கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மண்டூர் முருகன் மீது கீர்த்தனைகளும் அதன் தொடர்பான சுவாமி விபுலாநந்தர் பற்றிய சில பாடல்களும்

Page 1
తతాuూ జోeeF జోకాeF జోక్మాత బొక్కాణికెశోళాeూ జోక్యాలోకి జోక్యాలకెత్త,
S2
சிவ
மண்டூர் மு கீர்த்தை அதன் ெ சுவாமி விபுலா 9A6h) Lu ITL
ஆசிரி
பண்டிதர், வித்துவான் வி
AeLALA AMAASAAAAA AALAAA LLA AMA AMS MAMLL LAeAM AMA LLMLS AASeAeLALA AMA SLLLM AALqi
 

Apie
AgAFF
*As
ప్రోజ్కాకి
Ara
gfyr Afr
గిజా?*
مجھے؟ حیے مچھے
ருகன் மீது னகளும் தாடர்பான ாநந்தர் பற்றிய டல்களும்
L IIί.
1. சி. கந்தையா B, O, L
میخی اہمیت
سيسته محلیت
جماعتیات
منوعه"گیریه
محمحصے
محمحے
عیسحہ^محے
ج�ڑ عین ہچحخمحے

Page 2

மண்டூர் முருகன் மீது கீர்த்தனைகளும் அதன் தொடர்பான சுவாமி விபுலாநந்தர் பற்றிய சில பாடல்களும்
இந்தப் புத்தக விற்பனையால் சேரும் பணம் யாவும் இராமகிருஷ்ண சங்க அனதை இல்லத்திற்கே சேரும்.
பதிப்புரிமை:
பூனி இராமகிருஷ்ண சங்கம்,
இலங்கைக் கிளை
இராமகிருஷ்ணபுரம்
Lot Lj56/TIL-1.
15 நவம்பர் 1988

Page 3

(Upಹಿರೌ$ಶಾ
இந்நூலில் 1946ம் ஆண்டிற் பாடிய பாடல்களும் உள்ளன. அக்காலம் எல்லாம் உடனுக்குடன் அச்சிட்டு துண்டுப் பிரசுரங்களாக சில வெளியிடப்பட்டன. ஆயினும் மண்டூர் முருகனுடைய பேரில் கீர்த்தனங்கள் சில பாடி னேன். அவற்றைச் சேர்த்து முழுவதும் அச்சிட உண்டான ஆசை இதுவரை நிறைவேறவில்லை. பாடல்களுக்கு இசை யமைத்துத்தர எனது பெருமகனுன திரு. பாலசுப்பிரமணி யம் கிடைத்தார். அவர் இளமையிலிருந்து எனது மனைவி திருமதி கங்கேஸ்வரி என்பவரிடம் பயின்று அகில இலங்கை பாடற் போட்டிகளில் கலந்து பல பரிசுகள் பெற்றவர். அவருடைய துணையினுல் முருகனுடைய கீர்த்தனங்களை இசையமைத்து வைத்திருந்தேன். அவைகளை இப்போது வெளியிடக் காலாயிற்று.
இவைகளை வெளியிடும்போது மண்டூர் முருகன் கோயிலைத் தொடர்ந்து விபுலாநந்த அடிகளார் மட்டக்களப்பு முழுவதும் ஆக்கிய இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலைகளும் அவற்றின் தலைமை போன்ற இராமகிருஸ்ணபுரம் சிவா னந்தா வித்தியாலயமும் அதனேடு அமைந்த மாணவர் இல்லமும் பற்றிய பாடல்களும் இதனேடு சேர்க்கப்பட்டி ருக்கின்றன. விபுலாநந்த அடிகளாரின் உடல் அடக்கத்தின் போது யான் எழுதி அச்சிட்டு கொடுத்த பாடல்கள் இத னுேடு சேர்க்க வேண்டிய அவசியத்தை பல அன்பர்கள் எனக்கு நினைவூட்டினர்கள். அதனுல் இத்தகைய பாடல் களும் இந்நூலில் இடம்பெற்றன. இன்னமும் பல பாடல் கள் வெண்பா, விருத்தம், ஆசிரியப்பா என்பனவும் உண்டு.
அன்பர்கள் இந்நூலை ஏற்று படித்து பயன்பெறுவார்
0,0YTTI J5 .
நூலின் இடையில் இலங்கை மாதா திருத்த சாங்கம் என்னும் நூலும் சேர்க்கப்பட்டுள்ளது.

Page 4
இந்நூலில் இடைப்பிறவரல் ஆகபின்னுல் வருவதைச் சேர்க்கும் அவசியத்தைக் குறிப்பிடுவதற்கு அன்பர்களிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். ஆலயக் கணக்குகளைப் பார்க்க நாலு ஊர்களிலுமிருந்து கணக்குப்பிள்ளைகள் வைக்கப் பெற்றுள்ளார்கள். கந்தசஷ்டி விரத காலத்தில் மண்டூர் 3ம் குறிச்சியினரும், நாவிதன் வெளியினரும் முக்கியபங் கெடுக்கும் நிகழ்ச்சி வள்ளியம்மன் திருமணத்தன்று உண்டு. அதனல் அப்பகுதிக்கும் இருவரைச் சேர்த்தல் அவசிய மாகும். அதற்கு தற்போது மண்டூர் மகாவித்தியாலய அதிபராக உள்ள திரு. S. தில்லைநாதன் அவர்களும், மட்டக்களப்புக் கச்சேரியில் உதவி அரசாங்க அதிபராக இருந்து இளைப்பாறியுள்ள திரு. V. சோமசுந்தரம் அவர் களும் பொருத்தமாகும். இந்த ஆறு கணக்குபிள்ளைமாரும் சுவாமி தீர்த்தமாடும் போது சபாமண்டபத்துள் செல்ல சட்ட பூர்வமாக இடமளிக்கப்படல் வேண்டும்.
மற்றும் ஒரு உதவி வண்ணக்கரும் நியமிக்கப்படல் வேண்டும். இதனுல் மண்டூரில் உள்ள மண்டூர் வகுத்து வார், பழுகாமத்து வகுத்துவார் என்ற பிரச்சினைக்கு மறுப்பு நீக்கப்படுகிறது. அண்மையில் நடந்த வழக்கில் இது பற்றிப் பேச இடமளிக்கப்படவில்லை. இதனலே மரபு நிலை நிறுத்தப்படவில்லை என்று தீர்க்க வேண்டிய அவசியம் கோட்டாருக்குண்டாயிற்று.
கப்புகளுர் தலைமையில் நடக்கும் இவ்வாட்சி முறை பழைமையான எண்பேராய ஆட்சியை நினைவூட்டுவது. கணக்குப்பிள்ளைமார் குழுவுக்கு திரு. S. தில்லைநாதன் அவர்கள் செயலாளராக இருக்கலாம் என்பதும் எனது தாழ்மையான எண்ணமாகும். - -
வணக்கம் - வி. சீ. கந்தையா
15, மாடி வீதி, 1 5 8 8 سم 1 1 سم மட்டக்களப்பு.

மண்டூர் விநாயகர் வணக்கம்
------------ سے کSA-------------
அருளொழுகும் திருவதனம் அதுகொண்டு மண்டூர் வாழ்
ஆனைமுக மணிவிளக்கை அநவரதமும் மறவேன்.
நேரிசை வெண்பா
பூந்தாமரைப் பொலியும் பொற்கொடியே அன்னநடைத் தூண்டாமணி விளக்கே சொற்சுடரே - நீண்ட புகழ்த் தீந்தேன் பிலிற்று தமிழ்ச் செல்வக் களஞ்சியமே பூண்டேன் மலரடிப்பூண் போற்றி.
நற்புலவோர் ஞானம் நவில்வாய் முனிவோர்கள் சொற்குளுறை தூயசுடர் விளக்கே - நற்கமலப் பூவதியும் அன்னப் பெடையே புதுமலரென் நாவதிய வந்திடுதி நன்கு.
கற்போர் உளத்தவியாக் காமர் கலைவிளக்கே சொற்போர் புரிவோர் தம்சொற் கொழுந்தே - அன்பு நிறைந் தண்டினேன் உன்றன் அடிமலர்கள் தந்தென்னக் கொண்டிடுதி உன்பாற் குறித்து.
இன் தீந் தமிழ்க் கவிகொண்டேத்தி உனத்துதிக்கத் தந்தாய் மலரணங்கே தண்ணளியால் புந்தி மகிழ்ந் தாங்கிலமும் கற்றுவளர் ஆரியமும் பெற்று ஒளி ஓங்கிவரச் செய்யெனக்கு ஈங்கு.
நல்லோர்க்குள் நல்லோனுய் நாளும் கலைநிறையப் பல்லோர் புகழ்ந்துரைக்கும் பாவலனுய்ச் - சொல்லிலுயர் தீரணுய்ச் செம்மைநிறை சீலளுயுன்னடியோர் நீரனுய்ச் செய்திடெனை நீண்டு.
(1946 விஜயதசமியன்று (3- 10- 46) பாடியது)
O1

Page 5
எங்கள் அன்னை கலை வாணி 一一一★一一一
விருத்தம் அறுசீர்
வெள்ளே அன்னை மலர்வாணி மேவிப்பணியுமுயரன்பர் உள்ளக் கமலத் துறைவாணி உருகிப்பாடும் பாவலர்தம் கொள்ளை இன்பத் தமிழ்நாவில் குடிகொண்டுள்ள குலவாணி அள்ளக் குறையாத் தெள்ளமுதாம் அன்னை எங்கள் கலைவாணி
இன்பத் தமிழ் கொண்டிவள் பெயரை ஏசிப்பேசி நின்ருலும் இன்பத் தலர்ந்தே உளம்குளிர எல்லாமருளும் பெருவாணி
இன் புற்றெழவே நலமருளும் எங்கள் அன்னை கலைவாணி
பல்வித்தகரும் பாவலரும் பாடிவேண்டும் கவிவாணி சொல்வித்தகரும் துறவோரும் துதிகொண்டேத்தும் சொல்வாணி மல்வித்தகரும் மறவோரும் மனதிற் பேணும் மதிவாணி எவ்வித்தகரும் போற்றியுயர் எங்கள் அன்னை கலைவாணி
இன்சொற் புணர்ந்த உயர்நிறைந்த எழிலும் சுவையும்பயந்துள்ள இன்பப்பொருளும் இசைநயமும் எல்லாம் சேர்ந்த கவிபோல இன்பம் பயந்து எழில்பயந்து எவர்க்கும் உள்ளக்களிகொடுக்கும் இன்ப உருவே கலையுருவாம் எங்கள் அன்னை கலைவாணி
வெள்ளைமலராள் வெண்துகிலாள் மேவுமழகின் பொன்மேனி வெள்ளையானுள் எல்லாமும் மேவுமிவற்றின் பொருளாயின் வெள்ளை தூய்மை தனகாட்டும் மேவும் கலையும் தூவொளியாம் வெள்ளை இன் பத் துருவானுள் மேவி எங்கள் கலைவாணி
வேண்டி நிற்போம் இவள்பாதம் மேலும் கலைகள் நமக்குயரும் வேண்டி நிற்போம் செல்வமெலாம் மேலும் மேலும் தந்திடுவாள் வேண்டி நிற்போம் திருவருளை மேலும் உண்மை புகழோங்கும் வேண்டி நிற்போம் தருவளெலாம் மேலும் அன்னை கலைவாணி
(இன்று (1 - 10 - 49) விஜயதசமிக் காலை இச்செய்யுள்கள் வாணியைப் போற்றி எழுதப்பெற்றன,
O2
 
 

மண்டூர் விநாயகர் மீது
------
இராகம்- மத்தியமாவதி
தாளம்- ஆதி
si)6)6. சித்தி விக்னேஸ்வரனை நீ என்றும் சேவித்து
சிந்தித்திடுவாய் - மனமே (சித்தி)
அனுபல்லவி
புத்தியில் ஒன்றி நின்று போற்றிப்பணிந்து அன்பாய்
நித்தியம் மண்டூர்வாழ்நின்னை அணைந்துருகி. (சித்தி)
சரணம் கல்வி செல்வங்களோங்க காலனும் நம்மை நீங்க பல்புகழ் தேங்க சித்தி நீ வளரும் எங்கள் செல்வ வினுயகனைச் சீர்மலி செம்மல் தன்னை - மல்குவளம் சுரந்து வாழ்வு கதிக்க என்று (சித்தி)
சருகு பித்தளையையும் தங்கத் தெளிவாய் மாற்றி ஒளிபெற நம்மை ஆக்கி உள்ளுணர்வோங்க வைக்கும் ஒருவனே மண்டுர் வளர்ந்து ஒளிரும் அருட்கடலை ஊன்றி உணருவோர்க்கு உண்மை நிலை அளிக்கும் (சித்தி)
03

Page 6
கதிரை முருகன் மீது 一一一演一一
இராகம்- பைரவி தாளம் - ஆதி
அருள்செய் கதிர் வேலா ஏழை
அன்பிற்கிரங்கி வந்தே அணைத்து என எடுத்து
(அருள் செய்)
அனுபல்லவி உருகி மனம் கனிந்து உனது கதிரைப் பதி கருதும் அடியார்க்கின்பம் காட்டி மனம் நிறைந்து
(அருள்செய்) சரணம்
இச்சை கிரியை ஞானம் என்ற உனது புகழ்
ஏத்தி அருள்வளர்த்தே இன்பம் பெருக உன்னை மெச்சும் அடியார் துயர் மேவித்துடைத்து நிதம்
மேன்மைக் கலையோடன்பு வெற்றி அளிக்கும் ஐயா
(அருள்செய்)
உன்னைக் கருதலன்றி ஒன்றும் நினைத்தலில் லேன் ஊமை விளியேன் உந்தன் ஒங்கு பதம் பணிய என்னைப் பணித்து இன்பம் ஏற்றி நலம் வளர
என்றும் உனைப்பரவி ஈடில் புகழ் விளங்க
(அருள் செய்)
04.

வருவீர் கதிர்காமம் . . . .
= 07 - S6
கிளியைத் தூது விடுத்தேன்.
1. கிள்ளை உரை செய் நீ கிளி மொழியாள் வள்ளி பங்கன்
தெள்ளு தமிழ் முருகன் தேனர் கடம்பணியும் பிள்ளை கதிரை நகர் பேசும் அடியவர்க்கு உள்ளும் பகையுளதோ உறு துயரம் உண்டாமோ!
2. அஞ்சுகமே செம்பவள அணிவாய் மணிக்கிள்ளாய் கெஞ்சுகின்றேன் உன்னைக் கிளர்வான் படர்ந்தேகி மஞ்சை வடிவேலான் மாணிக்கக் கங்கையிடைத் தங்கத் தமிழருக்குத் தடையுளவோ கண்டிடுக,
சென்று வந்த கிளி.
கீழை நெடுவான் படர்ந்து கொடு முடியும் ாேடும் கடந்து கதிர்காமம் - நாடி வந்து மணிக்கிள்ளை வாய் திறந்து பேசுமொழி சிந்தைதனை உருக்கும் சீர்த்து.
வள்ளிதளை அணைந்தான் மறைந்தேன் அவள் பகிர்வாள் கள்வா கதிரையுறை கந்தா தமிழர் பயம் கொல்வாய் என முருகன் கூர்வேல் நுதி தொட்ட்ான் விள்ளும் பயம் உளதோ வேல்வேல் என எழுந்தேன்
முருகன் அருட் தெய்வம் மூவேழுலகுக்கும் ஒருவன் அவன் தீமை ஒன்றும் அணுக விடான் தருவன் கதிர்வேல் தம்முட் துணை கொண்டு வருவீர் கதிரிகாமம் மனச்சோர்வு வேண்டாமே.
கல்லோயாவில் சிங்களவர்க்கும் , தமிழர்க்குமிடையில் நடந்த கலகத்தைத் தொடர்ந்து இம்முறை (1956 ஆடி) கதிர்காமத்திற்கு தமிழர் செல்லப் பயந்துள்ளதையொட்டி 15 - 7 - 56 'ஈழகேசரி’க்கு
இப்பாடல் எழுதி அனுப்பப்பட்டது.
OS

Page 7
மண்டூர் முருகன் பேரில் கீர்த்தனைகள் 導
06 - 09 - 78
1.
இராகம் - கரகரப்பிரியா தாளம் - ஆதி
தில்லை மண்டூர் முருகன்
சொல்வாய் இளங்கிளியே - ஒருமுறை நீ
சொல்வாய் இளங்கிளியே
அனுபல்லவி தில்லை மண்டூர் முருகன்
திருப்பெயர் தன்னை இன்று வள்ளி மணுளன் மயில்
வாழ் முருகேசன் என்று (சொல்வாய்)
சரனம்
செந்நெற் கழனி சூடும்
தில்லை மண்டூர் வளரும் மன்னன் அடியர் துயர்
மாற்றும் செவ்வேலனை நீ கன்னித் தமிழ் முருகன்
கதிர்வடி வேற்குமரன்
இன்னல் களைந் தன்பர்க்(கு)
இன்பம் அளிப்போனென்று (சொல்வாய்)
06

2. சோதி மண்டுருறை துணைவன்
இராகம் - சாமா தாளம் - ரூபகம்
வேல் முருகையா - உன்
தாள் துணை ஐயா - மண்டூர்
அனுபல்லவி சூழ்வினை அகல துன்பங்கள் விலக
சோதி மண்டூருறை துணைவன் நீ ஐயா
(வேல் முருகையா) சரனம் கண்ணுெடு மனமுமுன்
கழல்களில் வைத்தேன் காப்பதுன் கடனென்று
கரங்கள் குவித்தேன் பண்ணுெடு உன் புகழ்
பாடித் துதித்தேன் பாமரன் நான் எம
பயத்தினை ஒழித்தேன். வேல் முருகையா)
3. அருள் செய் கதிர்வேலன்
இராகம் - ஆனந்தபைரவி தாளம் - ஆதி
-
அருள் செய் கதிர்வேலா - ஏழை
அன்பிற்கிரங்கி வந்தே அணைத்து என எடுத்து (அருள் செய்)
உருகி மனம் கனிந்து
உனது மண்டூர்ப் பதி கருதும் அடியர்க்கின்பம்
காட்டி மனம் நிறைந்து (அருள் செய்)
O7

Page 8
FAJGONU ab இச்சை கிரியை ஞானம்
என்ற உனது புகழ் ஏத்தி அருள் வளர்த்தே
இன்பம் பெருக உன்னை மெச்சும் அடியார் துயர்
மேவித் துடைத்து நிதம் மேன்மைக் கலையோடன்பு
வெற்றி அளிக்கும் ஐயா. (அருள் செய்)
4. தில்லை மண்டூர் வளரும் செல்வன்
இராகம் க ஆரபி தாளம் - ஆதி
தில்லை மண்டூர் வளரும்
செல்வக் குமரனருள் செப்புக நன்மனமே - தினமே அனுபல்லவி வள்ளி மணம் புணரும்
வள்ளலருட் குமரன் புள்ளி மயிலில் வரும்
போதாந்த நாதனென்று
சரணம் செல்வக் கதிரை நகர்
தில்லை மண்டூருணக்கு சீவன் முத்தி அருள்
செல்வ முரித்துனக்கு நல்லை நகர் வளரும்
நல்ல துணைவன் என்று நானுனேத் தேடி வந்தேன்
நாயகன் நீதானென்று (தில்லை மண்டூர்)
5. சொந்தம் உனையலாது துணை எது முருகா
இராகம் - ரஞ்சனி
தாளம் - ஆதி
மண்டூர்ப் பதியில் உறை வள்ளி மணவாளா
வீண் தமிழ்க் குமரா நீ வருக முருகா
() 8
 

அனுபல்லவி பண்டைத் தலங்களிலே
பார்புகழ் நின்பதிகள் கண்டும் மனம் அடங்கேன்
கடம்பா முருகா (மண்டூர்ப்பதியில்)
சரனம் தந்தையும் தாயும் நீ சற்குரு நாதனே தனி முதலானவன் நீ சரவணபவனே பந்த மறுத்தருள் வாய் பாசம் களைந்திடுவாய் சொந்தம் உனையலாது துணை எது முருகா
(மண்டூர்ப்பதியில்)
திரை மறைவில் நிற்கும் தில்லை மண்டுரான்
இராகம் = சுருட்டி தாளம் - ஆதி
தில்லை மண்டூரினிலே
திரையின் மறைவில் நின்று நல்ல அருள் சுரக்கும்
நாதன் வருவானடி - என்றும்
- (தில்லை மண்டூர்) தொல்லை வினை அலச் சூழும் பிணி விலக நல்லோர் துணைக்குரிய
நாதன் மண்டூரான டி
(தில்லை மண்டூர்) தாள மேளங்கள் கொட்டத்
தான் மயிலூர்ந்து வந்து ஊழின் வலி அறுக்கும் ஒருவன் மண்டூரானடி
(தில்லை மண்டூர்) மூர்த்தியைக் கண்டாரில்லை
முத்தியைப் பெற்றேர் உண்டு சாத்திரம் எதுமங்கில்லை
கத்துவம் மண்டூரில் உண்டு
(தில்லை மண்டூர்)
09

Page 9
5.
செவ்வேல் முருகனுக்கே நேர்த்திகள் செய்து மூழ்கி நிறைபயன் சேர்ப்பரங்கே
(தில்லை மண்டூர்) இம்மை மறுமை ரெண்டும் இன்பம் நிறைப்பானன்ருே செம்மை முருகன் மண்டூர்ச்
சீரிய செல்வமன்ருே,
(தில்லை மண்டூர்)
O
 

மட்கக்களப்பு இராமகிருஷ்ண சங்க மாணவரில்லப் பாடில்
சனகனமன அதிநாயக ஜயகே?. என்ற மெட்டு
அருளமுதம் நிறை பரீராம கிருஷ்ண அண்ணலை என்றென்றும் வாழ்த்துவமே
அனுபல்லவி பெருநிலை ஞானி பரமஹம்சர்
பேரொளி சாரதை அன்னை அவர் திருவுறு தீர விவேகாநந்தர்
சேர்ந்ததோர் குருமசராசரவர் வாழ்க வாழ்க குருதேவர் திருவடி வாழ்க
(அருள்முதம்)
சரணம் மலரினில் நறுமணமாய் உயர்
உயிரினுக்குள்ளுறை உயிராகி - அதன் உள்ளொளிர் பேருணர்வது வாகி பலமத சங்கமம் ஒன்முன
பரம்பொருள் ஒன்றெனப்பகர் பெரியோ இலகிடு மாணவரில்ல முறைந்து
எமை வளர் நின்மதம் வாழ்த்துகின்ருேம் வாழ்க வாழ்க வாழ்க குருதேவர் திருவடி வாழ்க
(அருளமூதம்)
11

Page 10
மாணவரில்லப் பெருங்கோவில்
வந்துறை தவமே வாழ்த்துகின்றுேம் ஆணவம் தீமை அவை அகற்றி
அருளொளி வளர்த்தோய் வாழ்த்துகின்ருேம் தீனருக் கருளொடு செம்மை அறம்
சேர்த்திடு திருவே வாழ்த்துகின்ருேம் மாணுடை அறிவு கல்வி பொறை
வளருக எமக்கென வாழ்த்துகின்ருேம் வாழ்க வாழ்க வாழ்க குருதேவர் திருவடி வாழ்க
(அருளமுதம்)
சுடலையில் எழுந்திடு பெருங்கழகம்
சூழ்ந்திடும் மாணவர் வாழ்நிலையம் திருவுறை நிலை என எழிலோங்கத்
திரண்டுள பெரியோர் வாழ்வுறுக இடமுற எமை வளர் பெருந்துறவோர்
ஏற்றெமை மதிபுகழ் நல்லாசார் பெருநலமுற எமை வாழ்த்துகின்றர்
பேரருளாளனே வாழ்த்துகின்ருேம் வாழ்க வாழ்க வாழ்க குருதேவர் திருவடி வாழ்க (அருளமுதம்)
குருதேவர் அகவல் 16 - 3 - 46
மலர் தலை ஞாலம் வாழ்ந்திடவந்த அலர் கதிரோன் போல் அகவிருள் சித்துக் குதிராம் அந்தணன் கொண்ட நற்சந்திர மதியார் மணிதர வந்தவதரித்துச் சமயமும் சாதியும் சார்ந்திடு பேதம் கமையுடன் இளமையிற் கடிந்தே ஞானக் கலைவளர முதாய்க் கற்பகக் கொழுந்தாய் மலைவளர் மடந்தைதன் மானுருக் காண உணவுந் துயிலும் ஒழித்து நல்லுயிரையும் கணத்தினில் ஒழிக்கக் கைக்கொளும் வாளே அவித்தையை அறுக்க ஓங்கரிய வாளாத் தவத்தினுக் கெட்டாத் தாயுருக் காட்டக் களிமகிழ் பூத்தக் காளிதன் மகவாய் அளி பெற வளர்ந்த அன்பே அமுதே பயிரவி அன்னையார் பயிற்று தந்திரமும்
12
 
 

வயிர நற் தோதா புரிதரு ஞானமும் கணக்கினுக் கடங்காக் கடுந்தவனயொரு கணத்தினிற் கண்டே கடல்வரை உலகம் அனைத்திலும் பிரமம் ஆடுதல் காட்டி
மனத்தினிற் பெண்டிரை மாதுராய்ப் பேணிச் சகலமும் நிறை தவச் சாரதை கணவனுய் இகபரம் ஆளும் இன்ப நற் பிழம்பாய் அருள் ஒளிர் கண்ணன் ஆண்மைசேர் ஆக்கையன் இருளகல் ஞான இசைவளர் மொழியான் வித்தியா சாகரன் விவேக நரேந்திரன்
சத்திய வாலிபன் சார ஆங்கவணுல்
பத்தியும் ஞானமும் பலமதச் சேர்க்கையும் இத்தரை விளங்கநம் இந்து மதக் கொடி எடுத்தொளி சேர்த்த இராமக்கிருஷ்ண அடுத்தவர் பவப்பிணி அறுக்கு நல்லொளிசேர் அண்ண லெங் கதாதர அருட் சுடர் மணியே மண்ணிலுன் இணையிலா மறைமொழி போற்றி வாழ்குவம் உன்சுழல் மலர் எடுத்திட்டே
அருட் சுடர்மணி என்ற தலைப்புடன் இவ்வகவல் 23, 2, 47 "ஈழகேசரி யிலும் மார்ச் 1947 இராமகிருஷ்ண விஜயத்திலும் வெளிவந்தது.
கதாதரர் தாலாட்டு
6. S. 46
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ சீரார் பசுங்கிளியே தெவிட்டாத செந்தேனே பேரார் குலக் கொழுந்தே பெருமானே கண் வளராய்!
கண்ணே கருமணியே கற்கண்டே கதாதரனே மண்ணை அளந்தானே மாயவனே கண்வளராய்!
அசோதை மணித் தொட்டிலுக்கும் அலை கடற்கும் இவ்வேணை அசையும் சிறு தொட்டில் அடுக்குமோ கண்மணியே
பிறவிப் பிணியகலப் பெருவறுமைப் பேய் தொலைய அருமைக்கு திராமன் அகம்பிறந்தோய் கண்வளராய்

Page 11
முத்தே முழுமணியே மூவுலகும் ஆளவந்த வித்தே கதாதரனே விழுப்பொருளே கண்வளராய்
இத்தாலாட்டும், குருதேவர் அகவலும் 16- 3= 46ல் நடந்த கதாப்பிரசங்கத்திற்காய் இசைமணி S. வினுசித்தம்பி அவர்கள் கேட்டு எழுதிக் கொடுத்து பின்னர் இராமகிருஷ்ண விஜயத்திற்கு அனுப்பி பிரசுரித்தவை.
விவேகானந்த மாலை
1946ம் ஆண்டு தை மாதம் நடந்த விவேகாநந்த ஜயந்தியில் பாடியது
1. அன்புமணம் பரந்தோங்கி அருள் செழித்து உலகனைத்தும்
துன்பமகன் றுயிர் வாழச் சுடர்விளக்காய் அவதரித்தோய் பண்பிதனுல் எமக்கன்றிப் பார்முழுதுக் கும்முடைய இன்ப விவே காநந்த ஏத்துகின்ருேம் ஜய ஜயவே!
2. நம் தருமப் பூங்காற்று நாடுதொறும் மணம் கொழிக்கச்
சிந்தைசிறந் தாங்கிலரும் சிக்காக்கோ வந்தோரும் இந்து மதத்து உயர்நோக்கை இனித்தேற்றுக் கொண்டுரைக்க வந்த விவே காநந்த வாழ்த்துகின்ருேம் ஜய ஜயவே!
3. வேண்டுவர்க்கு வேண்டுவதாய் வேண்டிடும்போ தங்குவரும்
ஆண்டவனே தான்சிவனுய் அல்லாவொடு கிறிஸ்தாய் நீண்டிடுவோன் என்றுரைத்த நின்மலனைத் தன்குருவாய்ப் பூண்ட விவே காநந்த போற்றுகின்ருேம் ஜய! ஜயவே!
4. வெறுவயிற்றுக் கில்லைமதம் வேண்டுவதேற் தளை அடிமைச் சிறைநீங்கிப் பொருள்வளரச் செயல்வேண்டும் என அரசுத் துறையதற்கும் மதமிதற்கும் தொடர்கண்ட சுடர்மணியே துறவி விவே காநந்த வாழ்த்துகின்ருேம் ஜய! ஜயவே!
5. சங்குதிரை ஊர்ந்துவரத் தரளநிரை அலை எறியும்
பொங்குகடல் சூழிலங்கை புகழ்சிறந்து முன்னேங்க இங்கு சிவா நந்தமுனி எழுந்தருளப் பண்ணின நீ வங்க விவே காநந்த வாழ்த்துகின்ருேம் ஐய! ஜயவே!
14.
 
 
 
 
 

பாரதஞ் சேர் தெய்வீகப் பழம்பெருமை மிக்கோங்கச் Soprniruo கிருட்டிணனர் தெய்வ அருட் சங்கமதை நேராகச் சேர்த்தமைத்த நின்பெருமைக் கீடேது தீரவிவே காநந்த சேவடியோய் ஜய ஜயவே!
இந்துமதப் போர்வீரன் என்றுலக முனைப்போற்ற அந்தணரும் அறவோரும் ஆரதிகள் கொண்டேத்தப் பந்தமற இல்லோரும் பார் முதல் சீர்தேட அருள் தந்தவிவே காநந்த பணிந்தோம் ஜய ஜயவே!
பொன்னுர்ந்த திருவடிகள் புகவிழையும் அன்பருக்கு என்னளும் உலகியற்கை இறவாதப் பூங்கழல்கள் முன்னக அருள் பொழியும் மொய்கரும வழி கண்டோய் நின்னுமம் மொழிகின்ருேம் நீள்தவனே ஜய! ஜயவே!
ஈழ நற்கிழக்கு வாழ் எம்புகழ் மன்றினில்
ஆழவே பொறித்திடும் அரசியற் சிற்பிகாண் வாழி நின்புகழ் வளர்க இவ்வுலகிடை
வாழ்த்தினுேம் வீர விவேகாநந்த ஜய ஜயவே!
10. ஏழைகளே நடமாடும் இவ்வுலகக் கோயிலவர்
நீள் துயரக் கண்ணீரில் நீந்துமவர் மேலாவார் தாழ்வவர்க்கு ஒன்று முரு தாரணியில் என்றமர
வாழ்வுதரு மன்னவனே வாழ்த்துகின்ருேம் ஜயர் ஜயவே!
=
பூர்மத் சுவாமி விபுலாநந்தஜீ அவர்கள் இலங்கைச் சர்வகலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராகி வந்தபோது கல்லடி உப்போடைக்கிராம வாசிகள் சார்பில் அன்பர் நடராசர் வரவேற்புக்காகக் கேட்டுப் பாடி அளித்தது.
நேரிசை வெண்பா
ஞானத்தவக் கொழுந்தை நங்கள் கலேயமுதை மோனத் தமிழ் மூன்றும் தந்தானத் - தானத்தின்
சன்மணியைச் சாமிவிபு லாநந்த நன்மணியைப் பன்மலர் தூவிப் பணிகுவாம்.
15.

Page 12
0.
5.
0.
豊5。
3 0.
நிலைமண்டல ஆசிரியம்
தண் தமிழ் அணங்குசெய் தவப்பயனென்ன வண் தமிழ்க் காரைநன் மாநகராங்கண் கல்வியும் செல்வமும் கறைமிடற் ருேன்பால் செல்வுறு மனமும் சேர்திரு அண்ணல்
சுவாமி நாத வள்ளல் பயந்த சுவாமி விபுலா நந்த வள்ளால் ஆரியம் ஆங்கிலம் அரும் பொருட் சாத்திரம் சீருடன் பயின்றே சிந்தை தெளிந்தோய் கற்றவர் புலன்விழை நற்றவக் கொழுந்தே!
இத்தரை யாவும் இளமையிற் துறந்தோய் அருந்திற லாளன் நரேந்திர நாதன் அருள் மொழி ஞான தீபங்காட்டித் திருத்தினை நடராஜன் திருவடிவம் பழந்தமிழ் மாந்தர் பருகு யாழிசைத் திறன்
உளங்கொள ஆய்ந்தே உயர் தீந்தமிழில் யாத்தினி தளித்தாய் ' யாழ் நூலாக' தனஞ்சயன் தந்த "தசருபகத்தையும் மனஞ் செலுஞ் சிற்பியார் மாண்பு நூல்களையும் 'மதங்க சூளாமணி என யாத்து
இலங்க நீ சூட்டினை இன் தமிழுக்கே இதனுல், முத்தமிழ்ச் சாறுவார் வித்தகக் கரும்பே பத்தியிற் கயிலைப் பருப்பதம் கண்டோய் முந்திரிச் செடிநிறை முது பதியிதனைச் சிந்தையிற் தெரிந்தே சிவா நந்த சாலை
தந்தெமை மகிழ்விற் தங்கிடச் செய்தோய் இலங்கையும் தமிழொளி இலங்குதற்கா நீ இமயமால் வரையிருந் திறங்கி வந்தனையே நின்கடன் பலவு நீ அறிகுவை நாங்கள் என் சொலற்(கு) எம்மிடை வருக நின்னெழிலார்
வரவு நல்வரவே ஆகுக வான்திரைக்
கரையக மனலெனக் கணக்கிலா நாள் பல வாழி நீடுழி நீவருதி நல்வரவே
16
 

பூனிமத் சுவாமி விபுலாநந்தா அவர்களது திருவுடல் அடக்கத்தின்போது பாடப்
பெற்ற இரங்கற் பாக்கள்
21-7-1946
G6hgufisT LIFT
ஞானத் தவக்கொழுந்து நங்கள் கலைமுதல்வன் மோனத் தமிழ் மூன்றும் முற்றுமுனி - தானமணி சன்மணி எம்சாமி விபுலாநந்த நன்மணிவிண் மன்மணியாய் விட்டான் மகிழ்ந்து
கட்டளைக் கலித்துறை 1. ஈழம் பயில் தவம்சேர ஒருங்கு திரண்டெழுந்தே
நாளும் மதிபோல் கலையில் வளர்ந்தொளிர் ஞானமிக்கு பாழும் உலகம் வெறுத்துப் பரத்தினுக் கேகினையோ வாழும் கலையோய் மதி விபுலாநந்த மாமணியே!
2. எல்லாக் கலையும் நிறைந்தாய் இயலிசை நாடகமும்
சொல்லாய்ப் பயின்றன சோராதிளமை சுகித்தலின்றி வல்லா னிராமகிருஷ்ண பரமனடியினை சார்ந் தெல்லாரு மேத்த இருந்தாய் நீ இன்றெங்கு ஏகினையோ
தாழிசைகள் 1. சரிகமவும் பதறிசவும் தனித்தனியே வடித்தெடுத்து
புரிவுறநல் லிசையமுதாய்ப் புவிக்களித்தாய் புலவோர்கள் பரிவுற இங் கழுதரற்றிப் படுதுயரம் தணிலாழப் பிரிவுறவு செய்தனையே பெருமுனிவ வருவாயோ?
2. சத்தியமும் அன்பதுவும், சாத்திலுயிர்க் கிரங்குவதும்
உத்தமமென் ருெரு நோக்கேயுனது மதம ய் இருந்தாய் நித்திரையாய் இன்றிருக்கும் நினைவெதுவோ நிருமலனே வித்தகனே விபுலாநந்த வீர மணி மீளாயோ!
3. ஏழைகளும் ஒன்று னக்கு இருநிதியங் கிழவர்களும்
பாவலருக் குயிரான பார்த்திபனே காரைநகர் மூழுதவம் சேரவொன்ரு ய் முளைத்தெழுந்த செழும்பயிரே வாழும் வழி என்னேயோ வரல் நினைந்து சென்ரு யோ
17

Page 13
7.
0.
கல்வியிலும் மிகுபுலவன் கதித்த தவநிலைமையிலும் சொல்லிலும் மிகுபுலவன் சுவாமிவி புலாநந்தன் நல்லிசையில் நாயகன்காண் நமக்குயிரென் றிருந்தோமை வல்லவநீ சொல்லாது வானுலகம் மேவினையே!
வீதிதொறும் பள்ளிகளை விதித்தனை நீ எம்நாட்டில் சாதிமதம் பாராது தானிருந்து காட்டினையே மாதவனே உன்போல வாய்த்திடுமோ இப்புவிக்கே நீதவனே கண்துயின்ரு ய் நித்திரையில் மீளாயோ!
உன்னைப்புறம் பேணுபவர் உயிர்த்துணைவர் பலர்நின்றர் பொன்னைக் கருதாதே புரவலரும் சூழவந்தார் கன்னித் தமிழ்க்கரசே கவிமணியே கார்முகிலே கண்ணைத் திறந்தொருகால் காட்டாயோ அன்பருக்கே
மாதர்களைப் போற்றிமிக மதிமயங்கி வாழாது மாதவனைப் போற்றியருள் மதிநிறைந்து வாழ்ந்தாயே காதகனே அந்தகனும் கண்ணிலியை ஏமாற்றப் போதமிலா தேகினையோ புவிமீதார் சரணெமக்கே
இளமையினைத் துறந்தாய் எழில் துறந்தாய் ஏர்துறந்தாய்
வளமனைத்தும் நீதுறந்தாய் வாழ்ந்தாயே மன்னுயிர்க்காய் உளமுனக்கு எங்களையும் ஒருங்கே துறப்பதெனத்
தவமுதல்வ சற்றேனும் நம்மனதில் ஒர்ந்திலமே
விண்ணுடர் நேற்றிரவு விட்டார் மழைத்துளியென் றெண்ணுமகிழ் ந்திருந்தேம் எண்ணினமோ நீகொழும்பில் பொன்னுடர் நீர்தெளிக்கப் போகுமழை தானது வென் றண்ணுவோ இங்கெழும்பி யன்பர் முகம் பாராயோ!
கண்ணினுக்கும் கண்மணியே கவிஞருக்குச் சொன்மணியே மன்னருக்கும் மன்மணியே மதிப்புலவோர் மனமணியே சன்மணிக்குள் சாமிவிபு லாநந்த நன்மணியே பொன்மணியே எங்குசென்ரு ய் புகலாயோ ஒருவார்த்தை
18

புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் கொடுத்த சிறப்புப் பாயிரம் விளங்கும் மாவலி மணி நாட்டின்
வீசும் பெயர்தான் மேலும் நிலைக்க துலங்கும் விபுலாநந்தன் சீர்சால்
மாணவன் தன் சிறப்பால் இலங்கை அன்னை திருத்தசாங்கம்
என ஒன்றெழுதிப் புகழ் கொண்டான் இலங்கும் மண்டூர்க் கந்தையா
எனும் பெயரோன் புகழோங்குகவே
ஏ, பெரியதம்பிப்பிள்ளை
3, 4, 50
இலங்கா மாதா திருத்தசாங்கம்
இது மகாகவி பாரதியாரின் படைப்பான பாரததேவியின் திருத்த சாங்கம் என்னும் பாடற்பகுதியினைக் கண்டு எழுதப் பெற்றது (நேரிசை வெண்பா)
1. மென்மழலைக் கிள்ளாய் நாம் வேண்டுவது நல்குமன்ன இன்குதலை நாமம் எனக்குரையாய் நன்புவியில் மன்னுடத்த வள்ளல் வளர் ஞானம் நாட்டுவிக்கும் பொன்னிலங்கா தேவியெனப் போற்று
நாடு 2. இன்மழலைப் பைங்கிளியே எங்களுயி ராய்நிறைவாள் தொன்மை வளநாடு சொற்றிடுநீ. நன்மைநிறை சூழ மலைகடல் சேர் தென்னிலங்கா என்று புகழ் ஈழவள நாடெனவே ஏத்து
நகர் 3. வன்னப் பசுங்கிளியே வானேரு மேத்து புகழ்
அன்னை யுறை நகர் தா னங்கெதுவோ - மன்னுசிவ தென் கதிரை மாநகர்காண் தேவி அருள் வெள்ளம் பொங்கஇடறை கின்றபதி போற்று
19

Page 14
0.
சீராரிளங்கிளியே தெய்வநலம் சான்றவள் தன் பேரா றுரைத்திடுவாய் பேசிடிலோ - நீரா லே காவளரச் செந்நெல் கரையார்ந்து இன்பநிறை மாவலியின் கங்கையென வாழ்த்து
எங்கள் புகழ் உலகம் எங்கும் நிறைவிப்பாள் தங்குமலை யோதிடுக தத்தாய்நீ க அங்கிறைவன் பாதமலர் தானமரும் மன்னுசிவப் பேர்பூண்ட சோதிமலை கைதொழுக சூழ்ந்து
ஊர்தி
செம்பவள வாய்க்கிள்ளாய் தேவியவளிவரும் அம்புரவி யேதென்றறைகுவையோ - வன்புரவி தேர் யானை ஏழுள்காண் சீய அடர்ப்பிடரே சேர்வாளெம் மன்னயெனச் செப்பு
65). அஞ்சுகமென் பிள்ளாய்நம் மன்ன வெகுண்டெழுங்கால் வெஞ்சமரிற் கையாளும் வேல் கூரு ப் - கெஞ்சுநரைக் கைதுரக்கி யாள்வாள் கடியார்ப் புறம் போக்கக் கைதுரக்கு வாள் குலிசம் காண்
UPUಃ பச்சை மணிக்கிளியே பார்முழுது மானுள் சீர் மெச்சு புகழ்முரச மோதுவாய் - இச்சகமீ தெங்கும் சிங்களமும் செந்தமிழு மோங்க உண்மையென பொங்கு முரசன்பே புகல்
தார் தேனுர் மொழிக்கிள்ளாய் செம்பவள வாய் திறந்தெம் மானுள் புனைமாலை மாண்புரையாய் - மேனுள்நம் இன்னலறத் துரநகைசெய் எங்களன்னை மல்லிகையின் தன் மலரே தானுவந்தாள் தார்
கொடி இன் சொல் மரகதமே எங்கள் உயிரன்னை தன்சொல் விளங்குகொடி தான்காணுய் - மிஞ்சுநரை வென்றே அடைந்தவரை மேவி விளங்குமொளி குன்முத ஞானக் கொடி

1 O.
I 1.
I 2.
13,
I 4.
15.
16.
இவ்வாசிரியரின் நூல்கள் 一一★一一
ஆனைப்பந்தி விநாயகர் பதிகம் கட்டுரை இயல் கண்ணகி அம்மன் குளுத்திப்பாடல் முதலிய நான்கு நூலகள பாரதியின் பாஞ்சாலி சபதம் - உரை, விளக்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் கம்பராமாயணம் மந்திரை சூழ்ச்சி, கைகேயி சூழ் வினைப்படல நூல்கள், உரை விளக்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் விபுலாநந்த ஆராய்வு விளக்கம் மட்டக்களப்பு தமிழகம் (1965 ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது) கண்ணகி வழக்குரை - ( சுமார் 3000 பாடல்கள் கொண்டது 21 பல்வேறு
ஏட்டுப்பிரதிகளைப் பரிசோதித்த பதிப்பு நூல் ) மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் - (இலங்கைக் கலைக் கழகத்தின் தமிழ் நாடகக் குழு உறுப்பினராயிருந்தபோது குழுத்தலைவர் கலாநிதி சு. வித்தியானந்தன் பெயரில் வெளியிடப்பட்டது ) அலங்கார ரூப நாடகம் (மேற்படி கலாநிதி சு. வித்தியானந்தன் பெயரில் ) இராம நாடகம் - (மட்/ பிரதேச கலா மன்ற வெளியீடு) அநுவுருத்திர நாடகம் - ( மேற்படி பிரதேச கலா மன்ற வெளியீடு) மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் - ( பிரதேச அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சு) மட்டக்களப்புச் சைவத் திருத்தலங்கள் - (பிரதேச அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சு ) தருமபுத்திர நாடகம் - ( மட்/ பிரதேச கலா மன்றம் வெளியீடு செய்யவிருப்பது )
இந் நூல்
புனித செபஸ்தியார் அச்சகம், மட்டக்களப்பு.

Page 15


Page 16
புனித செபஸ்தியார் அ

ச்சகம், மட்ட்க்களப்பு, Isup