கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலவெள்ளம்

Page 1


Page 2

காலவெள்ளம்
நீர்வை பொன்னையன்
வெளியீடு இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்

Page 3
காலவெள்ளம்
நூல் நூலாசிரியர் வெளியீடு
விநியோகஸ்தர்/விற்பனையாளர்:
வெளியீட்டுத் திகதி:
அச்சுப் பதிப்பு
விலை
காலவெள்ளம்
நீர்வை பொன்னையன்
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
18, 6/1, கொலிங்வூட் பிளேஸ் கொழும்பு - 06
இலங்கை
பூபாலசிங்கம் புத்தகசாலை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொலைபேசி இல. 01:12422321
19.09.2OIO
ஆர்.எஸ்.ரி.என்டர்பிறைஸ்ஸஸ் (பிறைவேட்) லிமிட்டட் 114, டபிள்யு.ஏ.சில்வா மாவத்தை, கொழும்பு 6,
தொ.இல. 2501715
e5_IT 275/=

நீர்வை பொன்னையன்
சமர்ப்பணம்
இனவாத யுத்தத்தில் பலியான எமது தாய்த்திருநாட்டின் அனைத்து
இன மக்களுக்கும்.
iii

Page 4
காலவெள்ளம்
iV

முன்னுரை
காலவெள்ளம் பத்து ஆக்கங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுதி ஐம்பதாம் ஆண்டுகளிலிருந்து இன்று வரையான ஐம்பது ஆண்டு கால வெள்ளத்தில் அடிபட்டவை; எனது அனுபவங்கள். இந்த அனுபவங்கள் என்ஆழ்மனதில் புதைத்துள்ளன. இவை ஒரு உன்னத தேட்டம், என் அனுபவத் தேட்டத்திலிருந்து காலத்துக்கு காலம் மேல் கிளம்பி புத்தாக் கம் பெற்றவை என் இலக்கியப் படைப்புக்கள். இந்த ஐம்பதாண்டு கால கட்டத்தில், கடந்த மூன்று தசாப்தங்கள் எமது தாய்த்திரு நாட்டின் இருண்டகாலமாகும்.
கடந்த மூன்று தசாப்தங்களாக எமது தாய்த்திரு நாட்டில் இனவாத யுத்தம் கோரத் தாண்டவமாடியது. இந்த இனவெறி யுத்தத்தால் எமது நாட்டுப் பொருளாதாரம், கல்வி, கலை பண்பாடு, சமூகக் கட்டுக் கோப்பு, மனித விழுமியங்கள் எல்லாம் தகர்க்கப்பட்டு, சர்வநாசமாக்கப் பட்டன. மக்களது ஜனநாயகம் சார்ந்த சகல உரிமைகளும் மறுக்கப்பட் டன, பறிக்கப்பட்டன.
இந்த இனவாத யுத்தததிற்கு முன்னர் எமது நாட்டில், சிங்கள, தமிழ் பிரதேசங்களில் ஓரளவு கருத்துச் சுதந்திரம்இருந்தது. கலை இலக்கி யவாதிகள், ஊடகவியளாளர்கள் தமது கருத்துக்களை ஒரளவு வெளிப்ப டுத்தினார்கள். முற்போக்கு எழுத்தாளர்கள் தமது தளத்திலிருந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய நிலை இருந்தது. அதே போல ஏனைய எழுத்தாளர்களும் தமது கருத்துக்களை முன்வைக்க முடிந்தது. மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருந்தது. ஊடகவியலாளர்களும் சுதந்திர மாக செய்திகளையும் தகவல்களையும், புலனாய்வுக் கட்டுரைகளையும், விமர்சனம் கட்டுரைகளையும் வெளியிட்டார்கள். அரச சமூக நடவடிக் கைகளை விமர்சித்து எழுத முடிந்ததது. ஆனால் இனவாத யுத்தம் முனைப்படைந்த பின்னர் கலை இலக்கியவாதிகளதும் ஊடகவியலாளர் களதும் சுதந்திரமும் ஜனநாயக உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட் L.-6ől.
முதலாளித்துவச் சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் ஒரளவுக்கு இருக் கத்தான் செய்தது. அரசின் தவறுகளையும், மக்களது நலன்கள் பாதிப்பு றும் நடவடிக்கைகளையும், போக்குகளையும் எழுத்தாளர்களும், ஊடக வியலாளர்களும் சுட்டிக்காட்டக் கூடிய நிலமை இருந்தது. விமர்ச்சிக்க வும் கண்டிக்கவும் உரிமை இருந்தது.
V

Page 5
காலவெள்ளம்
சோஷலிஸ் சமூகத்திலும் கருத்துச் சுதந்திரத்திற்கு முக்கிய இடமி ருந்தது. நூறு பூக்கள் மலரட்டும். நூறுகருத்துக்கள் முட்டி மோதட்டும் என்று மாமேதை, மாஒ சேதுங் கூறியுள்ளார். மகத்தான அக்டோபர் புரட் சியின் தலைவரும், சோவியத் யூனியனில் சோசலிஸ் சமூகத்திற்கு பூர் வாங்க தளமிட்டவருமான உன்னத தலைவர் லெனின் அவர்கள் பின்வரு மாறு கூறியுள்ளார். 'கட்சிக் கொள்கைகளை வகுக்கும் போதும் கட்சி நடவடிக்கைகளை முன்வைக்கும் போதும் நன்றாக விவாதித்து, சரியாக தர்க்கித்து முடிவெடுக்கவேண்டும் என்று வற்புறுத்திக் கூறியுள் ளார். ஏன், மாக்ஸிசமே தர்க்க வியலை அடிப்படையாகக் கொண்டதுதானே. ஓர் ஆரோக்கயமான சமூகத்துக்குக் கருத்துச் சுதந்திரம் அத்தியாவசியம்.
கடந்த மூன்று தசாப்தங்களாக எமது நாட்டில் எத்தனை கலை இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் அதிகாரத்திலுள்ள வர்களுக்கெதிராக மாற்றுக் கருத்துக்களை முன் வைத்தமைக்காக காணா மல் போயிருக்கின்றார்கள், படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் நாட்டைவிட்டே ஓடியிருக்கின்றனர். சிங்கள தமிழ் தேசியவாத யுத்தத் தின் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே சரியான ஜனநாயகம் சார்ந்த கருததுக் களை முன்வைத்த கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்க ளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
1977 இல் ஆட்சிபீடம் ஏறிய திருவாளர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா வின் அரசு இந்தப் 'புனித கைங்கரியத்தை ஆரம்பித்து, தொடர்ந்து நடாத் தியது. யாழ் பல்கலைக் கழகமாணவரும் "மனிதன்" என்ற சஞ்சிகையின் ஆசிரியருமான திரு விமலதாசன் என்பவரை முதன் முதலாக திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ராணுவம் சுட்டுக் கொன்றது.
ஜே. ஆர். ஆரம்பித்து வைத்த பாசிச நடவடிக்கை வட புலத்தில் ஆயுதக் குழுக்களால் தொடரப்பட்டது. ஜனநாயகம் சார்ந்த கருத்தை முன் வைத்து அதற்காகப் போராடிய சிறந்த கவிஞரும், நாடகக் கலைஞரும் யாழ் பல்கலைக்கழக மாணவியுமான செல்வி படுகொலை செய்யப்பட் டார். செல்வி வன்னிப் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய, விவசாயக் கிராமத்திலுள்ள அடிமட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். செல்வி நீதிக்கும் நியாயத்துக்குமாகப் போராடிய பெண் போராளி, அதே பேர்ல யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட உடற் கூற்று விரிவுரையாளர் ரஜனி திரணகம ஒரு தீவிர வாத ஆயுதக் குழுவால் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஒரு தீவிரமான சமூகப் போராளி. ஆயுதக் குழுக்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை, விமர்சித்து முறிந்த
Vî

நீர்வை பொன்னையன்
பனை என்ற நூலை எழுதி வெளியிட்ட இருவரில் முதன்மையானவர். கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தீவிர சமூகப் போராளி படு கொலை செய்யப்பட்டார். 'புதிய தோர் உலகம்', நாவலின் ஆசிரியர் கோ விந்தன் (நோபேர்ட்) என்பவரும் ஒரு ஆயுதக் குழுவால் கொல்லப்பட் டார். 'ஈழ முரசு பத்திரிகையின் ஆசிரியரும் தமிழர் நிதிய உரிமையாளரு மான மயில் அமிர்தலிங்கம், விடுதலை பத்திரிகையின் ஊடகவியலாளர் சண்முகலிங்கம், தொழிலாளர் பாதை ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. தேவராசா, சிரேஷ்ட பத்திரிகையாளரும் மட்டுநகர் மாநகரசபை மேயரு மான செழியன் பேரின்பநாயகம், நெல்லை நடேசன், ஊடகவியலாளர் சிவராம், கே. குகமூர்த்தி இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா , றேலங்கி செல்வராஜா, தினமுரசு பத்திரிகையாளர் சின்னபாலா என்ற அழைக்கப்படும் பால நடராஜ ஐயர் ஆகியோர் பாசிஸ் ஆயுதக் குழு ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் மாத்திரமல்ல, புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் பாஸிஸ ஆயுதக் குழுக்களால் தமிழ் ஊடக வியலாளர்கள் சுட்டுக் கொல் லப்பட்டனர். 1996 ல் பிரான்ஸில் பாலசிங்கம் கஜேந்திரன் என்ற ஊடக வியலாளர் சுட்டுக் கொல்லப்பட்டடார். கனடாவில் தாயகம் பத்திரிகை ஆசிரியர் ஜோர்ச் குருச்சேவ், கனடிய தமிழ் சுதந்திர ஊடகவியலாளர் டி.பி. எஸ். ஜெயராச், கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபன அதிபர் இளையபாரதி ஆகியோர் மீது கொடுரமான மிலேச்சத்தனமான தாக்குதல் கள் நடத்தப்பட்டன.
தென் இலங்கையில் ஜே.ஆரின் பாசிச ஆட்சிக்காலத்திலிருந்து ஆரம்பித்த ஜனநாயகம் சார்ந்த கருத்துச் சுதந்திரப் பறிப்பும் ஊடகவிய லாளர்கள் படுகொலைகளும் இன்றும் தொடர்கதையாக நீண்டு வருகின் றன. ஜே.ஆரின் உலகமயமாக்கல் கொள்கையை விமர்சித்து டாக்டர் சரத் சந்ரா ஒரு நூலை எழுதினார். ஜே.ஆரின் கையாட்கள் டாக்டர் சரத்சந் ராவை பொரளையில் வைத்து கடுமையாகத் தாக்கினர். படுகாயமடைந்த அவரை அழுக்கு நீர் வடிகால்வாயில் தூக்கிவீசிவிட்டுச் சென்றனர் ஜே.ஆரின் அடியாட்களால், யுத்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த பிரேமதாச காலத்தைய சிறந்த நாடகக் கலைஞரும் ஊடகவிய லாளருமான நிச்சாட் டீ சொயிஸா, றோகணகுமார, லக்மல் சம்பத், திஸக் ஷன்,சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். பிரபல ஊடகவியலாளரும் கேலிச் சித்திர வரைஞரு மான (காட்டுனிஸ்ற்) பிரகீத் எகலிய கொட காணாமல் போனார். பிரபல சிங்களத் திரைப்பட நெறியாளரான பிரசன்ன விதான யுத்தம் சம்பந்தமாக
Vii

Page 6
காலவெள்ளம்
புரசந்த களுவர என்று ஒரு திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்ப டம் கடுமையான தணிக்கைக்குள்ளாக்கப்பட்டது. அக்ஷரய' என்ற மற்று மொரு திரைப்படத்தை நெறிப்படுத்தித் தயாரித்தார். பிரசன்ன விதான இது ஒரு நீதியரசரின் தரக்குறைவான நடவடிக்கைகள் பற்றி விமர்சிக் கின்ற திரைப்படம். இது இன்று வரை தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல, எமது நாட்டில் ஜனநாயகம் சார்ந்த கருத்துச் சுதந்திரப் பறிப்பும், படுகொலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இனவெறி யுத்தகாலத்தில் தோன்றிய போர்க் கால கலை இலக்கி யப் படைப்புக்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம். போராளி களால் தமது கள அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டு புனையப் பட்ட படைப்புக்கள்,இவை பொது மக்களுக்குப் போதியளவு கிடைக்க வில்லை. இரண்டாவதாக, போரைப் பார்வையாளர்கள்ாக நின்று பாார்த் துப் புனையப்பட்ட படைப்புக்கள், மூன்றாவதாக, போரினால் பாதிக்கப் பட்டவர்களால், தாங்கள் பெற்ற அனுபவங்கள், இவற்றை நேரடியாகப் பார்த்து அனுபவித்த மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் இழப்புக்கள் இவற்றின் தாக்கத்தால் ஏற்பட்ட உந்துதலால் புனையப்பட்டபடைப்பு
556.
இயக்கங்களிலுள்ள சில போராளிகளாலும், அவ்வியக்கங்களைச் சார்ந்த எழுத்தாளர்களாலும் ஆக்கங்கள் புனையப்பட்டன. இவை இயக் கங்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந் தன. அதே வேளை ஒரே இயக்கத்துக்குள்ளேயே உள்ள முரண்பாடுகள், அடக்குமுறைகள், மோதல்கள், அழிப்புக்கள் ஆகியவற்றை அடிநாதமா கக் கொண்டு புனையப்பட்ட கலை இலக்கியப் படைப்புக்கள், எதிர்ப்பி லக்கியப் படைப்புக்களாகவே கொள்ளப்பட்டன. இந்த எதிர்ப்பிலக்கியப் படைப்புக்கள் வெளியே வரவில்லை. அனைத்தும் அப்படியே அமுக் கப்பட்டன. மாற்றுக் கருத்துக்களையும், ஜனநாயகம்சார்ந்த உரிமைகளை யும் கொண்ட கலை இலக்கியப் படைப்புக்கள் மறைக்கப்பட்டன. இருட்டடிப்புச் செய்யப்பட்டன. அழித்தொழிக்கப்பட்டன.
இயக்கங்களுக்கிடையேயுள்ள மோதல்களினால் ஏற்பட்ட அழிவுக ளையும், அழிப்புக்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புக்கள் புனையப்பட்டபோதும் இவற்றை வெளியிட சில ஊடகங்கள் தயங்கின. சில மறுத்தன. காரணம் கேட்ட பொழுது தாங்கள் இயக்கங்களைப் பகைக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஆயுதக் குழுக்களதும் அரச படையினரதும் அத்துமீறல்களையும் மக்கள் விரோத நடவடிக்கைக
Viii

நீர்வை பொன்னையன்
ளையும் அம்பலப்படுத்துகின்ற விமர்சிக்கின்ற படைப்புகளை சில ஊட கங்கள் வெளியிட மறுத்தன. அதே வேளை சிங்கள இனத்தைத் திட்டு கின்ற தூற்றுகின்ற இனவாத ஆக்கங்களையும் பெரும்பாலான தமிழ் ஊட கங்கள் வெளியிட்டு இனக்குரோதத்தை வளர்த்தன. தமிழ் தேசிய வெறியை ஊட்டின. இதே பாணியில் தமிழ் இனத்தை இழிவுபடுத்து கின்ற தூசிக்கின்ற, இனக்குரோத ஆக்கங்களையும், பொய்த் தகவல்களை யும் சிங்கள ஊடகங்கள் வெளியிட்டு இனவாதத்தை வளர்த்தன. சிங்கள தேசிய வெறியை ஊட்டின. அப்படியிருந்தும் இரு தரப்புகளிலுமிருந்தும் எதிர்ப்பிலக்கியப் படைப்புக்கள் தெட்டந் தெளியனாய் வரத்தான் செய் தன. இரு தரப்புகளிருந்தும்இன வாதத்துக்கு எதிரான, போருக்கு எதி ரான, இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்துகின்ற கலை இலக்கியப்படைப்புக்கள் வரத்தான் செய்தன.
கடந்த காலங்களில் நான் அனுபவித்த துன்பதுயரங்களும், நான் பங்குபற்றிப் பெற்ற போராட்ட அனுபவங்களும், இதனால் நான் பெற்ற தாக்கங்களும் மன எழுச்சிகளும் என் ஆழ்மனதில் புதைந்துள்ளன. இவற் றில் சில காலத்துக்குக் காலம் மேற்கிளம்பி, கருவாகி, உருவாகி பிரசுவிப் புக்கான மனோ அவஸ்தையை, தவிப்பை, உந்துதலைக் கொடுக்கின்றன. இந்த மனோ எழுர்ச்சியில், உந்துதலில் பிறந்த சில ஆக்கங்களே "கால வெள்ளம்" என்ற தொகுதியில் அடங்கியுள்ளன. இதற்கு ஏற்றவகையில் தான் இத் தொகுதியின் அட்டைப்பட ஓவியத்தை நான் தேர்ந்தெடுத்துள் ளேன்.
1943 காலகட்டத்தில் இந்தியாவின் கலாசாரத் தொட்டில் என் றழைக்கப்படுகின்ற வங்காளத்தில் ஒரு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இப் பஞ்சத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தியவர்கள், அன்று இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திலிருந்த பிரித்தானிய ஏகாதிபத்திய வாதி கள். இப்பஞ்சத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் சிறு வர்களும்தான். ஒரு தாயையும்பிள்ளையையும்குறியீடாக வைத்து, வங் கத்தின் பிரபல ஓவியர் ஸாகிட் ஹமீட் அவர்கள் ஒரு ஓவியத்தைத் தீட்டி யுள்ளார். எமது தாய் மண்ணில்மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற இனவாதயுத்தத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் சிறுவர்களும் தான். இதன்குறியீடாகத்தான் வங்க ஓவியர் ஜாகிர் ஹஜூசெ யினின் ஒவியத்தை 'காலவெள்ளம்' என்ற இச் சிறுகதைத் தொகுதிக்குத் அட்டைப்படமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
எனது எழுத்தைப்பொறுத்தவரை தொழிலாளர்கள் விவசாயிகள் பொதுமக்களது வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களைச் சித்திரிக்கும்
ix

Page 7
காலவெள்ளம்
படைப்புக்களை ஆக்கிவருகிறேன். அதே வேளை கடந்த மூன்று தசாப் தங்களாக இனவாத யுத்தம் நடந்துகொண்டிருக்கின்றது. இந்த இன வெறியுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது ஆவணங்களையும் இழப்புக ளையும் பார்த்து, பங்குபற்றி அனுபவித்த உணர்வுகளின் உந்துதலால் சில ஆக்கங்களைப் புனைந்துள்ளேன். புனர் ஜென்மம், ஜீவநாதம், வெண்பு றா, வேட்டை, ஜென்மம், ஆறடிநிலம், காவியமானான், பேய்களும் பிசா சுகளும், வீடு முதலிய கதைகளைப் புனைந்துள்ளேன். இவற்றைப் பிரசுரிக்க சில ஊடகங்கள் தயங்கின, சில மறுத்தன. ஆனால் நான் எனது படைப்பாக்கத்தைத் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றேன்.
'கால வெள்ளம்' என்ற இச் சிறுகதைத் தொகுதியில் தரிசனம், முனைப்பு ஆகிய இரு சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவை இரண்டும் ஐம்பதிலிருந்து ஐம்பத்தேழுவரை கல்கத்தாவில் கல்வி கற்றுக் கொண்டி ருக்கையில், நான் நேரடியாகப் பங்குபற்றிய போராட்டங்கள் இரண்டில் பெற்ற அனுபவங்களின் உந்துதலில் பிரசவித்தவை ஐம்பத்தேழு அறுபதில், சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் நான் தற்காலிகமாக ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவம் போலிகள் படைப்பை உருவாக்க உந்துலாக இருந்தது. கனடா மாப்பிள்ளையால் வஞ்சிக்கப்படுகின்றாள் ஒரு பெண். தனது சுயமுயற்சியில் கிடைத்த அர சாங்க உத்தியோகத்தையும் தூக்கி வீசிவிட்டு, தன் ஒரே குழந்தையுடன் தற்துணிவோடு தாயகம் திரும்பும் அப்பெண்ணின் கதையே தகர்வு. கால வெள்ளம், தெளிவு ஆகிய ஆக்கங்களில் நான் மாணவனாக இருந்த காலத் தில் பெற்ற அனுபவங்களில் இரண்டு சம்பவங்கள் படைப்பாக்கம் பெற் றுள்ளன. மூடுதிரை, வீடு, காவியமானான், பேய்களும் பிசாசுகளும், ஆகிய ஆக்கங்களில் போர்க்காலச் சம்பவங்கள் ஆக்கங்களாக உருப்பெற் றுள்ளன.
கால வெள்ளம் சிறுகதைத் தொகுப்பு எனது எட்டாவது தொகுதி. முன்னைய ஏழு தொகுதிகளையும் ஆர்வத்துடன்ஏற்றுக் கொண்ட என் ஆத்மநேய வாசக நெஞ்சங்களாகிய உங்களுக்கு இதைச் சமர்பிக்கின் றேன்.
நீர்வை பொன்னையன் 18, 6/1, கொலிங்வூட் பிளேஸ் கொழும்பு 06 இலங்கை

IO.
பொருளடக்கம்
காலவெள்ளம்
போலிகள்
தரிசனம்
தகர்வு
வீடு
மூடுதிரை
காவியமானான்
தெளிவு
முனைப்பு
பேய்களும் பிசாசுகளும்
நீர்வையின் படைப்புகளும் சமூக இயங்குதளமும்
xi
IO
27
33
62
79
89
IO3
129
138

Page 8
Xii

நீர்வை பொன்னையன்
காலவெள்ளம்
அவன் எங்கையடா?
அவரது ஆவேசக் குரல் அப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கிறது.
வேலுபொடியன்ரை முச்சந்தியில் கூடிநிற்கின்ற வர்களுக்குத் திகைப்பு. ஊரின் தென்மேற்கிலுள்ள புறம்போக்குநிலத்தில் பெருங்கலட்டி.
பெருங்கலட்டியிலுள்ள பற்றைகளுக்குப் பின்னால் காலைக் கடனை முடித்தபின்பு, ஒவ்வொருவராக வந்து, வேலுப் பொடியன்ரை முற்சந்தியில் கூடுவர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு குட்டி பார்ளிமென்ரைநடத்திவிட்டுத்தான் தங்கள் வீடுகளுக்குச் செல்வது வழக்கம்.
குடும்ப விவகாரங்கள், ஊர் பிரச்சினைகள், குடுக்கல் வாங்கல் பிணக்குகள், ஊர் வம்புகள், நாட்டு நடப்புகள், அரசியல் போன்ற விவகாரங்கள்தான் அந்தப் பார்ளிமென்ரில் பேசப்படும் .
போதிய ஆட்கள் வந்து சேர்ந்து விட்டனர்.
இன்னும் பார்ளிமென்ற் தொடங்கவில்லை.
' 916) 1657 6 Tëj60) 5u ft?
l

Page 9
காலவெள்ளம்
அவரது ஆவேசக் குரல் அங்கு கூடி நின்றவர்களைத் திணறடிக்கின்றது.
அவன் ஆராயிருக்கும்? '
அவன் ஆராயிருந்தாலென்ன. இண்டைக்கு அவன்ரை பாடு அதோ கெதிதான்
முச்சந்தியில் கூடி நிற்கின்ற ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ண அலைகள்.
அந்தப் பிராமணப் பயல் எங்கையடா?
இடுப்பில் நாலு முழக் கதர் வேட்டி, தோளில் கதர் சால்வை. தலையில் குடும்பி. கையில் எந்த நேரமும் ஒரு மஞ்சள் நிற துணிப்பை. இளமைத் தோற்றம் எலுமிச்சை பழநிறம்.
தொழில், ஊர் சேவை.
அவன் பிராமணனல்ல. அது பட்டப் பெயர்.
அட அந்த அப்பாவி யார்?
ஒருவர்.
'முடிஞ்சுது. இண்டைக்கு அந்த வேதவனத்தின்ரை பாடு அதோ கதிதான்
மற்றவர்.
அந்த அப்பிராணி மிதிச்ச இடத்துப் புல்லும் சாகாதே. '
தன்ரை வாழ்க்கையை ஊர் சேவைக்காக அர்ப்பணிச்ச பொடியனாச்சே. அதுக்கா இந்தப் பேரிடி2 ‘
'நேற்றுப் பொழுது படேக்கைதான் அந்த வேதவனமும், இவர் பெரியண்ணையும் கலகலப்பாய் கதைச்சு, சிரிச்சுப் பேசிக்கொண்டு போனதை நான் பாத்தன்."
வேலுப்பிள்ளை.
'பெரியண்ணை எண்டு தான், அந்த ஊரிலை உள்ள சிறுவர் தொடக்கம், பெரியவர்கள் வரை, தில்லையம்பலத்தை உரிமையோட வாஞ்சையுடன் அழைக்கின்றார்கள்.
'நேற்றென்ன, மூண்டு நாட்களாய், எங்கடை ஊரின் வடமேற்குப் புறத்திலுள்ள காந்தி நகரிலை, வேதவனம் ஒரு பெரிய மகாநாட்டை நடத்தினார். அது வெற்றிகரமாய் நடந்து முடியிறதுக்கு, பெரியண்ணை மும்முரமாய் அலுவல் பார்த்தவர்.'

நீர்வை பொன்னையன்
'வேதவனத்தின்ரை வலது கையாய், மூண்டு நாட்களும் பெரியண்ணை கடுமையாய் செயல்பட்டார். அப்பிடிப்பட்ட அவர், இண்டைக்கு வேதவனத்தைத் துலைச்சுக்கட்டத் துடிக் கிறாரோ.
கணபதிப்பிள்ளை மனம் வெதும்பிக் கூறுகின்றார். சவாரிச் செல்லன்ரை பூவரசம் வேலி. வேலியிலுள்ள பூவரசம் கதியால் ஒன்றை, பெரியண்ணை துள்ளி எட்டிப்பிடித்து, இடுக்கி இரண்டாய் முறிக்கின்றார்.
இண்டைக்கு என்ன நடக்கப்போகுதோ? முச்சந்தியில் கூடிநிற்கின்றவர்களுக்குப் பதட்டம்.
இந்தப் பெரியண்ணைக்கு என்ன புடிச்சிட்டுது? இவர் ஏன் இப்பிடி அட்டகாசம் பண்ணிறார்?
அவர்கள் மனதில் கேள்வி. "எங்கடை ஊரிலை மூண்டு நாட்களாய் மறுமலர்ச்சி மகாநாட்டை சிறப்பாய் நடத்தி முடிச்சார் வேதவனம்.
நேற்றுத்தான் மகாநாட்டின் கடைசிநாள். நேற்று மகாநாட்டில் பங்குபற்றிய எல்லாருக்கும் சமபந்திப் போசனம் . அதையும்கூட, பெரியண்ணை நிண்டு மும்முரமாய் நடத்தி முடித்தார்.
அப்படிப்பட்டவருக்கு இண்டைக்கு என்ன புடிச்சிட் டுது? ஏன் இப்பிடி அட்டகாசம் பண்ணிறார்?
பெரியண்ணனின் நெருங்கிய நண்பன் சண்டியன் சண்முகத்தைக் கேட்கின்றார், பாஞ்சான் கந்தையா.
இப்ப இவர் பெரியண்ணை ஏன் வேதவனத்தை அடிச்சு முறிக்கத்துடிக்கின்றார்?'
கார்த்திகேசுவின் கேள்வி. மறுமலர்ச்சி மகாநாட்டுக்கு வந்திருந்த இருநூற்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் எல்லாருக்கும், எங்கடை ஊர் மக்கள் ஒண்டு சேர்ந்து, மூண்டு நாட்களும், மூண்டு நேரமும் உணவளித்தம்.
மகாநாட்டு மண்டபத்துக்குப் பக்கத்திலுள்ள மூண்டு வீடுகளையும் எடுத்தம். காலை, பகல், இரவு உணவு வகைகளை அந்த மூண்டு வீடுகளிலும் சமைத்து வழங்கினம். அரிசி, காய் கறி வகைகளைச் சேர்ப்பதில் பெரியண்ணைதான் முன்னுக்கு நிண்டு செயல்பட்டார். அவரது தலைமையில்தான்
'சாப்பாட்டு சபை 'களும் சிறப்பாய் நடந்தது. எங்கடை
3

Page 10
காலவெள்ளம்
ஊரிலை நடக்கிற நன்மை தீமைகள் எல்லாம், பெரியண்ணை யின்ரை தலைமையில் தான் நடந்து வருகின்றன.
அவனன்றி அணுவும் அசையாது. ' அதைப்போல பெரியண்ணையின்றி எந்தப் பொதுக்காரியமும் நடைபெறுவ தேயில்லை. எங்கடை மக்களுக்காகப் பெரியண்ணை
தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துள்ளார்.
எங்கடை ஊர்க்கட்டுப்பாட்டை எவரும் மீறி நடக்க (Lp gll fig1. அதுக்குப் பெரியண்ணை எள்ளளவும் இடம் கொடார்.
பெரியண்ணை தனிக்கட்டை. திருமணம் முடிக்காத ஐம்பது வயது பிரமச்சாரி.
பெரியண்ணனுக்கு ஐந்து சகோதரிகள். அவர் தான் குடும்பத்தில் மூத்தவர்.
அவரது இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டார்.
குடும்பச் சுமை அவரது தலையில். போதிய நிலபுலன்களை அவரது பெற்றோர் விட்டுச் சென்றிருந்தனர்.
கஷ்டப்பட்டு உழைத்து தன் ஐந்து சகோதரிகளையும் கரை சேர்த்துவிட்டார்.
அவருக்கு கல்யான வயசு கடந்துவிட்டது. இப்போ அவர் கட்டைப் பிரமச்சாரி. பெரியண்ணை எப்படி கஷ்டப்பட்டு உழைத்தாலும், அவர் பொது வேலைகளில் ஈடுபடுவதில் என்றுமே பின் நின்றதில்லை.
அவரது தோட்டத்தில் வேலை செய்வதற்கு நீ முந்தி, நான் முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு ஐயாவத்தை, நாவலடி போன்ற குறிச்சிகளைச் சேர்ந்த எட்டுப் பத்துப் பேர் முன்வருவார்கள்.
பெரியண்ணையின் தோட்டத்தில் வேலை செய்கின்ற குடும்பங்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்கு பெரி யண்ணை ஒரு நாளும் கூலி கொடுப்பதில்லை.
அவர்களுக்கு சாப்பாடு தாராளம் . காலையில் குரக்கன் புட்டு அல்லது "கூப்பன்மாப் புட்டும் மரவள்ளிக்கிழங்குக் கறியும், தேத்தண்ணி சீனியுடன். மத்தியானம் நெல்லரிசிச் சோறும் இரண்டு மூன்று கறிகளும்.
4

நீர்வை பொன்னையன்
அவரது 'குடிமக்களின் நன்மை தீமைகளில் பெரி யண்ணை பங்கெடுப்பார். இறப்புப் பிறப்புக்கள், திருமணங் கள் போன்ற காலங்களின்போது, பெரியண்ணை தான் செலவுப் பொறுப்பு. தாராளமாய் பெரியண்ணை தனது பணத்தைச் செலவு செய்வார்.
சித்திரை புதுவருசப்பிறப்பு, தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் பெரியண்ணை தன் குடிமக்களுக்கு புது உடுபுட வைகள் கொடுப்பது வழக்கம். ஆண்களுக்கு நான்கு முழக்
'காரிக்கன்' வேட்டிகளும், சிறுவர்களுக்கு நரமுண்டுத் துண்டுகளும், சிறுமிகளுக்கு சீத்தைச் சட்டைகள், பெண் களுக்கு 'காடுவெட்டிச் சேலைகளும் கொடுப்பார்.
எல்லோரும் பெரியண்ணை வீட்டுக்கு வந்து உடுப்புகளை வாங்கிச் செல்வார்கள்.
புதுவருடக் கைவிஷேசம் தலைக்கு ஒரு ரூபா. குடிமக்களின் கலியாணவீடு, மரண வீடு, நோய்நொடிக் காலங்களில் பெரியண்ணை பார்த்தும் பாராமல் செலவு செய்வார்.
ஊரில் உள்ள கோவில்களின் கட்டுமான திருப்பணி வேலைகளிலும் பெரியண்ணை முன்னின்றுழைப்பார்.
கிராமத்தில் ஏற்படும் பிணக்குகளையும், சண்டை சச்சரவு களையும் தனது அதிகாரத்தையும் சமயோசித புத்தியையும் பாவித்து தீர்த்து வைப்பார். இதற்குக் கிராம மக்கள் பெரியண்ணையைத்தான் எதிர்பார்ப்பர்.
எங்கள் ஊரின் ஒற்றுமை, கட்டுக்கோப்பு, முன்னேற்றம் ஆகியவற்றில் பெரியண்ணை எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக அக்கறை செலுத்தி வருகின்றார்.
எங்கள் ஊரைச் சேர்ந்த ஆசாரி கந்தசாமி, கோவில் தேர் செய்ய சிங்கப்பூர் சென்றார்.
மூன்று வருடங்களின் பின் அவர் பெரும் பணக்காரனாக திரும்பி வந்தார்.
பணக்கார ஆசாரி கந்தசாமி ஊரில் எவரையும் மதிப்பதில்லை.
ஆசாரி கந்தசாமியின் தந்தை திடீர் என மாரடைப்பால் இறந்துபோனார்.
தந்தையின் செத்தவீட்டை பெரும் டாம்பீகமாகச் செய்து தனது அந்தஸ்தை நிலைநாட்ட எண்ணினார் கந்தசாமி.
தேர் சாயலில் பாடை கட்டப்பட்டது.
5

Page 11
காலவெள்ளம்
கரையூரில் இருந்து ஐந்து கூட்டம் பறை மேளம் கொண்டு வரப்பட்டது.
இதைத் தடுக்க பெரியண்ணராக்கள் முயற்சித்தனர். பலனில்லை. பொலிஸ் காவலுடன் பிரேதம் எடுக்கப்பட்டது. சில நாட்களின் பின் ஆசாரி கந்தசாமி தனது வில் வண்டியில் யாழ்ப்பாணப் பெரியபட்டணம் சென்றிருந்தார்.
ஆசாரி வீடு திரும்பும்பொழுது நள்ளிரவாகிவிட்டது. எங்கள் ஊர் தெற்கெல்லையில் உள்ள கூத்தாடுவான் குளத்தடியில் நான்கைந்து பேரின் நடமாட்டம்.
விடிந்ததும் விடியாததுமாக கறுவல் கொத்தான் காலைக் கடன் முடிக்க வயல் வெளியிலுள்ள அலரிப்புட்டிக்குச் செல்கின்றான்.
கூத்தாடுவான் குளத்தடியில் தேடுவாரற்ற நிலையில் ஒரு
மாடுகளைக் காணவில்லை. முனகல் சத்தம் எங்கிருந்து வருகிறது? வில்லு மதகின் கீழிருந்துதான் முனகல். சுற்றப்பட்ட புல்பாய்க்குளிருந்துதான் சத்தம் வருகின்றது. வழிப்போக்கர் இருவரின் உதவியுடன் சுற்றப்பட்ட புற்பாய் வெளியே எடுக்கப்படுகின்றது.
அடிகாயங்களுடன் ஆசாரி கந்தசாமி. ஒரு மாதத்திற்கு மேல் யாழ்ப்பாணம் பெரியாஸ் பத்திரி யில் படுத்த படுக்கையாக கந்தசாமி.
கந்தசாமியின் கைகால்கள் சரியாகச் செயல்பட மறுக்கின்றன.
நான்கு மாதங்களுக்கு மேலாக கந்தசாமியால் வெளியே நடமாட முடியவில்லை.
பொலிஸ் வந்தது. விசாரணை நடந்தது. பலன்? பெரியண்ணையாக்கள் தான் தன்னை அடித்து முறித்தது என்று, ஆசாரி கந்தசாமிக்கு நன்றாகத் தெரியும்.
6

நீர்வை பொன்னையன்
பயம் காரணமாக கந்தசாமியால் வாய்திறக்க முடிய வில்லை.
அடித்தவர்கள் யார் என்று தனக்குத் தெரியாதென திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஆசாரி கந்தசாமி.
'பெரியண்ணை ' ‘என்ன வேதவனம்? ' 'உங்கடை உதவியாலை நேற்றும் இண்டைக்கும் எங்கடை மகாநாடு சிறப்பாய் நடந்தது. நாளைக்கு மகாநாட்டு கடைசி நிகழ்ச்சி. அதுதான் மிக முக்கியமானது. அதன் வெற்றியும் சிறப்பும் உங்கடை ஒத்துழைப்பிலைதான் தங்கிக்கிடக்கு. "
அதென்ன? ' "மகாநாட்டின் உச்ச கட்டம்தான் சமபந்திப் போசனம் அதுக்கு நான் என்ன செய்யக்கிடக்கு? ‘எங்கடை ஊரிலையுள்ள கம்பன் புலக் குறிச்சி ஆட்களின்ரை பகுதியைச் சேர்ந்த ஏழெட்டு பேர் இந்த இரண்டு நாள் மகாநாட்டிலை பங்குபற்றியிருக்கினை. அவை யோடை நாவலடியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பெரியாஸ் பத்திரி அற்றென்டன் பசுபதியும், கம்பன் புலத்தைச் சேர்ந்த மெக்கானிக் இராசதுரையும் இரண்டு நாள் மகாநாட்டிலையும் பங்குபற்றியிருக்கினை. "
அப்பிடியா எங்கள் ஒருதருக்கும் தெரியாமல் போச்சே, என்னாலை நம்பமுடியேல்லை. '
வியப்புடன் கூறுகின்றார் பெரியண்ணை. அவை ஆட்களோடை ஆட்களாய் சேர்ந்து இருந்தினை. அதைப்போலை நாளைக்கு நடக்கிற சமபந்திப் போசனத் திலையும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில ஆட்களும் பங்குபற்றினால்."
‘என்ன பேய்க்கதை கதைக்கிறாய்? எங்கடை ஊராக்களுக்கு இது தெரிய வந்துது, பெரிய பிரச்சினையாய் போகும். எங்கடை ஊர்க்கட்டுப்பாடு?
அதில்லை பெரியண்ணை, நேற்றும் இண்டைக்கும் நாங்கள் பாடுபட்டது வீணாய்ப்போகும். '
அப்பென்ன செய்கிறது. 2 ‘ ஐயாவத்தை, நாவலடியைச் சேர்ந்த மூன்று நாலு பேர் சமபந்தி போசனத்திலை பங்குபற்றினால் நல்லாயிருக்கும். '
7

Page 12
காலவெள்ளம்
‘எங்கடை ஊராக்கள் என்ன சொல்லுவினமோ. பெரியண்ணை எங்கடை ஊர் இளம் பொடியளோடை நாங்கள் கதைச்சிருக்கிறம். அவை எல்லாருக்கும் சம்மதம். எங்கடை ஊர் பெரியாக்களை நீங்கள் தான் ஒரு மாதிரி சமாளிக்கவேணும். '
இளசுகள் தான் முக்கியம். எங்கடை ஊர் முன்னேற்றத் துக்கு அவங்கள் தான் முன்னுக்கு நிண்டு பாடுபட்டுழைக் கினை. அவையோடை ஒத்துழைக்காட்டி எங்களாலை ஒண்டும் செய்யேலாது. இந்த விசயத்திலை அவையோடை நாங்கள் பட்டும் படாமலும் சேர்ந்தோட வேண்டியதுதான். '
"சரி, ஊராக்கள்? ' 'பெரியண்ணை, நீங்கள் நினைச்சால் அவையளைச் சமாளிச்சுப் போடுவியள்.
‘வேதவனம் நீஆரையாவது கேட்டுப் பார்த்தியா? ' நான் நாலைஞ்சு பேரைக் கேட்டன். அவை பயத்திலை தயங்கிக் கொண்டிருக்கினை.
நீங்கள் சம்மதிச்சால், அந்த நாவலடி சரவணையும், கம்பன் புலத்து காத்தியும், தாங்கள் தயார் எண்டு சொல்லினை. நீங்கள் என்ன சொல்லிறியள்? “
இனி என்ன செய்யிறது? அப்ப சரி. காரியம் ஒப்பேற வேணுமே.
அப்பநாங்கள் அவையளைக் கூப்பிடுகிறம். ‘ஆனாஒண்டு வேதவனம். '
என்ன பெரியண்ணை2 ‘ "சரவணையாக்களைத் தலைப்பந்தியிலை இருத்தாதை யுங்கோ. அவையளை, பந்திக்கு இடையிலையும், தொங்க லிலையும் ஆக்களோடை ஆக்களாய் இருத்துங்கோ. நான் அந்தப் பக்கம் வரேல்லை.
மறுமலர்ச்சி மகாநாடு சமபந்தி போசனத்துடன் வெற்றி கரமாய் நடந்து முடிந்தது.
மகாநாட்டு முடிவிலை நடந்த சமபந்தி போசனம் பற்றி, ஊரிலை இரவிரவாய் பலவகையான கதைகள் புகைந்தன.
இந்த விவகாரம் விடியுது, விடிய முந்தி பெரியண்ணை காதிலும் விழுகின்றது.
காலையிலேயே பெரியண்ணையின் அட்டகாசம் வெடித் தது.

நீர்வை பொன்னையன்
அவன் எங்கையடா? ' அந்தப் பிராமணப்பயல் எங்கை போட்டானடா? அவனை இண்டைக்கு நான் அடிச்சு முறிக்கிறன். அவன்ரை குடும்பியை அறுத்தெறியிறன். அவன் எங்கை போட்டானடா?
அரை மணி நேரத்துக்கு மேல், பெரியண்ணை, வேலுப்பொடியன்ரை முச்சந்தியிலை நிண்டு
அட்டகாசம் பண்ணிக் கமறுகின்றார். கமறிக் களைத்த பெரியண்ணை தன் வீட்டுக்கு செல்கின்றார்.
'அண்ணை அந்த வேதவனத்தை அடிச்சு முடிச்சுப் போட்டியே2 ‘
சகோதரி அன்னம் கேட்கின்றாள். 'பாவம், அது இப்ப எந்த ஆஸ்பத்திரியிலை கிடக்குதோ? நீயும் வாறியே போய்ப்பாப்பம். '
அன்னத்தின் பேச்சில் கிண்டல் அவன் என்ரை கண்ணிலை பட்டானெண்டால் தெரியும், அவன் படுகிற பாட்டை '
திண்ணைப் பக்கம் ஒருக்காதிரும்பிப் பாரண்ணை' கேலியாக அன்னம் திண்ணைக்குக் கட்டியிருக்கின்ற கிடுகுத் தட்டி மறைவில் வேதவனம்.
நீஇஞ்சையா இருக்கிறாய்? ' ஆச்சரியமாய் பெரியண்ணை. 'வேலுப்பொடியன்ரை முச்சந்திப் பக்கம் போகாதை. ‘ 'வேம்படி வயிரவர் கோயிலுக்குப் பின்னாலை போற ஒற்றையடிப் பாதையாலை போ. '
நீதானே எனக்குச் சொன்னாய் பெரியண்ணை அப்ப அவன் எங்கை?"
Yuk

Page 13
காலவெள்ளம்
O
போலிகள்
நீ இஞ்சை ஏன் வந்தாய்? உனக்கிஞ்சை என்ன வேலை? இப்பவே போய்த்துலை! அவரைக் கண்டதும் அதிபர் அருணாசலத்துக்கு கொதிப்பு. ஆக்ரோஷமாய்க்கத்துகின்றார் அதிபர் அருணாசலம். மகாலிங்க மாஸ்டருக்கு பதட்டம். மெளனியாய்நிற்கின்றார் இரண்டாம் தவணை விடுமுறை முடிந்துவிட்டது. இன்றுதான் கல்லூரி தொடக்கம். வகுப்புகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. மாணவ மாணவிகள்
கூட்டம் கூட்டமாய் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு குதூகலம். அவர்கள் ஆரவாரம். ஒரு மாதத்துக்கு முன்னம் நான் உனக்கு
10

நீர்வை பொன்னையன்
என்ன சொன்னான்? உனக்கு இந்த உத்தியோகம் எள்ளளவும் சரிவராது. எங்கடை கல்லூரி ஒரு கல்விக் கோயில். உன்போன்ற உலுத்தருக்கு
இனி இஞ்சைநீ வராதை இப்பவே போய்த்துலை. அன்று நான் உனக்கு சொன்னனான்தானே" மகாலிங்க மாஸ்ரர் கூனிக் குறுகி நிற்கின்றார். "இப்ப நீ இஞ்சை வந்து நிற்கின்றாய். இப்பவே போய்த்துலை இந்த இடத்திலை நிக்காதை மகாலிங்க மாஸ்ரருக்கு மலைப்பு. இந்தக் கல்லூரியிலை தொடர்ந்து தான் படிப்பிக்க முடியும் என்ற எதிர்பார்ப்புடன்தான் இன்று அவர்
வந்துள்ளார். அவரது எதிர்பார்ப்பு நிறைவேறுமா? அது அவருக்கே கேள்விக்குறி. "பெற்றார்கள் எல்லாரும் எங்களை நம்புறார்கள்.
அதனால் தான் அவர்கள்

Page 14
காலவெள்ளம்
தங்கடை பிள்ளையளை எங்கடை கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அந்த நம்பிக்கையை
நாங்கள் அடியோடு நாசமாக்கிறதா? எங்கடை கல்லூரிக்கு வருகின்ற எல்லாப் பிள்ளையளையும் எங்கடை சொந்தப் பிள்ளையளாய் எண்ணித்தான்நாங்கள் கல்வி கற்பிக்கிறம்.
ஆனால் உன்போன்ற உலுத்தர்கள் உல்லாசமாய் பொழுது போக்க இஞ்சை வாறியள் பார் அந்தப் பாலா மாஸ்ரரை" பேச்சு மூச்சற்று சிலையாய் நிற்கின்றார் மகாலிங்க மாஸ்ரர். உயர் வகுப்பு மாணவன் ஒருவன்
மகாலிங்க மாஸ்ரரின் புத்தம் புதிய ஏ.போட்டி காரை கண்டுவிட்டான். அவன்
ஓடோடிச் சென்று மகாலிங்க மாஸ்ரர் வந்திருக்கிறார் என்ற செய்தியை தன் சக மாணவர்களுக்கு
வெறுப்புடன் கூறுகின்றான்.
12

நீர்வை பொன்னையன்
மகாலிங்க மாஸ்ரர் படிப்பிக்க இனி இஞ்சை வரமாட்டார். பாலா மாஸ்ரர்தான் இனி எங்களுக்கு தொடர்ந்து படிப்பிப்பார்" ତTର୍ତtop J திடமாய் நம்பியிருந்த உயர் வகுப்பு மாணவ மாணவியற்கு இடிவிழுந்தாற் போலாச்சு. உயர் வகுப்பு மாணவ மாணவியர் மத்தியில் கொந்தளிப்பு கொந்தளிக்கும் மாணவ மாணவியர்கள் அதிபரின் அலுவலகத்தின் முன் அலை அலையாய் வந்து குவிகின்றனர். மாணவ மாணவியரின் கொந்தளிப்பை அறிந்த அதிபர் அருணாசலம் அலுவலகத்திலிருந்து வெளியே வருகின்றார். "என் அருமைப் பிள்ளைகளே! உங்கள் நிலமை எனக்கு நன்றாய் புரிகின்றது. நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளிறன்.
நீங்கள் எதுக்கும்
13

Page 15
காலவெள்ளம்
பயப்படாதீர்கள். கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லாரும் உங்கள் உங்கள் வகுப்புகளுக்கு அமைதியாய் செல்லுங்கள். அதிபர் அருணாசலத்தின் மேல் அசையாத நம்பிக்கை மாணவர்களுக்கு. அதிபரின் சொற்கேட்டு அமைதியாய் செல்கின்றனர் தத்தமது வகுப்புகளுக்கு. பாலா பமாஸ்ரர் பமீண்டும் இங்கு படிப்பிக்க வருவார் என்ற நம்பிக்கை மாணவ மாணவியர்க்கு. அதிபரின் அலுலகத்தில். கூடிநிற்கின்ற ஆசிரியர் அனைவரும் அதிபர் அருணாசலத்துக்கு பக்கபலமாய் நிற்கின்றனர் உறுதியாய். LD5nTGS) siu LDfTGřvgTrii அடிக்கடி கல்லூரிக்கு வராமல் லீவெடுப்பார். அந்த நாட்களில் அவரது மாணவ மாணவிகள் பாலா மாஸ்ரரை தங்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்கும்படி
மன்றாட்டமாய் வேண்டுவர்.
14

நீர்வை பொன்னையன்
மாணவ மாணவிகளது வேண்டுதலுக்கு அதிபரின் அனுமதியுடன் Luftavrt LDrTGňvJtri உற்சாகமாய் பாடங்களைப் படிப்பிப்பார். மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன் L 1цgциLJгтпе95Gт. பாலா மாஸ்ரரே தங்களுக்கு தொடர்ந்து படிப்பிக்கவேண்டுமென்று ஆவலாய் இருக்கின்றனர் மாணவ மாணவியர்
பாலா மாஸ்ரருக்கு கற்பித்தல் கைவந்த கலையாச்சே தமிழ் இலக்கிய பாட வேளைகளில் மானிடக் கவிஞன் கம்பனிலிருந்து புரட்சிக் கவிஞன் பாரதிவரை எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரிலிருந்து முற்போக்குக் கவிஞன் முருகையன் ஈறாக தரிசனம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். வரலாற்றுப் பாட வேளைகளில் விடுதலை வீரர்கள் மாஜினி, கரிபால்டியிலிருந்து ஏப்ரஹாம் லிங்கன் வரை, தத்துவ வித்தகர்
15

Page 16
காலவெள்ளம்
கார்ல் மார்க்ஸிலிருந்து மாமேதை மாஒ வரை, விஜயம் செய்து கொண்டே இருப்பார்கள். பாரிஸ் கம்யூன், பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்ய ஒக்ரோபர் புரட்சி, வியட்நாம் விடுதலையின் வீர வரலாறு, இந்திய சுதந்திர வேள்வி எல்லாம்
விவரணச் சித்திரமாய், காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டோடும். அரசியல், பொருளியல் பாடங்கள் எல்லாம்
எளிமையாய் ரசனையாய் வழங்கப்படும் பாலா மாஸ்ரரால்.
மாணவ மாணவிகள்
எல்லோரும் ஆர்வத்துடனே கற்பார்கள். ஆனால் LD5fTGÖ)ä15 LDIT6og Gurt எந்த நேரம் பார்த்தாலும் சோம்பேறித்தனமாய் பொழுது போக்கிக்கொண்டே இருப்பார்.
இவர் படிப்பிப்பது மிகவும்
குறைவு. இவருக்குத் தெரிந்தால் தானே
16

நீர்வை பொன்னையன்
படிப்பிக்க முடியும். இவர் எப்படி ஏலெவல் பாஸ் பண்ணினாரோ இவருக்காக யாராவது குதிரை ஓடினார்களோ மாணவர்களுக்கு சந்தேகம். பாலா மாஸ்ரரே தங்களுக்கு பாடங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து கற்பிக்க வேண்டும் என்ற பேராவல் எல்லா மாணவ மாணவியர்க்கும். ‘எங்கடை கல்லூரியிலை ஒரே ஒரு ஆசிரிய வெற்றிடம்தான் இப்போ உண்டு. அந்த இடத்துக்கு
பாலா மாஸ்ரரைதான நியமிக்கும்படி சிபார்சு செய்துள்ளோம் நாம்.ஏனென்றால் அவன்தான் எங்கடை கல்லூரியிலை கற்பிக்க தகுதியுள்ளவன். திறமையானவன். ‘என்னை சிபார்சு செய்யுங்கள் ' என்று நீ கேட்டாய். நாங்கள் உன்னை ஒரு போதும் சிபார்சு செய்யமாட்டம்.
ஏனென்றால்
17

Page 17
காலவெள்ளம்
ஆசிரியத் தொழில் உனக்கு எள்ளளவும் சரிவராது என்று எங்கள் எல்லோருக்கும் நன்றாய் தெரியும். இந்த விசயத்தை அன்று நான் உனக்கு உறுதியாய் சொன்னன். 'மூன்று மாதங்கள் மாத்திரம்தான் நான் இஞ்சை படிப்பிப்பன். பின்னர் இந்த வேலையை நிச்சயமாய் நான் விட்டிடுவன். அதன்பின் பாலா மாஸ்டர் தொடர்ந்து படிப்பிக்கட்டும் என்று நீ சொன்னாய். மூன்று மாதங்கள் மாத்திரம் படிப்பித்துவிட்டுநீ வேலையை விட்டுவிடுவாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நிச்சயமாய் நான் இந்த வேலையை விட்டிடுவன். இல்லாவிட்டால் நீங்கள் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுங்கள். மூன்றே மூன்று மாதங்கள் மாத்திரம் தான். பின்பு நான் நிச்சயமாய்
8

நீர்வை பொன்னையன்
விட்டிடுவன் சேர். கடவுள் சத்தியமாய் நான் சொல்லிறன் சேர் மூன்று மாதங்கள் மாத்திரம் படிப்பிக்க நீ ஏன் ஆசைப்படுகிறாய் ஏன் உனக்கு இந்த ஆசை அந்தரம்?
‘சேர்
எனக்கு கலியானப் பேச்சு நடக்குது ' சைவ வேளாளர் குடும்பம் பெண் வீடு கண்ட நிண்ட இடங்களில் செம்புதண்ணி எடுக்காத குடும்பமது. ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளை. வேறை சகோதரங்கள் இல்லை. கொழுத்த சீதனம். புத்தம் புதிய பெரிய மாடிவீடு நல்லூர் செட்டித்தெருவில் இருபத்தைஞ்சு லட்சம் காசு ரொக்கம். முப்பது பரப்பு தனிக்கிணற்று தோட்டக் காணி தின்னவேலியில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார்
பெரிய சாராயத் தவறனை.
பூநகரியில் ஐம்பது பரப்பு
19

Page 18
காலவெள்ளம்
நெல்வயல்
கிடக்கிறதெல்லாம் பொம்புளைப் புள்ளைக்குத்தான் கலியானப் புறோக்கர் உறுதியாச் சொன்னான். 'மாப்பிள்ளைப் பொடியன் பீ.ஏ.மாஸ்ரர். பெரிய பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிறான். பள்ளிக்குடம் போறதுக்கு புத்தம் புதிய ஏ. போட்டிக் கார் பெரிய மோட்ட சயிக்கிளும் வைச்சிருக்கிறான். வசதியான குடும்பம். ஊரிலை நல்ல செல்வாக்கு நல்லாய் படிச்ச குடும்பம் பரம்பரைப் பணக்காரர் சுண்டி எடுத்த வெள்ளாளக் குடும்பம் கண்ட நிண்ட குடும்பங்களில் கை நனைக்காத குடும்பம். அண்ணன்மார் இரண்டுபேரும் கலியாணம் கட்டினம். அக்கா ஒருத்தி அமரிக்காவிலை. இன்னொரு அக்கா லண்டனிலை. மூத்த அக்காவின் புருசன் அமெரிக்காவிலை டொக்டர். இளைய அக்காவின் புருசன் லண்டனில் இஞ்சினியர் மூத்த அண்ணன் கொழும்பிலை பெரிய கம்பனியிலை
20

நீர்வை பொன்னையன்
அக்கவுண்டன். இரண்டாவது அண்ணனும் அக்கவுண்டன்தான். யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியிலை பெரிய அடைவுபுடிக்கும் கடை. பண்டாரவளையில் பெரிய பலசரக்கு ஸ்ரோறும் பிரசித்தி பெற்ற புடவை மாளிகையும். இரண்டுபேற்றை சாதகங்களிலும் பத்து பொருத்தங்களும் சரியான பொருத்தம் விஸ்தாரமாய் கூறினான். புறோக்கர். பெண் வீட்டாரும் அதை "வலுவாய் நம்பீட்டினை. அதுக்குதான் சேர்நான் மூண்டு மாதங்கள் இஞ்சை படிப்பிக்க அந்தரப்படுகிறன். மனம்விட்டு சொல்கிறார் LD5ITahsinijas LDIT6juJi. நீர் சொல்லிறதெல்லாம் சரிதான் மாஸ்ரர் ஆனால் அந்த பாலா மாஸ்ரர் சரியாய் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். அவனுக்கு இரண்டு பெண் சகோதரிகள் கல்யாண வயதில் தம்பிமார் இரண்டு பேரும் படிக்கின்றார்கள்.
2

Page 19
காலவெள்ளம்
பெற்ற தாயோ நோயாளி. படுத்த படுக்கையாய் மூண்டு வரியங்கள். பாலா மாஸ்ரரின்தகப்பனுக்கும் வயது போட்டுது. அப்படியிருந்தும் அவர் இரவு பகலாய் மாடாய் உழைக்கிறார். பாலா மாஸ்ரரின்தகப்பன் பத்துபரப்பு தோட்டக் காணியை 'கொண்டிசன் உறுதி 'முடிச்சு எழுதிக்குடுத்து பணத்தை கடனாய் வாங்கி பாலாவை படிப்பித்தார். கடன்தவணையும் முடிஞ்சு போச்சு தோட்டக்காணியும் பறிபோச்சு வீடு வளவையும் ஈடு வைச்சுத்தான் பாலாவை தொடர்ந்து படிப்பித்தார் தகப்பன். வீடுவளவை மீட்டெடுக்க வழியில்லாமல் தவிக்கின்றார்கள் பாலாவாக்கள். பாலாவிற்கும் வேலையில்லை ஆறு மாதங்களாய்தான் எங்கடை கல்லூரியிலை உன்னைப்போல தற்காலிகமாய் படிப்பிக்கின்றான்
Lff HGR)f H.
காலையும் மாலையும்
22

நீர்வை பொன்னையன்
ஏழு மைல்கள் சைக்கிள் மிதிச்சுத்தான் இஞ்சைவந்து படிப்பிக்கின்றான். சைக்கிளும் மாதவாடை மாதம் முப்பது ரூபா வாடைக் காசு சொந்த சைக்கிள் வாங்க பணமேதுபாலாவுக்கு? நீயோ மூண்டு மைல் தூரத்துக்கு ஏஃபோட்டிகாரிலை உல்லாசமாய் கல்லூரிக்கு வந்து போறாய்
"Gigi பாலாவின் குடும்பம் கஷ்டப்பட்ட குடும்பம் எண்டு எனக்கு நல்லாய் தெரியும் நான் மூன்று மாதங்கள் இஞ்சை படிப்பிக்கிறன். பாலா மாஸ்டர் என்ரை சம்பளத்தை எடுக்கட்டும் "ஒய் மகாலிங்கம் நீ படிப்பிக்க உன்ரை சம்பளத்தை எடுக்க பாலா சம்மதிப்பானா? பாலா என்ன
தன் மானமில்லாதவனா?
23

Page 20
காலவெள்ளம்
விடு உந்த விசர் கதையை இந்த விசயத்தை பாலா அறிந்தானெண்டால் உன்னை சும்மா
விடமாட்டான். வீண்கதை பேசாதை நீ இப்பவே போய்த் துலை. இனி இந்தப் பக்கம் வந்திடாதை . ஒரு மாதத்துக்கு முன்னம் இதை நான் உனக்கு சொன்னனான்தானே. மானம் ரோசமில்லாமல் இப்ப நீ இஞ்சை வந்து நிற்கிறாய் வெட்கமில்லாமல் ஒரு மாதத்துக்கு முன்னம் "ப்ளாங் செக்கோடை கொழும்புக்கு நீ போனதும் எனக்கு நன்றாய் தெரியும் மலையக பாடசாலை ஒன்றில் ஆசிரியநியமனம் பெற்றுக்கொள்ள கல்வி அமைச்சிலுள்ள லஞ்ச பிணந்தின்னிக் கழுகுகளுக்கு நிவேய்த்தியம் படைக்க வேண்டுமே. யாழ்ப்பாணப் பாடசாலையில் ஆசிரிய நியமனம் ஒன்றுக்கு எட்டு சிறீ
24

நீர்வை பொன்னையன்
இப்படியும் நடக்குதா? என்ன, ஆசிரிய நியமனம் ஒண்டுக்கு எட்டாயிரம் ரூபாவா? இதிலென்ன ஆச்சரியம்? இன்னும் கொஞ்சக் காலத்தில் பத்தாயிரமோ அதுக்கு மேலையும் போகும். யாழ்ப்பாணத்திலையுள்ள பாடசாலையில்
ஆசிரிய நியமனம் பெற ஏன் பத்தாயிரம் ரூபா? " "யாழ்ப்பாணத்தில் ரியூட்டறி ரியூசன் கடைகள் ஏராளமாச்சே. மகாலிங்க மாஸ்ரர் உனக்கு எது? ஐஞ்சு சிறியா அல்லது எட்டா? அல்லது இரண்டுமா? இப்பெல்லாம் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் சிறியள் மலிஞ்சு போச்சு. இதாலை
தரமான கல்வியும் துலைஞ்சு போச்சு மகாலிங்கம்
இனி உன்ரை பயறு இஞ்சை அவியாது. இப்பவே போய்த்துலை "
"G5gri.
25

Page 21
காலவெள்ளம்
நியமனக் கடிதம் என்ர கைவசமிருக்கு இறுமாப்பில் மகாலிங்கம். "எடே மகாலிங்கம் உந்த நியமனக் கடிதத்தை நீவைச்சு கூழ் காச்சிக் குடியடா. போடா வெளியாலை
போக்கிலிப் பயலே. இப்பவே போய் துலையடா இனி இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பாக்காதையடா நீசப் பயலே! ரெளத்திர மூர்த்தியாய் கர்ச்சிக்கின்றார் அதிபர் அருணாசலம். அண்டசராசரங்களும் அதிர்கின்றன.
★
26

நீர்வை பொன்னையன்
6saf60Js)
நகரத்தின் ஆத்மா மூச்சுத் திணறுகிறது.
நகரமென்ன, முழுத் தேசமுமே கொதித்துக் கொந்தளித்து எரிமலையாகி நிற்கின்றது.
புகைவண்டிகள் ஓடவில்லை.
ட்றாம் வண்டிகளைக் கானோம். சாலைகளில் பஸ் வண்டிகளில் ஒன்றைத்தானும் காணவில்லை. மோட்டார் வாகனங்கள் கண்ணில் தென்படவில்லை. முச்சக்கர பைசிக்கிள் நிக்சோக்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. பைசிக்கிள் ஒன்றைத் தானும் வீதியில் காணவில்லை.
சாலைகள் வீதிகள், நெடுந்தெருக்கள் எல்லாம் ஆளரவமற்று வெளிச்சோடிக் கிடக்கின்றன.
நகரத்தின் ஆத்மா எப்படி மூச்சுத் திணறும்?
தேசத்தின் உயிர் நாடியான ஹ"க்ளி நதியில் ஒரு படகைக்
27

Page 22
காலவெள்ளம்
கூடக் காணவில்லை.
படகுகள் அனைத்தையும் நதிவிழுங்கி ஏப்பமிட்டு விட் L5s 72
ஆயிரக் கணக்கான பாதசாரிகள், மோட்டார் வாகனங்கள், புகை வண்டிகள் எல்லாம் ஏக காலத்தில் போவதும் வருவது மாக ஜீவத் துடிப்புடனிருந்து கொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற ஹெளராப் பாலம் இன்று ஆளரவமற்று வெறிச்சோடி சோகத் தின் உருவாய் நிற்கின்றது. அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், கடைகள், அங்காடி வியாபாரக் கடைகள், சாப்பாட்டுக் கடைகள், பிரபல ஹோட்டல்கள், பாடசாலை கள், கல்லூரிகள் எல்லாமே மூடிக் கிடக்கின்றன.
தொழிற்சாலைகள், மில்கள், ஆலைகள் ஒன்றும் இயங்க வில்லை.
வங்கம் மூச்சுவிட மறந்து விட்டதா? நகரத்தின் சாலைகள், வீதிகள், தெருக்கள் எல்லாவற்றி லும் திடீரெனஜிவத்துடிப்பு மக்கள் சமுத்திரம் அலை மோதல்!
மக்கள் சக்தியின் பேரெழுச்சி! நகரத்தின் பிரதான சாலைகள், வீதிகள், தெருக்கள் வழியாக முட்டி மோதி அலைபாய்ந்து ஆக்ரோசமாய் வந்து கொண்டிருக்கின்றன ஊர்வலங்கள். நகரத்தின் நெஞ் சிலே யுள்ள செளறங்கி சதுக்கத்தை நோக்கி மக்கள் பிரவாகம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருக் கிறது.
கல்கத்தாநகரத்தின் ஆத்மா மூச்சுத் திணறுகின்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயி கள் அரச, தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், ஆண்கள், பெண்கள், மாணவர்கள். இளைஞர்கள், வயோதிபர்கள் எல்லோரும் அணிவகுத்து உத்வேகமாய் வந்து கொண்டிருக் கின்றனர்.
வங்கத்தின் ஆசிரியர்கள் தங்கள் ஜீவனோபாயத்துக்கான ஐந்து அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து இரு வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருன் றனர்.
அரசாங்கம் பாராமுகமாய் இருக்கின்றது. அரசின் கவனத்தை ஈரப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆசிரி யர்கள், நகரத்தின் நெஞ்சிலேயுள்ள செளரங்கி சதுக்கத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னால் அமர்ந்து சத்தியாக் கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
28

நாவை (oபானனையன
சத்தியாக்கிரகப் போராட்டம் ஒரு வாரத்தையும் தாண்டு கின்றது. பலனேதுமில்லை.
உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. பத்து நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் நீடிக்கின்றது. அரசு மெளனமாயிருக்கின்றது. சில உண்ணாவிரதிகளின்நிலை கவலைக்கிடம். அரசின் பிடிவாதப் போக்கைக் கண்டித்து ஊடகங்கள் குரலெழுப்புகின்றன.
மக்கள் கொதித்தெழுகின்றனர். ஆசிரியர்களது நியாயமான போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதற்குப் பதிலாக அரசு மாற்று நடவடிக் கையிலிறங்குகின்றது.
உண்ணாவிரதமிருக்கின்ற ஆசிரியர்களை வன்முறை மூலம் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது. பொலிஸ் களத்தில் இறங்குகின்றது.
பொலிஸ் படையின் பொறுப்பதிகாரிறாய் செளத்திரி. நாச தேவதையின் பிறவியாய் செளத்திரி. செளத்திரியின் கையில் எந்த நேரமும் யாரையாவது தாக் குவதற்குத் துடித்துக் கொண்டிருக்கும் லத்திக் கம்பு. எவரை யாவது சுடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கும் கைத்துப் பாக்கி அவனது இடுப்பில்.
செளத்திரியின் விழிகளில் எரியும் கனல். கொம்பு மீசை அவனது விசர் பிடித்த முகத்தை மேலும் கோரமாக்குகின்றது.
ரத்த வெறி பிடித்த அவன் போராளிகளைத் தாக்குவ தற்குத்தவித்துக் கொண்டிருக்கின்றான்.
எத்தனையோ தொழிற்சங்கத் தலைவர்கள், பிரபல அரசி யல்வாதிகளின் தலைமையில் நடந்த தொழிற்சங்கப் போராட் டங்களையும், அரசியல் ஆர்ப்பாட்டங்களையும் செளத்திரி வன் முறைத் தாக்குதல்களால் முறியடித்து அடக்கு முறை அரசாங் கங்களின் பாராட்டுதல்களையும் பதவி உயர்வுகளை யும் பெற்றிருக்கின்றான்.
பதினைந்து வருடங்களுக்கு மேலாக செளத்திரியின் புகழ். அடக்குமுறைச் சக்திகளின் மத்தியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது
செளரங்கி சதுக்கத்திலுள்ள காந்தி சிலைக்கு முன்னால்
29

Page 23
காலவெள்ளம்
உண்ணாவிரதமிருக்கின்ற ஆசிரியர்களை, செளத்திரியின் தலைமையில் பொலிஸ்படை அடித்து உதைத்துத் தாக்கி அப்புறப்படுத்த முயல்கின்றது.
வன்முறை வெடிக்கின்றது. இரு தரப்பும் மோதல், தடியடிப் பிரயோகம்.
துப்பாக்கிச் சூடு!
மூன்று ஆசிரியர்கள் பலி!
அநேகர்படுகாயம்.
புரட்சியின் தொட்டில் வங்கம்.
வங்கம் கொதித்தெழுகின்றது.
வங்கத்தின் சகல பகுதிகளிலுமிருந்து மக்கள் வந்து நகரத்தை முற்றுகையிடுகின்றனர்.
நகரத்திலும் சுற்றுப் புறங்களிலுமுள்ள பாடசாலைகள், கல்லூரிகள், புகையிரத நிலையங்கள், சந்தைக் கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில் தற்காலிகமாகத் தங்கியிருக்கின்ற மக்கள் களத்திற்குப் புறப்படுகின்றனர்.
ஊர்வலம் ஆரம்பமாகின்றது.
ஆசிரியர்கள், மாணவர்கள், அரசாங்க, தனியார்நிறுவனங் களின் ஊழியர்கள், தொழிற்சங்க-விவசாய சங்கங்களின் உறுப் பினர்கள் அனைவரும் அணிதிரண்டு அலையலையாய் ஊர் வலங்களில் வந்து கொண்டிருக்கின்றனர்.
நகரத்தின் சகல பகுதிகளிலுமிருந்து வந்து கொண்டிருக் கின்றனர்.
ஊர்வலங்கள் சங்கமித்து செளரங்கி சதுக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. செளரங்கி சதுக்கத்திலுள்ள காந்தி சிலை கள்ளங்கபடமற்ற குழந்தைத்தனமான சிரிப்புடன் நிற்கின்றது.
காந்தி சிலை முன்னால் பல்லாயிரக்கணக்கான போராளி கள் அணிதிரண்டு ஊர்வலமாகச் சென்று வங்க மாநில சட்ட சபையை முற்றிகையிட்டு.
ஆசிரியர்களினது ஐந்து கோரிக்கை களும் கிடைக்கும் வரை
சட்டசபை உறுப்பினர்கள் அனை வரையும் சிறைப்படுத்தி வைக்கும் வேட்கையுடன் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஊர்வலத்திலுள்ள போராளிகளை அடித்துக் கலைத்து விடும்படி பொலிசுக்கு அரசு கட்டளை.
ஊர் வலத்தில் வந்து கொண்டிருக்கும் போராளிகளை
30

நீர்வை பொன்னையன்
தடுத்து நிறுத்தி அடித்துத் துரத்தும் வெறியுடன் பொலிஸ் படை தயார்நிலையில் அரணாய் நிற்கின்றது.
பொலிஸ் படைக்கு தலைவன் ராய் செளத்திரி.
ராய் செளத்திரி பொலிஸ் அரணுக்கு முன்னால் வீறாப்புடன்நிற்கின்றான்.
ஊர்வலம் புறப்படுகின்றது!
"இன்குலாப்!
ஜிந்தாபாத்! "
"புரட்சி
ஓங்குக! "
கோஷித்தபடியே வாட்ட சாட்டமான ஒரு மாணவன் முன்வருகின்றான்.
செளத்திரியின் லத்திக் கம்பு உயர்கின்றது.
இன்குலாப்!ஜிந்தாபாத்! "
கோவித்தபடியே மாணவன் சுருண்டு விழுகின்றான்.
மாணவனின் மண்டை பிளந்து, காந்தி சிலைக்கு முன்னா லுள்ள புல் தரையை இரத்தமயமாக்குகின்றது.
"இன்குலாப்
ஜிந்தாாபாத்! "
பிமால் சென்
ஓய்வு பெற்ற ஆசிரியர். எண்பது வயது.
குள்ள உருவம்.
கண்களில் தடித்த மூக்குக் கண்ணாடி
கையில் பொல்லு.
கம்பளிப் போர்வை.
இன்குலாப்
ஜிந்தாபாத்! "
கர்ஜித்தபடியே முன்வருகின்றார் பிமால் சென்.
லத்தியை ஓங்கியபடியே
ஓடி வருகின்றான் செளத்ரி.
நிதானமாக மூக்குக் கண்ணாடியைக் கழற்றுகின்றார் சென்.
பிமால் சென் செளத்திரியை வெறித்துப் பார்க்கின்றார்.
31

Page 24
காலவெள்ளம்
சென்னின் பார்வையில் அமானுஷ்ய ஜீவத்துடிப்பு. தன் சுட்டு விரலை செளத்திரியின் நெற்றிக்கு நேராக நீட்டுகின்றார் சென்.
நீ! நீ என்னட்டைப் படித்த மாணவனல்லோ! " செளத்ரிதிகைத்தவனாய் பின் வாங்கி நின்றான். சென்னுடைய தீட்சண்யம் மிக்க கண்களை செளத்ரி உற்றுப் பார்க்கின்றான்.
‘என்னைப் படிப்பித்த ஆசிரியர் போல கிடக்கு. அதே கண்கள்! " செளத்ரியின் ஞாபகத் தடத்தில் பிமால் சென்னின் விழி களின் ஞானச் சுடரொளி.
செளத்திரிக்கு அதிர்ச்சி. சென்னின் பார்வையில் மானி டம் ஜெக ஜோதியாய் சுடர் விடுகின்றது. ருத்ர அவதாரமாய் ஆசிரியர் சென். ‘என்ர குரு செளத்திரிக்குப் பேரதிர்ச்சி! செளத்திரியின் மனதில் உதைப்பு. அவமானமும் வெட்கமும் அவனைப் பிடுங்கித் தின்கின்றன. செளத்ரியின் அதிகாரத் திமிர்த்தனம், வாலிப மிடுக்கு, ரத்தாவேச வெறி, திமிர்த்தனம் எல்லாமே அழிந்து மறைகின்றன.
ஒரு நொடிக்குள் செளத்ரி அனுதாபத்துக்குரியவனாய் தாழ்ந்து நிற்கின்ற அவலம்.
ஸ்தம்பிப்பில் உறைந்து நிற்கின்றான் செளத்ரி. அழக் கூடத் தோன்றாத சடமாய் நிற்கின்றான். அவமதிக்கப்பட்டுப்போன ஊமைக் காயத்தின் வேதனை செளத்திரிக்கு
மனக் கொந்தளிப்பு. செளத்திரியின் மனது உருகி மருகித் தவிக்கின்றது. போர்க் களத்தில் சகல ஆயுதங்களையும் இழந்து, இராமன் முன்னால் நிராயுதபாணியாய் அவமானத்தோடுதலை குனிந்து நிற்கும் இராவணனாய் செளத்திரி.
தன் தலையிலுள்ள பொலிஸ் தொப்பியை எடுக்கின்றான் செளத்ரி.
பொலிஸ் அதிகாரியான செளத்ரியின் தொப்பியும் லத்திக் கம்பும் பிமால் சென்னின் காலடியில்.
★
32

நீாவை பொன்னையன
தகர்வு
இன்று இரவு
நாங்கள பயணம. எங்கடை தாயகத்துக்கு நாங்கள் பயணம். நாங்கள் பிறந்த மண்ணுக்கு நாங்கள் போறம். அவள் பிறந்து வளர்ந்த கிராமத்து எழில் காட்சிகள்
அவளது மனக் கண் முன் நிழலாட்டம். கிராமத்தின் கிழக்குப் பக்கமாய் பச்சைப் பசேலென்ற நெல் வயல்கள். நெல் வயல்களை அண்டி விரிந்து பரந்த புல்வெளி. புல்வெளியின் அடிவயிற்றில் நீலக் கோடாய் அமைதியாய் தூங்கும் உப்பாறு. ஊரின் மேற்குப் புறமாய் செழிப்பான
33

Page 25
காலவெள்ளம்
வாழைத் தோட்டங்கள். காய்கறித் தோட்டங்கள். புகையிலை, வெங்காயம், உருளைக்கிழங்கு காசுப் பயிர்த் தோட்டங்கள். ஊரின் மார்பில்
அவளது வீடு. வீட்டின் முற்றத்தில் சடைத்து வளர்ந்த வேப்பமரம். வேப்பம் கொப்பில் அயல் வீடுகளிலுள்ள அவளையொத்த சிறுவர் சிறுமிகளுடன் உல்லாசமாய்
ஊஞ்சல் ஆடியது எல்லாக் காட்சிகளும் அவளது கண்முன் விரிந்து படர்ந்து நிழலாட்டம். அவளது இதயத்தில் நினைவுகள் சுமை. கண்களில் கண்ணிர்.
‘எங்கடை ஊருக்கு எப்போநாங்கள் போய்ச் சேரப்போறம் என்ற தவிப்பு அவளுக்கு. போதும் இந்த புலம் பெயர் வாழ்வு.
வாழ்வா?
34

நீர்வை பொன்னையன்
இது அர்த்தமற்ற வாழ்வு. நரக வாழ்வு. இந்த நாட்டைப் பற்றி நான் கூறவில்லை. இந்த நாட்டின் மக்களைப் பற்றி நான் கூறவில்லை. எல்லாம் எங்கடை மக்களைப் பற்றித்தான். இல்லையில்லை. எங்கடை மக்களைப் பற்றி அல்ல. நான் கூறுவதெல்லாம் உன்னைப் பற்றி உன்ரை குடும்பத்தைப் பற்றித்தான். நான் இப்போ கூறப்போறதெல்லாம் தெட்டத்தெளிவாய் கூறுகின்றேன். வெட்ட வெளிச்சமாய்
கூறுகின்றேன். எதுவித தயக்கமுமின்றி நான் கூறுகின்றேன். அற நனைஞ்சவளுக்கு குளிரென்ன கூதலென்ன? அவளது நெற்றிச்சுழிப்பு. அவள்
தீக்கண் பார்வை அவனது நெஞ்சை ஊடுருவிப் பாய்ச்சல்.
35

Page 26
காலவெள்ளம்
அவளது விழிகளில் அசாதாரண ஒளிப் பிரவாகம். அவனுக்கு ஒரே குழப்பம் அவள் மெளனித்திருப்பு ஆறு வரியங்களாய்
நான்
உன்னோடை வாழ்ந்த வாழ்க்கை பற்றித்தான் நான் இப்ப சொல்லிறன். வாழ்வா? அது நரக வாழ்க்கை
巫?
இ
நீ ஒரு மனிசனா? நீ மனிசனுமில்லை நீ மிருகமுமில்லை.
நீ
அசிங்கமான அருவருக்கத்தக்க ஒரு மண் புழு. அவன் ஏதோ சொல்ல முனைப்பு. நீ வாய் திறவாதை, அவள் உறுதியாய் தடுப்பு. நான்தான் பேசுவன். நீ கேட்டுக் கொண்டிரு. இண்டைக்குநீ கேட்காவிட்டால் இனி நீ ஒரு நாளும் என்ரை பேச்சைக் கேட்கமுடியாது. ஆறு வரியங்களாய்
36

நீர்வை பொன்னையன்
நீஅட்டகாசமாய் அகங்காரத்தோடை பேசினாய்.
நான் பேசாமல் வாய் பொத்திக் கொண்டிருந்தன். இப்போ
நான் பேசுகின்றேன். நீ பேசாமல் கேட்டுக் கொண்டிரு. நீ கேட்கத்தான் வேண்டும். ஆறு வரியங்களுக்கு முன் உன்னோடை நான் இஞ்சை வந்தன். நீ என்ன செய்தாய்? நான்சும்மாவா வந்தன்? நான் வெறுங்கையோடையா உன்னட்டை வந்தன்? நாலு வரியங்களாய் நான் லண்டனிலை உழைச்சு சேமிச்ச பணத்தோடை வந்தன். அதுமட்டுமா? என்ரைஅம்மாவும் அப்பாவும் எனக்குத் தந்த வீடு வளவு நல்லூரில். அதோடை நாப்பது லட்சம் காசு. ஏனென்றால் நீகனடா மாப்பிளையல்லே. அதுதான் உன்ரை அம்மாவும் அப்பாவும்
கேட்டு வாங்கின சீதனம்.
37

Page 27
காலவெள்ளம்
எங்கடை பணத்திலைதான் நீகனடாவிலை வீடு வாங்கினாய். அதுவும் உன்ரை பேரிலைதான் வாங்கினாய் நீ. அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள். அவை கடுமையாய் உழைச்சு சிக்கனமாய் வாழ்ந்து பணத்தைச் சேமிச்சு அக்காமார் இரண்டு பேருக்கும் இரண்டு வீடுகள் கட்டிக் குடுத்தினை. நல்லூரிலையுள்ள வீட்டை எனக்குத் தந்தினை. என்ரைஅண்ணன்மார் இரண்டுபேரும் கனடாவிலைதான். இரண்டு அண்ணன் மாருக்கும் கனடாவிலை சொந்த வீடுகள். அவளுக்கு பெருமிதம். உன்ரை ஆக்களுக்கு? உன்ரை மூண்டு அக்காமாரும் இரண்டு அண்ணாமாரும் ஏழெட்டு வரியங்களாய் கனடா விலை தான்.
ஆனால்
ஒருவருக்குத்தானும் கனடாவிலை சொந்தமாய் வீடில்லை. அவர்கள் கனடாவுக்கு வந்த நாளையிலையிருந்து இண்டு வரையும்
38

நீர்வை பொன்னையன்
வாடகை வீடுகளிலைதான் இருந்த வைனை. ஏன் உங்கடை அப்பாவும் அம்மாவும் நாப்பது வரியங்களாய் கொழும்பிலை வாடகை வீடுகளிலைதான் வாழ்ந்து வருகினை. ஏன், உங்கடை சொந்த ஊரிலைகூட உங்களுக்கு சொந்த வீடில்லை. குறவர்கூட தாங்கள் தற்காலிகமாய் அமைத்த சொந்தக் குடிசைகளிலைதான் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் அதிலை பெருமைப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் உங்களுக்கு அந்த மண்ணோடை ஒட்டாத வாழ்க்கை. அது மாத்திரமே? உங்களுக்கு சொந்த ஊரிலோ கொழும்பிலோ அல்லது கனடாவிலோ எவருடனுமே ஒட்டுபIல்லை, உறவுமில்லை.
39

Page 28
காலவெள்ளம்
நண்பர்கள் கூட எவருமில்லை.
உங்களுக்கு
பட்டம், பதவி பணமிருந்தால் போதும் அதுதான் உங்கடை வாழ்க்கையின் லட்சியம் உன்ரை அக்காமாரதும் அண்ணன்மாரதும் குடும்பங்களாவது பற்றுப் பாசத்தோடை ஒட்டுறவாய் வாழ்கின்றனவா? ஆனால்
உங்கடை ‘பேர்த்டே பார்ட்டியளிலை 'தான் நீங்கள் எல்லாரும் ஒண்டு கூடுவியள். அதன் பிறகு? நீஆரோ நான் ஆரோ " எண்ட வாழ்க்கை. உங்கடை வாழ்க்கை ஆங்கிலம் மட்டும்தான் நீங்கள் எல்லாரும் பேசிற மொழி. ஆங்கிலம் தான் உங்கள் மூச்சு. நீங்கள் எல்லாரும் வெள்ளைக்காரர் எண்ட நினைப்பு உங்களுக்கு.
உங்கடை
அம்மாவும் அப்பாவும்
உங்களோடை ஒண்டாய்
40

நீர்வை பொன்னையன்
சேர்ந்து வாழ
நடந்தது என்ன? உங்கடை அம்மா உன்ரை பெரியண்ணன் வீட்டிலை. உங்கடை அப்பா உன்ரை சின்னண்ணன் வீட்டிலை. அக்காமார் அவையளை திரும்பிக்கூட பார்க்கேல்லை. வெள்ளிக்கிழமைகளிலை மாத்திரம்தான் மாலை வேளைகளிலை கனடா ஸ்காபரோவிலுள்ள கனடா கந்தசாமி கோயிலில் உங்கடை அம்மாவும் அப்பாவும் சந்திப்பு.
என்ன உறவு?
என்ன வாழ்க்கை? இரண்டு மாதங்கள்தான் அவர்களுக்கு கனடா வாழ்க்கை.
விரக்தியுடனும் வெறுப்புடனும் தான் அவர்கள் இருவரும்
இலங்கைக்கு
திரும்பியாச்சு.
சரி,
அதுதான் போகட்டும் ஆறு வரியங்களாய் நீ என்னோடை வாழ்ந்தாய். அது ஒரு வாழ்க்கையா? உன்ரை தேவைகள்
எல்லாத்தையும் நான்
41

Page 29
hilol).6lo) oil onli,
ஒன்றும் விடாமல் நிறைவேற்றி வைச்சன். ஆனால் நீ? என்ரை ஆசைகளை என்ரை ஆசாபாசங்களை நீ எப்பவாவது புரிந்தியா? நீ எதையாவது நிறைவேற்றி வைச்சியா? என்ரை உணர்வுகளை எப்பவாவது நீபுரிந்து நடந்தியா? எப்பவாவது ஒரு தரமாவது ஒரு உடுப்பாவது
எனக்கு நீ வாங்கித்தந்திருக்கிறாயா? ஆனால் உனக்கு ஒவ்வொரு பேர்த் டேக்கும் நான் உடுப்பு வாங்கித்தந்தன். அதுதான் போகட்டும் எங்கடை ஒரே ஒரு குஞ்சு செல்லக் குமரனுக்கு எப்பவாவது ஒரு உடுப்பாவது தகப்பன் எண்ட முறையிலை நீ வாங்கிக் குடுத்திருக்கிறாயா? நல்லநாள் பெருநாள் எண்டு சித்திரை வரியப்பிறப்பு தீபாவளிநாட்களில் ஒரு நாளாவது ஒரு உடுப்பாவது எங்கடை குழந்தைக்கு நீ வாங்கிக் குடுத்திருக்கிறியா? நான்தான் எல்லா
42

நீர்வை பொன்னையன்
கொண்டாட்டநாட்களிலும் எவ்வளவு கஷ்டப்பட்டும் உடுப்புகள் வாங்கிக் குடுத்திருக்கிறன்.
எங்கடை குமரன பிறந்து மூண்டு வரியங்களில் எங்கடை குமரனோடை
ஒரு நாளாவது
ஒரு தரமாவது
ịể அன்பாய் கதைத்திருக்கிறாயா?
ஆனா உன்ரை அக்காமாற்றை அண்ணன்மாற்றை பிள்ளைகள் எல்லாத்தையும் நீதலைக்கு மேலை தூக்கிவைச்சு செல்லம் கொண்டாடுறாய். ஏனெண்டால் உன்ரை அக்காமாற்றை அண்ணன்மாற்றை பிள்ளையஸ் எல்லாம்
வெள்ளை.
உன்ரை அப்பா, அம்மா அண்ணன்மார், அக்காமார் அவையின்ரை பிள்ளையஸ் எல்லாரும் வெள்ளைநிறமாம். சங்கு வெள்ளையாம். நானும் எங்கடை குமரனும் வெள்ளையில்லை.
கறுப்பு.
43

Page 30
காலவெள்ளம்
என்ரை அப்பா, அம்மா அண்ணன்மார், அக்காமார் எல்லாரும் எங்கள் குடும்பமே வெள்ளையில்லை.
கறுப்புத்தான். ஆனால் நாங்கள் எல்லாரும் மணிசர்கள், மனிசத்தன்மையுள்ளவர்கள். என்னைநீ கல்யாணம் கட்டும்போது நான் வெள்ளையாயிருந்தேனா? கல்யாணத்துக்கு முன்னம் உன்ரைஅம்மாவும் அப்பாவும் நீயும்
(368560),685" பெண்பார்க்க வந்தியள். அப்ப நான் வெள்ளையாய் இருந்தேனா? நான் கறுப்பாய்தானே இருந்தன். நல்லெண்ணைக் கறுப்பு அப்ப இது உங்கடை கண்ணுக்குத் தெரி யேல்லையா? அந்த நேரத்திலை எங்களிடம் இருந்த சொத்தும் பணமும்தான் உங்னகடைகண்ணுக்கு பெரிசாய்த் தெரிஞ்சுது. அப்ப என்ரை
கறுப்பு நிறம்
44

நீர்வை பொன்னையன்
உங்களுக்கு பெரிசாய்த் தெரியேல்லை. அப்படித்தானே? எங்கடை கல்யாணம் திடீர் கல்யாணம் கல்யாணம் முடிஞ்சு மூண்டாம் நாளே நாங்கள் இரண்டு பேரும் கனடா பயணம் இதுக்கான ஏற்பாடு எல்லாம் ஏற்கனவே நீங்கள் செய்து வைத்தாச்சு. இது எங்களுக்கு அப்போ புரியாப் புதிர்.
எங்கடை மகனுக்கு, லீவெல்லாம் முடியப்போகுது பிந்திப் போனால் பறிபோயிடும் வேலை. அதுதான் இந்த அவசரம் " உன்ரைஅம்மா என்ரை மாமி அண்டு சொன்னா. நாங்களும் அவ சொன்னதை அப்பிடியே நம்பீட்டம். நீண்டநாட்கள் நாங்கள் கொழும்பிலை நிண்டால்
உன்னைப் பற்றிய உன் குடும்பத்தைப் பற்றிய எல்லாப் பொட்டுக் கேடுகளும் எங்களுக்கு தெரிய வந்திடும் எண்ட பயத்திலைதான்
45

Page 31
காலவெள்ளம்
என்னையும் உன்னையும் அவசர அவசரமாய் கனடாவுக்கு அனுப்பி வைச்சினை. இது வெறும் நாடகம் எண்டு பிறகுதான் எங்களுக்குத் தெரியவந்துது. எல்லாம் முடிஞ்சுபோச்சு இதை நானோ, என்ரை பெற்றாரோ பெரிசுபடுத்தேல்லை. நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு. நடக்கவிருப்பதை சரியாய்ப் பாப்பம் எண்டுதான்நாங்கள் எல்லாரும் அமைதியாயிருந்தம். எனக்கு குழந்தை பிறந்தபோது என்னைப் பராமரிக்க என்ரைஅம்மா இஞ்சை வந்தா. என்ரை சேமிப்பு பணத்திலைதான் என்ரை அம்மாவின் கனடா பயணச் செலவும். குழந்தை பிறந்து ஒரு மாதம்கூட முடியேல்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை வேலை எல்லாம்
செய்து முடிஞ்சு
46

நீர்வை பொன்னையன்
ஓய்வாய் இருந்த வேளை
ரி.வி 'பார்த்துக் கொண்டிருந்தா என்ரை அம்மா.
'மூக்கு முட்ட திண்டிட்டு ரி.வி பார்க்கத்தானோடி நீஇஞ்சை வந்தனியடி? என்ரை அம்மாவை என்னைப் பெத்த அம்மாவை நீஅடாவடித்தனமாய் ஏசித்திட்டினாய். எனக்கு திகைப்பு என்ரை அம்மாவுக்கு அதிர்ச்சி. நாங்கள் இடிஞ்சுபோனம். இதுக்குப் பிறகு இரண்டு நாள்தான் இஞ்சைநிண்டா என்ரைஅம்மா. இஞ்சைநிண்ட இரண்டு நாட்களும் என்ரை அம்மாவின்ரை பல்லிலை ஒருசொட்டுத்தண்ணிகூட படவேயில்லை. படுத்த படுக்கையாய் கிடந்தா என் அம்மா. நானும் அப்படித்தான் கிடந்தன். ஒரு சொட்டுத் தண்ணிகூட என்ரை தொண்டேக்கை போகல்லை. மூண்டாம் நாளே
என்ரை அம்மா
47

Page 32
காலவெள்ளம்
எங்கடை ஊருக்கு பயணமானாள்.
எனக்கு குழந்தை பிறக்கும்வரை ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்தேன். குழந்தை பிறந்ததோடை என்ரை வேலை போச்சு. ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் வேலை தேடினன். அரசாங்க வேலைகளுக்கான பத்திரிகை விளம்பரங்களை பார்த்து என்தகமைக்கேற்ற வேலைகளுக்கு, நான் ஆறு மாதங்களாய் தொடர்ந்து
விண்ணப்பங்கள் நூற்றுக்கணக்கில் அனுப்பிக் கொண்டிருந்தன். தனியார் கம்பனிகளிலும் வேலைக்கு முயற்சித்தன். போன கிழமை வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஐஞ்சு வரியமாய் நான் உழைச்சு கொட்டிறன். நீசும்மாயிருந்து கொண்டு வெக்கமில்லாமல் என்ரை சோத்தை திண்டுகொண்டிருக்கிறாய் எண்டு அடிக்கடி சொல்லி என்னைத் திட்டி அவமானப்படுத்தினாய். உனக்கு எங்கை
வேலை கிடைக்கப்போகுதடி
48

நீர்வை பொன்னையன்
உந்த வீண்முயற்சியை விட்டிடு இண்டைக்கே. சுப்பமாக்கற்றிலை பில் போடிற வேலையாவது தேடி எடு. அதுவும் கிடைக்காட்டி, வீட்டுக்கு வீடு "பேப்பர் போடுற வேலையாவது செய்யடி மனம் கூசாமல் நீ அடிக்கடி நச்சரிச்சு திட்டித்தீர்க்கிறாய். இதிலும் பார்க்க வேறு என்ன அவமானம் எனக்கு ஏற்படப்போகுது? எல்லாத்துக்கும் மேலாய்
என்னைச் சந்தேகப்படுகிறாய். சரி அதைத்தானும் நீ என்னை நெற்றிக்கு நேராய் கேட்டிருக்கலாமே. கேட்கிறதுக்கு உனக்கு துணிவில்லை. ஏனென்றால் உனக்கு முதுகெலும்பில்லை. நீ ஒரு கோழை. இல்லையில்லை. நீ மனிசனுமில்லை. நீ மிருகமுமில்லை நீஅசிங்கம் பிடித்த அருவருக்கத்தக்க
49

Page 33
காலவெள்ளம்
மண்புழு.
ତTର୍ତtଟ୪t?
எனக்கு வேலை கிடைக்காதா? காலையிலை நான் வீடு வீடாய் போய் "பேப்பர் போடவேணுமா? நான் அப்படிப்பட்ட தகுதியற்றவளா? எனக்கு நல்ல வேலைக்கு தகமையில்லையா? நான் இப்ப சொல்லிறன் எனக்கு வேலை கிடைச்சிட்டுது. “என்ன, உனக்கு வேலை கிடைச்சிட்டுதா? “ அவனுக்கு ஆச்சரியம் ‘என்ன வேலை? எங்கை வேலை?
எப்ப போறாய் வேலைக்கு? அவனுக்கு அறிய ஆவல். எனக்கு என்ரை தகமைக்கேற்ற வேலை. ஒன்ராறியோ மாகாண அரசாங்க வீடமைப்புச்சபையில் கணக்காளர் வேலை.
அப்பிடியா? ' அதிசயித்தவனாய் அதிர்ந்து போனான் போன கிழமையே எனக்கு
50

நீர்வை பொன்னையன்
கணக்காளர் நியமனக் கடிதம் வந்திட்டுது.
அப்ப நீ எனக்கேன் சொல்லேல்லை?
எங்கடை சொந்த நாட்டுக்கு நாங்கள் போக விமானப் பயணச் சீட்டுக்கள் எடுக்கவேணுமே. அதோடை பிரயாண ஒழுங்குகள் எல்லாம் செய்யவேணுமே. அதுதான் எனக்கு வேலை கிடைச்ச விசயத்தை நான் உனக்கு சொல்லேல்லை. நான் உனக்கு ஏன் சொல்லவேணும்? சொல்லித்தான் 6T6ծT6ծTւյսյ6ծT? அப்ப நீ வேலைக்கு போகேல்லையா? அதுவும் அரசாங்க வேலை. ஊருக்கு நீ போகத்தான் போறியா? நீ பொய் சொல்லிறாய். உனக்கெங்கை வேலை கிடைக்கப்போகுது? என்னைநீ ஏமாத்தப்பாக்கிறியா? ' சந்தேகத்துடன் அவன்.
51

Page 34
காலவெள்ளம்
‘என்ன?
உங்களைப்போல
நாங்கள் ஏமாத்துப் பேர்வளியளா?
இந்தா. இதோ பார் ‘. நியமனக் கடிதத்தை அவனது மூஞ்சியில் அவள் வீசி எறிகிறாள். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனுக்கு திகைப்பு திணறல்
நீஊருக்குப் போகத்தான் போகிறாயா? நீ வேலைக்கு G3LufTG395@ib6oo6nbul urT? " திக்கித் திணறி அவன் கேட்கிறான்.
அவளை.
நான் வேலைக்கு போவன் எண்டு நீநினைக்கிறியா? நான் இஞ்சைநிண்டால்தானே வேலைக்கு போக. அது மாத்திரமில்லை இனிமேல் நான் உன்னோடை சேர்ந்து வாழ்வன் எண்டு
நீ
52

நீர்வை பொன்னையன்
நினைக்கிறியா? அது நடக்கிற காரியமா? அதை விட்டிட்டு வேறை ஏதாவது சொல்லு. அவனுக்கு பேரதிர்ச்சி.
நாங்கள் ஊருக்குப் போறது நிச்சயம் நானும் என்ரை செல்லக் குழந்தை குமரனும் இண்டைக்கு இரவே நாங்கள் பிறந்த மண்ணுக்கு நிச்சயமாய் போறம் நீராமனெண்டால் இருந்திட்டு போ. ஆனால் நான் தீக்குளிக்க சீதையில்லை.
53

Page 35
41லவெள்ளம்
வீடு
இணைப்பாளர் இளங்கோ இருக்கிறாரா?"
ஏரியாப் பொறுப்பாளர். ‘ஓ. உள்ளை இருக்கிறார் போய்ப் பார்தம்பி.
தாய்மார்கள் குழந்தைகளது வரவைப் பதிவு செய்து கொண்டிருக்கின்ற பவானி கூறுகின்றாள்.
ஏரியாப் பொறுப்பாளர் உள்ளே செல்கின்றார்.
வாரும் தம்பி உட்காரும் பெளவியமாகக் கூறுகின்றார் இணைப்பாளர்.
இந்த வீடு தேவைப்படுகுது. எடுத்த எடுப்பிலே கூறுகின்றார் ஏரியாப் பொறுப்பாளர். 'எந்த வீடு? வியப்புடன் இணைப்பாளர். ‘என்ன நக்கலா? இந்த வீடுதான் முறாய்ப்புடன் பொறுப்பாளர். 'இந்த வீட்டிலை சத்துணவு நிலையம் நடக்குது தம்பி ‘
அதுக்கென்ன மூண்டு நாளைக்குத்தான்.
54

நீர்வை பொன்னையன்
'இல்லை தம்பி. மாதாமாதம் கற்பிணித்தாய்மாருக்கு கிளினிக்கும் இஞ்சைதான் நடக்குது. அதோடை ஆரம்ப சுகாதார நிலையமும் நடக்குது. "
‘எல்லாம் நடக்கட்டும் நல்லதுதானே மூண்டு நாளைக்குத் தானே. பிறகு நீங்கள் எல்லாத்தையும் நல்லாய் நடத்துங் கோவன். '
'மூண்டு நாளைக்கெண்டுதான் உவையள் சொல்லு வினை. வந்த பிறகு வீடு அவைக்கு நிரந்தரம். இதுதான் அவையின்ரை தந்திரோபாயம் உப்பிடி எத்தினை பேற்றை மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வீடுகளை அவை எடுத்திருக் கினம். "
இளங்கோதனக்குத்தானே கூறிக் கொள்கின்றான்.
‘என்ன யோசிக்கிறியள்?
தம்பி இந்த வீடு எதுக்கு?
தற்கொலை செய்தாரே அந்த தம்பிமுத்து அவற்றை பிரேதம் வைக்க '.
இப்ப பிரேதம் ஒரு வீட்டிலைதானே வைச்சிருக்கினை. அங்கை மூண்டு நாளைக்கும் வைச்சிருககலாம்தானே?
அந்த பிரேதம் கோயில் வீதிக்குப் பக்கத்திலையுள்ள ஒரு வீட்டிலைதான் கிடக்கு '
அங்கை மூண்டு நாளும் வைச்சிருக்கலாம்தானே?
'கோயில் வீதிக்குப் பக்கத்திலை பிரேதம் கிடக்கேக்கை பூசை நடத்தக்கூடாதாம். கோயில் குருக்கள் சொல்லுறார். 'நேற்று இராப் பூசை நடத்தேல்லை. இண்டைக்கு உதயப் பூசையும் நடத்தேல்லை பிரேதத்தை உடனை வேறை எங்கை யாவது கொண்டு போங்கோ. அப்பதான் கோயிலை புண்ணிய தானம் செய்துபோட்டு மத்தியானப் பூசை நடத்தலாம் ' எண்டு குருக்கள் அந்தரப்படுத்திறார்.
ஏரியாப் பொறுப்பாளர்.
அப்ப தம்பிமுத்தற்றை சொந்த வீட்டிலையே அவற்றை பிரேதத்தை கொண்டுபோய் வைக்கலாம்தானே?"
அதெப்படி? அங்கை எங்கடை வைத்தியக் கல்லூரி நடக்குதே, மடைக்கதை சொல்லுறாய், '
கோபமாய் கத்துகிறார் பொறுப்பாளர் வசந்தன்.
தம்பி கோபப்படாதை. உங்கடை வைத்தியக் கல் லூரிக்கு முன்புறமாய்த்தான் தம்பிமுத்தற்றை வீடு கிடக்குக.
55

Page 36
காலவெள்ளம்
அது புறம்போக்காய்த்தான் கிடக்கு. அந்த வீட்டிலை வகுப்புகள் நடக்கிறேல்லை. அதை நீங்கள் உபசரிப்பு மண்டபமாய்த்தான் பாவிக்கிறியள். அங்கை பிரேதத்தை வைக்கலாம் மூண்டு நாள்தானே? '
நிதானமாய் கூறுகின்றார் இளங்கோ.
தம்பிமுத்தர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு அது. நீங்கள் அவரை வலோற்காரமாய் வெளியேற்றும் வரை அவர் வாழ்ந்த பரம்பரை மண்வீடு அது. அங்கை வைச்சுத்தான் அவற்றை பிரேதம் எடுக்க வேணும். அதுதான் முறை. தம்பிமுத்தற்றை ஆசையும் அதுதான்.
'ஏழெட்டு வரியத்துக்கு முந்தியே தம்பிமுத்தர் தன்ரை வளவுக்கை ஒரு கல்வீடு கட்டினார். ஆனால் அவர் அந்த புதிய வீட்டிலை ஒரு நாளும் படுத்தெழும்பியதில்லை. அவற்றை மனைவியும் பிள்ளையஞம்தான் கல்வீட்டிலை படுக்கிறவை. "
அப்ப அவர் எங்கை படுக்கிறவர்?" பொறுப்பாளர். தம்பிமுத்தர் தன்ரை பரம்பரை வீட்டிலை, தன்ரை பாட்டனாரும் தகப்பனாரும் படுத்தெழும்பின வேப்பம் வாங்கிலில்தான் படுத்தெழும்பினார். '
மூன்று நாட்களுக்கு முன்னர்தன்ரை பரம்பரை வீட்டிலை யிருந்து அவர் வலோற்காரமாய் வெளியேற்றப்பட்டார். அதன் பின் அவர் ஒருவருடனும் கதைப்பதில்லை. அவர் தன்ரை வாழைத்தோட்டத்திலுள்ள கொட்டிலில்தான் இருந்தார்.
அவரது குடும்பம் கந்தசாமி கோயில் மேற்கு வீதியிலுள்ள ஒரு வீட்டில் வசிக்கிறது.
கந்தசாமி கோயில் மேற்கு வீதியில் பாலர் பகல் விடுதி. வடமேற்குப் புறமாய் அரச ஆயுர்வேத வைத்தியசாலை. நடுவில் இயக்க முகாம் அண்மையில் விமானக்குண்டு வீச்சு நடந்தது. அதிர்ஷ்டவசமாக அன்று ஞாயிற்றுக்கிழமை. பாலர். நிலையம் விடுமுறை. பிள்ளைகளில்லை.
பகல் பத்து மணி. குண்டு வீச்சு பாலர்நிலையத்தின் ஒரு பகுதி பாதிப்பு. மேற்கு வீதியிலுள்ள நான்கு வீடுகளில் ஒன்று முற்றாக
56

நீர்வை பொன்னையன்
சேதம். வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பு பங்கருக்குள் இருந்த படியால் உயிர்தப்பிச்சினம்.
அடுத்த மூண்டு வீடுகளிலுமுள்ளவர்கள் எல்லோரும் வேறு இடத்துக்கு போய்விட்டார்கள்.
அந்த மூண்டு வீடுகளில் ஒன்றில்தான் தம்பிமுத்தற்றை குடும்பம் தங்கியிருக்கின்றது.
தன் சொந்த வீட்டிலிருந்து வலோற்காரமாய் வெளி யேற்றப்பட்ட தம்பிமுத்தர் மூன்று நாட்களாய் ஒருவருடனும் பேச்சல் பறச்சலில்லை. சகலதையும் பறிகொடுத்து விட்டதான உணர்வு.
அவர்நடைப்பினமாய் திரிகின்றார். மூன்றாம் நாள் மதியவேளை. வாழைத்தோட்டத்திலுள்ள கொட்டில் வாசலில் தம்பி முத்தர்.
மனைவி அவருக்கு சோற்றைக் கொடுத்திருக்கின்றாள். தம்பிமுத்தர் ஒரு கவளம் சோற்றை வாயில் வைக் கின்றார்.
சோழகக் காற்று சுழன்றடிக்கிறது. வாழையிலையிலுள்ள சோற்றில் மண்.
சோற்றைத் தூக்கி வீசிவிட்டு வெளியேறுகின்றார் தம்பி முத்தர்.
சிறிது நேரந்தான். கொட்டிலின் பின்புறத்தில் ஓங்காளிப்புச் சத்தம் மனைவி விசாலாட்சி பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று பார்க்கின்றாள்.
சாய்ந்தபடியே கிடக்கின்றார்தம்பிமுத்தர். வாயில் வெண்நுரை. “பொலிடோல் 'போத்தல் பக்கத்தில். மனைவியின் மரண ஒலம். தம்பிமுத்தரின் பிரேதம் கந்தசாமி கோயில் மேற்கு வீதியிலுள்ள வீட்டில்.
நேற்று மதியத்திலிருந்து கோயில் பூசைநடக்கவில்லை. பிரேதத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி. சத்துணவு நிலையம் நடக்கின்ற வீட்டில் பிரேதத்தை
57

Page 37
காலவெள்ளம்
வைப்பதற்கு ஏரியாப் பொறுப்பாளர் வசந்தன் முயல்வு.
இணைப்பாளர் இளங்கோ சத்துணவு நிலையத்தை விட்டுக் கொடுக்க மறுப்பு.
"ஒரு மணித்தியாலத்தில் உங்கடை சாமான்கள் எல்லாத் தையும் அப்புறப்படுத்துங்கோ. இல்லாட்டி நாங்கள் அதுகளை வெளியே எடுத்துப் போடுவோம். பொறுப்பாளர் மிரட்டல்
தம்பி, அவசரப்படாதை. வேறை இடத்துக்கு நிலை யத்தை மாத்திறதுக்கு சம்மதமா எண்டு இஞ்சை சாப்பாடு எடுக்கிற தாய்மாரைக் கேட்டுப் பாப்பம் அவை சம்மதம் எண்டால் நாங்கள் இடம்மாறத் தயார்
சரி, அவையளை இப்பவே கேப்பம் " பொறுப்பாளர்அவசரம்
தம்பி இப்ப பதினொரு மணியாச்சு. தாய்மாரும் குழந்தைகளும் சாப்பிடுகிற நேரம். அவை சாப்பிட்டு முடிஞ் சதும் கூட்டத்தை வைப்பம். அவையின்ரை விருப்பத்தைக் கேப்பம். அவை ஒமெண்டால் நாங்கள் வேறை இடத்துக்கு போறம் "
"எவ்வளவு நேரம் செல்லும்? ' பொறுப்பாளர். ‘ஒரு மணி நேரமாகும். நீர் போட்டு வாரும் " தாய்மாரும் பிள்ளைகளும்இலைக்கஞ்சி குடிக்கின்றனர். சத்துணவு நிலையத் தொண்டர்கள் மூவரும் ஊரின் பல பகுதிகளுக்கு சைக்கிள்களில் பறக்கின்றனர்.
ஊர் கூடுகின்றது. ஏரியாப் பொறுப்பாளரும் வந்துவிட்டார். கூட்டம் ஆரம்பம். நிலையத்தை மாற்றுவதிலுள்ள சிக்கல்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றார் இணைப்பாளர்.
ஏரியாப் பொறுப்பாளரும் தனது நிலைப்பாட்டை கூறுகின்றார்.
இந்த இடத்திலிருந்து சத்துணவு நிலையத்தை மாற்றக் கூடாது"
தாய்மாரின் கோபித்த குரல்.
'ஏன் மாத்தக்கூடாது? '
58

நீர்வை பொன்னையை
பொறுப்பாளர். 'மூண்டு வரியமாய் இஞ்சைதான் நாங்கள் சாப்பாடு எடுத்துவாறம். இது எங்களுக்கு வசதியான வீடு.
"ஏன் வேறை வீட்டுக்குப் போனாலென்ன? ' இந்த வீட்டிலை சாப்பாட்டுச் சாமான்கள் வைக்க ஒரு பெரிய அறை. சாப்பாடு சமைக்க வசதியுள்ள குசினி. மருந்துகள் வைக்க சுவர் அலுமாரியுள்ள ஒரு அறை, தாய்மார்களையும் பிள்ளைகளையும் டரக்டர் பரிசோதிக்க ஒரு அறை தாய்மார்களுக்கு சுகாதாரக் கூட்டங்கள் நடத்த விசாலமான மண்டபம். இப்பிடி வசதியாக உள்ள வீடு வேறை இடத்தில் இல்லை. '
இணைப்பாளர் விளக்கிக் கூறுகின்றார்.
இந்த வசதியள் மாத்திரமில்லை. இந்த வீட்டுச் சொந்தக்காரர் மூண்டு வரியங்களுக்கு முன்னமே கனடாவுக்கு போட்டார். இந்த வீட்டிலை சத்துணவு நிலையமும் சுகாதார நிலையமும் தொடர்ந்து நடத்திறதுக்கு தங்களுக்கு பூரண சம்மதம் எண்டு எழுதிக் குடுத்திட்டும் போயிருக்கிறார். '
'மூண்டு நாளைக்குத் தானே பிறகு நீங்கள் இஞ்சை திரும்பி வந்திடலாம். '
தம்பி துவக்கத்திலை உப்பிடித்தான் நீங்கள் சொல்லு வியள். பிறகு நீங்கள் நினைச்சதைச் சாதிப்பியள். உப்பிடி எத்தினை பேற்றை வீடுகளை நீங்கள் எடுத்தியள்? அந்த வீடுகளின்ரை சொந்தக்காறர் இப்ப பிறத்தியாற்றை வீடுகளிலை ஒண்டுக்குடித்தனம் நடத்துதகள். அவைக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் கஷ்டங்கள். உங்களுக்கு நாங்கள் எவ்வளவோ உதவியள் செய்திட்டம். அப்பிடியிருந்தும் நீங்கள் எங்களை ஏன் தொடர்ந்து தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறயள்?
நாகம்மாப்பாட்டி ஆதங்கத்துடன் கேட்கின்றா.
தம்பி. நாங்கள் உங்களுக்கு பச்சையாய்த் தந்தம் சமச்சதாய்த் தந்தம். அதுவும் நாங்கள் ஆமிக்குப் பயந்து பயந்து அவங்களுக்குத் தெரியாமலே, எவ்வளவோ உங்களுக்கு செய்து வாறம். நீங்கள் என்னடாவெண்டால். '
விசாலாட்சி மாமி மனவேதனையுடன் கூறுகின்றார். 'உங்களுக்கு நாங்கள் பத்தாயிரம், பத்தாயிரமாய் பணமும் தந்தம். பவுனும் தந்தம் ‘
59

Page 38
காலவெள்ளம்
பர்வதம் பாட்டி.
"அது மாத்திரமே எங்கடை பிள்ளையளையும் தந்தம். ஆனாநிங்கள்? '
'உங்கடை பண்ணையஞக்கு நாங்கள் பயிர்செய்த நிலங்களை புடுங்கியெடுத்தியள். நாங்கள் அரைகுறைப் பட்டினியோடை காலம்தள்ளினம். '
செல்லையா குமுறுல்.
அதுமாத்திரமே. எத்தனை பேர்குடியிருந்த வீடுகளையும் பறிச்சியள்.
‘எங்கடை ஊரின் வடக்குப் பக்கத்திலை ஏழு வீடுகளை ஒண்டாச் சேத்து உங்கடை மருத்துவக் கல்லூரிக்கெண்டு பறிச்செடுத்தியள்.
கந்தையா கூறுகிறார்.
அது மாத்திரமே? '
தனித்தனி வீடுகளையும் தொட்டந் தொட்டமாய்ப் பறிச்சியள். '
‘எங்கடை ஊரின் தெற்குப் பக்கத்திலை ஐஞ்சு வீடுகளை ஒண்டாய் எடுத்தியள். அங்கை உங்கடை சட்டக் கல்லூரி நடக்குது. "
இப்ப எங்கடை சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதியள். இதிலும் பாக்க நீங்கள் எங்களை ஒரேடியாய் வன்னிக் காட்டுக்கே கலச்சுப்போட்டு நீங்களும் உங்கடை ஆக்களும் சொகுசாய் இஞ்சைஇருங்கோவன். '
அன்னமுத்தாச்சி குமுறிக் கூறுகின்றா.
இந்த போசாக்கு நிலையத்தை இடம் மாத்திறதுக்கு நாங்கள் சம்மதமில்லை. இந்த வீட்டைத் தர முடியாது. நீங்கள் செய்யிறதைச் செய்யுங்கோ. '
அங்கு கூடி நிற்கின்ற மக்கள் ஏகோபித்த குரலில் கூறுகின்றனர்.
'இல்லை கண்டிப்பாய் இந்த வீட்டிலைதான் பிரேதத்தை வைக்கப்போறம். இப்பவே சாமான்களை எடுங்கோ "
'முடியாது. வீடு தரமுடியாது. சாமான்களையும் நாங்கள் எடுக்கமாட்டம். நீங்கள் செய்யிறதைச் செய்யுங்கோ. இந்த விசயத்துக்குநாங்கள் உங்கடை மேலிடத்துக்கும் போகத்தயார்.
தாய்மார்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.
60

நீர்வை பொன்னையன்
தம்பிமுத்தற்றை சொந்த வீடு கிடக்கு. அவர் பிறந்து
வளர்ந்து வாழ்ந்த பரம்பரை மண்வீடு கிடக்கு அந்த வீட்டிலை வைச்சுத்தான் அவற்றை பிரேதம் எடுக்க வேணும் அதுதான் நல்லதும் கூட.
நீங்கள் நினைச்சபடி நடக்கேலாது. இரண்டு மணித்தியாலாத்துக்கை இந்த வீட்டை விட்டிட வேணும் இல்லாட்டி நாங்கள் உதுக்கை கிடக்கிற சாமான்களை எடுத்து றோட்டிலை போட்டிட்டு பிரேதத்தை இஞ்சை கொண்டுவந்து வைப்பம் "
மக்கள் மத்தியில் கொந்தளிப்பு
‘எங்க ஏலுமெண்டால் செய்யுங்கோ பாப்பம்
வேலுப்பிள்ளை சவால் விடுகின்றார்.
'பிள்ளை இந்திராகதவைப் பூட்டு '
கந்தசாமி.
'வாங்கோ எல்லாரும். தம்பிமுத்தற்றை பிரேதத்தை எடுத்துக் கொண்டுபோய் அவற்றை சொந்த பரம்பரை வீட்டிலை வைப்பம்.
வேலுப்பிள்ளை வன்மத்துடன் கத்துகிறார்.
பொறுப்பாளர் தன் மோட்டார் சைக்கிளை விசுக் கொண்டு எடுத்துக கொண்டுஅவ்விடத்தை விட்டகல்கின்றார்.
மக்கள் எல்லோரும் ஒண்டுதிரண்டு செல்கின்றனர்.
தம்பிமுத்தற்றை பிரேதம் அவற்றை பரம்பரை வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
தம்பிமுத்தற்றை பாட்டனாரும், தகப்பனாரும் படுத் தெழும்பிய வேப்பம் வாங்கில் பிரேதம் வைக்கப்படுகின்றது.
★
61

Page 39
காலவெள்ளம்
மூடுதிரை
என்ரைதங்கன் இன்னும் வரேல்லையே ஒரு மாதமாகப் போகுது. ஐயோ!
என்ரை தங்கனுக்கு என்ன நடந்ததோ? ஏன் இன்னும் என்ரை ராசன்
வரேல்லை? என்ரை செல்லனைப் பற்றி எதுவித தகவலும் எங்களுக்கு தெரியவில்லையே. தங்கமலரின் மனதில் ஏக்கம், பயம். தங்கமலர்தவிப்பு. தங்கமலர்தங்கராசனை திருமணம் செய்து ஒரு வருடந்தான். அவர்களின் திருமணம் காதல் திருமணம். ஆறு வருடக் காதல் தங்கராசனுக்கு
62

நீர்வை பொன்னையன்
இருபத்தி நாலு வயது தங்கமலருக்கு இருபத்தொரு வயது தங்கமலர் அழகில் பேரழகி. தங்கம் நிறத்தில் தங்கம் குணத்திலும் தங்கம்தான். தங்கம் தற்பொழுது ஆறுமாதக் கர்ப்பிணி.
தங்கராசனுக்கு கட்டுக்கோப்பான உடற்கட்டு. உறுதியான உள்ளம். துடிப்பான விடலை. முற்கோபி. சத்திய வேட்கை அவனுக்கு கடுமையான உழைப்பாளி. உழைப்பால் உயர வேண்டும் என்ற வெறிதங்கனுக்கு செழிப்பான செம்மண் தோட்டம். பத்துப் பரப்புத்தான். சிறு தானியம், காய்கறி அரைவாசித்தறையில் காசுப்பயிர் மிகுதி நிலத்தில் மாறி மாறி வெங்காயம், உருளைக் கிழங்குச் செய்கை ‘விவசாய விற்பனைப்பொருள் விற்பனைச் சங்கத்தில் ' உறுப்பினன் தங்கன் கடந்த இரண்டு வருடங்களாய் விதை உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு போக காலத்தில் கிடைக்கவில்லை
விதை கிழங்கு
63

Page 40
காலவெள்ளம்
நேரகாலத்துக்கு வந்தது.
ஆனால் உரிய காலத்தில் கிடைக்கவில்லை. போகம் தப்பித்தான் விதை கிழங்கு விவசாயிகளுக்கு கிடைப்பு. காரணம் கேட்டால். போர்க்காலச் சூழ்நிலை. சங்கச் செயலாளரும், தலைவரும் சாக்குப் போக்குச் சொல்லி தப்பித்துக்கொள்ளல். சங்கப் பொதுக்கூட்டம் இரண்டு வருடங்களாய் வைக்கவேயில்லை.
காரணம் கேட்டால்
அதற்கும் போர்க்காலச் சூழ்நிலை சாட்டு. ‘விவசாய விளைபொருள் விற்பனைச் சங்கத்தில் ' இருநூற்று எண்பதுபேர் உறுப்பினர்கள். இருநூற்று அறுபது உறுப்பினர்கள் ஒப்பமிட்டு பொதுக் கூட்டத்திற்கு கோரிக்கை. இன்று சங்க பொதுக்கூட்டம். கூட்டம் ஒன்பது மணிக்கு. கூட்டம் முடிய, இரவு பதினொரு மணியானாலும் இப்ப பயப்பிடத் தேவையில்லை இலங்கை இராணுவத்தை முகாமுக்குள்
64

நீர்வை பொன்னையன்
முடக்கி வைச்சாச்சு. இந்தியன் ஆமி தான் இராப் பகலாய் ரோந்து. இந்தியன் ஆமி எங்கடைநண்பனாச்சே, இந்தியன் ஆடமி எங்களைப் பாதுகாக்கத்தான் இலங்கைக்கு வந்தது. இயக்கங்கள் எல்லாம் அப்பிடித்தான் சொல்லுதுகள். இலங்கை அரசாங்கமும் அப்பிடித்தான் சொன்னது. இப்பதான் எங்களுக்கு நிம்மதி. இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டம் தொடங்கிவிடும். இண்டைக்கு இரண்டத்தா ஒரு முடிவு வரத்தான் போகுது. கந்தசாமியாக்களின்ரை கபட நாடகம் இண்டைக்கு அம்பலமாகப் போகுது. சங்க உறுப்பினர்கள் நம்பிக்கை. “கந்தசாமி அண்ணை எப்ப கூட்டம்? ' கந்தசாமியைத் தங்கன் கேட்டான். ‘போன மாதம் கூட்டம் வைச்சாச்சே, உனக்கு தெரியும் தானே. பிறகென்ன கூட்டம் 2 ‘
கிண்டலாய் கந்தசாமி.
65

Page 41
காலவெள்ளம்
‘என்ன எங்களை பேக்காட்டிறியா? போன மாதம் நீவைச்ச கூட்டம். உற்பத்திக் குழுக்கூட்டம். நாங்கள் கேட்கிறது. விவசாய சங்கப் பொதுக்கூட்டம் " தங்கராசன். வரியத்துக்கு ஒரு முறைதான் வருடாந்தப் பொதுக்கூட்டம் வைக்கிறது வழக்கமாச்சே, இப்பென்ன கூட்டம் " கந்தசாமி. ‘விவசாய விளைபொருள் விற்பனைச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் வைச்சு மூண்டு வரியமாச்சு “ தங்கராசன் குறுக்கீடு
தம்பிதங்கராசா இப்ப போர்க்கால சூழ்நிலை. கண்ட நிண்ட நேரமெல்லாம். கூட்டம் போடேலாது. இது உனக்கு நல்லாய் தெரியும். அப்ப நீ ஏன் அந்தரப்படுகிறாய்? அதுமாத்திரமில்லை. கூட்டம் வைக்கிறதெண்டால் பொடியளிட்டை அனுமதி எடுக்கவேணும். அவையஞக்கு நேரமில்லை. இப்ப போர்க்கால சூழ்நிலை கூட்டம் போடுறதை
பிறகு பாப்பம் "
66

நீர்வை பொன்னையன்
கந்தசாமி சொல்லி நழுவப் பார்க்கிறான்.
'சங்க நடவடிக்கையள் சம்பந்தமாய் கன பிரச்சினையள் தீர்க்க வேண்டிக் கிடக்கு. பொதுக் கூட்டத்திலைதான் இந்தப் பிரச்சினையள் பேசித்தீர்க்கவேணும். கூட்டத்தைக் கெதியாய் கூட்டு கந்தசாமி. கூட்டம் கூட்டிறதுக்கு பொடியளிட்டை ஏன் அனுமதி எடுக்கவேணும்? இது எங்கடை சங்கப் பிரச்சினைகள். பொதுக் கூட்டத்திலைதான் சங்கப் பிரச்சினைகள் எல்லாத்தையும், நாங்கள்தான் பேசித் தீர்க்கவேணும். பொடியளிட்டை ஏன் நாங்கள் போகவேனும்? ' தங்கராசன் வெட்டிப் பேசுகிறான்.
நீங்கள் கொஞ்சப்பேர் கேட்டால் கூட்டம் வைக்க வேணுமோ? " கந்தசாமி 'கந்தசாமி அண்ணை, இது எங்கடை சங்கம்.
பொதுமக்களின்ரை சங்கம்.
67

Page 42
காலவெள்ளம்
விவசாயம் செய்யிற பொதுமக்களின்ரைசங்கம். சங்கம் பற்றிய எந்த முடிவும் சங்க உறுப்பினரால்தான் எடுக்க முடியும். எடுக்க வேண்டும் உங்களைப்போல இரண்டொருவரல்ல தங்கராசன் வலியுறுத்தல் 'சங்க உறுப்பினர்களிலை அரைவாசிப்பேருக்கு மேலை கூட்டம் வைக்க வேணுமெண்டு எழுத்திலைதந்தால்தான் நாங்கள் கூட்டம் வைப்பம். நீங்கள் செய்யிறதை செய்யுங்கள். செருக்குடன் கூறுகிறான். கந்தசாமி.
அண்ணை கந்தசாமி எங்கடை சங்கத்திலை இருநூற்று அறுபத்தைஞ்சு பேர்
Ք -ւ-6ծTLգ-ԱմrlԱմ ծoւԼ-Լ-LD வைக்க வேணுமெண்டு இந்த மகஜரில் கையொப்பம் போட்டிருக்கினை.
இப்ப போர்க்காலச் சூழ்நிலையில் சிவில் நிர்வாகம் தமிழ் பிரதேசங்களிலை இல்லை எண்டு எங்களுக்கு நல்லாய் தெரியும். அப்படியிருந்தும் நாங்கள்
68

நீர்வை பொன்னையன்
எங்கடை நடவடிக்கைகளை முறைப்படி செய்யிறம். அதனாலை தான்நாங்கள் இந்த மகஜரிலை ஒரு பிரதி கூட்டுறவு ஆணையாளருக்கு, மற்றொரு பிரதி அராசங்க அதிபருக்கு அனுப்பிவைச்சிட்டம். இந்தா உனக்கு
மூலப்பிரதி. இப்பென்ன சொல்லுறாய் கந்தசாமி அண்ணை? இப்ப வருடாந்தப் பொதுக்கூட்டம் எங்களுக்குத் தேவையில்லை அவசரப் பொதுக் கூட்டத்துக்கு மூண்டு நாள் முன்னறிவித்தல் போதும். அவசரப் பொதுக் கூட்டத்தை கெதியாய் கூட்டு கந்தசாமி தங்கராசன் வற்புறுத்தல் கந்தசாமிக்கு நாடி விழுந்து போச்சு. அவசரப் பொதுக் கூட்டத்துக்கு அறிவித்தல் குடுத்தாச்சு. இன்று இரவு ஒன்பது மணிக்கு பொதுக்கூட்டம். இரவு ஒன்பது மணியாச்சு. சங்க உறுப்பினர்களும் வந்தாச்சு. இருநூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள்
69

Page 43
காலவெள்ளம்
பிரசன்னம்.
இனம் தெரியாத இரண்டு விடலைகளும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பிரசன்னமாயிருக்கின்றனர். "யாராயிருந்தாலென்ன எங்கடை விசயத்திலை தலையிடாமல் இருந்தால் போதும் தங்கராசன் தனக்கு தானே கூறிக் கொள்கிறான் 'வந்தவை கூட்டத்தைப் பார்த்திட்டு போகட்டும் கூட்டம் ஒழுங்காய் நடந்தால் போதும் " தங்கராசன் மனதிற்குள் கூடியிருந்த மக்கள் மனங்களில் பல்வேறு கேள்விகள். "விதை உருளைக் கிழங்கு எத்தினை அந்தர்கள் இரண்டு வரியமும் எங்கடை சங்கத்துக்கு
வந்தது?
வந்த விதை கிழங்கு சங்க அங்கத்தவர்களுக்கு சரியாக பங்கீடு செய்யப்பட்டதா? சங்க அங்கத்தவர்கள்அல்லாத வெளியாருக்கு விதை கிழங்கு கொடுக்கப்பட்டதா? பல்வேறு கேள்விகள்
மக்கள் மனதில்.
70

நீர்வை பொன்னையன்
மக்களின் இந்தக் கேள்விகளுக்கு நிர்வாகத்தினரால் சரியான பதில்கள் கொடுக்கப்படுமா? மக்கள் மனங்களில் இக்கேள்விகள் முட்டி மோதல். "கேள்விகளை யார் கேட்பது? கேள்வி கேட்பவனுக்கு சரியான மனத்துணிவு வேணும் யார் கேட்கப் போகின்றான் பொறுத்திருந்து பாப்பம் " மக்கள் மனதில் ஆவல். கூட்டம் தொடங்குகின்றது. தலைவர் ஒரு சில வார்த்தைகள் கூறி முடிக்கின்றார். செயலாளர் கந்தசாமி அமைதியாய் இருக்கின்றார். இரண்டு விடலைகளும் எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். தலைவருக்கும் செயலாளருக்கும் நிம்மதி. செயலாளர் அறிக்கை சமர்ப்பிப்பு. செயலாளரின் அறிக்கையிலும் பல்வேறு விடயங்கள் கூறப்படவில்லை. முக்கிய விடயங்கள் மூடி மறைப்பு. பொருளாளர் அறிக்கையிலும ஒரே குழறுபடி சங்க உறுப்பினர்களுக்கு
71

Page 44
காலவெள்ளம்
பெரும் அதிருப்தி கூட்டத்தை முடிக்க தலைவர் முயற்சிப்பு.
"செயலாளரின் அறிக்கையில் முக்கிய விடயங்கள் பல சொல்லப்படவில்லை
சொல்லப்பட வேண்டிய
பல விடயங்கள்
தற்செயலாய் தவறிவிட்டனவா? அல்லது வேண்டுமென்றே மூடிமறைக்கப்பட்டுள்ளனவா? தங்கராசனின் கேள்விக் கனைகள்
செயலாளரை நோக்கி “எத்தனைதடவைகள் விதை கிழங்கு எங்கடை சங்கத்துக்கு
வந்தது?"
தங்கராசன்
'மூண்டோநாலு தடவைகள் "சரியாய் சொல்லுகந்தசாமி கந்தசாமி மெளனம் 'கந்தசாமி அண்ணை இதென்ன சில்லறைக் கடை 6Siluunt unTUL DIT? இது சங்க விவகாரம். இதெல்லாம் சங்கப் பதிவேட்டிலை பதிஞ்சு வைக்கவேனும் விதை கிழங்கு எத்தினைதடவைகள்
வந்தன?
72

நீர்வை பொன்னையன்
யார் யாருக்கு பங்கீடு செய்யப்பட்டது? என்ற விபரங்கள் எங்கடை சங்க பதிவேட்டிலை பதிஞ்சிருக்கவேணும் ஏன் பதியேலை? தங்கராசா தொடர்ந்து கேள்விக் கணைகளை தொடுக்கின்றான். 'முதல் இரண்டு தடவைகளும் வந்த விதை கிழங்கு ஆராருக்கு குடுக்கப்பட்டது? விபரத்தைச் சொல்லு செயலாளர் கந்தசாமி அவர்களே?"
பதிலில்லை அந்தக் கிழங்குக்கு என்னாச்சு? அதுக்கான விபரங்கள் எங்கடை சங்கப் பதிவேட்டிலை எந்த இடத்திலும் இல்லை. இதுக்கான விளக்கத்தை சங்கச் செயலாளரும், தலைவரும்
இந்தச் சபைக்கு சொல்லித்தானாக வேண்டும். தலைவரும், செயலாளரும் மெளனம். கடைசியாய் இரண்டு தடவைகள் வந்த விதை கிழங்கு, எத்தினை நாட்களின் பின்
73

Page 45
காலவெள்ளம்
எங்கடை விவசாயிகளுக்கு பங்கீடு செய்யப்பட்டது? விதை கிழங்கு வந்து ஒரு மாதத்துக்கு பின்தான் எங்கடை விவசாயிகளுக்கு பங்கீடு செய்யப்பட்டது ஏன் இந்தத் தாமதம்? விதை கிழங்கு வந்து இரண்டு மூன்று நாட்களில் எங்கடை சங்க உறுப்பினர்களுக்கு ஏன் பங்கிடப்படேல்லை போகம் தப்பி கிழங்கு
நட்டால்
என்னவாகும்? இது திட்டமிடப்பட்ட சதிச்செயல். பண்ணைகளுக்கு எப்பிடி விதை கிழங்கு கிடைச்சது? பண்ணைகளில் விளைஞ்ச கிழங்கு சந்தைக்கு வந்து விற்பனையாகும் வரை எங்கடை கிழங்கு சந்தைக்கு வரக்குடாது. ஒரு மாதம் பிந்தித்தான் எங்கடை கிழங்கு
விளைந்து
சந்தைக்கு வந்தது. இந்த ஒரு மாத இடைவெளியில் பண்ணைகளில் விளைந்த கிழங்கு உச்சவிலை
பண்ணைச் சொந்தக்காறருக்கு
74

நீர்வை பொன்னையன்
அதிகலாபம்.
அதுமாத்திரமல்ல கடைசி இரண்டு தடவைகளும் ஒரு மாதம் பிந்தித்தான் எங்களுக்கு பங்கிடப்பட்டது. ஏன் இந்தத் தாமதம்? ஒரு மாதம் விதை கிழங்கு இருப்பில் இருந்ததால் விதை கிழங்கு சூடேறி அழுகல் நோய் பிடித்துவிட்டது. இதை மூடிமறைக்கத்தான் இரவிரவாய் எங்களுக்கு விதை கிழங்கு பங்கிடப்பட்டது. எங்கள் தோட்டங்களில் விதை கிழங்கு நாட்டிய கையோடை அடைமழையும் வந்து தொடர்ந்து பெய்தது. போகம் தப்பி மழை காலத்தில் எங்கள் தோட்டத்தில் நாட்டிய விதை கிழங்கெல்லாம் அழுகி நாசமாகிவிட்டது. இதனால் இரண்டு
வரியமாய்
பாரிய நட்டம் இதற்கு யார் பொறுப்பு? இதற்கு சரியான விளக்கத்தை தலைவரும் செயலாளரும் இந்த சபைக்கு தந்துதானாகவேண்டும் .
தங்கராசா,
75

Page 46
காலவெள்ளம்
உனக்கு விளக்கம் வேண்டுமா? கூட்டம் முடிஞ்ச பிறகு
நாங்கள்
சரியான விளக்கம் தாறம், இப்ப நீ பேசாமலிரு கூட்டத்தைக் குழப்பாதை வந்திருந்த இனந்தெரியாத விடலைகளில் ஒன்று விறைப்பாய் கூறியது. சபையில் சலசலப்பு. தருணம் பார்த்திருந்த தலைவர் கூட்டத்தை
முடித்து வைத்தார்.
தங்கராசா
வா இஞ்சை விடலைகளில் ஒன்று கூப்பிடுகின்றது "ஏன்?
நீவா இஞ்சை தங்கராசன் செல்கின்றான்.
'ஏறு இந்த மோட்டார் சைக்கிள்ளை 'ஏன் நான் உன்ரை மோட்டார் சைக்கிள்ள ஏறவேணும் " 'உனக்கு விளக்கம் தானே வேணும் ஏறு சைக்கிளை 'முடியாது இப்ப இஞ்சை விளக்கத்தைச் சொல்லன்"
‘ஏறடா ‘
தங்கராசனை விடலைகளிலை ஒன்று பலாத்காரமாய் தன்ரை
மோட்டார் சைக்கிளில்
76

நீர்வை பொன்னையன்
ஏற்றுகின்றான். விடலைகள் இரண்டும் தங்கராசனை கூட்டிச் செல்கின்றனர். ‘ஒரு மாதமாகப் போகிறது என்ரைதங்கன் வரேல்லை" அவனைப் பற்றி ஒரு தகவலும் தெரியேல்லையே தங்கராசனின் மனைவி தங்கமலர் தன் கணவனைத் தேடி இயக்கங்களின் ஒவ்வொரு முகாமாய் ஏறி இறங்குகின்றாள். இராப் பகலாய் அவள் கணவனைத் தேடி அலைகின்றாள்.
தங்கராசன் என்றொரு ஆள் எங்கடை முகாமில் இல்லை.
அப்பிடி ஒரு ஆள் இஞ்சை வரேல்லை. அப்பிடி ஒரு ஆளைப்பற்றி எங்களுக்கு ஒண்டும் தெரியாது ' தங்கமலர் சென்ற ஒவ்வொரு முகாமிலும் இதே பதில்தான். மாத முடிவில் தங்கமலருக்கு வெள்ளைச் சேலை
ஒன்று வந்தது!
77

Page 47
காலவெள்ளம்
தங்கமலர் அழுது குழறவில்லை. பொங்கி எழுகின்றாள் தங்கமலர். வெள்ளைச் சேலையை தீயிட்டு எரிக்கின்றாள். குமுறிக் கொந்தளிக்கும் தங்கம் கண்ணகியாய் புயலாய் பாய்கின்றாள் நீதி கேட்டு. நீதி கிடைத்தது தங்கத்துக்கு
தமிழினத்துரோகி ' என்ற அட்டை கழுத்தில் தொங்க, நெற்றியில் "பொட்டு வைக்கப்பட்டு. விளக்குக் கம்பத்தில் தொங்குகின்றாள்
தங்கமலர்.
女
78

நீர்வை பொன்னையன்
м
காவியமானான்
‘எங்களுக்கும் காலம் வரும்.
காலம் வந்தால் வாழ்வு வரும் " எந்த நேரமும் பாட்டுத்தான். 'காடுவிளைஞ்சென்னமச்சான். நமக்குக் கையும் காலும்தானே மிச்சம் "
இன்னும் எத்தனையோ பாட்டுக்கள். இயக்கப்பாட்டுகளும் தான். இயக்கக் கூட்ட மேடைகளில் சாந்தன் குழுவினரும், தமிழ் நாட்டிலிருந்து
கொண்டு வரப்பட்ட தேனிசைச் செல்லப்பா குழுவினரும் பாடிய பாட்டுக்களை அப்படியே, அதே ‘ரியூன்களில் 'பாடினான் அவன்.
அவனுக்கு மதுரக்குரல். எங்களுக்கு வியப்பு. நித்திரை செய்கின்ற நேரத்தையும் சாப்பிடுகின்ற நேரத்தையும் தவிர மற்றெல்லா நேரங்களிலும்பாட்டுத்தான். சில சந்தர்ப்பங்களில் அவனுடைய பாட்டுக்கள் எங்களுக்கு எரிச்சலைத் தரத்தான் செய்யும்.
ஆனால் என்ன செய்வது?
அவனுக்கு அது ஆத்மதிருப்தி.
79

Page 48
காலவெள்ளம்
அவன் சோம்பேறியல்ல. அவன் எந்த நேரமும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டேயிருப்பான்.
வேலை செய்து கொண்டே பாடுவான். ஒரு பாட்டை அவன் ஒரு முறை கேட்டால் போதும். அந்தப் பாட்டை அவன் அதே "மெட்டில் அப்படியே பாடிவிடுவான்.
அது அவனுக்கு கைவந்த கலை, ஒரு கொடை. அவன் பிறவிக் கலைஞனா? யாருக்குத் தெரியும்? பிற்காலத்தில் அவன் ஒரு சிறந்த பாடகனாய் வந்துவிடு வானோ?
அவனுக்கு வயது பதின்நான்கு அல்லது பதினைஞ் சிருக்கும்.
அவனுடைய சரியான வயது என்ன என்று எங்களுக்குத் தெரியாது.
அவனுடைய பாட்டானரும் உத்தேசமாகக் கூறியதும் அதே வயதுதான்.
அவனுடைய பெயர்கூட என்னவோ சுப்ரமணி என்று தான்பாட்டனார் சொன்னார்.
மலையகத் தோட்டங்களில் குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களது பிறந்த திகதியையும் பெயரையும் பதிவு செய்வது அரிது. அதற்கான வாய்ப்பு வசதிகள் அவர்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது. அதைப்பற்றி அவர்களுக்கும் அக்கறையில்லை.
கூப்பிடுவதற்கு இதமாகவும் சுலபமாகவும் இருக்க வேண்டும் என்ற வகையில் 'வசந்தன் ' என்ற பெயரில் அவனை அழைத்தோம்.
அவனும் அந்தப் பெயரை விரும்பினான். ஏற்றுக் கொண்டான்.
அவனை வசந்தன் என்ற பெயரில்தான் எல்லோரும் அழைத்தனர். அதுவே அவனுக்கு நிரந்தரப் பெயராகிவிட்டது.
ஆனால் அவனுக்கு இன்னொரு பெயருமுண்டு. சின்னப் புயல். வேலை. வேலை. வேலை. எந்த நேரமும் அவனுக்கு
80

நீர்வை பொன்னையன்
வேலைதான்.
அவன் ஒரு பொழுதும் சும்மா இருந்ததில்லை. இருக்க வும் மாட்டான்.
அவன் உழைக்கப் பிறந்தவனாச்சே, அவனென்ன அவனது சமூகமும் உழைக்கப் பிறந்த வர்கள்தான்.
அவன் எவரைக் கண்டாலும் கேலியும் கிண்டலும் செய்வான். ஆரம்பத்தில் அவர்களுக்குக் கோபம் வரத்தான் செய்தது. காலகெதியில் அவனது நல்ல குணத்தையும், மற்றவர் களுக்கு உதவி செய்யும் பண்பையும் கண்டு அவனை எல் லோரும் நேசிக்கத்தான் செய்தனர்.
அவன் ஒரு அலாதிப் பேர்வழி. அவன் அற்புதமானவன். அவனுக்கு வேலையும் பாட்டும், கிண்டலும் கேலியும் தான்.
எங்கள் அயல்வீட்டு அன்னம்மாவை சும்மா விடமாட் டான்.
அன்னம்மாஅக்காவிற்கு உடல் பருமன். அசைந்தசைந்து தான்நடப்பா.
அடைக்கோழி ", "குண்டம்மா , தாரா " என்று வசந்தன் அன்னம்மா அக்காவைக் கிண்டல் செய்வான்.
"தோட்டக்காட்டான் நட்டாமுட்டி அழிவான் , நாசமாப் போவான்' என்று அன்னம்மாஅக்கா கோபாவேசமாய் திட்டுவா. அது அந்த நேரம் மட்டும் தான்.
அன்னம்மா அக்கா எல்லாவற்றையும் உடனே மறந்து விடுவா.
'வசந்தன் குட்டி', 'செல்லக்குட்டி', 'ராசா என்று பாசமாய் வசந்தனை செல்லமாய் அழைப்பா.
அன்னம்மா அக்கா ஏதாவது உதவி கேட்டால் உடனே வசந்தன் எதுவித தயக்கமுமின்றி முழு மனத்துடன் அந்த வேலையைச் செய்து கொடுப்பான்.
இருவர் மத்தியிலும ஒரு வித பிடிப்பு, பாசம். சாப்பாட்டில் வசந்தன் அதிக கவனம் செலுத்துவதில்லை. காலைச் சாப்பாடு பத்து பத்தரை மணிக்கு. மதியச் சாப் பாடு மூண்டு மணிக்கு மேலைதான். அதுவும் நிற்பந்தத்தின்
8

Page 49
காலவெள்ளம்
நிமித்தம்தான். எல்லா வேலைகளையும் முடித்த பின்தான் சாப்பாட்டைநாடுவான்.
அவன் சாப்பாட்டுப் பிரியனல்ல. மரக்கறிச் சாப்பாடுதான். எங்களுடைய சாப்பாடு தான் அவனுக்கும். வசந்தனுக்கு எதிரிகள் எவருமில்லை. எல்லோரும் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள்தான்.
அவனுடைய நண்பர்களில் சிலர் இயக்கங்களைப் பற்றி சில வேளைகளில் கதைப்பார்கள்.
இயக்கங்களுக்குகிடையிலுள்ள வேறுபாடுகளை பேதங் கள் பற்றியோ அவனுக்கு எதுவும் தெரியாது.
எல்லா இயக்கங்களும் ஆமிக்கு எதிராய் சண்டை போடுகின்றன என்பது மட்டும்தான அவனுக்குத்தெரியும். இதனால் எல்லா இயக்கங்களும் ஒன்றுதான் என்று ஆரம் பத்தில் நினைத்தான்.
ஏதாவது ஒரு இயக்கத்தைச் சேர்ந்த போராளி வந்து விட்டால் போதும். உடனே அந்தப் போராளியுடன் அவன் நேசபூர்வமாய்ப் பேசுவான். அந்தப் போராளியின் தோளிலுள்ள துப்பாக்கியை ஆதாரத்துடன் தடவுவான். ஒரு தாய் தன் குழந்தையை செல்லமாகத் தடவிக் கொடுப்பது போல் அந்தத் துப்பாக்கியைத் தடவுவான்.
அந்தப் போராளியின் மோட்டார் சைக்கிளை ஆவலுடன் தொட்டுத்தடவிக் கொடுப்பான்.
அந்த மோட்டார் சைக்கிளில் தானும் ஏறி ஓட வேண்டும் என்ற பேராவல் அவனுக்கு. அது நிறைவேறுமா என்ற ஏக்கம் அவன் மனதில்.
இயக்கங்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் அவன் ஆர்வத்துடன் பங்குபற்றுவான், முன்னணியில் நிற்பான்.
மூன்று மாணவர்களை பேரினவாத இராணுவம் சுட்டுக் கொண்டுவிட்டது.
"பெரிசு ’ என்று அழைக்கப்படும் இயக்கம் எல்லாப் பாடசாலைகளையும் மூடிவிட்டு பகிஷ்கரித்து, கண்டன ஊர்வலத்துக்கும் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தது.
எல்லா பாடசாலைகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன.
எங்கள் ஊரிலுள்ள ஒரே ஒரு பள்ளிக்கூடம் மட்டும்தான்
82

நீர்வை பொன்னையன்
மூடப்படவில்லை. அந்தப் பாடசாலையின் அதிபர் மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்.
அவர் தண்ணிவண்டி, எந்த நேரத்திலும், பாடசாலை நேரத்திலும்கூட அவர் "கிராணத்தில் , சில வேளை முழுக் கிராணத்திலிருப்பார்.
எங்கள் ஊரிலுள்ள 'பிரமுகர்கள் பாடசாலையை மூடி, பகிஸ்கரிப்பில் பங்குபற்றும்படி அவரை விநயமாகக் கேட்கின் றனர். அவர் 'மசியவில்லை 'மறுக்கிறார்.
வசந்தன் சைக்கிளில் சென்று அந்தப் பாடசாலை அதிபர் முன்திடீரெனக் குதிக்கின்றான்.
"ஒய் மாஸ்ரர் பள்ளிக்கூடத்தை உடனே மூடு. இல்லாட்டி நான் இந்த "கிறனேற்றை ' உன்மேலை சார்ச் பண்ணுவன்
அவனது இடுப்பில் பொங்கிடமிதப்பாயிருந்த பகுதியைத் தடவியபடியே கர்ச்சிக்கின்றான் வசந்தன்.
அதிபர்திகிலடைகின்றார். தம்பி நான் பள்ளிக்கூடத்தை இப்பவே மூடிறன். என்னை ஒண்டும் செய்துவிடாதை. ‘
பதறிப்போய் அதிபர் கூறுகின்றார். உடனே பாடசாலை மணி அடிக்கின்றது. பாடசாலை மூடப்படுகின்றது. அதிபரும், ஆசிரியர்களும் பாடசாலைப் பிள்ளைகளும் கண்டன ஊர்வலத்திலும் பங்குபற்றுகின்றார்கள்.
வசந்தனுடைய இடுப்புப் பகுதியில் கட்டப்பட்டிருந்தது "கிறனைற் ‘அல்ல, அது ஒர் மாங்காய்தான்.
பின்னர் இதை அறிந்த அதிபர் எங்கள் வீட்டிற்கு வந்து முறையிடுகின்றார்.
ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள வீதியால் ராணுவம் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
வசந்தன் எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள கிடுகுவேலி மறைவில் குப்புறப்படுத்துக் கிடக்கின்றான்.
வீதியால் சென்று கொண்டிருந்த ராணுவத்தினரைக் குறிபார்த்தபடியே படுத்துக் கிடக்கின்றான்.
அவனுடைய கைகளில் 'உரபாக்கினால் ' சுற்றப்பட்ட மண்வெட்டிப் பிடி.
83

Page 50
காலவெள்ளம்
எங்கள் எல்லோருக்கும் பெரும் பதட்டம். ராணுவ அணி சென்றபின் வசந்தனுக்கு நல்ல 'சாத்து ' வசந்தன்திடீரெனக் காணாமல் போய்விடுகின்றான். அயலவர்களையும் அவனுடைய நண்பர்களையும் நாம் விசாரிக்கின்றோம்.
‘எங்களுக்கு ஒண்டும் தெரியாது. இதுதான் எல்லோருடைய பதில். நாங்கள் தேடாத இடமில்லை. எங்கள் ஊரிலும், அயல் ஊர்களிலுமுள்ள எல்லா இயக்கங்களின் முகாம்களிலும் விசாரிக்கின்றோம்.
அப்படி ஒருதரும் இஞ்சை வரேல்லை. அவனைப்பற்றி எங்களுக்கு ஒண்டும் தெரியாது.
இதே பதிலைத்தான். நான்கு இயக்கங்களின் முகாம் பொறுப்பாளர்கள் சொல்கின்றனர்.
எங்கடை ஊரைச் சேர்ந்த பாடசாலைக்குச் சென்ற மூன்று இளைஞர்களைக் காணவில்லை. மூன்று நாட்களாக அவர்கள் வீடு திரும்பவில்லை.
எங்கள் வீட்டிலுள்ள எல்லாருக்கும் பெரும் கவலை. அயலட்டைக்காரர்களுக்கும்தான்.
இரண்டு வருடங்களின் பின் ஒரு நாள் எங்கள் வீட்டின் முன் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்கின்றது.
இளைஞர்கள் இரண்டு பேர் இறங்குகின்றனர். அவர்களுடைய தோள்களில் ஏ.கே. போட்டி செவிண் துப்பாக்கிகள்.
"யார் இவர்கள்?" "இஞ்சை இவை ஏன் வந்திருக்கினம்? எங்கள் மனதில் கேள்விகள். நன்றாக உயர்ந்து வளர்ந்த ஒருவன். அவன்தான் மோட் டார் சைக்கிள் ஓடிவந்தவன். மற்றவன் குள்ளமானவன், குண்டன்.
உயர்ந்து வளர்ந்தவனுக்கு வாட்டசாட்டமான உடல் வாகு.
அரும்பு மீசை, மெல்லிதாக முறுவலிக்கின்றான்.
84

நீர்வை பொன்னையன்
அவன் முகத்தில் மகிழ்ச்சி. 'ஆர் இவன்? "ஏன் சிரிக்கின்றான்? ' ஐயா என்னைத் தெரியேல்லையா? " அவனது கேள்வி. அவனுடைய குரலில் ஒருவித கரகரப்பு. அது பருவ மாற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம்.
‘கேட்ட குரல் மாதிரிக் கிடக்கு எனக்கு. " நான்தான் உங்கடை வசந்தன் ‘. எங்களுக்கு ஒரே வியப்பு. ஆச்சரியம். இதை எங்களால் நம்பமுடியேல்லை. நம்பாமலும் இருக் கேலாமல் கிடக்கு.
உங்கடை வசந்தன்தான் நான். ' 'வசந்தன்! ஏககாலத்தில் நாங்கள் எல்லாரும் கத்துகின்றோம். எங்களுக்கு பேராச்சரியம். பெரு மகிழ்ச்சி. தான் எப்படி இயக்கத்துக்குப் போனது, எப்படி ரெயினிங் எடுத்தது, எங்கை எங்கை ஆமியோடை தாங்கள் மோதியது என்பது பற்றி விபரமாக கூறிக் கொண்டிருக்கின்றான்.
நாங்கள் ஆச்சரியத்துடன் அவன் சொல்லிக் கொண்டிருப் பதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
‘ஒரு மோதலில் எங்கடை உக்கிரமான தாக்குதலுக்கு ஆமிக்காறர் நிண்டுபிடிக்க முடியாமல் தங்கடை துப்பாக்கி களையும் எறிஞ்சுபோட்டு பின்வாங்கி ஓடிவிட்டாங்கள். பெருமையுடன் அவன் சொல்லிக் கொள்கின்றான். இண்டைக்கு நீங்கள் எங்கடை வீட்டிலை சாப் பிட்டிட்டுத்தான் போகவேணும். '
தங்கச்சியின் அன்புக் கட்டளை." அவர்கள் உடன்படு கின்றனர்.
தங்களுடைய அனுபவங்களை வசந்தன் விபரமாகக் கூறிக் கொண்டிருக்கின்றான்.
அங்கு கூடி நின்றவர்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
போராளிகளது வீரதீரத் தாக்குதல்களையும் சாதனை
85

Page 51
காலவெள்ளம்
களையும் கேட்டுக் கொண்டிருக்கின்ற எங்களுக்கு பேராச் சரியம்.
சாப்பாட்டிற்கு தங்கச்சி அவர்களை அழைக்கின்றாள். அவர்கள் வயிறாரச் சாப்பிடுகின்றார்கள். "கனநாளைக்குப் பிறகு இண்டைக்குத்தான் நல்ல உரிசையான வீட்டுச் சாப்பாடு '
பூரணதிருப்தியுடன் கூறுகின்றான் வசந்தன். பயிற்சியின் பின் வசந்தன் சென்றியில் சிறிது காலம்
951-6Ö) D.
சென்றிக் கடமையை அடுத்து களத் தாக்குதலுக்குச் செல்கின்றான்.
கப்ரின் புயல் தலைமையில்தான் களத்தாக்குதல். முதல் களத் தாக்குதலிலேயே வசந்தனின் வீராவேசத் தாக்குதல் திறன் புலப்படுகின்றது.
வசந்தனின் மின்வெட்டுத் தாக்குதல் திறனைப் பார்த்த கப்ரின் புயலுக்கு வியப்பு.
வசந்தனின் ஆற்றலைப் பாராட்டுகின்றான் கப்ரின் புயல். கப்ரின் புயலின் பாராட்டு ஒப்புக்குத்தானா? களத் தாக்குதல்களில் வசந்தன் ஆர்வத்துடன் தொடர்ச்சி யாக ஈடுபட்டு வருகின்றான்.
களத் தாக்குதல்களில் வசந்தன் சாதனைகளை நிலை நாட்டிக் கொண்டே செல்கின்றான்.
சக போராளிகள் மத்தியில் வசந்தனுக்கு செல்வாக்கும் மதிப்பும் பெருகி வருகின்றது.
"சின்னப்புயல்" என்று போராளிகள் வசந்தனை அழைக் கத் தொடங்கினர்.
சின்னப்புயல் என்று இயக்கப் பெயர் வசந்தனுக்கு நிரந்தரமாகிவிட்டது.
சின்னப்புயலின் துரித வளர்ச்சி கப்ரின் புயலுக்கு கிலேசத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் அவன் அதை வெளிக் காட்டவில்லை.
கப்ரின் புயல், சின்னப்புயலின் திறனைப் பாராட்டி அவனைத்தட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
களத்தில் வீராவேச மின்வெட்டுத்தாக்குதல்களை நடத்தி
86

நீர்வை பொன்னையன்
ஆக்கிரமிப்புப் படையினரை விரட்டி அடிப்பதில் சின்னப் புயல் போராளிகள் மத்தியில் முன்னணியில் நிற்கின்றான்.
பல சமர்களின்போது ஆக்கிரமிப்பு ராணுவத்தின் இரும் புக் கழுகுகள் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களை நடத்துகின்றன.
வான் தாக்குதல்களில் போராளிகள் காயமடைகின்றனர். சிலர் வீரமரணமெய்துகின்றனர்.
கடுமையான குண்டுத்தாக்குதல்கள் மத்தியில் காய மடைந்த போராளிகளை துணிகரமாக மீட்டு வருகின்றான் சின்னப்புயல். அத்துடன் மரணமடைந்த வீரத் தியாகிகளின் உடல்களையும் மீட்கத்தவறவில்லை சின்னப்புயல்.
சக போராளிகள் மத்தியில் சின்னப்புயலின் செல்வாக்கு மென்மேலும் அதிகரித்து வருகின்றது.
சின்னப்புயலின் துரித வளர்ச்சி கப்ரின் புயலுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
கப்ரின் புயல் விழிப்படைகின்றான். ஆனால் அவன் தனது அச்சத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சின்னப்புயலின் சாதனைகளை அவன் பாராட்டவே செய்தான். இப்பாராட்டுக்கள் உதட்டளவில்லதான் என்பது யாருக்குத் தெரியும்?
சின்னப்புயலை மேலும் மேலும் பாராட்டி, அவனைக் களத்தாக்குதல்களுக்கு அடுத்தடுத்து ஈடுபடுத்திக் கொண்டே யிருக்கின்றான் கப்ரின் புயல்,
தொடர்ச்சியாக களத்தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண் டிருப்பதினால் சின்னப்புயலின் உடல் நிலை நலிவடை கின்றது.
தனது உடல் தளர்வின் காரணமாக சின்னப்புயல் களத்திற்கு செல்லத் தயங்குகின்றான்.
கப்ரின் புயல் அவனை நிற்பந்தித்து களத்தாக்குதலில் ஈடுபடுத்துகின்றான்.
சின்னப்புயல் ஆக்கிரமிப்புப் படையினரை மின் வெட்டுத் தாக்குதலினால் விரட்டி அடித்துக் கொண்டிருக் கிறான்.
சின்னப்புயலின் பின்னால் சற்றுத் தூரத்தில் கப்ரின் புயலும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றான்.
ஆக்கிரமிப்புப்படையினரைத் துரத்தியடித்துக் கொண்டி
87

Page 52
காலவெள்ளம்
ருக்கின்ற சின்னப்புயல் திடீரெனதரையில் சாய்கின்றான். அவனுடைதலையின் பின்புறத்தில் படுகாயம். துப்பாக்கிக் குண்டு துளைத்த படுகாயத்திலிருந்து சின்னப்புயலின் செங்குருதி பீறிட்டுப் பாய்கின்றது.
அவனுடைய செங்குருதி தாயக மண்ணைக் குளிப்பாட்டுகின்றது.
ஏ.கே.போட்டி செவினை சின்னப்புயலின் கரங்கள் இறுகப்பற்றிப்பிடித்துக் கொண்டே இருக்கின்றன.
சின்னப்புயலின் சக போராளிகள் சோக சாகரத்தில், கப்ரின் புயலின் மனதில் ஒருவித பதகளிப்பு. சின்னப்புயலின் முகத்தைப் பார்த்த அவனுடைய மனதில் பயபிதி. அதை வெளிக்காட்டாமலிருக்க அவன் முயல்கின்றான்.
வசந்தனின் உடல் எங்கள் ஊருக்குக் கொண்டு வரப் படுகின்றது.
மக்கள் அலை அலையாக வந்து குவிகின்றனர். ஊரே சோகமயம். தங்கள் உறவுகளில் ஒன்றை இழந்துவிட்டதான துயரம் அனைவருக்கும்.
வசந்தனுக்காக உருகுகின்றனர் மக்கள். 'எனக்குப் போட்டியாய் கிளம்பிய இவன்துலைஞ்சான். கப்ரின் புயலின் உள்ளத்தில் உவகை.
இனி எனக்கு எவனும் போட்டியாக இல்லை . புயலுக்கு மகிழ்ச்சிப் பூரிப்பு. வசந்தன் மக்களின் இதயங்களில் அழியா ஒவியமானான்.
女
88

நீர்வை பொன்னையன்
தெளிவு
‘என்ன? அவ்வளவு அவசரமோ? ' மெளனம் 'ஏனிந்த அவசரம்? ' மூண்டு நாலு வரிசமாய்ப்பூட்டிக் கிடந்ததே
இவ்வளவு காலமாய் நீ அவசரப்படேல்லையே. இப்ப ஏனிந்த அவசரம்? '
"மோகன் வரப்போறான். என்ட ஆதங்கமோ? பதில்லை.
இந்த அமுதசுரபியின் “கேற் மூன்று நாலு வரிசமாய்ப்பூட்டிக் கிடக்கு.
வீட்டிலேயுள்ளநாங்கள் வெளியாலை போகேக்கையும் உள்ளை வரேக்கையும்தான் கேற் பூட்டுத்துறந்து பூட்டப்படும்.
நீ இஞ்சை வந்தபிறகு என்ரை சொந்தக்காறரோ, அயலவர்களோ இந்த அமுதசுரபிக்கு வாறேல்லை. ஏன்?
உங்கடை மச்சாள்மாரை விட்டிட்டு நீங்கள் என்னைக் கலியாணம் கட்டினதெண்ட கோவம் அவையஞக்கு எண்டு நீ சொன்னாய்.
நீ இஞ்சை வரமுந்தி இந்த
89

Page 53
காலவெள்ளம்
கோப்பாய் மாப்பாண முதலியாற்றை அமுதசுரபி வீட்டு கேற் ஒருநாளும் பூட்டப்படுகிறதில்லை.
ஆடுமாடுகள் உள்ளை வராமலிருக்க கேற் சாத்திக் கொளுவித்தான் கிடக்கும். எந்த நேரமும் ஆர் வேணுமெண்டா லும் வரலாம். போகலாம்.
நீ வந்த பிறகு இந்த கேற் நிரந்தரமாய் பூட்டித்தான் கிடக்கு.
கேற் ஏன் பூட்டினதெண்டு துவக்கத்திலை நான் உன்னைக் கேட்டன்.
காலம் கெட்டுப் போச்சு. இப்ப சில இடங்களிலை பகலிலையும் களவுகள் நடக்குது. எதுக்கும் முன் எச்சரிக்கை யாய் இருக்கிறது நல்லதெண்டு நீ சொன்னாய். நான் நம்பினன்
நீ வாறதுக்கு முன்னம் எந்த நேரமும் ஆர் வேணு மெண்டாலும், உள்ளை வரலாம். போகலாம்.
ஆர் வந்தாலும் கடைசி தாக சாந்தியாவது தீர்த்துத்தான் போவினை.
மோர் அல்லது எலுமிச்சம் பழத்தண்ணி குடிச்சுத்தான் போவினை.
ஆனா இப்ப? ஒருதரும் உள்ளை வரமுடியாதே. முந்தி வீட்டிலை சாப்பாட்டுப் பஞ்சமேயில்லை. சொந்தக்காரர்கள், அயலவர்கள், வெளியார் எவராயிருந் தாலும் பசியாறித்தான் போவினை. இல்லாட்டி பெரியம்மா 65LIT.
ஒரு நாளைக்கு குறைஞ்சது மூன்று நாலு கொத்து அரிசி வேகும்.
என்ன வீட்டிலையுள்ள அஞ்சாறு பேருக்கு இவ்வளவு அரிசியா?
எங்கடை மாடுகளைப் பராமரிக்கிறதுக்கு மருது, வள வைக் கூட்டி சுத்தம் பண்ணிறதுக்கும் வெளி வேலையள் செய்யிறதுக்கும் மருதின்ரை பெண்சாதி. தொட்டாட்டு வேலை யள் செய்யிறதுக்கு அவையின்ர பிள்ளையஸ். இரண்டு. வயல் வேலை செய்யிற இளையவன். இடைக்கிடை சொந்தக்காரர் மாறிமாறி வருவினம். எல்லாருக்கும் மதியச் சாப்பாடு எங்கடை வீட்டிலைதான்.
90

நீர்வை பொன்னையன்
இதெல்லாத்துக்கும் எங்கடை வயல் நெல்லுத்தான். சோத்துக்கு மொட்டைக் கறுப்பன் அரசி. பலகாரத்துக்கு சாதாரண நெல்லரிசி.
யாராவது சொந்தக்காரரிலை அல்லது அயலட்டையிலை பிள்ளை பெத்தால் எங்கடை வீட்டிலையிருந்துதான் மொட் டைக் கறுப்பன் நெல்லு போகும்.
காலையிலை புட்டு அல்லது இடியப்பம், இடைக்கிடை தோசை அல்லது இட்லி. சனி ஞாயிறிலை அப்பம்.
அப்பத் தேங்காய் மரங்கள் இரண்டு மூண்டு எங்கடை வளவுக்கை நிக்குது. பதினைந்து தென்னையள்.
‘மால் 'மூலைக்கை செத்தல் தேங்காய்க் குவியல். என்ரைஐயா, அம்மாவாக்கடை திவசம் ' எண்டால் ஒரு மூட்டை அரிசிக்கு மேலை அவிபடும்.
குறைஞ்சது மூன்று "சபை இருந்தெளும்பும். சொந்தக்காரருக்கும் அயலட்டைகளுக்கும் பெட்டி பெட்டியாய் திவசச்சோறு போகும்.
மருது, இளையவி அவையின்ரை குடும்பங்களுக்கும் சொந்தங்களுக்கும் பொட்டியளிலை சோறு போகும்.
எங்கடை ஊரிலையுள்ள மூண்டு கோயில்களின் தேர்த் திருவிழாக்கள் உபயம் நாங்கள்தான்.
மூன்று திருவிழாக்களையும் நடத்திற செலவுக்காக மூண்டு கிணத்தடித் தோட்டங்கள் குத்தகைக்கு குடுத் திருக்கிறம். அந்த மூன்டு தோட்டங்களையும் கோயில் கிணத் தடித் தோட்டங்கள் எண்டு எங்கடை பாட்டனார் தில்லையம் பலம் எழுதிவைச்சார்.
கோயில் திருவிழாப் பலகாரங்கள் எங்கடை சொந்தங் களுக்கும் அயலட்டைகளுக்கும் மருது இளையவியாக்களுக் கும் தாராளமாகக் கொடுத்தனுப்பப்படும்.
எங்கடை வீட்டிலை ஏதாவது நன்மை தீமையெண்டால் ஐஞ்சாறு நாட்கள் அயலவர்களதும் சொந்தக்காரர்களதும் வீடுகளில் உலை ஏறாது எல்லாருக்கும் எங்கடை வீட்டிலை தான் மூன்டு வேளையும் சாப்பாடு.
ஆனா நீ வந்த பிறகு மூன்டு நாலு வரியங்களாய் காலையிலை பானும் பட்டரும் அல்லது ஜாம்.
அஞ்சாறு பேருக்கு ஒண்டரை றாத்தல் பாண் போதும். மதியச் சாப்பாட்டுக்கு இரண்டு சுண்டு சம்பா அரிசி
91

Page 54
காலவெள்ளம்
போதும்.
நாட்டரிசிச் சோறு செமியாதாம். இரவிலை மெல்லிய சாப்பாடு. பால், தயிர், மோர், நெய் எல்லாம் மறந்த கதையாச்சு. இப்ப எங்கடை வீட்டிலை அங்கர் அல்லது நெஸ்பிறே மாப்பால்தான்.
முந்தி மூன்டு நாலு பசுமாடுகள் எங்கடை வீட்டிலை. வயல் உழுகிறதுக்கும் வண்டி இழுக்கிறதுக்கும் ஒரு சோடி எருதுகள்.
பெரியம்மாவைச் சுற்றி ஏழெட்டுக் குழந்தைகள். உறவினர்களதும் அயலவர்களினதும் குழந்தையள்.
பெரியம்மா மாம்பழத்தோலைச் சீவி, பழத்தை வெட்டி குழந்தைகளுக்குக் குடுப்பா.அல்லது பலாப்பழச்சுளைகளைப் பிடுங்கிக் குடுப்பா.
பிள்ளையஞக்குக் கொள்ளை ஆனந்தம். எங்கடை வளவு பசுஞ்சோலை. மா, பலா, தென்னை போன்ற வான்பயிர்கள், எலுமிச்சை, தோடை போன்ற மரங்களும் நாலஞ்சு வளவைச் சுற்றி தென்னை, செவ்விளணி, கமுகு மரங்களும்.
மாம்பழக் காலத்திலை வீட்டு மூலைக்கு மூலை மாம் பழக் குவியல்கள்.
கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட் மாம்பழக் குவியல்கள்.
அயலவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எங்களை வளவிலும் வயல்களிலும் வேலை செய்யிறவர்கள் எல்லாருக் கும் பெரியம்மா மாம்பழங்கள் குடுத்தனுப்புவா,
இப்ப எல்லா மாமரங்களும் பிலா மரங்களும் போக காலத்திலை யாழ்ப்பாணத்திலையிருந்து வாற பழ வியாபாரி களுக்கு மரத்தோடை குத்தகைக்கு விற்கப்பட்டுவிடும்.
நோயாளிகளுக்கும் கோயில் அபிஷேகத்துக்கும் குடுக்கப் பட்டு வந்த செவ்விளநீர் குலைகள் வெளியேயிருந்து வருகிற வியாபாரிகளுக்க விற்கப்படுகின்றன.
எங்கடை வயல்கள் மூண்டும் குத்தகைக்கு குடுக்கப்பட்டு விட்டன.
வயல்களில் முதல் வரியம் நல்ல விளைச்சல். அந்த
92

நீர்வை பொன்னையன்
வரியம் மாத்திரம்தான்.
அடுத்த வருடம் வயல் குத்தகைக்கு இரட்டிப்பாக் கப்பட்டது.
வயல்களைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் இதற்கு உடன்படவில்லை.
வயல்களுக்குள் இறங்க வேண்டாமென்று அவர்களுக் குக் கூறப்பட்டது. அவர்கள் இரண்டு வரியங்களாக வயல் களுக்குள் இறங்கவில்லை. மற்றவர்களையும் அவர்கள் வயல்களுக்குள் இறங்கவிடவில்லை.
விளைவு?
மூன்டு வரியங்களாய் வயல்கள் விதைக்கப்படவில்லை. அவை காடுபத்துகின்றன.
தோட்ட நிலங்களின் குத்தகையும் இரண்டு மடங்காக்கப்பட்டன. மூன்டு வரியங்களாய் தோட்டங்களும் பயிரிடப்பட வில்லை. அவை தரிசாய்க் கிடக்கின்றன.
பெரியம்மாதான் வயல் நிலங்களதும் தோட்ட நிலங்களதும் குத்தகையைக் கூட்டினதெண்டு நான் நினைச்சுக் கொண்டிருக்கிறன்.
இதெல்லாத்தையும் பாத்த மருது குழம்பிப் போனான்.
நாச்சியார், இந்தக் கூத்தெல்லாம் நடக்குதே. நீங்கள் ஏன் பேசாமலிருக்கிறியள்? பெரியம்மாவை மருது கேட்டுது.
'மருது, இது அவையின்ரை குடும்ப விடயம். நாங்கள் இதிலை தலையிடக்கூடாது. நீயும் பேசாமலிரு
பெரியம்மாதிட்டவட்டமாய் கூறிப்போட்டா. நாலு வரியங்களுக்கு முந்தி நீ எங்கடை கோப்பாய் கிறிஸ்ரியன் கல்லூரியிலை படிப்பிக்க வந்தாய்.
எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு சிறிய வீடு. நீயும் உன்ரைஅம்மாவும் அங்கைதங்கினியள். கொஞ்ச நாளைக்குப் பின் உன் அண்ணனும் அவற்றை குடும்பமும் வந்து உங்களோடைதங்கிச்சினை.
ஒருநாள் உங்கள் அண்ணன் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆங்கிலச் செய்திப் பத்திரிகை வாசிப்பதற்குத்தான் வந்தார். அன்று தொடக்கம் தினசரி மாலையில் பத்திரிகை வாசிப்பதற்கு அவர் வந்து கொண்டிருந்தார்.
93

Page 55
காலவெள்ளம்
‘என்ரை தங்கச்சி ஆங்கிலம் படிக்க விரும்புகிறாள். ம 1ங்களால் உதவ முடியுமா?
உன்ரை அண்ணன் கேட்டார். நான் உதவ உடன்பட்டன். விளைவு? ஒட்டகம் கூடாரத்துக்கை தலை வைச்ச கதையாச்சு. அந்தவேளை மோகன் உங்களோடை வரேல்லை. எனக்காக என்ரை மூன்டு முறை மச்சாள்மார் காத்திருந் தினை.
நீ வந்ததாலை அவை நிரந்தரமாகவே பெருமூச்சு விடவேண்டி வந்துது.
இண்டுவரை அவை கல்யாணம் கட்டேல்லை. நீ வந்து இரண்டு மூன்டு மாதங்களாய் எங்கடை குடும்ப நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தாய்.
பெரியம்மாக்கள் உன்னை மனப்பூர்வமாய் தங்கள் மருமகளாய் ஏற்றுக் கொள்ளும்வரை நீகாத்திருந்தாய். பின்னர் படிப்படியாய் பெரியம்மாவின்ரை நடவடிக்கைகளிலை நீ தலையிட ஆரம்பிச்சாய். இது எனக்குத் தெரியாது.
ஒரு நாள் திடீரென எங்கடை அமுதசுரபியின் 'கேற் 4 - L'ul-l-g5).
"ஏன் கேற் பூட்டிறியள் எண்டுதான் கேட்டன். காலம் கெட்டுப் போச்சு. இப்ப சில இடங்களிலை பட்டப் பகலிலும் களவுகள் போகுதாம். எதுக்கும் முன்னெச்சரிக்கையாய் இருக்கிறது நல்லதுதானே நான் உன்ரை சொல்லை ஏற்றுக்கொண்டன்.
அந்த வேளையில் நான் உன்ரை உள்நோக்கத்தை புரிந்து கொள்ளேல்லை.
அடுத்தநாள் வளமையாய் எங்கடை வீட்டை வாற குழந்தையள் வந்துதுகள்.
கேற்பூட்டிக் கிடந்துது. “பெரியம்மா! பெரியம்மா! அதுகள் கூப்பிட்டுதுகள். பதிலில்லை. கேற்றும் திறக்கப்படவில்லை.
ஒரு மூலையிலிருந்து பெரியம்மா அழுதுகொண்டிருந்தா. எனக்கொண்டும் விளங்கேல்லை.
"ஏன் கேற் திறக்கேல்லை?
94

நீர்வை பொன்னையன்
பெரியம்மாக்களுக்குநீ சொன்னதாய் பிறகுதான் எனக்குத் தெரியவந்தது.
மூண்டு நாலு நாட்கள் குழந்தைகள் வந்து கத்திப்போட்டு ஏமாற்றத்துடன்திரும்பின.
இந்தப் பஞ்சப் பிசாசுகள் வந்து எந்த நேரமும் கத்தித்
துலையுதுகள். அமைதியைக் குலைக்குதுகள். எங்கடை நிம்மதியைக்கெடுக்குதுகள். அதுதான் கேற் திறக்கேல்லை "
உனக்கு முதல் வெற்றி.
‘என்ரை இரண்டாவது மகள் செல்வி பெரியபிள்ளை யாகிவிட்டாள். '
அயல் வீட்டு அன்னம்மா வந்து ஆனந்தத்துடன் கூறினா. பெரியம்மாவுக்கு மனம் நிறைந்த சந்தோசம். “கொஞ்சம் பொறு அன்னம்மா " உள்ளை சென்றா பெரியம்மா. ஆறு கொத்து மொட்டைக் கறுப்பன்நெல். ஒரு கொத்து உழுந்து, ஒரு போத்தில் ஆனைக்கோட்டை விளக்கின நல்லெண்ணையுடன் வருகின்றா.
அன்னம்மா சந்தோசத்துடன் அவற்றை வாங்குகின்றா. "கொஞ்சம் பொறு. புயலாய் வந்த நீ எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு உள்ளே செல்கின்றாய்.
அந்தப் பிள்ளைக்கு தண்ணி வாக்கிற அண்டைக்கு ஐஞ்சோ பத்தோ குடுத்தா போதும். இப்ப இதெல்லாத்தையும் கொண்டுபோய் அவை எல்லோரும் பங்குபோட்டுத் திண்டிடு வினை.
நீ சொன்னாய். அன்னம்மா ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா. பெரியம்மா இடிஞ்சுபோய் இருந்த இடத்திலே இருக் கின்றா.
இப்பிடி அள்ளி அள்ளிக் குடுத்துக் கொண்டிருந்தா, எங்கடை குடும்பம் கெதியிலை குட்டிச் சுவராய்த்தான் போகும்.
உன்னை நான் கேட்டதுக்கு நீ இப்படிக் கூறி என்ரை வாயை அடைச்சுப் போட்டாய்."
95

Page 56
காலவெள்ளம்
“பெரியம்மா, எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. ஓடோடி வந்து ஆனந்தத்துடன் கூறுகின்றான் மருதன். அப்படியா! ' பெரியம்மாவுக்கு சரியான சந்தோசம். அரைப்பறை மொட்டைக் கறுப்பன் நெல் லைக்குகொண்டு வாறா.
நீ அந்த நெல்லை எடுத்துக்கொண்டுபோய் வைச்சிட்டு பத்து ரூபாவை மருதனுக்கக் குடுக்கிறாய்.
மருதன் அந்தக் காசைக் கைநீட்டி வாங்கவில்லை. திரும்பிப்போட்டான்.
பெரியம்மா என்ன செய்வதெண்டு தெரியாமல் திகைத்த வளாய் நிற்கின்றா.
‘எங்கடை குடும்ப விடயங்களிடை நீங்கள் இனிமேல் தலையிட்டால் நான் எங்கடை மாமா வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவன். '
நீ பெரியம்மாவை எச்சரித்தாய். இது எனக்குத் தெரியாது. பெரியம்மாக்களும் எனக்குச் சொல்லேல்லை.
படிப்படியாய் நீ பெரியம்மாவை அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தி. மிரட்டி, அவவை இந்த வீட்டிலையிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளிட்டாய்.
பெரியம்மா இது பற்றி ஒரு வார்த்தை கூட எனக்குச் சொல்லேல்லை.
தம்பி, இவ்வளவு காலமும் நாங்கள் உன்னோடை இருந்தம். சிறுவயதிலேயே நீ உன்ரை பெற்றோரை இழந் திட்டாய். நாங்கள் உன்னை வளத்து வழிகாட்டி படிப்பிச்சு எல்லாரும் உன்னை மதிச்சு பாராட்டக் கூடிய மனிசனாக்கி விட்டிருக்கிறம் "
இப்ப நீ குடும்பக்காறன்,இனி உன்ரை பெண்சாதிதான் உன்னைக் கவனிப்பா. இந்தக் குடும்பப் பொறுப்பை இனி அவதான் எடுத்து நடத்த வேணும். அதுதான் முறை.
அப்ப நீங்கள்? இனி நாங்கள் என்ரை மகனோடை இருக்கப் போறம். பக்கத்திலைதானே அவன்ரை வீடும் "
அவவைப் போக வேண்டாம் எண்டு எவ்வளவோ
96

நீர்வை பொன்னையன்
மன்றாடி அழுது குழறித் தடுத்துப் பார்த்தன்.
அவ கேட்கேல்லை. என்னை விட்டிட்டுப் போட்டா. எனக்கு தாய்க்குத் தாயாயிருந்து என்னை ஆளாக்கின பெரியம்மா என்னை விட்டுட்டுப் போனது எனது மனதை சரியாய்ப் பாதிச்சுது. நான்நடைப்பினமாய்த்தான்திரிஞ்சன்.
நீ வந்து ஆறு மாதங்களுக்குள் பெரியம்மாவையும் பெரியப்பாவையும் என்னட்டையிருந்து பிரிச்சு வெளியேற்று வதில் வெற்றி கண்டாய்.
தாங்களாய் விரும்பித்தான் பெரியம்மாக்கள் அண்ண னோடை இருக்கப் போனவை எண்டு நான் நினைச்சுக் கொண்டிருந்தன். பெரியம்மான்ரை சொல்லைக் கேட்டு நான் பொறுமையாயிருந்தன்.
இப்ப நான்தனி மரம் சித்தப் பிரமை பிடிச்சவனாய்த்திரியிறன். இப்ப நீநினைத்தபடி என்னை ஆட்டிப் படைக்கிறாய். உன்ரை அண்ணனும் அவற்றை குடும்பமும் எங்கடை வீட்டிலை வந்து நிரந்தரமாய் குடியேறிட்டனை. நீங்கள் எல்லாரும் சேர்ந்து கும்மாளமடிக்கிறியள்.
இப்ப அல்லி ராஜ்யம். ஒரு நாள் நான் எங்கடை வீட்டுக் கிணத்துக்கை தவறி விழுந்து போனன்.
விசரிலை நான் கிணத்துக்குள் குதிச்சிட்டன் எண்டு கதை கட்டி விட்டியள். எனக்கு பயித்தியப் பட்டம் கட்டி விட்டியள்.
எங்கடை சொத்தெல்லாத்தையும் அபகரிக்கத்தான் அப் பிடிச் செய்தியள்.
வீடுவாசல், கானி பூமி, பணக் குடுக்கல் வாங்கல் சகல பொறுப்புக்களையும் பெரியம்மாக்களிடமிருந்து பறிச்சிட் டாய்.
என்ரை சம்பளத்தைக்கூட நீதான் இப்ப எடுக்கிறாய். பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்கக்கூட எனக்குப் பணமில்லை.
எங்கடை சமூகமுன்னேற்ற சங்கத்துக்குக்கூட இப்ப நான் நிதி உதவி செய்யிறேல்லை.
97

Page 57
காலவெள்ளம்
வயல்கள் தோட்டங்களின் குத்தகைக் காசைக்கூட நீதான் வாங்கி எடுக்கிறாய்.
நான் இப்ப சரி பிழை ஒன்றும் பேசுறேல்லை. நீ பிழை விடமாட்டாய் எண்டுதான் நான் நம்பினனான். ஏனென்டால் எனக்கு உன்னிலை அவளவு நம்பிக்கை.
கல்லூரியிலை கூட நீ ஒழுங்காய் படிப்பிக்கிறேலை. அதிபர் அடிக்கடி முறையிடுகிறார். எங்கடை முகத் துக்காக அவர் பொறுமையாயிருக்கிறார். உனக்கு மகளிர் மன்ற வேலையள். எந்த நேரமும் நீ வெளியாலைதான். மகளிர் மாநாடுகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் எண்டு எப்ப பார்த்தாலும் நீ வெளியாலை தான்.
கொழும்பு, கண்டி, திருமலை, மட்டக்களப்பு எண்டு சுத்தித்திரியிறாய்.
உங்கடை மன்றத்தின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள், அறிக்கைகள், உங்கள் படங்கள் எல்லாம் அடிக்கடி செய்திப் பத்திரிகைகளிலும் றேடியோவிலும் வரவேண்டும் எண்ட வெறியுடன் நீ செயல்படுகிறாய். உன்னை முன்நிலைப் படுத்தித்தான் உன்ரை செயல்பாடுகள். ஆனால் எங்கடை கிராமத்திலையுள்ள பெண்களின் வாழ்வில் எவ்வித முன் னேற்றமுமில்லை. உன்னைச் சுற்றியுள்ள ஒரு சின்னக் கூட்டம் பெண்கள்தான் முன்னேறியுள்ளதாகப் பாவனை செய் கிறார்கள்.
எனக்குப் பயித்தியம் எண்டு கூறி என்னை என்ரை சொந்தக்காரர்களிடமிருந்தும் என்ரை நண்பர்களிடமிருந்தும பிரித்து என்னைத்தனிமைப்படுத்திப் போட்டாய்.
இந்த ஊரையே முன்னேற்ற வேண்டும் எண்ட லட்சியத் துடன் போராடி வருகின்ற சங்கத்திலை நான் மாணவனாக இருந்த காலத்திலேயேயிருந்தே செயல்பட்டு வந்தன்.
எனக்குப் பயித்தியம் எண்டு சொல்லி என்னை என்ரை சமூகத்திலையிருந்து பிரித்துத் தனிமைப்படுத்திப் போட் டாய். என்னை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திப் போட்டாய். இண்டைக்கு நான் நிற்கதியானநிலையில்.
இண்டைக்கு தைப்பொங்கல். எங்கடை சொந்தக்காரர், அயலவர்கள், நண்பர்கள் எல்லாரும் ஒண்டு சேர்ந்து பொங்கல் நாளைக் கொண்டாடிக் கலகலப்பாய் இவ்வளவு காலமும் இருந்து வந்தம்.
98

நீர்வை பொன்னையன்
நீ வந்த பிறகு எல்லாம் போச்சு
இப்ப பகல் ஒரு மணி.
இண்டைக்கு காலை பத்து மணியளவில் மருது றோட் டாலை போறதை எங்கடை கேற்றடியிலை நிண்ட நான் கண்டன்.
'மருது இஞ்சை வாரும் "
அது வரத் தயங்கியது.
நான் கட்டாயப்படுத்திக் கூப்பிட்டன்.
பதட்டத்துடன் வந்தது.
நீங்கள் எல்லாரும் ஏன் எங்கடை வீட்டுக்கு வாறேல்லை. பெரியம்மா உங்களை வரவேண்டாமெண்டு சொன்னவவா?
மருது பேசாமல் நிக்குது.
சொல்லும். பெரியம்மாவா வரவேண்டாமெண்டு சொன் னவ2 ‘
ஐயோ தம்பி, அப்பிடிச் சொல்லாதையும். அந்தப் புண்ணியவதியிட்டை இப்படிப்பட்ட அற்பத்தனம் எள்ளளவு மில்லை. உங்களை பரம்பரையிலை இப்படிப்பட்ட கேவல மான, கொடுமையான மனப்பான்மையுடைய ஒருதரிட்ட கூடக் காணேலாது.
அப்ப ஆர் உங்களை வரவேண்டாமெண்டு சொன்னது.
"சின்னம்மாதான் எங்களை வரவேண்டாமெண்டு சொன்
(656) /
"ஏன் அப்பிடிச் சொன்னா?" அது எங்களுக்குத் தெரியாது தம்பி" "பெரியம்மாட்டைநாங்கள் முறையிட்டம் ‘எங்கடை தம்பி நிம்மதியாயிருக்க வேணுமெண்டால்
நீங்கள் ஒருதரும் இனி இஞ்சை வராதேங்கோ. இந்த விசயத்தை தம்பிக்கும் சொல்லிப்போடாதேங்கோ'
மண்டாட்டமாய் சொன்னா அந்தப் புண்ணியவதி அதுதான்நாங்கள் ஒருதரும் இஞ்சை வாறேல்லை.
‘என்ன சொல்லுறாய்? இது உண்மையா" அது மாத்திரமில்லை தம்பி. பெரியம்மாக்கள்தாங்களாய் விரும்பி இந்த வீட்டை விட்டுட்டுப் போகேல்லை. சின்னம்மாவும் அவவின்ரை அண்ணன்களும் பெரியம்மாக்
99

Page 58
காலவெள்ளம்
களுக்கு சரியான நெருக்கடிகள் குடுத்துக் கொண்டிருந்தினை. அவையின்ரை தொல்லையள் தாங்கேலாமல்தான் அவை உங்கடை விட்டை விட்டுப் போனவை. நீர் ஆத்திரப்படுவீர் எண்டுதான் பெரியம்மாக்கள் இந்தக் கொடுமைகளை உங்களுக்குச் சொல்லேல்லை. அதாலைதான் அவை இந்த வீட்டை விட்டுப் போனவை'
மருது மனம் வெதும்பிச் சொல்லிப்போட்டு போனான். இப்ப ஒரு மணி. நீங்கள் வந்து கேற்றைத் திறவெண்டு
என்ன வெய்யில் வெக்கையாய்க் கிடக்கே? நாலஞ்சு வரியமாய் எனக்கும் பெரியம்மாக்களுக்கும் எப்படி வெக்கையாயிருந்திருக்கும்? நாங்கள் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பம்?
இப்ப நேரம் ஒரு மணி. இவ்வளவு நேரமும் ஏறுவெய் ш5)6iо.
இனி இறங்கு வெய்யில். எங்களுக்கல்ல உங்களுக்கு. என்ன றோட்டாலை போறவை வாறவை எல்லாரும் கேற்றுக்கு வெளியிலை கனநேரமாய்நிக்கிற உங்களைப் பாத்து கேலியாய் சிரிக்கினையா?
உங்கடை மானம் போகுதா? உங்களுக்கு மானம் எண்ட ஒண்டு இருந்தால் தானே போறதுக்கு?
கொஞ்சம் பொறுங்கோ பெரியம்மாக்கள் வந்திடுவினை. எங்கடை தோட்டங்களையும் வயல்களையும் குத்த கைக்கு எடுத்து செய்யிறவையும் வந்திடுவினை.
பெரியம்மாக்கள் வந்திட்டினை. மருது இளையவியாக்களும் வந்திட்டினை நான்தான் எல்லாரையும் வரச் சொன்னான். சரி. இப்ப நான் கேற்றை திறக்கிறன். எல்லாரும் வீட்டு விறாந்தையில்.
'வீட்டுத் திறப்பை எடுத்துவா" நான்.
"ஏன்?"
100

நீர்வை பொன்னையன்
நீ.
திறப்பைக் கொண்டா, 'நான் சொல்லுறன்.
நீ மரமாய் நிக்கிறாய்.
‘என்ன? எனக்கு திரும்பவும் விசராக்கிப்போட்டு தெண்டு நினைக்கிறியளா? '
நான் அமைதியாக மால் பக்கம் போறன்.
கொஞ்ச நேரத்திலை திரும்பிவாறன்.
என்ரை கையிலை மாடு சாய்க்கிறதுவரம் கம்பு.
பதறிப்போய்நீவீட்டுத்திறப்பை எடுத்துவாறாய்.
‘எங்கடை வீட்டுத் திறப்பை பெரியம்மைாவிட்டை குடு "
"ஏன்?
திகைப்புடன் நீ,
இண்டையிலையிருந்து பெரியம்மாதான் எங்கடை வீட்டுக்குப் பொறுப்பு. அத்தோடை எங்கடை காணி, பூமி, குடுக்கல் வாங்கல் எல்லாம் அவவின்ரை பொறுப்பிலைதான்"
அப்ப நான்? பதறிப்போய்நீ
'நீ மாத்திரமில்லை உன்ரைஅம்மா, அண்ணன், அண்ணி அவையின்ரை இரண்டு பிள்ளையஸ் ஒருதருக்கும் இந்த வீட்டிலை இனி இடமில்லை. எல்லாரும் வெளிக்கிட்டிட வேணும் " உறுதியாய் நான் சொல்லுறன்.
"ஏன்?
அதிர்ச்சியுடன் நீ.
அது அப்படித்தான்'
அப்ப நாங்கள் எங்கை போறது?
நீங்கள் எல்லாரும் அக்கராயனுக்குப் போங்கோ "
அங்கை ஏன்?
அக்கராயனுக்கு மோகனதாஸ"ம் வாறானாம். உன்னை அவன் அங்கை வரட்டாம் "
'மோகனதாஸா?
‘என்ரை முறைமச்சாள்மார் மூண்டு பேரிலை ஒருத்தியை உன்ரை மோகனதாஸ்"க்கு கலியாணம் கட்ட வைக்கச் சொல்லி நீ என்னை எவ்வளவு பாடுபடுத்தினாய்? அதுக்கு
101

Page 59
காலவெள்ளம்
நான் அடியோடை மறுத்திட்டன். '
‘அெகாலைக் குற்றத்துக்காக மறியலுக்குப் போன ஒருதனைக் கலியாணம் கட்ட எந்தப் பெண்தான் சம்மதிப் ц Јптоўт2 “
அக்கராயன் குளத்திலை மோகனதாஸின்ரை தகப்பனுக்கு நாப்பது ஏக்கர் வய்ல் காணியும் வீடு வளவும் கிடக்காடம் "
'டேமாகன் இன்னும் மூண்டு நாளையிலை அக்கராயனுக்கு வாறானாம். '
'வதனா. எண்ட பொம்பிளையையும் அக்கராயனுக்கு வரச்சொல்லி மோகன் கடிதம் எழுதியிருக்கிறானாம்
'ஆர் அந்த வதனா? பீதியுடன் அவள் கேட்கிறாள் 'எனக்கெப்படித் தெரியும்? ' 'எனக்கொண்டும் புரியேல்லையே. ஒருவேளை மோகன் எனக்குத் தெரியாமல் அந்த வதனாவை வைச்சிருந்தானோ?
அவளுக்கு ஒரே குழப்பம் பதற்றம். 'வதனா நான் மறியலுக்குப் போக முந்தி, இரண்டு வரியங்களாய் நீ என்னை வைச்சிருந்தாய். அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. இன்பமானவை.
அந்த இன்ப நாட்களின் இனிய நினைவுகளை என்ரை இதயத்தின் புனித இடத்தில் வைத்துப் பூசித்தபடியே ஆறு வரியங்களை நான் சிறையில் கழிச்சுவாறன்"
இன்னும் மூன்று நாட்களிலை நான் விடுதலையாகி விடுவன். அதன் பின்நான் நேராய் அக்கராயனுக்கு வாறன்"
'வதனா, நீயும் அங்கை வந்திடு ' ‘என் அன்பே 'பழையபடி நாங்கள் இன்பமாய் வாழ்வோம்! " இந்தா, மோகன்ரை கடிதம். 'வதனாவுக்குத்தானே அந்த மோகன் கடிதம் எழுதியிருக் கிறான். அப்ப நான் ஏன் அக்கராயனுக்குப் போக வேணும்?
கடிதத்தை வாங்கியபடியே கேட்கின்றாள் அவள்.
அந்த வதனா நீதான்."
★
102

நீர்வை பொன்னையன்
முனைப்பு
பொலிஸ் நிலையம் நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். றேனுக்கா சக்ரவர்த்தியும் என்னுடன். காலை பத்து மணி இளஞ் சூரியன் வீராப்பு என் உடலில் தகிப்பு. என் உள்ளத்தில் எண்ணற்ற கேள்விகள். எதுக்காக என்னை
அெை
பொலிஸ் ஸ்ரேசனுக்கு கூப்பிட்டிருக்கினை? உதவிப் பொலிஸ் ,அதிகாரி ராஜ் பிஹாரி போஸ் என்னை விசாரிக்க ஏன் துடியாய் துடிக்கிறான்? இதே ராஜ் பிஹாரி போஸ்தான், இரண்டு வரியத்துக்கு முன் வங்க பிஹார் மாநிலங்கள் இரண்டையும் இணைக்கும் அரசின் முனைப்புக்கு
எதிரான மக்கள் போராட்டத்துக்கு
103

Page 60
காலவெள்ளம்
ஆதரவாய்
எங்கள் கல்லூரி புரட்சிகர மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடியடிப் பிரயோகம் நடத்தி முறியடிக்கத் துடியாய்த் துடித்தான். இதே உதவிப் பொலிஸ் அதிகாரி ராஜ் பிஹாரி போஸ்தான் இன்றும்
என்னை
விசாரணை செய்ய துடியாய்த்துடிக்கிறான். ஏன் இந்தத் துடிப்பு? ஏலுமெண்டால் அவன் என்னை நல்லாய் விசாரிக்கட்டும். எதற்கும்
நான் தயார்த்தான். ரேணுஹா, நிமாய் கோஷ், இந்திரா, அனிஷ் ராய் செளத்ரி போன்ற எண்ணற்ற மாணவத் தோழர் தோழியர் என்றும் என்பக்கம். றேணுஹாவைப் பார்க்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் உல்லாசம், உத்வேகம். பரவசம்.
அவள்
104

நீர்வை பொன்னையன்
அன்பின் வடிவாய், மனித உன்னதங்களாய் என்றும் மிளிர்கின்றான். அவளது பார்வையில் மானிடம் ஜெக ஜோதியாய் ஜொலிக்கின்றது
ஆனால்
இந்திரா? இந்திராவுக்கு இன்று ஏன் என்றுமில்லாத இந்த அக்கறை என்மேல்? அவளது அண்ணன், அந்த உயர் பொலிஸ் அதிகாரி நரேந்திரகோஷிற்கு என்னைக் காப்பாற்ற ஏன் இந்த முனைப்பு? எண்ணற்ற கேள்விகள் என்னைக் குடைவு. என்மேல் இந்திராவுக்கு ஏன் இந்த திடீர் கரிசனை? ஒருநாள் கூட நான் அவளுடன் பேசியதில்லையே? அவளும் அப்படித்தான். அப்போ
அவள் என்னை ஏன் இன்று அழைத்திருக்கிறாள், அவசரமாய்!
இந்திராவை
நான்தினம் தினம் பார்ப்பு.
105

Page 61
காலவெள்ளம்
அவளது பெயர் கூட நேற்றுவரை எனக்குத் தெரியாது. அவளது வீடு எங்கள் கல்லூரி விடுதிக்கு அண்மையில்தான். ஒரு வருடத்துக்கு முன்புதான்நான் அந்த விடுதிக்கு வந்தேன். காலையும் மாலையும்
நான்
எங்கள் கல்லூரிக்கு சென்று திரும்பி வரும் போதெல்லாம் இந்திராவின் தரிசனம் எனக்குக் கிடைப்பு. இந்திரா இளமையின் வசந்தத்தில் காலடி எடுத்து வைக்கிறாள். அவள் அழகுச் சிலை. அவளது கனவு காணும் விழிகளின் அடியில் ஒருவித சோகத் திரை. ஏனிந்த சோகத் திரை? தினமும் காலையும் மாலையும் அவளது வீட்டு விறாந்தையில் அவள் நிற்கின்ற போதெல்லாம் அவள் பக்கத்தில்
சிறுவன். சிறுவனுக்கு மூன்றோ,
106

நீர்வை பொன்னையன்
நான்கு வயதிருக்கும். சிறுவன் அவளது மகனா? அதெப்படி இருக்க முடியும்? அவளது நெற்றியில் குங்குமப் பொட்டில்லை. அவளது தலையில் மொட்டாக்கு சீலையுமில்லை. கட்டுக்குலையாத அவளது உடலில் நெருப்புத்தணலாய் கனல்கின்ற
தடித்த சிவப்பு கரை போட்ட வெள்ளைப் புடவை இல்லை. நீண்டு வளர்ந்து சுருண்ட கடல் அலையாய் புரளும் கரும் கூந்தல் காற்றில் நீந்திக்கொண்டிருப்பு. கன்னி கலையாத களை அவளது முகத்தில்
நான்
காலையும் மாலையும் கல்லூரிக்குச் சென்று வரும் போதெல்லாம் அவள் அவளது வீட்டு விறாந்தையில் நிற்பு. அவள் பக்கத்தில் அந்தச் சிறுவன் இன்முகம் காட்டி
107

Page 62
காலவெள்ளம்
கையசைப்பு. ஆனால் அவளது முகத்தில் ஒரு வித இறுக்கம். ஏன் இந்த இறுக்கம்? இந்திராவின் அக்கா சுபதாவும் சிறுவனின் அப்பாபிமால் சென்னும் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள். சிறுவனின் அம்மாவும் அப்பாவும் விபத்தில் மரணம். இல்லை. இல்லவேயில்லை. அவர்கள் இருவரும் அமைச்சர் ஒருவரின் நிதி மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதற்காக, அமைச்சரின் சதியினால் படுகொலை. இந்திராவும் இப்போ புலனாய்வுப் பத்திரிகையாளர். இந்திராவுக்கு இன்று என்மேல்
ஏன் இந்தத் திடீர் அக்கறை? மேதினக் கூட்டம் முடிந்து ஏழு மணியளவில் நான் என் விடுதிக்கு வருகின்றேன். 'பாபுஜீ நான்திரும்பிப் பார்க்கிறேன்.
'பாபுஜிஉங்களை
என்ரை
“சோட்டா மா வரட்டாம் "
108

நீர்வை பொன்னையன்
மூச்சிரைக்க ஓடிவந்த சிறுவன் கூறுகின்றான். எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி? என்னால் இதை நம்பமுடியவில்லை.
ஒருவேளை அது வேறை யாரோவாக இருக்கலாமோ? எனக்கு சந்தேகம். ‘என்னையா வரச் சொன்னா? ஐயமாய் நான். சிறுவனைக் கேட்கின்றேன். 'ஒமோம் உங்களைத்தான் சோட்டா மா வரட்டாம். "இல்லை யில்லை
உன்ரை சோட்டாமா வேறை ஆரையோதான் கூட்டி வரச் சொல்லியிருக்க வேணும் நீஆள் தெரியாமல் என்னட்டை வந்திருக்கிறாய். " 'பாபுஜி உங்களைத்தான் சோட்டா மா வரட்டாம். அதோ அங்கை நிக்கிறா. பாருங்கோ. இந்திரா என்னைப் பார்த்தபடியே நிற்கின்றாள்.
'வாங்கோ. கெதியாய் வாங்கோ " என் கையைப் பிடித்து இழுக்கின்றான் சிறுவன். என்னுடன்
109

Page 63
காலவெள்ளம்
ஒரு வார்த்தை கூட பேசாத இந்திரா
இன்று என்னை எதிர்பார்த்து நிற்கின்றாள். தயங்கித் தயங்கி நான் அவளிடம் செல்கின்றேன். என் கையைப் பிடித்து செல்கின்ற சிறுவனுக்கு பெருமகிழ்ச்சி. நான் இந்திராவின் வீட்டு வாசலில் கால் எடுத்து வைத்ததும் அவளது முகத்தில் பமலர்ச்சி. அவளது மென்மையான உதடுகள் பிரிகின்றன. சிறு முறுவல். அவளது விழிகளில் அசாதாரண ஒளிப்பிரவாகம். இது கனவா? இப்படி நடக்குமென்று நான் ஒரு போதும் எண்ணியிருந்ததில்லை. என் இதயத்தில் இளமையின் ஏக்கம், தாபம் ஆவல், ஆசாபாசங்கள் அனைத்தும்
முட்டி மோதி, பொங்கிப் பிரவகித்து,
காட்டாற்று வெள்ளமாய்
10

நீர்வை பொன்னையன்
அலை மோதிப் பாய்ச்சல். கணப்பொழுதுதான்.
நான் என்நிலைக்கு வருகின்றேன். என்னை எதிர்பார்த்துநின்ற இந்திரா 'வாருங்கள் உள்ளே. ஜெயிலுக்குள் அல்ல எங்கள் வீட்டுக்குள். ' புன்னகை ஒன்றை உதிர்த்து என்னை வரவேற்று
உள்ளே அழைத்துச் செல்கின்றாள். ‘என்ரைசின்னண்ணா
உங்களை அவசரமாய் பார்க்கவேனுமாம் அவர்தான் உங்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். '
கூறியவளாய் கதிரை ஒன்றை இழுத்துவிட்டு
stag
அமரும்படி கூறுகின்றாள். 'அண்ணா, அண்ணா
நீங்கள் தேடியவர் இஞ்சை வந்துள்ளார். வாங்கோ கெதியாய் மகிழ்ச்சி பொங்க இந்திராதனது அண்ணனை கூப்பிடுகின்றாள். அவளது விழிகளில்
11

Page 64
காலவெள்ளம்
துடுக்குத்தனம் ஆஜானுபகவான ஒருவர் பொலிஸ் சீருடையில் என் முன். எனக்குத் திகைப்பு நமஸ்கார் பாபு. என் பெயர்நரேந்திரநாத் கோஷ். நரேந்திரன் என்று அழைக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னார் வங்க - பிகார் மாநிலங்கள் இணைப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாய் வங்க புரட்சிகர மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியது. ஆண் - பெண் பேதமின்றி ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடியே புரட்சிக் கோஷமிட்டுக் கொண்டு நாம்ஆக்ரோஷமாய் முன் செல்கின்றோம். என்கையை தோழி ரேணுஹா இறுகப் பிடித்தபடியே நாம் இருவரும் ஆர்ப்பாட்டப் பேரணியின்
எங்கள் கைகளில்
செம்பதாகை.
112

நீர்வை பொன்னையன்
புரட்சிக் கோஷமிட்டபடியே நாம் முன் செல்கின்றோம் ஆர்ப்பாட்டப் பேரணியைத் தடுக்க பொலிஸ் படை குவிப்பு. ஊர்வலத்தைத் தகர்க்க தடியடிப் பிரயோகம்
நடத்த உதவிப் பொலிஸ் அதிகாரி ராஜ் பிஹாரி போஸ் கட்டளையிட முஸ்தீப்பு. பொலிஸ் உயர்அதிகாரி நரேந்திரநாத் கோஷ் அதிரடித்தலையீடு. தடியடிப் பிரயோகம் தடுத்துநிறுத்தம். மாணவர் பேரணி காட்டாற்று வெள்ளமாய் முன்பாய்ச்சல். அதே உயர் பொலிஸ் அதிகாரி நரேந்திரநாத் கோஷ் இன்று இப்போ இங்கே என் முன். நரேந்திரனையும் அவர் சகோதரி இந்திராவையும் அதிர்ச்சியுடன் நான் பார்த்தபடியே இருக்கிறேன். ՞ւ յո6Նույույ. நான் இந்த ஹ"கிளி மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி. இப்பதான் டியூட்டி முடிஞ்சு
113

Page 65
காலவெள்ளம்
வீடு வந்துள்ளேன். இன்னும் என் உடையை கூட நான் மாற்றவில்லை. அவசர அவசரமாய் நான் உங்களை பார்க்க வேண்டியிருக்கு அதுதான் உங்களை கூப்பிட்டழைதேன். ' எனக்கு ஒன்றும் புரியவில்லை. "எதற்காக நீங்கள் என்னை அவசரமாய் அழைத்தீர்கள்? ஆவலுடன் நான் கேட்பு. நரேந்தரகோஸின் தாயார் வருகை. கைகூப்பி நான் அவர்களை நமஸ்கரிப்பு. அவரும் என்னை அன்பாய் வரவேற்பு. சிற்றுண்டியும் தேனிரும் தந்து உபசரிப்பு. எதற்காக இவர்கள் என்னை அவசரமாய் அழைப்பு? நான் அறிய ஆவல்.
"LJгторп Lпцу இன்றிரவு நீங்கள் உங்கள் விடுதியில் தங்கக்கூடாது. ' நரேந்ரன் கூறுகின்றார். எனக்கு பிரமிப்பு.
14

நீர்வை பொன்னையன்
'ஏன் பாபுஜிநான் எனது விடுதியில் தங்கக்கூடாது? அப்போநான் எங்கே தங்குவது, ' ஒன்றும் புரியாமால் குழம்பிப்போய் கேட்கிறேன். 'பாலா பாபு அவசரப்படாதையுங்கோ. பதட்டம் வேண்டாம்
.# 1חו_L חט6חנ_t எல்லாவற்றையும் நான் விபரமாய்சொல்வேன். இப்பொழுதல்ல. தருணம் வரும்போது நான் விபரமாய் சொல்வேன்.
ц_игторгт ц_игтц /. இன்று இரவு நீங்கள் தங்குவதற்கு ஏற்ற இடம் ஏற்பாடாச்சு. நீங்கள் அங்குதான் இன்று தங்கவேண்டும். இது எங்கள் கட்டளை" நரேந்தரன் பாபுவின். வார்த்தைகளில் நிதானம் கண்டிப்பு.
இன்று இரவு உங்கள் விடுதியில் நீங்கள் தங்கினால் உங்களை அழைத்துச் சென்று மாமியார் வீட்டில்
தடுத்து வைத்து
115

Page 66
காலவெள்ளம்
விசாரணை செய்ய நிச்சயம் ஆள் வரும். அதற்கான திட்டமும் தீட்டியாச்சு. ராஜ் பிஹாரி போஸ் என்ற பொலிஸ் அதிகாரி தான் இதன் சூத்திரதாரி. இதெல்லாம் எனக்கு நன்றாய் தெரியும். இந்த விஷமிகளை ஓடவிட்டுத்தான் பிடித்து அமத்தவேணும் பாலா பாபு நீங்கள் எதற்கும் பயப்பிட வேண்டாம். எல்லாவற்றையும் நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறன்.
நரேன் பாபுஜி" எதற்காக இந்தச் சதி வேலை? நான் எவருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே அதைப் பற்றி பேச இப்போ நேரமில்லை
ւ յrr6Ծrrւ յույ. நாளைக்கு எல்லாம் உங்களுக்கு விபரமாய் நிச்சயமாய் தெரியவரும். நீங்கள் இப்போ நாங்கள் ஏற்பாடு செய்த
16

நீர்வை பொன்னையன்
இடத்துக்குச் செல்லுங்கள். நாளை காலை பத்து மணிக்கு நான் டியூட்டியில் இருப்பேன். நீங்கள் அந்த நேரம் என்னை நேராக வந்துபாருங்கள். எல்லாம் தெரிய வரும். இந்திரா இஞ்சைவா. பாலாவை ரேணுகாவீட்டுக்கு அழைத்துப்போ இந்திரா என்னை தோழி ரேணுஹா வீட்டிற்கு அழைத்து செல்கின்றாள். தோழி ரேணுஹா மஜும்தார் குடும்பத்தில் நான்காவது பிள்ளை. ரேணுஹாவின்தந்தை இந்திய சுதந்திரப் போராளி. மஜூம்தார் பதினாறு வயதில் வங்க சிற்றகொங் ஆயுதக் கிடங்கு தாக்குதல் போராட்டத்தில் பங்குபற்றியதற்காக பத்து வருடங்கள் சிறையில் இருந்தவர். மஜும்தாரின் மனைவி மிருனாளினி தேவி வங்கத்தின் பிரபல
மக்கள் கவி, முன்னனணி பாடகி.
மஜ"ம்தாரின் மூத்த மகன்
117

Page 67
காலவெள்ளம்
சீதா ரஞ்சன்
வங்கத்தின் பிரபல வழக்கறிஞன். அத்துடன்தீவிர தொழிற்சங்கவாதி. முதல் மகள்
உஷா நந்தினி வித்தியாசாகர் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியர். இரண்டாவது மகள் சுபதா பங்கபாஜிக் கல்லூரியில் அரசியலில் விரிவுரையாளர். மூன்றாவது மகள்
ரேணுஹா
எனது சகமாணவி. கலைப்பட்டப்படிப்பு இறுதியாண்டு.
எங்கள் கல்லூரி புரட்சிகர மாணவர் சங்க செயலாளர்.
கடைக் குட்டி
fTLDIT. கல்கத்தா கலைக் கல்லூரியில் நாடகத்துறையில் பயிற்சி. மஜும்தார் குடும்பமே கம்யூனிஸ்ட் குடும்பம். நான் அங்கு வருவேன். என்று என்னை எதிர்பார்த்திருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்னைக்கண்டதும் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பு.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
118

நீர்வை பொன்னையன்
இதயபூர்வமாய் உபசரிப்பு. சப்பாத்தி ரொட்டியும் பருப்பு,உருளைக்கிழங்கு கறியும்
இரவு உணவு. அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாய் பேசி இராச்சாப்பாடு. நள்ளிரவு வரை நாம் அனைவரும் வங்க அரசியல், கலை இலக்கியம், தொழிலாளர்- விவசாயிகள் போராட்டங்கள், வங்க புரட்சி பற்றிய கலந்துரையாடல். காலை ஒன்பது மணிக்கு சோறும் பருப்பும் உருளைக்கிழங்கும் அனைவருக்கும் அன்புடன் பரிமாறல். காலை பத்து மணி. பொலிஸ் நிலையத்தை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். தோழிறேணுஹாவும்
எனனுடன.
எங்கள் கல்லூரி புரட்சிகரமாணவர் ஆர்ப்பாட்டப் பேரணி. ஆண் - பெண் பேதமின்றி
ஒருவர் கையை மற்றவர்
119

Page 68
காலவெள்ளம்
இறுகப் பற்றியபடியே உத்வேகமாய் ஆர்ப்பாட்டப் பேரணி ஊர்வலம் தோழிறேனுஹாவும் நானும் ஒருவர் கையை மற்றவர் இறுகப் பற்றியபடியே பேரணியின் முன்னணியில் சென்று கொண்டிருக்கும் காட்சி
என் கண் முன் நிழலாட்டம்.
இந்திரா விடியது விடியுமுன்பே போகவேண்டிய இடமெல்லாம் GLunul
பார்க்க வேண்டியவர்கள் எல்லோரையும் பார்த்துவிட்டாள். முனைப்புடன் பொலிஸ் நிலையத்தின் முன்னால்
இந்திராவுடன் எங்கள் கல்லூரி புரட்சிகரமாணவர் சங்க தலைவர் அனிஸ் ராய் செளனத்திரி பதினைந்து இருபது மாணவ மாணவி தோழர் தோழியர்களுடன் அணிவகுத்துநின்றனர். உக்ரோஷத்துடன்.
120

நீர்வை பொன்னையன்
பொலிஸ் உயர்அதிகாரி நரேந்தர கோஷ் எம்மை அன்புடன் வரவேற்று விசாரணை ஆரம்பம். ராஜ் பிஹாரி போஸிற்கு ஏமாற்றம், ஆத்திரம். ‘நேற்று மாலை நாலரை மணிக்கு நீர் எங்கு சென்றிருந்தீர்?"
'சரம்பூர்நகரசபை மைதானத்தில் நடந்த மேதினக் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். '
"யாருடைய மேதினம் கூட்டம்?" வங்க தொழிலாளர் விவசாயிகள் ஒன்றிணைந்த மேதினக் கூட்டம். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த மேதினக்கூட்டம் " அந்தக் கூட்டத்தில் நீர் பேசினரீரா?
ஆம் பேசினேன். அதில் என்னதப்பு?
நீர் ஒருவெளிநாட்டுப் பிரஜை உள்நாட்டுஅரசியலில் நீர்தலையிடலாமா?
நிச்சயமாக தலையிட
CLPL q-tLIslois. அந்த உரிமையும் எனக்கு இல்லை. ஆனால் மேதினம்
121

Page 69
காலவெள்ளம்
சர்வதேச தொழிலாளர் தினம். தொழிலாளர் தின விழாவில் பங்குபற்றியதில் என்ன தவறு?
நீர் கூட்டத்தில்
பேசியுள்ளீர். அதுமாத்திரமல்ல. அங்கிருந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவரை பாராட்டி புகழ்ந்து பேசியுள்ளீர். அத்துடன்அவருக்கு மலர் மாலையும் அணிந்துள்ளிர்
அது உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை. அதிலென்னதப்பு? பங்கிம் முகர்ஜி
பாபுஜி
நாடறிந்த கம்யூனிஸ்ட்தலைவர். அது மாத்திரமல்ல. அவர்நாடறிந்த உன்னத நாடகக் கலைஞர். அவர்தலைசிறந்த உன்னத நாடக நடிகர். வங்க புரட்சிக் கவிஞன். சுகந்தோ பட்டசாரியாவின் 'அஞ்சலோட்டக்காரன். ' கவிதை நாடகம்
அந்த உன்னத
122

நீர்வை பொன்னையன்
கலைப் படைப்பை
நிழல் நாடகமாக்கி தன்னந்தனியளாய் தானே நடித்து வங்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற உன்னத நாடக நடிகர். பங்கிம் முகர்ஜி என்ற மகத்தான நாடகக் கலைஞர் பங்கிம் முகர்ஜியின் நிழல் நாடகத்தைப் பார்த்து புரட்சிப் புயலாய் பொங்கி எழாத
வங்காளி
எவர்தானுமுண்டா? இந்த உன்னத கலைப் U60L-ligou
தடை செய்வதற்கு வங்க காங்கிரஸ் அரசு எத்தனைதடவைகள் முயற்சி எடுத்து. இறுதியாய் மண் கவ்வியதுதான் மிச்சம்.
இப்படிப்பட்ட புரட்சிக் கலைஞனை பாராட்டி மலர் மாலை அணிந்ததில் தப்பென்ன? அது தவறென்றால்நான் எந்தத் தண்டனையையும்
123

Page 70
காலவெள்ளம்
ஏற்கத்தயார். ՞ւ յrr6Ծո Լյուլ உணர்ச்சி வயப்பட
வேண்டாம்
உங்கள்
செயல்பாட்டில் தவறொன்றுமில்லை. ஆனால் உங்களை சிக்கலில் மாட்டிவைக்க ஒரு சிலர் முனைப்பு. உள்நாட்டு அரசியலில் நீங்கள் தலையிடுவதாய் தவறான குற்றத்தை உங்கள் மீது சுமத்தி உங்களை
நாடு கடத்துவதற்கு நீண்டநாட்களாய் திரைமறைவில் ஒரு சிலர் தொடர்ச்சியாய் சூழ்ச்சி செய்து வருவது உங்களுக்கு தெரியுமா?
நரேன் பாபுஜி எனக்கு அது நன்றாகத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளாய் எங்கள் கல்லூரி
மாணவர் சங்க
தலைவராயிருந்த லலித் குமார் போஸ"ம்
124

நீர்வை பொன்னையன்
அவனது கையாட்களும் எனக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றனர். என்பது எனக்கு நன்றாகத் தெரியும். லலித் குமார் போஸின் அப்பாரமேஸ்குமார் நான்கு பெரிய மில்களின் சொந்தக்காரன். எமது கல்லூரி மாணவர் சங்க தலைமையை
காலாதி காலமாய் லலித் குமார் போஸ் போன்ற
பிற்போக்கு கும்பல்தான் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி
தங்கள் கைவசம் வைத்திருந்து வந்தனர். மாணவர்களின் நலன்களில் என்றுமே அவர்கள் அக்கறை காட்டியதில்லை. என்றுமே அவர்கள் நிர்வாகத்தின்
பக்கம்தான். அணிஷ் ராய் செளத்ரி மிதினாப்பூர் மாவட்ட ஏழை விவசாயியின் மகன். படிப்பிலும் பண்பிலும் உயர்ந்துநிற்பவன். ஆனால் ஏழை விவசாயியின் மகன்
125

Page 71
காலவெள்ளம்
அனிஷ் ராய் செளத்ரி நான்கு மில்கள் சொந்தைக்காரனின் மகன் லலித் குமாரை எதிர்த்து போட்டியிடுவதா? கடந்த இரண்டு ஆண்டுகளாய் லலித் குமார் போஸ்தான் கல்லூரி மாணவர் சங்க தலைவனாயிருந்தான். இந்த வருடம் அனிஷ் ராய் செளத்ரி லலித் குமாரை எதிர்த்து போட்டியிட்டான். கல்லூரி மாணவர் சங்க தலைவனாயிருந்தான். கல்லூரி கன்ரீன் குத்தகை லலித் குமாரின் கையில் மூன்று வாரங்களாய். கல்லூரி நிர்வாகம் தட்டிக் கேட்க தயக்கம். தலைவர் தேர்தலில் அனிஸ் ராய் செளத்ரி இலங்கை மாணவரின் ஆதரவுடன் அமோக வெற்றி. அவர்களிடமிருந்த அதிகாரத்தை எமது கல்லூரி மாணவர்களது பெரும்பான்மை ஆதரவுடன் தகர்த்தெறிந்து பமாணவா சங்கத
தலைமையையும்
126

நீர்வை பொன்னையன்
நிர்வாகத்தையும் புரட்சிகர மாணவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன்பே கைப்பற்றி
பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றோம். எமது கல்லூரி மாணவர் சங்கம் அகில இந்திய மாணவர்சங்கம் சம்மேளனத்தின் கிளை என்ற வகையில் புரட்சிகர செயல்பாடுகளில் பங்காளியாய் இருக்கின்றது. ՞ւ յոavուսուլ. உங்கள் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற இலங்கை மாணவர்களது ஆதரவும் புரட்சிகர மாணவர் சங்கத்தின் வெற்றிக்கு
வழிவகுத்தது. இலங்கைமாணவர்களையும் வங்காள மாணவர்களையும் ஓரணியில் திரட்டி ஆதரவளித்தது நீங்கள்தான் என்பது லலித் போஸ் குழுவுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் உங்களுக்கு எதிராக தொடர்ந்து சூழ்ச்சி
127

Page 72
காலவெள்ளம்
செய்து வருகின்றனர். 67ւնւսւգաn6ւյցն உங்களை நாடு கடத்தி விட வேண்டும் என்ற வெறி லலித் குமார் போஸிற்கு. ராஜ் பிஹாரி போஸ் லலித் குமார் போஸின் உடன் பிறந்த அண்ணன்தான். பாலா பாபு நீங்கள் விழிப்பாயிருங்கள். விசாரணை முடிந்தது. நீங்கள் போகலாம் " நான், ரேணுஹா, இந்திரா, அணிஷ் ராய் செளத்ரி நாங்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திலிருந்து தலைநிமிர்ந்தபடியே வெளிவருகின்றோம்."
女
28

நீர்வை பொன்னையன்
பேய்களும் பிசாசுகளும்
சிறுவர் ஆஸ்பத்திரிக்கு நாங்கள் மூன்றாவது முறையாகச் செல்கின்றோம். ஐந்தாம் வார்ட்டில் காயப்பட்ட சிறு வர்கள் இருபது பேர்.
ஆறாம் வார்ட் மேல்மாடியில் அங்கு காயப்பட்ட சிறுவர்கள் ஏழு பேர்.
அவர்களுக்குப் பாரிய காயங்கள் தீவிர சிகிச்சை. பிரத்தியேக பராமரிப்பு.
அந்த வார்டுக்கு கண்டபடி பார்வை யாளர்கள் செல்ல முடியாது.
காயமடைந்த சிறுவர்களுக்கு உடுப் புகள், பால்மா வகைகள், பழங்கள், பிஸ் கட்டுகள், விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் எடுத்துச் செல்கின்றோம்.
எங்களைப் பார்த்ததும் சிறுவர்க ளுக்கு மகிழ்ச்சி முகங்களில் மலர்ச்சி. காயப்பட்ட சிறுவர்கள் மாத்திர மல்ல, ஏனைய நோயாளிச் சிறுவர்களும் எங்களை ஆவலுடன் எதிர்பார்த்து இருக் கின்றனர்.
சிறுவர்கள் மீது எங்களுக்கு அனுதா பம் பரிவு
சிறுவர்களுக்கும் எங்கள் பமீது பற்று. இது மூன்றாவது தடவை. முதல் முறை சென்றபொழுது பழவ
கைகள், பிஸ்கட்டுகளை மாத்திரம்தான்
129

Page 73
காலவெள்ளம்
நாங்கள் எடுத்துச் சென்றோம் அப்பொழுது காயப்பட்ட சிறுவர் களுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்று அங்குள்ளதா தியர்கள் கூறினார்கள். இதன்படியே நாங்கள் பொருட்களை எடுத்துச் செல்கின்றோம்.
மூன்றாம்வார்டில் தாதியர் இருவர். காயமடைந்த சிறுவர்களை இளம்தாதி சிரத்தையுடன் பரா மரிப்பு.
மற்றைய தாதி அலட்சியப் போக்கு. நாங்கள் கொண்டு சென்ற பொருட்களை காயமடைந்த சிறுவர்களுக்கு பங்கிட்டுக்கொடுக்கும்படிதாதியர் எங்களுக்குக் கூறுகின்றனர்.
உடுப்புகளையும் பால்மா வகைகளையும்தாதிகளிடம் ஒப் படைக்கின்றோம். அவர்கள் அவற்றை அந்தந்த சிறுவர்களின் கபேர்ட்களில் வைக்கின்றனர்.
பழங்கள், பிஸ்கட்டுகள், ரொபிகள் எல்லாவற்றையும் அந்த வார்ட்டிலுள்ள எல்லாச் சிறுவர்களுக்கும் பங்கிடுகின் றோம்.
சிறுவர்களுக்கு ஆனந்தம். மேல்மாடியிலுள்ள ஆறாம் வார்ட்டுக்கு செல்கின்றோம். முதிர்ந்ததாதி தடுக்கின்றா.
அங்கை இரண்டு மூண்டு காயப்பட்ட சிறுவர்கள்தான் இருக்கினை. அவர்களுடைய பொருட்களை எங்களிட்டைத் தாங்கோ. நாங்கள் அவைக்குக் குடுக்கிறம். '
பெரியதாதி கூறுகின்றா. அங்கை படுகாயமடைஞ்சஏழு சிறுவர்கள் இருக்குதுகள்.
இளம்தாதி கூறுகின்றார்.
நீங்களேஅவர்களுக்குரிய பொருட்களை நேரடியாக கொ
டுங்கோ. அதுதான்நல்லது. அப்பொழுதுதான் அவர்கள் சந்தோ சப் டுவினை. "
இளம்தாதி வலியுறுத்திக் கூறுகின்றார்.
முதியதாதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின் ՈD351
ஆறாம் வார்ட்டுக்கு நாங்கள் செல்கின்றோம்.
நான்கு வயதுப் பையன் ஒருவன். அவனுடைய தலையின்
130

நீர்வை பொன்னையன்
பின்பக்கத்தில் காயம்.
பாரிய காயம். அவனுக்கு அறிவில்லை. வந்த நாளையிலையிருந்து அவன் மயக்கநிலையில். அச்சிறுவனுடைய கட்டிலுக்கு அருகில் பதின்நான்கு அல் லது பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன். அவன் அச்சி
அவனுக்கு பிஸ்கட், ரொபிகளைக் கொடுக்கின்றோம். 'எனக்கு வேண்டாம். மற்றவைக்குக் குடுங்கோ. ' பற்றற்றவனாய் கூறுகின்றான். இந்தப் பையனுக்கு எதைக் குடுத்தாலும், அவன் தனக்கு வேண்டாம் என்கிறான். '
தாதி.
இவன் எதையும் ஏற்பதில்லை. ஏன் எண்டு எங்களுக்கு தெரியேல்லை. " மற்ற தாதி
இவன் எங்களோடையும் அதிகம் பேசுவதில்லை. எவரு டனும் பேசுவதில்லை. இவனுக்கு என்ன நடந்ததெண்டுளங்க ளுக்கு தெரியாது. "
தாதி கவலையுடன் கூறுகின்றாள்.
'எந்த நேரமும் இவன் மெளனம்தான். நாங்கள் இவனைப் பேசவைக்க எவ்வளவோ முயற்சித்தம் பலனில்லை. இவன் வாயே திறக்கிறானில்லை. "
மற்றைய தாதி.
'இவனைப் பார்க்க எங்களுக்கு சரியான கவலையாகக் கிடக்கு '
இரண்டு தாதிகளும் கூறுகின்றனர்.
'எதையோ பறிகொடுத்தவன் போலையிருக்கிறான். சாப் பாட்டிலோ, உடுப்பிலோ அவன் கவனம் செலுத்துவதில்லை. எங்களுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை ".
தாதியர் இருவருக்கும் அவன்மேல் பச்சாத்தாபம்.
ஏழு பிள்ளைகளுக்கும் மேற்கொண்டு இன்னும் என் னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றனவென்று நாங்கள் அவர்களிடம் கேட்டோம்.
என்னுடன் வந்தவர்கள் மற்றைய சிறுவர்களுடன் கதைத்
131

Page 74
காலவெள்ளம்
துக் கொண்டிருக்கின்றனர்.
முன்பு நாங்கள் வந்த இரு தடவைகளும் நான் அந்த சிறு வனை அவதானிக்கத்தான் செய்தேன். ஆனால் அவனுடன் பேச வில்லை.
இம்முறை நான் அவனுக்குப் பக்கத்தில் அமர்கின்றேன். அவனுடைய கையைப் பிடித்து தடவுகின்றேன். அவனுடைய நாலுவயதுத் தம்பிக்கு எப்பிடிக் காயம் ஏற் பட்டது என்று வாஞ்சையுடன் அவனைக் கேட்கின்றேன்.
அவன் வாயே திறக்கவில்லை. மெளனமாகவே இருக்கின் றான்.
கதைப்பதற்கு முதலில் அவன் தயங்குகின்றான். 'சொல்லுதம்பி என்ன நடந்ததெண்டு சொல்லு நான் அவனை ஊக்குவிக்கின்றேன். அவன் விம்முகின்றான். அவனுடைய முதுகைத் தடவிக் கொடுக்கின்றேன். அவனுடைய அழுகை அதிகரிக்கின்றது. மடைதிறந்தாற்போல் அவன் கதறி அழுகின்றான். தான் எங்கு இருக்கின்றேன் என்பதையே மறந்து அழுது புலம்புகின்றான்.
அவன்பாட்டில் வேண்டுமட்டும் அவனை அழ விடுகின் றேன்.
அவனது மனச்சுமை இறங்கு மட்டும்நான் அவனை அழ விடுகின்றேன்.
இவ்வளவு நாட்களும்இந்த இதயச்சுமையை இவன் சுமந் துகொண்டு எவ்வளவு அவஸ்தைப்பட்டிருப்பான்? இந்தப் பிஞ்சுக்குஇந்தக் கதி ஏன் ஏற்பட்டது? இவனைப்போல் எத்தனை பேர்தங்கள் இதயச் சுமையை இறக்குவதற்கு வழிதெரியாமல் அவஸ்தைப்பட்டும் கொண்டி ருக்கிறார்களோ யாருக்குத் தெரியும்?
என் மனதில் எண்ணற்ற கேள்விகள். “என் இதயத்தில் சோகச்சுமை. படிப்படியாக அவனது அழுகை குறைகின்றது. ஆசுவாசமடைந்ததும் அவன் பேச ஆரம்பிக்கின்றான்.
132

நீர்வை பொன்னையன்
‘எங்களுடைய ஊர் ஒரு சின்னக் கிராமம் " அது எங்கை இருக்கு? எனக்கு அறிய ஆவல். அது ஒரு எல்லைக் கிராமம் அந்தக் கிராமம் எங்கை இருக்கு? ஆவலுடன் கேட்கின்றேன்.
அந்த எல்லைக் கிராமம் வவுனியாவுக்கும்மதவாச்சிக்கும் இடையிலை இருக்கு. "
அது காட்டுப் பிரதேசமா? இல்லை ஒரு பக்கம்தான் காடு, மற்றப் பக்கம் பெரிய குளம். அடுத்த பக்கம் வயல். '
'உங்கடை ஊரிலை எத்தினை குடும்பங்கள்? “ இருநூறு இருநூற்றைம்பது குடும்பங்கள் இருக்கும். அது தமிழ் கிராமமா? 'இல்லை. ஒரு எழுபது எண்பது குடும்பங்கள் சிங்களக் குடும்பங்கள். மிச்சம் தமிழ் குடும்பங்கள். அநேக சிங்களாக்கள் தமிழ் பேசுவினை. தமிழாக்களும் சிங்களம் பேசுவம். நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாய் சந்தோசமாயிருந்தம்.
அப்ப, தொழில்? 'வயலில் நெல்பயிரும் ஒரு போகத்திலை எள்ளுப் பயிரும் செய்தம் மீன்பிடி. சின்னச் சின்ன காய்கறித் தோட்டம். இடைக் கிடை சிலர் வேட்டை
"பண்டி, மரை, முயல், மான்களை வேட்டையாடினம் போககாலத்திலை சிலர் காட்டுப்பகுதிகளில் தேன் எடுத்து விற் றனர்.
'படிப்பு? ‘என்ன பெரிய படிப்பு? ஒரு சின்னப் பள்ளிக்கூடம் எழு பத்தைஞ்சு அல்லது எண்பது தமிழ் பிள்ளைகள், நாப்பது நாப் பத்தைஞ்சு சிங்களப் பிள்ளையஸ். '
ஐஞ்சாம் வகுப்பு வரைதான் நடந்தது. ' ஐஞ்சாம் வகுப்பிலை ஏழு தமிழ் பிள்ளையஸ்தான். ' 'காலையில் தமிழ் பள்ளிக்கூடம் பின்நேரம் ஒரு மணிக்கு சிங்களப் பள்ளிக்கூடம். '
ஒரு தமிழ் வாத்தியாரும் ஒரு சிங்கள வாத்தியாரும் அவை
133

Page 75
காலவெள்ளம்
இரண்டு பேரும் பேசிப் பறைஞ்சு, ஒரு மாதத்திலை ஒவ்வொரு தர் ஆறேழு நாள்கள்தான் பள்ளிக்கூடம் வருவினை. "
‘ஒரு சின்ன கவுண்மேந்து ஆஸ்பத்திரி. ஒரு டொக்டரும் ஒரு ஒடலியுந்தான். டொக்டர் ஐஞ்சாறுநாள்தான் ஆஸ்பத்திரிக் கு வருவார். மற்ற நாளையிலை மருந்துதாறது ஓடலிதான். அது வும்நாங்கள் அவனுக்கு காசு குடுத்தால்தான் மருந்து தருவான்.
"பெரிய வருத்தம் வந்தால் வவுனியா ஆஸ்பத்திரிக்கு போ வேணும் "
சண்டையும் நடந்துகொண்டுதானிருந்தது. ‘பேயஞக்கும் பிசாசுகளுக்குமிடையிலைதான் சண்டை சனங்களுக்கையல்ல. '
தூரத்திலை குண்டு வெடிக்கும் சத்தங்களும் இடிமுழக்க மாய் செல் சத்தங்களும்.
எங்கடை ஊருக்கு மேலாலை அடிக்கடி பிளேன்கள் இரைஞ்சுகொண்டு பறந்துகொண்டிருந்தன.
எங்களுக்கு ஒரே பயம். எங்கடை ஊரிலை ஒருநாள் சுந்தரமும்பாலாவும் கா ணாமல் போட்டாங்கள் "
அவைகள் இரண்டு பேரும் திரும்ப வரேல்லை. கொஞ்ச நாளையாலை விசயன், மலர், சுகுணா மூண்டு பேரும் ஓடிட்டினை.
பேய்களுக்கும் பிசாசுகளுக்கும் சண்டை நடந்துகொண்டு தானிருந்தது.
சண்டையிலை கனபேர் செத்திட்டினை எண்டு சொன் னாங்கள். அதிலை சுந்தரமும் சுகுனாவும் செத்திட்டினை. "
அவை இரண்டு பேற்றை பிரேதங்களும் எங்கடை ஊருக் குக் கொண்டு வந்துதினை. அவையின்ரைதாய் தகப்பன்களும் குடும்பங்களும் குழறிக் கத றி அழுததைப் பார்க்கேலாமலிருந்தது. எங்கடை ஊரே சோகத்தில். பேயளையும் பிசாசுகளையும் எங்கடை ஊராக்கள் திட்டி சபிச்சினை.
கொஞ்சநாளையாலை காட்டுக்கு விறகு வெட்டப்போன பியசீலி அக்கா, நந்தாஅக்கா இரண்டு பேரையும் காணேல்லை.
134

நீர்வை பொன்னையன்
பொழுதுபடுகிற நேரம்தான் அவை இரண்டு பேரும் திரும்பி வந்தினை. அவை இரண்டு பேரும் தலைவிரிகோல மாய் பித்துப்பிடிச்சவர்களாய் குழறி அழுது கொண்டிருந்தினை.
அவையின்ரை சீலை சட்டையள்தாறுமாறாய் கிழிச்சுக்கி டந்தது.
இது நிச்சயமாய் பிசாசுகளின்ரை வேலைதான்.
ஊராக்கள் உறுதியாய் சொல்லிச்சினை.
எங்களுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.
நாலஞ்சுநாளைக்குப் பிறகு சுமனாவதி அக்காவும் பிரே மாவதி அக்காவும் குளத்துக்கு குளிக்கப் போச்சினை. இரண்டு பேரும் அக்கா தங்கை மார். அவை திரும்பி வரேல்லை. அவையை நாங்கள் தேடாத இடமில்லை.ை
அவை இரண்டு பேற்றை உடல்களும் சீலை துணியில் லாமல் குளக்கட்டுக்குப் பக்கத்திலை கிடந்தது. "
"ஊரே சோகத்தில் தவிச்சது. "
‘பேய் பிசாசுகளின்ரை அட்டகாசம் தாங்கே லாமல் கிடத்துது.
'அண்னை நீங்கள் பேய் பிசாசுகளைப் பாத்திருக்கிறி սյ6ոTTշ ՛
திடீரென அவன் கேட்கின்றான்
'இல்லை, ஏன் கேக்கிறாய். "
நாங்கள் பாத்திருக்கிறாம்
‘எப்ப? எப்பிடி? "
‘ஒரு நாள். நடுச்சாமம் நாய்கள் குலைச்சுதுகள். வர வர கடுமையாய் குலைக்கதுகள்.
"சிலர் வெளியாலை எட்டிப்பாத்தினை.
‘பேய்கள் நடமாடுதுகள்
"பாத்தவை சொல்லிச்சினை '
இரண்டு மூண்டு நாளைக்குப் பிறகு நாய்கள் கடுமை யாய் குலைச்சுதுகள்.
நாங்களும் எட்டிப்பாத்தம் "
'உண்மைதான். நாங்கள்எங்கடை கண்ணாலை பாத்தம் பேய்கள்தான். '
இது நல்லதுக்கல்ல.
135

Page 76
காலவெள்ளம்
சிலர் சொல்லிச்சினை, பகல். மத்தியான வேளை.
நாய்கள் கடுமையாகக் குலைக்குதுகள். ' ‘வெளியாலை பாத்தம் " பிசாசுகள் நடமாட்டம். இதுவும் நல்லதுக்கல்ல. எங்களுக்கு தெரிஞ்சுது. ‘பேய்கள் எங்கடை ஊரிலை இரவு வேளைகளில் வந்து போகுதுகள் எண்டதை அறிஞ்சுதான் பிசாசுகள் எங்கடை ஊருக்கை நடமாடத்துவங்கிச்சுதுகள். '
சண்டைதூரத்திலை நடந்துகொண்டுதாணிருந்தது." ‘எங்களுக்கு நிம்மதியில்லை "ஊரில் பதட்டம் " "சண்டை மோசமடைஞ்சது. " ‘எங்கடை ஊரிலை எங்களாலை இருக்கேலாமல் போச்சு." எங்கடை ஊரைவிட்டுநாங்கள் வெளியேறினம். கனநாளாய்நாங்கள் அலஞ்சுதிரிஞ்சு அல்லல்பட்டம். கடசியாய் ஒரு ஊருக்குப் போனம். அங்கை ஒரு பெரிய முகாம் இருந்தது. அங்கை கொஞ்சநாள் இருந்தம்.
இந்த இடத்தையும் பேய்களும் பிசாசுகளும் விட்டுவைக் கேல்லை.
பிசாசுகள் வந்து திரிஞ்சுதுகள். காடேறிப் பிசாசுகள், ரத்தக்காடேறிகள், பில்லிப் பிசாசு கள், எரிமாடன்கள் இன்னும் எத்தினையோ வகைப் பிசாசுகள் வந்துச்சுதுகள்.
கடல் கடந்தும் பிசாசுகள் வந்துதுகள் எண்டு கேள்வி. ‘மேலையிருந்து சுப்பசொனிக் ஜெற், புக்காறா விமானங் கள் குண்டுமாரி பொழிஞ்சுதுகள்.
மல்ற்ரிபறல் பீரங்கிகள் குண்டுகளைக்கக்கிக் கொண்டிருந் தன.
கீழையிருந்துதுப்பாக்கிச் சூடுகள். ' ‘பேய்களாலை நிண்டு பிடிக்க முடியேல்லை. அப்பிடியி ருந்தும் சண்டை புடிச்சுக்கொண்டுதானிருந்ததுகள். '
இடையிலை நாங்கள் அகப்பட்டு அவஸ்தைப்பட்டம்.
136

நீர்வை பொன்னையன்
'ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பினித்தாய்மார், வயோதிபர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கிலை படுகாயம். கன பேர் செத்துக் கொண்டிருந்தினை.
‘எல்லா இடமும் மரண ஒலங்கள் நாங்கள் விழுந்து படுத்துக் கிடந்தம். ‘என்ரை கண்ணுக்குமுன்னாலையே என்ரை சிநேகிதன் மார், என்ரை அப்பா, அம்மா, அக்காமார் மூண்டுபேர், இரண்டு அண்ணன்மார் எல்லாரும் சுட்டுக் கொல்லப்பட்டினை.
‘என்ரைசின்னத் தம்பிக்கு படுகாயம் " நானும் தம்பியும் தப்பிட்டம் " 'சண்டை ஓய்ஞ்சுது ' காயமடைஞ்சவர்களை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண் டுவந்தினை. சிலபேர் வழியிலையே செத்துப் போச்சினை.
"கடுமையாய் காயப்பட்ட சிறுவர்களை கொழும்புக் கொண்டுவந்தினை.
றெட் குறொஸ்தான் படுகாயமடைந்த சிறுவர்களை இஞ்சை கொண்டு வந்துது.
படுகாயமடைஞ்ச என்ரை தம்பியையும் இஞ்சை கொண்டு வந்தினை. அவனுக்குத்துணையாய் நானும் வந்தன்." இஞ்சை நேர்ஸ் அக்காமார் காயப்பட்ட எல்லாரையும் நல் லாய் பாக்கினை. அவை எல்லாரும் நல்லவை. அன்பாயிருக் கினை. இரண்டொரு சிடுமுஞ்சியளும் இருக்கினைதான்.
'டாக்குத்தர்மாரும் அன்பாய் ஆதரவாய் எல்லாரையும் பாக் கினை. "
‘சரி, இப்ப உனக்கு என்னவேணும் மோனை? 'எனக்கொண்டும்வேண்டாம். அண்ணை இப்ப ஏன் நீ ஒருத்தரோடையும் சரியாய் பேசிறேல்லை? நீ ஏன் எந்த நேரமும் கவலையோடை இடிஞ்சுபோய் இருக்கிறாய்? '
'அண்ணை இந்தப் பேய்களையும் பிசாசுகளையும் அடி யோடை ஒழிச்சுக் கட்ட வேணும். அப்பதான் எங்களுக்கு நிம் மதி. '
அவனுடைய வார்த்தைகளில் கோபாவேச வெறி. கண்களில் தீக் கனல்!
★
137

Page 77
காலவெள்ளம்
நீர்வையின் படைப்புலகமும் சமூக இயங்கு தளமும்
எம்.கே. முருகானந்தன்
எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார் கள்? தமது ஆத்ம திருப்திக்காக எழுதுப வர்கள் பலர் இருக்கிறார்கள். தாங்கள் கொண்ட இலட்சியத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதற்காக எழுதுபவர் களும் இருக்கிறார்கள். சமூகத்தில் தனது அடையாளத்தைப் பதிக்க வேண்டும் என்பதற்காக எழுதுபவர்களும் இருக்கிறார்கள்.
எல்லோரும் எழுதுகிறார்களே நானும் முயன்று பார்க்க லாம் என முயற் சிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பலரும் இவ்வாறான எண்ணத்துடன் எழுத்துத் துறைக்குள் நுழைகிறார்கள். ஆனால் கால வெள்ளத்தில் பொறுப் புணர்வு அதிகரித்து, சமூக அக்கறையும் மேலோங்க அவர்களது பார்வை விரிவடைகிறது.
நாம் ஏன் எழுதுகிறோம் என்று தனது எழுத்துலகப் பாதையை துணி வுடன் வெளியுலகிற்கு துல்லியமாக வெளிச்சம்போட்டுக் காட்டி எழுதுபவர்கள் ஒரு சிலராகத்தான் இருக்க முடியும். உள்ளத்தில் கள்ளமில்லாத படைப்பாளியால் தான் அவ்வாறு எழுத முடியும்.
அண்மையில் 80 வயதை எட்டிய ஒருவர்தனது இளமைப் பருவம் முதல் கடந்த சுமார் 5 தசாப்தங்களாக கொள்கைப் பிடிப்போடு சிறுகதைகளைப் படைத்து வருகிறார்.
கலைத்துவமாகவும், வாசகர்களுக்கு பயனுள்ளதாக வும் சிறப்பாக எழுதி வருகிறார்.
138

நீர்வை பொன்னையன்
அடக்கப்ப்ட்ட எல்லா மக்களுக்காகவும் அவரது படைப்பு கள் குரல் கொடுக்கின்றன.
முற்போக்கு இலக்கியத்தில் அவருக்கெனத் தனியி டம் உண்டு
இலங்கையின் பெரும்பாலான பத்திரிகைகள் அவரது படைப்புகளை விருப்போடு பிரசுரிக்கின்றன.
வாசகர் மட்டத்திலும் எழுத்தாளர் மத்தியிலும் மதிக்கப் படுகிறார்.
ஆயினும் இன்றுவரை அவருக்கு இலங்கைத் தேசிய சாஹித் தியப் பரிசு கிடைக்கவில்லை.
இவரது முதல் சிறுகதைத் தொகுதி 1961 ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதியாக அவ்வாண்டின் நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால் அன்றைய சாஹித்திய குழுத்தலைவரான ஒரு பேராசிரியர்.
சிறுகதை என்டது ஒரு இலக்கிய வடிவம் அல்ல அதற்குப் பரிசு கொடுக்க வேண்டியது அவசியமில்லை.
எனத் தடுத்துவிட்டதாக தெரிகிறது.
அந்த ஒரே ஒரு வருடம் மட்டுமே சிறுகதைத் துறைக்கென சாஹித்தியப் பரிசு வழங்கப்படவில்லை.
இதனால் சிறந்த சிறுகதைத் தொகுதியாக தேர்ந்தெடுக்கப் பட்டும் பரிசு கிடைக்காமல் போய்விட்டது. இது ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல. பரிசளிப்புகளின் போது திறமைகளைவிட வேறு வியடங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. தனிப் பட்ட உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகளுக்கும் குறை வில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
அவர் பரிசுகளைத் தேடி ஒருபோதும் ஓடியதில்லை. முற் கூறிய சாஹித்திய மண்டலம் உட்பட எந்தப் போட்டிக்கும் தனது
1 2Q

Page 78
காலவெள்ளம்
நூலை அனுப்பியதில்லை.
ஒரு எழுத்த7ளனுக்கான அங்கீகாரம் மக்களிடம்இருந்தே வரவேண்டும். பாரதிக்குடம் மார்க்பிைங் கார்க்கிக்குடம் யார் பரிசு கொடுத்த7ர்கள்2
எனக் கூறி போட்டிகளையும் பரிசுகளையும் நிராகரிக்கின்றார் அவர். இருந்தபோதும்
கொழும்பு பல்கலைக் கழகம் 1998லும் பேராதனைப் பல்கலைக்கழகம் 2009லும்
அவரது படைப்புப் பணிகளைச் சிலாகித்து இலக்கிய விருதுகள் வழங்கிக் கெளரவிக்கத் தவறவில்லை.
அவர்தான் நீர்வை பொன்னையன். சிறந்த தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு பெறாத சிறுகதைத் தொகுதி 'மேடும் பள்ளமும்' ஆகும்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாது ஒழிய வேண்டும் என்ற மனிதநேயக் கொள்கையை தனது கல்விப் பிராயத்திலேயே வரித்துக் கொண்டவர் அவர். தனது ஊரிலுள்ள அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றாலும் பட்டப் படிப்பை மேற்கொண்டது வங்காளத்தின் கொல் கொத்தா பல்கலைக்கழக, சரம்பூர் கல்லூரியிலாகும். போராட்ட உணர்வும் முற்போக்குக் கொள் கைகளும் இவரது உள்ளத்தில் பதிவதற்கு அங்கிருந்த அரசியல் சமூகச் சூழலும் முக்கிய காரணங்கள் ஆகின்றன.
இளமைப் பிராயத்திலேயே முற்போக்கு எண்ணங்கள் தனதுள் ளத்தில் ஆழப் பதிந்த அவர் தான் கொண்ட இலட்சி யத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறார். எழுத்து இவரைப் பொறுத்த வரையில் ஒரு சமூகப் பணி. தன்னை ஒரு சமூகப் போராளியாகவே மாற்றிக் கொண் டார். சாதி, மதம், பிரதேசம், பொருளாதாரம் போன்ற யாவற்றின் பெயராலும் ஒடுக்கப்படும் சகல மக்களின் விடுதலைக்காத் தொடர்ந்து தன் எழுத்தாணியை கூர்மையாகப் பயன்படுத்து கிறார்.
140

நீர்வை பொன்னையன்
மண்ணின் மீது பற்றுக் கொண்டவர் இவர். இதனால் தனது பிறப்பிடமான நீர்வேலியை தனது பெயரோடு நீர்வை என இணைத்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்கிறேன் என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பொன்னையா என்ற தனது பெயரையே பொன்னையன் எனச் சுருக்கிக் கொண்டவர். இருந்தபோதும் நீர்வை பொன்னை யனான அவர்நண்பர்கள் பலருக்கும் நீர்வை மட்டுமே.
மண் மீது மட்டுமின்றித் தனது பெற்றோரில் மதிப்பும் பாசமும் கொண்டவர் நீர்வை. தாய் மீதான பாச உணர்வை வெளிப் படுத்துகிறது. 'அழியாச் சுடர் என்ற சிறுகதை. தகப்பனின் மீதான பாசம் 'சுருதிபேதம்" கதையிலும், பாட்டன் மற்றும் தாய்மாமன் மீதான ஈர்ப்பு 'பாசம்' மற்றும் 'வேப்பமரம்' ஆகிய படைப்புகளில் வெளிப்படுவதைக் காண்கிறோம்.
நீர்வை பிரதானமாக ஒரு சிறுகதைப் படைப்பாளி. இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை அவர் எழுதியபோதும், அவற்றில் சில நாம் ஏன் எழுதுகிறோம் என்ற கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தபோதும், அவர் தன்னை சிறுகதையாளனாகவே முனைப்புப்படுத்தியுள்ளார்.
ஈழத்து முற்போக்கு சிறுகதை எழுத்தாளர்களின் மூத்த தலைமுறையைச் சார்ந்த இவரது ஆரம்பகாலப் படைப்புகளே மிகுந்த கலைத்துவம் மிக்கவையாக அமைந்தது ஆச்சரியமிக் கது. இவரொத்த பலரும் சூழலுக்கு ஒவ்வாத நிகழ்வுகள் கொண்ட கற்பனை வரட்சியான, பிரச்சார வாசனையால் வெறுக்க வைக்கும். கலைவரட்சியுடனான போர்முலாரீதியான கதைகளாகக் சுட்டிக் கொண்டிருந்த நேரத்திலேயே மண்மணம் மிக்க கலைத்துவப் படைப்புகளைத் தந்துள்ளார்.
எமது நாடு ஒரு விவசாய நாடு. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சொந்தக் கானியற்றவர்கள் குத்தகைக் காணிகளில் பயிர் செய்பவர்கள். வயல்கள் மாத்திரமின்றித் தோட்டப் பயிர்களும் குடாநாடெங்கும் செழித்திருந்தன. ஆனால் விவ சாயிகள் வறுமையில் வாடினர். இவர்களைப் பற்றி தமது படைப்புகளில் பேசாது கற்பனையான தொழிலாள வர்க்கப் பிரச்சனைகள் பற்றி பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்
141

Page 79
காலவெள்ளம்
கள் பேசிக் கொண்டிருந்தபோது, நீர்வை மட்டும் விவசாயிகள் பிரச்சனையை தனது படைப்புகளில் முதன்மைப்படுத்தினார். மேடும் பள்ளமும், புயல் போன்ற சிறுகதைகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. தோட்டக் காணி, நீர் இறைப்பு என யாழ் விவசாயிகளின் வாழ்க்கையை தத்வரூபமாகக் காட்டும் "சுயம்வரம்' மற்றொரு சிறந்த படைப்பாகும். நாட்டார் கதை களின்சாயல் படிந்த அக்கதை மிக உன்னதமான ஒரு படைப்பாக எனக்குப்பட்டது. குடாநாட்டு விவசாயிகளைப் பற்றி மட்டு மின்றி வன்னிப் பிரதேச விவசாயிகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல் எழுதத் தவறவில்லை. உதாரணங்களாக உதயம், சம்பத் ஆகிய படைப்புகளைச் சொல்லலாம்.
'மேடும் பள்ளமும்' என்ற இவரது முதற் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் கிராமிய மணம் ரம்யமானது. அத்துடன் அவை பல்வேறு மாறுபட்ட மற்றும் பரீட்சார்த்த பாணிகளில் படைக் கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கலை நேர்த்தியில் அத் தொகுப்பு கதைகள் மிகத் தரமானவை.
வங்காளத்தில் படிக்கும்போது மாணவர் எழுச்சிப் போராட்டங் களில் பங்கு பற்றியதால் அடக்குமுறை எதிர்ப்பு, மக்கள் எழுச்சி, போராட்டம், போன்றவற்றில் பரந்த அனுபவம் கிட்டியது, அத்துடன் அங்கு கற்கும் காலத்தில் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு மொழிவழி இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதாலும் இவருக்கு நவீன இலக்கியங் கள் பரிச்சயமானது. இவற்றின் ஊடாக படைப்புகளில் கருத்தாழம் இருக்கும் அதே நேரம் உருவ நேர்த்தியும் கலை யழகும் சேர்ந்திருக்க வேண்டியதின் அவசியத்தைப் புரிந்திருக் கிறார். இதனால்தான் நீர்வையால் தனது சமகால எழுத்தாளர் கள் பலருக்கும் இல்லாதவாறு சிறுகதைப் படைப் பின் சூட்சுமம் பிடிபட்டிருக்கிறது. யதார்த்தம், நனவோடை, குறுங் கதை போன்ற மாறுபட்ட வடிவங்களை பரீட்சித்து அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
வங்கச் சூழலைக் களமாகக் கொண்ட தரிசனம் முனைப்பு மற்றும் உடைப்பு போன்ற படைப்புகள் ஈழத்து இலக்கியப் பரப்பிற்கு கிடைத்த மிக வித்தியாசமான படைப்புகளாகும்.
14 O

நீர்வை பொன்னையன்
கல்வி கற்று இலங்கை திரும்பிய நீர்வை தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். முழு நேர அரசியல் பணியாளராக இருந்ததால் தொழிலாளர்களுடனும், உழைக்கும் மக்களினதும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர்களது பிரச்சனையை அனுபவபூர்வமாக அறிந்தார். அவர்களது பிரச்சனைகளுக்காக அவர்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்தார். இதனால் இவர் எழுதிய கட்சி அரசியல் சிறுகதைகளிலும் செயற்கைத்தன்மை இருக்க வில்லை. பிரச்சார வாடை அவற்றில் இருந்தபோதும் பட்டறி வும் அனுபவமும் இணைந்ததால் அவற்றில் உண்மைத்தன்மை வெளிப்பட்டது.
கடுமையான போர்க் காலத்தில் யாழ் மண்ணில் தொண்டர் நிறுவனங்களுடன்இணைந்து பணியாற்றியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கியமாக விதவைகள், குழந்தை கள், ஊனமுற்றோர் போன்றவர்களுக்கு சமூகப் பணியாற்றிய அனுபவமும் கைகூடியுள்ளது. இவை பற்றிய பதிவுகள் ஜென்மம், கானல், இரட்சிப்பு போன்ற பல சிறுகதைகளில் புலப்படுகின்றன. போர் பற்றிய மாற்றுக் கருத்துக்களை தனது படைப்புகள் ஊடாக முன்வைத்த ஒருசிலரில் இவர் முக்கியமானவர் எனலாம்.
கட்சி அரசியல் தொழிலாளர் போராட்டங்கள் சார்ந்த படைப்புகளை இவர் நிறையவே எழுதியிருந்தாலும் பாதை தொகுப்பு இத்தகைய படைப்புகள் நிறைந்த தொகுதி எனக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இவர் அதிகம் எழுதுபவரல்ல. இதுவரை சுமார் 70-80 சிறுகதை கள் மட்டுமே எழுதியுள்ளார்.
மேடும் பள்ளமுடம், உதயம், பாதை, ஆன்மடம், வேட்கை, நீர்வை பொன்னையன் சிறுகதைகள், நிடமிர்வு ஆகியன இவரது
ஏழு சிறுகதைத் தொகுப்புகள77கும்.
இவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்கள் என்ன என
யோசிக்கும்போது பல விடயங்கள் முக்கியமாகப்படுகின்றன. நீர்வையின் படைப்புகள் கருத்தாழம் நிறைந்தவை. எப்பொழு
143

Page 80
காலவெள்ளம்
தும் அவை சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய அவசியமான கருத்துக்களை முன்வைப்பவையாக இருக்கும். தேர்ந்தெடுத்த சொற்கள், சுருக்கமான வசன அமைப்பு, தெளிவான நடை, உரையாடல்கள் ஊடாக கதை சொல்லும் பாணி, தெளிவான தீர்க்கமான திசை காட்டும் முடிவு, பொருள் செறிந்த குறும் தலைப்புகள் எனப் பலவாகும். பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் கதை சொல்லும் கலையை நீர்வை பரீட்சித்திருக்கிறார். இவற்றில் பல அவரது படைப்புலகின் ஆரம்ப கட்டங்களில் இடம்பெற்றன. தனக் கென ஒரு பாணி உருவாகியதும் அதன் வழியிலேயே நீண்ட காலம் பயணித்தார்.
ஆயினும் அண்மைக் காலங்களில் அதன் வடிவம் சார்ந்த மற்றொரு புது முயற்சியில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. கதை முழுவதையும் தனித்தனி வாக்கியங்களாக பந்தி பிரிக்காமல் எழுதி வருகிறார். சிறிய வசனங்கள். கவிதையாக இல்லாமல் அதே நேரம் புதுக்கவிதை போன்ற தோற்றத்துடன் படைக்கப்படுகின்றன. அண்மையில் வெளி வந்த நிமிர்வு தொகுதியில் இத்தகைய படைப்புகளைக் காண் கின்றோம்.
ஏற்கனவே குறிப்பட்ட நாம் ஏன் எழுதுகிறோம்' என்பது இவரது கட்டுரைத் தொகுதியாகும்.
'உலகத்து நாட்டார்கதை' என்பது இவரால் மீள மொழியப்பட்ட நாட்டார் கதைத் தொகுப்பு. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கிலுள்ள நாட்டார் கதைகளின் தொகுப்பு. இது பல பதிப்புகள் கண்ட ஒரு சிறந்த நூலாகும்.
தொகுப்பு நூல்கள் சிலவற்றின் தொகுப்பாசிரியராகவும் திகழ்கி றார். அந்த வகையில் முற்போக்கு இலக்கிய கவிதைச் சுவடுகள், முற்போக்கு இலக்கிய சிறுகதைச்சுவடுகள், ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் ஆகியன இவரால் தொகுக்கப்பட்டவையாகும்.
நீர்வை, அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப் பாளராகப் பதினொரு ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி, தொழிலாளி, யுவசக்தி
44

நீர்வை பொன்னையன்
ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்குழுக்களிலிருந்து பணியாற்றி யுள்ளார். அவ்வாறே, கலைமதி, வசந்தம் ஆகிய இலக்கிய சஞ்சிகைகளிலும் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார்.
விபவி கலாசார மையத்தின் தமிழ் மொழி இணைப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றியதுடன் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் முக்கிய அங்கத்தவராகவும் செயற் படுகிறார். ஆயினும் தாய்ச் சங்கமான முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகாலம் முதல் அதன் செயற்பாடுகளில் முக்கிய பங்கெடுத்தவர். அதன் வளர்ச்சிக்கு உதவியவர். அதன் மகாநாடுகள் சிறப்பாக நடைபெற முக்கிய பணியாற்றியவர்.
அவ்வாறு இருக்க எதற்காக இப்பொழுது இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் எனப் பிரிந்துநின்று செயற்படுகிறீர்கள் எனக் கேட்டபொழுது.
முற்போக்கு எழுத்தாளர்சங்கம் செயலிழந்து போய்
பலவருடங்களாகிறது. அதற்கு புத்துயிர்கொடுக்க பல முயற்சிகள் செய்துடம் முடியாமல் போயிற்று. அதன் நீண்ட
காலச் செயலாளரான பிரேம்ஜி7கனடாவிலிருந்து வந்து
முயன்றும் முடியாமல் போயிற்று. எனவே முற்போக்கு
கருத்துகளை உடைய படைப்பாளிகளை ஒன்று சேர்த்து பணியாற்ற வேண்டியது காலத்தின் தேவையாக இருந்தது.
என்கிறார்.
சிறுகதை, கவிதை நூல் வெளியீடுகளுக்கு அப்பால், மூத்த முற்போக்கு சிறுகதையாளர்களையும் கவிஞர்களையும் இன் றைய சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் தொகுப்புநூல் வெளியிடுவது. தோழர்கார்த்திகேசன், பேராசிரி யர், க.கைலாசபதி போன்றோரது நினைவுச் சொற் பொழிவுகள் நடாத்துவது, இலக்கியச் செல்நெறிகள், இலங்கை யின் கல்வி முறை, சூழலியல், சேதுசமுத்திரத்திட்டம், புவிவெப்படைதல், உலகமயமாதல் போன்ற சமுதாய மேம் பாடு நோக்கிய விடயங்களில் கருத்தரங்குகளும் நூல்வெளியீடு களும் என இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் முழு மூச்சுடன் செயலாற்றி வருகிறது. தேர்ந்தெடுத்த திரைப்படங் களை காட்சிப்படுத்தவும் செய்கின்றோம்.
145

Page 81
காலவெள்ளம்
என அதன் செயற்பாடுகளை விளக்கினார்.
இவர் பிறந்தது 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதியாகும். யாருக்கும் தெரியாமல், எந்தவித ஆர்ப்பாட்டமு மின்றி அவரது 80ஆவது பிறந்த தினம் கடந்த 2010 மார்ச் மாதத்தில் கடந்துவிட்டது. மணிவிழா, பவளவிழா என எழுத்தாளர்கள் பலரும் (நான் உட்பட) தம்மை வெளிச்சம் போட்டுக் காட்டும் எழுத்து உலகில் இவர் வித்தியாசமானவர். தன்னை முதன்மைப்படுத்தாதவர் கொள்கைகளுக்காக வாழ்பவர்.
நிறைந்த வயது, நிறைவான வாழ்க்கை தொடர்ச்சியான கடும் உழைப்பாலும், போராட்டங்களாலும் கொள்கைப் பிடிப் பாலும் திடமான உடல். அத்துடன் தளராத மனமும் வாய்த் திருக்கிறது. வயதில் முதிர்ந்தாலும் சோர்வின் சாயல் படியாது. இளமைத்துடிப்புடன் இன்றும் தொடர்ந்து செயற்படும் நீர்வை பொன்னையன் பல்லாண்டு காலம் வாழ்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட வேண்டி வாழ்த்துகிறேன்.
நீர்வையின் 80 அகவை பூர்த்தியை ஒட்டி வீரகேசரிப்
டத்திரிகை வாரமலரில் எழுதிய இக்கட்டுரை சில மாற்றங்களுடன் இந்நூலில் இடம் பெறுகிறது.
★
146


Page 82

எழுதுகிறோம் என்று தனது எழுத்துலகப் துணிவுடன் வெளியுலகிற்கு துல்லியமாக
போட்டுக் காட்டி எழுதுபவர்கள் ஒரு
தான் இருக்க முடியும் உள்ளத்தில் த படைப்பாளியால் தான் அவ்வாறு
போக்கு சிறுகதை எழுத்தாளர்களின் மூத்த றயைச் சார்ந்த இவரது ஆரம்பகாலப் ளே மிகுந்த கலைத்துவம் மிக்கவையாக
ஆச்சரியமிக்கது. இவரொத்த பலரும் ஒவ்வாத நிகழ்வுகள் கொண்ட கற்பனை ன, பிரச்சார வாசனையால் வெறுக்க கலை வரட்சியுடனான போர்முல ரீதியான கச் சுட்டிக் கொண்டிருந்த நேரத்திலேயே ம் மிக்க கலைத்துவப் படைப்புகளைத்
நீர்வை,
தில் படிக்கும்போது மாணவர் எழுச்சிப் ங்களில் பங்கு பற்றியதால் அடக்கு முறை க்கள் எழுச்சி, போராட்டம் போன்றவற்றில் லுபவம் கிட்டியது. அத்துடன் அங்கு கற்கும் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்புக் லும் இவருக்கு நவீன இலக்கியங்கள் னது இவற்றின் ஊடாக படைப்புகளில் ம் இருக்கும். அதேநேரம் உருவநேர்த்தியும், கும் சேர்ந்திருக்க வேண்டியதின் தைப் புரிந்திருக்கிறார். இதனால் தான், ல் தனது சமகால எழுத்தாளர்கள் பலருக்கும் ாறு சிறுகதைப் படைப்பின் சூட்சுமம் க்கிறது. யதார்த்தம், நனவோடை த போன்ற மாறுபட்ட வடிவங்களை அவற்றில் வெற்றியும்பெற்றிருக்கிறார்.
எம்.கே. முருகானந்தன்