கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசன் ஆணையும் ஆடக சவுந்தரியும்

Page 1
.િ ܬܐ
心
 


Page 2


Page 3

அரசன் ஆணையும் ஆடக சவுந்தரியும்
( இரு நாடகங்கள் )
திருமதி: கங்கேஸ்வரி கந்தையா ( தமிழ் விரிவுரையாளர், ஆசிரிய கலாசாலை. )
மட்டக்களப்பு
விற்பனை உரிமை: - கலைவாணி புத்தக நிலையம்
யாழ்ப்பாணம்: கண்டி மட்டக்களப்பு.
196 5

Page 4
TAMIL PLAYS First Edition: December 1965. Rights, Reserved by the Author
முதற்பதிப்பு : மார்கழி, 1965.
உரிமை ஆசிரியருக்கே
ARASAN AANAT
and
AADAEA SAÜNARI ("Two plays in Tamil)
by
Mrs. Kangeswari- Kandiah Tami Lecturer,
Teachers Training College,
BATTICALOA. (Ceylon)
Price Rs. 2 / 25
கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
 
 
 
 
 

பொருளடக்கம்
முன்னுரை அணிந்துரைகள்:
1. பண்டிதர், செ. பூபாலபிள்ளை
916) IIT 5 ώΥΤ iii. திருமதி. கமலபூஷணி
திருநாவுக்கரசு அவர்கள் i. பண்டிதர், ஐ. சரவணமுத்து
அவர்கள் முதலாவது நாடக உறுப்பினர் அரசன் ஆணை இரண்டாவது நாடக உறுப்பினர் ஆடக சவுந்தளி

Page 5
மு ன் னு ரை
ങ്ങആ
தமிழினத்தின் பழம்பெரும் சொத்தாக உள்ளது நாடகம், காலத்துக்குக் காலம் வேறுவேருன கோலத்தில் விளங்கி நமக்கு நலன் சேர்த்த கலைச்சொத்து அது. மற் றைய மொழிகளோடு நோக்கினுல், சிறிது காலத்துக்கு முன்பு நாடகக்கலைப்பணியிலிருந்து நாம் சற்றுவிலகியிருந்து விட்டோமென்று தோன்றும். ஆயினும் இன்று நன்கு வளர் ந்து வருகிற ஒரு கலையாக நாடகம் விளங்குகின்றது. இன்று பல நாடக மன்றங்களும், கலைக்கழகங்களும், பத்திரிகைக ளும் தமிழரிடையே இத்துறையில் ஒரு விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்திருக்கின்றன. அவ் விழிப்புணர்ச்சியும் அதன் பயனும் நாடகத்துறையிலே சிறந்து நிற்கும் ஏனைய உலக மொழிகளோடு ஈடு கொடுத்து நிற்கவல்லதொரு சிறப் பினைத் தமிழ்மொழிக்கு ஊட்டுவிப்பனவாம்.
ஒரு சமூகத்தினதும், தனி மனிதனதும் குறைபாடு கள், இழி நிலைக்காரணங்கள் என்பவற்றை இனிய முறை மாற்றி அமைக்கவல்ல சமூக சீர்திருத்தக் கருவியாக நாடகம் எங்கும் பயன்பட்டு வந்திருக்கின்றது. ஒரு நாட் டின் அரசியல் வரலாறு, சமயநிலை, சமூக வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், முதலான பலவற்றை நாடகநூல் கள் நன்கு எடுத்துக்காட்டுவன. இத்துறையில் இர ண் டு வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, என் ணுல் எழுதப்பெற்ற இவ்விரு நாடகங்களையும் தமிழன்னை யின் திருவடிகளுக்குச் சமர்ப்பித்து நிற்கின்றேன்.
அரசன் ஆணை என்ற தலைப்பில் அ  ைமந் துள் ள முதலாவது நாடகம், இந்திய வரலாற்று நிகழ்ச்சி ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அந்நிகழ்ச்சி யின் காலம் கி. பி. 15ம் நூற்றண்டின் பிற்பகுதியாகும். தமிழ் நாட்டிலிருந்த சோழ, பாண்டிய இராச்சியங்கள் நிலை குலைந்து விஜய நகர மன்னனின்கீழ் இருந்த காலம், வடக்கே

முன்னுரை 3.
வங்காளத்தினை இலியாஸ் ஷாஹி சுல்தானும், தட்சிண தேசத்தைப் பாமனி சுல்தானும் ஆண்டனர். மகா பராக் கிரம சாலிகளான இவர்களைக் கலிங்கநாட்டெல்லையுட் புகா தவாறு பெரும்போர் செய்து துரத்திய இள வ ர ச ன் புருடோத்தமனே நமது நாடகத் தலைவன்.
இன்றைய ஒரிஸ்ஸா மாகாணம் ஒட்ட தேசம் என வும், அங்குள்ள கட்டாக் நகரம் கடகம் எனவும் அன்று வழங்கப்பெற்றன. கலிங்கநாட்டதிபதியாகிய கஜபதி கபி லேந்திரன் என்பவனுடைய ஆணையுள் அந்த ஒட்ட தேசம் இருந்தது, அக்காலத்தே விஜய நகர அரச குடும்பத்தின் இளைய பரம்பரையைச் சேர்ந்த அரசன் ஒருவன் காஞ்சி புரத்தைத் தலை நகராகக்கொண்டு தமிழ் நாட்டுக்கு மண்ட லாதிபதியாக இருந்தனன். அவனுடைய மகளான பத்மா வதி, பேரழகு காரணமாக, பொது மக்களால் ரூபாம்பிகை என அழைக்கப்பட்டவள். கடவுட் பத்தியும், நற்குண நல் லொழுக்கங்களும் மிக்கு விளங்கிய அவளுக்கும், ஒட்ட தேச த்து அரச குமாரனுன புருடோத்தமனுக்கும் நடைபெற இருந்த திருமணம் திடீரென நின்று போயிற்று சிறந்த விட்டுணு பத்தர்களான ஒட்டதேச அரச பரம்பரையினர் தமது பத்திச் சிறப்பினுல், ஜகந்நாதப் பெருமானது பிரும் மோத்சவத் தினத்தன்று, தேரோடும் வீதியில் உழவாரத் திருத் தொண்டு செய்து வருதல் தவருக விளக்கம் செய் யப்பெற்றதும், அம்மன்னர் பரம்பரையினரைத் தோட்டி என்று விஜய நகர மன்னன் இழித்துக்கூறித் தன் மகளைப் புருடோத்தமனுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தமை யால் இரு நாட்டவருக்கும் போர் மூண்டது.
புருடோத்தமனது தலைமையிற் சென்ற கலிங்கர்
படை முதன் முறை தோல்வி கண்டமையும், இரண்டாம்
முறை செய்த உக்கிரப் போரிலே வெற்றி கொண்டு காஞ்சி புரம், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் முதலான பெரிய நக ரங்கள் வரை பரந்து சென்று தமிழகத்தைச் சூறையாடின மையும் சரித்திரம் கண்ட உண்மைகள். தமிழ் நாட்டுச்

Page 6
4 முன்னுரை
சாசனங்களிலே ஒட்டியன் கலாபம் என இந்நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். புருடோத்தமன், தான் செய்த சூளுரையின்படியே விஜய நகர இள வ ர சி யான பத்மாவதியைச் சிறை செய்து, அவளை ஓர் உண்மைத் தோட்டிக்கு மணம் செய்து கொடுக்குமாறு, தனது முதன் மந்திரிக்கு ஆணையிடுகின்றன். குறித்த தவணையின் இறுதி நாளன்று, மந்திரியின் சாதுரியத்தினுல், புருடோத்தமனே அந்த உண்மைத் தோட்டியாவதை இந் நாடகம் புனைந்து காட்டுகின்றது. சிறுகதை வடிவிலே பத்திரிகைகளிலும் வெளிவந்த ஒரு இனியவரலாறு இது.
கி. பி. 1497ல் சகல கலிங்காதிபதியாக ஒட்ட தேசத்துக்கு முடி சூட்டப் பெற்றுச் சில காலம், தமிழ் மண்டலத்தையும் ஆண்ட மன்னன் என்று வரலாறுகளிற் கூறப்பட்டுள்ள பிரதாபருத்திரன் என்பவன் நமது புரு டோத்தமனுக்கும், பத்மாவதிக்கும் பிறந்த மகனே என் பதை இங்கு நாம் அறிந்து கொள்ளுதல் நன்ரு கும்.
இரண்டாவது நாடகமான ஆடக சவுந்தரி கிழக் இலங்கையிலே கிறிஸ்துவுக்குப்பின் சுமார் 3ம் நூற்ருண் டில் நிகழ்ந்ததாக அறியப்படும் வரலாறு ஒன்றினை அடிப் படையாகக்கொண்டு எழுதப்பெற்றது. ம ட் டக் களப் பு மான்மியம், மட்டக்களப்புத் தமிழகம், தெட்சிண கைலாச புராணம், குளக் கோட்டன் கல்வெட்டு என்பனவற்றில் உள்ள குறிப்புகள், இந் நாடகத்துள் வரும் ஆடக சவுந்தரி குளக் கோட்டன் என்பாரைப்பற்றிய வரலாற்றைப் பெறத் துணை செய்தன.
ஆடக சவுந்தரியின் காலம் கலியப்தம் 3370 ஆண்டு (கி. பி. 268) வரை என்று தெரிகின்றது. 1 2 0 வயது வரை வாழ்ந்த வளாகக் கருதப்படும் ஆடக சவுந்திரி மேல் வங்கர் குலத்தவனும் வைதூலிய சைவமதத்தைச் சேர்ந்தபவனுமான மகாசேனன் என்பவனை மணந்தாள்
 

என்று மட்டக்களப்பு மான்மியத்தால் அறிகின்ருேம். ஈழ
நாட்டு வரலாற்றிலே, மகா வம்சக் கடைசி அரசனுகக்கூறப்
படுகின்ற மகாசேனன் என்பான் கி. பி. 275 முதல் கி. பி. 301 வரை அநுரதபுரியிலிருந்து ஆண்டவன். அவனது காலமும், அவன் வைதூலிய மதத்தைத் தழுவிய ஒருவன் என்ற இலங்கைச் சரித்திரக் குறிப்பும், ஆடக சவுந்தரியின் வரலாற்றுக் குறிப்புகளுடன் பெரிதும் இயைந்துவரக் காண லாம். வைதூலிய மதத்தவனுன மகாசேனன், மகாவிகா ரையிலிருந்த ஹீனயானம் எனப்படும் தேரவாத புத்தமத குருமாரை எதிர்த்ததோடு, அவர்களுக்குரியனவாக இருந்த பல புத்தாலயங்களை இடித்துத்தள்ளியுமிருக்கின்ருன் இடித் தவற்றைத் தானே திரும்பப் புதுப்பித்தும் இருக்கின் முன் என்ற இலங்கை சரித்திரக்க் குறிப்புகளும், ஆட க சவுந் த ரி யின் வரலாற்றில் வருகின்ற மகாசேனனுக்கும் பொருந்தியனவாகவே இருக்கின்றன. மகாசேனன் கந்த ளாய்க் குளத்தைக் கட்டினன் என்ற இலங்கைச் சரித்திர கூற்றும் மட்டக்களப்பு வரலாற்றுடன் இயைந்தே காணப் படுகின்றது; எனினும் அவன் தெட்சணுபதி ஆலயமும் நேர்பண்ணி அபிஷேகமும் செய்வித்தான், என்றகுறிப்புக்கு எந்த ஆதாரமும் இலங்கைச் சரித்திரத்திலே காணப்பட მეჭ6)?ე).
குளக் கோட்டன் கல் வெட்டு, தெட்சிணகைலாச புரா ண ம் என்பவற்றின்படி, கந்தளாய்க் குளத்தையும் கோணேசர் கோட்டத்தையும் அமைத்தவன் குளக்கோட் டன் என்பவனே. தெட்சணுபதி ஆலயமும் நேர்பண்ணி காந்தளே ஏரியையும் ஆடக சவுந்தரியின் உதவியோடு கட் டியவனக மட்டக்களப்பு வரலாறுகளிற் கூறப்படும் மக சேனன், வங்க தேசத்து வீரசோகனது புத்திரனும், வைது லிய சைவனும், ஆடக சவுந்தரியை மணந்து சிங்ககுமா னைப் பெற்றேனுமாகின்றன்.

Page 7
6 முன்னுரை
மகாசேனனும் குளக்கோட்டனும் ஒருவர்தானே என்பது இன்னும் நன்கு தெளிவு பெறவேண்டிய செய்தி யாகவே உள்ளது. குளக்கோட்டனது காலமும் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. மகா வம்சத்து மகாசேனன், மட்டக்களப்புத் தமிழ்ப் பேரரசியாகிய ஆடக சவுந்தரியை மணஞ் செய்து சிங்க குமாரனைப் பெற்றன் என்று கொள் ளுதற்கு இலங்கைச் சரித்திரங்களுட் சான்று இல்லை. இந் தச் சூழ் நிலையில், ஆடக சவுந்தரியின் வரலாறும், குள மும் கோட்டமும் அமைத்த குளக்கோட்டன் வரலாறும் கிழக்கிலங்கைச் சரித்திரக் குறிப்புகளை ஒட்டி இந் நாடகத் துள்ளே பிணைந்து செல்வதைக் காணலாம்.
மட்டக்களப்புப் பழந்தமிழ்வழக்கிலே 'தமிழ்மதம் என்று சைவ சமயத்தையே குறிப்பார். இந்நாட்டின் பழ மையான சைவ மதம், முருக வழிபாட்டு நெறியிலே ஊறி நின்ற ஒன்று. வைதூலிய சைவம் என்னும் சொல் இங்கு வேதகாலத்துச் சிவ நெறியைக் குறிக்க வழங்கியுள் ளது. இவ்வாறு ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த மட் டக்களப்பின் சமய நிலை, அரசியல் முறை, சமூகவழக்கங் கள் சில, இன்றும் உள்ளவயற்களத்து வழக்கங்கள் சில வற்றின் தோற்றம், நாட்டின் நீர்ப்பாசன ஒழுங்குகள், கோணேசர் கோயிற் பரிபாலன நியதி என்பவை இந்நாட கத்தினூடு இழைத்துச் செல்லப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நாட்டின் ஒரு புண்ணியப்பழம்பதி யான மாமாங்கத் தீர்த்தக் குளம் ( அட்டை பின்புறம் ) இராமரால் காசி அவிமுத்தி தீர்த்தம் கலந்து அமைக்கப் பெற்ற தென்பது ஐதீகம், அத்திருக் குளத்தில் முழுகிய புண்ணியப் பயனலே, பன்னெடுங்காலமாகத் தன்னுடனிரு ந்த அமங்கலத்தன்மை நீங்கப்பெற்ற மாமங்கையாகிய ஆடக சவுந்தரியினல், " மாமங்கை நதி ' என்று அத்திருக் குளம் பெயர் பெற்ற வரலாறும் இந்நாடகத்தினூடு புலப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரு வரலாற்று நிகழ்ச்சிகளையும் நாடகவடி வாக்கும் போது எழுந்த இன்றியமையாமை நோக்கிப் புதி தாகச் சில பாத்திரங்கள் படைக்கப்பெற்றுள்ளன. நாடக உரையாடற் பகுதிகள் பாத்திரங்களின் தகுதிக்கும், தன் மைக்கும், காலத்துக்கும் ஏற்ப வேறுபட்டுச் செல்லும் தமிழ் நடையிலே கூடியவரை அமைக்கப்பெற்றுள்ளன. முதல் நாடகத்தில் இடம் பெற்றுள்ள பத்திப்பாடல்கள் மூன்று, சந்தர்ப்பத்துக்குப் பொருந்தத் தக்கவாறு ஆழ்வார் பாசுரங் களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளன. இந்நாடகங்கள் அரங்கு செய்யப்படும்போது முறையே இரண்டு, இரண் டரை மணித்தியாலங்களுள் அமைதல் வேண்டும் என்ற நியதி கூடியவரை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
எனது இம் முயற்சியைப் பாராட்டி, இந்நூலுக்கு
அணிந்துரை நல்கிய தமிழறிஞர்களுக்கு நான் பெரிதும் கட மைப் பட்டுள்ளேன். நூற் பொருளுக் கிசைந்த நல்லதோர் அட்டைப் படத்தினை வரைந்து தந்தவர் தம்பிலுவில்லைச் சேர்ந்த ஓவியக் கலைஞர். திரு. செ. ஜே. கிருஷ்ணபிள்ளை அவர்கள். நூலின் பின்புற அட்டைக்குத் தேவைப்பட்ட படங்களைத் தந்துதவியவர் திருமகள் அழுத்தகத்தின் அதிப ரான திரு. மு. சபாரெத்தினம் அவர்கள். இப் பெருமக் கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மிகக் குறுகிய காலத்துள்ளே இந்நூலை அழகுற அச்சேற்றித் தந்த மட்டக்களப்புக் கத்தோலிக்க அச்சகத்து அதிபர், ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி உரியது.
சரித்திர உண்மைகளை நாடகமாகப் புனைவதில் ஏற் படும் பல கஷ்டங்களையும் நாடகக்கலை அறிஞர் உணர் வாராதலினல், காலச் சூழ் நிலையை நோக்கி, எனது இச் சிறு முயற்சியினையும் நன்கு வரவேற்று, என்னை மேலும் இத்துறையில் ஊக்குவிப்பார்களென்று நம்புகின்றேன்.
வணக்கம்,
(திருமதி க. கந்தையா 15, மேல் மாடித் தெரு,
மட்டக்களப்பு. 20一12-1965_
2

Page 8
ЕЈН ஆசிரியர் யிற்சி லூரியின்
முன்னைநாள், தமிழ்ப்பேராசிரியர்
பண்டிதர், செ. பூபாலபிள்ளை அவர்களது
மதிப்புரைச் செய்யுட்கள்
l பொன்னிலங்கைக் குணதிசையிற் பொற்புறவே பொருந்துமட்டுக் களப்பிற் தோன்றும் தன்னிகரில் வேளாளர் குலக்கொடியாள்
தண்ணளிசேர் கங்கேஸ் வரியாம் மன்னுடிகழ் மட்டுநகர் ஆசிரியர்
கல்லூரி மகிழு மாறு நன்னலஞ்சேர் செந்தமிழில் விரிவுரைகள்
நிகழ்த்துகின்ற நங்கை நல்லாள்.
2
தொழத்தகுநல் நடமாடுந் தெய்வமெனத்
தமிழ்க்குலத்தார் தொழுது நிற்கும் இழந்ததமிழ் நலமெலாம் எடுத்துரைத்த
எழில் விபுலா நந்தர் சீஷை கிழக்கிலங்கைச் சரித்திர முங் கிருபைநிறை
பெண்களதுங் கீர்த்தி காட்டி வழக்கிறந்த நாடகமாந் தமிழ்வளர்க்க
 
 
 
 
 
 
 
 
 
 

அணிந்துரை 9
3 உழவு தொழில் புரிகின்ற உத்தமர்கள்
களே நீங்கி உவகை எய்த
அழகுதமிழ் மொழிநடையில் இசைப்பாக்கள்
ஆங்காங்கே அமைத்து நல்ல பழகுதமிழ்ப் பண்டிதரும் பாமரரும்
பயனடையப் படித்தும் பார்த்தும் கழனிநிறை மட்டூர் வாழ் கங்கையாள் இருநாடகங் கருதித் தந்தாள்.
4. நகைச்சுவையில் நாமெலாம் ஈடுபட
நல்ல பிநயம் எடுத்துக்கூறி வகைப்படுத்திக் காலமுடன் களன்காட்சி
உறுப்பினரை வகுத்துக் காட்டி மிகப்படுந்தீ வெகுளியால் வீறுற்ற புருடோத்தமன் வீரங்காட்டிச் சுவைப்படவே பத்மாவதி சுகுணத்தைத்
துலக்குவது அரசன் ஆணை’.
5
அமுதமுண வாகித்தீஞ் சுவை ஆயுள்
அளிக்கு மஃதே யொப்ப அமுதமென வேபுனைந்த அரசனர்
ஆணையிக் கூத்தி னுலே - குமுதமலர் வாய்புரையுங் குமரியர் குமிழ்நகைக் குமரர் யாரும்
சுமுகமுறக் காதலின்பச் சுகமுற்றுப் பண்பாட்டாற் துலங்கு வாரே,

Page 9
ஆடக் சவுந் தரிஎனும் பழைய
அரசியார் அழகு சரிதை நாடக முறைதனில் நனிவிளக்கித் தமிழர சாட்சி முறையை ஏடறி விலாதவரும் எளிதினில்
விளங்க வெடுத்தே உரைக்கும் நாடக முறைமையது நன்றினிது
நம்மவர் நாட்டறி வினுக்கே.
மாங்க அமிர்தநதி, தென்கயிலை,
குளக்கோட்டர் மகிமை காட்டிக்
சவுந்தரியார் குடிகள் வாழ மாறு மணம்புரிய மந்திரியார்
வகுத்தவழி அறமுங் காட்டும் பூமாதாம் ஆடகநற் சவுந்தரியார்
நாடகத்தைப் போற்ருர் யாரே!
8
கையே கந்தனை ஈன்றுமுன்
சுரர்துயர் காத்து நின்ருள்
கங்கையாள் செய்யிரு நாடகத்
கல்லடி, பண்டிதர், செ. பூபாலபிள்ளை மட்டக்களப்பு. 22-12-1965,
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவேகாநந்த மகளிர் கல்லூரி அதிபர், திருமதி. கமலபுஷணி-திருநாவுக்கரசு, B, A (Hons.)
அவர் க ள து சிறப்புரை.
முத்தமிழினுள்ளும் மக்கள் மனத்தினை மிகுதியும் கவர்வது நாடகத்தமிழ். அது மனத்தை நெகிழ்வித்துப் புலன்களை நுண்மைப்படுத்துவது; மக்களின் அன்ருட வாழ் வோடு இயைந்து போவது. ஆகையினுற்தான் தொன்று தொட்டு இன்று வரை உலகில் எல்லாச் சமூகங்களிலும் தெருக்கூத்துத் தொடக்கம், பேசும் படம் வரை நாடகக் கலை மக்களின் மனத்தைக் கவர்ந்து வருவதாயுள்ளது. இந் நாடகக்கலை தமிழ் மொழியில் இன்னும் சிறந்த முறையில் தற்காலத் தேவைக்குத் தக்கவாறு முன்னேறவில்லையென் பதை நாம் கவனிக்கவேண்டும். நம்மிடைப் பழைய நாட கங்கள் பல உள என்பது உண்மையே. ஆணுல் அவை, தாம் எழுந்த காலத்தின் தேவைக்குத் தக்கவாறு எழுதப்பட் டவை. தமிழ் இலக்கியம் ஏனைய துறைகளில் முன்னேறிய வேகத்தில், நாடகத்துறை முன்னேறவில்லை. நல்ல படிப்பனை களைக்கொண்ட நாடகங்கள், நம் பழமையின் சிறப்பைச் சித் திரிக்கும் நாடகங்கள், நல்ல பிற மொழி நாடகங்களின் தழுவல்கள், சிறந்த முறையில் அமைக்கப்பட்ட நகைச்
சுவை நாடகங்கள் முதலியன தமிழில் மிகுதியும் வரவேற்
கத் தக்கன.
இத்துறையில், இங்கு தரப்பட்டிருக்கும் 'அரசன் ஆணை, "ஆடக சவுந்தரி என்னும் இரு நல்ல வரலாற்று நாடகங்களை, மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை யிலே தமிழ் விரிவுரையாளராகக் கடமையாற்றும் திருமதி கங்கேஸ்வரி கந்தையா அவர்கள், தம் முதல் முயற்சியாகத் தந்துள்ளார்கள். நாடகங்கள் அன்னுரின் ஆராய்ச்சிக் கூர்

Page 10
12 婷 அணிந்துரை i
மையையும், தமிழறிவையும் நன்கு காட்டி நிற்கின்றன. செவியேறலாக நமக்குக்கிடைத்துவந்த சரித்திரம், அதோடு சேர்த்துப் புனையப்பட்டு வந்த பல கதைகள், நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் தொகுத்து, மட்டக்களப்புப் பகுதியில் ஒரு காலத்தில் ஆண்டுவந்ததாகக் கூறப்படும் ஆடகசவுந்தரி எனும் அரசியாரையும் அவரது கணவரான குளக்கோட்டு மகாராசாவையும் வைத்துப் புனையப்பட்டது ஆடக சவுந் தரி என்னும் நாடகம். இது எல்லா வகையிலும் வரவேற் கத்தக்கதாயுள்ளது. நம் நாட்டு மேடைகளிற் சிறப் τητα, இடம் பெறவேண்டிய ஒன்று. 'அரசன் ஆணை’ என்ற நாடகம் இந்திய நாட்டுவரவாறுகளிற் கூறப்படும் இன்னேர் உண்மை நிகழ்ச்சி. இவைகளினூடே, இன்றைய மக்கட் சமூகம் அறிந்து கொள்ளவேண்டிய பல செய்திகள் நுழைந்து சென்று கொண்டிருக்கக் காணலாம்.
அறிவும், அனுபவமும் முதிர்ந்தாலொழிய ஆழ்ந்த, தெளிந்த கருத்துக்கள் வெளிப்படமாட்டா சிறந்த கருத் துரைகளை வழங்குவதே இலக்கியப் படைப்பின் குறிக்கோ ளாக வேண்டும். அவ்வகைப் படைப்புக்களே நின்று பயன் தருபவை. ஏனைய மலிந்த படைப்புக்கள் யாவும் மக்கள் மனத்தை யும் கருத் தை யு ம் குழப்புவன தமிழறிவும், எழுத்து வன்மையும் ஆராய்ச்சித்திறனும்கொண்ட திருமதி கந்தையா அவர்கள், தமிழிலக்கியத்தில் நெடுநாளாகத் தொடர்பு கொண்டுள்ளவர். இவர் இம் முயற்சியில் ஈடு பட்டிருப்பது, தமிழ் மொழிக்கு மிகுதியும் நன்மை தருவ தாகும். ஆகவே ஆசிரியை அவர்களின் முயற்சியை நாம் வரவேற்று, மேலும் இத்துறையில் அவர் ஈடுபட்டு நமக் குச் சிறந்த நாடகங்களை வெகு விரைவில் இன்னும் தந்து கொண்டிருத்தற்கு, இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளே யும், உடற்சுகத்தையும் கொடுக்கவேண்டுமென வேண்டு GBGJ ITILDET 55.
மட்டக்களப்பு, கமலபூஷணி-திருநாவுக்கரசு
 

தம்பலகாமம் கோனே நாயகர் கோயிற் பரிபாலனசபைத் தலைவரும், முன்னைநாள், திருக்கோணமலை இந்துக்கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதருமான திருவாளர். ஐ. சரவணமுத்து அவர்களது
அணிந்துரை.
உலகம் ஒரு நாடக மேடை’ எனக்கூறிய நாடகக் கஜல மேதை, செக சிற்பியாரின் கருத்துரைமுக்கால உண்மை வாய்ந்தது. முத்தமிழ்க் கலைகளுள் நாடகக்கலை, இரண்டை பும் தன்னகத்தே அடக்கி விளங்கும் ஒப்புயர்வற்ற உயர் தனிக்கலையாக இருக்கின்றது. நமது பழந் தமிழ் இசை நாடகங்களின் மரபு, சிறப்பு என்பவற்றைச் சிலப்பதிகார மும், அதன் உரை முதலியனவும் நன்கு எடுத்துக்காட்டு கின்றன. பழஞ் சிறப்பு வாய்ந்த நமது நாடகத்தின் வளர் ச்சி, சினிமாக் கலையாக மாறி மக்களின் உணர்ச்சியையும் மனத்தையும் கவர்ந்து பிணித்து வருகின்ற இக்காலத்தே தமிழில் நல்ல நாடகங்கள் எழுதப்படுதல் மிகவும் அவசிய மாகவே இருக்கின்றது.
ஆங்கிலத்தில், செக சிற்பியாரின் நாடகங்கள் த ஒறந்து விளங்குவதற்குக் காரணங்கள் உண்டு. ம னி உணர்ச்சிகள், குணுதிசயங்கள், செய்கைகள், பேச்சுகள் எ லாம் ஒன்பான் சுவைகலந்து, அவர் படைத்த பாத்திர கள் மூலம் மலர்ந்து சுவை பயந்து, மனித உள்ளத்தை கவர்ந்து, பார்ப்பவர் உள்ளத்தையும் நடிப்பவர் உள்ளத்
வாய்ந்தன. ஒன்றல் (Harmony) தான் நாடகத்தின் குறிக்கோள்
செக சிற்பியார், இப்சன், பேணுட்சோ முதலி நாடகாசிரியர்கள், நாடகத்துறையை மிக நுட்பமாக

Page 11
கையாண்டு, சமுதாயத்தில் நிலவும் குறைகளையும், போலிக் கொள்கைகளையும், போக் கையும் மாற்றியமைக்க முயன்ற னர். பழைய சரித்திர நிகழ்ச் சி களை அடிப்படையாகக் கொண்டு நல்ல நாடகங்கள் வரைந்து தந்தனர். பண்டைக் காலச் சமூக வாழ்க்கையின் போக்கையும், கொள்கைகளை யும் பண்பாட்டையும் எடுத்து நினைவு படுத்தி ஒப்புநோக்க உதவினர்.
இந்த முறையிலே அமைந்த அரசன் ஆணை என்னும் முதலாவது நாடகம் விஜய நகர சாம்ராச்சிய காலத்து நிகழ்ச்சியை அடிப்படையாகக்கொண்ட ஒரு சரித் திர நாடகமாகும். ஏறக்குறைய இரண்டு நூற்ருண்டு களுக்கு முன் நம் முன்னேரின் அரசியல் முறைகள், வீரம், கற்பு, மானம், என்ற நற்பண்புகள் எவ்வாறிருந்தன என அறிய அது உதவுகின்றது.
விஜய நகர சாம்ராச்சியத்தின் சரித்திரம் மூன்று நூற்ருண்டுகள் வரை பரந்து கிடக்கும் பலதிற நிகழ்ச்சி கள் நிறைந்த ஒரு பெரும் வரலாறு.
இறுதியாக, தென்னிந்தியாவில் சுதந்திரத்துடன் புகழொளி பரப்பிய சாம்ராச்சியம் அது மூன்று நூற்றண் டாகத் தென்னக நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும், மறுசமய மூர்க்கத்தாக்குதலிலிருந்து காப்பாற்றிய பெருமை இந்தச் சாம்ராச்சிய அரசர்களுக்கே உரியது. இந்த இடத்து நிகழ்ச்சியைக் கருவூலமாகக்கொண்டு அ ர சன் ஆணை என்னும் நாடகத்தை இந் நூலாசிரியர் யாத்தது சாலச் சிறந்ததாகும்.
நற்கலையின் நோக்கம்: போதனை செய்தல், பண்" படுத்துதல், வினையீடு கொள்ளச் செய்தல் என முத்திறப்ப டும் என்று மேல் நாட்டுக் கலேவல்லுனர் கூறுவர். பண்பா' டுடைய மனிதனின் ஒவ்வொரு செய்கையிலும், சொல்லி
 
 

அணிந்துரை i 15
லும் கலைமணம் வீசும் என்பர். அதன்படி நமது சமுதாயத் தைக் கலை மணம் வீசச் செய்யும் முறையில், நற் கலையின் நோக்கம் மூன்றையும் இனிதே பரப்பும் வகையில், இந் நூலி லுள்ள நாடகங்களிரண்டும் அமைந்திருப்பதை நான் மிகு தியும் பாராட்டுகின்றேன்.
அரசன் ஆணையுள் வரும் கலிங்காதிபதி கபிலேந் திரன், வயதும், பண்பாடும் முதிர்ந்த ஒரு அரசன். அவன் மகன் புருஷோத்தமன், ஆண்மை, வீரம், மானம், அறிவு என்பன நிரம்பிய ஒரு ஆணழகன். ஒரு நாடகத்தலைவனுக்கு வேண்டிய நற்குணங்கள் நிரம்பப்பெற்றவன். குலத்தையும் குலதெய்வத்தையும் மேலாகக் கருதுபவன். பத்மாவதியோ தமிழ் நாட்டுப் பண்பும், கற்பும், அழகும், அ டக் க மும், அறிவும், அன்பும் நிறைந்த அரசகுல மங்கை, சீறிவிழுந்து வீரவார்த்தைகள் பேசிய புருஷோத்தமன், பத்மாவதியின் அடக்கத்தோடு கூடிய அழகைக்கண்டதும், தான் முன்பு கூறிய சபதத்தை மறந்து அவள் வயப்படுகிருன் அழ கென்பது என்ன? ஒரு பொருளினூடே காணப்படும், அரு மைப்பாடு அல்லவா! அந்த அருமைப்பாடு பத்மாவதியில் நன்கு ஒளி விடுவதைக்கண்டு கொண்டதும், புருஷோத்தமன் தன்னையே மறந்து அதனேடு ஒன்றிவிடும் தன்மை நாடகத் துள் மிகச் சிறப்பாகக் காட்டப்பெற்றிருக்கின்றது.
பத்மாவதியைப் புருஷோத்தமன் நேரிற் காணும் வரை இந்த நாடகம் அவலமாக முடியுமோ என ஐயுற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பத்மாவதியைக் கண்டதும் நாடகத்தின்போக்கு உடனே மாறி இன்பமாக முடிகிறது. இது சஸ்பென்ஸ் ( Suspense ) என்ற ஒரு சிறந்த நாடக அம்சம். அடுத்தது எது நடக்குமோ எனத் தெரியாது வைத்து, மனத்துக்கு அவாவையுண்டாக்கி இழுத்துச் செல் லும் ஒரு கலைத்திறமை. இச் சிறப்பு இந்தக் காட்சியில் நிறைந்து நின்று சுவை ஊட்டுகின்றது.
A3

Page 12
6 அணிந்துரை i
நாடகாசிரியன் இசையையும், இயற்கையையும், மனித எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் குழைத்து, நாடக பாத்திரங்களின் மூலம் நமக்குத் தருகின்ருன் நாடகத்தின் மூலம், கால விரிவிலே ஒரு கணப்பொழுது எனக் கொள்ளத் தக்க நேரத்தில், இயற்கையின் ஒரு மூலையை, வாழ்க்கை யின் ஒரு கண நேரத்தை, அழகின் ஒரு கூற்றை, அவ்வாறு எடுத்துக்காட்டுவதற்கு எத்துணையோ திறமை வேண்டும். இந் நூலாசிரியரின் அத்திறமை, ஆடக சவுந்தரி எனும் நாட கத்திலே கருக்கொண்டு, முறுக்குடைந்து விரை பரப்பும் தன்மை உடையதாகத் திகழ்வதைக் கண்டு உள மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஈழத்திலே நாடகக் கலையைக் கையாண்டு இலக்கி
யப் பணி புரிய முன் வரும் பெண்மணிகளுக்கு இவர் முன்
னுேடியாக விளங்குவது, நம் நாட்டுக்கு, சிறப்பாக மட்டக் களப்புப் பகுதிக்கு மிக்க பெருமை தருவது.
ஆடக சவுந்தரி என்னும் பெண்ணரசி, ஏறக்குறைய கி. பி. 78- 268க்குள் ( கலியப்தம் 3180க்கும் 3370க்கும் இடையில் ) மட்டக்களப்புப் பகுதியிலிருந்து ஆண்டவரென் பது அப்பகுதி வரலாறும், கர்ண பரம்பரைக் கதையுமா கும். இவ்வரசி, திருக்கோணேஸ்வரத்திற் பெருந்திருப்பணி களைச் செய்து, குளமும் கட்டிய குளக்கோட்டன் என்னும் சோழ அரசனைத் திருமணம் செய்தாள் என்று கல்வெட்டுச் சாசனம் சான்று பகர்கின்றது.
இந்தச் சோழ அரசனது காலத்தை " திருந்து கலி பிறந்து ஐந்நூற்ருெருபதுடன் இரண்டாண்டு சென்ற பின்னர் ' என்று அக்கல்வெட்டு வரையறுக்கின்றது. கலியப்தம் 512 என்பது, இற்றைக்குச் சுமார் 4500 ஆண்டு களுக்கு முன்னர் என்ருகும். சிந்து வெளி நாகரீககாலத்தை அண்மிய காலம் அது மட்டக் களப்பு வரலாற்றின்படி ஆடக சவுந்தரியின் காலம் (கி. பி. 2-3 நூ. ஆ.) கடைச்

அணிந்துரை i 17
சங்க காலம் ஆகின்றது. பரராமதேவன் எ ன் னு ம் சோழ அரசனின் மகனே குளக்கோட்டன் என்று கல்வெட்டும், புராணக் கதையும் கூறுவ, எனினும் சோழர் குல அரசர் வரிசையில் இப் பெயருடன் ஒரு அரசன் இருந்தமைக்குச் சரித்திரச் சான்றுகள் இல்லை. இவைகளால், குளக்கோட்ட னது காலம் முதலியன இன்னமும் ஆராய்ச்சிக்கே இடமாய் இருக்கின்றன.
கல்வெட்டுக் கூற்றுக்களின் பிரகாரம் குளக்கோட்டன் ஈழத்தில், காடுகெடுத்து நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கி, கோயிற் பணி திறம்பட நடக்க ஒரு நிருவாகத் திட்டமும் வகுத்து, குடிகளைக் கொண்டு வந்து திருக்கோண மலைப் பகுதியிலே குடியேற்றினன். 1624ம் ஆண்டு போர்த் துக்கேயத்தளபதி, கோணேஸ்வரத்தைஇடித்துத்தரைமட்ட மாக்கிக் கோயிற் செல் வங்களை யும் கொள்ளை கொண்ட போது, அக் கொள்ளையிலிருந்து எஞ்சியவற்றைக்கொண்டு வந்து தம்பலகாமத்திலே ஒரு சிறிய கோயில் கட்டிக்காத் தவர்கள், குளக் கோ ட்டன் குடியேற்றிய தானத்தார், வரிப்பத்தார், என்று சொல்லும் காரியஸ்தர், வயிராவியார் என்னும் பகுதியாரே. வாழையடி வாழை என வந்த அவர் களின் சந்ததியாரே இன்றும் கோயிற் தொண்டு செய்து வருகின்றனர்.
இந் நூலில், ஆடக சவுந்தரி என்ற நாடகத்தால், திருக்கோணமலைக் கோயிற் பரிபாலனத் திட்டம், குடியேற் றம் முதலிய அவ்வாரு ன பல செய்திகளோடு, மட்டக்களப் பின் பழமையான அரசியல், சமய சமூக வழக்கங்கள், மாமாங்கத் தலவரலாறு, மட்டக்களப்பு மக்க ளும் திருக் கோணமலைப் பகுதிமக்களும் பண்டு கொண்டிருந்தநெருங்கிய தொடர்பு என்பனவும் நன்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. சாதி சமய சமரச மனப்பான்மையை வளர்த்து நின்றதமிழ்ப் பெண்ணுன ஆடக சவுந்தரியின் மூலம், பலவித வேறுபாடு களும், நிறைந்து காணப்படும் இன்றைய தமிழ்ச் சமுதாயத் துக்கு ஒரு நற் போதனை கிடைக்கின்றது. -

Page 13
வள்ளுவர் கூறும் நற்குணங்களுக்கமைய நன்கு படைக்கப்பெற்றிருக்கும் காலிங்கராயர், பிரம்மராயர் என் னும் மந்திரிமார் நாடகத்திற்கு அச் சா னி போன்றிருக் கிருர்கள்.
நாடகத் தலைவனும் தலைவியும் சமயப்பற்று மிக நிறைந்தவர்கள்; குடிகளிடத்தில் அன்பும் தயையும் கொண்ட வர்கள் எதையும் தாங்கும் பண்பு படைத்தவர்கள். அச் சிறப்புகளினலேயே, செயற்கரிய பெரும் பணிகளைச் செய்து முடித்தனர் என்பது நாம் அறிந்து பயன்பெற வேண்டிய தாகும். பழைய வரலாற்று வழியில் வந்த குளக்கோட்டனை யும், ஆடக சவுந்தரியையும், நாடகத்தின் வழியே நாம் கண்டு களிக்குமாறு ஆசிரியர் தந்திருத்தல், பழமையிலே புதுமை கலந்ததொரு புதுமை. கலையைச் சுவைக்கும் பழக்கத்தை எக் காரணத்தாலோ மறந்து விட்ட நம் குறையை நீக்க, இத் தகைய நாடகங்கள் மிகப் பயன்படும் என்பது உண்மை.
நாடக நூல்களின் நல்லமைவுக்கு, நிறைந்த பொரு ளுடைய குறைந்த சொற்களும் வேண்டும். இம் முறையைச் செகசிற்பியார் பிற்காலத்தில் எழுதிய நூ ல் களிலே கண்டுகளிக்கலாம். அரசன் ஆணை ’, ‘ ஆடக சவுந்தரி என்னும் இந்த நாடகங்களை எழுதிய திருமதி. கந்தையா அவர்கள் சிறந்த இம் முறையினையும் தம் நூலுள் நன்கு கையாண்டிருக்கிருர், -
அவர், இத்துறையில் மேலும் மேலும் ஈடுபட்டுத் தலைசிறந்த நாடகங்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கும், ஏன், அகில உலகத்துக்கும் நல்க இறைவன் நீண்ட ஆயு ளையும், நிறைந்த ஆற்றலையும் மேலும் கொடுக்கவேண்டு மென்பது அடியேன் பிரார்த்தனை.
வாழ்க தமிழ் மங்கையர் கற்பு ! வாழ்க தமிழ் வீரம் ! தம்பலகாமம்,
ஐ. சரவணமுத்து و 5، 6 9 1 سي 2 1 سبت 2 2
 

( இரு நாடகங்கள் )
ஆடக சவுந்தரி

Page 14

முதலாவது 9 J J Gil 9, 260)
நாடக உறுப்பினர்.
விஜய மன்னன் :-
விஜய நகர அரச குடும்பத்தின் இளைய
பரம்பரையைச் சேர்ந்தவன்.
இளவரசி, பத்மாவதி:-
ைெடி மன்னனின் மகள்.
சுந்தரி:-
இளவரசியின் உயிர்த் தோழி.
வனஜா, சுகுணு, நளினி, எழிலி, கமலா;-
இளவரசியின் மற்றைத் தோழியர்.
குறத்தி:-
இளவரசியின் திருமணம் பற்றிக்குறிசொல்
. I6) GT.
மாதங்கி
விஜய மன்னனது அரசவை நடன மாது
ைெடி மன்னனது அரசவை ஊழியன்.
கஜபதி கபிலேந்திரன்:-
கலிங்க நாட்டதிபதி, ஒட்டதேசத்துக்கும் அரசன்.

Page 15
20 அ3 நாடக உறுப்பினர்
பண்டித மகாசயர்:-
ைெடி மன்னனின் முதன் மந்திரி.
புருடோத்தமன் :-
ைெடி மன்னனின் மகன். இந்நாடகத்துத் தலைவன்.
மகேந்திரன் :-
புருடோத்தமனின் தோழன்.
பொன்னி:-
கலிங்க அரண்மனைப் பூக்காரி.
இராமன்:-
பொன்னியின் கனவன்.
மேலும், கலிங்க மன்னனது குலகுரு, அரண் மனைச் சேவகன், தூதுவர், ஆலாத்திப் பெண்கள், ஒரு துறவி, முரசறைவோர் என்பாரும் மு னி ய ன் , கறுப்பையா, பழனிச்சாமி, கண்ணன், வள்ளி, செல்லி கண்ணி, தங்கம் முதலிய குடிமக்களும், வேறு பொது மக்கள் சிலரும் இடம் பெறு 6) IT.
 
 
 

அரசன் ஆ2ண
in grrà
இடம் : விஜயநகர மன்னனது பேரவை.
(விஜயநகர மன்னனுடைய அரச சபையில் நடனமாது மாதங்கியின் நடன அரங்கேற்றம் சிறப்புற நடை
பெறுகின்றது.
நடன முடிவில்)
விஜயமன்னன் மாதங்கி! உனது கலையின் திறமை
யைக் கண்டு நாம் அளவிலா மகிழ்வு கொண் டோம். தமிழன் தன் ஒய்வு நேரத்தைத் தலைசான்ற கருத்துக்களோடு இன்பமாய்க் கழிக்க உதவிவந்தது இந்த நாட்டியக்கலை இது உயிருடன் நிலைத்துவாழ உதவுகின்ற உனக்கு இறைவன் நற்சுகத்தையும் பலத்தை யும் தந்தருள்வானுக இன்றுமுதல் இந்நாட் டின் ஆடல் அரசி' என்ற பட்டத்தை உனக் குச் சூட்டுகின்ருேம். இதோ! இந்தப் பரிசை யும் பெற்றுக்கொள், (சில பரிசுப்பொருட்களைக் கொடுக்க, மாதங்கி அவற் றை வணக்கத்துடன் பெற்றுக்கொண்டு வெளியேறு கிருள்.)
சேவகன் : மன்னர் பெருமானே ! ஒட்டதேசத்தி
லிருந்து தூதுவரிருவர் வந்திருக்கின்றனர்.
விஜய உள்ளே அழைத்துவா,
தூதுவர் (வணங்கி) மகாராசாவே கலிங்காதி பதியாகிய கஜபதி கபிலேந்திர மகாராசா,
3.

Page 16
22
அரசன் ஆணை
தங்கள் உறவு என்றும் நிலைக்கவேண்டி இத் திருமுகத்தையும், இக் கையுறைப் பொருளை
யும் கொடுத்துவரும்படி எங்களுக்குக் கட்
விஜய
டளையிட்டார். (ஒரு விலையுயர்ந்த முத்துமாலை யையும், ஒலையையும் கொடுக்கின்றனர். முதன்மந் திரியார் முன்சென்று அவைகளைப் பெற்றுக்கொண்டு
மன்னவனிடம் ஒலையைக் கொடுக்கிருர், அரசன் திரு
முகத்தைப் படித்து, மலர்ந்தமுகத்துடன் · · o
தூதுவர்களே ! இந்த நல்ல செய்தியைக் கொணர்ந்ததற்குப் பரிசாக இதோ இந்த இரத்தினமாலை இரண்டு உங்களுக்கு உங்கள் இளவரசருக்கும், எனது மகளுக்கும் நடக்க வேண்டும் என்று உங்கள் அரசர் விரும்பு கின்ற திருமணத்தின் முலம் எங்கள் இரண்டு அரச பரம்பரைகளுக்கும் அழியாத பிணைப்பு ஏற்படப் போகின்றது. அதனை நாம் பெரி தும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்ருேம் திரு முகத்திற் குறிப்பிட்டபடி, அந்த நன்னுளி
லேயே திருமணத்தையும் முடித்துவிடலா
மென்று மன்னர் கபிலேந்திரரிடம் கூறுங்கள் (தூதுவர் செல்லச் சபையும் கலைகின்றது )
2nib asi, (TnʼLGA
இடம் : அரண்மனைப் பூந்தோட்டம்,
(நளினி, சுகுணு, கமலா, எழிலி நால்வரும், குடங்
கொண்டு ஆடிப்பாடித் தோட்டத்துப் பூக்கன்றுகளுக்கு
நீர் ஊற்றுகின்றனர். இவர்கள் நீர்மொண்டு வரும் வழியில் பெரிய மரமொன்றின் பின்புறமாக ஒரு ஆட வனைப்போன்று மாறுவேடத்திலிருந்த வனஜா, கையில்

2ith y gyfrif "G) 23
தடியுடன் திடீரென அவர்கள் முன் குதித்துத் தொண் டையைக் கனைத்துக்கொண்டு)
6.60 gr. (மாறுவேடத்தில்) : ஏய் நில்லுங்கள் (ஒவ் வொருவர் கையிலுமிருந்த குடத்தைத் தட்டித் தட் டிச் சுற்றிவந்து) எங்கே போகின்றீர்கள்?
சுகுணு: நாங்கள் எங்கேபோனலும் உனக்கென்ன?
வனஜா (மா. வே.) : நான் யார் தெரியுமா? இந்
நாட்டு இளவரசன். (எல்லோரும் கொல் என்று சிரிக்கின்றனர்.)
வனஜா (மா. வே.) (வாயில் விரலை வைத்துக்கொண்டு)
ஏன் சிரிக்கிறீர்கள்?
| || || BN நளினி : இந்த நாட்டு மன்னருக்குப் புத்திரனே கிடையாது என்பதை அறியாமற் சிக்கிக் கொண்டாய்!
வனஜா (மா. வே.) ஐயோ! புத்திரி இருக்கிருளா?
எழிலி : இருக்கிருள். அவள்தான் எங்கள் இள வரசி. இந்தப் பூந்தோட்டம் இளவரசியா ருடையதுதான், நாங் க ள் இளவரசியின் தோழிகள்.
வனஜா (மா. வே.) ம். பார்த்தாலே தெரியுதே
கமலா ஏன்? நீ அவளைக் கலியாணம் பண்
ணிக்கொள்ளப்போகிருயோ?

Page 17
அரசன் ஆணை
சிரிக்கிருர்கள். கமலா சுகுணுவைப்பார்த்து) சுகுணு! இவர் கேள்வியைப் பார்த்தாயா? இப்படியே விட்டுவிட்டால் காரியம் முற்றிவிடும். (சற்றுக்
கோபமாக, மாறுவேடத்தில் நிற்பவரைப் பார்த்து)
ஏய்! உத்தரவின்றி யாரும் உள்ளே வரமுடி யாத இப்பூங்காவினுள், தைரியமாகப் புகுந் ததுமில்லாமல், கேலியும்பண்ண ஆரம்பித்து விட்டாயோ? நில், உன்னை என்ன செய்கின் ருேம் பார்!
சுகுணு இளவரசி வரும் நேரமாகிவிட்டது. நீ உடனே வந்தவழியே போகிருயோ, காவற் காரரைக் கூப்பிட்டுக் கைதுசெய்யச் சொல் லட்டுமோ?
வனஜா ஐயோ! வேண்டாம், வேண்டாம். வந்த வழியே போய்விடுகிறேன். (பயந்தவன்போல், பின்னுக்கு அடியெடுத்து மறைய முயலும் நேரம், தலைப்பாகை மரக்கொம்பரில் சிக்கிக்கொள்ள, எல்லோ ரும் வனஜாவெனக்கண்டு, ஒடிப்போய் அவளை வளைத் துக்கொள்கின்றனர்.)
நளினி (வனஜாவைக் கட்டிப்பிடித்து) நல்ல மாயக்
காரியடி வனஜா , நீ,
கமலா (வனஜாவைப் பார்த்து) உனக்கு ஆண்வே
டம் மிகப் பொருத்தமாயிருந்ததே!
6.160 gr LD se se eso,
எழிலி : (வனஜாவைப் பார்த்து) என் மனசு கூட உன்
பின்னுலேதான் போய்க்கொண்டிருந்ததடி. (எல்லோரும் சிரிக்கி ள்)
 
 
 
 

2ib jirrL"GF) 25
வனஜா எழிலி! இப்பொழுது உன் மனசு உன் னிடம் திரும்பி வந்துவிட்டதோ? நெஞ்சைத் தொட்டுப்பார்.
எழிலி : வந்துவிட்டது! வந்துவிட்டது!
சுகுணு நேரமாகிறது; வாருங்கள் தோட்டத் தைச் சுற்றிப்பார்ப்போம். (எல்லோரும் செல்லு கின்றனர். மறுபுறமாக இளவரசி பத்மாவதியும், அவ ரது உயிர்த்தோழி சுந்தரியும் வருகின்றனர்.)
இளவரசி : சுந்தரி! எங்கே எழிலி, சுகுணு gp(D)
வரையும் காணவில்லை.
சுந்தரி வந்துவிடுவார்கள். பூங்கன்றுப் பாத் தியைக் குனிந்து பார்த்து) இதோ பாருங்கள்; இப்பொழுதுதான் நீரூற்றியிருக்கின்றர்கள். இங்கே தோட்டத்துள்ளேதான் எங்கேயா வது நிற்பார்கள். (திரும்பிப்பார்த்து) அதோ!
வருகிருர்கள். இளவரசி : சுகுணு! ஏன் இவ்வளவு தாமதம். சுகுணு - ம்..ம். (என்று வார்த்தையை விழுங்கி)
நாங்கள் பட்ட பாட்டை என்னென்றுதான் சொல்லுவது தேவி! (சொல்ல வேண்டாமென்று வனஜா வாயில் விரலை வைத்து, உஸ். என்று மெளன மொழியிற் கூறு கிருள். சுகுணு வனஜாவின் மெளனக் குறிப்பைக் கவ னியாதவள்போல் பாடுகிருள்.)
சுகுணு நாங்கள் பட்ட பாட்டைச் சொன்னுல் நாடெல்லாம் நகைக்கும்
நாடெல்லாம் நகைக்கும்.

Page 18
26 அரசன் ஆணை
நாடெல்லாம் நகைக்கும் இந்தக் காடெல்லாம் திகைக்கும் - ஒரு வெட்டுமீசைக் கட்டழகன் பொட்டெனக் குதித்தான் பொட்டெனக் குதித்தான் - எம்மைச் சுற்றியே வளைத்தான் என்னென்னவோ செய்தியெல்லாம் எடுத்துக்கூறினுன்
எடுத்துக்கூறியே - LDGOT GODF" பறித்துச் சென்ருனே!
இளவரசி ஆ! அப்படியா? ஆண் வா டையே வீசாத இந்த நந்தவனத்தில் அவ்வளவு தை ரியமாக வந்தவன் யாரடி அவன் எங்கே GBL), Tuff GSS) LI "LITT GöI ?
(வனஜா பயந்தவள்போலப் பதுங்குகிருள். மற்றை யோர் பேசாமல் நிற்கிருர்கள்.
இளவரசி என்னடி மிரளுகிறீர்கள்? (ஒருவரும் ஒன் றும் பேசாது நிற்கவே) சுந்தரி என்ன இவர்கள் இப்படிக் கல்லாகிவிடுவார்கள் போலிருக்கி றதே. (சுந்தரி நிகழ்ந்ததைத் தெரிந்துகொண்டவளாய், வன ஜாவைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்து)
இந்த ஆணழகன்தானம்மா இத்தனை பேரையும் மயக்கி மையல் உண்டாக்கியவன் ளவரசி ஆ. இவன்மேல் இவர்களுக்கு மைய
லும் உண்டாயிற்றுமோ?
 
 
 

2戍。rs".島 岁歼
சுந்தரி அதை ஏன் கேட்கிறீர்கள்? இவனையே கல்யாணம் செய்துகொள்ள வேணும்என்று எழிலி கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டா GIT ITGBILD ! (இளவரசியுட்பட எல்லோரும் சிரிக்கிருர்கள். இவ் வேளை நந்தவனத்தின் வெளிப்புறத்தில் ஒரு குறத்தி பாடிக்கொண்டு செல்ல, எல்லோரும் அதனை உற்றுக் கேட்கின்றனர்.) குறத்தி பச்சை குத்தலையா - அம்மாமாரே
பச்சை குத்தலேயா பாம்புப்பச்சை பல்லிப்பச்சை பருத்தகைக்கு ஏற்றபச்சை சேம்புப்பச்சை செல்லப்பச்சை சிறுத்தகைக்கு ஏற்றபச்சை பச்சை, குள்ளநரிக் கொம்பிருக்கு, குட்டிப் புலிப் பல்லிருக்கு, நல்லவசியமிருக்கு, நாட்டையெல்லாம் ஆட்டிவைக்கும். பச்சை குத்தலேயா அம்மாமாரே பச்சை குத்தலையா? குறத்தி நந்தவனத்துள் நிற்பவர்களை எட்டிப்பார்த்து) ஏம்மா பச்சை குத்தலையா? குறிகேக்கலையா, குறி? இளவரசி சுந்தரி குறிகேட்போமாடி சுந்தரி அதற்கென்ன! (குறத்தியின் பக்கம் நோக் கிக் கைதட்டுதலும் குறத்தி வருகின்ருள். பொருத்த மான ஒரு உயர்ந்த இடத்தில் இளவரசி உட்கார,
அருகில் சுந்தரியும், சுற்றி ஏனைய தோழிமாரும் உட்காருகின்றனர்.)

Page 19
2& அரசன் ஆணை
குறத்தி gol gal gal ... ...
ஆதி அன்னை வள்ளிஜாதி நானுங்க ஆனைமுகன் ஆணையாக அஞ்சாமற் சொல்லிடுவன் - அவங்க ஆறுமுகன் ஆணேயாக மாருமற் சொல்லிடுவன் அச்சம் வேணும் அம்மா நான் நிச்சயமாய்ச் சொல்லிடுவன்.
(ஆடிவந்து இளவரசியின் கையைப் பிடித்து)
குறத்தி : அம்மா இளவரசி நங்கை கையில ஒரு
மங்களமான ரேகை ஆணுலும் . . 92 (5 பங்கமும் உண்டு. சொல்லவே பயமாயிருக்கு, அம்மா!
வனஜா பயப்படாதே! சும்மாசொல்லு,
குறத்தி சீதேவியாரிடம் செல்வங்கள் நிறைவா கும். இந்தப் பூதேவியிருக்குமிடம் பொன் காய்ச்சுப் பழமாகும். குடும்பம் தழைக்க வந்த குலக்கொழுந்து ராசாத்தி, அம்மா நீ. ஏம்மா! சரியெண்ணு, சரியெண்ணுங்க, இல் லேண்ணு இல்லேண்ணுங்க.
சுந்தரி சரிதான்; சரிதான்.
குறத்தி இடும்பைகள் வந்தாலும் ஈசுவரன்தான் காத்திடுவான். உன்கண்ணுன கண்ணழகன் உனைக் கைபிடிக்க வாருனம்மா. கண்திட்டி, நாத்திட்டி, இடையில் கயட்டங்கள் செய்யு
 

2 to origi) . 29
மம்மா. இன்னும் மூணு மாசத்துக்குள்ள அம்மாவுக்கு கண்ணுலம் வரும். சுந்தரி ஆ! நல்லது நல்லது எங்கிருந்துவரும்? குறத்தி : அம்மாவுக்கு அர சாளும் மவராசன் தான் வாருன் இடையில் பேச்சுப் புரளி யால ஒரு பிரட்டு வரும். அம்மா மனசு கலங்கவேணு, அந்த மாயக்கிருஷ்ணனுட மலரடியைப் புடிச்சுக்கிட்டா மலைபோல வாறதெல்லாம் பணிபோல பறந்துவிடும். (தோழிமாரெல்லோரும் சைகைமூலம் தமக்குள்ளேயே பேசிக்கொள்கின்றனர். இளவரசி சுந்தரியைப் பார்க்க, சுந்தரி ஒரு சீலையும், மாலையும் குறத்திக்குக் கொணர்ந் து கொடுக்கிருள்.)
குறத்தி (பணிந்து வாங்கிக் கொண்டு) அம்மா மவ
ராசியா வாழனும், (போகிருள்). கமலா : இங்கே மலைக்குறத்தி, இளவரசிக்கு மண வாளன் வருகிருனென்று குறிசொல்லுகிருள்; அங்கே முல்லையின் புதுமொட்டு எப்போது மலருமென்று வண்டு சுற்றுகிறது. நல்ல சகுனமடி!
நளினி : ஆமாம்; நம்ம பகிடியும் காக்காயிருக்கப் பனம்பழம் விழுந்ததுபோல், வெற்றியாகப் போகிறதோ, சுகுணு இளவரசர் வந்துவிட்டால் அப்புறம்! எழிலி : தேவியார் நம்மை எங்கேயடி கவனிக்
| | 495 (3 LITTG)

Page 20
30 அரசன் ஆணை
இளவரசி போங்கடி போங்கள் உங்களுக்கு எப்
பொழுதும் இதே பேச்சுத்தான்.
னஜா தேவி கோபிக்காதீர்கள், வேடிக்கையா
கப் பேசுகிருர்கள்.
ளவரசி சரி, சரி, நேரமாகிறது; வாருங்கள்,
அரண்மனைக்குப் போகலாம்.
3D F, L. G. - 1 Lh அங்கம்.
டம்: கலிங்காதிபதி கஜபதி கபிலேந்திரனது
9 TJF60) 62.1.
(அவைக்களத்தே முதன் மந்திரியாகிய பண்டித மகா
சயரும், மற்றும் நான்கு மந்திரியர், சேனதிபதி ஆகியோரும் தத்தம் இடங்களிலே இருக்கின்றனர். அரசர் மெய்காப்பாளருடன் வருகின்ருர், அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவித்து, அரசன் அமர்ந்தபின் தாமும் அமர்கின்றனர்.)
ன் மந்திரியாரே! இளவரசன் புருடோத்தமன் வங்காளத்தின் மீது படையெடுத்துச் சென் ருனே, அப் படையெடுப்பைப் பற்றி இன்று ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா ?
ந்திரி மகாராசாவே, நேற்றுவரை வெற்றி நம் படைகளுக்கே என்று அறிவிக்கப்பட்டது. இன்று, இதுவரை எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. ஆயினும் தட்சிணத்தை ஆண்டுவந்த பராக்கிரமனுண பாமனிஸால்தானைப் பத்து நாட்களில் வென்று வெற்றிக்கொடிநாட்டிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 1ம் அங்கம் 3.
நம் இளவரசர் புருடோத்தமர் இந்தச் சாதாரண பேர்வழியான வங்காளத்தை ஆளும் இலியாஸ் ஷாஹிஸுல்தானுக்குத் தோற்றுவிடுவாரா? சிறிதும் ஐயம் வேண் டாம். வெற்றி நம்முடையதே.
(சேவகன் ஒருவன்வந்து அரசனைப் பணிந்து ஒரு திரு முகத்தைக் கொடுக்க அரசன் வாங்கி வாசித்து முக மலர்ச்சியுடன் முதன் மந்திரியிடம் கொடுக்கிருன். மந்திரி உரத்து வாசிக்கிருர், அப்போது, குலகுருவும் வருகிருர் எல்லோரும் எழுந்து நிற்கின்றனர். அரசன் சிம்மாசனத்தினின்றும் இறங்கி)
அரசன் சுவாமி வரவேண்டும் வரவேண்டும், பொலிவின்றி இருந்த எங்கள் அரச சபை தங்கள் வரவால் இன்று புனிதமாயிற்று. (அவரை முன்னே அழைத்துச்சென்று ஆசனம் ஒன் றில் அமரச் செய்கின்றன். குலகுரு அரசனையும் சபை யையும் கைதுரக்கி ஆசீர்வதித்து அமர்கிருர் பின் னர் எல்லோரும் அமர்கின்றனர்.)
குலகுரு அரசே! எங்கே புருடோத்த மனைக் காண
அரசன் சுவாமி! இறைவன் திருவருளாலும்
கள் ஆசீர்வாதத்தாலும் எனது மகன் பு டோத்தமன், வங் கா ளத் து ஷாஹிஸ76 தானே வெற்றிகொண்டு மீண்டுவந்துகொண் டிருக்கிருன் அதோ. (புருடோத்தமன் வருதல். அரசனும் ஏனையோரு புருடோத்தமனே வரவேற்க முன்செல்கின்றனர். இ பெண்கள் பின்வரும் பாட்டைப் பாடிக்கொண்டு

Page 21
岛2 அரசன்
” ,
இளவரசருக்கு ஆலாத்தி எடுத்துக் கண்ணுறு கழிக் கின்றனர்.)
பெண்கள் : ராஜாதி ராஜன் ஆகவேண்டும் - நீ (பாட்டு) ராஜகுலதிகன் ஆகவேண்டும்
ராஜாதி ராஜணுகி ராஜ குல திலகனகி புருஷோத்தம மன்னன்
வாழவேண்டும்.
எங்கள் - யுவராஜன் நீடு
வாழவேண்டும்.
(ஆலாத்தி எடுத்து முடிந்ததும் பெண்கள் போக, இள வரசர் அரசரையும், குலகுருவையும் வணங்குகிருர், அரசன் மகனேக் கட்டியனைத்து)
அரசன் என் அன்புச் செல்வமே! உனது வீரத் தைப்பற்றிக் கேள்வியுற்ற எனது தோள்கள் விம்முகின்றன. இவ் வெற்றிமுரசத்தைக் கேட்டுமகிழுதற்கு உனது தாய்தான் கொ டுத்துவைக்கவில்லையே!
மகன்; அப்பா இதென்ன உங்கள் வார்த்தை! * பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும் நற் றவ வானிலும் நனி சிறந்தனவே' என்று நீங்கள்தானே அடிக்கடி கூறுவீர்கள். அதை நான் மறந்துவிடவில்லை. பெற்ற தாய்க்குச் செய்யவேண்டிய கடமையையும் சேர்த்து என்னைப்பெற்ற தாய்நாட்டுக்குச் செய்கின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

31ம் அங்கம் 33
றேன். எனது தாய்க்குப்பதிலாகத் தாய்த் திருநாடு மகிழும் அப்பா! அதுவே எனக் குத் திருப்தி (எல்லோரும் தத்தம் ஆசனங்களிலமர்கின்றனர்.)
குலகுரு அரசே! புருடோத்தமனைப் புறப்போ ரில் ஈடுபடுத்தி வெற்றிகண்டிருக்கிறீர். இனி அகப்போரிலும் விரைவில் அவனை ஈடுபடுத்தி வெற்றிகாண வேண்டு மென்பது எனது அவா. இதைப்பற்றிச் சிந்தித்ததுண்டா?
அரசன் ஆம் சுவாமி தாங்கள் முன்பு கூறிச் சென்றபடியே விஜயநகர ம ன் ன னரி டம் பெண்கேட்டு ஒலை போக்கியுள்ளோம். முடி இன்னும் கிடைக்கவில்லை.
விஜயநகரம் சென்ற தூதுவர் : (அவ்வேளை வந்து அரசனை
வணங்கி) மன்னர் பெருமானே! வணக்கம் விஜயநகர மன்னர் மகிழ்ச்சியோடு தங்களு குத் தந்த திருமடல். (தாம் கொண்டுவ திருமுகத்தைக் கொடுத்துச் செல்கின்றனர். அரச திருமுகத்தை வாசித்து)
அரசன் சுவாமீ! தாங்கள் நினைத்தபடியே நல் முடிபும் கிடைத்துள்ளது. நாம் எண்ணி நாளிலேயே முகூர்த்தம் வைத்துவிடலாெ
னவும் இசைந்துள்ளார்கள். -
குலகுரு : அப்படியே ஆகட்டும். மிக்க மகிழ்ச் அரசன் : (முதன்மந்திரியைப் பார்த்து) அமைச்சரே
விவாகத்திற்கு இன்னும் ஒரு மாசகாலமே

Page 22
34
அரசன் ஆணை
இருப்பதால் நீர் விரைவிலேயே அதற்கு
வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து
முடிக்க வேண்டும். மகாநதிக்கரையோர மாக உள்ள மாளிகைகளைக் கலியாணத்திற்கு வருகின்ற சிற்றரசர்கள் தங்குவதற்கும், நகர்ப்புறத்தேயுள்ள மாளிகை முழுவதை யும் பெண்வீட்டார் தங்குவதற்குமாக ஒழுங் கு செய்யவேண்டும்.
மந்திரி அப்படியே ஏற்பாடு செய்கின்றேன் பிரபு.
(சபை கலைகிறது.)
3ம் காட்சி 2ம் அங்கம்.
QL: கலிங்கநாட்டு வீதி.
(வள்ளுவர் இருவர் முரசறைகின்றனர். வீதியில் மக் கள் வந்து கூடுகின்றனர்.) (ஒருவன் முரசறைய, மற்றவன் வாசிக்கிருன்) நம்நாட்டு இளவரசரான புருடோத்தம மகாராசாவுக்கு இன்றிலிருந்து 5ம் நாள் திருமணம் நடக்கப்போகிறது. அவ்வைப வத்தில் நம்நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்பதும், இளவரசஜ மணக்கப்போகும் அரசகுமாரியான விஜய நகர மன்னனது புதல்வி பட்டணப்பிரவே சம் செய்யவிருக்கும் அன்று காலை, மகாநதிக் கரையிலிருந்து அரண்மனை வரையிலுள்ள ராஜ வீதியை அவர்களது பவனிக்காக நன்கு அலங்கரித்துச் சிறப்பிக்கவேண்டும் என்பதும்

1ம்
2
2D
d
2լb
to
1.
s
ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட, கஜபதி கபிலேந்திர மகாராஜாவின் கட்டளை வெகு பராக். எச்சரிக்கை,
(முரசறைந்துவிட்டுப் போகின்றனர். வீதியில் நின்ற இருவர் தமக்குள் அதுபற்றி உரையாடுகின்றனர்.)
ஆள்: அடேதம்பி! கேட்டியாடா புதினத்தை ஆள் என்னண்ணே!
ஆள் நம்ம இளவரசருக்குக் கண்ணுலமாண்
Las T
ஆள்: நூருண்டு வாழனும் நம்ம இளவரசர்.
அண்ணே பொண்ணு எந்த ஊராம்.
ஆள் விஜயநகரத்து . . . ஆள்: இராசாவா ?
ஆள் அட அசடே! நம்ம இளவரசர் இன் னுெரு ராசாவையாடா கண்ணுலம் பண்ணு 6)ITri ?
ஆள் பின்னை ஆரை? ஆள்: விஜயநகரத்து ராசாவோட மவளே.
புரிஞ்சுதா? ஆள் புரிஞ்சுது புரிஞ்சுது எப்பண்ணே
ணுலம்? ஆள்: இன்றிலிருந்து அஞ்சாம் நாள்

Page 23
36 அரசன் ஆணை
2ம் ஆள் அப்ப வா போவம். இன்றிலிருந்தே கொஞ்சம் வயிற்றைக் காயப்போட்டு Gild; சுக்கொள்ளணும். 1ம் ஆள் ஏண்டா அப்படி?
21 ஆள் கண்ணுலச் சாப்பாடு, வடை, வாழைப்
பழம், லட்டு, ஜிலேபி, பூந்தி, பாயசம் எல் லாம் கிடைக்குமோ இல் லியோ?
ஆள் (சிரித்து) எந்த நேரத்திலும், எங்க போ னலும் சாப்பாட்டு நினைவே . .தான்! நீ ஒரு சாப்பாட்டு ராமன், சரி வா போவம். (முனியன், கறுப்பையா, பழனிச்சாமி, கண்ணன் ஆகிய நாலு பேர் வருகிருர்கள். அவர்களெதிரே இராமனும் வருகிருன்) இராமன்: எங்கேயண்னே? நீங்கள் நாலு பேரும்
களைச்சு விழுந்து வருகிறியள்.
முனியன்: ஏனப்பா ராமா! உனக்கு நகரத்துப்
புதினமொன்றும் தெரியாதா?
இல்லீங்களே.
கறுப்பையா ராமா! நம்ம இளவரசர் இருக்காரே
ராமன் கண்ணுலம்மா (துள்ளிக்குதித்து) அடே, நம்ம இளவரசருக்குக் கண்ணுலம் (என்று
 
 
 
 
 
 
 
 
 
 

3 2ம் அங்கம் 3 ή
மகிழ்ந்தவன், திடீரென நின்று வாயில் விரலைவைத்து யோசித்தான்.)
கண்ணன் ராமா, என்ன டா, திடீரென இப்படி
மாறிவிட்டாய் இளவரசர் கண்ணுலம் பண் ணுவது உனக்குப் பிடிக்கவில்லையா,
இராமன் இல்லைத்தம்பி அப்படி இல்லை. நம்ம சம் சாரம் பொன்னி இருக்காளே. அவள் அரண் மனையிலேதான் பூவிற்பவள். அவளுக்குத் தெ ரியாதோ, தெரிந்தும் எனக்குச் சொல்லவில் லையோவெண்ணுதான் யோசித்தேன். வே று. இளவரசரிட கண்ணுலம் எனக்கே கண்ணுலம்மாதிரி; இல்லியா!
முனியன் ராமா! நாங்கள் அரண்மனை வீதியெல் லாம் அலங்கரித்துவிட்டு வாருேம். நீ போய் அதைப்பாத்திட்டு, அப்புறம் பொன்னியை
(சென்றுவிடுகின்றனர். பொன்னி வீதிவழியே பூவிற்று விட்டு வெறுங்கூடையைக்கொண்டு குதூகலமாக வரு கிருள். வள்ளி, செல்லி, கண்ணி என்று வேறு இல பெண்கள் எதிர்கொண்டு வருகிருர்கள்.)
வள்ளி என்னடி பொன்னி, நல்ல குதூகலமா
கிடக்கு. -
பொன்னி ம். குதூகலத்துக்கு என்ன குறைச் சல், இண்ணைக்கு, இப்பாத்தான் பூக்களைக் கொண்டுபோனேன், கூடைமட்டும்தான் மிக் சம். எல்லாம் வித்துப்போச்சு நாளைக்கு

Page 24
58 அர்சன் ஆணை
மூணு நாலு மடங்கு அதிகமாப் பூக்கொண் டரனும் எண்ணு சொல்லியிருக்காங்க.
ஏனடி, என்ன விசேஷம்?
பொன்னி அரண்மனையில், நம்ம இளவரசருக்குக்
கண்ணுலமாம்.
செல்லி அப்ப, உன்பாடு கொண்டாட்டம்தான்
எண்டு சொல்லு,
பொன்னி ஏன் உனக்குக் கொண்டாட்டமில்லி யா? நம்மையெல்லாம் தன்னுடைய கண் போல, ஒரு குறையும் வாராமே காப்பாற்றி வாற மவராசாவுடைய மகனல்லவா இள வரசர். அவரெண்ணுல் வீராதி வீரன். அவ ருடைய கண்ணுலம் எண்ணுல் நமக்குக் கொண்டாட்டம்தானே.
கண்ணி எப்பவாம் பொன்னி கண்ணுலம்?
பொன்னி நாளைக்குக் காலையில இளவரசருக்குப் பெண்ணுகப்போகிற அரசகுமாரி பட்டணப் பிரவேசம் செய்வாராம். பட்டணம் முழு துமே அலங்கரிச்சிருக்கு கண் கொண் டு பாக்க ஏலாது சிறப்பை, பொண்ணு στοδοτ ணுலோ தங்கப்பதுமை மாதிரியாம். அரச குமாரி என்பதைவிட அழகு குமாரி எண்ணு சொல்வதுதானும் பொரு த் த ம். இந்தக் கலிங்க நாட்டிலேயே அந்தச் சீதேவியைப் போல அழகுள்ள பெண் ஒருத்தரும் கிடை யாதாம் எ ண் ணெல் லா ம் அரண்மனையில
 

4 1ம் அங்கம் 39
பேசுருங்க. நாளைக்காலையில அந்த அம்மா பவனி வாறதை எல்லாரும் பார்க்கணுமாம். விடியமுன்னம் பூக்கொணந்திரனும் எண்ணு கண்டிப்பாச் சொல்லிவிட்டிருக்காங்க.
வள்ளி: அப்படியானுல் நாம அந்தம்மாவைப் பாக்
கிறதில்லையா பொன்னி.
பொன்னி பார்க்கணும். கண்டிப்பாய்ப் பார்க்க ணும். அதுவும் நம்ம ஊருப் பொண்ணல்ல? நான் விடியுமுன் பூவையும் கொண்டு போ யிடுவன். மூவரும்: நாங்களும் வாருேம் கூட்டிற்றுப் போ
றியா பொன்னி?
பொன்னி அப்படின்ன, விடியமுதல் எங்க வீட்
டுக்கு வந்திருங்க கூட்டிண்டு போறன்.
மூவரும்: Fif), sfrî).
(எல்லோரும் பிரிந்துசெல்கின்றனர்)
4ud syn gå : 1 b அங்கம்.
இடம்: பொன்னியின் வீடு.
(பொன்னி உட்புறம் ஏதோ அலுவலாயிருக்கிருள்) இராமன் பொன்னி பொன்னி!
பொன்னி (உள்ளிருந்து) இதோ வந்துட்டேன் மச்
சான்,

Page 25
4 0 அரசன் ஆணை
இராமன் பொன்னி சீக்கிரம் வாடி, ஒரு புதினம்
கொணந்திருக்கேன்.
பொன்னி (வந்து) என்ன மச்சான் பொன்னி பொன்னி எண்ணு உசிரையே வாங்குறியே. என்ன புதினம் கொணந்திருக்கே. மலையைக் கல்லி எலியப் புடிச்சியா?
இராமன் என்னடி கேலி பண்ரு! நம்ம இளவர
சர் இருக்காரே . . . . . -
பொன்னி ருக்கார், ருக்கார்,
இராமன் அவருக்குக் கண்ணுலமாண்டி, கண்ணு
GvLDrt Ltd.
GL ir görs of : . . . . . LĎ . . . .
இராமன் பொன்னி, இண்ணைக்கு அரமனைப் பக்
கம் போனியே, என்ன பேசுருங்க. பான்னி அவங்க கண்ணுலம் பண்ணினு நம்மா ளுக்கென்ன? அது பெரிய இடத்து விஷயம். என்னத்தையாவது பேசுவாங்க.
இராமன் பொன்னி! நீ இப்படிச் சொல்லலா மாடி? எங்கநாட்டு இளவரசி வாரு எண்ணு, என்னைத்தேடி எம் பொன்னி வந்த மாதிரித் தானே எண்ணுதான் நினைச்சேன். ான்னி (சிரித்து) அடேயப்பா, பொருத்தம் எப் படியிருக்கு மச்சான் பலே கெட்டிக்காரன் தான். மச்சான்! இப்படியேயிருந்தா பொ
 
 

4 : 2ம் அங்கம் 4.
ழுது போவதே தெரியாமப் பேசிண்டிருக் கலாம். சற்று இரு (உள்ளேபோய் மோர் கொ ணர்ந்து) இந்தா, மோரைக் குடி, வீட்டுவேலை யெல்லாம் இண்ணிக்கே முடிச்சாத்தானே நாளைக்காலையில கண்ணுலம் பார்க்கலாம். இராமன்: ஆமா ஆமா (மோரை வாங்கிக் குடிக்கி
முன், பொன்னி உள்ளே போகிருள்)
4ம் காட்சி 2ம் அங்கம்.
இடம்: அரச வீதி.
(அரசகுமாரி பவனிவருவதைக்காண மக்கள், சுட்டம் கூட்டமாய் நிற்கின்றனர். வெயிலும் ஏறிக்கொண்டே போகிறது. அரசகுமாரி வருவதாய்க் காணவில்லை. மக்கள் தமக்குள் பலதும் பேசிக்கொண்டு நிற்கிருர் கள்.) -
1ம் ஆள் என்னண்ணே! ஒரு ஆரவாரத்தையும்
g, frgöör Gi) Gí)Gu Jl
2ம் ஆள்: வழியில் ஏதாவது தடையேற்பட்டதோ?
3ம் ஆன் அவங்க என்ன நம்மப்போல சாதார னமான வங்களா? அவங்களோ பெரிய ராச குடும்பம்; அவங்களுக்கென்ன தடைவரப் போகுது?
(அவ்விடத்தில் இராமன் வந்து சேர்ந்தான்.)
4ம் ஆள் முகூர்த்தம் தப்பிப் போச்சாமே

Page 26
42 அரசன் ஆணை
5ம் ஆள் என்னண்ணே! இந்த விஜயநாட்டா
ரெல்லாம் இப்படித்தானே?
1ம் ஆள்: அந்தப் பொண்ணு மாட்டேண்ணுட்
(3 L_fr?
(ஒரு துறவி வருகிருர்)
துறவி நாராயணு! நாராயணு! (செருமிக்கொண்டு) அப்படிச் சொல்லாதேடா தம்பி, தமிழ் நாட்டுப்பெண்கள் கற்பு நெறி தவறமாட் டார்கள். தமக்குக் கணவனுக வரவிருந்த வன் கல்யாணம் பண்ணமுன்னரே இறந்து விடநேர்ந்தாலும், அவனை அந்தப்பெண் ஒரு நாளும் பார்த்திராவிட்டாலும், அவனுடைய பெயரை உச்சரித்துக் கொண்டிருந்து தன் வாழ்நாளை விதவையாகவே கழிக்கும் உறுதி கொண்டவர்கள் தமிழ்நாட்டுப் பெண்கள்.
இராமன் அப்படிச் சொல்லுங்க சாமி இந்த மூடங்
களுக்கு,
ýmyGunir: அப்படியா சாமி.
ாமன்: இந்தா பாருங்க, எம்மனவியும் தமிழ்
நாட்டுப் பொண்ணுதான். ஆள்: அதுதான் உனக்குக் கோபம் வந்திருச்
(Big Tp ராமன் இல்லை, இல்லை; பொன்னி ஒரு கொறை
யுமே அறியாம வளர்ந்த பொண்ணு; நானே சாதாரண தொழிலாளி. அண்ணைக்கு உழச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4 2ம் அங்கம் 43
3ம் ஆள்: அப்போ . . ஓங்க சம்சாரம் என்ன
அண்ணைக்குச் சாப்பிடுறவன். இந்தப் பொண் ணைக் கண்ணுலம் பண்ணின எப்படிடா வாழறதெண்ணு எனக்குப் பயமாகத்தான் இருந்துது பொன்னியொட அப்பா அம்மா வங்க, தங்க வீட்டோடே நாங்களுமிருந்தா ஒரு கொறையும் வராதெண்ணு சொல்லிட் டாங்க. நம்ம ஊரு வழக்கத்தை நாம் மாத் திட்டா நமக்கு அவம்ானம்தானே. நான் நம்ம ஊருக்கு வரணும்எண்ணே சொல்லிப் புட்டன்.
சொன்னு?
இராமன் அதை நெனச்சா இப்போதே a
துறவி நாராயணு, தமிழ்ப் பெண்குலம் வாழ்க!
இராமன்: நாங்கள் ரெண்டுபேரும் சோடி நடை
நிறையுதுடா தம்பி, உடனே பொன்னி, அவங்க அம்மாவப் பார்த்து ஏழைத்தொ ழிலாளி என் புருசனெண்ணுலும், கூழைக் குடித்துறங்கும் குடித்தனம்தான் வந்தாலும் கோழைகளில்லை அம்மா, குறைகள் எனக் கொண்ணுமில்லை. என்று பாடிக்கொண்டு ஒரே பாய்ச்சலில் என்பக்க லில் வந்துட்டா!
போட்டு வந்திட்டம். இந்தா, மூணுவரிசமா குது. ஒரு கொறையுமில்லாமே குடும்பம் நடக்குது.

Page 27
44 அரசன் ஆணை
4ம் ஆள் அப்பிடின்னு ஏதோ ஒரு தடைதான் இந்த ராச கல்யாணத்துக்கு வந்திருக்கணும்.
துறவி எல்லாம் விதிப்படியே நடக்கும். நாரா யணு, நாராயணு, (என்று கூறிக்கொண்டே செ ல்லுகிருர் மற்றைய நால்வரும் அவர் பின்னே செல் கின்றனர். வேருேரிடத்திலே பெண்கள் சிலர் கூடி நிற் கிருர்கள். பொன்னி அரண்மனைப்பக்கத்திலிருந்து ஓடி வந்து அப் பெண்கள் கூட்டத்தினிடையே சேருகிரு ஸ்
பொன்னி என்னடி இந்த அணியாயம், கல்யா) ணம் நிறுத்தப்பட்டு விட்டதாமே. எங்க இளவரசருக்கு இப்பிடியும் ஒரு அவமானம் GU6) TLDTL. (பெண்கள் ஒருவரோடொருவர் குசுகுசுத்தனர்)
தங்கம் என்னடியது குசு குசுப்பு: நம்ம யுவரா சனை அவமதித்த அந்த விஜயநகரத்துக்கு நாமே படையெடுத்துச் செல்ல வேண்டா C3LDTP
செல்லி படையெடுத்துப்போய். தங்கம்: அந்த அம்மாவைக்கண்டு, ஏம்மா வரல்லை? எங்கராசாவை ஏமாத்திக்கிடலா மெண்ணு நினைச்சீங்களோ? அப்பிடின்னு கேட்கிறது.
பொன்னி அப்புறம்.? தங்கம்: இப்ப உடனே எங்ககூடப் புறப்படம்மா, நாங்க கூட்டிண்டு போறம், எண்ணு கூட்
டிண்டு வந்திடுறது.
 
 

4 : 2ம் அங்கம் 盔岛
செல்லி அசல் மூளை, இந்த அம்மாபோய்க்கேட்க,
அந்த அம்மா வந்திடுவாங்க.
பொன்னி இடையில இருக்கிறவங்களும் சும்மா
நிண்ணிடுவாங்க.
வள்ளி (மிகுந்த துக்கத்துடனும் ஆவேசத்துடனும் வரு
கிருள்) அணியாயம், அணியாயம் இந்த அணி யாயத்தை யாரும் பொறுக்கலாமா?
செல்லி என்னடி இது?
வள்ளி: இந்தக் கண்ணுலமே குலைந்துபோச்சாமே!
காரணம் தெரியுமோ?
தங்கம் தெரியாதே.
வள்ளி; நம்மசாமி, குலதெய்வம், அந்த ஜகந்நா தப் பெருமான் கோயிலில் வருசா வருசம் நடக்கும் திருவிழாதானமே காரணம். நம்ம ராசாவை தோட்டி கீட்டி என்றெல்லாம் பேசினங்களாமே!
பொன்னி என்னடி நீ சொல்றது. ஒண்ணும் புரியு
தில்லையே.
வள்ளி எனக்கு அதைச் சரியாச் சொல்லவும்
தெரியுதில்லையே. (துறவி வருகிருர், எல்லோரும் முன்சென்றுதுறவியை வணங்குகிறர்கள். பொதுமக்களும் அவ்விடத்திற் கூடி விடுகின்றனர்) Garies: girlf at Tril 3, altila,
6

Page 28
46
அரசன் ஆணை
துறவி நாராயணு, நாராயணு
வள்ளி என்னசாமி, நம்ம நாட்டுக்கு இப்பிடி
அவமானம் வந்திட்டுதே!
பொன்னி சாமி! இவள் வள்ளி, "நம்ம கோயில்
திருவிழாதானும் கண்ணுலம் நிண்ணதுக்குக் காரணம். என்னவோ நம்மராசா தோட்டி யாம் எண்ணெல்லாம் சொல்ருள் ஒண்ணு மே புரியவில்லைசாமி.
தங்கம் என்னசாமி இவள் சொல்றது?
துறவி நாராயணு எல்லாம் விதிப்படியேதான்
நடக்கிறது. நாராயணு, நம்முடைய கஜபதி மன்னர்கள் நா ட் டை எம்பெருமானுக்கே அர்ப்பணம் செய்தவர்கள். இந்த ஜகந்நா தப்பெருமானே நாட்டுக்கு அதிபதியென்ற அபிப்பிராயமுடையவர்கள். மன்னர்கள் எம் பெருமானின் பிரதிநிதிகளாகவே அமர்ந்து நாட்டைப் பரிபாலனம் செய்கிறர்கள் என் பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக் கை. தங்களை எம்பெருமானுடைய தாசர் களாகவே மதித்து, பூசாகாலங்களிலே திருத் தொண்டுகளிலும் பங்கெடுத்துக் கொள்வார் கள். ஜகந்நாதப் பெருமானுக்குத் தாங்கள்
அடிமைகளென்பதை அவர்கள் நன்கு வெ
ளிப்படுத்துவது, நமது ஊரில் நடைபெறும் பிரும்மோத்சவத்தின் பொழுதுதான். தேர் ஓடும் காலத்தில் கஜபதி மன்னர்கள் தங்கத்
 

4 : 2 b egypäig; ab 47
துடைப்பத்தைக் கையிலேந்திநின்று தே ருக்கு முன்னுல் வீதியைச் சுத்தம் செய்து கொண்டுபோவார்கள். இது நாமெல்லோ ரும்கண்டு அனுபவித்துவரும் ஆனந்த நிகழ்ச் சிதானே!
இந்தப் பேரானந்த நிகழ்ச்சியை, கலகம் செய்து வயிறுவளர்க்கிற கயவர்கள் யாரோ, தப்பாக அர்த்தம் செய்துகொண்டு விஜய மன்னனது மனத்திலே கலவரத்தை மூட்டி விட்டிருக்கிருர்கள். தீவினை காரணமாக விஜயமன்னனும், கஜபதி க்ஷத்திரிய தருமத் தைக் கடைப்பிடிக்கவில்லை, தோட்டி வேலை செய்கிருனமே! எதுவாயிருந்தாலும் வாளும் செங்கோலும் பிடிக்கும் கையினலே துடைப் பத்தைத் தொடலாமா என்று கூறி, சாதி கெட்ட இவனது பிள்ளைக்கு எங்கள் பெண் ணைக் கொடுக்கமாட்டோம் என்று திடீரென மறுத்துவிட்டான்.
கூடியிருந்தோருள் ஒருவர் எங்கள் நாட்டையும், நா ட்டையாளும் மன்னனையும், மற்றும் எல்லோ ரையும் காக்கும் குலதெய்வத்தையும் இகழ்ந் துபேசிய இவர்களை நாங்கள். கூடியிருந்தோர்: சும்மா விடமாட்டோம்: ஆமாம்.
ஒருவன்: வாழ்க.
எல்லோரும் கஜபதிமன்னன்,
இன்னுெருவன் வீழ்க

Page 29
எல்லோரும் விஜயமன்னன். (இவ்வாறு பன்முறை
சொல்லிக்கொண்டு செல்கின்றனர்.)
துறவி நாராயணு, எல்லாம் விதிப்படியே நடக்
கும். நாராயணு!
5 , ; b அங்கம்.
(கஜபதி மன்னனது மந்திரிசபை கூடுகிறது.)
அரசன் அமைச்சர்களே! மாசு மறுவற்ற மன்னர்
குலத்திற்கு என்னல் இந்த இழிவு நேர்ந்ததே யென்பதை நினைக்க என் உள்ளம் கொதிக் கிறது. சிற்றரசர்களும் மற்றையோரும் வந்து கூடியபின்னர், கல்யாணம் நடைபெறவேண் டிய சமையத்தில், இப்படி அவமானப்பட நேர்ந்ததை நான் எவ்வாறு சகிக்கமுடியும்? அவன் என்னைமட்டுமா பழித்தான்! என் குலத்தையும், குலதெய்வத்தையும் அல்லவா பழித்துவிட்டான். இதற்குப் பழிக்குப்பழி வாங்கியே தீரவேண்டும்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அமைச்சர் அரசர்பெருமானே! இந்தத் தள்ளாத
வயதிலே தங்களுக்கு வேண்டாம் இத்தொல் லே, நாங்களே அதை முடித்துவிடுகிருேம்,
புருடோத்தமன் : இல்லை, இல்லை. அதை என்னிடம்
விட்டுவிடுங்கள். என்னைத் தோட்டியென்றும் அதனுற் தோட்டிக்குத் தன் பெண்ணைக்
 
 

கொடுக்கமுடியாதென்றும் அந்த விஜயமன் னன் கூறினனல்லவா! நான் க்ஷத்திரிய வீரன் என்பது உண்மையாகில், அந்தப் பெண்ணைச் சிறைசெய்து, ஒர் உண்மையான தோட்டிக்கு அவளை மணம்செய்து வைத்து, நமக்குக் கற் பிக்கப்பட்ட களங்கத்தை அவர்களுக்கே சொந்தமாக்கிவிடுவேன்.
தந்தையே! நம் குலத்திற்கு ஏற்பட்ட மாசினைத் துடைத்து, உண்மையை நிலைநாட் டுவதற்காக நான் உடனே போருக்குப் புறப்
படவேண்டும். அருள்கூர்ந்து அநுமதிதாருங்
55 Gjir.
ன் 3 (மகனைக் கட்டியனத்து) மகனே! வீரத்தோடு சென்று, வெற்றியோடு மீண்டும்வருவாயாக,
(போர் முரசு தூரத்தில் ஒலிக்கிறது. படைகள் செல்
இடம் : அரண்மனைப் பூங்கா.
புருடோத்தமன் (தனக்குத்தானே) இளமையிலேயே
லுகிற ஆரவாரமும் கேட்கிறது. சில நாட்களால், போரிலே புருடோத்தமன் வெற்றியடைந்தான் ... ... விஜயநகர அரசகுடும்பத்தவர்கள் சிறையாகக் கொண் டுவரப்பட்டார்கள். W臀”。
பத்மாவதியைப் பார்க்கவும் விரும்பாத அரசன் அவ ளைத் தவிர்ந்த எல்லாக் கைதிகளையும் சிறைக்கூடத் திலே சென்று கண்டு மகிழ்ந்து வருகிருன்)
5ம் காட்சி 2ம் அங்கம்,
தாயையிழந்த என்னைத் தாயும் தந்தையு

Page 30
50 அரசன் ஆணை
*
மாகக் காப்பாற்றி வளர்த்த என் தந்தைக் கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்துவிட்டேன். விஜயமண்டலப்போரிலே நான் பெற்ற வெற்றிகேட்ட என் தந்தை யின் மகிழ்ச்சிக்கு எல்லையே யிருக்காது. தனது தள்ளாப்பிராயம் என்ற காரணத் தைக்காட்டி, இந்தப்பூமி பாரத்தையும் என் தலைமேற் சுமத்தி அமைதி பெற்றுக்கொண் டார் என் தந்தை. அரசனுக முடி சூடின லும் என் மனம் அமைதியுறுவதாயில்லையே.
தோழஞன மகேந்திரன்: (திடீரெனத் தோன்றி) ஏன் அமைதியுறுவதாயில்லை அரசே?. ஒ.
டும் எங்கே அமைதியுறப் போகிறது! புருடோத் அப்படி யொன்றுமில்லை ಙ್
விஜயமன்னனது குடும்பத்தினர் சிறை ·
ருடோத் 度 அறியாமலென்ன? (காதுக்குள் இரகசி
யம் கூறுகிறன்)
ந: ஐயோ! பாவம். மன்னன் செய்த &לJמ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 ; 2ம் அங்கம்
புருடோத் பாவமாவது பழியாவது, இந்த முடி வில் யாருடைய பேச்சையும் நான் கேட்கப் போவதில்லை. மகேந்திரா ! நீ உடனே
சென்று நமது முதல் அமைச்சரை அழைத் 3:16):IIT.
மகேந்: அப்படியே மகாராசா! இதோ! நிL) து மதிப்பிற்குரிய முதலமைச்சராகிய பண்டித மகா சயரும் வருகிருர்,
அமைச்சர்: வணக்கம் மன்னரேறே!
புருடோத் அமைச்சரே! நீர் எனது வெற்றிக்காக நிறைவேற்றி வைக்கவேண்டிய காரியமொன் றுள்ளது.
அமைச்சர் அரசே! தங்கள் கட்டளை எதுவானுலும்
நிறைவேற்றக் காத்திருக்கின்றேன்.
புருடோத் பண்டித மகா சயரே! நான் முன்பே தீர்மானித்துள்ளபடி, நம்மை ஏளனம்செய்த அந்த விஜ்யமன்னனின் புதல்வி பத்மாவதி யை, இன்றிலிருந்து ஆறு மாத காலத்திற் குள்ளாக ஓர் உண்மைத் தோட்டிக்கு நீர் மணம்செய்து வைத்துவிடவேண்டும். பெண் ணையும் உம்முடன் இப்பொழுதே அழைத்துச் செல்லும். (மகாசயர் சிறிது யோசிக்கிருர்) புருடோத் என்ன யோசிக்கிறீர்? இது என் ஆணை; மாற்றம் இல்லை. மணமகனக நீர் தெ செய்யும் தோட்டியோ, அன்றிஅவளோம

Page 31
剔 அரசன் ஆணை
புக் காட்டுவாராயின் அரசன் ஆணை இது என்பதை வலியுறுத்திச் செய்விக்கும் உரிமை
யையும் உமக்கு வழங்குகின்றேன். *
அமைச்சர் கட்டளைப்படியே மகாராசா,
(மந்திரி யோசிக்கிருர்)
புருடோத் இப்பொழுதுதான் என் நெஞ்சிலிருந்த பாரம் இறங்கியிருக்கிறது. போய் உடனே ஆகவேண்டியவற்றைக் கவனிக்கவும்.
(அனைவரும் செல்கின்றனர்)
5ம் காட்சி 3ம் அங்கம். (பண்டித மகாசயரின் வீட்டிலுள்ள பூஜையறையில் பூரீ ஜகந்நாதப் பெருமானின் விக்கிரகம் வைக்கப்பட் டிருக்கின்றது. பூஜைக்குரிய எல்லா ஆயத்தங்களையும்
செய்துமுடித்து, முன்னலிருந்தபடியே பத்மாவதி வீணை வாசித்துக்கொண்டு பாடுகிருள் . . .)
* 'ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்ருெருவர் இல்லை பாரில் நின் பாதமூலம்
பற்றிலேன் பரமமூர்த்தி! கார்ஒளி
கண்ணனே கதறுகின்றேன் ஆர் உளர்களைகண் அம்மா
அரங்கமா நகருளானே'
* தொண்டரடிப் பொடியாழ்வார்.
 
 
 
 
 
 
 

5 - 3ம் அங்கம் 荡3
செவிகளிலே விழவில்லையா? இன்னும் எத் தனை காலம் நான் இந்தச் சிறையிலே கிடந்து வருந்துவது? பெண்ணுனவள், வளர்ப்பினிற் பெற்றேருக்கும், வாழ்க்கையிலே கணவனுக் கும், வயோதிபத்தில் மக்களுக்கும் கட்டுண்டு ாழவேண்டுமென்ற உலகநியதியிருக்க, மன மாகுமுன்னரே பெற்றேரிலிருந்து என்ன நீ பிரித்துவிட்டாய்! ஏற்றுக்கொண்டேன். ஆ னல், மணமகனுகப் பேசப்பெற்றவரையன் றி, வேறு எவரையும் கண்ணெடுத்தும் பா ாத தமிழ் மகளாகப் பிறக்கவைத்த நீ, என்னை ஏன் வாழவைக்க மறந்துவிட்டாய்? ஏழைபங்காளனே! இந்த ஏழைக்கு இரங்க மாட்டாயா? எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பார்களே! எம்பெருமானே! இந்த ஏழை யின் துயரத்திற்கு ஒரு முடிவே கிடையாதா? (கண்ணிர்விட்டு அழுது விழுந்து வணங்கி எழுந்து, அப்படியே அசையாமல் இருக்கிருள். பண்டித மகா சயர் அவளுக்குத் தெரியாமல்வந்து பின்னல் நிற் கின்ருர்)
பண்டித ແຜນສໍາ பத்மா எழுந்து கண்ணிரைத்
፭

Page 32
பத்மா (குரல்கேட்டு எழுந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) ஐயா! வணக்கம். தாங்கள் வந் ததைக் கவனிக்காமல் இருந்துவிட்டேன்; அடி யேனை மன்னித்துவிடுங்கள்.
ப. மகா: "தீர்க்கசுமங்கலீபவ’ (இருகைகளையு முய ர்த்தி ஆசீர்வதிக்கிருர்) நீ மன்னிப்புக் கேட்க வேண்டிய தவறு என்ன அம்மா செய்துவிட் டாய். அழாதே; குழந்தாய்! அரசன் கொ டுத்த கெடு முடியப்போகிறது; இன்றையத் தினம்தான் கடைசிநாள்: எ ன் ன செய்வ தென்று நானல்லவா அழவேண்டும்!
பத்மா ஐயா! பெரியவரே; தாங்கள் ஏன் கவ லைப்படவேண்டும். தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. தாங்களாக நன்கு தீர்மானித் து எப்படிச் செய்தாலும் அதை நான் சரி என்றுதான் கொள்வேன்.
த்மாவதியின் கண்களினின்றும் பொலபொலவென்று ர் வடிந்துகொண்டே இருக்கிறது.)
பத்மா வருத்தப்படுவதிலே பயனென்ன? அன்று எழுதிய பிரமன், அழித்து இன் றக்கு ஒன்றும் புதிதாக எழுதப்போவ ல்லை. எல்லாம் விதிப்படியே நடக்கும்.
ஆம். நீங்கள் கூறுவது உண்மைதான். எனினும் மானத்தையிழந்தபிறகு உயிர்வாழ் வதில் என்ன பயன் இருக்கிறது? குற்றம் செய்தவரைத் தண்டிப்பதுதானே அரசநீதி
 
 
 
 
 
 
 
 
 
 

அப்படியிருக்க, இந்தத் தண்டனையை என் தலையிலே சுமத்துதற்கு நான் என்ன அப ராதம் செய்தேன்?
ப. மகா: பத்மா! வருத்தப்படாதே, தைரியத்து டன் இருக்கவேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட் டது. எனக்கு இப்பொழுது புதிய யோசனை ஒன்று தோன்றியுள்ளது. அதனைப் பயன் படுத்திப் பார்க்கலாம். அரசனுக்கும் முன் பிருந்த கோபம் இப்பொழுது கொஞ்சம் தணிந்திருக்கிறது. எதற்கும் அந்த ஜகந்நா தப் பெருமான் கட்டாயம் நமக்கு வழிவிடு வார் என்ற நம்பிக்கை உண்டு. இன்று தேர்த் திருவிழாவல்லவா? வா அங்கே போகலாம். (பத்மாவதி வீணையை எடுத்து வைத்துவிட்டு, பூஜை யறையிலிருந்த பெருமான வணங்கிப் பண்டித மகா சயரின் பின் போகப் புறப்பட்டாள்.)
ப. மகா ஏனம்மா! ஒரு நல்ல புடவையைக் கட் டிக்கொள். உன் நகைகள் எல்லாவற்றை யும் போட்டுக்கொண்டு வரலாமே! தேர்த் திருவிழாவைப் பார்க்க எவ்வளவு சனங்கள் வந்திருப்பார்கள். இந்தக் கோலத்தோடா போவது உள்ளே போய் நன்ருக உடுத்திக் கொண்டுவா. முன் மண்டபத்திலே காத் திருக்கின்றேன்.
(இருவரும் செல்கின்றனர்)

Page 33
56 அரசன் ஆணை
5ம் காட்சி 4ம் அங்கம். இடம் பரீ ஜகந்நாதப் பெருமாள் கோயிற்
திருவீதி.
(தேர் வடம்இழுபட ஆயத்தமாக நிற்கின்றது. புரு டோத்தம மன்னன் முன்னதாகவே வந்து தேரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைத் தோத்தரிக்கிருன்)
புருடோத் : (பாட்டு)
1. * நீள்நாகம் சுற்றி நெடுவரை
நட்டு ஆழ்கடலைப் பேணுன்கடைந்தமுதம்
கொண்டுகந்த பெம்மானைப் பூணுரமார்வனேப் புள்ளுரும்
Guri 65T LDë%36puj, காணுதார் கண் என்றும்
கண்ணல்ல கண்டாமே. நாட்டினுய் என்ன
உனக்குமுன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே
கொண்டு என் வல்வினையை பாட்டினுல் உன்னை என்
நெஞ்சத்து இருந்தை காட்டினுய் கண்ண புரத்துறை
- அம்மானே.
(விழுந்து நமஸ்கரிக்கிருன் அதேசமையம் பண்டித மகாசயர் பத்மாவதியைக் கூட்டத்துள் ஒருபக்கமாக நிறுத்திவிட்டு, மன்னன் பக்கல் வருகிருர்)
டோத் என் தந்தைபோன்ற பெரியவரே ! வணக்கம். வேளைக்கு வந்துவிட்டீர்கள். தே ரை இழுப்பதற்காக அனைவரும் தங்கள் கட்
* திருமங்கை ஆழ்வார்.
 
 
 
 
 
 
 
 
 

5 : 4ம் அங்கம்
டளையையே காத்திருக்கின்றர்கள். வடம் பிடிக்க உத்தரவாகலாமே?
ப. மகா தங்கள் சித்தப்படியேயாகட்டும் அரசே! (அரசனும் பண்டித மகாசயரும் வடத்தைத் தொட்ட பின்னர் மற்றையோர் யாவரும் சேர்ந்து தேர்வடத்தி னைத் தொட்டு இழுக்கத்தொடங்கினர். அரசன் தன் முன்னுேர் வழக்கப்படியே பரிவாரங்கள் இருபுறமும் நின்று வெண்சாமரை வீசி, ஆலவட்டக் குடை பிடிக்க, * தங்கத் துடைப்பத்தைக் கையிலேந்திப் பெருமான் பவனிவரும் தேருக்கு முன்பாக நின்று வீதியை அலகிட் டுக்கொண்டே பாடுகிருன்.)
“நாட்டினுய் என்னே
உனக்குமுன் தொண்டாக.
(பண்டித மகாசயர் அங்கிருந்து மெல்ல நழுவிப் பத்மாவதியின் பக்கமாகப்போய்ச் சனக்கூட்டத்தோடு நிற்கின்ருர்,
புருடோத் மணிகளொலிக்க எம்பெருமான் பவனி வரும் இப் பேரழகைக் கண்டுமுடிக்க எனது இருகண்களும் போதவில்லையே! ஜகந்நாதப் பெருமானே! இந்தச் சனசமுத்திரம் . தோன் செய்யும் திருப்பணியையும் மறந்து, துடைப் பத்தைக் கையில் ஏந்தியபடியே மக்கட் கூட்டத்தைத் திரும்பிப்பார்க்கிறன்.)
Hருடோத் (மந்திரியாரின் பக்கத்தில் நின்ற பெண்ணைக் கண்டதும் திடுக்கிட்டு, மெல்லிய குரலில்) ஆ! இ தென்ன! பண்டித மகாசயரின் பக்கத்தில் நிற்பது யார்? இலக்குமிதேவி, தேரினின்றும் இறங்கித் தூரத்தே நின்று, தான் எழுந்தருளி
* அட்டைப்படம்.

Page 34
வந்த இத்தேரின் அழகைப்பார்க்கின்ருரோ! (அரசனுடைய மனம் பலவாறு சிந்தித்தது. உள்ளத் திலே பத்மாவதியின் அழகிய உருவம் பதிந்துவிட்டது. அவள்மீது அரசனுக்குப் பச்சாத்தாபமும், காதல் உணர்ச்சியும் ஏற்பட்டன. அரசனது உள்ளத்துணர்ச் சியைப் பண்டித மகாசயரும் புரிந்துகொண்டார்.)
ப. மகா மகளே! இங்கே வா. (பத்மாவதியை
அழைத்துச்சென்று மன்னன் புருடோத்தமன் முன்னி லையில் நிறுத்துகிருர்).
ப. மகா மன்னர் பெருமானே! தங்களை நான் வேண்டிக்கொள்ள விரும்புவது ஒன்றுண்டு. அரசன் ஆணைக்கு எல்லோரும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதைத் தாங்கள் அறி விர்கள். விஜயநகர அரச குடும்பத்திற் பிறந்த இந்தப் பெண்ணை, ஒரு தோட்டிக்கு மணம் செய்து வைக் க வேண்டுமென்பது அரசன் ஆணை. இவளுக்குத்தகுந்த மண மகன் இதுவரை கிடைக்கவில்லை. தேரடியி லே தோட்டிவேலை செய்யும் தாங்களே இவ ளுக்குத் தகுந்த வரன் ஆவீர்களென்பது எனது கருத்து. அரசன் குறித்த கெடுவும் இன்ருேடு முடிவதாற் தாங்கள் இவளைத் திருமணம்செய்து அரசனுணையையும் நிறை வேற்றவேண்டும். இது, அரச தோட்டியா ருக்கு இந்நாட்டு மன்னன்பேரால் மந்திரி இடும் ஆணையுமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 : 4ம் அங்கம் - 59
(மன்னன் திகைத்து நிற்கிருன், மகாசயர் தேர்த்தட் டிலிருந்து ஒரு மாலையை எடுத்து, பத்மாவதியின் கை யிற் கொடுத்து) மகளே! மாலையை மன்னர் கழுத்திலே சூட்டு. (பத்மாவதியின்முன் புருடோத் தமன் தலையைக் குனிகிருன், மக்களின் மங்கள ஆர வாரத்துக்கிடையே பத்மாவதி மன்னனுக்கு மாலை சூட்டி அவனடிகளை வணங்குகின்ருள்.)
மக்கள் கூட்டம்: வாழ்க மன்னர் தம்பதிகள்; கபி லேந்திரர் வம்சம் விளங்கவந்த பூபதி புரு டோத்தம மகாராசா வாழ்க! தமிழ்நாட்டு மணிவிளக்கு, மகாராணி பத்மாவதி வாழ்க!
மகாசயர் : (இருவருடைய கைகளையும் ஒன்று சேர்த்து விஜயர் குலமும், கபிலர் குலமும் விளங்க வந்த செல்வக் கொழுந்துகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
பொங்கும் மங்களம் எங்கும் பொலிக!
அரசன் ஆணை நிறைவு.

Page 35
ஆடக சவுந்த ரி
நாடக உறுப்பினர்.
ஆடக சவுந்தரி :-
இந்நாடகத் தலைவி. உன்னரசுகிரி, மட்
டக்களப்பு, தெட்சணுபதி (திருக்கோண மலை) இராச்சியங்களின் அரசி,
பிரம்மராயர் :-
ஆடக சவுந்தரியின் முதன் மந்திரி.
டிை படைத்தலைவன்.
45.60TLA III 6OTi :-
திருக்கோவில் என்னும் ஊர்ச் சித்திரவே லாயுதசுவாமி கோவிலின் பிரதம குருக் 56t.
கண்ணப்ப முதலியார் : س"
பூபாலகோத்திரத்து வேளாளர் குலத் தலைவர்.
 
 
 
 
 
 
 
 

ஆ நாடக உறுப்பினர். 6.
கட்டியங் கூறுவோர் -
ஆடக சவுந்தரியின் அரசவை ஊழியர்.
ஒற்றன் :- - A
- பிரம்மராயரின் அந்தரங்கப் படைத் தலை
of 66t.
அமுதவல்லி -
ஆடக சவுந்தரியின் முதற் தோழி.
தம்பதியாள், பூங்கொடி, முல்லை, வள்ளி :-
அரசியின் மற்றைத் தோழியர்.
வீரன், மாறன் :-
ஆடக சவுந்தரியின் படைவீரர்.
வீரனின் மனைவி.
குளக்கோட்டன் :- -
சோழதேசத்து இளவரசன். திருக்கோண
மலைக் கோவிலையும், கந்தளாய்க் குளத்தை யும் கட்டியவன். இறுதியில் ஆடக சவுந்
தரியை மணந்துகொண்டோன்.
காலிங்கராயர் :-
குளக்கோட்டு மன்னனின் மந்திரி.
வாயிற் காவலன் :-
 ைெடி மன்னனின் அரண்மனை ஊழியன்,
8

Page 36
9, L 3, J aLj 3, f
1ம் காட்சி
கட்டியம் கூறுவோருள் முதல்வர்: இளவரசி ஆடகசவுந் தரியார் பல்லாண்டு வாழ்க, மாமன்னர் மனு நேய கயவாகுவின் தவச் செல்வி நீடூழிவாழ்க. (வாசித்தல்) இம் முடிசூட்டு மண்டபத்தி லே கூடியிருக்கும் பெருமக்களே! பொது மக்களே! நமது அரசரது செல்வப்புதல்வி யாகிய ஆடக சவுந்தரியாருக்கு, இன்னும் சிறிது நேரத்திலே வரவிருக்கும் நல் முகூர்த் தத்திலே, மணிமுடி சூட்டுவார்கள். நீங் கள் அனைவரும் பயபத்தியோடிருந்து, நிகழ்ச் சிகளைக் கண்குளிரக்கண்டு நம் அரசியாரை வாழ்த்திச் செல்லவேண்டுமென்பது முடி சூட்டுவிழா மூதவையின் பெருவிருப்பமாகும்,
இரண்டாமவர் ஆமாம், திருக்கோவிற் பிரதம குருக்கள் அபிஷேக தீர்த்தத்தினேடு இன்னும் சில விநாடிகளுள் வந்துவிடுவார். அவர் வந் துவிட்டாலே மட்டக்களப்பு இராச்சியம் முழுவதும் வந்ததற்குச் சரியாகிவிடும். தெட் சணு பதிப் பிரதிநிதிகள், * கன்னிநதி ஏழிலு மிருந்து தீர்த்தமும் கொண்டு நேற்றே வந்து விட்டனர். உகந்தை மலையிலிருந்து அணு மார் தீர்த்தமும் வந்துவிட்டது. இனிச் கணக்கமேயில்லை.
* கன்னியாய் வெந்நீரூற்றுகள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ம் காட்சி 63.
(மணியின் கலகலப்பு ஒசை கேட்கின்றது. திருக்கோ விற் பிரதம குரு கண்டபாணரும், அவரைத் தொ டர்ந்து மனுநேய கயவாகு மன்னனின் மந்திரி பிரதா னிகளும், மற்றையோரும் வருகின்றனர்.)
கண்டபாணர் (சபையை நோக்கி) மங்களம் உண்டா குக. இந்த உன்னரசு கிரி இராச்சியத்தின் மணிமுடியைத் தரிக்கவிருக்கும் முதற்பெண் ணரசி ஆடக சவுந்தரியேதான். சிறந்த மன் னர்களுக்குரிய சகல இலட்சணங்களும் பொ ருந்திய அத்திருவாட்டி, நம்மை நூற்றிரு பது ஆண்டுகாலம் ஆளப்போவதாகப் பெ ரிய பெரிய சோதிடர்கள் கூறியுள்ளனர். எத்தனை வருடமானுலும் ஒளிகுன்ருத பொன் போன்ற பேரழகியாக அவர் இருக்கப்போ கிருர் என்பதை அறிந்தே ஆடக சவுந்தரி என்று தன் மகளுக்கு அரசரும் பெயர் வைத் திருக்கிருர், அப்பேரரசியின் முடிசூட்டு விழா நம்மனைவரது வாழ்விலும் ஒளிகூட் டும் விழாவாக அமையுமாக.
2ம் கட்டிய (தலைவணங்கி) ஐயா, குருக்கள் ஐயா ! மன்னிக்கவேணும். நம்ம மகாராணியின் பேருக்கு என்ன ஐயா கருத்து?
கண்ட அடே! நீபெரிய ஆராய்ச்சிக்காரன்போல இருக்கிருயே. இளவரசியின் பெயர் ஆடக சவுந்தரி ஆடகம் என்ருல் பொன் என்று பொருள்; சவுந்தரி- அழகி; எனவே பொன்

Page 37
64. ஆடக சவுந்தரி
போன்று மங்காத அழகுடைய பெண் என் பது அப் பெயருக்குப் பொருளாகும்.
2ம் கட்டிய அப்படியானுல் உண்மையாகப் பொ ருத்தமான பேர்தானையா, வணக்கம்,
முதன் மந்திரி பிரம்மராயர் (கட்டியகாரரைப் பார்த்து)
சரி, நீங்கள் போகலாம்.
கட்டியகாரர் வணக்கம் ஐயா. (செல்கின்றனர்.)
பிரம்ம (கண்டபாணரிடம்) ஆமாம், பெரியவரே ! நமது இளவரசியார் சீதாப்பிராட்டியாரின் மறு அவதாரமானவர் என்று நமது அரண்ம னைச் சோதிடர் முன்னர்க்கூறியுள்ளார். திடீ ரென முனிவர் ஒருவர் ஒருநாள் இங்கே தோன்றி இளவரசியாருக்கு இராமமந்திரத் தை உபதேசித்து, இராமரது உருவச்சிலை ஒன்றையும் கொடுத்துச் சென்றிருக்கிருர், இராம மந்திரத்தின் வலிமையால் வருங்கா லத்திலே பூதப்படைகள் பலவற்றின் துணை இவருக்குக் கிடைக்கப்போகிறது என்றும்கூட அச்சோதிடர் அண்மையிலே கூறியிருக்கிருர், திரிகால ஞானியாகிய அவரது சோதிடம் இதுவரை பொய்த்ததே இல்லையாம். அல் லவா! கண்ட இதுமட்டுமா! அப்பால் நமது இளவரசி யாரைப் போரில் வெல்ல எவராலுமே முடி யாத காரியமாகிவிடும். இந்த இலங்கைத்
 
 
 

தீவைத் திரிசிங்கள நாடாக்கி, கிழக்குப் பகு தியை மட்டுமே நமக்குரியதாகப் பந்துவாச மகாராசா காலத்திற் போடப்பட்ட திட்ட மெல்லாம் மாறி, இலங்கை முழுவதுமே இந்த உன்னரசு கிரி ராசாத்தி ஆளப்போவ தை இருந்துபாருங்கள்!
பிரம்ம (பக்கத்தே திரும்பி, 2ம் மந்திரியைப் பார்த்து) தண்டராயரே! முடிசூட்டு முகூர்த்தம் நெ ருங்குகிறது. அரசியாரை இனி அழைப்பிக்க வேண்டும். இவ்விராச்சியத்தின் குல வழக் கப்படி, பூபாலகோத்திரத்து வேளாளர் தலைவர்தான் முகூர்த்தவேளையில் மணிமுடி யை எடுத்து நமது குருவின் கையிற் கொ டுக்கவேண்டுமல்லவா! பேரரசர் மனுநேய கயவாகுவினுல் இதற்கென்று பட்டம் கட் டப்பெற்ற வேளாளப் பெரியாரான கண் ணப்பமுதலியார் வந்துவிட்டாரா?
2ம் மந்திரி தண்டராயர் : அவரை அழைத்து வருவ தற்காகத் தம்பிலுவில் என்ற ஊருக்குச் சென்ற சேவகர்கள் வந்துவிட்டார்கள். முத லியாரும் வந்துகொண்டே யிருக்கிருராம்
கண்ணப்ப முதலியார் இதோ வந்துவிட்டேன் ஐயா! (என்று கூறிக்கொண்டே கடுக்கன்கொல்லை காதிற் தொங்க, மார்பிலே ஒரு பட்டயம் மின்ன வந்து, சிங் காசனத்தின் பக்கத்தே தமக்கென இடப்பட்டிருந்த தனி ஆசனமொன்றில் அமர்கிருர்)

Page 38
பிரம்ம சரி! அனைவரும் வாருங்கள். உரிய வரி சைகளோடு சென்று, அரசியாரை இம்மண் டபத்துக்கு அழைத்துவருவோம். (எல்லோரும் எழுந்துசெல்லுகின்றனர். சிறிதுநேரத்தில், முன்னே வேல் வீரர் செல்ல, அரசியார் தமது தோழியர், காவலாளிகள், மந்திரிபிரதானிகள் சூழவர அத்தாணி மண்டபத்தே வந்து சேருகின்ருர்)
3669. (முன்வந்து, உயர்ந்த பீடமொன்றிலே வெள் ளித்தட்டில் வைக்கப்பட்டிருந்த மணிமுடியை இரு கரங்களாலும் பயபத்தியோடு எடுக்கிருர்) திருக் கோவிற் சித்திரவேலாயுதப் பெருமானது திருவடிகள் போற்றி! உகந்தைமலைக் கந்தன் ஒளிவேல் போற்றி! மாமன்னர் மனுநேய கயவாகுவின் புகழ் போல, அவரது திருமக ளாரும் இம்மணிமுடியைத் தரித்துச் செங் கோலோச்சிப் பல்லாண்டு காலம் எம்மைப் புரந்து வாழுதல் வேண்டும். (முடியைப் பிர
குருவிடம் கொடுக்கிருர்)
எல்லோரும் எங்கள் பேரரசி ஆடகசவுந்தரி வாழ் க! உன்னரசுப் பெண்ணரசி வாழ்க! செல் வம் பொங்குக: சீரும் பொங்குக: புகழும் பொலிவும் எங்கும் பொங்குக. (இக்குரலிடை யே மணி, தாரை, தம்பட்டைக்ளும் முழங்குகின்றன. கண்டபாணர் முடியினை ஆடகசவுந்தரியின் தலையிலே சூட்டுகின்றர். எல்லோரும் அரசியார்மீது மலர் மாரி சொரிகின்றனர்.)
ண்ட மந்திரி அவர்களே! செங்கோஜல் இனி நீங்கள் அரசியார் கையிற் கொடுங்கள்.
 
 
 

1 lib sitt * 6à 67
பிரம்ம அருள், வலி, ஆண்மை, கல்வி, ஈகை,
புகழ், போகம் முதலியவற்றேடும் நல்லரசு நடாத்தி எமது மாமன்னர் மனுநேய கய வாகுவின் காலத்திற்போல அவரது மரபு துலங்கவந்த திருமகளாம் நமது அரசியார் காலத்திலும் இச்செங்கோல் புகழ் சிறந்து விளங்குவதாக, (செங்கோலைக் கொடுக்கிருர், அரசியார் கையேற்று, அரியணையில் அமருகிருர், பிரம் மராயர் முன்வந்து) இந்தத் திரிசிங்கள நாட்டை ஒரு குடைக்கீழ் ஆழவிருக்கும் எங்கள் பேர ரசி ஆடக சவுந்தரி வாழ்க! பலவளங்களும் நிறைந்த இந்த உன்னரசு இராச்சியத்தின் பொன்னரசி சவுந்தரியார் பல்லாண்டு வாழ் க. குறை எதுவுமின்றிக் குடிகள் வாழவும், மாத மும்மாரி பொழிந்து இம்மாநிலம் வளம் சுரக்கவும், நீதி, நேர்மை, அன்பு, கட வுட்பத்தி என்பன எங்கும் பரக்கவும், எதிரி களும், மற்றும் அரசரும் வந்து, அடிபன்னிந்து எமக்கு அடங்கிவாழவும் வல்லதான நல் லாட்சியை எங்கள் பேரரசியார் செலுத்து
தற்குரிய பேரருளைத் திருக்கோயிற் சித்திர
வேலாயுதப் பெருமான் கடாட்சித்தருளுவா ராக, தமக்கு எதிரி என்பார் யாருமில்லாத தன்னிகரற்றதொரு நன்னிலையைத் தமிழ்க் குலக்கொழுந்தான இத்தேவியார் காலத்தே
இந்த உன்னரசுகிரி இராச்சியமும், மட்டக்
களப்பு இராச்சியமும் அதன் வடக்கேயுள்ள தெட்சணுபதி இராச்சியமும் பெறப்போகின்

Page 39
றனவென்பது திண்ணம். இந்நாட்டுப் பெரு மக்கள் அனைவரது நல்விருப்பத்தினையும், பெருமதிப்பினையும் கவர்ந்துகொண்ட ஆடக சவுந்தரியாரின் காலம் இந்த மட்டக்களப்புச் சரித்திரத்திலேயே ஒரு பொற்காலமாக விளங்கப்போகின்றது என்பதிற் சந்தேகமே யில்லை. வாழ்க நம் கொற்றம்! உன்னரசு கிரிப் பெண்ணரசி ஆடகசவுந்தரியார் பல் லாண்டு, பல்லாண்டு வாழ்வாராக,
அரசி ஆடகசவுந்தரி: (எழுந்து) எனது அன்பினைக்
கவர்ந்துகொண்ட பொதுமக்களே! மதிப்புக் குரிய கண்டபாணர் முதலிய பெருமக்களே! பெருமைக்குரிய முதலமைச்சரே! மற்றைய மந்திரி பிரதானிகளே! உங்கள் அனைவரது நல்லாசிகளையும் கேட்டுப் பெருமகிழ்வெய்தி னேன். உங்களுடைய பேரன்புக்கு எனது மனம் நிறைந்த நன்றி உரியதாகுக. (பக்கம் திரும்பி) அறிவாற்றலும் மதியூகமும் வல்ல எனது மந்திரிமாரே! வெற்றியன்றித் தோல் வியே அறியாத வீரர்களே! உங்கள் எல்லோ ருடைய பரிபூரணமான ஒத்துழைப்பும் இருக்கும்போது, எனது ஆட்சிக்கு என்ன குறை இருக்கப்போகிறது. (முன்னுல் நோக்கி) பொதுமக்களே! மனுநீதி தவருது இந்நாட் டையாண்ட மன்னர் பிரான், எனது தந்தை மனுநேயகயவாகு. அவ்வேந்தர் பெருமா னின் அடிச்சுவட்டில் நின்று, உங்களனைவ ரதும் விருப்பத்துக்கிசைய இன்று இப்பெரும்
 

irrog)
பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். எனது தந்தை கடைப்பிடித்த வழியிலேயே நின்று, நானும் உங்களுக்குச் சேவைசெய்யக் காத் திருக்கிறேன். இந்நாடு செழித்து மக்கள் யாவரும் துன்பம் மறந்து இன்பம் நிறைந் தோராய் வாழவேண்டும். பசியும் பிணி யும் பகையும் இந்நாட்டிலே கால்வைத்தல் கூடாது. வரி என்ற சுமை மக்கள் பால் ஒரு போதும் அதிகரித்தலும் ஆகாது. எதி லும் எமக்கு வெற்றியைத் தருகின்ற இராம நாமமானது நாடெங்கும் ஓங்குதல் வேண் டும். உகந்தைமலை, திருக்கோயில் என்று எனது பாட்டனர் நாமம் சாற்றிய நாகர் முனை, 8 தில்லைக்காட்டுமண்டூர், 9 போர் முனைநாடு, வெருகலம்பதி என்னும் தலங் களிலே எழுந்தருளியிருக்கும் முருகன் ஆல யங்களின் திருப்பணிகள் யாவும், குறைவற நடத்தல் வேண்டும். தமிழ் மதம் எங்கும் பரவுதல் வேண்டும். இவையனைத்தும் சிறப் புற நடத்தற்கு எல்லாம் வல்ல திருவருளே வேண்டுகின்றேன். இன்றிலிருந்து என்னு டைய வேலைஎன ஒன்று எனக்கு இல்லை. உங் கள் சேவையே எனது சேவை உங்கள் இன் பமே எனது இன்பம். பேரன்புக் குடிகளா கிய உங்களது நல்வாழ்த்துகளுக்கு மீண்டும் எனது நன்றியைச் செலுத்துகின்றேன். (அரசியார் பொதுமக்களுக்குக் கைகூப்புகின்ருர்) % மண்டூர், இ போரைதீவு, வெருகல், இவ்வூர்க இன்றும் கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற முருகன் தல
(6)YTTET LIÉ)

Page 40
70 ஆடக சவுந்தரி
தன்பராயர் : (எழுந்து) மகாசனங்களே! இன்று மாலை நமது அரண்மனை நடன மண்டபத்திலே நடக்கவிருக்கும் நாடகவிழாவிலும் நீங்கள் கலந்து மகிழ்ந்துசெல்ல வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கின்ருேம்.
பொதுமக்கள்: மகாராணி ஆடகசவுந்தரி வாழ்க! வாழ்க நம் அரசி! வளர்க அவர் செங்கோல்! (மக்கள் வெளியேறுகின்றனர்)
அரசி (மந்திரி முதலானுேரைப் பார்த்து) அரசியற் கருமங்களைக் கவனித்தற்காக உடனே நமது ஆலோசனைச்சபை கூடட்டும்.
(சபை கூடியதும்)
பிரம்ம ஆம் அரசியாரே! தங்கள் நல்ல கருத் துகளை நிறைவேற்றும் முகமாக நாம் முத லிலே கவனிக்கவேண்டியதொன்று இருக் கிறது.
அரசி முதலில் வயல் வளத்தைப் பெருக்கவேண் டும். அதைத்தானே கூறப்போகின்றீர்கள்?
பிரம்ம ஆம் தேவி. அதன் தொடர்பான ஒன்று தான் நான் கூறப்போவது, அம்மணி! தங் கள் முன்னேரது அருஞ்செயல்களால் வயல் வளத்துக்கு நம்நாட்டிற் பஞ்சமேயில்லை. உங் கள் தந்தையார் சங்குமண் கண்டிமுதல் தாடைகிரி வரை இருபத்து நாலு ஏரிகள் ஒன்ரு ய்ச்சேர, முப்பத்திரண்டு மதகுகள் வைத்துக் கடல்போன்றதொரு குளத்தைக்
 
 

கட்டி அதன் நீரால் இந்நாட்டை வளம் கொழிக்கச் செய்தார் என்பதை அனைவரும் அறிவர். அந்தச் * சங்குமண்கண்டிக் குளத் திலே நீர் மிஞ்சிவந்தால் அது வெளியேறு தற்கென்று வடபுறமாகக் கள்ளிஓடை என்று ஒரு வாய்க்காலை அப்போதே வெட் டிக் கடலிற் சேர்த்தும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகக் குளம் நிரம்பிக் கள்ளி ஒடைவழியாக நீர் பெருகிக் கடலுக்கு ஒடத் தக்க பெருமழையும் பொழிந்து வருகின் றது. ஆனலும். (தயங்கினர்)
அரசி ஆணுலும்! . என்ன அமைச்சரே?
பிரம்ம ஆலுைம் வயல்களிலிருந்து கிடைக்கும்
விளைவுதான் குறைவாக இருக்கிறதம்மணி!
அரசி என்ன! நீருயர்ந்தும் நெல் உயரவில்லையா? பிரம்ம மன்னிக்கவேண்டும். நெல்லும் உயர் கி றதுதான். ஆனல் சூடுபோடும் களங்களில், மலைபோன்று குவிக்கப்படும் நெற் குவியல்கள் தான் திடீரென்று மறைந்துவிடுகின்றன. அரசி ஆ1 ஆச்சரியமாயிருக்கின்றதே! காரணத்
தை ஆராய்ந்து பார்த்தீர்களா? பிரம்ம ஆம் இராட்சதப்பேய்கள் அவற்றைக் களவாடுகின்றன என்றுதான் எல்
* சங்கமான் கண்டி,
இன்று களிஓடை எனவழங்குவது,

Page 41
ஆட்க சவுந்தரி
லோரும் கூறுகிருர்கள். அதுவும் மகாராசா வின் காலத்திலிருந்தே நடந்துவருவதாக.
அரசி என்ன! எனது தந்தையின் காலத்திலிரு
ந்தே இது நடந்திருக்கிறதா மனுநீதிதவ
ருத என்தந்தை கொடுங்கோன்மை ஏதே
னும் புரிந்ததுண்டா? இன்றேல் இராட்சதப் பேய்களுக்கு நம் நாட்டில் என்ன வேலை?
இதற்கு மருந்து ஒன்றும் இல்லையா மந்திரி யாரே?
ம்ம தேவி! பதரு தீர்கள். அந்த இராட்சதப் பேய்களைப்பற்றிய கதையையும் ஒருவாறு அறிந்து வந்திருக்கின்றேன்.
அரசி அப்படியா அமைச்சரே! எல்லாவற்றை
யும் விபரமாகக் கூறுங்கள்.
jii: முற்காலத்திலே, இராம பிரான
லுவதற்காக, இராவணேசன் நிகும்பலேயி லே ஒரு யாகம் செய்தான் என்று அறிந்
மபாணத்தினுல் மாண்டுவிட, நிகும்பலேயா கத்திலிருந்து தோன்றிய வலியபேய்கள் இந் தப் பக்கத்து மலைச்சாரலிலே உள்ள குகை களில் இன்னும் வாழ்ந்து வருகின்றனவாம். யானை உருவமும் மனித உடலும் உடைய,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ம் காட்டு 73
வலிய பெரிய இராட்சதப் பேய் ஒன்றின் தலைமையில் உள்ள அவை, எதையும் சாதி க்கவல்ல மகாபலசாலிகள், இவைகளும் இப் பகுதியில் வயல்வளம் செய்தே வாழ்கின்றன. நமது சங்குமண்கண்டிக் குளம் நிரம்பிக் கள்ளிஓடைவழியாகச் செல்லும் மிதமிஞ்
சிய நீரால் அந்தப் பேய்களின் வயல்கள் பாழாகின்றன. இதனுல், அந்த இராட் சதப்பேய்கள் மாயமாகவந்து நமது வயல் வளத்தைக் கொள்ளையிட்டு நம்மைப் பழி வாங்குகின்றன போலும்! நமது நாட்டு எல் லையிலுள்ள பெரிய மலைக்குகைவாயில் ஒன் றிலே நெல் உமிகளின் குவியல் நாளுக்குநாள் வளர்ந்து செல்வது கொண்டும், இராட்சதப் பேய்களின் வேலைதான் இதுவென்று நம்ப வேண்டியிருக்கிறது. இதன் உண்மைகளை நேரிலே அறிந்துவருமாறு சென்ற சேனதி பதியின் வரவும், முடிசூட்டுவிழாவும் ஏக காலத்தில் நிகழ்ந்ததால், அவரிடமிருந்து எந்த முடிபினேயும் அறியமுடியவில்லை. பின் னர்க் கேட்டுச் சொல்லலாமென.
அரசி: ஏன், ஏன், சேனதிபதியார் இப்பொழு தே அதனே என் முன்னர்க்கூறட்டுமே!
சேகுதிபதி: (தலைவணங்கி) இராமநாமத்தினுல் அனை த்தையும் வென்று காக்கும் பேரரசியாருக்கு என் வணக்கம். இராட்சதப்பேய்கள் நம் பேரரசியாரின் பெயரைக் கேட்டமாத்திர த்தே சரணடைந்துவிட்டன.

Page 42
ஆடக சவுந்தரி
அரசி: என்ன எல்லாமே வியப்பாயிருக்கின்றன. தளபதியாரே! அனைத்தையும் விபரமாகக் கூறும்.
சேனு: இராமபிரானுக்குப் பயந்து இங்கே வந்து விட்ட இராட்சதப் பேய்கள், இராமநாமத் தின் துணைகொண்டு அரசு புரியும் உங்கள் ஆட்சிக்கு மண்டியிடுவதாக இராட்சதப் பேய்களின் தலைவரே என்னிடம் கூறினர் மகாராணி. அரசியாருக்கு அந்த இராட்ச தப்பேய்கள் முப்பதும், குறட்பூதங்கள் எழு பத்தெட்டும் இனிமேல் எப்போதும் அடிமை என்றும் கூறிய அந்தப் பயங்கரமான யானை உருவத்தலைவர், ஒரு வேண்டுகோளைத் தங் கள் திருமுன்னிலைக்கு விடுத்திருக்கிருர் அரசி!
அரசி என்ன அந்த வேண்டுகோள்?
சேணு அரசியாரின் ஆணையின்றி எந்த மானிட ரும் தமது எல்லைக்குள் வரக்கூடாதென்றும், அடிமைகளாகிய தங்களுக்கு நாளொன்றுக் குப் * பத்து அவனம் நெல் மட்டும் களஞ் சியத்தில் ஒதுக்கிவைத்தால் அதைக்கொண்டு அரை வயிற்றையாவது தாங்கள் நிரப்பிக்
கொள்ள வழியாகுமென்றும் கூறி, அரசி
லையைச் செய்துமுடிக்க வேண்டுமானுலும் உடனே முடித்துக்கொடுப்பதாகவும் உள்
* 75 புசல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7 5
ளது அந்த விண்ணப்பம், அரசியாரின் ஆணை யுட்பட்ட எந்தச் * சூட்டுக்களவட்டிக்கு சென்று, தாங்கள் இனி நெற்கொள்ளையிடுவ தில்லை என்றும் பணிவுடன் பூதத் தலைவ தெரிவித்துள்ளார் அரசி,
அரசி : அப்படியா! மிகவும் நல்லது. நான் உண்
மையிலேயே பாக்கியசாலிதான். இராட் தப் பேய்களைப்பற்றிப் பல கதைகள் கேள் விப்பட்டிருக்கிறேன். அவை நமக்கு அடிை யாவதென்ருல் அதைப்போல வெற்றி வேறு ஒன்றுமேயில்லை. (சேனதிபதியைப் பார்த்து) பத்து என்ன, இருபது அவண நெல்லை, நம் மைச் சரணடைந்திருக்கும் அந்தப் பூதங் ளுக்கு உணவாக நாள்தோறும் கொடுப்பே மென்று கூறிவிடும் தளபதியாரே (சபையை பார்த்து) அந்த இராட்சதப்பூதர்கள் வாழு பகுதியை அவர்களுக்கே விட்டுவிடுவோம் கள்ளிஓடைத் தண்ணிரைத் தம்பட்டைக் குளத்துக்குத் திருப்பிவிட்டால் இராட்சத வெளியும் பாழாகாது; அவர் களுக்கு ம்
T
சதக்கல்' என்று பெயர் வழங்குவதாக, இன்
* போரடும் நெற்களம்,
இப்பெயரால் ஒரூர் அக்கரைப்பற்றுக்கு அருகில் உள்ளது.
 ெஇந்த இடம் இன்றும் இப்பெயராலேயே வழங்
கின்றது.

Page 43
றிலிருந்து நம் நாட்டு வயல்களிலே " சூடு போடும்போது (ெநெற்களங்களைச் சுற்றி, இராம நாமத்தால் மந்திரித்த கயிறுகளி ஞலே வளைத்து அனைவரும் பூதக்காவல் செய் வார்களாக மட்டக்களப்பு இராச்சியத்தின் தென்மேற்கெல்லையும் உன்னரசுகிரியின் வட மேற்கெல்லையும் இராட்சதக் கல்லேயாக இ ருக்கட்டும். (முதன் மந்திரியாரைப் பார்த்து) அமைச்சரே! நாம் முதன் முதல் எடுத்துக் கொண்ட கருமமே நமது குடிமக்களுக்கு வெற்றியாக முடிந்துவிட்டது. இன்று மாலை திருக்கோயிற் சித்திரவேலாயுதருக்குச் சிறப் பான பூசையொன்று செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அங்குச் செல்லுமுன் எனது அந்தப்புரத்தில் எழுந்தருளியிருக்கின்ற இரா மமூர்த்திக்குப் பூசைசெய்து விடைபெற்று வருகிறேன். (அவை கலைகின்றது. அனைவரும் செல்கின்றனர்)
2, 3, Tig இடம் ஆடகசவுந்தரியின் நந்தவனமாளிகை.
(அரசியும், தோழி அமுதவல்லியும் உரையாடிக்கொண் டிருக்கின்றனர்.)
அரசி (தோழியைப் பார்த்து) அமுதவல்லி! எவ் வித குறையுமில்லாது நமது ஆட்சி நிலவிய
சூடுபோடுதல் - போரடுதல் சூடுமிதித்தல்,  ெஇவ்வழக்கம் இன்றும் மட்டக்களப்பு வயற்களங்
களில் உண்டு.
مریم ملتهاند.......S
 
 
 
 
 
 
 
 

| 2b gitnr *. 6 77
போதும், என் மனத்தில் மட்டும் ஒரு நிறை வையும் காணவில்லையே. ஏதோ ஒருவித பதட்டமாக இருக்கிறதடி
தோழி ஆம் அம்மா! தங்களைப்போன்ற பெரிய
வர்களுக்கெல்லாம் அப்படித்தானிருக்கும்.
ஆ இப்படித்தானம்மா குடிகளுக்கு எவ்வ
ளவு நன்மையைச் செய்தாலும், செய்தது
போதவில்லையேயென்று ஏங்கி ஏங்கி, இன் னும் ஏதாவது செய்யவே துடித்துக்கொண் டிருப்பார்கள் சிறந்த அரசர்கள் என்றேன்.
அரசி அப்படித்தான் என்ருல் எப்படியிருக்குமடி?
அரசி: அடி, நான் சொல்வது உனக்கு எங்கே விளங்கப்போகிறது! விரைந்துபோய் முதன்
மந்திரியாரை இங்கே அழைத்துவா (தோழி போகிருள்.)
(மந்திரியார் வருகிறார்.)
மந்திரி பிரம்மராயர் : பேரரசியாருக்கு வணக்கம்.
தங்கள் உத்தரவு .
அரசி பிரம்மராயரே! இப்படி அமருங்கள்.
கடந்த பல ஆண்டுகளாக நாட்டைச் சிறப் புற ஆண்டுவருகிருேம். உங்கள் மதியூகத் தினுல் ஆட்சியிலே எதுவித குறைவும் ஏற் பட்டதில்லை. ஆயினும் சென்ற மூன்று நாட்களாக என்னுள்ளத்திலே ஒரு கலக்கம்,
10

Page 44
ή 8 - ஆடக சவுந்தரி
பிரம்ம அதை நானறியலாமோ தேவி!
அரசி? ஆம். அதற்காகவே அழைப்பித்தேன். பக்கபலமாகவிருந்து என்னைக் காத்து வழி நடத்துகிற பூரீராமமூர்த்தியானவர் கனவி லே தோன்றி, தான் ஆக்கிய 'அவிமுத்தி தீர்த் தம் வடக்கே ஒரு காட்டுக்குள் மறைந்து கிடக்கிறதென்றும், அதைக் கண்டுபிடித்து அதன் மகிமையை நாடறியச் செய்தபின்பு தான் நமக்கு நன்மை உண்டாகுமென்றும் கட்டளையிட்டுச் சென்ருர், ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல, மூன்று நாட்களாகத் தொ டர்ந்து இதே கனவுதான். அந்தத் தீர்த்தத் தை எங்கே, எப்படி, எப்போது காண்பே னே.? அவிமுத்திதீர்த்தம், காசியிலே தான் அல்லவா இருக்கிறது அமைச்சரே?
ஆம் தேவி ஆயினும் அவிமுத்தி தீர்த்தத்
தை நம் நாட்டிலே பெறக்கூடிய வழியை
யும் அந்த இராமமூர்த்தி காட்டித்தானிருக் கிருர் அம்மா.
மராயரே.
ரம்ம இந்த அடிமைக்குத்தானம்மா. ஒரு முனி வர் வந்து தீர்த்தத்தின் சிறப்பினையும் இடத் தையும் கூறிச்சென்ருர், ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2tibo garri "G) 79
அரசி அவருக்கு எப்படித்தெரியுமாம் மந்திரியா
பிரம்ம அவர் திரிகாலமுமுணர்ந்த ஞானி மாதி ரித்தோன்றினர் தேவி. அவிமுத்திதீர்த்தம் நமது ஊருக்கு வடக்கே கிட்டத்தட்ட நூறு காதவழி தூரத்திலே இருக்குதாம். காசித் தீர்த்தம்தானும் அதுவும். இந்த நாட்டின் பெரிய புண்ணிய தீர்த்தமான அது பசிய நிறமான சேருயிருக்குமென்றும், அதில் முழு கினல், குட்டரோகிகள் கூட உடனே சுகம் பெறுவார்கள் என்றும் முனிவர் சொன்னர், அரசி : மிகவும் அற்புதமான தீர்த்தம்போலத்
தெரிகிறதே!
ஆம் அரசி இராவணனையும் அவனு டைய அரக்கர்குலத்தையும் கொன்ற பாவத் தைத் தீர்ப்பதற்காக அனுமானைக் காசிக்கு அனுப்பி, அவிமுத்தி தீர்த்தம் எடுப்பித்து, இங்கே இருந்த குளமொன்றிற் கலந்து இரா மர் நீராடிப்போனுர் என்று முனிவர் மே லும் கூறினர். அந்தக்குளமே இங்குக் குறிப் பிடப்படும் அவிமுத்தி தீர்த்தமாகும். நாம் அதில் நீராடினுல் நமது நாட்டில் இருக்கிற ஒரு அமங்கலத்தன்மை மாறி, மங்கலம் உண்டாகும் என்பது அவர்கருத்து. அரசி : முனிவர் வேறு என்ன சொன்னர்? அவ '! இங்கே அழைத்துவரவில்லை அமைச் 曾

Page 45
80 ஆடக சவுந்தரி
பிரம்ம தங்களிடம் கூட்டிக்கொண்டு வரலாமெ ன்று அம்முனிவரை அழைத்தேன். ராம், ராம், ராம் என்று சொல்லிக்கொண்டே அந்த முனிபுங்கவர் வடக்கு நோக்கிச் சென் று மறைந்துவிட்டாரம்மா.
அரசி கேட்கக்கேட்க அற்புதமாக இருக்கின்ற தே! எப்படியும் நாம் அந்த இடத்திற்கு விரைவிற்செல்லுதல் வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள் அமைச் சரே.
பிரம்ம சரி தேவி. (செல்ல எழுகின்ருர்)
அரசி பிரம்மராயரே! முக்கியமாகப் பேசவே ண்டிய இன்னென்றை மறந்தே விட்டேன். சற்று அமருங்கள். (மந்திரி அமர் கிருர்) அன்று நான் கூறியதுபற்றிக் கவனித்தீர்களா?
பிரம்ம : (ஆழ்ந்து சிந்தித்தபடியே) அன்று கோயில், இன்று குளம். இரண்டும் நல்ல காரியங்கள் அம்மணி !
அரசி அப்படியானுல் நீர் இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை என்பதுதான் அர்த்த மா? . . . . . (மந்திரி மெளனம் சாதிக்கின்ருர்) ஏன் ஒன்றுமே பேசாதிருக்கின்றீர்? நான் இப்போது எதைப்பற்றிக் கூறுகின்றேன் என் பதை யாவது அறிவீரா ?
பிரம்ம ஆம் அரசி. வடக்கேயிருந்து வைதூலிய சைவனெருவன்வந்து தெட்சிண கைலையிலே
தெட்சிணகைலாயம் எனப்படும் திருக்கோணமலை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறங்கி அங்கே ஒரு சிவாலயமெழுப்புகி முன் என்பதுதான் நமது இப்போதையச் சிக்கல் என்று அறிவேன்.
அரசி அறிந்து. . . சும்மா இருந்துவிட்டீர். அதுதானே ! . . . . . இந்த ஈழநாட்டிலே கொட்டியன் ஆண்ட 0 தெட்சணுபதி நாட் டையும் * வாகூரனது புத்திரன் பிரசன்ன சித்து இருந்தாண்ட மட்டக்களப்பு முழுவ தையும், தன்னேரில்லா மனு நேய கயவாகு வின் உன்னரசுகிரி நாட்டையும் கட்டி, திரி சிங்களத்தின் பெரும்பகுதியை ஒரு குடைக் கீழ் ஆளுவது இந்த ஒரு ஆடகசவுந்தரியே யாகும். நமது எல்லைக்குள்ளே இறங்கி, எனது உத்தரவின்றிக் கொத்தளம் அமைக்க எத்தனை துணிவு அவனுக்கு மட்டக்களப் புத் தமிழ் வீரர் எத்தனையோ எதிர்வேந்தர் களது கொட்டத்தை அடக்கியவர் என்பதை அறிந்திருந்தால் இந்தத் துணிவு அவனுக்கு வந்திருக்குமா? தன்மானமும், தமிழ் வீர மும் மிக்க பரம்பரையிலே தோன்றியவர் நாம். ஊர்பேர் தெரியாத ஒருவன், எம்மை மதியாது, எமக்குத் தெரியாது, எம்நாட்டி
கொட்டியன் இருந்து ஆண்ட இடமே இன்றுள்ள கொட்டியாரம்,
திருக்கோணமலைநாடு.
* வாகூரன் இருந்த இடம் இன்றைய வாகூரவெளி,

Page 46
82 ஆடக சவுந்தரி
லே இறங்கி ஏதோ கட்டுகின்ருனும், அதை
நாம் கேட்டுப் பொறுத்துக் கொண்டிருக்க
வேண்டுமாம்! அமைச்சரே முடிசூட்டு விழா விலன்று நீர் எடுத்துக்கொண்ட சங்கற்பம் இதுதான்போலும்
பிரம்ம இல்லை அம்மணி! சற்றுப் பொறுமையு டன் சிந்தியுங்கள் வந்தவன் யாராயிருந்
தாலும் கட்டுவது கோவில் அல்லவா? திருப்
பணியாயிற்றே அதுவும்.
அரசி ; அதுவும் . . . என்ன ? வைதுரலிய
சைவக்கோவில், முருகன்தான் தமிழ்க்குலத் தாரது பழமையான தெய்வம். இந்த நாட் டிலே வேதகாலத்துச் சிவனுக்கு இடமே இல்லை.
பிரம்ம சரிதேவி. ஆயினும், தெட்சண ைகலை *தச கண்ட ராவணனுல் முன்னுளிலே பூசிக் கப்பட்டதலம். முக்கோண லிங்கத்தைத்
தாபித்து, கன்னியாநதி என்று ஏழு கொதி நீர்த் தீர்த்தங்களையும், பாபநாசச்சுனை என் று குளிர்ந்த அமிர்த தீர்த்தத்தையும் அமைத்து வழிபட்டபழங்கோவில். இராவ
ணன் இறந்துபோன பிறகு சிதைந்துபோன
பெருங்கோவில் தெட்சணுபதி, திரிசிங்களத் தின் கிழக்கு இராச்சியத்திற்கு அக்கோயில் தான் அம்மணி ஒருகாலத்தில் விளக்காயி ருந்தது. அந்த விளக்கை இப்போது ஒருத்
 
 
 
 
 

2ம் காட்சி 岛、
தன் வந்து கொளுத்துகிருன். அவன்வைதூ லிய சைவன்தான். ஆனலும் நமது தேவி யாரின் உள்ளத்தில் உறைகின்ற இராமமூர் த்தியும் சிவனை வழிபட்டே தனதுபாவத்தைக் கழுவியிருக்கிருர், அதனுலே, அந்தக் கோ விற்பணியைத் தடுத்தல் பாவமாகுமே என்று தான் சிறிது சிந்திக்கின்றேன்தாயே! மே
632I LD• • • • • • • • • • • • • • • • • •
அரசி ஒகோ! பாவபுண்ணியக் கணக்குப்போடு
கின்றிரா! நமது மானத்தைக் காக்கவேண்
டிய நேரத்திலா இந்தப்பேச்சு மேலும்.! என்ன கூறப்போகிறீர்?
பிரம்ம வந்திருப்பவன் இளமை யும் அழகு ம்
நிறைந்த ஒரு வீரனும்!
அரசி அப்படியா! அவனுடைய ತಿಥಿ0 # ಗ್ರ:
வீரத்தையும் பற்றிச்சிந்தித்து நீர் மன்னி பதற்கு உம்மிடம் பெண்மக்களும் இல்லைே (ஒரு கேலிச்சிரிப்பு, பின்னர் முகத்தில் ஒரு கடுகடுப்ே டு எழுந்து அங்கும் இங்கும் உலவுகிருள். திடீரென் மந்திரியாரே! நான் ஒரு முடிவுக்கு வந் விட்டேன். அது நடந்தேயாக வேண்டு (பிரம்மராயர் சற்றுப்பயபத்தியுடன் அவதானித்து கேட்கிருர்.) நீர் நேரே சென்று தளபதியையும் வேண்டிய படைகளையும் திரட்டிக்கொண்டு செல்வீராக. அந்த வைதூலிய சமயத்தவன் கட்டுகிற கோயிலை இடித்துக் கடலிற்தள்

Page 47
ஆடக சவுந்த
விட்டு அவனையும் பிடித்துக்கொண்டு வாரும். அல்லது உமது இரக்கத்தையும் அவனையும் ஒரு படகிலேற்றிக் கடலிற் தள்ளிவிட்டு
வாரும்.
பிரம்ம சரி தேவி. (மந்திரி புறப்படுகிருர்)
அரசி: அமைச்சரே! சற்றுப்பொறும். நமது அவி முத்தி தீர்த்தயாத்திரைபற்றி என்ன? நீங்கள் அனைவரும் அத்தீர்த்தம்வரை எங்களுடன் வந்துவிட்டு அப்பால் வடக்கே செல்லலாம் தெட்சணுபதிக்கு இங்கிருந்து திருக்கோயில், * கருங்கொடியூர் , 9 மட்டக்களப்பு, தில் லைக்காட்டு மண்டூர், P போ ரே று மு ன, 9 கொக்கட்டிஊர் வழியாகச் செல்வோம். உடனே சென்று அந்தப்பயணத்துக்கான ஏற்பாடுகளையும் சேர்த்துக் கவனிக்கவும்.
பிரம்ம: த ங் க ள் கட்டளைப்படியேயாகட்டும். மகாராணியுடன் வந்து அவிமுத்திதீர்த்தத் தில் ஆடியபின்னரே தெட்சணுபதிக்குச் செல் வேன். நாளைக்கே நாம் புறப்படலாம்தேவி. (மந்திரி செல்கிருர், அரசியும் எழுந்து அந்தப்புரம் செல்கிருர்)
கருங்கொடித்தீவு எனப்படும் அக்கரைப்பற்று. மட்டக்களப்பு அக்காலத்தில் இன்றுள்ளபடியன்றி, மட் டக்களப்பு வாவியின் தென்கோடியிலேயே இருந்தது. மண்டூர், போரைதீவு. கொக்கட்டிச்சோலை,
 
 
 
 
 

._ 85
3 un gruga
இடம்: மாமாங்கத் தீர்த்தக்கரைச்சோலை.
(தம்பதியாள், பூங்கொடி, முல்லை, வள்ளி முதலான தோழியர் தம்முள் உரையாடுகின்றனர்.) தம்பதியாள் என்ன அற்புதமானதீர்த்தமடிஇது. இதனைச் சுற்றி வேறு சின்னச்சின்னத் தீர்த் தங்கள் ஆறு உண்டாமே!
பூங்கொடி ஆமடி! அனுமார்தீர்த்தம், காக்கை தீர்த்தம், பழையாறு, நற்றண்ணிமடு, பால மீன் மடு, மட்டிக்களி இவற்றின் நடுவே இந்த அற்புதமான அவிமுத்திதீர்த்தம், இதிலுள்ள புண்ணியத்தின் வலிமைதான் எவ்வளவடி?
முல்லே என்னடி இன்னமும் அவிமுத்திதிர்த்தம் என்கிருய். இன்ருேடு இதற்கு "மாமாங்கை நதி என்றல்லவா பெயராயிற்று. இன்றை க்குத்தானே இந்தத்தீர்த்தத்தின் மகிமை யால் அரசியும் நம்மை எல்லாம் போல ஒரு மங்கையாக ஆகியிருக்கிருர்,
தம்பதி: ஆமாண்டி அதிசயம் என்று இதைத்
தான் சொல்லவேணும். வள்ளி நமது தேவியின் கழுத்தின்கீழ், அவர் பிறந்தநாளிருந்தே காணப்பட்ட முடிபோன்
ற கருமையான பெரிய அடையாளம், இந்
* இப்போது மட்டுநகரின் அணித்தாக உள்ள
மாமாங்கத் தீர்த்தம்,
1

Page 48
86 ஆடக சவுந்தரி
தத்தீர்த்தத்தில் முழுகியதும் உடனே அழிந் துபோயிற்றே. அதிலே எவ்வளவு இரகசி யங்கள் இருக்குதாம் தெரியுமாடி உங்க ளுக்கு?
தம்பதி என்னடி அப்படி இரகசியம்?
வள்ளி போடி நீ ஒரு மக்கு நீ ஒன்றையும் கூர்ந்து கேட்பதுமில்லை. கூர்ந்துகவனிப்பது LA)|6)%ს) ,
தம்பதி நமக்கென்னத்துக்கடி இதெல்லாம்? பெ ரிய இடத்துச் சங்கதிகளிலே நாம் ஏன் தலைப் போடுவான்?
பூங் சரியம்மா நீ பெரிய புத்திசாலி. ஒன்றிலும் நீ தலைப்போடாதே, இதை மட்டும் சொல்லி ଗମ୍ଫ୍ (ତ).
தம்பதி: இல்லை, இல்லை, கோவிச்சுக்காமே நீங்க
கேட்கிறதை எல்லாம் கேளுங்கடி.
பூங்: நம்ம ராசாத்திக்கு என்ன என்ன பேர்
உண்டு என்று சொல் பார்ப்போம்.
தம்பதி: இதிலென்ன கிடக்குதாம். எங்கள் அர சியின் முழுப்பேரும், மும்மடி ஆடகசவுந்தரி; மும்மலை ஆடகசவுந்தரி எண்டும் சொல்லு வாங்க. (எல்லோரும் கொல் என்று சிரிக்கிருர்கள். தம்பதியாள் சுற்றுமுற்றும் பார்த்து மலைத்து நிற் கிருள்.)
 
 
 
 
 
 
 

3ம் காட்சி 87
வள்ளி: (ஏளனமாக) ஏண்டி இராசாத்தியுட முதற் தோழி! அந்த அம்மாளுடைய பெயரைக் கூடச் சரியாகச்சொல்லத் தெரியவில்லையே உனக்கு முன்முடி ஆடகசவுந்தரி, முன்முலை ஆடகசவுந்தரி என்று சொல்லப் பழகிக் கொள் *。
தம்பதி? அம்மாடி! எனக்கேண்டி அந்தப்பட்டம்? நான் ராசாத்தியுட முதற் தோழியுமில்லை. எனக்கு அந்தப் பட்டமும் வேணும். நீங்கள் சொல்ற இந்தப்பேர்களுக்கு என் னடி கருத்து?
முல்லை: முடிபோன்ற வடிவமுள்ள மறுவோடு பிறந்ததால், இராணி ஆவதற்கு முன்பே முடி சூடிவந்தவர் தேவியார். அதனுலே தான் முன்முடி ஆடகசவுந்தரி என்று நம்ம ராசா த்தியைச் சொல்கிருர்கள்.
தான் பெரியபெண் ஆவதற்குமுன்பே, முலை :يقي வடிவமான அந்த மறுவோடு பிறந்ததைக் குறித்துத்தான் முன்முலை ஆடகசவுந்தரி என் றும் கூறுகிருர்கள்.
வள்ளி: இன்று அந்த மறு அழிந்து போயிற்றல்
δυολιΓTP
upsis: அது அழிந்த பிறகு அரசியாரிலும் 960) LD தியான தன்மை, ஒரு மாதிரிக்கூச்சப்படுதல் எல்லாம் தெரியுது பார்த்தியளாடி!

Page 49
சவுந்தரி
வள்ளி ஆம், நானும் கவனித்தேன்; அந்த மறு வில் ஏதோ இரகசியம் இருக்கத்தான் வேண் டும். பூங் இதெல்லாம் என்ன என்று அந்த முதற் தோழி அமுதவல்லிக்கு மட்டும்தாண்டி தெ ரியும். முதன் மந்திரியார் பிரம்மராயர் மூலம் அவள் எல்லா இரகசியங்களையும் அறிந்து வைத்திருக்கிருள்.
தம்பதி: ஆமாம், அம்மாடி, அதோ ராசாத்தியுட உயிர்த்தோழி அமுதவல்லியும் வருகிருள். என்னை இனிமேற் கிண்டல் பண்ணுதீங்கடி. (அமுதவல்லி சற்றுக் குதூகலத்தோடு வருகிருள்.)
வள்ளி வாடிஅம்மா! வா, அரசியாருக்கு அந்த மறு அழிந்தது உனக்குத்தான் ஆனந்தமாக இருக்கிருப்போற் தெரிகிறதே.
அமுதவல்லி இல்லாமல் என்ன! இத்தனைநாளும் அரசியாருக்குப் பக்கத்தில் நிற்பதென்ருல் நெருப்புக்குக்கிட்ட நிற்கிறமாதிரி, சீறு பூறு என்ற பேச்சுடன், முகத்திலே எந்நே ரமும் எள்ளும் கொள்ளும் வெடிக்குமே. முதன் மந்திரி பிரம்மராயருக்குக்கூடத் தேவி யாருக்குக் கிட்டவருவதற்குக் கிடுகிடென்று நடுக்கம் என்ருல் நாம் எம்மாத்திரம்1
எல்லோருக்கும் தெரிந்த பழங்கதையைப் பாடிக்கொண்டிருக்காமல், இப்போது அரசி யார் பாடென்ன என்பதை மட்டும் சொல்லு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3b To G)
மற்றெல்லோரும்: ஆமாம். அதைத்தான் நாங்களும்
உன்னிடம் கேட்க இருந்தோம்.
அமுத ஆமாண்டி! நீங்கள் கேட்கவேண்டியது; -
நான் சொல்லவேண்டியதுதான் அது. ஆணுல், சொல்வதற்குச் சொல்லொன்றும் வருகுதில் இலயே,
தம்பதி அமுதவல்லிக்கு என்ன ஒசத்தியும் அக்
களிப்புமாயிருக்குது. பாத்தியளாடி?.
அமுத தம்பதியாள் அக்களிப்பு என்ருளே, அது முற்றிலும் உண்மைதான். வெய்யிலில் நின்றவர்க்குத்தானே நிழலினருமை தெரி யும். இத்தனை வருடங்களையும் தேவியாருக் குப் பக்கத்தில் நெருப்பிலேயே நின்று கழித்த நான், இன்றைக்குத்தான் நீரில் மிதக்கிறே னடி, மிதக்கிறேன். அரசியார் இப் போது உகந்தை மலைத்தீர்த்தம் போல் என் ன குளிர்மையாய் இருக்கிருர் தெரியுமா? முன்னைய சீற்றமும் வீரகர்ச்சனையும்போய், பெண்மைக் குணங்கள் யாவும் அவரிடத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. என் தோழிமார்க ளே! பேச் சென்ருல் இப்போது கற்கண்டு மாதிரி கண்களிலே ஒரு தண்ணளி (அங்க லாய்ப்போடும், அமுதவல்லிகூறுவதை அதிசயக்குறிப் போடும் யாவரும் கேட்கின்றனர்.)
வள்ளி என்னடி இந்தப்புதுமை?

Page 50
90 ஆடக சவுந்தரி
அழுத: என்னபுதுமை, என்னபுதுமை
எங்கள் மகாராணியொரு இன்பப்பதுமை. 1. என்னபுதுமை எங்கள் மகாராணி
இன்பப்பதுமை அது நல்ல புதுமை சொன்ன மன்ன மேனியும் அன்ன
நடையும்
சொகுசான கன்னி எழில் மின்னு
நிலையும்-என்னபுதுமை,
2. பத்தரைமசற்றுத் தங்கம் என்னலாமோ
பசியசெந்தாமரையாள் என்னலாமோ வித்தகமாய்ப் பேசுவதன் மென்மை
பென்னவோ
வீறுநடைஓடிச்சென்ற வேகமென்னவோ
- என்னபுதுமை,
3. அவிமுத்திதீர்த்தத்தில் ஆழ்ந்தெழும்பவே அந்த மறு மாறியதன்மாயமென்னவோ கவியின்பம் காட்டுமொரு
பெண்ணுமாயினுள் காதல்கொள்ள ஏற்றவொரு
மங்கையாயினுள்-என்ன புதுமை
(அமுதவல்லி, மேற்படி பாட்டைப் பாடிக்கொண்டு வெவ்வேறு சாயலில் நிற்கும் தோழியரையும் சேர்த் துக்கும்மி நடனம் ஆடினுள்) ம்பதி: தேவியின் இரகசியங்களில் எதுவும் உன க்குத் தெரியாமலில்லையே அமுதவல்லி? அமுத ஆமாம். இனி எதையும் மறைப்பதற் கில்லை, முன்னர் யாவும் சோதிடர் கூற்முக
 
 
 
 
 
 
 
 
 

3ம் காட்சி
இருந்தபடியால் நடந்தேறுமட்டும் ஒன்றை யும் வெளிப்படுத்துதல் கூடா தெ ன் று முதன் மந்திரியார் கட்டளையிட்டிருந்தார்.
பூங் அப்படியானல் உனக்கு இதெல்லாம் எப் போதோ தெரியுமென்று சொல்லு, சரியா ன கள்ளியடி நீ.
| aliups: அரசியார் சிறுபெண்ணுக இருக்கும்போ
அமுத அதுவா? தேவியின் கழுத்தின்கீழ் இருந்த
து அவரது தாயாருக்கும் தந்தையாரான மனுநேய கயவாகுவேந்தருக்கும், முதன் மந் திரியார் பிரம்மராயருக்கும் முனிவர் ஒரு வர் இதுபற்றிக்கூறும்போது நானும் அங்கி ருந்தேன். முனிவர் ஒருவர் கூறினராம் என்று மந்திரியார் கூறுகிற சோதிடம் வே ருென்றுமில்லையடி இதுதான்.
வள்ளி: அமுதவல்லி! அந்தமுனிவர் கூறியதை
இப்போதாவது அவர் கூறியபடியே சொல் லடி கேட்கலாம்.
மறு அவருடைய நூறுவயதுக்குப்பின்பு இர
மமந்திர தீர்த்த விசேடத்தினுல் அழியுமென் றும், அதுவரை அவருடைய பேச்சு, செயல் யாவும் ஒரு வீரனுக்குரியவை போன்றே இருக்குமென்றும், திருமணத்தைப் பற்றியே
சிந்திக்கவும் மாட்டாரென்றும். ...

Page 51
தம்பதி (இடைமறித்து, ஏங்கி) அப்போ, தேவியா
ருக்குத் திருமணமே இல்லையாமா."
முத விசர்ப்பெண்ணே! சொல்லி முடிக்கும்
முன்னரே அழப்பார்க்கிருயே?
*னயோர் அதுதானே! நீ மீதியைச் சொல்லடி
கேட்போம்.
முத: இந்த மறு அழிந்தபின்னரே, சிறந்த வோர் ஆடவணை மணம் செய்து, தனது நூற்றுப்பதினேழாவது வயதில் ஒரு புத்திர னைப் பெறுவாரென்றும், நூற்றிருபது வய துவரை வாழ்வாரென்றும் கூறினர். முன் முடி, முன்முலை என்று கூறப்படுகிற மறு அழிந்தபின்னர்த்தான் பெண்களுக்குரிய நா ணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள் இவரிடத்திலே வெளிப்பட்டுத் தோன்றும் என்றும் முனிவர் கூறியதின் உண்மையை இப்போது நேரில் அறிந்தேனடி,
அப்படியானல், விரைவில் உன்னரசுகிரி திருமணவிழாக் கொண்டாடப்போகிறதென் று சொல்லேன்.
அமுத (சிரித்தபடி) தெட்சணுபதியில் வந்திறங் கிக் கோயில்கட்டுகின்றவனை உடனே அடித் துத் துரத்துமாறு கொதித்துக்கூறிய அரசி யார், இன்று மந்திரியாரும் ப டை களு ம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8th irrig 93
தெட்சணுபதி நோக்கிப் புறப்படும்போது
கூறியவற்றை நீங்கள் கேட்கவேண்டும்!
தம்பதி : என்ன போருக்குப் போகவேண்டா
மென்று பயந்து தடுத்துவிட்டாரா?
அமுத அப்படி ஒன்றும் கோழையாகிவிடவில்லை எங்கள் மகாராணி முன்பெல்லாம் அவர் பேச்சில் வீரத்தோடு கடுகடுப்புக் கலந்திருக் கும். இப்போதும் அந்தத் தமிழ் வீரத்தை அவர் இழக்கவில்லை. ஆனல், பழைய வீரம் தேனிற்குழைந்து வெளிப்படுகின்றது இப் போது.
தம்பதி என்னடி, நீ பெரிய புலவர்நடைத் தமி
ழிற் பேசுகிருய்? (எல்லோரும் சிரிக்கின்றனர்) *ம். எங்களுக்கு விளங்கச் சொல்லேன்.
அமுத அதாவது, அரசியார் இப்போது விர வார்த்தைகளையும் இனிமையாகக் கூறுகிருர், (półn அப்படிச்சொல்லு முதன் மந்திரியாரும் படைகளும் வடக்கு நோக்கிப் புறப்படும் போது என்ன கூறினர் நம் தேவியாரென்று சொல்லமாட்டாயா அமுதவல்லி?
அமுத தெட்சணுபதியில் வந்திறங்கிக் கோ யில்கட்டுகிற வைதூலிய சமயத்து வீரனேடு உடனே சண்டைக்குப் போகவேண்டாம்; கூடியவரை சமாதானமாகப் பேசி, நாட்
12 。

Page 52
94. ஆட்க சவுந்தரி
டைவிட்டு வெளியேறவேண்டும், அல்லது நமக்குத்திறை கட்டவேண்டும் என்று கேளும், அதற்கு அவன் இணங்காவிட்டால், போர் முனைக்கு, நேரில் நானே வருவே னென்று நாளும் குறித்துவாரும் என்று பிரம்மரா யரிடம் நமது அரசியார் அ மை தி யாக ச் சொல்லி அனுப்பியிருக்கிருர், வள்ளி என்ன அருமையாகக் கூறியிருக்கிருரடி நம்மரசியார். தெட்சிண கைலைக்கு வந்தி ருப்பவர் பேரழகராமே! அவர்தான் நமது தேவிக்கு வாய்க்கப் போகிருரோ?
முல்லை நானும் அப்படித்தாண்டி நினைக்கிறேன்.
பூங் இல்லாவிட்டால், அவரும் அங்குவர, இங் கு நம் தேவியாரிலும் இத்தனை மாற்றங்க ளேற்படுமா? வள்ளி நன்முகச்சொன்னுய் பூங்கொடி! அந்தப் பேரழகர் நாட்டைவிட்டேகவும், திறை கட் டவும், சம்மதிக்காவிட்டால் நேரில், தானே போருக்குப் போவதற்கு நாள் குறித்துவரும் படி முதலமைச்சரிடம் அரசியார் கட்டளை யிட்டு அனுப்பியிருக்கிருர், அந்த நல்ல நாள் உண்மையிலேயே புறப்போருக்குப் பயன்படு மோ, அல்லது அகப்போருக்குத்தான் பயன் படப்போகிறதோ தெரியவில்லை. நமது தேவி யாரின் அழகை நேரிலே கண்டால் அந்த வைதூலிய வீரர் எங்கேயடி இந்நாட்டை

3b giff * g) 95
விட்டுப் போகப்போகிறார்? அவர் நம்மோ டுதா னிருக்கப்போகின்ருரோ!
முல்லை; அப்படியானுல் நாமெல்லோரும் முற்கட் டியே வைதூலிய சைவராகி விடுவதுதான் புத்தி. இல்லாவிடில், அரசியாரின் அந்தப் புரத்து வேலைகூட நமக்கு இல்லாமற்போக G) IT LÈ). (முல்லை கூறுவதைக் கேட்டுக்கொண்டே, அரசியார் திடீரென்று, அமைதியும் அடக்கமும் நிறைந் த புதியகோலத்தோடு அங்குவர, எல்லோரும் பயந்து ஒதுங்குகிறர்கள்.)
அரசி இல்லை. நீங்கள் வைதூலிய சைவர்களாக மாறவேண்டியதில்லை. நமது இராமமூர்த் தியும், தாம் வழிபாடியற்றிய இந்த அவிமுத் தித்திருத்தலத்திலே சிவலிங்கம் ஒன்றைத்தா னே வைத்துப் பூசித்திருக்கிருர், நாம் எல்லோ ருமே சைவர்கள்தான். ஆனல் வைதூலிய மார்க்கத்துச் சைவர்கள் நம்மிலும் பார்க்க எவ்வளவோ குறுகிய மனங்கொண்டவர்க ளாகத் தெரிகின்றது. மிகுந்தலேக்கு இப்பா லிருந்த சில புத்த ஆலயங்களே அவர்கள் இடித்துத் தள்ளியிருக்கின்றர்கள். அவர்க ளைக்கொண்டே நாம் அவற்றைக் கட்டுவிக்க வேண்டும். நமது மட்டக்களப்பு இராச்சி யத்துத் * தமிழ் மதத்திலே, வைதுரலிய சம யத்தார், புத்த சமயத்தார், விட்டுணு சம யத்தார் என்னும் எவர்மீதும் வெறுப்பில்லை.
* இச்சொல் மட்டக்களப்புத் தமிழிலே சைவசமயத்
தையே இன்றும் குறிக்க வழங்குகின்றது

Page 53
பூங்: அப்படியானுல், நம்நாட்டுச் சமயங்கள் மீது வெறுப்புக்கொண்ட அந்த வைதூலியனுக் குத் தகுந்த தண்டனை கொடுக்கவேண்டு மென்று முன்பு நம்மரசியார் கூறியது சரி தான்.
அரசி இல்லையடி என்னுடைய அந்தத் தீர்ப்புச் சரியில்லை. அவர்களையும் நமது கொள்கை களை உணரச்செய்தல் வேண்டும். அதனுல் மந்திரியாரிடம் நான் முதலிற் கூறிய கட் டளையை இப்போது மாற்றிக் கூறியிருக்கி றேன்.
வள்ளி; ஏன்தேவி! அப்படியானுல் அந்த வீர ரைச் சிறைப்பிடித்துவந்து நம்முடனேயே வைத்துவிட்டால் என்ன? தம்பதி சி அதில் யாருக்கு என்னடி லாபம்? நம்மூர்ச் சோத்துக்குத்தானடி நட்டம்.
அரசி இல்லை; அப்படிச் சொல்லிவிடமுடியாது.
வள்ளி (மற்றைத் தோழியரைப் பார்த்து) ஆமாம். இந்த அவிமுத்தி தீர்த்தத்தில் ஆடியபின்ன ரே, நம்நாட்டுக்கு மங்கலம் வரப்போகிற
தென்று, இராமமூர்த்தி, தேவியாருக்குக் கன விற் கூறியிருக்கிருரல்லவா? அந்த மங்கலம் இந்த வைதுரலிய வீரரோடுதான் வரப்போ கின்றதோ என்னவோ? (தோழியர் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்கின்றனர்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசி (நானத்தோடு) போங்கடி போங்கள்; உன் னரசு கிரிக்குச் செல்லுதற்கு வேண்டிய ஏற் பாடுகளைப்போய்க் கவனியுங்கள்; உடனே புறப்படுவோம். (எல்லோரும் செல்கின்றனர்.)
4ம் காட்சி 1ம் அங்கம்
இடம் : தெட்சணுபதி எல்லை.
(மந்திரி பிரம்மராயர் தெட்சணுபதி எல்லையிற் படைகளைத்தங்குமாறு சொல்லிவிட்டுத் தனித்து உலா வுகிருர்)
பிரம்ம (தனக்குள்) இந்தப் புண்ணியவான்வந்து சிவப்பணிபுரியும் எல்லேயுள் நாம் போர்ப் படையுடன் செல்வது தகுதியாகுமா? தெட் சணுதிபதியைப் பார்த்துவருமாறு நா ன் அனுப்பிய ஒற்றனையும் இன்னும் காணவில் லேயே 1. (அங்கும் இங்கும் நடக்கிருர்)
ஒற்றன் : மந்திரி பெருமானே! வணக்கம். பிந்தி வந்தமைக்கு என்னை மன்னிக்கவேண்டும். தெட்சணுபதிக்குள்ளே கால் வைத்தவர்கள் விரைந்து மீளுவதென்றல் முடியவே முடி LITT gil 29 ULJET.
பிரம்ம : சரி எப்படியோ நீ மீண்டுவந்துவிட்டா யே, என்ன செய்தி? அங்கே கோவில் கட்டி முடித்துவிட்டார்களா?

Page 54
ஒற்றன் : தெட்சிண கைலைக்கோவில் முடிந்துதானி ருக்கிறது. ஆனல் இதனேடு விட்டுவிடாமல் இந்த மன்னனைக்கொண்டு ஈழநாடுமுழுவ தும், சிவனுக்குக் கோவில்கள் எடுப்பித்தால் நல்லதுபோற் தோன்றுகிறது பெருமானே!
பிரம்ம நல்ல யோசனை. வேறென்ன புதினங்
கள் அறிந்துவந்தாய்?
ஒற்றன் நல்ல கட்டழகும், கலங்காத
மும், சிவபத்தியும், குடிகளிடத்திற் பேரன் பும் நிறைந்த இந்தச்சோழதேசத்து இளவ ரசனிடம் இப்பகுதியிலிருந்த சிற்றரசன் தன் நாட்டைக் கொடுத்துவிட்டு, தானும் கோயில் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டு விட்டா னும்!
gold அந்தச் சிற்றரசன் ஒரு புண்ணியவான்
என்று தோன்றுகிறது!
ஒற்றன் : அமைச்சர்தலைவரே! எதிரிகட்குப் புறங் கொடாதும், எந்த நிலையிலும் மானங்கெடா தும் விளங்குகிற இந்த இளவரசனை மான வீரன் என்றும் மானசேனன்' என்றும் மக் கள் போற்றுகின்றர்கள். தெட்சிண கைலைக் கோவில் மட்டுமா எழுப்பப்பட்டிருக்கிறது! பக்கத்திலுள்ள காடுகளையெல்லாம் வ ள வயல்களாக்கி, அவற்றுக்கு நீர்ப்பாய்ச்சுவ தற்காகப் பல குளங்களுமல்லவா கட்டப்பட்
டிருக்கின்றன. இந்நாட்டுமக்கள் அந்த இள
 

4 1ம் அங்கம் gg)
வரசனை எவ்வளவு புகழ்கிருர்கள் என்ப தைக்கூற ஆயிரம் நாவுடைய ஆதிசேடன லும் கூட முடியாது ஐயா! சிவனுக்குப்பெ ரிய கோட்டமும், அதன் பணி வளர்த ற் கென்று பல குளங்களும் அமைத்த மன்ன வனைக் குளக்கோட்டன்’ என்ற பெயரால் மக்கள் தமது உள்ளக் கோயிலில் வைத்துப் பூசிக்கிருர்கள்.
பிரம்ம ஆமப்பா அந்த இளவரசன் ஒரு தேவ
ணுகத்தான் இருக்கவேண்டும். அவன்செய் யும் பணியும் மிகப்பெரிய திருப்பணிதான். ஆகையினுற்தான் நமது அரசியாரும் சமாதா னத்துக்கான வழிகளையே கூடியவரை கடைப் பிடிக்குமாறு கடைசிநேரத்திலே கூறியிருக் கின்ருர்,
ஒற்றன் : அரசியார் கூறியதுதான் சரி. இந்த
அரசருடன் சமாதானம் செய்துகொண்டால் ஈழம் முழுவதுக்குமே அது நன்மைதான் ஐயா!
பிரம்ம ஆம், நீ கூறுவதை நானும் ஒப்புக்கொள்
கிறேன். எமது படைபட்டாளங்கள் யாவும் இங்கேயே நிற்கட்டும். எனக்குப் பல்லக்கும் வேண்டாம், பட்டுப்பரிவட்டமும் வே ண் டாம். குளக்கோட்டன் சபைக்கு நடந்தே
செல்வேன். அதுவும் தனியாகவே செ ல்
வேன். (ஒற்றன் செல்கிருன்; மந்திரியாரும் புறப் படுகிருர்)

Page 55
4ம் காட்சி 2ம் அங்கம்.
இடம்: குளக்கோட்டனது மாளிகை.
(அரசர் தனது மந்திரி காலிங்கராயருடன் தெட்சணு
பதிஆலய நிர்வாக ஒழுங்கு, வயல்வளம் பெருக்குதல் முதலானவை பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ருர்)
குளக்கோட்டன் : மந்திரத்தலைவரே! உமது மதிநுட் பமும், உறுதுணையுமே இங்கு எனது மனவி ருப்பத்தை நன்கு நிறைவேற்றிவைத்தன. ஆலயம் அழகுற முடிந்துவிட்டது. பல்லாண் டுகாலம் போனுலும் இந்தக் கோவிற் பணி குறைவற நடக்கவேண்டுமல்லவா!
காலிங்கராயர் : பெருமானே! அதற் குத் தானே, மருங்கூரிலிருந்து முப்பது குடிகளைக்கொண் டுவந்து இப்பகுதியிற் குடியேற்றப் போவதா கச் சொன்னீர்கள். அது மிக மிக நல்ல யோசனை ஏழு குடிகளைத் தானத்தாராக நிய மியுங்கள். பக்கத்தே கிடக்கும் பள்ளவெ
மிப்போம். அவர்களுக் கிடையே
 
 
 
 
 
 
 
 
 
 
 

4 2ம் அங்கம் 0.
செப்பேடு செய்து தாங்கள் கையெழுத்திட் டு வைத்துவிட்டாற் தொண்டுகள் குறை வின்றி நடக்கும்.
குளக்கோ : மிகவும் பொருத்தமான யோசனை. இதன்படியே யாவற்றையும் சித்தம் செய்வ தோடு, மேலும் ஆகவேண்டியவைகளையும் சரிவரக் கவனித்துத் திட்டம்பண்ணிவைக் கவும்.
காலிங்க : எல்லாம்சரி அரசே! ஆனல் ஒன்றே
ஒன்றுதான் குறைவாக இருக்கிறது.
குளக்கோ: குறையா? எதைக்குறிப்பிடுகிறீர்கள்?
காலிங்க கோயிலும் குடியிருப்பும் சரி வயல்வெ ளிகளுக்கும் குறைவில்லை. ஆயினும் குளங்க ளைப் பொறுத்தவரையில் நாம் மனநிறைவு கொள்வதற்கில்லை. ஏனெனில், நாம் இது வரை கட்டிய குளங்களோ மிகவும் சிறிய வை; திருத்திவைத்திருக்கிற பூமியோ இரண் டாயிரத்தெழுநூறு அவனம் நெல் விதைப் புத் தரை. இவ்வளவுக்கும் நீர்ப்பாய்ச்சும் வசதி கிடைக்கவில்லையே என்பதைத்தான் கூறவந்தேன்.
குளக்கோ அதுதான் என் சிந்தனையையும் சிதைக் கிறது மந்திரியாரே, எங்கே, எப்படி, ஒரு பெரிய குளத்தைக் கட்டலாமென்ற முடிவு நம்மிருவருக்கும் எட்டாம்ற்போனதன் மர்
3

Page 56
I O2 ஆடக சவுந்தரி
மந்தான் எனக்கும் விளங்கவில்லை. ஏதோ தெட்சணுபதியான்தான் இதற்கு ஒரு வழி காட்டவேண்டும். (அவ்வேளை தூரத்தே தெட்ச ணுபதி ஆலயமணி கேட்கின்றது.) அதோ கோவில் மணியோசை கேட்கின்றது. நமது எண்ணம் சரிவர நிறைவேறும் காலம் வந்துவிட்ட தென்பதற்கான மங்கல ஒலிதான் இது. (அவ்வேளை வாயிற்காவலன் உள்ளே வருகின்றன்.)
வாயிற்காவலன் அரசர் கொற்றம் வாழ்க! யா ரோ ஒரு பெரியவர், ஈழத்தரசியாரின் மந்தி ரியாம், தங்களைக்காண வந்திருக்கிருர் மகா ராசாவே,
குளக்கோ: அப்படியா? தா ம த மின்றி உடனே அழைத்துவர். (காவலன் செல்ல, அரசர் தனது மந்திரியாரைப் பார்த்து) காலிங்கராயரே! ஈழத் தரசி ஆடக சவுந்தரியின் மு த ல மை ச் சர் பிரம்மராயர் தான் வருகின்ருர், நம்மை இங் கிருந்து துரத்திவிடுமாறு அரசியார் அவரைப் படையுடன் அனுப்பியிருப்பதாக நமது ஒற் றர் தலைவனல் முன்பே அறிந்தேன். ஆனல்
இன்ருே, பிரம்மராயர் கால் ந டையாக த் தனித்து வருகின்றர். என்ன மாற்றமென்று அறிவோம்.
(பிரம்மராயர் உள்ளேவருகிருர்)
மட்டக்களப்பின் மாமந்திரக்கிழவரும், மதி வாணர் பெருந்தலைவரும் ஆகிய மதிப்புக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4 2ம் அங்கம் I 03
குரிய மந்திரி பிரம்மராயரே வாருங்கள். இப் படி அமருங்கள் ஏன் இப்படித் தனித்து நடந்து வந்தீர்கள்? செய்தி சொல்லி விட் டிருந்தால், எனது ஆட்களை உங்க ளி டம் அனுப்பியிருப்பேனே!
பிரம்ம (வணங்கி) அதனுல் ஒரு கு  ைற வு மில்லை அரசே! தங்களுக்கு என் பெயர் முழுவதும் நன்கு தெரிந்திருக்கிறதே. தங்களைப்பற்றி யான் கேள்விப்பட்டதெல்லாம் சரிதான்.
குளக்கோ: ஆம். நீங்கள் கேள்விப்பட்டதொன் றும் பொய்யாயிராது. ஒற்றர்கள் மூலம் நா னும் எல்லாவற்றையும் அறிந்துள்ளேன். ஆயி னும் நீங்கள் இத்தகையதொரு தைரியசாலி என்பதை மட்டும் நான் ஒருபோதும் கேள் விப்பட்டதேயில்லை. உங்களுக்கு எனது பா ராட்டுகள் பிரம்மராயரே!
பிரம்ம சோழர்குலத்தோன்றலே! எனக்கு ஒன் றுமே விளங்கவில்லை. சற்று விபர மாக ச் சொல்லுவீர்களானுல் . . .
குளக்கோ: அப்போதுதான் தெளிவாகுமோ? நீர் கூறவந்தவற்றையெல்லாம் நான் கூறவேண் டும்! சரி, தெட்சணுபதியிலே கோவில் கட் டுகிற வைதூலியன, உடனே படைகளுடன் சென்று அடித்துவிரட்டிவிட்டுவாரும் என்று உங்களை அரசியார் சொல்ல, அந்த வேலை யை நீங்கள் தனியாகவே செய்து விடலா

Page 57
ஆடக சவுந்தரி
மென்று படைகளை எல்லையில் நிறுத்திவிட்டு, நீங்கள் மட்டும் தைரியத்தோடு இங்கு வந் ததைத்தான் சொன்னேன்.
பிரம்ம (துணுக்குற்று) . . அப்படி . . ஆனல் . எங்கள் அரசியார் பின்பு தம் கட்ட ளையிற் சிறிது திருத்தம் செய்திருக்கிருர் அரசே, עיר 。
குளக்கோ தெரியும். என்னைத்திறைகேட்டிருக்கி ருர், இல்லாவிட்டால், நேரிலே போருக்குத் தானே வருவதாகச் சொல்லியிருக்கின்ருர் அவ்வளவுதானே! சரி, அவை இரண்டையுமே செய்வோம். ஆனுல் என்னுடைய வேலைக ளில் இன்னும் ஒன்று மட்டும் முடியாமலி ருக்கிறது. அதையும் நிறைவேற்றி விடுவேன னுல் வேண்டிய திறையினைச் செலுத்திவிட்டு நானே நாட்டைவிட்டுச் சென்று விடுவேன். தெட்சணுபதிக் கோயிலை உங்கள் அரசியார் நேரிலேவந்து பார்த்தபின்னர், இடித்தெறிய வேண்டுமானல் அப்படியே செய்யட்டும். என்கடன் பணி செய்து கிடப்பது மட்டும் தான். அவ ன ரு வரி ன் படி அப்பால் யாவும் நடக்கும். உங்கள் அரசி எனது வம்சத்தவ ளானபடியால் அவளுடன் நான் ஒருபோ துமே போர் செய்யப்போவதில்லை.
ரம்ம அரசே! தாங்கள் எவ்வளவு உயர்ந்த உள் ளம் படைத்தவராக இருக்கின்றீர்கள் உங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4 2ம் அங்கம் 105
ளது குறை என்னவென்று கூறினல், நாங்க ளும் அது முடியும் வழியினைத் தேடுவோம். இந்தச் செங்குத்தான மலையிலே அழகிய பெரிய கோவிலொன்றை இலகுவாக எழுப் பியுள்ளீர்கள். தச கண்ட இராவணன் கா லத்துக்குப்பிறகு, ஈழத்தின்கீழ்பால் மீண்டும் அருள்விளக்கேற்றிய தங்களால் நிறைவேற் றமுடியாததொரு குறையும் உண்டாமோ!
குளக்கோ: ஆம், மந்திரியாரே! நானும் அப்ப டித்தான் பெருமிதம் கொண்டிருந்தேன். எம்பெருமானது திருவருட்பணியினைச் செய் யும்போது சிறிதேனும் தற்செருக்கு இருக் கவே கூடாது என்பதையானறிவேன். ஆயி னும், என்னுல் இத்திருப்பணி, இத்தனை சிறப் பாக விரைவில் முடிந்துவிட்டதே என்றுண் டான மகிழ்ச்சியில், ஒருவித செருக்குனர் சியும் கலந்திருந்தல் கூடும். கோயிற்பணி தொடர்ந்து வளரக் குளம் கட்டமுடியாது நிற்கும் நிலைமை அதனுலேதான் ஏற்பட்ட தென்று உணருகிறேன்.
அம்மகிழ்ச்சி இயற்கையானதுதான் அர தே!
குளக்கோ: ஏதோ! இந்தத் தெட்சணுபதி மக்கள் வளம் பொங்கி வாழவேண்டும்; சிவாலயத் திருப்பணி சிறிதும் குறைவின்றி ஊழிகாலம் மட்டும் நடந்துவரவேண்டும். இதுவே எனது

Page 58
06 ஆடக சவுந்தரி
ஆசை. அதற்காக, வற்ருத நீர் வந்து கூடும் வகையிலே பெரிய குளமொன்றை அமைக் கும் வழியையே எண்ணிக் கவல்கின்றேன். இதற்கு ஒருவழி சொல்வீர்களானுல் உங்க ளுக்கு என்ன கைம்மாறு செய்யவேண்டு மாயினும் செய்வதற்குச் சித்தமாயிருக்கின் றேன் பிரம்மராயரே!
பிரம்ம குளம்தானே! இந்தத் தெட்சிண கைலைக் குத் தென்மேற்கிலே, * தன் பல வெளிக்கு அப்பாலுள்ள இரண்டு மலைகளையும் பொருத் தி, ஒரு அணைகட்டிவிட்டால் மிகப்பெரிதான குளம் ஒன்று அமையும், அம்மலைகளுக்கு ஊ டாக எப்போதும் ஒடிச்செல்கின்ற சிற்ருறு களின் நீரினுற் குளமும் என்றும் வற்ருத கடலாக இருக்கும் அரசே!
குளக்கோ இது என் ஆயுட்காலத்துள் செய்து முடிக்கக்கூடிய ஒரு வேலை அல்லவே பிரம்ம ராயரே!
பிரம்ம இல்லையரசே செய்து முடிக்கக்கூடிய வேலைதான். எங்கள் அரசியார் நினைத்தால் செய்யமுடியாதவேலை ஒன்றுமே இ ல் லை. அவர் விரும்புவாராயின், தனக்கு அடிமை யாக இருக்கும் இராட்சதப் பூ த ங் க ளி ன் துணையோடு ஒருசில நாட்களுக்குள்ளேயே
* இன்று தம்பலகாமம் எனப்படும் ஊர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

4 : 2ம் அங்கம்
இதனை முடித்துத்தருவார். குளம் தொட்டு வளம் பெருக்குவதில் எங்கள் அரசியாரும், அவரின் முன்னேரும் எப்போதுமே பெரிய விருப்பம்கொண்டவர்கள்.
குளக்கோ: அப்படியானுல் மிகவும் நல்லது மந்தி ரியாரே. இதற்கு நான் செய்யக்கூடிய பதில் உபகாரம் என்ன இருக்கிறது?
பிரம்ம : மன்னிக்கவேண்டும் அரசே! எங்கள் அர சியாரின் கருத்தை இந்த இடத்திலே தங் களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். தன் மத ஆர்வத்தினலே நீங்கள், இந்தப்பகுதியி லிருந்த புத்தாலயங்கள் சிலவற்றை இடித்
துத் தரைமட்டமாக்கிவிட்டீர்கள். எங்கள் அரசியின் இராச்சியத்திலே தமிழ் மதம், விட் டுனுமதம், புத்தமதம் என்ற பேதமே இல்லை. அதனுலேதான் பேதம் கற்பிக்கிற உங்கள் வைதுரலிய மதத்தை அரசியார் வெறுத்தார். எங்கள் நாட்டு மத ஒற்றுமையைக் குலைத்து, நீங்கள் இடித்த புத்தகோயில்களை உங்களைக் கொண்டே கட்டுவித்தல் வேண்டும் என்பது அரசியாரின் விருப்பம். நீங்கள் அதனைச் செய் துமுடிக்கச் சம்மதம் தெரிவிப்பீர்களாயின், குளம்கட்டும் உதவியை நான் அரசியிட மிருந்து பெற்றுத்தருதல் இலகுவாயிருக்கும்.
குளக்கோ பிரம்மராயரே அற்புதமான சமாதா னத்தூதுவர் நீங்கள் இந்த உடன்படிக்கை

Page 59
ஆடக சவுந்தரி
யை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று உங்கள் அரசியாரிடம் சொல்லுங்கள். தெட் சணுபதி ஆலயத்தை ஒருமுறை வந்துபார்க்கு மாறு அரசியை நான் அழைப்பதாகவும் கூறுங்கள். அவரை வரவேற்க, இந்தத் தெட் சணுபதி மிக்க மகிழ்வோடு காத்திருக்கின் Pது காலிங்க: அரசே! இவர்களுடைய அரசி உங்கள் வமிசத்தைச் சேர்ந்தவள் என்றீர்களே. அடி யேன் அதனை அறியலாமா?
குளக்கோ ஆம். எல்லாமறிந்த உங்களுக்கு இது தெரியாமலிராது என்றல்லவா நினைத்திருந் தேன். இந்தியாவிலே, க லிங்க நாட்டி ன் வடக்கே அசோக்கிரி என்னும் பதி இருக் கிறதல்லவா?
கலிங்க ஆம். அதுதான் பேரரசராகிய அசோக சுந்தர மன்னவரின் தலைநகர். அம்மன்னர், தங்களுக்கு மாமன்முறையினர் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். குளக்கோ: அவருடைய மனைவியார்தான் மனேன்
மணிசுந்தரிதேவி. - காலிங்க ஆம் அரசே! அத்தேவியார் பெற்ற பெண் குழந்தை, தான் பிறக்கும்போதே முடித்த கூந்தலும் பேரழகுமுடையதாய் இருந்ததாமே அதன் கழுத்தினடியில் இருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4 2ம் அங்கம் 09
த அமங்கலமான பெரிய மறுவொன்று நாட் டுக்குத் துர்ச்சகுன மென்று சோதிடர் கூறிய படியால், மன்னர் குழந்தையைப் பெட்டி யில் வைத்துக் கடலில் விட்டாரென்று ஒரு கதையும் இருந்ததறிவேன்.
பிரம்ம உண்மை, முற்றும் உண்மையே. அக்
குழந்தைதான் ஆடகசவுந்தரி, பெட்டி கரை யில் வந்தடைந்த உடனே அதனைத்திறந்த தும், குழந்தை இல்லாது வருத்தப்பட்டுக் கொண்டிருந்த மன்னர் மனுநேய கயவாகு வைப் பார்த்துக், குழந்தை மகிழ்வோடு சிரித்த சிரிப்பை நீங்கள் பார்த்திருக்கவேண் டும். அந்தச் சிரிப்பின் பெருமையினலே தான், திருக்கோவிலுக்குத் தெற்கே உள்ள அந்த இடத்துக்குப் * பாலர் நகைநாடு என்று மன்னர் பெயரிட்டிருக்கிருர்,
காலிங்க: அப்படியா! கடலில் விடப்பட்டபிறகு
அக்குழந்தைக்கு என்ன நடந்ததென்பதைத் தான் நான் அறியவில்லை. அக்குழந்தையே ஆடகசவுந்தரி என்ருல், எங்கள் அரசர், உத்தரவில்லாமல் அந்த அரசியாரின் இந்த நாட்டிலே இறங்கிய குற்றத்திற்காக அவர் கேட்கிற திறையைக் கொடுத்தல் முறை தானே!
* இப்போது பாணகை', 'பாணமை என்ற பெ
யர்களால் வழங்கும் இடம்.
4

Page 60
to ஆடக் சவுந்தரி
குளக்கோ என்ன சொல்கின்றீர், காலிங்கராயரே?
காலிங்க? இல்லை அரசே, அரசியார் உங்களிடம் திறைகேட்டதாக இவர் கூறினரே அதற்குச் சொல்கின்றேன்.
குளக்கோ திறை கொடுக்கத்தான்போகிறேன்.
குளத்தைக் குறித்த படி கட்டித்தந்தால், என் னையே திறையாகக் கொடுக்கவும் சித்தமா யிருக்கின்றேன்.
அதைத்தான் நானும் எதிர்பார்க்கின் றேன் அரசே! எங்கள் அரசியாருக்கு ஏற்ற திறைப்பொருள் தாங்களேதான். குளக்கோ : (சிரித்துக்கொண்டு, ஏழு வட முத்துமாலேயொன் றைப் பிரம்மராயரிடம்கொடுத்து) இது எனது சமாதானப் பரிசு என்று உங்கள் அரசியிடம் கொடுங்கள், -
(பிரம்மராயர் முத்து மா லை யை வாங்கிக்கொண்டு விடைபெற்றுச் செல்கிருர் சபை கலைகின்றது.)
5ம் காட்சி 1ம் அங்கம் இடம் உன்னரசு கிரிப்புறத்தில் வீரன் என்ற போர்வீரனின் வீடு.
(வீரனும், அவனது நண்பன் மாறனும் அன்று நடந்த சில அரண்மனை நிகழ்ச்சிகளைப்பற்றிப் பேசிக்கொண் டிருக்கின்றனர்.)
ܓ`
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 1ம் அங்கம்
Ill
மாறன் என்ன வீரா தெட்சணுபதி யாத்திரை
உங்களுக்குத் தோல்வியாக முடிந்ததாமே! வீரன்! அதை ஏன் கேட்கிருய். நமது மந்திரி
பிரம்மராயரையும் நம்பி, நாம் யாருடனும் போருக்குப்போக நினைக்கலாமா?
மாறன் என்ன! அத்தனை பயங்கொள்ளியா அவர்?
வீரன்: அப்படியில்லை. அந்த மனிதன் ஒரு தரும
ராசாடா! சமாதானம், சமாதானம் என்று தான் எடுத்ததற்கெல்லாம் சொல்வார். மாறன் : அப்படி என்ருல்! வீரன்: அப்படி என்ருல், போர் எங்கே கிடைக் கப்போகிறது எங்களுக்கு, தெட்சணுபதி யில் வந்திறங்கியிருக்கும் வைதூலிய வீர னுேடு போர்செய்யவென்று எங்களை அரசி யார் பிரம்மராயருடன் அனுப்பிவைத்தார். ஆனல் பிரம்மராயரோ, அந்த அரசனேடு சமாதான உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டு திரும்பிவிட்டாரே! இதனுல், போ ரைத்தேடித் தினவு எடுத்தபடி இருக்கும் எங் கள் தோள்களுக்குத் தோல்விதான்.
மாறன் : அதை அல்ல நான் சொன்னது போரி
லே நீங்கள் தோற்றபடியால், குளக்கோட் டனுக்கு நமது இராணியார் தனது பூதப் படைகளைக்கொண்டு குளம் ஒன்று கட்டிக் கொடு க்கவேண்டிய நிபந்தனையை ஏற்று நீங்கள் திரும்பியதாகவல்லோ கதை

Page 61
盟】2 ஆடக சவுந்தரி
வீரன் : (கோபத்தோடு) ஆர்சொன்னது (பக்கத்தி
லே கிடந்த ஈட்டியைத் தூக்குகின்ருன்)
மாறன் : அடேய்! என்னைக் குத்திப்போடாதே. சூரப்புலியான நீ கூடப்போயிருக்கும் போது நமது படைக்குத்தோல்வி எ ப் படிய டா வரும்!
வீரன் அதுதானே பார்த்தேன்! (ஈட்டியைக்கீழே போட்டுவிட்டுக் கோபம் தணிந்து) குளம் வெட்டு வது பற்றிய செய்தி என்ன தெரியுமோ?
மாறன் : தெரியும், தெரியும். குளக்கோட்டர சர் நமது முதல் மந்திரியாரைக் கெஞ்சிக் கேட்ட உதவியாம் அது!
வீரன் : அப்படிச்சொல்லு உண்மையைது. அதன்
படி இதுவரை நமது பூதப்படை குளம் கட் டவேண்டிய இடத்திற்குச் சென்றிருக்குமே!
மாறன் : ஒன்பது நாட் திட்டத்திலே, பெரியதொ
ரு குளத்தைக் கட்டிவிட்டு நமது பூதப்ப
டைகள் நேற்றே திரும்பிவிட்டன. இது
உனக்குத் தெரியாதா? வீரன் இருக்கும், இருக்கும். ஒன்பது நாளில் முடி
யாவிட்டால், சோழ இளவரசனுக்கு எங்கே கட்டுபடியாகப்போகின்றது! நமது இராட் சதப்பூதங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத் தோர் அவணம் நெல்வீதம் சாப்பாட்டுச் செலவுப் பொருத்தம் அல்லவா!
 
 
 
 
 
 
 
 
 
 

5: 1ம் அங்கம் 13
மாறன் தனது ஆட்களால், நினைக்கவும் முடி யாத பெரிய வேலையை இவ்வளவுவேக மாக நமது பூதப்படைகள் செய்து முடித் ததை மன்னர் வியந்து * காந்தளை என்ற நமது தலைமைப் பூதத்தின் பெயரையே குளத்துக்கும் சூட்டியிருக்கிருராம். அதனேடு காந்தளைக் குளத்துக்குப் பாது காவலராய் இருக்குமாறு மூன்று குறட் பூதங்களையும் அங்குவைத்துக்கொண்டாராம்.
வீரன் எல்லாம் நமது அரசியாருக்கும், நமக்
கும் புகழ்தான்.
ແrງ ஆமாம். அரசியாரைப் பார் ப்ப தற்
கென்று அந்தக்குளக்கோட்டு மகாராசா இங் கே வருகிருராமே! அதைப்பற்றிய சேதிளது வும் உனக்குத்தெரியுமா? (வீரன் தெரியாதென்று தலையாட்டுகிருன்) எங்கே உன் மனைவி
விரன் : அரண்மனையிலிருந்து வள்ளி இன்னும் வரவில்லை. இனி வாறநேரமாச்சுது. வந்தால் எல்லாம் தெரிஞ்சுபோச்சுது (வள்ளிவருகிருள்).
மாறன் என்ன தங்கச்சி, இன்றைக்கு அரண்
மனையில் ஏதும் விசேடம் கிசேடம் உண்டா?
வீரன் அடே! நீ போய் அவளைக் கேட்கிறியே! அவளைப்பார்க்கத் தெரியல்லியா! அங்கே
* இப்போது கந்தளாய்க் குளம் என வழங்கப்
படுகின்றது.

Page 62
ஆடகசவுந்தரி
ஒரு விசேடம் இருக்கத்தான் செய்யுதென்று!
ஒரு விசேடமா! எத்தனையோ விசேடம் இருக்குது தெரியுமா, இன்றைக்கு அரண்
particip
வீரன் ஒவ்வொன்ற கச் சொல்லுவள்ளி கேட்
G3 fTb.
அதெல்லாம் பேசிக்கொண்டிருக்க இன் றைக்கு நேர மில்லை. நான் உடனே அரண் மனைக்குத்திரும்பிப்போயாகவேண்டும்.
வீரன் : என்னடிஅம்மா அப்படிவிசேடம்!
வள்ளி : தூதுபோய்வந்த முதல் மந்திரியாரும்,
அரசியாரும் இரண்டு மூன்று நாட்களாக எதையோபற்றிப் பேசிக்கொண்டிருந்தாங்க. அதுக்குப்பிறகு, இப்பவெல்லாம் நம்ம அர சியார் ஒரு நோயாளிமாதிரி; நித்திரை யில்லை, நிமை இல்லை; ஊண் இல்லை, உறக்கம் இல்லை. அவருடைய உடம்பெல்லாம் ஒரே கொதி. எள்ளுப்போட்டால் எள்ளும் பொரி யும். அடிக்கடி தெட்சணு பதிக்குப் போக வேண்டுமென்று சொல்கிருர், பிறகு அப்ப டிச்சொன்னதற்காக வெட்கப்படுகின்ருர்,
வீரன் அந்தத் தெட்சணுபதி வீரர் இங்கே வரு கிருராமே உண்மையா? அரசியாருக்கும் அது தெரியும்தானே? .ܬܬܐ ܬܹܐ
 
 

5; 2ம் அங்கம் I 75
வள்ளி ஆமாம். அதைக் கேட்டபிறகு அரசி யார் பாடுபெரும்பாடு என்னடி இன்னும் காணுேம் என்று அடிக்கடி கூறுவார். யாரை அம்மா? என்று கேட்டால் ஒன்றும் இல்லை யடி என்பார்.
வீரன் : அப்படியென்றல் இனிச்சரிதான். வருகிற
குளக்கோட்டரும் திரும்பிப்போகப் * G3 LITT @ தில்லை.
ள்ளி சரி, சரி, அந்தப்புரத்து விடயங்களைப் பற்றி ஆடவர்களுக்கு என்ன பேச்சு. நேர மாச்சு நான் போயிட்டுக் கெதியாக வந் திடுறன். அப்போ. போய்வரட்டுமா..?
(வள்ளிபோக, வீரனும் மாறனும் எழுந்து செல்கின் றனர்.)
5ub 3, Tu'_g : 2ம் அங்கம்.
இடம் ஆடகசவுந்தரியின் அந்தப்புரம்.
(தோழிமார் மட்டும் அங்கே உரையாடிக்கொண்டு நிற்கின்றனர்) வள்ளி என்னடி இந்த உன்னரசு கிரி இன்றைக் குக்கொண்டிருக்கிறகோ லம்! வீதி எங்கும்
என்ன அழகான சோடனைகள்,
தம்பதியாள் நம்ம ராசாத்தியுட மாப்பிள்ளை வரு
கிருராமே! பின்னைக் கேட்கவேண்டுமா?.

Page 63
ii i 6 ஆட்கசிவுந்தரி
பூங்கொடி ; எடியே! மெல்லப்பேசு, இரகசியமான பெரிய இடத்து விடயம். அரசி அறிஞ்சா நம்மபாடு அதோகதிதான்.
முல்லை : ஒன்றும் நடக்காது. இதைப்பற்றி நாம் பேசுவதை அரசியார் கேட்டால் இன்னும் மகிழ்ச்சி கொள்ளுவார்.
வள்ளி அப்படியானுல் எல்லா ஒழுங்கும் சரி
என்று சொல்லு,
முல்லை : ஆமாம். மந்திரி பிரம்மராயர் இருக்கி ருரே! பொல்லாத பேர்வழியடி அவர் பெண் ணைப்பற்றி மாப்பிளைக்குச் சொன்னர். மாப் பிளையைப்பற்றிப் பெண்ணுக்குச்சொன்னர். இரண்டு பேரின் மனத்துக்கும் இடமாற்றம். இது அங்கே, அது இங்கே.
வள்ளி : அப்படிச்சொல்லு சங்க தி யை குளக் கோட்டார் ஆம்பிளேயல்லவோ அ த ஞல், பொறுக்கஇயலாது புறப்பட்டு இங்கே வா முர், நம்மராசாத்தி பாவம், இங்கே கிடந்து துடிக்குது! -
பூங்கொடி : அடியே! குளக்கோட்டார் அப்படிச் சும்மா புறப்பட்டு வரவில்லையடி, நமது முதல்மந்திரியார் தான் அழைத்திருக்கிருர், உன்னரசிராச்சியமே அரசரை வரவேற் கின்றது.
என்ன! திருமணத்துக்காடி?
 
 
 
 
 
 
 
 
 

5 2ம் அங்கம் 11
முல்லே நீ ஒரு அவசரக்காரியடி, நம்மராசாத்தி அவரைப்பார்க்காமல் எப்படியடி திருமணம் நடக்கும்? (அப்போது அமுதவல்லி வருகிருள்)
அமுத 5 நடக்கத்தானடி போகின்றது திருமணம், மந்திரியார் குளக்கோட்டு மன்னரது படம் ஒன்றைக் கொண்டுவந்து அ ர சி யா ரிடம் கொடுத்தார். பார்த்ததும் ஆனந்தத்தாலே தேவியின் கன்னமிரண்டும் சிவந்து விட்ட தடி அவரது வீரம், புகழ் என்பதைத் தான் முன்னரே அரசிக்குத்தெரியுமே! முதன் மந் திரியார் செ ய் த முன்னேற்பாட்டின்படி குளக்கோட்டரும் உன்னரசுகிரிக்கு வந்
கொண்டிருக்கின்ருர்,
வள்ளி அப்படியென்றல் நம்மராசாத்தி தன்
உள்ளத்தை அவரிடம் பறிகொடுத்து விட டார் என்று சொல்லு,
கதியை. நான் நேற்று இராசாத்தியின் பூ சோலைக்குப் போனேன். அங்கே மெல்லி குரலில் பாட்டொன்று கேட்டது. மெல் மறைந்துநின்றுகவனித்தேன். பாடியது வே. யாருமில்லை நம் அரசியேதான்.
தம்பதி அந்தப்பாட்டைப் பாடுடி கேட்போம்
(பாடுகிருள்.)
15

Page 64
118 ஆடக சவுந்தரி
1. குளக்கோட்டு மாசேனன் குறுநகைசெய் வீரன் புகழ்கேட்க அவர்பேரைப் புகலுதி நீ வண்டே!
2. உன்னரசுத் தமிழ்மதத்தை
உவந்து கொண்ட சோழன் எம்மரசுள் வருகவென்று இயம்பிடு நீ வண்டே!
(அமுதவல்லி ஒருமுறை பாடியபின் எல்லோரும் சேர்ந்து பாடுகின்றர்கள். திடீரென்று அரசியார் வரு கின்றர். உடனே பாட்டை நிறுத்துகின்றனர்)
அரசி; ஏனடி நிறுத்திவிட்டீர்கள்? பாடுங்கள், நானும் சேர்ந்து பாடுகின்றேன். (அரசியை நடுவில் விட்டு அனைவரும் வளைந்துநின்று பாடி ஆடு கின்றனர். முடிந்ததும்)
அமுத (வள்ளியைப்பார்த்து) அடி வள்ளி, உனது
சந்தேகம் தெளிந்ததா?
அரசி : எதில் அவளுக்குச் சந்தேகம்?
அமுத 5 இல்லையம்மா, குளக்கோட்டர் வருவ தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
அரசி: ஆமாம், நேரமாச்சு. சகல வரிசைகளோ டும் அவரை எதிர்கொள்ளப் புறப்படுவோம்.
தம்பதி ஏனம்மா! போருக்கு வருபவரை அப்
படியா சென்றுவரவேற்பது?
 
 
 
 
 
 

5 2ம் அங்கம் 19
அரசி என்னடி சொல்கின்ரு ய்? முல்லை: இல்லை அம்மா, உங்கள் நால்வகைச் சேனைகளுடனும் போர் தொடுக்கத்தானே வருகிருர் அந்தவிரர்.
அரசி என்னடி பிதற்றுகிறீர்கள்!
அ ம் ம ணி! கோபங் கொள்ளாதீர்கள். நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு ஆகிய உங்கள் நால்வகைச் சேனைகளையும் எதிர்த்து வென்று, நமது பெண்மை இராச்சியத்துள் ஆண்மை நலமுங்கலந்து புகழ் வீசப்போ கும் நன்னிகழ்ச்சியைத்தான் இவள் குறிப் பிடுகிருள் என்று நினைக்கின்றேன். (அரசி நாணத்தாற் தலைகுணிகின்ருள்.)
பூங்
அமுத என்னடி, விளங்காமற் பேசுகின்றீர்கள். குளக்கோட்டு வீரரது பெயரைக் Gail . . மாத்திரத்திலேயே நம்மரசியாருடைய நா குணமாகிய படைகளும் தோற்றுப்போ விட்டதை நீங்கள் கண்டும், காணுதமாதி என்னென்னவோ பேசுகிறீர்களே!.
ரசி அமுதவல்லியும் இப்போது இவர்களோடு சேர்ந்து கொண்டாயா? சரி, அவர் வரப் போகின்ருர், எல்லாரும் வரவேற்புக்கு போகப் புறப்படுங்கள். (அனைவரும் செல்கின்றனர்)

Page 65
ஆடக சவுந்தரி
5ம் காட்சி 8ம் அங்கம், இடம்: அரண்மனைப் பூந்தோட்டம். (வரவேற்பு முடிந்த அன்று மாலை ஆடகசவுந்தரியும், குளக்கோட்டனும் பேசிக்கொண்டிருக்கிருர்கள்.)
குளக்கோட்டன்: இன்று காலே வரவேற்பு மண்ட பத்திலே அரசியாரது கம்பீரமான தோற் றத்தைக்கண்டு, எதற்கும் கலங்காத எனது வீர நெஞ்சமே தலைவணங்கிற்று.
ஆடகசவுந்தரி அது இந்த நாட்டு மகாராணியைக் காணும் எவருக்கும் உண்டாகும் உள் ளத்து ஒரு அசைவுதான்.
குளக்கோ என்னுலே சிந்திக்கவும் முடியாத மா பெரும் குளக்கட்டு வேலையை மிகவிரைவில் முடிப்பித்துத்தந்து, எனது தன் மதச் செருக் கை மாற்றி மதசமரச உணர்ச்சியையும் ஊட் டிய மாதரசியாருக்கு எனது நன்றியை மீண் டும் மீண்டும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.
ஆடக: இந்த இரண்டிலே ஒன்றும் பிர மாத மில்லை.
குளக்கோ அரசியார் குறிப்பிடுவது.
ஆடக ஒன்று, நான் குளங்கட்ட உதவி செய்தது;
மற்றையது நீங்கள் நன்றிசொல்ல விரும்பு துெ.
குளக்கோ: திருக்குளப்பணி உங்களுக்கு இலகுவா னது என்று நீங்கள் சொல்லலாம். ஆனல்.
 
 
 

5 3ம் அங்கம்
ஆடக மற்றதும் அப்படித்தான். சோழநாட் டார் வெறும் சொல்லில் வீரர்கள்தானே! அதைத்தான் சொன்னேன், நீங்கள் நன்றி சொல்ல விரும்புவதில் ஒன்றும் பிரமாதமில் லேயென்று. (அரசி சிரித்தார்)
குளக்கோ அரசி! மன்னிக்கவேண்டும். யாரோ, எப்பவோ செய்த குற்றத்திற்காக இப்படி என்னைப் பழிவாங்காதீர்கள்.
ஆடக இல்லையே; எனது முன்னேருள் ஒருவரான கலிங்க இளவரசி பத்மிணிதேவியின் உள்ளத் தைக் கவர்ந்துசென்றுவிட்டு, அரசியல் கார ணமாக ஏற்பட்ட மனத்தாங்கலுக்காய், அப் பெண்ணுக்குக் கொடுத்த வாக்கைக் காற்றி லே பறக்கவிட்ட சொல்வீரனுன வீரசேனன் உங்கள் உறவினன்தானே! அவனை யாரோ வென்று சொல்லி நீங்கள் தப்பிவிடலாமா?
ளுக்குமுள்ள தொடர்பை எல்லாம் பிரம்ம ராயர் கூறியுள்ளார்போலும்!
அதுமட்டுமல்ல, உங்களுக்கு எங்கள் இராச் சியத்தின் மீது ஏற்பட்டுள்ள உள்ளத்தொடர் பையும்பற்றித் தெளிவாகக் கூறிவிட்டார். குளக்கோ: அப்படியானுல். sea
குளத்தைக் கட்ட உதவி செய்தஎனக்கு, நீங்கள் என்ன பரிசு தர வேண்டும் என்று தானே கேட்கின்றீர்கள்?

Page 66
22 ஆடகசவுந்தரி
குளக்கோ அதைப்பற்றி.
ஆடக (இடைமறித்து) அதைப்பற்றி இன்னும் என் ன வேண்டியிருக்கின்றது? குளத்தைக் கட்ட உதவி செய்தேன்; பதிலாக என் உள்ளத் தைத் தொட்டுவிட்டீர்களே! போதாதா?
குளக்கோ: அப்பாடா பயந்தே போய் விட்டேன். எங்கள் முன்னேன் ஒருவனது செயலை அரசி யார் குத்திக்காட்டியபோது சமாதானத் தந் தை போன்ற பிரம்மராயருடைய கருத்து இதிலே பிழைத்து விட்டதோ என்று எண் ணிைனேன்.
ஆடக: அப்படி நடக்காது அரசே! பிரம்மராயர் எனது தந்தைக்குச் சமமானவர். அவரது செயல் எதுவும் எனது நன்மைக்கும், விருப் பத்துக்கும் மாறக ஒருபோதும் முடிந்ததே இல்லை. அதனல், அவர் தனக்குச் சரி என்று காணும் எதையும் என்னுடைய முடிபாகவே மற்றையோருக்குக் கூறு ம் உரிமையையும் அவருக்கு வழங்கியுள்ளேன்.
குளக்கோ உங்கள் சொந்த வாழ்வு சம்பந்தமான
வற்றிலுமா?
ஆடக: எனது சொந்த வாழ்வென்று ஒன்று எனக் கில்லை. நான் வாழ்வது இந்த நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலத்திற்காகவே தான். அந்த நலத்திற்கு எது உகந்த தென்று தீர்க்க தரிசியாகிய பிரம்மராயர் உணர்கின்ருரோ, அவர் அதைத் தடையின்றிச் செய்தேயா @i ffrif !

5: 3ம் அங்கம்
குளக்கோ: அப்படியானுல்.
(சந்தேகத்தோடு அரசியைப் பார்க்கிருன்)
ஆடக ஆம். என்னை உங்களுக்குத்தருவதாக அவர் வாக்களித்து வந்தாரே! அதுவுமா? என்று தானே சந்தேகிக்கிறீர்கள்! சந்தேகம் வேண் டாம் அரசே! எந்த ஆடவர்மீதும் செல்லாத என் உள்ளமானது, உங்கள் பெயரைக் கேட் டமாத்திரத்திலேயே நெகிழ்வுறத் தொடங்கி விட்டது. திருவருளின் சித்தம் அதுவென்று கொண்டு, அன்றிலிருந்தே உங்களை என் மனத்தில் வரித்துக் கொண்டு விட்டேன் .
குளக்கோ: அன்பே எனது உள்ளமும் நீண்டநாட் களுக்குமுன்பே என்னிடமிருந்து புறப்பட்டு, உன்னரசுகிரி அந்தப்புரத்திற்கு வந்து விட் l-gile
அரசே! இனிமேல் இந்த ஆடக சவுந்தரி தங்கள் அடிமை. திரிசிங்களத்தின் கிழக்குப் பகுதியாகிய இந்த உன்னரசு கிரி, மட்டக்க ளப்பு, தெட்சணுபதி ஆகிய மூன்று இராச் சியங்களையும், இவற்றிலுள்ள குடி மக்கள், அவர்களின் நன்மை தீமைகள் ஆகிய யாவற் றையும் உங்கள் தி ரு வ டி க ளி லே யே ஒப்ப டைக்கின்றேன். ஏற் று க் கொள்ளு ங் கள். (அரசனைப் பணிகின்ருள். அவ்வேளையிலே பிரம்மராய ரும் அங்கு வருகின்ருர்)

Page 67
1 24 ஆடக சவுந்தரி -
இவ்வேளையில் இங்கே வந்ததற்கு என்னை மன்னித்தருள வேண்டுகின்றேன்.
ஆடக மன்னிப்பா? உங்களைப் பொறுத்தவரை நீ ங் க ள் அப்படிக்கேட்டிருக்கே வேண்
it (BLD!
பிரம்ம சரி, என்னை நீங்க ள் உங்கள் தந்தை போன்று கருதுவதாகத் தானே சற்று முன் கூறினீர்கள்.
குளக்கோ: உண்மையைத்தானே! கூறினுேம், ஆடக ஆம், அப்படித்தான் ஐயா.
பிரம்ம நல்லது, இப்படி வாருங்கள்! (இருவரும்
பிரம்மராயர் அருகில் வருகின்றனர்) இதோ, லே மாலை வெள்ளி தோன்றியிருக்கும் இந்த நல்வேளைதான் ஆடக சவுந்தரியாருக்குத் திரு மணம் நடந்தாக வேண்டும் என்பது அவரது தந்தை அசோகசுந்தரனதுசங்கற்பம். உங்கள் நல்வாழ்வுக்காக, எந்த ஆடம்பரமுமின்றி உங்களிருவருக்கும் தந்தைபோன்ற ஒருவரே அத்திருமணத்தை நடத்தியும் ஆகவேண்டும் என்பதும் அரசன் ஆணை. (அரசியைப்பார்த்து) மகளே! இப்படி அருகில்வா. நீ மிதந்துவந்த பெட்டியுள், உனது தந்தை வைத்துவிட்ட இச்சாசனத்திலே இவற்றை எல்லாம் விரி வாக அவர் எழுதிவைத்திருக்கிருர்,
 
 
 
 
 
 
 

5: 3ம் அங்கம் I 25
இதோ, உன்னுடன் அந்தப் பே  ைழ யு ள் இருந்த கணையாழி! இதனைக் குளக்கோட்டர சரதுகையிலே நீ அணிதல் வேண்டும். (தேவி கணையாழியை அரசரது வலக்கைச் சுட்டுவிரலிலே போடுகிருள்)
குளக்கோ: தேவியார், அவசரத்திலே மோதிரத் தைச் சுட்டுவிரலிலல்லவா போட்டுவிட்டார்
Jo D அப்படியா! அரசியார் செய்யவேண்டிய தைத்தான் செய்திருக்கிருர், சுட்டுவிரலிலே திருமணமோதிரத்தைப்போடுதல் தான் இந் நாட்டின் மிகப் பழமையான வழக்கம். யான் அதை இங்கே குறிப்பிட மறந்து விட்டாலும், அரசியார் மரபுப்படிதான் அதனைச் செய் திருக்கிருர்.
குளக்கோ : பெரியவரே! அந்தப் பழைய வழக் கத்தின் பொருள் என்னவென்று நான் அறி ULIGN) s TLD IT............ ரம்ம : அரசே! நீர் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்பினுலும், அரசியாரே உமது சுட்டு விர லில் நின்று அதனைக் காட்டுவதாக இருத் தல் வேண்டும். அதாவது, மாறுபாடில்லாத மன ஒருப்பாடு, கணவன் மனைவியருக்குள் இருக்கவேண்டும் என்பதுதான் இந்நாட்டுப் பெரியோரின் வழிவழி விருப்பமாகும். ளக்கோ: மிகவும் நல்ல கருத்து. நான் இதனைப் பெரிதும் வரவேற்கின்றேன் மந்திரியாரே!

Page 68
ஆடகசவுந்தரி
ம்ம நல்லது. (அரசியின் இரு கைகளையும் பிடித் துக் குளக்கோட்டனது கையிலே கொடுத்து) இந்த வானம், பூமி, உள்ளமட்டும், சந்திர சூரியர் உள்ளமட்டும், உங்கள் புகழ் மங்காது வளர் வதாக! உங்கள் இல்லற வாழ்விலே எல்லா நல்லறங்களும், சகல மங்கலங்களும் பொங் குவதாக! நீவிர் இருவீரும் நகமும் சதையும் போல், பூவும் மணமும்போல், தமிழும் அதன் இனிமையும் போல், இணைபிரியாது நீடூழி வாழ்வீர்களாக, நமது மூன்று இராச்சியங் களுக்கும் குளக்கோட்டுமன்னனே இனிமேல் அதிபதியாகிருர் அ த ன் அடையாளமாக அவருக்கு முடி சூட்டும் விழா நாளைக்காலை நடைபெறும். அதனைத் தொடர்ந்து நமது குலதெய்வமான திருக்கோவிற் சித்திரவே லாயுத சுவாமி தரிசனம். இவற்றுக்கு வேண் டிய ஏற்பாடுகளெல்லாம் செய்தாய்விட்டன.
கோ : பின்னர்க் காந்தளே ஏரியையும், தெட் சணுபதி ஆலயத்தையும் அரசியாருக்குக் காட் டுதற்காக, அவரது குளக்கோட்டு மகாராசா, தனது ஆடகசவுந்தரி மகாராணியை அழைத் துச் செல்லவும் ஏற்பாடாகி இருக்கும் அல்
ஆம் அரசே! எல்லாம் ஒழுங்காகவே செய்திருக்கின்றேன். (மறுபுறம் திரும்பி) நான்
பிறந்ததன் பயனும் இன்ருேடு நிறைவேறி விட்டது. எனது வாழ் விலே ம கி ழ் ச் சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5: 3ம் அங்கம் 127
நிறைந்த நாளும் இதுவேதான். நாம் எல் லோரும் சென்று நாளைக் காலை குளக்கோட்டு
மன்னரது முடிசூட்டு விழாவுக்கு வருவோம். மணமக்கள் நீடூழி வாழ்க!
(திரை)
ஆடக சவுந்தரி நிறைவு
நூல் நிறைவுறும்

Page 69


Page 70
மட்டக்களப்பு (மாமங்கை நதி) தீர்த்தக்கு
மட்டக்களப்பு -
சித்திர வேலாயுத
 
 

-- L D FT L DIT DĚJI 5, Lř)
ளமும் கோவிலும் (பக்கம் 85
- திருக்கோவில்
சுவாமி கோவில்
(பக்கம் 62, 66 , 69 - 26 etc.)