கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம் பெயர் அரசியலில் தமிழர் தேசியம்

Page 1
(திரி சிங்கள பெரமுனையின் கூட்ட
நீங்கள் மிகவும் மோச ஊதித் தூண்டிவிடுகிறர்கள். ந/ பொருளா தாரக் கொள்கைகள் லாம் ஆனால் மக்கள் சமூகத்திற கூடியதாக மொழி, மதம் மற்றும் தூண்டிவிட்டால் அது எங்கு பே/ தெரியாது. கடந்த ஞாயிற்று மைதானத்தில் நான் கண்ணுற்ற அங்கத்தவர்கள் கண்டிருந்தார்கே பற்றியே வெட்கப்பட்டிருப்பர். இ அவர்கள் மனவேதனை அடைந்த
-கலாநிதி என். எம். பெரேரா, கட்சி, 1955 ஒக்டொபர் 19ம் சபையில் கூறியது.
1955ம் ஆண்டு சிங்கள இ பார்த்து என். ஏம்.பெரேரா கூறிய உரையை ஆரம்பிக்கிறேன். இ நாட்டை சின்னாபின்னமாக்கப் டே கூறியது. ஆனால் இது சிங்க தமது சுயலாப அரசியலுக்காக அரசியல்வாதிகளுக்கும் மிகப் இக்காலகட்டத்தில் நடந்த தமி கண்ணுற்றிருந்தால் இடதுசாரித் கூறியிருப்பார்கள்.
இலங்கையில் ‘தமிழ் ே கட்டமெனவும் 'தமிழர்களின் தே

சிந்தனை 2
அரசியலில் தேசியம்'
ம்பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது)
மான உணர்ச்சி சுவாலைகளை 1ங்கள் அரசியல் கோட்பாடுகள், என்பவற்றுக்காக மோதிக்கொள்ள ர்கு மனோ விகாரத்தை ஏற்படுத்த்
இன அப்படையில் அவர்களைத் 7ய் முடியும் என்பது எவருக்குமே கிழமை நகரசபை மண்டப 1தை இந்த சபையின் கெளரவ ளேயானால் அவர்கள் தங்களைப் ந்த நாட்டின் எதிர்காலம் பற்றி திருப்பர்.
தலைவர் லங்கா சமசமாஜக்க
திகதி இலங்கை பிரிதிநிகள்
}னவாதத்தை தூண்டியவர்களைப் இந்த வரிகளை கூறி நான் எனது து சிங்கள இனவாதிகள் இந்த ாகிறர்கள் என எச்சரிக்கை யாக ள இனவாதிகளுக்கு மட்டுமல்ல
தமிழ் இனவாதம் பேசிய தமிழ்
பொருத்தமானதாகும். வடக்கில் ழரசுக் கட்சியின் கூட்டங்களை 5 தலைவர்கள் இப்படித்தான்
தேசியத்தின்’ எழுச்சியின் உச்ச சிய விடுதலைப் போராட்டத்தின்

Page 2
இறுதி வடிவமெனவும் அழைக்கப்பெற்ற, புலிகளால் மேற்கொள்ளப பட்ட ஆயுதப் போராட்டம் 2009 மே 18ம் திகதி மிக அவலமாக முடிவுற்றதை நாம் அனைவரும் அறிவோம். நடந்து முடிந்த அவலத்தை இன்னமும் ஜீரணிக்க முடியாத நிலையிலேயே தமிழ் சமூகத்தின் பெரும் பகுதி இருக்கின்றது, அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்த நாடுகளில் நிலைமை அதவிைட அவலமானது உண்மை. அது ஒரு புறமிருக்க, அந்த ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்ட விதத்தையும் அதற்கு அடிப்படையாக இருந்த தமிழர் தேசிய கோட்பாட்டையும்' அதற்கு ஏற்பட்ட அவலமான முடிவையும் பற்றி தமிழ் அரசியல் சமூகம் ஒரு முறையானதும் ஆழமானதுமான அரசியல் பகுப்பாய்வை (political postmortem) செய்வது இன்றைய கால கட்டத்தில் ஒரு முக்கியமான கடமையாகும். தனியாக தமிழ் தேசியத்தின் அரசியல் தளம், அங்கு இயங்கிய அரசியல் சக்திகள், அவற்றின் செயற்பாடுகள் மட்டுமன்றி அவற்றின் சித்தார்த்த அடிப்படை, மற்றும் இவற்றின் இயக்கப் போக்கிற்கு உறுதுணையாக இருந்த ஏனைய சமூக, பண்பாட்டு அங்கங்களையும் உள்ளடக்கியதாக அப்பகுப்பாய்வு செய்யப் பட்டாலே அது முழுமை பெறும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
அது ஒரு புறமிருக்க. நடந்து முடிந்த ‘தமிழர் தேசியத்திற் கான ஆயுதப்போராட்டத்திற்கு அடிப்படையாக இருந்த ‘தமிழ் தேசிய கோட்பாட்டையும் அதன் எழுச்சியையும், இயங்கு முறையை யும், வீழ்ச்சியையும் தற்போதைய சூழ்நிலையில் 2009 மே 18க்கு முன் பின் என பிரித்துப் பார்க்கப்பட வேண்டியது அவசியம். அதே போல் புலம்பெயர் சூழலிலும் கூட இந்த ‘தமிழர் தேசியம்’ அதன் செயற்பாடு, அதன் இயங்கு தளம், இயங்கு முறை எவ்வாறு இருந்தது என்பதையும் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முழுமையாக அழிக்கப்பட்ட 2009 மே 18க்கு முன் பின் என பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. தற்போது நான் வாழ்ந்து வரும் கனேடிய மண்ணிலும்கூட நிலைமை எவ்வாறு இருந்தது, எவ்வாறு மாறிவருகின்றது என்பதைப்பற்றிய எனது அவதானிப்பு களையே உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

2009 மே 18 வரை கனடாவில தமிழர் தேசியம்'
கடந்த முப்பது வருட காலமாக நிகழ்ந்து முடிந்த சிவில் யுத்தத்தின் போது இலங்கையை விட்டு வெளியேறிய தமிழர்களின் எண்ணக்கை பருமட்டாக எட்டு இலட்சத்திற்கும் பத்து இலட்சத்திற்கும் இடைப்பட்டது என கணிப்பிடப் படுகின்றது. அதில் இரண்டரை இலட்சத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்ப்ட்ட தொகையினர் தற்போது கனடாவில் வாழ்கின்றனர். அந்த வகையில் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் மிக அதிகமாக வாழும் நாடாக கனடாவை நாம் குறிப்பிடலாம். யுத்தம் மிக உக்கிரமாக நடந்த இறுதிக்கால கட்டத்தில் புலிகள் இயக்கம் (3LDITFLDIT60T இராணுவத் தோல்வியை தழுவிக கொண்டிருந்த பொழுது பெருந்தொகையான புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் உக்கிரமான ஆர்ப்பாட்டங்கள், எழுச்சி ஊர்வலங்கள், வீதி மறிப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்பட்டன.
இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஏககாலத்தில் ஒரேவிதமான சுலோகங்கள், கோரிக்கைகள் என்பவற்றுடன் Ꮿj60Ꭷ6Ꭳl நடாத்தப்பட்டன. இந்தியாவில் தமிழ் நாட்டிலும் சமகாலத்தில் இதனையொத்த ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரிவினரின் ஆதரவுடன் நடாத்தப்பட்டன. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அப்போது நடைபெற்ற இந்திய தேர்தல் முடிவுகளைக்கூட அந்த ஆர்பாட்டங்களும் எழுச்சியும் பாதிக்கலாம் என அவதானிப்புக்கள் தமிழர் தரப்பிலிருந்து மிகப் பலமாக முன்வைக்கப்பட்டன.
இவ்வாறு நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் மிகவும் பெருந்தொகையான புலம்பெயர் தமிழர்களின் பங்குபற்றுதல் கனடாவில் தான் என்றால் அது மிகையாகாது. அவ்வாறாக ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி நடத்திய ஆர்பாட்டங்களினால் கனேடிய அரசாங்கம் உட்பட டொரன்டோ பெருநகர் பொலீசாரும், நிர்வாகமும்கூட ஒருவகையில் திகைத்து திணறிப்போய் நின்றன என்றும் நாம் கூறலாம். அவ்வாறான ஆர்ப்பாட்டங்களும் எழுச்சி ஊர்வலங்களும் கனடாவின் ஒட்டாவா
3

Page 3
தலைநகரிலும் சமகாலத்தில் நடாத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் அவற்றை அறிக்கையிடச் சென்ற கனேடிய ஊடகங்களும் கனேடிய பொலீஸ் துறையினரும் எவ்வாறு இவ்வளவு பெருந்தொகையான மக்கள் சடுதியாக வீதியில் இறக்கப்படுகின்றனர்? யார் இவர்களை தூண்டி விடுகின்றனர்? எந்த அமைப்பு இதற்கு பொறுப்பு என கண்டறிவதில் தலையைச் சொறிந்து கொண்டன. இதற்கு முன்னர் தமிழர்களின் ஆர்ப்பாட்ங்களை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்த கனேடிய ஊடகங்கள் இம்முறை அவற்றை அசட்டை செய்ய முடியாத அளவுக்கு அவை பெருமெடுப்பில் நடாத்தப்பட்டன.
ஒன்டாரியோ மாகாண மட்டத்திலும், டொரன்டோ உள்ளு ராட்சி நிர்வாக மடத்திலும் மற்றும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஸ்காபுரோ பகுதியை பிரதிநிதித்துவ படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட இலங்கையில் நடக்கும் யுத்தம் தொடர்பாக தமது பங்கிற்கு கவலையும் அக்கறையையும் தெரிவித்து அறிக்கைகளை விடுத்தனர். அவ்வார்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுத்த கனேடிய பொலீஸ் துறையினர் பின்னர் விடுத்த அறிக்கையில், நடந்து முடிந்த ஆர்ப்பாட்டங்களால் தமக்கு பல மில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டதாகவும், டொரன்டோ நகரில் பல்வேறு வியாபாரத் துறையினருக்கும் பெரும் நஷ்டங்கள் ஏற்பட்டதாகவும் கருத்து வெளியிட்டனர்.
ஆனாலும், இந்த ஆர்ப்பாட்டங்களால் புலம் பெயர் தமிழர்களோ அல்லது இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது உலகெங்கும் வாழ்ந்த அவர்களின் ஆதரவாளர்களோ அல்லது 'தமிழர் தேசியத்திற்கும் அதன் போராட்டத்திற்கும் ஆதரவான சக்திகளோ விரும்பியபடி இலங்கை அரசாங்கத்தின் இறுதி இராணுவ நடவடிக்கையின் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அதை தடுத்து நிறுத்த முடியவில்லை. புலிகள் இயக்கத்தின் இறுதி வீழ்ச்சியையும் தவிர்க்க முடியவில்லை.
4

புலம்பெயர் தமிழர்களால் கனடாவில் நடாத்தப்படும் ஒரு டசினுக்கும் மேற்பட்டட பத்திரிகைகள், அரை டசின் எண்ணிக்கை யான 'வானொலிகள், தொலைக்காட்சிகள் அனைத்தும் நடத்திய உணர்ச்சி மிகு பிரச்சாரங்கள் அனைத்தும் வெறும் விழலுக் கிறைத்த நீராகின. இறுதியாக புலிகள் சுற்றிவளைக்கப் பட்டிருந்த புதுமாத்தளனில் இருந்து அப்போதைய புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் செய்மதித் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கனேடிய தமிழ் வானொலிகள் உட்பட புலம்பெயர் நாடுகளில் இருந்த தமிழ் வானொலிகள் மூலம் தலைவர் உங்களைத்தான் நம்பியிருக்கிறார்' என்கின்ற தொனியில் உலகத் தமிழர்களிடம் ஆதரவு கேட்டும்கூட இறுதி முடிவு பெரும் அவலமாகவே இருந்தது என்பதை பலராலும் இன்னமும்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
இது இவ்வாறு நடந்தது ஏன்? என்கின்ற கேள்வி ஒரு புறமிருக்க, கனடாவில் தமிழர்கள் பெரும் தொகையாக வாழ்வதால் தாங்கள் கனடாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பிரிவினர் என்றும், தமது கோரிக்கைகளை புறம் தள்ளி கனடாவின் பிரதான மூன்று கட்சிகளும் ஒன்டாரியொ மாநிலத்தில் ஆட்சிக்கு வரமுடியாது என்றும், கனேடிய இலங்கைத் தமிழர்கள் பெருமையாக தமக்குள் சிலாகித்துக் கொள்ளுவது உண்டு. அது மட்டுமன்றி மாநகர சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் தேசிய மட்டத்திலான தேர்தல்களின்போதும் மூன்று கட்சிகளிலும் அவ்வப்போது தமது பிரதிநிதிகளை நுளைத்து அவர்களை வெற்றிகொள்ளச் செய்வதற்காக முயற்சித்து தமது பலத்தை காண்பிக்க முயன்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. இவ்வாறான தேர்தல்களில் தமிழ் பிரதிநிதிகளை வெல்லச் செய்வதற்கு அவர்கள் எல்லா உத்திகளையும் கையாண்டனர். தேர்தல் நாட்களில் தமிழ் வாக்காளர்களை வாகனங்களில் வாக்குச் சாவடிகளுக்கு ஏற்றிப் பறித்தனர். வேறு மாநிலங்கள், நகரங்களில் வாழ்ந்த தமிழர்களை ஸ்காபுரோ பகுதியில் உள்ள வீடுகளின் முகவரிகளின் கீழ் வாக்காளர் பட்டியலில் பதியவைத்து தேர்தல் அன்று அவர்களை வாக்களிக்க வைத்தனர். புலிகள் இலங்கையில் பலமாகவும்
5

Page 4
அவர்களின் பல்வேறு செயற்பாடுகள் கனேடிய மண்ணில் பலமாகவும் இருந்த காலத்தில், அதாவது 2009ம் ஆண்டு மே 18 வரையிலும் ஒரு தேர்தலிலும்கூட கனேடிய அரசியலில் தமிழர் பிரதிநிதிகளை வெற்றிகொள்ள வைப்பது என்னும் அவர்களின் கனவு பயனளிக்கவில்லை.
இது ஏன் இப்படி ஆயிற்று? இதற்கு கனேடிய வாழ் தமிழர்கள் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். பொதுவாக அவர்கள் கூறிக்கொள்ளுவது ‘எம்மவர் இடையே ஒற்றுமை இல்லை' என்பதாகும். அதிலும் குறிப்பாக புலிகள் இயக்கத்தின் அரசியல் இராணுவ மற்றும் ஜனநாயக விரோத செயல்கள், சாதாரண மனித விழுமியங் களுக்கு ஏற்கத்தகாத செயற்பாடுகள் அனைத்தையும் எந்தவித கேள்விக்கும் உட்படுத்த விரும்பாத கனடா வாழ் தமிழர்கள் இதற்கு முன்வைத்த காரணங்களோ விநோதமானவை. அவற்றில் பிரதானமானது 'தமிழனத்தின் துரோகிகள் தமக் கெதிராக கனேடிய மண்ணில் செய்யும் பிரச்சாரமே இந்த தோல்விகளுக்கு காரணம' என்பதே அவர்களது பிரதான வாதம்.
உண்மையில் புலிகளுக்கு எதிரான கருத்துள்வர்களின் கருத்து வெளிபாடுகளுக்கு புலிகளும் அவர்களின் ஆதரவுப் பிரிவினரும் புலிகளின் முன்னணி அமைப்புக்களும் கனேடிய மண்ணில் விடுத்த அச்சுறுத்தல்கள் எண்ணில் அடங்காதவை. தமக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றை எரித்தல், அவற்றை விற்பவர்களை எச்சரித்தல், அவற்றுக்கு விளம்பரம் வழங்குபவர்களைத் தடுத்தல், அவற்றுடன் தொடர்பானவர்களை உடல் ரீதியாக தாக்குதல் அல்லது தாக்கப் படுவார்கள் என அச்சுறுத்துதல், அவர்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் என இவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்களை கனேடிய சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதையிட்டு இவர்கள் கிஞ்சித்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே அவற்றை மேற்கொண்டனர். கருத்துச் சுதந்திரம் என்பது அளவுக்கதிகமாக உள்ள நாடு என சொல்லப்படுகின்ற கனடாவில் தமக்கெதிரான கருத்துள்ளவர்களை கண்டால் மிரட்டும்
6

மனோபாவம் கொண்டவர்களாக தமிழர்களை மாற்றுகின்ற வகையிலேயே அவர்களின் சகல ஊடக பிரச்சார நடவடிக்கை
களும் இருந்தன.
புலிகள் இயக்கத்தை விமர்சித்தவர்களை குறிவைத்து தமது ஊடகங்கள் மூலம் சேறடிப்பது ஒருவகை பிரதான உத்தியாக பயன்படுத்தப்பட்டது. அவர்களின் தனிப்பட்ட வர்ழ்க கையை பாதிக்கும் விதத்தில் செய்திகள் மற்றும் கருத்துகளை வெளியிட்டனர். அவர்களின் தொழிற் துறைகளை பாதிக்கின்ற விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அவர்களின் உறவினர்கள் ஊரில் இருந்தால் அவர்களுக்கு பிரச்சினை வரும் என்கின்ற வகையில் மறைமுகமான அச்சுறுத்தல்களை விடுத்தனர். அவ்வாறானவர்களின் அகதி அந்தஸ்து வழக்குகள் மற்றும், கனடாவின் நிரந்தர குடி அநுமதி அல்லது குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பாதிக்கின்ற வகையில் மொட்டைக் கடிதங்களை கனேடிய நிர்வாகத் துறையினருக்கு அனுப்பினர். இதுபோன்ற சகலவிதான தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் இவர்கள் மேற்கொண்டனர். இவற்றின் மூலம் கனடாவில் வாழும் முழுத் தமிழரும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்கள் என்பதையே இவர்கள் கனேடிய சமூகத்திற்கு காட்ட முற்றபட்டனர்.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் பெரும்பாலான தமிழர்களை மெளனமாக்கி கனேடிய மண்ணிலும் தமக்கு தலையாட்டும் கூட்டமாக இவர்கள் மாற்றி வைத்திருந்தனர். இவர்களின் இந்த அடாவடித்தனங்கள் அனைத்துக்கும் முகம் கொடுத்து இவர்களின் செயற்பாடுகளை சகல மட்டத்திலும் அம்பலப்படுத்தக்கூடிய ஆன்ம L6), b கொண்டவர்களாக செயற்பட்டவர்கள் கனடாவில் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் அந்த மிச் சிலரின் பிரச்சாரப் பலத்திற்கு இவர்களால் முகம் கொடுக்க முடியாமல் இவர்கள் அந்த சிறு பிரிவினர் மீது துரோகிகள் என்னும் 66OF மாரியைப் பொழிந்தனர். இவ்வாறானவர்களை "தெருக்களில் கண்டால் காறியுமிழுங்கள், இவர்களைப் போன்றவர்களை நடுத்தெருவில் தீயிட்டு கொழுத்த
7

Page 5
வேண்டும் என தமது ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தனர். தமக்கு மாற்று கருத்துள்ளவர்களை கனேடிய தமிழ் ஊடகங்களில் வந்து கருத்து கூறாத வண்ணம் பார்த்துக்கொண்டனர். அப்படி எவரையாவது தமிழ் ஊடகங்கள் கருத்துக்கேட்டால் அந்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்தனர்.
இவற்றையெல்லாம் செய்கின்றபொழுது இவர்களுக்கிருந்த நம்பிக்கை என்ன? இலங்கையில் புலிகள் எப்படியேனும் இராணுவ ரீதியாக வெற்றிபெற்று விடுவார்கள் என்பதே. தமது சுயபுத்தி, பொதுப்புத்தி, பட்டறிவு, சுட்டறிவு என எல்லாவற்றையும் கண்முடித்தனமான நம்பிக்கையுடன் புலிகள் என்னும் இயக்கத்தின் செயற்பாடுகள் மீது ஒட்டு மொத்தமாக முதலீடு செய்தனர். அதுவே தமிழர் தேசியத்திற்கு செய்யும் பங்களிப்பு என்னும் குருட்டு நம்பிக்கையிலேயே இவ்வளவையும் செய்தனர். மற்றவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் காரணமாக, தாங்கள் சாதாரண தமிழ் மக்கள் என்றும், அல்லது கனேடிய வாழ் சாதாரண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சமூக அமைப்புக்கள் என்றும், கூறிக்கொண்டு வீதிகளில் இறங்கினாலும் இவர்களால் புலி (p85epl960)u கழற்ற முடியவில்லை. புலிக்கொடிகளை கைவிட முடியவில்லை. அல்லது கைவிட விரும்பவிலை எனவும் கூறலாம்.
கனடாவில் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாகவும் அதன் சில முன்னணி அமைப்புக்களான, உலகத் தமிழர் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு கழகம் என்பன பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவானவைகள் எனவும் தடை செய்யப்பட்டி ருந்தும் இவர்கள் நூற்றுக்கணக்கான புலிக்கொடிகளை ஏந்தியபடியும், பிரபாகரனின் படங்களை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர். சில வேளைகளில் பிரபாகரனின் படத்தை தமது முகங்களுக்கு மேலாக முகமூடிகள்போல் அணிந்த வண்ணம் இன்னும் நூற்றுக் கணக்கில் பிரபாகரன்கள் வருவார்கள் என்பது போலவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இன்னும் சிலர் இராணுவ உடைகளை தரித்த வண்ணம் புலிக்கொடிகளுடன் அணிவகுத்து நின்றனர். சில
8

பெற்றோர் தமது முகங்களையும் தமது சிறு பிள்ளைகளின் முகங்களையும் புலிகள் போல் வர்ணம் தீட்டியபடி இந்த ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டனர். இவ்வாறான ஆர்ப்பாட்டங் களில் எல்லாம் இவர்கள் மிக முக்கியமாக மூன்று சுலோகங்களை முன்வைத்தனர்.
பிரபாகரன் எங்கள் தலைவர் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம் !! கனேடிய அரசே புலிகள் மீதான தடையை நீக்கு !!! இவையே அச் சுலோகங்கள்
இலங்கை அரசாங்கம் நடத்தும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்! என இவர்கள் பெரும் குரலெடுத்து கூவத் தொடங்கியதெல்லாம் இலங்கை இராணுவம் புதுக்குடியிருப்பை பிடித்து அதற்கு மேலும் போகப்போகின்றது, புலிகளின் தலைமை அழிக்கப்படப்போகின்றது என்பது உறுதியான பின்னரே என்பதை இந்த ஆர்ப்பாட்டங்களை உன்னிப்பாக அவதானித்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். அதன் பின்னர்தான் யுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்! இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்கின்றது! என்கின்ற சுலோகங்கள் வரத்தொடங்கின. அதுவரை யுத்தத்தால் மக்களுக்கேற்பட்ட அழிவு இவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்க வில்லை.
கைகளில் ஒலி வாங்கிகளுடன் முன்னால் நின்று பெரும் சத்தமாக கோசம் போடுபவர்கள் பிரதானமாக இந்த மூன்று சுலோகங்களையே தொடர்ந்து கத்திய வண்ணம் இருந்தனர். இது இவர்கள் போட விரும்பிய தாங்கள் சாதாரண மக்கள் என்னும் வேடத்தை தாங்களே களைந்தது போலானது.
அது மட்டுமன்றி இந்த ஆர்பாட்ங்களின்போது இவற்றை அறிக்கையிட வரும் கனேடிய ஊடகவியலாளர்களை ஒரு குறிப்பிட்ட குழுவினரே சூழ்ந்து கொண்டு அவர்களுக்கு பதிலளிப்பர். ‘விடுதலைப் புலிகள்தான் இலங்கையில் தமிழ்
9

Page 6
மக்களுக்காக போராடுபவர்கள் எனவும், அவர்களே தமிழர்களின் ஏக பிரதிநிதகள் எனவும் கூறுவர். அத்துடன் கனேடிய அரசாங்கம் அவர்கள் மீதான தடையை நீக்கி அவர்களை விடுதலை இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் கூறுவர், சில கனேடிய ஊடகவியலாளர்கள் யுத்த பிரதேசத்தினுள் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்களாமே 66öt[B கேள்வியை கேடடுவிட்டால் அதற்குப் பதிலளிக்காமல் இரண்டு இளம் பெண் பிள்ளைகளை முன்னால்விட்டு அவர்கள் குரல் தழுதழுக்க, கண்ணிர் மல்க அங்கு எங்கள் மக்களை இராணுவம் குண்டு போட்டு அழிக்கிறது. இனப்படுகொலை நடக்குது, கனேடிய ஊடகங்கள் இவற்றை அம்பலப்படுத்த வேண்டும்" என அழுதபடி ஆங்கிலத்தில் கூற வைப்பார்கள்.
இறுதியாக இந்த உத்திகள் எவையுமே பயனளிக்காமல் போவதை இவர்கள் கண்கூடாக கண்டுகொண்டனர். அதன் பின்னர் இந்த புலிக்கொடியை பிடித்ததால் தான் இந்தப் பிரச்சினை இதைப் பிடிக்காமல் ஆர்ப்பாட்டம் செய்வதென்றால் மட்டும்தான் நாங்கள் வருவோம்' என அவர்களுக்குள் பல பிணக்குகளும் பிடுங்குப்பாடுகளும் ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. தாங்களே கட்டிய மாய மாளிகைக்குள் நின்று 'தமிழர் தேசிய எழுச்சியையும் அதன் போராட்ட உச்சத்தையும் கண்டு ஒரு வித போதை தலைக்கேறிய நிலையில் இருந்தவர்கள் 2009 மே 19ம் திகதி 6T606) கனேடிய பத்திரிகைகள் அனைத்திலும் முன்பக்கத்தில் கொல்லப்பட்ட பிரபாகரனின் 2606) நூற்றுக்கணக்கான இலங்கை இராணுவத்தினர் துாக்கி வைத்திருந்த LILLb பிரசுரிக்கப்பட்டிருந்ததை பார்த்து திகைத்தாலும், அதனை எள்ளி நகையாடினர். தாம் இரண்டரை தசாப்தங்களாக கட்டிய கனவுக் கோட்டை தம் தலைமீதே இடிந்து விழுவதைக்கூட உணர முடியாத நிலைக்கு இந்த சமூகம் கொண்டு செல்லப்பட்டிருந்தது என்பதுதான் அவலமான உண்மை. அந்த உண்மையை ஓரளவாவது உணர்ந்து கொள்வதற்து அதற்கு பருமட்டாக இரண்டு வருடங்கள் எடுத்துள்ளன.
10

2009 மே 18இன் பின்னர்.
2011ல் நடந்து முடிந்த கனேடிய தேர்தலில் முதல் முறையாக ஒரு தமிழ் பிரதிநிதியாக ராதிகா சிற்சபேசன் 5000 அதிகப்படியான வாக்குகளால் ஸ்காபுரோ பகுதியல் வெற்றி பெற்று கனேடிய நாடாளுமன்றம் சென்றுள்ளார். கனடாவில் eyp6ÖTABT6gbi LJGOLDTGOT BL' fuuTGOT New Democradic Party (NDP) என்று அழைக்கப்படும் புதிய ஜனநாயக் கட்சியின் சார்பில் போடடியிட்டே அவர் வெற்றி பெற்றார். அதேபோல் தற்போது ஆழும் கட்சியான கன்சவேர்டிவ் கட்சியின் சார்பில் ஸ்காபுரோ பகுதியில் மற்றுமொரு தேர்தல் பிரிவில் போட்டியிட்ட ராகவன் பரம்சோதி 12 800 வாக்குகள் எடுத்தாலும் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விகண்டார். இலங்கைத் 'தமிழ் தேசியம்' பேசும் தமிழர்கள் கனேடிய அரசியலுக்குள் நுளைவதென்றால் அது ஸ்காபுரோ பகுதிக்குள் மட்டும்தான் முடியும். ஏனெனில் அங்கு மட்டும்தான் இலங்கை தமிழர் பிரச்சினையை கூறி வாக்கு கேட்க முடியும்.
இம்முறை புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டதன் பின்னரான புதிய சூழ்நிலையில் இவ்விருவரும் தேர்தல் களத்தில் குதித்து பெருமளவு வாக்குகளை எடுத்திருப்பது கவனிக்கத் தக்கதொரு விடயமாகும். இதில் குறிப்பாக வெற்றிபெற்ற ராதிகா சிற்சபேசனின் வெற்றிக்கு பலகாரணகள் அவருக்கு சாதகமாக அமைந்தன. முதலாவது இம்முறை கனடா முழுவதும் என்று மில்லாதவாறு NDP என்னும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அலை வீசியது. பிரதான எதிர்க் கட்சியான லிபரல் கட்சி சரியான தலைமைத்துவம் இன்றி அல்லாடியதால் அதன் மீது விரக்தியுற்ற பெருந்தொகையான லிபரல் கட்சியின் ஆதரவாளர்கள் தனது வாக்குளை NDP கட்சிக்கு வழங்கினர். முதல் முறையாக அக்கட்சி நூற்றுக்கு (103) மேற்பட்ட ஆசனங்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியானது. இந்த NDP அலை வீச்சு சூழ்நிலை ராதிகாவுக்கு பெரும்வாய்ப்பாக அமைந்தது. இரண்டாவது ராதிகா சிற்சபேசன் தன்னை எப்பொழுதும் பகிரங்கமாக புலிகளுக்கு ஆதரவானவராக காட்டிக்கொள்ளவில்லை. அவ்வாறு காட்டியிருந்
11

Page 7
தாரேயானால் தேர்தல் காலங்களல் கனேடிய ஆங்கிலப் பத்திரிகைகள் அப்பிரச்சினையை பகிரங்கமாக எழுதியிருக்கும். அது தமிழரல்லாதோரின் வாக்குகள் அவருக்கு கிடைப்பதை பாதித்தும் இருக்கும்.
மூன்றாவது ராதிகா தனது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ் சமூகத்தினரிடம் அதிகம் கவனம் செலுத்தாமல் அங்கு பெரும்பான்மையாக வாழும் ஏனைய சமூகத்தவர்களிடம் தமது பிரச்சாரப்பணிகளை மேற்கொண்டதுடன் அவர்கள் கனடாவில் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாடாளுமன்றத் தில் குரல் கொடுப்பேன் என்பதையே அதிகம் பகிரங்கமாக பிரச்சாரப்படுத்தினார். தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி அவர் தமிழ் வாக்காளர்களை பிரத்தியேகமாக சந்திக்கும்போது மட்டும் வாக்குறுதிகளை வழங்கியதுடன் "தமிழருக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை நாடாளுமன்றத்தில் எடுத்துச்சொல்ல என்னை அனுப்புங்கள்" "தமிழரின் குரலை நான் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வேன்" என்னும் கருத்துக்களை முன்வைத்தார். புலிகள் அழிந்து போனதால் மனமுடைந்து ஏங்கிப்போயிருந்த தமிழர்கள் ராதிகாவுக்கு தமது வாக்குகளை வழங்குவதைத்தவிர செய்வதற்கு வேறொன்றும் இருக்கவில்லை. அவருடைய இந்த தேர்தல் உத்தி அவருக்கு பேருதவியாக இருந்தது. அதற்கு பிரதிபலனாக நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சின்போது தமிழில் பேசி கனேடியத் தமிழர்களிடம் அவர் கைதட்டலும் வாங்கினார்.
புலிகளின் சாயம் பட்டால் கனேடிய அரசியலில் வெற்றிபெறுவது கடினம் எனபதற்கு தோல்விகண்ட ராகவன் பரஞ்சோதி ஒரு சிறந்த உதாரணமாகும். புலிகளின் வானொலி, தொலைக்காடசி என்பவற்றில் புலிகள் தொடர்பாக பல பிரச்சாரப் பணிகளில் அவர் முன்னர் ஈடுபட்டிருந்தார். புலிகளை விடுதலைப் போராளிகள் என வர்ணித்திருந்தார். அதுவும் சில கட்டங்களில் ஆங்கில மொழியில் அவர் அப்பிரச்சாரங்களை மேற்கொண் டிருந்தார். அவர் போட்டி யிட்ட ஆழும் கட்சியான கன்சவேர்டிவ் கட்சி புலிகள் இயக்கத்தையும் அதன் முன்னணி அமைப்புக்
2

களையும் தடைசெய்த கட்சியாகும். எனவே அந்த கட்சியில் போட்டியிட தனது புலித் தொடர்புகளை மறைக்க ராகவன் பரம்சோதி தனது பெயரை "கவன் பரம்சோதி' (Gavan Paramjothy) என மாற்றிக்கொண்டு தேர்தலில் குதித்தார். ஆனால் கனேடிய ஆங்கில ஊடகங்கள் அதனைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தின. தான் ஒருபோதும் பயங்கரவாதிகளை ஆதரிப்பதில்லை என்றும், தான் ஒரு இந்தியத் தமிழன்' என்கின்ற கருத்துப்படவும் அவர் மறுப்பறிக்கைகளை விடுத்தார். அவரைப்பற்றி இந்தப் பிரச்சாரம் கன்சவேர்டிவ் கட்சியின் தலைமைக்கும் பெரும் தலையிடியாக அமைந்தது. தனக்கெதிரான் பிரச்சாரங்களை தமிழர்களிடம் காண்பித்து தன்னை எப்படியாவது நாடாளுமன்றம் அனுப்பும்படி அவர் கோரினார். ரோசம்கொண்ட தமிழர்கள் தமது வாக்குகளை அவருக்கு அள்ளி வழங்கினர். ஆனால் புலிச்சாயம் பூசப்பட்டால் தமிழர் அல்லாதேரின் வாக்குகள் கிடைக்காது என்னும் கசப்பான உண்மையை அவரும் அவரது ஆதரவாளர்களும் பின்னர் புரிந்து கொண்டனர்.
இங்கே புரிந்து கொள்ளப்பட வேண்டியது யாதெனில் நான் முன்னர் குறிப்பிட்ட விபரங்களின்படி கனேடிய மண்ணில் புலிகள் இயக்கமும், அதன் ஆதரவு அமைப்புக்களும், அதனை தீவரமாக ஆதரித்தவர்களும் மேற்கொண்ட மனித நாகரீகத்துக்கு ஒவ்வாத செயல்கள் புலிகள் இருக்கும் வரை மட்டுமல்ல் புலிகள் அழிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னரும்கூட தேர்தலில் அவர்களை பாதிக்கின்றது என்பதே. ஆனால் தற்போது புலிகள் இல்லாத நிலையில் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் ஆதரவுப் பிரிவினர் மூன்று நான்காக பிளவு பட்டுப்போயுள்ளனர். அந்த பிளவின் எதிரொலி கனேடிய மண்ணிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது. முன்னர் மற்றவர்கள் மேல் வாரியிறைத்த சேற்றை இப்போது அவர்கள் தம்மீது மாறி மாறி வாரியிறைக்கின்றனர். எவரெவர் புலிகளின் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்தவர்கள், எவரெவர் புலிகளைக் காட்டி சேர்த்த பணத்தை தமது பைக்குள் போட்டுக் கொண்டவர்கள், அதனை வைத்து சொந்த வியாபாரம் பண்ணுபவர்கள் என்பன எல்லாம் சிறிது சிறிதாக சந்திக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. 2009 வரை மக்களைக்காட்டி, போராட்டத்
13

Page 8
தைக் காட்டி சோத்த பல மில்லியன் டாலர்களுக்கு கணக்கு சொல்வார் எவருமில்லை.
முன்னர் மாற்றுக் கருத்தாளர்களை கருத்துச்சொல்ல அனுமதிக்காத அல்லது அனுமதிக்கப் பயந்த கனேடிய தமிழ் ஊடகங்கள் படிப்படியாக அவ்வாறானவர்களை தமது ஊடகங்களில் கருத்துச் சொல்ல அநுமதிக்கத் தொடங்கியுள்ளன. முன்னர்போல் இப்போது தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு விழுந்தடித்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செல்வதை காணமுடியாதுள்ளது. முன்னர் புலிகள், அல்லது அவர்களது ஆதரவு அமைப்புக்கள் நடத்தும் நிகழ்வுகளில் தம்மை முன்னிலைப் படுத்தியவர்கள் தற்போது தமக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோல் நடந்து கொள்ளு கின்றனர்.
ஆனாலும் தற்போது தீவிர புலிஆதரவாளர்களும், பிரிவினைவாதம் பேசுகின்ற பிரிவினரும் நாடு கடந்த தமிழீழ அரசு' என்கின்ற கோதாவில் தம்மை மீள ஒருங்கமைத்து இயங்குவதை நாம் காண்கிறோம். சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கத்துக் கெதிராக கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்படும் காலமிது. இறுதி եւյ355 காலத்தில் பெருந்தொகைான யுத்தக் குற்றங்கள் நடந்திருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகவே அக்கண்டனங்கள் முன்வைக்கப்படு வதை நாம் அறிவோம். இந்த புதிய சூழ்நிலையை இந்த நாடுகடந்த தமிழீழ அரசு' கோரும் பிரிவனரும், எஞ்சியிருக்கும் தீவிர புலி ஆதரவுப் பிரிவினரும், தீவிர பிரிவினைவாதம் பேசுவோரும் தமக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்ள முனை கின்றனர்.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக அக்கறைப் பட வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்காக கன்ேடிய அமைப்புக் கள், அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டங்கள் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் இடங்கள், சந்தர்ப்பங்கள் என்பவற்றை பயன்படுத்தி இலங்கையில் தமிழர்களுக்கு தனியான
14

நாடு அவசியம்' என்னும் கருத்துக்களை நாசூக்காக முன்வைக் கின்றனர். தற்போது புலிகள் அழிக்கப்பட்டு விட்டதனால், இலங்கையிலும், வெளிநாடுகளிலும், கனடாவிலும் அவர்களின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் இல்லாதிருப்பது இவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்திருக்கிறது. சனல் 4 தொலைக்காட்சி யினால் வெளியிட்ட விடியோ படக் காட்சியுடன் இவர்கள் இந்த பிரச்சாரத்தை மிக தீவிரமாக செய்து வருகின்றனர். பார்பவர்களின் மன உணர்வுகளை பாதிக்ககூடியதான காட்சிகளைக்கொண்ட இந்த வீடியோக் காட்சியானது ஆயிரக்கணக்கில் புலிக்கொடிகளை ஏந்தியபடி பத்தாயிரக் கணக்கானோர் வீதியில் நடத்திய ஆர்பாட்டங்களை விட பலமான பிரச்சாரக் கருவியாக இவர் களுக்கு பயன்படுகின்றது.
சாதாரண தமிழ் மக்கள் இவர்களின் இந்த பிரச்சார பணிகளில் தற்போது அதிகம் பங்குபற்றாத காரணத்தினால் இவர்கள் தற்போது கனேடிய பல்கலைக் கழகங்களில தமிழ் மாணவர்கள் அதிகம் கற்கும் பல்கலைக் கழகங்களை குறிவைத்து இந்த தனிநாட்டுக்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளு கின்றனர். இலங்கை அரச படைகளிடம் தோற்றுப் போனோம், சிங்களவனிடம் தோற்றுப்போனோம் எனக் கொதிப்புடன் பழி வாங்கும் உணர்ச்சியில் துடிப்பவர்களுக்கு தீனி போடுவ தாகவே இவர்களின் பிரச்சாரப் பணிகள் அமைகின்றன. இலங்கையில் இருக்கும் அரசியல் சூழ் நிலையை சற்றும் கணக்கில் எடுக்காது இவர்கள் மீண்டும் புலம் பெயர் மாணவ சமூகத்திடம் கண்மூடித்தனமான தீவிர பிரிவினைவாதத்தை முன்வைப்பது 30 வருட கொடிய யுத்தத்தை அநுபவித்து நொந்துப் போயிருக்கும் LDiscB6061T 6TILLQ பாதிக்கும் என்பதையிட்டு இவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. முன்னர் ஒரு காலத்தில் இந்தியா எமக்கு தனிநாடு பெற்றுத் தரும்' என தமிழர்கள் நம்ப வைக்கப்பட்டனர். அதன்பின், “சகல தமிழரும் புலிகளின் பின்னால் நிற்கின்றனர், புலிகள் தனி நாடு பெற்றுத் தருவர் என நம்ப வைக்கப்பட்டனர். தற்போது ‘சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தோடு ஆத்திரத்தில் இருக்கிறது. இந்த சந்தர்பத்தை நாம் பயன்படுத்தினால் சர்வதேசம் நமக்கு தனிநாடு பெற்றுத் தரும்' என நம்பவைக்க முற்படுகின்றனர்.
15

Page 9
நான் முன்னர் குறிப்பிட் களை வென்றெடுக்கவென 'தம பெயரால் ஆரம்பிக்கபட்ட ஆயுத தராமல், ஒரு பரம்பரையினரை அவலமான அந்த முடிவை ஏன் ஒரு ஒட்டுமொத்த பகுப்பாய்வை காலகட்டத்தில், மீண்டும் புதிய என்பதுபோல் இந்த பிரிவினை பிரச்சாரத்தை மீண்டும் புலம்பெய தற்போது இலங்கையில் வாழும் நல்லிணக்கத்திற்கான செயற்பா இனவாத சக்திகளின் (é வெளியேயும்) செயற்பாடுகள் 6 அதற்று சற்றும் குறைவில்லாத பிரிவினைவாதிகளின் செய்ற பாடு
இலங்கையில் வாழும் உரிமைகள் தொடர்பான கலந்து எடுத்துச் செல்வதற்கான வ மக்களிடையே குரோத உணர்வு வாதிகள் சிங்கள இனவாதிக முயற்சிகளையும் செய்வார்கள் கொள்ளுவது அவசியம். இவர்க தமிழ் மக்கள் மீதான அடுத்த கல்லாக அமையப் போகின் இலங்கையில் வாழ்பவர்கள் புரி தடுத்து நிறுத்துவதற்கான ப மாத்திரமேயுண்டு. அதற்கான மக்கள் மட்டத்திலிருந்து ஆரம்பி
(இலங்கை முற்போக்கு கலை இ 2011.07.24ந் திகதி எஸ்.மனோரஞ்
வெளியீடு: இலங்கை முற்போ 18 1, கொலின்வூட் பி
1.

டதுபோல் தமிழர்களின் உரிமை லிழர் தேசிய எழுச்சி' என்னும் ப் போராட்டம் எந்தப் பலனையும் முற்றாக அழித்துவிட்டு மிகுந்த எட்டியது? என நின்று நிதானித்து செய்ய வேண்டிய இன்றைய மொந்தையில் பழைய கள்ளு வாதிகள் தமது பிரிவினைவாத பர் நாடுகளில் ஆரம்பித்துள்ளனர். சமூகங் களிடையே சரியான மீள் டு களுக்கு எதிராக சிங்கள அரசாங்கத்திற்கு உள்ளேயும், எவ்வாறு அமைந்திருக கிறதோ வகையில் புலம்பெயர் நாட்டு டுகளும் அமைந்துள்ளன.
தமிழ் மக்களின் அடிப்படை
ரையாடலை மக்கள் மட்டத்திற்கு ழிகளை தடுப்பதற்கும் அந்த வளர்வதற்கும் தமிழ் பிரிவினை ளூடன் கைகோர்த்தபடி எல்லா T என்பதை நாம் புரிந்து ளின் நடவடிக்கை இலங்கையில் சுற்று அழிவுக்கான அத்திவாரக் றது என்பதையும் தற்போது ந்துகொள்வது அவசியம். அதை ணியும் திறனும் உங்களிடம் காத்திரமான நடவடிக்கைகளை ப்பதே இன்று மிக அவசியம்.
இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சன் ஆற்றிய உரை).
க்கு கலை இலக்கிய மன்றம் ளேஸ், கொழும்பு - 06
6