கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டா செல்வா முதல் டட்லி செல்வா வரை

Page 1
பண்டா - செல்வ
டட்லி - செ
சிங்களத் தலைவர்களுட6 தோல்வியில் முடிந்த பின்னணி பிரச்சினைக்கு நியாயமான தீர்ன பாரம்பரிய தமிழ்க் கட்சிகளின் வழக்கம். பண்டா- செல்வா ஒ ஒப்பந்தத்தையுமே அவர்கள் ஒப்பந்தங்களும் தமிழ் மக்களின் ஆ நிகழ்வுகள் என்பதால் அவை ெ பற்றியும் கைவிடப்பட்ட சூழ்நிை தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவது பாராளுமன்றத் மாதங்களில் நடைபெற்றது. அக்கா ஒரேநாளில் எல்லாத் தொகுதிகளு நாளில் சில தொகுதிகள் என் பாராளுமன்றத் தேர்தல் பத்தொன் நாளில் எல்லாத் தொகுதிகளுக்கும் மார்ச் மாதத்திலேயே ஆரம்பமாகி
முதலாவது தேர்தலில் பெறவில்லை. இலங்கைத்தமிழர தேர்தல் பிரசாரங்களில் இனப் பி பெறத் தொடங்கியது. தமிழரசுக்

சிந்தனை-3
ா முதல்
ல்வா வரை
- சிவா சுப்பிரமணியம் -
ன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யில் அவர்களிடமிருந்து இனப் வை எதிர்பார்க்க முடியாது என்று பேச்சாளர்கள் அடிக்கடி கூறுவது ப்பந்தத்தையும் டட்லி-செல்வா
குறிப்பிடுகின்றனர். இவ்விரு அரசியல் வரலாற்றில் முக்கியமான செய்துகொள்ளப்பட்ட பின்னணி ல பற்றியும் இன்றைய சந்ததியினர்
தேர்தல் 1947ஒகஸ்ட், செப்ரெம்பர் லத்தில் இப்போது நடப்பது போல் க்கும் தேர்தல் நடக்கவில்லை. ஒரு ற அடிப்படையில் முதலாவது பது நாட்கள் நடைபெற்றது. ஒரே தேர்தல் நடத்தும் நடைமுறை 1960 Jğil.
இனப்பிரச்சினை முக்கித்துவம் சுக்கட்சிகளத்துக்கு வந்த பின்னரே ச்சினையின் தீர்வு முக்கியத்துவம் கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களான
t

Page 2
எஸ்.ஜே. வீ. செல்வநாயகம், கு.வன்னியசிங்கம்முதலானோர் ஜீஜீபொன்னம்பலத்தின்தலைமையிலான அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாகவே முதலாவது தேர்தலில் போட்டியிட்டனர்.
தமிழ்க் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெறும் நிலை தேர்தல் முடிந்து இரண்டு வருடங்கள் கழிவதற்கு முன்னரே ஏற்பட்டது. டீ.எஸ். சேனநாயகவின் தலைமையில் அமைந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைய வேண்டும் என ஜீ.ஜீ. பொன்னம்பலமும் அவரைச் சார்ந்தவர்களும் வலியுறுத்தினார்கள். முற்போக்குச் சிந்தனையுள்ள சிங்களக்கட்சிகளுடன்ஒத்துணர்வின் அடிப்படையில் ஒத்துழைப்பது (Responsive Co- operation) 6Taip! Gisiggi 63.6565ITL6015Sai) கூறியிருந்ததை இவர்கள் தங்கள் பக்க நியாயமாக முன்வைத்தார்கள். ஐக்கியதேசியக் கட்சி முற்போக்குச் சிந்தனையுள்ள கட்சியா இல்லையா என்பதில் இவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை.
நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்று எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் கூறினார். இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலமைப்பைத் தீர்மானிப்பதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபையொன்றை அமைக்க வேண்டும்' என்பது அவர் முன்வைத்த நிபந்தனைகளுள் முக்கியமானது. செல்வநாயகத்தின் கருத்தை ஜீ.ஜீ.பொன்னம்பலமும் அவரைச் சார்ந்தவர்களும் நிராகரித்தனர். அரசாங்கத்தில் இணைவதெனக் கட்சியின் பாராளுமன்றக் குழு பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானித்ததைத் தொடர்ந்து கட்சி பிளவுபட்டது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் கபினற் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்தின் தலைமையில் வெளியேறியவர்கள் தாங்கள் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப்போவதாக 1949 ஒகஸ்ட் 29 ந் திகதி யாழ்ப்பாணத்தில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பின் பிரகாரம், இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949 டிசம்பர் 18ந் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

1952ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில்தமிழரசுக்கட்சி ஏழு வேட்பாளர்களைநிறுத்திய போதிலும் கோப்பாயில் கு.வன்னியசிங்கமும் திருகோணமலையில் என்.ஆர். இராஜவரோதயமும் மாத்திரம் வெற்றி பெற்றனர். காங்கேசன் துறையில் எஸ்.ஜே.வீ.செல்வநாயகம் தோல்வியடைந்தார். ஆனால் அடுத்த தேர்தலில் தமிழரசுக்கட்சியின் பலம் வெகுவாக அதிகரித்தது. கட்சியின் 14 வேட்பாளர்களுள் 10 பேர் வெற்றி பெற்றனர்.
இந்த வளர்ச்சிக்கு விசேடமான காரணம் உண்டு. ஐக்கிய தேசியக் கட்சியும் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயகவின் தலைமையில் அமைந்த கூட்டணியான மக்கள் ஐக்கிய முன்னணியும் சிங்களம் மட்டும் என்பதைப் பிரதான தேர்தல் கோஷமாக முன்வைத்தன. ஏற்கனவே தோற்றம் பெற்றிருந்த இனப் பிரச்சினை இக் கோஷத்தினால் கூர்மையடைந்தது. இறுதி நேரம் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் அணியாக இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எந்தவொரு கொள்கையையும் முன்வைக்கவில்லை. சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்ததமிழரசுக்கட்சிக்குக்கூடுதலான ஆதரவு கிடைத்தது. இத் தேர்தலுக்காக வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் "நாங்கள் தமிழ் மாநிலமொன்றை மாத்திரமன்றி முஸ்லிம்களுக்காக முஸ்லிம் மாநிலமொன்றையும் கோருவோம்." * என்று தமிழரசுக் கட்சி கூறியிருந்ததால் முஸ்லிம்கள் மத்தியிலும் அக்கட்சி செல்வாக்குப் பெற்றது.
வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான சமஷ்டி அமைப்புகள் நடைமுறையில் இருக்கின்றன. சமஷ்டி அலகிலும் பார்க்க மத்திக்குக் கூடுதலான அதிகாரங்கள் உள்ள சமஷ்டி அமைப்பு கனடாவில் உள்ளது. அவுஸ்திரேலியாவில் சமஷ்டி அலகுகள் மத்தியிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டிருக் கின்றன. இந்தியாவில் சமஷ்டியும் ஒற்றையாட்சியும் இணைந்த கலப்புமுறை நடைமுறையில் இருக்கின்றது. இவற்றுள் எவ்வாறான
3

Page 3
சமஷ்டி அமைப்பைக் கோருகின்றது என்பதைத் தமிழரசுக் கட்சி தெளிவுபடுத்தவில்லை. எனினும் சமஷ்டி என்ற கருத்துருவம் இனப்பிரச்சினைக்கான தீர்வாகத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தது.
பண்டா - செல்வா ஒப்பந்தம்
1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரசுக் கட்சி கூடுதலான இடங்களைக் கைப்பற்றியது. ஏனைய மாகாணங்களில் மக்கள் ஐக்கிய முன்னணி அமோக வெற்றியீட்டி ஆட்சி அமைத்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டீ. பண்டாரநாயகபிரதமராகப் பொறுப்பேற்றார்.
சிங்களம் மட்டும் கொள்கைக்கும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்புலங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கும் எதிரான போராட்டம் நடத்தப் போவதாகத் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழரசுக் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதிக்கு அமைவாக நேரடி நடவடிக்கை எடுப்பது பற்றித் தீர்மானிப்பதற்காக 1958 ஒகஸ்ட் 19 ந் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மகாநாட்டில் பின்வரும் தீர்மான்ம் ஏகமனதாக நிறைவேறியது.
"இலங்கையில் சமஷ்டி யூனியனை அமைப்பதற்குப் பிரதம மந்திரியும் இலங்கைப் பாராளுமன்றமும் ஆயிரத்துத் தொழாயிரத்து ஐம்பத்தேழாம் ஆண்டு ஒகஸ்ட்மாதம் 20ந்திகதிக்கு முன்நடவடிக்கை எடுக்கத் தவறினால் அந்த இலக்கை அடைவதற்காக அகிம்சை வழியில் கட்சி நேரடி நடவடிக்கையை ஆரம்பிக்கும்."
தமிழரசுக் கட்சியின் காலக்கெடுவைப் பிரதமர் எஸ்.டபிள்யூ ஆர்.டீ. பண்டாரநாயக குறைத்து மதிப்பிடவில்லை. தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் இறங்கினார். பிரதமருக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெறச் செய்வதில் பீநவரத்தினராசா கியூ.சீ. வகித்த பாத்திரம் முக்கியமானது. பேச்சுவார்த்தை 1957 ஏப்ரல் மாத பிற்பகுதியில் ஆரம்பமாகியது.
இனப்பிரச்சினைக்கான தீர்வாகப் பிராந்திய சபைகளை
4

நடைமுறைப்படுத்தும் நோக்கத்தைப் பிரதமர் பண்டாரநாயக கொண்டிருந்தார். இதற்கான நகல் மசோதா ஏற்கனவே தயாரிக்கப்பட்டு 17-05-1957ந் திகதிய அரசாங்க வர்த்தகமானியில் பிரசுரமாகிய போதிலும் பிரதமருக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே பேச்சுவார்த்தை ஆரம்பமாகியிருந்ததால் பாராளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படவில்லை.
தொடர்ச்சியாகநடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சரத்துகளாகின. அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயகவும் தமிழரசுக் கட்சியின் sti Sai எஸ்.ஜே.வீ.செல்வநாயகமும் 1957 ஜூலை 26ந் திகதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் செயற்குழு கொழும்பில் கூடியபோது வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர். அ.அமிர்தலிங்கமும் மட்டக்களப்புப் பாராளுமனற்உறுப்பினர்செ.இராசதுரையும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒப்பந்தத்தை ஏற்பது சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிடுவதாகிவிடும் என்று அவர்கள் வாதிட்டனர். "சமஸ்டி ஆட்சியமைப்புக்கான அடிப்படையை இவ்வொப்பந்தத்தின் மூலம் உருவாக்கியுள்ளோம்" என்று செல்வநாயகம் அவர்களுக்கு விளக்கமளித்தார்."
பின்வருவன ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
l. வடமாகாணம் ஒரு பிராந்திய அலகாகவும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய அலகுகளாகவும் இருத்தல்.
2. பாராளுமன்றத்தினால்அங்கீகரிக்கப்படுவதற்கு உட்பட்டதாக
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய அலகுகள் மாகாண எல்லைகளுக்கு அப்பாலும் ஒன்றிணைவதும் ஒரு பிராந்திய அலகு பலவாகப் பிரிவதும் .
3. பிராந்திய சபைகளுக்கு நேரடியான தேர்தல்.
5

Page 4
4. விவசாயம், கூட்டுறவு, காணிகளும் காணி அபிவிருத்தியும், குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், கடற்தொழில், வீடமைப்பு, சமூக சேவைகள், மின்சாரம், நீர்ப்பாசனம், வீதிகள் உட்பட பிராந்திய சபைகளுக்கான விடயங்களைச் சட்டத்தில் உள்ளடக்குதல்,
5. மத்திய அரசாங்கம் பிராந்திய சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு
செய்யும்.
6. வரி விதிப்பதற்கும் கடன் பெறுவதற்கும் பிராந்திய
சபைகளுக்கு அதிகாரம் உண்டு.
7. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாக மொழி.
இவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருப்பதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி அடையமுடிந்திருக்கும். பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் 1957ம் ஆண்டிலேயே இலங்கையில் சமஷ்டி அமைப்பொன்று தோன்றியிருக்கும் என்று அரசறிவியல் ஆய்வாளரான பார்தா எஸ்.கோஷ் (Partha S. Ghosh)g,601g, Ethnicity Versus Nationalism - The Devolution Discourse in Sri Lanka 6Taipo DIT@Sai Jiufoliugogs g) sigs குறிப்பிடலாம்.
ஐ.தே.கவின் எதிர்ப்பு
1956ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்தது. எட்டுத் தொகுதிகளில் மாத்திரம் அதனால் வெற்றியீட்ட முடிந்தது. ஜே.ஆர். ஜயவர்த்தன தனது அரசியலை ஆரம்பித்த களனித் தொகுதியில் தோல்விடைந்தார். கட்சி மீண்டும் தலைதூக்குவதற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகப் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கருதிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் ஒப்பந்தத்துக்கு எதிராகத் தீவிர பிரசாரத்தை ஆரம்பித்தார்கள். அவர்களின் பிரசாரத்தில் பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

O வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தமிழைநிர்வாக மொழியாக ஏற்றுக்கொண்டதன் மூலம் அரசகரும மொழிச் சட்டம் வென்றுவெறிதாக்கப்படுகின்றது.
O கல்லோயா அபிவிருத்திச் சபை உட்பட வடக்கு, கிழக்கில்
வாழும் சிங்களவர்கள் மீது தமிழ் மொழி திணிக்கப்படும்.
() கல்லோயா அபிவிருத்தித்திட்டத்தில் வாழும் சிங்களவர்கள்
அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
O ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட அதிகாரங்களுடன் ஒன் றிணைந்த பிராந்திய சபை அமையுமேயானால் மத்திய அரசாங்கத்துக்குச் சமனான அரசாங்கமாக இருப்பதோடு அடுத்த கட்டமாகத்தனிநாடு உருவாகும்.
O வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவரைக் குடியமர்த்த
முடியாமற் போய்விடும்.
பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராகக் கண்டி தலதா மாளிகை வரையிலான பாதயாத்திரையை 1957 ஒக்ரோபர் 2ந் திகதி ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்தது. ஜே.ஆர்.ஜயவர்த்தன இதற்குத் தலைமை தாங்கினார். பாதயாத்திரையின் போது ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தி ஒப்பந்தத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்கள். ஒக்ரோபர் 3ந் திகதி இம்புல்கொட என்ற இடத்தைப் பாதயாத்திரை அடைந்தபோது, கம்பஹாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ.பண்டாரநாயகவின் தலைமையில் ஒரு குழுவினர் தாக்குதல் தொடுத்து மேலும் முன்னேறவிடாது தடுத்தனர். பாதயாத்திரை பாதியில் கைவிடப்பட்டது.
பாதயாத்திரை தோல்விடைந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஒயவில்லை. பெளத்த மதகுருமாரை அணிதிரட்டி ஒப்பந்தத்துக்கு எதிரான பிரசாரத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்தது. இதே நேரம், ஜீ.ஜீ.பொன்னம்பலமும் சீசுந்தரலிங்க

Page 5
மும் வடக்கில் ஒப்பந்தத்துக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையிலும் பிரதமர் உறுதி தளரவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மகாநாடு 1958மார்ச் 1ம், 2ம் திகதிகளில் நடைபெற்றது. அம்மகாநாட்டில்உரையாற்றிய பிரதமர்பண்டாரநாயக ஒப்பந்தத்தை நியாயப்படுத்திப் பேசினார். *
வலதுசாரிச் சதி
ஒருபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்புச் செயற்பாடுகள் வலுவடைய, மறுபுறத்தில் அரசாங்கத்துக்குள்ளேயே பிரதமருக்கு எதிர்ப்புக் கிழம்பியது. தேர்தல் காலத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதான ஆதரவாளர்களில் ஒருவராகச் செயற்பட்ட களனி மகாவிகாரைப் பிரதம குரு மாபிட்டிகம புத்தரகித்த தேரோ தனது உறவினர் ஒருவருக்குச் சில வர்த்தக சலுகைகளை வழங்க வேண்டுமென விடுத்த வேண்டுகோளைப் பிரதமர் பண்டாரநாயக நிராகரித்துவிட்டார். இதனால் ஆத்தரமடைந்த தேரோதனக்கு மிகவும் நெருக்கமானவரானசுகாதார அமைச்சர் விமலாவிஜேவர்த்தனமூலம் அமைச்சரவைக்குள் வலதுசாரிக் குழுவொன்றைத் தோற்றுவித்துப் பண்டாரநாயகவுக்கு எதிராகச் செயற்பட வைத்தார்.
வலதுசாரி அமைச்சர்கள் இடதுசாரி அமைச்சர்களான பிலிப் குணவர்த்தனவையும் வில்லியம் டி சில்வாவையும் எதிர்க்கும் தோரணையில் பிரதமருக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். பண்டா-செல்வா ஒப்பந்தம் தொடர்பாகவும் இவர்கள் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. தென்னிலங்கையில் எதிர்ப்பு வலுவடைந்த நிலையிலும் பிரதமர் ஒப்பந்தத்தை உறுதியாக ஆதரித்து நின்றதை இவர்கள் விரும்பவில்லை. வலதுசாரி அமைச்சர்களில் ஒருவரான போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனநாயக 1958 மார்ச் மாதத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மீண்டும் சிங்கள பூரீ பஸ்களை அனுப்பினார். ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு இயக்கம் பலமடைந்து வரும் வேளையில் தமிழ்ப் பிரதேசங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு வித்திடுவதன் மூலம் பண்டாரநாயகவைப் பலவீனப்படுத்தித் தங்கள்

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வலதுசாரி அமைச்சர்கள் மேற்கொண்ட முடிவின் அடிப்படையிலேயே சிங்கள பூரீபஸ்கள் அனுப்பப்பட்டன. அறிந்தோ அறியாமலோ தமிழரசுக் கட்சி இவ்வமைச்சர்களின் நோக்கத்துக்குத்துணைபோனது.
வலுவான எதிர்ப்புக்கு மத்தியிலும் பிரதமர் உறுதியாக நின்றதையும் இடதுசாரிக் கட்சிகள் ஒப்பந்தத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததையும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவது இனப்பிரச்சினையின்தீர்வுக்கு வலுவான அடிப்படையைத் தோற்றுவிக்கும் என்பதையும் கவனத்தில் எடுத்துத் தமிழரசுக் கட்சி பிரதமரின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறீ எதிர்ப்பு இயக்கததை ஆரம்பித்ததன் மூலம் பிரதமரைப் பலவீனமானநிலைக்குத்தமிழரசுக் கட்சி தள்ளியது.
பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பொன்னம்பலமும் சுந்தரலிங்கமும் சிறீ எதிர்ப்புப் பிரசாரத்தையும் வடக்கில் ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது தமிழ் மக்கள் மத்தியில் தங்களைத் தனிமைப்படுத்திவிடும் எனக் கருதியதாலோ என்னவோ தமிழரசுக் கட்சித் தலைமை சிறீ எதிர்ப்பு நேரடி நடவடிக்கையில் இறங்கத் தீர்மானித்தது. தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட பஸ்களில் சிங்கள பூரீ இலக்கத் தகடுகளில் தார் பூசுவதும் மற்றைய வாகனங்களின் இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகளுக்குப் பதிலாகத்தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதும் இவர்களின் நேரடி நடவடிக்கையாக இருந்தது. எஸ்.ஜே.வீ. செல்வநாயகமும் இந்த நடவடிக்கையில் பங்கு பற்றினார். மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணத் திலும் ஏப்ரல் மாதத்தில் மட்டக்களப்பிலும் சிங்கள பூரீ இலக்கத் தகடுகளுக்கு அவர்தார் பூசினார். தமிழரசுக் கட்சி சிறீஎதிர்ப்பு நேரடி நடவடிக்கையை ஆரம்பித்ததும் பொன்னம்பலமும் சுந்தரலிங்கமும் படிப்படியாக ஒதுங்கிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தத்தைக் கைவிடுமாறு 1958ஏப்ரல் 9ந்திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் பிரதமர் பண்டாரநாயக அதை ஏற்கவில்லை. " எனினும் அன்றைய தினமே ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டிய
9

Page 6
சூழ்நிலை ஏற்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியினது ஏற்பாட்டின் பேரில் பிக்குமாரின் சத்தியாக்கிரகம் அன்று பகல் பிரதமரின் வீட்டுக்கு முன் இடம் பெற்றது. ஒப்பந்தத்தைக் கைவிடுமாறு அவர்கள் வற்பறுத்தினர். ஒப்பந்தத்தைக்கைவிடுவதாக அறிவிக்கும்வரைஅந்த இடத்திலிருந்து நகரப்போவதில்லை எனக் கூறினர். அதே நேரம், ஒப்பந்தத்தைக் கைவிட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றும்படி சில அமைச்சர்கள் ஆலோசனை தெரிவித்தார்கள். வேறு வழியின்றி, ஒப்பந்தத்தைக் கைவிடுவதாகப் பிரதமர் அறிவித்தார். தமிழ்த் தலைவர்களின் தீவிரமான செயற்பாடுகள் மற்றும் அவற்றின் விளைாக ஒப்பந்தத்துக்கான எதிர்ப்பு வலுவடைந்தமை ஆகிய காரணங்களால் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதாகத் தனது வானொலி உரையில் அவர் கூறினார்
சிங்கள சிறீபஸ்களைத் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பியமை வலதுசாரி அமைச்சர்களின் சதி என்பதைத் தமிழரசுக் கட்சி புரித்துகொண்டு தூரநோக்குடன் செயற்பட்டிருக்கலாம். ஒப்பந் தத்துக்கு எதிரான சதி முயற்சியே சிறீபஸ்கள் என்பதையும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும் இப் பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடும் என்பதையும் மக்களுக்கு விளங்கப்படுத்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அக்கறை செலுத்தியிருக்கலாம். அதைவிட்டு, ஒப்பந்தத்துக்கு எதிரான சக்திகள் பலமடையும் வகையிலும் பிரதமரை பலவீனப்படுத்தும் வகையிலும் போராட்டத்தை ஆரம்பித்துத்தீவிரமாக முன்னெடுத்தமை மாபெரும் தந்திரோபாயத்தவறு.
சுதந்திரக் கட்சி ஏமாற்றியது.
பண்டாரநாயகவுக்கு எதிரான வலதுசாரிச் சதியின் உச்ச கட்டமாக 1959 செப்ரெம்பர்26ந்திகதி அவர்சுட்டுக்கொல்லப்பட்டார். அக் கொலை வழக்கில் மாபிட்டிகம புத்தரகித்த தேரோ முதலாவது எதிரி என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சர் டபிள்யூ. தகநாயக பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரது அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட
IO

நிலைக்கவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1960 மார்ச் 19ந் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 50 ஆசனங்களைக் கைப்பற்றியது.தனிக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும் மொத்தம் 151 தெரிவு செய்யளப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டபாராளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதல்ல.
தமிழரசுக் கட்சியின் பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் டட்லி சேனநாயக எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பண்டா- செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேச்சுவார்த்தை யின் போது செல்வநாயகம் முன்வைத்த நிபந்தனைக்குப் பதிலளித்த டட்லி சேனநாயக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதாகவோ பிராந்திய சபைகளை அமைப்பதாகவோ தன்னால் வாக்குறுதி அளிக்க முடியாது எனக் கூறியதால் பேச்சுவார்த்தை முறிந்தது.
பண்டா-செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி அளித்த வாக்குறுதியின் பேரில், அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பதெனத் தமிழரசுக் கட்சியின் தலைமைக் குழு தீர்மானித்தது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு மற்றைய கட்சிகளின் ஆதரவு இல்லாத போதிலும் அரசாங்கம் அமைப்பதற்கு அக் கட்சியின் தலைவர் டட்லி சேனநாயகவுக்கு மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணதிலக அழைப்பு விடுத்தார். அறுதிப் பெரும்பான்மை இல்லாத கட்சிக்கு அழைப்பு விடுப்பதற்கு முன் மற்றைய கட்சிகளின் நிலைப்பாட்டைக் கேட்டறியும் வழமையான நடைமுறையை அவர் பின்பற்றவில்லை.
டட்லி சேனநாயகவின் அரசாங்கம் 1960 ஏப்ரல் 22ந் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அரசாங்கத்துக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 93 வாக்குகளும்
ll

Page 7
அளிக்கப்பட்டன. சிம்மாசனப் பிரசங்கத்துக்கு முன்னதாகவே டட்லி சேனநாயக நியமன உறுப்பினர்கள் ஆறு பேரையும் நியமித்திருந்தார். அவர்களும் சில சுயேச்சை உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாராளுமன்றத்தைக்கலைக்கும்படி டட்லி சேனநாயக ஏப்ரல் 23ந் திகதி மகா தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார்.
அரசாங்கம் அமைப்பதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி உரிமை கோரியது. இக் கோரிக்கை தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளினதும் தமிழரசுக்கட்சியினதும் நிலைப்பாட்டைக் கேட்டறியும் நடைமுறையை மகா தேசாதிபதி ஆரம்பித்தார். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பீர்களா என்று இடதுசாரிக் கட்சிகளிடம் கேட்ட மகா தேசாதிபதி தமிழரசுக் கட்சியிடம் "குறைந்தது இரண்டு வருடங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவீர்களா" எனக் கேட்டார். "சிறீலங்காசுதந்திரக்கட்சியின்முழு ஆட்சிக் காலத்திலும் ஆதரவளிப்போம் எனக் கூறிய எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் நிபந்தனையற்ற ஆதரவு எனக் கூறவில்லை. இதைக் காரணங்காட்டி மகாதேசாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
டட்லி சேனநாயக பிரதம மந்திரியாகப் பெயர் குறிப்பிடப்பட்டவர்(Prime MinisterDesignate) மாத்திரமே என்றும் சபையில் நம்பிக்கை வாக்கைப் பெற்ற பின்னரே அவர் பிரதம மந்திரி என்ற சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறுவார்என்றும் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சு செய்யும் அதிகாரம் அதுவரை அவருக்கு இல்லை என்றும் கலாநிதி என்.எம்.பெரேரா சுட்டிக்காட்டியதை மகா தேசாதிபதி கவனத்தில் எடுக்கவில்லை. இலங்கைப் பாராளுமன்றம் அக்காலத்தில் பின்பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகவே மகா தேசாதிபதி இவ்விடயத்தில் நடந்தார்.
பிரித்தானியாவில் 1923 டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிங் கட்சி 258இடங்களையும் தொழிற் கட்சி 191 இடங்களையும் லிபரல் கட்சி 151 இடங்களையும் கைப்பற்றின. கன்சர்வேடிங் கட்சியின்தலைவர் பால்ட்வின்(Baldwin) பிரதமராகப் பதவியேற்றார். சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் அவரது
12

அரசாங்கம் தோல்வியடைந்தது. அவர் இராஜினாமா செய்தாரே யொழியப் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சு செய்யவில்லை. லிபரல் கட்சியின் ஆதரவுடன் தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது. *
பாராளுமன்றத்தைக் கலைப்பது என்ற முன் முடிவுடனேயே மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணதிலக மற்றைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். அவர்ஐக்கிய தேசியக் கட்சிக்காரர் என்பது ஒரு காரணம். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அப்போது தலைமை வகித்தவர் சீ.பீ.டிசில்வா. சாதியில் குறைந்தவரான அவர் பிரதமராகுவதை உயர் சாதிக்காரரான சேர் ஒலிவர் குணதிலக விரும்பியிருக்கமாட்டார் என்பது மற்றைய காரணம்.
அரசியலமைப்பு விவகாரங்கள் பற்றிய தலைசிறந்த நூலாக Constitutional Law by Wade and Phillips gaito 6160g கருதப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஒருபோதும் பெரும் பான்மையைப் பெற்றிருக்காத பிரதமர் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஆலோசனை வழங்கும் உரிமை உடையவரல்ல என்று 1965 ம் ஆண்டு வெளியாகிய இதன் ஏழாவது பதிப்பில் சொல்லப் பட்டுள்ளது. முந்திய பதிப்புகளில் இக் கருத்து இருக்கவில்லை. * இலங்கையில் 1960ம் ஆண்டு இடம் பெற்ற சம்பவத்தை நினைவில் வைத்தே ஏழாவது பதிப்பில் இது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் 1960 ஜூலை 20ந் திகதி நடைபெற்றது. சிறிமாவோ பண்டாரநாயகவின் தலைமையில் இத் தேர்தலுக்கு முகங்கொடுத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி 75 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கு 16 ஆசனங்களும் கிடைத்தன. நியமன உறுப்பினர்கள் ஆறு பேரையும் சேர்த்து ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைச் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக பிரதமராகப் பொறுப் பேற்றார். அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததால் செனெற் சபை உறுப்பினராக நியமனம் பெற்றார்.
13

Page 8
பண்டா- செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகத் தமிழரசக் கட்சிக்கு வாக்குறுதி அளித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனிப் பெரும்பான்மை கிடைத்ததும் அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது.
இடதுசாரி ஐக்கிய முன்னணி
சிறிமாவோ பண்டாரநாயகவின் அரசாங்கம் பாடசாலை களையும் பெட்ரோலிய வர்த்தகத்தையும் தேசியமயமாக்கியதால் வலதுசாரி சக்திகளின் தீவிர எதிர்ப்புக்கு உள்ளாகியது. எனினும் இடதுசாரிக் கட்சிகளுடன் உறவை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சியில் அவ்வரசாங்கம் ஈடுபடவில்லை.
இப் பின்னணியில், இடதுசாரிக் கட்சிகளுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து 1963 ஒகஸ்ட் 12 ந் திகதி இடதுசாரி ஐக்கிய முன்னணி உதயமாகியது. பண்டாரநாயகவின் தலைமையில் அமைந்த கூட்டணியான மக்கள் ஐக்கிய முன்னணி அவரது கொலைக்குப் பின் உடைய, அக் கூட்டணியில் அங்கம் வகித்த பிலிப் குணவர்த்தனவின் தலைமையிலான புரட்சிகர சமசமாஜக் கட்சி (V.L.S.S.P) மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் தனித்து இயங்கத் தொடங்கியது. அதுவே இடதுசாரி ஐக்கிய முன்னணியின் உறுப்புக் கட்சி.
இடதுசாரி ஐக்கிய முன்னணியின் முதலாவது பலப் பரீட்சையாக 1964 ஜனவரி 18ந் திகதி நடைபெற்ற பொரளை இடைத்தேர்தல் அமைந்தது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.டிசில்வா காலமாகியதாலேயே இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.ஐக்கிய தேசியக்கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிட்ட இத் தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முன்னணி வேட்பாளர் விவியன் குணவர்த்தன வெற்றியீட்டினார்.
இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தேர்தல் வெற்றியையும்
l4

முன்னணியின்பக்கம் மக்கள்அணிதிரள்வதையும் சிறீலங்காசுதந்திரக் கட்சித்தலைமை அச்சுறுத்தலானவளர்ச்சிப்போக்காகவே நோக்கியது. இந்தநிலையில், "பிற்போக்குச்சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக" சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒத்துழைக்க முன்வருமாறு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக 1964 மாாச் 28ந் திகதி பொதுக் கூட்டமொன்றில் இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் அழைப்பு தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடதுசாரி ஐக்கிய முன்னணிக்குள் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் 1964 ஜூன் மாதம் லங்கா சமசமாஜக் கட்சி தனியாக அரசாங்கத்தில் சேர்ந்து மூன்று அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றது. இதன் விளைவாக இடதுசாரி ஐக்கிய முன்னணி இயற்கை மரணம் எய்தியதோடு லங்கா சமசமாஜக் கட்சியும் பிளவுபட்டது.
இக் காலப்பகுதியில் அரசாங்கத்துக்கு எதிரான நேரடி நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டன. அதே சமயம், அரசாங்கத்தில் சமசமாஜிஸ்டுகள் இணைந்ததால் அதிருப்தியுற்றிருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறப்பினர்களைக் கட்சி மாறச் செய்து அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டிருந்தது. அம் முயற்சியில் வெற்றி கிட்டுவதற்கான அறிகுறிகள் தென்பட்டபோது தமிழரசுக் கட்சியின் உதவியைஐக்கிய தேசியக் கட்சி நாடியது. அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் தமிழரசுக்கட்சி அதன் நேரடி நடவடிக்கைத் திட்டத்தைக் கைவிட்டது.
சிம்மாசனப் பிரசங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு 1964 டிசம்பர் 3ந் திகதி நடைபெற்ற போது அமைச்சர் சீ.பி.டி சில்வாவின் தலைமையில் பதின்மூன்று பூரீலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.
15

Page 9
தமிழரசுக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தது. அரசாங்கத்துக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நிதியமைச்சர்கலாநிதி என்.எம்.பெரேராவும் லங்கா சமசமாஜக் கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான பேர்னாட் சொய்சாவும் வெளிநாடு சென்றிருந்தனர். லங்காசமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேறிப் புரட்சிகரப் பிரிவாகச் செயற்பட்ட எட்மன்ட்சமரக்கொடியும்மெரில் பெர்னாண்டோவும்அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டட்லி - செல்வா ஒப்பந்தம்
சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1965 மார்ச் 22ந் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு:
ஐக்கிய தேசியக் கட்சி 66 சிறீலங்கா சுதந்திரக் கட்சி 44 தமிழரசுக் கட்சி 14
லங்கா சமசமாஜக் கட்சி சிறீலங்கா சுதந்திர சோஷலிஸ்ட் கட்சி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்க் காங்கிரஸ் ஜாதிக விமுக்தி பெரமுனை மக்கள் ஐக்கிய முன்னணி Ol சுயேச்சைகள் O6
ஐக்கிய தேசியக்கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்க வில்லை. மற்றைய கட்சிகளின்ஆதரவைப் பெற்றுஆட்சி அமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இறங்கின. இரண்டு கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரின. ஆட்சி அமைக்கும் எதிர்பார்ப்புடன் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக தனது இராஜினாவைத்தாமதப்படுத்தினார்.
I6

தேர்தல் முடிந்தவுடனேயே மற்றைய கட்சிகளின்தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும் தமிழரசுக்கட்சி அதன் ஆதரவு யாருக்கு என்பதை உடனடியாக வெளிப்படுத்த வில்லை.
பண்டா -செல்வா ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப் படுத்துவதாகவும் அது பற்றிச் சிம்மாசனப் பிரசங்கத்திலேயே உறுதியளிப்பதாகவும் சிறீலங்காசுதந்திரக் கட்சி தமிழரசுக் கட்சிக்குத் தெரியப்படுத்தியது. ஆறு சுயேச்சை உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திர சோஷலிஸ்ட் கட்சியின் ஐந்து உறுப்பினர்களில் இருவரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கும் தகவலும் தமிழரசுக் கட்சிக்குத் தெரிவிக்கப் பட்டது. எனினும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தமிழரசுக் கட்சி விரும்பவில்லை.
பண்டா- செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான கண்டி யாத்திரையின் போது வைத்திய ஆலோசகராகச் செயற்பட்ட டாக்டர் எம்.வீ.பீ பீரிஸ்ஸின் இல்லத்தில் டட்லி சேனநாயகவும் எஸ்.ஜே.வீ. செல்வநாயகமும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 1965 மார்ச் 24ந் திகதி டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டட்லி சேனநாயகவும் தமிழரசுக் கட்சியின் சார்பில் எஸ்.ஜே.வீ. செல்வநாயகமும் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் பிரதான அம்சங்கள்:
l. வடக்கு, கிழக்கில்நிர்வாக மற்றும் ஆவணமொழியாகத்தமிழ்
2. வடக்கு, கிழக்கில் தமிழில்நீதிமன்ற நடவடிக்கை
3. மாவட்டசபைகள்
4. காணிப் பங்கீட்டுக்கு எல்லாப் பிரசைகளும் உரித்துடை
17

Page 10
யோராகும் வகையில் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் குடியேற்றத்திட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள காணியற்றோருக்கு முதலாவதாகவும் வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இரண்டாவதாகவும் முன்னுரிமை.
ஒப்பீட்டளவில் பண்டா-செல்வா ஒப்பந்தம் இந்த
ஒப்பந்தத்திலும் பார்க்க எவ்வளவோ மேலானது. தமிழ் மக்களின் நலன்என்ற கோணத்திலிருந்துபார்க்கையில் சிறிலங்காசுதந்திரக்கட்சி
ஆட்சி
அமைப்பதற்கு ஆதரவளிப்பது தான் தமிழரசுக் கட்சி
செய்திருக்க வேண்டியது.
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தில்தமிழரசுக்கட்சிதீர்மான
சக்தியாக இல்லை. தமிழரசுக் கட்சி இல்லாமலே (நியமன உறுப்பினர்களுடன்) அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை
உண்டு.
ஐக்கிய தேசிய கட்சி 66 சிறீலங்கா சுதந்திர சோஷலிஸ்ட் கட்சி O5 தமிழ்க் காங்கிரஸ் O3 ஜாதிக விமுக்தி பெரமுனை Ol மக்கள் ஐக்கிய முன்னணி Ol நியமன உறுப்பினர்கள் O6
82
சிறிலங்காசுதந்திரக்கட்சி ஆட்சி அமைத்திருந்தால்நிலைமை
வேறு. அந்த அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி தீர்மான சக்தியாக இருந்திருக்கும். தமிழரசுக் கட்சி ஆதரவை விலக்கினால் அரசாங்கம் வீழ்ந்துவிடும் நிலை.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி 4. லங்கா சமசமாஜக் கட்சி O இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி 04
18

சுயேச்சைகள் O6
நியமன உறுப்பினர்கள் O6
67
தமிழரசுக் கட்சி 14
81
இந்த நிலையில், சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் இருப்பு:தமிழரசுக் கட்சியின் ஆதரவிலேயே தங்கியிருக்கும். பண்டாசெல்வா ஒப்பந்தத்தின் சரத்துகளைத் தாமதமின்றி நடைமுறைப் படுத்துமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கக்கூடிய நிலையில் தமிழரசுக் கட்சி இருந்திருக்கும். இரண்டு இடதுசாரிக் கட்சிகளின்ஆதரவும் இவ்விடயத்தில்தமிழரசுக்கட்சிக்குநிச்சயமாகக் கிடைத்திருக்கும்.
பண்டா-செல்வா ஒப்பந்தத்தைநடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலையைத் தமிழ் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதற்குத் தமிழரசுக் கட்சி தவறிவிட்டது. ஒரு தடவை ஏமாற்றியதால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கவில்லை என்ற வாதம் பண்டா- செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராகப் பச்சை பச்சையாக இனவாதம் பேசியஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்த பின்னணியில் பொருத்தமற்றது. கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதே சிறந்த அரசியல்.
எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் மார்க்சிஸ்டுகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்." தேசியமயக் கொள்கைக்கும் எதிரானவர். பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்தவர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்கத் தமிழரசுக் கட்சி மறுத்ததற்கு அதன் தலைவரின் மார்க்சிய எதிர்ப்பு நிலைப்பாடே பிரதான காரணம் எனக்கூறுவது தவறாகாது. சிறீலங்கா சதந்திரக் கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளும் அங்கம் வகிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் அபிப்பிராயம்
19

Page 11
நிலவியது.அவ்வாறான அரசாங்கம் அமைவதைத்தவிர்க்க வேண்டும் என்று செல்வநாயகம் நினைத்திருக்கலாம். 1960 ஏப்ரல் மாதத்தில் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைத்திருந்தால் அவ்வரசாங்கம் விரைவிலேயே வீழ்ந்திருக்கும் என்று பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் கூறிய பின்வரும் கூற்று மேற்படி கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
"1960 ஏப்ரலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மாற்று அரசாங்கம் அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் ஆதரவளித்த போதிலும் செல்வநாயகம் ஒருபோதும் மார்க்சிஸ்டுகளை மானசீகமாக அங்கீகரித்தவரல்ல. அந்த அரசாங்கம் லங்கா சமசமாஜக் கட்சியிலும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலுமிருந்து அமைச்சர்களைச் சேர்த்துக்கொள்ளும் காரணத்தினால் நிச்சயமாக வீழ்ந்திருக்கும் என்பதைப் பின்னறிவுடன் கூற முடியும். அரசாங்கம் தேசியமயக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் கட்டத்தில் தமிழரசுக் கட்சி அதன் ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கும்."
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்த "தேசிய அரசாங்கத்தில்" தமிழரசுச் கட்சியின் சார்பில் மு.திருச்செல்வம் கபினெற் அமைச்சராகப் பதவியேற்றார். அந்த அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி இரண்டறக் கலந்தது எனலாம். "தந்ததுன் தன்னைக் கொண்டதென்தன்னை" என்று அந்த அரசாங்கத்துடனான உறவுக்கு அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். தமிழரசுக்கட்சி வழக்கமாகச் சுதந்திர தினத்தைப் பகிஷ்கரித்து வந்தது. ஆனால் 1966 சுதந்திர தினத்தன்று எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றினார்."
மாவட்ட சபைகளுக்கான வெள்ளை அறிக்கை 1968 ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கான சட்டமூலத்துக்கு அரசாங்க பாராளுமன்றக் குழுவில் பலத்த எதிர்ப்பு இருந்ததால் அது கைவிடப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் டட்லி சேனநாயக செல்வநாயகத்தையும் தமிழரசுக் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து, மாவட்ட சபை விடயத்தில் தனது இயலாமையைத் தெரியப்படுத்தியதுடன் அதற்குப்
20

பொறுப்பேற்றுப் பதவியை இராஜினாமா செய்யப்போவதாகவும் கூறினார். அவர் எதிர்பார்த்தது போலவே, தொடர்ந்து அவர் பிரதமராகப் பதவி வகிக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சி கேட்டுக்கொண்டது. *
டட்லி- செல்வா ஒப்பந்தத்தில் மாவட்ட சபையே பிரதான அம்சம் . அது இல்லை என்றாகிய பின்னரும் தமிழரசுக் கட்சி தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகித்தது. திருச்செல்வம் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்தார்.
தமிழரசுக் கட்சியின் நெருக்குவாரம் காரணமாகப் பாராளு மன்றத்தில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டதேயொழிய மாவட்ட சபைகளை அமைக்கும் நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக்கு ஒருபோதும் இருக்கவில்லை.
மாவட்ட சபைகளுக்குப் பொறுப்பான உள்விவகார அமைச்சுப் பதவியைத் திருச்செல்வத்துக்கு வழங்க வேண்டும் எனத் தமிழரசுக் கட்சி வேண்டுகோள் விடுத்தது" . ஆனால் உள்ளூராட்சி அமைச்சுப் பதவியே அவருக்கு வழங்கப்பட்டது. 1965 இன் பிற்பகுதியில் எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்தின்தலைமையில்தமிழரசுக் கட்சிக்குழுவொன்று பிரதமர் டட்லி சேனநாயகவைச் சந்தித்து மாவட்ட சபை பற்றிப் பேசிய போது, "பதவியில் சில மாதங்கள் இருந்த பின்பு நீங்கள் உங்கள் கோரிக்கையை வற்புறுத்த மாட்டீர்களெனநான்நினைத்தேன்" என்று டட்லி கூறினார். *
திருகோணமலை கோணேஸ்வர ஆலயப் பிரதேசத்தைப் புனித நகராகப் பிரகடனப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகக் குழுவொன்றைத் திருச்செல்வம் நியமித்தார். சேருவில விகாரையின் பிரதம தேரோ புனித நகர் ஆலோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் பிரதமர் டட்லி சேனநாயக திருச்செல்வத்துடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அக் குழுவைக் கலைத்தார். பிரதமரின் அச் செயலினால் அதிருப்தியுற்ற திருச்செல்வம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
மாவட்ட சபை விடயத்திலும் புனித நகர் விடயத்திலும்
21

Page 12
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை நடந்துகொண்ட முறை தமிழரசுக் கட்சியை "வேண்டாப் பங்காளி" போல நடத்தியதைக் கோடி காட்டுகின்றது. ஆட்சியை நடத்துவதற்குத் தமிழரசுக் கட்சியின் ஆதரவு அத்தியாவசியமானதாக இல்லாததே இதற்குக் காரணம் எனக் கூறலாம்.
தமிழரசுக் கட்சி 1968 நவம்பர் மாதத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த போதிலும் அரசாங்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது. 1970 பொதுத் தேர்தல் காலம் வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை ஆதரித்து வந்த தமிழரசுக் கட்சி பொதுத் தேர்தலுக்கான அதன் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இனப்பாகுபாடு காட்டியது என்றும் தமிழ் மக்களின் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுக்கவில்லை என்றும் குறை கூறியது.
மேலுமொரு சந்தர்ப்பம்
சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டுச் சேர்ந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1970 மே 31ந் திகதி பதவியேற்றது. பண்டா- செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான இன்னொரு சந்தர்ப்பம் சோல்பரி அரசியலமைப்புக்குப் பதிலாகப் புதிய அரசி யலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான செயற்பாடுகளில் இவ்வரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்தது.
புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடைமுறைக்குத் தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்குமேயானால் பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் பிரதான சரத்துகளை அரசியலமைப்பில் உள்ளடக்க முடியும் என்ற தகவல் மு.திருச்செல்வத்துக்கூடாக எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. தனக்கு இந்த வாக்குறுதியை அளித்தவர்கள் யார் என்பதைத் திருச்செல்வம் வெளிப்படுத்தாத போதிலும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களேஅவருடன் தொடர்புகொண்டனர் என்பதை ஊகிக்க முடியும். செல்வநாயகம் அந்த அழைப்பைநிராகரித்தார். *
22

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி சில கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு அனுப்பியது. அந்த மகஜர் அரசியலமைப்புப் பொறிமுறை பற்றிய அறிவின்மையை வெளிப்படுத்தும் வகையில் மோசமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணம் என்கிறார்பேராசிரியர்ஏ.ஜே.வில்சன்.'தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரமுகரும் சட்ட வல்லுநருமான திருச்செல்வமும் அக்காலத்தில் தமிழரசுக் கட்சியுடனான தொடர்பைத் துண்டித் திருந்தவரான யாழ்ப்பாணத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.எக்ஸ்.மாட்டினும் கூட இதே கருத்தைத் தெரிவித்தனர்.
பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சரத்துகளை இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்குவது தமிழ் மக்களின் நலனைப் பொறுத்த வரையில் முக்கியமான ஒரு சாதனை.தமிழரசுக்கட்சி அந்த அழைப்பை ஏற்றிருக்கவேண்டும். பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் சரத்துகளை அரசியலமைப்பில் உள்ளடக்க முடியாமற் போனால் அரசியலமைப்பு நிர்ணய சபை மட்டத்திலேயே ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கலாம். கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன் படுத்தாமல் அழைப்பை நிராகரித்தமை மிகப் பெரிய தவறு. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அது மிகப் பெரிய பின்னடைவு.
சான்றாதாரங்கள்
1, A, Jeyaratnam Wilson - S.J.V. Chelvanayagam and the Crisis of Sri Lankan Tamil Nationalism - 1947-1977
P.7
2. W.A. Wiswa Warnapala- Ethnic Strife and Polities in
Sri Lanka — P.75
3. ரி. சபாரத்தினம்-தந்தை செல்வா - ஒரு அரசியல்
வாழ்க்கைச் சரிதை Lulë - 158
4. ரி. சபாரத்தினம் - மேலது - பக் - 162
5. A. Jeyaratnam Wilson - ibid - p. 87
6. Bradman Weerakoon - Rendering unto Caesar - P. 42
23

Page 13
10.
11.
12.
3.
14.
15.
16.
17.
A. Jeyaratnam Wilson
L.J.M. Cooray - Constitu — р. 78
L.J.M. Coory - ibid - P.
A. Jeyaratnam Wison - I
A. Jeyaratnam Wilson - i
TD.S.A. Dissanayahe – Vol:11 - P.264
A. Jeyaratnam Wilson
A. Jeyaratnam Wison - it
ரி.சபாரத்தினம் - மேலது.
A.Jeyaratnam Wilson-i
A. Jeyaratnam Wilson
வெளியீடு: இலங்கை முற்போ
18-6/1, கொலின்வூ

ibid - P95
tional Government in Sri Lanka
79
bid - P24
bid - P. 100
War or Peace in Sir Linaka
ibid - p. 109
bid - P. 107
Ljáš. 235
bid - p. 116
Ibid - P. 116
க்கு கலை இலக்கிய மன்றம் பூட் பிளேஸ், கொழும்பு - 06
4