கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அங்கையன் கவிதைகள்

Page 1


Page 2

BHInIJfrگ ‘அங்கையன்’
கயிலாசநாதனின் கவிதைத் தொகுப்பு

Page 3
நூல்
665
நூலாசிரியர்
முகவரி
முதற்பதிப்பு
பதிப்புரிமை
அச்சுப் பதிப்பு
பக்கங்கள்
விலை
அங்கையன் கவிதைகள்
கவிதை
அங்கையன் கயிலாசநாதன்
(திரு. வை. அ. கயிலாசநாதன்)
H1/2, அரச தொடர்மாடி,
கொழும்பு - 04, இலங்கை தொலைபேசி எண் : 581047
: டிசம்பர் 2002
திருமதி இராஜலட்சுமி அம்மாள் கயிலாசநாதன்
: யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்,
48B, புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13
: (Xiv + 106) = 20
ரூபா 100/=

இதழினுள்ளே .
முனனுரை свотииото
பாவும் நாவும்
கவிஞனாக்கினாய்
தமிழ்க்கனி
எதனைப் பாட .? கையிற் கனிவிருந்தால் .?
ు அகிலம் பிறந்ததம்மா
s 3. கோணேஸ்வரனே குறையா நிலவே குளிராயோ?
9. பார் பேசும் பழங் கதிர்காமம் yo 10. கந்தன் கவி மலர்கள்
:t சக்தி விழாவையொட்டிய பக்திக் கவி
'12 என்னிதயத்தின் ஒளியே
13 மண்ணின் புதுமைகள் '14. சுணக்காதே f
தாமதந்தானே வருகை .5 ولى '6. முகிலில் மறைந்த முழு நிலவு ^#f7, பாரினில் ஊர்வலம் போகுமடி
iii
பக்கம்
ix
03
04
06
07
10
11
12
14
16
17
20
35
36
38
39
40
42

Page 4
காதல் பறந்ததம்மா .18 تهران ஆ19 திரும்பாதோ?
குழந்தை
“23, மணிக்குரல் ஒலித்ததே ! སྙི . அத்தானைப் போலவொரு கோலம்
30. வேதனைச் சிரிப்பு 3. இளைய ஈழமே எழுந்திராய் 32. கவலை மறையுதடா
36, மானிடர்க்குப் பாடம் 7. நெடுங்கடல் சாய்ந்ததம்மா
44
45
46
47
48
51
52
53
57
59
60
60
63
65
66
67
68
73
75
76
78
 
 
 
 
 
 
 
 

முன்னுரை
'கவிதை என்பது மேம்பாடுற்ற பேச்சு' என்பது பிரபல விமரிசகர் ஒருவரது கருத்தாகும். பேச்சு எவ்வாறு மேம்பாடு உறுகிறது? சாதாரண பேச்சு மொழியில் வரும் சாதாரணமான சொற்கள், கவிதையில் வருகையில் மேம்பாடு பெறுவது எப்படி? இதுபற்றி விரிவாக விளக்குவதானால், அது கவிதைக் கலை பற்றிய ஆராய்ச்சி ஆகிவிடும். அத்தகைய ஆராய்ச்சியில் இறங்காது, கவிதைச் சொல் மேம்பாடு பெறுவதற்கான ஒரு வழி ஓசை ஒழுங்காக்கம் என்னும் உண்மையை மாத்திரம் இங்கு கருதுவோம்.
கவிதையில் வரும் ஒசை ஒழுங்காக்கம் பல்வேறு படித்தரங்களில் நிகழும். பேச்சோசையை ஒட்டி அதற்கு மிகவும் கிட்டிய விதத்தில் நிகழும் ஒழுங்காக்கம் ஒரு வகை. இவ்வாறு பேச்சோசையை ஒட்டி எழும் இயற்பாக்கள் நவீன கவிதையின் பிரதான கிளையாக வளர்ந்து வருகின்றன. இக்கவிதைகளில், பேசும் குரலை அடிப்படையாகக் கொண்ட ஒசையைக் கவிஞர்கள் தம் கருத்து வெளியீட்டின் பொருட்டும் கையாளுகின்றனர். ஒசை ஒழுங்காக்கத்தின் பிறிதொரு வகை இசைக்கலையை - அதாவது சங்கீதத்தை - மிகவும் தழுவிய ஒன்றாகும். இவ்வித ஒழுங்காக்கத்தின் பூரண நிலையை, சங்கீத சாகித்தியங்கள் என்னும் இசைப்பாக்களில் நாம் காண்கிறோம்.
அங்கையன் கயிலாசநாதனின் கவிதைகள் சங்கீத சாகித்தியங்கள் அல்ல. எனினும் அவை இசைத்தன்மை மிக்கனவாக உள்ளமையை - அவை பாடுங்குரலை ஆதரிசமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளமையை - பாடற் சுவைஞர்கள் நிச்சயம் உணர்வார்கள். அவரது பாடல்கள் சில, மெல்லிசை அமைத்துப்
V

Page 5
பாடுவதற்கென எழுந்தவை என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும். இந்த வகையில், 'மணிக்குரல் ஒலித்ததே' என்னும் பாட்டும், மழைசிந்தும் கடலோரம் இளநண்டு படங்கீறும்' என்னும் பாட்டும், 'பட்டு இதழ்விரித்து' என்னும் பாட்டும் மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளவை எனல் பிழை ஆகாது. இவை பொருத்தமான இசையுடன் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாவது பெருமைப்படத்தக்க செய்தியாகும்.
அங்கையன் மெல்லிசைக்கென முழுக்க முழுக்க எழுதிய பாடல்களைத் தவிர்ந்த ஏனைய பாடல்களிற் கூட இசைப் பாவினத்துக்குரிய பண்புகள் முதன்மை பெற்று நிற்பதையே நான் காண்கிறேன். கண்ணதாசன் போல மிகப் பல இசைப் பாடல்களை எழுதிக்குவிக்காவிட்டாலும், கயிலாசநாதனும்,தம் பாட்டுக்களிலே, இலகுவில் மக்களை ஈர்க்கும் இதமான சொற் பிரயோகங்களைக் கையாளும் வழக்கம் உடையவர். ‘சோமு’ என்னும் மீ. ப. சோமசுந்தரம் அவர்களின் பாட்டுக்களிற் காணப்படுவது போன்ற ஏக்க - சோக - இனிமை - இசைக்கலவை அங்கையனின் பாடல்களிலும், சிற்சில இடங்களிலே தலைகாட்டுகின்றன. சோமுவைப் போலவே அங்கையனும் வானொலியுடன் தொடர்பு பூண்டு இருந்தமையை நாம் நினைவு கூரலாம். ஆயினும், வானொலிப் பணியைத் தொடங்கு முன்னரே அங்கையன் தம் கவிதைகளிற் பலவற்றை எழுதி முடித்து விட்டார் என்பது கருதத்தக்கது.
இனி, இசைப்பாக்கள் சிறந்த கவிதைகள் ஆகுமா என்ற ஐயமும் சிலரிடையே எழுதல் கூடும். காலம் சென்ற சிங்களக் கவிஞர் மகா (G.கமசேகர) அவர்கள் சிறந்த பாடலாசிரியரே எனினும், கவிஞர் என்று பார்க்கும்போது அவர் இரண்டாந்
vi

தரத்தவரே என்றும் சிலர் வாதிக்கிறார்கள். அது எவ்வாறாயினும், ஈழத்துத் தமிழர் ஆக்கி, ஈழத்துக் கலைஞர்கள் இசையமைத்து, ஈழத்துப் பாடகர்கள் குரல் கொடுத்து ஒலிப்பதிவான ஈழத்துப் பாடல்கள் என்னும் புதிய கலைத்துறை இப்பொழுது உருவாகி வருவதனை எவரும் மறுத்தல் இயலாது. இத்துறையின் தொடக்க காலத்திலே, பல தயக்கங்களும் மயக்கங்களும் இருந்தன. இசைவாணர் எப்படிப் பாடுவரோ என்ற எண்ணம் எதுவும் இல்லாத புலவர்கள் இயற்றிய பாட்டுக்களை, சங்கீத வித்துவான் ஏதோ ஒரு தாளத்தில், ஏதோ ஒரு இராகத்தில், தாம் தமது குருவிடம் கற்ற ஏதோ ஒரு கிருதி அல்லது கீர்த்தனத்தின் மெட்டிற்குள்ளே திணித்துப் பாடிவிட்டுப் போகும் போக்கே ஆரம்ப காலத்தில் இருந்தது. ஆனால், ஆரம்ப காலத்துப் போக்குகள் பல இன்று மாறிவிட்டன; தயக்க மயக்கங்கள் பல நீங்கிவிட்டன. இன்றைய ஈழத்துப் பாடலாசிரியர், இசைவாணரின் போக்குகளை உணர்ந்தே எழுதுகிறார். இசைவாணரும் கவிஞரின் எண்ணவோட்டங் களையும் உணர்ச்சிச் சுழிப்புகளையும் மனங் கொண்டே இசையமைக்கிறார். ஆதலால், ஒரளவு திருப்திகரமான பாடல்கள் உருவாகி வருகின்றன. எஸ்.கே.பரராஜசிங்கம், ஆர். முத்துச்சாமி, ரி. வி. பிச்சையப்பா முதலான இசையமைப்பாளர்கள் உருவாகி வருகின்றனர். இசைப்பா ஆசிரியர்களும் நூற்றுக்கணக்கிலே தோன்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இசைவாணர்களும் கவிஞர்களும் ஒருங்கே அமர்ந்து தமது படைப்புத் தொழிலில் ஈடுபடத்தக்க நெருக்கமான சூழல் இன்னும் தோன்றவில்லை. அப்படியொரு நல்லுறவு ஏற்படுமாயின் திறமான பல ஈழத்துப் பாடல்கள் பிறப்பெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அங்ங்ணம் பிறப்பெடுக்குமாயின், ஈழத் தமிழ் மெல்லிசைக் கலை புதிய பரிமாணங்கள் பலவற்றைப் பெற்று விருத்தியடையும். அங்ங்ணம் விருத்தியடையும் இசைக்கலை வரலாற்றில் அங்கையன் கயிலாசநாதனின் பாட்டுகளும் திடமானதோர் இடம் பெற்றுத் திகழும் என்பது நிச்சயம்.
vii

Page 6
பதிப்புரை
1976இல் தனது 34வது வயதில் அகால மரணமடைந்த அங்கையன் கயிலாசநாதன் 1960 தொடக்கம் 15 வருட காலம் தொடர்ச்சியாக ஈழத்துத் தமிழ் எழுத்துத் துறையில் ஈடுபட்டுச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழி பெயர்ப்புகள் எனப் பல்துறைகளிலும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர். ஆனால் கவிதைத் துறையில்தான் அவருக்கு மிகுந்த ரசனையும் ஈடுபாடும் இருந்தது. சிறு பையனாக இருந்தபோது தனியே போகும் வழியில் பாடிக் கொண்டு திரிந்த கயிலாசநாதன், சங்கீதம் கற்காவிட்டாலும் அவருக்குத் தாளத்தோடு கூடிய இசையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. 1972இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் நாடகத் தயாரிப்பாளராகச் சேர்ந்து நிலைய இசைக் கலைஞர், பாடகர்களின் தொடர்பு ஏற்பட்டது, பெரும்பாலான மெல்லிசைப் பாடல்கள் இயற்ற இவருக்குத் தூண்டுகோலாக அமைந்தது. 2000 ஆகஸ்டில் நடைபெற்ற அங்கையன் நூல்கள் வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்தியபோது, “தமிழ் நாட்டுச் சினிமாப் பாடல்களைப் போலன்று, கயிலாசநாதனின் மெல்லிசைப் பாடல்கள் கவித்துவம், கருத்துச் சிறப்பு, இசை நயமும் சேர்ந்து கேட்போர் மனதை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தனவாய் அமைந்திருந்தன” எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறினார். வானொலியினூடாக இன்றும் ஒலிபரப்பாகும் 'ஒ' மணிக்குரல் ஒலித்ததே . 'மழைசிந்துங் கடலோரம். ', 'பட்டு இதழ் விரித்து.', 'காலை மலரே கனிவுடைய செண்பகமே.', 'கண்ணுக்குள் தவழ்ந்து வந்த ஒவியமே. என்ற பாடலடிகளில் தொடங்கும் இவரது
Χ

மெல்லிசைப் பாடல்கள் நுண்ணுணர்வைத் தூண்டிப் பெரும்பாலோர் ரசிக்கும் மெல்லிசைப் பாடல்களாக விளங்குகின்றன.
1977 பங்குனியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவைப் பகுதியினர் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அங்கையன் கயிலாசநாதனின் முதலாண்டு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த இருப்பதாக எனக்கு அறியத் தந்ததும், அவசர அவசரமாக அங்கையனின் கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து அவரே இட்டு வைத்திருந்த 'வைகறை நிலவு' என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதை நூலினை அச்சேற்றி அவரின் ஆத்ம சாந்திக்காக, பணிப்பாளர் நடராசா மூலம் வெளியிட்டு வைத்தேன். அப்போதைய சூழ்நிலையில் என்னால் முடிந்தது அவ்வளவுதான். தட்டத்தனியாக எனது மாதாந்த அரச ஊதியத்துடன் எமது மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி 1999 இல் வேலையிலிருந்து ஒய்வுபெற்ற பின்புதான் கையெழுத்துப் பிரதிகளாக இருந்த அங்கையனின் எழுத்துக்களை நூலுருவில் ஆக்கி வருகிறேன். இதுவரை மூன்று நாவல்களையும் சிறுகதைத் தொகுதி ஒன்றினையும் வெளியிட்டுள்ளேன். என்னிடம் எஞ்சியுள்ள ஏனைய கவிதைகளையும் தொகுத்து ஒரு நூலாக்க வேண்டும் எனச் சமீப காலமாக ஒரு ஆதங்கம். பேராதனை, மாத்தளை, நல்லூர், கொழும்பில் பல இடங்களில் நடைபெற்ற கவியரங்குகளில் வாசித்த பலவும், வேறு அவரே குறிப்பிட்டு வைத்த தனிக் கவிதைகள் பல, என்னிடம் இல்லாதது கவலை தந்தது. என்றாலும் 'வைகறை நிலவில் சேர்க்காது விடுபட்டு என்னிடம் இந்த் கவிதைகளையும் சேர்த்து ஆணைழுபடுததும் நோக்குடன் இக்கவிதைத் தொகுதியை வெளிக்கொணர்கிறேன்.
xi

Page 7
அங்கையனுடன் நெருங்கிய இலக்கியத் தொடர்பு கொண்ட கவிஞர் இ. முருகையன் ‘வைகறை நிலவு'க்கு எழுதிய முகவுரை இத் தொகுதிக்கும் சாலப் பொருத்தமாக இருப்பதால் அதனையே முன்னுரையாக அமைத்துள்ளேன். அங்கையன் எந்த வேளையிலும் கவிதை எழுதக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர். இன்ன பொருளில் எழுதித் தாருங்கள் என்று கேட்ட வர் மனம் குளிர, சிறு பொழுதில் கவிதை புனைந்து கொடுப்பதில் வல்லவராய் இருந்தார். சிட்டி பாபுவின் ஒரு வீணை இசைக் கேற்ப தமிழில் கவிதை இயற்ற முடியாது என்று ஒரு பாடகர் கூற அதனைச் சவாலாக ஏற்று அந்த இசைக்கேற்ப எழுதப்பட்டதே, "ஓ! மணிக்குரல் ஒலித்ததே எனத் தொடங்கும் மிகவும் ஜனரஞ்சகமான மெல்லிசைப் பாடலாகும்.
"Poets are Prophets 61 607 j, gi, pólu 9/fi, 60) 5u Gof Gör கவிதைகள் சிலவற்றில் தீர்க்க தரிசனமான கருத்துக்கள் மறைந்து கிடப்பதையும் உணரலாம். 'அன்னை' என்ற தலைப்பில் தன் எட்டு வயது மகள் சார்பாக கவிதை எழுதிக் கொடுத்து மூன்று வாரங்களில் அவர் அகால மரணத்தைத் தழுவினார். ஆனால் அந்தப் பாலர் கவிதையில் அடங்கிய தீர்க்க தரிசனமான உட்பொருளை நானும் எனது பிள்ளைகளும் அனுபவித்து உணர்ந்துள்ளோம்.
“எழுதியபின் எதுவும் எழுத்தாளனுக்குச் சொந்தமல்ல; அவை பொது மக்களுக்கே சொந்தமானவை" எனக் கூறியவர் கயிலாசநாதன். அவர் மறைந்து 26 வருடங்களுக்குப் பின் வெளிவரும் இந்நூலினை அவரின் கவித்துவத்தை வெளிக் கொணரும் ஒரு பதிவேடாக
xii

விளங்க வைப்பதே என் விருப்பம். இதனை அறியுங் காலத்தை இப்போதாவது ஏற்படுத்தியதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஈழத்தின் மெல்லிசைப் பாடலாசிரியர்களுள் முன்னோடி ஒருவராகக் கணிக்கப்பட்டுள்ள அங்கையனது மெல்லிசைப் பாடல்கள் இன்று ஒலி அலைவரிசையிலே கலந்து உலகளக்கும் கலைவடிவங்கள். ஏனைய கவிதைகளிலும் உள்ள கவித்துவமும் கவிதைப் பொருள் பற்றியும் வாசகரிடமிருந்து அறிய ஆவலாய் உள்ளேன்.
"//7மகள் பே7லெ7ரு தெய்வமில்லை - அவன்
பெண்மையைக் கண்டவர் ச7வறிய7ர்”என அவரது கவிதை ஒன்றில் வருகிறது. இலக்கிய ஆர்வலரும் ஆய்வாளரும் சிரத்தையுடன் வாசித்து, அக்கூற்று சம்பந்தமான தீர்மானம் எடுப்பதற்காக ‘அங்கையன் கவிதைகளை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி வணக்கம்
திருமதி இராசலட்சுமி அம்மாள் கயிலாசநாதன்
H 1/2, அரச தொடர்மாடி கொழும்பு - 04,
இலங்கை. தொலை. எண், 581047
★ ★ ★ ★ ★
xiii

Page 8
1968இல் கொழும்பு
விவேகானந்த சபை
மண்டபத்தில் கொழும்பு இலக்கிய வட்டத்தின் ஆதரவில் நடைபெற்ற ‘பாரதிதாசன் விழா வில் பாடியது.
xiv
 
 
 
 
 
 
 
 
 

இறை வணக்கம்
ஆழ் கடலை இருசுடரை அருமலையை
அருவியினை அழகோடு அமைத்துத்தந்தே
சூழ்வினைகள் பலவோடும் மனிதசுற்றம்
சுதந்திரமாய் வாழ வைத்து மறைந்து விட்ட
ஏழ்நிலையுங் கடந்தவனை மனத்திலேத்தி
என்றனுயிர்க் கவியமுதை ஏட்டிலூற்றி
ς s காழ்சூடிக் கழல்சூடிக் கருத்தைத்தந்த
VAO
கடவுளினை வாழ்த்தியே வணங்குவோமே.
அங்கையன் கவிதைகள்

Page 9
寄
அங்கையன் கவிதைகள்

தோரனம்
3*2திதி
நலிவுற்ற தமிழர் வாழ்வு
நலம்பெற வேண்டு மென்ற
பொலிவுற்ற எண்ண மொன்றே
பொருளதாய்க் கொண்டேன் மற்று
கலியுகப் பொருள்கள் நச்சிக்
கவிதைகள் பொழிய வில்லை
சலிப்புற்று தள்ள வேண்டாம்
சரணம் நும் கரங்கள் தாமே.
அங்கையன் கவிதைகள்

Page 10
பாவும் நாவும்
பல்லவி
வைய இருளில் வதைத்துக் கிடந்தேற்கு வெய்யில் எனவந்த வித்தகியே
அதரபல்லவி
பூமகளும் போற்றும் பூவுலகும் ஏற்கும் நாமகளே நின்பதம் நாம் பணிந்தோம்
சரனங்கள்
பாடுங் குயிலதன் பாட்டினிலும் வண்ண ஆடும் மயிலதன் ஆடலிலும் பள்ளம் ஒடும் நதியசை ஒசையிலும் - வையம் கூடுமிடமெங்கும் நாடிடும் தெய்வம்
நீலத் திரைக்கட லோரத்திலும் அந்த நீண்ட விசும்பின் நிலவதிலும் கோலப் பசுமை ஒளியுடையாள் - என்றன் கோடி குறைகளைத் தீர்த்து வைப்பாள்
பாலைப் பழிக்கும் நிறமுடையாள் இந்தப் பாரைச் சுமக்கும் திறலுடையாள் வேலை நிகர்க்கும் விழியுடையாள் - வாணி வெள்ளை மலரதன் மேலுறைவாள்
4. அங்கையன் கவிதைகள்

திக்குத் தெரியாத காட்டிருந்தேன் வாணி தென்றலாய் வந்தே திசையளித்தாள் நெக்கி யுருகி நினைவழிந்தேன் - தேவி நெஞ்சச் சுமைகளைப் போக்கி விட்டாள் !
பாரினில் ஆயிரந் தெய்வமுண்டு இந்தப் பாமகள் போலொரு தெய்வமில்லை பேரினில் நாமகள் ஆயினுமே - அவள்
பெண்மையைக் கண்டவர் சாவறியார் !
நவநிதி போலெனை நாடி வந்தாள் இந்த நானில வாழ்வதை ஈடேற்றத் தவமிது போலெனைச் சார்ந்ததில்லை - அவள் தாளன்றி வேறினி வாழ்வு மில்லை.
அங்கையன் கவிதைகள்

Page 11
கவிஞனாக்கினாய் .
2)து"தி2:2துத்தி".23 2 22xதித்இதரித்சி2,
கனலில் முகிழ்த்த உரு - என் நினைவில் வடித்த கரு தினம் கனவில் திளைக்கும் இரு பெருங் கண்ணில் மலர்ந்த திரு.
கவிதை பாடவென்று - புதுக் கற்பனை தந்தா ளன்று நிதம் அவியும் நெஞ்ச ஆசைக் கவள் அள்ளி விட்டாள் நீரை அது புகையு தென்றன் நெஞ்சில் இனிப் பிறப்பதற்கும் இல்லை எனை இமியும் அகலா நல் இணை அகன்றும் மறக்கொணாது தமிழ்க் கவிஞனாக்கினாளே இனிக் கவிதை தரும் இன்பம் .
N
محبر
N
محبر
將
N
A
N
محبر
sis N
ア 9
ys W
93
ܡ
6 அங்கையன் கவிதைகள்

தமிழ்க் கணி
அலைமோதும் நெஞ்சுடனே ஆற்றோரத் தமர்ந்தே ஆவலுடன் பார்த்திருந்தேன்
அவள் வரவை நானே சிலைமேனிதனை மேவுஞ்
சிங்காரப் பாவை சிந்தனையைக் கிளறிவிடுஞ்
சிரிப்போடு வந்தாள்.
கட்டான பட்டுடலைக்
கண்ணாரக் கண்டு கலக்கமுற்ற காலையவள்
கண்ணா! என்னைத் தொட்டாலே யுன்துயர்
தீருமோ? என்றாள் துள்ளிநடம் போட்டாள்
துவண்டு விழச் செய்தாள்.
முத்தார முறுவலினால்
மாலையது போட்டாள்
மோகனப் பார்வையினால்
மேளந்தான் கொட்டி
அத்தான் என அழைத்தாள்
இசைபாடச் சொன்னாள்
அரிவையவள் கேட்டதுமே
நான் என் செய்தேன்?
அங்கையன் கவிதைகள்

Page 12
கண்ணே என்றழைத்தேன்
கவிபாடக் கற்பனைக்கு என்னசெய்ய வென்றே
ஏங்கியே நின்றேன் பண்ணினாள் பாசாங்கு
பகன்றிட்டாள் மழலையிலே பாடென்று கேட்டாற்
பாவலரும் பாடார்!
எத்தனையோ கவிஞர்கள்
உனைப்புணர்ந்த போதும் என்நெஞ்சு உன்னைவிட்(டு)
அகலா தென் றென்றும் பித்தனைப் போற் பகன்றிட்ட
என்றன் பேச்சிற் பேதையவள் மயங்கியே
சாய்ந்தாள் தோளில்,
சாய்ந்தவளைத் தாங்கியே
அனைத்துக் கொண்டேன் சாற்றிட்டேன் இதுவொன்று
கேட்பாய் என்றே ஆய்ந்த தமிழ்க் கன்னி
உன் அணிகள் குலுங்க ஆக்கிடுவேன் அழகு தமிழ்க்
கவிதை ஈங்கே !
அங்கையன் கவிதைகள்

இப்படித்தான் எல்லோரும்
எண்ணமிட்டார் பின்னர்
ஏது காரணமோ
எனைமறந்து போனார் உப்புநிறை பாண்டத்தில்
ஊறி வரு நீர்போல் ஊறினவே இந்தமொழி
அவளிதழின்ஊடே.
காலம் கடந்தால்
திரும்பாது கண்ணே! கவிதை பிறந்தால்
அழியாது என்றே தோளைப் பற்றித்
திருப்பினேன் பக்கம் துடித்தனள் மடியில்
பதித்தனன் முத்தம்.
இரு இதழின் சாறு
இரு புறமும் மீறி இதமாக ஏட்டில்
கவியாக மாறி வருகிறது காண்பாய்
வாய்ந்த தமிழ்க் கனியே!
వ% a
N
/
Ké
※ MYN
M
w
۶
W
அங்கையன் கவிதைகள்

Page 13
or 560 oorŮ Ur L — ---- ?
డ్రూఢడ్రూ
வானை நோக்கிப் பறக்கின்றேன் வாழ்விழந்த நம்மவரின் FF6OTL flity, Goldful JourtG36) இழைத்துவிட்ட கேடுகளை மோனப் பெருவெளியில் நெஞ்சங் கடுகடுக்க.
மனிதனை மனிதனாக மதிக்கவே தெரியாத மனிதரும் மானிலத்தில் வாழ்கின்றார்; பார்க்கின்றேன்.
வெண்மதியை இங்கிருந்து மின்விசையில் நாடுகிறார் கண்ணிழந்து கருத்தழிந்து காண்பனவும் ஒன்றின்றி எண்ணங்கள் பலகோடி எண்ணியெண்ணி ஏமாந்து பண்ணுகிறார் பாரினிலே பார்க்கின்றேன் - நானுமிங்கே
கற்பென்று பேசிடுவார் கற்பினையே விலைகொள்வார் அற்பசெயல்களிலே ஆயுளையே விட்டிடுவார் விற்பனரென்று தம்மை வீறாப்புடன் அழைக்குமிந்த அற்பரையே என்னசொல்லி எப்படிநான் பாடிடுவேன்?
O அங்கையன் கவிதைகள்

கையிற் கணிவிருந்தால் .
“நீலவிதானத்தின் நித்திலப் பூப் பந்தர்க்” கீழ்க்
கோல மயிலோடு கூடிமகிழ்ந்தவர்க்குங்
காலன் அடிமிதித்துக் கண்மிரட்டி வாய்நறும்பில்
ஆலம்போ லெண்ணி அகல்விரோ? மாட்டீரோ?
వ4 శీడ వడ
/\ /\ /\,
ஏழையென்ற சொல்லெமக்கு ஈந்தவரும் நீராமோ? கோழை நினைவுகளைக் கொட்டிவிட்டுப் பின்னுமங்கே ஆளை அடிமையென அடக்கிவிட்ட மடமையினை நாளை எமதுலகம் நீக்கிவிடும் பார்த்திடுவீர்!
※※※
/\ /\
கையிற் கனிவிருந்தாற் கணியுநுங் காதன்மொழி மெய்யிற் புறமானால் மீறிவிட மாட்டீரோ? அய்ய! உமக்கெல்லாம் ஆருமிலைப் பாடந்தர செய்க! நுமது திறஞ் செப்பிடவே நாமுமுளோம்!
※※米
காற்றசைவின் போக்கினிலே கரைதிரியும் எங்களது ஏற்றமிகு தன்மானம் எங்கோடிப் போனதுவோ? ஆற்றுவாரில்லை! ஆனதரிப்பர் தானும் இல்லை நாற்றமிகு சொற்கள்தமை நாங்களல்லக் கேட்பதற்கே!
Sa NK Na
sis is 2s
குப்பையிலே வீழ்ந்துவிட்ட கோமளத்தை வாழ்வினிலே ஒப்புமை காட்டியே உலகோடு பேசுகின்றீர்! தப்பெதுவும் நாமறியோம் தயவெதுவும் வேண்டோமே இப்புவியி லெம்மை இருக்கவிடிற் போதுமையா!
அங்கையன் கவிதைகள்

Page 14
அகிலம் பிறந்ததம்மா .
多°乏多*仑多荚<、芬、杉*>多*<多*影、芬 2********P2P
பார்வதி யொருநாள் பஞ்சணை இருக்கப்
பக்கத்தில் வந்து நின்றான் - சிவன் பக்கத்தில் வந்து நின்றான் - அவள்
சீர்வகை என்ன சிலம்பொலி என்ன
சிந்தித் தடங்கி நின்றான் - சிவன் சிந்தித் தடங்கி நின்றான்.
கைவளை யோடிய மென்கரம் பற்றியே
கண்மணியே என்றான் - சிவன் கண்மணியே என்றான் - அவள்
மெய்சிலிர்த்தார்த்து மேனிநுடங்கிட
மெல்லெனவே நகர்ந்தாள் - உமை
மெல்லெனவே நகர்ந்தாள் (பார்வதி)
அய்யன் அரவணை சாய்ந்திட்ட போதினில்
அகிலம் பிறந்த தம்மா - இந்த அகிலம் பிறந்த தம்மா - அதில்
உய்யவெனக் கங்கை ஒடிய போதினில் உலகம் செழித்த தம்மா - பல
உயிர்கள் மலர்ந்ததம்மா. (பார்வதி)
2 அங்கையன் கவிதைகள்

வேறு
பூமரம் பாமரம் மாமரம் தாவரம் யாவையுந் தோன்றினவே - அங்கு சாவரம் நாவரம் வாழ்வரம் பெற்றவர்
யாவரும் தோன்றினரே -
(பின்னணி சிவாயநம ஓசை)
நாவாரம் தேவாரம் பாவாரம் பூவாரம் ஏவாளின் காட்சியம்மா - அதை ஏந்திக் களித்திட்ட மானுடம் இன்பத்தில் நீந்திக் குளிக்குதம்மா - என்றும் நீந்திக் களிக்குமம்மா! (பார்வதி)
04.12.75
அங்கையன் கவிதைகள் 3

Page 15
கோனேஸ்வரனே
குறையா நிலவே குளிராயோ?
పఢలPడ23 தி
ല്ലഭല്ല திதி
தானே தோன்றித் தளிரார் பாத நடமாடி மானேர் விழியாள் மருங்கே யுறைய மகிழ்வோடு தேனே மலரே யெனப்பா டடியார் துதிகேட்கும் கோணேஸ் வரனே குறையா வின்பம் கொடுநேசா
நானாய் வளர்ந்துநற் றமிழால் நாமந்தனைப்பாடி தேனாய் நினைந்து தினமும் விழைந்து தித்தித்தேன் ஏனோ நீதான் இடிபோ லிருந்தாய் இறைவாநற் கோணேஸ் வரனே குறையா நிலவே குளிராயோ?
உருவாய் உறைந்த வுனைநான் துதித்து உருகுங்கால் தருவாய் சுகமே தளரா இளமை தண்கல்வி திருவாய் மலர்ந்து அருளாள் நீலக் கடல்வந்து பொருதப் பெயரா மலைவாழ் ஈசா பொறுப்பாயோ?
மந்தி குலைந்து மடுவிற் குதித்து மகிழ்ந்தாடும் வெந்து பொசுங்கு வெயிலின் கொடுமை வேளையிலும் அந்தி நெருங்க அழகார் மயிலும் நடமாடிச் சிந்தை களிக்கும் மலைமேல் வாழும் சிவநேசா
நந்தா வனத்தின் நயனக் கிளிகள் இசைபாடும் செந்தா மரைகள் சிரிக்கும் ஆங்கே சின்னஇடை நந்தா விழியார் நாதா வெனவே நயந்துன்னை சொந்தம் பேசும் சுனையார் குன்றின் சிவனேவா!
4
அங்கையன் கவிதைகள்

நீலக் கடலை நெருங்கிக் கங்கை நீரென்றே மாலைக் கதிரோன் மறையும் போது மான்கூட்டம் வாலைக் குழைத்துக் கரைசேர் நீரில் வாய்வைக்கும்
கோலச் செம்மை குறையாத் தென்றற் கோணேசா !
வானும் பொழிய மலர்கள் இனிக்க மனம் சேர்க்கும் கானும் சதுக்கக் கடலிற் கலக்கும் காட்டாற்றில் மீனும் மிதக்கும் மானும் மிடற்றும் இன்பத்தில் நானும் இருக்க நலந்தா கோண மலைநாதா !
தங்க மணிகள் இசையோ டசையத் தலைகளிலே தங்கை குவித்துத் தா! தா! வென்றே தனிக்காதல் பொங்க நிற்கும் அடியார் மனமே புழுங்காமல் அங்கை சிவக்க அளிக்கும் அருளே யாவாயோ?
தீபச் சுடரின் திறலால் துாய்மை தனைத் தேக்கிப் பாபக் களையும் பறந்தே போகப் பக்தர்களைச் சாபக் குழிமீட்டருளிச் சைவ வேதத்தின்
தாபக் களைதீர் தலைவா தாள்கள் பணிந்தேனே !
உமையோ டுறைந்த வுனைநான் பரவி உயர் பாட்டுச் சமையா திருந்தேன் அஃதென் சிறுமை சர்வேசா குமையே னினியோர் குறையும் உளதோ குவலயத்தில் தமிழால் மாலை பாலித் தணியத் தவறேனே !
அங்கையன் கவிதைகள் 5

Page 16
பார் பேசும் பழங் கதிர்காமம்
அருள்கொண்டு அனல்கண்ட பொறிஆறு அமை பொய்கையில் மருள்கொண்டு மதிகண்ட மங்கையர்களறுவர்கையில் பொருள்கொண்டுபுகழ்கண் ன் டொறிகோபம் அகல வேண் அருள் கொண்டு ஆறுமுகம் பன்னிருகை ஆன பொருளே.
பிரணவப் பொருள் தேடிப் பெரும்பாடுபட்ட பிரமன் சரவணப் பொய்கை தருதண்ணலுன் தண்டனைகளாகியும் அரவணியும் அண்ணலுன் தந்தை உன்னறிவுரை காளாகியும் குரவைதரு குறவஞ்சிக் கொடிக்கு நீ ஆளாகவோ!
பரவசப் பழனியிலே பழமுதிர் சோலையிலே திருப்பரங்குன்றினிலே திருத்தணி மலையினிலே திருச்செந்தூரினிலே சேர்சாமி மலையினிலே அருட்படும் ஆறுபடைவீடு நீ வைத்தாயே!
தெரு நீள பக்தர்குழாம் திரள்திரளாய்த் தெரியுதே பேரூந்தி தங்குமிடம் பெருந்திரளாய்த் தோணுதே ஒரூராம் உன்ஊரைத் தேடியே ஒடுகின்றார்
பார்பேசும் பழங்கதிர்காம மது பார்.
M
N %s %ir
NM S4 OOOOOO /\ MS.
அங்கையன் கவிதைகள்

கந்தன் கவிமலர்கள்
(அந்தாதி)
காப்பு
கண்ணுதிர்ந்த மலர்கள் கொண்டே கனிவுதிரும் பாதம் நச்சி எண்ணியது வேண்டு மென்றே ஈசா நான் எழுது கின்றேன் நண்ணியவை நழுவிற்றேனும் நாதனுன்றன் பாதம் போதும்; பண்ணமைத்துப் பாடு வோர்க்கே
பதமளித்துக் காத்தி டாயே.
8565 upoofrats 6ir
கந்தா முருகா கடம்பா கனக மயி லோய் செந்தா ரிருக்கைச் சிவனார் மைந்தா சிந்தனையின் நந்தா விளக்கே நயனக் கிளிகள் நாதா வுன் அந்தாள் பணிந்தேன் அளியாய் தமிழை அடியேற்கே.
அடியே னுனைநான் அல்லும் பகலும் அழுத ரற்றிப் படியேன் நின்னைப் பரவிப் புகழும் பாடல் தமைக் கொடியேன் அதனால் குறைகள் பலவுங் குவலயத்தில்
“படியேன்” என்றோ பணித்தாய் ஈசா பாதகற் கே.
அங்கையன் கவிதைகள் 7

Page 17
பாதகன் பண்பிலன் பரமனின் பாலகன் பார் புகழை சாதகஞ் செய்திலன் சஞ்சலன் செஞ்சடைச் செஞ்சகனை ஒதகு நூல்களை ஒதிலன் உன்மத்தன் உருவ பூழிந்த தீதகன் என்னையும் தீந்தமிழாற் கொண்ட தீங்கடலே.
கடலது போல்விழி காட்டிடு கோலங்கள் கண்ட பின்னும் உடலது வெம்மையில் உருகிடு தேற்றமுங் காண்கி லையோ மடலிது நின்றனுக் கென்மனம் சாய்க்கவே மனது வைத்தேன்
தடலெடுத் தென்னுயிர் தணித்திடத் தவிக்கிறேன் தற் பரனே.
பரனே முருகா பணிவேன் உனைநான் பல்காலும் உரனே கவிதை உறைவே உலக மக்கள் அரனே அயனே அரியே எனினும் அடியேற்கே
வரனே யளிக்கும் வளமார் கைகள் வைத்தவனே.
வைத்தவன் வையகம் வார்கடல் வழங்கு நன்வேல் கைத்தலங் கொண்டவன் காப்பவன் வள்ளி யென்னும் மைத்தடங் கண்ணியை மணந்தவன் மலர்ந்த செவ்வேள்
இத்தலங் கண்டதோர் கோலமன்றோ விதுவெங்குளதே.
எங்குளன் என்றவர் ஏங்கியே கேட்டிடும் எற்பொழுதில் இங்குளன் அன்பர்தம் இதயத்தி லென்றெழும் சரவணப் பங்கயப் பாதங்கள் நெஞ்சினில் பதமிடும் பரஜதியில் அங்கவர் கண்களில் ஆறுகள் பாய்ந்திடும் அவ்வொலியே.
8 அங்கையன் கவிதைகள்

அவ்வொலி மெளலியான் மைந்தன்றன் அரும் புகழை செவ்வொலிச் சேவலின் வாய்நின்று செப்பியே சேர்த்திடுமால் பவ்வொலி பாவொலி பக்தர்கள் பாடிடு பரவசத்தால்
செவ்வழி சேர்கெனச் சேவடி காட்டிடும் சேர்ந்தவர்க்கே.
சேர்ந்தவர் சார்ந்தவர் சிறந்தவர் என்றவர் தம் மாந்திய பக்தியில் நீந்திய மீனென நிற்குஞ்செவ்வேல் ஏந்திய கைகளோ எண்ணினிற் பன்னிரண் டேனும் வையம் பூந்துகில் போலவன் தாங்கிடு காட்சிகள் போதிப்பவே.
போதித்தவன் தந்தை பொன்மலை ஏறிய புண்ணியனாம் சாதித்தவன் பலசாத்திர நுண்மைகள் சண்டித்தனங்களுமே நீதித்தல மவன் நித்திலக் கோயில்கள் நீளவணி ஏதித்தல மென்றுமே கண்டதோ எண்ணு தற்கே.
எண்ணம் கருநாகத்திற் கேதுபல மென்றெந் நாளும் வண்ண மயில்மிது வனிதை யிருவருடன் வடிவேலும் கண்ணன் மருகோனும் கனதனமும் புட்பகமும் கடிதுதாங்கி
சுண்ண மெனவாங்கே சுற்றிப் படர்கின்ற சர்ப்பத்திற்கே.
சர்ப்பமா யெனையே சரனெனக் கொள்ளிற் சண்முகனே கர்ப்பமாய்க் கொண்ட கனவிது நெஞ்சிற் கனநாளாம் சொப்பனம் பலித்த சுவையது கண்டச் சுகத்தினிலே
நிற்பேனென் வாழ்வின் நெடும்பாதை தோறும் நித்தியமே
அங்கையன் கவிதைகள் 9

Page 18
சக்தி விழாக்களையொட்டிய பக்திக் கவி
தீதறு கவிதையின் திறல் மிகு சக்தியே திக்கெட்டுங் கொட்டு முரசே போதவிழ் கூந்தலிற் பொங்கிய கோலமே புன்மைகள் போக்கும் அருளே நாதவழ் தேவியே நலசக்தி ரூபமே நாயினேற் கருளுந் தாயே வாதிலும் வெல்லுமோர் வரமெனக் கீந்தனை வந்தருள் இங்கு நீயே.
சக்தியைப் பாடுமோர் சக்தியே பெற்றனன் ஜகத்தினோர் நிதமும் நோற்கும் முக்தியைத் தந்திடு முத்தொளிர்த் தெய்வமே முன்னின் றருளி டாயே
பாடுவோர் பாக்குரல் பாடலாய்க் கொண்டிடும் பான்மையோர் வாழு முலகில் ஆடிடு மயிலதை ஒப்பிய கோழி போல் அடியவன் நிகர்க்கொ ணாமல்
தேடிடு பொருளெனத் தீஞ்சுட ரொளியெனத் தீந்தமிழ் சொல்ல வைப்பாய் காடிலும் நதியிலும் காற்றிலும் தீயிலும் கானுநற் சக்தித் தாயே
20 அங்கையன் கவிதைகள்
 
 

கம்பனுக்கும் மற்றந்தக் கவிகாளி தாசனுக்கும் அம்புவியிற் பாரதிக்கும் அருணகிரி நாதனுக்கும் நம்பியதாற் கவிவேகம் நனி பெறவே செய்தவளே நம்புகிறேன் நானும் நாயகியே நாவிலுறை.
கல்வியுஞ் செல்வமும் வீரமும் இந்தக் காசினி கண்டதோர் பேறெனவே முன்னோர் சொல்லியே வைத்ததால் மானுடத்தின் நாடி சேர்ந்தே துடித்தது மூன்றினுக்கே
நல்லியல் கொண்டநற் பெண்மையதே மூன்று நாயகியாகியே சக்தியெனத் தொல்லுலகி லிங்கு தோன்றினவே நிதம் தோத்தரித்தே கவி யாத்துரைப்போம்.
女 女 ★
காற்றில் இலைகள் சரசரத்தால் அங்கு கண்டது பேயென நின்றலர்வார் சேற்றில் புழுவும் நெளிந்திடினே கொடும்
சர்ப்பம் அதுவென்று கண்டழுவார் நாற்றுக் கதிர்கள் வயல்களுக்குள் நின்று
நாகம் போல் ஆடிடு கோலங் கண்டே பேற்றைப் பெருந்தவத் தாயுருவில் பயம்
போக்கி யருளிய பொற்கொடியாம்.
அங்கையன் கவிதைகள் 2

Page 19
பிள்ளையைப் பெற்றவள் மார்பெடுத்துப் பயம்
போக்கியருளிய கோல மதாய் வெள்ளை மனத்தினன் என்னையவள் காளி வேக விடாதிகல் போக்கி விட்டாள் கொள்ளைக் கவியவள் கோமளப் பூவையாள்
கொள்கைக் கினியவள் என்று மனம் அள்ளத் துடித்திட்ட போதிலவள் என்முன்
அன்னை வடிவினில் வந்து நின்றாள்.
பையனாய் ஊர் சுற்றிப் பள்ளிசென்று சிலர்
பாய்ச்சிய கூர்சொற்கு அஞ்சி நிற்க ஜய புதல்வ அடுக்காது பயம்
அற்பர்க்கு வாய்த்ததோர் சொத்திதென்று நையப் பயத்தினைப் போக்கிவிட்டாள் ஞால
நாயகியாகவுந் தோற்றிவிட்டாள் கையைக் குவிக்கிறேன் காளி யுன் றனிரு
காலணி மேவிய வீரத்திற்கே
வேலற்கு வீரத்தை ஈய்ந்து பின்னேயொரு
வேலினைக் கையிலே தந்து சொன்னாள் ஞாலத்தில் வீரத்தை நாம் விதைத்தோமென்ற ஞாபகம் யாவர்க்கும் தோற்ற வொரு கோலத்தைக் கொள்ளவே வேண்டு மென்றே குன்றக்
கோட்டத்துக் கேசனுக் காணையிட்டாள் சீலத்தை எண்ணி வியந்தெழுந்தேன் என்னைச்
சேர்ந்த பயமும் கலைந்ததம்மா.
22
அங்கையன் கவிதைகள்

கொற்றவை நற்கவி கொண்டிடுவாள் அன்பர்
குற்றங்கள் யாவும் பொறுத்தருள்வாள் பற்றையுள் தங்கிய பாம்பினமும் பழம்
பாறையுட் சென்றுறை கூகைகளும் இற்றரை மக்களின் ஏற்றமற்றோர் பெரும்
இடர் விளைத் தின்புறும் எத்தர்களும் கற்றையாய்க் கொன்று குவிபடவே அன்னை
காட்டினாள் ஒர்வழி வீரமதே.
ஏற்றம் எனக்கிங்கு உற்றதனைக் கண்டே
ஏங்கி மனத்திடை வீங்கிய பேர்களும் சீற்றம் நனிகொண்டு செய்தனர் தீமைகள்
செத்து மறையச் செய்தவள் அன்னையே நாற்றம் நிறைய அடிக்கும் சமூகக் குறைகளை நானே யகற்றிக் குழியில் இடும்வரை நோற்றவள் துர்க்கையாம் அன்னை அவளருள்
நோன்றிடல், நோற்றிடல் செய்த தவப்பயன்.
மன்னர் படையொடு வந்தெதிர் கொள்கையில் மாதாவெனக்குப் பலங் கொடுத்தாள் தென்னர் பலமொன்று சேர்ந்தது போலவர்
தோள்வலி மண்ணிடை வீழவைத்தாள் கன்னல் தமிழில் கவிசமைக்கும் திறல்
காட்டி எனக்கவள் வீரத்தினைச் சொன்ன முறைகளில் மெய்ம் மறந்தேன் - இந்தச்
சேதி தனை எந்த ஊரறியும்?
அங்கையன் கவிதைகள் 23

Page 20
பூவுடை வேந்தர்கள் பூரிப்பிலும் அவர்
போற்றி நடமிடும லாரிப்பிலும் நாவுடைச் செய்யுள் பல கொடுத்தாள் அன்னை
நானதைக் கொண்டனன் வேற்படையாய் பாவுடை யாரெவர் பக்கத்திலும் சற்றும்
பயமழித் தென்றனை நிற்க வைத்தாள் காவுடை நன்மலர் தூற்றி எந்தன்
காளி நலம் பல சாற்றிடுவேன்.
(சக்திகளுட் செல்வச் சக்தி லகூடிமி. செந்தாமரைக்கு மட்டுமன்றி, சிந்தனையில் நிதம் துதித்து வந்தாருக்கும் வரமருளும் தெய்வம். aga/76)/øpüb 9/gpõ60 uu அன்னங்களும் பெயரா நிலைபெற்ற பேறுடைய அழகுடையாள் லசஷ்மியின் பெருமை லட்சத்தில்
9/Usii/guda)
ஒட்டைக் குடிசையில் பெய்த மழைவெள்ளம்
ஒடிக் குடிசையை சோர நனைந்திடப் பாட்டைப் படித்தனன் பாருளோர் வாழ்வினிற்
பாதியும் அற்றதோர் பாவிமகன் நாட்டைக் கலக்கிய பேயென வந்ததே
நாதியுங் கெட்டுக் குளிரில் நடுங்கினன் வீட்டிற் புகையெழவில்லை மனத்தினுள்
வெம்மை மிகவெழ வாடி நின்றேன்.
24 அங்கையன் கவிதைகள்

சூரியக் கதிர் பூமியிலும் என்றன்
சுந்தரக் குடிசையின் கூரையுள்ளும் வீரியம் காட்டிய கோலமென அங்கு
வீழ்ந்து விளையாடிய வேதனையில் மாரியும் பெய்தது மக்கள் மிரண்டனர்
மாசற்ற சேயிழை தானு மிரங்கிலள் சேரியைப் போலென்றன் வாழ்வு மிருளவே
செல்வ மகள் தன்னை வேண்டி நின்றேன்.
தாமரைப் பூவினில் வீற்றிருந்தாள் திரு தாவி யணைந்த தனி மகளே ஒரு பாமரன் போல் விழி நீரு முதிர்ந்திடப்
பாடிப் பரவி மனமுருகிச் சில சேமமெனக் கினி வேண்டுமம்மா எந்தன்
செல்வவளங்கள் பஞ்சமே போக்கிடவே தாமதியாய் தாயே தாள் பணிந்தேன் பொருள்
தந்துமே ஆட்கொள்ள வேண்டுமென்றேன்.
பூ மகள் என்றன் புலம்பலைக் கேட்டனள்
புன்மை மிடிமையைப் போக்க அவாக்கொண்டே கோமகள் கோலத்தைக் கொண்டே எழுந்தங்கு
கொட்டினள் செல்வங்கள் கோடி குவிந்தன பாமகள் என்றுமே பாடிக் களித்தனன்
பாரின் வறுமைகள் பாய்ந்தே பறந்தன சீர்மிகு தேவியின் நாமத்தைப் பாடியே
சிந்தை செழித்து மகிழ்ந்து சிறந்தனன்.
அங்கையன் கவிதைகள் 25

Page 21
அன்னப்புள் போல் நடை கொண்டவளாம் திரு
ஆவணம் பூமணம் கண்டவளாம் வன்னப் பொற் பாவை யுருவுடையாள் அவள்
வாயிதழ்ச் செம்மையில் தேனுடையாள் கன்னற் குரல் மொழி மாதரசி யவள்
காட்டிய நல்வழி ஆயிரமாம் மன்னர்க்கும் ஈடான செல்வம் படைத்தவம்
மாதினை நாளுமே ஏத்திடுவோம்.
வண்ண நறுங் காவினைத் தந்தனள்
வாழும் புள் பூங்குயில் என்று படைத்தனள் கண்ணினுக் கெட்டாத தூரத்த தாயொரு
கட்டிடம் செய்தனள் சோலை அமைத்தனள் நண்ணிப் பறந்திடி வாகனம் நாற்படை
நாதங்கள் கேட்டிடத் தேவர்தம் கூட்டங்கள் எண்ணக் கடலினுள் நீந்திக் களித்தனன்
எங்கினி என்றனை ஒப்ப நிலைப்பவர்?
காணி நிலத்தினில் ஏர்கள் உழுதன
காணுமிடங்களில் பேரும் நிலைக்கவே தோணிகள் ஒட்டியே தோகையரோடுமே
துய்த்தனன் இன்பங்கள் கோடி பல்கோடியே நாணிப் புறந்தந்தாள் நாயகி தானுமே
நானும் விடவில்லை அன்னாளைப் பாடவே மாண் இங்கனே இந்த மானிடர்க் கேதுகாண்?
மாட்சியதுவன்றி வீழ்ச்சி இனியில்லை !
26
அங்கையன் கவிதைகள்

சாலைகள் தோறு நல் லாலைகள் கண்டனன்
சாத்திரம் நாட்டிய சாலைகள் கண்டனன் வேலைகள் ஆயிரம் பேர்க்குமே ஈய்ந்தனன்
வேய்ங்கனி மாதவள் காதன் மகிழ்ச்சியில் நூலை நுகர்ந்தவர் நோய்களில் மாய்ந்திட நூறு மருத்துவ சாலைகள் கண்டனன் பாலைப் பொழியும் நிலவு முதல் இந்தப்
பாரின் நிழல் வரை என்னதாய் ஆக்கினள்.
தேவியைப் பாடுமோர் தெய்வக் கவிதையைத்
தேன்தமிழ் தன்னிலே ஊற்றியளித்திட ஆவி துடித்தது ஆங்கவள் பேரினில்
ஆயிரம் ஆயிரம் தேனிசை பாடினன் மேவி எழுந்தன இன்பமும் மேன்மையும்
மேதினி மக்களும் மெய்ம்மறந் தார்த்தனர் கூவி யழைக்கிறேன் தேவியே வந்தருள்
கும்பிட்டிருப்பனே கோடி பலகாலமே.
(நாவிலுறைந்து நந்தமிழின் மேன்மையைப் பாவில் வடிக்கச் செய்யும் பழந்தமிழ்த் தெய்வம், நாமகள் : சாவிலும் அதன் பின்னும் கவிச்சாத்திரங்கற்றவர், பேரைநிலைக்க வைக்கும் பெருமையுடைய, பால்மணம் பெறவைக்கும் நாயகியாம்
சரஸ்வதியைச் சரண் புகுவோம்.)
அங்கையன் கவிதைகள் 27

Page 22
ஊருக்குள்ளே யன்றொரு நாளினிலே எங்கள்
ஊரவர் யாவரும் கூடி நின்றார் பாருக்குள்ளே கல்வி மேன்மையிலே பல
பட்டங்கள் பெற்றவர் பேசிடுவார் நேருக்கு நேரிதாய் கண்டு களித்திட
நின்றே தவமொன்று செய்தனர் காண் சீருக்கும் கல்விக்கும் சின்மை யறிவினன்
சேர்ந்தே தவமங்கு செய்திருந்தேன்.
கல்வியைக் கற்றவர் பட்டங்கள் பெற்றவர்
காசினி வாழ்வில் தலை நிமிர்வார் என்று சொல்லிய அன்னையோ சோற்றுக்கும் நோற்பவள் சோர்ந்து விட்டேன் கல்வி தீண்டுதற்கோ நல்லியல் அற்றவன் என்ற நினைவினில்
நான் அழுதேன் இந்த நானில மீதினில் கல்வியைப் போலொரு செல்வமுண்டோ?
கேட்டுக் கவன்றனன் நிதம் கவன்றனனே.
இப்படி நாட்கள் கழிகையிலே ஒர் நாள்
இன்பத் தமிழினில் நூல்கள் பல செப்பிய பாவலர் யார்க்கும் ஒரு
தெய்வத் தருள் வந்து சேர்ந்ததனால் செப்பினர் ஆயிரம் செய்யுளென்றார் நானும்
சேயிழைத் தெய்வத்தை வேண்டினனே அவள் கப்பிய என்னிருள் போக்குதற்காய்க்
காட்டினள் கோலம் நான் கண்டு மயங்கினேன்.
28
அங்கையன் கவிதைகள்

விண்னெழுந்த பறவைகளின் ஒசை தன்னில்
விரித்துவைத்த புல்லாடை தன்னில் இந்த மண்ணெழுந்த காட்சிகளில் மாதர் தம்மில்
மனமயக்கம் கொள்ள வைத்தாள் கவிஞனானேன் பண்ணெழுந்த தம்மா இப் பாரைப் பாடப்
பாவெழுந்த தாங்கே என் நெஞ்சந் தன்னில் கண்விழுந்த நீர் கண்டு கலங்க வில்லைக்
களித்திருந்தேன் கலைமகளின் அருளை நச்சி.
சிற்றாடை வெள்ளலைகள் போற் சுருண்டே
சிற்றிடையைச் சுற்றி வர அன்னஞ் சூழ பொற்றாமரைக் குளத்தே வீற்றிருந்தாள்
பொங்கி வரும் எழில் கண்டு பூரித்தேனே கற்றாங்குழல் மார்பில் துவண்டு வீழக்
கடைவிழியால் எனைக் காதல் செய்தாள் ஆங்கே உற்றனனே நோய் வாயில் என்ன செய்வேன்
உனையன்றி யாருளரோ? கலையே என்றேன்
வீணையினக் கைநடுவில் ஏந்தி என்னை
விழியுயர்த்திப் பார்த்தாளேபார்வை தன்னில் நாணில்லை; உரிமையுடன் நவின்றாள் கன்னி
நானழிந்தேன் என்நிலைமை அவளின் நோக்கில் தேனென்ன இசையங்கு பிறந்தபோது
தேகத்தில் குளிர் கொட்டத்திகைத்தேன் அங்கே மீனென்ன விழியுடையாள் இசைச்செந்தேனில்
மீனென்ன நீந்தியதோர் கோலங் கண்டேன்.
அங்கையன் கவிதைகள் 29

Page 23
ஆற்றங்கரை தன்னில் அமைந்ததோர் மண்டபத்தில்
ஆங்கவள் சென்ற மர்ந்தாள் சேற்றைக் கடந்தொரு செந்தாமரை பற்றிச்
சென்றேன் அவளின் பின்னால் காற்றைப் பிழிந்ததோர் அமைதியிலே - அவள்
கண்மூடி நிற்கையிலே, நான் தோற்றமினியவத் தோகையின் தோகையிற்
சூடி மகிழ்ந்திருந்தேன்.
கன்னி நிலவே கவிதை அழகே கற்பகப் பூங்கொம்பே உன்னை நினைத்து ஒரு கோடி தவஞ் செய்தேன்
உன்னருள் கிட்டுதற்காய் என்ன தவமோ ஏந்திழை சிரித்தாள்
என்னை மறந்தனனே கன்னி முகத்தைக் கையுட் கிடத்திக் காதல் செறிந்து நின்றேன்.
கொண்டேன் ஒரு வெறியே கோமளமே நித்திலமே விண்டேன் என வந்த வித்தகியே உன்னையன்றி அண்டேன் ஒரு தெய்வம் ஆரணங்கே பேரழகே என்றேன் அவளெழுந்து ஏகினளே பின் தொடர்ந்தேன்.
அன்ப என அழைத்து அடியவன்றன் கைபற்றி என்புகள் நிலைபெயர என்னெற்றி தடவியவள் இன்பமே என்றும் இருக்கப் பெறுதி யெனில் துன்பத்தை விட்டே துரங்கவிதை செய்தி என்றாள்.
30
அங்கையன் கவிதைகள்

செந்தமிழின் சீரும் சீரறியுந் திறனும் நொற்திருந்து கற்காதான் நோய் மிகுந்தேன் ஆதலினால் செந்திருவே கலைமகளே செழுங்கவிதை செய்வதற்கே வந்துற்றே னுன்னை வரமே எனக்கருள்வாய்.
என்று புலம்பி ஏந்திழையாள் மெல்லிடையிற் சென்று வலம் வந்தேன் சீச்சி விட்டுவிடும் என்று சிணுங்கி எனைப் பார்த்துச் சிரித்து நன்றே தருகின்றேன் நற்கவிகள் என்றனளே
பெற்றவள் தந்ததோர் முத்தம் போன்றும்
பெரியவர் தட்டிய செல்லம் போன்றும் உற்றவள் மகவுமுன் நாணி யீய்ந்த
உறுமன்புச் சின்னத்தைப் போன்றும் நானே இற்றைநாள் அறியாத இன்பமொன்றை
இருநொடிக்குள் ஈய்ந்து பின் மறைந்துவிட்டாள் சுற்றுமுற்றும் பார்த்தேனோர் சேதியில்லை சுந்தரியும் போனவழி ஏதோ? ஏதோ?
ஏங்கியதோர் நெஞ்சத்தை இறுகப்பற்றி
இருந்திட்டேன் மண்டபத்து மேடை மீது ஓங்கியதேஉன் வெறியில் கவிதை ஒட்டம்
உடைத்தெறிந்து புரண்ட தம்மா களித்து நின்றேன் பாங்கிலுறைந்து பழந்தமிழின் தேன் சுவையைப்
படித்துக்கொடுக்காமல் முத்தம் தாங்கியிரு என்றென்னைத் தனியே விட்டே
தனிமகளும் போயினளே, பாடுகின்றேன்.
உங்கையன் கவிதைகள் 3.

Page 24
என்னெஞ்சு குளிர்தற்காய் ஏந்திழையே பாடி வந்தாள் நன்னெஞ்சுக் கவிதையினை நான் கேட்டு மகிழ்தற்காய் வன்னெஞ்சும் குளிர்மையுற வான் மழையும் நிலைவு பெற என்னென்பேன் அக்குரலோ இனிய தமிழ்த் தேன் கரும்பு.
(சக்திதனை மூன்றாக வகுத்துக் கண்ட, ஜகத்தினுக்கு ஈய்ந்தோம் நம் பாக்கள் தம்மை, பக்தி நெறிதழைக்கவிஷ் வையமெல்லாம், பார்புகழும் பெண்மை நலம் ஓங்க!ஒாங்க!, எத்திசையும் தமிழ் பரவும் பாடலெல்லாம், இசையோடு ஒலிக்கின்ற காட்சி கண்டே, நித்திரையில் விழிப்பதனில் நினைவில் இன்பம், நெடுநாட்கள் நினைத்திடுக வாழ்க! வாழ்க!)
వ4
4
వ4
ఎడ
1.
w
/
N
ஒலிபரப்பு : 16.10.1972 - தமிழ் ஆசிய சேவை
16.10.1972 - தமிழ் வர்த்தக சேவை
32 அங்கையன் கவிதைகள்

அங்கையன் கவிதைகள்
33

Page 25
34
அங்கையன் கவிதைகள்
 

எண் இதயத்தின் ஒளியே
கTTலை மலரே கனிவுடைய செண்பகமே சோலைக் குயிலே சுவைநிறைந்த தேன்பழமே வேலைப் பழிக்கும் விழிபடைத்த பொற்குடமே நூலைப் பறித்து நுண்ணிடையில் ஏன்வைத்தாய்?
ஆனந்த ராகத்தின் அற்புதத் தேனிசையே நானந்தப் பொருளென்றே நாவாற் சுவைதருவாய் தேனுந்தன் இதழென்றே தெவிட்டாத இதமளிப்பாய் ஏனுந்தன் இதழ்ச்சிவப்பை விழியேற்றுக் கொண்டதுவோ?
அன்னம் நடைநடக்கும் உன்னடையைக் கண்டதனால் ஆதவன் ஒளிபெற்றான் உன்னெழிலைக் கேட்டதனால் தென்னன் தமிழ்நிலைத்தாள் உன்குரலின் இனிமையதால் இன்னும் எதைச் சொல்ல என்னிதயத்தின் ஒளியே?
Gallas
களிகொண்ட மனதின்று கவியொன்று பாடும் கனவென்று அதைநெஞ்சு கதிகொண்டு சாடும் அழிகின்ற வாழ்வுக்கும் அது தேவையென்று அலர்கின்ற நினைவங்கு அலைகின்றேன் நாளும்.
கடல்நின்ற அலைவந்து கரைகண்டு போக மலைநின்ற நீர்வந்து மடுகண்டு சாய கடலன்ன கவிகொண்ட கவிசொன்ன பாடல் நிலையென்ன இனியென்று நிலை கொள்ளலாமோ.
அங்கையன் கவிதைகள் 35

Page 26
மண்ணின் புதுமைகள் AATe AeATe eeAAYeAAeA AeeeLYSAAMAYeA YeSAeASAAYeSTAMSe YeYeeAYLS AYeeSAaASYeezYeL YSYYLL LAYAS
சின்னக் குமரியின் வண்ணக் கதுப்பினிற் சிந்திய முத்துக்கள் எத்தனையோ? - அவள் எண்ணத் தகிப்பினில் நண்ணிப் பறந்திடும்
வண்ணக் கனவுகள் எத்தனையோ?
பின்னற் சடைதனிற் குத்திய பூக்களிற் பின்னும் விழிகளும் எத்தனையோ? - அவள் அன்ன நடையினை அள்ளித் தொடர்ந்திடும் ஆசை மனங்களும் எத்தனையோ?
கன்னி மனத்தினை எண்ணித் தவித்திடும் காளைகள் நெஞ்சமும் எத்தனையோ? - அவள் கன்னக் குழியது சொன்ன கதைகளைக் கண்டு களிப்பவர் எத்தனையோ?
காதல் மலரன்ன மோக முகைவிடும் காரிகை ஆசைகள் எத்தனையோ? - அதில் சாதல் முடிவென்றே சாற்றிய போதிலும் சார்ந்து சிறப்பவர் எத்தனையோ?
கன்னற் குரலினிற் காலங்கள் போக்கிடக் காத்துக் கிடப்பவர் எத்தனையோ? - அவள் காலடி மேவிய பாதையிற் போய்விழும் காதலர் பூமியில் எத்தனையோ?
36
அங்கையன் கவிதைகள்
 

பெண்ணைப் படைத்தவர் யாரெனக் கேட்டவர் பேசித் துடிப்பவர் எத்தனையோ? - மனப் புண்னைப் புரைவிடச் செய்திட்ட பூவையாற்
பொன்றத் துடிப்பவர் எத்தனையோ?
மண்ணிற் புதுமையாய் வந்திட்ட மாதவள் மாண்புக் கலைகளும் எத்தனையோ? - கொடுஞ் சுண்ணக் கலவையுள் வீழ்ந்த புழுவெனச்
சுற்றிப் புரளுவோர் எத்தனையோ?
கன்னங் கருமிருள் மின்னிய மின்னலாய்க் காடதிற் கண்டதோர் பாதையுமாய் - தினம் மின்னிக் கிடக்குமோர் பெண்ணையன்றி யிந்த
மேதினி வாழ்க்கையிற் கண்டதென்ன?
அங்கையன் கவிதைகள் 37

Page 27
சுனக்காதே நீ
உன்னை அழைத்தேன் ஒரு சொல்லும் பதிலில்லை பின்னைஒரு கணந்தான் பொறுத் திருந்தேன் கண்ணேநீ, போனதுவுங் காதமோ? அன்றி என்னே தூரம்? எனக்கொருக்காற் GeFT665 6SGL6óT? நீ என்று வரைந்தேன்கண் நீலநிறமாயினவோ? ஆ என்ற உன்குரலோ அறியேனே! ஏனோதான் சே! நீ பெண்ணல்ல பெண்ணென்றாற் பேசவரும் வா! என்ற போதேநீ வந்திருப்பாய் - நீ தெய்வம் ! உனக்காக உயிரிருக்கும் உறவிருக்கும் மொழியிருக்கும் சுணக்காதே நேரமில்லைச் சுறுக்காக வந்துவிடு! பிணக்கம் ஏன்? GolLu6oT Lou G36uo! உனக்காக இங்கொருவன் உலகமதிற் சுமையாக இருக்கின்றான்; நீயோ - எனக்காக வரவேண்டாம் தெய்வம் நான்! உனக்காக வந்துவிடு உறவு மலரும் - புத் துலகம் வளரும்!
38
அங்கையன் கவிதைகள்

தாமதந்தானே வருகை
'ఆడజాAPPA-F*గి
தாமதந்தானே வருகை தனிமையில் வாடிநின்றேன், காதலிது சோகந்தானே நீ வராத வாழ்வினிலே வேதனைதான் வாழ்வதாகும்
பூவந்த மான்விழியென் பொன்விளக்காய்ப் பொலியாயோ? நீ தந்த பேரொளியில் நெடுநிலவும் மயங்காதோ!
தனிமர நிழலில் நின்றாய் தங்கரதம் போலவன்றோ வருவாய் என்றிருந்தேன் வந்துஎனைக் காணவில்லை காதலே இதுவென்றால் கதிரவனும் பொய்த்திடானோ?
பெண்மையே பேருயிரே பேதலிக்க விடுதல் நன்றோ? உன்னையே நம்பியிந்த உலகமதில் நானும் வந்தேன் காதலே இருமையன்றோ காரிகையே கைகொடாயோ?
அங்கையன் கவிதைகள் 39

Page 28
வருஷம் முழுதும் மலர் சாற்றி - உன் வரவை ஒருநாள் எதிர்பார்த்தேன் பரிசம் ஏதும் இல்லையடி - என் பாவை எங்கோ மறைந்தனையோ?
முகிலில் மறைந்த முழுநிலவே - என் முன்றலில் மலர்ந்த மல்லிகையே அகிலில் எரியுந் தீபோல - என் அங்கம் எல்லாம் வேகுதடி
காதல் என்றால் கருவிருக்கும் - அந்தக் கருவில் ஏதும் உயிரிருக்கும் சாதல் ஒன்றே முடிவென்றால் - அந்தச் சாவுக்கும் ஒருநாள் சாவுவரும்
அன்பே தேனே அருமருந்தே - நெஞ்சில் அழியா இடத்தைப் பெற்றவளே என்பே உருகிப் போகுதடி - என் எதிரில் ஒளிரும் நாள் எதுவோ?
நம்பியிருங்கள் வருவேன் என்றாய் - அந்த நாளும் வந்தே போனதடி வெம்புகின்றேனே வேதனையால் - உன் விழிகள் ஒருநாள் திறக்காவோ?
40
அங்கையன் கவிதைகள்
 

பேசும் விழியே பொற்குடமே - என் பிறவிப் பிணி தீர்ப்பாயென்றே நேசம் கொண்டு நினைந்திருந்தேன் - அந்த நினைவுக்கும் முடிவு வைத்தனையோ?
வாழ்வுக் கடலில் ஒடமென - என் வளமார் துணையாய் நீவந்தாய் தாழ்வுக் கிணற்றில் தள்ளிவிட்டாய் - உன் தகைமை ஈதோ நானறியேன்
துணையாய் இருப்பாய் எனநினைத்தேன் - உன் துயரே துணையாய்ப் போனதடி பிணையாய் வாழ்வில் ஏதுமில்லை - என்
பிணையே வாழ்வு பிழைத்ததடி
என்றோ ஒருநாள் வருவாய்நீ - என் இதயம் அன்று நின்றிருக்கும் நன்றோ தீதோ நான்சொல்ல - முன் நாடி யாவும் அடங்கிவிடும்
அதனால் அன்பே கேள்ஒன்று - உன் அயரா அன்பில் திளைத்தவன்நான் இதமானால் நாம் இணைத்திருப்போம் - வேறு விதமானால் நாம் மறந்திருப்போம்.
NA/ Na \Y \/ NA/ ※ aw ※ ※ ※
அங்கையன் கவிதைகள் 4

Page 29
பாரினில் ஊர்வலம் போகுமடி
சித்திரைத் திங்கள் பிறக்குமென்ற இன்பச்
செய்தியைக் கேட்டுளம் துள்ளுதடி - நல்ல
நித்திரையும் பெரு நிம்மதியும் வந்து
நெஞ்சை நிறைக்கின்ற வேளையடி - மணப்
பத்திரிகை அச்சு வாகனத்தில் ஏறிப்
பாரினில் ஊர்வலம் போகுமடி - வாய்
முத்திரையில் கன்னம் முண்டிச் சிவந்திட
மூச்சுக்கள் வெந்து முயக்கம்பெற - இன்பம்
அத்தனையும் ஒன்றும் ஆட்சியிலே பெண்மை
ஆடி உறங்கிடும் போதினிலே - தோழி
கத்துங் குயிலதன் கன்னற் குரலினில்
காதன் மொழிகேட்டுக் காக்களெல்லாம் - மலர்
மொத்து மொத்தாகவே முன்னசைந்தாடிட
மூழ்கிடுவோம் மஞ்ச நீரோடை - நம்
சித்தங் குளிர்ந்திடப் பாலித்த தெய்வத்தை
செந்தமிழால் ஏத்திப் பூசையிட்டு - கன்னித்
தத்தம் அளித்தவெம் தாய்தந்தையர் பேணி
தாலியைத் தந்தவர் மேனியிலே - பணி
முத்தங்கள் பெய்து முறைக்கொண்டு வாழ்ந்துமே முன்னைப் பழமையை மீட்டுவந்து - மேலைத்
42 அங்கையன் கவிதைகள்
 

தத்துவத்தால் கெட்டுத் தம்மை யழித்திட்ட
தாய்மொழி மாதரைப் போலவன்றி - இப்
புத்தாண்டுபோல் நூறு புகழாண்டு தோற்றிட புண்ணியங் கோடிகள் செய்வோமடி!
பண்ணொடு மண்ணினிற் பாதம் வைத்தேஎழில் பாவையர் ஆடிடும் ஆட்டங்கண்டேன் விண்னொடு சாய்த்தேனும் வீங்கிளையார் - கொண்ட
வேட்கையை ஈடேற்ற வேண்டுமென்றே
மன்னனாய் நடைபோட்டு வந்தேன் அந்தமருள் மான்விழிக் கூட்டத்தை அண்டி, இரு
கண்ணொடு கண்ணினை நோக்கி நின்றேன் - அவள்
காதலைக் கைப்பற்றி ஆளுகின்றேன்.
பெண்ணொடு வாழ்க! அன்றி மற்று - ஒர்
பேறதைப் பாரதிற் கண்டவர் யார்? எண்ணுக வையகம் எம்முடைமை - அதில்
ஏற்றமுற ஒரு பெண் கடமை !
அங்கையன் கவிதைகள் 43

Page 30
காதல் பறந்ததம்மா
அன்ன நடையினில் ஆவி கலந்திட
அள்ளிப் பருகி நின்றேன் - கரும்
பின்னற் சடையினில் பெய்மலர் கண்டுமே
பின்னும் அருகிற் சென்றேன் - அவள்
என்னை உறுவிழி உற்றுக் கலந்ததும்
எண்ணக் கட லமிழ்ந்தேன் - என்
கண்ணை அவள்வழி விட்டதும் ஆங்கவள்
காதலுக் கேங்கி நின்றேன் - வீதித்
திண்ணை மருங்கினில் தேனாறு பாய்ந்ததும் தித்தித் தடங்க லுற்றேன் - இதழ்ப்
பண்ணையில் ஊறிய பாலமு தாயவள்
பற்கள் துலங்கிக் கண்டேன் - இனி
என்ன அவளென்னில் ஆசைகொண்டா ளென்று அள்ள நெருங்கிச் சென்றேன் - அவள்
என்ன இதுஇங்கு எப்படி வந்தது?
என்று குரல் கொடுத்தாள் - நான்
என்னை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தனன்
எங்கும் எதுவுமில்லை - பின்
கன்னத்தில் வெட்டிய மின்னலைக் கண்டதும்
காதல் பறந்த தம்மா - அவள்
கன்னித் தமிழ்மகள் என்றுமே கண்டதும்
கருணை மலர்ந்த தம்மா.
44
அங்கையன் கவிதைகள்

திரும்பாதோ?
அன்பும் பண்பும் அணியாகி - நல் அடக்கம் இனிமை மொழியாகி இன்பம் ஒன்றே என்றும் - என இருந்தாள் இன்று மறைந்தாளோ?
முகிலைக் குழலாய் முடித்தவளை - சொல் மழையைத் தேனாய்த் தந்தவளை அகிலைப் போலே ஒளிவீசும் - அவள் அடைந்த திசையை அறிவேனோ?
நெஞ்சில் அன்பாய் நிறைந்தாளே - என் நினைவின் நிழலாய் மலர்ந்தாளே அஞ்சி ஒடுங்கும் அவள் நடையை - நான் அருகில் இருந்து காண்பதெப்போ?
உள்ளம் இணைய உடல்பிணைய - எம் உறக்கம் நீளும் கிறக்கத்தில் கொள்ளும் அன்பின் சுமையிங்கே - இனிக் குறையும் நாளும் வாராதோ?
ஆடும் அழகில் அவளிருக்க - கண்டு அரங்கை நெஞ்சில் அமைத்தளித்தேன் தேடுங் கண்கள் அவளின்றி - இமை திரும்ப உறக்கங் கொள்ளாவோ?
காற்றிற் கலந்தாள் கீதம்போல் - நடுக் காட்டில் எரிந்தாள் பிணத்தைப்போல் சேற்றில் விழுந்த நறுமலரின் - மனச் சுகந்தம் இனியும் திரும்பாதோ?
அங்கையன் கவிதைகள் 45

Page 31
மழை சிந்தும் கடலோரம் இள நண்டு படம் கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதம் உந்தன் நினைவூறும்
கலை கண்ட உருவாகிக் களி கொண்ட நிலவே உன் கழல் சிந்தும் ஒளி கண்டு கவி யென்று மகிழ் வேனே
நிலைமாறும் புவி மீதில் நிதி யாக வந்தாய் உன் நிழல் மீது என் வாழ்வும் நிலை யாகு மென் பேனே!
خویش به
அங்கையன் கவிதைகள்
 
 
 

காதல் கீதம்
6ாங்கோ தொலைவில் நதியோரம் எனக்காய்ப் பூத்து மணம் பரப்பி வெங்கா னத்தில் விளை மனத்தை விதைக்கும் வண்ண நறுமலரே இங்கே உனக்காய் உலகமதில் இருக்கும் ஒருவன் நினைவுனக்குத் தங்கா திருக்கும் புதுமையினைத் தனியேன் எண்ணித் தவிக்கின்றேன்
கோடி மலைகள் படர் தொடரில் குலவித் திரியும் மென் காற்றில் ஆடி அசைந்து உடல் வருந்தி அலைபோல் இன்பம் பெறுகின்றாய் பாடித் தணலிற் பாகாகிப் பரிவின் தவிப்பில் பதைக்குமெனைக் கூடி மகிழ்ந்தால் உன் வண்ணம் குறைந்தா போவாய் சொல், மலரே!
சிந்தும் உன்றன் வண்ணந்தான் சிதறிப் போகா திருக்கவெனச் சிந்தும் எந்தன் கண்ணிர்க்குச் சேர்ந்த வடிவம் கவிதையடி ! எந்தன் மலரே! இளமனமே என்னுள் உயிராய் இருக்குமுனை வந்தங் கொலிக்கும் காதல்தன் வடிவக் கீதம் வருடாதோ?
அங்கையன் கவிதைகள் 47

Page 32
சுகம்
கண்ணுக்குள் தவழ்ந்துவந்த ஒவியமே - என் கருத்துக்குள் மறைந்து நின்ற காவியமே பெண்ணுக்குள் புகுந்துவந்த போதிலும் நான் - உன் எண்ணத்துள் நீந்திடத் துடிப்பேனடி !
வாழ்வது உனையன்றி வேறுஇல்லை - உன் வரவது தவிர்ந்தங்கு பாதை இல்லை சூழ்வது உனையன்றிச் சுற்றம்இல்லை - என்
ககத்துக்கு உனையன்றி யாரும் இல்லை
கரும்பென்றால் உன்குரலின் கனிவு அன்றோ? - இரு கயலென்றால் உன்விழியின் சாயலன்றோ? அரும்பென்றால் உன்முல்லைக் கோலமன்றோ? - என்
அறமென்றால் உன்னோடு வாழ்தலன்றோ?
அங்கையன் கவிதைகள்
 

49
அங்கையன் கவிதைகள்

Page 33
50
அங்கையன் கவிதைகள்
 

மணிக்குரல் ஒலித்ததே
ஓ! மணிக்குரல் ஒலித்ததே ! நினைத்ததும் உணர்ந்ததும் மணந்ததும் நடந்ததே! ஆ1 ஆ! அது இனிமை
பொன் நிகர்த்த நம்கனாக்கள் கைகூடும் நாளிதே - கனிந்த கன்னி வாழ்விலே நினைத்தவர் அகத்திடை சுகித்திடும் முகூர்த்தமே !
நல் வாழ்க்கையின் இன்பம் ஈடேற்றும் ஒசையே - குழந்தைச் செல்வம் வீட்டிலே ! களிப்பிடை உதிர்த்திடும் சிரிப்பினில் ஒலிக்குமே !
அங்கையன் கவிதைகள் 5

Page 34
அத்தானைப் போலவொரு கோலம் - என்
அன்பே நீ தந்தாய் எந்நாளும் அத்தானைப் போலவொரு கோலம்
பித்தானேன் உன்னழகைக் கண்டு - நான் பெற்றேனே பேரின்பம் இன்று முத்தான உன்முகத்தின் பிம்பம் - வான
முழுமதியம் பெற்றதுதான் இன்பம்
கையசைவோ பெய்மலர்கள் வாங்கும் - சிறு கால்நடையில் என்நினைவு துரங்கும் மைவிழிகள் அன்னைமுகம் பார்க்கும் - அந்த மயக்கத்திலே என்வாழ்வு பூக்கும்
பெற்றேனே பிள்ளையென உன்னை - வாழ்வில் பெற்றதொரு பேறுமினி என்னே முற்றாத இளமுகையே தேனே - என் முழுவாழ்வும் நிறைந்ததுவே மானே.
※ g
g
※
52
அங்கையன் கவிதைகள்
 

பட்டு இதழ் விரித்து - சிரிக்கும்
வட்ட முகம் அனைத்து - நான்
தொட்டு மகிழ்ந் திருப்பேன் - உனைத்
தெய்வம் என உரைப்பேன்
வட்ட நிலா முகமும் - நெஞ்சில்
வாஞ்சை எழும் சுகமும் - உன்னைத்
தொட்டதால் வந்த தம்மா - சுவை சொட்டிடும் தேன் பழமே
கான மயில்களின் ஆட்டம் - உன்றன்
கைகளிலே அங்கு தோற்றும் - தேவ
காணக் குயில்களின் பாட்டும் - நிந்தன் கிள்ளை மொழிநினைவூட்டும்
தத்தித் தவழ்ந்து நீவந்து - எந்தன்
தாடை முகமெலாந் தந்து - முத்தம்
தித்திக்குதா என்று கேட்கும் - விழி
தேன்மலர் போலெனைப் பார்க்கும்
தெய்வங்கள் ஆயிரம் உண்டு - ஒரு
தோற்றம் இதுவரை கண்டு - நான் உய்வனென்றே மனம் கொண்டேன் - அதை
உன்வடிவு தன்னிற் கண்டேன்
அங்கையன் கவிதைகள் 53

Page 35

:
གྱི་
凌。
அங்கையன் கவிதைகள் 55

Page 36
56
அங்கையன் கவிதைகள்
 

பூவிட்ட கோவில் வாசல்
வள்ளியே முருகா என்றே
வழங்கு நற்பெயரை இன்றே எள்ளியே நகைக்குஞ் சைவர் இருக்கின்ற உலக மீதே வள்ளியும் முருகன் தானும்
வாழ்வுறக் கொண்ட பேரார் மெள்ளவே தள்ளப் பட்டார்
மேதினி நீதி யீதோ?
கந்தனை வேலன் தன்னைக்
கைதொழு தரற்றி, நாளும் நிந்தனை செய்யுஞ் சைவர்
நிலமது நிலவுஞ் சூழல் தந்தனை முருகா வுன்னைத்
தாள்பணிந் தேற்று வோர்கள் “கந்தனை” “வள்ளி” தன்னைக்
காறியே உமிழ்வ தென்னே !
வள்ளியைத் தெய்வ மென்று
வணங்கிடும் வாய்மை மக்கள் “வள்ளி”யைத் தள்ளி நிற்கும்
வகைமையை என்ன வென்போம் கொள்ளியை எடுத்துச் சைவக்
கொள்கையைக் கொல்வோர் தம்மை அள்ளியே எரிக்க வன்றி
ஆவது வேறொன் றுண்டோ?
அங்கையன் கவிதைகள் 57

Page 37
கள்ளுண்டு நல்ல சோற்றுக்
கறியினுக் கலைந்து கற்றா உள்ளுண்டு வெட்டிப் பங்கு
உவப்புட னிட்டு வீட்டில் மெள்ளுதல் செய்யுஞ் சைவ
மேன்மைகொள் மக்கள் மேனி
ஒள்நுதல் நீறு தோற்றும்
ஒப்புவீர் ஆக மத்தில்
பிறப்பினால் ஒப்பர் எல்லாம்
பிதற்றிய வள்ளு வத்தை மறப்புயல் என்று ஏத்தி
மனத்திலிட் டுரைக்கு மாக்கள் பிறப்பினால் தாழ்ந்தா ரென்று பெரும்பழி சுமத்தி னாரே குறத்தியை மணந்த கோவே
குவலயத் தமைதி யென்றோ?
மாவிட்ட புரத்தில் வாழும்
மான்விழிக் கண்ணி வேந்தே பாவிட்டுக் கேட்ப தொன்று
பாரினிற் பொதுமை ஓங்க ஆவிட்ட சாணத் தாலே
அடிபடு முன்னர் நீயும் பூவிட்ட கோவில் வாசல்
பொறிந்திடத் திறந்தி டாயே!
※ ※ ※ ※ ※ YYYN محبرYN MYa YYYN M'N
58
அங்கையன் கவிதைகள்

தகைமையும் தமிழரும்
உழவுந் தொழிலும் உலகத்துயர உரங்கொண்டு பழகுந் தமிழிற் பயிற்றுங் கவிதைத் திறங்கண்டு சுழலுஞ் சுழலக் ககனத்திடையே போர்வென்று நிலவுந் தமிழர் நெஞ்சத்திற்கே நிகழ்ந்ததென்ன?
கங்கை முதலாய்க் கடாரமீறாய்க் கைக்கொண்ட சிங்கத் தமிழர் நாமென்றிருந்து சிலகாலம் அங்கை குளிர அலமந்தெழுதி அரற்றியதும் சிங்க அரசின் அடிமைக்கெனவே செப்பிடுமின்
மூன்று பிரிவில் முடங்கிக் கிடந்த முன்னவர்க்கு ஆன்ற பொருளை அருளி மறைந்த அவைப் புலவோர் தோன்றி யெம்மார் துயரங்களையத் துதிபாடி நோன்றா லன்றி நுகருந் தகைமை நேராதே !
பொய்யைக் கொன்று பொறாமை நீக்கிப் புகழ்ச்சியுடன் செய்வ தொன்றே சிறந்த தாமென் சிந்தைமிக உய்யும் வழியில் உவந்து கலந்து முன்னிற்பின் அய்ய தமிழர் அரிய தகையோர் ஆகாரோ?
தலைவ னொருவன் தரணி தனிலே தகைமையுடன் உலவி வருதல் உணராத் தமிழர் உறைவிடத்தில் சிலபேர் பொறாமைச் சிறுமைநோயாற் சிறப்பற்ற
உலவாக் கதைகள் ஒம்புங் காலம் ஒயாதோ?
அங்கையன் கவிதைகள் 59

Page 38
மாற்றம்
முன்னவர் போர்தொடுத்து மூவேந்த ராட்சி கண்டார் மன்னவர் ஆனோம்அந்த மகிமைகொள் மேடைப் பேச்சால் என்னதான் பழமைநம்முன் இருப்பினும் அதனை வீணே கன்னலென் றெண்ணி மாய்ந்து கண்டதுமேது முண்டோ?
ஆடையிற் றிப்பிடித்து அலமந்து நோவும்போது வாடையில் மெலிகின்றாளே வனிதையென் றலறும்மூட ஆடவன் நிலையையொத்த அரசியல் மாற்றியாங்கோர் கோடியி லேனும்ஆட்சி கொண்டிடுந் தகைமை வேண்டும்.
பிளவுகள் ஆகாவே
ടല്ലല്ലല്ല
பொருள்வளங் கலைவளம் மொழிவளம் - என்ற
புதுமைகள் பெருகுஞ்செந் தமிழர்க்கு
உருவளம் ஊர்வளம் ஒற்றுமை - அன்னார் உள்ளங்கள் மட்டுமே வேற்றுமை
அரசியல் ஞானத்தில் தந்தையோ - கொள்கை
ஆன்றநற் கட்சியைப் பேணுவான்
உருவினில் இளையவப் பிள்ளையோ - மற்று
இடர்தரு கட்சியின் அங்கமே
ARs அங்கையன் கவிதைகள்

இவ்வாறாய்க் குடும்பத்தில ரசியல் - இரு
பிளவினைப் பகைமையைத் தோற்றிடும் ஒவ்வாத நிலையினில் தமிழருள் - இன்னும்
எத்தனை பிளவுகள் கேண்மினோ
பள்ளர் நளவர் நற்பாங்கற்ற - இன்னும்
பறையர் உலுத்த ரென் றாயிரம் சொல்ல வொணாத சாதிகள் - நமைச்
சோதனை செய்கின்ற வேதனை
மெள்ள உரைத்திடப் போகுமோ - இந்த
மேதினி ஏடாக மாறினும் அள்ளக் குறையாத சம்பவம் - சாதி
ஆட்சியால் ஏற்பட்ட தீங்குகள்
சாதிப் பிளவு ஒருபுறம் - எமைச்
சாடும் கொடுமைகள் கோடியோ?
வாதிட்டுந் தீர்க்க முடிந்திடா - இந்த
வண்டமிழர்தம் பிளவுகள் !
மட்டக் களப்பினில் ஒர்குலம் -வட
மாநிலத் தோன்றலும் ஒர்குலம் வட்ட நிலாவினைத் தொட்டிடும் - வண்ண
மாமலை மக்களும் ஒர்குலம்
அங்கையன் கவிதைகள் 6

Page 39
எட்டுத் திசையிலும் நம்மவர் - எனின்
எங்கள் உதிரத்தார் என்றிடும்
நெட்டைக் கனவு நிலைத்திடும் - காலம்
நெருங்கி எமைவந்து சேர்ந்திடின்
பெட்டைக் கனவும் பலித்திடும் - தமிழ்ப்
பேதையர் வாழ்வும் உயர்ந்திடும்
விட்டுவிட் டாலோவில் வேதத்தைச் - சிறு விட்டிலும் எம்மை இகழ்ந்திடும்
சிந்தனை ஞானஞ் சிறந்தவன் - பெருஞ்
சேர்க்கைவிஞ்ஞானத்தைக் கண்டவன்
முந்தைப் பழமையை விட்டுமே - விதி
முந்திப் பழகிடல் வேண்டுமே
சாதி சமயப் பிராந்தியப் - பேதம்
சாற்றும் இலக்கியம் யாவையும் மோதி யொதுக்கி யகற்றியே - பொருள்
மேன்மைகொள் நாட்டினை ஆட்சியை
ஒதியுணர்ந்தவர் யாவரும் - முன்னே
ஒன்று திரண்டு படைகொளப்
பாதை வகுத்தலே நன்றுகாண் - மற்றுப்
பாழும் பிளவுகள் ஆகாவே.
62 அங்கையன் கவிதைகள்

வேதனைச் சிரிப்பு
2ジエージ
("சிரித்திரன் ஆசிரியர்திரு. சி சிவஞானசுந்தரம் தாம் வரைந்த ஓர் ஒவியத்தை என்னிடம் கொண்டு வந்து கவிச் சித்திரமாக்கித் தரும்படி கேட்டார். ஒடுங்கியதோர் பாதையோரத்தில் பசியால் நடுங்கும் ஒரு பெண். பக்கத்திலே அவளுடைய கக்கத்தைப் பற்றியவண்ணம், பாலுக்காக ஏங்கி நிற்கும் பான்மையையுடைய ஒரு பாலகன் ஒட்டைக் குடிசையின் கூரையின்மேல் அவள் உண்டுவிட்டு உதறும் கைகளைப் பார்த்து காத்திருக்கும் இரு காகங்கள். மழையைத் தாங்காதுவிட்டாலும் நிழலையேனும் கொடுக்கச் சக்தியுள்ளனவான
இரண்டு பெரிய மரங்கள். பொருளுடையோரின் இதயம் போன்ற மதிற் சுவர்")
வீர சுதந்திரம் வேண்டி நின்றோம் - பெரும் வீரரென்றே பறை சாற்றிவிட்டோம் ஆரமு துண்டவர் போலப் பத்தொன்ப தாண்டுகள் இன்று கழித்துவிட்டோம்.
பேரதோ வீரர்நாம் பின்னு மென்ன - எம் போலொரு வீரர்இப் பாரில்இல்லை சீரினைச் சொல்லவோ நாக் கூசும் - அதைச்
சிந்தையால் நோக்கிடிற் கண்கூசும்.
இங்கொரு காட்சியைக் காண்கின் றிர் - ஈழ அன்னையின் பிள்ளையாம் ஒர்ஏழை மங்கையின் ஒலமோ சோறு சோறு - என்று
மாய்ந்திடும் கோலத்தில் என்னஉண்டு?
அங்கையன் கவிதைகள் 63

Page 40
பக்கத்தில் கக்கத்தைப் பற்றி நிற்கும் - அவள் பாலற்குப் பாலுக்குப் பாதையில்லை வெட்கத்தில் மாற்றாரைக் கேட்க அஞ்சி - மீளா வேதனைத் தீயினில் வேவதுமேன்?
நன்றியை மூலமாய்த் தந்து விட்டு - அன்னாள் நல்துணை நாடிடும் நாயினுக்கும் ஒன்றிடத் திக்கேதும் இல்லாமல் - அந்த ஒடையில் துTங்கிடும் காகத்திற்கும்
உண்ணக் கொடுத்தவள் கையோ இன்று - இங்கு ஒடிந்து மடிந்து கிடக்கின்றதே எண்ணக் கொதிப்பினில் இக் காட்சி - எம்மை என்றுதான் விட்டுமே நீங்கிடுமோ?
மேடையில் திட்டங்கள் தீட்டிவிட் டோம் மேதினி மக்கள் உயரவில்லை - ஆனால் ஆடையில் மானத்தைக் காத்துவிட் டோம் ஆவது ஒன்றுமே இல்லைக் கண்டீர் - இனி
கோடையில் பெய்கின்ற வான முண்டு - ஒரு கொள்கையில் வாழ்கின்ற மக்களில்லை வாடையில் நோகின்றார் மக்கள் - இவர் வாழ்க்கையை ஈடேற்று வாருமில்லை.
64
அங்கையன் கவிதைகள்

இளைய ஈழமே எழுந்திராய்
இளைய ஈழமே எழுந்திராய் - உன்
இதய கீதமாய் மொழிந்திராய்
பழைய காலங்கள் புதியதாகு மோர்
பான்மை நோக்கிநீ நடந்திடாய் -
இளைய ஈழமே எழுந்திராய் - உன்
இதய கீதமாய் மொழிந்திராய்.
எங்கள் நாடிது பொங்கும் வாழ்வினைச்
சங்கநாதமாய் ஒலித்திடாய்
எங்கும் பொதுமையும் பொலிவும் நிறைந்திட
இங்குன் பணிதனை அளித்திடாய்
இளைய ஈழமே எழுந்திராய் - உன்
இதய கீதமாய் மொழிந்திராய்.
அங்கையன் கவிதைகள் 65

Page 41
கவலை மறையுதடா
சாதி யொழிந்த தடா - தீய சஞ்சலம் போன தடா நீதி ஜெயித்த தடா - நம்முள் நேர்மை தழைத்த தடா மேதினி யெங்கும் பொது மேன்மை பெருகு தடா வாதினி வேண்டோமே - எங்கள்
வாழ்வினைப் புதுக்கி விடு.
பாரதி சொன்ன வந்தப் List6titóOLD Gutg, LoLIT பாரினில் நல்லுடைமை பவனி வருகு தடா காரினில் மின் போலே
கவலை மறையுதடா ஆரினி எம்மை யெல்லாம் அழிக்க வல்லாரே?
(1962)
அங்கையன் கவிதைகள்

Gibj
ూభ్రజోత్తూభ్రూడ్ర*
நான் நினைத்த போது
நான் நடப்பதில்லை
வான் சிரித்த போது
வளம் பொழிவதில்லை
அன்பை ஏற்கும் நெஞ்சம்
அன்பு செய்வதில்லை
பண்பு பேசும் நெஞ்சம்
பழகிக் கொள்வதில்லை
ஏனோ இந்த நீதி
இவ் வையமீது மோதி
தானே ஆட்சி செய்து
தவிக்க விட்ட சூதோ?
அங்கையன் கவிதைகள் 67

Page 42
வைகறை நிலவு
சுடிவிக் களித்தவக் குயிலின் குரலிசை குன்றி மடிந்ததுவோ? - இப்போ குன்றி மடிந்ததுவோ? ஆவிக் கலப்பினில் அன்பு முகம்பார்த்தோர் அயர்ந்து துரங்கினரோ? நின்னை மறந்து தூங்கினரோ?
மோகனப் பெருவெளி மீதில் உலாவியே மோக ஒளி வீசி - உயிர்த் தாகக் குளிர் வீசி ஞானப் பழமென வந்து நடமிட்டே நயனக் கதைபேசி - காதல் நன்மை பலபேசி
காடும் நடுங்கும் கடுங்குளிர் தன்னிலே காற்றைத் துணைகொண்டு - கொடுங் கூற்றை எதிர்கொண்டு வாடும் நிலவேநீ வந்த வழியென்ன வாஞ்சையினாற் றானோ? - மன வாஞ்சையி னாற் றானோ?
வைகறைப் போதினில் வந்துநீ நிற்பதால் வாழ்த்துவாரில்லையடி - நிலவே வாழ்த்துவாரில்லையடி கையுறை வாங்கியே காரியம் பார்த்திடும் காசினி மக்கள் இவர் - தினம் காசிற்கு நெக்கும் இவர்
68
அங்கையன் கவிதைகள்

கன்னி முகத்தினை உன்னதாய்ப் பொய்கூறிக் கவிதை இயற்றி டுவார் - பெருங் கதைகள் அளந்திடுவார் பின்னை மகவிற்குப் பெற்றுமே தருவதாய்ப் பெருமை பேசிடுவார் - உன் பெருமை பேசிடுவார்!
கன்னங் கருமிருள் தன்னில் மயங்கியே கலங்கி நின்றார்க்கே - வாய் புலம்பி நின்றார்க்கே இன்னருளாய் ஒளி ஈய்ந்து மகிழ்ந்தனை என்னத்தைக் கண்டுவிட்டாய்? - உனை மின்னலைப் போன்று விட்டார்
பச்சை யிளந்தளிர் பாடும் இறகினம் பாரினில் உள்ள வெல்லாம் - மனுப் பாவியர் உள்ள மெல்லாம் இச்சையுடனுன்னை ஏந்திக் களித்துப்பின் ஏங்கித் தவிக்க விட்டே - வானில் ஏகமாய் நிற்கவிட்டே
நித்திரைச் சுக நிம்மதிச் சேர்க்கையில் நீந்திக் களிக்கின்றார் - நின் நினைவை அழிக்கின்றார் இத்தரை மக்களின் இந்நிலை கற்றிட எத்தனை நாள் வேண்டும்? - உனக்கினும் எத்தனை நாள் வேண்டும்?
அங்கையன் கவிதைகள் 69

Page 43
70
அங்கையன் கவிதைகள்
 

அங்கையன் கவிதைகள்
7

Page 44
அங்கையன் கவிதைகள்
72
 

தனிமை
பாழும் உயிர் போவதற்கோ நாளும் இல்லையே - இந்தப் பாவிமகன் வாழ்வதற்கோ ஆளும் இல்லையே.
- பாழும் உயிர்
தன்னந்தனியே மண்ணின்மீது தனித்து நிற்கிறேன் - கொடுந் தாகத்தாலே நெஞ்சுலரத் தவிதவிக்கிறேன்.
கண்ணினின்று நீர் பிறந்தே கலங்க வைக்குதே - என் கண்களென்ன பெண்கள் கண்ட கனிவு கொண்டதோ
- பாழும் உயிர்
பூமிகண்ட அன்று நெஞ்சம் புலம்பி அழவில்லை - என் புலம்பல் கேட்ட தாயோ பாலைப் புசிக்கத் தந்தனள்.
நாவரண்டு கண்ணிருண்டு நடுங்கி நலிகிறேன் - இந் நானிலத்து ஆசை யெல்லாம் நழுவிப் போகவே.
- பாழும் உயிர்
அங்கையன் கவிதைகள் 73

Page 45
கண்ணை விற்றுச் சோறு வாங்கிக் கண்ட தென்னவோ - என் கற்பனையின் அற்புதத்திற் காலம் போனதே.
மண்ணைத் தொட்ட போதுவெறும் சதையாய் வந்தனன் - இனி மாளுந் தீயில் வேகும் போது சாம்பராகுவேன்.
- பாழும் உயிர்
என்ன வாழ்வு என்ன வாழ்வு ஏதும் அறிகிலேன் - காலம் என்னைத் தனியே விட்டலைத்தே
என்ன கண்டதோ?
மரணம் நாளை வருகுதென்றால் மனம் மறுக்குதே - இந்த மனம் மரணத் தீயில் வெந்தால் வாழ் விருக்குமோ?
- பாழும் உயிர்
ܠܣܠ 塑
அங்கையன் கவிதைகள்

மானிடர்க்குப் பாடம்
ஊரெல்லாம் வீசுவது ஒரே ஒளி
உலகெல்லாம் பேசுவது ஒரே மனம்
பேரெல்லாம் பெறுவது ஆக்கவேலை
பிறரதனைப் பிதற்றுவதில் ஊக்கமில்லை
சீரெல்லாஞ் சேர்ப்பது சிந்தைவிளைவு
சுயமான நினைவுகளைச் சேர்த்திட்டாலோ
பாரெல்லாம் பரிணமிக்கும் பண்புநாளும்
பாட்டினிலே கூறிடினும் கொஞ்சந்துன்பம்
மக்கள்குலம் ஒருபுறம் வாழக்கண்டே
மாக்களும் புறவாழ்வு வடிவுகொண்டே தக்கபடி நடைமுறைகள் எடுத்தேபிறர் தயவற்ற சுதந்திரத்தால் ஆக்கந்தேடி வக்கரிப்பு: வாய்வீச்சு வலுத்த வஞ்சம்
வழங்குவன நல்லுரைகள் உலகினுக்கே
துக்கமெது? துரக்கமெது? அறியமாட்டா!
துடிப்புண்டு, நடிப்பில்லைச் சோர்வுமில்லை.
அங்கையன் கவிதைகள் 75

Page 46
நெடுங்கடல் சாய்ந்ததம்மா
து.
பாலது புளித்த தம்மா பகலது இருண்ட தம்மா நூலது கறையா னுக்கே நுண்ணிரை யான தம்மா நீலநல் மணிக ளெல்லாம் நெடுங்கடல் சாய்ந்த தம்மா கோலங்கள் குலைந்த தம்மா
குவலயம் நடுங்கு தம்மா
காடுகள் சாய நல்ல கழனிச்செங் கதிர்கள் காய மேடுகள் வீழப் பள்ளம் மேலுறை நீரும் வற்ற வீடுகள் தோறுங் கண்ணிர் வெள்ளங்கள் ஒடத் தத்தம் பாடுகள் இன்றி மக்கள்
பரிதவிக்கின்றா ரம்மா
தண்ணளித் தமிழைக் காத்துத் தரணியிற் புகழிற் பூத்து விண்ணுயர் பெருமை சேர்த்து
விளங்கிய அண்ணா தன்னை
76 அங்கையன் கவிதைகள்

எண்ணியே தமிழின் மக்கள் இரங்கியே நிற்கும் போது மண்ணிலே ஈரஞ் சேர மாந்தர்கள் அழுகின்றாரே.
நெஞ்சங்கள் உதிரங் கொட்ட நினைவுகள் அதிரச் செந்தீ வஞ்சங்கள் கொண்டு நாட்டை வாரியே எரித்த வாறு தஞ்சங்கள் வேண்டி எந்தன் தமிழர்கள் ஒடுஞ் சோகம் கொஞ்சமோ சொல்ல அம்மா
காசினி ரைடாய் வேண்டும்.
கடமையில் கட்டுப் பாட்டில் கண்ணியம் என்ற மூச்சில் உடைமையை விளக்காய்க் கொண்டு உளமதை நெய்யாய் வார்த்து மடமையைக் களைந்து மக்கள் மனதிலே தீப மேற்றி விடைபெற்றுச் சென்றார் அண்ணா
விண்ணுல காள வாமோ?
S/ ఏ4 N/ N1 S2 o aN 2s ※ 2s
அங்கையன் கவிதைகள் 77

Page 47
ਰੰ
Ptah sneG3 232 -ata2. తిణి*** StráQAS. 9) žio *ஹகே 6) 1భీ-రొటీశాv 8 لثورة
ہی پہللہ (ت Tدله شړلو هحر
ÇAchvy) இன்ஸ்ஃ (rt,3 விe. Q্যe":"ণ্ঠriod & v ۲fڈالنب - ()9xe مند ہی بخش 9 ثGشsrھلاڑی 8. ਸੰ. 6ਨe
飘 Cછે.) శ్రీuసినీ ? (NASD :్యల్డ్-ది مen\6 ہے نبوہ دیش) ,و, 7 \6 ,ٹ کلام ث\لا؟ ہی رہنماڑہ میں ڈنڈv ')، ہڈ}ن:۹۲)‘‘(٥
(این م\ C MVNIVÅ( منبع ܐ݈ܬܳ
83rd ای ف« શ્રેઠ 9\శA 9or o (3 *&*Tuత్తిడ్ర) g\\్యక్తి - రోసం لوي؟)Rہr 68 مثلا 0 ܠܽܐܘ\ܬܰܐ ܬ݁ܶ@ܘܳܟ ܠܹܐ، ܐܶܢܽܝ9ܣܛܘ6V
>\;\; \e .بست * 实 EyÀ.
2
78
அங்கையன் கவிதைகள்
 

குங் கவிதை
6M5
79
கவிதைகள்
அங்கையன்

Page 48
80
அங்கையன் கவிதைகள்
 

வாழ்வு ஒரு கேடா?
பெற்றவள் தெய்வம் இந்தப்
பிறவியில் வாழு மட்டும் உற்றவர் உறவோ ரெல்லாம்
உலகினில் நிலைப்பதில்லை கற்றவர் கூறுங் கூற்றைக்
கணமது மறக்கா நம்பி புற்றின்வாய் ஈசல் போலப்
புறப்பட்டான் வீட்டை விட்டே
நட்டமும் நயமும் நாளில்
நடப்பதே புனித வாழ்வில் கெட்டவர் நிலைகள் மாறிக்
கேடிலா வாழ்வு வாழ அற்றவர் அலைந்து ஆடி
அகலமா சடைந்த பின்னர் உற்றனர் உயர்ந்த பீடம்
உலகினிற் காண லாமே!
seoõToo orooU opö585 oor oor6õr!
அன்னை சொல் அபாண்டம்
என்று அவளையும் மறக்க எண்ணியே வீட்டில் உள்ள
அணிகளிற் சில வற்றை நன்னியே பெற்றுக் கொண்டு
நூறிரெண்டிற் கடகு செய்து அன்னையை அயலார் தம்
மவரையும் மறந்து சென்றே.
அங்கையன் கவிதைகள் 8

Page 49
காவியை அடைந்தான்!
காவியை அடைந்த காளை
காசினைக் கடையிற் சேர்த்து வேலியாய்க் கடையை எண்ணி
வேலையாம் பயிரை நட்டான் சோலிகள் பலவும் வந்து
சுந்தரன் சுகத்தைத் தாக்க வேலையை விட்டுப் பின்னே
வீட்டிற்கே ஓடி வந்தான்.
மாதாவை மனத்திலேத்தி.
மகனது வரவு கண்ட
மாதாவின் மனமோ ஐயோ பகலவன் பார்வை பட்ட
புழுவெனத் துடித்த தாமே இகந்தனி லிவ்வாறெங்கும்
இருப்பது சகஜ மென்று அகமது குளிர்ந்தே அன்னை
அன்புடன் ஏற்றுக் கொண்டாள்.
கண்கண்ட தெய்வம் தன்னைக்
கலக்கினேன் கொடியேன் நானே புண்பட்ட மனத்தோ டேகிப்
புலம்பினான் அனங்கன் தானும் கண்பட்ட வேகம் அன்றிக்
கைபட்ட தோசம் தீரத் தென்பட்ட தரணி யெல்லாம்
திருநெறி காணச் சென்றான்!
82
அங்கையன் கவிதைகள்

அன்னையை இழந்தான்
அனங்கனும் இவ்வாறலைவது கண்டு பெற்ற மனம் சினந்தனை விடுத்து நற்
சிந்தனை கலக்கி நாளும் அனங்கனின் நினைப்பி னாலே உடல் நலங்கெட்டே பனம்பழம் உதிர்தல் போலே
பாரினில் மடிந்தாள் அந்தோ.
கண்களை மலர்க ளாக்கி .
அன்னையை இழந்த சோகம்
அனங்கனை அடிமை கொள்ள முன்னந் தான் செய்துவந்த
மூர்க்கமாம் வேலை தன்னை எண்ணியே நாளும் போதும்
இரங்கியே வந்தான் மைந்தன் கண்ணிரை மலர்களாக்கிக்
காணிக்கை செலுத்தி னானே!
கலைத் தெய்வக் கருணை
ஈன்றவள் தன்னைக் கொன்று
இழந்தன வற்றை எண்ணித் தூண்டிலின் மீனே போலத்
துடிதுடித் தவனைக் கான ஆன்றவர் அகந்நெகிழ்ந்து
அனங்கனை ஆற்ற வேண்டிச் சான்றோரின் கீழே கல்விச்
செல்வத்தைப் பெறவே செய்தார்
அங்கையன் கவிதைகள் 83

Page 50
நலம்பெறக் கண்டான் நம்பி
நாட்களும் நகர்ந்த பின்னர்
நம்பியும் வளர்ந்து தேறிமற்
அனைத்தையும் அறிந்து கற்று வீட்டிலே விரைந்து வந்து
வேண்டிய பலவுஞ் செய்து நாட்டிலே ஒருவனாக
நயமுடன் நலமும் பெற்றான்.
பல்கலைக் கழகம் வைத்த
பரீட்சையில் தேறி அன்னான் நல்மதிப் பெடுக்க வெண்ணி
நால்வரைக் கலந்து கேட்டுப் பல்கலைக் கழகஞ் சென்று
படிக்கவும் வசதி கொண்டான் செல்வரைக் காத்துக் காத்துச்
சிந்தையை விருத்தி செய்தான்.
ஆணியோ டனங்கன் வாழ்வே .
ஆணியோ ராறு நான்கில்
அனங்கனும் போக எண்ணி ஏனைய நண்பர் செய்யும்
அடுக்குகள் பலவுஞ் செய்தான் ஆணியும் வந்து போக
அனங்கனும் பயணஞ் செய்தே ஏணியும் வைத்தா லெட்டா
இடந்தனை வந்து சேர்ந்தான்.
84
அங்கையன் கவிதைகள்

வாசிற்றி தன்னில் நாளும்
வாசனை செய்து வாழும் 'ஒசி(ற்) றி’அருந்தும் அந்த
உயர் திரு “சீனியர்ஸ்” காசில்லா அனங்கன் தன்னைக்
கடுகென மதித்து வந்தே பேசினார் பெருமை யெல்லாம்
பிதற்றினார் பலபே தங்கள்.
காதலர் பாதை தன்னில் .
கல்வியைக் கற்கும் வேளை
காளைகள் பலபேர் தங்கள் செல்விகளுடனே செல்லுங்
காட்சிகள் கணக்கி லாவே சொல்லிவைத் தாற்போலன்று
சுந்தரன் சுகமில் லாமல் எல்லோர்க்குங் கருணை காட்டும் மருந்தக மேகி னானே!
கன்னியைக் கண்ட காளை .
மருந்துகள் பெற்ற பின்னர்
மனதையோர் நிலையில் வைத்து விருந்துகள் பலவும் வைக்க
விருப்பங் - கொண் டசைவா னுக்கு விருந்தென ஒருத்தி முன்னே
விண்ணிலா வென்று சொல்லி மருந்துடன் வந்தாள் அங்கே
மயங்கினான் அவளைக் கண்டே!
அங்கையன் கவிதைகள் 85

Page 51
மலர்கள் அன்ன மங்கை
குறிஞ்சியின் மலர்கள் எல்லாம் கூட்டணி செய்து இந்தக் குறுமகள் உருவம் பெற்றாற்
குவலயம் உய்யப் போமோ? அறிதுயில் செய்யும் அந்த
அழகனின் தேவி போல மறிநிலம் அடி பதித்து
மங்கையும் வந்தாள் அங்கே.
துாதுவேண்டாப் பாவைகள்
அணங்கினை அனங்கன் பார்க்க
அனங்களை அவளும் நோக்கச் சுணங்கின வேலை கொஞ்சம்
சுந்தரன் சிரித்தான் அங்கே பிணங்கின பெண்ணின் நாணம்
பேசின விழிகள் நான்கும் அணங்கினை விடுத்து அன்னான்
அகலவே மறுத்து நின்றான்.
வல்லான் விதியே .
கல்லினில் அளவு செய்து
கற்பனை வளத்தைக் கொட்டிச் சொல்லொணாத் துயர மெய்திச்
சோம்பல் வருத்த மின்றிக் கல்லினில் வடித்துப் பின்னர்க்
காயத்தை அளித்து விட்ட வல்லவன் செய்கை என்னே
வாயினால் புகழ லாதே.
86
அங்கையன் கவிதைகள்

மலைத்(த) தேனோ?
மங்கையின் மனமும் மாறி
மாறுடை மனத்தா ளாகி அங்கரை நேரந் தானும்
அடுத்து நிற்கவொ ணாமற் செங்கையை வீசி வீசிச்
சிந்தையைக் கவர்ந்து கொண்டு மங்கையும் மறைந்தே விட்டாள்
மன்னவன் மலைத்து நின்றான்.
தெளிவுறக் கண்ட காளை
பின்புறம் வந்த மோட்டார்
“பூம்” என்றொலி யெழுப்பத் தன்னிலை பெற்றுச் சற்றுத்
தள்ளியே நின்றான்; பின்னர் அன்னவள் சென்று வந்த
அடியினைக் கூர்ந்து கண்டு பின்னேயே சென்று பெண்ணின்
புகலிடங் கண்டு கொண்டான்.
விசனம் ஏனோ?
எண்ணங்கள் குமிழ்களாகி
இதயத்தின் வெளியே வந்து சொன்ன திசைக ளெல்லாஞ்
சுற்றின திரிந்தன சுகத்தினை எண்ணியே ஏங்கி நின்ற
அனங்கனின் அருகில் வந்து என்னதான் யோசனை என்று
இயம்பினன் ஒருவன் அங்கே.
அங்கையன் கவிதைகள் 87

Page 52
அன்பினுக்கு ஒருத்தி
அன்பினை அனங்கன் முன்னம்
அருந்தினான் அன்னை யாலே பண்பினைப் பின்னர் சேர்ந்த
பள்ளியிற் பழகிக் கொண்டான் இன்பத்தைச் சுவைக்க ஏங்கி
இதயத்தைத் திறந்து விட்ட அன்பிற்கு ஒருத்திக் காக
அலைந்தனன் அவனுந் தானே.
ஏக்கமே வாழ்வுதானோ?
இன்பமே உன்னை நானும்
உயிருடன் உவப்ப தென்றோ அன்பினைச் சொரிய வேண்டும்
அதனைநீ ஏற்க வேண்டும் பண்புடன் பழக வேண்டும்
பாசத்தை வளர்க்க வேண்டும் அன்புடன் நீயுமென்னை அத்தான்
என்று அழைக்க வேண்டும்.
தினையளவன்பிற்காக
நினைவுகள் திசைதோ றேக நீடித்த நேர மாக சுனைகளிற் பாய் நீர் போலச்
சிந்தனை யலைகள் பாய வினைகளை மறந்து துன்ப
விளிம்பினில் ஏங்கி ஏங்கித் தினையள வன்பிற்காகத்
தேம்பினன் நிமிட நேரம்.
88
அங்கையன் கவிதைகள்

LDoor Lou Jösö5 lb
செங்கதிர் மங்கிடத் தன்
சிந்தை ஒளி விட மங்கையின் நினை வோடு
மாசிலாக் காதல் கொண்ட அங்கையற் கண்ணழகன்
அலைந்தனன் துரும்பு போல மங்கிய மாலை தன்னில்
மனமது மயங்கி நின்றான்.
தெரிவதோ காதல் கண்ணில்?
விரிவுரை தொடங்கி விட்ட
ஏழாம் - நாள் அனங்கன் தானே பரிவுடன் அவளைப் பார்க்கப்
பார்வையில் தீயைக் கண்டாள் தெரிவதோ காதல் கண்ணில்
தீண்டினால் பற்று மென்றோ அரிவையும் அவனை விட்டு
அகன்றனள் இடத்தை விட்டே.
go loo&shoir oSloodoo?
பலமுறை முயன்ற பின்னும்
பாவையின் முகமலர்ச்சி சிலமணி நேரந் தானும்
நீடித்து நின்ற தில்லை கலவர முற்ற காளை
கன்னியின் காதற் காக உலகையே விலை பேச
உறுதியும் பூண்டு கொண்டான்.
அங்கையன் கவிதைகள் 89

Page 53
அரும்பு
அன்றுதான் அவன்றன் வாழ்வில்
அடையாத இன்பங் கண்டான் பொன்றினாள் போல நங்கை
பூமியிற் சாய்ந்து விட்டாள் சென்றவன் கண்டான் அங்கே
சேயிழை மயக்க முற்றாள் அன்றுடன் அவர்கள் காதல்
அரும்பொடு மனத்த தாகா!
மயக்கமும் தயக்கமும்
பெயரினைக் கேட்ட போது
பேசா திருந்தாள் சற்று வியர்வையைத் துடைத்த வாறு
வேண்டுமோ நிசமாய் என்றாள் கயலனை கண்ணாள் கேட்ட
கேள்வியைப் புரிந்து கொண்டு மயல்பல செய்ய மங்கை
மருண்டனள் விரண்டாள் பின்னர்.
தேவிஎன்றவள் பகன்றாள்
திருவருள் கிடைத்த தென்று நாவினில் ஈரம் வைத்து
நாயகன் பேச லுற்றான் ஆவியைப் பிரிந்த போதும்
அம்பலத் தானுந் தன் தேவியைப் பிரிவதில்லை
தெரிவாயே அறியா யோ?
90
அங்கையன் கவிதைகள்

(வேறு)
காரண மில்லா உவமைகளைக்
கட்டிவிடாதீர் கவனம் ஆரணங்கின்னவாறு அனங்கனை
அதட்ட அறிவழிந்து பாரிலே பெண்கள் பயந்தவர்
களென்றே எனின் இவள் வீரியம் பேசும் மொழியாள்
வேண்டாம் காதல் ஐயோ!
அரும்பொடு மலர்ந்த காதல்
3ான்னை அந்நிலை யிலும்
அன்புடன் காத்த வுங்கள் அன்பினுக் கென் நன்றி
அதன் செழிப்பை இனி எண்ணியே வாழுவேன் என்றே
அவளும் இணங்கிக் கொள்ள உன்னியே எழுந்து உளமகிழ்ந்து
அனங்கன் உலகை மறந்தான்.
(வேறு) உறக்கமே இல்லைத்தானே!
அருளோடு மலர்ந்த அந்த
அன்பெனும் மலரை அன்னான் பொருளோடு இன்பங் கண்டு
புவிதனில் புளகம் உற்றான் திருவோடு நிறைந்த அவள்தன்
திருநுதல் முகத்தைக் கான ஒருபொழு தேனும் நம்பி
உறங்கினான் இல்லைத் தானே.
அங்கையன் கவிதைகள் 9

Page 54
கல்நெஞ்சக் காளைகள்
இப்படி இன்பங் கொண்டு
இருவரும் இருக்குங் காலை கப்பிய இருள் அடர்ந்த
காளைகள் நெஞ்சம் அங்கே உப்பிய பாண்டம் போல
உடைந்துளம் தகர்ந்ததாலே செப்பரி சிந்தை காதல்
சீரழியாமற் போமோ.
காதல் இல்லையேல் .
காதலில் வளர்ந்த இன்பக்
கன்னியும் காளை தானுங் காதலை இழந்தாற் பின்னே
கலவரஞ் சூழ்ந்தி டாமல் சாதலே நலமென் றெண்ணிச்
சாற்றினர் தம் முள்ளேயே ஆதவன் உதயமாகி அந்தி
அழிவது போல ஞான்றே.
சூழ்ச்சியா?
அனங்கா நீ அறிகுவாயோ
அன்பினை ஈய்ந்த உன்றன் மனம்நிறை மங்கை நல்லாள்
மாசுடைப் பாண்டம் நம்பி சினங்கொண்டான் சிந்தையிற்
செயலற்றான் சொல்லக் கேட்டு அனங்கனே அரிவை பேச்சை
அறிவதற்கோடிச் சென்றான்.
92
அங்கையன் கவிதைகள்

தோகைமயில் வாயில் சர்ப்பம்
நண்பர்கள் சொல்ல வந்த
நயவஞ்சப் பேச்சை நம்பி இன்பத்தை அளிக்க நின்ற ஏந்திழை மனமே மாற துன்பத்தைத் துண்ையாய்ப் பற்றி
தோகையை மறக்கக் கேட்க அன்பிற்கும் மாற்றம் உண்டோ
ஆற்றுவீர் அன்பா என்றாள்.
பள்ளியிற் படிக்கும் போது
பாவையும் வேறொருவனோடு கள்ளமாய்க் காதல் செய்தே
காலத்தைக் கழித்தா ளென்றே கள்ளமே அறியா வந்தக்
காளையின் நெஞ்சிற் பாய்ச்ச உள்ளமே வெந்து நோவ
உலகையே மறக்க லானான்.
தூதொன் றனுப்பலானான்
உண்மையில் என்னை அன்னாள்
உவந்து நேசிப் பதானால் பெண்மைக்கே உரிய நாணப்
பேச்சினை ஒழித்து, என்னை நன்னியே கூற வேண்டும்
நானதை நம்ப வேண்டும் எண்ணியே தூது விட்டான்
இனங்கினாள் மங்கை நல்லாள்.
அங்கையன் கவிதைகள் 93

Page 55
சோடிழந்த அன்றில்
கற்பனைக் கடந்த தங்கள்
காதலை நாளும் எண்ணி அற்பரின் சொல்லைக் கேட்டு
அவதியும் உற்றக் காலை கற்புடை மாதர் செய்யும்
கடனையும் கன்னி நல்லாள் அற்புதமாக அங்கே ஆற்றினள் அவனுங் கண் டான்.
வெள்ளியில் நடக்கும் தெய்வ
வேண்டுதல் மறந்து விட்டாள் எள்ளுவார்கூட்டஞ் சேர்ந்து
என்றுமே போக மாட்டாள் மெள்ளவே பாடங் கற்று
மேன்மையாய் வாழ எண்ணி உள்ளமே வேக, வேக
உறக்கத்தை மறந்தாள் தேவி.
ஆடையும் அணியுமாக
அரம்பையர் போலப் பெண்டிர் தேடிய இன்பங் காணத்
தெருத் தெரு வலையுங் காலை வாடிய முகமுற்றேங்க
வனிதையும் விடுதி தன்னிற் சோடியை இழந்த சோகஞ்
சிந்தையிலேறி நின்றாள்.
94
அங்கையன் கவிதைகள்

உண்பதை மறந்து விட்டாள்
உண்பதை மறந்து விட்டாள்
உடுப்பதை ஒழித்துப் பின்னும் இன்பத்தை எண்ணியெண்ணி
ஏங்கியே வாழ்ந்து வந்தாள் அன்பனின் ஐயந் தன்னை
அன்பினால் அகற்ற வேண்டி அனங்கனைக் காண ஞான்றும்
அவதியோ டேங்கி நின்றாள்.
நம்பியைக் கண்ட நங்கை
தேவி தன் துயரோடு
திம்புனல் நீரோ டைநாடி ஆவியைப் பிரிக்க வேண்டி
அங்கேயே சற்று நின்றாள் மேவிய இன்பந் தேடி
மகாவலி அருகில் வந்த நம்பியைக் கண்டு நங்கை
நாணியே ஒதுங்கி நின்றாள்.
குறைகளைக் கூறக் கேட்டு
கண்டதும் அவனைக் கன்னி
கவலையின் உருவ மாகி மண்டையிற் பாரத் தோடு
மறுகியே நடை பெயர்க்க அண்டையிற் சென்ற காளை
அருகினில் அவளை இட்டுக் கொண்டையைக் கோதிப் பின்னர் குறைகளைக் கூறலுற்றான்.
அங்கையன் கவிதைகள் 95

Page 56
கோதையும் கூறலானாள்
ஊர்வம்பு உரைக்கும் வஞ்ச
உலுத்தர்கள் வாழும் நாட்டிற் சீர்கொண்ட காதற் கிங்கே
சிறப்பிலைக் கண்டீர் அத்தான் பேர்கொண்ட பெண்மை யினுக்கே
பெருமையாய் விளங்குந் தேவி ஆர்வுற்று அவனைக் கட்டி
அணைத்தனள் அன்பி னாலே.
துாமணஞ் செய்துகொள்வேன்
காரணம் எதுவுமின்றிக்
கலங்குதல் பெண்ணுக் குண்டு வாரண நம்பி தன்னுள்
வம்புடன் நினைத்துக் கொண்டான் தோரணங் கட்டி உன்னைத்
துTமணஞ் செய்து கொள்வேன் ஆரமு தன்னாய் உன்றன்
அழுகையை ஒழித்தி டாயே.
துயநல் உளமே போதும்
அழுவதால் பயனென் றில்லை
ஆறினால் முடிவு மில்லை விழுமிய வாழ்வு வாழ
விரும்பினால் போதுமோ காண் தொழுதடி கண்ட தொண்டர்
துாயநல் உளம தாலே அழுதடி அடைந்தனரே
அறிவாயே அரிவை நீயும்.
96
அங்கையன் கவிதைகள்

துன்பமே வாழ்வு தானோ?
அன்பினை விலைக்கு வாங்க ஆராலும் முடியா தம்மா இன்பத்தை விதிக்கு நாமே
இடையிட முடியுமோ நல் அன்பினை வளர்த்து விட்டு
இடையிலே பறிப்பதென்றால் துன்பமே வாழ்வாய்ப்ாறும்
துயரத்தை ஒழிப்பாய் கண்ணே.
மன்னிப்பீர் மங்கை என்னை
மன்னவன் சொன்ன விந்த
மணிமொழி கேட்ட மாது அன்னவன் பின்னே சற்று
அடியிட்டு நடந்து சென்று கன்னலும் பாலும் நன்றாய்க்
கலக்கிய மொழியினாலே மன்னவா மங்கை யென்னை
மன்னிப்பீர் என்று கேட்டாள்.
முடிவாகப் பதில் ஏது?
மங்கையின் மயக்கங் கண்டு
மயங்கிய அணங்கன் சற்றே செங்கையைப் பற்றிக் கேட்டான்
சிந்தித்துப் பதிலைச் சொல்வாய் திங்களை நிகர்க்கும் உந்தன்
திருநுதல் களங்கப் பட்டால் இங்கிருந் தென்ன வாழ்வு
இனிமேலும் காணப் போவேன்.
அங்கையன் கவிதைகள் 97

Page 57
98
சீதையின் கற்பின் திண்மை
செறிவினைக் காட்ட வண்ணல் தோதையைக் குழவி னோடு
கொடுநெருப்பிட்டா ரன்றோ தாதவிழ் கூந்தல் நங்காய்
தயக்கத்தை விட்டு நீயும் ஏதிது என்று சொல்ல
ஏத்தினேன்; இறைஞ்சு கின்றேன்.
அலறினாள் தேவியங்கே
ஐயகோ அத்தான் என்னை
அத்தனை பழிக்குள் ளாக்கி செய்வது அறியா நிற்கும்
சிந்தையைக் சீராக் குங்கள் பையவே சொல்லுகின்றேன்
பாவையென் வாழ்வில் உற்ற ஐயுறவு நீங்க அமைதியை
அடைவீர் அத் தான்.
அழகினை எனக்கே அந்த
ஆண்டவன் அளித்து விட்டான் பழகவே பண்பை என்னைப்
பெற்றவள் தந்து போனாள் களங்கத்தை எனக்கு இந்தக்
கயவர்கள் அளித்த காலை மெழுகென உருக வென்னை
விட்டிட வேண்டாம் அத்தான்.
அங்கையன் கவிதைகள்

தேன்மொழி என்ன செய்யும்?
பரிவுடன் அனங்கன் நோக்கப்
பாவையும் மிரண்டு பார்க்க தெரிவுடன் அவர்கள் கண்கள்
திருதிருவெனவே காண அரிவையும் அனங்கன் தன்னை
அன்புடன் அணுகிப் பின்னும் தெரிவீரோ” என்று சொல்லித்
தேன்தமிழ் பேசலுற்றாள்.
அன்றுமைக் கண்டக் காலை
அனங்கனென்றறிந்த போது என்றுமே மயங்கா வென்றன்
இதயமே மயங்கிற் றன்றோ பொன்றினால் மறப்பேனல்லேன்
புவிதனில் உங்கள் அன்பை என்றுமே தேவி சொல்ல
இரங்கியே நின்றான் அண்ணல்,
கலைந்த மேகம்
கண்மணி உன்னை என்றன்
கருத்தினில் நிறைத்து விட்டேன் பெண்மணி நீயே யென்றன்
பேதமை போக்கி விட்டாய் எண்ணியே உவகை பூத்து
இதழ்களை இணைத்தக் காலை கண்மணி என்ற கத்தல்
காதினில் ஒலித்த தையோ!
அங்கையன் கவிதைகள் 99

Page 58
கூவிய குரலான் யாரோ?
தேவிதன் திருவாய்க் கொண்ட
தீந்தமிழமுதந் தன்னை ஆவியே பிரிந்த போதும்
அகற்றவே மாட்டேன் என்றாள் கூவிய குரலான் அங்கே
கொடு வெறிப் பார்வையோடு தாவியே அவளைப் பற்றித்
தன்பக்கம் இழுத்துக் கொண்டான்.
எத்தனை நாளாய் நீங்கள்
இப்படி நடந்தீர் என்று பித்தனைப் போலே அங்கே
பிதற்றியே கலங்கி நின்றான் அத்தனாம் அவளின் தந்தை
அனலிடை மெழுகாய் நின்றே செத்தாலும் விடுதற் கில்லைச்
சீக்கிரம் புறப்படுங்கள்.
மறக்க முடியுமோ?
அன்புடைத் தம்பி நல்ல
அறிவுடை நம்பி நீயும் என்னுடை மகளை இன்றோ
டென்னியே பார்க்க வேண்டாம் உன்னுடைய வாழ்வு முற்ற
என்னுடைய மகளா தேவை அன்புடன் கேட்டுக் கொள்வேன்
அவளைநீ மறந்தி டாயே.
00
அங்கையன் கவிதைகள்

அவளைநான் மறக்கற் கில்லேன் அவளின்றி வாழ மாட்டேன் தவமுடை யோரே எங்கள்
தனிமையைக் குலைக்க வேண்டாம் அவநிறைச் சொற்களாலே
அவதியுற்றேங்கச் செய்து பயனெது காண்பீர் அந்தோ
பகன்றனன் அனங்கன் தானே.
காதலை ஒழிக்கலாமோ?
உன்னுடன் எனக்கென் வேலை
உங்களைப் பிரிக்க வேண்டின் நன்றுடன் பெரியோர் வாசல்
நலமுடன் சென்று நானே இன்றுடன் உங்கள் காதல்
ஒழிந்திடக் கேட்டுக் கொள்வேன் என்றுமே கூறிக் கொண்டு
ஏகினர் இடத்தை விட்டே.
காதல் காதல் காதல்
காதலாம் காதல் அந்தக்
காதலர் பாதை தன்னில் ஏதமே அறியா அற்பர்
இடையிலே புகுவரன்றே கோதிலா நங்கை நல்லாள்
கொண்டவன் தனையே விட்டு பூதல வாழ்வில் வேறோர்
புகலிடங் காண்பாளன்றே.
அங்கையன் கவிதைகள் 0.

Page 59
கானக் குயில்கள்
மானம் போய் விடுமேயென்று
மனத்திலே எண்ணிக் கொள்ளும் கானகக் குயில்கள் நெஞ்சம்
கல்லினில் இழைத்த தாமோ தேனினு மினிய காதல்
தவறுண்ட குட்டி போல கானிலே தனியே பின்னே
கவலைதான் எச்ச மாமோ.
இதயக் குமுறல்
அன்பினை இழந்த சோகம்
அடிமுதல் வரையும் சுட்டு என்பினை உருக்கி நெஞ்சத்
திதழ்களுங் கருக்கி யாங்கே வன்பினால் உருவாய்த் தோன்றும் வஞ்சமே தீர்க்கத் தோன்றும் இன்பத்தின் சுவைதான் என்னே
இதயத்தின் குமுறல் தானோ.
கையறு நிலை
உண்பதை வெறுக்கத் தோன்றும்
உடுப்பதை மறக்க எண்ணும் பெண்ணின வாஞ்சை கொல்லும்
போதையர் என்றே சொல்லும் கண்களைப் பிடுங்கி னாற்றான்
காரிகைக் கனவு மாறும் புண்படும் நெஞ்சைச் சுட்டால்
புதுமையே கெட்டி டாதோ.
02
அங்கையன் கவிதைகள்

வாரங்கள் ஒடி நாட்கள்
வருடமாய் மாறும் போது சீரெங்கே சிறப்பு மெங்கே
சிந்தை கொண்ட நற் பேரெங்கே பிறப் பெங்கே
பாவி நெஞ்சி லின்ப ஊற்றெங்கே உவப் பெங்கே
உலக மீ தே.
(வேறு)
பவள வாயில் பாதை தந்த
பாலின் மணமே போனதே தவமுங் காணாத் தனிமைபெற்ற தரணி மிக்க தாகமே இவளை எண்ணி உவகைபூத்த
இன்ப நாட்கள் ஒடுமே எவளும் இன்னும் உள்ளிடாத
எண்ணம் வந்து சேருமே.
(வேறு) கிளியினுக்குப் பழியா?
அஞ்சுகம் தனிமை கொண்டாள்
அயலவர் இரக்கங் கொண்டார் நெஞ்சினால் பேச மாட்டாள்
கிண்டலும் கேட்க ஒண்னாள் பஞ்சிலே படுத்த போதும்
பாவைக்கு முள்ளாய்க் குத்தும் கொஞ்சமாய் எஞ்சி நின்ற
குதுTகலம் போயிற் றாமே.
அங்கையன் கவிதைகள் 03

Page 60
அண்ணலைக் கண்டு தன்னுள்
அமைந்தநல்லெண்ணங் கூற வண்ணமே பூண்ட மங்கை
வாழ்வினில் தோய்ந்த தோகை நண்ணியே வந்து போவாள்
நாவது அசைந்தால் தானே கண்களை நிலத்திற் சேர்த்து
காதலின் கணிவைக் காட்டாள்.
அருகில் வர அச்சம்
தோழியர் துணையாய் வந்தால்
துங்கமாம் முகமும் மங்கும் ஏழிசை மொழியும் குன்றும்
ஏந்திழை இதழ்கள் வாடும் ஆழியாம் அவளின் நெஞ்சம்
அடிப்பதும் அதிகமாகும் கோழியைச் சேரும் சேய்போல்
தோழியை நெருங்கி நிற்பாள்.
பாவைக்கு ஒரு துதா?
அனங்கனோ அவளைக் காணின்
அடிக்கடி நிலைகள் மாறிக் கணந்தனிற் கனவு கானுங்
கண்களிற் கலக்கத் தோடு இனங்கவோ இனிமேல் நானும்
இப்புவி தன்னி லன்று மனங்கொள நினைத்த நெஞ்சம்
மாசுடன் திரும்பு மாமே.
04
அங்கையன் கவிதைகள்

நெஞ்சத்து நீர்
தோகைதன் வழியால் வந்தால்
தேம்பிடும் அனங்கன் உள்ளம் வாகையின் னருகே யுள்ள
வழிதனில் இறங்கி ஒடும் போகையில் அவர்கள் நெஞ்சம்
புலம்பியே கண்ணிர் சொட்டும் கூகைகள் போலக் கண்கள்
குழிவுடன் நோக்கு மாமே.
நெஞ்சின் அலைகள்
நெஞ்சினில் நிறைந்த நல்ல
நினைவுகள் கரைந்து பின்னே வஞ்சமாம் நெருப்பி னாலே
வடிவுறும் நீறாய்த் தானே அஞ்சுகம் தனையே அன்னான்
அழகுறு சிலையாய்ச் செய்து நெஞ்சிலே நினைவின் கீழே
நிறுத்தியே வைத்து விட்டான்.
அன்பு உளற்று
பொங்கிடும் உணர்ச்சி வெள்ளம்
பாவையின் சிலையை முட்டும் தங்கிடும் அன்பு ஊற்று
தூபத்தில் லிருந்து விழும் இங்கிதமாக இரண்டும்
ஒன்றிடும் கலப்பி னாலே தங்கமாம் குணங்கள் அங்கே
தவழ்ந்தன அவர்கள் வாழ்வில்.
அங்கையன் கவிதைகள் 05

Page 61
நூலுருவில் வெளிவந்தவை
* கடற்காற்று (பரிசு நாவல்)
முதற் பதிப்பு - 1972 இரண்டாம் பதிப்பு - 2000
* வைகறை நிலவு ಸ್ಠಳ್ಳಿ;
∆ “မြို့ אא κκ 2000 - تهييج
క్ష్యలో
* அங்கையன் கதைகள் ༈ -2000
197,
(சிறுகதைத் தொகுதி)\l {్కY} Y్వ * சிட்டு
வெளிவர இருப்பவை
* சொர்க்கமும் நரகமும்
* அங்கையன் கட்டுரைகள்
06 அங்கையன் கவிதைகள்
 
 
 
 
 
 
 
 


Page 62
அங்கையன் என் கலைஞன்
* 'அங்கையன்’ பல்து படைத்திருந்த போதும் அவருக்கு மிகுந்த ஈடுட வதிலும் ரசிப்பதிலும் அவ அவருடைய ஆத்மாவின் கவிதை என்று சொல்ல பாடல்களும் கவிதைகளு சம்பாதித்துக் கொடுத்தன
பல்க6ை
* “காதல், குடும்பம், குழ பககங்களை நுண்ணுரவு புகழீட்டியவன் அங்ை மெல்லிசைப் பாடல்களாக சில கவிதைகளில் அ காணமுடியும். அவை தரிசனங்களில் அவனும்
PRINTED BY UNIE ARTS (PV
 

O
ல்ல நாவலாசிரியர், நல்ல ராய்ச்சிக் கட்டுரையாளர்,நல்ல கதை ஆசிரியர் என்ற ழுக்கு அப்பால் உணர்ச்சியும் பிர்த்துவமும் லக்கண தமுமான பண்பும் மிக்க பிதைகளைப் படைக்குங் பிஞனாகவும் விளங்குகிறார்.
சிந்தையிலே நிறைந் }க்கும் கருத்தைத் திட்ட ட்டமாகச் சொல்லும் உறுதி வர் சொல்லில் இழைகிறது. ரிய நெறியும், கூரிய கொள்கை நம கூடி நிற்கும் இவரது டைபடகள பல".
இ. நாகராஜன்
1றை லக்கியங்களைப் கவிதைத் துறையிலேதான் ாடு. கவிதைகளை ஆராய் பர் மிகவும் ஈடுபட்டு வந்தவர். மணிக்குரலாகத் திகழ்ந்ததே லாம். இவரது மெல்லிசைப் tp இவருக்குத் தனிப் புகழைச்
வேந்தன் சில்லையூர் செல்வராசன்
த்தை என வாழ்வின் இனிய க் கவிதைகளின் மூலம் தந்து கயன். வானொலி மூலம் இவை இன்றும் உலகளப்பன. வனது தூரதரிசனங்களைக் தழுவி நின்ற இலட்சிய ாழ்விான்’.
கலாநிதி என். சண்முகலிங்கன்
LTD., COLOMBO 13. TEL: 330195.