கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாதை

Page 1

பொன்னையன்

Page 2


Page 3

LI LI GODb
கீர்வை பொன்னையன்
வெளியீடு:
பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் விதி, கொழும்பு-11.
தொ. பே. 422321

Page 4
முதற்பதிப்பு : பெப்ரவரி 1997 உரிமை பதிவு
விலை ரூ. 40-00
இந்தியாவில் கிடைக்குமிடம் :
குமரன் பப்ளிஷர்ஸ் 79, முதல் தெரு, குமரன் காலனி,
வடபழநி, சென்ன்ை-600 026.
அச்சிட்டோர் :
சித்ரா பிரிண்டோ கிராபி 24, பொன்னுசாமி தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.

سہ حصہ مسح عصر حصہ ۔سحہ حصص عح حصہ حصہ
சமர்ப்பணம்
எமது ஈழத் தாய்த்திருநாட்டில் மார்க்ஸிஸ லெனினிஸத்தின் பரம்பலுக்குத் தன்னைத் தூய்மையுடன் அர்ப்பணித்த தோழர் மு. கார்த்திகேசன் அவர்களுக்கு ཡང་མཁན་མང་། ཡང་མཁན་མང་། ནམ་ལངས་ཁག་དང་། ཡང་མཁན་ཡང་མཁན་མཁན་མང་
حصحص بعد حصعصعصعصعصعصعص
நன்றி!
: வட பிரதேசத்தில்
கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதில் முன்னோடி
களாயிருந்தவர்களுள்
ஒருவரான தோழர்
ஆர். பூபாலசிங்கத்தின் மூத்த புதல்வர் பூஞரீதர சிங்
அவர்களுக்கு.
TLTSS SMTSLiiSTS TLLeLeLBS TLSS MLLLqSS MTLqM TiLSqS TLqBS TLLqS TLLLeLS

Page 5
என்னுரை
*எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எழுது கின்றேன். எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி, நான் ஒரு பொழுதும் எழுதுவதில்லை" என்று உலகத்துப் பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் தந்தை மார்க்ஸிம் கார்க்கி ஓரிடத்தில் கூறியுள்ளார்.
அவரது பாதையில் சென்று கொண்டிருக்கின்ற முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாமும் எமக்குத் தெரிந்தவற்றை, உழைக்கும் வர்க்கத்தைப் பற்றி அதாவது தொழிலாளர், விவசாயிகள் பற்றி அவர்களது ஆசா பாசங்கள், துன்ப துயரங்கள் அவர்களது மேம்பாட்டிற்கான போராட்டங்கள் பற்றி எழுதுகின்றோம்.
*எழுத்தாளனே! நீ யார் பக்கம்? நீ சுரண்டப்படு கின்றவன் பக்கம் நிற்கின்றாயா? அல்லது சுரண்டு கின்றவன் பக்கம் நிற்கின்றாயா?" என்று மார்க்ஸிம் கார்க்கி கேட்கின்றான்.
முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாங்கள் உழைக் கின்ற சுரண்டப்படுகின்ற மக்களின் பக்கம்தான் நிற்கின் றோம். ஏனென்றால், எம்மில் அதிகமானவர்கள் உழைக் கின்ற தொழிலாளர் விவசாயிகளின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்; இந்த வர்க்கத்தில் ஜனித்தவர்கள்; இந்த மக்களுடன் வாழ்பவர்கள்; இவர்களது போராட்டங்களில் பங்கு பற்றுபவர்கள். அதனால்தான் எம்மில் அநேகர்

5
தொழிலாளர், விவசாயிகள் பற்றி எழுதுகின்றோம். அவர் களுக்காகவே எழுதுகின்றோம்.
1960-களில் ஆரம்பித்து 70-களிலும் நான் தொழிற் சங்க விவசாய சங்க வேலைகளில் முழுநேர ஊழியனாக ஈடுபட்டிருந்த காலத்தில் நாங்கள் நடத்திய போராட்டங்களி லிருந்து பெற்ற அனுபவங்களையும், உணர்வுகளையும், இப்போராட்டங்களிலிருந்து நான் கற்றவற்றையும் பட்டை தீட்டி சிருஷ்டிகளாக எமது மக்களுக்கே திருப்பிக் கொடுக் கின்றேன். இப்படைப்புக்களை அவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் எளிமையாக சிருஷ்டித்து வழங்கு கின்றேன்.
எனது படைப்புக்களில் தொழிலாளர், விவசாயி கள்தான் கதாநாயகர்கள். வர்க்க உணர்வுடைய தன்நல மற்ற அர்ப்பணிப்பு, கூட்டுச் செயற்பாடு, தர்மாவேச போர்க்குணம் ஆகிய குணாம்சங்களையும். சுரண்டல் சூறை யாடல் அநீதி அக்கிரமங்கள் நிறைந்த, மனிதனை மனிதனே விழுங்குகின்ற இந்த சீர்கெட்ட சாக்கடைச் சமுதாயத்தை முற்றுமுழுதாக மாற்றி, இல்லாரும் உள்ளாரும் இல்லாத ஒரு புதிய உன்னத உலகை அமைக்க வேண்டுமென்ற லட்சிய வேட்கையையும் கொண்ட தொழிலாளர், விவசாயி கள்தான் எனது கதாநாயகர்கள். இவர்கள்தான் எதிர்கால வரலாற்று நாயகர்கள்.
"மக்கள் மக்களே வரலாற்றின் உந்துசக்தி” என்று மாமேதை மாஒ கூறியுள்ளார். அந்த மக்கள்தான் உலகின் வரலாற்றுப் போக்கை நிர்ணயிப்பவர்கள்; யுத்தவெறிபிடித்த ஏகாதிபத்திய, பிற்போக்குவாத நவீன நரகாசுரர்களல்ல.
"சோஷலிஸம் மரணித்துவிட்டது", "கம்யூனிஸத்திற்கு சாவுமனியடிக்கப்பட்டுவிட்டது". "மார்க்ஸிஸம் தோற்று விட்டது" என்று ஏகாதிபத்தியமும் பிற்போக்குவாதிகளும் எக்காளமிடுகின்றார்கள்; அவர்களது பிரச்சாரப் பீரங்கிகள் முழங்குகின்றன. அது மாத்திரமல்ல. இருபதாம் நூற்றாண்

Page 6
6
டின் இறுதிப் பகுதியான இன்றைய சகாப்தத்தில் தனது மரணப்படுக்கையிலிருக்கின்ற ஏகாதிபத்தியம். குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இறுதி ஆயுதமாக இன ரீதியான பயங்கரவாதத்தைத்தூண்டி வளர்த்து உலகெங்கும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த பயங்கரவாதம் உலகில் பல பகுதிகளில் பேரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக் கின்றது. 'தொல்லை கொடுப்பது தோல்வி அடைவது, மீண்டும் தொல்லை, மீண்டும் தோல்வி, மீண்டும் தொல்லை. தமது அழிவுவரை, ஏகாதிபத்தியமும் பிற்போக்குவாதமும் தொல்லை கொடுத்துக் கொண்டே யிருப்பார்கள்."
அமெரிக்க ஏகாதிபத்தியமும் தனது புதை குழி யைத் தானே தோண்டிவிட்டது. ஏனென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இந்தப் பயங்கரவாதப் பூதம் இன்று அதன் குகைக் குள்ளேயே புகுந்து அதை அச்சுறுத்திக் கொண்டிருக் கின்றது. இதனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் திகைத்துத் தறிகெட்டு நிற்கின்றது. ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப் பட்ட இந்தப் பயங்கரவாதப் பூதம் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தை நிச்சயம் கபஸ்ரீகரம் செய்தே தீரும்.
ஒரு சிறுபொறி பெரும் காட்டுத் தீயையே உருவாக்கு கின்றது. இருண்ட வானத்தில் அங்கே ஒரு மூலையில் மின்னல் தோன்றுகின்றது. அது இருளில் புதைந்திருக் கின்ற முழு உலகையும் ஒளிமயமாக்குகின்றது. அதேபோல அன்று உலகின் ஒரு மூலையில் மார்க்ஸிஸ் ஒளியில் புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சி முழு உலகையுமே உலுக்கியது. அது மாத்திரமல்ல. அந்தப் புரட்சி உலகின் மூன்றிலொரு பகுதி நாடுகளிலுள்ள தொழிலாளர், விவசாயிகளை விடு தலை செய்து ஒரு புதிய உலகைத் தோற்றுவித்தது.
அன்று தொழிலாளர், விவசாயிகளது ஆதர்ச புருஷர் களான மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியவர்களால் ஆரம்பிக்க்ப்பட்டு, மார்க்ஸிஸ் ஒளியில் கர்மவீரர்கள்ால்

7
காலத்துக்குக் காலம் பல்வேறு ரூபங்களில் விடுதலைக்கான போராட்டங்கள் நடத்தப்பட்டு வெற்றிவாகை சூடப்பட்டு வந்துள்ளது. காலகெதியில் இப்போராட்டம் துர்அதிஷ்ட வசமாக திசைமாறி இன்று தற்காலிக பின்னடைவுக்குள் ளாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களது விடுதலைக்கான போராட்ட லட்சியம் நிச்சயம் வெற்றிவாகை சூடும் என்ற உறுதியான நம்பிக்கை கோடானுகோடி மக்களுக்கு இருக்கவே இருக்கின்றது. இந்தப் புனித லட்சியத்திற்கு தம்மை அர்ப்பணித்து ஆத்ம சாதனைபுரிய வேண்டுமென்ற சத்திய வேட்கை உழைக்கும் மக்களின் இதயங்களில் ஜுவாலித்துக் கொண்டுதா னிருக் கின்றது.
முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாமும் இந்த உழைக்கும் மக்களின் பேரணியில் நின்று எமது வரலாற்றுப் பணியை நிறைவேற்றுவதில் இதயபூர்வமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் அழிவுகாலம் வெகுதூரத்திலில்லை. அதே வேளை மார்க்ஸிஸம் இந்த மாநிலத்தை நிச்சயம் வெல்லும்!
வசந்தம் நீர்வை பொன்னையன் நீர் வேலி 01.09.96

Page 7
உள்ளே.
என்னுரை சுருதி பேதம் வேப்ப மரம்
மலை சாய்கின்றது யுக புருஷர்கள்
எரிசரம் ரத்தச் சுவட்டில் ஒர் அடி புதிய தலைமுறை உலைக்களம்
காணிநிலம். நியதி ஞானஸ்நானம்
பாதை
24
36
52
64
74
90
108
128
151
193

பாதை
சுருதி பேதம்
ல்ேயாண ஊர்வலத்திலிருந்து எழுந்து காற்றில் மிதந்து தவழந்து வந்த நாதஸ்வர கானம் என் உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகின்றது.
நேரத்தைப் பார்க்கின்றேன்.
ஒன்பதரை மணி. பத்து மணிக்குத் தொழிற்சங்கக் கூட்டம். கடைகள் எல்லாம் பூட்டிய பின்பு, இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டுத்தான் கூட்டத்துக்கு வருவார்கள், கடைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள்,
கூட்டத்துக்கு போகுமுன் ஒன்பதரை மணியளவில் வந்து என்னையும் கூட்டிச் செல்வதாகக் கூறியிருந்தான் கந் தையா.
நேரமும் ஒன்பதரை மணியாச்சு. இன்னும் அவனைக் காணவில்லை.
ஒருவேளை அவனும் கல்யாண வீட்டுக்குப் போய் விட்டானோ?

Page 8
10 O பாதை
இருக்காது. அவனுக்கு எல்லாவற்றுக்கும் முதலிலுள் ளது, அரசியலும் தொழிற்சங்கமும்தான்.
சரி, இன்னும் சிறிது நேரம் இருந்து பார்ப்போம்.
வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை தலைமாட்டில் வைக்கின்றேன் நான். "லயிற்றை அனைத்துவிட்டு, படுக்கையில் கிடந்தபடியே கிழக்குப் பக்கமாக இருந்த ஜன்னலை நோக்குகின்றேன்.
மத்தாப்பிலிருந்து பல வர்ணப் பூக்கள் வெடித்துக் கிளம்புகின்றன. அவை இருண்ட வானத்தில் வர்ணக் கோலமிட்டு அழிந்து மறைகின்றன.
ஊர்வலம் நானிருக்கும் தெருவை நோக்கி வந்துகொண் டிருக்கின்றது.
மங்கள கும்பம் வைத்து, குத்துவிளக்கேற்றி, புதுமணத் தம்பதிகளை ஆராத்தி எடுத்து, பொட்டிட்டு வாழ்த்த வேண்டுமென்ற உணர்வு என்னையறியாமலே எனது உள்ளத்தில் ஒரு கணம் தலையெடுக்கின்றது.
சுருட்டுக் கடைக்கு மேலேயுள்ள, சுருட்டுப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற, ஒரு சிறிய இருண்ட அறை யில்தானே நான் இருக்கின்றேன்! இந்தச் சூழ்நிலை என் னைச் சரியான சிந்தனைக்குத் தள்ளிச் செல்கின்றது.
என் அருகில் நின்று,பிற புதுமணத் தம்பதிகளை ஆராத்தி யெடுத்து வாழ்த்தி வரவேற்க வேண்டிய நீ ஊர்வலத்தில் வந்துகொண்டிருக்கின்றாய்.
கோகிலா, உன் வருகைக்காக நான் எத்தனை நாட்கள் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்?
இன்று நீ திருமணக் கோலத்துடன் கல்யாண ஊர்வலத் தில் வந்து கொண்டிருக்கின்றாய்.

நீர்வை பொன்னையன் O 11
என்றாவது ஒரு நாள் நீ இந்தக் கோலத்தில் வருவாய் என்பது எனக்குத் தெரியும்.
இன்று நீ வருகின்றாய். உன்னைக் கைப்பிடிக்கவேண்டிய நான்? உன்னைப்பற்றி அளவுக்கு மீறிய நம்பிக்கைகளை வைத் துக்கொண்டு, உனக்காக இந்த ஜன்னலருகே நான் காத் திருந்தேன்.
காலையும் மாலையும் நீ என்னைக் காண்பதற்காகத் துடிதுடித்து இப்பக்கமாக வந்ததை அறிந்து, உனது உணர்ச்சிவசப்பட்ட தன்மையினை என்னுள் நினைத்துச் சிரித்திருக்கின்றேன். ஆனால் இன்று? அன்று நாம் முதல் முதலாகச் சந்தித்தது எனக்கு இன் னும் ஞாபகமிருக்கின்றது.
நான்கு வருடங்களுக்கு முன் பேராதனைப் பல்கலைக் கழகத்திற் படிப்பதற்கு நான் வந்தேன்.
முதலாவது நாள் விரிவுரை முடிந்து வந்து, எங்கள் விடுதிக்கு முன்னாலுள்ள வாகை மரத்தின்கீழ் நானும் எனது நண்பன் பத்மநாதனும் கதைத்துக்கொண்டு நின்றோம்.
மலையில் தவழ்ந்து வந்த குளிர் காற்று எங்கள் உடலில் சில்லிட்டது.
பச்சைக் கம்பளத்தில் சிந்திவிட்டதைப்போல பல வர்ணப் பூக்கள் மலர்ந்து எழில் தந்து கொண்டிருந்தன.
மாலைச் சூரியனின் செவ்வொளியில் வானம் பூமி எல் லாம் மூழ்கித் திளைத்துப் புதுப் பொலிவுடன் ஜொலித்தன,
கூட்டம் கூட்டமாக, நிறம் நிறமாகச் சிரிப்போடு கல கலத்து மாணவ மாணவிகள் வந்துகொண்டிருந்தார்கள். எல்லோரிலும் இளமையின் பூரிப்பு, வனப்பு.

Page 9
12 C) uses
எனது இதயத்தில் ஒருவித மயக்கம்.
சிரிப்பொலி கேட்டது.
நாங்கள் திரும்பிப் பார்த்தோம்.
நீயும் ஐந்தாறு மாணவிகளும் உங்கள் விடுதியை நோக்கி வந்து கொண்டிருந்தீர்கள்.
எங்களுக்குக் கிட்ட நீங்கள் வந்ததும் நின்றீர்கள் எனது நண்பன் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
பதிலுக்கு உன்னுடன் வந்தவர்களையும் நீ எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாய்.
அடுத்த நாள், பல்கலைக் கழக நூல் நிலையத்திலுள்ள எண்ணற்ற புஸ்தகங்களை நான் வியப்புடனும் ஆவலுடனும் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்,
என் நண்பன் அடுத்த ஷெல்ஃவிலுள்ள புஸ்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்,
புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த என் கண்களில் நிழலாட்டம் தட்டுப்பட்டது.
என் தலை நிமிர்ந்தது.
ஒரு புத்தகத்தைத் தட்டிலிருந்து எடுத்தபடியே நீ என் னைக் குறுகுறுப்போடு பார்த்துக்கொண்டு நின்றாய்
எமது விழிகள் தமக்கே உரிய தாபத்தோடு முட்டி மோதின.
உன் தலை கவிழ்ந்தது.
எனது பார்வையை நிலை நிறுத்தி உன்னையே நான் பார்த்துக்கொண்டு நின்றேன்.
எனது நண்பன் எங்கள் பக்கம் திரும்பினான்.

நீர்வை பொன்னையன் O 13
அவன் எம்மிருவரையும் மாறி மாறிப் பார்த்ததை நாம் உடனடியாய் உணரவில்லை.
அவனுடைய உதட்டில் குறும்புத்தனம் நிறைந்த முறுவல் வெடித்தது.
**நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடிக்கின்றீர்கள் போலி ருக்கின்றது" என்று அர்த்த புஷ்டியுடன் மெதுவாக அவன் கூறினான்.
நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம்.
எமது நிலையை உணர்ந்த அவன் என்னை வெளியே இழுத்துச் சென்றான்.
நாங்கள் செல்லும்பொழுது நீ என்னைத் திருட்டுத்தன மாகப் பார்த்துப் பெருமூச்சுவிட்டதை நான் கண்டேன்.
செனட் கட்டிடப் பக்கமாக மகாவலி வளைந்து அமைதி யாக ஓடுவதைப் பார்த்தபடியே நான் நின்றேன்.
*முட்டாளே! வேதனையை விலைக்கு வாங்காதே, நீ வந்த வேலையைப் பார்" என்று என் நண்பன் எனக்குப் புத்திமதி கூறினான்.
நான் விடவில்லை.
உன்னைப்பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல் எனக்கு ஏன் ஏற்பட்டது என்று எனக்கே புரியவில்லை.
மத்திய கன்ரீனுக்கு நாம் போகும்போது உன்னைப் பற்றிய சகல விபரங்களையும் அவன் எனக்குக் கூறினான்.
சில நாட்களின்பின் எதிர்பாராமலே உனது கடிதம் எனக்குக் கிடைத்தது.
அக்கடிதத்தில் என்னைப்பற்றிய சில விசயங்களை நீ எழுதியிருந்தாய்.

Page 10
14 O பாதை
என் நண்பன்தான் என்னைப்பற்றி உனக்குக் கூறி யிருக்க வேண்டும்.
அவன் சரியான ஆள். எனக்குக் கூறிய புத்திமதியை அவன் உனக்கும் கூறி னானோ என்னவோ?
என் நண்பன் உனக்கு நிச்சயம் புத்திமதி கூறியிருப் பான். அவன் அப்படிப்பட்டவனே! நீ ஏன் அதைக் கேட்கவில்லை?
உனது கடிதத்தால் எனது உள்ளத்தில் ஒருவித சலனம்.
நான் ஒரு விவசாயியின் மகன். எனது தந்தையின் உழைப்பில் கிடைக்கும் வருமானம் எங்கள் தினசரி வாழ்க் கைக்கே போதாது.
எனது அண்ணன் பதுளையில் வைத்திருக்கும் சுருட்டுக் கடையின் உதவியுடன் தான் எங்கள் குடும்பம் ஒருவிதமாகச் சமாளித்தது.
கடன் பட்டுத்தான் என் தகப்பன் என்னைப் ι η ι பித்தார்.
எங்கள் தகுதியை மீறியெடுத்த முடிவினாலேதான் நான் பல்கலைக் கழகத்துக்கு வந்தேன்.
உனது தந்தை ஒரு அரசாங்க உத்தியோகத்தர். கஷ்ட மின்றி உங்கள் குடும்பம் வாழ்ந்தது. அத்துடன் 9shift சிரமமின்றி உன்னையும் படிப்பித்தார்.
நானோ எனது குடும்பத்தின் வயிற்றைப் பட்டினி போட் டுக்கொண்டுதான் பல்கலைக் கழகப் படிப்பை ஆரம்பித் தேன்.
எமக்கிடையில் ஆரம்பித்த இந்த உறவு நிலைக்குமா? என்ற ஐயம் எனக்கு இருக்கத்தான் செய்தது.

நீர்வை பொன்னையன் O 15
எங்களிருவரையும், எங்களிருவருடைய குடும்பங்களை யும் ஒப்பிட்டுப் பார்த்ததன் பயனாக இந்தச் சந்தேகம் என் மனதில் தோன்றியது.
ஆனால் உனது கடிதங்கள் இந்தச் சந்தேகத்தை அகற் றத்தான் செய்தன.
நாம் கடிதத் தொடர்பில் ஆரம்பித்து, தனிமையில் சந்திக்கவும் தொடங்கினோம்.
நாங்கள் பல்கலைக் கழகப் பூங்காவிலும் வேறு பற்பல இடங்களிலும் இடைக்கிடை சந்திப்போம். அவ்வேளை களில், எமது படிப்பு முடிந்ததும் நாம் இருவரும் நல்ல உத்தி யோகம் எடுத்துக்கொண்டு, ஒரு புதிய காரும் கொழும்பில் ஒரு வீடும் வாங்கி செளகரியமாக வாழவேண்டும் என்று நீ அடிக்கடி கூறுவாய்.
இப்படிப்பட்ட டாம்பீக வாழ்க்கை எனக்கு சரி வராது என்று நான் எத்தனை தடவை உனக்குக் கூறியிருக் கின்றேன்?
எட்டாத கனவுகளையும் எனக்குப் பிடிக்காத செளகரியங் களையும் இள வயதிலிருந்தே நான் வெறுத்து வருபவன்.
சினிமா பார்ப்பதற்கும், கண்டி கட்டுக்கலைப் பிள்ளை யார் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் போவதற்கும் நீ என்னை அடிக்கடி கூப்பிடுவாய். அவ்வேளைகளில் சில கூட்டங்களுக்கு நான் போக வேண்டியிருந்தால் உன்னுடன் நான் வரவில்லை. இதற்காக நீ என்னை எத்தனை தடவைகள் கோபித்திருக்கின்றாய்? உனது ஆசாபாசங்களை நான் உணராதவனல்ல ஆனால் கூட்டங்கள்தான் எனக்கு முக்கியமானவை என்பதை அவ்வேளைகளில் நீ உணர வில்லை. அந்த விதத்தில் அதை என்னில் ஒரு குறையாக நினைத்தாய் நீ.
நான் உடையில் கவனம் செலுத்துவதில்லையென்று நீ அடிக்கடி குறை கூறுவாய்.

Page 11
16 O பாதை
முதலாம் வருட முடிவில் நடத்தப்பட்ட சோஷலன்று நடந்த சம்பவத்தை இன்னும் நான் மறக்கவில்லை.
சோஷல் முடிந்து நான் எனது விடுதிக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது நீ என்னிடம் வந்தாய்.
"இங்கு வந்தும் நீங்கள் இன்னும் திருந்தவில்லை "
வந்ததும் வராததுமாக நீ கடுகடுப்புடன் கூறினாய்,
“©rsär?””
"வருடத்தில் ஒருமுறை நடைபெறுகின்ற இந்த சோஷலுக்காவது மற்ற மாணவர்களைப் போல உங்களுக்கு -ேடை உடுத்திக் கொண்டுவர முடியாதா?’
"ஏன், எனது உடைக்கென்ன???
வியப்புடன் நான் கேட்டேன்.
"உங்களுடன் பேசுவதற்கு நான் எவ்வளவு ஆவலுட னிருந்தேன் தெரியுமா? உங்களுடைய வழமையான கசங்கிய உடையைக் கண்டு வெட்கப்பட்டுத்தான் நான் உங்கள் பக்கம் வரவில்லை. ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்???
பொருமலுடன் நீ கேட்டாய்
இந்த விசயத்தில் நான் உன்னைச் சமாதானம் செய்யாமல் விடுதிக்குச் சென்று விட்டேன்.
என்னிடமுள்ள உடைகளைத்தானே நான் அணிய Срі, щир.
காலகதியில் உனது மனதைச் சீர்படுத்திவிடலாமென்று நான் நான் எண்ணினேன். அதற்காக என்னாலானவரையும் முயன்றிருக்கின்றேன்.
நாம் இரண்டாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்
கையில் திடீரென எனது தந்தை இறந்தார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

நீர்வை பொன்னையன் O 17
எங்கள் வாழ்வையே தாங்கி நின்ற அந்த மரம் சாய்ந்த போது, எனது எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் அனைத் தும் தகர்ந்து போய்விட்டன. அது எத்தனை பெரிய இழப்பு
ஒரு ஏழை விவசாயின் விடியாத வாழ்வாக எனது தகப்பனாரது வாழ்வும் சோக மயமாக முடிந்துவிட்டது.
நான் எனது படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, என் அண்ணனுடைய சுருட்டுக்கடைக்கு வேலை செய்யச் சென்றேன்.
கால்சட்டை போட்டு, பல்கலைக் கழகத்தின் வசதியான அறையின் படுக்கையிலும், வனப்புமிக்க மேசையில் பக்குவ மாக வைக்கப்படும் சாப்பாட்டிலும் என்னை நான் ஆழ்த்திக் கொள்ளாதபடியினால் தான் ஒரு கடையில் வேலை செய்யப் போவது என் மனதுக்குக் கஷ்டமளிக்கும் காரியமாக இருக்கவில்லை.
நான் உன்னை விட்டுப் பிரியும்பொழுது நீ அழுகையை அடக்க முடியாதவளாய் கண்ணிர் விட்டு என் நெஞ்சையே நெகிழவைத்து விசும்பினாய்.
உனது படிப்பு முடிந்ததும் என்னிடம் வந்து விடுவதாக நீ கூறிய வாககுறுதியை இன்னும் நான் மறக்கவில்லை.
உனது படிப்பு முடிந்தது.
நானிருக்கும் பதுளையில் தான் உனக்கு ஆசிரியை வேலை கிடைத்தது. அது தற்செயலானதாயினும் மீண்டும் என்னை நீயே குழப்பினாய்
நான் வேறு ஏதாவது தொழில் எடுப்பதற்குப் பல முயற்சிகள் செய்தேன்; பலனில்லை.
எனது வேலை சம்பந்தமாக லஞ்சம் கொடுப்பது போன்ற பல வழிகளை நீ சொன்னாய். அந்த வேளைகளில் பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற உனது

Page 12
18 C பாதை
திமிரான போக்கு எனக்குக் கசப்பைக் கொடுத்து, உன்னை நான் ஏசியுமிருக்கின்றேன்.
என் தந்தை ஒரு விவசாயி. அவருடைய தொழிலை தான் மனப்பூர்வமாகச் செய்திருப்பேன். ஆனால் எங்களுக்கு சொந்த நிலமில்லை. முதலீடு செய்வதற்குப் போதிய பண வசதியுமில்லை.
எனது அண்ணன் ஒரு சுருட்டுக்கடைக்காரன். இத் தொழிலைச் செய்யும் என் அண்ணனுக்கு மரியாதைக் குறைவில்லையென்றால், அவருடைய தம்பி, நான் இதைச் செய்வதால் எனது மரியாதை குறைந்துவிடவா போகிறது?
கோகிலா! நீ என்னை மனப்பூர்வமாகக் காதலிக் கின்றாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நடைமுறை வாழ்வினைச் சிந்திக்காது நீ கதைத்தது எனக்கு அச்சமூட்டியது.
நீ பிறந்து வளர்ந்த வாழ்வின் சூழ்நிலைகள் உன்னை விழுங்கி விட்டபோதும், அவற்றிலிருந்து உன்னை மீட்டெடுக்கலாம் என்ற என் நம்பிக்கையை நீ மெதுவாகத் தகர்க்க முற்பட்டாய்.
நான் சுருட்டுக்கடையில் வேலை செய்வது உனக்குப் பிடிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியத்தான் செய்தது.
அதற்கு நான் என்ன செய்ய? நான் சுருட்டுக்கடைக்காரனுடைய தம்பி தானே?
உனக்கு என் தொழில் கெளரவக்குறைவாகத் தானிருக்கும்
இன்று நீ ஒரு ஆசிரியை, உனது தந்தை கொழுத்த சம்ப்ளம் பெறும் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். ஆனால்
அவருடைய தந்தை எனது தகப்பனைப் போல ஒரு சாதாரண விவசாயிதான். இது நீ சொல்லித்தான் நான்

நீர்வை பொன்னையன் O 19
தெரிந்துகொண்டது. எனினும் இதை நான் அன்று உனக்கு எடுத்துக் கூறியதற்காக என்னை நீ கோபித்தாய்.
எனக்கு இதனால் ஒன்றும் கெட்டு விடவில்லை. அன்று நீ பாடசாலையிலிருந்து வரும்பொழுது என்னைச் சந்தித்தாய்.
*நீங்கள் சுருட்டுக்கடையில் வேலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று எடுத்த எடுப்பிலே நீ கூறினாய்.
“sፓ6ör?”
“என்னுடன் படிப்பிற்கும் ஆசிரியைகளும் மற்றவர்களும் இதை அறிந்தால் எனது கெளரவம் என்னா வது?"
*அதற்கு நான் என்ன செய்ய?” "ஏன். உங்களுக்குப் படிப்பில்லையா? யாராவது ஒரு தோட்டத் துரையைப் பிடித்து கொஞ்சம் பணத்தையாவது கொடுத்து ஒரு தேயிலைத் தோட்டத்தில் ஒரு கெளரவமான வேலையை எடுத்தாலென்ன? வேணுமென்றால் நானே ஏற்பாடு செய்."
"என்ன சொன்னாய்? லஞ்சம் குடுத்து உத்தியோக மெடுப்பதா? யார் நானா?”
"ஏன், அதனாலென்ன?" "பட்டினி கிடந்து செத்தாலும் இப்படியான வேலையை செய்வோமென்று நீ நினைக்கிறாயா?"
ஆத்திரத்துடன் நான் உன்னைக் கேட்டேன். இதனால் அன்றைய எங்கள் பிரிவு எனது முகவெறுப் போடும் உனது அர்த்தமற்ற கண்ணிரோடும் முடிவுற்றது
முதல் முதலாக நாம் இருவரும் மகாவலி கங்கைக் கரையில் தனிமையாகச் சத்தித்தபொழுது நான் கூறியதை நீ மறந்து விட்டாயா? படித்துப் பட்டம் பெற்ற பின்பு எனக்கு

Page 13
20 O பாதை
வேலை கிடைக்காவிட்டால் எனது தந்தையின் தொழிலை அல்லது எனது அண்ணனுடைய தொழிலைச் செய்வேன் என்று நான் உனக்குக் கூறவில்லையா?
அதனாலென்ன? எனக்கு நீங்கள்தான் வேண்டும்; உங்கள் தொழிலல்ல என்று அன்று நீ கூறவில்லையா? அப்போது நான் அறிவினை இழந்து, உணர்ச்சியின் அடிமையாகி, உன்னைப் பற்றி எவ்வளவு நம்பிக்கை கொண்டேன்!
தோட்டத்துரைமார்களும் பெரிய அரசாங்க உத்தி யோகத்தர்களும் போகின்ற கிளப்புகளுக்கு நான் போக வேண்டுமென்று நீ விரும்பினாய். இதை நீ மறைமுகமாக எனக்குக் கூறினாய்.
இப்படி நீ கூறுகையில் எனக்கும் உனக்கும் இடையில் ஒரு சுவர் எழுவதனை நான் உணரத் தலைப்பட்டேன்.
தோட்டத் தொழிலாளர்களும் சாதாரண மக்களும் செல்கின்ற சாப்பாட்டுக்கடைகளுக்கு நான் சாப்பிடப் போவதை நீ வெறுத்தாய்.
உனது தந்தை கொழும்பில் கோல்பேஸ் ஹோட்டல் போன்ற பெரிய ஹோட்டல்களிலா சாப்பிடுகின்றார்?
நான் தோட்டத் தொழிலாளர்களுடன் கூடித் திரிவதும், அவர்களுடைய தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவதும் உனக்குக் கெளரவக்குறைவென்று நீ பொருமுகின்றாய், இதனால் நீ என்னை விட்டுப் படிப்படியாக அகலலானாய்.
தோட்டத் தொழிலாளர்களுடைய ரத்தம் தான் தேயிலைச் சாயமாக மாறுகின்றன என்பது உனக்கு எங்கே தெரியப்போகின்றது? அவர்களுடைய பரித்தியாக உழைப்புத் தான் எங்கள் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும் பாகத் திகழ்கின்றது என்பது உங்களைப் பொன்றவர்களுக்கு ப்ேபடித் தெரியும்?

நீர்வை பொன்னையன் O 21
இதனால் தான் உன் போன்றவர்கள் தோட்டத் தொழி லாளர்களது சோக வாழ்க்கையைப் பார்க்க மறுக்கின்றீர்கள், அவர்களுடைய துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கைக்கு போராட்டம் மூலம் விடிவுகாண முற்படும் எங்களை வெறுக் கின்றீர்கள்.
நான் பல்கலைக் கழகத்திலிருக்கும்பொழுது, அங்கு குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களை ஒன்று திரட்டி ஒரு தொழிற்சங்கம் உருவாக்கியது உனக்குத் தெரியும்தானே?
கடைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றிணைத்து ஒரு தொழிற்சங்கம் அமைப்பதில் நான் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று பதுளைக்கு நீ வந்த ஆரம்பத்தில் நான் உனக்குச் சொல்லியுள்ளேன்தானே !
கோகிலா, உனது தந்தையும் அரசாங்க உத்தியோகத் தர்களின் சங்கத்தில் இருக்கின்றார்.
ஏன், உன் போன்ற ஆசிரியர்களுக்கும் தொழிற்சங்கம்
இருக்கின்றதுதானே! நீயும் அதில் ஒரு அங்கத்தினராக இருக்கின்றாய்தானே.
ஒரு புதிய காரும் பெரிய பங்களாவும் வைத்திருக்கின்ற ஒரு பெரிய தோட்டத் துரை உன்னைக் காதலிக்கின்றார். இன்று உனக்கும் அவருக்கும் திருமணம்.
ஆனால் அவரை நீ காதலிக்கின்றாயோ என்னவோ எனக்குத் தெரியாது. எனினும் நீ என்னிடம் எதிர்பார்த்துக் காணத் தவறிய ஆடம்பர வாழ்க்கையை நீ அவரிடம் கண்டிருக்கின்றாய் என்பது உண்மையல்லவா?
உங்கள் அந்தஸ்தைக் காட்டுவதற்கு, உனது திருமணத் துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து சிறந்த நாதஸ்வரக் கோஷ்டி யையும் கூட உனது தந்தை கொண்டு வந்திருக்கின்றார்.
உனது கல்யாணத்துக்கு என்னை நீ அழைத்திருந்தால் நான் வரமாட்டேனென்று நீ நினைத்தாயா?

Page 14
22 O u Tong5
என்னை நீ ஏன் அழைக்கவில்லை? உன்னை நான் காட்டிக்கொடுத்து விடுவேன் என்ற அச்சமா? அல்லது இந்த இன்பகரமான வேளையில் உனது பழைய காதல் உன் நினைவுக்கு வந்து உன் உள்ளத்தை உறுத்தும் என்று நீ எண்ணினாயா?
அன்று வைத்திருக்க வேண்டுமென்று நீ ஆசைப்பட்ட பெரிய கார் நன்றாக அலங்கரிக்கப்பட்டு, அதில் நீ வந்து கொண்டிருக்கின்றாய்.
உனது கல்யாண ஊர்வலம் நான் தங்கியிருக்கும் சுருட்டுக்கடையை நெருங்குகின்றது.
தெருவைப் பார்க்கும் வடக்குப் பக்கமாக உள்ள ஜன்னல் பக்கம் நான் போய் நிற்கின்றேன்.
இதே ஜன்னலண்டை வந்ததும் முன்பு எத்தனை நாட் கள் உன் விழிகள் உயர்ந்து என்னைக் காண்பதற்கு ஏங்கித் தவித்து நோக்கின!
இன்றும் நீ வருகின்றாய். உன்னையறியாமலே உனது விழிகள் இன்றும் ஜன்னலை நோக்கி உயருமோ?
ஜன்னலுக்கு நேரே நீ வருகின்றாய். உனது வலது கை உன் நெற்றிப் பொருத்தை ஏன் வருடுகின்றது?
உன்னை ஏமாற்றி விட்டு, உன் உள்ளத்திலுள்ள சலனத்தை உன் கண்கள் காட்டிக் கொடுத்து விடும் என்ற அச்சத்தினாலா உன் கண் இமைகளை நீ வருடுகின்றாய்?
உன் உதட்டில் புன்னகை, இதை நீ வேண்டுமென்றே வருவிக்கின்றாயா? உனது கல்யாண ஊர்வலம் நானிருக்கும் கடையைத் தாண்டுகின்றது.

நீர்வை பொன்னையன் O 23
வெளியே கதவு தட்டும் சத்தம்.
நான் அமைதியாகச் சென்று ‘லயிற்றைப் போடு கின்றேன்.
ஒரே ஒளிப்பிரவாகம்,
கதவைத் திறக்கின்றேன்.
வாசலில் கந்தையா நிற்கின்றான்.
"செல்வராஜா, பத்துமணியாகப் போகுது. கூட்டத்துக் குப் போவம்' அவன் கூறுகின்றான்.
நானும் கந்தையாவும் புறப்பட்டோம்.
எனது உள்ளத்திலும் உடலிலும் உத்வேகம்.
கோகிலா, உன்னை நான் அடைந்திருந்தால் என் மனச்சாட்சிக்கும் நேரிய வாழ்க்கைக்கும் நான் துரோகம் செய்தவனாக இருந்திருப்பேன்.
நான் எடுத்த சரியான முடிவினால், எனக்கு வாழ்வையே உணர்த்திய தொழிலாளி வர்க்கத்தின் பேரணி யில் நான் என்றென்றும் ஒரு அம்சமாகத் தலை நிமிர்ந்து நிற்பேன்.
கூட்டம் நடக்கப்போகும் தொழிற் சங்கமண்டபத்துக் குள் நானும் கந்தையாவும் செல்கின்றோம்.
எமது சங்கத் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகள் பற்றி ஆரவாரத்துடன் கலந்துரையாடிக் கொண்டிருக் கின்றார்கள்.
கல்யாண ஊர்வலத்திலிருந்து எழுந்து வந்த நாதஸ்வர கானம் தொழிலாளர்களுடைய உயிரோட்டம் நிறைந்த ஆரவார ஒலியில் மங்கி மடிந்து போகின்றது!
1972

Page 15
2. வேப்ப மரம்
'சந்தை கூடப்போகுது; கெதியாய் எட்டி மிதிச்சு வா மோனை” கணபதி அப்பா என்னைத் துரிதப்படுத்தினார்.
எனது கழுத்து முறிந்துவிடும் போலிருந்தது. இடுப்பில தாங்க முடியாத வலி மூச்சுவிட முடியவில்லை. காலடி எடுத்து வைக்க முடியாமலிருந்தது.
தலையிலுள்ள வாழைக்குலை என்னை அழுத்தியது. எழுபது வயதைத் தாண்டிவிட்ட கணபதி அப்பா மூன்று வாழைக்குலைகளைத் தலைமீது சுமந்துகொண்டு எதுவித கஷ்டமுமின்றி, காலை எறிந்து கையை வீசியபடி கெம்பீர மாகச் சென்று கொண்டிருந்தார்.
எங்கள் ஊரின் கிழக்குப் பகுதியிலுள்ள வாழைத் தோட்டத்திலிருந்து அரை மைல் தான் நாங்கள் நடந்திருப் போம். எனக்குக் களைப்புத் தட்டிவிட்டது. மேல் மூச்சு வாங்கியது. ஐந்து மைல்களுக்கப்பாலுள்ள சுன்னாகச் சந்தைக்கு எப்படித்தான் நான் இந்தச் சுமையையும் சுமந்து கொண்டு செல்லப் போகிறேனோ என ஏங்கினேன்.
"கொஞ்சம் மெதுவாய் நடவணையப்பா. என்னாலை கெதியாய் நடக்கேலாமல் கிடக்கு '
என்ன இந்த வயதிலை இப்படியெண்டால் நீங்கள் எப்படித்தான் சீவிக்கப் போறியள்? அந்த நாளையிலை உந்த வயதிலை நான் என்னென்ன வேலையள் செய்தன்

நீர்வை பொன்னையன் O 25
தெரியுமே? அப்ப சுமை சுமக்கிறதிலை என்னோடை ஒருத னும் போட்டி போட ஏலாது. ஏன் இப்பதான் என்ன? எங்கை ஒரு தம்பி என்னை அசைச்சுப் பாக்கட்டும் பாப்பம்."
பெருமையுடன் கூறினார் அவர்.
நாங்கள் சந்தையை நோக்கி நடந்து கொண்டிருந் தோம்.
எங்கள் ஊரின் நடுவில் ஒரு வெளி. அந்த வெளியின் மத்தியில் கிளைத்துச் சடைத்து, வானத்தை நோக்கி வளர்ந் தோங்கிய ஒரு வேப்பமரம். மங்கிய விடிநிலவொளியில் ஒரு பெரிய கருமுகிலைப்போல நின்றது.
*அப்பா, இந்த வேப்பமரத்தை ஏன் கறுத்தாற்ரை வேம்பு எண்டு சொல்லுறவை?"
'எட மோனை, இந்த விசயம் உனக்கு இன்னும் தெரியாதே? உங்களைப் போல வருங்காலப் பயிருகள் தெரிஞ்சிருக்க வேண்டிய முக்கியமான விசயம் இது!"
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார் அவர்.
'சரியணை சொல்லு." "அந்த நாளையிலே வெள்ளைக்காறன் ஆண்ட காலம் அது. அப்ப இண்டையைப் போலை தார் றோட்டு இருக் கேல்லை. எங்கடை ஊரிலை வெறும் கல்லு றோட்டு ஒண்டும், வண்டில் பாதையஞம் தான்.
‘'இப்ப இருக்கிறதைப் போலை அப்ப கல்வீடுகளும் பெரிய பள்ளிக்கூடங்களும் இருக்கேல்லை. பண்டிதற்றை பள்ளிக்கூடம் எண்டு நாங்கள் சொல்லிற ஒரு சின்னப் பள்ளிக்கூடத்தைச் சிவசங்கர பண்டிதர் எங்க ைஊருக்குக் கிழக்குப் பக்கத்திலை நடத்தினார்.
uT-2

Page 16
26 O பாதை,
பெரிய பட்டணம் எண்டு நாங்கள் சொன்ன யாழ்ப் பானைப் பட்டணத்திலை கல்லாலை கட்டின நாலஞ்சு கவுண்மேந்துக் கட்டிடங்களும், ஒரு கிட்டங்கியும், மூண்டு நாலு கல்வீடுகளும்தான் கிடந்து துகள். அப்ப சீமேந்து இல்லை. கட்டிடங்களைக் கல்லு, மண, சுண்ணாம்பு இந்த முண்டையும் குழைச்சுக் கட்டிறது.
‘எங்கடை ஊரிலை, வெள்ளைக் காறனுக்குப் பந்தம் பிடிக்க, அவன்ரை அரசாங்கத்திலை:உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த சின்னத்தம்பி உடையாரும், நீலகண்ட முதலியும் தான் பெரிய நாச்சாரும் வீடும் கட்டியிருந்தாங் கள். அவங்கள் தான் பெருவாரியான காணி பூமியளை வைச் சிருந்தாங்கள். அந்தத் திமிரிலை எங்கட ஊராக்களை அடக்கியாளப்பாத்தாங்கள் அவங்கள்.
**ஆனால் எங்கடை ஊராக்கள் அவங்களுக்குப் பயப் பிடேல்லை. அவங்களை எள்ளளவும் மதிக்கேல்லை
“பெரிய கறுவல், சின்னக் கறுவல் எண்டு இரண்டு பேர் எங்கடை ஊரிலை இருந்தினை. அவை இரண்டு பேரிட்டையும் கொஞ்சக் கொஞ்ச காணியள்தல் விண் இருந்துது. இரண்டு பேரும் தோட்டம் தான் செய்தினை. அவை இரண்டு பேரும் நெருங்கின சிநேகிதம். அது மாத்திர மில்லை, எங்கடை ஊரிலை உள்ளவை எல்லாரும் கறுவ லாக்களைத்தான் மதிச்சினை. அவங்கள் சொல்லுறபடி தான் எல்லாம் செய்வினை. ஏனெண்டால் எல்லாவற்றை நன்மை, தீமையிலும் அவங்கள் தான் முன்னுக்கு நிப்பாங் கள். எல்லாவற்றை இன்ப துன்பங்களிலும் அவங்கள் பங்குபற்றுவாங்கள்.
*இது உடையானாக்களுக்குப் பிடிக்கேல்லை. கறுவ லாக்களை மட்டந்தட்டப்பாத்தாங்கள் அவங்கள். அது பலிக்கேல்லை.
"பெரிய கறுவலையும், சின்னக் கறுவலையும் அண்டல் போட்டு அவங்களைக் கொளுவிவிட்டு மோதப்பண்ண

நீர்வை பொன்னையன் O 27
முயற்சித்தாங்கள் உடையானாக்கள். பெரிய கறுவல் எங்கடை ஊரிலை வடக்குப் பகுதியிலை இருந்தான். சின்னக் கறுவல் தெற்குப் பகுதியிலை இருந்தான். வடக்கு மூலையான் தெற்கு மூலையான் எண்டு அவங்களைப் பிறிக்கப் பாத்தாங்கள்.
**கறுவலாக்களைப் பிறிக்கிறதாலை ஊராக்களையும் பிறிக்கலாமெண்டு பாத்தாங்கள் அவங்கள். அதுவும் பலிக் கேல்லை,
‘சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாங் கsர் உடையானாக்கள்.
‘ஒருநாள் ஒரு பாதிரியார் எங்கடை ஊருக்குக் குதிரை வண்டியிலை வந்தார். அவர் ஒரு வெள்ளைக்காரன்.
*உடையானையும் முதலியையும் அந்தப் பாதிரியார் முதல்லை சந்திச்சு கதைத்துப்போட்டு, பிறகு கறுவலாக் களோடை கதைக்கவேணுமெண்டு அவங்களைக் கூட்டிக் கொண்டு வரச்சொல்லி ஒரு ஆளை அனுப்பினார்.
‘எங்களைச் சந்திக்கவேணுமெண்டால் அவர் எங்க ளிட்டை வரட்டும். நாங்கள் அவரைத்தேடி உடையான் வீட் டுக்கு வரமுடியாது எண்டு வந்த ஆளிட்டைச் சொல்லி அனுப்பினாங்கள் கறுவலாக்கள்.
"அவரும் உடையானாக்களும் கறுவலாக்களிட்டை வந்தினை.
* இதை அறிஞ்ச ஊரும் ஒண்டாய்க் கூடிச்சுது.
'வாழைப்பழமும், இளணியும் குடுத்துப் பாதிரியாரை உபசரிச்சுப் போட்டு, வந்த விசயம் என்ன எண்டு பாதிரி யாரைக் கறுவலாக்கள் விசா ரிச்சாங்கள்
"நாங்கள் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்திருக்கிறம் எண்டார் பாதிரியார்.

Page 17
28 O பாதை
“எங்கை எண்டு பெரிய கறுவல் கேட்டான்.
'இந்த ஊருக்கு நடுவிலையுள்ள வெளியிலை தான் கோயில் கட்டத் தீர்மானிச்சிருக்கிறம் எண்டு பாதிரியார் கூறினார்.
‘என்ன? ஊருக்கு நடுவிலையுள்ள வெளியிலை கோயில் கட்டப் போறியளா? எங்கை கட்டுங்கோ பாப்பம்’ என்டு சின்னக் கறுவல் கொதிச்செழுந்தான்.
** "சின்னக் கறுவல் அவசரப்படாதை பொறு. நான் விசயத்தைக் சொல்லுறன். நீங்கள் கோயில் கட்ட வேணு மெண்டால் தாராளமாய்க் கட்டலாம். ஆனால் இந்த வெளியிலை கட்டக்கூடாது' எண்டு பெரிய கறுவல் உறுதி யாய்ச் சொன்னான்.
* 'ஏன் இந்த வெளியிலை கட்டக்கூடாது?’ எண்டு பாதிரியார் கோபத்தோடை கேட்டார்.
‘எங்கடை ஊருக்கு நடுவிலை இந்த ஒரேயொரு வெளி தான் கிடக்கு மற்றதெல்லாம் குடியிருக்கிற காணியள், தீவாளி, வரியப்பிறப்பு நாளுகளிலை இந்த வெளியிலை தான் நாங்கள் கூத்துகள் நடத்துகிறது. எங்கடை ஊர்ப் பிள்ளையஸ் விளையாடி றதுக்கும் இந்த ஒரேயொரு வெளி தான் கிடக்கு. அதோடை மாரிகாலத்திலை எங்கடை ஊர் ஆடுமாடுகள் மேயிறதும் இந்த வெளியிலைதான் வேணு மெண்டால் எங்கடை ஊருக்குக் கிழக்காலை அல்லது மேற் காலை பெரிய வெளியள் கிடக்கு. அந்த வெளியள் ஒண்டிலை நீங்கள் கட்டலாம்' எண்டு பெரிய கறுவல் சொன்னான்.
'இல்லை இந்த வெளியிலைதான் நாங்கள் கட்டப் போறம்' எண்டு திட்டவட்டமாக சொன்னார் பாதிரியார்.
'முடியாது; நீங்கள் கட்டேலாது, வேணுமெண்டால் நிலை நிக்கிற எங்கடை ஊர் ஆக்களிலை ஆருக்காவது

நீர்வை பொன்னையன் O 29
நீங்கள் இந்த வெளியிலை கட்டிறது விருப்பமோ எண்டு கேட்டுப்பாருங்கோ’ எண்டான் பெரிய கறுவல்.
"ஊர் ஆக்கள் எல்லாரும் விருப்பமில்லை எண்டு ஒண்டாய்ச் சொல்லிச்சினை.
*இது கவுண்மேந்து விசயம் பாரதூரமானது வீணாய் மலையோடை மோதி மண்டையை உடையாதையுங்கோ' எண்டு உடையானும், முதலியும் கறுவலாக்களை வெருட்டி னாங்கள்.
"ஒய் உடையாரே, வேணுமெண்டால் உங்கடை வளவுக்கை கட்டும். ஆனால் நாங்கள் உயிரோடை இருக்கு மட்டும் இந்த வெளியிலை நீங்கள் கட்டேலாது எண்டு சின்னக்க றுவல் சீறிப்பாய்ஞ்சான். ஊராக்களும் அவ னோடை சேர்ந்து பொங்கி எழுந்தினை.
‘பாதிரியாருக்குச் சரியான கோவம். அவர் ஏதோ இங்கிலிசிலை பேசிப் போட்டுத் திரும்பிப் போட்டார்.
"நாலஞ்சு நாளைக்குப் பிறகு மண்ணையும், கல்லை யும், சுண்ணாம்பையும் கொண்டு வந்து அந்த வெளியிலை பறிச்சாங்கள்.
'பிறகு பாதிரியாரும், நாலஞ்சு பேரும் வந்து கோயில் கட்ட இடத்தை அளந்து அத்திவாரம் வெட்ட முளைக் கட்டையச்சுக் கயிறு கட்டினார்கள்.
"இதைக் கேள்விப்பட்ட சின்னக் கறுவல் ஓடிவந்து கயித்தை அறுத்தெறிஞ்சு போட்டு, கட்டையளையும் பிடுங்கினான்.
*ஊராக்களும் இதை அறிஞ்சு பொங்கியெழும்பி, கம்பு களோடையும் தடியளோடையும் வந்து வேலை செய்த ஆக்களை அடிக்கப் போட்டினை.
"பெரிய கறுவல் எல்லாரையும் சமாதானப்படுத்திப் போட்டு, பாதிரியாக்களைத் திருப்பியனுப்பினான்.

Page 18
30 O utops
*பிறகு கறுவலாக்கள் ஊராக்களிட்டைக் கையொப்டிங் கள் வாங்கி, கவுண்மேந்து ஏசண்டருக்கு ஒரு பெட்டிசம் அனுப்பினாங்கள்.
“பெட்டிச விளக்கத்துக்கு கவுண் மேந்து ஏ சண்டர் ஆக்களைக் கூப்பிட்டார். அவரும் ஒரு வெள்ளைக் காறன் தான்.
'சின்னக் கறுவலை வரவேண்டாமெ டு மறிச்சுப் போட்டு பெரிய கறுவலும், வேறை இரண்டு மூன்று பேரும் கவுண்மேந்து ஏசண்டரிட்டைப் போனாங்கள்.
"எங்கடை ஆக்களைக் கண்ட உடனே கவுண்மேந்து ஏசண்டல் துள்ளிக்குதிச் சான்.
**ஆரடா அவன் சின்னக் கறுவல்? எண்டு முதலிலை பாஞ்சான்.
** "அவன் வரேல்லை, ஐயா? எண்டு பெரிய கறுவல் சொன்னான்.
4 ஏனடா?*
" "அவனுக்குச் சுகமில்லை’ எண்டு சொன்னான் பெரிய கறுவல்,
* அவனை நான் என்ன செய்யிறனெண்டு LT(5é கோடா. ஆரடா பெரிய கறுவல்?’ எண்டு பிறகு கேட்டான்.
"நான் தானெண்டு சொல்லிக்கொண்டு பெரிய கறுவல் முன்னுக்கு வந்தான்.
" "அடே, என்னடா நீயும் சின்னக் கறுவலும் குழப்பம்
செய்ய ஊராக்களைத் தூண்டிறியளாம்" எண்டு ஏ சண்டன் கேட்டான்.
" இல்லையே” எண்டு நிதானமாய்ச் சொன்னான் பெரிய கறுவல்.

நீர்வை பொன்னையன் O 31
* அப்ப இதென்னடா இந்தப் பெட்டிசம்? எண்டு பெரிய கறுவலாக்கள் அனுப்பிய பெட்டிசத்தைக் காட்டி னான் ஏ சண்டன்.
** "அதென்னண்டால், எங்கடை ஊருக்கு நடுவிலை யுள்ள வெளியிலை கோயில் கட்டவேண்டாமெண்டும், ஊருக்குக் கிழக்காலை அல்லது மேற்காலையுள்ள வெளி யிலை கோயிலைக் கட்டச் சொல்லிறம் எண்டும்" பெரிய கறுவல் சொன்னான்.
*' "நீங்கள் ஆரடா அதைக் கேக்கிற துக்கு? மூச்சுக் காட்டினால் உங்களெல்லாரையும் சுட்டுத் தள்ளிப்போடுவம்; கவனமாய் ஒடுங்கோ எண்டு அதிகாரத்திமிரோடை போனாக்களை எச்சரிச்சுத் துரத்திப்போட்டான் கவுண் மேந்து ஏசண்டன்.
" "உவங்களுக்குச் சரியான பாடம் படிப்பிச்சுக் காட்டிறம்’ எண்டு தன்னோடை போன ஆக்களுக்குச் சொல்லிக்கொண்டு திரும்பி வந்தான் பெரிய கறுவல்.
** "என்ன நடந்தது?’ எண்டு பெரிய கறுவலை ஆவலோடை கேட்ான் சின்னக்கறுவல்.
* ஏசண்டன் சொன்னதையெல்லாம் பெரிய கறுவல் விபரமாய் சொன்னான்,
" அந்த வெள்ளைக்காறன் இப்படிக் கேவலமாய் பேச நீங்கள் சும்பா கேட்டுக் கொண்டு நிகண்டிட்டு வந்து அதை இஞ்சை சொல்ல உங்களுக்கு வெக்கமில்லையே? இது அவங்கடை ஆட்சிதான். ஆனா இது எங்கடை தேசம்; எங்கடை மண், உவங்களை நான் ஒரு கை பாக்கிறன்" எண்டு சின்னக் கறுவல் சபதம் செய்தான்.
“பெரிய கறுவல் அவனைச் சமாதானப்படுத்தினான்.
'மூண்டு நாலு நாளையாலை அந்த வெளியிலை கோயில் கட்டத் துவங்கினாங்கள்.

Page 19
32 O பாதை
*கத்தியும் கையுமாய்ப் போன சின்னக் கறுவலைப் பெரிய கறுவலும் ஊராக்களும் புத்தி சொல்லி மறுச்சினை.
*மூண்டு நாலு மாதத்துக்கை கோயிலைக் கட்டி முடிச் சாங்கள்.
"சின்னக் கறுவல் பயித்தியம் பிடிச்சவன் மாதிரி அலைஞ்சு திரிஞ் சான்.
"கோயில் திறப்பு விழாவுக்கு முதல் நாள் உடையான் வீட்டிலை ஆடும், கோழியும் அடிச்சு குடிவகையோட ஒரு பெரிய விருந்து நடத்தினாங்கள். யாழ்ப்பாணத்திலை யிருந்து அந்த விருந்துக்கு இரண்டு மூன்று வெள்ளைக் காறங்களும் அரசாங்க உத்தியோகத்தன்களும் வேறை அஞ்சாறு பேரும் வந்தாங்கள்.
*உடையான் வீட்டுக்கு இரண்டு மூண்டு பேரைக் காவலுக்கு வைச் சாங்கள் கறுவலாக்கள்.
ஊராக்கள் எல்லாம் ஒண்டாய் திரண்டினை
கறுவலாக்கள் புயல் வேகத்திலை ஒடியாடித் திரிஞ் சாங்கள்,
'அண்டைக்கு இரவு எங்கடை ஊர் நித்திரை கொள் ளேல்லை.
*திறப்பு விழாவிலண்டு காலமை பாதிரியாரும் வேறை சில ஆட்களும் அந்த வெளிக்கு வந்தினை. கோயில் கிடந்த அந்த வெளியிலை நிலத்தை உழுது குரக்கன் நாத்து நட்டு, அதுக்கிடையிலை வாழைக்குட்டியளும் நட்டுத் தண்ணி இறைச்சு விட்டாச்சு.
‘பாதிரியாருக்குச் சரியான கோவம் வந்தது; எல்லாரை யும் பேசிப்போட்டு எங்கடை ஊராக்களுக்குப் பாடம் படிப் பிச்சுத்தாறன் எண்டு சொல்லிப் போட்டுப் போனார்.
*கோயிலை ஆர் இடிச்சது எண்டு அறியிறதுக்கு, கவுண்மேந்து ஏசண்டரின்ரை ஒடரிலை எங்கடை ஊராக்

நீர்வை பொன்னையன் O 33
களைக் கொஞ்ச கொஞ்சப் பேராய்ப் பிடிச்சு அடிச்சு வெருட்டிப் பாத்தது அரசாங்கம்.
‘எங்கடையாக்கள் மூச்சுக்கூட விடேல்லை, "பிறகு உடையானும் முதலியும் கவுண் மேந்து ஏசண்ட னும் சேர்ந்து சூழ்ச்சி செய்து பொய் வழக்குப் போட்டு சின்னக் கறுவலை மறியலுக்கு அனுப்பினாங்கள்.
"இதாலை எங்கடை ஊர் குமுறிக்கொண்டிருந்தது. *உடையானும் முதலியும் இரவிலை வெளிக்கிடுற தில்லை. பகலிலையும் தங்கடை கையாக்களோ டை தான் பயந்து பயந்து நடமாடினாங்கள்.
*சனங்கள் அவங்களைக் கண்டால் வெறுப்போடை காறித் துப்பிச்சினை.
"சில நாளையாலை சின்னக் கறுவல் வருத்தம் வந்து மறியல் வீட்டிலை செத்துப் போனானெண்டு சொன்னாங் கள்.
"பெரிய கறுவலுக்குத் தன்ரை வலது கை முறிஞ்ச மாதிரிக் கிடந்தது. அவன் சரியாய்க் கவலைப்பட்டான். ஊராக்களும் சரியாய்க் கவலைப்பட்டினம்.
"மறியல் வீட்டிலை சின்னக் கறுவலை அடிச்சுத்தான் சாக்காட்டினவங்கள் எண்ட உண்மையை மறியலாலை வந்த தில்லையம்பலம் வெளிப்படுத்தினான்.
* உடனை பெரிய கறுவல் கோபா வேசம் கொண்டு எழும்பினான்.
* ஊராக்களும் கெம்பி எழும்பிச்சினை.
"உடையானும் முதலியும் பயத்திலை ஒளிச்சிட்டாங் கள். ஒரு மாதமாய் அவங்கடை தலைக்கறுப்பைக் காணேல்லை.

Page 20
34 O பாதை
*கெம்பி எழும்பின ஊர், தலைவரி கட்ட மறுததது.”
"அதென்னணையப்பா தலை வரி.’
நான் கேட்டேன்.
'தலை வரியெண்டு அந்த நாளையிலை ஒரு வரி இருந் தது. இருவத்தொரு வயது வந்த ஒவ்வொரு ஆம்பிளையும் ஒரு வரியத்துக்கு ஒருக்கால் கவுண்மேந்துக்கு வரியாய் ஒரு ரூபா கட்டவேணும். இந்தக் காசை விதானையிட்டைக் கட்டவேணும். இந்தக் காசு கட்டினவைதான் கவுன்சில் தெரிவிலை வோட்டுப்போட ஏலும். வரி கட்டாதாக்களை கவுண்மேந்து மறியலுக்கு அனுப்பும்,
'பெரிய கறுவல்தான் ஊராக்களைச் சேர்த்து இந்தத் தலைவரிக் காசைக் கட்டாமல் குழப்பஞ் செய்தான்.
"கவுண்மேந்தாலை ஒண்டும் செய்யேலாமல் போச்சு? ஏனெண்டால் எங்கடை ஊர் ஒண்டாய்ச் சேந்து நிண்டுது. பக்கத்திலை உள்ள ஊருகளில் ஆக்களும் எங்களுக்கு உதவி யாய் நிண்டினை.
'பிறகு கோயில் கிடந்த இடத்திலை ஒரு வேப்பம் கண்டையும் நட்டினை, எங்கடை ஊராக்கள். அதுதான் இந்தக் கறுத்தாற்றை வேம்பு.
* அட இவ்வளவு நாளும் உனக்கு இந்த விசய்ம் தெரியா மல் போச்சே, உண்மையிலை கறுவலாக்கள் சரியான வீர வான்கள்தான்,
**இந்த விசயம் பழையாக்களுக்குத்தான் தெரியும், இதைத் தெரிஞ்சவை இப்ப நாலஞ்சு பேர் தானிருக்கினை."
'கறுவலாக்கள் உன்ரை கூட்டாளியனோணையப்பா?"
'இல்லையடா மோனை, அவங்களிருக்கேக்கை எனக்கு உன்ரை வயது தானிருக்குமெண்டு நினைக்கிறன். எப்பவும்

நீர்வை பொன்னையன் O 35
நாங்கள் அவங்களோடைதான் திரிவம். அவங்கள்தான் எங்களுக்கு வழிகாட்டி. இந்த மனத் துணிவை எங்களுக்கு ஏற்படுத்தினது அவங்கள்தான். அந்த வேப்ப மரத்தைப் போலைதான் அவங்களுக்குப் பெரிய மனசு."
சொல்லிவிட்டு, கணபதி அப்பா மெளனமாக நடத்தார். எனக்கு அளவு கடந்த உற்சாகமாயிருந்தது.
தலையிலுள்ள வாழைக் குலையின் பாரம்கூட எனக்குத் தெரியவில்லை.
1979,

Page 21
3. மலை சாய்கின்றது
'வா கனகர் வா. ஏது விடியுது விடியமுந்தி இந்தப் பக்கம்? என்ன விசேசம்? மேற்குத் திக்கிலை ஆரோ
குமுறிக் கேக்குது. ஆர் அது? என்ன பழஞ்சலிப்போ அல்லது..?’
நித்திரை விட்டெழுந்து வந்து, புகையிலைச் சுருட்டைச் சுருட்டிக் கொண்டிருந்த சோமசுந்தரம் "கேற்றைத் திறந்து கொண்டு வந்த கனகரைப் புதினம் விசாரிக்கின்றார்.
'உமக்குத் தெரியாதே? எங்கடை பறட்டைப் பெரிய தம்பியல்லே மோசம் போட்டுது."
'என்ன, அந்த அறுப்பான் செத்துப் போனானே' சோமருடைய வார்த்தைகளில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். "அட, நான் அவசரப்பட்டிட்டன்’ திடீரெனத் தன் தவறை உணருகின்றார் சோமர். 'ஏன், என்ன நடந்தது அந்த மனிசனுக்கு? ஐயோ அந்த நல்ல பிறவி.'
தனது தவறை மறைப்பதற்கு முயல்கின்றார் பூசி மெழுகிய வார்த்தைகளால்.
"அதை ஏன் கேக்கிறியள்? ராத்திரி தலைக்கோழி கூவேக்கை வாழைக்குத் தண்ணி இறைக்கப்போக எழும்பி,

நீர்வை பொன்னையன் O 37
தேத்தண்ணியை வைச்சுக் குடிச்சுது. பிறகு தலையிடிக்கு தெண்டு பாயை விரிச்சுப் போட்டு மனிசன் சரிஞ்சவர்தான், விடிவெள்ளி காலிச்ச பிறகு அவற்றை மகள் பாக்கியம் அவரை எழுப்பினாள். ஆரை எழுப்பிறது?"
*அந்த நல்ல மனிசனுக்கு இப்பிடியா நடக்க வேணும்? அனுதாபம் கலந்த வார்த்தைகளாய் விசாரிக்கின்றார்.
*அந்தாள் காய்ச்சல் தலையிடியெண்டு நானறிய ஒரு நாளும் பாயிலை கிடக்கேல்லை. என்ன மாதிரி வயிரம் பாஞ்ச உடம்பு அதுக்கென்ன செய்யிறது. நல்ல சீவன். தானும் பாயிலை கிடந்து கஷ்டப்படாமல், மற்றவையளை யும் கரைச்சல் படுத்தாமல் போய்ச் சேந்திட்டுது. அவர் இன்னும் கொஞ்சக் காலம் இருந்திருந்தால்.”
கனகருடைய குரலில் வேதனையும் ஏக்கமும்.
இது தான் நல்ல சந்தர்ப்பம். பெரியான்ரை மகனாக்
களுக்குச் சரியான பாடம படிப்பிக்க இப்பதான் வாய்ப்புக் கிடைச்சிருக்கு.”
சோமருடைய மனதுக்குள் ஒருவித கிளுகிளுப்பு. "நான் அவசரப்படக்குடாது. பிரேதம் எடுக்கிறதெண் டால் பெரியான்ரை மகனாக்கள் என்னட்டை வரத்தானே வேணும். அவங்கள் வந்தால் செத்த வீட்டுச் சிலவுக்கெண்டு கடன் குடுத்திட்டு அந்த வாழைத்தோட்டத்தைக் கொஞ்ச நாளையாலை எழுதிச்சுப் போடலாம். வராட்டி. அவங்கள் பிரேதம் எடுக்கிறதை ஒருக்கால் பாப்பம், ஒருவேளை விடியப்புறம் அவங்கள் இஞ்சை வந்து சொன்னாங்களோ..?
சோமருடைய உள்ளத்தில் தவிப்பு.
"அன்னம்மா. இஞ்சேரும் அன்னம்மா!'
தனது மனைவியை ஆவலுடன் கூப்பிடுகின்றார்.

Page 22
38 O Lurr6035
*பொறுங்கோ. இப்பதான் தேத்தண்ணி போடுறன். கெதியாய்க் கொண்டாறன்.'
‘அதைப் பிறகு கொண்டா. இப்ப இஞ்சை கெதியாய்
என்ன? என்ன நடந்தது?" அன்னம்மா பதைபதைத்துக்கொண்டு அவசரமாக வருகின்றாள்.
* உனக்குத் தெரியாதே விசயம்? பறட்டைப் பெரிய தம்பியல்லே செத்துப் போச்சு.*
என்ன? அட பாவமே."
அன்னம்மாவுக்குத் திகைப்பு.
*பெரியதம்பியின்ரை மகனாக்கள் இஞ்சை வந்து செத்த வீட்டுக்கு சொன்னவங்களே?”
இல்லை. ஒருதரும் வரேல்லையே."
அன்னம்மா திரும்பிப் போகின்றாள்.
ஒகோ, அவங்களுக்கு அவளவு திமிரா? எங்கை உவங் கள் இண்டைக்கு செத்த வீடு நடத்திற கெட்டித்தனத்தைப் பார்ப்பம். ஒருக்கால் சவம் எடுக்கிறதெண்டால் எடுத்துப் பாக்கட்டும்?"
கோபத்துடன் துள்ளி எழுகின்றார் சோமர்.
கனகருக்குத் திகைப்பு.
"மகனாக்கள் விட்ட பிழைக்கு அந்த நல்ல மனிசன் பெரியதம்பியின்ரை பிரேதத்தை எடுக்க விடாமல்.’
கனகருடைய வார்த்தைகளில் பதட்டம்.
"உவங்கடை திமிருக்கு அவன் பெரியான்ரை சவத்தைத் தூக்கவிடாமல் மறிச்சு நாறப் பண்ணாவிட்டால் நான் பெரிய வேலுப்பிள்ளையின்ரை மகன் சோமசுந்தரமில்லை,”

நீர்வை பொன்னையன் O 39
*கொஞ்ச நேரத்துக்கு முந்தி கனகர் நல்ல மனிசன் எண்டு நீயும் சொன்னனிதானே?"
"அவன் பெரியான் குறைஞ்சவனே? அவன் செய்த அநியாயத்துக்கு ஐஞ்சாறு மாதம் அவன் பாயிலை கிடந்து உத்தரிப்பானெண்டு நினைச்சன். அதுக்கிடேலை அவன் துலைஞ்சிட்டான்.'
வயிற்றெரிச்சலுடன் பொருமுகின்றார் சோமர்.
*பெரியதம்பி ஐஞ்சாறு மாதம் பாயிலை கிடந்தால், வருத்தச் சிலவுக்கெண்டு கடன் குடுத்திட்டு, அந்த மனிது னிட்டைக் கிடக்கிற ஒரேயொரு வாழைத்தோட்டத்தை அமத்திப் போடலாமெண்டு நினைச்சார் இவர். அதுவாய்க் கேல்லை.
இந்த எண்ணம் வந்ததும் கனகருக்குச்சோமர் மேல் வெறுப்பும் கோபமும் வருகின்றது.
* ஏன் பெரியதம்பி என்ன அநியாயம் செய்து து? அந் தாள் மிதிச்ச இடத்துப் புல்லும் சாகாதே?*
"சாதிக்கலவரம் நடக்கேக்கை அந்தச் சுறுட்டு வால் கட்டி பொன்னுத்துரையனாக்களோடை பெரியானாக்களும் சேந்து மரமேறியளின்ரை பக்கம் தானே நிண்டவங்கள். கோயிலுக்கை கீழ் சாதியளை விடவேணுமெண்டு நிண்டு அவங்களுக்குக் கோயிலைத் துறந்து விட்டாங்கள். இது தெய்வத்துக்கு பொறுக்குமே. இப்ப கண்ணுக்கு முன்னாலை காட்டி விட்டுது. அவங்கள் எல்லாரும் இப்பிடித்தான் குறுக் காலை போவாங்கள் ’
சோமர் திட்டுகின்றார்,
உலகம் போற போக்கை இவராலை தடுக்கேலுமே?
வழித்தெரிச்சலிலை திட்டிறார். இன்னும் கொஞ்ச நாளை யாலை இவருக்குப் பயித்தியம் பிடிச்சிடும் போலை கிடக்கு,

Page 23
40 O பாதை
சோமருக்காகப் பச்சாதாபப்படுகின்றார் கனகர், மறு புறம் அவருக்குச் சோமரில் வெறுப்பு.
அன்னம்மா இரண்டுபேருக்கும் தேநீர் கொண்டு வரு கின்றாள்.
‘அந்த சிவப்புச் சட்டைக்காரப் பொன்னுத்துரையன் தான் இதுகளுக்கெல்லாம் கால். அவன் தான் எங்கடை ஊரைப் பழுதாக்கிறான். அவன் சுறுட்டுக்காறற்ரை சங்கத் துக்குத் தலைவனெண்ட நூல் எங்கடை ஊருக்கும் தலை வனே? அவனுக்கும் நான் இண்டைக்கு நல்ல பாடம் படிப் பிச்சுத்தாறன்.'
வெஞ்சினத்துடன் கூறிவிட்டுத் தேநீரை எடுக்கின்றார் சோமர்.
"இஞ்சேர் எல்லாரோடைம்யு நீ வீணாய்ப் பகைச்சு தொல்லையை விலைகுடுத்து வாங்காதை, அதுவும் எங்கடை பொன்னுத்துரையோடை மாட்டுப்பட்டால் என்ன நடக்குமெண்டு தெரியுமே?”
கனகருடைய வார்த்தைகளில் சூடேறுகின்றது.
'கனகர் வாயைப் பொத்து. மூச்சுக் காட்டாமல் தேத் தண்ணியைக் குடிச்சிட்டுப் போ."
'எனக்கு உன்ரை தேத்தண்ணி வேண்டாங்காணும்.” ‘என்னடா சொல்லிறாய்?" சோமர் துள்ளி எழுகின்றார். "இஞ்சேருங்கோ, அவசரப்பட்டு வீணாய் சண்டை சச்சரவை உண்டாக்காதையுங்கோ. பொறுமையா யிருங்கோ."
அன்னம்மா கெஞ்சுகின்றாள். "எனக்கு நீ புத்தி சொல்ல வந்திட்டியோடி? ஒண்டுக்கும் வழியில்லாத இந்த கனகனைப்போலை அற்பனுகள் எனக்கு

நீர்வை பொன்னையன் O 41
முன்னாலை தலைநிமிர்ந்து பேசவோ? கொண்டாடி அந்தச் சால்வையை. இவங்களை நான் இண்டைக்கு ஒருகைபாக்கிறன்."
கர்ச்சிக்கின்றார் சோமர். "ஏன் இப்ப எங்கை போகப் போறியள்? என்ன, செத்த வீட்டிலை போய்ச்சண்டை பிடிக்கப் போறியளே? என்ரை ராசா நீங்கள் அங்கை போக வேண்டாம். இந்த நீர்த் தேகத்திலை ஒரு காயம்பட்டாலும் பெரிய புண்ணாக்கிப் போடும். பிறகு அதுமாறாது.”
அன்னம்மா மன்றாடுகின்றாள். "அங்கை போக எனக்கு என்னடி விசரே?"
"அப்ப எங்கை போகப் போறியள்?"
‘எங்கடை குடிமோன்களிட்டை இப்பவே போறன். செல்லையானாக்கள் இண்டைக்குச் சவமெடுக்கிற கெட்டித் தனத்தை ஒருக்கால் பாப்பம்."
'அன்னம்மா, நான் வரப்போறன்." கூறிக்கொண்டே கனகர் எழுகின்றார்.
"கனகர், சரி போனது போகட்டும். என்னை வேணு மெண்டால் நீங்கள் பெரியான்ரை செத்த வீட்டுக்கு ஒருதரும் போகக்குடாது. அப்பிடியில்லையெண்டு நீங்கள் போனால் என்ன நடக்குமெண்டு உனக்குத் தெரியும் தானே?"
எடே சோமா என்ன நீ சொல்லி நாங்கள் நிப்பமே? நாங்கள் உன்ரை வாரக் குடியளே? எங்களை நெடுக அடக்கி யாளேலுமெண்டு நீ நினைக்கிறியா? நாங்கள் போகத்தான் போறம். எங்கை நீ செய்யிறதைச் செய் பாப்பம்? உன்ரை உறுட்டல் பார்வை எங்களை ஒண்டும் செய்யாது."
st-3

Page 24
42 O Lust 605
தர்மாவேசத்துடன் கூறிவிட்டு, கனகர் நேராக பெரிய தம்பி வீட்டுக்குப் போகின்றார்.
s O coo Ο Ο
"பொன்னுத்துரை, இப்ப என்ன மாதிரி பிரேதம் எடுக்கிறது?"
பெரியதம்பியின் மகன் செல்லையா கவலையுடன் கேட்
கின்றாள்.
'ஏன், என்ன நடந்தது?’’
"பிரேதம் தூக்கிற ஆக்களும் பாடைகட்டிறவையும் வர மறுத்துப்போட்டினை."
“ “6ፓ6ör ?””
* சோமர் மறிச்சுப்போட்டார்."
"ஏன் மறிச்சவராம்?"
* சாதிக்கலவரத்திலை நாங்கள் தங்களுக்கு மாறாய் நிண்டிட்டம் எண்டகோவத்திலை.'
*அதுக்காகத்தானெண்டு உனக்கு எப்பிடித்தெரியும்?"
"இஞ்சை நிக்கிறார் எங்கடை கனகர் அம்மான். இவர் தான் சொன்னவர்.”
*அது மாத்திரமில்லை, செல்லையா.”
* அப்ப?"
'நீ அவற்றை வீட்டைபோய் இழவு சொன்னனியே?
'இல்லை’
"அப்ப அவருக்குக் கோவம் வராதே?"
" அப்ப நான் அவரிட்டை இப்ப போகட்டே?”

நீர்வை பொன்னையன் O 43
*நீ போகலாம். ஆனால் அவரிட்டை நீ மண்டாட்டம் கேக்க வேணும்."
*சரி. என்ன செய்யிறது. நான் கேட்டுப்பாக்கட்டே??? சமோனை செல்லையா. நீ சோமனிட்டைப் போகாதை" கனகர் இடைமறிக்கின்றார்.
*கனகம்மான் நீ கொஞ்சம் பேசாமலிரணை. அவசரப் படாதையணை.”
பொன்னுத்துரை கனகரை அதட்டுகிறான். *செல்லையா, சோமர் அதோடை விட்டிடுவரே?"
பொன்னுத்துரையின் கேள்வி செல்லையாவுக்குப் புரிய வில்லை,
**அவருக்கு நான் வேறை என்ன செய்ய வேணும்?"
**செத்த வீட்டுச் சிலவுக்கும் நீ அவரிட்டைத்தான் கடன் வாங்க வேணும். அவர் சொல்லுறபடிதான் நீ செத்த வீடு நடத்த வேணும் "
"என்ன செய்யிறது. ஒருக்கால் போய்பாப்பம். பொன்னுத்துரை நீயும் வா."
*செல்லையா, நான் சோமரிட்டை வரேல்லை. நீ வேணுமெண்டால் போ. சோமர் எட்டு அல்லது பத்துச் சோடி பறைமேளங்கள் பிடிக்கச் சொல்லுவர். தண்டிகைப் பாடை கட்ட வேணுமென்னுவர். தின்ன வேலியிலையிருந்து நாலு பாட்டுக்காரர், சவக்கிரியை செய்ய இருபாலைச் சைவக் குருக்கள் கொண்டுவர வேணுமெண்டு நிப்பர். அது மாத்திரமே? கீரிமலையிலை அந்திரட்டிச்சிலவு, வீட்டுக் கிருத்தியச் சிலவு. கடைசியாய் நீ உங்கடை வாழைத் தோட்டத்தையும் அவருக்கு எழுதிக்குடுக்க வேண்டிவரும். நான் ஏன் உதுக்கை வந்து மாட்டுப்பட வேணும்?"

Page 25
44 O Lursos
"இப்ப என்னத்தைச் செய்யிறது பொன்னுத்துரை?”
"மற்றவையளோடையும் யோசிச்சச் செய்."
**ஆரோடை?”
"ஏன் இஞ்சை நிக்கினை, முருகேசு, நாகராசா,
தில்லையம்பலம், கனகரம்மான், சுந்தரம் எல்லாரோடையும் ஆலோசிச்சுச் செய்யன்."
"சுந்தரம், இதுக்கு என்ன வழி?”
**செல்லையா உனக்கு விருப்பமெண்டால் நீ சோம ரிட்டைப் போ. நாங்கள் அதுக்கு மாறில்லை. ஆனால் நாங்கள் அவரிட்டை வரம், வாறதையும் நீதான் அனுபவிக்க வேணும்.'
*எடே மோனை செல்லையா, நீ சோமனிட்டைப் போய் வேலையில்லை.”*
மீண்டும் கனகர் குறுக்கிடுகின்றார்.
“Srgör?”
"சோமன் லேசுப்பட்டவனே? முந்தி கதிரவேலுவின்ரை செத்த வீட்டிலை சோமன் இப்பிடித்தாள் குழப்பிடி விட்டவன். ஒரு நாள் முழுவதும் அதுகள் பிணத்தை வைச்சுக் கொண்டிருந்துதுகள். கடைசியாய் அவனிட்டை போய், காலிலை விழுந்து மண்டாடிச்சுகள். பிறகு அவன்ரை சொல்லுப்படிதான் அதுகள் நடுச்சாமத்திலை பிரேத மெடுத்துதுகள். இதை நீ மறந்திட்டியே?"
செல்லையாவைக் கேட்டார் கனகர்.
*அது மாத்திரமே? அந்த வேலாயுதத்தின்னர செத்த வீட்டுக்கு என்ன செய்தான் சோமன்? அதுகள் இருந்து பாத்திட்டு கைதடியிலை போய் பிரேதம் தூக்கிறதுக்கு ஆக்களைப் பிடிச்சுக்கொண்டு வந்துதான் பிரேத மெடுத்துதுகள்.”

நீர்வை பொன்னையன் O 45
முருகேசு வெறுப்புடன் கூறினான். ‘'சின்னத்துரை, காத்திகேசு, சண்முகம், கந்தையா இன்னும் எத்தினை பேருக்கு சோமன் உலைவைச்சவன்? செத்த வீடுகளுக்கும் கலியான வீடுகளுக்குமெண்டு அது களுக்கு காசு கடன் குடுத் சிட்டு, அதுகளின்ரை காணியளை அமத்தினான் சோமன். அதுகளை நடுத்தெருவிலை நிக்க விட்டான். அவன் இனிக்க இனிக்கப் பேசுவான் முதலிலை. அவளவும் நஞ்சுதான்."
தில்லையம்பலத்தின் வார்த்தைகளில் வெறுப்பு “எட பொடியள், சோமனுக்கு கனமாய் காணி பூமிகள் கிடக்கு. தொகையாய் பணம் இருக்கு. அவன்ரை மருமோன் விதானை. அவனுடைய பிள்ளையள் கவுண்மேந்திலை பெரிய உத்தியோகம் பாக்கிறாங்கள். கோடுகச்சேரியிலை அவனுக்கு நல்ல செல்வாக்கு. அதுக்காக நாங்கள் எல்லாரும் அவன்ரை சொல்லுப்படி ஆடவேணுமே? அவனுக்கு நாங்கள் நெடுகப் பயப்பட்டு அடங்கி ஒடுங்கிச் சீவிக்க வேணுமே? நாங்கள் அவன்ரை அடிமை குடிமை யளே? ஏன் நாங்கள் ஆம்பிளையளில்லையே?" கோ பாவேசத்துடன் கேட்கின்றார் கனகர். எல்லோரும் மெளனமாகி நிற்கின்றார்கள். ‘இவன் இப்பிடித்தான் நெடுகச் சேட்டை விட்டுக் கொண்டு வாறான். இதுக்கு இன்றைக்கு ஒரு முடிவு கட்ட வேணும்.'
கன கருடைய குரலில் உறுதி. ‘என்ன செய்யிறது? நீ இதுக்கு ஒரு வழியைச் சொல்ல னனை கனகரம்மான்.'"
கனகரைப் பார்த்துக் கேட்டான் செல்லையா 'ஏன், இஞ்சை எங்கடை பொன்னுத்துரையிருக்கிறான் தானே. இவன் நாலு தேசமும் அடிபட்டவன். சுருட்டுத்

Page 26
46 O பாதை
தொழிலாளியளின்ரை எத்தினை வேலை நிறுத்தங்களை நடத்தி வெற்றி கண்டவன். நல்லாய் அனுபவப்பட்டவன். ரனடா மோனை பொன்னுத்துரை பேசாமல் நிக்கிறாய்? இதுக்கு ஒரு வழியைச் சொல்லன்.'
ஆஜானபாகுவான பொன்னுத்துரையைக் கனகர் பார்க் கின்றார்.
"அப்பிடியெண்டால் இனி நாங்கள் வண்டிலிலை தான் பிரேதம் கொண்டு போகவேணும். நாங்கள் எலலாருமாய்ச் சேர்ந்து காசு சேர்த்து ஒரு பிரேத வண்டிலைச் செய்து வைச்சிருப்பம்."
எல்லோருடைய முகங்களும் மலருகின்றன.
*இதுதான் சரியான வழி. இதோடை சோமன்ரை திமிரும் அடங்கிப்போம்.”
சந்தோஷத்துடன் கூறுகின்றார் கனகர்
*ஆனால் இன்னொரு கரைச்சல் வரும்." முருகேசு ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்புகின்றான்.
* துணி வெளுக்கிறவையளையும் தலைமுடி வெட்டிற வையளையும் எங்களுக்குத் தொழில் செய்ய வேண்டா மெண்டு சோமன் மறிச்சால்..?
பொன்னுத்துரை சிறிது நேரம் மெளமாக நிற்கின்றான். அவனுடைய நெற்றியில் சிந்தனைக் கோடுகள்.
'அட, இது ஒரு பெரிய பிரச்சனையே? எங்களை தில்லையம்பல மன்னர் நினைச்சால் எல்லாம் சரிவரும்.”
எல்லோரும் தில்லையம்பலத்தைப் பார்க்கின்றனர்.
தில்லையம்பலம் ஒன்றும் புரியாமல் பொன்னுத் துரையைப் பார்க்கின்றான்.

நீர்வை பொன்னையன் O 47
"தில்லை. இறாட்டுக்கரையிலை நீ கட்டின கடையிலை இரண்டு அறைகள் சும்மா கிடக்கு. அதிலை துணி வெளுக்க ஒரு லோண்றியையும் முடிவெட்டிறதுக்கு ஒரு சலுனை யும் துவங்கி விட்டால் விசயம் தீந்துது. இதுக்கு நா? ஆக்களையும் ஒழுங்கு பண்ணிறன்."
*நீ என்ன சொல்லுறாய் தில்லை.' கனகர் தில்லையைக் கேட்கின்றார். *ஓ, நான் கடையைத் தரத்தயார்."
‘இன்டைக்கு என்ன செய்யிறது?" செல்லையாவின் கேள்வியில் அவசரம். “யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு பிரேத வண்டிலைப் பிடிச்சுக்கொண்டு வருவம்.”
நாகராசா முன் வருகின்றான். ‘ஏன் அந்தப் பெரிய எடுப்பெல்லாம்? ஏன் நாங்கள் ஆம்பிளையளில்லையா? பிரேதம் தூக்க எங்களுக்குக் கையளில்லையா? அதைக் காவிறதுக்கு எங்களுக்குத் தோள்களில்லையா? எங்கடை பிரேதத்தை நாங்கள் தூக்க ஏன் பின்வாங்க வேணும்? ஏன் வெட்கப்பட வேணும்? எங்கடை பெரிய தம்பியின்ரை பயில்வான் தேகத்தை நாங்கள் தூக்கினால் எங்களுக்கு பெருமைதானே?"
பொன்னுத்துரை ஆவேசத்துடன் கேட்டான்.
“ஒரு கமுக மரத்தை வெட்டிப் பிளக்க வேண்டியது. அதை வளைச்சு அதுக்கு மேலை துணியைப்போட்டு மூடினால் பாடை, பச்சைத் தென்னோலைப் பன்னாங்கிலை பிரேதத்தை வைச்சுத் தூக்கிக் கொண்டு போவம்.'
கனகர் பெருமிதத்துடன் கூறுகின்றார்.
எல்லோருக்கும் மன அமைதியும் தெளிவும்.

Page 27
48 O பாதை
'இதுதானப்பா உண்மையான செத்த வீடு. இதிலை பதினைஞ்சு இருவது பறைமேளங்களில்லை. இருநூறு அல்லது முன்நூறு ரூபா சில விலை தண்டிகைப் பாடை யில்லை. இதிலை ஒருதரும் கள்ளுக் குடிச்சிட்டு வெறியிலை ஆடேல்லை. மற்ற செத்த வீடுகளென்டால் கல்யாண ஊர்வலம் போறமாதிரியிருக்கும். ஆனால் இதிலை ஒரு ஆடம்பரமுமில்லை. இதுதான் உண்மையிலை பிரேத Darifsu.6ub.'
வீதியில் இரு பக்கங்களிலும் பார்த்துக்கொண்டு நிற்கின்றவர்கள் தங்களுக்குள் கூறிக்கொள்கின்றார்கள்.
O o s so
பொன்னுத்துரை, என்ன சங்கதி சோமர் வயித்தையும் தள்ளிக்கொண்டு தன்னந்தனிய வந்து சுடலையிலை நிக்கிறார்.
சந்தேகத்துடன் கேட்கின்றார் கனகர்.
"தன்ரை பயறு இனி அவியாதெண்டு விசயத்தைச் சமாளிக்கிறதுக்கு இஞ்சை வந்திருக்கிறார் போலை."
ஏளனத்துடன் கூறுகின்றான் தில்லையம்பலம்.
‘தன்ரை ஆக்கள் எல்லாரையும் செத்த வீட்டுக்கு வராமல் மறிச்சுப்போட்டு, சோமர் ஏன் இஞ்சை வந்து நிக்கிறான்? கடைசி இடை வழியிலை எங்களோடை சேர்ந்து வந்திருக்கலாமே? சுடலையிலை ஏன் தனிய வந்து நிக்கிறான்? இவன் சரியான ஆள் விழுங்கிக் கள்ள னல்லோ?”
பொன்னுத்துரையின் மனதில் சந்தேகம் எழுகின்ற .
“இவ்வளவு நாளும் சுடலையிலை சோமர் தானே குடிமக்களுக்கு குடி உரிமைக் காசும் கூலியும் பங்கிட்டுக்

நீர்வை பொன்னையன் O 49
குடுத்தவர். மறந்துபோய் அது குடுக்கத்தான் இஞ்சை வந்திருக்கிறாரோ?
நாகராசா கேலியுடன் கூறுகின்றான். "இல்லை நாகராசா. இதுக்கை ஏதோ விசயமிருக்கு. சோமன் எல்லாம் திட்டம் போட்டுத்தான் செய்யிறவன். நாங்கள் எல்லாரும் கவனமாயிருக்க வேணும். ஒண்டுக்கும் பின்வாங்கக்கூடாது."
எல்லோரையும் உசார்ப்படுத்துகின்றான் பொன்னுத் துரை.
"இப்பென்னப்பா தலையா போகப்போகுது? வாறது வரட்டும். பாப்பம்,'
தயக்கமின்றிக் கூறுகின்றார் கனகர். “விறகெல்லாம் அடுக்கினபடி கிடக்கு. சோமற்ரை கையிலையும் ஒண்டையும் காணேல்லை. அவர் சமாதானத் துக்குத்தான் வந்திருக்கிறார் போலை கிடக்கு '
சனமுகம் சமாதானம் கூறுகின்றான்.
"சரி, பிரேதத்தைக் கவனமாய் இறக்கு. விறகுக்கு மேலை வையுங்கோ.”
நாலு பக்கமும் பார்த்துக்கொண்டு பொன்னுத்துரை கூறுகின்றான். அடிக்கடி அவன் சோமரைக் கடைக்கண் ணால் பார்க்கின்றான்.
*எல்லாரும் வாய்க்கரிசியைப் போடுங்கோ. செல் லையா கொள்ளிக்கட்டையை எடு "
கனகர் செல்லையாவை அழைக்கின்றார்.
செல்லையாவின் நெஞ்சு பொருமுகின்றது. அவ னுடைய கண்களில் கண்ணிர். கொள்ளிக்கட்டையை கை எடுக்கின்றது. அதில் நடுக்கம்.

Page 28
50 O பாதை
மனிதனுக்கே முன் உதாரணமான, உழைப்பில் திருப்தி கண்ட, பெரியதம்பியின் உயிரற்ற முகத்தை, கடைசி முறை யாகப் பார்ப்பதற்கு எல்லோரும் முன்வருகின்றனர்.
"எடே, இந்த இடத்திலை உந்தப் பிரேதம் சுடேலாது.??
சோமர் கர்ச்சித்துக்கொண்டு முன்னுக்கு வருகின்றார்.
எல்லோரும் திகைக்கின்றனர்.
கணநேரம் மெளனம்.
ஏன்???
பொன்னுத்துரையின் உறுதிமிக்க குரல் மெளனத்தைக் கலைக்கின்றது.
*குடிமக்கள் தூக்கிவராத பிரேதம் இந்த இடத்திலை சுடேலாது.??
திமிருடன் கூறுகின்றார் சோமர்.
“சோமு, வீணாய் குழப்படி செய்து உனக்குக் கரைச்ச லைத் தேடாதை. பேசாமல் போ.”
கனகர் எச்சரிக்கின்றார். *நீ பொத்தடா வாயை." கையை ஓங்குகின்றார் சோமர், *உனக்கு இப்பென்னடா வேணும்?”
வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு முன்னுக்குப் பாய்கின்றார் கனகர்.
*கனகம்மான், கொஞ்சம் பொறு."
பொன்னுத்துரை கனகரைத் தடுக்கின்றான்.
“சுடலையிலுமா உன்ரை ஆட்டம்?"
நிதானமாக சோமரைக் கேட்கின்றான் பொன்னுத் துரை.

நீர்வை பொன்னையன் () 51
"எடே, எனக்கு முன்னாலை நீ தலைநிமிந்து பேசிறி யோடா? கூலிக்குச் சுறுட்டுவால் கட்டிற உனக்கு அவ்வளவு திமிர் வந்திட்டுதோடா?"
பொன்னுத்துரையின் கண்கள் எரிதழல்களாக மாறுகின் றன.
சோமருடைய உப்பிய பெருத்த மூஞ்சையில் ஒரு அசுர அடி.
சோமருக்குத் தலை சுழல்கின்றது.
‘என்னடா, இவ்ளவும் பாத்துக்கொண்டிருக்கிறியள்?"
தன்னைச் சமாளித்துக் கொண்டே கத்துகின்றார் Gšafrr:LDř.
குரல் ஒயமுன் தாழம் பற்றைகளுக்குள்ளிருந்து சோம ருடைய கையாட்கள் கத்தி பொல்லுகளுடன் ஓடி வருகின் றார்கள்.
**எடுங்கோடா விறகு கட்டையளை."
கனகருடைய ஓங்காரக் குரல்.
விறகு கட்டையுடன் கனகர் பாய்கின்றார்.
பொன்னுத்துரை முதலானோரும் கனகருடன் சேர்ந்து தாழம்பற்றைகளுக்குள்ளிருந்து வருகின்றவர்களை நோக்கிப் பாய்கின்றனர்.
சுடலை ரணகளமயம்!
சோமருடைய கையாட்கள் சிதறி ஓடுகின்றனர்
ஏடே இஞ்சை நில்லுங்கோடா!"
கத்திக்கொண்டு விறகுக் கட்டைகளுடன் பொன்னுத் துரை தரப்பினர் சோமருடைய கையாட்களைக் கலைத்துக் கொண்டு ஓடுகின்றார்கள்.
"நான் இனி என்னண்டடா சீவிக்கிறது? என்ரை மானம் போட்டுதே!"
அலறிக்கொண்டு சோமசுந்தரம் திரும்பிப் பார்க்காமலே ஒடுகின்றார்.
1972.

Page 29
4. யுக புருஷர்கள்
'ஏன் சோமு, உனக்கு இண்டைக்கு பஸ் குடுக்கேல் லையாம்?"
“என்ன எங்கடை சோமுவுக்கு பஸ் குடுக்கேல் 60 subCurt?'
அங்கு கூடிநின்று கொண்டிருக்கின்ற தொழிலாளர்கள் ஒரே குரலில் கேட்டபடியே சோமசுந்தரத்தை ஆச்சரியத் துடன் பார்க்கின்றனர்.
சோமசுந்தரம் நிர்விசாரமாக நிற்கின்றான். ‘ஆரடா எங்கடை சோமனுக்கு பஸ் குடுக்க மாட்ட னெண்டது?’
டிக்கட் புத்தகத்தை தனது தொடையில் அடித்துக் கொண்டு உரத்துக் கத்தியபடியே வருகின்றான் வேலுப் பிள்ளை.
*மச்சான் வேலுப்பிள்ளை. அவசரப்படாதையடாப்பா, கொஞ்சம் பொறுமையாயிரு. முதலிலை விசயத்தை என்னெண்டறிவம்.”
சிவகுரு வேலுப்பிள்ளையின் கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு கூறுகிறான்.
"சோமு என்ன நடந்தது? ஏன் பேசாமல் நிற்கிறாய்?”

நீர்வை பொன்னையன் O 53
பசுபதியின் குரலில் ஒரு வகைப் பதட்டம். சோமசுந்தரமும் அப்பு சண்முகமும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
*அப்பு ஏன் இவன் சோமன் பேசாமல் நிக்கிறான்?" **இப்பென்ன அப்பிடித் தலைபோற விசயம் நடந் திட்டுதே? ஏன் அந்தரப்படுறியள்?"
அப்பு சண்முகம் அவர்களை அமைதியுடன் கேட் கின்றார்.
அவருடைய முப்பது வருட கால சேவையில், இதிலும் பார்க்கப் பாரதூரமான எத்தனையோ பிரச்சினைகளை, தொழிற் சங்கப் போராட்டங்கள் மூலம் தீர்த்து வைத்த அனுபவத்தால் ஏற்பட்ட நம்பிக்கை, உறுதி அவருடைய கேள்வியில் தொனிக்கின்றது.
“அவை வேலை குடுக்காட்டி நாங்கள் பாக்கிற மாதிரிப் பாக்கிறதுதான். அதுக்கு ஏனடாப்பா இப்பிடிக் கொதிப்
rts'
கூறிக்கொண்டு அப்பு சண்முகம் சிவகுருவைப் பார்க் கிறார்.
*ஏன் பஸ் குடுக்கேல்லையெண்டு இப்ப நான் போய் அவங்களைக் கேக்கிறன்."
சிவகுரு கந்தோருக்குப் போகத் திரும்புகிறான். **சிவகுரு கொஞ்சம் நில், என்ன நடந்ததெண்டு சோமுவை முதலிலை கேப்பம்.”
அவர்கள் சிவகுருவைப் போக விடாமல் தடுக்கின்றனர். "சோமனைப் பற்றி எங்களுக்குத் தெரியாதே? இந்தப் பதினைஞ்சு வரியத் துக்கை அவன் பஸ் ஓடேக்கை எப்ப வாவது ஒரு அக்சிடன்பட்டிருக்கிறானே? எங்கை அவன்

Page 30
54O பாதை
வேலையிலை ஏதாவது ஒரு பிழையைக் காட்டட்டும் பாப்பம்?"
*வேலுப்பிள்ளை நீ சொல்லுறது எல்லாம் சரிதான். ஆனால் நாங்கள் எங்கடை நிதானத்தை இழக்கக் கூடாது. சோமு, விசயத்தைச் சொல்லன்."
தனது காக்கிக் கோற்றைப் போட்டு கொண்டே கூறுகின்றார் அப்பு சண்முகம்.
"நான் பஸ் எடுக்கப்போனன். எனக்கு இண்டைக்கு பஸ் இல்லையெண்டு டிப்போ மனேச்சர் சொன்னார்.!"
"ஏன் இல்லையாம்?" வேலுப்பிள்ளை இடைமறித்துக் கேட்கின்றான்.
“யாழ்ப்பாணத்து ஒஃவ்விசிலையிருந்து ஒடர் வந் திருக்காம்.'
"என்னை இண்டைக்குக் காலமை பத்து மணிக்கு அங்கை வரட்டாம்."
**இதுக்கை ஏதோ விசயமிருக்கு ' தலையை ஆட்டிக்கொண்டு சிவகுரு, அப்பு சண்முகத் துக்குக் கூறுகின்றான்.
'நேற்று அச்சுவேலி பஸ் ஸ்ரான்டிலை நடந்த விசயத்துக்காகத் தான் அவங்கள் இப்பிடிச் செய்திருக்க வேணும்.'
வேலுப்பிள்ளை கூறியதைக் கேட்ட அவர்கள் அப்பு சண்முகத்தை நோக்குகின்றார்கள்.
"இப்ப நாங்கள் என்ன செய்யிறது?" *சிவகுரு இதுக்காக நாங்கள் குழப்பமடையக் கூடாது. ஒருக்கா அந்த ஒஃவ்விசுக்குப் போய்ப் பாப்பம். அப்பிடி விசயம் முத்தினால் நாங்கள்."

நீர்வை பொன்னையன் O 55
"அப்ப தொட்டதெல்லாத்துக்கும் இனி அவங்கள் இப்பிடிச் செய்வங்கள். நாங்கள் அவையிட்டை ஓடிறதோ?,
அப்பு கூறி முடிப்பதற்கு முன் வேலுப்பிளை குறுக்கிட்டு முத்தாய்ப்பு வைக்கின்றான்.
'இதென்ன பெரிய விசயமே? இதிலும் பார்க்க எத்தனையோ பாரதூரமான பிரச்சினையளுக்கு எங்கடை யூனியன் முகம் குடுக்கேல்லையே? ஒருக்கால் போய்த்தான் Lu Tt Uu Gud.”
அப்பு கூறியதை ஆமோதித்து அவர்கள் தலையை ஆட்டுகின்றனர்.
“இந்த முறையும் ஒருக்கால் தெண்டிச்சுப் பாப்பம். சோமனையும் அப்புவையும் எங்கடை கையுக்கை போட்டால் அவையின் ரை யூனியன் துலைஞ்சுது.*
மனதுக்குள் கூறிக்கொண்டு நாகலிங்கம் சோமசுந்தரத் தையும் அப்பு சண்முகத்தையும் தனது கீழ்க் கண்ணால் மாறி மாறிப் பார்க்கின்றார்.
சோமசுந்தரமாக்கள் யாழ்ப்பாணம் போவதற்குத் தயாராகின்றனர்.
‘சோமு, ஏன் வீணாய்த் தொல்லையை விலைக்கு வாங்குவான்? நீ ஒண்டுக்கும் யோசியாதை. நான் வாறன் . அவையோடை கதைச்சு எல்லாத்தையும் சரிப்பண்ணி விடுகிறன்."
"என்ன சொல்லுறாய் நாகலிங்கம்?"
சோமு இழுக்கின்றான்.
"இஞ்சை ஏலாட்டி நான் உன்னைக் கொழும்புக்குக் கொண்டு போய் அலுவல் பார்த்துத்தாறன்."
என்ன, நானோ? உனக்குப் பின்னாலை நான் வரவோ?*

Page 31
56 O Lursos
ஆவேசத்தொனியில் கத்துகின்றான் சோமசுந்தரம்.
"ஏனப்பா கோவிக்கிறாய்? ஒரு மனிசன் கஷ்டத்திலை யிருக்கிறானெண்டு நான் உதவி செய்யவர, நீ என்னடா வெண்டால்."
எங்கடை யூனியன் என்ன புளியங்காய் ஆயப் போட்டுதே?"
கையை வீசிக்கொண்டு வேலுப்பிள்ளை ஓடி வந்தான்.
*நாகலிங்கம், உங்களைப் போலை பின் கதவாலை போய் அலுவல் பார்ககிற பழக்கம் எங்களிட்டையில்லை.”
அப்பு சண்முகத்தின் சூடான வார்த்தைகளைக் கேட்ட நாகலிங்கத்தின் முகம் இருளுகின்றது.
அது மாத்திரமில்லை. நாங்கள் யூனியன் வைச்சிருக் கிறது உங்களைப் போல சலுகையள் பெறுகிறதுக்கில்லை. எங்கடை உரிமையளைப் போராடி எடுக்கிறதோடை தொழிலாளி வர்க்க ஆட்சியைக் கொண்டுவர. இதை நீங்கள் மறந்திடாதையுங்கோ."
சோமு உச்சஸ்தாயியில் கத்துகிறான். "இண்டைக்கு நீங்கள் பெரிய அதிகாரியளின்ரை கைக் கூலியளாய் வேலை செய்யிறியள். அவை முந்தி என்ன சொன்னவையென்டதை மறந்திட்டியளோ?”
மந்திரிமார் எண்டால் முதலிலை அவை கந்தோருக்கு வந்து எங்களோடை கதைச்சுப் போட்டுத்தான் பிறகு தொழிலாளியைப் பார்க்கப் போவினை. ஆனா இவர் முதலிலை தொழிலாளியளிட்டை போட்டு, பிறகுதான் எங்களிட்டை வாறார். அதோடை தொழிலாளியள் அவரைத் தோழர் எண்டு கூப்பிடுகினை. நாங்கள் அவரை "சேர்' ண்டு கூப்பிடுகிறம் இப்பிடியான நிலைமையில நாங்கள் என்னண்டு வேலை செய்யிறதெண்டு முந்தி ஒரு முறை அவை சொன்னதை உங்களாலை மறுக்கேலுமே?”

நீர்வை பொன்னையன் C 57
சோமுவின் சாடுதலுக்கு நாகலிங்கத்தால் முகம் கொடுக்க முடியவில்லை,
"எப்படியெண்டாலும் இவன்ரை வேலையை இல்லாமல் பண்ணாவிட்டால் என்ரைபேர் நாகலிங்கமில்லை"
மனதுக்குள் கறுவிக்கொண்டு அந்த இடத்தை விட்டகலுகின்றார் நாகலிங்கம்,
‘அப்ப நாங்கள் யாழ்ப்பாணம் போவம். சிவகுரு நீயும் வா முதலிலை லீவு எழுதிக் குடும்பம்."
"அப்பு, நான்?" *சரி வேலுப்பிள்ளை நீயும் வாறதெண்டால் வா. ஆனா அங்கை வந்து நீ வீணாய்க் குளறக்கூடாது.”
*நான் ஒன்டு சொல்லுறன் அப்பு. நேற்று அச்சுவேலி பஸ்ரான்டிலை நடந்த விசயத்துக்காகத்தான் இந்த நடவடிக்கையெண்டால் நாங்கள் விட்டுக் குடுக்கக்கூடாது. கடைசி வரையும் போராடவேணும்.'
பருத்தித்துறையை நோக்கி பஸ்ஸை ஒட்டிக்கொண் டிருக்கும் சோமசுந்தரம் தனது கைக்கடிகாரத்தைப் பார்க் கிறான்.
*அட ஒன்பது மணிக்கு மேலையாய்ப் போச்சுது'
இடைக்கிடை மேய்ச்சல் மாடுகளை விலத்திச் செல்வதற் காக ஹோண் அடித்தும் பஸ்ஸை மெதுவாகச் செலுத்திக் கொண்டும் வந்ததனால் அலுத்து, சலிப்படைந்து போயிருந்த சோமசுந்தரம் தன்னைச் சுதாரித்துக் கொண்டு பஸ்ஸை ஒட்டுகின்றான்.
LDF-4

Page 32
SR () பாதை
சோமசுந்தரத்தின் பஸ்ஸை ஒரு மோட்டார் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
*சயிட்” கண்ணாடிக்குள் இதைக் கவனித்தபடியே அவன் பஸ்ஸை ஒட்டுகின்றான்.
இரண்டு மூன்று தடவைகள் மோட்டார் விலத்திச் செல் லாததனால் அவனுடைய மனதில் எரிச்சல் ஏற்படுகின்றது, அப்படியிருந்தும் அவன் நிதானமிழக்காமல் பஸ்சை ஒட்டிக் கொண்டிருக்கின்றான்.
பின்னுக்கு வந்துகொண்டிருக்கும் மோட்டார் ஹோன் சத்தம் கேட்டு அது விலத்திச் செல்வதற்கு அவன் போதிய இடம் கொடுக்கின்றான். ஆனால் மோட்டார் விலத்திச் செல்லவில்லை. அது பின் தொடர்ந்துவந்து கொண்டிருக் கின்றது.
மீண்டும் மோட்டாரின் ஹோண் ஒலிக்கின்றது.
மன உளைச்சலுடன் மோட்டார் விலத்திச் செல்வதற்கு சோமசுந்தரம் இடம் கொடுக்கின்றான்.
பஸ்ஸை விலத்துகின்றது மோட்டார். அப்பொழுது மோட்டாரிலிருந்த அதிகாரி சோமசுந்தரத்தை கவனமாகப் பார்க்கின்றார்.
"ஒ இவனா?
சோமசுந்தரத்தை பழிவாங்க வேண்டுமென்று நெடு நாட்களாகக் காத்திருந்த அந்த அதிகாரி இன்று சந்தர்ப்பம் கிடைத்திருப்பதை நினைத்து மனத்திற்குள் குதூகலிக் கின்றார்.
இவனும் இவன்ரை யூனியன்காரரும்தான் என்னை மதிக்கிறாங்களில்லை. மற்றமூண்டு யூனியன்களின் ரை தலைவர்மார் எல்லாரும் என்ரை காலுக்கை நிண்டு சுழலு கிறாங்கள். ஆனா இவங்கள். இண்டைக்கு இவனுக்கு சரி யான பாடம் படிப்பிச்சால்தான்.

நீர்வை பொன்னையன் O 59
தனது வாயிலிருக்கும் சிகரட்டின் புகையை மூச்சுப் பிடித்து இழுத்து வெளியே விடுகின்றார் அதிகாரி.
‘என்ரை கந்தோரிலை வேலை செய்யிற பெரிய இடத்து ஆக்களெல்லாம் எனக்கு எவ்வளவு மதிப்புத் தருகினை. அவை எல்லாரும் என்ரை வீட்டை வந்து தேத்தண்ணி கூடக் குடிச்சிருக்கினை. இவங்கள் மாத்திரம்தான் என்னை எடுத்தெறிஞ்சு நடக்கிறாங்கள். இண்டைக்கு இவன் சோமன்ரை திமிரை அடக்காட்டி.
மோட்டாரை வேகமாகச் செலுத்துகின்றார் அதிகாரி. அச்சுவேலி பஸ் நிலையத்தில் சோமுவின் பஸ் வந்து நின்றதும் பிரயாணியள் மத்தியில் பெரும் அமர் க்களம் ஏற்படுகின்றது.
நீண்ட நேரமாக பஸ்சிற்காகக் காத்து நின்ற அவர் களுக்கு உற்சாகம் பிறக்கின்றது. தாம் செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாகச் செல்வதற்கு அவர்கள் முண்டி யடித்துக்கொண்டு பஸ்சிற்குள் ஏறுகின்றார்கள்.
வேலுப்பிள்ளை சுறுசுறுப்பாக டிக்கட்டுகளை எழுதிக் கொடுப்பதும் பணத்தை வசூலிப்பதுமாக இருக்கின்றான்.
சீற்றின் முதுகுப் புறமிருத்த தனது துவாய்த் துண்டை எடுத்து முகத்து வியர்வையைத் துடைத்துவிட்டு துவாயால் தனது மார்புப்புறம் வீசியபடி இருக்கின்றான் சோம சுந்தரம்.
ஆர் இந்த பஸ்சின் ட்றைவர்?
மோட்டாரிலிருந்து இறங்கி வந்த அதிகாரி கேட் கின்றார்.
நான் சேர்." சோமசுந்தரம் பஸ்சிலிருந்து இறங்கி வந்து கூறு கின்றான்.

Page 33
60 O ur62o5
"ஏன் வேகமாய் பஸ்ஸை ஒடினனி???
தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டு அனாயாசமாக கேட்கின்றார் அவர்.
"சேர் நீங்கள் தந்திருக்கிற நேரத்துக்கை ஒவ்வொரு றிப்பையும் ஓடிமுடிக்க வேணும். அதுதான்."
கடமை உணர்ச்சியுடன் கூறுகின்றான் சோமசுந்தரம். "அதுக்கு இவ்வளவு வேகமாய் பஸ்ஸை ஒட்டிறதோ?”
அதிகாரியின் வார்த்தைகளில் கண்டனத் தொனி.
*நீங்கள் எங்களுக்குத் தந்திருக்கிற நேரம் காணாது. இதுபற்றி முந்தி எங்கடை யூனியன் உங்களுக்கு எத்த னையோ தரம் எடுத்துச் சொல்லியிருக்கு. நீங்கள் அதைக் கவனிக்கேல்லை. ஆனால் நாங்கள் எங்கடை கடமையைச் சரியாய்ச் செய்யிறம் எப்பிடியெண்டாலும் உங்கடை நேரத் துக்கை ஒவ்வொரு றிப்பையும் ஓடி முடிக்க வேணும். அதாலைதான்.'
"நீ நினைச்சபடி ஒடுறதுக்கு இது உன்ரை குஞ்சியப் பன்ரை பஸ்ஸ்ே?"
**ஆறுதலாய் ஓடினால் ஏன் பிந்தினதென்று கேக்றியள். கெதியாய் ஓடினாலும் குற்றம் சொல்லுறியள், அப்ப றோட்டிலை நிக்கிற ஆக்களை விட்டுட்டு :ெறும் பஸ்ஸை ஓடச் சொல்லுறியளா?" கூறிவிட்டு அங்கு நிற்கின்ற பிர யாணிகளைப் பார்க்கின்றான் சோமசுந்தரம்.
இதற்குப் பதில் கூற முடியாமல் தடுமாறுகின்றார் அதிகாரி.
அங்கு நிற்கின்றவர்கள் அதிகாரியைப் பார்த்துக் கேலி யாகச் சிரிக்கின்றனர்.
என்ன கனமாய்க் கதைக்கிறாய்? உங்கள் தரவளி யளைச் சுட்டுத் தள்ளினால் தான் எல்லாம் சரி வரும்."

நீர்வை பொன்னையன் O 61
அவர் கூறிய வார்த்தைகள் சோமுவின் இதயத்தில் சவுக்கடி போல் உறைக்கின்றது.
வேலுப்பிள்ளை டிக்கட் கொடுப்பதை திடீரென நிறுத்தி விட்டு அந்த அதிகாரியை முறைத்துப் பார்க்கின்றான்.
‘நான் முந்தி ஆமியிலை இருந்தவன் துப்பாக்கி சுடுகிற போட்டியிலை நான்தான் முதல் பரிசு எடுத்த
னான்.”*
அதிகாரியின் முன் வந்து கூறிவிட்டு அவரை ஏறிட்டுப் பார்த்தபடியே நிற்கின்றான் சோமசுந்தரம்.
இரண்டடி பின்வாங்கி மோட்டாரில் போய் ஏறுகின்றார் அதிகாரி.
*உன்னை நான் என்ன செய்யிறன் பார்."
மோட்டார் கதவை அடித்துச் சாத்திக்கொண்டு கூறிய
படியே புறப்படுகின்றார் அவர்.
திரும்பவும் டிக்கட் கொடுக்கிறான் வேலுப்பிள்ளை.
பஸ் புறப்படுகின்றது.
o
"ஓ, சண்முகமே என்ன விசயம்? ஏதாவது பிரச் சினை.”
அறைக்குள்ளிருந்து வெளியே வந்த நாகலிங்கத்தை விலத்திவிட்டு உள்ளே சென்ற அப்பு சண்முகத்தை வினவு கின்றார் அதிகாரி.
அப்பு சண்முகத்தைத் தொடர்ந்து வந்த சோமசுந்தரத் தையும், வேலுப்பிள்ளையாட்களையும் கண்டவுடன் அவ ருடைய முகத்தில் திடீர் மாற்றம்.
*நான் சோமுவின்ரை விசயமாய் வந்தனான்."

Page 34
6? O பாதை
'இந்த காடையன்களுக்காகப் பேச நீ வந்திருக் ፏ]ይÖGuሠ?””
வந்ததும் வராததுமாய் இவர் இப்பிடி. அப்பு சண்முகத்துக்குக் கோபம் தலைக்கேறுகின்றது. 'அந்தக் காடையன்களை இவ்வளவு நாளும் நீங்கள் ரன் வேலையிலை வைச்சிருந்தனியள்?"
அப்பு சண்முகத்தின் இந்தக் கேள்விக்கணைக்கு அந்த அதிகாரியால் பதிலிறுக்க முடியவில்லை.
"எனக்கும் உங்களுக்கும் ஒரு கதையுமில்லை. இந்த இடத்தைவிட்டுப் போங்கோ.”
கூறிவிட்டு ஒரு ஃபயிலை எடுத்து விரிக்கின்றார் அவர். *அப்ப சோமுவின்ரை பிரச்சினை?” *அது உங்களுக்குச் சொல்ல வேணுமே?” தலையை நிமிர்த்திக் கேட்கிறார் அதிகாரி. "நாங்கள் யூனியன் சார்பிலை வந்திருக்கிறம.” "உங்கடை யூனியனைப் பற்றி எனக்குக் கவலை வில்லை.’’
**சோமுவுக்கு ஏன் பஸ் குடுக்கேல்லையெண்டு எங்க ளுக்கு நீங்கள் சொல்லித் தானாக வேணும். இல்லாட்டி எங்கடை யூனியன்."
* அளவுக்கு மிஞ்சிக் கதைச்சியளெண்டால் உங்களெல் லாரையும் வேலையிலிருந்து நீக்கவேண்டி வரும் தெரி
ഥr? '
"நீங்கள் நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.”
அப்பு அமைதியான குரலில் கூறுகின்றார்:
"டிப்போவுக்குக் காயிதம் வரும். போய்ப் பாருங்கோ.”*

நீர்வை பொன்னையன் O 63
* அப்ப ஏன் சோமுவை இஞ்சை வரச் சொன்னீங்கள்?"
டெலிபோனை அதிகாரி கையில் எடுக்கின்றார்.
ஏன் டெலிபோன் எடுக்கிறியள் எண்டு எங்களுக்குத் தெரியும். உந்த வெருட்டுகளுக்கு நாங்கள் பயந்தவங்க ளில்லை. எங்கடை தொழிற்சங்கம் எங்களைச் சரியான வழி யிலைதான் வளர்த்திருக்கு."
டெலிபோனை வைத்துவிட்டு வெளியே செல்வதற்கு அதிகாரி எழுகின்றார்.
"எனக்கு இந்த வேலை போனால் நான் லொறி ஓடிச் சீவிப்பன். இல்லாட்டி மரமேறிக் கள்ளுச் சீவி என்னாலை வாழ்க்கை நடத்த ஏலும். எது வந்தாலும் நாங்கள் இப்ப போய்க் கொண்டிருக்கிற பாதையிலை தான் எண்டைக்கும் போய்க் கொண்டிருப்பன்."
சோமுவின் குரல் ஓங்கி ஒலிக்கின்றது. "அதுக்கு எனக்கென்ன?” *உனக்கு இந்த வேலை போனால் உன்னாலை அப்படிச் சீவிக்கேலுமே?*
உச்ச ஸ்தாயில் கத்திய சோமுவின் குரல் அந்தக் காரியாலயத்தின் எட்டுத் திக்கிலும் பிரவகிக்கின்றது.
அதிகாரியின் முகம் வெளுக்கின்றது. அவர் நிலைதடுமாறி கதிரையிலை தொப்பென இருக் கின்றார்.
"நாங்கள் இப்ப போறம். நாளைக்குக் காலமை எங்கடை சோமுவுக்கு பஸ் குடுக்காட்டி றோட்டிலை ஒரு பஸ்ஸ-ஸும் ஓடாதெண்டதை மனதிலை வைச்சிருங்கோ.'
கூறிவிட்டு அப்பு சண்முகமாட்கள் வெளியேறு கின்றார்கள்.
1974.

Page 35
5. எரிசரம்
'கால் றாத்தல் பிஞ்சு மிளகாய் என்ன விலை?
*அறுபது சதம்."
காலை நீட்டியபடியே, வெற்றிலைக்குச் சுண்ணாம் பைத் தடவிக்கொண்டு, தலை நிமிராமலே அவள் கூறு கின்றாள்.
"என்ன, ஒரு றாத்தல் பிஞ்சு மிளகாய் இரண்டு ரூபா
நாப்பது சதமா?”
வியப்புடன் நான் கேட்கின்றேன்.
"ஒரு றாத்தல் செத்தல் மிளகாய் முப்பத்தைஞ்சு ரூபா விக்குது. பிஞ்சு மிளகாய் இரண்டு ரூபா நாப்பது சதம் விக் காமல் என்ன செய்யிறது?’’
அவளுடைய குரலில் கடுகடுப்பு.
* எடே, நிலைமை தெரியாமல் கதையாதை. நேற்றுத் தான் நீ கொழும்புக்கு வந்தனி. பேசாமலிரு.”*
நண்பன் என்னைப் பேச விடாமல் தடுக்கின்றான். * கொஞ்சம் சூடேத்திப் பாப்பம் என்ன நடக்குதெண்டு.” எனது மனதில் குறும்புத்தனம் தலை தூக்குகின்றது.

நீர்வை பொன்னையன் O 65
**வெள்ளைக்காரன்ரை காலத்திலை ஒரு றாத்தல் செத் தல் மிளகாய் அறுபது சதம்தானே?"
"என்ன, வெள்ளைக்காறன் எங்கடை நாட்டை விட்டு ஒடீட்டானே?"
தலையை நிமிர்த்தி எங்களைப் பார்த்துக் கேட் கின்றாள்.
அவளுடைய கண்களில் கோபக் கனல்.
நாங்கள் ஒன்றும் பேசவில்லை.
"எங்கடை நாட்டிலையுள்ள பெருவாரியான தேயிலை, றப்பர் தோட்டங்களை இண்டைக்கும் வெள்ளைக்காறன் தான் வைச்சிருக்கிறான். பெரிய பெரிய கம்பெனியள் எல்லாம் அவன்ரை கையிலைதான் கிடக்கு. இது உங்களுக் குத் தெரியாதே?”
அசந்துபோய் நான் நிற்கின்றேன்.
"அதோடை அமெரிக்காக்காறன் உலக வங்கி எண்ட வட்டிக் கடையை வைச்சு எங்கடை நாட்டைக் கொள்ளை யடிக்கிறான். இவைகள் எல்லாருக்கும் இஞ்சையுள்ள தரகு முதலாளியள் முண்டு குடுக்கிறாங்கள்.”
**இந்த விசயமெல்லாம் காய்கறி விக்கிற இந்தக் கிழவிக்கு எப்பிடித் தெரியும்?"
எனக்குப் பேராச்சரியம்.
“எங்கடை நாட்டைக் கொள்ளையடிக்கிற இந்த அந்நி
யன்களை நாங்கள் அடிச்சுக் கலைக்காட்டி.."
இழந்துவிட்ட இளமையை மீண்டும் பெற்றுவிட்டவளாய் அவள் கையை வீசியபடியே ஆவேசத்துடன் கத்துகின்றாள்.
கோழித் தூக்கத்திலிருந்த சந்தை விழிக்கின்றது.

Page 36
66 O பாதை
அவள் எங்களை வெறுத்துப் பார்த்தபடியேயிருக் கின்றாள்.
அவளுடைய குழி விழுந்த கண்களிலிருந்து வரும் உக்கிரப் பார்வை என்னுடைய இதயத்தை ஊடுருவி அறுக் கின்றது
அந்த உக்கிரப் பார்வைக்கு எனது கண்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
"ஆச்சி, இவன் இடத்துக்குப் புதிசு. விசயம் தெரியா மல் கதைக்கின்றான். நீ கோவியாதையணை. சரி மிளகா யைத் தாணை ’’
நண்பன் நிலைமையைச் சமாளிக்க முயல்கின்றான். **இந்த விசயத்திலும் விளையாட்டா?" எரிச்சலுடன் கூறிவிட்டு அவள் மிளகாயை நிறுக்கின் றாள்.
* வேறு என்ன வேணும்?” "ஒரு றாத்தல் கத்திரிக்காய், அரை றாத்தல் வாழைக் காய், வெண்டிக்காய்.”*
அவள் ஒவ்வொரு சாமானாக நிறுத்துப் போடுகின் றாள்.
கணக்கைக் கேட்டுக் காசைக் கொடுத்துவிட்டு, நாங்கள் வேறு ஆளிடம் சாமான் வாங்கச் செல்கின்றோம்.
**நல்ல வேளை நாங்கள் தப்பினது. நீ வீண் கதை பேசி.அந்த மனிசி வாய் திறந்தால்.’
* ஏன், அப்பிடி அவள்.?” 'அவளைப்பற்றி உனக்கென்ன தெரியும்? இந்தச் சந்தையிலுள்ள வியாபாரியஸ் எல்லாரும் அவளுக்கு மடக் கம். இஞ்சை தலை தூக்கிற சண்டை சச்சரவு எல்லாத்தை யும் அவள் தான் தீர்த்து வைக்கின்றவள்."

நீர்வை பொன்னையன் O 67
*அப்பிடியா?"
*ஆராவது அநியாயமாய் நடந்தால் அவள் சும்மா பார்த்துக் கொண்டிராள். எந்த விண்ணணெண்டாலும் அவள் எதிர்த்துச் சண்டை போடுவாள். சரி விடு அவளின் ரை கதையை. நாங்கள் வந்த வேலையைப் பார்ப்போம்.'
நண்பன் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருக்கின்றான்.
எனது மனம் நிலை கொள்ளாமல் தவிக்கின்றது.
*அந்த ஆவேசக் குரல்.எங்கோ, எப்பொழுதோ கேட்ட மாதிரி..!
அலைந்துகொண்டிருக்கின்றது எனது மனம்.
அவளுடைய அந்த உக்கிரப் பார்வை.!
அந்த உக்கிரப் பார்வையை எப்பொழுதோ கண்ட மாதிரி எனது நினைவுத் தடத்தில் உணர்வு தட்டுப்படுகின்றது.
'இவளை நான் எங்கே பார்த்தேன்?" எனக்குத் தெளிவில்லை.
காய்கறி வாங்கிவிட்டு நண்பன் திரும்பிச் செல்வதற்கு என்னைக் கூப்பிடுகின்றான்.
"சோமாவதி அக்கா, சாமான்களைப் பார்த்துக்கொள். நான் தேத்தண்ணி குடிச்சிட்டு வாறன்."
பக்கத்திலிருந்த பெண் அந்தக் கிழவியிடம் கூறிவிட்டு எழுந்து செல்கின்றாள்.
சோமாவதி”
எனது மனதில் சலனம்.
"அதெப்படி முடியும்? அவள் அந்த."
*சரி ஒருக்கால் கிட்டப் போய்ப் பார்ப்பமே!”

Page 37
68 O பாதை
நண்பனிடம் கூறிவிட்டு நான் செல்கின்றேன். "எங்கை போறாய்? பிறகும் அந்தக் கிழவியோடை.”
**வாறன் பொறு” நான் செல்கின்றேன். நண்பன் என்னைத் தொடர்கின்றான். அவள் மற்றுமொரு வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவிக் கொண்டிருக்கின்றாள்.
அவளை நான் உன்னிப்பாகப் பார்க்கின்றேன். அவளுடைய நெற்றியின் இடது புறத்திலுள்ள அந்த வடு எனது கண்களில் படுகின்றது.
எனக்கு திகைப்பு. சிறிது நேரம் செயலற்று நிற்கின்றேன். "நீங்கள்தானே அந்த சோமாவதி?” துணிவை வரவழைத்துக்கொண்டு நான் கேட்கின்றேன்.
எந்தச் சோமாவதி?” தலையை நிமிர்த்தி, வியப்புற்றவளாய் அவள் என்னைப் பார்க்கின்றாள்.
"கணவரியத்துக்கு முந்தி மாத்தறையிலை நடந்த அந்த ஊர்வலத்திலை.”
அவளுடைய கண்களில் ஒளி வீசுகின்றது. "அதுக்கு இப்பென்ன?" "அண்டைக்கு நானும் அந்த ஊர்வலத்திலை.” என்னில் எதையோ தேடுவதுபோல அவளுடைய விழிகள் என்னை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருக் கின்றன.
உணர்ச்சி அலைகளுக்குள் சிக்கித் திணறிக் கொண் டிருக்கும் எம்மிருவர் மத்தியில் மெளனம்.

நீர்வை பொன்னையன் O 69
எம்மைப் புரிந்துகொள்ள முடியாதவனாய் எனது நண்பன் செய்வதறியாது நிற்கின்றான்.
‘'நீங்கள் அந்த தேயிலை கொம்பனியிலை இப்ப வேலை செய்யிறேல்லையா?*
மெளனத்தைக் கலைத்து நான் கேட்கின்றேன்.
*அந்த விசயம் நடந்த பிறகு அந்த வெள்ளைக்காரத் தேயிலைக் கொம்பனிகாரன் என்னை வேலையிலை வைச்சிருப்பனெண்டு நினைக்கிறியா?”
**அப்ப சீவியத்துக்கு?" *மரக்கறி வித்து ஒரு மாதிரி சமாளிக்கிறன். அண்டைக்கு எங்களோடை ஒண்டாயிருந்து சாப்பிட்டு ஒருமிக்கச் சேர்ந்து போராடிச்சினை எங்கடை தலைவர் மார், பிறகு அவர் எங்களை தோளை ஏணியாய்ப் பாவிச்சு மெத்தை வீட்டிலை ஏறின பிறகு எங்களை மறந்திட்டினை,** அவளுடைய முகத்தில் வெறுப்புப் படர்கின்றது. "எங்கடை பழைய தலைவர்மார் எங்களைக் கைவிட்டாலும் நாங்கள் தொழிலாளியள், மனம் தளரேல்லை எங்கடை இலக்கை அஈடயிற துக்கு இன்டைக்கும் நாங்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டுதாணிருக்கிறம்,’
அவளுடைய வார்த்தைகளில் தன்னம்பிக்கை உறுதி. **உங்களோடை நான் ஆறுதலாய்க் கன விசயம் பேச வேணும். உங்களை எங்கை சந்திக்கலாம்?"
'ஏன், என்ரை வீட்டை வரலாமே.”*
“ “ 6 tu ?”
*உனக்கு எப்ப வசதியோ அப்ப வரலாம்.’
‘இரண்டு மூன்டு நாட்களுக்குள்ளை?" *ஒ, தாராளமாய் வரலாம்."
தனது வீடிருக்கும் குறிப்பை அவள் கூறுகின்றாள்.

Page 38
70 CD I u IT gvpgb
*சந்தையை விட்டு நானும் நண்பனும் புறப்படு கின்றோம்."
"கட்டாயம் வர வேணும்."
உரத்துக் கத்துகின்றாள்.
வராமல்?’
கைகளை ஆட்டிவிட்டு நாம் செல்கின்றோம்.
எனக்கு ஒரே உற்சாகம்.
மனம் ஆனந்த வெறியில் கூத்தாடுகின்றது.
‘என்னடாப்பா ஏதோ மாத்தறை, ஊர்வலம், தேயிலைக்
கொம்பனி எண்டு நீங்கள கதைச்சியள். எனக்கொண்டும் விளங்கேல்லை. ஆரடாப்பா இந்த, சோமாவதி”
**வியட்நாமிலை போலை எங்கடை நாட்டிலையும் வீரப் பெண்கள் இருக்கிறார்களடா கந்தையா."
எனது இதயத்தில் உணர்ச்சியலைகள் முட்டிமோது கின்றன.
'தான் சோமாவதியை பற்றிக் கேக்கிறன். நீ வியட் நாமைப் பற்றித் துவங்கிறாய். விசயத்தைச் சுற்றிவளைக்கா மல் நேராய்ச் சொல்லு. ஆரடாப்பா இந்த சோமாவதி?”
என்னால் சிறிது நேரம் பேச முடியவில்லை. **ஏனடாப்பா பேசாமல் வாறாய்? என்ன விசயம்??? *சரி நான் சொல்லிறன்." ‘நான் மாணவனாயிருந்த காலம்-அப்ப வெள்ளைக்காரன் எங்களை நேரடியாய் ஆண்டு கொண்டிருந்தான்,
தென் இலங்கையிலை ஒரு மகாநாடு நடந்தது. யாழ்ப்பாணத்திலையிருந்து நானும் போனன்.

நீர்வை பொன்னையன் O 71
இலங்கையிலுள்ள எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆண் களும் பெண்களுமாய் ஆயிரக்கணக்கிலை மகாநாட்டுக்கு வந்திருந்தினை.
மூண்டு நாட்கள் மகாநாடு நடந்தது.
தலைவர்மாரும் அநேக தொழிலாளர்களும் மகா நாட்டிலை உணர்ச்சியோடை பேசிச்சினை.
ஒவ்வொரு நாள் இரவும் கலை நிகழ்ச்சிகள்!
மகாநாட்டிலை கலந்துகொண்ட எல்லாருக்கும் பெரிய விழிப்பு: உத்வேகம்.
கடைசி நாள் பெரிய ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்திருந்தினை.
மூண்டாம் நாள் பின் நேரம் ஊர்வலம் துவங்கிச்சுது.
ஊர்வலத்திலை பல்லாயிரக்கணக்கான மக்கள்.
ஒரு பெரிய சிவப்புக் கொடி ஊர்வலத்துக்கு முன்னாலை பறந்து கொண்டிருந்தது.
தலைவர் மார் ஊர்வலத்தின் முன்னணியிலை நின்டினை.
ஊர்வலம் வெளிக்கிட்டுது.
நூறு யார் துரத்திலையுள்ள சந்திக்கு போச்சுது.
சந்திக்கு நடுவிலை ஒரு வெள்ளைக்கார அதிகாரி நிண்டான்.
அவனுடைய கூலிப்படை அவனுக்குப் பின்னாலை நிண்டுது.
அவங்கள் எல்லாரிட்டையும் ஆயுதங்கள்.
ஊர்வலத்துக்குத் தடையெண்டு அவன் சொன்னான்.

Page 39
72 O பாதை
முன்னணியிலை நிண்ட தலைவர்மர் திகைச்சபடியே நிண்டினை.
ஊர்வலத்திலை நிண்ட எங்கள் மத்தியில் கொதிப்பு; கொந்தளிப்பு.
ந | ங்கள் எலலாரும் ஆக்ரோ ஷத்தோடை கோஷம் போட்டபடியே முன்னேறிக்கொண்டிருந்தம்.
‘எல்லாரும் கலைஞ்சு போங்கோ. இல்லாட்டி உங்களைச் சுட்டுத் தள்ளுவம்' எண்டு வெள்ளைக்காற அதிகாரி திமிருடன் சொன்னான்.
‘எங்களை சுடுங்கோடா பாப்பம்." கத்திக் கொண்டு நாங்கள் முன்னுக்குச் சென்றம். தலைவர்மார் எங்களைச் சமாதானப்படுத்தப்படாதபாடு பட்டுக் கொண்டிருந்தினை.
எல்லாரையும் இடிச்சுத் தள்ளிப்போட்டு ஒரு பெண் முன்னுக்கு வந்தாள்.
தலைவர்மாரையும் தள்ளிப்போட்டு அவள் வேகமாய் முன்னுக்குப் பாஞ்சாள்.
* ஏகாதிபத்திய ஏவல் நாயே விடடா வழியை!’ முழங்கிக்கொண்டு அந்த அதிகாரியை 8®t!ወub தள்ளினாள்.
அவளுடைய அந்த ஆவேசக் குரலிலும் உக்கிரப் பார்வையிலும் அந்த அதிகாரி மலைத்துப் போய் நிண்டான். அவனுடைய கூலிப் படையும் செயலற்று நிண்டுது. செங்கொடியை அவள் பிடுங்கினாள். கோஷம் போட்டபடியே முன்னேறினாள். நாங்கள் அவளைப் பின் தொடர்ந்தோம்.

நீர்வை பொன்னையன் O 73
அதிகாரி அடித் தொண்டையால் ஏதோ உரத்துக் கத்தினான்.
கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன் ஊர்வலத்தின் முன்னுக்குச் சென்று கொண்டிருந்த அவளை நோக்கி ஓடினான்.
அவளுடைய மண்டையிலை அவனுடைய குண்டாந்தடி விழுந்தது.
அவளின்ரை நெத்தியிலையிருந்து ரத்தம் வடிஞ்சுது.
அவள் அதைப் பொருட்படுத்தாமல் முன்னுக்குப் போய்க் கொண்டிருந்தாள்.
நாங்கள் ஊர்வலமாய்ப் போய்க் கூட்டத்தை நடத்திறம்.
கூட்டத்திலை நிண்ட எல்லாரது வாயிலும் சோமாவதி எண்ட அவளின்ரை பேர் அடிபட்டுது.
1973
Lur - 5

Page 40
6. ரத்தச் சுவட்டில் ஒரு அடி.
அமரத்வ மே தினம் நீடூழி வாழ்க!”
இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு, காற்றில் மிதந்து வந்த கம்பீரக் கோஷம் பொலீஸ் நிலையச் சுவரில் முட்டி மோதி எதிரொலிக்கின்றது.
இது கனவா? நினைவா? பொலீஸ் நிலையப் பாதுகாப்பு அறையில் அடைபட்டுக் கிடக்கின்ற எங்களுக்கு ஆச்சரியம்; அதிர்ச்சி! இந்த நேரத்தில் இந்தக் கோஷம்.?” தோழன் கந்தையா கேள்வி எழுப்புகின்றான். "அதுவும் இந்தப் பகுதியில்?’’ வேலுப்பிள்ளையின் குரலில் தடுமாற்றம்.
இது நடக்கக் கூடிய காரியமா?’’ நான் கேள்வியெழுப்புகின்றேன். பொலீஸ் நிலைய சுவர்க் கடிகாரம் சிறிது நேரத்திற்கு முன்புதான் பத்து மணி அடித்து ஓய்ந்தது.
இந்த நேரம கெட்ட நேரத்தில் இப்படிக் கோஷம் எழுப்புவது யாராக இருக்க முடியும்?

நீர்வை பொன்னையன் O 75
கேள்விக் குறியுடன் நாங்கள் மூவரும் உன்னிப்பாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
நிசப்தம்,
"உஸ். என்ன மாதிரி வேர்த்துக் கொட்டுது." தோழன் கந்தையா சேட்டினால் தனது உடலில் வியர்வையைத் துடைத்து விட்டு, அதே சேட்டை விசிறியாக விசுக்கி வியர்வையை ஆற்ற முயல்கின்றான்.
மூன்று பக்கங்களும் கற்சுவர்கள். முன் பக்கம் பலமான இரும்புக் கம்பிகள் போட்ட ஒற்றைக் கதவு. ஒரு சிறிய அறை. அதன் ஒரு புறத்தில் கொங்கிறீட்டினாலான ஒரு வாங்கு. அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் மூவர்.
ஒருவர் மாறி மற்றவர் இருப்பதும் நிற்பதுமாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றோம்.
பாதுகாப்பு அறைக்குள் துளி காற்றுக்கூட நுழைய (figtungi.
வெப்பம் தாங்க முடியவில்லை.
எங்கள் உடலெல்லாம் வியர்த்து வடிகின்றது. கொசுக்கடி.
வயிற்றைக் குமட்டும் நாற்றம் தாங்க முடியவில்லை. மனித பிறவிகள் இருக்கக் கூடிய இடமா இது?
ஆங்கிலேயன் எம்மவரை அடிமைகளாக ஆண்ட காலத்தில் கட்டப் பட்ட கட்டடமல்லவா இது? அந்தக் தோஷம் இப்பொழுதும் தொடர்ந்திருப்பதில் என்ன ஆச்சரியம்?
கடல் பறவை ஒன்று எங்கிருந்தோ தன்னந்தனியனாக இருந்து சோகக் குரலில் அலறிக் கொண்டிருக்கின்றது.

Page 41
76 O பாதை
முறைப்பாடு செய்யும் மண்டபத்தில் புகைத்துக் கொண் டிருக்கும் சிகரட்டிலிருந்து வந்து கொண்டிருக்கும் புகை யிலை நெடி சிகரட் புகைக்க வேண்டும் என்ற அவாவை எனக்கு எழுப்புகின்றது.
பாதுகாப்புச் சிறையிலிருக்கும் எனக்கு சிகட் எங்கிருந்து வரும்?
புகையிலை நெடி தொடர்ந்து வந்து கொண்டிருக் கின்றது.
எனக்கு உள்ளத்தில் எரிச்சல் ,
போன ஆண்டு மே தினத்தை நாங்கள் எவ்வளவு உற்சாகத்தோடை நடத்தினம்! ஆனால் இந்த ஆண்டு." தோழன் வேலுப்பிள்ளையின் வேதனைக் குரல் என் கவனத்தை இழுக்கின்றது.
'ஏன், இந்த ஆண்டும் எங்கடை மே தினம் போராட்ட உணர்வோடை நடந்து கொண்டிருக்கிதுதானே.”
தோழன் கந்தையா கூறுகின்றான். * அதில் நாங்கள் பங்கு பற்ற முடியாமல் போட்டுதே." விரக்தியுடன் கூறுகின்றான் வேலுப்பிள்ளை. ஆனால் எங்கடை மே தினம் நடந்திருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம். நான் அதை வெளிக்காட்டவில்லை. வெளிக்காட்டினால் கந்தையா என்னைத் திட்டுவான்
நான் மெளனமாக இருக்கின்றேன். தொழிலாளி வர்க்கத்தில் போராட்ட உணர்வை வெளிப் படுத்தும் நாள் மே தினம். தொழிலாளி வர்க்கம் தனது கடந்த கால உரிமைப் போராட்டங்களின் அனுபவங்களைத்
தொகுத்து அதன் அடிப்படையில் தனது எதிர்கால போராட்டத்தை பிரகடனப்படுத்தும் நாள்தான் இத்தினம்

நீர்வை பொன்னையன் O 77
தொழிலாளி வர்க்கத்தின் உரிமைப் போராட்ட வர லாற்றின் அடிச்சுவடு இரத்தம் தோய்ந்தது.
எமது உரிமைகளைப் பெறுவதற்கு நாமும் இந்த போராட்ட அடிச்சுவட்டில் செல்வது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.
இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள கோடானு கோடி உழைச்கும் மக்கள் தமது சர்வதேசிய பாட்டாளி வர்க்க உணர்வையும் சர்வதேசிய பாட்டாளி வர்க்க ஒருமைப் பாட்டையும் வெளிப்படுத்துவதற்காக அலையலையாகத் திரண்டு வீதிகளில் போராட்ட உணர்வுடன் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் நாங்கள்?
*எங்கடை தோழர்மார் ஊர்வலம் நடத்தியிருப் 1960)6or Guu?””
வேலுப்பிள்ளையின் கேள்வி எனது மனதைச் சுண்டி யிழுக்கின்றது.
"நிச்சயம் நடத்தியிருப்பினை."
கந்தையா உறுதியுடன் கூறுகின்றான்.
*ól" Lub?”
எனது கேள்வி.
‘கூட்டமும் நிச்சயமாய் நடந்து கொணடிருக்கும்.*
கந்தையாவின் குரலில் நம்பிக்கையுறுதி.
'உலகத் தொழிலாளர்களே
ஒன்று சேர்வோம்!"
சர்வதேசிய பாட்டாளி வர்க்க உணர்வு பீறிட்டு பாய்கின்ற கோஷம் பொலீஸ் நிலையத்திற்குச் சமீபமாகக் கேட்கின்றது.

Page 42
78 O um sos
'பழக்கமான குரல் போலை கிடக்கு."
நான் கூறுகின்றேன்.
"பாத்தியளா ஆமாம் எங்கடை தோழர்மாற்றை குரல் தான். அது சின்னமணியன்றை குரல்தான். சந்தேக மில்லை."
கந்தையா மகிழ்ச்சி பொங்கக் கத்துகின்றான்.
அவனுடைய கண்களில் ஒளிப்பிரவாகம்
எனது உடலில் புதிய இரத்தத்தின் வீறான பாய்ச்சல்.
உள்ளத்தில் உத்வேக உணர்ச்சி.
என் கண்கள் கலங்குகின்றன.
நாங்கள் அன்று செய்த பிரதிக்ஞை இன்று.
அன்று.
ஒரு மாதத்திற்கு முன்
**இந்த முறை மே தினமும் கூட்டமும் நடத்த முடியாதாம்.'
வந்ததும் வராததுமாகக் கூறிக்கொண்டு எங்கள் தொழிற்சங்கக் காரியாலயத்திற்குள் அடியெடுத்து வைக் கின்றான் வேலுப்பிள்ளை.
4 ஏன்???
சண்முகம் கேட்கின்றான்.
'தடை போட்டிட்டாங்கள்.'
வெறுப்புடன் வேலுப்பிள்ளை கூறுகின்றான்.
"அப்பிடி ஆராலை தடுக்கேலும்? அது எங்கடை உரிமையடா!எங்கை அவர்கள் தடுத்துப்பாக்கட்டும்பாப்பம்."
ஆர்ப்பரித்துக்கொண்டு துள்ளியெழுகின்றான் கதிர் காமு.

நீர்வை பொன்னையன் O 79
கந்தையா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றான்.
“பொன்னுத்துரை. பேச்சுவார்த்தைக்கு நீதானே போனனி. என்ன நடந்தது?"
நான் மெளனமாக இருக்கின்றேன். "ஏன் பேசாமலிருக்கின்றாய்? என்ன நடந்தது?" வேலுப்பிள்ளையின் குரலில் கடுகடுப்பு **இந்த முறை நாங்கள் எல்லாரும் மே தினத்தைக்
கோலாகலமான கலாச்சார விழாவாக நடத்த வேணும் எண்டு அவை கேட்டினை."
கேலாச்சார விழாக்களெண்டால்..?” கதிர்காமு இடை மறிக்கின்றான். *பாட்டுக் கச்சேரிகள், சுற்றுலாக்கள், விளையாட்டுப் போட்டிகள், நாடகங்கள், நடனங்கள், பெரிய விருந்துகள், வாண வேடிக்கைகள் எல்லாம் நடத்தி மே தினத்தைக் கலாச்சார விழாவாகக் கொண்டாட வேணுமாம்.”
இதுக்கை ஏதோ மர்மமிருக்கு. கனகர் சந்தேகமெழுப்புகின்றார். "அது மாத்திரமில்லை. இந்தக் கொண்டாட்டங்களுக் கான போக்குவரத்து வசதிகள், சாப்பாடு, மற்றும் செலவுகள் எல்லாம் தாங்களே பொறும்பேற்கினையாம்.'
'தொழிலாளியின்ரை போராட்ட உணர்வை மழுங் கடிக்கிறதுக்கு அவை செய்யிற சூழ்ச்சி இது.'
கதிர்காமு புட்டுக் காட்டுகின்றான். 'சோற்றுப் பாசலுக்காக அவங்களுக்குப் பின்னாலை தொழிலாளியாகிய நாங்கள் போவம் எண்டு நினைக்

Page 43
80 O பாதை
கிறாங்களே? இது நடக்கக்கூடிய காரியமே? எங்களை ஆரெண்டு நினைச்சாங்கள் அவங்கள்? கதிர்காமு ஆர்ப்பரிக்கின்றான். "நாங்கள் நிச்சயம் மே தின ஊர்வலமும் கூட்டமும் நடத்துவம் எண்டு அவைக்கு நான் உறுதியாய்ச் சொன்னன், ?
"அதுக்கு அவை என்ன சொல்லிச்சினை?’’
"உது சரிவராது. எங்கை ஏலுமெண்டால் நடத்துங்கோ பாப்பம் என்று சவால் விட்டாங்கள்," சுறண்டும் வர்க்கத் தின்ரை கைக்கூலியள்.
‘என்ன சவால் விட்டாங்களோ? எங்களை ஆரெண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறாங்கள்?"
கொதித்தெழுகின்றான் கதிர்காமு. *அவங்கள் சொன்ன மாதிரி இப்ப நடந்திட்டுது." "ஏன் மே தின ஊர்வலத்துக்குத் தடை போட்டிருக்குது, தெரியுமே?”
*ஏன்? என்ன காரணம்?"
காரணம் அறிய வேலுப்பிள்ளை அவசரப்படுகின்றான். **குழப்பம் வருமாம்”* என்ன குழப்பம்? "இப்பதான் தெரியுது அவங்கடை சூழ்ச்சி” "என்ன சூழ்ச்சி? கதிர்காமு கசப்புடன் கூறுகின்றான். *இனக்கலவரம் எண்டு சொல்லிச் சொல்லி தொழிலாளி வர்க்கத்தினைப் பிளவுபடுத்திறதுக்கு அவங்கள் முயற்சிக் கிறாங்கள். அது ஒருபோதும் நடக்காது."
வேலுப்பிள்ளையின் குரலில் உறுதி.

நீர்வை பொன்னையன் O 81
'ஏன் ஆறு மாதத்துக்கு முந்தி எங்கடை உரிமையள் பறிக்கப்படுகிறதை எதிர்த்து நாங்கள் ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினம் தானே"
'அப்பாடா. அதை நாங்கள் நடத்திறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டம்?"
“தொழிலாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி எங்கடை வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்கிறதுக்கு இனக்கலவரம் எண்ட பூச்சாண்டியை அவங்கள் பாவிக்கப் பாத்தாங்கள்."
"ஆனால் நடந்தது என்ன?”
*சுறண்டுற வர்க்கமும் அதின்ரை ஊது குழல் பத்திரிகை களும் இனக்கலவரத்தைச் சிலர் தூண்ட முயற்சிக்கினை எண்டு ஒப்பாரி வைச்சு எங்கடை வேலை நிறுத்தப் போராட்டத்தை உடைக்கிறதுக்கு எவ்வளவு முயற்சி செய்தினை தெரியுமே?”
*அது பலிக்கேல்லை. எங்களுக்குத்தானே வெற்றி!'
**இப்பவும் அதைத்தான் செய்யப் பாக்கிறாங்கள்."
**அது ஒருக்காலும் நடக்காது. எங்கடை ஐக்கியம் போராட்டக் களத்திலை கட்டி எழுப்பப்பட்டதடா, அதை ஒருதனாலையும் உடைக்கேலாது.”
கதிர்காமு அறுத்துறுத்துக் கூறுகின்றான்.
“மே தின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடததிற உரிமையைத் தொழிலாளி வர்க்கம் போராடித்தான் வென் றெடுத்தது. அந்த உரிமையை நாங்கள் ஒருபொழுதும் இழக்க விடமாட்டம். இரத்தம் சிந்திப் போராடி வென் றெடுத்த உரிமையளை பாதுகாக்கிறதுக்காக நாங்கள் போராடத் தயங்கமாட்டம் எண்டு நான் அவைக்குச் சொல்லி வைச்சன்.”*

Page 44
82 O Luar so35
‘இனி நாங்கள் சும்மா இருக்கக்கூடாது. இப்ப என்ன செய்யவேணும் எண்ட முடிவைச் சொல்லுங்கோ."
கதிர்காமு முடிவிற்காகக் காத்திருக்கிறான். "நாங்கள் சுறுசுறுப்பாய் வேலை செய்யவேணும்.
ஆனால் நிதானம் தவறக்கூடாது. எந்தவிதக் கஷ்டத்துக் கும் தயங்காமல் உறுதியோடை முகம் கொடுக்கவேணும்.'
கந்தையா கூறுகின்றான்.
*அவையள் சும்மா இருப்பினையே?’
சண்முகம் கேட்கின்றான். “அவை தங்கடை வேலையைப் பாக்கட்டும். நாங்கள் எங்கடை வேலையைப் பாப்பம். ஆனால் இந்த விசயத்திலை இறுதி வெற்றி எங்களுக்குத்தான் ”
கந்தையனின் கூற்றில் திடநம்பிக்கை. வேலைப் பொறுப்புக்களைப் பங்கிடுகின்றோம். ஊர்வலத் தயாரிப்பு வேலையைக் கந்தையாவும் கதிர்காமுவும் பொறுப்பெடுக்கின்றார்கள்.
சின்னமணியனுக்கும் எனக்கும் கூட்டம் ஒழுங்கு பண்ணும் வேலை.
வேலுப்பிள்ளைக்கும் கனகருக்கும் பிரசாரம். நாங்கள் எல்லாரும் கூட்டாக அசுர வேகத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.
எமது தொழிற்சங்கக் காரியாலயம் இரவும் பகலும் சுறுசுறுப்பாயிருக்கின்றது.
தொழிலாளர்கள் உத்வேகத்துடன் செயல்படுகின்றார் கள்.
மே முதலாம் திகதி!

நீர்வை பொன்னையன் O 83
காலை ஏழு மணி. பஸ்சில் வந்து இறங்கும்பொழுது பஸ் நிலையத்தில் நான் கைது செய்யப்படுகின்றேன்.
பொலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படு கின்றேன்,
முதல் நாள் இரவு எமது தொழிற்சங்கக் காரியாலயத் தில் கைது செய்யப்பட்ட கந்தையாவும் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது கைதான வேலுப்பிள்ளையும் அங்கிருக்கின்றனர்.
எனக்குப் பிரமிப்பு. ஆத்திரம். கந்தையா என்னை அமைதிப்படுத்துகின்றான். "எங்கை உங்கடை ஊர்வலத்தையும் கூட்டத்தையும் இப்ப நடத்துங்கோ பாப்பம்."
பரிகாசமாக ஒரு பொலீஸ் அதிகாரி கூறுகின்றார். நான் பதில் சொல்ல வாய் திறக்க, கந்தையா சைகை மூலம் என்னை அடக்குகின்றான்
எமது மே தின ஊர்வலமும் கூட்டமும் இனி நடக்காது
என்ற நம்பிக்கை அவருக்கு, அதில் அவருக்கு வெற்றிப் பெருமிதம், மகிழ்ச்சி
ஜீப் வண்டியில் நாங்கள் ஏற்றப்படுகின்றோம்.
அன்று மத்தியானம் வரை எங்களை எங்கெல்லாமே கொண்டு அலைந்து திரிகின்றார்கள்.
மதிய வேளை உணவிற்குப் பின் மீண்டும் ஜிப் பயணம் ஆரம்பிக்கின்றது.
ஜிப் சென்று கொண்டேயிருக்கின்றது.
எங்களை எங்கு கொண்டு செல்கின்றார்கள்?
எங்களுக்குப் புரியாப் புதிர்.

Page 45
84 O பாதை
ஆனால் நாங்கள் பதட்டமடையவில்லை.
இறுதியில் நகரப் புறத்திலிருந்து ஐம்பது மைலுக்கப்பா லுள்ள ஒரு பொலீஸ் நிலையத்திற்கு நாங்கள் கொண்டு சென்று காவலில் வைக்கப்பட்டிருக்கின்றோம்,
நேரம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக் கின்றது.
எங்களுக்கு எரிச்சல்.
எங்களைக் கொண்டு வந்த அதிகாரி எங்களை, தான் எப்படிக் கைது செய்தான் என்று தனது வீரப் பிரதாபங் களை அங்குள்ளவர்களுக்கு அளந்து கொண்டிருக்கின்றான்.
ஐந்தரை மணி அடிக்கின்றது.
திடுக்குற்று, தோழன் கந்தையா எங்களை நோக்கு கின்றான்.
அவனுடைய முகத்தில் சிறிது அமைதியின்மை.
“என்ன தோழர் கந்தையா?"
“எங்கடை ஊர்வலம் நடக்கிற நேரமாகுது அங்கு என்ன நடக்குதோ?”
*அதுதான் எங்களுக்கும் யோசினையாயிருக்கு."
வேலுப்பிள்ளை பதட்டத்துடன் கூறுகின்றான்.
“ஊர்வலம் நிச்சயம் நடக்கும். ஆனால் ஏதாவது மோதல் ஏற்பட்டால்."
* எங்கடை கதிர்காமு சரியான துடியாட்டக்காறன். எதுவித கட்டுப்பாடுமில்லாதவன், ஆவேசத்திலை ஏதாவது மோட்டு வேலை செய்து மாட்டுப்பட்டுப் Gust 60rst னெண் டால்.”
பதட்டத்துடன் கூறுகின்றான் கந்தையா.

நீர்வை பொன்னையன் O 85
‘எங்கடை சின்னமணியன் அவனைக் கட்டுப்பாட்டுக்கை வைச்சிருப்பன். நாங்கள் பயப்பிடத் தேவையில்லை கந்தையா.”
நான் ஆறுதல் கூறுகின்றேன்.
எங்கள் ஊர்வலம் வெற்றிகரமாக முடியுமோ என்ற தவிப்பு எங்களுக்கு.
ஒரு நிமிடம் ஒரு யுகமாக எங்களுக்கிருக்கின்றது. இரவு எட்டு மணிவரை நாங்கள் அங்கு. ஜிப் புறப்படுகின்றது. எங்கு கொண்டு செல்கின்றார்கள்?
நகரத்தை நோக்கி ஜீப் திரும்புகின்றது.
ஒன்பதரை மணிக்கு பொலீஸ் நிலையத்திற்குள் நுழை கின்றோம்.
*இவயின்ரை ஊர்வலம் என்னாச்சு?"
ஜீப்பிலிருந்து கொண்டு அந்தப் பொலீஸ் அதிகாரி கேலியுடன் தனது கண்ணைச் சிமிட்டியபடி பொலீஸ் நிலையத்திலுள்ள தனது சகாவைக் கேட்கின்றான்.
* அவங்கள் ஊர்வலம் நடத்திப்போட்டாங்கள்." அவருடைய குரலில் ஆற்றாமை. ‘என்ன? ஊர்வலம் நடத்திப் போட்டாங்களோ? திடுக்கிட்டுப் பதட்டத்துடன் கேட்கின்றான். அவனுடைய குரலில் நடுக்கம். *சீ, இப்பிடி நடக்கும் எண்டு நான் நம்பேல்லை.
அந்த நேரம் நான் நிண்டிருந்தால் அவங்கடை எலும்பு களை நொருக்கி."
பல்லை நெருடுகின்றான்.

Page 46
86 C) பாதை
கண்களில் தீப்பிழம்பு. "அவங்கள் இப்ப எனக்கு முன்னாலை நிண்டாங்* ளெண்டால் என்ன நடக்கும் தெரியுமே?”
பூட்ஸ் காலால் தரையை உதைத்துக்கொண்டு கர்ச்சிக் கின்றான்.
எங்கள் பக்கம் அவனுடைய கவனம் திரும்புகின்றது. "இண்டைக்கு வட்டியும் முதலுமாய் இவங்களுக்குப் பாடம் படிப்பிச்சுக் காட்டிறன். முதலிலே இவங்களை உள்ளுக்கை போடு.'
எங்களிடமிருந்து புத்தகங்கள், பத்திரிகைகள், பேனா, சிகறெட்டுக்கள் எல்லாம் பொறுப்பேற்கப்படுகின்றன.
சோதனையின் பின் எங்களைப் பாதுகாப்பு அறைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.
பொலிஸ் உயர் அதிகாரி அப்பொழுதுதான் பொலீஸ் நிலையத்திற்குள் நுழைகின்றான்.
“இப்பொழுது நிலைமை எப்படி?” பாதுகாப்பறைக்குள் இருக்கும் எங்களுக்கு அவனது தடித்த குரல் தெளிவாகக் கேட்கின்றது.
*எல்லாம் கட்டுப்பாட்டுக்கை கொண்டு வந்திட்டம். ஆனால் அவங்கடை கூட்டம் நடந்து கொண்டிருக்கு."
* கூட்டத்துக்குப் பொறுப்பானவங்களையும் இண்டைக்கு இரவே பிடிச்சுக் கொண்டு வந்து உள்ளுக்கை போட்டிட வேணும். அதோடை நாளைக்குக் காலையிலை இதுபற்றி முழு அறிக்கையும் தயாராயிருக்கவேண்டும். சரி நான் வருகிறன்.”
அவனுடைய மோட்டார் இரைந்து கொண்டு புறப்படு கின்றது.

நீர்வை பொன்னையன் O 87
‘என்ன நடந்தது? என்னண்டு அ3:ங்கள் ஊர்வலம் நடத்தினாங்கள்? நீங்கள் ஏன் விட்டனிங்கள்?"
எம்முடன் வந்த அதிகாரி மீண்டும் கதையைத் தொடங்கி வைக்கின்றான்.
இப்பொழுதும் அவனுடைய குரலில் ஆத்திரம் தனிய 6f66; 6.
‘எங்கடை ஆட்கள் சரியான விழிப்போடைதான் இருந்தினை. காலையிலேயிருந்து நகரம் முழுவதும் கவன மாக றோந்து சுத்திக்கொண்டிருந்தினை."
"அப்ப இது எப்பிடி நடந்தது?" "ஊர்வலம் நடக்கப்போகுதெண்டதுக்கு எதுவித அறி குறியும் எங்களுக்குத் தென்படவில்லை. அவங்கடை ஆட் களிலை ஒருதன்தானும் எங்கடை ஆட்களின்ரை கண்ணிலை தட்டுப்படேல்லை."
*அப்ப உங்களுக்கு உசார் குறைஞ்சு போச்சா??? *இல்லையில்லை. உசாராய்த்தானிருந்தம்." “ஐந்தரை மணியிருக்கும்"
*ஒரு நாற்சந்தியிலை இடிமுழக்கம் போலை 8ዎ®j கோஷம் கேட்டுது'
*அந்த நேரத்திலை சந்திக்குப் பக்கத்திலையிருந்த மூண்டு படமாளிகைகளுக்குள்ளை யிருந்து படம் முடிஞ்சு ஆக்கள் வெளி வந்து கொண்டிருக்கினை."
“பாத்தால் அந்த ஆக்களிலை பெருவாரியானவை அவங்களோடை சேந்திட்டினை.”
"பஸ் நிலையம, சந்தை, கடைத் தெருக்கள் எல்லா இட ங்களிலுமிருந்து கொஞ்ச நேரத்திலை கும்பல் கும்ப
லாய் ஆக்கள் வந்து அவங்கடை ஊர்வலத்திலை சேந்தினை."

Page 47
88 O பாதை
ஊர்வலம் புறப்பட்டுது.” *றோந்து சுத்திக் கொண்டிருக்கிற எங்கடை ஆக்கள் எல்லாம் ஒண்டாய் வந்து சேருறத்துக்கிடையிலை அவங்கடை ஊர்வலம் அரைவாசித் தூரத்தைத் தாண்டி விட்டுது."
"எங்கடை ஆக்கள் வந்து சேர்ந்த உடனை நாங்கள் ஊர்வலத்தை மறிச்சம்."
அவங்கள் நிண்டால்தானே!" *அவங்கள் எவ்வளவு உறுதியோடையும், வீறாப் போடையும் வேகமாய் ஊர்வலத்திலை போனாங்களெண்டு அந்த நேரத்திலை நிண்டு பாத்தால்தான் தெரியும்.”
என்ன நீயும் அவங்கடை ஆளைப்போலை பேசிறாய்" "இல்லையில்லை. உண்மைாய் அவங்கள் எல்லாத்தையும் மறந்து, ஒண்டையும் பொருட்படுத்தாமல் ஒருவித லட்சிய
வெறியோடைதான் எல்லாரும் போனாங்கள்.'
கடைசியாய் நாங்கள் ஊர்வலத்தைக் கலைக்கிற முயற்சியிலை இறங்கினம் "
ஊர்வலம் கலையத்தான் செய்தது ஆனால் கொஞ்ச நேரத்திலை தூரத்திலை பல திக்கு களிலுமிருந்து சின்னச் சின்ன ஊர்வலங்கள் கூட்ட மைதானத்தை நோக்கிப் போச்சுதுகள்.'
நாங்கள் அங்கை போறதுக்கிடையிலை அவங்கள் மைதானத்துக்கை இறங்கிவிட்டாங்கள்."
ஊர்வலத்திலை போன பத்துப் பன்னிரண்டு பேர் gu ஆஸ்பத்திரியிலை கிடக்கிறாங்கள்."
கூட்டம் நடந்து கொண்டிருக்கு.' "எங்கடை ஆக்கள் அங்கை நிக்கினை. இன்னும் கொஞ்சம்பேரை அங்கை அனுப்பியிருக்கிறன்'

நீர்வை பொன்னையன் O 89
"கூட்டம் முடியிற நேரமும் வந்திட்டுது."
"அமரத்வ மே தினம்
நீடூழி வாழ்க!”
உறுமிக்கொண்டு வந்து பொலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த ஜீப்பிலிருந்து கோஷம் வெடித்துக் கிளம்பி ஒலிக் கின்றது.
"எடே சத்தம் போடாமல் வாயைப் பொத்துங்கோடா!"
ஒரு முரட்டுக் குரல் அலறுகின்றது.
பூட்ஸ்களின் சத்தம்
பொலீஸ் நிலையத்தில் பரபரப்பு.
பாது காப்பு அறையில் இரும்புக் கம்பிகளினூடாக வெளியில் என்ன நடக்கின்றது என்று நாம் பார்க்க முயல் கின்றோம். ஒன்றும் தெரியவில்லை.
பலவித சத்தங்கள்.
'உலகத் தொழிலாளர்களே
ஒன்று சேர்வோம்!”
மீண்டும் கோஷம் ஒலிக்கின்றது.
"எடே வாயை மூடுங்கோடா. இல்லாட்டி..?
மீண்டும் முரட்டுக்குரலில் அலறல்.
'அமரத்து மே தினம்
நீடூழி வாழ்க!”
அறைக் கதவின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நாங்கள் மூவரும் உச்ச ஸ்தாயிலில் கோஷிக்கின்றோம்.
எமது பாதுகாப்பறையை நோக்கி பூட்ஸ் கால்கள் $ዛ}- வருகின்றன.
**தொழிலாளி வர்க்கம்
நீடூழி வாழ்க!” நாங்களிருக்கும் பாதுகாப்பறை அதிர்கின்றது
གཡག - 1979 ult-6

Page 48
7. புதிய தலைமுறை
பாயில் கிடந்து புரண்டு கொண்டிருந்த நான் எழுந்து வெளியே புறப்படுகின்றேன்.
இன்னும் விடியவில்லை. பனித்திரைப் போர்வைக்குள் உலகம் மெளனத் துயிலில் ஆழ்ந்திருக்கின்றது.
என் எலும்புப் பொருத்துக்களைப் பணிக்காற்று தாக்கு கின்றது.
இரவு முழுவதும் நித்திரையின்மையால் எனது கண் களில் கரிப்பு.
இந்த நேரத்தில் எங்கள் படலையடியில் அவன் என் னைச் சந்தித்தால்..?
நான் அவசரப்பட்டு விஷயத்தைக் குழப்பக்கூடாது. இப்பொழுது வெளியே போகவா, விடவா? எனது மனதில் கண நேர சலனம்.
இன்றைக்கு வேலுப்பிள்ளையண்ணையுடைய உரு ளைக் கிழங்கு கிளப்பவேண்டும்.
நேரத்தோடே போனால்தான் வெயில் வர முந்திக் கிழங்கைக் கிளப்பி முடிக்கலாம்.

நீர்வை பொன்னையன் O 9 நான் இப்பொழுது என்ன செய்ய? வெளியில் ே அல்லது..?
எப்படியென்றாலும் நான் வெளியே போகத்தானே வேண்டும்? சரி போய்த்தான் பார்ப்பமே
ஆனால் இப்பொழுதிருக்கும் எனது மன நிலையில் நான் கனகசபையைச் சந்தித்தால் என்ன நடக்குமோ?
எங்கள் வீட்டுக்கு முன்னால்தான் அவனுடைய 6f6. நடக்கவேண்டியது நடந்தே தீரும். வருறது வரட்டும்.
நான் படலையை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றேன்.
எனது நெஞ்சில் சுமை.
உடலில் சோர்வு.
நேற்று இரவு நடந்த அந்தச் சம்பவம்
o s oc c o
இரவு பத்து மணி இருக்கும்.
அப்பொழுதுதான் நான் எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.
தனது சகேற்றடியில் கனகசபை இரண்டு மூன்று பேருடன் கதைத்துக் கொண்டு நின்றான்.
என்னைக் கண்டதும் அவன் செருமினான்.
நான் அதைக் கவனிக்காதது போல நடந்து கொண் டிருந்தேன்.
"இப்பதான் பிரபு உழைப்பாலை போறார் போலை கிடக்கு.?"

Page 49
92 O UIT 6025
நான் சிறிது தூரம் சென்றதும் கனகசபை கூறினான்.
இந்த நேரத்தில் ஏன் சச்சரவு? நாளைக்கு விடியட்டும்."
நான் மெளனமாக வீட்டுக்கு வந்தேன்.
வீட்டில் விளக்கில்லை.
கை, கால்களைக் கழுவி விட்டு வீட்டிற்குள் சென்றேன்.
இருள் மயம்
ஒரே அமைதி
இந்த நேரத்தில் எல்லாரும் தூங்கிவிட்டார்களா?
எனக்கு ஆச்சரியம்.
ஆச்சி’
பதிலில்லை
தேங்கச்சி"
மூச்சுக்கூட இல்லை.
என்ன நடந்தது?
*"எணை ஆச்சி."
உரத்துக் கூப்பிட்டேன்.
ஒரு பதிலையும் காணவில்லை. ஏன் ஒருவரும் எழும்ப வில்லை?
எனக்கு ஒருவித பதட்டம்,
இருளை என் கண்கள் துழாவின.
தட்டுத் தடுமாறிக்கொண்டு தடவி நெருப்புப்பெட்டியை எடுத்து விளக்கைக் கொளுத்தினேன்.
மூலைக் கொருவராக ஆச்சியும் தங்கச்சியாட்களும் சுருண்டு கிடந்தார்கள்.
அப்பு.?

நீர்வை பொன்னையன் O 93
அவர் சுவருடன் சாய்ந்துகொண்டிருந்தார். அவருடைய கைகள் இரு முழங்கால்களையும் கட்டிப்பிடித்துக் கொண் டிருந்தன. முழங்கால்களுக்கிடையில் அவருடைய தலை புதைந்து கிடந்தது.
நான் திகைத்தபடியே சிறிது நேரம் நின்றேன். "ஆச்சி. எணை ஆச்சி." குனிந்து பதட்டத்துடன் ஆச்சியை எழுப்பினேன். 'இவ்வளவு நேரமும் எங்கையடா போட்டுவாறாய்?" அப்பு கர்ச்சித்தார். நான் அவரைத் திரும்பிப் பார்த்தேன். அவருடைய கண்களில் கோபக் கனல். மெளனமாக நான் நின்றேன். * ஏனடா பேசாமல் நிற்கிறாய்? கேட்டதுக்கு மறு மொழியைச் சொல்லடா"
"வாசிக சாலையில ஒரு கூட்டம்.”
‘என்னடா! கூட்டத்துக்குப் போனனியே டா ?” கையை ஓங்கிக்கொண்டு அவர் துள்ளி எழுந்தார். *அவனை அடியாதையப்பா' ஆச்சி பதைபதைத்துக் கொண்டு எழுந்து அவரைப் பிடித்தா.
விடடி என்னை. நீதானடி அவனை நாசமாக்கினனி" அவர் திமிறினார். **என்னாணை அவனை ஒண்டும் செய்யாதை." ஆச்சி அவரைக் கெஞ்சினா. *"இண்டைக்கு நான் இரண்டில் ஒண்டு பாத்துத் தாறன். ஒண்டில் உவன்திருந்த வேணும், அல்லது.”
நான் சுவரோரமாக ஒதுங்கி நின்றேன்.

Page 50
94. O urso5
'உந்தக் கூட்டங்கள் கூடித் திரியுறதுக்கே நாங்கள் பட்டினி கிடந்து, கஷ்டப்பட்டு உன்னைப் படிப்பிச்சது?"
நான் ஒன்றும் பேசவில்லை.
"உன்னிலும் பார்க்கக் குறைஞ்ச படிப்புப் படிச்சவங்கள் உத்தியோகம் பாக்கிறாங்கள். நீ கட்சியெண்டும் கூட்டங் களெண்டும் சொல்லிக்கொண்டு ஊர் அலுவல் பாத்துத் திரி யிறாய். இஞ்ச வீட்டில குமருகள் இருந்து பெருமூச்சு விடுது கள். உந்தக் கட்சி வேலையாலைதான் உனக்கு உத்தி யோகம் கிடைக்கேல்லையெண்டு கனகசபையாக்கள் சொல்லினை."
"என்னோடை படிச்ச எத்தனைபேர் ஒரு கட்சியிலு மில்லையணை. அவையஞக்குக்கூட இன்னும் வேலை கிடைக்கேல்லையணை அப்பு."
"ஏன் அந்தக் கனகசபையின்ரை பொடியள் இரண்டுக் கும் வேலை கிடைச்சுட்டுதுதானே. அவங்கள் உன்னிலும் பார்க்கக் குறைஞ்ச படிப்புத்தானே? அவங்களுக்குக் கிடைச்ச உத்தியோகம் உனக்கேன் கிடைக்கேல்லை?”
*அப்பு, நீ அரசாங்கத்திலை ஒரு பெரிய உத்தியோகம் பாத்திருந்தால் எனக்கும் லேசிலை வேலை கிடைச் சிருக்கும்."
* கனகசபை கவுண்மேந்திலை உத்தியோகம் பாத்த வரே? அவர் கொம்பனியிலைதானே வேலை செய்தவர்.'
*உத்தியோகம் எடுக்க அவனைப் போலை ஐயாயிரக் கணக்கிலை சிலவழிச்சால் எவையெண்டாலும் வேலை யெடுக்கலாம்.'
"இவ்வளவு நாளும் உனக்குச் சிலவழிச்சது காணா தெண்டு இப்ப நான் ஐயாயிரமாறாயிரத்துக்கு எங்கை போக? நாங்கள் குடியிருக்கிற காணி கூட இப்ப .

நீர்வை பொன்னையன் O 95
‘அப்பு லஞ்சம் குடுத்து உத்தியோகம் எடுக்கிறதைவிட, தோட்டம் செய்யிறது எவ்வளவோ நல்லது.'
““夺f! உத்தியோகம் கிடைக்காட்டிப் போகுது. நீ ஒழுங்காய் நிண்டு என்னோடை தோட்டத்தையாவது செய்யிறியா??
ஏனணை நான் தோட்டம் செய்யேல்லையே?’
*தோட்டம் செய்யிறாய்தான். ஆனால் கட்சியெண்டு சொல்லிக்கொண்டு கூட்டங்கள் கூடி மற்றவையளோடை ஏன் வீண் கரைச்சலுக்குப் போறாய்?"
*நான் ஆரோடையணை வீண் கரைச் சலுக்குப்
G9t :5r Tጋ5ör?””
* அந்த கனகசபையனாக்களோடையெல்லாம் ஏன் மல்லுக்கட்டிறாய்? அவையின்ரை ஆளணியென்ன? செல் வாக்கென்ன? இதாலை நீ எங்களைக் குடி யெழுப்பிப் பரதேசம் போகப் பண்ணப் போறியே?’
*அவங்கள் செய்யிற அநியாயத்தை நாங்கள் எவ்வளவு நாளைக்கெண்டு பொறுக்கிறது?"
அப்பிடி யென்னடா பெரிய அநியாயத்தைக் கண் டிட்டாய் அவை உனக்கென்னடா செய்தவை? அப்பிடி ஏதாவது நடந்தாலும் அவையள் பெரியவையள். அது மாத்திரமில்லை. அவை பொல்லாதவையள்.'
‘அந்த வேலுப்பிள்ளையண்ணைக்கு அவங்கள் என்ன செய்தவங்கள்? கடன் காசு குடுக்கேல்லையெண்டு அவற்றை உருளைக் கிழங்கைக் கிளப்பவிடாமல் மறிச்சுப் போட்டான் கனகசபை."
* அதுக்கு உனக்கென்னடா? ஏனடா ஊர்த் தொல்லை எல்லாத்தையும் நீ உன்ரை தலையிலை போடுறாய்?.

Page 51
96 O பாதை
'எணை அப்பு, இண்டைக்கு வேலுப்பிள்ளை அண்ணைக்கு நடந்ததுதானே நாளைக்கு எங்களுக்கும் நடக்கும்!”
"அப்ப வேலுப்பிள்ளை ஏன் கனகசபையின்ரை கடன் காசைக் குடுக்கேல்லை."
"உருளைக்கிழங்கை வித்துப்போட்டு கடன் காசைத் தாறனெண்டு தானே வேலுப்பிள்ளையண்ணை சொன்ன வர். ஏன் போன போகத்திலை எங்கடை செல்லத்துரை யண்ணருக்கு என்ன நடந்தது? குத்தகைக்காசு குடுக் கேல்லையெண்டு அவற்றை வெங்காயத்தைக் கிண்டவிடா மல் மறிச்சான் கனகசபை, பிறகு அதைத் தறையுக்கை வைச்சு கோண்டாவிலா ருக்கு அரைகுறை விலைக்கு வித்துப் போட்டு, தன்ரை காசை அறவிட்டான். கோண்டாவிலா ரிட்டையும் அவன் கொமிசன் அடிச்சான், அது மாத்திரமே?”
'போனவரிசம் அந்த பெரியதம்பி அண்ணையின்ரை புகையிலை வெட்டிற நேரத்திலை என்ன செய்தான் அவன்?"
*உன்னாலை தனிய அவையளை என்ன ରଥFiji யேலுமடா?*
"அதுதானணை அப்பு தோட்டம் செய்கிற நாங்கள் எல்லாரும் ஒண்டாய்ச் சேர்ந்து ஒரு சங்கத்தை உண்டாக்கி ஒற்றுமையாய் நிண்டு கனகசபையாக்களை."
*எடே உந்த வேலையள் பார்க்கிறதெண்டால் நீ இந்த
வீட்டிலை இருக்க வேண்டாமடா . இந்த ஊரிலுமிருக்க வேண்டாமடா. இப்பவே நீ எங்கையாவது போய்த்துலை”
"சரி நான் போறன்’ நான் வெளியேறினேன்.

நீர்வை பொன்னையன் O 97
'தம்பி இஞ்சை வா மோனை, என்ரை ராசா ஒரிடமும் போகாதையணை”
ஆச்சி வந்து இடைமறித்தா,
'இல்லையணை ஆச்சி நான் இப்பவே எங்கையாவது போறன்’
'உன்ரை கோச்சியாணை போகாதை, அவர் கோவத் திலை பேசினார் பேசிப்போட்டுக் கிடக்கட்டும் நீ வா மேனை."
எனது கையைப் பிடித்து இழுத்தா ஆச்சி.
நான் திரும்பி வந்தேன்.
ஒன்றும் பேசாமல் நான் பாயை எடுத்து விரித்துப் படுத்தேன்.
**ஏன் மோனை, சோத்தைச் சாப்பிட்டிட்டுப் LIL60T 60600T.'
'எனக்கு வேண்டாமணை' "ஏனப்பா, நீயும் எழும்பன், பட்டினி கிடந்து போட்டு நாளைக்கு நீங்கள் என்னண்டு தோட்டச்திலை வேலை செய்யப் போறியள்? எழும்புங்கோவன்'
"எனக்கு ஒன்றும் வேண்டாம். நீ பேசாமல் போய் படு. அவன் கூட்டம் நடத்தித் திரியட்டும்" அப்பு அதட்டி விட்டுத் திரும்பிப் படுத்தார். ஆச்சி மன்றாடினா. நாங்கள் பேசாமல் கிடந்தோம், *உங்களாலை இந்தக் குமர்களும் பட்டினி கிடக்கல்லே. எழும்புங்கோவன்'
சிறிது நேரத்தில் அப்புவின் பொருமல் சத்தம் கேட்டது.

Page 52
98 O பாதை
என்னால் பொறுக்க முடியவில்லை, **அப்பு, எணை அப்பு எழும்பணை'
அருகில் போயிருந்து நான் அவரை எழுப்பினேன்.
அவர் எழுந்து முகம் கழுவினார்.
எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தோம். ஒரு பேச்சில்லை, வேண்டா வெறுப்புடன் சில சோற்றுக் கவளத்தை நான் வாயில் போட்டு விட்டுப் படுத்தேன்,
கண்கள் மூட மறுத்தன. என்னால் எத்தனை பேருக்குக் கரைச்சல்?
இண்டைக்கு முதல் முதலாய் நான் என்னுடைய அப்புவை எதிர்த்துப் பேசிப் போட்டென் நான் அப்படிச் செய்திருக்கக்கப்படாது.
பாவம் அவர்தான் என்ன செய்வார்? எத்தனை நாளைக்குத்தான் அவர் இப்படிக் கஷ்டப்படுவது? எவ்வளவு நம்பிக்கையோடு அவர் என்னைப் படிப்பித்தார்?
நான் எட்டாம் வகுப்புப் பாஸ்பண்ணின உடனை என் படிப்பை நிறுத்திவிட்டுத் தோட்டம் செய்விக்கச் சொல்லி எத்தனை பேர் அப்புவுக்கு ஆலோசனை சொன்னார்கள்.
*என்ரை மகன் நல்ல கெட்டிக்காரன், இன்னும் கொஞ்சம் படிப்பிச்சுப் பாப்பம். கடைசி கிளறிக்கல் உத்தி யோகமா இது கிடைக்கும்’
தனது ஆலோசனை கூறியவர்களுக்கு அவர் சொன் னார்.
*ஆறுமுகம், உன்ரை மோன் இவ்வளவும் படிச்சது காணாதே? இப்ப படிக்கிறவை எல்லாருக்கும் கவுண் மேந்திலை உத்தியோகம் கிடைக்கப் போகுதே? அவனை

நீர்வை பொன்னையன் O 99
மறிச்சு என்ரை இரும்புக் கடையிலை கணக்கெழுத விடு. நான் மாதம் எழுவத்தைஞ்சு ரூபா தாறன், அவனை நெடுகப் படிப்பிக்க உன்னட்டைப் பணம் கிடக்கே? நானே என்ரை பொடியனை மறிச்சுப் போட்டன்."
நான் எஸ். எஸ். ஸி பாஸ் பண்ணியதை அறிந்த கனகசபை அப்புவுக்குக் கூறினார்.
‘என்ரை மகன் திறமையாய்ப் பாஸ் பண்ணியிருக் கிறான். நான் அவனை மேல் படிப்புப் படிப்பிக்கப் போறன்???
பெருமையுடன் அப்பு கனகசபைக்குக் கூறினார்.
‘எங்களைப் போல பெரியாக்களா லை யே ஏலாமல் கிடக்கு. தோட்டம் செய்கிற உன்னாலை ஏலுமே? இவ் வளவு வசதியிருந்தும் நான் என்ரை பிள்ளையளை மறிச் சுப் போட்டன், பேராசைப்படாதை ஆறுமுகம். அவனை மறிச்சு ஏதாவது ஒரு தொழிலைப் பாக்கச் சொல்லி, அல்லது உன்னோடை சேர்ந்து தோட்டத்தைச் செய்யச் சொல்லு."
கனகசபை அப்புவை அடிக்கடி தூண்டினான்,
அவர் கேட்கவில்லை. நான் சர்வகலாசாலையை அடைந்தேன். எங்களுக்கிருந்தது ஒரேயொரு தோட்ட நிலம்.
அப்பு அந்த நிலத்தைக் கனகசபையிடம் ஈடுவைத்து எனக்கு மாதா மாதர் பணம் அனுப்பினார்.
மேலும் பணம் தேவைப்பட, அந்த நிலத்தை அவர் கனகசபைக்கே விற்றார்.
அது இப்பொழுது எனக்குத் தெரியவில்லை. ஏனென் றால் அதே தோட்ட நிலத்தைதான் அவர் தொடர்ந்து செய்தார்.

Page 53
100 O பாதை
குத்தகைக்குத் தான் அந்தத் தோட்டத்தை அப்பு செய்தார் என்று பின்புதான் நான் அறிந்தேன்.
எனது படிப்பின் இறுதிக் காலத்தில் நாங்களிருக்கும் வீடுவளவையும் கனகசபையிடமே அப்பு ஈடு வைத்ததும் எனக்குத் தெரியாது.
எனது படிப்பு முடிந்தது.
'உவன் தமிழிலைதானே படிச்சவன். அதுவும் சயன்ஸ் பாடங்களெண்டாலும் பறவாயில்லை சயன்ஸ் பாடங்களை உவன் எடுக்கேல்லை. உவனுக்கெங்கை வேலை கிடைக்கப் போகுது நீ உலைஞ்சதுதான் மிச்சம். அது நீ பட்டபாடு. ஆனால் என்ரை கடனை நீ இப்பவே தீத்துப்போடு”
கனகசபை அப்புவை நெருக்கினான்.
இன்று, நாளையென்று அப்பு தவணையெடுத்தார்.
நான் அப்புவுடன் சேர்ந்து தோட்டம் செய்கிறேன். தோட்டத்திலிருந்து வருகின்ற வருவாய் எங்களுடைய வாழ்க்கைக்கே போதாது. கனகசபையின் கட3ை எப்படித் தீர்க்க முடியும்?
எங்கள் பகுதியிலுள்ள வாலிபர்கள் எல்லோரும் சேர்ந்து பணம் திரட்டி ஒரு வாசிக சாலையைக் கட்டுவதற்கு முடி வெடுத்தோம்.
முதல் முதலில் நிதி உதவி கேட்டு நாங்கள் கனகசபை யிடம் சென்றோம்.
*தோட்டம் கொத்திற உங்களுக்கென்னடா வாசிக சாலை? போங்கோடா? போய் மண்ணைக் கொத்துங் G35т т”
கனகசபை திமிருடன் கூறி எங்களை விரட்டினான். எங்கள் பகுதியிலிருப்பவர்கள் படிப்பதைக் கனகசபை போன்றவர்கள் எப்படி விரும்புவார்கள்?

நீர்வை பொன்னையன் O 101
உவன் ஏழாம் வகுப்புப் படிச்சிட்டு அந்த நாளையிலை ஒரு வெள்ளைக்காறன்ரை இரும்புக் கொம்பனியிலை வேலைக்குச் சேர்ந்தவன்தானே? உவனுக்கு வாசிகசாலை யின்ரை அருமையைப்பற்றி என்ன தெரியும்?"
எங்களுடன் வந்த சண்முகம் கொதிப்புடன் கூறினான். 'கனகசபை வேலையிலை சேர்ந்து நாலைஞ்சு வரியத் துக்கை ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டி முடிச்சுப் போட் டான். இப்படிப்பட்ட அவன் பெரிய கெட்டிக்காரன் தானெண்டு சின்னத்தம்பி அப்பா அடிக்கடி சொல்லுவார்." கனகசபையின் கெட்டித்தனத்தைப் பற்றி முருகேசு பிரஸ்தாபித்தான்
"அது மாத்திரமே? வரியம் வரியம் அவன் எங்கடை ஊரிலையுள்ள தோட்ட நிலங்களை அல்லது வீடுவளவு களை வாங்கத் தவறேல்லை. எங்களாலை ஏலுமே?”
கதிரவேலு கேட்டான்.
‘இதெல்லாம் அவன் வெள்ளைக்காறன்ரை இரும்புக் கொம்பனியிலை அடிச்ச காசுதானே. அதுதான் அவங்கள் இவனை வேலையிலையிருந்து விலத்தினவங்களெண்டது உங்களுக்குத் தெரியாதே?”
புதிய இரகசியத்தைச் சொல்வதைப்போல் சண்முகம் கூறினான்.
எது எப்படியிருந்தாலும் சரி, கனகசபை வேலையை விட்டு நீக்கப்பட்டு வரும்பொழுது எங்கள் பகுதியிலுள்ள பெரும்தொகையான நிலத்துக்குச் சொந்தக்காரனாகி விட்டான். அத்துடன் அவன் யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய இரும்புக் கடையையும் திறந்தான்.
ஊரில் பணம் சேர்த்து நாங்கள் வாசிகசாலையைக் கட்டி முடித்தோம்,
வாசிகசாலை நன்றாக நடந்தது.

Page 54
102 O uit 607,35
கனகசபை சில நாட்களுக்கு வாசிகசாலைப் பக்கம் தலைகாட்டவில்லை.
பலவித முயற்சிகள் செய்து கனகசபை அடுத்து வருடம் வாசிகசாலையின் தலைவர் பதவியைக் கைப்பற்றினான்.
கனகசபை தலைவராக வந்த அடுத்த நாள் மாலை காங்கள் வாசிகசாலைக்குச் சென்றோம். வாசிகசாலை பூட்டிக்கிடந்தது. கனகசபையின் வீட்டுக்குச் சென்று ஏன் வாசிகசாலை யைப் பூட்டியதென்று கேட்டோம்.
'இண்டைக்கு வெள்ளிக்கிழமை. நீங்கள் எல்லாரும் கோயிலுக்குப் போக வேணும். அதுதான் பூட்டினனான். அதாலை இப்பென்ன குடி முழுகிப் போச்சா?”
கேலியுடன் கேட்டான்.
"இதுக்கு முந்தி ஒரு நாளும் வெள்ளிக்கிழமைகளில் வாசிகசாலை பூட்டிறத்தில்லையே???
நான் கேட்டேன்.
"எடே நான்தான் வாசிகசாலைத் தலைவர், நான் நினைச்ச நேரம் பூட்டுவன், நினைச்ச நேரம் திறப்பன். நீங்களாரடா கேக்கிறதுக்கு? வாயைப் பொத்திக்கொண்டு போங்கோடா வெளியாலை."
அவன் உறுமினான். *இருந்து பார் என்ன நடக்குதெண்டு.” நாங்கள் கூறிவிட்டு வந்தோம். புதிய தலைவராக கணபதிப்பிள்ளையைத் தெரிவு செய்தோம்.
அன்று கணபதிப்பிள்ளையின் தோட்டத்திலிருந்த வாழைகளையெல்லாம் தனது கையாட்களை ஏவி விட்டு

நீர்வை பொன்னையன் O 108
இரவோடிரவாக வெட்டிச் சரித்துத் தோட்டத்தை அழித் தான் கனகசபை.
இதையறிந்த நாங்கள் கொதித்தெழுந்தோம்.
பொறுமையுடனிருக்கும்படி எங்கள் பகுதியிலுள்ளவர்கள் எங்களை அமைதிப்படுத்தினார்கள்.
எங்களுடைய வெங்காயச் சங்கத்தின் தலைவராகவும் கனகசபை இருந்தான்.
அவன் தான் நினைத்தபடியேதான் சங்கத்தை நடத்தினான்.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்தப் பதவியிலிருந்தும் அவனை இறக்கினோம்.
சில நாட்களின் பின் சங்கத்திலிருந்த வெங்காய மெல்லாம் அழுகி நாற்றமெடுத்தது. இதனால் எங்கள் சங்கத்துக்கு பல ஆயிரக்கணக்கான ரூபா நட்டம்.
என்ன நடந்ததென்று எங்களுக்குப் புரியவில்லை. எல்லோருக்கும் திகைப்பு, வேதனை.
"நான் ஆரெண்டு இன்னும் உந்த மண்கொத்தி யளுக்குத் தெரியேல்லை. வெங்காயச் சங்கத் தலைவர் பதவியிலிருந்து அவர்கள் என்னை விலத்தினாங்கள். இப்ப பாத்தியே நடக்கிறதை?”
முடிவெட்ட வந்த தம்பையாவிடம் கேட்டான் கனகசபை,
"என்ன விசயம் கமக்காறன்? நீர் சொல்லுற தொண்டும் எனக்கு விளங்கேல்லை."
தம்பையா ஆவலுடன் கேட்டான்.
'சங்கத்திலையுள்ள வெங்காயமெல்லாம் ஏன் அழுகி நாறுதெண்டு உனக்குத் தெரியுமே?”
*தெரியாது கமக்காறன். ஏன் அழுகி நாறுது?"

Page 55
104 O பாதை
* வெள்ளைக்காறனை ஆட்டி வைச்சவனடாநான். உந்த மண் கொத்தியள் என்ரை கால் தூசுக்குக் காணுமே? ஊத்தைச் சோடாவைத் தண்ணியிலை கரைச்சு வெங்காயத் துக்கை தெளிச்சது ஆரெண்டு நினைக்கிறாய்? அது என்ரை ஆக்கள்தான். அதாலைதான் வெங்காயமெல்லாம் அழுகுது எண்டு உவங்களுக்கெங்கை தெரியப்போகுது?"
அட அநியாயப்பட்டவனே. நீ நாசமாய்ப் போக..!"
தம்பையா தனது மனதுச்குள் கனகசபையைத் திட்டி விட்டு எங்களுக்கு இந்த விசயத்தை உடனே வந்து சொன்னார்.
எங்கள் மனம் கொதித்தது.
கனகசபைக்குப் பாடம் படிப்பிக்க நாங்கள் கிளம்பி னோம் ஆனால் சிலர் எங்களை மன்றாடித் தடுத்து நிறுத் தினார்கள்.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு விவசாய சங்கத்தை உண்டாக்கினால்தான் கனகசபையனாக்களின்ரை அட்ட காசத்துக்கு எதிராகப் போராட முடியுமென்று ஆலோசனை கூறினோம். ஆனால் சிலர் தயங்கினார்கள்.
வேலுப்பிள்ளை அண்ணைக்கு நடந்த சம்பவம் எங்களை ஒன்று சேர்த்துவிட்டது.
சங்கம் உருவாகியது.
நாங்கள் எல்லாரும் இண்டைக்கு ஒன்று சேர்ந்திட்டம் இனி கனகசபையனாக்களாலை எங்களை ஒன்றும் செய் யேலாது.”
ஐக்கியத்தின் சக்தியை உணர்த்தி சண்முகம் கூட்டம் நடக்கும் பொழுது கூறினார்.
வேலுப்பிள்ளை அண்ணை நாளைக்கி உங்கடை உருளைக்கிழங்கு கிளப்ப வேணும். நாங்கள் எல்லாரும் கிளப்பிறதுக்கு வாறம்,’,

நீர்வை பொன்னையன் O 105
நான் தீர்க்கமாகக் கூறினேன். "கனகசபையாக்கள் வந்தால்.’ தயக்கத்துடன் வேலுப்பிள்ளை அண்ணர் எங்களைப் பார்த்துக் கேட்டார்.
"அவங்களுக்கு நெடுகப் பயந்து சீவிக்க வேணுமே? முருகேசு கேட்டான். *கனகசபையின்ரை மருமகன் கிராமசேவகனெண்டதுக் காக நாங்கள் அவங்களுக்கு அடங்கி ஒடுங்கி நடக்க வேணுமே?”
கதிரவேலு கூட்டத்திலிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டான்.
'வேலுப்பிள்ளை இது மண்வெட்டி பிடிக்கிற கைய ளடா, ஏலுமெண்டால் கனகசபையனாக்கள் வந்து பாக் கட்டும் " கை முஷ்டியை உயர்த்திக்கொண்டு கந்தையா ஆக்ரோஷத்துடன் கூறினான்.
நான் புரண்டு புரண்டு படுத்திருக்கின்றேன்.
*ஆறுமுகம் உன்னாலை இனி கடன் தீர்க்கேலாது. வட்டியும் ஏறிக்கொண்டு போகுது. நீ உன்ரை கர ணியை எனக்கு எழுதித் தந்திட்டு வன்னிப் பக்கம் சீவிக்கப் போறது தான் நல்லது. இல்லாட்டி நான் உன்ரை வீடு வளவை வெந்தீசிலை விற்க வேண்டி வரும். அது உனக்குத் தான் மானக்கேடு.”
நேற்று அப்புவைப் பயமுறுத்தினானாம் கனகசபை, ஏன் அவன் என்னைத்தான் சும்மா விடுகிறானே? காலையில் நான் நித்திரை விட்டெழுந்து வெளியே புறப்படுவேன்.
எங்கள் படலையடியில் அவன் நந்தியாய் நிற்பான்.
-

Page 56
106 O பாதை
"இன்னும் ஒண்டும் அம்பிடேல்லையே?’
இதே கேலி நிறைந்த கேள்வியை இரண்டு மூன்று வருட காலமாக ஒவ்வொரு நாள் காலையிலும் கனகசபை என்னைக் கேட்டுவருகிறான்.
O 6. O OO OO C)O
நிலம் வெளுத்துக் கொண்டு வருகிறது. படலையடிக்கு நான் வந்து விட்டேன். கனகசபையும் அவனுடைய ஆட்கள் மூன்றுநான்கு பேரும் நிற்கின்றார்கள்.
"இன்னும் ஒண்டும் அம்பிடேல்லையே?’
என்னைக் கண்டதும் கனகசபை வழமையான கேள்வி யைக் கேட்கிறான்.
* கிடைச்சுட்டுது."
"என்ன! கிடைச்சுட்டுதா? என்ன வேலை? எங்கை?" பதைபதைத்துக்கொண்டு கேட்கிறான். "அலுப்பாந்தித் துறை முகத்திலை மூட்டை தூக்கிற
வேலை. ஏன், உனக்கு அல்லது உன்ரை ஆக்களாருக்காவது இந்த வேலை வேணுமே?”
என்னடா கேலி பண்றியாடா?”
* நீ எங்களைக் கேலி பண்ணலாம். நாங்கள் உங்களைக் கேலி பண்ணினால் என்னடா?*
"எடே, நீங்கள் ராத்திரி சங்கம் உண்டாக்கினதெல்லாம் எனக்குத் தெரியுமடா. உங்களாலை எங்களை அசைக்கேலு GSLIDT Lsr?”
இருந்து பாரடா என்ன நடக்குதெண்டு."
என் குரல் ஓங்குகின்றது.
சத்தம் கேட்டு எங்களுடைய ஆட்கள் பல திசைகளிலு மிருந்து ஓடிவருகின்றார்கள்

நீர்வை பொன்னையன் O 107
'எனக்கு முன்னாலை நிண்டு தலைநிமிர்ந்து பேச மண்கொத்திற உங்களுக்கு அவ்வளவு துணிச்சல் வந்திட்டு தோடா?*
* * 6 resör, 6orLT Gago (T6ör 6or ruiu?””
பொத்தின கையை ஓங்கிக்கொண்டு அவனை நோக்கி நான் பாய்கின்றேன்.
‘என்னடா பாத்துக் கொண்டு நிக்கிறியள்? இவனுக்கு நாலு போடுங்கோடா?”
தனது வளவுக்குள் ஓடிப்போய் நின்று கொண்டு தனது கையாட்களைப் பாத்துக் கத்துகின்றான் கனகசபை,
வேலிகளிலுள்ள தடிகள் முறியும் சத்தம் கேட்கின்றது. “எங்கை அவன்ரை மேலிலை தொடுங்கோடா LirùLJub?””
தடிகளுடன் ஆரவாரித்துக்கொண்டு ஓடிவருகின்ற வேலுப்பிள்ளையாட்கள் கர்ச்சிக்கின்றார்கள்.
“உவன் வேலன்ரை உருளைக் கிளங்கைக் கிளப்பப் போறிங்களாமடா. எங்கை கிளப்புங்கோடா பாப்பம்’
தனது "கேற்றை இறுக்கிச் சாத்திப் பிடித்துக்கொண்டு கேட்கின்றான் கனகசபை.
தோளில் மண்வெட்டியுடன் முன்னுக்கு ஓடிவருகின் றான் கந்தையா.
"எடே கனகா, நாங்கள் இண்டைக்கு அவன்ரை கிழங் கைக் கிளப்பத்தானடா போறம். ஏலுமெண்டால் நீங்கள் வந்து மறியுங்கோடா பாப்பம்?*
கந்தையாவின் வஜ்ரக் குரல் ஒலிக்கின்றது.
1972.

Page 57
8. உலைக்களம்
'வா, பழனி வா, இப்பிடி இரு."
சிரித்த முகத்துடன் பழனியை வரவேற்று, தனக்கு எதிரிலுள்ள கதிரையில் உட்காரும்படி கூறினார் முதலாளி.
**உனக்கு சோடா வேணுமோ அல்லது தேத் தண்ணி.?’’
*எனக்கு சோடா ஒண்டும் வேண்டாம் முதலாளி என்னை ஏன் கூப்பிட்டனிங்கள்?’’
'ஏன், அவசரப்படுறாய்?"
'எனக்கு நிறைய வேலை கிடக்கு. நான் கெதியாய்ப் போவேணும்.”
*வேலை ஒடியா போகப் போகுது? நீ இன்னும் கலி யாணம் கூடக் கட்டேல்லை. தனிக்கட்டை தானே? கடுமை யாய் உழைக்கக்கூடாது, உடம்பையும் கவனிக்கவேணும்.'
சிரித்துக் கொண்டு முதலாளி கூறினார்.
*முதலாளி, ஏன் என்னைக் கூப்பிட்டனிங்கள்? விசயத் தைச் சொல்லுங்கோ."
"உனக்கு இப்ப குடிக்க ஒண்டும் வேண்டாமே?
*ஒண்டும் வேண்டாம்.”

நீர்வை பொன்னையன் O 109
*உன்ரை சாட்டிலை நானும் ஏதாவது குடிக்கலா மெண்டு பாத்தன். அது வாய்க்கேலை. போகட்டும். ஆனா. பழனி உன்னை நினைக்கத்தான் எனக்குப் பெரிய கவலை யாய்க் கிடக்கு. நீ ஏன் இப்பிடி நாசமான வழியிலை போறாய்?"
பழனியின் நெற்றி சுருங்கியது.
*முதலாளி, விசயத்தைச் சுத்தி வளைக்காமல் நேரடி
மாய்ச் சொல்லுங்கோ."
'பழனி நீ நல்ல உழைப்பாளி. நேர்மையானவன். உனக்கு நல்ல எதிர்காலமிருக்கு."
'எனக்கு நல்லாய் ஐஸ் வைக்கிறார் முதலாளி?
**ஆனால் நீ ஏன் எல்லாத்தையும் கெடுக்கப் பார்க் கிறாய்? உந்த சங்க வேலையளை உன்ரை தலையிலை போட்டுக்கொண்டு உன்ரை நேரத்தை ஏன் நாசமாக் கிறாய்? நீ அழியப் போறியே?’
'சங்க வேலையளாலை என்ரை .புைப் !ெ" என்றும்
கெடேல்லை.”
* நான் அதைச் சொல்லேல்லை உன்ை எதிர் காலததைப பற்றித்தான் எனக்குக் கவலை நன் ெ கதி
யிலை பெண்பிளைபளுக்கெண்.ொரு பீடித்தொழிற் லை துவங்கப் போறன் . நீ என்னோடை ஒத்துழைச்சால் உனக்கும் நல்லது; எனக்கும் நல்லது '
‘நான் இதுக்கு என்ன செய்யக் கிடக்கு?’’
‘நான் சொல்லுறபடி நீ நடந்தால் உன்னை அந்தத் தொழிற்சாலைக்கு மனேச்சராக்குவன். உனக்குச் சம்பளம் கூடும். அதோடை அங்கை வேலை செய்யப்போறவை எல்லாம் இளம் பெண்பிள்ளையஸ் தானே? நீயும் கலியாணம் கட்டாதவன். உனக்கு நல்ல வாய்ப்பு, ஆனால் உந்தச் சங்க

Page 58
110 O பாதை
வேலையள் எல்லாத்தையும் இண்டையோடை விட்டிட வேணும். என்ன சரிதானே?"
'எனக்கு மனேச்சர் வேலையும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம். ஆனால் முதலாளி நாங்கள் தொழிலாளியள். நீங்கள் நினைக்கிறமாதிரி நாங்கள் அப்படிச்சோரம் போற வங்களில்லை.”
"எடே நீங்கள் இஞ்சை வயித்துச் சோத்துக்கு வந்தனி யளடா. வீண் கதை பேசாமல் மரியாதையாய்ப் போய் வேலையைச் செய்யுங்கோடா. அப்பிடியில்லாமல் சங்க மெண்டு சொல்லிக்கொண்டு எனக்குக் கரைச்சல் தந்தால் என்ன நடக்கும் தெரியுமே? காட்டுவாடிக் கந்தையனாக் களைக் கொண்டு இந்த ஊரிலுமில்லாமல் உங்களை அடிச்சுத் துரத்துவனடா?"
*சரி, நீ செய்யிறதைச் செய் பாப்பம்."
ஆக்ரோஷத்துடன் கூறிவிட்டு, பழனி கீழே இறங்கி வந்துகொண்டிருந்தான்.
காலையில் பழனியும் மூன்று தொழிலாளர்களும் கோரிக்கைகள் பற்றிக் கதைப்பதற்குத் தங்கள் பீடி முத லாளியிடம் சென்றார்கள்.
அவர்களை நிற்க வைத்தபடியே விஷயத்தைக் கேட்டு விட்டு பிறகு பார்ப்போமென்று அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார் முதலாளி.
பின்னேரம் பழனியை வரும்படி ஆளனுப்பினார்.
பழனி செல்வதற்குத் தயங்கினான்.
*"தனியப் போகப் பயப்படுறியா?" ஒரு தொழிலாளி பழனியைக் கேட்டான்.
"இல்லை "

நீர்வை பொன்னையன் O 111
*பிறகேன் தயங்கிறாய்?"
"இன்னுமொராள் என்னோடை வந்தால்."
‘பழனி நீ எங்கடை சங்கத் தலைவர். உன்னிலை எங்களுக்கு நல்ல நம்பிக்கை நீ போட்டு வா."
ஏகோபித்த குரலில் தொழிலாளர்கள் கூறி அனுப்பி னார்கள்.
சமனேச்சர் வேலை தரப்போறஈராம், மனேச்சர் வேலை. என்னை ஆரெண்டு நினைச்சுக் கொண்டார்?
மேல் வீட்டிலிருந்து இறங்கி வரும் பொழுது பழனியின் மனம் குமுறியது.
இனி நாங்கள் என்ன செய்யிறது..?
ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தான் பழனி.
"போராட்டம்தான் ஒரேயொரு வழி. ஆனா எங்கடை யாக்கள்...??
வலது கால் விரல்களை ஊன்றி, தெண்டித் தெண்டி, படிகளில் நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தான்.
*பழனி, என்னவாம் முதலாளி?”
தொழிலாளர்கள் ஆவலுடன் கேட்டனர்.
பழனியின் உடலெல்லாம் வியர்த்திருந்தது.
'ஏன் பேசாமல் நிக்கிறாய்?"
‘என்ன சொன்னார் முதலாளி?
‘என்ன நடந்தது?"
தொழிலாளர்கள் அவனைத் துளைத்தனர்.
தன் நிலைக்கு வருவதற்குப் பழனிக்கு சிறிது நேர மெடுத்தது.

Page 59
112 O Lust 605
"என்ன, கோரிக்கையளைத் தர முடியாதாமே?" சுப்பையா கேட்டான்.
இல்லை’
"அப்ப தாறாராமே?”
ஆச்சரியத்துடன் குத்தூஸ் கேட்டான்.
"அதுவுமில்லை.”*
*அப்பென்ன சொன்னார்? ஏன் இழுக்கிறாய்? சொல் லித் தொலையன்’ எரிச்சலுடன் கூறினான் சுப்பையா.
"முதலாளி எனக்கு மனேச்சர் வேலை தரப்போகிறா
9s
ராம்
தொழிலாளர்களுக்குப் பேரா ச்சரியம். *பிறகே ன்ன எங்களுக்கு? நீ மனேச்சராய் வந்தால் எங்கடை உரிtைuள எல்லாத்தையும் தருவாய். இனி சங்க ளுக்கு ஒரு கரைச் சலுமிருக்காது.”
சந்தோசத்துடன் ஆர்ப்பரித்தனர், சில தொழி 6) IT6Tig, 6ir.
"பொறுங்கே: . இதுக்கை ஏதோ மர்மமிருக்கு. இல்லாட்டி எடுத்த எடுப்பிலை முதலாளி பழனியை ஏன் மனேச்சராக்க போகிறார்?"
ராஜ சந்தேகமெழுப்பினான். ‘'இப்ப இருக்கிற மனேச்சரும் முந்தி எங்களைப் போலை ஒரு தொழிலாளியாய்த்தானே இருந்தவர். அவரும் எங்களைப் போலை தானே முந்திக் கஷ்டப் பட்டவர். இப்ப அவர் ஏன் எங்களுக்கு உரிமையளைத் தரேல்லை?”
நிதானமாகக் கேட்டான் பழனி.
தொழிலாளர் மத்தியில் மெளனம்,

நீர்வை பொன்னையன் O 113
**நாளைக்கு நான் இந்த முதலாளிக்குக் கீழை மனேச் சராய் வந்தால் உங்களுக்கு உரிமையள் கிடைக்குமெண்டு நினைக்கிறியளா?*
பழனியின் கேள்வி அவர்களைத் திகைக்க வைத்தது.
, "என்னை முதலாளி இந்தத் தொழிற்சாலைக்கு மனேச்சராக்குவனெண்டு நீங்கள் நம்புநியளா?”
பழனி கூறுவதன் ஆர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. *அவன் பெண்பிளையஞக்கெண்டு ஒரு பீடித் தொழிற் சாலை துவங்கப் போறானாம்; அதுக்குத் gif ல், என்னை
سr 6.
' பே; நான் .'
"எடே முதலாளி எங்கடை சங்கத் தலைவரை விலைக்கு வாங்கப் பாக்கிறான். இப்பதான் விசயம் தெரியது.'
சிறீசே : கூறினான்
• :°ቾ፭ : « $ ́} w ጿரமே? நான் கலிபாணம் கட்ட தலா 51 ல், போறதல்லாம இளம் பெண்
** அது 复、 á.
பிள்ளையளாம். எனக்கு நல்ல வாய்ப்பிருக்குமாம்’
தொழிலாளர்களுடைய முகங்களில் வெறுப்புர் கலந்த கோபம் படர்கின்றது.
பழனி வெறுப்புடன் கூறினான்.
"நாங்கள் நாரிமுறிய நாள் முழுவதுமிருந்து பீடி சுத்திறம். எங்கடை வேலைக்கேத்த சம்பளத்தை முதலாளி தாறானில்லை. ஆனா மாதா மாதம் ஆயிரக் கணக்கிலை கோயில்களுக்குச் சிலவழிக்கிறான்."
பாலு கூறினான்.
**அவன் ஆயிரக்கணக்கிலை சும்மா சில வழிக்கிறானே? கடவுள்களின்ரை படங்களை பீடி விளம்பரத்துக்குப் பாவிக்

Page 60
114 O பாதை
கிறான். அதோடை பெண்களின்ரை அரை நிர்வாணப் படங் களையும் போடுறான்?
சுப்பையா விசயத்தைப் புட்டுக் காட்டினான்.
8 "நாங்கள் வயித்துச் சோத்துக்காக இந்த ஊருக்கு வந்தவங்களாம். ஏதாவது கரைச்சல் குடுத்தால் காட்டு வாடிக் கந்தையனாக்களைக் கொண்டு இந்த ஊரிலுமில்லா மல் அடிச்சுக் கலைச்சுப் போடுவனெண்டு அவன் சொன்னான்."
"ஐயோ! காட்டுவாடியாக்கள் பெரிய ஐ.ஆர்.சி.யள். சரியான பொல்லாதவங்கள். எத்தினை பேரை அவங்கள் துலைச்சுக் கட்டினவங்கள். நாங்களிப்ப என்ன செய்ய?"
பீதியுடன் கூறினர் சிலர். "எங்களுக்கும் உழைச்சுக் காய்ச்சுப் போன கையளிருக்கு. நாங்களேன் பயப்பிட வேணும்??
கைமுஷ்டியை உயர்த்திக் காட்டிக் கொண்டே கேட் டான் சிறீசேனா.
*எங்கை ஏலுமெண்டால் காட்டுவாடியாக்கள் வரட்டும் பார்ப்பம்.”*
சவால் விட்டனர் தொழிலாளர்.
'சரி முதலாளியாக்கள் செய்யிறதைச் செய்யட்டும். இப்ப நாங்கள் என்ன செய்யிறது?”
சுப்பையா கேட்டான்.
*எங்கடை கோரிக்கையளை முன்வைச்சு நாங்கள் போராட்டத்தைத் துவங்க வேணும். உங்கடை அபிப்பிராயம் என்ன?*
பழனியின் கேள்வி தொழிலாளர்கள் மத்தியில் கணப் பொழுது சலசலப்பை ஏற்படுத்தியது.

நீர்வை பொன்னையன் O 115
*வேலை நிறுத்தம் செய்யிறதைவிட எங்களுக்கு வேறை வழியில்லை."
ராஜூ உறுதியான குரலில் கத்தினான். ‘நாங்கள் எல்லாரும் தயார்.' ஏ கோபித்துக் குரலெழுப்பினார்கள் தொழிலாளர்கள். டெலியோனை எடுத்தார் முதலாளி. வந்தனர் பொலிசார். தொழிற் கந்தோரிலிருந்து தொழிலதிகாரி வந்தார். முதலாளியைக் கண்டு பேசினார். பின்னர் தொழி லாளர்களிடம் வந்தார்.
உபதேசம் செய்தார் தொழிலதிகாரி. பின்னர் தனது மோட்டாரிலேறிச் சென்றுவிட்டார். தொழிலாளர்கள் நிலை குலையவில்லை. முதலாளி தனது பென்ஸ் காரில் இரவு முழுவதும் ஒடித் திரிந்தார்.
"நீங்கள் இண்டைக்கே என்ரை வீட்டை விட்டிட்டு வெளியேறி விடவேணும். எனக்கு வீடு தேவை."
தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரன் தனது கையாட்களுடன் வந்து விடிவது விடியமுன் தொழிலாளர்களுக்குக் கூறினான்.
தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி. சிலர் கொதித்தெழுந்தனர். "இப்பென்ன தலையா போட்டுது? ஏன் பதறுகிறியள்? இது நடக்குமெண்டு எங்களுக்கு முன்னமே தெரியும். இன்னும் எவ்வளவோ நடக்க இருக்கு, எல்லாக் கஷ்டங் களுக்கும் உறுதியாய் நிண்டு முகம் குடுக்கவேணும். இப்ப எங்கடை முழு நோக்கமும் போராட்டத்திலை வெற்றி

Page 61
116 O பாதை
எடுக்கிறதுதான். பிறகு இந்த வீட்டுக்காறனைப் பாத்துக் கொள்ளுவம்.”
தொழிலாளர்களைப் பழனி அமைதிப் படுத்தினான். * நாங்கள் இனி எங்கை தங்கிறது?" ஒரு தொழிலாளி கேட்டான். "நாங்கள் சேர்ந்திருக்கிற பெரிய தொழிற்சங்க சம்மேளனக் காரியாலயம் இருக்கு. இப்ப அங்கை தங்குவம். பிறகு வேறை இடத்தைப் பாப்பம்.'
தமது வாடிக்கைக் கடைக்கு காலைச் சாப்பாட்டுக்கு சென்றனர், தொழிலாளர்கள்.
"உங்களுக்குச் சாட்பாடு தரேலாமல் கிடக்கு நீங்கள் வேறை கடையைப் பாக்கிறது நல்லது.'
தயங்கித் தயங்கி கூறினார் கடை முதலாளி.
"ஏன் ந? ங்கள் காசு தரமாட்டம் எண்டு பயப்
பிடுறியளா???
“அதில்லை. இதலை எனக்குக் கன தொல்லையள் வரும் அதுதான்."
‘எங்களுக்குச் சாப்பாடு குடுக்க வேண்டாமெண்டு எங்கடை பீடிக் கொம்பனி முதலாளி உங்களை மறிச்சுப் போட்டானெண் டு வெளிப்படையாய்ச் சொல்லுங்கோவன். சரி டோகுது. நாங்கள் பிறகு வாறம். வாருங்கோ நாங்கள் Guits b. ''
பழனி தொழிலாளர்களுடன் வெளியேறினான். *சாப்பாட்டுக்கு இனி என்ன செய்ய?" சில தொழிலாளர்கள் பழனியைக் கேட்டனர். ‘எங்களுக்கு உதவி செய்ய எங்க டை தொழிற்சங்க சம்மேளனமிருச்கு. ஆயிரக்கணக்கான தொழிலாளியளிருக் கினை. நாங்கள் ஏன் கலங்க வேணும்?'
 
 

நீர்வை பொன்னையன் O 117
தொழிலாளர்களுக்குத் தென்பூட்டினான் பழனி.
பீடிக் கொம்பனி முதலாளியின் இந்த நடவடிக்கை நகரத்திலுள்ள ஏனைய தொழிலாளர்களைக் கொதிப் படையச் செய்தது
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பீடித் தொழிலாளர்களுக்குக் கைகொடுத்துதவ ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் முன்வந்தார்கள்.
உணவுப் பொருட்களும் நிதியும் திரட்டப்பட்டது. பஸ் தொழிலாளி வேலுப்பிள்ளை பழனியையும் இரண்டு மூன்று பீடித் தொழிலாளர்களையும் தனது வீட்டிற்குக் கூட்டிச் சென்றான்.
**ஆச்சி, பீடிக் கொம்பனி முதலாளி செய்த வேலை யைக் கேள்விப்பட்டியே?’
தனது தாய் அன்னமுத்தாசசியைக் கேட்டான் வேலுப் பிள்ளை
‘ஏண்டா மோனை, என்ன செய்தவர் அவர்?அந்த ஆள் நல்ல மனிசனாச்சே!'
*ஒமணை அவன் மிச்சம் நல்லவன் தான். இவை அங்கை பீடி சுத்துறவை. தங்களுக்குச் சம்பளம் கூட்ட வேணுமெண்டு அவனைச் கேட்டினை. அவன் கூட்டிக் குடுக்கேல்லை. இவை வேலை நிறுத்தம் செய்யினை. அவன் என்ன் செய்தான் தெரியுமே?”
*அப்பிடி அந்தாள் ஒரு அநியாயமும் செய்யாதே. கடவுள் பக்தி நிறைஞ்ச மனிசன். எந்த நேரமும் கோயில் குளமெண்டு திரியுது.'
*அதெல்லாம் வெளியாலைதானணை, ஆனா உள் ளுக்கு.? இவை இருக்கிற வீட்டுக்காறனை இராத்திரி அவன் பிடிச்சு இவையை அங்கையிருந்து கலைச்சி CBu (TL" L.FT 6öT.ʼʼ

Page 62
118 O பாதை
"இப்பிடி அந்த ஆள் செய்யுமெண்டு என்னாலை நம்பேலாமல் கிடக்கு மோனை'
"அது மாத்திரமேயணை? இவைக்குச் சாப்பாடு குடுக்கக் கூடாதெண்டு கடைக்காறரையும் மறிச்சுப் போட்டான் ”
"அட நாசமாய் போவானே! இப்படியும் ஒரு மனிசன் செய்வானே? அவனைப் பாம்பு வெட்ட."
ஆத்திர மேலீட்டால் திட்டினாள் அன்னமுத்தாச்சி. "நாங்கள் தானணை இப்ப இவைக்கு உதவி செய்ய வேணும் ”
"என்ன செய்ய வேணும் எண்டு சொல்லு உடனே செய்யிறம்.’
‘எங்கடை தொழிற் சங்கக் கந்தோரிலை இவை தங்குவினம். சாப்பாடுதான்.”
* சமைக்க நாங்க உதவி செய்யிறம். இடம்தான்." "அந்தத் தகரக் கடையுக்கை சமைச்சால் போகுதணை.” தகரக் கடையென்றதும் பீடித் தொழிலாளர்களுடைய முகம் மலர்ந்தது.
நகரத்தின் இதயத்தை நான்கு துண்டுகளாக வெட்டிப் பிளந்து செல்லும் இரு சாலைகள் குறுக்கு நெடுக்காகச் செல்லும் இடம்தான் அந்தத் தகரக் கடைச் சந்தி.
சந்தியின் தென் கிழக்கு மூலையில் ஒரு சிவப்பு நிறத் தபால் பெட்டி.
தபால் பெட்டிக்குக் குடை விரித்தாற் போல வளர்ந் தோங்கிப் படர்ந்து நிற்கின்றது பெரிய வாகை மரம்.
கொழுந்துவிட்டெரியும் அக்னி ஜுவாலையைப்போல் வாகை மரத்தில் சிவப்புப் பூக்கள் நிறைந்திருக்கின்றன.

நீர்வை பொன்னையன் O 119
வாகை மரத்தை அண்டினாற்போல, கிழடு தட்டி நிற்கின்றது ஒரு தகரககடை.
நகரத்தின் மத்தியில் அந்தத் தகரக்கடை இருந்தாலும் இரவில் அந்தச் சந்தியால் தனியே செல்வதற்கு அஞ்சு கின்றார்கள், மக்கள்.
"ஒமடா மோணை. அது நல்ல இடம்தான்." முகத்தில் ஒளி படரக் கூறினாள் அன்னமுத்து ஆச்சி.
*அங்கை காட்டுவாடிக் கந்தையா இருக்குது. ஏன் வீண் தொல்லையை...??
பீடித் தொழிலாளி ஒருவன் இழுத்துக் கூறினான்.
*அப்பிடி அவன் எங்களை மிஞ்சிவிடுவானே? அவனை நாங்கள் பாத்துக்கொள்ளிறம். அவன் ஒரு அறையிலை தானே கிடக்கிறவன். மற்ற அறையுக்கை நீங்க சமைக்க லாம். வாருங்கோ நான் அறையைக் கூட்டிச் சுத்தப் படுத்துறன்.'
அடுத்த அறையிலிருந்து வந்த கஞ்சாப் புகை மணம் அவர்களுடைய மூக்கைத் துளைத்தது.
'அறுப்பான் விடியக் காத்தாலையே துவங்கிட்டான் கூறிவிட்டு பின்பக்கமாக மற்றைய அறையைத் திறந்து கூட்டத் தொடங்கினா அன்னமுத்தாச்சி.
*ஆரடா அங்கை? என்னட ரா சத்தம்?"
அடுத்த அறையில் இருந்து வெளியே வந்தான் காட்டுவாடிக் கந்தையா.
அவனுடைய கண்களில் போதையின் கிறக்கம். இரத்தச் சிவப்பாக அவை இருந்தன.
"எடே காட்டுவாடி! உனக்கு இப் பென்னடா வேணும்? மூச்சுக் காட்டாமல் போய் உன்ரை பாட்டிலை கிடவடா'

Page 63
120 O பாதை
சேலைத்தலைப்பை இழுத்து வரிந்து கட்டிக் கொண்டு விளக்குமாறும் கையுமாக முன் வந்து கூறினா அன்ன முத்தாச்சி.
*இவங்கள் ஆர்? இஞ்சை இவங்களுக்கென்ன வேலை. ஏன் வந்தவங்கள்?"
கடுகடுப்புடன் கேட்டான். ‘நான்தானடா அவையைக் கூட்டி வந்தனான். அவை இந்த அறையுக்கை சமைக்கப் போகினை. நீ அவையோட ஒரு கரைச்சலுக்கும் போகக்கூடாது. மூச்சுக் காட்டினால் என்ன நடக்குமெண்டு உனக்குத் தெரியுந்தானே?"
பொய்க் கோபத்துடன் எச்சரித்தா அன்னமுத்தாச்சி. "இவங்கள் ஏன் இஞ்சை சமைக்க வேணும்?" * உனக்குச் சொல்லவேணு மோடா?" அன்னமுத்தாச்சி சீறிப்பாய்ந்தா. *பொறனை ஆச்சி, கந்தையாண்ணை, இவை பீடிக் கொம்பனியிலை வேலை நிறுத்தம் செய்யினை. இவைக்குச் சாப்பாடு குடுக்கக் கூடாதென்று கடைக்காறரை இவை யின்ரை முதலாளி மறிச்சுப் போட்டான். அதோடை அவை யிருந்த வீட்டுச் சொந்தக்காறனைப் பிடிச்சு வீட்டிலையு மிருந்து இவையை வெளியேத்திப் போட்டான்."
‘அப்பிடியா அவன் செய்தான்? சரி நான் அவனைப் பாத்துத்துக்கிறன்.”
வேலுப்பிள்ளை சொன்னதைக் கேட்ட காட்டுவாடி வெஞ்சினத்துடன் கூறினான்.
காட்டுவாடியை எல்லோரும் அதிசயத்துடன் பார்த் தனர்.
*சரி அவை தங்கடை வேலையைப் பாக்கட்டும். நான் என்ரை வேலையைப் பாக்கிறன். ஆனா என்னிலை ஆராவது

நீர்வை பொன்னையன் O 121
வீணாய் கறுவினால் நான் உங்களைத் துலைச்சுக் கட்டிப் போடுவன் ??
"ஒமடா போ! போய் உன்ரை வேலையைப் t.isrrl-fr.'
அன்னமுத்தாச்சி கூறிவிட்டு துரிதமாய்ச் செயற்படத் தலைப்பட்டா.
தொழிலாளர்கள் சமையலுக்கு ஆயத் கம் செய்தனர்.
சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை அன்னமுத் தாச்சி தனது வீட்டிலும் அயலிலுள்ளவர்களிடமிருந்தும் எடுத்துக் கொடுத்தா.
போராட்டம் தொடர்ந்து நடந்தது.
“இந்தக் காட்டுவாடியா உங்கடை முதலாளியைத் தேடிப்போறவன்? ஆராவது தேவையெண்டால் அவர்கள் என்னைத் தேடித்தான் வரவேண்டும். தெரியுதா டா?*
பீடிக் கொம்பனி முதலாளி காட்டுவாடிக் கந்தையாவைக் கூட்டி வரும்படி அனுப்பிய ஆளிடம் கேட்டான்.
முதலாளிக்கு நேரமில்லை. அதோடை அவருக்குச் சாடையாய்ச் சுவமில்லை. அதுதான்.'
“எடே இந்தக் கந்தையன் தொழிலாளியளுக்கு எதிராகப் போவனெண்டு உங்கடை முதலாளி நினைக் கிறானோடா? நீயும் அவன்ரை சொல்லைக் கேட்டுக் கொண்டு என்னட்டை வந்தியோடா? ஒடடா கேடு கெட்டவனே ஒடு. இது ஒரு நாளும் நடவாதெண்டு அவனிட்டைப் போய் சொல்லுடா.*
அவனை விரட்டினான் காட்டுவாடி.
“இப்பென்ன மாதிரி இருக்கு உங்கடை வேலை நிறுத்தம்?"
ir-8

Page 64
122 O பாதை
இரண்டு மூன்று நாட்களின் பின் காட்டுவாடி தொழி லாளர்களைக் கேட்டான்.
"முதலாளி விட்டுக் கொடுக்கிறானில்லை. நாங்களும் எங்கடை உரிமையள் கிடைக்குமட்டும் போராடுவம்.”
அவர்கள் உறுதியுடன் கூறினார்கள். *மோனையள் மயிலை இறகுபோடச் சொல்லிக் கேட்டால் அது தானாகப் போடாது. புடிங்கித்தான் எடுக்கவேணும். நீங்கள் உப்பிடி பீடிக்கொம்பனி முன்னாலை சும்மா நிக்கிறதாலை வேலையில்லை."
காட்டுவாடி சொன்னதன் அர்த்தம் சிலருக்குத்தான் புரிந்தது.
'நீங்கள் எத்தனை நாளுக்குத்தான் பிடிப்பியள்?" அக்கறையுடன் கேட்டான். *காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் சோடாத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் இந்த இடங்களிலையுள்ள தொழிலாளியளும் பஸ் தொழி லாளியளும் இப்ப எங்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக் கினை. நாளைக்கு அவை எங்களுக்காகப் போராடக் கிளம்பப் போகினை.'
பெருமையுடன் கூறினான் பழனி.
அடுத்த நாள் சில தொழிலாளர்கள் மத்தியானச் சாப் பாட்டை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
பிந்தி வந்தவர்களுக்குக் கறியில்லை. கறி வாங்குவதற்கு அவர்கள் பக்கத்திலுள்ள சில கடைகளின் படிகளில் ஏறி இறங்கினார்கள். கறி கிடைக்க வில்லை,
பச்சை மிளகாயுடனும் வெங்காயத்துடனும் சோற்றைச் சாப்பிடத் தொடங்கினார்கள் அவர்கள்.

நீர்வை பொன்னையன் O 123
கையில் சாராயப் போத்தலுடன் அப்பொழுதுதான் எங்கிருந்தோ வந்த காட்டுவாடி இதைக் கண்டான்.
விசயத்தை விசாரித்துவிட்டு ஒரு பெரிய கோப்பையுடன் வெளியேறினான்.
சிறிது நேரத்தில் கோப்பை நிறையக் கறியுடன் வந்தான்.
'இது எங்கை கிடைச்சுது?"
"கடையிலைதான்'
"எவ்வளவு காசு?”
இந்தக் காட்டுவாடியா காசு கொடுத்து வாங்கிறவன்?"
நன்றி நிறைந்த பார்வையுடன் தொழிலாளர்கள் சாப்பிட்டனர்.
அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த காட்டுவாடியின் நினைவுச் சுவட்டில் என்றோ நடந்த சம்பவங்கள் தட்டுப்பட்டன.
அவனுடைய கண்களில் நீர் துளித்தது. ஒரு நீண்ட பெருமூச்சு. கள்ளத்தோணி’ என்ற சாட்டில் பீடித் தொழிற் சங்கத் தலைவர்களில் மூன்று நான்கு பேர் கைது செய்யப் பட்டனர்.
போராட்ட உலைக்களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு அம்சம் நாங்கள். ஆனபடியால்தான் நாங்கள் எது வந்தாலும் அஞ்சப் போவதில்லை!
தொழிலாளர்களுக்குப் பழனி உறுதியூட்டினான்.
போராட்டம் கட்டம் மாறியது.
காங்கேசன்துறை, பருத்தித்துறை, பரந்தன், ஆனை யிறவு போன்ற இடங்களில் உள்ள தொழிலாளர்கள் பீடித் தொழிலாளர்களுக்காகப் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

Page 65
124. Ο μιτουρό
வெளுயூரிலிருந்து சில கைக்கூலிகளைக் கொண்டு வந்தார் பீடிக் கொம்பனி முதலாளி. அவர்கள் தொழிலாளர் களைத் தாக்குவதற்கு வந்தார்கள்.
இத் தகவல் காட்டுவாடிக்கு ஏற்கெனவே எட்டிவிட்டது. தம்மைத் தாக்குபவர்களை எதிர்த்துப் போராட பீடித் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.
காட்டுவாட்டி முஷ்டியை உயர்த்திக்கொண்டு முன் பாய்ந்தான்.
தொழிலாளர்களும் பாய்ந்தனர். கருங்காலிகள் சிதறி ஓடினர். பீடிக் கொம்பனி வாகனங்கள் வெளியூர்களுக்கு பீடி விற்கப் போக முடியாத நிலை ஏற்பட்டது.
ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் முதலாளி தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு முன்வந்தார்.
தொழிலாளர்களுக்கு உரிமைகள் கிடைத்தன. அவர்கள் தலைநிமிர்ந்து ஊர்வலமாக வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஊர்வலம் தகரக் கடைச் சந்திக்கு வந்துவிட்டது.
அன்னமுத்தாச்சி வாய் நிறைந்த புன்னகையுடன் ஊர்வலத்தை வரவேற்கின்றா. அவவினுடைய கண்களில் ஆனந்தக் கண்ணிர். தாய்மையின் பொலிவு.
தொழிலாளர்களுடைய பார்வையும் அன்னமுத்தா சசி யின் பார்வையும் அன்புப் பிணைப்பில் முட்டி மோதுகின்றன. தகரக் கடையைத் தொழிலாளருடைய விழிகள் ஆவ லுடன் நோக்குகின்றன.
எடே காட்டுவாடி! என்னடா செய்கிறாய்? ஊர்வலம் வந்திட்டுதடா!"

நீர்வை பொன்னையன் O 125
ஆனந்த எக்களிப்புடன் அன்னமுத்தாச்சி குரல் வைக்கின்றா.
காட்டுவாடிக் கந்தையா கடையின் முன்பக்கக் கதவைத்
திறந்துகொண்டு நெஞ்சை நிமிர்த்தியபடியே வெளியில் வருகின்றான்.
அவனுடைய உதட்டில் வெற்றிப் புன்னகை.
விழிகளில் புதுப் பொலிவு. ஊர்வலத்துடன் அவன் சங்கமிக்கின்றான். காட்டுவாடிக் கந்தையாவின் இதயத்தில் தொழிலாளி வர்க்க உணர்வு நீண்டகால இடைவெளியின் பின் தலை தூக்குகின்றது.
ஊர்வலம் தொழிற்சாலையை நோக்கி வீறு நடை போட்டுச் சென்று கொண்டிருக்கின்றது.
தூரத்தில் ஒரு ஜீப் வருகின்றது.
முதலாளியின் கைக்கூலிகள் ஜீப்பில் ஆயுதங்களுடன் இருக்கின்றார்கள்.
காட்டுவாடிக் கந்தையாவைத் தேடித்தான் அவர்கள் வருகின்றார்கள் என்பதைத் தொழிலாளர்கள் உணர் கின்றார்கள்.
காட்டுவாடி ஒடவில்லை. ‘எங்கடை காட்டுவாடியிலை ஒருவனும் தொட ஏலாது" சுப்பையா உரத்துக் கத்துகின்றான்.
கந்தையாவின் முகத்தில் உணர்ச்சி அலைகள் முட்டி மோதுகின்றன.
‘எங்கை ஏலுமெண்டால் எங்கடை கந்தையா விலை ஆராவது கை வைக்கட்டும் பார்ப்பம்."

Page 66
12 C) ut 605
தொழிலாளர்கள் எகோபித்துக் கத்துகிறார்கள்.
இது எங்கடை பஸ் தொழிலாளியளின்ரை ஊர் nuspost ?” ”
காட்டுவாடியின் உடலில் புல்லரிப்பு.
கந்தையா முன்பு ஒரு பஸ் கொம்பனியில் தொழிலாளி யாக வேலை செய்தவன்.
பஸ் தொழிலாளரின் வேலை நிறுத்தத்தை முன் நின்று நடத்தியதற்காக அவனுடைய வேலை பறிபோயிற்று.
தன்னை வேலை நீக்கம் செய்த பஸ் கொம்பனியின் முதலாளியைப் பழிக்குப் பழி வாங்கப் போன அவன் மறியலுக்குச் சென்றான்.
இதை பீடித் தொழிலாளர்கள் இரண்டு மூன்று நாட் களுக்கு முன்புதான் காட்டுவாடியின் வாயிலிருந்து கேட்டறிந்தனர்.
**எங்கை ஏலுமெண்டால் எங்கடை கந்தையாவிலை ஆராவது கை வைக்கட்டும் பாப்பம்.?”
*மறியலுக்குப் போக முந்தி, நான் கடைசியாய்ப் போன ஊர்வலத்திலையும் எங்கடை தொழிலாளியள் இப்புடித்தான் கத்தினவை."
வெறிபிடித்தவனாய், கந்தையா ஊர்வலத்தில் நடக் கிறான்
**வாறவன் வரட்டும். இண்டைக்கு இரண்டத்தா ஒண்டு பாத்துத் தாறம்."
தொழிலாளர்கள் குமுறுகின்றார்கள்.

நீர்வை பொன்னையன் O 127
உணர்ச்சி ததும்பக் கந்தையா பழனியின் கையை இறுகப் பற்றுகிறான்.
ஜிப் ஊர்வலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது;
எதிர்கால உலகின் எஜமானர்களைக் கொண்ட ஊர்வலம் எதிரேயுள்ள சகல தடைகளையும் தகர்த்தெறிந்து
செல்லும் தொழிலாளி வர்க்க உத்வேக உணர்வு பீறிட்டுப் பாய ஜெயகோஷத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
1973

Page 67
9 காணி நிலம்.
'அந்தச் சந்தியிலை காரை நிப்பாட்டு றைவர்.” "றைவராம், றைவர். ஏன் எனக்குப் பேரில்லையே? என்ரை பேர் சண்முகம் எண்டு தான் இவருக்கு எத்தினை நாள் சொன்னனான்."
சண்முகத்தின் மனதில் ஆத்திரம் தலை தூக்குகின்றது. அவன் வேகமாக மோட்டாரை ஓட்டிக் கொண்டிருக் கின்றான்.
"றைவர். போய், "பியோன்’ எண்டு கூப்பிடுகிற திலை இவங்களுக்கு ஒரு பெருமை. இவங்கடை அதிகாரத் திமிர் எவ்வளவு நாளைக்கெண்டு பாப்பம்."
மனதுள் கறுவுகின்றான் அவன். சந்தி வருகின்றது. மோட்டார் சந்தியைத் தாண்டுகின்றது, 'றைவர் காரை நிப்பாட்டு,’’
கேட்டும் கேளாதவனாய் அவன் மோட்டரை ஒட்டிக் கொண்டிருக்கின்றான்,
*நான் சொன்னது கேக்கேல்லையே ? காரை நிப்பாட்டு.” உரத்துக் கத்துகின்றார் சுந்தரம்.
‘என்னையா? காரை நிப்பாட்டிறதோ?”

நீர்வை பொன்னையன் O 129 கேட்டுக் கொண்டே அவன் திடீரென பிறேக்கைப் போடுகின்றான்.
சோமசுந்தரம் முன்சீற்றில் வந்து மோதி பின்னுக்குப் போய் விழுகின்றார்.
தான் அவதிப்படுவதைச் சண்முகம் பாத்துவிட்டால் தனக்குக் கெளரவக் குறைவென்றெண்ணித் தன்னைச் சமாளிக்கின்றார் அவர்.
இதை "சைட் கண்ணாடிக்குள் பார்த்துக் கொண் டிருந்த சண்முகத்தின் உதடுகளில் இளமுறுவல்.
சோமசுந்தரம் தனது ஆத்திரத்தை வெளிக்காட்ட வில்லை.
மோட்டாருக்குள் இருந்தபடியே சிறிது நேரம் நாலு புறமும் நோட்டம் விடுகின்றார் அவர்.
இரு றோட்டுகள் ஒன்றையொன்று குறுக்கு நெடுக்காக வெட்டிச் செல்லும் நாற்சந்தி.
சந்தியின் தென்மேற்கு மூலையில் ஒரு பனங்கூடல். தோட்ட நிலங்கள் சிதறிக் கிடக்கின்றன. சந்தியின் தென்கிழக்கு மூலையில் ஒரு பெரு வெளி. அது மூளியர்கக் கிடக்கின்றது. ஊரின் மேற்கெல்லைக் கோடியிலிருக்கும் அந்தப் பெரு வெளியையும் தோட்ட நிலங்களையும் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கப்பால் பனஞ்சோலைகள் வட்டவளையமாய்ச் சுற்றி நிற்கின்றன.
‘எங்கடை திட்டத்துக்கு இந்த வெளி நல்ல இடம் தான். இது ஆற்றையெண்டு முதலிலை விசாரிச்சுப்
பாப்பம்.'
மோட்டாரிலிருந்து இறங்குகின்றார் சோமசுந்தரம்.

Page 68
130 (0 பாதை
சோழகக் காற்று செம்பாட்டுப் புழுதியை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது.
தோட்ட நிலங்களில் வேலை செய்து கொண்டு நின்ற
வர்களில் சிலர் மோட்டாரடிக்கு வருகின்றார்கள்.
மேல் நாட்டு உடுப்பு. வாயில் புகைந்து கொண்டிருக் ரும் பைப். பார்வையில் மிடுக்கு.
அவரை ஏதோ ஒரு பெரிய அரசாங்க அதிகாரி என்று ஊகித்தறிகின்றனர் அந்த விவசாயிகள்.
**இது ஆற்றை காணி?”
தரிசு நிலமாகக் கிடந்த அந்தப் பெரு வெளியைக் காட்டி அலட்சிய பாவத்துடன் கேட்கின்றார் சோமசுந்தரம்.
*அது கந்தப்பு விதானையாற்றை,’’ அடக்கொடுக்கத்துடன் வேலுப்பிள்ளை கூறுகின்றார்.
என்ன. விதானையாரோ??
'ஒமையா. அவர் பழைய விதானையார். இப்ப அவற்றை மருமகன்தான் இஞ்சை கிராம சேவகர்.'
நல்லதாய்ப்போச்சு. இனி பிரச்சினையில்லை."
நிலம் கிடைக்குமென்ற திருப்தி சோமசுந்தரத்துக்கு. **கல்லுக் கிளப்பிக்கிடக்கின்ற அந்த நிலம்?"
*அது என்ரை."
பெருமையுடன் கூறுகின்றார் வேலுப்பிள்ளை.
*அதுக்குப் பக்கத்திலை கிடக்கிறது?"
**அதுவும் கந்தப்பு விதானையாற்றைதான் நான்தான் அதைக் குத்தகைக்கெடுத்துச் செய்யிறன். கல்லுக் கிளப்பிக்

நீர்வை பொன்னையன் O 131
கிடக்கிற அந்த நிலமும் அவற்றைதான். போனவரியம் நான் அதை விலைக்கு வாங்கிப் போட்டன்."
கூறிவிட்டு, தன்னுடன் நிற்கின்றவர்களைப் பார்க் கின்றார் வேலுப்பிள்ளை.
*அது சரி ஐயா. இதெல்லாம் ஏன் விசாரிக்கிறியள்?" வேலாயுதம் சந்தேகத்துடன் கேட்கின்றான். ‘என்னைக் கேக்கிறதுக்கு இவன் ஆர்?" அவருடைய இமைப்புருவங்கள் உயர்ந்து தாழ்கின்றன. சோமசுந்தரம் வேலாயுதத்தை ஏறிட்டுப்பார்க்கின்றார். 'இவனை முன் எப்பொழுதோ பார்த்த மாதிரி’. தனது கண்களை நெரித்துச் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் வேலாயுதம்.
'நான் அவசரப்படக் கூடாது. வந்த வேலையை முதலிலை பாப்பம். பிறகு இவனைக் கவனிப்பம்."
*உங்கடை பகுதியிலை கமத்தொழிலை முன்னேத்திற துக்கு அரசாங்கம் என்னை அனுப்பியிருக்கு."
“மிச்சம் நல்லது ஐயா.”* வல்லிபுரம் பணிவுடன் கூறுகின்றான்.
"நாங்கள் இந்த இடத்திலை ஒரு மொடல் ஃவாம்
துவங்கப் போறம். நீங்கள் எல்லாரும் என்னோடை ஒத் துழைக்க வேணும்."
கட்டளையிடும் தோறணையில் கூறுகின்றார் சோம சுந்தரம்.
அவர் கூறியது புரியாவிட்டாலும் சிலர் பணிவாக ஒமென்று தலையை ஆட்டுகின்றனர்.

Page 69
132 O பாதை
வேலாயுதத்தை அவர் மீண்டும் உன்னிப்பாகப் பார்க் கின்றார்.
"இவன் எங்கை. ஒ, இவனை நான் வவனிக் குளத்திலை பார்த்திருக்க வேண்டும்."
* நீயும் தோட்டம் செய்யிறியா? உன்ரை தோட்டம் எங்கை?"
தனது ஊகம் சரியா என்று அறிவதற்கு வேலாயுதத் தைக் கேட்கின்றார்.
‘இவனுக்கு நான் சொல்ல வேணுமா?’ வேலாயுதத்தின் மனதில் கேள்விக்குறி. "நானாய் ஏன் கொ )ாவுவான்? எங்கடை ஆக்கள் பிறகு என்னைத்தான் குற்றம் சொல்லுவினை. அதையும் அனுபவத்திலை படிச்சாத் தான் தெரியும்."
"எனக்குச் சொந்த நிலமில்லை. இப்ப கூலிவேலை செய்யிறன், கந்தப்பு விதானையாற்றை கொஞ்ச நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறன். இனித்தான் வெண்காயம் நடப்போறன்."
* அப்ப நீ இதுக்கு முந்தி என்ன செய்தனி?” "பரந்தன் சோடாத் தொழிற்சாலையிலை வேலை செய்தனான்."
*நான் நினைச்சது சரிதான்'. சோமசுந்தரத்தின் முகத்தில் இருள் படர்கின்றது. "எங்கடை திட்டம் நிறைவேறவேணுமெண்டால் இவனை இஞ்சை விட்டு வைக்கக்கூடாது."
அவர் மோட்டாரில் ஏறுகின்றார்.
*றைவர் காரை எடு."

நீர்வை பொன்னையன் O 133
மோட்டார் புறப்படுகின்றது
‘எங்களுக்கு நல்ல ஆள்தான் வந்து வாச்சிருக்கு."
மோட்டார் சென்று கொண்டிருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கினறவர்களுக்கு வேலாயுதம் சொல்கின்றான்.
“ஏன் அவருக்கென்ன?”
வேலுப்பிள்ளையின் கேள்வியில் ஒரு வித சந்தேகத் தொனி.
"உவங்கள் எங்கடை உழைப்பை உறிஞ்சிறவங்கள் உவங்களை ஒழிச்சுக்கட்டினால் தான்...”*
பல்லை நெருடிக் கொண்டு கூறுகிறான் வேலாயுதம்.
எடே வேலாயுதம், உனத்கு எல்லா ரோடையும் கொழுவல்தான். உதாலைதான் உனக்கு அந்த பரந்தன் சோடாத் தொழிற்சாலை வேலையும் பறிபோனது ?
*வேலுப்பிள்ளை அண்ணை, அவசரப்பட்டு ஒராளைப் பற்றி முடிவுக்கு வராதைங்கோ போகப் போகத்தான் எல்லாம் தெரிய வரும்.'
*ஒ இவர் எல்லாம் தெரிஞ்சவர். அதாலைதான் வேலையையும் பறிகுடுத்திட்டு இப்ப கூலிக்குக் கொத்தி றார்."
வல்லிபுரம் நளினமாகக் கூறினான்.
. உன்னைப்போலை கதைகாவிச் சீவிக்கிறனே நான்?"
வேலாயுதத்தின் வார்த்தைகளில் கடு கடுப்பு.
வேலாயுதம் பேசாமல் போய் உன்ரை வேலையைப் பாரடா, அவன் சொன்னால் சொல்லிப் போகட்டும்,”
வேலுப்பிள்ளை அவனைப் பிடித்துத் தள்ளினார்.

Page 70
134 O பாதை
"நான் என்ரை வேலையைப் பார்க்கிறன், அண்ணை, பாக்கிறன். எப்பதான் நீங்கள் என்ரை சொல்லைக் கேட் டியள்? எல்லாம் நீங்களே பிறகு அறிவியள்."
வேலாயுதத்தின் வார்த்தைகளில் கசப்புணர்ச்சி.
O O o co o
**விதானையாற்றை புதுக்காணியை அரசாங்கம் எடுக் கப் போ குதாம்.'
தோளில் மண்வெட்டியுடன் வந்த கந்தையா கூறினார்.
‘என்ன, விதானையாற்றை புதுக்காணியை அரசாங் கம் எடுக்கப் போகுதோ?*
புதுக்கிணற்றடியில் களைப்பாறிக் கொண்டிருந்த வேலுப்பிள்ளையாக்கள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.
"ஒமண்ணை, காலமை கச்சேரிக்குப் போய் வந்த விதானையார் தலையிலை கைவச்சுக் கொண்டு இடிஞ்சு போயிருக்கிறார் "
*உது நடக்குமெண்டு நீங்கள் நம்பிறியளோ?” வேலாயுதம் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.
"உனக்கு எல்லாத்திலையும் சந்தேகம் தான். நீ எப்ப தான் சரியான வழிக்கு வரப்போறியோ??
வேலுப்பிள்னை மன உளைச்சலுடன் கூறினார்
*ஆர் சரியான வழிக்கு வாறதெண்டதை இருந்து
பாப்பம்.'
சவால்விடுவதைப் போல கூறினார் வேலாயுதம்.
*எங்களுக்கு ஒரு வழியும் வேண்டாம் மோனை. எங்கடை பாட்டை நாங்கள் பார்த்துக் கொள்ளுவம்."
குமாரவேலு நிர்விசாரமாகக் கூறினார்.

நீர்வை பொன்னையன் 0 135
*சும்மா கிடக்கிற வெளிதானே. அரசாங்கம் எடுத்து ஏதாவது செய்யட்டன்."
கந்தையா சொன்னான்.
"நீ சொல்லுறது சரிதான். தண்ணியிலை விளைஞ்ச உப்பு தண்ணியிலை தானே கரையும்.’’
வேலுப்பிள்ளை பீடிகை போட்டார்.
*நீ என்னண்ணை சொல்லிறாய்? எங்களுக்கு ஒண்டும் விளங்கேல்லை."
அவர்கள் வேலுப்பிள்ளையைப் பார்த்துக் கேட்டனர்.
'நீங்கள் முந்தநாளையில் பொடியள் உங்களுக்கு என்ன தெரியும்? அந்தப் புலக்காணி விதானையாற்றையே?
பின்னை?”
"இது அவற்றை சீதனமோ, முதிசமோ? அவற்றை பரம்பரைச் சொத்தோ அல்லது அவர் காசு குடுத்துக் கொண்ட காணியோ?"
**அதென்ன விளையாட்டெண்டதைச் சொல்லண்ணை'
வேலாயுதமாக்களுக்கு விசயத்தை அறியத்துடிப்பு.
*பதினைஞ்சு இருவது வரியத்துக்கு முந்தி அவர் விதானை வேலை பாக்கேக்கை அந்தப் புலம் அவற்றை கைக்கு வந்தது.'
“என்ன மாதிரி???
*அது அந்த மடத்தடித் தில்லையம்பலத்தின்ரை H6υιο. அந்தாள் செத்துப் போச்சுது, பிள்ளைகுட்டியளில்லை.”
பிறகு?
"விதானையார் அந்த நொத்தாரிசு கந்தவனத்தைப் புடிசசுகள்ள உறுதி எழுதி ஆட்சி எடுத்த புலம்தான் அது."

Page 71
86 O ur soos
"அப்பிடியா சங்கதி?’’ "அதுமாத்திரமே? அந்தக் கோயில் கிணததடித் தோட்டம், பாரைப்புலம் பனங்காணி, அலரிப்புட்டி வயல்
அறுவது பரப்பு எல்லாம் கள்ள உறுதி முடிச்ச காணியள் தான்.'
"எங்களுக்கேனப்பா இந்தக் கதையளை? இது பெரிய இடத்து விசயம். பிறகு கரைச்சலிலை வந்து முடியும்.”
குமாரவேலு கூறினான்.
*இதிலை என்ன பிழை? உண்மையைத்தானே அவர் சொல்லிறார்."
கந்தையா கூறினான்.
'இந்தப் புலம் ஒண்டு போனாப்போலை விதானை யாருக்கு சீவிக்க வழியில்லையே? அந்தாள் குத்தகைக்குக் குடுத்திருக்கிற ஏழெட்டுக் கிணத்தடித் தோட்டங்கள் கிடக்குத்தானே? எங்களைப்போலை ஆக்களுக்கு என்ன கிடக்கு?"
விரக்தி மேலிடக் கூறினான் வைத்திலிங்கம். **இது மாத்திரமே? நெடுங்கேணியிலை நாப்பது ஏக்கர்.
கவுண்மேந்துக்குச் சொந்தமான காட்டைக் கள்ளமாய் வெட்டி எரிச்சு வயலாக்கி வைச்சிருக்கிறார்."
கந்தையா கூறினான். "அதோடை அவற்றை மகன்ரை பேரிலை விசுவமடு விலை ஏக்கர் கணக்கிலை மிளகாய்த் தோட்டமும் கிடக்கு. அந்தாளுக்கென்னப்பா குடுத்து வைச்சவன். அனுபவிக் கிறான். நாங்கள் இராப்பகலாய் உழைச்சாலும் சீவிக்க வழியில்லாமல் திண்டாடுறம்."
மனம் வெதும்பிக் கூறினான் வைத்திலிங்கம்.

நீர்வை பொன்னையன் O 137
* ஓ, மற்றவையின்ரை உழைப்பைச் சுறண்டினால் சுகசீவியம் நடத்தலாம் தான். உங்களைப்போலை ஏமாந்த சோணகிரியள் இருக்குமட்டும் விதானை யாரைப் போலை பெருச்சாளியள் இருப்பினை தான் ?
வேலாயுதத்தின் வார்த்தைகளில் வெறுப்புக் கலந்த ஆத்திரம்.
"நீ துவங்கீட்டியே? உனக்கு நெடுக ஆரோ டையேன் மோதவேணுமெண்ட ஆசை.”
வேலுப்பிள்ளை அண்ணை. எங்கடை ஆக்களோடை நான் மோதிறனே? மோதவேண்டிய ஆக்களோடை நான் கட்டாயம் மோதிக் கொண்டுதானிருப்பன்."
நீ எப்பிடி அழிஞ்சுபோனாலும் பறுவாயில்லை. ஆனா உன்னைப் பெத்து வளத்த அந்தக் கிழடுகளை கடைசி காலத்திலை கலங்க வையாதை"
* அவையளைப்போலை இந்த நாட்டிலை லட்சக்கணக் கான ஆக்கள் வாழ்வு முழுதும் கலங்கிக் கொண்டுதானிருக் கினை அண்ணை."
sir?'
**லட்சக்கணக்கான நாங்கள் எங்கடை ரத்தத்தை வேர்வையாக்கி உழைக்கிறம். ஆனா அடுத்த நேரம் என்ன சாப்பாடு எண்ட ஏக்கம் எங்கடை நெஞ்சிலை நிரந்திரமா யிருக்கு. இந்த நரக வாழ்க்கையை மாத்திறதுதான் எங்கட முதல் வேலை. நீங்கள் இதை எப்பத்தான் 2-603TUtt போறியளோ?
வெறுப்புடன் கூறிவிட்டுச் சென்றான் வேலாயுதம்,
கந்தப்புவிதானையார் கச்சேரிக்குப் போவதும் வருவது மாயிருந்தார்.
Luft-9

Page 72
138 () பாதை
பலனில்லை.
கடைசியாக தனது மருமகனைக கொண்டு சோம சுந்தரத்துக்கு ஒரு வரவேற்பு விழாவை நடத்தி முடித்தார்.
வரவேற்பு விழாவிலன்று இரவு அவருக்கு விதானையார் வீட்டில் ஒரு பெரிய விருந்து.
மூன்று நான்கு நாட்களின் பின் கந்தப்பு விதானை யாரின் அந்த தரிசு நிலத்தைச் சுற்றி முட்கம்பி வேலி ஒன்று தோன்றியது.
3cs 3 cos
*வேலாயுதம் இனி நான் என்னண்டு சீவிச்கிறது? பொலிடோல் குடிக்கிறதைவிட எனக்கு வேறை வழி யில்லை "
வந்ததும் வராததுமாக வேலுப்பிள்ளை பொருமிக் கொண்டு கூறினார்,
வெண்காயத்துக்குப் பாத்தி கட்டிக்கொண்டு நின்ற எல் லோரும் வேலுப்பிள்ளையைத் திகைப்புடன் பார்த்தனர்.
‘என்ன நடந்தது வேலுப்பிள்ளை அண்ணை?"
அமைதியாகக் கேட்டான் வேலாயுதம்,
‘என்ரை காணியை அரசாங்கம் எடுக்கப்போகுதாம்."
வேலாயுதத்தின் தெளிந்த முகத்தில் திடீரென இருள் ஓடிப் பரவியது.
*ஆர் சொன்னது?’
வைத்திலிங்கம் கேட்டான்.
*நான் இப்பதான் கச்சேரியாலை வா றன். அண்டைக்கு இஞ்சை வந்த அந்தத்துலைவான் தான் சொன்னான்."
வேலுப்பிள்ளையின் முகத்தில் நிச்சுவாசமான சவக்
566,

நீர்வை பொன்னையன் O 139
**அப்ப கந்தப்பு விதானையாற்றை சும்மா கிடக்கிற அந்தப் புலம்?”
கந்தையா கேட்டான்.
‘அதை எடுக்கேல்லையாம். என்ரை நிலம்தான் பறி போகப் போகுது. நானும் என்ரை பெண் சாதி பிள்ளையஞம் இனி என்ன செய்ய?”
அவருடைய வார்த்தைகளில் சூனியமயமான ஏக்க உணர்ச்சி.
'இது பெரிய அநியாயம். இதைக் கேக்கிறதுக்கு ஆக் களில்லையே?’
வைத்திலிங்கம் நிராதரவு உணர்ச்சியுடன் ரே, ட | ண்
*அண்ணை, எனக்கு அந்தச் சோடாத் தொழிற்சாலை வேலை போச்சுது. நான் பொலிடோல் குடிச் சனே ? ஏன் இண்டைக்கும் நாங்கள் சீவிக்கிறம் தானே?"
'நீங்கள் மூண்டு கட்டையள்தானே? ஏழுபிள்ளையஞம் நாங்களும் என்ன செய்ய?"
*அவங்கள் உன்ரை நிலத்தை எடுக்கப்போ)ாங்கள் எண்டு வைச்சுக்கொள்ளுவம். உங்கடை கையளையும் அவங் களாலை புடுங்கேலுமே?”
'நிலமில்லாமல் வெறும் கையள் கிடந்து என்ன செய்யும்?"
அந்தக் கையளாலை உழைச்சுத்தான் நீ அந்த நிலத்தை வாங்கினாய். அது உங்கடை உழைப்பாலை வந்தது. அதை அரசாங்கம் என்னண்டு எடுக்கேலும்?"
'ஏன் எடுக்கேலா தே?"
வல்லிபுரம் கேட்டான்.

Page 73
140 O பாதை
*அண்ணை, எங்கடை நாட்டிலை நூற்றுக்கணக்கான,
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைச்சிருக்கிற ஒரு சில ஆக்கள் இருக்கிறது உங்களுக்குத் தெரியுமே?” இருக்கினை யெண்டு கேள்விப்பட்டம்.' *"ஐம்பது ஏக்கருக்கு மேலை வைச்சிருக்கிறவையிட்டை கூடுதலாய்க் கிடக்கிற நிலத்தைத்தான் எடுக்கவேணு மெண்டு ஒரு சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்திருக்கு. உன்ரை நிலம் இரண்டு ஏக்கருமில்லையே? அதை எப்பிடி எடுக்கேலும்?"
"அப்ப இதுக்கு என்ன செய்யிறது?" வைத்திலிங்கம் ஆவலுடன் கேட்டான். "நாங்கள் இதை எதிர்த்துப் போராடவேணும்." துணிவாற்றலுடன் கூறினான் வேலாயுதம், "நீ அழிஞ்சதுமில்லாமல் எங்களையும் பலிகுடுக்கப் பாக்கிறியே?”
வல்லிபுரம் வேலாயுதத்தைக் கேட்டான். *வல்லிபுரம், நீ எப்பன் சும்மாயிரு. ஏன் அவசரப்படு கிறாய்?" கந்தையா அதட்டினான்.
'இது கவுண்மேந்து விசயம் மோனை, எங்களுக்கு ஏன் வீண் தொல்லையை?’
குமாரவேலு குறுக்கிட்டார். 'ஏன், வேலாயுதம் சொல்லுறதிலை நியாயம் இருக்குத் தானே. இந்த விளையாட்டுகளுக்கு இனி நாங்கள் இடங் குடுக்கேலாது."
கந்தையா உற்சாகத்துடன் கூறினான்.
"அப்பிடி எதிர்த்தால் அவங்கள் என்ரை நிலத்தை
எடுக்க மாட்டாங்கள் என்ன?”

நீர்வை பொன்னையன் O 141
நம்பிக்கைத் துளிர் விடக்கேட்டார் வேலுப்பிள்ளை.
"எப்பிடி எடுக்கேலும்?"
"அப்ப புதிசாய் வந்தவனை மாத்த வேணுமெண்டு நாங்கள் கவுண்மேந்துக்கு ஒரு பெட்டிசம் போடுவமே?'
வைத்திலிங்கம் கேட்டான்.
"நாங்கள் கேட்டாப்போலை கவுண்மேந்து அவனை மாத்திப் போடுமே???
'மாத்தாமல்??
*அண்ணை உங்களுக்கு விசயம் தெரியாது. எனக்கு இவனைப் பற்றி நல்ல அனுபவமிருக்கு ' ‘'நீ என்ன மோனை சொல்லுறாய்?" அவர்கள் ஒன்றும் புரியாமல் வேலாயுதத்தைப் பார்த் தனர்.
'முந்தி அவன் வவனிக்குளப்பகுதியிலை வேலை செய்தவன். அவன்ரை பேர் சோமசுந்தரம்."
'உனக்கென்னண்டு தெரியும்?"
குமாரவேலு கேட்டான். *நான் சோடாத் தொழிற்சாலையிலை வேலை செய் யேக்கை வவனிக்குளப்பக்கம் போறனான்."
* 6 sir?'"
“எங்கடை விவசாய சங்கக் கூட்டங்களுக்கு. அந்தப் பகுதியிலை அவன் செய்த அட்டகாசங்களைக் கேக்க வேணுமே?”
**அப்பிடி என்ன செய்தான்?" "அங்கை பெரிய பெரிய கமங்களைச் சில பெஞ்சனியர் மாரும் பெரிய அரசாங்க உத்தியோகத்தர் மாரும்தான் வைச்

Page 74
1 l 2 C. Lu T 6p5
சிருக்கினை. யாழ்ப்பாணத்திலை சீவிக்க வழியில்லாமல் போய்க் குடியேறின பெருவாரியான ஆக்கள் சின்னச் சின்னக் கமங்களைத்தான் வைச்சிருக்கினை."
* அதிலை என்ன தப்பு?” குமாரவேலு கேட்டான். *பெரிய கமக்காறரைத்தான் இவன் நெல்லுச் சங்கத் தலைவர், காரியதரிசியாய் வைக்க வழி செய்தான்.”
*படிச்ச, நாலு விசயம் தெரிஞ்சவங்கள் தானே தலை வர் காரியதரிசியாய் இருக்க வேணும்!”
வல்லிபுரம் இடைமறித்துக் கூறினான். "அவங்கள் சின்னக் கமக்காறற்றை நெல்லை வாங்கா மல் இழுத்தடிச்சாங்கள், நெல்லிலை பதர் கிடக்குதெண்டு கூடுதலாய்க் கழிச்சாங்கள். அதோடை சின்னக் கமக் காறற்றை நெல்லுக் காசைக்கூட நேரகாலத்தோடை குடாமல் கரைச்சல் படுத்தினாங்கள்." **இது பெரிய அநியாயமல்லோ." பொறுமையிழந்து கூறினான் வைத்திலிங்கம். *சின்னக் கமக்காறரிலை சிலர் போய் சோமசுந்தரத் திட்டை முறையிட்டினை, அவன் என்ன சொன்னான் தெரியுமே?”
*அப்பிடி அவன் என்ன சொன்னவன்?" 'சீவிக்க வழியில்லாமல் இஞ்சை குடியேறவந்த நீங்கள் இப்ப ஞாயம் பேசிறளவுக்கு வந்திட்டியளோ? மூச்சுக் காட்டாமல் போய் உங்கடை வேலையைப் பாருங்கோ. இல்லாட்டி உங்களை இந்த இடத்தாலை உடனை கலைச்சுப் போடுவன் எண்டான்.”
"ஆளைப்பார்த்தால் நல்லவன் மாதிரி தெரிஞ்சுது. இப்பவல்லோ விசயம் வெளிக்குது."

நீர்வை பொன்னையன் O 143
வைத்திலிங்கம் தெளிவு பெற்றவனாகக் கூறினான்.
"அதோடை நிண்டானே? பெரிய சுமக்காறருக்கு கிரமமாய் வேண்டியளவு தண்ணி குடுக்கிறியள். எங்களுக்கு அரை குறையாய்த்தான் இடைக்கிடை தண்ணி கிடைக்குது. சிலருக்கு அடியோடை கிடைக்கிறேல்லை. பயிரெல்லாம் லாடுது எண்டு சின்ன வயல்காறர் சொல்லிச்சினை. அதுக்கு அவன் சொன்னதை நினைக்க இப்பவும் எனக்கு ரத்தம் கொதிக்குது.'
* என்ன சொன்னான்?"
கந்தையா கேட்டான்.
"தண்ணி வேணுமெண்டால் கல்லைஎடுத்து உங்கடை முழங்காலிலை குத்துங்கோ. தண்ணி வரும் எண்டான்."
*உப்பிடித் திமிர் பிடிச்சவங்களுக்கு நல்ல பாடம் படிப்பிச்சாத்தான் சரிவரும்.'
கொதித்துக் கூறினான் வைத்திலிங்கம்,
பிறகு???
"சோடாத் தொழிற்சாலையிலை வேலை செய்யிற எங்கடை தொழிலாளியளின்ரை உதவியோடை ஒரு விவசாய சங்கத்தை அவை துவங்கிச்சினை. அந்தச் சங்கத்திலை பெரும் தொகையான சின்னக்கமக்காறர் சேர்ந்தினை'
*அதாலை அவையின்ரை பிரச்சனையள் எல்லாம் தீந்து போச்சே?*
வல்லிபுரம் தலையை ஆட்டிக் கொண்டு கேட்டான்.
*விவசாய சங்கம் போராட்டத்தைத் துவங்கிச்சுது, தண்ணி வரிகுடுக்க மறுத்தினை கமக்காறர். அவையள் நெல்லுச் சங்கத்துக்கு முன்னாலை மறியல் செய்தினை கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்திச்சுது விவசாய

Page 75
144 O பாதை
சங்கம். கடைசியாய்த்தான் அவன்ரை விசயம் அம்பலத்துக்கு வந்தது, அரசாங்கம் அவனை வேறை இடத்துக்கு மாத் திச்சுது.”*
*அதெல்லோ சரியான வேலை." சந்தோசத்துடன் அவர்கள் கூறினார்கள்.
'பிறகு அவன்ரை இடத்துக்கு வந்தவன் அவனையும் வெண்டவன். ஆனா சங்கம் அவனைச் சரியான இடத்திலை வைச்சதாலை அவனாலை ஒண்டும் செய்யேலாமல் போச்சுது."
அவங்களிலை சிலர் நல்லாக்களாயுமிருப்பினை தானே.” குமாரவேலு சொன்னான்.
**இதிலை நல்லவன் கூடாதவன் எண்ட பிரச்சனை யில்லை. பெரிய பெரிய உத்தியோகங்களிலை இருக்கிறவங்க ளிலை அநேகமான வங்கள் பெரிய குடும்பங்களிலையிருந்து தான் வந்தவங்கள். அவங்கள் தங்கடை ஆக்களின் ரை நன்மைக்காகத்தானே வேலை செய்வங்கள். எங்கடை வேலையை நாங்கள் தான் செய்யவேணும்."
"நாங்கள் இப்ப என்ன செய்ய வேணும்?" கந்தையா கேட்டான்.
"எங்கடை விவசாய சங்கத்திலை சேருங்கோ எண்டு
தான் முந்தி உங்களுக்கு எத்தினை தரம் சொன்னன். நீங்கள் கேட்டியளே?!?
"இப்பதானே எங்களுக்கு விசயம் தெரியுதுமோனை."
“ஐம்பது ஏக்கருக்கு மேலை நிலம் வைச்சிருக்கிற வங்கள் கூட தங்கடை நிலங்களைக் காப்பாத்திறத்துக்கு நாலஞ்சு பேராய்ச் சேந்து கொம்பனியளைத் துவங்கிறாங் கள். ஆனால் நாங்கள்..?"

நீர்வை பொன்னையன் O 145
‘எங்களுக்கு ஏனப்பா சங்கம்? பிறகு உதாலை வீண் குழபபங்களும் சண்டையஞம் வந்து.'
வல்லிபுரம் இழுத்துக் கூறினான். *வல்லிபுரம் உனக்கு விருப்பமில்லாட்டி நீ சும்மாயிரு." கந்தையா குறுக்கிட்டான் .
*இன்னும் உங்கடை மரமண்டையிலைஏறேல்லையே?" வேலாயுதம் ஆவேசம் வந்தவனைப்போலக் கத்தினான்.
அவர்கள் மெளனமாயிருந்தார்கள். 'நாங்கள் கஷ்டப்பட்டு மாடுபோலை உழைக்கிறம். வாழ்க்கையிலை என்ன சுகத்தைக் கண்டம்? பிறந்து சாகும் வரை கடன், நிலக்குத்தகைக்கும் வட்டிக் காசுக்கும் தான் நாங்கள் உழைச்கக் குடுக்கிறம். வேறை என்ன மிச்சத்தைக் கண்டம்?”
உணர்ச்சி பொங்கிப் பெருகும் அவனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள் அவர்கள்.
"ஆனால் வேலை செய்யாமலிருக்கிற கொஞ்சப்பேர் சுகபோகமாய் வாழுறாங்கள், விதானையாற்றை சீவியத்தை யும் எங்கடை சீவியத்தையும் ஒப்பிடடுப் பாருங்கோ. இது எப்பிடி நடக்குது?”
"அது அவை குடுத்துவைச்சவை. முற்பிறவியிலை." 'டே வல்லிபுரம் குறுக்கிடாமலிரடா. இல்லாட்டி.." வைத்திலிங்கம் கத்தினான்.
'அவங்கள் எங்கடை உழைப்பை உறிஞ்சித்தான் சுகபோகமாய் வாழுறாங்கள், அவங்கடை அந்த சுறண்டிற வர்க்கத்தை அழிச்சால்தான் எங்களுக்கு மீட்சி"
வேலாயுதத்தின் வார்த்தைகளில் ஆக்ரோஷம் கொதித்துப் பொங்கியது.

Page 76
14) O பாதை
*அதுக்கு நாங்கள் என்ன செய்யவேணும்?” விழிப்புற்றவர்களாய் அவர்கள் கேட்டனர். "எங்கடை உழைப்பை உறுஞ்சிறவங்களை நாங்கள்
அழிச்சொழிக்க வேணும். அதுக்கு உழைக்கிற நாங்கள் எல்லாரும் ஒண்டு சேந்து போராட வேணும்.’
“உதாலை கன தொல்லையள் வருமெண்டது உங்களுக்குத் தெரியுமே? அவனைப் போலை நீங்களும் அழியப்போறியளே???
“எடே வல்லியா வாயைப் பொத்திக் கொண்டிரடா. இல்லாட்டி என்ன நடக்குமெண்டு தெரியுமேடா'
வைத்திலிங்கம் கையை ஓங்கிக் கொண்டு கர்ச்சித்தான்,
சரி வேலாயுதன்ரை வழியிலையும் ஒருக்கால் போய்த் தான் பாப்பமே என்ன நடக்குதெண்டு.”
குமாரவேலு கூறினான்.
'நீங்கள் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன? நான் போறன்."
வல்லிபுரம் புறப்படுகின்றான்.
"ஒமடா போ. போய் விதானையிட்டைக் கோள் சொல்லி வாங்கித் தின்னடா"
கூறிவிட்டு வல்லிபுரம் போய்க்கொண்டிருக்கும் திசையை நோக்கிக் காறித்துப்பினான் வைத்திலிங்கம்.
'இவ்வளவு நாளும் நாங்கள் உன்னைச் சும்மா சண்டைக்காறன் எண்டுதான் நினைச்சம். இப்பவல்லோ உன்னைப் பற்றி எங்களுக்குத் தெரியுது."
வேலுப்பிள்ளை உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான்.

நீர்வை பொன்னையன் O 147
அவர்கள் எல்லோரும் வேலாயுதத்தின் கையை உறுதி யாகப் பிடித்தனர்.
o 5
cy O 3
'ஏன் வந்தினியள்?"
வேலுப்பிள்ளையாக்களை நிற்க வைத்துக் கொண்டே அதிகார தோரணையில் கேட்கின்றார் சோமசுந்தரம்.
‘'வேலுப்பிள்ளையின்ரைநில விசயமாய் வந்தனாங்கள்."
வைத்திலிங்கம் பணிவுடன் கூறுகின்றான்.
*கதிரையள் கிடக்கு, எங்களை இருக்கக்கூட சொல் லேல்லை. இவனுக்கு எவ்வளவு திமிர்.
கந்தையா ஆத்திரமடைந்து மனதுக்குள் குமுறு கின்றான்.
‘என்ன, வேலுப்பிள்ளையின்ரை காணி விசயமோ?"
'ஓமய்யா அதுபற்றிப் பேசத்தான் வந்தனாங்கள்.'
காத்திகேசு முன்னுக்கு வந்து அடக்கொடுக்கமாகக் கூறுகின்றான்,
‘விவசாய சங்கம் எங்களை அனுப்பியிருக்கு '
தலையை நிமிர்த்திக் கொண்டு சொல்கிறான் கந்தையா.
*ஓகோ இஞ்சையும் அது முளைச்சிட்டுதா?’’ கிண்டலாகக் கேட்கின்றார் சோமசுந்தரம்,
‘எங்ககையெல்லாம் பிரச்சினையள் இருக்கோ அங்கை
யெல்லாம் எங்கடை சங்கம் இருக்கும்.'
வேலாயுதம் அழுத்திக் கூறுகின்றான்.

Page 77
148 O பாதை
"சரி, அது எங்கையாவது கிடக்கட்டும். எனக்கென்ன? ஆனா வேலுப்பிள்ளையின்ரை நிலவிசயமாய் நான் எப்பவோ முடிவெடுத்திட்டன்."
"அந்த முடிவை சங்கம் ஏற்கேல்லை." வேலாயுதம் கூறுகின்றான்.
"அதைப் பற்றி எனக்குக் கவலையில் லை’ சோம சுந்தரம்.
"அது பிழையான முடிவு. அதை மாற்றத்தான் வேணும்.”
வேலயுதத்தின் வார்த்தைகளில் கண்டிப்பு. ‘அதை மாத்தச் சொல்லுறதுக்கு நீ ஆர்?" “இது எங்கடை பிரச்சினை. இதுக்கு நாங்களும் சேந்து தான் முடிவெடுக்க வேணும்."
'அந்த முடிவை நீங்களே எடுங்கோ. என்ரை முடிவை நான் எடுத்திட்டன்."
"அது பிழையான முடிவு." மீண்டும் கூறுகின்றான் வேலாயுதம். f'ssir?’’
“ஐம்பது ஏக்கருக்கு மேலை வைச்சிருக்கிறவையின்ரை கூடுதலான நிலத்தை எடுக்க வேணுமெண்டுதான் அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தது. வேலுப்பிள்ளை யிட்டை இரண்டு ஏக்கர் நிலம் கூட இல்லையே."
"ஓ எனக்கு சட்டப்படிய்பிக்கிறியளா?” நளினமாகக் கேட்கின்றார் சோமசுந்தரம், "ஏன் எங்களுக்குச் சட்டம் பற்றித் தெரியக் குடாதோ? தெரிஞ்சதை நாங்கள் சொல்லக்குடாதோ? சட்டம் உங்க ளுக்கு மட்டும்தான் சொந்தமோ?"

நீர்வை பொன்னையன் O 149
வேலாயுதத்தின் குரலில் கடுமை,
"என்ன, இந்த இடத்திலை வந்து இவ்வளவு துணி வாகக் கதைக்கிறானே?"
குமாரவேலு மனதுள் கூறிவியப்படைகின்றான்.
* அதை வேறை இடத்திலை போய்ச்சொல்லு. இது காரியாலயம், தெரியுதா?*
மேசையில் ஓங்கி அடித்துக் கொண்டு கத்துகின்றார் சோமசுந்தரம்.
* இது காரியாலயம் எண்டதை மறந்து நீதான் கத்திறாய்.”*
வேலாயுதத்தில் துடியான கண்கள் சோமசுந்தரத்தை வெறித்துப் பார்க்கின்றன,
அவனுடைய துணிவாற்றலைக் கண்ட வேலுப்பிள்ளை யாட்களுக்கு அவன் மேல் உறுதியான நம்பிக்கையேற்படு கின்றது.
‘'இப்ப வெளியாலை போறியளா? அல்லது கழுத்தைப் பிடிச்சு தள்ளச் சொல்லவா?"
அவர் உறுமுகின்றார்.
**இந்தக் காரியாலத்திலை உனக்கிருக்கிற உரிமை எங்களுக்குமிருக்கு."
‘உரிமை கொண்டாடுறியோ??
‘இந்த காரியாலயத்தை நடத்திறதுக்கும் உங்களைப் போலை ஆக்களுக்குச் சம்பளம் குடுக்கிறதுக்கும் நாங்களும் வரிப்பணம் குடுத்துக் கொண்டுதாணிருக்கிறம்,’
உ -களோடை அலட்டிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. போங்கோ வெளியாலை."

Page 78
150 O பாதை
"நாங்கள் வந்த விசயத்துக்கு முடிவெடுத்துக் கொண்டு தான் போவம்.”
கந்தையா உறுதியுடன் கூறுகின்றான்.
‘பியன் இவங்களைப் புடிச்சு வெளியாலை தள்ளு.”
அடித்தொண்டையில் கத்திக் கொண்டு அவர் மேசை மணியை அடிக்கின்றார்.
வேலாயுதத்தின் நெற்றிப் பொருத்திலுள்ள ரத்தக் குழாய்கள் புடைத்துத் துடிக்கின்றன.
'உனக்கு வவனிக்குளத்திலை நடந்ததை மறந் திட்டியா?"
‘போங்கோட வெளியாலை,'
"எங்களுக்கும் டே புடோ போடத் தெரியும்.’
கந்தையா கொதித்துக் கூறுகின்றான்.
"நாங்கள் போகாட்டி நீ என்ன செய்வாய்? எங்கடை தலையைச் சீவிப்போ டுவியோ??
வைத்திலிங்கம் கோபாவேசமாகக் கேட்கின்றான்.
*உன்னோடை கொஞ்சப்பேர் தான் நிப்பினை. ஆனால் எங்கடை பக்கத்திலை லட்சக்கணக்கான விவசாயி கள் நிக்கினை. இதை மறந்திடாதை.'
நெ ஞ்  ைச நிமித்திக்கொண்டு கூறுகின்றான் வேலாயுதம்.
*நீங்கள் வாருங்கோ. பிறகு பாத்துக்கொள்ளுவம்.'
வேலுப்பிள்ளை அவர்களைக் கூப்பிடுகின்றார்.
'இப்ப நாங்கள் போறம். ஆனால் உனக்கொண்டு சொல்லுறம். வேலுப்பிள்ளையின்ரை காணியை நீ எடுக் கேலுமெண்டால் எடுத்துப்பார் பார்ப்பம்.'
வேலாயுதத்தின் வார்த்தைகள் தெறித்துவிழுகின்றன.
அவனுடைய தர்மா வேசக்குரல் அந்தக் 35 at if யாலயம் முழுவதும் ஒலித்து எதிரொலிக்கின்றது.
அவர்கள் கெம்பீரமாகத் தலையை நிமித்திக்கொண்டு வெளியே வருகின்றனர்.
1974

10. நியதி
* கனகம்!**
என்ன?*
"என்ரை பொல்லையும் சால்வையையும் எடுத்துவ: '
சாய்மனக் கதிரையில் சரிந்திருந்த தனது தொந்தி வயிற்றை, கதிரைச் சங்டங்களில் இருகைகளையும் ஊன்றி
நிறுத்திக்கொண்டு, கனகம்மா கொடுத்த தேநீரை வாங்கிய படியே கூறுகின்றார் சிறாப்பர் கனகசபை,
'இப்ப எங்கை போகப் போறியள்?’’
'ஏன் உனக்குச் சொல்லவேணுமே?”
‘என்ன, எனக்குச்சொல்லாமல் வேறை ஆருக்குச் சொல்லப் போறாய்? உன்ரை கள்ளப்பெண்டாட்டிமா ருக்குச் சொல்லப்போறியா?’’
கனகம்மா கர்ச்சிக்கின்றாள்.
கோபத்தில் அவளுடைய முகம் விகாரமாகின்றது.
சிறாப்பருடைய உடலில் நடுக்கம்,
அவர் ஒடுங்குகின்றார்.
'இல்லை, கனகம்’
“என்ன இல்லை???

Page 79
36 לס6זונ_t () 152
வெட்டிப் பேசுகின்றாள் கனகம்.
* கனகம் இஞ்சை வாரும்’
கனிவாக அவர் அழைக்கின்றார்.
கனகம் அசையாமல் நிற்கின்றாள்.
கனகர் மெல்ல எழுந்து சென்று கனகம்மாவின் கையைப் பிடித்து அவளைத் தன்னுடன் அணைத்துக்கொண்டு வந்து, சாய்மணைக் கதிரை யின் கட்டத்தில் இருத்திவிட்டு, கதிரை யில்தான் உட்கார்ந்து அவளுடைய முதுகைத் தடவிக் கொடுக்கினறார்,
கனகம் கல்லாக இருக்கின்றாள்.
கனகம் ‘’
என்ன?” என்னோட கோவமா?"
கோவிக்காமல் என்ன செய்ய? எங்கை போறியள் எண்டு நான் கேட்க, உனக்குச் சொல்லவேணுமோ எண்டு நீர் சீறி விழுந்தால் நான் வேறை என்ன செய்ய?”
*இல்லை. கனகம், ஒரு மனிசன் வெளிக்கிடேக்கை சின்னப்பிள்ளை மாதிரி எங்கை போறாய் எண்டு கேக்கிறது சகுனத் தடையெண்டு உனக்குத் தெரியாதோ? இதை நான் உனக்கு எத்தினை நாள் சொல்லியிருக்கிறன்?”
சரி இனிச் சொல்லுங்கோவன்’ நான் ஒருக்கால் வயல் பக்கம் போட்டு வாறன்.’ "இப்ப ஏன் அங்கை?’’
*நாலஞ்சு மாதத்துக்கு முந்தி அந்தக்கோயில் காணிய ளுக்கை அந்த மரமேறியளின்ரை முப்பது குடும்பங்கள் வலோற்காரமாய்ப்போய் வீடு கட்டினது உனக்கும் தெரியும் தானே, அதுக்கு என்னாலையும் ஒண்டும் செய்யேலாமல்

நீர்வை பொன்னையன் O 153
போச்சு, நான் பொலிசிலை முறைப்பாடு செய்ய அவங் களும் கையை விரிச்சுப்போட்டாங்கள்'
*அதுக்கு வயலுக்கு இப்ப என்னத்துக்குப் போறியள்?" "அவங்கள் நெல்லு வெட்டப் போறாங்களாம். இன்னும். ஒருத்தனும் குத்தகைக்காசு தரேல்லை. அதுதான்'
'நீங்கள் முந்தி ஒருத்தனையும் காணேல்லையா? என்னவாம் அவங்கள்?'
*அவங்கள் ஒருத்தனும் குத்தகைக் காசு தர முடியா தாம். அவங்கள் எல்லாரையும் தூண்டி விடுகிறவன் அநத நல்லான்தான்'
*அவன் முந்தநாளைப் பொடியன் தானே? அவன் ரை சொல்லை ஆர் கேப்பினை?”
'இல்லை கனகம், அவன்தான் இந்தக் குழப், மெல் லாத்துக்கும் காரணம். அவன் கொம்யூனிஸ்ட் கா ) ரே " டை சேந்து தேத்தண்ணிக் கடையளைத் தங்களுக்கும் திறந்து விடவேணுமெண்டு முந்தி சாதிக் கலவரத்தைத் துவக் கினான். இப்ப குத்தகைக் காசை ஒருதரும் குடுக்கக்கூடா தெண்டு மறிக்கிறான்,'
"அந்த நாயை அடிச்சு முறிச்சுவிட்டால் எல்லாம் சரிவரும்!”
அவனை இப்பொண்டும் செய்ய ஏலாமல் கிடக்கு. எந்த நேரமும் அவனோடை பதினைஞ்சு இருவது இளசு கள் திரியுதுகள்'
‘அப்ப துவக்கத்திலையே நீங்கள் அவனைத்துலைத் துக்கட்டியிருக்க வேணும்.”
'அது தான் முந்தி சாதிக்கலவரம் நடக்கேக்கை அவனை வெடிவைச்சுத் துலைக்க வேணுமெண்டு எங்கடை ஆக்களிட்டை நான் எத்தினைதரம் சொன்னன். அவங்கள்

Page 80
154 O Lufr6og
கேட்டாங்களே? இப்ட அவன் இந்த ஆட்டமெல்லாம் ஆடுறான். ஒண்டுக்கும் அவன் பயப்பிடுறானில்லை. பொலிசோடை கூடச் சட்டம் பேசிறான். இப்பென்ன செய்ய?’’
*அப்ப தந்திரமாய்த் தான் அலுவல் பாக்கவேணும். அவங்களோடை நேரடியாய் மோதக் கூடாது. இப்பகாலம் மாறிப்போச்சு"
பெருமூர்சு விட்டுக்கொண்டு கூறுகின்றாள் கனகம். 'நான் என்ன அப்பிடி முட்டாளே? சாதிக்கலவரத் திலை நான் பட்டது காணாதே? அடிவயித்தைத் தடவித் தான் அலுவல் பார்க்க வேணும்"
"அப்பென்ன செய்யப்போறியள்?” 'அவன் ஜே. பி. சுந்தரன் அவங்கடை ஆள்தானே? அவனை நான் கையுக்கை வைச்சிருக்கிறன். அவனைக் கொண்டுதான் இவங்களை மடக்க வேணும்."
*அது தான் சரியான வழி, ஆனால் சுந்தரன் செய் வானோ எண்டதுதான் கேள்வி.”
*செய்யாமலென்ன? நான் எங்கடை கிராமச் சபைச் சேர்மனைப் பிடிச்சு அந்தக்கிழக்கு றோட்டுப் போடுற கொந்தறாத்து வேலையை எடுத்துத்தாறனெண்டு சுந்தர னுக்கு சொல்லியிருக்கிறான். இப்ப நான் காலாலை இட்டதை தலையாலை செய்வான்."
* அப்ப நல்லாப்போச்சு’
"அந்த மரமேறியள் தான் குத்தகைக் காசு தரேல்லை யெண்டு பாத்தால் எங்கடை ஆக்களும் இன்னும் தரேல்லை. நன்றிகெட்ட நாயன்."
* இதுக்கு என்ன செய்யப் போறியள்?"

நீர்வை பொன்னையன் () 155
"சேர்மனைக் கொண்டுதான் எங்கடை ஆக்களைச் சரிப்பண்ண வேணும்.”
"இனி நீங்கள் கவனமாய் அலுவல் பார்க்க வேணும். அவசரப்பட்டு சாதிக்கலவரத்திலை வீணாய்ப் போய் மாட்டுப்பட்டு, அநியாயமாய் ஆயிரக்கணக்கிலை காசைச் சிலவழிச் சதுதான் மிச்சம்."
*கனகம், நீ என்ன விசர்க்கதை பேசிறாய்? எனக்கு மானம்தான் பெரிசு. இந்தக் கீழ் சாதிகள் எங்களை மிஞ்ச நான் விடுவனே? எங்கடை பரம்பரையாய் வந்த சாதிக் கட்டுப்பாட்டை அவர்கள் உடைக்கேக்கை நான் சும்மா இருப்பனே? அப்பிடியெண்டால் என்ரை மானம் மரியா தை? நான் இந்த ஊரிலை சீவிக்கிறேல்லையோ?”
"கடைசியாய் இப்பென்னத்தைக் கண்டியள்? அவங் களுக்கு தேத்தண்ணிக் கடையை துறந்து விட்டா ச்சுத் தானே? உங்கடை மானத்தைக் காப்பாத்திப் போட்டி யளோ? இந்த ஊரை விட்டிட்டு ஓடி விடுவீங்களோ?"
'இதெல்லாம் அந்த கொம்யூனிஸ்ட் காறராலும் அவன் நல்லானாலும் வந்தது. அதோடை எங்கடை ஆக்களிலும் சில பேர் அவங்களோடை சேந்ததாலை வந்தவினை."
"இனிமேலாவது நீங்கள் முன்னெச்சரிக்கையாயிருக்க வேணும்."
*சரி போனது போகட்டும். இனி வாறதைப் பாப்பம்." "உவன் செல்லையன் எங்கை?"
ஆட்டுக்குக் குழைவெட்டிக் கொண்டு நிண்டான்*
செல்லையா. எடே, செல்லையா..." கனகம்மா கதிரைச் சட்டத்திலிருந்துஎழுகின்றாள்.
என்ன ஐயா!"

Page 81
156 O பாதை
செல்லையன் குரல் கொடுத்துக் கொண்டு ஓடி வருகின் றான்.
‘'நீ கெதியாய் ஓடிப்போய் எங்கடை சேர்மன் மார்க்கண் டரையும் அவன் அந்த ஜே. பி. சுந்தரனையும், வயல் பக்கம் நான் உடனை வரட்டாமெண்டு சொல்லி, கையோடை கூட்டிக்கொண்டா.”
செல்லையன் ஒடுகின்றான்.
"அப்பனே, சிதம்பர நடராசா”
கூறிக்கொண்டு எழுந்து புறப்படுகின்றார் சிறாப்பர்
●6ö『559F50DL」
கையில் வெள்ளிப் பூண் போட்ட பொல்லு மார்பில் நெடுங்குறுக்காக உத்தரியமாய் பரமாஸ் சால்வை. நெற்றி யில் திருநீற்றுப்பட்டைக்கு மத்தியில் பெரிய சந்தனப் பொட்டு. செருப்பு கிரீச்சிட்டு ஒலியைக் கிளப்ப, சிறாப்பர் கனகசபை வயலை நோக்கி ராசநடை போட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்.
சிறாப்பருக்கு அறுபதுவயதுக்கு மேலிருக்கும். இப்பொழு தும், தான் இருப்பத்தைந்து வயதுக் குமரனென்ற நினைப்பு அவருக்கு.
அவர் அந்தப் பகுதியில் பெரும்புள்ளி. சிறாப்பரில்லா மல் எந்த ஒரு விசயமும் நடக்காது.
அந்த ஊரிலுள்ள கோயில் மணியகாரரும் சிறTப்பர் தான்.
சிறாப்பர் என்பது கனகசபையின் பட்டப் பெயரே யொழிய அவர் என்றுமே சிறாப்பர் உத்தியோகம் பார்த்த தில்லை.
அவருக்கெதுவித தொழிலுமில்லை, வேலை செய்ய வேண்டுமென்ற அவசியமும் அவருக்கில்லை. அவருடைய

நீர்வை பொன்னையன் O 157
பரம்பரைச் சொத்துகளிலிருந்தும் மனைவியின் சீதனக்காணி களிலிருந்தும் வருகின்ற வருமானத்திலிருந்து சுகசீவியம் நடத்துகின்றார்.
அந்த ஊரிலே உடையார் சின்னத்தம்பி வட்டிப்பணத்தி லும், மற்றவர்களை ஏமாற்றி மோசடி செய்தும் பெரும் தொகையான காணிகளை வாங்கி வைத்தார். அவருக்கு பிள்ளை குட்டிகளில்லை. உடையார் இறக்கும்பொழுது முழுக் காணிகளையும் இந்தியாவிலுள்ள சிதம்பரக் கோயி லுக்கு தருமசாதனமாக எழுதி விட்டார்.
சிறாப்பர் கனகசபைக்கும் உடையார் சின்னத்தம்பிக்கும் எதுவித தொடர்புமில்லை. ஆனால் உடையாருடைய அன்பு மனைவி விசாலாட்சிக்கும் சிறாப்பர் கனகசபைக்கும் ஏற் பட்ட கள்ள நட்பே, கோயில் காணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பைக் கனகசபைக்கு கொண்டு வந்து விட்டது.
இந்தியாவிலுள்ள கோவில்களின் பேரில் இலங்கையில் பல இடங்களில் பெருந்தொகையான தர்மசாதனக் காணி களிருக்கின்றன. இக்காணிகளை சிறாப்பர் கனகசபை போன்ற பெரிய மனிதர்கள்' மேற்பார்வை செய்து வரு கின்ற வருமானத்தில் ஒரு பகுதியை இந்தியாவிலுள்ள கோயில் தர்மகர்த்தாக்களுக்கு அனுப்புகின்றார்கள். மிகுதியைத் தாங்கள் அனுபவிக்கின்றார்கள்.
பனஞ்சோலையைப் பிளந்து செல்லும் ஒன்றையடிப் பாதை வழியே வயலை நோக்கி நடந்து கொண்டிருக்கின் றார், சிறாப்பர்.
இந்த பாதை வழியே முன்பு அவர் மிடுக்குடன் செல் வார். அவரைக் கண்டவர்கள் எல்லோரும் தங்கள் தோள் களால் சால்வையை எடுத்துக் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு, ஒதுங்கி நின்று, சிறாப்பருக்கு வழிவிட்டு அவர் கள் போன பின்புதான் செல்வார்கள் ஆனால் இன்று அதே

Page 82
158 O பாதை
ஒற்றையடிப்பாதையில் சிறாப்பர் பயந்து பயந்து நடந்து கொண்டிருக்கின்றார்.
அந்த ஊரின் மேற்கெல்லைக் கோடியில்தான் வயல் வெளி இருக்கின்றது.
மலைப்பாம்பு போல வளைந்து செல்கின்ற அந்த வயல்வெளி இரண்டு ஊர்களுக்கிடையில் இருக்கின்றது.
வயல்வெளியின் எல்லைக்கோட்டில் பனைமரங்களும் தென்னை மரங்களும் குத்திட்டு நிற்கின்றன.
குறுக்கு நெடுக்காகச் செல்கின்ற வரம்புகள் வயல் வெளியைத் துண்டு எண்டாக வெட்டிப் பிளந்திருக்கின்றன.
வயல்வெளியின் மத்தியில் ஒரு பரவைக்குளம். மாரி காலத்தில்தான் நிரம்பி வழிந்து, நெற்பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வழி செய்யும். வானம் பொய்த்தால் நெற் செய்கை யில்லை வருடத்தில் ஒரே ஒரு போகம் தான் இந்த வயல் களில் நெற்செய்கை.
கோடை காலத்தில் சிறு பயிர்கள் செய்வதற்கு உதவு கின்ற பல கிணறுகள் அந்த வயல் வெளியில் சிதறிக்கிடக் கின்றன.
பொழுது சரிந்து கொண்டிருக்கின்றது
மஞ்சள்நிற மாலை வெய்யில் வயல் வெளியைப் பொன் நிறமாக்கிக் கொண்டிருக்கின்றது.
காகக்கூட்டங்கள் மேற்கு வானத்தில் நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன.
வானத்தின் அடிவயிறு மெதுவாகச் சிவந்து கொண் டிருக்கின்றன.
செழித்து வளர்ந்து முற்றித் தலையைத் தொங்க விட்டுக்கொண்டிருக்கும் நெற்கதிர்கள் பாரம் தாங்காது மென்காற்றில் ஆடி அசைந்துகொண்டிருக்கின்றன.

நீர்வை பொன்னையன் O 159
வயல் வரம்பில் நின்றுகொண்டிருக்கின்றாள் அன்னம். அவளுக்கு இருபது வயதிருக்கும்.
பருவத்தில் பொங்கிப் பூரித்து மதாளித்து வளர்ந்து உழைப்பால் உருண்டு திரண்ட அவளுடைய உடலை இளம் தென்றல் கட்டித் தழுவி முத்தமிடுகின்றது.
காற்றிலே பறந்து கொண்டிருக்கின்ற தனது சுருண்ட தலைமயிரை ஒதுக்கி விட்டு மேற்குத் திசையை நோக்கிய படியே அவள் எதையோ எதிர்பார்த்துக் கொண்டு நிற்கின்றாள்.
அளுடைய கனவு காணும் கண்களில் ஒளிபொங்கிப் பிரவகித்துக் கொண்டிக்கின்றது.
கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற அவளுடைய செவ்விதழ்கள் மலர்ந்து முறுவலிக்கின்றன.
‘உழைப்பில் உறுதியான உடற்கட்டு, ஒளிவிடும் கூர்மை யான கண்கள், சுருண்டு கறுத்த அடர்த்தியான தலைமயிர், வாலிபக் கெம்பீரம், தலை வணங்காத உறுதிமிக்க நடை." நல்லதம்பியின் வனப்பான தோற்றம் அன்னத்தின் மனக்கண்ணில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக் கின்றது.
நல்லதம்பி அன்னத்தின் உயிர். அவள் என்றோ தன்னை அவனுக்கு அர்ப்பணித்து விட்டாள்.
நல்லதம்பியின் பெயரைக் கேட்டதும் சாதி வெறி யருக்குக் குலை நடுக்கம்.
அந்த ஊரிலுள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அவனைத் தமது உயிராக மதிக்கின்றார்கள்,
நல்லதம்பி நல்ல உழைப்பாளி. தனது இரண்டு கைகளையும் நம்பி உயிர் வாழ்பவன் அவன்.

Page 83
160 O பாதை
சிறு வயதிலிருந்து வறுமையிலும் சாதிக் கொடுமையிலும் தானும் தன்னுடைய சமூகத்தவரும் அனுபவித்த துன்ப துயரங்களை நினைத்து அவன் அடிக்கடி எரிமலையாக மாறுவான். இக்கொடுமைகளுக்கு எதிராக அவன் பல தடவைகள் போராடித் தோல்வி கண்டிருக்கின்றான்.
இரண்டு வருடங்களுக்கு முன் தனது சமூகத்தினரைத் திரட்டி அவன் உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்தான்.
சாதி வெறியர்கள் இந்தப் போராட்டத்தைச் சாதிக்க கலவரமாக மாற்றினார்கள்.
உரிமைக்காகப் போராடிய மக்களின் வயல்களிலுள்ள பயிர்களெல்லாம் சாதி வெறியர்களால் அழித்து நாசமாக்கப் LU L-sør.
மண்ணை நம்பி வாழ்ந்த மண்மக்களின் வாழ்க்கையில் வறுமை; வெறுமை.
அநேக வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பலருடைய உயிர்கள் சாதிவெறியர்களின் ரத்தப்பசிக்கு இரையாக்கப்பட்டன
ஆனால் போராளிகள் நிலைகுலையவில்லை. நல்லதம்பியை ஒழித்துக்கட்டிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று சாதி வெறியர்கள் நினைத்தார்கள். அவனைக் கொல்லப் பல தடவைகள் முயன்றார்கள். ஆனால் முடிய வில்லை.
நல்லதம்பி மீது கொலையாளியெனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டது.
பொலீசார் அவனை கைது செய்ய முயன்றனர். அவன் தலைமறைவாகி விட்டான். ஆறு மாதங்களாகத் தலைமறைவாக இருந்து அவன் போராட்டத்தை நடத்தினான்.

நீர்வை பொன்னையன் O 161
நல்லதம்பி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ஒரு வருடத்துக்கு மேலாக இருந்தான்.
அவன் சிறையிலிருந்த காலத்தில் அவனுடைய தகப்பனையும், தம்பியையும், சகோதரியின் கணவனையும் சாதி வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள்.
எல்லாத் துன்பத்தையும் அவனுடைய இதயம் சுமந்து கொண்டு தானிருந்தது. ஆனால் அவனுடைய உறுதி தளரவில்லை.
விளக்கமறியலில் இருக்கும் நல்லதம்பி சிறைக் கைதி களின் உரிமைக்காகப் பல போராட்டங்களை நடத்தினான். கைதிகளதும் சிறை ஊழியர்களதும் இதயங்களில் அவன் நிலைத்துவிட்டான்.
உரிமைப் போராட்டப் பாடல்களை நல்லதம்பி உணர்ச்சி யுடன் பாடும்பொழுது கைதிகளின் இதயங்கள் குமுறிக் கொந்தளிக்கும்.
சிறையிலிருந்து வெளிவந்த அவனுடைய தலைமையில் போராட்டத் தீயில் அடக்கி ஒடுக்கப்பட்டி மக்கள் தங்க ளுடைய உரிமைகளை வென்றெடுத்தார்கள்.
உரிமைப் போராட்டத்தில் நல்லதம்பிக்கு அன்னம் உத்வேகமளித்ததுடன் தானும் சேர்ந்து போராடினாள்.
நல்லதம்பியினுடைய வயலுக்கும் வேலுப்பிள்ளை யினுடைய வயலுக்குமிடையிலுள்ள பெரிய வரம்பினடியில் மாட்டுக்குப் புல்லறுத்துத் கொண்டிருக்கின்றாள் அன்னம்.
புல்லறுத்துக் கொண்டிருக்கும் அவளுடைய மனம் நல்லதம்பியை நினைத்து மயங்கிக் கிடக்கின்றது
'அன்னம்."
நல்லதம்பியின் குரல் காற்றில் மிதந்து வருகின்றது.

Page 84
62 O J T 605
சொப்பனாவத்தையிலிருந்த அன்னத்தின் செவிகளில் நல்லதம்பியின் குரல் வந்து விழுகின்றது. அவள் தன்னை மறந்த மோன நிலையிலிருக்கின்றாள்.
"அன்னம்’
மீண்டும் குரல்.
அவள் திடுக்கின்றாள்.
தன் நிலைக்கு வந்த அவள் அக்குரலைக் கேட்டும் கேளாதவளாகப் பாவனை செய்கின்றாள்.
அவளுடைய செல்லத்தனம் அவனுக்கு நன்றாகத் தெரியும்.
நல்லதம்பி வரம்பில் குந்தி இருக்கின்றான். அவனுடைய கண்களில் குறும்புத்தனம்.
திடீரென அன்னத்தின் காதைப் பிடித்து முறுக்கு கின்றான்
'sid D.T...''
அன்னம் செல்லமாகச் சிணுங்குகின்றாள்.
* கள்ளப்பெட்டை, நான் கூப்பிட்டது உனக்குக் கேட்கேல்லையா?”
* கேட்டால் என்னவாம்?”
* ஏன் பேசாமலிருந்தாய்?”
* பேசாவிட்டால்?"
'இது தான்! அவளுடைய கன்னத்தைக் கிள்ளுகின்றான்.
முறுவலித்தபடியே நல்லதம்பியை அவள் ஒரு மாதிரி யாகப் பார்க்கின்றாள்.

நீர்வை பொன்னையன் O 163
அவர்களுடைய விழிகள் ஒன்றை ஒன்று கட்டித தழுவி, போதையில் மயங்குகின்றன.
நல்லதம்பியினுடைய கண்களிலிருந்து வந்த ஒளிப் பிரவாகத்துக்கு அன்னத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவளுடைய முகம் கன்றிச் சிவக்கின்றது. தலை கவிழ்கின்றது.
"கூடிய கெதியிலை உதெல்லாத்துக்கும் வட்டியும் முதலுமாய் கணக்குத் தீத்துத்தாறன்.'
அன்னத்தின் முகத்தை நிமிர்த்தியபடியே நல்லதம்பி கூறுகின்றான்.
*ஓ அப்பிடியும் ஒரு எண்ணம்தான் எங்கை பாப்பம்?" *இருந்து பாரன்” திடீரென அவனுடைய கைவிரலை அவள் கடிக் கின்றாள்.
ʻʻgp6I...ʼʼ
நல்லதம்பி சிணுங்குகின்றான். இருவரும் சிரிக்கின்றனர் 'அட, நான் ஒண்டை மறந்திட்டன்."
6.556
“சிறாப்பன் இப்ப இஞ்சை வருவான் எண்டு அவன்ரை வீட்டிலை வேலை செய்யிற செல்லையா சொல்லிச்சுது."
"ஏனாம் இஞ்சை வாறான்?" ""குத்தகைக் காசு விசயமாய்பேச.” *அவன் ஏன் வீணாய் உலையிறான்? உதெல்லாம் நடக்கிற விசயமோ?*
‘எங்கடை நெல்லை வெட்டவிடாமல் மறிச்சால்?"

Page 85
1 64 O LITT 6o5
'எங்கை ஏலுமெண்டால் அவன் மறிச்சுப் பாக்கட்டன் பாப்பம்."
'அவன் தன்ரை ஆக்களோடை பொலிசின்ரை உதவி யோடை வந்து நெல்லை வெட்டினால் என்ன செய்வியள்?” 'அந்த கோயில் காணிக்கை நாங்கள் குடியேறேக்கை அவன் மறிச்சுத்தான் பாத்தவன் கடைசியாய் என்னத்தைச் செய்தான்?"
*அது சும்மா கிடந்த காணியள். இது அப்பிடியில்லை." *அப்படியெண்டால் முதலிலை அவங்கள் என்னைப் பினமாக்கிப்போட்டுத்தான் எங்கடை நெல்லை வெட்ட வேணும்.'
"என்ன, என்ரை ராசாவைத்தெ7 ட நான் சும்மா விட்டிருப்பனே?”
“உம்மைத் தொடுகின்றவன்ரை கையை இந்தக்கத்தி உடனே துண்டாடும்.”
கோயா வேசமாகக் கூறுகின்றாள் அவள். "அங்கே பார் சிறாப்பன் வாறான்!" சிறாப்பர் கனகசபை வந்துகொண்டிருக்கும் திசையைக் காட்டுகின்றாள் அன்னம்.
நல்லதம்பி எழுந்து நிற்கின்றான். நல்லதம்பியினுடைய வயலை நோக்கி வந்துகொண் டிருந்த சிறாப்பர் அவனைக் கண்டதும் வேலுப்பிள்ளையின் வயல் பக்கம் செல்கின்றார்.
சிறாப்பர் வருவதைக் கண்ட விவசாயிகள் அனைவரும் நல்லதம்பியிடம் செல்கின்றனர்.
வேறு வழியின்றி சிறாப்பர் கனகசபை நல்லதம்பியின்
வயலுக்கு வருகின்றார். சிறிது தூரத்தில் ஜே பி. சுந்தரம் வருவதைச் சிறாப்டர் காண்கின்றார்

நீர்வை பொன்னையன் C 165
இரட்டை நாடித் தேகம், நரைத்த தலை, கதர் வேட்டி சால்வை. நெற்றியில் சந்தனப்பொட்டு, ஜே.பி. என்ற தோரணையில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவர் வந்து கொண்டிருக்கின்றார்.
சுந்தரம் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சமுகத்தைச் சேர்ந்தவரெண்டாலும் அவரிடமிருந்து பணமும் பெரிய
மனிதர்களுடன் அவருக்கிருந்த தொடர்களும் அவருக்கு ஜே. பி. பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தன.
முன்னொரு காலத்தில் இரண்டு மூன்று தொழிலாளர் களை வைத்து, கள்ளுச்சீவி ஒரு கள்ளுக்கொட்டிலை இந்த ஊரில் நடத்தினார் சுந்தரம்.
கையில் காசு பிரளத் தொடங்கியவுடன் சில பெரிய மனிதர்களைப்’ பிடித்து கள்ளுப் 'பெர்மிட்' எடுத்து யாழ்ப்பாண நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ஒரு கள்ளுக் கொட்டிலை நடத்தத் தொடங்கினார் அவர்
இப்பொழுது சுந்தரத்தின் கீழ் பதினைந்து இந்திய சிவல் தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள்.
இப்பொழுது அவர் பிரபல கொத்தராத்துக்காரராகவும் வந்துவிட்டார்
அவரிடம் ஒரு புதிய மோட்டாருமிருக்கின்றது.
உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கு முன் அவருடைய சமூகத்தவர்கள் மத்தியில் சுந்தரத்துக்கு மதிப்பிருந்தது.
போராட்டம் தொடங்கியவுடன் சுந்தரம் யாழ்ப்பாணத்தி லுள்ள தனது உறவினரின் வீட்டிற்குத் தப்பிச் சென்று விட்டார். அங்கிருந்து கொண்டு பெரிய மனிதர்களுடன் சேர்ந்து போராட்டத்தை முறியடிக்க மறைமுகமாக வேலை செய்தார் அவர். அத்துடன் ‘சமாதானப் பேச்சு வார்த்தை" என்று கூறிக்கொண்டு போராடிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களைக் காட்டிக் கொ ப்ெபதற்கு, பொலீஸ் ஜீப்பி லும் அவர் பல தடவைகள் பவனி வந்திருக்கின்றார்.

Page 86
166 O பாதை
வயலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சுந்தரம், நல்லதம்பியின் வயலில் விவசாயிகள் கூடி நிற்பதைக் காண்கின்றார்.
"நான் இப்ப அங்கை போ கவா, விடவா?"
நான் போக, அவங்க ஏதாவது கேவலமாய்ப் பேசி னால்."
‘போகா விட்டால் அந்தக் கிழக்கு றோட்டு கொந்த றாத்து வேலை..?’
"அவங்கள் இப்ப எல்லாத்தையும் மறந்திருப்பாங்கள். ஒரு மாதிரித் தந்திரமாய்க் கதைச்சுப் பாப்பம் " தயங்கித் தயங்கி, சுந்தரம் செல்கின்றார். நல்லதம்பி நிற்பது அவருடைய கண்ணில் படுகின்றது. "இந்த நாசமாய் போவான்தான் எல்லாத்தையும் கெடுக்கின்றான்."
*இவனை மட்டம் தட்டினால் எல்லாம் சரி வரும். என்ரை ஆக்கள் என்னை அப்படிக் கைவிடப் போகினையே? நான் நினைக்கேல்லை. போய்ப் பாப்பம்."
சுந்தரம் நல்லதம்பியின் வயலுக்கு செல்கின்றார். அவர் வந்துகொண்டிருப்பதைக் கண்ட சிறாப்பருக்குத் தென்பு.
"என்ன சங்கதி, இண்டைக்கு இந்தப் பக்கம் வந்திருக் கிறியள்?”
வயல் வரம்பில் வந்து நின்ற சிறாப்பரை நல்லதம்பி கேட்கின்றான்.
கையில் புல்லு அறுக்கும் கத்தியுடன் அன்னம் நிற்ப தைக் கண்டவுடனே, சாதிக் கலவரத்தின்போது ஒரு நாள் உலக்கையும் கையுமாக அன்னத்தைக் கண்டது சிறாப்ப ருடைய நினைவுக்கு வருகின்றது.

நீர்வை பொன்னையன் O 167
"இவன் நல்லானையும் மிஞ்சி விடுவன்போலை கிடக்கு."
எப்படி விசயத்தைத் துவங்குவது என்று தெரியாமல் சிறாப்பர் சிறிது மெளனமாக நிற்கின்றார்.
“என்ன சங்கதி, ஏன் பேசாமல் நிக்கிறாய்?"
"குத்தகைக் காசு விசயமாய்க் கதைக்கலாமெண்டு வந்தனான்”
தயங்கிக்கொண்டு கூறுகின்றார் சிறாப்பர்.
"என்ன, குத்தகைக் காசோ?*
நல்லதம்பியின் வார்த்தையில் ஏளனம்.
அவனுடன் நிற்கின்ற மண்மக்களின் முகத்தில் வெறுப்பு கண்களில் கோபத் தீ.
"நீங்கள் செய்யிற வயல் காணியளின்ரை குத்தகை."
**இது ஆற்றை காணியள்?’’
"சிதம்பரக் கோயில் காணியள்."
சிறாப்பர் இழுக்கின்றார்.
சுந்தரம் அந்த இடத்துக்கு வந்து விட்டார்.
சேர்மன் மார்க்கண்டரும் கிட்டடியில் வந்து கொண்டிருக் கிறார்.
"அது உன்னுடைய வயலோ?”
அன்னம் சீறுகினறாள்.
*அன்னம், நீ பேசாமலிரு”
நல்லதம்பி அதட்டுகிறான்.
*வீண் சச்சரவில்லாமல் பிரச்சினையைச் சமாதான மாய்த் தீர்ப்பம்.'
சேர்மன் குறுக்கிடுகிறார்.

Page 87
168 () பாதை
"ஒ சாதிக்கலவரத்திலை நீ செய்ததை நாங்கள் மறக் கேல்லை. இப்ப ஆருக்காகப் பேச வந்திருக்கிறாய் எண்டும் எங்களுக்குத் தெரியும். இந்த விசயத்திலை நீ தலை யிடாதை. போய் வேறை வேலையைப் 山T行。””
வேலுப்பிள்ளை சேர்மனை மடக்குகின்றான்.
சேர்மனுக்குக் கோபம் பீறிடுகின்றது.
‘தலையிட்டால் என்ன செய்வியள்?”
வீணாய் மரியாதை கெடுவாய்.”
வேலுப்பிள்ளை ஆள்காட்டி விரலைக்காட்டிக் கொண்டு கர்ஜிக்கின்றான்.
* தம்பி வேலுப்பிள்ளை பெரியவையை மதியாமல் பேசாதை ’’
சுந்தரம் கூறுகின்றார்.
*ஒ நீரும் மற்றத்தரம் பெரியவையஞக்காகப் பேச வந்திட்டீரோ? இப்ப நீரும் பெதிய மனிசன் தானே?*
சுந்தரத்தைப் பார்த்து நல்லதம்பி கேலியுடன் கேட்டான்.
*சிறிது, பெரிசு பிறகு பாப்பம். இப்ப பிரச்சினைக்கு வருவம்.”
சுந்தரம் கதையை மாற்ற முயற்சிக்கின்றார்.
* என்ன பிரச்சினை?”
வேலுப்பிள்ளை வெட்டிக்கேட்கின்றான்.
குத்தகைக் காசு.”
"இதிலை என்ன பிரச்சினை கிடக்கு?’
'நீங்கள் ஒருதரும் இன்னும் குத்தகைக் காசு குடுக் கேல்லையாம் அதுதான் சிறாப்பர் ஐயாவின்ரகுத்தகையைக் குடுத்தால் எல்லாம் தீந்துபோம்.'

நீர்வை பொன்னையன் O 169
'ஏன் இந்தக் காணியள் அவற்றையோ?”
*வேறை ஆற்றை?"
சிறாப்பர் திருப்பிக் கேட்கின்றார். *உன்ரை எண்டதுக்கு என்ன அத்தாட்சி? உன்னட்டை உறுதி கிடக்கோ?”
*இது கோயில் காணியள், இவ்வளவு காலமும் நான்
தானே மேல் பார்வை பாத்து வந்தன்." எந்த கோயிலின்ரை காணியள்?"
"ஏன் இந்தியா விலையுள்ள சிதம்பரக் கே! யிலின் ரை காணியள்தான்.”
*இந்தியாவிலை கோயில், இலங்கையிலை கா ofயள், இந்தக் காணியளின்ரை குத்தகைக் காசை நீ வாங்கி அங்கை அனுப்புகிறியா? அல்லது நீ அதைப் பசியாறு கிறீயா? இது சரிதானா?
நல்லதம்பி கேட்டான்.
"ஏன் இதிலை என்ன பிழை?"
* கோயில் சொத்தை நீ அனுபவிக்கலாமா?."
சிறாப்பருக்கு என்ன பதில் கூறுவதென்று தெரிய வில்லை.
"எங்கடையாக்கள் அந்த கோயில் காணியளுக்கை அஞ்சாறு மாதத்துக்கு முந்தி குடியேறினார்கள். எங்கடை தலையை நீயும் உன்ரை ஆக்களும் சீவிப்போட்டியளே? சிறாப்பர் வெலவெலத்துப்போய் நிற்கின்றார்.
"ஒய் சிறாப்பர் இந்தக் காணியள் உன்ரையுமில்லை. கோயிலுக்கும் சொந்தமில்லை."
t ፡ú -–11

Page 88
170 O பாதை
நல்லதம்பி அழுத்திக் கூறுகின்றான்.
o osrsör?”
**இந்த காணிள்ே உடையார் சின்னத்தம்பியின்ரை, ஒரு காலத்திலை கோயிலுக்கெண்டு எழுதி வைச் சது உண்மைதான்.”
"இதை நான்தானே மேல் பார்வைபாத்து வாறன்."
அது சரிதான். ஆனால் இப்ப இந்தக் காணியள் எங்களுக்கு சொந்தம்."
எப்படி?"
““@画芦 ாணியளின்ரை பெறுமதிக்கு மேலாலை நாங்கள் குத்தகைக் காசு குடுத்திட்டம். இனி இந்தர்காணி யளிலை உனக்கு எந்த உரிமையுமில்லை தெரியுதா?”
*தம்பி நல்லதம்பி, கோயில் விசயம் பொல்லாதது. இதிலை ஒரு சதம் எடுத்தாலும் பெரிய பாவம். கடவுள்
விப்பார். வீண் குழப்படி செய்யாதைமோனை."
சுந்தரம் குழைந்து பேசுகின்றார்.
*ஒய் சுந்தரம் பாவம் புண்ணியம், கடவுள் கோபிப்பர் எண்டு எங்களுக்குப் போதிக்க உனக்கு என்ன தகுதி யிருக்கு?”
கோபத்துடன் கேட்கிறான் நல்ல தம்பி.
ஏன் மோனை கோவிக்கிறாய்?"
“路 செய்யிறதெல்லாம் ፴፡ f]Guህ ጠ ?”
t is 65T நான் என்ன பிழை செய்யிறன்?"
சசுந்தரம் எங்களுக்கு ஒண்டும் தெரியாதெண்டு நினையாதை. Lன்னட்டை வேலை செய்யிற அந்த இந்தியாக்காறச் ஓவல் தொழிலாளியளுக்கு நீ ஒழுங்காய்ச் சம்பளம் குடுக்கிறியா?

நீர்வை பொன்னையன் O 171
‘நான் குடுக்கிறேல்லை எண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
‘எங்களுக்கு எல்லாம் தெரியும். எல்லாச் சம்பளத்தை யும் சேத்து ஒரு வரியத்துக்கு ஒருக்கால் மொத்தமாய்த் தாறன் எண்டு சொல்லிப்போட்டு, கைச் சிலவுக்கு இரண் டொரு ரூபாயைக் குடுப்பாய் நீ. வரியம் முடிய அவர்கள் காசு கேட்கேக்கை அந்த இந்தியச் சீவல் தொழிலாளி யளைக் கள்ளத்தோணி எண்டு நீ பொலீசிலை புடிச்சுக் குடுத்திருக்கிறாய். இது எங்களுக்குத் தெரியாதெண்டு நினையாதை. ‘
சுந்தரம் வாயே திறக்கவில்லை.
“இது மாத்திரமே? நீ யாழ்ப்பாணத்திலை அடிக்கடி *பாட்டியள்' வைக்கிறதும் எங்களுக்குத் தெரியும். கொத் துறாத்து வேலைக்காகத்தான் நீ இதைச் செய்கிறாய். கொந்தறாத்து வேலையை எடுத்து றோட்டுகளுக்கு வெறும் மண்ணைப் போட்டிட்டு எத்தினை ஆயிரம் ரூபாயை நீ சுருடடியிருக்கிறாய் எண்டும் தெரியும்."
நல்லதம்பியின் வார்த்தைகள் சுந்தரத்தை நிலை குலையச் செய்தன.
*சிறாப்பர் ஐயா என்னாலை இதில் ஒண்டும் செய்யே லாது. நீங்கள் பட்ட பாடு, தான் போறன்."
சுந்தரம் மெல்ல நழுவிச் செல்கின்றான்.
'ஏன் போறாய், இன்னும் கொஞ்சம் நின்று கேட் டிட்டுப் போவன்"
வேலுப்பிள்ளை கத்துகின்றான்.
அப்ப இப்பென்ன சொல்லுறியள்?"
சிறாப்பர் வினவுகின்றார்.

Page 89
172 O பாதை
'சிறாப்பர், குத்தகைக் காசெண்ட பேச்சுக்கே இட மில்லை. நீ போய் செய்யிறதைச் செய்.”
"நீங்கள் எல்லோரும் கோடேற வேண்டி வரும்.”
என்ன வெருட்டிறியா? உதுக்கு நாங்கள் பயப் பிடேல்லை "
*ஆறுமுகம், நீங்கள் என்ன சொல்லுறியள்?’
சாதிக்கலவரத்தின்போது தன்னுடன் சேர்ந்து நின்ற தனது சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் முதலியவர்களைக் கேட்கின்றார் சிறாப்பர்.
நாங்கள் வேறை என்னத்தைச் சொல்ல? நல்லதம்பி ஆக்கள் சொன்னத்தைத்தான் நாங்களும் சொல்லுறம்,’
என்ன?"
எல்லோருக்கும் வியப்பு!
நீங்களும் அவங்களோடை சேந்து..?”
சிறாப்பர், மரியாதைய ய்க் கதை, என்ன அவங்கள் இவங்களெண்டு.'
எச்சரிக்கின்றான் நல்லதம்பி.
*சிறாப்பர், சாதிக்கலவரத்துக்குக் கோயில் காணி 6f 6ft 600 குத்தகைக்காசு தான் சிலவழிக்கிறன் எண்டு நீ எங்களுக்கு முந்திச் சொல்லேல்லையா?”
பேசாமல் நிற்கின்றார் சிறாப்பர்.
கோயிலைச் சாட்டி நீ திண்டு ஏப்பம் விடுறாய். உன்னாலைதான் எங்கடை வயல்களும் அழிஞ்சு தாங்கள் வரியக் கணக்காய் ப்சிபட்டினியோடை இருந்தம். நீ சுக சீவியம் நடத்தினாய்.”
*நீ என்ன சொல்லுறாய் ஆறுமுகம்?"

நீர்வை பொன்னையன் O 73
தளதளத்த குரலில் கனகசபை கேட்கின்றார்.
"இப்பதான் எங்களுக்கு விசயம் புரிஞ்சுது. நாங்கள் இனி ஒரு சதமும் தரமாட்டம்"
ஆறுமுகம் முதலியோர் ஏகோபித்துக் கூறுகின்றார்கள்.
"அப்ப நல்லதம்பியாக்களும் நீங்களும் ஒண்டாய்."
'சிறாப்பர், நீயும் சேர்மன் மார்க்கண்டுவும் ஜே.பி. சுந்தரமும் போலையுள்ள “பெரிய மனிசரெல்லாம் ஒண் டாய்ச் சேரலாம், நாங்களும் நல்லதம்பியாக்களும், ஒண் டாய்ச் சேரக்குடாதோ? உழைத்து வாழற நாங்கள் ஏன் ஒண்டு படக்குடாது?"
* இப்ப உங்கடை சாதி..?"
4*உன்னைப்போலை உள்ளவங்களுக்குத்தான் சாதி. மண்ணையும் எங்கடை கையளையும் நம்பி வாழுற எங்க ளுக்குச் சாதி எண்டு ஒண்டில்லை. நாங்கள் எல்லாம் ஒண்டு உழைக்கிற நாங்கள் ஒரே வர்க்கம்’
அங்கே, இரு திசைகளிலிருந்து ஓடி வந்த இரண்டு நதிகள் சங்கமித்து, புதுச்சக்தி பெற்று வீறுடன் முன் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
6 மார்க்கண்டு, நீ வா அப்பா உவங்களோடை கதைச்சுப் பிரயோசனமில்லை. நாங்கள் வேறை வழியைப் பாப்பம்."
மண்மக்கள் தீக்கொழுந்தாக மாறுகின்றார்கள்.
43 டே சிறப்பா!'
அவர்களுடைய இடிமுழக்கம் போன்ற குரல்கள் வயல் வெளியில் எதிரொலிக்கின்றன.

Page 90
174 O Lurgaps
சிறாப்பரும் மார்க்கண்டரும் விரைவாகச் செல்லப்பார்க் கின்றனர்.
*சிறாப்பா, நீ என்னடா செய்யப்போறாய்?"
அவர்கள் முழங்குகின்றார்கள்.
சிறாப்பரும் கூட்டாளிகளும் ஓட முயல்கின்றார்கள். முடியவில்லை.
"நீ செய்யிறதைச் செய்யடா, நாங்களும் தயாரடா."
ஒன்று திரண்டு மக்களின் குரல் இடிமுழக்கமாக ஒலிக் கின்றது
1971

11. “ஞானஸ்நானம்"
அவருடைய கைகள் தாலியை எடுக்கின்றன. உழைத்து உரமேறிய நூற்றுக்கணக்கான கரங்கள் எங்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பதற்குப் பேரார்வத்துடன் காத்திருக்கின்றன.
அவர்கள் அனைவருடைய முகங்களிலும் மகிழ்ச்சிப் பூரிப்பு.
தாலியை எடுத்த அவருடைய கண்கள் என் முகத்தை நோக்குகின்றன.
என் கண்களில் கண்ணிர்த்திரை. அவருக்கு அதிர்ச்சி. அவருடைய கைகளில் சிறு நடுக்கம். தயங்கியபடியே நிற்கின்றார். "என்ன மாப்பிள்ளை சோர்ந்துபோய் நிற்கிறீர்?" கிண்டல் செய்து சிரிப்பூட்ட முயல்கிறார் மரியன் 35th so Jutjar.
"புது மாப்பிள்ளையல்லே. அவருக்கு வெட்கமாயிரர் தே" கந்தையா கண்ணைச் சிமிட்டிக்கொண்டே கேலி புரி கின்றார்.
எல்லோரும் "கொல்லெனச் சிரிக்கின்றார்கள்.

Page 91
176 O பாதை
"எங்கடை கோகிலா வைக் கல்யாணம் கட்ட உவர் குடுத்து வைத்திருக்க வேணும்.'
கணபதிப்பிள்ளை பெருமையுடன் கூறுகின்றார். என் அருமைத் தோழி சோமா வெற்றிப் பெருமிதத் துடன் புன்முறுவல் பூத்து நிற்கின்றாள்.
"ஏன் எங்கடை மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல் இவரைக் கட்ட கோகிலாதான் குடுத்து வைச்சிருக்க வேணும்."
விட்டுக் கொடுக்காதவளாக செல்லம்மா பெருமையடிக் கின்றாள்.
கோகிலா ஆனந்தப்பட வேண்டிய இந்த நேரத்தில் உன் கண்கள் ஏன் கலங்குகின்றன என்று கேட்பதுபோல அவர் என்னை நோக்கியபடியே நிற்கின்றார்.
எனது உள்ளத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. இந்த மங்களகரமான நேரத்தில் பெற்ற தாய், உடன் பிறந்த சகோதரிகள், உற்றார் உறவினர் எவருமின்றி நீ அனாதையாக நிற்கின்றாய் என்று உன் கண்கள் கலங்கு கின்றன என்று அவர் நினைக்கின்றாரா?
நான் அனாதையா? அவர்? எனக்குத் தந்தையில்லைத்தான். என் தந்தை எனது படிப்பு அரைகுறையாக இருக்கும் பொழுதே கண்ணை மூடிவிட்டார்.
என்ரை இரண்டு மூத்த பிள்ளைகளையும் சரியாகப் படிப்பிக்கேலாமல் போச்சு கடைசி என்ரை கடைக்குட்டி கோகிலாவையாவது நான் நன்றாகப் படிப்பிக்க வேணும்."
அடிக்கடி எனது தந்தை கூறுவார்.

நீர்வை பொன்னையன் O 177
அவரது ஆசை பூர்த்தியடையாமலே அவர் எங்களை விட்ட கன்று விட்டார்.
என்னைப் பெற்ற தாய் இன்றும் திடகாத்திரமாகத் தானிருக்கின்றார்.
ஆனால் எனது இந்த மங்களகரமான நேரத்தில், என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து வளர்த்த என் அன்புத்தாய் ஏன் என்னுடனில்லை?
எனது மூத்த சகோதரிகளும் கரை சேர்ந்து நாலும் பெற்று நன்றாகத்தானிருக்கின்றனர்.
அவர்களைக் கரை சேர்க்க நான் என்னையே அழித்து வந்ததையுமா அவர்கள் மறந்து விட்டார்கள்?
நான் ஓரளவு படித்துள்ளேன் என்பதற்காகவா எங்கள் குடும்பப் பொறுப்பு அன்று என் தலைமீது வந்து விழுந்தது? எனது படிப்பை அரைகுறையில் நிறுத்திவிட்டு கல்லூரி யில் தொழில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே நான் வேலை பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கின்றேன். இக்காலத்தில்தான் அவரும் தொழில் பயில்வதற்கு அக் கல்லூரிக்கு வருகின்றார்
வந்து இரண்டொரு தினங்களுக்குப்பின் அறிமுகமான அவர் என் பின்னாலேயே சுற்றிக்கொண்டு திரிகின்றார்.
எனது சக மாணவர்களது கண்கள் எம் இருவரையும் சுற்றி வட்டமிடத் தொடங்குகின்றன.
எனக்கு வெட்கம்; ஒருவித எரிச்சல்,
ஏன் எந்த நேரமும் என்னைச் சுற்றிக்கொண்டு திரிகின்றிர்கள்??
ஒருநாள் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண் டிருககும் பொழுது என் பின்னால் வந்து கொண்டிருக்கின்ற அவரை நான் திடீரெனத் திரும்பிக் கேட்கின்றேன்.

Page 92
178 O பாதை
இத்திடீர்த் தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அதிர்ச்சி. "நான் ஒரு பெண். நீங்கள் என் பின்னால் இப்பிடி சுற்றிக்கொண்டு திரிந்தால் மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?
அவருடைய முகம் வெளிறுகின்றது. எனது மனம் இளகுகின்றது.
தயவுசெய்து தொந்தரவு செய்யாமல் என்னைத் தனியே விட்டு விடுங்கள். மற்றவர்கள் என்னைக் கேலி செய் கின்றார்கள்."
கண்கள் கலங்கிக் கூறுகின்றேன்.
நான் உம்மை விரும்புகின்றேன். உமக்கு என்னிலை விருப்பமில்லையெண்டால்.’
தட்டுத் தடுமாறிக் கொண்டு கூறுகின்றார். அவருடைய குரல் தளதளக்கின்றது.
இது யோசிக்க வேண்டிய விசயம். தயவுசெய்து என்னை."
எனது மனதில் சிறிது சலனம். "இதிலை யோசிக்க என்ன கிடக்கு? விருப்பமெண்டால் ஓம் அல்லது இல்லை. கதை முடிஞ்சுது,
அவருடைய வார்த்தைகளில் விரக்தி தொனிக்கின்றது. அவரது மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. "சரி நான் உங்களை விரும்புறன் என்று வைச்சுக் கொள் ளுங்கள். ஆனால் இப்பிடி எந்த நேரமும் என் பின்னாலை சுற்றித் திரியக் கூடாது."

நீர்வை பொன்னையன் O 179
மற்றவர்களுடைய கண்களிலிருந்து தப்பித்துக் கொள் வதற்காகவே நான் இப்பிடிக் கூறுகின்றேன்.
எனது இந்த முடிவு தற்காலிகமானது என்பதை அவரால் எப்படி அறிந்து கொள்ள முடியும்.
எனது வார்த்தைகளைக் கேட்ட அவருக்கு உற்சாகம் பிறக்கின்றது.
"நான் உம்மை இனி எள்ளளவும் தொல்லைப்படுத்த மாட்டன். நேர காலம் வரும்போது நான் வருவென்,
உறுதியுடன் கூறுகின்றார்.
'உது நடக்கிற காரியமே? பிறகு எல்லாம் சமாளிக்க லாம். இப்ப நான் நிம்மதியாயிருந்தால் போதும்."
எனக்குள் நானே கூறுகின்றேன். என்னையே நான் ஏமாற்றுகின்றேனா? அவர் தனது வாக்குறுதியின்படியே நடக்கின்றார். எனக்கு மன நிம்மதி. நான் எப்பொழுதாவது கதைத்தால் அவர் கதைப்பார்.
அவ்வளவுதான். அவராக முன்வந்து ஒருபோதும் கதைப்ப தில்லை.
அவர் ஒரு பிடிவாதக்காரரா? அப்படியெண்டால் இருந்துவிட்டுப் போகட்டுமே. எனக் கென்ன?
*கோகிலா, எனக்கு வேலை கிடைச்சிட்டுது. வாற முதலாம் திகதி நான் பொறுப்பேற்க வேணும்.”
திடீரென ஒரு நாள் அவர் வந்து கூறுகின்றார். “என்ன, உங்களுக்கு வேலை கிடைச்சிட்டுதா? ஆச்சரியத்துடன் கேட்கின்றேன்.

Page 93
180 O பாதை
இதோ கடிதம். இலங்கை வங்கியில் ஆய்வு உத்தி யே கத்தர் வேலை. மாதம் 750 ரூபா சம்பளம். ஆனால் உனக்கு."
சந்தோஷமும் சோகமும் அவருடைய வார்த்தைகளில் இழையோடுகின்றன,
எனக்கு ஒரு வேலை எப்பதான் கிடைக்குமோ? என் மனம் அங்கலாய்க்கின்றது. 'கோகிலா, எனக்கு வேலை கிடைச்சது சந்தோஷம் தான். ஆனால் உன்னை விட்டுப் பிரிய.
வேதனையும் சஞ்சலமும் நிறைந்த வார்த்தைகள். எல்லோரும் இப்பிடித்தான் கூறுவினை. பிறகு? இந்தத் தொடர்பை முறிக்கிறதுக்கு இதுதான் சரியான தருணம். என்ன சாட்டுச் சொல்லலாம்.
மனம் அலைகின்றது. ஓ! எனது மதம்..!" காரணம் கண்டுபிடித்ததில் மனத் திருப்தி.
எனக்கும் கவலையாய்த்தானிருக்கு. ஆனால் ஒரு வழியிருக்கு
நான் பீடிகை போடுகின்றேன்.
என்ன? என்ன வழி?" அவர் அவசரப்படுகின்றார்.
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் மறந்திட்டால்." என்ன? மறக்கவா? அவருக்கு பேரதிர்ச்சி.
அதுதான் நல்லது" "அப்ப அண்டைக்கு நீர் சொன்னது?

நீர்வை பொன்னையன் O 181
*அண்டைக்கு நான் சொன்னனான்தான். ஆனால் இண்டைக்கு யோசிக்கேக்கை."
"இப்ப என்ன யோசிக்கக் கிடக்கு? வார்த்தைகளில் சிறிது கடுகடுப்பு.
நான் வேறை சமயத்தைச் சேர்ந்தவள்." "அது எனக்கு அப்பவே தெரியும். அதைப் பற்றி எனக்கு எள்ளளவும் கவலையில்லை."
*ஆனால் என்ரை வீட்டார்?
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் சரியாய் புரிஞ்சு மனம் ஒத்தால் மற்றவையின்ரை விருப்பு வெறுப்பைப் பற்றி ஏன்
யோசிக்க வேணும்? அவையே வாழப் போர்வை? அலையளே எங்களுக்கு கஞ்சி ஊத்தப் போகினை?
அவருடைய வார்த்தைகள் என்னைத் திணறடிக் கின்றன.
எனக்குப் பொறுப்பிருக்குது.'
‘என்ன பொறுப்பு??
“எனக்கு தகப்பனில்லை. இரண்டு அக்க மார், கலியாணம் கட்டாமல் என்னை நம்பியிருக்கினை .
உமக்கு மாத்திரமில்லை."
எனக்கு அதுக்கு மேலாலையிருக்கு. என்ரை தகப்ப னார் பட்ட கடன் பதினையாயிரம் தீர்க்க வேண்டும். இரண்டு தம்பிமாற்றை படிப்பு, எனது சகோதரியைக் கரை சேர்க்கிறது. எல்லாம் என்ரை தலையிலைதான்."
"சுமையுள்ள இரண்டு ,பர் சேர்வதிலும் பார்க்க கடைசி ஒருதர7 வது சுமையில்லாதவராயிருந்தால்."
*பொறுப்பில்லாத மனிதனெவனுமில்லை. ஆனா அந்தப் பொறுப்பை உணராதவையிருக்கினை. அவையளை

Page 94
182 O பாதை
மனிதரென்று சொல்லேலாது பிரச்சனைக்கு முகம் கொடா
தவை கோழைகள் விருப்பமில்லாட்டி நேரடியாகச்
சொல்லும். சாட்டுகள் சொல்ல வேண்டாம்."
"எனக்கு என்ன சொல்லிறதெண்டு தெரியவில்லை."
‘ஒண்டில் ஓம். அல்லது இல்லை. இந்த ஐஞ்சு மாதத் துக்குள்ள என்ரைப் பற்றி நீர் ஓரளவு புரிஞ்சிருப்பீர். விருப்ப மில்லாட்டிச் சொல்லும்."
"இதுக்கு மேலை என்ன சொல்லக் கிடக்கு உங்கடை விருப்பம் எதுவோ அதுதான் எனக்கும்.”
"இல்லை கோகிலா. நீர் திட்டவட்டமாகச் சொல்ல வேணும். ஓம். அல்லது இல்லை. இரண்டைத்தா ஒண்டு."
'உங்கடை பிடிவாதத்துக்கு முன்னால் என்னாலை எப்பிடி நிற்கேலும் சரி. ஓம்."
அவரது கண்கள் சுடர் விடுகின்றன.
*கோகிலா நான் போட்டு வாறன். என்ரை பொறுப்பு முடிஞ்சவுடனை நான் நிச்சயம் வருவன். உமது பொறுப்பு முடியும் வரை எவ்வளவு காலமெண்டாலும் நான் காத்திருப் பன். சரி. நான் வாறன்."
எனது பதிலுக்குக் காத்திராமலே அவர் என்னிடம் விடைபெற்றுச் செல்கின்றார்.
அவர் என் அருகில் இருந்த பொழுது அவருடைய அருமை எனக்குத் தெரியவில்லை
என்னைவிட்டு அவர் சென்ற பின்புதான் அவருக்காக எனது மனம் தவியாய் தவிக்கின்றது.
அவருடைய ஒரே ஒரு கடிதத்திற்காக என் உள்ளம் ஏங்கி அழுகின்றது.
ஒரு வாரம் கழித்து அவருடைய கடிதம் வருகின்றது. எனது மனச்சுமை தீர நான் அழுகின்றேன்.

நீர்வை பொன்னையன் O 183
"அவரிடமிருந்து இனி என்னை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது."
எனது உள்ளம் உறுதி பூணுகின்றது.
எமது கடிதங்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன.
அத்திபூத்தாற்போல் சந்திப்பு.
எனக்கு வேலை கிடைக்கின்றது. என்னை ம)ந்து நான் மாடாக உழைக்கின்றேன்.
என் சகோதரிகள் ஒவ்வொருவராகக் கரை சேர்கின் றார்கள்.
அவர்களைக் கரை சேர்ப்பதற்காக நான் பட்ட பாடு?
ஆனால் நான்? எனது வயது சென்று கொண்டிருப்பதையே இவ்வளவு காலமும் நான் உணரவில்லை.
தனது கடமை முடிந்து அவர் என்னை நாடி வரு கின்றார்.
அவரது நண்பன் திருமணப் பேச்சிற்காக எனது வீட்டிற்கு வருகின்றான்.
எனது வீட்டார் இத்திருமணத்திற்கு மறுக்கின்றனர். காரணம் அவர் வேறு சமயத்தைச் சேர்ந்தவர்.
எமது பத்து வருட கால தொடர்பு இபற்றி அவரது நண்பன் எடுத்துக் கூறுகின்றான்.
ஆனால் பயனில்லை. காலம் கரைகின்றது.
திருமணப் பேச்சு முடிவின்றி இழுபட்டுக் கொண்டே செல்கின்றன. எனது வயது முப்பதையுந் தாண்டிவிட்டது.

Page 95
184 O பாதை
எனது உணர்ச்சிகள் எழுந்து என்னுள்ளேயே செத்து மடிந்து கொண்டிருக்கின்றன.
வீட்டாரின் பிடிவாதமோ எவ்வளவும் தளரவில்லை,
அவரைப் போல குணம், நடை, தொழில் உடைய ஆரையாவது ஒருத்தரை நீங்கள் கொண்டு வந்தால் நான் கலியாணம் கட்டத் தயார்.’
இறுதியாக நான் கூறுகின்றேன்
"எனக்கோ எதுவித சீதனமுமில்லை. நான் பெரிய அழகியுமில்லை. சுமாரான அழகுதான். ஆனால் என்னை யார் கட்டுவதற்கு முன்வருவினை?
இதை என் வீட்டார் உணர்ந்த ல் தானே?
அவர்கள் தங்களைப் பற்றி மட்டும்தான் யோசிக் கிறார்கள் போலும். எனது உழைப்பு மாத்திரம்தான் அவர்களுக்கு வேண்டும்.
எதுவித அக்கறையுமின்றி அவர்கள் இருக்கின்றார்கள்.
காலம் எனது மனதை மாற்றிவிடும் என்று எண்ணு கின்றார்களோ?
அவர் பொறுமையுடன் தானிருக்கின்றார்
எவ்வளவு காலம் பொறுமையுடனிருக்க முடியும்.
எனது வேலையில்கூட எனக்கு அக்கறையில்லை. சடமாக இயங்குகின்றேன்.
தற்செயலாக சோமாவதி எனது வாழ்க்கையில் தட்டுப் படுகின்றாள்.
வேலை இடம் மாற்றப்பட்ட அவள், எமது கா ரியாலயத் திற்கு வருகின்றாள்.

நீர்வை பொன்னையன் O 185
அவள் வேறு இனத்தைச் சேர்ந்தவள். இதனால் எமது சக உத்தியோகத்தர்கள் அவளைத் தனிமைப்படுத்தி ஒதுக்கி வைக்கின்றனர்.
எதையும் பொருட்படுத்தாமல் அவள் எல்லோருடனும் சகசமாகப் பழகுகின்றாள்.
ஆனால், மற்றவர்கள் அவளை மேலும் மேலும் வெறுத்து ஒதுக்கி வைக்க முயல்கின்றனர்.
நாங்கள் இரண்டு மூன்று பேர் மட்டும் அவள்மீது பச்சாத் தாபம் கொள்கின்றோம்.
அவளுக்கும், எனக்குமிடையில் பிணைப்பு இறுகு கின்றது.
எமக்கு அவள் ஒரு அதிசயப் பிறவியாகத் தோன்று கின்றாள்.
அவளது நடை, உடை, பாவனை, பிரச்சனைகளை அணுகும் முறை, அவற்றிற்குத் தீர்வு காண்பது, எல்லா வற்றிலும் அவள் எங்களிலிருந்து மாறுபட்டிருக்கின்றாள்.
எளிமையான நடை, உடை, மனம்விட்டு எல்லோருட னும் பழகுவது, மற்றவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப் பதில் அளவு கடந்த ஆர்வம். எல்லாவற்றிலும் அவள் தனித் தன்மையுடையவளாக இருக்கின்றாள்.
எமது தொழிற்சாலையிலுள்ள தொழிலாளர்களினது பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவளுக்கு எல்லையற்ற அக்கறை; தானாகவே முன்வந்து போராடுவாள்.
குறுகிய காலத்தில் அவள் எல்லோரதும் ஆதரவையும் மதிப்பையும் பெற்று விடுகின்றாள்.
Lu T-12

Page 96
186 O பாதை
சண்டைக்கோழி என்று தொழிலாளர்கள் அவளைச் செல்லமாக அழைப்பார்கள்.
அதிகார வர்க்கத்தினருடன் மோதும் பொழுதெல்லாம் அவள் முன்னணியில்தான் உறுதியுடன் நிற்பாள்.
எங்களையும் அவள் தனது பாதையில் மெல்ல மெல்ல இழுத்துச் செல்ல ஆரம்பிக்கின்றாள்.
தொழிலாளிவர்க்க விரோதிகளுக்கும், சிங்கள பெருமின வாத வெறியர்களுக்கும் எதிராக அவள் முழுமூச்சுடன் போராடி வருகின்றாள். இதன் காரணமாகத்தான் அவள் எமது ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாள்.
இது பின்புதான் எமக்குத் தெரிய வருகின்றது.
அவளை ஒதுக்கித் தள்ளியவர்கள்கூட அவளை இன்று மதிக்கின்றார்கள். நேசிக்கின்றார்கள்.
அவளுடைய பாதையில் செல்வது எமக்குக் கஷ்டமாக இருக்கிறது.
காரியாலயத்திற்குள் சொகுசாக இருந்து கொண்டு உத்தியோகத்தர்களுடன் பழகிவரும் எமக்கு படிப்பறிவற்ற, முரட்டுத்தனம் பிடித்த தொழிலாளர்களுடன் பழகுவது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தானிருக்கின்றது.
வெய்யில்-மழையில் அடிபட்ட, சீமெந்துத் தூசிபடிந்த வியர்வை நாற்றமடிக்கும் அவர்களுடைய முரட்டு உடல்கள், அழுக்குப்படிந்த உடை, எடுத்ததற்கெல்லாம் கூப்பாடு போட்டு கத்தும் முரட்டுத்தனம் எல்லாமே எமக்கு அருவருப்பை ஊட்டின. அவர்களை நாம் வெறுத்தோம்.
முன்பெல்லாம் ஏதாவது தேவைகளுக்காக அவர்கள் எமது காரியாலயத்திற்குள் நுழைந்தால் தூரத்தில் வைத்து விடயத்தைக் கேட்டறிந்துவிட்டு அவர்களை விரட்டி விடு வோம்.

நீர்வை பொன்னையன் O 187
ஆனால், சோமாவதியுடன் சேர்ந்து நாம் நெருக்கமாகப் பழகப்பழக எங்களை அறியாமலேயே ஏதோ ஒரு சக்தி எங்களை அவளுடைய பாதையில் இழுத்துச் செல்கின்றது. ஆரம்பத்தில் இது எமக்குக் கஷ்டமாக இருந்தாலும் போகப் போகப் பழக்கமாகி வருகின்றது.
தோற்றத்தில் எமது தொழிலாளர்கள் முரடர்களாகவும் அசிங்கமானவர்களாகவும் காட்சியளிக்கத்தான் செய்கின்றார் கள். ஆனால் அவர்களுடன் நெருங்கிப் பழகப்பழக அவர் களுடைய இதயங்களின் அழகும், தியாக உணர்வும், தன்னல மற்ற சேவையும் எமக்குப் புலப்படுகின்றது.
காலக்கிரமத்தில் நாங்கள் தொழிலாளர்களது வாழ்வில் சங்கமிக்கின்றோம். தொழிலாளிவர்க்க உணர்வு எம்மை இறுகப் பிணைக்கின்றது.
தொழிலாளிவர்க்க இயக்க நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் நான் சோமாவுடன் சேர்ந்து முழு மூச்சுடன் ஈடுபடுகின்றேன்.
எனது வாழ்வில் உற்சாகம் பிறக்கின்றது. அவருக்கும் இது வியப்பைக் கொடுக்கின்றது.
பொறுமையுடனிருக்கும் அவர் மீண்டும் எமது திருமணப் பேச்சை எழுப்புகின்றார்.
என் வீட்டாரின் எதிர்ப்பு வலுக்கின்றது.
எனது வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் நான் தங்கள் வழியில் வருவேன் என்ற முடிவிற்கு அம்மாவாக்கள் வருகின்றார்கள்.
வேலையை விட்டு விடும்படி அவர்கள் என்னை நிர்ப்பந்திக்கின்றனர்.
ஆரம்பத்தில் நான் எதிர்க்கின்றேன்.

Page 97
188 O பாதை
அவர்களுடைய நச்சரிப்பும் தொல்லைகளும் என்னால் தாங்கமுடியாமலிருக்கின்றது.
நான் நிலைகுலைகின்றேன். எனது வாழ்வில் மீண்டும் விரக்தி *கோகிலா ஏன் ஒரு மாதிரி சோர்ந்து போயிருக்கின்
றாய்
ஒருநாள் சோமா என்னை விசனத்துடன் வினவு கின்றாள்.
"தற்கொலைதான் எனக்கு ஒரே வழி. பொருமிக்கொண்டு கூறுகின்றேன். அவளுக்குப் பெரும் திகைப்பு. என் துயரத்திற்கான காரணத்தைக் கேட்டுக் கொண்
டிருக்கின்ற அவளுடைய முகபாவம் பலவித மாறுதல் களுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றது.
இறுதியில் அவள் சிரிக்கின்றாள். எனக்கு ஆத்திரம் பொங்குகின்றது. ‘நான் வேதனைப்படுகின்றேன். உனக்கு fift it is கிடக்கு. இனி நீ என்னோடை பேச வேண்டாம் போ
கடுகடுப்புடன் கூறிவிட்டு நான் அழுகிறேன்.
அடி பயித்தியமே! நாங்கள் இருக்கேக்கை நீ ஏன் கவலைப்பட வேணும்?"
எனக்கொன்றும் விளங்கேல்லை. நான் பொருமி அழுது கொண்டிருக்கின்றேன்.
'கோகிலா உன்ரை இந்தக் கலியாணம் கட்டாயம் நடக்கும்.'

நீர்வை பொன்னையன் O 189
"சோமா நீ நினைக்கிற மாதிரியில்லை. என்ரை கலியாணத்துக்கு அம்மாவாக்கள் வரமாட்டினை, என்னாலை தனிய என்னண்டு கலியாணத்தை நடத்தேலும்?"
"அவையை வரச் சொல்லிறதுதானே.”
“அவை வரமாட்டினை."
"ஏன் வரமாட்டினை?”
"நான் வேறை மதத்தைச் சேர்ந்தவள். அவற்றைச் சமயம் வேறை. அதுதான் அம்மாவாக்கள் வரமாட்டினை."
"ஏன் அவை வந்தால் என்ன?”
"மதம் விட்டு, மதம் மாறிச் செய்யிற என்ரை கலியானத் துக்கு அம்மாவாக்கள் வந்தால் அவையளை அவையளிள்ரை கத்தோலிக்க மதத்திலையிருந்து தள்ளி வைச்சு விடுவினை யாம்."
இதைக் கேட்டதும் சோமாவின் முகம் சிவந்தது. உதடு கள் துடிக்கின்றன. கண்கள் தீப்பிழம்பாகின்றன. அவளு டைய தோற்றம் பயங்கரமாக மாறுகின்றது.
*கேவலம், பெத்த பிள்ளையின்ரை கலியாணத்துக்கு வராமல் தடுக்கிறதா அந்த மதம்.”
அவளுடைய ஆவேச வார்த்தைகள் சுழன்று சாடு கின்றன
அவளைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கின்றது.
இந்த நாசமாய்ப் போன இனவெறி, மதவெறி, சாதி வெறி எல்லாத்தையும் தொழிலாளியினைச் சுரண்டிச் சூறை யாடுற ஒரு கும்பல் தொழிலாளி வர்க்கத்தைப் பிளவு படுத்த ஆயுதமாய்ப் பாவிக்கிது.”
அவளுடைய வார்த்தைகள் தெறிக்கின்றன.

Page 98
190 O பாதை
"இந்த நாசகார முதலாளித்துவ வெறிக்கும்பலை அழித் தொழிப்பதற்கு தொழிலாளி வர்க்கம் இறுதி வரை போராட வேணும்.”
கோபத்தில் அவளுடைய விழிகள் தெறித்து விழுந்து விடும்போல தோன்றுகின்றது.
'கோகிலா இந்த நரபலி எடுக்கிற வெறிக் கும்பலை அழித்தொழிக்காத வரை எங்களுக்கு ஓய்வுறக்கமில்ல்ை.’
"நாங்கள் இந்தக் கொலைகாரக் கும்பலை நிச்சயம் அழித்தே தீருவம்."
அவள் சூளுரைக்கின்றாள்.
நான் அசந்து போயிருக்கின்றேன். அவள் சிறிது நேரம் மெளனமாக இருக்கின்றாள். அவளுடைய உணர்ச்சிக் கொந்தளிப்பு'அடங்குகின்றது. கோகிலா நீ ஒண்டுக்கும் யோசியாதை ஆர் வந்தா லும் சரி, வராவிட்டாலும் சரி உன்ரை கலியாணத்தை நீரிங்கள் நடத்தி வைக்கிறம். இது நடக்குதோ இல்லையோ எண்டதை இருந்து பார்."
அவள் கூறியதுபோல எனது கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன,
சோமாவுடன் சேர்ந்து எமது தொழிற்சாலையிலுள்ள தொழிலாளர்கள் எனது திருமண ஏற்பாடுகளை மும்முர மாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
உலகமே ஒண்டு திரண்டு எனது திருமண ஏற்பாடு களைச் செய்கின்றதைப் போன்ற உணர்வு எனக்கு
எமது திருமணச் சடங்கு நடந்து கொண்டிருக்கின்றன
அவரது கைகள் எடுத்த தாலியை அப்படியே பிடித்துக் கொண்டிருக்கின்றன.

நீர்வை டொன்னையன் O 191
எனது உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்குகின்றது.
'மாப்பிள்ளை ஏன் நிக்கிறீர்? என்ன எங்கடை கோகிலா வின்ரை அழகிலை சொக்கிப்போய் நிக்கிறீரோ?
கணபதிப்பிள்ளை கிண்டல் பண்ணுகின்றார். எல்லோரும் சிரிக்கின்றார்கள்.
என் அருமைத் தோழி சோமா என்னை ஒரு மாதிரிப் பார்க்கின்றாள். அவளுடைய உதடுகளின் கடைக்கோடியில் அர்த்தபுஷ்டியான முறுவல்.
எனக்கு சிறிது வெட்கம். எனது உதடுகளிலும் சிறு முறுவல். நான் தலையைச் சிறிது குனிந்து கழுத்தை நீட்டு கின்றேன்.
என் கழுத்தில் தாலி ஏறுகின்றது. உழைப்பால் புனிதத்துவம் பெற்ற நூற்றுக் கணக்கான
கரங்கள் எம்மை வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றன.
'நான் அனாதையில்லை. வாழ்விலும் தாழ்விலும் கைகொடுத்துதவும் தொழிலாளிவர்க்கத்தின் பேரணியில் நான் நிற்கின்றேன். நான் அனாதையில்லை."
இந்த உணர்வில் எனது உள்ளம் பொங்கிப் பூரிக் கின்றது.
என் அருமைத் தோழி சோமாவும் வெற்றிப் பெருமிதத் துடன் என்னை வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றாள்.
கோகிலா உன் கண்கள் ஏன் கலங்கின?
மெதுவாகக் காதுக்குள் அவர் என்னைக் கேட்கின்றார்.

Page 99
192 O LuT605
'கோகிலா, நான் சாவதற்கு முந்தி நீ செத்துவிட வேண்டும். நான் முந்திச் செத்தால் நீ அனாதையாய் போவாய். உன்னை என்ரை ஆக்களோ அல்லது உன்ரை ஆக்களோ பார்க்க மாட்டினை எண்டு அன்றொரு நாள் நீங்கள் கூறியது எனது நினைவுக்கு வந்தது அதுதான்.'
"அதுக்கு இந்த நேரத்திலையா கண் கலங்க வேணும்.” "அதுக்கில்லை அத்தான். நான் இப்ப அனாதை யில்லை."
*கோகிலா என்ன சொல்லுகிறாய்? எனக்கு ஒண்டும் விளங்கேல்லை."
*அத்தான் நீங்களும் இப்ப அனாதையில்லை. நாங்கள் இரண்டு பேரும் இப்ப தொழிலாளி வர்க்கத்தின்ரை ஒரு அம்சம்.'
அவர் என் கண்களைப் பார்த்தபடியே நிற்கின்றார். "அத்தான் வாழ்விலும் தாழ்விலும் எமது தொழிலாளி வர்க்கம்தான் எமக்குக் கைகொடுத்து உதவும். இதை இன்று நீங்களே நேரில் பார்க்கின்றீர்கள்."
அவருடைய கண்கள் சுடர் விடுகின்றன. புதுப்பொலிவுடன் அவர் முறுவலிக்கின்றார். எமது புதிய பாதையில் நாங்கள் உறுதியாக அடி யெடுத்து வைக்கின்றோம்.
{1979 سس

12. பாதை
'இப்பதானே வாறாய் மோனை?”
பஸ்சிலிருந்து இறங்கிய வேலுப் பிள்ளையை வாஞ்சை யுடன் கேட்கின்றார் அம்மான் கந்தையா.
*ஓம் அம்மான்.' புதிய றோட்டை ஆவலுடன் பார்த்தபடியே கூறுகின் றான் வேலுப்பிள்ளை.
* எப்பிடிச் சுகம்?
“ஏதோ, கந்தசாமியாற்றை தயவாலை சுவமாயிருக் கிறன்.”*
"சாடையாக் கறுத்துப் போனாய் போலை கிடக்கு." "மாறை வெய்யிலெண்டால் கேக்க வேணுமே?” *அட அநியாயமே!"
அம்மானுடைய குரலில் அனுதாபம்.
*அது மாத்திரமே? கருங்கல்லு உடைக்கிற வேலை." 'இதெல்லாம் அந்தப் படுபாவி கந்தசாமியாலை வந்த supsT.'
'அம்மான், நாங்கள் எப்பிடிக் கஷ்டப்பட்டாலும்'பரவா யில்லை. இந்த றோட்டு வந்ததே போதும்.”

Page 100
194 O பாதை
வேலுப்பிள்ளையின் வார்த்தைகளில் மன நிறைவு. ‘உங்கடை சுவம் எப்பிடி அம்மான்? தேத்தண்ணிக் கடை யாவாரம் எப்பிடிப் போகுது?"
*இந்தப் புது றோட்டு வந்ததாலை எங்களுக்கு நல்ல வாய்ப்பு,”
“ “6ፓ6ör?” ” *மேற்கு ஊருகளிலையிருந்து சாமான்கள் எடுக்கிற துக்கு எங்கடை இந்த யூனியனுக்குத்தான் எல்லாரும் வாறவை. யூனியனும் நல்லாய் பெருத்திட்டுது. எனக்கும் நல்ல யாவாரம்.”*
யூனியன் கட்டடத்தைப் பார்க்கின்றான் வேலுப்பிள்ளை பழைய சின்னக் கட்டடமிருந்த இடத்தில் நாலுமாடிக் கட்டிடம் கெம்பீரமாகத் தலைநிமிந்து நிற்கின்றது.
கட்டிடத்தைப் பார்த்தபடியே அவன் நிற்கின்றான். *சரி நீ களைச்சுப்போய் வாறாய் மோனை போய் தண்ணிவென்னியைக் குடி. பிறகு சந்திப்பம்."
"நான் வாறன் அம்மான்.? கூறிக்கொண்டு, பிரதான வீதியிலிருந்து கிளை விட்டுச் செல்லும் புதிய றோட்டில் காலடியெடுத்து வைக்கின்றான் வேலுப்பிள்ளை.
அந்த றோட்டில் கால் வைத்ததும் அவனுடைய உடலில் புல்லரிப்பு.
கண்களில் தேஜஸ்மயமான ஒளி.
அந்தப் புதிய றோட்டை ஆசை தீரப் பார்த்தபடியே நிற்கின்றான்.
"ஏன் மோனை மலைச்சுப்போய் நிக்கிறாய்? ஏதாவது வேணுமோ? அல்லது உனக்கு என்ன செய்யுது?"

நீர்வை பொன்னையன் O 195
அம்மான் பதைபதைத்துக் கேட்டுக் கொண்டு வேலுப் பிள்ளையை நோக்கி விரைகின்றார்.
'எனக்கு ஒண்டுமில்லையம்மான், நான் போட்டு வாறன்.”*
“முந்தி என்னமாதிரி வாட்டசாட்டமாயிருந்த Gruusir. L 6T6626T6lj (olt DsÖ65ői (5. Táj és" ப்பு எவ்வளவு மெலிஞ்சுபோச்சு???
வேகமாக நடந்து கொண்டிருக்கும் வேலுப்பிள்ளையின் காதில் அம்மான் கந்தையாவின் ஆதரவான வார் த்தைகள் விழுகின்றன.
கையில் ஒரு பெரிய பார்சல் கர்மவீரனைப்போலத் தலையை நிமிர்த்தியபடியே நடந்து கொண்டிருக்கின்றான்.
றோட்டில் இரு மருங்கிலும் பச்சைப் பசேலென்று வளர்ந்தோங்கிய வாழை மரங்கள். வேலுப்பிள்ளையைத் தலைசாய்த்து வரவேற்பதுபோல நிற்கின்றன அவை.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பார்த்தனுபவித் திராத அந்தக் காட்சியை அனுபவித்துக் கொண்டே நடக் கின்றான்.
*தம்பி வேலுப்பிள்ளை இப்பதானே வாறாய் மோனை?"
வாழைத்தோட்டத்துக்குள்ளிருந்து றோட்டில் வந் தேறிய பூதத்தம்பி குசலம் விசாரிக்கின்றார்.
"இப்பதான் வாறன் அண்ணை.??
'உதென்ன கையிலை???
*அது புத்தகங்கள்.” “என்ன, உவ்வளவும் புத்தகங்களே என்னத்துக்கு"
"ஒமண்ணை. அது நான் படிக்கிறதுக்கு."

Page 101
196 O பாதை
'இது நல்ல வேலைதான். சரி. நீ களைச்சுப்போய் வாறாய். அதைத்தாவன். நான் கொண்டந்து தாறன்.'
*வேண்டாமண்ணை. ஒரு அந்தர் வெண்காயத்தைச் சுமந்த எனக்கு இது பெரிய பாரமே?”
'அவங்கள் அந்த கந்தசாமியனாக்களின்ரை அட்ட காசம் பொறுக்கேலாமல் கிடக்கு. எல்லாத்துக்கும் தான் பிறகு உன்ரை வீட்டை வாறன்."
**இண்டைக்கு இரவைக்கு வா அண்ணை. மறந்து போகாதை"
"நான் கட்டாயம் வருவன். நீ கெதியாய் வீட்டை போ மோனை.”*
கந்தசாமி, இன்னும் உங்கடை ஆட்டம் அடங்கேல் லையே? உது எவ்வளவு நாளைக்கு போகுதெண்டு பாப்பம்."
பூதத்தம்பியை விட்டகன்ற வேலுப்பிள்ளை மனதுக்குள் கூறியபடியே நடக்கின்றான்.
கநதசாமி கோவில் வடக்கு வீதிக்கு வந்துவிட்டான் அவன்.
வேலுப்பிள்ளையைக் காண்கின்றார் கோவில் மனேச்சர் கந்தசாமி.
உடனே அவருக்குத் திகைப்பு
பயத்தில் கைகால்கள் நடுங்குகின்றன.
தனது சால்வையால் தலையை மூடுகின்றார்.
கந்தசாமியைக் கண்டதும் வேலுப்பிள்ளையின் ரத்தம் கொதிக்கின்றது.
கோயில் பூங்கொல்லைக்குள் ஒடிப்போய் பதுங்குகின் றார் கந்தசாமி.

நீர்வை பொன்னையன் O 197
வேலுப்பிள்ளை தன்னை மறக்கின்றான். *டே கந்தசாமி, உன்னை இப்பவே துலைச்சுக்கட்டிப் போட்டு நானும்.'
கையை உயர்த்துகின்றான். கையில் புத்தகப் பார்சல். அவனுடைய உணர்வில் தடை.
*வேலுப்பிள்ளை. நீ யாருடன் போராடுகின்றாய் என்ற தெளிவு முதலில் உனக்கு இருக்க வேண்டும். அடுத்தது எப்படிப் போராடப் போகின்றாய் என்ற திட்டமும் உன் னிடம் இருக்க வேண்டும். அப்படியென்றால் தான் நீ போராட்டத்தில் வெற்றி பெறுவாய்
மாறை ஜெயிலில் இருக்கும்பொழுது, அவனுடைய சிங்கள நண்பன் பண்டாரா கூறியது வேலுப்பிள்ளையின் ஞாபகத்துக்கு வருகின்றது.
வேலுப்பிள்ளை தன்னைச் சமாளித்து ஒரு நிலைப் படுத்துகின்றான்.
"தனி மனிதனை ஒழிக்கிறதாலை எங்கடை பிரச்சினை யள் தீரப்போறதில்லை, எங்களைச் சுரண்டுகின்ற வர்க் கத்தை அழித்து நிர்மூலமாக்கிவிட்டு அதிகாரத்தை உழைக் கும் வர்க்கம் கைப்பற்றினால் தான் எங்கடை பிரச்சினையள் தீரும்.'
வேலுப்பிள்ளை ஜெயிலுக்குச் சென்று சிறிது காலத்தின் பின் அவனுடன் அறிமுகமான பண்டாரா கருங்கல்லு உடைத்துக் கொண்டிருக்கும் பொழுது கூறியது அவ னுடைய மனதில் பளிச்சிடுகின்றது.
தனது வீட்டுக்குச் செல்கின்றான் வேலுப்பிள்ளை. அவன் இன்று வருவான் என்று அவனுடைய வீட்டா ருக்கு எப்படித் தெரியும்?

Page 102
198 O Isrsogb
வீடு பூட்டிக்கிடக்கின்றது.
*அவர்கள் தோட்டத்துக்குத்தான் போயிருக்க வேணும்.”
புத்தகப் பார்சலை அடுத்த வீட்டில் வைக்கின்றான்.
தோட்டத்தை நோக்கி அவனுடைய கால்கள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
வழியில் சங்கக்கடை.
அது இன்னும் திறக்கப்படவில்லை.
சங்கக்கடைக்குப் பக்கத்தில் ஒரு புதிய வாசிகசாலை.
வேலுப்பிள்ளைக்கு ஆச்சரியம்.
மகிழ்ச்சிப் பூரிப்பு.
வாசிகசாலைக்குள் அவன் செல்கின்றான்.
நான்கைந்து இளைஞர்கள் பத்திரிகை படித்துக் கொண் டிருக்கின்றார்கள்.
இப்ப எங்கடை ஆட்களுக்கு பத்திரிகை படிச்கக்கூட நேரமிருக்கு.
புத்தகங்கள் நிறைந்த இரண்டு அலுமாரிகள் வேலுப் பிள்ளையின் கண்களில் படுகின்றன.
அவனுக்கு ஆனந்தம்.
எடே! எங்கடை வேலுப்பிள்ளை அண்ணை வந்திட் Litiglal'
திடீரென ஒருவன் கத்துகின்றான்.
வேலுப்பிள்ளையை எல்லோரும் வியப்புடன் பார்க் கின்றனர்.
எல்லோருக்கும் உணர்ச்சிப் பரவசநிலை.

நீர்வை பொன்னையன் O 199 அவர்களுடைய சேமநலன்களை அவன் அக்கறையுடன் விசாரித்தறிகின்றான்.
*அண்ணை. மறியல் வீட்டுச் சீவியம் எப்படி? நீ என்ன மாதிரி காலம் தள்ளினாய் எண்டதை எங்களுக்குச் சொல் லண்ணை.”*
அவர்கள் ஆவலுடன் அவனைக் கேட்கின்றனர். தான் கற்றவற்றையும். தனது அனுபவங்களையும் அவன் அவர்களுக்குத் தொகுத்துக் கூறுகின்றான்.
அவனுடைய வார்த்தைகளில் எளிமை, தெளிவு, ஒரு வித வேகமும் உறுதியும்.
அவன் கூறிக்கொண்டிருப்பனவற்றை அவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுடைய உடல்களில் புதிய ரத்தத்தின் வீறான பாய்ச்சல்,
உள்ளத்தில் செயல்படத் தூண்டும் வேட்கை. வேள்வித் தீயில் தம்மை அர்ப்பணிப்பதற்குத் தங்களுக் குள் திடசங்கற்பம் செய்கின்றார்கள் அவர்கள்.
*இனி நீங்கள் படியுங்கோ. பிறகு சந்திப்பம்." பேசி முடிந்ததும் அவன் போவதற்கு எழுகின்றான். "ஏனன்ணை அவசரப்படுகிறாய். இன்னும் சொல்லன்." அவனை விட அவர்களுக்கு மனமில்லை.
‘'நான் இப்ப தோட்டத்துக்குப் போகவேனும், இரவைக்குச் சந்திப்பம்."
'அப்ப நாங்களும் உன்னோடை வாறம்."
** வேண்டாம் மோனையள். நீங்கள் இப்ப படியுங்கோ."

Page 103
200 O பாதை
உற்சாகத்துடன் அவன் தோட்டத்தை நோக்கிச் செல்கின்றான்.
புதிய றோட்டு பனங்கூடலைப் பிளந்து கொண்டு செல்கின்றது.
ரோட்டின் இரு பக்கங்களிலும் இடைக்கிடை புதிய வீடுகள்.
நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் இந்தப் பக்கத்தில் ஒரு வீட்டைக் கூடக் காணமுடியாது.
இரவு வேளைகளில் இந்தப் பகுதிக்கு வருவதற்கு அநேகருக்குப் பயம்.
பனம்கூடலைத் தாண்டி, செம்பாட்டு வெளியினூடாகச் செல்கின்றது ரோட்டு.
இந்த வெளி முன்பு தரிசு நிலமாகக் கிடந்தது. இப்பொழுது இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பல கிணறுகள் தோண்டப்பட்டிருக்கின்றன.
புது மண்ணில் பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. நிர்ச்சிந்தையாகச் சென்று கொண்டிருக்கும் வேலுப் பிள்ளையின் மனம் பழைய சம்பவங்களை இரை மீட்டுக் கொண்டிருக்கின்றது.
o O od oe Ο Ο
ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய தோட்ட நிலங்களுக்குச் செல்வதற்கு நல்ல பாதையில்லை.
கல்லும் முள்ளும் நிறைந்த ஒரு வண்டில் பாதை அவர்களின் தோட்டங்களின் விழிம்பில் வந்து நின்று விட்டது.
குழைக் கட்டுகளையும் எருக்கடகங்களையும் தங்க ளுடைய தலைகளில் சுமந்து செல்லும்பொழுது அவர்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்ல முடியாது.

நீர்வை பொன்னையன் O 201
அவர்களுடைய தோட்ட நிலங்களுக்கு மத்தியில் $2(სტ ஒற்றையடிப்பாதைதான் சென்றது.
அந்த நாளையில் இரண்டு மூன்று பேர்களிடம் தான் தண்ணீர் இறைக்கின்ற யந்திரங்கள் இருந்தன.
ஒற்றையடிப் பாதையால் அந்த யந்திரங்களை அல்லது ஆடு மாடுகளைக் கொண்டு செல்லும்பொழுது எத்தனை சண்டைகள் நடந்தன? எத்தனை பேர்களுடைய மண்டைகள் பிளந்தன?
ஒரு நாள் அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பாதையைத் திறப்பதற்கு ஆலோசித்தார்கள்.
தங்களுடைய நிலங்களில் சிறிது பகுதியை பாதை எடுப்பதற்கு விட்டுக் கொடுப்பதற்கு எல்லோரும் சம்மதித் தனர்.
அவர்களுடைய தோட்டங்களின் மேற்குப் பக்கத்தில் ஒரு பிரதான வீதி. ஊரின் கிழக்குப் பக்கத்திலும் பிரதான வீதி. இரண்டையும் இணைக்க அந்தப் பாதையை எடுப் பதற்குத் தங்களின் நிலங்களில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்தார்கள் ஒவ்வொருவரும்.
கயிற்றைக் கட்டி வேலிகளை வெட்டிப் பாதையைத் திறப்பதில் வேலுப்பிள்ளையும் அவனது சகாக்களும் முன் நின்றுழைத்தார்கள்.
கந்தசாமி கோயிலடிக்குக் கிட்ட பாதை வந்தது. கோவிலுக்கு வடக்குப் பக்கமாக இருந்த வேலியை வெட்டுவதற்கு வேலுப்பிள்ளையாட்கள் கயிற்றைக் கட்டி னார்கள்.
** வேலி வெட்டக்கூடாது." கோவில் மனேச்சர் கந்தசாமி திடீரென வந்து அவர் öGö6T மறித்தார்.
unr-13

Page 104
202 O பாதை
“'gፓ6är?”” அவர்கள் கேட்டார்கள். "கோயிலுக்குப் பக்கத்தாலை ரோட்டுப் போட நான் விடன்."
"என்னத்துக்கு? வேலுப்பிள்ளை வியப்புடன் கேட்டான்.
கோயிலுக்குப் பக்கத்தாலை றோட்டுப் போனால், நாலுபதினெட்டுச்சாதியளும் அதாலை செத்த பிணங்களைக் கொண்டு போவங்கள். அப்ப கோயில் என்னவாகும்?"
**நல்லூர் கந்தசாமிகோயிலிக்கு இரண்டு பக்கத்தாலை யூம் றோட்டுகள் போகேல்லையோ?”
அமைதியாகக் கேட்டான் வேலுப்பிள்ளை.
"அது பட்டணம். இஞ்சை அப்பிடிச் செய்யேலாது. தான் விடன்."
"மறிக்கிறதுக்கு நீ ஆர்?
சண்முகத்தின் குரலில் கடுமை.
"நான் ஆரெண்டோடா கேக்கிறாய்? உனக்கிப்ப சொல்லவேணுமோடா?"
வெறி பிடித்தவராகக் கத்தினார் கந்தசாமி,
“கந்தசாமி அண்ணை. இது பொது விசயம். ஊர் ஆக்கள் எல்லாரும் ஒத்துநிக்கினை. இது ஊர் நன்மைக்குத் தானே. நீ இதிலை தலையிடாதையண்ணை."
வேலுப்பிள்ளை பணிவுடன் கூறினான்.
"உன்ரை புத்திமதி எனக்குத் தேவையில்லையடா. ß போய் உன்ரை வேலையைப் பாரடா. நான் சொன்னால் சொல்லுத்தான்."

நீர்வை பொன்னையன் () 209
“கந்தசாமி ஒடுற ஆற்றை உன்னாலை தடுத்து நிறுத் தேலாது. நீ குறுக்கை நிண்டியெண்டால் அது உன்னையும் அடிச்சுக் கொண்டுதான் போகும்.'
“டே வேலுப்பிள்ளை வீண் கதை பேசாதை. போடா இந்த இடத்தாலை’
தனது தொந்தி வயிற்றைத் தூக்கிக் கொண்டு துள்ளிக் குதித்தார் கந்தசாமி.
"நீ ஏன் மறிக்கிறாய் எண்டு எனக்குத் தெரியும்."
'உனக்கென்னடா தெரியும்?
‘இந்த றோட்டு வந்தால் இந்த ஊர் முன்னேறிவிடும். தோட்டம் செய்யிற நாங்கள் முன்னுக்கு வந்திடுவம். அப்பிடி நாங்கள் முன்னேறிட்டால் நாளைக்கு நீங்கள் எங்கடை தோளிலை ஏறிச்சவாரி செய்யேலாது எண்ட பயம் தான் உனக்கு.??
“டே வேலா. வாயைப் பொத்திக்கொண்டு போடா, இல்லாட்டி.."
கையை ஓங்கியபடியே முன்னுக்கு வந்தார் கந்தசாமி. ‘ஓய், என்ன காணும் வெருட்டிறீர்?"
"டே, மண் கொத்திப்பயலே ஒய் எண்டு என்னைக் கூப்பிட உனக்கு அவளவு துணிவு வந்திட்டுதோடா??
*டே கந்தசாமி. மல்லுக்கட்ட இப்ப எங்களுக்கு நேர மில்லை. உன்னை பிறகு பாத்துத்தாறமடா?*
என்னடா சொன்னாய்???
கையை உயர்த்திக் கொண்டு மீண்டும் ஓடி வந்தார்.
'ஏலுமெண்டால் மறியடா, பாப்பம்! சண்முகம் கத்தி யைத் தா நான் வேலியை வெட்டிறன்."

Page 105
2U4 O பாதை
வேலுப்பிள்ளை வேலியை வெட்டினான். கந்தசாமி ஓடிவந்து கத்தியைப் பிடித்தார்.
இருவரும் ஒருவருக்கொருவர் இழுபட்டனர். கந்தசாமியின் கையில் ரத்தம். *"ஐயோ! என்னைக் கொல்லுறான்." ஓலமிட்டுக் கொண்டு ஓடினார் கந்தசாமி. கந்தசாமியைக் கொலை செய்ய முயன்றான் என்று வேலுப்பிள்ளையின் மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
வேலுப்பிள்ளைக்கு ஐந்து வரியம் கடூழியச் சிறை. சிறைக்குப் போனது ஒரு வகையில் நல்லதென்று வேலுப்பிள்ளை எண்ணினான்.
அங்குதான் அவன் அந்த பண்டாராவைச் சந்தித்தான். எதிர்கால நல்வாழ்வில் பண்டாராவுக்கு எவ்வளவு நம்பிக்கை, உறுதி.
அவனும் ஓர் ஏழை விவசாயியின் மகன்.
நிலமற்ற விவசாயிகளின் உரிமைகளுக்காக ஒரு பெரிய நிலச் சொந்தக்காரனுடன் மோதியதால் அவன் சிறைக்கு வந்தான்.
பெரிய நிலச் சொந்தக்காரர்களைப்பற்றிப் பேசும் பொழுது அவனுடைய கண்கள் தீப்பிழம்பாகும்.
அவனுடைய திண்மையும் உறுதியும் வாய்ந்த உடலில் ஆவேசத் துடிப்பு.
பண்டாராவைச் சுற்றி எப்பொழுதும் ஒரே கூட்டம். கமக்கேயும் ரணதுங்காவும் அவனுடன் விவாதிக்கத் தொடங்கிவிட்டால் அதற்கு ஒரு முடிவேயில்லை. இறுதியில் ஒரே முடிவுக்குத்தான் அவர்கள் வருவார்கள்.

நீர்வை பொன்னையன் O 205
எட்டாம் வகுப்புப் படித்த வேலுப்பிள்ளைக்குச் சிங்களம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கிய பண்டாரா அவனுக்கு உலகத்தைப் பற்றிய அந்தத் தத்துவத்தையே படிப்பித் தான்.
“வேலுப்பிள்ளை, நாங்கள் இந்த நாட்டின் எந்தப் பகுதியில வாழ்ந்தாலும், உழைப்பாளியள் எண்ட ரீதியிலை நாங்கள் எல்லாரும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த வர்கள். எங்களை அடக்கி ஆளுகின்ற சுரண்டல் வர்க்கத்தை நிர்மூலமாக்குவதற்கு நீ உனது பங்கைச் செலுத்துவாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அதற்கான நாடு பரந்த போராட்டம் நடக்கும் பொழுது ஒரு நாள் நாம் நிச்சயம் சந்திப்போம். நீ போய் வா."
வேலுப்பிள்ளை சிறைச்சாலையை விட்டுப் புறப்படும்
பொழுது அவனுக்கு நம்பிக்கையுறுதியூட்டி பண்டாராவும் அவனது சகாக்களும் வழியனுப்பி வைத்தார்கள்.
வேலுப்பிள்ளை இப்பொழுது புதிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றான்.
தோட்டக்கரைக்குத் தான் வந்துவிட்டதை உணரு கின்றான் வேலுப்பிள்ளை.
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோட்டக் கிணறு களில் தண்ணீர் இறைக்கும் யந்திரங்கள் ஒசையெழுப்பிக் கொண்டிருக்கின்றன.
சில தோட்டங்களில் உழுது கொண்டிருக்கும் உழவு யந்திரங்களின் பேரிரைச்சல்.
குழைக்கட்டுகளையும் எருப்பசளையையும் ஏற்றி வந்த
லொறிகளிலிருந்து அவற்றைப் பறிக்கின்றார்கள் சில தோட்டக்காரர்கள்.

Page 106
206 O பாதை
வேலுப்பிள்ளை "பெரிய கிணத்தடித் தோட்டத்துக்குச் செல்கின்றான்.
அவனைக் கண்டதும் அயல் தோட்டங்களிலுள்ளவர்கள் வந்து குவிகின்றனர்.
எல்லோரும் அவனைச் சூழ்கின்றனர்.
அவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திணறுகின்றார் கள்.
"தம்பி வேலுப்பிள்ளை. எப்ப வந்தனி மோனை?"
சிறிது நேரத்தால், நாகலிங்கம் கனிவுடன் கேட் கின்றார்.
“காலமைதான் வந்தனான் அண்ணை.”*
*புள்ளை நல்லாய் மெலிஞ்சு போனான். நிறம் கூட மாறிட்டுது.*
சரவணை அப்பாவின் குரலில் வேதனை.
‘இதெல்லாம் அந்த நாசமாய் போன கந்தசாமியனாக் கிளாலை வந்தது. அவங்கள் பரிசாம்பலாய் போக...??
செல்லம்மா அக்கா வயிற்றெரிச்சலுடன் திட்டுகின்றா.
"மறியல் வீட்டிலை சாப்பாடு எப்பிடி மோனை? அவங்கள் உன்னை அடிச்சு உதைச்சுக் கரைச்சல் பண்ணின வங்களே???
“அங்கை என்னை ஏன் ஆரும் அடிக்கப்போகினை? சாப்பாட்டையும் ஒரு மாதிரிச் சமாளிச்சன். அதுகிடக்கட்டும். உங்கடை பாடு எப்பிடி?
“இப்ப நீ பாக்கிறாய் தானே? எங்கடைபாடு பிழை யில்லை. ஆனால் அந்தப் பாடேலைபோ வாங்களாலை தான் எங்களுக்கு நெடுகக் கரைச்சல்.’

நீர்வை பொன்னையன் O 207
'ஆர்? ஆரவங்கள்?"
*வேற ஆர்? அந்த கந்தசாமியனாக்கள் தான்." 'அவங்கள் என்ன செய்யிறாங்கள்?"
'நீ மறியலுக்குப்போன அடுத்த ஆடிமாதம், கந்தசாமி தன்ரை தோட்ட நிலங்களின் ரை குத்தகையைக் கூட்டிப் போட்டான்.'
"அதோடை நிண்டானே? கோயில் தோட்டக்காணிய ளின்ரை குத்தகையையும் கூட்டிப்போட்டாங்கள், அவங்
في 8 م
$5窟
'நீங்கள் சும்மா இருந்தனிங்களே?’’ "எங்களாலை,என்ன செய்யேலும் மோனை. அவன்
தானே கோயில் மனேச்சர். அதோடை அவனிட்டைக் கன
தோட்டக்காணியள், பணம், ஆளணி எல்லாம் கிடக்கு.' 'இது நடக்குமெண்டு எனக்கு அப்பவே தெரியும்.”
'தாங்கள் அந்த கோயில் காணியளைச் செய்யப்போற மெண்டு போன வரியம் மறிச்சுப்போட்டாங்கள். இப்பவும் அந்த தோட்ட நிலங்கள் சும்மா கிடக்கு."
*தோட்டம் செய்ய நிலமில்லையெண்டு எத்தினையோ பேர் அலைஞ்சு திரியினை. ஆனால் இவங்கள்."
'அதுக்கென்ன மோனை செய்யிறது?"
*கந்தையா அண்ணை. முந்தி அந்தத் தோட்ட நிலங்
களிலை பயிர் செய்த நீங்கள் எல்லாரும் இப்ப திரும்பவும் அதே நிலங்களிலை பயிர் செய்ய வேணும்.'
வேலுப்பிள்ளை நிதானமாகக் கூறினான். 'அவங்கள் விடுவங்களே?"
*வலோற்காரமாய்ச் செய்யிறதுதான்."

Page 107
208 O பாதை
*அவங்கள் சும்மாயிருப்பங்களே?"
சரவணையப்பா பயம் தொனிக்கக் கேட்டார்.
அவங்கள் வரேக்கை பாப்பம். நீங்கள் பயப்பட வேண்டாம். கெதியிலை வேலையைத் துவங்கவேணும்.'
‘எங்கடை வயித்திலை அடிக்கிறதுக்கு அவங்கள் புது வழியளையும் பாவிக்கிறாங்கள்?
*அதென்னப்பா புது வழி???
*போனபோகம் நாங்கள் வெண்காயம் கிளப்பினம் அப்ட கோயில் தேர் செய்யிறதுக்கெண்டு ஒவ்வொருதரிட் டையும் ஒவ்வொரு அந்தர் வெண்காயத்தை தாங்கள் ’
வேலுப்பிள்ளையின் நெற்றியில் சுருக்கங்கள்.
“அது மாத்திமே? கோயில் மதில் போடுறதுக்கெண்டு ஒவ்வொருதற்றை வாழைத் தோட்டங்களுக்கையும் ஒவ் வொரு தலைவாழைக் குலையளை வெட்டினாங்கள்."
"நாங்கள் உருளைக் கிழங்கு வித்தபொழுது தலைக்கு இருபத்தைஞ்சு ரூபா வீதம் அவங்களுக்குத் தாரை வாத்தம்.”
“இதுகளுக்கெல்லாம் அவங்கள் கணக்குக்காட்டினாங் களே? அதுவுமில்லை."
"ஏன் நீங்கள் கேட்கேல்லை?"
ஆத்திரத்துடன் கேட்டான் வேலுப்பிள்ளை.
"நாங்கள் எத்தினைதரம் கேட்டம். அவங்கள் காட்டி னால் தானே???
"இப்ப நாங்கள் செத்தல் மிளகாய் விற்கப்போறம். அவங்கள் கோயில் மணிக்கூட்டுக் கோபுரம் கட்டிறதுக்குக் காசு சேர்க்கப் போறாங்களாம்.”

நீர்வை பொன்னையன் O 209
"இனி ஒருதரும் ஒரு சதம் கூடக் குடுக்கக்கூடாது." வேலுப்பிள்ளையின் குரலில் கடுமை. *அவங்கள் எங்களைச் சும்மா விடுவாங்களே? எங்கடை தோட்டங்களை இரவிரவாய் அழிச்சுப்போடுங்கள்."
'குத்தகைக் காணியளுக்கை இருக்கிற எங்களைக் குடி யெழுப்பிப் போடுவாங்கள்.”
சிலர் பீதியுடன் கூறினர். "இனி நாங்கள் ஒண்டுக்கும் பயப்பிடக்கூடாது. எங்கடை புது றோட்டைப் போடவிடாமல் கந்தசாமியனாக் கள் முட்டுக்கட்டையாய் நிண்டாங்கள். நாங்கள் அவங் களுக்குப் பயந்து சும்மா இருந்திருந்தமெண்டால் இந்த றோட்டு வந்திருக்குமே?”
வேலுப்பிள்ளையின் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டின.
"இனி அவங்கள் எங்களோடை கரைச்சலுக்கு வந்தால் அவங்களை நான் துலைச்சுக்கட்டிப்போடுவன்.'
காத்திகேசு ஆவேசம் மேலிடக் கத்தினான். *நான் தூக்குக் கயித்துக்கு போனாலும் பறுவாயில்லை. அவங்கடை குடலை எடுத்து மாலையாய் போடுறனோ இல்லையோ எண்டு பாருங்கோ.’
கத்தியைச் சுழற்றிக்கொண்டு கதிரவேலு இரைந்தான் ,
*கதிரவேலு, கந்தசாமியாக்களை மாத்திரம் கொலை செய்தாப்போலை எங்கடை பிரச்சினை எல்லாம் தீந்து போமே?”
எல்லோரும் வியப்புடன் வேலுப்பிள்ளையைப் பார்த் தனர்.

Page 108
210 O பாதை
'தீராமல்?? கதிரவேலுவின் குரலில் வஞ்சினம். "அவங்களைப்போலை எத்தினையோ கந்தசாமியாக் கள் இந்த நாட்டிலை இருக்கிறாங்கள். அவங்கள் எல்லாரும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவங்கள். உன்னாலை தனிய அவங்கள் எல்லாரையும் கொலை செய்ய முடியுமோ?"
கதிரவேலு பிரமித்துப்போய் நிற்கின்றான். *அந்த வர்க்கம்தான் இந்த நாட்டிலை எங்களைப் போலை உழைக்கிற எல்லாரையும் சுரண்டி, சூறையாடிச் சு கசீவியம் நடத்திக் கொண்டிருக்கு."
"அப்ப நாங்கள் என்ன செய்யிறது?" அவர்கள் சோர்வுடன் கேட்கின்றனர். "அந்த வர்க்கத்தை அழிச்சொழிச்சால்தான் உழைக்கிற எங்களுக்கு விமோசனம்.”
"அதை எப்பிடிச் செய்யிறது?" "அதுக்கெண்டு ஒரு பாதையிருக்கு. அது நீண்டபாதை. அந்தப் பாதையிலை நாங்கள் போகவேகணும்.'
*அதெனof பாதை?’ *அதுதான் போராட்டப் பாதை. உழைக்கிற வர்க்கத் துக்கும் அந்த உழைப்பைச் சுரண்டிற வர்க்கத்துக்குமிடை யிலை நடக்கிற போராட்டம்."
நாங்கள் தனிய அதை என்னண்டு செய்யிறது?
‘இந்த நாட்டிலை உழைக்கிற நாங்கள் எல்லாரும் ஒண்டு சேர்ந்து, எங்கடை தலைவிதியை எங்கடை கையிலை எடுத்துக்கொண்டு உறுதியாய் அந்தப் போராட்டப் பாதை
யிலை போனால்.’

நீர்வை பொன்னையன் O 211
"நாங்கள் தயார்." அவர்கள் அந்தரங்க சுத்தியுடன் கூறுகின்றனர்.
'நீங்கள் நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுவமான பாதையல்ல."
**இப்பிடிக் கேவலமாய்ச் சீவிக்கிறதைவிட அப்பிடி ஒரு நல்ல வேலையைச் செய்யேக்கை செத்தாலும் பறுவா uმeiხ6თ6lა. ””
கதிரவேலு உறுதியாகக் கூறுகின்றான்.
"அந்தப் பாதைக்கு முதல்படியாய், தோட்டம் செய்யிற நாங்கள் எல்லாரும் ஒண்டு சேர்ந்து ஒரு விவசாய சங்கத் தைத் துவங்கவேணும்."
"நாங்கள் எல்லாரும் தயார்." அவர்கள் கூறுகின்றார்கள். *அதுக்குப்பிறகு?’ கார்த்திகேசுவின் கேள்வியில் அவசரம்.
ஒரு வரியத்துக்கு முந்தி அந்த கோயில் காணிய ளிலை பயிர் செய்ய வேண்டாமெண்டு கந்தசாமியாக்கள்
மறிச்சுப் போட்டாங்கள்தானே?
"ஒம். மறிச்சாங்கள்."
"அந்தக் காணியள் ஒரு வரியமாய் சும்மா கிடக்கு." வேலுப்பிள்ளை அவர்களைப் பார்க்கின்றான். அவர்கள் மத்தியில் ஒருவிதத் துடிப்பு.
**அந்தக் காணியளைச் செய்த ஆக்களுக்குப் பயிர் செய்ய நிலமில்லை. ஒரு வரியமாய் அவை கூலிப்பிழைப் புக்குப் போகிணை. அதுவும் கிடைக்கிறது அருமை."
"நாங்கள் படுகிற கஷ்டத்தை ஆருக்கு சொல்லுறது?"

Page 109
212 O பாதை
சிலர் மனம் வெதும்பிக் கூறுகின்றார்கள்.
“அந்த சும்மா கிடக்கிற நிலங்களிலை முந்தி பயிா செய்தாக்கள் வலோற்சாரமாய் இப்ப பயிர் செய்யத் துவங்க வேணும்.”
"கெதியாய் அந்தவேலையைத் துவங்குவம்.”
உத்வேக உணர்வுடன் கூறுகின்றான் காத்திகேசு.
"நாங்கள் எல்லாரும் ஒண்டு சேர்ந்து அவைக்கு உதவி யாய் நிக்க வேணும்.”
"நாங்கள் பத்து முறையும் தயார்.”
காத்திகேசுவின் உறுதி நிறைந்த குரல் கெம்பீரமாக ஒலிக்கின்றது.
"எங்கை கந்தசாமியாக்கள் வந்து எங்களை மறிச்சுப் பாக்கட்டும் பாப்பம்?”
முருகேசு கத்தியை உயர்த்தி வீசிக்கொண்டு கத்து கின்றான்.
அங்கு கூடிநின்றவர்களை நோக்குகின்றான் வேலுப் 1966D6T.
அவர்களுடைய விழிகளில் புத்தொளி
1973


Page 110


Page 111

1960களில் ஆரம்பித்து 70 களிலும் நான் தொழிற்சங்க விவ சாய சங்க வேலைகளில் முழுநேர ஊழியனாக ஈடுபட்டிருந்த காலத் தில் நாங்கள் நடத்தியபோராட்டங் களிலிருந்து பெற்ற அனுபவங்க ளையும்,உணர்வுகளையும், இப் போராட்டங்களிலிருந்து நான் கற்றவற்றையும் பட்டைதீட்டி சிருஷ்டிகளாக எமது மக்களுக்கே திருப்பிக் கொடுக்கின்றேன். இப்ப டைப்புக்களை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளி மையாக சிருஷ்டித்து வழங்குகின் றேன். எனது படைப்புக்களில் தொழிலாளர் விவசாயிகள்தான் கதாநாயகர்கள் வர்க்க உணர்வு டைய, தன்னலமற்ற அர்ப்ப ணிப்பு கூட்டுச் செயற்பாடு, தர்ம வேச போர்க்குணம் ஆகிய குணாம்சங்களையும், சுரண்டல், சூறையாடல் அநீதி அக்கிரமங் கள் நிறைந்த மனிதனை மணி தனே விழுங்குகின்ற இந்த சீர் கெட்ட சாக்கடைச் சமுதாயத்தை முற்று முழுதாக மாற்றி, இல்லா ரும் உள்ளாரும் இல்லாத ஒரு புதிய உன்னத உலகை அமைக்க வேண்டுமென்ற லட்சிய வேட் கையையும் கொண்ட தொழிலா ளர் விவசாயிகள்தான் எனது கதா நாயகர்கள். இவர்கள்தான் எதிர் கால வரலாற்று நாயகர்கள்