கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செந்தணல்

Page 1


Page 2


Page 3

‘அங்கையன்’ கயிலாசநாதன். செந்தணல், ஒரு நாவல்.

Page 4
கயிலாசநாதன் என்ற கலைஞன்
"கலை என்பது செயல் திறமையைக் காட்டுவதும், அழகு ஏற்படும் வகையிற் செய்வதும், சுவை பயக்கவல்லதும் பற்றிய பல காரியங்களுக்கு உதவுவதுமான அறிவையும் ஆற்றலையும் குறிப்பதுமாகும். ஆகவே கலையிற் செயல், பயன், திறமை, அழகு, சுவை என்ற அம்சங்கள் உள்ளன". - ‘அங்கையன் கயிலாசநாதன்
“பல்கலைக்கழக மாணவனாயிருக்கும் போதே ஆய்வுக் கட்டுரைகள், கவிதை, சிறுகதை ஆகியன எழுதுவதிலே வல்லவராக இருந்தவர் "அங்கையன்'. - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
O “கொழும்புப் பிரதேச நாவலாகச் ‘செந்தணலை அடையாளங் காணலாம். கொழும்பு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் மிக நுட்பமான அவதானிப்புடன் அங்கையன் கயிலாசநாதன் இந்த நாவலில் விபரித்துள்ளார்.
- செங்கை ஆழியான்
O “மகாகவி பாரதியைப் போன்றே, தனது ஆக்கங்கள் நூலாக வேண்டுமென்று கனவுகள் கண்ட கலைஞன் அங்கையன். கடல் வாழ்வை தமிழில் முதலில் எழுதிய பெருமை பெறும் இவர், இன்னும் பல படைப்புச் சிகரங்களைத் தொட்டவர். நாம் அதை அறியும் காலம் இப்போது வசப்பட்டிருக்கிறது". - செ. யோகநாதன்

6 9
eHIGOùLUIGI Èí LĪGUIÈFISírí Gufsir
Lசந்தன7ர்/ (நாவல்)
அங்கையன் பதிப்பகம் H 1/2, அரசாங்கத் தொடர்மாடி, கொழும்பு 04, இலங்கை,

Page 5
நூலாசிரியர்
முகவரி
முதற்பதிப்பு
பதிப்புரிமை
கணனி அச்சுப் பதிப்பு :
பக்கங்கள்
விலை
செந்தணல்
நாவல்
அங்கையன் கயிலாசநாதன்
அங்கையன் பதிப்பகம் H 1/2, அரசாங்கத் த்ொடர்மாடி, கொழும்பு 04, இலங்கை.
Go 2000
திருமதி இராஜலட்சுமி அம்மாள் கயிலாசநாதன்
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி,
(Թ&ոզքւbւյ՝ 13.
Xiv + 242
et, Lust 250/=

முன்னுரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் ஒருங்கே கல்வி கற்ற எண்மரில் ஒருவராக எங்களுடன் திகழ்ந்த, அங்கையன் கைலாசநாதனை இன்று எண்ணிப் பார்க்கின்றேன். தோற்றத்தில் எங்கள் அனைவரிலும் மிக இளையவராகவும், விடய ஞானத்தில் எங்களை விட மிக உயர்ந்தவராகவும் விளங்கினார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவாக்கிய படைப்பாளிகளான செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், அங்கையன் கைலாசநாதன் ஆகிய மூவரும் ஒரே வகுப்பில் ஒரே காலகட்டத்தில் கல்வி கற்றோம். திருவாளர்கள் வை. ஏரம்பமூர்த்தி, க.சிவராமலிங்கம், மு.கார்த்திகேசன் ஆகியோர் எமது இலக்கியத் தடத்தைக் கருத்தோடு அமைத்துத் தந்தனர். பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒன்றாகவே வந்தோம். அங்கு பேராசிரியர்கள் கைலாசபதி, வித்தியானந்தன் ஆகியோர் இலக்கியச் செல்நெறியைச் சுட்டிக் காட்டினர்.
பல்கலைக்கழக மாணவ நிலையிலேயே அங்கையன் கைலாசநாதன் தன்னையொரு படைப்பாளியாக அடையாளம் காட்டிக் கொண்டார். இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் எனப்பல்துறையிலும் தனது முத்திரைகளைப் பதித்துள்ளார். அவருடைய ‘கடற்காற்று' என்ற குறுநாவல் நூலுருவில் வெளிவந்தபோது, பலரது பார்வையும் அவர்மீதுபட்டது. நுணுக்கமான அவதானிப்புடன் கூடிய யதார்த்தப் படைப்பாகக் கடற்காற்று விளங்குகிறது. சமூகத்தின் அவலங்களை நுட்பமாகச் சித்திரிப்பதோடு, சமூகத்தின் சின்னத்தனங்களை விமர்சிக்கவும், அந்த விமர்சனமூடாக ஒரு சமூகம் எப்படியிருக்கக் கூடாதென்பதைச் சுட்டிக் காட்டவும் அங்கையன் கைலாசநாதனால் முடிந்திருந்தது. செந்தணல் என்ற இந்த நாவலும் அவர் வரித்துக் கொண்ட படைப்பிலக்கிய வகைக்குரியதாகவே விளங்குகின்றது.
ஈழத்து நாவலிலக்கியத்தின் நவீன வடிவாக்கம் இளங்கீரன், செ. கணேசலிங்கம், கே. டானியல் முதலானோரின் வருகையுடன் அமைந்தது. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அவர்களின் நாவல்கள் மிளிர்ந்தன. வர்க்கியம், சாதியம் எனும் கருப்பொருட்கள், யதார்த்தமாயும் மண்வாசனையோடும் மார்க்சீயப் பார்வையில் அவர்களது படைப்புக்களில் வெளிக்கொணரப்பட்டன. அடுத்த கால கட்ட நாவலாசிரியர்களாக அடையாளம் காணப்பட்ட செங்கை ஆழியான், செ. யோகநாதன், செம்பியன் செல்வன், தெணியான் என்போர் வரிசையில் அங்கையன் கைலாசநாதன் அமைகிறார். 1969இல் அவர் எழுதிய ‘செந்தணல் என்ற இந்த நாவல், வகைமாதிரிச் சமூகம் ஒன்றின் துன்பியல் நாடகமாக விளங்குகிறது.

Page 6
செந்தணல் நாவலை மீண்டும் படித்துப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட நிலை அங்கையன் கைலாசநாதனின் படைப்பனுபவத்தைத் தரிசித்த உணர்வாகும். வெறும் கதை படிப்பவர்களுக்குச் செந்தணல் திருப்தியைத் தராது. ஏனெனில் , கதைசொல்வது அங்கையன் கைலாசநாதனின் எண்ணமாகச்செந்தணலிலில்லை. அதற்காகச் ‘செந்தணலில் நாவலிற்கான கதை இல்லையென்று அர்த்தமன்று. மிகமிக மெதுவாக, திரைப்படம் ஒன்றின் நுட்பமான நகர்வாக, “செந்தணல் விரிகின்றது. இந்த நாவலினுடாகப்பல்வேறு சமூகப் பெறுமானங்களை அங்கையன் கைலாசநாதன் கூறிவிடுகிறார். கதை படிகின்ற சாதாரண வாசகனுக்குச் சிலவேளைகளில் கதாசிரியரின் சமூகப் பெறுமானக் கூற்றுக்கள் தடையாகவிருக்கலாம். ஆனால், ஏற்றவிடத்தில், ஏற்ற மாதிரி அவற்றை இந்நாவலினுாடே சொல்லியிருப்பதுதான் இந்த நாவலின் சிறப்பென நான் கருதுகின்றேன். அவற்றினூடாகவே கைலாசநாதனின் படைப்பனுபவத்தினைத் தரிசித்த உணர்வு எனக்கு ஏற்படுகின்றது.
ஈழத்தமிழ் நாவல்களைப் பிரதேச வகையினவாகப் பாகுபடுத்தி ஆராயும் மரபு விமர்சகர்களிடையே இன்றுள்ளது. வன்னிப்பிரதேச நாவல்களாகக்காட்டாறு, நிலக்கிளி,மலையகப்பிரதேச நாவல்களாக,மலைக்கொழுந்து,குருதிமலை என்பன போல, கொழும்புப் பிரதேச நாவலாகச் ‘செந்தணலை அடையாளங் காணலாம். கொழும்பு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் மிக நுட்பமான அவதானிப்புடன் அங்கையன் கைலாசநாதன் இந்த நாவலில் விபரித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தொழில் காரணமாகக் கொழும்பில் வாழ நேரும் மக்கள் எதிர்நோக்கும் பல்வகைச் சமூகச் சிக்கல்கள்ை இந்த நாவல் பேசுகின்றது. கொழும்பு நகரின் குடும்ப உறவு, தொழில் பார்க்கும் பெண்கள் அலுவலகங்களில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குடும்ப முறிவு போன்றவற்றிற்கு இந்த நாவலில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.
செந்தணலில் அங்கையன் கைலாசநாதன் சம்பவப்பகைப்புலங்களை மிக அவதானமாகச் சித்திரித்துள்ளார் என்பேன். சூழலைக் கண்முன் கொண்டு வருவதில், ஒரு புகைப்படப்பிடிப்பாளனின் கலைத்துவத்தோடு இயங்கியுள்ளார். இந்த நாவலில் வகைமாதிரிப் பாத்திரங்கள், கதையின் வளர்ச்சிக்குத் துணை புரிகின்றன. செல்வராணியின் அழகை இரசிக்கும் ஆடவர் கூட்டம், அவளது இதயத்தை நேசிக்கவில்லை. அவளை உணர்வுள்ள ஒரு பெண்ணாகக் கருதவில்லை. அவளுடைய வாழ்க்கையில் குறுக்கிடும் ஆடவர் அவளை ஒருபோகப் பொருளாகவே பார்க்கின்றனர். கணவன் கமலேஸ்வரனும் அவ்வாறென உணரும்போது அவள் துடித்துப்போகிறாள். ஆர்ட்டிஸ்ட் கமலேஸ்வரன் சாதாரண யாழ்ப்பாணத்து வாலிபன். அவனால் அவனது மனைவியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. முரண்பாடுகள் குடும்பத்தில் ஏற்பட, பற்றுக் கோடற்ற நிலையில் இருவரும் வேறு பற்றுக் கோடுகளை நாட முயற்சிக்கிறார்கள். உண்மையில் சந்தர்ப்ப சூழ்நிலைக்குப் பலியாகிப் போகும் இருவரின் கதையாகச் ‘செந்தணல் அமைகின்றது. பல்வேறு முரண்படாப் பாத்திரங்களின் சங்கமத்தில் செல்வராணி - கமலேஸ்வரன் வாழ்வை, அங்கையன் கைலாசநாதன் செந்தணலில் சித்திரித்துள்ளார்.
vi

இலக்கியத்தின் சமூகப் பணி, ஒரு சமூகம் இப்படி இருக்கிறது என்று சித்திரிப்பதோடு நின்று விடுவதில்லை. எப்படி ஒரு சமூகம் இருக்க வேண்டுமெனச் சித்திரிக்காவிடினும், எப்படி ஒரு சமூகம் இருக்கக் கூடாதென்றாவது சுட்டி நிற்க வேண்டும். அவ்வகையில் செந்தணல் சமூகத்திற்கு ஒர் எச்சரிக்கையாக அமைகிறது. முகமூடிகளோடு பழகும் கொழும்பு மாந்தரை, சிறப்பாக யாழ்ப்பாணத்துக் கொழும்பு மாந்தரை, அங்கையன் கைலாசநாதன், அவர்களின் குணவியல்பு விகாரங்களைச் சிறப்பாகச் சித்திரித்துள்ள பாங்கு சுவையானது. ஒர் ஆணும் பெண்ணும் பேசுவதைப் பழகுவதைத் தப்பாக ஏறிட்டுக் கதைகட்டுதல், வதந்திகளைப் பரப்புதல், ஆடம்பரமான நாகரிக வாழ்வுக்கு அடிமைப்படல், கிடையாதவற்றிற்காக ஏங்குதல், பிரதி பலன் எதிர்பார்க்காத நட்பு போன்ற இன்னோரன்ன குணவியல்புகளோடு செந்தணலில் வரும் பாத்திரங்கள் கமலேஸ்வரன் செல்வராணியின் குடும்பத்தை எவ்வாறு சீரழிவிற்கு இட்டுச் செல்கின்றன என்பதையும், இருளில் ஒரு ஒளிப் புள்ளியாக நின்று உதவுகின்றதென்பதையும் அங்கையன் கைலாசநாதன் செந்தணலில் வார்த்துத் தந்துள்ளார்.
இந்த நாவலில் அங்கையன் கைலாசநாதன் வாழும் சமூகத்தின் சின்னத்தனங்களை வார்த்தைகளாற் கடுமையாகத் தாக்கும் இடங்கள் பலவுள்ளன. பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் இடிபடும் அவலங்கள், அலுவலகங்களில் பணிகள் சரிவர நேரத்தோடு நடைபெறாத நிலைமைகள், ஆசிரிய மாணவ தப்பான உறவுகள், மேலதிகாரிகளின் தவறான போக்குகள் போன்ற விடயங்கள் நாவலில் வரும்போது, கடும் வார்த்தைப் பிரயோகங்களால் அச்சின்னத்தனங்களைச் சாடும் படைப்பாளியாக மாறிவிடுகிறார். நாவலின் சமூகப் பார்வையில் இவ்வாறான அம்சங்கள் இயல்பாகப் பொருந்தி, பாத்திரங்களின் வாயிலாகவும் அவர்களின் நடத்தைகளினாலும் புலப்படுத்தப்படில் சிறப்பாக அமையுமெனினும், ‘செந்தணலில் அவை ஆசிரிய கூற்றுக்களாக வெளிவந்திருப்பதுநாவலின் சிறப்பிற்குக் குறைவை ஏற்படுத்தவில்லை.
அங்கையன் கைலாசநாதன் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கொண்ட பட்டதாரி. அதனால், செந்தணலில் உரை, நடை எளிமையாகவும், அதேவேளை இலக்கண சுத்தமானதாயும் அமைந்திருக்கின்றது. பாத்திரங்களின் உரையாடல்களில் பேச்சுவழக்குச் செம்மையாக விழுந்துள்ளது.
அங்கையன் கைலாசநாதனின் செந்தணல் என்ற இந்த நாவல் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் ஆரோக்கியமான புதியதொரு வாவாகும். இளவயதிலேயே எங்களை எல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார். அவர் ாங்களுடன் இன்றும் இருந்திருக்கில் ஈழத்துப் புனைகதை இலக்கியத்திற்கு இன்னமும் பல அற்புதங்களைத் தந்திருப்பார்.
பதிவாளர், செங்கை ஆழியான். க. குணராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்ாணம்
28 - 03 - 2000
wii

Page 7
அணிந்துரை
நெருக்கமான ஒரு கூட்டாளியை
நினைந்து . 8 O O CA O O
அங்கையன் கயிலாசநாதனுடைய செந்தணல் இப்பொழுது புத்தக வடிவம் பெற்று உங்கள் கைகளில் உள்ளது. இந்த நாவலை எழுதியவர் எனக்கு மிகவும் நெருக்கமானதொரு கூட்டாளி.
அது 1965 - 1967 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்பொழுது நான் பம்பலப்பிட்டியில் ஓர் அறையிலே தங்கியிருந்தேன். ஏறத்தாழ, கிழமையில் மூன்று தடவைகளாவது கயிலாசநாதனை நான் சந்திப்பதுண்டு. அவர் என் இருப்பிடத்துக்கு வருவார். நாம் இருவரும் பம்பலப்பிட்டிக் கடற்கரையில், மாலை வேளைகளில் உலாவி வருவோம். அப்போது அவர் ‘வீரகேசரி ஆசிரியர் குழுவிலே பணியாற்றிக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பட்டம் பெற்ற புதிசு ஆய்வறிஞர் என்று பெயர் பெற்று அன்று எழுதிக் கொண்டிருந்த பலர் பற்றியும் அரட்டை அடிப்பது எங்கள் இருவருக்கும் பிரியமானதொரு பொழுதுபோக்கு. அங்கையன் மிகவும் சிறந்த உரையாடற்காரர். கனதியான விடயங்கள் பற்றியும் கேலி - கிண்டற் போக்கிலும் பலவற்றையும் நாம் நம்மிடையே பகிர்ந்து கொள்வோம். சுயாதீனமாக எது பற்றியும் சிந்தித்து, மனந்திறந்து பேசும் அங்கையனின் போக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.
அக்காலப் பகுதியிலே கதை, கட்டுரை, கவிதை என்று பல துறைகளிலும் கைலாசநாதனின் அக்கறை படிந்திருந்தது. ‘வீரகேசரிக்கென்று' கவிதைகளையும் கட்டுரைகளையும் என்னிடமிருந்து பெற்றுச் சென்று வெளியிடுவிப்பது அவருடைய பழக்கமாக இருந்தது. ஒரு சமயம், 'தொல்காப்பியமா, தொல்கோப்பியமா? - ஓர் ஐயவினா’ என்று ஒரு பகிடிக் கட்டுரையை நான் எழுதியிருந்தேன். இது கைலாசநாதனை மிகவும் கவர்ந்தது. டாக்டர் சீ. சீ. சும்மாவனார்’ என்ற புனைபெயரில் இது வெளியாயிற்று. ‘வீரகேசரியில் இதைப் பார்த்த கைலாசநாதன், இதைப் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் உந்தப்பட்டு என் இருப்பிடத்தை விசாரித்து அறிந்து நேரிலே என்னைக் கண்டார். அதுதான் எங்களுடைய முதலாவது சந்திப்பு என்று நினைக்கிறேன். அதே பாணியில் இன்னும் சிலவற்றை எழுதும்படி அவர் ஊக்கப்படுத்தினார். தமிழியல் ஆய்வாளர்களின் பாணியிலே கற்பனையான அடிக்குறிப்புகள், மேற்கோள்களையும் சேர்த்து, 'பாரதியார் காலம் யாது?’ என்னும்
v i i i

ஒரு நையாண்டிக் கட்டுரையை நான் எழுதிக் கொடுத்தேன். 'டாக் ரி சீ.சீ.சும்மாவானார்’ என்ற பெயரில், இந்தக் கட்டுரையும்'வீரகேசரியில் சிறப்பான முறையில் வெளியாயிற்று.
நையாண்டிக் கட்டுரைகளை மட்டுமல்லாமல், கனதியான கட்டுரைகள் பலவற்றை நான் எழுதிடுவதற்கும் வை. அ. க. காலாக இருந்திருக்கிறார். ஒரு சமயம் இன்றைய ஈழத்தில் தமிழ்க் கவிதை' என்று தலைப்பிட்டுக் கட்டுரையொன்றை எழுதிக் கொடுத்தேன். கைலாசநாதன் அதற்குத் தந்திருந்த துணைத் தலைப்பு என்ன தெரியுமா? சோமசுந்தரப் புலவரின் கவிதைகளில் நவீனத்தன்மை இல்லை இது ஒருவகைப்பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இதோ,அவர் இட்ட துணைத் தலைப்புகளுக்கு மேலும் சில உதாரணங்கள் பழந்தமிழ்ப் பாண்டித்தியமே மொழி நடையை இறுக்குகிறது, ‘கவிதைக் கலை மந்திரசக்தியுடன் தொடர்புடையது, பொருளுக்குச் சொல் அடிமை. பத்திரிகையாளர் என்ற வகையில், வாசகர் உளவியலை நன்குமோப்பம் பிடித்து வைத்திருந்தவர் வை. அ. க. என்பது கண்கூடாக விளங்குகிறது அல்லவா?
2
பத்திரிகையாளர் என்பதுமாத்திரமல்ல;கயிலாயர்’ஒரு கவிஞர், கதைஞர், கலைஞர் என்பனவுங் கூடத்தான் அவருடைய இரசனைக்கும் ஆக்கத்திறனுக்கும் ஏதுக்களாய் அமையலாயின. வைகறை நிலவு என்ற கவிதைத் தொகுப்பும், கடற்காற்று என்ற பரிசு நாவலும் அவர்தம் கலைத்திறத்துக்குக் கட்டியம் கூறின.
பின்னர் அவர் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக மாறித் திகழ்ந்த காலத்தில், அவருடைய ஆளுமையின் வேறு முகங்களும் வெளிப்பட்டுத் துலங்கின. மெல்லிசைப்பாடல்கள் ஈழத்திலே உதயமாகிய காலத்தில், பாடலாக்கத்திலும் இவர் கணிசமான பங்களிப்பைச் செய்யலானார். இன்னும், ஒலிச்சித்திரங்கள்,நாடகங்கள் முதலியவற்றின் உருவாக்கத்தின் போதும் இவருடைய திறமைகள் விளங்கித் தோன்றின. சுந்தா சுந்தரலிங்கம், இராஜேஸ்வரிசண்முகம், சில்லையூர் செல்வராசன், எஸ். கே. பரராஜசிங்கம் முதலியவர்கள் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளிலே பிரகாசித்த காலப்பகுதியில், எழுத்துருப்படைக்கும் ஆற்றலுள்ளவர்களை இனங்கண்டு அவர்களை முயற்சியில் இறங்குமாறு ஊக்கியதுடன், தயாரிப்புப் பணிகளிலும் பொறுப்பெடுத்துத் தோள் கொடுத்து இயங்கினார் என்பது, பதிவு செய்யப்பட வேண்டியதோர் உண்மையாகும். இவை எல்லாம் நமக்கு எவற்றை உணர்த்துகின்றன? கைலாசநாதனின் கலை நெஞ்சத்தையும், நகைச்சுவை உணர்வையும், படைப்பாக்க உந்தலையும் - எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய மதிப்பீடுகளின் செம்மைப் பாட்டையுமே ஆகும்.

Page 8
3
இப்படிப்பட்டதொரு நல்ல படைப்பாளியை இடைவழியிலே ‘காலம் நம்மிடமிருந்து பறித்துக்கொண்டு போய் விட்டது. இது என்ன கொடுரம் யாருமே எதிர்பார்த்திருக்காத விதத்திலே வண்டி விபத்தொன்றிலே நாம் கலைஞர் கைலாசநாதனை இழந்தோம். அவர் இன்று வரை இருந்தால், இன்னும் என்னென்ன சாதனைகளை நமக்குத் தந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கும் போது, அவரை அறிந்துணர்ந்தவர்கள் நிச்சயம் வேதனைப்படுவார்கள்.
கலைஞர் கைலாசநாதனின் அகால மறைவு இத்தனை துயர நினைவுகளை நமக்கென விட்டுச் சென்றாலும், அவருடைய பங்களிப்புகளைப் போற்றிப் பேணுவதும் நினைவு கூருவதும் கலையுலகின் கடமைகள் ஆகின்றன. அவற்றுக்கான முயற்சியின் பேறாகத்தான், இப்போது வெளிவந்துநம் கையில் அமர்ந்துள்ள புத்தகம் விளங்குகிறது.
செந்தணல் அங்கையன் கையிலாசநாதனால் 1969 இல் எழுதப்பட்டது. 'மித்திரன்’ இதழில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது. இது கணிசமான நெடுமை உடையது. புத்தகம் இப்பொழுது வாசகர் கைகளில் உள்ளமையால், இதுபற்றி முன்கூட்டியே அதிகம் கருத்துரைகள் சொல்வதைக் காட்டிலும், நூலின் உள்ளே, எந்த ஒரு முன் முடிவும் இல்லாமல், திறந்த மனத்துடன், நுழைந்து உலாவி வருமாறு வாசகர்களுக்கு இடமளிப்பதே நல்லது.
4
அப்படியானால் நூலாசிரியர் பற்றியும் எதுவும் கூறாமல் விட்டிருக்கலாமே என்று சிலர் கேட்கலாம். உண்மையில் இன்று, மேலோங்கி நிற்கும் திறனாய்வுக் கோட்பாடுகள் சில, அந்தநிலைப்பாட்டைத்தான் உரத்துக் கூறுகின்றன. எழுத்தாக்கம் ஒன்றின் பாடப்பகுதியை மாத்திரந்தான் திறனாய்வாளர் பரிசீலனை செய்யவேண்டும், புத்தகத்துக்கு அப்பால் உள்ள சங்கதிகள், வரலாற்றுச் சூழல், சமூக நிலைமைகள் உட்பட்ட சகல தரவுகளும் விமரிசகனுக்கு எதுவிதத்திலும் தேவை இல்லை என்று அந்தக் கோட்பாட்டினைச் சிக்கெனப் பிடிப்பவர்கள் வாதிடுவார்கள்.
நவீனப் பின்னியத் திறனாய்வு நியதிகள் சிலவற்றின்படி, ஒரு படைப்பின் உட்பொருள் பற்றியோ, அதன் பண்புகள் பற்றியோ விளக்கம் தருவதற்கு, அதைப் படைத்தவனுக்குக் கூடத் தனி உரிமை ஏதுமில்லை. இந்த நியதிக் கோட்பாட்டினை, The author is dead' (géfluff gpigs. SLITf) 6Tsirl) Gilly 655G6) 695 பொன்மொழி போல அடித்துக் கூறுவதுண்டு.

ஆனால், உண்மை என்ன? ஒரு படைப்பைப் பகுத்தாயும்போது, அது தோன்றிய வரலாற்றுச் சூழல், நூலாசிரியர் பற்றிய பிற செய்திகள், விவரங்கள் என்பன, அதன் ஆய்விலே எந்த விதத்திலுமே உதவிடக் கூடாது என்பது சரியா?
5
மதிப்பீடு சரியாக இருக்க வேண்டுமானால், மதிப்பீட்டுக்கு உள்ளாகும் பொருள் இயலுமளவு நன்கு அறிந்துணரப் படவேண்டும் என்பது ஒர் அடிப்படை முன்தேவை ஆகும். அவ்வாறு விளக்கம் பெறுவதற்கு, நூலாசிரியர் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் உதவுமானால், அந்தத் தகவல்கள் நம்பகமான முறையிலே கிடைக்கும் என்றால், திறனாய்வாளர் அவற்றை எல்லாம் பார்க்க மாட்டேன்' என்று அடம் பிடிக்கலாமா?
பாடப்பகுதியின் சொற்களை மட்டும் ஆதாரமாக வைத்துத்தான் மதிப்பீடு செய்யப்படல் வேண்டும் என்பது நூலாசிரியரின் உத்தேசம். அது பற்றிப்பிரச்சினை இல்லை. ஆனால், இருண்ட சில இடங்களைப் புறச்சூழற் செய்திகள் துலக்கக் கூடுமானால், வெறும் ஊகங்களைவிட அவை பெறுமதி மிக்கவை என்று கருதுவது புத்தியீனம் ஆகாது. புறச்சூழற் செய்திகள், திறனாய்வாளரிடம் விபரீதமான முன்முடிவுகளை ஏற்படுத்தாது தற்காத்துக் கொள்ளும் முதிர்ச்சியும் பக்குவமும் இல்லாத ஒருவர், நல்ல விமர்சகராவது எப்படி? இன்னும் சொல்லப் போனால், அவர் நல்ல வாசகராகக் கூட இருக்க முடியாதே
ஆகவே, திறனாய்வுக் கோட்பாடுகள் பற்றிய புதுமோகம் என்ற மாயை வலையிற் சிக்காத, பொதுமதி படைத்த எவருக்கும், நூலாசிரியர் பற்றிய புறச்சூழற் செய்திகளும் பயன்படும் என்பது கண்கூடு. அந்த வகையிலே, சென்ற நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப்பகுதியிலே திடீரென மறைந்த விட்ட கலைஞர் ஒருவரைப்பற்றிய புறநிலைத் தரவுகளைத் தெரிவிப்பது, அவரைப்பற்றிய சரியான மதிப்பீட்டுக்குத் தடையாக அமைய மாட்டாது; மாறாக, முழுமையான மதிப்பீட்டுக்குத் துணையாய் நிற்கும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையிலேதான், அ. கை, பற்றிய செய்திகள் சிலவற்றை இங்கு நினைவுகூர்கிறோம்.
6
செந்தணலைநேரே சென்று கண்டுணரும்படி வாசகர்களுக்கு வழிவிட்டு நாம் விலகி நிற்கிறோம். திருமதிகையிலாசநாதனின் வெளியீட்டுமுயற்சிகள் வெற்றி தருவனவாய் அமையட்டும்.
இ. முருகையன் நீர்வேலி தெற்கு, நீர்வேலி இலங்கை .

Page 9
பதிப்புரை
1960 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்த அங்கையன் கயிலாசநாதன், என் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே, அகால மரணமடைந்த, என் பெயரைக் கொண்ட தனது பாசமிகு மூத்த சகோதரியாரின் நினைவு மீட்கப்பட்டு, என்மீது பெரும் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டார். அன்று தொட்டு, தனது குடும்பச் சூழ்நிலை, தனது கஷ்ட நஷ்டங்கள் யாவற்றையும் என்னிடம் கூறி ஆறுதலடைந்து கொள்வார். அன்புச் சகோதரனாக, உற்ற நண்பனாக ஏற்பட்ட எமது தொடர்பு, அவரும் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு சிறப்புப் பட்டப் படிப்பைத் தொடர்ந்ததால் மேலும் வளர்ந்தது.
1962ல் படிப்பு முடிந்து நான் பல்கலைக்கழகத்தால் வெளியேறியபின் நாம் சந்தித்தது அருமை. ஆனால், இடைக்கிடை கடிதத் தொடர்பு வைத்திருந்தோம். 1965இல் எனக்கு அரசாங்க சேவையில் நிரந்தர வேலை கிடைத்து கொழும்பு வந்து தங்கியிருந்த போது ஒரு நாள் நான் நடைபாதையில் சென்று கொண்டிருக்கையில் தற்செயலாக அவரைச் சந்தித்தேன். அப்பொழுது, தான் கொழும்பில் பிரித்தானிய தூதராலயத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றுவதாகக் கூறினார். சில வருடங்களாகத் தடைப்பட்டிருந்த எமது தொடர்பு மீண்டும் தொடர்ந்தது. பின்பு என்னைக் காதலித்த அவரை 1967இல் திருமணஞ் செய்து கொண்டேன்.
எமது இல்லறவாழ்வுபல ஏற்றஇறக்கங்களுக்கு மத்தியில் திருப்திகரமாகக் கழிந்தது. 1972 வரை மூன்று குழந்தைச் செல்வங்களைப் பெற்று இணைபிரியாது வாழ்ந்து வந்தோம். அவருடன் வாழ்ந்த காலங்களில் அவரின் கற்பனா சக்தியையும் இலக்கியப் படைப்பாற்றலையும் நன்கறிந்து வியந்து ஒத்தாசையாகப் பணிபுரிவேன். தான் பார்த்து, அனுபவித்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் அப்படியே எழுத்துருவில் வடிப்பார். சமூகக் குறைபாடுகளைச் சாடுவதில் அவர் என்றும் பின் நிற்பதில்லை. அவர் மனதில் எழும் எண்ணங்கள் சிறுகதைகளாக, கவிதைகளாக, கட்டுரைகளாக, நாவல்களாக, நாடகங்களாக மிக விரைவில் தெளிவான ரசனையுடன் வெளிவருவதை நான் கண்டு அனுபவித்தவள். பதினைந்து ஆண்டுகள் தரமான பல ஆக்க இலக்கியங்களைப் படைத்த என் கணவர் 1976இல் விபத்தில் சிக்கி 34 வயதில் அகால மரணமடைந்தார்.
எனக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியை அடுத்து, என்னையே நம்பியிருந்த எமது மூன்று குழந்தைச் செல்வங்களையும் வளர்த்து, கல்வியூட்டி, ஆளாக்கும் சவாலை ஏற்றுக் கொண்டேன். திடீரென இறந்த எனது அன்புக் கணவரின் ஆவி,
xii

"உனக்கும் பிள்ளைகளுக்கும் மறை முகமாக நின்று துணை புரிவேன்” எனக் கூறிய வாக்கு ஆறுமாதங் கழித்துக் கிடைத்ததும், என்றுமில்லா மனத்தைரியம் ஏற்பட்டது. அன்றிலிருந்து எனது உத்தியோகத்தையும் செவ்வனே பார்த்து எனது பிள்ளைகளையும், தந்தை இல்லாத குறை முடிந்தவரை ஏற்படாதவாறு வளர்த்து ஆளாக்கி விட்டேன். ஆனால், படைப்பாற்றல் இனிதே கைவரப் பெற்ற எனது கணவர் உயிரோடிருந்தால் இன்னும் எத்தனையோ இலக்கியப் படைப்புக்களை ஆக்கிச் செந்தமிழுக்குச் சேவையாற்றி, தனது முதிர்ந்த அனுபவத்தை அளித்திருப்பார் என்ற ஆதங்கம் இன்றுவரை இருக்கிறது. ஏன்? நான் சாகும்வரை அது இருந்து கொண்டே இருக்கும்.
அன்னாரது முதலாண்டு நினைவு தினத்தன்று, அவரின் கவிதைகள் சிலவற்றைத் தெரிந்து 'வைகறை நிலவு என, அவரே இட்ட தலைப்பில் வெளியிட்டேன். தொடர்ந்து, 1969ஆம் ஆண்டு அவர் மித்திரன் நாளிதழில் தொடர்ச்சியாக இரு மாதங்கள் எழுதி வெளிவந்த ‘செந்தணல் என்ற பிரபல்யம் பெற்ற நெடு நாவலை அவருக்குக் காணிக்கையாக வெளியிட வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் அதற்கான நிதி வசதி என்னிடம் இருக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஒரு பதிப்பகத்தாரிடம் இது பற்றிக் கூறியபோது “மிகவும் நீண்டு விட்டது. சில பகுதிகளைக் கட்பண்ணிவிட்டுப் போடலாம்” என்றார். ஒரு நாவலின் பகுதிகளைக் கத்தரித்துவிட்டு வெளியிடுவது என்ற வார்த்தைகள் என் செவிகளுக்கு நாரசமாகப் படவே "அப்படிப் போடச்சம்மதமில்லை” எனக் கூறி விட்டேன். மீண்டும், "செந்தணலை"வெளியிடும் ஆவல், நீறு பூத்த நெருப்பாக என் நெஞ்சில் அடங்கி வெந்து கொண்டிருந்தது. அவர் அகால மரணமடைந்து 24 வருடங்கள் கழித்துஅங்கையன்’கயிலாசநாதன் எழுதிய ‘செந்தணல்' என்னும் நாவல் புத்தக வடிவில் வெளிவர இப்பொழுது தான் இறையருள் கிட்டியுள்ளது. இம்முயற்சி அன்னாரின் ஆத்ம சாந்திக்கான சமர்ப்பணம். இது கைகூடியதினால் அவரின் திறனை, பெயரை, நிலை நாட்டக்கூடியதாய் உள்ளது என்ற மனத்திருப்தியும் எனக்கு இவ்வளவு காலங்கழித்தும் ஏற்படுகின்றது.
அங்கையனுடன் மிக நெருங்கிய இலக்கியத் தொடர்பு கொண்டவரான கவிஞர் இ. முருகையனுடன் தொலைமடல் மூலம் நான் தொடர்பு கொண்டதும், மறுவார்த்தையின்றித் தன் நெருங்கிய நண்பன் நினைவாக எழுதி அனுப்பிய விரிவான விமர்சனத்துக்கு எனது மனப்பூர்வமான நன்றி. அதற்கு அவருக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்.
xiii

Page 10
கல்லூரிக் காலத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை அங்கையனுடன் ஒன்றாகப் படித்துப் பழகிய சகபாடியும், செங்கை ஆழியான்’ என்ற புனைப் பெயரில் இன்றைய பிரபல சிறுகதை எழுத்தாளராக விளங்குபவருமான கலாநிதி க. குணராசா, எனது வேண்டுகோளுக்கிணங்கி, கொழும்புக்கு வந்த சமயம் ‘செந்தணலை அச்சகத்தில் பெற்று வாசித்த பின், எழுதிக் கொடுத்த முன்னுரையும் இந்நூலுக்கு மெருகூட்டுவதாக, பெறுமானமுள்ளதாக விளங்குகிறது. கலாநிதி குணராசாவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதற்கொரு எடுத்துக் காட்டாக அங்கையன்’ கயிலாசநாதன் விளங்கட்டும். அன்னாரது படைப்பாற்றல் அவர் மறைந்து இத்தனை காலங்களின் பிறகும், வாசகர்கள் மத்தியில் விளங்க வேண்டும். அப்படியாயின், காலங்கடந்த போதும் நான் செய்யும் இந்த ‘செந்தணல் வெளியீடு எனக்கும் என் பிள்ளைகள் மூவருக்கும் பெரும் மனநிறைவை ஏற்படுத்துவதாக அமையும். என்னிடம் அவரது கையெழுத்து வடிவில் இருக்கும் ஏனைய படைப்பிலக்கியங்களை, எனது பிள்ளைகள் அச்சுவாகனமேற்றி வெளியிட வேண்டுமென்பது எனது விருப்பம். அது நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் எனது அடிமணம் கூறுகிறது.
நன்றி வணக்கம்
H II/2, gyvesamtidesg Golgim Liliummy2 திருமதி இராஜலட்சுமி அம்மாள் கொழும்பு - 04 கையிலாசநாதன் இலங்கை,
தொலைபேசி எண்: 581047

தணல் ஒன்று
உருகிப் போன வார்த்தைகளிலே உள்ளம் வெதும்பித் துடித்தது. திருஞானத்துக்கு நெஞ்சு பொறுக்காமல்தான் அப்படிச் சொன்னான் என்று பொருளாகக் கொள்ள முடியாமல் தவிதவித்தான் கமலேஸ்வரன். அவனைப் பார்க்கையில் யாருக்குமே அந்த எண்ணம் எழுமா என்று கேள்விகளால் குமைந்து நொந்தது அவனுடைய இளகிய அந்த உள்ளம்.
"உன்னைப்பார்க்கப்பார்க்க எனக்குச் சொல்ல முடியாத வேதனையாய் இருக்குது கமலேஸ்."
நண்பன் என்ற உயரிய அந்தஸ்த்தை நன்றாகக் கடைப்பிடித்த திருஞானத்தின் வார்த்தை, அந்த நட்பை, அதன் உயரிய தன்மையை மகிமையை உணர முடியாதவன் போலக் கமலேஸ்வரனைக் கலங்க வைத்தது.
குணத்தால் குறைந்தவர்களின் குறுகிய உடலம் போல இடநெருக்கடியால் எட்டடி நீளம், பத்தடி அகலமாகக் கட்டப்பெற்ற அந்த அறை அவனுடைய அத்தனை ஆசைகள், கனவுகள், சித்திர உபகரணங்கள், ஒரு தொய்ந்துபோன கட்டில், ஒரு கதிரை என்ற இவற்றை முடக்கியிருந்தது. கொழும்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவனைப் பார்த்து, ஒன்றாகப் படித்து ஒன்றாகத் திரிந்து ஒன்றாகவே இன்பத்தைத் துன்பத்தைப் பகிர்ந்து கமலேஸ்வரன் எங்கே நிற்கின்றான் என்பதையும் முழுதாகப் புரிந்திருந்த திருஞானம் அப்படிக் கூறியது அவனை அதிரச் செய்து விட்டது.
அவர்கள் இருந்த அறைக்கு அப்பால் ஓராண்டு தானும் தாமதமின்றிப் பிறந்த குழந்தைபோல ஒட்டியபடி அமைக்கப்பட்டிருந்த மற்றொரு அறையில் கமலேஸ்வரன் அவனுடைய மனைவிசெல்வராணி, அவர்கள் இருவரும் ஒன்றாக விட்டமூச்சில், அவள் வயிற்றில் விளைந்த ரமணன், ரஞ்சனி என்ற இரு சின்னஞ் சிறு குழந்தைகள் என்ற ஜீவன்கள் இரவிலும் பகலிலும் தரித்து வந்தனர். அந்த இரு அறைகளுக்கும் அப்பால் மனிதன் தனது வயிற்றுக்கு ஏதாவது தீனி போடவேண்டும் என்ற பரிதாபத்துக்கு இரங்கி அந்தக் கட்டிடத்தை அமைத்த புண்ணியவான் நான்கு அடிச் சதுரத்தில், பால்கனியில் அமைத்த ஒரு சிறு குசினி. அதனை அதிகம் நிரப்பக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வசதியற்றிருந்தும் வசதிபோலக் காட்டும்படி கமலேஸ்வரன் வாங்கிப்போட்ட ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு - அதனைச் சுற்றி யாராரோ உபயோகித்து விட்டு அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்திருந்த விலையுயர்ந்த பால் புட்டிகள் - அவற்றுள் உப்பு முதல் மிளகாய்த்துாள் வரை இருந்தன.
கொழும்பில் வாழுகிறோம் என்று மிகக் கர்வமாக அவன் பிறந்த யாழ்ப்பாணத்து ஊர் மண்ணில் கம்பீரநடையிட்டுவிட்டு கொழும்புக்கு வந்ததும் அந்த நான்கு ஜீவன்களும் தரிக்கும் இடம் அது. சாதாரண நிலையிலும் அதற்குப் பங்களா என்றுதான் பெயர்.
கமலேஸ் என்று அழைத்துவிட்டு அவனுடைய முகத்தின் விரக்தி அலைகளைக் கண்ட திருஞானம் சற்றுத் துணுக்குற்றான். ஆனாலும் இதெல்லாம் சகஜம் - மனிதன் விரும்பாத ஒன்று அவனைப் பற்றிய குறைகளை மற்றவர்கள் சொல்வது என்ற திருப்தியில், தொடர்ந்தான்.

Page 11
“நானும் கொழும்புக்கு மாற்றமாகி வந்த நாளிலையிருந்து பார்க்கிறன். உன்னுடைய உடல்நிலை, மனநிலை ஒண்டுமே சரியாக இல்லை. உன்னை இத்தனை நாளும் வெளியிலை மட்டும் சந்திச்சன். இண்டைக்குத்தான் உன்னை உன்னுடைய கொழும்பு வீட்டில் சந்திக்க முடிஞ்சுது. உனக்கு அப்படி என்ன குறை? புனிதமான உன்னுடைய ஓவியக்கலை. செல்வத்தோடையும் சிறப்போடையும் வந்த மனைவி, அன்பிலே பிறந்த குழந்தைகள். ஆண்டவனே எண்டு இரண்டு பேரும் உழைக்கிறியள்.”
கமலேஸ்வரன் தனது முகத்தில் அடர்ந்து வளரத் துடித்துக் கொண்டிருந்த தாடியை இரு கைகளாலும் உரஞ்சினான், “ஷேவ்வும் எடுக்கவில்லை” அவனுடைய அதரங்கள் திருஞானத்தின் கேள்வியைப் பொருட்படுத்தாதன போல முணுமுணுத்தன.
நான் உன்னை என்ன கேக்கிறன் ? பட்டதாரி ஆசிரியரான திருஞானம் தனது தொழிலின் வெளிப்பாட்டில் இப்படியே கேட்டுவிட்டான். விடை தெரியாத மாணவன் போல் திருதிருவென விழித்த கமலேஸ்வரன், உள்ளறையைப் பார்த்துவிட்டு, திருஞானத்துக்கு மட்டும் தெரியும்படி, பேசாதே என்று கண்களால் கேட்டுக் கொண்டான்.
அப்பொழுது அவர்களை நோக்கி யாரோ மெல்ல மெல்ல அடியெடுத்து வருகிறார்கள் என்பது திருஞானத்துக்குப் புலப்பட்டது. உள்ளறைப் பக்கமாகத் தனது கண்களைச் சுழற்றிய திருஞானம், பழைய நிலைக்கு அவற்றை மீட்பதற்கு முன்பே செல்வராணி இரு கோப்பைகளில் தேநீரைக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தாள். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகியும் நலுங்காத அவளுடைய தோற்றம் கிழவிகளாகியும் குமரி வேடம் போடும் சில பெண்களின் கைவந்த ஒப்பனை இல்லாமலே அழகாக இருந்தது. நாளுக்கு நாள் புதுப்புது அலங்காரம், புதுப்புதுக் கதைகள் பாவங்கள், தரும் தன் மனைவியின் அழகில் சிக்கிசிக்கித்தவித்து, தவிப்பின் விடுதலையாக அவளையே நுகர்ந்து இன்னமும் அடங்க்ாதவன்போல இப்பொழுதும் அவளை ஒருமுறை பார்த்தான் கமலேஸ்வரன்.
நேற்று பின்னிவிட்டிருந்த தனது சுருளான கூந்தலை இன்று மதியம் முழுகியபின் உலரக்கூடியதாகவும், அதேவேளை அழகாகவும் கோதி ஒரு கிளிப்பால் பிணைத்திருந்தாள் செல்வராணி. அவள் நடந்து வருகையில் அவளுடைய பின்புறத்தை முழுதாக மறைத்திருந்த அந்தக் கேசம், அவள் மெல்ல ஒய்யாரமாகக் குனிந்து அவர்கள் முன் வெற்றுத் தட்டத்தை வைத்தபொழுது, முன்புறமாக விழுந்து தான் இருப்பதைப் புலப்படுத்தியது. அப்பொழுது அவள் தன் மார்பகங்களில் பட்ட அவற்றைக் கைகளால் தொடாமலே உலுப்பி பின்புறம் விட்டபொழுது அவளுடைய அங்கங்கள் எல்லாவற்றிலுமே ஏற்பட்ட அசைவுகளும், அவற்றைச் சமாளிப்பதுபோல அவள் திருஞானத்தைப் பார்த்துக் கண்களாலும் பற்களாலும் சிரித்த சிரிப்பும் எதையோ இருவருக்கும் புரியவைத்தன.
திருஞானம் பதிலுக்கு நன்றியோடு மெல்லச் சிரித்தபடி கமலேஸ்வரனைப்பார்த்து தனது சிரிப்பை முடித்தான். வாழ்க்கையின் தத்துவமே சிரிப்பில் அடங்கியிருக்கின்றது என்று யாரோ சொன்னார்களோ என்னவோ, அச்சங்கலந்த அவனுடைய சிரிப்பு என்னைத் தப்பாக எண்ணிவிடாதே என்று கமலேஸ்வரனைக் கேட்டது போன்றிருந்தது.
அவள் கோப்பைகளை மீட்டுக் கொண்டு போய் விட்டாள். கமலேஸ்வரன், தான் சாய்ந்து முடங்கியிருந்த கட்டிலில் இருந்தபடியே அருகிலிருந்த சித்திரமேசையில் தூரிகைகளுடனும் பென்சில் பேனை மைக்கூடுகளுடனும் ஒன்றாக, சமத்துவமாகக் கிடந்த சிகரட் பாக்கட்டை எடுத்துத் தனியே புகைக்கத் தொடங்கினான். அவன் சிகரட்டைப் பற்றி

இழுக்கையிலும் அதனை வெளியே நாசியாலும் வாயாலும்ரம்மிய உணர்வுடன் விடுகையிலும் அவனையே அவதானித்திருந்த திருஞானம் தன்பக்கமாக அதுவும் நேரடியாகத் தனது நாசிக்குள் புகைக்கற்றைகள் படையெடுத்து வருவதைக் கண்டதும் நுகர்ந்ததும், தனது முன் பக்கமாகக் கையால் இரண்டு தடவை விசிறிவிட்டு, “இனியாவது சொல்லன் கமலேஸ்” என்றான்.
“என்னத்தைச் சொல்ல ?” கமலேஸ்வரன் உடனடியாக அவனது கேள்விக்கு விடையளிப்பதுபோன்று கூறினான். எனினும் அவனுடைய உள்ளத்தில் தெய்வத்துக்குக்கூட மறைக்கும் அந்த உண்மை என்னவோ முடங்கிக் கிடக்கின்றது என்பது திருஞானத்துக்குத் தெளிவாகியது.
எந்த ஒரு விஷயமும் முற்றும் முழுதாகவும் மறைக்கப்படுகையில், அந்த விஷயத்தை நிர்வாணமாகவே அணுக வேண்டும் என்ற துடிப்பு மனிதனுக்கு இயற்கையானது. மறைக்கப்படுகின்றபொருள்களில் மகிமை அல்லது அது சார்ந்த உண்மை இல்லாதுவிடினும், மறைக்கப்பட்ட பொருள்களைக் கண்டுவிடவேண்டுமென்றதுடிப்பும் அவற்றைக் கண்டபோது இனிப்பும் இதமும் இருப்பது சகஜம்.
"உன்னுடைய மதிப்புக்குரிய ஒருத்தன் என்ற பெருமையிலை தான் இதுவரையும் திண்டாடிக் கேக்கிறேன். நீயோ சொல்லப் பிடிக்காதவன் போல மறைக்கிறாய். இனி உன் இஷ்டம்” என்று திருஞானம் கூறிவிட்டு உள்ளறைப் பக்கமாக நோட்டம் விட்டான். கமலேஸ்வரனுடைய இரு குழந்தைகளும் இரு நிலைகளையும் ஆளுக்கு ஒன்றாகப் பற்றிய வண்ணம் அவர்கள் இருவரையும் பார்த்த வண்ணமும் பார்த்துச் சிரித்த வண்ணமும் நின்றன.
கமலேஸ்வரன் அக்குழந்தைகளை வெறித்த விதம் அவர்களை முன்புபோல் உள்ளுக்கு ஒட வைத்தது. அவர்கள் இருவரும் இருந்த முன்னறைக்கு ரமணனும் ரஞ்சனியும் வருவது கூடாதென்பது கமலேஸ்வரனின் கட்டளை. அக்குழந்தைகள் வந்து தனது மேசையில் உள்ள வர்ணக் குழம்புகளைச் சட்டைகளிலும் நிலத்திலும் உடம்பிலும் தேய்த்து விளையாடுவதுடன், வர்ணத்தையும் வீணாக்குகிறார்கள் என்பது ஏகமனதான குற்றச்சாட்டு.
சிவப்பு நிறமென்றால் ரமணனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் சூரியன் அதிகாலையில் சிவப்பாக இருக்கும் அழகை இமைகொட்டாமல் பார்ப்பான். மாலைகளிலும் வானம் சிவப்பாக இருக்கும். மற்ற நேரங்களிலும் சூரியனும் வானமும் சிவப்பாகவே இருக்கக் கூடாதா என்றும் அந்த நான்கு வயதுச் சிறுவன் ஏங்குவதும் உண்டு. சிவப்பின் மகிமையை அச்சா கலர்'என்றுமட்டும் தனக்கு இயைந்தபடி அவன் கூறினாலும் அதன் மகத்துவத்தைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறான். கமலேஸ்வரனுக்கும் அடிக்கடி தட்டுப்பாடாகின்ற வர்ணமும் சிவப்புத்தான். அதனால் அந்தச் சிவப்பு வர்ணப் போத்திலை அவன் மிகப் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் தட்டுப்பாடாகும் அந்தப் பொருள்மீது அவனுக்கு இனம்புரியாத வெறுப்பும் இருந்தது. ரஞ்சனிக்கு எல்லாம் பிடிக்கும். அப்பா அம்மா அண்ணன் என்ற ரமாண்’ அந்த பெரிய வீடு, கீழே ஒரு ஆளை மட்டும் புதைக்கக் கூடிய முற்றம், வானம் பூமி, பறவைகள் மரங்கள் எல்லாம் பிடிக்கும். பறவைகள் கலகலவென்று சத்தமிட வேண்டும் அப்பொழுதுதான் அவள் கைகொட்டிச் சிரிப்பாள். 'ரமாண்’ என்று பிஞ்சுக் குரல் எழுப்பித் தமையனையும் அழைத்தபடி சிரிப்பாள். மரங்கள், ஒன்றில் பூக்க வேண்டும் அல்லது காய்க்க வேண்டும். இரண்டுங் கெட்டான் மரங்களை அவளுக்குப் பிடிக்காது. அம்மா சோறு தீத்தும் பொழுது மட்டும் பிடிக்காது, ஆனால் வாசமுள்ள புசர்மா'

Page 12
பட்டுச்சட்டை இவற்றை அணியும்போது மிகவும் இனிமையாக இருக்கும். அப்பா ஆபீஸ் என்று மட்டும் அவள் கமலேஸ்வரனைப் பார்த்துக் கேட்டாள் என்றால், அப்பா நீங்கள் அலுவலகத்துக்குப் போகவில்லையா ? அப்படிப் போய் மாலை வீடு திரும்பும் பொழுது எங்களை, சிறப்பாக என்னை மறக்க வேண்டாம். கட்டாயமாக டொபி அல்லது சுவீட் வாங்கி வரவும் என்று மிக நீளமான ஆழமான பொருள் இருக்கும்.
எல்லாமே தன் போக்காகவும், சுயநலமாகவும் இருப்பதனால் தானோ என்னவோ இந்த ஜீவன்களுக்கு ஒவ்வொரு உறவுமுறை இருக்கின்றது. இருவேறு இடங்களில் பிறந்த இருவர் அவர்கள் ஆணும் பெண்ணுமாக இருந்து ஒன்றானால் கணவன் மனைவி என்றும், இருவரும் ஆண்களாக அல்லது பெண்களாக இருந்தால் நண்பர்கள் என்றும் ஒவ்வொரு உறவுமுறை. பிள்ளையைப் பெற்றால் அவற்றைச் சுமக்கின்றவள் தாய், பாதுகாக்கின்றவன் தந்தை, கூடப் பிறந்தால் சகோதரம் - இப்படி அநேகம் உறவுகள். அந்த உறவுகள் கூட தாக்கப்பட்டதும் பாதிக்கப்பட்டதும் இருந்தநிலை மறந்து பிரிவதும் உண்டு. இப்பொழுது கமலேஸ்வரன் ஏதோ சூழ்நிலையில் இருப்பதுபோன்ற ஒரு பிரமையில் நட்யென்ற உணர்வின் உரிமையில் திருஞானம் அவனைப்பற்றிக் கேட்டபொழுது கமலேஸ்வரனுக்குப்பதில் சொல்ல முடியாத நிலை. அவன் டொபி கொண்டு வீட்டுக்கு வராதவிடத்து அவன் அந்தக் குழந்தைகளுக்கு அப்பாவே அல்ல என்ற உணர்வு.
"திரு” கமலேஸ்வரன் நினைவுகளை எங்கெங்கோ சிதறவிட்ட நிலையை மீட்டு இதுவரையும் அமைதியாகத் தன்முன் இருந்த திருஞானத்தைச் சுட்டி அழைத்தான்.
என்ன?’ என்று கேட்பது போலப் பார்த்தான் திருஞானம். "இந்த வாழ்க்கை என்வரையில் சலித்து விட்டது திரு. காலையில் எழும்புறதும், பறந்தடிச்சு ஒபீசுக்கு ஒடுறதும், பஸ்ஸிலை நடக்கிற தில்லு முல்லுகளைப் பார்க்கிறதும் அவஸ்தைப்படுகிறதும், ஒபிசினலமுதுகொடிய கீறுகிறெண்டு கீறுகிறதும், பேந்துபொழுதுபட காலமை எப்படிப் போனனோ அப்படி வீட்டைவாறதும், மனைவி எண்டதுக்காக அவளோடை இரண்டு கதை, பிள்ளைகள் எண்டதுக்காக அதுகளுக்கு தின்பண்டம், ஏதாவது விளையாட்டுச் சாமான்கள், இரண்டொரு கொஞ்சல்கள், நித்திரை. விடிந்ததும் இதே பல்லவி - இராகம் தாளம். எனக்கு இந்த உலகமே பிடிக்கவில்லை”
“தவறு கமலேஸ் தவறு. உலகத்துக்குத் தன்னைப் பிடிக்கவில்லை எண்டு கண்டதும் தான் உலகம் எனக்குப் பிடிக்கவில்லை எண்டு சொல்லுவார்கள். உன்னைப் பொறுத்த வரையில் உன்னுடைய தூய்மையான பவித்திரமான தொழிலைப் பொறுத்த வரையில் உன்னைத்தான் உனக்குப் பிடிக்கவில்லை எண்டு எனக்குப்படுகிறது, இதிலை சரி எது பிழை எது எண்டு தெரியாது எண்டாலும் சொல்லுறன் நீதான் முழுதும் இதுகளுக்குக் காரணம். உன்னாலை தான் இதுகளை ஒழிக்க முடியும்"
“என்ன சொல்லுகிறாய் திரு.?” “ஊக்ம் ! உன்னை எத்தினை கஷ்டங்களுக்கிடையிலை இந்தியாவுக்கு அனுப்பினார் உன்னுடைய அப்பர். அவர் உன்னை விஞ்ஞானம் படிக்க வைச்சார். விஞ்ஞானம் இலங்கையிலை உருப்படாது. புத்தகத்திலை விஞ்ஞானம் படிச்சு என்னத்தைக் கிழிக்கப் போறம். ஆகாயக் கப்பலையும் றேடியோவையும் இன்னுமின்னும் எத்தனையோ விஷயங்களையும் பயிற்சி விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சிட்டாங்கள். தமிழனாகப் பிறந்தவன் இராவணன் ஒட்டின புட்பக விமானத்தையும், அனுமான் தூக்கிப் போன இரவுஞ்சத்தையும் படிச்சால் போதும். பிள்ளையார் ஏன் டிவோஸ் செய்தார் ? முருகன் ஏன் 'செகண்ட் பெற் முடிச்சார் ? சிவபெருமான் ஏன் இரகசியமாகக் கணக்கப் பொம்பிளையளை தலையிலையும்

உடம்பிலையும் கையிலையும் வைச்சிருக்கிறார் எண்டு கிண்டலும் கேலியும் செய்து போட்டு எனக்கு விஞ்ஞானமும் வேண்டாம், வரலாறும் வேண்டாம். அஞ்ஞானமும் வேண்டாம். அபவாதமும் வேண்டாம் எண்டு கலைக் கல்லூரியிலை ஒவியம் மட்டும் படிச்சியே அது நீ செய்த பிழை. உன்னுடைய விஷமத் தனமான செய்கையாலை ஒரேயொரு ஆம்பிளைப்பிள்ளை எண்டு பெத்து அழகு பார்த்த உன்னுடைய அப்பர் நொந்து கடைசியிலை மோசம் போனார். இருக்கிற மிச்சம் உங்க அம்மா - உன்னுடைய மனுசி பிள்ளைகள் இந்த நாலும்தான் உன்னுடைய உலகம். இதுகளுக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?"
திருஞானம் அவனைக் கூண்டில் நிறுத்தி விசாரித்தான். "என்றோ எப்பொழுதோ அடியெடுத்து வைத்த பாதை சீராக, சரியாக இல்லாது போனால் அந்தப் பாதையை அல்லது அந்தப் பாதையிலை நடந்த கால்களைப் பிழை சொல்ல முடியாது. அதைச் செய்தவன் குற்றவாளி. சரிவர யோசிக்காமல் எதை எவன் செய்யிறானோ அவன் உன்னைப் போலத்தான் சொல்லுவான். என் வரையிலை முன் யோசனை இல்லாதவங்களுக்குப் பெயர் இலட்சியவாதிகள் எண்டு சொல்லுவன். வருகிறது அறிகிறவன் தீர்க்கதரிசி மட்டுமில்லை யதார்த்தவாதியுங்கூட ஏதோ நான் இப்பிடிச் சொன்ன உடனே நான் சொல்லுறது செய்யிறது எல்லாம் சரி எண்டு அர்த்தமில்லை. ஆனால் நான் சொல்லிப் போட்டால் அது பிறகு சரியில்லாட்டி விட்டிடுவன் அரிச்சந்திர நாடகம் போட மாட்டன். செய்தது பிழை எண்டால் அந்தப் பிழையையே சரியாக எடுப்பன். அல்லது அதுக்கு வளைந்து கொடுப்பன் 1 ஆனால் உனக்கு ?"
கமலேஸ்வரன் இதழ்களில் குறுநகை ஒடியது. அவன் சொன்னான், “எவ்வளவு அதிசயமான உலகம் இது 1 வேற்றுமைகளிலை ஒற்றுமை காணுறதை உவமை எண்டு சொல்லுவினம். ஒற்றுமையிலை வேற்றுமை காணுறதை பகைமை எண்டு சொல்லலாம். ஆனால் நம்மளைப் பொறுத்தவரையில் உவமைதான் உன்னுடைய தீர்க்க தரிசனமும் யதார்த்தமும் எனக்கில்லை. அதுகள் எனக்கு வேண்டாம். அப்படி ஒரு காலம் எனக்கு வராது. வரவும் கூடாது. நான் இயற்கையை இயற்கையாக நம்புறன். இயற்கையை உள்ளபடி தான் சித்திரிப்பேன். எனக்கு மொடேர்ன் ஆர்ட் பிடிக்காது ஆபாசம் பிடிக்காது அப்படி ஆபாசமான ஒவியங்களைத் தீட்டி ஆபாசமான இந்த உலகத்திலை வாழுறதிலும் என்னுடைய மணிக்கட்டை அறுத்து சுடுதண்ணியிலை கையை வைச்சு அதிலை பெருக்கெடுக்கிற இரத்தத்திலைதான் அந்தச் சிவப்பான ஆபாசத்தை கீறுவன். அப்படிக் கீறுகிற வரைக்கும் ான்ரை உயிர் என்னட்டை இருக்காது”
“மடையன் மாதிரி அலட்டாதை கமலேஸ். பாரதியார் பாடின எட்டடிக் குச்சுக்குள்ளையும் மாட மாளிகைகளையும் கோடி கோபுரங்களையும் காணலாம். அந்த இலட்சியவாதியான பாரதியார்கூட ஒரு மச்சுவீடு வேண்டுமெண்டு கேட்டார். அவர் உலகத்தை உணர்ந்துதான் அந்தப் பாட்டைப் பாடினார். நீ கட்டி அழுகிற ஒவியம் எத்தனை புத்திமதிகளை உனக்கு தருகிறதோ அந்தப் பரமசிவனுக்குத்தான் வெளிச்சம்!”
பரமசிவனுக்கு ஒவியந் தெரியாது திரு. அவருக்குத் தெரிஞ்சது நடனம் மட்டும் தான். என்னுடைய ஓவியம் இலட்சியமாக வாழவிடாட்டி நான் . ’ அவன் குரல் தழுதழுத்தது. கண்கள் எதனையோ சுட்டெரிப்பது போலச் சிவந்தன. உதடுகளின் மெல்லிய படபடப்பில் அவன் மெளனியானான்.
செல்வராணி திடீரென்று அவர்களின் கதையை அந்த ஜிவ உரையாடலை முறிபவள் போல, "வாருங்கள் சாப்பிடலாம்” என்றாள்.

Page 13
“சாப்பிடவா? நேரம் போறதே தெரியுதில்லை.” என்று கூறியபடி எழுந்த கமலேஸ்வரன் வா சாப்பிடலாம் என்றபடி, தனது சித்திர மேசையில் நிறைந்திருந்த போத்தல்கள் புட்டிகள் முதலியனவற்றை ஒதுக்கினான். அவனுடைய அடிமனது வேறொரு மேசையாவது இல்லையே என்று பிழிந்தபடி ஏங்கினாலும், உதட்டில் ஒர் ஏளனச் சிரிப்புப் பிறந்து கண்கள் வழியே இந்த மேசையில் விழுந்தது. திருஞானம் அதனை உணர்ந்தவன்போல, "பரவாயில்லை, கையிலை வைச்சே சாப்பிடலாம். நீபோய்ச் சாப்பாட்டை எடுத்துண்டு வா" என்றான்.
அவள் கொடுத்த தண்ணிரால் அந்தச் சவக்குழி முற்றத்தில் ஒரமாக உள்ள ஒடையில் கையை அலம்பியபடி வந்தவன், கமலேஸ்வரன் கொடுத்த இடியப்பத்தை உண்ணத் தொடங்கினான். வெளியே பகலை அப்படியே வாரி உண்ட களைப்பில் அந்த இரவு அமைதியாக இருந்தது.
2
இரவின் அந்த இனிய தூக்கத்தைக் கெடுப்பது போல காலி வீதி நெடுகிலும் வெள்ளவத்தை அடங்கலும் உள்ள நெடுவீதிகளிலும், குறுக்கு ஒழுங்கைகளிலும் நிறைந்திருந்த தெருவிளக்குகள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. பகல் ஒளிக்கு எம்முடைய பிரகாசம் சளைத்ததல்ல என்ற கம்பீரம் ஒவ்வொரு சின்னஞ்சிறு விளக்கிலும் தெரிந்தது.
திருஞானம் உண்ட களை மாற்றி, இரண்டொரு வார்த்தைகளும் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்று வெகு நேரமாகியிருந்தது.
கமலேஸ்வரன் வீட்டின் முற்றமாக அமைந்திருந்த அந்த ஒடையில் வந்து நின்று தெரு விளக்குகளைப் பார்த்தபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். அக்கம் பக்கத்து வீடுகள் , அவற்றில் வசிக்கும் இனந்தெரியாத பெயர் தெரியாத நபர்கள், மனிதன் பெறமுடியாத மதிப்பை நாயாகப் பிறந்தும் பெற்று விட்டோமே என்ற களிப்பில் திளைக்கும் நாய்கள் - எல்லாமே உறங்கிவிட்ட நேரம்.
செல்வராணி ரமணனையும் ரஞ்சனியையும் படுக்க வைத்துவிட்டு கமலேஸ்வரனின் வரவைப் பார்க்காதவள்போல தன்னுடைய வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். நாளைக்கு அலுவலகத்துக்குப் போகும்பொழுது அணிய வேண்டிய சேலை, அந்தச் சேலையின் எங்கோ ஒரு மூலையில் இடப்பட்டிருக்கும் நீலப்பூவுக்கு மாச்' பண்ணக்கூடியதான சட்டை, பிள்ளைவரம் இனி வேண்டாம் என்று அவளின் விருப்பத்தின் பெயரில் அவர்கள் இருவரும் விரும்பிக் கொண்டபின் இதுதான் தருணமென்று பார்த்து பீறிட்டு பருத்து வளர்ந்திருக்கும் அவளின் எடுப்பான மேலங்கங்களை இணைத்து இறுகப் பிடிக்கும் விதமான அந்தத் துணி என்றெல்லாம் அவள் எடுத்து, எடுத்து வைத்தாள்.
உறங்குவதற்கே வகையற்றதான அந்தக் கட்டில் அவள் இட்ட அந்த ஆடை அணிகளைத் தாங்கியபடி பெருமிதமாக அவள் பக்கம் நீண்டு கிடந்தது. எதிரே நிலைக்கண்ணாடியின் அரை உருவம் பெற்றதும், அவள் நெடுநேரம் தரிசிப்பதுமான கண்ணாடியும், அதன்முன் குவிந்து கிடந்த உதட்டுச் சாயம், நகச் சாயம், பவுடர், சென்ட் என்பனவற்றின் புட்டிகள் அந்த மினுங்கிய ஒளியில் வண்ணவண்ணமாகப் பளபளத்துக் கொண்டிருந்தன.

கமலேஸ்வரன் கையில் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த சிகரட்டை ஒரே இழுவையில் முடித்துவிட்டு உள்ளறைப் பக்கமாக வந்தான்.
அவனுடைய வருகையை உணர்ந்திருந்த செல்வராணி தான் களைந்து விட்டிருந்த ஆடைகளை மெல்ல ஒதுக்கியபடியும், அதேவேளை தன்னைச் சரிசெய்வதுபோற் காட்டிய படியும் நின்றாள்.
கமலேஸ்வரனுக்கு இந்த நாடகம் மிகப் பழையது அநாவசியமான விஷயங்களுக்கெல்லாம் உடம்பை அலட்டுவது கொழும்பில் உள்ள பலருக்கு இருக்கும் வியாதி என்று தெரிந்து கொள்ள அவனுக்குப் பலநாட் செல்லவில்லை.
எவன் எவன் வாழ்க்கையின் கீழ்த் தட்டில் தோன்றி அதிலிருந்து அதல பாதாளமான சம்பவங்களைக் காணுகிறானோ, தீராத தரித்திரமும் அரை குறையான ஆனந்தமும் அனுபவிக்கிறானோ அவனவன் அத்தகைய வாழ்க்கையின் இழிநிலையே கண்டதில்லை என்று மறைக்க பகட்டாக வாழத் தலைப்படுவான், இந்த உண்மை கமலேஸ்வரனுக்கு பழையது.
தாழ்ந்த நிலையில் பிறப்பதோ, வளர்வதோ உலகில் யாருமே செய்யாத குற்றம். பிறந்து விட்டோமே என்று வருந்துவதும், உள்ள வாழ்க்கை நிலையை வார்த்தை ஜோடனைகளாலும் ஆடை அலங்காரத்தாலும் ம்றைப்பதும்தான் குற்றம். உடுக்க என்பதற்காகக் கடன்பட்டுப்பட்டாடை சார்த்தவேண்டுமென்று எங்காவது சொல்லியிருக்கா என்ன?
அழகில்லாத பெண் தன்னை அழகியாகக் காட்டிக் கொள்வதும், நடப்பதும், அறிவில்லாதவன் தன்னை அறிஞனாக்குவதும் உலகம் கண்ட உண்மை. இயற்கை கொடுத்த நிலை எதுவோ அதை உண்மையோடும் பக்தியோடும் கடைப்பிடிக்கும் பொழுது அங்கு அவள் பேரழகியாவாள், அவன் மேதையாவான்.
கமலேஸ்வரன் எங்கோ எப்பொழுதோ தான் படித்து உணர்ந்த இவற்றை எண்ணியபொழுது அவனுடைய குழி விழுந்த இதழ்க் கோடிகளில் இளநகை ஒடியது.
“என்ன சிரிக்கிறீயள்?" செல்வராணி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவள் போல இருந்து விட்டுக் கேட்டாள்.
“சிரிக்கிறேனா?”கமலேஸ்வரன் இப்பொழுது சிரித்துக் கொண்டுதான் கேட்டான். அவன் ஏளனம் சிரிப்பாகும் என்று அவனுக்கே தெரியாததாகி விட்டது. அவன் தொடர்த்தான்.
“மனிதன் ஒண்டைப் பிடிச்சு தெண்டாலும் சிரிப்பான். பிடிக்காட்டிலும் சிரிப்பான். சிரிப்பு சில பேர் கையாளுற நல்ல மருந்து வருகிற சந்தோஷத்தை அல்லது வ்ெறுப்பை அந்தச் சிரிப்பாலேயே சமாளிச்சுப் போடுவினம்”
“இப்ப உங்களுக்குப் பிடிக்காமல் என்ன நடந்தது?" குற்றமுள்ள நெஞ்சங்கள் அர்த்தம் பிடிக்கவும் தவறுவதில்லை என்பது எவ்வளவு தூரம் மெய்யானது என்பதை அவளுடைய கேள்வி வெளிக்காட்டியது.
பிடிக்காமலா? எனக்குப்பிடிச்சபடி இஞ்சை என்ன நடக்கிறது. நான் வெள்ளைக் கடுதாசியிலை வர்ணம் பூசுறன். நீ உன்னிலை வர்ணம் பூசுகிறாய். வேலை செய்யிற விளம்பரக் கம்பனிக்காக நான் படம் போட்டு விளம்பரஞ் செய்து கொடுக்கிறேன். நீஎண்டால் உன்னையே விளம்பரப்படுத்துகிறாய். இதெல்லாம் பிடிக்கிற விஷயமா? ஒரு தமிழ்ப் பெண் - அதுவும் சாதி, பண்பாடு பேசுகிற குலத்திலே வந்த ஒருத்தி செய்யிற காரியமா?"

Page 14
கமலேஸ்வரன் அவளை நேரடியாகத் தாக்குவது போன்று கேள்விகள் கேட்டதும் செல்வராணியின் கண்கள் வழமைபோல் குளமாகத் தொடங்கின. அழுகை என்பது ஆயுதம் என்று செல்வராணி இன்றும் நம்பிக் கொண்டிருந்தாள். பெண்களின் கண்ணிர் பாவமானது என்ற பரிதாபம் கமலேஸ்வரன் நெஞ்சில் நிறைந்திருந்த போதும், அவளுடைய போக்கும் நடப்பும் அவற்றுக்கு அவள் சொல்லும் கண்ணிர்ச் சமாதானமும் கடந்து விட்ட நான்கு ஆண்டுகளில் அவனுக்குச் சலித்துப்போன விஷயங்கள். அடிக்கடி பிரயோகிக்கப்படும் எந்த வஸ்துக்கும் மதிப்புக் குறைந்து போவது என்னவோ இயற்கையாகி விட்டது. அவன் அவளுடைய கலங்கிச் சிவந்து போயிருக்கும் கண்களை ஒருமுறை வெட்டிப் பார்த்துவிட்டு மறுபடியும் மெளனியானான்.
பரிதாபமும் கோபமும் ஒரே இடத்தில் தரிக்கும் என்பது கமலேஸ்வரன் காட்டிய அனுபவம். அவளை மேலும் நோகச் செய்யக் கூடாது என்ற உறுதியில்-கருணையில் அவன் கட்டிலிற் கிடந்த மடிப்புக் கலையாத செல்வராணியினுடைய சேலை சட்டைகளை ஒரு புறமாக ஒதுக்கிவிட்டு கட்டிலில் சாய்ந்தான்.
அப்பொழுது அவனையும் அறியாமல் அவனுடைய கை ரெடிமேட்டாகப் பின்னி வைக்கப்பட்டிருந்த கூந்தல் கற்றையைத் தட்டி விட்டதும், அது மண்ணில் விழுந்து பாம்புபோல் கிடந்தது.
“என்னைப் பிடிக்காட்டிச் சொல்லுங்களன், நான் போறன். எதுக்கு இப்பிடி மனுசரை அவமானப்படுத்துறியள்” என்று சினந்தாள் செல்வராணி
திடுக்கிட்டு எழுந்த கமலேஸ்வரன் தனது காலடியில் அகப்பட்ட பின்னல் சடையைப் பாம்பை மிதித்தவன் போலவே விலத்தி அதனைக் கையில் எடுத்து ஒருமுறை வெறித்துப் பார்த்துவிட்டு கட்டிலில் போட்டான்.
“என்ன சொன்னாய்?"
“செல்வராணி ! உனக்கு நாத்திமிர் கூடுது, கண்டபடி கதையாதை. உன்னை என்னை நம்பிக்கிடக்கிற இந்தச் சீவன்களை மதிச்சாகிலும், அதுகளுடைய எதிர்காலத்தை நினைச்சாகிலும் மனிசரைப்போல கதை. நீ நினைச்ச மாதிரி நடக்கவும் பேசவும் நான் நீ வைச்ச ஆளில்லை."
“நானும் அப்பிடித்தான். நீங்க வைச்ச ஆளில்லை. உங்களுக்குக் குடும்பத்தைப்பற்றிப் பிரச்சினை இல்லை. என்னைப் பற்றி அக்கறை இல்லை. நான் வடிவாப்போறது உங்களுக்குப் பிடிக்காது.” செல்வராணி அழுது கொண்டே சொன்னாள். "இஞ்சை வா இப்பிடி " அவன் கட்டிலில் இருந்தபடியே அவளுடைய கையைப் பிடித்து, அவளைத் தன் பக்கமாக இழுத்தான். அவள் அவனுடைய அந்தப் பிடியையும் உதறிவிட்டு அப்படியே நின்றாள். அவனுக்கு அவளுடைய அந்தச் செய்கை என்னவோ போல இருந்தாலும் தன்னைச் சமாளித்தபடி சொன்னான்.
“நீ நினைக்கிறது போல இந்த முழு உலகமுமே பகட்டிலை மயங்கிக் கிடக்குது எண்டு நினைக்காதை செல்வராணி, நல்ல சட்டை போடாட்டி, ஷேவ் எடுக்காட்டி சந்தோஷக் குறைவாகப் பார்க்கிற பேசுற உலகம் ! புதுப்புது ஸ்டைலுக்கும் புரியாத பேச்சுக்கும் அடிமைப்பட்டுப் போன ஒரு உலகமும் இருக்குது. ஆனால், நீ எதிர்பார்க்கிற அந்த உலகம், நம்மஞக்கு ஏன் எண்டுதான் நான் கேக்கிறன்"
செல்வராணி எதனையோ உன்னிப்பாகக் கேட்பவள் போல அவனை விறைத்தபடி நின்றாள். கலங்கி வடிந்த அவளுடைய முகத்தில் கண்ணிர்க் கோடுகள் காயத் தொடங்கின.

11) லிப்பும் சிவப்புமாக இருந்த அவளுடைய அந்த முகம் இப்பொழுது பார்ப்பதற்கு விகாரமாகவே இருந்தது. ஆணின் சாதாரண உயரமளவுக்கு வளர்ந்திருந்த அவளுடைய முழு மேனியையும் ஒருமுறை கண்களால் சுற்றி வந்து அவன் தொடர்ந்தான்.
"உனக்கு இண்டைக்குச் சொல்லுறன். ஒரு காலத்திலை பெம்பிளையன் வேலை செய்யவே கூடாது எண்டு விரும்பினவன் நான். அதுவும் வேலை செய்யிற ஒருத்தியைக் கல்யாணம் முடிக்கமாட்டன் எண்டு நிண்டவன் நான். விதிவசமாகத்தான் இருக்க வேணும். நீ எனக்கு மனைவியாக வாய்ச்சாய். அதோடை உனக்கு வேலையும் கிடைச்சிருந்தது. நானும் பார்த்தன். இந்த வாழ்க்கைச் செலவு கூடிய காலத்திலை, அதுகும் என்போல ஆளுகளின்ரை வருமானத்தின்ரை திறத்திலை உன்னை வேலைக்குப் போகாமல் மறிக்க எனக்கு மனம் வரயில்லை. நீயும் வீட்டிலை இருக்கிறதையும் விரும்பயில்லை. ஆனால்.” "ஆனால். உன்னை நம்பி நான் வாழத் துவங்கியது பெரியதப்பு எண்டு எப்பவோ தெரிஞ்சிட்டன், இனி ஒண்டுதான் மிச்சம். நீ வேலைக்குப் போறது சரியா எண்ணுறது தெரிஞ்சு போகும். தேவையில்லாத விஷயங்களைப் பிரச்சினை ஆக்குற நீ செய்யிறது பேசுகிறது ஒண்டும் எனக்குச் சரியாய்ப் படயில்லை !”
“எனக்கு காரக்டர் சேட்டிப்பிக்கேற் இஞ்சை ஒருதரும் தரவேண்டாம். ஐ நோ வாட் ரு டு" செல்வராணி தனது கொழும்புப் பாணியில் கூறிவிட்டு கதவையும் படிரென அறைந்தபடி வெளியே போனாள்.
அவன் குமைந்து கொண்டிருந்தான். கடவுள் பக்தி இல்லாமல் ஒரு பூசாரி தெய்வத்துக்கு அர்ச்சனை செய்யலாம், மலர் சாத்தலாம், பால் வார்க்கலாம், எதுவும் செய்யலாம். தெய்வம் அதனை ஏற்றுக் கொள்ளும், அல்லது விடும். ஆனால் கணவன் பக்தி இல்லாமல் எந்த மனைவியுமே அவனுக்கு வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாது, செய்யவுங் கூடாது.
கணவன் என்ற உயிருக்கு மனைவி செய்வது கடமை. ஒரு விதத்தில் அவன் தன்னை நெடுங் குமராக இருக்கவிடாது வாழ்வளித்தான் என்பதற்கான நன்றியாகவும் இருக்க வேண்டும். பூசாரியின் தெய்வத் தொண்டு பலவிதங்களில் தொழிலின் அடிப்படையில் அமைந்தது! அது தொழில், மனைவியாக இருப்பது தொழிலாகக் கருதப்படும் பொழுது செல்வராணியின் அந்தச் செய்கை சரியானதாகவே கொள்ளலாம்.
இவற்றையெல்லாம் ஒப்புவதற்குக் கமலேஸ்வரனுடைய மனம் பெருமளவு பின்னுக்கிழுத்தது. பலருடைய தூற்றல்களுக்கும் நச்சரிப்புகளுக்கும் மத்தியில் புரோக்கர்களினதும் சித்தப்பன் ஒருவரினதும் ஆசை வார்த்தைகளை நம்பி அவன் தாலிக் கொடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டது என்னவோ இன்று அவனுக்குச் சரியாகப்படவில்லை.
மணவாழ்க்கை சரியாக இருக்கும், இருக்கவும் வேண்டும் என்ற நம்பிக்கையிலும் பிரார்த்தனையிலுமே மனித இனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த இயக்கம் தடைப்படும்படியாக நம்பிக்கையிலும் பிரார்த்தனையிலும் அர்த்தமற்ற செய்கைகளால் இடி விழுந்தது போலாகி விட்டதும் மனிதன் தன்னை இழந்து இறுதியில் வாழ்வையும் இழக்கத் துணிகின்றான்.
கமலேஸ்வரன் முன்பின் தெரியாத ஒருத்தி பெருமளவு சீதனத்துடனும் நிறைந்த அழகுடனும் கிடைக்கிறாள் என்று ஆனந்தப்பட்டான். செல்வராணி ஒரு வெள்ளிக்கிழமையன்று கோவிலுக்கு நாகரீகமாக உடுத்துச் சென்றபோது, கமலேஸ்வரன் பெண் பார்த்தான். முன் கூட்டியே உருவாக்கப்பட்ட திட்டத்தின் பிரகாரமே இது நடந்தது.

Page 15
இந்நாடகத்தைச் சிறப்பாக முடித்து மொத்தம் கிடைத்த ஆறாயிரம் ரூபா சீதனக் காசில் ஆயிரத்தையும் சுருட்டிய பெருமை அவனுடைய சிறிய தகப்பனையே சாரும். கலியாணம் முடிந்து மாப்பிள்ளை பெண்வீட்டார் குடிபுகுந்ததும் விலகிக் கொண்ட அந்தச் சிறிய தகப்பன் நான்கு ஆண்டுகளாகியும் திரும்பாததும் ஒன்றும் புதினமாக அவனுக்குத் தெரியவில்லை.
“தம்பி உன்ரை காசிலை ஒரு ஆயிரம் ரூபா தா, புகையிலை வித்ததும் தந்து போடுறன்” என்று அவர் பெற்றுச் சென்றபொழுது,"இதிலையென்ன. நீங்கள் ஆறுதலாகத் தாருங்கள்” என்று அவன் சங்ககைக்காகக் கூறியதை அவர் மெய்யாகவே பாவித்துவிடுவார் என்று மட்டும் அவன் எதிர்பார்க்கவில்லை.
கல்யாண சீசனின்போது பெண் பகுதியாரின் அழைப்புகளை ஏற்று கமலேஸ்வரனும் செல்வராணியும் நான்கு பட்டுப் படிகள் ஏறி இறங்கிய பொழுது, அழைப்பில்லாமலே தங்களிடம் வரவேண்டுமென்று எதிர்பார்த்தவர்கள் கடந்த நான்கு வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
3
தமிழ் ஆசிரியர் சோமலிங்கத்திற்கு ஒரேயொரு பெண்ணாகப் பிறந்து, இரண்டு அண்ணன்மார்களுக்குத் தங்கையாகவும் வளர்ந்த செல்வராணிக்குத் தாய் மட்டும் இல்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது.
செல்வராணி செல்வமாக வளர்ந்த காலங்களில் “உதென்ன மாஸ்டர் ! உங்கடை பிள்ளை கொழும்புப் பெட்டையளைவிட மோசமாகக் குதிக்கிறாள்" என்று ஊரில் உள்ள ஒரு முதியவர் கூறிக் கண்டித்து அறுக்கையாக வளர்க்கும்படி ஆலோசனையும் செய்தபொழுது சோமலிங்கம் கதைகளால் சமாளித்தார்.
“எனக்கு உள்ள ஒரேயொரு பெண் குஞ்சு. அதுதானே செல்வராணி எண்டும் பேர் வைச்சிருக்கிறன். அவள் இப்ப சந்தோஷமாக இருக்கவேணும். நாளைக்கு ஒருத்தன்ற கையிலை தள்ளிப் போட்டா அவன் எப்பிடிவைச்சிருக்கிறானோ? என்ன சொய்யிறானோ.” சோமலிங்கம் சொல்லிக் கொண்டே தன் கண்களைத் துடைத்தார்.
இவை மிக மிகச் சாதாரணமானவை என்று உணர்ந்துகொண்ட அந்த முதியவர், “ஓம் ஓம். நீங்கள் சொல்வது சரிதான். இந்த நாளையிலை பெம்பிளையளை அறுக்கை பண்ணியும் என்னத்தைக் காணுறது ?” என்றபடி நகர்ந்த சம்பவத்தைச் செல்வராணி பெருமையாக தன் கணவனிடம் சொல்லி, தான் செல்வமாக வளர்ந்த வளர்ப்பைநாசூக்காகப் புலப்படுத்தினாள்.
“போயும் போயும் கொம்பனியிலை கிளாக்கு உத்தியோம பாக்கிற ஒருத்தனுக்கே தங்கச்சியைக் கொடுக்கப் போறிங்கள். வீடு வளவு காசு எண்டு சீதனமும் வேறை.” அரசாங்கத்தில் கிளார்க்காக வேலை பார்க்கும் சோமலிங்கத்தின் மூத்த மகன் ஞானச்சந்திரன், ஒருநாள் கேட்டான்.
“உனக்கு நேச்சர் விளங்காது. அந்தப் பொடியன் இந்தியாவிலை படிச்சது. கொம்பனியிலை விளம்பர வேலை பார்க்குது. இந்த நாளையிலை மாப்பிள்ளை பார்க்கிறது எண்டாச் சின்ன விஷயமெண்டே நினைச்சாய். நீ நான் சொல்லுறதைச் செய். கண்டபடி வந்து அலட்டாதை."
10

சோமலிங்கம் தனது சுமையை உணர்ந்தவர் மட்டுமல்லாமல் உலகத்தையும் உணர்ந்தவர் என்ற உண்மை தொனிக்கக் கூறிவிட்டார். ஞானச்சந்திரன் பின்னர் எல்லாம் பொருமுவதே யல்லாமல் பேசுவது இல்லை
“தங்கச்சியும் புருஷனும் என்ர வீட்டை வராட்டி நான் எந்த உறவும் வைக்கிறதில்லை."
இப்படியொரு சங்கற்பத்தைக் காரணமில்லாமல் செய்து கொண்டு பல சோலிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டான் அவளின் மற்றொரு அண்ணனான சந்திரமோகன்.
அவர் வரட்டும் என்று செல்வராணியும் ரோஷம் ஏற்றியதும் கமலேஸ்வரன் இவர்களைப் பொருட்படுத்தாமலே விட்டுவிட்டான். பிள்ளைகள் பிறந்தன - தந்திகள் பறந்தன. ஆனாலும் செல்வராணியின் அண்ணன்மார் எதுவித தந்திகளையும் எதிர்பார்க்கவுமில்லை ! அவை அவர்களுக்குக் கிடைக்கவுமில்லை.
கமலேஸ்வரன் கொஞ்சம்களிப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக, செல்வராணி சொன்ன கதைகள் இவை சிறுபிள்ளைகள் பகிடிக்காகப் போடும் பொய்க் கோபம் பின்னர் நாளடைவில் பகைமையாகி விடுவது போன்று, செல்வராணி சகோதர பாசத்தை அறியாதவள்போல ஆகிவிட்டாள்.
கமலேஸ்வரனின் நெஞ்சம் மேலும் குமைந்து கொண்டேயிருந்தது. அவர்கள் கல்யாணம் நடந்த அன்று. மனிதன் பெண்ணாசைக்கு அடிமையாகி விட்டான் என்று பகிரங்கப் பிரகடனஞ் செய்த வேளை அது.
செல்வராணி பின்னிவிட்ட நெடுங்கூந்தல். அதனைச் சுற்ற வளைந்து வந்த பூமாலைகள், நெற்றியிலும் உச்சி வகிட்டிலும் இட்ட குங்குமம். தலையை அலங்கரித்த மின்மினி போன்ற ஆபரணங்கள் செக்கச் சிவந்த அவள் மேனி குங்கும வர்ணக் கூறைச் சேலைக்குள் சிறைப்பட்டு, அவள் தட்டித் தடக்க நடந்து வந்து, இரகசியங்கள் வெளியாகவிருந்த அந்தப் பொழுதில், "நான் நீங்கள் சொல்லுறதைக் கேட்டு அடங்கி நடப்பன்" என்று நாக்குழறச் சொன்ன மொழிகளைக் கமலேஸ்வரன் ஒருமுறை நினைத்துப் பார்த்தான்.
வாக்குறுதிகள் என்றுமே நிறைவேற்றப்படுவதில்லை, மிகப் பயங்கரமான அனுபவமான உண்மை என்பது போல அவனுடைய நாசிகளையும் பிய்த்து எறிவது போல் பெருமூச்சொன்று பாய்ந்தது.
சோமலிங்கம் மகள் மீது பாசங் கொண்டவராக இருந்த போதும் யாழ்ப்பாண ஊரியிலிருந்து கொழும்புக்கு வரவோ, கொழும்பிலேயே நிரந்தரமாக இருக்கவோ முடியாத நிலையில் இருந்தார். அவருடைய பிற்பட்ட கால வாழ்க்கையை உயிர் அனுபவித்துக் கொண்டிருந்ததால், ஊரிலுள்ள தமிழ்ப் பரியாரிடம் மருந்து வாங்குவது செலவுச் சிக்கனமாகவும் உடம்புச் செளகரியமாகவும் இருக்கும் என்று எண்ணி மகளின் சீதன வீட்டிலேயே குடிகொண்டு விட்டார். அவருக்கு உதவியாகச் சந்திரமோகன் குடும்பம் இருந்தது. சந்திரமோகன் ஊரிலேயே தனது தொழில்முயற்சிகளை மேற்கொண்டு வந்தான். புகையிலையைக் கட்டிப் பொல்காவலை, குருநாகல் என்று சுருட்டுக் கடைகளுக்கு அனுப்புவது அவனுடைய வேலை. பின்னர் வசூலுக்காகப் புறப்பட்டு, இடைவழியிலேயே இலாபப் பணத்தையும் மூலதனத்தையும் ஒதுக்கிவிட்டு, சோமலிங்கத்திடம் சென்று கைகட்டி நிற்கும் பழக்கமும் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதுண்டு.

Page 16
கதவு படீரென்று சாத்தப்பட்டதும் திடுக்கிட்டு எழுந்த ரஞ்சனி சிணுங்கத் தொடங்கினாள். கட்டிலில் சாய்ந்தபடியே அவளுடைய நெற்றிமுகம் கன்னம் என்பனவற்றை வருடி, ஆறுதலான இரண்டு மூன்று பாராட்டுதல்களைச் செய்து அவள் தூங்கியதும் செல்வராணியைத் தேடிக் கண்களைத் திருப்பினான் கமலேஸ்வரன்.
அவளைக் காணவில்லை. முன்பக்கமாக உள்ள அறையிலும் நடமாட்டந் தெரியவில்லை. குபிரென்று நடுக்கமெடுக்கும் உணர்ச்சித் திவலைகளின் எத்தலில் கட்டிலைவிட்டு எழுந்த அவன் முன்னறையைத் திறந்து இருள் பரந்திருந்த அறையினுள் ஒளி பாய்ச்சினான். அப்பொழுது அவன் கண்ட காட்சி அவனை ஒரு முறை உலுக்கி எடுத்தது.
செல்வராணி கிடந்த கோலத்தைக் காண கமலேவரனுக்கு என்னவோ செய்தது. கால்களை அகலப் போட்டு கைகளை முடக்கி தன் அகன்ற மடிமீது புதைத்தபடி முன்னறையில் இருந்த சாய்வு நாற்காலியில் அவள் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்.
"அழுகை, அழுகை' என்று தனக்குச் சொல்லிக் கொண்டு அவளை நெருங்கினான் அவன்.
கமலேஸ்வரன் தன் அருகே வருவதைக் கண்ட செல்வராணி கால்களை ஒன்றாக்கியபடி சற்று எழுந்து, நிமிர்ந்து அவனையே பார்த்தாள்.
அவளைத் தேற்றுவதற்கு மொழியற்ற நிலையில் அவன் தன் அணைப்புக்களால் தேற்ற முயன்று கொண்டிருந்தான். சிலம்பிக் கிடந்த அவளுடைய சுருண்ட கட்டைக் கேசத்துக்குள் விரல்கள் உழுது வந்தன. அது அவளுக்கு அமைதியைக் கொடுப்பது போன்றிருந்தாலும், கண்களில் கண்ணிர் கறை கட்டியிருந்த வழியே மீண்டும் பாய்ந்தது. நாசித் துவாரங்கள் அகலப்பிய்ய இதழ்கள் துடிதுடிக்க அவள் அவனை விழுங்குவது போல், பிரியப்போகுமுன் ஒருமுறை, கடைசி முறையாகப் பார்ப்பது போல் பார்த்தாள். அவன் நாற்காலியில் தனக்கும் இடந்தேடிக் கொண்டு நெஞ்சை அழுத்தி அவள்மீது பாரத்தை விழுத்தி, தன் கன்ன ஓரங்களால் வழிந்திருந்த கண்ணிர்ப் படைகளை அகற்றினான்.
இப்பொழுது அவனும் அழுகிறானா? தன் கண்ணிர் அவன் முகம் முழுவதும் பரவியதைக் கண்ட செல்வராணி, தன் கைகளால் அவனுடைய முகத்தை ஒற்றிவிட்டாள். விட்டதும் அவளுடைய குழிவிழுந்த இதழ்க் கோடிகளில் இளநகை மிகப் பிரயத்தனப்பட்டு ஓடியது,
அவன் கேட்டான். “என்னோடை கோபமா செல்வம்?" அவள் கோபமாக இருந்தாளோ என்னவோ, அந்தக் கேள்விக்கு அளிக்கக் கூடிய பதில்தான் என்ன? அது பாரதூரமான கோபமா இருந்தாலும் அவளால் என்னத்தைச் சாதிக்க முடியும்? அவன் கொடூரமான வார்த்தைகளால் சொல்கின்றான் என்று கண்டால் அவனது வழியைத் திருத்தப் பார்ப்பாள். முடியாதபோதுதான் அவன் வழியே திரும்புவாள். செல்வரானியால் அவன் வழிக்குத் திரும்ப முடியாது விட்டால், தன்வழி நடப்பாள். இவற்றுள் ஒன்று நடந்துதானே தீரவேண்டும்.
இப்பொழுது அவன் கேட்ட அந்தக் கேள்விசாக்கலேட் நிறையக் கொடுக்கவில்லை என்று தாயின் தோள்களிலும் மார்பிலும் தன் பிஞ்சுக் கைகளால் ஓங்கி ஓங்கி அடித்துவிட்டு, தானும் அழுது தீர்ந்தபின் அந்தத் தாயை அன்போடு பார்க்கும் குழந்தையின் பார்வையை ஒத்திருந்தது. செல்வராணி கோபிக்கவில்லை. கோபிக்காதவள் போலவே காட்டினாள். அது அவனுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக அவனுடைய தாடைகள் இரண்டையும் இழுத்துத் தன் முகத்துக்கு நேரே நிறுத்தியபடி கண்களை ஒருமுறை சிமிட்டி இல்லையென்று சைகை காட்டினாள். அப்பொழுதுதான் அவள் சிரித்தாள்.
2

ஒளிர்ந்து கொண்டிருந்த மின் விளக்கில் அவளது பற்கள் முத்து ஒளி வீசின. அது கமலேஸ்வரனுக்கு என்னவோ செய்வதுபோல்பட்டது.
சிரிப்பு என்பதன் உள்ளார்ந்த அர்த்தமும் அதுதானோ? "நீ நோகும்படியாகப் பேசிப் போட்டேன் இல்லையா?” என்றான் கமலேஸ்வரன். செல்வராணி இதற்குப் பதில் சொல்லவில்லை. செய்வதும் செய்துவிட்டு அதனையே மறுத்துக் கூறவும் வேண்டும் என்ற ஆவலுடன் அவன் கேட்டது அவனுக்கு ஒரு விதத்தில் சங்கடமாகவும் இருந்தது.
அவர்களுடையகைகள் ஒன்றையொன்றுமெல்லமெல்ல இறுகப்பற்றத்தொடங்கின. செல்வராணியின் கண்கள் இமைகளுக்குள் சொருகப்படுவது போன்று பல தடவைகள் அவனைக் பார்ப்பதும் பின்னர் இமைமூடி, இமைகளுக்குள் சொருகப்படுவதுமாக இருந்தன.
அவள் அணிந்திருந்த அந்த ஒற்றை இரவு உடுப்பு அவளுக்குப் பெரிய பாரமாக இருப்பது போன்ற பிரமை. அதனை அங்குமிங்கும் பிய்த்து விடுவது போன்று அவளுடைய கைகள் துளாவின. அவன் அதற்கு ஒத்தாசையானான்.
அவர்கள் எப்பொழுது படுக்கச் சென்றார்கள் என்பது தெரியாததாக இருந்தாலும் காலையில் எல்லா அலுவலஸ்தர்களும் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் சூரியன் சற்றுப் பலமாக எரிக்கத் தொடங்கும் எட்டு மணிப்பொழுதில் அவர்கள் கண்விழித்தார்கள். காலை வானத்தைப் பார்க்கின்ற ஆவலில் ரமணன் வெள்ளனவே எழும்பி விட்டான். அவனைத் தொடர்ந்து மூசிய வண்ணம் எழுந்து வந்த ரஞ்சனி பகல் முழுவதும் என்ன செய்வது என்ற பரிதாபகரமான யோசனையில் அந்த வீட்டு வாசற்படியில் வந்து குந்தினாள்.
கமலேஸ்வரன் அலுவலகத்துக்கு நேரம்போய் விட்டது என்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு முன்னரே போய்விட்டான். செல்வராணி குழந்தைகளை வெளிக்கிடுத்தி, தானும் வெளிக்கிட்டாள். அவளுடைய அலுவலகமும் தனியார் கம்பனியாக இருந்த பொழுதும் அவள் அரசாங்க ஊழியர் போன்று இன்று போனாலென்ன நாளை போனாலென்ன என்ற நிலையில் மிக ஆறுதலாக இயங்கிக் கொண்டிருந்தாள்.
தனது வார்ந்து வடிந்த முகத்துக்குச் செம்பவுடர் அத்திவாரமிட்டு, வெண்பவுடர் பூசுகையில், தன் கணவர் சொரசொரக்கும் தாடியுடன் ஷேவ் எடுக்காமலே 'ரை' யுடன் அலுவலகத்துக்குப் போனதை நினைக்கும் பொழுது கடந்த இரவின் இன்ப நுகர்ச்சியின் பின்பு அவளுக்குச் சிரிப்பாக இருந்தது.
நேற்றிரவு ஆயத்தமாக எடுத்து வைத்திருந்த துணிமணிகளை அணிந்து கொண்டு காலையில் அவசரப்பட்டு கமலேஸ்வரன் வாங்கிவந்த கடை அப்பத்தை இரண்டு முறை வாய்க்குள் இட்டாள். பிள்ளைகள் இருவரும் மாலை ஐந்து மணிக்காகத் தவஞ் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
பக்கத்து வீட்டிலுள்ள கணேசமணியின் வீட்டில்தான் இனி அவர்களுக்கு வேலை. கணேசமணி வேலைக்குக் கிளம்பியதும் அவன் மனைவி பரமேஸ்வரி வீட்டில் தனியே இருந்து சமையல் வேலைகளைக் கவனிப்பாள். தனியே இருக்கும் பரமேஸ்வரிக்கு தனியே இருக்கும் இக் குழந்தைகள் துணை. ஒரு விதத்தில் ஆறுதலும்கூட.
சீதனத்தில் காற்பங்கை இந்தியாவிலுள்ள அத்தனை புண்ணிய தீர்த்தத் தலங்களிலும் கரைத்து விட்டும் அவர்களுக்குக் கடந்த ஏழு வருடங்களாக எந்தவித அருளும் கிடைக்கவில்லை. “சிவனே!” என்று தனியன்களாக இருக்கும் அச்சோடிக்கு ரமணனும், ரஞ்சினியுந்தான் பிள்ளைகள்.
13

Page 17
பரமேஸ் " என்ற இனிய குரல் கேட்டதும் இரட்டைக் குழந்தைகள் போன்று ஒட்டியிருந்த தன் வீட்டின் முகப்புக்கு வந்தாள் பரமேஸ்வரி. செல்வராணி கையில் திறப்புக் கோர்வையும் குழந்தைகளும் சகிதமாக நிற்பதைக் கண்டதும் மாதங்கள் பலவாகச் செய்து பழக்கப்பட்ட பாணியில் ரஞ்சி” என்று அழைத்துச் சிரித்தபடி குழந்தைகளையும் சாவிக் கொத்தையும் பொறுப்பேற்றாள்.
செல்வராணி தனக்கே உரிய பாணியில் விடைபெற்றுக் கொண்டு கையில் அங்குமிங்கும் ஆடி இடைக்குச் சாமரை வீசிக் கொண்டிருந்த அழகுப் பையும் ஏழு வர்ணக்குடையும் சகிதமாக வீதிக்கு வந்தாள்.
அவள் பஸ் ஹோல்டுக்கு வரும் பொழுது வங்கிக் கட்டிடத்துக்கு அருகில் உள்ள மணிக்கூடு ஒன்பது மணிப் பொழுது தாண்டி எட்டு நிமிடமாகின்றது என்று காட்டியது. செல்வராணி தனது கைக்கடிகாரத்தையும் பார்த்துவிட்டு ஓ காட்ரூ லேட்' என்று தனக்கே சொல்லிக் கொண்டாள்.
கொழும்பில் உத்தியோகத்தர்கள் வேலைத் தலங்களுக்குப் புறப்படும் நேரத்தை வெளியார் பார்ப்பார்களானால் இலங்கையில் பத்து மணிக்குத்தான் அலுவல்கள் ஆரம்பிக்கின்றன என்று நினைப்பார்கள். அவ்வளவுக்குச் சனநெருக்கடி பஸ்களிலும் தரிப்பு இடங்களிலும் இருந்தது. கட்டுப்பாடற்ற நிருவாகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தேச நலனற்ற உத்தியோகத்தர்களால் பல பொல்லாத வேலைகள் நாளுக்கு நாள் தாமதப்படுத்தப்படுகின்றன என்பது ஊரறிந்த விஷயம்.
செல்வராணி பேர்சனல் அசிஸ்டன்டாக இருக்கும் மோகன் ராய் கம்பனியில் எட்டரை மணிக்கே வேலைகள் ஆரம்பமாகிவிடும். அவள் விரல்கள் ஒடிய டைப் அடிப்பதும், நாரி உழையும்படி உழைப்பதும், ஒய்வு நேரங்களிலும் பல வேளைகளில் அலுவலக வேலைகள் பார்ப்பதும், சம்பள உயர்வு முதலியனவற்றுக்கு உதவி செய்யாது விடினும், தப்பித்தவறி ஒரிரு நாட்கள் வேலைக்குப் பிந்தினால் தட்டிக் கேட்க ஆட்கள் இருந்தும் அப்படிக் கேட்க முடியாதவாறு தடுத்து விடும். ஏற்றுமதி வேலைகளில் அதிகம் நாட்டமுடையதும், வெளிநாட்டார் தொடர்புகள் பல கொண்டதுமான அந்தக் கம்பனிக்குச் செல்வராணி போன்ற ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்கள் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது வாஸ்தவம்.
சுயமொழிக் கல்வியுடன் தங்கள் பெயர்களை மட்டும் ஆங்கிலத்தில் ஒழுங்காக எழுதத் தெரிந்தவர்களை, பட்டம் பெற்றாலும் அரசாங்கமும் தனியார் துறைகளும் வேண்டுமென்றே கைவிடுகின்ற நிலையும் எல்லோருக்கும் வெளிச்சமானது. செல்வராணி டைப்பிங் கடிதத் தொடர்புகள், கணக்கு வழக்குப் பார்த்தல் முதலிய பல நிருவாகத் துறைகளில் பரிச்சயமும் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருந்தது அதிருஷ்டவசமாக அவளுடைய குறைந்த கல்வித் தராதரத்துடன் பெரிய வேலை கிடைக்க வாய்ப்பளித்தது. செல்வராணி ஊர்ந்து செல்லும் அந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் அடுக்கப்பட்ட மனிதக் கிழங்குகளில் ஒன்றாக தன்னை முன்புறமும் பின்புறமும் காத்தபடி சென்று கொண்டிருந்தாள்.
எதிர்பாராத பிறேக்குகளின் போதும், இறக்க ஏற்றங்களின் போதும் பெண்மையை நுகராத நுகர்ந்தும்பசி அடங்காத சில காமப்பட்டினிக் களிசான் கும்பல்களின் பசிக்குத்தான் விருந்தெரிந்த நாள் முதல் பேணிப் பாதுகாக்கின்ற பிருஷ்டபாகங்கள் இரையாகக் கூடாதே என்ற ஏக்கத்தில் அவள் சென்று வருவது வழக்கம். சில வேளைகளில் தவிர்க்க முடியாத சில முகங்களுக்காக, தவிர்க்க முடியாத முறையில், தவிர்க்க முடியாத பெண்கள் நடந்து
14

கொாவதும் அவள் கண்களுக்கு எட்டுகின்ற சாட்சியாக இருந்த பொழுதும், கற்புக்கும் பெருமைக்கும் பெயர் பெற்ற தன் ஊரின் - யாழ்ப்பாணத்தின் கெளரவத்துக்குப் பங்கம்
விளைவிக்கக் கூடாதே என்ற கவலையும் அச்சமும் அவளை வாட்டுவதும் உண்டு.
செல்வராணி பஸ்நெரிசலிலிருந்து தனக்குத்தானே விடுதலையளித்துக் கொண்டு அலுவலகப் படிஏறி ஆசனத்தை நோக்கி நடக்கும் பொழுது, நெடு நாட்களாக வெளியூர் சென்று மீண்டிருந்த கம்பனிமுதலாளிராயும் காரைவிட்டு இறங்கி உள்ளே சென்று கொண்டிருந்தார். ராய் சில ஆண்டுகளுக்கு முன்னரே தன்னை விட்டுப் பிரிய விரும்பிய இளமையை இறுகப் பிடித்து பலவந்தமாகத் தன்னிடம் குடியிருக்கும் நாற்பத்தைந்து வயது இளைஞன்'
செல்வராணியும் அவரும் ஒன்றாகவே ஒருவர் பின் ஒருவராக ஒன்றன்பின் ஒன்றாக இருக்கும் அறைகளில் நுழைந்ததும், ஏற்கனவே திடீரென்று ஏற்பட்ட மயான அமைதி குலைந்து ஏளனக் குரல்கள் புரியாத மொழிகளில் ஒலிக்கத் தொடங்கின.
4
அன்றாட வேலைகளுக்குச் சரணம் பாடிவிட்டு உத்தியோகத்தர்கள் புறப்படுகின்றவேளை அது. நாலரை மணிக்குத்தான் அலுவல்களுக்கான பைல்கள் மூடப்பட வேண்டுமென்ற ஒரு அலுவலக நேரம் எழுத்தளவில் இருக்க, நான்கு மணிக்கே பெரும்பாலானவர்கள் புறப்பட்டு விட்டனர். கட்டுப்பாடுகள் உள்ள அலுவலகங்களில் மட்டும் சில மனச்சாட்சி உள்ளவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
நாலரை மணியை முட்கம்பி எட்டத் தொடங்கியதையும் அறியாதவனாக வேலையில் மூழ்கியிருந்தான் கமலேஸ்வரன். தடின் புடின் என்று கதிரைகள் அவற்றின்மீது இருந்தவர்களின் நன்றியுணர்ச்சியற்ற உந்தலால் பின்புறம் எற்றப்படும் சத்தமும், மேசை லாச்சிகள் இழுத்து அறையப்படும் ஒசையும், டக்கு டக்கு என்ற பூட்ஸ் ஒலிகளும் அவன் வேலை செய்து கொண்டிருந்த வெள்ளைக் கட்டிடங்களை நினைத்து அவனுடைய புலன்களை தம் பக்கமாக ஈர்த்துக் கொண்டிருந்தன.
மாலை வீடு திரும்புகின்றோமே என்ற அவசரமின்றி, வேலை செய்தும் செய்ததுபோற் காட்டியதுமான ஒரு பாவனையில் தம்மை ஒப்பனை செய்து மீண்ட பெண் ஊழியர்கள் பலரின் முகங்களிலிருந்து வீசிய-அப்பொழுதுதான் பூசப்பட்ட பவுடரின் நெடிநாசியைக் குடைந்தது. முழந்தாள்களுக்குமேல் ஆறு ஏழு அங்குலங்கள் உயர்ந்து தாழ்ந்திருக்கும் கால்களை ாக்காலத்தும் தீண்ட மாட்டோம் என்ற சங்கற்பத்தில் அப்பெண்களுட் பலருடைய இலாவண்ணியமான உடல்களை ஆரத் தழுவி, இறுகப் பிடித்துக் கொண்டிருந்த மினி சட்டைகளில் ஊறியிருந்த வியர்வையையும் மறக்கடிப்பதற்காக அந்தநெடி எங்கும் பரந்திருந்தது. சுயமொழிகளில் அத்திவாரத்தில் ஆங்கிலத்தில் உள்ள மிகச் சாதாரணமான சொற்களை மிகவும் அழுந்தந் திருத்தமாக உச்சரித்து, ஒருவரை மற்றவர் எள்ளியபடி அவர்களும் அவர்கள் அனைவர் மீதும் தம் பார்வைகளாலெறித்தபடி அங்குள்ள ஆடவரிற் சிலரும் சென்று கொண்டிருந்த காட்சி அவனை அருவருப்புக் குள்ளாக்கியது.
கமலேஸ்வரன் கல்யாணமானவன் என்ற சமூகக் குறைபாடு காரணமாகவும், அவனது தொழில் வெறும் கலை மட்டுமே என்ற இளக்காரத்தாலும் பெரும்பாலான அந்தக் கம்பனி ஊழியர்கள் அவனுடன் அவ்வளவாக அளவளாவுவதில்லை.
15

Page 18
கமலேஸ்வரனுக்கு அப்படி அவர்கள் ஒதுங்கி நடந்தது பெரும் ஆறுதலாகவும் இருந்தது.
“என்ன? இன்னும் போகவில்லையா நீங்கள்?" என்ற ஒரு குரல் அவனைத்திரும்பிப் பார்க்க வைத்தது.
அவன் வரைந்து கொண்டிருந்த தனது கையை நிறுத்தி, பின்புறமாகச் சிரித்தபடி திரும்பினான்.
நாகரீகம் எவ்வளவு உச்சத்துக்கு வெள்ளம் போல், பூகம்பம் போல் எழுந்தாலும் பொருமாத சரியாத குறையாத ஒரு மலைபோல தமக்கெனவே உரிய நாகரீகத்துடனும் சில நல்ல தமிழ்ப் பெண்கள் உலவுகிறார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ள சித்திரா அவனைப் பார்த்துக் களங்கமில்லாமல் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
முழங்கைவரை நீண்ட சோளியும், உடலின் பெரும் பாகங்களை மிச்சமின்றி மறைத்த மடிப்புகள் நிறை சேலையும், நெற்றியில் மட்டும் சிவப்பாகத் தோற்றும் செஞ்சாந்துப் பொட்டும், ஒழுங்காக உச்சிவார்ந்து அமைவாக இழுக்கப் பெற்று பின்னிவிட்ட நீண்ட சடைத்த கருமையான கூந்தலும் அவளுடைய தனி அழகை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
கேலிக்கும் குறும்புக்கும் விண்ணப்பஞ் செய்துவரும் சில சினிமாக் கதாநாயகர்களை அப்படியே ஒப்பித்த கோலமுடைய ஆடவர்கள் அவளை நினைப்பதும் நெருங்குவதும் பேசுவதும் மிக அபூர்வம். அவளை ‘றிசேர்வ் டைப்' என்று ஏதோ மனோதத்துவங்களையே கரைத்துக் குடித்தவர்கள் போலக் கூறி அமைதியானார்கள் அங்குள்ள பலர். இலகுவாகக் கிடைக்கின்ற பொருள்கள் இருக்கையில், கஷ்டப்பட்டு அவற்றைத் தேட அவர்களால் முடியுமா?
சித்திராவின் கேள்விக்கு சிறிது தாமதித்தே பதிலளித்தான் கமலேஸ்வரன். “கையிலை வேலை இருக்கு நாளைக்குப் புதுவிளம்பரம் கொடுக்க வேணுமாம். அதுதான் “லே அவுட் போட்டுக் கொண்டிருக்கிறன்.”
“எல்லாரும் போகினம்." சித்திரா சொன்னாள். “போகட்டுமே. அவர்கள் எப்பவோ போயிருப்பினம்; இந்த வெள்ளைக்கார முதலாளிக்காக நாலரை மணிக்காவது போகினமே, அது போதும்’ என்றபடி தனது உதவியாளான சிரிபாலாவைப் பார்த்தான் கமலேஸ்வரன் அவனும் புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்த பொழுதும் கமலேஸ்வரன்போ’ என்று சொல்லும்வரை பார்ப்பவன்போல் அவனையே விழிவாங்காமல் பார்த்தபடி இருந்தான்.
“ffurgurr!” கமலேஸ்வரன் அழைத்ததும் கதிரையைப் படிர் என்று பின்புறம் எற்றியபடி விரைவாக எழுந்து வந்தான் அவன்.
“இந்த 'லே அவுட் நாளைக்கு வேண்டியது. இதில் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட வண்ணங்களைத் தீட்டி வையுங்கள். எழுத்துக்களை நான் எழுதுகிறேன். இப்பொழுது நீங்கள் வீட்டுக்குப் போகலாம்” என்று ஆங்கிலத்தில் கூறினான் கமலேஸ்வரன். கமலேஸ்வரன் தனக்கு நேரடியான அதிகாரி என்ற மதிப்பிலும் கமலேஸ்வரனின் குணநலன்களில் அதிக ஈடுபாடு கொண்ட பிடிப்பு உயர்வாக இருந்ததால் சிரிபால மிகவும் பயபக்தியுடன் ஒன்றும் பேசாது தலையை மட்டும் கனிவோடு ஆட்டியபடி கமலேஸ்வரன் கொடுத்த ஒவியத்தாளைப் பெற்றுக் கொண்டு நகர்ந்தான்.
16

அப்பொழுது நடு மண்டபத்தை நோக்கி வெளியே வந்த கம்பனி டைரக்டர் மில்ஸ்வேர்த் கமலேஸ்வரன் இன்னமும் வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டதும் அவனருகே வந்து "மிஸ்டர் கமலேஸ்வரன்! நீங்கள் அவசரப்பட்டு வரைய வேண்டாம். நாளைக்கு மாலையளவில் படத்தைக் கொடுத்தால் போதும்” என்றார்.
கமலேஸ்வரன் மரியாதையுடன் எழுந்தபடி "யேஸ் சேர்’ என்று சிரித்தான். பதிலுக்குச் சிரித்த அவர் “குட்நைட்” என்று கூறியபடி மிகக் கம்பீரமாகக் காரை நோக்கி நடந்தார். ஹில்ஸ்வேர்த் போவதையே சிலைகள் போலப் பார்த்திருந்த அந்த மூவரும் தமக்குள் ஏற்பட்ட ஆனந்தத்தை ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்து, கம்பனிடைரக்டரான அவரின் எளிமையைக் கண்களால் வியந்தபடி மெளனியானார்கள்.
சிரிபாலா “செரியோ’ என்றபடி வெளியே போனான். பதிலுக்குக் கூறிய கமலேஸ்வரன் “உங்களைத் தாமதிக்கிறேன் இல்லையா?” என்று சித்திராவைக் கேட்டான். “என்ன தாமதம்? இப்ப பஸ்ஸிலை எள்ளுப் போட்டால் விழாது. தேர் பார்த்த மாதிரித்தான் இருக்கும். நான் நடந்து போகலாம் எண்டு இருக்கிறன்” தனக்கு பஸ்ஸில் ஏற்படும் சில பயங்கரமான அதேவேளை மிருகத்தனமான அனுபவங்களை உணர்ச்சிகளால் மென்றுகொண்டு கூறினாள் சித்திரா.
“கொள்ளுப்பிட்டி வரைக்கும் நடந்து போனால் அங்கையிருந்து எக்ஸ்பிரஸ் எடுக்கலாம். சனம் இருக்காது” என்றபடி வெளியேறினான் கமலேஸ்வரன். சித்திராவும் அவனைத் தொடர்ந்து நடக்கத் தொடங்கினாள்.
ஹில்ஸ்வேர்த் அட்வடைசிங் சேவிஸ் என்ற அந்தக் கம்பனியில் ஓர் உதவி ஆடிஸ்டாக கமலேஸ்வரன் ஆறு ஆண்டுகளுக்கு முன் சேர்ந்த பொழுது, இப்பொழுது அவன் இருக்கும் நிலையிலிருந்தவர் வேறு கம்பனிக்குப் பதவி உயர்வுடன் சென்றதும், இந்த நிலைக்கு உயர்த்தப்பட்டான் அவன். சாதாரண கிளார்க்காக இருந்த சிரிபாலா தனக்கிருந்த கலை ஆர்வத்தை முதலிட்டு கமலேஸ்வரனின் பழைய பதவியை நிரப்பினான்.
சித்திரா அந்தக் கம்பனிக்குப்புதியவள். அங்குள்ள 'மினிஸ்கேட்டுகள்' அவளைக் கன்றி புறூட் என்று எள்ளுவதைக் கேட்டும் கேளாதவள் போல அடக்கத்தின் துணையுடன் இரண்டு ஆண்டுகளைக் கழித்து விட்டாள் அவள்.
வாய் திறந்தால் காதலைத் தவிர வேறு எதனையும் பேசித் தெரியாத சில பண்பு குறைந்த ஊழியர்கள் அவளுடன் நித்திய தொடர்பு கொள்ளக் கூடாது என்பதற்காகவோ என்னவோ அவள் தான் அங்குள்ள லிவ்கிளார்க். இந்தியாவில் விஞ்ஞானப் பட்டம் பெறுவதற்காக நான்கு வருடங்களையும் எண்ணாயிரம் ரூபாவையும் செலவழித்த பின் யாரோ பெரிய புள்ளிக்கு வேலை எடுத்துத் தரும்படி கொடுத்து அழித்தெழுதப்பட்ட கணக்கிலே சேர்த்துக் கொள்ளப்பட்ட இரண்டாயிரமும் போக, ஒன்றுமே எஞ்சாததால் வேலை செய்தாகிலும் பிழைப்போம் என்ற துணிவில், ஒரு சமூக உந்தலில் கொழும்புக்குப் புறப்பட்டவள் அவள்.
ஒல்லியான உயர்ந்த அவள் உருவம் அவள் சிவப்பாக இல்லாவிட்டாலும் எடுப்பாகவும் கவர்ச்சியாகவும் இவளை வைத்திருந்தது அவளுக்குச் சங்கடமான சந்தர்ப்பங்களைக் கொடுத்ததுண்டு. கமலேஸ்வரனின் உறவு அவர்களுக்கு மட்டும் வெளிச்சமான தூய நட்பு, ஒரு விதத்தில் சகோதரத்துவம், அவர்களுக்குத் தெம்பை ஊட்டி வந்தது.
தனக்கு இளைய மூன்று சகோதரிகளையும் ஒரு தம்பியையும் படிப்பிப்பதற்கும், அவர்களுக்கும் அவர்களது தாய்க்கும் சோறு போடுவதற்கும் யாழ்ப்பாணத்திலேயே
17

Page 19
அரசாங்க அலுவலகமொன்றில் வேலை செய்யும், சாகும் வரையும் கிளார்க்கான தந்தைக்குத் துணையாக அவள் உழைக்க வேண்டியிருந்தது.
பெண்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க ஆண்கள் மட்டும் உழைக்க வேண்டுமென ஒரு தர்மமான சமூகநிலை நிலவி, அது ஆங்கிலேயச் செல்வாக்கினால் அழிக்கப்பட்டதும் ஆடை கட்டிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்ட எத்தனையோ பெண்களைப் போன்ற இக்கட்டான நிலைக்கு ஆளாக்கப்பட்டவள் அவள்.
அதற்கு அவள் பிறந்த மண்ணில் என்ன சாபத்தாலோ வசதிகள் இருக்கவில்லை. அந்த ஊரில் பெண்களுட் பலரைப்போல் உமல்களையும் கடகங்களையும் இழைத்து, பாய்களைப் பின்னி பன்ன வேலைகளால் கூப்பனுடன் வாங்கும் கறிச் சரக்குகளுக்கு உழைக்க அவளுக்குப் பழக்கமும் மனத்திடமும் இருந்தபொழுதும், பட்டப் படிப்பும் அவளது எதிர்காலம் என்ற கல்யாணமும் அவர்களைக் கொழும்புக்கு ஏற்றுமதி செய்துவிட்டிருந்தன. தன்னைத் தானே காக்கும் மனத்தைரியமுள்ள பெண் எங்குதான் சீவித்தால் என்ன? சித்திரா அத்தகையவள் என்ற நம்பிக்கை அவளுடைய பெற்றோருக்கு மட்டுமல்லாது, ஊரவர்க்கும் இருந்ததை அவள் அதிர்ஷ்டமாகக் கொண்டாள்.
சித்திரா தங்கியிருந்த போர்டிங்கில் உள்ள அம்மாள் தனது கழுகுக் கண்களால் பிந்திவரும் பெண்களைச் சுத்திகரிப்பு நோட்டம் விடுவதுண்டு. வெளியே தன் பாதுகாப்பில் உள்ள பெண்களைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாலும் தனக்கு வேண்டியது பணந்தானே, பெண்களின் ஒழுக்கம் அல்லவே என்று அவள் பேசாமல் இருந்து விடுவாள்.
ஆனால் சித்திரா எவ்வளவு நேரம் தாமதித்து வந்தாலும் அந்த அம்மாள் அவளை எரித்துவிடுவதுபோலப் பார்க்க மாட்டாள். பச்சை அரிசிகளில் முப்பத்திரண்டை அவளாகப் பொறுக்கி எடுத்து அவளுடைய வாய்க்குள் ஒழுங்காக யாரோ நிரந்தரத்துடன் அடுக்கி விட்டதான இயற்கை உண்மையுடன் அவள் சிரிப்பதை இரசிக்கின்ற தன்மையில் தன்னை மறந்து அமைதியாக இருந்து விழிவாங்காமலே பின்னர் அந்த அம்மாள் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு சித்திராவுக்கு எவ்வளவோ இதமாக இருக்கும்.
கொழும்பில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் அவள் அந்த அம்மாளின் பாதுகாப்பிலேயே இருக்கிறாள். அவர்கள் இருக்கும் விடுதி தப்பித் தவறி விட்டவர்களை அடிக்கடி வெளியே ஒரு மாத நோட்டிசுடன் அனுப்பிக் கொண்டிருந்தது. சித்திராவுக்கு அவர்களுட் பலருடைய கதைகள் வெட்ட வெளிச்சம். அந்தக் கதைகள் தந்த அனுபவங்களைக் கற்களாக்கி அவள் மேலும் தனது அன்புக் கோட்டையைப் பிறருக்கு எட்டாமல் உயர்த்திக் கட்டிக் கொண்டிருந்தாள்.
கமலேஸ்வரன் நீண்ட தூரம் மெளனமாக வந்து கொண்டிருந்தான். அவன் உரையாடல்களை விரும்புபவனாக இருந்த பொழுதும், தனது கவலைகள், வெறுமைகள் அப்பட்டமாகிவிடக் கூடாதே என்ற அச்சத்தில் அதிகம் எதையும் பிரஸ்தாபிப்பதில்லை.
அவள் கேட்டாள். “இனி மொடல்களை வைச்சு விளம்பரப்படுத்தப் போகினமாம். நீங்கள் என்ன நினைக்கிறியள் அது பற்றி?”
'உம்' கமலேஸ்வரன் தனது சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவளுக்குச் சொன்னான்.
“நான் சொல்லுதற்கு என்ன இருக்கிறது. ஆனால் மொடல் விளம்பரத்தை நினைக்க மனசுக்குச் சங்கடமாக இருக்கிறது. ஆரன் அதைச் செய்தால் பறவாயில்லை. அது என்னுடைய தலையிலேயே விழும்போல கிடக்கு."
18

"உண்மையிலை அது நல்ல முறையா?" அவள் கேட்டாள். "உலகத்திலை எது நல்லது எது கெட்டது என்பதெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். போல்றும் டான்ஸ் நல்லது, பரதம் கெட்டது என்ற உணர்விலும் சித்தனையோ பேர் இருக்கிறார்கள். கொலை செய்து உணவுண்ணுறதும் இந்தக் காலத்திலை நல்லதுதான். அது பல விஷயத்தில் அவசியம் எனப்பட்ட உடனை நல்லதாகியிட்டுது. சில பாஷன்கள் இருக்குதே அதுகளுக்குப் புத்தகங்களிலை சொல்லியிருக்கிற நல்லதுகளெல்லாம் கெட்டதுதான். அதாலை எது எந்த உலகத்துக்கு ாப்பொழுது நல்லது என்கிற விஷயம் சொல்லக் கஷ்டமானது" என்றபடி சித்திராவை ஒரு முறை பார்த்தான் கமலேஸ்வரன்.
அவள் ஒதுங்கி அடக்கமாக நடந்து கொண்டே அவன் சொல்வதைக் கேட்டாள். அவள் அவனைப் பார்த்தவிதம் "உம் சொல்லுங்கள்” என்று கேட்பது போலவும் இருந்தது. அவன் தொடர்ந்தான்.
“மொடல்களை வைச்சு. இப்ப சோப்புக்கு விளம்பரஞ் செய்யிறதெண்டால்,பிரபல சினிமா நடிகையான ரேணுகாதேவி இந்த ‘காதல் நிலவு சவர்க்காரத்தையே உபயோகிக்கிறார். அதனால் அவரைப் போல நீங்களும் அழகுடன் ஜொலிக்க வேண்டுமானால் காதல் நிலவு சோப்பையே உபயோகியுங்கள் என்று விளம்பரப்படுத்துவது, அப்படிச் செய்யக்கை ரேணுகாதேவி அழகாகச் சிரிப்பது போலவும், முகம் பளபளப்பாக இருப்பது போலவும் உள்ள ஒரு படம் போதும். இந்த முறைதான் இதுவரை செய்து வாறம். இணி. சிச்சீ.”
“சொல்லுங்களேன்!” சித்திரா குழைந்து கேட்டாள். “நீங்களா செய்யப் போகிறீர்கள்? உங்களிடம் சொன்னாலென்ன,” என்று பொருத்தமற்றவாறு ஏதோ கூறி விட்டுச் சொன்னான் கமலேஸ்வரன்.
“பூப்போல பெய்கிற நீரைத் தருகிறது எங்கள் ஷவர் என்று குளியலறை விளம்பரமும் செய்ய வேண்டிவரும். அப்படி என்றால் யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணை காசுகாட்டி, கூட்டி வந்து குளியலறையிலை அவளைக் குளிக்கவிட்டு படம் எடுப்பாங்கள். அவள் எத்தினை ஆடைஅணிகளுடன் வந்தாளோ அத்தினையும் இல்லாமல்மயக்கமானதும் மறைவானதுமான ஒரு காட்சி எடுக்கப்படும். அப்படிப்பட்ட கண்ணறாவிப் படங்களை நான்தான் எடுக்க வேண்டி வரும். அதை நினைக்கத்தான்.” அவன் தயங்கியபடி நிறுத்தினான்.
"இதுதான் கூடாது. எந்த விஷயத்தினையும் ஆத்மசுத்தி இருக்குமெண்டால் அதைத் தொழிலாகச் செய்யிறதிலை தப்பில்லை” சித்திரா நிதானமாகக் கூறிவிட்டுத் தன்வழி நடந்து கொண்டிருந்தாள்.
"மிஸ் சித்திரா நீங்கள் என்ன சொல்லுறியள்?" கமலேஸ்வரன் அவள் கூறிய இயல்பூக்கமான தத்துவத்தைக் கேட்டதும் திடுக்கிட்டபடி கேட்டான்.
அவள் கூறினாள். "நான் உங்களோடை இவ்வளவு அன்பாகப் பழகுறேன். எங்கடை பழக்கத்திலே எந்தவித களங்கமும் இல்லை. ஆனால் என் காதறிய ஏன் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களுக்குத் தெரியும். நம்மளைச் சேத்துக் கதைச்சினம் தானே. அப்ப நீங்கள் உங்கள் பழக்கத்தை மாத்தவில்லையே. நானும் அப்படியே தானே இருக்கிறேன். அது எங்கட ஆத்மசுத்தி. இப்ப பாருங்கள் இந்தக் காலி றோட்டாலை
19

Page 20
எத்தினை பஸ்கள் கார்கள் எத்தினை தெரிஞ்ச மணிசர்கள் போகினம். அத்தினை பேரிலும் சரி அரைவாசியாவது நம்மளைப் பற்றி என்ன நினைக்கும் தெரியுந்தானே "அவள் கேட்டதைப் புரிந்துகொண்டு "ஆம்" என்று தலையை ஆட்டினான் கமலேஸ்வரன்.
“இப்படி எத்தினை எத்தினை இந்த உலகத்திலை இருக்கும். நீங்கள் ஒரு கலைஞர். எதையும் கலைக் கண்ணோடை பார்க்க வேண்டும். நான் இன்னுமொண்டு சொல்ல வேணும். ஆம்பிளை டாக்டர் ஒருத்தர் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் செய்தால் அது விரசமானதா? டாக்டர் இல்லாமலே பிரசவ வேதனையாலை அந்தப் பெண் சாகிறதிலும் அவள் ஒரு டாக்டருக்குமுன் தன் பிரசவத்தைச் செய்யிறது பாவம் இல்லை. களங்கமும் இல்லை. ஆபாசமும் இல்லை. அதைப் போலத்தான் உங்களுடைய வேலையும். கம்பனிக்காறங்கள் குளிக்கிற அறையில் அப்படியே படம் பிடிக்கச் சொன்னால் நீங்கள் செய்ய வேண்டியதுதான். அதுதான் தர்மம்"
“சித்திரா ! நீங்கள் வயதிலை மட்டுந்தான் இளையனிங்கள்". கமலேஸ்வரன் திணறியபடி கூறினான். கிணற்றுக்குள்ளிருந்து கத்துபவனின் குரல்போல், அது சித்திராவுக்குப் பட்டும் படாமலும் கேட்டாலும் அவனுள்ளே மிகப் பயங்கரமாக ஒலித்தது.
5
கமலேஸ்வரன் வீட்டுக்கு வந்ததும் நன்றாக இருட்டியிருந்தது. ரமணனும் ரஞ்சனியும் கண்கள் கலங்கிய வண்ணம் அவனை வரவேற்ற காட்சி அவனுக்கு என்னவோ போலிருந்தது. தன் கையில் அக்குழந்தைகளுக்காக வாங்கிக் ாெண்டு வந்திருந்த இனிப்புப் பொட்டலத்தை அவிழ்த்து ஆளுக்கொண்றாகக் கொடுத்தபடி "அம்மா வரயில்லையா ரமணன்?" என்று கேட்டான் கமலேஸ்வரன்.
இருட்டியும் அம்மா அப்பா வரவில்லையே என்ற ஏக்கத்தில் பரமேஸ்வரி எவ்வளவோ தேற்றியும் அழுகையை விடாது ரஞ்சனி முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி அழத் தொடங்கினாள். ரமணன் அம்மா இன்னும் வரவில்லை என்பதைக் காட்ட கண்களைப் புறங்கையால் கசக்கியபடி தலையை ஆட்டினான்.
“என்ன ! இன்னும் வரவில்லையா?” என்று யாரிடமும் பதிலை எதிர்பார்க்காமல் கேட்டபடி பக்கத்து வீட்டுக்குள் சென்றான் கமலேஸ்வரன்.
பரமேஸ்வரி கையில் திறப்புகளுடன் அவனை நோக்கிச் சிரித்தபடி வெளியே வந்தாள்.
“என்ன செல்வராணி இன்னும் வரவில்லை?” என்றபரமேஸ்வரியின் கேள்வியை சட்டை செய்யாதவன் போல், திறப்புக் கோர்வைக்காகக் கையை நீட்டினான் கமலேஸ்வரன். பரமேஸ்வரி திறப்புகளை அவனிடம் கொடுக்காமலே கூறினாள்: “இருட்டிப் போட்டுது, இன்னும் ஒபிசாலை ஆள் வரயில்லை. நீங்க போய் பாத்துட்டு வாங்கோ. நான் பிள்ளையளைத் தூங்க வைக்கிறன்"
கமலேஸ்வரனுக்கு அவள் கூறியது முள்போல தைத்தது. குணங்கெட்ட ஒருத்திக்குப் புருஷனாக இருப்பதுபோல அவனுடைய நெஞ்சு கணத்தது. பிள்ளைகள் தூங்குகிற நேரத்தையும் தாண்டித்தான் செல்வராணி வருவாள் என்பதைச் சுட்டிக் காட்டாமல் பரமேஸ்வரி கூறுகிறாள் என்றும் அவன் நினைத்துப் பொருமினான்.
20

"என்ன நான் கேக்கிறன்.” குழந்தையைப் போல இரந்தாள் அவள். “நான் எங்கை தேட? அவள் வருகிற நேரம் வரட்டும்” என்றபடி திறப்புக் கோர்வையை வாங்கிக் கொண்டு திரும்பிய அவன் “நீங்களும் ஒரு ஆள்தான் ” என்று பரமேஸ்வரி கூறியதைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றான்.
பின்னர் தன்னைச் சமாளித்தபடி தனது வீட்டுக்கு வந்து கதவுகளைத் திறந்தான். ரமணனும் ரஞ்சனியும் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஓடி வந்தார்கள். ரஞ்சனி அந்த இரு அறைகளையும் தனது நீலக்கண்களால் சல்லடையிட்டுத் தேடினாள். அம்மாவைக் காணவில்லை என்பது நிதர்சனமாகியதும் மறுபடியும் அவளுடைய முகம் கருகியது.
அடிக்கடிகார்கள் வந்துபோகாத அவர்கள் வீட்டு ஒழுங்கையில் ஒரு கார்ச்சத்தம் கேட்டதும் ரமணன் வெளியே எழுந்து ஓடிவந்தான். கண்களைக் கூசச் செய்யும் ஒரு புதுக்கார் அவர்கள் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டதும் ரமணன் காரடிக்கு ஓடினான். கால்களில் படிந்திருந்த தூசியையும் மேற்சட்டையின்றிக் காற்சட்டை மட்டுமே அணிந்திருந்த கோலமும் ரமணனை அவனது உண்மையான தோற்றத்தைக் காட்டாமல் இருக்கச் செய்தன.
பளபளக்கும் அந்தக் காரின் முன் சீட்டில் இருந்து சிரித்து, “குட்நைட். தாங் யூ வெரிமச்.” என்றெல்லாம் கூறியபடி இறங்கி வந்த செல்வராணியைக் கண்டதும் "அம்மா !” என்று அழைத்தபடி ஓடினான் அவன்.
"சீ கெற் பக்” என்று அவள் கூறியதை விளங்க முடியாமல் அவளைத் தாவிப் பிடித்தான் ரமணன்.
காரைத் திருப்பி வந்து மறுபடியும் வீட்டுக்கு எதிரே நின்ற ராய், “கூ இஸ் தற் போய்?" என்று கேட்டார்.
“இங்கே உள்ள ஒரு பையன்” என்று அவள் கூறியதும், “ஐ சீ ! உங்கள் மீது இவ்வளவு அன்பாக இருக்கிறனே ” என்று வியந்த ராய், “குட்நைட் டு யூ” என்றபடி மறைந்தார்.
“டேய் ரமணன்! ஏன் சேட் போடவில்லை உன்னுடைய சிலிப்பர்ஸ் எங்கை? என்றபடி அவனுடைய முதுகில் படீரென்று அறைந்தாள் செல்வராணி
பகல், ராய் தனது குடும்பம் பற்றிக் கேட்ட பொழுது தனக்குப்பிள்ளைகள் இல்லை என்று செல்வராணி கூறியிருந்த உண்மையை ரமணன் 'அம்மா’ என்று வாஞ்சையுடன் அழைத்துப் பொய்யாக்கப் பார்த்தானே என்ற ஆத்திரம் அவளைக் குடைந்து கொண்டிருந்தது.
அவள் கணேசமணியின் சற்று விசாலமான வீட்டையே தனது வீடு என்றும் வேறு சொல்லியிருக்கிறாள். ஒழுங்கை முகப்பிலேயே தான் இறங்குவதாகச் செல்வராணி கூறியிருந்தும், “வாட்இஸ் தெயார்? ஐ வில் டிறொப் யூ அட் யுவர் பிளேஸ்” என்று அவளின் வீட்டிலேயே இறக்கி விடுவதாகக் கூறியபடி வந்து விட்டார் ராய்,
ரமணன் வீரிட்டு அலறியபடி "அப்பா" என்றும் அழைத்தான். அவனின் அழுகையொலியைக் கேட்ட தவிப்பில் வெளியில் வந்த கமலேஸ்வரன் அந்த முற்றத்தை நோக்கிச் செல்வராணி வருவதைக் கண்டதும், தன்னைச் சமாளித்துக் கொண்டு, “என்ன ரமணன்?” என்று பரிவோடு கேட்டான்.
அப்பா. அம்மா அடிச்சாப்பா " என்றபடி அவன் விக்கி விக்கி அழுதான். ரஞ்சனி செல்வராணியைக் கண்டதும் தத்திதத்திஓடிவந்தாள். அவளுக்குப்பரமசந்தோஷமாகஇருந்தது.
99
2

Page 21
கமலேஸ்வரன் ரமணனை அழைத்துத் தடவிக் கொடுத்தபடி செல்வராணியைக் கொன்று விடுவது போலப் பார்த்தான். வாசவை நெருங்கி நின்ற அவன், அழுது வடிந்த ரமணன், ஆவலோடு வந்து நின்ற ரஞ்சனி இவர்களில் யாரையுமே கவனிக்காதவள்போல உள்ளே சென்று மறைந்தாள் செல்வராணி.
வாசல் அண்டையை அவள் கடந்து சென்றதும் அவளிலிருந்து வீசிய கோயா வாசம் அப்பொழுது தான் மேக்கப் முடிந்து அவள் வெளிவருகிறாள் என்பதைக் காட்டுவது போல் எங்கும் பரந்து வீசியது.
கைப் பையைக் கட்டிலில் தடால் என்று வீசியபடி அவள் தலையணைகளை வாரி இழுத்து அவற்றின்மீது குப்புற விழுந்து, கால்களைப் பின்னியபடி அங்குமிங்கும் உருண்டாள். கட்டில் அவளுடைய அந்த எதிர்பாராத தாக்குதலைச் சமாளிக்க முடியாதது போலவும். பூனையாற் கவ்வப்பட்ட எலியைப் போலவும் கீச்சுகீச்சு என்று அவல ஒலிஎழுப்பியது.
“ஐ கோகோ மாட். இட் இஸ் பிக்கோஸ் ஒப் யூ லாட்" வாயில் வந்தபடி எதை எதையோ புலம்பிக் கொண்டிருந்தாள் அவள். அவளது மொழியில் உன்னால் நான் பைத்தியமாகவே போகிறேன்! போகிறேன் என்று அர்த்தங் கண்டான் கமலேஸ்வரன்.
அவனுடைய பொறுமையை அவள் மீண்டும் மீண்டும் சோதிப்பது போன்றிருந்தது அந்தக் காட்சி
“செல்வராணி " கமலேஸ்வரன் அபயக் குரலில் ஒர் ஆணின் மிடுக்கோடு கத்தினான். கமலேஸ்வரனின் கையைப் பிடித்து நின்ற ரமணன் மேலும் இறுகப் பற்றியபடி பேந்தப் பேந்த விழித்தான். ரஞ்சனி எதிர்பாராத அந்தப் பேரொலியைக் கேட்கத் திராணியற்றவளாகி முன்னறையில் உள்ள அந்த மேசை விளிம்புள் முகம் புதைத்தாள்.
கமலேஸ்வரன் கத்தியதைக் கேட்டதும் ஒர் பக்கமாக மெல்ல மெல்லச் சரிந்து நடந்து வந்த பரமேஸ்வரி, பக்கத்து வீட்டுச் சங்கதியை எண்ணி வாயுட் கைபுதைத்துச் சிரித்தாள்.
அவள் தன்னைக் கட்டுப்படுத்தியும் அடக்க முடியாது போன அந்தச் சிரிப்பு "கிளுக்” என்ற ஏளன ஒலி கமலேஸ்வரனுடைய செவிப்பறைகளில் ஓங்கி அறைந்தாற்போற் கேட்டது.
அவன் கணேசமணியின் வீட்டுப் பக்கமாக ஒருமுறை வெடுக்கென்று பார்த்துவிட்டுச் செல்வராணியையும் குழந்தைகளையும், செல்வராணியையும் வெளியேயும் கண்களை அலைத்துப் பார்த்தான்.
“என்ன பைத்தியம் மாதிரி உன் பாட்டிலை சிரிக்கிறாய்?" பக்கத்து வீட்டு விறாந்தையில் மரக்கறிக்கூடையை இறக்கி வைத்து விட்டுக் கணேசமணி கேட்டான்.
கமலேஸ்வரன் வீட்டுப்பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டி, ஒரு கையால் மறுபடியும் தன் வாயைப் பொத்தியபடி, மெதுவாகச் சொன்னாள் பரமேஸ்வரி.
“எனக்குப் பைத்தியமில்லை. அங்காலைதான் அது கொஞ்சநாளா விட்டுட்டு, இண்டைக்குப் பேந்து ஆரம்பிச்சிட்டுது"
“என்ன சொல்கிறாய் நீ?"கட்புருவங்களைச் சுருக்கி, கண்களை மேலிறைக்குப் புகுத்திக் கேட்டான் கணேசமணி.
“உள்ளுக்கு வாருங்கள் சொல்லுகிறேன்" என்றபடி அவனுடைய முழங்கையை ஒருகையால் பற்றி இழுத்து மரக்கறிக் கூடையையும் தூக்கிக் கொண்டு அவள் உள்ளறைக்குச் சென்று குசினிவரை நடந்தாள்.
22

மீண்டும் பயங்கரமான சிரிப்பொலி கமலேஸ்வரன் காதுகளை அறுத்து எடுத்தது. “செல்வராணி" கமலேஸ்வரன் அழைத்தபடி, ரமணனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான்.
செல்வராணி மூடிய கண்கள் திறக்காமல் தன் அதரங்களைக் குவித்து “ஊம்” ான்று ஒலியெழுப்பினாள். அவள் ஏதோ மயக்கத்தில் இனம் புரியாத களிப்பில் மிதந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
கமலேஸ்வரன் அவளை உசுப்பி, கைகளைப் பற்றித் தூக்கி நிறுத்த முனைந்த பொழுது திறந்த கதவுகள். கண்களைக் கூச வைக்கும் மின் விளக்குகள். அந்தச் சின்னஞ் சிறு உயிர்கள். எல்லாவற்றையுமே மறந்தவளாய் அவள் கமலேஸ்வரனைத் தாவி இழுத்துக் கட்டிலில் விழுத்தியபடி அவன் மீது குழந்தைகளை முத்தமிடுவதுபோல் தடையற்ற முத்தமாரி பெய்தாள்.
“செல்வராணி" கமலேஸ்வரனின் கண்கள் செவ்வானமாகின. இடையிடையே வெண்முகில்கள் போலவிருந்த கருணையும் காதலும் செம்மையில் மூழ்கடிக்கப்படுகின்ற ஓர் அற்ப தறுவாய் மட்டுமே இருந்தது.
அவன் அவளை வெறித்துப் பார்த்தான். கருமையான அவனுடைய முகம் மேலும் கருமையில் வெந்து கொண்டிருந்தது. அகன்று திறந்திருந்த நெற்றியில் துளிர்த்த வியர்வைகள், அந்த இடமும் போதாதென்று அவன் உடல் எல்லாம் இடந் தேடிக் கொண்டிருந்தன. நாசித் துவாரங்கள் அடிக்கடி அகலப் பிய்ந்து கொண்டன.
"உனக்கென்ன பைத்தியமா?" வெறுப்போடு அவளைப் பார்த்தபடி கேட்டான் கமலேஸ்வரன்.
Φεπιώ செல்வராணி மறுபடியும் கண்களை மூடி உதடுகளைக் குவித்தபடி அவனது முகத்துள் தன்னுடைய முகத்தைப் புதைத்தெடுப்பவள்போல மேலும் மேலும் முன் புறமாகச் சாய்ந்து வந்தாள்.
அவளுடைய அந்த முகத்தை ஆக்ரோஷத்துடன் எற்றி விட்ட கமலேஸ்வரன் கட்டிலில் இருந்து எழுந்து, வெளியே வந்து பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டான்.
அடுத்த அறைக்குள். "யூ ஆர் ரூ ஹார்ட். ஸோ றவ், "செல்வராணி அவன் கடுமையானவன் சொர சொரப்பானவன் என்று பிதற்றிக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது அவனுக்கு.
“கொஞ்சநாள் நிம்மதியாக இருந்தாள். பேந்து என்ன வியாதியோ? ஆரம்பிச்சிட்டாள். அதே பைத்தியம்"
கமலேஸ்வரன் தனக்குள் முனகிக் கொண்டான். அவன் கண்கள் செம்மையின் எரிவைத்தாங்கிக் கொள்ளாமல் கண்ணிரால் குளிர் பெற்றுக் கொண்டிருந்தன. அவனுடைய பற்கள் ஒன்றையொன்று நெருட அவன் வெதும்பிக் கொண்டிருந்தான்.
செல்வராணி கட்டிலில் மறுபடியும் விழுந்து புரண்டாள். உடலில் ஏற்பட்ட வெம்மையால் பிறப்பிக்கப்பட்டிருந்த வியர்வைத் துளிகள் பெனியன் போன்ற தோள்பட்டை வரையுமே மறைத்த அவளுடைய சட்டையையும் நனைக்கத் தொடங்கின.
அவள் தனது சேலையின் முந்தானையை எடுத்துச் சதுரமாக மடித்தபடி தனக்குக் குளிர்மையை ஏற்படுத்த வீசத் தொடங்கினாள்.
23

Page 22
ரஞ்சி ! ரஞ்சி'
எதனையோ நினைத்துக் கொண்டு ரஞ்சனியை அழைத்தாள் செல்வராணி.
முன்னறைக்குள் இன்னும் நின்று கொண்டிருந்த ரஞ்சனி தன் சின்ன உடலை அங்கு மிங்கும் ஆட்டி, தலையையும் மாட்டேன் என்று அசைத்து விட்டுப் பேசாது நின்றாள். பின்பு திடீரென்று ஒடிச் சென்று கமலேஸ்வரனின் மடிக்குள் முகத்தைச் சாய்த்து மெளனியாகக் கிடந்தாள்.
"நீவரமாட்டே. என்னட்டை ஒருத்தரும் வரமாட்டீங்க. உங்க அப்பா. நீங்க. எல்லோருமே என்னை விட்டுப் போயிட்டீங்க. நல்லாப் போங்க. நல்லாப் போங்க, இட் இஸ் குட். ஹஹ்ஹா !”
செல்வராணி தனியே கிடந்து அரற்றிக் கொண்டிருந்தாள்.
குழந்தைகளுக்கு இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என்ற உந்தலில் அவர்களையும் அழைத்துக்கொண்டுகாலிவீதியை நோக்கி நடந்தான் கமலேஸ்வரன்.
6
கணேசமணி உடுப்புகளைக் களைந்து கொழுக்கியில் மாட்டிவிட்டு மனைவி சொல்லப் போகும் கதையின் ஆர்வத்தில் குசினிக்குள்ளேயே வந்து அமர்ந்து கொண்டான். நாற்புறமும் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு ஒரேயொரு ஜன்னல் மட்டும் உள்ள அந்தச் சமையற்கூடம் இரகசியமான கதைகளை அந்தத் தம்பதிகள் கதைப்பதற்கு மிகவும் செளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
பரமேஸ்வரி இரவுச் சாப்பட்டுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து, அவற்றை நின்று சுடர் விட்டு எரியும் மண்ணெண்ணெய் அடுப்பில் ஏற்றினாள். கணேசமணியைப் பார்த்து மெல்லிதாக எழுந்த தனது புன்னகையை முழுதாக அவனிடமே சமர்ப்பித்தபடி அவனருகில் வந்து பின்னர் ஜன்னலால் வெளியே ஒருமுறை எட்டிப் பார்த்தாள்.
இயல்பாகவே குசலமான வீச்சு எறியும் அவளுடைய கண்கள் இடையிடையே மின்ஒளியின் பிடியிலிருந்து விடுபட்டுத் தென்பட்ட இருள் படைகளிலும் எதையோ தேடின, தாங்கள் இருவரும் பேசப்போகும் அந்தப் பொல்லாத இரகசியத்தைக் கேட்டு மூன்றாம் ஆள் இல்லையென்ற தெம்பில் முன் புறமாக வந்து கமலேஸ்வரனின் வீட்டையும் ஒரு தடவை நோட்டம் விட்டாள்.
மயான அமைதியாக, முன் அறையில் துளியும் ஒளியின்றிக் காணப்பட்ட அந்த வீட்டின் பின்புற அறையில் சீற்று வெளிச்சந் தெரிந்தது, குழந்தைகளின் அரவமோ, கமலேஸ்வரன் செய்வான் என்று அவள் எதிர்பார்த்த கர்ஜனையோ அங்கு கேட்காததால், தன்னுள் எழுந்த வியப்பில் மூழ்கியபடி கணேசமணியின் அருகே சென்று அமர்ந்தாள்.
காய்கறி அரிவதற்காகப் பரமேஸ்வரி பயன்படுத்தும் அந்தத் தட்டுப் பலகையில் கணேசமணி சுவரோடு சாய்ந்து அவளையே பார்த்தபடி இருந்தான். பரமேஸ்வரி மறுபடியும் கிளுக்கென்று சிரித்துவிட்டு, அவனுடைய கால்களுள் தனது கையைப் புதைத்து அவனை அலாக்காக ஒருமுறை எற்றினாள். “சொல்லன் பரமேஸ் ” பரமேஸ்வரிதான் அறிந்துவைத்திருக்கும் அந்தப் பெரிய இரகசியத்தைச் சூட்டோடு சூடாகச் சொல்லாமல் இழுத்தடிக்கிறாளே என்பது அவனுக்கு அப்பொழுது ஏற்பட்ட கவலை.
24

அவள் கேட்டாள் "செல்வராணி ஆரு எண்டு உங்களுக்கு தெரியுமா?" "எனக்கு எப்படித் தெரியும்? இஞ்சை வந்து இரண்டு மாதம்தானே ஆகுது, அவையின்ற அம்மா கோவிச்சுண்டு போனதோடை பிள்ளையளை இஞ்சை விடுகினம். மற்றபடி அவள் உன்னோடை படிச்சவள் எண்டு நீ சொன்னாய். அவ்வளவுதான் தெரியும்” நன்றான் கணேசமணி.
'அவ்வளவு தானா? அவள் என்னோடை படிக்கவில்லை, நான் படிச்ச கொலிஜ்ஜிலைதான் படிச்சவள். எனக்கு இரண்டு வருஷம்யூனியர்”என்று முடிக்கு முன்னே ாமேஸ்வரியின் முகத்தில் தன்னை அறியாத கம்பீரம் எழுந்து மறைந்தது. செல்வராணிக்கு முன்னரே தான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டதான அந்தப் பெருமிதம் தோன்றிய சிறிது நேரத்தில் அவளைப் போல கட கடவென்று ஆங்கிலம் பேசவும் கொழும்புக்கு ஏற்றாற்போல் படுக்கவும் முடியாமல் போய் விட்டதே என்பது போன்ற ஏக்கமும் வந்து குடிகொண்டது.
"இண்டைக்கு அவன் காரிலை கொண்டு வந்து விட்டுட்டுப் போனான். இவ ாண்டாலோ அப்பப்பா பெத்த பிள்ளையையே தன்னுடையதில்லை எண்டு சொல்லி, மணனுக்கு அடிச்சும் போட்டா. இவ்வளவு திமிர் இருக்கிறவவுக்கு ஒரு வேலைக்காரியை வைச்சிருக்க வக்கில்லை "
“சரி சரி விஷயத்துக்கு வா." “பேந்தென்ன. அவன்தான். என்னவோ பேர் எல்லே,’பரமேஸ்வரிசொல்லிவிட்டு நிறுத்தினாள். அவன் என்று அவள் குறிப்பிட்டது ராயைத்தான் என்று உணர்ந்து கொண்ட கணேசமணி “சரியப்பா ! அவன்தான் ராய். கம்பெனி முதலாளி” என்றபடி தனது கதை ஆவலை மேலும் வெளிப்படுத்தினான்.
“அந்தப் புண்ணியவாளன் யப்பானுக்கோ எங்கேயோ போயிட்டு இண்டைக்கு நேத்து வந்திருக்கிறான். அம்மா பழையபடி துவங்கியிட்டா.”
“என்ன பழையபடி.” "நாமள் இஞ்சை வரையுக்கு முன்னை எனக்கு போஸ்ட் மாஸ்டர் பொஞ்சாதி பரிமளம் சொன்னவ, இதுவும் அவனும் சிநேகிதம் எண்டு. முந்தியெல்லாம் அவனோடைதான் கத்தித் திரியிறவ! இப்ப கொஞ்ச நாளா இல்லாமல் இருந்தது பேந்து ஆரம்பிச்சிட்டா. நான் கேக்கிறேன். அதென்ன கல்யாணம் முடிச்ச பெம்பிளை இன்னொருத்தனுடைய காரிலை பவனி வாறது"
"இதெல்லாம் இஞ்சை வேண்டாம். இதைப் போய் யாழ்ப்பாணத்திலை பேசுவம் கொழும்பு எண்டால் நாலு சாதியும் இருக்கிற இடம். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி இஞ்சை ஸோஷல் எண்டு சொல்லுவினம். பெம்பிளையும் ஆம்பிளையும் கட்டிப் பிடிச்சண்டு போல்றும் டான்ஸ் ஆடுவினம். இன்னுமின்னும் எத்தனையோ விஷயங்கள். இதுகளைக் கணக்கு எடுக்க ஏலாது”
கணேசமணி சொன்னதை ஏற்காதவள் போல, “அப்பிடியெண்டால் இந்தா பாருங்கள்! நீங்களும் பெரிய உத்தியோகத்திலை இருக்கிறியள். அறுநூறு ரூபாவுக்கு மேலே சம்பளம். நீங்கள் ஏன் இதுகள் செய்யிறதில்லை?” என்று கேட்டாள்.
பரமேஸ்வரி தன்னையே கேள்விகளால் அமர்த்துவதாக உணர்ந்த கணேசமணி சமாளித்தபடி சொன்னான்.
“என்னுடைய விஷயம் வேறை. இந்தா கமலேஸ்வரனும் இருக்கிறான் தானே. ஏதாவது பார்டியா? கூட்டமா? ஒண்டும் இல்லை"
25

Page 23
"அவருடைய கதையை விடுங்கள். அவர் தனக்குள்ளேயே ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு வாழுறார். அவருக்கு மனிசிமேலை கிஞ்சித்தும் கண்டிப்பு இல்லை. அப்பிடியெண்டால் அவ ஒடத்தானே வேணும். கமலேஸ்வரனுக்காக நான் நல்லா வருத்தப்படுகிறன். அது பாவம் மனிசியினுடைய நடப்பை கலியாணம் முடிக்க முந்தியேனும் தெரிஞ்சிருக்க வேணும். அப்பிடித்தெரிந்து முடிச்சிருந்தாலும் அதுக்கு ஏற்றமாதிரி பிறகு பிறகு நடந்து கொள்ள வேணும். இதென்னடா எண்டால் சும்மா கண்ணை மூடிக் கொண்டெல்லே இருக்குது."
தான் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தைப் புரிந்து கொள்ளாதவள் போலக் கூறினாள் பரமேஸ்வரி.
ஒரு மணமான பெண் தன் புருஷனைத் தவிர வேறொருவனுக்காகப் பரிந்து பேசுவதையோ, அனுதாபமாக நடந்து கொள்வதையோ தவறாக, கற்பு என்பதன் பொறுப்புக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகக் கருதும் உலகம் அவளுடையது என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், தான் தன் கணவனிடமே கூறுகின்றேன் என்ற உணர்வில் அவள் கூறினாலும், கணேசமணி முகம் சுண்ட அவளை வெறித்துப் பார்த்தான்.
கமலேஸ்வரனுக்காக அவள் பரிவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதைப் பார்வையளவில் தெரிந்து கொண்டு சொன்னாள்.
“செல்வராணி எஸ். எஸ். ஸி. படிக்கையிக்கை காரிலைதான் வந்து போவா. தகப்பன் ஒருடிச்சர் எண்டதாலை கொஞ்சப்பிள்ளையன் சேர்ந்து கார்பிடிச்சுப்பள்ளிக்கூடம் வருவினம். நானும் தான் வானிலை போறனான். எச். எல். சி. வரைக்கும் வந்ததும் நான் படிப்பை நிறுத்தியிட்டன். வாசிற்றிக்கும் எடுபடயில்லை. அவ தொடர்ந்து படிச்சா..?
பரமேஸ்வரி அவனை ஒருமுறை தனது இரு விழிகளாலும் வலம் வந்த படியும், தலையை எதற்கோ காரணமில்லாமல் ஆட்டியபடியும் நிறுத்தினாள். அவள் சொல்லக்கூடிய அந்த இரகசியம் கணேசமணியின் ஆவலுக்கு மேலும் மேலும் இரையிட்டுக் கொண்டிருந்தது.
“பிறகு பிறகு”
பிறகென்ன செல்வராணியினுடைய முதற் காதலனாக அவவை ஏத்தித் திரிஞ்ச டிரைவரே வந்தான். அவன் வேறை தொழில் செய்யிறவன். அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது எண்டு கார் வைச்சு ஓடினவனாம். வடிவானவன் எண்டும் கேள்வி. இவ மயங்கித் திரிஞ்ச உடனை பிரின்சிபல் பச்சை சேர்டிபிக்கட் குடுக்கப் பார்த்தா. தகப்பன் சோமலிங்க டீச்சர் ஒரு மாதிரி சமாளிச்சு வேறை பள்ளிக்கூடத்திலை சேர்த்தார். இப்பிடி ஒரு பெம்பிளை தன்னுடைய வாயாலை சொல்லக் கூடாத கதையள் கணக்க .
இப்ப என்னடா எண்டால். உக்ம் நான் அந்தப் பிள்ளைகளுக்காகப் பாக்கிறன். நம்மஞக்குமோ இவ்வளவு வருஷமாச்சு. ஒரு பிள்ளையும் இல்லை. கடவுளும் என்னை நல்லா வருத்துறான். ரமணனும் ரஞ்சினியும்தான் ஆறுதல் எண்டு இருக்கிறன். இப்பிடித் தங்கக் கட்டிகளைப் போல பிள்ளையஞக்கு பிள்ளை வேண்டாம் எண்ணுறதுகளுக்கு."
பரமேஸ்வரி எதனையோ சொல்ல முனைந்து அதனைச் சொல்ல முடியாது போன தவிப்பில், அடுப்பில் பொங்கியதையும் கண்டு விட்டு, சடாரென்று எழுந்து போனாள்.
கணேசமணி உதட்டுக்குள் மெல்லச் சிரித்தபடி அமர்ந்திருந்தான். அவன் வேலை பார்க்கும் கந்தோரில் இந்தக் கதை போன்று ஆயிரம் கதைகள் காதாரக் கேட்டிருக்கிறான். யாரோ ஒருத்தியை விரும்பியவன் அவள் கிடைக்காமல் வேறு ஒருவனுக்கு மனைவியாகிய பொழுது கட்டிவிட்ட கதைகள் அவற்றில் எத்துணை உண்மை இருக்கும்
26

என்று அறியாது பெண்களே பெற்றெடுத்த அந்த ஆடவர்கள் விழுந்து விழுந்து கேட்டு, தம்மைச் சேர்ந்தவர்களுக்கும் பரப்பிய சாதனை. இப்படி எத்தனையோ, எத்தனையோ . இப்படியான வெட்டிக் கதைகளால் வாழ்வையே இழந்து தவிக்கும் தம் குல, தம்மொழிப் பெண்களைப் பற்றி அவர்களுள் யாருமே யோசித்ததில்லை.
அத்தகைய அபலைகள் சிந்திய கண்ணிர்த் துளிகள் வெள்ளங்களாகி, காட்டாறுகளாகி ஒரு நாள் அவர்களையும், அவர்களது குல கெளரவத்தையும் அள்ளியெடுத்துக் கடலில் சேர்க்கும் என்ற மனச்சாட்சியும் உறுத்தியதில்லை.
பெண் என்பவள் சாதாரண போகப் பொருள் என்ற நினைவு ஒரு சமூகத்தில் என்றுவரை நிலைக்கின்றதோ, அன்றுவரை அவர்கள் வாழ்வது சுமூகமாகவே இருக்க மாட்டாது.
எத்தனை உபதேசங்கள் சில நல்லவர்களிடம் இருந்து இப்படி வெளியான போதும் அவற்றைப் பொருட்படுத்த யாரும் இருக்கவில்லை.
அதுவும் கணேசமணிக்குத் தெரியும். ஆனாலும் என்ன செய்வது? கணேசமணிக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து வெளி முற்றத்துக்கு வந்தான்.
ஒ எவ்வளவு அற்புதமான நிலவு அப்பொழுதுதான் எழுந்து வந்து கொண்டிருந்த நிலவில் மனதைப் பறிகொடுத்தபடி நின்று கொண்டிருந்தான் கணேசமணி.
நிலவுக்குக்கூடக் களங்கம் உண்டல்லவா? அவன் தன்னையே கேட்டுப்பார்த்தான். வட்ட வடிவான அந்த ஒளிக்கோளத்தின் நடுவே பொட்டுப்பொட்டாகத் தெரிந்து, மனதில் எழும் உருவத்தை அப்படியே படம் பிடிக்கும் அதற்குப் பெயர் முயலா? ஒளவையாரா? களங்கமா?
மனிதன் இப்பொழுதுநிலவையும் பிடிக்கப்போகிறான் மனிதனின் கால்கள் பட்டு இந்த மண்ணுக்கு ஏற்பட்ட களங்கம் போதாதா? அவனின் கண்பட்டு அந்த நிலவுக்குக் கற்பிக்கப்பட்ட களங்கம் போதாதா? அவன் அந்த நிலவிலேயே குடியிருக்க எண்ணுகிறானே. பூமிக்கு நேர்ந்த துர்ப்பாக்கியம் அந்த நிலவுக்கும் ஏற்படத்தான் வேண்டுமா?
கணேசமணி கலையில் சற்று ஈடுபாடு கொண்ட புள்ளிவிபர அதிகாரியாக இருந்தான். அதனால் அவனது உயர் கல்விக்கும் கலை இரசனைக்கும் ஏற்றவாறு சிந்தனைகள் விரிந்து நெகிழ்ந்து கொண்டிருந்தன.
மனிதனின் வாய் எவ்வளவு களங்கமானது 1 மற்றவர்களைப் பற்றிய கதைகள் கேட்கின்றவிடத்துகளங்கமானவற்றையே பேசவேண்டும்என்பது இயற்கை விதிக்காதஒருநியதி ஒஎவ்வளவு அற்புதமான நிலவு செல்வராணியும் எவ்வளவு புதுமையான பெண்? அவன் மனம் வியப்புக் கடலில் விழுந்தடித்தது. செல்வராணியின் நடை உடைகளைப் பொறுத்த வரையில் அவனுக்குத் தன்னூர் எண்ணமே இருந்த பொழுதும், அநாவசியமாக அவள் நாகரீகம் என்ற போர்வையில் எதனையுமே செய்யவில்லையே என்ற ஞானமும் இருந்தது. நாகரீக உலகத்துக்கு ஏற்றாற் போலப் பேசுவதும் வாழ்வதும் குற்றம் என்று எங்காவது சட்டத்தில் சொல்லியிருக்கா?
அவன் சிந்தனைகள் குழம்பின. சமையல் முடிந்ததும் வீட்டு முற்றத்தில் அதன் வெளிப்புறத் தூணுடன் தன்னுடலைப் பாரங்கொடுத்து, கைகட்டி மெளனியாகி நின்ற கணேசமணியின் அருகில் பரமேஸ்வரி வந்தாள்.

Page 24
கணேசமணியின் கண்கள் நிலவை வெறித்துக் கொண்டிருந்தன. பரமேஸ்வரி வந்ததையும் வந்து அருகில் நிற்பதையும் கவனியாத அவன் “சே எவ்வளவு கேடு கெட்ட உலகம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
“என்ன சொல்லுறியள்?’பரமேஸ்வரி திகைப்புடன் கேட்டாள். அப்பொழுதுதான் அந்த உலகை மறந்து உலகுக்கே மீண்ட சுகமான சிந்தனையில் மூழ்கியிருந்த கணேசமணி அதனின்றும் விடுபட்டவனாகி “என்ன கேட்டாய்?” என்று அவளைப் பார்த்தான்.
பரமேஸ்வரி எவ்வளவு புனிதமானவள். புனிதமானவை களங்கமானவற்றைப் பேசும்பொழுது புனிதமானவற்றின் புனிதம் கெட்டு விட மாட்டாதா?
வெள்ளைத் துணியினால் அழுக்கைத் துடைத்தால் அந்தப் பொல்லாத அழுக்கு அந்தத் துணியில் ஒட்டிக் கொள்ளாதா?
கணேசமணி எத்தனையோ தீர்க்கமாக நினைத்தபடி சொன்னான். பரமேஸ், ஒண்டு சொல்லுறன் ஆத்திரப்படக் கூடாது. செல்வராணியைப் பற்றி இப்படி இனிக் கதைக்கக் கூடாது. நான் கந்தோரிலை மட்டும் இப்படியான வம்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். நீ அவளைப் பற்றிச் சொல்லாதை. எனக்கு என்னமோ போலை இருக்குது”
"நான் சொல்லக் கூடாது எண்ணுறியள் நானும் என்ன அவளைப் போல. பரமேஸ்வரியை ஆத்திரப்படக் கூடாது என்று அவன் கேட்டிருந்தும் அவள் ஆத்திரமாகவே அவனைக் கேட்டது அவனை உலுக்கியது.
“அவளைப் போல அல்ல பரமேஸ் உலகத்திலை ஆரெண்டாலும் மற்றவையைப்போல இருந்ததில்லை. இருக்கிறதுமில்லை. சும்மா பேச்சுக்கு மட்டும் அவரைப் போல இவரைப் போல எண்டு சொல்லலாம். யேசுபிரானும் மனிதராக வந்தவர்தானே, புத்தர்பிரானும் அப்படித்தானே. ஏன் மகாத்மாகாந்தி என்னவாம் ஒரு யேசு, ஒரு புத்தர், ஒரு காந்தி பிறக்கலாம். ஆனால் எல்லோரும் யேசுவாகவும் புத்தராகவும் காந்தியாகவும் மாற முடியுமா? அல்லது பிறக்கத்தான் முடியுமா?”
தன் கேள்விகளால் பரமேஸ்வரியைச் சூழ்ந்து கொண்டு அவளையே கண்களுக்குள் இறுக, இறுக, மிக மிக நெருக்கமாக இழுத்தபடி தொடர்ந்து கூறினான் கணேசமணி.
"நீ கேள்விப்பட்டிருப்பாய் எண்டு நினைக்கிறன். ஒரு சாம்ராஜ்யத்தையே ஒரு பெம்பிளை கவிழ்த்திருக்கிறாள். கட்டியும் எழுப்பியிருக்கிறாள். அதுக்காக எல்லாப் பொம்பிளையஞம் கிளியோபாட்ராவாக முடியுமா? ஒருத்தி குணம் கெட்டுவிட்டாள் எண்டால் மற்றொருத்தி உயர்ந்து விட்டாள் எண்டு எதைக்கொண்டு சொல்லுறது. நாமள் வாழுற வாழ்க்கை மிகப் புனிதமானது. அதிலை இப்பிடிப்பட்ட ஊருக் கதையள் அதுகும் மூண்டாந் தரமான விமர்சனங்கள் எனக்கு வேண்டாம்"
பரமேஸ்வரி குற்ற உணர்வில் அவனைப் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்தாள். அவளை மெல்ல அணைத்து தன்னுடனும் தூணுடனும் சேர்த்தபடி கணேசமணி சொன்னான்.
“பெண்களைப் பற்றிப்பெண்களே அவதூறாகக் கதைக்கக் கூடாது. அது பாவம், நீ பாவத்தைச் சம்பாதிக்கக் கூடாது எண்டதுக்காகத்தான் நான் இதைச் சொல்லுறன் என்றபடி அழுவதற்கே ஆயத்தமாக வீங்கி எழுந்த அவளுடைய முகத்தை ஒரு கையால் மெல்ல, மெல்ல வருடி விட்டான் கணேசமணி.

கணவனோடு தன்னை அர்ப்பணித்த நிலையில் வீட்டின் முன்பு நின்று நிலவின் மகிழ்வில் இறங்கத் தொடங்கி இருந்த பரமேஸ்வரி, வெளியே ஒழுங்கைப் பக்கமாகத் தொலைவில் கமலேஸ்வரன் ரஞ்சனியைத் தூக்கிக் கொண்டும்ரமணனைக் கையிற்பிடித்துக் கொண்டும் வருவதைக் கண்டதும் தன்னைக் கணவனிடமிருந்து பிரித்துக் கொண்டாள். அப்பொழுது அவள் அணிந்திருந்த சேலையின் முகதலைப்பு பிசங்கிய நிலையில் கீழே சாய, தன்னையும் அறியாத வெட்க உணர்வில் அவனைப்பார்த்து அடக்கமாகத் தன்னுட் சிரித்தபடி படாரென்று அள்ளி மேலே இட்டாள்.
அவளுடைய அந்தக் கோலத்தை ஆனந்தமாகத் துய்த்த கணேசமணி "வெட்கத்தைப் பாரேன்” என்றபடி சிரித்தான்.
அப்பொழுது, அவர்களுக்கு மேலே காய்ந்து கொண்டிருந்த அந்தக் குளிர் நிலவு உருகிக் கீழே அலமலக்காக விழுந்ததுபோல் பாதகனின் கைக்குள் எதிர்பாராத விதமாகச் சிக்கியதும் அபலை எழுப்பிய அவலக் குரல்போல் செல்வராணிபக்கத்துவிட்டிலிருந்து வீரிட்டு அலறினாள்.
அதைக் கேட்டதும் அம்மா' என்று அந்த வேதனை கலந்து வெடித்த குரலைக் கேட்டதும் பரமேஸ்வரி கல்லாகி நின்றாள். கணேசமணி செய்வதறியாது ஒடினான்.
கைகளில் இருந்தரஞ்சனியை அலாக்காகக் கீழே இறக்கிவிட்டு அப்பொழுதுதான் அங்கு வந்த கமலேஸ்வரன் படபடப்புடன் வீட்டுக்குள் ஓடினான். ரமணன் செல்வரானிக்காகக் கமலேஸ்வரன் வாங்கிக் கொடுத்திருந்த சோற்றுப் பொட்டலத்துடன் அழாக் குறையாக நின்றான். ரஞ்சனி'அம்மா’ என்று அழத் தொடங்கினாள்.
செல்வராணி புலம்பிக் கொண்டேயிருந்தாள். ஆ அவளுக்கு என்ன நடந்தது?
次次
29

Page 25
தணல் இரண்டு
சட்டமும் சமூகமும் ஒருத்திக்கு எதிராகத் திரும்பிவிட்டால் அவள் யாரிடம் போவாள்? ஆடுவதும் நானே ஆட்டுவிப்பதும் நானே என்று சொல்லும் ஆண்டவனிடமா? அந்த ஆண்டவனே நேரில் வந்து அந்தப் பெண்ணைப் படைத்தவன் நான் அவளை வளர்த்தவன் நான், அவளுடைய கற்பு பங்கப்படாதது என்று அடித்துக் கூறினாலும் எழுதியெழுதிக் குவித்தாலும் இந்தக் கதையை நம்புவதற்கு எந்தச் சமூகமும் தயாரா?
ஒவ்வொரு பெண்ணினுடைய வாழ்க்கையிலும் என்றோ எப்பொழுதோ நடந்துவிட்ட பயங்கரமான, அவளுக்கு மட்டுமே அல்லது அவளுடன் சம்பந்தப்பட்டுவிட்ட மற்றொரு உயிருக்கு மட்டுமே தெரிந்ததுமான சம்பவங்கள் தந்த அனுபவம் இருக்கத்தான் செய்யும்.
பெண் என்பவள் பிறந்து வளர்ந்து திரண்டு பருத்து அங்கங்களுடன், என்று வீதிக்கு வருகிறாளோ அன்று முதல் அவளை ஆயிரம் கண்கள் பார்க்கத்தான் செய்யும்.
ஆஅவள் அழகாகவும் இருந்துவிட்டாள் என்றால்? இப்படி ஒரு மகளை இறைவா நீ எனக்குத் தரவில்லையே கல்யாணச்சுமை இல்லாமலே நான் வாழ்ந்திருப்பேனே என்று தனக்கு அழகற்றுப்பிறந்த ஒரு மகளுக்கு வரன் தேடிக் களைத்துவிட்ட ஒரு தந்தைமணம் ஏங்கும்.
இப்படியொருத்தி எனக்கு மனைவியாகக் கிடைத்தால் என்றால் என் வாழ்க்கையோ சில்லென்று பூக்குமே யென்று ஒரு வாலிப உள்ளம் துள்ளும்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை என்றாலும் இவளோடு நான் வாழத்தான் வேண்டும். இப்படி ஒரு காமுகன் நெஞ்சம் கனவு காணும்.
செல்வராணி கல்லூரிக்கு அடியெடுத்து நடந்த பொழுது இப்படி ஆயிரமாயிரம் பார்வைகள்: ஆயிரமாயிரம் எண்ணங்கள்; கனவுகள் . ஆசைகள்.
எண்ணங்கள், ஆசைகள், கனவுகள் பலிப்பதில்லையா? பதினாறு வயதில் எஸ். எஸ். சி. சித்தியெய்திய அவள் ஊர்ப் பள்ளிக் கூடத்திலிருந்து பட்டணத்திலுள்ள கல்லூரிக்கு எச். எஸ். சி. படிக்கச் சென்றதும் முதலில் அவளுக்குத் தேவைப்பட்டது ஒரு போக்குவரத்துச் சாதனம். அது கார், அதற்கொரு சாரதி. முதலில் தன்னை ஏற்றித் திரியும் ஒரு நன்றிக்காக செல்வராணி சாரதி சந்திரனுடன் சிரித்தாள். அது அவளுக்கு ஒரு நிர்ப்பந்தமாகி கடமையாகி, ஈற்றில் உணர்வாகி, இப்படிப் படிமுறையாக வளர்ந்த ஒருநாள் - அன்று அவன் வழக்கம்போல் அவளுக்குச் செளகரியமாகக் காரின் முன்சீட்டை ஒதுக்கி அவளை மனைவிபோல் அமர்த்திக் காரைச் செலுத்திக் கொண்டிருக்கையில் பின்புறத்தில் ஆறு, ஏழு பள்ளி மாணவிகள் திமிறித் திணறி உட்கார்ந்துள்ளோம் என்ற பாவனையில் இருக்கையில், அவன் இடையிடையே வீசும் விழிகளில் ஏதேதோ பேசினான்.
செல்வராணிக்கு அவை ஒன்றும் விளங்கவில்லை ! துண்டுத்தாவணி மிகமிகத் தேவைப்பட்டதால் அதனை தான் அணிந்திருந்த பாவாடை சட்டைக்கு மேலால் போர்த்தி பின்புறமாக அழகாக இறுக இழுத்துவிட்டு கம்மென்று இருந்த கல்விப் பொழுதுகளில்.
30

ஆசிரியர்களும் அவளைப் பார்த்தார்களே. அவள் தனியே சில வேளைகளில் காணப்பட்டுவிட்டால் அங்கு கற்பித்த மணமாகாத ஆசிரியருள் சிலரும் அந்தச் சில வேளைகளில் பல தடவைகள் அவளைப் பார்த்துப் பார்த்து ஏதேதோ சொல்வார்களே -
அவையும் அவளுக்கு விளங்காத காலம் அது. இவர்கள் எல்லோரும் தாம் தாம் தன்னுடன் சம்பந்தப்பட்ட வரையில் தனக்கு ஏதோ உதவி செய்யும் அடிப்படையில் பிரதியுபகாரமாகத் தன்னிடமிருந்து எதனையோ எதிர்பார்ப்பது போன்று மட்டும் அவளுக்குத் தோன்றியது.
தன்னை மனுஷியாக்க வேண்டும் என்ற கங்கணத்தில் தன் உடலே இயங்கிக் கொண்டிருப்பது போன்ற பிரமையும் அவளுக்குள் ஏற்பட்டதுண்டு. தான் அப்படி மனுஷியாகுமுன் தன்னாலானளவு படித்து முடித்துவிட வேண்டுமென்று ஆவலும் துடிப்பும் மட்டுமே அவளிடம் நிறைந்தன.
அவளுடைய அந்த ஊரில் உள்ள நம்பிக்கையான கார்க்காரன் சந்திரன் என்பதால் செல்வராணி பல சந்தேகமான வெளியார் கேள்விகளுக்கு நல்ல பதில்களையே கொடுத்து வந்தாள். கொழும்பின் மயக்கத்தில் வாழும் அவளோடு சேர்ந்த பல மாணவிகள் இன்னும் எத்தனையோ விசயங்களைக் கச்சிதமாகச் செய்து முடிக்கிறார்கள் என்று அவள் கதை கதையாகக் கேட்ட பொழுது மட்டும் தன்னை கண்ணாடிமுன் நிறுத்தி சில விசாரணைகள் செய்து கொள்வாள்.
சந்திரன் ஒருநாள் தனது சிறுமியான ஒரு தங்கையையும் அழைத்துக் கொண்டு செல்வராணியையும் இரந்து அவள் கல்லூரியால் திரும்பும்பொழுது ஒரு சினிமாவுக்கு அழைத்துச் சென்றான்.
அவனுக்கு இருந்த எண்ணம், கனவு, ஆசை அவளைப் பக்கத்தில் இருத்தி ஒருநாள் ஒரு நேரம் படம் பார்க்க வேண்டும் என்பதுதான். அற்ப ஆசைகளுக்கிலக்காகிப் பின்னர் அவற்றுக்கே இரையாகிவிட்ட மனிதர்களுக்கு ஒன்றுமறியாதவர்கள் இரையாகுவதுமுண்டு.
இளம் கன்று பயமறியாதல்லவா? வழமையான காதல் காட்சியுடன் அந்தத் தமிழ்ச் சினிமா ஆரம்பமான பொழுது சந்திரன் தானே அந்தச் சினிமாவின் கதாநாயகனாக மாறிய நினைப்பில் அருகிலிருந்த அவளை நடிகை என்று ஸ்பரிசிக்கத் தொடங்கிய அந்தக் கடைத்தரமான முதல் முதல் உணர்ச்சி பெற்ற பொழுதில் அவள் சிலிர்த்து உசும்பி முறைத்து அமர்ந்து முடிவில் இருக்க முடியாமல் வெளியே எழுந்து சென்று விட்டாள்.
அன்று கல்லூரி நடைபெற்ற பொழுதும் அவன் ஒருநாள் லீவு கேட்டிருந்தால் அதனை வழங்கிய செல்வராணி உட்பட மற்றும் மாணவிகள் பஸ்ஸிலேயே போய் வந்தனர். செல்வராணி தனியே பஸ்ஸிற்காகக் காத்திருந்த பொழுது சந்திரன் காரை நிறுத்தி விட்டு அவளிடம் வந்து கேட்ட விதமும், கெஞ்சிய உணர்வும் அவளை அவனுடனும் அவன் தங்கையுடனும் சினிமாவுக்குச் செல்ல சம்மதிக்க வைத்தன!
மறுநாள் ஊரில் நடந்த சந்திப் பேச்சுக்கள் சோமலிங்க மாஸ்டர் ஒரு பெட்டையை வளர்க்கிற வளர்ப்பு அவளை ஒரு கீலராக்கப் போகிறது என்ற சாரத்தில் நிகழ்ந்தன.
அம்மன் கோவிலையும் அதன் வீதி மணலில் வளர்ந்திருக்கும் ஆலையும் சுற்றி செல்வராணியை மானசீகமாகக் காதலுணர்வும் அண்டும் மாணவர்களும், வாலிபர்களும், தண்ணீர்க் குடங்களில் நீரை நிறைத்து ஊரார் வீட்டுப் பெண்களின் கதைகளை அளந்து
3.

Page 26
தம்முள் தம் இரகசியங்கள் வெளிப்படாதவரை திருப்திப்படும் இளம் பெண்களும், இளவயதினரான குடும்பப் பெண்களும் சொன்ன கதைகள், ஞானச்சந்திரன், சந்திரமோகன் வரை எட்டி பின்னர் சோமலிங்கம், கல்லூரி அதிபர் என்போருடைய காதுகளிலும் நஞ்சாகப் புகுந்தன.
மூன்றாம் நாள், நடந்தது பற்றி ஒருவருக்கும் சொல்லாமல் சந்திரனுடைய காரின் பின் சீட்டிலிருந்து சற்றுமாறுபட்ட முகத்துடன் அவள் கல்லூரியால் வந்ததும், "நீ இனிப்படிக்க வேண்டாம்" என்று சோமலிங்கம் சொன்னதும், அவர் ஒருமுறை தான் சொல்வார். அப்படிச் சொல்வது சிந்தித்துத்தான் சொல்வார் என்று உணர்ந்த செல்வராணி கதிகலங்கிப் போனாள்.
ஆசையில் விழுந்த பேரிடி அது. பல்கலைக்கழகம் வரையிலேனும் எட்டிப் பார்க்காது விட்டாலும், கல்லூரிப் படிப்பையேனும் முடிக்க வேண்டும் என்ற செல்வராணியின் எண்ணத்தில், கனவில், ஆசையில் ஒரு முற்றுப்புள்ளி வந்து விழுந்தது.
அவள் தனியே கிடந்து அழுதாள். குமுறினாள். நெஞ்சுவலியெடுக்க நடந்தவற்றை நினைத்தாள்.
இப்பொழுது ஊரார் பேசிக் கொண்டனர். “நெருப்பில்லாமல் புகையாது. செல்வராணி போனதும் போனா, இந்தச் சந்திரனோடையா போக வேணும். இவங்கட காரிலை ஏறிப் போனாத்தானா படிப்பு வரும். இல்லை தெரியாமல் கேட்கிறன். இவங்களுக்கு எல்லாம் எப்ப வந்த கார்? தகப்பனைப் போல இவனும் தொழில் செய்தால் என்ன? சாதி, எந்தப் புத்தி, குலம், எந்த ஆசாரம்?”
ஒருத்தியின் பிரசங்கம் மேற்கோள் அடிக்குறிப்புகளுடன் முடிந்ததும், மற்றவள் சொன்னாள்.
“இந்த நாளையிலை பெட்டைகளைப் படிக்க விடக்கூடாது. படிச்ச பொம்பிளையளாலைதான் சோலி சச்சரவு எல்லாம்"
பின்னை என்னவாம்! நாங்கள் எல்லாம் படிச்சே குடும்பம் நடத்துறதும் எங்கை இஞ்சை வரட்டும் பார்ப்பம் இந்தப் படிச்சுக் கிழிச்ச மனுஷியள். எங்களாலை முடியிற வேலையளை இவளுகள் செய்யட்டும் பாப்பம்"
ஒரு பெண்ணைப் பற்றிப் பல பெண்கள் நாத்தெறிக்கப் பேசிய கதைகள் இவை. நாளடைவில் செல்வராணி சந்திரனுடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தாளென்றும், அது காரணமாகத்தான் சோமலிங்கம் படிப்பதை நிறுத்தினார் என்றும் வரலாறு எழுதப்பட்டது.
அவள் இப்பொழுது இந்தச் சமூகத்துக்காக அழுதாள்! சித்தம் கலங்கியது. செல்வராணி பாடசாலைக்குப் போவதை நிறுத்திவிட்டு வீட்டிலே வெட்டிப்பொழுது கழித்துக் கொண்டு இருந்த வேளை அது.
அவள் படித்த கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு வருமாறும், வந்து அவளுக்கே கைவந்த ஒப்பனை வேலைகளைச் செய்யுமாறும் கல்லூரி அதிபரே கடிதம் எழுதியிருந்தார். அவளுக்கு இப்படி அப்படிச் சாட்டுக்கள் போக்குகள் சொல்லி வெளியே போக வேண்டும். அப்படிச் சென்று நாளுக்கு நாள் மாறிவரும் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரினதும் வாழ்க்கை அனுபவத்தை இரசிக்க வேண்டும் என்று ஆவல் நிறையக் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது.
32

வேறு கல்லூரியில் அவளைச் சேர்க்கப் போவதாகக் கூறி சோமலிங்கம் கல்லூரி அதிபரிடம் நல்ல சான்றிதழ் வாங்கியிருந்தும் என்ன காரணமோ அவர் அப்படிச் செய்யவில்லை. உண்மையை உணராது தான் அவசரப்பட்டு செல்வராணியை விலக்க நினைத்த ஒரு பாவத்துக்குப் பிராயச்சித்தமாகக் கல்லூரி அதிபர் அந்தக் கல்லூரி சம்பந்தப்பட்ட ஏனைய விஷயங்களிலும் அவளை ஈடுபடுத்த நினைத்தார்.
அவ்வாறு நினைத்த ஒரு நல்லெண்ணத்தின் முதல் வித்தாகவே செல்வராணியை ஆண்டு விழாவில் பங்கு பற்றுமாறு அழைத்திருந்தார்.
பெண்ணான, பண்புள்ள அந்தத் தலைமை ஆசிரியைக்கு அவரைப் போன்ற மற்றொரு . பெண்ணை உணர, அறிய முடியாதா, என்ன?
சோமலிங்கம் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர் போல செல்வராணியை ஆண்டு விழாவுக்கான உதவியைச் செய்து கொடுக்குமாறு அனுப்பி வைத்தார்.
செல்வராணி ஆண்டுவிழா நடைபெறவிருந்த அந்த நாள் காலை கல்லூரிக்குச் சென்றபொழுது, அதிபர் மிக மகிழ்வோடு வரவேற்றார். அவருடைய முகத்தில் இனம் புரியாத பாவக்களை, ஒரு கணம் மின்னல்போல வெட்டிமறைந்ததைச் செல்வராணி அவதானித்தாள். தனியே வீட்டிலிருந்த காலங்களில், அவளுடன் துணையாக இருந்த சின்ன அண்ணனான சந்திரமோகனின் மனைவி மகாலட்சுமியுடன் அடிக்கடி ஒதுங்கி நடந்தாலும், இந்த உலகத்தின் வாடையிலிருந்து எங்கோ ஒரு கோடிக்கு அந்தக் கோடியின் ஒரு மூலைக்கு ஏற்றப்பட்டதாலும் அவளால் தன்னையேனும் முழுமையாகப் படிக்க முடிந்தது.
இப்பொழுது செல்வராணிக்கு எல்லாந் தெரியும். கல்யாணம் முடித்ததும் கடவுள் தானாக வந்து கொடுக்கும் பிள்ளைச் செல்வங்களை தான் வாங்கி வளர்க்கின்ற நிலைவரும் என்ற நினைப்புமாறி, அது தன்னுடன் உறவாடப்போகும் ஒருவனின் பிணைப்பால், அவன் தரும் இன்பத்தால், அந்த இன்பத்தின் முடிவாக எழும் ஒரு விதத்தில் பெருமைப்படத் தக்கதான துன்பத்தால் பிறப்பது. என்றெல்லாம் அவள் தெரிந்திருந்தாள்.
பிரயோசனமற்ற முறையில் தன்னிடம் குடிகொண்டுள்ளது என்று முன்னர் நினைத்திருந்த அழகு, எந்த நேரத்தில், எந்த நிலையில், எப்படிப்பார்த்தாலும் அர்த்தமுள்ளது என்றும் அவள் உணர்ந்து தெளிவாக்கியிருந்தாள்.
இனி, எந்த ஆடவனும் அவளை வெறித்தால், ஆசையோடு பார்த்தால், அண்ட நெருங்கினால் அவள் ஒவ்வொரு முனையில் நின்றும் அவனை அவனது வெறியை, ஆசையை, அண்டும் செயலை எதிர்த்துப் போரிடவும் தயாரானாள்.
இப்பொழுது கல்லூரி அதிபர் பார்த்த விதமும் அப்படித்தான் இருந்தது. செழித்துக் கொழுத்து வளர்த்திருந்த அவளை, தான் ஓர் ஆணாக இருந்தால் இப்பொழுது அவள் இருக்கும் நிலையில் அப்படியே அள்ளி மடியில் வைத்து அழகு பார்க்கத் துடித்தது அதிபரின் அந்தப் பெண் உள்ளம்.
“செல்வராணி படிப்பையும் நிறுத்தியாகி விட்டது. இனி என்ன செய்ய யோசிக்கிறீர்? கல்யாணந்தானே"
செல்வராணி அடக்கமாக அந்தக் கேள்வியை இரசித்தபடி, கண்கள் தமது அகலத்தையும் நீளமாக்கி ஒடுங்க, மார்பின் மீது பிணைந்திருந்த கைகளை விலக்கி ஒரு வகையால் வாயையும் பற்களையும் தெரியாத மூடியபடி சிரித்தாள்.

Page 27
அந்தச் சிரிப்பு என்றோ ஒருநாள் எவனோ ஒருவனுக்குத்தான் அர்ப்பணமாகத்தானே வேண்டும் என்ற உலகியல் பூர்வமான, இயற்கை ரீதியான அந்த எண்ணத்தில் அவள் மிதந்து கொண்டிருந்தாள்.
“சரி! இன்று மாலை ஆறு மணிக்கு ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள்தான் முக்கிய இடம்வகிக்கின்றன. இந்த நாளையிலே கலையை இரசிப்பவர்கள் தொகை குறைவு. அதனால்தான் இந்த ஏற்பாடுகள் எல்லாம். நீர் போன வருஷம் செய்ததுபோல தனியான ஒப்பனைகளை ஆடுகிற, நடிக்கிற பெண்பிள்ளைகளுக்குச் செய்துவிட வேண்டும். குலசிங்கம் ஆசிரியரும் உமக்கு உதவி செய்வார், என்ன?”
கல்லூரி அதிபர் சொல்லி முடித்து அவளை அனுப்பி வைத்தார். செல்வராணி தன் கால்கள் ஏற்கனவே நடந்து, நடந்து பழகிப்போன அந்தக் கல்லூரியை, அதன் கட்டிடங்களை, படிகளை, பாதைகளை விழியாலும் நடையாலும் வலம் வந்தாள்.
ஆண்டு விழா ஆரம்பமாகி உச்சக் க்ட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. மாணவர்களும் மாணவியரும் மும்முரமாகத் தமது கலை நுணுக்கங்களை மேடையில் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
மேடைக்குப்பின்புறமாக உள்ள ஒப்பனை அறையில் கடைசியாகவுள்ள ஒரு காட்சி, அது நடனம். அதிற் பங்கு கொள்ளும் ஏழு மாணவிகளுக்கு மற்றொரு ஆசிரியையின் உதவியுடன் ஒப்பனை செய்துவிட்டு, ஒப்பனையாளர்களும் அந்தக் கடைசிக் காட்சியை இரசிக்கச் சென்ற நேரம்.
குலசிங்கம் நன்றியுரை சொல்லும் மாணவனுக்கு எப்படி எப்படிப் பேசுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
செல்வராணியை நீண்ட நாட்களின் பின்பு கண்ட ஆனந்தத்திலும், அவள் இன்று இரவே போய்விடுவாள், இனித் திரும்ப மாட்டாள் என்ற ஏக்கத்திலும் அவளை அழைத்துச் சுகம் விசாரித்திருந்த அவன் இப்பொழுது பேசினான்.
சிவந்து எம்பிய கண்கள், அடிக்கடி உடம்பை வளைத்து வேலை செய்ததால் ஏற்பட்ட ஒரு களைப்பு, மதர்த்து எழுந்திருந்த அவளது தோற்றம் குலசிங்கத்தை தன் களைப்பை மறக்கும்வரை பேசத் தூண்டிக் கொண்டிருந்தன.
அவன் கேட்டான், "சோமலிங்க மாஸ்டர் ஆரைப் பார்க்கிறாராம். பி. ஏ. யா? டாக்டரா? அல்லது. அவரைப் போல ஒரு டிச்சரா?”
செல்வரானிக்கு விளங்கி விட்டது. அவள் தலையைக் குனிந்து சிரித்தபடி, தன் கால்களை ஒராட்டுபவள் போலவும், நின்ற நிலையிலே தன்னை தாலாட்டுபவள் போலவும் மெல்ல மெல்ல ஆடிக் கொண்டாள்.
“சும்மா சொல்லு செல்வராணி " அவள் மறுபடியும் சிரித்தாள். சந்திரன் என்ற கார்காரனுடன் உறவு வைக்கத் துணிந்தாளே இவள் என்றுதான் கேள்விப்பட்ட கதைகளின் அத்திவாரத்தில் சிந்தனையைத் திருப்பிவிட்ட குலசிங்கம் தனக்கு நேரே தெரிந்த கண்ணாடியில் தன் உருவம் விழுந்து கிடப்பதைக் கண்டு, அதே தருணமாகத் தன்னை ஒருமுறை பார்த்தான்.
“சரி இப்பவே வீட்டுக்குப் போகிறீரா? அல்லது.
39
34

சொல்வராணி சொன்னாள், "ஐயா வந்தவர், அவரோடை போயிடுவன். “உம்.” குலசிங்கம் வெளிக்குக் காரணமில்லாதவாறு தோன்றும் பெருமூச்சொன்றை மிகப் பிரயத்தனப்பட்டு ரகசியமாக வெளியேவிட்டான்.
எதனையோ நினைத்தவன்போல"நீர் நிற்கிறீரே அடுத்த அறைக்குள் கதிரைகள் Allée),.......... எடுத்துக் கொண்டு வாறன்.” என்றபடி நகரத் தொடங்குகையில், "வேண்டாம், நானே எடுத்துண்டு வாறன்” என்றபடி பாதி ஒளியும் பாதி இருளுமாகக் கிடந்த அந்த அறையை நோக்கி ஒரு குறிப்பில் நடந்தாள் செல்வராணி.
2
செல்வராணி அந்த அறைக்குட் கிடந்த கதிரைகளில் ஒன்றை எடுத்துத் தூக்க முயன்றபொழுது, அவள் பின்பு சென்ற குலசிங்கம், “நானே தூக்கிறன்” என்றபடி அவளிடமிருந்து அதனை வாங்குவதற்காகப் பற்றினான். அப்பொழுது அவனுடைய கைகள் அவளுடைய விரல்களையும் சேர்த்துப் பிடிக்க, அவள் அவன் வேண்டுமென்றே செய்ததான அந்தப் பிடியிலிருந்து தன் விரல்களை விடுவிக்காமல் ஸ்தம்பித்து தியங்கி மருண்டு நின்றபொழுது.
குலசிங்கம் தன் அற்பமான மிக மிக அற்பமான தனது ஆசையை அவளிடம் அர்ப்பணித்து அவளிடமிருந்தே வலிந்து அந்த ஆசைக்கு நிறைவும் தேடிவிட்டு ஒப்பனை அறைப் பக்கமாகத் திரும்பி வந்தான்.
மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர்கள் எத்தனை பேர் இன்று வேலையிழந்து, மானமிழந்து திரிகிறார்கள் என்ற ஓர் அர்த்த நிலையில் எழுந்த நினைவும் அவனைப் பின்னுக்கிழுத்ததால், தன் வெறியை ஆசையை ஆரம்பதுடனேயே பூர்த்தி செய்து விட்டு அவன் மீண்டான்.
செல்வராணி திகைதுப் போனாள். அன்று ஒருநாள் சந்திரனுடைய ஒரேயொரு விண்ணப்பத்துக்கு நன்றியுணர்வுடன் நடப்பான் என்ற நம்பிக்கையில் செவிசாய்த்த குற்றத்துக்காக, அவள் படிப்பை இழந்தாள். சந்திரன் தனக்கு இருந்த வெறியைத் தன்னுடன் கூடவே பிறந்து, கூடவே சினிமாவுக்கும் வந்திருந்த தங்கைக்கும் தெரியாமல் சாதுர்யமாக அவளது மேற்பாகத்தைத் தீண்டிய பொழுது, செல்வராணி தனது வெறுப்பை, அருவருப்பைக் காட்டியபொழுதும் அவற்றையும் பொருட்படுத்தாமல் மிருகமாகிக் கொண்டிருந்தானே.
இப்பொழுது கல்வியை மட்டுமல்லாமல் ஒழுக்கத்தையும் புகட்ட வேண்டிய தனது ஆசிரியர் இப்படித் தன்னை வாரி அணைத்து, கைகளுள் தனக்குரியவற்றைத் திணித்து பிடுங்கி எடுப்பவர் போலவும், நடந்து கொண்டதும், தன்முகம் மீதும் இதழ் மீதும் எத்தனையோ வாரிவாரி வழங்க வெறிகொண்டதும் அவளுடைய திகைப்பு நிலையை அழிக்கும் நினைவுகளாகக் கிளர்ந்தன.
நடந்ததை நினைக்க அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு. ஆனாலும் அழுது அப்படியொரு இக்கட்டான நிலையில் குலசிங்கத்தை வீழ்த்தி, அவன் மன்னிப்புக் கோர, அதற்கு மனம் குழைந்துஉடன்பாடு தெரிவிக்க அவளுக்கு இஷ்டமாக இருக்கவில்லை.
yy
35

Page 28
கன்னங்களைத் தான் அணிந்திருந்த சேலை முந்தானையால் வழித்துத் துடைத்து, நாசி, வாய் என்பவற்றையும் அழுத்தி ஒற்றியபடி நிலைகலைந்திருந்த தன் ஆடைகளையும் சரிப்படுத்தினாள் செல்வராணி.
ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத பிடாரிகள் செல்வராணி குமுறும் உள்ளத்துடன் தனக்குள் சொன்னாள்.
குலசிங்கம் ஒப்பனை அறையில் கூனிக்குறுகி நிற்பதைக் கண்டதும், இருண்டு கிடந்த அந்த அறையின் மற்றொரு வாசலால் நாட்டியம் நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்துட் சென்றாள் அவள்.
மேடையில் ராதாவாக நடித்து ஆடிக் கொண்டிருந்த சிறுமியைக் கண்ணானக நடித்த சிறுமி மிக அன்புடனும் ஆதரவுடனும் அணைத்து, கன்னத்துடன் கன்னத்தைச் சேர்த்து சோடி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்.
எங்கு பார்த்தாலும் ஒரே காட்சியாக இருப்பது போன்ற பிரமை அவளுள் எழுந்து மறைந்தது.
ஆண் பெண் உறவு வாழ்க்கையின் முழுமையுமே ஆக்கிரமித்து விட்டது போன்ற உணர்வு வாழ்க்கை என்ற முழுமையில் ஆயிரத்தில் ஒன்றாக உள்ள, உள்ளதாக வேண்டிய அந்த இருபாலார் உறவு காணுமிடம் எல்லாம் பொட்டிட்டுக் காட்டப்படுவதை அவள் மிக்க அருவருப்புடன் பார்த்தாள்.
புதிதாக உண்டாகிய ஒரு பலாத்கார உறவில் தன் வாய்க்குள் ஏதோ சென்று விட்டது என்ற உணர்வில், திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியே காறி உமிழ்ந்தாள் அவள். அவளுடைய கன்னங்களைக் கைகள் மெல்லத் தடவிய பொழுது ஒரு கன்னம் வலிப்பது போலவும் பட்டது. காயம் எதுவும் உண்டாகியிருக்குமோ என்ற பயம் எழுந்தபோது, அவள் தனது கண்கள் தனக்காக இரகசியமாக வெந்து கரைந்து நீரை உகுத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
இரக்கமற்ற காமுகர்கள் இந்த உலகத்தில் நடமாட வேண்டும் என்பதற்காகப் பரந்து நிற்கும் வானம், அதனையே பார்த்துப்பார்த்துபொறுமையோடு நிரந்தரமாகி இருக்கும் பூமி, அதில் கோடி கோடி மனிதர்கள், ஆயிரம் ஆயிரம் உறவுகள், ஆசைகள்.
குலசிங்கம் அவளை அணைத்த பொழுது கையிலிருந்து நழுவியிருந்த கதிரையால் தூக்கி அடிக்க வேண்டும் போலவும் செல்வராணிக்கு இருந்தது. அவள் அப்படி நினைக்கையில் உடலைமட்டும் இறுகப்பற்றியிருந்த அவனுடைய பிடிக்குள் இருந்து விடுதலை பெற்ற கைகள் கதிரையைத் தூக்காது, அதனைப் பலமாகப் பற்றத் தொடங்கின. கனவில் சண்டையிடுவதுபோல் இருந்தது அவளுக்கு.
நாட்டியமும் முடிந்து நன்றியுரையும் முடிந்தது. கூட்டம் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது.
சோமலிங்கம் மகளின் வரவைப் பார்த்து பாடசாலை'கேட்டருகில் காத்திருந்தார். செல்வராணி அதிபரிடமும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.
அப்பொழுது இலேசாக விழுந்த ஒளிக்கற்றைகள் சற்று இருள் படர்ந்திருந்த வகுப்பறைகளின் விழிம்புப் பாதையால் ஓர் உருவம் தயங்கித் தயங்கி வருவதைக் கண்டாள் அவள். அந்த உருவம் மிகப் பழக்கப்பட்டதுதான் என்ற உணர்விலும், மறுபடியும் ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சத்திலும் நடக்கவிடக் கூடாது என்ற தெம்பிலும் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
36

“செல்வராணி” ஏதோ. குலசிங்கம் திக்கித் திணறியபடி கூறினான். “தெரியாமல். என்னை மறந்த உணர்ச்சி நிலையில். ஏதோ. தவறாக நினைக்க வேண்டாம். உங்களுடைய அப்பாவிடமும் சொல்ல வேண்டாம். அப்படியானால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்"
குலசிங்கம் இவற்றைச் சொல்லும் வரையும் செல்வராணி நிற்கவில்லை. அவள் நடந்து கொண்டேயிருந்தாள். வீதியால் நடந்து கொண்டிருக்கையில் ஒரு சுவீப் டிக்கட் வாங்கும்படி கெஞ்சும் சிறுவனைப்போல், கெஞ்சியபடியே பின்னால் நடந்து வருவதைப் போல் குலசிங்கமும் கூறிக்கொண்டே அவள் பின் நடந்தான்.
அவனால் மேற்கொண்டு உபத்திரம் இல்லை என்ற நம்பிக்கையுணர்வு எழுந்ததும் அவள் நடந்து சோமலிங்கம் நின்ற இடத்துக்குச் சென்றாள்.
ஊரெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தது. செல்வராணி உடைகளைக் களைந்தெறிந்து விட்டுத் தனது வழமையான ஒற்றை உடுப்புடன் படுக்கைக்குச் சென்று விட்டாள்.
சோமலிங்கம் அவளைச் சாப்பிடுமாறு எவ்வளவு பணித்தும் அவள் சாப்பிட மறுத்து விட்டாள். உடம்பை எரிப்பது போல் வெப்பம் காய்ந்து கொண்டிருந்தது. நெற்றிப் புடகு வெடிப்பதுபோல அடித்துக் கொண்டிருந்தது. கபாலங்களும் அவற்றைச் சுற்றியும் உள்ள தலைப்பாகங்கள் தெறிக்காத குறையில் இருந்தன.
படுத்திருந்த அவள் மீது ஏதோ பெருஞ்சுமையை யாரோ தூக்கி வைத்து அழுத்துவது போலவும், கால்களையும் கைகளையும் அசைத்து உசும்பவும் முடியாமல் ஆழ ஆழ இட்டுச் செல்வது போலவும் இருந்தது.
அவள் வாழ்க்கையில் இரண்டாம் முறையாக ஏற்பட்ட அந்த மிருகத்தனமான பண்பற்ற பயங்கரச் செயலைத் தொடர்ந்தும் யாரோ செய்துகொண்டிருப்பதுபோலவும் பட்டது. செல்வராணி வியர்த்துக் கொட்டும் தன்னுடலை ஒருவாறு சமாளித்து நிறுத்தியபடி, வெளியே அகன்று பரந்து மாமரங்களும் தென்னை இளங் கன்றுகளும் சோலைகளாகியிருந்த முற்றத்துக்கு வந்தாள்.
காய்ந்து கொண்டிருந்த கும்மிருளில் அவளால் எதனையுமே பார்க்க முடியவில்லை. தூரத்தில் எங்கோ தூரந் தூரமாக நிறுவப்பட்டிருந்த மின் விளக்குகளிலிருந்து ஈயாதான் கொடுத்த கொடை போல ஒளி வந்து கொண்டிருந்தது.
திருடர்களின் நடமாட்டமே அற்றதான அப்பகுதியில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் பாதுகாப்பு வெளிச்சம் ஒன்றுமே எரியவில்லை. அவளது அந்த வீடும் இருளின் போதையில் மயங்கிக் கிடந்தது.
வலிக்கின்ற ஒரு பக்கத்துக் கன்னத்தை மெல்ல மெல்ல வருடி சுகங்கொடுத்தபடி தூணுடன் சாய்ந்து நின்றாள் செல்வராணி
அவள் படுக்கையை விட்டு எழுந்ததும், கதவுதிறந்ததும், வெளியில் நிற்பதும் என்ற அவளுடைய செயல்களை உணர்ந்த சோமலிங்கம் விழிமூடாது படுத்த நிலையிலேயே ஒசையைக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
செல்வராணிக்கு இருளைப் பார்க்கப் பார்க்க பயமாக இருந்தது. வெளியே நள்ளிரவில் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்கள் இயற்கை ரீதியாக ஏற்பட்ட விடத்து அவள் உருண்டு நித்திரை செய்யும் தாயாரைத் துணையாக அழைத்துச் செல்ல முடியாதவளாகி இன்று பதினான்கு ஆண்டுகள் மறைந்துவிட்டன. அவளுக்கு நான்கு வயது வரப்போகிறது என்ற நிம்மதியிலோ என்னவோ தாயாரும் கண்ணை மூடிவிட்டார்.
37

Page 29
செல்வராணி ஊரில் வழங்கும் பேய்க் கதைகள், பெண்கள் திருடிகளின் பேடித்தனமான செய்கைகள், படித்தவர்களும் பண்புடன் நடந்து மற்றையோர்க்கும் பண்பு புகட்ட வேண்டியவர்களுமானவர்களே உணர்ச்சி பிறழ்ந்து தவறி விடுகின்ற நிலை என்றெல்லாம் நினைவுத் திரையில் இட்டுக் கொண்டிந்தாள்.
ஒருநாள் யாரோ ஒருத்தி தனியாக வீட்டுப்பின்புறத்துக்கு இரவில் சென்றபொழுது அவளை என்னமோ பலவந்தப்படுத்தி ஏதேதோ செய்து விட்டதாகவும், பின்னர் முகந்தெரியாத அந்த மிருகத்தின் முகம் தெரியாமலே அவள் பிரமை பிடித்து வாடினாள் என்றும் அவளைப் பேய் பிடித்து விட்டதாக எண்ணிய பெற்றோரும் ஊராரும் மந்திரவாதியிடம் போக, அவன் அவளுக்குப் பேய் ஒட்டினான் என்றும் பல கதைகளை அவள் கேட்டிருக்கிறாள். அக்கதைகளைக் கேட்ட அடுத்த நான்கு ஐந்து நாட்களுக்கு அவள் இருண்டி விட்டால் வெளியே தலைகாட்ட மாட்டாள்.
பெண் தனியாகப் படுத்திருக்கும் பொழுது, ஒலைச் செத்தைகளையும் தட்டிகளையும் நீவி உள்ளே வரும் சில பெண் திருடிகள் பற்றியும் அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.
பகிரங்கமான இடங்களில் சற்றுவேளை நம்பிக்கையுடன் ஒர் ஆடவனுடன் நின்று விட்டால் அவன் செய்யக் கூடியதான அந்தப் பொல்லாத குறும்பு நாளடைவில் வம்பாகி எத்தனை எத்தனை பெண்களின் வாழ்க்கைக் கதைகளையே முடித்திருக்கின்றன.
கடந்த கிழமையில் ஒருநாள் மகாலட்சுமியுடன் வந்து கதைத்த ஒருத்தி கதைகதையாகச் சொன்ன பயங்கரச் சம்பவங்களில் ஒன்று தன் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கும் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.
அந்த இருவரும் பேசும் பொழுது, அவள் தாழ்வாரத்தில் நின்று எவ்வளவு ஆவலாகக் கேட்டாள். பெண்ணைக் கெடுப்பதில் ஆணுக்குள்ள ஆனந்தம் போன்று, கெடுக்கப்பட்ட அபலையைப் பற்றிக் கூட்டிக் கதைப்பதில் பெண்களுக்கும் உண்டா?
அடுத்த தெருவில் படிப்பை நிறுத்திவிட்டு வறுமையின் கொடுமையில் வாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகளின் வயதை ஒத்த ஒருத்தி தனியே வீட்டிலிருந்த பொழுது, அவளுடைய முறையான மைத்துனன் ஒருவன் வீடு புகுந்து அவளுடைய கையைப் பிடித்தானாம்.
சந்திகளில் விடிந்தால் பொழுது சாய்ந்தால் நிற்பதையே தொழிலாகக் கொண்ட அவனுக்கு மானத்துக்கு அஞ்சிய அந்த ஏழைக் குடும்பம் அவளைக் கல்யாணஞ் செய்து கொடுத்ததாம்.
செல்வராணிக்கு இப்பொழுது உடல் எல்லாம் வியர்த்துக் கொட்டியது. அந்தக் கொடிய இருளில் அப்படியொருவன் மறைந்துநின்று தன் கைகளைப்பற்றி, பின்னர் தன்னை மணந்துகொள்ள விடாப்பிடியாக நிற்பதுபோல அவளுக்கு இனம் புரியாத நினைவு எழுந்தது.
இப்பொழுது நெஞ்சும் வேறு கணத்தது. இருதயத்தின் எங்கோ ஒரு பகுதியில் திடீரென ஏற்பட்ட தாக்குதலால், அதனால் உண்டான ஒரு வெடிப்பிலிருந்து உதிரம் கசிவது போலவும், அந்த உதிரக் கசிவால் உடம்பெல்லாம் நோவது போலவும் இருந்தது.
அவள் திடீரென்று பாய்ந்து சுவிட்சைத் தட்டி விட்டாள். வீட்டின் வெளிப்புறம், முற்றம், தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் அந்த மின்னொளி பாய்ந்தது.
38

தன் கைகளை மறுபடியும் பற்ற, தன்னைத் தன் விருப்பத்துக்கு ஆசைக்கு, இதயத்துக்கு மாறாகத் தீண்ட ஒருவனும் அங்கில்லை என்ற தெம்பு.
எதனையோ நினைத்துக் கொண்ட செல்வராணி திடீரென்று தனது அறைக்குட் சென்று தாழிட்டுப் படுத்துக் கொண்டாள். அவள் ஒடிச் சென்ற பொழுது கேட்ட டொங் டொங்’ என்ற காலடி ஓசையில் கட்டிலைவிட்டு எழுந்து வந்த சோமலிங்கம், வெளிச்சம் வெளியே பாய்ந்து கொண்டிருப்பதையும், உள்ளறையுள் செல்வராணி நிலைகுலைந்து குப்புறப்படுத்துக் கிடப்பதையும் பார்த்தார்.
செல்வராணியை அழைத்து “என்ன? என்றுமில்லாதவாறு இப்படி நடந்து கொள்கிறாய்?" என்று தனக்குள் எழுந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமுகமாகக் கேட்போம் ான்று அவர் நினைத்த பொழுதும் நா எழவில்லை.
சுவிட்சை மடக்கி விட்டு, தன் கட்டிலுக்குச் சென்று அவர் உறங்கத் தொடங்கினார். வெகு தொலைவில் ஒரு கார் உறுமும் சத்தமும் அதனைத் தொடர்ந்து நாய்கள் குரைக்கும் அரவமும் கேட்டன.
செல்வராணி உடல் களைத்திருந்ததாலும் மனம் புதிய விஷமத்தனமான அனுபவங்களின் வேதனையில் நொந்திருந்ததாலும் சற்று உறங்கி விட்டாள்.
அவர்களது வீதியருகில் அந்தக் கார் ஓடி வருவது போன்று ஏதோ உணர்வில் அவள் தெரிந்து கொண்டதும் துணுக்குற்று எழுந்து ஒலமிட்டாள்.
"அம்மா என்னை விட்டிட்டுப் போயிட்டியா? இப்ப என்னைக் காரிலை கொண்டு போகப் போறாங்களே. ஐயோ. அப்பா. நான் என்ன செய்வேன்.?”
இடியோசை கேட்டநாகம்போல சோமலிங்கம் எழுந்து அவளது அறைக்குள் ஓடினார். அவர் உடல் வெலவெலத்தது. சுவிட்சைப் போடவுந் தெரியாமல், அது எங்கே இருக்கிறது ான்பதைக் கண்டுபிடிக்கவும் முடியாமல் குழந்தை போல அலைந்தார் சிறிது நேரம்
செல்வராணியின் ஒலம் கேட்டதும் அவர் நெஞ்சம்படக் படக் என்று அடித்ததுடன் பார்வை ஒரேயடியாக மங்கியது போலவும், காதுகள் செவிடாகி விட்டது போலவும் பட்டது.
“செல்வராணி என்னம்மா நடந்தது?" என்று அழாக்குறையுடன் குரல் தளதளக்க அவர் கேட்ட பொழுது, அப்பொழுது உள்ளே நுழைந்த சந்திரமோகன் “என்ன ஐயா. ஏன் இப்படி ஒரு மாதிரி.." என்று இழத்தபடி ஸ்விட்சைப் போட்டான்.
மகாலட்சுமி கண்களைக் கசக்கியபடி எல்லோரையும் அலுப்புடன் பார்த்தாள். கட்டிலின் நடுவே யாரோ தூக்கி வைத்த குழந்தை போல வெம்பிக் கொண்டு தலையைக் கவிழ்த்திருந்தாள் செல்வராணி.
3
அந்தப் பயங்கர இரவின் முதற்பாதியில் செல்வராணிக்கு நடந்ததை அவள் யாரிடமாவது சொன்னால் குலசிங்கம் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறியது செல்வராணியின் நினைவுத் திடலில் விழுந்து தெறித்தது.
ஏழைகள் என்றால் அவர்களுக்கு கற்பு என்பதே இல்லை என்று தன்னிலை தெரியாது தவறாகக் கணக்கிட்டிருக்கும் இந்த உலகம் ஓரளவு வசதியுள்ள செல்வமகள் (ருத்தியின் கற்புக்கு எவ்வளவு விலை நிர்ணயித்திருக்கும் என்று ஒருவராலும் உன்னி
மண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.

Page 30
செல்வராணிக்குச் சீதனமாகக் கொடுக்கப்படும் பனந்தான் இனி அதையுந் தீர்மானிக்கப் போகிறது.
குலசிங்கத்தின் அந்தக் கொடூரமான இச்சைக்கு ஆட்பட்ட செய்கை அவளை நிலைகுலையச் செய்யும் என்று அவனும் எதிர்பாக்கவில்லை.
அவள், அவன் கைகள் தன் விரல்களைப் போர்த்தியதும் ஏதோ உணர்ச்சியில் இருந்தாள் என்பது இப்பொழுது அவளுக்குப்பட்டும் படாமலும் நினைவுக்கு வந்தது. அந்த உணர்ச்சி அவன் எதிர்பார்த்த ஒரு பருவ மங்கையின் உணர்ச்சியாக நிச்சயம் இருக்கவில்லை என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.
இப்பொழுது அவள்தான் ஏன் இந்த எதிர்பாராத உணர்ச்சிகளின் தாக்குதலுக்கு ஆளானாள் என்பதற்கான உண்மைக் காரணத்தைச் சொன்னால் குலசிங்கம் உண்மையிலேயே உயிருடன் இருக்க மாட்டானா?
சந்திரமோகன் தனது இயற்கையான வலுச்சண்டை வீரத்தை முன்வைத்து குலசிங்கத்தின் கதையை முடித்துவிடலாம் அல்லவா? அவனே என்ன செய்வது, தங்கையும் உணர்ச்சிவசப்பட்டு விட்டாள் என்று பேடிபோல் வருந்தத் தொடங்கினால், ஊரில் எழக்கூடிய அலர் குலசிங்கத்தை மட்டுமல்ல அவளையும் கொன்றுவிட மாட்டாதா?
செல்வராணி கட்டிலில் குந்தியிருந்தபடியே வெதும்பி வெதும்பி அழுதாள். பயங்கரக் கனவுகண்ட குழந்தைபோல தான் கண்ட கனவு இன்னது என்று சொல்ல மொழியின்றி அழுது கொண்டே மறுபடியும் துயில்வதுபோல், எல்லோர்மீதும் தன் விழிகளை வீசிய செல்வராணி கட்டிலில் மெல்லச் சாய்ந்து உறங்கத் தொடங்கினாள்.
அந்த நடுநிசியில் ஊசி விழுந்தாலும் அயல் வீட்டார்க்குக் கேட்கக் கூடியதான நெருக்கமான குடியிருப்பில் மகளை மேற்கொண்டும் எதுவும் கேட்க விருப்பமில்லாதவராக சோமலிங்கம் தனது கட்டிலுக்குச் சென்றார்.
அப்படியொருவேளையை எதிர்பார்த்வர்கள் போல சந்திரமோகனும் மகாலட்சுமியும் உள்ளே சென்று விட்டனர்.
செல்வராணியை ஏதன் முனிஞ்சிருக்கும். என்று தனது மனதிற்ப்பட்ட அந்தக் கருத்தை மெதுவாகக் கணவனிடம் கூறியபடி கட்டிலில் வீழ்ந்தாள் மகாலட்சுமி
அவள் கூறிய அந்த வார்த்தைகளைப் பொறுக்க முடியாதவனாகி சந்திரமோகன் அவளை விறைத்துப் பார்த்தபடி, உனக்கு நல்லது ஒண்டும் கதைக்கத் தெரியாட்டி வாயை மூடிக் கொண்டு பேசாமல் படு' என்று நறும்பினான்.
எதிர்பாராத தாக்குதல்களால் தூக்கமின்றித் தவித்த அவர்கள் விடிந்து எழுந்ததும் எதிர்பாராத வரவொன்றும் அவர்களை எதிர்நோக்கியது.
அந்த ஊரிலே பலவற்றுக்குப் பெயர் போனவரும் சிலவற்றுக்குப் பெயர் பெற்றவருமான கல்யாணத் தரகர் கந்தப்பர் அவர்களுடைய வீட்டுக்கு வந்தார்.
சோமலிங்கத்தைப் பார்த்து அவருடைய முகத்தில் செல்வராணியைக் கண்டவர்போல வழிகளிலும் தெருக்களிலும் கந்தப்பர் சிரிப்பதன் உள்ளார்ந்த அர்த்தத்துக்கு சோமலிங்கம் இப்பொழுது பொருள் கண்டவரானார்.
வீட்டு நிலையும் தற்சமயம் அதற்குச் சாதகமானது போல் சோமலிங்கத்துக்குப் பட்டதால் கந்தப்பரை வரவேற்பதில் அவருக்கு விருப்பம் சற்று அதிகமாகவே இருந்தது.
குலசிங்கத்தின் தூதுவனாகத் தனது அப்போதைய அவதாரத்தை அறிமுகம் செய்து கொண்ட அவர், "மாஸ்டருக்கு விடிஞ்சதும் விடியாததுமாக ஒரு நல்ல சேதி
40

கொண்டாறன். மாஸ்டர் இதைத் தட்டிக் கழிக்க மாட்டார் எண்டு நினைக்கிறன்” என்றபடி முன்கூடத்தில் உள்ள கதிரையில் குடையை வைத்துவிட்டு, மற்றொரு ஆசனத்தில் சென்றமர்ந்தார் கந்தப்பர்.
கந்தப்பர் நித்திரையை விட்டு எழமுன்னரே அவரைச் சென்று சந்தித்த குலசிங்கம் தனக்கு அதிகளவு அறிமுகம் தேவைப்படாததால் உடனடியாகத் தனது புதிய ஆசைபற்றி அவரிடம் பிரலாபித்திருந்தான்.
நீண்ட நாட்களாகப் பெரிய இடத்துச் சம்பந்தம் ஒன்றும் செய்து வைக்காததாலும், பஞ்சாங்கம் கணித்தவர்கள் " ஒரு மாதத்தில் குறைந்தது பத்துக் கல்யாண முகூர்த்தங்களையேனும் அச்சடிக்காததாலும் உழைப்பு அதிகமின்றி இருந்த கந்தப்பருக்கு இலட்சுமி கடாட்சம் கிட்டியதுபோல இருந்தது.
குலசிங்கம் கொலை செய்துவிட்டு பொலிஸ் ஸ்டேசனையே தஞ்சம் புகுந்தவன் போல அவரிடஞ் சென்று தான் செய்தவற்றை மட்டும் கூறாது செல்வராணி தனக்கு மாணவியாக இருந்தாள் என்றும், அப்படி மாணவியாக இருந்த காலங்களில் தன்னைப்போல அழகும் அடக்கமும் குணமும் உள்ள வேறு ஒரு பெண்ணை தான் பார்க்க முடியாது தடுத்த குற்றத்தைச் செய்து விட்டாள் என்றும், அவள் மீது தன்னைக் காதல் கொள்ளச் செய்து விட்டாள் என்றும் பலவாறு கந்தப்பரிடம் சொன்னான்.
அந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் போதிக்கும் கல்யாணம் ஆகாத ஆசிரியர்களுள் ஒழுக்கத்தின் சிகரமாகத் தன்னைப் பிறர் மதிப்பதை நன்கு அறிந்திருந்த குலசிங்கம் அதையும் தன் பக்கம் சாட்சியச் சான்றாக எடுத்துக் காட்டினான்.
சோமலிங்கத்திடமிருந்தும் குலசிங்கத்திடமிருந்தும் குறைந்தது இரண்டாயிரம் சுருட்டலாம் என்று பேச்சுக்கிடையே கணக்குப் போட்டுப் பார்த்த கந்தப்பர் குலசிங்கத்தின் இந்தப்பிரேரணையைப் பலமாக ஆமோதித்து, அவனை ஆறுதல் வார்த்தைகள் கூறி வாழ்த்தி அனுப்பிவிட்டு சோமலிங்கம் வீட்டுக்கு வந்திருந்தார்.
“என்ன, விஷயத்துக்கு வாருங்கள் ஏதாவது. சோமலிங்கம் இரவு ஏற்பட்ட துன்பகரமான அந்த நிகழ்ச்சியை மறக்கச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கேட்டார்.
"ஓ! எல்லாம் விஷயமாகத்தான் வந்த நான் உங்கடை பிள்ளைக்கு குலசிங்க மாஸ்டரை."
“ஆரு செல்வராணியைப் படிப்பிச்ச குலசிங்க மாஸ்டரே” “ஓம் ஓம். தங்கமான பொடியன். நல்ல சம்பளம். பெஞ்சன் வரும். கந்தப்பர் கந்தபுராண கடைசிப் பக்கம்வரை பிறப்பு வளர்ப்பு ஊர் பெயர்ச் சிறப்பு வன்றெல்லாம் கூற ஆயத்தமாகிய பொழுது “எனக்கு அவரை நல்லாகத் தெரியும் கொஞ்சக் காலம் என்னோடையும் படிப்பிச்சவர். " என்றார் சோமலிங்கம்.
அது கந்தப்பர் கலாரசனையுடன் கூற இருந்ததைக் குழப்பியது என்றாலும், சோமலிங்கத்தின் முகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
வரவேற்பு உபசரணைகள் முடிந்ததும் கந்தப்பர் நாள் குறிக்கும் நினைப்புடன் கிடைக்கப் போகும் இரண்டாயிரத்திலும் என்னென்ன செய்வது என்று கணக்குப் போட்டுப் பார்த்தபடி நடந்தார்.
சாதகப் பொருத்தம் இல்லாவிட்டாலும் சோதிடருக்கு ஜஞ்சோ பத்தோ கொடுத்தாகிலும் ஆண்டவன் கொடுக்காத அந்தப்பொருத்தத்தை ஏற்படுத்திவிட வேண்டும் ான்றும் கந்தப்பர் தீர்மானித்தார்.
yy
4.

Page 31
சோமலிங்கம் பாடசாலைக்குச் செல்வதற்காகப் புறப்பட்ட பொழுது கந்தப்பர் வந்ததையும் பேசியதையும் பொறுமையுடன் கேட்டிருந்த செல்வராணி பொங்கி வந்த அழுகையையும் அடக்கியபடி சொன்னாள்.
"ஐயா எனக்கா கல்யாணம் பேசுறியள்? குலசிங்க மாஸ்டர் என்னைப்படிப்பிச்சவர். அவரை எனக்குப் பிடிக்கவில்லை. ༡༡.
பொருத்தம் உண்டோ இல்லையோ கூறப்படும் பொருளுக்கு வார்த்தைகளுமா இல்லை? செல்வராணி எதிர்பாராத ஒரு தாக்குதலின் பின் தன்னைப் பெற்ற தந்தையிடமே கூச்சமின்றித் தன் கல்யாணத்தைப் பற்றியும் வரனைப் பற்றிய எதிர்பார்ப்பையும் கூறிவிட்டு அந்த இடத்திலும் நிற்காமல் சென்று விட்டாள்.
சோமலிங்கத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. மகளுடன் வாதாடி, ஏதோ பிரச்சனையால் நொந்து கிடக்கும் அவளை மேலும் வேதனைக்குள்ளாக்க விரும்பாத அவர், “உனக்கு இஷ்டமில்லாட்டி விடு செல்வராணி. கந்தப்பர் வந்தார் முகத்துக்காகப் பதில் சொல்லி அனுப்பினேன். ஏன் அவன் பொடியன் குலசிங்கம் நல்லவன். அவனைப்போல தங்கமான பிள்ளையை நானும் இதுவரை பார்க்கவில்லை" என்றபடி வெளியே நடந்தார்.
குலசிங்கத்துக்கு ஏற்பட்ட துணிச்சலை மிக்க வியப்புடன் செல்வராணி சிந்தித்துப் பார்த்தாலும் அவனால் தனக்கு என்றும் ஏதோவொரு விதத்தில் ஆபத்து உண்டாகலாம் என்பதையும் அவள் தீர்க்கமாக்கிக் கொண்டாள்.
வஞ்சிக்கப்பட்டவர்கள் பழிவாங்குவதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதிலும் வஞ்சனைக்குப் பழி பதிலாகக் கிடைக்கும், கிடைத்தே தீரும் என்பதும் பல சந்தர்ப்பங்கள் காட்டிய உண்மை.
குலசிங்கத்தினால் தான் வஞ்சிக்கப்பட்டாலும் தன்னால் அவனை எவ்விதத்திலும் பழிவாங்க முடியாது என்று உணர்ந்ததும் நெஞ்சம் பொருமினாள் செல்வராணி.
அவனது துரோகச் செயலுக்காகத் தான் அழுத கண்ணிர் வெள்ளமாகி, காலம் என்ற வெம்மையில் காயும் போது அவன் பாதையில் சேறும் சகதியுமாகக் கிடந்து அவனை வழுக்கி விழுத்தும் என்று சபித்தாள் அவள்.
அதே வேளை, கல்யாணப் பேச்சு எழுந்த பொழுது, தான் சம்மதிக்கவில்லை என்பதைக் கேட்டு குலசிங்கம் ஒரு சாராயப் போத்தலுக்காகக் கொலையுஞ் செய்யக்கூடத் தயங்காத குண்டர்களைக் கொண்டு தன்னைக் கெடுக்கலாம் என்று அவள் நினைத்து அஞ்சினாள். அவனால் எடுக்கப்படும் எல்லாவித முயற்சிகளையும் தான் தோற்கடிக்கும் பொழுது அவனே ஒருநாள் தான் தனியே இருக்கும் பொழுது வீட்டுக்கு வந்து தன்னைக் கொலைசெய்து விட்டுப் போகலாம் என்று நினைத்தபொழுது'ஓ' என்று அலறினாள் அவள். அப்பொழுது அவளைத் தவிர அந்த வீட்டில் எந்த ஜீவனுமே இல்லாததால் அவளுக்கு அந்த பொல்லாத உணர்ச்சிகளில் பீதியும் கலந்து குடலைப் பிடுங்குவது போல் இருந்தது.
சுற்றும் முற்றும் பார்த்த அவள் வெளியே நிற்காது உள்ளறைக்குள் ஒடிச் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
வெளியே கடைக்குச் சென்றிருந்த மகாலட்சுமியோ, எங்கோ புகையிலைத் தீர்வைக்காகச் சென்ற சந்திரமோகனோ அப்பொழுது அவளுக்குத் துணையாக இல்லாததையும் எண்ணி எண்ணி அவள் செத்துக் கொண்டிருந்தாள்.
42

இரண்டு வாரங்கள் கழிந்தன. செல்வராணி இரவில் பயங்கரமாக அலறுவதும் தீனக் குரலில் எதையோ சொல்லிச் சொல்லி அழுவதும் நிரந்தரமாகி விட்டதைக் கண்ட சோமலிங்கம் டாக்டரிடம் அவளை அழைத்துச் சென்றார்.
ஊரார் பேய் பிடித்துவிட்டதாகக் கதை கட்டியபொழுது, டாக்டர் அந்த நோய் இன்னவென்று சொன்னதைக் கேட்டதும் சோமலிங்கம் குடும்பமே ஒருமுறை ஒடிந்து வீழ்ந்தது போல இருந்தது.
செல்வராணிக்கு மனஞ்சாரா நரம்பியக்கம் என்ற நியுறோசிஸ் கண்டிருப்பதாக ாக்டர் சொன்னதும் சோமலிங்கம் வாய்விட்டே அழுது விட்டார்.
“தாயில்லாப் பிள்ளை. தனியே கிடந்து என்ன செய்வாளோ!” என்று அவர் தலையில் அடித்துக் கொண்டதும் ஊரார்தற்காலிகமாகத் தமதுவாயை மூடிக் கொண்டனர். எதிர்பாராத நிகழ்ச்சிகளும், ஏமாற்றத்தின்மேல் ஏமாற்றமும் தொடர்ந்து வரும் துயரமும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறிய டாக்டர், செல்வராணியையாரோ எதிர்பாராத விதமாகத் தீண்டியிருக்கிறார்கள் என்று மட்டும் கூறினார்.
அதைக் கேட்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் அவளைத் தீண்டிவிட்டதாக உள்ளுர எண்ணிய பொழுது ஏற்பட்ட குற்ற உணர்வில் அவள்மீது பரிவு காட்டத் தொடங்கினார்.
செல்வராணி வெளியே நிற்பதும், எதனையாவது அல்லது யாரையாவது கண்டதும் நிடீரென்று உள்ளே ஒடி அறைத்ை தாழிடுவதும் வழக்கமாகியிருந்தது.
次次次 次次 次
4.

Page 32
தணல் மூன்று
செல்வராணி தனது கடந்தகால வாழ்க்கை தந்த கொடிய பாடங்களை மீட்டுட் பார்த்தபொழுதுதான் என்றோ எப்பொழுதுதோ அவளை விட்டு எங்கோ போய்விட்டதாயின் நினைவு எழுந்ததும் "அம்மா” என்று வீரிட்டு அலறினாள்.
தன்னைக் காணும் ஒவ்வொரு ஆடவனும் பாலுணர்வுடனேயே பார்ப்பது போன்று அவளுக்கு இருந்தது. அவர்களின் பார்வைகள் எத்தகையது என்பதிலும் அவள் அவர்களுடைய அந்தப் பார்வையை எதிர்பாராத விதமாகவோ உறுதிப்படுத்து முகமாகவோ பார்க்க நேர்ந்த பொழுதெல்லாம் இந்த நினைவையே அவளுக்கு அளிப்பனவாக இருந்தன. கமலேஸ்வரன் படபடப்புடன் ஓடிவந்து செல்வராணி இருந்த அறையைத் திறக்க முயன்ற பொழுது அவளுடைய உணர்ச்சிகள் கொந்தளிக்கும் வேளையில் வழமையாகப் பூட்டப்பட்டிருப்பதுபோல் இப்பொழுதும் அக்கதவு பூட்டப்பட்டே கிடந்தது.
செல்வராணியின் நிலைகெட்ட போக்கு ஒரு பக்கம் அவனுடைய மனதைக் குழப்பி இருந்தாலும் நான்கு பேர் முன்னிலையில் தனக்கு இப்படியும் அவமானகரமான அவளின் செயல்கள் இடம் பெறும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. “செல்வராணி கதவைத்திற. לל கமலேஸ்வரன் சற்றுப் பலமாக கத்தினான் எனினும் உள்ளேயிருந்து அவளின் பதில் எதுவும் வரவில்லை. மூச்சற்றுப்பேச்சற்றுக் கிடப்பவள் போல உள்ளே அவள் கிடந்தாள். கமலேஸ்வரனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த கணேசமணியும், பரமேஸ்வரியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
பரமேஸ்வரியைக் குரல் கொடுக்கும்படி தலையை அசைத்தான் கணேசமணி. “செல்வம் கதவைத் திறவுங்கள்’ என்ற பரமேஸ்வரியின் குரல் கேட்டதும் மந்திரத்தால் கட்டுண்டவள்போல எழுந்த செல்வராணி வந்து கதவைத் திறந்தாள்.
“கமலேஸ். ஆரன் டாக்டரைப் பாருங்கள். பாவம் உங்கள் மனைவி சரியாக இளைத்துப் போயிட்டா” என்று கணேசமணி சொன்னதும் அதனை ஆமோதிப்பவள் போல அவனையே பார்த்தாள் பரமேஸ்வரி
செல்வராணி எதுவும் நடவாதது போல தலையைக் கவிழ்ந்து கொண்டு அரைகுறையாக அவளது தோளில் தொத்தியிருந்த தாவணி அடிக்கடி விழ, அவள் அதனை அள்ளி அள்ளிப் போட்டபடி நின்றாள்.
அழுது அழுது சிவந்து வீங்கிய அவளுடைய கண்கள் எவ்வளவுக்கெவ்வளவு முன்னர் பார்ப்போரை மறுபடியும் பார்க்குமாறு கெஞ்சுவனபோற் காணப்பட்டனவோ அவ்வளவுக்கு அவ்வளவு ஒருமுறை தவறிப்பார்த்துவிட்டாலும் மறுமுறை பார்க்க வேண்டாம் என்று கேட்பன போல் உருண்டன.
அந்தக் கொடூரமான காட்சி சின்னஞ்சிறு குழந்தை ஒன்றை யாரோ அரக்கன் கத்தியால் வெட்டியதால் ஏற்பட்ட காயங்கள் அதன் உடலில் தெரிந்தாற்போல் காணப்பட்டது. அழுது வீங்கியிருந்த அவளுடைய கன்னங்களும் நாசியும் செக்கச் சிவந்திருந்தன.
கமலேஸ்வரன் கணேசமணியையும் பரமேஸ்வரியையும் ஒருமுறை பார்த்தான்.
44

‘டூ சம்திங்" என்று கமலேஸ்வரனுக்குச் சொன்னபடி கணேசமணி தன் வீட்டை நோக்கி நடந்தான். பரமேஸ்வரி செல்வராணியின் ஒரு கையைப்பற்றி அவளுடைய கேசத்தையும் ஒருமுறை தடவிக் கொடுத்துவிட்டு பேசாமலே போனாள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ரமணனையும் ரஞ்சனியையும் படுக்க வைத்துவிட்டு, “சாப்பிடு செல்வராணி, நானும் பிள்ளைகளும் சாப்பிட்டு விட்டம்” என்றான் கமலேஸ்வரன்.
கமலேஸ்வரன் தன் எஞ்சியிருந்த நல்வாழ்வையும் கெடுத்துவிட்டு இப்பொழுது ஒன்றும் அறியாதவன்போல் அவளிடம் அன்பாகப் பேசி நடக்க முனைகின்றான் என்பது போற்பட்டது அவளுக்கு.
சிவந்திருந்த தனது கண்களை மேலும் அகலப் பரப்பி இதழ்களையும் இறுக மூடி அவனை அவள் பார்த்த பொழுது அந்தப் பார்வையை நேரே சந்திக்க முடியாதவனாகி கமலேஸ்வரன் வேறெங்கோ நோட்டம் விட்டான்.
அவன் பார்வையில் வெளியே ஒளிபாய்ச்சிக் கொண்டிருந்த நிலவுபட்டது. அந்தக் காட்சியில் தன்னை, மனத்தைக் குளிர்வித்தவன் போல மீண்டும் சொன்னான்.
"உனக்காகப் பார்சல் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன். எதை நினைச்சு இப்ப இப்பிடிக் கலங்கி நிற்கிறாய்? மனதைக் கண்டபடி அலட்டாமல் சாப்பிடு”
பிள்ளைகளை மட்டும் சாப்பிட வைத்துவிட்டு ஒரு கோப்பைத் தேநீருடன் தனது இராச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மீண்டிருந்த அவன் இப்பொழுது பேசினான். உணர்ச்சிகளை அவனாக அவனே உணர்ச்சிகளாக வாழ்ந்த ஒருவனான கமலேஸ்வரன் செல்வராணியை உணர்ச்சிகளுக்கு இடமளிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டான்.
செல்வராணி இடி இடியென்று சிரித்தாள். “எனக்கு டின்னர் இருக்கா?" என்று அந்தச் சிரிப்பினிடையே அவனைப் பார்த்துக் கேட்ட அவள், திடீரெனச் சிரிப்பை அடக்கியவளாக, கமலேஸ்வரனை விறைத்தபடி நின்றாள்.
கமலேஸ்வரன் உடல் குறுக உள்ளம் நைந்த கோலத்தில் அவளிடம் எதனையோ யாசிப்பவன் போல் நின்று கொண்டிருந்தான். அவளுடைய அந்தக் கேள்விக்குப் பதிலாக நான்கு ஐந்து முறை தனது ஆத்திரம் தீருமட்டும் மொங்கிவிட்டு நிம்மதியாக மூச்சுவிட வேண்டும் என்று அவன் துடித்தாலும், அவனுடைய கண்கள் அவளைப் பரிதாபமாகவும் அனுதாபமாகவும் பார்த்து அத்தகைய கொடிய தாக்குதலை அவள் தாங்கக்கூடிய நிலையில் இல்லை என்பதை உள்ளத்துக்கு எடுத்து ஒதிக் கொண்டிருந்தன.
அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நேரத்தைப் பார்த்தான் அவன். அப்பொழுதுதான் எட்டுமணி முடிந்திருந்தது. தனக்கு ஓரளவு பழக்கமான டாக்டர் ஞானமலரின் நினைவு வந்ததும், அவளிடம் நிலைமையை விளக்கி இந்த அடத்துக்கு வைத்தியம் பார்க்கலாமா? என்ற கேள்வியுடன் வெளியே சென்றான் கமலேஸ்வரன்.
வெளியே அடியெடுத்து வைத்ததும் அவளையும் கேட்டுப் பார்க்கலாம் என்ற நினைவில், “டாக்டரைக் கூட்டி வரட்டுமா செல்வராணி” என்று மிகத் தணிந்த குரலில் கேட்ட கமலேஸ்வரனுக்கு அவள் கொடுத்த பதில், அவன் உயிரை, மானத்தை, இரத்தத்தை பிழிந்தெடுப்பதாக இருந்தது.
“எனக்கென்ன பைத்தியமா? உங்களாலை என்ன கடவுளாலையும் என்னுடைய வருத்தத்தைப் போக்க முடியாது. உங்களாலை முடிஞ்சால் டாக்டரைக் கூட்டியர வேண்டாம். போய் அந்த யமனைக் கூட்டியாருங்கள்?"
45

Page 33
கமலேஸ்வரன் “முடிஞ்சால் அதையாவது செய்யிறன்” என்றபடி வெளியே சென்றான்.
நெருப்பு என்றால் சுடும்; தண்ணிராயின் குளிரும். இயற்கைப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஒரேயொரு தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதே இயற்கையின் பிண்டமாகி உருவான பெண் எப்படிப்பட்டவள்? சுடுவாளா? குளிர்வாளா?
கமலேஸ்வரன் நெஞ்சம் குழம்பித் தத்தளித்தாள். அவன் எத்தனையோ பெண்களுடன் பேசிப் பழகியிருக்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையினர் என்று அவனால் கணக்கிட முடிந்தது. ஒருத்தி பகட்டுக்கு அடிமை. இன்னொருத்திமானத்துக்கு அஞ்சியவள். வேறொருத்தி நேர்மையின் இருப்பிடம். இப்படி ஆயிரம் ஆயிரம் பெண்கள்; ஆயிரமாயிரம் உணர்ச்சி நிலைகள்.
இவர்களும் குடும்பம் என்ற மிகப் பெரியதும் புனிதமானதுமான பந்தத்தில் கட்டுண்டு வாழவில்லையா?
கமலேஸ்வரன் வாங்கிக் கொண்டு வந்திருந்த சோற்றுப்பார்சலைச் செல்வராணி மிக ஏளனமாகப் பார்த்து, “எனக்கு டி(ன்)னர் இருக்கா?” என்று ஏளனமாகவே கேட்டது அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்து இதயத்தின் அடியில் உணர முடியாத ஒர் இடத்துக்குச் சென்று, அவன் ஊறவைத்திருந்த பல சம்பவங்களைப் புத்துயிர்பெறச் செய்து விட்டிருந்தது.
கமலேஸ்வரன் வேலைக்குப் போவதும் வேளாவேளைக்குக் கண்ட, கண்ட கடைகளில் வேண்டியவாறு பசியைப் போக்கிக் கொள்வதுமாக இருந்த பிரம்மச்சாரிய வாழ்வில் தனக்கு ஒரு மனைவி வந்ததும், அவள் தன் கையாலே சமைத்து அன்பொழுக அவனுக்குப் படைத்து விட்டுத் தான் உண்ணும் அழகைப் பார்த்திருப்பாள் என்று கனவு கண்டிருந்தான்.
கல்லும் மண்ணும் கலந்து கூடவே பாக்கும் இடப்பட்டுள்ள கடைச்சோற்றில் ஏற்பட்ட வெறுப்பு மாதத்தில் இருமுறை அவனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வந்தது. யாழ்ப்பாண ஊரிலுள்ள தன் தாயாரின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து, அவள் இன்முகம் காட்டி ஊட்டும் நஞ்சையும் அமுதமாக உண்பதற்காக அவன் ஒடோடி அவளிடம் செல்வான். தாயோடு அறுசுவை போகும் என்று ஏற்கனவே அவனைப் போன்ற ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளாக்கப்பட்ட ஒருவர் சொல்வியிருக்கக்கூடிய அந்த முதுமொழி அவன் வரையில் மாசற்ற உண்மையாகவே இருந்தது.
செல்வராணி அலுவலகத்துக்குப்புறப்படும் அவசரம், பிள்ளைகளைக் குளிப்பாட்டி அலங்கரிக்கும் பொறுப்பு என்றெல்லாம் காரணங்காட்டிச் சமையலை ஒதுக்கி விடுவாள். ஆண்டு ஆண்டுகளாக அந்தக் காலி வீதியில் நிறைந்து கிடக்கும் கடைகளில் உணவுப் பொட்டலங்களைக் கட்டுவதும், அவற்றை வீட்டில் வைத்து உண்பதும் அவனுக்கு இப்பொழுதெல்லாம பழக்கமாகி விட்டது.
தன்மீது அருகதை இல்லாத ஒருத்திக்காகத் தான் வலிந்து வாங்கி வந்த அந்த உணவுப் பொட்டலத்தை அவள் ஏளனமாகப் பார்த்ததும், பேசியதும் அவனை உறுத்திக் கொண்டே இருந்தது.
கமலேஸ்வரன் டாக்டர் ஞானமலரிடம் பல நிகழ்ச்சிகளைக் கூறியதும், அவளுக்கே அவன்மீது ஒரு பரிவுணர்ச்சி எழுந்தது. அவனுடைய ஆண்மையே அவனை விட்டு எங்கோ வெகுதூரம் சென்று விட்டிருந்ததை டாக்டர் ஞானமலரால் வெகுவாக உணர முடிந்தது.
46

கவலைகளின் மூழ்கடிப்பில் அவனது முகம் சுருண்டு கறுத்திருந்தது. கண்களுக்குள் இரண்டு கொத்து எண்ணெய் வார்க்கும் அளவுக்கு அவை உள்ளே இழுக்கப் பெற்றவையாகவும், ஒளியிழந்தும் களை இழந்தும் காணப்பட்டன. இருப்பினும் அவனது கலையுணர்வு அவற்றிலே நிரந்தரமாக ஊறிவிட்டதாலோ என்னவோ அவனுடைய அந்தக் கண்கள் இனம் புரியாத வசீகரத்தைக் கொடுத்தன.
கமலேஸ்வரனையே பழிவாங்காமல் பார்த்திருந்த ஞானமலர் தனக்குள் எதையோ எண்ணிப் புன்முறுவல் பூத்தபடி,"உங்கள் மனைவிக்குமருந்து என்று கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால்டிரக்ஸ்மட்டுமல்ல வார்த்தைகளும் சில நோயாளிகளுக்கு மருந்தாகலாம். உங்கள் மனைவிக்கு இருக்கக்கூடிய இந்த வருத்தம் மனஞ்சாரா நரம்பியக்கம் (நியூறோசிஸ்) போன்றது. அவளை நீங்கள் அல்லது அவளுடன் சம்பந்தப்பட்ட யாரோ மிகவும் கொடுமையாக நடத்தியிருக்க வேண்டும்" என்று கூறிநிறுத்தியபடி கமலேஸ்வரனைப் பார்த்தாள் ஞானமலர். எளிமையும், அடக்கமும், தெய்வீகமும் நிறைந்திருந்த ஞானமலரின் கண்கள் தன்னையே நிறுத்தமாகப் பார்த்ததும், அந்தப் பார்வைக்குச் சளைத்தவனாகி கமலேஸ்வரன் யன்னலுக்கு வெளியே பார்த்தான்.
அவனுடைய கண்களைப் பிற பொருள் ஒன்று கவ்வுவது போன்றிருந்தது. அங்ங்ணம் கவ்வும் அப்பொருள் கண்களின் ஊடாகச் சென்று தனது இருதயத்தை இரக்கமின்றி சம்மட்டி கொண்டு அடிப்பது போலவும் பட்டது அவனுக்கு,
ஞானமலரின் வார்த்தைகளில் நெழிந்த தீர்க்கதரிசனம் அவள் இளவயதான குடும்பப் பெண்ணாக இருந்த பொழுதும் முதிய மிகமிக முதிய ஒரு கைதேர்ந்த டாக்டர் என்பதை யாருக்குமே வெளிக்காட்டியது. செல்வராணியை ஒருமுறை தானும் இப்படிப்பட்ட நிலையில் பரிசோதித்துப் பார்க்காமலே அவள் இன்ன வருத்தமாக இருக்கலாம் என்று கூறியது கமலேஸ்வரனுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக இருந்தது.
அவனுடைய விழிகள் தன்னை எண்ணி ஆச்சரியத்தில் மிதப்பதாக உணர்ந்த ஞானமலர், அழகாக ஒருமுறை மெல்லச் சிரித்துவிட்டு," எனக்கு வேலை முடிந்துவிட்டது. டங்களைப் பார்க்க என்னவோ செய்கிறது. அதற்காக உங்களோடு வருகிறேன்” என்று தன்நிலையை வெளிப்படையாகவே சொன்னாள்.
பெண்கள் எந்த உயர் பதவியை வகித்தாலும், உயர்நிலையை அடைந்தாலும் அவர்களுக்கென்றே இயற்கை ஒதுக்கிக் கொடுத்த சில குணநலன்கள் இருந்தே தீரும். அக்குணநலன்களுள் தம் மனதிற் பட்டதை அப்படியே வெளியிற் சொல்லாமல் எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிக்கும் தன்மையும் ஒன்று என்பதை ஓரளவு அனுபவரீதியாகக் கண்டிருந்த கமலேஸ்வரன் ஞானமலர் பட் பட் டென்று பேசி முடிப்பதைக் கேட்கக் கேட்க ஆவல் பூண்டவனாகி, அவன் தனது இருக்கையை விட்டு எழுந்தும் அவளையே பார்த்த வண்ணம் அசையாது இருந்தான்.
ஞானமலர் அவனைப் பார்த்து மறுபடியும் சிரித்துவிட்டு,"எங்கும் இல்லை. உங்கள் வீட்டுக்குத்தான் போகிறோம், வாருங்கள்” என்றபடி காரை நோக்கி நடந்தாள். அவளுடைய அந்த மெல்லிய கைகள் வழமையாகக் கொண்டு செல்லும் மருந்து கேஸ் இன்றி, வெறுமனே ஆடிக் கொண்டன.
அவள் வெளியே வருவதைக் கண்ட அவளுடைய தந்தை அவளிடம் எதனையோ கேட்பதுபோல் பார்த்ததும் கமலேஸ்வரனுடைய வீட்டு விலாசத்தை அவனிடம் கேட்டு அங்கே போவதாகத் தந்தையிடம் கூறினாள்.
7

Page 34
வழக்கமாக இருட்டு வேளைகளில் எங்கேயும், போகாத ஞானமலர் இன்றிரவென்று கமலேஸ்வரனுடன் வெளியே போவது அந்த முதியவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனாலும் அவர் அதனை வெளிக்காட்டவில்லை.
ஞானமலர் தந்தைக்கும் ஒரு சிரிப்பை விடையாகக் கொடுத்தபடி புறப்பட்டு கமலேஸ்வரனுடைய வீட்டுக்கு வந்த பொழுது, நேரம் எட்டே முக்காலாகியிருந்தது.
சலனம் எதுவுமற்ற முறையில் டாக்டர்களுக்கு தயக்கம் இல்லை என்ற உணர்வுடன் ஞானமலர் அந்தக்குச்சு வீட்டுக்குள் நுழைந்தாள்.
டாக்டர் ஞானமலரைக் கண்டதும் துணுக்குற்ற செல்வராணி, தன்னைச் சமாளித்தபடி கைகளைக் கூப்பியபடி, “குட் ஈவினிங் டாக்டர்’ என்றாள். அவள் அப்பொழுது நடந்து கொண்ட விதம் பண்பட்ட யாழ்ப்பாண மண்ணில் பிறந்த அவள் ஆங்கில மோகத்தால் எவ்வளவு தூரம் பீடிக்கப்பட்டுள்ளாள் என்பதைக் காட்டியது.
ஞானமலர் நிதானமாக “குட் ஈவினிங்" என்றுவிட்டு யாரும் அமருங்கள் என்று கூறு முன்னரே, ஒரு கதிரையிற் கிடந்த விளையாட்டுப் பொருட்களை எடுத்து மேசையில் இட்டமிட்டபடி அமர்ந்து கொண்டாள்.
பெருமையற்றதும் தன்நிலை உணர்ந்ததுமான அவளுடைய அந்தச் செய்கையால் மின்சாரம் பாய்ச்சப் பெற்றவர்கள் போலான அந்தத் தம்பதிகள் ஒருவரை யொருவர் பார்த்து முறுவலித்து, ஞானமலரை விழிகளால் மெச்சினர்.
இந்தக் காட்சியை அவதானித்துவிட்ட ஞானமலர், “நிற்கிறீர்களே! இருங்களன்” என்றபடி இருவரையும் பார்த்தாள்.
அந்த மூவருக்கும் போதியதான தொகையிற் கிடந்த அந்தக் கதிரைகள் அவர்களைத் தாங்கிக் கொண்டு நிம்மதியாயின.
"நான் சும்மா வந்திருக்கிறேன். உங்களுக்கு உடல்நலம் இல்லை என்று உங்கள் கணவர் சொன்னார். இருவரையும் ஓரளவு பழக்கமாதலால் நேரத்தையும் பார்க்காமல் புறப்பட்டு வந்துவிட்டேன்"
"அதுசரி! உங்களைப் பார்த்தால் உடம்புக்கு ஒன்றுமில்லையோலத் தெரிகிறது" குறும்பாகப் பார்த்தபடி கூறிய ஞானமலர், தனக்கு அருகாக அமர்ந்திருந்த செல்வராணியின் கையை நாடி பார்ப்பதுபோல் பற்றினாள்.
ஞானமலரின் மெல்லிய ஸ்பரிசத்துடன் குளுகுளுப்பானதும் குறும்பு நிறைந்ததுமான வார்த்தைகளைத் கேட்டதும் செல்வராணியின் உள்ளம்பன்னீரால் ஆட்டியது போல் ஆகியது.
தொலைவிலிருந்து பூத்தமலர் அருகில் வந்து மணப்பது போன்ற பிரமையும் அவளுக்கு உண்டானது. செல்வராணி தன் முகத்தைத் தாவணியால் அடக்கமாகத் துடைத்தபடி ஞானமலரைப் பார்த்து அன்பொழுகச் சிரித்தாள். இந்தச் சிரிப்பை எங்குதான் ஒளிக்கிறாள்?
கமலேஸ்வரன் தன் மனைவியின் சிரிப்பில் கண்ட புதுமையைக் கண்டு வியந்தபடி தன்னையே கேட்டான்.
அவன் தனது கேள்விக்குத் தானே பதிலும் காணுமுன் டாக்டர் கேட்ட கேள்வியால் முகம் சுண்டி நின்றாள் செல்வராணி
48

செல்வராணியினுடைய முகம் ஒரு விதத்தில் பேயறைந்தாற் போலவும் ஆகியது. விழிகளை அங்கும் இங்கும் அலையவிட்ட அவளின் நிலையைப் புரிந்து கொண்ட ஞானமலர் “எக்ஸ்கியூஸ் அஸ் பிளிஸ்” என்று கூறியதும் கமலேஸ்வரன் எழுந்து வெளியே சென்றான்.
அப்பொழுது அதே கேள்வியை ஞானமலர் திரும்பவும் கேட்பது அவனுடைய செவிகளில் இலேசாகக் கேட்டது.
“இன்றைக்கு முழுவதும் எங்கெங்கே போனீர்கள்? செல்வராணி ஒன்றையும் மறைக்காமல் சொல்லுங்கள். உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படும்படியாக என்ன நடந்தது?”
செல்வராணி விம்மத் தொடங்கினாள்.
"நான். நான்.”திக்கிதிக்கி வெளிவரத் துடித்த வார்த்தைகளை அவள் மென்று விழுங்கினாள். அவள் தான் பெற்ற சிசுவை சமூகம் என்ற பிசாசுக்கு அஞ்சி, தானே கொல்லும் ஒரு கன்னியின் நிலையில் இருந்தாள்.
2
செல்வராணி அழுது கொண்டே சொன்னாள். “என் வாழ்க்கை மிகப் பயங்கரமான சம்பவங்களைக் கொண்டது டாக்டர். அந்தச் சம்பவங்களை நினைத்தால், அந்தச் சம்பவங்களால் நான் பட்ட வேதனையை நினைத்தால் எனக்கு வாழ்க்கையே பிடிக்காமல் போய்விடும். நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் இப்படி வளர்ந்தேன்? என்றெல்லாம் நான் என்னையே பல தடவைகள். ஒ சாகும்வரையும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்"
செல்வராணி தனது வாழ்க்கையை டாக்டர் ஞானமலரிடம் ஒப்பிக்க வேண்டும் என்ற துடிப்பில் மிக நிதானத்துடன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள்.
அவளுடைய உடல் பதறுவதையும் கைகள் நடுங்குவதையும் அவதானித்த ஞானமலர், அந்தக் கைகள் அப்படி நடுங்குவதைத்தான் கண்டுவிடக்கூடாதே என்ற பலவந்தமான உணர்வில் செல்வராணி கதிரை விளிம்புகளைப் பற்றியதும், அந் நடுக்கம் மேலும் பன்மடங்கு அதிகரிப்பதைக் கண்டதும் பெண் என்ற தன்மையில் சிறிது வேதனைப்பட்டாள்.
“கைகளை எடுத்து மடியில் வைத்திருங்கள்” என்று ஞானமலர் கூறியதும், தான் எடுத்த பிரயத்தனத்தையும் விட்டு, டாக்டர் ஞானமலரிடமிருந்து தான் எவ்விதத்திலும் தப்ப இயலாது என்ற தோல்வி உணர்வில் அவ்வாறே செய்தாள். அப்படி அவள் கைகளை மடியில் சாய்த்ததும் ஏற்பட்ட சோர்வில் மேலும் கூனி அமர்ந்து வேதனையுடன் சிரித்தாள்.
“உங்களைப்போல ஒரு பெண் என்ற நினைவுடன் சொல்லுங்கள்” என்றபடி தனது கைகளை மேலுயர்த்தி நெஞ்சோடு பின்னினாள் ஞானமலர். கால்களையும் முன்புறமாக நீளும்வரை நீட்டி ஒய்யாரமாக ஒன்றன்மீது ஒன்றாக இட்டபடி ஞானமலர் இருந்த தோற்றத்தில் சற்று இலயித்துப் போன செல்வராணி தன்னையும் அறியாது தனது கால்களை உள்ளிழுத்து கதிரையின் கீழே சாய்த்தபடி இருக்க முனைந்த பொழுது மடி அகன்றதும் ஏற்பட்ட சுகத்தில் தொடர்ந்தாள்.
“எனது பிறப்பு, வளர்ப்புப் பற்றிப் பிரமாதமாகச் சொல்வதற்கில்லை. ஆனாலும் ஒரு சாதாரண செல்வக் குடும்பத்தில் பிறந்து முழுச் செல்வமாக வளர்ந்தவள் நான். எனக்குத் தாயின் அன்பு தெரியாது.”
49

Page 35
“எல்லாந் தெரியும் எனக்கு நீங்கள் குமராக இருந்த காலங்களில் ஏதாவது நடந்ததா? ஏதாவது என்னும் பொழுது உங்களுடைய சம்மதத்துடன் சரி, விருப்பத்துக்கு மாறாகச்சரி ஏதாவது தீங்கு நேர்ந்ததா? தாயைப் போலவும் தந்தையைப் போலவும் உங்களை வளர்த்த தகப்பன், அல்லது அண்ணன்மார் அல்லது சுற்றத்தார் அல்லது. சேர்ந்தவர்கள்."
ஞானமலர் தான் எதிர்பார்க்கும் அந்த அதிர்ச்சியைச் செல்வராணி இனம்புரிந்து சொல்வதற்கு வசதியாகப் பேசி முடித்தாள்.
“ஒன்றுமில்லை”
“பொய் சொல்லக் கூடாது செல்வராணி. நான் சாதாரண டாக்டர் மட்டும் அல்ல. ஒரு நியூறோலஜிஸ்ட் என்பதையும் மறக்க வேண்டாம். நீங்கள் சொல்வதில் உண்மை மட்டும் எனக்குக் கேட்கும். உண்மையையும் பொய்யையும் பிரித்துப் பார்க்க என்னால் முடியும். பாலையும் தண்ணீரையும் பிரித்துக் குடிக்குமாமே அன்னம். அதுபோல.” என்று சிரித்தபடி கண்களையும் சிமிட்டி செல்வராணிக்கும் சிரிப்பு ஊட்டினாள் ஞானமலர். சிரிக்கும்படி தன்னை மானசீகமாகக் கேட்டுக் கொண்டதான அந்த அன்பு கலந்த ஆணையில் கட்டுண்ட செல்வராணி ஒரு கணம் சிரித்துவிட்டு கூறினாள்.
“என் கன்னிப் பருவம் கண்ணீரில் ஒடிய ஒன்று நான் இருவரால் கெடுக்கப்பட்டேன் என்று ஊர்கதைகட்டியது.அந்த இருவருடனும் நான் ஏதோவொரு விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தது உண்மை. ஆனால் ஒன்று எனக்குத் தெரியாத பருவத்தில் நடந்தது. மற்றது."
"சொல்லுங்கள்"
"விருத்தெரிந்த காலம். ஆனால் என் விருப்பத்துக்கு எதிராக. அதனாலும் நான் என் கற்பை இழக்கவில்லை. மனத்தளவிலும் சில ஆரம்ப விஷயங்களிலும் மாசுபடுத்தப்பட்டு விட்டேன்"
செல்வராணியின் கண்கள் இருண்டும் கசிந்து வந்தன.
அதைப் பொருட்படுத்தாமல் சந்திரனால் தான் படிப்பை இழந்ததையும் குலசிங்கத்தால் தான் தன்னை இழந்து தனியே தவித்ததையும், அதனால் மனநோய் கண்டு சிகிச்சைகள் நடைபெற்றதையும், அந்த மனநோயே பேய்பிடித்த ஒன்று என்று எழுந்த கதைகளால் தான் மாந்திரீகர்களின் கைக்குள் சிக்கி எத்தனையோ விரதங்கள், அனுட்டானங்கள் என்பனவற்றை மேற்கொண்டதையும் அப்படி அப்படியே சொன்னாள் செல்வராணி,
'உம்' என்று எழுந்த தனது உணர்ச்சிகளின் தொகுப்பாகிய அந்தப் பெருமூச்சை வெளியே விட்ட சுகத்தில் தொடர்ந்தாள் செல்வராணி,
"ஆண் கொள்ளும் காதல் அவன் வாழ்க்கையில் ஒரு பகுதி. பெண் கொள்ளும் காதல் அவள் முழுவாழ்வாகும். அவள் உயிரே அதில்தான் தங்கியிருக்கிறது. நீங்கள் அப்படி ஏமாற்றப்படும்படியாக யாரையும் காதலித்தீர்களா?”
“இல்லை”
“உங்கள், கணவரை?”
ஞானமலர் எதனையோ தீர்க்கமாக எதிர்பார்த்துக் கேட்டாள். டாக்டர் என்ற முறையில் அவளுக்குத் தேவைப்பட்டது அந்த, தனது கேள்விக்கான பதில்.
செல்வராணி மகுடி முன்னர் ஆடும் நாகம்போல், பாகனின் துறட்டிக்குள் அவன் சொல்வனவற்றையே செய்து தன் நிலையை, தன் பலத்தை மறந்த யானை போல் தெய்வம்முன் பக்தைபோல் கேட்பதைச் சொல்லவும் செய்யவும் தயாராக இருந்ததால், “இல்லை” என்று அடித்தாற்போலவும் அழுத்தந்திருத்தமாகவும் கூறினாள்.
50

“நன்றாக யோசித்துத்தானே சொல்கிறீர்கள்?"
"இதில் யோசிக்க என்ன இருக்கிறது?” “உங்களுடைய குழந்தைகள்.?” “அவை உணர்ச்சிகளுக்குப் பிறந்தவை. அவருக்கு என்னைத்
தேவைப்பட்டதுபோல், எனக்கும் அவரை வேண்டிய பொழுது.
“சரி, அவரை விரும்பியா கல்யாணம் செய்தீர்கள்?" “யாழ்ப்பாணத்திலே பிறந்து வசைக்கும் ஆளான ஒரு பெண் தனக்கு ஒரு கணவனை விரும்பி முடிக்க இயலாது என் வரையில் அந்தச் சமூகத்திடமிருந்து விடுதலை தேவைப்பட்டது. அவர் கொழும்பிலேயே நிரந்தரமாகத் தொழில் செய்வார்; எக்காரணங் கொண்டும் யாழ்ப்பாணம் வரமாட்டார் என்பது தான் அவரின் முதல் பிடித்த விஷயம். இரண்டாவது அவர் உண்மையில் மிகவும் நல்லவர். ஆனால் .
"ஆனால்..?” ஞானமலர் கேட்டாள். “என்னால் அவரைக் காதலிக்க முடியவில்லை. கல்யாணம் பேசி முற்றாகியதும் என்னைப் பெண் பார்க்க வந்த பொழுது அவர் என்னை ஒரு இச்சைப் பொருளாகப் பார்த்தாரே தவிர, பெண்ணாக, மனைவியாக, காதலியாகப் பார்க்கவில்லை. அப்படி அவர் உணர்வு பெற்றிருந்தாலும் அதைக் காட்டவில்லை. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரைக் கணவனாக மட்டுமே மதிக்கிறேன். என்னுடைய ஆசாபாசங்களுக்கு உகந்த காதலனாக நான் காணவில்லை. ஆனாலும் எனக்கு ஒரு நிம்மதி.”
“என்ன?” “என்னைத்தான் எல்லோரும் நேசிக்கிறார்களே தவிர என் இதயத்தை நேசிக்கவில்லை. இதயத்தை நேசிக்கும் ஒருவரை நான் பார்த்திருக்கிறேன்.”
‘சாகப் போகிறேன் என்பவனுக்கு மருந்து கொடுக்க இயலுமா? உங்கள் இதயத்தை உங்களை விரும்பும் ஒருவனுக்குத் திறந்து காட்டியிருக்கலாம். அப்பொழுது அது பச்சையா சிவப்பா அல்லது உண்மையிலேயே வெள்ளையா என்று அவனால் பார்க்க முடியும். அதன்படி நடக்கவும் முடியும்"
“உண்மைதான் டாக்டர் அதுதான் சொன்னேனே. தானாக விரிய இருந்த மலரின் இதழ்களை அலமலக்காகப் பிய்த்து மணத்தைக்கூட நுகராமல் தேனைப் பருகாமல் உள்ளே என்ன இருக்கிறது என்று மட்டும் பார்த்து விட்டுச் சென்ற மூடர்களால் நான் இப்படி ஆனேன். சிதறப்பட்ட இதழ்கள் விழுந்து தொங்க மலர்ந்த மலர் நான். இனி தலைக்கும் உதவ மாட்டேன். தெய்வத்துக்கும் அர்ச்சிக்கப்பட மாட்டேன்"
மற்றது." “என்ன?” ஞானமலர் அவள் பேசுவதில் ஏற்பட்ட தெளிவைக் கண்டதும் ஆவலோடு கேட்டாள். செல்வராணி கூறினாள்:
“என் வாழ்க்கையே பல விபத்துக்களைக் கொண்டது. அந்த விபத்துக்கள் எல்லாமே வசையின் உருவத்தில் என்னைச் சூழ்ந்து கொண்டன. நான் வேலை செய்யும் கம்பனிடைரக்டர் ஒரு வெளிநாட்டவர். அவருடைய குடும்பம் எல்லாம்டில்லியில் இருக்கிறது. அவர் இங்கு கல்யாணஞ் செய்தும் பிரம்மச்சாரியாக இருக்கிறார். பெரிய பங்களா எடுத்து அங்கு நான்கு ஐந்து வேலைக்காரர்களை வைத்து அவர் குடும்பம் நடத்துகிறார். வயதில் சற்று முதியர். ஆனால் பார்ப்பதற்கு, பேசுவதற்கு, பழகுவதற்கு மிகவும் இனியவர்.
s

Page 36
என்வரையில் இதை யாராவது தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றால் மிஸ்டர் ராயைப்போல, அதுதான் அவருடைய பெயர், ஒரு சுவீட் ஜென்ரில்மனை நான் என் வாழ்க்கையிலேயே காணவில்லை"
“என்னுடைய வாழ்க்கை எப்படி முடிந்தாலும் எனக்குக் காரியமில்லை. நடந்து விட்ட சம்பவங்களைவிட அந்த முடிவு அவ்வளவு கொடியதாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. நாங்கள் பிறப்பதும் வளர்வதும் ஒரு அர்த்தமான வாழ்க்கை வாழ்வதற்குத்தான். அர்த்தமான வாழ்க்கை உகம் என்னைப் பொறுத்தவரையில் புதுமையோடு உலகத்தோடு போவதுதான். இதற்காக நாங்கள் ஒபண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் பிதற்றி, கற்பு கற்பு என்று பேசி அந்தக் கற்பையே கொலை செய்து வாழ எனக்கு விருப்பமில்லை"
“என்னைக் கெடுத்தவர்கள் என் மனதைப் புண்ணாக்கி இந்த நிலைக்கு விட்டவர்கள் இந்த கற்பு பேசுகிற குலத்திலே வந்தவர்கள்தான் என்றால், அதை யோசித்துப் பார்க்கும்பொழுது எவ்வளவு கீழ்த்தரமாகத் தெரிகிறது. நான் ஒரு கலவரத்தால் பாதிக்கப்படவில்லை. ஏன்? தமிழ்ப் பெண்களுக்கு தமிழர் அல்லாத பிற இனத்தவர்கள் தருகின்ற மதிப்பு அவர்களது குலத்தில் பிறந்தவர்கள் தருவதில்லை. யாராவது இதை மறுக்கட்டும் பார்ப்பம்.
"நான் வேலை செய்யும் கந்தோரில் வெளிநாடுப் பாணியில் தொழில் நடக்கிறது. பேர்சனில் அஸிஸ்டன்ட் என்றால் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு நான் எந்நேரமும் மிஸ்டர் ராயினுடைய அறைக்குள்ளே இருக்கிறேனாம். அவருடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் காலத்தைக் கழிக்கிறேனாம். இன்னுமின்னும் எத்தனையோ. எங்கள் தமிழ் ஊழியர்களே வம்பளக்கிறார்கள். ஒரு தமிழச்சிக்கு எவருமே வசை வைக்க மாட்டார்கள், அவளுடைய குலத்தவன் ஒருவனைத் தவிர அவ்வளவு தூரம் வம்பளக்கிற காரியத்தில் நாங்கள் முன்னேறியிருக்கிறோம்.
எங்காவது பஸ்ஸில் அல்லது பொது இடத்தில் ஒரு பெண்ணுக்கு உணர்ச்சி வசப்பட்ட கொடூரம் ஏற்படும் என்றால் அது எங்களுடைய ஒருவனாகத்தான் இருப்பான்.
இவர் கமலேஸ்வரன்கூட இந்தக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்பார். அவற்றை என்னிடம் சொல்லாமல் வேறு வேறு வழிகளில் தினமும் என்னை வார்த்தைகளால் சித்திரவதை செய்கிறார். நான் லிப்ஸ்டிக் பூசுவதும் ஸ்டைலாக உடுப்பது ஒன்றும் இவருக்குப் பிடிக்காது. இவர் ஒரு ஆட்டிஸ்டாக இருந்ததுதான் நான் இவரைக் கல்யாணம் செய்யச் சம்மதிக்க வைத்தது. அது வெள்ளைக் கடதாசியில் வண்ணம் பூசி அதனை அழியா ஒவியங்களாக்கி தான் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பார் என்ற உணர்வில் அதே போன்று என்னையும் வைப்பார் என்று நம்பினேன். அந்த ஆசையில், கனவில் என்றோ இடிவிழுந்து விட்டது. இவற்றை யோசித்தால் எந்தப் பெண்ணாவது அழாமல் இருப்பாளா? அவளுக்கு என்ன வருத்தம்தான் வரமாட்டாது” என்றபடி இளைக்கத் தொடங்கினாள் செல்வராணி
ஆறுதலாக அமைவாக இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் அவள் தன் அலைக்கழிந்த வாக்கையை இலக்கு இன்றிச் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஞானமலர் "இவ்வளவுதான் வாழ்க்கையா?” என்று கேட்டாள்.
“வாழ்க்கை ஒவ்வொருவரைப் பொறுத்த வரையிலும் வேறுபட்டது. அது ஒரு விதத்தில் கண்ணாடி போன்றது, யார் யார் பார்க்கின்றார்களோ அவர்களை மட்டும் அந்தக் கண்ணாடியில் காணலாம், என் வரையில் என் வாழ்க்கை இவ்வளவுந்தான். நான் சிறகு கொண்டு பறந்து திரிந்து அந்த இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் ஆதரிப்பார்,
52

அனாதரிப்பார் யாருமின்றி அவலப்பட்டிருக்கிறேன். கல்லூரிப் படிப்புமில்லை, கலகலப்பான பறவுமில்லை என்று என் சொந்த வீட்டிலேயே சிறைப்பட்டுக் கிடந்திருக்கிறேன். ஐயா அவர்தான் என் தந்தை, என்னை எவ்வளவுக்கு செல்லமாக வளர்த்தாரோ அவ்வளவு கட்டுப்பாடாகப் பின்னர் நடந்து கொண்டார். நான் கேட்கிறேன். இந்த நாடகம் எல்லாம் ரன்? பெண் வளர்ந்த பின்னர் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்பது முட்டாள் தனமான கருத்து. சிறுமியாக இருக்கும்பொழுது அவளுக்கு பொறுப்புக்களை உணர்த்தி, மார் உலகத்தைக் காட்டிவிட்டால் வளர்ந்து வரும்பொழுது தனது பொறுப்புக்களை ஊர் உலகத்து நடப்புகளுக்கு ஏற்றபடி அவளால் நிறைவேற்ற முடியும் இங்கு என்னடா என்றால் ால்லாம் தலைகீழாக இருக்கிறது
நான் சொல்வது இதுதான். ஒரு சமூகம் கட்டுப்பாடானதாக இருந்தால் அது குற்றமில்லை. ஆனால் பாதி கட்டுப்பாடும் மீதி தான்தோன்றித்தனமாகவும் இருக்கக் கூடாது. மற்றது, கற்பு என்று பேசி போற்றிக் காக்க முனைபவர்களே அந்தக் கற்புக்கு விலைகேட்டு ஏலம் போடக் கூடாது.
இல்லை டாக்டர், கேட்கிறேன்! கண்ணகி கற்புள்ளவள். அவளைப் பொலவே ால்லாத் தமிழ்ப் பெண்களும் இருக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்தமான 'ஹம்பக் இல்லையா? அப்படியானால் கணவனுடைய தேவைகள் என்ன என்று அறியாது சிலைபோல் இருந்துவிட்டு, கணவன் தன்வழியே கெட்டு அழிந்ததும் சமூகத்தின்மீது அல்லது சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும்? அந்த நிலையில் வேறு விதமாகப் பார்த்தால் கண்ணகி ஒருத்திதான் அக்காலத்தில் கற்போடு இருந்தவளா? என் வரையில் எனக்கு இந்த மாதிரியான கற்பு தேவையில்லை. நான் இப்படி சொன்னதும் பலர் என்மீது கோபிக்கலாம். மறைவாக ஆடுகின்ற துர்நாடகத்திலும் ஒளிவு மறைவு இன்றிச் சொல்பவளுடைய நாக்குக் கற்புள்ளது அல்லவா டாக்டர்?"
ஞானமலர் வியந்து சிரித்தபடி தலையை மடும் ஆட்டினாள். இப்பொழுதும் அவள் பழைய இருக்கை நிலையிலேயே இருந்தாள். செல்வராணிக்கு மனநோய் போன்ற ஒருவகை வருத்தம் ஏற்பட்டு முற்றிவிட்டது என்று ஞானமலர் எண்ணியது சற்று மாற்றக்கூடிய அபிப்பிராயமாக இப்பொழுது இருந்தது.
அவர்கள் பேசி முடித்து விடுவார்கள் என்ற உணர்வுடன் காலி வீதி மருங்கில் சற்று உலாவி விட்டு வீட்டுக்குள் கமலேஸ்வரன் நுழைந்ததும் அவனைக் கண்ட செல்வராணி ஏதோ சொல்ல எழுந்த நாவையும் முடக்கியபடி விழிகளை வேறுபக்கம் அலைய விட்டாள்.
கமலேஸ்வரனை ஞானமலர் பார்த்ததும் அவன் அமைதியான புன்னகையை வீசியபடி உள்ளறைக்குச் சென்று கட்டிலில் அமரப் போகையில் "மிஸ்டர் கமலேஸ்வரன் உங்களுடைய மனைவியோடு கதைத்துக் கொண்டு போகலாம்போல இருக்கிறது. அவள் என்னுடைய வருத்தத்திற்கு நல்ல மருந்துபோல இருக்கிறாள்" என்றாள் ஞானமலர்.
“யெஸ் யெஸ்" என்ற கமலேஸ்வரன் மறுபடியும் சிரித்துவிட்டு அமைதியானான். அப்பொழுது அடுத்த வீட்டிலுள்ள கடிகாரம் பத்துமுறை அடித்து ஓய்ந்தது, அந்த அமைதியான இரவுப் பொழுதில் தெளிவாகக் கேட்டது.
ஞானமலர் தனது கைக்கடிகாரத்தைப்பார்த்து,"மை குட்நெஸ், ரென் ஒகுளொக்" ான்றாள்.
“நாளை மாலை எனது கிளினிக்குக்கு வாருங்கள். அங்கு சந்திக்கிறேன்” என்றபடி, போவதற்கு எழுந்தாள் ஞானமலர்.
53

Page 37
துணைக்கு நானும் வருகிறேன்?" என்று கேட்ட கமலேஸ்வரனைப்பார்த்துஓரளவு பெரிதாகச் சிரித்த ஞானமலர், "ஒரு பெண்ணுக்கு உலகத்தில் யாருமே துணையாக இருக்க முடியாது. அவளுக்கு அவள்தான் துணை” என்று கூறினாள். ஞானமலர் அப்படிக் கூறிவிட்டு செல்வராணியைப் பார்த்து “இல்லையா? செல்வராணி" என்று கேட்டாள்.
ஞானமலரின் கேள்வியை சங்கடத்துடன் விளங்கிக் கொண்ட செல்வராணி, வலிந்து சிரித்தாள். அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டே காரை நோக்கி நடந்தாள் ஞானமலர்.
3
பகலில் ஒருவரையொருவர் உண்டு முடிப்பதுபோல நடந்து கொள்ளும் தம்பதிகள் இரவைக் கண்டதும் அதன் கொடுமைக்காகவோ, தனிமை இரவில் பொல்லாதது என்பதற்காகவோ ஒன்றுபடுவது இயற்கையாகி விட்டது.
மனித மனம் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அப்பட்டமான சுயநலமுடையது என்பதுதாம்பத்தியத்தின்போதுதான் பலருக்குத் தெரியவரும். எங்கு நான் என்ற பிரயோகம் இருக்கின்றதோ, எங்கு தன்தலை உயர வேண்டுமென்ற கொள்கை நிலவுகின்றதோ அங்கு சுயநலம் என்பது வாழத் தொடங்கும்.
கமலேஸ்வரனையும் செல்வராணியையும் பார்ப்பவர்களுக்கு இப்படியான எண்ணம் எழுந்தாலும் எழும். அது அவர்கள் வாழ்க்கை.
செல்வராணி அன்றிரவு ஒன்றும் சாப்பிடாமலே படுத்து உறங்கிவிட்டாள். டாக்டர் ஞானமலரோடு நடந்த உரையாடல்கள் அவளுக்கு ஓரளவு ஆறுதலை அளித்திருந்தன என்பதும் என்னவோ உண்மைதான்.
டாக்டர் ஞானமலர் போன்ற ஜீவன்களைக் காண்பதற்கும் உரையாடுவதற்கும் அவள் அடிக்கடி தனக்குச் சுகவீனம் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டத் தயாராகியிருந்தாள்.
மறுநாள் விடிந்ததும் கமலேஸ்வரன் அலுவலகத்துக்குச் சென்று விட்டான். மனதில் திடீர் திடீரென ஏற்படும் பயங்கர நினைவுகளால் சூழப்பட்டு, நினைவுகளின் சிதறல்களில் தெறித்தோடும் பழைய சம்பவங்களால் மனம் வெந்து நொந்து தவித்த செல்வராணி அன்று கந்தோருக்குச் செல்லவில்லை. கமலேஸ்வரனும் வீட்டில் இல்லாததும், பிள்ளைகளை ஒருவாறு அன்பு கொள்ளச் செய்ததும் அவளுக்கு அன்று நிம்மதியைக் கொடுக்கும் இரு முக்கிய விஷயங்களாக இருந்தன.
பரமேஸ்வரி இடைசுகம் செல்வராணியிடம் வந்து குசலம் விசாரிப்பதும், அவளுடைய நெற்றி முகம் தாடை என்றெல்லாம் தொட்டுப் பார்த்து அவளுக்கு ஜுரம் அடிக்கவில்லை என்று திருப்திப்படுவதுமாக இருந்தாள். ரமணன் ரஞ்சனி இருவரும் பரமேஸ்வரி தங்கள் வீட்டுக்கு வந்துபோனதும் அவளுடனேயே சென்று விட்டார்கள்.
செல்வராணி உடம்பையும் மனத்தையும் அலட்டிக் கொள்ளாமல் படுத்து ஒய்வெடுக்க வேண்டுமென்ற ஒர் அன்புக் கட்டளையைப் பரமேஸ்வரி இட்டிருந்ததால், குழந்தைகளுக்கும் செல்வராணிக்கும் சமைத்துப் போட வேண்டிய முழுப்பொறுப்பையும் அவளே ஏற்றாள்.
54

பரமேஸ்வரி வயதில் மூத்தவள் என்பதாலும், நேர்மையான முறையில் மட்டுமே அன்பு காட்டுவாள் என்பதாலும், செல்வரானிக்கு உண்மையிலேயே ஒய்வு தேவைப்பட்டதாலும் அவள் பரமேஸ்வரியின் அந்தக் கட்டளையை ஆவலோடு ஏற்றுக் கொண்டாள்.
அன்று மாலை டாக்டர் ஞானமலர் தனது இருப்பிடத்துக்கு வருமாறு செல்வராணியை அழைத்திருந்தாலும், செல்வராணிக்கு அப்படியொரு மருந்து தேவைப்பட்டதாலும் அவள் டாக்டரிடம் போவதற்கு ஆயத்தமானாள்.
கமலேஸ்வரன் காலையில் அலுவலகத்துக்குச் செல்கையில் மாலையில் போக வேண்டியிருந்த இந்த விஷயம்பற்றிஎதுவும் கூறாமலே சென்றிருந்தான். செல்வராணி அவன் எப்பொழுது வீடு திரும்புவான் என்பதைச் சரியாகக் கணக்கிட முடியாதவளாகக் குழம்பி, பின்னர் அவன் வரும்வரையும் ஆயத்தமாகி நிற்கலாம் என்ற தீர்மானத்தில் வழமைபோல் தன்னை அலங்கரிக்கத் தொடங்கினாள்.
அவள் தனது முகத்துக்கு வெண்மாவை அப்புகையில் அவளையே விழிவாங்காது பார்த்தவாறு வாய்க்குள் விரல்களைத் திணித்து ஏதோ சுவையில் கிறங்கி நின்றரஞ்சனியைக் கண்டதும் ரஞ்சனிக்கும் பவுடர் பூசி விட்டாள். அதனை இரசிக்க முடியாத உணர்வில் பார்த்த ரமணன் “பூ பவுடராம் பவுடர்” என்றபடி பரமேஸ்வரி வீட்டுக்கு ஓடினான்.
செல்வராணி வேலைக்குச் செல்லாமல் இன்று முழுவதும் வீட்டிலேயே இருந்துவிட்டு, மாலை வந்ததும் புறப்பட ஆயத்தமாகிய பொழுதுபோயா தினம் போன்ற ஒரு நான் இது என்று நினைத்த ரமணன் தானும் அவளுடைன் கூட வருவதாகப் போட்டிருந்த அப்பிளிகேஷனை செல்வராணி ஏற்றுக் கொள்ளாது அவனுக்கு அப்படியொரு கோபத்தை உண்டாக்கியிருந்தது. இப்பொழுது ரஞ்சனிக்கும் அவள் சோடனை செய்தது அவனுக்குத் தாங்க முடியாத கோபத்தையும் கவலையையும் கொடுத்திருந்தது.
கமலேஸ்வரன் இன்றைக்கென்று வீட்டுக்கு நேரத்துடனேயே வந்திருந்ததால், தான் வெளியே தனியாகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லை என்று செல்வராணி ஒரு கணம் ஆறுதலடைந்தாள்.
அவன் வந்ததும், அவர்கள் புறப்பட்டு பஸ் தரிப்பு இடத்தை நோக்கி நடந்தனர். ரஞ்சனி ரமணன் இருவரும் வீட்டுக்குள் அடங்கியிருப்பதை வெளிப்படையாகப் புலப்படுத்தியதுடன் ஆர்ப்பாட்டம், சொல்வது கேட்க மாட்டோம் என்ற வேலை நிறுத்தம் எல்லாம் செய்யத் தலைப்பட்டதும் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றான் கமலேஸ்வரன். டாக்டருடன் செல்வராணியை விட்டு விட்டு பிள்ளைகளுடன் எங்காவது உலாவப் போகலாம் என்பது அவனுடைய எண்ணமாகவும் இருந்தது.
மாலை நேரம் ஒருநாள் வராவிட்டால் தங்களின் அந்த ஒருநாள் வாழ்வே போய் விட்டதாக எண்ணும் பல இளவட்டங்கள் சந்தையையும் அதற்கு நேரே எதிர்ப்புறமாக உள்ள பாதையோரங்களையும் பஸ்தரிப்புக் கூண்டுகளையும் நிறைத்துக் கொண்டு நின்றனர்.
பகல் முழுவதும் கந்தோர்களிலும் மற்றும் அலுவல் தலங்களிலும் பொழுது போக்கியும் வேலை செய்தும் வந்திருந்ததால் அவர்களுட் பலருக்கு கண்களுக்கு விருந்தளிக்க வேண்டியநிலை ஏற்பட்டிருந்தது.
காலையில் எவ்வளவு அவசரமாக அலுவலகங்களை நோக்கி ஒன்றன்பின் ஒன்றாகச் சென்ற வாகனங்கள் மாலையில் அவ்வாறே திரும்பிய பின்னர், மீண்டும் வடக்கு நோக்கி எங்கோ அடுக்கடுக்காகப் படுவேகத்தில் சென்று கொண்டிருக்கும் வேளை அது.
S5

Page 38
பிரதான பஸ்தரிப்புக் கூண்டுகளில் ஒரு கையை இட்டு, இடுப்பில் நளின கம்பீரத்துடன் மறுகையை விரல்கள் மடித்த நிலையில் அமர்த்தி அவர்கள் நிற்கும்பொழுது, அன்றைய தினம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தாது பூத்த பூஞ்செடிகளிலிருந்து அவாக் அவாக்கென்று மலர்களைப் பறித்து, மாலையாக்கி அம்மாலைகளைத் தமது கூந்தல்களிலே ஏற்றி இளம் பெண்களும் இளம் பெண்களாக ஒரு காலத்தில் இருந்தவர்களும் நடந்து, நடந்து போகும் காட்சி அவர்களுக்குத் தம்மை அறியாத இன்பக் கிளுகிளுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அருகில் உள்ள பொதுசனச் சந்தையில் ஈக்கள் மட்டுமே நிறைந்திருந்ததால் அடுக்கடுக்காக, நெருக்கமாக மிக அண்டி ஒருபாலார் செல்லும் பொழுது, அவர்களின் கூந்தல் மலர்களை மொய்க்க வண்டுகள் இல்லாது போவதால் அந்த இளைஞர்களே தங்களை வண்டுகளாக்கி பறந்தடிக்கும் காட்சி பரவசமாக இருக்கும்.
திடுதிடுப்பென்று சந்தியில் உள்ள சிவப்பு வெளிச்சம் எரிந்ததும், வந்த வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத சாரதிகள் அப்பகுதியில் வாழத் துடித்த ஒரு சோடி உயிர்களைப் பலியெடுத்து ஒய்வதும் உண்டு. அப்படிப் பலியெடுக்கப்பட்டவர்கள் வீதியில் விழுந்து கிடக்க அவர்களைக் கூட்டம் கூட்டமாகச் சென்று சூழ்ந்து கொள்வதற்கும் அந்த வட்டங்கள் தயாராக இருந்தன.
அப்பொழுது அங்கு வேகமாக வந்து ஒரு கார் தன் வேகத்தால் மறந்த நிலையில் ஒடிக்கொண்டிருக்க, ஒன்றாக வந்தவர்கள் வீதியில் பாதியும், பாதையோரத்தில் பாதியுமாக அவசரப்பட்டுப் பிரிந்தார்கள். அப்பொழுது வீதியில் உயிருக்காக வரம் வேண்டி நிற்பவர்கள் நிற்க, அந்த வீதியில் உள்ளவர்களை இழந்துவிடுவோமா என்ற அச்சத்தில் பாதையோரத்திற்கு வந்து சேர்ந்துவிட்டவர்கள் நின்று பரிதாபமாகப் பார்த்தனர். வேகமாக வந்த கார் வேகமாக அவர்களை விலக்கி அப்பால் சென்றதும் அந்த மனிதக் கூட்டம் விட்ட ஒரு மூச்சு சந்தடியையும் மிஞ்சி ஒலிப்பது போலத் தோன்றியது.
குழந்தையை ஒரு கையால் பிடித்தபடி மனைவியை மறுகையால் அணைத்தபடி, தங்கள் இல்லற வாழ்க்கை இங்கேயே முடியக் கூடாது என்ற இறை விண்ணப்பத்தில் ஒருவன் வந்து கொண்டிருந்தான். பாதசாரிகளுக்கென்றே அந்தக் காலி வீதியைத் துண்டாக்கி இடப்பட்டிருந்த மஞ்சள் கரையிட்ட வெள்ளைக் குறுக்குக் கோடுகளை அவமதித்தபடி வேகமாக வந்த காரில் இருந்த ஒருவன், அந்த ஒருவனைப் பார்த்து விறைத்து தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் இரண்டொரு தூஷண வார்த்தைகளைப் பேசிவிட்டு அப்பால் மறைந்தான். தன்னை வீதியில் வைத்து அவமானமாகப் பேசிய அவனை, அந்த அவன் தண்டிக்க நினைப்பதற்கிடையில் அந்தக் கார் வடக்கே நாற்றமெடுக்கக் கிடக்கும் ஆற் றின் பாலத்துக்கும் அப்பால் சென்று விட்டது.
வடக்கும் தெற்கும் பாலங்களையே எல்லைகளாகக் கொண்ட அந்தப் பூமியில் வாழ்வுக்காக ஏங்குபவர்களைப் பார்த்துப் பரிகசித்த படியும், ஏதாவது அலங்கோலங்களைக் கண்டு எள்ளிநகையாடியபடியும் நிற்கும் அந்த வாலிபர்களுள் ஒருவன் செல்வராணி அந்த மாலைவேளையில் சரக் சரக்கென்று சேலை ஒலியெழுப்ப, குலுங்கி முழங்கும் வளையல்கள் 'கணிர் என்று சப்திக்க கமலேஸ்வரன் பிள்ளைகள் சகிதம் வருவதைக் கண்டதும், அருகில் நின்றவர்களுக்கு அவளைப் பார்க்கும்படி உத்தரவிட்டு அமைதியானான்.
கமலேஸ்வரனும் செல்வராணியும் பிள்ளைகளுடன் அந்த வாலிபர் கூட்டத்தைத் தாண்டி அப்பாற் சென்றதும், "கவனிச்சீங்களா?" என்றான் அவன்.
56

“ஓம் என்ன விஷயம்? ஆள். என்ன ஒரு மாதிரியோ?” என்று இழுத்தான் மற்றவன்.
“சரியான ஒவர்” என்னுடைய ஒபிசிலைதான் வேலை செய்யும். கொஞ்சம் மூக்கும் முழியும் இருந்தாப்போலை பெரிய நினைப்பு. டைரக்டருடன் மட்டும்தான் கதைப்பா(ள்). ஓபிசிலை ஒரே சிரிப்பும் கும்மாளமுந்தான். இவள் இண்டைக்கு ஒபிசுக்குவரயில்லை, ஒபிசே ஒன்றும் ஓடாமல் கிடந்திட்டுது" என்றான் அவன்.
இவர்கள் செல்வராணியைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லுகிறார்கள் என்பதை மட்டும் கவனித்து அதனை அவ்வளவு தூரம் பொருட்படுத்தாமலும் சென்ற கமலேஸ்வரன் அந்த வாலிபர் கூட்டம் கொல்' என்று சிரித்தபோது தோளில் சாய்ந்து கொண்டிருந்த ரஞ்சனியின் தலைக்கு மேலால் தன் கண்களை வீசி அவர்களை ஒருமுறை வெறித்தான். அந்தக்கூடத்தில் ஒருவனைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்பதைக் கமலேஸ்வரனுக்குச் சொன்னாள் செல்வராணி,
“அவன் எங்கடை ஒபிசிலைதான் வேர்க் பண்ணுகிறவன், டேர்டி பெல்லோ" கமலேஸ்வரன் “அப்படியா?" என்று மட்டும் கேட்டு விட்டு தொடர்ந்து நடந்தான். செல்வராணி தன்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவனை மிகவும் கூடாதவன் என்று கூறியதைக் கமலேஸ்வரன் சற்று எடையிட்டுப் பார்த்தான். செல்வராணியின் நடப்புக்கள், போக்குகள் பற்றி அல்லது அவனது நடப்புக்கள் போக்குகள் பற்றி இவர்களுள் யாரோ ஒருவருக்கு அதிருப்தி உண்டாகியிருக்கிறது என்று எண்ணினான் கமலேஸ்வரன்.
கமலேஸ்வரன் அப்படி நினைத்த பொழுது பஸ் தரிப்புக்கு வந்து நின்ற செல்வராணியை ஒருமுறை அளப்பவன்போலப் பார்த்து அந்த அதிருப்தி இவளுடைய நடப்புக்களாலும் போக்குகளாலும் ஏற்பட்டிருக்கக் கூடியது என்று முடிவு கண்டான். அதே ைேள தன்னோடு புறப்பட்டு வந்திருக்கும் தன் மனைவியைப் பார்த்து அவர்கள் ஏதோ சொல்லிக் கொல்' என்று சிரித்ததையும் அவன் வெறுத்தான்.
களைப்புப் போக்குவதற்கு அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு மேற்கே பரந்து கிடந்த வானமும், நிறைந்து கிடந்த கடலும், ஆடிவந்து வீசும் காற்றும், கண்களையும் உள்ளத்தையும் ஒருசேர மகிழ்விக்கும் காட்சிகளும் குறைவில்லாமல் இருக்கும் பொழுது இளவட்டங்கள் எல்லாமே அந்தத் தரிப்பு நிலையங்களையும் சுற்றவுள்ள பகுதிகளையும் சூழ்ந்திருக்க வேண்டுமா? என்றும் கமலேஸ்வரன் தன்னுள் கேட்டுப் பார்த்தான்.
அவனுக்கு அவனிடமிருந்தே பதில் கிடைக்கவில்லை. இந்த அமர்க்களத்தில் டாக்டர் ஞானமலரிடம் அவர்களைக் கொண்டு செல்ல ஒரு பஸ் வந்து நின்றது.
அவர்கள் டாக்டர் ஞானமலரின் இருப்பிடத்துக்குச் சென்றதும் அவள் சொன்ன கதையில் செல்வராணி மயக்கம் போட்டு விழுபவள் போல ஆனாள்.
4
“உங்கள் இருவரையும் பிள்ளைகளையும் இங்கே வரச்செய்து விட்டேன். செல்வராணிக்கு இருக்கும் வெறுப்பு உங்களுடன் வந்ததும் சற்று
s
அதிகரித்திருக்கும் போல.
57

Page 39
கமலேஸ்வரனைப் பார்த்து ஞானமலர் வேண்டுமென்றே இப்படிக் கூறியதும், அதனைக் கேட்ட செல்வராணி நேற்றிரவுதான் அவளுக்குக் கூறிய அந்தப் பொல்லாத உண்மையை, கமலேஸ்வரன் அவளுக்கு வெறும் கணவன் மட்டும்தான்; காதலன் அல்ல(ன்) என்பதை வெளிப்படுத்துகிறாளா என்ற கேள்வியில் ஏங்கியபடி குற்றஉணர்வுடன் தவித்தாள். அப்பொழுது ஞானமலரைப் பார்த்து இலேசாகச் சிரித்த கமலேஸ்வரன் செல்வராணிமீதும் விழிவெட்டியவனாகத் தலையைக் கவிழ்ந்துகொண்டான். இரண்டாவது நபர், அவர் யாராக இருந்தாலும் அறியக்கூடாது என்று அவன் அடக்கி ஒடுக்கி வெளியே தெரிய விடாது மெளனத்தாலும் சிரிப்பாலும் மூடி மறைத்திருந்த பல தாம்பத்திய இரகசியங்களைச் செல்வராணி வெட்கமில்லாமல் வெளியே சொல்லிவிட்டாளோ என்று அஞ்சினான்.
செல்வராணி, அவளைப் பற்றியதான அந்தக் கேள்வியைப் பொருட்படுத்தாதவள் போலவும் விளங்கிக் கொள்ளாதவள் போலவும் சிரிப்பொன்றினால் மெல்லச் சமாளித்து அந்தக் கேள்வியை அப்பொழுது கேட்டவர்கள் மறந்து விட வேண்டுமென்ற பிரார்த்தனையில் பேசாதிருந்தாள்.
கமலேஸ்வரன் டாக்டர் ஞானமலருக்கு முன்பாக இடப்பட்டிருந்த நாற்காலிகளுள் ஒரமாகக் கிடந்த ஒன்றில் அமர்ந்திருக்க, ரமணனும் ரஞ்சனியும் முன்கூடத்திலுள்ள தொங்கு பொருள்களையும் படங்களையும் அழகு பார்த்துக் கொண்டிருந்தனர்.
வீட்டிலேயே அமைத்துக் கொண்ட ஒரு மருத்துவ மனையாக அது இருந்ததால் வருவோர் போவோர் கண்களுக்குச் செளகரியமாகக் குழந்தைகளின் பால்வடியும் முகங்களைக் கொண்ட அழகிய படங்கள் ஒருபக்கச் சுவரை அலங்கரித்துக்கொண்டிருந்தன. அதிகம் புகைப் பிடிப்பதால் ஏற்படக்கூடியதென்று வைத்தியம் கூறும் அந்த உண்மைக்கு உருவம் கொடுத்தாற் போல ஒருவன் சிகரட் பிடிப்பதாகவும், அவனே பின்னர் தொண்டைக் குழாய், சுவாசப்பை, இருதயவெளிப்புறம் ஆகியவற்றில் கிருமிகளால் அரிக்கப்பட்டவனாகக் காட்சி தருவதாகவும் அந்தப் படம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
ஒரு பக்கச் சுவரில் அப்பொழுதுதான் கொய்து வைக்கப்பெற்றன போன்ற ரம்மியக் காட்சியில் ஒரு கொத்து மலர்கள் காணப்பட்டன. அவை ஒரு பெண்ணின் இரு கைகள் ஏந்தி நிற்பதுபோல அமைக்கப்பட்ட பளிங்குகளில் நிறைந்திருந்தன. அந்த மலர்களுக்கு மேலே எடுப்பாக நின்று டக் டக் கென்று ஆடிக்கொண்டிருக்கும் கம்பியுடன் ஒரு பெரிய மணிக்கூடு தொங்கப்பட்டிருந்தது.
ரமணன் அதனை வெகுவாக இரசித்து அந்த முட்கம்பி அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கையில், அந்த ஆட்டத்துக்கேற்ப குனிந்து முழந்தாள்களில் கைகளைப் பதித்தபடி உடலையும் தலையையும் ஆட்டினான். அவனுடைய ஆட்டத்தையும் முட்கம்பியின் அசைவையும் ஒருசேரப் பார்த்த ரஞ்சனி கைகொட்டிச் சிரித்தபடி, தாய்க்கும் அது பற்றிக் காட்டி அவளையும் ஆனந்தப்படுத்த வேண்டுமென்ற ஒர் ஆவலின் உந்தலில் உள்ளே ஓடினாள்.
டாக்டர் ஞானமலர் அவர்களோடு ஏதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு, நேரம் ஆகியிருந்ததால் வெளியே உள்ளே' பெயர்ப்பலகைக்குள் உள்ள வெளியே என்றிருக்கும் எழுத்துக்களில் உள்ளே என்பதை மறைத்துவிட்டு, கதவுகளை மூடினாள்.
さ
8

அப்பொழுது தங்களை உள்ளேவிட்டு, வெளியே செல்லாதவாறு கதவுகளை டாக்டர் பூட்டுகின்றார் என்ற நினைவில் ரமணனும் எழுந்து கமலேஸ்வரனிடம் வந்து, கமலேஸ்வரனின் கயை இறுகப் பிடித்தபடி வெளியே பார்த்தான். அப்பொழுது அவனது செய்கையைக் கவனித்த ஞானமலர், ரமணன்மீது ஒருபாசப் புன்னகையை வீசியபடி அவனை நெருங்கியதும், ாதுவித முகபாவமும் அற்றவனாகி, அவன் செல்வராணி, கமலேஸ்வரன் ஆகியோருக்கு நடுவில் சென்று நின்றான்.
ரமணன் வெளியே செல்லத் துடிப்பதை உணர்ந்த கமலேஸ்வரன் “நாங்கள் சற்று வெளியே போகிறோம்.பிள்ளைகளுக்கு கடலைக்காட்டிவிட்டுவருகிறேன்"என்றபடி எழுந்தான். “கடல் என்றும் உள்ளதுதான், அதன் அலைகள் என்று பார்த்தாலும் ஒரேமாதிரியே பாம்பி எம்பிப் பாயும். கடல் என்றுமே மாறுவதில்லை. பூமிக்குப் பாதுகாப்பாக அந்தக் கடல் தனது கடமையை இரவு பகல் என்று பாராது செய்து கொண்டுதான் இருக்கிறது" என்று ருானமலர் கூறியதும் அவள் தன்னைப் போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட கமலேஸ்வரன் சொன்னான் :
“கடல் என்றும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். அது உண்மை, ஆனால் கடலைப் பார்க்க வேண்டும் என்று இன்று தோன்றும் மனித ஆசை நாளை தோன்றாமல் விடலாம் அல்லவா? கடலை இன்று பார்க்கும் பொழுது ஏற்படக்கூடிய உணர்வு நாளை ஏற்படாமலும் விடலாம் அல்லவா?" என்று குறும்புடன் சிரித்தவாறு கூறியதும், ஞானமலர் அவனையே சற்று நிதானமாகப் பார்த்தாள்.
“உயர்ந்த தத்துவம் பேசுகிறீர்களே?” என்று கூறி நிறுத்தி அவனை மீண்டும் பார்த்தபடி,தொடர்ந்தாள். நீங்கள் கலைஞர் மட்டுமல்ல, தத்துவஞானியும்போலக் கிடக்கிறது" “தத்துவமே உயர்ந்ததுதான். கலை இருக்கிற இடத்தில் தத்துவம் இருந்தேதீரும். னென்றால், கலை இருக்கிற இடத்தில் வாழ்வு இருக்க மாட்டாது. அந்த வாழ்வின் இடத்தைத் தத்துவமாவது நிரப்புகிறதே. அவ்வளவில் சந்தோஷப்பட வேண்டும்" என்றதும் செல்வராணி, அவன் தன்னையே குத்திக் காட்டுகிறான் என்ற எண்ணத்தில் வெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.
கமலேஸ்வரன் தனக்குள் சிரித்தபடி “நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நாங்கள் வெளியே போய்விட்டு வருகிறோம்” என்று கூறி எழுந்தான்.
‘அப்படியானால் நீங்கள் நேரே வீட்டுக்குப் போங்கள். ஒரு மணித் தியாலத்துக்குமேல் நான் செல்வராணியைக் கொண்டுவந்து வீட்டில் இறக்கி விடுகிறேன்” ான்றாள் ஞானமலர்.
செல்வராணிக்குடாக்டர் ஞானமலர் கூறிய அந்த வார்த்தைகள் பெரும் ஆறுதலாக இருந்தன.
கமலேஸ்வரனும் பிள்ளைகளும் புறப்பட்டதும், செல்வராணியைப் பார்த்த ஞானமலர் குறும்போடு சிரித்தபடி “உங்கள் கணவர் ஒரு புதுமையான ஆளாக இருக்கிறார்”என்றாள். “புதுமையும் ஓரளவு வசீகரமாக இருக்கும். ஆனால் இவரைப் பொறுத்த வரையில் இவரது புதுமை, பழமையையே ஒப்பிக்கின்றது. அது எங்களுக்குப்புதுமையாகத் தெரிகின்றது. அவ்வளவுதான்” என்றாள் செல்வராணி
“அதுசரி, நீங்கள் நிறைய ஆங்கில நூல்கள் வாசிக்கிறீர்கள் போல இருக்கிறது. உங்கள் வாயில் ஒரு தமிழ்ச் சொல்லாவது வருகிறதுமில்லை ஆங்கிலம் மிகச் சரளமாகப் பேசுகிறீர்கள். கொழும்பில் அல்லது வெளிநாட்டில் படித்தீர்களா?"என்று கேட்டாள் ஞானமலர்.
59

Page 40
"எங்கும் படிக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்தேன். படிக்கிற காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி, நிறைய வாசிப்பேன். தமிழ் படித்தவர்கள் படுகின்ற பாட்டைப் பார்க்க நாளடைவில் எனக்குத் தமிழ்மொழி மீதே ஒரு வெறுப்பு வந்துவிட்டது"
"அப்படிச் சொல்லக் கூடாது. தமிழை நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த எம். பி. பி. எஸ். டிப்ளோமா எல்லாவற்றுக்கும் பின்னர் தமிழ் படிக்கிறேன். வீட்டின் உட்பக்கங்கள் எல்லாம் தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்களே காணப்படும். வாருங்கள் காட்டுகிறேன்," என்று கூறியபடி எழுந்தாள் ஞானமலர்.
அவளைத் தொடர்ந்து இதுவரை எந்த வெளியாரும் அதிகமாக நூழைந்திருக்க முடியாத அந்தப்பெரியமாடிவீட்டின் உள்ளறைக்குச் சென்றாள் செல்வராணி விசாலமான அந்த அறையில் ரவிவர்மாவின் கம்பராமாயணக்காட்சிகளைக் கொண்ட ஓவியங்கள் முதல்ஞானமலர் சென்ற சென்ற நாடுகளில் கண்ட கலைப் பொருட்கள் வரை பலவும் நிறைந்து கிடந்தன.
ஞானமலர் அந்தப் பொருட்களில் வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு நடராஜர் சிலையைக் காட்டியபடி,"இதனை எங்கே வாங்கியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
சிலையின் கம்பீரமான நடனக் கலையழகில் ஒரு கணம் தன்னை மறந்த வியப்புடன் சிக்கிய செல்வராணி, கேள்வி காதில் விழுந்ததும், “தமிழ்நாட்டிலா?” என்று கேட்டாள்.
"அதுதான் இல்லை. தமிழ் நாட்டில் இந்தச் சிலைகளைச் செய்தால் நாங்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சைவசமயம் தோன்றி வளர்ந்த புண்ணிய தலத்தில் இப்படி நடராஜர் சிலையைச் செய்து விட்டோம் என்று தமிழர்கள் பெருமைப்படுவதற்கும் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு வெள்ளையன் இதன் கலையழகில் மயங்கி அதனை வெள்ளியில் வார்த்து எடுத்தானே. அதில்தான் புதுமை இருக்கிறது. சைவசமயம் பரவாத இடங்களுக்குக்கூட நடராஜர் சிலை சென்றிருக்கிறது. அது ஒன்றே இச்சிலையின் மகத்துவத்தை வெளிக்காட்டப் போதுமானது. இதனை லண்டனில்தான் வாங்கினேன்” என்றாள் ஞானமலர்.
செல்வராணி வியப்புடன் ஞானமலரையும் சிலையையும் பார்த்துவிட்டுக் கூறினாள். “டாக்டர் இந்தச் சிலையின் மகத்துவம் லண்டனில் இருந்தபொழுது தெரிந்தது. ஆனால் இந்தச் சிலையின் தெய்வீகம் உங்கள் கையில் இருக்கையில்தான் தெரிகிறது.
ஞானமலர் இதனைக் கேட்டதும் தான் அந்தச் சிலையை ஏதோ களங்கப்படுத்தி விட்டவள் போன்ற அருட்டுணர்வில் சிலையை இருந்த இடத்தில் வைத்துவிட்டு மறுபடியும் வைத்திய கூடத்துக்கு வந்து அமர்ந்தாள்.
அவளைத் தொடர்ந்து வந்த செல்வராணி இருக்கையில் அமர்வதற்கு முன்னரே சொன்னாள் ஞானமலர்.
“உங்கள் கணவர் மிஸ்டர் கமலேஸ்வரன் சொன்னார், கலை இருக்கிற இடத்திலே வாழ்க்கை இருக்காது என்று. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது தெரியுமா?"
செல்வராணி இப்பொழுது முகங்கறுத்தவளாகக் கேட்டாள். அந்தக் கேள்வி ஞானமலரால் வெகுவாக இரசிக்கப்படாது போனாலும் அவளுக்குத் தன்னைப் பற்றியும் சில வார்த்தைகள் தனது சொந்தத் துன்பம் குறையும் பொருட்டுச் சொல்ல வேண்டுமென்று தூண்டியது.
60

ஞானமலர் சொன்னாள், “செல்வராணி நான் உண்மையிலே சந்தோஷமாக இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
"இதென்ன கேள்வி டாக்டர்?" செல்வராணி சுடு புளுங்கல் நெல்லை விழுங்கிய கோழி போல் திக்கினாள். “அர்த்தத்துடன்தான் கேட்கிறேன் செல்வராணி. உண்மையிலேயே நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?” "உண்மையில் அப்படித்தான் நினைக்கிறேன்" “எப்படி?” "நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று வழக்கறிஞரான உங்கள் கணவர், அன்புள்ள தந்தை, அத்துடன் நீங்கள் புதிய தம்பதிகள்.”
“தவறு செல்வராணி, நாங்கள் புதிய தம்பதிகள் என்றதும் பாவத்துக்கு இரங்கி சந்தோஷம் எங்கள் வீட்டுப் பக்கம் வருவதில்லை. சந்தோஷம் என்பது ஒரு வரம். அதுதான் கடவுளால் கொடுக்கப்படுவது. அந்த வரம் எனக்குக் கிடைக்கவில்லை. கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பிள்ளைச் செல்வம் எனக்குக் கிடைக்கவில்லை.
ஞான மலரின் குரல் தளதளத்தது. செல்வராணியிடம் தனது கதையைச் சொல்லி ஆறுதலடையலாமா என்ற கேள்வியும் ஏக்கமும் ஒன்றாகப் பிறந்தன. தனது கதையைக் கூறுவதால் தனக்கு ஆறுதல் கிட்டுமோ இல்லையோ என்பது அவளுக்கு ஒரு கணத்தின் பின்னர் பிரச்சினையாக இல்லாதுவிடினும் செல்வராணியைப் பொறுத்த வரையில் தன் கதை அவளுடைய நோய்க்கு மருந்தாகும் என்று மட்டும் அவள் நம்பினாள்.
அத்துடன் செல்வராணியின் நோய்க்கான அடிப்படைக் காரணங்களைத் தன் கதை நிச்சயமாக வெளிக் கொண்டு வரும் என்று ஞானமலர் நினைத்ததால், தான் மேற்கொண்டுள்ள இந்தப் பெரும்பணி வெற்றியளிக்குமென்றும் அவள் நம்பி அதனால் பெருமைப்பட்டு மனநிறைவு பெறுவதுதானே என்று மகிழ்ந்தாள்.
ஞானமலர் தொடர்ந்தாள். “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது, இதனை நீங்கள் முதலில் நம்பி ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். இளவரசியாக இருந்தால் என்ன, ஏழையாக இருந்தால் என்ன பெண்ணைச் சுற்றியே அவளைச் சேர்ந்த ஆடவர்கள் வாழ்கிறார்கள். பெண்கள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. ஆண்கள் இந்த உலகத்தை உருட்டி வாழ்வதாக நினைப்பது சுத்த அபத்தம். ஏனென்றால் பெண் இல்லாமல் ஆண் பிறக்க இயலாது என்பது மட்டுமல்ல அவள் இல்லாமல் அவன் வாழவும் முடியாது. அவன் சாக வேண்டுமென்றாலும் அவனுக்குப் பெண்தான் வேண்டும். இதனை உணர்ந்தோ என்னவோ சிலசில இயற்கைப்பொருட்களுக்கு பெண்மைத் தன்மையை ஏற்றியுள்ளார்கள். வாயு பகவான், அக்கினி பகவான் என்று கூறுபவர்கள் நிலத்தையும் கடலையும் பெண்களாகவே கூறுகிறார்கள், ஏன் என்று தெரியுமா? அவை ஆக்கும் சக்தி படைத்தவை. அவற்றை நம்பியே இந்த மனித இனம் வாழ்கிறது.
செல்வராணி தனிமையில் சிரித்துக் கொண்டாள். பின்னர் கேட்டாள். “இதற்கும் உங்களுக்கும் என்ன டாக்டர் சம்பந்தம்?” “என்னோடு சம்பந்தப்பட்டு விட்டவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தமோ அந்தச் சம்பந்தம் இருக்கிறது"
6

Page 41
“என் வாழ்க்கையில் நான் தாய்மையை எய்தவே முடியாது”
“என்ன?" செல்வராணி அதிர்ச்சியுடன் கேட்டாள்.
"ஆமாம் செல்வராணி நான் சாஸ்திரம் பேசவில்லை. வைத்தியம் செய்கிறேன். தாய்மை அடைவதற்கு வேண்டிய எல்லாம் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவருக்கு நித்திய குடியாலும் பல்வேறு உறவுகளாலும் திருமணத்திற்கு முன்னரே அந்தச் சக்தி அழிந்து போயிருந்தது. நான் என்ன செய்வது? பிள்ளை வேண்டுமென்பதற்காக அவருக்கும் எனக்கும் சம்பந்தப்பட்ட வேறு டாக்டர்களுக்கும் தெரிந்த உண்மையை என்னால் மறைக்க முடியுமா? எனக்கு இருக்கும் பிள்ளைத் தாகம் போல என் தந்தையார் தனது ஒரே மகளின் பிள்ளையைப் பார்த்துவிட்டுச் சாவது என்று தினமும் வேண்டிக்கொள்கிறார். அப்படியானால் அவருக்கு இனி மரணம் என்பதே ஏற்படாது" என்றபடி வேதனை கலந்த சிரிப்பொன்றை வெளியே விட்டாள் ஞானமலர்.
"உண்மையாகவா டாக்டர்?"
செல்வராணி இன்னமும் நம்பிக்கை அற்றவள் போலக் கேட்டாள். இப்பொழுது செல்வராணியின் வாழ்க்கையின் பயங்கரச் சம்பவங்கள் திடீரென எழுந்த பேரலைகளால் எற்றுண்டு எங்கோ வீசுப்பட்டது போலவும், பின்னர் அதே அலைகள் ஒரு கரையில் முட்டி மோதிவிட்டு மீண்டும் வருவன போலவும்பட்டது.
உள்ளம், டாக்டர் ஞானமலருக்காக வருந்த கண்கள் அவள் மேலும் என்ன சொல்லப் போகிறாள் என்று அவதானிக்க காதுகளைக் கூர்மையாக்கியபடி, தான் இருந்த, கதிரையையும் இழுத்து மேசையை நெருக்கி இறுக்கமாக இட்டபடி நிமிர்ந்திருந்தாள் செல்வராணி,
5
ஒர் ஆணுடன் ஒரு பெண் கொண்ட தொடர்பினால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைக் கடவுள் கொடுத்தாரென்று வாய்க் கூச்சமில்லாமல் கூறுகிறார்கள். இது கற்புக்குப் பங்கமானது இல்லையா? பிள்ளை வேண்டும் என்று விரும்புகின்ற ஒருத்தி; தன் கணவனால் முடியாது என்று தீர்க்கமாகிவிட்ட ஒன்றுக்காக அந்த ஒரே நோக்கத்தில் இன்னொருவருடன் நடந்துகொண்டால் அவளை நடத்தை கெட்டவள் என்கிறார்கள். இதில் யார் நடப்பு கெட்டுவிட்டது? அவளுடைய நடப்பா அல்லது அவளைச் சேர்ந்த சமூகத்தின் நடப்பா?
செல்வராணி மனச்சுமை குறைந்து விட்டது போன்ற உணர்வில் நிர்மலமாகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஞானப்லர் தொடர்ந்து கூறினாள்:
"குல கெளரவம் கற்பு என்றெல்லாம் பேசும் நாம், கடவுள் தந்த செல்வங்கள் என்று உண்மையற்ற ஒரு பொய்யைக் கூறும்பொழுது கேட்பவர்களுடைய மனதில் எந்தவித சலனமும் ஏற்படுவதில்லை. சொல்பவளுடைய நிலையும் அப்படித்தான். ஆனால் என்வரையில் என்னிடம் உள்ள தாய்மைக்கான தகைமைகளை வீண் விரயஞ் செய்கிறேன். அவர் வருவார். அவருக்கு வேண்டியபோது அணைப்பார். பின்னர் பழையபடி பாருக்கும் நீதிமன்றத்துக்கும் என்று போய்விடுவார். அவரைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தில்
62

மூன்றே மூன்று விஷயங்கள் உள்ளன. ஒன்று அவரது தொழில் - அது சட்டம். மற்றது மது. இன்னொன்று பெண் என்ற இன்பக் கருவி. பெண்ணை இன்பத்துக்கு மட்டும் வாய்த்த ஒரு கருவியாகப்பாவிப்பவன் அவன் எவனாக இருந்தாலும் கடை மனிதன்,முட்டாளும் கூட." ஞானமலர் எதனையோ எண்ணியபடி யாரையோ பொரிவது போலப் பேசியதைக் கேட்ட செல்வராணி தன்னைப் போல் ஒருத்தியும் இந்த உலகத்தில் இருக்கிறாள் என்ற சமூகரீதியான ஒருமகிழ்ச்சியில் திளைத்தபோது, ஞானமலருடைய உள்ளமும் வார்த்தைகளும் தான் புதுமை வாய்ந்தவை, ஆனால் அவளும் அவளது அடக்கமான வாழ்க்கையும் அவளுடைய வீட்டை நிறைத்துள்ள கலைப் பொருள்களும் பழமை மீறாத தமிழ் மரபின் சின்னங்கள் என்ற நினைவு தடுத்தது.
செவ்வானம் போன்ற பொது மேனியழகும், எலுமிச்சம்பழம் போன்ற முகநிறமும் உள்ள ஞானமலர் எடுப்பான தோற்றத்திலும் துள்ளித் தெறிக்கும் கண்வீச்சிலும் எவ்வளவு அழகாக காண்பவர்களைத் தம்வசமிழந்து தன்வசமாக்குபவளாக இருக்கிறாள் என்று வியந்தாள்.
கருநாவற்பழம் போன்ற நிறமும், டிராக்டர்கள் உழுதுவிட்ட வயல்களின் தோற்றம் போன்ற குட்டைகள் விழுந்து குழிகளாகிவிட்ட முகமும் நெட்டை உருவமும் சிறிய கண்களும் கலையழகே இம்மியும் அற்ற தோற்றமும் உள்ள அவளுடைய கணவனான சுந்தரராஜனையும் செல்வராணி நினைத்துப் பார்த்தாள்.
அவனுடைய தொழிலுக்கு ஏற்றவாறு, சாட்சிகளை மிரட்டவும் விழிகளால் உறுத்தவும் அத்தோற்றம்பயனளித்ததாக அவள் நினைத்துப்புன்முறுவலித்ததைக் கவனித்த ஞானமலர், “ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
ஞானமலர் தனது வைத்திய அனுபவ காலங்களில் எத்தனையோ மரணங்களையும் ரணக் கொடுமைகளையும் நேரிலே கண்டவள்.
கணவனுடன் கோபித்துக் கொண்டு தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தனக்குத் தானே தீமூட்டிய ஒரு பெண்ணைத் தற்செயலாகக் கண்ட அயலவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தபொழுது அவள் டாக்டர் ஞானமலருக்குக் குற்றுயிராகக் கிடந்துசொன்ன கதைகள். அவளுடைய கணவன் ஒரு கார்ச் சாரதியென்றும், அவனது நித்திய குடியால் அவளை நித்தமும் வதைத்து வந்தானென்றும், உழைப்பதெல்லாம் குடிப்பதால் பிறந்திருந்த மூன்று பிள்ளைகளுக்கும் கஞ்சி வார்க்கவே வக்கற்ற நிலை உருவாகியது என்றும் அவள் சொன்ன கதைகள். ஞானமலர் எந்தவித சலனமுமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அந்தப் பெண் சொன்னாள்: “வாழவேணுமெங்கிற ஆசையிலே. பிள்ளைகள் படுற கஷ்டத்தைப் பார்க்க முடியாமே நான் தப்புப் பண்ணினது என்னமோ உண்மை அம்மா! அதுக்காக என்னை நானே இப்ப தண்டிச்சிக்கிட்டேன். தப்புப் பண்றவங்க எல்லாம் ஒரு காலத்திலே தண்டிக்கப்படத்தான் வேணும். தப்பு இருந்தா தண்டனையும் இருக்குமில்லியா?" “எம் புருஷனோட சிநேகிதமான ஒரு கடை முதலாளி எம்மேலே ரொம்பப் பிரியம். அவருக்கிட்டே எனக்கு இருந்த மதிப்பு அவருக்காக என்னமும்பண்ணலாம் போல ஆயிடிச்சு. அந்தப் பிரியமே மாதக் கணக்காக வருஷக் கணக்காக தொடர்பாச்சு. ஒருபடி அரிசி வாங்க, ஒருறாத்தல் சீனிவாங்க.ஐ.ய்.யோ. அம்மா மொத்தத்திலே என் வயித்திலை பொறந்த குஞ்சுகளுக்கு தீனி போட ஒவ்வொரு கிழமையும், கிழமையிலை ரெண்ணு மூணு நாள் நான் தப்புப் பண்ணியே விட்டன்.
6.

Page 42
அதுக்கு என்னை வேசின்னு தூற்றினாங்க. ஆமா! நீங்க சொல்லுங்கம்மா - ஊதாரி பெண்டாட்டி வேசியாக இருக்கிறது தப்பா? புருஷன் கவனிக்காமே விட்டிட்டா அந்தப் பொண்ணு என்னதான் செய்வா? ஒருத்தனைக் கட்டிக்கப்போ அவாள் மனசு என்னமா கனவு காணும் தெரியுமா? எனக்கு இப்பிடி இப்பிடி எல்லாம் வாங்கிக் குடுப்பான் அந்தப்புருஷன், நேரத்துக்கு வயித்துக்குக் கொடுத்து நினைச்சநினைச்சப்போ அன்போட பேசி ஆதரவோட நடந்துக்குவான் என்றெல்லாம் அவாள் நினைச்சி நினைச்சி சந்தோஷப்படுவா இல்லே
புருஷ லட்சணம்னா என்னாம்மா? பொண்ணை ஒசத்தியா வெச்சிருக்கிறதில்லே! பொண்ணு ஒருத்தி இருக்கிற சிறப்பைப் பார்த்தா அவாளுடைய புருஷன் எப்பிடிப் பட்டவங்கறது தெரிஞ்சுபோடும். ஆமா அகத்தின் அழகு மொகத்தில் தெரியுமாப்போல. எம் புருஷன் இதுக்கு ஒண்ணும் தேவலே. ரொம்ப ஜாஸ்தியா காரியஞ் செய்யிறவாளைப்போல டமாரடிப்பான். ஆனா, வூட்டிலே ஒண்ணும் இல்லை. பொண்டாட்டி புள்ளைகள். ஊம். இப்பிடிப் பட்டவங்களுக்கு வாழ்க்கைப்படுறதிலும் இப்பிடியே செத்திட்டா நல்லதுன்னுதான் என்னை நானே கொழுத்திட்டேன். போனால் போவது மசிரு உசிரு.”
முதல்நாள் இரவெல்லாம் டாக்டர் ஞானமலருக்கு இப்படிக் கூறிய அந்தப் பெண் மறுநாள் இறந்துவிட்டாள். அவளைப் பற்றிய நினைவுகள் ஞானமலரை விட்டுமட்டும் என்றும் அகலவில்லை.
ஒரு மயிர் இழந்துவிட்டதே என்று யாரும் கவலைப்படுவதில்லையே! அந்தப் பெண்ணும் இந்தச் சமூகத்துக்கு ஒரு மயிரைப்போன்று ஆக்கப்பட்டவள். அவளுடைய உயிரின் விலை அவளோடு பிறந்த உடம்பின்மீது சூட்டப்பட்ட கற்புத்தான். அவ்வளவுக்கு அவளுடைய அந்தச் சமூகம் சூன்யமயமாக இருந்ததை ஞானமலர் எண்ணியெண்ணி வெறுத்தாள்.
சுந்தரராஜனும் தான் பகல் முழுவதும் உயிருடன் இருந்தது உண்மை என்பதை நிரூபிப்பதற்காக வீட்டுக்கு வருவான். வீட்டில் அவனை அருகதையுடன் தேடுவதற்கு, சமூகத்தில் தனக்கு இருக்கும் மாங்கல்ய அந்தஸ்து மறைந்துவிடக் கூடாதே என்ற பிரார்த்தனையில் வாடுவதற்கு ஞானமலர் என்றும் இருந்தாள். ஆனாலும் அவளை அவன் சீறிய வேளைகளில் அவளைத் தவிர வேறொரு உயிரின் நினைவாகச் சுந்தரராஜன் வருவதற்கு அப்படியொன்றும் அவனுக்கு இருக்கவில்லை; கிடைக்கவும் இல்லை.
இப்பொழுதும் அவர்கள் பேசத் தொடங்கி, பேசக் கூடாதே என்று இருவரும் எதிர்பார்த்து இறுக மூடி வைத்திருந்த தெல்லாம் தட்டுண்டு கொட்டுப்பட்டவாறு வெளியே அம்பலமாகிய பின்னர் இருவருமே ஒருவராகிய நிலையில் பேசியும் இரண்டு மணித்தியாலங்களை நேரம் விழுங்கியிருந்தது.
இரவு ஒன்பது மணியாகியும் காலை எட்டு மணிக்குப் புறப்பட்ட சுந்தரராஜன் வரவில்லை. நீதிமன்றம் ஆகக் கூடியது ஆறு மணித்தியாலங்கள் மட்டுமே விசாரணை செய்தும் சுந்தரராஜனுக்கு விடியாதது போலிருக்கும். சட்டங்களும் நுணுக்கங்களும் அவனுக்கு மிக மிகக் கைவரப் பெற்றிருந்ததால், அவன் எடுத்துக் கொள்ளும் வழக்குகளில் பெரும்பான்மையினவற்றின் தீர்ப்புகள் "சாட்சியங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக எதிரி விடுதலை செய்யப்பட்டார்” என்று பத்திரிகைகளில் வெளிவருவதுண்டு. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் எதிர் தரப்பில் ஆஜாராகும் சுந்தரராஜன் எழுப்பும்
64

சட்டப் பிரச்சினையும், அதற்குக் கொடுக்கும் விளக்கமும் ஜூரர்களை மட்டுமன்றி நீதிபதியையே சில வேளைகளில் மயக்கடிப்பதால், சட்டப் பிரகாரம் அந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணை செய்யப்படாமலே ரத்தாகி விடும் வேளைகளும் வந்ததுண்டு.
நீதிமன்றங்களை அடுத்த வீதியில் பெரிதான கட்டிடம், பெயர்ப்பலகைகள் எதுவுமின்றி, சாதாரண குச்சி வீட்டின் அமைப்பில் இருக்கும் ஒரு தேநீர்க்கடையின் கடைசி மேசையும் நாற்காலியும் அவனது அலுவலகமாக இருந்தன. அங்குள்ள வெயிட்டர்கள் பலர் அவனுக்கு இலிகிதர் வேலைகள் பார்ப்பதுண்டு. இந்தத் துண்டை அவரிடம் கொடுப்பது அந்தத் துண்டை இவரிடம் கொடுப்பது, வழக்காளிகளுக்கு பூரீ சுந்தரராஜன், வழக்கறிஞர், சட்ட மேதைத்துவம் இவைபற்றிச் சிலாகித்து உண்மையான தகைமைகளை எடுத்துச் சொல்வது போன்ற வேலைகளைப் பெரும்பாலும் அவர்கள் செய்து வந்தார்கள். அதி அவசரமாக உயர்நீதிமன்றம் வரைக்கும்போகும் எனக் குற்றவாளியே எதிர்பார்க்கும் வழக்குப் பற்றிய விளக்கமும் துணையும் வேண்டுவோர் அவனுடைய இந்த மருத்துவமனையின் முன்னறையில் வெகு நேரமாகக் காத்திருக்க வேண்டும்.
அந்த வழக்காளிகள் வந்திருக்கும் செய்தியை ஞானமலர் தொலைபேசி மூலம் எப்படியோ நான்கு ஐந்து இலக்கத் தொடர்களைப் பிரயத்தனப்பட்டு டயல் செய்து தெரிவிப்பாள். அவன் காரையும் எடுத்துக் கொண்டு வந்திறங்கும் நேரத்துக்குள் குறைந்தது மூன்று தடவைகள் ஒரு சோம்பேறி அந்தத் தூரத்தை நடந்து முடித்து விடுவான்.
ஒரேயொருநாள் சிறுபொழுது சுந்தரராஜனுடன் பேசி தங்கள் குறைகளையும் ஆவல்களையும் கூறிவிட்டுச் சென்றால் மறுமுறை அவர்கள் அவனைக் காணும்பொழுது அவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். ஏற்கனவே பேசப்பட்ட தொகையை முன்கூட்டியே வாங்கி விடுவதால் வழக்கு முடிவதற்கு முன்னரே அந்தச் சின்னஞ்சிறு தேநீர்க்கடை முதலாளியிடமும், பாரிலும், பெரிய ஹோட்டல்களிலும் அந்தப் பணம் சென்று பதுங்கிவிடும். வெளிநாட்டிலேயே சட்டம் படித்ததாலும், வெளிநாடுகளிலேயே பல காலம் பயிற்சி பெற்றதாலும் அவன் எளிமையான சட்டவாதி என்றும், அறிஞன் என்றும் சேர்ந்தவர்களும் சிறந்தவர்களும் போற்றுவது அவனுக்குப் பெரும் பலமாக இருந்ததால், அவனைப் பொறுத்தவரையில் கிடைக்கும் வழக்குகளுக்கான "கொமிஷனை” அந்த வழக்குகளை ஒழுங்கு செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டி ஏற்படவில்லை. அப்படிக் கொடுக்கக் கூடிய பணத்தை அவன் ஹோட்டல்களில் வைத்து உணவாகவும், விலைமிக்க மதுவாகவும் வழங்குவதால் அவனது சமரச சன்மார்க்கம் வளர்ந்ததுடன், எளியோர்கள், வறியோர்கள் மத்தியிலும் மிகப் பலமானதும், பெரியதுமான பெயரை வாங்கிக் கொடுத்தது.
எங்காவது ஒருவனுடைய நாவில் “பாரிஸ்டர்” என்று ஆரம்பித்தால், அந்தச் சொல்லைக் கேட்ட மற்றொருவன் “சுந்தரராஜன்" என்று கூறிவிடுவான். நாவலர் என்றால் ஆறுமுகநாவலர் போல, பாரிஸ்டர் என்றால் சுந்தரராஜன் நினைவே எல்லோர்க்கும் எழும்.
அப்பொழுது அவன் அங்கு வந்தான். ஞானமலர் தான் தவறியும் ஏதும் சொல்லவில்லை, செய்யவில்லை என்ற "தாரக” மந்திரத்தை உச்சரித்தபடி, அவனைக் காலையில் பிரிந்தபொழுது எந்த உணர்வில் இருந்ததாக அவனுக்குக் காட்டியிருந்தாளோ, அந்த உணர்வைப் பெற்றாள்.
செல்வராணி அவனையே விழிவாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கையின் ஒரு விரலில் தோளுக்கு மேலாகக் கீழே சாய்ந்து தொங்கியிருந்த அவனுடைய 'கோட் அங்குமிங்கும் ஆட, அவனுடைய கால்கள் மெல்ல மெல்ல நடந்தபோதும்,
6S

Page 43
நிதானமிழந்தவை போன்று தள்ளாட, கண்கள் சிவந்து, குறுகுறென வெட்டி விழிக்க, கார்ச் சாரதி பைல்களைத் தூக்கிப் பயபக்தியுடன் உள்ளேவர சுந்தரராஜன் “குட் ஈவினிங். டார்லிங்" என்ற தனது வழமையான குரலுடன் உள்ளே நுழைந்து, ஞானமலருக்கு முன்பாக ஒரு பெண் போன்ற உருவம் வண்ணச்சேலை சுற்றி அழகாக இருப்பதைக் கண்டதும், தலையை உலுப்பி, கண்களைத் தெளிவாக்கினான்.
பின்னர் அவளை எங்கோ பார்த்த நினைவு எழுந்ததும், கதுப்புக்குள் சிரித்தபடி உள்ளறைப் பக்கமாகச் சென்றான். உள்ளறைக்குள் கோட்டை வீசிவிட்டு, சிகரட்டை உறுஞ்சி இழுத்தபடி சுந்தரராஜன் அவர்களை நோக்கி வந்த பொழுது அவர்கள் இருவருமே ஒருவரையொருவர் துணை வேண்டிக் கொண்டு பேந்தப் பேந்த விழித்தனர்.
6
கமலேஸ்வரன் கடற்கரையில் பிள்ளைகளுடன் உலாவிவிட்டு வீட்டுக்கு வந்ததும் இதுவரையும் அவர்களை எதிர்பார்த்து, எதிர்பார்த்து அலுத்த களைப்பில் பரமேஸ்வரி புறுபுறுக்கத் தொடங்கினாள்.
செல்வராணியை விட்டுவிட்டு பிள்ளைகளுடன் அவன் வருவதைக் கண்டதும் அவளுக்கு இருந்த வெறுப்பு இரட்டி மடங்காகியது.
“செல்வராணி வரவில்லையா? உங்களோடு தானே வெளிக்கிட்டவள்" என்றபடி வீதியைப் பார்த்தாள். அந்த ஒழுங்கையுந்தாண்டி அப்பால் காலி வீதிவரை கண் செலுத்திய பரமேஸ்வரி, எங்கோ யாரையோ காணவேண்டுமென்று சென்றிருந்த கணேசமணியும் இன்னமுந் திரும்பாததை எண்ணியதும் அச்சத்தின் வாய்ப்பட்டிருந்தாள்.
வீட்டிலே சொல்லிவிட்டு வெளியே செல்லும் கொழும்புவாசி திரும்பி வரும்வரை அவருக்காகச் சமைப்பதில் புண்ணியமில்லை என்று பலர் நகைச்சுவையோடு கூறி மகிழும் கதைகள் பல அவளுடைய எண்ணத்தில் நீச்சலடித்தன. யம வேகத்தில் பாதசாரிகளை ஜடங்கள் என்ற உணர்வில் மதியாது அங்குமிங்குமாக அலைந்து திரியும் வாகனங்கள் அல்லது பொருளைக் கண்டவிடத்து அப்பொருளை உடையவனின் பெறுமதி என்னவாக இருந்தாலும் அவனுடைய வாழ்க்கையையே முடித்துவிடும் அளவுக்குத் துணிச்சலும் காடைத்தனமும் மிக்கவர்கள், இன்னுமின்னும் எத்தனையோ அப்படி வெளியே செல்பவர்களைத் திரும்பி வரச் செய்வதில்லை.
“ஓபீசாலை வந்து உடுப்புங்கழத்தாமல் போன மனுசனையும் இன்னும் காணன். அப்படி நான் தனிச்சிருக்கிறேன். அவருக்கு மட்டும் ஊர் வேலை கனத்துப் போச்சுதுபோலை.”
கமலேஸ்வரன் திறப்புகளை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டு சலனமற்றவாறு வீட்டுக்குள் செல்வதைத் தடுத்து, அவர்களுடன் சற்றுப் பயமின்றி தனிமையின்றி இருக்கலாம் என்ற அவாவில் சொன்னாள்.
"ஏன். அவரும் வெளியே போய் விட்டாரா?” கமலேஸ்வரன் கேட்டான். “ஓம். ஐஞ்சு ஜஞ்சரை மணிக்குப் போனவர் இன்னும் வரயில்லை. மணியும் ஒன்பதாகப் போகிறது. சரி சரி. சமையல் ஒண்டும் இல்லையெல்லோ. பிள்ளையஞக்குச் சாப்பாடு கொடுக்க வேணும்.” என்று கூறிவிட்டு, “ரமணன் ரஞ்சனி” என்று குரல் கொடுத்தாள் பரமேஸ்வரி.
66

கடலை, ஐஸ்கிரீம் என்பனவற்றுடன் கடையில் வேறு உண்டதால் அவர்கள் வயிறு முட்டியவர்களாக எந்தவித தேவையுமின்றி தத்தம் இடங்களில் படுத்திருந்தனர்.
பரமேஸ்வரியின் அழைப்பைக் கேட்டு அவர்கள் இருவரும் எழுந்து ஓடி வந்ததும் பரமேஸ்வரி சொன்னாள்:
“சின்னஞ் சிறிசுகள் என்ன மாதிரிச் சாப்பிட்டு இருக்க வேண்டியதுகள். இப்பிடி நேரங் கெட்ட நேரத்திலை சாப்பிட்டால் உடம்பிலை என்ன ஒட்டும்? வாம்மா ரஞ்சனி, அண்ணனையும் கூட்டிக் கொண்டு வா. வந்து சாப்பிடுங்கள்"
தாயாக முடியாத தவிப்பில் தினமும் வெந்து கொண்டிருக்கும் அவளுடைய ஏழை மனம் அந்தக் குழந்தைகளைத் தன்னுடைய பிள்ளைகளாகவே பாவித்து ஒரு விதத்தில் அவ்வாறு நம்பி நடந்து கொள்வதையிட்டு நன்றியுணர்வோடு அவளை ஒருமுறை பார்த்துச் சிரித்துவிட்டுக் கூறினான் கமேலஸ்வரன்.
“வேண்டாம் பாருங்கோ. அவர்கள் கடையில் சாப்பிட்டு விட்டார்கள்." கமலேஸ்வரன் தான் அவர்களை வலிந்து அழைத்துச் சென்று கடையிற் சாப்பிட வைத்திருந்த பொழுதும், அந்தச் செய்கை தன்னுடையது என்று காட்ட விரும்பாதவன் போல், பிள்ளைகள் தாமாகவே சென்று கடையில் சாப்பிட்டார்கள் என்பது போன்ற அர்த்தத் தொனியில் கூறியது பரமேஸ்வரிக்கு என்னவோ போலிருந்தது.
“அதுசரி, நான் ஒருத்தி இஞ்சை கிடக்கிறன் எண்ட நினைவு ஆருக்கன்சரி இருந்தாத்தானே” என்று இழுத்தபடி ஒரு பெருமூச்சை வெளியே தள்ளிய பரமேஸ்வரி, ரமணனையும் ரஞ்சனியையும் வருமாறு அழைத்துச் சென்று, உட்கூடத்தின் சாப்பாட்டு மேசையிற் கிடந்த பழங்களை அவர்களிடம் கொடுத்தாள்.
பின்னர், வெளியே வந்து இரு வீடுகளின் பொது முத்தத்தில் நின்று கொண்டேயிருந்த கமலேஸ்வரனைப் பார்த்து, “நீங்கள் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டாள். அவளுடைய அந்தக் கேள்வி அவனை ஒரு கணம் எங்கோ எல்லாம் இட்டுச் சென்றது. அவன் தாயோடு பிள்ளையாக இருந்த காலத்தில் அகப்பைக் காம்பை இடக்கையில் எடுத்து வைத்தபடி வலக்கையால் அவன் வேண்டாம் வேண்டாம் என்று கத்தியும் அழுதும் கேட்காமல் அள்ளி அள்ளிப் போடும் அவனுடைய தாய் தங்கம்மாவின் நினைவு அவனைக் கசக்கிப் பிழிந்தது.
செல்வராணி அவனுக்கு மனைவியாக என்ன காரணத்திற்காக உடன்பட்டாளோ என்பது அவனுக்கு இன்று வரையும் புரியாததாகவே இருந்தாலும், தங்கம்மா எல்லாக் காரணங்களுக்குமாகவே பெற்றெடுத்துப் பெயரிட்டு, பெயரோடு வாழவும் வைத்தாள் என்பது தெரிந்திருந்தது. செல்வராணி கேட்க வேண்டியதும், கடந்த சில காலங்களாக அவள் மறந்து விட்டதுமான இந்தக் கேள்வியால் அவன் பதில் பேசாது, கண்களின் அடிவாரங்களுள் எழுந்து ஒளி வீசியபடி நின்ற கருணை முத்துக்கள் தெளிக்க அவளையே பார்த்தபடி நின்றான்.
"உங்களை என்ன கேட்கிறது. சாப்பிட்டீங்களா? சொல்லுங்களன்." பரமேஸ்வரி தனக்கே இயல்பான ஓர் அன்புக் கண்டிப்புடன் கேட்டாள். கமலேஸ்வரன் தன்னைச் சமாளித்து, சமநிலை பெற்றவனாகி, சிரித்து, "எல்லாம் ஆகிவிட்டது. இப்பொழுது திரும்பப் பசித்து நான் சாப்பிட வேண்டும் போல கிடக்குது” என்றான்.
"அப்ப வந்து சாப்பிடுங்கள்". பரமேஸ்வரி ஒரு தாய்மையுணர்வுடன் வெளியாகவும் சுருக்கமாகவும் கேட்டாள்.
67

Page 44
"இல்லை, இல்லை எனக்குப்பசி அடங்கிவிட்டது. இன்னுமொருநாள் பார்ப்போம்", என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான். பின் எதனையோ நினைத்துவிட்டு, பரமேஸ்வரியைப் பார்த்து, “செல்வராணி இப்ப வரலாம். அவள் தான் சாப்பிட்டாளோ என்னவோ. நேற்றுக் கொண்டு வந்த பார்சல் காலையில் எடுத்துக் கொட்டப்பட்டது” என்று கூறினான்.
பரமேஸ்வரி எதுவும் பேசாது தலையை ஆட்டினாள். அவன் உள்ளே போவதையே பார்த்தபடி நின்றவள் திடீரென்று கழுத்தையும் இமைகளையும் பார்த்து வெட்டி, வெளியே பார்த்தாள்.
அப்பொழுது அந்த ஒழுங்கையில் ஒளி வெள்ளம் ஒடவிட்டபடி ஒரு கார் வருவது தெரிந்தது.
அந்தக் கார் அவளுடைய வீட்டு வெளிக் கதவோரம் வந்து நின்றதும், உள்ளே சென்று, வீட்டு விறாந்தையில் நின்றபடி பார்த்தாள் பரமேஸ்வரி
அது டாக்டர் ஞானமலருடைய கார் என்பதை உணர்ந்ததும், செல்வராணியைத் தேடிப் பரமேஸ்வரியின் கண்கள் பாய்ந்தன. ஞானமலரே காரை ஒட்டி வந்ததால், காரின் முன் சீட்டிலிருந்து செல்வராணி “தாங்க் யூ. குட் நைட்" என்றபடி இறங்கினாள்.
அவள் இறங்குவதோடு தானும் இறங்கி வெளியே வந்த கந்தரராஜன், “உங்களைச் சந்திக்க நேர்ந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு காலமும் காணமல் இருந்து விட்டேனே என்பதற்காகச் சற்றுக் கவலைப்படுகிறேன். நாம் திரும்பவும் சந்திப்போமாக. ” என்றபடி அவளுக்கு விடையளித்துவிட்டு, அவள் இருந்துவந்த இடத்தில் அமர்ந்து கொண்டான்.
சுந்தரராஜனுடைய அந்த அலாரிப்பு வருணனையை அதிகம் ரசியாத ஞானமலர், இவர் இப்பொழுது லண்டனில் இருக்கிற நினைப்பில் இருக்கிறார். லண்டன் வேறு தமிழர்கள் வாழும் இடங்கள் வேறு. செல்வராணியிடம் வேண்டாத கதைகளை அளக்கிறாரே என்று நினைத்தபடி காரைத் திருப்பினாள்.
ஞானமலர் சற்று வெறுப்படைந்து அந்தப் போதில் அந்த வெறுப்பைத் தன்னுடன் சம்பந்தப்பட்டு விட்ட ஏதோ, எவரோ மீது தீர்த்துக் கொட்ட வேண்டுமென்ற மனித உந்தலில் காரை 'திடீர் பிறேக் இட்டாள். பின்னர் கார் புறப்படும்பொழுதும் மிக அவசரமாகவே புறப்பட்டாள். அந்தக் கார் அள்ளி எறிந்து இருளைக் கிழித்துக் கொண்டு வேகமாக இருளில் மறைந்தது.
கமலேஸ்வரன் விடிந்ததும் அலுவலகத்துக்குச் சென்ற பொழுது அவனுடைய புதிய வேலை சற்றும் எதிர்பாராத விதத்தில் அமைந்திருந்ததைக் கண்டு ஏக்கமும் கலக்கமும் அடைந்தான்.
ஹில்ஸ்வேர்த் நாகரீகத் தன்மையுடையவர் என்பதால் விருப்போ வெறுப்போ பட்பட்டென்று பதில் சொல்லி ஆகவேண்டும்.
இன்று தான் செய்யப் போகும் வேலை குறித்து அவனால் எதுவித முடிவுக்கும் வர முடியாதிருந்தது. அலுவலகத்தில் மறுநாள் வேலைபற்றிச் சிந்திப்பதற்கு வீட்டிலாவது நிம்மதி இருக்க வேண்டும். அலுவலகத்தில் அலுவலகப் பிரச்சினைகளை முடித்து வீட்டிலையேனும் நிம்மதியாக இருக்கலாம் என்று வந்தால் அங்கு அப்பிரச்சினைகளே மறுவடிவம் எடுத்தது போன்று புதிய பிரச்சினைகள் கிளம்பியிருக்கும்.
பிரச்சினைகள் வெறும் பிரச்சினைகளாக இருந்தால் அவற்றைச் சுலபமாகத் தீர்த்து விடலாம், ஆனால் அப்பிரச்சினைகள் குட்டி போடுவதனால் தானோ என்னவோ
68

ஒன்றைத் தீர்க்க மற்றொன்று எங்கிருந்தோ எழுந்துவிடும். மூட்டைப் பூச்சிகளைக் கொல்பவனுக்கு ஏற்படும் தர்மசங்கடமான நிலை கமலேஸ்வரனுக்கும் பல சந்தர்ப்பங்களில் 1ற்பட்டதுண்டு. அவனுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதானால் அது இன்னொரு பிரச்சினையால் மட்டுமே முடிகின்ற காரியமாகிவிட்டது. அவனுக்கு அதனால், பிரச்சினைகளைப் பிரச்சினைகளாலேயே தீர்க்காமல், தன்னால் தீர்க்க முடியுமா என்ற வேதனை ஆராய்ச்சியில் கமலேஸ்வரன் நிறைந்து கிடந்தான்.
“சேர், உங்களை டைரக்டர் கூப்பிடுகிறார்’ என்று காரியாலயச் சேவகன் கூறிவிட்டுச் சென்றதும், புதிய விளம்பர முறைபற்றி விரிவுரை நடக்கப் போகிறது என்ற ம.ணர்வுடன் எழுந்து சென்றான் கமலேஸ்வரன்.
"குட் மோனிங்" என்று கமலேஸ்வரன் சொல்லி வாய் மூடுவதற்குள் அதற்காகவே ாதிர்பார்த்திருந்தவர் போன்று ஹில்ஸ்வேர்த்தும்"குட்மோனிங், இப்படி அமருங்கள்” என்றார். கமலேஸ்வரன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்து கொண்டிருந்ததால் அதனை எப்படிச் சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கும் ஆவலிலும் பதட்டத்திலும் விரல்களைப் பின்னியபடி அமர்ந்திருந்தான்.
ஹில்ஸ்வேர்த் சொன்னார்: "மிஸ்டர் கமலேஸ்வரன், இந்த நாட்டிலே ஓரளவுக்கு விளம்பரத்தாலே விளம்பரமாகியுள்ள நாங்கள் இப்பொழுது எங்கள் மேல் நாடுகளில் கடைப்பிடிக்கும் விளம்பர யுத்தியைப் பயன்படுத்த வேண்டும். இது இந்த நாட்டை அதாவது உங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் புதியதாக மட்டுமன்றி மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். அதுதான் மொடல் விளம்பரம்” என்று கூறிவிட்டு, சற்று அமைதியான அவர், மேசையில் வெள்ளி கேசில் நிறைந்து கிடந்த வெளிநாட்டுச் சிகரட்டை மிக அலாதியாகப் பற்றி இழுத்து புகையைவிட்ட வண்ணம் அவனைக் கவனித்தார்.
குளிர்சாதனம் ஊட்டப்பட்டிருந்த அந்த அறைக்குள் வெளிப்பட்ட சிகரட் புகை, அவனைப் போலவே வெளியே செல்லவும் முடியாமல், உள்ளே தரிக்கவும் முடியாமல் எழுந்து ாங்கோ புக முனைந்து கொண்டிருந்தது. கமலேஸ்வரனும் தன் உள்ளக் கிடக்கைகளை எல்லாம் வசனத்தில் திரட்டி, "எனக்கு இந்த அசிங்கமெல்லாம் பிடிக்கவில்லை. நான் ராஜினாமாச் செய்கிறேன்” என்று கூறத் துடித்தாலும், நாட்டு நிலையும் அவனது குடும்ப நிலையும் அதற்கு ஒத்தாசையாக இல்லாது போகவே அமைதியாகக் குமுறிக் கொண்டிருந்தான்.
அவனுடைய முகத்தில் இப்புதுமுறை விபரீதமாக விளையாடிக் கொண்டிருப்பதை அவதானித்த ஹில்ஸ்வேர்த், சொன்னார்:
"நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். உங்களை உணர்ச்சி ஆளும்பொழுதுமட்டும் ஒரு வித்தியாசம், மற்றவர்கள் உணர்ச்சிகளின் வழியில் செயலாற்றியும் விடுவார்கள். நீங்களோ என்றால் உணர்ச்சிகளுக்கு அடிமையாகுவதும் இல்லை; அந்த உணர்ச்சிகளை ஆள்வதுமில்லை. இப்படிப்பார்க்கையில் உணர்ச்சிகளே நீங்களாகவும், நீங்களே உணர்ச்சிகளாகவும் இருப்பது போலத் தெரிகிறது” என்று மிகவும் அமைதியாக அவனைப் பற்றிக் கூறிவிட்டு, அவனிடமிருந்து எதுவித பதிலையும் எதிர்பார்க்காதவர் போலத் தொடர்ந்து கூறினார் ஹில்ஸ்வேர்த்.
“இன்றே நீங்கள் வரையும் ஒவியத்துக்குத் தற்காலிகமாகக் குட்பை சொல்லிவிட்டு, இனி காமராவுக்கு உதவியாக அமைந்து, படங்களுக்கு ஏற்ற டிசைன் எழுத்துக்களை வரைய வேண்டியதுதான். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எக்ஸ் கம்பனிக்கு
69

Page 45
ஷவர் விளம்பரம் தேவையாம். அவர்கள் புதிதாகச் சவர்க்கார உற்பத்தி செய்கிறார்கள். ஒர் அழகான பெண். அவளையும் வரவழைத்திருக்கிறேன். குளிப்பது போலவும், அவள் இந்தக் கம்பனியின் 'மேகலா சவர்க்காரத்தை உபயோகிப்பது போலவும் படம் எடுக்க வேண்டும். இங்குள்ள குளியலறையில் சிகு சிகு'என்று பாயும் நீரில் உல்லாசமாக அவள் நீராட வேண்டும். காமராமென் எல்லாரும் ஆயத்தமாக நிற்கிறார்கள். சரியாகப் பத்துமணி பதினைந்து நிமிஷத்தில் படம் எடுக்கலாம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வெற்றிகரமாக முடித்துத் திரும்பி வாருங்கள்” என்றபடி அவனுக்கு விடை கொடுத்தார் ஹில்ஸ்வேர்த்.
கமலேஸ்வரனுக்கு நாக்குதிக்கியது போன்றும், வார்த்தைக் கொடிகள் ஒன்றுக்குள் ஒன்று மறைந்து ஒரே சூன்யமாகி விட்டது போன்றும் இருந்ததால் அவன் எதுவுமே பேசாது, அவர் இட்ட பணியை ஏற்றுக் கொண்டவனாகி, வெளியே வந்தான்.
அவனுடைய கால்கள் பத்தேகால் மணியை நோக்கி நடந்து கொண்டிருந்தன.
7
கமலேஸ்வரன் தனக்கு ஏற்படப்போகும் புதிய அருவருப்பான அனுபவததை எண்ணி, புளுங்கிக் கொண்டிருக்கையில் அவனைக் கண்ட சித்திராவுக்கு என்னவோ செய்வதுபோல இருந்தது. அவள் எழுந்துவந்து அவனுக்குக் கூறினாள்.
“உங்களுக்குப் படிச்சுப் படிச்சு சொல்லியிருக்கிறன். எதுக்கும் யோசிக்க வேண்டாம். எந்த விஷயத்திலும் ஆத்ம சுத்தி இருக்குமெண்டால் அதனைச் செய்வதில் தவறில்லை. தவறுகளும் சரிகளும் மனிதன் முதலில் செய்துவிட்டு பிறகு கண்டு பிடித்தவைதான். தவறுகளும் சரிகளாக இருக்கிற காலம்தான் இது. ஒருவனுக்குப் பிடிக்காதது தவறு. பிடித்தது சரி. ஒவ்வொருவனுக்கும் எது எது பிடிக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது"
கமலேஸ்வரன் சித்திராவை ஒரு புன்னகையுடன் வரவேற்று கண்களால் சிமிண்டியபடி அவளையே பார்த்தான். அவனுடைய அந்தப் பார்வை புதியது போலவும் ஏதோ செய்வது போலவும் இருந்ததால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத சித்திரா திடீரென்று குழந்தையைப் போலச் சிரித்தாள். அவளுடைய அந்தச் சிரிப்பின் அடி ஆழத்துக்கு வீசப்பட்ட கமலேஸ்வரன், அதனின்றும் மீளத் துடித்தான்.
அப்பொழுது “குட் மோர்னிங் சேர்” என்ற ஓர் இனிய குரலைக் கேட்டதும், சித்திரா வெடுக்கென்று திரும்பி அந்தக் குரல் வந்த வழி பார்க்க, கமலேஸ்வரன் பதிலுக்கு “குட் மோர்னிங்” என்றான்.
யாரோ ஒருத்தி தான் தற்சமயம் இருந்த இடத்தை நிரப்ப விரும்புகிறாள் என்பதை உணர்ந்த சித்திரா, “நான் பிறகு பேசுகிறேன்" என்றபடி எழுந்து தனது இருப்பிடத்திற்குச் சென்றாள்.
அந்த யுவதி தன்னை அறிமுகப்படுத்தியதும் கமலேஸ்வரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உயர் குடும்பப் பெண்போல அழகாக உடுத்திருந்த அவள், சரளமாகப் பேசிய ஆங்கிலத்திலிருந்து அவள் ஓரளவேனும் உயர் கல்வி பெற்றவள் என்பது கமலேஸ்வரனுக்கு விளங்கியிருந்தது.
7()

தனக்கும் இன்னொரு ஆடவனுக்கும் முன்பாக அவள், ஒரு பெண் எப்படி ஆனந்தமாகக் குளிப்பாள் என்பதை அவள் நிதர்சனமாகக் காட்டப் போகிறாள் என்றெல்லாம் நினைத்ததும் கமலேஸ்வரனுக்கு வேதனையாக இருந்தது.
ஒரு பெண் கெடுவதற்கு ஆரம்பமான வழி இதுதான் என்றும் அவன் நினைத்தான். பின்னர் அவளையே கேட்டான்.
“இதற்கு முன்னரும் இப்படியான மொடல் விளம்பரங்களுக்கு உதவியிருக்கிறீர்களா?
"ஆமாம் மூன்று தடவைகள் வேறொரு கம்பெனிக்கு இப்படிச் செய்துள்ளேன். இரவு நடனங்களிலும் எனக்கு நிறையப் பயிற்சி உண்டு” என்று கூறிய அவள் ஒருவன் முன்னிலையில் தன்னையே அர்ப்பணிக்கின்ற நிலைக்கு ஆளாக்கப்பட்ட பின் உள்ளத்தை மறைப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்து கொண்டவள் போல தொடர்ந்து கூறினாள். “எனக்கு உண்மையில் இதனை நினைக்க மனச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப் பிரச்சினை. எனக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. என்னை நம்பி இருக்கின்ற இரு சகோதரிகளுக்காக இப்படியெல்லாம் நடக்கிறேன். என் வாழ்க்கை பற்றி அவர்கள் அறியக் கூடாது என்பதற்காகவும் அறிந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ளவோ, நான் கொடுக்கும் பணத்தை ஏற்கவோ மாட்டார்கள் என்பதற்காகவும் இதனை வெகு மறைவாகவே செய்கிறேன். பத்திரிகைகளில் வரும்பொழுது மொத்தத்தில் என்னை அடையாளமே காணமுடியாது." என்றாள் அந்தப் பெண்.
“உங்கள் தங்கைகள் எங்கே இருக்கிறார்கள்?" "அவர்களை விடுதியில் இருத்திப் படிப்பிக்கிறேன். இந்த நாகரீக உலகத்தின் வாடை அவர்கள் மீது வீசாது என்று நம்பிக்கையும் இருக்கிறது. நான் எங்கோ ஒரு கம்பனியில் ஸ்டெனோவாக இருப்பதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள்” என்றபடி சிரித்தாள் அவள்.
இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லையே என்று தன்னையே கேட்டுக் கொண்ட கமலேஸ்வரன் பதிலுக்கு முறுவலித்தான்.
நேரம் பத்தாகி இருந்தது. காமராவுடன் அப்பொழுது அவனை அணுகிய ஒருவன் அவளைக் கண்டதும் அவர்களுடைய உரையாடலைக் குழப்ப விரும்பாதவன் போல ஒதுங்கி நின்றான்.
கமலேஸ்வரனுக்கு மனம் திக்கடித்தது. தனக்கு முன் அழகே உருவமாக இருக்கும் அந்தப் பெண் ஒரு தொகை பணத்துக்காக தான் அணிந்திருக்கும் அந்த வண்ணப் பூச்சேலையையும் மற்றும் அணிகளையும் அகற்றி ஒரு சவர்க்கார நுரைகளை ஆடையாகப் போர்த்தி அழகு விளம்பரம் செய்யப் போகிறாள் என்று நினைத்தபடி, முன் சுவரில் தொங்கியிருந்த பெரிய கடிகாரத்தின் முட்கம்பியில் இலயித்திருந்தான். பின்னர் தனது கைக்கடிகாரத்தையும் பார்த்தபடி, “சரி போவோம்” என்று எழுந்தான்.
படம் எடுத்து முடிந்தது. அவள் பின்புறமாகத் தனது அழகைக் காமராவுக்குக் காட்டி, முன்புறமாகப் பெய்து கொண்டிருந்த பூமழை போன்ற நீரில் முகம் புதைத்துச் சிரித்தபடி குளித்தும் காட்டினாள். வல்லாப் பத்திரிகைகளிலும் அரைப் பக்க விளம்பரத்துக்காக அதனை இனி அமைக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இப்பொழுது இருந்தது.
7

Page 46
அவள் மேலாடைகள் மட்டும் இன்றி அந்தக் கொட்டும் நீரில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் ஒரு ஆடவர் முன்னிலையில் நனைந்த பொழுது ஒவ்வொருவருக்கும் எழுந்திருக்கக்கூடிய எண்ணங்களையும் ஆசைகளையும் எண்ணிப் பார்க்காதவளாகி, முன்னர் எந்த உணர்வில் வந்தாளோ அந்த உணர்விலேயே மறுபடியும் அவனிடம் வந்து விடை பெற்றாள். ஆனாலும் அவளுடைய விழிகள் நிலத்தைக் கவ்வ, உதடுகள் தமது சிரிப்பின் வேகத்தை இழந்தனபோல், அவள் நின்று கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணுக்குரிய பணத்துக்கான வவுச்சரை கமலேஸ்வரன் ஒப்பமிட்டுக் கொடுத்தான். அவள் அதனைப் பெற்றுக் கொண்டு கவுண்டரை நோக்கி நடந்தாள்.
அப்பொழுதும் அவள் முகத்தில் எள்ளளவு சலனமும் இருக்கவில்லை. அவளுக்கு வேண்டியது பணம். அதனைப் பெறுவதற்கு அவள் கெட்டழியாமல் இப்படிச் செய்வதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கமலேஸ்வரன் அதனை இந்த நாட்டுக்கே ஏற்பட்டுவிட்ட சாபக்கேடாகக் கருதியது என்னவோ வாஸ்தவம்,
பலம் வாய்ந்த ஆனால் கல்வி அறிவற்ற ஓர் ஆண்மகன் தனக்கிருக்கும் உடற்பலத்தைக் கொண்டு தோட்டங்கொத்தப் போவான். அது அவனுடைய தொழில். கற்ற ஒருவன் தனது கல்வியை மூலதனமாக்கி அதனால் வாழ முனைவான். அது அவனுடைய தொழில். இந்த சமூகத்தின் ஒவ்வொரு ஜீவனும் தன்னிடம் உள்ள ஒன்றையே முதலாக்கி அதன் மூலம் அந்த உள்ள ஒன்றுக்கேற்பத் தொழில் செய்து வாழ்வது இயற்கை அல்லவா? கமலேஸ்வரன் சிந்தனை உலகியல் பூர்வமாகத் திரும்பிய பொழுது அவன் இப்படியெல்லாம் நினைத்தான்.
இது மட்டுமா தனக்குக் கிடைத்த உடலையே மூலதனமாக்கி, அந்த உடலை இச்சிக்கின்றவர்களுக்கு அதனை ஈடு கொடுத்து, பல சந்தர்ப்பங்களில் விற்றுப் பிழைக்கிறார்கள் சில அபாக்கியவதிகள். அதுவும் சாபக்கேடோ, என்ன கேடோ. அவர்களுக்கு அதுதான் ஒரே வழியாகிவிட்டது. இந்த நிலையில் விற்பவளுக்கும் வாங்குபவனுக்கும் உள்ள உறவுதான் இப்பொழுது அங்கு வந்து தன்னைக் காட்டிவிட்டு அப்பாற் சென்று மறைந்துவிட்ட பெண்ணுக்கும் கமலேஸ்வரனுக்கும் உள்ள உறவு.
சித்திரா அங்கு வந்தாள். கமலேஸ்வரன் அமைதியாகக் கடமையாற்றுகின்ற தனது வழமையான நிலையை மறந்து குமுறிக் கொண்டிருந்தான். இன்பங்கள் துன்பங்கள் என்ற இயற்கைச் சக்திகளையும் கடந்துவிட்ட ஒரு மோனநிலை அவன்தூரிகையைப் பற்றித் தொழில் புரியும் பொழுது தெரியும் டொர் ரென்று விசையுடன் வீசிக்கொண்டிருந்த காற்றில் அவனது கேசம் நெற்றியில் புரள்வதும், மறுபடியும் பிறந்த இடத்துக்கு ஒடுவதுமாக இருந்தது. அவனது கழுத்தை இனம் புரியாத உறவில் நெரித்து வளைந்து வந்திருந்தடை'அவன் அணிந்திருந்த ஷேர்ட்டை ஒட்டி நிற்க மாட்டேன் என்ற சுதந்திர உணர்வில் மேலேயும் பக்கமாகவும் எம்பி எம்பிப் பறந்தடித்தது.
கமலேஸ்வரன் காற்றின் முற்றுகையை இம்மியும் பொருட்படுத்தாமல் மூன்று நாட்களுக்கு முன்பு சவர்க்கார விளம்பரத்துக்காகத் தான் பிரயத்தனப்பட்டு, ஆத்ம திருப்தியுடன் வரைந்திருந்த அந்த ஒவியத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
அந்தப் படம் ஒரு காதல் சோடியைச் சித்திரிப்பதாக இருந்தது. அவளுடைய பளபளப்பான வதனம் எக்ஸ் கம்பனியின் காதல் நிலவு சவர்க்காரத்தினால்தான் இப்படி ஆக்கப்பட்டது என்பது அவனுடைய கலையுணர்விலுள்ள கற்பனை. ஆனால், ஹில்ஸ்வேர்த்
72

அந்த ஒவியத்துக்குத் தற்காலிகமாக முழுக்குப் போடும்படி கூறியதும் அவன் தற்காலிகமாக தான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்குமே முழுக்குப் போடலாமா என்று கேள்வி எழுப்பினான். கமலேஸ்வரன் குமைந்து கொண்டிருந்ததைக் கவனித்த சிரிபாலா அவனை எப்படியும் தேற்ற முடியாது என்ற உணர்வில் சோகமே உருவமாகி மெளனமாக இருந்தான். இன்று அவனுக்கும் வேலை ஒடவில்லை. சித்திரா கேட்டாள். “எப்படி படப்பிடிப்பு?” அவளுடைய கேள்வியில் எத்தனையோ அர்த்தங்கள் வெளிப்பட்டு நின்றன. அவற்றைப் புரிந்தானோ என்னவோ சித்திரா சிரித்துக் கொண்டு நிற்பதையும் அலட்சியப்படுத்தியபடி "உங்களுக்குக் கூடப் பகிடியா?" என்று இதயத்தின் அடியிலிருந்து எழுந்த ஒரு கேள்வியால் கேட்டான்.
சித்திராவின் முகம் சுண்டி விட்டது. அவள் தன்னைச் சமாளித்தபடி சொன்னாள். "நான் இன்றைக்குச் சொல்லி வைக்கிறன். உங்களை உங்கள் தாயார் கூடக் கேவலமாக ஏளனமாகப் பார்த்தாலும் பேசினாலும், நான் ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டேன். நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள். அதைப் பார்க்கப் பொறுக்காமல்தான் பகிடியாகக் கேட்டேன். அதைப் பகிடியாகவே எடுத்திருந்தால் ஒருவேளை நீங்கள் சிரித்திருக்கலாம் அல்லவா?”
கமலேஸ்வரன் அவளையே விழுங்குவது போலப் பார்த்தான். சித்திராவை அவன் இருக்கச் சொல்லாததால் அவள் நின்று கொண்டே இருந்தாள்.
அவன் சொன்னான். “சித்திரா நான் இங்கேயும் இருக்கிற காலம் மிகக் கொஞ்சம். எனக்கு என்னுடைய ாதிர்காலம் எப்படி அமையப் போகுது என்று தெரிஞ்சதும் நான் கவலைப்பட்டுப் புண்ணியமில்லை, நான் என்னுடைய வாழ்க்கையை என்றோ தீர்மானித்து விட்டேன், உங்களுக்கும் வெகு விரைவில் குட்பை சொல்லலாம்."
அவன் கூறி முடிப்பதற்குள் சித்திரா அதிர்ந்து போனவளாக அருகில் இருந்த கதிரையை இறுகப்பற்றியபடி தலையைக் கவிழ்ந்தாள். அவளால் அவனுக்குப்பதில் சொல்ல முடியவில்லை.
8
சித்திரா ஒன்றுமே பேசவில்லை. அழுகை மட்டும் வந்திருந்தது. அவளுக்கு அப்பொழுது கிடைத்த ஒரேயொரு ஆறுதல் அழுகைதான். கமலேஸ்வரனுடைய திடீர் முடிவுகளுக்குப்பின்னர் முடிவே இல்லை என்பதை ஒரளவு தெரிந்திருந்த அவள் அவனுடைய அந்த வார்த்தைகளில் நிறைந்து கிடந்த பொருளை எண்ணி எண்ணி வெந்து கொண்டிருந்தாள்.
கமலேஸ்வரனை அதட்டி அல்லது ஆறுதலான வார்த்தை பேச அவளால் முடியும். ஆனால் அந்த வார்த்தைகளைப் பேசுவதற்கு ஒர் உறவு அல்லது உரிமை அடிப்படையேனும் இருக்க வேண்டும் அல்லவா? அவனுக்குத் தாயாக அவள் இருந்திருந்தால் முட்டாள்தனமாக (யுடிவெடுக்கிறான் என்று கண்டிக்கலாம். அல்லது கன்னத்தில் இரண்டு கொடுத்து அவனை கனர வைக்கலாம். ஒரு சகோதரியாகவேனும் அல்லது மனைவியாகவேனும் அவனுக்கு
7.

Page 47
வாய்த்திருந்தால் அவனோடு கூடப்பிறந்த உரிமையில் அல்லது அவனுடன் கூடிக்களித்த உறவின் அடிப்படையில் அவள் அவனைக் கெஞ்சியேனும் கேட்டுக் கொள்ள முடியும்.
அப்படியென்றால் அவள் யார்? சித்திரா அவனுடன் மிக நெருக்கமாகத் தன் இதயத்தை வைத்துப் பேசப் பழகிக் கொஞ்ச நாட்கள்தான் கழிந்திருந்தன. இந்த நாட்களில் அவள் அவனை ஒருவாறேனும் புரிந்து கொண்டிருந்தால், அவனால் தன் வாழ்க்கையிலேயே அவப் பெயர் ஏற்பட்டாலும் பறவாயில்லை என்ற தீர்க்கமான நம்பிக்கையிலும் தீர்மானத்திலும் இன்றும் அவனுடன் மனம் விட்டுப் பழகி வருகிறாள். அப்படியிருக்கும் தனக்கு அவன் மற்றைய அலுவலகப் பெண்களுக்குச் சொல்லியிருக்கக் கூடியது போல, குட்பை கூறிவிடப் போகிறேன் என்று சொன்னது குமைந்து, குமைந்து கொன்று கொண்டிருந்தது.
அவள் இதுவரையும் அவனாற் கேட்ட பெயர்கள் எல்லாம் அவள் நினைவைக் கொதிக்கச் செய்தன. அவனுக்காக அவள் எதனையுஞ் செய்யலாம் போன்று ஏற்பட்டு, நாளுக்கு நாள் வளர்ந்து வந்த எண்ணமெல்லாம் கரைந்து எங்கோ ஒட, அவள் வன்மங் கொண்டவள் போலத் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள்.
அந்த அலுவலகத்தில் ஏதேதோ அலுவல்களில் அந்த நேரம் கருத்தில் இருந்தவர்களின் கவனத்தை அவளுடைய அந்த அழுகை ஈர்த்துவிடக் கூடாதே என்பதும் இப்பொழுது அவளுக்குப் பிரச்சினையாக இருந்தது.
“மனமே! நீ அன்பு வைத்த இடம், பாச உணர்ச்சி பொங்கப் பழகிய இடம் உன்னுடைய அன்பைத் துச்சமாக மதித்து விட்டது. உனக்கு விரைவில் கிடைக்கும் பரிசு குட்பை தான். ஆதலால். உன்னை மன்றாடிக் கேட்கிறேன். நீ கரைந்து எஞ்சியிருக்கிற என் மானத்தை முழுக்க முழுக்க வாங்கி விடாதே" என்று இரந்து கேட்பவள்போல சித்திரா தன் நெஞ்சை யாருக்கும் தெரியாமல் வருடிவிட்டாள்.
அவளுடைய கண்டத்திலிருந்து ஒரு முள் உறுத்துவது போலவும் அதனைக் கக்கவும் முடியாமல் உள்ளே செலுத்தவும் முடியாமல் அவள் விக்குவது போலவும் அந்தக் காட்சி இருந்தது.
கமலேஸ்வரன் அவ்வளவு வெறுப்பாகக் கூறினால்தான் சித்திரா விடமிருந்தும் அவளுடைய அன்புப் பிடியிலிருந்தும் தப்பலாமென்று எண்ணியதால் வேண்டுமென்றே அப்படிக் கூறினான். அதனால் என்றுமே அவள் அழுது பார்த்திராத அவனுடைய கண்கள், இப்பொழுது அவள் அழுவதைக் கண்டதும், அவளுக்காக இரண்டு சொட்டுக் கண்ணிரை நன்றியாகச் செலுத்தத் துடித்துக் கொண்டிருந்தன. அவனுடைய வன்மம் பாய்ந்த நெஞ்சம் அதற்கு அனுமதி மறுத்ததால், அவன் பின்புறமாகத் திரும்பி அந்த அறையின் ஒரு மூலையில் தலையைக் கவிழ்ந்து கொண்டே எதனையோ தாறுமாறாகக் கிறுக்கிக் கொண்டிருந்த சித்திராவைப் பார்த்தான்.
அங்கு கருணை பொங்கி வழிந்தது! கமலேஸ்வரன் தன்னைப் பார்த்து, அல்லது தன்னிடம் எழுந்து வந்து ஒரு வார்த்தையேனும் ஆறுதலாகப் பேசமாட்டானா என்று அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டிருந்ததை உணர்ந்து கொண்டவன்போல, எழுந்து சென்றான்.
அவன் தன் முன் வந்து சிலையாக நிற்பதைத் தெரிந்து கொண்ட சித்திரா கலங்கிச் சிவந்து வெம்மையிலும் வாடிக் கொண்டிருந்த தனது பெரிய விழிகளை மேலுயர்த்திய பொழுது, ஒரு பெண் தேவதையே அவனைப் பார்த்தது போலிருந்தது. அவன் அருகில் தேடி
7.3

வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் கணப்போது உள்ளம் மகிழ்ந்தாலும், அவன் பேசிய வார்த்தைகள் மறுபடியும் நெஞ்சிற் புடமிட உதடுகள் துடித்தன. யாரோ ஒட்டி வைத்தாற் போன்றிருந்த அந்த உதடுகள் துன்பச் சுமையைத் தாங்க முடியாமல் துடித்ததும், கண்கள் மறுபடியும் பரிவோடு கலங்கி வந்தன.
"சித்திரா! எனக்காக ஏன் இப்படி அழுகிறீங்கள்?"
சித்திரா ஏதோ மனத்திற்குள் சொன்னாள். "உங்களுக்காக மட்டுந்தான் நான் இப்பொழுது இருக்கும் நிலையில் அழமுடியும். முதலில் என் பெற்றோர், சகோதரங்கள். இந்த உலகத்தில் எனக்குக் கிடைத்த நட்பு, அன்பு எல்லாம் நீங்கள். உங்களுக்காக நான் அழக் கூடாதா என்ன?”
தான் கேட்டதற்குச் சித்திரா ஒன்றும் பேசாது, சிறிதும் தன்மீது கொண்ட கோபந் தணியாது இருக்கிறாளே என்று ஏங்கியபடி, கமலேஸ்வரன் தொடர்ந்தும் கேட்டான்.
"ஏன் அழுகிறீர்கள்? உம்மை இப்போ யார் என்ன சொன்னது?" கமலேஸ்வரன் ஆத்திரத்தோடு கேட்டான். ஆனாலும் அதில் தன்மதிப்பைக் குறைத்து அன்பைக் கூட்டியிருந்தது சித்திராவுக்கு வெளிப்படையானதும், அவன் இதுவரையும் போட்டு வந்த நீங்கள் என்பதற்கு முடிவு வந்ததும் அவள் அவனை ஒரு முறை பார்த்தாள்.
அந்தப் பார்வை : இன்னுமொரு படி கீழே வந்து"சித்திரா ஏன் அழுகிறாய்?" என்று கேட்க மாட்டாரா என்பது போன்றிருந்தது.
கமலேஸ்வரனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அந்த அலுவலகத்தில் அவள் அழுதாள் என்றால், அந்த அழுகைக்கான காரணம் கேட்டு அவளைத் தேற்ற ஒருவருமே இல்லை என்பது இருவருக்கும் தெரிந்த உண்மை. சித்திரா அழ, கமலேஸ்வரன் அவளைத் தேற்ற என்ற இந்தச் செய்கைகள் இன்றுவரை ஏற்பட்டதில்லை. இவ்வளவுக்கும் உணர்ச்சிகளால் அரிக்கப்படாத கல் அன்று சித்திரா. அவளுக்கு சொல்ல முடியாத துன்பம் ஒன்று என்றுமே நேர்ந்ததில்லை. ஏனெனில் அவள் சொல்ல முடியாதளவுக்கு இன்பத்தை ான்றுமே அனுபவித்ததில்லை.
ஏமாற்றங்களும் துன்பமுமே வாழ்க்கை என்று ஆகிவிட்ட பின்னர் இடையிடையே கோடை மின்னல் போல வெட்டி வெட்டி மறையும் இன்பத்தைத் தேடி ஒடவோ, அதற்காக பாசித்து நிற்கவோ சித்திரா என்றுமே தயாராக இருக்கவில்லை.
அந்த அளவில் அந்த இருவருடைய அந்த உறவின் அத்திவாரம் ஒற்றுமையில் இடப்பட்டிருந்தது. குடும்பச் சுமையுள்ள குடும்பங்களில் பிறந்த அவர்கள் கண்ணிர் வார்த்து கல்வி கற்றதும் கண்ணிராலேயே காலத்தைக் கழித்ததும் இருவர் நினைவுகளையும்விட்டு அகலாத சம்பவங்கள். மற்றும் மாணவர்களுக்குத் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை ான்பதை நடையாலும் உடையாலும் அவர்கள் சமாளித்து வென்ற சம்பவங்களும் இலேசில் பறப்பதற்கில்லை.
அந்தப் பொல்லாத சம்பவங்களை மீண்டும் மீண்டும் வலிந்து இழுத்து, ஒரு பாட்டம் அழுது கொட்ட வேண்டுமென்றும் அவர்கள் எண்ணியதில்லை.
இன்பத்தையும் துன்பத்தையும் வெகுவாக இனங் கண்டுகொள்ள முடியாது. ாழ்ந்து கழிக்கும் சித்திரா இப்பொழுதுதான் தனக்குத் துன்பங்களுக்கே துன்பமான ஒரு காயம் நடந்துவிட்டதென்று எண்ணிக் கலங்கினாள்.
75

Page 48
சித்திரா மீண்டும் அவனைப் பார்த்துவிட்டு, அவளிடமிருந்து ஒரு பதில் வந்தால்தானே அவன் அவளிடம் அப்படி முன்யோசனையின்றிக் கூறிவிட்டது மகாதவறு என்று மன்னிப்புக் கேட்க முடியும், அல்லது அதற்காக வருந்த முடியும் என்று நினைத்தவள் போலக் கூறினாள்.
“சொல்றதும் சொல்லிப் போட்டு கேள்வி வேறையா?” இப்பொழுது அவளையும் அறியாமல் அவளுடைய கடை இதழ்கள் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டன. தான் அப்படிக் கூறியது அவளுடைய அழுகைக்கு நிச்சயமான காரணம் என்று தெரிந்து கொண்டும் அவன் அவளிடம் காரணம் கேட்டது ஒருவிதத்தில் அவனது குறும்பை எண்ணிய சிரிப்பாகவும் இருந்தது.
“நான் என்ன சொன்னேன்?” “என்ன சொல்லவில்லை?” "இச்! நான் என்னதான் அப்படிச் சொன்னேனாக்கும்" கமலேஸ்வரன்இயல்பாகஅதேவேளை அவள்சிரிக்கவேண்டும்என்றஅபூவலில்கேட்பான். “என்ன சொன்னனானோ? 'குட்பை சொல்லுறீங்கள். அதுகும் எனக்கு உங்களை இந்த ஒபிசிலை பிடிச்சுவைக்க என்னாலை முடியாமல் போகலாம். ஆனால்.”
“என்ன?” “இந்த உலகத்திலிருந்து உங்களை நான் விடவே மாட்டேன். நான் அப்படி விட்டுவிட்டேன் எண்டால் என்னை நானே வாழவிட மாட்டேன்"
சித்திரா ஏதோ உணர்ச்சியில் தனது உள்ளக் கிடக்கையை வெளியிட்டு விட்டாள். அதனைக் கமலேஸ்வரன் எப்படிப் பொருள் கொண்டாலும் அவளக்குக் கவலையில்லை. சித்திராவைப் பொறுத்த வரையில் அவள் கூறியதெல்லாம் உண்மைதான்.
சொற்ப நாட்கள் பழகி, மலை மலையாக அன்பைக் குவித்து அவனைக் குழந்தையாக்கி அந்த அன்பு மலைகளில் ஒடி ஆடவிட்ட சித்திராவை அவன் கனிவோடும் நன்றியோடும் பார்த்தான்.
தனக்கு இருக்கக் கூடிய சில சமூகக் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் அவளை என்ன என்னவோ எல்லாம் சொல்லி அணைக்க வேண்டும் போல அவனது கைகளும் நெஞ்சமும் துடித்தன.
சித்திரா எவ்வளவு நிதானமாக அந்த வார்த்தைகளைச் சொன்னாளோ அவ்வளவு அர்த்தத்துடன் இப்பொழுது அவனைப் பார்த்தாள். கமலேஸ்வரனுடைய விழியோரங்கள் நனைந்திருந்ததை அவளால் காணமுடிந்தது.
அது மன்னிப்பா? சித்திரா சொற்ப நேரத்திற்குள் ஏற்பட்ட போராட்டங்கள், சித்திரவதைகள், துன்பங்கள் எல்லாவற்றையுமே மறந்தவளாகி குழந்தைபோல் சிரித்தாள்.
தனது துன்பங்களில் பாதியைப் பகிர்ந்து எடுத்து தனக்காகவும் அழுவதற்கு ஒருத்தி கிடைத்துவிட்டாள் என்ற நம்பிக்கை உணர்வில் மூழ்கி, கிறங்கியிருந்ததால் அவனால் சிரிக்க முடியவில்லை.
அவன் ஒன்றுமே பேசாது திரும்பிநடந்தான். அப்பொழுதும் அவனுடைய காதுகளில் சித்திரா ஆயிரந் தெய்வங்கள் முன்னிலையில் நின்று சத்தியஞ் செய்து கொண்டிருந்தாள்.
“உங்களை இந்த ஒபிசிலை பிடிச்சு வைக்க என்னாலை முடியாமல் போகலாம். ஆனால் இந்த உலகத்திலிருந்து உங்களை நான் விடவே மாட்டேன். நான் அப்படி விட்டு விட்டேன் எண்டால் என்னை நானே வாழவிட மாட்டேன்!”
76

9
அன்று சாயந்தரம் காலையில் எடுக்கப்பட்ட விளம்பர மொடல் பற்றி அறிவதற்காகக் கமலேஸ்வரனை அழைத்திருந்தார் ஹில்ஸ்வேர்த்.
கலையென்ற துய்மையான தனது வாழ்க்கையில் மாறாத களங்கமொன்று ஏற்பட்டு விட்டதென்ற உணர்வில் சித்திரா எவ்வளவு தேற்றியும் கேட்காத கமலேஸ்வரன் மிகவும் முகம்வாடியிருந்தான். புதிய விளம்பர அறிமுக நாளிலிருந்தே அவன் கம்பனியில் தனது கடமைகளைக் கூடச் சரிவரச் செய்யவில்லை. அவனுடைய மேசைக்கும் நாற்காலிக்கும் கீழே குடிபோதையில் ஒருவன் வீசிவிட்டது போன்று சிகரட் துண்டுகள் கிடந்தன. சிகரட்டைப் புகைத்து சாம்பலை இடுவதற்கென மேசையில் கிடந்த ஆஷ் றே'யையும் அவன் மதிக்கவில்லை.
முகம் பார்க்கக் கூடியளவுக்கு பொலிஷ் செய்யப்பெற்று இருந்த அந்த நிலத்தில் இந்தக் கூழங்கள் அழகை இழக்கச் செய்யுமாறு கிடந்தன. மதிய போசனத்துக்கு எல்லோரும் வெளியிற் சென்றதும், தனது வழமையான அலுவலக உலாவை மேற்கொண்ட ஹில்ஸ்வேர்த் இதனைக் கண்டுவிட்டார்; எனினும் இதுபற்றியாரிடமும் எதுவும் சொல்லாது திரும்பிவிட்டார். அலுவலகத்தில் ஒர் ஊழியரின் சில நடப்புக்கள் ஏனையோரிலும் மாறுபட்டதாக இருப்பது மற்றையோருடைய கவனத்தை இழுத்து சில சந்தர்ப்பங்களில் நகைப்புக்கு இடமாகப்போகும் நிலையில் இருந்தாலும், அந்த ஊழியரின் அந்த நடப்பின் கவனத்தால் இழக்கப்பட்டு அதற்காகச் சிறிது வருந்துவது அலுவலகப் பொறுப்பாளருக்கு ஏற்படுவதுண்டு. ஹில்ஸ்வேர்த் இந்தக் காட்சியைக் கண்டதும் கமலேஸ்வரன் தன் நிலைமறந்து இருக்கின்றான் என்று மட்டும் எண்ணினார்.
இப்பொழுதும் கமலேஸ்வரன் அவர் முன்னிலையில் யாராலோ பெரிதாகப் பழிவாங்கப்பட்டவன் போலும், அந்தப் பழியை இக்கணமே பழி செய்தவனுக்கே திருப்பி விடுபவன் போலும் இருந்தது அவருக்கு வெறுப்பை ஊட்டியது.
அவனையே அமைதியாக உற்று நோக்கியிருந்த ஹில்ஸ்வேர்த் மேசையில் முழங்கைகளையிட்டு கைகளால் வாயை மறைத்துப் பின்னி, கண்கள் மட்டும் அவனை வெறிக்க இருந்தார். அந்த நிசப்தமான பொழுதில் அவருடைய அறைச் சுவர்களின் ஒரு பக்கத்தில் பெரிய வானொலிப் பெட்டியை வைத்தது போன்ற காட்சியில் இருந்த ஏர் கண்டிஷனர் மட்டும் யாருடையதோ மனத்தைப் பிரதிபலிப்பது போல ‘உர்ரென்று ஒலியெழுப்பிய வண்ணமிருந்தது. அது அந்தப் பெரிய அறையே உயிர்பெற்று, கமலேஸ்வரனுடைய வாழ்க்கைக்காக ஒரு பெருமூச்சு விடுவது, விட்டதுபோலவும் இருந்தது.
ஹில்ஸ்வேர்த் கேட்டார். “நான் உங்களை ஏன் அழைத்தேன் என்று தெரியுமா?” “இல்லை ஒருவேளை காலையில் நடந்த படப்பிடிப்பைப் பற்றிக் கேட்பதற்கு என்று நினைக்கிறேன்” என்று பவ்வியமாகக் கூறினான் கமலேஸ்வரன்.
"அது எப்படி நடந்தது என்றும், அப்படி நடக்கையில் நீங்கள் எப்படி நடந்து கொண்டிர்கள் என்றும் எனக்குத் தெரியும். அவற்றை உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள கனக்கு அத்தகைய ஒர் அவசியம் இல்லை” என்று மிக வெறுப்புடன் ஹில்ஸ்வேர்த் கூறியதும் *மலேஸ்வரன் ஒரு முறை அசந்து போனான்.
7ך

Page 49
நெஞ்சு இரட்டிப்பாக அடிக்க தனது வேலைவரை முழுக்குப் போடப்படப் போவதை ஒரு நிலையில் ஆதரித்தும், பல நிலைகளில் வெறுத்தும் கமலேஸ்வரன் இருந்தான்.
“உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்கிறேன். நான் இப்படிச் சொல்வதனால் எனக்கு இலங்கை நாட்டின் மீதோ, இலங்கை மக்கள் மீதோ வெறுப்பில்லை. ஆனால் உங்களைப் போன்று ஆற்றல் இருந்தும் முன்னேறத் தயங்கும், அல்லது முன்னேறவே மாட்டோம் என்று விடாப்பிடியாக நிற்கும் பிரசைகளால்தான் உங்கள் நாடு இவ்வளவு பின் தங்கியிருக்கிறது. மேல் நாடுகளில் உற்பத்தியாகின்ற பொருளை எவ்வளவு விலை கொடுத்தாகிலும் வாங்கி அனுபவிக்க வேண்டுமென்ற ஆவல் உள்ள நீங்கள் அந்தப் பொருள்களை இங்கு செய்தால் என்ன? அல்லது அவற்றை இங்கு ஏன் செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்புவதுமில்லை.
அவர் தொடர்ந்தார். கமலேஸ்வரன் மெளனியாகிக் கேட்டுக் கொண்டிருந்தான். "ஆப்டர் ஒல், கலையென்றால் என்ன இறக்குமதிச் சரக்குப் போலவா?”
கலையையே வாழ்க்கையாக்கி அதற்கே தன்னை அர்ப்பணஞ் செய்து கொண்ட ஒருவனுக்கே தான் கலையைப் பற்றிய வியாக்கியானஞ் செய்ய நேர்ந்துவிட்ட ஒருவிதத்தில் சங்கடமானதும் மறுவிதத்தில் தன் பெருமை கூட்டுவதுமான அந்தச் சந்தர்ப்பத்தை வெகுவாக இரசித்த ஹில்ஸ்வேர்த் தொடர்ந்து கூறினார்.
“அகன்று பரந்து சிறந்து நிற்கும் இந்த வானத்துக்கும் மண்ணுக்குமிடையில் சூரியன் எவ்வளவு பொதுமையாக, புதுமையாக விளங்குகின்றதோ அவ்வளவு சிறப்புடன் கலையும் மிளிர்கின்றது. நீங்கள் கீதை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். லோர்ட் கண்ணன் சொல்லியிருக்கிறார் கலைகளிலே நான் ஓவியம் என்று. கலைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த கலை ஓவியக் கலைதான். அதில் ஆச்சரியப்படுவதற்கும் சந்தேகப்படுவதற்கும் எதுவுமில்லை. ஆனால் உங்களைப் பொறுத்தவரையில் ஒவியம் கலை அல்ல, தொழிலாகிவிட்டது. கொடுக்கப்படுகின்ற விளம்பரத்துக்கு உங்கள் கற்பனையையும் கைவண்ணத்தையும் காட்டி, சிறந்த ஒவியங்களை வரையலாம். அது விளம்பரம் என்ற தொழிலுக்கு உதவுகின்றது. இன்னொன்று, தொழிலைக் கலையுணர்வோடு செய்யலாம். அதே போன்று கலையையும் தொழில் உணர்வுடன் செய்ய வேண்டும்"
கமலேஸ்வரன் சிலையாகி இருந்தான். தனது இமைகளை ஒரு கணம் வெட்டி மூடினாலும் ஹில்ஸ்வேர்த் சொல்லப் போகும் சில விஷயங்களை விட்டுவிடுவேனோ என்பது போன்ற ஏக்கம் அவன் முகத்தில் தெரிந்தது.
ஹில்ஸ்வேர்த் சொன்னார்: "நாங்கள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்த பொழுதும் புதுயுகத்தில் வாழ்கிறோம் என்பதை மறக்கக்கூடாது. சரித்திர காலத்தில் அரசர்களும் பிரபுக்களும் சாம்ராஜ்யங்களையும் நாடுகளையும் அமைத்தார்கள். சித்திரமும் சிற்பமும் வளர்ந்திருந்தன. அவற்றை வளர்ப்பதற்கென்றே கலைஞர்கள் தம் போக்கில் கற்பனையை வார்த்து வடிப்பதற்கென்றே அரசர்கள் சிலர் உதவியிருக்கின்றனர். அந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கக்கூடிய ஆயகலை இன்று இல்லையே என்று ஏங்குவது சுத்த மோசமான கருத்து. அது அந்தக் காலம். இது இந்தக் காலம். இந்தக் காலத்தில் எல்லாம் புதுமை, ஒரு பெண்ணை வரைய வேண்டுமென்றால் அவளுக்கே சிறப்பான சில உறுப்புக்களை கோணல் மாணலாகக் கிறுக்கிவிட்டு, அந்தச் சதுரங்களில் வர்ணத்தை அள்ளி நிரப்பினால் அது "மொடேன் ஆர்ட் ஆகிறது. இதனையும் இரசிப்பதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.”
78

“இப்பொழுதெல்லாம் புதிய முறையில் நாங்கள் விளம்பரம் செய்து மக்களின் பாவனையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறோம் என்று எங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. இந்தப் பெயரில் உங்களுடைய சேவைக்கும் பங்குண்டு என்பதற்காக நான் நன்றியாக இருக்கிறேன். ஆனால் கம்பனி விதிகளுக்குமாறாக நீங்கள் கலையைக் கட்டி அழுவதானால் நான் என்ன சொல்ல? அல்லது என்ன செய்ய?”
ஷேக்ஸ்பியர் காலத்தில் கூடப்பேசியிருக்க முடியாத கடினமானதொரு மொழியில், கண்களில் வார்த்தைக்கு வார்த்தை ஒளியும் தெளிவும் பிறக்க ஹில்ஸ்வேர்த் பேசிக் கொண்டிருந்தார்.
கமலேஸ்வரன் உள்ளங் குறுகி அவரை எதிர்த்துப் பேசவோ, அல்லது தனது முடிவைத் தெரிவிக்கவோ முடியாத நிலையில் தவித்தபொழுது, ஹில்ஸ்வேர்த்தே அவனுக்கு அடியெடுத்துக் கொடுப்பவர் போலச் சொன்னார்.
“கடைசியாக நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தனி நபரின் ஆசாபாசங்களுக்காகக் கம்பனியை மூட நான் விரும்பவில்லை. அதைவிட முட்டாள்தனமும் வேறு இல்லை என்று நினைக்கிறேன். ஆதலால் இந்த மொடல் விளம்பரத்தைக் கவர்ச்சியாகச் செய்யக்கூடிய ஒரு நபரை நான் தேட வேண்டியதுதான்.”
கமலேஸ்வரன் அதனைக் கேட்டதும் பெரிதும் ஆறுதல் அடைந்தவன் போலானான். அவனுடைய உதடுகள் மெல்லத் துடித்தபோதும், அவற்றின் கடைக் கோடிகளில் மென்னகை நிறைந்து கிடந்து மறைந்தது.
அவன் கூறினான். "நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மனத்துக்குப் பிடிக்காமல் ஒன்றைச் செய்வதிலும் அதைச் செய்யாமலே விடுவது மேல். பிரச்சினைகளை வளர விட்டுத் தீர்ப்பதிலும், ஆரம்பத்திலேயே தீர்ப்பது அல்லது பிரச்சினைகளை அழித்து விடுவது உசிதமானது. அப்படியானால் நான் எனது வேலையிலிருந்து விலகுவதாக முடிவு செய்கிறேன்"
ஹில்ஸ்வேர்த், தான் கூறியதை அவன் எவ்வளவு பிழையாக விளங்கிக் கொண்டான் என்பதைக் கவலையுடன் எண்ணியபடி அவனை விறைத்து,"அவசர முடிவுகள் செய்ய வேண்டாம். உங்களை விலகும்படி நான் கேட்கவில்லை. உங்களுக்கு மேற்பார்வை வேலை கொடுக்கிறேன். சம்மதமா?” என்றும் கேட்டார்.
“மன்னிக்க வேண்டும். ஒவ்வொரு விளம்பரமும் மொடல்களால் ஆகும் பொழுது ஒவ்வொரு பெண்ணையும் காசுக்காக நான் கெடுக்கின்றேன் போலப்படுகிறது. எனது மனோதத்துவம் அப்படி என்னை மன்னித்து விடுங்கள். நான் ராஜினாமாச் செய்கிறேன்” என்றபடி போவதற்கு எழுந்தான் கமலேஸ்வரன்.
"உங்களுக்கு மிகவும் பிழையானதும், புதுமைக்கு ஆகாததுமான ஒரு மனோபாவம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு என்னிடம் மருந்தில்லை. நான் எனது கருத்துக்களை இனிச் சொல்ல விரும்பவில்லை” என்றபடி அருகில் தெரிந்த கண்ணாடிச் சுவரின் ஊடாக வெளியே பார்த்தார் ஹில்ஸ்வேர்த்.
கமலேஸ்வரன் மிக அமைதியாக நடந்து வெளியேறினான்.
★★★ ★★ ★
79

Page 50
தணல் நான்கு
கமலேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்ட லிவு நாட்களில் அவன் இதுவரை எடுத்தன போக எஞ்சிய நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருந்தாள் சித்திரா.
தான் அவனுக்குக் கூறியவை யாவற்றையுமே அவன் பொருட்படுத்தாதவனாகி ராஜினாமாக் கடிதத்தையும் சமர்ப்பித்தது அவளுக்கு என்னவோபோல இருந்தது.
அவளுடைய இருதயம் அதனைச் சுற்றி அணிந்திருந்த சட்டைகளையும் அணிகளையும் பிய்த்துக்கொண்டு வெடித்துவிடுவதுபோல, அதற்கான அறிகுறியாக நெஞ்சு கனப்பது போலவும் தொண்டைக்குள் மிடறுகள் தரிப்பன போலவும் இருந்தன. அவள் அடிக்கடி தன் நெஞ்சை வருடிவிட்டுக் கொண்டாள்.
கண்கள் கலங்கிக் கலங்கி வந்ததால் பார்வை மங்கிவிட்டது போலவும், திடீரென்று அவள் முதுமை எய்தியதால் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது போலவும் இருந்தது.
சித்திரா அழுதாள். கமலேஸ்வரன் ஒரு மாதத்துக்கு முன்னறிவித்தல் கொடுத்து, கம்பனிச் சட்டப் பிரகாரம் கடிதம் சமர்ப்பித்திருந்தான். அதன்படி அவனுக்கு எல்லாமாக இருபத்திரண்டு நாட்கள் எஞ்சி இருந்தன.
சித்திரா அவனது லிவு நாட்களைக் கணக்கிட்டு ஹில்ஸ்வேர்த்திடம் அனுப்பி வைத்ததும், அவர் அவனது ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு விட்டதாக ஒரு நோட் எழுதிக் கொடுத்தார். இவை யாவற்றையும் தானே செய்ய வேண்டியிருப்பதையிட்டு சித்திரா பெரிதும் வெந்து பொசுங்கினாள்.
உணர்ச்சிகளே வாழ்க்கையாகிவிட்ட அவனுக்காக அவள் அழுத கண்ணிர் எந்தப் பயிரையும் வளர்க்க முடியாதபோதும், அவர்கள் இருவருக்குமிடையே நெருங்கி, மிக மிக நெருங்கி வளர்ந்து கொண்டிருந்த அன்புப் பயிரை வளர்க்க நிச்சயம் உதவி செய்திருந்தது. அவள் தனக்காக அழுது அழுது செத்துப் போய்விடுவாளோ என்றவரைக்கும் கமலேஸ்வரனும் சற்றுக் கலங்கினான்.
வேலையை விட்டுவிட்டால் இந்த சமூகம் தனக்குக் கொடுத்திருந்த மதிப்பை பெருமளவு குறைத்துவிடும் என்று அவன் அறிந்திருந்தும், அந்த அத்திவாரமற்ற ஒரு சமூக அந்தஸ்துக்காக அவன் போராடத் தயாராகவில்லை.
நான்கு ஐந்து மனிதர்கள் ஒருவனைப் பற்றிப் பேசுவது பழியாகும். அந்த நான்கு ஐந்து பேரைக் கொண்ட ஒரு கூட்டமே அவனைப் பற்றிப் பேசத் தலைப்படும் பொழுது அது புகழாகும். புகழைப் பேசினாலும் பழியைப் பேசினாலும் பேசுபவர்களுடைய நாக்குகள் பொருள் உணர்ந்து மணமறிந்து பேசுவதில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். அந்த நான்கு ஐந்து நபர்களுக்காக அவன் வருந்தவோ, அவர்களுடைய அன்புக்காக ஏங்கித் தவஞ்செய்யவோ மனமற்றவனாகி அமைதியாக இருந்தான்.
அவன் வேலையை விட்டு விலகப் போகிறான் என்பதைக் கேட்டதும் சிரிபாலா அதிர்ந்து போனான். கமலேஸ்வரனுடைய இடத்தைத் தற்சமயம் நிரப்பக்கூடியவனாக அவனே இருந்தபொழுதும் அந்தப் பதவிக்காக சிறந்த முறையில் தன்னை வழிநடத்திய ஓர் அன்பனை இழக்க அவன் தயாராகவில்லை.
80

தளதளக்கும் தாழ்ந்த குரலில் சிரிபாலா சொன்னான். “உங்களுக்கு இப்படியொரு எண்ணம் வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்கள்தான் இந்த அலுவலகத்தில் எனக்கிருக்கும் ஆறுதல், துணை, வழிகாட்டி எல்லாம். இப்பொழுது நீங்கள் போய்விட்டால் என்னால் தனியே இருக்க முடியாது. என் குடும்பநிலை இடந் தருமென்றால் நானும் உங்களுடன் புறப்பட்டு விடுவேன்"
“என்ன கதை இது சிரிபால் நாங்கள் நினைத்தபோது விடுவதற்கும், வேண்டியபோது பெறுவதற்கும் வேலை என்ன சந்தைச் சரக்கா? எனக்கு எல்லாமே அலுத்துவிட்டது. எனக்கு வாழ ஆசையாயிருந்தும் அதற்கான வகையை அறியாமல் நான் என்னையே அழித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இளைஞர், வாழ்ந்து களிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. எனக்காக இன்னொரு உயிர் வருந்துவது என்றால் அது நான் செய்த பாக்கியம். அதற்காக உங்களுக்கு என் நன்றி. மற்றது, உங்களைப் பற்றி சிறந்தளவுக்கு அறிக்கை கொடுத்துள்ளேன். ஒரு வேளை இந்தப் பதவி உங்களுக்கே கிடைக்கலாம். அப்படிக் கிடைக்க வேண்டுமென்பதே என் ஆசை”
"நான் முப்பது ஆண்டுகளாக இலட்சியத்திலே பிறந்து வளர்ந்து விட்டேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்த ஓவியக் கலையைக் கற்றது என்னுடைய இலட்சியத்தை இரட்டி மடங்கு வலுவடையச் செய்து விட்டது. தமிழ்நாட்டில் படித்த காலங்களில் எங்கள் முன்னோரான தமிழ் அரசர்களின் வீரச் செயல்களின் நினைவுச் சின்னங்களான சிற்பங்களையும் ஒவியங்களையும் பார்த்ததும், எனது உலகியல் நினைவே அழிந்துவிட்டது. வானளாவி உயர்ந்து நிற்கும் வண்ணக் கோபுரங்கள், இடைவெளியின்றி எத்தனையோ கலைஞர்களின் இதயக் கிடக்கைகளாக மலர்ந்திருக்கும் மங்காத சிற்பங்களும், காலத்தாலும் கயவர்களாலும் அழிக்கப் பெறாது காலத்துடனேயே வாழ்ந்திருக்கும் சித்திரங்களும் என்னைக் கவர்ந்து தம்முடன் ஈர்த்து விட்டன. அந்த ஈர்ப்பு என்னை என் ஆத்மாவுக்காகவே வாழ்பவனாக்கி விட்டது. நடந்தவை கடந்தவைகளாகவே இருக்கட்டும். ஏதோ உணர்வு, நான் விலகிக் கொள்கிறேன். என்னால் ஒவியக்கலை வளராமல் விட்டால் காரியமில்லை. ஆனால் ஒவியத்தை நம்பி வாழ்க்கையை ஆரம்பித்துவிட்ட என்னால் அதன் தூய்மை கெடவில்லையென்று உலகை உணர்ந்த ஒருவன் சொன்னால் அதுவே போதும் எனக்கு.”
கமலேஸ்வரன் எங்கோ பார்த்தபடி கூறிவிட்டு சிரிபாலாவைப் பார்த்தான். அவன் குழந்தை போல் விக்கி விக்கி அழத் தொடங்கியிருந்ததைக் கண்டதும்,துணுக்குற்று எழுந்து, அவனுடைய கைகளைப்பற்றி தன் அருகில் அழைத்து, "சே ஆண்பிள்ளை அழலாமா?” என்று கேட்டபடி சிரிபாலாவின் கண்களை மெல்ல வருடிவிட்டான்.
கமலேஸ்வரனுடைய அன்புப் பிடியிலேயே வெகுநேரம் இருக்க வேண்டுமென்று விரும்பிய சிரிபாலா அவனுடைய கைகளை இரு கைகளாலும் வாரிப் பிடித்து தன் முகத்தில் புதைத்தபடி மேலும் தலங்கினான்.
சிரிபாலா இளைஞனாக இருந்ததாலோ என்னவோ தன்னை ஆண்டு உணர்ச்சிகளைக் கொல்ல அவன் பழகியிருக்கவில்லை.
அவர்கள் கலங்கிக் கொண்டேயிருந்தார்கள். கமலேஸ்வரனுக்காக மற்றவர்கள் கலங்கியபொழுது, அவர்கள் தன்மீது கொண்டிருக்கும் உண்மையான அன்புக்காக அவனும் கலங்கினான். அவர்களை விட்டுப் பிரிவது இப்பொழுது அவனுக்குக் கஷ்டமானது போற்பட்டது.
እ81

Page 51
ஓ! அன்பின் காட்சி கண்ணிர் அல்லவா? கமலேஸ்வரன் ராஜினாமாச் செய்தது செல்வராணியைப் பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை. அலுவலகத்திலிருந்து மீண்ட அவள் பத்திரிகையில் ஒரு கோரச் செய்தியை வியப்புடன் படித்து, அந்தக் கோரத்திற்குப் பலியானவர்களுக்காக ஒரு கணமுமே வருந்தாது பத்திரிகையை அப்பால் வீசிவிட்டு அமைதியாகும் ஒருவன் போல, வெளியே சென்று விட்டாள்.
டாக்டர் ஞானமலரின் அந்நியோன்ய நட்புக் கிடைத்தது அவளுக்கு இரு விதத்தில் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருந்தது. ஞானமலர் ஒரு டாக்டர் என்பது அவளுக்கு அதிக சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்ததுபோல இருந்தது.
அன்று அலுவலகத்தில் மதிய போசன வேளையின்போது தன்னுடன் பேசும் ஒரு சிலருக்கு வலிந்து இழுத்து, டாக்டர் ஞானமலருடன் தனக்கு ஏற்பட்ட நட்பைப்பற்றி மெல்லச் சொல்லியிருந்தாள் அவள்.
ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள் வேறு வேறு நிலைக்கு ஆளாக்கப்பட்டதும் தப்பித் தவறி உயர் உத்தியோகம் எடுத்துவிட்ட ஒருவன் அல்லது ஒருத்தி தனது சகபாடியான அந்தத் துரதிஷ்டசாலியைத் தன் வாழ்நாளிலேயே கண்டதில்லை என்ற உணர்வுடன் எங்கோ பார்த்தபடி செல்லும் காட்சி கொழும்பு வீதிகளில் நிறைந்து கிடக்கும். பட்டதாரி ஆசிரியரின் மகன் தமிழாசிரியருடைய மகனைக் குறைவாக நோக்குவதும், அல்லது தந்தை டாக்டராகவோ வழக்கறிஞராகவோ கணக்காளராகவோ இருந்துவிட்டால் அவர்களில் ஒருவரின் மகன் எல்லோரையுமே கீழாக நோக்குவதும் ஒரு சமூகப் பண்பாகி விட்டது. தந்தை வழக்கறிஞர் அண்ணன் டாக்டர் அக்கா பட்டதாரி ஆசிரியை என்றெல்லாம் பெருமையடிக்கும் ஒரு குடும்பத்தின் கடைசி மகள், பத்து முறை சிறைசென்று மீண்டாலும் எத்தாரிதத்தாரியாக இருந்தாலும் அவளுக்கும் ஒரு அந்தஸ்தைக் கொடுக்கும் இந்தச் சமூகம் பற்றிச் செல்வராணி நன்கு அறிந்திருந்ததாலோ என்னவோ, சேர்பவர்களுடன் மட்டுந்தான் சேர்பவளாக இருந்தாள்.
இதனை உணர்ந்தோ என்னவோ அவள் கொழும்பில் வேலைக்கு வந்த ஆரம்ப காலங்களில் போல் றும் டான்ஸ் ஆடவுங்கற்றிருந்தாள். டாக்டர் ஞானமலரிடம் இதுபற்றி அவள் ஒருமுறை சொல்லியதும் அவள் பட்ட ஆனந்தம் அந்த இருவருக்குமே தெரிந்தது.
கணேசமணி, பரமேஸ்வரி இருவருமே கமலேஸ்வரனைப்பரிதாபமாகப் பார்த்தனர். செல்வராணி இனி ஒரேயடியாக உயர்ந்து விடுவாள் என்று அவர்கள் ஷேஷ்யஞ் செய்யவும் தலைப்பட்டனர்.
வழமைபோல இருட்டியதும்தான் வீடு வந்த செல்வராணியிடம் “நான் றிசைன்' பண்ணி விட்டேன். இனி வேலைக்குப் போக மாட்டேன்” என்று கமலேஸ்வரன் கூறியதும், அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, தன் கதுப்புக்குள் சிரித்துக் கொண்ட செல்வராணி கூறியவை அவனுடைய நெஞ்சைப் பிழிந்து கொண்டிருந்தன.
"ஓ அதுக்கென்ன? நான் இருக்கிறன் மாடு மாதிரி உழைப்பதற்கு" என்றபடி அவள் வெளியே சென்றுவிட்டாள்.
அவளுடைய வார்த்தைகளைக் கேட்காது இருப்பதற்கு அவனுடைய காதுகள் செவிடாக இருக்கக் கூடாதா என்றும் ஏங்கினான் அவன்.
அப்பொழுது அங்கு வந்த பரமேஸ்வரி,"உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது" என்றபடி அவனிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள்.
82

கமலேஸ்வரன் அந்தக் கடிதத்தைப் படித்ததும் தலைசுற்றி விழுந்தவன்போல, நிற்க முடியாமல் வீட்டின் முற்றத்திலேயே குந்திவிட்டான்.
அந்தக் கடிதத்தை அவனுடைய தாயார் தங்கம்மாதான் எழுதியிருந்தாள்.
தனக்கு ஊரில் தனியே கிடக்க முடியாமல் இருக்கிறது என்றும், அடிக்கடி ஏற்படும் நோய்க்குக் கொழும்பில் வைத்தியம் பார்ப்பதற்காக இன்று மாலையே கொழும்பு மெயிலில் புறப்படுவதாகவும் எழுதியிருந்தாள்.
"அம்மா முந்தியெல்லாம்பட்ட நெட்டூரங்கள் போதாமலோ பேந்தும் வரப்போறியள்? ஐய்யோ! நான் என்ன செய்வேன்?"
அவன் வாய்விட்டே அலறினான்.
2
செல்வராணி விழுந்தடித்து வந்தவள்போல தன் முன்பாக இளைக்கத் தொடங்கியதும் ஞானமலருக்கு வியப்பாக இருந்தது. அப்பொழுதுதான் தன்னிடம் வந்திருந்த பல நோயாளர்களைத் தாமதமின்றிப் பரிசோதித்து அனுப்பிவிட்டு, அப்பாடா என்றிருந்த ஞானமலர் செல்வராணியினுடைய அந்தக் கோலத்தையும் அது தந்த களைப்பையுங் கண்டு ஆச்சரியப்பட்டாள்; பின்னர் அவளுக்கு வரும் வழியில் ஏதாவது நடந்திருக்குமோ என்று ஐயுறவுங் கொண்டாள்.
வார்த்தைகள் உள்ளத்துக்குள்ளேயே கிடந்து பறக்கத் துடிப்பனபோல் இறக்கைகளை அடித்தாலும், மூச்சு ஒத்துழையாததால் பேச முடியாது தவித்தாள் செல்வராணி. இரண்டு கைகளையும் அந்தரத்தில் தூக்கி உயர்த்திப் பறப்பவள் போன்ற நிலையில் தான் வந்த வழியைச் சுட்டிக்காட்டி, அதரங்களைத் திறந்து கன்னங்களாலும் கண்களாலும் சிரித்து நின்ற செல்வராணியைக் கண்டு ஞானமலரும் இப்பொழுது சிரித்து விட்டுக் கேட்டாள்.
“ஏன்? யாராவது துரத்தி வருகிறார்களா?”
“ஊக்கும்"
"அப்பொழுது?”
செல்வரானி பிரயத்தனப்பட்டு மூச்சை விட்டபடி சொன்னாள்.
“பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வருவதற்குள் களைத்து விட்டேன் போல இருக்கிறது. உங்களுக்குச் செய்தி தெரியுமா? அவர். அவர்தான் மிஸ்டர் கமலேஸ்வரன் அதாவது என் கணவர் ராஜினாமாச் செய்து விட்டார்” என்று கேலியுடனும் இரசனையற்ற குறும்புடனும் கூறிச் சிரித்தாள்செல்வராணி
“யாரை?.”
ஞானமலரும் அந்தப் பொழுதையும் அவள் கூறிய செய்தியையும் வெகுவாக இரசித்தவாறு கேட்டாள். “உங்களையா?”
"இல்லை தன்னுடைய வேலையை. இனிவேலைக்குப்போகமாட்டாராம். எனக்கு இனி இரண்டு வேலை. அவருக்கும் அவருடைய அம்மாவுக்கும் உழைத்துப் போட வேண்டும்"
செல்வராணி கூறி முடிப்பதற்குள் அவளை அரியாசனம் இட்டு ஆதரிக்க வேண்டும் போன்று எழுந்த துடிப்பில், “உள்ளே வந்து ஆறுதலாக இருங்கள்.” என்றபடி தகாது ஒய்வு அறைக்கு அழைத்துச் சென்றாள் ஞானமலர்.
然、

Page 52
அங்கே கிடந்த ஒரு பஞ்சணையில் செல்வராணி தொப்பென்று விழுந்து புரண்டாள். உடலெல்லாம் தாபம் ஏற்பட்டுவிட்ட இளம்பெண் வகையறியாது புரண்ட ஒரு தன்னின்பக் காட்சிபோல அது இருந்தது. அவளுடைய எடுப்பான அங்கங்கள் அவள் வேண்டுமென்றே அழுத்திய அந்தச் செய்கையால் உடலில் ஒட்டியிருக்காது விட்டகலும் நிலையில் பஞ்சணையில் உறங்கத் தொடங்கின.
ஞானமலர் அன்று மதியம் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி முழுக்கிட்டு இருந்ததால், ஈரத்துடன் முடிக்கப் பெற்றிருந்த தனது கூந்தலை அவிழ்த்துவிட்டபடி அந்தப் பஞ்சணையில் தன்னையுஞ் சேர்த்துக்கொண்டு கேட்டாள். அவளுடைய கேள்விகள் சுவர்களில் ஒலித்து மறைய, செல்வராணி ஏதோ நினைவில் இலயித்த பின்னர், மேசை மீதிருந்த டிரான்ஸிஸ்டரைக் கையிலெடுத்தாள்.
“எனக்கு இப்பொழுது இருக்கும் சந்தோஷத்தில் குடுகுடென்று ஆடவேண்டும் போல இருக்கிறது,' என்று செல்வராணி கூறியதும் அப்படியொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவள்போல இருந்த ஞானமலர் சொன்னாள்.
“நல்ல வேளை நினைவுபடுத்தினீர்கள். இன்றிரவு ஒரு வரவேற்புப் பார்ட்டி நடனமும் இருக்கும். எனது விருந்தினராக நீங்கள் வருகிறீர்களா?” என்று கேட்ட ஞானமலரின் கைகளைக் கிடந்த நிலையிலேயே தாவிப் பற்றிய செல்வராணி ஆங்கிலப் பாணியில் அவற்றை மாறி மாறி முத்தமிட்டபடி கூறினாள்.
"நான் இன்றைக்கு இருக்கும் நிலையில் நீங்கள் எங்கு கேட்டாலும் வரத் தயார். முதலில் எங்காவது போக வேண்டும். இந்த மனிதப் புழுக்கள் நழுவி நழுவி ஊராத ஓர் இடத்துக்கு. இரு, இரு உயிர்களாக இந்த உலகம் சோடிபோட்டுப் பிணைந்து அனுபவிக்கும் ஓர் இன்ப உலகத்துக்குப் போக வேண்டும் போல இருக்கிறது"
செல்வராணி விளிகளை இமைகளுட் புகுத்தி ஒருக்களித்த நிலையில் உருண்டு நிமிர்ந்து ஞானமலரைப் பார்த்தாள். செல்வராணியின் அந்த ஒய்யாரத்தை அழகு உணர்ச்சியுடன் மென்ற ஞானமலர் அவளுடைய கேசத்துள் விரல்களைப் பாய்ச்சி நெற்றியிலிட்ட திலகம் அழியாதவாறு புடகுகளை வருடிவிட்டாள். “யாருக்கு பார்டி?” செல்வராணி கேட்டாள். "ஓ! அதுவா? பிரெஞ்சுப் பாடகர் ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு இங்குள்ள பெரிய புள்ளிகள் வரவேற்பு அளிக்கின்றன. பேர்ள் ஒவ் த இண்டியன் ஒஷன் ஹோட்டலில் பார்டி, நாங்கள் இருவரும் போகிறோம்" என்று கூறிய ஞானமலர், எதனையோ நினைத்துக் கொண்டவள்போல, “ஒருவர் இறந்து விட்டாலும் பார்டி வைக்கிற நாள் விரைவில் வரும். இங்கு இமிடேஷன் அதிகம். அதுதான் எல்லாம் பார்டி டான்ஸ்மயமாக இருக்கிறது”என்றபடி கக்களங்கட்டிச் சிரித்தாள்.
நன்றாகச் சொன்னீர்கள். ஆனால் அதனால் எங்களுக்கு நட்டமில்லை. நான்கு பெரிய மனிதர்களைக் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படாமலா போகப் போகிறது?” என்றாள் செல்வராணி,
இருவரும் உரையாடி மகிழ்ந்த அந்தப் போதில் தன்னையும் இட்டபடி அங்கு வந்தான் சுந்தரராஜன்.
“டார்லிங்" என்று அவனது அழைப்பைத் தொடர்ந்து அவனும் அவர்கள் இருந்த அறைக்குள் நுழையவே, அவனுடைய வரவை எதிர்பார்க்காது, தன் ஆடைகளை அவமதித்துக் கிடந்த செல்வராணி அவாக்கென்று எழுந்து பஞ்சணையில் விழுந்து கிடந்த தாவணியையும் அள்ளி மார்பை மூடினாள்.
84

அப்பொழுது அந்தக் காட்சியை வெகுவாக இலயித்து இரசித்த சுந்தரராஜன், தோளில் தொங்கிய தனது கோட்டைமடித்து, வண்ணமான அந்த மேசையில் அமைதியாக ாகத்தபடி தனக்குள் சிரித்துக் கொண்டான். அவனுடைய சிரிப்பை அர்த்தமற்றதாக நானமலர் கணக்கிட்டுக் கொண்டிருக்கையில் செல்வராணி நாணம்மீதுTரப் பெற்று எழுந்து தலைகவிழ்ந்து அமர்ந்தாள்.
"மிஸிஸ் கமலேஸ்வரனையும் அழைத்துக் கொண்டு போகலாமே. அவவக்கு இசை
ான்றால் மிகவும் பிடித்த விஷயமாயிற்றே.” என்று செல்வராணியுடன் நன்கு பழகி, அவளுடைய ஆசாபாசங்களைப் புரிந்து வைத்திருக்கும் ஒருவன் போலக் கூறினான் ந்ைதரராஜன்.
sy
“ஓம் அவவும் எங்களுடன் வருகிறா. ஞானமலர் அமைதியாகக் குரல் கொடுத்தாள். செல்வராணி அவர்கள் இருவரையும் ஆமோதிப்பவள் போலத் தலையை ஒரு முறை மேலும் கீழும் அசைத்துச் சிரித்தாள்.
கிராமப்புறங்கள் அயர்ந்து தூங்க ஆரம்பித்த வேளையில் கொழும்பு நகரம் பகல் ால்லாம் தூங்கிய பின்னர் கண்களைப் புறங்கைகளால் கசக்கிச் சோம்பல் முறிக்கத் தொடங்கிய நேரம் அது.
வீதிகளிலும் வீடுகளிலும் உள்ளவர்களின் நடமாட்டம் ஒய்ந்த அப்போதில் அந்தப் பிரெஞ்சுப் பாடகரின் இன்னிசை விருந்தைக் கேட்க விசேட அழைப்பின் பெயரில் வந்திருந்த இரசிகர்கள் அந்த ஹோட்டலின் மொட்டைமாடி மண்டபத்தையே நிறைத்திருந்தனர்.
அகன்று பெரிதாக இருந்த அந்த மண்டபத்தின் நான்கு கோடிகளில் இடையிடையே சோபாக்களும் கட்டில்கள் போன்ற பஞ்சனைகளும் இடப்பட்டிருந்தன. அதிகளவு ஒளிபாய்ச்சக்கூடிய சக்தி பெற்றிருந்த மின்பல்புகள் யாவும் பல வர்ணங்கள் பூசப்பட்டதால் ஒளிமங்கி ஒளிநிழல்களாக மட்டுமே காட்சியளித்தன. நடுப்பகுதியில் இடத்துக்கு இடம் வசதி போன்று மேசைகளும் நாற்காலிகளும் இடப்பட்டிருந்தன.
பாடகர் பற்றிய அறிமுகம் முடிந்ததும் அவரின் பாட்டுக்கள் சில வெளியே கேட்டன. பலருக்கு விளங்காத அந்த மொழியில் பல்வேறு இராகங்கள் ஒலிக்கத் தொடங்கின. பலர் சிலைகளை ஒப்பித்தவேளை, சிலர் ஒலியின்றி விரல்களால் தாளம் இட்டும், தலையை ஆட்டியுமிருந்தனர். ஒவ்வொரு பாடலும் முடிந்து விட்டது என்பதற்கு அறிகுறியாக வரும் ஓர் இடைவேளையைப் பயன்படுத்தி, அந்த மண்டபமே அதிரும்படி எல்லோரும் கைதட்டி ஆரவாரித்தனர்.
ஆங்கிலத்தையும் அழகாகப் பேசிய அந்தப் பிரெஞ்சுக்காரருக்கு விளங்கக் கூடிய முறையில் "ஒன்ஸ் மோர்” என்றும் குரல்கள் ஒலித்தன.
செல்வராணி, சுந்தரராஜன் தம்பதிகளுடன் ஒதுக்குப் புறமாக அமர்ந்து, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். காதைப் பிளக்கும் ஒலிகளை எழுப்பும் பக்கவாத்தியங்களும் கரகரத்த குரலில் அந்தப் பாடகர் இனிமையாகப் பாடிய பாடல்களும் அவளை வெகுவாகக் கவராது விடினும், அந்த இளம் பாடகரின் இனிய தோற்றமும், ஒவ்வோர் வார்த்தையையும் உச்சரிக்கும் பொழுது அவருடைய உதடுகள் குவிந்து, அதனால் உண்டாகும் உணர்ச்சி அழகும் அவளைப் பிணித்தன.
சுந்தரராஜன், செல்வராணிக்கும் ஞானமலருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டதால் இடைககம் செல்வராணியின் பக்கமாகத் திரும்பி “மார்வலஸ்", "இதயகீதம்' என்றெல்லாம் ஏதேதோ பிதற்றக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. ஞானமலருக்கு இப்படி
85

Page 53
அருமையாகக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் தானும் முழுமையாக ஆழ்ந்து அனுபவிக்கச் கணவர் அனுமதித்தாலும் தந்தை தடுத்துவந்தாரே என்ற கவலை போன்ற உணர்வு எழுந்தது. அவளுடைய தந்தையார் ஊரில் உள்ள நிலபுலங்களை ஒரு தடவை மேற்பார்வை பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றிருந்தது பெரும் ஆறுதலாகவும் இருந்தது.
அந்தப் பிரெஞ்சுப் பாடகரின் பாடல் ஒசை முடிந்ததும் மெல்லிசை வாத்தியங்கள் ஒலிக்கத் தொடங்கின. சிற்றுண்டி, மதுவகைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் தொடர்ச்சியாக இப்பொழுதும் வழங்குவதில் பணியாட்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஒவ்வொரு மேசையிலும் ஆண் பெண் பேதமின்றிப் பருக வேண்டுமென்ற மானசீகக் கோரிக்கையிலும் நவீனத்தின் அடிப்படையிலும் நான்கு கிளாஸ்கள் வைக்கப்பட்டு, மதுப் போத்தல்களும் நிறைந்து கிடந்தன.
சுந்தரராஜன் வேண்டியளவுக்கு மதுஅருந்தியிருந்ததால், தன் சக இரசிகர்களான ஞானமலரையும் செல்வராணியையும் குடிக்கும்படி கேட்டுக் கொண்டான். செல்வராணிக்கு ஒரு சமூக அருவருப்பு அப்பொழுது எழுந்தாலும், ஞானமலர்“பெண்களுக்கு வாயும் வயிறும் இல்லையென்று யார் சொன்னது?” என்று கேட்டுக் கொண்டே அருந்தினாள். தன்னிலும் உயர்ந்தவள் என்று தான் கருதும் டாக்டர் ஞானமலர் மது அருந்துவதைக் கண்ட செல்வராணி வியப்புக்கு அதிகம் இடங்கொடாது அவள் வழியே தானும் சென்றாள்.
அவர்களின் மேசையில் வைக்கப்பட்ட விஸ்கி, சோடாப் போத்தல்கள் வெறுமையானதும், அதுவரை பார்த்திருந்தனபோல் அந்த வாத்தியங்கள் நடன இசையில் ஒருமித்து முழங்கின.
மேடையின் ஒரு கோடியில் கூட்டமாக அமர்ந்திருந்த அந்த வாத்தியக்காரர்கள் கால்களையும் கைகளையும் அசைத்து, வளைத்து பின்னர் அங்கங்களாலேயே இசைபாடி தாளமிட்ட பொழுது, கூடியிருந்த அந்த இரசிகர்கள் எல்லோருமே எழுந்து நடு மண்டபத்துக்குச் சென்றனர். அவர்கள் அங்ங்ணம் போகும் பொழுதே இவ்வளவு நேரமும் தத்தமக்கு விருப்பமான அழகுள்ளவர்களை இடையிடையே வெட்டி இரசித்திருந்த சிலர், அந்த அழகிகளின் முன் சென்று சற்று தலை தாழ்த்திகைகளை நீட்டினார்கள். ஆடவர்கள் நடனமாட அழைக்கையில் மறுப்பது சபைத் துரோகம் என்று பொது மரபாகிவிட்ட ஒன்றைக் கேள்வியால் அறிந்த அந்த அழகிகள்,மனம் என்பதைப் பிரச்சினையாக்காது எழுந்து சென்று கைகோர்த்து, இடை நெருக்கி, கால்கள் பின்ன, விழிகள் சொருக, நெஞ்சு புடைக்க ஆடினர். சுந்தரராஜன், செல்வராணியின் முகத்தை ஆவலோடு பார்த்தபடி ஞானமலரின் கைகளைப்பற்றி அவளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றான்.
வாத்தியங்களின் ஒசைக்கேற்ப கால்கள் பின்னிப் பின்னி ஆடின. அந்தக் கால்கள் நியூயோர்க், லண்டன், பாரிஸ், ரோம் என்ற நகரங்களிலெல்லாம் நடந்து, நடந்து ஆடிக் களைத்து ஓய்ந்த பொழுது அந்தப் பொழுதில் கேட்ட வேறுபட்ட வாத்திய இசை அவர்கள் எல்லோரையும் பிரிந்து நிற்கச் செய்து, பின்னர் மறுபடியும் சோடி சேர்த்தது.
ஞானமலர் படுக்கை போன்ற ஒரு பஞ்சணையிற் சென்று அமர்ந்து செல்வராணியையும் அழைக்க வேண்டி அவர்கள் முன்பு இருந்த இடத்தைப் பார்த்தபொழுது அந்த மேசையும் நாற்காலிகளும் வெறுமனே கிடந்தன.
திரளாக ஆடிக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்திற்குள் மங்கலாகப் பாய்ந்து கொண்டிருந்த அந்த வெளிச்சத்தின் துணைகொண்டு செல்வராணியைத் தேடினாள் ஞானமலர். தலை கிறுகிறுப்பது போன்று இருந்ததால், தலையைக் குனிந்து இருதடவைகள் உலுப்பிவிட்டு, கண்களையும் முகத்தையும் முந்தானையால் ஒற்றிவிட்டபடி பார்த்தாள் அவள்.
86

கூடத்தின் ஒரு கோடியில் அவள் ஒருவனுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த சேலைத் தாவணியை இழுத்து இடுப்பில் செருகியிருந்த ஒன்று மட்டும் அடையாளமாக ஞானமலருக்குத் தெரிந்தது.
ஞானமலர் சிரித்தாள். உலகத்தைப் பார்ப்பதுடன் மட்டுமல்லாமல் அந்த உலகம் இப்படிப்பட்டதுதான் என்று அநுபவித்து அறிவதிலும் இன்பமிருக்கிறது என்று நினைத்தபடி அமைதியானாள் ஞானமலர்.
ஆவல் உள்ளவர்கள் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த வேளை அது. கடைசியாக ஒரு சோடி பலவித ராக தாளங்களுக்கும் ஏற்ப ஆடவேண்டுமென்ற இறுதி நிலையிலும் செல்வராணி சளைக்காமல் களைக்காமல் ஆடிக்கொண்டே இருந்தாள்.
நடனம் முடிந்து சிரிப்பும் கும்மாளமும் போன்ற மதுவின் உச்சநிலை அங்கு தாண்டவமாடியதும் தன்னுடனேயே ஒட்டி ஒட்டி நின்ற அந்த நபரை சுந்தரராஜன் தம்பதிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் செல்வராணி,
"மீட் மிஸ்டர் மோகன் ராய்" ராயுடன் கைகுலுக்கிக் கொண்ட ஞானமலர் செல்வராணியைப் பார்த்துச் சிரித்தபடி, "உங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி” என்றாள்.
சுந்தரராஜனுக்கு மனத்துள் ஏதோ கிடந்து அரிப்பதுபோல் பட்டது. அவனுடைய புதிய ஆசை முளையுடனே கிள்ளிநெருப்பிலிட்டது போன்று இருந்தது அவனுக்கு.
மோகன் ராயின் அறிமுகம் தனக்குப் பிடிக்காத பல விஷயங்களுள் ஒன்று என அவன் கணக்கிட்டுக் கொண்டான்.
அவர்கள் பிரிந்து வீடுகளுக்குச் சென்ற பொழுது வீதிகளில் பீட்டில் சென்ற பொலிஸ்காரர்களையும், குப்பைக் கிடாரங்களையும் பீப்பாக்களையும் தடவி உணவு தேடி இடைக்கிடைகுரைத்துக் கொட்டியநாய்களையும் தவிர வேறு எந்த உயிரும் நடமாடவில்லை. கமலேஸ்வரன் நினைவுச் சுழல்களுள் சிக்கிச் சிக்கித் தவித்துக் கொண் டிருந்தான். தான் வேலைக்கு முழுக்குப் போட்ட அன்றைய தினத்தில் தங்கம்மா வருகின்றாள் என்ற ஒன்றும், அன்றைக்கென்றே எங்கே போவது என்று தெரியாது செல்வராணி போய் விட்டாள், என்ற ஒன்றுமான இரண்டு எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்து விட்டதை எண்ணிக் குழம்பினான் அவன்.
காலையில் அணிந்து சென்ற அந்த உடுப்புக்களை இன்னமும் அவன் கழற்றவில்லை. சோம்பலற்ற ஒரு வைராக்கியம் ந்ெஞ்சைச் சூழ்ந்து முற்றுக்கை யிட்டிருந்ததால் வழமை போல பிள்ளைகளை மட்டும் கவனித்துவிட்டு தன்னை மறந்து அந்தச் சாய்மனைக் கட்டிலில் முடங்கிக் கிடந்தான் கமலேஸ்வரன்.
காலை ஐந்தரை மணிக்கு கொழும்புக் கோட்டையில் தங்கம்மா வந்து இறங்கிய பின்னர் உத்தர தேவியில் அவளை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே அனுப்பி வைக்கலாமா? என்று அவன் ஒருகணம் எண்ணிய பொழுது இந்தச் சூழ்நிலையில் தான் அப்படிச் செய்வது செல்வராணிக்கு உசார் அளிப்பதாக மட்டுமன்றி தன்னைக் கோழையாகவும் மாற்றிவிடுமென்ற உணர்வு அவனை ஆட்கொண்டது.
செல்வராணியைச் சுந்தரராஜன் தம்பதிகள், வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றதும் அவள் மயங்கி, தியங்கி, தயங்கி உள்ளே நடந்து வந்தாள். தன் வாய் தவறுதலாக எதனையும் உளறிவிடக் கூடாதென்றும் மதுநெடி எக்காரணங் கொண்டும் வீசக் கூடாதென்றும் அவள் சிறு வயதினளாக இருந்த பொழுது கும்பிட்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டாள்.
87

Page 54
3
தங்கம்மா வந்து விட்டாள். நெற்றியில் பட்டை பட்டையாகத் துலங்கும் திருநீறு சந்தனம் தூய வெள்ளை ஆடை சகிதம் வயதின் முதுமையையும் வறுமையின் கொடுமையையும் அணைத்து, அனுபவிக்கப் பழகிவிட்டிருந்த அவளுடைய தோற்றம் பார்ப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்த பொழுதும் கமலேஸ்வரனைப் பொறுத்த வரையில் தெய்வீகம் நிறைந்ததாகவும் இருந்தது.
விழிவளத்துக்கு ஆகாத ஒருத்தியாக, விதவையாகத் தங்கம்மா இதுவரை காலமும் வாழ்ந்து குமைந்து, அதனாலும் வேறு பலவற்றாலும் ஏற்பட்டுவிட்ட நோய்க்குக் குணம் வேண்டிக் கொழும்புக்கு வந்துள்ளாள்.
கமலேஸ்வரன் விடிவதற்கு முன்னரே எழுந்து கோட்டைப் புகையிரத நிலையத்துக்குச் சென்று விட்டான். காலியிலிருந்து வந்த ஒரு பஸ் அவனுக்குக் கைகொடுத்ததால் நான்கு மணிக்கெல்லாம் அவன் புகையிரத நிலையத்தை அடைந்திருந்தான்.
இரவு முழுவதும் நெஞ்சையும் மூளையையும் ஒருமித்து அரித்துக் கொண்டிருந்த நினைவுகளாலும் பிரச்சினைகளாலும் நித்திரை கெட்டு விட்டதால் அவன் மிகவும் வாடிப் போயிருந்தான். உலகத்தின் இருள்களெல்லாம் அவன் முகத்திலேயே மிக அடர்த்தியாகக் குடிகொண்டன போன்று காணப்பட்டது. உணவும் வேளைக்கு உட்செல்லாததால் அடிவயிறெல்லாம் கூனியிருந்த அவன், அந்தப் புகையிரத நிலையத்தின் மேடைகளில் ஆங்காங்கு இட்டிருந்த வாங்குகளில் ஒன்றில் உறங்கினான்.
காங்கேசன்துறையிலிருந்து வந்த மெயிலால் பிரயாணிகள் வழிந்து கொண்டிருந்ததால் ஏற்பட்ட அரவமும் அவனுடைய அந்த ஆழ்ந்த தூக்கத்தைக் கெடுக்கவில்லை.
எல்லோரும் அவரவர் வழி இறங்கி நொறிஸ் வீதியையும் மாக்கலம் வீதியையும் நோக்கிச் சென்றபின், அந்த ஐந்தாம் மேடையில் திடீரென ஏற்பட்ட வெறுமையில் தனியே நின்ற தங்கம்மா தூரத்தில் ஓர் ஆசனத்தில் உலகை வெறுத்த நிலையில் ஒருவன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும், மகனின் நினைவும் வரவே அவனருகில் சென்று பார்த்தாள். அவளுடைய எண்ணம் பிழைக்காதவாறு கமலேஸ்வரன் உறங்கிக் கொண்டிருந்தான். பெற்று வளர்த்து சீராட்டி தாலாட்டிய அவளுக்கே சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவனது கோலம் இருந்ததால் அருகில் செல்ல வேண்டுமென்ற துடிப்பிருந்தும் சிறிது தயங்கி, அந்த உருவம் கமலேஸ்வரனுடையதுதான் என்ற தெம்பிலும் தெளிவிலும் அவனுடைய கைகளைத் தொட்டு, “தம்பி, தம்பி” என்று எழுப்பினாள் தங்கம்மா.
மாளாத கொடுமைகளுக்குள்ளும் மீளா உறக்கம் கொண்டிருந்த அவனை மறுபடியும் யாரோ வேதனை உலகுக்கு அழைக்கிறார்கள் என்ற நினைவிலும், செல்வராணியே தன்னைத் துரந்து தொல்லை கொடுக்கிறாள் என்ற வெறுப்பிலும் கண்விழித்த கமலேஸ்வரன், தாயைக் கண்டதும் எழுந்து நின்றான்.
அவனுடைய இருதயம் அவளைக் கண்டு ஆயிரம் குசலம் விசாரித்த பொழுதும் நா எழாத நிலையில் அவளையேயார்த்து நின்ற கமலேஸ்வரன், வலிந்து சிரித்தபடி கேட்டான்.
"அம்மா. உடம்பு எப்படி? பிரயாணம் எல்லாம் சுகமாக இருந்ததுதானே?
88

தங்கம்மா மகனுடைய அந்த மெளனத்தை முதலில் வேதனையோடு பார்த்தாலும் அவனது குரலைக் கேட்ட ஆனந்தத்தில் சிறிது தாமதித்து, "அது சரி உன்னுடைய உடம்பு என்ன? என்ன இது? ஆ நீ இருக்கிற கோலம் என்ன? உன்னை நினைக்கையிக்கை தான் எனக்கு எல்லா வருத்தமும். எனக்கு மட்டும் சாவில்லை. இந்த அக்கிரமங்களை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறன்” என்று கூறிக் கண்கலங்கினாள்.
ஒரே ஆண் மகனின் வாழ்க்கை எப்படி எப்படியெல்லாம் அமைய வேண்டுமென்று அவள் எண்ணியிருந்த எண்ணங்கள், கட்டியிருந்த மனக்கோட்டைகள் எல்லாம் தவிடு பொடியாக இப்பொழுது பல மாதங்களாகி யிருந்தும், மீண்டும் மீண்டும் ஏற்படும் உணர்ச்சிகளில் நம்பிக்கையைப்பாய்ச்சி, நாளைக்காவது கமலேஸ்வரன் ஒன்றாக இருப்பான் என்று அவள் நினைத்து தேறியிருந்தவை யெல்லாம் சிதைந்து, அந்தச் சிதைவின் தாக்குதலில் கண்ணிர் மடைதிறந்து பாய்ந்து கொண்டிருந்தது.
"அழாதீங்க அம்மா! என்ன செய்வது எல்லாம் இப்பிடி ஆகிப்போச்சு. நடக்கிறது நடக்கட்டும். வாருங்கள் நாங்கள் போவோம்” என்றபடி அவள் கொண்டு வந்திருந்த சின்னச் சூட்கேசையும் ஒரு தூக்குப்பையையும் தூக்கினான் கமலேஸ்வரன்.
அவன் அந்தப்பையைத் தூக்கும்பொழுது,"அ, ஆ நெரிச்சுப் போடாதை. இஞ்சை கொண்டா அதை நான் கொண்டுவாறன். அதுக்கை முட்டையும், கொஞ்ச வறுத்தமாவும் பழமும் இருக்கு, உனக்கெண்று ஊரெல்லாம் திரிஞ்சு இந்த முட்டையை வாங்கியாறன்" என்று கூறி, அவனுடைய பதிலை எதிர்பாராது அவள் கமலேஸ்வரனிடமிருந்த அந்தத் தூக்குப் பையை வாங்க முனைந்தாள்.
“இல்லையம்மா! நான் பெளத்திரமாகக் கொண்டு வருகிறேன்". கமலேஸ்வரன் கூறிவிட்டு அமைதியாக முன்னே நடந்து, புகையிரத நிலையத்தை விட்டு வெளியேறினான். தங்கம்மா அவனைத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள்.
செல்வராணி புரண்டு புரண்டு படுத்து ஒரளவு தன் உடல் அசதியைப் போக்கிக் கொண்டவளாகி அலுவலகத்துக்குப் போகும் ஆயத்தத்தில் கண்விழித்து எழுந்த பொழுது, "ஆச்சி” என்று ரமணன் பெரிதாகக் குரல் கொடுத்து ஆரவாரிக்க ரஞ்சனி அவர்களது வரவைக் கண்டு குதூகலித்து கைகொட்டிச் சிரித்தாள்.
காலையில் எழுந்து சிவப்பு வானத்தையும் சிவப்பு சூரியனையும் இரசித்து மகிழ்ந்தபடி வீட்டு வாசற்படியில் தாயார் எழும்வரையில் குந்தியிருந்த ரமணன், தங்கம்மா வருவதைக் கண்டதும் பெரிதும் மகிழ்ந்தான்.
அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போனதும், இவர்களைக் குளிப்பாட்டி உணவூட்டி துணையாக இருந்த "ஆச்சி"யை ரமணன் மறக்கவில்லை என்பது அவனுடைய எதிர்பாராத ஆரவாரம் எடுத்துக் காட்டியது.
ரமணன், "ஆச்சி. ஆச்சி வந்துட்டா.” என்றெல்லாம் ஏதோ சினிமாப் பாடல் மெட்டொன்றில் குரலெடுத்துப் பாடியதை நாராசமாகக் காதுகளில் விழுத்திய செல்வராணி "டேய் ரமணன். அந்தக் கிழம் இஞ்சை ஏன் வருகுது. நீ பேசாமல் இரு உனக்கு வேலையில்லாட்டி வேறை ஏதாவது பாட்டைப்படி. அந்தக் கிழத்தைப் பற்றிப்பாடாதை." ான்று படுக்கையிற் கிடந்தபடியே கத்தினாள்.
"உண்மைக்கு . அம்மா 1 ஆச்சி இந்தாவாரு” என்று அவன் கூறியதும், கட்டிலிலிருந்தபடியே தலையை நீட்டி வெளியே பார்த்த செல்வராணி, தங்கம்மா
89

Page 55
உண்மையிலேயே மகனுடன் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும் இரவு பருகியிருந்த மதுவின் ஆனந்தம் மறைந்து வெளி மட்டும் எஞ்சியது போன்ற உணர்வில், “ரோசம் கெட்டதுகள்" என்று கறுவினாள்.
காலையில் எழுந்ததும் எழாததுமாகத் தங்கம்மாவின் முகத்தில் விழித்ததும், முதன் முதலாக அவளைப் பற்றிய கதையைக் காதுகள் கேட்டதும் அன்றைய தினத்துக்கு அபசகுனமான இரு விஷயங்கள் என்று கணக்கிட்டாள். வருவதும் வந்ததுகள் யாழ்தேவியில் வந்து தொலைக்கலாமே என்றும் அவள் கோபமாக எண்ணினாள்.
அலுவலகத்தில் பல கம்பெனிகளின் உரிமையாளர்களும் வெளிநாட்டு வியாபாரிகளும் வந்து வந்து அவளுடனேயே இறக்குமதி ஏற்றுமதி சம்பந்தமாகக் கலந்து பேசுவதும், கப்பல்களில் சரக்குகள் வந்திறங்குவதற்கான ஆளுதவி கோருவதுமான பல வேலைகளைச் செய்து கொள்வதால் அந்த அத்தனை நபர்களுக்கும் அவள் எப்படி பதில் சொல்லுவது என்றும் நினைத்துப் பார்த்தாள். தங்கம்மாவின் வருகையால் தன் மனம் அமைதி இழந்து தவிக்க, வேலைகள் சிறப்பாக நடைபெற மாட்டாது என்றும் அவள் துடித்தாள்.
"ராணி ராணி 1 வாட் ஹப்பின்ட் டூ யூ ?” என்று அடிக்கொரு தடவை அங்கு வந்து போகும் மோகன் ராய் கேள்வி கேட்க, கவலைகள் எதுவுமே அற்றவள்போல நடிக்க வேண்டி ஏற்படுமே என்று சங்கடப்பட்டாள் செல்வராணி,
“இந்தாப் பாருங்கள்” என்று கர்ணகடூரமாகச் செல்வராணி கமலேஸ்வரனை விழித்தபொழுது, ரமணன் மெளனியாக, ரஞ்சனி ஒடிச் சென்று தங்கம்மாவிடம் சரணடைந்தாள்.
தனது குரலைக் கேட்டு அஞ்சிய ரஞ்சனி கமலேஸ்வரனிடமேனும் ஓடாமல் தங்கம்மாவிடம் சரணடைந்ததைக் கண்ட செல்வராணிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்ததும் ரஞ்சனியை ஒரே தாவலில் வாரி இழுத்து அப்பால் தள்ளி விட்டாள். செல்வராணியின் அந்த மிருகத்தனமானதும் அற்பத்தனமானதுமான பிடிக்குள் நசுங்குண்ட ரஞ்சனி ஒவிய மேசையுடன் மோதுண்டு நிலத்தில் தடால் என்று வீழ்ந்தாள்.
“அடிபாவிபிள்ளையை இப்பிடி ஏன் வதைக்கிறாய்?" என்று அர்த்தமில்லாமலும் செல்வராணியைப் பார்க்காமலும் கூறிக்கொண்டு ரஞ்சனியைத் தூக்கி நெஞ்சோடு அனைத்தாள் தங்கம்மா.
“வைச்சவசை போதாதென்றுபேந்தும் வந்தாச்சு. இந்தாப்பாருங்கள் இவஇஞ்சை இருக்கிறதெண்டால் நான் எங்கேயெண்டாலும் போகிறேன். இவஷம் நானும் இஞ்சை ஒண்டா இருந்தால் இவ என்னைப் பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையெண்டு போயிடும், அவ்வளவுதான்" என்று கமலேஸ்வரனைப் பார்த்து விறைத்தபடி கூறினாள் செல்வராணி
இப்படியொரு வார்த்தை செல்வராணியிடமிருந்து வருமென்று எதிர்பார்த்த கமலேஸ்வரன், “நீ வாயைப் பொத்து. எனக்குத் தெரியும் யாரை வச்சிருக்கிறது. யாரை அனுப்புகிறது என்று” என்று பலமாகக் கத்திக் கடிந்து கொண்டான்.
கமலேஸ்வரனிடமிருந்து தான் எதிர்பார்த்த ஆறுதலானதும் அனுசரணையானதும் பேச்சு வெளிப்பாடாததைக் கண்டதும் செல்வராணி வெதும்பத் தொடங்கினாள். காலையில் எழுந்ததும் சிவந்திருந்த அவளுடைய விழிகள் இப்பொழுதுமுண்டிச் சிவக்க ஆரம்பித்திருந்தன. செல்வராணி ஏதேதோ சொல்லிப் புலம்பிக் கொண்டு சென்று, அறையைத் தாழிட்டாள்.
90

தங்கம்மாவைச் செல்வராணி அப்படி அவமானப்படுத்தியது கமலேஸ்வரனுக்கு நினைக்க நினைக்க ஆத்திரமூட்டுவதாக இருந்தது.
உடனடியாக ஒரு வார்த்தையைக் கேட்டு அவன் கோபப் படாதவன் போல, ஆனாலும் அந்த வார்த்தை அவனுடைய செவிப்பறைகளில் மீண்டும் மீண்டும் ஒலித்த பொழுது அவன் இரத்தம் கொதிப்பது போலாகும்.
குணத்திலும் மற்றும் நடப்புகளிலும் ஒரளவேனும் நிறைந்த ஒருத்தி இப்படிக் கூறியிருந்தால் என்றாவது ஒருநாள் அவளைத் திருத்தலாம் என்று அவன் ஆறுதலடைந்திருப்பான்.
அவர்களிடையே ஏற்பட்ட ரகளை முடிந்து ஒய்ந்து விட்டது போன்ற ஓர் அமைதி அங்கு ஏற்பட்டதும், அலுவலகத்துக்குச் செல்ல ஆயத்தமாகிப் புறப்பட்டு வந்த கணேசமணி, "அம்மா ! எப்பிடி, செளக்கியமா?” என்று தங்கம்மாவைக் கேட்டான்.
"ஆண்டவன் புண்ணியம். நல்லாக இருக்கிறேன்” என்று கணேசமணியை மதிக்க வேண்டுமென்ற ஆவலில் கூறினாள் தங்கம்மா.
“கமலேஸ் 1 நான் வருகிறேன்” என்று கமலேஸ்வரனை விழித்துக் கூறிவிட்டு அவன் அப்பால் சென்றதும், ரமணன் ரஞ்சனி ஆகியோருடைய பரிதாபகரமான இளமை வாழ்க்கையை எண்ணியபடி, அங்கு வந்து அவர்களை அழைத்தாள் பரமேஸ்வரி
ரமணனும் ரஞ்சனியும் அப்படியொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர் போல எழுந்து பரமேஸ்வரியிடம் ஓடினார்கள்.
"அம்மா! எப்பிடிபிரயாணமெல்லாம், நீங்களும் வாருங்கள்” என்று தங்கம்மாவிடம் வந்து அவளையும் அழைத்தாள் பரமேஸ்வரி.
தங்கம்மா அத்தருணத்தைப் பயன்படுத்தி எழுந்து அவள் பின் சென்றாள். அவர்கள் எல்லோருமே அகன்று விட்டதும் கமலேஸ்வரனுடைய நெஞ்சம் அலமலக்காக அடித்துக் கொள்ள, கைகளும் கால்களும் உதறின. அவனுடைய முகம் வரவர விகாரமடைந்து கொண்டே சென்றது.
அவனுக்கு இப்பொழுது இருந்ததெம்பில், செல்வராணியுடன் தனக்கான வாழ்க்கைக்கும் ஒரு முடிவு கண்டால் என்ன என்பது போன்றுமிருந்தது.
அலுவலகம் என்று சாக்குப் போக்குச் சொல்லி வேளா வேளைக்கு வீடு திரும்பாததும், அவளுடைய அத்தனை நடப்புக்களுக்கும் பொறுப்பாக அவன் இருந்து அவனுக்கே சொல்லாமல் வெளியே சென்று நடுச் சாமங்களில் வீடு திரும்புவதும் போன்ற ஒரு குடும்பப் பெண்ணுக்கு ஆகாத செய்கைகள் செல்வராணியிடம் நிறைந்து கிடந்தன. இப்பொழுது சில நாட்களாக கமலேஸ்வரனை ஒரு ஜடமாக செல்வராணி மதிக்கத் தொடங்கியிருந்ததும் அவனுக்கு ஆண்மையே விழித்தெழுந்தது போலாயிற்று.
“செல்வராணி கதவைத் திற" என்று கர்ஜித்த அவனுடைய குரலைக் கேட்டு செல்வராணியே ஒரு கணம் திடுக்கிட்டாள். இன்னுமின்னும் தான் அடமாக இருந்தால் என்னென்ன விஷயங்கள் நடந்து முடிந்து விடுமோ என்றும் அவள் அஞ்சியதால் மெல்ல வந்து கதவுத் தாழைத் தட்டி விட்டாள்.
"யூ டேர்டி ராஸ்கல் அம்மாவுக்கு என்ன சொன்னநீ? அம்மா உனக்கு என்ன வசை வைச்சவ ? ஆல் றைட் ராத்திரி எங்கை போயிருந்தாய்? உம் 1கம் ஒன்.”
செல்வராணி பேந்தப் பேந்த விழித்தாள். முன்னர் ஒருநாள் கம்பனியில் கணக்காளனாக இருந்து இப்பொழுது லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடன்

Page 56
பலவாறு அவள் பேசித் திரிந்ததை யாரோ கமலேஸ்வரனுக்குத் துணிவுடன் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து, அவற்றின் உண்மை பொய்யை இரண்டு வாரங்களாக அறிந்து தெரிந்த அவன், அவளை இப்படித்தான் அன்றும் கேட்டான்.
அவனுடைய வாழ்க்கையில் அவள் செய்து விட்டாள் என்று அவனும் ஊராரும் கருதிய நம்பிக்கைத் துரோகத்துக்குத் தண்டனையாக அவன் அவளை மூன்று நாட்கள் படம்பின் உட்காயங்களுடன் படுக்கையிலிட்டிருந்தான்.
அத்தி பூத்தாற்போல் கமலேஸ்வரனுக்கு வருகின்ற கோபம், தனது கோரப் பசிக்கு யாரையாவது இரையெடுத்த பின்னர் ஒய்ந்து விடும்.
அவன் மறுபடியும் நல்ல மனிதனாகி விடுவான். "உம், சொல்லு எங்கே போயிருந்தாய் ?” “டாக்டர் வீட்டுக்கு” கமலேஸ்வரன் தொடர்ந்து கேள்விகள் கேட்க விரும்பாதவனாகி வெளியேறினான். டாக்டரின் வீட்டுக்கு அவளை அழைத்து சென்றவனும் அவனே ஆதலால், அங்கு அவள் சென்று செய்திருக்கக்கூடிய, பேசியிருக்கக்கூடிய, அனைத்துக்கும் தானே பொறுப்பாளி என்றும் அவன் எண்ணியதால் அமைதியானான்.
தன் வேலைக்கு மட்டுமன்றி குடும்ப வாழ்வுக்கும் ஒரு முடிவு செய்து கொண்டபின் வீணாக மனத்தையும் உடம்பையும் அலட்டிக் கொள்ளக் கமலேஸ்வரன் விரும்பவில்லை.
அவன் மெளனியானான்.
4.
திருஞானம் அடிக்கடி கமலேஸ்வரனைப் பார்ப்பதற்காக வராத காரணத்தைக் கமலேஸ்வரனிடம் கூறிய பொழுது அவன் ஏங்கியது மட்டுமன்றி நண்பர்கள் மத்தியில் கம்பீரமாக வாழ்ந்த காலங்களையும் எண்ணிப் புளுங்கினான்.
கல்லூரி விவாதங்களிலும் மேடைகளிலும் வந்து வந்து குவிந்து விழுந்த சொற்கள் எங்கோ ஒடி மறைந்து விட்டதாக வருந்தினான் கமலேஸ்வரன். சொற்களால் ஏளனப் பாணியில் வெறுப்புமிக்க சிலர் அவனைத் தாக்கும் பொழுது, அந்தச் சிலரின் சொற்களையே திருப்பிவிட்டு, சொன்னவர்களை மடக்கும் வாயாடியாக இருந்த கமலேஸ்வரன் இப்பொழுதெல்லாம் மெளனியாக வாழத் தொடங்கி விட்டான்.
"கமலேஸ் 1உன்னிடம் இனி நான் வருவதில்லை என்று அன்றே தீர்மானித்தேன். உன் நட்பு உயர்ந்தது, புனிதமானது, அர்த்தமுள்ளது என்ற காரணங்களுக்காக என் மனைவியை பிள்ளைகளை மறந்து உனக்காக எதுவுஞ் செய்ய நான் தயார். உன்னைக் கண்டுவிட்டு வந்து இங்கு அழுது கொண்டிருக்க என்னால் முடியாது"
கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன. திருஞானம் தொடர்ந்து கூறினான். "நீ இப்பொழுது அனுபவிக்கிற வாழ்க்கை இருக்கே - அது நீ செய்த பாவம் கமலேஸ். பாவம் ! உன்னைக் காதலிக்கிறதுக்காக இந்தியா வரையும் வந்தாளே ஒருத்தி அவள் விட்டபெருமூச்சு உன்னை என்றும் வாட்டிக் கொண்டே இருக்கும். உன்னை மனதார நேசிச்சது அவள் செய்த பிழை என்று நான் சொல்ல மாட்டேன். உன்னை மட்டுமே அவள் கணவனாகக் கற்பனை செய்தாள். இன்றும் அப்படித்தான். இப்ப. உன்னுடைய மனைவி பற்றி நான் கேள்விப்பட்டதுகளை எல்லாம் என்னால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வளவு பயங்கரமான நாகரீகம் அவவை ஆட்கொண்டிருக்கிறது"
92

கமலேஸ்வரன் தனக்கு ஏற்பட்ட மண்டைக் கொதியைத் தணிக்கலாம் என்ற நம்பிக்கையில் திருஞானத்தைத் தேடி வந்திருந்தான். பாடசாலை விடுமுறையாக இருந்ததால் திருஞானம் வீட்டிலேயே இருந்தது கமலேஸ்வரனுக்கு ஆறுதல் அளித்தது. அந்த ஆறுதலே அவனுடன் பேசிய சற்று நேரத்திற்குள் பனிபோல மறைந்து விடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
ஓ ! பனிமழை ஆகாது அல்லவா ? இப்பொழுது திருஞானம் அவனுக்காக அழுவது அவனுடைய கவலையைக் கூட்டுவதாகவே இருந்தது. திருஞானம் கண்களை ஒற்றிவிட்டுக் கொண்டு கூறினான்.
"இலங்கை இப்பொழுது இருக்கிற இருப்பிலை ஒருவன் யாரை மறந்தாலும் தான் செய்யும் தொழிலை மறக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் எதனை விட்டாலும் தொழிலை விடக்கூடாது. இன்னும் சொல்லப் போனால் கமலேஸ், தொழில் - தெய்வம், மட்டுமில்லை, தொழில்தான் உலகம் வாழ்க்கை, எல்லாம். நாங்கள் பீ.ஏ. படித்திருந்தால் என்ன எம். ஏ. படித்திருந்தால் என்ன, அவனவன் பார்க்கிற தொழிலைக் கொண்டு தான் அவனை இந்த உலகத்தார், அதுகும் நம்முடைய தமிழ் ஆட்கள் மதிப்பினம். பீ.ஏ. படித்துவிட்டுதோட்டஞ் செய்தால் நீ சாதாரண கமக்காரன் தான். ஒரு பஞ்சை விவசாயிக்கும் உனக்கும் வித்தியாசமில்லை. இந்தா பார் ! நான் பி. எஸ். ஸி. பட்டம் எடுத்து, படிப்பிக்கிறேன். இதே பட்டத்துடன் இன்னொருவன் வரி மதிப்பீட்டாளனாக இருக்கிறான். என்னைவிட அவனுக்கு இந்த உலகம் அதிக மதிப்புக் கொடுக்கிறது. நான் சாதாரண சட்டம்பிதான்.
இனி எங்களுடைய ஆட்களுக்கு 'பெஞ்சன் பயித்தியம் இருக்கிறது. கம்பனிகளிலே 'பெஞ்சன் கிடையாது. கம்பனி உத்தியோகத்தன் எழுநூறு எண்ணுறு என்று சம்பளம் எடுத்தாலும் அவன் சின்ன மனுஷன்தான். ஏனென்றால் அரசாங்கத்திலே இருநூறு ரூபாவரை சம்பளம் பெறும் கிளார்க்குக்கு பென்சன் கிடைக்கும். அவனுடைய கல்யாணம், சீதனம் எல்லாம் தன்னாலே உயர்ந்து விடும்.
யாழ்ப்பாணத்தானைப் பொறுத்தவரையில் அவன் சாவுக்குத் தேடி வைக்கிறான். சீதனம் கொடுப்பதும் பெஞ்சன் எடுப்பதுமே நம்முடைய சமூகம் என்றாகிவிட்டால் முன்னேற்றம் எங்கிருந்து வரப் போகிறது. நீ இப்பொழுது பார்த்த வேலையையும் விட்டுவிட்டாய். இது தற்கொலை செய்ததுக்குச் சமானம். உன்னை நான் நேசிக்கிறேனே, அதில் ஒன்றுமே மாற்றமிராது. ஆனால் உன் தாயார் கூட உன்னை வெறுக்கிற ஒரு நிலை இனிவந்தால் ஆச்சரியப்படாதே. உனக்கு ஒழுங்கான வாழ்க்கை கிடைக்காவிட்டாலும் அதிருஷ்டவசமாக ஒரு நல்லதாய் கிடைத்திருக்கிறா. இனி உன்னுடைய மனைவியின் நடப்பும் மாறும். ஒருவேளை மோசமாகும். ஏதோ என்னைக் கேட்காமலே ஆத்ம சோதனை செய்து விட்டாய். இனியாவது வேறு வேலை தேடு. பணம் தான் இந்த உலகம்.”
கண்டத்துள் விக்கி, விக்கி வார்த்தைகள் வெளிவந்து கொண்டிருக்க, கண்கள் கலங்கிக் கலங்கி நீர் வடிக்க கமலேஸ்வரனுக்காக அழுது அழுது சொல்லிக் கொண்டிருந்தான் திருஞானம்.
கமலேஸ்வரன் எதுவுமே பேசவில்லை. அவன் இனிப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லையென்ற நிலையை உருவாக்கி விட்டிருந்தான் திருஞானம்.
திருஞானத்தின் விருப்பத்தின்படி கமலேஸ்வரன் தங்கம்மாவை சில நாட்கள் திருஞானத்தின் வீட்டிலேயே தங்கியிருக்க விடுவதாக முடிவு செய்தான்.
அவர்கள் இருவரும் கல்லூரி நண்பர்களாகவும், கலாசாலை நண்பர்களாகவும் வாழ்ந்த காலங்களில் திருஞானம் கமலேஸ்வரனைத் தேடிப் போனால் தங்கம்மாவின் அன்பு
93

Page 57
வேண்டுகோளின் பிரகாரம் அவனுடைய வயிற்றுள் உணவு நிறைந்து கிடந்தாலும், அதற்கு மேலும் தங்கம்மா கொடுப்பதை உண்டுதானாக வேண்டும். “இப்பொழுதுதான் அம்மா சாப்பிட்டு வருகிறேன்” என்று திருஞானம் மறுத்து, ஆயிரம் கோயில்களில் சத்தியஞ் செய்யத் தயாராக இருந்தாலும் தங்கம்மா அவனுக்குத் தின்பண்டங்களைக் கொடுத்து உண்ண வைத்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பாள்.
இரவு வேளைகளில் சிறுவர்களாக இருந்த அவர்கள் சினிமா, கடற்கரை என்று சென்றுவிட்டு நேரங் கழித்து திரும்பவே முடியாது. ஓர் இரவு அப்படித் திரும்பிய அவர்கள் இருவரையும் அவள் அடித்தாள். அடி பொறுக்காத அவர்கள் அழுததைப் பொறுக்காத அவள் இரு கைகளாலும் இருவரையும் வாரி நெஞ்சோடு அணைத்தபடி "என்ரை செல்வங்கள் அல்லே. இனி எங்கேயும் போனால் வெள்ளனை திரும்பிட வேணும்.” என்று அணைத்து உச்சி மோந்தது திருஞானத்தை விட்டு இன்னும் மறையவில்லை.
தங்கம்மாவை நினைத்த பொழுது அவனால் துக்கந்தாள முடியவில்லை. "அந்தத் தெய்வத்துக்கும் இந்தக் கதியா? நீ என்ன நினைத்தாலும் சரி கமலேஸ். அம்மாவைப் பற்றிப் பேசவோ, வெளிக்கிடும்படி கூறவோ உன்னுடைய மனைவிக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை. அந்த வேளை நான் அங்கு நின்றிருந்தால்கூட என்ன நடந்திருக்குமோ எனக்குத் தெரியாது. சரி, சரி அம்மாவைக் கூட்டிவந்து நான் என்னோடு வைத்திருக்கிறேன், நீ ஒன்றுக்கும் யோசிக்கத் தேவையில்லை. வா போகலாம்” என்றபடி எழுந்தான் திருஞானம்.
தங்கம்மாவைத் தங்களுடன் இருக்க விடும்படி கணேசமணியும் பரமேஸ்வரியும் எவ்வளவோ முயன்று கேட்டும் திருஞானம் அதற்கு இம்மியும் சம்மதிக்கவில்லை. கமலேஸ்வரனுக்கு இல்லாத உறவு தனக்கிருப்பதாக அவன் கூறியபொழுது, “நான் பெத்தது ஒண்டு, பெறாதது ஒண்டு” என்று தங்கம்மா உறுதியளித்ததைக் கேட்டதும் எல்லோருடைய நெஞ்சங்களும் ஒருமுறை உருகி ஓய்ந்தன.
கமலேஸ்வரன் வீட்டை விட்டு தங்கம்மா அன்றே புறப்பட்டு விட்டாள். தன்னால் ஒரு குடும்பம் அதுவும் தான் பெற்ற பிள்ளையின் வாழ்வு கெட்டுவிடக் கூடாது என்பதுதான் அவளுக்கு இருந்த எண்ணமெல்லாம்.
செல்வராணிமாலை அலுவலகத்தால் வந்த பொழுது தங்கம்மாவைத் தேடினாள். அவள் இல்லாதிருப்பதைக் கண்டதும் ஏற்பட்ட திருப்தியில் நிறைந்தபொழுதும் அக்கம்பக்கம் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏறபடவே ரமணனை அழைத்துக் கேட்டாள்.
"ஆச்சி எங்க ரமணன்?” "அவபோயிட்டா. அழுதுண்டு போனாம்மா அவவைப் போகச் சொல்லி அம்மாதான் சொன்னா என்று எல்லோரும் சொல்லிச்சினம். ஏம்மா போகச் சொன்னே? ஆச்சி பாவம்"
செல்வராணியிடம் தன் மன உளைவைச் சொன்னால் ஒருவேளை அவள் தன்னை அடித்து விடுவாளோ என்று அஞ்சி அஞ்சிக் கூறினான் ரமணன்.
“ரமணன் ஆச்சி இருக்கிறாவே அவ பொல்லாதவ. பிள்ளையட அம்மாவைப் பற்றி கூடாமல் ஊரிலே மற்றவங்களோடை பேசுறவ"
செல்வராணி தன் மீது தயங்கித் தயங்கி ரமணன் காட்டிய குற்றத்தைப் பொய்யென்று ஆக்குவதற்காக அப்படிக் கூறினாள். ரமணன் அதை நம்ப மறுப்பவன்போல தொடர்ந்தும் அவளுக்குப் பதில் கூறிக் கொண்டிருக்காது வெளியே ஒடினான்.
கமலேஸ்வரன் வெளியே சென்று விட்டு இருட்டிக் கொண்டிருந்த அந்த வேளையில் வீடு திரும்பியதும் அவனுக்கு வழமைபோல் ஓர் இடி காத்திருந்தது. தினமும்
94

அவனுடைய கைகளை மாலையில் பார்த்து, அவை தாங்கி வந்திருந்த ஏதாவது இனிப்புப் பொட்டலத்தை வாங்கி ஆவலோடு உண்டு மகிழ்ந்திருந்த ரமணனும் ரஞ்சனியும் அவன் வருவதைத் தூரத்திலேயே கண்டு விட்டதால் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளி கேட்டுக்கு வந்திருந்தனர்.
அவன் கைகள் வெறுமனே கிடந்ததும் அவனுடைய களிசான் பொக்கட்டுகள் கனக்கின்றனவா என்ற ஆராய்ச்சியில் இறங்கிய பொழுது அதனை விளங்கிக் கொண்ட கமலேஸ்வரன் அவர்கள் இருவரையும் அனைத்தபடி, "இண்டைக்கு ஒண்டும் வாங்கவில்லை. ரமணன்! அப்பாட்டைக் காசு இல்லை,” என்று கூறினான்.
தான் பெற்றபிள்ளைகளிடமே பணிவாகவும் கடமையை நிறைவேற்றமுடியாதுபோன கவலையிலும் கமலேஸ்வரன் கூறியதும் அவனுடைய குரல் மிகமிகத் தாழ்ந்தது.
ரஞ்சனிக்கு அவனைப் பார்க்கக் கோபம் கோபமாக வந்தது. ரமணன் அவனுடைய பிடியிலிருந்து தன்னை உதறிக் கொண்டு சென்று மதிலுடன் முகம் புதைத்து கண்களை மூடியபடி நின்றான்.
கமலேஸ்வரன் அந்த இருவரையும் பார்த்து ஒரு முறை சிரித்தான். அவனை அந்தப் பொழுது பார்த்த அவர்கள் தங்கள் மென்னைகள் நீட்டி வேறு பக்கமாக விசையோடு முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
கமலேஸ்வரன் செல்வராணியிடம் கேட்டான். “பெட்டிக்குள் இருந்த பணமெல்லாம் எங்கே?" "நான் எடுத்து விட்டேன். அது நான் உழைத்த காசு. என்னுடைய ஒரு சதமும் நன்றி கெட்டதுகளுக்குச் சுவறக் கூடாது. அதுதான் எடுத்தநான்"
“யாரைச் சொல்லுகிறாய் நன்றி கெட்டதுகள் என்று?” “யாரைச் சொல்லலாம் நன்றி உள்ளதுகள் என்று. என்வரையில் என்னோடு சம்பந்தப்பட்ட எல்லோருமே நன்றி கெட்டதுகள்"
செல்வராணி அவனைப் பார்க்காது எங்கோ பார்த்தபடி சட்சட் என்று பதிலளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய நாவில் குத்திரமான மொழிகள் விளையாடிக்கொண்டிருந்தன. கமலேஸ்வரனுக்கு அவள் தன்னையும் ஒரு நன்றி கெட்டவனாகக் கூறியது என்னமோ போலிருந்தது. அவன் சொன்னான்.
"நீ உழைக்கிறது உனக்காகத்தான். உன்னுடைய ஒரு சதமும் எனக்கு வேண்டாம். இப்பிடி ஏற்கனவே கூறியிருந்தால் நான் ஏதாவது செய்திருக்கலாம். பிள்ளைகளை நினைக்கத்தான் பரிதாபமாக இருக்கிறது. இந்த வேகத்திலேயே போனால் என்ன நடக்குமோ எனக்குத் தெரியாது.”
அவன் எதனையோ கூறத் துடித்தான். முடியாது போகவே வெளியே எழுந்து வந்தான். அப்பொழுது செல்வராணி கூறியது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
“வேலையையும் விட்டுப் போட்டு நான் உழைக்கிறதிலை அதிகாரம் பண்ணவும் இருக்கிறார்.மானரோசம்இருந்தால்வேலையைவிட்டமாதிரிஇன்னும்எத்தனையோசெய்யலாமே?” செல்வராணியின் அந்த வார்த்தைகளுடன் கமலேஸ்வரன் ஒருமுடிவுக்கு வந்தான். மார் ஆயிரம் வாய்களால் ஆயிரம் சொல்லும். அதற்காக அவன் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது அர்த்தமற்றதாக இருந்தது. செல்வராணியுடன் வாழ்ந்த காலங்கள் அவனுக்கு இன்ப நினைவுகளைத் தருவனவாக இல்லாவிட்டாலும், உலகத்தையும் பெண்ணையும் ஒரளவுதானும் தெரிந்து கொள்ளச் செய்திருந்தன.
அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.
95

Page 58
தணல் ஐந்து
ஒரு மாதம் ஒடித் தீர்ந்தது. கமலேஸ்வரனுடைய வாழ்க்கை அப்படியே ‘மெயில்றெயின்’ போல ஒடிக் கொண்டிருந்தாலும் உள்ளார்ந்த சில விஷயங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
செல்வராணி தனது பொழுது போக்குகளில் எவ்வளவுக்கு அருகதை கொண்டிருந்தாளோ அவ்வளவுக்கு அதிகாரமும் கிடைக்கப் பெற்றவளாக இருந்தாள். ஹில்ஸ்வேர்த் விளம்பரக் கம்பனி கொடுத்திருந்த சேவைப் பணமும் தீர்ந்துவிட்ட நிலையில் கமலேஸ்வரன் இருந்ததால், இப்பொழுது அவன் வாழ்க்கைக்குப் பணம் அவசியப்பட்டது.
இந்த இடைவெளிக்குள் அவன் சில பத்திரிகைக் கம்பனிகளின் படிகளையும் ஏறி இறங்கி இருந்தான். பத்திரிகைகளில் வெளி வருகின்ற கதைகளுக்குப் படம் போட்டுக் கொடுக்க அவன் எடுத்த பிரயத்தனங்கள் வீணாகியிருந்தன. ஏற்கனவே சித்திரக்காரர்களாகச் சேர்ந்தவர்களே சித்திர வேலைகளின்றி இருப்பதாகக் கூறிய பத்திரிகை ஆசிரியர்கள், தாம் புதிதாகப் புகைப்படங்கள் எடுத்தே கதைகளைப் பிரசுரிப்பதாகக் கூறியதும் அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.
அவனுடைய தூரிகை, வர்ணம் பட்டு நெடுநாட்களாகி இருந்ததால் பரட்டைத் தலை போலிருந்தது. வர்ணப் புட்டிகள் ஈரமின்றிக் கிடந்தன.
அவனுடைய அந்தச் சித்திர மேசை வீணே இடத்தைப் பிடிக்கின்றது என்று கருதிய செல்வராணி, வர்ணப் புட்டிகளையும், தூரிகைகளையும் தாள்களையும் ஒன்றாகவே ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு, பத்திரிகைகளையும் பிற சில்லறைப் பொருட்களையும் இட்டிருந்தாள்.
அவை பற்றி கமலேஸ்வரன் ஒன்றும் பேசுவதில்லை. தன் வேலையுடன் தனக்கிருந்த சகலமும் மறைந்து விட்டன என்ற ஏக்க உணர்வு அவனை ஆட்கொண்டிருந்ததால், அவனால் எதுவுமே பேச முடியவில்லை. சமையல் மிக அரிதாக நடைபெறும் அந்த வேளையில் அவன் உண்பதே வெகு குறைவாக இருந்த பொழுதும் செல்வராணியினுடைய சீவியத்திலேயே அவன் இருப்பதாகப் பிறர் கூறியவை உண்மை போன்றும் அவனுக்குப்பட்டது.
செல்வராணி அவனுடைய குழப்பமான இந்தச் சூழ்நிலையை வெகுவாகப் பயன்படுத்திக் கொண்டாள்.
பரமேஸ்வரி செய்து வரும் உதவிக்கு நன்றியாக அவளுடைய நீண்டநாட் குறையைப் போக்குவதற்கும் செல்வராணி முயற்சியெடுத்திருந்தாள். பரமேஸ்வரியை அழைத்துச் சென்று டாக்டர் ஞானமலரிடம் பரிசோதனைக்காக விட்டபொழுது ஞானமலர் செல்வராணியைப் பெரிதும் வியந்தாள்.
தன் வாழ்க்கையில் கிடைக்கவே முடியாத பாக்கியம், தன் போன்ற ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கியுள்ள ஒருத்திக்கேனும் கிடைக்க வேண்டுமென்ற உந்தல் டாக்டர் ஞானமலருக்கு இருந்ததால், பரமேஸ்வரி பற்றி அதிக சிரத்தை எடுத்துக் கொண்டாள்.
96

செல்வராணியுடன் பரமேஸ்வரி சென்று வருவதைக் கணேசமணி முதலில் விரும்பாதபோதிலும் அவளின் வாழ்க்கை ஆசையின் ஈடேற்றத்துக்காகவே செல்வராணியும் பாடுபடுகிறாள் என்பதை உணர்ந்ததும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி இருந்தான்.
பெண்களுக்குக் கட்டுக்காவல் இடுவது சுத்த முட்டாள் தனமானது. அவர்கள் கெடத்தான் வேண்டுமென்று விடாப்பிடியாக நின்றால் கெட்டே போவார்கள். அதனைத் தடுக்க யாராலும் முடியாது என்றெல்லாம் கணேசமணி அறிந்திருந்தான். அதனால் பரமேஸ்வரி மீது தான் வைத்த அன்பை, காதலை, பந்தத்தை எவ்விதத்திலும் அவன் சந்தேகிக்கவில்லை.
பரமேஸ்வரியின் ஏக்கத்துக்கு அவளின் உடலின் உள்ளமைப்பே காரணமாகியது என்பதை டாக்டர் ஞானமலருக்கு எக்ஸ்-றே மூலம் தெளிவாகியதும் அவள் கணேசமணியைச் சந்தேகிக்க இடமில்லாது போனது.
கமலேஸ்வரன் வேலையை விட்டுவிட்டான் என்ற செய்தியைச் செல்வராணியிடமிருந்து, கேட்டதும் மோகன்ராய் சற்று அவளுக்காகக் கவலைப்படுபவன் போலக் காட்டினாலும் பின்னர் அதனை மறந்து, தனக்கும் செல்வராணிக்கும் இடையே ஏற்படக்கூடிய மகத்தான உறவுக்கு அது பலமான அத்திவாரம் என்றும் நினைத்தான்.
"அப்படியானால் நீங்களே உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று சொல்லுங்கள்" என்றான் ராய்,
தான் இதுவரை காலமும் கஷ்டப்பட்டு மறைத்து வந்த ஏழ்மை அதிவிரைவிலேயே துலாம்பரமாகி விடுமென்று செல்வராணி எதிர்பார்க்கவில்லை. அவள் சொன்னாள்.
"அப்படியொரு கஷ்டமும் வந்து விடாது. அவர் விரைவில் வேறு வேலை தேடி விடுவார்"
“நான் எங்களுடைய கம்பனியில் வேலை கொடுத்து விடுவேன். ஆனால், ஆர்டிஸ்டுக்கு இங்கு வேலை ஒன்றுமே இல்லை” என்று கூறிவிட்டு ராய் பெரிதாகச் சிரித்தான்.
ஒரு கலைஞனை நம்பி உன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து அநியாயமாகக் கெட்டழிகிறாயே என்று தன்னைச் சுட்டிக்காட்டி ராய் கேலி செய்வதாக எண்ணி வருந்தினாள் செல்வராணி
கலைஞனுடைய மனைவி என்ற இளக்காரமான உணர்வு தன்னோடு சம்பந்தப்பட்ட யார் மனதிலும் தோன்றக் கூடாது என்ற நினைவில் அவள் கமலேஸ்வரன் உலகப் பிரசித்தி பெற்ற ஹில்ஸ்வேர்த் அட்வடைசிங் சேவிசில் பிரதம விளம்பர அதிகாரி என்று சொல்லி வைத்திருந்த தெல்லாம் பொய்யாகவும் கனவாகவும் போய்விட்டதை ாண்ணிப் புளுங்கினாள்.
இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஏழ்மை நிலையால் தான் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் அவள் எண்ணினாள். உலகத்துக்கு ஏற்றாற்போலத்தான் வாழப் பழகிக் கொண்ட விதத்தை யெல்லாம் கமலேஸ்வரன் மண்ணோடு மண்ணாக்கி விட்டதாக எண்ணிய பொழுது,தொடர்ந்தும் அவனுடன் வாழ்ந்து கெட்டபெயர் எடுப்பதிலும் முதலும் கடைசியுமாக ஒரேயொரு கெட்ட பெயர் எடுத்தாலென்ன என்றும் அவள் மனம் எண்ணத் தலைப்பட்டது. ஒர் ஏழைப் பெண் சமூகத்தைப் புரிந்து சோஷலாக வாழ ஆரம்பித்தால் அவளை ாக்கூசாமல் விபச்சாரி என்பார்கள். ஆனால் ஒரு பணக்காரி விபசாரம் செய்தாலும் அதனைச் ஸோஷல் என்றே சொல்ல ஆயிரம் நாக்குகள் தயாராக இருக்கும். கொழும்பில் ாழ நேர்ந்துவிட்ட அவளுக்கு இவை நன்கு தெரிந்திருந்தன.
97

Page 59
ராய் கேட்டான்.
"ஒன்று செய்யலாம். உங்களை விரும்புகிற ஒருவனிடம் உங்களை நீங்களே ஒப்படைத்துவிட்டு, ஜாலியாக வாழலாமே. ஒருவேளை வேலை வெட்டி என்று உங்கள் அழகான உடலைப் போட்டு வதைக்க வேண்டியும் ஏற்படாது" என்றபடி கண்களை மேலிறைக்குள் விழுத்தி,செல்வராணியின் மனப்பூர்வமான ஆவல் எது என்று அறியும் பொருட்டு கபடமாகச் சிரித்தபடி இருந்தான் ராய்,
செல்வராணிக்கு அதனை முதலில் நினைக்கச் சங்கடமாய் இருந்தாலும் கட்டிய புருஷடினக் கள்ள உறவுக்காகக் கொலை செய்தவர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள்தானே என்ற நினைவு எழுந்ததும் சொன்னாள்.
"கல்யாணமே இந்தக் காலத்தில் ஆடை அணிகள் போல ஆகிவிட்டது. ஒரு சேலை பிய்ந்து போனால் அதனை வீசி விடுவதுபோல, குடும்பம் சரிவர நடக்காது விட்டால் அவரவர் விலகிக் கொள்கிறார்கள். ஒரு விதத்தில் குடும்பமும் ஒரு வியாபாரம்தான். இலாப நட்டம் பார்க்க வேண்டிய நிலையில் இன்றைய குடும்பஸ்தர்கள் இருக்கிறார்கள். கணவன் மணிவிக்கிடையில் நெடுந்தகராறு இருக்குமென்றால் அவர்கள் விலகி, அவர்களே அவர்களை வாழ விடுவதிலும் வாழவைப்பதிலும் தவறில்லை என்று தோன்றுகிறது. சமூகம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே போகிறது. இந்த மாற்றத்தின் வேகத்தில் எங்கள் இந்தியப் பண்பாடு சரி, தமிழ்ப்பண்பாடு சரி காற்றோடு கலந்த தூசிபோல ஆகிவிடக்கூடிய நிலையும் ஏற்பட்டு வருகிறது. எங்கள் மத்தியில் பிரிவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.”
எண்ணங்கள் பல கோணங்களில் இருந்தும் கிளைத்து அவளுடைய வார்த்தைகளைக் குழப்பியதால் செல்வராணி தன்னால் முடிந்தவற்றைக் கூறிவிட்டு அமைதியானாள்.
மதிய போசனத்தின்பின் இளைப்பாறக்கூடிய அளவுக்கு இருந்த அந்த இடைவேளையில் ராயுடன் சில முக்கியமான விஷயங்களைப் பேசித் தெரிந்து கொள்வதில் அவள் ஆறுதல் அடைந்தாள்.
"அப்படியானால் ஒன்று செய்யுங்களேன்! பேசாமல் மிஸ்டர் கமலேஸ்வரனுடன் விவாகரத்துச் செய்து கொள்ளுங்களேன்" ராய் எடுத்த எடுப்பிலேயே அப்படிக் கூறியதும் அவன் கூறியது அவளுக்கு உடன்பாடோ இல்லையோ என்பதைப் பிரச்சினையாக்காது சமூகத்துக்காவே பதில் சொன்னாள் செல்வராணி
"எங்களுடைய குலத்தில் விவாகரத்துக்கள் நடப்பதில்லை. அப்படி நடந்தாலும் நியாயமான காரணத்தால் தான் நடக்கும். விதவையாகிவிட்ட ஒரு தமிழ்ப் பெண் தனது இருபது வயதில் இருந்தாலும் அவள் மறுமணம் செய்தால் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள். முன்னர் ஒருகாலம் இருந்தது- கணவனுடன் அந்த விதவை தீயில் வெந்துசாக வேண்டும். அப்பொழுதுதான் அவள் பத்தினி என்று போற்றப்படுவாள். ஆங்கிலேயர் ஆட்சி அதற்கு முடிவு கட்டியது. மொட்டையடித்து வெள்ளைச் சேலை உடுத்து, கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், மங்களகரமான வைபவங்கள் இவை எல்லாவற்றிலிருந்துமே அவள் ஒதுக்கப்பட்டாள். இன்னும் காலம் மாறியது. இவை அவளது கணவனின் பிரிவால் வாடும் அவளுக்கு ஆறுதல்களாயின. இன்றைக்கும் விதவையை விழிவளமாகக் கண்டவர்கள் தாங்கள் புறப்பட்ட பயணத்தை மேற்கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட சமூகத்திலே பிறந்த நான் விவாகரத்துச் செய்வதென்பது முடியாத காரியமாகி விடும்.
செல்வராணிக்குச் சமூகம் என்பதன்மீது நாளடைவில் அளவில்லாத பயம் ஏற்பட்டிருப்பதை அவதானித்த ராய் கேட்டான்.
98

“அந்தச் சமூகம் உங்களை ஒதுக்க முன்பு நீங்களே அதனின்றும் பிரிந்துவிட்டால். கதைக்காகச் சொல்லுகிறேன். வேண்டாத ஒருவனை விவாகரத்துச் செய்துவிட்டு விரும்பிய நல்ல ஒருவனுடன் நாட்டை விட்டே சென்று விட்டால்..?”
“நல்ல யோசனைதான். ஆனால், பந்தங்கள் பற்றியிழுக்கும். "புதிய பந்தம் இனிமையானதாகவும் பலமானதாகவும் இருந்து விட்டால்.? ஒரு வேளை அந்த பந்தங்களை மறக்கலாம்". செல்வராணி இப்பொழுது சிரித்தாள். பின்னர் கூறினாள்.
“என்னுடன் ஒரு டாக்டர்; பெயர் ஞானமலர் மிகவும் நெருங்கிய நட்புடையவர். அவள்)கூட ஒரு நாள் சொன்னா(ள்). என் வாழ்க்கையில் கொடிய வியாதிகள் தலை தூக்காமல் இருக்க நான் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று. என் உணர்ச்சிகளை யார் யார் மிருகத்தனமாகத் தூண்டி விடுகிறார்களோ அவர்களை ஒதுக்கி வாழும்படி அவ(ள்) சொன்னா(ள்). நான் அதையும் கேட்டுவிட்டு இன்னமும் அவருடனேயே வாழ்கிறேன்"
தனக்குப் பொறுமை அதிகம் இருப்பதாகக் கூறி மெச்சிய பார்வையுடன் மீண்டும் சிரித்தாள் செல்வராணி.
அவள் சிரித்த பொழுது அடர்ந்த அவளுடைய கதுப்புக்களில் இதழோரங்களுடன் விழுந்த குழிகளில் இலயித்த மோகன்ராய், “இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டபடி மேசையில் நீண்டுகிடந்த அவளுடைய கையைப் பற்றினான்.
அந்தப் பிடியிலிருந்து சிறிதும் விலக விரும்பாத செல்வராணி திடீரென்று கண்களில் மின்சாரம் பாய்ந்து சூடு ஏற்பட்டது போன்ற ஒருவித அதிர்ச்சி விழிகளுடன் தலையைச் சற்றுத் தாழ்த்தி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை இமை வெட்டிப் பார்த்தால் ஒரு வேளை தன் பிடியிலிருந்தும் பார்வையிலிருந்தும் அவள் மறைந்து விடுவாளோ என்று மோகன்ராய் எண்ணியது போன்று அவனும் இமை மூடாதிருந்தான்.
அவனுடைய இரு கைகளுக்குள்ளும் தஞ்சமடைந்து கிடந்த தனது கையை மீட்டபடி கேட்டாள் செல்வராணி
“டில்லியில் வாழ உங்களுக்குப் பிரச்சினையாக இருக்க மாட்டாதா?” “எனக்கென்ன பிரச்சினை? நீங்கள் ஓர் இந்து. அதுதான் எங்களுக்கு, அதாவது டில்லி மக்களுக்கு வேண்டியது. என்னுடைய மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டாள் என்று உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். எனக்கு இரு பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் தாயாருடன் இருந்து டில்லியிலேயே படிக்கிறார்கள். என்னுடைய விருப்பத்துக்குத் தடையாக, நான் விரும்புபவர்களைத் தவிர வேறு எவருமே இருக்க முடியாது. எனது பிள்ளைகளுக்கும் ஒரு நல்லதாய் கிடைத்த சந்தோஷம் இருக்கும்" "ஏற்கனவே ஒருவருக்குத் துரோகம் செய்துவிட்ட அல்லது செய்யப்போகும் நான் மற்றொருவருக்காவது விசுவாசமாக இருப்பேன் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?" செல்வராணியினுடைய கேள்வியால் ராய் சற்றுக் குழம்பினான். ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் தன்வரையில் அந்தக் குழப்பத்திற்கு முடிவுகண்டவன் போலக் கூறினான். “இது ஒன்றே போதும். நீங்கள் உங்களுக்கு வரப்போகும் கணவனுக்கு விசுவாசமாக இருப்பீர்கள். உங்கள் நிலையை நீங்கள் உணர்ந்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கேள்விகளிலேயே இந்திய சமுதாயம் வாழ்க்கையை ஒட்டுகின்றது. இத்தகைய கேள்விகளால்தான் நமது சமுதாயம் புடம் போடப்பட்டு வருகிறது. உங்களுடைய
99

Page 60
தன்னுணர்வுமிக்க இந்தக் கேள்வியால் நான் உங்களை மேலும் நம்புகிறேன், நேசிக்கிறேன்." என்றபடி மேசையில் குனிந்து அதில் இன்னமுங் கிடந்த அவளுடைய கைகளை இழுத்து தள் முகத்துட் புதைத்துக் கொண்டான் ராய்,
அப்பொழுது ஏற்பட்ட இழுபறியில் ராயினுடைய முழங்கை மேசையி லிருந்தபெல்லை அமுக்கியதும் அந்த பெல் அமுக்கத்தினால் ஏற்பட்ட ஒலியைக் கேட்ட அலுவலகச் சேவகன் அங்கு வந்து இதுவரை கம்பனி ஊழியர்கள் கதை கதையாகக் கூறிய சம்பவங்களில் ஒன்று உண்மையாகவே நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.
அவர்கள் இருவரும் எதிரெதிராக இருந்த பொழுதும் ஒருவராகத் துடிக்கும் இன்பக் கிறக்கத்தில் இருந்து விடுபட்டு வாசலைப் பார்த்தபொழுது அங்கு அந்தச் சேவகன், “யேஸ் சேர்” என்றபடி பக்குவமாக நிற்பதைக் கண்டனர்.
"யூ பூல், கெற் அவுட்", மோகன்ராய் தன் சக்தி எல்லாவற்றையும் சேர்த்துக் கத்திவிட்டு பேந்தப் பேந்த விழித்தான்.
"கவலைப்படாதீர்கள்” என்று கூறிய செல்வராணி, "இவன் போய் கதையாகவோ புதினமாகவோ சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் நாங்கள் ஒருவரையொருவர் எவ்விதத்திலும் தீண்டாமலே இருந்த காலங்களில் ஒரே காரில் சென்று வந்ததைப் பிழையாக விளங்கிஏதேதோ எல்லாம் பேசியிருக்கிறார்கள், இந்தக் கம்பனி ஊழியர்கள். இவர்களுக்கு இன்றையப் பொழுது நன்றாகப் போகும். இந்தக் காட்சியைக் கண்டு சொன்னதற்காக இந்தச் சேவகனுக்கு ஐம்பது சதமோ ஒரு ரூபாவோ கிடைக்கும். அதுவும் நல்லதுதுான்".
“வம்புக்கதைகள் கட்டி நான் உங்களை விரும்பும்படி செய்தார்கள். இனி தொடர்ந்து கதைப்பதன் மூலம் உங்களுடன் என்னை வாழ வைத்தால் போதும். இதுவே என் பிரார்த்தனை."
செல்வராணி கூறி முடித்தாள். அவளுடைய கன்னங்கள் ஏற்கனவே நாணத்தால் இடப்பட்ட செம்மை காய இப்பொழுது கவலையில் சிவந்து காணப்பட்டன. கண்களின் அடியில் நீரூற்றுத் தென்பட்டாலும் விழிகளின் மணிகளில் எதிர்காலம்பற்றிய இன்பக்கனவும், அதனால் எழுந்த மகிழ்ச்சிப் புன்னகையும் விளையாடிக் கொண்டிருந்தன.
பகல் முழுவதும் ஒளி பரப்பிய களைப்பில் கடலுக்குள் நீராடச் சென்றுவிட்ட சூரியனின் கோலத்தைக் கண்டு சிரிப்பது போன்று அந்த மாலை நிலவு மெல்ல முகிழ்த்திருந்தது. காலை சோம்பலுடன் எழுந்த பகலவன் மதியம் எறிந்த உக்கிரத்தை, அது கொடுமை என்று எண்ணிஊஊஒலியெழுப்பிநொந்தவர்கள் மாலையில் அந்த ஆறு மணிப் பொழுதில் பழைய செம்மை பூண்டு எப்படித் தோன்றியதோ அப்படி மறையும் அழகை இரசிப்பதற்கு யாருமே தயாராக இருக்கவில்லை.
விழிகளை மூடினால் அருகருகே வாசனை கமழச் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும் பெண்களை இரசிக்காது தவறிவிடுவோமோ என்ற இழப்புக்குத் தயாராகாத உணர்வில் ஒரு வாலிபர் கூட்டம் நின்று கொண்டிருந்தது.
தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொண்டு நின்ற அந்த எதிர்கால உலகத்தின் பேச்சுக்களையும் அர்த்தமற்றவற்றுக்கான கபடச் சிரிப்புக்களையும் கேட்க அப்பொழுது அங்கு வந்த கமலேஸ்வரனுக்கு என்னவோ போலிருந்தது.
100

அன்று தாயார் தங்கம்மாவைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் பிறந்திருந்தால் பகல் முழுவதும் சோம்பித் தூங்கிவிட்டு அப்பொழுதுதான் வெளியே புறப்பட்டிருந்தான் கமலேஸ்வரன். அந்த வாலிபர் கூட்டத்தின் தமிழ் ஆங்கிலம் அவனை இக்கட்டான ஒரு நிலைக்கு து டுச் சென்றது. அவன் கல்லூரியில் படித்த காலத்தில் தமிழில் ஒரு வார்த்தை பேசினால் ந்து சதம் குற்றப்பணம் கட்ட வேண்டிய நிலையில் இருந்ததை நினைத்துப் பார்த்தான் அவன். தமிழே பேசக் கூடாத நிலையை அன்று தோற்றுவித்து ஒரு விதத்தில் வெறுப்பை அட்டினாலும், மறு விதத்தில் அவனை கம்பீரமான ஆங்கில உரைநடையாளனாக மாற்றியிருந்தது, பல வழிகளில் உதவியது.
அவர்களுள் ஒருவன் சொன்னான். "மச்சான் தெயர் ஷி இஸ் கம்மிங்" "வெயர்?” "தற்டேம் என்னவோ பெயர். அண்டைக்கு அந்த பிரன்ட் சொன்னான், இவள் முருபாஸ்ட் கேஸ் என்று. அந்தா அந்த வடக்கத்தையானுடைய கார்லை. ஷா என்ன மாதிரி இருக்கிறாள் பார்த்தியளோ வெரி பியூட்டி. எண்டாலும் வெரி பாஸ்ட் கேர்ள்"
"அவள் கேர்ள் இல்லையடா மச்சான். மாரி பண்ணினவள். குறைஞ்சது நாலு பிள்ளையள் இருக்கும்" மற்றொருவன் மறுத்துக் கூறினான்.
அவர்களுடைய கதை, சனத்துள் ஒருவனாக நின்ற கமலேஸ்வரனுடைய காதுகளில் பட்டும் படாமலும் கேட்டதும், அவர்களின் விழிகள் சென்றவழி அவனும் பார்த்தான்.
சிவப்பு விளக்கு எரிந்ததும் நிறுத்தப்பட்டிருந்த மோகன்ராயினுடைய அந்தக் கார், பச்சை விளக்கு எரிந்ததும் உஸ். என்று ஒலியெழுப்பியபடி நகரத் தொடங்கியதும் கமலேஸ்வரனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. செல்வரானிதனது ஒய்யாரமான இருக்கையில் நளின கம்பீரமாக வெளியே பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள். கமலேஸ்வரன் பற்களை நறும்பிக் கொண்டான். வீட்டில்தான் நிம்மதி இல்லாவிட்டாலும் நான்குபேர் மத்தியிலேனும் நிம்மதியுடன் இருக்க வேண்டாமா? அதற்கும் செல்வராணி முட்டுக்கட்டையாக இருக்கிறாள் என்பதை நினைக்க ஒரேயடியாக எல்லோரையும் கொலை செய்துவிட்டுத் தானும் மடிந்தால் என்ன என்றும் எண்ணத் தோன்றியது.
அலுவலகத்துக்குச் செல்வதாகக்கூறி வீட்டை விட்டுப் புறப்படுவதும், அவளுக்கு ஏற்றவாறு ஆடுவதும், பணத்தால் உயர்ந்தவர்களுடன் பொழுது போக்குவதும் பல பெண்களுக்குப் பொதுவாகிவிட்ட இந்தக் காலத்தில் செல்வராணியும் அந்தப் பல பெண்களுள் ஒருத்தியாகத் தன்னை ஆக்கிக் கொண்டு விட்டாளா? என்றும் கமலேஸ்வரன் சந்தேகப்பட்டான்.
தன் கண்கள் முன்னிலையில் தன்னுடையன போன்ற ஆயிரம், ஆயிரம் கண்கள் பார்த்து தவறாகவோ சரியாகவோ கதைகள் பேசவும் வழிவகுக்கக்கூடிய ஒரு வேலையைச் செல்வராணி செய்து கொண்டு செல்வது அவனுக்கு விரக்தியை ஊட்டியது.
அந்தஅவன் சொன்னான். “நீங்கள் சொன்னா பிலீவ்பண்ண மாட்டிங்கள். இவள் கிளப், டான்ஸ் எண்டெல்லாம் போறாள். ஆரோ கப்பற் கம்பனி முதலாளி இவளை வைச்சிருக்கிறானாம். நம்மடை யாழ்ப்பாணத்திலை பிறந்து இது கொழும்புக்கு வந்து செய்யிற வேலை. உக்ம். நினைச்சா நெஞ்சு நடுங்கும்"
101

Page 61
'நீசும்மா அலட்டாதை அவள் லிப்ட் எடுத்தண்டு போனவுடனை கதை கட்டுறியே உன்னுடைய கொலிஜ் காதலியை விடவா அவள் மோசம்? இன்னொருவன் கேட்டான்.
கமலேஸ்வரனுக்குத் தொடர்ந்தும் பஸ்ஸுக்காக காத்திருக்கப் பிடிக்கவில்லை அவன் விறு விறென நடந்து வீட்டுக்குச் சென்றான்.
தங்கம்மாவைப் பார்க்க வேண்டுமென்று அவனுக்கு இருந்த ஆவலிலும் அந்த இளைஞர்கள் கூறியவற்றுள் எவ்வளவு உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன என்று அலசிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மிக்கிருந்தது.
கமலேஸ்வரன் வீட்டுக்குச் சென்று செல்வராணி வந்திருக்கிறாளா என்று பார்த்தான். அவளை அங்கு காணவில்லை. ரமணனைக் கேட்டபொழுது அவன் 'அம்மா இன்னும் வரவில்லை” என்று கூறினான்.
அவனுக்குத் தலைசுற்றுவது போல இருந்தது. பூமி அவன் காலடியில் கிடப்பதையும் மறந்து அவனுடைய தலையையும் தன்னுடன் சேர்க்க வேண்டுமென்றதுடிப்பில், அவனை வீழ்த்த வேண்டுமென்ற வெறியில் சுழன்று கொண்டு இருப்பதுபோல உணர்ந்தான் கமலேஸ்வரன்.
மோகன்ராய் செல்வராணியைத் தனது வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, காரை
ஒட்டிச் சென்று செட்டுக்குள் விட்டான். அவன் காரிலிருந்து இறங்கி, கீழே இறங்கியிருந்த தனது காற்சட்டையை திறப்புக்கள் சிகரெட் பாக்கட் நிறைந்த கைகளால் நடந்து கொண்டே
இழுத்து மேலே விட்ட அழகை இடுப்பில் ஒரு கையைப் பதித்து ஒரு பக்கமாக தலையையும்
சாய்த்து, அழகாக நின்று பார்த்தாள் செல்வராணி.
அவளை உள்ளே சென்று கூடத்தில் இருக்கும்படி மோகன்ராய் கூறியிருந்தும்,
அவன் வரவேண்டுமென்று காத்திருந்தாள் அவள்.
அந்தப் பிரமாண்டமான மாடிவீட்டின் மேல் மாடிக்கு அவர்கள் இருவரும் சென்று
கொண்டிருக்கையில்,படிகளின் ஒரமாக ஒருவன் கைகட்டிக்கொண்டு நின்றுராயைப் பார்த்தான்.
"கூல் டிறிங்ஸ்" என்று ஆரம்பமும் முடிவுமின்றி ராய் கூறியதும் “யேஸ் சேர்"
என்றபடி உள்ளறைப் பக்கமாக ஓடினான் அந்தப் பணியாள்.
உள்ளறைக்குள் நின்ற மற்றும் இருவரை மெல்ல இடித்து, ஆட்காட்டி விரலால் மேலே இருதடவைகள் உயர்த்திச் சுட்டிக் காட்டிவிட்டு, ஒரு கையால் யாரையோ அணைப்பது போல் நடித்தான் அவன். அந்தப் பணியாளின் செய்கையின் பொருளை உணர்ந்த மற்றும் இருவர் கொல்லென்று சிரிக்க ஆவல் பூண்டவராயினர். எனினும் அவர்களுடைய அந்தச் சிரிப்பே அவர்களுக்கு வேலையையும் சுகமான வாழ்க்கையையும் இழக்கின்ற அழுகையைக் கொடுக்குமென்பதை அவர்கள் அறிந்து தெளிந்திருந்ததால் ஒருவாறு ஒலியின்றிச் சிரித்துச் சமாளித்துக் கொண்டனர்.
"இது எத்தனையாவது?" ஒருவன் கேட்டான்.
"ஆண்டவனுக்குத் தெரியும்"
"அப்ப முதலாளிக்கு?"
"அவருக்குத் தெரியாமலாவிடப் போகுது இன்னாவே சும்மா உடம்பை அலட்டுறே. கூல் டிறிங்ஸ் இல்லே கேட்டவர். உம். சீக்கிரம். சீக்கிரம்." அந்தப் பணியாட்களுள் ஒருவன் மற்றவர்களைத் துரிதப்படுத்தினான்.
ராயினுடைய மொழியில் “கூல் டிறிங்ஸ்" என்றால் “பியர் போத்தல்கள் இரண்டு” என்று அர்த்தம் என்பதைத் தெரிந்திருந்த அவர்கள் இரு கிளாஸ்களையும் தட்டத்தில் வைத்து இரு பியர் போத்தல்களையும் எடுத்து ஒருவனிடம் கொடுத்து மாடிக்கு அனுப்பினார்கள்.
102

93
"ஆமா, அவ தமிழ்ப் பொம்பிளை மாதி இருக்கிறவோ..?. "தமிழும் சிங்களமும் தான் இந்த ஸ்புட்னிக் காலத்திலே எல்லாப் பண்பாடும் புஸ் என்னு போச்சப்பா! அது அந்த நாளையிலை . நம்ம பொம்பிளைங்க இருந்தாங்க, எல்லாம் அவங்ககிட்டே இருந்தது. இப்ப என்னடா எண்டா. பொம்பிளைங்க கொஞ்சம் படிச்சு நாகரிகத்தைப் பிடிச்சுக்கிட்டு சும்மா சுத்தறாங்க. காலம் கெட்டுப் போச்சப்பா"
"நீ ஒண்ணும் பெரிசா அளக்காதே தோ! எத்தினை பேர் கெட்டாலும், எத்தினை நாகரிகம் வந்தாலும் அத்தனைக்கும் சளைக்காத தமிழ் பொண்ணுங்களும் இருக்கிறாங்க. ஆமாக்கும்.” என்றான் ஒருவன்.
“ஏண்டா! நீங்களும் பொம்பிளைங்களைப் பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? உங்களுக்கென்று தாண்டா நம்ம ஜல்ஜல் இருக்கே. அதுக்கப்புறம் ஏண்டா மத்தப் பெண்ணுக பத்தி ஆராய்ச்சி. மேலே கதைச்சீங்கண்ணா ஒதைச்சுப்புடுவேன் ஒதைச்சி போவியளா.."
ராய்க்கும் செல்வராணிக்கும் குளிர்பானம் கொடுத்துவிட்டு வந்த அந்தப் பணியாள் மற்ற இருவரையும் மிரட்டினான்.
அவர்கள் அமைதியானார்கள். மேல் மாடிக்கு வந்ததும் காற்றையும் சூழவுள்ள மரங்களையும் வானத்தையும் தவிர யாருமே இல்லாதது செல்வராணிக்குக் கூச்சமாக இருந்தது.
ஆண்டுகள் ஆண்டுகளாகப் பழக்கப்பட்டுவிட்ட ஒருவனாக மோகன்ராய் இருந்த பொழுதும் முதன் முதலாக அவனுடைய வீட்டிற்கு வந்த பொழுது அவளையும் அறியாமல் அவளுடைய நெஞ்சம் பக் பக்' என்று அடித்துக் கொண்டது.
சுவர்களில் மாட்டப்பட்டிருந்த வண்ண வண்ணச் சித்திரங்களையும் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டிருந்த அந்நிய அழகிகளின் அரை நிர்வாண வண்ணப் படங்களும் அந்தக் கூடத்தை நிறைத்திருந்தன.
அமர்ந்தால் ஆளை அப்படியே உள்ளுக்குள் இழுத்துச் செல்லும் சோபாக்களில் ஒன்றைக்காட்டி அவளை அமரும்படி கூறிய ராய் கழுத்துப் பட்டியை அவிழ்த்து அவற்றுள் ஒன்றை நோக்கி எறிந்தான். பின்னர் வியர்த்து வந்ததால் பானை'யும் போட்டுவிட்டு தனது சேர்ட் பட்டன்களில் மூன்றையும் கழற்றி விட்டான்.
அப்பொழுது அவனுடைய நெஞ்சில் இடமின்றி அடர்ந்து வளர்ந்திருந்த உரோமங்கள் வெளியே தெரிய, அவற்றைக் கண்டு அவற்றிலிருந்து விழிகளைப் பெயர்த்து வெளியே பார்த்தாள் செல்வராணி,
அவளுடைய கண்கள் மேலே மேலே செருகுவன போன்றும், தூக்கம் ஏற்படுமுன் உடலில் ஏற்படும் ஓர் அசதி போன்றும் அவளுக்கு இருந்ததால், அவள் அகன்றதும் ஆளமானதுமான அந்தச் சோபாவுக்குள் தன்னுடல் முழுவதையுமே புதைத்து ஆறி அமர்ந்தாள்.
மோகன்ராய் அவளைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தபொழுது, வழமைபோல ஹோட்டலுக்கே சென்று பேசிக் கொண்டிருக்கலாம் என்றுதான் செல்வராணி கூறினாள். அவன் மேலுமிரந்து கேட்டு செல்வலட்சுமி போன்ற பெண்கள் உலவாததால், தன்னுடைய வீடு இருண்டும் பாழடைந்தும் கிடப்பதாகக் கூறியதும், செல்வராணி அவனுடைய வீட்டுக்கு வரச் சம்மதித்திருந்தாள்.
அப்பொழுது அவளைப் பார்த்துச் சிரித்த ராய் இன்னும் சிரித்துக் கொண்டேயிருந்தான். அவளுடைய வருகையால் அவன்படும் ஆனந்தத்தை எண்ணிப்
103

Page 62
பூரித்த செல்வராணி அவனையே பார்த்தபடியிருந்தாள். புதிதாகப் பூத்துள்ள அந்த உறவு அவள் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு திருப்பமாக அமைந்து அவள் எண்ணம் போல், கனவு போல், உருவாக வேண்டுமென்ற பிரார்த்தனைக் கோலம் அவளுடைய விழிகளில் தெரிந்தது.
"ஹவ் யுவர் டிறிங்க்ஸ்” என்ற ராய், அவள் என்ன கூறப்போகிறாள் என்று எதிர்பாராமல் பியர் போத்தலைத் திறந்து கிளாஸ்களில் ஊற்றி ஒன்றை அவளிடம் நீட்டினான்.
அவனுடைய கையிலிருந்து அதனைப் பெற்றுக் கொண்ட செல்வராணி, மீண்டும் டீபோயில் பியர்கிளாசை வைத்தபடி சிரித்தாள்.
"இந்த பியர் எங்களுடைய ஆட்களுக்கு வெறியைக் கொடுக்கும்” அவள் சொன்னதைப் புரிந்து கொண்ட ராய் பெரிய பகிடியைக் கேட்டவன்போல அடக்க முடியாது சிரித்தான்.
3
“எங்களுடைய இந்து சமூகம் என்ன நோக்கத்துடனோ கட்டுப்பாடுகளை வைத்துக் கட்டி அழுது கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கணவனுடைய முகத்தை முதன்முதலாக முதலிரவன்றுதான் கண்ட பெண்களும் இருந்திருக்கிறார்கள். கல்யாணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அதாவது பேசிச் செய்யப்பட்டாலும் ஆண் எப்படி என்று பெண்ணும், பெண் எப்படி என்று ஆணும் அறியமுடியாதிருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் விரும்பிச் செய்யும் கல்யாணங்கள் இந்த வகையில் சிறந்தவை"
ராய் ஏதோ விரிவுரையாற்றிய களைப்பில் இரண்டு சிப் பியரைக் குடித்துவிட்டு சிகரட்டைப் பற்றத் தொடங்கினான். அந்த மாலைப்பொழுதில் செல்வராணியின் பக்கத்தில் இழுத்த பியர், முதல் தாக்குதலிலேயே வெகு இதமாக இருந்தது.
அவன் கூறியதை ஏற்றுக் கொண்டவள் போலத் தலையை ஆட்டிய செல்வராணி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"காதல் கல்யாணங்களும் எல்லாருக்கும் வெற்றியளிப்பதில்லை. சாதி வேறுபாடு, சமய வேறுபாடு, மொழி வேறுபாடு, வயது வேறுபாடு, என்றெல்லாம் காதலுக்குப் பேதமில்லை. ஆனால் இந்த வேறுபாடுகளையும் வென்று காதல் மணம் புரியும் சோடிகள் மனவேறுபாடு என்ற ஒன்றுக்காகப் பிரிந்து போகிறார்கள். மனம் குழப்பமானது. அதனை ஒருவாறு சமாளித்துத் திருத்தலாம். ஆனால் அத்திருத்தத்தைச் செய்ய எல்லோர் மனமும் தயாராவதில்லை. தன் சம்பந்தமான குறைகளை எவ்வாறு ஒருவன் மறைக்கிறானோ அவ்வாறு மனஞ் சம்பந்தப்பட்ட குறையை நிவர்த்தி செய்ய மனம் முனைவதில்லை"
அவள் தொடர்ந்தாள். "காதலிப்பவர்களே தாங்கள் காதலித்தவர்களுக்குத் துரோகம் செய்கிறார்கள்" “உங்கள் வரையில் எப்படி?”ராய் ஏறிக் கொண்டிருந்த போதையின் மயக்கத்தில் ஏதோ கேட்டான். செல்வராணி இன்னமும் ஒன்றுமே அருந்தாதிருந்தாள். அவனுடைய அந்தக் கேள்வி அவளுக்கு என்னவோபோற்பட்டாலும் ராய்க்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது தனது கடமை என்று நினைத்துக் கூறினாள்.
"அதுதானே ஆயிரந் தடவை சொல்லியிருக்கிறேன். நான் எனது கணவரைக் கல்யாணத்தின் போதுதான் கண்டேன். நாங்கள் ஒருவரையொருவர் உடலால் அணுகிய
104

பின்னர்தான் உள்ளத்தால் அணுகினோம். அவருடைய உள்ளம் அவ்வளவு பலவீனமானது என்பதைப் பின்னர்தான் கண்டு கொண்டேன். என்ன செய்வது, விதியே என்று நான்கு ஆண்டுகளை ஒட்டி விட்டோம். இரண்டு குழந்தைகள் வேறு. அவரை எப்படி என்னால் காதலிக்க முடியவில்லையோ அப்படி என் பிள்ளைகளில் கூட அன்பு வைக்க முடியவில்லை" உங்களுக்குக்குழந்தைகள்இருக்கின்றனவா?ராய்வியப்போடுகுரல்கோணக்கேட்டான். “ஓ அது கொடுமை. இரண்டு குழந்தைகள்.” செல்வராணி தான் மறைத்து மறைத்து வந்த உண்மையைத் தானே வெளிப்படுத்தியதை எண்ணிக் கவலைப்பட்டாள்.
அவளுடைய முகம் கருகிக் கொண்டே போனதைக் கண்டுவிட்ட மோகன்ராய் நெருப்பை மிதித்தவன் போலப் பதறினான். தனது பதற்றம் எவ்விதத்தில் அர்த்தமுள்ளது என்று அவனால் கணக்கிட முடியாது போனாலும் அவள் தன் முன்பாக முகங் கோணியிருப்பதை ராய் விரும்பவில்லை.
தனது சோபாவை விட்டு எழுந்துவந்து அவள் அமர்தருந்த சோபாவின் ஒரு புறத்தில் அமர்ந்தபடி அவளுடைய கையைப்பற்றி விரல்களால் தேய்த்துக் கொண்டே கூறினான் ராய்.
“ஓராணி மை குயீன்." அசல் ஆங்கிலேயனை ஒப்பித்தபடி கூறிய ராயினுடைய குரல் தளதளத்திருந்தது. அவள் தனது சிறு கவலையையும் எவ்வளவு பெரிதாக எடுத்து, தான் கவலைப்படுகிறார் என்று செல்வராணி நினைத்தபொழுது அவனை அப்படியே அணைத்து அவனுடைய அந்தப் பொல்லாத கவலையைப் போக்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்க வேண்டும்போல இருந்தது.
“உங்களை நான் ஏன் இங்கு அழைத்து வந்தேன் தெரியுமா?" ராய் குறும்பாகக் கேட்டான். மேலிறைக்குள் கண்களை விழுத்திராயைப் பார்த்த செல்வராணி கீழுதட்டைக் கடித்தபடி தலையை ஆட்டி “தெரியாது” என்று சிரித்தாள்.
“பொய்யைப் பாருங்கள்” என்று செல்லமாக அவள் தாடையைத் தீண்டிவிட்டு சொன்னான் மோகன்ராய்.
"நமது திட்டம்?" ராய் கேள்வி எழுப்பியதும், அந்தக் கேள்விக்குக் கேள்வியாகச் சிரித்தபடி, “என்ன?” என்று தலையாற் கேட்டாள் செல்வராணி
"நீங்கள் முதலில் இந்தியாவுக்குப் போவதற்கு ஆயத்தமாகுங்கள். இலங்கையிலிருந்து நமது ஆசைகளை, கனவுகளை நிறைவேற்ற முடியாது. எனது தம்பி டில்லியிலும் இப்படியொரு கம்பனி வைத்திருக்கிறான். உலகப் புகழ்பெற்ற இந்தியன்ஷிப்பிங் லைன்ஸ் உரிமையாளன் அவன். நீங்கள் அங்கு வேலைக்கு மாற்றம் பெற்றுள்ளதாகக் கதை கட்டலாம். அல்லது விவாகரத்துச் செய்யுங்கள். இங்கேயே இந்த உலகத்தின் பிடியிலிருந்தும் பார்வையிலிருந்தும் விலகி வாழலாம். உலகத்துடன் சேர்ந்து அந்த உலகத்தின் வரவேற்பு என்ற அற்பமான சலுகையைப் பெற்று பல விஷயங்களை இழப்பதிலும், நாமே நமக்குள் ஒரு காதற் சாம்ராஜ்யத்தை அமைத்து வாழலாம். என்ன சொல்கிறீர்கள்?"
விவாகரத்து அவ்வளவுக்கு நல்லதாகப் படவில்லை. முதலில் அவரைப் பிரிந்து இந்தியாவுக்குச் செல்லலாம். பின்னர் ஒரு சில மாதங்கள் கழிந்ததும் விவாகரத்துச் செய்து கொள்ளலாம்.
செல்வராணி சதித் திட்டத்துக்கு ஆலோசனை கூறும் ஒரு கைதேர்ந்த மோசடிக்காரனுக்கும் பிறக்காத ஒரு துணிவுடன் ஒரு சமூகத்தையே புரட்டி அடிக்கும் அந்த வார்த்தைகளைக் கேட்டு ராய் பிரமித்துப் போனான்.
105

Page 63
இவ்வளவுக்குத் தன்மீது அவள் காதல் கொண்டிருக்கிறாள் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கு இனம் புரியாத இன்பப் பெருக்கு ஏற்பட்டிருந்தது.
"இன்னமும் சில நாட்கள் போகட்டும். அதற்குள் இந்தியப்பயணத்துக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து முடித்து விடலாம்.
ராய் கூறி முடித்தான்.
கமலேஸ்வரன் தான் கண்ட அந்த அருவருப்பான காட்சியையும் கேவலமான கதையையும் நினைத்துப் பார்க்கையில் தற்கொலை உணர்வு பெற்றவனானான்.
செல்வராணியை மிருகத்தனமாகத் தாக்கி தன் பழிவெறி தீருமட்டும் வதைக்க வேண்டும் போல அவன் குமைந்து கொண்டிருக்கையில், அந்தக் கோடி வீடுகளுக்குமுன் ஒரு கார் வந்து நின்றது.
இருட்டியிருந்ததால் அந்தக் காரின் ஒளிவெள்ளம் அப்பிரதேசத்தையே வென்று கொண்டிருந்தது. கலங்கிப் பலவீனப்பட்டிருந்த கமலேஸ்வரனுடைய கண்களை அந்த ஒளிக்கற்றைகள் தாக்கியதும் அவனால் எதையுமே பார்க்க முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டான். பின்னர் காட்சிகளுக்காக அவன் விழி திறந்தபொழுது எங்கும் பச்சை, நீல வர்ணங்களாகத் தெரிந்தன. வட்ட வட்டமான அந்த வர்ணக் கோலங்கள் திரண்டு திரண்டு விழிமணிகளின் அசைவில் பிடிபடாது அடிபட்ட பந்து போலத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன.
அந்த வர்ணக் கோலங்களிலிருந்து இறங்கி வருவது போன்று செல்வராணி அமைதியாக விடைபெற்றுக் கொண்டு வெளியே நடந்து வந்தாள்.
கமலேஸ்வரன் வீட்டின் முன்னறையிலிருப்பதைக் கண்டதும் தன் துரோகத்துக்கு ஆளான ஜீவனை குற்ற உணர்வுடன் நோக்குபவன் போலப் பார்த்தாலும், தனது அத்தனை வசதிகளும் அவளுக்கு அளித்திருந்த உயர்வான நினைவில் “குட் நைட் ரூ யூ ராணி” என்று சற்று உரக்கவே கூறினான்.
சம்பிரதாயப்படி கூறும் இப்படியான வார்த்தைகளுக்கு உண்மையான வலிமை இல்லாதுவிடினும், மோகன்ராயின் வார்த்தைகளில் தெறித்த திமிரும், அலட்சியத் தன்மையும் கமலேஸ்வரனுடைய காதுகளைச் செவிடாக்கின.
கமலேஸ்வரனைக் கண்டதும் மதிப்பு மிக்கவளாக தன் நடையின் மூலம் அவனுடைய அனுதாபத்தைப் பெறவேண்டுமென்ற ஆவலில் மிகப் பரிவுடன் பார்த்தபடி நடந்து உள்ளே சென்றாள் செல்வராணி
“நில்!” என்ற கமலேஸ்வரனின் கர்ஜனை, கம்பீரமான குரலைக் கேட்டதும் துணுக்குற்ற செல்வராணி தன்னைச் சமாளித்தபடி நின்று பின்புறத்தையே அவனுக்குக் காட்டியபடி தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள்.
“எங்கே இவ்வளவு நேரமும்?” கமலேஸ்வரனின் கண்கள் கனலைக் கக்காத குறையில் அவளை மென்று கொண்டிருந்தன.
“இப்பதான் வாறன்.”
“அது தெரியும் எங்கேயிருந்து இப்ப வருகிறாய்?”
“ஒபீஸிலையிருந்து”
“யாருக்குச் சொல்கிறாய் இதை?"
“கேட்பவர்களுக்குத்தான்"
செல்வராணி தொடர்ந்து பதில் சொல்லத் தயாராக இல்லை என்பதுபோல் உள்ளே சென்று விட்டாள்.
106

உள்ளறைக்குள் சென்று உடுப்புகளைக் களையாது கட்டிலில் தலையணைகள் மீது புரண்டு கொன்டிருந்த செல்வராணி, கமலேஸ்வரன் கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுடன் எழுந்து கட்டிலில் அமர்ந்தான்.
அவன் சொன்னான். "நான் வீட்டை விடுவதாக முடிவு கட்டி விட்டேன். உனக்கு வீடு வாசல் என்று நினைவற்றுப்போன பிறகு இங்கிருந்து என் மானத்தை மேலும் நான் விற்கவிரும்பவில்லை"
"அப்படியானால் பிள்ளைகளை என்ன செய்யப்போற எண்ணம்?” தனது உணர்ச்சிகளைச் சமாளித்தபடி கேட்டாள் செல்வராணி. அவளுடைய உதடுகள் வறண்டு போயிருந்ததால் வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை.
"பிள்ளைகள் உனக்கிருந்தால்தானே. நீ பாரீசில் பிறந்திருக்க வேண்டியவள். தப்பித்தவறித்தமிழ்ச் சட்டம்பியார் சோமலிங்கத்திற்கு மகளாகப் பிறந்து விட்டாய். உனக்குத் தகுதியில்லாத பிள்ளைகளைப்பற்றி இனிக் கதையாதை. எனக்கு அவர்களை வளர்க்கத் தெரியும்."
செல்வராணிக்கு அவன் கூறியது பெரும் ஆறுதலாக இருந்தது. தனது திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்போல இருந்ததால் எழுந்து மறுபடியும் மோகன்ராயினுடைய வீட்டுக்கே போய் விடலாமா என்று எண்ணினாள் செல்வராணி.
ஏதோ மன உளைச்சல்கள் அவளை வாட்டிக்கொண்டு இருந்தன. கமலேஸ்வரன் தனது நடப்புக்களைக் கண்டு பொறுக்காது கையில் அகப்படும் பொருளால் எடுத்துத் தன்மீது வன்மஞ் சாதிப்பான் என்றெல்லாம் செல்வராணிக்கு இருந்த பயம் நீங்கிய களை இப்பொழுது தாண்டவமாடியதால் இப்பொழுது எதுவுஞ் செய்யலாம் என்ற துணிவும் வேறு பிறந்திருந்தது.
அவனுடைய அந்தத் தோழமையை எண்ணிய பொழுது செல்வராணிக்குச் சிரிப்பாகவும் இருந்தது.
அப்பொழுது பரமேஸ்வரியின் வீட்டிலிருந்து அங்கு வந்த ரமணனும் ரஞ்சனியும் கண்களைக் கசக்கிக் கொண்டுபடுக்கச் சென்றனர். உள்ளறைக்குள் செல்வராணி இருந்து அவர்களை வருமாறு அழைத்ததும், ரமணன் சடாரென்று திரும்பி கமலேஸ்வரனிடம் ஒடி வந்தான். ரஞ்சனி கைவிரல்களைப் பின்னி டூ காட்டி விட்டு ரமணனுடன் வந்தாள்.
செல்வராணி அப்பொழுதும் சிரித்தாள். “ரமணன்! நாளைக்கு ஆச்சியிடம் போவம். நீங்கள் இரண்டு பேரும் ஊருக்குப்போய் ஆச்சியுடன் இருக்கிறியளா?” என்று கமலேஸ்வரன் கூறியதும், அவன் அப்படி என்றாவது கூறமாட்டானா என்று ஏங்கியிருந்தவன்போல “ஓம் அப்பா. ஆச்சி. ஆச்சி. நாங்கள் ஊருக்கே போயிடுறோம்" என்று கூறினான் ரமணன்.
ரமணனுடைய அந்தப் பதிலைக் கேட்ட பொழுது கமலேஸ்வரன் கவலைகளை யெல்லாம் கண்கள் வழியாக உருகி வெளியே பாய்வது போன்றிருந்தது. செல்வராணிக்குக் கணவனாக நேர்ந்ததில் அவன் தனக்கு எவ்வித பெருமையும் இல்லையென்று கருதினாலும், அந்த இரு குழந்தைகளுக்கும் தந்தை என்ற மட்டில் அவன் பெருமைப்பட்டான்.
கமலேஸ்வரன் அழுவதைக் கண்டதும் ரஞ்சனி, "அப்பா” என்றபடி அவனருகில் வந்து அவனுடைய கைகளைத் தன் கைகளால் மூடினாள். அப்படி மூடுவதினால் அவனுடைய கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீர் தடைப்பட்டு விடும் என்று அவள் நம்பியிருக்க வேண்டும்.
107

Page 64
4
“உங்களுடைய அற்பத்தனமானதும் திமிரானதுமான கதைகளாலும் நட்புக்களாலும் தாயில்லாமலாகிவிட்ட எனக்குக் கூடப்பிறந்த அண்ணன்மாரும் இல்லாமல் போய்விட்டினம். தந்தை என்ற உறவில்கூடஐயா இங்கு வந்துபோவதில்லை. கொழும்புக்கு வருகிறார். ஒரு நாளாவது என்னை எட்டிப் பார்த்ததில்லை. இந்த லட்சணத்திலே நான் உங்களை நம்பி வாழ்ந்தேன். நான் கண்டது ஏமாற்றந்தான்"
கமலேஸ்வரனின் கண்களிலிருந்து நீர் பொல பொலவென்று விழுந்து கொண்டிருப்பதைக் கண்டதும், வெளியறைக்கு அப்பொழுது வந்திருந்த செல்வராணி, அவனை மேலும் பலவீனப்படுத்த வேண்டுமென்ற வெறியில் கூறினாள்.
அவளுடைய அந்தக் கோலமும் வார்த்தைகளும் யாரையோ அவள் பழிவாங்கத் துடிப்பதுபோல இருந்தன. இடுப்பில் வைத்த கையை அகற்றாது, கமலேஸ்வரன் முன்பாக அவள் வந்து நின்றபொழுது அவளைப் பார்த்த ரமணனும் ரஞ்சனியும் பேந்தப் பேந்த விழித்தனர்.
செல்வராணி கவலைகளை அழுத்த முடியாத தவிப்பில் இளைத்துக் கொண்டு நின்றாள். அவளால் தொடர்ந்து பேச முடியாது என்ற உடல்நிலை அங்கு எழுந்தாலும், தன்னுடைய நடப்புகளுக்குத் தானே காரணமன்று என்பதை அப்பொழுது நிரூபிக்க வேண்டியதோர் அவசியம் அவளுக்கு எழுந்தது.
வார்த்தைகள் விக்கி விக்கி வெளிவர, செல்வராணி கூறியதைச் சிவந்திருந்த விழிகளாலும் கேட்பவன்போல வெறித்தபடியிருந்தான் கமலேஸ்வரன்.
“என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை. பெண் உலகத்திலே தனியாகவும் வாழ முடியாது; யாரோ ஒரு துணை அவசியம். நீங்கள் என்னை வெளியிலே போ என்று பிடரியில் பிடித்துத் தள்ளிவிடாமல் ஆபத்தான மெளனத்தால் என்னைக் குழப்பியடிக்கிறீர்கள். எனக்கு இந்த உலகத்திலே வாழ ஒரு துணை வேண்டும். அதைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு விதத்தில் தேடிக் கொண்டும் விட்டேன்"
"என்ன சொல்கிறாய் நீ?" கமலேஸ்வரன் அவள் எதனைக் குறித்துச் சொல்கிறாள் என்பதைப் புரிந்தும் புரியாதவனாகிக் கேட்டான்.
“உங்களுக்கு விளங்கவில்லையா?”
e y)
“நான் காதலுக்காக ஏங்குகிறேன். என்னை எல்லோருமே பார்த்துச் சிரிக்கிறார்கள். ஒருவராவது நானும் ஒரு பெண்; உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்கள் எல்லாவற்றுக்கும் கட்டுப்பட்டவள் என்று யாருமே கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. அலுவலகத்தில் ஊழியர்களின் அவப் பெயர். வீதிகளில், தெரிந்த தெரியாதவர்களின் கேலியும் கிண்டல்களும். வீட்டிலாவது அன்போடு பேசி ஆதரவோடு நடந்து கொள்ள எனக்கு யாருமில்லை. ஒருவரே துணையாக இருந்தாலே போதும் என்று நம்பி உங்களுக்குக் கழுத்தைக் கொடுத்தேன். நீங்களோ உங்களை நேசித்த என் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்து விட்டிர்கள். அனைத்த இந்தக் கைகள் உங்களால் குறண்டி விட்டன. உங்களுக்காக ஓங்கிக் கிடந்த என் மனம் செத்து விட்டது. நான் என்ன செய்ய?”.
108

மேற்கத்தைய தத்துவ நூல்களில் ஊறியெழுந்த அவள் மொழிகளைக் கமலேஸ்வரனே விளங்கிக் கொள்ள முடியாதவாறு செல்வராணி சொல்லிக் கொண்டிருந்தாள். இரட்டைக் கருத்துக்கள் உள்ள ஆங்கிலப் பதங்களை உபயோகித்த பொழுது கமலேஸ்வரன் பெரிதும் சங்கடப்பட்டான். ஆத்திரம் வரும்பொழுது ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளும் இலங்கையரைப் பார்த்துச் சிரித்த அவனுக்குச் செல்வராணியின் பேச்சைக் கேட்டுச் சிரிக்கத் திராணி எழவில்லை.
அவள் கூறுவதிலும் ஏதோ உண்மையிருக்கிறது என்று மட்டும் அவன் மனச்சாட்சியே ஏற்றுக்கொண்ட போதும் அந்த நியாயமான வேதனைகள்தானா அவளைக் குழப்பியடிக்கின்றன என்ற கேள்வியை எழுப்பி, அதனை ஆராய அவன் முற்படவில்லை.
நேர்மையான வார்த்தைகளை, தனது வேதனைகளை வெளிப்படுத்தினால் அவனால் ஏதும் பரிகாரம் தேட முடியும் என்று மட்டும் அவன் அப்பொழுது சிந்தித்தான்.
என்றோ எப்பொழுதோதன் வாழ்க்கையில் ஏற்பட்ட பயங்கர இடிக்காக, காலங்கள் காலங்களாக மாறுதல்கள் ஏற்பட்டாலும், மறக்காது அந்தப் பேரிடிக்கான தனது பழியை யாரிடமோ வாங்குவதாகப்பட்டது அவனுக்கு. அவனைப்பொறுத்த வரையில்தான் கணவன் என்ற அந்தஸ்திலிருந்து இம்மியும் நழுவவில்லை என்ற எண்ணமே ஓங்கிநின்றது.
செல்வராணி தன் நிலை உணராது நிலத்தில் நின்று நிலத்தையும் பார்க்காது வானத்திலிருந்து மண்ணைப் பார்க்கின்ற தன்மையில் நடந்து கொள்கிறாள் என்று அவன் நினைத்தான்.
வசதி படைத்தவன் வாகனத்தில் ஒய்யாரமாகப் போகிறான் என்பதைக் கண்கள் கண்டுவிட்ட பாவத்துக்காக, அத்தகைய ஒய்யாரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குவதிலும், ஒன்றுமறியாத ஏழை மனதைப் போட்டு வதைப்பதிலும் என்ன இன்பங் காணமுடியும்? வசதியுடன் பிறந்த ஒய்யாரம் வேண்டுபவன் முதலில் வசதிகளைத் தேடிக் கொள்ள வேண்டும். வசதிகளைத் தேடிய பின்னர் ஒய்யாரம் தானாகவே வந்துவிட மாட்டாதா?
செல்வராணி தான் பழகும் உயர்தட்டு மனிதர்களுடைய வாழ்க்கை தனக்குக் கிடைக்கவில்லையே என்பதற்காக ஒரு சமூகத்தையே இரை கொடுத்து அந்த ஒய்யாரத்தைத் தேட முனைகிறாள் என்பதை நினைக்கும் பொழுதுதான் கமலேஸ்வரனுக்குச் சொல்ல முடியாத துயரமாக இருந்தது.
அன்று மாலை அவன் கண்ட காட்சி செல்வராணியின் எண்ணப் போக்கின் அப்பட்டமான வெளிப்பாடு என்று அவன் விளங்கிக் கொண்டான். இன்னொருவனுடைய காரில் ஒய்யாரமாக இருந்து செல்லும் அற்ப பொழுதை விடக் கேவலமானது ஒரு பெண்ணுக்கு வேறு இல்லை என்றும் அவன் நினைத்தான். பஸ் என்ற பொதுவாகணம் போதியளவு சேவையில் இருக்கையில் அதனைப் பயன்படுத்தாது கார் என்ற செளகரியத்தக்கு ஒருத்தி தன்னை அடிமையாக்குவதை விடச் சிறுமையும் ஒன்றில்லை,
நடப்பதற்கே கால்கள் இன்றித் தவிக்கும் மனிதர்களைப் பார்க்கும்பொழுது எமக்குக் கால்கள் கிடைத்தனவே என்று கடவுளுக்கு நன்றியாக இருக்க வேண்டும். நடந்து நடந்து பிரயாணஞ் செய்பவர்களைக் கண்டால் பஸ்ஸில் போவதற்கு எமக்குப் பணம் கிடைத்ததே என்று பூரிப்பெய்த வேண்டும். எமக்குக் கிடைத்த அந்த சொற்ப தொகையைப் பெரிதாக எண்ண வேண்டும். அதற்குப் பதிலாக, பளபளக்கும் புதுப் புதுக் கார்களில் பவனி வருபவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு, எம்மைத் தாழ்த்தி நோக்கி, ஏக்கப் பெருமூச்சு விடுவதில் எவ்வித அர்த்தமுமில்லை.
109

Page 65
கமலேஸ்வரன் தன் வாழ்வின் வேகத்தை எண்ணி ஒருமுறை மகிழ்ந்தான். தன்னை இனங்கண்டு கொள்ள முடியாதவளாகச் செல்வராணி இருக்கின்றாளே என்பதை நினைக்க வேதனையாக இருந்தபொழுதும், அவளுக்காகவும் ஒரு கணம் அனுதாபப்பட்ட கமலேஸ்வரன் அவளை ஒருமுறை பார்த்தான்.
"நான் என்ன செய்ய என்று நீ என்னைக் கேட்காதே. ஏனென்றால் நான் சொல்பவற்றையே நீ செய்தவள் என்ற அர்த்தம் இங்கு தோன்றும். நான் கனவிலும் நினைக்காத கேட்காத கதைகள் உன்னால் நடந்து கொண்டிருக்கின்றன. என் வரையில் நான் சொல்லக் கூடியது இதுதான். எங்களுக்குள் இருந்த கல்யாண ஒப்பந்தம் இந்த நாட்களில் முடிந்து விட்டது. வியாபாரத்துக்கு எழுதப்படும் ஒப்பந்தமாவது உரிய காலம் வந்ததும் புதுப்பித்துக் கொள்ளலாம். கல்யாண ஒப்பந்தம் அப்படியில்லை செல்வராணி அது ஒன்றே ஒன்றுதான் இந்த உலகத்தில் சாவினாலும் பிரிக்க முடியாதது. வியாபாரி ஒருவன் இறந்துவிட்டால் அல்லது உயிரோடு இருந்து தனது பங்கைத் தன் வாரிசுக்குக் கொடுக்கலாம். ஆனால் எனது பங்கான உன்னை நான் யாரிடம் கொடுப்பது? என்னிடமிருந்து உன்னை நீ பிரிக்கத் தீர்மானித்து, அதன்படி நடக்க ஆரம்பித்து பின்பு, நான்தான் என்ன செய்யமுடியும்? உன்னை அடித்துவருத்தி வேண்டுமானால் வேலைகளைச் செய்விக்க முடியும். ஆனால். என்னைக் காதலிக்கச் செய்ய முடியாது.”
"காதல். உக்ம் எவ்வளவு புனிதமான வார்த்தை. நல்லவேளை நீ கன்னியாக இருந்தபொழுது நான் உன்னைக் கண்டு நாமிருவரும் காதல் கொண்டு திரியவில்லை. அல்லாவிடில் காதலின் மகிமையும் கெட்டிருக்கும். காதல் இருக்கிறதே, அது மிகப் புனிதமானது. தெய்வீகமானது. மென்மையானது. பலவந்தத்தால் எதனையும் பெறலாம். ஆனால் காதலைப் பெற முடியாது. இந்த விதத்தில் நான் உன்னிடம் தோற்றுவிட்டேன்.
5
"நீங்கள் எதில்தான் வென்றிருக்கிறீர்கள்?"
செல்வராணி சற்றுக் கடுகடுப்புடன் கேட்டுவிட்டு, அப்படிக் கேட்பதற்கு தனக்கு வந்திருந்த அதீத துணிச்சலையும் ஒரு கணம் எண்ணி வியந்தாள்.
பெண்ணுக்குத் தன்னையும் தன் கற்பு, பெயர் முதலிய அத்தியாவசிய சமூக வாழ்க்கை அம்சங்களையும் காத்துக் கொள்வதற்கு மட்டுந்தான் துணிச்சல் வேண்டும், தைரியம் வேண்டும். தன்மீது எதிர்பாராத விதமாக வந்து விழுந்த பழிகளையும் ஒறுத்து அடிக்க அவள் துணியலாம். அந்தத் துணிவு ஆண்மையின் பிறப்பாக ஆகிவிட்டாலும், ஒரளவு மன்னிக்கத் தக்கது. ஆனால் ஓர் ஆணை, அதுவும் தன் கணவனை எதிர்த்துப் பேசுமளவுக்கும் தனது வார்த்தைகளால் அவன் அணுவணுவாகச் சாகும் அளவுக்கும் அவளுக்குத் துணிச்சல் ஏற்படத்தான் வேண்டுமா?
கமலேஸ்வரன் அவளை ஆக்ரோஷமாக விறைத்தான். அவளுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவ்வார்த்தைகளின் கொடுமைக்கும், கடுமைக்கும் தண்டனையாக ஒவ்வோரடி சவுக்கால் அடிக்க வேண்டும் போல இருந்தாலும் ஏதோ உணர்வு அவனது கைகளை எழாமல் தடுத்துக் கொண்டிருந்தன.
அவன் சொன்னான்.
110

"நான் எதில் வென்றிருக்கிறேன் என்று கேட்க உனக்கு வெட்கமாக இல்லையா? கல்யாணம் முடிக்குமுன் நான் எதிலாவது, ஆமாம். என் இலட்சியத்தில், என் வாழ்க்கை முறையில், என் நடப்புக்களில். பேச்சுக்களில் எதிலாவது தோற்றிருந்தால் நீ சொல்லு. ஆனால் கல்யாணம் ஆன பின்னர் நான் தோற்றிருந்தால் அந்தத் தோல்வியில் அல்லது வென்றிருந்தால் அந்த வெற்றியில் உனக்கும் பங்குண்டு. அந்தப் பங்கும் சாதாரண பங்கல்ல. சமமான பங்கு. என்னுன்டய நிலை இதுதான் என்று தெரிந்த பின்னர் நீ அதற்கேற்ப மாறியிருக்க வேண்டும். பிள்ளைக்குப்பால் மாவுக்குப்பணமில்லையென்றிருக்க நீலிப்ஸ்டிக் கியூடெக்ஸ்ஸுக்கு காசை இறைக்கிறது சரி என்று நினைக்கிறாயா?” “உங்களுடைய சிகரட் குடியில் நூறு குடும்பம் நடத்தலாமே.” “நியாயமான கருத்துத்தான் செல்வராணி. ஆனால். நூறு குடும்பம் நடத்தலாமென்று நினைக்கிறாயா?”
அவன் தன் வார்த்தைகளாலே தன்னை அடிக்கிறான் என்பதை உணர்ந்ததும் அவளுக்கு உடனே அவனைக் கலங்க வைக்க வேண்டுமென்ற வைராக்கியமும் எழுந்தது. அதற்காக அவள் மனம் அலைந்த பொழுது இடையில் எழுந்த மெளனத்தைக் கலைத்துக் கொண்டு சொன்னான் கமலேஸ்வரன்.
“நீ ஊர் உலகம் சொல்கிறது எல்லாம் பொய் பொய் என்று உன் வாயால் மெழுகிக்கொண்டு திரிகிறாய். ஊர் என்ன பேசுகிறது என்பதை உனக்குச் சொல்ல என்னால் முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நிஐந்தரை மணிக்கு வெள்ளவத்தைச் சந்தியில் ராயினுடைய காரில் போனதைப் பார்த்தேன். என் இரத்தம் கொதித்தது. என்ன செய்வது? பேசாமல் திரும்பிவிட்டேன். அப்படி ஐந்தரை மணிக்கு இங்கே வந்த நீவீட்டுக்குவர எட்டரை மணியாகிறது. இவ்வளவு தூரத்தையும் உருண்டு உருண்டு வந்தாலும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்து விடலாம். அப்படியில்லை! நீ அவனோடு எங்கோ சுற்றப் போய்விட்டு இங்கே வருகிறாய். அதுதான் நான் சொல்லுகிறேன். கல்யாண காலத்திலே கார்க்கார மாப்பிள்ளையாகப் பார்த்துக் கட்டியிருக்க வேண்டும். அல்லது குடியும் கூத்தும் பின்னர் கூத்தியும் என்று திரிபவனைப் பார்த்துப் பிடித்திருக்க வேண்டும். இவற்றுக்கு நான் தகுதியற்றவன். எனக்கு உன்னைத் தவிர வேறு பெண்ணைத் தெரியாது. ஆனால் உனக்கு.”
என்றுமே இப்படி அவளுடைய சொந்தமானதும் மிக மிக இரகசியமானதுமான அந்த வாழ்வு பற்றிப் பேசாத கமலேஸ்வரன், அவளது நடப்புகளை அப்படியே ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டிப்பேசத் தொடங்கியதும் செல்வராணி ஒன்றும் பேசாது தலையைக் கவிழ்ந்து நின்றாள்.
கமலேஸ்வரன் கூறியவற்றைக் கேட்டதும் கால்கள் நடுங்கியதால் அவளால் நிற்க முடியவில்லை. முன்னறையின் கதவைத் தாழிட்டபடி வந்து அவனுக்கு எதிராகச் சுவரோடு சாய்ந்து மண்டியிட்டு இருந்தாள் செல்வராணி.
"உனக்கு அவன் மீது அளவிலாத அன்பு பிறந்து விட்டது. அலுவலகத்திலும் வேலையை விட்டு அன்பு செய்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டும் இதுவரை பொறுமையாக இருந்தேன். இனி என்னால் முடியாமல் போய்விட்டது. உன்னை நான் நேசித்தேன் என்ற குற்றத்திற்காக இதைவிடக் கொடிய தண்டனை வேறு எதனையும் நீ தந்திருக்கலாம். உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் என்மீது அன்பு வைப்பது தகுதியற்றதாக இருந்தால். நான் சுமையாக இருந்தால் தடையாக இருந்தால். என்னை
111

Page 66
நஞ்சூட்டியென்றாலும் கொன்றுவிடு. உலகத்திலே எந்த ஒரு கணவனும் தனது மனைவியை இன்னொருவனுக்குத் தத்தஞ் செய்து கொடுக்க மாட்டான். அப்படிப்பட்டவன் ஆண் வார்க்கத்துக்கே ஒர் அவமானச் சின்னம். அப்படி ஒரு அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை"
"என்னென்னவெல்லாம் பேசுகிறீர்கள்?’ செல்வராணி குழைந்து கேட்டாள். வேளைக்கொரு தடவை அவள் உடை மாற்றுவது போன்று அடிக்கொரு தடவை குணம் மாறுகிறாள் என்று அவன் நினைத்தபொழுது உள்ளூர வேதனையாக இருந்தது.
"உனக்கு இங்கிருக்கப் பிடிக்காவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய் ஆனால் என்னுடைய மனைவி என்ற அந்தஸ்த்தில் மட்டும் உனது வேட்டைகளை நடத்தாதே. அவ்வளவுதான்"
கமலேஸ்வரன் தன்னைப் போகச் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட செல்வராணி உள்ளறைக்குட் செல்வதற்காக எழுந்தாள். சிகரட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு கண்களை மூடினான் கமலேஸ்வரன்.
இவர்களுடைய கதைகளைக் கேட்க விரும்பாது எப்போதோ உள்ளே சென்று தூங்கிவிட்ட ரமணனும் ரஞ்சனியும் விட்ட சுவாசம் அங்கு பலமாகக் கேட்டது. அதனைத் தொடர்ந்து செல்வராணி அழுவது போன்றும், அழுது அழுது அரற்றுவது போன்றும் ஒலிகள் அங்கு எழுந்து, எழுந்து மறைந்து கொண்டிருந்தன.
கமலேஸ்வரன் வேலையற்றிருந்த இந்த ஒரு மாத காலமாக மனம் ஏவும்பொழுது வரைந்திருந்த வண்ண வண்ண ஒவியங்களைப் புரட்டிப் பார்த்தான். அவனது எண்ணப்படி கலைக்காகவே வாழும் ஒருவன், அவன் நம்பியிருக்கும் அந்தக் கலையின் பல வெளிப்பாடுகளைச் சித்திரங்களாகத் தீட்டி அவற்றை வாங்கக் கூடியவர்களிடம் கொண்டு சென்று விற்றால் என்ன என்றும் எண்ணினான். அப்படியொருநாள் தன் வாழ்க்கையில் வந்தால் இதர கலைஞர்களையும் அவன் தாழ்த்தி மதிப்பிடச் செய்து விடுவான் போலவும்பட்டது.
கலையும் வறுமையும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்து, ஒன்றையொன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் இருந்தும் விட்டால் கலைஞன் என்னதான் செய்ய முடியும்? சிந்தனையில் அரிப்பு ஏற்பட்ட பொழுது சித்திரங்கள் பிறக்கும். ஆனால் வயிற்றில் குடைவு ஏற்படும்பொழுது அதனையும் தீர்க்கத்தானே வேண்டும்.
செல்வராணியின் சம்பளம் வீட்டு வாடகை, குடும்பச் செலவு என்றெல்லாம் கரைந்து விடும். அவனுடைய சம்பளமும் இருந்த காலங்களில் அவனால் அதிகம் புகைக்கவும் முடிந்தது. அதற்கு இதற்கு என்று பணத்தைச் செலவிடவும் முடிந்தது. கையில் எஞ்சியிருந்த சில ரூபாக்களுக்கு அளவளவான தூரிகைகளையும் வர்ணங்களையும் தாள்களையும் வாங்கியிருந்தான். அவ்வளவும்தான் இப்பொழுது அவனுடைய உடைமைகள் அவை கொடுக்கப்போவது எதுவாக இருந்தாலும் அதுதான் அவனுடைய வாழ்க்கையும் ஆகப் போகிறது.
இந்த நிலையில் அடுத்தது என்ன என்றும் கமலேஸ்வரன் கேள்வி எழுப்பினான். தன்னிடம் கைவசமிருக்கும் அந்த ஒவியத் தாள்களைப் புத்தகசாலைகளுக்கு எடுத்துச் சென்று விலைக்கு வாங்குமாறு கேட்கலாம் என்றும் அவன் தீர்மானித்திருந்தான்.
மற்றொரு புனிதமான வேலை கிடைக்கும்வரை இப்படியே காலத்தை ஒட்டுவது என்றும் அவன் முடிவு எடுத்தான்.
12

இதற்கிடையில் தாயார் தங்கம்மாவையும் பிள்ளைகளையும் யாழ்ப்பாணத்துக்கே அனுப்புவதாகவும் அவன் எண்ணினான். அதன் பின்னர் செல்வராணியின் நடப்புகளைப் பொறுத்து அவளுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கலாம் என்று அமைதி கண்டான் கமலேஸ்வரன்.
நேரத்துக்கு உணவும் ஆன சமையலும் இன்றி வாடும், அவனுடைய பெயரைச் சொல்லி வாழப்போகும் அந்த இரண்டு குழந்தைகளையும் நினைக்க கமலேஸ்வரனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. எஞ்சிய சோற்றை இட்லியாகவும் வடையாகவும் அவலாகவும் ஆக்கும் கைவன்மைமிக்க கொழும்புச் சோற்றுக் கடைகளை நம்பி அந்தக் குழந்தைகளை வாழவிட அவன் அஞ்சினான். கடை உணவுகளைத் தொடர்ந்து உண்டு வந்தால் ரமணன் பத்து வயதைத் தாண்டுவதற்குள் அவனுக்கு அப்பென்டிசைடிஸ் வந்துவிடும் என்றும் அவன் நினைத்தான்.
கொந்தளிக்கும் நினைவுக் கடலிலிருந்து நீந்திக் கரையேற முடியாமலே சற்று உறங்கி விட்டான் கமலேஸ்வரன். கையில் புகைந்து கொண்டிருந்த சிகரட் அடிவரை எரிந்து அவனுடைய இரு விரல்களையும் சுட்ட பொழுது திடுக்கிட்டு எழுந்து, அந்த அறையில் மடும் வெளிச்சம் இன்னமும் இருப்பதைக் கண்டு விழித்தான்.
மடியில் உறங்கிக் கொண்டிருந்த அவனது கலைச்செல்வங்களை ஒவ்வொன்றாக எடுத்து மறுபடியும் பார்த்தான் கமலேஸ்வரன்.
அந்த ஒவியங்களை விழிகள் தரிசித்துக் கொண்டிருந்த வேளை இதயநாதம் கவி உணர்வுடன் ஒலிப்பது போன்றிருந்தது.
பூத்து மணத்துக் குலுங்கும் வண்ணக்காவின் மத்தியிலே சேர்த்து அணைத்துக் கிடக்கும் இரு சின்னஞ்சிறு சிட்டுகள்.
வட்ட நிலவினைத் தொட்டிடும் ஆசையின் வாஞ்வை மிகக் கொண்டு பொட்டிட்ட நெற்றியும் புன்னகை முகமுமாக தத்து நடையிடும் ஒரு குழந்தை. பாலமுருகன் போன்ற பச்சிளம் அழகு. சோலைகளின் நடுவே தோன்றும் ஒரு காட்சி. பட்ட மரத்தின் கிளைகள், பரந்து நிற்கும் வானம். உயர உயரப் பறக்கும் பறவைகள். அந்த மரத்தின் கிளைகளில் ஒன்றில் வழிதெரியாமல் வந்து குந்தியிருந்து கூவும் ஒரு குயில். அக்குயில் கழுத்தை வளைத்து கீழ்நோக்கிக் கூவும் காட்சியில். பட்டமரத்தைச் சுற்றி ஆறு பாய்வது போன்ற ஒரு தோற்றம்.
--- எம்பி எழுந்து மடியும் கடல் அலைகளில் துணிவுடன் செல்லும் ஒரு சிறு தோணி நின்ற கரையும் சேரும் கரையும் தெரியாததொரு போக்கு. வானங் கறுத்து மழை முகில்கள் திரண்டிருக்கின்றன. அந்த ஒடத்தில் ஒரு கம்பும் கையுமாக ஒரு செம்படவன். பாய் மரத்தின் உச்சியில் ஒரு காகம். புயலடித்து உலகத்தையே ஆக்கிரமிக்கப் போவதுபோன்ற அந்த இயற்கைக் கோலத்தில் நினைவுகளாலும், இறக்கைகளாலும் பறக்கும் அந்த இரு உயிர்கள்.
கமலேஸ்வரன் ஒவ்வொரு ஓவியத்தையும் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் ஒரு செம்படவனாக இருந்து தான் பிடித்த மீன்களைக் கொண்டு சென்று விற்கவேண்டுமென்றால் அவனுக்கு ஒரு மீன் சந்தையிருக்கும். வீதிகளில் கொண்டு சென்று அவற்றை விற்க வேண்டுமென்றாலும் வீதிக்கு ஒரு பெண்ணாவது அந்த மீன்களை வாங்கி விடுவாள். அவன் ஒரு கமக்காரனாக இருந்தாலும் அவன் உற்பத்தியாக்கும் உணவுப் பொருள்களை அவ்வாறேனும் விற்க முடியும். இப்பொழுது அவனது மடியில் பிறந்த கோலங்களுடன் கிடக்கும் அந்தச் சித்திரங்கள்.
113

Page 67
தணல் ஆறு
சாத்திரம் பேசும் தமிழன், குலம், கோத்திரம் ஆகியன பேசுவதிலும் குறைந்தவன் அல்லன் என்பதை நூற்றாண்டு நூற்றாண்டுகளாக நிரூபித்து வந்ததைப் பொய்யென ஆக்குவது போன்று பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்களின் வாழ்க்கை முறையினைச் சித்திரிக்கும் ஓவியக் கண்காட்சி போயா தினத்தன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தமிழ் நாட்டிலிருந்தும் ஒவியங்கள் பல தடைகளையும் தாண்டி வந்து கொழும்பில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியில் தமது பங்கைச் செலுத்தியிருந்தன. அந்த ஒவியங்கள் தமிழர்களுடைய வாழ்க்கையைச் சித்தரிக்கின்றவா? அன்றி ஏதாவது அரசியல் சூழ்ச்சிகளைச் சித்திரங்கள் மூலமாக விளக்குகின்றனவா என்று ஆய்வுக் கண்ணாடி மூலம் பார்த்து, தெளிந்த பின்னரே அவை அனுமதிக்கப்பட்டிருந்தன. சித்திரங்களில் காணப்பட்ட மனித உருவங்களுள் ஆண்கள் மீசை வைத்தவர்களாகவும், பெண்கள் காஞ்சிபுரப் பட்டுச்சேலையும், பூவும் பொட்டும் அணிந்தவர்களாகவும் காணப்பட்டதால் அவர்கள் அசல் தமிழர்கள் என்று தமிழர்கள் அல்லாதார் தெரிந்து கொண்ட நிம்மதியான சேதியும் கண்காட்சியின்போது தெரிய வந்தது.
கிழக்கு மாகாணத்திலும், மலைநாட்டிலுமிருந்து வந்திருந்த சித்திரங்கள் ஒன்றுபட்டு ஓங்கும் தமிழினத்தின் புகழை விளக்குவனவாக இருந்தன யாழ்ப்பாணத்திலிருந்து வந்த சித்திரங்கள் மட்டும் விசித்திரங்களாகப் பரிணமித்தன. அது கமலேஸ்வரனுக்கு வியப்பாக இருந்தாலும், இந்தக் கொடுமை என்றுதான் எம்மைவிட்டு நீங்கப் போகின்றதோ என்று பொருமினான், அவன்.
அந்த யாழ்ப்பாண ஒவியங்களிற் கோயிற் காட்சிகளும், கள்ளுக் கொட்டிற் காட்சிகளும் நிறைந்திருந்தன. அவற்றைப் பார்க்கும் ஒரு வெளிநாட்டான் யாழ்ப்பாணத்தில் கோயில்களும் கள்ளுக் கொட்டில்களும் மட்டுந்தானா இருக்கின்றன என்று கேட்குமளவுக்கு அவை தொகையில் பெருகியிருந்தன.
"ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே" என்று அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரமும் அவனுடைய நினைவில் பக்தியுடன் எழுந்து மறைந்தது. சமய குரவர்களுக்கே கடவுளராக இருந்த மக்கள் சிலரை உள்ளே செல்ல விடாது முட்கம்பிகளும் பிரம்ம இராட்சதர் போன்ற காடையர்களும் வழிமறித்து நிற்கும் காட்சி ஓர் ஒவியத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தது. மற்றொன்றில் கள்ளுப் பிளாவை இரு கைகளாலும் இருந்தபடி ஏந்திக் குடிக்கும் ஒரு வேளாளனைச் சித்திரிக்க அதே வேளாளன் பின்னர் அந்தக் கள்ளுக் கொடுத்தவனைப் பார்த்து ஆட்காட்டி விரலை நீட்டி ஏதோ வைவது போன்றும் இருந்தது.
தண்ணிர்க் குடத்துடன் சென்று கிணற்றில் நீர் மொண்டு திரும்பிய ஒரு பெண்ணை ஏழு முரடர்கள் தாக்குவது போலவும், குடம் சரிந்து கிடக்க நீர் பாய்வது போலவும் குடநீருடன் போட்டி போட்டு கண்ணிர் பாய்வது போலவும், அவை இரண்டையும் முந்திக் கொண்டு அவளுடலிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்வது போலவும் ஒரு காட்சி,
114
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"கேவலம் ஒரு பெண்ணை அடிக்க இத்தனை முரடர்களா யாழ்ப்பாணத்துக்குத் தேவைப்படுகிறது? ஒரு குரல் எழுந்ததும் அதன்வழி விழி திருப்பிய கமலேஸ்வரன் அங்கு ஹில்ஸ்வேர்த் நிற்பதைக் கண்டான்.
அவரிடமிருந்து ஒதுங்கலாமா என்று அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஹில்ஸ்வேர்த்தே “குட் ஈவினிங் மிஸ்டர் கமலேஸ்வரன்” என்றபடி அவன் பக்கமாக வந்து கைகுலுக்கிக் கொண்டார்.
"பை தவே." என்று இழுத்த ஹில்ஸ்வேர்த்,நீங்கள் மொடலையே ஆபாசம் என்று அஞ்சி ஒடுகிறீர்கள். இங்கே பாருங்கள் உங்கள் யாழ்ப்பாணத்தில் டொப்லெஸ் மேலைல மூடாத சேலை அணிந்துள்ளார்கள். சட்டை இல்லாமலே அணிந்துள்ளார்களே, இவ்வளவுக்கும் நீங்கள் லண்டனையும் பாரீசையும் நியூயோர்க்கையும் பின்னடையச் செய்து விட்டீர்களே. அந்த நகரங்களில்கூட ஓரளவுதான் வெளிப்படுத்துவார்கள்.”
ஹில்ஸ்வேர்த் சொல்லிக் கொண்டே சிரித்தார். கமலேஸ்வரனைக் கண்டு வேலையற்றிருக்கும் அவனுடைய வாழ்க்கையின் சேமங்களைக் கிண்டிக் கிளறிக் கேட்காது பொதுவான சமூகப் பிரச்சினைகள் பற்றி உரையாடலாம் என்று நினைத்த ஹில்ஸ்வேர்த் நகைச் சுவையாகவும் மிகவும் தாராளமாகவும் உரையாடினார்.
"இல்லை இல்லை" கமலேஸ்வரன் சொன்னான். பின்னர் தொடர்ந்தான். "எங்களுடைய யாழ்ப்பாணத்தில் துரதிஷ்டவசமாக ஒரு சில சமூகங்களிலே பிறக்க நேரிட்டுவிட்ட பெண்களுக்கு பண்பாடு பேசும் எங்கள் இனம் கொடுத்த தண்டனை இது இத்தகைய பெண்கள் தங்கள் மேற்புறங்களை மூடிச் சட்டை அணிய முடியாது. சேலை அணியலாம் என்று அனுமதித்த அந்த முதலாவது அடக்குமுறையாளனுக்கு நாங்கள் நன்றியாக இருக்க வேண்டும். நல்லவேளை அதுவும் கூடாது என்று யாரும் கட்டுப்பாடு விதிக்கவில்லை."
சோகமான ஒரு கதையைச் சொல்லத் தொடங்குகையில் கமலேஸ்வரனுக்குத் தொண்டையை அடைப்பது போன்றிருந்தாலும், ஹில்ஸ்வேர்த்துக்காக நகைச் சுவையுடனேயே கூறினான்.
“நான் நினைத்தேன், யாழ்ப்பாணத்தின் வெய்யிற் கொடுமையையும் புழுக்கத்தையும் தாங்க முடியாது உங்கள் பெண்கள் இப்படி அணிகிறார்கள் என்று."
"இந்தக் கொடுமையையாவது சகித்துக் கொள்ளலாம். இதைவிடக் கேடுகெட்ட பல விஷயங்கள். சொன்னால் நாக்கு வெந்துவிடும் என்று பயமாக இருக்கிறது. இவ்வளவுக்கும் நாங்கள்தான் உலகத்திலேயே முதன்முதல், ஆமாம் ஆதாம் ஏவாள்கூட தமிழர்கள்தானே. ஏன் உலகத்தில் முதல் முதல் தோன்றிய குரங்கும் தமிழ்க் குரங்குதானே. இது மட்டுமல்ல ரோமாபுரியுடனும் எகிப்துடனும் இன்னுமின்னும் பல நாடுகளுடனும் கலாசாரத் தொடர்புகளும் வணிகத் தொடர்புகளும் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அந்தப் பெருமை இருக்கிறது. போதாதா?”
கமலேஸ்வரன் ஏதோ அர்த்த புஷ்டியுடன் கூறுகிறான் என்பதை இலங்கை வாசம் அளித்த அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்ட ஹில்ஸ்வேர்த்பலமாகச் சிரித்துவிட்டுக் கூறினார். "மிஸ்டர் கமலேஸ்வரன்! உங்களை இங்கு இன்று காண்பேன் என்று எதிர்பார்த்துத்தான் நான் இங்கு வந்தேன். வரும் பொழுது என் மனைவியையும் அழைத்து வந்தேன். அவளும் ஆத்மாவைக் கொஞ்சம் கேள்வியால் புரிந்து கொண்டதனால் உங்களைப் பார்க்க வேண்டுமென்று ஒருமுறை சொன்னாள். இப்பொழுது அவளுக்கும் ஒரு சந்தர்ப்பம்" என்றபடி "டியர்" என்று அழைத்தார் ஹில்ஸ்வேர்த்.
15

Page 68
யாழ்ப்பாணத் தமிழர்களின் வாழ்க்கையை அணுவணுவாக இரசித்துத் தன்னுள் நகைத்து, சித்திரங்களில் அழுது கொண்டிருப்பவர்களுக்காக அனுதாபப்பட்டுக் கொண்டிருந்த அவள் அங்கு வந்தாள்.
ஹில்ஸ்வேர்த் இருவரையும் அறிமுகஞ் செய்து வைத்தபொழுது சாதாரண மனித உயரமுடைய இவருள் இப்படியொரு உயர்ந்த ஆத்மா குடிகொண்டிருக்கிறதா?” என்ற வியப்பு கண்களில் மிளிர கமலேஸ்வரனைக் கையெடுத்து வணங்கினாள் அந்த ஆங்கில மாது அவளுடைய செயலைத் தெய்வீகமாகப் போற்றிய கமலேஸ்வரன் பதிலுக்கு வணங்கிவிட்டு, அற்புதமான அந்தத் தம்பதிகள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான்.
அந்தப் பார்வையில் அவன் உள்ளம் மகிழ்ந்திருந்தது தெரிந்தது. "மிஸ்டர் கமலேஸ்வரன். எங்களுடைய நாட்டைப்பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். சூரியன் மறையாத நாடு என்று இரவு பகலற்ற எங்கள் உழைப்புக்காகப் பெயர் பெற்றிருக்கிறது என்னவோ உண்மை. ஆனால் எங்கும் ஏதோ பேதம் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பேதம் 17ஆம் நூற்றாண்டுடன் போய்விட்டது. மனிதர்கள் அடிமைகளாக விற்கப்பட்டதும், கைகள் கால்களில் சங்கிலி மாட்டிய பின்னர், நாணயக் கயிறு பூட்டப்பட்ட எருதுகளிடமிருந்து வேலை வாங்குவதுபோல் தொழில் செய்வித்ததும் மேல் நாடுகளில்தான். ஆனால் கொடுமைகள் அன்று மேல் நாடுகளில் இருந்தன, இன்று அடியோடு மறைக்கப்பட்டு விட்டன. இதற்கு மனிதப் புரட்சிதான் முக்கிய காரணம். இந்த இருபதாம் நூற்றாண்டில். ஒஇன்னமும் முப்பதாண்டுகள் தாண்டிவிட்டால் மற்றொரு நூற்றாண்டே வந்து விடும். இந்தப் புதுயுகத்தில் உங்கள் மக்கள் மத்தியில் இப்படியொரு பேதமா? வெள்ளையன் கறுப்பன் பேதத்துக்கு நியாயமான அரசியற் காரணம் இருக்கிறது. உங்களுடைய இந்தப் பேதத்துக்கு எந்தவித காரணமுமில்லை. முன்பு இருந்திருக்கக்கூடிய பொருளியற் காரணம் இப்பொழுது இல்லை. இப்பொழுது யாழ்ப்பாணத்தில் எல்லோருமே ஓரளவு படித்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். இலங்கையிலேயே அதிகம் படித்தவர்களும் அங்குதான் பிறந்தார்களாம். சே படித்த மனிதர்கள் பண்பாட்டை மறந்து விட்டார்களா?”
ஹில்ஸ்வேர்த் கூறிக்கொண்டே ஒவ்வோர் ஓவியமாகப் பார்த்து முடித்தார். கமலேஸ்வரன் அவருடைய ஞானத்துக்கு விளக்கங் கொடுப்பது அவசியமாகப் படாததால், அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றதும், விழுந்த கல்லுக்காக வழிவிட்டிருந்த நீர்ப்பாசி, கல் ஆழத்துக்குச் சென்றதும், கல் விழுந்த வழியைத் தானாகவே மூடிக் கொள்வது போன்று ஹில்ஸ்வேர்த் தம்பதிகளுடன் சற்று உரையாடிய அமைதி நீங்க, மறுபடியும் கவலைகள் அவனைச் சூழ்ந்து கொண்டன.
கமலேஸ்வரனுக்கு இப்பொழுது புதிய பிரச்சினை. தன்னூரவர்களின் நிலையை எண்ணியும் அவன் கவலைப்பட்டான். எங்கள் பெருமைகளைச் சொல்வதற்கு முன்னோர்கள் இருந்தார்கள். ஆனால் வரப்போகும் யுகத்தின் தமிழர்களுக்கு அவர்கள் சொல்லிப் பெருமைப்படத் தக்கதாக நாம் என்ன செய்து வருகிறோம் என்ற கேள்வியும் அவனுள் எழுந்தது. இரவற் குரலுக்கு அழகாக வாயசைக்கும் நிலையில், மேல்நாட்டார் உற்பத்தியாக்கும் எல்லாப் பொருள்களையும் நாமே உருவாக்கி விட்டோம் என்ற மகிழ்வில் அனுபவிக்கிறோம். எங்களுக்கு என்று மொழிமட்டும் இருக்கிறது. அது தவிர இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்று நினைக்கும்பொழுது அழவேண்டும்போலவும் அவனுக்கு இருந்தது.
116

"ஓ! நீங்களா?”
எங்கோ எப்பொழுதோதன் இதயத்தின் அடிக்கோடிவரை பரந்து, இனிமையாகவும் இதமாகவும் நாளுக்கு நாள் ஒலித்து இப்பொழுது சொற்ப நாட்களாக அந்த ஒலிப்பின்
ரப்பின்றி மறைந்து கேட்ட அதே குரல்.
“சித்திரா. என்று மனம் பொங்கி அழைத்தது. மனத்துக்கு வாயிருந்தால் அவனுடைய அந்த அழைப்பு அவளுக்கு இதுவரை கேட்டிருக்கும் அல்லவா?
கமலேஸ்வரன் திறந்த இதழ்களை மூடாமல் பரந்த தனது விழிகளை இமைக்காமல் நடந்து கொண்டிருந்த கால்களை நிறுத்தி திரும்பிப் பார்த்தான்.
சித்.தி.ரா
அவனுடைய அதரங்கள் துடித்தன. அவளைக் காணும் பொழுது அவனுக்கு ஏற்படுகின்ற ஆனந்தம் போன்று அவளுக்கும் இருந்ததால், அவர்களிடையே கிடந்த சொற்ப நூரத்தை ஒடியபடி கடந்த சித்திரா, அவனருகில் சற்று நெருங்கிவந்து இளைத்தபடி கேட்டாள்.
"ஐயோ இதென்ன கோலம்?"
சித்திராவின் கேள்விக்குப் பின்னர்தான் தன் முகத்தில் நாட்கணக்காக வளர்ந்திருந்த தாடியையும் , நீர்பட்டு ஸ்திரிக்கை பட்டு வெகு நாட்களாகி விட்ட ஷேர்ட்டையும் களிசானையும் நினைத்துப் பார்த்தான் கமலேஸ்வரன். அவனுடைய உடல் போதியதும் வேளைக்கு ஆனதுமான உணவின்றிப் பலவீனப்பட்டிருந்ததும் அவன் உணர்வில் தெரிந்தது.
சித்திரா கண்களை ஆயிரந் தடவைகளாக இமைத்து எரிந்து கொண்டு அவற்றின் வழியே உருகிவந்த இதயத்தைத் தடுத்துக் கொண்டாள். அசைந்தால் மற்றொருவருடன் முட்டும் அளவுக்கு நிறைந்திருந்த சனத்திரளில் தன் உணர்ச்சிகளை அடக்கமுடியாத பேதமையால் அவப்பெயர் வந்து சேருமோ என்ற அச்சமும் அவளுள் ாழுந்தது.
“சித்திரா. நீங்கள் என்னைப்பார்க்காமலே இவ்வளவு நாட்கள் இருந்ததுபோல் இன்றும் எங்காவது ஒதுங்கியிருக்கலாம். நான் ஒரு துன்பக் கேணி, தனக்குத்தானே பகையாகிவிட்ட ஒருவனைப் பார்த்தால் இதயமுள்ள எந்தப் பெண்ணும் அழத்தான் செய்வாள். நீங்களோ என்மீது அன்புவேறு கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்க்கை பற்றியே நீங்கள் கேட்காமலிருப்பது நல்லது" என்றபடி சடாரென்று நடந்து வெளியேறினான் கமலேஸ்வரன்.
“நில்லுங்கள்!” என்று சித்திரா தீனக் குரலில் அழைத்தது அவனுடைய செவிப்பறைகளில் ஒலித்தது. கமலேஸ்வரன் நடந்து வீதிக்கு வந்தான்.
“ஒன்று சொல்கிறேன். இந்த சின்ன இடைவெளிக்குள் உங்களை நான் பலதடவைகள் பார்த்து விட்டேன். உங்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை பிறந்த வேளைகளில் எல்லாம் உங்களுக்குத் தெரியாமல் உங்களை நீங்கள் எனக்குக் காட்டிவிட்டீர்கள்"
“என்ன சொல்கிறீர்கள்?"
இமைகளைச் சுருக்கி, புருவங்களை வளைத்துக் கொண்டான் கமலேஸ்வரன்.
"நீங்கள் பஸ் ஹோல்டில் நின்றது. ஆர்ட் பெயின்ட் கடையில் வர்ணங்கள் பிரஷ்கள் வாங்கியது உங்கள் அம்மாவுடனும் வேறொரு ஆளுடனும் வீதியால் நடந்து சென்றது. குழந்தைகளுடன் கடையில் பொருள்கள் வாங்கியது. இன்னும் வேண்டுமா? திகதி நேரம் எல்லாம் சொல்லட்டுமா?"
117

Page 69
சித்திரா கூறிய சம்பவங்கள் எல்லாம் அவன் நடத்தியவைதாம் என்பதை வியப்புடன் நினைத்துப் பார்க்க அவனுக்கு மகிழ்ச்சியும் எழுந்தது.
“எல்லாம் சரி. அந்த வேளைகளில் எங்கை நிண்டது இந்தத் தேவதை?” சித்திரா தன்னை மறந்து ஒரு கணம் பெரிதாகச் சிரித்தாள்.நெடுநாட்களுக்குப் பின்னர் அவளுக்குக் கிடைத்த அந்தச் சந்தர்ப்பம், நெடுநாட்களாக அவளுக்கு ஏற்பட்டிருந்த உள்ளக் குமைச்சலைப் போக்குவதாகவும் இருந்தது.
“ஒரு நாளாவது செத்தானா இருக்கிறானா என்று பார்க்கவில்லை. கதை அளக்கிறாவாம் கதை"
"வெவ்வெவ்வே! ஆர் முதலிலே வருகிறது என்பதோ வீட்டுக்கு வருவதோ பிரச்சினை அல்ல. நீங்கள் ஒருநாள் ஒரு பொழுது என்னுடைய நினைவுடன் இருந்தீர்களா? இல்லை. இல்லவே இல்லை, அப்படி இருந்திருந்தால் உங்களை நான் பஸ்ஸில் இருக்கும்பொழுது ஏன் கண்டிருக்க வேண்டும்?"
"அடசே அம்மா வீட்டுக்கு வந்திருக்கலாமே?” "நான் வருவேன். ஒரேயொரு நாள் வருவேன். என்னுடைய ஆசைகளை கனவுகளை எல்லாவற்றையுமே கொண்டு அங்கு வருவேன். அந்த நாளும் வரும்.”
"ஆமாம் நான் சாகிற நாள் அது “என்ன சொல்கிறீர்கள்?" சித்திரா சினந்தாள்.
2
சித்திராவுக்கு கோபம் கோபமாக வந்தது. கமரேலஸ்வரன் எதைச் சொல்லக்கூடாது என்று நினைத்திருந்தாளோ அதையே அவன் கூறியவிடத்து அப்படியொரு தீங்கு அவனுக்கு நேர்ந்து விட்டதாகவும், அந்தத் தீங்கை முன்னிட்டு அவள் அவனுடைய வீட்டுக்குச் செல்ல நோர்ந்தததாகவும் எண்ணியபொழுது அவளுக்கு அழுகையே வந்து விட்டது.
உயர்ந்த ஒல்லியான உருவத்தில் ஒட்டியிருந்தாற்போலக் காட்சி தந்த அவளுடைய சின்னமுகம் கண்ணீரால் நிறைந்தது. அந்தக் காட்சியைக்கான கமலேஸ்வரன் பெரிதும் சங்கடப்பட்டான்.
“சித்திரா நீங்கள் என்னைக் காணும்பொழுதெல்லாம் அழுகிறீர்கள். அப்படியானால் உங்களைக் காணாமலே நான் இருந்து விடுகிறேன். என்னைக் காண்பதாலும் என்னுடன் பேசுவதாலும் ஒரு பெண்ணின் இதயம் குழம்பி அழுகிறது என்றால் அதிலும் வேதனையான ஒரு விஷயம் இருக்க முடியாது"
கமலேஸ்வரன் தனது குரல் கரகரக்கக் கூறினான்.
சித்திரா சொன்னாள்:
“உங்களை எல்லோருமே நேசிப்பதுபோல இருந்து உங்களுக்கே துரோகஞ் செய்கிறார்கள். நானும் உங்களுடன் ஆண்டுகளாகிப் பழகிவிட்டேன். அந்தப் பழக்கத்தால் என்னையும் அறியாது உங்கள் கஷ்ட நஷ்டங்களில் மட்டும் பங்கு கொள்ள என்மனம் துடிக்கிறது. நான் என்ன செய்ய? நீங்கள் இருக்கும் நிலை ஏற்கனவே என் மனதைக் குழப்பியிருக்கிறது. இப்பொழுது என்னடாவென்றால் நீங்கள் ஏதேதோவெல்லாம் பேசுகிறீர்கள். எனக்கு இருக்கும் இதயபூர்வமானதும் மானசீகமானதுமான ஒர் ஆதரவு நீங்கள் மட்டும்தான் இதையும் நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?"
18

அவள் சிறுமியைப் போல ஒன்றையும் மறைக்காமல் கூறிக் கொண்டாள். பின்னர் சிணுங்கினாள். சித்திராவைப் பார்க்க கமலேஸ்வரனுக்குச் சிரிப்பாக இருந்தது.
அவன் கூறினான்.
“உங்களுக்கு உலகத்தை விளங்காது, சின்ன வயது நாட்போகப் போக எல்லாம் புரியும்.”
“உம், உம் பெரிய அனுபவஸ்தர் சொல்கிறார். நான் உலகத்தைப் புரிந்து
கொண்டதால்தான் உங்களை ராஜினாமாச் செய்ய வேண்டாம் என்று கூறினேன். இது ஏன் என்று தெரியுமா?"
“சரிதான் பெரிய அனுபவம் நீங்கள் பாட்டிதான். சரி சரி வாருங்கள் ஒரு கடைக்குச் சென்று அங்கிருந்து சண்டை பிடிப்போம்” என்றபடி, வீதியின் எதிர்க்கோடியிலிருந்த குளிர்பானச்சாலையொன்றை நோக்கி நடந்தான் கமலேஸ்வரன்.
அவனுடைய அழைப்பு இதுதான் முதற்தடவையாக இருந்ததால், சித்திரா சிறிது சந்தோஷப்பட்டாலும் ஒருவாறு சமாளித்தபடி அவன் பின்னர் நடந்து வீதியைக் கடக்க முயன்றாள்.
நடுவீதிக்குச் சென்றுவிட்ட கமலேஸ்வரன் சித்திரா இன்னமும் அந்த வீதியில் பாதியை கடக்காமல் இருப்பதைக் கண்டதும் சற்றுத் தரித்து அவளை வரும்படி அழைத்துக் கொண்டிருக்கையில் அவள் பக்கமாக வேகமாக வந்த கார் சடாரென்று பிறேக்குடன் நின்றது. காரில் இருந்தவன் சொன்னான்.
“ஹலோ! உங்களுடைய மனைவியைக் கையில் பிடித்துக் கூட்டிக் கொண்டுதான் போங்களேன்"
அந்தக் காரின் பின் சீட் முழுவதும் பெண்களே நிறைந்திருந்ததால் அந்த
ரம்மியமான காதல் உணர்வில் அவன் கூறினான் என்று சித்திரா அமைதி கண்டாலும், கமலேஸ்வரன் அப்படிக் கூறிய அவனை விறைத்துவிட்டு, சித்திராவை வரும்படி அழைத்து, வீதியைக் கடந்து, கடைக்குள் புகுந்தான்.
அவர்கள் இருவரும் ஆசனங்களில் சென்று அமர்ந்ததும், சிப்பந்தி ஒருவன் வந்து அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். சித்திரா பக்கம் தலையைத் திருப்பிய கமலேஸ்வரன், “என்ன குடிக்கிறீர்கள்?" என்று கேட்டான்.
"நீங்களே சொல்லுங்கள்” என்று சித்திரா உணர்ச்சியற்றுக் கூறியதும், என்ன இருக்கிறது?" என்று சிப்பந்தியைக் கேட்டான் கமலேஸ்வரன்.
களைப்புடன் கடைக்கு வருபவர்கள் தங்களுக்கு எது தேவை என்று தீர்மானிப்பதில் எடுக்கும் வழமையான சோம்பல் நேரத்தில் வெறுப்படைந்திருந்த அந்தச் சிப்பந்தி "பைன் அப்பிள் யூஸ், ஒரேஞ், ஐஸ்கோப்பி, மில்க்ஷேக் -” என்று அடுக்கிக்கூறி முடிப்பதற்குள்,"இரண்டுமில்க்ஷேக்” என்று விட்டு சித்திராவைப் பார்த்தான் கமலேஸ்வரன்.
அவள் விழிப் புலன்களை எங்கோ செலுத்தி அமர்ந்திருந்து, நெற்றியில் புரண்டு அலமலந்து கொண்டிந்த கேசத்தை வாரி வாரி மேலே விட்டுக் கொண்டாள். மேலே காற்றாடி பலமாகச் சுற்றிக் கொண்டிருந்ததால் அவளுடைய முந்தானை பறந்து கமலேஸ்வரனுடைய கையில் விழுந்தது, நொட்டி விட்டு ஒடும் குழந்தையைப்போலக் காணப்பட்டது.
அதனை அவதானித்த சித்திரா, பேசாதிருக்க அந்த முந்தானை இயல்பாகக்
கையில் விழுந்தபொழுது அதனை இழுத்த கமலேஸ்வரன், அவள் அவனைப் பார்த்ததும், "அம்மா. ஏசுறதுக்கு ஒண்டுமில்லையா?” என்று கொச்சையாகக் கேட்டான்.
119

Page 70
அவனுடைய அந்தப் பொழுதை மிகவும் விரும்பியவள் போன்று சிரித்த சித்திரா "பேசுறதோ. என்ன என்னமோ எல்லாம் கோபம் வந்துது. பாவம் எண்டு விட்டிட்டன்” என்றவள், “சரி வேறு வேலை ஏதாவது தேடினீர்களா?” என்றும் கேட்டாள்.
“ஓம்" என்று கமலேஸ்வரன் கூறியதும், “என்ன வேலை?” என்று ஆவலாகக் கேட்ட சித்திராவுக்கு அவன் கூறியது சிரிப்பையூட்டியது.
“அம்மாவேலை. பிள்ளைகளைக் குளிப்பாட்டி சாப்பாடு கொடுத்து பராமரிக்கிறேன்"
அவன் தொடர்ந்து கூறினான். “இந்த லட்சணத்திலே எனக்கு எங்கே வேலை கிடைக்கப் போகிறது?’ என்று கமலேஸ்வரன் கேட்டு முடிப்பதற்குள் சிப்பந்தி இரு பெரிய கிளாஸ்களில் பாலைக் கொண்டுவந்து வைத்தான்.
ஷேர்ட் பாக்கட்டில் கிடந்த சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு கிளாசைக் கையில் எடுத்தான் கமலேஸ்வரன். சித்திராவும் பருகத் தொடங்கிய பொழுது, இரு பெண்கள் மிக நாகரீகமான தோற்றத்துடன் காரிலிருந்து இறங்கி அங்கு வந்தார்கள். அவர்களை சித்திரா முதலில் கண்டாலும் அமைதியாக எதுவித உணர்வுமின்றி இருந்தாள். முன்பின் தெரியாதவர்களைப் பார்க்கும்பொழுது அப்படி என்ன உணர்வுதான் எழ முடியும்?
கமலேஸ்வரனுக்கு நெஞ்சு திக்கென்றது. பனை நிழலிலிருந்து பாலைக் குடித்தாலும் பார்ப்பவர்கள் நினைப்பது கள் என்றல்லவா?
அங்கு வந்த செல்வராணியும் டாக்டர் ஞானமலரும் கமலேஸ்வரன் ஒரு பெண்ணுடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்வதைக் கண்டதும் அவர்களருகில் வந்தார்கள். டாக்டர் ஞானமலரின் வற்புறுத்தலால் செல்வராணி தயக்கத்தைவிட்டு அவர்களருகில் வந்து கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள். சித்திரா யாராக இருக்கலாம் என்ற ஆராய்ச்சியில் அவளுடைய மனம் ஈடுபட்டிருந்த பொழுது விழிகள் சித்திராவை ஏளனமாகப் பார்க்க, உதடுகள் பிதுங்கின.
கமலேஸ்வரன் இருவரையும் சித்திராவுக்கு அறிமுகப்படுத்த, டாக்டர் ஞானமலர் மகிழ்வதாகத் தலையை அசைத்து அந்த அறிமுகத்தை அங்கீகரித்துக் கொண்ட பொழுது, செல்வராணி சிலையாகி நின்றாள். பிள்புறமாக மேற்புறம் சாய, முன்புறமாக வலது காலைப் பதித்து கைகட்டியபடி நடப்பவள் போன்று செல்வராணி கோலங் காட்டியதைக் கமலேஸ்வரனால் பொறுக்க முடியவில்லை. சித்திரா அவளைப்பற்றி வேறிடங்களிலிருந்து அறிந்து கொண்டதைத் தொடர்ந்து அப்படியொரு அறிமுக அங்கீகாரம் அவளிடமிருந்து வராததே நன்றெனத் தோன்ற அமைதியாக இருந்தாள்.
கமலேஸ்வரன் சங்கைக்காக அவர்களையும் அமரும்படி கூறியதும், அதனை விரும்பாத செல்வராணி ஞானமலருக்குக் கண்ஜாடை காட்டினாள். ஞானமலர், தாங்கள் ஒரு சிநேகிதியைத் தேடி அங்கு வந்ததாகக் கூறியபடி அங்குமிங்கும் பார்த்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு காரை நோக்கி நடந்தாள்.
“உக்ம்' என்று செல்வராணி சிலுப்பிக் கொண்டு நடந்தாள். அவளுடைய சிலும்பல் ஒசைக்கு உதடுகளைப் பிதுக்கி அபிநயஞ் செய்த கமலேஸ்வரன், சித்திராவைப்பார்த்துச் சிரித்தான். இருள்படர்ந்த முகத்துடன் இருந்ததைக் கண்டதும் வருத்தத்துடன், என்ன சித்திரா? என்ன யோசனை?" என்று கேட்டான் அவன்.
120

“உம் ஒன்றுமில்லை" என்றபடி பெருமூச்சு விட்டாள் சித்திரா. "இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்து விடவில்லை. இவர்களையிட்டு எதற்கும் யோசிக்க வேண்டாம். உங்களுக்கு என்னைத்தான் வேண்டும். இவர்களையல்ல." "ஆமாம் எனக்கு உங்களைத்தான் வேண்டும் ஆனால்.” “என்ன?” "இரவு வீட்டுக்குச் சென்றதும் நீங்கள் அமைதியாகத் தூங்க வேண்டும். எந்த வசைக்கும் நான் கலங்க மாட்டேன். ஆனால் நீங்கள் கிறுங்கக் கூடாது"
“எனக்கு விளங்குகிறது சித்திரா அடிபட்டு அடிபட்டு என் இருதயம் கல்லாகிவிட்டது. மரத்துப்போன விஷயம் இது சரி நம்முடைய விஷயத்துக்கு வருவோம்" "நான் ஒன்று கேட்கட்டுமா? கேட்டால் கோவிக்க மாட்டிர்களே?” சித்திரா குழைந்து கேட்டபொழுது, அவள் என்ன கேட்டாலும் மறுக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டிருந்தான் கமலேஸ்வரன்.
அவள் காட்டும் அன்புக்குக் காணிக்கையாக, அது உண்மையாக ஊறும் அன்பு என்பதற்குச் சாட்சியாக வெளிவரும் கண்ணிருக்குக் கைமாறாக சித்திரா கேட்பது எதுவாக இருந்தாலும் சம்மதிப்பது அல்லது கொடுப்பது என்று கமலேஸ்வரன் எண்ணினான்.
“என்ன பேசாமல் இருக்கிறீர்கள்?" “என்ன கேட்கப் போகிறீர்கள்?"
ee 99
655...
99
“வந்து". அவள் கூறியதையே கமலேஸ்வரன் ஒப்பித்ததும், சிணுங்கினாள் சித்திரா. அவளுடைய அந்தச் சிணுங்கலை வெகுவாக இரசித்த கடிலேஸ்வரன் சற்றுப் பெரிதாகச் சிரித்தான். பின்னால் மூலைக்கு மூலை சோடிகளாக அமர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தவர்களின் கவனத்தை ஈர்க்குமளவுக்குத் தனக்கு மகிழ்ச்சி வந்துவிட்டதை எண்ணியபடி “என்ன கேட்கப் போகிறீர்கள்?" என்றான்.
"இந்த." அவள் கூறிக் கொண்டே கைப்பையைத் திறந்து, அந்த மாதம் தனக்குக் கிடைத்திருந்த சம்பளத்தில் எப்படியெப்படியோ எல்லாம் கட்டுப்படுத்தி செலவழிக்காது வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளை மடித்து, ஒரு நாணயக் குற்றியளவாக்கி விட்டு, அவனுடைய கைக்குள் திணித்தாள்.
அது இன்னதென்று கையைத் திறந்து பார்த்தபொழுது கண்டுகொண்ட கமலேஸ்வரன், “இல்லை சித்திரா. உங்களுடைய அன்பு எனக்குப் போதும். நான்தான் முறைப்படி உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டியவன். இப்பொழுது அதற்கும் லாயக்கற்றுப் போய் விட்டேன். எனக்கு இது வேண்டாம். என்னுடைய எல்லாச் செலவுகளையுமே நான் விட்டு விட்டேன்" என்றபடி அவளிடம் கொடுக்க, அவள் படிரென்று தன் கைகளைப் பின்வாங்கிக் கொண்டாள்.
“என்னைப் பற்றித் தெரியுமில்லே இதைப் பிடியுங்கள். சரி இப்பொழுது நான் தருகிறேன் என்று நினைத்தாவது வாங்கிக் கொள்ளுங்கள்” என்று இரப்பவன் போலக் கூறினான் அவன்.
அவள் அவனிடமிருந்து விடுபட்ட களிப்பில் சிரித்தபடி அமர்ந்திருந்தாள். "அப்படியா சங்கதி?” என்றுமுணுமுணுத்த கமலேஸ்வரன் காற்றில் ஆடிக் கொண்டேயிருந்த அவளுடைய முந்தானையைப் பற்றி அதில் ஒரு மூலையில் அந்தக் காசை முடிந்து விட்டான். அப்பொழுது அவனிடமிருந்து தனது சேலை முகதலைப்பை மீட்க சித்திரா முயன்றும்
12

Page 71
முடியவில்லை. அவர்கள் மேலும் இழுபறிப்பட்டால் அவளுடைய சேலையே அந்தத் தாக்குதலைத் தாங்காமல் கிழிந்து விடுமென்று அவள் நினைத்ததால் மேற்கொண்டு பேசாதிருந்தாள்.
“சரி, சரி பார்ப்பம். நான் உரிமையற்றவள்தானே.” “என்ன கதை இது" “அல்லாவிட்டால் இந்தக் கஷ்டமான நேரத்திலே ஏதோ என்னாலானதைச் செய்கிறேன், நீங்கள் பிறத்தியாள் என்று நினைத்துத்தானே மறுக்கிறீர்கள்
"அசடு வழிகிறதைப் பாருங்கள்" "என்னோடு கதைக்க வேண்டாம்" சித்திரா கூறினாள். "சரி புறப்படுங்கள் போவம்" "நான் கதைக்க வேண்டாமென்றல்லவா சொன்னேன்?" "அதுதான் புறப்படுவோம் என்றேன்" இருவரும் மனம் விட்டுச் சிரித்துக் கொண்டனர். சித்திரா கேட்டாள். “சரி இனி என்ன செய்யப் போகிறீர்கள்?" “வேலை தேட வேண்டும். வருவது ஒன்றும் மனதுக்குப் பிடித்ததாயில்லை" கமலேஸ்வரன் பதிலளித்தான். பின்னர் அவனே தொடர்ந்து கூறினான்.
“நாளையிலிருந்து போர்ட் பெயின்டிங் செய்யப் போகிறேன்" “எங்கே?” “ஒரு கடை முதலாளி கேட்டவர், அது ஒரு நகைக் கடை பெண்கள் ஆடை அணிகளுடன் உள்ளது போல வரைந்து பெயர்ப் பலகையும் எழுத வேண்டும் என்று கூறியிருக்கிறார்"
"அதையாவது செய்யுங்கள். கலை எங்கிருந்தாலும் பிறக்கும். அது சரி. பெண்களை ஆடை அணிகளுடன் வரையவேண்டும் என்றால், பெண்கள் எல்லாரும் ஆடை அணிகள் இல்லாமலா திரிகிறார்கள்?"
“பார்த்துத்தான் சொல்ல வேண்டும்" “இந்தா! நான் இருக்கிறேன்.” கூறிக் கொண்டே கதிரையுடன் சேர்ந்து நளினமாகக் கமலேஸ்வரனைப் பார்த்தாள் சித்திரா.
அவனுடைய விழிகள் அவளை அன்பு முறுவலுடன் வலம் வந்த பொழுது சித்திராவின் பெண்மை விழித்துக் கொண்டதுபோலாயிற்று. அவனுடைய முகத்தைச் சற்றும் கூச்சமின்றிப் பார்த்துப் பேசி, கிண்டல் செய்து, சிரித்து மகிழ்ந்த அவளால் இப்பொழுது அவனைப் பார்க்க முடியவில்லை. உடலெல்லாம் நாணம் புகுந்து கொண்டதுபோல உணர்வு உண்டாகியது.
சித்திரா தலையைக் கவிழ்ந்து கொண்டாள். கமலேஸ்வரன் மெல்லச் சிரித்தான். பின்னர் கூறினான். "அம்மாடி இது ஒரு கோயிற் சிலை. பெண்ணாக இருந்தால் இந்த நாளையிலே நாணமடைய மாட்டாளே. ஆடை அணிகள் இருக்கின்றன. அழகான சேலை, அதற்கு கலையம்சமாக மாச்' பண்ண ஒரு பிளவுஸ், கையிலே உம், ஒரு 'சுக்கிறாண்டி மோதிரம், உம் உம். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஆ நான்கு வளையல்கள் . மேலே ஆங் எம்மா மொத்தம். ஒரு தங்கச் சங்கிலி. சரி எல்லாந்தங்கந்தானே?. பித்தளையாக இருந்தாலும் இந்த தேவதை அணிந்ததும் தங்கமாகி விடும். ஆதலால் அவை தங்கம்தான்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"சும்மா இருங்கள்"
"நீங்கள் தானே இப்படிச் சொல்ல வைத்தீர்கள்"
“இப்படியா சொல்லச் சொன்னேன்?’ என்று கேட்டபடி தலையை நிமிர்ந்து கமலேஸ்வரனைப் பார்த்தாள் சித்திரா.
அவனுடைய கண்கள் இனம் புரியாத ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. கமலேஸ்வரன் முடிந்துவிட்ட அந்த நூறு ரூபாத்தாளையும் தூக்கி, காற்றின் போக்கில் ஆட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது சித்திராவின் முந்தானை.
"இதை இப்படியே வைத்திருக்கப் போகிறேன். நீங்களாக இதை அவிழ்த்து ாடுக்காவிட்டால் எத்தனை வருஷம் சென்றாலும் இப்படியே விடுவேன்" "டோபி அவிழ்ப்பான். நீங்கள் ஒன்றும் சிரமப்பட வேண்டாம்" "நான் இனி இதை உடுத்தால்தானே?"
ee
ஏன்? “என்னைச் சிரிக்க வைத்த சேலை. நன்றியோடு அப்படியே பெட்டிக்குள் மடித்து வைப்பேன்" என்றவள் சிறிது தாமதித்துக் கேட்டாள். “எனக்காக ஒரு உதவி செய்கிறீர்களா?” இது மற்றதுபோல. என்ன செய்ய வேண்டும்?" "இந்தத் தாடியை. எடுத்து பழையபடி ஆகிக் கொள்ளுங்கள். இப்படி நான் சொன்னவுடன் எனக்கு அழகு மோகம் என்று தயவுசெய்து நினைக்க வேண்டாம். நாங்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிற நிலையிலேதான் கவனமாக இருக்க வேண்டும். "டிப்டொப் பாக நீங்கள் திரியிற காலம் இதுதான்! என்ன, கேட்பீர்களா? செய்வீர்களா?”
'உண்மைதான் சித்திரா. உங்களுக்காக இதை வேண்டுமானால் மாற்றி விடுகிறேன். ஆனால், இந்த உலகத்துக்காக எதையுமே செய்ய நான் தயாரில்லை. இந்த உலகம் எண்ணெய் போன்றது. கல்லைப் போட்டால் சத்தமில்லாமல் விழுங்கி விடும். தண்ணீரை ஊற்றினால் அதனைச் சேர்த்துக் கொள்ளாது ஒதுக்கி விடும். நெருப்பில் வைத்தால் பொரிந்து தள்ளும்."
கமலேஸ்வரன் கூறிக் கொண்டே “புறப்படுவோமா?” என்றான்.
நடந்தே போவோம்” என்றபடி எழுந்தாள் சித்திரா. கமலேஸ்வரன் சிப்பந்தியை அழைத்துப் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினான்.
“பார்க்க வேண்டியவர்கள் எங்களைப் பார்த்து விட்டார்கள். இனிப் பயப்படத் தேவையில்லை அல்லவா?”
சித்திரா கேட்டதும், காலில் முள் குத்தியவன் திடீரென்று காலை நோக்கிக் குணிவது போன்று கமலேஸ்வரன் சித்திராவை நோக்கித் திரும்பினான்.
3
அன்றுமாலை கண்ட காட்சியைப் பொருளாக வைத்து, கமலேஸ்வரனிடமிருந்து தான் பிரிவதாகச் செய்திருந்த முடிவை நாகரீகமாக வெளிப்படுத்தியிருந்தாள் செல்வராணி.
அவள் சொன்னாள்.
123

Page 72
“எனக்கு டில்லிக்கு மாற்றம் வந்திருக்கிறது இங்கிருக்கும் வேலைகள் யாவற்றையுமே டில்லிக்கு மாற்றப் போகிறார்களாம். என்னையும் வரும்படி கட்டாயமாகக் கூறியுள்ளார்கள் வேலையை விட்டுவிட்டால் நாங்கள் இப்பொழுதிருக்கும் நிலையில் என்ன செய்கிறது. ?”
அவள் வேண்டுமென்றே இப்படித் திரித்துக் கூறியதைக் கமலேஸ்வரனால் புரிந்து கொள்ள முடிந்த போதும், தான் கூறுவதற்குச் சாதகமாக அவள் ஓரிடமுமே விட்டு வைக்கவில்லை என்று எண்ணியதும் பேசாதிருந்தான்.
டில்லிக்கு மாற்றலாகிச் செல்வதும், அங்கு சென்று நினைத்தபடி வாழ்வதும் சாதாரணமான விஷயங்களா? ஒசெல்வராணி எவ்வளவு சாதாரணமான முறையில் அவற்றைக் கூறி விட்டாள். அவன் உழைப்பு எதுவும் இன்றி இருக்கின்றான் என்றும் அவன் அப்படியிருக்கையில் அவள் நம்பி இருக்கின்ற ஒரே வேலையையும் விட்டு விட்டால் கதி என்ன? என்றும் செல்வராணி நாசூக்காகச் சுட்டிக் காட்டியது அவனுக்கு என்னவோ போலிருந்தது.
அவன் கேட்டான் “செல்வராணி! நீ என்ன யோசித்திருக்கிறாய்?" "நான் என்ன யோசிக்க இருக்கிறது? எனக்கு வாழவேண்டுமென்கிற ஆசை நிறைய இருக்கிறது. வாழ்க்கை இன்பமாக இருக்கவும் வேண்டும். அந்த ஆசையும் இன்பமும் கிடைப்பதென்றால் சுலபமான காரியமல்ல. அவை டில்லிக்குப் போவதன் மூலந்தான் கிடைக்குமென்றால் நான் அதில் யோசிக்க என்ன இருக்கிறது? போக வேண்டியதுதான்" என்று கூறி, சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தாள் செல்வராணி,
"ஆனால். உங்களையும் பிள்ளைகளையும் நினைக்க கவலையாக இருக்கிறது" "பொய் சொல்லாதே செல்வராணி அதிகம் கோபிப்பவர்களும், சமூகத்துக்கோ மனச்சாட்சிக்கோ பயப்படாதவர்களும் பொய் சொல்வது புதுமையான விஷயம். உனக்குப் பொய் பேசாமல் இருக்க முடியாது என்றால் பேசாமலே இருக்கிறது நல்லது"
கமலேஸ்வரன் எங்கோ பார்த்தபடி கூறினான். “எனக்குப் பொய்யும் வேண்டாம், மெய்யும் வேண்டாம். கடமைக்குச் சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொன்னேன். நான் போகத்தான் போகிறேன் என்றால் என்னைப் பிடித்து நிறுத்த இங்கே யாருமில்லை அல்லது பிடித்து நிறுத்தலாம் என்று நினைத்தாலும் அது முடியாத காரியம். டில்லியின் அழகான தோற்றத்தில் என்னை மறந்து கேவலமான எனது வாழ்க்கையை மறந்து வாழலாம் என்று நினைக்கிறேன்"
செல்வராணி கோபமாகக் கூறியதும் அவளோடு தொடர்ந்து பேச விரும்பாத கமலேஸ்வரன் எழுந்து முற்றத்துக்குச் சென்றான்.
அவன் பணிகின்றான் என்று நினைத்து அவள் கூறினாள். "உக்ம் இப்படி அநியாயமாகவும் கேவலமாகவும் என்னை ஏன் நடத்தினார் என்பது இன்றைக்குத்தானே தெரிந்தது. கடமைக்காக இங்கு குடும்பம் நடத்தாமல் ஒரேயடியாக என்னை விட்டுப் போவதுதானே. என்னைத் தவிர வேறு பெண்ணைத் தெரியாது என்று கூறியது மட்டும் உண்மை! நான் பேசினால்தான் அது பொய். என்ன உலகம் இது?"
சித்திராவுடன் தான் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததையே செல்வரான தவறாகக் கணக்கிட்டுக் கூறுகிறாள் என்று நினைத்ததும் வேதனையாக இருந்தது கமலேஸ்வரனுக்கு. அதனைக் கூறி, விளக்கம் கொடுத்து, பின்னர் சித்திரா சம்பந்தப்பட்ட
24

தனது உறவுக்கு உண்மையிலேயே களங்கம் கற்பிக்க அவன் விரும்பாததால் வீதிக்கு வந்து வெளியே நடந்தான்.
அப்பொழுதும் செல்வராணியே பேசினாள்.
“விஷயம் உண்மைதான். அல்லாவிட்டால் அப்படிச் சொல்லியும் பேசாமல் போவான் syst?”
விடிந்ததும் முதல் வேலையாக நகைக் கடை முதலாளியிடம் சென்றிருந்தான் கமலேஸ்வரன். சித்திராவின் அன்புக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக காலையிலேயே சலூனுகுச் சென்று தன்னை அலங்கரித்துக் கொண்டான். பிடரியையும் காதோரங்களையும் தாடைகளையும் நிறைத்து அடர்திருந்த மயிர்க் கூட்டங்கள் இப்பொழுது அவனை விட்டுப் பிரிந்திருந்தன.
பழைய அழகனாக அவன் மாறிவிட்டான். காலையில் சித்திரா தன்னைக் கண்டால் எவ்வளவு களிப்படைவாள் என்று நினைத்த பொழுது அவனுடைய இதழோரங்கள் சிரித்துக் கொண்டன.
நகைக்கடை முதலாளிக்கு நம்பிக்கையூட்டும் முகமாகவும் மாதிரிகள் தெரியுமுகமாகவும் தன்வசமிருந்த தனது ஒவியங்கள் சிலவற்றையும் கமலேஸ்வரன் கையோடு எடுத்துச் சென்றான்.
அந்த முதலாளி அவற்றைப் பார்த்துவிட்டுக் கூறினார்.
"தம்பி, இலங்கையிலும் இப்படி ஒவியர்கள் இருக்கிறாங்க என்பதை நினைத்தால் பெருமிதமாயிருக்கு அடச்சா என்ன அழகு. என்ன கலை. உம்” என்று கூறி ஒரு பெருமூச்சை வெளியே தள்ளியபடி அவர் கூறினார்.
"நம்மடை ஆக்கள் மட்டும் ஆதரவு கொடுத்தால் இலங்கையிலை எந்தக் கலைஞனும் கஷ்டப்பட மாட்டான். சரி. நம்ம விஷயத்துக்கு வருவோம். எனக்கு இரண்டு பொம்பிளைங்க வேணும். என்ன அப்படிச் சிரிக்கிறீங்க. இரண்டு பொம்பிளைங்க ஜாலியாக எங்க நகைகளைப் போட்டுக் கொண்டு நிக்கிறாப்போல. கடையின் இரண்டு வாசல்களிலும் நிற்க வைக்க வேணும் . வருற பொம்பிளைங்க எல்லாம் அடி இப்பிடி அழகாக நாங்க இல்லையே என்று ஏங்க வேணும். நீங்க வரைகிற பொண்ணுங்களைப் போல அழகாக இருக்க எங்கடை நகைகளையே அவங்க வாங்க வேணும். என்ன ஒரே சிரிப்பாக இருக்கே. ஆமா இன்னொரு சமாச்சாரம். இரண்டு பெண்ணுகளில் அசல் தமிழ் பொண்ணு, இந்த. சேச்சே சொல்லவே அசிங்கமாய் இருக்கே. இந்த தோள்பட்டை வரை பெனியன் போல சட்டை. அடிவயிறு அரை அடிவரை தெரிகிறது. முதுகில் முக்காவாசி தெரிகிறது. இதெல்லாம் வேண்டாம். சுமாராக மூட வேண்டியதெல்லாம் மூடி இருந்தால் போதும். ஆமா. ! நீங்க வரைஞ்சிருக்கிறீங்களே, இந்த மாதிரி மற்றது இருக்கே! வேணுமின்னா ஒரு ‘புல் புல்லாக இருக்கட்டும். தென்னாட்டுக் கலைக்கு மேல் நாட்டுச் சாயம் பூசட்டும். சரியா?”
“சரி. நீங்கள் ஒரு கலைஞனுடைய ஆத்மாவை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களைக் கண்டதில் எனக்குப் பெரிய சந்தோஷம்.”
“என்ன பிரமாதமாகப் புரிஞ்சு வைச்சிருக்கேன் தம்பி. தமிழ்ப் பொண்ணு தமிழழகவே இருக்கோனும், இங்கிலிஷ்காரி இங்கிலிஷாகவே இருக்கோணும். தமிழச்சி
25

Page 73
கவுண் போடுறதையோ, இங்கிலிஷ்காரி சேலை உடுத்துறதையோ நான் சகிக்க மாட்டேன். இந்த நாளையில எல்லாம் இமிட்டேஷன், ஆமா. எங்கட நகைகளைத் தவிர."
அவர் கூறிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார். பின்னர் கூறினார். "தெய்வசக்தி, கலை அபிமானம் நிறைந்தவங்க செட்டிமாருங்க. எங்களுக்கு தமிழும் தமிழ்க் கலையும்தான் பிடிக்கும். நாங்க வேட்டி கட்டின குபேரன்கள். எங்கL வாக்கும் நிதானமானது. உங்களுக்கு இந்த போர்டுகள் வரையறதுக்கு எவ்வளவு வேணும்? ஏன் கேக்கிறேன்னா. கலைக்கு விலை வைக்க முடியாது. உங்களுடைய சித்திரங்களுக்குக் குடுக்க என்னிடம் பணமே இல்லை. உங்களுடைய உழைப்புக்கு மட்டும் குடுக்கிறேன். கேளுங்கள்"
"நான் முதல் தடவையாக போர்ட்பெயின்டிங் செய்யப்போகிறேன். எனக்கு “றேட்" விபரம் ஒன்றும் தெரியாது. நீங்கள் பேசுகின்ற பாணி என்னை மகிழ்ச்சியில் திக்காட வைக்கிறது எவ்வளவானாலும் கொடுங்கள், வாங்கிக் கொள்கிறேன்"
“மூணு போட்டுகள் இல்லியா? செலவெல்லாம் என்னோட. முந்நூறு ருபா தர்ரேன். சம்மதமா?”
'நன்றி, என்னாலானதை நிச்சயம் செய்கிறேன்," கமலேஸ்வரனுக்கு பேச்சே எழுவில்லை. அடக்கமாகக் கூறிவிட்டு அமைதியானான் அவன்.
செட்டியார் பலமாகச் சிரித்தது அவன் காதுகளில் இதமாக விழுந்தது.
126
 
 
 
 
 

தனல் ஏழு
ஒரு கிழமையாகப் பிரயத்தனப்பட்டு தனது கலை உணர்வுகளை யெல்லாம் கொட்டி வியர்வையையும் வர்ணமாக்கி வரைந்திருந்த அந்தச் சித்திரங்களைப் பல்வேறு கோணங்களிலும் பார்த்துச் செப்பனிட்டுக் கொண்டிருந்தான் கமலேஸ்வரன்.
செட்டியார் இரவு இரவாகக் கமலேஸ்வரன் இருந்து வரைவதை விழிமூடாது அருகிலிருந்து கவனித்துக் கொண்டார். முதலில் ஏதோ இருபெண்களின் உருவமும், வட்டமான தனது கடையின் பெயரும் எழுதப்படும் என்று மட்டும் இரகசியமாக எண்ணிய செட்டியார் மூன்றாம் நாள் அவனது சித்திரப் பெண்களைப் பார்த்த பொழுது சொக்கியே போய் விட்டார்.
'தம்பி! உங்களைக் குளப்புகிறேன்னு நினைக்க வேணாம். ஆமாம் இந்தப் பெண்ணு எங்காவது இந்த உலகத்திலே இருக்கிறாளா? அப்படியானால் சொல்லுங்க. நான் ஒருக்கால் நேர்ல பார்க்க வேணும். சும்மா சினிமா ஸ்டார்களையும் அவள் இவளுகளையும் படமாக வரைகிறானுகளே.என்ன அழகு. இதெல்லோ சித்திரம்." தனது இளமை தன்னைவிட்டுப் போயிருந்தும், கமலேஸ்வரனுடைய சித்திரப் பெண்ணைக்கண்டு இரசித்த ஒரு மயக்கத்தில் தன்னை மறந்தே கூறினார் செட்டியார்
கமலேஸ்வரனுக்கு வியர்த்துக் கொட்டியது. அவன் சிந்தனையில் அந்த ஓவியம் தீட்டும் வேளையில் எந்தப் பெண்ணின் உருவமுமே விழவில்லை அந்த ரகசியம் கைகளுக்குத்தான் தெரியும். அதனை வெளியில் சொன்னால் கேட்பவர்கள் நம்பமாட்டார்களே என்றும் கமலேஸ்வரன் நினைத்தான்.
'இல்லை! ஏதோ உங்கள் அன்பான வார்த்தைகளே பெண்ணுருவம் எடுத்திருக்கின்றன அவ்வளவுதான் நான் கூறமுடியும். என் வரையில் இது சாதாரண அழகுதான்"
“என்ன அடக்கம். என்ன பண்பு. ஐயோ! எனக்கு இப்படி ஒரு புள்ளை பொறக்கமாட்டேங்குதே."
கமலேஸ்வரனுக்கு அந்த முதியவரின் வார்த்தைகளைக் கேட்ட பொழுது நெஞ்சமெல்லாம் உருகிவழிந்தது.
"இல்லை. நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. என்னைப் போல ஒரு மகன் பிறந்திருந்தால் நீங்கள் இப்பொழுது இருக்கும் மகிழ்ச்சியில் இருந்திருப்பீர்களோ என்னவோ அத்துடன் நான் ஒன்றும் பெரிதான அடக்கமானவன் அல்ல. எண்ணங்களிலும், ஆசைகளிலும், கனவுகளிலும் விழுந்த இடி என்னை இப்படி ஆக்கிவிட்டது. அவ்வளவுதான்"
“சரி தம்பி. உங்களைச் சங்கடப்படுத்த நான் விரும்பலை ஏதோ.மனத்திலே பட்டுது பட்டுன்னு சொல்லிப்புட்டன்” செட்டியாருக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்தத் தூய இளைஞனுடைய வாழ்க்கை எவ்வளவு பயங்கரமாக இருக்க வேண்டும் அவ்வளவு பயங்கரமாக இல்லாவிட்டால் இவனால் எப்படி இப்படிக்கூற முடியும்?
127

Page 74
எந்த ஒரு திறமான ஆக்க சிருஷ்டியும் அடிக்கடி கண்ணிரால் கழுவப்படுகிறது அப்படிக் கண்ணிரால் கழுவப்படாத எந்தச் சிருஷ்டியும் களிப்பைக் கொடுத்ததில்லை முயன்று பெறுவதற்கும் இலகுவாகக் கிடைப்பதற்கும் உள்ள வித்தியாசமல்லவா அது?
கமலேஸ்வரன் தனது பொறுப்பான அந்தச்சித்திர வேலைகள் முடிந்த பொழுது ஆறுதலாக மூச்சுவிடத் தொடங்கினான். அவன் அமைதியாக இருந்து தீட்டவேண்டு மென்பதற்காக செட்டியார் கடையின் பின்புறமாக உள்ள ஓர் அறையையே ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.
வர்ணங்கள் தேவைப்பட்ட பொழுது அவற்றை வாங்கி வருவதற்காக அவன் வெளியே செல்ல எழுந்தால் செட்டியார் விடமாட்டார். கடைப்பையனை அழைத்து கமலேஸ்வரன் கொடுக்கும் விபரத்துண்டையும், பணத்தையும் அவனிடம் கொடுத்து வாங்கி வருமாறு பணிப்பார். அந்த கடையில் ஒரு டெக் கதிரையையும் அவர் போட்டிருந்தது அப்படியான வேளைகளில் கமலேஸ்வரன் சற்று ஒய்வெடுக்க வேண்டுமென்பதற்காக
இவற்றையெல்லாம் கமலேஸ்வரன் நினைத்தபொழுது அந்தச் செட்டியார் இனத்தில் தான் பிறந்ததற்காக ஒரு கணம் சந்தோஷப்பட்டான். பிறரைப் பாராட்டாத சுயமேன்மை செப்பும் பான்மையினராக இன்றைய உலகத்திலிருக்கும் தமிழர் பலருக்கு செட்டியார் ஒரு விதி விலக்கா? என்று அவன் கேள்வி எழுப்பினான்.
சித்திரவேலைகள் முடிந்து அவற்றைச் செட்டியாரிடம் ஒப்படைத்த பொழுது அன்றிரவே அவர் கடை வாசல்களில் அச்சித்திரப் பெண்களை நிறுத்திவிட்டார். அவர்கள் அணிந்திருந்த பல நகைகளின் டிசைன்கள் தம்மிடமோ, அல்லது அந்தக் கடைவீதியிலுள்ள எந்த நகைக்கடையாளரிடமோ இல்லை என்பதை மகிழ்ச்சியோடு நினைத்துக்கொண்டார் செட்டியார். தலைமைப் பத்தரை அழைத்து அந்த 'டிசைன் களைக் கவனிக்கும் படியும் உடனடியாக அத்தகைய நகைகளைச்செய்து முடிக்கும் படியும் உத்தரவிட்டார் அவர்.
"தம்பி உங்களுடைய கலைக்கு மட்டுமில்லை. உழைப்புக்குக்கூட என்னால் பணந்தர முடியாது. ஏதோ நான் சொன்னபடி முந்நூறு ரூபா.கொடுக்கிறேன். அத்தோடு.என்ன. என்னவெட்கம். ஆம்பிளைப் பிள்ளை.சிங்கக் குட்டிமாதிரி இருக்க வேணாமோ. இந்த ஒரு சின்ன மோதிரம் உங்களுடைய விரலில் என் நினைவாகக் கிடக்கட்டும்.” என்றபடி அவன் சட்டைப் பைக்குள் பணத்தைத் திணித்து, அவனுடைய கையைப் பற்றி வெறுமனே கிடந்த மோதிரவிரலில் அந்த மோதிரத்தையும் அணிந்தார் செட்டியார்.
செல்வராணியைக் கைப்பிடித்த போது ஏதோ நாகரீகத்தின் வெளிப்பாடாக அவள் தன் கையாலேயே போட்டு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகக் கழற்றாமல் கிடந்த தனது கல்யாண மோதிரத்தை சென்றவாரம் பணம் தேவைப்பட்ட பொழுது அடகு வைத்திருந்தான் கமலேஸ்வரன்.
கொண்ட மனைவியே வீட்டுப் பணத்துக்கு வேலிகட்டும் அளவுக்குச் சென்று விட்டதால் அவன் அப்படிச் செய்வதில் சரி, பிழை பார்க்கத் தயாராகவில்லை.
செட்டியார் தனது விரலில் மோதிரம் அணியும் பொழுது கடை ஊழியர்கள் அனைவருமே பார்த்து நின்றது கமலேஸ்வரனுக்கு பெரிய வெக்கறைத் தன்மையை ஏற்படுத்தியிருந்தது.
செட்டியாரிம் விடைபெற்றுக் கொண்டு கமலேஸ்வரன் தங்கம்மாவைக் காணச் சென்றான். நோய் ஓரளவாவது இரங்கி, அவளைத் தனியே விட்டிருந்த கோலம் அவனுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது.
128

ஒருவருமே உடன்பிறவாத தனக்கு திருஞானம் என்ற ஒரு நண்பன் எல்லாமாக இருக்கின்றான் என்பதை நினைத்த பொழுது, திருஞானத்தை நன்றிப் பெருக்கோடு பார்த்துக் கொண்டான் கமலேஸ்வரன்.
“எனக்கு ஒரு நண்பன், அம்மாவுக்கு ஒரு பிள்ளை, உன்னைக் கடைசிவரை மறக்க மாட்டேன். என் உயிர் பிரியும் பொழுது நான் ஒரு நான்கு பேருடைய முகங்களைத் தேடினால் அதில் ஒன்று நிச்சயம் உன்னுடையதாக இருக்கும்.”
"இதென்ன கமலேஸ். இதற்குப் போய் குரல் தளதளக்கிறாயே..நான் செஞ்சோற்றுக் கடனைத்தான் தீர்த்தேன். இன்னும் தீர்ப்பேன். அம்மா உனக்கு மட்டுமில்லை அம்மா. தாயற்ற எனக்கும் ஒரு தாய்.சோற்றுக் கடனுக்காக கன்னனும், கும்ப கர்ணனும் உயிர் விட்டார்களாம். அவர்களுடன் ஒப்பிடுகையில் நான் எம்மாத்திரம்? உண்மையில் அம்மா இங்கிருந்து எனக்குத்தான் உதவி செய்தார்கள்.” திருஞானம் கூறிவிட்டு, தங்கம்மாவைப் பார்த்தான்.
தங்கம்மா எதிலும் இலயிப்பற்ற கோலத்தில் இருந்தாள். பின்னர் கூறினாள், "தம்பி நான் இனி ஊரோடை போகலாம் என்று நினைக்கிறேன்.
நாளைக்கே போகலாம் நல்லூர்த் திருவிழாவும் தொடங்கப் போகுது.கடைசி காலத்திலே சின்னஞ் சிறுசுகளுக்கு இடைஞ்சலாக இல்லாமல் கோயில் குளமெண்டு கிடக்கிறது நல்லது. உங்கள் இரண்டு பேரையும்தான் நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய நினைவு இருந்தால் அங்கை அடிக்கடி வாருங்கள்."
தங்கம்மா கூறியதும், அதனை மறுக்க திருஞானம் நா அசைத்த பொழுது, கமலேஸ்வரன் கைகாட்டி தடுத்து விட்டான்.
இளவயதில் விதவையான அதிர்ச்சியின் தாக்குதலால் பெரிதும்பாதிக்கப்பட்டிருந்த தங்கம்மாவுக்கு கமலேஸ்வரன் வேலை என்ற வாழ்க்கையையும் இழந்து விட்டான் என்ற செய்தியை யாருமே எட்டவைக்கவில்லை. கமலேஸ்வரனுக்கு இருந்த இடியெல்லாம் தங்கம்மாவுக்கு தன் வாழ்க்கையின் முழு இரகசியங்களும் தெரியக் கூடாது என்பதுதான். வரக்கூடிய பேராபத்தைத் தடுப்பதற்கு தங்கம்மாவின் பிரிவும் உகந்ததுதான் என்று உணர்ந்தவன் போல் அமைதியானான் திருஞானம்.
கமலேஸ்வரன் கூறினான். 'அம்மா! சம்பளக் காசில் இருநூறுரூபா இந்தாருங்கள். உங்களுடன் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போய் வீட்டில் வைத்திருங்கள். ரமணனும் ஒரளவு வளர்ந்துவிட்டான். கடை தண்ணிக்கு என்று போகவும் வசதியாக இருக்கும்” என்றபடி அவளிடம் பணத்தைக் கொடுத்தான் கமலேஸ்வரன்.
"உன்னுடைய செலவுகளுக்குப் பணம் இருக்கா?” என்று கேட்டாள் தங்கம்மா. “என்னிடம் சம்பள மீதப் பணம் இருக்கிறது” என்று கூறியபடி போவதற்கு எழுந்தான் கமலேஸ்வரன்.
கமலேஸ்வரன் வீட்டுக்கு வந்தபொழுது வங்கிக் கட்டிட மணிக் கூண்டிலிருந்து பதினொரு தடவைகளாக மணி ஒலிகேட்டு ஒய்ந்திருந்தது.
அன்றிரவென்று ஏதோ நினைவில் சமையல் வேலைகளில் ஈடுபட்ட செல்வராணி பிள்ளைகளுக்கு உணவூட்டி உறங்கவைத்துவிட்டு, தான் டில்லிக்குப் புறப்படுவதற்காகப் பெற்றிருந்த பாஸ்போட், விசா முதலியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாஸ்போட்டில் உள்ள தனது புகைப்படத்தையே திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டாள் செல்வராணி கட்டும் இளமையும் குலையாமல் தான் பழைய நிலையிலேயே
29

Page 75
இன்னும் இருப்பதை எண்ணி எண்ணிப் புளகாங்கிதப்பட்டாள் அவள். தனக்கு இப்படி ஒரு அழகிய உருவம் உண்டா என்றும் பொய்மையில் எழுந்த சந்தேகத்தில் மகிழ்ச்சி பூக்கக் கட்டிலில் கிடந்தாள் அவள்.
கமலேஸ்வரன் வந்து கதவைத் தட்டியதும், முதலில் கொழும்பு கேடிகளை நினைத்து அமைதியான செல்வராணி, அவன் குரல் கொடுத்ததும், முன்னைய அச்சம் நீங்கி, வெறுப்பு மேலோங்க வேண்டுமென்றே எழும்பாது கிடந்தாள்.
அவன் கதவைத் தட்டியும் செல்வராணி எழுந்து வந்து கதவைத் திறக்காததை ஒலியளவில் உணர்ந்து கொண்ட பரமேஸ்வரி கணேசமணியை உருட்டி எழுப்பி, விஷயத்தைச் சொன்னான்.
இருள் படர்ந்திருந்த அந்தப் பிரதேசத்தில் கணேசமணியின் வீட்டு வெளிச்சம் கருணை பொழியப் பாய்ந்ததும், கமலேஸ்வரன் கேட்டான்.
“செல்வராணி இன்னும் வீட்டுக்கு வரவில்லையா?” கணேசமணிக்கு அவனுடைய கேள்வி ஆண்மையற்ற ஒன்றாகப் பட்டாலும், அதானைக் காட்டிக் கொள்ளாமல் பரமேஸ்வரியைப் பார்க்க, அவள் சொன்னாள்.
“இல்லையே! பொழுதுபடுறதுக்கு முந்தியே வந்திட்டா.பிள்ளையலும் சாப்பிட்டதாகச் சொன்னா அவ இன்டைக்கு சமைச்சிருக்க வேணும்.”
பரமேஸ்வரி அப்பழுக்கின்றிக் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கணேசமணி கமலேஸ்வரனுக்குத் தெரியாமற் சிரித்துக் கொண்டான்.
நாளைக்கு அம்மா ஊருக்குப் போகிறாவாம். கமலேஸ்வரன் இரண்டாம் பட்சச் செய்தியாகக் கூறியதும், தங்கம்மாவின் பிரயாணத்துக்கு ஏதாவது உடனடிக் காரணம் இருக்குமா என்ற கேள்வியின் ஆவலில், ஏன்? என்று கேட்டாள் பரமேஸ்வரி
ஒன்றுமில்லை. வருத்தம் பூரண குணமாகிவிட்டது. அதுதான் இங்கிருந்தாலும் இன்னொருவருக்குச் சுமையாக இருக்கவேண்டிவரும் என்று நினைத்திருக்க வேண்டும். நாளைக்கே போவதாகக் கூறினார். என்று கமலேஸ்வரன் கூறியதும் நாளைக்கா? தனது பிரிவுத் துயரை வெளிப்படுத்திக் கொண்டாள் பரமேஸ்வரி தங்கம்மா ஊருக்குப் புறப்படுகின்ற செய்தி பட்டும் படாமலும் செல்வராணியின் காதுகளில் கேட்டதும் அதுபற்றிய பூர்வாங்கத்தையும் கேட்கும் ஆவலில் எழுந்து வந்து கதவைத்திறந்தபடி, பரமேஸ்வரியைப் பார்த்துச் சிரித்தாள்.
என்ன லைட் எரியுது, ஆள் நித்திரையோ?” என்று பரமேஸ்வரி கேட்டதும், அதற்குப் பதில் கூறவிரும்பாது மறுபடியும் சிரித்தாள் செல்வராணி. அந்தச் சிரிப்பில் அவளுடைய விழிகள் கமலேஸ்வரனையும் ஒரு முறை தரிசித்த பொழுது, ஏதோ அர்த்தமற்ற ரீதியில் அவனைப் பழிவாங்கிவிட்டது போன்ற திருப்தியில் நிறைந்தாள் அவள்.
பரமேஸ்வரி விடைபெற்றுச் சென்றதும் செல்வராணி கமலேஸ்வரனுடைய கணையாழி விரலில் கிடந்த மோதிரத்தை மின்னும் ஒளியில் கண்டதும் துணுக்குற்றாள். அவளுடைய சிந்தனை விரிந்தது. கடந்தவாரம் கையில் பணமில்லையென்று கல்யாண மோதிரத்தையே அடகுவைத்தவருக்கு புதிதாக ஒரு மோதிரம் எப்படிக் கிடைத்தது? பணம் கொடுத்து வாங்கியிருந்தால் அடகுவைக்கப்பட்ட மோதிரம் இருக்கையில் இன்னொன்றைப் புதிதாக யாரும் வாங்குவார்களா? அப்படியானால் இவருக்கு யாரோ கொடுத்திருக்க வேண்டும் என்ற நினைவுகளில் செல்வராணி குழம்பியபடி கேட்டாள்.
“நீர் ஒரு மோதிரம் போட்டிருக்கிறீர் போல இருக்கிறது. யார் வாங்கியது? உங்கள் சினேகிதி கொடுத்தாளா?”
 
 
 
 
 
 
 
 
 
 
 

“ஷட்டப் சித்திராவை அவ்வளவு கேவலமானவளாக கணிக்காதே. உன்னுடைய சிவப்புக் கண்ணாடியினால் பார்த்தால் யாரைத்தான் ஆபாசமாகத் தெரியாது நெருப்பும் சிவப்புத்தான். ஆனால் நெருப்பு ஆபாசமானது அல்ல. தொட்டால் மட்டுமல்ல துரந்தும் சுட்டுவிடும். சித்திராவைப் பற்றிப் பேசுவது இன்றைக்கே கடைசியாக இருக்கட்டும்."
கமலேஸ்வரன் ஆக்ரோஷத்துடன் கூறிவிட்டு உள்ளே சென்றான்.
"உண்மை புனிதமானது செல்வராணி முனகிக் கொண்டே சென்று படுக்கையில் வீழ்ந்தாள். அதனைப் பொறுக்காத கமலேஸ்வரன் அவளை நறுநறுவெனப் பார்த்துவிட்டு அமைதியானான். ஊரெல்லாம் தூங்கும் அந்த வேளையில் தாங்கள் மட்டுமே தம்பதிகள் என்று பொட்டிட்டுக் காட்ட அவன் விரும்பாததால் அப்படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து விட்டான்.
விளக்குகள் அணைக்கப்பட்டதும் ஏற்பட்ட பேரிருளைத் தீக்குச்சியினால் சற்று அகற்றி ஒரு சிகரட்டைப் பற்றவைத்தபடி யோசனையில் ஆழ்ந்தான் கமலேஸ்வரன்.
சித்திராவின் தொடர்பைத் துண்டித்தால் அவளுக்கு மேலும் ஏற்படவிருக்கும் களங்கத்தைத் தடுக்கலாம் அல்லவா? அவனுடைய முதற் கேள்விக்குப் பதில் தேடி மனம் அலைந்து கொண்டிருந்தது.
யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நினைவு எழுந்து, புறப்பட்டு டாக்ஸிகளையும் கார்களையும் நிரப்புகின்ற சாமான் சக்கட்டுக்களுடன் கொழும்புக் கோட்டைப் புகையிரதத்தை நிறைத்து, புகையிரதம் வந்ததும் மனித உணர்ச்சி இன உணர்ச்சி என்பவற்றையே மறந்து சுயநலம் தலை தூக்க முண்டியடித்து ஏறி விழுத்தபடுகின்ற மக்களைக் காணக் கமலேஸ்வரனுக்குச் சிரிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.
இன்று பிற்பகல் காங்கேசன்துறைக்குச் செல்லும் நோக்குடன் மேடைக்கு வந்த யாழ்தேவியில் இடம் பிடிக்கவேண்டுமென்ற பேரவாவில் கொண்டு வந்த பொருட்களைக் குரங்குகள் குட்டிகளைக் காவுவதுபோல் தூக்கிக் கொண்டு பிரயாணிகள் ஏறியபொழுது, அவர்களுடைய மிருகத்தனமான நெரிசலில் ரமணனும் ரஞ்சனியும் அகப்பட்டு விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அவர்களை இறுகப்பற்றி தன்னோடு அணைத்துக் கொண்டான் கமலேஸ்வரன். தன்னை விட்டுப் பிரியப்போகும் உதிரத் துணிகளின் அந்த உருவங்களை ஒருமுறை உடலோடு சேர்த்து அணைப்பதில் அவனுக்கு அந்தவேளையையும் மறந்த இன்பமாகவிருந்தது.
யாழ்தேவிக்குள் ஏறியதும் கொளுத்தும் வெய்யிலையும் கொட்டும் வியர்வையையும் பொருட்படுத்தாது, பக்க யன்னல்களையும் இழுத்து மூடிக்கொண்டு போர்த்துக் கொள்ளும் நபர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்படுவதுண்டு வெற்றிலைச்சாறு உமிழவேண்டும், காற்றுப்பிடிக்க வேண்டும் என்று சாக்குப் போக்குகள் சொல்லிமூலைசீட் பிடிக்கும் நபர்களும் அன்று வந்திருந்ததைக் கமலேஸ்வரன் அவதானித்தான். பல பெட்டிகளில் கிழங்கு அடுக்குவது போன்று காட்சி தரும் பெருநாட்கள் அல்லாத அன்றும் அவர்கள் விழுந்தடிக்கத் தவறவில்லை.
ஒ என்ன அவசரம் என்ன சுயநலம்?
13.

Page 76
தங்கம்மாவையும் பிள்ளைகளையும் ஒருவாறு ஏற்றி ஆளுக்கொரு ஆசனத்தையும் தேடிக்கொடுத்த பின் அமைதியாக மூச்சுவிட்ட கமலேஸ்வரன், இதுவரையும் தனக்கு ஒத்தாசையாக வந்து உதவிய திருஞானத்தையும் நன்றிப்பெருக்கோடு பார்த்துச் சிரித்துக் கொண்டான்.
'உக்ம் இந்த சனங்கள் தங்களை விட்டு விட்டு யாழ்தேவி போய்விடப் போகிறது என்றா இத்தனை அவசரப்படுகிறார்கள்?
திருஞானம் கமலேஸ்வரனுடைய வெகுவாக அந்தக் கேள்வியை இரசித்தபடி சிரித்துவிட்டுக் கூறினான்.
'கமலேஸ்! நீ மெயில் றெயின்லே வந்து பார்க்கவேண்டும். ஏறக்குறைய ஒவ்வொருவருக்கும் புளூஜுரம் பிடித்துவிடும். மூன்று பேர் அமரக்கூடியதும் அமர வேண்டியதுமான ஆசனங்களில் ஒரு ‘நோயாளி இறுக்கிப் போத்துக் கொண்டு படுத்திருப்பார் தட்டியெழுப்பி தள்ளியிருக்கும்படி கேட்டால் தான் அப்பொழுதுதான் ஆஸ்பத்திரியால் துண்டு வெட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் போவதற்கு வந்திருப்பதாகக் கூறுவார். நாக்கூசாமல் பொய்சொல்வதுடன் நிற்காது, மற்றறவர்களையும் ஏமாற்றி அவர்களுடைய அனுதாபத்தையும் பெறப் பார்ப்பார்கள். இப்படி ஆயிரம் யாழ்தேவி யாழ்ப்பாணத்துக்கு ஒன்பதரை மணியளவில் போகும்பொழுது, ஆறுஅரை மணிக்கும் ஒன்பது மணிக்குமிடையில் ஒரு கோழித் தூக்கத்தோடு வாறதுக்குத்தான் இந்த வேஷம். ஏதோ இந்தளவுக்கு எங்களுக்கு செளகரியமாக இடம் கிடைத்தது போதும் இங்கு நோயாளிகள் இல்லை
இருவரும் பெரிதாகச் சிரித்தனர் பின்னர் கமலேஸ்வரன் கேட்டான். “என்ஜினுக்கு அருகில் உள்ள பெட்டியில் ஏன் ஆட்களைக் காணோம்?" "அதுவா தப்பித் தவறி ஏதும் நடந்தால் என்ஜினுக்கும் இரண்டு மூன்று பெட்டிகளுக்கும் தான் சேதம்வரும் என்று நம்மவர்கள் கணக்குப் போட்டிருகிறார்கள்"
"இதில் வாழப் பயமா? அல்லது சாகப் பயமா? "ஆண்டவனுக்குத் தெரியும்” திருஞானம் கூறிவிட்டுத் தங்கம்மாவைப் பார்த்தான். தங்கம்மா அவர்களின் உரையாடலில் கலந்துகொள்ளாமல் அதனைக் கேட்டு மெல்லச் சிரித்தபடி அமர்ந்திருந்தாள்.
ரமணனும் ரஞ்சனியும் ஜன்னலுக் கூடாகத் தலையை வெளியே நீட்டி புகையிரதப் பாதைகளையும் அவற்றில் வந்து போய்க்கொண்டிருந்த புகையிர தங்களையும் இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஊரிலே றெயில் இல்லை, இப்பவாவது பார்த்துக்கோ’ரமணன் ரஞ்சனிக்குக் கூற அவள் அவனுக்கு பெப்பே காட்டிவிட்டு, தங்கம்மாவின் மடிக்குள் முகத்தைப் புதைத்தபடி நின்றாள்.
யாழ்தேவி புறப்பட ஆயத்தமாகியதும் அமர்ந்திருந்த பெட்டியை விட்டுக் கீழே இறங்கிய கமலேஸ்வரனும் திருஞானமும், மேடையில் நின்றபடி ஜன்னலினூடாக தங்கம்மாவுடன் பேசிக் கொண்டனர்.
திருஞானம் சொன்னான் “தமிழ் வைத்தியம் செய்தபிறகு ஆங்கில மருந்தால் குணமாகியிருக்கிறது. வயிற்றோட்டமும் நெஞ்சுஅடைப்பும் பொல்லாத வியாதிகள். மறுதலித்தால் கஷ்டம், கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”
“எனக்கு ஒன்றுமே வராது நீ கவலைப்படாத தம்பி.” தங்கம்மா கூறிவிட்டு அமைதியானாள்.
132

யாழ்தேவி நகரத்தொடங்கியதும் ரமணனும் ரஞ்சனியும் அந்த இருவருக்கும் கையை அசைத்து விடைபெற்றுக் கொண்டனர். தங்கம்மா கண்களின் அடிவாரம் கலங்க, சிரித்த முகத்துடன் விடைபெற்றுக் கொண்டாள்.
திருஞானத்துக்கும் விடை கொடுத்துவிட்டு, எங்கெங்கோ சுற்றிவிட்டு இனிச்செய்வது என்ன என்ற யோசனையுடன் வீட்டுக்கு வந்த கமலேஸ்வரனுடன் கடுகடுப்பாக நடந்து கொண்டாள் செல்வராணி
பரமேஸ்வரிஅன்று பகல் முழுவதும் உணவின்றி அழுதுகொண்டே கிடக்கின்றாள் என்று அரைநாள் லிவில் நின்ற கணேசமணி கமலேஸ்வரனுக்கு தளதளத்துக் கூறியதும் கமலேஸ்வரனின் தொண்டையை ஏதோ அடைப்பது போன்றிருந்தது.
உறவோ, உரிமையோ அற்றவர்கள்தானே என்று எண்ணக்கூடிய பரமேஸ்வரியும் கணேசமணியும் ரமணனையும் ரஞ்சனியையும் பிரிந்துவிட்ட சோகத்தில் வாடிப்போயிருந்தனர். அங்கு நிலவிய சூழ்நிலையில் கார் ஒன்று அமர்த்திச் சென்று யாழ்தேவியிலிருந்து எல்லோரையுமே மீட்டு வரலாமா என்றும் எண்ணத் தோன்றியது.
“பிள்ளைகளை எங்களிடம் விட்டிருக்கலாமே கமலேஸ். பிள்ளை இல்லாத பாவியள்.நாங்கள் எப்படியும் வளர்த்தெடுப்போமே”
என்று கூறும் பொழுது கணேசமணியும் அழுதுவிடுவான் போலிருந்தது. “இல்லை கணேஷ் நான் வீட்டையும் விடுவதாக முடிவு செய்துவிட்டேன். செல்வரானிக்கும் இங்கிருக்கப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். என்று பட்டென்று கமலேஸ்வரன் கூறியது கணேசமணிக்கு அதிர்ச்சியையும் கவலையையும் கொடுப்பது போலானாலும் அவன் அதனை மறைத்துக் கொண்டான்.
பரமேஸ்வரியைத் தேற்றப் போதும் போதுமென்றாகியது கமலேஸ்வரனுக்கு. கணேசமணிக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூறவேண்டியவனானான் அவன்.
கமலேஸ்வரன் தனியே வருவதைக் கண்டதும் அழுது வீங்கிய முகமும் கலங்கிய விழிகளும் நீர் சிந்தும் நாசியுமாக நின்ற செல்வராணி படீர்' என்று உள்ளே சென்று கதவை அறைந்தாள். அவளுக்கு இருந்த வன்மமெல்லாம் கதவின் பேய் அலறலுடன் தீர்ந்ததுபோலிருந்தது அந்தக் காட்சி
"அந்தக்கிழட்டு மனிஷியோட அனுப்பின நேரம் எங்காவது கடலில் தள்ளியிருக்கலாமே!” என்ற செல்வராணியின் குரலைக் கேட்டதும் நஞ்சு குடித்தது போலிருந்தது கமலேஸ்வரனுக்கு. அவனுடைய நெஞ்சம் இரட்டிப்பலம் கொண்டு விசையுடன் அடித்தது. அதற்கேற்ப கால்களும் கைகளும் நடுங்கின. கணேசமணி குடும்பம் அந்த வேளை அங்கில்லாது விட்டால் கமலேஸ்வரன் எதுவும் செய்வான் போலவுமிருந்தது.
அவன் கத்தினான். "நீ பொத்து வாய் உன்னாலை பெறத்தான் முடிந்தது வளர்க்க முடியவில்லை. அதுகள் வளர்ந்து வாழவேண்டுமென்பதற்காகத்தான் அம்மாவோடு அனுப்பினேன். யாரை கிழட்டு மனுஷியென்று கேவலமாக நையாண்டியாகப் பேசுகிறாய்? தாயற்ற உனக்கு பிள்ளைப்பேறு முதல் அத்தனையும் பராமரித்து வைத்ததும் அந்தக் கிழந்தான். கண்டபடி பேசாதே நாக்குத் தெறித்தாலும் தெறிக்கும்."
“கண்டபடி பேசினால் நாக்குத்தெறிக்குமென்றால் இதுவரைக்கும் இந்த வீட்டில் எத்தனை நாக்குகள் தெறித்திருக்க வேண்டும்?"
“செல்.வராணி"
133

Page 77
ஆதிமூலமே என்ற யானை போலானான் கமலேஸ்வரன். கமலேஸ்வரனுக்குக் கோபம் உச்சமாக ஏறியிருந்ததையும் அலட்சியமாகப் பார்த்தாள் செல்வராணி. சற்று இடைவேளையில் எழுந்த பேரமைதியைத் தொடர்ந்து கண்களில்பட்ட தனது உடுப்புக்கள், புடவைகள், பொருள்கள், எல்லாவற்றையும் எடுத்து ஒரு சூட்கேஸிற்குள் இட்டாள் செல்வராணி
“என்னுடைய பிள்ளைகள் இருக்கமுடியாத இந்த வீட்டில் நான் மட்டும் எதற்கா இருப்பான்?"அவளுடைய அதரங்கள் பலவாறு முணுமுணுத்துக் கொண்டன.
“இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதிலும் கண்ட நிண்டவனுக்கு சேலைதிறந்து ஹோட்டல்களில் ஸ்றிப்டிஸ் நடனம் ஆடலாம். பேசுகிறதெல்லாம் பண்பாடு பற்றி செய்கிறதெல்லாம் அக்கிரமம். துணைக்கு புதுக்க ஒருத்தி கிடைத்தால் ஏற்கனவே கிடைத்தவளை வெளியே பிடித்துத்தள்ளி விடாமல் இப்படியா செய்வது? ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பொரிந்து தள்ளினாள் செல்வராணி,
கமலேஸ்வரன் அவள் என்ன பேசினாலும், எது செய்தாலும் ஒன்றும் பேசுவ தில்லையென்று முடிவோடு முற்றத்திற்கு வந்து சுவரோடு சாய்ந்து கொண்டான்.
கணேசமணியின் மிரட்டலின் பெயரில் செல்வராணியின் ஒல அரவம் கேட்டதும் வெளியே வந்த பரமேஸ்வரி உள்ளே முடங்கியிருந்தாள். கமலேஸ்வரனும், செல்வராணியும் பேசக்கூடியவை குடும்ப விஷயம் என்றும், அதில் எந்தக் கோணத்திலும் தாம்தலையிடக் கூடாதென்றும் கணேசமணி கண்டிப்பான உத்தரவிட்டிருந்தான்.
கமலேஸ்வரன் வெளியில் வந்ததும் இதுவரையும் வறாந்தையில் நின்ற பரமேஸ்வரி முகத்தைச் சுளித்தபடி உள்ளே சென்றாள்.
செல்வராணி அழுகையை நிறுத்தி வன்மங்கொண்ட முகத்துடன் பெட்டியொன்றைக் கையில் தூக்கியபடி வெளியேறிக் கொண்டிருந்தாள்.
கமலேஸ்வரன் எழுந்து குறுக்கிட்டு “எங்கே போகிறாய்?" என்று கேட்டான். “நான் எங்கேயும் போவேன்! ஆனால் என் பிள்ளைகள் இல்லாத இந்த வீட்டில் மட்டும் ஒரு நாளும் இருக்க மாட்டேன்” என்று அரற்றினாள் செல்வராணி
"நீ எங்கேயும் போவேன் என்று கூறுவதெல்லாம் நாளையிலிருந்து, என்னை வேண்டாம் என்று என்னையே அவமதித்த நிலையில் நீ வீட்டை விட்டுப் போகிற இந்த நேரத்திலும் எங்கெ போகிறேன் என்று கூறுவது ஒரு தர்மம், செல்வராணி நாளைக்கு உனக்கு ஏதும் நடந்துவிட்டால் அல்லது நீயே ஏதும் தீங்கைச் செய்துவிட்டால் பதில் சொல்ல வேண்டியவன் நான். நான் பதில் சொல்ல விரும்பாவிட்டாலும் சட்டமோ ஊரோ என்னைச் சும்மாவிடாது. அது தான் கேட்கிறேன். உன்னுடைய சொந்த ஊருக்குப் போகிறாயா? பிள்ளைகளைத்தேடி எங்கள் ஊருக்குப் போகிறாயா? அல்லது.”
"நான் எங்கேயும் போகவில்லை. ஆனால் இங்கே இருக்கமாட்டேன்" செல்வராணி முரண்டுபிடித்ததும், அவளுடைய கையிலிருந்த சூட்கேசை அவாக்கென்று பறித்தெடுத்த கமலேஸ்வரன் அவளையும் பற்றி உள்ளே தள்ளினான்.
இப்பொழுது அவன் கேட்டான். “பொய்யாகவோ உண்மையாகவோ ஓர் இடத்தைக் கூறாமல் இங்கிருந்து நீ ஒரு அடிதானும் நகரமுடியாது. கடைசியாகச் சொல்லி விட்டேன்.”
கமலேஸ்வரனுடைய கடுமை என்றுமில்லாதவாறு சென்றதும், அவள் சொன்னாள். “என்னை விரட்டி ஒன்றும் நடக்காது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, குடும்ப வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேன் என்பதற்காக உலகத்தில் உள்ள முட்டாள்
134

பெண்களைப் போல ஆறு, குளம், றெயில் என்று தஞ்சம் புகமாட்டேன். ஒன்று சொல்கிறேன், நான் யார் கெட்டாலும், யார் செத்தாலும் வாழ்ந்தே தீருவேன். எனக்கு இப்பொழுது என்னுடைய வாழ்க்கைதான் பெரிதாகப்படுகிறது. நான் யாருக்காகவும் வாழவோ, தியாகஞ் செய்யவோ, உயிர் விடவோ தயாராக இல்லை”
எனக்குஇந்தக்கதைகள்எல்லாம்வேண்டாம் நீபோகிறஇடம்மட்டும்தான்வேண்டும்" "அலுவலகத்தால் வரும்பொழுது இப்படி அக்கிரமம் நடக்குமென்று நினைத்தா வந்தேன்? ஏதோ போகிறேன். எங்கே போகிறேன் என்பது பின்னர்தான் தெரியும்.”
முதன்முறையாகத் தனது கன்னத்தில் விழுந்த பேரிடியொன்றை நடுங்குகின்ற கைகளால் தடவிப் போக்கிக் கொண்டாள் செல்வராணி
“சே! வெட்கம் கெட்ட வேலை இது உன்னையும் போய் ரோஷமுள்ளவன் அடிப்பானா?” கமலேஸ்வரன் விளுங்கிக்கொண்டே, தொடர்ந்து கேட்டான்.
"நீ எங்கே போகிறாய்?" செல்வராணி அழுதுகொண்டே நிசப்தமாக நின்றாள். கமலேஸ்வரன் கூறினான்: “ஊரறிய நாடறிய நடந்த நமது கல்யாணம் இந்தக்கணம் நீ என்னை விட்டுப் போனதும் முறிந்து விடும். உறவு முறிந்த பின்னும் நீ எனக்குச் சட்டப்படி மனைவிதான். அந்த மனைவி வீட்டிலிருந்தால் என்ன வேறு எங்கு இருந்தால் என்ன...பொறுப்பாளி புருஷன் தான். எனக்குச் சுமைகளைத் தந்தாய், கவலைகளை சுமத்தினாய்.ஏமாற்றமே என் வாழ்க்கை என்று ஆக்கினாய். எல்லாவற்றையும் என்னால் பொறுக்க முடிந்தது. இனியும் முடியும், ஆனால் பழியை மட்டும் என்னிடம் விடாதே, அந்தப்பழி என்னையே மட்டுமல்ல நான் சம்பந்தப்பட்ட எல்லோரையுமே அழித்துவிடும். நான் என்ன செய்வேன் என்பது பின்னர் எனக்குத் தெரியாது. அவ்வளவு தான்"
செல்வராணி புறப்படுவதே நோக்கமாக நின்றதால் அவனிடமிருந்து எப்படியாவது விடுதலைபெற்றுவிடவேண்டுமென்ற ஆவலில் அவன் கூறியபடி பொய்யைச் சொல்லியேனும் பிரியவேண்டுமென்று துடித்து அவள் முடிவாகச் சொன்னாள்.
“நான் எங்கே போவேன்? எனக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லையே. ஏதோ உழைக்கிறேன். அந்தப் பணம் எனக்குப் போதும். உங்களிடம் ஜீவனாம்சம் கேட்டும் வரமாட்டேன். எங்காவது ஒரு ஹாஸ்டலில் தங்கியிருக்க வேண்டியதுதான். நாள் வந்தால் டில்லிக்கும் போயேவிடுவேன் இது நிச்சயம்.”
“சரி இனி உன் இஷ்டம் குட்பை கமலேஸ்வரன் எங்கோ பார்த்தபடி கூறினான். அவனுடைய கை இது வரை தாங்கியிருந்த அந்த சூட்கேசை மெதுவாக மண்ணில்விட்டு, தான் அமர்ந்து கொண்டான்.
செல்வராணி அந்தச் சூட்கேசை எடுத்து ஒதுக்குப் புறமாக வைத்தபடி, குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவி அலங்கரித்து வெளியேறினாள்.
செல்வராணி புறப்பட்டுச் செல்லும்வரையும் பேசாதிருந்த பரமேஸ்வரி தனக்கு இடப்பட்டிருந்த உத்தரவையும் மீறுபவள்போல ஒடி வந்து கமலேஸ்வரனைக் கேட்டாள்.
“செல்வராணி எங்கே போகிறா?” “ஊருக்கு" உணர்ச்சியறக் கூறியபடி உள்ளே சென்றான் கமலேஸ்வரன். அவனுடைய கண்முன் தன் வாழ்க்கையே பாழாகிவிட்ட வர்ணப் புட்டிகள் பட்டு, அவனைப் பார்த்து சிரித்தன. கையில் அகப்பட்ட ஒரு வர்ணப் புட்டியை எடுத்து எங்கோ usuares sésorter sub(sususuysii.

Page 78
அவன் வீசிய அந்தப் புட்டி சுவரில் மோதுண்டு உடைந்து சிதறியது. சுவரில் யாரையோ வெட்டிச்சாய்த்த பொழுது பீறிட்ட இரத்தம்போல செவ்வர்ணக் குழம்பு சிந்தியிருந்தது.
கமலேஸ்வரன் தலையைப் பிய்த்தபடி கதவுடன் மண்டையை மோதினான் அப்பொழுது எழுந்த பேரொலியின் காரணம் புரியாது விழித்தனர் இருவர்!
அவனுடைய அதரங்கள் மறுபடியும், மறுபடியும், மறுபடியும் முணுமுணுத்துக் கொண்டன. குட்பை குட்பை குட்பை
அவனுடைய சிந்தனை விரிந்து பிய்ந்தது. இரு நண்பர்கள் கருத்து வேற்றுமை ஏற்படும்பொழுது பிரிவார்களேயானால் அவர்கள் பரஸ்பரம் விளக்கங்கொடுத்து அன்போடுதான் பிரிவார்கள் ஆனால் வாலிபந்தொட்டு காதலராக வளர்ந்த ஜோடி இடையில் ஏற்படும் மனத்தாங்கலால் பிரியும்பொழுது என்னை மறந்துவிடு'என்று மட்டும் கூறிப்பிரிந்து விடுவர்.
சே, எவ்வளவு அற்பமான பிரிவுகள்!
பிரிவு என்ற முடிவுக்காகத்தான் உறவு என்ற ஒன்றை ஆரம்பித்து அதில் உரிமை, பாசம், காதல், நட்பு என்றெல்லாம் பிதற்றி முத்திரை பொறிப்பதிலும் அந்த உறவையே ஆரம்பிக்காதிருந்தால் மனம் எவ்வளவு இலேசாக இருக்கும். சந்திப்பதற்கும், ஒருவரையொருவர் தெரிந்து கொள்வதற்கும், காதலிப்பதற்கும் பின்னர் பிரிவதற்குந்தான் இந்த உலகம் இருக்கின்றதென்றால், ஏன் இந்த உலகத்தையே நம்மிடமிருந்து பிரிக்கமுடியாது?
3
எதற்கெடுத்தாலும் “நாலுபேர் என்ன சொல்வார்கள்?" என்று கேட்டுக் கேட்டு அந்த நான்கு பேருக்குமாகவே அத்தனை ஜீவன்களும் வாழ்க்கையை நடாத்துகின்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டுவிட்ட ஒரு சாபக்கேடு.
வயிறு பசியால் வாடித்துடிக்க கண்கள் இமைகளுக்குள் சொருகித்தஞ்சம்வேண்ட, வாய் பிளக்க, நாவற்ற வாடும் ஒரு ஜீவனுக்கு உண்டு ஏப்பம் விட்ட பின்னரேனும் ஏதாவது உண்ணக்கொடுக்க வகையற்ற மனமற்ற பிரகிருதியும் அந்த நால்வருள் ஒருவன் தானே.
குடும்பம் ஒன்றாக வாழ்தால், ஐயோ அவர்களைப்போல இன்பமாக எங்கள் குடும்பத்தை நடத்த முடியவில்லையே என்று ஏங்குவதும் அந்தக் குடும்பம் எம்மைப்போலக் கெட்டழிய மாட்டாதா என்று நச்சுத்தன்மையில் பொறாமைப் படுவதும், நச்சரிப்பதும் அந்த நால்வரும் மற்றொருவன் அல்லவா? குடும்பம் கெட்டழிந்துவிட்டால் அந்தக் கேட்டுக்கு நூறு காரணங்கள் கற்பித்து மனம் ஆறக் காரணங்கள் பேசுவதும் அவர்கள் அல்லவா? ஆனால் வாழும் குடும்பங்கள் மென்மேலும் நன்றாக வாழவேண்டுமென்றோ, வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் மீண்டும் புதுவாழ்வு பெற வேண்டுமென்றோ யாரும் விரும்புவதில்லையே அல்லது அத்தகைய ஈடேற்றத்திற்காக எதுவும் செய்வதுமில்லையே
செல்வராணிக்கு நினைவுகள் தடம்புரள்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவள் சென்றுகொண்டிருந்த அந்த கோட்டை பஸ் வேகமாகச் செல்வதும் சடுதியாக நிற்பதுமாக இருந்த பொழுதுகளில் செல்வராணி தன்னைப் பாதுகாத்தபடி சூழப்பார்த்தாள்.
136

ஒருவரையொருவர் பகிரங்க இடங்களிலும் விட்டுப் பிரியமாட்டோம் என்ற தாம்பத்திய நெருக்கத் தொட்டுணர்வில் பெண்ணின் தோள்மீது சுற்றிவரக் கையிட்டு அவளுடைய அகம்மீது தன்னுடம்பு சாய்ந்து அந்த பஸ்ஸில் இருந்த சில சோடிகளை அவள் கண்டாள்.
செல்வராணிக்குச் சிரிப்பாக இருந்தது அவர்கள் ஒவ்வொருவரும் குடும்பமாயிருக்கையில் தன்னைப்போன்றே கண்ணீரால் காலத்தைத் தள்ளப்போகிறார்கள் என்று நினைத்த பொழுது ஒரு மன ஆறுதல் ஏற்பட்டது. தன்னுடைய வாழ்க்கை இவ்வளவு திருப்தியீனமாக மாறிவிட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்கள் கலங்கி வந்தன. இரண்டு வீதி விளக்குகளும் எரியத்தொடங்கியிருந்த அந்தப்பொழுதில் துணைகளுடன் தோளோடு தோள் பதித்து இன்ப சுகங்களில் உலகம் திளைத்துக் கொண்டு இருக்க யாரோ இட்ட சாபத்தால் பாதிக்கப்பட்டு தன்னந்தனியாக ஒரு ஹோட்டலில் அன்றைய இரவைக்கழிக்கத் தான் போய்க்கொண்டிருப்பதை எண்ணிய பொழுது நெஞ்சு அப்படியே கழன்று விழுந்தது போலாயிற்று.
செல்வராணி அழுதாள். அந்த பஸ்ஸில் யாருடைய முகத்தையும் நேரடியாகப் பார்க்க முடியாதவாறு அவள் அமர்ந்திருந்ததும் அவளுடையபின்னால் கொண்டையிலும்,பின்புறத்திலும் மட்டும் பஸ்ஸின் ஒளி விழுந்ததும் அவளுக்கு அழுவதற்குச் சாதகமாக இருந்தன.
ஒருவன் மீது நம்பிக்கையை வைத்தது குற்றமென்றால் அந்த நம்பிக்கைக்கே துரோகம் செய்வதை என்னவென்று சொல்வது காதலித்து ஊர்சுற்றி களவில் சேர்ந்து களிக்காமல் அவள் எவ்வளவு கட்டுப்பாடாக வாழ்ந்தாள். அவளுடைய கன்னிப்பருவத்தில் ஏற்பட்டுவிட்ட சோதனைகள் தான் எத்தனை? அத்தனை சோதனைகளில் ஒன்றிலேனும் அவள் தவறியிருந்தாலும் இந்தளவுக்குக் கவலைப்பட்டிருக்க மாட்டாள்!
தன்னுடையவை என்று தான் பேணி வைத்த அத்தனையுமே புத்தம்புதிதாக கமலேஸ்வரனிடம் ஒப்பித்து அவனே தானாய் தானே அவனாய் அவள் வாழத் தலைப்பட்டதும், வாழவேண்டுமென்று துடித்ததும் பழைய கதைகளாகி விட்டனவே.
செல்வராணி பொருமினாள். எந்த ஓர் ஆணும் தன் மனைவியை ஆதாரமில்லாமல் குற்றஞ் சாட்டினால், அன்பு கிஞ்சித்துமின்றி வெறுத்தால் அவனுடைய தேவைகள், நோக்கங்கள், ஆசைகள் எவையென்று அறியாமலும் அறியத்துடிக்காமலும் அவற்றை இயல்புக்கேற்ப வேனும் நிறைவேற்றாமலும் இருந்தால், அந்த ஆணுக்கு அவள் மனைவி என்று சொல்லிப் பெருமைப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? மனைவியை அவன் வெறுப்பானானால் அவனுக்கு வேறு ஒருத்தியின் துணை கிடைத்துவிட்டது அல்லது கிடைப்பாள் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது என்றும் அர்த்தம் அல்லவா? ஆனால் ஒரு மனைவி தனது கணவனுக்குச் செய்ய வேண்டியவற்றிலிருந்து தவறினால் அதற்கு என்ன அர்த்தம்?
கணவனுடைய தார்ப்பரியப் போக்குகள் மாறுபட்டு விட்டன என்று அர்த்தமா? கணவன் தன்னிச்சையாக மனைவியின் இஷ்டத்துக்கு மாறாக நடக்கத் தொடங்கினால் திருத்த வேண்டியவள் மனைவிதானே.
கமலேஸ்வரன் செய்த குறைகள் என்ன? செல்வராணி தன்னையே கேட்டுப் பார்த்தாள். அவளுக்கு ஒன்று இரண்டு குறைகள் என்று கணக்கிட முடியாமல் குறைகளின் உருவமே கமலேஸ்வரன் என்று மட்டும் எண்ணத் தோன்றியது, அதிற் பிறந்த வெறுப்பில் அவன் எப்படியாவது நாசமாகப் போனாலும் இனி அவனுடைய முகத்தில் விழிப்பதில்லை என்றும் அவள் அப்பொழுது சங்கற்பஞ் செய்து கொண்டாள்.
37

Page 79
அவள் பஸ்ஸை விட்டு இறங்கி ஒரு ஹோட்டலை நோக்கி நடக்கும் பொழுது கால்கள் தயங்கின, அடிபட்டு விறைத்துப்போன அவளுடைய பெண்மனம் எதுவும் நடக்கட்டும் அதனை எதிர் கொள்ளத் தயார் என்று இயங்கிக் கொண்டிருந்தது.
வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும், உள்நாட்டு தனவந்தர்களும் ஒருங்கே சங்கமமாகி உயர்வான குடிவகைகளை உயரிய முறையிலேயே பருகிக் கொண்டிருக்க மனேஜர், பையன்கள், வெயிட்டர்கள் எல்லோருமே எல்லாக் கோணங்களிலும், அம்சங்களிலும் அவளைப்பார்த்து ஏதேதோ நினைக்க, குனிந்த தலையுடன் உள்ளே சென்றாள் செல்வரானி அவள் அப்படிச் சென்று கவுண்டரில் அமர்ந்திருந்த மனேஜரைப் பார்த்து தனக்கு இரவு தங்குவதற்கு ஒர் அறை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டபொழுது அவளைத் தொடர்ந்து யாராவது வந்திருக்கிறார்களா என்று வெளிக் கதவுவரை தன் உள் விழுந்த விழிகளை வீசிய அவர், அவள் மீது புன்னகை வீசியபடி, “அறை இருக்கிறது. அட்வான்ஸ் கொடுக்கிறீர்களா?” என்று கூறிக் கேட்டார்.
அந்தப் பெரியமிகத்துப்பரவான ஹோட்டலுக்கு எத்தனையோ சிறிய அசிங்கமான மனிதர்கள் எல்லாம் வந்துபோயிருக்கிறார்கள். தளுக்கும், மினுக்குமாக வரும் சிலபெண்கள் தங்கள் வேலைமுடிந்ததும், அத்தோடே கலைந்துவிட்ட வேஷத்தையும் பொருட்படுத்தாமல், பொலிசார் வந்து தேடுவதற்கு முன் போய்விட வேண்டுமென்ற அவசரத்தில் வந்த வழிக்கும் தெரியாமல் விழுந்தடித்து ஒடுவதும், அவர்களைப் பற்றிக் கதை கதையாக சிப்பந்திகள் பேசுவதும், சிரிப்பதும் அந்த மனேஜர் கண்டு கேட்டு அலுத்துவிட்ட விஷயங்கள்.
வெளிநாட்டிலிருந்து இலங்கை அழகிகளை வந்து பாருங்கள் என்ற விளம்பரத்தைத் தொடர்ந்தோ, என்னவோ புறப்பட்டு வரும் உல்லாசப் பிரயாணிகள் வரலாற்றுப் புகழ்பெற்ற தலங்கள் எங்கே இருக்கின்றன என்று கேட்காமல், அவர்களுட் சிலர் ஹோட்டல்களில் தங்கி அங்கு சில விஷயங்களை ஆக்கக் கூடியவன் என்று தம் மனதில் படும் ஒரு சிப்பந்தியை அணுகி “ஒன்று வேண்டும் அசலாக இருக்கட்டும்" என்று கூறி, அவனுடைய கையில் கள்ள மார்க்கட்டில் நல்ல விலை போகக் கூடிய ஒரு டாலரையோ, சிலிங்கையோ திணிப்பதுதான் முதல் வேலையாகக் கொண்டிருப்பார்கள்.
இவ்வளவுக்கும் அந்த வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிக்கு வேறு இடம் கிடைக்காமல் இங்கு வந்தான் என்பது அர்த்தமல்ல. ஆனால், இதற்கென்றே விளம்பரங்கள் செய்யப்படும்பொழுது,குப்பையோ சப்பையோ அதில் என்னதான் இருக்கிறது என்றுருசித்துப் பார்க்க அவர்களுட் பலருக்கு ஆசை.
அப்பொழுதும் அந்த எண்ணங்களில் திளைப்பதால், அவள் உள்ளே ஓர் அறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில்அவளைத் தமக்கு முன்னரே தெரியும் என்பதை உணர்த்துபவர்களைப் போல, செல்வராணியைப் பார்த்துச் சிரித்து விழிகளால் குசலமும் விபரித்துக் கொண்டனர்.
இவை யாவற்றுக்கும் மசியாத நிலையில் செல்வராணி நடந்து சென்றது அங்கிருந்த பலருக்கு ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்தது. வெளிநாட்டவர்களை வலிந்து அழைத்து தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தால் ஆங்கிலத்தின் மானத்தையும் உயிரையும் ஒரேயடியாக ஒரேநேரத்தில் வாங்கத் திராணி பெற்றிருந்த ஒருவன், தான் ஒரு வெள்ளையனுடன் அடித்துக் கொண்டிருந்த ஜம்பக் கதைகளை நிறுத்தி செல்வராணியைப் பார்த்து அறிமுகச் சிரிப்பு சிரித்தபொழுது, அவள் விறைத்தபடி சென்றதைப் பார்த்து விட்ட பலரும், அந்த வெள்ளையனும் மிக்க பலமாகச் சிரித்தனர். ஏளனமும், கிண்டலும், போதையும்
138

கலந்த அந்தச் சிரிப்பை உணர்ச்சியற்ற தனது சிரிப்பால் ஒருவாறு அடக்கிவிட்ட அவன் தன்னோடிருந்த வெள்ளையனை விரல்காட்டி முன்னர் அழைத்து.
“டோன்ட்.வொறிசேர். ஐ. கியர்.ஐநோ. ஹேர். ஷி.இஸ் ஏரமில்.ஐ வில் செற் ஹேர்.” றைற். யூ.கோ அன்ட் டூ த பெஸ்ட்.
செல்வராணியை முதலில் கண்டதும் வடஇந்தியப் பெண்களின் உருவ அமைப்பில் உள்ள அழகி என்று மட்டும் நினைத்து அவளையே பார்த்தபடி இரண்டு சிப் அருந்திய அந்த வெள்ளைக்காரன் இப்பொழுது எண்ண அலைகளில் மிதந்தபடி புகையை ஊதி, ஊதித் தள்ளினான்.
"நீ இதனை ஒழுங்குசெய்து கொடுத்தால் உனக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசு கொடுக்கிறேன்.” ஆங்கிலேயன் தனக்கு ஏற்பட்ட அந்தப் புதிய ஆசையை நாகரீகமாக வெளிப்படுத்தி, போதை ஏற்றியிருந்த அவனுக்கு ஆசையையும் ஊட்டிவிட்டு அமைதியானான்.
அன்று காலை அலுவலகத்துக்குப் போவதாகக் கூறிவிட்டு அந்த ஹோட்டலின் முன் இருக்கை அறையில் கையில் வைத்திருந்த பழைய வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகையை விளங்கியும் விளங்காமலும் புரட்டி பூசிக்காட்டிவிட்டு, பின்னர் அங்கு வரும் ஒரு சில வாடிக்கையாளர்க்கும் பூச்சி காட்டி விட்டு மாலை நான்கு மணிக்கே வீட்டுக்குக் கற்போடு செல்லும் பெண்களை எண்ணி, அவர்கள் சமூகத்துக்குப் பயந்து கட்டுப்பட்டவர்கள் என்று அனுதாபப்பட்ட மனேஜர் மிக அருமையாகச் செல்வராணி போன்று அங்கு வருபவர்களைச் சற்று துணிச்சல் மிக்கவர்கள் என்றே நினைத்தார்.
அவருக்கு இருப்புக் கொள்ளாதது போன்று உணர்வு ஏற்பட்டது. இத்தனை அழகும் இவ்வளவு கட்டும் உள்ளவளுடன் பேசிக் கொண்டிருப்பதே இன்பம் போன்றிருந்தது அவருக்கு. அந்தப் பட்டறையிலே நாளும் பொழுதும் அமர்ந்து, அமர்ந்து இருந்து, மதுப் போத்தல்களின் நெடியிலும், கம்மென்று வீசும் காற்றாடிக் காற்றிலும், நினைவுகளிலும் சூடு ஏறியிருந்த அவனுடைய நாற்பத்தெட்டு வயது உடம்புக்கு, ஜில்லென்று குளிர் நீரில் தொம் என்று விழுந்தது போலிருந்தது செல்வராணியினுடைய வருகை.
செல்வராணி பர்சைத் திறந்து ஐம்பது ரூபாத்தாளை எடுத்து அட்வான்சாகக் கொடுத்த வேளை, அவர் இருபது ரூபாவை எடுத்துக் கொண்டு அவளுடைய கையில் மீதம் முப்பது ரூபாவையும் கொடுத்த பொழுது, அவளுடைய விரல்களைத் தன் கை ஸ்பரிசித்ததை நினைத்து, ஏதோ மூச்சைப் பிடிப்பவர் போல நாசியருகே தனது கையைக் கொண்டு சென்றார். அப்பொழுது இலேசாக வீசிய ஒரு வாசம், முழுமையாகி திருமதி கமலேஸ்வரன் என்ற அவளே தன்தாடையை வருடுவது போன்ற மயக்கத்தில் ஆழ்ந்தார் அவர்.
அந்த ஹோட்டலின் நடுமண்டபத்தின் சுவரில் தொங்கவிட்டிருந்த கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்ந்ததும் செல்வராணிக்கு இரவுச்சாப்பாடு ஏதும் வேண்டுமா என்று கேட்பதற்காக அவளுடைய இருபதாம் இலக்க அறையை நோக்கி எழுந்து சென்றார் மனேஜர். அறைக்கதவை அவர் தட்டும் பொழுது, இனம்புரியாத முறையில் தன்னுடைய நெஞ்சை யாரோ தட்டுவது போலவும், அந்தத் தட்டலைத் தாங்காது அவருடைய நெஞ்சம் டக்டக்கென்று அடித்துக் கொள்வது போலவும் இருந்தது. ஒருகையால் நெஞ்சைத்தடவி விட்டுக்கொண்டு மறுகையால் தொடர்ந்தும் தட்டினான் மனேஜர்.
யேஸ். என்றபடி இரவு உடுப்புடன் நின்ற செல்வராணியைக் கண்டதும் செருமிக் குரலைச் சீர்ப்படுத்திய மனேஜர் சிரித்துக்கொண்டார். இடம்தேடிவந்த அந்தச் சிரிப்பை மதிக்கும் உணர்வில் செல்வராணியும் சிரித்ததும் இரசனையில் மூழ்கியமனேஜர் கல்லானார்.
139

Page 80
“உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று செல்வராணி கேட்டதும், கனவிலிருந்து கலைக்கப்பெற்ற மனேஜர், “இல்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க வந்தேன்." என்று இழுத்தார்.
“பையனை அனுப்புங்கள்.”என்று கூறிமுடிக்கு முன்னரே செல்வராணி கதவை மூடினாள்.
ஒருகணத்துள் அவருடைய மனம்பட்ட இன்பம் இப்பொழுது ஏமாற்றமென்ற நச்சுத்துளி விழுந்ததால் சோகமாக, மனேஜர் வந்த வழியே, அலுப்புடன் திரும்பி நடந்தார். மனேஜருடைய எதிர்பாராத அந்தச் செய்கையை அவதானித்த சிப்பந்திகள் அவருடைய வருகை சோகமாக இருந்ததைக் கண்டதும் முதலில் அதனை நம்பாதவர்கள் போல ஒருவரையொருவர் பார்த்து அமைதியாக நின்றாலும், அவர் தங்களைத் தாாண்டிக் கவுண்டருக்குச் சென்றதும் கொல்லென்று சிரித்தனர்.
“உங்களுக்கு என்னடா சிரிப்பு? வேலையைப் பாருங்களன் வேலையை" என்று மனேஜர் முழங்கிய சிங்களம் அவர்களின் செவிகளில் சங்க நாதமாக ஒலித்ததும், அந்தச் சிப்பந்திகள் மூவரும் அமைதியானார்கள்.
“அறைநம்பர் இருபதுக்கு. என்ன வேண்டுமென்று கேள்.” என்று மனேஜர் கூறியதும், அப்படியொரு உத்தரவுக்காக எதிர்பார்த்து நின்ற ஒரு சிப்பந்தி ஒட ஆயத்தமாகியதும், அவனைத்தடுத்தமற்றொருவன் உம். உம் உன்னுடையதுமுதலாம்மாடி இது இரண்டாம்மாடி அறைகளைக் கவனிப்பது தனது வேலை என்பதைக் காட்டுவது போல், பெருவிரலை நெஞ்சுக்கு நேரே காட்டி இரண்டுமுறை அசைத்தான்.
செல்வராணி தங்கியிருந்த அறை மறுபடியும் தட்டப்பட்டதும், இதுவரை கட்டிலில் புரண்டு அழுது வடிந்த அவள், கண்களை அவசரமாகத் துடைத்தபடி எழுந்து வந்து கதவைத் திறந்து, அதனை ஒரு கையால் பிடித்தபடி, சுவருடன் தன் முழுப்பாரத்தையும் மோதிநின்றாள். "அம்மா ஏதாச்சும் வேணுங்களா” என்ற குரலைக் கேட்டு முதலில் வியப்போடு நோக்கிய செல்வராணி. அவனைப் பார்த்து தானே வலிந்து சிரித்தபடி கூறினாள்.
"நீங்களா இந்தப் புளோருக்கு. இந்த றுாமை யாரும் கண்டபடி தட்டாமல் பார்த்துக் கொண்டால் போதும். உங்களுடைய பெயர் என்ன?”
“சிவன்."என்று உடனடியாகக் கூறிய அவன், அவளுடைய முகத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு “இது தான் முதல் தடவையாக வாரீங்களா?" ஏம்மா ஒரு மாதிரி இருக்கிறீங்க. ஐயோ. அழுறிங்களே. என்று கலங்கியபடி கூறினான்.
"இல்லை சிவன் நீங்கள் நான் சொன்னதைச் செய்தால் போதும் வேறென்ன?” “சாப்பிட ஏதாச்சும் கொண்டரட்டுங்களா?” “எனக்கு ஒன்றும் வேண்டாம்" “குடிக்க.." சிவன் குழந்தை போலக் கேட்டுக் கொண்டு நிற்பதைப் பார்க்கச் செல்வரானிக்குப்பரிவு எழுந்தது. தான் கலங்குவதைக் கண்டதும் அவன்பதறக் கேட்டதும், அனுதாபமாகத் தன்னைப்பார்த்ததும் ஆனந்தமாக இருந்தன. அவனுக்காகவேனும் ஏதாவது குடிக்கவேண்டும் என்று அவள் நினைத்து, “கோப்பி கொண்டுவாருங்கள்” என்றாள். எதனையோ திடீரென நினைத்துக் கொண்டவள் போல, “கொஞ்சம் நில்லுங்கள்” என்றபடி உள்ளே சென்று தனது பர்சைத் திறந்து ஐம்பது ரூபாத்தாளை எடுத்துவந்து அவனிடம் கொடுத்தாள். அதனை வாங்கிக் கொண்டே சிவன் கூறினான்.
"அவங்க கணக்கிலே போட்டுக்குவாங்க. போறப்போ குடுக்கலாம்.”
140

“வேண்டாம் நீங்கள் காசு கொடுத்தே வாங்கி வாருங்கள். மீதத்தை நீங்களே வைத்திருங்கள்.” செல்வராணி மெல்லிதான கண்டிப்புடன் அழுத்தம் திருத்தமாகக் கூறியதும், சரிம்மா' என்றபடி நகர்ந்தான் சிவன்.
போகும்பொழுது, சிவனுடைய அதரங்கள் தமக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டன.
"ஆச்சரியமா இருக்கே, நாப்பதுருபா அறையெடுத்து ஐஞ்சுபத்துரூபாவுக்குக்கூட குடியிருப்பாங்கள், இந்த அம்மாளைப் பார்க்க அப்படித் தோணல. கம்முன்னு நாலு ரூபா அறுபது சதத்தை என்கிட்டே தள்ளிப்புட்டாவே."
4
கமலேஸ்வரன் மிகப்பெரிய சமூகத் தீங்கொன்றைச் செய்து விட்டான் என்ற மனக்கசப்பில் பரமேஸ்வரி அவனைக்கண்ட போதெல்லாம் முகத்தை எங்கோ வைத்துக்கொண்டு சென்றாள். எதிர்பாராத விதமாக அவனைச் சந்திக்க நேர்ந்தபொழுது கணேசமணி மிகவும் பிரயர்த்தனப்பட்டுச் சிரித்துக் கொண்டானே தவிர எந்தவிதமான பேச்சுக்கும் இடங்கொடுக்கவில்லை.
ரமணன் ரஞ்சனி இருவரும் ஒடிப்பிடித்து விளையாடி புழுதிகிழப்பியிருந்த அந்தச் சின்னஞ்சிறு முற்றம் இப்பொழுது களை இழந்து கிடந்தது. கமலேஸ்வரன் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த வீடு எந்நேரமும் இருள் படர்ந்ததாகக் கிடந்தது. பூத்துக்குலுங்கிய சோலையைப் புயலடித்துச்சாய்த்துவிட்டதுபோன்ற காட்சியாக அந்த இடம் காண்பவர்களுக்குத் தென்பட்டது.
கடற்கரையில் கட்டியெழுப்பிய மண்கோட்டைகளை எம்பி வந்த அலைகள் ஒரேயடியாக ஒரேநேரத்தில் இடித்துக்கரைத்துவிட்ட சோகம்போன்று, செல்வராணியின் பிரிவும் அவனை ஒரேயடியாகக் கரைத்துவிட்டிருந்தது. கடந்த கிழமையில் ஒரு நாள் மாலை அவன் வீட்டை விட்டுப்புறப்பட்டபொழுது சிறிதும் கலங்காமல் வன்மமும் கோபமும் நிறைந்து வழிய இதயத்தைப் பலமாக்கியிருந்த கமலேஸ்வரனுக்கு அவளுடைய பிரிவு என்னவோ போலிருந்தது.
குருடனாகப் பிறந்தவன் வாழ்நாள் முழுவதுமே குருடனாக வாழ்ந்து தீர்த்தால் அவனுக்கு பார்வை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் நிறைந்த குறை மட்டுமே இருக்கும். ஆனால் பிறவிக்குருடன் இடைவயதில் கண்பெற்று, இந்த உலகத்தின் இன்பக் காட்சிகளையெல்லாம் மெய்மறந்து இரசித்திருந்த வேளை, மறுபடியும் பெரிதென எழுந்த மின்னல் வெட்டி பெற்றிருந்த தன் கண்களை இழப்பதென்றால் அவனால் பொறுக்கக்கூடிய விஷயமா? பெண் என்றால் தாய் என்று மட்டும் ஒருவன் வாழ்ந்து விட்டால் அவனுக்குப் பெண்சகோதர பாசமோ மனைவி அன்போ உருவாக மாட்டாது. மற்றப் பெண்களும் தாயைப் போன்றவர்கள்தான் என்று அமைதியாகி விடுவான் அவன். பெண்ணிலே ஆரம்பமாகி பெண்ணோடு சங்கமமாகி இதுவரை களிப்புடனோ வெறுப்புடனோ கழிந்து போன வாழ்வை ஒருமுறை எண்ணியபொழுது அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
பேயோடு பழகிவிட்டும்பிரிவது கஷ்டமென்று கூறுகின்ற நிலையில், பெண்ணோடு பழகி அவளோடு வாழ்ந்து அவளைப்பிரிவது என்பது அவனைப் பொறுத்த வரையில் சங்கடமான காரியமாகவிருந்தது.
141

Page 81
சிரங்கு கொடியதுதான், ஆனால் அதனால் உண்டாகும் அரிப்பைச் சொறிந்து கொள்வதன்மூலம் ஏற்படும் ஒர் அற்ப இன்பத்தைஅந்தச் சொறிவால் பின்னர் ஏற்படும் எரிவை நினையாது அனுபவிப்பவர்கள் இல்லையா? செல்வராணியும் அடிக்கடி அவனுக்கு ஒரு சொறியாகி விட்டதால்அந்தப்போதில் அவன் நடந்து கொண்ட விதம் இப்பொழுது எரிவை கொடுத்துக் கொண்டிருந்தது.
விளக்குகள் எல்லாம் அணைந்த நிலையில் தனியே கிடந்து யன்னலுக்கு ஊடாகத் தெரிந்த வானத்தை வெறித்தான் கமலேஸ்வரன்.
நிர்மலமாக இருளில்கிடந்த அந்த வானத்தில் எத்தனை, எத்தனை விண்மீன்கள் வந்து வந்து போய்க்கொண்டிருக்கும் நிலவு வந்து இன்று எத்தனையோ நாட்களாகிவிட்டன. மாலை வந்ததும் சிரித்தபடி எழுந்து வந்து குளிர்த்தென்றலோடு குதுரகலம் ஊட்டிய அந்த நிலவும் இந்த வானத்தோடு கோபித்துக்கொண்டு எங்கோ போய்விட்டதா?
கமலேஸ்வரன் புரண்டு படுத்தான். அவனுக்கு ஏதாவது புகைக்க வேண்டும் போன்றிருந்தது. தெருவிளக்கின் ஒளி அந்த அறைக்குள் விழாதபோதும் ஆள்நடமாட்டம் மட்டும் தெரியக்கூடிய அளவில் அந்த அறையில் 'ஒளி' இருந்ததால் அவனால் எழுந்து சிகரட் பாக்கட்டைத் தேடமுடிந்தது. ஆறு ஏழு பாக்கட்டுகள் அங்குமிங்குமாக மேசையிற் கிடந்தும், அவற்றுள் ஒன்றில் ஒரு சிகரட் தானும் இல்லாதது பெரும் ஏமாற்றமாகியிருந்தது. மாலையில் ஒரு கப் டி குடிக்க வேண்டுமென்ற நெஞ்செரிவில் வெளியே காலி வீதிக்கடைக்குச் சென்றிருந்த பொழுது இரண்டு பாக்கட்டுகள் வாங்கி வந்தும் அவை தீர்ந்து போயிருந்தன.
எழுந்து எங்காவது போய் வாங்கி வரலாமா என்று மனம் எழுப்பிய கேள்விக்கு சம்மதம் கொடுக்க முடியாமல் எல்லோரும் உறங்கிய பின்னர் இராக் கடையொன்றை நோக்கி நடக்கலாம் என்று மட்டும் அவன் அப்பொழுது எண்ணியபடி, கட்டிலைச் சுற்றி விதைக்கப்பெற்றன போல் கிடந்த மஞ்சள் பில்டர் சிகரட் துண்டுகள் மீது நோட்டம் விட்டான்.
பார்வையில் எல்லாம் முடிவுவரை எரிந்து தீய்ந்திருப்பது போலப்பட்டதும் விளக்கைப் போட்டு நிலத்தில் தேடினான் கமலேஸ்வரன் கட்டிற் காலுடன் அணைக்காமலே வீசியிருந்த ஒரு சிகரட் துண்டைக் கண்டதும் ஆனந்த உணர்வில், அதை எடுத்து பற்ற வைத்து ஒரு தம் இழுத்தான். அப்பொழுது உணவொன்றும் உட்செல்லாததால் ஒன்றோடு மற்றொன்றாக ஒட்டியிருந்த குடல் ஓரங்கள் பிய்ந்து விடுவன போன்று எரிந்ததும், குழாயடிக்குச் சென்று கையிலேந்தியபடி தண்ணிரைக் குடித்துவிட்டு, ஈரம் பட்ட கையை அணிந்திருந்த சாரத்துக்குள் புதைத்துத் துடைத்தபடி, அந்த சிகரட் துண்டின் புகையை ஆவலோடு இழுத்தான்.
அவனுக்கு ஓரளவு பசி அடங்கியது போன்ற உணர்வு. நேற்றைய தினம் செல்வராணியின் நிலைபற்றிக் கேள்விப்பட்டதும், அவனுக்கு ஒரு விதத்தில் ஆறுதலாகவும் இருந்தது. அவள் மோகன் ராயின் உதவியின் பெயரில் ஒரு வீட்டில் தனியறையொன்றில் வாழ்ந்து வருகிறாள் என்று அவன் அறிந்து கொண்டான். செல்வராணி வேலைக்குச் செல்கிறாளா என்பதை அறியும் ஆவலில்
142

மோகன்ராய் அன்ட் கம்பெனிக்குப் போன் செய்து, சொல்வராணியை விசாரித்தான். தொலைபேசியை இயக்கிய பெண் அவள் டைரக்டரின் அறையில் 'பிஸி” யாக இருப்பதாகவும், சற்று தாமதித்து தொடர்பு கொள்ளும் படியும் கூறியதும், அவள் கொழும்பிலேயே எங்கோ இருப்பதாக எண்ணி அமைதியானான். பின்னர் அந்தப் பெண்ணிடம் கமலேஸ்வரன் தன்னை செல்வராணியினுடைய சகோதரன் என்று அறிமுகப்படுத்தி அவள் புதுவிட்டு விலாசம் என்ன என்று கேட்ட பொழுதுதான் அந்தப் பெண் சொன்னாள்.
“மிஸிஸ் கமலேஸ்வரன் பழைய வீட்டில் இல்லை. கொள்ளுப்பிட்டியில் ஒரு வீட்டில் அறை எடுத்து இருக்கிறார். மிஸ்டர் கமலேஸ்வரன் யாழ்ப்பாணத்துக்கு வேலையாகிச் சென்று விட்டதுதான் காரணம்.”
ஒரு குடும்பம் ஆணின் கேவலமான நடப்புக்களால் கெட்டாலும், பிரிந்தாலும் அதைப்பற்றிப்பேச ஒருவரும் இருக்கமாட்டார்கள் அந்தக் குடும்பம் அதன் தலைவியான பெண்ணால்த்தான் கெட்டது, அல்லது பிரிந்தது என்று மட்டும் கூற ஆயிரம்பேர் இருப்பார்கள். செல்வராணியும் தனது குடும்பம் பிரிந்ததை பிறர் அறிந்தால் அந்த அவப்பெயர் தன்னால்த்தான் ஏற்பட்டது என்று கணக்குப் போட்டுக் கொள்வார்கள் என்பதை நினைத்தோ, எண்ணவோ நம்பக்கூடிய முறையில் புதிய கதையைப் பரப்பியிருக்கிறாள்.
கொலைகாரனே தான் நிரபராதி என்று நிரூபித்துக் காட்ட வழிவகைகள் இருந்தாலும் ஒரு பெண் தான் கற்புடையவள் என்பதை உண்மையாகவே நிரூபிக்க எந்த மார்க்கமும் இல்லை. அதனால் தானோ என்னவோ பெண்ணைக் கெட்டுவிட்டாள் என்று வாய்க்கு வந்தபடி கூறிவிடுகிறார்கள். அப்படி வசைவைக்கப்டடவள், தான் நிரபராதி என்று எப்படி நிரூபிக்கமுடியும். ஊர்க் கதைகளுக்காக நெஞ்சு பொசுங்கி வேதனையில் நைந்து போவதைத் தவிர அவளால் வேறு என்ன செய்ய முடியும்?
செல்வராணியும் தன் ஆசைகள் எதுவாயிருந்தாலும், அவள் வரையில் முடிந்துவிட்டதான ஒரு கதை அப்படி முடிவதற்கு அவளே முழுக்காரணமாகவும் இருக்கவில்லை என்பதையே நம்பவைக்கத் துடித்தாள்.
இனம்புரியாத அசுரதுணிச்சலில் ஹோட்டலில் தங்கச் சென்றிருந்த அன்றொருநாள் இரவை அவள் அடிக்கடி நினைத்தபொழுது உடலெல்லாம் நடுங்கியது.
சிவன் என்ற அந்தச் சிப்பந்தியின் சகோதர உதவி இல்லாவிட்டால் அன்று அவள் பலருக்கு இரையாகியிருப்பாள் என்று எண்ணிய பொழுது உரோமக்கற்றைகள் சிலிர்த்து வந்தன.
ஒருவன் அவளின் அறைக்குப் பக்கத்து அறையிலிருந்து பல்கனி வழியாக யன்னலருகில் வந்து நின்றுடக் டக் என்றுதட்டியதும் இரகசியமாக அவளை அழைத்ததும் எவ்வளவு கேவலமான காரியம் என்று அவள் பொருமினாள். அந்தக் ஹோட்டலுக்கே பொறுப்பான மனேஜர் சட்டத்தைப் பாதுகாக்காது சட்டத்தை மீறுபவனாக நடந்து கொண்டதும் அவளுக்கு வெறுப்பை ஊட்டியது. எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் விடியும்வரை இருந்துவிட்டு நேரே ராயிடம் தஞ்சம் புகுந்ததும் அவனின் சிபார்சின் பெயரில் ஒரு வீட்டில் உடனடியாக அறைகிடைத்ததும் அவள் நினைவில் வட்டமிட்டன.
4.

Page 82
மோகன்ராயை நினைத்த பொழுதெல்லாம் அவன் செய்யும் உதவிகளுக்காக எந்த விதத்திலும் நன்றி செலுத்தலாம் போன்றும் செல்வராணிக்குப் பட்டது.
அப்பொழுதும் மோகன்ராய் அவள் முன்பு அதிகாரி என்ற தோரணையை மறந்து உள்ளத்துக்குள்யேயும் புகுந்து மிக மிக நெருங்கி விட்டவனாகி எவ்வளவு அன்போடும் இனிமையோடும் பேசிக் கொண்டிருந்தான்.
அவளுடைய ஒவ்வொரு கதையையும் அவன் எவ்வளவு ஆறுதலாகக் கிரகித்தான், எவ்வளவு அமைதியாகப் பதிலுரைத்தான்!
“பாஸ் போட் எல்லாம் எடுத்தாயிற்று, வீட்டைவிட்டு வேறு கிழம்பியாயிற்று இனி என்ன? புறப்பட வேண்டியதுதானே"மோகன்ராய் கேட்டதும் செல்வராணி சற்றுத் தயங்கி, பின்னர்சிரித்து அந்தத் தயக்கத்தின் உட்பொருளைச் சமாளித்தபடி போகலாம் அதற்கு என்ன?" என்றாள்.
'எனக்கு ஒவ்வொரு நாள் போவதும் பெரிய கஷ்டமாக இருக்கிறது. இழந்து போன என்னுடைய இல்லற வாழ்க்கை எப்பொழுது மறுபடியும் ஆரம்பிக்கப் போகிறதென்று துடியாய்த் துடித்து ஏங்குகிறேன்.
"ஆசையும் மனமும் இருந்தால் நிச்சயம் வழிபிறக்காமலா விடப்போகிறது?” செல்வராணி கூறியதும்,'அப்படியா? என்று கேட்டபடி அவளுடைய கைகளைத் தாவிப்பிடிக்க உந்திய மோகன்ராய் திடீரென்று எதனையோ நினைத்துக் கொண்டவன் போல அந்த முயற்சியை நிறுத்திவிட்டு மேசையில் இருந்த கோலிங் பெல்லையெடுத்து இலாச்சிக்குள் திணித்தான். பின்னர் செல்வராணியைப் பார்த்துச் சிரித்தபடி “எங்களுடைய வில்லன் இந்த பெல் தான்” என்றான். செல்வராணி "கிளுக்' என்று சிரித்தாள்.
★★★ ★次
144

தணல் எட்டு
கையிலிருந்த காசும் கண்களில் பட்ட நண்பர்களும் குறைந்த ஒருநாள், கமலேஸ்வரனுக்கு ஒரு எண்ணம் உதித்தது. வீடு விடுவதற்கு இன்னமும் இரண்டு நாட்களே இருந்ததால் புது இடத்தில் பெறக்கூடிய அறைக்கு வாடகையேனும் கொடுப்பதற்குப் பணம் வேண்டுமே என்று நினைத்த பொழுதுதான் அவன் அந்த நினைவில் ஆழ்ந்தான்.
அன்று போயாதினமாக இருந்ததால் வாரம் முழுவதும் உழைத்துக் களைத்த உயர் குடும்பக்கலை இரசிகர்கள் வீட்டில் மனைவிமக்களுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தனது ஒவியத்தாள்களை எடுத்து ஒரு பெரிய உறையில் இட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன்.
வெளிநாட்டுக் கலைப்பொருள்களுக்கு என்ன விலை வந்தாலும் கொடுத்து அவற்றை இல்லங்களில் மாட்டி வைத்துப் பெருமையாகப் பேசும் சிலருடைய நினைவும் அவனுக்கு இருந்ததால் அவர்களில் ஒருவராவது தனது உயர்ந்த சில ஒவியங்களை ரசித்து அவற்றின் எழிலில் மயங்கி விலை கொடுத்து ஆதரிப்பார் என்ற சிறு நம்பிக்கை அவனுள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
தமிழ் விழாக்கள், மாநாடுகள், கலை விழாக்கள் முதலியன நடைபெறும் பொழுது முன்வரிசை பெறுமுகமாகத் தமிழில் பேசும் சில ஆங்கிலத் தமிழர்களின் உண்மையான கலை ஆர்வம் எத்தனை பாகை வரை இருக்கிறது என்பதை அறிய இது ஒரு சந்தர்ப்பம் என்று அவன் எண்ணினான்.
அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் ஒரேயொரு அந்தஸ்தைக் கொண்டு தமிழையும் தமிழ்க்கலைகளையும் கரைகண்டவர் நாம் என்று கங்கணம் கட்டி நிற்கும் பல பெரியார்களின் வீட்டு விலாசங்களையும் தொலைபேசி வழிகாட்டியைப் புரட்டிப் புரட்டித் திரட்டியிருந்தான் கமலேஸ்வரன்.
சேட் பாக்கட்டில் கிலுங்கிக் கொண்டிருந்த சில்லறைக் காசுகள் அன்றைய பொழுது பஸ்ஸிற்கும் சிகரெட், தேநீர் ஆகியவற்றிற்குத் தாராளம் என்று கண்டு கொண்ட அவன் வீடுகளுக்குமேல் வீடுகளாகக் கட்டி ஐந்தாறு அறைகள் கொண்ட அந்த வீடுகளில் மூன்று பேரும் ஒரு நாயும் என்று வாழும் பகுதிக்கு பஸ் மூலம் வந்து நடந்து சென்றான்.
அன்றொருநாள் ஓவியக் கண்காட்சி நடைபெற்ற பொழுது, இலங்கையில் கலைஞர்கள் இருக்கிறார்கள், தரமானவர்களும் உயர்வானவர்களுமான அவர்களை ஆதரிக்க மட்டும் யாருமில்லை. இத்தகைய உண்மைக் கலைஞர்களின் இதயதாகத்திற்கு எமது இரசனை என்ற ஆகாரத்தையும் ஆதரவு என்ற பதார்த்தத்தையும் வழங்கி வருவோமானால் அவர்கள் உள்ளம் மட்டுமல்ல, வயிறு மட்டுமல்ல ஆத்மாவே சாந்தியடையும். என்றெல்லாம் ஆரம்ப உரையில் முழங்கியிருந்த பெரியார் லோகநாயகம் வீட்டுக்கு அவன் சென்ற பொழுது முதலில் ஒர் அல்சேஷன் நாய் அவனை வரவேற்றது.
'வொள் வொள்' என்ற அந்த பிஸ்கட் நாயின் கனத்த குரலைக் கேட்டதும் கமலேஸ்வரன் முதலில் பின் நின்றான். அவனுக்கு நாயினால் கடிபட்டால் அதற்குச் செலவாகக்கூடிய பணமே தன்வசம் இல்லையென்ற உணர்வு வேறு நகைச்சுவையாக
45

Page 83
மேலெழுந்ததால் பாதி திறந்திருந்த அந்த கேட்டை முழுதாக மூடியபடி நின்றான். அப்பொழுது அந்த நாய் காம்பவுண்டுக்குள் நின்றபடியே அவனுடைய கைமீது பாய்ந்தது. வெடுக் கென்று கையை எடுத்த கமலேஸ்வரன் ஐயா!' என்று மரியாதையாகக் குரல் கொடுத்து அழைத்தான். /*
வானைப் பிளக்கின்ற அளவுக்கு அந்த நாயின் குரைப்பு இல்லாது விட்டாலும் அந்த வீட்டை ஒரு முறைக்குப் பல முறைகள் அதிர்க்குமளவுக்கு இருந்த போதும் அந்தக் குரைப்பையோ அதற்குரிய காரணத்தையோ சிந்தியாது உள்ளே யாரோ ஒருவருடன் அந்தக் குடும்பமே சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தது கமலேஸ்வரனுக்குத் தெரிந்தது.
கொழும்பின் வீதிகளில் கிடக்கும் சாதாரண நாய்கள் களிசான் போட்டவர்களைக் கண்டால் மட்டும் குரைக்க மாட்டா. வேட்டி சாரம் உடுத்தவர்களைக் கண்டதும் அவற்றிற்குக்கூட ஒரு எக்காளமான போக்கு எழுவதுண்டு. ஆனால் கறுவாத்தோட்டத்து நாய்கள் இன்னமும் ஒருபடி மேலே சென்று கார்களில் வந்து இறங்காத யாராக இருந்தாலும் குரைத்தே தீர்வனவாக இருப்பது அவனுக்கு வியப்பாக இருந்தது.
எசமானர்களுடைய உளப்பாங்கு கேவலம் அந்த நாய்வரை எட்டிவிட்டதா என்று பொருமிய பொழுது, “கவுத?" என்ற விசாரணக்ை குரலுடன் வெளியே வந்தான் வேலையாள் ஒருவன.
கமலேஸ்வரனுக்கு அவனுடைய கேள்வி தூக்கிவாரிப் போட்டது. ஒ அது தமிழ்ப் பெரியாரின் வீடு அல்லவா? அவன் தனக்குள் கேட்டுக் கொண்டு "ஐயா இருக்கிறாரா?" என்று அவனைக் கேட்டான்.
மிஸ்டர் லோகநாயகம் என்று கமலேஸ்வரன் அழையாததைக் கவனித்த வேலையாள் அவனை மேலுங்கீழும் ஒரு முறை பார்த்துவிட்டு, "ஐயா நாளைக்கு ஆபிசுக்கு போவார். ஆபீசு விஷயமானா அங்கே சந்திக்கலாம். இப்போ யாரோ பெரியவங்க வந்திருக்காங்க. அவங்ககிட்ட பேசிக் கொண்டிருக்கிறார்” என்று அவன் கூறிய பொழுது, தான் ஆரம்பித்திருக்கும் சோதனை விழாவுக்கு அது சிறந்த தலைமையுரை என நினைத்து வேதனையோடு சிரித்துக் கொண்டான் கமலேஸ்வரன்.
"ஐயாவைப் பார்க்க வேண்டும். கமலேஸ்வரன் வந்திருப்பதாகச் சொல்லுங்கள் தம்பி.” என்று கமலேஸ்வரன் அந்த வேலையாளை உரிமையுணர்வுடன் அழைத்துக் கூறியதும், நெடுநேரத்தின் பின்பு சிரித்த அவன்,"ஜிம்மி கோ இன்” என்று நாயைப் பார்த்துக் கூறவே அந்தநாய் வாலைக் குழைத்தபடி அப்பாற் சென்றது. அவன் கூறினான்.
“ஸார்! யாரோ டிபார்டுமென்டுக்குப் பெரிய ஒருவரோடை பேசிக்கிட்டிருக்கிறார் இப்ப போனா ஒருவேளை உங்களுக்கு வேண்டியதைச் சொல்வாரோ என்னவோ?
"பரவாயில்லை அவரை ஒருமுறை கண்டு பேச வேண்டும். நான் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்று கமலேஸ்வரன் உள்மனத்தில் பற்றிய கோபத் தீயின் வெம்மையை வார்த்தைகளிலும் பிடிக்க விடாது கூறியதும், "நில்லுங்கள் ஸார்" என்றபடி உள்ளே சென்றான் அவன்.
சற்று நேரத்தின் பின்னர், “சரி. வாருங்கள் ஸார். ஐயா கூப்பிடறாரு." என்ற அந்த வேலையாளின் குரலைத் தொடர்ந்து உள்ளே சென்றான் கமலேஸ்வரன்.
கமலேஸ்வரன் தான் ஒரு கலைஞன் என்ற உணர்வில் உள்ளிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததும், யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முறையாகக் கொழும்புக்கு வந்து தமது வீட்டுக்கு வருவதாக எண்ணிக் கொண்டார் லோகநாயகத்துடன் உரையாடிக் கொண்டிருந்த நபரான அரசாங்க அதிகாரி.
146
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் வணங்கிய பொழுது அந்த வணக்கத்தின் தெய்வீகத்தையே உணராது அவர்கள் இருவரும் கீழ்மை வரவேற்புடன் மட்டும் அமைந்ததும், அவர்களுடன் கலகலவென்று உரையாடிக் கொண்டிருந்த திருமதி, செல்வி லோகநாயகம் ஆகியோர் திடுதிடுப்பென்று எழுந்து உள்ளே சென்றதும், அவனை சிறியவனாக்கி விட்டிருந்தன.
“என்ன விஷயம்?’ என்று லோகநாயகம் கேட்டதும், 'உங்களைப் பார்க்கலாமென்று வந்தேன்” என்றான் கமலேஸ்வரன்.
"டேக் யுவர் சீட்” என்று கூறிய லோகநாயகம் ஸோபாக்களுக்கு நடுவில் கிடந்த கதிரையைச் சுட்டிக் காட்டியபடி, அதிகாரியைப் பார்த்து, "இவர் ஒரு ஆர்ட்ஸ்டிஸ்ட்" என்றார். பின்னர் "ஆர்ட்டிஸ்ட் என்றால். ஹௌ டு தேசே இன் டமில்?” என்றபடி கமலேஸ்வரனைப் பார்த்ததும், அவன் சொன்னான்.
"ஓவியர். அல்லது சைத்திரியர். "ஆங்கிலத்தில் ஆர்ட்டிஸ்ட் என்றால் ஆண் பெண் பாகுபாடு இல்லை. தமிழில் பெண்ணை ஒவியர் என்று கூறலாமா?” என்றபடி பெரிதாகச் சிரித்த லோகநாயகத்தின் குரலோடு சேர்ந்து அந்த அதிகாரியும் சிரித்தார்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஆயத்தம் செய்கிறார் என்று தனக்குள் நினைத்துக் கறுவிய கமலேஸ்வரன் அவர்களுடைய அந்தச் சிரிப்பில் கலந்து கொள்ளாது மெளனமாக இருந்தான்.
அரசாங்க அதிகாரி தமக்கு நேரம் போவதாகக் கூறிவிட்டு எழுந்து உள்ளே தலையை நீட்டியதும், அவர் போகப் போகிறார் என்பதை உணர்ந்து கொண்ட திருமதி லோகநாயகம் சரிந்து கிடந்த தாவணியை வெட்ட வெளிச்சமாக விலக்கி அள்ளி மறுபடியும் பக்குவமாகத் தோளில் இட்டபடி ஒயிலாக நடந்து வந்து, "வை யூ ஆர் இன் எ ஹறி ஏன் அவசரம். இருங்களன் போகலாம்” என்று சங்கையோடு கூறினார்.
"நோ. நோ. பிள்ளையள் சுவியிங் போக வேணுமெண்டதுகள். காரில்லாவிட்டால் சுவிடமிங் போகாதுகள். அதுதான் நான் போகவேணும். அடுத்த வாரமளவில் வருகிறேன்.” என்றபடி அதிகாரி நகர்ந்ததும், இதுவரை கதவோடு ஒட்டி நின்று வெளியே பார்த்த செல்வி, லோகநாயகம் உட்பட நாயும் உள்ளே போனது.
"டியர்” என்ற குரலைத் தொடர்ந்து "யேஸ் கம்மிங்" என்றபடி எழுந்து உள்ளே சென்றார் லோகநாயகம். அங்கு ஒரு குரல் கேட்டது.
“என்ன. கண்டது நிண்டதுகள் எல்லாத்துக்கும் கதிரை போட்டு கதைத்துக் கொண்டிருக்கிறியள். பின்னேரம் திருக்குறள் விழா எல்லோ. சேவன்டை இறைச்சி வாங்கிவர அனுப்பியிருக்கிறன். நேரம் போச்சு. எண்ணையைத் தேயுங்கள்."
‘வெயிட் டார்லிங். அவன் பொடியன் ஒருநாளும் வராதவன். ஏதோ வந்திருக்கிறான். என்னண்டு கேப்பம்"
'உம்' அவன் வந்தது பிடிக்காமல் அவரும் அந்தா பேயிட்டார்." தம்பதிகளின் உரையாடல் கமலேஸ்வரனின் காதுகளில் நாரசமாகத் தைத்துக் கொண்டது.
'g fl....... சொல்லுங்கள்' என்றபடி மறுபடியும் தமது இருக்கைக்கு வந்த லோகநாயகம் அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “நீங்கள் ஆர்ட்டிஸ்டுகள். நம்ம தமிழ் ஆக்கள் பற்றி நிறைய கீறலாமே." என்று தொடர்பின்றியும் பொருளின்றியும் கூறினான்.
s
147

Page 84
கமலேஸ்வரன் சொன்னான். "ஆமாம்! இப்பொழுது நிறைய பொயின்ட்ஸ் கிடைத்திருக்கிறது. இனிக் கீறத்தான் வேண்டும்"
“என்ன விஷேஷம்? இங்காலுப் பக்கம்.'லோகநாயகம் கேட்டதும் அவன் கூறினான்.
"உங்களிடம் ஆதரவு கோரி.” "என்ன? ஆதரவா?. ஹஹ்ஹா. எதற்கு" "என்னுடைய கலைக்கு.?" “விளங்கச் சொல்லுங்களேன்.” என்று அவர் கேட்டதும், தான் வைத்திருந்த ஒவியங்களை எடுத்து அவரிடம் நீட்டினான் கமலேஸ்வரன்.
மேலெழுந்தவாரியாகத் தட்டிப் பார்த்த லோகநாயகம் அவற்றின் எழிலை உண்மையிலேயே கண்டு வியந்து கூறினார்.
“மார்வலஸ்! மிஸ்டர் கமலேஸ்வரன். வொண்டர்புல் சீன்ஸ். இவ்வளவு பெயிண்டிங்ஸ்களையும் இங்கேயே பிறேம் போட்டு மாட்டி வைக்கவேணும் போல கிடக்கு."
"அதற்குத்தான் கொண்டு வந்தேன்." “எனக்கு இரண்டைக் கொடுங்கள். உங்கள் நினைவாக இருக்கட்டும். "நீங்களே தெரிந்து எடுத்துவிட்டு எனக்கு ஏதாவது கொடுங்கள். எனக்கு இது தொழில்."
கமலேஸ்வரனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதும், தான் பணம் போட்டு வைத்திருக்கும் வங்கியே திவாலாகிவிட்டது என்பதை செவியுற்றவர் போலானார் லோகநாயகம். பின்னர் அந்த அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமலே கேட்டார் அவர்.
“விற்கவா கொண்டு வந்தீர்கள்?" "ஆம்"
ஆ. இலங்கையிலே ஒரு ஆர்டிஸ்ட் இப்பிடிச் செய்யிறது இதுதான் முதல் தடவை. குட். குட். வெளிநாடுகளில் எல்லாம் யேஸ். யேஸ். நான் லண்டனிலே இருந்தபொழுது பார்த்திருக்கிறேன். தாங்கள் உருவாக்கிய கலைப் பொருள்களை வீடு வீடாகத் திரிந்து விற்பார்கள். சிலர் ஏஜண்டுகள் மூலமும் விற்பார்கள். அங்கு அதை ஒருவரும் இழிவாக நினைக்க மாட்டார்கள். ஆனால் இங்கே கேவலமாக மதிப்பாங்கள்."
ፃ)
re
"அப்படித் தெரிந்துதான் உங்களிடம் வந்தேன்" “ஒ ஓ நான் இரண்டு படங்களை எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் இவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது. ஐந்தோ பத்தோ கொடுத்து உங்கள் உயர்ந்த கலையைக் குறைவாக மதிப்பிட நான் விரும்பவில்லை.
“சரி நீங்கள் கலையைப் புரிந்து கொண்டு கலைஞர்களை ஆதரிக்க வேண்டும் என்று பேசினீர்கள். அந்த நம்பிக்கையில்தான் வந்தேன். நான் வருகிறேன்." என்றபடி எழுந்து வெளியேறினான் கமலேஸ்வரன்.
அவனுடைய மொழிகளுக்குப் பதில் கூறமுடியாமல் தடுமாறினார் லோகநாயகம், ஒவியக் கண்காட்சியின்போது அவர் பேசிய அந்தப் பேச்சை எழுதிக் கொடுத்த அவருடைய தமிழ் தெரிந்த நண்பர், கமலேஸ்வரனுடைய கேள்வி போன்ற ஒன்றுக்கு பதில் ஒன்றும் எழுதவில்லையே என்று குழம்பினார் லோகநாயகம்.
148
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2
பகலெல்லாம் வீதிகளில் அலைந்து இந்தப் பகட்டான கொழும்பின் சந்தடியில் திக்காடிவிட்டு இருண்டியதும் வீட்டுக்கு வந்த கமலேஸ்வரனுக்கு உடல் அசதியாக இருந்ததுடன் வயிறும் பிய்ந்து விடுவதுபோல் பசித்துக் கொண்டிருந்தது.
கையிலிருக்கும் சில்லறைகளைச் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்த்தான் கமலேஸ்வரன். மொத்தமாக ஒன்றரை ரூபா தேறியிருந்தது. அந்தக் காசை கடையில் சாப்பாட்டுக்கு கொடுத்தால் குறைந்தது ஒரு ரூபா போய்விடும் என்று கணக்குப் பார்த்து, அது சரிவராத நினைவு என்று எண்ணியபடி ஒரு தேநீர்க் கடையை நோக்கி நடந்தான் அவன்.
கடையில் இரண்டு பணிசை உண்டு பிளெயின் டீயும் குடித்துவிட்டு திரும்பும் பொழுது அந்த ஒழுங்கையில் இருமருங்கும் உள்ள வீடுகளின் முற்றங்களிலும் வாசல்களிலும் நின்று பின்மாலைப்பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பவர்கள் செல்வராணி தன்னைவிட்டுப் பிரிந்த கதையைப் பலவாறாகச் சொல்லி தன் காதுகள் அறியச் சிரிப்பார்கள் என்ற நினைவும் வேறு எழுந்ததால் இந்த உலகம் நித்திரையில் ஆழும்வரை வீட்டுக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தான்.
கொழும்பில் வேலையற்ற தனி மனிதன் வாழ்வதற்குத்தான் வகையோ வழியோ இல்லை என்றாலும் சாவதற்குச் செளகரியமாக ஒன்று இல்லாது விட்டால் மற்றொன்று உண்டு என்ற அர்த்தத்தில் புகையிரதப் பாதையும் அதனை ஒட்டினாற் போல ஆழமான கடலும் அவன் கண்களில் தென்பட்டன.
புகையிரதப் பாதைக்கும் கடலுக்கும் இடையில் கிடந்த சொற்ப வெளியில் நிறைந்து காணப்பட்ட பாறாங்கற்களின் மறைவிலிருந்து இரகசியமான காதல் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தன சில சோடிகள். தூரந்தூரமாக ஒருவர் பார்வையிலிருந்து விடுபட்டு மற்றொருவர் எங்கோ எப்படியோ இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
வானம் இருண்டதைக் கண்டதும் தன் மேனியையும் இருளால் இழுத்து மூடிக் கொண்டு உறங்கத் தொடங்கிய பூமியின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாமலோ என்னவோ அந்தப் பகுதியில் அந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் அறவே அற்றிருந்தது. அது அந்தச் சோடிகளுக்கு மிகச் செளகரியமாக இருந்தது.
கொழும்பில் தங்கள் பிள்ளைகள் வேலை செய்கிறார்கள் என்பதற்கு அறிகுறியாக பிறந்த ஊர்களுக்கே அவர்கள் இருந்திருந்து போவதும் மாத முடிவில் ஒழுங்காக மணியோடர் அனுப்புவதும் பெற்றவர்களுக்குப்போதியனவாக இருந்ததால், மேற்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கெங்கெல்லாம் போகிறார்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்குவதில்லை. அதனை வெகுவாகப் பயன்படுத்திய சிலர் தங்கியிருக்கும் இடங்களுக்கும் காரணம் சமாதானம் சாட்டுக்களைக் கூறிவிட்டு வெளியே புறப்பட்டுத் துணைகளுடன் மிக நெருக்கமாக அமர்ந்து பேசிச் சிரித்து விளையாடும் அற்ப பொழுதுகளுக்காக அந்தக் கடற்கரையில் தவஞ் செய்து கொண்டிருந்தனர்.
துணையையிழந்த துயரையும் அவப் பெயரையும் மறப்பதற்காகவும் மறைப்பதற்காகவும் அங்கு வந்த கமலேஸ்வரனுக்குத் தான் அந்தச் சோடிகளின் இறுக்கமான இருப்பைக் குழப்புவதுபோலப் பட்டதும் கடற்கரை வழியாகவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.
149

Page 85
முன்னும் பின்னுமாக ஒளிப்பிரவாகத்தை அள்ளி வீசிக் கொண்டும், பூம்மென்று ஒலியெழுப்பிக் கொண்டும் ஒடும் புகையிரதங்கள், அகப்படுவனவற்றைநசித்து அரைக்கவும், வாழ வழி தெரியாதவர்களுக்கு கைகொடுத்து இரட்சிக்கவும் தயார் என்ற கருணா கம்பீரத்தில் ஒடிக் கொண்டிருந்தன. வாழ்ந்து களைத்தவர்கள் எங்கள் கரங்களில் வந்து சேருங்கள். புதுவாழ்வுதருகிறோம் என்றப்ாவனையில் கடலலைகள் யாரையோ எம்பி எம்பி அழைத்து, ஒருவரும் அணைப்புக்காக ஏங்காததால் சோர்வுற்றுத் தாமே மடிந்தன.
ஒரலை வந்து எழுந்து ஒலித்து மடிந்ததும் அதே இடத்தில் மற்றொன்று எப்படியோ பிறந்தது. அதுவும் மடிந்ததும் இன்னொன்று. கடலின் ஒவ்வோர் அலையும் இந்த மண்ணின் ஒவ்வொரு மனித உயிரல்லவா?
நேரம் படிந்து கொண்டிருந்ததால் கமலேஸ்வரன் இதுவரையும் நடந்து வந்த தூரத்தை மறுபடியும் நடந்து தீர்த்து வீட்டிற்கு வரும்பொழுது எல்லோரும் உறங்கி இருந்தனர். கணேசமனியும் பரமேஸ்வரியும் யன்னல்கள் கதவுகள் யாவற்றையும் பூட்டிக் கொண்டு உள்ளிருந்து உரையாடும் ஒலி மட்டும் அங்கு கேட்டது.
வீட்டைத் திறந்து வெளிச்சத்தைப் பொருத்திய அவன் அந்த வீட்டை இருநூறு ரூபா வாடகைக்கு எடுத்த பொழுது எப்படிப்பார்த்தானோ அப்படி இப்பொழுதும் பார்த்தான். இப்பொழுது அவனுக்கு இருக்கும் துணை அந்த வீடு மட்டுந்தான். அதுவும் இரண்டொரு நாட்களின் பின்னர் வேறொரு குடும்பத்திற்குத் துணையாகப் போகின்றதல்லவா?
மணமுடித்த நாள்முதல் ஆண்டுகளாக வாழ்ந்து கழித்த அந்த வீட்டையும் பிரியப் போகிறோமே என்று நினைக்கையில் அவனுக்கு இதயம் என்னவோ செய்தது. செல்வராணியின் முகத்தை உரிமையோடு தனிமையில் சந்தித்ததும் அந்த வீட்டின் பின்புற அறையில் தானே. அந்நியனாகக் கடந்த கிழமை இருந்தவன் மிகமிக அந்நியோன்னியமாக அவளுடன் உறவாடிய பொழுது அவள் எழுப்பிய கிளுக்' என்ற சிரிப்பொலிகளைக் கேட்ட இந்தச் சுவர்கள் அதற்கிடையில் மறந்து விடுமா? அவர்களின் ஒன்றுபட்ட சுமையைத் தாங்கவும் அவர்களின் போக்குக்கு இயைந்து.ஒலியின்றி ஜடமாகவே கிடக்கவும் பொறுமை பெற்றிருந்த அந்தக் கட்டிலும் இன்று இருவரையும் இழந்து தனியே கிடக்கின்றதே அவர்கள் இருவரும் ஒன்றாக விட்ட மூச்சு இந்த ஒற்றை யன்னல் வழியாகத் தானே வெளியே சென்று காற்றுடன் கலந்தது.
ஓ! இப்பொழுது அந்தக் காற்றே எங்கு சென்றிருக்கும்? அறை குமண்டியிருந்ததால் யன்னலைத் திறந்து மூச்சு வாங்கினான் கமலேஸ்வரன். பின்னர் அசைந்து வந்து கட்டிலில் கைளை ஊன்றியபடி அமர்ந்து அவ்வாறு ஊன்றிய நிலையிலேயே அங்குமிங்கும் விழிகளைச் சுழற்றினான்.
ரமணன் அடம் பிடித்து அந்நாளில் அவனைக் கொண்டு வாங்குவித்த முச்சில்லுச் சைக்கிள் தூசிபடிந்த நிலையிலும் மினுங்கிக் கொண்டிருந்தது. இடவசதிக்காக அந்தச் சைக்கிளை தானே தாங்கிக் கொண்டிருந்த தொட்டில் கால்கள் கழற்றப் பெற்ற நிலையில் மூலைச் சுவரோடு ஒதுக்கமாக இருந்தது. அந்தத் தொட்டில் திடீரெனப் பொருத்தப்படுவது போலவும் தாய்மையுணர்வு தலைதூக்கி எழ செல்வராணி ரமணனையும் ரஞ்சனியையும் ஒவ்வொருவராக இட்டு ஆட்டுவது போலவும் அவனுக்கு ஒரு பிரமை எழுந்தது. தொட்டிலில் பிள்ளையை இட்டு செல்வராணி ஆட்டும் பொழுது முன்னும் பின்னும் கைகள் சென்று வர அதற்கு உடந்தையாக தானும் அசைந்து வளைந்து கொடுத்து அவள் இடையைப் பின்புறமாகவே சென்று பற்றி அவன் அவளை "ஆராரோ" சொல்லி ஒராட்டியதை நினைத்துக் கொண்டான்.
150

அவனுடைய கைகள் அவளுடைய இடையைச் சுற்றி வலம் வந்த பொழுது தொட்டிலில் ஒரு கையும் அவனுடைய தோளில் ஒரு கையுமாக இட்டு, அவள் அவனைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்து “நீங்களும் வாருங்கள்! உங்களையும் ஒராட்டுகிறேன்" என்று கொஞ்சும் தமிழில் கூறினாளே, அபபொழுது அவன் சொன்னான். "இது பட்டப்பகல் . அதற்கு நேரம் கிடக்கிறது"
இருவரும் அந்தப் பொழுதில் அந்தப் பதிலைத் தொடர்ந்து விழுந்து விழுந்து சிரித்த பொழுது, இருவரது முன் நெற்றிகளும் மோதியதால் ஏற்பட்ட வலியைச் சிரித்தபடியே தடவிக் கொடுத்துக் கொண்டனரே.
கமலேஸ்வரன் மேலும் மேலும் அந்த வீட்டையும் பொருள்களையும் பார்த்துப் பார்த்து இளமையும் இன்பமும் பூத்திருந்த ஒரு காலத்தின் பொழுதுகளையும் சேர்த்து எண்ணித் துடித்துக் கொண்டிருக்கையில், அபபொருள்கள் எல்லாம் எங்கோ படிப்படியாக மறைவன போலவும் அவன் பார்வை குறைந்து வெள்ளை வெளோரென்று தெரியும் ஒரு காட்சியில் மட்டும் உறைவது போலவும் இருந்தன.
கண்களிலிருந்து பிறந்த நீர்ப்படலம் அவற்றையே மறைக்கிறது என்பதை அப்பொழுது உணர்ந்து கொண்ட கமலேஸ்வரன் விரல்களால் கண்களைத் துடைத்து விட்டான். அப்பொழுது தெளிந்த பார்வையில் துவாயை எடுக்க நடந்த பொழுது உள்ளறையிலிருந்த உடுப்பு அலுமாரியின் மேற்புறப் பரப்பில் தன்னந் தனிமையில் இருந்த சோடிப் படம் தென்பட்டது.
ஆவலோடு பார்த்தபடி கையில் எடுத்து மேலும் பார்த்தான் கமலேஸ்வரன். “செல்வராணி . சொல்லி வைத்துச் சேர்ந்தோம். இப்பொழுது ஒருவருக் கொருவரேனும் சொல்லாமல் பிரிந்து விட்டோமா?"
அவன் அந்தப்படத்தில் தெரிந்த செல்வராணியின் நிழலைப்பார்த்துக் கேட்டான். “நான் என்ன தீங்கு அப்படி உனக்குச் செய்து விட்டேன்? பராமரிப்பற்ற பிள்ளைகளுக்குச் சிறந்த பாதுகாப்பு தேடினேன். அந்தப் பிள்ளைகள் எங்களை நம்பி எங்களுக்குப் பிறந்தவை அல்லவா? நம்பிக்கைக்குத் துரோகம் செய்யலாமா? செல்வராணி. ஐ.ய்.யோ. ஆனால் நீ செய்து விட்டாயே. இது ஆகுமா?. சொல் செல்வராணி. சொல்.”
கமலேஸ்வரன் வெறிபிடித்தவன் போல அந்தப் படத்தை சுவரோடு மோதினான். பின்னர் உடற்பலம் எல்லாவற்றையும் சேர்த்துத் தரையில் வீசினான்.
மனித ஆசைகள் எண்ணங்கள் உடைந்தாற்போல் அந்தக் கல்யாணப் புகைப்படத்தைப் பாதுகாத்திருந்த கண்ணாடி சுக்கு நூறாகியது. சில்லமாகியிருந்த கண்ணாடித் துண்டுகளையும் பொருட்படுத்தாது நடந்து சென்று விழுந்து கிடந்த அந்தப் படத்தை எடுத்து, இருகைகளிலும் ஏந்தியபடி ஒருமுறை வெறித்தான் கமலேஸ்வரன். அவனுடைய சப்பாத்துக் கால்களுக்குள் அகப்பட்ட கண்ணாடித் துண்டுகள் சீமெந்துத் தரையில் அழுத்தப்பட்டு மேலும் உடைந்ததுடன் அபயக் குரல் எழுப்புவன போன்று உரைசல் ஒலியிட்டன.
கமலேஸ்வரனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு துண்டுகளாக அந்தப் படம் பிரிக்கப்பட்டதும் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வீசினான். அப்பொழுது தொட்டிலுக்குள் பறந்து மோதி விழுந்தது செல்வராணியினுடைய படம். தனது படம் சுவரில் மோதுண்டு தரையில், காலடிக்கு அண்மித்து விழுந்ததும் அதனைச் சப்பாத்துக் காலால் எற்றி, இலக்கற்று எங்கோ தள்ளிவிட்டபடி வெளியேறினான் கமலேஸ்வரன்.
51

Page 86
தனது கைகள் வரையும் பொழுது கலைந்துவிட்ட ஒவியத்தையே அந்தக் ால் முலையில் தூக்கி வீச மனமற்று, அது பிறந்த கோலத்துடனே கிடக்க விட்டுவிட்டு ாழும் கமலேஸ்வரன், யாரோ செய்த சிலைக்கு தான் தகுந்த முறையில் வர்ணந் தீட்டத் தவறிவிட்ட குற்ற உணர்வில் கலங்கி, தியங்கி உறங்கியிருந்த விடியற் பொழுதில் யாரோ கதவைத் தட்டுவதைக் கேட்டதும் அலுப்புடன் எழுந்து வந்து திறந்தான்.
காலைச் சூரியன் எல்லோரையும் துயிலெழுப்பித் தங்கள் தங்கள் அலுவல்களைக் கவனிக்க அனுப்பிவிட்டு, தான் தன் வேலையை மேற்கொண்ட அமைதியான அந்தப் பொழுதில் தனக்கும் ஒரு வேலை உண்டு என்பதை மறந்தவளாகச் சித்திரா அவன் முன் நின்றாள்.
அவளைக் கண்டதும் முகமலர்ச்சியோடு வரவேற்பு வார்த்தை வெளிப்பாடோ இன்றி நிர்ச்சலனமாக நின்று துயில் நீக்கிய சோம்பலைப் போக்க முனைந்து கொண்டிருந்த கமலேஸ்வரனைப் பார்த்து சித்திரா கேட்டாள்.
"நான் உள்ளே வரலாமா?" "இங்கு இனி வரக் கூடிய ஒருத்தி நீங்கள்தான். தாராளமாக வாருங்கள். இப்படி இருங்கள்.” என்றபடி அவளுக்கு அருகில் ஒரு கதிரையை இழுத்து விட்டான் கமலேஸ்வரன். கையில் வைத்திருந்த ஒரு பொட்டலத்தை அவனுடைய ஒவிய மேசையில் வைத்துவிட்டு, கறுத்துக் காய்ந்திருந்த அவனுடைய முகத்தையே ஏக்கப் பரிவுடன் பார்த்தபடி வந்து அமர்ந்தாள் சித்திரா.
“என்ன? ஏதாவது புதினமா? கமலேஸ்வரன் கேட்டதும், அவள் சொன்னாள். 'இல்லை. உங்களிடமிருந்து அதைத் தெரிந்து கொண்டு உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்"
“என்னைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று யாராவது நினைத்தால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். என்னைப் பார்க்காமலே இருங்கள்"
“என்ன. என்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்களே?” "ஆம் சித்திரா. எல்லோரும் என்னை அறியாமல் என் இதயத்துள்ளே குடிபுகுந்து விடுகிறார்கள். பின்னர் ஒரு நாள் இருந்தது இருந்தாற்போல் போய் விடுகிறார்கள். ஒ சொல்லிக் கொள்ளாமலே போய் விடுகிறார்கள். சந்திப்பு தொடக்கம், பிரிவு முடிவு."
சித்திரா வேதனையோடு சிரித்து அவனுடைய அந்தக் குழந்தை இதயத்தை அணு அணுவாக அணுகினாள்.
“ஒரு நாள் வருவேன். என் ஆசைகள் கனவுகளோடு வருவேன் என்று சொன்னீர்களே. அந்த நாளா இன்று?" கமலேஸ்வரன் கேட்டான்.
“என்னத்துடன் வந்திருக்கிறீர்கள்?"
சித்திரா சிரித்தபடி எழுந்து சென்று தான் கொண்டு வந்த அந்தப் பொட்டலத்தை எடுத்து அவனிடம் இரண்டு கைகளாலும் தாங்கியபடி நீட்டினாள்.
“என்ன இது?"
"வாங்கிக் கொள்ளுங்களேன்"
"திரும்பிக் கொடுக்க முடியாதை வாங்கி என்ன பிரயோசனம்?”
99
"தயவு செய்து. பிளீஸ்.
152
 

கமலேஸ்வரன் அவள் கொடுத்த அந்தப் பொட்டலத்தை வாங்கிப் பிரித்துப் ார்த்தான். அவனுடைய கண்கள் சுருங்க, புருவங்கள் வளைய, அவன் அவளைப் பார்த்து
“சித்திரா. அன்று நான் காசில்லாமல் கஷ்டப்படுவேன் என்று நினைத்தீர்கள். இன்று சாப்பாடே இல்லாமல் கஷ்டப்படுவேன் என்று நினைத்து இதைக் கொண்டு
ந்திருக்கிறீர்கள். ஒரு தாய் மட்டும் இந்த உலகத்தில் செய்யும் காரியங்கள் இவை.
"அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்காது.” “இல்லை! சித்திரா. என்னுடைய இதயத்தை வாடகைவீடு என்று நினைத்து வந்து குடிபுகுந்து பின்னர் சென்று விடுகிறார்களே. அவர்களால் ஏற்பட்ட பயந்தான். ஏமாற்றந்தான் முடிவற்ற இந்தத் துயருந்தான் எல்லாவற்றுக்கும் காரணம். ஏதோ பேசுகிறேன். என்ன பேசுகிறேன் என்பது உண்மையில் எனக்குத் தெரியாது.”
“ஐ.ய்.யோ. அழுகிறீர்களே.” “இந்தக் கண்ணீர் இருக்கின்றதே. ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட ஏழைகளின் சொத்தாக இருந்தது. பின்னர் பெண்களுக்குப் பொதுவான ஒன்றாக ஆகியது. இப்பொழுது என்போன்று ஏங்குபவர்களுக்கும் கிடைத்த ஒரேயொரு வரப்பிரசாதம், தேவன் காட்டிய புகலிடம். -
கமலேஸ்வரனுக்குப் பசி இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் மேசையருகில் இருந்தபடியே அந்தப் பொட்டலத்தை மறுபடியும் பிரிந்தபொழுது, சித்திரா எழுந்து உள்ளே சென்று குசினியில் இருந்த தம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அதனை வாங்கி முகத்தை அலம்பிக் கொண்டே கமலேஸ்வரன் புதிதாக எழுந்த ஒருவித ஆவலுடன் உண்ணத் தொடங்கினான்.
அப்பொழுது சொன்னாள் சித்திரா. “நானே என் கையால் தயாரித்த தோசை.” “பார்க்கவும் சுவைக்கவும் அப்படித்தான் தெரிகிறது”. தண்ணீர் ஒரு மிடறு
அவன் உண்டு முடிகின்ற வேளை வந்ததும் கேட்டாள் சித்திரா. "அது சரி யாருடைய படம் உடைந்து கிடக்கிறது? படத்தைக் காணவில்லை.
“ஓகோ அவவின் மீதான கோபத்தைக் கெட்டித்தனமாகப் படத்தோடு சாதித்து
விட்டாயிற்று போல.” عے
“இங்கே பேசுவது. சித்திரா ஒன்றில் உங்களைப் பற்றி இருக்கட்டும். அல்லது என்னைப் பற்றி இருக்கட்டும். மூன்றாம் நபரோ இந்த உலகமோ இங்கு, அது நமக்கு இடையில் வரக்கூடாது.”
"அதுதான் என் பிரார்த்தனையும்." சித்திரா அமைதியாக வெளிப்பட்டாள்.
153

Page 87
3
“இன்றைக்கு வேலை இல்லையா?” சித்திரா எவ்வித அவசரமுமின்றி அமைதியுடனும் முகத் தெளிவுடனும் இருப்பதை அவதானித்த கமலேஸ்வரன் கேட்டான்.
“இல்லை லிவு போட்டிருக்கிறேன். திருடனைப் பிடித்து காவற்காரனாக வைத்ததுபோல, அடிக்கடி லிவு எடுக்கும் என்னை, "லிவ் கிளார்க்காக வைத்துவிட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் ஒருநாள் லிவு எடுத்திருக்கிறேன். மற்றது, மிஸ்டர் ஹில்ஸ்வேர்த் எனக்குப் புதிய பதவி கொடுத்துள்ளார். அடுத்த மாதத்திலிருந்து நான் அட்மினிஸ்ட்றேடிவ் செக்ரடறி. நூறு ரூபா சம்பளமும் கூட்டியிருக்கிறார். சிரிபாலாதான் தற்சமயம் ஆக்டிங் கொம்மேர்ஷியல் ஆர்டிஸ்ட் அங்கு எல்லாம் முன்னேற்றம்"
“அதற்கு நான் வெளிக்கிட்டதுதான் காரணம்" “ஏன் எதற்கெடுத்தாலும் உங்களுடைய தலையில் நீங்களே பழிபோடுகிறீர்கள்” சித்திரா கடிந்து கொண்ட பாவனையில் கேட்டாள்.
“உலகத்திலே எல்லோரும் சுமக்கத் தயங்குவதும் சுமக்க முடியாததும் இந்தப்பழி ஒன்றுதான். நான் அதனையே சுமக்க ஆயத்தமாகி விட்டேன் என்றால், வாழ்க்கையைப் புரிந்து எப்படி எது வந்தாலும் ஏற்கத் தயார் என்பது அர்த்தம்" கமலேஸ்வரன் இதழ்களைப் பிதுக்கி கண்களை மூடிச் சற்று நளினங் காட்டி விட்டுத் தொடர்ந்து கூறினான்.
“பெண் உள்ளத்துக்கு, தான் அன்பு வைக்கிற இடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டுமென்பது விருப்பம். ஆனால் அந்த விருப்பமெல்லாம் என் வரையில் நிறைவேறாத ஒன்று என்றே கூறுவேன். ஏனென்றால் இந்த உலகத்தில் இன்னும் பிறக்காதவனையும் பிறந்து இறந்து சாம்பராகிவிட்டவனையும் தவிர யாருமே பரிசுத்தவான்கள் அல்ல. அப்படியானால் பெண் யார்மீது அன்பு காட்டுவதாம்? பெண்களின் அன்பு இருக்கிறதே அது அனுதாபத்தில் ஆரம்பித்தால் என்றும் நிலைக்கும். கீழ்நிலையில் ஆரம்பிக்கும் பொழுது எந்த விஷயத்துக்கும் பரிணாமம் இருக்கும். மேல்நிலையில் ஆரம்பித்தால், அதாவது ஒருவனைக் கல்விமான் என்பதற்காகவோ பலசாலி என்பதற்காகவோ பணக்காரன் என்பதற்காகவோ ஒரு பெண் அவனை விரும்பினால் அது என்றாவது ஒருநாள் எப்படியாவது மாறும். ஆதலால் என்மீது அன்பு கொள்ளக் கூடியவர் என்னுடைய இந்த இழிநிலையிலிருந்து என்னைப் பார்த்துப் பரிவோடு நடந்து கொண்டால் போதும்"
“என்னுடைய அன்பின் மீதும் உங்களுக்குச் சந்தேகமா? உங்களுக்காக வேண்டி என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள்." சித்திரா இப்படிக் கேட்டதும் கமலேஸ்வரன் உண்மையிலேயே சிரித்து விட்டான்.
“உங்களுடைய அன்பா?. நோய் இல்லாத இடத்தில் வைத்தியத்தைப் பற்றி யாராவது சிந்திப்பார்களா? சித்திரா அன்பைப் பற்றியே ஒரு பிரச்சினை நம்மிடையே எழாதவரை நாங்கள் நாங்களேதான். எங்களுடைய பழக்கம் மாறாமலே இருக்கும்.
“எத்தனை சோதனைகள். வசைகள். அந்தப் பழக்கத்தை மாற்றப் பார்த்தனவே"
"அதுதான் சொன்னேனே. ஒருவேளை அன்பு என்பதன் செவிகளுக்கு அந்தச் சோதனைகளும் வசைகளும் எட்டாமலிருக்கலாம் அல்லவா?”
“எனக்கென்றால் ஒன்றும் விளங்கவில்லை". “சரி-சாப்பிட்டாச்சு. இனி வேலைக்குப் போக வேண்டும்." என்றபடி தன்னைத் தயார்ப்படுத்த எழுந்தான் கமலேஸ்வரன்.
154

“வேலைக்கா?" சித்திரா வியப்புடன் இழுத்தாள்.
"ஆமாம். என்று நையாண்டியாகக் கூறிய கமலேஸ்வரன் சிரித்தபொழுது சித்திராவும் அவனுடைய குறும்புப் பேச்சில் கிறங்கி மகிழ்ந்தாள்.
என்ன வேலை?"
“விற்பனை வேலை"
“என்ன விற்பனை?”
"ஓவியங்களை இரசிகர்களிடம் கொண்டு சென்று விற்கிறது. விற்பனையை நேற்றே ஆரம்பித்து விட்டேன். ஆனால் ஒன்றுமே விலைபோகவில்லை.”
'6Jsit?”
“என்னுடைய உயர்ந்த கலைக்கு ஐந்து பத்தென்று கொடுத்து கெளரவக் குறைவாக நடந்து கொள்ள விரும்பவில்லையாம்"
"யார் சொன்னது?"
“ழரீலழரீ லோகநாயகம் அவர்கள்."
சித்திரா கொல்லென்று சிரித்தாள்.
“இளிப்பு அதுதான் குறைச்சல் - நான் இப்பொழுது என்ன சொன்னேனாக்கும்.?”
“ஒன்றுமில்லை."
“எங்கே."
“எங்கேயுமே ஒன்றுமில்லை."
“பார்க்கிற பார்வையைப் பாருங்கள்."சித்திராவின் விழிகளை நோக்கிகையை உறுத்தியபடி அவன் அவள் முன்பாக வந்ததும், சிரிப்பு சிந்திய தன் முகத்தை இருந்த இருப்பிலேயே வேறு பக்கம் திருப்பினாள் சித்திரா.
“கொஞ்சம் இருங்கள். வெளிக்கிட்டு வருகிறேன்.” என்றபடி கமலேஸ்வரன் உள்ளே சென்றான். சித்திரா தலையை அசைத்து விடை கொடுத்து விட்டு கைகளைப் பின்னி தாடையைப் பதித்தபடி அமைதியானாள்.
போயா விடுமுறையன்று மாலை கொழும்பின் மூலை முடுக்குகளி லிருந்தெல்லாம் புறப்பட்டு வந்து காலி முகத்தின் கடற்கரையில் காற்று வாங்கி ஒரு கிழமைக்குப் போதுமானவளவுஸ்டொக் செய்து கொண்டு எல்லோரும் சென்று விட்டிருந்த அன்று மாலை சித்திராவிடம் விடைபெற்றபின்னர் தனது ஒவியங்களை எடுத்துக் கொண்டு அங்கு வந்தான் கமலேஸ்வரன். கூடவே வெற்றுத்தாள் ஒருபென்சில் என்றும் அவன் எடுத்து வந்து கடலையும் அதனை மறித்துக் கட்டிய அணையையும், நெடிதாகச் சென்றுகொண்டிருந்த வீதியையும் புல்வெளியையும் பிரித்து இடப்பட்டிருந்த ஆசனமொன்றில் மேற்கு வானத்தைப் பார்த்து அமர்ந்திருந்த அவன் சனநடமாட்டம் அதிகமற்ற அந்த வெளியையே வெறித்துக் கொண்டிருந்தான்.
மடியில் பிள்ளைகள் போல கட்டவிழ்ந்து காற்றில் படபடத்து விளையாடிக் கொண்டிருந்த தனது ஒவியங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்த அவன் கோயிற் காட்சியொன்றைக் கண்டதும் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
போயா அன்று சினிமாவிற்கோ கடற்கரைக்கோ என்று புறப்படும் கொழும்பு வாசிகள் வெள்ளிக்கிழமையை கோவில் நாள் என்று ஒதுக்கி வைத்திருப்பது அவனை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இந்த அவசர உலகத்தில் இந்தளவுக்காவது தெய்வத்தை
55

Page 88
நினைப்பதற்கு என்றும் ஒரு நாளை ஒதுக்கி வைத்திருப்பது ஆச்சரியமான மகிழ்ச்சியை அவனுக்கு அளித்திருந்தது. வெள்ளிக் கிழமைகள் தோறும் சாதாரண நாட்களைப் போன்று லிப்ஸ்டிக்கும் கியூடெக்ஸ் ஐடெக்ஸுகளும் அழகாக அணிந்து கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்று, முழுகிவிட்டிருந்த தலையை கூடி முடித்து அதனைச் சுற்றிமலர் மாலைகளை அணிந்தும், பிளாஸ்டிக்கிலாலான தனிப்பூவை அணிந்தும் வரும் சைவப் பெண்ணின் கோலத்தை அந்த ஒவியத்தில் சித்திரித்திருந்தான் கமலேஸ்வரன்.
அவர்கள் ஒருபுறம் மினிஸ்கேட்டுகளுடனும் உடலெல்லாம் தெரியாது அரைகுறையாக மறைத்த ஆடைகளுடனும் "கொஸ்மபொலிடன்”முறையில் நின்று கும்பிடும் பொழுது எதிர்ப்புறத்தில் நிரையாக கைகட்டியபடிகளிசான்’அணிந்த வாலிப பக்தர்கள் சூழ நிற்கும் காட்சியாக அது இருந்தது.
அவர்களுடைய ஆத்ம வேண்டுகோள்களையும் விண்ணப்பங்களையும் கிரகித்து அனுக்கிரகிக்கப் போகும் தெய்வத்தின் சிலைக்கும் ஆடை ஆபரணங்களை புதுமையாகச் சாத்தியிருந்தார்கள். கந்தசுவாமி கோவிலான அந்தப் புனித இடத்தில் குடிகொண்ட வள்ளி தெய்வயானை ஆகிய தெய்வச் சிலைகளுக்கு கொழும்புத்தமிழ் பாணியிலே சேலை சட்டை ஆபரணங்கள் அணிவித்திருந்ததும், முருகனுக்கும் அந்த வகையிலேயே சாத்துப்படி செய்திருந்ததும், அவனது ஒவியத்தில் அப்படியே படம் பிடிக்கப்பட்டிருந்தன. அங்கு மணியை ஒரு கையிலும், தீபத்தை மறுகையிலும் ஏந்திய குருக்கள் கொடுக்கு இழுத்துக் கட்டிய பாணியும் மேற்புறந் திறந்த அவரது மேனியில் பொற்குவளைகள் கெளவிய உருத்திராக்க மாலைகள் கிடந்து புரள்வதும் அக்காட்சிக்கு முழுமையூட்டிக் கொண்டருந்தன. அந்த ஒவியத்தின் அடியில் கலப்படக் கலாசாரம்' என்று தலைப்புக் கொடுத்திருந்தான் கமலேஸ்வரன்.
கோவில் வாசலில் குவிந்து கிடந்த செருப்புக்களும் சப்பாத்துக்களும் 'றெடிமேட் டாகத் தயாரித்துவைத்திருந்த பிரசாதங்களும் அந்த ஒவியத்தில் பார்த்தால் தெரியுமளவுக்கு காட்சி தந்து கொண்டிருந்தன.
இதழ்களில் குறுநகை ஒட அதனின்றும் தனது பார்வையைத் திருப்பி ஏனைய ஓவியங்களையும் தரிசித்துக் கொண்டிருந்த கமலேஸ்வரன் எக்ஸ்கியூஸ்மீ’ என்ற ஆங்கிலேயரின் குரல் கேட்டதும் பக்குவமாகத் தலையை உயர்த்திப் பார்த்தான்.
முன்பின் தெரியாத ஒருவர் மனைவி அவருடைய முழங்கையைப் பற்றியபடி ஒட்டி நிற்க அவனை அணுகி உரையாட விரும்புகிறார் என்பதை உணர்ந்ததும் அவர்களை ஆசனத்தில் அமரும்படி கேட்காது தான் எழுந்து கொண்டான் கமலேஸ்வரன்.
"குட் ஈவினிங். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” கமலேஸ்வரன் கேட்டதும், அவனுடைய கைகளிலிருந்த ஒவியங்களிலிருந்து விழிகளைப் பெயர்க்காமல், "நாங்கள் இவற்றைப் பார்க்கலாமா?” என்று கேட்டார் அவர்.
“பை ஒல் மீன்ஸ்” என்றபடி அவரிடம் தன் கைகளிலிருந்த ஒவியங்களைக் கொடுத்த பொழுது அந்த ஆங்கிலேயர் ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு, தன் மனைவியிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
“எக்ஸலன்ட். மாஸ்ட பீஸ்..” என்றபடி குறுநகை எழமுணுமுணுத்தாள் அந்தப் பெண். அவர்களுடைய முகங்களையே மாறி மாறிப் பார்த்து இனம் புரியாத இன்ப மோகம் கொண்டிருந்த கமலேஸ்வரன் தன் வாழ்வு இன்னும் கெட்டுவிடவில்லை என உறுதியடைந்து கொண்டான்.
156

"நீங்கள் வரைந்தவைகளா?” "ஆம்! கலை எனது தொழில். இப்பொழுது வேலையற்றிருக்கிறேன். முதல் தடவையாக பொழுது போகும்வரை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று இங்கு எடுத்து வந்தேன்” என்றான் கமலேஸ்வரன்.
“முடிந்தால் இவற்றை விற்பீர்களா?" அந்த ஆங்கிலேயர் சலனமற்றபடியும், ஏன் வேலை போனது என்ற கேள்வி போன்ற இயற்கைக் குசலம் அற்றும் கேட்டது கமலேஸ்வரனுக்கு உள்ளூர ஆறுதலாக இருந்தது. வெளிநாட்டார் ஒருவருக்குப் பிழைப்புக்காகத் தனது ஒவியங்களை விற்பது பிறந்த நாட்டை அவமானப்படுத்தியதாகுமா என்றும் அவன் யோசித்தான்.
அவனுடைய மெளனத்தைக் கண்ட அந்த ஆங்கிலேயர் கூறினார். "நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. விற்க விருப்பமில்லாது விட்டால் சொல்லுங்கள் நாங்கள் இங்கிருந்தே இந்த உயரிய கலையை ஆசைதிர இரசித்து விட்டுப் போகிறோம். நான் ஒரு பத்திரிகையாளன். எனது பெயர் டேவிட்சன். நான் ஓர் அமெரிக்கன். பிட்ஸ்பர்க் போஸ்ட் கெசட் பத்திரிகையின் ஆசியப் பதிப்பாசிரியன். எனக்குக் கலை என்றால் உயிர். ஏன்? எந்த அமெரிக்கனுக்கும் அப்படித்தான். விஞ்ஞானத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை ஈடேற்றுகிறோமோ அவ்வளவுக்குக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எங்கள் ஆத்மாவை ஈடேற்றுகிறோம். ஈடேற்ற வேண்டுமென்று துடிக்கிறோம்."
"உங்களைக் கண்டதில் நான் பெருமைப்படுகிறேன். எனக்கு இந்தச் சந்திப்பு அரிய ஒரு சந்தர்ப்பம் என் பெயர் கமலேஸ்வரன். இங்கே தான் இருக்கிறேன்."என்றதும், "மீட் மை வைப்" என்றபடி தனது மனைவியை அறிமுகஞ் செய்து வைத்த டேவிட்சன் கூறினார்.
“வெரி ஹப்பி ஈவினிங். நாங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் இங்கு வந்தோம். இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்று கேள்விப்பட்டோம். நான் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் கூறுகிறேன். தவறாக எண்ணிவிட வேண்டாம்” என்று சொல்லி நிறுத்தி, கமலேஸ்வரனை நன்கு கவனித்துவிட்டு, அவர் கூறினார்.
"ஆண்டவன் எப்படி பேதங்களைக் கடந்தவனோ அதேபோல பத்திரிகையாளன் விருப்பு வெறுப்புக்களையும், நாடுகளையும், மொழி மதங்களையும் கடந்தவன். உண்மை பரிசுத்தமானது. கருத்து சுதந்திரமானது உங்கள் நாடு முத்து என்று பெயரளவில்தான் இருக்கிறது. முத்தை சிப்பிக்குள்ளேயே இன்னமும் விட்டு வைத்தால் எப்படி? இலங்கையின் வீதிகள், கட்டிடங்கள், ஹோட்டல்கள் எல்லாமே பார்ப்பதற்கு கவர்ச்சியற்றிருக்கின்றன. இப்படி ஒரிரண்டு மனிதர்கள் உங்களைப்போல. காண்பதற்கும் பேசுவதற்கும் செளகரியமானவர்களாக இருக்கிறார்கள். இங்கு உல்லாசப் பிரயாணிகளைத் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்காக அவமதிக்கிறார்கள். ஆனால் ஜப்பானில் அப்படியில்லை. வெளிநாட்டுப் பணத்திலேயே அந்த நாடு குளிர்ச்சியாக வளர்கிறது. நான் நினைக்கிறேன் ஜப்பானில் தேசிய மொத்த வருமானத்தில் நாற்பதுவீதம் உல்லாசப் பிரயாணத்தால் கிடைக்கிறது. சூழவரக் கடலும், வேண்டிய இடங்களில் வேண்டியவாறு மலையும், நதியும், காலநிலையும் கொண்ட இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே புவியியல் ரீதியில் தலைசிறந்தது. ஆனால் இங்கு நிருவாகம் சரியில்லைப்போலத் தெரிகிறது. எனக்கு இலங்கையைப் பற்றி கேள்வியளவில் நன்கு தெரியும். ஆனால் இப்பொழுதான் முதன் முறையாக உங்கள் பொன்னாட்டைப் பார்க்கிறேன். உங்கள் நாட்டுக்காக ஒரு பத்திரிகையாளன், ஒரு மனிதன் என்ற அடிப்படையில் நான் பெரிதும் வருந்துகிறேன்.”
57

Page 89
டேவிட்சன் உணர்ச்சிகரமாக மனதில் பட்டவற்றை அப்படியே கூறும் அழகில் இலயித்து, உண்மையை உண்மையாகவே எடுக்கப் பக்குவப்பட்டுக் கொண்டிருந்த கமலேஸ்வரன், “நீங்கள் கூறுவது முற்றிலும் சரி” என்றபடி அமைதியானான்.
"மிஸ்டர் கமலேஸ்வரன்.இப்பொழுது உங்கள் ஒவியங்கள் என்னை மறுபடியும் வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன. சொல்லுங்கள். இவற்றை விலைக்குக் கொடுக்கிறீர்களா?."
“நான் விற்பதற்காகவே எண்ணியிருக்கிறேன். நேற்றும் இங்குள்ள ஒருவரிடம் கொண்டு சென்று வாங்குமாறு கேட்ட பொழுது அவர் மறுத்து விட்டார்."
திருமதி டேவிட்சன் இதனைக் கேட்தும் பலமாகச் சிரித்தார். பின்னர் அநுதாபத்துடன் கமலேஸ்வரனைப் பார்த்து, “வருந்த வேண்டாம். நாங்கள் எல்லாவற்றையுமே வாங்குகிறோம்" என்றார்.
நன்றி” என்று கூறியபடி டேவிட்சனைப் பார்த்தான் கமலேஸ்வரன். அவனுடைய "மாலைக் காட்சி" என்ற ஒவியத்தையும் பார்த்துக் கொண்டே தன்னை மறந்து நின்ற டேவிட்சன்,
"இந்த இயற்கையில் ஏதாவது அழகுக் குறையைக் கண்டாலும் உங்களுடைய ஒவியத்தில் எதனையுமே குறையாகக் காணமுடியாது போலிருக்கிறதே. இப்படியான கலையம்சங்கள் நிறைந்த ஒவியங்களை மைக்கேல் ஆஞ்சலோ மட்டுந்தான் தீட்டியிருக்கிறார்.” என்று கூறினார்.
“இலங்கையில் உயர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அமெரிக்கன் ஒருவன்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது" திருமதி டேவிட்சன் நகைச் சுவையாகக் கூறியதும் அவளின் முதுகில் செல்லமாகத் தட்டி "நோ டார்லிங் நொட் அட் ஒல்” என்றார் டேவிட்சன்.
டேவிட்சன் கையிலிருந்த ஓவியங்களை மேலெழுந்தவாரியாக எண்ணி எல்லாமாக இருபதுஎன்று தனக்குள் முணுமுணுத்தார். பின்னர் பர்சைத் திறந்து கையில் கணிசமான அளவுபற்றி கற்றையாகக் கிடந்த பத்துரூபாத் தாள்களை வெளியே இழுத்து கமலேஸ்வரனிடம் கொடுத்தபடி, "உங்கள் ஒவியங்களை மட்டும் எண்ணினேன். பணத்தை எண்ண நான் விரும்பவில்லை. நீங்களே எண்ணி எவ்வளவு என்று எங்களுக்குச் சொல்லுங்கள்" என்றார்.
கமலேஸ்வரன் இரு கைகள் நிறைந்து காற்றில் பறக்கத் துடித்த அந்த ரூபாத் தாள்களை இறுகப் பற்றியபடி எண்ணி நானூற்று எழுபது ரூபா" என்றான்.
“நோ. நோ. டார்லிங். இது போதாதே" என்று டேவிட்சன் அவதிப்பட்டதும், அவர் மனைவி தனது கைப் பையைத் திறந்து மேலும் பணத்தை எண்ணி "கலையின் பெயரால் அதன்விலை பெருகட்டும்” என்றபடி கொடுத்தார்.
கமலேஸ்வரன் தனக்கு முன்னர் கொடுத்த தொகையே அதிகம் என்றதும், டேவிட்சன் சொன்னார்.
“எங்களுடைய மனவளம் போல எங்கள் நாடும் செல்வத்தால் பெருகி வழிகிறது. அங்கு நீங்கள் வந்தால் உங்களை எங்கள் டொலர்களால் நீராட்டுவோம். எங்களுக்க கலை உயிர் என்றேனல்லவா? அப்படியானால் கலையே கலைஞன்தானே. கலைஞன் எங்களுக்கு உயிர் என்று அர்த்தமல்லவா?”
கமலேஸ்வரன் நாவடைத்து நின்றான். அவனால் எதுவுமே பேச முடியவில்லை.
158

டேவிட்சன் தனது கோட்டுக்குள் கையைத் துளாவி தனது விலாசமிடப்பட்ட விசிட்டிங் கார்டை எடுத்து அவனிடம் ஒப்பமிட்டுக் கொடுத்தபடி கூறினார்.
“உங்களை எங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவது எனது முதல் வேலை" என்று கூறி நிறுத்தினார். பின்னர் தமது டயறியை எடுத்து கமலேஸ்வரனைப் பற்றிய விபரங்களைக் கேட்டு எழுதிக் கொண்டார். அவர் அங்ங்ணம் பேட்டி கண்டபொழுது திருமதி டேவிட்சன் முதலில் கமலேஸ்வரனையும் பின்னர் இருவரையும் புகைப்படமெடுத்துக் கொண்டார்.
“எங்களுக்கு இலங்கையில் இனிப் பார்க்க வேண்டிய இடங்கள் காட்சிகள் இல்லை. கொலம்பஸ் எங்கள் நாட்டைக் கண்டுபிடித்தாராம். நாங்கள் இருவரும் உங்களைக் கண்டு பிடித்து விட்டோம். இன்று எங்களுக்கு மகிழ்ச்சிமிக்க ஒரு நாள்.” என்ற டேவிட்சனைப் பார்த்துச் சிரித்த அவர் மனைவி, அதனை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினார்.
அந்தத் தம்பதிகளுக்கு வணக்கந் தெரிவித்து விடை கொடுத்துவிட்டு வீடு நோக்கி அவன் நடந்த பொழுது அவன் இதயம் அவர்களுக்கு நன்றிசொல்லிக் கொண்டது.
உங்களுக்கு இலங்கையில் உள்ள நாட்களில் இன்று மகிழ்ச்சியான நாள். எனக்கு என் வாழ்நாளிலேயே மகிழ்ச்சியான நாள். எனது தூரிகைக்கு இன்றுதான் முதன்முதல் கெளரவம் கிடைத்திருக்கிறது. உங்கள் இரசனையுள்ளம் என்றென்றும் வாழட்டும்.
கமலேஸ்வரன் தனது கண்களைக் கைக்குட்டையால் ஒற்றியபடி தொடர்ந்து நடந்தான்.
4
காலி வீதி வழியே கமலேஸ்வரன் நடந்து கொண்டிருந்தான். தூரந் தூரமாக மினுங்கி, அழுது வடிந்து கொண்டிருந்த வீதி விளக்குகளின் ஒளியில் அவன் உருவம் விழுந்து சிறிதாகி அவன் நடந்து கொண்டே இருக்கையில் பின்னர் பிரம்மாண்டமாகி விளையாடிக் கொண்டது. ஒளியை அண்மிக்கும்பொழுது சிறிதாவதும் சேய்மிக்கும்பொழுது பெரிதாவதுமாக செல்லம் கொட்டும் அந்த நிழலையே அவன் பார்த்துக் கொண்டு சென்றான்.
வீதிகளின் மருங்கில் கூட்டம் கூட்டமாக மாலையுலாச் சென்று கொண்டிருந்தவர்களுள் ஒருத்தி திடீரென்று செல்வராணியின் உருவம் பெறுவது போல அவனுக்குத் தோன்றியது. சடாரென்று நின்று செல்வராணியைப் போன்றதான ஒரு பிரமையைக் கொடுத்த அந்தப் பெண்ணை நோக்கிய கமலேஸ்வரன் அவள் வேறு யாரோ ஒருத்தி என்று கண்டு தெளிந்ததும் தொடர்ந்து நடந்தான்.
காலிமுகக் கடற்கரையிலிருந்து கொள்ளுப்பிட்டி வரை நடந்ததும் செல்வராணி இருக்கின்ற விடுவரை செல்ல வேண்டும் போன்று துடித்தது மனம், அவளைக் கண்டு உறவோடும் உரிமையோடும் பேசி எத்தனையோ வருடங்களாகி விட்டன போன்ற ஏக்க உணர்வு அவன் உள்ளத்தில் எழுந்துதகித்துமுடிவதற்குள் அவளின் இருப்பிடம்வரை கால்கள் நடந்து முடித்தன.
59

Page 90
தனது வழமையான தோற்றத்தை சேட் கைகளை நீட்டி விடுவதன் மூலமும் தலையைக் கோதிக் கோதிக் குழப்பி விடுவதன் மூலமும் மாற்றலாமா என்று அவன் எண்ணினான். இவ்வேளை நடையையும் வெகுவாகத் தளர்த்திக் கொண்டால் வீட்டுக்குள்ளிருந்தவாறே வீதியைப் பார்ப்பதையே வேலையாகக் கொண்ட பெண்களும் பிறரும் தன்னை அடையாளங் காண மாட்டார்கள் என்றும் அவன் எண்ணினான்.
எண்ணங்களோடு செயல் ஒத்துழைக்காது போகவே கமலேஸ்வரன் தொடர்ந்து நடந்தான். அவளுடைய வீட்டுக் கம்பவுண்டுக்குள் கேட் அருகில் பளபளக்கும் கார் ஒன்று நின்றதும் அவனுக்குத்திக்கென்றது. அந்தக் காரின் இலக்கத்தைக் கவனித்த பொழுது அது ராயினுடைய கார்தான் என்று தெரிந்துகொண்டான் கமலேஸ்வரன். அந்த மாலையில் இன்னொருவரின் வீட்டில் இன்னும் தன் மனைவியாக உள்ள ஒருத்தியிடம் ராய் பேசிக் கொண்டிருப்பதையும், அவன் கூறிய ஏதோ ஒன்றுக்காக செல்வராணி விழுந்து விழுந்து சிரிப்பதையும் அவதானித்தபடி நடந்தான் கமலேஸ்வரன்.
அவனுடைய நெஞ்சமெல்லாம் கனத்தது. தான் ஓர் ஆணாகப் பிறந்ததற்காகவே வெட்கப்பட்ட அவன் அப்படி ஒரு காட்சியைக் கண்டதற்காக வேதனைப்பட்டான்.
முறையான பாதுகாப்புடனும் கட்டுப்பாடுடனும் செல்வராணிக்குக் கணவன் என்ற ரீதியில் தான் நடந்து கொண்டிருந்தால் இத்தகைய நெஞ்சிடிகள் தனக்கு ஏற்பட்டிருக்க மாட்டா என்று எண்ணிய பொழுது, மாலையில் அந்த வெள்ளைக்காரத் தம்பதிகளின் சந்திப்பில் மறந்தவை யாவும் மறுபடியும் நினைவுக்கு வந்தன.
தொடர்ந்தும் அங்கு சுற்றித் திரியப் பிடிக்காது மறுபடியும் காலி வீதிக்கே வந்த கமலேஸ்வரன் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு பஸ்ஸில் ஏறினான்.
செல்வராணி இன்னமும் தன்னோடான சட்ட உறவை ஏன் வைத்திருக்கிறாள் என்ற கேள்வி மட்டுமே இப்பொழுது எழுந்தது. அன்று காலை தன்னைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில், அன்பில் செல்வராணி பழைய வீட்டுப் பக்கம் வராது விட்டாலும், தப்பித் தவறி விட்டுவிட்டுச் சென்ற ஒரு பொருளை மீட்கும் நோக்கத்துடன் வந்திருந்தால் சித்திரா அங்கு இருந்து சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்பதைப் பார்த்து ஏதாவது நினைக்க இடமுண்டுதானே என்றும் அவன் கேள்வி எழுப்பினான்.
சித்திராவுடன் தனக்கான உறவு எந்த விதத்திலும் இந்த உறவின் அசிங்கமான வருணனை போன்று ஆகாது என்று அவன் முடிவாக்கிய பொழுது மறுபடியும் செல்வராணியைக் கண்ட காட்சிக்காக மனம் வருந்தியது.
கமலேஸ்வரன் வீட்டுக்குச் சென்றதும் வீட்டு முற்றத்தில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த திருஞானத்தைக் கண்டதும் ஆச்சரியத்துடன் பார்த்து, “திரு என்ன நெடு நேரமாக என்னைப் பார்த்தா நிற்கிறாய்?" என்று கேட்டான்.
அவன் கலங்கிய முகத்துடன் நின்றதைக் கண்டதும் கமலேஸ்வரனுக்கு வியப்பு நீங்க சந்தேகம் குடிகொண்டிருந்தது. செல்வராணி வீட்டை விட்டுப்போன பின்பு இன்றுதான் திருஞானத்தை அவன் கண்டதால், தனக்கு ஏற்பட்டுவிட்ட அவமானத்தைத் திருஞானம் தாங்க முடியாது கலங்குகிறான் என்று நினைத்துக் கொண்ட கமலேஸ்வரன் கூறினான்.
"திரு. ஐ. ஆம். ஸாரி. நான் என்ன செய்வேன். நான் அம்மாவுடன் பிள்ளைகளை அனுப்பினதைக் குறையாக வைத்து அவள் வீட்டை விட்டே போய் விட்டாள். உண்மையில் பிள்ளைகள் போனது அவளுக்குக் குறையல்ல. ஆனால் அது ஒரு சந்தர்ப்பம். உடனடிக் காரணம். என் மனைவியைப் பற்றி என் வாயாலேயே குறையாகக் கூற வேண்டிய பாவகரமான வேலை. என்ன செய்ய? விதியே என்று விட்டு விட்டேன்."
160

“எல்லாம் எனக்குத் தெரியும் கமலேஸ். இவ்வளவு நாட்களாகியும் தெரியாமல் இருந்தது. இன்று உன்னிடம் வந்தபொழுதுதான் தெரிந்தது. பக்கத்து வீட்டிலே சொன்னார்கள். ஆனால் நீ எனக்கு இதுபற்றி ஒரு விளக்கமும் சொல்ல வேண்டாம் நான் எதிர்பார்த்ததுதான்."என்று கூறியபடி கமலேஸ்வரனின் தோளைப்பற்றித்தன் பக்கம் திருப்பினான் திருஞானம். பின்னர் கூறினான்.
"நான் இன்றுதான் யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறேன். அம்மா. ஐ. ய். யோ.”
“என்ன திரு? அம்மாவுக்கு என்ன? “இங்கிருந்து யாழ்ப்பாணம் போன இரண்டாம் நாளே வருத்தம்பிடித்துவிட்டதாம். பிள்ளையளை வீட்டிலே தனியே விட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு என்னவென்றுபோவது என்று நினைத்து மருந்துகூட எடுக்காமல் இருந்து விட்டாவாம். இப்ப. இப்ப. அவ."
“சொல் திரு. எனக்கு உடலெல்லாம் பதறுகிறது" "ஆண்டவா சோதனைக்குமேல் சோதனையா? அவ. பெரியாஸ்பத்திரியிலே வார்ட்டில் கிடக்கிறா கமலேஸ். நீ போனாயானால் உதவியாயிருக்கும். நீ தான் பெண்பிள்ளை ஆண்பிள்ளையெல்லாம். ஒரேயொரு பிள்ளையாய்ப் பிறந்து சந்தோஷப்பட்டதற்கு கடைசிக் காலங்களிலே பாவம் நன்றாகக் கஷ்டப்படுகிறாய். நானும் என்ன செய்ய? ஊருக்குப் போனபொழுது எங்கள் வீட்டில் பிள்ளைகளை விட்டுவிட்டு அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றேன். இங்கும் பாடசாலை தொடங்கி விட்டது. நீதான் போய் ஏதாவது செய்.நீபோகும் வரையிலேனும் அம்மா உன்னைப்பார்க்க இருந்தால் உண்மையிலேயே நீ அதிருஷ்டசாலி. ” திருஞானம் குரல் குன்றிவரக் கண்கள் கலங்கி வழியக் கூறினான்.
“அ.ம்.மா" கமலேஸ்வரன் தீனக் குரலில் தாயாரை நினைத்து அழைத்ததும் வா. கதவைத் திற." என்றபடி நடந்தான் திருஞானம்.
வீட்டுக்குள் சென்றதும் கற்றை கற்றையாக பாக்கெட்டுக்குள் திணிக்கப்பட்டிருந்த ரூபாக்களை எடுத்து திருஞானத்தின் மடியில் இட்டபடி, “எண்ணிப் பார், நான் இன்னும் எண்ணியும் பார்க்கவில்லை” என்றான் கமலேஸ்வரன்.
“கம்பனியாலே கொடுத்தார்களா?’ திருஞானம் கேட்டதும், “இல்லை. இன்றைக்கு நான் நடத்திய வியாபாரம். எனது ஓவியங்களை ஒரு அமெரிக்கர் வாங்கினார். அவர் கொடுத்த பணம்.” என்று கூறினான் கமலேஸ்வரன்.
“அமெரிக்கர்கள் நல்ல இரசிகர்கள்" என்று கூறிவிட்டு, “சரி. நீ வெளிக்கிடு. மெயில் ஏழு பதினைந்துக்கே போயிருக்கும். இனி அநுராதபுரம் பஸ் பதினொரு மணிக்கு இருக்கிறது. அங்கிருந்து காலைபஸ்ஸில் யாழ்ப்பாணம்பத்துமணிக்கெல்லாம்போய்விடலாம். அல்லது நின்று காலை உத்தரதேவியில் புறப்படலாமா?.” என்று கேட்டான் திருஞானம்
“எப்படியென்றாலும். இங்கிருந்தும் நித்திரையோ நிம்மதியோ வரப்போவதில்லை, கொழும்பு வீதிகளில் அலைந்தாலும் ஓரளவு ஆறுதல்.” என்றான் கமலேஸ்வரன்.
"இந்தா. மொத்தம் அறுநூற்றியிருபது ரூபா இருக்கிறது."என்றபடி பணத்தை மேசைமீது வைத்தான் திருஞானம்.
"அது வேறு உலகம்.” என்று முணுமுணுத்த கமலேஸ்வரன், "அம்மாவுக்கு என்ன..?” என்று கேட்டதும், சுவாசமாக்கி விட்டது.” என்று திருஞானம் எங்கோ பார்த்து அந்த நிலைக்கு தங்கம்மாவை ஆளாக்கிய சூழ்நிலையை வெறுத்தபடி கூறினான்.
e
16

Page 91
'உம்' கமலேஸ்வரனின் நாசியைப் பிய்த்துக் கொண்டு வெளியேறிய பெருமூச்சு அந்த அற்ப மெளனத்தில் தெளிவாகக் கேட்டது.
ሰ "நாளைக்கு ஒர் அறை வேறுபார்க்க வேண்டும்.” கமலேஸ்வரன் கூறி,"அடுத்த மாதம் முதல் வேறு ஆட்கள் வருகிறார்கள்.” என்று முடித்தான்.
"அப்படியா? அப்படியென்றால் இங்குள்ளவற்றை எனது இடத்தில் கொண்டு வந்து தற்காலிமாகப் போடு, பிறகு ஆறுதலாக இடந் தேடலாம்.”
திருஞானம் கூறியதை ஆமோதிப்பவன் போலத் தலையை ஆட்டினான் கமலேஸ்வரன்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேதனையும் உரிமையும் திட்டங்களும் நிறைந்த அந்தப்பொழுதில் அங்கு காதைப்பிளக்கும் ஒலியில் "சைலன்சர்”அற்றமோட்டார் சைக்கிள் ஒன்று வந்து நின்றதும் இருவரும் எழுந்து வெளியே பார்த்தபடி, ஒருவரை யொருவர் திகைப்புடன் விழித்தனர்.
வீட்டுக்குப் புறப்படுவதற்காகப் பெட்டியைத் திறந்து வைத்து தேவையான உடுப்புக்களையும் பொருட்களையும் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்த கமலேஸ்வரன் அப்பொழுது கையிலெடுத்திருந்த டிரௌசருடனே பிரமித்து நின்றான்.
அந்தத் தந்திச் சேவகன் வீட்டு இலக்கத்தைத் தெளிவாகப் பார்த்துத் தெரிந்து கொண்டு சைக்கிளில் உள்ளே வந்ததும் அவர்கள் இருதயங்கள் பல மடங்கு அடிக்கத் தொடங்கின. "ஆண்டவனே எங்களுக்கு இந்தத் தந்தி வரக்கூடாது" என்று வேண்டிக் கொண்டான் திருஞானம்.
தொடர்ந்து பல நாட்களாக கொஞ்சம் பலவீனப்பட்டுப்போயிருந்ததால் அவனால் எந்தத் துக்கத்தையும் இலகுவில் தாங்க முடியாது என்று நினைத்த திருஞானம் கமலேஸ்வரனைப் பரிவோடு பார்த்துக் கொண்டான். அடிக்கடி அடிபட்டு மீண்டும் மீண்டும் நெருப்பில் வெந்து உரம் ஏறியிருக்கும் இரும்புத் துண்டு போல கமலேஸ்வரன் இருந்ததால் தன்னைவிட்டு வேறோர் உயிர் பிரிந்து விட்டது என்ற கவலையின் ஏக்கத்தில் மட்டும் நிறைந்திருந்தான்.
அவர்கள் அமைதியாக விழிபிதுங்கி நிற்பதைக் கண்ட அந்தச் சேவகன், "இது நாற்பதாம் நம்பர் வீடுதானே?" என்று கேட்டதும் கமலேஸ்வரனும் திருஞானமும் ஒத்த குரலில் "ஆம்" என்றனர்.
"மிஸ்டர் கமலேஸ்வரனுக்குத் தந்தி” என்றபடி தந்தியை அவன் நீட்டிய பொழுது கமலேஸ்வரன் அசையாது நின்றான். திருஞானம் கமலேஸ்வரனை ஒருமுறை பார்த்துவிட்டு தானே சென்று கையெழுத்திட்டு தந்தியைப் பெற்றான். தனது கடமை முடிந்தது என்ற ஒரே உணர்வில் தந்திச் சேவகன் சென்றதும், அந்தத் தந்தியைக் கையில் வைத்தபடி புரட்டிப் பார்த்தான் திருஞானம்.
பின்னர் கமலேஸ்வரனையும் அந்தத் தந்தியையும் பார்த்தபடி நிற்கையில் “யாருக்குத் தந்திவந்தது?" என்றபடி வெளியே வந்தான் கணேசமணி அவனைத் தொடர்ந்து வெளியே வந்த பரமேஸ்வரி வீட்டு விறாந்தையின் தூணுடன் சாய்ந்தபடி முற்றத்தில் நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினாள்.
இருவரும் தந்தியைப் பிரித்துப் படிக்கத் தயங்கி நிற்பதைக் கண்ட கணேசமணி தானே அதனை வாங்கிப் பிரித்தான். அந்தத் தந்தி வாக்கியங்களைக் கண்டதும் அவனுடைய கண்கள் பொல பொல வென்று நீர் உகுந்தன. அந்தக் கண்ணிரை யாரும்
62

பார்க்கும் முன்னர் சடா ரென்று எதிர்ப் புறமாகத் திரும்பி கண்களைத் துடைத்துவிட்டு, ஒன்றுமே பேசாது அந்தத் தந்தியைத் திருஞானத்திடம் கொடுத்துவிட்டு, விறுவிறென உள்ளே நடந்தான் அவன்.
பிரிந்த நிலையில் கிடந்த அந்தத் தந்தியைஜடமொன்று கைபெற்றுநீட்டுவதுபோல் கமலேஸ்வரனிடம் கொடுக்க திருஞானம் முயற்சித்த பொழுதும் கமலேஸ்வரன் நாசி அகலப் பிய்ய, கண்கள் இமைவெட்டாது எங்கோ வெறிக்க சிலையாகி நின்றான்.
“கம. லேஸ். நீயே படித்துப் பார். எனக்கு நேற்றே தெரியும்."திருஞானம் தன்னைப் பலவாறு அடக்கிக் கொண்டு கூறினான்.
“கமலேஸ்."
திருஞானம் மறுபடியும் அழைத்ததும் அப்பொழுதுதான் உயிர் பெற்று உசும்புபவன்போல முனகினான் கமலேஸ்வரன். நடுங்கும் கைகள் இரண்டையும் முன் நீட்டி சுமக்க முடியாத துயரோடு வந்துள்ள அந்தத் தந்தியும் கணக்கும் என்ற உணர்வில் நின்ற கமலேஸ்வரன், அதனை மேலெழுந்தவாரியாக ஒரே பார்வையில் பார்த்ததும், பக்கத்து யன்னலை ஒரு கையால் பற்றிக் கொண்டு தந்தியைக் கசக்கியபடி கதறினான்.
“தாயே. நீயும் என்னை விட்டுட்டுப் போட்டியா?” என்று அவன் அழுத்தமாக அலறியதும்பாய்ந்துசென்ற திருஞானம் கமலேஸ்வரனைப்பற்றித்தன் நெஞ்சுட் புகைத்தபடி தானும் அழுதான். தன் இதயம் புலம்பிக் கொண்டே இருக்க, கமலேஸ்வரனைத் தோற்றுவதற்கு வாயெடுத்தான் திருஞானம்
பக்கத்து வீட்டில் பரமேஸ்வரியின் விசும்பல் ஒலி கேட்டது. கணேசமணி ஏதேதோ கூற அவளைத் தேற்றினான்.
“என்ன செய்வது பரமேஸ்வரி நீ அழாதே. அந்த அம்மாவுக்கு அப்படி ஒரு விதி. எல்லோரும் ஒருநாள் சாகிறது நிச்சயம்தான். ஆனால் இப்படி அநாதையாக, ஆதரிப்பாரற்று ஆட்கள் சாவது கொடுமையிலும் கொடுமை.”
“கமலேஸ் உன்னுடைய இளமையில் கண்ட ஏமாற்றத்தில் உன் தந்தையார் போனார். இப்பொழுது உன் குடும்ப வாழ்க்கையில் கண்ட ஏமாற்றத்தில் அம்மாவும் போய்விட்டார். உன்னைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் மட்டும் அவர்களால் முடிந்தது. பாவம். அவர்கள் வேறு என்னதான் செய்ய முடியும்?"திருஞானம் ஏதேதோ அரற்றினான்.
5
உலகத்தில் ஒருவன் இழக்க முடியாத செல்வம் அவனுடைய தாய் என்பது கமலேஸ்வரனின் மனம் உடைந்து போனதிலிருந்து பலருக்கு வெளிச்சமாகியது. கட்டிய மனைவி விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள் என்று அதிகம் கலங்காது தன்னை ஒருவாறு சமாளித்திருந்த கமலேஸ்வரனுக்கு, தங்கம்மாவின் மறைவு தாள முடியாததாக இருந்தது.
தகனக் கிரியைகளும் கடன்களும் முடிந்து கமலேஸ்வரன் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்கு வந்துகொண்டிருந்தான். அவனுடைய நினைவுகள் பலவாறு அவனைக் குடைந்து கொண்டிருந்தன.
தந்தி வந்த அன்றிரவு ஒன்பது மணியளவில் திருஞானத்துடன் சென்று செல்வராணிக்கு தனது தாயாரின் மரணச் செய்தியைக் கூறிய பொழுது செல்வராணி நடந்துகொண்ட விதம் அவனுக்குச் சொல்ல முடியாத துயரை அளித்தது.
163

Page 92
“செல்வராணி! நீ வீட்டைவிட்டே புறப்பட்டு விட்டாய். உன்னுடைய பிரிவு இடம்பெற்றதோடு." கமலேஸ்வரன் சொல்லி முடிப்பதற்குள் அவள் கேட்டாள்,
“அதற்கு இப்பொழுது என்ன? வீட்டைவிட்டு வெளிக்கிட்ட பிள்ளைகளை இழந்து, புருஷனை மறந்து இருக்கலாமென்று தான் நினைத்தேன். அதுவும் நீங்கள் இங்கு வந்தவுடன் இல்லை என்று ஆகிவிட்டது போல இருக்கிறது.”
செல்வராணி கூறியதைப் பொறுக்க முடியாது கோபமும், வெறுப்புந் தொனிக்க கூறினான் திருஞானம்.
“ஒன்று மட்டும் கவனித்துப் பேசுங்கள். வீட்டைவிட்டு வெளிக்கிட்ட உங்களை மறுபடியும் வருந்தி அழைக்க நாங்கள் வரவில்லை. ஆனால் கமலேஸ்வரனுடைய தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தியை உங்களுக்குச் சொல்வது எங்கள் கடமையென்றுதான் வந்தோம். நீங்கள் கதைப்பது கட்டிய புருஷனோடு என்பதையும் மறக்க வேண்டாம்”
"இறந்துவிட்டாவா? சேதி சொன்னதற்கு நன்றி. அதற்கு நான் என்ன செய்ய?” செல்வராணி எங்கோ வெளியை வெறித்தபடி கூறியது அந்த இருவருடைய ஆத்திரத்தையும் மேலும் கிளறியதுடன், அவர்களுடைய ஆண்மையையே கேவலமாக மதித்து அவள் கூறுவது போலவும் இருந்தது.
“செல்வராணி. நீ வீட்டுக்கு வரகிறாயா?" கமலேஸ்வரன் உணர்ச்சிகளை அடக்கியபடி கேட்டான். அவள் அதற்குச் சொன்னாள்,
“மன்னிக்க வேண்டும். நான் வாழ ஆசைப்படுகிறேன். என் உணர்ச்சிகளைப் புரிந்து அவற்றை மதித்து நடக்கக் கூடியவராக எனக்கு யாரும் இல்லை.”
“ஏன் இல்லை?” என்று இரண்டடி முன்நடந்து உறுக்கியபடி கேட்ட கமலேஸ்வரனைப் பின்னுக்கு இழுத்துத் தடுத்தான் திருஞானம். அவனுடைய பிடியிலிருந்து தனது கையை உதறியெடுத்த கமலேஸ்வரன் கனல் பொங்கக் கூறினான்.
“ரோசம்மானம் இருக்கின்றதா உனக்கு? இருந்தால் நான் கட்டியதாலிகழுத்தில் தொங்க இன்னொருவனுடன் சுற்றித் திரிவாயா? என்னை ஏன் சட்டம் என்ற சிறைக்குள் நிறுத்தி உனக்குக் கணவனாக்கி வைத்திருக்கிறாய்?"
செல்வராணிக்கும் கோபம் வந்து விட்டது. சுற்றும் முற்றும் ஆட்கள் இரகசியமாக அவர்களைப் பார்த்து நிற்கக் கூடிய அந்த வேளையில் கமலேஸ்வரனையும் திருஞானத்தையும் வெறித்து, வெறித்துப் பார்த்தாள் செல்வராணி
அவளுக்கு இப்பொழுது தாலி கனத்தது. அப்படியே கொடியோடு கழற்றி கமலேஸ்வரனைப் பார்த்து எறிந்தாள் அவள். ஒளியில் தங்கப் பாம்பொன்றை வீசி விட்டது போன்று பறந்து வந்து கமலேஸ்வரனுடைய நெஞ்சில் பலமாகப் பட்டு அவனது காலடியில் விழுந்தது அந்தத் தாலிக்கொடி.
திருஞானத்துக்கு அங்கு நிற்பதே பிடிக்காததால் சடாரென்று திரும்பி வீதிக்கு நடந்து வந்து கமலேஸ்வரனுக்காக காத்திருந்தான். கமலேஸ்வரனுக்கு தனது கைகளையும் கால்களையும் சங்கிலியால் இறுகப்பிணைத்துவிட்டு, இதயத்தை மெல்லிய கத்தியால் குத்தி, குத்தி யாரோ கிழிப்பதுபோல இருந்தது.
கண்கள் சிவந்தெழுந்ததால் ஏற்பட்ட எரிவில் கால்களும் கைகளும் பதறின. அகப்பட்ட பொருளால் எடுத்து அவளை ஒரே அடியாக அடித்துச் சாய்க்க வேண்டும் போலவும் இருந்தது.
கமலேஸ்வரன் சொன்னான்,
164

“அடங்காப்பிடாரி உனக்கு என்னுடைய அருமை தெரியவில்லை. இதனுடைய மதிப்பு மட்டும் என்னவென்று தெரியப் போகிறது? இந்த ஒன்றே போதும்.நீ எப்படிப்பட்டவள் ான்று தெரிவதற்கு." என்று கூறி வைதுகொண்டே, அந்தத் தாலிக்கொடியைக் குனிந்து எடுத்து கையில் அமைதியாக இட்டு வளைய வளையப் பார்த்தான் கமலேஸ்வரன்.
பின்னர் கொடியை ஏந்தியபடி நடந்து சென்று அவளுடைய அறையின் சுவர்க்குந்தில் அதனை வைத்துவிட்டு வெளியே செல்வதற்காகத் திரும்பினான் அவன்.
“ஏன்? சாவீட்டுச் செலவுக்குப் போதுமே! அதற்காகத்தானே கொடியைப் பற்றிய கதை வந்தது” செல்வராணி கூறியதைக் கேட்காதவன் போல நிலத்தை கண்கள் வலிந்து விழுங்க நடந்தான் கமலேஸ்வரன்.
பஸ் தரிப்பு நிலையம் வரை திருஞானம் கமலேஸ்வரனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவர்களில் யாரும் எதுவும் பேசக்கூடாது என்ற பிராத்தனையிலேயே இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
"அப்பா யானை.யானை" என்ற ரமணனின் குதூகலமான ஒலி அவனுடைய எண்ணச் சுழலைத் தடுத்தது. திரும்பிப் பார்த்தபொழுது அங்கு ஒரு குழுமாடு நின்று பூம் என்ற பேரொலி எழுப்பியபடி ஒடிக்கொண்டிருந்த யாழ்தேவியை எதிர்ப்புணர்ச்சியுடனும் பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தது.
“அது எருமை மாடு ரமணன். யானை அதைவிடப் பெரிதாக இருக்கும். முன்னுக்குத் தும்பிக்கையும் இருக்கும்" என்று கூறி, “கண்டபடி வெளியே தலைகாட்டிப் பார்க்க வேண்டாம்," என்றும் கேட்டுக் கொண்டான்.
ரமணனுக்கு அவ்வாறு உத்தரவாகக் கூறுவதற்கே தனக்குச் சக்தி இல்லாமல் போய்விட்டது என்றும் ஒருமுறை எண்ணினான் கமலேஸ்வரன்.
ரஞ்சனிக்கு வீட்டில் ஆட்கள் வந்திருந்ததும், அழுது அழுது சிந்தியதும், ஆச்சியைக் கொஞ்ச ஆட்கள் சேர்த்து பெட்டிக்குள் வைத்துத் தூக்கிக் கொண்டு எங்கோ சென்றதும், அலுப்பையும் ஆத்திரத்தையும் பயத்தையும் கொடுத்ததால், அவற்றால் ஏற்பட்ட பெருங்களைப்பில் எட்டு நாட்களின் பின்பு அயர்ந்து தூங்கிக் கொண்டு கிடந்தாள்.
மாலைக் காற்றும் அவள் மீது வந்து விழுந்த சூரியக் கதிர்களும் அவளைத் தூக்கமென்ற இன்ப உலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தன. கமலேஸ்வரனுடைய ய்லவீனப்பட்டுவிட்ட உடம்பு அவளை நெடு நேரம் மடியில் தூங்க வைக்க முடியாது ற்வித்ததால் அவள் அவர்களுக்கு எதிர்ப்புறமாக நீண்டுகிடந்த சீட்டில் துயின்று கொண்டிருந்தாள்.
கமலேஸ்வரன் வெளியே தலையை நீட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது ரமணனுக்கு அவ்வளவுபிடிக்காத விஷயமாகப்பட்டதும் சீட்டில் அமர்ந்தபடி ஜன்னல் மடிப்பில் கைபதித்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.
திருஞானம் இரண்டு நாட்கள் லீவில் மட்டுமே வந்திருந்ததால் அவன் ஐந்து நாட்களுக்கு முன்னரே கொழும்புக்குத் திரும்பி விட்டான். அத்துடன் கமலேஸ்வரனுடைய வீட்டிற் கிடந்த பொருட்களை எங்கேயேனும் முடக்க வேண்டு மென்ற பொறுப்பும் திருஞானத்துக்கு இருந்தது. கமலேஸ்வரன் ஊருக்குச் செல்லும் பொழுது புதிதாக வருபவர்களுக்கு அசெளகரியம் ஏற்படாதவாறு பொருட்களை ஒதுக்கிக் கொடுக்குமாறு கேட்டு, திறப்புக்களையும் கணேசமணியிடம் கொடுத்திருந்தான்.
165

Page 93
கொழும்புக் கோட்டைக்குச் சென்றதும் பிள்ளைகளுடன் எங்கு செல்வது என்று யோசனையில் ஆழ்ந்தான் கமலேஸ்வரன். கணேசமணி முகத்தைச் சுழித்துத் திரிந்ததை தங்கம்மாவின் மரணத்துடன் ஒரு திருப்பமாக மாற்றியிருப்பான் என்று அவன் நம்பிக்கையுணர்வுபெற்றதும் ஆறுதலடைந்தான்.
கமலேஸ்வரன் வீட்டுக்குப்பிள்ளைகளுடன் வந்த பொழுது அதிர்ச்சியடைந்தான். கணேசமணியின் வீடு பூட்டிக் கிடந்ததுடன், தன்னுடைய பார்வையின்றியே தனது வீட்டிற் கிடந்த அற்ப சொற்ப பொருள்களும் எங்கோ முடக்கப்பட்டு விட்டன என்றும் அவன் எண்ணினான்.
இரவு பத்து மணிக்குப் பின்னரும் தனது வீட்டின் முன் யாரோ புதுமுகங்கள் அமர்ந்து கல கலவென்று உரையாடிக் கொண்டிருந்தன. அவன் அங்கு இருந்த ஒரு நாள் அந்த வீட்டைப் பார்ப்பதற்காக வந்த அந்தப் பெண்களின் தந்தையான முதியவர் வீட்டின் முன்னறையில் ஒரு சோபாவில் சாய்ந்தபடி எதனையோ ஆழச் சிந்திப்பவர் போல அமர்ந்திருந்தார்.
இதுவரையும் கல கலவென்று இருந்த அந்தப் பெண்கள் தங்கள் வீட்டை நோக்கி யாரோ ஒருவர் குழந்தைகளுடன் வருவதைக் கண்டதும், “களிசான் போட்டபிச்சைக்காரன்” என்று மட்டும் நினைத்து ஏதோ கறுவி அமைதியானார்கள்.
கமலேஸ்வரனை மிகக் கஷ்டப்பட்டு அடையாளம் கண்டுகொண்ட அந்த முதியவர் “ஹலோ. ஹலோ. எல்லாம் முடிஞ்சுதா?ஐ.ஆம் ஸாரி. உங்கன் அம்மாவின் பிரிவு உங்களை வாட்டியிருக்கும்.” என்று எழுந்து முற்றத்துக்கு வந்து கமலேஸ்வரனுடன் அனுதாபமாகக் கைகுலுக்கிக் கொண்டார்.
பதிலுக்கு நன்றி தெரிவித்த கமலேஸ்வரன், கலகலவென்று முன்னர் இருந்து தன் எதிர்பாராத வருகையை விரும்பாதவர்கள்போல இதுவரையும் இருந்த பலதரப்பட்ட வயதுகளையுமுடைய அந்த ஆறு பெண்களையும் ஒரே விழி வீச்சில் பார்த்ததும் அவர் சொன்னார்.
“அவர்கள் என்னுடையவைப், பிள்ளைகள்.” “ஐ.சீ.”கமலேஸ்வரன் கூறிக் கொண்டே அவர்களின் அறிமுகத்தைச் சிரித்துப் பெற்றுக் கொண்டதும், பிச்சைக்காரனாக இருப்பான் என்று தாங்கள் கருதிய ஒருவர் எவ்வளவு நாகரிகமாகவும் அழகாகவும் உரையாடுகிறார் என்று எண்ணி வியந்ததுபோல் பார்த்துக் கொண்டனர். முற்றத்தில் பரப்பப்பட்ட கதிரைகளில் பெண்கள் அமர்ந்திருக்க அவர்களுடைய தாயார் எழுந்து “டேக் யுவ சீற்பிளிஸ்" என்று கூறினார்.
“தாங்கியூ. நாங்கள் இப்பொழுதே போக வேண்டும். மிஸ்டர் கணேசமணி, ஐ மீன் யுவர் நேபர் எங்கே? அவர்கள் எங்காவது போய்விட்டார்களா?” என்று கேட்டான்
கமலேஸ்வரன்.
“யேஸ் யேஸ். நேற்று ஊருக்குப் போய் விட்டினம். வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் செல்லும்.” என்று கூறிய அந்தப் பெண் “உங்களிடம் கொடுக்கும்படி
திறப்புக்களைக் கொடுத்திருக்கிறார்கள். உங்களைத் தங்கள் வீட்டிலேயே தங்கும்படி சொல்லிச்சினம்.” என்று அவனிடம் வீட்டுக்குள் இருந்த திறப்புக் கோர்வையை எடுத்துக் கொடுத்தாள்.
166

“தாங்கியூ” என்றபடி பெற்றுக் கொண்ட கமலேஸ்வரன் கணேசமணியின் முன்யோசனையையும் கருணையையும் எண்ணி வியந்து, அவற்றுக்காக அவனுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டான்.
மனதாரக் கணேசமணி தம்பதிகளின் உருவம் நினைவுத் திரையில் விழுந்த பொழுது, அவர்களுக்கு இருக்கும் நெடுநாட் குறையைப் போக்க ஆண்டவனே கருணை காட்டு என்று அவர்களுக்காக வேண்டிக் கொண்டான்.
கணேசமணியின் வீட்டைத் திறந்து கொண்டு கமலேஸ்வரன் உள்ளே சென்றதும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ச்சியாக ஏற்பட்டுவிட்ட நெஞ்சிடிகளுக்கும் கவலைகளுக்கும் விலக்காக சில பொறுப்பான விசயங்களையுந்தான் சேர்ந்து விட்டவர்கள் செய்திருக்கிறார்கள் என்று அவன் நினைத்து நன்றிப் பெருக்கில் உருகினான்.
சுவரின் நடுப்பகுதியில் பார்வையில் இலகுவில் படும்படி அவனுடைய தாயாரின் படம் மாட்டப்பட்டிருந்தது. அதனைச் சுற்றிக் கருகிய மலர்மாலை ஒன்று கிடந்தது. அதனைப் பார்த்ததும் கணேசமணியும் பரமேஸ்வரியும் வீட்டை விட்டுப் புறப்பட்டு இரண்டு மூன்று நாட்களேனும் சென்றிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன்.
女次★ 女次
167

Page 94
தணல் ஒன்பது
செல்வராணியின் மனம் பெரிதும் குழம்பியிருந்தது. வீட்டைவிட்டு வெளிக்கிட்டு நெடுநாட்களாகி விட்டிருந்ததும், காண்பவர்கள் எல்லோருமே அவளை ஒரு விதமாகப் பார்ப்பதுபோலப்பட்டதும் அவளை நாளுக்கு நாள் வாட்டத் தொடங்கின. அவள் தான் இந்த உலகத்தில் எப்படித் தனியப் பிறந்தாளோ அப்படியே தனிய வாழ்வதாகவும் எண்ணிப் பொருமினாள்.
தனது குறைகளையெல்லாம் தந்தை சோமலிங்கத்துக்கு ஒருபாட்டம் எழுதிக் குவித்திருந்தாள் எனினும் அவர் கொழும்புக்கு வந்து இரண்டொரு ஆறுதல் வார்த்தை கூற நினைக்கவில்லை என்பது அவளுக்குப் பெரிதும் வேதனையாக இருந்தது. பதிலுக்கு ஒரு கடிதம் மட்டும் வரைந்திருந்தார்.
"உன்னைச் செல்லமாக வளர்த்தது, நாகரிகமாக வாழவைத்தது எல்லாம் எவ்வளவு முட்டாள்தனமான வேலைகள் என்பது உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து தெரிகின்றன. உனக்கு நாகரீகத்தையே பின்பற்றத் தெரியாது என்பதுதான் என்னுடைய இப்போதைய முடிவு. நாகரீகம் என்ற விஷப்பாம்பு உன் கால்களைச் சுற்றிவிட்டது. இனி நீ அதிலிருந்து விடுபடுவதுமிகக் கஷ்டமான காரியம். பாம்புதானாகவும் விடமாட்டாது.நீயாக அதனை விடுவித்தாலும் அது சும்மா இருக்காது.
ஒரு தமிழ்ப் பெண் இலேசில் செய்ய முடியாததும் செய்யக் கூடாததுமான ஒரு காரியத்தை நீ மிகச் சாதாரணமாகவும் சுலபமாகவும் செய்து முடித்துவிட்டாய். உன்னை நேரில் கண்டால் நான் எப்படி மாறுவேனோ என்று நினைக்க எனக்கே பயமாக இருப்பதால் நான் கொழும்புக்கே வராது விட்டுவிட்டேன்.
முக்கியமாக ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். உன் வாழ்க்கையில் நீயாக ஏற்படுத்திக் கொண்ட விரக்திக்கு விமோசனம் கேட்டு இங்கு வராதே. வருவதாயின் உன்னை வரவேற்க நான் இருக்க மாட்டேன். உனது வீடுதானே என்ற உரிமையும் கர்வமும் உனக்கு ஏற்பட்டால் எந்த நிமிடத்திலும் நானும் உன் சின்ன அண்ணன் குடும்பமும் உனது வீட்டை விட்டு அகல ஆயத்தமாக உள்ளோம்.”
செல்வராணிக்கு வாய்விட்டு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. பெற்ற தந்தையே தன்னை வெறுத்துக் கடிதம் எழுதும் அளவிற்கு தன் வாழ்க்கை ஆகிவிட்டதாக எண்ணி அவள் கலங்கினாள்.
நீ வருவதாக இருந்தால் உன் கணவன், பிள்ளைகளுடன் இங்கு வா. உங்களை அப்படிக் காணவே என் மனம் துடிக்கிறது. ஆண்களைப் போன்ற மனத்தைரியம் பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் இருக்க வேண்டுமே தவிர சொந்தத் திருப்தியீனங்களை அகற்றுவதற்கு அத்தகைய துணிச்சல் வரத் தேவையில்லை.
சோமலிங்கம் மிக மிக வெளிப்படையாகத் தரிசனம் செய்து எழுதியிருந்தார். செல்வராணி தன்னைப் பற்றி யாரோ மிக அபாண்டமாகத் தந்தையிடம் கூறியிருக்கிறார்கள் என்று நினைத்து, அப்படியானவர்கள் அழிந்தொழிந்து போக வேண்டும் என்றும் சபித்தாள்
168

கமலேஸ்வரனும் திருஞானமும் வீடுதேடி வந்து தங்கம்மா இறந்த செய்தியைக் கூறிய பொழுது, தான் அப்படி நடந்து கொண்டது சரியா? என்று அவள் தன்னையே ஒருமுறை கேட்டுப் பார்த்தாள். மனம் எங்கோ அலைந்தது.
அன்று மாலை முழுவதும் அவளுக்கு ஒன்றுமே ஒடவில்லை. எழுந்து எங்காவது செல்லலாமா என்று நினைத்த பொழுது முதலில் ராயின் நினைவே வந்தது. கடிதத்தை மடித்து சூட்கேஸில் வைத்தபடி அவள் அலங்கரிக்கப் புறப்படத் தயாரானாள்.
முதலில் ராயினுடைய நினைவே வந்த போதும் தன்னுடைய வாழ்க்கை இதுதானென்று தீர்க்கமாகு முன்னரே அவன் எதற்காகவோ எல்லாம் துடித்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெளிவாகியிருந்தது. அதனால் நிச்சயமற்றதாகவும் போகக்கூடிய உறவுகளை நம்பி, தன்னை அவர்களுடைய இன்பப் பசிக்கு இரையாக்குவதில் என்ன இலாபம் கிடைக்கப் போகிறது என்று அவள் நினைத்து, மாலையிலோ மற்ற இரவு நேரங்களிலோ ராயினுடைய வீட்டுக்குத் தவறியும் செல்லக் கூடாது என்று அவள் முடிவுகட்டியிருந்தாள்.
டாக்டர் ஞானமலரைக் கண்டும் சில நாட்களாகியிருந்ததால் செல்வராணி அவளைக் காணத் துடித்தாள். அப்பொழுது மனம் அமைதிக் குறைவாகவும் இருந்தது. ஞானமலர்தான் அந்த அமைதிக் குறைவைப் போக்கக் கூடிய ஒரே டாக்டர். அவர்களுக்குத்தான் தனது நோய் இன்னது என்று தெரியும்.
செல்வராணிடாக்டர் ஞானமலரின் வீட்டுக்கோலிங் பெல்லை'அமுக்கிய பொழுது வெகுநேரமாக பதில் கிடைக்காமல் இருந்தது. வந்ததும் வந்து விட்டோம் பொறுத்துப் பார்ப்போம் என்று நினைத்து அவள் மறுபடியும்பெல்லை அமுக்கினாள்.
“யேஸ்” என்றபடி கதவைத் திறந்த சுந்தரராஜன் எதிர்பாராத அந்த வரவை எண்ணி உள்ளூர மகிழ்ந்தபடி “பிளீஸ். கம்இன்.” என்று அவளுக்கு வழிவிட்டு அழைத்தான்.
நின்ற நிலையை நகர்த்தாமல் நின்ற செல்வராணி அவனுடைய கோலத்தைக் க்ண்டதும் சற்றுத் துணுக்குற்று, பின்னர் தன்னைச் சமாளித்துச் சிரித்தபடி கேட்டாள்.
“டாக்டர் இருக்கிறாரா?” “வாருங்கள். வந்து அமருங்கள்” என்று அவன் கூறியதும் உள்ளே சென்று நடுமண்டபத்தில் உள்ள சோபாவில் அமர்ந்தாள் செல்வராணி, டாக்டர் ஞானமலருடைய கன்சல்டேஷன் அறையில் நித்தமும் உயிர் உள்ளதுபோல மழை காலங்களிலும் தன் இயல்பான போக்குடன் சுழன்று கொண்டிருக்கும் காற்றாடி எவரோ ஒருவருடைய பிரிவுக்காக வருந்தி நிற்பது போலக் காணப்பட்டது.
அந்தப் பெரிய வீட்டில் அப்பொழுது ஏற்பட்டிருந்த பலமான மயான அமைதியில் அவள் தனியே விடும் மூச்சு பயங்கரமாகக் கேட்டது. சுந்தரராஜன் அவளை அமரும்படி கூறிவிட்டு உள்ளே சென்று தான் அருந்திக்கொண்டிருந்த மதுவில் மேலும் இரண்டு கிளாஸ்கள் ஊற்றி மடமடவென்றுபுறங்கையால் வாயையுந்துடைத்துவிட்டு அங்கு வந்தான். ஞானமலர் வருகிறாள் என்று பின்புறமாகக் கேட்ட காலடியோசையிலிருந்து கணக்கிட்ட செல்வராணி “ஹலோ எப்படி?” என்றபடி திரும்பிய பொழுது சுந்தரராஜன் கண்களை மேலிறைக்குள் விழுத்தியபடி, கதவு நிலையை ஒரு கையால் பற்றிச் சிரித்துக் கொண்டு நின்றான்.
அவனுடைய அந்தக் கோலம் செல்வராணியை மிகவும் அசெளகரியப் படுத்தியது. அவள் அதனைக் காட்டிக் கொள்ளாமல், “நீங்கள் தானா? எங்கே டாக்டர்.” என்று கேட்டாள்.
69

Page 95
"ஐ ஆம் ஸாரி.ஞானமலர் தகப்பனுக்குச் சுகமில்லையென்று ஊருக்குச் சென்று விட்டாள். இனி அவ வருவதற்கு குறைந்தது நான்கு நாட்கள் ஆகும். உங்களிடம் சொல்லிவிட்டுப் புறப்படலாமென்று போன் செய்தா. அன்று நீங்கள் அலுவலகத்துக்குப் போகவில்லையாம்."
"ஓ அப்படியா? சரி.நான் பின்னர் வந்து காண்கிறேன்." என்றபடி எழுந்தாள் செல்வராணி,
"பிளிஸ்.அமருங்கள் வீட்டுக்கு வந்தவர்கள்ஆற அமர்ந்துதான் போக வேண்டும். மற்றது எங்களுடைய ஆசைக்கும் அன்புக்கும் உரிய விருந்தினர் நீங்கள் ஒருவர்தான். பறுவாயில்லை.சற்று இருந்துவிட்டுப் பின்னர் புறப்படுங்கள்.”
“இல்லை.நான் போக வேண்டும். .வேறு வேலையும் இருக்கின்றது." “என்ன வேலை?” “பிள்ளைகளைப் பார்க்க வேண்டும்” சுந்தரராஜன் இடி இடியென்று சிரித்தான். அவனுடைய அந்தச் சிரிப்பு செல்வராணி பொய் சொல்கிறாள் என்பதைச் சுட்டிக்காட்டுவது போலிருந்தது.
“பிள்ளைகளா? நீங்கள் தான் வீட்டில் இல்லை.என்று கேள்விப்பட்டேனே. உங்களுக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். உங்களுடைய இன்பகரமாக இருக்க வேண்டிய இந்த இனிய இளமை வாழ்க்கை இப்படிக் கவலைகளிலும் மனநோய்களிலும் ஒடிக்கொண்டிருப்பதைப் பார்க்க எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா செல்வா!"
சுந்தரராஜன் அவளுடைய பெயரைக் குறுக்கி ஏதோ உரிமையோடு அழைப்பவன் போலக் கூறியதும் அவனையே மேலும் கீழும் ஒருமுறை பார்த்தாள் செல்வராணி. இவருக்குத்தான் என்மீது எவ்வளவு அக்கறை?
“ஏதாவது குடிக்கிறீர்களா?”
பறவாயில்லை.நான் புறப்படலாம் என்று நினைக்கிறேன். “இல்லை.பிளிஸ்.இருங்கள்” என்றபடி உள்ளே சென்ற சுந்தரராஜன் தனது மதுக் கிளாசை நிறைத்தபடியும், செல்வராணிக்கு குளிர்பானம் தாங்கிய படியும் மீண்டும் வந்தான்.
“இந்தாருங்கள்." என்றபடி அவளிடம் நீட்டிய பொழுது செல்வராணி முதலில் தயங்கினாள் என்றாலும் பின்னர் “நன்றி” என்று கூறியபடி வாங்கிக் கொண்டாள்.
அவள் முன்பாக வந்து அமர்ந்த சுந்தரராஜன் அர்த்தமற்ற முறையில் சிரித்துவிட்டு, “இனி என்ன செய்வதாக யோசிக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
என்ன செய்வது.வாழ்க்கையை அழுது தீர்க்க வேண்டியதுதான்," செல்வராணி விரக்தியுடன் எங்கோ பார்த்தபடி கூறியதும் சுந்தரராஜன் இடைமறித்துக் கூறினான்.
“நோ.நோ.வாழ்க்கையை இப்படித்தான் அமைக்க வேண்டுமென்று கனவுகண்ட யாருமே அதனை அப்படியே வாழ்ந்து முடிப்பதில்லை. வாழ்க்கை என்பது பலதும் பத்தும் நிறைந்தது. அதில் எது எமக்குப் பிடிக்குமோ அதனை எடுத்துவிட்டு மீதத்தை மறந்துவிட வேண்டும். இப்படித்தான் வாழ்வோம் என்று இருப்பதைவிட எப்படியும் வாழலாம் என்று வாழ
yy
yy
வேண்டும்.
செல்வராணி தான் கூறுபவற்றை லயிப்புடன் கவனிக்கிறாள் என்பதை
அவதானித்த சுந்தரராஜன் தொடர்ந்தான்.
"ராஜ்யங்களை வெல்லும் ஒருவனுக்கு தன் மனைவியை வெல்ல முடியாதிருக்கும்
பலரிடம் வென்றவன் ஒருத்தியிடம் தோற்றுப் போகிறான்.இப்படி எத்தனையோ. ஆனால
70

நான் ஒன்று மட்டும் சொல்வேன் ஸ்கொட்லாந்து மன்னன் புறுாசைப்போல எல்லோரும் முயல்பவர்களாக இருக்க வேண்டும். சிலந்தியிடம் கற்ற பாடம் அது. ஒரு முறை தோற்று விட்டால் மனம் சோர்ந்து அந்த விஷயத்தையே விட்டு விட்டோமானால், நாம் அந்த ஒருமுறை மேற்கொண்ட முயற்சியின்போது கொண்டிருந்த ஆசை என்னாவது? ஆசையை ஒரு நாளும் சொல்லக்கூடாது. அது என்னுடைய கிரிமினல் லோவின்படி குற்றம்” செல்வராணி அவனுடைய தத்துவார்த்த நகைச்சுவையைக் கேட்டுச் சிரித்தாள். அவனும் அந்த அழகிய இளமைச் சிரிப்பை வெகுவாக இரசித்தபடி தொடர்ந்து கூறினான்.
"அன்றொருநாள் இரவுஉங்களுடன் டான்ஸ் ஆடவேண்டுமென்று நான் பெரிதும் ஆசைப்பட்டேன். அன்று எனக்கு அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதற்காக நான் ஆசையைக் கொன்று விட்டிருந்தால் இப்பொழுது நீங்கள் வந்திருக்கும் மாதிரிக்குப் பேசியிருக்கவே மனம் இருந்திருக்காது.”
“டான்ஸ் என்றால் எனக்கு உயிர்” செல்வராணி பாரீஸ் பெண்ணைப் போன்று அபிநயஞ் செய்து கூறியதும் மதுவை உள்ளுக்கு நிறைய அனுப்பியிருந்த சுந்தரராஜன் அவள் அமர்ந்திருந்த அந்தப் பெரிய சோபாவுக்கு இடம் பெயர்ந்தான்.
செல்வராணி பரந்து கிடந்த தனது முந்தானையை அள்ளி மடியில் இட்டபடி ஒரு பக்கமாகச் சாய்ந்து அவனையே பார்த்தபடி இருந்தாள். பின்னர் அவளே கேட்டாள்.
“நான் போகட்டுமா? இன்னொருநாள் ஆறுதலாக வந்து பேசிக் கொண்டிருக்கிறேன்”
“ஓ கெள சின்புல்.இட் இஸ்.இன்று எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். வீட்டில் ஒருவரும் இல்லையே என்று ஏங்கியபடி முடங்கிக் கிடந்தேன். தெய்வம் போல நீங்கள் வந்துவிட்டுப் போகிறேன் என்கிறீர்களே..?” என்றபடி செல்வராணியின் முன்கையை முதலில் வருடியபடி, பின்னர் பற்றி, மிக குனிந்து அதில் முத்தமிட்டான் சுந்தரராஜன்.
டான்ஸ் என்றால் எனக்கு உயிர்' என்று சொல்லியிருந்ததால், அந்த உயிரான நாட்டியத்தை ஒர் ஆணுடன் ஆடிய முடிவில் அவனும் அன்பு மீதூரப் பெற்றவனாயின் அப்படித்தான் முத்தமிடுவான். அதில் சமூகத்தவறு ஒன்றுமில்லை என்று செல்வராணி நினைத்து, பின்னர் கையை எடுத்து மடியில் வைத்து அவனுக்கும் தனக்குமுள்ள இடைவெளியை மேலும்அதிகரித்தபடி அமர்ந்தபொழுது ஆசனத்திலிருந்தபடியே அந்தத் தூரத்தைக் கடக்க முடியாது என்று கண்ட சுந்தரராஜன் அவள் தன்னையும் விரும்புகிறாள் என்ற மகிழ்ச்சி உணர்வில் அவளுக்கு எதிர்ப்புறமாக எழுந்து வந்து அவளுடைய தோளைச் சுற்றிக் கைகளை வளையவிட்டு, அவளை இறுகத் தன்னுடன், தன் முகத்துடன் சேர்த்து இதழ்களில் உதடுகள் பதித்து ஆண்மையுடனும் அது கலந்த வெறியுடனும் மிருக பலத்தில் முகம், தாடை, கழுத்து, இதழ்கள் என்றெல்லாம் முத்தமிட்டான். அதிலிருந்து விடுபட முடியாமல் திணறி மூச்செடுத்தாள் செல்வராணி.
பின்னர் ஏதோ வெறி பிடித்தவள் போல எழுந்து நின்று அவனது முகத்தில் இருகைகளாலும் மாறிமாறி அடித்துவிட்டு அதேவீச்சில் குனிந்து கைப்பையை எடுத்து, அவனையும் "யூ டேர்டி பூல்.” என்றபடி தள்ளிவிட்டு, வெளியே விறுவிறென நடந்தாள்.
கேடுகெட்ட நடப்புக்களை நாகரீகம், அந்தஸ்து என்ற போர்வைகளில் மறைத்து அந்த மாயையை நம்பித் தங்கள் இயல்புகளை மறந்தவர்களுக்குப் புதுப்பாடம் கற்பிக்கும் இந்த உலகத்துக்காக அவள் கண்கள் அழுது கொண்டிருந்தன.
7

Page 96
2
ஒவ்வொரு பெண்ணினுடைய வாழ்க்கையும் நித்த விபத்துள் நிறைந்துள்ளது என்பது கொழும்பு வாழ்க்கைகளில் கண்டுவிட்ட பெரிய அனுபவமாக இருந்தது செல்வராணிக்கு. அவளைப் பொறுத்த வரையில் அழகும் கவர்ச்சியும் வெறி மிகுந்தவை என்று எண்ணிப் புளுங்கி அழுதாள்.
தன்னுடைய நம்பிக்கை எங்கு பலமாக நிலைக்கின்றதோ அங்கு ஏமாற்றமோ துரோகமோ முடிவாகத் தனக்குக் கிடைப்பதாக அவள் நினைத்த பொழுது இந்த ஆடவர் உலகத்தையே அழித்து விடலாமா என்றும் கறுவினாள்.
கமலேஸ்வரனுடன் தனது வாழ்க்கையை ஆரம்பித்தது மிகமிகத் தவறான ஒரு காரியமாகப்பட்டது அவளுக்கு. அவளைப் பொறுத்த வரையில் ஆண்மையும் அன்பும் அற்ற ஆடவர்கள் வீதி நாய்களுக்குச் சமமாகத் தென்பட்டனர்.
சுந்தரராஜன் நீதிமன்றத்திலேயே துணிந்து பொய் சொல்லி எத்தனையோ வழக்குகளை முறியடித்த பெருமை மிக்கவன், என்பது அவளுக்குத் தெரியும். அத்துடன் குடிகாரனாக அவனுக்கு இங்கிருக்கும் கூட்டாளிகள் பலர், பல தடவைகளுக்கு மேல் வெலிக்கடையில் வாழ்ந்தவர்கள் என்பதை நினைத்த பொழுது உடலெல்லாம் புல்லரித்தது. குலசிங்கம் ஆசிரியர் அவளின் நம்பிக்கையிலும் மதிப்பிலும் இடிவிழச் செய்தான். சாரதி துரோகமே செய்தான். அவர்களுடைய அற்ப ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் யாருமே அவளைப் பலி கொண்டார்கள் என்று எண்ணிய பொழுது பழி உணர்ச்சியும் எழுந்தது.
சுந்தரராஜன் எதற்கும் அஞ்சமாட்டான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால் அவனுடைய மனைவி டாக்டர் ஞானமலருடன் தான் கொண்ட நட்பையும் மதியாது எந்த இழப்பையும் தனக்கு அவன் ஏற்படுத்துவான் என்று அவள் திடமாக நம்பினாள்.
செல்வராணி அழுது கொண்டே ஏதேதோ அரற்றினாள். ராய் அவளுக்கு அன்றிரவு போன் செய்த பொழுதுகூட அவள் சரியாகப் பேசவில்லை. அவனைக் கண்டதும் அவனுடைய குரலைக் கேட்டதும் அவளுக்கு எழுகின்ற கலகலப்புக்கூட அன்றிரவு ஏற்படவில்லை.
மோகன் ராயும் ஆண்தானே என்று அவள் நினைத்திருக்க வேண்டும். கணேசமணி குடும்பம் ஊரிலிருந்து வந்ததும் அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களிடம் வீட்டுச் சாவிகளைக் கொடுத்துவிட்டு, தனக்கு உடனடியாக வேண்டிய உடைகள், மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வேறிடத்துக்குச் சென்றான் கமலேஸ்வரன்.
ரமணனும் ரஞ்சனியும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனுடன், அவன் செல்லும் இடத்திற்கே சென்றுவிட வேண்டும் என்று இருந்ததால், கமலேஸ்வரன் புதிதாக எடுத்த ஒற்றையடியில் அவர்கள் வாழ்வதற்காகச் சென்று விட்டார்கள்.
அன்று காலி முகத்தில் அந்த வெள்ளைக்கார தம்பதிகள் வாரி வழங்கியிருந்த பணமெல்லாம் தாயின் ஈமச் சடங்குகளுக்குச் செலவழிக்கப்பட்டதால் கமலேஸ்வரனுக்குப் பழையபடி பணக் கஷ்டம் தெரியத் தொடங்கியிருந்தது.
72

சித்திரா அவனை அடிக்கடி வந்து பார்த்துப் போவது ஒன்றுடனே அமைய வேண்டியவளாகி விட்டாள். கமலேஸ்வரன் அவள் மேற்கொண்டு எதுவும் செய்யவோ சொல்லவோ கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருந்ததால், குடும்ப நிலைகளில் தலையிட முடியாத குறையில் பல தடவைகள் அழுது விட்டாள் சித்திரா.
கமலேஸ்வரனுக்கு ஒருநாள் காலை செட்டியாருடைய நினைவுவந்ததும் அவரைக் காண வேண்டுமென்ற ஆவலில் சென்றான்.
கமலேஸ்வரனைக் கண்டதும் அவர் பட்ட ஆனந்தம் எல்லை கடந்திருந்தது. கடைப் பையனை அனுப்பிக் கடையிலிருந்து காப்பி வாங்கி வரும்படி பணித்துவிட்டு அவனுடன் அளவளாவினார் செட்டியார்.
“உங்களுடைய சித்திரங்களை இங்கு வருகிற பொண்ணுங்க விட்டுவைக்கிறாங்க இல்லியே தம்பி. யாரு இவங்க. யாரு வரைஞ்சாங்க. என்றெல்லாம் குடைஞ்சு கேக்கிறாங்க. நான் என்ன சொல்ல? யாரோ இப்பிடியொருத்தி இருக்கலாம். ஆமா கமலேசு. உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா?.”
கமலேஸ்வரன் சிரித்துக் கொண்டே உள்ளூர அழுதான். அதரங்கள் முணுமுணுத்துக் கொண்டன.
“ஓம். அது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு" “என்ன முகத்திலே சந்தோஷத்தைக் காணோமே. ஏதாவது ஜோலியா?” "அப்படியொன்றுமில்லை. நல்ல வேலையிலிருந்தேன். அதனை நானே எனது ஆத்ம திருப்திக்காக விட்டு விட்டேன். அதுதான்.
கமலேஸ்வரன், "ஒவ்வொரு விளம்பரமும் மொடலால் ஆகும் பொழுது ஒவ்வொரு பெண்ணைக் கெடுக்கிறேன்” என்று கருதி தான் ராஜினாமாச் செய்ததைக் கூறிய பொழுது செட்டியார் அசந்தே போய் விட்டார்.
கமலேஸ்வரன் முன்பு, செல்வமும் சிறப்பும் பெற்று சமூகத்தின் உயர் தட்டுக்கு எப்படியோ வந்து விட்ட தான் ஒரு சிறிய மனிதன் என்பது போன்று எண்ணி பக்தியுடன் அவனைப் பார்த்துக் கொண்டார் செட்டியார்.
அவருடைய இதய நாதம் எதனையோ மீட்டிக் கொண்டிருந்தது. அவர் கூறினார். “உங்களை அண்ணைக்கு, உயரிய கலைஞனாகக் கண்ட பெருமை எனக்கு ஏற்பட்டது. ஆனா இண்ணைக்கோ - ஒரு பெரிய. உம் உம். மிகப்பெரிய ஜீவனை. மனுஷனைக் கண்ட ஆனந்தம் ஏற்பட்டு விட்டது.”
“நன்றி” கமலேஸ்வரன் மெல்லக் கூறினான். செட்டியார் சொன்னார். "ஆமா, ரொம்ப இளைச்சுப் போயிருக்கிறீர்களே. என்ன. என்கிட்டே எதுவும் மறைக்காதீங்க. நான் உங்களுக்கு அப்பன் மாதிரி.”
“ஒன்று நடந்து விட்டது. இரண்டு கிழமைகளுக்கு முன்பு நான் என் தாயையும் இழந்து விட்டேன்."
அவன் அப்படிக் கூறியதில்தான் எத்தனை அர்த்தங்கள்? படித்த காலத்தில் தந்தையை இழந்தேன். வாழ வேண்டிய இளமையிருந்தும் அதற்குத் துணையாக வந்தவளையும் இழந்தேன். கடைசியில் ஒரேயொரு ஆறுதலாக எனக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த தாயையும் இழந்தேன் என்ற கமலேஸ்வரனின் எண்ணக் கலக்கங்களின் வெளிப்பாடாக இருந்தது அவனுடைய அந்தப் பதில்.
73

Page 97
“சே! என்ன அநியாயம்? உங்கட அம்மா போயிட்டாவா?” “என்ன செய்வது விதியே என்று இருக்கிறேன்" "அப்படின்னா சம்சாரம்?" “அவள் இருக்கிறாள். அவளுக்கு ஒன்றுமில்லை" கமலேஸ்வரன் கூறிவிட்டு, செட்டியார் மேற்கொண்டு எதுவும் கேட்டு விடக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் அவரைப் பார்த்தான். பின்னர் கூறினான்.
“எனக்கு வேறு ஏதாவது வேலை வேண்டும்." 'ஆ இந்தாப் பாத்தீங்களா? சொல்லணும் சொல்லணும்னு இருந்தேன். உங்களைக் கண்ட சந்தோஷத்திலே மறந்தே போயிட்டேன். மனுஷாளுக்கு, அழுகை எண்ணாலும் சந்தோஷம் எண்ணாலும் மறதி அதிகம். ஆமா இந்தக் கடை வீதியில் அதோ தொங்கலில் தெரியுதே ஒரு பெரிய கட்டிடம்.”அவர் கூறி முடிப்பதற்குள் கடைவாசலுக்கு எழுந்து வந்து அந்தக் கட்டிடத்தைப் பார்த்தான் கமலேஸ்வரன்.
ஒ எவ்வளவு பிரமாண்டமான கட்டிடம். கோயிலை நிறுவும்பொழுது கட்டிடக் கலையின் தத்துவங்களில் ஒன்று அது இடத்தாலும் உயரத்தாலும் பெரியதாக இருக்க வேண்டும் என்பதாகும். மானிட ஜன்மங்களுக்கு அச்ச உணர்ச்சி முதலில் ஏற்படும் பொழுதுதான் பக்தி எழும் என்ற மனோதத்துவம் கோயிற் கட்டிடக் கலையில் சிறந்து நிற்பது கமலேஸ்வரனுக்கு நினைவில் எழுந்தது. பணத்தால் உயர்ந்தவர்களும் அருளால் உயர்ந்த தெய்வங்களின் கோயில்களைப் போன்று கட்டிடங்களை எழுப்புவது வசதிக்காக மட்டுமன்றி, வசதியினாலும் பயத்தினாலும் என்பதையும் நினைத்து, அந்த வானளாவி நின்ற மாடத்தைப் பார்த்தபடி வந்தமர்ந்தான் கமலேஸ்வரன்.
செட்டியார் தொடர்ந்து கூறினார். “அந்தக் கட்டிடத்தின் மூணாம் மாடிக்கு நேரேயிருக்கும் பரந்த இடத்தில் அவங்கடை விளம்பரம் ஒண்ணு இருக்காம், அதை வரையணுமாம். 'றேட் டெல்லாம் சொன்னாங்க. நானும் என்னாலானதைச் சொல்லி ஒருமாதிரி எழுநூற்றைம்பது ரூபா பேசியிருக்கிறன். சம்மதமா?”
“சம்மதமாவது? இருக்கின்ற நிலவரத்துக்கு நேரே வானத்துக்குப் பறந்து அந்த நீல வானத்தில் வண்ண வண்ணமாக எதனையும் வரைவேன் போல இருக்கிறது"
செட்டியார் அவனுடைய அந்த வார்த்தையைக் கேட்டதும்பொல பொல வென்று சிரிப்பை உதிர்த்து கூறினார்.
"ஆமா கலைஞர் இல்லே! அப்பபிடித்தான் கூறுவீங்க." கமலேஸ்வரன் அமைதியாகச் சிரித்துக் கொண்டான்.
3
உலகத்தில் உள்ள அத்தனை பெண்களும் நவநாகரீகத்தைத்தானே விரும்புகிறார்கள். நாகரீகமற்றவர்களை யாரும் விருப்புடன் நோக்கி மதிப்பதுமில்லையே! பெண்ணுக்கு கற்பும் தூய்மையும் இயற்கையை இயற்கையாகவே அழகுபடுத்தும் அழகுமட்டும் இருந்தால் போதும் என்றும் ஒரு காலம் இருந்ததல்லவா? ஏன் அந்தக் காலம் மாறியது? சமூகம் ஏன் வளர்ந்தது?
74

செல்வராணி தன்னைக் குடைந்து கொண்டே இருந்தாள். தமிழர் நாகரிகம், பண்பாடு என்றெல்லாம் பேசுகிறார்களே. ஆனையிறவுக்கு அங்காலேனும் அவை வளர்கின்றனவா? பண்பாடு பேசும் வீடுகள் எல்லாம் தொடை தெரியும் சட்டைகளாலும் இறக்கை ஒடிந்தரவிக்கைகளாலும் நிறைந்து கிடக்கின்றன. கொழும்பிலும் எத்தனை பெண்கள் என்னைப்போல் உடுக்கிறார்கள். உடலுக்கு ஏற்ற கோலத்தில் உடை அணிகிறேன். அதில் என்ன தவறு? கண்ணுக்கு மை தீட்டுவதும் உதட்டுக்குச் சாயம் பூசுவதும் பண்பாட்டு இலக்கியங்களில் இடம்பெறவில்லையா? அப்படியானால் ஒரு கலைஞனை என் கோலமும் போக்கும் ஏன் கவரவில்லை?
கலைஞன் பெண் இரசனையற்றவனா? பெண்ணை இரசிக்கத் தெரியாதவன் கலைஞனாக இருக்க முடியாதே. கலை என்பதே பெண்ணிலிருந்து தானே பிறக்கிறது
செல்வராணி எங்கோ புறப்பட ஆயத்தமாகி பின்னர் எங்கும் புறப்பட எண்ணாது, அறையுட் கிடந்த சோபாவில் சாய்ந்தபடி முகட்டைப் பார்த்தாள்.
இந்த முகடுகள் முன்னர் வைக்கோலாலும் காட்டுக் கொம்பர்களாலும் மூடப்பட்டிருந்தனவே. பின்னர் கிடுகுகள் அவற்றை மறைந்தனவே. சிலகாலம் வளைந்த ஒடுகள் வேயப்பட்டன. இப்பொழுது செங்கல் ஒடுகளும், ஆஸ்பெஸ்டசும் முகடுகளை மறைக்கின்றனவே. ஒரு வீட்டைவிட பெண் கேவலமானவளா? அப்பெண் இருப்பதற்காக வீடா? வீடு இருப்பதற்காகப் பெண்ணா?
காலங்கள் எப்படியெல்லாம் மாறிவிட்டன. செல்வராணி கணுக்கால் தெரியாமல் நீண்ட பாவாடை உடுத்து, கல்லூரிக்குச் சென்ற காலங்களை எண்ணிப் பார்த்தாள். கிடந்த நிலையிலேயே வீதியால் உலாவிச் சென்று கொண்டிருந்த சில இளம் பெண்கள் மீது கவனம் சென்றதும் அவள் சிரித்துக் கொண்டாள். ஒ காலம் மாறுவதில்லை! ஆனால் அது மாற்றப்படுகிறது.
அந்தப் பெண்களுடைய மினி ஸ்கேட்டுகளையும் அவை ஒட்டி இறுக்கியிருந்த உடலையும், மீதமாக விட்டிருந்த உறுப்புக்களையும் செல்வராணி பார்த்தாள்.
அவள் பலமாகச் சிரித்தாள். சே! யாராவது பார்த்தால் பைத்தியம் என்றல்லவா நினைக்கப் போகிறார்கள்? தனக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து வந்து ஜன்னலை மூடினாள். அவள் ஜன்னலைத் திறந்திருந்ததாலேதான் தான் வெளியே பார்க்க நேர்ந்தது என்று எண்ணியதும், அவளுக்கே விளங்காத பல தத்துவங்கள் பிறந்தன.
அவள் பற்றியிருந்த ஜன்னல் அப்படியே நின்றது. மூடுவதற்கு முன்னர் கடைசி முறையாக ஒரு தடவை பார்க்க வேண்டுமென்று விழிகள் துடித்தன. அவள் பார்த்தாள்.
வீதியால் வந்த ராயினுடைய கார் அவள் வீட்டுப் பக்கமாகத் திரும்புவது தெரிந்தது. கைகளை எடுத்து, ஜன்னலை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்தாள் செல்வராணி.
அந்த இடைவேளைப் பொழுதில் பலமாக வீசிய காற்று அந்த ஜன்னலை அடித்து மூடிவிட்டு அப்பாற் சென்றுவிட்டது. திடீரென்று எழுந்த ஒலி அவளை ஒரு கணம் துணுக்குற வைத்தது. அது ஜன்னல் எழுப்பிய அபயக் குரல் என்பதை உணர்ந்து தேறினாள் செல்வராணி.
மோகன் ராய் காரை காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு தனக்கேயுரிய பாணியில் ஸ்டைலாக நடந்து வந்தான். வெயிலின் கொடுமை அவனுடைய குளிர்ச்சி எண்ணங்களையும் சூடாக்குவதுபோல் இருந்ததால் ஒரே நேரத்தில் “ஊ ஊ” என்று ஊதியபடி சிரித்தான் மோகன் ராய்.
75

Page 98
"குட் ஆப்ரனூன்" செல்வராணி வரவேற்புக் கூறியதும் அவனும் அதனையே திருப்பிக்கூறி அவளோடு சிரித்தான்.
“காலம் வீணாகிப் போகிறது. இனி புறப்படுவதற்கு ஆயத்தமாக வேண்டும். உங்களைக் கடை வீதிக்குக் கூட்டிக் கொண்டு போகலாமென்று வந்தேன்"
மோகன் ராய் அவர்களின் நெடுநாள் திட்டத்துக்கு விரைவில் ஈடேற்றமளிப்பவன் போலக் கூறியதும்,
“அதற்கென்ன புறப்படலாமே!” என்றாள். அவள் அப்படிக் கூறிவிட்டு புறப்படாமலே நின்றது மோகன் ராய்க்குச் சிரிப்பை ஊட்டியது.
"ஏன் இந்த அழகு போதாதா? இன்னமும் அலங்களிக்க வேண்டுமா?"அவளுடைய முகம், மார்பு, இடை, கால்கள் எல்லாவற்றிலும் விழிகளைத் தரித்து இரசித்தபடி கூறினான் அவன்.
செல்வரானிக்கு வெட்கம் வந்தது போலிருந்ததும், வீட்டின் கூடத்துள் விழிகளை வீசினாள். அங்கு யாருமில்லை. நல்ல வேளை என்று நினைத்தபடி, “நல்ல ரசிகன்தான்” என்றாள் குறும்பாக. பின்னர் சிரித்துக் கொண்டாள்.
"இந்த அழகு உங்களுக்குப் போதுமென்றால் புறப்பட வேண்டியதுதானே!" செல்வராணி கூறிவிட்டு அழகுப்பையை எடுப்பதற்காக உள்ளே சென்றதும், ராய் காரை நோக்கி நடந்தான்.
அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கமலேஸ்வரன் செட்டியார் கூறியவற்றுக்குச் சம்மதந் தெரிவித்திருந்ததால் வர்ணங்களைத் தோளில் மாட்டிக் கொண்டு, அவர்கள் அமைத்துக் கொடுத்த ஏணியில் மேலே சென்று விட்டான். இப்பொழுது கட்டிடத்துக்கு வெளியே ஒட்டிக் கொண்டு இந்த உலகத்தைப் பார்த்தான். உயர்ந்த மாடிக் கட்டிடத்தில் ஏறிநின்று ஜன்னலால் கீழே பார்க்கும் பொழுது குடலெல்லாம் திரண்டு குண்டுபோலக் கீழே விழுவது போன்றும், மயக்கம் வருவது போன்றும் இருக்கும் அல்லவா? அதேபோன்று அவனுக்கும் முதலில் இருந்தது. ஒழுங்கான உணவு உட்செல்லாததால் உரமிழந்திருந்த கைகளும் கால்களும் சற்று உதறின. அவனுடைய நெஞ்சுரமும் கலையார்வமும் பலமாக இருந்ததால், செட்டியாருக்குக் கூறியது போன்று அவனால் வானத்திற்குப் பறந்து சென்று அந்த நீலவானத்தில் வண்ணந்தீட்டவும் முடியும்.
கமலேஸ்வரன் மண்ணைப் பார்த்தான். பச்சைப் பசேலென்று இருந்த மண்ணில் எத்தனை எத்தனை கட்டிடங்கள். மேலே நீலவானம். கீழே பசுந்தரை. பச்சையும் நீலமும் கலந்தால் மஞ்சள் அல்லவா உருவாகும்? மஞ்சள் நிறத்தை அவனால் காணமுடியவில்லை.
உலகமே செங்குருதி கொட்டப்பட்டதால் செம்மை பட்டுக் காட்சியளித்தது. ஆண்களும் பெண்களும் தனித்தும் சேர்ந்தும் அங்குமிங்குமாக எங்கோ போய் வந்து கொண்டிருந்தனர். மேலேயிருந்து வேடிக்கை பார்த்தான் கமலேஸ்வரன். மனதில் ஏற்பட்ட ஒரு நடுக்கம் இப்பொழுது முற்றாகத் தணிந்து விட்டது போன்றிருந்தது.
அவன் அந்த நகைக்கடை வீதியைப் பார்த்தான். செட்டியாருடைய கடையும் அதன் பெயர்ப் பலகையும் மட்டும் தெரிந்தன. உள்ளே ஒன்றுமே தெரியவில்லை. நகையும் புடவைகளுமாக அந்த வீதி நிறைந்திருந்தது. அதற்குப் பெண்கள் வீதி என்று பெயர் வைக்காமல் விட்டு விட்டார்களே!
176

கமலேஸ்வரன் மேற்கே தொலைதூரம் பார்த்தான். இடையிடையே எழுந்து நிற்கும் இரட்டை மாடிக் கடைகளின் கூரைகள் மீதாக அவன் பார்வை விழுந்த பொழுது கொந்தளிக்கும் அலைகடல் தெரிந்தது. கடலுக்கும் தனது உள்ளத்துக்கும் ஒரு வித்தியாசமுமில்லை என்று அவன் பொருமினான்.
கடலுக்கு இரவும் இல்லை, பகலும் இல்லை. அலைகள் என்றுமே ஒய்வதில்லை. மேற்கு வானின் சூரியக்கதிர்கள் பட்டு கடல்நீர் இடையிடையே மினுக்கங் காட்டியது.
கமலேஸ்வரனுக்கு வெய்யிலில் தோன்றிய அந்தக் காட்சி கிளுகிளுப்பாக இருந்தது. மஞ்சள் நிறச் சுண்ணாம்பு வெள்ளை அடித்துள்ள அந்தச் சுவரின் ஒரு பகுதியில் அழகு நங்கையரையும் வண்ண ஆபரணங்களையும் அவன் படைக்க வேண்டும். அதற்கென எழுந்த உணர்வில் தன்னைத் தாங்கியிருந்த பலகையில் வைக்கப்பட்டிருந்த வர்ணக் குழம்புகளைப் பார்வையிட்டான் அவன்.
மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாம் மாடி எல்லையின் அடியில் அவனுடைய ஒவியம் வளர்ந்து கொண்டிருந்தது.
அவனுக்கு இடையிடையே ஏற்படும் களைப்பைப் போக்குவதற்கு உதவியாக முகில்கள் சூரிய ஒளிக் கீற்றுகள் அவனைத் தாக்காமல் அடிக்கடி தடுத்துக் கொண்டன. கிழக்கு வானம் ஒரு வர்ண வானவில்லையிட்டு தனது கலை ஆர்வத்தையும் கைவண்ணத்தையும் காட்டியது.கமலேஸ்வரன் இயற்கையே தன்னுடன் போட்டியிடுவதாக குறுகுறுப்புடன் எண்ணிக் கொண்டான்.
அப்பொழுது டேவிட்சன் என்ற அந்த அமெரிக்கப் பத்திரிகையாசிரியர், தனது மாலைக்காட்சி என்ற ஒவியத்தைப் பார்த்து இயற்கையைப் பரிகசித்தது நினைவுக்கு வந்தது. ஒரு பெண்ணின் முழுத் தோற்றத்தையுமே கோடுகளாக வரைந்து முடித்த அவன் நகை விருப்பமுடைய ஒய்யாரமும் அழகும் கொண்ட ஒருத்தியின் முகத்தைத் தேடி அந்த வீதியைப் பார்த்தான்.
எல்லாப் பெண்களுமே தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது அழகாகத் தெரிவார்களா? கமலேஸ்வரனுடைய கண்கள் நகை விளம்பரத்துக்கு ஏற்ற அழகியின் அழகிய முகத்தைத் தேடி அலைந்தபடியிருந்தன.
பழைய மொடல் கார்களே நிறைந்து கிடந்த அந்த வீதியில் ஒரு புதுக்கார் நுழைந்தது. காருக்குள் இருவர் இருப்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. கமலேஸ்வரன் அந்த உருவங்களை இலகுவில் அடையாளங் கண்டு கொண்டதும் உள்ளம் பதறப் பார்த்தான்.
அவனுடைய பார்வையிலிருந்து தப்பாத மோகன்ராயும் செல்வராணியும் அவன் அவர்களுக்கு மேலே ஒர் உலகத்திலிருப்பதை உணராமல் ஒரு புடவைக் கடைக்குள் செல்வதற்காக நடந்து கொண்டிருந்தனர்.
வானத்துக்கு இந்தக் காட்சி பொறுக்காத ஒன்றுபோல இருந்தது. அது பொருமி இடித்தது. அந்த மாலையில் திடீரென இரவு வந்ததுபோல் எங்கும் இருண்டு காட்சியளித்தது. மனித நிழல்களிலும் கட்டிடங்களின் மறைவுகளிலுமிருந்து உயர்ந்துவிட்ட அந்தக் கட்டிடம் வானத்தின் ஓர் இயற்கை ஒளியில் தெளிவாகத் தெரிந்தது. கடைகளில் திடீரென விளக்குகள் எரியத் தொடங்கின.
மோகன் ராய் செல்வராணியின் தோளை உரசி, உரசி நடந்து கொண்டிருந்தான். அப்படிச் செல்லாது விட்டால் அவனுக்கு பத்தியப்படாதது போல இருந்தது. செல்வராணி
177

Page 99
எதிர்வரும் ஆட்களை விலத்தும் பொழுது ராயிடம் தன்னை முழுதாக ஒப்படைத்தே சென்று கொண்டிருந்தாள்.
அகலமாக வெட்டிய அவளுடைய மேற்சட்டைக்கும் ஏற்றி முடித்த கொண்டைக்கும் இடையே தங்கப் பாம்பு போல் சுற்றிக் கிடந்த தாலிக்கொடி கமலேஸ்வரனின் கண்களில் பட்டது. அதனின்றும் அவன் பார்வையை வெறுப்போடு எடுத்த பொழுது அவளைச்சூழ ஆயிரந் தாலிக்கொடிகளை யாரோ வீசுவது போலவும் அவை யமனுடைய பாசக்கயிறு வீசப்படும் மாதிரி என்று கதை கூறுவார்களே; அதுபோல அவனை வளைய வளைய வந்து சுற்றுவதும் போன்ற காட்சிகள் தோன்றின.
கமலேஸ்வரன் தான் அமர்ந்திருந்த பலகை பலமுடையதுதானா என்று பரீட்சித்துப் பார்த்தான். ஒர் ஆள்கள்டப்பட்டுநீட்டி நிமிர்ந்துபடுக்கக்கூடியதுபோன்ற நீள அகலமுடைய அந்தப் பலகை நான்கு தடவைகள் மேலும் கீழுமாக ஆடிவிட்டு ஓய்ந்தது. அது அவனுக்கு ஆறுதலை அளித்தது.
திடீரென்று வானம் பெரிதாக முழங்கியது போன்று ஒரு பேரொளி எழுந்தது. அந்தக் கடைவீதியில் நிறைந்து கிடந்த மனிதக் கூட்டம் மழைக்கு அஞ்சி கடை வாசல்களில் நின்றபடியே வீதியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.
இருந்தது இருந்தாற்போல் திடீரென்று மழை கொட்டியது. கமலேஸ்வரன் ஒவியத்தை மறைப்பதற்காக மேலே வரிந்து கட்டப்பட்டிருந்த 'கான்வஸ்' துணிக்குள் ஒதுங்கினான். அப்பொழுதும் அவனுடைய விழிகள் செல்வராணி மீதும் ராயின் மீதும் அவர்கள் வந்திருந்த காரின் மீதும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. உள்ளம், தனக்குக் கிடைத்த ஒன்றையாரோ அனுபவிக்கிறார்களே என்ற ஏக்கத்திலும்பதற்றத்திலும் பொருமியது. இதயம் பலமாக அடிக்கத் தொடங்கியது.
செல்வராணி மீது மழைத்துளி விழக்கூடாது என்ற பிரயத்தனமான அவாவில் தனது கைக்குட்டையை எடுத்து அவளுடைய தலைமீது இட்டு இடது கையால் அவளின் உயர்ந்து ஒடுங்கிய இடைமீது கைசேர்த்து அணைத்துராய் அழைத்துச் சென்றதைக் கண்ட கமலேஸ்வரனின் உள்ளம் மின்னல் தாக்கி திடீரென்று அறுந்து சாய்ந்த தந்திக்கம்பி போலாயிற்று. இதயம் ஒருகணம், அடிப்பதை நிறுத்தியது போலவும் தான் பலகைக்கு வெளியே நின்று அந்தக்கோரக் காட்சியைப் பார்ப்பது போலவும் இருந்தது.
நடந்து தன்னைச் சரிப்படுத்தி நின்று மேலும் அந்தக் காட்சியை அவர்கள் காருக்குள் சென்று மறையும்வரை பார்க்க மனம் துடித்தது. அவன் கால்களை எடுத்து வைத்த பொழுது பலகையைக் காணவில்லை.
கூட்டத்தை விலக்கியபடி "பேய் போன்று ஒலமிட்டபடி செட்டியார் ஓடிவந்து கமலேஸ்வரனைத் தூக்கி நிறுத்தி தன் நெஞ்சோடு அணைத்தபடி வாய்விட்டு அழுதார்.
“என்ரைராசா! உன்னுடைய வாழ்க்கையை நானே முடிச்சிட்டேம்பா. என்னை மன்னிச்சிடு.”
அவருடைய குரல் பலஹினமாக வெளிவந்து கொண்டிருந்தது. கமலேஸ்வரனுடைய முன்நெற்றி, தாடைகள், வாய் என்றெல்லாம் இரத்தம் பெருக்கெடுத்து மழைநீருடன் எங்கோ ஒடிக் கொண்டிருந்தது. அவனுடைய இடது முழங்கை முறிந்து தொங்குவது போன்று காணப்பட்டதும், செட்டியார் அதனைப்பற்றி மெல்ல அசைத்த பொழுது தோள் அசையாமலே மணிக்கை நாற்புறமும் அசைந்து வந்தது.
178

“ஐ.ய்.யோ வர்ணம் ஏந்திய இந்த வண்ணக்கையும் போச்சா. கதிர்வேலாயுத சுவாமி. உன்னுடைய வாசலிலும் இப்பிடிக் கேடா? ஜ.ய்.யோ நான் என்ன ஈடுகொடுப்பேன்."
செட்டியார் இடதுகையில் கமலேஸ்வரனைத் தாங்கியபடி செட்டியாரை விலக்கியதும், “சரி, ஆஸ்பத்திரிக்கு உடன் கொண்டு போவம் அப்பா" என்றபடி தனது கடைக்கு எழுந்து ஓடினார்.
அவருடைய அந்த நகைக் கடைக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து ராய் அவரை அழைத்து, “என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“ஐ.ய்.யா அதை ஏன் கேக்கறிங்க ஆத்மாவுக்காக வாழ நினைச்சவனுக்குக் கடவுள் கொடுத்த தண்டனை. அவன் ஒரு கலைஞன். அதோ மேலே சித்திரம் தீட்டியிருந்தான். இந்த கொள்ளையிலபோன மழை வந்தது. வழுக்கி விழுந்திட்டான்.” செட்டியார் அங்கு நிற்கவில்லை. பணத்தை எடுத்துக் கொண்டு இரத்தந் தோய்ந்து செங்காவியாகியிருந்த வேட்டியை மடித்து சந்து கட்டியபடி ஓடினார்.
செல்வராணிக்கு, அந்தக் குளிர்ப் பொழுதில் உடல், நெற்றி, கழுத்து எல்லாம் வியர்த்தது. அவள் உடல் இனம்புரியாதவாறு நடுங்கிக் கொண்டிருந்தது.
திக் பிரமை பிடித்தவள் போல அங்குமிங்கும் பார்த்தாள் செல்வராணி. மாடியிலிருந்து யாரோ கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டான் என்று ராய் கூறியது அவளுக்கு மேலும் கலக்கத்தை ஊட்டியது.
விழுந்து கிடப்பது ஒரு கலைஞன் என்பது மட்டும் அவளுக்குத் தெரிய வந்ததும் அவளையும் அறியாமல் அவளுடைய இதயம் பிரார்த்தித்தது. ஊருக்கு தாயாரின் மரணச் சடங்கிற்காகச் சென்றிருந்த கமலேஸ்வரன் திரும்பியிருக்கக் கூடாது' என்று வேண்டிக் கொண்டாள். அவளுடைய கை, கழுத்தை வருடி தாலிக்கொடியை ஒருமுறை பற்றியது. அன்றிரவு கமலேஸ்வரனும் திருஞானமும் தன்னைத் தேடி வந்தபொழுது தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணிய செல்வராணி,அது தவறான ஒரு நடத்தை என்று தீர்ப்பளித்து அழுதாள்.
ராய்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளுடைய கண்ணிரைக் கண்டதும் திருதிருவென்று விழித்த அவன் சொன்னான்.
"இதுவேறு ஆர்ட்டிஸ்ட்ராணி உங்களுடைய கமலேஸ்வரனாக இருக்க முடியாது. அந்தச் சோம்பேறிக்கு இவ்வளவு உயரத்துக்கு ஏறமுடியுமா?"
ராய் பலமாகச் சிரித்தது செல்வராணிக்கு ஆத்திரமூட்டியது. அத்துடன் கமலேஸ்வரனை மிகமிகக் கேவலமாகக் கூறியது வெறுப்பையூட்டியது. “நாம் பிரியும் பொழுதும்முறையோடு பிரிய வேண்டும்' என்று கூறிய அவனுடைய முகமும் வார்த்தைகளும் திரைப்படம் போலத் தெரிந்தன.
செல்வராணி தன்னை மீறியபடி கூறினாள். “அவரை அவ்வளவு கேவலமாகக் கூறும் அளவுக்கு நாம் ஒன்றும் உயர்ந்து விடவில்லை.”
ராய் பேயறைந்தவன் போலப் பார்த்தான். துக்கம் பலமாகத் தொண்டையை அடைத்ததுடன் மூக்கையும் அடக்குவது போலிருந்தது.
ஒரு சிலர் கமலேஸ்வரனைச் சுற்றி நிறையாத கூட்டத்தைப் பயன்படுத்தி ஒடும் மழை வெள்ளத்தோடு ஒடிக் கொண்டிருக்கும் உதிரக் காட்டை மேலும் வளர்க்காமல் அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்கத் துடித்தனர்.
79

Page 100
கமலேஸ்வரனை டாக்ஸியில் இட்டபொழுது அவனுடைய இடப்புறமே சீரழிக்கப்பட்டு விட்டது. பலருக்கு வெளிச்சமாகியது. இடுப்பு எலும்பு, முழந்தாள் என்பன பலமாகத் தாக்கப்பட்டிருந்தன. உடலெல்லாம் கீறல்களும் உரசல்களுமாகக் காட்சி தந்தன.
அவன் செட்டியாருடைய மடியில் பேச்சற்றுக் கிடந்தான்.
4.
கமலேஸ்வரனுக்கு நினைவு வந்ததும் சுற்றும் முற்றும் விழி திறந்து பார்த்தான். வெள்ளை வெளேரென்று முகட்டில் ஒட்டினாற்போல் கிடக்கும் சீலிங், அதன் நடுவில் ஆட்டுவிப்பார் யார் என்று அறிய முடியாதவாறு சுழன்று கொண்டிருக்கும் காற்றாடி, பக்கத்தில் தன்னைப் போன்றே உறுப்பில் எதனையோ இழந்து, உதிரத்தையும் இழந்து இழப்பு மீட்புக்காக வந்து கிடக்கும் யார் யாரோ வெள்ளை உடுப்பும் வெள்ளை உள்ளமுமாகப் பணிவிடை செய்யும் நர்சுகள், வந்து வந்துபோகும்டாக்டர்கள். என்றெல்லாம் அவனுடைய கண்களும் நினைவுகளும் சுழன்றன.
அவனுடைய கண்கள் மறுபடியும் காற்றாடியில் பதிந்த பொழுது மனம் எதனையோ நினைத்துக் கொண்டது. அவனுடைய அந்த நிலையை உருவாக்கி அவனை அவஸ்தைக்கு ஆளாக்கிய அது என்ன என்று கேட்டது.
கேள்விகளிலேயே வாழ்க்கை ஒடுவதால் பதில்கள் கிடைப்பதில்லைப் போலும். வாழ்க்கையே கேள்வியாக்கி, அந்தக் கேள்வியிலேயே வளர்ந்துவிட்ட தனது சமுதாயத்தைப் பற்றியும் அவன் எண்ணினான்.
காற்றடித்தால் சாய்ந்துவிடும் என்ற ஒரே காரணத்துக்காக சுவரில் பகைப்புலம் அமைத்து ஒவியந்தீட்டச் சொல்லிய கடை முதலாளியையும், அதனை நிலத்திலேயே வைத்து வரைந்து விட்டு உயரத் தூக்கினால் அசிங்கமாக ஆடிக் கொண்டிருக்கும் என்ற மனேஜரையும், அவனுக்கு எப்படியாவது கலைப்பிழைப்புக் கிடைக்க வேண்டுமென்று விரும்பிய செட்டியாரையும், அவனுடைய பிழைப்புக்கு மட்டுமன்றி, வாழ்க்கைக்கு மட்டுமன்றி உடலுக்கே, அதன் உயிருக்கே உலைவைக்க அங்கு வந்த செல்வராணியையும் கமலேஸ்வரன் மாறி மாறி நினைத்துக் கொண்டான்.
கமலேஸ்வரன் நாற்பது அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து மற்றொரு கடையின் கூரையில் தெறித்து தார் வீதியில் விழுந்து புரண்டதெல்லாம் இந்த உயிரைக் காப்பதற்கு மட்டும்தானா? என்றும் கேட்டுப் பார்த்தான். தலை சுற்றுவது போன்றும், கண்கள் பார்வை மங்கியவை போன்றும் இருந்த அந்தப் போதில் அவனால் பலமாக நிற்கமுடியாமற் செய்த அந்த வஸ்து எது? என்றும் ஆராய்ந்தான் அவன்.
ஓ! மனித உணர்ச்சியின் பலவீனந்தான் எத்தகையது? கமலேஸ்வரன் அங்கு இடது கைமுறிந்து, விலா எலும்பு பெயர்ந்து, முழந்தாழ்களும், தாடைகளும் உடைந்து கிடக்கின்றான் என்ற செய்தி எட்டியதும் திருஞானம், கணேசமணி ஆகியோர் துடிதுடித்து ஓடிவந்தனர். அவர்கள் செய்தியறிந்ததும் பட்ட வேதனையும், கமலேஸ்வரனைக் கண்டதும் காட்டிய அனுதாபமும் துயரின் எல்லையிலே அவர்களை இட்டுச் சென்று விட்டது. அது பரிதாப சம்பவம் என்பதைக் காட்டியது. ஆனால் செல்வராணிக்கு இன்னும் அந்தச் செய்தி எட்டவில்லையா?.
180

அன்று இரவு ஏழு மணியளவில் வாங்கிய புடவைகளையும், ஒரு சில நகைகளையும் அழகு பார்த்துக் கொண்டிருந்த செல்வராணி, விடைபெற்ற பொழுது மோகன்ராய் அவளுடைய கைகளுக்குள் பொருட்களைத் திணித்தபடி, அறைக்குள் வைத்து குழந்தையை முத்தமிடுவதுபோல் அவளுடைய தாடையை இதழ்களால் உழுததையும், அதனால் அவளுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு இன்பத்தையும் எண்ணிக் கிறங்கியிருந்தாள்.
புடவைக் கடையிலிருந்து புறப்படும் பொழுது, அபசகுனமாக ஒருவன் விழுந்தது அவளுக்கு என்னவோ போன்றிருந்தது.
செட்டியார், “அவன் ஒரு கலைஞன்” என்று மொட்டையாகக் கூறியதையும் செல்வராணி நினைத்துப் பார்த்தாள்.
கலைஞர்களே அபசகுனமாகவர்களா? செல்வராணி தன்னையே கேட்டபடி எழுந்து வந்து வீதியைப் பார்த்தாள். அங்குமிங்கும் அலறிப் புடைத்துக் கொண்டு ஒடும் வாகனங்களின் சாரதி ஆசனங்களில் இருந்த ஒவ்வொருவரும் மோகன்ராய் போன்று தென்பட்டனர். வீதியால் நொந்து ஒடிந்து நடந்து கொண்டிருப்பவர்கள் எல்லாரும் கமலேஸ்வரனைப் போன்ற சோரம் போனவர்கள் என்று எண்ணிய பொழுது, அவரும் ஒரு கலைஞன்தானே. வேலையற்ற கொடுமைக்காக அந்த உச்சியில் ஒவியந்தீட்ட ஏறியிருப்பாரா? என்று ஐயுற்றாள் அவள்.
அப்பொழுது மோகன்ராய் அவனை ஒரு சோம்பேறி என்று கூறியது நினைவுக்கு வரவே, அதனை ஏற்காது அவள் மனம் எதற்காகவோ குழம்பிக் கொண்டது.
செல்வராணி அந்தப்பொழுதில் ராய்க்கு கூறிய வார்த்தைகளைத் தவறாக ஏதோ அவசரத்தில் கூறி விட்டதாகச் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று துடித்தாள். அவனை அப்பொழுதே கண்டு, எல்லா விதத்திலும் நீங்கள் மிஸ்டர் கமலேஸ்வரனிலும் உயர்ந்தவர்கள் என்று கூறி அவனுடைய அன்பைப் பழையபடி யாருக்குமின்றி முழுதாகப் பெறவேண்டுமென்று துடித்தாள்.
செல்வராணி கட்டிலில் கிடந்த பொருட்களை அப்படியே சமத்துவமாக அள்ளி டிராயரில் இட்டு பூட்டிவிட்டு கண்ணாடிக்கு நேரே வந்து பவுடர் கொஞ்சம் எடுத்துமுகத்தில் ஒற்றி, அழகைச் சரிபார்த்துக் கொண்டு வீதிக்கு வந்து டாக்ஸி ஒன்றை மறித்தாள்.
அவளைப் போன்ற ஒருத்தி அப்படி எப்பொழுதாவது டாக்ஸி மறிக்கமாட்டாளா என்ற ஆசையில் ஒடிக் கொண்டிருந்தவன் போல் ஏனைய வாகனங்களையும் முந்திவந்த அவன், அவற்றை இடைநடுவில் திக்காடும்படி செய்து, பிறேக்கை நன்கு அழுத்தி நிறுத்திய பொழுது அந்த மொரிஸ் மைனர் டாக்ஸி முன்னும் பின்னும் உயர்ந்து பதிந்து தன் பாரத்தைச் சமப்படுத்தியபடி நின்றது.
செல்வராணி 'இரத்மலானைக்கு” என்றதும் வந்த வேகத்தில் வீதியில் ஒரு வட்டமிட்டுத் திருப்பி தெற்கு நோக்கி ஓடியது அந்த டாக்ஸி.
அவள் டாக்ஸிப் பணத்தைக் கொடுத்து விட்டு ராயினுடைய வீட்டுக்குள் வந்து உள்ளேயிருந்த பிறெஸ்பட்டனை அமுக்க நினைத்துக் கையெடுத்த பொழுது, அன்று அவள் வந்து அமர்ந்து உரையாடிய மேல்மாடியின் நடுக்கூடத்திலிருந்துநோ.நோ. அடஸ்விச் ஒப் த லைட் என்று குரல் கேட்டது.
முன் நீட்டிய கையை எடுக்க அவள் நினையாமலே சுற்று முற்றும் பார்த்தாள். செல்வராணியைக் கண்டதும் புதுவித மதிப்பும் அன்பும் ஊரப் பெற்றவனாக ஒருநாள் கண்ட வேலையாள் சிரித்தபடி வந்து, “என்னம்மா எதாச்சும் வேணுங்களா? ஐயா மேலைதான் இருக்கிறார். வேறு யாரோவும் வந்திருக்காங்க.."என்றபடி குழைந்தான் அவன்.
8

Page 101
“சரி. நானும் போகிறேன்” என்று கூறி, அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் மாடியேறிய செல்வராணியை, அவன் தயங்கியபடி “வந்து.” என்று கூறித் தடுத்தான்.
“என்ன விஷயம்?" செல்வராணி தன்னை அவன் தடுப்பதை விரும்பாதவள் போலக் கேட்டாள். ஒண்ணுமில்லேமா வந்து. ஐயாவுக்கு இப்பிடியே போனிலே நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்றேன், அப்புறம் நீங்க போகலாம்.”
“ஒன்றும் வேண்டாம். நானே நேரில் போகிறேன்” என்றபடி உட்புறமாகப் பூட்டாது வெறுமனே சாத்தியிருந்த கதவை ஒசையின்றி அவள் குறும்பு உணர்வுடன் திறந்தபொழுது, அங்கு கண்ட காட்சி அவளை நிலைகுலையச் செய்தது. கீழே நோக்கி வளர்ந்து சென்ற படிகளில் விழுந்து உருண்டு விடாமல் கதவின் பிடியையே செல்வராணி இறுகப் பற்றிய பொழுது ஏற்பட்ட சத்தத்தையும் அவதானிக்காதவர்கள் போல.
ராயின் மிக மிக நெருங்கிய அணைப்பில் செல்வராணிக்கு நன்கு அறிமுகமில்லாத ஒருத்தி அந்த நீண்ட சோபாவில் பாதி உடலும், அவனது மடியில் நெஞ்சில் பாதி உடலுமாகக் கிடந்தாள். அவளுடைய ஆடைகள் அலங்லோலமாகக் கிடந்தன. மேற்புறத்திலிருந்து கீழே கழற்றிச் சாய்க்கப்பட்ட துணிகளும் சட்டையும் அவர்கள் கால்களுக்கிடையில் அகப்பட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தன.
இமைகளுக்குள் விழிகளை மூடிச் சிரித்தபடியே. "நோ டார்லிங். நோ. என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தாள் அந்த முக்கால்வாசி நிர்வாணமான மங்கை. மோகன்ராய் அவளுடைய அங்கங்களை மிக ஐக்கியப்படுத்தி ஆனந்தப்பட்டிருந்த காட்சியைக் கலங்கி மூடிய கண்களால் கஷ்டப்பட்டுக் கண்டு கொண்டாள்.
“என் வாழ்க்கையே நாசமாகி விட்டதே. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விட்டதே"
மெளனமாக இதயம் சொல்லி அழுதது. செல்வராணி பலமாகக் கதவை இழுத்து அறைந்தாள். அப்பொழுது கதவு எழுப்பிய அவலக்குரல் ஜன்னல்களும் மூடப்பெற்று கற்போடு இருந்த அந்த வீடு சூறையாடப்பட்டு விட்டதைக் கண்டு பொறுக்காத ஒன்றாகக் கேட்டது. நடுக்காட்டில் காடையரிடம் அகப்பட்ட கன்னிப் பெண்போல, நீர் குடிப்பதற்காகக் குளத்துக்குச் சென்று பின்னர் அந்த நீரிலேயே வழுக்கி விழுந்த வெள்ளாட்டைப் போல அவளுடைய இதயமும் அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தது.
அவளுக்கு அபயமளிக்க அங்கு யாரும் இல்லாது விடினும் கதவு எழுப்பிய ஒலியில் கனவு கலைந்த நிலையில் துடித்துப் பதைத்து எழுந்து ஓடிவந்து, "வேலு என்ன சத்தம்? யார் கதவை அறைந்தது?" என்று ஆங்கிலத்தில் கர்ஜித்தான் மோகன்ராய்,
"கம்பெனி அம்மா வந்திருந்தார். நான் முதலில் தடுத்தேன். கேட்கவில்லை. உங்களுக்கு போன் செய்தேன். பதிலில்லை. அவர் கதவை அறைந்துவிட்டு வெளியே போய்விட்டார்”
தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தெளிவோடு கூறியதும், மோகன்ராய் படிகளில் இரண்டை ஒரே தடவையில் தாண்டி இன்னும் கீழே வந்து “ஆ செல்வராணியா வந்தது? ஏன் போகிறாள்? எங்களைக் கண்டு விட்டாளா?” என்று முனகியபடியாரையோ கேட்டான். வேலு உடனே பின்கட்டுப் பக்கஞ் சென்று விட்டதால், வெளியே ஒடிவந்து
y)
பார்த்தான் ராய்,
82

தன்னுடன் அன்று மாலை வந்த பொழுது அணிந்திருந்த அதே சேலையை சரக் சரக்கென்று ஒலியெழுப்பி நடந்து, அவள் கேட்டைத் தாண்டுவது தெரிந்தது. அவளை அழைக்கலாமா என்று நினைத்த பொழுது அவனுடைய மனம் சொல்லிக் கொண்டது.
தன்னை விட்டுவிட்டுப் போகின்ற யாரையுமே எவரும் துரத்திச் செல்லக் கூடாது. மோகன்ராய் கறுவியபடி உள்ளே சென்று கதவைப் பூட்டிக் கொண்டு இலகுவானான்.
செல்வராணி நடந்துகொண்டிருந்தாள். அவளுடைய கையில் தொங்கிப்பலமாக ஆடிய அழகுப்பை இடையிடையே கீழ்க்கால்களையும் தொடையையும் தாக்கத் தொடங்கியதால் அதனைத் தோளில் மாட்டி, கக்கத்தின் ஊடாக எடுத்து ஒரு கையால் அடியில் பற்றியபடி விறுவிறென நடந்தாள் செல்வராணி.
அவளுடைய இருதயமும் கண்களும் எது எதற்காக எல்லாமோ அழுது கொண்டிருந்ததால் ஒவ்வொரு விளக்கும் இரண்டாகவும் மூன்றாகவும் தெரியத் தொடங்கின. இடுப்பில் ஒயிலாகச் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொணண்டாள். அந்தக் கைக்குட்டையும் போதாமற் போகவே, நடையைத் தளர்த்தி நின்று முந்தானையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
இரண்டாவது நபர் வீதியால் ஒருபெண் வருவதைப் பார்த்தால் ஆயிரம் கனவுகள் அதிலிருந்து பிறக்கும் என்பது அவள் அறிந்த சாதாரண விஷயமாதலால் இப்பொழுது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“நம்பிக்கைத் துரோகி. பசுமை நிறைந்த நினைவுகளிலும், கனவு கலந்து ஆசைகளிலும் சென்றுகொண்டிருந்த என் குடும்ப வாழ்வையே கெடுத்தபாவி. தன்னுடைய புத்தியைக் காட்டிவிட்டான்."
செல்வரானி ஏதேதோ வைது கொண்டே நடந்து பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்தாள்.
5
செல்வராணி வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக தன் வசமிருந்த பாஸ்போட், விசா முதலிய பிரயாண வசதிப் பத்திரங்களை எடுத்து, தன் வெறி தீருமட்டும் கைகளால் பிய்த்தெறிந்தாள். அவளுக்கு அப்பொழுது ஏற்பட்டிருந்த பயங்கர கோபத்தில் வேறு என்னென்ன செய்வாளோ என்று ஏங்குமளவுக்கு உணர்ச்சி நிலைகள் மாறியிருந்தன.
அன்று காலை கடமை உணர்ச்சியுடன் அவள் அலுவலகத்துக்காகப் புறப்பட்டுச் சென்றதும். வழமை போல அங்கு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. செல்வராணி ஏதேதோவெல்லாம் பயங்கரமாகக் கற்பனை செய்திருந்ததால் அவளுக்கு ஒழுங்காக வேலைகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஊட்டியது.
காலையில் நெருப்பை மிதித்தவன் போல முகத்தை வைத்துக் கொண்டு காரணமில்லாமல் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்த மோகன்ராய் அன்றைக்கென்றே நேரத்துக்கு அலுவலகத்திற்கு வந்திருந்தது அவளுக்கு மேலும் வியப்பை ஊட்டியது.
செய்வதும் செய்துவிட்டு தன்னைச் சமாதானப்படுத்தும் நோக்கமாகவே அவன் அன்று அங்கு அப்படி வந்திருக்கிறான் என்று செல்வராணி நினைத்ததும், மோகன்ராய்
183

Page 102
கூறும் எவ்வித காரணத்தையும், சமாதானத்தையும், சாட்டையும் ஏற்றுக் கொள்வதில்லை என்று அவள் தீர்க்கமாக முடிவு செய்திருந்தாள்.
மோகன்ராய் அழைக்கிறான் என்று அலுவலகச் சேவகன் வந்து கூறியதும் அதற்கென ஆயத்தமாக இருந்த அவள் எழுந்து விறுவிறென நடந்து உள்ளே சென்றாள். அவனுடைய குளிர்ச்சியறைக் கதவு இழுக்கப் பெற்று திறந்து, விசையூட்டிய நிலைக்கும் அதிக பலத்துடன் கைவிடப்பட்டதால் பலமாக வந்து மோதியது.
அந்தக் கதவு எழுப்பிய ஒலி வழமைக்கு மாறாக இருந்ததுடன் அகெளரவமான ஒன்றாகவும் இருந்தது, மோகன்ராய்க்கு என்னவோ போலிருந்தது. அவன் அதனைக் காட்டிக் கொள்ளாமல் மேசைமீது பின்னி வைக்கப்பட்ட கைகளை மேலும் மேலும் பிசைந்தபடி, எதனையோ சொல்லவும், தான் சொல்வதே உண்மை என்று யாரும் நம்ப வேண்டும் என்றும் துடித்துக் கொண்டிருந்தான்.
ஓ! அவன் என்ன தான் காரணம் சொல்லப் போகிறான்? செல்வராணி கண்டுவிட்டதான அந்தப் பொல்லாத காமநிலைக் காட்சி பொய் என்று சொன்னால் நம்புவதற்கு அவள் என்ன குழந்தையா?
ஒரு பெண்ணுடன் வேறு ஓர் ஆடவன் தனிமையில், அதுவும் உணர்ச்சிகள் முடுக்கிய நிலையில், அவளை ஆசையோடும் வெறியோடும் அணைத்த உச்சச் சேர்க்கையின் பிணைப்பில் கண்ட பின்னும் அவர்களைச் சகோதரர்கள் என்றோ, சகோதர உணர்வில் பழகுபவர்கள் என்றோ நண்பர்கள் என்றோ யாராவது எண்ணுவார்களா?
செல்வராணி கண்ட அந்தப் பெண் நல்ல வேளையாக அந்த அலுவலகத்தில் வேலை செய்பவளாக இல்லை. வெளிநாட்டார் மட்டுந்தான் செல்வந்தர்கள், நாகரீகமானவர்கள், அழகானவர்கள் என்ற நம்பிக்கையின் சுவட்டில் அவர்களுக்காக எதனையும் துறக்கவோ, திறக்கவோ தயார் என்ற தீர்மானத்தில் இன்ப இரவுகளைச் சந்திக்கும் சில ஒருத்திகளில் ஒருத்தியாக அந்தப் பெண் அவனுடைய மடியில் தன்னை மறந்து மயங்கிக் கிறங்கிக் கிடந்தாளே, அந்தக் காட்சியைத்தான் பொய் என்பதா?
மோகன் ராய் நெடிய மெளனத்தை ஒடித்துக் கொண்டு கூறினான். "குட் மோர்னிங்.." செல்வராணி நிஷ்டூரமான தன் வாழ்க்கைக்காக கலங்கிக் கொண்டு சொன்னாள். "குட் மோர்னிங் இப்பொழுது ஏன் அழைத்தீர்கள்? மோகன் ராய் துடி துடித்தான். அந்த அலுவலகத்திற்கு அவன் கையெழுத்திட்ட நியமனக் கடிதத்தை வாங்கி ஆறு ஆண்டுகளாக அவள் கேட்காத கேள்வி அது.
முன்னரெல்லாம் அவள் அவன் முன்பாக வந்து கைகட்டி பதுமை போல் நின்று அவனைத் தரிசித்தபடி பக்குவமாகப் பதில் சொல்வாள்.
அவனுக்காக அவளுடைய இதயத்தைத் திறந்து விட்ட பின்னர் அந்த மதிப்பு நீங்க, அவன் அமரும்படி கூறுமுன்னரே கதிரையில் அமர்ந்து பகிடிகளும், கிண்டல்களும் செய்து ஒர் உயர்ந்த நட்பில் சில ஆண்டுகள் வேலை செய்து முடித்தாள். இப்பொழுது அவன் அமரும்படி கூறினால் அமர மாட்டேன் என்ற அடத்தில் நிற்பவள்போல விறைத்துக் கொண்டாள், செல்வராணி.
தன்னை ஒரு பெண் அவமதிப்பதைத் தாங்க முடியாது குழம்பிக் கொண்டிருந்தாலும், மோகன்ராய் கேட்டான்.
"நேற்று இரவு என் வீட்டுக்கு வந்துவிட்டு உடனடியாகத் திரும்பி விட்டீர்களே, ஏன்?" "ஏன் என்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன?”
184

“நான் கேட்டது உங்களுடைய காரணத்தை ஒவ்வொருவருக்கும் தன் தன் காரணம் மட்டும்தான் பெரியது. இதில் உங்களுடைய காரணம் உங்கள் வரையில் எவ்வளவு பெரியது என்று பார்ப்பதற்காகவே நான் கேட்கிறேன். நீங்கள் சொல்லத்தான் வேண்டுமென்பதில்லை. சொன்னால் வேறு எதிர்பாராத நட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்காது. அதனால்தான் அந்தக் காரணம் என்னவென்று கேட்கிறேன்.”
“என் வரையில் அந்தக் காரணத்தை என் கண்களாலேயே கண்டபின்பு நான் புதிதாக என்னத்தை யோசிக்க இருக்கிறது. நீங்கள் ஒரு ஸ்திரீலோலன். உங்களிடம் அன்பு வைப்பதையோ, உங்களை நம்பி என் வாழ்க்கையை நாசமாக்குவதையோ நான் இனியும் விரும்பவில்லை. நான்தான் இதில் நம்பிக்கை கெட்டவள்’ செல்வராணி கூறும் பொழுதே அவளுடைய நெஞ்சம் இடித்தது. விழிகளில் மின்னல் வெட்டியது. முகமெல்லாம் இருண்டு வந்தது.
அவளுடைய கண்களிலிருந்து மழை பொழிந்தது. செல்வராணி இப்பொழுது கேட்டாள். “கேவலம் ஒரு பெண்ணை மயக்குவதற்காக தனது பதவி, அந்தஸ்து, அன்பு இவற்றையெல்லாம் ஒருவன் துஷ்பிரயோகஞ் செய்யலாமா?"
மோகன்ராய் அவளுக்கு என்ன பதிலைத்தான் அப்படிப் பெரிதாகக் கூறிவிட முடியும். அவன் செய்ததும் செய்து கொண்டேயிருப்பதுமான ஒரு காரியத்தை அவள் கேட்டுவிட்டாள். தனது பதவிக்காகவும், சமூக அந்தஸ்துக்காகவும் பெண்கள் அவன் மீது மயங்கினால் அது தான் செய்த பிழை அன்று, என்று இதுவரை எண்ணிப் பெருமிதப்பட்டிருந்த அவனுக்கு அவளுடைய அந்தக் கேள்வி மூச்சுத் திணற வைத்தது.
பதில் தெரியாது விட்டாலும், பதில் தெரியாது என்பதைக் காட்டுவதுதானே உலக
ராய் கூறினான்.
“உங்களுக்குத் தேவையற்ற கதைகள் வேண்டாம். இப்படியெல்லாம் கூறுவதற்கு நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முந்திய கற்புள்ள செல்வராணியாக இருக்க வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் படியும், இந்து முறைப்படியும் ஒரு பெண்ணுக்குக் கணவன்தான் தெய்வம். நீங்களோ என்றால் அந்தக் கணவனையே, தெய்வத்தையே துச்சமாக மதித்து பகட்டுக்காகவும், நிறைந்த வாழ்க்கை வசதிக்காகவும் அலைந்தார்கள். அதற்கு நான்
ணைப்பில் என் இன்பத்திற்குத் துணையாகக் கிடந்த ஒருத்தியை கேவலமாக மதித்துப் பேசியிருக்கக் கூடாது. இனிப் பேசினால் நான் சகிக்க மாட்டேன்.”
"ஆடுவது வேசி நாடகம், அளப்பது கண்ணகி கதை. நல்ல உலகம் இது" “ஷட் அப் ஒழுங்கான வார்த்தைகளை ஒழுங்கான முறையில் பேச வேண்டும். கட்டிய கணவனைத் துறக்கின்ற அளவுக்கு துணிச்சலும், அவன் தானே கழுத்தில் கட்டிவிட்ட தாலியை அவமதித்து கழற்றி எறிகின்ற நாகரீகமும் தலைக்கேறியிருக்கும் உன் போன்றவள் வேறு எதனைத்தான் செய்ய மாட்டாள்? உனக்கே நீ கூறியது மிகப் பொருந்தும். ஆடுவது வேசி நாடகம். அளப்பது கண்ணகி கதை."
மோகன்ராய் என்றுமே அதிகமாகக் கோபிப்பதைச் செல்வராணி கண்டதில்லை. ஆதலால் அப்பொழுது அவன் முகம் மாறியிருந்த கோலத்தைச் சற்று நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டாலும், மனம் எதற்கும் உறுதியாக நின்று கொண்டிருந்தது, அவளுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
| 85

Page 103
“ஒருவன் அல்லது ஒருத்தி உலகத்தில் யாருக்குமே பயப்படத் தேவையில்லை. யாருக்காவும் வாழவும் தேவையில்லை. ஆனால் மனச்சாட்சிக்கும் சமூகத்திற்கும் தெய்வத்திற்கும் அஞ்சித்தான் தீர வேண்டும். இந்த மூன்றும் மனிதனை மூன்று நிலைகளில் உயர்த்தவல்லன. மனச்சாட்சி மனிதனை நேர்மையாளனாக்கும். சமூகம் அவனை ஒழுக்கவானாக்கும், தெய்வம் அவனை வாழ வைக்கும்.”
“என்னை ஒன்றுமே வாழவைக்க மாட்டாது. ஒன்றுக்குமே என்வரையில் அந்தச் சக்தி இல்லை”
“ஒன்று கேட்க விரும்புகிறேன். நமது நாட்டில் பெண்களால் பல அற்புதத் திருக்கோலங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பெண்களால் மழைபெய்திருக்கிறது. இன்னும்கூட சில நல்ல பெண்கள் இந்த நாட்டில் இருப்பதனால்தான் சூரியன் தகிதகித்து மண்ணில் வீழ்ந்து இந்த நாசகார உலகை அழிக்காமல் காத்து நிற்கிறது. மழை பெய்து, வயல்கள் செழித்து இந்த நாடு இந்தளவுக்கேனும் நிலைத்திருக்கிறது என்றால் ஒரு கற்பு மகளின் உண்மைத் தவந்தான் காரணம்."
“எங்கள் பாரத நாட்டில் ஒருவன் உத்தமனாக வாழ்வதையே தேசத் தொண்டாகும் என்று கருதுகிறோம். ஒவ்வொருவரும் உத்தமர்களாக இருக்கும்பொழுது நாட்டில் கொலை, களவு முதலிய பாதகங்கள் நிகழ மாட்டா. அவற்றுக்கு இந்த மண்ணில் இடமில்லை. அவற்றின் இடத்தில் அகிம்சையும் சத்தியமும் நிலைத்து வளர்ந்து விடும். அவற்றால் இந்த மனிதகுலமே வாழும்.”
செல்வராணி இப்பொழுது பொறுமையை இழந்து கேட்டாள். "இவையற்றி உங்களுக்கு நன்றாகக் கேள்வியளவில் தெரிந்திருக்கிறதே தவிர, செயலளவில் ஒன்றுமே தெரியவில்லை. என் மனத்தைக் கெடுத்தீர்கள். நேற்றிரவு என் கண்கள் அறிய, மனம் அறிய வேறொரு பெண்ணின் கற்பைச் சூறையாடினீர்கள். நீங்கள் பேசுகிற சத்தியத்தையும் அகிம்சையையும் சரியாகக் கடைப்பிடித்த மகாத்மா காந்தியே தனது செக்ஸ் பலவீனத்தை சத்திய சோதனையில் ஒப்புக் கொண்டுள்ளார். அத்தகைய தெய்வ மனிதர் பிறந்த நாட்டில் பிறந்துவிட்டு, குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் மூடி மறைக்கிறீர்களே”
"நீங்கள் பேசுவது உங்கள் அதிகாரியுடன், முதலாளியுடன் நான் நினைத்தால் உங்களுடைய பிழைப்புக்கே முடிவுகட்டி விடுவேன், கவனம்”
“பூ பெரிய பிழைப்பு. மானங்கெட்ட பிழைப்பு மானங் கெட்டவங்களுக்குக் கீழ் மானங்கெட்டுச் செய்யும் இந்த வேசித்தனத்திலும் உண்மையிலேயே இன்னொருவனுக்குச் சேலை திறந்து நிம்மதியாக வாழலாம். கற்பு என்று பொய் பேசிக் கொண்டு கற்புத் தவறி நடப்பதிலும், கற்பே இல்லாதவள் என்று ஒருத்தி தன்னைத்தானே சொல்லிக் கொண்டு கற்பின்றி வாழ்வது கற்பானது. ஏனெனில் கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்றுதான் எங்கள் தூயமொழியில் கூறப்பட்டிருக்கிறது. பெண்ணுடைய அங்கத்தில் கற்பு இல்லை. அவளுடைய மனத்தில்தான் அது இருக்கிறது.”
“யூ கெட் அவுட்” “தாங் யூ” செல்வராணி வேண்டுமென்றே அவனுக்கு நன்றி கூறியது மோகன்ராய் தனக்குக் கிடைத்த பெரிய அவமானமாகக் கருதினான்.
186

6
செல்வராணி தனது ஆசனத்துக்கு வந்தமர்ந்ததும் நெஞ்சம் படக்கென்று அடித்துக்கொண்டது. தான் இந்நாட்களில் இருக்கும் நிலையில் மோகன் ராயுடன் அப்படி அவதூறாகவும் அவமரியாதையாகவும் பேசியிருக்கவே கூடாது என்று மனம் எண்ணிப் புலம்பினாள்.
கட்டிய கணவனைப் பிரிந்து, பிள்ளைகளை மறந்து, தந்தையால் வெறுக்கப்பட்டு வாழும் இந்த நிலையில் செல்வராணியின் பதில்கள் நிலைமைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவையாகப்படவில்லை அவளுக்கு. அவள் கலங்கினாள். கண்களிலிருந்து வழிந்த பிரவாகத்துக்கு முடிவு வேண்டி மனம் அலைந்தது.
தனது வேலைகளிலும் நாட்டம் செல்லாததால் எதனையாவது படிக்கலாமா என்று தனது மேசை டிராயர்களைத் திறந்து பார்த்தபொழுது, வழமையாக அங்கிருக்கும் கதைப் புத்தகம்கூட இருக்கவில்லை. கடந்தவார முடிவில் டைப்பிஸ்ட் அதனை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டது அபபொழுது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
செல்வராணி எழுந்து சென்று கணக்காளருடைய அறைக்குட் சென்று, அவர் வரும்பொழுது வாங்கி வந்த காலைத் தினசரிகளைக் கேட்டு வாங்கி வந்தாள்.
அவள் அங்கு சென்றதும் பத்திரிகைகளை எடுத்து அவளிடம் கொடுத்த கணக்காளர் அவளைக் கேட்டார்.
“பை.த. வே. உங்களுடைய கணவரின் பெயர் என்ன?” கமலேஸ்வரனைப் பற்றி ஏதோ குடைந்து கேட்கப் போகிறார் என்ற அச்ச உணர்வில் சிறிது தயங்கி, பத்திரிகைகளை எடுக்கும் நோக்கத்துடன் ஏன் இங்கு வந்தோம் என்று வருந்தியபடி "மிஸ்டர் கமலேஸ்வரன்” என்றாள். "அவர் ஒர் ஆர்ட்டிஸ்ட் அல்லவா?”
ஆமாம்.” “ஐ. ஆம் சாரி” என்று கூறி நிறுத்திவிட்டு, அந்தப் பத்திரிகையின் முதற்பக்கத்தின் அடியில் ஒரு சிறு செய்தி இருப்பதைச் சுட்டிக் காட்டியபடி "இது யார்?" என்று செல்வராணியைக் கேட்டார்.
செல்வராணி பலவீனப்பட்டிருந்த தனது இதயத்தை அடிக்காது நின்று விடாதே என்று யாசிப்பது போல் நெஞ்சில் கைவைத்தபடி, அவசரஅவசரமாக அந்தச் செய்தியை வாசித்தாள்.
அவள் உடலும் மனமும் பதறின. “ஐ.ய்.யோ தெய்வமே” என்று அடக்கமாகக் குரல் எழுப்பி, வேதனையோடு முனகியபடி கணக்காளர் முன்னிலையிலிருந்த கதிரையில் அமர்ந்து மேசைமீது குப்புற முகம் புதைத்து அழுதாள்.
அவளுடைய விசும்பலைக் கேட்டு, அதற்குத் தானே காரணமாகி விட்டதாக உணர்ந்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டார் அந்தக் கணக்காளர்.
அந்தச் செய்தியில் கமலேஸ்வரன் என்ற ஒர் ஆர்ட்டிஸ்ட் இரண்டு மாடிக் கட்டிடமொன்றில் ஒவிய வேலைகளில் ஈடுபட்டிருந்த பொழுது கால் தவறி விழுந்து பல உடற் சேதத்துக்குள்ளானார் என்றும், கொழும்பு பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரின் நிலை மிக அபாயகரமாக இருக்கிறது என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
187

Page 104
te
ஐ.ஆம். வெரி. சாரி. மிஸ். உங்களுக்கு ஒரு பழியான காரியஞ்செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும்.”
அந்தக் கணக்காளர் குரலை மிகவுந் தாழ்த்திக் குழைகின்ற ஒரு தொனியில்
கூறியதை, “பறுவாயில்லை. உங்களுக்கு நான் நன்றியாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இன்றுதான் எனக்குத் தெரியும்.” என்றபடி மறுத்து, எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் செல்வராணி.
செல்வராணி ஆஸ்பத்திரிக்கு டாக்ஸியொன்றை அமர்த்திக் கொண்டு விரைந்து சென்றதும், பார்வையாளர் செல்ல முடியாத அந்த வேளையில் கமலேஸ்வரனைப் பார்க்க வேண்டுமென்ற அவா மேலும் மேலும் உந்தி அவசரத்துள் ஆழ்த்தியதும், காவலாளிகளையே பிரமிக்கும்படி நிற்கவைத்து விட்டு அவள் உள்ளே போய்க் கொண்டிருந்தாள்.
உச்சிக் கொண்டையும் பெண் டாக்டர் போன்ற பொது 'ஒப்பனையும் கொண்டு அவள் தோற்றியதால் அவளைத் தடுப்பதா விடுவதா என்று காவலாளிகள் ஐயுற்று நின்ற வேளையில் செல்வராணி அவர்கள் ஒவ்வொருவயுைம் தாண்டி அப்பாற் சென்று கொண்டிருந்தாள்.
காவலாளிகளின் முகத்திலே விழிக்காமல் மிகவும் சீரியஸாக நிலத்தையும் நீண்டு கிடக்கும் கொறிடோர்’களையும் பார்த்தபடி சென்றால் அவர்கள் அப்படிச் செல்வோர் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என்று நினைத்து பேசாதிருந்து விடுவார்கள் என்று செல்வராணி அறிந்து அதற்கேற்ப அவ்வாறு நடந்து கொண்டாளோ என்னவோ?
ஒருவரும் அவளைத் தடுக்கவில்லை. கமலேஸ்வரன் கிடந்த வார்ட்டை அவள் கால்கள் நெருங்கிக் கொண்டிருக்கையில், அவர் பிரக்ஞையற்றுக் கிடக்கின்றாரோ, விழித்துக்கிடக்கின்றாரோ. உசும்பக் கூடியவாறும், பேசக்கூடியவாறும் கிடந்தால் அவருடன் எதனைப் பேசுவது? என்றெல்லாம் பலவாறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த பொழுது அவனை விழிக்கு விழி சந்திக்க ஒருவித பயமும், வெட்கமும் ஏற்பட்டன.
அவள் அவ்வாறு தியங்கித் தயங்கி நிற்கையில், நில்லுங்கம்மா. நீங்க இப்போது உள்ளே போக முடியாது” என்ற குரலைக் கேட்டதும் வியப்போடு திரும்பினாள்.
அத்தனை தொழிலாளர்களுள்ளும் தன்னைத் தடுக்கும் ஒருவனை மிகவும் உற்று நோக்கியபடி பர்ஸை திறந்து இரண்டு ரூபாவை வெளியே எடுத்து கைக்குள் திணித்தபடி அவனை அழைத்தாள் செல்வரர்ணி
அவன் இப்பொழுது சிரித்தபடி அவளை நெருங்கி வந்து, "இல்லேம்மா. நீங்க அழுதுண்டு போறதைப் பார்த்தா பரிதாபமாகத்தான் இருக்குது. ஆனால், இப்ப டாக்டர்கள் வருகிற நேரம். அதுதான் சொன்னேன்.” என்று இழுத்தான்.
செல்வராணி அவனிடம் அந்த இரண்டு ரூபாவையும் கொடுத்ததும் அவன் தொடர்ந்த கூறினான்.
"நீங்க போங்கம்மா. டாக்டர் வந்தா நான் ஒடியாந்து சொல்றன்.” செல்வராணி தனது துயரையும் மறந்து இதழ்களுக்குள் சிரித்தபடி கூறினாள். 'sfl. கட்டிட மொன்றிலிருந்து விழுந்து ஒரு ஐயாவைக் கொண்டுவந்து போட்டிருக்கிறார்களே. எங்கு அவர் கிடக்கிறார்?"
“வாங்கம்மா." என்றபடி முன்னடைந்தான் அந்தக் காவலாள். செல்வரானிக்கு கமலேஸ்வரனைக் காட்டிவிட்டு அவன் அப்பாற் சென்றதும் அவள் அங்கேயே சற்று நின்றாள்.
88

அவளுடைய கண்களில் அவன் விழுந்ததும் உள்ளம் பேதலித்து வெதும்பியது. கைகளும் கால்களும் பாண்டேஜால் கட்டப்பட்ட நிலையில், இடதுகாலை சற்று உயரமாகத் தூக்கி வைத்தபடி அவன் கிடந்த கோலம் அவள் நெஞ்சை உருக்கியது.
செல்வராணி அமைதியாகக் கிடந்த அந்த வார்டே கிடுகிடுக்கும்படி ஒலமிட்டாள். "அத்.தா.ன்" கமலேஸ்வரன் பிரக்ஞை பெற்று வெகுநேரமாகியிருந்தது. அவனால் இப்பொழுது கழுத்தைத் திருப்பிப் பார்க்கவும் கேட்கவும் ஓரளவு பேசவும் முடிந்திருந்தது.
அவன், கிடந்த நிலையிலேயே கழுத்தை வெட்டிப் பார்த்த பொழுது செல்வராணி கண்ணிரும் கம்பலையுமாக வந்து கொண்டிருந்த காட்சி தெளிவாகத் தெரிந்தது.
கமலேஸ்வரனுக்கு இரவு முழுவதும் இருந்த ஏக்கமும் நோவும் எங்கோ மறைந்து விட்டன போன்ற உணர்வு எழுந்தது. அவன் தனது உள்ளம் பொங்க அவளை 'வா' என்று அழைப்பது போல செல்வராணிக்குப்பட்டது. u
தன்னைத்தேடி அவள் வருகின்றாள் என்றும், தனக்காகவே அழுகின்றாள் என்றும் கமலேஸ்வரன் உணர்ந்த பொழுது, பலவற்றை மறந்த நிலையில் நெஞ்சு குளிர்ந்தது. “ஐ.ய்.யோ. தெய்வமே. உங்களுக்கு என்ன நடந்தது. அன்று யாரோ விழுந்து விட்டார்கள் என்று மட்டுமே சொன்னார்களே. யார் என்று எனக்கு ஒருவரும் சொல்லவில்லையே. எனக்கு இப்படி ஒன்று வந்திருக்கலாமே.”
செல்வராணி புலம்பினாள். "வட் இஸ் திஸ் செளட்டிங்? ஆ?” என்று கேட்டபடி அங்கு கமலேஸ்வரனைப் பரியளிக்கும் நர்ஸ் வந்தாள். கமலேஸ்வரன் நர்சைப் பார்த்து, "ஷி இஸ் மை வைவ். லெற் ஹேர் கிறை" என்றதும் நர்ஸ் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தபடி, "ஓ அப்படியா?” என்று கூறி அப்பால் சென்றாள்.
செல்வராணி கமலேஸ்வரனுடைய அடிபடாத காலில் முகம் வீழ்த்தி அதனைக் கண்ணிரால் கழுவிக் கொண்டிருந்தாள்.
“எனக்கு என்னையே பிடிக்காமல் போய்விட்டது. நான் ஏன் வாழ்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. வாழவேண்டுமென்ற அற்ப ஆசையும் அற்றுப்போய்விட்டது."
அவள் புலம்பிக் கொண்டே இருந்தாள். கமலேஸ்வரன் அந்த ஆஸ்பத்திரி வார்ட் முகட்டை வெறித்தபடி விழுந்த சிலை போலக் கிடந்தான்.
செல்வராணி சொன்னாள்: “பிள்ளைகளின் கதியும் என்ன என்று தெரியாது. யார் பிள்ளைகளைப் பார்க்கிறார்கள்.”
கமலேஸ்வரன் அப்பொழுதும் பேசாமல் கிடந்தான். அவள் அவனுடைய கைகள், அடிபட்ட இடங்கள் ஆகியவற்றை மென்மையாகப் பற்றி ஆறுதலோடு தடவிக் கொடுத்தாள்.
அவள் தன்னை முழுதாக உரிமையோடு தீண்டுவதை விரும்புகிறானோ வெறுக்கிறானோ என்று உணர முடியாதவாறு அப்பொழுதும் உசும்பாது ஒரு வார்த்தை பேசாது கிடந்தான் கமலேஸ்வரன்.
செல்வராணி அவன் பேச்சற்று விழி திறந்து கிடப்பதைக் கண்டதும் பயந்தபடி நர்சைக் கூப்பிட்டு அவனது நிலையை அறியலாமா என்று நினைத்துத் துடித்த பொழுது, அவன் நர்சுக்கு,"அவள் எனது மனைவி. அவளை அழவிடுங்க.."என்று கூறியது நினைவில் அப்பொழுது வந்தது.
189

Page 105
நான் அழ வேண்டுமென்று பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்பது போல் பார்த்தாள் செல்வராணி.
அவளுடைய விழிகளை அவனுடைய கண்கள் சந்தித்த பொழுது ஏற்பட்ட ஒர் உளத்தாக்குதலைத் தாங்க மாட்டாது செல்வராணி அவனுடைய காலைச்சுற்றி இடப்பட்டிருந்த கட்டைப் பார்த்து அதனை மெல்ல வருடத் தொடங்கினாள்.
செல்வராணியைப் பார்க்கையில் ஒரு பெண் தனது கணவனுக்காக இவ்வளவு பரிந்து அழுகின்றாளே என்று அனுதாபத்தோடு நினைத்துக் கொண்டான் கமலேஸ்வரன். பின்னர் தன் மனைவியே, கடந்த காலங்களின் செல்வராணியே, தன்னை ஆஸ்பத்திரிவரை தேடி வந்து, தன் கால்களில் விழுந்து அழுகிறாள் என்று நினைத்த பொழுது அவனுக்கு அருவருப்பாகவும் இருந்தது.
ஒரு பெண் தாயாக இல்லாதவிடத்தில் அவள் என்ன உறவில் அமைந்தாலும் அவளுடைய கால்களில் விழுந்து அழுதால், ஒர் ஆண் செய்யும் அந்தக் காட்சி எவ்வளவு அசிங்கமானதாக இருக்கும்.
அத்தகையவொரு காட்சியே அங்கு அப்பொழுது நிகழ்வதாக நினைத்துக் கொண்டான் கமலேஸ்வரன்.
நர்ஸ் பொறுமையிழந்து எழுந்து வந்து சொன்னாள். “பக்கத்திலிருந்து பராமரிக்க வேண்டிய நீங்கள் திடுதிடுப்பென்று இப்பொழுது வந்து அவரைக் குழப்புகிறீர்கள். நேற்று இரவோடு இரவாக அம்மா ஒராள் வந்து போனா. அமைதியாக அழுதபடி தன்வேலைகளை ஒழுங்காகக் கவனித்தா. இந்த பன்டேஜ் கட்டவே அவதான் பெரிதும் உதவியாக இருந்தா. காலையிலும் பிள்ளைகளுடன் வந்தா. பார்வை நேரத்துக்குள்ளேயே வந்து போய்விட்டா. நீங்கள் என்றால் ஆஸ்பத்திரியையே அல்லோகல்லோகப் படுத்துகிறீர்கள்.”
செல்வராணிக்கு நர்ஸ் சொன்னவை பிடிக்கவில்லை. கமலேஸ்வரன் வேறு மெளனியாகக் கிடந்தது அவளுக்கு வேதனையாக இருந்தது. பின்னர் ஒருவாறு தன்னை சமாளித்தபடி சொன்னாள்.
“மன்னிக்க வேண்டும். என்மீது தவறுதான். கமலேஸ்வரன் தனக்கு ஏற்பட்ட காயங்கள் யாவும் திடீரென ஆறிவிட்டதை உணர்ந்தவன் போல மகிழ்ச்சியோடு அந்த வெளியை அப்பொழுது பார்த்தான்.
எவராவது தான் செய்தது பிழை என்று முழுமனதாக ஒத்துக்கொண்டு அதனை அந்தப் பிழை சம்பந்தப்பட்டவர்களுக்கு வாயாரக் கூறி மன்னிப்புங் கேட்டால் அதனிலும் சிறந்த தெய்வீகம் வேறு எதுவுமில்லை என்று கமலேஸ்வரன் நினைத்து மகிழ்ந்தான்.
தங்கம்மா இறந்த பொழுது செய்தி சொல்லப் போன தன்னுடன் அவள் நடந்து கொண்ட விதமும் இப்பொழுது பேசிய விதமும் முற்றிலும் வேறுபட்ட இரு பெண்களை நினைவுபடுத்தின. சித்திராவே செல்வராணியின் உருவம் பெற்று அங்கு வந்து அப்படிப் பேசுகிறாளா என்றும் அவன் கற்பனையோடு சந்தேகப்பட்டான்.
நர்சின் வற்புறுத்தலின் பெயரிலும் டாக்டர் வந்தால் அவர் தன்னைக் கண்டிப்பார் என்றும் நர்ஸ் அச்சந் தெரிவித்ததாலும் செல்வராணி அழுத வண்ணம் விடை பெற்றாள்.
நர்ஸ் அப்பாற் சென்றதும் கமலேஸ்வரன் செல்வராணியைப் பார்த்தான். அவளுடைய முகம் வீங்கி, விகாரமடைந்திருந்தது. கண்கள் சிவந்து பொல பொலவென்று நீர் சுரந்திருந்ததால் இரத்தம் கண்டியனபோல் காணப்பட்டன. அடிக்கடி சிந்திய நாசியைத் துடைத்துத் துடைத்து விட்டதால் நாசி சிவந்து பொருமியிருந்தது.
90

கமலேஸ்வரன் இப்பொழுது கூறினான். “என்னுடைய ஆத்மா இறக்கைகள் ஒடிந்த பொழுது உனக்கு என் ஆத்மா துடிக்கவில்லை. அழுகை பிறக்கவில்லை. ஆனால் கேவலம் இந்த உடம்பில் ஒட்டியிருக்கும் கையும் காலும் முறிந்து விட்டபொழுது மட்டும் உன்னை மறந்து இது ஒரு ஆஸ்பத்திரி என்பதை மறந்து அழுகிறாய். துடிக்கிறாய். விசித்திரமான போக்கு உன்னுடையது.”
செல்வராணி குழைந்தபடி கெஞ்சினாள். “என்னை மன்னித்து விடுங்கள். ஏதோ உணர்ச்சி குழம்பிய நிலையில் தவறாக நடந்து விட்டேன். எனக்கு இந்த உலகில் யாருமில்லை. உங்களைத்தவிர."
"அண்மையில் ஏதாவது சினிமா பார்த்தாயா செல்வராணி?” “ஐ.ய்.யோ. என்னை வார்த்தைகளால் கொல்லாதீர்கள்" செல்வராணி நிலைகுலைந்து கதறினாள்.
“ஏதோ. உன் வாழ்க்கை, நீயே தீர்மானித்து விட்டாய். இனி மன்னிக்க நான் என்ன கடவுளா? அந்தக் கடவுளே உன்னை மன்னித்தால் திரும்பவும் வா"
செல்வராணி தலையைக் கவிழ்ந்தபடி வெளியே சென்றாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் கமலேஸ்வரன்.
நெடு நேரத்தின் பின்பு எதற்காகவோ, யாருக்காகவோ கலங்கி வந்த தனது கண்களைப் புறங்கையால் துடைத்து விட்டான் கமலேஸ்வரன்.
முறிவு ஏற்படாது வீதிஉராய்ந்ததால் சிறிது காயமேற்பட்டிருந்த அவனுடைய வலது கை, அவனுடைய உள்ளம் போலவே எரிந்து கொண்டிருந்தது.
7
திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது சிறு வயதாக இருக்கும் பொழுதே செல்வராணி கேள்விப்பட்டிருந்தாளாயினும், அந்தத் தெய்வத்தின் கடாட்சத்துக்காக இதுவரை என்றாவது ஏங்கியவளாக அவள் அமையாதது, அவள் செய்த சமயப் பிழை மட்டுமன்றி, அவளை அந்த மறதிக்கு இட்டுச் சென்றிருந்த நாகரீகத்தினதும் தவறுமாகும்.
அலுவலகத்துக்குச் செல்வதும், வீட்டுக்கு வருவதும் கேளிக்கைகள் கும்மாளங்கள் சினிமா கடற்கரை என்றெல்லாம் சுற்றியபடிப்பதும்தான் கொழும்பு வாழ்க்கையாகிவிட்ட நிலையில் பலர் கிழமைக்கு ஒரு தடவை வந்து போகும் வெள்ளிக்கிழமை மாலையை தெய்வத்துக்காக ஒதுக்கி வைத்ததாலோ என்னவோ கஷ்ட நஷ்டமின்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கடவுள் தான் இருக்கின்ற தன்மையைக் கவலைகள் மூலம் மனிதர்களுக்கு உணர்த்தும் பான்மையை அப்பொழுதுதான் செல்வராணி எண்ணி வியந்து தனது இழிசெயலுக்காகவும் அறியாமைக்காகவும் வருந்தினாள்.
தன் தவறுக்காக வருந்தும் பொழுது கடவுள் அவளை மன்னித்து விடுவாரோ என்னவோ? ஆனால் அவளைப் பொறுத்தவரையில், இப்பொழுதெல்லாம் வருந்துங்கள் மன்னிக்கப்படுவீர்கள்’ என்ற தூய வேதவாக்கில் நம்பிக்கை மிக மிக எழுந்திருந்தது.
கமலேஸ்வரனைப் பிரிந்து மோகன்ராயின் எடுபாட்டுக் கதைகளிலும் பகட்டு உலகத்திலும் மயங்கித் திரிந்த சில காலங்களை அவள் சபித்தாள். மோகன்ராய் என்ற அன்பற்ற, பிணைப்பற்ற காமஜடத்தை நம்பி, குதிரையென எண்ணி வாழ்ந்து கழித்தன போக
19

Page 106
மீதமாக உள்ள அற்ப சொற்ப வாழ்க்கையை நீந்திக் கழிக்கலாம் என்று அவள் எண்ணி, கனவுகள் பல கண்டு, மயங்கியிருந்தது எவ்வளவு தவறானது என்றும் தெரிந்துகொண்டாள். கல்யாணம் நடந்து முடிந்த சில நாட்களில் ஒரு நாள், அவளை அனைத்தபடி கட்டிலின் ஒரு பக்கத்தில் தலையணையை இட்டு சாய்ந்திருந்த கமலேஸ்வரன் கூறியது இன்று திடீரென்று நினைவில் விழுந்தது.
“செல்வம் கலைஞனைப் பற்றி என்ன நினைக்கிறாய்? “உயர்ந்த ஆத்துமாக்கள். அவர்கள்தான் கடவுளின் பிரதிநிதிகள். இந்த வையத்தை கடவுள் படைத்து மனிதர்களையும் மற்றும் உயிர், உயிரற்றனவற்றையும் அதில் வாழவிட்டு, கலைஞர்களை அவற்றின் கவலர்களாக அனுப்பியிருக்கிறார். படைக்கும் சக்தி பெண்ணுக்கு இருப்பதால் பெண் இந்த வையகத்தின் சிறந்த ஒர் அம்சமாகப் போற்றப்படுகிறாள். அதுபோல கலைஞரும் இந்த மண்ணின் சூரியன்கள், சிறந்த அம்சங்கள். அவர்களால்தான் வாழ்க்கை ஒளி பெறுகிறது. இந்த மண்ணும் புனிதமடைகிறது.” செல்வராணி தான் இருந்த அந்த அன்பு மயக்கத்தில் ஏதேதோவெல்லாம் கூறினாள்.
அதற்கு கமலேஸ்வரன் சொன்னான். “எது எது தனக்கென்று இன்றி மற்றவர்களுக்காக அல்லது மற்றவற்றுக்காக வாழ்கின்றதோ அது அதற்கு ஜிவிதமே இல்லை செல்வராணி, கலைஞனும் எந்த அம்சத்திலும் தனக்காக வாழ்வதில்லை. பிராணாவஸ்தைப்பட்டு எத்தனை சிறந்த கலைப் பொக்கிஷங்களைத் தருகிறான். அவனுடைய கலையை இரசித்துமகிழும் மக்கள் அவனைப் பற்றியோ அவனுடைய கேவலமான வாழ்க்கையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. இதுதான் கஞைனுடைய வாழ்க்கை. ஏன் நம்முடைய தமிழர் வரலாறே, கலைவாழ்வு கொடிய வறுமை கொண்டது என்று சுட்டிக் காட்டுகிறதே. பசியால் வாடிக் களைப்பால் சோர்ந்து நினைவால் அழிந்து, கட்டிய மனைவிக்கே உண்ணக் கொடுக்க உணவின்றி, உடுக்கக் கொடுக்க உடையின்றி வானமே கூரையாக வையகமே பஞ்சணையாகப் படுக்கவிட்டு வாழ்ந்த கலைஞர்கள் எத்தனை? எண்ணில் அடங்கக்கூடிய நம் கலைஞர்களின் வாழ்க்கையின் சோக சம்பவங்களை எண்ணில் அடக்க முடியாது. ஒவ்வொரு கலைஞனுடைய வாழ்க்கையும் சோகமயமானது. எவன் பேனாவை நம்பி வாழப் புறப்படுகின்றானோ, எவன் தூரிகையை நம்பி வாழத் தலைப்படுகின்றானோ அவன் வடிப்பது கண்ணீர்"
“என் வரையில் என் வாழ்க்கையும் என்றோ ஒருநாள் திடீரென்று அஸ்தமிக்கும். அன்று நான் உண்மையிலேயே கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் அதுதான் விதி. தோற்றம் உண்டு என்றால் முடிவும் வேண்டுமல்லவா?”
கமலேஸ்வரன் கூறியவற்றை அன்று கேட்ட பொழுது, மறுத்து தான் உயிருடன் இருக்கும் வரையிலேனும் கமலேஸ் இந்த உலக வாழ்க்கையில் ஏமாற்றப்படாது பார்த்துக் கொள்வதாக உறுதியளித்ததையும் செல்வராணி நினைத்து, அந்த வாக்குறுதியைத் தன்னால் நிறைவேற்ற முடியாமற் போனதற்காக வெட்கி வருந்தினாள்.
யாழ்ப்பாணத்திலே பிறந்துவிட்ட எந்தப்பெண்ணும் கங்கை மீனுக்குச் சமமானவள். கங்கையின் ஊற்று முதல் எத்தனையோ யோசனைகள் அந்தப் புனித நீரில் ஆடி, மகிழ்ந்து நீந்தி விளையாடும் மீன்களுக்கு யாராலும் எந்தவித ஆபத்தும் ஏற்படுத்தப்படுவதில்லை. ஆனால் கல்கத்தாவின் சாக்கடைகளுடன் அந்தப் புனித கங்கைநீர் கலந்து வங்காள விரிகுடாவுக்குள் விழும்பொழுது, அதன் தூய்மையும் புனிதமும் கெட்டு விடுகின்றனவே. அதே கங்கையின் புனித மீன்களைப் பிடித்துப் புசிக்க எத்தனை கைகள் தயாராகி விட்டன.
92

யாழ்ப்பாணத்திலே பிறந்த ஒருத்தி யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்து அங்கேயே மறைந்து விட்டால் அவளுடைய புனிதம் என்றுமே கெட்டுவிடாது. அவள் தெய்வீக மண்ணின் திருவுருவமாகப் போற்றப்படுகிறாள். ஆனால் கொழும்பு என்ற சாக்கடைக்குள் வந்து, வாடகை வீடு என்ற சந்து பொந்துகளுக்குள் நுழைந்து, வேலை என்றும் நாகரீகம் என்றும் அலையும்பொழுது, அவளும் கல்கத்தாக் குடாவில் விழுந்த கங்கை மீனாக அல்லவா மாறி விடுகிறாள். அவளைக் கெடுக்க, அனுபவிக்க எத்தனை மனிதர்கள் தயாராக வெறியோடு இருக்கிறார்கள்.
எங்கோ கேட்ட பெளராணிக விரிவுரையின் நினைவுபோல், இப்படியொரு நினைவும் செல்வராணியின் சிந்தனையில் இடமாறி விழுந்தது.
இதே வேகத்தில் தான் சென்று கொண்டிருந்தால் சோகம் என்ற வளைவும் சந்தி என்ற கஷ்டமும் வரும்பொழுது நிச்சயமாக யாருடனோ, எதனுடனோ மோதி அந்த இடத்திலேயே மாள வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும் என்றும் அஞ்சினாள் அவள்.
ஆசையையே வாழ்க்கையாக்கிவிட்ட ஒருத்தி, அந்த ஆசை நிறைவேறாத குறையில் மறைந்துவிட்டால், அவளின் ஆத்மாவே சாந்தியடையுமா? அல்லது நிறைவு தான் எய்துமா?
செல்வராணி கொண்டவனின் வெறுப்பையும் கண்டவனின் பகையையும் சம்பாதித்து விட்ட பின்னர் தனக்கு வாழ வழியே இல்லையா? என்று அடிக்கடி கேள்வி எழுப்பினாள்.
அவள் அலுவலகப் படியேறி தனது ஆசனத்தை நோக்கி நடந்ததும், ஒவ்வொருவரும் வழமைபோல் பார்க்கும் அந்த விஷமானதும், கேலியானதுமான பார்வையின்றி அனுதாபமாகப் பார்ப்பது போலிருந்தது.
எந்நாளும் வெம்மையையே கொட்டிக் கொண்டிருக்கும் சூரியன் திடீரென்று, ஒருநாள் மதிய வேளையில் தண்ணொளி வெண்ணிலாவாகக் குளிர்ந்து, இனிமையாகக் காட்சியளித்தால் அது ஆச்சரியமாகவும், இயற்கையிலேயே சந்தேகத்தோடு நோக்கும் அச்சமாகவும் அமையும் அல்லவா? அவளும் எதிர்பாராத அந்தப் பரிவுப் பார்வைகளைச் சந்திக்க நேர்ந்த பொழுது, முதலில் ஆச்சரியப்பட்டாள் ஆயினும் தனக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுக்களின் பெயரில் ஏதோ தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக எண்ணி, உள்ளம் வெதும்பினாள் செல்வராணி
அவள் தனது மேசையைப் பார்த்த பொழுது, திருமதி கமலேஸ்வரன்' என்று டைப் செய்யப்பெற்ற ஒரு நீண்ட உறை கிடந்தது. அதனைக் கையிலெடுத்தபடி அந்த நீண்ட அலுவலக மண்டபத்தையும் அதனை நிறைத்துக் கிடந்த மேசைநாற்காலிகளையும் அவற்றுள் தஞ்சம் புகுந்து அழுது வடிந்து கொண்டிருந்த ஊழியர்களையும் ஒரு தடவை பார்த்தாள். அன்று அந்தக் கடிதத்தை டைப்' செய்த டைப்பிஸ்டையும் அவள் மனம் நினைக்கையில், விழிகள் தேடிய பொழுது, அவள் அந்த மண்டபத்தின் முன்புறமாக அமைந்த கண்ணாடி அறையின் ஒரு முலையில் மேசைக்குள் முகம் புதைத்து, கதிரையிலிருந்தபடி தூங்குபவள்போல இருந்தது தெரிந்தது.
இல்லற வாழ்க்கையிலேயே இடிவிழுந்தது போலாகி விட்டபொழுது, கேவலம் அவளுக்கு இந்த வேலையில் அல்லது வேறு ஏதாவது ஒன்றில் விழுந்திருக்கக்கூடிய இந்தத் தாக்கம் அப்படி எதனைக் கெடுத்துச் சாதிக்கப்போகிறது?
தனக்குள் ஒர் அசாதாரண பலத்தை வருவித்தபடி கடித உறையை உடைத்துப் பார்த்தாள் செல்வராணி.
அது ஒரு வேலை நீக்கக் கடிதம்.
193

Page 107
"ஓ ! நான் வேறு ஏதாவதோ என்று பயந்து விட்டேன்" செல்வராணி முணுமுணுத்த அந்த வார்த்தைகளைப் பட்டும் படாமலும் கேட்ட, அருகில் இருந்த ஒருத்தி திரு திருவென்று விழித்தாள்.
இவளுக்கு இப்படியொரு துணிச்சலா?’ என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.
கடிதத்தில், ஒரு மாத முன்னறிவித்தலுக்குப் பதிலாக அதற்குரிய ஒரு மாதச் சம்பளமும், 'கிறாட்டியுடி, என்ற சலுகைப் பணமும் உறையுள் இடப்பட்டிருந்தன. அவள் பணத்தைச் சுருட்டி கைப்பைக்குள் அமைதியாக வைத்தபடி, கடிதத்துடன் மோகன்ராயின் அறைக்குச் சென்றாள்.
“எனக்கு ஒருமாத முன்னறிவித்தல் தேவையில்லை என்று பணத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்! நான் பணத்துக்கு அவ்வளவு ஆசைப்படவில்லை. ஆசைப் பட்டிருந்தால் இவ்வளவு தூரம் மாடாக உழைத்திருக்க மாட்டேன். மற்றொரு முக்கியமான விஷயம் வேலை நீக்கத்துக்கான காரணம் கடிதத்தில் காட்டப்படவில்லை. பஞ்சுக்கு இல்லாத பயம் நெருப்புக்கு ஏன் வந்ததோ தெரியவில்லை"
மோகன்ராய் வரட்டுச் சிரிப்பொன்றைப் பலமாக உதிர்த்தது, அந்தக் குளிர்ச்சி அறையின் கண்ணாடிகளைப் பலமாகத் தாக்கி, மறுபடியும் மறுபடியும் செல்வராணியின் காதுகளுக்குள் பலமாக வந்து இடித்தது.
“இட் இஸ் ஒல் றைட். இப்பொழுது காரணத்தைச் சொல்லிவிட்டு பின்னர் சிரியுங்கள் ”
கடுகடுப்புடன் செல்வராணி கூறியதை ஒரேயடியாக முறியடிப்பவன் போலக் கூறினான் மோகன் ராய்.
நடத்தை கெட்டவர்களைக் கம்பனியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் கம்பனியின் பெயர் என்ன ஆகும்? அலுவலகத்திலிருந்து யாருக்கும் கூறாமல் நினைத்தபடி வெளியேறுவதும் வருவதும் கம்பனிச் சட்டங்களுக்கு மாறுபட்டவை. இன்னும் பல. சொல்ல வெட்கமாக இருக்கிறது”
"ஏன். நீங்க சம்பந்தப்பட்ட குறைகள் என்பதாலா. “ஷட் அப்” “உங்களுக்கு வேறு என்ன சொல்லத் தெரியும்? குட்பை" செல்வராணி வெளியே அமைதியாக நடந்தாள். அவளைப் பொறுத்த வரையில் ஒரு பெரும் பிரச்சினை தீர்ந்து விட்ட உணர்வே அப்பொழுது எழுந்திருந்தது.
நேரம் பதினொன்றரையாகி இருந்ததால் கமலேஸ்வரனை மறுபடியும் காண வேண்டுமென்று துடித்தது அவளுடைய உள்ளம். இடைக்கிடை இல்லறவாழ்க்கையின்போது அவன் அவளை வேலையை விடுமாறு வேண்டிக் கொண்ட பொழுதும், கடுமையாகக் கேட்டுக் கொண்ட பொழுதும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தட்டிக்கழித்து வந்த தனது சாதுரியத்தைப் பழித்தாள் செல்வராணி
தான் தனியே குடியிருந்து ஆட்சியும் அன்பும் ஒருநாளேனும் செலுத்திய கமலேஸ்வரனுடைய அந்த தனிமை, இருதயத்தை மறுபடியும் எப்படியேனும் கொள்ளை கொள்ள வேண்டுமென்று துடித்தாள்.
அவன் கால் கைகளில் ஏற்பட்டுள்ள முறிவுகள் மாறுகின்ற காலங்களில் தன் அன்பெல்லாவற்றையும் சொரிந்து அவனைக் குணப்படுத்திய பின்னர், அவனுடைய அன்பிலே திளைத்துமறுபடியும் வாழவேண்டுமென்ற ஆசையில் மனம் அலைந்துகொண்டிருந்தாள் அவள்.
94

8
சித்திரா கமலேஸ்வரனைத் தலையணைகளில் சற்று உயர்த்தி, இருப்பது போலாக்கி அவனுக்குத் தன் கையாலேயே உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
செல்வராணி அந்த வார்டின் மண்டப வாசலை அடைந்ததும் அந்தக் காட்சியைக் கண்டு பிரமை பிடித்து நின்றாள். அவளுக்கு அப்பொழுது ஏற்பட்ட ஆயிரம் உணர்ச்சிகளில் உள்ளே செல்வதா சற்று வெளியிலே நின்று விட்டு அவன் உண்டு முடிந்ததும் செல்வதா என்று சிந்தனையைச் குழப்பிக் கொண்டிருந்த வேளை, கட்டிலில் இருபுறமும் நிறைத்தவர்களாக நின்ற ரமணனும் ரஞ்சனியும் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளை செல்வராணியைக் கண்டு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு அமைதியாக நின்றனர்.
பிள்ளைகளின் அந்த விழி இரகசியத்தைக் கவனித்த கமலேஸ்வரன் தானும் ஒன்றையும் பார்க்காதவன்போலக் கிடந்தான்.
செல்வராணி தயங்கியபடியும் நிலத்தைக் கால்களால் கிறுக்கியபடியும் தலை கவிழ்ந்து நின்றது அவனுக்குப் பார்க்கப் பரிதாபமானதாக இருந்தது.
சித்திரா உணவுப் பாத்திரங்களைக் கழுவுவதற்காக வெளியே சென்றதும் கமலேஸ்வரன் சொன்னான்:
ரமணன்! அம்மா வந்து நிற்கிறாவே. போய் என்ன என்று கேளன்." ரமணன் கமலேஸ்வரனைப்பார்த்தபடி தலையை ஆட்டி மறுப்புத் தெரிவித்துவிட்டு கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த போர்வையில் எம்பியிருந்த ஒரு நூலை இழுத்து, இழுத்து விட்டான். ரஞ்சனி தன்னையும் கமலேஸ்வரன் ஏதாவது கேட்டு விடுவான் என்று எதிர்பார்த்து அஞ்சியவள் போல அந்த இடத்தை விட்டு அகன்றவளாக செல்வராணி நின்ற திசைக்கு எதிர்ப்புறமாகப் பார்த்தபடி நின்றாள்.
அந்த இருவரதும் கோபத்தையும் வெறுப்பையும் பார்த்தபொழுது கமலேஸ்வரனுக்கு செல்வராணி மீது மேலும் பரிவே எழுந்தது. பெற்று வளர்த்தெடுத்த செல்வராணியை சொற்ப நாட்களுக்குள் எவ்வளவு விரைவாக மறந்து விட்டார்கள் என்று அவன் எண்ணிக் கொண்டான்.
சித்திரா மறுபடியும் உள்ளே வந்ததும் செல்வராணியும் அங்கு வந்தாள். செல்வராணியைக் கண்டதும் சித்திரா சிரித்தாள். அவளுடைய அந்தச் சிரிப்பில் எந்தவித களங்கமும் இல்லாத போதும், அது தனக்கு அவள் துரோகஞ் செய்துவிட்டு அந்தத் துரோகத்தை மறைப்பதற்காகச் சிரிக்கும் சிரிப்பாகக் கருதினாள் செல்வராணி சித்திராவின் இனிய கோலம் தனக்கிருந்தும், அவளைப்போல ஆட்களைக் கவரும் குணம் இருந்தும் மறைந்து விட்டதே என்று ஏங்கினாள் அவள்.
ரமணனும் ரஞ்சனியும் தன்னைக் கண்டதும் ஆவலோடு ஓடிவந்து தன் மீது பாய்ந்து அணைக்காததும் அவளுக்கு என்னவோ போலிருந்தது. உடலெல்லாம் அந்த அணைப்புக்காகத் தகித்துக் கொண்டிருப்பது போலாகியது.
அவள் வெதும்பினாள்.
195

Page 108
கமலேஸ்வரன் சித்திராவை அழைத்து தனது பின்புறமாக நிறைந்து கிடந்த தலையணைகளை அப்புறப்படுத்தும்படி கூறியதும், சித்திரா அவனுடைய தலையை ஒரு கையால் அணைத்துத் தாங்கியபடி முகம் நெஞ்சோடு அணைய தலையணைகளை அப்புறப்படுத்திய காட்சியைச் சகிக்க முடியாது, செல்வராணி வெளியே பார்த்தாள்.
சித்திராவின் கையைப் பற்றி ரமணன் ஏதோ கூறியதும் அவள் வெளியே அழைத்துச் சென்றாள்.
செல்வராணி இப்பொழுது கமலேஸ்வரனைப் பார்த்துக் கேட்டாள்.
"உடம்பு எப்படி இருக்கிறது?"
“பறுவாயில்லை”
“என்னை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள்.
"யார் மோகன்ராயா?"
“மோகன்ராய் என்றாவது ஒரு நாள் தன்னுடைய சுயமான வெறி மிகுந்த போக்கைக் காட்டுவான்” என்று அவன் பல தடவைகள் அவளுக்கு அறிவுரை செய்ததை நினைத்துக் கொண்டான். 'வந்தால் அறிவான் சண்டாளன்' என்று கூற வேண்டும் போன்று அவனுடைய அதரங்கள் துடித்தன. அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் , அதுவும் தன்னைத் தேடி வந்துள்ள இடத்தில் அப்படிக் கூறுவது சரியல்ல என்று எண்ணியபடி கேட்டான்.
“இனி என்ன செய்வதாக உத்தேசம்?"
“என்னஅப்படிக் கேட்கிறீர்கள்?"
"இல்லை. எல்லாவற்றையும் நீயே தீர்மானித்து அதன்படி செய்கிறாய். அதுதான் கேட்டேன். அப்படிக் கேட்பதில் தவறில்லை என்று எனக்குப்படுகிறது."
செல்வராணியின் கண்கள் கலங்கி வந்தன. கமலேஸ்வரனின் அன்பை மறுபடியும் எப்படியாவது பெறவேண்டுமென்று அவள் கனவுகண்டு வந்திருக்கிறாள். அந்தக் கனவே பாழாகி விட்டது போன்றிருந்தது, அப்பொழுது அவள் அங்கு வந்தபொழுது கண்டுவிட்ட காட்சி. கமலேஸ்வரன் கேட்ட கேள்விகள் வேறு அவளைப் பற்றின்றி ஆக்கிவிட்டிருந்தன.
நெஞ்சு குமைந்தது.
அந்த வார்ட்டில் நிலவிய சந்தடியைக் கிழித்துக் கொண்டு சித்திராவின் மெல்லிய குரல் இனிதாக ஒலித்தது.
"நான் போகட்டுமா?"
சித்திரா கமலேஸ்வரனைப் பார்த்துக் கேட்டதும்,அவன் அவளை விறைத்தான். செல்வராணியைக் கண்டதும் அங்கு நிற்கப்பிடிக்காது அவள் போக விளைகின்றாள் என்று நினைத்த அவன் சித்திரா நான்' என்று குறிப்பிட்டதை விரும்பாமல் வேறுபக்கம்பார்த்தாள்.
அவனுடைய காலடிப் பக்கமாக ரமணணை அனைத்தபடி நின்ற சித்திரா அவனை நிற்க விட்டு விட்டு கட்டிலில் நடுப்பக்கமாக சற்று முன் வந்து செல்வராணிக்குப் பின்புறம் காட்டியபடி மெதுவாகச் சொன்னாள்.
"அவ வந்து நிற்கிறா நான் தொடர்ந்தும் நிற்பது. கோபித்துப் பார்க்க வேண்டாம்.நான் போகட்டுமா?
196

“கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டிய கேள்வி. யாரும் வரலாம் போகலாம். நீங்கள் போகத்தான் வேண்டும் என்றால் போகலாம். ஆனால் நான் உங்களைப் போகும்படி கேட்க மாட்டேன்.
சித்திராபிசங்கினாள் செல்வராணியையும் கமலேஸ்வரனையும் மாறிமாறிப்பார்த்த பொழுது அவள் எதனையோ இழக்கவும் எதையும் தாங்கவும் தயாராக இருப்பது போலப்பட்டது. அந்த இக்கட்டான நிலையிலிருந்து முதலில் தனக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்று அவள் நினைத்துச் செல்வராணியிடம் வந்து “நீங்கள் நிற்கிறீர்களா? நான் போய்விட்டு வருகிறேன்” என்றாள்.
சித்திராவின் இனிய தோற்றம் கமலேஸ்வரனை மட்டுமின்றியாரையும் எளிதாகக் கவர்ந்து விடும் என்று அதே கவர்ச்சியில் மயங்கி நின்ற செல்வராணி அவள் தக் வாழ்வில் குறுக்கிடாதவரை அவளுடைய நட்பையும் ஏற்கத் தயாராக இருப்பவள் போல் வலிந்து சிரித்துவிட்டு “சரி” என்றாள்.
ரமணனும் ரஞ்சனியும் தாயுடன் செல்வார்களா என்ற கேள்வியை விழிகளில் பதித்து அவர்களையும் கமலேஸ்வரனையும் சித்திரா பார்த்ததைப் புரிந்து கொண்ட கமலேஸ்வரன் கூறினான்.
“ரமணன் . தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு போ. அவ போகப் போறாவாம்.”
ரமணன் ரஞ்சனியின் கையைப் பிடித்து அழைக்கு முன்னரே ரஞ்சனி ஓடிச் சென்று சித்திராவின் சேலையைப் பற்றியபடி நடப்பதற்கு ஆயத்தமாக நின்றாள். தன் சேலையைப் பற்றி நின்ற ரஞ்சினியைத் தாய்மை உணர்வில் வாரித் தூக்கிய சித்திரா நம்பிக்கை ஒளிபெற்ற களிப்பில் அவள் கன்னத்தைத் தன் முகத்தால் வருடியபடி செல்வராணியைப் பார்த்தாள்.
செல்வராணி உணர்ச்சிகளையே இழந்து விட்டவள் போல நின்று கொண்டிருந்தாள்.
"அம்மாவுக்கு ஒரு கிஸ்தா” என்று சித்திரா கூறியதைக் கேட்ட ரஞ்சனி அவளுடைய முகத்தை இரு கைகளாலும் பற்றி அணைத்து தன்னருகே இழுத்துக் கொஞ்சினாள்.
“இல்லை. பிள்ளையடை அம்மாவுக்கு” என்று சித்திரா சொல்லும் பொழுது அவளுடைய அந்த இனிய தெளிவான குரல் கரகரத்து வெளிவந்தது. ரஞ்சனியைப் பொறுத்த வரையில் தான் அவளுக்கு 'அம்மா'வாகிவிட்ட களிப்பில் திளைத்த கணநேரத்தால், தானே தன் வாயால் 'அம்மா' இல்லையென்று மறுத்த துயரம் அவளை வாட்டிக் கொண்டிருந்த வேளை ரஞ்சினியை இருகை நீட்டி அழைத்தாள் செல்வராணி
ரஞ்சினி'டூ காட்டிவிட்டு சித்திராவின் கழுத்துள் முகம் புதைத்துக் கொண்டாள்.
செல்வராணிக்கு வாய்விட்டுக் கதற வேண்டும் போல இருந்தாலும் கண்களின் அடியில் எரிந்து கொண்டு ஊறி வந்த கண்ணிரை அடிக்கடி இமைகளை வெட்டுவதன் மூலம் தடுத்துக் கொண்டு, மறுபடியும் அழைத்தாள்.
“வாம்மா ரஞ்சினி"
'இல்லை .போர்”
197

Page 109
ஓ! அது கொடுமை
செல்வராணி கலங்கினாள். அப்பொழுது கமலேஸ்வரன் சொன்னவை அவளுக்கு மேலும் துயரளிப்பதாக இருந்தன.
“பெற்ற பிள்ளையே விரும்பாத தாயை உலகத்திலே பார்க்க முடியாது. அதை இப்பொழுது இங்கே பார்க்கிறேன்”.
“ரஞ்சனி. அம்மாவை முட்டிவிடு .
கமலேஸ்வரனை பார்த்துப் பின்னர் சிரித்துக் கொண்ட ரஞ்சனி
s
செல்வராணியை அணைத்து முத்தமிட்டாள்.
சித்திரா நடக்கத் தொடங்கியதும், அவளையும் முந்திக்கொண்டு வெளிக்கதவை நோக்கி ஓடினான் ரமணன். செல்வராணி அவனையும் அழைத்து முத்தம் கேட்பாள் என்ற அச்சமே அப்பொழுது அவனுக்கு இருந்திருக்க வேண்டும்.
அவர்கள் போனதும் கமலேஸ்வரன், முகத்தை வெறித்தபடியே சொன்னான். “செல்வராணி. கடந்த காலங்களில் நடந்து கொண்ட முறைக்கும் செய்த குற்றங்களுக்கும் தண்டனையை நீ பெற்று வளர்த்த பிள்ளைகளே தந்து விட்டார்கள் பார்த்தாயா! இனிப் புதிதாக நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். நீயும் போகலாம்”
செல்வராணிக்கு அந்த ஆஸ்பத்திரி வார்டே சுற்றிச் சுழல்வது போல இருந்தது.
3. . . . . . ய்.யோ என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்ததெல்லாம் தவறுதான். ஆனால் . இன்று நான் புதியவள்.
செல்வராணியின் விசும்பலோடு சேர்ந்த அந்த விண்ணப்பத்தைக் கேட்டுப் பலமாக இடி இடியென்று சிரித்தாள் கமலேஸ்வரன்.
9
வாழ்க்கை என்பதன் உள்ளார்ந்த அர்த்தமே என்னவென்று புரியாத, புரிய வேண்டுமென்று துடித்தும் அதற்கு முடிவே காணாத மானிடப் புழுக்கள் தம்பாட்டில் ஏதோ இயக்கத்தில் துடித்துக்கொண்டிருக்கின்றன. விபத்து நேர்ந்துவிட்டால் தம்பிரிவுயாருக்கோ பெரும் நட்டத்தை ஏற்படுத்திவிடும், ஆதலால் இறப்பு வேண்டாம், பரிகாரம் மட்டுமே வேண்டும் என்ற பேரவாவில் ஆஸ்பத்திரியை நிறைத்துக் கிடந்தனர் காயம்பட்ட நோயாளிகள்.
ஒருவனுடன் மற்றவன் பகைத்துக் கொண்டு ஒருவரை யொருவர் வெட்டி இருவருமே இரத்தப் பலி எடுத்துக் கொண்டு ஏதோ வெளியில் அங்கு வந்து கிடக்கின்றார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட புண் ஆறி பின்னர் வெளியே சென்றதும் தொடர்ந்தும் தமது பகைமையைப் பாராட்டுவதற்கா? அவர்களைச் சுற்றி இரு பொலிஸ்காரர்கள் இருபத்திநான்கு மணித்தியாலங்களும் காவல் செய்து வருகிறார்கள். ஆத்திரமூட்டப்பட்ட வேறு சிலரால் அவர்களுக்கு ஆபத்து நேரக்கூடாது என்ற ஆவலா? அல்லது அவர்கள் உயிரையாவது கவர்ந்து சென்று விடுவார்கள் என்ற அச்சமா?
பொலிஸ்காரர்கள் அமைதியாகக் கடமை செய்து கொண்டிருந்தார்கள்.
198

ஒருவர் மீது மற்றவர் பொறாமைப் படுவதற்கும் போட்டியிடுவதற்கும்தான் இந்த வாழ்க்கையா? உன்னை உயர்த்த வேண்டுமானால் மற்றவனைக் குறைக்காதே என்று சுவாமி விபுலானந்தர் சொல்லி வைத்த சாதாரண உண்மையும் இவர்களுக்குத் தெரியவில்லையா அவர்கள் கல்வியறிவற்றவர்கள் போலக் காணப்படவுமில்லையே.
கமலேஸ்வரன் தன்னைச் சூழவுள்ள மனித கூட்டங்களைப் பார்த்தபோது கேள்விகளும் அவனைச் சூழ்ந்து குழப்பிக் கொண்டிருந்தன.
இப்பொழுதும் செல்வராணி பவ்வியமான பார்வையுடன் அவனருகில் நின்று கொண்டிருந்தாள். கிடந்த நிலையில் அவளுடன் அவளே முடிவாக எடுத்துப் பின்னர் முடிவுற்றதாகி விட்டதான அவர்களுடைய வாழ்க்கையின் தத்துவார்த்த விசாரணைக்கு அச் சூழ்நிலை பெரிதும் சாதகமாக இருந்தது.
கமலேஸ்வரன் கேட்டான். "நீ என்ன செய்வதாக யோசனை ?” " நான் என்ன செய்வேன்? என்னையே நம்பி நான் கெட்டு விட்டேன். வாழ்க்கையில் நடத்தை கெட்டவள், அலுவலகத்தில் ஒழுங்கீனமானவள். இவ்வளவிற்கும் நான் செய்த தவறு என்னைச் சேர்ந்தவர்களை மனமார நேசித்தேன். அவர்களுக்குப் பணிவிடை செய்து மகிழ்ந்தேன், மகிழ்வித்தேன். கந்தோரில் மாடாக உழைத்தேன்"
“சரி என் அந்த அவர்கள் உன்னை வெறுத்தார்கள்? இன்று நடுத்தெருவில் நிற்கிறாயே? இதற்கு யார் பொறுப்பு"
“பொறுப்பாளி யாரென்று விசாரனை செய்ய நான் விரும்பவில்லை. ஏனென்றால் என்னோடு சம்பந்தப்பட்டவர்களையும் இங்கு அழைத்து விசாரணை செய்ய வேண்டிவரும். அப்படியானால் சாட்சிகளே குற்றவாளிகளாகிற நிலை எழுந்தாலும் எழும்"
கொலையாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டால் சட்டம் எதற்குச் செல்வராணி?” கமலேஸ்வரன் கூறிவிட்டு அவளை ஒருமுறை பார்த்தான்.
அந்த அமைதிக்குள் அவனுடைய விழிகள் புகுந்து அவளை அணுவாக அணுகி அணுவுக்குள்ளும் அணுவாகி அறியவோ அடையாளங் காணவோ முடியாத ஒரு பெண்மைக் குணத்தைத் தேடிய பொழுது அவள் நாணித் தலை குனிந்தாள்.
இப்பொழுது சொல்' என்று அவன் கூறியதும் அது என்ன?’ என்பது போல் அவனை நிமிர்ந்து பார்த்த செல்வராணி சோகமாகி நின்றாள்.
“நான் இராமன் அல்ல ஆமாம்! சீதை கற்புடையவள் தான் என்று உலகிற்குக் காட்டுவதற்கு, இராமன் அவளை அக்கினிப் பிரவேசம் செய்வித்தான், நானுன்னை என்ன செய்ய? அக்கினிப் பிரவேசஞ் செய்தால் நீ மட்டுமல்ல இந்த நூற்றாண்டில் எந்த மூலையிலுள்ள எந்தப் பெண்ணுமே பொசுங்கி விடுவாள். அதற்காக எல்லாப் பெண்களுமே கெட்டவர்களாகி விட்டார்களா? ஆனால் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஒருவனுக்கென்றே பிறப்பவர்களல்ல அவர்கள். அவர்களை அனுபவிக்கப்பலர் அல்லது சிலர் நிச்சயம் பிறந்திருப்பார்கள்.33
செல்வராணி அங்குமிங்கும் பார்த்துவிட்டு அவனை நெருங்கி வந்து கட்டிலில் ஒரு கையை ஊன்றியபடி கூறினாள்.
"நான் தூய்மை கெடாதவள். இதை நீங்கள் நம்பலாம்"
199

Page 110
கமலேஸ்வரன் பலமாகச் சிரித்தான். அச்சிரிப்பு அருகிலுள்ளவர்களையும் கவர்ந்து விடாதபடி பின்னர் ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு அவளைப் பார்த்தான் அவன்.
ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே பேசக் கூடாத பேச்சல்லவா அது. அப்படியிருந்தும் அவள் கூறியது கமலேஸ்வரன் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் தான் அப்படிக் கூற நேர்ந்ததற்கு வருந்தித்தன்னை ஆறுதல் வார்த்தைகளால் தேற்றுவான் என்ற நம்பிக்கையில் தான் அவன் சிரித்த விதம் அவளை நரம்பொடியச் செய்தது. அச்சிரிப்புக்குப் பதிலாக அவளுள்ளம் அமைதியாக அழுது கொண்டது. அவன் சொன்னான்: “செல்வராணி உன்னுடைய நிலைமைக்காக நான் சிரித்தேன் என்று நினைத்து விடாதே. ஒருக்காலும் எப்பெண்ணும் கூறக் கூடாத ஒன்றை நீ சொல்லி விட்டாய். உன்னுடைய உள்ளத்திலேயே ஒரு கேள்வி இருக்கிறது. நான் கெட்டு விட்டேனா என்பதுதான் அது. ஒர் அடிமை, தான் அடிமையாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டால் அவன் பாதி சுதந்திரம் பெற்று விட்டான் என்று அர்த்தம். அதேபோல் ஒரு பெண்ணும் தான் கெட்டுவிட்டேனா என்று கேள்வி எழுப்பினால் அவள் முழுவதும் கெட்டுவிடவில்லை என்று அர்த்தம். நீ இப்பொழுது கூறியது நீ இன்னும் கெடவில்லை என்ற பொருளைத் தந்தாலும் மற்றவர்கள் உன்மீது நியாயமானளவு சந்தேகப் பார்வையை விழுத்துவது நியாயமானது என்று உணர்த்துவதாக இருக்கிறது"
தான் கூறியவற்றைக் கிரகிக்கிறாள் செல்வராணி என்பதை உணர்ந்ததும் அவள் முகத்தில் படர்ந்திருந்த இருளைப் பார்த்து விசனித்து, பின்னர் கூறினான் கமலேஸ்வரன். "நீ வருத்தப்படக் கூடாது. என்வரையில் எனக்கு இப்பொழுது இருக்கும் எண்ணமெல்லாம் இது தான். அதாவது. ".
என்ன?’ என்று ஆவலோடு கேட்பது போல் பார்த்தாள் செல்வராணி. “என் நெஞ்சில் படும்படியாக என்று தாலியைக் கழற்றி எறிந்தாயோ அன்றே நமது பந்தம் முடிந்து விட்டது. நமது வாழ்க்கை சினிமாக் கதை போலவோ, அல்லது சில ஆங்கிலப் பாணியில் அமைந்த வாழ்க்கை போலவோ இல்லை. சிக்கல்களும் பிரச்சனைகளும் நிறைந்து, பின்னர் சுமுகமாக ஒரு சுபம் போட்டு, பார்ப்பவர்களை மகிழ்விக்க என்னால் முடியாது. நான் நினைப்பது செய்வது ஒன்றுதான். அது என்னுடைய மானம். பெண்களுக்கு கற்பு எப்படி முக்கியமோ ஆண்களுக்கு மானம் அப்படி, உன்னை உன்னால் காக்க முடியாது போய்விட்டால் என்னை என்னால் காக்க முடியாமல் போகுமா?
என் மானத்தையும் இழந்து மனப்பூர்வமாகச் சொல்கிறேன். என் மனைவி என்ற ஓர் அந்தஸ்தை மட்டும் உனக்குக் கொடுக்கிறேன். தாலிகழுத்தோடு கிடக்கட்டும். இவற்றை விரும்பினால் உன் பிடியிலிருந்து தாமாகவே விலகிக் கொண்ட பிள்ளைகளை நீதாயென்று உரிமை கொண்டாட வரக்கூடாது. நீ தாயாக விரும்பினால், நான் உனக்கு கணவனாக மானசீகமாகவே இருக்க மாட்டேன். இவ்வளவுக்கும் நான் தூக்குப் போட்டுச் செத்து விடுவேன் என்று அர்த்தமில்லை. அப்படியென்றால் குறைந்தது பதினைந்து தடவை நான் மரித்திருக்க வேண்டும். சரி, இதில் ஒன்று நீ செய்துதானாக வேண்டும்!”
200

“ஐ.ய்.யோ.நான் படுகிற வேதனையே எனக்குத் தண்டனை தான். நீங்கள் இப்படியெல்லாம் பேசி என்னை வருந்தாதீர்கள். உங்கள் கால்களைப் பிடித்துக் கேட்கிறேன்"
“சீ. நீஎன் கால்களைப்பிடிப்பதா? கணவனின் கால்களை மனைவி தொடலாமா? அதைவிடப் பெரிய மானக்கேடு உலகத்திலேயே இல்லையே!”
" ஏன் குத்திப் பேசுகிறீர்கள்? நான் நொந்து போயிருக்கிறேன். வேலை வேறு போய்விட்டது. நான் மொத்தத்தில் ஆருமற்றவள், எதுவுற்றவள்”
“ஆரம்பத்திலே நீ யோசித்திருக்க வேண்டும் செல்வராணி பானைக்குள் ஆடு தலையை ஒட்டிவிட்டது என்பதைக் கண்ட உன்போன்ற முட்டாள் ஆட்டின் கழுத்தை வெட்டி, பானைக்குள் விழுந்த கழுத்தை எடுத்து அகற்றுவதற்காகப் பானையை உடைத்ததைப்போல் தான் உன்னுடைய வாழ்க்கை. கணவனை வேண்டாமென்று வேலையைப் பிடித்தாய். இப்போது வேலை வெட்டியும் போய்விட்டது. கணவனும் உரிய முறையில் இல்லை"
" அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்" “எப்படித்தான் சொன்னலென்ன? மனதுக்குப்பிடிக்காத ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்த வாழ்க்கை இனி எனக்கு வேண்டாம். என் வரையில் நான் சாகவும் தயார், வாழவும் தயார். நீ போய்விட்டு வா. நேரங் கடந்து விட்டது"
செல்வராணிக்கு அழுகை பொத்தென்று வந்தது. அவள் கொழும்பில் வேலை பார்த்துக் குடும்பம் நடத்தி, கண்ட ஏமாற்றத்தைப் போக்க, தந்தையான தந்ததைக்கே ஏற்பட்ட பெருங்கவலையை நீக்க யாழ்ப்பாணம் போகலாமா? என்று முதன் முதலாகச் சிந்தித்தாள். பெண் என்ற கொடி படர ஏதாவது ஒரு துணை தேவை அல்லவா ?
次女次 次次
201

Page 111
தணல் பத்து
நெடிய பனைகளுக்கும் ஈய்ந்துப் பற்றைகளுக்கும் நடுவே நிறைந்து கிடந்த நாகதாழிகளையும் ஊடறுத்துச் சென்று கொண்டிருந்த ஓர் ஒற்றையடிப்பாதையில் ஒரு கையில் சூட்கேசும் மனம் நிறைந்த கலவலைகளுமாகச் செல்வராணி புகையிரதத்தை விட்டு இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.
அவளுடைய உணர்வெல்லாம் தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாகத் தன்னைப் பேணிக் காத்து வளர்த்த சோமலிங்கத்தின் முகத்தையும், அவளைக் கண்டதும் அந்த முகம் எப்படி எப்படி எல்லாம் மாறும் என்ற ரேகா பாவங்களையும் நினைப்பவையாக அப்பொழுது இருந்தன.
இந்தப் பனைகள் கொடுத்த பழத்தையும், கிழங்கையும், மாவையும், உண்டல்லவா யாழ்பாணத்து முதியவர்கள் இன்னும் பலசாலிகளாக மானமிக்கவர்களாக, தன்னம்பிக்கை என்ற நாகரீகத்தை உடையவர்களாக விளங்குகிறார்கள்? அவர்கள் ஆங்கிலம் படித்ததில்லை. அரசாங்க உத்தியோக மோகம் கொண்டு கண்டவர் நின்றவர்களின் கால்களில் விழுந்து கேவலமாகவில்லை உத்தியோகத்தர் என்ற அற்ப புழுக்களை ஈன்றதைத் தவிர அந்த முதிய உலகம் வேறு என்ன தவறுதான் செய்தது?
கரடு முரடான மண்ணைக் கிண்டி அதில் புகையிலைக் கன்றையோ கத்தரி, மிளகாய்க்கன்றுகளையோ செழித்துக் கிடக்கும் செம்மண்ணில் ஊன்றிப்பாடுபட்டு ஐந்தாறு பணஞ்சேர்த்துப் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றார்களே. அவர்களும் பின்னடைந்த காலங்களில் தம்மைப் போன்றே கஷ்டப்படக் கூடாது என்ற காருண்யத்தினாலல்லவா?
ஐயாவும் என்னைப் படிப்பித்தாதே. நான் ஒழுங்காகப் படித்திருந்தால், இன்று ஒரு பட்டதாரியாகவேனும் இருப்பேன். சமூகம் என்னைப் படித்தவள் என்பதற்காகவேனும் மதித்திருக்கும்.
ஓ! பட்டதாரிகள்தான் என்ன செய்கிறார்கள்? இன்று அவர்களின் நிலை. பாவம் கொழும்பு நகர வீதிகளிலும் சொந்த ஊர்களின் சந்து பொந்துகளிலும் அவர்களின் பொழுதும் கழிகின்றது. இல்லாக் கொடுமையில் கிளார்க்கு வேலையோ, வேறு ஏதாவது குறைந்த வேலையோ பார்ப்போமென்று புறப்பட்டாலும் அவர்களைத்தான் தப்பித்தவறி அவர்களுக்கு அதிகாரிகளாகவும், சீனியர் களாகவும் ஆகிவிட்டவர்கள் சும்மா விட்டு வைக்கிறார்களா?
பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது என்னமாக் கனவு கண்டிருப்பார்களோ? நானுந்தான் என் வாழ்க்கை இப்படி ஆகுமென்று கண்டேனா என்ன? கணவனுமின்றி, பிள்ளைகளுமின்றி, பெற்றவரே தஞ்சமென்று போகிறேன். இது ஒரு முடிவாக இருந்தால் நான் கண்ணியாகவே இருந்திருக்கலாம் அல்லவா?
ஆவரசு மரங்கள் காற்றிலே ஆடி அவளை வரவேற்பன போலக் காட்டிக் கொண்டன. சில்லென்று வீசிவந்த அந்தக் காலைக்காற்று பனை ஒலைகளை முட்டிவிட்டு அப்பாற் சென்றது. கூனிக் குறுகிவிட்ட கிழவிகளைப் பின்புறமாக வந்து தள்ளிவிட்டு ஒடும் 'வாண்டு சிறுவர்களை அவர்கள் திரும்பி நின்று நான்கு வார்த்தைகள் வைவதுபோன்று.
202

தொட்டு விட்டு ஓடிய தென்றலை ஏதேதோ பொருளில் சினந்து கொண்டன. பனைகளின் உச்சியில் இன்னமும் விழாது தொங்கிக் கொண்டிருந்த காவோலைகள்.
முதிர்ந்து விட்டால் அறளை பெயர்ந்து விடுமா? சிறியவற்றையும் தாங்க முடியாது சினக்கின்ற நிலை வந்துவிடுமா?
ஐயாவும் முதிர்ந்து விட்டாரே! செல்வராணி நடந்து கொண்டேயிருந்தாள் அவளுடைய காற் செருப்புகளுக்குள் நசுங்கி, பின்னர் தெறித்து ஒடிய செங்கற்களும் பரல்களும் அருகருகே உள்ள பற்றைகளுள் விழுந்ததும் பாம்பு சரசரப்பது போன்று ஒலி அங்கு எழுந்தது.
செல்வராணி துணுக்குற்று ஒலி வந்த திக்கைப் பார்த்தபொழுது, நெஞ்சு இரட்டிப்பாக அடித்துக் கொண்டது.
புற்றுகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் நாகதாழிகளுள்ளும் தமது ஜிவியத்தை நடாத்தும் கொடிய கருவளலை நாகங்களும் புடையன்களும் இந்த உலகத்தின். ஒயாழ்ப்பாணத்தின் தர்ம காவலாளர்களாக இருந்ததாக அந்நாட்களில் கதை கதையாகக் கூறுவதைச் செல்வராணி கேட்டிருக்கிறாள்.
ஆண்மையற்றவர்களையும் கற்பற்றவர்களையும் அந்த நாகங்கள் தேடித் தேடித் திரியுமென்று பல பாட்டிக் கதைகள் அந்நாட்களில் சொல்லப்படும்.
எட்டு மணிக்கே இருண்டு நித்திரையின் ஆட்சியில் நிம்மதி பெறும் யாழ் பூமியின் காவலர்கள் அந்தப் பாம்புகள் தாம் என்றும் அவளுக்குத் தெரியும்.
கணவன் ஆழத் துயின்று கொண்டிருக்கையில் கொல்லைப் புறத்தில் காத்து நின்ற கள்ளக் காதலனைச் சந்திக்கச் சென்ற ஒருத்தியை குப்பை மேட்டில் கிடந்த கொம்பெறி மூர்க்கண் என்ற பாம்பு கொத்தி, அவளுடைய மையம் எடுபடாதவரை ஏறிய மரத்திலிருந்து இறங்காதிருந்த சம்பவமும் அவளுடைய நினைவுக்கு வந்தது.
மோகன்ராயை மனப்பூர்வமாக என் இதயம் காதலித்ததே. அவன் அதனை எவ்வளவு துச்சமாக மதித்து உதறித் தள்ளிவிட்டான். ஏன் நான் அவரைக்கூட கமலேஸ்வரனை இன்றுமுதல் காதலிக்கிறேனே. அவரும் என்னை முற்றாக வெறுத்து விட்டார்.
தவறி விட்டவளுக்கு விமோசனமில்லையா? நான் தவறி விட்டேனா? "இல்லவே இல்லை!" செல்வராணி வாய் திறந்து கத்தினாள். அந்தத் தோட்ட வெளியில் புகையிலைக் கன்றுக்குச் சூத்திரக் கிணற்றிலிருந்துநீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவர்கள் தம் தொழிலையும் மறந்து திரும்பிப் பார்த்தனர்.
தூரப் பார்வையில் விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில் கையில் சூட்கேசுடன் ஒரு பெண் வருகிறாள் என்பதைக் கண்டு, நடையிலும் உடையிலும் அவள் ஒரு குமரி என்பதை உணர்ந்து வேலை செய்த களைதீர அவர்கள் வெறித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து விட்டு செல்வராணி தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
அவர்களுள் ஒருவன் சொன்னான். “டேய் .தாருடா இது? நம்முடைய சோமலிங்க மாஸ்டற்றை பெட்டை மாதிரி தெரியுது. அவள் ஏன் இஞ்சை வாறாள்?”
செல்வராணிக்கு சுரீரென்று தைத்தது.
நடமாடுவதால், அந்த மனிதர்கள் உலாவும் பூமியும் இனிமையற்று வரண்டு போய்க் கிடக்கின்றது.
203

Page 112
அடிக்கடி மழை பெய்யாததாலும், அந்த மண்ணின் பெரும்பாலான கிணறுகள் உவர் நீராக இருப்பதாலும் அவர்கள் அப்படியெல்லாம் வரட்சியாகவும் இனிமையற்றும் பேசுகிறார்கள் என்று நினைத்த பொழுது அவள் தனக்குள் பழி தீர்த்தபடி சிரித்தாள்.
மற்றவன் சொன்னான் "ஆளைப் பாரன், தளுக்கும் மினுக்கும். அசல் சினிமா ஸ்டார் தான்ரா" " போய் சும்மா உங்கடை வேலையைப் பாருங்கள் வேலையை அவள் இரண்டாந் தாரமும் கட்டிப் போட்டாளாம். அந்தப் பொதுக் கிணத்தைப் பற்றிப் பேசி ஏன் வாயைப் பழுதாக்கிறியள். கடவானுக்காலை தண்ணிபுட்டண்டு போகப் போகுது. மாட்டைப்பிடியுங்கபா!" தண்ணிர் கட்டிக் கொண்டு நின்ற மூன்றாமவன் நடுத் தோட்டத்துக்குள் நின்றபடி கத்தினான்.
பத்திரிகைச் செய்தியிலும் வேகமாகத் தனது நடப்புகள் பரவியிருப்பதைக் கேட்ட பொழுது செல்வராணி கணநேரம் ஸ்தம்பித்தாள்.
செல்வராணிநடையைத் தொடர்ந்த பொழுது, காற்றில் ஒருவன் பலமாக உமிழ்வது தெளிவாகக் கேட்டது.
அவன் சொன்னான். “ உப்பிடி எனக்கொரு தங்கச்சி இருக்க வேணும். துண்டு துண்டாக வெட்டி நெருப்பிலை போடுவேன்"
"பின்னை என்ன . புரியன் பிடிக்கிறதுக்கு இஞ்சையிலிருந்து கொழும்புக்கே போக வேணும். ஏன் நாங்கள் இல்லையோ? " இளவயதினனான ஒருவன் கூறியதும், நீ பொத்தடா வாயை" என்று அடக்கினான் மற்றொருவன்.
செல்வராணிக்குப்பாதை மறைக்கப்படுவதுபோன்றிருந்தது. அவள் கண்களைத் துடைத்து விட்டாள்.
“நில் அங்கே!” பயங்கரமாக காட்டிலே சுடுபட்டுத் தப்பி வந்த யானை, வெறி பிடித்து பிளிறிய ஒலி போன்று ஒரு குரல் கேட்டது.
செல்வராணியின் உடலெல்லாம் நடுங்கியது. சூட்கேஸ் கையை விட்டுத் தடாலென்று நிலத்தில் வீழ்ந்தது. அவள்லபக்கென்று அதனை எடுத்து, இறுகப் பற்றியபடி சந்தேகமும் பயமும் குடிகொள்ளத் திரும்பிப் பார்த்தாள்.
"எங்கே போறாய்?" முறுக்கிவிட்ட பெரிய மீசை கருகருவென்று வளர்ந்து பலவந்தமாகச் சுருட்டி விடப்பட்டு சினிமா டோப் போன்று காதையும் பிடரியையும் மறைத்த ஜடை, முன் தொந்தி விழுந்து கைகளிலும் உரமேறி வீங்கி உயர்ந்த தோற்றத்துடன் அங்கு அவள் பின்னால் வந்து கொண்டிருந்தான் சந்திரமோகன்.
பொத்து.உன்னை யார் இஞ்சை வரச்சொன்னது?"
வீடு நெருங்கியிருப்பதால் வீட்டு வளவுக்குள் தந்தையார் சோமலிங்கம் நின்று பார்த்து, ஒடி வந்து தமையனின் மிருகத் தாக்குதலில் இருந்து காப்பாற்றமாட்டாரா என்று பிரார்த்தித்தாள் செல்வராணி.
சந்திரமோகன் சொன்னான்.
204

“ என்னை அண்ணன் என்று சொல்லாதே. நல்ல காலம் அம்மா செத்தது.
உன்னைப் பற்றிக் கேள்விப் பட்டும் நாங்க உயிரோட இருக்கிறம். அவ எண்டா இத்தறுதிக்குத் தற்கொலை செய்திருப்பா. என்ன செய்கிறது? மானங்கெட்ட ஒருத்திக்கு அண்ணனாய்ப் பிறந்து ரோசங் கெட்டுப் போச்சு . உன்னால் ஐயா படுகிற வேதனை கொஞ்சநஞ்சமா?
"நான் ஒரு பிழையும் விடவில்லை அண்ணா!” “ஏதன் பேசினாய் எண்டால் இந்த இடத்திலேயே உன்னை வெட்டிப் புதைச்சுப் போட்டு நானும் போவன். வாயை மூடிக்கொண்டு எங்கையெண்டாலும் செல். உனக்கு வீடு வேணுமென்றால் உள்ளே வராதே. கொஞ்ச நேரத்திலை வெளிக்கிடுறோம். அதற்கு பிறகு வா"
"அண்ணா! அவள் விக்கி விக்கி அழுதாள். கையிலிருந்த சூட்கேஸ் அநாதரவாய் கிடந்து வானை வெறித்தது.
"அண்ணா என்னுடைய வாழ்க்கையே ஒரு வசைப்புராணம் தான். நீங்கள் கூட நம்பிவிட்டீர்களே.ஐ.ய்யோ! என்னுடைய உயிர் இன்னும் போகமல் இருக்கிறதே. கட்டின புருஷன்கூடக் கைவிட்டு விட்டாரே கூடப் பிறந்ததும் என்னை வேண்டா மென்கிறதே.நான் எங்கே போவேன்? என்ன செய்வேன் ஈசா !
அவளுடைய அபலைக்குரல் அந்தத் தோட்ட வெளியெங்கும் பயங்கரமாக ஒலித்தது. சந்திரமோகன் சிறிதும் கிறுங்காமல் கூறினான்.
“இந்தா பார் நான் பின்னாலை வாறதையும் கவனிக்காமல் அந்தத் தோட்டத்தில் நின்ற வடுகுகள் என்ன சொல்லிச்சு தெரியுமா? நீ இரண்டாந்தாரம் முடிச்சுட்டியாம். அம்மா சின்ன வயசிலை செத்தும், ஆம்பிளையா பிறந்து ஒரு சின்னம்மாவை கூட்டியரஐயாவாலை முடியாமலாவிட்டவர்?நீ உன்ரபுருஷன் உயிரோடு இருக்க இன்னொருத்.ஐயோ. அம்மா நீ மட்டும் குடுத்து வைத்தவ. புத்தியாகப் போய்ச் சேர்ந்துட்டாய்."
"அண்ணா! நான் வாழுறது பிடிக்காவிட்டால் சொல்லுங்கள். நான் எங்கேயாவது போய் விடுகிறேன்.”
"உன்னை இப்பிடி வளர்த்ததெல்லாம் இதுக்குத்தானோ? ஊருப் பொட்டையள் மாதிரி காதலிச்சு அந்தக் காதல் சரிவராமல் போனவுடனை பொலிடோல் குடிக்கிறமாதிரி நினைச்சியோ? உனக்கு ஒருத்தனைக் கட்டிக் கொடுத்தால் நீ மரியாதையாக இருக்கிறதுதானே. ஒரு அண்ணன் தன் வாயாலை பேசக் கூடாததெல்லாம் பேசவைக்காதே.என்னைப் பற்றித் தெரியும்.உனக்கு
சந்திரமோகன் கர்ஜித்தான். செல்வராணியின் குடலே நடுக்கத்தில் அறுந்து வீழ்ந்து விடும் போலிருந்தது. “சரி நீ வா! அவள் போற இடத்துக்குப் போகட்டும்” சோமலிங்கம் அமைதியாக வேலிக்கு மேலால் தலையை உயர்த்தியபடி கூறியதைக் கேட்டு பெட்டிப் பாம்பானான் சந்திரமோகன்.
செல்வராணி சிலையாகி, பின்னர் உயிர் பெற்று பின் புறமாகத் தெரிந்த பனையோலை வேலியின் ஒரு புறத்தை ஒலி வந்த திசையோடு சேர்த்துப் பார்த்த பொழுது சோமலிங்கம் குச்சியால் பல் விளக்கிக் கொண்டு, அமைதியாக நிற்பது தெரிந்தது. வேலிப் பொட்டொன்றுக்குள் முகம் விழுத்தி சந்திரமோகனின் மனைவி விடுப்பு பார்த்ததும் செல்வராணிக்குத் தெரிந்தது.
205

Page 113
அவள் சிறிது யோசித்துவிட்டு, பெருமூச்சை எறிந்தாள். எதனையோ வைராக்கியமாக நினைத்துக் கொண்டவள் போல சேலைத் தலைப்பை எடுத்துக் கண்களையும் முகத்தையும் அலக்காகத் துடைத்துவிட்டாள். சூட்கேசைக் கைப்பற்ற முன்னர் கால்கள் நகரத் தொடங்க அவள் வந்த திசை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.
தோட்டங்களைச் சுற்றியுள்ள ஒரு புல்வெளிப் பள்ளத்தில் நிறைந்து கிடந்த நீருக்குள்ளிருந்து தவளைகள் ஏக குரலில் சப்தித்த வண்ணமிருந்தன. அது அந்த வட்டாரத்திலுள்ள அத்தனை உயிர்களையும் ஏதோ உதவி கேட்டு அழைப்பதுபோலிருந்தது. மனிதக் குரலுக்கு, அதுவும் ஒரு பெண்ணின் குரலுக்குச் செவிமடுக்காத அந்த மனிதப் புழுக்கள், தவளைகளின் குரலுக்குத் தாழ்ந்து விடுமா என்ன?
அவள் போய்க் கொண்டே இருந்தாள்.
2
அகன்று செறிந்து கிடந்த அந்த யாழ்ப்பாண மண் சிவந்து பிளந்து தன்னை விழுங்கிவிட மாட்டாதா? ஒடி எழுந்து உயர்ந்து விழும் கடல் அலைகள் அப்படியே தன்னை வாரி விழுங்க மாட்டாவா? உயர்ந்த கிளைகளுள் வளைந்த கொம்பர்கள் அப்படியே தன் கழுத்தை இறுக்கி நெரித்து உறவின் மகிமையற்ற இந்த உலகத்திலிருந்து பிரிக்கமாட்டாவா? செல்வராணி இயற்கையின் அந்தப் பேரின்ப எழிற் காட்சிகளை, வாழ்க்கையை முடிக்கக்கூடிய சாதனங்களாகப் பார்த்து ஏங்கியபடி நடந்து கொண்டிருந்தாள்.
அன்பே பொய்தானா? நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு அவரை எட்டி உதைத்தால் எப்படி இருக்கும்? எல்லோருமே என்னை நேசித்தவர்களாகவும் எனக்காகவே வாழ்ந்தவர்களாகவும் காட்டிக் கொண்டதெல்லாம் பொய்தானா?
செல்வராணி தன் கண்களை மறுபடியும் மறுபடியும் துடைத்து விட்டாள். சிவப்புச் சட்டைக்கு மாச்' பண்ணக்கூடிய முறையில் செம்பூக்கள் இடப்பெற்ற பச்சைச் சேலையின் முந்தானையில் அவளின் பெருகி வந்த கண்ணிர், பட்டதால் அந்த முகதலைப்பு கறுப்பாகத் தெரிந்தது.
ஒரு பக்கம் எந்நேரமும் இருண்டதாகக் கிடக்கும் இந்தப் பூமிபோல், நாகரீகமாகப் பேசி வாழ்ந்து திரியும் சிலரின் அறிவுப் பக்க இருள் போல் அது இருந்தது.
கல்யாணம் முடித்த புதிதில் செல்வராணி கண்ணுக்குள் வெங்காய நீர் சிந்த முன்னறைக்கு வந்த பொழுது, அவளின் அந்தத் தோற்றத்தைக் கண்டுவிட்ட கமலேஸ்வரன் துடித்துப்பதைத்து எழுந்து சென்று அவளை நெஞ்சோடு அனைத்து, பிடரியை ஒரு கையால் குடைந்து முதுகையுந் தடவிக் கொடுத்து, பதட்டத்துடன் கூறினான்.
“செல்வராணி ஏன் அழுகிறாய்? இங்கு நீ அழும்படி என்ன நடந்து விட்டது?எனக்கு என் வாழ்க்கையிலேயே பிடிக்காதது பெண்ணின் கண்ணீர்தான். அதைக் காண நான் சகிக்க மாட்டேன். உன் கண்ணில் நீர் வழிந்தால் என் இரத்தமெல்லாம் உறைவதுபோல் இருக்கிறது. அழாதே செல்வராணி"
அப்பொழுது அவனுடைய அணைப்பையும் பேச்சையும் மகிழ்ந்து அனுபவித்து வெங்காயம் தந்த எரிவையும் மறந்தபடி சிரித்தாள் செல்வராணி.
206

அவன் இப்படி ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் கூறமாட்டானா என்று ஏங்குபவள்போல, பிடியிலிருந்து விடுபடாமல், விடுபடவேண்டும் என்றும் விரும்பாமல் அவனுடைய மார்பகங்கள் அவளுடைய புஜத்தையும் செஞ்சையும் அழுத்தும்படி திரும்பி அவனுடைய கழுத்தில் தன் இரு கைகளையும் சுற்றிவளைத்து பின்னி"உம் சொல்லுங்கள்" என்று சிரித்தாள்.
"நீ இல்லாவிட்டால் நான் வாழவே மாட்டேன் எங்காவது ஆறோ குளமோ பார்த்து விழுந்து செத்து விடுவேன்"
செல்வராணியின் மனம் அந்த இன்ப நினைவுக் காட்சிகளை இரசித்திருந்த வேளை, முகம் பழையபடி இருண்டு வந்தது.
அவர் இல்லாமல் நான் வாழ ஆசைப்பட்டேனே? ஓர் ஆணிடமிருந்து ஒரு பெண் எதனைத்தான் எதிர்பார்க்கிறாள்? நான் அவரிடமிருந்து எதனை எதிர்பார்த்தேன்?
எண்ணங்கள் என்ன? கனவுகள் என்ன? எத்தனையோ இன்பங்களை எதிர்பார்த்தேனே!
மறுநாள் கொழும்பு வந்ததும் முதல் வேலையாகவும் கடைசி முறையாகவும் கமலேஸ்வரனை ஆஸ்பத்திரியில் சென்று பார்ப்பதென நினைத்தாள் செல்வராணி
மன உளைச்சல்களும் பிரயாண அசதியும் அவளை வெகுவாக வாட்டியிருந்தன. இப்பொழுதெல்லாம்பார்த்தவர்களுக்கு முதல்நாள் போரில் தமையனையும், அன்றைய போரில் கணவனையும் இழந்தபின், மகனையும் போருக்கு அனுப்பி இரை கொடுத்து தன் பங்கை நிறைவேற்ற மட்டும் திராணி பெற்றிருந்த ஒரு தமிழச்சி போல் அவள் காட்சியளித்தாள். உள்ளவர்களையும் உள்ளனவற்றவையும் இழந்த பின்னர், தன்னிடமிருந்த நம்பிக்கை ஒன்றே இப்பொழுது அவளுக்குத் துணையாக நின்றது.
பார்ப்பவர்கள் மயங்கித் திரிந்த வசீகரம் முழுதாக வாடாமல் அவள் தன்னை ஒருவாறு அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டாள்.
கமலேஸ்வரனை அணுகி அவன் தன்னைப்பற்றிக் கொண்டிருக்கும் அந்த முடிந்த முடிவையும் தெரிந்து கொண்டு எல்லோரிடமிருந்தும் விடைபெறுவததென்று தீர்மானித்தபடி வார்டினுள் நுழைந்தாள் செல்வராணி.
எந்த ஒரு பெண்ணும் தான் இந்த உலகத்தின் மதிப்பில் எங்கு வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டால், அந்த மதிப்புக்கேற்ப நடக்கலாம் அல்லவா? செல்வராணி ஒரு தடவை நினைவால் தவறிவிட்டதற்காக கமலேஸ்வரனும் அவளை எங்கு இட்டுள்ளான் என்பதையும் அறிய வேண்டும் போல் அவள் மனம் துடித்தது. யார் என்ன சொன்னாலும், என்ன செய்யத் தூண்டினாலும் அவர்களுடைய பேச்சுக்களுக்காக தன்னையோ தன் உயிரையோ மாய்ப்பதில்லை என்று பலமுறை சத்தியஞ் செய்து கொண்டு புறப்பட்டாள் அவள்.
பெண் மனது பூப் போன்றது என்பதற்காக அந்த மனம் வாடப் பலரும் பலவாறு பேசுவார்கள் என்பது செல்வரானிக்கு நன்கு தெரியும். தினம் தினம் இந்த நாட்டில் ஏமாற்றம் ஒன்றே காரணமாக வாழச் சக்தியற்று தற்கொலை செய்யும் ஜீவன்களுக்காக அனுதாபப் பட்டிருக்கிறாள் அவள்.
பிறந்து விட்டோமே என்பதற்காக எப்படியெல்லாம் வாழும் பெண்களைப் பற்றிய கதைகளையும் அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். அந்த வாழ்க்கையும் அவ்வளவ சிறப்பானதல்ல என்றும் துணிந்திருந்தாள் செல்வராணி.
207

Page 114
பார்வையாளர்கள் நோயாளர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட அந்த வேளையில் ஒரு பக்கம் ஸ்கிறீன் இட்டு மறைக்கப்பட்டிருந்த இடைவெளியின் ஊடாக செல்வராணி கண்ட காட்சி அவளுடைய உயிரைப் பிழிந்தது. தான் உண்ண வைத்திருந்த உணவில் பாம்பு வந்து விஷத்தைக் கக்கி விட்டுச் செல்வதைப் பார்த்துவிட்ட பரிதாபமான பசிக்காரனைப் போலானாள் அவள்.
உள்ளே அந்த சந்தடியையும் மறந்து, சித்திராவை அழைத்து அனைத்து அவளுடைய கன்னங்களில் வழிந்திருந்த கண்ணிரைத் துடைத்து முறிந்து விட்ட தனது கையையும் பலம் பெற்றது போன்றதோர் அணைப்பின் மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் கமலேஸ்வரன்.
செல்வராணி இனி அங்கு தான் செல்வது அவ்வளவு உசிதமானதன்று என்று நினைத்தாள்.
அவளையும் அறியாமல் அவளுடைய கால்கள் பின்நோக்கி நடந்தன. இந்த உலகப் பூந்தோட்டத்தில் எத்தனை மலர்கள் நித்தம் மலர்கின்றன? அவற்றுள் எத்தனை மலர்கள் நித்தம் அழிகின்றன? மலர்களின் மலர்ச்சியில் மகிழும் மனித மனம் அழிவில் கலங்குவதில்லையே. தெய்வத்துக்குச் சாத்தப்பட்ட மலராக இருந்தால் அதனைப் பெற்று கண்ணில் ஒற்றி தலையில் சூடுகிறார்கள். பெண்ணின் முடியிலிருந்து புழுதியில் விழுந்து விட்டால் அதனை மிதித்துப் புதைக்கிறார்கள். மரத்திலிருந்து தாமே பறித்தால் முகர்ந்த பார்க்கிறார்கள் எத்தனை இரசனை இதில்?
செல்வராணி தெய்வத்துக்குச் சூட்டிய மலர்தான். ஆனால் அந்தத் தெய்வம் அவளைத் தன்னோடுமுறையாக இட்டபடி இருத்தாமல் பக்தர் என்ற இரசிகனிடம் கொடுத்து விட்டதே. அந்த இரசிகனும் சூடிமகிழ்ந்த பின் தெருவில் வீசிவிட்டான்.
ஓ! அவள் புழுதி மலர்!
★次次 次次
208

தணல் பதினொன்று
நாற்பது நாட்கள் நடந்து தீர்ந்தன. கமலேஸ்வரன் ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டு அவனுடைய அறையில் தங்கியிருந்தான். ஒரே கிடையாகக் கட்டிலில் கிடந்து சிகிச்சை பெற்றபொழுதும், அவனுடைய இடது கையின் தோற்றம் முன்னர்போல் இயற்கையாக ஒழுங்காக இல்லாது முழங்கை முறிந்த நிலையில் மடிந்து முன்புறம் நீண்டிருந்தது. நடப்பதற்கு உகந்ததாக ஒரு ஊன்று கோலையும் அவன் பெற்றிருந்தான். அதன் உதவியுடன் முறிந்த நிலையிலேயே புண் ஆறிய அவனது இடதுகால் பலமாக மண்ணில் பதித்து நடக்க முடியாததாக இருந்தது. அவனுடைய பெயரைத் தெரியாதவர்கள் இப்பொழுது அவனை ஒரு சொத்தி என்று அழைக்கக் கூடியவாறு இருந்தது, அந்தப் பரிதாப கோலம்.
செல்வராணி யாரையும் முகம் கொடுத்துப் பார்க்கவோ பேசவோ விரும்பாததால் ஹோட்டல் ஒன்றில் நிரந்தரமாக வாடகை அறை எடுத்துத் தங்கியிருந்தாள். அவளுடைய வரவை ஆவலோடு எதிர்பார்த்த மனேஜரும், சிவன் உட்பட பணியாட்களும் இப்பொழுதெல்லாம் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.
அன்றொருநாள் இரவு அவள் தனியான அந்த அறையில் புதுமையாகி விட்ட தனது வாழ்க்கையை எண்ணியபடி படுத்திருந்தபொழுது, அறைக்கதவை யாரோ தட்டுவது கேட்டு எழுந்து வந்து பார்த்தாள்.
மனேஜர் பற்களை அழகாகக் காட்டி அவளிடம் எதனையோ யாசிப்பது போன்று சற்றுமுன் கூனி, உடம்பை வளைத்து சிரித்தபடி நின்று கொண்டிருந்தான்.
ஒருநாள் இரவு தனக்கு அந்த ஹோட்டலில் ஏற்படவிருந்த பயங்கரமான அனுபவத்தினின்றும் புத்திசாதுரியமாகத் தப்பி வெளியேறிய அவள், அதே கூண்டில் தானாகவே வந்து விழுந்தது, அவள் இப்பொழுதெல்லாம் எதற்கும் தயார் என்று ஆகிவிட்டாள் என்பதை எல்லோருக்கும் எடுத்துக் காட்டியது.
அவன் சொன்னான். "நோனா, அன்றைக்கு ஒருநாள் இரவு மட்டும் ஆடிவிட்டு பின்னர் வராமலிருந்து விட்டீர்களே. உங்களுடைய டான்சைப் பார்க்க எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். இன்றிரவு வெளிநாட்டவர்கள் பலரும் வருகிறார்கள். உங்களுடைய நடனவிருந்து எங்களுக்கு அவசியம்."
செல்வராணி தனக்கு அறிமுகமாகிவிட்ட சிலருக்காக உடம்பை அப்படி இப்படி அசைத்து ஏதோ அன்றிரவு அவளைப் போன்று ஆகிவிட்ட சில பெண்களுடன் நடனமாடியது என்னவோ உண்மைதான். பரத நாட்டியத்துக்கென்றே மண்ணில் முறையாகக் கால் பதிக்காவிட்டாலும், கல்லூரிப் படிப்பின்போது சங்கீதம் அல்லது நடனம் என்ற ஒன்றை மாணவிகள் பொழுது போக்காகவேனும் படிக்க வேண்டுமென்ற அதிபரின் உத்தரவின் பெயரில் அவளும் ஒரளவு இராகம், தாளம், பாவம் என்ற இவற்றைத் தெரிந்திருந்தது எவ்வளவு வசதியாக இன்று இருந்தது.
209

Page 115
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே. அதுபோல செல்வராணி ஒரு பரத நர்த்தகியாகவும் அங்கு மதிக்கப்பட்டது வாஸ்தவம்தான்.
அவளுக்குத் தொழில் என்றோ, துணையென்றோ ஒன்றும் ஒருவரும் இல்லாது போனது இந்தக் கலை வளர்ப்புக்குப் பெரிதும் உதவியது.
“சரி. நான் வருகிறேன்.” என்று செல்வராணி மகிழ்ச்சி உணர்வுடன் கூறியதும் மனேஜர் பெரிதும் ஆறுதலடைந்து சிரித்தான். பின்னர் கூறினான்.
“டுவிஸ்ட். அத்தோடை தனியே புளோர் டான்ஸும். எவ்வளவு வேண்டும் என்று கூறவும் வேண்டும்."
“நீங்களாகவே பார்த்துக் கொடுங்கள்", செல்வராணி அடக்கமாகக் கூறியதும் மனேஜர் சொன்னான்.
“ஐநூறு ரூபா" “சரி” மனேஜர் மனக்களிப்புடன் சென்று விட்டதும் செல்வராணி அறைக் கதவைச் சாத்தியபடி கண்ணாடி முன் வந்து நின்றாள்.
அவளுக்குச் சிரிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. என் உடலைப் பெரும்பாலும் நிர்வாணமாக்கி ஐம்பது, நூறு ஆடவர்கள் முன், அப்படியும் இப்படியுமாக அசைவதற்கு ஐநூறு ரூபா கொடுக்கிறார்களாம். என் ஆத்மாவையே புரிந்து கொள்ளாதவர்களுக்கு இது ஒரு பாடம்,
கண்ணாடிக்குள் தனது கோலத்தைக் கண்டு சிரித்தாள் அவள். கண்ணிரும் கம்பலையுமாக, குடியும் குடித்தனமுமென்று இருந்த காலங்கள் முடிந்து தீய்ந்து விட்டன. எஞ்சியிருக்கும் உடற்பலத்துக்கு ஆயுள் இருக்கும்வரை எனக்கும் மவுசு இருக்கும்.
தன் பழமையை மறக்க வேண்டும் என்று அவள் பல தடவைகளாக நினைத்துக் கொண்டாள். மறக்க வேண்டும் மறக்க வேண்டாம் என்று விரும்புபவன் அடிக்கடி நினைவுக்கு வருவது போல அவளுடைய அந்தரங்க மணவாழ்க்கையே நினைவில் வந்து அரித்துக் கொண்டிருந்தது.
கண்ணாடிமேசை டிராயருக்குள் இருந்த கமலேஸ்வரனுடைய புகைப்படத்தைச் சலனமின்றி எடுத்துப் பார்த்தாள்.
பின்னர் கூறினாள். “சத்தியமாகச் சொல்கிறேன். உங்களைத் தவிர என்னை வேறு யாருமே இதுவரை தீண்டவில்லை. இனி இனி. என்னை மன்னித்துவிட வேண்டும். உங்களுக்குக்காவது சித்திராஎன்ற அந்தப்பெண் இருக்கிறாள்.பிள்ளைகள் இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு? அவளுடைய முகம் இருண்டு வந்தது. கண்கள் கலங்கியதும், அணிந்திருந்த இரவு கவுணின் காற்புறத்தைப் பற்றி உயர்த்தி கண்களை ஒற்றிவிட்டாள் செல்வராணி. கமலேஸ்வரனுடைய அந்தப் புகைப்படம் அவளுக்குப்பாராமாக இருப்பதுபோலிருந்தது. சில பல திருந்தக்கூடிய தவறுகளையே மன்னிக்கத் தெரியாததால் பெரிய தவறுகள் நேர்ந்து விட்டதாக அவள் எண்ணியதும் திறந்தபடி கிடந்த டிராயருக்குள் அதனைப் போட்டுவிட்டு, படாரென்று டிராயரை உள்ளுக்குள் தள்ளினாள்.
அப்பொழுது கண்ணாடி மேசையில் நிறைந்து கிடந்த புட்டிகள் ஒன்றோடொன்று முட்டி எழுப்பிய ‘சல சல ஒலி, அவளையே அவை பார்த்துச் சிரிப்பன போல இருந்தது.
என்னதான் சிரிக்கட்டுமே.
210

அன்றிரவு இரண்டு மணிவரை குடியும் கும்மாளமுமாக இருந்த அந்த ஹோட்டல் அறைகளில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செல்வராணி தனது ஆடைகளை மாற்றிக் கொண்டு விட்டு அசதியின் பெருக்கில் உறங்கிக் கிடந்தாள். வெளியே அவளுக்குத் துணையாக அந்த புளோரின் சிப்பந்தியான சிவன் படுத்திருந்தான்.
மறுநாள் பகல் பதினொரு மணிக்கு விழித்துக் கொள்ளும் அந்த ஹோட்டலில் தனது வாழ்க்கையையும் தான் சம்பந்தப்பட்ட அல்லது சந்திக்க நேர்ந்துவிட்டவர்களுடைய வாழ்க்கையிலும் நேருகின்ற அல்லது நேர்ந்துவிட்ட பரிதாபகரமான சம்பவங்களுக்காக அவனுடைய உள்ளம் ஒருமுறை வேதனைப்பட்டது.
செல்வராணி அந்த ஹோட்டலுக்கு வந்து வெகுநாட்களாகியிருந்ததால் அவளைப் பற்றி ஒரளவு தெரிந்து கொள்ள அவனுக்குப் பல வாய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. அவனுடைய தொடர்பு ஒன்றையே சற்று நிரந்தரமாக்கியிருந்த, அதுவே ஓரளவு பலமானது என்று நம்பியிருந்த செல்வராணி, தானாகவும் அவனுக்குக் கதைகள் சொல்லி ஆறுதலடைந்திருக்கிறாள்.
மேடைகளிலும் பத்திரிகைகளிலும் சமூக வளர்ச்சி பற்றியும் புனருத்தாரணம், சீர்திருத்தங்கள் பற்றியும் அடுக்கடுக்காக அழகான மொழியில் பேசி எழுதி வந்தும் என்ன பிரயோசனம் என்று சலித்தான் சிவன். ஒரு பெண் தனக்கு வாழ்வு கேட்டு கைநீட்டிய பொழுது அவளுக்கு ஆறுதலளிக்கத் தெரியாதவர்கள் கலைஞர்களாக இருந்தென்ன? கடவுள்களாகத்தான் இருந்தென்ன?
செல்வராணி அந்த ஹோட்டலுக்கு மறுபடியும் வருவதைக் கண்டதும் முதலில் சிவனால் தாங்க முடியவில்லை. தனக்கு விருப்பமான ஒரு பெண், தன்னை அன்புக்குப் பாத்திரமானவனாக்கிய ஒருத்தி, அங்கு வந்து வீணாக கெட்டழியப் போகிறார்களே என்றும் ஏங்கினான் அவன்.
அதனைப் பொறுத்திருக்காமல் அவளிடம் காரணம் கேட்டபொழுது, கண்ணிரிடையே அவள் சொன்ன கதைகளைக் கேட்டு அவனும் அழுதான்.
ஒருத்திக்கு இதுதான் என்ற வாழ்க்கை நிலை மாற்றப்பட்டு, எதுவாகவும் இருக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்ட பின், அதில் விரக்தியுற்ற அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் வாழ்வதற்காக அங்கு வந்தது தவறில்லை என்றும் அவன் உள்ளம் எடுத்தெடுத்துக் கூறிக் கொண்டது.
குடும்பத்தில் இருந்து கொண்டே பணஆசையிலும் நாகரீக மோகத்திலும் அங்கு வந்து வந்து போகும் உயர் இடத்துப் பெண்களிலும் செல்வராணி எள்ளளவும் குறைந்தவள் அல்ல என்றும் அவன் எண்ணினான்.
அன்றிரவு புளோ டான்ஸின்' போது அந்த மண்டபத்தில் நிறைந்து கிடந்த குடியர்களுக்கும் காமவெறியர்களுக்கும்நீர்வார்த்துக் கொண்டிருந்த அவன் இடைக்கிடை மேடையைப் பார்த்தபொழுது பீரங்கி வெடித்தாற் போன்ற ஒலிகளிடையே மெல்லிய ஒளியில் செல்வராணி இடையிடை மூடிய அங்கங்களை உலுப்பி வளைத்து ஆடிய கோலம் அவனுக்கு என்னவோ போலிருந்தது.
காணக் கூடாத பல காட்சிகளை அவளிடம் கண்டுவிட்டு, அவளை ஆடைகள் விழப்பார்த்த பொழுது அவனால் நேரே பார்க்க முடியவில்லை. அதனை உணர்ந்துவிட்ட செல்வராணி அப்பொழுது சொன்னாள்.
“சிவன். என்னைப் பார்க்க உங்களுக்கே வெட்கமாக இருக்கிறதா?”
211

Page 116
“இல்லை அம்மா. அப்பிடியொண்ணுமில்லே.”
"அப்படி வெட்கமாக இருந்தாலும் பறுவாயில்லை. ஏனென்றால் என்னைப் பார்க்க எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. இருந்தும் என்ன செய்கிறது. ஆடை களைவதையும் கலை என்கிறார்கள். நானும் அதையே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். பத்துப்பேருடன் போய் உடல்நிலையாலும் மனநிலையாலும் கெட்டழிவதிலும்பார்க்க உங்கள் தாயிடம், உங்கள் சகோதரிகளிடம் இந்த உலகத்துப் பெண்களிடம் ஆடைக்குள் மறைந்து கிடக்கும் இரகசியங்கள் இவைதான் என்று காட்டுவதில் எனக்கு இப்பொழுது ஒரு திருப்தி, இதில் மற்றவனுடைய கைக்குள் நான் நசுங்குண்ணாமல் இருந்தால் அதுவே போதும். அதுதுான் என் பிரார்த்தனையும்."
“என்னம்மா இதைப்போய்ப் பெரிசா சொல்லிறீங்க. எனக்குத் தெரியும் இஞ்ச என்ன நடக்கிறது எங்கிறது. திடுதிப்ன்னு யாரோ ஒருத்தனோடை வருவாங்க. அறை வேணும்னு கேப்பாங்க. நாப்பத்தைஞ்சு ரூபா குடுத்து அறையெடுத்து, இரண்டு பேருமாக ஒரு மணித்தியாலம் குடும்பம் நடத்திப்புட்டுப் போயிருவாங்க. அவங்க நாளைக்கு வீதியிலை அடக்க ஒடுக்கமாகப் போனா, அவர்களை ஒழுக்கமுள்ளவன்னு காட்டி உங்களை ஒத்த நேர்மையுள்ளவாளை கெட்டவன்னுவாங்க. இதாம்மா உலகம்.”
சிவன் கூறியவற்றிலிருந்தும் சொல்லிய அடையாளங்களிலிருந்தும் அவளுக்குத் தெரிந்த பல கற்புடை மகளிர் அங்கு ஒருநாள் மண வாழ்க்கை நடத்திய கதை விளக்கமாகியது.
செல்வராணி சிரித்துக் கொண்டாள்.
2
அன்று சாயந்தரம் தனது படுக்கையில் தலையணையை உயர்த்தி வைத்துக் கொண்டு, கஷ்டங்களின் மத்தியிலும் பத்திரிகைகளை வாங்குவித்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் கமலேஸ்வரன்.
செட்டியார் அவனுடைய பரிதாபத்துக்கு இரங்கி விளம்பரம் கேட்டிருந்த கடைக்காரரிடமிருந்து சொற்ப பணம் பெற்று, தன் பணமும் சேர்த்து முந்நூறு ரூபா கொடுத்திருந்தது வைத்திய செலவுக்கும் பிறவற்றுக்கும் பெரிதும் உதவியாக இருந்தது. பணம் முழுவதும் கரைகின்ற நிலையில் இருந்தாலும்பத்திரிகைகள், கலை நூல்கள் இவையும் அவனுடைய படுக்கை நிலையில் பொழுதைப் போக்கி மனஅமைதியைக் கொடுக்கும் சாதனங்களாக இருந்ததால், சித்திரா கொண்டுவந்து வைத்த பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
இலங்கைப் பத்திரிகைகளின் செய்திச் சேவையின் திறத்தை வியந்து கொண்டிருந்த கமலேஸ்வரன், கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகைகளின் பெண்கள் பக்கத்தைப் புரட்டி எறிந்த வாக்கில் பார்த்த பொழுது முக்கால்வாசி நிர்வாணமாக ஒருத்தி கால்களை அகற்றிவிட்டு, இடையை முன்புறம்தள்ளி, கைகளை அகலப் போட்டு, மேற்புறத்தைப் பாரமாக ஆட்டுவது போன்றும், அந்த இயற்கைப் பெண்மை அழகில் மயங்கிக் கிறங்கியிருப்பவர்களைப் பார்த்துச் சிரிப்பது போன்றும் உள்ள ஒரு புகைப்படத்தைக் காண நேர்ந்தது.
22

ஒரு பக்கத்தில் காற்பங்கை நிரப்பியிருந்த அந்தப் படத்தை அருவருப்புடன் பார்த்துவிட்டு அப்பால் அடுத்த பக்கத்துக்கு விழிகளை வீசிய பொழுது மனம் பலமுறை அடித்து எதனையோ மறுபடியும் துருவிப் பார்க்கும்படி தூண்டியது.
அந்தப்படத்தில் நின்று ஆடிக் கொண்டிருக்கும் பெண்ணை அந்தக் கோலத்தின் முழுமையைத் தான் ஏற்கனவே எங்கோ கண்டது போன்று எண்ணினான் கமலேஸ்வரன். தலைமுடியைச் சுருட்டி, நெற்றிவரை மறைத்து கண்களுக்கு அதிகளவு மையிட்டு ஒரு பலே நாட்டியக்காரி போன்றுமுக அழகுசெய்துள்ள அவளை மறுபடியும் பார்த்தான் கமலேஸ்வரன்.
“செல்வராணி. ரோசங் கெட்ட நாயே. கமலேஸ்வரன் பலமாக பற்களை நறும்பியபடி அந்தப்படத்தை மீண்டும்பார்த்தான். படத்தின் அடியில் வீழ்நீர் சிந்தி நிற்கும் வேட்டை நாய்களின் முகங்கள் போன்று மூவருடைய முகங்கள் தெரிந்தன. அவர்களின் விழிகள் அவளுடைய சிறிது மூடிய இடையழகில் மயங்கி நின்றதை, அந்தப் படத்தை எடுத்த கமராமான் தத்ரூபமாக எடுத்திருந்ததால் காண முடிந்தது.
கைகள் நடுங்கி வருவது போலவும், பன்னிரண்டு பக்கங்களைக் கொண்ட அந்தத் தினசரி தொன் பாரமாக இருப்பது போலவும் பட்டதும் அப்பத்திரிகையை வீசி எறிந்தான் அவன்.
உள்ளூர முழுதாக ஆறாத அவனுடைய காற்புண் அந்தப் பலவந்தமான அசைவில் நோவு கண்டது. அவன் தனது நெஞ்சை ஒரு கையாலும் முழந்தாளை மறு கையாலும் தடவிவிட்டான்.
“ஐ. ய். யோ. தெய்வமே என்னைக் கொல்ல மாட்டாயா? நான் வாழ வேண்டுமென்று உன்னிடம் வரங்கேட்கவில்லை. எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கூடக் கேட்கவில்லை. நான் கேட்பது மரணம் மட்டுந்தான் அதை எனக்குத் தரமாட்டாயா?"
திறந்து கிடந்த ஜன்னலுக்கு வெளியே தூரவுள்ள தென்னை மரங்களின் உச்சிக்கும் அப்பால் தெரிந்த சைவக் கோவிலின் கோபுரம் அவனுடைய கண்களில் பட்டதும் வேண்டிக் கொண்டான் கமலேஸ்வரன்.
சித்திரா சற்று முன் அந்த அறையுட் கிடந்த நாற்காலியில் ஒரே இரையாக இருந்து அந்தப் பத்திரிகையைப் புரட்டிப் புரட்டிப் படித்து, தன்னையும் ஒரு மாதிரிப் பார்த்தது அவனுக்கு இப்பொழுது நினைவுக்கு வந்தது.
அவள் கையில் சோற்றுக்கரியருடன் உள்ளே வந்ததும் கமலேஸ்வரன் முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டான்.
சுவருடன் மோதி அம்மண்மாக விரிந்த நிலையில் விழுந்து கிடந்த அந்த ஆங்கிலத் தினசரியைப் படிக்க முடியாத போதும் படங்களையேனும் பார்க்கலாம் என்ற ஆவலில் எடுக்கப்போன ரமணன், அந்தப் பக்கமொன்றில் தன் தாயினுடைய படம் வெளிவந்திருந்ததைக் கண்டுவிட்டு முதலில் இனமறியாத் திகைப்பு அடைந்தான். பின்னர் நேரிலேயே பேச விருப்பமற்ற ஒருத்தியன் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய விரும்புபவன் போல பத்திரிகையின் இரு விழிம்புகளிலும் கை ஊன்றியபடி நெஞ்சுக்கு நேரே கீழே அந்தப் படம் தோற்ற, பார்த்துக் கொண்டிருந்தான் ரமணன்.
"அப்பா. அம்மான்ர படம் வந்திருக்கு. குளிக்கையிக்க போட்டோ பிடிச்சிருக்கிறாங்கள்’ என்று பாதி மகிழ்ச்சியும் பாதி விரக்தியும் பொங்கக் கூறிய
213

Page 117
ரமணனை “நீ போடா அங்காலை” என்ற கமலேஸ்வரனின் கர்ஜனை எழும்பி அவனுக்கு அழுகையை ஊட்டியது.
ரமணனை வாரி நெஞ்சோடு அணைத்தபடி கமலேஸ்வரனைப் பார்த்துக் கண்களால் கடிந்து கொண்ட சித்திரா, “நீ அழாதை ராசா. அது அம்மாட படமில்லை. அம்மாவைப் போல ஆரோ ஒருத்தியின்ர டான்ஸ் படம். ” என்று ஆறுதலாகக் கூறி அவனுடைய அழுகையை அடக்கினாள்.
"அந்த அம்மாவினுடைய படம் அது இல்லை என்று இந்த அம்மா வக்காலத்து வேண்ட வந்துவிட்டா.”
“சரி. சரி. எழுந்திருங்கள். சாப்பிடலாம். நேரம் இரண்டரையாகிவிட்டது” சித்திரா அவனுடைய பேச்சுக்குக் காது கொடுக்காதவள் போலக் கூறி அவனை உஷார்ப்படுத்தியதும், கமலேஸ்வரன் ஏதோ முனகிக் கொண்டான்.
“யாரை நம்புவது என்றே தெரியவில்லை. அந்தப்படம் அவளுடையதுதான் என்று தெரிந்தும் இங்குகொண்டு வந்து போட்டாயிற்று. பார்த்ததும்பார்த்துவிட்டுதாங்கள் மட்டும் நல்ல பிள்ளைபோல இருந்து விட்டீர்கள்.”
ரமணனுடைய கவனத்தையும் ஈர்ந்துவிட்ட அந்தப் படம் செல்வராணி யினுடையதுான் என்பது தெளிவாகக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் கடிந்துகொண்டு “சரி சரி. எந்த நாய் எந்தப் பன்றியைத் தின்றால் என்ன?” என்றபடி எழுந்திருந்தான்.
ரமணன், ரஞ்சனி இருவருக்கும் ஏற்கனவே பசி தீர்த்து விட்டிருந்த அவள் அவனுக்காக எங்கோ கடைக்குச் சென்று அந்த உணவை வாங்கித்தானே கைகளால் இட்டு, கொடுத்த பொழுது, ஒரு கையில் மெல்ல ஏந்தியபடி உண்ணத் தொடங்கினான் கமலேஸ்வரன்.
அவன் உண்ணும்பொழுது தரையில் அமர்ந்து கவருடன் முதுகு சாய்த்து கைகள் இரண்டையும் முழந்தாள்களுடன் சேர்த்து இருந்த சித்திராவின் மடிக்குள் இடங்கேட்டு வந்த ரஞ்சனி அதிலேயே படுத்தாள். அவளை அணைத்தபடி, கமலேஸ்வரனுக்கு வேண்டியவற்றை எடுத்து எடுத்து இட்டாள் சித்திரா.
“இதுவும் எத்தனை நாளைக்கு? உமக்கு என்று ஒரு வாழ்க்கையின்றி பட்டு, பாழகிப் போய்க்கொண்டிருக்கிற என்னுடைய அற்ப வாழ்க்கைக்காக அதையும் அநியாயமாக அழிக்கின்றீர்?
கமலேஸ்வரன் பொருத்தமற்று ஏதோ கூறுகிறான் என்றளவில் அமைந்துவிட்ட சித்திரா, அவனுக்கு எதுவித பதிலும் கூறாமல், “நீங்கள் சாப்பிடுங்கள்." என்றாள்.
சித்திரா தான் எடுத்திருந்த லீவு நாட்கள் யாவும் முடிந்து விட்டன என்றும், அதனால் அவள் நாளைக்கே அலுவலகத்துக்குச் செல்ல வேண்டுமென்றும் கூறினாள். கமலேஸ்வரன் அந்தக் கருத்துக்கு வெகுவாக ஆதரவு அளித்து, அவள் ஒழுங்கு செய்தபடி பையன் ஒருவன் வேண்டியவற்றைச் செய்வான் என்றும் கூறினான்.
அவர்களுடைய உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்த வேளை, எதனையோ வேதனையோடுநினைத்துக்கொண்டகமலேஸ்வரன்"ஆ.இன்னொன்று”என்றபடிகூறினான். “இந்தப் பிடாரியை நீர் தேடிப்போன பொழுது, அவள் ஊருக்குப் போய்விட்டாள் என்றல்லவா சொன்னீர்? இந்தா அவள் கொழும்பு ஹோட்டல்களில் டான்ஸ் ஆடித் திரிகிறாள். என்ன இது?"
“நான் கேள்விப்பட்டது வேறு. உங்களுடைய மனம் அவதியுறக்கூடாது என்பதற்காக அதைக் கூறவில்லை. அவ ஊருக்குப் போய் அங்கு தகப்பன்
24

வரவேண்டாமென்று கூறியதும், இருந்த அறையையும் காலி செய்து கொண்டு ஹோட்டலில் நடந்த டான்ஸிலை எடுத்த படம்தான் இன்றைக்கு வெளிவந்தது.”
சித்திரா பவ்வியமாகக் கூறியபடி தலையைக் கவிழ்ந்தாள். அப்பொழுது நிலவிய மெளனத்தைக் கலைத்துக் கொண்டு ஒருவன் கமராவுடன் “எக்ஸ்கியூஸ் மீ" என்றபடி உள்ளே நுழைந்தான்.
கமலேஸ்வரன் அவனை வரவேற்று அமரும்படி கூற, சித்திரா ரஞ்சனியைத் தூக்கிக் கொண்டு எழுந்து பக்கத்து விறாந்தைக்குச் சென்றாள்.
வந்தவன் சொன்னான். “நான் ஒரு பத்திரிகை நிருபர். உங்களைப் பற்றி அமெரிக்கப் பத்திரிகைகளில் பெரிதாக கட்டுரையும் படங்களும் வந்திருக்கின்றன. இலங்கையரான உங்களை எங்களுள் எவருக்குமே தெரியாது போனது வருந்தத்தக்கது. உங்களைப் பற்றிச் சில விபரங்கள் வேண்டும்" என்றபடி தன் கையில் வைக்கப்பட்டிருந்த அந்த அமெரிக்கப் பத்திரிகையை எடுத்து கமலேஸ்வரனிடம் கொடுத்தான் அவன்.
அதனை ஆவலோடு பெற்றுக் கொண்ட கமலேஸ்வரன் ஒரு பக்கத்தைப் புரட்டிய பொழுது இந்து சமுத்திரத்தில் ஒரு கலை முத்து' என்று பெரியதாகத் தலைப்பிட்டு கமலேஸ்வரனுடைய வாழ்க்கைக் குறிப்புக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றுடன் அவன் வரைந்திருந்த ஓவியங்கள் மூன்றையும் பிரசுரித்திருதார்கள். அந்த ஒவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைப்பு இடப்பட்டவையாக இருப்பதைக் கண்ட கமலேஸ்வரன், டேவிட்சன் என்ற அந்த அமெரிக்கப் பத்திரிகையாசிரியருடைய கலைத்திறனையும் நேர்மையையும் கருணையையும் எண்ணி வியந்தான். "இயற்கைக்கு ஒரு சவால்” என்ற மகுடமிட்ட, அன்றொருநாள் மாலை டேவிட்சன் இயற்கையுடன் தனது ஒவியத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து இரசித்த அந்தச் சித்திரத்தைக் கண்டதும் பிரமித்தான். தான் நுணுக்கமாக வரைந்த கோடுகளும் மிகத் தெளிவாகக் துலங்கும்படிப்புளக் செய்து பிரசுரித்த பத்திரிகைத் தொழில் திறனையும் மனமாரப் பாராட்டி புளகாங்கிதப்பட்டான்.
அப்பொழுது அந்த நிருபர் கேட்டார். “எப்படி? ஒரேயடியாகப் பிரமித்துப் போய்விட்டீர்களே” "ஆமாம் என்னால் நம்பவே முடியவில்லை.” “இப்பொழுது எங்கள் 'சிலோன் ஹெரல்ட் பத்திரிகையிலும் உங்களைப் பற்றி நிறைய எழுதப்போகிறோம். உங்கள் மனைவியையும் குழந்தையையும் அணைத்தபடி நீங்கள் வரைந்த ஓவியம் ஒன்றைப் பார்ப்பதாக ஒரு போஸ் கொடுங்கள்.”
கமலேஸ்வரன் சொன்னான். “ஒரு கலைஞன் தன்னுடைய படைப்புகளைத் தானே தான் இரசிக்கிறான். இலங்கையில் இதுதான். வெளிநாட்டில் அவனையும் அவனுடைய படைப்புக்களையும் பத்திரிகையாளர்களும் மக்களும் ஒருசேர இரசிக்கிறார்கள்.”
“எல்லோரது சார்பிலும் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்ற நிருபர் சித்திராவை அங்கு வந்து கமலேஸ்வரன் அருகில் அமர்ந்து போஸ் கொடுக்குமாறு கேட்டதும், சித்திரா திருதிருவென்று விழித்து, தன்னைச் சமாளித்தபடி, "இட் இஸ் ஆல் றைட். அவரையும் பிள்ளைகளையும் எடுங்கள்” என்றாள்.
“மனைவி இல்லாமல் கலை என்ன 'கலை! இவரை இந்தளவுக்கு உயர்ந்த கலைஞனாக்கியதே நீங்கள்தானே. மனைவி ஊக்கப்படுத்தி ஒரு கலைஞனை
215

Page 118
எவ்வளவுக்கும் உயர்த்தலாம். தாய் ஊக்கப்படுத்துவதிலும் ஒரு காதலி ஊக்கப்படுத்தினால் கலைக்கு உயிர் பிறக்கும். தாய் ஊக்கப்படுத்தினால் வாழ்க்கையில் உயிர் பிறக்கும். அவன் முன்னேறுவான். அதுதான் காதலுக்கும் பாசத்துக்கும் உள்ள வித்தியாசம்”
“அழகாகப் பேசுகிறீர்களே” கமலேஸ்வரன் கூறிவிட்டு, சித்திரா படும் அவஸ்தையை" இரசித்துக் கொண்டிருந்தான்.
அவளுடைய முகம் திடீரென்று எழுந்த கலவரத்தால் சுண்டிச் சிவந்தது. நெற்றியெல்லாம் வியர்த்து வந்தது. அவள் வலிந்து சிரித்தபடி பதிலின்றி நின்றாள்.
நிருபர் கேட்டார்.
தயங்காதீர்கள் மிஸிஸ். கமலேஸ்வரன். உங்களுடைய படத்தையும் எங்கள் பத்திரிகை தாங்கி வந்தால் பெருமையாக இருக்கும் அல்லவா?”
"நான். நான். மிஸ்தான்’ சித்திரா தயங்கித் தயங்கி, பின்னர் வேதனையோடு கூறினாள்.
இதுவரை அவளையே பார்த்திருந்த கமலேஸ்வரன் “ஏன் சிரமம்? நாமே எடுத்துக் கொள்வோம்” என்று கட்டிலில் ஒருவாறு எழுந்து அமர்ந்தான்.
அந்த அறையில் திடீரென மின்னல் வெட்டியது. கமலேஸ்வரனைப் பற்றிய குறிப்புக்களை எடுத்துக் கொண்டு, நிருபர் விடை பெற்றுக் கொண்டார். தன்னைக் காண்பதற்காக ஆஸ்பத்திரிவரை சென்று, அங்கு தனது விலாசம் எடுத்துத் தேடி வந்து, நல்ல செய்தியை வழங்கிவிட்டுச் சென்ற நிருபரின் சாதுரியங்களை எண்ணி மகிழ்ந்த கமலேஸ்வரன், சித்திராவை மனைவியாக்கியது குறித்து மெளனியானான்.
அது ஒரு விபத்து' என்று அவன் எண்ணி சித்திராவைப் பார்த்தபொழுது, அவள் கால்களால் நிலத்தை மெழுகுபவள் போல எங்கோ நாணத்துடன் பார்ப்பதும், பின்னர் கால்களைப் பார்ப்பதுமாக நின்று கொண்டிருந்தாள்.
“என்னம்மா, என்ன சமாச்சாரம்? ஏன் ஒரு மாதிரி.” கமலேஸ்வரன் குரலை மாற்றி குறும்பாகக் கேட்டதும், கண்களையும் முகத்தையும் கைகளால் சிறுபிள்ளை போல் மூடிக்கொண்ட சித்திரா, சிரித்தபடி வேறு திசைக்குத் திரும்பினாள்.
"சரிசரி. கெதியில் கலியாணம் முடித்து அவரையும் அழைத்துக்கொண்டு இங்கே வாரும்."
கமலேஸ்வரன் கூறியதைக் கேட்டு வெடுக் கென்று கழுத்தை வெட்டி வெறித்த சித்திரா, “சரி. அதையாவது செய்வோம். இனி என்ன? என்றாள். அது கமலேஸ்வரனுக்கு என்னவோ போலிருந்தது.
3
விளம்பரம் இல்லாத வியாபாரம், மானமில்லாத ஆண்மை, அழகும் குணமுமற்ற பெண்மை, மழையில்லாத வானம், பசுமையற்ற மண் - இவற்றுக்கெல்லாம் இந்த உலகில் இருக்கும் மதிப்புக்கள் பற்றி கமலேஸ்வரன் நன்கு உணர்ந்திருந்தான்.
தொழில் கலை என்றே இருந்த பொழுது அவனுக்கு இருந்த சமூக மதிப்பையும், இப்பொழுது எதுவுமற்ற பொழுது எட்டியே பார்க்காத உலகத்தையும் நினைத்தபொழுது பொருமினான் அவன்.
216

தன்னை நம்பிப் பிறந்துவிட்ட இரு குழந்தைகளுக்குமாகவேனும் ஏதாவது செய்து பிழைக்கத்தானே வேண்டுமென்று நினைத்தான். முன்னர்போல் மாடிகளில் ஏறி விளம்பரம் வரைய அவனுடைய கால் பலமற்றதாக இருந்தது. நிலத்திலிருந்தே வரையக்கூடிய அவனது ஒவியங்களுக்கு மகிமையைத் தருவதற்கு அவன் வாழ்ந்த கொழும்பில் யாருமே இருக்கவில்லை.
கொழும்பின் அதி நாகரீகப் பகுதியில் வாழும் தமிழ்ப்பெரியவர்களுடைய நினைவு அடிக்கடி வந்தபொழுது, அவர்கள் விழாக்களின்போது மட்டும் தமிழையும் தமிழ்க் கலையையும் பற்றிப் பேசுபவர்களாதலால் அவர்களை நம்பி வாழ்வதில் பிரயோசனமில்லை யென்றும் அவன் எண்ணினான்.
ஒருநாள் மாலை, அடுத்தது என்ன? என்று அவன் சிந்தித்துக் கொண்டிருந்த வேளை என்றோ ஒருநாள் திருஞானத்துக்குக் கூறியவை நினைவுக்கு வந்தன. இந்த ஆபாச உலகத்தைப் பற்றி ஆபாசமாக வரைவதானால் என்னுடைய மணிக்கட்டை அறுத்து அதில் பெருக்கெடுத்தோடும் இரத்தத்தில் தான் அந்தச் சிவப்பான ஆபாசத்தை வரைவேன்' என்று அவன் கூறியிருந்தது, உதிரத்தைக் கொதிக்கச் செய்தது. அவன் அடிக்கடி தன் கைகளைப் பார்த்துக் கொண்டான்.
உலகத்தில் எத்தனைபேர் சொல்பவற்றைச் செய்கிறார்கள்? இப்பொழுது சில நாட்களாக புதிய வர்ணங்களைக் குழைத்து, புதிய ஓவியங்களை வரையத் தொடங்கியிருந்தான் கமலேஸ்வரன். இயற்கையின் இன்ப எழிற் காட்சிகளுக்கு மெருகூட்டுவதுபோல் இயற்கையை ஓர் அழகான பெண் இரசித்துக் கொண்டிருப்பதுபோன்ற முறையில் அவனுடைய ஒவியங்கள் அமையத் தொடங்கின. இயற்கை தனியே இயற்கையாக இருந்த அழகுடன், இயற்கையிலேயே அழகாகிவிட்ட பெண்ணையும் அங்கு சேர்த்தால் அந்த ஓவியம் ஒருவேளை விலைபோகலாம் என்று அவன் எண்ணினான்.
அவனுடைய அந்த அறையில் இப்பொழுது அதிக நடமாட்டம் இருப்பதில்லை. கட்டுக் கதைகளுக்குச் செவி சாய்க்காதிருந்த சித்திரா அன்று பத்திரிகை நிருபர் அவளை உண்மையிலேயே கமலேஸ்வரனுடைய மனைவியாக்கப் பார்த்ததிலிருந்து அவளுடைய நெஞ்சத்தில் இனம் புரியாத கலவரமிருந்து கொண்டே வந்தது. கமலேஸ்வரன் அதனை நன்கு அவதானித்தான். ஆயினும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
சித்திராவும் ஒரு நாள் மாறினால் அவன் ஆச்சரியப்படாத அளவுக்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டான்.
ஜிவிதத்துக்காக மற்றவர்களை யாசிப்பதிலும், ஏதோ ஒரு வழியில் எப்படியாவது உழைத்து உயிரைப் பிடித்து, நம்பியவர்களையும் காப்பது என்று நினைத்துக் கொண்டு, வெளியே புறப்பட்டான் அவன்.
ஒருநாள் கதைப்போக்கில் கலையை மதிக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி அவன் யாரோ சொல்லக் கேட்டிருந்தான். அந்தக் குடும்பத்தின் நினைவு வந்ததும், அவர்களும் தான் கண்ட தமிழ்ப் பெரியார்கள் போன்றே மாறிவிடுவார்களா என்ற அச்சமும் உள்ளூர எழுந்திருந்தது.
ஒரு கையில் தடி ஊன்றி இடது காலுக்குத் துணையாக அதனைப் பயன்படுத்தி அவன் நடந்த பொழுது, அவனைப் பரிதாபமாகப் பார்த்த கண்களுக்காக வருத்தப்பட்டான் அவன். அவனை எல்லோருமே பரிதாபமாகப் பார்ப்பது அவனுடைய அற்ப சொற்ப ஆண்மைக்கே இழுக்குச் சேர்ப்பது போலிருந்தது.
217

Page 119
அவன் அந்த வீட்டை அடைந்து, வீட்டிலுள்ளவர்களை அழைத்த பொழுது ஒரு நடுத்தர வயதுப்பெண் வந்து “யார் வேண்டும்?” என்று கேட்டாள்.
அவளுடைய கேள்விக்குப்பதில் கூறாமல், தான் எதிர்பார்த்து வந்த அந்தப்பெண் அவள்தான் என்ற நம்பிக்கையில், கையில் மாதிரிக்காகக் கொண்டு வந்திருந்த ஆறு ஒவியங்களையும் அவளிடம் நீட்டிவிட்டு, தனது நிலைக்காக மேலும் வருந்தி, நிலத்தைப் பார்த்தபடி நின்றான் கமலேஸ்வரன்.
அந்தப் பெண் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ஒவியங்களை அமைதியாக வாங்கப் பார்த்தாள். அவற்றுள் தன்னையும் அறியாமல் ஈடுபட்ட நிலையில், சிறிது நிலவிய மெளனத்தையும் கலைத்துக் கொண்டு அவனை உள்ளே வந்து அமரும்படி சிங்களத்தில் கூறினாள் அவள். கமலேஸ்வரன் புரியாமல் விழித்த பொழுது, அவள் “கம் அன்ட் டேக் யுவர் சீட்” என்றாள்.
கமலேஸ்வரன் அவளுடைய மனோபாவத்தைப் புரிந்து சிரித்து, "தாங்க் யூ” என்றபடி உள்ளே தன்னித்தன்னி நடந்து வெளி விறாந்தையில் இடப்பட்டிருந்த சோபாவொன்றில் சென்றமர்ந்தான்.
அந்த ஒற்றைமாடி வீட்டின் கூடங்கள் யாவும் சித்திரங்களால் நிறைந்து கிடந்தன. கலைக்குப் பதிலாக இச்சையைத் தூண்டுமளவுக்கு அவை காட்சியளித்துக் கொண்டிருந்தன. கண்ணன் சேலைகளை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறி இருப்பது போலவும் தமது அந்தச் சேலைகளை குளித்த கோலத்திலேயே நின்று கோபியர் தரமாறு வேண்டுவது போலவும் ஒரு காட்சி கண்ணில் விழுந்தது.
காமத்துக்கு வக்காலத்து வாங்க பெளராணிகம் புறப்பட்டு விட்டதா? கமலேஸ்வரன் கேள்வியை விழிகளில் பதித்தபடி அந்தப் பெண்ணைப்பார்த்தான். அவள் சிரித்துவிட்டு, கூறினாள். "நீங்கள் மிஸ்டர் கமலேஸ்வரன் என்று நினைக்கிறேன். இன்று உங்களைப் பற்றி 'சிலோன் ஹெரால்ட் நிறைய எழுதியிருக்கிறது. இப்படிக் கலையை நம்பி வாழ்பவர்களுடைய வாழ்க்கையே பெரும் சோதனைகளைக் கொண்டதாக இருக்கின்றது. உங்களுக்காக நான் வருந்துகிறேன். நானும் என்ன, ஏதோ கலையைக் கொண்டுதான் வயிற்றைக் கழுவுகிறேன். கட்டிக் காக்க கணவன் அற்ற விதவை நான். உள்ளது இரண்டு மக்கள். அவர்களில் ஒருவன் லண்டனில் இருக்கிறான். மற்றவன் இங்கு படிக்கிறான். அவனையும் என்னையும் காக்கிறதுக்காக இப்படி ஒரு வியாபாரஞ் செய்கிறேன். அதையும் பொலிஸ்காரர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்"
அந்தப் பெண்ணுடைய கதை ஏதோ சட்டவிரோதமான கலை ஈடுபாட்டில் அவள் இருக்கிறாள் என்பதை அவனுக்குப் புலப்படுத்தியதும், முதலில் சங்கடப்பட்டான். பின்னர், காமமே தொழில் என்றால், அந்தத் தொழிலை நேர்மையாகச் செய்வதில்தான் புனிதம் இருக்கிறது என்று தனக்குள் முனகிக் கொண்டான்.
அவள் சொன்னாள். “இந்த கொழும்பில், சில பெரிய இடத்துப் பெண்களைப்போல பெண்ணுடலை விற்றுப் பிழைக்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய வேலை சித்திரங்களை வியாபாரஞ் செய்வதுதான். ஆனால் ஒன்று, நான் உங்களுடைய உதவியைப் பெரிதும் நாடுகிறேன். உங்கள் பார்வைக்காக சில படங்களைத் தருகிறேன். பார்த்துவிட்டு அதன்படி எத்தனை
28

s
படங்கள் வேண்டுமானாலும் வரைந்து கொடுங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன். கூறிக் கொண்டே அவள் உள்ளே சென்றாள்.
பின்னர் கையில் ஒரு கிளாஸ் குளிர்பானத்தையும் ஒரு போட்டோ ஆல்பத்தையும் ஏந்தியபடி வந்து அவற்றை அவனிடம் கொடுத்தாள்.
கமலேஸ்வரன் நன்றிகூறி, அவற்றை வாங்கிக் கொண்டான். குளிர்பானத்தை அருந்திவிட்டு, அப்பொழுது உடலை அலட்டி நடந்து வந்ததால் ஏற்பட்டிருந்தகளைப்பைப்போக்கிக்கொண்டு ஆல்பத்தைப்புரட்டியபொழுதுநெஞ்சுதிக்கென்றது. கமலேஸ்வரன் ஏக்கக் கண்களுடன் நின்று கொண்டேயிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் வேதனையோடு சிரித்துவிட்டுச் சொன்னாள்:
"மிஸ்டர் கமலேஸ். நான் முதலே கூறிவிட்டேனே. என்னை விற்கக் கூடாது என்பதற்காகவும், என் போன்ற பெண்களை வைத்து கெட்ட நடத்தையில் ஈடுபடுத்தக் கூடாது என்பதற்காகவும் எந்த உயிருக்கும் சேதமில்லாமல் இதனைச் செய்கிறேன். இது சட்ட விரோதமாக இருந்தாலும், மனச்சாட்சிக்கு விரோதமானது அல்ல. மாமிசம் சாப்பிட விருப்பமில்லாத ஒருவன் கோழி போன்றும் ஆடு போன்றும் உருவம் அமையச் செய்யப்பெற்ற கேக், சீனியப்பம் முதலியவற்றை உண்டால் அது கொலையாகுமா?"
கமலேஸ்வரன் அந்தப் பெண்ணின் அந்தக் கேள்வியில் திக்காடிவிட்டு, கூறினான்.
"அது நிச்சயம் கொலை இல்லை. ஆனால் அது ஒர் ஆபாசமான சிந்தனை. அப்படிச் செய்திருப்பதை நானும் கடைகளில் பார்த்திருக்கிறேன். yy
“ஐ சீ! நீங்கள் உங்கள் திராவிடச் சிற்பக் கலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" அவள் மென்மையாகக் கேட்டாள்.
"அது ஒரு புனிதமான கலை. திராவிடச் சிற்பக்கலையைச் சொந்தங் கொண்டாடுவதற்கேனும் நான் மறுபடியும் ஒரு பச்சைத் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்.
"நான் சொல்கிறேன் என்று வருத்தப்படக் கூடாது. உங்கள் சிற்பக்கலையில் எண்பது வீதம் ஆபாசம். ஆபாசம் என்பதன் பொதுப்படையான கருத்து நிர்வாணம் என்றால், முழுக்க முழுக்க ஆபாசம் என்பேன். இப்பொழுது சொல்லுங்கள்! நிர்வாணம் ஆபாசமா?”
“இல்லை” "அப்படியானால் இதோ உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நிர் "ாணப் படங்கள் ஆபாசமா?”
கமலேஸ்வரன் அமைதியாக இருந்தான். அவன் பதில் கூறவில்லை. அவள் தொடர்ந்து கூறினாள்.
“ஆபாசம் - ஆபாசம் என்று எங்கு பார்த்தாலும் அடிபடுகிறார்கள். ஆபாசத்தைப் பற்றிப் பேசுவதே என்வரையில் ஆபாசந்தான். ஆனால் ஆடை களைந்த பின்னர் மனிதர் பிறந்த மேனியாகக் காட்சி அளித்தால் அது ஆபாசமல்ல. மனித ஆத்மா நிர்வாணமாக இயக்கப்படுகிறதே, அது ஆபாசம். இரசிக்க வேண்டியவை புசிக்கப்படும் பொழுது ஆபாசமாகின்றன. ஆதலால் எது எது தன்தன் நிலை அழிய இயக்கப் படுகிறதோ அது ஆபாசம். உங்களுடைய சிற்பக் கலைகளைக் கவனித்திருப்பீர்கள். அதில் தோற்றுகின்ற பெண்ணின் மேலுறுப்புக்கள் இரண்டும் அப்பட்டமாகத் தெரிகின்றன. அப்படி அந்த இரண்டும் அப்பட்டமாகத் தெரிந்தால் ஆபாசமில்லை என்று மறைக்கப்பட்டு மற்றொன்று
29

Page 120
தெரிந்தால் அது ஆபாசம் - காமம். முன்னையது கலை. கலைக்கு ஒளிவுமறைவு இல்லை. நீங்கள் கலையோவியர். 99
அவள் கூறிக்கொண்டேயிருந்தாள். கமலேஸ்வரனின் மனம் அவளுடைய அந்த வாதத்தை உள்ளூர ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏதும் கூற அவன் தயங்கினான். அவளுடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதா இல்லையா என்று அவன் போராடிக் கொண்டிருந்தான்.
4
சூன்யமாகிவிட்ட வாழ்க்கையில் கமலேஸ்வரனுக்கு எதுவுமே விளங்காத உணர்வு எழுந்திருந்தது. அவன் தான் கட்டிக் காத்து வைத்திருந்த சில கோட்பாடுகளை யாரோ தகர்த்திவிட்டு, தனியே நடுக்காட்டில் விடுபட்டவன் போல் ஆனான்.
அவனுடைய கண்களில் படுகின்ற இந்தச் சமூகத்தில் எத்தனை போலிகள் இருக்கின்றன? மேடைகளில் கற்புப்பற்றி பேசுகின்றவர்கள் வீடுகளில் அதற்கு இம்மியும் இடங் கொடுக்காததும், நேர்மை, கண்ணியம் , தர்மம் பற்றியெல்லாம் பிதற்றுபவர்கள் அவற்றைப் போற்றாததும் அவனுக்கு இப்பொழுது சாதாரண விஷயங்களாகப்பட்டன.
தன்னை மற்றானுக்கு இரையாக்கி சமூகத்தின் கொடிய நோயாகிவிட்ட விபசாரத்துக்கு இரைபோட விரும்பாத சுமணா என்று தன்னை அறிமுகஞ் செய்துகொண்ட அவளைப் பார்க்கையில் அவனுக்கு ஒருவிதத்தில் பெருமையாக இருந்தது.
கள்ளை இறக்குபவர்களில் எத்தனையோ பேர் அதனைக் குடிப்பதில்லையே. மீன் பிடிப்பவர்கள் சிலர் மச்சமே உண்பதில்லையே. இப்படிதத்தம் தொழிலை மட்டும் மதித்துச் செய்துவிட்டு, தம் சொந்த வாழ்க்கையைப் பொறுத்த வரையில் அவற்றிலிருந்து வெகுதூரம் விலகியிருக்கும் உத்தமர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களுடைய மனமும் கட்டுப்பாடும் எவ்வளவு உயர்ந்தவை என்றெல்லாம் எண்ணினான் கமலேஸ்வரன்.
அவன் ஆண் பெண் உறவுகளை அப்படியே பச்சையாகத் தெரிய எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அருவருப்புடனும் உந்தலின் பெயரிலும் பார்த்தான்.
அப்புகைப்படங்களில் கண்ட காட்சிகள் காணாதவர்களுக்கு மட்டும் புதுமையாக இருந்த பொழுதும் எல்லோரும் இரகசியமாக ஒருமுறையேனும் பார்க்கத் தூண்டுவனவாக அமைந்திருந்ததை கமலேஸ்வரன் ஒருகணம் எண்ணிப் பார்த்தான்.
அவனுடைய பதில் எதுவாக இருக்குமோ என்று இதுவரை ஏங்கியிருந்த சுமணா, அவனை அவசரப்படுத்துபவள் போலக் கேட்டாள்.
ஏன். எதற்காகத் தயங்குகிறீர்கள்?" “ஒன்றுமில்லை. என்னுடைய பழைய வாழ்க்கைச் சம்பவம் ஒன்றை நினைத்துப் பார்த்தேன்"
“என்ன அது?” “ஒரு பெண் மொடல் அழகியாவதை விரும்பாமல் அவளை அரை நிர்வாணமாகவோ அல்லாமலோ புகைப்படம் எடுத்து விளம்பரஞ் செய்வதை விரும்பாமல், மதிப்புமிக்க எனது பதவியையே ராஜினாமாச் செய்தவன் நான். அதனால் இன்று எத்தனை முக்கிய விஷயங்களை இழந்து கிடக்கிறேன். மற்றது எனக்கு ஒரு சபதம், ஆபாசம் என்ற
220

எனது கருத்துக்குள் நிர்வாணமும் அடங்கியிருப்பதாக அன்று கருதினேன். அப்படி நிர்வாணமான ஆபாசத்தை வரைவதென்றால் என் உதிரங் கொண்டு வரைவேன் என்றும் சொல்லியிருக்கிறேன்". கமலேஸ்வரன் ஏதோ இலட்சியத்தின் அடிப்படையில் கூறுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட சுமணா, சொன்னாள்:
"பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் இவை மிஸ்டர் கமலேஸ்வரன். நாங்கள் கலாசாரம், பண்பாடு எல்லாம் பேசிக் கொண்டிருந்தால் வயிறு நிறையாது. மனத்துரோகம் இல்லாத விஷயங்கள் என்றால் அவற்றை நாம் செய்யத் தயாராக வேண்டும். நாங்கள் ஆபாசப் படங்கள் என்று பிறரால் வர்ணிக்கப்படுகின்ற இவற்றை வைத்திருப்பதைப் பிறர் கண்டாலே ஆபத்துத்தான். ஆனாலும் என்ன செய்வது? உங்களைப்பற்றி தீர விசாரித்து விட்டுத்தான் இருந்தேன். அதற்கு உடந்தையாக நீங்களே வந்து விட்டீர்கள். இனி நான் என்ன சொல்ல?”
“கலைக் கல்லூரியில் நிர்வாணமாகப் பெண்களை நிற்க வைத்து, அவர்களைப் பார்த்து வரையும்படி வகுப்பு நடத்துவார்கள். அப்படியான வகுப்புக்களை நான் பகிஷ்கரித்திருக்கிறேன். இயற்கையே பெண்மையாக பெண்மையே இயற்கையாக இருப்பதை ஆத்மரீதியில் புரிந்தவன் நான். அதனால் இயற்கையை இரசித்து அதனை வர்ணத்தில் வடிக்கிறேன்." என்று கூறி நிறுத்தி சுமணாவின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, தொடர்ந்து கூறினான் கமலேஸ்வரன்.
“வாழ்க்கை வாழ்வதற்கு என்று உணர்ந்து தெளிந்துவிட்ட பலர் எத்தனை எத்தனை விதமாகப் பணத்தைச் சேர்க்கிறார்கள். இப்படி வரைவதால் ஒருவரையேனும் மோசடி செய்யவில்லை. கெடுக்கவில்லை. என்ற திருப்தியாவது இருக்கட்டும். நான் வரைந்து கொடுக்கிறேன். உங்களுக்கு எவ்வளவு பிரதிகள் வேண்டும்?”
கமலேஸ்வரன் சம்மதந்தெரிவித்ததில் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்தாள் சுமணா. பின்னர் கூறினாள்:
"நீங்கள் இதனால் அடையப்போகும் இலாபம் கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாமாக பதினைந்து படங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் வசதிபோலப் பிரதிகள் செய்து கொள்ளுங்கள். உங்களை மன்றாட்டமாக ஒன்று கேட்கிறேன். இது சட்டத்துக்கு மாறானதாகக் கருதுவார்கள். அப்படிச் சட்டம் உங்களைத் தப்பித் தவறி சந்தித்தால், என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்.”
சுமணாவின் முகம் பயங்கரமாக இருண்டது. அவளுடைய கண்கள் கலங்கிய பொழுது, அவள் தன் பெண்மைக்காக எவ்வளவு பிரயத்தனப்படுகிறாள் என்பது தெளிவாகியது.
"இல்லை. இல்லை. ஒருக்காலும் இல்லை. இந்த நிர்வாணப் படங்களுக்காக என் மானம் மரியாதை அத்தனையையும் நான் நிர்வான'மனிதனானாலும் உங்களை ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டேன்"
கமலேஸ்வரன் கூறியதிலிருந்து அவனை நம்புவதாகத் தெரிவித்து சுமணா, உள்ளே சென்று இருநூறு ரூபாவை எடுத்து வந்து முற்பணமாகக் கொடுத்தாள்.
அவன் கையோடு எடுத்துச் சென்றிருந்த ஓவியங்களை விற்றதும் பணம் கொடுப்பதாகச் சொல்லி அவற்றைப் பெற்றுக் கொண்டாள் சுமணா.
பணத்தை சுமணாவிடமிருந்து வாங்கும் பொழுது கமலேஸ்வரனுடைய இருதயம் பலமாக அடித்துக் கொண்டது. அதனை அவள் புரிந்து கொண்டு விடக்
22

Page 121
கூடாதே என்ற பிரயத்தனத்தில் கைகளில் நடுக்கம் தோன்றவிடாது பலமாக்கிக் கொண்டான் கமலேஸ்வரன்.
அந்தப் படங்களை ஒர் உறையுள் இட்டு மடித்தபடி ஊன்றுகோலையும் எடுத்துக் கொண்டு எழப் போனான் கமலேஸ்வரன். அவனுடைய கால்கள் ஒரேயடியாக அமர்ந்திருந்ததால் விறைத்திருந்தன. அவன் நிற்க முடியாது தடாலென்று அமர்ந்திருந்த கதிரைக்குள் விழுந்தான்.
"அணே!” என்று சுமணா எழுப்பிய அந்த ஒலியின் பரிவுட் கட்டுண்டு, சிரித்துச் சமாளித்தபடி, "இவ்வளவு காலமும் மனம் பலவீனப்பட்டிருந்தது. இப்பொழுது உடலும் பலவீனப்பட்டுவிட்டது. இனியும் உயிருடன் இருக்கக்கூடாது."என்றான் கமலேஸ்வரன். “மனிதர்களுக்கு ஒளி கொடுத்துத் தான் உருகி அழியும் மெழுகுவர்த்தி போல, மணம் கொடுத்து கருகி அழியும் ஊதுவர்த்திபோல கலைஞனும் பிறருக்காக தான் அழிகின்றான். அப்படியொரு அழிவு வரட்டும். ஆனால் விரக்தி மேலிட்டால் உயிரை மாய்க்குமளவுக்கு எண்ணம் வரக்கூடாது, வளரவும் கூடாது. yy
சுமணா கூறியவற்றைக் கேட்டு,"அதுவும் சரிதான்” என்றபடி ஊன்றி, ஊன்றி நடந்து வெளியேறினான் கமலேஸ்வரன்.
அன்று இரவு நடுச்சாமமாகியும் அதனையும் பொருட்படுத்தாது, சித்திரா அனுப்பியிருந்த பையனிடம் ரமணனையும் ரஞ்சனியையும் பராமரிப்புக்கு விட்டுவிட்டு ஒரே இரையாக இருந்து ஒவியங்களை வரைந்து கொண்டிருந்தான் கமலேஸ்வரன்.
அர்த்த நாரீஸ்வரர் போன்ற கோலத்தில் கிடையாகக் காணப்பட்ட அந்த நிர்வாணப்படங்களை இடையிடையே புரட்டி, குறிப்பான 'போஸ்களைத் தெரிந்து கொண்டு தொடர்ந்து வரைந்தான் அவன்.
வீட்டில் ஆன பொழுது போக்கின்றி அவதிப்பட்ட ரமணன் அன்று மாலை அவனுக்குப்பிடித்தமான சிவப்பு வர்ணப்புட்டியை எடுத்துப்பெண்களைப்போல நகங்களிலும் கன்னங்களிலும் தடவியதால் அதிகளவு வர்ணம் செலவாகவில்லை என்ற அதிருப்தியில் அன்று 'சிலோன் ஹெரால்ட் வெளியிட்டிருந்த கமலேஸ்வரனின் புகைப்படம், கட்டுரை ஆகியவற்றுக்கும் மை தீட்டியிருந்தான்.
இடையிடையே படங்களைப் பார்த்து, வரைந்துவிட்டு, சற்று ஒய்வெடுப்பதற்காகப் பத்திரிகையைப் புரட்டிய கமலேஸ்வரன் தனது புகைப்படத்தின் மீது கோணல் மாணலாக கோடுகளும், பத்திரிகைப் பக்கங்களில் அப்பா', 'அபம்' என்ற பொருளற்ற சொற்களும் நிறைந்திருப்பதைக் கண்டு சினந்தான்.
புதிதாக வேலைக்கு வந்திருந்த பையனின் வேலையா என்று பார்ப்பதற்காக மனம் துடித்தது. மேசை நாற்காலியில் இருந்து கொண்டே அந்த அறையின் ஒரு கோடியில் நீட்டி நிமிர்ந்து, கைகால்கள் வீசி நல்லுறக்கத்திற் கிடந்த ரமணனைப் பார்த்த பொழுது வேலைக்காரச் சிறுவன் மீது எழுந்த கோபம் ரமணன்மீது திரும்பியது.
இவருக்கு வர வர குணம் கூடுது என்று கொச்சையாக நினைத்துக் கொண்டு, சிவப்பு வர்ணம் பூசப்பட்ட பின் பச்சையாகத் தெரிந்த அந்தக் கறுப்பு எழுத்துக்களில் கண்கள் பதித்தான் கமலேஸ்வரன்.
அவன் தான் வரைந்த ஆண்களையும் பெண்களையும் பென்சிலால் மட்டுமே முதலில் தீட்டியிருந்ததால், அந்த அவர்களுடைய சேர்க்கையை அப்பட்டமாகக் காட்டுவதற்கு அவசியமென அவனுக்குப்பட்ட சிவப்பு வர்ணம் தீர்ந்து போயிருப்பது நினைவுக்கு வரவே,
s

மேசையில் தனியே ஒரு மூலையில் அவசரத்தில் மூடியது பாதி மூடாதது பாதியாக வைக்கப்பட்டிருந்த சிவப்பு வர்ணப் புட்டியைப் பற்றி எடுத்த பொழுது, அந்த மூடி கையுடன் நிற்க நிலைகுலைந்த போத்தல் மேசையில் உருண்டு நிலத்தில் விழுந்து உடைந்து சிதறியது.
“இது என்ன சங்கடம்?" கமலேஸ்வரன் மினுங்கிக் கொண்டிருந்த அந்த மின்னொளியின் வசீகரத்தையும் இழந்து, பேயறைந்தவன் போலக் காணப்பட்டான்.
பத்திரிகையை ஒரு கை பற்றிய நிலையில் மேவாயைச் சீண்டிவிட்ட அவன், சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக, பத்திரிகையை வீசிவிட்டு எழுந்து சென்று பிளேட் கிடைக்குமா என்று தேடினான். கண்ணாடி மேசைமீது 'றேஸரின் நடுவே பதுங்கியிருந்த பிளேட்கண்ணில் படவே, அதனைக் கழற்றியெடுத்து வந்து மேசையருகில் அமர்ந்தபடி ஏற்கனவே வலியால் சூம்பியிருந்த தனது இடது கைச் சுட்டுவிரலை எங்கோ பார்த்த வண்ணம் அறுத்தான்.
ஆஅது பழிக்குப் பழி வாங்கி விட்டதா? என் வாழ்க்கையில் நான் செய்த முதல் தவறு இந்தச் சிவப்பு வர்ணத்தில் ஆசை வைத்ததுதான். சிவப்பு அபாயகரமானது என்று பொருள் செய்யப்பட்டிருந்தும் அந்தச் சிவப்பின்றி வாழ முடியாதவனாக ஆகி, கலையைக் கற்றது என் தவறு. கலைஞனின் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செல்வராணியைப் பற்றி ஏற்கனவே கதைகள் கேட்டிருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாது, அவள் அழகிய சிவப்பி என்பதற்காக அவளை மணந்து கொண்டது என் தவறு.
நீல வானத்தைப் படைக்க வேண்டுமென்றால், அது ஒன்றில் காலையாக இருக்க வேண்டும் அல்லது மாலையாக இருக்க வேண்டும். காலையும் மாலையும் அற்ற வானத்தை அது இரவாகவேனும் இல்லாதுவிடில் யாருமே படைப்பதில்லை. நீலம் காதலின் அறிகுறியல்லவா? காதலைப் படைக்கவும் சிவப்புத் தேவைப்படுகிறதே. நான் சிவப்பின் 9.g60s... அதனால்தான் இந்த மோசம் எல்லாம் வந்தது. வர்ணங்களுள்ளேயே விரைவில் வெளிறி விடுவதும் இந்தச் சிவப்புத்தானே.
“ஆ” என்ற அவலக் குரலுடன் கைவிரலில் பீச்சிய இரத்தத்தைக் கீழே சிந்தவிடாமல் அந்தப் புட்டியில் நிரப்பிக் கொண்டிருந்தான் கமலேஸ்வரன். அவனுடைய கண்கள் பயங்கரமாகச் சிவந்திருந்தன. நெற்றியிலும் கழுத்தோரங்களிலும் சிறுசிறு துளிகளாக வியர்த்துக் கொட்டியது.
யாருக்கோ ஏதோ தீங்கு செய்து விட்டதனால், அந்தத் தீங்கிலிருந்து எக்காலத்திலும் எவ்வாறேனும் தப்ப முடியாது என்பதற்காக அவதிப்படுவது போல் இதயம் அடித்துக் கொண்டது.
கையிலிருந்து பெருகி, அந்தப் புட்டியை இரத்தம் நிறைத்துக் கொண்டிருக்கையில் ஆத்மாவின் குரல் பலமாக ஒலிப்பது அவனுடைய காதுகளில் தெளிவாகக் கேட்பது போலவிருந்தது. அதன் நிறைவு உணர்வின் வழி தெரிந்ததும், களைத்துவிட்ட முகத்தின் இருண்ட தோற்றத்தினூடே பேரொளியின் சாயல் படர்வது போன்றுமிருந்தது. கோடிகளில் எரிவு பெற்றிருந்த கண்கள் புதிய தெளிவு பெற்று, பார்வை துல்லியமாகுவது போன்றுமிருந்தது. என் ஆண்மைக்கும் ரோசத்துக்கும் மானத்துக்கும் எந்தவித இழுக்கும் ஏற்படவில்லை என்றும், அப்படி ஏற்பட்டதாகக் கொள்ளக்கூடிய சம்பவங்கள் நடந்திருந்தால் அந்தச் சம்பவங்களிற் சம்பந்தப்பட்டு விட்டவர்களுக்காகவே அவ்வாறு நடந்தன என்றும் மனச்சாட்சி அடித்துக் கூறுவது போலிருந்தது.
223

Page 122
கமலேஸ்வரனின் கண்களில் இருந்து பொல பொல வென்று நீர் சொரிந்தது. அவன் இதுவரையும் கண்கலங்கி மனம் வெதும்பியிருந்தால் அது அவனுடைய வாழ்க்கைக்காக என்று நிச்சயமாகத் தெரிந்தது. ஆனால் இப்பொழுது அவன் அழுவது?
அவனுடைய உதடுகள் துடித்துக் கொண்டன. அவன் முறை முறைத்து, எதற்காகவோ இறைஞ்சுவது போலக் கண்களையும் மூடினான்.
“கலைத்தாயே! நீ பெற்றெடுத்த உன் பிள்ளை யாசிக்கிறேன். உன்னிடமிருந்து எனக்கு பிரிவேகிடையாது. ஆனால் இந்த வாழ்க்கையிலிருந்து எனக்கு விடுதலை தா. நான் பெற்ற செல்வங்களுக்காகவும் நான் வாழ்ந்து களைத்துப்போய் விடுவேன். அந்தக் களைப்புக்கு முன்னரே என்னை ஆற வைத்துவிடு."
எங்கோ வீதியின் குறுக்கே சென்ற நாயொன்றை வேகமாக வந்த ஒரு வாகனம் மோதி எறிந்துவிட்டு ஓடுவது அவனுடைய மோன வணக்கத்தைக் குற்றுயிராக்கியது. அந்த நாய் எழுப்பிய அவலக்குரல், அந்த நடுநிசியில் சோகமாகி, சிந்தனையின் குழப்பமாகி, அவனுடைய இருதயத்தின் எங்கோ ஒரு கோடியில் எதிரொலித்தது.
துன்பம் என்ற விபத்துள் இந்த மனிதர் சிக்கியதும் எவ்வளவு ஒலமிடுகிறார்கள்! நாய்க்கு எங்கு அடிபட்டாலும் அது முன்னங்கால் ஒன்றைத் தூக்கி அழுவதுபோல், மனிதருக்கு என்ன நடந்தாலும் அவர்கள் இதயத்தைப் பிழிந்து அழுகின்றார்கள். நாயின் காலுக்குச் சமமானதா இந்த இதயம்?
அழுகையை நினைத்ததும் அவன் உடல் புல்லரித்து வந்தது. ஒஆணுக்கு ஆகாத Glsusi) அதுவென்று அவன் நினைத்திருக்க வேண்டும்.
5
வலுவிழந்து கால் விறைத்த போதும், நிலையழிந்த மனம் எதனையோ குடைந்து குடைந்து மறுத்தபோதும், அவற்றைக் கட்டுப்படுத்தி, யாவற்றையும் விஞ்சிய வெறியில் அந்தப் பதினைந்து படங்களில் பப்பத்துப் பிரதிகள் செய்து முடிந்து, கமலேஸ்வரன் வெளியே எட்டிப் பார்த்த பொழுது உலகம் இரண்டு நாட்களைக் கழித்து விட்டது தெரிந்தது.
கமலேஸ்வரன் அறைக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு உள்ளேயிருந்து வரைந்தது ரமணனுக்கு ஒன்றும் வியப்பாக இருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் தனக்கு மிகவும் பிடித்தமான சிவப்பு வர்ணத்தை எடுத்துச் சேதப்படுத்தியிருந்தது காரணமாக ம் என்று அவன் கற்பனை செய்துகொண்டான். புதிதாக வந்திருக்கும் வேலைக்காரப் பயன் அவனுக்குமுழுக்கஒர் அம்மாவாகியிருந்ததுஎந்தவித சங்கடத்தையும்கொடுக்கவில்லை. சிவப்பு வர்ணந் தீர்ந்து விட்டது என்பதற்காக அன்றொருநாள் இரவு வருந்தாத கமலேஸ்வரன், மறுநாள் மாலை கடைக்குச் சென்று மேலும் வர்ணங்கள் வாங்கியிருந்தான். 'சிலோன் ஹெரால்ட் அவனுக்குச் சன்மானமாகச் சிறிய தொகை வழங்கியிருந்தது அப்பொழுதுதெல்லாம் பெரிய உதவியாகவிருந்தது.
வானம்திடீரென்று கறுத்து உலகத்துக்குளதனையோ கூறிமிரட்டிக்கொண்டிருந்தது. இடையிடையே மனிதன் தன்னை மறந்து நிலைகெடக் கூடாது என்பதற்காக, உயிரைப் பலிகொள்ளக்கூடிய முறையில் முகில்கள் திரண்டு இடித்துக் கொண்டிருந்தன. இடையிடையே .b கண்ணாடி யன்னல்களையும் பிளந்து எறிவது போன்று மின்னல் வெட்டியதுاقع)sوڑ])tlوا۔الی! G6l6)I6rfhGBu விறாந்தையில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளியில் வீசிவந்த குளிர் காற்றின்
224

மென்மைத் தாக்குதலில் உடல் சிலிர்க்க, பந்து உருட்டி விளையாடிக் கொண்டிருந்த ரமணனும் ரஞ்சனியும் அந்த வேலைக்காரப் பையனும் திடீரென்று அறையைத் தட்டிய பொழுது சினந்து கொண்ட கமலேஸ்வரன், அவர்களை அந்த அறையையும் விறாந்தையையும் குசினி போன்ற அமைப்பில் தொடுத்திருந்த அறைக்குட் செல்லுமாறு சப்தமிட்டு உத்தரவிட்டதும் அவர்கள் இயற்கைக்குப் பயந்த நிலையில் மெளனிகளாய் அந்தச் சின்னறைக்குட் புகுந்து கொண்டனர். அப்பொழுதும் கமலேஸ்வரன் தான் கோடிட்ட சித்திரங்களுக்கு வர்ணந் தீட்டிக் கொண்டிருந்தான். அவன் உள்ளிருந்து வரையும் பொழுது யாராவது அந்தப் படங்களைப் பார்த்துவிடக் கூடாது என்பதே அவனுடைய அந்தக் கட்டுப்பாட்டுக்கும் தனிமைக்கும் கர்ஜனைக்கும் காரணம் என்பது அவனுடைய முகபாவங்களிலிருந்து தெரிந்தது.
வானத்தோடு பூமியும் ஒத்தாசையாக இருண்டு, இரவு என்ற தமது சுகமான போர்வையை இழுத்து மூடிக் கொண்டு உறங்கிய அந்த நேரம் அவனுடைய அறைக் கதவு மறுபடியும் தட்டப்பட்டது.
தூற்றிக் கொண்டிருந்த மழையின் சுகத்தில் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க வேண்டிய ரமணனும் ரஞ்சனியும் மறுபடியும் தனக்குத் தொந்தரவு செய்வதாக எண்ணி, அவர்கள் மீது சினந்து கொண்டு, மேசையிற் கிடந்த படங்களை ஒன்று திரட்டி டிராயருக்குள் இட்டபடி எழுந்து வந்தான் கமலேஸ்வரன்.
“இதுகளாலே பெரிய தொல்லையாகப் போய்விட்டது. உங்களை யார் தட்டச் சொன்னது?’ என்றபடி கதவைத் திறந்தவன், வெளியே மொட்டாக்கு இட்டு மழைத் தூறல்களைச் சேலையில் பெற்று, காற்பங்கு நனைந்த கோலத்துடன் நடுநடுங்கியபடியும், முகம் விகாரப்பட்டு யாரையோ பழிவாங்கிவிட்டு வந்தவாறும் சித்திரா நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் வாயடைத்து, விறைத்து நின்றான்.
யாராக இருந்தாலும், எதற்காக வந்தாலும் வீடுதேடி வந்தவர்களை 'வாருங்கள் என்று கூறி அழைக்காத நாவுக்கு எந்தவித அர்த்தமுமில்லை என்று எண்ணிக் கொண்ட அவன், “உள்ளே வாரும். நனைந்து கோயிருக்கிறீரே. நேரம் ஒன்பதரையாகி விட்டது என்ன. ஏதும் அவசரமோ?” என்று அடுக்கிக் கூறினான்.
அவனுடைய வார்த்தைகளில் நெழிந்த அவசரத்தைப் புரிந்து கொண்ட சித்திரா, தனக்கு அன்று மாலை எழுந்த சிக்கலான சில கேள்விகளுக்கு விடை காணுமுகமாகத் தான் வந்திருப்பது தவறல்ல என்று தேறி, உள்ளே நகராமல் சொன்னாள்.
“என் வாழ்க்கையிலும் ஒரு கடைசிக் கட்டம்" “என்ன?” கமலேஸ்வரன் பதட்டத்துடன் கேட்டான். கதவின் இறக்கையைப் பற்றியபடி உள்ளே வராமல் அவள் நின்ற பொழுது உயர்ந்திருந்த கையினூடே மிதந்திருந்த அங்கங்கள் அவளின் வாயில் சேலை, லினன் பிளவுஸ் எல்லாவற்றுக்கும் ஊடாகத் தெரிந்ததைக் கமலேஸ்வரன் கண்ட பொழுது, அதனைப் பார்க்காதவன் போல வேறெங்கோ விழிகளை வீசியபடி, “சரி. உங்ளே வந்து உடைகளை உலர்த்திவிடும். துவாய் தரட்டுமா?” என்று , அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்று பெட்டியைத் திறந்து, இதுவரை பயன்படாத ஒன்றாக நெடு நாட்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஒரு துவாயை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.
வெளியே இருமுறை விழிகளை வீசிவிட்டு ஏற்பட்டிருந்த சிறு அச்சம் நீங்கிய நிலையில் திடீரென்று உள்ளே அடியெடுத்து, பற்றியிருந்த கதவின் இறக்கையின் பிடிவிடாமல் 'சடாரென்று கதவை மூடினாள்.
225

Page 123
சித்திராவின் அந்தச் செய்கை கமலேஸ்வரனுடைய சிந்தனையில் இனம் புரியாத கலவரத்துள் அவள் அகப்பட்டு விட்டாள் என்பதைக் காட்டியது.
“பதற வேண்டாம் சித்திரா. நான் ஊனமாகி விட்டேன் தான், ஆனாலும் ரோசம் இருக்கின்றது. உமக்கு என்ன நடந்தாலும் உம்மைக் காப்பாற்றுவேன்.”
கமலேஸ்வரன் அவள் கொழும்புக்குள்ளநரிகளுக்குப்பயந்துதான் அப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்துக் கூறியதை, சந்தர்ப்பமாகக் கொண்ட சித்திரா உடனே கூறினாள்.
“சத்தியஞ் செய்யுங்கள். ’ உங்கள் ரோசம் எனக்குப் போதும். ஊனம் எனக்குப் பொருளில்லை. சத்தியஞ் செய்யுங்கள். ”என்று சித்திரா தன் கையை அவன் நின்ற பக்கமாக நீட்டியதும், அவன் தனது கையை அதன்மீது வைத்து"சத்தியமாகச் சொல்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை, உம்மைக் காப்பாற்றியே தீருவேன்.” என்றான்.
சித்திராவின் கண்கள் நீரால் நிறைந்து, அவள் அவனைப்பார்க்க முடியாது தடுத்த பொழுது, அந்தத் தடையையுந் தகர்த்து அவனை அப்படியே ஆசையோடு பார்க்க வேண்டும்போல் இருந்த உணர்வில் அவனுடைய கையை இறுகப்பற்றி, கண்களிலும் முகத்திலும் தேய்த்தபடி மண்டியிட்டு “என்னைக் கைவிட மாட்டீர்களே” என்று பெரிதாகக் கேட்டு அழுதாள்.
கமலேஸ்வரனுக்கு இப்பொழுது எல்லாம் விளங்கிய நிலை இருந்தது. ஓர் அபலையின் வேண்டுகோள் எதுவாக இருந்தாலும் அதனை நிறைவேற்றுவதில் பாவமில்லை என்று தனக்கேயாவிட்ட கலாவேததர்மப் பிரகாரம் சிந்தித்தான் அவன்.
சித்திரா விக்கி, விக்கி அழுதபடி கூறினாள்.
"ஐயா ஊரிலிருந்து வந்திருக்கிறார். நான் இங்கு உங்களுடன் சுற்றித் திரிகிறேனாம். உங்களுக்கும் எனக்கும் இருக்கின்ற கள்ள உறவால்தான் உங்கள் மனைவி செல்வராணி உங்களை விட்டுப் பிரிந்து போனாவாம். ஊரில் ஒரே கதையாம். அவற்றுக்காகவே திடுதிப்பென்று புறப்பட்டு வந்தாராம். நேற்று முழுவதும் அதுதான் நான் இங்கு வரவில்லை. அவர் என்னைக் கையோடு அழைத்துச் சென்று எங்களுக்குத் தெரிந்த ஒரு கல்லூரி ஆசிரியருக்குக் கல்யாணம் முடித்து வைக்கப் போகிறாராம்"
"நீங்கள் அன்றொரு நாள் பகிடியாகவோ வெற்றியாகவோ என் கல்யாணத்தை நினைவுபடுத்தினிர்கள் அவருடன் வரும்படி கூறிய அன்றே ஐயா ஊரிலிருந்து புறப்பட்டு விட்டார்”
“சரி. சரி. இப்பொழுது என்ன செய்யப்போகிறீர்?"கமலேஸ்வரன் உணர்ச்சி குன்றிக் கேட்டான்.
“என் வாழ்க்கையில் கல்யாணமே நடக்காது. பதிவுத் திருமணம் என் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது. நான் சாகத் தயார். உங்களை விட்டுப் பிரியவே மாட்டேன்.”
“சித்.தி.ரா. என்னம்மா இது?”
கமலேஸ்வரன் ஈனமாகக் குரலெழுப்பியபடி, நிலைகெட்டு மண்ணில் விழப் போனான். அப்பொழுது,ஆஎன்று அவலப்பட்டபடி சித்திரா அவனை விழவிடாமல்தாங்கிக் கொண்டாள்.
շշ6

6
கமலேஸ்வரன் கொடுத்த துவாயால் ஒற்றிக்கொண்டே கூறினாள் சித்திரா. “எனக்குப் பேசி வந்தவர் தாலி கட்டி ஆறுமாதஞ்சென்ற பின்பு உங்களோடு எனக்கிருந்த தொடர்பு எப்படிப்பட்டது என்று கேட்பார். நான் நட்பு என்றால், தமிழ்ப் பெண்ணெருத்தி ஒர் அந்நிய ஆடவனுடன் நட்புக் கொள்ள முடியாது. அவர்கள் ஒன்றில் காதலர்களாக இருக்க வேண்டும்.அல்லது. என்று இராகம் இழுப்பார். இப்படி ஆரம்பித்து, நாளைக்கு நான் கெட்டுவிட்டவள் என்ற பெயரெடுத்து, குடும்பம் பிரிந்து, சமூகத்தின் மதிப்பை இழந்து தவிக்க நேரிடும். வசை வைப்பவர்கள் சும்மா சொல்ல மாட்டார்கள். அவதூறாகத்தான் சொல்வார்கள். நான் கண்ணிரும் கம்பலையுமாகத்தான் வாழ்க்கையை ஒட்டவேண்டி வரும். என்வரையில் ஒன்று நிச்சயம். நான் முதன் முதலாக இப்பொழுதுதான் காதலிக்கிறேன். இதில் நான் தோற்றால் இதுவே என் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம். தொடர்ந்தும் இந்த உலகத்தைப் பார்த்து, அதன் கேலிக்கும் கிண்டலுக்கும் இரையாகி வாழ நான் விரும்பவில்லை. உங்களுக்கு மேலும் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்"
கமலேஸ்வரனுக்கு அவளுடைய நிலைமையைப் பார்க்க ஒரு விதத்தில் பரிதாபமாகவும், மறுவிதத்தில் தர்மசங்கடமாகவும் இருந்தது. அவளுடைய விழிகளிலிருந்து பெருகிக் கொண்டிருக்கும் கண்ணிரைத் துடைத்துவிட வேண்டும் போல் கைகளும் மனமும் துடித்த பொழுது அப்படிச் செய்ய விடாமல் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருந்தது.
அவன் சிறிது நேரம் குழந்தையைப் போல் பேந்தப் பேந்த விழித்தான். அவள் வரம் கேட்பது தன்னிடம் என்று தெம்பு பிறந்ததும், "அழாதீர் சித்திரா.அழுது ஒன்றும் ஆகாது. ஆகவேண்டியதைச் சொல்லும்.முடிந்தால் செய்கிறேன்.” என்றான் கமலேஸ்வரன்.
“ஆண்டுகள் ஆண்டுகளாக உள்ளம் குமுறக் குமுற உங்களைப் பிரியவும் முடியாமல் உங்களோடு சேரவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். இப்பொழுது என்னைப் பற்றியும் கேவலமாக இந்த உலகம் பேச வெளிக்கிட்டு விட்டது. இனிப் பேசுவது உண்மைதான் என்று நிரூபிக்க வேண்டியதுதான்."
“இந்த உலகத்துக்காக, அதற்குப்பயந்துநீர் வாழ்கிறீர். அப்படித்தானே?"அவன் கேட்டான். அவனுடைய அந்தக் கேள்வியில்தான் எத்தனை தொனி.
“இல்லை.ஆனால்.” “என்ன, இல்லை ஆனால்.? “உலகம் என்பது பெண்ணைக் கட்டிக் காக்கின்ற ஒன்றாக இன்று ஆகிவிட்டது. நாங்கள் கெட்டு விட்டோமா சுத்தமாக இருக்கிறோமா என்று தொட்டுப் பார்த்து 'உண்மையைச் சொல்கிற சக்தி இந்த உலகத்துக்கு இருக்கின்றது. ஏனென்றால் இந்த உலகம் கடவுளுக்கும் மேலால் அழிக்கிற சக்தி படைத்தது. எத்தனை குடும்பங்கள் இந்த உலகத்தால் பிரிந்திருக்கின்றன? எத்தனை மனிதர்கள் இந்த உலகத்தின் வாய்ச் சொல்லுக்காக உயிரையே விட்டிருக்கிறார்கள்? எத்தனை அழிவுகள்? கடவுள் ஆக்கிறார்.இந்த உலகம் அந்த ஆக்கங்களை அழிக்கிறது.
s
227

Page 124
"நான் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர் நீர்?" அவன் கேட்டான்.
அவள் அழுகையிடையே சிரித்தபடி, நாணி வந்த முகத்தைக் கீழே சாய்த்து விழிகளை மட்டும் உயர்த்தி மேலிறைக்கூடாகப் பார்த்தபொழுது எழுந்த ஒர் இன்பகரக் காட்சியை இரசித்த கமலேஸ்வரன், கனமாகிக் கொண்டிருந்த அந்த தனிச் சூழலை சொகுசாக்கியபடி சொன்னான்.
“நான் ஏற்கனவே திருமணமானவன். இரு குழந்தைகள் வேறு இருக்கிறார்கள்.”
"நான் கன்னி, எனக்கும் தாய்ப்பாசம் உண்டு. என் இளைய சகோதரர்களுக்கே நான் தான் தாய்.”
"அந்தச் சகோதரங்களுக்காவேனும் இந்தமுடிவை மாற்றக் கூடாதா?”
"அவர்களுக்காக நானோ எனக்காக அவர்களோ வாழவில்லை. அவர்கள் அப்படி வாழ்வதாகக் கூறினால் அது அப்பட்டமான பொய். ஏனென்றால் உலகத்தில் யாரும் யாருக்காகவும் வாழ முடியாது. அடுத்தவர்களுக்காக நாம் உண்பது போன்றது அது. ஒவ்வொரு மனித உயிரும் தன் போக்கில் சுயநலமாகவே வாழ்கிறது. உங்களைத் தெரியாமல், தெரிந்து கொள்ள் விரும்பாமல் தன்னையே அழித்துக் கொள்கிற செல்வராணி அக்காவுக்காக நான் வருந்துகிறேன். உங்களுடைய இந்த நிலையில் என் சேவை இடம்பெற்றால் ஆத்மசாந்தியளிக்கக்கூடிய வேறு விஷயம் இந்த உலகில் எனக்கு வேறு இருக்க முடியாது."
“என்ன, செல்வராணி அக்கா? எப்பொழுது வந்தது இந்த உறவுமுறை?” கமலேஸ்வரன் கிண்டலாகக் கேட்டதும், அது செல்வராணி மீது அவன் கொண்ட ரெளத்திரத்தின் வெளிப்பாடு என்று மட்டும் உணர்ந்து கொண்ட சித்திரா, சொன்னாள்.
"ஆமாம்.என்வரையில் அவ எனக்கு அக்காதான்."
"உனக்கு வெட்கமாக இல்லை?”
“வெட்கப்பட என்ன இருக்கிறது? வெட்கப்படக் கூடாததற்கு வெட்கப்படுபவன் வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்பட மாட்டான். நான் உரிமையோடு சொல்கிறேன் அவ அக்காதான். அவவே என்னிடம் கூறிவிட்டா”
“என்ன உளறல் இது?”
“இல்லை.உண்மை. அவஎந்த மொடல் விளம்பரத்தை நீங்கள் வெறுத்தீர்களோ அதையே செய்கிறா. தனக்கு அதில் ஈடுபாடு ஏற்பட்டு விட்டது என்றும் சொன்னா. அவ எள்ளளவும் மாறவில்லை. அதே தோற்றம், எங்கள் கம்பனிக்கு ஒருநாள் மொடலாக வந்து போஸ் கொடுத்தா.”
அப்படிக் கூறும் பொழுது செல்வராணிக்காக வருந்துபவள் போலானாள் சித்திரா.
次次女 女★ 次
228

தணல் பன்னிரண்டு
சித்திரா தன் மனதில் இவ்வளவு காலமும் குமைந்து கிடந்தவற்றைக் கமலேஸ்வரனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டாள். மழையும் சிறிது விட்டிருந்தது. அவள் எப்படித் தனியே வந்தாளோ அப்படியே புறப்பட ஆயத்தமாகிய பொழுது கமலேஸ்வரன் நேரத்தைப் பார்த்தான்.
நேரம் பதினொன்றாகியிருந்தது
இவ்வளவு நேரமும் இருவரும் என்ன பேசினோம் என கமலேஸ்வரன் ஆச்சரியத்துடன் நினைத்துக் கொண்ட பொழுது அடிமனதில் சித்திராவின் அந்தக் கோரிக்கை உயிர் பெற்று, சுண்டித் துடித்துக் கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.
சித்திரா தனது கோரிக்கையை அவனிடம் எவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கூறிவிட்டாள். அவனால் அதற்கு ஒன்றுமே சொல்லமுடியவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவள் அப்படியொரு கோரிக்கையுடன் அவனுக்காக வாழ முற்பட்டிருந்தால் இந்தச் சமூகப் பிரச்சினையே அவனுக்கு எழுந்திருக்காது.
இப்பொழுது அவனைச் சுற்றி சமூகம் வேலி போட்டு விட்டது. அந்த எல்லைக்கும் அப்பால் அவன் அடியெடுத்து வைத்தால் சட்டமென்ற விஷநாகம் புற்றுள் இருந்தபடியே அவனைத் தீண்டும். ஒருவேளை பலதார மணத்துக்காக அவன் தண்டிக்கப்படலாம் அல்லவா?
செல்வராணி அவனுக்குச் சட்டப்படி மனைவியாக இருந்து கொண்டு கொல்பவற்றை நினைத்த பொழுது மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. ஆதரவற்ற நிலையில் அவளும்தான் என்ன செய்வாள்? என்றும் அவன் எண்ணினான். பிழைப்பற்ற நிலையில் கொள்கைகளின் வழியைத் தானே அமைத்துக் கொண்டாற் போன்று, சமூகம் விதித்த சில நல்லடக்கங்களைச் செல்வராணியும் மீறிவிட்டாள் என்று சமாதானப்பட்டான்.
பெண்ணைச் சுற்றி அமைந்த நமது சமூகத்துக்கு இவை ஆகாதவை என்றும் பின்னர் பொருமினான். ஆவலோடு தனது பதிலுக்காகக் காத்துதன்மீது வைத்த விழிகளை வாங்காது ஏங்கிப்பார்த்தபடி நின்று கொண்டிருந்த சித்திராவை அவன் தீர்க்கமாகப் பார்த்த பொழுது, அவள் இன்னொருவனுக்கு வாழ்க்கைப்படவே மாட்டேன் என்று கூறியது நினைவுக்கு வந்தது.
அவன் கேட்டான்
"கடைசியாக உமது முடிவென்ன?”
'உங்கள் கையால் என் நெற்றியில் குங்குமப் பொட்டிடுங்கள். மறுகணமே உங்களுக்கு மட்டும் நான் உரியவள் என்ற பேரானந்தத்தில் இறங்கி விடுகிறேன்"
“சே என்ன பேச்சு இது?”
“எது? நீங்கள் குங்குமம் இடுவதா?”
அவளுடைய கேள்வியை அவ்வளவாகப் பொருட்படுத்தாது உடனே "இல்லை” என்று கமலேஸ்வரன் கூறி, "இல்லை.சாகிற எண்ணந்தான். சாவு தானாக வருவது அதனை நாமாக அமைக்கக் கூடாது" என்று முடித்தான்.
229

Page 125
"அப்படியானால் ஏன் தயங்குகிறீர்கள்?" "நான் தயங்க வில்லை சித்திரா.உம்முடன் வாழ எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவுதான்." அவனுடைய குரல் திடீரென்று வெடித்தாற் போன்று குரல் கரகரத்தது.
“சரி,நாம் புறப்படுவேம்” என்றபடி வெளியே வந்தான் கமலேஸ்வரன். அவனைத் தொடர்ந்து நடந்தாள் சித்திரா.
மறுநாள் ஒவியங்களை வரைந்து முடித்து சுமணாவிடமிருந்து தான் பெற்று வந்திருந்த புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டு கமலேஸ்வரன் புறப்பட்டான்.
ஒருகையில் வரைந்த படங்கள் சுமையாக இருக்க மறுகையில் தன்னைத் தாங்கும் ஊன்றுகோல் நிறைய, அவன் நடந்து கொண்டிருந்தான்.
அந்தப் படங்களைக் கடந்த சில நாட்களாக யாருக்கும் தெரியாது மறைத்து வைத்திருந்ததைச் சாதுரியமாக எண்ணிய அவன், எதிர்பாராத விதமாக அவற்றையாராவது பார்த்துவிட்டால் தனது கெளரவம் காற்றோடு போய்விடும் என்று நினைத்த பொழுது உடலைவிட்டுப் புறப் பொருள்கள் அனைத்தும் சுழன்று வீழ்வது போலிருந்தது.
கையில் நிறைந்து தாளால் சுற்றப்பெற்ற அந்தப் படங்களை இறுகப் பற்றிக் கொண்டு பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்தான். அங்கு பஸ்ஸுக்காகக் காத்து நின்றவர்களின் தொகையைக் கண்ட பொழுது அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவசரத்தில் எல்லோரும் துடித்துக் கொண்டிருப்பதை அவன் அவதானித்தான்.
பஸ் ஹோல்டைச் சுற்றி குட்டி போட்ட பூனைகள் போல சிலர் நடந்து கொண்டே இருந்தனர். கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும், பின்னர் பஸ் வரவேண்டிய திசையை நோக்குவதுமாக நின்ற வேறு சிலரின் மத்தியில், ஒய்யாரமான 'மினி ஆடைகளில் மெய்புதைத்து நின்றவர்கள்மீது கள்ளமாகக் கடைக்கண் வீசியவர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.
கருமி செய்ததானம்போல் மிக அருமையாக அரை மணித்தியாலத்துக்கு ஒன்றாக வந்து கொண்டிருக்கும் பஸ்களில் முண்டியடித்து ஏறி, முதலில் ஏறியவர்கள் உள்ளே சற்றும் நகராமல் வாசலிலேயே நின்று கொண்டிருப்பது அவனுக்கு வெறுப்பூட்டி யிருந்தது.
கூன், குருடு, கிழம், முடம் என்றெல்லாம் பகிரங்கப் போக்குவரத்துச் சாதனமாகிவிட்ட பஸ்ஸையே உபயோகிப்பதால், அத்தகையவர்களினுடைய வரவை அதிகம் பிடிக்காது, காருண்யமற்ற முறையில் பல பிரகிருதிகள் நடந்து கொள்வதை நினைத்த பொழுது நெஞ்சு நடுங்கியது. இப்பொழுது தானும் ஒருபாதி முடவனாகி விட்டது அவனுக்கு வேதனையளிப்பதாக இருந்தது.
அப்பொழுது ஒரு பஸ் வந்து நின்றது. ஓடிக்கொண்டேயிருக்க எல்லோரும் ஏறிவிட வேண்டுமென்ற ஒரு புதுவகை மரபைக் கடைப்பிடிக்கும் சாரதிகளுக்கு விதிவிலக்காகக் கூடாது என்பதற்காக, அந்த பஸ் சாரதியும் பஸ்ஸை மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்தான்.
கமலேஸ்வரனுக்கு தொடர்ந்தும் அந்தப் படங்களுடன் அங்கு நிற்கப் பிடிக்காததால் எப்படியாவது அந்த பஸ்ஸில் ஏறி, சுமணாவின் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென்று துடித்து, வலுவிழந்த இடது காலை தனியே மண்ணில் விட்டு வலது காலை எடுத்து பஸ் தட்டில் வைத்து கையிலிருந்த ஊன்றுகோலுடன் சேர்த்து பஸ் கைபிடியைப் பற்றி எழும்பியபொழுது கண்டக்டர் மணி அடித்தான்.
230

அதே தருணத்தை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்த சாரதி லபக்கென்று சிறுபொருள் போல் பஸ்ஸை நகர்த்தியதும், உள்ளுக்குள் நின்றவர்களின் தாக்கமும், பிடித்தகைநழுவியதும் காரணமாக, கால் ஊன்ற முடியாது பலமிழந்த தவிப்பில் தடாரென்று வீதியில் விழுந்தான் கமலேஸ்வரன்.
கமனா கொடுத்திருந்த நிர்வாணப்பட ஆல்பத்திலிருந்து படங்கள் சிதறி வீதியில் பறக்கத் தொடங்கின. போய்வந்து கொண்டிருந்த வாகனங்களிலிருந்து விசையாக எழுந்த காற்றில் அவை பறந்து தூரந்தூரமாக விழுந்தன.
அந்தப் படங்களில் ஏதேதோ அற்புதக் கோலங்களைக் கண்டுவிட்ட சிலர் தம்மையும் மீறி உணர்ச்சி வசப்பட்ட கண்களோடு அவற்றை எடுத்து இரசிக்கத் தொடங்கினர்.
கமலேஸ்வரன் ஒருவாறு தட்டித் தடுக்கி எழுந்த பொழுது, அந்தக் காட்சிகளைக் கண்டு திகைத்தான். தனது பலவீனத்துக்கும் முன்யோசனையற்ற தன்மைக்குமாக வாய்விட்டு அலறவேண்டும் போலவும் இருந்தது.
அந்தப் பிரயாணிகள் தமது அவசரத்தையும் மறந்து அந்தப் படங்களை இரசித்து நிற்க, அவற்றைத் தற்செயலாகக் கண்டுவிட்ட பெண்கள் குட்டை ரோகியைக் காண நேர்ந்துவிட்டவர்கள் போன்று கமலேஸ்வரனையும் படங்களையும் கூட்டங்களையும் பார்த்தப்படி ஒதுங்கிக் கொண்டனர்.
கமலேஸ்வரன் எழுந்து ஊன்றுகோலைப் பலமாக நிலத்தில் பதித்து, அந்தப் படங்களுக்காகக் கையை நீட்டியபொழுது, அதனை எடுத்தும் விறைத்தபடி நின்றவர்களுள் ஒருவன் "நா நா பொலிஸியட்ட யண்டோண" என்றபடி ஓடத் தொடங்கினான்.
அந்தக் கூட்டத்துக்குள் ஒன்றாக இதுவரையும் மறைத்து நின்ற ஒருவன், கமலேஸ்வரனைப் பற்றி ஆதரவாக ஒரு புறம் நிறுத்திவிட்டு விழுந்து சிதறப்பட்டு இப்பொழுது பலருடைய கைகளில் தவழ்ந்துகொண்டிருந்த அந்தப்படங்களைச் சேகரித்து கமலேஸ்வரன் அருகில் வைத்தான்.
கமலேஸ்வரனுக்கு தானே ஆடைகள் மத்தியில் நிர்வாணமாக நிற்பது போன்று உணர்வு ஏற்பட்டதும், எவ்வளவு செலவானாலும் ஒரு டாக்ஸி மறித்து ஏறி அகன்றுவிட வேண்டும் போலிருந்தது.
வாட்ட சாட்டமான அந்த இளைஞன் தன் மீது கருணை கொண்டு இவ்வளவு ஒத்தாசையாக நடந்து கொள்கிறான் என்ற நன்றியுடன் நினைத்து அவனைப் பார்த்த பொழுது, அவன் தானே வீதி கரைக்குச் சென்று ஒரு டாக்ஸியை மறித்தான்.
அவனுடைய செய்கைகளை மிக ஆச்சரியமாகக் கவனித்த கமவேஸ்வரன் அவனுக்கு நன்றியோடு புன்னகை செய்து தனது அந்த நிலைக்காக வருந்தினான்.
பதிலுக்குச் சிரித்துக் கொண்ட இளைஞன் கமலேஸ்வரனுடைய கையைப் பற்றி பதனமாகக் காருக்குள் நுழைய உதவி செய்துவிட்டு, “எங்கே போக வேண்டும்?” என்று சிங்களத்தில் கேட்டான்.
கமலேஸ்வரன் அவன் கேட்பது இதுதானாக இருக்க வேண்டுமென்று ஊக்கித்து நகர மண்டபத்தடிக்கு” என்றதும் டாக்ஸி நகரத் தொடங்கியது.
“நானே கொண்டுவந்து விடுகிறேன்’ என்றபடி அந்த இளைஞன் முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டதும் கார் பறந்தது.
இளைஞன் கேட்டான். "நீங்கள் ஓர் ஓவியராக்கும்"
231

Page 126
"ஆம்" “நிறையப் படங்கள் வரைந்திருக்கிறீர்கள் போல . இவற்றை என்ன செய்கிறீர்கள்?"
'வயிற்றைக் கழுவ வேண்டும். விற்க வேண்டியதுதான். சில வேளைகளில் இப்பொழுது நடந்தது போல மானத்தையும் சேர்த்து விற்க வேண்டியதுதான். )y
"ஆணும் பெண்ணும் சேர்வதை அப்பட்டமாகக் காட்டும் படங்கள். நன்றாக விலை போகின்றனவா?”
இளைஞன் அடக்கமாகவும் நாகரீகமாகவும் கேட்டபொழுது, அப்பொழுது ஏற்பட்டிருந்த நெஞ்சிடியைப் போக்கி மனதைத் தேற்ற அவனுடன் சிறிது பேச வேண்டும் போன்றிருந்தது, கமலேஸ்வரனுக்கு.
கமலேஸ்வரன் சொன்னான். "வானத்தை ஆணாகவும் பூமியைப் பெண்ணாகவும் உருவகித்து இயற்கையின் இன்ப எழில் என்றெல்லாம் பிதற்றும் நமது முன்றாந்தர இரசிகர்கள் அந்த வானமும் பூமியும் சேருகின்ற ஒரு மாலைக் காட்சியை ஓவியமாகச் சித்திரித்தால் ஒரு காசு கொடுத்து வாங்க மாட்டார்கள். அங்கும் இந்த இயற்கைப் புணர்ச்சிதான் இடம் பெறுகிறது. ஆனால் அதில் எள்ளவும் விரசமில்லை. அது முழுக்க முழுக்கக் கலை. இங்கோ.Ges! சொல்லவே வேதனையாக இருக்கிறது. அடல்ற்ஸ் ஒன்லி படங்களுக்கு கியு கியுவாக நிற்கிறார்கள். ஆபாசப் படங்களை எவ்வளவு கொடுத்தும் வாங்கி, தலையணையின் கீழ் வைத்து இரசிக்கிறார்கள். மொத்தத்தில் களைஞனை உருவாக்க வேண்டியவர்கள் கலைஞனையே கொல்கிறார்கள். பிறந்து விட்டோமே அதனால் வாழ வேண்டுமே என்பதற்காக இப்படியான இழிதரு வேலைகளுக்கும் எங்கள் தூய்மையான தூரிகைகளை நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது"
"நியாயந்தான்” என்று ஒரு வார்த்தையிலேயே பதில் கூறிய அவன்,'இப்பொழுது எங்கே போகிறீர்கள்?’ என்று கமலேஸ்வரனைப் பார்த்துக் கேட்டான்.
தனக்கு உதவியாக, துணையாகச் சிரமத்தையும் பாராது வரும் ஒருவனிடம் எதையும் ஒளிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்ட கமலேஸ்வரன் கூறினான்.
நகர மண்டபத்தடியில் ஒரு பெண் இந்தப்படங்களுக்கு அதிக பணம் கொடுத்து வாங்குகிறா. அவவுக்கு இதுதான் தொழில். உடல் ரீதியாக செக்ஸை அனுபவிக்காமல் கலையின் உருவத்திலும் அதனை அனுபவிக்கலாம் என்பது அவவின் கொள்கை. இந்தப் படங்களை வெளி நாட்டிலும் இங்கும் உள்ள சிலருக்குப் பெரிய விலைக்கு அவ கொடுப்பா. அவவின் வேண்டுகோளின் பெயரிலேயே நூற்றுக் கணக்கில் இப்படியான படங்களை வரைந்து கொடுக்கிறேன். y "இது ஆபத்தான தொழில் அல்லவா?” "ஆம், ஆனால் என்ன செய்கிறது? எனக்குக் கலையைத் தவிர இந்த உலகத்தில் ஒன்றுந்தெரியாது. நான் கலைக்காகவே வாழ்பவன். நீங்கள் வந்திராது விட்டால் ஒருவேளை நான் பொலிஸ்காரர்களின் கைகளில் மாட்டப்பட்டிருப்பேன்"
"ஐ சீ” என்று கூறிய இளைஞன் கமலேஸ்வரனைச் பார்த்தச் சிரித்தான். சுமனாவின் வீட்டுக்கு முன்பாக டாக்ஸி நிறுத்தப்பட்டது. கமலேஸ்வரன் டாக்ஸிக்குப் பணத்தைக் கொடுக்க முயன்ற பொழுது அந்த இளைஞன் தடுத்து, தானே பக்கத்தைக் கொடுத்தான்.
2-3-2

இளைஞனைப் பார்க்கப் பார்க்க அவனுடன் அதிகம் பழக வேண்டும் போல் கமலேஸ்வரனுடைய மனம் துடித்தது. படங்களைச் சுமனாவிடம் கையளித்துவிட்டு அவனுடனேயே சென்றுவிட வேண்டும் போல உணர்வு எழுந்ததும் அவனைத் தனக்காகக் காத்திருக்கச் சொன்னான் கமலேஸ்வரன்.
அதனை எதிர்பார்த்திருந்தவன் போலவே மறுப்பு எதுவுமின்றி உடன்பட்ட அவன் தனக்கு ஒர் அவசரமான விஷயம் இருப்பதால் அந்த விஷயத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு டெலிபோன்’ செய்துவிட்டு வருவதாக முன்பாக உள்ள பெட்ரோல் செட்டை நோக்கி நடந்தான்.
சுமணா அந்தப்படங்களை நடுமண்டபத்தில் வைத்து மிக இரகசியமாக இரசித்த பொழுது அவளுடைய கண்கள் அவளையும் அறியாமல் சிவந்து வந்தன. அவள் கமலேஸ்வரனைப் பார்த்தப்பொழுது "யூ ஆர் ஏ கிறேட் ஆர்டிஸ்ட் தீஸ் ஆர் ஒல் நச்சுறல் பியூட்டிஸ்" என்று அவனையும் அவனுடைய அந்த ஒவியங்களையும் புகழ்ந்தாள்.
நெடிய மெளனத்தைக் கலைத்துக் கொண்டு அவளுடைய குரல் அந்தத் தனி வீட்டில் கீச்சிட்டு ஒலித்து ஒய்ந்த பொழுது சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் எழுப்பிய ஒலி பயங்கரமாகக் கேட்பது போல் உணர்ந்தான் கமலேஸ்வரன்.
சுமணா மறுபடியும் அவனையும் அவற்றையும் புகழ்ந்தபடி அவனை நெருங்கி அமரும்படி கூறினாள்.
கமலேஸ்வரன் அமர்ந்ததும் அவள் கேட்டாள்,
"இவற்றை வரையும் பொழுது யாராவது பார்த்தார்களா?”
"இல்லை"
"கொண்டு வரும்பொழுது, பஸ்ஸில் ஏறும்பொழுது படங்கள் விழுந்து விட்டன. பின்னர் ஒருவாறு சமாளித்து டாக்ஸியில் வந்து விட்டேன். எனக்கு உதவியாக ஓர் இளைஞனும் வந்தான்."
"அவனை முன்னரே தெரியுமா உங்களுக்கு?”
“இல்லை”
“என்ன?”
சுமணா ஏங்கியவளாக அச்ச விழிகளோடு சுற்று முற்றும் பார்த்ததும், கமலேஸ்வரன் சொன்னான்.
"அவனைக் கண்டதும் நானும் முதலில் ஒரு மாதிரித்தான் நினைத்தேன். பின்னர் அவனுடைய கதைகள் யாவும் அன்பு நிறைந்தவையாக இருந்தன. பயத்தை விட்டுவிட்டேன். இப்பொழுது அவன் எனக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறான்"
“சரி.சரி.நீங்கள் சீக்கிரம் போய் விடுங்கள்” என்றபடி அலுமாரியைத் திறந்து பண நோட்டுக்கள் சிலவற்றை எடுத்து எண்ணினாள் சுமணா.
அந்த அற்ப இடைவெளிக்குள் வெளியே விரைவாக வந்த வாகனம் ஒன்று திடீரென்று பிறேக்கிடும் ஒலியும், அதனைத் தொடர்ந்து சிலர் இறங்கி ஓடிவரும் ஒலியும் கேட்டன.
கமலேஸ்வரனை வெறித்த சுமணா, அலுமாரியை மூடாது அதன் அடித்தட்டில் அடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், சித்திரங்கள் ஆகியவற்றையும் கமலேஸ்வரன் அப்பொழுதுதான் கொண்டுவந்து மேசையில் நிறைத்திருந்த படங்களையும் மாறிமாறிப் பார்த்து வெளியே விழிபெயர்த்த பொழுது, ஆங் என்று ஏக்க ஒலி எழுப்பினாள்.
233

Page 127
அவளுடைய கையிலிருந்த பண நோட்டுக்கள் கீழே விழுந்து சிதறின. வேட்டை நாய்கள் போன்று வந்த பொலிஸ்காரர்கள் சிலர் படங்களைக் கைப்பற்றினர். வேறு சிலர் அந்த வீட்டைச் சுற்றி நோட்டம் விட்டனர். கமலேஸ்வரனின் பக்கத்தில் ஒரு கான்ஸ்டபிள் வந்து நின்று கொண்டான். சுமணாவை அழைத்து கேள்விகள் தொடுக்க ஆரம்பித்தான் சார்ஜன்ட்
சுமணா பொங்கிச் சிவந்த விழிகளும் முகமுமாகக் காட்சியளித்தாள். கமலேஸ்வரனையே சந்தேகமாகப் பார்த்தாள் அவள். அவன் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டான் என்று மனதுள் வைதாள்.
“போக்கிரி மனிதா உன்னையும் ஒருவன் என்று நான் நம்பினேனே!” என்று OROTT பயங்கரமாக அலறியதும், அவளை அதட்டிய சார்ஜன்ட், "உம்.உம்.அதையெல்லாம் நீதிமன்றத்திலே சொல்லலாம். இப்பொழுது வாருங்கள் ஸ்டேஷனுக்கு" என்றபடி, மற்றைய உதவியாளர்களுக்கு அவர்களை இழுத்துச் செல்லும்படி கையிலிருந்த மெல்லிய தடியால் சைகை காட்டினான்.
பொலிசாருடன் வந்திருந்த இளைஞன் கமலேஸ்வரனிடம் வந்து சொன்னான். "ஐ ஆம் ஸாரி.நான் என் கடமைைையத்தான் செய்தேன். நான் ஒரு சி.ஐ. டி. இளைஞனைப் பார்க்க முடியாது கமலேஸ்வரன் முகத்தை எங்கோ திருப்பியபடி அவர்களுடன் சென்று கொண்டிருந்தான்.
2
மறுநாள் ஆபாசப் படங்களை விற்பனை செய்ய முயன்று கொண்டிருக்கையில் கமலேஸ்வரன் என்ற ஒவியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று எல்லாப் பத்திரிகைகளுமே செய்தி வெளியிட்டிருந்தன. இந்த விற்பனைக்கு உடந்தையாக இருந்த சுமணா என்ற பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்று அச்செய்தி கூறியது.
செல்வராணி'சிலோன் ஹெரல்ட்பத்திரிகையை ஹோட்டல் அறையிலிருந்தவாறே புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில் அதிர்ந்தவள் போலானாள். முதலில் தன்னுள்ளே தானாகச் சேர்ந்து தனக்கென வாழ வந்தவன் என்று கமலேஸ்வரனை நினைத்த பொழுது அவளுடைய உள்ளத்தில் பரிவுணர்ச்சி எழுந்தது. சிறிது நேரத்தில் அப்பரிவே வைராக்கியமாக, துரோகி ஒருவனுக்குக் கிடைத்த தண்டணையாக அவள் நினைத்துக் கொண்ட பொழுது அமைதியானாள்.
'சிலோன் ஹெரால்ட்' பத்திரிகை கமலேஸ்வரனுடைய புகைப் படங்களையும் சித்திரங்களையும் பிரசுரித்து, வாழ்க்கைக் குறிப்புகளை வானளாவப் புகழ்ந்து ஏனைய பத்திரிகைகளுக்கும் முன்னோடியாக எழுதியிருந்த பெருமையைச் சிறுமையாகக் கொள்வதுபோல், குறிப்பிட்ட கமலேஸ்வரன் என்ற ஆர்டிஸ்ட் அமெரிக்கப்பத்திரிகைகளாலும் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் எழுதியிருந்ததைக் கவனித்த செல்வராணி, தனக்குள் ஏளனமாகச் சிரித்துக் கொண்டாள்.
படிப்பது தேவாரம். இடிப்பது சிவன் கோவில் அவளுடைய அதரங்கள்
முதலுமுடிறுத்துக் கொண்டன.
234

அவள் உலக வாழ்க்கைக்கேற்ப பாதி உடல் தெரிய நாகரீகமாகத் திரிந்ததை யதார்த்தமாக இரசிக்கத் தெரியாத கமலேஸ்வரன் இப்பொழுது கலைஞர்களுக்கும் ஓர் அவமானச் சின்னமாக விளங்குவதை நினைத்து அவள் பொருமினாள்.
உறவோ, பகையோ தான் கமலேஸ்வரனுடைய மனைவி என்று சந்தர்ப்பங்கள் கலை சம்பந்தமாக ஏற்பட்ட பொழுது சொல்லிப் பெருமைப்பட்டிருந்த அவள், இப்பொழுது அவனுடன் கொண்டிருக்கும் சட்டரீதியான உறவையும் துண்டிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.
அவனுடைய உறவைத் தொடர்ந்தும் பொருளாகக் கொண்டு வாழ்வது பல வழிகளில் தடையானது போன்றிருந்தது அவளுக்கு.
துன்பமான வாழ்க்கை வாழ்கிறோம் என்று உடம்பை அலட்டிப் பேசித் திரியாது, அடக்கமாக இருப்பதே அனைத்திலும் சிறந்தது என்று செல்வராணி பலவாறு சிந்தித்தாள். கமலேஸ்வரனைப் போன்று ஆயகலை, தூயகலை என்றெல்லாம் பிதற்றி, அந்தத் தூயகலையின் மார்க்கமாகவே அம்மணப் படங்களை வரைந்து பகிரங்கமாக விற்கப் புறப்படுவதிலும், இருட்டிலே நடப்பதை இருட்டிலேயே செய்துவிட்டு, அதன் விளைவுகளைத் தன் வரையிலேயே தாங்கி சமூகத்திற்கு ஒரு நோயைப் பரப்பாது இருப்பது சாலச் சிறந்தது என்றும் எண்ணினாள் செல்வராணி
அன்றொரு நாள் மோகன்ராய்மீது தான் பூரண காதல் கொண்டிருந்ததென்ற உண்மையே இப்பொழுது அவளுக்கு நேர்மையாகப்பட்டது.
அவள் தன்னையே இப்பொழுது மன்னித்தாள். செல்வராணி அறையில் இருந்தவாறே சுந்தரராஜனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கும் கமலேஸ்வரனுக்கும் ஆன பந்தத்தைச் சட்டமென்ற கத்தி கொண்டு வெட்டிவிட வேண்டுமென்று கோரினாள்.
செல்வராணி அன்று தான் நடந்து கொண்டதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்டாள். "நோ.நோ நோ நொட்.அற்.ஒல்"என்று சுந்தரராஜன் கூறிப் பெரிதாகச் சிரித்தது போனில் கரகரத்துக் கேட்டது.
“இதோ நான் உடனேயே ஆவன செய்கின்றேன்” என்று கூறிய சுந்தரராஜன் அவளை உடனடியாகப் பார்க்க வேண்டுமென்றும், அவளின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் கூறினான். இந்த இடைவெளியில் அவனைத் தவறியேனும் கண்டுவிட்டால் தானாகவே ஒதுங்கிக் கொள்ளும் செல்வராணி இப்பொழுது அவனுடன் வலிந்து பேசியதை நினைத்த பொழுது தன்னைச்சூழ இன்ப வெள்ளம் பெருக்கெடுப்பது போல உணர்ந்து களித்தான் சுந்தரராஜன்.
அவளிடமிருந்து விடைபெற்று, ஒரே தாவலில் சென்று பீரோவைத் திறந்து அங்கிருந்த ஜின்னில் சொற்பத்தைக் கிளாசில்ஊற்றி"லோங். லைப்.மை.டாலிங். செல்வராணி. ” என்று பெரிதாகக் கூறிப் பருகினான்.
“என்ன? ஒரே குஷியாக இருக்கிறதோ?” என்று கேட்டபடி வந்த ஞானமலரை அவன் விறைத்துக் கொண்டவிதம் அவளை வாயடைத்து நிற்க வைத்தது. பின்னர் சில பயங்கரச் சம்பவங்களைச் அனுபவித்துவிட்ட அவள் மெளனியாகி வந்தவழி திரும்பினாள். செல்வராணி வீடு தேடிவந்த இடத்தில் ஞானமலர் இல்லாத அந்த வேளையில் சுந்தரராஜன் அவளைப்பற்றி இழுத்து பலவந்தப்படுத்தியதை ஞானமலர் அறிந்திருந்தாள்.
235

Page 128
ஞானமலர் இல்லாத சமயம் செல்வராணி அங்கு வந்ததாக முன் வீட்டுப் பெண், அவள் ஊரால் வந்ததும் முதல் வேலையாகக் கூறியதும் ஞானமலர் அவனை அதுபற்றிக் கேட்டாள்.
செல்வராணியே தன் மனைவியிடம் தனது செய்கை பற்றிக் கூறியிருக்கலாமென்று எண்ணி தன்னுள் பயந்துகொண்ட சுந்தரராஜன் அவளிடம் நடந்ததைக்கூறி மன்னிப்புக் கேட்டான்.
“ஐ.ஆம்.ஸோ.ஸாரி ஞானா என் வாழ்க்கையிலேயே நான் செய்ததவறு அது ஒன்றுதான். நீர் ஊருக்குப் போனதும் நான் தனியே வாடிக் கிடந்தேன். நீர் வரும்வரையும் குடித்து, குடித்து மயங்கிக் கிடந்த நான் ஒருநாள் செல்வராணி வந்தபொழுது கட்டுப்படுத்தியிருந்த நிலையழிந்தேன். அவளுடைய தோற்றமும் பேச்சும் நான் போதையிலிருக்கிறேன் என்று தெரிந்தும் என்னுடன் பழகிய கலகலப்பும் என்னை மயக்கிவிட்டன. அப்பொழுது அவளுடைய கையில் முத்தமிட்டேன்.அவள் பயந்து ஓடி விட்டாள். அவ்வளவுதான்."
ஞானமலர் பாவமன்னிப்புக் கொடுப்பாள் என்று சுந்தரராஜன் நம்பினான். ஆனால், படித்த மனைவி தான் குடிபோதையில் அற்பத்தனமாக நடந்து கொண்டதை மன்னிப்பாள் என்று எண்ணிய அவன் எண்ணத்தில் இடிவிழுந்தது போல் ஞானமலர் கண்டபடியெல்லாம் பேசினாள். ஈற்றில் செல்வராணி மீதும் கோபங் கொண்டு, அவள் அவளுடைய தகுதிக்கேற்றவர்களுடனேயே பழகிக் கொள்ள வேண்டுமென்று, தன்னுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள வேண்டாமென்றும் கண்டிப்பாக ஒருநாள் நேரே சென்று கூறி விட்டாள்.
அது பின்னர் சுந்தரராஜனுக்கு எட்டவே அவன் எப்படி மிருகமாக நடந்து கொண்டான் என்பதும், தனக்குத் தானே ஞானமலர் வைத்தியஞ் செய்ததும் அப்பொழுது அவளுக்கு நினைவுக்கு வந்தன.
செல்வராணியைக் காணவேண்டுமென்ற துடிப்பில் கண்மண் தெரியாமல் காரை எடுத்து கோட்டையை நோக்கிப்பறந்து, அந்தக் ஹோட்டைலை அடைந்த சுந்தரராஜன் அவள் இருந்த அணியை நோக்கி மாடிப் படிகளில் ஏறி ஓடினான்.
அவன் உடனே வருவதாகக் கூறியிருந்ததும் செல்வராணி தன்னைச் சற்று அலங்கரித்து விடலாம் என்ற உணர்வில் மேக்அப்'முடித்து அணிந்திருந்த ஓவர்கவுணைக் களற்றிச் சேலையை அணிந்து கொண்டிருந்த வேளை கதவு பலமாகத் தட்டப்பட்டது.
யாரோ வெளியே மிகமிக அவசரமாக நின்று கதவைத் தட்டுவதாக எண்ணி, பின்னர் அது சுந்தராஜனாகவே இருக்க வேண்டுமென்று நினைத்து, சேலையைக் கண்டவாறு சொருகிக் கொண்டு வந்து கதவைப் பாதிதிறந்த நிலையில் வைத்து வெளியே பார்த்தாள்.
வியர்த்துக் கொட்டிய நிலையில் ஓடிவந்த களைப்பை இளைத்து ஆற்றியபடி நின்று சிரித்த சுந்தரராஜன் அவள் உள்ளே அழைக்கு முன்னர் தானாகவே கதவைத் தள்ளி உள்ளே நுழைந்து, பின்னர் பின்புறமாகத் தள்ளிக் கதவை மூடியபடி செல்வராணியை விறைத்தான். பூட்டின் கைபிடியைப் பற்றிய அவனுடைய கைகள் அதனைவிட்டு முன்னெழுந்து நீண்டு அவளை அருகே வரும்படி அழைப்பனபோல் நின்றன.
236

செல்வராணி தயக்கமும் நாணமும் மீதுரப் பெற்று திக்கினாள். அவன், “பிளிஸ். உங்களைப் பார்க்கவே ஓடோடி வந்தேன்” என்று கூறி கைகளை மறுபடியும் நீட்டிய பொழுது அவள் அவனுக்காகவே அங்கு நின்றவளாக குழந்தையொன்று ஒடிச் சென்று தாயின் நெஞ்சோடு அணைந்தாற்போன்று செல்வராணியும் அணைந்து கொண்டாள்.
சுந்தரராஜனுடைய நாசிகளைப் பிய்த்து அறையில் தெளிவாகக் கேட்டு, எங்கோ பெருகி வீசிக் கொண்டிருந்த காற்றிலே சிறு துளியாகக் கலந்து விட்ட மூச்சு செல்வராணியின் காதோரங்களையும் தாடைகளையும் மோதிச் சென்றதை அவளும் உணர்ந்து கொண்டாள். இப்பொழுது அவள் எதையுமே தடுக்கவில்லை.
செல்வராணி அவனுடைய பிடியிலிருந்து விலகி 'சிலோன் ஹெரால்ட் பத்திரிகையை எடுத்து வந்து தான் அடையாளமிட்டிருந்த கமலேஸ்வரனைப் பற்றிய செய்தியைக் காட்டினாள்.
"யேஸ்.. யேஸ் நானும் பார்த்தேன். புவர் பெலோ. என்ன செய்கிறது. அவனுக்கெதிராக நான்தான் ஆஜராக வேண்டியிருக்கிறது. கிறவுண் கவுன்செல்"
சுந்தரராஜன் பலமாகச் சிரித்தான். “இட் இஸ்குட் சித்திரா என்றவளை மறுமணம் புரியப் போவதாகக் கேள்வி. வதந்தி பலமாக அடிபடுகிறது. அது நடக்கக் கூடாது"
“நான் மட்டும்தான் அவருக்கு மனைவி. இன்னொருத்தி இருக்கவே கூடாது. ஆளை உள்ளே தள்ளுங்கள். அதோடு விவாகரத்து நோட்டிசும் கொடுங்கள்" செல்வராணி அடிக்கடி உணர்ச்சிகளின் வாய்ப்பட்டு திக்கித் திக்கிக் கூறினாள்.
சுந்தரராஜன் “யேஸ் ராணி நான் செய்து காட்டுகிறேன் பாருங்கள்” என்றபடி மேலும் சிரித்துக் கொண்டான்.
கமலேஸ்வரன் மீது வழக்குத் தாக்கல் செய்து ஆபாசப் படங்கள் வரைந்து கையிருப்பில் வைத்திருந்தது, விற்பனை நோக்கத்தினால்தான் பகிரங்கமாக எடுத்துச் சென்றது, ஒன்றுமறியாத பெண்ணை வாங்குமாறுதூண்டியது ஆகிய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தார்கள்.
சுமணாவுக்குத் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக கமலேஸ்வரன் பொலிசாருக்கு அளித்த சாட்சியத்தில் தானாகவே அவளிடம் சென்று அந்தப் படங்களை வாங்குமாறு கேட்டதாகக் கூறியிருந்தான். அதனால் சுமணாமீது எவ்வித குற்றச் சாட்டுக்களையும்சுமத்தாதுபொலிசார் அவளைச்சாட்சியாக மாற்றியிருந்தனர். அவள் விடுதலை பெறவேண்டுமென்றால் அப்படித்தான் கூறவேண்டுமென்று கமலேஸ்வரள் கேட்டிருந்ததால் பெருகி வந்த அழுகையினிடையே அவனைக் கையெடுத்து வணங்கினாள் சுமணா.
பொலிசார் அவளை அரசாங்க தரப்புச் சாட்சியாக மறுபடி கோரிய பொழுது பெரிதும் அவதிப்பட்டாள் சுமணா. கமலேஸ்வரனுடைய வற்புறுத்தலின் பெயரில், பின்னர் மனமின்றிச் சம்மதித்தாள்.
அடுத்த நாள் காலை நீதிமன்றம் கூடிய பொழுது கமலேஸ்வரனைப் பொலிசார் ஆஜர் செய்து வழக்கையும் சமர்ப்பித்தனர்.
அவன்மீது சாட்டப்பட்ட குற்றங்கள் யாவும் குறித்து அவன் ஏதாவது கூற விரும்புகிறானா? என்று நீதவான் கேட்டபொழுது நீதிமன்றத்தில் கூடியிருந்த அனைவருமே அவனுடைய பதிலைக் கேட்டுத் திகைத்தனர்.
237

Page 129
3
"நான் குற்றவாளி" கமலேஸ்வரன் கூறியதை வியப்போடு பார்த்தார் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க வந்திருந்த நீதவான்.
குற்றவாளிகள் தங்களது குற்றங்களைத் தாங்களே ஒப்புக் கொண்டு அவற்றுக்காக வருந்தும் பொழுது தேவனால் மன்னிக்கப்படுகிறார்கள் அல்லவா? கமலேஸ்வரனின் கண்களிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த ஒருவித திவ்விய ஒளியையும் முகத்தில் திடீர் திடீரென்று ஏற்படும் பாவங்களையும் நீதவான் நன்கு அவதானித்தார். கடுகடுப்பும், தொடர்ந்தும் தன்னால் வஞ்சிக்கப்பட்டவர்களைச் சாகடிக்க வேண்டும் என்பது போன்ற வெறியும் கொண்டு குற்றவாளிக்கூண்டில் ஏறி நிற்கும் எத்தனை எத்தனை தரிகளின் முகத்தை அவர் பார்த்திருக்கிறார். அவர்கள் அத்தனை பேரிலும் வேறுபட்டதோர் அதிசயத் தோற்றத்தை அன்று கமலேஸ்வரன் அவருக்கு அளித்துக் கொண்டிருந்தான்.
நிலவியிருந்த மயான அமைதியைக் கிழித்துக் கொண்டு விசும்பல் ஒலி அங்கு கேட்டது. இதுவரையும் கமலேஸ்வரன்மீது விழிபதித்திருந்த கூட்டம் பார்வையாளர் கலரியைப் பார்த்தபொழுது அங்கு சித்திரா பொருமி அழுது கொண்டிருந்தது தெரிந்தது. அறிமுகமற்ற ஒரு பெண்ணின் அழுகை, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுவிட்ட கமலேஸ்வரனுக்காகத்தான் என்று அவர்கள் எண்ணிய பொழுது, அது சாதாரணம் என்று அமைதி கண்டார்கள் அவளுடன் கூடவே வந்திருந்த ரமணனும் ரஞ்சனியும். பொலிஸ்காரர்கள் புடைசூழ அப்பாவை கறுத்த கோட் அணிந்த ஒருவன் கேள்விகளால் குடைந்து கொண்டிருக்கிறான் என்று எண்ணிக் கறுவிக் கொண்டனர். கமலேஸ்வரன் பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
"கலைஞன் பிறப்பதும், இந்த நாற்றம் பிடித்த சமூகத்திலே வாழ்வதும் குற்றமான செயல்கள் என்பதாலும் நான் குற்றவாளி. ஏனெனில் உலகில் எத்தனையோ வகையான தொழில் துறைகள் இருக்க, ஆன்மீகத்தால் அலைந்து, நம்பினவனுக்கே துரோகம் செய்யும் இந்தக் கலையை நான் நம்பி அதனை உயிராக மதித்து, போற்றி, தொழிலாகக் கொண்டது பெருங் குற்றம்"
“இங்கு கேட்ட கேள்வி - ஆபாசப் படங்கள் பற்றி கலையைப் பற்றியது அன்று, ஆபாசமே கலையாகிவிட்ட நிலையில் கலையைப்பற்றி முழுதாகத் தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை"
தான் சில கேள்விகள் கேட்பதற்குத் தனக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று கேட்டான் சுந்தரராஜன்.
நீதவான் தலையை அசைத்து, “நீங்கள் கேட்கலாம்” என்றதும், சுந்தரராஜன் சினிமா நடிகன்போல் உடலை அப்படியும் இப்படியும் ஒருமுறை அசைத்து கோட்டைச் சரிசெய்து கொண்டு எழுந்து கேட்ட கேள்விகளை மிக அகெளரவமாக நினைத்தான் கமலேஸ்வரன்.
சுந்தரராஜனுக்குப் பதில் சொல்வதிலும் தூக்குக் கயிற்றில் தொங்குவது மானமுள்ள ஒருவனுக்குச் சிறந்த கருமம் என்று கமலேஸ்வரன் எண்ணியதால், நீதவானைப் பார்த்துக் கூறினான்.
238

“யுவர் ஒணர், குற்றவாளி எனது குற்றத்தை ஒப்புக்கொண்டதும் விசாரணை எதற்கு? நானே ஆபாசப் படங்களை வரைந்து, பகிரங்கமாக எடுத்துச் சென்று, ஒன்றுமறியாத ஒரு பெண்ணை அவற்றை வாங்கும்படி வற்புறுத்தியிருக்கிறேன். புளு பிலிம்ஸ் என்ற வகையில் இந்த ஒவியங்கள் அமையாது விட்டாலும், குற்றம் குற்றமே.
சுந்தரராஜன் குறுக்கிட்டு பீனில் கோட் குற்றச் சட்டக்கோவை 285ம் பிரிவின் பிரகாரம் ஆபாசப் படங்களை வரைந்தது முதலான பல குற்றங்களையும் எதிரி செய்திருக்கிறார். அவர் ஒப்புக்கொள்வதை நாம் ஏற்றுக் கொண்டு தகுந்த தண்டணை கொடுக்குமாறு வேண்டுகிறேன், என்று வழக்கை முடிப்பதாகவும் தெரிவித்தான்.
கமலேஸ்வரன் தான் குற்றவாளியல்ல என்று கூறி வழக்கை விவாதித்து வெல்லவும் திராணி பெற்றிருந்தாலும் அந்தச் சூழ்நிலையில் அவனுடைய வாழ்க்கையின் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் பல நீதிமன்றத்தில் புட்டுப்புட்டு ஆராயப்பட்டுவிடும் என்ற அச்சமும் அவனை ஆட்கொண்டிருந்தது.
நீதவான் கமலேஸ்வரனை முழுதாக ஒருமுறை பார்த்துவிட்டு மூன்றாம் நான்காம் குற்றச்சாட்டுக்களின் பெயரில் மூன்று மாதக் கடூழியச் சிறைத்தண்டணையும், முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டுக்களின் பெயரில் 600 ரூபா தண்டமும் விதிக்கிறேன் என்று கூறினார்.
சுமணாவின் குரல் அழுவது போன்று பலமாகக் கேட்டது அவளையும் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலாக்கிய கமலேஸ்வரனை நினைத்து அவளும் அழுதுகொண்டிருந்தாள்.
பத்திரிகைகளின் விளம்பரத்துடன் நீதிமன்றத்துக் கலரியுள் நிறைந்து கொண்டிருந்த கூட்டத்தையும் விலத்திக் கொண்டு கணேசமணியும் பரமேஸ்வரியும் வந்தனர். பரமேஸ்வரி சனத்திரளை விலக்கி இளைத்து இளைத்து நடக்கும் கர்ப்பவதியாக இருந்ததை தற்செயலாக விழிதிரும்பிய கமலேஸ்வரன் கண்டபொழுது உள்ளூர மகிழ்ந்தான்.
மொத்தத்தில் அவனுக்கு இந்தச் சமூகத்திலிருந்து மூன்று மாத ஓய்வு கிடைத்துள்ளது. விதிக்கப்பட்ட தண்டத்தையும் அவன் கட்டத்தவறினால் மேலும் சில மாதங்கள் சிறையை அனுபவிக்க வேண்டிவரும். கமலேஸ்வரன் இதுவரையும் தான் பார்க்காத உலகம் அது என்று நினைத்திருந்தான். அதனையும் பார்த்துவிட்டால் போகிறது என்று வன்மமாக எண்ணிக் கொண்டான்.
கமலேஸ்வரனுடைய முகத்திலே திடீரென எழுந்த பிரகாசத்தைக் கண்டதும் பலர் பிரமித்துப் போயினர். சிறைசெல்லப் போகின்றேனே என்ற கவலை அவனைக் கிஞ்சித்தும் வாட்டவில்லை. பிழைப்புக்காகத் தன்னை விற்று, நாகரீகமாகிவிட்ட இந்தச் சமூகத்தின் மேல்தட்டின் நாகரீகமானவர்கள் என்று காட்டித் திரிபவர்களிலும் சமூகத்தின் அதல பாதாளத்துக்கே சென்று அந்தச் சமூகத்தைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள அவன் துணிந்து விட்டானா என்ன?
கமலேஸ்வரனைத் தொடர்ந்து சில காலத்திற்குக் காண மாட்டோம் என்ற உணர்வில் அந்த வேட்கையைப் போக்க வந்திருந்தவர்களைப் பார்த்த பொழுது அவன் வியந்தான். நீதிமன்றக் கட்டடத்தின் ஒரு மூலையில் தன்னை எல்லோரிடமிருந்தும்
230

Page 130
விடுவித்துத் தனியாக அமர்ந்திருந்தாள் செல்வராணி. அழுகையோ சிரிப்போ அற்றவாறு நாட்டிவைத்த கற்சிலை போன்று அமைதியாக அமர்ந்து, கமலேஸ்வரன்மீது வைத்த விழிகளை வாங்கி இமைக்காது அவள் இருந்து கொண்டேயிருந்தாள்.
பிஸ்கால் கமலேஸ்வரனை அழைத்து தீர்ப்பின் பிரதியுடன் அப்பால் சென்றதும் சித்திரா திடீரென்று எழுந்து அவனைக் கொண்டு செல்ல ஆயத்தமாக வந்திருந்த ‘வானடிக்கு ஓடினாள். அவள் அவனுக்கு வேண்டிய ஒருத்தி என்ற உணர்வில் அவனை அவள் பக்கம் திருப்பி நின்ற பிஸ்கால், பொலிஸ் ஆகியோர் அவள் அவனுடன் பேச அனுமதித்தனர்.
கமலேஸ்வரன் தன் வரவைக் கண்டு நிற்கிறான் என்பதைச் சித்திரா கண்டு நிலத்தில் கண் புதைத்து கணநேரம் மெளனமாக நின்றாள். அவளைப் புடை சூழ்ந்து நின்ற ரமணனும் ரஞ்சனியும் “அப்பா” என்று கூவியபடி ஒடிச்சென்று தாவிக் கொண்டனர். அவர்களை ஆவலோடு அனைத்து நெஞ்சோடு சேர்த்து முகம் புதைத்தான் கமலேஸ்வரன்.
பின்னர் அவர்களை விடுத்து எங்கோ பரந்து நிற்கும் வானத்தையும் அதனைத் தொட்டுவிட வேண்டுமென்ற துடிப்பில் உயர்ந்து நிற்கும் கோபுரங்களையும் தென்னை மரங்களையும் பார்த்தான். அவன் மண்ணைப் பார்த்த பொழுது ஏதோ அவசரத்தில் இயங்கிக் கொண்டிருந்த உலகத்தில் சித்திரா மட்டும் தன்னையே பார்த்தபடி அழைப்புக்காகவும் அணைப்புக்காகவும் ஏங்கி நிற்பது போன்று அவனுக்குப்பட்டது.
நிற்க முடியாது இடது கால் நடுநடுங்கிக் கொண்டிருந்ததாலும் கையிலிருந்த ஊன்றுகோலை எறிந்தபடி முன்புறமாக இரண்டு கைகளையும் நீட்டி அவளுக்காக ஏங்கி அழைப்பவன் போலக் கைகளை நீட்டினான்.
அவள் ஆசையோடு ஓடி வந்து அவன் நெஞ்சில் விழுந்தாள். அவளது இடையையும் கழுத்தையும் பற்றி அவனுடைய கைகள் வளைந்து அணைத்த பொழுது, அவள் அமைதியாக அழுதுகொண்டு நின்றாள்.
"நான் செய்த கொள்கைத் துரோகம் இது. சிற்பத்தில் நிர்வாணம் இருந்தால் அது ஆபாசம் அன்று. ஒவியத்தில் அது ஆபாசமாகத்தான் தெரிகிறது. இது எனக்கு ஓர் அக்கினிப் பிரவேசம். நான் அதனை முடித்துவிட்டு வருகிறேன்"
கமலேஸ்வரன் அவளுடைய கன்னஓரமாக முகம் வைத்து காதுகளுக்குள் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்.
ரமணன் சித்திராவின் சேலையைப் பற்றியபடி “அன்ரி’ என்று அழைத்து எதற்காகவோ அழுதான்.
“இல்லை. Ꭻ [Ꭲ éᎭIᎢ ...... . அம்மா என்று திருத்தினான் கமலேஸ்வரன். அவனுடைய அந்தத் திருத்தத்துக்காக நன்றியோடு பார்த்த சித்திரா, வீசப்பட்டுக் கிடந்த அந்த ஊன்றுகோலை எடுத்துக் கமலேஸ்வரனிடம் கொடுத்தாள்.
“இனி எனக்கு இது எதற்கு? நான் இனி என்றுமே விழமாட்டேன். கமலேஸ்வரன் கூறிக்கொண்டே திறந்து கிடந்த வானின் கதவின் இறக்கையைப் பற்றி உன்னி ஏறினான்.
24()

வான் உருளத் தொடங்கி அங்கு நின்ற எல்லோரதும் பார்வையிலிருந்தும் விடை பெற்றுக் கொண்டிருந்தது.
கமலேஸ்வரனுடைய அவமானகரமான முகத்தில் விழிப்பதில்லை என்று தன்னுள் கறுவி தீர்மானித்திருந்த பொழுதும், அங்கு வந்து அமைதியாக ஒதுக்கத்தில் நின்றுகொண்டிருந்தான் திருஞானம். செல்வராணி குனிந்த முகத்துடன் வெளியேறிக் கொண்டிருந்ததை அவனும் பார்த்தான்.
யாரும் எவருடனும் பேசாது மெளனமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். ரஞ்சனியைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி அந்த வான்’ நின்ற இடத்தைப் பார்த்து அழுதபடி நின்ற சித்திராவின் கண்களை இரு பிஞ்சுக் கரங்கள் ஒற்றி விட்டன. "ம்மா.ப்பா.” என்று ரஞ்சனி ஏதோ கூற முயன்று கொண்டிருந்ததை அவதானித்த சித்திரா, அவளை அணைத்து முகத்துடன் சேர்த்து, "அப்பா. வருவார் அம்மா’ என்று தேற்றினாள்.
எல்லாமே தன் போக்காகவும் சுய நலமாகவும் இருப்பதனால்தானோ என்னவோ இந்த ஜீவன்களுக்கு ஒவ்வொரு உறவுமுறை இருக்கின்றது.
முற்றும்
次次次 次次
241

Page 131
நூலுருவில் வெளியாகிய அங்கையன் கயிலாசநாதனின்
ஏனைய படைப்புக்கள்
கடற்காற்று (பரிசு நாவல்)
முதற்பதிப்பு
இரண்டாம் பதிப்பு
வைகறை நிலவு (கவிதை)
வெளிவர இருப்பவை
சொர்க்கமும் நரகமும் (நாவல்) சிட்டுக் குருவிகளும் வானம் பாடியும் (நாவல்) அங்கையன் கயிலாசநாதனின் சிறுகதைகள்
242
 


Page 132


Page 133
egy, áPáfu
6 6
திறமை ஏற்படு
Φ 6ΦΩ 6) II II 压Tfu直 அறிவை குறிப்பத G JF. u. I 6ão
Η 6O 6) || 6
(இந்
இவ்வாறு காலஞ்சென்ற 1962) ஆண்டு பேராதன மாணவனாயிருந்த காலத்திலே மாணவனாயிருக்கும் போதே ஆ சிறுகதை ஆகியன எழுது அங்கையன், எனது பல்க மாணவராகவும் இருந்தார்.
பட்டம் பெற்றபின் பத்தி துறைகளிற் பெற்ற அனுபவமு உடையவராக அவர் இறுதியாக துறையுட் புகுந்தார். பிறமெ நாடகங்களாக்கித் தயாரித்து அவருடைய வானொலி மெ அறிந்தவை. கலையுணர்வும், மு காரணத்தாலே, அங்கைய விடயங்களை வானொலி வேண்டுமென்று செயல்பட்டவ கருத்துக்களுக்கு செயல்வடிவ அவரை 34 வயதிலேயே உலகிற்குப் பேரிழப்பு ஆகும்.
தமிழ்த்துறை, Zഗ്ഗZര07 ബ07%
796
 

பரைப்பற்றி.
9560) 6) என்பது செயல் யைக் காட்டுவதும், அழகு ம் வ ைகயிற் செய்வதும் யக்க வல்லதும் பற்றிய பல வ்களுக்கு உதவுவதுமான வயும் ஆற்றலையுமே நாகும். ஆகவே, கலையிற் , Liu I sir , திறமை, அழகு, ன்ற அம்சங்கள் உள்ளன. து தருமம், பேராதனைப் பல்கலைக் கழகம், பக்கம் 45)
அங்கையன் கைலாசநாதன் னைப் பல்கலைக்கழகத்தில் எழுதினார். பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள், கவிதை, துவதிலே வல்லவராயிருந்த லைக்கழக நண்பராகவும்,
திரிகை, அச்சகவியல் ஆகிய ஆக்க இலக்கியத் திறனும் கக் கடமையாற்றிய ஒலிபரப்புத் ாழிக் கதைகளை வானொலி வெற்றியும் கண்டுள்ளார். ல்லிசைப் பாடல்கள் பலரும் யற்சி ஊக்கமும் கொண்டிருந்த ன் எப்படியாவது புதிய
ரசிகர்களுக்கு அளிக்க ார். சிந்தனையிலே தோன்றும் ம் கொடுப்பதில் ஆர்வ்ம்மிகுந்த இழந்துவிட்டமை இலக்கிய
கலாநிதி அ. சண்முகதாஸ்
PRINTED BY UNIE ARTs (PvT) LTD., T. P : 330195