கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்

Page 1


Page 2


Page 3

அமரர் ‘அங்கையன்’ கயிலாசநாதனின் சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும் - ஒரு நாவல் -

Page 4

9|LOJí அங்கையன்’ கயிலாசநாதன்

Page 5
நூலாசிரியர்
முகவரி
முதற்பதிப்பு
பதிப்புரிமை
கணனி அச்சுப் பதிப்பு :
பக்கங்கள்
விலை
சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்
நாவல்
! அங்கையன்’கயிலாசநாதன்
(திரு. வை. அ. கயிலாசநாதன்)
H 1/2, அரச தொடர் மாடி,
கொழும்பு - 04, இலங்கை தொலைபேசி எண் :581047
: 6. 2001
திருமதி இராஜலட்சுமி அம்மாள் கயிலாசநாதன்
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி, கொழும்பு 13.
: X + 96
: ரூபா 150/=

முன்னுரை
இலங்கையில் நாவல் இலக்கியம் தமிழகத்துடன் ஒப்பிடும்போதுபின்தங்கிய நிலையில் உள்ளது என்ற கருத்து முற்றிலும் நியாயமற்றதல்ல, படைப்பாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் படைப்புக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் அக்கருத்தை மறுக்க முடியாது. பரீட்சார்த்த நாவல்கள் எனப்படுகிற வகையில் நோக்கினால் தமிழகத்தில் பரீட்சைக்காக எழுதுகிறவர்கள் நிறையப்பேர் உள்ளனர். படைப்பு எதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதைக் கவனித்தால் தமிழகத்தில் நிலவும் பார்வைக்கும் இங்கு உள்ளதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. மற்றப்படி எந்த வகையான ஆக்க இலக்கிய வடிவத்தைப் படைப்பாளிகள் நாடுகிறார்கள் என்பது புழக்கத்தில் உள்ள ஊடக வசதிகளால் கணிசமான அளவுக்குத் தீர்மானிக்கப்படுகிறது.
இலங்கையில் நாவல் இலக்கியத்தைப் பொருளாதார இழப்பின்றி ஆதரிக்கக் கூடிய வெளியீட்டு வசதிகள் இல்லை. முழுநேர ஆக்க இலக்கிய எழுத்தாளர்கள் எனக் கூறக் கூடியவர்கள் எனக்குத் தெரிய இல்லை. எனவே நூல்கள் பெருமளவும் படைப்பாளிகளது ஆத்ம திருப்திக்காகவும் சில சமயங்களில் நூல் வெளியீட்டுக்கான நிறுவனங்களது ஆதரவின் விளைவாகவும் பல சிரமங்களினிடையே வெளிவருகின்றன. இதற்குள் வணிக நோக்கில் தமிழகத்திலிருந்துகுறுக்கிடும்பதிப்பாளர்கள் உள்ளனர். ஈழத்துநாவல் இலக்கியம் இன்றைவிடச் செழிப்புடன் இருந்த காலம் ஒன்று இருந்தது. அக்காலம் ஈழத்துத் தமிழ் எழுத்தின் தனித்துவம் பற்றிய உணர்வு எழுச்சி பெற்றிருந்த காலம். தமிழகத்துக் குப்பைச் சஞ்சிகைகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் பலரை முதற்தடவையாக ஈழத்துப் புனைகதைகளை வாசிக்கச் செய்தன. இந்த அறிமுகம் பின்பு ஒரு வலிய வாசகர் தளமாகியது. அது அயலிலிருந்து வந்த மலிவான பதிப்புக்களின் மத்தியிலும் நிலைத்து வலிவும் விரிவும் பெற்றது.
1977க்குப் பின்பு இந்த மண்ணில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்களை அவற்றை இயலுமாக்கிய ஒரு சமுதாய நெருக்கடியிலிருந்து பிரித்து நோக்க முடியாது. அவற்றின் பின்விளைவுகளின் நடுவே இன்று நமது சமுதாய நெருக்கடியையும் போராட்டங்களையும் கூற முனைகிற இலக்கியங்கள் 1970களின் நடுப்பகுதி வரை வந்த இலக்கிய மரபின் தொடர்ச்சியையும் அதனுடனான ஒரு முறிவையும் தம்முட் கொண்டுள்ளன. இன்று, சமூகப் பார்வை இல்லாத ஈழத்துத் தமிழ் இலக்கியம் அடையாளமற்றது. இந்தச் சமூகப் பார்வைக்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளது. அதை மறந்து இன்றைய ஈழத்தமிழ் ஆக்க இலக்கியத்தை முழுமையாக அறிய முடியாது.

Page 6
நூல் வெளியீட்டு வசதிகளின் போதாமை காரணமாகப் பல படைப்பாளிகள் செய்தி ஏடுகளின் வாரப் பதிப்புக்களையும் சில சமயம் நாளாந்த வெளியீடுகளையும் தமது களங்களாகப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே தொடர்கதையாக வருகிற நாவலுக்குரிய சில நிர்ப்பந்தங்கள் பலவற்றை ஏற்றே படைப்புக்களை உருவாக்க முடிந்தது. ஒப்பிடத்தக்க நீளமுடைய அத்தியாயங்களும் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் அடுத்த அத்தியாயம் பற்றிய எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமான இறுதிப்பகுதிகளும் ஆழமான சமூக அக்கறையோ இலக்கிய ஈடுபாட்டையோ கொண்டிராத வாசகனையும் தன்பால் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கமும், இன்றுவரை, இத்தகைய ஆக்கங்களில் அவசியமாகின்றன.
இலக்கிய உன்னதங்கள் பற்றிஉரக்கப் பேசுவோர், நமது படைப்பாளிகள் பலர் இந்த வரையறைகட்கு உட்பட்டுத் தமது படைப்பாற்றலையும் சமூக உணர்வையும் வெளிப்படுத்தினர் என்பதைக் கணிப்பிற் கொள்வதில்லை. பணத்துக்கும் புகழுக்குமான இலக்கியச் சமரசங்களுடன் படைப்புக்கான களத்தைப் பெறுவதற்கான சமரசத்துடன் ஒப்பிடுவது நியாயமாகாது. படைப்பாளியின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான இத்தடைகள் மொழிநடையையும் கதையமைப்பையும் பாதிக்கின்றன. அப்படிப்பட்ட பாதிப்பின்றி எழுதாமல் இருக்க, படைப்பாளி எழுதாமலே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்நோக்கலாம். வாசகரைச்சென்றடைந்துவாசிப்பின்தரத்தையும் வாசிப்பவர்களின் தொகையையும் விருத்தி செய்வது வெறும் மலிவான ரசனைக்குரிய எழுத்தையொத்த காரியமல்ல.
கயிலாசநாதனின் எழுத்து ஈழத்துப் படைப்பிலக்கிய வளர்ச்சியை அடையாளப்படுத்துகிற எழுத்து என்பதையும் எழுத்தாளர் என்ற வகையில் அவர் தன்னை அடையாளப்படுத்தி வளர்ச்சி பெற்று வந்த ஒரு காலச் சூழலில் மிகவும் வருந்தத்தக்க விதமாக அவரது மறைவு நிகழ்ந்தது என்பதையும் நோக்கும் போது அவரது ஆக்கங்கள் இன்று நூலுருப் பெறுவது அவரது நினைவுக்காக அவரது மனைவியார் செய்யும் பணியாக மட்டுமல்லாமல் அவர் வாழ்ந்த காலத்தின் தமிழ் ஆக்க இலக்கியத்தின் ஒரு முக்கியமான பகுதியின் பதிவாகவும் அமைகிறது.
ஈழத்துப் புனைகதையின் அமைப்பின் மீது வெளியீட்டுக்கான களங்கள், வாசகர் உருவாக்கம் என்பன ஏற்படுத்திய தாக்கம் ஒரு புறமிருக்கத் தமிழகத்துப் படைப்பிலக்கியங்களின் பாதிப்பை, குறிப்பாகச் சொற் பிரயோகத்தின் மீதான செல்வாக்கை, முற்றாகவே விலக்க இயலாமையை நாம் இன்று வரை பல நல்ல ஆக்கங்களிற்கூடக் காண்கிறோம். நம் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்குமிடையான இடைவெளி, தமிழகத்து எழுத்தைச் சிறிதேனும் சார்ந்திருக்கும் தேவைக்கு இடமளிக்கிறது. கயிலாசநாதனின் மொழிப் பிரயோகத்திலும் இப்
V

பண்பைச் சற்றுக் காண நேருகிறது. அவரது எழுத்தின் முனைப்பு அடிப்படையிலும் பொருளளவிலும் இம் மண்ணினது என்பதை மீறியே இது நிகழ்ந்துள்ளது. இன்று இலங்கையின் படைப்புலகின் நலிவும் வாசிப்பின் போதாமையும் தமிழகத்தின் மிக மோசமான எழுத்தின் ஆதிக்கத்தை இங்கு மீளவும் நினைவூட்டத் தொடங்கியுள்ள நிலையில் கயிலாசநாதனுடைய காலத்தின் எழுத்து நமது படைப்பாளிகட்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியதாகிறது.
"சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்” நாவலில் வருகிற மனிதர்கள் நிசமானவர்கள். அவர்களது உணர்வுகள் நிசமானவை. அதேவேளை அவர்களின் பண்பின் சாதகமான அம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை உத்தமமான பாத்திரங்களே கதையில் உலா வருவதான ஒரு மயக்கத்துக்கு இடமளிக்கின்றன. கதைக்குரிய சமூகச் சூழல் தமிழ் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கம் சார்ந்தது என்ற அளவில் கதைச் சூழலுக்கு அப்பாற்பட்டு முழுச் சமூகமும் சார்ந்த ஆசிரியரின் சமூகப் பார்வையை விரிவுபடுத்த இப்படைப்பு அதிக இடமளிக்கவில்லை. எனினும் மனித நேயம் என்பது கீழ்த்தரமான பொருளியற் கண்ணோட்டத்தை மீறி நிற்க வேண்டும் என்ற பார்வையை நூலில் பொதுவாகவே நாம் காண முடிகிறது.
தரமான ஈழத்துப் படைப்பிலக்கியத்தின் கணிசமான ஒரு பகுதி இன்னமும் நூலுருப்பெறாமலே உள்ளது. அது இன்னும் சில ஆண்டுகளில் நூலுருப்பெறாது போனால் அநேகமாக மறக்கப்பட்டும் இழக்கப்பட்டும் போகும் என்பது உண்மை. இந்த நிலையில் கயிலாசநாதனின் படைப்புக்கள் நூல் வடிவு பெறுவது ஒரு சிறு ஆறுதல். இவ்வாறான முயற்சிகளுக்கு இந்த முயற்சி ஒரு தூண்டு கோலாக இருக்கும் என எண்ணுகிறேன்.
திரு. சி. சிவசேகரம் பேராசிரியர்-இயந்திர பொறியியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்,
vii

Page 7
பதிப்புரை
தினது பல்கலைக்கழக காலத்தில் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், விமர்சனங்கள், தனிக் கவிதைகள், குறுநாவல்கள் என எழுதத் தொடங்கிய "அங்கையன்” கயிலாசநாதன், அடுத்த ஐந்து வருடங்கள் ஈழநாடு, வீரகேசரி ஆகிய இரு பத்திரிகைகளில் துணை ஆசிரியராக வேலைபார்த்தபோது நிறையச் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள், நீண்ட நாவல்கள் என எழுதி, அவை பத்திரிகைகளில் வெளிவந்து இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் இரண்டு ஆண்டுகள் சொந்தமாக ஓர் அச்சகத்தை நடத்திய இவர் சமூகதீபம்’ என்ற சமூக இலக்கிய சஞ்சிகையையும் வெளியிட்டார். ஆகஸ்ட் 1972 இல் இலங்கை ஒலிபரப்புப்கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் நாடகத் தயாரிப்பாளராக நியமனம் பெற்றபின் பெரும்பாலும் நேயர்களைக் கவரக்கூடிய வகையில் நாடகங்களைத் தயாரிப்பதுடன் எழுதியும், சிறப்பு நிகழ்ச்சிகளாக பாட்டிடையுற்ற உரைநடைச் சித்திரங்களையும் சிறப்பாக எழுதித் தயாரித்து வழங்கிப் பாராட்டுப் பெற்றார். ஒரு கவிஞனாகவும் இசையில் ஈடுபாடும் கொண்டு விளங்கிய அங்கையன் பல மெல்லிசைப் பாடல்களை எழுதி அவற்றிற்கேற்ப இசை அமைப்பித்து வழங்கவும் முன்வந்தார். இலங்கையில் மெல்லிசைப்பாடல்களின் மூத்த கலைஞருள் ஒருவராகக் கருதப்படும் இவர் எழுதிய மனதை நெகிழ்விக்கும் மெல்லிசைப் பாடல்கள் இன்றுவரை வானொலியில் ஒலிப்பரப்பப்பட்டு பலரால் ரசிக்கப்படுகிறது.
அங்கையன்’ வாழ்ந்த காலத்தில் வெளிவந்த நூல், 1962 இல் அவர் எழுதிய கடற்காற்று’ என்னும் குறுநாவல் ஒன்று மட்டுமேயாகும். தமிழில் மீனவர் வாழ்வையொட்டி எழுதப்பட்ட முதலாவது நாவலாகக் கூறப்படும் இந்நூல், 1972 இல் அவரால் அவரது சொந்த அச்சகத்திலே அச்சடிக்கப்பட்டு வெளியாகியது.
1976 ஏப்ரலில் தனது 34வது வயதில் அகால மரணமடைந்ததை அடுத்து ‘அங்கையனின் பன்முகப் படைப்புக்கள் கையெழுத்து வடிவிலே முடங்கிக் கிடந்தன. வீட்டில் இருந்த அவரது படைப்புக்களைப் பாதுகாத்து எனது கடமைகளிலிருந்து ஓய்வு பெற்று பணவசதியும் ஏற்படவே அவற்றை ஒவ்வொன்றாகப் பதித்து வெளியிட முன்வந்தேன். தனது ஒவ்வொரு
viii

படைப்பினையும் தனித்தனியே ஒழுங்குபடுத்தி - பொருளடக்கம் எழுத, இரணடுககு அட்டைப்படங்களும் வரைந்து வைத்திருந்த அங்கையனின் எதிர்பார்ப்பு ஏறத்தாழ 25 வருடங்களின் பின் நிறைவேறி அது அன்னாருக்கு ஆத்ம சாந்தி கொடுக்கும் என எண்ணி என் மனம் ஆறுதலடைகிறது. வைகறை நிலவு’ அட்டை போலவே சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்'என்ற நூலுக்கும் அவரே வரைந்து வைத்த வர்ணப் படத்தையே அட்டைப் படமாகப் போடுவதிலும் எனக்கு ஒர் ஆத்மதிருப்தி ஏற்படுகிறது.
2000 ஆகஸ்டில் அங்கையனின் “செந்தணல்” என்ற நெடுநாவலும் பதின்மூன்று சிறுகதைகளடங்கிய அங்கையன் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டன. ஆனால் இவ்விரு நூல்களின் உள்ளடக்கம் ஏற்கனவே அவர் வாழ்ந்த காலத்தில் பத்திரிகைகளில் வெளிவந்து பலரால் வாசிக்கப்பட்டவையாகும். ஆனால் சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்’என்னும் இந்நாவல் 1972 மே மாதம் எழுதி முடிக்கப்பட்டு வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தது. இதுவரை எங்கும் பிரசுரிக்கப்படாத இந்தப் புதிய நாவலை இவ்வளவு காலங் கடந்தேனும் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் இப்படைப்பு மறைந்து போகாது அக்காலத்தின் ஒரு இலக்கியப் பதிவாக அமையும். அத்துடன் கால நீரோட்டத்தில் தாக்குப் பிடித்து இன்று அது எவ்வாறு வரவேற்கப்படுகிறது என்பதையும் அறிய ஆவல் கொண்டுள்ளேன்.
இந்நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்களை எனக்குத் தெரியவேமாட்டாது. இந்நாவலுக்கு அங்கையனைத் தெரியாத ஒருவரிடமிருந்தே முன்னுரை பெற விரும்புகிறேன் என கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. சோ. தேவராஜாவிடம் நான் கூறிய போது, பேராசிரியர் சிவசேகரம் தகுதிவாய்ந்தவர் அவரிடம் பெற்றுத் தருகிறேன் என்று தானாகக் கொண்டு சென்று கொடுத்து அதனைப் பெற்றுத் தந்த பெருங் கருணையை என்னால் மறக்க முடியாது. அவரிடமுள்ளது உண்மையான தமிழ் நெஞ்சம்' என எண்ணி வியந்ததுடன் இப்படியாக மனமுவந்து பணியாற்றும் ஒரு பத்துப்பேர், இருந்தால் கொழும்பில் நிச்சயம் தமிழ் இனி வாழும் என நினைத்து இறைவனை வேண்டிக்
கொண்டேன்.
படைப்பாளி அங்கையனைத் தெரியாது அவரது மனைவியாகிய என்னையும் தெரியாது. இந்த நிலையில் நண்பன் தேவராஜா மூலம் கிடைத்த இந்நாவல்
ix

Page 8
முழுவதையும் வாசித்த பேராசிரியர் சிவசேகரம் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலான ஈழத் தமிழிலக்கியப் போக்குப் பற்றிய தனது கருத்துக்களை மிகத் தெளிவாக இலகு தமிழில் எழுதியுள்ளார். பேராசிரியராகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பொறுப்பு மிக்க பணிகள் மத்தியிலும் அக்கறையுடன் மனமுவந்து இம்முன்னுரை வழங்கியுள்ளதை ஒரு தமிழ்த் தொண்டாகவே கருதுகிறேன். இதனால் அங்கையனையோ என்னையோ தெரியாத ஒருவரைக் கொண்டு, இந்நாவலை மாத்திரம் வாசித்து அதனூடாக வெளிப்படுபவை பற்றி அறிய விரும்பிய எனது எதிர்பார்ப்பும் கைகூடியது இறைவன் திருவருளேயாகும். பேராசிரியர் சிவசேகரம் செய்த இந்த உதவிக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இவரைப் போல, எந்தத் துறையில் உயர்படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றவரும் தமிழன்னையின் வளர்ச்சியில் தீவிர ஈடுபாடும் கரிசனையும் கொண்ட அறிஞர்களின் பங்களிப்பு இன்று எமக்கு மிகவும் தேவைப்படுவது தொன்றாகும்.
திருமதி இராஜலட்சுமி அம்மாள் கயிலாசநாதன்
H 1/2, so J3F Golg5TLĺ LDHlg. கொழும்பு - 04 இலங்கை

சிட்டுக்குருவிகளும் 6) ITT60IDITTIQUID
இறைவா!துன்பப்பட வேண்டும் - மரிப்பதற்கன்று;
ஆனால், மேலும் துன்பப்பட
- பாசியின் புனித மேரிமக்தலேன்.
"நீரும் ஒரு மனுஷனா?”
கோயில் ஐயர் எத்தனையோ கேள்விகளை வந்ததும் வராததுமாகக் கேட்டிருந்தார். அத்தனைக்கும் சட்புட் டென்று ஏதோ தன்மையாகவும், அடக்கமாகவும் பதிலிறுத்த செந்தில்நாதனுக்கு அவர் கேட்ட அந்தக் கேள்விக்கு மட்டும் பதிலிறுக்க முடியவில்லை. அவன் மெளனியாக விருந்தான்.
ஓடிக்கொண்டிருந்த அச்சு யந்திரங்களின் பேரிரைச்சலையும் விஞ்சியது போன்று ஐயர் மேலும் கத்தினார்.
"நீரும் ஒரு மனுஷன் தானா?”
செந்தில்நாதன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு, தன் கைகள் படர்ந்திருந்த அந்த அகன்ற மேசையையும் அதன்மேற் சிதறிக் கிடந்த பைல் கட்டுகளையும், அன்று அங்கு அவன் முன்பாக வந்து குவிந்திருந்த கடிதங்களையும் பார்த்த வண்ணமிருந்தான்.
மேசை விளிம்பிற்கும் அப்பால் ஐயருடைய வேட்டிச் செருகல், அதனுள்ளிருந்து அவர் தோள்வரை பூனூல், அவரின் உத்தண்டமான பேச்சின் விளைவாக எழுந்த மூச்சால் எம்பி எம்பிப் பதிந்த நெஞ்சில் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்த தங்கச் சங்கிலி, அதிலே அலாக்காகத் தொங்கி அங்குமிங்கும் ஆராத்தி எடுப்பது போல் ஆடிக்கொண்டிருந்த பதக்கத்தில் பொறிக்கப்பட்ட முருகனின் தோற்றம் - எல்லாவற்றையுமே விழிகள் வலம் வந்து கொண்டிருந்தன.
அவன் ஐயருடைய முகத்தை மட்டும் பார்க்கச் சக்தியற்றவனாய், பார்த்தால் தன்னிடமிருந்த அந்தச் சொற்ப ஆன்ம பலமுமே போய்விடுமோ என்ற அச்சத்தில், மறுபடியும் மறுபடியும் மேசையிலேயே கண்களை வீழ்த்தியிருந்தான்.
1.

Page 9
அந்த அச்சடிப்பு அலுவலக அறையில் அவனுக்கு முன்பாக உள்ள இரு மூலைகளிலும் தன்னை, தனது அந்த வர்ண அச்சுக் கந்தோரை நம்பி, வேலைக்கென்று வந்திருந்த மானேஜரையும் டைபிஸ்டையும் ஏறிட்டேனும் பார்த்து, "நான் மனுஷன் தானா?” என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா? என்றாலும் அவர்களைப் பார்க்கச் செந்தில்நாதனுடைய கண்கள் கூசின; ஒ! நாணின.
செந்தில்நாதன் என்ன சொல்லப் போகிறான் என்பதில் உள்ளூர்ந்த ஆர்வத்தை விதைத் து, அநாயசமாகத் தேவையற்ற காகிதம் ஒன்றை டைப்ரைட்டரில் பொருத்தி, ஏதோ அவசரமானதும் கவனமானதுமான ஒரு கடிதத்தை மடமடவென அடித்துக் கொண்டிருந்தாள் ரேணுகா. அவளுக்கு அவ்வேளை ஏற்பட்டிருக்கக் கூடிய உணர்ச்சிகள் எங்கோ, யார் மீதோ தீராத வெறுப்பொன்று ஏற்பட்டிருக்கின்றது என்பதைக் கூறாமற் கூறிக் கொண்டிருந்தன.
எதிர் மூலையில் அவனையே பார்த்தபடி அமைந்த மேசைக்கு அப்பால் அவன் வாயிலிருந்து உதிர்வனவற்றை அப்படியே கிரகித்து ஒன்றையுமே தவறவிடாமல் செய்கின்ற மானேஜர் காந்தன், தன் பொறுமைக்குச் சோதனை ஏற்படாமற் காக்க வேண்டுமென்பதற்காக, அப்பொழுதுதான் எழுந்து உள்ளே போனான்.
செந்தில்நாதன் அமர்ந்திருந்த மேசைக்கும், அது நீண்டு முட்டிக் கொண்டிருந்த வாசற் சுவருக்கும் இடையே கம்பீரமாகப் பிணைக்கப்பட்டிருந்த பாபர்சாப்புக் கண்ணாடி, உள்ளே முதலாவது அறையில் நின்று அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த கொம்பஸிட்டர்களின் முகங்களைத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்தது. உள்ளே சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருந்த டியூப்லைட் வெளிச்சத்தில் அவர்கள் எழுத்துக் கேஸில் ஒரு கண்ணும், கண்ணாடி வழியாக வெளியே ஒரு கண்ணுமாக நின்று கொண்டிருப்பது செந்தில்நாதனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
"நீயும் ஒரு மனுஷனா?”
அவனுடைய அதரங்கள் மெல்லச் சொல்லி, தன்னையே கேட்டுப்பார்ப்பதை நன்றாக உணர்ந்தான்.
ஐயர் அந்த நேரத்தில், அந்த இடத்தில் அந்த நபர்கள் முன்னால் அந்தக் கேள்வியைக் கேட்காது, அவனை ஒரேயடியாக உச்சந்தலையில் இரும்புத் துண்டத்தால் ஓங்கியடித்திருந்தால் அவன் நிம்மதியாக, மனதார அதனை ஏற்று, அன்றுடனே நித்திய போராட்டத்துக்காகப் பிறந்த தன்னை, தனது வாழ்வை, அந்த நபுஞ்சுக வாழ்வை ஒட்ட வேண்டுமென்பதற்காகத் தான் படாதபாடுபட்டு மேற் கொண்ட தொழிலை முடித்திருப்பான்.
ஆனால்?
ஐயர் கேட்ட அந்தக் கேள்விக்கு அவன் வாய் திறந்து எதுவுமே கூறவில்லை. மனுஷன்' என்றால் எப்படியாம் அடையாளங் காண்பது? இரண்டு கைகள், இரண்டு கால்கள், பேசும் சக்தி - இவையோடு இன்னும் சில இருந்தால்
2

மட்டும் மனிதர்களாகிவிட முடியுமா?. கண்களா - ஓ! அவை ஆந்தைக்கும் உண்டல்லவா? காதுகளா - அவை யானைக்கும் உள்ளனவே! வாயா - அது நாய்க்கும் மட்டும் இல்லையா? அப்படியானால் மனிதன் என்பவன் பேசுபவன் என்று அர்த்தமா? கிளியும் தானே கற்றுக் கொடுத்தால் பேசுகிறது; அதனால் கிளி மனுஷனாகிவிட முடியுமா?
“என்ன சார்! என் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருக்கிறன் நான். நீர் பேசாமலிருக்கிறீரே வாங்கிய கடனை, அதுகும் கேவலம் ஒரு முந்நூறு ரூபாக்கள்சை கொடுக்க வக்கில்லாத நீர் . ஒரு மனுஷனா சொல்லும் காணும்"
செந்தில்நாதன் பேசவேயில்லை. அவனுடைய அடிமனதில் கேள்வியலைகள் கெம்பி எழுந்து கொண்டீந்தன. பணம் இல்லாதவன் மனுஷன் இல்லையா? அவனுக்குமானம் உணர்ச்சி ரோஷம் வெட்கம் என்ற இவற்றில் ஏதேனும் ஒன்று கிஞ்சித்தும் இருக்க மாட்டாதா? அப்படியானால். . . . . . . எனக்கு?
கைகள் இரண்டையும் தாடையுடன் சேர்த்து, விரல்களால் முகவாயை மூடியபடி, அச்சுக்கூட வாசல், அதன் வெளியே அங்குமிங்கும் சென்று கொண்டிருக்கின்ற வாகனங்களின் சில்லுகள், மனிதர்களின் கால்கள், அராபிய முறைப்படி போடப்பட்டிருந்த அந்தக் கங்கிறீட் வீதியிலிருந்து விலகிச் சிதறுண்டு கிடக்கும் கருங்கற்கள் இவற்றை மாறிமாறி வெறித்துப்பார்த்த வண்ணமிருந்தான், செந்தில்நாதன்.
தன்னையும் மீறி, சிங்கம் போற் கர்ஜிக்கும் தனது வாய், அனுமதியின்றித் தனக்குத் தெரிந்த பதிலாக, "ஆமாம்! நானும் மனுஷன் தான், ஐயரே! உமக்குத் தெரியாத ஆகமம் எல்லாம் அறிந்திருக்கிறேன். நீர் பூஜை செய்யும் கிரந்தமென்ன - அதன் தோற்றம் வளர்ச்சித் தன்மையெல்லாம் கற்றிருக்கிறேன். இந்த அச்சகத்தைத் திறக்குமுன், ஏன் உம்மிடம் கடன் வாங்குமுன் நான் மனுஷனாகத்தான் இருந்தேன். இப்பொழுது மட்டும் நானும் மனுஷன் தானா என்று நீர் கேட்டதும் தான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது" என்று சொல்லிவிடக் கூடாதே என்பதற்காக அவன் மறுபடியும் மெளனியாகவிருந்தான்.
“பேசமாட்டீரா?” ஐயர் கறுவினார். “பேசுறேன். கொஞ்சம் டயம் வேண்டும்?” அவன் எங்கோ . . . . .? பார்த்தபடி கூறினான். “எதுக்கு.? நீர் பேசறதுக்கா. இல்லை பணங் கொடுப்பதற்கா?” “எல்லாவற்றுக்குமே! எனக்குக் கொஞ்சஅவகாசம் வேண்டும்”
3.

Page 10
“ஆகா! என்ன பேச்சு என்ன பேச்சு? பணத்தை அதுகும் வட்டியும் இல்லாமல், குட்டியும் இல்லாமல் வாங்கிய பணத்தைக் கொடுக்கிறதுக்கு எவ்வளவு பஞ்சி. அந்தப்பணம் இப்போ இல்லை; சாவகாசமாகக் கொடுக்கலாம் என்கிறதுக்கு காசு வேறை கொடுக்க வேணும் போலக் கிடக்குதே”
ஐயர் செந்தமிழ்க் கொச்சையில் அவனைக் கேலி செய்தார்.
அழாக் குறையாகத் தலை கவிழ்ந்தான் செந்தில்நாதன். அவனுடைய அந்த நேரத்து உள்ளத்துணர்ச்சிகளை, அவை வெந்து பொடியாகிக் கொண்டிருக்கின்ற கோரக் காட்சியை எந்த மனிதக் கண்ணும் பார்க்கவோ, எந்த மனித நெஞ்சமும் உணரவோ சக்தியற்றிருந்தன.
உள்ளே சென்ற காந்தன் திரும்பவேயில்லை. முன்புறமாகச் சிலையாக இருந்து, விரல்களை மட்டும் அசைத்து டக்கு டக்கு என்று அவன் உள்ளம் சுக்கு நூறாகிக் கொண்டிருக்கும் ஒலி போன்று டைப் செய்துகொண்டிருந்தரோணுகாவும் அவனை ஒரு முறையேனும், ஒரேயொருமுறையேனும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
அவர்களும்என்னதான் அவனைப்பற்றிநினைத்துக்கொண்டிருக்கிறார்கள்?
ஐயருக்குப் பொறுமையில்லை என்பதை அவன் மேசை முன்பு பரவிக் கிடந்த பைல்களில் ஒன்றை எட்டி எற்றிவிட்டதன் மூலம் காட்டினார். அந்தப் பைல் அவனுடைய அந்த மேசையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்த மைப்புட்டியை அலமலக்காக எற்றிவிட்டு, அந்த மைப்புட்டி இருந்த இடத்தையும், அதனுள் இருந்த சிவப்பு, கறுப்பு மைகள் சிந்திய தூரத்தையும் மறைத்தபடி ஆறிக்கிடந்தது.
செந்தில்நாதன் தன் மேற்சட்டை, காற்சட்டைகளில் மைத்துளிகள் கோரமாகவும், கேவலமாகவும் தெறித்த பொழுதும், உணர்ச்சி வசப்பட்டோ, நிலைதழும்பியோ எழவுமில்லை; அல்லது ஐயரை எட்டிப் பிடித்து, தன் வாலிபம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று காட்டவும் இல்லை. வெள்ளை வெளேரென்று காலையில் வரும்பொழுது அவன் அணிந்து வந்த அந்தச் சோடி உடுப்பு, செம்புள்ளி கரும்புள்ளி குத்தியது போல் காணப்பட்டது. பாக்கட்டில் இருந்த கைக்குட்டையை மெல்ல இழுத்து, தன் முகத்தில் மூக்கோரமாக வழிந்து கொண்டிருந்த மையைத் துடைத்து விட்டான் அவன். அப்படித் துடைக்கும் பொழுது, கண்கள் அந்தக் கைக்குட்டையை இலேசாகப் பார்க்கவே செய்தன. யாரோ, ஏன் ஐயரே ஓங்கி அறைந்ததால் மூக்கணாங்கொழுந்து உடைந்து இரத்தப் பெருக்கெடுப்பது போல் இருந்தது அந்தக் காட்சி.
ஐயர் வெலவெலத்துப் போனார்!
அவர் வந்ததும் வராததுமாக “அமருங்கள்”என்று அவன் அன்போடு உபசரித்ததை ஏதோ பசப்பு வார்த்தைகளால் தன்னை மருட்டி வெறுங்கையுடனேயே மறுபடியும் அனுப்பப் போகிறான் என்று சந்தேகப்பட்ட அவர், கதிரையைக் காலால் அரக்கி அப்பால் இட்டுவிட்டு அந்த வெற்றிடத்தில் நின்று கொண்டேயிருந்தார்.
4.

செந்தில்நாதன் மிக்க அமைதியுடன் “அமருங்கள்” என்றான். “தம்பீ. ”என்ற நடுங்குகின்ற குரலுடன், அவன் முன் தாள் பணியாத குறையில் நின்று கொண்டிருந்தார் ஐயர்.
“பறுவாயில்லை! அமருங்கள்” “தம்பி” “காரியமில்லை. எதிர்பாராமல் நடந்துவிட்டது. அதற்காக நான் கோபிக்க முடியுமா? நீங்கள் உங்களுக்கு வந்த கோபத்தால் பைலை மட்டுமே தட்டி விட்டீர்கள். அது மைக்கூட்டில் படும் என்றோ, அல்லது அப்படிப் படவேண்டுமென்றோ நீங்கள் எதிர்பாக்கவில்லையே! அவன் சொல்லி முடிப்பதற்குள், “இல்லை தம்பி இல்லை இல்லவேயில்லை” என்று மறுத்தார் ஐயர்.
அவன் தொடர்ந்து கூறினான். "அப்படி என் மீது மிக அசிங்கமான முறையில் மை படும் என்று நீங்கள் எதிர்பார்க்காதது எவ்வளவு எதிர்பாராத ஒன்றோ, அதே போல நானும் இந்த அச்சுத் தொழிலால் பல பிரச்சினைகளுடன் என் வாழ்க்கைப் பிரச்சினையையும் தீர்க்கலாம் என்றுதொடக்கி,அது இப்பொழுது நடக்காமற்போனது எதிர்பாராத ஒன்று, நாங்கள் எதிர்பார்க்கிறபடி எல்லாமே நடந்தால், அதோ நான்கு கட்டிடங்கள் தள்ளினாற் போல் இதே வீதியில் கோயில் ஒன்று இருக்கிறது. அங்கே தெய்வம் என்று முருகன் இருக்கிறானே! இங்கு தெய்வத்துக்கு என்ன வேலை? காட்டி மறைப்பதும், கொடுத்துப் பறிப்பதும் தெய்வம் செய்யும் சின்ன விளையாட்டுக்கள்.
"நான் அமரும்படி கேட்டும், நீங்கள் அமராததும் ஒரு பிராப்தம் தான். வைதிகப் பார்ப்பானர் ஒருவருக்கு நான் இருந்து கொண்டே பதில் சொல்ல எனக்கு இறைவன் பணித்திருக்கின்றான். இல்லை இல்லை. நீங்கள் நின்று பதிலிறுக்க வைத்துள்ளான் அந்தக் கடவுள். . . . . இது எவ்வளவுக்கு எதிர்பாராத ஒன்று தெரியுமா?”
“இல்லைத் தம்பி இல்லை. ” ஐயர் கூறியபடி நாண உணர்வுடன் கதிரையை இழுத்துப் போட்டவாறு அமர்ந்தார். செந்தில்நாதன் மெல்லச் சிரித்தான்! “துன்பத்திலும் சிரிக்கிறீங்களே தம்பி?” “அது மிகக் கஷ்டமான கல்வி. அப்படிச் சிரிக்கப் பழகிவிட்டால், நாளடையில் நமக்கே இன்பம் எது, துன்பம் எது என்று தெரியாமற் போய்விடும். பின்னர் பிரச்சினைகள் என்பனவே இருக்க நியாயமில்லை. ஆசை இருக்கிறதே. அதுதான் துன்பத்தின் தாய். அதுதானோ என்னவோ? ஆசையைக் கொன்றுவிடு; இல்லையென்றால் என் ஆவியைப் போக்கி விடு' என்று பாடியிருக்கிறார்கள்.
"சே! அப்பிடியெல்லாம் செய்து விடாதீங்கதம்பி. நீங்க படிச்சவங்க. நல்லா வாழ வேணும். சாகிற நோக்கம் வேண்டவே வேண்டாம்"
5

Page 11
ஐயர் அவன் கூறியதில் முழுதும் விளங்காமல் பதறிபடி கூறினார். 'உம் உங்களுடைய காசைக் கொடுக்கும் வரைக்கும் நான் சாகமாட்டேன்”
“ஏதோ என் கோபம் போயிட்டுது. உங்களுடைய குணத்துக்காக. உம் அதை நினைச்சுத்தான் நம்பிக்கையோடு போறன். கெதியிலை காசை அனுப்பிப் போடுங்க. நான் வாறன்...”
ஐயர் விறுவிறென்று வெளியே வீதியில் விழுந்து, போய்க் கொண்டிருந்தார். செந்தில்நாதன் அவருக்குச் சிரித்தப்படி விடை கொடுத்து அனுப்பிவிட்டு, மறுகணம் முகமெல்லாம் விகாரப்பட்ட குரூபியாக மாறினான்.
அவனுடைய மேசையில் இருந்து பளபளத்த 'பெல்" லை ஒரு முறை அமுக்கிவிட்டு, பாக்கட்டில் இருந்த பர்ஸைத் திறந்து, போனவாரம் கொடுத்து, இன்னமும் எடுக்காதிருந்த லோண்டரி உடுப்பு ரஸிதைத் தேடி, உடுப்புகள் எடுக்க வேண்டிய திகதியைப் பார்த்தான்.
அவனுக்கு ஓரளவு திருப்தி அழைப்புச் சத்தங்கேட்டு வந்த பையனிடம் அந்த ரஸ்து, அதற்குரிய பணம் யாவற்றையும் கொடுத்து உடுப்புக்களை எடுத்துவரும்படி கூறிவிட்டு, உள்ளே நடப்பவற்றைக் காட்டிக் கொண்டிருந்த கண்ணாடியில் முகம் புதைத்திருந்தான் செந்தில்நாதன்.
கொம்பஸிட்டர்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கும் அப்பால் உள்ள இரண்டாவது அறையில் அவனுடைய மூன்று மெஷின்களில் இரண்டு நிரந்தர துக்கம் கொள்ள, ஒன்று மட்டும் பேரிரைச்சலுடன் வேலை செய்து கொண்டிருந்தது. அப்பொழுதே உள்ளே சென்ற காந்தன் இரண்டு அறைகளையும் தொடுத்த நிலையில் சாய்ந்தபடி, கூரைக்குள் வெளிச்சத்துக்காகப் பொறித்த கண்ணாடியினூடாக வானத்தை வெறித்தபடியே நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அந்த அச்சகத்தில் அதிகாரங்கள் நிறைந்த மானேஜர் பதவி கிடைத்தும் ஒரு சிறு பையனின் வேகத்தில் அதிர்ச்சியால் உணர்ச்சிமயமாகி வெறித்துக் கொண்டு நின்றதை, செந்தில்நாதன் நன்கு அவதானித்தான்.
முன்பாக எதிர்ப்புறம் பார்த்து டைப்ரைட்டரின் ஸ்பேஸ் தட்டின் மீது கைகளை அழகாகப் பதித்து, குனிந்த தலைநிமிராது இருந்த ரேணுகாவையும் உற்றுப் பார்த்தான் அவன்.
அவளும் எதையோ, யாரையோ எதற்காகவோ பறிகொடுத்தவள் போல இருந்தது அவனுக்கு என்னவோ போலிருந்தது.
குற்றம் புரிந்துவிட்ட எனக்குக் கிடைத்த தண்டனைக்காக இவர்கள் ஏன் கலங்க வேண்டும்? இவர்கள் உண்மையிலே கலங்குகிறார்களா? அல்லது.
அல்லது.

அல்லது. இப்படியொரு அவமானத்தை இலேசாக மிக மிக இலேசாகத் தாங்கிக் கொண்டிருக்கும் என்னைக் கேவலமாக எண்ணிப் புளுங்கிக் கொண்டிருக்கிறார்களா?
மெளனம் எத்தனை பொருளுடையது? பேசாமல் கலங்குபவர்களிலும் பார்க்க, ஒப்பாரி வைத்து அழுபவர்களின் நோக்கம் எளிதில் புரிந்து விடுமல்லவா? கேட்டுவிட்டால், . கேட்டுவிட்டால் உண்மையில் இவர்களுடைய மெளனம் எதற்காக என்பது தெரிந்து விடாதா?
செந்தில்நாதன் கண்ணாடியையும் ரேணுகாவின் ஒருபக்கமாகத் தெரிந்த அந்த முகத்தையும் மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வெளியே லோண்டரிக்குப் போன பையன் ஒரேயொரு சேட்டுடன் மட்டும் வந்து “களிசான் இன்னும் அயேர்ன் பண்ணல்லையாம் ஸார்! அப்புறமாக எடுத்துக்கலாமாம்" என்றபடி, சேட் பார்சலை மேசைமீது வைத்துவிட்டு, அவன் கொடுத்தனுப்பியிருந்த ஐந்து ரூபாவையும் அப்படியே மேசைமீது வைத்தான்.
நல்ல வேளையாக அது ஒரு புஷ்சேர்ட்டாக இருந்தது. “பறுவாயில்லை நீபோர்”என்று கூறி பையனை அனுப்பி விட்டு, “எக்ஸ்கியூஸ் மீ, ரேணுகா என்றபடி, அவளின் பதிலுக்கோ, எந்தவித முகபாவத்துக்குமோ காத்திராது, இருந்த படியே இருந்து கொண்டு மை தோய்ந்த தனது சட்டையைக் கழற்றி மேசைமீது வைத்துவிட்டு, அந்த புஷ்சேட்டை மாட்டிக் கொண்டான். இடுப்பின் மேற்பாகம் மட்டுமே காற்சட்டையில் மையூறியிருந்ததால், அந்த ஒரே சேர்ட் மட்டும் அவனுடைய மானத்தைக் காக்கப் போதுமானதாகவிருந்தது, அவனுக்குத் திருப்தியளித்தது. மாலையில் பஸ்ஸில் போகும் பொழுது யாரும் அவனைப் பெரிதாக நோட்டம் விடமாட்டார்கள் என்ற சந்தோஷத்திலும் இருந்து மனம் விடுதலையானதும், மெல்ல எழுந்து உள்ளே சென்றான்.
ஒடுக்கமாக, ஆனால் நீண்டு அறைகளால் தொடுக்கப்பட்டு, அடியில் ஒரு பாக்கிங் அறையுடனிருந்த அந்த அச்சகத்தின் கோடியில் உள்ள 'பைப்பில் கையாலேயே நீர் மொண்டு அவன் தனது முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தான். பின் பக்கமாக உள்ள வெளியில் வீசிய காற்றும், பாக்கிங் பேப்பரில் பேக்குகள் ஒட்டிக்கொண்டிருந்த பெண்கள் சிலரின் சிரிப்பொலியும் அவனை வேறு, வேறு உணர்ச்சிகளில் அடிமை கொண்டன.
வழமையில் அவன் உள்ளே உலா வருகின்றான் என்பதைக் கண்களாலும், ஒருத்தி மற்றவளின் தொடையில் கிள்ளியும் "உஸ்” என்று ஒலியெழுப்பியும் அவன் வருகையைத் தெரிவிக்கும் அந்தப் பெண்கள் அவன் அங்கு நிற்கும் பொழுதே, அடக்கமின்றித் கொல்லென்று சிரித்தது அவனுக்கு என்னவோ போலப்பட்டது.
அந்தப் பெண்களை ஒருமுறை நாசித் துவாரங்கள் அகல,விழிகளை வீசிப் பார்த்துவிட்டு, அவன் தனது காற்சட்டையையும் இரகசியமாகக் குனிந்து பார்த்தான்.
7

Page 12
உள்ளேயிருக்கக்கூடியமைத்துளி அடையாளங்களை, அணிந்திருந்த சட்டை நன்கு மறைத்திருப்பதைக் கண்ட திருப்தியுடன், தனக்கு மை வீசப்பட்டதற்காக அவர்கள் சிரிக்கவில்லை என்ற முடிவுடன் உள்ளே வந்து, அந்தச் சுழல் கதிரையில் அமர்ந்தான். மேசையிலிருந்த பெல் இரண்டு தரம் அலறி ஓய்ந்தது. பெல்லின் சமிக்ஞையின் பிரகாரம், பேப்பர் பாக் ஒட்டும் பெண்களுக்குப் பொறுப்பான ஒருத்தி அவன் முன் வந்து நின்றாள்.
அவளுடைய முகம் கறுத்திருந்தது “என்ன நடக்கிறது?” “ஒட்டுறாங்க” தமிழ் தெரிந்த அந்தச் சிங்களப் பெண் லதா அணிந்திருந்த சேலையின் முந்தானையை இரண்டு கைகளிலுமிட்டு உருவியபடி கூறினாள்.
“சிரித்து விளையாடுறாங்க என்று சொல்லுங்கள்" “இல்லே! அது நீங்க வந்தப்போ சுமணா உஷாராக இருக்கறத்துக்காக வாங்கைவிட்டு எழும்பினா. மத்தவ விழப்பாத்தா. அதான்”
“உம். . . . . உம். . . . . ஒருவர் விழுகிறதையோ, விழப் பார்க்கிறதையோ பார்த்துச் சிரிக்காதீர்கள். அது என்றோ ஒரு நாள் உங்களையே நீங்கள் பார்த்துச் சிரிக்க வைக்கும். ஊர் உலகம் எல்லாமே சிரிக்க வைக்கும். நீங்கள் போகலாம்"
அவள் பயத்துடனும் பக்தியுடனும் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
மெஷின் ஒடிக்கொண்டேயிருந்தது. சுவரிலிருந்த கடிகாரமும் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. அந்த உயிரற்றவற்றின் சத்தங்களைத் தவிர வேறு எதுவுமே அந்த அச்சுக் கூடத்தில் கேட்கவில்லை.
செந்தில்நாதன் உள்ளே பின்புறமாகச் சென்றதும், காந்தன் தனது ஆசனத்துக்கு வந்துவிட்டான். அவனைப் பார்த்த செந்தில்நாதன் சொன்னான், “காந்தன்! இங்கே வாரும். இதென்ன காகிதங்கள் எல்லாவற்றையும் திறந்து பாரும்" காலையிலே வந்திருந்த அந்தக் கடிதங்களை உடைப்பதற்கு அப்பொழுதுதான் நேரம் கிடைத்ததை நினைத்து, கைக்கடிகாரத்தைப் பார்த்தான் செந்தில்நாதன்.
மணி பன்னிரண்டாகியிருந்தது இன்னும் அரை மணியில் சாப்பாட்டு வேளை நினைத்துப் பார்த்தான் அவன்.

2
கிந்தன் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து விரித்துவைத்தான். சில காசோலைகளாகவும், கேள்விப் பத்திரங்களாகவும், வேறு தகவல் தாள்களாகவும் காணப்பட்டன. வங்கியிலிருந்து வந்திருந்தவற்றைத் தனியே கையில் எடுத்தப்படி, "ஒ திரும்பி வந்துவிட்டதா? காந்தன் இந்த செக்குக்கு உடன் பணம் அனுப்பும்படி 'கோல் போட்டுச் சொல்லும்.” ரேணுகா - "இந்த ரென்டர் செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம் என்று அடித்துத் தாருங்கள்" என்றபடி பெல்லை அடித்தான் அவன். “யெஸ் ஸார்” என்றபடி முன் வந்த பையனைப் பார்க்காது - கடிதங்களிலிருந்து விழிபெயர்க்காமல்-“எனக்கு ஒரு டிகொடு. இந்தக் கடிதத்தை டைப்பிஸ்டிடம் கொடு. இதுகளை அந்த மேசையில் வை” என்று கொடுத்து விட்டு, பர்சைத் திறந்து நாணயம் ஒன்றையும் எடுத்து மேசையிலிட்டான்.
மேசையின் விளிம்பில், டெலிபோனுடன் அடுக்கப்பட்டிருந்த பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான். செந்தில்நாதன் கடந்த வாரம் வெளியான வாரமஞ்சரியில் அவனுடைய சிறுகதை ஒன்று வெளியாகியிருந்தது. அதை மிக்க ஆவலோடு தனது கதைதானா? என்று அடையாளங் காண்பதில் ஈடுபட்டான். மேலோட்டமாக ஒவ்வொரு கலத்தையும் பார்த்துவிட்டு, அந்தக் கதைக்குப் பத்திராதிபரின் கற்பனைப்படி ஒவியர் வரைந்த படத்தைச் சற்று உற்றுநோக்கினான்.
ஓ! இங்கும் நுணுக்கமாக வரையக்கூடிய ஓவியர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பில் முறுவலித்தபடி, அந்தப் பத்திரிகையை மடித்து டிராயருக்குள் திணித்தான். அன்றைய தினசரிகளையும் செய்திகளுக்கு ஏற்றாற் போல் தங்கித் தடங்கி வாசித்து ஒவ்வொன்றாக மேசையில் இட்டான். அந்தப் பத்திரிகைகள் அடிக்கடி வரும் செய்திகளுடன், “காசோலை மோசடி தொகை அதிகரிப்பு" என்ற செய்தியுடன் தன்னை மறந்து, துணுக்குற்ற நிலையில் சிறுபொழுது கழித்தான் அவன்.
அன்று அவனுக்கு கோட்டையிலுள்ள ஒருவர் கொடுத்திருந்த காசோலை திரும்பி வந்திருந்தது. அவன் மட்டும் என்ன? இப்படியான காசோலைகளை நம்பி தனது காசோலையை எழுதிக் கொடுத்துவிட்டு, என்று "அக்கவுண்ட் குளோஸ்ட்” என்ற மகத்தானமுத்திரையுடன் கடிதம் வருமோ என்று காத்திருக்கிறான்.
இன்றைய நிலையில் அப்படியொரு கடிதம் என்றும் வரலாம் வரட்டுமே “ரேணுகா !” கோட்டைக் கடைக்காரர்காந்தனை வரும்படி தொலைபேசியில் அழைத்ததும், அவன் சொல்லிவிட்டு வெளியே போனதும் கூப்பிட்டான் செந்தில்நாதன். “உம்" என்றபடி அவனருகில் எழுந்து வந்து அழுவாள் போல நின்றாள் ரேணுகா.
s

Page 13
காலையிலிருந்து எந்தவித அசம்பாவிதமும் நடக்காதது போல எவ்வளவு நிர்மலமாக இருக்கிறது இவருடைய முகம்? என்று ஒரு புறம் தன்னுள் வியந்தபடியும், ‘எப்படி இருக்க வேண்டியவர், இப்படி ஆயிட்டாரேட் என்ற வேதனை மறுபுறமும் அவளை உலுப்ப, அவனுடைய மேசையுடன் தனது இடையை வழமை போல் உராய்த்தபடி நின்ற அவளை, முகம் கொடுத்துப்பார்க்காமலே"இந்த ரென்டர்களைக் கணக்குப் பாருங்கள்” என்று நீட்டினான்.
ரேணுகா நீண்ட தாள்களாக இருந்த அவற்றை இரண்டு கைகளாலும் நீட்டி வாங்கும்பொழுது, அவளைப் பார்க்காத அவனுடைய கையையும் வாங்குபவள் போலப் பற்றி, பின்னர் தானே நகர்த்தி, அந்தத் தாள்களுடன் தன் இருக்கைக்குச் சென்று, இருந்த இருப்பிலே அவனை ஏதோ விதமாகப் பார்த்துவிட்டு, வேலையில் மூழ்கினாள். ‘எல்லாம் முடிந்து விட்டது' என்ற நினைப்பில் கதிரையின் மேற்புறம் கம்பீரமாகச் சாய்ந்து, நிலத்தில் கால்கள் பின்னியவாறே ஊன்றி, அந்தக் கதிரையைச் சுழற்றிப் பார்த்தான்.
அவனுடைய ஒருவகைக் கண்களால் - உணர்ச்சிகளற்றவை போல, இறந்த ஆட்டின் கண்களை அப்படியே எடுத்து ஒட்டி வைத்தாற் போல - தோற்றும் கண்களால் அவன் பார்க்கும் பொழுது அவற்றை யாராலுமே நேராகச் சந்திக்க முடியாதிருக்கும் உண்மை, அவனைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் வெளிச்சம்.
ரேணுகா யாழ்ப்பாணத்தின் ஒரு கோடியிலிருந்து, கொழும்புக்கு வந்து அவனுடைய அச்சகத்தில் கொடுக்கப்படும் இருநூறு ரூபா சம்பளத்துடன் கொழும்பு வாடகை, வாழ்க்கைச் செலவு என்றெல்லாம் பார்த்து, தனக்கும் தன்னை நம்பியிருக்கும் ஊரில் உழைப்பற்ற குடும்பத்துக்கும் வாழ்க்கையை யோட்டத் துடுப்பாக நிற்கிறாள்.
அவளுடைய கோலம் முழுவதும் அவன் கண்களில் விழுந்ததும், இன்று மட்டும் அவளைப் புதிதாகக் கண்டவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் செந்தில்நாதன்.
சிவந்த மேனியும், மெல்லிய ஆனால் அளவான தோற்றமும், இருந்து டைப் அடிக்கும் பொழுது டைப் ரைட்டருடன் முட்டக்கூடிய பார்பகங்களும், இறுக்கமான ஆனால் மென்மை நிறைந்த கைகளும், அவனிடம் வேலைக்கென்று வந்து பிறகு ஒவ்வொன்றாகச் சேர்த்து அணிந்துள்ள தங்கச் சங்கிலி,காப்புகள்,தங்கக் கடிகாரம் - இவை தாம் அவளுடைய சொத்துக்கள். அவள் எளிமையில் செம்மையானவள் என்பதற்கு எந்தவித ஆடம்பரமுமின்றி இயற்கை அவளுக்குக் கொடுத்தவற்றுடன் திருப்தி கண்டு, தன்னை அலங்கரித்திருந்தாள்.
அவள் அவனிடம் வேலைக்கு வந்து இன்று இரண்டாண்டுகளும் ஆகப் போகின்றன. இதுவரையும் அவளுடன் நிதமும் பழகுவதாலும், பேசுவதாலும் அவள் தன் பராமரிப்புக்கு உட்பட்டவள் என்றும், சகோதரி போன்றவள் என்றும் எண்ணிக் கொண்டான்.
1

பகல் போசனத்துக்காக எல்லோரும் தின வரவில் கையெழுத்திட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். தூரத்திலிருந்து சாப்பாட்டுடன் வரும் இரண்டொரு சிங்களத் தொழிலாளர்களைத் தவிர, செந்தில்நாதனும் ரேணுகாவுமே அங்கிருந்தனர்.
பதினைந்து நிமிடங்கள் மெளனமாகக் கழிந்தன.
செந்தில்நாதன் கேட்டான்.
ரேணுகா! நீங்கள் சாப்பாடுகொண்டு வரவில்லையா? கடையில் எடுப்பித்துத் தரட்டுமா?”
கொண்டு வந்தனான்” - கவிந்தபடி கூறினாள் அவள்.
“சாப்பிடவில்லையா?”
ee s
“பசிக்கயில்லை”
"அதாலென்ன? பசிக்கும் போது சாப்பிடக் கிடைக்காது. மற்றவர்கள் வந்து விடுவார்கள்”
“மனமில்லை”
'வயிற்றுப் பசிக்கும் மனப்பசிக்கும் சம்பந்தமில்லை ரேணுகா"
“என்ன சொல்லுறீர்கள் ?”
“மனதிலே பட்டதை...”
“அதுசரி நீங்கள் சாப்பிடப் போகவில்லையா?”
“எங்கே போறது?”
“இவ்வளவு நாட்களும் போன இடத்துக்குத்தான்!”
"நான் சாப்பிட விரும்பவில்லை" - அவன் வெறுப்போடு கூறினான்.
கேவலம் இந்த வயிற்றை வளர்க்கத்தானே மானம் மரியாதை படிப்பு எல்லாவற்றையும் விற்று இந்தத் தொழிலைத் தொடங்கினேன். பரோபகாரம் தந்த தண்டனை நான் இன்று கடன்காரன்’ தன்னுள் நினைத்து உயிர் துடித்தான் செந்தில்நாதன்.
அவனுடைய மெளனத்தைக் கலைத்து அவள் கேட்டாள். அது அவனைத் தூக்கிவாரிப் போட்டது. நான் சொல்கிறனே என்று கோபிக்காதீர்கள். எனக்குப் பட்டதையே சொல்கிறேன்.
ரேணுகா தயங்கித் தயங்கி சொன்னாள். நீங்கள் பேசாமல் வேறு ஏதாவது வேலைக்குப் போய் விடுங்களேன். பிஸினஸ் என்றால் பிஸினஸ்ஸாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்றால் எப்படி வாழ்க்கையாக இருக்க வேண்டுமோ - அப்படி
w &
“என்னை மன்னித்து விடுங்கள்” ஸார். நான் என்னுடைய வசனங்களாக இவற்றைச் சொல்லவேயில்லை. நீங்களே உங்கள் கதையொன்றில் இப்படித்தான் எழுதியுள்ளீர்கள்"

Page 14
ரேணுகா அழுது விடுவாள் போன்றிருந்தது. அவன் சற்றுக் கடூரமாக அவளுடைய பெயரைக் கூவி அழைத்தது அவளுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
அவன் கூறினான். ஓ! அதுவா? எழுத்தும் வாழ்க்கையும் அதிகமாக ஒட்ட மாட்டாதவை ரேணுகா!” நான் இராமாயணத்தை எழுதினால் எப்படி இராமனாக முடியாதோ அப்படி. இராமன் பேசுகிறான் என்பதை நான் எழுதினால், அது அவன் பாத்திரப் பண்பு அதனை எழுதும் பொழுதுமட்டும் நான் இராமனாகின்றேன். பின்னர் அல்ல" அவன் கூறிவிட்டு,சற்றுநிதானமாக அவளைப்பார்த்தான்.கைகள் இரண்டையும் ஒன்றுடனொன்றாகப் பின்னி, தாடையைத் தாங்கி வாயை மறைத்துக் கொண்டு அவன் பார்க்கும் அவனுக்கே சொந்தமான அந்தப் பார்வையை எதிர்நோக்கச் சக்தியற்றவளாக ரேணுகா தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
“இந்த அச்சகத்தை எவ்வளவு சிரமப்பட்டுத் திறந்து இவ்வளவுக்குக் கட்டியெழுப்பியிருக்கிறேன். திறப்பதற்கு எவ்வளவு சிரமமோ, அவ்வளவுக்கு இலகுவானது மூடுவது மூடுவது பெரிதல்ல...... மூடினால். . . . . . ? என்பதுதான் பெரிய விஷயம்"
"மூடினால். ?"அவள் கேட்டாள். “இங்கு வேலை செய்கின்ற பதினாறு பேரும் பதினாறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அந்தப் பதினாறு குடும்பங்களின் குறைந்தது பத்து இந்த அச்சகத்தை நம்பித்தான் பிறந்திருக்கின்றன. இங்கு வேலைக்கென்று வந்திருக்கின்றன.
"நானுந் தான். "இப்பொழுது சொல்லுங்கள்! மூடினால். ரேணுகா மெளனியானாள். அவள் சென்று தனது இருக்கையிமலர்ந்ததும், அவன் அவளையே வைத்தவிழி வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான்.
மூடினால். . . . . . ஏற்பட்டுக்கொண்டே போகும் நட்டத்தை ஈடு செய்ய முடியாமல் கடன் தொல்லைகளால் படும் அவமானத்திலும், மூடியாயிற்று' என்ற ஒரேயொரு அவமானம் பெரிதாகுமா?
இப்படியொரு வேலைத் தலத்தைத் திறப்பதென்றால் சாமான்யமான காரியமா? அவருக்கு இவருக்கு என்று அஞ்சி ஒடுங்கி மாற்றார் வேலைத்தலத்தில் வேலை செய்வதிலும், குறைவானதா?
“ரேணுகா” அவன் ஏதோ யோசித்தவாறே கனவிடையே குரல் கொடுப்பவன் போல, அழைத்தான்.
“உம் "அவளுடைய மெல்லிய கீதமொழி மெல்லவே புறப்பட்டது. te
y
2

“என்ன ?"அவள் கேட்டாள். “அழைத்துவிட்டுப் பேசாதிருக்கிறீர்கள்"
“உம் ஒன்றுமில்லை” செந்தில்நாதன் ஏதோ சொல்ல வாயெடுத்தவன், எதையோ நினைத்தபடி சொல்லி முடித்தான். “பறுவாயில்லை. நீங்கள் சரியாகக் குழம்பிப் போயிருக்கிறீர்கள். எதைச் சொன்னாலும் நான் தாங்கத் தயார்! நீங்கள் கவலைப்படாதீர்கள்”
"ரேணுகா...!" அவளுடைய அந்த அன்பு கலந்த உறுதி மொழிகளைக் கேட்ட செந்தில்நாதன், அன்பு பொங்க அழைத்தான்.
“சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள்”
“நான் . . . . . நான் இந்த பிறஸை மூடுவதானால், என் வாழ்க்கை புதியதொரு பாணியில் புதியதொரு வேகத்தில் பழையபடி தொடர வேண்டும். . . . . அதற்கு ஈடாக. . . . .
“ஈடாக . . . . . எனக்கு என்ன கிடைக்கப் போகிறது?”
“வேறு வேலைக்குப் போகிறீர்களா?”
“உம் வேறு வேலையா?”
“வேலை இல்லாமல் எப்படி வாழ்வதாம்?"
“ஒஒவயிறு இருக்கிறதே. தீனி போட வேண்டுமே சரி சரி போகிறேன்" “அது தான் நல்லது அன்றைக்கும் உங்களை வேலைக்கு வரும்படியும்,
அறுநூறு ரூபா சம்பளமாகத் தருவதாகவும் அழைத்தார்களே! போனால் என்னவாம்?”
“அங்கேயா?” திகைப்புடன் கேட்டான் செந்தில்நாதன். "ஏன்?". வியப்புடன் கேட்டாள் ரேணுகா.
“ஒன்றுமில்லை!" என்றபடி செந்தில்நாதன் பேச்சை முறித்து, மேசையை வெறிப்பதற்கும், எதுவும் பேசாது ஒருமுறை அவனை ஒரக்கண்களால் பார்த்துவிட்டு, சாப்பாட்டுப்பார்சலை எடுத்துக் கொண்டு ரேணுகா உள்ளே செல்வதற்கும் சரியாக இருந்தது.
வெளியே சாப்பாட்டுக்குச் சென்ற மற்றும் தொழிலாளர்கள் மறுபடியும் ஒப்பமிட்டு விட்டு உள்ளே வந்தார்கள்.
மெஷின் சத்தமும், ரைப்கேஸ்கள் அடியுண்ணும் சத்தமும் ஒன்றையொன்று போட்டியிட்டபடி கேட்டன. மூலையில் பைன்டர் நம்பரிங் மெஷினை தாள்களின் மேலே கல்லாரி இட்டதும் கூடவே கேட்டது.
அவனுடைய நினைவுகள், அந்தத் துக்ககரமான வாழ்க்கைக்கு அத்திவாரமாக அமைந்து, வாழ்க்கைக்கு ஒட்டாத தெம்பையும் அறிவையும் அளித்த படிப்புக் காலங்களைத் தேடி ஓடின.
13

Page 15
3
"அங்கேயா?” செந்தில்நாதன் இந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான்.
பல்கலைக் கழகத்தில் தன்னோடு படித்த ஒருத்தியின் மிகப் பிரமாண்டமான சொத்துக்களைக் கொண்ட அந்தக் கம்பனியில்தான், தன்னை தனது மானத்தை விட்டுச் சென்று வேலை பார்ப்பதிலும், ஒன்றுமே வழியற்றுப் போன நிலையில், பசி கிடந்து உழன்று இறந்தாலும் தேவையில்லை என்று அவன் புளுங்கத்தொடங்கினான்.
அவள். . . . ? பல்கலைக்கழக மாணவர்களை எல்லோரும் ‘கலாம்புலாம்' என்று பொல்காவலையில் இறங்கிய பொழுது, அவர்களைத் தாங்கி வந்த களைப்பிலும், அவர்கள் கொடுத்த தொல்லைகளின் தகிப்பிலும் மூச்சுத் திணறி, ஒய்வு பெற்ற உணர்வுடன் பொல்காவலையை விட்டு ஒடோடென்று ஓடி மறையத் துடித்த அந்த மெயில் வண்டியிலிருந்து குதித்த புஷ்யா!
நகரத் தொடங்கிய வண்டி ஒருமுறை அறிவித்த ஹோர்ன் ஓசையையும் பொருட்படுத்தாது, தனது பெட்டியை ஒரு கையிலும், டம்பப்பையை மறுகையிலுமாகப் பிடித்தபடி வண்டியிலிருந்து இறங்க முயன்று தோற்று . . . . தண்டவாளத்துக்கும் புகையிரதச் சில்லுக்குமிடையில் தன் பொன்னான வாழ்வை, பூப்போன்ற உடலை பலியாக்கவிருந்த புஷ்பா தான் அவள்!
"ஐயோ! அம்மா! என்று யாழ்ப்பாணம் ஸ்டேஷன் வரையும் வந்து வழியனுப்பி விட்டு, வீடு திரும்பி இப்பொழுது உறக்கத்திலிருக்கும் அவளின் தாயை அழைத்தபடியே, மேடையினின்றும் நழுவி, கீழே பள்ளத்தில் விழப்போனவளை, ஒடிச் சென்று, கட்டியணைத்துத் தூக்கி மேடையில் நிறுத்தினான் செந்தில்நாதன்.
எத்தனையோ மாணவர்கள் அதனை, ஏன் அவள் விழுந்து சதைசதையாகச் சிதையும் காட்சியையுமே இரசிக்கத் தயாரானவர்கள் போல் நின்றிருக்க, செந்தில்நாதன் முன்வந்து செய்த அந்த முன்யோசனையும் பரிவும் மிக்க செயலைப் பலவாறு எண்ணிவியந்தபடி, தன்னை மறந்து, நெஞ்சுக்கு நெங்சாக அவன் தாங்கிப் பிடித்த பிடி விடுபட்ட பொழுதும், தான் பிடித்த பிடிவிடாமல் நின்றவள்தான் புஷ்பா.
அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவளிடம் தோன்றிய அலட்சியத்தைப் பொல்காவலைக்கு முன்னரே கண்டிருந்தான் செந்தில்நாதன். உள்ள அத்தனை பேருள்ளும் இளையவனாக இருக்கக்கூடிய அவன், தன் உயிரைக் காத்ததை எண்ணிப் பெருமைப்பட்டாள், அப்பொழுதுதான் தன்நிலை உணர்ந்து கட்டியணைத்திருந்த கைகளைத் தளர்த்தி, பின்புறமாக இரண்டடி நகர்ந்துநின்றாள் அவள்.
14

மெயில் வண்டி அப்பாற் சென்றதும், மேடையின் ஓரமாக, தண்டவாளத்துடன் அருந்தினாற் போற் கிடந்த அவளுடைய சூட்கேசையும் இறங்கி எடுத்துத் தூக்கியபடி, அடுத்த மேடையை நோக்கி நடந்தான் செந்தில்நாதன்.
அவன் சென்ற வழியே சென்று கொண்டிருந்த அவளை எள்ளிநகையாடிய மாணவர்களைப் பார்க்க அவளுக்குத் திராணியற்றிருந்தது.
இளமையையும் மிஞ்சிய கம்பீரம்" புஷ்பா தன்னுட் சொல்லி வியந்தாள். செந்தில்நாதன் எதுவுமே பேசவில்லை. அவன் வாய் திறந்து, "இப்படியெல்லாம் கவலையினமாக வரலாமா? இறங்கும் பொழுது பார்த்து இறங்க வேண்டாம்” என்று தன்னைக் கண்டிக்கும் பாவனையிலேனும் இரண்டொரு வார்த்தைகள் பேச மாட்டானா என்று ஏங்கினாள் அவள்.
சிதம்பரத்தம் பூக்களும் வெள்ளலரி செவ்வலரிகளும் ரோஜாக்களும் மல்லிகைகளும் ஒன்றாகக் கொட்டிக் குவித்தாற் போல் நின்று தும்பைச் சிரிப்பை அவிழ்த்தபடி நின்ற மற்றைய மாணவிகளையேனும் புஷ்பா பார்க்கவில்லை. அவர்களுடன் தானும் ஒருத்தியாகச் சென்று நிற்கவுமில்லை.
“தம்பதிகள் வாழ்க! இந்தக் கலையாண்டின் முதற் காதலர்கள் வாழ்க! அழகான பெண்ணை மனைவியாக அடையும் பாக்கியசாலி வாழ்க!”
வானையளாவிக் கேட்ட அந்த வாழ்த்தொலிகளில் கேலி குமைந்திருந்த போதும், அது எவ்வளவு இனிமையானது என்பதை எண்ணும் பொழுது, புஷ்பாவின் உள்ளம் பூரித்தது. சற்று முன் தான் புகையிரதத்துக்கு இரையாகியிருந்தால், அது யாருக்கு லாபம். இப்பொழுது தன்னை தன்னுடைய உயிரையும் மதியாது காத்து பழையடி உலவ விட்ட செந்தில்நாதனை ஆவலோடு பார்த்தபடி நின்றாள்.
கூடிநின்ற அவளுடைய கல்லூரிச் சகமாணவிகள், புதிதாகச் சேர்ந்துவிட்ட மற்றைய பல்கலைக்கழக மாணவிகளுடன் குசுகுசுத்தது பட்டும்படாமலும் கேட்கவே செய்தது.
"இன்றைக்குப் புஷ்பாவினுடைய வாழ்க்கையிலேயே பெரிய திருப்பம்" “ஒரு நாளாவது தன்னைப் பெற்ற தகப்பனைத் தவிர வேறு எந்த ஆணையுமே மதிக்காதவள். . . . . . இன்றைக்குக்கென்று அந்த ஆளை விட்டு அகலாமலே நிற்கிறாளே! ஆச்சரியமாயில்லையாடி?”
“ஊம் ஊம் கல்லூரியில் காதலித்தால் டிஸ்மிஸ். பல்கலைக் கழகத்தில் காதலித்தால் கல்யாணம். இது அவளுக்குத் தெரியாதென்று நினைக்கிறாயா?” மற்றொருத்தி கிண்டல் செய்தாள்.
அவர்களை நோக்கி புஷ்யா நடக்கத் தொடங்கினாள். பின்னர் ஒருபக்கமாகத் திரும்பி எங்கோபார்த்தவள்,தன்பார்வையை இழுத்து அவன் பாதங்களில் வைத்தபடி “உங்கள் பெயர் என்ன? என்று மெதுவாகக் கேட்டாள்.
அவன் சிரித்தான்! “தவறாக ஒன்றுமில்லை என்னுடைய உயிரையே மறுபடியும் எனக்குத் தந்தவர் நீங்கள். உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். உங்களை என்றும் மறக்கமாட்டேன்"
தேவசந்நிதானத்திலிருந்து புலம்பிய பக்தை போல நின்றாள் புஷ்பா!பின்னர் மிகச் சிரமப்பட்டு, அவள் உடல் வழியே தன் விழிகளை எடுத்து முகத்தைப் பார்த்தாள்!
15

Page 16
ஒ எவ்வளவு ஆழகான முகம்? சுந்தரம் என்றோ சந்திரன் என்றோ பெயர் வைத்திருப்பர்களோ இவரைப் பெற்றவர்கள்?
புஷ்பா மெளனமாக அவனையே பார்த்த பொழுது, அவளையும் மீறி அழுகை வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், இடுப்பில் சொருகியிருந்த கைக்குட்டையை இழுத்து, கண்களையும் கூடவே முகத்தையும் ஒற்றிக் கொண்டாள்.
“இப்பொழுதுமணமகள் ஒப்பனை செய்கிறார்". உயர, எங்கோ இருந்து ஒரு குரல் கேட்டது. அதனைத் தொடர்ந்து பெரும் சிரிப்பொலியும் கேட்டது.
பொல்காவலை ஸ்டேஷன் மாடியில் நின்று ஜன்னலூடே வெளியே மேடையைப் பார்த்தபடி புதிய மாணவர்கள் சிலர் நின்று நகைத்தனர்.
செந்தில்நாதன் எதுவுமே பேசாது அவளையே அப்படியே . . . . . . விழுங்கி விடுபவன்' போல நின்றான். அவள் தன் மார்பகங்களைத் தன் நெஞ்சோடு அழுத்தியதால், அந்த இக்கட்டான நேரத்தில் எந்த உணர்வும் தோன்றாதவன் போன்றிருந்த அவன், இப்பொழுது அவளுடைய அந்த உறுப்புக்களையே வெறித்தபடி நின்றான்.
சற்றுவிலகியிருந்த தாவணியைச் சரிசெய்த புஷ்பாவின் கன்னக் கதுப்புக்களில் செவ்வரி படர்வது போன்ற உணர்வு அந்த மேர்குரி வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது.
அவன் சிரித்தான்!
“நான் வரட்டுமா?”
“புஷ்பா இரப்பவள் போலக் கேட்டாள்.
“என்னுடனா?” - செந்தில்நாதன் கேட்டது அவளுக்கு ஆனந்தமாகவும், கோபமாகவும், வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது.
“என்ன கேட்கிறீர்கள்? பெயர் தெரியாதவருடன் எங்கே போவதாம்?”
கேள்விகள் தாம் எத்தனை அர்த்தமுடையவை?
வாழ்க்கையே கேள்விகள் கேட்டு, கேட்டு விடை காணாமலே பெரும் பகுதியைக் கழித்துவிட்ட அவனுக்கு அந்தக் கேள்வியும். . . . . .
ஒஎவ்வளவு அர்த்தமான கேள்வி என்னை அவள் பேச. பேசவேவைத்து விட்டாளே”
“என்னுடைய பெயரைக் கேட்டீர்கள் அல்லவா? என் பெயர் செந்தில்நாதன்” என்று கூறிக் கொண்டே சிரித்தான் அவன்.
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்க ஆவலாக இருந்த பொழுதும், அண்மித்துச் செல்ல விரும்பாமல் தூரவே நின்று கத்தியவர்களுள் ஒருவனின் குரல் கேட்டது.
"ஆரம்பம் சிரிப்பாக இருந்தால் முடிவு கண்ணீர்தான். எதற்கும் எங்கள் அனுதாபங்களும் வாழ்த்துக்களும். இத்துடன் இந்தப் புதுக் காதல் நாடகம் முடிவடைகிறது. இன்னும் சில விநாடிகளில் கண்டிக்குச் செல்லும் கரிக்கோச்சி வரும். அது வரையும் சாப்பாடு”
பெருத்த ஆரவாரத்திடையே தெளிவாகக் கேட்ட இந்தக் குரல்கள் புஷ்பாவின் காதுகளில் அம்புகளைத் தைத்தன.
அவன் அப்பொழுதும் சிரித்தான்.
16

ஓ! அவள் அழுகிறாளா? “நீங்கள் சாப்பிடவில்லையா?” 'உம்' முனகியபடியே செந்தில்நாதனைப் பார்த்தாள் புஷ்பா' “சாப்பிட்டாயிற்று"
காப்பி ஏதாவது வாங்கித்தரட்டுமா?” புஷ்பா பேசாமல் நின்றதும் “இருங்கள் வாங்கி வருகிறேன்” என்றபடி கடைத்தெருப் பக்கம் போனான் செந்தில்நாதன்.
அவள் தனியே நிற்பதைக் கண்ட கல்லூரித் தோழிகள் துள்ளிக் குதித்து ஓடிவந்தார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு அவள் தவறி விழுந்ததற்காக அனுதாபஞ் சொல்ல நேரம் கிடைத்தது.
"ஏன்டி புஷ்யாபார்த்து இறங்கக் கூடாது"ஒருத்தி கண்டிப்புடன் கேட்டதும், அதைத் தடுத்து மற்றொருத்தி சொன்னாள்.
“நீர்சும்மா இரும் அப்படி விழாமல் இருந்தால் எப்படி இங்கே "விழு”கிறதாம். அங்கே தண்டவாளத்திலே விழுந்தாலும் நேரே சொர்க்கம். இங்கே வண்டவாளத்திலே விழுந்தாலும் நேரே சொர்க்கம்"
"கம்மா இருடி" கலகலவென்று வெண்கலப் பாத்திரங்களை யார் அங்கு கொட்டிவிட்டது? “எந்தக் கொலிஜ்ஜாம்?" அவர்கள் கேலி செய்வதை ஆத்திரத்துடன் பார்த்த புஷ்பா, "இதுகளா கேட்டேன்?" என்றதும், எழுந்தவாக்கிலே என்ன மாதிரிகட்டிப்பிடிச்சாய் தெரியுமா? சினிமா பார்க்கிற மாதிரி இருந்தது. ஆஹா”சகமாணவி ஒருத்தியின் கிண்டல்,
“போங்கடி” “கம்மா போக முடியுமா? வலு சுலபமாகக் கல்யாணப் பிரச்சினையையே தீர்த்துவிட்டாய். சாப்பாடு எப்பொழுது? உம் சொல்லு"
“மண்ணாங்கட்டி! எங்கப்பாவிடம் இருக்கும் கொழும்புக் கடையிலும், பாக்டரியிலும் லட்சம் லட்சமாகக் கொட்டி வளர்கிறது. நான் ஒரே பெண், எனக்கு வழியிலும் தெருவிலும் தான் மாப்பிள்ளை-வரவேண்டும் என்ற பஞ்சப்பாடு இல்லை” புஷ்யாவின் செல்வத் திமிரான பேச்சு அங்கு சிரித்தவாறு சிண்டி நின்ற சில ஏழை மாணவிகளின் நெஞ்சைக் குழைய வைத்துவிட்டது. சுருங்கிய முகங்களுடன் அவர்கள் நிற்பதை, அவள் கூறியது சுரீரென்று தைத்ததைச் செந்தில்நாதனும் கவனித்தான். அவன் அவர்களருகில் வருவதற்கும், மற்றைய பெண்கள் இதுதான் தருணமென்று புஷ்பாவை விட்டுப் போவதற்கும் சரியாக இருந்தது.
“உம் உங்களுக்குக் காப்பி கொண்டு வந்திருக்கிறேன்” உள்ளூர ஏற்பட்ட வேதனையைக் காட்டிக் கொள்ளாமல், போத்தலில் நிறைந்து, குலுங்கிக் கொண்டிருந்த காப்பியையும், கையிலிருந்த கிளாசையும் அவளிடம் நீட்டினான் செந்தில்நாதன்.
இரண்டு கைகளாலும் வாங்கியபடி சிரித்து,தாங்ஸ்'என்றாள் புஷ்பாபின்னர் “என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்” என்று 'சூ கொட்டினாள்.
“கஷ்டங்கள் தாங்கிக் கொள்ளக் கூடியவை. அவமானங்கள் சகிக்க முடியாதவை. நான் கஷ்டத்திலே பிறந்து, கஷ்டத்திலே வளர்ந்து, கஷ்டத்திலேயே
7

Page 17
படித்தவன். இந்தப் பல்கலைக்கழகப் படிப்பு எனக்கு ஒத்துவராது. ஏனென்றால் பணக்காரர்களால் மட்டுமே அது முடியும்"
செந்தில்நாதன் கூறும் பொழுது அவனுடைய நாசிகளையும் பிய்த்துக் கொண்டு பெருமூச்சு எறிந்தது. கண்களின் அடிவாரங்களில் கண்ணிர் சுரந்து, முகத்தில் பொசுங்கி வீழ்ந்தது.
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
"அப்படி என்று எனது அபிப்பிராயத்தையோ, கருத்தையோ நான் சொல்லவில்லை. எனது அநுபவத்தைத் தான் சொன்னேன். என்னுடைய பெயரை எவ்வளவு ஆவலோடு கேட்டீர்கள். ஊருக்கு மட்டும் தான் நான் செந்தில்நாதன்.
எனக்குள் எனது பெயர். . . . எனது தாயின் பெயர் கஷ்டம், தந்தையின் பெயர் பட்டினி. என் பெயர் கண்ணிர். . . . . ”அவன் கூறி முடிக்கு முன்னர் கண்கள் அழுதுவிட்டன.
கண்களை ஒற்றிவிட்டு, ஒரு பெண்ணின் முன்னர் கண்ணிர் சுரந்த கண்களைக் கேவலமாக எண்ணியபடி, “குடியுங்கள். காப்பி ஆறிவிடப் போகிறது" என்றான்.
“அதிகமாயிருக்கிறதே" என்று சிரிக்க முயன்றாள் புஷ்பா.
“பறுவாயிலலை முடிந்தளவு குடியுங்கள் ” என்று பழையபடி சிரித்தான் செந்தில்நாதன்.
"நீங்கள் அரைவாசியை. . . . . . ’ புஷ்பா சொல்லிக் கொண்டே கிளாஸில் ஊற்றி அவனுக்குக் கொடுத்து விட்டு, போத்தலுடன் தான் பருகினாள்.
“இப்பொழுது மணமக்கள் பால் பழம் சாப்பிடுகிறார்கள்”
மீண்டும் அதே நகையொலி
"இன்னும் நான் நிற்க விரும்பவில்லை. உங்களுக்கு என் அன்பு . . . . . . நன்றி. . . . . . எல்லாம். நீங்கள் தந்த உயிர் மீது சத்தியம். . . . . . . . s
புஷ்பா என்ன சொல்கிறாள்?
ஒ! அதுவா?
இப்படி எத்தனை மலர்கள் வா வா! என்று அழைத்திருக்கின்றன? விடியுமுன் அவை மணமற்றுக் குணமுமற்றுப் போயிருக்கின்றனவே சத்தியம் மகிமையானது தான். அதனைச் சொல்லும் நா பவித்திரமானதா? ஆயிரந் தடவை ஆயிரம் பேருக்கும் அது சொல்லாதோ? அவளுடைய நெஞ்சு ஒரு முறை. . . . . ஒரு வேளை பேசியதா? இருக்கலாம். . . . . இருக்கவே இருக்காது இந்த சினிமா யுகத்திலே யாரை நம்புவது? ஒ எல்லோரும் எவ்வளவு சாமர்த்தியசாலிகள்.
செந்தில்நாதன் மறுபடியும் எழுந்த நகையொலி கேட்டு, நினைவுகளின் சுழிப்பிலிருந்து தப்பினான்.
"இப்பொழுது தலைவன் தலைவி பிரிவு”
“இப்பொழுது உங்கள் கொட்டம் அடக்கப்படும்” என்றபடி அவர்களை நோக்கி நடைபோட்டான் செந்தில்நாதன்.
ஏளன ஒலிகளுடன் அந்த இளைஞர்கள் மேல்மாடியின் மறு கரைக்கு ஒடும் சத்தம் பரவலாகக் கேட்டது. அதனைத் தொடர்ந்து கண்டிப் புகையிரதம் வெளுத்து வந்த வைகறைப் போதிலும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.
8

4
ஒரு கிழமைக்கு முன் செந்தில்நாதன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் துணிமணிகளுடனும், மற்றும் வேண்டியவற்றுடனும் வந்து இறங்கும்படியும் பதிவாளர் அறிவித்ததும், அதை. ஓ! அந்த நரக வேதனையைத் தந்த அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் தன்னுள் பொருமினான் செந்தில்நாதன்.
நான்கு பெண்களைப் பெற்றுத் தத்துவிட்டு தாய் போனதும், இரண்டை காலனுக்கும், மற்றையவர்களை வந்த வந்தபடியும், வசதிப்படியும் கட்டிக் கொடுத்து விட்டு, ஏதோ பிள்ளைகள் கரை சேர்ந்து விட்டார்கள் என்ற மகிழ்ச்சியில், தன் ஈமக்கிளியைக்கு மட்டும் உழைக்கும் சக்தியுடன் இருந்த பெற்றவரைப் பார்த்ததும் செந்தில்நாதன் “ஹோ"என்று கதறினான்.
'ஐ.ய்.யோ.சிவனே! உலகத்திலை சோதனை பாஸ் பண்ணயில்லையெண்டு அழுங்கள் என்ரை பிள்ளை பாஸ் பண்ணிப் போட்டேனே எண்டு அழுகுது. முத்துமாரியம்மாளே இதுக்கு ஒரு முடிவே இல்லையா?”
அவனுடைய அழுகையைக் கிஞ்சித்தும் பொறுக்காத அந்தத் தெய்வம் அழுது, அழுது ஒலமிட்டது.
கம்பனியொன்றில் உத்தியோகம் பார்க்கும் அவனுடைய அண்ணன் சொன்னான்.
“ஊருக்குள்ளேயே முதல்முதல் யுனிவர்சிட்டிக்குத் தம்பி போறான். எப்பிடியெண்டாலும் படிப்பிச்சுப் போடவேணும். தம்பி நீஅழாதை அண்ணன் நான் இருக்கயிக்கை ஏன் அழுகிறாய்? சீ ஆம்பிளையெண்டால் அழுவானாடா? அழாதை நான் எப்படியெண்டாலும் காசு அனுப்புகிறன்” என்றபடி அவுனும் அழுதான்.
“நான் பழையபடிதோட்டஞ் செய்யிறன் மோனை. நீயோசிக்காதை என்னை நம்பு கிடைச்ச சந்தர்ப்பத்தை விடாதை"
ஒரு காலத்துத் திண்ணைப் பள்ளி ஆசிரியரான அவனுடைய தந்தையார் சிற்றம்பலத்தின் உறுதி மொழிகளும் அங்கு கேட்டன. தமக்குக் கிடைத்த இரண்டு கால்களும் வீரமும் சக்தியும் குன்றிய நிலையில், கையூன்று பொல்லுடன் நின்ற சிற்றம்பலத்தாரைக் கண்டதும் இன்னும் அழவேண்டும் போன்றிருந்தது. அவனுக்கு
இவர்கள் ஏன் என்னை இப்படி நேசிக்கிறார்கள்? அதனைச் சிற்றம்பலத்தாரே சொல்லி விட்டார். “கடைசிக் காலத்திலை எங்கடை ஊண்டு கட்டை நீ தான். சீவியம் முதல் கொள்ளி வரைக்கும் நீ தான்
கதி அண்ணன் எத்தினை வயசாச்சு. . . . . கல்யாணம் முடிக்காமல் மாடாகப் பாடுபடுகிறான். அவனையும் நீ படிச்சு வெளிக்கிட்டு ஒரு உத்தியோகம் பார்த்து, காக்கவேணும்.
எத்தனை ஆசைகள்?
9

Page 18
அத்தனை ஆசைகளின் மூலதனத்திலே, அன்று மாலை விடுதிக் கட்டணத்துக்காக காப்பு விற்று, அவன் கையில் கொடுக்கப்பட்டிருந்த முந்நூறு ரூபா பாக்கட்டுக்குள் ஒழுங்காக இருக்கின்றதா என்று தொட்டுப் பார்த்தான் செந்தில்நாதன்.
கண்டிப் புகையிரதம் கடுகண்ணாவை மலையிடைகளினூடே போய்க் கொண்டிருந்தது.
அவனையே நோட்டம் விட்டிருந்த மாணவர்களுட் பலர், இரவெல்லாம் வேண்டுமென்றே நித்திரை விழித்ததால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது விடியத் தொடங்கியிருந்தது. புஷ்யா அவனைப்பார்ப்பதும் வெளியே மலைகளின் உச்சியில் அவன் நின்று சிரிப்பதை இரசிப்பதுமாகத் தன்னுள் சிரித்துக் கொண்டாள்.
அவளையும் இடையிடையே பார்த்துக் கொண்ட செந்தில்நாதன்,"உங்களை ஒன்று கேட்க மறந்து விட்டேன்" என்றபடி நிறுத்தினான்.
“என்ன? தாராளமாகக் கேளுங்கள்?” என்று ஆவலோடு கூறினாள் அவள். “உங்கள் பெயரை....”
ஓ! அது . . . " என்று சற்று நிறுத்திவிட்டு, அவனை அப்படியே ஒரு
முறை பார்த்தாள் புஷ்யா.
“உங்களுக்குள். . . . . . . இல்லை. . . . உங்கள் பெயருக்குள் ஏற்கனவே சங்கமமாகியிருக்கிறது"
“என் பெயருக்குள்? கண்ணீர் . . . கண்மணியா?”
“சும்மா நம்பிக்கையிழந்து விசனப்படாதீர்கள்! அதுதான் சொன்னேனே. கண்ணிர் என்பது உங்கள் வாழ்க்கையில் இனி வராது. என்னை நம்புங்கள். என் பெயர் புஷ்பா"
"ஓ! மிக நல்ல பெயர். அந்தத் தாமரைச் செல்வி போலவே இருக்கிறீர்கள்"
"அப்படியா?” என்றபடி அவனுடைய கண்களுக்குள் தன் அழகுக் கோலத்தைத் தேடினாள் அவள். நெற்றியிலிட்ட சாந்து. . . . நேரே வகிடெடுத்த கருங்கூந்தல். . . . . இளநகை பிறக்கும், செல்வக் களிப்பில் நிதமும் நீந்தியதால் கனிந்த பழமாகியிருந்த முகம்....... நீரோடை போன்ற ஒளிமிக்க கண்கள். விண்டு பருத்து விடுதலை கேட்டு நிற்கும் மார்பு"
அவள் தனது தாவணியைச் சரிசெய்தாள். அதைப் பார்த்துச் சிரித்த அவன், “நான் கண்ணை மூடிக் கொள்கிறேன்” என்று குறும்பாகக் கூறிவிட்டு, அவளது மடியிலிருந்த தலையணையைத் தரும்படி கேட்பது போல் சுட்டி, கையை நீட்டினான்.
அவள் இரண்டு கைகளாலும் அதனைப் பக்குவமாகத் தூக்கிக் கொடுத்ததை வெகுவாக இரசித்த அவன், அந்தத் தலையணையை மடியில் வைத்துப் பிள்ளைபோல் ஓராட்டினான்.
“என்ன இது?” கோபமாகக் கேட்பது போல் அவள் குரல் ஒலித்தது. முகம் சிரித்தது.
20

e
உம்’ உதடுகளைக் குவித்து “நீங்கள் கொடுத்தது!’ என்றான் செந்தில்நாதன்.
“அதற்கிடையிலா?” என்று விட்டு, தனது முகத்தை இரு கைகளாலும் மூடி, பெரிதாகச் சிரித்தாள் புஷ்பா,
"ஆரம்பம் சிரிப்பாக இருந்தால் முடிவுகண்ணீர்தான்!” சற்றுமுன் மாணவன் ஒருவன் கத்தியது செந்தில்நாதனின் செவிப்பறையில் மறுபடியும் எதிரொலித்து அறைந்தது.
திடீரென்று முகம் மாறியவனாக இருந்த அவனை, புஷ்பா வெகுநேரமாகப் பார்க்கவில்லை. அவன் முன் அனைத்தையும், ஒ ஆடைகளையும் இழந்து இருப்பது போல் நாணி, கூசி அமர்ந்திருந்தாள் அவள். அவளுடைய அகன்ற கண்கள் ஜன்னலுக்கு வெளியே பாய்ந்து கொண்டிருந்தன.
“இப்பொழுது மணமக்கள் ஜலக்கிரீடை போன்ற றெயின்கிரீடை செய்வார்கள்" என்றபடி நகையொலி கேட்டது.
"மறுபடியும் ஆரம்பித்தாயிற்றா? பள்ளியெழுச்சி பாடட்டுமா?" என்றபடி செந்தில்நாதன் எழுந்ததும், பின்னிருந்தவர்கள் “ஒல் த பெஸ்ட் அவர் டியர் செந்தி" என்றதும், சிரித்தபடி அமர்ந்துவிட்டான் அவன்.
ஒரு கிழமை சென்றது “இந்த நாட்கள் தான் எப்படிப் போகின்றன?”வியப்போடு கேட்ட புஷ்பாவின் குரலைக் கேட்டு, படிப்பகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த செந்தில்நாதன் நின்றான்.
"நாம் நடந்து கொண்டிருக்கிறோம். நாட்கள் ஒடிக் கொண்டிருக்கின்றன. எப்படிச் சரிவரும்?”
செந்தில்நாதனுடைய பதிலை மிக ஆழச் சிந்தித்துவிட்டு, “உண்மைதான்! மனித வேகத்திலும் காலத்தின் வேகம் அதிகம்” என்றாள் புஷ்பா.
“எப்படி ராக்கிங் எல்லாம்?" செந்தில்நாதன் சிரித்தபடி கேட்டான். “உம் நரக வேதனை. கேட்காத கேள்விகள் எல்லாம் கேட்டார்கள். ஓர் ஆண்
ஒரு பெண்ணை எப்படி. . . . . சே! இதற்குப் பெயர் பல்கலைக்கழகமா?”
புஷ்பா வெட்கம் கலந்த வேதனையுடன் கூறினாள்.
ஹஹ்ஹா" என்னவாம்?”
"இல்லை சர்வகலையும் இங்குதான் கற்கிறார்கள். அதனால் தானே பெயர் அப்படி”
“அது சரிஸார்! தங்களை மாலையிட்டு வரவேற்றார்களா? இல்லை"புஷ்பா குத்தலாகக் கேட்டாள்.
தனது விடுதிப் பெண்கள் தன்னை முதலிரவுப் பெண்ணாகப் புடம் போட்டு, அழவைத்து பின்னர் "எல்லாம் சகஜம்" என்று சமதானப்படுத்தியதை நாசூக்காகச் சொன்ன அவள், அவன் இரண்டு வார்த்தைகள் ஆறுதலாகப் பேசாது, தனது வேதனையை வெகுவாக இரசித்துச் சிரித்தது என்னவோ போலிருந்தது.
21

Page 19
“எனக்கா? பொல்காவலையிலிருந்து கண்டிவரை அன்று நமக்கிடையே நடக்காதது எவையோ, அவற்றை நடந்ததாகச் சொல்லச் சொன்னார்கள். . . . . . לל
“அதாவது?” “அதாவது மடியில் படுத்து மார்பில் தவழ்ந்து என்று அவர்களே அடியெடுத்துத் தந்தார்கள்.
“சீ! நீங்கள் சொன்னீர்களா?”புஷ்யா அருவெறுத்துக் கேட்டாள். “வேறு வழி?” “போங்கள். நான் உங்களை என்னவோ என்று நினைத்திருந்தேன்” - சிணுங்கினாள் அவள்.
“நல்ல வேளை! இப்பொழுதாவது நான் மனிதன் என்று தெரிந்ததா? என்ன வோவாக இனி நினைக்க வேண்டாம் என்ன?”
செந்தில்நாதன் சிரித்தான். விரிவுரைகள் முடிந்து வெகுநேரமாகியிருந்ததால் வெறிச்சோடிப் போயிருந்த அந்த விரிவுரை மண்டபமும் அறைகளும் மறுபடியும், மறுபடியும் அவனுடைய சிரிப்பொலியை எதிரொலித்து, புஷ்பாவினுடைய காதுகளில் வார்த்துக் கொண்டிருந்தன.
“எனக்குத் தலையிடிக்கிறது" புஷ்பா சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கும் காத்திராமல் போய்விட்டாள். பெண்கள் மர்மந்தானா? செந்தில்நாதன் தன்னையே கேட்டுக் கொண்டான். அப்பொழுது சுவரோடு ஒருக்களித்துச் சாய்ந்து, அவள் விறுவிறு என்று நடக்கும் அழகையே இமைசாய்க்காது பார்த்துக் கொண்டிருந்த செந்தில்நாதனுடைய தோள்களில் மெல்லக் கைவைத்து உலுக்கிய விரிவுரையாளர் கமலக்கண்ணைக் கண்டதும் அவன் வெலவெலத்துப் போனான்.
“aromi!” “பறுவாயில்லை செந்தில்நாதன். இங்கு வந்து ஒரு கிழமைதான் ஆகிறது. ஒரு மாதகாலம் இந்த வண்ணப்பூமி பேராதனை அழகாகத் தான் இருக்கும். போகப் போக எதிர்காலம் அழகாக இருக்க வேண்டுமென்பதற்காக இவை அழகற்றவைகளாகி விடும்"
“என்ன ஸார் சொல்கிறீர்கள்?” செந்தில்நாதன் இருள் படர்ந்த தனது முகத்தைச் சரிப்படுத்திக் கொண்டு கிணற்றுள்ளிருந்து குரல் கொடுப்பவன் போலக் கேட்டான்.
'உம்' என்னுடைய அறைக்கு வாரும் சொல்கிறேன்” என்றபடி அவர் நடந்து சென்று அவனை இருக்கும்படி சைகை காட்டிவிட்டு, ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
கமலக்கண்ணன் அங்குள்ள தமிழ் விரிவுரையாளர்களுள் முதிய கல்வி ஞானமும் இளமையும் மிக்கவர். நாற்பது வயதை எட்டிவிட்ட அந்தக் கலாநிதி வாழ்க்கையையும் சூழ்நிலைகளையும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பது
22

நன்றாகத் தெரிந்தது. வரலாறு கற்பிக்கும் அவர், கடந்த காலங்களில் அதே பல்கலைக்கழகத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுவிட்ட காதல் நோயால் பீடிக்கப்பட்டு, அதற்கு மருந்தாக மதுவைக் குடித்து, கல்வியை மட்டுமன்றி வாழ்க்கையையுமே இழந்த எத்தனையோ பேர்களைப் பார்த்திருக்கின்றார். அவரின் அனுபவம் அப்பொழுது பேசியது.
“இங்கு வந்த புதிய மாணவர்களுள் கொஞ்சமேனும் விவேகமும் குணமும் உள்ள மாணவன் நீர் என்பதற்காகச் சொல்கிறேன். பலவற்றை இப்பொழுதே சொல்லிவிடலாம் என்றும் நினைக்கிறேன்"என்று கூறிவிட்டு, செந்தில்நாதன் என்ன சொல்கிறான் அல்லது நினைக்கிறான் என்பதை அறிய விரும்புகிறவர் போல அமைதியாக அவனைப் பார்த்தார்.
“சொல்லுங்கள் ஸார்”
“நாங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தவர்கள். நாட்டின் பல பாகங்களிலுமிருந்து இங்கு படிக்க வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேர்களுள்ளும் எங்களுடைய போக்கு பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் தனிப்பட்டது. பொருளாதார நிலைமையில் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம். வயல்களிலும் தோட்டங்களிலும் மாடாக உழைத்து எங்களைப்பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள் எமது பெற்றோர்கள் என்று நாம் இங்கு வந்ததும் நினைப்பதில்லை. இங்கு ஒருவருடம் படிக்க எவ்வளவு செலவாகும் என்பதை யாரும் கவனிப்பதில்லை. ஒரு வருடம் சோதனை சித்தியாகாது விட்டால், வாழ்க்கையில் ஒரு வருடத்தை இழக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. கூடப்படித்தவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் எமக்குக் கிடையாமற் போகிறது. அத்துடன் வயதும் ஏறுகிறது. வயதுக் கட்டுப்பாடுள்ள பரீட்சைகளில் தோற்றவும் நாம் தகுதியற்றவர்களாகி விடுகிறோம்"
“உண்மை ஸார்”
"அப்படியானால் நான் சொல்கிறேன். கேட்டு நடக்கிறீரா?”
“நிச்சயமாக ஸார்”
“புஷ்பாவை உமக்கு ஏற்கனவே தெரியுமா?”
இவரென்ன வந்து ஒரு கிழமைக்குள் எல்லோருடைய பெயர்களையும் நினைவில் வைத்திருக்கிறாரே?’ என்று அவன் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவனுக்கு அவள் ஏற்கனவே தெரிந்தவளாக இருக்க நியாயமில்லை என்று கண்ட அவர் தொடர்ந்து கூறினார்.
“எனக்கு அவளின் தகப்பனை நன்றாகத் தெரியும். அவர் ஒரு பெரிய கார்ப்பரேஷன் வைத்திருக்கிறார். சோப் மற்றும் அழகு சாதனப் பாக்டறி வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் எங்களுடைய ஊரவர்தான். மகள் பல்கலைக்கழகத்துக்கு எடுபட்டதும், அவர் என்ன சொன்னார் தெரியுமா? இனிப் படிக்க வேண்டாம் என்று, தனது மகள் படிப்பில், போட்டியில் ஜெயித்துவிட்டதை ஊரார் அறிந்தால் போதும். இருக்கின்ற ஒரே பெண்ணுக்கு இருக்கின்ற இலட்சங்களை எண்ணிக் கொடுத்தால் அது இரண்டு நாட்கள் பிடிக்கும்.
23

Page 20
"நீர் புஷ்பாவை. . . . . ”கண்களை மேலே சொருகிக் கொண்டு அவனைப் பார்த்த அவரின் கண்களை நேரே சந்திக்கச் சக்தியற்றவனாக யன்னலூடே வெளியே பார்த்தான். விடுதி மண்டபங்களைத் தாண்டி இவ்வளவு நேரமும் நடந்து கொண்டிருந்த புஷ்பா தனது விடுதியை நோக்கி கலகா வீதியால் போய்க் கொண்டிருப்பது அவன் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது.
“கண்டதும் காதல் எவ்வளவு விரைவாக வருகின்றதோ, அவ்வளவு விரைவாக விட்டுப் போய்விடும். புஷ்பா உன்னை விரும்புகிறாளோ, இல்லையோ, கல்யாணத்துக்குப் பணத்திமிர் பிடித்த அவள் தகப்பன் ராஜா எப்பொழுதும் சம்மதிக்கமாட்டார். அன்பான குடும்பத்தை விட்டு, இவ்வளவு சொத்துச் சுகங்களை விட்டு உம்முடன் புறப்பட அவள் ஆயத்தமாக இருக்க வேண்டும். இருப்பாளா என்பது தான் கேள்வி... ?”
"அப்படி இருப்பாள் என்று வைத்துக்கொண்டாலும், தாய் தகப்பன் வளர்த்தவர்கள் எல்லோரும் வெறுக்கும்படி நடந்து, விரும்பியபடி திருமணமும் செய்யும் எந்தக் குடும்பமும் என்றைக்கும் சந்தோஷமாக இருக்க மாட்டாது, தம்பி இது எனக்கு நன்றாகத் தெரியும். வெறும் காதல் ஒரு பிள்ளை பிறந்தவுடன் அற்று விடும். பொருள்தான் இந்தப்பொருளாதார காலத்திலே முக்கியம். ராஜாவோ, பெற்ற மகளோ ஊர்ப் பெண்களைப் போல் இடையிடை பணத்தின் அருமையை உணர வேண்டும் என்று, செலவுக்கும் அதிகம் கொடுக்கமாட்டாதவர். அப்படிப்பட்ட மனுஷன் தன் விருப்பத்துக்கு மாறாகச் செல்லும் மகளுக்கு ஒரு சதமேனும் கொடுக்கமாட்டார். காதலியாகிவிட்டாள் என்பது கேள்விப்பட்டால் புஷ்பாவைப் பல்கலைக்கழகத்திலிருந்தே நிற்பாட்டி விடுவார். அத்துடன் உம்மையும் பழிவாங்கவும் தயங்க மாட்டார். நெருப்பு வாழ்க்கையில் நீர் அவதிப்படாமல், அமைதியாக. . . . எதற்கு இங்கு வந்தோமோ ..... அதற்கு. அந்தக் கல்விக்கு மனங்கொடுத்து, அதனையே முழுமையாகப் பெறத் தெண்டிக்க வேண்டும். நீர் இருக்கும் வசதியின்மை உங்கள் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தும். எதற்கும் யோசித்துப் பிறகு பதில் சொல்லும், நான் வரட்டுமா?” என்றபடி, அவனுடைய தலையசைப்புக்கோ, பதிலுக்கோ காத்திராமல் கமலக்கண்ணன் எழுந்து வெளியே சென்றார்.
சிலைபோல அழாக்குறையாக இருந்த செந்தில்நாதன் சிறிது நேரத்தில் எழுந்து வெளியே சென்றான்.
அவனுள் இருந்த போராட்டம் வளர்ந்த பின் தறிப்பதிலும் முளையிலேயே கிள்ளுவது சுலபமல்லவா? மரமாகிவிட்டதைத் தறித்தால், இதிலிருந்த மரம் எங்கே? என்று யாரும் கேட்பார்கள். முளையையே கிள்ளிவிட்டால் யார் கேட்கப் போகிறார்கள்? கேட்டாலும் “தெரியாது” என்றும் சொல்லிவிடலாமே.
உண்மையிலேயே புஷ்பா என்னை விரும்புகிறாளா? துணிச்சல்காரியான அவள் என்னை அப்பொழுது கோவித்தபடி சென்றது ஏன்?
அவன் குமைந்து கொண்டு நின்றான்.
24

5
Dனித வர்க்கம் எவ்வளவு ஏற்ற இறக்கங்களைக் கொண்டது என்பதை எடுத்துக் காட்டுவது போல் காட்சி தந்தது அந்தப் பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்களும் விடுதிகளும், கிழக்கே உயர்ந்த பீடபூமியில் வெறும் கொட்டில் போல் காட்சி தந்தது பொருளியல் பிரிவு. கலைக்கூடம் பள்ளத்தில், பாதையோரத்தில் அமைந்து விட்டாலும் அதன் கம்பீரம்தான் எத்துணை? அதன் அடியொற்றி மேலும் மேலும் நீண்டு சென்ற விரிவுரை மண்டபங்கள், அறைகள் - புத்தம் புதுப்பெண்ணின் பொலிவு போலல்லவா காட்சிதருகின்றன. மேற்கே மகாவலி கங்கையின் வருடலில் மெய்மறந்து, வானைப் பிடிக்கும் மாடிகளுடன் தெரிவதுதான் படிப்பகம். விரிவுரை மண்டபங்களையும், படிப்பகத்தையும், பக்கத்தில் நிர்வாகக் கட்டிடத்தையும் தொடுத்து தூண்களால் எழுந்த மண்டபம்,
ஒவ்வொரு தூணுக்கும் ஒரு சோடியாக நின்று கடந்த காலங்களையும், எதிர்காலங்களையும், பேசிப்பேசி வாழ்நாள் முழுவதும் இணைபிரியமாட்டோம் என்று உறுதி கூறும் காதல் ஜோடிகள் ஒருபுறம், விரிவுரைகள் மாறிமாறித் தொடங்குவதும், முடிவதுமாக இருந்த காலங்கள்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, தூண் ஒன்றுடன் சாய்ந்து நின்றான் செந்தில்நாதன். மாலையில் விடுதியிலிருந்து மற்றைய மாணவர்களுடன் அரட்டை அடிப்பதிலும் படிப்பகத்திற்கு வந்து பயனுள்ளவற்றைப் படிப்பது எவ்வளவு மேலானது என்று அவன் எண்ணியதால், அன்றும் வெகுநேரம் அங்கு வந்து படித்துவிட்டு, வெளியே ஒய்வெடுத்துக் கொண்டு நின்றான்.
நிர்வாகக் கட்டிடத்துக்கு அப்பால், கங்கைக் கிளை யொன்றின் கரையோடு சென்று கொண்டிருந்த பாதை வழியே தனியே வந்து கொண்டிருந்தாள் புஷ்பா.
அவளைக் கண்டதும் உள்ளே படிப்பகத்தை நோக்கி நடந்தான் செந்தில்நாதன். கமலக்கண்ணன் கூறியவற்றுக்கு இன்னமும் சரியான முடிவு காணாத அவன், தானாக ஒரு முடிவுக்கு வருவதற்குள் தனது முடிவை புஷ்பா கூறி, குழம்பி விடுவாளோ என்று அஞ்சினான் அவன்.
தன்னைக் கண்டதும் செந்தில்நாதன் திடீரென்று உள்ளே செல்வதைப் புஷ்யா அப்பொழுதும் கண்டாள். ஒரே பாடங்களை அவர்கள் கற்றபொழுதும், விரிவுரை தொடங்கும் வேளை பார்த்துத்தான் செந்தில்நாதன் மண்டபத்துள் நுழைவதை அவள் கவனிக்கத்தான் செய்தாள்.
அவன் ஏன் தன்னை வெறுக்கிறான்? அன்றொரு நாள் மாலை, கமலக்கண்ணன் வருவதைத் தூரத்தில் கண்டுவிட்டு, பொய்க் கோபத்துடன் தலையிடிக்கிறது என்றபடி போனாளே - அதற்காகவா? அல்லது?
2 3

Page 21
புஷ்யா எப்படியோ நடந்துகொண்டிருந்தாள். அவளுடைய மனம் வெகுவாகக் குழம்பியிருந்தது. அவளுடைய கனிந்த முகம் வெய்யிற்பட்டாற் காய்வது போன்று கருகி, கறுத்திருந்தது.
“கொஞ்சம் வெளியே வருகிறீர்களா?”
புஷ்பாவுக்குத் துணிச்சல் வந்துவிட்டது. எந்த ஒரு செயலுக்கும் காரண காரியம் இருக்கத்தானே வேண்டும்? அது எதுவாயிருக்கும் என்று குழம்புவதிலும், எது தான்? என்று தெரிந்து கொள்வதில்தான் எத்தனை நிம்மதி. அது எது என்று தெரிந்தபின் அதனால் ஏற்படுகின்ற மன விளைவுகள் என்னவா”ருந்தாலும், எப்படி இருந்தாலும், அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற திாக்கமான ஆவல் அவளை உந்திக் கொண்டிருந்தது.
“ஏன் வரச் சொன்னீர்கள்?”
மெளனியாக அவள் சென்ற கங்கைக் கரைவரை பொறுமையாக நடந்து கொண்டிருந்த செந்தில்நாதன், அமைதியைக் குலைத்தபடி கேட்டான்.
அவள் சிலையாக அவனையே பார்த்தபடி நின்றாள். கையிலிருந்த பைலை நெஞ்சோடு சேர்த்து, கைகட்டி ஒருக்களித்து நின்ற அவளுடைய கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகப் பொழிந்தது.
அவள் பேசவில்லை.
கங்கை நீர் எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது. கண்ணிரும் நீர்தானே. அது ஏன் பார்க்கும் கண்களைக் குத்தியெறிகிறது?
செந்தில்நாதன் கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“என்ன சொல்லப் போகிறீர்கள்?”
அவன் மெதுவாக, அவள் பக்கமாக, நிறைந்து கிடந்த பசும் புற்களைப் பார்த்தபடி கேட்டான்.
“நான் படிப்பை விட்டுவிட்டுப் போகப் போகிறேன்"
“என்ன?” யார் சம்மட்டி கொண்டு அவனை அப்பொழுது தாக்கியது தன்னைச் சமாளித்தபடி “ஏன்?" என்று கேட்டான் செந்தில்நாதன்.
“கலாநிதி கமலக்கண்ணன் எல்லாம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்"
“உம் உம் சொன்னார்" என்று கூறியவன், சற்று நிதானித்தான். நீங்கள் படிப்பை விட்டு விட்டுப் போகாமல், என்னை விட்டுப் போங்கள். என்னுடன் பேச ஆரம்பித்த நாளிலிருந்து உங்கள் செல்வச் செழுமை மிக்க கண்கள் அழுவதையே நான் பார்க்கிறேன். கல்வி ஒரு பொழுதும் உங்களைக் கைவிடமாட்டாது"
“பைத்தியக்காரத்தனம்”
அவள் ஏளனமாகக் கூறினாள்.
26

“எது?” - அவன் பரிவோடு கேட்டான்.
“உங்களை விடுவது?”
படிப்பை விடுவது புத்திசாலித்தனமோ?”
படிப்பு பெண்ணுக்கு அவசியமில்லை”
“படுமுட்டாள் தனம். பழுத்த பணக்காரப் பெண்ணுக்குப் படிப்பு அவசியமில்லாதிருக்கலாம்"
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
“இப்பொழுது ஏன் அழுகிறீர்கள்? இன்னும் ஒரேயொரு நாள் தவணை தாருங்கள்”
கண்களை முகதலைப்பால் துடைத்தபடி நின்றாள் புஷ்பா, அவள் தனது சேலையை இழுத்த பொழுது, தோளிலிருந்து நழுவிய தாவணி, அவளுடைய மேற்சட்டை முழுவதையும் அப்படியே வெளிக்காட்டியது. அதைப் பொருட்படுத்தி விசனப்படாமல் அள்ளி மறுபடியும் இட்டபடி கேட்டாள் புஷ்பா.
“எனக்கு அந்த முடிவை இப்பொழுதே சொல்லிவிடுங்கள். நாளை வரை உங்கள் முடிவு என்னவாயிருக்கும் என்று குமைந்து குமைந்து நான் உயிருடனேயே இருப்பேனோ தெரியாது. உங்களுடைய முடிவு எதாயிருக்கும் என்று தெரியாமல் சாவதிலும், இதுதான் என்று திட்டமாகத் தெரிந்து கொண்டு சாவது எனக்கு நிம்மதியாகவிருக்கும்"
“நான் நேற்றே முடிவு செய்து விட்டேன்” செந்தில்நாதன் சொன்னான். “இப்படி ஏதும் அபத்தமாகப் போனால் இருப்பதில்லையென்று"
“எப்படி?”
“உங்கள் அப்பா ராஜாவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் குணத்தைப் பார்த்தால், என்னால் உங்கள் பொன்னான வாழ்வு மண்ணாகிவிடும் போலத் தெரிகிறது. அதுதான் இங்கு நாம் பிரிந்து விடலாமா? என்று தோற்றுகிறது” என்றான் தியங்கி, தியங்கி.
“சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விட்டீர்களா?” என்றபடி, மகாவலிக் கரையை நோக்கி நடந்தாள் புஷ்பா.
ஒருவர் முகம் மற்றவர்க்கு மிகச் சிரமமாகத் தெரியுமளவுக்கு மட்டும் அப்பொழுதுமம்மல் வெளிச்சமிருந்தது. சூரியன் அவர்களுடைய அந்தக் காட்சியைச் சகிக்க மாட்டாமல் போய்விட்டானோ என்னவோ?
திடீரென்று கத்தினாள் புஷ்பா!
அது படிப் பகத்திலிருந்தவர்கள்வரை நிச்சயம் கேட்டிருக்கும். தனிமையில் இரகசியமாக, அதிகம் பேர் பார்க்காத இடமாகத் தேடி வந்துவிட்டு, அத்தனை பேரையும் உதவிக்கு அழைப்பது போல் அவள் ஏன் அப்படி அலற வேண்டும்?
27

Page 22
சந்தேகங்களின் நமைச்சலில் கங்கைக் கரையை நோக்கி ஓடினான் செந்தில்நாதன்.
"ஐ. til. . . . . . யோ! இரத்தம்”
புஷ்பா அலறினாள்.
“என்ன புஷ்பா என்ன இது இரத்தமா? எப்படி வந்தது?” - பதறினான் செந்தில்நாதன்.
மகாவலி கங்கைக் கரை முழுவதும் செம்மை படர்ந்திருந்தது. அவளுடைய கால்வழியே ஏறி தொடையருகில் குடிகொண்ட மலை அட்டையின் கொடுமை அது என்று உணர அவனுக்கு வெகுநேரமும் பிடிக்கவில்லை. அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த ஈரலிப்பான புல்வெளியிலிருந்து அந்த இரக்கமற்ற அட்டை ஏறியிருக்கிறது என்று தெரிந்த அவன், அவளைத் தொடுவதா? தொட்டுச் சேலையை மெல்ல, மெல்ல நீவி, அட்டையிருந்து இரத்தம் உறிஞ்சும் இடத்தைக் கண்டு, அதனைப் பிடுங்கி எறிவதா? எப்படி? எப்படி?
தடுமாறிக் கொண்டிருந்த செந்தில்நாதனைப் பார்த்து “என்ன பார்த்துக்கொண்டா நிற்கிறீர்கள்?’ என்று பரிதாபமாகக் கேட்டாள் புஷ்பா
இதற்கு மேலும் பொறுமை முடியுமா?
அப்படியே அவளை வாரியணைத்து, கரைமணலுக்கு வந்த செந்தில்நாதன், அவனை மடியில் சாய்த்து, அட்டை சென்ற வழியே கையையும் அனுப்பி, அதனைப் பிடுங்கி வெளியில் எறிந்து விட்டு 'தூ' என்று துப்பினான். பின்னர் ஆத்திர மேலிட்டால், அருகில் கிடந்த கல்லொன்றால், அந்த ஆத்திரம் தீருமட்டும் குத்தி அந்த அட்டையைச் கொன்றான்.
உள்ளாடையை விரல்களிற் சுருட்டி வலிக்கின்ற இடத்தை அழுத்தி, அழுத்தித் தேய்த்த புஷ்பா, நோ மாறும் பொழுது, எதையோ எண்ணியவளாக'பொளுக்கென்று சிரித்து, மணலில் இருந்தபடியே அவனுக்குப் புறமுதுகிட்டு இருந்தாள்.
அதற்குரிய காரணத்தை உணர்ந்து கொண்ட அவன் “பறுவாயில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை!” என்றான்.
அவள் கேட்டாள்!
"அண்ணைக்குக் கட்டிப்பிடித்தாயிற்று. இப்பொழுது வாரியணைத்தாயிற்று. . . . . போதும் போதாததற்குச் சேலையை வேறு . . . . . கிளுக்”
அடிக்கடி உணர்ச்சிகளை மாற்றி, மாற்றி பேசுகிறாளே! பெண்ணுக்கு மட்டும் இது கைவந்த கலையா? என்று வியப்புடன் பார்த்த செந்தில்நாதன், தன்னைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு எதிர்ப்புறமாகத் திரும்பியிருந்த அவளுடைய பின்னலைச் சிண்டி, "அம்மா! தாயே! தங்கள் திருமுகம் தெரியவில்லையே! சிரிக்கிறீர்களா? அழுகிறீர்களா? அழும்பொழுதும் அழகாகத்தான் இருக்கிறீர்கள்” என்றான்.
28

வெடுக்கென்று தலையை வெட்டிப் பின்னலைப் பறித்தெடுத்த அவள் பின்புறமாகக் கைகளை ஊன்றிய வண்ணம், இடை நிலத்திலிருக்க ராட்டினம் போல் சுழன்று அவனைப் பார்த்தபடி மெல்லச் சிரித்தாள்.
“அந்த அட்டையை ஏன் கொலை செய்தீர்கள்?” “உம் பரிதாபம் பிறந்து விட்டதாக்கும்” “இல்லை. பாவம் தானே!" “uuri?” “அட்டை” “ஹஹ்ஹா மகாத்மா, திருவள்ளுவர் யாருக்குமில்லாத கருணை. அட்டைக் கடியில் இரத்தம் ஆறாகப் பெருகுகிறது. அதனைத் தாங்காமல் குழந்தை போல் வீரிட்டு அழுகிறீர்கள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கொன்றுவிட்டேன்!”
“இல்லை! அந்த அட்டைக்கு நன்றி சொல்ல. "இழுத்தபடி அவனை ஒரக்கண்களால் பார்த்தாள் புஷ்பா.
“சரி சரி நீங்கள் இருந்து நன்றிசொல்லுங்கள். நான் வருகிறேன்” என்றபடி எழுந்தவனின் கையை இரண்டு கைகளாலும் பற்றி அவள் இழுத்த பொழுது, அதனை எதிர்பார்க்காத செந்தில்நாதன் அலமலக்காக அவள் மீதே வீழ்ந்தான்.
வீழ்ந்தவனை வாரி அணைத்து, அவன் முகத்தைத் தன் மார்போடு சேர்த்து நெரித்த புஷ்பாவின் முகத்தைப் பார்க்க முடியாது திணறினான் செந்தில்நாதன்.
சொருசொருவென்று இருந்த கங்கை மணலில் வேண்டியவாறு பிரளக்கூடியதாக இருந்தது.
ஆனால் தன் மடியிலும் மார்பிலும் விருப்பமில்லாமல் திமிறிக் கொண்டிருந்த செந்தில்நாதனின் காதோரங்களைக் கண்ணிர் நனைக்கத் தொடங்கியதும், அவளின் அந்த அன்பை வியந்தபடி அசைவற்றுக் கிடந்தான் அவன்.
புஷ்யா அழுது, அழுது சொல்லிக் கொண்டிருந்தாள். “என்னை மறந்து விடாதீர்கள். பல்கலைக்கழகத்துக்கு வந்ததும் வராததுமாக யரரையும் பிடிக்க வேண்டுமென்று நான் வரவில்லை. நான் வளர்ந்த நாள் முதல் ஆண்களைக் கண்டாலே வெறுப்புடனேயே வாழ்ந்தவள் நான். என்னை ஒடிக்கொண்டிருந்த புகையிரத வாசலின் கம்பியைப் பற்றியபடி நீங்கள் முதல்முதல் பார்த்த பொழுது, உங்களுடைய அந்தப் பார்வையை வெறுத்து சிலுப்பினேனே. நினைவு இருக்கிறதா? ஆனால். தெய்வமாக எனக்குக் கொடுத்த பரிசு நீங்கள். உங்களுடைய அன்பு என் பக்கமாகவே என்றென்றும் இருக்கும் என்று சத்தியஞ் செய்கிறீர்களா? வாய் திறந்து என்னைக் கைவிடமாட்டேன் என்று ஒரு தரம் சொல்கிறீர்களா? என்றோ ஒரு நாள் நான் ஒருவருக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள்தானே! அவர் ஏன் நீங்களாக இருக்கக் கூடாது? பேசமாட்டீர்களா?”
புஷ்பா இரந்து கேட்டாள்! கலாநிதி கமலக்கண்ணன் அன்று வழங்கிய அறிவுரையின் தொடர்பாக, அவள் தன்மீது உண்மையான அன்பு கொண்டிருக்கிறாள்தானா? என்று பார்க்க -
29

Page 23
பரீட்சிக்க வேண்டுமென்று காத்திருந்த செந்தில்நாதனின் நெஞ்சம் இப்பொழுது அவனையும் அறியாமல் உருகிக்கொண்டிருந்தது.
"புஷ்யா. ”வாய் நிறைய, மனம் நிறைய அழைத்தான் அவன்.
'சொல்லுங்கள்!” - ஆவலோடு கேட்கத் துடித்தாள் புஷ்பா. அவன் ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல, அவற்றை ஆயிரமாயிரம் போதுகளில், நாட்களில், யுகங்களில் நின்று நின்று கேட்க வேண்டும். போன்றிருந்தது அவளுக்கு "சொல்லுங்கள்” ஆவலோடு தூண்டினாள் அவள்.
நான் பரம ஏழை புஷ்பா!உங்களுடைய குடும்பத்துக்கு ஒரே மாப்பிள்ளையாக வரத் தகுதியற்றவன்.
"ஓ! எந்த விதமாகப் பார்த்தாலும் நான் உங்ளை அடைய முடியாது என்று இப்பொழுது தோன்றுகின்றது."
"ஐயோ! அப்படியெல்லாம் பேசாதீர்கள்!
என் உயிரே போய்விடும் போல இருக்கிறது”
அவள் மறுபடியும் அழுதாள்.
“என்னை மரியாதையாக நீங்கள் நாங்கள் போடாதீர்கள்1எனக்கு என்னவோ போலிருக்கிறது”
“எந்தப் பெண்ணையும் எடுத்தெறிந்தாற்போல் நீ நான் என்று நான் பேசுவதில்லை புஷ்பா"
“என்னை ஏன் எடுத்தெறிகிறீர்கள்?"
“உங்களையா? நானா?”
அவளுடைய மடியில் புரண்டு தலையை வைத்தவாறே கேட்டான் செந்தில்நாதன்.
அப்பொழுது முன்னிலவு புறப்பட்டிருந்தது. பாலாறு போன்று அருகில் காணப்பட்ட மகாவலி கங்கையை வெறித்தபடி கிடந்த செந்தில்நாதன், திடீரென்று எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
பின்னர் கூறினான்.
புஷ்யா! நீ நம்பினாலும் சரி விட்டாலும் சரி உங்கள் அப்பா என்னை ஏற்றாலும் சரி, எற்றி உதைத்தாலும் சரி உன்னைத் தவிர நான் வேறு எந்தப் பெண்ணின் கழுத்திலும் தாலியை எனது கையால் ஏற்ற மாட்டேன். இந்த மகாவலித் தாய் மீது ஆணை! ஆனால் ஒன்று. . . . . . நீ என்னை மனதார நேசிக்கிறது பக்தி பூர்வமாகக் காதலிக்கிறது. அன்புபூர்வமாக நடந்துகொள்கிறது எல்லாம் உண்மையானால்.”
ஆவேசம் வந்தவன் போலக் கூறிக் கொண்டிருந்த செந்தில்நாதனை அன்பொழுகப் பார்த்திருந்த புஷ்பா "உண்மையானால்...” என்று அடியெடுத்துக் கொடுத்தாள்.

“இங்கு படிக்கும் காலம் வரை என்னுடன் பேசக் கூடாது. என்னோடு பழகக் கூடாது. பட்டப் பரீட்சை முடியும்வரை எந்த விதத் தொடர்பும் இருக்கக் கூடாது முடியுமா? செய்கிறாயா? சொல்"
“முடியாது முடியாது முடியாது கண்ணுக்கெதிரே உங்களை வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க என்னால் முடியாது. வேண்டுமானால் தனியே சந்திப்பதை விடுவோம். இதில் நம்பிக்கைக்கு என்ன இருக்கிறது. இப்படிச் சொல்வதிலும், என்னை மனதார நேசிக்கிறாய் என்றால் இதோ இந்த மகாவலியில் வீழ்ந்து செத்துப்போ! என்று சொல்லுங்கள் நான் செத்தே போகிறேன்.
வெறிபிடித்தவள் போல எழுந்தாள் புஷ்யா!
".... si.... ur"
அதட்டினான் செந்தில்நாதன்.
"அப்படியானால் இனிமேல் நீ என்னைப் பார்க்க மாட்டாய். இது சத்தியம்”
அவனும் எழுந்தான். பின்னர் ஒருமுறை அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு கரகரத்த குரலில் சொன்னான்.
“நமது உறவு இப்பொழுதே பலருக்குத் தெரியும். உன் அப்பாவரை எட்டியிருந்தாலும் ஆச்சரியமில்லை. கலாநிதி கமலக்கண்ணன் கூறமாட்டார். ஆனால் சகமாணவர்களுள் ஒருவனோ, ஒருத்தியோ எங்களைப் பிரிக்க நிச்சயம் சதிசெய்வார்கள் உன்னை ஒரேயடியாக என்னிடமிருந்து உன் அப்பா பறித்தெடுத்து விடுவார். நீபடிப்பில் கெட்டிக்காரியாக இருப்பதும், உனக்குப்படித்துத்தான் ஏதாவது உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற நிலை இல்லையென்பதும் ஊரறிந்த விஷயம். இதுக்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது"
“என்ன?” “நான் எங்கேயாவது போய் ஏதாவது செய்கிறேன். என்றாவது ஒரு நாள் என் நினைவு வந்தால். . . . . என்னை உனக்குத் தேவைப்பட்டால் என்னிடம் வா!
உன் வரவைப் பார்த்துப் பார்த்து ஏங்கி, ஏமாந்து நான் இறந்துவிட்டேன் என்றால், என் பிணத்தின் மீது உன் கையால் ஒரேயொரு பூ போடு. அந்த இனிய மணத்தின் அமைதியில் என் கட்டை எரியட்டும்”
"அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்”
“சரி!உனக்கு நேரமாகி விட்டது. ஏழு மணிக்கெல்லாம் மற்றப் பெண்களும் விடுதி திரும்பி விடுவார்கள். புறப்படு. உம்”
துரிதப்படுத்தினான் அவன். ஏதேதோ சொல்ல வாயெடுத்த அவளின் பேச்சை ரெளத்திரமாகத் தடுத்த செந்தில்நாதன் விடுதிவரை அழைத்துச் சென்று விட்டு விட்டு, வடக்கேயிருந்த தனது விடுதி நோக்கி நடைபோட்டான்.
米 米 米
31

Page 24
6
செந்தில்நாதன் தனது அறைக்குள் நுழைந்ததும், அறை நண்பன் கூறியதைக் கேட்க நம்பமுடியாதிருந்தது.
“செந்திநீர் டீக்காவது வருவீர் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. உமக்கு ஒரு பதிவுத்தபால் வந்திருக்கிறது. உமது அண்ணரிடமிருந்து என நினைக்கிறேன்" என்றபடி கடிதம் ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
படபடப்புடன் பதில் எதுவுமே பேசாது பிரித்துப் படித்தான் அவன். அரசாங்கத்திலிருந்து ஊர் விலாசமிட்டு ஒரு கடிதமும், அண்ணனிடமிருந்து மற்றதும் வந்திருந்தன. அண்ணனின் கடிதத்தையே அவன் முதலில் வாசித்தான்.
அன்புள்ள தம்பி.
உன்னை தபாலதிபர், சிக்னலாளர் பதவிக்கு தெரிந்தெடுத்திருக்கிறார்கள். நீ கஷ்டப்பட வேண்டுமா? அல்லது வேலையில்லாமல் பிரச்சினை மிக்க இந்த நாட்களில், கிடைத்த அராசங்க வேலைக்குப்போவதா என்பதை நன்றாக யோசித்து, உனக்கு எது விருப்பமோ அதன்படி செய்.
அக்கடிதமும் இத்துடன் வருகிறது.
அன்புள்ள அண்ணன் சி. தில்லைவாசன்
"அண்ணா"
செந்தில்நாதன் மகிழ்ச்சி பொங்க அழைத்தான். பின்னர் அந்த அரசாங்கக் கடிதத்தைப் பார்த்த பொழுது, பத்தாந் திகதி கொழும்பு பெரிய தபாற்கந்தோருக்கு வேலைக்கு வரும்படி எழுதியிருந்தது தெரிந்தது.
இன்னும் இரண்டே நாட்கள்
அவன் முணுமுணுத்தான்.
செந்தில்நாதனுக்கு என்ன செய்வது என்பது தெளிவாக, தீர்க்கமாகத் தெரிந்த பொழுதும், எப்படிச் செய்வது என்பது தெரியாமல் தவித்தான். பின்னர் அறை நண்பனைப் பார்த்து “நான் வேலைக்குப் போகிறேன். இன்றே இப்பொழுதே புறப்படுகிறேன்” என்றான்.
இடி விழுந்தது போன்ற அதிர்ச்சியில் அந்த அறை நண்பன் தவிக்கையில், அவனுடைய வாழ்த்துக்களையோ, ஆலோசனையையோ எதிர்பாராமல் வெளியே
32

சென்றவன் திரும்பவும் உள்ளே வந்தபொழுது பெரிய சுமை இறங்கிவிடடது போன்று நிம்மதியாக மூச்சுவிட்டான்.
நேரே மேசையருகே சென்று கடமைக்காக புஷ்பாவுக்கும், கலாநிதி கமலனுக்கண்ணனுக்கும் இரண்டு கடிதங்கள் எழுதினான். கமலக்கண்ணனுக்கு எழுதியதில், அவர் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் கடமைப்பட்டுள்ளதாகவும், தான் சம்மந்தப்பட்டுவிட்ட உயிரின் படிப்பையும் மானத்தையும் மதிப்பதாயும், அதற்கு ஒத்தாசை செய்வதுபோல் அரசாங்கத்தில் தபாலதிபர் வேலை கிடைத்துள்ளதாகவும், இன்றிரவே போவதாகவும், மன்னிக்கும்படியும் கேட்டிருந்தான். அவளுக்கு
“உன்னை விட்டுப் போகிறேன் என்பதிலும், உன்னைப் பிரச்சினை களிலிருந்து விடுவிக்கவும், என்னை மேலும் பிரச்சினைகளுள் மாட்டாதிருக்கவும், கொழும்பு தபாற் கந்தோருக்கு ஒரு தபாலதிபராகச் செல்கிறேன்.
என் நினைவு உன்னிடம் இருக்கும் வரையும், பின்னரும் உன் அன்பு என்னிடம் என்றென்றும் ஒ மரணம் வரை இருக்கும். இது சத்தியம்.
நான் போகிறேன்!” என்று மொட்டையாக எழுதி உறையிலிட்டு மூடியபடி, பெட்டியை எடுத்தான் செந்தில்நாதன்.
மறுநாள் கொழும்புத் தலைமைத் தபாற் கந்தோரில் தான் வேலையை ஒப்புக் கொள்வது பற்றிய சகல விபரங்களையும் ஒப்பங்களையும் கொடுத்த அவன், அன்றே தனது நிலைமையை விளக்கிப் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தான்.
காலம் யாரையும் எதிர்பார்த்திராது, தன் வழியே உருண்டு கொண்டிருந்தது.
{0, 0. 0x8 0x- 0x8

Page 25
7
அச்சுக்கூட வாசலில் பெரிய ஒபல் றெக்காட் ஒன்று வந்து நிற்பதையும் உணராமல், கலங்கிச் சிவந்த கண்களால் எங்கோ வெறித்தபடியிருந்தான் செந்தில்நாதன்.
இத்தனை ஆண்டுகளில் தன் வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள் வேலை பார்த்த மூன்றாண்டுகளில் புஷ்யா எத்தனை எத்தனை விதமாகக் கடிதங்கள் எழுதினாள். எத்தனை தடவைகள் அவனைப் பார்க்க, தனியே களவாக வந்திருந்தாள். தபாற் கந்தோருக்கும் போக வேண்டுமென்று தந்தையார் ராஜாவையே அழைத்துக் கொண்டு வந்து, தன்னையே கலங்கிய கண்களோடு மெளனமாகப் பார்த்துவிட்டுச் சென்ற அந்த அன்பையும் உள்ளூர வியந்தான் செந்தில்நாதன்.
கடந்த நான்காண்டுகளுள் எத்தனை விஷயங்களை இழந்துவிட்டான்? எத்தனை கருமங்களைச் சாதித்து விட்டான் அவன்? அண்ணன் போய்விட்டார். . . சே! சிங்களச் சோதனைக்கே போகாதிருந்ததால் அவனுடைய வேலை பறிபோனது. வேலை பார்த்த காலங்களில் வெளிவாரியாகப் பட்டப் பரீட்சை எடுக்கலாம் என்று ஆகியதும் இழந்த அதே பட்டத்தை இரவு பகலாகப் படித்து தானும் ஒரு பட்டதாரியானான் அவன்.
அவன் பட்டப் பரீட்சையில் சித்தியெய்தியதைப் பத்திரிகையில் பார்த்ததும், களிப்பு மிகவூர ஓடோடி வந்தாளே புஷ்பா
ஓ! அவளுடைய காதல் எவ்வளவு சக்தி வாய்ந்தது? “எக்ஸ்கியூஸ் மீ” என்ற கனத்த குரல் கேட்டுத் திடுக்கிட்டான் செந்தில்நாதன்.
வந்தவருக்கு ஆசனமிட்டு இருத்த நினைவின்றி, தான் எழுந்து, இவரை எங்கோ எப்பொழுதோ யாருடனோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று உற்று நோக்கினான்.
"யோசிக்காதீர்கள் தம்பி! நான்தான் ராஜா” “ஒரேக் யுவர் சீட் பிளீஸ்” என்றபடி முன்னேயிருந்த கதிரையை மேசைமீது எட்டி இழுத்து, அவரை அமரவைத்துவிட்டு, “ஒரு வார்த்தை சொல்லிருந்தால் நானே வந்திருப்பேனே. அல்லது ஒரு போன் காலாவது போட்டிருக்கலாலமே. ஏதாவது எடுப்பிக்கட்டுமா? . . . . “ என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே போனான் செந்தில்நாதன்.
பறுவாயில்லை. வெளிக்கிடயிக்கை தான் காப்பி சாப்பிட்டேன். ஆமா - போன் பண்ணினேன். டிஸ்கனெக்டட் ரோனாக இருந்தது, அதுதான் நேரிலேயே
34

பார்த்துப் பேசலாம் எண்டு வந்தன்” என்று அவர் கூறி முடிப்பதற்குள் டெலிபோன் றிசீவரை எடுத்து காதண்டை வைத்த அவன், றிசீவரிலிருந்து எந்தவித சத்தமும் வராதிருப்பதைக் கண்டதும், "ஓ! ஐ அம் ஸாரி” என்றபடி றிஸிவரைப் பலமாக அறைந்தான்.
“இட் இஸ் ஒகே” ராஜா கம்பீரமாகச் சொல்லி முடித்தார். பின்னர் அணிந்திருந்த டையை சரிசெய்து, தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டே கோர்டை கைமாறி இழுத்து விட்டார்.
போன்கட்டாகியதை நொந்து, இலட்சாதிபதியின் முன் அவமானப்பட்டதை நினைக்க அவனுடைய இதயம் அழுதது. நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போன்றுமிருந்தது.
“ஒரு போன் பில் கட்டவக்கற்ற நீஎப்படியப்பா என் பெண்ணை விரும்புவாய்? செல்வமாக வளர்ந்த அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய உனக்கு வக்கிருக்கிறதா?”என்று ராஜா கேட்டார் என்றால் என்ன பதிலைத்தான் சொல்வது? "உன்னுடைய கடன்காரர்களுக்கு என்னுடைய மகளா, ஒரு லட்சாதிபதியின் பெண்ணா பதில் சொல்கிறது?” என்று கேட்டால், அப்படியே வெளியே பாய்ந்து சென்று, வீதி விளக்குக் கம்பத்துடன் மோதுவதா? அல்லது அதோ தலைக்கு மேலே இருக்கும் மெயின் சுவிற்ச் பிளக்கைப்பிடுங்கி, அதற்குள் கையை விடுவதா? என்ன? "பேசாமல் இருக்கிறியளே தம்பி என்ன முகம் ஒரு மாதிரி . . . . கறுத்துப் போச்சு. . . . . இருக்கட்டும் இருக்கட்டு. . . . . . உங்களைச் சிரிக்க வைக்கிறேன்" என்று சொல்விட்டு வாசலுக்கு வெளியே பார்த்தார் ராஜா.
பின்னர் தன்னையே காருக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மகளை வரும்படி சைகை காட்டினார்.
வந்து நின்ற காரிலிருந்து சாரதிதான் இறங்குகிறான் என்று கதவு அடிபட்ட சத்தத்தில் நினைத்த செந்தில்நாதன் தலையைக் கவிழ்த்தபடி மேசையைப் பார்த்த வண்ணமேயிருந்தான்.
யாரோ அறை வாசலருகே வந்து நிற்பது போன்று அசுகை தெரிந்ததும் நிமிர்ந்தவன், தடாலென்று கதிரையைப் பின்னே எற்றிபடி “நுே” என்ற ஏக்கக் குரலுடன் எழுந்து நின்றான்.
புஷ்பா !” அவனுடைய அதரங்கள் மெல்ல முணுமுணுத்தன. தலையால் பணிவாக வணக்கஞ் செலுத்தி, ஒரு மெல்லிய முறுவல் உதிர்த்தாள் அவள். ஆண்டுகள் ஆண்டுகளாக அமைதியாகத் தன் முன் வந்து சிலைபோல் நின்று கண்ணிர் வடித்துவிட்டுதானே பிரிந்து சென்ற அவள், அவன் கேட்டுக் கொண்டதுபோல் படிப்பு முடிந்ததும் பழக வந்திருக்கிறாளா?
35

Page 26
“இருங்கள்” நிலைமையைச் சமாளித்தபடி உபசரித்தான் செந்தில்நாதன். இருப்பதற்காக இரண்டடி முன் நடந்த புஷ்பா, கதிரையைப் பற்றியபடி பேசாது நின்றாள்.
செந்தில்நாதன் அமர்ந்ததும், புஷ்பா எதிர்பாராத வேகத்தில் கதிரையை இழுத்து அவனுக்கு அண்மையில் இட்டவாறு இருந்தாள்.
செந்தில்நாதன் முறுவலித்ததைப் பெரும் புண்ணியமாகக் கருதிய அவளும் சிரித்தாள். இரண்டு பேரும் சிரிப்பதை மாறி, மாறிப் பார்த்த ராஜா பெரிதாக, ஹா! ஹா! என்று ஒலியெழுப்பிச் சிரித்தார்.
அங்கு சிறிது நிலவிய மெளனத்தைக் கிழித்துக்கொண்டு ராஜா பேசினார். “தம்பி! உங்களை ஏன் பார்க்க வந்தோம் தெரியுமா?” “தெரியாது” “தெரியாது?” - அவன் பொய் சொல்கிறான் என்பதைத் தந்தையாருக்கு வெளிப்படுத்துபவள் போல இழுத்தாள் புஷ்பா.
“தெரியாது” என்று சற்று அழுத்தமாகக் கூறினான் செந்தில்நாதன். பின் தொடர்ந்தான்.
பின்னர் வரப்போவது தெரிந்திருந்தால் என் அண்ணனை ஆபரேஷனுக்கு அனுப்பியிருப்பேனா?” என்று கேட்கும் பொழுது அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன.
தந்தைக்குத் தந்தையாக, தோழனுக்குத் தோழனாக, அண்ணனுக்கு அண்ணனாக இருந்த அந்த அண்ணனை மறப்பது சுலபமான காரியமா?
"அண்ணனுக்கு என்ன நடந்தது?” புஷ்பா திகைப்புடன் கேட்டாள். “மரணம்’ அமைதியை வரவழைத்துக் கொண்டு எங்கோ பார்த்தபடி
கூறினான் அவன்.
"அண்ணன் கல்யாணம். . . . “ அவள் கூறி முடிப்பதற்குள் செந்தில்நாதன் சொன்னான்.
"அண்ணி இருக்கிறார்கள். கையில் ஒரு குழந்தையும் வளர்கிறது. ஆனால் .
"ஆனால் . . . . என்ன? அண்ணன் போய்விட்டார். அவ்வளவு தான்.
முப்பத்தாறு வயதுவரை வீட்டுக்காக உழைத்துவிட்டு, இளம் விதவைக்கு ஒன்றரை வருட வாழ்வும், கடைசிவரை கண்ணிரும் கொடுத்துவிட்டு அவர் போய் விட்டார்"
"ஏன் கண்ணீர் கொடுத்தார்? வேண்டுமென்றே செய்தாரா? விதி அப்படிச் செய்து விட்டது” புஷ்பா சொன்னாள். பின்னர், உங்களுக்கென்ன? அண்ணனை நம்பி வந்த அவர்களைப் பார்க்க இயலாதோ?” என்று கேட்டாள் அவள்.
36

“வயோதிகத் தந்தையரையும், வாழ்விழந்த அண்ணியையும் கடைசி வரை காப்பாற்ற வேண்டியதுதான். அதுதான் என் இலட்சியம். இதற்கு மற்றவர்கள் சம்மதிப்பார்களா? அதுதான் சிக்கல்” என்று செந்தில்நாதன் கூறியதும், அந்த இருவரின் முகங்களும் மாறின.
செந்தில்நாதனுக்குப் பக்கத்தில் யாரோ ஒருத்தி மிக உரிமையுள்ளவள் போன்று அமர்ந்திருந்ததை அருவெறுத்த ரேணுகா, தன் ஆசைகளில் ஏதோ இடி விழுந்தவள் போன்று முகத்தை எங்கோ இட்டபடி, மெளனியாக இருந்தாள்.
அங்கு அமைதி குடிகொண்டது.
“தம்பியோடு நிறையப் பேச வேண்டும். எப்ப சந்திக்கலாம்?"
ராஜா தந்திரமாகக் கேட்பதை உணர்ந்து கொண்ட அவன், “எப்பொழுதும் பேசலாம்!” என்றான் நிதர்சனமாக,
"அப்படியானால் ஒண்டு செய்யிறீங்களா?”
ரேணுகா பின்புறமாக இருப்பதைக் கவனித்து விட்டு, மெதுவாகக் கேட்டார்
ராஜா.
“என்ன?”
“எங்களோடை வீட்டை வாருங்களேன்!”
“ஒமோம்! வாருங்கள்.” புஷ்பா ஒத்திசைத்தாள். அவர்களுடன் அவன் புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கையில் காந்தன் உள்ளே வந்தான்.
“காந்தன் கோட்டைக் கடைக்காரர் என்னவாம்?”
“கொடுத்தார்”
“எவ்வளவு"
"முழுவதும் ஆயிரத்து இருநூறு."
“சரி சரி ஐயருடைய காசைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாரும். நடந்ததைப்பற்றி வருந்த வேண்டாம் என்றும் சொல்லும் என்றபடி காருக்குட்சென்று முன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான் செந்தில்நாதன்.
கார் புறப்பட்டது.
米 来 来
37

Page 27
8
“காலங்காத்தாலை ஐயர் வந்திருந்தாரா?” ஒடிக்கொண்டிருந்த காரின் சத்தத்தைத் தவிர அங்கு வேறு எதுவுமே கேட்காதிருந்த குறையை நிவர்த்திப்பவர் போலக் கேட்டார் ராஜா.
செந்தில்நாதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவரைத் திரும்பிப் பார்த்துப் பதிலேதும் சொல்லச் சக்தியற்றவனாகி, தனது அந்தரங்கங்களையே அணுவணுவாக அவர் அறிந்து வைப்பதை எண்ணி அஞ்சினான் அவன்.
“உங்களுடைய சொந்த வாழ்க்கையிலை குறுக்கிடுறன் எண்டு நினைக்கக் கூடாது. ஆப்ரல் ஒல்" நான் குறுக்கிடாமல் வேறு யார் தான் குறுக்கிடுகிறது. சொல்லுங்கள் தம்பி” என்றார் ராஜா.
கறுத்து விகாரப்பட்டிருந்த தனது முகத்தை முன் ஆசனத்திலிருந்தபடியே அவர் பக்கமாகத் திரும்பியவனின் கண்களுக்குள் புஷ்பாவே முதலில் விழுந்தாள். கார் பின் சீட்டின் வலது பக்கதில் அவள் ஒய்யாரமாக அமர்ந்து விழிகளை உயர்த்தியிருந்த கண்ணாடிக்கு ஊடாக வெளியே செலுத்தி ஏதும் அறியாதவள் போல் இருந்தவள், செந்தில்நாதன் திரும்பும் ஓசை கேட்டு அவனைப் பரிவோடு பார்த்தாள்.
"அப்பா'என்று தந்தையின் வலது காலை உலுப்பி,"அதெல்லாம் எதற்காக?" என்றும் அவள் கேட்டது அவனுக்குப் பெரும் ஆறுதலை அளித்தது.
“இல்லை!பத்துமணிபோல் என்னிடம் வந்தார். ஏதோவெல்லாம் சொன்னார் மனுஷன். அதுதான் கேட்டேன்" ராஜா மகளுக்குச் சொல்வது போல் பெதுவாகச் சொன்னார்.
நடந்தது எல்லாமே சொன்னாரா?” செந்தில்நாதன் அப்பொழுது தான் பேசினான். “யேஸ். . . . யேஸ். . . . எல்லாமே சொன்னார். சிறிது மெளனமாக இருந்த செந்தில்நாதன் ராஜாவை முழுவதும் பார்த்தபடி கேட்டான்.
“ஏன் அங்கு ஐயர் வந்தார் என்பதை நான் அறியலாமா?” “ஓயெஸ். தாராளமாக என் பெண்ணுக்கு வரன் தேட . . . . அதுதான் கல்யாணப் பேச்சு எடுக்க இன்று நல்ல நாளா? எண்டு பாக்கத்தான் ஆள் அனுப்பியிருந்தேன். அவரும் வந்தார். . . . . yy
நாசூக்காகச் சொல்லிவிட்டு, புஷ்பாவைப் பார்த்துச் சிரித்தார் ராஜா. செந்தில்நாதனைத் தந்தையார் மர்மமாகக் குடைவதை வெறுப்பவள் போலக் காணப்பட்டாள்; ஆயினும் எதுவும் பேசாது வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். “கல்யாணப் பேச்சு . . . . . ”செந்தில்நாதன் எதையோ கேட்க வந்துவிட்டு, அவராக ஏதும் சொல்லாதவரை, தானே குட்டையைக் கிளறி, தன் மூக்கை ஏன் அறுப்பான்? என்று மெளனியானான்.
38

"ஆமாம்!" மாப்பிள்ளை யாரென்று கேக்கவேணும் போல இல்லை?...”
"அப்பா”
“சும்மாயிரு புஷ்பா! தமாஷாக இப்பொழுது தானே பேசலாம். அப்புறம் பேச்சுக்கால் எடுத்தால், மரியாதையாகப் பேச வேணுமே” என்று பெரிதாகச் சிரித்தார் அவர். அவர் சிரிக்கும் பொழுது, அணிந்திருந்த ரை புடைத்திருந்த வண்டியில் எம்பி எம்பி விழுந்ததை செந்தில்நாதன் கவனிக்கவில்லையாயினும், சாரதி கவனிக்கவே செய்தான். கண்ணாடிக்குள் விழிபதித்துத் தன்னுள் மெளனமாகச் சிரித்த அவன், முன்னால் சென்ற மற்றொரு கார் திடீரென்று பிறேக் அடித்ததை மிக அண்மையில் சென்றே கவனித்ததால், சடுதியாகப் பிறேக் போட்டான். பின் ஆசனத்திலிருந்தவர்கள் முன் ஆசனங்களைக் கெட்டியாகப் பிடிப்பது செந்தில்நாதனுக்கு அவ்வேளை தெரிந்தது. சடுதியாகத் திரும்பி, புஷ்யாவுக்கு ஏதும் ஆயிற்றா என்று பார்த்த செந்தில்நாதன், அவள் சாரதியைப் பார்த்து சினப்பதைக் கண்டதும், பேசாதிருந்து விட்டான்.
ராஜா கத்தினார்.
“அபசகுனம் வைக்கப்பாத்தியே மடையா! உன்னுடைய வேலை
காரோட்டுறது. எங்கடை கதைக்கு ஏன் காது கொடுக்கிறாய். . . . " என்று சிங்களத்தில் கர்ஜித்ததும், சாரதி எதுவுமே பேசாது மெளனமாகக் காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.
சொற்ப நேரத்துக்குள் தன்னுடனும் உரையாடி, சாரதியையும் கவனித்து. ராஜா என்ற இந்த மனிதர் எப்படியெல்லாம் விஷயங்களைக் கவனிக்கிறார்?
கார் வீட்டுக் கம்பவுண்டுக்குள் நுழைந்ததும், “வாருங்கள் தம்பி” என்றபடி அவனுடைய பதிலுக்காகக் காத்திராது உள்ளே சென்று"மரகதம். யார் வந்திருக்கா எண்டு பார்” என்று குரல் கொடுத்தார். அவர் பேசும் இஸ்லாமிய, இந்திய, யாழ்ப்பாணத் தமிழ்களின் சங்கமத்தை இரசித்த செந்தில்நாதன் மெல்லச் சிரித்தான்.
அவன் இறங்குவதற்கு ஆயத்தமாகிய பொழுது, “உங்களைக் கையெடுத்துக் கேட்கிறேன். அவர்கள் கேட்பதற்கு மறுக்காமல் சம்மதித்து விடுங்கள். உங்களை நம்பி, எதிர்பார்த்து இன்றோடு நான்கு ஆண்டுகள் முடிகின்றன. என்னை வாழவையுங்கள்” என்று கும்பிட்டு இரந்தாள் புஷ்பா.
“சரிசரி உள்ளே போனால் எல்லாம் வெளிக்கும்தானே” கூறியபடி, இறங்கிய செந்தில்நாதன் தனது களிசானில் பட்டிருந்த மைத்துளிகளைப் பார்த்ததும், ஷேர்ட்டை இழுத்து விட்டபடி, மெதுவாக உள்ளே சென்றான். அவனைக் கண்டதும் வாலைக் குழைத்தபடி பெரியதோர் அல்சேஷன் நாய் குரைத்தது.
“ஜோன்சட் அப்” என்று ராஜா அடித் தொண்டையாற்கத்தினார். பின்னர் "கம் ஒன். மை டியர். யூஆர் வெல்கம்” என்று ஆங்கிலத்தில் முழங்கினார்.
முன் கூடம் பெரியதாகக் கட்டி, பின்புறமாக மாடி எழுப்பியிருந்த அந்த வீட்டினுள் அவரது குரல் கம்பீரமாக ஒலித்தது.
செந்தில்நாதனைத் தொடர்ந்து வந்த புஷ்பா அவனை ஆசனத்தில் அமரச் சொல்லிவிட்டு, “ஒரு நிமிஷம்” என்றபடி உள்ளே சென்றாள்.
39

Page 28
“என்னங்க! பையன். . . . . ” என்று சிரித்தபடியும், தன்னுள் மகிழ்ந்தபடியும் நின்ற மரகதத்தையும் பார்த்து, "பையனுக்கு என்ன?” என்றார் ராஜா.
"இல்லை மூக்கும் முழியும் நல்லாத்தான் இருக்கு வயசு குறைவு போலை, இந்தச் சின்ன வயசுக்குள் இவ்வளவு காரியம். . . . . பேசுங்கள். . . . . இந்தா புஷ்பா, ...நீ எங்கை உள்ளே போய்... என்ன செய்கிறாய். . . . வந்தவையைவிட உள்ளே என்ன பெரிசாக வைச்சிருக்கிறாய்.”
"இதோ! வந்துவிட்டேன் அம்மா!” என்றபடி துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் புஷ்பா.
உள்ளே சென்று உடைகளைக் களைந்து விட்டு, வேட்டியும் ஷேட்டுமாக முகங்கழுவி, திருநீறும் அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தார் ராஜா. அவருடைய ஆங்கிலத் தோற்றத்தில் எவ்வளவு கம்பீரம் இருந்ததோ, அதிலும் பன்மடங்கு தேஜஸ் அப்பொழுது இருந்ததை செந்தில்நாதன் நன்கு அவதானித்தான்.
அப்பா அங்கு வருவதைக் கண்டதும், குசினிக் கட்டுக்கு ஓடினாள் புஷ்பா. மரகதம் கணவரின் அழைப்பை எதிர்பார்த்து நின்றவள் போல, அவர் வாய்திறக்கு முன் அங்கு வந்து சேர்ந்தாள்.
"புஷ்பாவுக்கு ஒரு வரன் தேடுறம். உங்களுடைய அபிப்பிராயம் என்ன?” ராஜா என்ன கேட்கிறார் என்பதை ஒட்டி நின்று பார்த்த புஷ்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு “வேண்டியது தான்!” என்றான் செந்தில்நாதன்.
தகப்பன் நேரடியாகப் பேசாமல் மறுபடியும் சுற்றி வளைக்கிறாரே என்று சினந்த புஷ்யா, கைகளை மடக்கி நெட்டி முறிந்து, வலக்காலைப் பூமியில் தூக்கிக் குத்திச் சிணுங்கினாள். அந்த வீட்டில் அவள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்திருக்கக் கூடிய அந்தச் செயலை அப்பொழுதும் செய்ததை எண்ணிச் சிரித்தான் செந்தில்நாதன். அந்தச் சிரிப்பை அவளுக்கு மட்டும் கொடுத்து விட்டு ராஜாவின் பக்கமாகத் திரும்பிய அவனை உற்றுப்பார்த்த ராஜா,'தம்பி" என்று சோகம் கலந்த தொனியில் அழைத்துத் தொடர்ந்து கூறினார்.
“நான் உங்களைப் பொறுத்தவரையில் பலரிடமும் விசாரித்தேன். கலாநிதி கமலக்கண்ணன் தான் உங்கள் பெயரை முதல் எனக்குச் சொன்னவர். பல்கலைக்கழகத்திலை உங்களுக்கு அவர் என்ன சொன்னார் எண்டும் எனக்குத் தெரியும். நீங்கள் ஏன் பல்கழைக்கழகத்தை விட்டே வெளிக்கிட்டீங்க எண்டதுஊரை, உலகத்தைப் பொறுத்தவரை வேலை கிடைச்சதாலை எண்ணுவினம். ஆனால், அது என்ரை ஒரே செல்வத்துக்காக எண்ணுறதை நினைச்சா பெருமையாக இருக்கு. ஒரு விதத்திலை நன்றியாகவும் இருக்கிறன். மான ரோஷம் தன்னம்பிக்கை உள்ள ஒருத்தனைச் சொல்லச் சொல்லி, அவனுக்கே புஷ்பாவைக் கட்டிக் கொடுக்கிறேன் எண்டு கமலக்கண்ணனிடம் நான் சொன்னப்போ. . . . . அவர் உங்கடை பேரைச் சொன்னார். புஷ்பாவுக்கு நாலு வருஷம் கட்டுப்பாடு போட்டீங்களாம். அதிலையும் என் பிள்ளை கெட்டிக்காரி. அவ தபால் கந்தோருக்கு என்னையும் கூட்டிக் கொண்டு வந்தப்போ. . . . . நான் வேணுமெண்டே காரிலை இருப்பேன். எனக்கு எல்லாமே
40

முன்கூட்டியே தெரியும். புஷ்பா உங்களைப் பார்க்க வந்தாலும் சிரிப்போடை கதையை முடிச்சிடுவீங்க எண்டு.
“சரி சரி பழையவற்றை ஏன் கிளற வேண்டும். உங்கள் விருப்பம் என்ன?” நெந்தில்நாதன், புஷ்யா உள்ளே நின்று கண்கலங்குவதைப் பார்த்துப் பொறுக்காமல் தான் கூறுகிறான் என்பதை ஊகித்து, பின்னர் தெளிந்த ராஜா, புஷ்யா” என்று அழைத்தார்.
"உன்னுடைய ஆக்கள். உன்னுடைய வீடு. உன்னை நாங்கள் இருக்கச் சொன்னால் தான் இருப்பாய். ஆ நீ பெரிய ஜீவன் அம்மா”
பரீட்சை முடிந்து பாஸாகியதும் உங்களைக் கேட்கலாமெண்டு இருந்தன். உங்கள் அண்ணர் மோசம் போனதைக் கேள்விப்பட்டதும் விட்டுவிட்டேன். உங்களுக்கு இப்ப சம்மதந்தானே. . . . . . .
ராஜா ஆவலோடு கேட்டார். அதேவேளை ஏதாவது ஒரு நொண்டிச் சாட்டுச் சொல்லியேனும் அவன் தங்களை ஒரேயடியாகவோ, சிறிதாகவோ எற்றிவிடக்கூடாது என்று பிரார்த்தித்தார் ராஜா.
“கம்பனிகள் ரண்டும் புஷ்யாவுக்கும் உங்களுக்குமாகப் பொதுப்படப் பதிஞ்சு தரலாம். உங்கள் அண்ணியின் சீதனப் பணமும் உங்கள் அச்சுக்கூடத்தில் இருக்கிறதாலை, அதை அப்படியே அண்ணி பேருக்கு விட்டிடுங்க. . . " என்று மரகதம் வாய் திறந்தது வியப்பாக இருந்தாலும், எனது அந்தரங்கம் இவை வரை எப்படி எட்டியிருக்கும்? என்று ஆச்சரியப்பட்டான் செந்தில்நாதன்.
புஷ்யா! உனக்கு ஏதாச்சும் சொல்லத் தோணுதா? இப்பவே சொல்லிவிடு” ராஜா மகளைக் கேட்டார்.
“நீங்கள் எப்படி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதித்தீர்கள் என்று இவர் நன்றாக யோசிக்கிறார் போல எனக்குப்படுகிறது. அதை நீங்களே சொல்லிவிடுங்கள் அப்பா"
"ஓ! அதுவா? எனக்குப் பழைய ஞாபகம் ஒண்டு வருகுது. அப்ப புஷ்யாவுக்கு ஐஞ்சு வயசு இருக்கும். களிமண் குதிரை ஒன்றையும், ரப்பர் குதிரை ஒன்றையும் காட்டி எது வேணும் எண்டு கேட்டன். இரண்டையும் தூக்கிப் பார்த்த அவ, ரப்பர் குதிரையையே போதும் எண்டா. களிமண் குதிரை மிக அழகாக பெயின்ட் பண்ணியும் இருந்தது. இது வடிவான குதிரை. . . . . இதை எடேன் எண்டு நான் சொன்னேன். அதுக்கு அவஎன்ன சொன்னா தெரியுமோ? மண்குதிரை விழுந்தால் உடைஞ்சுபோம். காசும் நட்டம். பெயின்டும் நட்டம். ரப்பர் குதிரை என்றும் வைத்த விளையாடலாம். அத்தோடை மலிவு. . . . . எண்டா. அண்டையிலிருந்து புஷ்பா தெரியிற விஷயத்திலை தலையிடுகிறதில்லை.
“ஓ! இப்ப மட்டும் என்ன குறைஞ்சிட்டு தாம்” என்றபடி, மரகதம், புஷ்பா, செந்தில்நாதன் என்ற அந்த மூன்று பேரையும் ஒருமுறை மாறிமாறிப்பார்த்தார் ராஜா. பின்னர் கூறினார்.
4

Page 29
"எண்டைக்கு என்ரபிள்ளையின்ரை படிப்பும் மானமும் பெரிசெண்டு நீங்கள் மதிச்சீங்களோ, அதுகளுக்காக உங்களை இரையாக்கினிங்கலோ அண்டைக்கே, அதாவது உங்கள் கடிதத்தை டாக்டர் கமலக்கண்ணன் எனக்கு அனுப்பின அண்டைக்கே என் பொண்ணை உங்களுக்கே தருவதாக நிச்சயித்து விட்டேன்.”
செந்தில்நாதன் அமைதியாக, எந்தவித ஆனந்தமோ பதட்டமோ இன்றிக் கேட்டிருந்ததை அளவோடு இரசித்தார் ராஜா. பின்னர் மகள் பக்கமாகத் திரும்பி, “என்னம்மா புஷ்பா வீடு தேடி வந்திருக்கிறார். ஒண்டும் குடுக்க மாட்டாய் போலை கிடக்கு" என்றபடி மரகதத்தைப் பார்த்தார். தன்னை எழுந்து போகும்படி கணவர் கூறுகிறார் என்பதை உணர்ந்த கொண்ட மரகதம் அங்கிருந்து எழுந்து குசினிக்கட்டுக்குச் சென்றாள்.
“எல்லாம் குடுக்கலாம்” என்றபடி அவனைப் பார்த்து பொருளோடு சிரித்தாள் புஷ்பா.
“தம்பி. வேறு ஏதாவது சொல்ல வேணுமா? நீங்கள் ஏதாவது சொல்ல இருக்கா?" எழுந்து நின்று அவர் கேட்டதும், தானும் எழுந்து நின்று "என்னுடைய அண்ணி ஐயாவையும் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன். அனுமதிக்க வேண்டும்" என்றான் செந்தில்நாதன்.
"ஓ! தாராளமாக. அது கடமையுங் கூட பெற்றவர்களை மிஞ்சி என்ன கல்யாணம் வேண்டிக்கிடக்குது”
“மிக்க நன்றி!” “இட் இஸ் ஒகே” என்றபடி உள்ளே சென்றார் ராஜா. பின்னர் எதையோ நினைத்தவராகத்திரும்பி,"ஏம்மா புஷ்யா! அவருக்கு உன் வீடு எப்படி இருக்கு எண்டு காட்டேன்” என்று விட்டு, பதிலுக்காகக் காத்திராமல் அப்பாற் சென்றார்.
"உன் அப்பா இருக்கிறாரே! அனுபவத்தின் அகராதி. மனோதத்துவத்தின் மூத்த மகன். அறிவுக் கடல். . . .” செந்தில்நாதன் உதடுகளைப் பிதுக்கி, கண்களையும் உயர்த்திக் கொண்டு ராஜாவை வருணித்ததும், “எழுத்தாளர் ஸார் கொஞ்சம் எழுந்து வருகிறீர்களா? உங்களுக்கு வருணிக்க இன்னும் பொருள்கள் காட்டுகிறேன்” என்று சூத்திரமாகச் சொன்ன அவளைத் தொடர்ந்து சிரித்தபடி சென்றான் அவன்.
“இதுதான் என்னுடைய அறை என்று நடுவில் இருந்த ஓர் அறையை அவள் காட்டியதும், யன்னல் இருக்கிறதே! இரவில் உள்ளே தடங்கல் இல்லாமல் வரலாமே!” என்று தனக்குள் சொன்னதைக் கேட்ட புஷ்பா, “திருட்டுத்தனத்திலே யோக்கியம் பேசுகிறது; யோக்கியத்திலே திருட்டுத்தனம் பேசுகிறது. ஆளைப் பாருங்களேன். இப்பொழுது தானே எல்லாக் கதவுகளும் திறந்து கிடக்கின்றன உங்களுக்காக...” என்றாள்.
"திறந்து கிடக்க வேண்டியவை பூட்டிக் கிடக்கின்றனவே!" அங்கலாய்த்தான் அவன்!
42

“தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும்”எங்கோ பார்த்தபடி சொன்னாள் புஷ்யா.
“உம்!” என்று இரண்டடி அவளருகில் சென்று அவளை அணைக்கத்தாவிய பொழுது, அவள் ஒடிச் சென்று மேசை மீதிருந்த புகைப்படம் ஒன்றைக் காட்டி “இவரிடம் சொல்லுவேன்” என்று அபிநயம் பிடித்தாள்.
அந்தப்படம் ஒரு பத்திரிகையிலிருந்து கத்தரித்தது போலிருந்தது. அருகில் சென்று பார்த்ததும், “எப்படி இது இங்கே வந்தது?" என்றான். s
“உம் பேப்பரிலிருந்துகூட உங்கள் படத்தை நான் எடுக்கக் கூடாது என்று சட்டமா என்ன? சிங்களத்தால் வேலை இழந்த வாலிபர் இவர்தான். இவர் - சிங்களத்தால் வேலை இழந்தார். பணத்தால் படிப்பை இழந்தார். . . . “ என்று அவள் கேலியாகக் கூறியதும், “புஷ்பாவால் வாழ்வையே இழந்தார்’ என்று செந்தில்நாதன் கூறிவிட்டுப் பெரிதாகச் சிரித்தான். "ஆங்" என்ற அழும் ஓசையுடன் தாவி வந்த அவளை, வாரியணைத்து, “சே பகிடிக்குச் சொன்னேன்” என்றான். பின்னர், “கேளுங்கள் கொடுக்கப்படும்” என்றபடி நெஞ்சோடு அணைந்த மார்பை முதுகுப் புறமாக அழுத்திப் பதியவைத்தபடி, அவள் முகத்தினருகே குனிந்தான் அவன்.
அவள் கைக்குள் திமிறி, உடலோடு வழுக்குண்டு, அவனுடைய கால்களைப் பற்றிபடி தரையில் அமர்ந்தாள் புஷ்பா.
“என்னைக் கைவிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு அன்றுமிருந்தது. இன்றுமிருக்கிறது. இன்னுமிருக்கிறது ஆனாலும். . . . கொடுக்கச் சிரமமாயிருக்கிறது. ...” என்று குழைந்தாள் புஷ்பா.
"அப்படியானால் எடுக்கிறேன்!” என்றபடி அலாக்காக அவளுடைய தோட்பட்டைகளைப் பற்றித் தூக்கி. . . . .
“போதும் . . . . . போதும் . . . . . "புஷ்பா சிணுங்கியபடியே சிரித்தாள். அவளுடைய கண்களுக்கு தன்னுள் அவளாகிய உமாசிவன் சிலை மேசையிலிருப்பது நன்கு தெரிந்தது.
"புஷ்யா! இதைக் குடு”என்றபடி சாத்தியிருந்த கதவைத் தட்டினாள் மரகதம். குரல் கேட்டதும், புஷ்யாவினுடைய புத்தக அலமாரியை நோட்டம் விடுபவன் போல நின்றான் அவன். கதைவைச் சாத்திவிட்டு கையில் பாலுடனும், வாழைப்பழத்துடனும் வந்தாள் புஷ்பா.
“முதலில் கேட்டதைக் கொடுத்தால்தான் சாப்பிடுவேன்” என்று குழந்தை போல் அடம்பிடித்த அவனுடைய முகத்தை இரண்டு கைகளாலும் அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள் புஷ்பா.
பால் கிண்ணம் சுவர்க்கடிகார தூங்குமுள் போன்று இரண்டு வாய்களுக்கிடையில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது.
43

Page 30
9
நேரம் இரவாகியிருந்தது செந்தில்நாதன் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான். தனது இருபத்தெட்டு வருட காலத்தில் இதுவரை எந்தப் பெண்ணையுமே தேவையற்ற முறையில் ஏறிட்டுப் பார்க்காத, தொட்டு அனுபவித்தறியாத அவன். அன்று சாயந்தரம் தனக்கே உரியவள் என்று கடவுளால் அனுப்பப்பட்டு, பெற்றோரின் முழு மனதான சம்மதத்தையும் பெற்றுத் தந்த புஷ்பா என்ற பெண்மையின் மென்மையை முதல் முறையாக அனுபவித்த ஆனந்தம் நித்திரையைக் குழம்பிக் கொண்டிருந்தது. கடற்கரையோடு அமைந்த அந்தப் பெரிய வீட்டின் முன்னறையை முற்றுகையிடுவது போல் நிலவுக் கதிர்கள் பாய்ந்து கொண்டிருந்தன.
இப்பொழுதே, இந்த இரவே எழுந்து சென்று புஷ்பாவின் வீட்டுக் கதவைத் தட்டி அவளை அழைத்துக் கொண்டு இன்னும் போகாத புது உலகத்துக்குப் போனாலென்ன என்றும் மனம் பெரிதாகத் துடித்துக் கொண்டிருந்தது.
கட்டிலைவிட்டு எழுந்து யன்னல் ஓரமாகச் சென்று பரந்து கிடந்த கடலைப் பார்த்தான். அவனுடைய அறைக்குச் சில யார் தூரத்துக்கு அப்பால் கொழும்புக் கோட்டையையும் மாத்தறையையுந் தொடுக்கும் புகையிரதப் பாதை நிலவொளியில் வடிவாகத் தெரிந்தது. அப்பால் வா வா என்று அழைக்கும் வண்ணக் குமரியின் கைகளின் அசைவோடு பெருங்கடல் பூரித்து, ஆரவாரித்த வண்ணமிருந்தது. தனது அறையின் ஒரு பகுதியை மட்டுமன்றி, அந்தமாகடலின் முழுமேனியையும் தனதாக்கி உறவாடிக் கிடந்தது பூரணச் சந்திரன்.
தான் அனுபவிக்கும் “இன்பச் சேர்க்கை எவ்வளவு ரம்பியமானது என்று பார்”என்பதாக நிலவு காட்டுகின்றது என்று கற்பனை செய்தான் அவன்.
காலையில் வேலைக்கு விழுந்தடித்துச் சென்றவர்கள், மாலையில் தங்கள் மனைவியருக்கு வேண்டியவற்றை வாங்கி உதவி, இரவுணவு உண்டபின் எவ்வளவு இனிமையான உறக்கத்தில் மூழ்கியிருப்பார்கள் என்பதைச் செந்தில்நாதன் நினைத்த பொழுது அடி மனதிலிருந்து ஏதோ புறப்பட்டு நாசி வழியே தெறித்துப் பறந்தது.
கூடவே காய்ந்த பனியும், கடற்காற்றும் அவனுடைய தனிமையைக் கொன்று கொண்டிருந்தன. ஒருமையின் வெறுமை காலங்காலமாக அனுபவிக்கத் தக்க ஒன்றாக இருந்த பொழுதும், இருமையின் இனிமை எவ்வளவோ, எத்துணையோ என்று ஏங்கியிருந்தவனுக்கு, இவ்வளவும், இத்துணையும் இன்னுமின்னும் என்று காட்டுவது போல், அன்று புஷ்பா நடந்து கொண்டது அவன் நினைவுகளுக்கும் உதடுகளுக்கும் அப்பொழுதும் இதமாகவே இருந்தது.
44

վ6չLIT செந்தில்நாதன் நிலவைப் பார்த்து அழைத்தான். எவ்வளவு உயரத்தில். . . எவ்வளவு தூரத்தில் இருந்த நீ . . . . கைக்குக் கிட்டியதும் விட்டு விட்டு வந்து விட்டேனா நான்?
அதுதானே உன் அப்பா. . . . ஒ என் மாமனார் எப்பொழுதும் உன்னை என் கைகளுக்குள் சிறையிடத்தயாராக இருக்கிறார். நான் தான் மடையன். இன்றே இப்பொழுதே என் புஷ்பாவை. . . என் உயிரை. . . . . என் வாழ்வை என்னோடு விட்டுவிடுங்கள் என்று கேட்காமல் வந்துவிட்டேன்.
நீ மட்டும் இப்பொழுது உறங்கிக் கொண்டா இருப்பாய்? இல்லவே இல்லை! நீ மாளாத நோயில் வாடிய வண்ணமிருக்க நான் தான் முனிவன் போல
நிஷ்டையாகி விட்டேன் என்று என் மீது சபிக்கிறாயே. . . . உன் பொய்க் கோபமும் அடிமன வேதனையும் எனக்கு ஆனந்தத்தையும் துன்பத்தையும் தருகின்றனவே!
"புஷ்பா” செந்தில்நாதன் கட்டிலுக்கு வந்து தலையணையை உயர்த்தி வைத்து சாய்ந்தான்.
அவனுடைய நினைவுகள் எங்கோ எப்பொழுதோ நடந்த ஒன்றைத் திரையிட்டன.
ஊரில் உள்ள அரசாங்கப்பள்ளியில் அவன் படித்துக் கொண்டிருந்த காலம் அது இந்தியாவரை சென்று பி. எஸ்ஸி. பட்டம் எடுத்து விட்டு, அங்கு படிப்பிக்க நாள் தோறும் வந்த அவள். . . . அந்தப் பள்ளியில் வேறு விஞ்ஞானப் பட்டதாரிகள் இல்லாததால் அவளை பி. எஸ்ஸி, டீச்சர் என்றே மாணவர்கள், ஆசியர்கள் எல்லோரும் அழைக்கத் தலைப்பட்டனர்.
சரஸ்வதி பூசை வந்தது
வேண்டிய ஜோடனைகளைச் செய்து கொடுத்தான் செந்தில்நாதன். பள்ளியில் அதி உயர்ந்த வகுப்பான எஸ். எஸ்ஸி யில் தனது பதினைந்து வயதில் படித்த அவன்தான் அங்கு ஹெட் மொனிட்டர்.
இருண்டியிருந்தது
சரஸ்வதி பூசை முடிந்து ஆட்கள் எல்லோரும் போய்க் கொண்டிருந்த வேளைதான் அந்த பி.எஸ்ஸி டீச்சருக்கு அந்தக் கிராமத்திலிருந்து எட்டுமணிக்குப் பிறகு சங்கம் நடத்தும் பஸ் சேவை இல்லை என்பது தெரியவந்தது. அவள் நட்பாகப் பேசும் மற்றொரு தமிழ் ஆசிரியையை அவள் துணைநாடியபொழுது, தன் வீட்டிலேயே தங்கி மறுநாள் போகலாமென்று அவள் கேட்டாள்.
“என்னை வீட்டுக்காரர் பார்த்திருப்பினம். எங்கள் சொந்த வீடு என்றாலும் பறுவாயில்லை. நாளைக்கு இந்த வாடகை வீட்டுக்காரர் ஏதாச்சும் சொல்வார்கள். அதுதான் எப்பிடியும் போக வேணுமே” என்று அடம்பிடித்தாள் பி. எஸ்ஸி டீச்சர்.
45

Page 31
தமிழ் ஆசிரியைக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பின்னர் அவள்
சொல்வதிலும் நியாயமிருக்கிறது என்று எண்ணினாள். காலையும் மாலையும் யாழ்பாணத்திலுள்ள ஒரு வீட்டறையிலிருந்து வந்து போகும் அவள், சனிக்கிழமைகளிலேதான் தன் ஊருக்குப் போவது வழக்கம். அதனால், உற்றார், உறவினர்கள் எவருமே அவளைத் தேடி வர நியாயமில்லை. வீட்டுக்காரர் தேடி வரமாட்டார்கள். பதிலாக, அந்த அழகுப் பதுமை எங்கோ இன்பமாக இரவைக் கழித்துக் கொண்டிருக்கிறாள் என்று கண்மூடித்தனமாக எண்ணலாமல்லவா?
ஊரில் பஸ்ஸைவிட்டு அவள் இறங்கும் பொழுதும், பாடசாலைக்கு நடை நடந்து வரும்பொழுதும் மாலையில் பஸ்ஸுக்குப் போகும் பொழுதும் எத்தனை ஆண்கள் அவளைச் சுற்றித் திரிகிறார்கள் என்பது அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்துவிட்ட அந்தத் தமிழ் ஆசிரியைக்குத் தெரியாதிருக்க நியாயமில்லை. அவள் அப்படித் தன் விருப்பப்படி தன்னுடன் அன்றிரவு தங்கினாள் என்றாலும், அது அந்த ஊர் முரடர்களுக்குத் தெரியவந்தால். . . தன்னுள் குழம்பினாள் அவள்.
“ஒண்டு செய்யுங்கள்! என்னோடு துணையாகச் செந்தில்நாதனை அனுப்ப வழி செய்யுங்கள். கார் பிடித்து நாங்கள் போகிறோம்"
அவள் கேட்டவாறே செந்தில்நாதனும் வந்தான்.
“தவமக்காவா? கார் பிடிக்க வேணுமா?”
“ஓம் செந்தி" அழுவாள் போலக் கூறினான் தவம், அவனை ஒரு நாளேனும் தன்னிடம் வரும்படி அவள் முன்பெல்லாம் கேட்ட பொழுது, “தோட்டத்தில் வேலை கிடக்கு", "அக்காவட்டைப் போக வேணும்” என்று ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லும் அவன், அந்த இரவையும் பொருட்படுத்தாது சம்மதித்து வருவதை நினைக்க அவளுக்கு ஆனந்தமாகவிருந்தது.
“கற்கண்டு தரட்டுமா?"
தவம் கேட்டாள்.
“வேண்டாம். பூசையின் போது கொடுத்தார்கள், சாப்பிட்டேன்.”
“நான் கொடுத்தால் சாப்பிடமாட்டீரா?”
தவம் கேட்ட அந்தக் கேள்விக்குப்பதில் சொல்வதிலும், அவளை ஒரு முறை விழிவலம் வருவதில்தான் என்ன ஆனந்தம். அவளைப் போல நல்ல டீச்சரை, பெண்ணை, அழகியை அவன் இதுவரை பார்த்ததில்லை என்று தனக்குள் இரகசியமாகச் சொல்லிப் பெருமைப்பட்ட சில நாட்களை நினைவுகள் எண்ணிக்கொண்டன. அப்படிப்பட்டவளுடன் தான் நெருங்கிப் பழகுவதை மற்றைய மாணவர்கள் கேலி செய்தாலும், அவன் ஏன் பொருட்படுத்தவில்லை அவற்றை?
பத்மினி மாதிரி அச்சுரிச்சு இருக்கிறாடா” ஒரு சினிமா மோகி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
“என்ன பேசமாட்டீரா? நான் கொடுத்தால் சாப்பிடமாட்டீரா? தவம் குரலைத் தாழ்த்திக் கேட்டாள்.
“சாப்பிடுறன் குடுங்கள்!”
46

கார் வந்து விட்டது முதலில் தனது விட்டுக்குச் சென்று விஷயத்தைச் சொல்லிவிட்டு, அப்பால் யாழ்ப்பாணஞ் செல்லலாம் என்று செந்தில்நாதன் கேட்டதை வெகுவாக ஆமோதித்து இரசித்தாள்.
“இப்படியொரு விவேகமும், பார்ப்பதற்கு அழகாகவும் உள்ள பிள்ளையை இழக்க யாருக்கு மனம், வரும்? அவன் வளர்ந்து பெரியவனானால்.”
தன்னுள் ஆசை கொண்டாள் தவம் காரைவிட்டு இறங்கியதும். நின்று விடியப் போகலாம். இந்தாரும் காருக்குப் பணம் என்று பத்து ரூபாவைக் கொடுத்தாள் அவள்.
செந்தில்நாதன் அந்த நட்டநடு வீதியில் அவள் பெரிதாகச் சொன்னதை மறுக்க முடியாது திணறினான்.
அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும், எழுந்து வந்த வீட்டுக்கார அம்மாள், "யாரது? கூட வருறது?" என்று இராகம் பாடினாள். அப்பொழுதுதான் படுப்பதற்கு ஆயத்தமாகிய வீட்டுக்காரர்“உங்களுக்குச் சாப்பாடுவைச்சிருக்குடிச்சர்” என்றபடி விளக்கை அணைத்தனர்.
வீட்டுக்கார அம்மாள் கேட்ட கேள்விக்கு எப்படிப் பதிலளிப்பது என்று தெரியாமல் சிரித்துக் கொண்டு நின்றாள் தவம், “யார்முக லட்சணத்தைப்பார்த்துத் தம்பி போல இருக்கு நான் சொல்றதுசரியா?” என்று தவத்தைப் பார்த்துக் கேட்டதும் “சரி” என்று தலையை ஆட்டினாள் தவம்,
செந்தில்நாதன் மாடியிலிருந்த அவளுடைய அறைக்குச் செல்லும் பொழுது சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீர்?" “ஒண்டுமில்லை” "இரும் இரும் 1உம்மை. உம்மை!...” செல்லமாக அவன் கன்னத்தில் சீண்டினாள் தவம்,
ஒரேயொரு அறையில் அவனும் இருக்கப் போவதையோ, வேறு எதையோ எண்ணிய தவம் குதூகலித்தாள். என்றும் காணாதவாறு அவளுடைய முகம் பொலிந்திருப்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
வெளியே விறாந்தையுமின்றி மொட்டையாக உள்ள அந்த அறையைத் தொடர்ந்து ஹால் மட்டும் இருந்தது. அதுவும் பூட்டிக் கிடந்தது. பால்கனியில் அவன் நின்று கொண்டிருந்தான்.
"லைட்டை ஆப்பண்ணுறிரா? உடைமாற்றிவிட்டு வருகிறேன்" தவம் தணிந்த குரலில் கேட்டாள். அவனருகில் சுவிற்ச் இருந்ததைக் கண்டதும் அவன் விளக்கை அணைத்தான்.
சிறிது நேரம் கழித்து அவளுடைய குரல்தான் கேட்டது.
“போடும்”
47

Page 32
வாய்மூடுமுன் விளக்கைப் போடுவான் என்று எதிர்பார்க்காத தவம் தன் நைட்கவுணை அவாக்அவாக்கென்று பூட்டி முடித்தாள்.
விளக்கைப் போட்டபடி அவளைப் பார்த்த செந்தில்நாதன், வெட்கி பால்கனிப் பக்கமாகத் திரும்பி நின்றான்.
கண்கள் வழியே சென்ற அந்தக் காட்சி அவனை என்னவோ செய்தது? "முகத்தைக் கழுவிவிட்டு வாரும் சாப்பிடுவோம்” அன்போடு அவள் நடந்து கொண்ட விதங்களை எண்ணியெண்ணிப் பெருமைப்டடான் செந்தில்நாதன்.
அவளுக்கென்று வைக்கப்பட்டிருந்த உணவை இருவருமாகப் பகிர்ந்துண்ட களிப்பில் தவம் மேலும் மேலும் அவனை வரவேற்கத் தொடங்கினாள்.
வெளிச்சத்தைப் பாதி திறந்த தன் உடல்மீது பாய்ச்சி, கண்களைத் தன்னுள் வீசி, அதைக் காண விரும்பாதவனாய் மறுபக்கம் திரும்பி, வியர்க்க வியர்க்க நின்ற அவனுடைய கோலம் அவளுக்கு வியப்பாக இருந்தது.
பாலியல் தெரியாத பருவமா? இருக்கவே இருக்காதே. பின் ஏன் அவன் அப்படிச் செய்தான்? நித்தமும் குளிக்கும் பொழுதும், மேலாடை மாற்றும் பொழுதும், கண்ணாடி முன்னும், குளியலறையிலும் தன்னையே இரசித்து நிற்பாளே அவள். ஆண்டுகள் ஆண்டுகளாக அவளுக்கு அலுக்காத அந்த அழகு, அரை நொடியில் அவனை வெறுக்க வைத்தது ஏன்?
புதிது என்பதாலா? ஒரு வேளை தான் ஆசிரியை என்பதாலா? ஆசிரியைகளுக்கு உணர்ச்சிகள், ஆசைகள், கனவுகள் இல்லையென்று யாராவது சொன்னார்களா? அப்படியானால்,வழிதெருவெல்லாம் வாய்திறந்தபடிதான் போகும் பொழுதும், வரும்பொழுதும் நின்று இரசிக்கும் ஆயிரம் ஆயிரம் கண்களுக்கு அவள் என்ன பதிலைச் சொல்வதாம்?
ஆசை நடைபோட்டு அவள் நடக்கும் பொழுது, நல்லூர்த் தேர் அசைவது போல் உடல் அசையுமே. . . . அதற்கு மட்டும் அந்த அழகு ஏன் வந்தது?
“நீர் கட்டிலில் படுத்துக்கொள்ளும். உள்ளது ஒரேயொரு கட்டில். . . நான் பெட்சீட்டை விரித்து, பணிய படுத்துக் கொள்ளுறன்"
“பறுவாயில்லை. நான் பணிய படுக்கிறன்" “உம்! அப்ப இரண்டு பேருமே பணிய படுப்பமா?”
அந்த அறையில் அங்கொன்றும் இங்கொன்றுமான இரு மூலைகளில் இரண்டு பெட்சீட்டுக்கள் தங்களால் இயன்றளவு விரித்து கிடந்தன. அதனுள் ஒன்று திடீரென்று அறையின் மத்தியில், விளக்குக்கு நேரே கீழே வந்தது. அவள் சொன்னாள்.
“எதாச்சும் வாசிக்கப் போறன். நீர் தூங்கும்”. அவன் நித்திரை செய்யலாம் என்று பிரயத்தனப்பட்டான். பகல் முழுவதும் சரஸ்வதி பூசைக்காக மேசைகள் வாங்குகள் இவற்றை நகர்த்தியதில் பிராணனே 48

போயிருந்தது. கம்பங்களில் ஏறி குருத்தோலை மாலைகள் கட்டியது வேறு நரம்புகளை நோவடையச் செய்திருந்தது. புதிய இடம் அவனை நினைவுகளோடு அலைய வைத்துக் கொண்டிருந்தது.
கண்களை மூடியிருக்கிறானா, திறந்திருக்கிறானா என்று கண்டு கொள்ள முடியாத வெள்ளிச்சம். பல்புக்கு ஒரு பக்கமாக அணை கொடுத்திருந்த பேப்பர் துண்டுதான் அப்படிச் செய்திருந்தது.
பாதி இருளிலும், Lாதி வெளிச்சத்திலும் திளைத்துக் கொண்டிருந்தது அந்த அறை.
தவம் சாக்குக்காக எதனையோ படிப்பவள் போலக் காணப்பட்டாள். இரண்டு வரிகள் கைகளிலிருந்த நாவலைப் படிப்பதும், அதிலும் பன்மடங்கு நேரம் செந்தில் நாதனையே பார்ப்பதுமாக இருந்தாள் அவள்.
வெளியே என்ன சத்தம்?
“ஓ! செகண்ட் ஷோ முடிந்து சினிமா ரஸிகர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்?”
இவ்வளவு ஆரவாரமா?
பல்கனிக்கு எழுந்து வந்து பார்த்தாள் அவள். "மச்சான் என்ன படம். . . . . அவன் அவளை. . . . . பட்டும்படாமலும் ஏதோ கேட்கிறது. இடையிடையே தெரிந்த வீதி விளக்குகளில் இருவர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து.திரைப்படத்தைக் கேலி செய்து கொண்டு நடந்தனர்.
தன்னுள் சிரித்துக் கொண்டாள் அவள். அந்த வாலிபர், கூட்டத்தின் பின் வந்து கொண்டிருந்த பெண்களும் கிளுக்கென்று சிரித்து, கையில் திணித்திருந்த கைக்குட்டையால் வாயை மறைப்பதும் தெரிந்தது.
அந்த இருவரையும் மறுபடியும் பார்த்தாள் தவம், செந்தில்நாதனின் வயதை ஒத்த பள்ளி மாணவர்கள் அவர்கள். அவள் தீர்க்கமாக உணர்ந்து கொண்டாள்.
உள்ளே வந்து வீசியிருந்த விளக்கொளியை மறைத்த காகிதத் துண்டை எடுத்து விட்டு அவனைப் பார்த்தாள்.
அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.
அவள் கொடுத்த சேலையை வேட்டியாக மடித்து அணிந்திருந்த அவன், அதன் பாரத்தில் அச்சேலை தானாகவே அவிழ்ந்திருந்தது.
சேலை ஒட்டாத ஒன்றா?
ஏதோ முடிவுக்கு வந்தவள் போல விளக்கை அணைத்து விட்டாள் தவம்.
நேரம் சிறிது கழிந்தது. செந்தில்நாதன் முனகும் சத்தம் அறையில், அந்தப் பயங்கர இரவின் அமைதியைச் சிறிதாக்கியபடி கேட்டது.
அவன் புரண்டு படுத்தான்.
Lffss?
தன்மீது மெல்ல மெல்ல நெருங்கி, பிறந்த மேனியும் கலைந்த ஆடையுமாகத் தனது உடலை வாரி அணைப்பது. . . . . . . . . . .
4劈

Page 33
“யார்?” ஆதாரமாகக் கேட்டான் அவன். “செந்தீ” - ஆதங்கமாக அழைத்தாள் அவள். “டீச்சரா?” "ஆமாம் உரத்துப் பேசாதேயும். யாருக்காவது கேட்டுவிடும்” அச்சமும் வெறியும் கலந்த தொனிதவம் லைட்டைப் போடச் சொன்னதும் அவன் போட்டதும் அங்கு கண்டதும். .ஒ அவை இவ்வளவு மென்மையானவையா?
அவள் ஏன் சுடுகிறாள்? உலகமே இரவில், பனியில் குளிர்ந்து கொண்டிருக்கின்றனவே. அவள் மட்டும் தீக்குளிக்க அடுக்கிய விறகின் காய்ந்த தணல்போல். . . .
“சீ. நான் வீட்டை போறன்" சீறியபடி எழுந்தான் செந்தில்நாதன். பாய்ந்து சென்று அவன் லைட்டைப் போடுவான் என்பதையும் எதிர்பார்க்காத தவம், வெளிச்சத்தைக் கண்டதும் தான் தன்னைச் சரிசெய்யத் தொடங்கினாள். முழுவதுமே திறந்து கிடந்த அந்த நைட்கவுணில் தான் எத்தனை பட்டன்கள்? பூட்டப் பூட்ட நீள்கின்றனவா?
தள்ளாடியபடி, கண்களில் நீர் வழிய எழுந்த அவளுடைய முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது அவனுக்கு எந்நேரமும் தன் முன் சிரித்தபடி மட்டும் தான் நிற்கும் அவள், வேதனை கலக்கிய கண்களோடும், நீரோடும், யார் முகத்தையுமே பார்க்கச் சக்தியற்றவளாய், “செந்தீ போகாதேயும். உம்முடைய உதவி ஒண்டும் வேண்டாம். என்னை மன்னிச்சண்டு நிம்மதியாய்ப் படும் வீட்டார் என்ன நினைப்பினம் இப்ப நீர் போனால்....” என்று கேட்டுக் கொண்டாள்.
அழஆயத்தமாக நிற்பவள் போல், நாசித்துவாரங்களை அடிக்கடி பெருக்கிச் சுருக்கினாள் அவள். “நீர் போனால் . . . இதோ இந்தப் பல்கனியிலிருந்து குதித்து நன்றிகெட்டதுகளுக்காக உழைச்சு உழைச்சுஉருக்குலைஞ்சு போற இந்த உடம்பைப் போட்டிடுவன். இது சத்தியம்”
ஒரு கணம் துணுக்குற்றான் செந்தில்நாதன். கையில் எடுத்த தன் காற்சட்டை சப்பாத்துக்களை மூலைப்புறமாக எறிந்துவிட்டு, பேசாமல் தலையைக் கவிழ்ந்தபடி சென்று படுத்துக் கொண்டான்.
“இப்பிடி நான் என்னுடைய உணர்ச்சிகளோடு போராடுகிறேனே! ஏன் எண்டு உமக்குத் தெரிய வேண்டாமா?”
போய்க் கொண்டிருந்தவன் பக்கமாக இரண்டு கைகளையும் நீட்டினாள். அது உன்னாலான உதவிகளை நீஎனக்குச் செய்யாது விட்டாலும், உன்னாலான ஆறுதல் மொழிகளையேனும் சொல் என்பது போல் அவனுக்குப் பட்டது.
அவள் சொல்லத் தொடங்கினாள் அவன் சிலையானான்.
* * *
50

O
“இன்று எனக்கு முப்பத்தொரு வயது” அவள் சொல்லிவிட்டு வேதனையோடு சிரித்தாள். பின்னர் தொடர்ந்தாள்.
“உம்மைப்போல பதினைஞ்சு வயசில் எஸ்.எஸ்.ஸி. பாஸ் பண்ணிப்போட்டு இந்தியாவுக்கு காணி ஈடுவைச்சுப் படிக்கப் போனன். நாலு வருஷம் டிகிறிகோர்ஸ் முடிச்சு நேரே சிலோனுக்கு வந்து படிப்பிக்கத் தொடங்கினேன்.
“எனக்கு இருக்கும் மூண்டு தங்கைமாருக்கும் ஒரு தம்பிக்கும் நான்தான் தகப்பன். . . . . அண்ணன், அக்கா எல்லாம். . . . . y
"அப்பா இல்லையா?”
“இல்லை”
“பாவம் நீங்கள்”
“பாவந்தான் செந்தீ அம்மாவுக்கும் தங்கை தம்பிமாருக்கும் சீவியம் போடுறதிலிருந்து, மூத்த தங்கச்சியைக் கல்யாணம் செய்து கொடுத்தது வரை நான் தான். அவள் எனது உழைப்பால் எந்த வித கஷ்டத்தையும் கண்டாளில்லை. ஊரில் உள்ள ஒருத்தனைக் காதலிச்சு வீட்டை விட்டே ஓடப்போறன் எண்டாள். நான் தலையிட்டு அதைக் கெளரவமாக, கல்யாணமாக நடத்தி அனுப்பிவிட்டேன். என் பொருள் நகை பணம் எல்லாம்தான் அவளுக்குச் சீதனம்.
காணியை ஈடுமிட்டு. கன்னியைக் கரைசேர்த்து, இருக்கிற எல்லாரையும் படிப்பிக்கிறன். ஆனால். . . . எனக்கு மட்டும் வாழ்க்கை இல்லை செந்தீ - வாழ்க்கையே இல்லை -
செந்தில்நாதன் விக்கி விக்கி அழுதான். தான் படிக்கும் பள்ளிக்கு
ஆசிரியையாக வந்த நாள் முதல் தன்மீது அன்பும் பாசமும் கொண்ட தவம், தான் தனக்கிருக்கும் இரண்டு சகோதரிகளுள் ஒருத்தியாக நினைத்திருந்த அவள், தன் முன்னே தனது மாளாத வேதனைக் கதையைச் சொல்லி, சக்தியற்ற தன்னிடமே மொழியால் ஆறுதல் கேட்ட சம்பவத்தை நினைக்கும் பொழுதும், கேட்கும்பொழுதும் ஓ! வென அழவேண்டும் போல இருந்தது அவனுக்கு.
தனக்காக அவன் அழுகின்றான் என்பதை நன்கு விளங்கிவிட்ட தவம் அவனுடைய தாடையை மெல்லப்பற்றி"அழாதீர்!அழவேண்டாம் செந்தி. உமக்கு இன்னும் சொல்லியாற வேண்டியிருக்கு. . . . .” என்று பரிவோடு சொல்லி, நன்றியுணர்ச்சியோடு சிரிக்க முயன்றாள்.
“எந்த ஒரு பெண்ணும் தன்னைப் பற்றியும் தனதைப் பற்றியும் தான் கவலைப்படுவாள். நானோ அம்மா, தங்கைமார், தம்பி எண்டு கவலைப்பட வேண்டுமெண்டு ஆகிவிட்டது. நான் மூத்துப் பிறந்தது ஒரு குற்றம். பொறுப்புக்களை ஏற்று வாழ்ந்து பழகியது மற்றது"
5

Page 34
“டிச்சர்” “என்ன செந்தீ?” “நீங்கள் கல்யாணம் செய்தா என்ன?” "செய்யலாம் செந்திநான் சமூகத்துக்கு எந்தத் துரோகமும் செய்யவில்லை” என்றபடி, வெறிபிடித்தவள் போல பாய்ந்து எழுந்து சென்று, தனது அலமாரியைத் திறந்து, அதன் மத்தியிலிருந்த லாச்சியைத் தடவி சில கடிதங்களை எடுத்து அவன்முன் போட்டாள்.
“என்ன இதெல்லாம்?" "இதெல்லாம் என் சேட்டிபிக்கற்றுகள். என் அழகு எப்படிப்பட்டது? குணம் எப்படிப்பட்டது? அங்கங்கள் என்ன சொல்கின்றன? எண்டு.”
"எண்டு?” “என்னை வரிந்து கொள்ளக் கேட்ட சிலர் எழுதின கடிதங்கள்” “டிச்சர்” “இவற்றுக்கு நான்பதில் எழுதவில்லை. ஏன்? விருப்பமில்லாமலா? இல்லை! இல்லவே இல்லை. என்னை அப்பிடி விரும்பியவையிலை எப்படியோ ஒரு உத்தமனை என்னால் தெரிஞ் செடுக்க முடியும். . . . . . . என்னை நானே பெருமூச்சு விட்டு விட்டுப் பொசுக்க வேணும் எண்டு எழுதியிருக்கே. . . . " என்று சொன்னவள் எதையோ நினைத்துக் கொண்டவள் போல் “நீரே சொல்லும்! நான் அழகில்லாதவளா? என்று அனைத்தையும் மீறிக் கேட்டு அழுதாள்.
“எந்தக் குருடன் சொன்னான்?" “தாங் யூ! செந்தி தாங் யூ! நீர் முகத்துக்காகச் சொல்லயில்லை. உள்ளதைத்தான் சொல்லுறீர். ஏனெண்டால் கண்ணாடி ஒருக்காலும் பொய் சொல்லாது. இல்லையா?”
ஓம்!
'அம்மாவுக்கு நான் தங்களைவிட்டுப் போயிடுவனோ எண்டு பயம். என்னைத் திருமணம் செய்து கொள்ளுறவர் எனது உழைப்பைத் தங்களுக்குக் கொடுக்க விடமாட்டார் எண்ணுறது அவவின்ரை நோக்கம். நான் மெழுகுவர்த்தி போல எரிஞ்சு, எரிஞ்சு கரையிறன். இன்னும் எவ்வளவு நாளைக்கோ?.
"அழாதீங்க டீச்சர்"
“என்னைப் போல பெம்பிளையஞக்கு அழுகைதான் ஒரே மருந்து. அழுதால் கொஞ்சம் கவலை குறையும் எண்டு நினைக்கிறன். நான் ஏன் பிறந்தன் எண்டது எனக்குப் பெரிய கேள்வியாக இருக்குது. நான் செத்தால். . . . . ”அவள் சொல்லி முடிக்கு முன்னர், செந்தில்நாதன் பாய்ந்து அவளுடைய வாயைத் தனது கையால் பொத்தினான்.
அவனுடைய கையை இரண்டு கைகளாலும் பற்றி உள்ளங்கை நிறைந்த முத்தங்களைக் கொடுத்துவிட்டு, புறங்கையை இழுத்து அழுது வடிந்த தன் கண்களில் ஒற்றினாள் தவம்,
5
2

“எனக்குக் கல்யாணம் பேசிச்சினம். அது ஒரு கண்துடைப்பு. இந்த உலகத்திலை நான் எங்கை நிக்கிறன் எண்டு காட்டுறதுக்காகச் செய்த வேலை அது. என்னை. . . . . . לל
“உங்கள் . . . . . . "கிழவி எண்டுமாப்பிள்ளை பகுதி தள்ளிவைச்சிட்டுது. விருப்பமெண்டால் என்னுடைய இரண்டாவது தங்கச்சி சாந்தாவை முடிக்கிறதாகச் சொல்லிச்சினம். ஆனால், அவள்தான் என்னிலை கொஞ்சமெண்டாலும் அன்பு வைச்சிருக்கிறவள். மாட்டன் என்டிட்டாள். நானும் கேட்டுப்பார்த்தன். ஒரேயடியாக மறுத்துப் போட்டாள். நான் என்னையே அழிச்சுக் கொண்டிருக்கையிக்கை தனக்கு மட்டும் எதுக்கு வாழ்வு எண்டு கேட்டாள். அவளால்தான் எனக்கு வாழ்வு கிடைக்கப் பாத்தது. அவளும் ஒரு பட்டதாரி. தான் குடும்பத்தைப் பாக்கிறதாகவும் என்னை ஒரு வழியிலை விடச் சொல்லியும் இப்பவும் அம்மாவோடை அழுதபடிதான் இருக்கிறாள். . . . . s
“ஒரு நல்ல சகோதரம் போலை. . . . . . 9y “கடவுள் எங்களுக்கு அழகை மட்டும் கொட்டிக் கொடுத்தார். அவள் பார்ப்பதற்கு இன்னும் லட்சணமானவள். அவள் தனக்கு இந்த ஜென்மத்திலை கல்யாணம் நடக்காது எண்டு சொல்லுறாள்"
“உங்களுடைய குடும்பமே ஒரு சோகக்கதை டீச்சர் அதிலை உங்களுடைய கதை கொடுமையானது.
அரக்க மனம் படைச்சவையாலை இரக்கமற்றுப் போன கதை" செந்தில்நாதன் ஏதோ புலம்பினான். “நீர் என்ன சொல்கிறீர்?" தவம் கேட்டாள். அவளுக்கு விளங்கவில்லையா என்ன? ஒ! அவனுடைய கொதிப்புக்களுக்கிடையே அவன் புலம்பிவிட்டானா?
“நான் என்ன செய்யலாம்? உம்மைப் பார்த்த நாள் முதல் எனக்கு என்னையறியாமலே ஒரு பற்று. உம்மோடு பேச வேண்டுமென்பதற்காகவே நான் விரும்பித் திரிஞ்ச நாட்களும் உண்டு"
“உங்களுக்கு என்னவும் செய்யலாம் டீச்சர்” என்றபடி கண்களைத் துடைத்தான் செந்தில்நாதன்.
“இப்ப சொல்லும் என்னுடைய உணர்ச்சிகளை இனி மேலும் நான் ஏமாத்தவேணுமா? ஆசைகள், கனவுகள் எண்டு ஆயிரம் வருகுதே. என்ன செய்ய செந்தீ! என்ன செய்ய?’ என்று கேட்டு விட்டு, அவனைச் சில விநாடிகள் அப்படியே அமைதியாகப் பார்த்தாள் தவம்.
கண்ணிரும் முட்டியிருந்தால் ஏற்கனவே கூசச் செய்கின்ற அவளுடைய கண்கள் அந்த நாற்பது வோட்ஸ் விளக்கில் பெரிதாக ஜொலித்தன. அந்த மெளனத்தில் அவளை நேரே பார்க்கச் சக்தியற்று கீழே விழிகளை விட்டிருந்தான் அவன்.
"நான் உம்மைக் குழப்பிப் போட்டன் இல்லையா?”தீனமாக அவளுடைய குரல் கேட்டது.
2y
53

Page 35
"இல்லை” என்று தலையாட்டினான் செந்தில்நாதன். பின்னர் தன் முடிவைச் சொல்பவன்போல பெரிதாகக் கூறினான்.
"உங்களுக்குக் கூடிய சீக்கிரத்திலை கல்யாணம் நடக்கும் டீச்சர். இருந்து பாருங்கள். நானே செய்து வைக்கிறன். மறுக்கக்கூடாது”
தவம் பெரிதாகச் சிரித்தாள். தன்னால் முடிந்த ஒன்றைச் செய்ய முடியாத செந்தில்நாதன் தன்னால் முடியாத ஒன்றைச் செய்து முடிக்கவா போகிறான்?
அவளுடைய சிரிப்பைக் கேட்டு விழித்த சாமக் கோழி தானும் பெரிதாக ஒலியெழுப்பிவிட்டு ஒய்ந்து கொண்டது.
செந்தில்நாதன் கண்களைத் துடைத்து விட்டான். மேற்கே தெரிந்த கடலை வாரியணைக்க மெல்ல மெல்ல கீழே இறங்கி வந்து கொண்டிருந்த நிலவு, கடலுள் தானுமாக மூழ்கத் தயாரகிக் கொண்டிருந்தது. அவனுடைய அதரங்கள் "அண்ணி" என்று மெல்ல முணுமுணுத்தன. அவன் அன்று தவத்துக்குக் கல்யாணம் செய்தே வைத்துவிட்டான். அந்தப் புண்ணியந்தானோ என்னவோ இன்று தனது கல்யாணம் அழகு மிக்க குணசாலியான பெண்ணுடனும், அளவிறந்த பொருளுடனும் நடக்கக் காத்திருக்கிறது.
அந்தப் பள்ளியில் தன்னுடன் தவம் போன்றே அன்பாக நடந்து கொள்ளும் ஆங்கில ஆசிரியர் சண்முகத்துக்கு அவளைப் பேசி முடித்ததை எவ்வளவு பெருமையாக நினைத்தான்.
சண்முகம்மாஸ்டர் தவம் கிடைப்பாளா என்று தவமிருந்தது அவருக்குமட்டும் தெரிந்த உண்மை. ஆசிரியத் தொழிலுக்கும் பாடசாலைக்கும் இழுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் தன் உணர்ச்சிகளை, ஆசைகளை, கனவுகளை அடக்கியிருந்தார் என்ற செய்தி, தவம் மூலந்தான் பின்னர் தெரியவந்தது.
இன்னும் அவர்களுடைய வீட்டு முன் கூடத்தின் மையக்கல்லில் இடது கையில் வேல் தாங்கி வலது கையை அபயம் காட்டி திருச்செந்தூர் கோயிலின் பின்னணியோடு ஒரு திருமுருகனின் படம் இருக்கின்றதே! அது?
ஒ எவ்வளவு அபச்சாரம்? “சிற்றம்பலம் செந்தில்நாதன். என் கண்திறந்து வாழ்வளித்த கடவுள்" என்று தன் கையாலேயே எழுதி அவள் விளக்கேற்றுகிறாளே! சண்முகம் அதற்குச் சம்மதமா?
அவரும் தன்னுடைய படத்தை அவர்களுடைய படுக்கையறையில் தன்னந்தனியனாக மாட்டி, காலையில் எழுந்ததும் அவன் படத்திலேயே கண்விழிக்கிறாரே! அதற்கு மட்டும் அர்த்தம் என்னவாம்?
ஆனந்தப் புன்னகையைத் தன்முகம் உதிர்ப்பதை செந்தில்நாதன் மனதார வரவேற்றான். நிலவின்றி, ஒளியின்றி இருந்த அந்த அறையில் அவன் நிம்மதியாக உறங்க முனைந்த பொழுது, "அண்ணி! அண்ணி! அண்ணி!” என்று மனம் புலம்பி அழுது கொண்டிருந்தது, குழம்பியது.
54

‘அண்ணி” குழந்தை கண்ணனை அரவணைத்தபடி, அண்ணனை நினைத்து அழுது அழுது, தன்னுள் பீறிடும் உணர்ச்சிகளைச் சொல்லவோ மெல்லவோ வகையின்றி, ஐயாவே கதியென்றும், தான் அனுப்பும் மாதாந்த பணமே ஜீவனமென்றும் கிடக்கும் புனிதாவை நினைக்க ஓவென்று அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
தவத்தின் கல்யாணம் முடிந்தது வெகு நாட்களின் பின் வீட்டுக்குச் சுமையாகியிருந்த புனிதாவை அண்ணனுக்குப் பேசி செய்து கொடுத்ததும் தவிம் தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் தவத்தின் தாய் காலன் வழி சென்றதும், ஆதரிப்பார் அற்ற நிலையில் கையில் தேறிய சிறுபொருளோடு கல்யாணத்துக்காகக் காத்திருந்த கடைசிப் பெண்ணான புனிதாவை ஒரு நாள் அவன் கண்டபொழுது, ஒத்த வயதுள்ள ஒருத்தியைப் பார்க்கும் பொழுது ஏற்படுகின்ற உணர்ச்சிகளையே பெற்றான் ஆயினும், புஷ்பாவின் நினைவுகள் குறுக்கிட்டு அவனை மனிதனாக்கியிருந்தன.
இவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அழகு? தன்னையே கேட்ட அவன் தனக்கு விடை சொல்லுமுன், தவம் கேட்டாள். அந்தக் கேள்வி அவனை உலுக்கியெடுத்தது ஏதோ உண்மைதான்.
“ஏன் செந்தீ புனிதாவை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” “எனக்கு மட்டுமென்ன யாருக்கும் அவவைப் பிடிக்கும்” அவன் மெதுவாகத் தவத்தின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படியாகச் சொன்னதை, கதவின் பின் பக்கமாகச் சந்தடியின்றி நின்ற புனிதாவும் கேட்டாள் என்பது வெகுநேரம் கழித்துத்தான் அவனுக்குத் தெரிய வந்தது.
அவனுடன் பேசிக் கொண்டிருந்த அக்காவும் அத்தானும் வீதிப் பக்கமாகப் பார்த்திருப்பதையும், அவன் வீட்டினுள்ளே பார்வையை விழுத்தியிருப்பதையும் சாதகமாகப் பயன்படுத்திய அவள், அவனை “உண்மையிலேயே உங்களுக்கு என்னைப் பிடிக்கிறதா?’ என்று கேட்பவள் போலப் பார்த்தாளே! அதற்கு ஒத்திசையாக அவளுடைய இளகிய இதழ்களினூடே தவழ்ந்ததே ஒரு முத்துநகை
அவற்றின் அர்த்தமென்ன? செந்தில்நாதன் பதிலுக்குத் தன்னையுமறியாமற் சிரித்தபொழுது, அவனையே பார்த்திருந்த தவமும் சண்முகமும் தமக்குள் சிரித்துக் கொண்டனர். கன்னங்கள் சிவப்பேற பெண்ணைப்போல வெட்கி, தலையைக் கவிழ்த்து கைவிரல்களைப் பிசைந்த அவனைப் பார்த்து நின்ற புனிதா, தன்மீது அவர்களின் கவனம் திரும்பியதும் உள்ளறைக்குள் ஓடினாள்.
தன்னைப் பல்கலைக்கழகத்திலே காதலித்து கைவிட்டுச் சென்ற அவன் வருவான், வருவான் என்றிருந்து சாந்தா, வன்மத்திலேயே வாழ்ந்து காலமோட்டியிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்ட அவனுக்குப் பெரும் வருத்தமாயிருந்தது. இந்த நூற்றாண்டிலும் தன் மீது அன்பு சுரந்த அந்த ஒருவனுக்காக, அவனே ஏமாற்றி இடர்படுத்தி விலகிய பொழுதும் விட்டுவிடாமல்,
55

Page 36
அவனுக்காவே நோற்கும் அவள் இருக்கும் திக்குப்பார்த்துக் கையெடுத்துக்கும்பிட வேண்டும் போன்றிந்தது அவனுக்கு.
“சாந்தா டீச்சர் என்ன செய்யிறா?” ஒரு பள்ளிக்கூடத்தின் பெயரைச் சொல்லி, அவள் அங்கு ஆசிரியையாகவும் போர்டிங் மிஸ்ற்றஸ்ஸாகவும் இருப்பதாகத் தெரிவித்தாள் தவம்,
தவமும் எவ்வளவாகப் பழுத்துவிட்டாள்? இடையிடையே தோற்றும் நரை, இன்னும் சில ஆண்டுகளில் தலையையே பஞ்சு மெத்தையாக்கி விடும். கண்கள் அழுது அழுதே - என்னவோ, பழுதுகண்டு, இப்பொழுது அவள் கண்ணாடி அணிகிறாள். அவர்களுடைய குழந்தைகளைப் பராமரிப்பதிலும், நல்லதோர் எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதிலும் இப்பொழுது அவர்களுடைய நாட்டம் சென்றிருக்கிறது என்பது கதைகளிலிருந்து தெரியவந்தது. ஆசைகள் இன்றும் என்றும் வாழ்கின்றன! முன்னர் தனக்காக ஆசைப்பட்ட, கனவு கண்ட அவள், இப்பொழுது பிள்ளைகள் இருக்கும் சிறப்பைக் காணத் துடிப்பவளாக இருந்தது, அவனுக்கு ஒன்றும் வியப்பாக இல்லாது விட்டாலும், சிந்தனையைக் கிளறுவதாகவிருந்தது.
ஓ! மனிதக் கனவுக்கு எல்லையே இல்லையா? தவம் விரும்பியதின் பெயரில் அண்ணனையும், பெற்றோரையும் அழைத்து வந்திருந்தான் செந்தில்நாதன்.
புனிதா நாணிக் கோணி அவர்கள் முன் நடையழகி வந்த அந்தக் காட்சி பின்னர் அண்ணன் அவளுடைய முந்தானைத் தலைப்பைத் தனது சால்வையில் முடிந்து, அவளுடைய கையைப் பற்றி தீவலம் வந்த பொழுது அவன் உள்ளத்தில் கிளர்ந்து எழுந்த அந்த அன்பு மயமான இன்பம். . . .
எல்லாமே கனவு தானா? அவளுக்கு அண்ணன் துரோகம் செய்து விட்டாரா என்றும் எண்ணினான் செந்தில்நாதன். தாயும் ஆறுதலாக, உயிரோடிருந்தாலாவது தன் ஆட்களுடன் தன் மனக்கிலேசங்களைச் சொல்லி ஆற அவளுக்கு ஏதேனும் தெம்பு பிறக்கும்! இப்பொழுது, புகுந்த இடமே கதியென, பொல்லைத் துணை நாடிவிட்ட தந்தையைப் பாதுகாப்பாக எண்ணி, அவருக்குத் தன்னாலான சேவை செய்யவதே இன்பமென்று கிடக்கும் அவளை எண்ணும் பொழுது இரத்தக் கண்ணிரே வடியும் போலிருந்தது அவனுக்கு
வெகு சாமமாகியிருந்த அந்த வேளையில், அவனுடைய அறைக் கதவை யாரோ தட்டும் சத்தங் கேட்டது. செந்தில்நாதன் ஒரு கணம் துணுக்குற்றானாயினும், “தம்பி - செந்தில்நாதன். . . . உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கு” என்ற வீட்டு ஆச்சியின் குரல் கேட்டு வெளியே வந்தான்.
தந்தியை நடுங்கியபடி பிரித்து, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து வாசித்ததும், “அண்ணி!” என்று அலறினான் செந்தில்நாதன்.
梁梁梁
56

யTழ் தேவியால் இறங்கியதும் தனது பாக்கட்டுக்குள் திணித்திருந்த அந்தத் தந்தியை மறுபடியும் எடுத்துப் பார்த்தான் செந்தில்நாதன்.
"அண்ணியின் நிலைமை மோசம். உடன் வரவும் - சிற்றம்பலம்" என்றிருந்த அந்தத் தந்தியை நடுங்கியபடி மறுபடியும் பாக்கெட்டுக்குள் திணித்தபடி, "டாக்ஸி" என்று குரல் கொடுத்தான்.
காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுது, புஷ்யாவுக்கு ஒரு டெலிபோன் கோலாவது போட்டு தான் ஊருக்குப் போகிற விஷயத்தைச் சொல்லியிருக்கக் கூடாதா? என்று தன்னையே நொந்து கொண்டான். காந்தனுடைய அறைக்குச் சென்று, தான் யாழ்ப்பாணம் போவது பற்றிச் சொன்னவன், அச்சுக்கூடத்தை கவனமாகப் பார்க்கும்படி கேட்டானே தவிர, புஷ்யாவுக்கு காலையில் ஒரு செய்தியும் சொல்லிவிடு என்று சொல்லவில்லையே. தனது உறவாகிவிட்டவளுக்கு மூன்றாம் நபரைக் கொண்டு செய்தி சொல்வது எவ்வளவு அசிங்கத்தனமானது என்று விட்டுவிட்டானா?
புஷ்பா தேடப் போகிறாளே! அவளுக்கு ஏன் அவன் செய்தி அனுப்பவில்லை? இப்பொழுதுமட்டும் என்ன? அதோ தெரிகிறதே முற்றவெளியையும், அப்பால் படிப்பகக் கட்டிடத்தையும், முனியப்பர் கோயிலையும், கோட்டையையும், அப்பால், அப்பால் பண்ணைக் கடலையும் கம்பீரமாகப் பார்த்துக்கொண்டு - தபாற் கந்தோர். டாக்ஸியை மறித்து ஒரு தந்தி கொடுக்கலாமே? என்ன குறைந்துவிடப் போகிறது. டாக்ஸி தபாற் கந்தோரையும் தாண்டி விண்ணென்று பறந்து விட்டதே புஷ்யாவின் அன்பு அவனுக்குப் பொருளாக இல்லையா? என்ன? அண்ணியின் நிலமை மோசம் என்று மட்டும் தானே தந்தி வந்தது. அண்ணிக்கு ஏதாயினும் ஆகிவிட்டது என்று வந்திருந்தால். . . . . .
ஓ! அவனால் என்னதான் செய்துவிடமுடியும்? அண்ணனுக்கு வந்த சுவாசப்பைக் கண்டலை வெட்டி எடுப்பதுதான் நல்லது என்று எத்தனை டாக்டர்கள் சொன்னார்கள். அவனே முதலில் அதற்குச் சம்மதிக்கவில்லையே!
பட்டினி கிடந்து, கிடந்து தங்கைமாருக்காகவும் தம்பிக்காகவும் தனது சம்பளத்தைச் சேர்த்துச் சேர்த்து அனுப்பினாரே, அந்த அண்ணனை எடுத்த வீச்சில் இழப்பேன் என்று அவன் எண்ணினானா? என்ன? பொற்சிலை போல இருந்த புனிதாவின் வாழ்வை அப்படியே தூசு படிய விட்டுவிட்டு ஓடிவிடுவான் என்று அவர்களுள் யார் தான் எதிர்பார்த்தார்கள்?
57

Page 37
"ஆபரேஷனா? அது மிகச் சின்ன விஷயம்" என்று அங்கலாயத்து விட்டு,
ஒரே நொடியில் அண்ணனைக் கொன்ற டாக்டரைத்தான் அவனால் என்ன செய்துவிட முடியும்?
"பொசுப்பில்லாத பிள்ளை. வயித்திலை வந்ததும், வந்தது. என் பிள்ளை போயிட்டானே! எங்களையெல்லாம் தின்ன வைச்சுப்போட்டு, தான் பட்டினி கிடந்து, தன்னை அழிச்சுப் போட்டானே ஐ. . . . ய், . . . . யோ! . . . . . . என் மகனே! பட்டினியோடு போனாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். உன்னை இழந்துட்டனே ராசா! நீ பார்த்த மாத்திரத்திலையே அவளைக் கட்டிவை எண்டு ஒரே மூச்சாக நிண்டியே. அதுக்காகத் தானே நாங்களும் ஒமெண்டம். குடுத்து வைக்காத அவளாலை என்ரை குடும்பமே குட்டிச் சுவராப் போச்சுதே ஐயா! இனி என்ன செய்வேன்?”
தாயார் இட்ட மரண ஒலங்கள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றனவே. அண்ணியையும் கண்ணனையும் குறை சொல்லி என்ன பயன். ஒன்று மறியாத ஏழைப் பெண்ணும், இறக்கும் போது பிறக்காத பிள்ளையும் எந்த விதத்தில் குற்றவாளிகள்.
"நாதன். . . . இனி நான் என்ன செய்வேன்? எங்கே போவேன்? வயிற்றுக்குள்ளை இருக்கிறது வந்து அப்பா எங்கே எண்டு கேட்டால் நான் ஆரைக் காட்டுவேன். என்னை அன்போடு ஆதரிக்கிற அந்தக் கை அந்தா அந்தா ஒடிஞ்சு
விழுந்து கிடக்குதே ... ஐ. . . . ய்... யோ... தாயும் இல்லையே... ... தகப்பனும் நாதன். . . . நாதன். நான் ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறேன்... என்னுடைய இருதயம் இன்னும் துடிக்கிறதே . . . . . ஒருக்காலேனும் நிக்கமாட்டுதா? என்று
அடியற்ற மரம்போல வீழ்ந்து, அவனுடைய கால்களைக் கெட்டியாக வரிந்து கொண்டு அழுது, அழுது ஒலமிட்டாளே புனிதா.
“பிள்ளைத்தாச்சி! பாவம் தூக்கி ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லுமோனை' என்று கூட்டத்திலிருந்த பெண்களுள் ஒருத்தி சொன்னதைக் கேட்டு, கால்களைப் பிடித்து மண்னோடு மண்ணாகக் கிடந்த புனிதாவின் தாடைகளைப் பற்றி, அ. . . . ண். . . . ணf!” என்று பெரிதாக அழுதானே! தன்னை ஒருவாறு தேற்றிவிட்டு, அவன் சொன்னான். "நான் இருக்கிறேன்!” அதில் என்ன பெரிதாக அர்த்தம் இருக்கிறதாம்? அவன் இருக்கிறான் தானே! புனிதா அப்படியா நினைத்தாள்.
"நாதன் சொல்லுறார். தான் இருக்கிறோம் அண்ணன் போயிட்டார். ஆருமற்ற அண்ணியைக் கைவிடாமல் பாதுகாப்பேன் எண்டு சொல்லுறார்” என்றுதானே அவனுடைய அந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பொருள் கண்டாள். அண்ணனுக்கு எதும் ஆகக் கூடாது என்று ஆஸ்பத்திரிவிறாந்தை நெடுக விடுவிடென்று அங்குமிங்கும் மனமும் நினைவுகளும் அலைய, அலைந்தானே. அப்படியே ஒடிக்கொண்டிருந்த காரில் இருந்தபடியே முன்னும் பின்னும் நினைவுகளால் அலைக்கப்பட்டுக் கொண்டிருந்தான் செந்தில்நாதன்.
58

அவனுக்கு அப்பொழுது இருந்த தெல்லாம் தன்னுடைய பாதுகாப்பில், அண்ணணையும், இழந்த பின் ஓரளவு அமைதியான அண்ணிக்கு நேர்ந்ததென்ன? என்பதுதான். வார்த்தைச் சிக்கனம் தேடி, தந்தியடிப்பதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்காக ஏன் இப்படித் தந்தி அடிக்கிறார்கள்.
எங்கள் மனம் தந்தியடிக்கட்டும் என்றா? ‘அண்ணியின் நிலைமை மோசம்' யாருடைய அண்ணி? ஐயா சிற்றம்பலத்தாருக்கு அண்ணன் இல்லாததால், நிச்சயம் அது என் அண்ணிதான்? உன் அண்ணி என்றோ, புனிதா என்று பொட்டாகவோ எழுதியிருக்கலாமே! நிலைமை என்றால். . . . . மனநிலைமையா? அதற்கு ஏன் தந்தி அடிக்க வேண்டுமாம்? அப்படியானால் உடல் நிலைமையா? அது தான் என்ன என்று எழுதித் தொலைத்திருக்கலாமே!
கார் பறந்து கொண்டிருந்தது ஐயாவைப் போல நல்ல மாமன் எந்த மருமகளுக்கும் இந்த உலகத்திலே கிடைக்கமாட்டார் ஐயா எங்களைத்தான் தாறுமாறாகப் பேசுவாரே தவிர, மருமக்கள், அவர்கள் யாராயிருந்தாலும் சரி ஒன்றுமே சொல்லமாட்டார். புனிதா கையில் ஏதோ அலுவலாக ஒருநாள் இருந்தாள். களைத்துப்போய் அண்ணன் வந்தார். அவருடைய மதியச் சோற்றை அண்ணி கொடுக்கக் கொஞ்சம் தாமதித்து விட்டது. ஐயா அண்ணனையல்லவா பேசினார்.
“டேய் தம்பி உன்னுடைய பசி உனக்கெல்லே தெரிய வேணும். வா புனிதா இஞ்சை வந்து சோத்தைப் போடு எண்டு கேட்டால் என்னடா, கட்டின பெண்டிலை என்ன கேட்டாலென்ன? வெட்கமாடா? உன்னைப் பெத்தவன் நான். எனக்கே தெரியாது உனக்கு எப்ப பசிக்குமெண்டு? போவியா! போய்ச் சாப்பிடு".
எவ்வளவு நாகரிகமாகப் புனிதாவைக் கண்டித்தார் ஐயா? அப்படி ஏதும். . . . . மூன்று மாதத்துக்கு முன்னர் அவர்களுக்குச் சொல்லிவிட்டுப் புறப்படுகையில் இடுப்பில் கண்ணனை வைத்தபடி வீதிவரை வந்துநாதன்" என்று திக்கித்திக்கி அழைத்தது,"இனிமேலும் உங்கள் எல்லோருக்கும் நான் சுமையாகவே இருக்க வேணுமா? யோசிச்சு எனக்கு ஒரு வழிகாட்டுங்கள் நாதன். உங்களுடைய ஆறுதல் ஒண்டே எனக்குப் போதும். இருந்தாலும் நீங்களும் ஒரு வழியிலை போறதில்லையா? அதுதான் உங்களை மண்டாட்டமாகக் கேக்கிறேன். எனக்கு ஒரு முடிவு காட்டுங்கள்! என்று இரந்தாள் புனிதா.
"அண்ணி இதென்ன பேச்சு. அண்ணனின் பெயரால் நான் கட்டவேண்டிய கடன், என்னுடைய வாழ்க்கை முழுக்கச் சென்றாலும் கட்டி முடியாது. நீங்கள் எனக்குக் பாரமில்லை. எங்களுடைய அக்காமாரில் ஒருவர் இப்படி வந்து கண்ணிரும் கம்பலையுமாக நின்றால், காடு மேடு கடல் என்று அனுப்புவதா? சே! நாங்களும் மானம் ரோஷம் உள்ள ஆண்பிள்ளைகள் என்று பின்னர் வீதியில் உலாவுகிறதா? அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். உங்களையும் கண்ணனையும் என் உயிரை விற்றாவது காப்பேன்! இது சத்தியம் சத்தியம் சத்தியம். . . . . לל
59

Page 38
சத்தியங்களுக்கே முடிவில்லை என்பது போல் செந்தில்நாதனும் எத்தனை சத்தியங்கள் செய்துவிட்டான்? புஷ்பாவின் கழுத்தில் ஏறாத கொடி, யாருடைய கழுத்திலும் ஏறாது என்று அன்று ஒரு சத்தியம் செய்துவிட்டான். அதற்கு முன்னர் செய்த இந்தச் சத்தியத்தை இன்னும் முழுதாக நிறைவேற்றி முடிக்காத அவன்.
‘அண்ணி” ஆண்டவன் மீது ஆணையாகக் கேட்கிறேன். நான் வந்து உங்கள் நிலைமை என்னதான் என்று தெரிந்து கொள்ள முன்னர் உங்களுக்கு ஏதும் நடக்கக்கூடாது. உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பு உண்மையிலேயே மாசற்றதாக இருந்தால், நான் உங்களைக் காண வேண்டும். உங்கள் நிலைமை என்னவென்று தெரிய வேண்டும்.
அவன் தனக்குள் பிரார்த்தித்து முடிப்பதற்குள் எங்கோ ஏதோ சத்தம் கேட்டது. வீடும் நெருங்கிவிட்டதே! அது என்ன?"பறைச் சத்தம். "அ.ண்.
.ணி..."
அவனுடைய கண்கள் பொலவொலவென்று நீர் வார்த்தன. மூடிய கண்களை வெகு நேரத்தின் பின் அவன் திறந்த பொழுது, தூரத்து வயல்களில் அரித்த சிப்பிகளை கடகங்களில் அள்ளி வெறுமனே கிடந்த லொறிக்குள் சிலர் கொட்டுவது தெரிந்தது. செந்தில்நாதன் காதுகளைக் கூர்மையாக்கி வேறு சத்தம் கேட்கிறதா என்று பார்த்தான்.
ஒன்றும் இல்லாது போகவே, தன் அவசர நினைவுகளுக்காக வருந்தினான் அவன்.
“சே என்ன மானங்கெட்ட கற்பனை" அவனுடைய இத்தனை அலமலக்குக்களையும் பிரச்சினைப்படுத்தாதவன் போல தன் வழியே ஒட்டிக் கொண்டிருந்தான் சாரதி. அவனுக்கு இதுபோல் எத்தனை அனுபவம்? தனது காருக்குள் இருந்தபடி, கார்ச் சட்டங்கள் கூடாரம் யாவுமே பொடியாகும்படி மண்டையை நொறுக்கியவர்கள் எத்தனை? எத்தனை?
"அதோ தெரிகிறதே! அங்கே நிற்பாட்டுங்கள்!” என்று செந்தில்நாதன் சொல்லி முடிக்கவும், டாக்ஸி அங்கு வந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது.
கூலியைக் கொடுத்து விட்டு, அவன் உள்ளே ஓடியதும் அங்கு கண்ட காட்சி அவனை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.
அவனைக் கண்டுவிட்டு, மூலையில் கால்களை எறிந்து சோகமே உருவாக இருந்த தவம் எழுந்து ஓடிவந்து பக்கத்தில் நின்றுவிசும்பினாள்.
“டோன்ட் அப்செற் ஹிம்’ என்று உறுமியபடி அருகே வந்த சண்முகம் மனைவியைப் பிடித்து உலுக்கி அப்பாற் செல்லுமாறு சைகை காட்டினார்.
«Х» «Х» «Х»
60

2
Gର சிந்தில்நாதனைக் கண்டதும் புனிதாவுக்கு உயிர் வந்துவிட்டது போன்றிருந்தது.
"நாதன். . . நாதன்!” என்று இயங்கி, இயங்கி அழைத்தபடி அவள் கிடப்பது அவனுக்குத் தெரிந்தது. "புனிதா. . . . தங்கச்சி. . . . நாதன் வந்துட்டாரம்மா. . . . நாதன் வந்துவிட்டார்” என்று ஆவேசமாகக் கூறியதும், தன் உடலைப் பெரும் பாடுபட்டுத் திருப்பி அவனை ஒருமுறை பார்த்தாள் அவள்.
அவளுடைய கண்கள் அழுது, அழுது சிவந்திருந்தது தெரிந்தது. முற்றத்தில் நின்ற அவன் கையிலிருந்த தோற் பையைத் திசை தெரியாமல் வீசிவிட்டு, "அண்ணி!” என்று அவளருகில் சென்று, கையை மடித்துத் தலையணையாக வைத்துக் கிடந்த அவள் தலையைத் தூக்கி, பக்கத்தில் கிடந்த தலையணைகளுள் ஒன்றை எடுத்து ஒத்தாசை செய்தான். களைத்து வியர்த்துக் கிடந்த அவளுடைய கேசம், கன்னம் என்று நடுங்கும் விரல்களால் துடைத்துவிட்ட பொழுது, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
நெருப்புக் காய்ச்சல் வந்தவள் போற் கிடந்த கோலத்திலும் குணத்திலும் காணப்பட்ட அவளுடைய மேனி சில்லென்று குளிர்ந்து, கிடந்தது. ஒருவேளை.... குளிராக்கியிருக்குமோ? தன்னுள் சந்தேகப்பட்டபடி வெளியே பார்த்தான்.
அப்பொழுது கண்ணனுக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுப்பதற்காக அவனையுந் தூக்கிக் கொண்டு கடைக்குச் சென்ற சிற்றம்பலம் வந்தார்.
"ஐயா" என்று சற்று அதட்டி அழைத்து,"என்ன இது? அண்ணிக்கு என்ன?” என்று கேட்டான்.
“எல்லாம் உன்னாலைதான்!” "ஆங்"பக்கத்திலிருந்த வீட்டுத் தூண் அவனை வீழ்ந்துவிடாமல் தடுத்தது. அவன் விக்கினான். “என்னப்பா இது? எங்கோ கிடந்து இப்பொழுது தான் ஓடோடி வருகிறேன். என்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்களோ"
குழந்தைபோல் இரந்து அழுதான். கைகள் இரண்டையும் பிச்சைக்காக ஏங்குபவன் போல விரித்து, தந்தையைக் கேட்ட அவன், அவரின் முகத்தைப் பார்த்த பொழுது அவர் விசும்பி அழுவது தெரிந்தது.
பேரனின் இடுப்பிலிருந்து பிஸ்கட்டை தின்னத் துடித்த கண்ணன், செந்தில்நாதனைப் பார்த்துப்பா” என்றான்.
அவனுக்கு உலகமே ஒரு முறை சுற்றி வந்தது. "அப்பா இல்லை கண்ணா! நான்” அலறினான் அவன்.
61

Page 39
அவனுடைய அலறலைக் கேட்டு, அவனையே பார்த்தபடி கிடந்த புனிதா குரலெழுப்பி அழுதாள்.
எவருமே பேசாதிருந்ததும், சண்முகத்தை நோக்கி நடந்தான் செந்தில்நாதன். தம்பி ஐயா சொல்லிவிட்டார் என்று கோபிக்கக் கூடாது. ஆப்ரர் ஒல். . . . எல்லாம் எமோஷன்ஸ். யாரட்டையார் என்ன பேசுறது எண்டு தெரியாமல் நிக்கிறம். உங்களுடைய கல்யாணப் பேச்சு ஒரு காரணம் எண்டு நினைக்கிறேன். . . . . ?ל
சண்முகம் இழுத்ததும் “என்னுடைய கல்யாணப் பேச்சா. . . நேற்று நடந்த விஷயம் அது. அது எப்படி உங்களுக்குத் தெரியும்?
"தந்திவந்தது" என்று கூறிக்கொண்டேசுவரில் இட்டிருந்த அந்தத் தந்தியை எடுத்துக் கொடுத்தான் சண்முகம்.
செந்தில்நாதனுக்கு இப்பொழுது கோபம் பிறந்தது. “உங்கள் மகனுடைய கல்யாணம் முற்றாகி விட்டது. தயவுசெய்து சம்மதந் தருக - ராஜா” என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் சுக்கு நூறாக்குவது போல் "பணத்திமிர். தந்தியிலேதான் இதுகளை வார்ப்பினம்” என்ற படி கிழித்தான்.
அவனுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வான், என்ன சொல்லுவான் என்று நன்றாகத் தெரிந்து கொண்ட அத்தனை பேரும் மெளனிகளாகவிருந்தனர்.
‘அண்ணி” புனிதா அவனுடைய அழைப்பைக் கேட்டுத் திடுக்கிட்டாள். “அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” “மண்ணெண்ணெய்யைக் குடித்துவிட்டாளடா பெரும்பாடுபட்டு டாக்டரை யெல்லாம் கொண்டு வந்து காப்பாற்றினது சண்முகம் வாத்தியார்தான்"
சிற்றம்பலம் பேசினார். “தற்கொலை ஆங்’ அவனுடைய இரத்தங் கொதித்தது. என்னுடைய கல்யாணப் பேச்சுக்கும் அண்ணியினுடைய தற்கொலை முயற்சிக்கும் என்ன சம்பந்தம்?
அவன் கேள்விகளால் குமைந்து கொண்டிருந்தான். “செந்தி’ என்ற மெதுவான குரல் கேட்டு தலைக்குள் புதைத்திருந்த கைகளை எடுத்தான் செந்தில்நாதன்.
“இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம்” என்றபடி அவனைத் தனியே வரும்படி அழைத்தாள் தவம். அவனுடன் அப்படித் தனிமையில் பேசுவதற்கு அனுமதி கேட்பவள் போல கணவனைப் பார்த்தாள் அவள். அவன் தலையசைத்ததும், தெம்போடு குசினிப் பக்கமாகச் சென்றனர் இருவரும்.
“செந்தி வாழ வேண்டியவள்! விதவைக் கோலத்துடன் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறாளே எண்டு நான் தான் அவளுக்கு வேறை கல்யாணம் பேசிவன். உங்களுடைய வாழ்க்கையும் அவவாலை பாழாகிறதை என்னாலை சகிக்க
62

முடியாது. நீங்கள் உங்கள் மனதுக்கு ஏற்றாப்போலை நல்லா சீரும் சிறப்போடை வாழ வேண்டியவர். அண்ணனிலை இருக்கும் அன்புக்காக நீங்கள் உங்களை வருத்துவதுதான் எனக்குப் பிடிக்கவில்லை"
தவம் சொன்னவற்றை அவ்வளவாகச் சிரத்தை கொள்ளாதவன் போல நின்ற செந்தில்நாதன் அப்பொழுதுதான் தனது அண்ணன் கேட்டுக் கொண்ட ஒரு விண்ணப்பம் இன்னது என்றாற் போல் சொன்னான்.
“தம்பி எனக்கு உன்னிலை நல்ல நம்பிக்கையிருக்குநீ எப்படியும் எங்களடை பெயரைக் காப்பாற்றுவாய் எண்டு எனக்குத் தெரியும். பல்கலைக்கழகப் படிப்பையே வேண்டாம் எண்டு குடும்ப நிலைமைக்காக விட்டுத்தள்ளி உதறிய தியாகி நீ. உன்னுடைய போஸ்ட் மாஸ்டர் உத்தியோகத்தோடை இப்ப பி. ஏ. சோதனையும் எடுக்கப் போறாய். அது மாதிரி - தற்செயலாக எனக்கு ஏதும் ஆகிவிட்டால் புனிதாவை எங்கும் அனுப்பி விடாதை. என்ரை பேரைச் சொல்லி அவளுடைய வயித்திலை வளருகிற பிள்ளை ஆணாயிருந்தால் என்ன பெண்ணாயிருந்தால் என்ன நான், நீ ஏமாந்த படிப்பை படிச்சு முடிக்கப் பண்ணிப்போடு.
புனிதாவுக்கு ஏதும் தீங்கு செய்தால் என் ஆத்மா சாந்தியடையாது” அவன் கண்கள் கலங்கக் கூறியதும் அதற்குத் தான் சொன்னதும் அவன் நினைவுக்கு வந்தன.
"இதென்ன பேச்சண்ணா! உங்களுக்கு ஒன்றுமாகாது. இருந்து பாருங்கள் ஆனால்... என்னை ஏமாற்றிவிட்டு நீங்கள் போய்விட்டால், என் உயிர் அதன் பின் கிடக்குமென்றால் அண்ணி எங்கள் வீட்டை விட்டு வெளிக்கிட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இதனால் என்ன நடந்தாலும் சரி. இது சத்தியம்”
அதன் பிறகு அண்ணனோடு அவன் பேசவேயில்லை. கட்டிலில் கிடத்தி அவனை ஆபரேஷன் அறைக்குக் கொண்டு போய்விட்டார்கள்.
நான்கு மணித்தியாலயங்களாக நடந்த அவனுடைய மனப் போராட்டத்துக்கு முடிவு போல அண்ணனுடைய மரணச் செய்தி வந்து, அவனை நிலைகுலையச் செய்து வாழ்நாளெல்லாம் கலக்கத்தோடு போக வைத்துவிட்ட கதையை தவத்துக்கு அவன் சொல்லி முடித்தான்.
"நாமள் எல்லோருமே அழுது அழுது காணக் கூடியது ஒண்டுமில்லை செந்தி இப்ப இதுக்கு ஒரு முடிவு வேணும். உங்களுக்கு அவள் பாரமாக இருக்கிறதாகத் தனக்குள்ளே கற்பனை செய்துசாகப் போயிட்டாள். புத்திகெட்டவள்! நல்லா இருக்கிற பேர்களையே கெடுத்து தலைகுனிய வைக்கப் பாத்திட்டாள்"
“ஒவ்வொருவருக்கும் தன் வரையில் தான் செய்வது சரியாகவேபடுகிறது. காரணம், காரியம் என்பன எல்லாவற்றுக்குமே உண்டு. கொலை செய்கிறவனுக்கும் காரணம் இருக்கிறது. வாழ்க்கையில் தவறுகிறவனுக்கும் காரணமிருக்கிறது. தற்கொலைக்கு மட்டும் என்ன காரணமில்லையா? காரணம் இல்லாமல் எதுவுமே இல்லை. எங்களுடைய ஐயா என்னாலேதான் அண்ணி தற்கொலை செய்து கொள்ளப் பார்த்தா என்று சொல்லி என்னைக் குழப்பிவிட்டார். அதற்கு நான்
63

Page 40
எவ்வளவுதூரம் பொறுப்பாளி? நான் செய்யக் கூடியது அண்ணனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது தான்.”
"அதெல்லாம் வேண்டாம். அவள் இன்னும் இருபத்தேழுவயதை எட்டாதவள். அவளுக்கும் வாழவேண்டுமெண்டு எவ்வளவு ஆசையாயிருக்கும். கடைசிப் பிள்ளையாகப் பிறந்து எப்படியும் செல்லமாகத்தான் வளர்ந்தாள். நாங்கள் செல்வச் சிறப்போடை இல்லாதது நாங்கள் செய்த குற்றமா?பொருளுக்காக-கிடைச்சபெரிய சீதனத்துக்காக சாந்தாவைக் கைவிட்ட அவன், மனுஷனா அது மாதிரித்தான் புனிதாவின் கதையும். அவள் உங்களுக்கு அண்ணி மட்டுந்தான். அவளின் தற்கொலை முயற்சிக்கு நீங்கள் எப்பிடிக் காரணமாக முடியும்?”
தவம் சொல்லிவிட்டு நிறுத்தினாள். பின்னர் “உங்களுடைய ஐயா தான் பாவம். வீண் பேர் கேக்கப் பார்த்தார்” என்று கூறித் தனது வருத்தத்தைத் தெரிவித்தாள்.
“நான் சொல்லவேண்டியதைச் சொல்லிப் போடுறன். உங்கள் அண்ணனைப் போலவே அச்சுரிச்சு உங்களுடைய கோலம் என்னவோ அவளைச் செய்யுறது என நினைக்கிறேன். அவரை மறக்க முடியாமல் தவிக்கிறாள் போலை கிடக்கு. அப்படியொரு நல்ல கணவர் யாருக்கும் கிடைக்க மாட்டார். ஏன் நீங்கள் மட்டும் என்னவாம்?”
“என்ன?” “ஒரு பேச்சுக்குச் சென்னேன். உங்களைச் சின்ன வயசிலையிருந்து பார்த்தண்டு வாறன். உங்களைப் போல மனிதாபிமானம் உள்ள ஒரு ஆள் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமான காரியந்தான். நான் அவளை வேறு எங்காவது யாரையாவது முடித்துக் கொண்டு போய்விடு எண்டு சொல்லி வரன் பார்த்திண்டிருந்தன். உங்களுக்கு ஒன்றும் தீங்கு வரக்கூடாது. நீங்கள் வாழச் சொல்லும் வரைக்கும் தான் வாழ்வதாக அண்டைக்கு ஒரு நாள் சொன்னாள். . . . எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது" என்று விட்டு பெருமூச்செறிந்தாள் தவம்,
"அண்ணியுடன் இன்றைக்குப் பேசினீர்களா ஏதாவது?” செந்தில்நாதன் அவள் ஏதோ சொல்ல முற்படுகிறாள்; ஆனால் எதற்காகவோ பயந்து அதனை மறைக்கிறாள் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்து கொண்டான்.
"பேசினேன்! அவள் தன்னை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை எண்டு பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்"
“எவ்வளவு பைத்தியக்காரத்தனம்” “எது? “தன்னைத் தானே அழிப்பது. நான் இருக்கிறேன் என்ற நினைவு கொஞ்சமாவது இருந்ததா?”
s
64

“அந்த நினைவிலைதானே செந்தில் அவள் இவ்வளவு காலமும் உயிரோடை இருந்திருக்கிறாள். நீங்கள் தனக்கு இல்லையென்று கண்டதும் வாழ்க்கையே வேண்டாமென்று போயிட்டுது அவளுக்கு"
“என்ன சொல்கிறீர்கள்?”
மலை இடிந்து சரிவது போன்று அஞ்சினான் செந்தில்நாதன். சரிந்த மலை தன்னையே மூடி சமாதியாக்க தன் பக்கமாகவே சரியுமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.
தவம் நிதானமாகச் சொன்னாள்.
“நான் இனியும் மறைக்க விரும்பயில்லை. இப்பிடி அவளைப் போல மறைச்சு, மறைச்சு இன்னுமின்னும் விஷயங்கள் மோசமாகப் போய் விடும். . . . . . புனிதா உங்களை மனமார வரவேற்கிறாள். . . . . . s
"அண்ணி”
நெஞ்சை அழுத்திக் கொண்டு குந்தினான் செந்தில்நாதன்.
பயப்டாதீர்கள் செந்தீ தமக்கை இறந்து விட்டாளென்றால் அவள் பெற்ற பிள்ளையளைப் பார்க்க ஒரு கன்னியான தங்கையின் வாழ்வைப் பலி கொடுக்கிற நமது சமூகம், தமையன் இறந்தா, மிக மிக இளம் விதவையை ஏன் கவனிப்பதில்லை. அவளுக்கு மட்டும் ஆசையில்லையா? வாழ்க்கையில்லையா?
ஒரு காலத்திலை அவள் உடன்கட்டை ஏறினாள். தீக்குண்டம் வளர்த்து அதனுள் விழுந்து செத்தாள். பின்னர் மொட்டை அடித்து செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வீட்டுக்குள் சிறை வைச்சாங்கள். இப்ப இப்ப வெளிக்கிட்டு உலாவ அனுமதியிருக்குது. வெள்ளைச் சீலையையும் விட்டு, கலர் சீலைகளே உடுக்க, பூ வைக்க ஒரளவுக்கு அனுமதிக்கிறாங்கள். பொட்டு மறந்து பூவிழந்து அவள் சருகாகக் காய்ந்து, மெழுகாக உருகிய காலம் போய்விட்டது ஐயா. . . . . . .
“®sfi?”
“இனியென்ன? என் தங்கச்சியின் வாழ்வு சாவுதானா எண்டு கேக்கிறேன். அவளுக்கு ஆதரவில்லை. பெற்ற தாயோ எண்டைக்கோ போய்விட்டார். தகப்பனுடைய முகமோ நிறமோ தெரியாதவள். சின்ன வயசிலை அவரும் போய்விட்டார். அக்காவுக்கு அக்காவாக, அண்ணனுக் அண்ணனாக, தகப்பனுக்குத் தகப்பனாக வளர்த்தவள் நான். உங்களிலை எனக்கிருந்த ஆசைதான் உங்கள் அண்ணனுக்கு என் தங்கச்சியை கொடுக்கச் சம்மதிக்க வைச்சது. . . . . . s
“என்னுடைய அண்ணன் தகுதியற்றவரா?
எனக்காக ஏன் சம்மதித்தீர்கள்?”
"அப்பிடி நான் சொல்லயில்லை. அவர் முழுக்க முழுக்க ஒரு ஆம்பிள்ளை - மிக உயர்ந்த சீவன். அவரையும் எங்களுக்குப் பிடிச்சுத்தான் கொடுத்தோம். விதி விளையாடியிட்டுதே என்ன செய்வோம்?"
65

Page 41
செந்தில்நாதனுடைய மனம் மாறாதா என்ற பிரார்த்தனையில் நின்றாள் தவம். “செந்தி!” என்று அழைத்துவிட்டு அவள் அக்கம் பக்கம் யாராவது நிற்கிறார்களா என்று நோட்டம் விட்டாள். பின்னர் சொன்னாள்.
“என்டைக்கோ ஒரு நாள் நீங்களும் என்னைப் போல உணர்ச்சி வசப்பட்டு நடந்திருந்தாலும் இண்டைக்கும் நான் வாழுறவள்தான். இப்பிடி எத்தனையோ இந்த உலகத்திலை நடக்கும். ஒருவனைக் கைப்பிடிச்ச பிறகு தவறினால்தான் குற்றம். அதற்கு முன் ஒருத்தி உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விட்டாள் எண்டால் என்ன செய்யிறதாம்? எப்பிடி நிரூப்பிக்கிறது? நீங்கள் என்னைத் தொட்டிருந்தாலும் உடனே போய் என் கணவரட்டைச் சொல்லப் போறியளா? என்ன?”
அவள் தொடர்ந்து கூறினாள். “என்னை வைச்சேனும் என் தங்கையை எடை பார்க்காதீங்கள். அவளைத் தொட்டது உங்கள் அண்ணன். விட்டதும் அவர்தான். உங்கள் வீட்டுக்கு வந்த அடியை அவள் இன்னும் பெயர்க்கவில்லை. உங்களை உலகம் இருக்கும்வரை கோடானுகோடி அபலைகள் கையெடுத்துக்கும்பிடுவார்கள். புனிதாவின் வாழ்க்கை நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லிலையுந்தான் இருக்கிறது"
“என்னை விட்டுவிடுங்கள்! எல்லாரும் போய்விடுங்கள். ஐயோ! அண்ணா” அவன் வெறி கொண்டவனாகக் கத்தினான்.
“எனக்காக நீங்கள் ஏன் அழவேணும். நான் . . . . . குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் செந்தில்நாதன். அங்கு புனிதா நின்று கொண்டிருந்தாள்.
"அண். ஓ! நீங்களா? என்ன காரியஞ் செய்து விட்டீர்கள்? கடவுளுக்கு அடுக்குமா?”
“கடவுளுக்கு அடுக்குமா? எண்டுதான் நானும் கேக்கிறேன். என் நலனில் அக்கறை கொண்டு அண்ணன் இல்லாட்டியும் தம்பியாவது ஆறுதலாயிருப்பார் எண்டு நினைச்சன். இப்ப . இப்ப. ...”
"இப்ப மட்டும் என்ன நடந்து விட்டது?” "இனி என்னடா நடக்க வேணும்?” என்று அதட்டியபடி சிற்றம்பலம் அங்கு வந்தார்.
நெஞ்சிடிக்க அவரையே பார்த்த வண்ணம் நின்றான் செந்தில்நாதன். பின்னர் தணிந்த குரலில் கேட்டான்.
“எனக்கு அவகாசம் கொடுங்கள்!” என்றபடி உள்ளறைக்குச் சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்தான் செந்தில்நாதன்.
y3
米米案
66

3
செந்தில்நாதனை எங்கும் தேடி அலுத்து இருந்தாள் புஷ்பா,
காலையிலேயே எழுந்து அவளைப் பார்க்க வருவான் என்று அவள் கண்டிருந்த கனவு மறுநாளாகியும் நிறைவேறாதது பெரும் வேதனையைக் கொடுத்தது.
முதல் நாள் ஆறு எழுதடவைகளாகப் போன் பண்ணினாள். “அவர் இல்லை” என்று மட்டு மொட்டையாகப் பதில் வந்தது.
"எங்கே போய்விட்டார்?"
புஷ்பாவுக்கு மொட்டையாகப் பதில் சொன்ன ரேணுகா மீது பாயாத குறையாகக் கேட்டாள் புஷ்பா.
“தெரியாது! நீங்கள் யார் பேசுகிறீர்கள்? சொல்லுங்கள் வந்ததும் சொல்கிறேன்”
புஷ்பா பொறுமையை இழந்து றிஸிவரைத் தொப் பென்று இட்டாள்.
மறுபடியும் அச்சுக்கூட தொலைபேசி அலறியது. வெகுநேரம் கழித்து, காந்தன் அதனை எடுத்தான்.
'unf?”
மிஸ்டர் செந்தில்நாதன், பிளீஸ்”
“ஊருக்கு அவசரமாகப் போய்விட்டார்”
“எப்ப வருவார்?"
“சொல்லவில்லை”
“sfi”
ஒடோடிச் சென்று கட்டிலில் வீழ்ந்தாள் அவள்.
'ஊருக்குப் போகிற விஷயம் சின்ன விஷயமா?
'எனக்குக்கூடச் சொல்லிக்கொள்ள முடியாமல் போக அப்படி என்ன அவசரம்?
"மானேஜருக்கு மட்டும் சொல்ல. y
புஷ்பா மேலும் தாமதிக்கவில்லை.
"மிஸ்டர் காந்தனா?”
"ஆமாம்! நீங்கள் யார் பேசுறது”
"மிஸ் ராஜா. மிஸ்டர் காந்தன் உங்களுக்கு எப்படித் தெரியும்?”
"அவர் நேற்றுவிடியல் போல என்னுடைய அறைக்கு வந்திருந்தார். நேற்றுக் காலையே யாழ்தேவியில் போய்விட்டார். ஸ்டேஷன்வரை நானும் கூடப்
67

Page 42
போயிருந்தேன். ஒரே பதட்டமாக இருந்தார். என்ன விஷயம் என்று என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. போன் பில் கட்டச் சொன்னார். அவ்வளவுதான்”
காந்தன் விளக்கமாகச் சொன்னதும் ஓரளவு ஆறுதலடைந்தவள், ஒரே பதட்டமாகக் காணப்பட்டார் என்றதை நினைக்கத் தானும் பதட்டப்பட்டாள்.
“வைக்கட்டுமா?” என்று காந்தன் கேட்டதும்தான் யோசனையிலிருந்து விடுபட்ட புஷ்பா. . . .
“உம். ஒகே. . . . . ஒகே” என்று ஏதோ சொன்னாள். அவருக்கு என்ன நடந்திருக்கும்? நேற்று முழுவதும் அவர் சாப்பிடவே இல்லையா? அது தானா என் தொண்டை கம்மி, விக்கியது? அது தானா காரணமில்லாமல் என் உடம்பு அசதியாயிருந்தது? "அ.த். தா.ன்!” புஷ்பா வேதனை பொறுக்க மாட்டாதவளாக, தனது அறையிலும் குடியிருந்த அவனுடைய பத்திரிகைப் போட்டோவை எடுத்து மார்போடு அணைத்தபடி அழைத்தாள்.
நீங்கள் எப்பொழுது வருவீர்கள்? உங்கள் அப்பாவிடம் அனுமதி கேட்டு விட்டீர்களா? அவர் என்ன சொன்னார்? உன்மீது உயிரையே வைத்திருக்கும் ஒருத்தியை மணம் முடிக்காமல், வேறு யாரை முடிக்கப் போகிறாய் என்று கேட்டாரா? நீங்கள் சொல்லவில்லையா! - புஷ்பா எனக்காக நான்கு ஆண்டுகளாகத் தவங்கிடந்தவள். நான் ஒரு கடிதம். . . . ஒரேயொரு வரியேனும் எழுதாமல் இருக்க என் சுகம் கேட்டு மாதம், வாரம் ஒன்றாக எழுதி தான் என்மீது கொண்ட அன்பை நினைவூட்டிய வண்ணமிருந்தாள் என்று: என்னைக் காணாவிட்டால் தன் உயிரே போய்விட்டது போல் பிணமாக ஒ நடைப்பிணமாகத் திரிந்தாள் என்று சொல்லவில்லையா அத்தான்?
உங்களைக் கல்யாணஞ் செய்து கொடுத்தால் மட்டுமே உங்களுடைய மகளை உங்களால் உயிரோடு பார்க்க முடியும் என்று ஒரேபோடாகப் போட்டு, அப்பாவிடம் சம்மதம் பெற்ற சேதி. . . . உங்களுடைய பெருமையைக் கேள்விப்பட்ட அப்பாவே தாமாகச் சம்மதித்த சங்கதி. . . . . எல்லாம் சொன்னீர்களா அத்தான்?
உங்களை நம்பியிருப்பவர்கள் தானே என்று உதாசீனமாகப் பேசாதவர் நீங்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். வீட்டார் “ஏண்டா மகனே என் மருமகளின் போட்டோ எங்கே? கொண்டு வந்து காட்டினாத்தான் என்ன? என் கண்ணே பட்டு விடுமா?” என்று கேட்கவில்லையா? அதற்கு என்ன சொல்லிச் சமாளித்தீர்கள். “சம்மதம்” என்று ஒரு வார்த்தை சொன்னால் போட்டோ என்ன ஆளையே கொண்டு வந்து நிறுத்திவிடுவேன்” என்றீர்களா?
"ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள்? “யாரைக் கேக்கிறாய் புஷ்பா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்த புஷ்பா, எதிரே தந்தையார் ராஜா நிற்பதைக் கண்டு, சிரித்துச் சமாளித்தபடி 68

கையிலிருந்த படத்தை இரு கைகளும் பிணைத்தவாறு பின்னிடையில் சேர்த்து நின்றாள்.
“என்னம்மா கையிலே?”
ராஜா கேட்டதும், அவருக்கே தெரிந்த அந்த இரகசியப் பொருளைத் தன் வாயாற் கூறுத் தயங்கியவளாக, "ஒன்றுமில்லை சும்மா பேசிக் கொண்டிருந்தேன். அவருடன்"
ராஜா பெரிதாகச் சிரித்தார்.
அவருடைய சிரிப்பைக் கேட்டு அடி வளவில் குடியிருக்கும் வேலையாட்கள் குடும்பம், தூங்கும் மரகதம் எல்லோருமே எழுந்து வருகிறார்கள் என்று பிரமை கொண்ட புஷ்பா “ஏனப்பா சிரிக்கிறீர்கள்?” என்று சிணுங்கினாள்.
"அவர் எங்கையம்மா?”
“யாழ்ப்பாணம் போயிருக்கிறார்"
"ஒ"மகிழ்ச்சியாகக் கூவிய ராஜா கூறினார்.
“சம்மதங் கேட்டு வரச் சொன்னேனே. அதுதான் பிள்ளையாண்டான் உடனடியாகப் போயிட்டாப்போலை கிடக்கு. ஆமா புஷ்பா, உனக்கு எப்ப சொன்னார்?"
“எனக்கு வந்து சொல்லிவிட்டுப் போகவில்லை அப்பா அவருடைய அச்சக மானேஜர்தான் சொன்னான்"
“என்ன?”
வேதனையோடு சொன்ன புஷ்பாவின் குரலில் இருந்த அழுகையை உணர்ந்து கொண்ட ராஜா, அதிர்ச்சியும் வியப்பும் கலந்த தொனியில் கேட்டார்.
"அவருடைய ஆட்கள் யாருக்கும் ஆபத்தோ தெரியவில்லை. படபடத்தபடி யிருந்தாராம். தனக்குக்கூட ஒன்றும் சொல்லவில்லையென்று மானேஜர் சொன்னான்"
புஷ்பா அழுதே விட்டாள்.
“அழாதேம்மா! சே சே! என்ன மனுஷங்களப்பா. சொல்ல வேண்டியவர்களுக்குச் சொல்லாமல். ?"ராஜா கவலையோடு சினந்தார். பின்னர் “அவரை வரக் கூடாது எண்டு யாரம்மா சொன்னான். எந்தச் சாமமா
இருந்தாலென்ன உனக்கு வந்து சொல்லியிருக்கலாந்தானே” என்று கேட்டார்.
“சொல்லியிருக்கலாம் தான். காலை யாழ்தேவியைப் பிடிக்கிறதற்காக அவசரமாகப் போயிருப்பார்.
செந்தில்நாதன் செய்தது பெரிய பிழையாகத் தந்தையர் பேசக்கூடாதே என்பதற்காக அப்படிச் சொன்னாள் புஷ்பா.
“சரிதான். அவருக்கு அவங்க அப்பா சம்மதங் கொடுக்கட்டும் எண்டு ஒரு தந்தியும் எல்லே அடிச்சிருக்கு, பொண்ணு பகுதியார் சம்மதம் எண்டு அவங்களுக்குத் தெரிய வேண்டாமா?”
69

Page 43
"தந்தியா?"புஷ்பாவுக்கு ஒன்றுமே விளங்காதது போலிருந்தது. “அதானம்மா. நாங்கள் சம்மதம் எண்டு தெரியிறதுக்காக அடிச்சேன். மாப்பிள்ளை அங்க போக அவரடை அப்பாவே விஷயத்தைக் கேப்பினம். அவர் தடையில்லாமல் விஷயத்தைக் கக்கலாமல்லவா?”
“என்னப்பா இது? பெண் பகுதியாரே இந்தா அந்தா என்று நிற்கிறார்கள். இதற்குள் ஏதோ விஷமம் இருக்கிறது என்றல்லா அவர் வீட்டார் நினைப்பார்கள். நீங்கள் எல்லாரையும் ஜென்டில் மென்னாக நினைக்கிறீர்கள்"
புஷ்யா சற்று வெறுப்புடனேயே கண்டிந்தாள். பின்னர், சிலைபோல, குறும்பு செய்து அந்தக் குறும்பே கண்ணைக் குற்றியதும், அதனால் அவஸ்தைப்படுவோரைப் பரிதாபத்துடனும் பயத்துடனும் நின்று பார்த்து விழி பிதுக்கும் குழந்தைபோல, மங்கலாக இருள் விழுந்திருந்த அந்தப் பின்னேர ஒளியில் நின்று கொண்டிருந்த அவரை நிதானமாகப் பார்த்துவிட்டுக் கூறினாள்.
“சாதாரணமாகத் தந்தியைக் கண்டாலே யாருக்கும் பயம்தான். சாவு வருகிறதோ, இல்லை சஞ்சலம் வருகிறதோ என்று பயத்துடன் பார்ப்பார்கள். உங்களுக்கு வெளிநாடுகளுடன் கேபிள் தொடர்பு செய்து, அதே எல்லாவற்றுக்கும் பழக்கமாகிவிட்டது போல இருக்கிறது. உங்கள் மகளுக்குவரன் கேட்க, முறைப்படி நீங்கள் தான் போயிருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு தந்தியை அனுப்பி விட்டீர்களே. வெறும் கடகத்துக்கும் வெறும் தண்ணிர்க் குடத்துக்கும் சாத்திரம் பார்ப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது என்ன ஆயிற்றோ தெரியாது"
புஷ்பா கண்களைத் துடைத்துக் கொண்டாள். "Lord .....فا ... إق" சின்னஞ்சிறு குழந்தையாக அவள் இருந்தபொழுது தொட்டதுக்கும் சிணுங்கியிருப்பாள். அவள் கேட்ட, விரும்பிய எல்லாவற்றையுமே கொடுப் பதற்காகவே தாம் உயிருடன் இன்னும் இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அவர், தனது மகளின் வாழ்க்கையிலேயே மிக மிக முக்கிய சம்பவமான அவளுடைய கல்யாணத்தையும் அவள் விருப்பப்படி செய்யச் சம்மதித்த பின்னர், அந்தச் சம்மதத்தையே சம்மதம் கேட்ட ஒரு தந்தியால் வெறுப்பாகக் காட்டி, அந்த அருமை மகளின் கண்களைக் கசியச் செய்து விட்டோமே என்பதை நினைத்தபொழுது அவருடைய குரல் தளதளத்தது.
“என்னை மன்னிச் . . . . ”அவர் சொல்லி முடிப்பதற்குள், "அப்பா" என்ற கண்டிப்புடன் பெரிதாகக் கத்தினாள் புஷ்பா.
அவளுடைய வேதனை குறைந்து, அழுகையும் கலந்து வெளிப்பட்ட குரல் கேட்டு, அங்கு வந்த மரகதம், இருவரையும் பார்த்துப் பிரமித்து நின்றாள். பின்னர் தன்னைச் சமாளித்தபடி, கலகலப்பையும் வருவித்துக் கொண்டு கேட்டாள்.
“என்னங்க கல்யாணம் கைகூடாட்டித்தான் வீடே அழுதமாதிரியிருக்கும். இப்ப நாள் பாத்து ஜாம் ஜாம் எண்டு நடக்கிற வேளையிலை 'உம்'
70

மெண்டிருக்கிறியளே. . . . . புஷ்பா என்னவாம் . . . . சீதனம் காணாதாமா? அது தானே. . . . . . உள்ள ஒரு சதமும் பாக்கியில்லாமல் அவளுக்கே தாறம் எண்டு சொல்லுறது தானே. எங்களையும் சீதனமாகக் கேட்டால் கொடுத்தாப் போகிறது”
பெரிதாக நகைச்சுவையாகப் பேசிவிட்டவள் போலச் சிரித்தாள் மரகதம், ஈயாடாத முகத்துடன் நின்ற இருவரும், மரகதம் பக்கம் திரும்பி, அவள் கேட்டும் எந்தக் கேள்வியையும், “செந்தில்நாதன் சொல்லாமற் கொள்ளாமற் போய் விட்ட செய்தியைச் சொல்லி அதுதான் தங்கள் கவலைக்குக் காரணம் என்ற பதிலோடு சமாளிக்கக் காத்திருந்தனர்"
ஆனால், அவள் எதுவுமே கேட்காது இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“என்னங்க. . . . உங்களைத்தான். கல்லு மாதிரி நிக்கிறீங்களே! என்ன நடந்தது?"
ராஜாவின் பக்கமாக இரண்டு அடி நடந்து, கேட்டாள் மரகதம். ராஜா இன்னும் ஒரு நிமிஷம் மெளனமாக நின்றால் அவள் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விடுவாள் என்று அஞ்சிய அவர், “மரகதம் எல்லாம் அப்புறமாகச் சொல்கிறன். நீ வா" என்றபடி வெளியே போனார்.
அவரைத் தொடர்ந்து மகளை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டுப் போன மரகதம், கதவுக்கு அப்பாற் சென்றதும், மீண்டும் உள்ளே வந்த ராஜா, புஷ்யா. நீ ஒண்டுக்கும் யோசியாதை நானே நேரில் போறன்’ என்றபடி வெளியேறினார்.
தன்னை ஏன் ஒதுக்குகிறார்கள்? என்ற கேள்வியில் குமைந்த மரகதம், கண்கள் குளமானாள்.
“சே! நீ எதுக்கு அழணும்?” ராஜா அதட்டியதும் அவளுடைய அழுகை இன்னும் பெருகியது.
அவள் விம்மலிடையே கேட்டாள். "ஆமாம் நான் எதுக்கு அழவேணும்? நீங்கள் என்ன என்னைக் கட்டிய கணவரா? அவளென்ன? நான் பெற்றபிள்ளையா? நான் எதுக்கு அழவேணும்?"
‘பைத்தியம். பைத்தியம் எமோஷனலாகாதே! உனக்கு இரகசியமாக இஞ்ச எதுவும் நடக்காது. எல்லாம் பொறு சொல்லுறன் எண்டு தானே சொன்னேன்?”
ராஜா சிரிக்க முயன்று சிரித்தார். மரகதத்துக்கு இவையெல்லாம் மிகப்பழக்கமான சமாதானங்கள் என்பதால், அவள் அழுகையை நிற்பாட்டவில்லை.
“சரி இஞ்சவா" என்றபடி, அவள் வரவைப் பார்த்த வண்ணம் சோபாவில் சென்று அமர்ந்தார் ராஜா .
அவரைத் தொடர்ந்து சென்ற மரகதம், அவர் அருகில் சென்று, முந்தானையால் கண்களை ஒற்றியபடி நின்றாள்.
71

Page 44
"உட்கார்" என்று ராஜா உறுமியதும், அடக்கமாக அமர்ந்த அவள், இன்னும் எதற்காகத் தாமதிக்க வேண்டும்? என்ற கேள்வியைக் கண்களில் குடியிருத்தி அவரையே பார்த்தாள்.
“ஒண்டுமில்லையப்பா மாப்பிள்ளை வீட்டை நான் போறன். புஷ்பா தானும் வாறன் எண்டு அடம் பிடிச்சா. அதுதான் கல்யாணமாகாத பெண், சம்மதம் கேட்டு. உன் கல்யாணவீட்டையே போகப்போறியா எண்டு கேட்டன். கோவிச்சிட்டு அழுகிறா. சமாதானப்படுத்தினன். முடியவில்லை"
பொய்களுக்கும் எத்தனை உருவங்கள்? ராஜா இவ்வளவு நாகரீகமான பொய்யைச் சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒ உண்மை என்பது அப்பொழுது அங்கு இருந்தாலல்லவா பொய் என்பது எது என்று அடையாளங் கண்டுவிட முடியும்? பொய்யின் நடமாட்டம் எங்கும் அதிகரிப்பதால் தானோ என்னவோ உண்மை நமக்கென்ன என்று சோம்பலுற்று, பேசாமல் உறங்கிவிடுகிறது.
“அதுக்கென்ன? தன் வரையில் பையன் தான் புருஷன் எண்டு புஷ்பா இருக்கிறா, புருஷன் வீட்டை போறது கட்டினவவுக்கு வெக்கமா?”
மரகதம் கேட்டதும் துணுக்குற்றார் ராஜா. “வெட்க்கமில்லை. ஆனா பாக்கிறவன் காறித்துப்புவான். கல்யாணம் இன்னும் ஆகவில்லை. கட்டினவ கதை நடக்குது. கட்டினவ கதை"
அருவெறுத்தபடி பேசினார் ராஜா. "அம்மி மிதிச்சு, அருந்ததி பாத்து, அக்கினி வலம் வந்தாத்தான் கல்யாணம் கூடினதா அர்த்தமா?”
ராஜா எவ்வளவுக்கு எவ்வளவு கல்வியிலும் பொருளாதாரத்திலும் மட்டத்திலிருந்து மேலே வந்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு கல்வியிலும், அனைய சுகத்திலும் மேலேயிருந்து கீழே அவருக்காக வந்த மரகதம், அப்பொழுது கடந்தகால உரிமைகளை நிறைவேற்றி, நினைவுபடுத்தியபடி கேட்டாள்.
அவள் கேட்ட அந்தக் கேள்வி, அவர்களுடைய வாழ்க்கையையே அம்மணமாகப் பிய்த்துக் காட்டும் என்று ராஜாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவளுடைய அந்தக் கேள்விக்கு, நியாயமானதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கும் அந்தக் கேள்விக்குத் தான் பதிலளிக்காமல் இருக்கிறேனே என்று யாராவது பார்த்து, கைகொட்டிச் சிரிக்கிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்த்தார். ஒருவருமில்லை என்ற திருப்தியில், “மரகதம் கொஞ்சம் பாத்துப் பேசு! பழசைக் கிளறாதை” என்று கண்டித்து வைத்தார் ராஜா.
“என்னங்க அற்ப விசயத்துக்கு நாம் ஏன் மனஸ்தாப படவேணும்?” “உன் மகளின் கல்யாணம் அற்ப விசயமா?”
72

"ஆமாம்” எவ்வளவு ஆணித்தரமாகத் தலையசைத்தாள் மரகதம். பின்னர் அவளே சொன்னாள்:
“இந்தாங்க! நானும் அவவைப் போல இருந்தவதான். ஆனா எந்த ஆபத்திலையும் சிக்கியிருக்க நீங்க வந்து என்னைக் காப்பாத்தயில்லை. அவவக்கு நேர்ந்த ஆபத்தை அந்தப் பையன் தான் போக்கிவிட்டது. ஆனால் - எனக்கு?” கேட்டபடி நிறுத்தினாள் மரகதம்.
புஷ்பாவின் அழகில், சற்று முதுமையை மட்டும் கலந்திருந்த மரகதம் பேசினாள் என்றால், அவளுடைய பொருளுக்குக் கண்ணி வைத்து, அவளுடைய தகப்பனாருடைய கடையில் காஷியராக இருந்த அவர், தகப்பனாரை மிரட்டிக் கல்யாணஞ் செய்து கொண்ட கதையும், மரகதத்தையே மாய்மாலஞ் செய்து, வழிக்கெடுத்து மனதாரக் காதலிக்க வைத்த கதையும், பின்னர் தொட்டுவிட்டவரே தெய்வம் என்று அவள் ஒட்டிக்கொண்டு, வீட்டைவிட்டே களவாகப் புறப்பட்ட கதையும் பட்டவர்த்தனமாகிவிடும் என்று, ராஜாவுக்கு நன்றாகத் தெரியும்.
"துப்புக்கெட்டவங்களுக்கெல்லாம் என் பெண்ணைக் கொடுக்க.”அவர் சொல்லி முடிப்பதற்குள் பெண் புலியொன்று அவர்கள் மத்தியில் பாய்ந்து வந்து வீழ்ந்தது.
"அவரை வானளாவப் புகழ்ந்து விட்டு துப்புக்கெட்டவர் என்றா சொல்கிறீர்கள்?’ என்று சீறினாள் புஷ்பா
பின்னர் சிறு அமைதி நிலவியது. புஷ்பாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
பலரக வர்ண மலர்களாலான செண்டை அன்பளிப்புச் செய்துவிட்டு, அதை முகந்து பார்க்கையில், பாதையோரத்தில் பொறுக்கியெடுத்தோம். என்றாலும் அழகாயிருக்கிறது. அதனால் கொடுத்தோம் என்பது போயிலிருந்தது அவளுக்கு.
விடுவிடென வெளியே சென்றாள். "புஷ்பா! எங்கே போகிறாய்?” தீனமாகக் கேட்ட குரல்கள் ஒயுமுன், அவள் மெயின் கேட்டையுந் தாண்டிவிட்டாள்.
“போனதும் போனவர் உடனே அறிவிக்க முடியவில்லை. இதுவரை ஒரு பதிலுமில்லை! அதையும் பார்ப்பம்” என்று அவளுடைய அதரங்கள் முணுமுணுத்தது அவளுக்கே கேட்டது.
A
73

Page 45
4
புஷ்யா செந்தில்நாதனுடைய வீட்டுப்படியேறும் வரையும் யாரும் அவளைக் கவனிக்கவில்லை. இரவிரவாகக் கண் விழித்து, விளக்கமற்ற புகையிரதத்தில் தனிய வந்த பயமும், தூக்கமின்மையும் அவள் முகத்தில் இருட்கோடுகளை இட்டிருந்தன.
எப்படி அழைப்பது? "அத்தான்!” என்று அழைத்தால், பைத்தியக்கார ஆஸ்பத்தியிலிருந்து நேரே வந்த ஒருத்தி, யாரோ உறவற்ற ஒருவனை அழைப்பது போலல்லவா இருக்கும்?
"மாமா” என்றால் அம்மாவுக்கு அண்ணன், தம்பி யாருமில்லையே. ஓ! முகந்தெரியாதவர்களைப் பற்றிப்பிரலாபமா? புஷ்பா தன்னையே கடிந்து கொண்டாள். அற்ப மனிதர்கள் சந்தர்ப்பா சந்தர்ப்பங்களில் பெரிய மனிதராவது போல், சங்கைக்குதவாத விஷயங்களும் அவளைக் குழப்பிக் கொண்டிருந்தன.
திறந்து கிடக்கிற விறாந்தையில் உள்ள தூண்களில் தட்ட இயலாதே. உட்பக்கமாக இருக்கின்ற கதவில் சென்று தட்டுவதிலும் பெரிதாக “வீட்டுக்காரர்” என்று அழைக்கலாமா?
"சேடோட்டல் கன்றி புறூட்ஸ்”
“யாரது?” சிற்றம்பலத்தார் அகஸ்மாத்தாகத் திரும்பிய பொழுது கண்டதும், கேட்டார். "மிஸ்டர். . . . . செந்தில்நாதனின் . . . " என்று அவள் நடுங்கும் குரலால்
கேட்டபொழுது. . . "வீடு இது தான் பிள்ளை. உள்ளே வாருங்கள். வருத்தமாகக் கிடக்கிறான் தம்பி, ...” என்றார் சிற்றம்பலம்.
அவளுக்கு உலகமெல்லாம் சுற்றியது. உடுத்த உடுப்போடு வெறிகொண்டவள் போல. வெறிகொண்டவள் போல என்ன. வெறி கொண்டே . . . . தன் உயிருக்கு உயிராக வாழ்வுக்கு வாழ்வாக எண்ணத்தில் இதயத்தில் கலந்துவிட்ட அவனைப் பார்ப்பதற்காக அவள் அப்பா அம்மாவை அலட்சியஞ்செய்துவந்திருந்தது அவனுடைய பரிதாபமான வருத்தத்தைப் பார்ப்பதற்குத்தானா?
வருத்தம்? புஷ்பாவுக்கு அழுகையே வந்து விட்டது. ஓவென்று அழுதபடி, ஓடோடிச் சென்று அவனுடைய காலடியில் வீழ்ந்து கதற வேண்டும் போலவிருந்தது.
"வருத்தமா?” தன்னை அடக்கியபடி கேட்டாள். அவளைக் கண்டு தன் இயலாமையையும் பொருட்படுத்தாது எழுந்து அவளருகில் வந்த சிற்றம்பலத்தாரைக் கேட்டாள் புஷ்பா!
74

“ஓம் மோனை ... உள்ளே வந்து பாருங்கள். வந்து மூண்டு நாளுக்கை இப்பிடி ஆச்சு. என்ரை பிள்ளை. நூற்றி ஆறிலை காயுது. ஆஸ்பத்திரிக்கு ஏத்த காருக்குப் போயிட்டினம்"
சிற்றம்பலத்தார் மகனுக்குச் சின்னக் காயம் ஏற்பட்டாலே அவன் முன்பும், மற்றவர்கள் முன்பும் ஏசி விட்டு, தனிமையில் அந்த அவனுடைய வருத்தத்தை நினைத்து அழும் சுபாவமுடையவர். இப்பொழுது வயது எப்படிக்கடந்து விட்டதோ, அதே போல வெட்கமும் மறைந்திருந்தது.
வந்தது யார் என்று தெரியாமலும், கேட்க வேண்டுமென்ற உந்தலின்றியும் கையிலிருந்து அவரைத் தாங்கியிருந்த பொல்லை மண்ணில் குத்தி, குத்தி 6th farmi.
அவருடைய அழுகையை எதிர்பார்க்காத புஷ்பா, அது தனக்கு அழவேணும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்ததே என்ற உணர்வு எழ முன், "ஹோ" என்று கையை மடக்கி வாய்க்குள் திணித்து சப்தத்தைக் கொன்றபடி அழுதாள்.
“உள்ளே போகலாமா?’ என்று கேட்கக் கூட வேண்டாதவளாய், விறாந்தையைக் கடந்து ஒடிச் சென்று அறைகளைத் தேடி ஒதுக்குப் புறமான அறையில் அவன் கிடப்பது கண்டு விம்பித் துடித்தாள்.
தன் கால்களுக்குள் மிகவும் மென்மையான வஸ்து புரள்வதாக உணர்ந்து கொண்ட செந்தில்நாதன் கால்களை உதறியபடி கண்விழித்தான். “உம்” என்ற முனகலிடையே தனது முகத்தில் அவன் உதைந்தானென்று ஏற்றுக்கொள்ளாத புஷ்யா, முகத்தை வெளியில் எடுக்காமலே அழுது, அழுது உருகிக் கொண்டிருந்தாள். கட்டிலோரமாக மண்டியிட்டு இருந்து கால்களைப் பின்பக்கமாக வீசி, கைகளை காலோடு சேர்த்துக் கிடந்தவளைப் பார்த்த அவன், “என்ன அண்ணி யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?’ என்று தீனமாக, ஆனால் தெளிவாகவும் அதட்டலாகவும் கேட்டதைக் கேட்டுத் துடித்து,நிமிர்ந்த அவள், அந்தக் கேள்வியின் ஆழத்தை, நெருக்கத்தை அந்தப் பொல்லாத வேதனை மிகுந்த வேளையிலும் விளங்கிக் கொண்டாள். "அ.த். தா. ன்" புஷ்பாவின் அலறல் பின்வளவுக்கு விடியல் கடனுக்காகக் கண்ணனைக் கூட்டிக் சென்றிருந்த புனிதாவின் காதுகளில் கேட்டதும், நெஞ்சம் பரிதவிக்க, “கண்ணா" என்றபடி ஓடிவந்தாள்.
முற்றத்தில் பொல்லை ஊன்றியபடி கண் சிவந்து நின்ற சிற்றம்பலம் மருமகளைக் கண்டதும், “இதாரு பிள்ளை?” என்றார்.
“தெரியாது” என்பது போல் தலையை அசைத்த புனிதா, அறைக்குள் வந்து கவனித்ததும், அந்த இருவருமே அழுது கொண்டிருந்தது தெரிந்தது.
ஆச்சரியமும் சந்தேகமும் மீதுர அழைத்தாள் புனிதா. "புனிதா! நீர். நீர். இஞ்சை?”
75

Page 46
புனிதா கண்கள் கலங்க, நெஞ்சு விம்ம, குரல் கணக்கக் கூறினாள். "இஞ்சைதான் என்ரை வாழ்க்கை முடிஞ்சது" புனிதாவைக் சற்று உற்றுக் கவனித்த புஷ்பா, “வாழ்க்கை முடிஞ்சது” என்று புனிதா சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டாள்.
“எங்களுடைய கதையே இப்படித்தான்! ஒன்றாகப் படித்து ஒன்றாகத் திரிந்தோம். மேலே படிக்கப் பிரிந்ததோடு எல்லாமே பிரிந்துவிட்டது. படிக்கப் போகாமல் இருந்தாலே. பறுவாயில்லைப் போல இருக்கிறது"
எங்கோ பார்த்தபடி கூறினாள் புஷ்பா. மூக்கில் பெருகிய நீரைச் சீறி சேலையுள்ளே புதைத்த புஷ்யாவின் செய்கையையும், பேச்சையும் கலவரத்துடன் பார்த்த புனிதா கேட்டாள்.
“உமக்கு என்ன நடந்தது? கோடி செல்வத்துக்கு ஒரே மகள். கொழும்புச் சீவியம். . . வேறு . . . . . . . yy
“கோடி செல்வம் கோடானு கோடி செல்வத்தை இழக்க வைக்கப் பார்த்தது. ஒரு மாதிரிப் போராடி அதில் ஜெயித்தேன். இப்பொழுது மெளனம் என்னையும், காய்ச்சல் என்னுடைய செல்வத்தையும் இருந்த இடத்துக்கு அனுப்பப்பார்க்கின்றன’ என்று அவள் கூறும் பொழுது தொண்டை கம்மியது. பேச்சு எழாது அவள் திணறினாள். கையிலிருந்த கண்ணனை இறக்கிவிட்டு, புஷ்பாவை அனைத்து வருடிக் கொடுத்தாள் புனிதா.
“பணம் தான் பெரிசெண்ணுற இந்தக் காலத்திலை அன்பைப் பெரிசெண்ணுறிர் புஷ்பா. உம்மை அன்றும் இப்பிடித்தான் பார்த்தேன். நீர் மாறயில்லை” என்றபடி எங்களைக் கலங்க வைப்பதில் உங்களுக்கு எவ்வளவு ஆனந்தம் என்பது போல் செந்தில்நாதனைப் பார்த்தாள் புனிதா.
அவன் தகிக்கும் கண்களை அங்குமிங்குமாக உருட்டி அந்த இருவரையும் பார்த்தான். அவர்களிடமிருந்து விடுதலை வேண்டும் போற்பட்டது. அவனுக்கு அடிமனது "நீயும் ஒரு மனுஷனா?” என்று உரத்துக் கேட்டதும், எண்ணங்கள் கரை புரண்டன.
ஓ! ஆயிரம் நாய்கள் இப்படிக் குரைத்திருக்கின்றன. சில நாய்கள் கடித்துமிருக்கின்றன. அதற்காக நாயைப் பார்த்துக் குரைக்க முடியுமா? அல்லது கடிக்கத்தான் முடியுமா?
செந்தில்நாதன் எதையும், எவரையும் பொருட்படுத்தவில்லை. சிலைபோலக் கிடந்தான் அவன்.
"அழுகிறீர்களே”என்று கேட்டு அழுத புஷ்பா, புனிதாவை ஒருமுறை வெட்டி விட்டு, தனது சேலையால் அவனுடைய முகத்தைச் செவ்வனே துடைக்கலாம் என்று முயன்று, மேலாடையைக் கழற்றவோ, கீழாடையை உயர்த்தவோ முடியாத தர்மசங்கடமான நிலையிலிருந்து விடுபட்டவளாகி, அவனருகிற் சென்று ழிைந்தோடிய கண்ணிரைக் கைகளால் துடைத்துவிட்டாள்.
76

அவனுடைய நாசி நீர் முண்டியதால் மூச்செடுக்கும் பொழுதும் விடும் பொழுதும் பெரிதும் சப்தமிட்டது. புஷ்யா மேலும் பொறுக்காதவளாக, கட்டிலுக்கும் புனிதாவுக்கும் எதிர்ப்புறமாகச் சென்று, வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, தனது தாவணியைக் கழற்றி ஒரு கையால் நெஞ்சை அமர்த்தியபடியும், மறுகையால் அவன் நாசியைச் சேலை கொண்டு பற்றி, நீர் அகற்றியபடியும் இருந்தாள்.
விரல்கள் கொதித்தன. சேலைக்குள்ளாகவே உடல் நெருப்பாகச் சுட்டதை உணர்ந்து கொண்ட
புஷ்பா, பதட்டத்துடன் கேட்டாள்.
“புனிதா இங்கே கார் எடுக்க இயலாதா?”
"கிட்டடியில் இல்லை. ஊரிலேயே மூண்டோ நாலு கார் நிக்கு. எல்லாரும் மெயிலுக்கு ஆக்கள் ஏத்தப் போயிருப்பினம். மாமா சந்திக்கு ஆள் அனுப்பியிருக்கிறார். இப்ப கார் வந்திடும்”
புனிதா எண்ணங்களின் கொதிப்பினிடையே சொல்லி முடித்தாள்.
புஷ்பா சேலையை அகற்றியே அவனைச் சீராட்டுமளவுக்கு அன்பால் வளர்ந்திருப்பது அவளுக்குத் தன்னையுமறியாத குற்றவுணர்வைக் கொடுத்தது.
கல்லூரியில் இரண்டு பேரும் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது, புஷ்யா தன்மீது காட்டிய அன்பும் பரிவும் நிறுப்பதற்கே பெரியவை என்று அவள் எண்ணி அந்த அன்புக்காக அழுத நாட்களைத் தேடி ஓடினாள்.
தினமும் காலையில் பஸ்ஸில் எட்டு மைல் தூரம்பிரயாணஞ் செய்துகளைத்து வரும் புனிதாவுக்கு தவத்துக்கு அடுத்தபடியாக இருந்து ஆறுதல் செய்தவள் இந்தப் புஷ்பாதான்!
விடுதியில் சகல வசதிகளுடனும் தங்கியிருந்த அவள், பஸ்ஸில் இடம் கிடைக்கவில்லை. இடையில் நெரித்து ஏறியவர்கள் புத்தகங்களால் மறைத்தபடி தன்னைச் சீண்டியதையும், பஸ் நிற்பாட்டும் பொழுது வேண்டுமென்றே வந்து தன்மேல் உராய்ந்து சினமூட்டியதுடன், உடலை நோகச் செய்ததையும், தப்பித்தவறி மார்போடு இறுக்கி அணைத்திருந்த புத்தகங்கள் வழுவிவிட்டால், அவற்றைச் சரி செய்வதற்காகக் கையை எடுக்கும் வேளை பார்த்து, தங்கள் களிசான் பாக்கட்டுக்குள் கைவிட்டுக் கைக்குட்டையை வெளியே எடுத்துத் தன் மிதந்த மேனியை முழங்கையால் நோக இடிப்பதையும் அவள் சொல்லி அழுததெல்லாம் புஷ்பாவுடன் தான்.
களைத்திருக்கும் புனிதாவின் முகத்துக்குப் பவுடர் கொடுத்து, மெருகூட்டினவளும் புஷ்பாதான்.
ஒரு நாள் அவள் கேட்டாள்.
"ஏன் புனிதா . பேசாமல் போடிங்கிலேயே தங்கி விடுமன்?”
அப்பொழுது தன் ஏழ்மைச் சரட்டைப் புனிதா எடுத்துச் சொன்ன வேதனை நிறைந்த வார்த்தைகள். ஒ அவை வார்த்தைகளா? ஒவ்வொன்றும் இரத்தக் கண்ணிர்த் துளிகள்.
77

Page 47
“ஒரேயொரு அக்காவை நம்பிநாலு பேர்சீவிக்கிறம். ஒழுங்காப் போட்டு வாறதுக்குச் சட்டை, கவுண் இல்லை. . . . . காலங்காத்தாலை எழும்பிபட்டப் பரிச்சை படிக்க வாறன். காலைச் சாப்பாட்டுக் காசுதான் என்னைப் பஸ்ஸிலை கொண்டுவாறது. . . . . .
புனிதா மேலும் பேசவில்லை. புஷ்பா விசும்பினதுதான் காரணம். புஷ்பா தனக்குக் கொழும்பிலிருந்து பெற்றோர் அனுப்பிய புதுத் துணிகளை ஊரில் உலகத்தில் உள்ள தெய்வங்கள் அத்தனையையும் அழைத்து ஆணையிட்டு, எடுத்துச் செல்லும்படி பணித்ததையும் நினைத்தாள்.
அந்தப் புதுத் துணிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றபொழுது தாயார் கேட்டாள்.
“எது இதெல்லாம்?" “சிநேகிதி குடுத்தா...” *சிநேகிதி? ஊர் படுகிற பாட்டுக்கு உனக்கு உடுபுடவை வாங்கிக் குடுக்கிற சிநேகிதி ஆரு?"
"அம்மா! கொழும்பில் இருந்து இஞ்சை போடிங்கிலை இருக்கிற புஷ்பா குடுத்தது. . . . . . 99
புனிதா எவ்வளவு சொல்லியும் தாயார் கேட்கவில்லை. “மரியாதையாகச் சொல்லிப் போட்டன். ஆம்பிளைத் துணை இல்லாத நீங்கள். ஊரிலை ஆரன் குடுக்கிறதை வாங்கக் கூடாது. என்ரை குணம் தெரியுமல்லே?"
LoT . . . . شا... إق" “என்னடி? வேசியளைப் பெத்த என்ரை மானம் போகுது. உங்கக்காமார் கேட்ட வசை போதுமடி. இப்பிடிக் குணங்களாலைதானே உங்களை ஒருத்தனும் தேடமாட்டான் என்கிறாங்கள்.ஒருசோடி சட்டைக்கு உங்களை விற்கிறியளோ? போ! உடனை போய் தந்தவனட்டைக் குடு. . . . . . அல்லாட்டி தெருவிலை ஏறி . . . . . . yy
“அம்மா! சத்தியமாகச் சொல்லுறன். . . . . நான் ஒருத்தரோடையும் பறையுறதில்லை. பார்க்கிறதுமில்லை. புஷ்பா தான் குடுத்தா , நீங்க வேணுமெண்டால் போய்க் கேளுங்க. . . . . நான் இஞ்சையே நிக்கிறன். . . . . p
புனிதா அழுது, கெஞ்சி தான் உத்தமி என்றதை நிலைநாட்டப் பிரயத்தனப்பட்டாள்.
இருங்கடி உங்களுக்கு...” என்று கறுவியபடி வெளியே சென்ற தாயார் விளக்குமாற்றை எடுத்து, அதன் அடியை ஒரு முறை நிலத்தில் குத்தி நேராக்கிக் கொண்டு நிமிர்ந்த பொழுது புனிதா தலை தலையென்று அடித்து,"விதியே விதியே!” என்று அழுதாள்.
அவளுடைய அந்தப் பாவனை உண்மையானதுதான் என்று தாயார் உணர்ந்து கொண்டிருக்கையில், “நாங்கள் பெண்ணாப் பிறந்துட்டோமே ஆராச்சும் ஏதும் பிழையா நடந்தாலும் உடனுக்குடனை அம்மா எண்டு சொன்னனே... இப்ப
9.
7 8R

பெத்த தாயே சந்தேகிக்கிறாவே. . . . சந்நதியானே. . . . . நீயும் இருக்கிறியோ. . . . என்னை இப்பிடிவசை கேட்க வைச்சிட்டியே. . . . . . ஐயோ! பெத்தவவே சொல்லிப் போட்டாவே” என்று புனிதா நெக்கி, நெக்கி அழுதது சித்திரவதை செய்தது.
அவள் விளக்குமாற்றை எறிந்து விட்டு, கூடத்தின் ஒரு மூலையில் விளக்குக் காவலாக இருந்த தன் கணவர் முன் சென்று, “நான் என்ன செய்ய? பெத்த வயிறு பத்தி எரியுதே . . . . . செல்லமாக வளர்ந்தவளுக்கே சட்டைத் துணிக்கும் வழியில்லாமல் விட்டிட்டுப் போயிட்டீங்களே . . . . . . ஒருத்தி தன்னை மாடாய் அடிச்சுப் போடுறதும்பத்தாதே."என்று வயிறு, வயிறு என்று அடித்தாள். "அம்மா அம்மா." என்று புனிதா அவளைக் கையெடுத்துக்கும்பிட்டபடி, மண்டியிட்டதும்தான் அவள் தன்னை வதைப்பதை விட்டாள்.
ஓ! இப்படி எத்தனை நாட்கள்? ஒரு நாட்காலை புனிதாவுக்காகத் தனது வகுப்பறையில் ஏலவே வந்து காத்திருந்தாள் புஷ்யா. அன்று விடுதியில் தனக்குப் பரிமாறப்பட்ட விஷேசபலகாரங்களை இரகசியமாகப்பார்சல் செய்து, அவள் வந்ததும் வராததுமாக ஒடிச் சென்று. வகுப்பறை மூலையில் இருத்தி அவளை உண்ண வைத்து, அவள் உண்ணும் அழகை ஆவலோடு, ஒரு பெற்றதாயின் பெருமகிழ்வோடு பார்த்து நின்றாளே புஷ்யா. . . . . .
பல்கலைக்கழகத்துக்கு அவள் தெரிவு செய்யப்பட்டதும், புனிதா சித்தியடையாதது கண்டு புஷ்பா ஏன் அழுதாள்?
"புஷ்பா என் உடன் பிறப்பே நீஅழாதையம்மா! இப்ப நான் அழுகிறேனே. அது பெயில் விட்டிட்டன் எண்டதுக்காக அல்ல. பெயில் விட்டதை நினைச்சால் உண்மையிலேயே எனக்குச் சந்தோஷமாயிருக்கு. ஏன் தெரியுமா? ஏழ்மைக்கும் வறுமைக்கும்பட்டினிக்கும் இடையிலை கிடந்து சாகிற நான், மானம் போக, நித்தமும் காலமையளிலையும் பின் நேரங்களிலையும் என்னைக் கானுற ஒவ்வொருத்தனுடைய. . . . . . . அந்த மிருகப் பிறப்புக்களின்ரை கீழ்த்தரமான நாலாந்தரப் பசியை ஒரு உரஞ்சலிலே போக்கி, நான் அவங்களுக்குப் பசிக்கு மருந்தாகத் திரியிறநிலும் பார்க்க. . . . . பெயில் விடுறது எவ்வளவு நல்லது அக்காவுக்காகப் படிச்சன். . . . என் தகப்பன் எனக்குச் செய்யாத உதவிகளைச் செய்து, அண்ணன் காட்டியிருக்கக் கூடிய பாசத்தைக் காட்டி, தாய் போல எனக்கு அத்து இத்து ஊட்டி இருந்த உம்மைப் பிரியிறனே அது தான் புஷ்பா வெப்பியாரமாயிருக்கு. . . . . . . அழுகிறேன். . . . நீர் அழாதேயும். . . . . . . .
அன்று போனவள் புஷ்பா கடிதங்களாக இரண்டொரு முறை வந்தாள். பின்னர் மறந்தே விட்டாளா? அதோ! அவள் என் முகத்தையே இப்பொழுது பார்த்தபடி ஏங்கிக் கிடக்கிறாளே! எதற்காக?
>k >k >k
7. 9

Page 48
5
தான் தற்கொலை செய்ய முயன்றதைத் தவிர, மற்றைய எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டாள் புனிதா. புஷ்பாவுக்கு அவளையும் அறியாமல் அவளுடைய வாழ்க்கையில் தான் குறுக்கிட்டதான அந்த ஒரே விஷயத்தை மட்டும் புனிதா சொல்லவில்லை.
செந்தில்நாதனைக் கண்ட அன்று அவளுடைய மனத்தில் முதன்முதல் "இவரா! என் கணவர்?’ என்று கேள்வி எழுந்த அந்தக் கணம் முதல் அவள் பட்ட இன்ப வேதனை, அனுபவித்த அளவிலா இன்பம் எல்லாம் யாருக்குமே சொல்லக் கூடியவை தானா? தோழி, அவளுக்கும் மேலான ஒரு தெய்வீக நட்பும், பாசமும் உடையவள் என்பதற்காக, இப்பொழுது கீழ்த்தரமானதாகப்படும் அந்தப் புனிதமான இன்பத்தைப் புனிதாவால் மறக்க முடியுமா?
அண்ணனுக்கேனும் வாழ்க்கைப்படுகிறேனே என்ற திருப்தியில் அவள் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்த கதை யாருக்குத்தான் அவசியமானது?
வீடே கும்மிருட்டில் கிடக்க, ஒருவரை யொருவர் தெரியாத இருட்டில், அவளுடைய உடலைச் சுற்றிகழுத்தோரமாகக் கையனைத்து, வெப்பவலயக் காற்றுப் போன்ற அவனுடைய மூச்சு காதோரங்களைச் சுண்டி எழுப்ப, அவன் எத்தனை ஆயிரம் கதைகளை அவளுடைய இதயத்தின் அடிவாரத்துக்கு அனுப்பி வைத்தான். அந்தத் தனிமையான இன்பவேளையில் கூட தம்பியைப் பற்றிய பெருமையைத் தானே சொல்லிக் கொண்டிருந்தான், அவன் அண்ணன் தில்லைவாசன்.
"உனக்கு ஏதும் ஆனால் தம்பி ஒருத்தன்தான் கதி, எனக்கு ஏதும் ஆனாலும் நீயும் அவன் அடிக்கே போயிடு. அவன் ஒரு சாதி ஆள். நீ அவனை நம்புறாய் எண்டு தெரிஞ்சால், கடைசி வரையும் கைவிடமாட்டான்"
தில்லைவாசன் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு என்னதான் அர்த்தம்? “என்னுடைய கம்பனி வேலை பென்ஷன் இராது தம்பி கைவிட்டால் உன்பாடு சரி.நீஆருமில்லாத நீ.வயோதிகமாமன் மாமியும் உனக்காக வேணுமெண்டால் அழுவினம். உன் வயிற்றிலை வளருறதுக்குக் கதியே இல்லாமல் போய்விடும்" ஆஸ்பத்திரிக்கு ஆபரேஷன் விஷயமாகப் போனபொழுது அவன் ஏன் அப்படிச் சொன்னான்? தான் சாகப்போகிற செய்தி சாகப் போறவனுக்கு மட்டுந்தானா தெரியும்?
“வேலையும் போச்சு. . . . அண்ணனும் போயிட்டார். உளர் வீட்டை வித்து, ஏதாவது தெரிஞ்ச தொழிலாச் செய்யுங்கள் செந்தி” என்று கூறி, அதன்படியே அவன் வைத்திருந்த சிறிய தொகையுடன் தனது வீடு விற்ற பணத்தையும் கொடுத்து, சொந்தக் காலில் நிற்க வைத்தாளே புனிதா?
80

அவனை நம்பாமலா செய்தாள்? “புனிதா உமக்கு இப்படியொரு வேதனை நிறைந்த வாழ்க்கையை ஆண்டவன் நெடுக்க கொடுத்து விட்டான். ஊர் முழுக்க விழவேண்டிய இடி உமது தலையில் மட்டும் விழுந்த மாதிரி இருக்கிறது. ஆருமற்றவளாக இப்பொழுது இருக்கிறீரே என் வயிறெல்லாம் பத்தியெரிகிறது புனிதா. பற்றி எரிகிறது.” “யாரை யார் தேற்றுறது. புஷ்பா ? நாங்கள் எங்கையோ பிறந்து, எப்பிடியோ வளர்ந்தம். ஆனால், ஒரே பள்ளிக்கூடம் எங்களைச் சக மாணவிகளாக்காமல், சகோதரிகளாக்கிச்சுது. இப்ப. . . . .
“இப்ப?” “இப்ப என்ன? என் சண்டாள நினைவுகளுக்குச் சாவு மணி அடிக்காதா எண்டு கும்பிடுறன்"
“நீர் என்ன செய்கிறீர் புனிதா?” “ஒண்டுமில்லை. அதாரு வாறது. கார்ச்சத்தமும் கேட்குது" "9.... (....Ur" எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் விழிகளை இமைக்காது காரிலிருந்து இறங்கிய ராஜாவைப் பார்த்து, திடுக்கிட்டு, தேறி, அழைத்தபடி நின்றாள் புஷ்யா!
“என்ன நடக்குது?” ஆஜானுபாகுவான தோற்றத்துள் சிங்கமிருந்து பேசுவது போன்றதொரு தொனி, அங்கு கேட்டது.
விசும்பலுடன் சொன்னாள் புஷ்பா “நூற்றியாறில் காய்கிறது அப்பா அவர் கிடையாக் கிடக்கிறார்” "ஆ"ராஜா அயர்ந்துவிட்டார். செந்தில்நாதனைக் கொழும்பிலிருந்து வந்த கார் ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் சென்றபொழுது நேரம் எட்டரை மணியாகியிருந்தது.
புஷ்பா தானும் கூடவே வருவதாகக் கூறிய பொழுதும், ராஜா ஒரேயடியாக மறுத்துவிட்டார். "உன்ரை காதலை வீட்டோடை வைச்சிரு ஆஸ்பத்திரி வரைக்கும் வரவிட்டிராதை" என்று அவர் கீழ்த்தரமாகக் கூறிவிட்டுக் காரில் ஏறினார்.
புனிதாவை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் கவிழ்ந்தபடி ஒடோடிச் சென்று, செந்தில்நாதன் கிடந்த கட்டிலில் மண்டியிட்டபடி முகம் புதைத்தாள் புஷ்யா! சிற்றம்பலத்தாரும் கூடவே காரில் சென்றிருந்தார். தன் மகனுக்கு யாருமே துணையாக இல்லாததை நினைத்தபொழுது அவருடைய நெஞ்சு பொருமி வெந்தது. ராஜா தனது செல்வச் செழிப்பை வெகுவாக அப்பொழுது காட்டியதும் அவருக்கு என்னவோ போலிருந்தது. அத்துடன் தமிழ்மட்டுமே ஒழுங்காகத் தெரிந்த அவரைப் பார்த்து, "கெயர்லெஸ் ட்றீட்மண்ட்” என்று புறுபுறுத்ததையும் அவர் பெரிதும் வெறுத்தார். சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் பற்களை
8

Page 49
நறும்பியபடியும், கோபமுகத்துடனும் ராஜா பேசியதால் சிற்றம்பலத்தார் அப்படியே காரிலிருந்து குதித்தே விடலாமா என்றும் யோசித்தார். பின்னர் அநாதரவாகத் தன்மடியே தஞ்சமென்று கிடந்த செந்தில்நாதனின் முகத்தைப் பார்த்ததும் அவர் மனம் மாறியது. எனினும் கோபம் பீறிட்டது.
கோபம் என்பதும் தனியார் உடைமையா? என்ன? ஏழைக்களுக்கு வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா?
ராஜா சாரதியுடன் சிங்களத்தில் பேசினார். “ஒட்டைச் சுவரும் இரண்டறை வீடும் வைச்சண்டு மாடி வீட்டிலை சம்பந்தம். . . .மாடப்புறமாதிரி இருந்தவள் இத்தனை மைல்களைத் தாண்டி இராராவாகப் பயணம். . . . . . என்ன உலகமடா?”
சிற்றம்பலத்தார் அழுதது, அவரைப் பற்றிய கதையைக் கேட்ட சாரதி, கண்ணாடிக்குள் அவரைப் பார்த்தபொழுது தெரிந்தது.
“அவளுக்குச் சிங்களம் தெரியும் போல இருக்கிறது! ஐயா!' என்று சிங்களத்தில் கூறியதும், ராஜாவெடுக் கென்று சொன்னார்.
“இந்தக் கிணற்றுத் தவளைகளுக்கு எப்படி வேறு மொழி தெரியப் போகிறது?”
"இருக்கும் இருக்கும். சாரதி ஒத்துப் பாடினான்.
ஆஸ்பத்திரியிலை இவனைப்போட்டிட்டுப்பிறகு சொல்லுறன்.” தன்னுட் கறுவிக் கொண்ட சிற்றம்பலம், நினைத்துக் கொண்டார்.
பொல்காவலை, குருனாகல், கேகாலை, கண்டி, கொழும்பு. . . . . . . .உக்ம் பொறுக்கிப்பயலே! என்ரை பிள்ளை உனக்குமாப்பிள்ளை. ? இந்த ஊரெல்லாம் அடியுண்டு வியாபாரம் செய்தனானடா! நீ ஊரை ஏமாத்திறாய். பிழைச்சிட்டாய். . . . பெரிசாப் பேசுறாய்..... நான் ஊரை நம்பி ஏமாந்தன். தோத்துப் போனன் ...... உன் பல்லை உடைக்காமல் பேசாமலே இருக்கிறன். . . . . வயசு போகப் போக, சே! எனக்குமான ரோஷமும் போயிட்டுது. . . . இரடா. . . . உன்னைப் படிப்பிக்கிறன். . . . என்ரை காலிலை விழுந்து மாப்பிள்ளை கேக்கிறியா இல்லையா பாப்பம். உன்ரை மோளை நீபெத்திருக்கமாட்டாய் போலை கிடக்கு. அவள் பிள்ளை.....LT6) ah. என்ன மாதிரித் துடிக்கிறாள்?
ஆஸ்பத்திரியிலை செந்தில்நாதன் அனுமதிக்கப்பட்டதும், சிற்றம்பலத்தாரை எதிர்பார்க்காமல் கார் புறப்பட்டுவிட்டது.
“காரில்லாத ஊர்” “எந்த ஊர்?’ என்று கங்காணி கேட்டதற்கு டாக்டர் அறையிலிருந்து வெளியே வந்த ராஜா கூறியதும் சிற்றம்பலத்தின் காதுகளில் விழத்தான் செய்தது. மகனுடைய நிலைமையை நினைத்த பொழுது, தரித்து, ஆவன செய்ய வேண்டும் என்று ஆஸ்பத்திரியிலேயே நின்று விட்டார் சிற்றம்பலம்.
82

மத்தியான இடைவேளையில் புஷ்பாவும், புனிதாவும் கண்ணனுடன் வந்திருந்தனர்.
செந்தில்நாதன் தனக்கு நேர்ந்துவிட்ட சம்பவங்களின் கொடுமைகளையும் ஏற்றப்பட்ட ஊசிகளின் வலியையும் நொந்து கொண்டிருந்தான்.
“காய்ச்சல் சரியாகக் கூடியிட்டுதணை அப்பு கடைசி நிமிஷம் வரைக்கும் வைச்சிருக்கிறது. பிறகு கடவுளிலை பழியைப் போடுறது. அல்லது எங்களை ஏசுறது பாவம். . . . அருமந்த ஆம்பிள்ளை . . . .
வயதுவந்த நேர்ஸிங் மேட்ரன் கூறினாள். “வசதிப்படவில்லை மோனை உடனை வர"தீனமாகச் சொல்லிவிட்டு ஓய்தார். “கடவுள் பழி எடுப்பாரா? சிற்றம்பலத்தாரின் சித்தமே ஒருமுறை கலங்கியது. பெரிய டாக்டரை அழைத்திருந்தார்கள். அவர் வந்ததும், சிற்றம்பலத்தாரை அப்பால் வெளியே நிற்கும்படிபணித்து, அவனைப்பிறந்தமேனியாக ஐஸ் தொட்டிலில் இட்டுப் புரட்டி, குளிர் ஊட்டிக் கொண்டிருந்தனர் டாக்டரும், நர்ஸ்களும்.
விபரமறியாமல் உலாவினார் சிற்றம்பலம். மாலை இடைவேளையிலும் புஷ்பாவும் புனிதாவும் கண்ணனுடன் வந்திருந்தனர்.
அப்பொழுது சிறிது விழிதிறந்து பார்க்கக் கூடியளவு சுகம் பெற்றிருந்தான் செந்தில்நாதன்.
புஷ்யா அழுவது அவன் காதுகளுக்குக் கேட்கவில்லை; கண்கள் புரிந்து கொண்டன. அவளைச் சைகை காட்டி அழைத்து, கொழும்புக்குப் போகும்படி கூறினான் அவன்.
“உங்களை இந்த நிலையில் பார்ப்பேன் என்று கனவு கண்டேனா? இந்த நிலைமையிலே விட்டுவிட்டு நான் உயிர்போனாலும் போகமாட்டேன். போனால் என்னுடைய பிணம் போகட்டும்"
புஷ்பா பிடிவாதமாகச் சொல்லி விட்டாள். அவளுக்கு ஏற்படக் கூடிய அவதூறான நிலைமைகளை எடுத்து விளக்கி, அனுப்பி வைக்கச் சக்தியற்றுக் கிடந்தான் செந்தில்நாதன்.
சிற்றம்பலம், புஷ்பாவைத் தனியே அழைத்தார். புனிதாவுக்கு நெஞ்சு சுரீ ரென்ற பொழுதும், அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. பின்னர் மாமனார் தனக்கு எந்த வித குரோதமும் விளைக்காதவர்; விளைக்கவும் மாட்டார் என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
சிற்றம்பலம் சென்னார்: “பிள்ளை. உங்கப்பா காருக்கை நடந்தவிதம் எனக்குமானம் போறதாக இருந்தது. அந்த மனுஷன் பணத்தைத் தான் மதிக்கிறார். எனக்குச் சிங்களம் தொரியாதெண்ட நினைப்பிலை “ஓட்டை வீடு, பிச்சைக்காரர்” எண்டெல்லாம்
83

Page 50
பேசினார். டிறைவருக்கு எங்களைச் சொல்லி ஏளனம் செய்தார். இதுக்கு நான் பதில் சொல்லியிருப்பான். என்ரை மகன் என்னவும் சொல்லமாட்டான். இது அவன்ரை காதிலை கேட்டால் குடி முழுகியிருக்கும். . . . . . . உனக்காக. . . . . . . நீ அழுகிறதைப் பார்க்க எனக்கே அழுகைவருகுது அதாலை விட்டனான்"
"மாமா எனக்காக எங்கள் அப்பாவை மன்னித்து விடுங்கள். உங்களை
மன்றாட்டமாகக் கேட்கிறேன்"
புஷ்பா பணிவாகக் கேட்டாள்.
"அது சனியன் போகட்டும் நான் என்ரை மன உளைவுக்கு சொன்னனான். சொல்லாமலும் இருக்கக் கூடாதெல்லோ?”
புஷ்பா ஆமென்று தலையசைத்தாள்.
அவர்கள் உள்ளே வந்ததும் “பிள்ளையை ஏன் கொண்டு வந்த நீங்கள்? பச்சைப் பாலன் எல்லோ? பொறுப்பில்லாமல் நடக்கிறீங்களே! என்று இரைந்தாள் நர்ஸ்.
புனிதா வகையறியாது திகைத்தாள் பின்னர் துடிக்கும் உதடுகள் விம்ம,
ஏக்கத்தோடு செந்தில்நாதனைப் பார்த்தாள்.
அவன் "ஐயாவிடம் கண்ணனைக் கொடுங்கள்” என்று திக்கித் திணறிக் கூறினான். வெளியிலிடப்பட்ட வாங்கில் கண்ணனை அணைத்தபடி அமர்ந்தார் சிற்றம்பலம்.
"நான் என்னையே ஏமாற்றி விட்டேன். இப்பொழுது உங்கள் எல்லோரையும் ஏமாற்றினாலும் ஆச்சரியமில்லை என் மனதுக்கு விருப்பமில்லாமலே நான் செய்கிற இந்த வஞ்சகத்தைப் பெரிய மனதோடு மன்னியுங்கள். என்னை நாளடைவில் எல்லோரும் மறந்து விட்டால் நல்லது. உங்கள் உங்கள் வாழ்க்கையை அது பாதிக்காமலிருக்கும்”
செந்தில்நாதன் ஆழமான அர்த்தங்களுடன் மெல்லப் பேசினான்.
"ஐயோ! என்னவெல்லாம் பேசுகிறீர்கள்?"புஷ்பா விசும்பினாள்.
"ஐயோ! என்னவெல்லாம் பேசுகிறீர்கள்?"
“செந்தீ ராசா. . . . . ஏதோ சொல்ல முயன்றாள் புனிதா. அவளால் பேசமுடியவில்லை. தலைசுற்றி விழுவது போன்று, கண்கள் மேலே சொருக, நெற்றி வியர்க்க,தலைமயிர்கள் இனம்புரியாமல் கெம்ப, மண்ணில் விழப்போன புனிதாவைத் தாங்கிப் பிடித்தாள் புஷ்பா.
ஆறு மணியாகி விட்டது என்பதற்கு அறிகுறியாக ஆஸ்பத்திரி மணி அடித்தது.
எல்லோரும் வெளியேறினர் சிற்றம்பலத்தாரைத் தவிர.
次次★
84

6
“எங்களுடைய கள்ளைப் பற்றி உனக்குத் தெரியாது இல்லை வா காட்டுகிறேன்!” என்று சாரதியைக் கூட்டிக் கொண்டு, ஒலைக்கொட்டில்ளே நிறைந்த அந்த ஊருக்குச் சென்ற ராஜா, புஷ்யாவும் புனிதாவும் திரும்பிய பொழுது விறாந்தையில் புரண்டு கொண்டிருந்தார்.
"சாராயத்திலைதான்.கசிப்பைக் கலக்கிறாங்க கள்ளிலை என்னத்தை "அவருடைய புலம்பலைச் சகியாமல், அவமானமாகக் கருதி, "அப்பா" என்று குதறி அழைத்தாள் புஷ்பா
"காதலனைத் தேடி காதலி வந்தாள். மோளைத் தேடி அப்பன் வந்திான் . அப்பனைத் தேடி கள்ளு வந்தது. கள்ளைத் தேடி..?" என்று‘சிந்திப்பவர் போல் கூறி நிறுத்திவிட்டு, “வெறி வந்தது. . . . . . . ഊ്). . . . . . . ஹ க்ம்' என்று பெரிதாகக் கூறிச் சிரித்தார்.
புனிதா தன்னுள் அருவெறுத்தபடி மூக்கைப் பிடித்துக் கொண்டு அப்பாற் சென்றாள்.
புஷ்பா சாரதியைப் பார்த்தாள். அவன் கார் பின் சீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
“சே! வெட்கங்கெட்டமனிதர்கள்! இவர்களுக்கு வாய் ஏன்?"புஷ்பா தன்னுள் வெட்கமும் வேதனையும் நிரம்பப் பிதற்றினாள்.
"உனக்கும் வெறியா. மை டார்லிங் டோட்டர்?" “மண்ணாங்கட்டி” “சுண்ணாம்புக்கட்டி காதலுக்காக என்னை றோட்டுக்கு இழுத்திட்டியே புஷ்பா" ராஜா உளறினான்.
புதிதாகக் கார் நிற்பதைக் கண்ட சிறுவர்கள், ராஜா உளநிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
"அடே இரத்தக் கண்ணீர்சீன்டா. நல்லா இருக்குதில்லை! சிறுவன் ஒருவன் சினிமாவையும், ஒரு நடிகரையும் உதாரணங் காட்டிச் சொல்ல, ஏனையோர் கெர்ல் லென்று சிரித்தனர்.
“செந்தி அண்ணை ஆஸ்பத்திரியிலையாம்.” அதைக் கொண்டாடுகினம். “போங்கடா போக்கிரிப் பசங்காள்” என்று ராஜா உன்னி எழுந்ததும், சிறுவர்கள் ஓடிவிட்டார்கள். அவர்கள் போட்ட அமளியில்சாரதியும் கண்விழித்த அவன் சிறிதே போட்டிருந்தாலும், நேற்றைய இரவு நித்திரை அவரன மடக்கியிருந்தது. கண்களைக் கசக்கியபடி எழுந்து வந்தி .ெ கிணற்றடிக்குச் சென்று முகம் கழுவிவிட்டு, சாரத்தால் குனிந்து துடைத்தானி
85

Page 51
“புறப்படுவோமா ஐயா?” என்று அவன் கேட்டதும் இனிமேலும் அங்கு இருப்பதை விரும்பாத ராஜா, தட்டிக் தடக்கி எழுந்து, “புஷ்பா” என்று உரக்கத் கூவினார்.
“உம் இங்கேயே தான் நிற்கிறேன்!” என்று உறுமிய அவளை தலையை உலுப்பி, கண்களைக் கசக்கிப் பார்த்த ராஜா கேட்டார்.
"நீ வரப் போறியா இல்லையா?”
“எங்கே?” "கொழும்புக்கு இந்த பிச்சைக்காரராஸ்கல்களுடைய வீட்டை இருக்காதே. உன்னைக் கொன்னு போடுவானுக. . . . . பாத்துக்கோ. கொப்பங் சொல்றேன்"
"அப்பா. மரியாதையைக் கொஞ்சம் கொடுத்தால் ஓரளவுக்காவது அது மறுபடியும் கிடைக்கும். நான் இங்கேயே கிடந்து செத்து புழுவாகப் போனாலும் போவேனே தவிர, இனி உங்கள் வீட்டுக்கு வரமாட்டேன். அவர் கிடக்கிற கிடையைப் பார்த்த பிறகும் என்ன மனம் வந்து கேட்கிறீர்கள்! நீங்கள் போகலாம்!” - புஷ்பா நிதானமாகக் கூறினாள்.
“நீங்கள் போகலாம் மீன்ஸ், தற் யூ கெட் அவுட் வெளியே போ! எண்டா சொல்லுறாய்?"
“யேஸ் நெள யூகெட் அவுட் பிளீஸ்... அன்ட் டிசேர்வ் அன்ட் பிஹேவ் யுவர்செல்வ்’ புஷ்பா உரத்துக் கூவினாள்.
ராஜா மேலும் அங்கு நிற்கவில்லை. “என்னுடைய கள்ளுவெறி கண்ணைத்தான் மறைக்குது. . . . ஆனால் உன்ரை காதல் வெறி என்னையே மறைக்குது இல்லே. . . . . »y
அவர்கள் போய்விட்டார்கள். கார் புறப்படும் பொழுது ராஜா கார்க் கண்ணாடிக்கு மேலால் காறி உமிழ்ந்தது, அந்தக் கிராம வீதி எங்கும் பெரிதாகப் பறந்தது, புஷ்யாவின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது.
"புஷ்பா" “என்ன புனிதா?” “உங்கள் அப்பா போய்விட்டாரா?” ‘போயே விட்டார்” “நீர் அப்பிடிப் பேசினது சரியில்லை. என்ன சொன்னாலும் பெத்த தகப்பன் இல்லையா?”
“உம் நாக்குக்கு வந்த மாதிரி அவர்மட்டும் பேசலாமா? அதற்கு அவருக்கு ஸ்பெஷலாக லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்களா? அத்தானை துப்புக்கெட்டவர் . . பிச்சைக்காரர் என்றெல்லாம் கண்டபடி பேசுகிறார். அவர் இருக்கிற இடம் தேடிப்போய்த்தான் அவருடைய சம்மதங் கேட்டவர். அப்படிப் பேசலாமோ?”
86

"கூடாதுதான் புஷ்யா! நாங்கள் ஏழைகள். எங்களை அாைட் ைஇருக்கிற பணம் முடியுமட்டும் என்ன வேண்மெண்டாலும் பேசட்டும். ஆனால். நீர் அப்பாவைப் பேசியிருக்கக் கூடாது. பேசினது பிழை. . . . . .பிழை. . . . . 3y
“உம்மை வருத்திவிட்டேன். உமக்காக அப்பா என்னை மன்னிக்கட்டும் . . . . கடவுளும் கருணை காட்டட்டும். . . . . s
தூரத்தில் கார் ஹோர்ண் சத்தம்கேட்டது. “பார்த்தீரா? கடவுள் நிச்சயம் கருணை காட்டுவார்’ புஷ்பா மகிழ்ச்சியில் குதித்தாள். திடீரென்று மெளனியாகி, இருள் படர்ந்த முகத்தை மண்மீது வீழ்த்தி இருந்தாள்.
புஷ்பா ! கடவுள் கருணை காட்டட்டும். உமது நல்ல மனத்துக்கு. . . . . . உமக்கு இல்லாமலே எனக்குக் கொடுத்த உமது கைகளை உம்முடைய அத்தானை அணைக்கிறதன் மூலம் காட்டட்டும். நீங்கள் இரண்டு பேரும் உல்லாசமாகப் பாடித் திரியும் பறவைகள் போல என்றென்றும் வாழுங்கள். அதைப் பார்த்து . . . . . . நான் ஆனந்தக் கண்ணிர் வடிக்கிறதுக்கு எனக்கும் இனிமேலாவது அந்தக் கடவுள் கருணை காட்டட்டும்” என்ற புனிதா, சற்று அவளுடைய முகத்தைப் பார்த்தாள்.
புஷ்பா ஆனந்தத்தில் தன்னை மறந்து இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியில் வழிந்த கண்ணிரைத் துடைத்துவிட்டுக் கேட்டாள் புனிதா.
“புஷ்பா' “உம்” கனவிலிருந்து விடுபட்டவள் போல இசைத்தாள். “எனக்கு நீர் செய்த உதவிகள் ஒண்டையுமே நான் வாயாலை கேக்கவில்லை. எல்லாம் உம்முடைய மனத்திலை பட்டபடி செய்தீர். ஆனால் இப்ப முதல் முதலாக ஒண்டு கேக்கிறன். . . . . செய்வீரா?” யாசித்தாள் புனிதா.
“இதென்ன கேள்வி புனிதா? நீர் உங்களுடன் அவரைப்பார்க்கிற சந்தர்ப்பம் எனக்குக் கொடுத்தால் என் வாழ்க்கையைக் கூட, ஏன் உயிரைக் கூடக் கொடுப்பேன். உள்ளத்தால் மட்டுமல்ல, கோலத்தாலும் குணத்தாலும் நான் உமக்குச் சகோதரி. இது சத்தியம்”
புஷ்பா பெருமிதப் புன்னகை வீசினாள். பின்னர் தானே கேட்டாள். “நீர் என்ன கேட்டீர்?” “என் கண்ணனை உம்மிடம் ஒப்படைக்கட்டுமா?” “புனிதா" புஷ்பா அதட்டினாள். "பு. ஷ். பா”வியப்பும் வெறுப்பும் எழப்பார்த்தாள் புனிதா, “என்னம்மா சொல்கிறாய்?”
“சும்மா என்னை ஏமாற்ற வேண்டாம். நானும் ஒரு பெண். இன்னொரு பெண். . . அதுகும் உன்னுடைய ஆசைகள், கனவுகள் எப்படியிருக்கும். . . . அவை தான் என்னென்ன? . . . . .என்றெல்லாம் தெரிந்திருக்கிறேன். . . . நீ என்னிடமே
87

Page 52
மறைக்கிறாயே. . . . . உனக்காக நான் எதையும் இழக்கத் தயார். . . . . ஏன் என்
அத்தானைக்கூட. . . . . . .
՞ւ.....ஷ் . . . பா!” “கொஞ்சம் பொறு. . . . . . எனக்கோ ஒர் ஆண் எப்படி இருப்பார் என்று
இன்னும் தெரியாது. ஆனாலும் ஒர் ஆணின் அன்பு எத்தகையது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அவர் - என்னை என்னென்ன சோதனைகளுக்குள்ளாக்கினார் தெரியுமா?அவரை நான் தான் காதலிக்கிறேனோ என்று பல நாள் சந்தேகப்பட்டேன். பிறகு தான் தெரிந்தது. . . . . . அவர் ஒரு சத்தியவான் என்று. . . . . . நான் படித்து முடிக்கும் வரை தன்னைப் பார்க்கவோ பேசவோ பழகவோ கூடாது என்றார். ஆனால் நான் பார்த்தேன். பேச முயன்றேன். . . . பழகக் கற்பனையும் ஆசையும் கொண்டேன் . . . . . . . அதில் நான் படுதோல்வி கண்டன். சோதனை முடிந்ததும் நான் தொடர்ந்தும் அவரிடம் போனேன். . . . . . அப்பர்டா. . . . . நான்கு வருடங்களுக்குப் பிறகு போன கிழமைதான் என்னை அழைத்தார்a p. பேசினார். உக்ம் பழகினார். ”என்று கூறி, அவன் அன்று சாயந்தரம் நடந்துகொண்ட விதத்தை, ஏற்படுத்தியசுகத்தை நினைத்த அவள் நாணி, புனிதாவைப் பார்த்தாள்.
களங்கமில்லாத இந்தத் தேவதைக்குப் பெயர் புஷ்பாவா? ஏன்?கங்கா என்றே வைத்திருக்கலாமே!
“புனிதா ஒன்றை இன்னதென்றே அறியாமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் அதை அறியாமலே அறிய வேண்டும் என்ற ஆசை இல்லாமலே இருந்து விடலாம்.
முடியாது புஷ்யா"
முடியும் புனிதா. சொல்வதைக் கேள்! ஆனால் அது இன்னதுதான், இப்படித்தான் என்று சில காலம் சுவையாகத் தெரிந்து, முறையாக அனுபவித்து விட்டு,'அது'இன்றி இருப்பது பெரு விரதம்; பெரிய கொடுமை. அதுதான் நான் சொல்கிறேன். நான் இன்னும் அதை அறியவில்லை. இப்பொழுது அறிய விரும்பவும் இல்லை. . . . .
‘பைத்தியம்.பெண்மையே அதிலைதான் தங்கியிருக்குது. அதாலே
தான்:பெருமைப்பட்டு உலகத்திலை யாருக்கும் கிட்டாத பெருமையை தாய்மையைக் குடுக்குது"
"அப்படிப் பார்த்தால் நீயே எனக்கு மகளாவாய். உன்னை நான் அணைத்து அழைத்துப் போன காலங்களில் என் மனோநிலை தாய்மையையே தந்தது. உனக்கு உண்ணக் கொடுத்து. . . . . . ஒ சொல்லிக் காட்டுகிறேன் என்று நினைக்காதே. . . நீ உண்ணும் அழகைப் பார்த்திருப்பதில் நான் பட்ட இன்பம். . . . . பெற்ற
88

நிம்மதி. அப்பப்பா ஆதலால் சொல்கிறேன். உன் உணர்ச்சிகளைக் கொல்லாதே" புஷ்பா இவ்வளவுதூரம் பேசுவாள் என்று எதிர்பார்க்காத புனிதா, அன்பு மேலீட்டால் கண்ணனை ஒரு புறம் சாய்த்தபடி, புஷ்டாவை அணைத்து நெருக்கி அழுதாள்.
“புனிதா அத்தானை நான் பார்க்க வந்த அதே நிமிஷம் . . . . . . அவர் கண்களுக்குள் என் முகம் கிடந்த பொழுது. . . . . என்ன அண்ணி யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்று கவலையோடு சினந்தார். அதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு மனிதனின் கால்களில். . . . . . ஒ அவன் உண்மையிலேயே ஒரு மனிதனாக இருந்தால். . . . . அவனுடைய அன்புக்கு . . . . . . . அணைப்புக்கு உரிய ஒருத்திதான் விழுவாள். அவள் ஒன்றில் காதலியாக இருக்க வேண்டும். . . . அல்லது மனைவியாக இருக்க வேண்டும் . . . . . புனிதா நிச்சயமாக, சத்தியமாக அண்ணியாக இருக்க முடியாதம்மா”
“உண்மை புஷ்யா! ஆனால் . . . . நான். . . நான். . . . . என் கண்ணான
கண்ணன் மேல் சத்தியமாக . . ஒருநாளும் அப்பிடியோ எப்பிடியோ நடக்கவில்லை .."குற்றவாளிக்கூண்டில் நின்று'நான் சுற்றவாளி.சுற்றவாளி.சுற்றவாளி என ஒலமிடும் ஒரு நிரபராதி போலச் சொன்னாள் புனிதா. . . . . .
"அது எனக்குத் தெரியும். . . . . உனக்குப் பருவம் வருமுன்னரே உன்னை எனக்குத் தெரியும். . . . பருவம் வந்த வேளை ஆண் வாடையையே நீ வெறுத்ததும் தெரியும். . . . . பயிர்ப்பு உள்ள எந்தப் பெண்ணும் இலேசாகக் கெடமாட்டாள். . . . புனிதா. . . . கெடவே மாட்டாள். என்னை அவர் காதலிக்கு முன்னரே கட்டிப்பிடித்து விட்டார்” என்று கூறிப் பெரிதாகச் சிரித்த புஷ்பா, பல்கழைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையுமே புனிதாவுக்குச் சொன்னாள்.
இருபெண்களின் இணைப்பில் பொறாமையும் பிறக்கும். ஆறுதலும் கிடைக்குமா? அது அங்கே அவர்கள் இருவருக்குமே கிடைத்துக் கொண்டிருந்தது. “நீ வாழ்க! நீ வாழ்க!” என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே இதுவரையும் நின்ற தவம், "அம்மா புஷ்பா நீங்கள் தானா பத்து வருஷத்துக்கு முந்தியே புனிதாவுக்கு நிழல் கொடுத்த தெய்வம்?” என்றபடி புஷ்பாவை ஆரத் தழுவி, கண்ணிர் ஆறாய்ப் பெருக்கினாள்.
“இவதான் என் தாய்..... பெரியக்கா... எல்லாம்” புனிதா அமைதியாகச் சொன்னாள்.
“நான் ஒட்டுக் கேட்டுவிட்டேன். என்னை மன்னிக்க வேணும்.”தவம் பவித்திரமாகக் கேட்டாள்.
“அதனாலென்ன? பெண்களுக்கு உடல்தான் மறைப்புடன் இருக்க வேண்டும். உள்ளம் எப்பொழுதும் திறந்தே கிடக்க வேண்டும்" என்றாள் புஷ்பா.
89

Page 53
“கண்டவன் திருடியிட்டா. டோட்டல் லொஸ். இல்லையா?”
“யாரது?”
"அது என் கணவர். ”தவம் கூறிவிட்டுத் தொடர்ந்தாள்.
"அவர் சொல்றதும் ஒரு விதத்திலை உண்மை. ஆனால் அவர் சொன்ன அர்த்தத்திலையில்லை. நான் ஒரு நாள் தவறியிருந்தால், அப்பிடித் தவறி விட்டேன் எண்டால் என் கணவர் என்னை மன்னிப்பாரா? அவர்தான் மன்னிச்சாலும் சமூகம் எங்களைச் சும்மா விடுமா? என்னுடைய பெண்மையைக் களங்கமாகச் சொல்லி, அவருடைய ஆண்மையையும் இழிவுபடுத்தாதா? ஒரு பொய்யைச் சொல்லி, நான் அருந்ததியின் கற்பையே சந்தேகிக்க வைச்சவள் என்னுடைய நடத்தையால் எண்டால், . . . . ஆஹா! வாயாரப் புகழலாம். . . . . . . . அல்லது மனதுக்குள் வெறுக்கலாம். . . வாழ்க்கை ஒடியே தீரும். . . . . . . . . ஒமோம் நிம்மதியாக . . . .
“சரி அக்கா அவர் ஆஸ்பத்திரியிலை. சரியான கடுமை........
“பார்த்தண்டுதான் வாறம்" தவம் சொன்னதும் வியந்த மற்றிருவரும், ஏற இறங்கப் பார்த்தனர்.
"ஆச்சரியமாக இருக்கிறதே... அஞ்சனம் பார்த்தீர்களா?”
"இல்லை புஷ்யா பஸ் ஸ்டாண்டில் சொன்னார்கள்"
“ஓ! அதுதானே கேட்டேன்!”
அங்கு நிலவிய அமைதியில் ஒவ்வொருவர் மனதிலும் செந்தில்நாதன் ஒவ்வோர் உறவில், ஒவ்வோர் உருவில் நின்று கொண்டிருந்தான்.
ஆனால் - ?
அந்த மூன்று பேருமே அவனுடைய ஆசைகள், கனவுகள், உணர்ச்சிகள் யாவும் தம்முடன் மோதவேண்டும், மோதி எழும் இன்பத்தில் தாம் மிதக்க வேண்டும் என்று கனவு கண்டவர்கள்; ஆசை கொண்டவர்கள்;உணர்ச்சிவசப்பட்டவர்கள் தாம்.
ஓ! இப்பொழுது மட்டும் அவர்கள் ஏன் தங்கள் உடலோடு உள்ளத்தையும் பூட்டி வைத்திருக்கிறார்கள்? பெண்கள் என்பதாலா?
இருவர் விடைபெற்றனர்.
※
g
90

7
பDறுநாள் மதியம். செந்தில்நாதன் கிடையாகக் கிடந்தான். மகனுண்டு மூட்டைக் கடியும் கொசுக் கடியும் நிறைந்த அந்த வார்ட் உண்டு என்று பாடு பார்த்தார் சிற்றம்பலம். வேளா வேளைக்கு உண்ணாது, ஒரு நாள் முழுவதுமே பட்டினி கிடந்து, நர்ஸின் வேண்டுதலின் பெயரில் கடையிலிருந்துதருவிக்கப்பட்டிருந்த காய்ந்த இடியப்பத்தை வரண்ட தமது தொண்டைக்குள் திணித்து, அது உட்செல்லாது தொண்டைக் குழியிலேயே புதையுண்டபோது, தமது மரணத்தையும் வரவேற்றார் அவர்.
அவரது விக்கல் சத்தங் கேட்டு ஓடிவந்த நர்ஸ் தண்ணிர் கொடுத்து, நெஞ்சையும் கூனிய முதுகையும் உருவி விட்டு, அவரைத் தேற்றினாள். செந்தில்நாதனை தன்னால் முடிந்தளவு கூடுதலாகக் கவனிக்கிறதாகவும், முதிய அந்த அவர் படும் அவஸ்தை அவனின் நோயிலும் கொடியது என்றும் அவள் கூறியும், அவர் அசையவில்லை.
"அவனுக்கு ஒண்டு ஆச்சுதெண்டால், நானும் அவனோடையே போயிடுறன்! சிற்றம்பலத்தார் விக்கி விக்கி குரல் கேரக் கூறியது கேட்ட செந்தில்நாதன் தன்னுள் அழுதுான்.
வீட்டில் தன் வரவை எதிர்பார்த்துக் கிடக்கிற புனிதாவுக்கும் புஷ்பாவுக்கும், அவர்களை ஒட்டித் திரிகின்ற கண்ணனுக்கும் என்ன வழிபார்க்கிறது என்று அடிக்கடி சிந்தித்தான்.
ஒட்டி உறவாடினால் மட்டும் காதலா? ஏன் அது காமமாகவும் இருக்கக் கூடாது? ஒட்டாமலே, உறவு வைக்காமலே காதலிக்க முடியாதா? ஆங்கிலத்தில் தாயயையும் காதலிக்கிறார்கள். சகோதரியையும் காதலிக்கிறார்கள். தகுதியான பெண்ணையும் காதலிக்கிறார்களே. . . . . ஏன் அது எங்களால் முடிவதில்லை?
அவன் தன்னையே கேட்டுக் கொண்டிருந்த வேளை, புஷ்யாவும் புனிதாவும் கண்ணனை வெளியே சிற்றம்பலத்தாரிடம் கொடுத்துவிட்டு உள்ளே வந்தார்கள்.
காய்ச்சல் வரைபடத்தைப் பார்த்த புஷ்யாங்கே" என்று ஏங்கி விறைத்தாள். கூடவே புனிதா நிலை தளர்ந்தாள். அவனுடைய கட்டிலைப் பற்றி, அவனுடைய கால்களை மெல்லத் தடவி, வெளியே கிடந்த போர்வையை எடுத்து மூடிவிட்டாள்.
அது தெரிந்தும், அவன் எங்கோ வெறித்தபடி கிடந்தான். "ஒரு நேரம் கூடுகிறது. இன்னொரு நேரம் குறைகிறது. ஒரேடியாகக் கூடாதா? என்று கும்பிட்டுக் கிடக்கிறேன்"
“எப்படி இருக்கிறது?" என்று ஆவலோடு கேட்ட புஷ்யாவின் கேள்விக்கு, புனிதாவைப் பார்த்த வண்ணம் பதிலிறுத்தான் செந்தில்நாதன்.
"அண்ணனை. . . சொறி. . . . . . கண்ணனைக் கூட்டி வரவில்லையா?" அவன் கேட்டான்.
91

Page 54
“வந்திருக்கிறான். ”என்றபடி அவனைத் தூக்கி வந்தாள் புஷ்பா. மெளனியாகச் சிலை போல நின்றாள் புனிதா. “ஒருவரும் இன்னமும் சாப்பிடவில்லையென்று நினைக்கிறேன். . . . . ஒரேயடியாக வாழநினைத்தாலும் வாழ இயலாது . . . . போக நினைத்தாலும் போக முடியாது”
அவன் என்ன சொல்கிறான்? வாழ்வையும் மரணத்தையும் எவ்வளவு பக்குவமாக, தத்துவமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறான். வாழ்க்கை உங்களில் ஒருத்தியுடன் தான்; இரண்டு பேருடனும் அல்ல என்கிறானா? நீங்கள் பட்டினி கிடந்து நான் இறந்து விட்டால் என்னுடன் இறக்கலாமென்று நினைக்கிறீர்களே! அது நடவாத காரியம் என்கிறானா?
கண்ணனைத் தரச் சொல்லி, புஷ்பா தாங்கிப் பிடித்தவாறிருக்க அவனை அன்போடு (அணைக்காமல்) முத்தமிட்டான். அவன் அண்ணனைக் கண்டதிருப்தி
புஷ்பா' எவ்வளவு இனிமையாக அழைக்கின்றான்? அவர்களுடன் அவன் இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டுமென்பதற்காக கண்டம் திறக்கின்றதா?
“என்ன அத்தான்?” அத்தான் என்ற சொல்லில்தான் என்ன பவித்திரமான அன்பு தொனிக்கிறது? அவள் நெருங்கிச் சென்று அவனுடைய முழங்கையுடன் இடை அண்ட நின்று. . . கலங்கினாள்!
கஷ்டங்களைத் தாங்க முடியாத இந்தப் பிரகிருதிப் பெண்களுக்கு வாய் எதற்காக? கண்கள் எதற்காக? புலம்புவதற்கும் அழுவதற்கும்மட்டும்தானா? அவன் நினைத்தான். பின்னர் - “ஏன் அழுகிறாய்” என்று கேட்டான்.
“ஒன்றுமில்லை” என்பவள் போல் தலையை மறுத்தசைத்தாள் புஷ்யா. “ ஒன்றுமில்லாமலே அழ உங்களால்தான் முடியும். எல்லாவற்றுக்கும் அழவேண்டும் போல் இருக்கும், எங்களால் அது முடியாது. முடியும் ஆனால். . . . விடமாட்டார்கள். . . . . ஆண்பிள்ளைகள் என்பதை மறந்து விடுவார்கள்’ முணுமுத்தான்.
“என்ன அத்தான்?” “எனக்காக நான் சொல்கிறதைச் செய்கிறாயா? அந்தப் பிறஸ் இருக்கிறதே. . பாழாய்ப் போன வெள்ளை யானை. . . அதை நீ நிர்வகிக்கிறாயா? நிர்வகித்து ஐயா அண்ணி கண்ணன் எல்லோரையும் காப்பாற்றுகிறாயா? இதை உன்னால் (ypLLOIT?”
“சரியத்தான்! உங்களுக்கு உதவியாக நிர்வகிக்கிறேன்” புஷ்பா அவன் கேட்ட பொருள் விளங்கியவளானாலும், தெரியாதவள் போல ஒத்திசைத்துக் கூறினாள்.
92

புனிதா விசும்பினாள்! "அண்ணி” சினந்தான் செந்தில்நாதன். - பின்னர் வெறுப்பு மேலிட்டுக் கூறினான்.
“எனக்கு மருந்து கொடுக்கிறார்கள். நீங்கள் யாருமே கண்ணீரால் குணப்படுத்த முனையாதீர்கள்! கண்ணிரால் குணப்படுத்தலா மென்றால் உலகத்தில் இது உங்கள் தரவளிகளுக்கு எங்கே விளக்கப் போகிறது?”
யாரைப் பேசுகிறான்? புஷ்யாவும் புனிதாவும் ஒருவரையொருவர் பார்த்தபின் கண்களைத் துடைத்துக் கொண்டனர்.
"அப்படியானால். . . . " கூறிவிட்டு அவர்களைப் பார்த்தான். பின்னர் கண்ணனை வெளியே கொண்டு போய்க் கொடுக்கும்படி சைகை காட்டினான்.
“எப்படியானால் எதன் தொடர்ச்சி இது?” “என்னத்தான்?... புஷ்பா தன்மையாகப் பரிந்தாள். “உக்ம் நான் இங்கே கிடக்கிறேன். நினைவு எங்கே தான் போகிறது? நீ உடனே கொழும்புக்குப் போ! போய் ஆக வேண்டியதைக் கவனி"
“பொறுத்துப் போகிறேன்" அவள் இரந்தாள். பின்னர் கூறினாள். "நீங்கள் இந்தக் கிடைகிடக்கும் பொழுது நான் எப்படிப் போவேனாம்? தயவு செய்து. கருணை காட்டுங்கள். . . . . உங்களிடமிருந்து என்னைப் பிரிக்காதீர்கள். துரத்தாதீர்கள். அ.த். தா. ன்"
அவள் கண்ணிரை மருந்து என்று நினைக்கிறாளா? “சரி நான் துரத்தவில்லை. எல்லோரும் இங்கேயே இருங்கள் நான் போகிறேன்!
“செந்தீ சாகப்போன என்னையும் பிடிச்சு நிறுத்திப் போட்டு என்னையா பேச்சுப் பேசுறீங்கள்? ஒண்டு மட்டும் சொல்லுறன் . . . . நீங்கள் சொன்னதாலை உங்க வீட்டுக்கு வாழ வந்தேன். இனி என்ன சொல்லுறியளோ. . . . . . அதையும் செய்யிறன். . . . . . ஆனால் உங்களை மட்டும் வருத்தாதீங்கள். . . . அதை என்னால் தாங்க முடியுதில்லை . . . . ” என்றபடி இரண்டு கைகளையும் அவன் பக்கம் கூப்பி நீட்டியபடி கால்களுள் முகம் புதைத்து ஓவென்று அழுதாள் புனிதா.
"புஷ்பா! . . . . . புனிதா . . . . . . . கண்ணா” ஆசையோடு சொல்லிக் கொண்டான். செந்தில்நாதன். "ஐயா இருக்கிறாரா?” “இஞ்சை நிக்கிறன் அப்பு. "தளதளக்கக் கூறினார் சிற்றம்பலம். "ஐயா! இரவு பகலாக விழித்திருந்து என்னத்தை ஐயா கண்டுவிட்டீர்கள்?” கேட்டு விட்டுச் சிரித்தான் செந்தில்நாதன்.
அவனுடைய நாசிகளைப் பிளந்தெறிமாப் போல் பெருமூச்சொன்று பாய்ந்து சென்றது.
புஷ்பா புனிதா. ஐயா! கண்ணா!
93

Page 55
er
அத். . . . . . . . . தான்!” புஷ்பா அலறிய பேய் ஒலம் அந்த வார்டையே அதிரச் செய்தது.
கூடி நின்று, தங்கள், தங்கள் உறவினர்களுக்கு ஒத்தாசை புரிந்தவர்கள் எல்லோருமே பரக்கப் பரக்க விழி பிதுங்கிக் கொண்டு ஓடிவந்தார்கள்.
"ஐயோ! என்ன மாதிரி ஆம்பிள்ளை” "நா . . . த. . . . ன்” என்றபடி செந்தில்நாதனுடைய மடியில் அலமலக்காக இடப்பட்ட கண்ணனை சிற்றம்பலம் அவாக்கென்றுதாங்கியதும், மூச்சையற்று கீழே வீழ்ந்தாள் புனிதா.
"ஐயா. போயிட்டியா. எங்களைத் தவிக்க வைச்சிட்டுப் போயிட்டியா. என்று அங்கு ஒருமித்த குரல்கள் கேட்டதைக் கேட்டு ஓடோடி வந்தனர் டாக்டரும் நர்ஸ் சிலரும்.
டாக்டர் பரிசோதித்து விட்டுச் சொன்னார். நர்ஸ் சவக்காலைக்கு நோட் அனுப்புங்கள். மையம் வெளியே போகலாம். . . . நான் எதிர்பார்த்தேன். காய்ச்சல் கூடிக் கொண்டே போயிருந்தது. அதோடு ஒரு சதத்துக்கும் ஆறுதல் இல்லை நெஞ்சும் சரியான பலவீனம். நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்"
டாக்டர் போய்விட்டார். தனது அடிநாதமான இசையை ஊரெங்கும் எழுப்பி, சென்ற இடங்களிலும்
y
சிறந்து பறந்து திரிந்த அந்த வானம்பாடியின் பெருமை மிக்க உயிர் அடங்கி பல மாதங்களாகி விட்டன.
அதோ அவர்கள் ஊரில் இருந்த ஒட்டைக் கல்வீடு இன்று முற்றும் முழுதாக ஒட்டையாகி விட்டது.
வீதியால் போவோர் வருவோர் இன்றும் மெளனமாகக் போய்க் கொண்டிருக்கிறார்கள். இரவு வேளைகளில் ஏதும் சரசரத்தாலும் பலர் அந்தப் பக்கமே போவதில்லை.
ஆனால் - ? புஷ்பா என்ற காதல் குயிலைப் போன்று உள்ளத்தைத் திறந்து பாடிப் பறந்த குயில்கள் உடலையும் திறக்க விரும்பினால். . . . . . எத்தனை எத்தனை குருவிகள்
அந்த வீட்டுக்குள் இரவெல்லாம் குடியிருக்கின்றன?
பேய்வீடு' என்று நாளடைவில் சிறப்புப் பெயர் பெற்றுவிட்ட அந்த வீட்டினுள் எந்தச் சத்தம் கேட்டாலும் எட்டிப் பார்ப்பாரில்லையே! இச சென்ற ஒலிகள் அங்கு இதமாகக் கேட்கின்றன. அங்கு எத்தனையோ புஷ்பாக்களும் புனிதாக்களும் வந்து வந்து வாழ்ந்து போகிறார்கள்.
கொழும்பில் அந்தச் செந்தில் முருகன் கோயிலில் இப்பொழுது அடிக்கடி பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.
94

அங்கு வெள்ளாடை தரித்த இரண்டு பெண்கள் பழகாகா , களிலும் பூஜைகளிலும் தம்மை மறந்து, உலகை மறந்து எங்கோ ஓரிடத்தில், ஒருயிரில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கின்றனர். அவனை மனிதனா? என்று கேட். கோயில் ஐயர் நீ மனிதனில்லை! “ தெய்வம்” என்ற நினைவில் அவனை நினைத்து தீபங் காட்டுகிறார்.
அச்சுக்கூட இயந்திரங்கள் முன்னையதிலும் பன்மடங்கு மூச்செறிந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
கண்ணனைத் தூக்கவோ தாங்கவோ முடியாத ஒரு மனித ஜடம் ஒன்று அங்குமிங்குமாக எதற்கோ உலாவிக் கொண்டு திரிகிறது.
அதோ -
சுவரில் பழைய பானையை ஒட்டையிட்டு யாரோ அறைந்து கொடுத்த கூட் டைப் பெரிதாக நம்பி சில சிட்டுக்குருவிகள் சீழ்க்கை அடித்துச் சப்தித்து மகிழ்ந்திருக்கின்றன. அவற்றின் மத்தியில் ஒரு வானம்பாடியேனும் இல்லை.
ஓ! அது என்றோ எங்கோ பறந்து விட்டதே!
(முற்றும்)

Page 56
நூலுருவில் வெளிவந்த “அங்கையன் கயிலாசநாதனின்’
ஏனைய படைப்புக்கள்
ひ கடற் காற்று (பரிசு நாவல்)
முதற் பதிப்பு Marr 1972 இரண்டாம் பதிப்பு Mo 2000
2) வைகறை நிலவு (கவிதை) - 1977
3) செந்தனல் (நாவல்) - 2000
4) அங்கையன்’கதைகள் 2 سمهOOO
(சிறுகதைத் தொகுதி)
இன்னும் வெளிவர இருப்பவை
1) அங்கையன்’கவிதைகள்
2) சொர்க்கமும் நரகமும் (நாவல்)
9


Page 57
அங்கையன் என்ற
இந்து தருமம்' ே
* 'கொழும்புப் பிரதேச அடையாளங் காணலாம்.
பல்வேறு அம்சங்களையும் மி அங்கையன்’ கைலாசநாதன் (
★ மகாகவி பாரதியைப் நூலாக வேண்டுமென்று ச அங்கையன். கடல் வாழ்ை பெருமை பெறும் இவர், சிகரங்களைத் தொட்டவர். இப்போது வசப்பட்டிருக்கிற
 

லஞண் பற்றி.
B ᎧᏡ ᎧuᎩ என்பது செயல் மயைக் காட்டுவதும், அழகு ம் வகையிற் செய்வதும், சுவை வல்லதும் பற்றிய பல ங்களுக்கு உத வு வது மா ன  ைவ யும் ஆற்றலை யுமே பதாகும். ஆகவே, கலையிற் பயன், திறமை, அழகு, சுவை அம்சங்கள் உள்ளன". அங்கையன் கைலாசநாதன்
பராதனைப் பல்கலைக் கழகம் - 1962.
நாவலாகச் ‘செந்தணலை
கொழும்பு வாழ்க்கையின்
க நுட்பமான அவதானிப்புடன் இந்த நூலில் விபரித்துள்ளார்"
- செங்கை ஆழியான்
போன்றே, தனது ஆக்கங்கள் கனவுகள் கண்ட கலைஞன் }வ தமிழில் முதலில் எழுதிய இன்னும் பல படைப்புச் நாம் அதை அறியும் காலம்
99
b
- செ. யோகநாதன்
inted By Unie Arts (Pvt) Ltd., TIP: 330195