கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகத்து நாட்டார் கதைகள்

Page 1
莺 W:ርUPo եկի:
 

ன்னையன்
ள்மொழிவு
GLIMT
தமிழி
o
நீர்வை

Page 2


Page 3

உலகத்து நாட்டார் கதைகள்
தமிழில் மீள்மொழிவு நீர்வை பொன்னையன்
மீரா பதிப்பகம் 191/23, ஹைலெவல் வீதி கிருலப்பனை, கொழும்பு - 06

Page 4
Title
Subject
Author
First Edition
Second Edition
No of Pages
Type
Size
Paper
Cover
Cover Design
Sketches
Published by
Printed by
ISBN
WORLD FOLK TALES Retold by Neervai Ponniyan
Fiction
Neervai Ponnaiyan
25 - 05 - 2001
25 - 09-2004
351 + xvii
10 Point
12.5 x 18 cm
70gsm Bank Paper
Art Board
Anura Sirinath
Sanjaya Sasanka Dasanayake
Meera Pathippakam C 3/5, Anderson Flats,
Park Rd, Colombo - 5. Tel:2508250
E-kuvality Graphics 315, Jampettah Street, Kotahena. Colombo - 13. Te: 0 - 2389848
Rs... 350.00
955 - 1022- 00-9

சமர்ப்பணம்
என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய என் அருமை ஆச்சி, அப்புக்கு

Page 5

பொருளடக்கம்
பக்கம்
பதிப்புரை Χ தல்முகம் xi 10க்கள் இலக்கியம் xiv 1. கரீனல் 1. 2. புல்லுருவிகள் 3 3. நானற் புல்லும்
செந்தரர மரமும் 4 4. தகுதியற்ற நட்பு 5 5. அவா 6 6. தூரத்துப் பச்சை 7 7. எண்ணிக்கை பெரிதல்ல 8 8. மலையும் மடுவும் 9 9. தலைக்கணம் 10 10. நன்றிகெட்டவர்கள் 12 11. நயினால் கடிபட் மனிதன் 13 12. சந்தேகம் 14 13. tлdтѣмф 15 14. தீராத பிணக்கு 16 15. சாதுரியம் 17 16. வீரதீரம் 18 17. தீக்கோழி 20 18 குறிக்கோள் 2 19 தார்மீகம் 23 21) தீர்வு 24 21. தடிப்பு 25 22. நோவாத சம்பாத்தியம் 26 23. போலிப்பெருமை 27
24.
25.
வச்சிராயுதம்
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
1|dырddf மேதாவி
சாகாவரம் திமிர்த்தனம் கோணற்பார்வை வெவ்வேறுபாதைகள் ஆகாயக்கோட்டை கானமயிலா . பிறவிக்குணம் . dноGилdТаъй)
குளத்திற்குள் இருந்த
சந்திரன் குதிரையோ குதிரை! பழக்கதோஷம் பிரசவ வேதனை பாதுகாப்பு புதுவகைஇரக்கம் இரண்டு பெண்டாட்டிக்காரன் மதிமயக்கம் கற்பனாவாதிகள் பொல்லைக்கொடுத்து அடிவாங்குதல்
பெறுமதி மதிகெட் காகம் காலவிரயம்
பக்கம்
28
29
30
32
33
36
37
38
39
40
41
42
43
45
46
47
48
49
50
51
53
55
56
57

Page 6
48.
49.
5 ().
51.
52.
53.
54
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66,
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
ஜீவகாருண்யம்
எண்ணெய்ச்சட்டியிலிருந்து
நெருப்புக்குள் தியாகம் இரண்டுபைகள் இரை ஆசைவாததை வலிமை
ஆற்றாமை தக்கதண்டனை விழிப்பு
போலிஅன்ப பேராசை
கொக்கரிப்பு பயம் தெளிந்தது தீர்க்கதரிசனம் அளவுகடந்தால். உண்மை கசக்கும் எட்டாப்பழம் மாதுளை - அப்பிள் - முட்புதர் மாற்றம் மாற்றம்! வேட்டைநாய் கிறீச்சிடும் சக்கரங்கள் தயவஞ்சனை மலைகளை அகற்றிய மூடக் கிழவன் குட்டுப்பட்டாலும். போகத் தகாத இடம் குருட்டுச் சிந்தனை தந்திரம்
நரபலி
பக்கம்
58
60
61
63
64
66
67
68
69
70
72
73
74
75
76
78
79
81
82
83
84
85
86
87
90
91
92
93
94
77
78.
79.
然{}.
S.
82.
83.
84.
85.
怒6、
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
1 OO
1.
O2.
O3.
104.
105.
106.
O7.
108.
தன்னால் முடியாததை .
வாக்குறுதிகள் கழுகும் அம்பும் எதிர்பார்ப்பு கழிவிரக்கம் யதார்த்தம் அடிமைத்தனம்
கருணை மடியில் கனம் சமயோசிதம் வெற்றியாருக்கு? மாடும் இலையானதும் தேவ பிரார்த்தனை காலம் கடந்த ஞானம் சந்தேகம் யார் அழகு? ஆயத்தம் கபடத்தனம் பயனற்ற முயற்சி
மீன் குஞ்சின் சாணக்கியம்
சரணாகதி முயற்சி சமாதானம் Ꮷ,ᎢᏧᎥᏤᎶ5ᎠᏧᎳ மேதாவி
ssp.J. தற்பெருமை
கெட்டிக்காரன் புளுகு.
நீதிதேவன்
புலமை கோழிக் கள்ளன் இரட்டைநாக்கு
பக்கம்
96
97
99
100
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
20
2.
123
124
125
126
127
129
130
13

(9.
).
1.
12.
3.
114.
115
116.
117.
18.
119.
2O.
121.
122.
123.
124.
125.
126.
127,
128.
129.
30,
131.
132.
133.
34.
135.
36.
பக்கம்
ஆற்றல் 132 காமாலைக்கண்னன் 133 யதார்த்தவாதி 134 இரட் ைவேடம் 136 விடாப்பிடி 137 அடங்காப்பிடாரி 138 அச்சுறுத்தல் 139 ஆலோசனை 140 எதிர்பார்ப்பு 141 தன்வினை தன்னைச் சுடும் 142 மாற்றுவழி 43 மீனவன் 144 மூளை இல்லாததரி 145 கண்டபாவனையில் . 146 ஏமாற்றம் 147 சூரியனின் திருமணம் 148 இறுமாப்பு 49 பொறுமை 150 முடிவில்லாத வார்த்தைகள் 152 உழைப்பின் மகிமை 54 ஆதாம் - ஏவாள் 55 காற்றும் தண்ணிரும் சண்டை. 157
கஞ்சத்தனம் 1.59 இன்பதுன்பங்கள் 162 புதையல் தேடிய முட்டாள்கள் 1.65 இருதலைக்கொள்ளி 166 தற்பெருமை 168 ஆறாவது அறிவு இல்லாத மனிதன் 169
wii
38.
139
1 40.
41.
142.
143.
144.
145.
146.
147.
148.
49.
50.
151.
152.
153.
154.
155.
156.
157.
158.
159.
16O.
161.
62.
63.
164.
கட் ைபன்நெட் ைபகை
வர முயலுதல் அகந்தையின் விளைவு உலகில் நீதியே இல்லை கோழிகளின் சகிப்புத்தன்மை வாழ்க்கைபற்றிய சண்ை விழிப்பு
பரிமாற்றம்
பயன்பாடு மூலகாரனம் யார் போலிவைத்தியம் போதனை
அழுதவன் சிரித்தால் ...?
தண்டனை பறத்தற் போட்டி வன்னெஞ்சம் சமயோசிதம் விருந்தோம்பல் போட்டி விசாரணை கண்ணாற்கண்டது மிலேச்சன் ஆழம் அறியாது காலைவிடுதல் கசாப்புக்கடைக்காரன் நோக்கம் அடைக்கலம்
கொம்பு
உப்பு தலை இல்லாமல். குதிரைகள் வெளியே நிற்கின்றன
பக்கம்
171
174
175
177
178
181
182
183
184
185
186
187
189
190
193
194
195
197
199
200
201
202
203
204
205
206
208
210

Page 7
(5.
166.
167.
68.
69.
170.
17.
172
73.
174.
175.
176.
177.
178.
179.
80.
181.
182.
183.
184.
185.
186
87.
88.
189.
190.
191.
92.
193
94.
95.
b)றக்கல் வான்கோழி
கொம்புமிருகங்களின் விகுந்து சந்தேகத்துக்கு உரியது மூவர் அர்த்தமுள்ள பெயர்கள் அழகுப் போட்டி
லி
பிரார்த்தனை காஞ்சோன்றி அடையாளம் தண்டனை
குளிர்
பாதுகாப்பரண்.
மீன்
தவளை அன்பான அழைப்பு அசட்டுத் தைரியம் நிதானம்
ஆபத்து
ჭffწ)}[[)
தற்பெருமை ш06йгéddf
நன்றியுள்ள நாய் சிற்பத்தின் விலை சிங்கக்குகை அறியாமை அமைதியான கடல்
தவறான பாதை சேவலின் கூவல் இலையான்
பாரம்
பக்கம்
22
214
217
218
220
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
242
243
244
245
246
247
248
viii
9t
97.
98.
. (؟{19
2O().
2O.
2O2
2O3
204
2O5.
2O)6.
2O7
2O8.
209
21).
21.
212.
23.
214.
215.
216.
217.
28.
219,
22 ().
221.
222.
223
22-1.
1peыі)
நன்றி
н0фlpäif
நெருப்பு
தோகை
மன்னிப்பு
திறமை பயன்படாத பாதுகாப்பு தீர்ப்பு ஒரு மனிதனின் மகிழ்ச்சி தவம்
மருமகன் மோட்சத்தின் வழி புத்திமட்டும் போதாது விரக்தி நீங்கியது நான்கு பேருக்குச் சமமான ஒருத்தி இடம் நோக்கிய அறிவு ருப்பு
முட்டாளாக்கிய நீண்டதாடி எப்படிச்சொல்வது? மெக்காவரை பார்த்த மதகுரு ஆடுஅல்ல; புலி பகற் கனவுகள்
கனவு சாந்திபெறுவதற்கு (D) கடவுள் எங்கும் உள்ளார்
பக்கம்
249
250
25
252
253
254
255
256
257
258
261
263
265
267
269
270
272
273
275
277
279
281
283
285
287
290
295
சுவர்களுக்கு அதைக் கூறு 297
உயர்ந்தது
299

225.
226.
227.
228.
229.
23 ().
231.
232
233.
234.
235.
236.
237.
இராமலு) 11ஓவியம் விக கவி 9)ђӑ, 2» 50ф pй) 24і,ф 2»5)ѣ pй, வாய்க்குள் ஒரு நாரை அகிம்சை தோட்டியின் கனவு
பக்கம்
30 303
305 307 309 311
சொர்க்கத்துக்குச்சென்றான் 314
சிரிப்பது ரன்? அழுவது தந்திரத்தை வென்ற தந்திரம்319 ஒன்று.இரண்டு மூன்று. 323
மாறுபட் வாழ்க்கை சொல்லாத கதைகள் தங்கநிறப்பறவை
326 329
333
239.
24()
2-l. 2-42.
243.
244. 245.
246.
247.
248.
249.
25().
S. நிறைவேற்ற
இயலாத காரியம் விடாமுயற்சி நம்பிக்கைத் துரோகம் அவமதிப்பு
மாற்றம்
தண்டனை குருட்டுக்கோழி மூடப்பறவை
வீம்பு
தற்பெருமை
மழை முகிலின்கருணை தன்வினை. வெண்கலச்சிலை
பக்கம்
335 336 337 339 340 341 343 344 346 347 348 349 351

Page 8
பதிப்புரை
உலகளாவிய படைப்புகள், நாட்டின் தேசத்தின் எல்லைகளைக் கடந்து ஒரு மொழியில் மீள் கூறப்படும் போது, அம்மொழியினைப் பேசுபவர்களிடையே நல்லிணக்கத்தினையும் புரிந்துணர்வையும் மேம்படுத்துவனவாக அமைகின்றன. இந்த வகையில் முதுபெரும் எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் இப்பாரிய பணி தமிழ் மொழி க்கு வளம் சேர்க்க வல்லது என்பதில் இரு கருத்து இருக்க முடியாது.
ஐம்பதுகளில் தோன்றிய வீச்சு மிக்க படைப்பாளிகளுள் முதன்மைப்படுத்தப்பட்டவர் நீர்வை பொன்னையன். ஏலவே மேடும் பள்ளமும், உதயம், பாதை, வேட்கை போன்ற பல சிறுகதைத் தொகுதிகளினூடாக மிக்க அதிர்வினை ஏற்படுத்தியவர்.
நீர்வையின் இப்புதிய முயற்சி பள்ளிச் சிறார்கள் முதல் முதியோர் வரை பயனளிக்கத்தக்க தொன்று. ஆங்கிலப் புலமை மிக்க நீர்வை பொன்னையன் ஏனைய உலக உன்னத இலக்கியங்களையும் தமிழில் மீள் கூறும் நன் முயற்சியில் இறங்க வேண்டிய அவசியத்தினையும் இந்நூல் உணர்த்திநிற்கின்றது.
சிறுகதைத் தொகுதி, திறனாய்வு மற்றும் விமர்சனக் கட்டுரை களின் தொகுப்பு, சிறுவர்களுக்கான நூல், நலவியல் நூல் என்ற வரிசையில் மிக அண்மைக்காலங்களில் அழகியல் நூல் ஒன்றினையும் வெளிக்கொணர்ந்து அதன் எல்லைகளை அகலப்படுத்திச் செல்லும் மீரா பதிப்பகம் 'உலகத்து நாட்டார் கதைகள்’ எனும் நீர்வையின் இப் பாரிய முயற்சியினையும் அறுவடைசெய்வதன் மூலம் தனது வளர்ச்சி யின் மற்றுமோர் பரிமாணத்தினையும் எய்தி நிற்கின்றது என்று மிகத் தாராளமாகவே கூறலாம்.
25 - 05 - 2001 ஆ. இரத்தின வேலோன்

நூல் முகம்
இன்று சிறுகதைகள், நாவல்கள், குட்டிக் கதைகள் முதலான பாகுபாடுகளைப் பெற்று, இலக்கியக் கலை களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பன கதைகளே ஆகும். இந்த நவீன பாகுபாடுகளுள் அகப்படாத கதைகள் பல, மக்கள் இலக்கியமாக வாய்மொழி வடிவில் வழங்கி வந்துள்ளன. சரியாகச் சொல்லப்போனால், பாட்டும் கூத்தும் போலவே, கதைகளும் பழமை வாய்ந்தன என்று நாம் கருதலாம். அந்தப் பழங்கதைகளை நாம் நாட்டார் கதைகள் என்றும் நாடோடிக் கதைகள் என்றும் கூறுகிறோம்.
நாடோடிக் கதைகளை இயற்றியவர்கள் பொது மக்கள். தெனாலி இராமன், மரியாதை இராமன், பீர் பால், முல்லா, ஈசப் என்று தனியாட்களின் பெயராலும் சில கதைகள் வழங்குகின்றன. ஆயினும், பரந்த வகையில் நோக்கும் பொழுது, நாடோடிக் கதைகளில் மிகப் பெரும்பாலான வற்றை மக்கள் பலரும், எவருடைய விருப்பு வெறுப்பு களுக்கும் அப்பாற்பட்ட நிலையில், தமது புத்திநுட்பம், உணர்ச்சிச் செப்பம், வாழ்க்கை நோக்கு என்பவற்றுக்கு அமைய, தம்மியல்பாகவே படைத்துக் கொண்டனர் என்பதே முக்கியமாகிறது. நீதி, நியாயம், நன்மை, தீமை பற்றித் தாம் அனுபவ வாயிலாகத் தேடிப் பெற்றுக்கொண்ட விழுமியங் களை வெளிப்படுத்தும் உந்தலினால், (செடிகளிலே பூப் பூப்பது போல) இயற்கையாக மக்கள் மனங்களில் முகிழ்த்து இவை மலர்ந்தன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. நாடோடிக் கதைகள் எவருடைய வற்புறுத்தலாலோ
xi

Page 9
நிர்ப்பந்தத்தாலோ தோன்றியவை அல்ல. அவை சுதந்திர மான-சுயாதீனமான-பிறப்பாக்கங்கள்.
இந்தக் கதைகளிலே பயின்று வருவன, மாந்தர் குலத்தினை ஆட்டிப் படைக்கும் பல்வேறு உணர்ச்சிகளும் எண்ணங்களுமே. அழுகையும், இரக்கமும், ஏக்கமும், பண்பும் பரிவும் ஆகிய யாவும் நாட்டார் கதைகளில் இடம் பெறுவனவே. என்றாலும் இவற்றில் முனைப்பாக முதன்மை பெற்று நிற்கும் ஓர் அம்சம் மதிநுட்பம் கலந்த வேடிக்கை எனலாம். மக்கள் தம்மை நசுக்கும் சக்திகளின் மீது கோபம் கொள்வது இயல்பே. ஆனால், இப்படிப்பட்ட எதிர்ப்புணர்ச்சி, பல தருணங்களிலே கிண்டலாகவும் கேலியாகவும் வெளிப் படுவதை நாம் அவதானிக்கலாம். நூலறிவே தஞ்சம் என்று புகல் அடைந்துள்ள 'அறிவுடை நம்பிகளாகிய பெரியவர் களின் போக்குகள் சில, நடை முறை உலகுடன் இசைந்து போகாமையைக் குத்திக் காட்டும் கதைகள் பல கவனிக் கத்தக்கன. இந்தவாறான போக்குகள் எல்லாவற்றையும் மேவி, அவற்றுக்கு மேலாக நாடோடிக் கதைகளில் அழுத்தம் பெறும் அம்சம், பொதுமதி' எனப்படும் கொமன்சென்ஸ் ஆகும்.
பொதுமதி என்பதுதான் என்ன?
ஒருவர் தாம் வாழ்க்கையிற் பெற்ற அனுபவ அறிவி னைச் சேகரித்து, உலகியலுடன் இணைத்து நோக்கி, தமக் கெனச் சில நம்பிக்கைகளையும் கருத்தியலையும் மனத் தளவிலே உருவாக்கிக் கொள்கிறார். இவற்றின் நடு நாயக மாகிய பெரும்பான்மைக் கூறுகளின் திரட்டு, சமுதாயத்தின் பொதுமைச் சொத்தாக விளங்குகிறது. இந்தச் சேமநிதி யாகிய முதிசத்திலே, சமுதாய உறுப்பினர் ஒவ்வொருவரும் தத்தம் ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் தேவைகளுக்கும் தகுந்த விதத்தில் அவ்வப்போது எடுத்துப் பயன்படுத்து கிறார். அந்தப் பொது மூலவளம் தான் பொதுமதி.
xii

நாட்டார் கதைகள் பொதுமதியின் உறைவிடம், இன் னும் செம்மையாய்ச் சொல்வதானால், இன்றுவரை விருத்தி யாகிப் பரவியுள்ள தொழில் நுட்பம், வாழ்க்கைத் திறன்கள், கணிதம், விஞ்ஞானம், பொருளியில், அரசியல் உட்பட்ட சகலதுறைகளும், செப்பனிட்ட பொதுமதி தவிர வேறேதும் இல்லை. இத்தகைய பொதுமதியினை அடிப்படையாகக் கொண்ட நாடோடிக்கதைகளின் பெறுமதி மிகவும் பெரியது. இவற்றைத் தொகுத்து அமைத்த இந்த நூலின் பெறுமதியும் மிகவும் பெரியது.
மற்றுமொரு குறிப்பு இவ்விடத்தில் அவசியமாகிறது. இளறைய வாழ்க்கைப் போக்குகளுக்குப் பொருத்த மில்லாத கருத்தியல்களும் சொற்பிரயோகங்களும், நாடோடிக் கதை கள் சிலவற்றிலே, சில தருணங்களில் இடம் பெறுவ துண்டு. சிற்சில தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களை யும் உழைப்பாளிகளையும் தாழ்வுபடுத்தி மட்டந்தட்டும் நோக்குடைய கதைகளும் ஆங்காங்கே வழங்கி வந்திருக்க லாம். உதாரணமாக, சாதிப் பெயர்களை இழிவுக் குறிப்புடன் கையாளும் மொழிப் பிரயோகங்களைக் கொண்ட நாட்டார் கதைகளும் சிற்சில சாராரிடையே வழங்கி இருக்கக்கூடும். இசகு பிசகான இத்தகைய அம்சங்கள் இத்தொகுப்பில் இல்லாமை போற்றத்தக்கது.
நீர்வை பொன்னையனின் பல்லாண்டுகால முயற்சி ஒன்றின் பேறு இந்தப் புத்தகம், இவருடைய இந்தப் பணி மிகவும் பாரியது; பரந்து பட்டது.
இவருக்கு நம்மவர் யாவரும் நன்றி பாராட்டுவர் என்பது திண்ணம்.
நீர்வேலி தெற்கு, -இ. முருகையன்நீர்வேலி. 23O42OO1
xiii

Page 10
மக்கள் இலக்கியம்
நாட்டார் கதைகளும், நாட்டார் பாடல்களும் வாய்மொழி இலக்கியமாகும். இது கால தேச வர்த்தமானங்களை வென்று நிற்கின்றது. மனித குலம் தோன்றிய காலத்திலேயே வாய்மொழி இலக்கியம் உதித்து விட்டது. கதைகளாகவும் பாடல்களாகவும் ஜனித்த இது, மக்களின் செயற்பாட்டையும் அவர்களின் எண்ணக் கருவையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
நாட்டார் கதைகள் எக்காலத்தில் உதித்தவை, யாரால் உருவாக்கப்பட்டவை, எந்த நாட்டில் பிறந்தவை என்று எவராலும் வரையறுத்து, அறுதியிட்டுக் கூற முடியாது. இப்டைப்புகளுக்குக் கால வரையறை கிடையாது. இவற் றுக்கு எந்தவொரு நாட்டாரும் உரிமை கொண்டாட முடி யாது. இந்திய நாட்டார் கதைகளுக்கும் பிரான்ஸ் நாட்டார் கதைகளுக்கும் ஒருமைப் பண்புகள் இருக்கின்றன. இவை எவற்றிலிருந்து எவை உதித்தவை என்று கூற முடியாது. கிரேக்க நாட்டார் கதைகளுக்கும் பிரான்ஸ் நாட்டார் கதை களுக்கும் பிரித்தானிய, இந்திய, ஆபிரிக்க, சீன, துருக்கிய, ருஷ்ய தேசங்களின் நாட்டார் கதைகள் பலவற்றுக்குமி டையே ஒருமைப்பாட்டையும் பொதுமையையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
முற்காலங்களில் அதிகாரத்திலிருந்த பிரிவினரின் அநீதிகளையும் அக்கிரமங்களையும், சுரண்டல் சூறை யாடல்களையும், அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறை
XIV

களையும், மக்கள் விரோத நடவடிக்கைசsளை பட olவறுதத மக்கள், நாட்டார் கதைகளினூடாக தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வெளிப்படுத்தினர். அத்துடன் இக் கதைகள் மூலம் அதிகார வர்க்கத்தினரின் போலித்தனம், சின்னத்தனம், சீரழிவு என்பனவற்றையும் அம்பலப்படுத்தி, கேலியும் கிண்டலும் செய்தனர். இத்தகைய மானுட விழிப்பு ணர்வு மாத்திரமன்றி இக்கதைகளில் நீதி, நேர்மை, நியாயம், தர்மம், கருணை, அன்பு முதலிய மனித விழுவியங்கள் வெளிப்பட்டு நிற்பதையும் காண்கின்றோம்.
நாட்டார் கதைகளில் மனிதர்கள் மாத்திரமல்லாது மிருகங்கள், பறவைகள், மரங்கள், கடல், சந்திரன், சூரியன், காற்று, முகில் என்பனவும் பாத்திரங்களாக அமைந்துள்ளன. இது, மனிதர்களுடன் மாத்திரமல்லாது ஏனைய பிராணிகளு டனும் இயற்கையுடனும் மனிதர்களுக்கிருந்த நெருங்கிய ஈடுபாட்டையும் உறவையும் இவற்றின் மீது அவர்களுக் கிருந்த அக்கறையையும் நேசத்தையும் வெளிப்படுத்து கின்றது.
நாட்டார் கதைகளில் சில அவந்தி, அந்தரே, தென் னாலி ராமன், ஈசாப், முல்லா, பீர்பால் போன்ற தனிப்பட்டவர் களால் ஆக்கப்பட்டவை. ஆனால் நாட்டார் கதைகளில் பெரும்பான்மையானவை பொது மக்களால் இயற்றப் பட்டவை. மக்களது சமயோசிதம், புத்திசாதுரியம், வாழ்வு நோக்கு, உணர்வு வெளிப்பாட்டுச் செப்பம், வாழ்வுப் போராட்டம், அனுபவம் ஆகியவற்றுக்கமைய உருவாக்கப் பட்டிருக்கின்றன.
மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து வாய்மொழி இலக்கியமான நாட்டார் கதைகளும், நாட்டார் பாடல்களும் என்றுமே மக்கள் குரலாக ஒலித்து வந்துள்ளன. இந்த வாய் மொழி இலக்கியம் மனித குலத்தின் ஆத்மா. இது சர்வ
XV

Page 11
வியாபகமானது, சிரஞ்சீவியானது. இக்கதைகளிலிருந்து சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரும் பெருமளவு கற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
நாட்டார் இலக்கியத்தில் எனக்கு சிறுவயதிலிருந்தே நாட்டம். நாட்டார் கதைகளையும் நாட்டார் பாடல்களையும் கேட்டனுபவிப்பதில் எனக்கு அதிக ஆர்வம். இந்த ஆர்வம் வளர்ந்து, என்னைப் பரந்த வாசிப்பிற்கு இட்டுச் சென்றது. உயிர் வாழ்வதற்கு சுவாசிப்பு எவ்வளவு அவசியமோ அதே போல சீரிய வாழ்விற்கு வாசிப்பு அத்தியாவசியம். சிறிய அளவில் ஆரம்பமான என் வாசிப்புப் பழக்கம் வளர்ந்து வியாபித்து, நாளாவட்டத்தில் பன்முகப்பட்டது. அதே வேளை நாட்டார் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வம், எள்ளளவும் குன்றவில்லை. இப்பொழுதும் இத்துறையில் எனது தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
பல்வேறு நாடுகளின் நாட்டார் கதைகளைத் தேடி வாசித்தேன். இவைகள் மூலம் அந்த நாடுகளின் பல்வேறு பட்ட கலை, பண்பாடு, வாழ்வியல் போன்றவற்றை நான் அறிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. ஆகவே இக்கதை களை எமது மக்களுக்குத் தமிழில் கூறவேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதனால் இப்பணியை 1950 களில் நான் ஆரம்பித்தேன். தொடர்ந்து ஏற்பட்டு வந்த இடப்பெயர்வுகளின்போது நான் தமிழாக்கிய பெரும் தொகை யான கதைகளை இழக்க நேரிட்டது.
1996ல் மீண்டும் நான் கொழும்பிற்கு திரும்பி வந்த பொழுது இப்பணியை மீண்டும் ஆரம்பித்தேன். இத் தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வாரப் பதிப்பில் வெளிவந்தவை. தினக்குரல் ஆசிரியபீடத்தைச் சேர்ந்த அமரர் பொன் இராஜ கோபால், திருமதி தேவகெளரி ஆகியோர் இப்பணியைத் தொடர்வதற்கு என்னை ஊக்கப்படுத்தினர். இதன்
XV

அறுவடை யே 'உலகத்து நாட்டார் கதைகள்' என்ற நூலாக மீளுயிர் பெற்றள்ளது.
இந் நூலிலுள்ள கதைகள் மொழி பெயர்ப்பு அல்ல. இவற்றின் மூலவடிவத்தில் வருகின்ற பாத்திரங்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் முதலியவை இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன. ஏனெனில், அவை கதைகளை வாசகர்களுக்கு அந்நியப்படுத்துவதோடு அவர்களது வாசிப்பிலும் தேக்கத்தை ஏற்படுத்திவிடும். நூலாசிரியன் மூலக் கதையை முழுமையாக உள்வாங்கி, பின்பு கலைத் துவத்துடன் அதை மீளக் கூறுகையில் அவ்வாறு நிகழ்வது இல்லை. இங்குள்ள கதைகள் மீளக் கூறல் ஆகும்.
இக்கதைகள் அவற்றிற்குரிய கால அடிப்படையிலோ தேச அடிப்படையிலோ இங்கு தொகுக்கப்படவில்லை. காரணம், இவை கால தேச வர்த்தமானங்களைக் கடந்தவை. உலக சமுதாயத்திற்கு உரிய பொதுமைக் கருத்தியலை வெளிப்படுத்துபவை.
பூகோளமயமாக்கலின் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்ட எமது இன்றைய கல்விமுறை, எங்களது அறிவுத் தேடலை திசைதிருப்பிவிட்டது. இதனால் மனித விழுமியங்களும் பரந்த அறிவுத் தேடலுக்கான மனித சுதந்திரமும் மட்டுப் படுத்தப்பட்டுள்ளன. இந்த எல்லைக்கு அப்பால் சென்று சுதந்திரமாக அறிவைத் தேடுவதற்கு இந்த நூலும் இது போன்ற ஏனைய நூல்களும் பயன்படும் என்று நம்புகின் றோம்.
வசந்தம், -நீர்வை பொன்னையன்
நீர்வேலி. O1.O.5.2OO1
xvii

Page 12

1. கானல்
தான் நல்ல பலமுடையவன், சர்வவல்லமையுடை யவன்,பெரிய சாம்ராஜ்யத்தின் மன்னன் என்ற கர்வம் அந்தச் சிங்கத்திற்கு.
ஒரு நாள் மாலை நேரம், செவ்வொளி வீசும் அஸ்தமன சூரியன் விரிந்து பரந்து கிடக்கும் அந்திவானத்தை இரத்தமயமாக்கிக் கொண்டிருக் கின்றது.
வனப்புமிக்க இக்கண்கொள்ளாக் காட்சி அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கின்ற இந்தச் சிங்கத் திற்குக் களிப்பூட்டுகின்றது.
'இதோ இந்தப் பரவசமூட்டும் ஒளிப்பிரவாகம் எனது சாம்ராஜ்யத்திற்கு எழிலூட்டுகின்றது. இந்தப் பாலைவன சாம்ராஜ்யத்தின் மாமன்னனாகிய நான் இந்த ஒளிப்பிர வாகத்தைக் கைப்பற்றி அதை எனது ஆட்சிப் புலத்திற்குள் கொண்டு வந்து அடக்கி வைத்திருக்கத் தவறினால் அது எந்த நேரத்திலும் மங்கி அழிந்து மறைந்து விடும். ஆகையால் இந்தக் கணமே இந்த உன்னத ஒளிப் பிரவாகத்தைக் கைப்பற்றுகின்றேன்."
சிங்கம் இறுமாப்புடன் கூறிக்கொண்டு தனது உடலைச் சிலிர்த்து நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றது.
இரத்தம் சூடேறி, கொதித்துப் பீறிட்டு உடலெங்கும் வீறாப்புடன் ஒட, தூசிப்படலத்தை எழுப்பிக் கொண்டு 1

Page 13
-- 'ப',', '0' காய நோக்கிப் பாய்ந்தோடிக் கொண்டிருக் கிகாரது 'கம். அது பாய்ந்து செல்லச் செல்ல அஸ்தமன சூரியகம் பின்னே பின்னே சென்று வானத்தின் விளிம்பை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கின்றான். மாலை இருள் மெல்ல மெல்ல, பிரபஞ்சத்தை விழுங்கத் தொடங்கு கின்றது.
பாலைவனத்தின் அரும்பெரும் செல்வமான ஒரு ஏரி பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்ற சிங்கத்தைத் தடுத்து நிறுத்துகின்றது.
அந்தி வானத்தின் செஞ்சூரியன் ஏரியின் பளிங்கு போன்ற நீரில் பிரதிபலித்து, செவ்வொளி வீசுகின்றது.
'நான் தேடிக்கொண்டிருக்கின்ற இரை இங்கே தான் இருக்கின்றது.’
கூறியபடியே வீறாப்புடன் கர்ச்சித்துக் கொண்டு சிங்கம் ஏரிக்குள் பாய்ந்து மூழ்கி இறக்கின்றது.
'ஒரு மாயைத் தோற்றத்திற்காக என்னைத் தியாகம் செய்வதிலும் பார்க்க வேறு எந்த மகத்தான முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?"
சிங்கத்தின் இந்த இறுதி வார்த்தைகள் காற்றில் மிதந்து சங்கமித்து மடிகின்றது.
Ο

உலகத்து நாட்டார் கதைகள்
2. புல்லுருவிகள்
ஒரு புலி வேட்டையாடிக் கொண்டிருக்கையில் நரி யொன்றை இரையாகப் பிடித்துக் கொண்டது.
'உன்னால் என்னைக் கொன்று சாப்பிட முடியாது’ என்று நரி கூறியது.
'ஏன்?’ புலி கேட்டது.
"மோட்ச சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் என்னைக் காட்டு மிருகங்களின் அரசனாக நியமித்துள்ளார். நீ என்னைக் கொன்று சாப்பிட்டால் பேரரசனின் கட்டளையை மீறியவனாவாய். நீ அவருடைய கடுங்கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும். நீ நான் கூறியதை நம்பாவிட்டால் என்னுடன் வா; நான் நிரூபித்துக் காட்டுகின்றேன். நீ என்னு டன் வரும்போது என்னைக் கண்டதும் ஏனைய மிருகங்கள் எல்லாம் பயந்து ஓடி மறைகின்றனவா இல்லையா என்பதைப் பார்’, நரி உறுதியாகக் கூறியது.
புலி அதற்கு உடன்பட்டு நரியுடன் சென்றது. புலியும் நரியும் வருவதைக் கண்ட எல்லா மிருகங்களும் பயத்தினால் ஒடி ஒளிந்தன.
தன்னைக் கண்டுதான் மிருகங்கள் எல்லாம் பயந்து ஒடுகின்றன என்பதைப் புலி உணரவில்லை.
Ο

Page 14
நீர்வை பொன்னையன்
3. நாணற் புல்லும் செந்தரர மரமும்
எந்தப் புயல் காற்றுக்கும் தலைகுனியாமல் நிமிர்ந்து நிற்கின்றது ஒரு பெரிய செந்தூர மரம். அதன் அடியில் நின்ற ஒரு நாணல் புல் காற்று வீசியபோது தன்னால் இயன்றளவு வளைந்து கொடுத்தது.
'நான் வளைந்து கொடுக்காமல் உறுதியாக நிமிர்ந்து நிற்பதுபோல உன்னால் ஏன் நிமிர்ந்து நிற்க முடியவில்லை?”
செந்தூர மரம் நாணல் புல்லைக் கேட்டது.
'உங்களுக்குள்ள பலம் எனக்கு இல்லை’ என்று அடக்கமாகக் கூறியது புல்.
ஒரு நாள் பாரிய புயற் காற்று வீசியபொழுது அந்தப் பெரிய மரம் வீழ்ந்தது.
நாணல் புல் தான் நின்ற இடத்திலேயே முன் போலவே நின்றது.
Ο

உலகத்து நாட்டார் கதைகள்
4. தகுதியற்ற நட்பு
பசு மாடொன்று, ஒரு வெள்ளாடு, ஒரு செம்மறி ஆடு ஆகிய மூன்றும் ஒருநாள் சிங்கம் ஒன்றுடன் வேட்டையாடச் சென்றன. ஒரு மான் இரையாக அகப்பட்டது. அவை அந்த மானைப் பங்குபோடத் தொடங்கிய பொழுது சிங்கம் பின் கண்டவாறு சொன்னது.
‘நண்பர்களே முதலாவது பங்கு எனக்குரியது. ஏனென்றால் நான் உங்கள் எஜமான். இரண்டாவது பங்கும் எனக்குத்தான். ஏனென்றால் நான் உங்களிலும் பார்க்கப் பலசாலி. நான் உங்களிலும் பார்க்க வேகமாக ஓடுபவனா தலால் மூன்றாவது பங்கும் எனக்குரியதுதான். நான்காவது பங்கை எவன் தொடுகின்றானோ அவன் எனது ஜென்ம விரோதி’ என்று கூறி அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டது சிங்கம்.
O

Page 15
நீர்வை பொன்னையன்
5. அவா
ஒவ்வொரு நாளும் வெள்ளி முட்டை ஒன்றை இடு கின்ற ஒரு கோழி ஒரு பெண்ணிடமிருந்தது. 'அதுக்கு நான் கூடச் சாப்பாடு கொடுத்தால் அது தினமும் இரண்டு வெள்ளி முட்டைகளை இடும்’ என்று அப் பெண் தனக்குள் கூறிக் கொண்டாள். இதனால் அவள் கோழிக்கு அதிகளவு சாப்பாட்டைக் கொடுத்தாள். கூடுதலான சாப்பாட்டைச் சாப்பிட்டதனால் கோழிக்குக் கொழுப்பு மிதமிஞ்சியதுடன் அது செத்துவிட்டது.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
6. தாரத்துப் பச்சை
ஒரு ஆந்தை கரும்புறா ஒன்றைச் சந்தித்தது.
‘எங்கே செல்கின்றாய் நீ?" கரும்புறா ஆந்தையைக் கேட்டது.
'நான் கீழைத்தேசத்திற்குச் செல்கின்றேன்’
“எதற்காக?"
புறாவின் கேள்வி.
'எனது அலறல் சத்தத்தை இங்குள்ள மக்கள் அனை வரும் வெறுக்கிறார்கள். அதனால்தான் நான் கீழைத் தேசத் திற்குப் போக விரும்புகின்றேன்." ஆந்தை துயரத்துடன் கூறியது.
'உன்னால் உனது குரலை மாற்ற முடியுமென்றால் நீ கீழைத்தேசத்திற்குச் செல்வது சரி. ஆனால் உன்னுடைய குரலை உன்னால் மாற்ற முடியாவிடடால் நீ கீழைத்தேசத் திற்கோ வேறு எங்கேயோ போனாலும் அங்குள்ள மக்கள் இதேபோலத்தான் உன்னை வெறுப்பார்கள்’ என்று கரும் புறா கூறியது.
Ο

Page 16
நீர்வை பொன்னையன்
7. எண்ணிக்கை பெரிதல்ல
ஒரு பெண் முயல் ஒருநாள் பெண் சிங்கம் ஒன்றிற்குச் சமீபமாகச் சென்றது. 'ஒரு வருடத்தில் நான் அநேக பிள்ளைகளைப் பெறுகின்றேன். ஆனால் உனது ஆயுள் காலம் முழுவதிலும் உன்னால் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளைத் தானே பெற்றுக்கொள்ள முடிகின்றது’ என்று முயல் சிங்கத்துக்கு கூறியது. “அது உண்மைதான். ஆயினும், எப்படி என்றாலும் அந்தக் குட்டி, சிங்கமாகத்தான் இருக்கின்றது' என்று சிங்கம் பெருமையுடன் கூறியது.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
8. மலையும் மடுவும்
ஒரு பிரமாண்டமான சக்கரவாகப் பறவை இருந்தது. அதனுடைய முதுகு விசாலமான மலையைப் போலவும் சிறகுகள் முகில்களைப் போல வானம் முழுவதையும் மூடி மறைக்கக்கூடியனவாகவுமிருந்தது. அந்தப் பறவை பறக்கும் பொழுது வானத்தில் சூறாவளி சுழன்றடித்தது. ஒவ்வொரு தடவையும் அது பறக்கும் பொழுது ஒன்பதினாயிரம் மைல் களைத் தாண்டிச் சென்றது. அத்துடன் அது நீல வானத்தில் படர்ந்திருக்கும் நீராவிப் படலத்திற்கு மேலாக வட்டமிட்டு உயரப் பறந்து செல்லும்.
ஒரு தடவை இந்தச் சக்கரவாகப் பறவை தென்திசை யிலுள்ள சமுத்திரத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
'இந்தப் பென்னம் பெரிய பறவை எங்கே பறந்து கொண்டிருக்கின்றது? இதனால் எங்குதான் செல்ல முடி யும்?" என்று சக்கரவாகப் பறவையைப் பார்த்த ஒரு சின்னஞ் சிறிய சிட்டுக்குருவி கிண்டலாகக் கூறியது.
'நான் ஒரு சில அடிகள் தூரம்தான் தத்தித் தத்திப் பறப்பேன். அதன்பின்பு புதரிலிருந்து சுகமாகப் பொழுது போக்கிக் கொண்டிருப்பேன். என்னால், பறக்கக்கூடிய இவ்வளவு தூரமும் எனக்குப் போதுமானது, திருப்தியானது."
சிட்டுக்குருவி தனக்குத்தானே கூறிக் கொண்டது.
மகத்தானதற்கும் மட்டரகமானதற்கும் இடையிலுள்ள மனப்பாங்கைச் சிட்டுக்குருவி வெளிப்படுத்தியது.
Ο

Page 17
நீர்வை பொன்னையன்
9. தலைக்கணம்
இளவரசன் ஒருவன் அயல்நாட்டின்மீது படை யெடுத்து அந்த நாட்டை ஆக்கிரமித்து முற்றுகையிட்டு, தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வருவதற்குத் தீர்மானித் தான். இதைக் கேள்விப்பட்ட நண்பன் உடனடியாக இளவரச னைப் பார்க்கச் சென்றான்.
"நான் வருகின்ற வழியில் வடக்குத் திசையை நோக்கிக் குதிரையில் சென்றுகொண்டிருக்கின்ற ஒருவனைச் சந்தித் தேன். தெற்குத் திசையிலுள்ள ஒரு நாட்டிற்குத்தான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று அவன் எனக்குக் கூறினான்.'
‘அப்படியென்றால் நீ ஏன் வடக்குத் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றாய்?’ என்று நான் அவனைக் கேட்டேன்.
‘நான் தவறு செய்யவில்லை. சரியானதைத் தான் செய்கின்றேன். சரியான மார்க்கத்தில்தான் நான் செல்கின் றேன். ஏனென்றால் என்னிடம் சிறந்த குதிரைகள் இருக் கின்றன” என்று அவன் உறுதியுடன் பதிலளித்தான்.
'நீ சிறந்த குதிரைகள் வைத்திருக்கக்கூடும். ஆனால் நீ தவறான மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கின்றாயே’ என நான் கூறினேன்.
'அது மாத்திரமில்லை, என்னிடம் ஏராள 160ாம் இருக்கின்றது' அவன் செருக்குடன் கூறினான்.
1 O

உலகத்து நாட்டார் கதைகள் 'நீ நிறையப் பணத்தை வைத்திருக்கக்கூடும். ஆனால் செலவது பிழையான வழியல்லவா?"
'மிக நன்று, என்னிடம் மிகச் சிறந்த, கை தேர்ந்த தேரோட்டி இருக்கின்றான்' அவன் பிடிவாதமாகக் கூறுகின் றான்.
'உன்னிடம் சிறந்த குதிரைகள் இருக்கலாம். நிறை யப் பணம் இருக்கலாம். உனது தேரோட்டி கை தேர்ந்தவ னாக இருக்கலாம். ஆனால் நீ முன்னேறிச் செல்லச் செல்ல, நீ செல்ல வேண்டிய நாட்டிலிருந்து மேலும் மேலும் தூரத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கின்றாய். நீ எதிர்த் திசையில்தான் செல்கின்றாய். நீ செல்ல வேண்டிய சரியான திசை தெற்கு. அதற்குப் பதிலாக நீ தவறாக எதிர்த் திசையில் அதாவது வடக்குத் திசையை நோக்கிச் சென்று கொண் டிருக்கின்றாயே’
நான் அவனக்கு விளக்கிக் கூறினேன். நான் கூறியதை அவன் கேட்டால்தானே. அவன் பிடிவாதமாகத் தனது தவறான வழியிலேயே சென்று கொண்டேயிருக்கின்றான்.
O
11

Page 18
நீர்வை பொன்னையன்
10. நன்றி கெட்டவர்கள்
கடுமையான கோடை காலம். சில பிரயாணிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களால் சூரியனு டைய கொடும் வெய்யிலைத் தாங்க முடியவில்லை. உஷ்ணத்தால் அவர்கள் களைப்படைந்து விட்டார்கள். அவர்கள் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெரிய மரத் தைக் கண்டார்கள். அந்த மரத்தின் நிழலில் அவர்கள் படுத்திருந்தபடியே ஒய்வெடுத்தார்கள்.
'இந்த மலட்டு வெட்டை வெளியில் நிற்கின்ற இந்த மரத்தினால் மனிதனுக்கு என்ன பயன்?’ என்று அவர்கள் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்கின்றார்கள்.
'நன்றி கெட்ட பிரயாணிகளே! என்னிடமிருந்து நீங்கள் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதேவேளை, ஒன்றுக்குமே பயனற்றது என்று என்னை நீங்கள் நிந்திக்கின்றீர்களே' என மரம் அவர்களுக்குக் கூறி
 

உலகத்து நாட்டார் கதைகள்
11. நாயினால் கடிபட் மனிதன்
நாயினால் கடிபட்ட ஒரு மனிதன தன்னைக் குணப் த்ெதக்கூடிய ஒருவரைத் தேடி அலைந்தான். 'உன்னு டைய காயம் குணமடைய வேண்டுமென்றால் ஒரு துண்டு றொட்டியை நீ எடுத்து, உனது காயத்திலுள்ள ரத்தத்தில் தோய்த்து, அந்த றொட்டித் துண்டை உன்னைக் கடித்த நாய்க்கு நீ கொடுக்க வேண்டும்" என்று அவனைச் சந்தித்த ஒருவன் கூறினான்.
'உனது ஆலோசனையை நான் கடைப்பிடித்தால் இந்த நகரத்திலுள்ள எல்லா நாய்களினாலும் நான் கடிபட வேண்டும்’ என்று சிரித்துக்கொண்டே கூறினான் நாயினால் கடிபட்டவன்
13

Page 19
நீர்வை பொன்னையன்
12. சந்தேகம்
தனது கோடரியைத் தொலைத்துவிட்டான் ஒருவன். தனது அயலவனுடைய மகன்தான் அதைத் திருடியிருக்க வேண்டுமென்று அவன் சந்தேகப்பட்டான்.
அந்தச் சிறுவனுடைய நடையை அதாவது அவனது நடமாட்டத்தை அவன் உன்னிப்பாக அவதானித்தான். ஒரு திருடனுடைய நடையை ஒத்திருக்கின்றது சிறுவனுடைய நடை என்று எண்ணினான்.
சிறுவன் கதைக்கின்ற விதத்தை அவன் கவனித்தான். நிச்சயமாக, திருடன் கதைப்பதைப் போலத்தான் இவன் கதைக்கின்றான் என்ற முடிவிற்கு வருகின்றான்.
சுருங்கச் சொன்னால் அச்சிறுவனுடைய நடை, உடை, பாவனைகள், நடவடிக்கைகள் அனைத்தும் அவன் திருட்டுக் குற்றம் புரிந்ததை அம்மனிதனுக்குப் புலப்படுத்துகின்றன.
சில நாட்களின் பின் கோடரியைத் திருட்டுக் கொடுத்த மனிதன் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருக்கையில் தனது கோடரியைக் கண்டெடுத்தான்.
அதன்பின் அவன் அயலவனுடைய மகனை அவதா னித்தபொழுது, அவனுடைய நடை, உடை, பாவனைகள் எல்லாம் திருடனுடையவற்றைப் போன்றிருக்கவில்லை என்பதைக் கண்டு கொண்டான்.
Ο
14

உலகத்து நாட்டார் கதைகள் ܫ ܐ* ܘ ܘ - ܙ -***ܫܫ-*
13. I J Tá [[Éi(d,
கிழக்கேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு மனிதனு டைய தாய் இறந்து விட்டாள். அவளுடைய மரணத்திற்காக அவளுடைய மகன் அழத்தான் செய்தான். ஆனால் அதிகம் துக்கப்பட்டதாகத் தென்படவில்லை. மேற்கேயுள்ள கிராமத் தைச் சேர்ந்த ஒருவன் இதை அவதானித்தான். அவன் தனது வீட்டுக்குச் சென்று 'அம்மா நீ ஏன் கெதியாய்ச் சாகக் கூடாது? நீ கெதியாய்ச் செத்தால் நான் கடுமையாக அழு வேன். கிழக்கேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவனுடைய தாய் செத்த பொழுது அவன் கடுமையாய் அழவுமில்லை, துக்கப் படவுமில்லை. ஆனால் நீ செத்தால் நான் எவ்வளவு கடுமை யாக அழுவேன், எவ்வளவு துக்கப்படுவேன் என்பதை நீயே பார்’ என்று தாயைப் பார்த்துக் கூறினான்.
Ο

Page 20
நீர்வை பொன்னையன்
14. தீராத பிணக்கு
உடலுக்கு எது ஆதாரமாய் இருக்கின்றது என்பது பற்றி, பாதங்களுக்கும் வயிற்றிற்கும் பிணக்கு ஏற்பட்டது. "எங்க ளுக்குப் பலம் இருப்பதால்தான் நீ உட்பட முழுத்தேகத் தையும் சுமந்து கொண்டிருக்கின்றோம்’ என்று பாதங்கள் வயிற்றிற்குக் கூறின. 'நான் சிறிதளவாவது உணவு எடுக்கா விட்டால் உங்களால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடி யுமா? என்று பாதங்களை வயிறு கேட்டது.
Ο
 

--- உலகத்து நாட்டார் கதைகள்
15. சாதுரிய)
ஒரு முதிய பெண இளமபெண்ணுடன் நட்பாக இருந் தாள். அந்த இளம் பெண் சிறிது இறைச்சியைத் திருடிச் சாப்பிட்டு விட்டாள் என்று சந்தேகம் கொண்டு, மாமியார் அவளை வீட்டைவிட்டு வெளியேற்ற முற்பட்டாள். இளம் பெண் இதை முதியவளிடம் முறையிட்டாள். 'உன்னை நான் எங்கும் செல்ல விட மாட்டேன். உனது மாமியார் உன்னை வீட்டுக்குத் திருப்பிக் கூப்பிடச் செய்கின்றேனா இல்லையா என்று பார்’ சவால் விட்டாள் மூதாட்டி
அந்த முதியவள் ஒரு கட்டு வைக்கோலை எடுத்துக் கொண்டு இளம் பெண்ணுடைய வீட்டிற்குச் சென்றாள்.
'திருடப்பட்ட சிறிது இறைச்சிக்காக என்னுடைய இரண்டு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. எனக்கு நெருப்புத் தா. இந்த வைக்கோலில் நெருப்பு மூட்டி அந்த நாய்களை விரட்டிக் கலைக்க வேண்டும்’ என்று முதியவள் கூறி, பெண்ணின் மாமியாரிடம் நெருப்புக் கேட்டாள். இளம்பெண்ணின் மாமியார் சந்தேகம் நீங்கி மருமகளை வீட்டிற்கு திருப்பி அழைத்தாள்.
Ο
17

Page 21
நீர்வை பொன்னையன்
16. வீரதீரம்
ஒரு மாட்டுக் கொம்பினுள்ளே சென்ற ஒரு சுண்டெலி வெளியே வர முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது. அது கொம்பிற்குள்ளே மேலும் மேலும் சென்று கொண்டிருந்தது.
“நண்பனே! தயவுசெய்து திரும்பிச் செல். நீ உள்ளே செல்லச் செல்ல, பாதை ஒடுங்கி, மேலும் மேலும் ஒடுக்க மாகும்’ கொம்பு சுண்டெலிக்குக் கூறியது.
‘'நீ சும்மா கிட, நான் எல்லாத் தடைகளையும் உடைத் தெறிந்துகொண்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றேன். ஒரு பொழுதும் நான் பின்வாங்க மாட்டேன். நான் தோல்வி அடைய மாட்டேன். எப்பொழுதும் வெற்றியுடன் வீறுநடை போட்டு முன்னேறிக்கொண்டிருக்கின்ற வீரதீரன் நான்’ சுண்டெலி இறுமாப்புடன் பதிலிறுத்தது.
'ஆனால் நீ தவறான வழியில் சென்று கொண்டிருக் கின்றாய்” கொம்பு எச்சரித்தது.
"உனது புத்திமதிக்கு நன்றி. ஆனால் நான் எனது வாழ நாள் முழுவதும் என்னுடைய வளைக்குள் தான் இருந்து வந்துள்ளேன். எது சரியான வழி, எது பிழையான வழி என்று எனக்குத் தானே தெரியும். அது உனக்கு எப்படித் தெரியும்? என்னால் எப்படித் தவறு செய்ய முடியம்? நீ உன்னுடை u வேலையைப் பார். நான் என்னுடைய வேலையைப பாாக
கின்றேன்."
18

உலகத்துநாட்டார் கதைகள் செருக்குடன் கூறிவிட்டுச் சுண்டெலி மேலும் மேலும் முன்னுக்குச் சென்று கொண்டிருந்தது. அது முன்னுக்கு முன்னுக்குச் செல்ல, கொம்பிற்குள்ளேயிருக்கும் பாதை ஒடுங்கி இறுக்கமாக வந்தது.
சிறிது நேரத்தில் இந்த வீராதி வீரன் முன்னுக்கும் செல்ல முடியாமல் பின்னுக்கும் திரும்பிச் செல்ல முடியாமல் மூச்சுத் திணறிச் செத்துவிட்டான்.
Ο
9

Page 22
நீர்வை பொன்னையன் - - -
17. தீக்கோழி
ஒரு நகரத்தின் பாதுகாவலன், தான சகல வலலமையும படைத்த ஒரு பெரும்படைத் தளபதி என்று கூறித் திரிந' தான். திடீரென அந்த நகரம் எதிரியினால் சுற்றி வளைக்கப பட்டது. இதை அறிந்தவுடனே அந்தப் படைத் தளபதி பயத் தில் தொடை நடுங்கினான். அவன் தன்னுடைய சொந்த வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்து கொண்டு வீட்டுக் கதவு களை எல்லாம் தாழிட்டுப் பூட்டியதுடன் யன்னல்களையும் மூடினான். அவன் தனது படையினருக்கு இடும் கட்டளை களை எழுதித் தனது வீட்டு யன்னலில் ஒரு சிறு துவாரத்தி னுாடாக வெளியே அனுப்பிக் கொண்டிருந்தான்.
எதிரியின் படைகள் நகரத்தைச் சுற்றியுள்ள பெரிய அகழிகள் எல்லாவற்றையும் கடந்து நகரத்திற்குள்ளே வந்து விட்டன. இதை அறிந்த படைத்தளபதியான நகரத்தின் பாது காவலன் ஒரு பெரிய மரப்பெட்டிக்குள் ஒளிந்து மறைந்திருந தான், 'நான் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கின்றேன் நீங்கள் இந்தப் பெட்டிக்குப் பூட்டொன்றைப் போட்டு நன் றாகப் பூட்டிவிட்டு பெட்டியின் திறப்பை நீங்களே கவனமாக வைத்திருங்கள். எதிரியின் படைத்தளபதி பெட்டியின் திறப்பைக் கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டாம்" தனது வேலைக்காரர்களுக்கு அந்த மாவீரன் கட்டளையிடடான்
அந்த தீக்கோழியின் வீரதீரத்தையெனணி அவனு
 ை வேலைக்காரர்கள் சிரித்தனர்
D
20

உலகத்து நாட்டார் கதைகள்
* குறிக்கோள்
ஒரு ஆண் கெளதாரியை ஒரு பாம்பு கடித்துக் கொலை செயதது. பெண் கெளதாரி ஆறாத் துயரத்துடனும் உள்ளக் குமுறலுடனும் இரவு பகலாக அழுது புலம்பிக் கொண்டிருந் தது. அதனுடைய அவலம் மிக்க சோகமயமான புலம்பல் வசந்த கால காடு முழுவதும் வியாபித்து, பாழ்நிலையை உரு லாக்கி, ஒரு கரும் திரையை விரித்தது.
அந்தப் பெண் கெளதாரியின் துயரப் புலம்பல், அவ் பழியே சென்று கொண்டிருந்த ஒரு இசைக் கலைஞனு டைய உள்ளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "உள்ளத்தை உருககுகின்ற இந்தத் துயரப் புலம்பல் மரண வேதனை யைத தான் எனக்குத் தருகின்றது' என்று கலைஞன் கூறினான்.
வெந்துயரக் கண்டனத்தை வெளிப்படுத்தி, பழிக்குப் பழி வாங்க ஏங்கித் தவிக்கின்ற ஒரு சோக இசையை அந்த இசைக் கலைஞன் சிருஷ்டித்தமைத்தான். இந்தச் சோக இசையைக் கேட்ட எல்லா மக்களுடைய இதயங்களிலும் கிளர்ச்சி உணர்வு ஏற்பட்டது. இந்தச் சோக இசை குளிர்ந்த அதிகாலை வேளைகளிலும், வெப்ப நாட்களிலும், தனிமை நிறைந்த இரவுகளிலும் மக்களின் ரத்தத்தைக் கொதிப்ப டையச் செய்து பாம்புகளுக்கெதிரான ஒருவித வெறியை 29ITU - LQ-ri) CD
அந்த இசைக கலைஞனின் துயர இசையினால் உணர் = சிக் கொர் களிப்படைந்த மக்கள் ஆண் கெளதாரியைக் 21

Page 23
நீர்வை பொன்னையன் கொலை செய்த பாம்பைக் கண்டு பிடித்துக் கொன்றார்கள். அது மாத்திரமல்ல. அந்தக் கொலையாளிப் பாம்பின் சகாக் களையும் கண்ட கண்ட இடங்களில் கொன்று குவித் தார்கள்.
Ο
22
 

உலகத்து நாட்டார் கதைகள்
19. தார்மீகம்
இரக்க உள்ளம் படைத்த ஒரு பாம்பு சிட்டுக்குருவி ஒன்றைப் பிடித்தது. ஒரேயடியாக அந்தக் குருவியை விழுங்கிவிட, பாம்பு எண்ணியது. ஆனால் அதைக் கொடூர மாகக் கொலை செய்ய அது விரும்பவில்லைப் போலும், ஆகவே அந்தக் குருவியைத் தனது உடலால் மெதுமெது வாகச் சுற்றிப் படிப்படியாக இறுக்கியது.
தனது தலைவிதியைத் தானே விரும்பி ஏற்றுக் கொண்டு தன்னை அர்ப்பணிப்பதற்கு சிட்டுக்குருவியை இணங்கச் செய்வதற்கு பாம்பு முயற்சி செய்தது.
சிட்டுக்குருவி பாம்பினுடைய விருப்பத்திற்கு இண ங்க மறுத்துப் போராடியது. அதன் முயற்சி பலிக்கவில்லை. பாம்பின் முயற்சியும் பலிக்கவில்லை. இறுதியில் பாம்பு சிட்டுக்குருவியை மெதுமெதுவாக, சிறுகச் சிறுகக் கொன்று விழுங்கியது. "பாருங்கள், மற்றப் பாம்புகளைப் போல நான் முரட்டுத்தனமுடையவனல்ல; ஏனைய பாம்புகளிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவன்’ தன்னடக்கத்துடன் பாம்பு கூறிக்கொண்டது.
Ο
23

Page 24
நீர்வை பொன்னையன்
ஒரு குடியானவனின் குடும்பம எநத நேரமும் சண்டை. சச்சரவுக்குள்ளாகியிருந்தது. அவனுடைய இரண்டு புதல்வர் களும் ஒருவனுடன் ஒருவன் தொடர்ச்சியாக மோதிக் கொண்டேயிருந்தனர். அந்தச் சச்சரவைப் பேச்சுவார்த்தை களால் தீர்த்து வைப்பதற்குத் தந்தை முயன்றார். அவரால் முடியவில்லை. ஆகவே ஒரு நடைமுறை உதாரணத்தின் மூலம் அதைத் தீர்க்க முடியும் என்று நினைத்தார். தனது புதல்வர்களைக் கூப்பிட்டு ஒரு கட்டுத் தடிகளைக் கொண்டு வரும்படி கூறினார். ஒவ்வொருவராக அந்தத் தடிக்கட்டை முறிக்கும்படி கூறினார். அவர்கள் ஒவ்வொருவராக முயன் றார்கள். அவர்களால் அந்தக் கட்டுத்தடியை முறிக்க முடிய வில்லை. அந்தத் தடிக்கட்டை அவிழ்த்து ஒவ்வொரு தடியாக முறிக்கும் படி சொன்னார். இலகுவாக அவர்கள் அத்தடிகளை முறித்து முடித்தார்கள். 'நீங்கள் ஐக்கியப் பட்டிருக்கும் வரை எந்த எதிரியையும் உங்களால் முறி யடிக்க முடியும். நீங்கள் பிரிந்தால் உங்களால் அது இயலாது. ஆகவே நீங்கள் ஒற்றுமையா இருக்க வேண்டும்’ என்று தனது புதல்வர்களுக்குச் செ1 “னார்.
V
D
24

உலகத்து நாட்டார் கதைகள்
21. நடிப்பு
ஒரு கழுதை துர்அதிர்ஷடவசமாக, பசி கொண்ட ஒநாய் ஒன்றைச் சந்திக்க நேரிட்டது. 'என்மீது இரக்கம் காட்டுங் கள். நான் ஒரு நோயாளி. இதோ பாருங்கள் என்னுடைய பாதத்தில் ஒரு பெரிய முள் ஏறிக்கிடக்கின்றது' பயத்தில் நடுங்கிக் கொண்டே கூறியது கழுதை,
'உண்மைதான். உனது பரிதாபத்திற்குரிய நிலைமை எனக்கு வேதனையை தருகின்றது. மனமறியச் சொன்னால் உன்னைத் துயரத்திலிருந்து விடுவிப்பதற்கு நான் நிர்ப் பந்திக்கப்பட்டுள்ளேன்' ஓநாய் சொல்லிக்கொண்டே கெஞ்சி மன்றாடிய கழுதையைக் கடித்து துண்டு துண்டாகக் குதறியது
25

Page 25
நீர்வை பொன்னையன்
22. நோவாத சம்பாத்தியம்
‘என்னருமைத் தந்தையே, எப்படிச் செல்வத்தைச் சேர்க்க முடியும் என்று தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள்’ பேராசை பிடித்த ஒரு இளைஞன் தன் தந்தையைக் கேட்டான். “அது ஒரு மகிமை வாய்ந்த தொழில். செல்வத் தைச் சம்பாதிப்பதற்கு ஒருவன் தன்னுடைய நாட்டிற்குச் சேவை செய்வதில் இராப்பகலாக, பொது இலட்சியத்திற்காக உழைப்பதில் தனது ஆற்றல் முழுவதையும் அவன் அர்ப் பணிக்க வேண்டும்’ என்று தந்தை சொன்னார். "ஆ, அது சலிப்பைத் தருகின்ற ஒரு வாழ்க்கை. நான் படாடோபமற்ற ஒரு வழியைத்தான் விரும்புகின்றேன். நீங்கள்’ கூறுவது நிச்சயமாய் ஒரு சிக்கலான வழிமுறை. அது அவமானகர மானது. மிகவும் கடுமையாக உழைக்காமல் செல்வந்தனா வேன்' என்று இளைஞன் கூறினான். 'நன்று. அப்போ மூடனாயிருந்து ஜெயித்த அநேகரை எனக்குத் தெரியும்’ என்று சொன்னார் தந்தை.
Ο
26

உலகத்து நாட்டார் கதைகள்
23. போலிப் பெருமை
ஒரு சிங்கத்தின் தோலை நாய்கள் கண்டன. அவை அந்தத் தோலைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. அவைகளை ஒரு நரி கண்டது. “சிங்கம் உயிருடனிருந்தால் அதனுடைய நகங்கள் உங்களுடைய பற்களிலும் பார்க்க மிக நீளமானவையாகவும், அதிக கூர்மையானவையாகவும்
இருக்கும்’ எனக் கூறியது நரி.
(D
27

Page 26
நீர்வை பொன்னையன்
24. цъфват
ஒரு செலவநதனும ஒரு வறியவனும் கூடிக கதைத்துக் கொண்டிருந்தார்கள். 'என்னிடம் நூறு அவுன்ஸ் தங்கம் இருக்கின்றது. அதில் இருபது அவுன்ஸ் தங்கத்தை நான் உனக்குத் தந்தால் நீ என்னைப் புகழ்வாயா?"
செல்வந்தன் ஏழையைக் கேட்டான். 'உனது தங்கம் சரியாகப் பங்கீடு செய்யப்படாமலிருக்கும் பொழுது உன் னை நான் எப்படிப் புகழ முடியும்?"
'சரி அப்படியென்றால், என்னிடமுள்ள தங்கத்தில் அரைவாசிப் பங்கை நான் உனக்குத் தந்தால் என்னைப் புகழ் 6) Tu u T?””
'அப்பொழுது நாங்கள் இரண்டு பேரும் சரி சமமான நிலையிலுள்ளவர்களாக இருப்போம். ஆகவே நான் உன்னை ஏன் புகழவேண்டும்?"
செல்வந்தன் கேட்டான், 'என்னிடமுள்ள எல்லாத் தங்கக் கட்டிகளையும் உனக்குத் தந்தால் என்னை நீ புகழ் 6) Tu J MT?’’
'உன்னுடைய எல்லாத் தங்கக் கட்டிகளும் என்னிட மிருந்தால் நான் செல்வந்தனாகி விடுவேன். அப்பொழுது நான் உன்னைப் புகழ வேண்டிய அவசியம் ஏற்படாகே' என்று ஏழை கூறினான்
செல்வந்தன் திரு திரு என முழித்தான
28

உலகத்து நாட்டார் கதைகள்
25 மேதாவி
ஒரு பேரறிஞர் ஓர் இரவு விளக்கை ஏற்றுவதற்கு சக்கி முக்கிக் கல்லைத் தேய்த்து தீயை உண்டாக்கும்படி கூறினார்.
நீண்ட நேரமாக ஒன்றும் நடைபெறவில்லை.
'என்ன தாமதம்?' மேதை சீஷர்களை அதட்டினார்.
'கடுமையான இருட்டாக இருக்கின்றது. என்னால் 1ப்படி சக்கிமுக்கிக் கல்லைக் கண்டுபிடிக்க முடியும்?' சிஷன் கேட்டான்.
'சரி, சரி மெழுகுவர்த்தியைப் பற்ற வை. அந்த வெளிச் சத்தில் நாங்கள் இரண்டுபேரும் அந்தக் கல்லை இலகுவில் "ே டிக் கண்டுபிடிக்க முடியும்’ மேதாவி கூறினார்.
'மெழுகுவர்த்தியைப் பற்ற வைப்பதற்குத் தீ?" சிஷன் மேதாவியை வியப்புடன் கேட்டான்.

Page 27
நீர்வை பொன்னையன்
26. வச்சிராயுதம்
சுகவீனமுற்றிருந்த தனது நண்பனைப் பார்ப்பதற்கு ஒருவன் நீண்ட தூரம் பிரயாணம் செய்து அவனுடைய இருப்பிடத்தை அடைந்தான். அவன் நண்பனுடைய வீட்டை அடைந்த பொழுது, அயல்நாட்டுப் படைகள் அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
‘நான் விரைவில் இறந்து விடுவேன். உன்னைக் காப் பாற்றிக் கொள்வதற்கு இந்த ஆபத்தான இடத்தை விட்டு நீ உடனே போய்விடு’ நோயாளி நண்பனுக்குக் கூறினான்.
'உன்னைப் பார்ப்பதற்கு நான் நீண்ட தூரம் பிரயாணம் செய்து வந்திருக்கிறேன். இப்பொழுது நீ என்னைப் போகும் படி சொல்கின்றாய். நீ ஆபத்தான நிலையிலிருக்கும் பொழுது நோயாளியான உன்னைத் தனியே விட்டுவிட்டு என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எனது மனச்சாட்சிக்கு மாறாக நான் எப்படி நடக்க முடியும்?' நண்பன் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தான்.
‘எங்களுடைய மாபெரும் சேனை இங்கு வந்து கொண்டிருப்பதை அறிந்து இப்பிரதேசத்தில் உள்ள எல்லா மக்களும் ஓடிவிட்டார்கள். ஆனால் நீ மட்டும் இங்கு தங்கி யிருக்கின்றாயே? உனக்கு என்ன துணிச்சல்?’ படைத் தளபதி கோபாவேசமாகக் கேட்டான்.
'எனது நண்பன் சுகவீனமுற்றிருக்கின்றான் என்பதை அறிந்து நீண்ட தூரம் பிரயாணம் செய்து அவனைப் பார்க்க
30

உலகத்து நாட்டார் கதைகள் வந்தேன். நோய் வாய்ப்பட்டிருக்கும் அவனைத் தனியே விட்டுவிட்டு என்னால் எப்படிப் போகமுடியும்? எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு நோயாளியை ஆபத்தான நிலையில் விட்டுவிட்டுத் தப்பி ஓடும் ஒரு அற்பனில்லை நான். நான் போகமாட்டேன். வேண்டுமா னால் அவனுக்குப் பதிலாக என்னைக் கொன்று விடுங்கள்’ நிதானமாகக் கூறினான் அவன்.
'அன்பு, தியாகம், தர்மம் ஆகிய நன்னெறிகள் மேலோங்கி நிற்கின்ற இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்த நாங்கள் பெரும் அவக்கேடான பாதகர்கள். இனிமேல் இப்படியான மிலேச்சத்தனமான செயல்கள் நடைபெற மாட்டா”,
தளபதி அந்தரங்க சுத்தியுடன் கூறினான். அவன் அந்த நோயாளியையும் நண்பனையும் இதயபூர்வமாக வாழ்த்தி விட்டு, உடனே தனது படைகளை வாபஸ் செய்து கொண்டு சென்றான்.
அந்தப் பிரதேசமும் காப்பாற்றப்பட்டது.
t
M; * ଜ୍ଞା
gg
31

Page 28
நீர்வை பொன்னையன்
27. Ꮷ ᏤᏧ,fᏤ6ᎧᏁᏤᏝn
அந்நிய நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஒரு செல்வந்த நாட்டு மன்னனைப் பார்க்கச் சென்றான். தன்னால் மன்னனை இறவாமலிருக்கச் செய்ய முடியும் என்று கூறினான்.
இதைக் கேட்ட மன்னனுக்கு பேராச்சரியமும், பெரு மகிழ்ச்சியும். ஆனால் அந்நியன் உடனே தனது ஊருக்குத் திரும்பி விட்டான். இறவா மலிருக்கும் கலையை அந்த அந்நியனிடமிருந்து கற்றுவரும்படி தன் பிரஜைகளில் சிறந்தவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அந்நியனிடம் அனுப்பி வைத்தான். ஆனால் இறவாமலிருக்கும் கலையை அவன் கற்பதற்கு முன்பே அந்த அந்நிய்ன் இறந்து விட்டான்.
இதனால் கடும் சினமுற்ற அரசன் அந்தப் பிரஜையின் தலையை வெட்டிக் கொன்றான். அந்நியன் தன்னை ஏமாற்றுகின்றான் என்பதை உணரத் தவறிய மன்னன் தன்னுடைய ஒரு அப்பாவிப் பிரஜையைக் கொன்றான். அந்த மன்னன் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை இச் செயல் காட்டுகின்றது. தனது சொந்த நலனைத் தவிர வேறெதையும் மதிக்காத ஒரு முட்டாள் மன்னன் என்பதை இச்சம்பவம் வெளிப்படுத்துகின்றது.
O
32

உலகத்து நாட்டார் கதைகள்
28. திமிர்த்தனம்
ஒருநாள் புதரின் கீழ்ப் படுத்திருந்த சிங்கம் ஒன்று கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்து நின்று தனது உடலைச் சிலிர்த்துக் கொண்டபடியே சுற்றுமுற்றும் பார்த்தது.
அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த நுளம்புகள் அதன் கண்ணில் பட்டன. "நான் மிகவும் பலசாலியாக இருப் பதால் இந்த உலகில் எவருக்கும் நான் பயப்படத் தேவை யில்லை. இதற்கு, கடவுளுக்கு நான் நன்றியுடையவன். இந்த அற்பத்தனமான நுளம்புகளைப் போல நான் பலவீன மானவனில்லை. அவைகளை எவராலும் நசுக்கிக் கொன்று விட முடியும். அதனால்தான் அவைகள் எல்லோருக்கும் பயப்படுகின்றன’ சிங்கம் அகங்காரத்துடன் கூறியது.
இதைக் கேட்ட நுளம்புகள் கடும் சினம் கொண்டன. இதற்குப் பதிலடி கொடுக்க அவை முன்வந்தன. 'ஓய் சிங்கமே! நீர் உருவத்தில் பெரியவராகவும் பலம் உடைய வராகவும் இருப்பதால் உம்மை மிஞ்சியவர்கள் இல்லை என்று நினைக்காதீர், நாங்கள் உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும் உம்மை எங்களால் தோற்கடிக்க முடியும்' என்று ஒரு நுளம்பு கூறியது.
'உன் வாயை மூடு, அற்பப் பிராணியே! என்னிலும் பார்க்கப் பலமுடையவர்கள் உங்களில் எவராவது இருக்கின் றிர்களா? நீ கதைப்பதை நன்றாக யோசித்துக் கவனமாகக்
33

Page 29
நீர்வை பொன்னையன் கதைக்க வேண்டும். ஏனென்றால் என்னுடைய ஒரு பாதத்தால் உங்களில் அநேகரை நசித்துக் கொன்று விடு வேன் நான் சிங்கம் கோபாவேசத்துடன் கர்ச்சித்துக் கூறி
UJ 5.
இதை நுளம்புகளால் பொறுக்க முடியவில்லை. "சகோ தரர்களே வாருங்கள். இந்த ஆணவம் பிடித்த சிங்கத்திற்கு ஒரு பாடம் படிப்பித்துக் காட்டுவோம்’ ஒரு முதிய நுளம்பு அனைத்து நுளம்புகளையும் அழைத்தது. இந்த அறை கூவலை ஏற்றுக்கொண்டு எல்லா நுளம்புகளும் படை யெடுத்துச் சிங்கத்தின் உடலெங்கும் குத்தித் தாக்க ஆரம் பித்தன.
சிங்கம் தனது வாலால் சுழற்றி நுளம்புகளை அடித்த துடன், முதலில் தனது ஒரு பாதத்தினாலும், பின்பு மற்றப் பாதத்தினாலும் அவற்றை மிதித்துத் தாக்கியது. பின்பு தரையில் விழுந்து தனது நான்கு பாதங்களையும் வீசி அடித்து நுளம்புகளைத் தாக்கியது. தனது பற்களை நெருடிய துடன் கர்ச்சித்தது.
இதனால் அது சாதித்தது என்ன? ஒரு சில நுளம்பு களைத் தான் சிங்கத்தனால் கொல்ல முடிந்தது. ஆனால் படை படையாக நுளம்புகள் வந்து சிங்கத்தைத் தாக்கிக் கொண்டிருந்தன.
தன்னால் நுளம்புகளுடன் போராட முடியாது என்பதை உணர்ந்த சிங்கம் தாக்குவதை நிறுத்தும்படி நுளம்புகளை மன்றாடிக் கேட்டது.
'தயவு செய்து நிறுத்துங்கள். என்னைத் தாக்குவதை தயவு பண்ணி நிறுத்துங்கள்’ சிங்கம் மன்றாடியது.
‘இனிமேல் நான் உங்களைக் கேலி பண்ண மாட் டேன். எனக்கு அனுதாபம் காட்டுங்கள். கடவுளின் பெயரால் உங்களை வேண்டுகின்றேன்.'
34

உலகத்து நாட்டார் கதைகள் கருணை காட்டும்படி சிங்கம் நுளம்புகளை இரந்து கேட்டது. “சிங்கப் பிள்ளையாரே! இனிமேல் நீ உனது 9,600ےT வத்தைக் காட்டுவியா? திமிர்த்தனமாகப் பேசுவியா?*
சிங்கத்தைப் பார்த்துக் கேட்ட நுளம்புகள், அதனுடைய பரிதாப நிலையைக் கண்டு, அதன்மீது அனுதாபப்பட்டு அதைத் தாக்குவதை நிறுத்திவிட்டு ஒரு பெரிய கரு முகிலைப்போல காற்றில் மிதந்து பறந்து கொண்டிருந்தன.
அவமானம் தாங்க முடியாமல் சிங்கம், சப்தநாடிகளும் அடங்கி ஒடுங்கிப்போய், தலை குனிந்து நின்றது.
Ο
35

Page 30
-- -- ----- - ܀ -܀ -- ܀- -- -....-----. ...-.-. . . ا6mb6m IIJ6f آl IT 6fiم) : (6(II 6 أfff
29. கோணாற் பார்)ை)
ஒரு செல்வந்தனுடைய வீட்டின் சுவர் ஒருநாள் பெரு மழை பெய்து கொண்டிருந்தபோது இடிந்து விழத் தொடங் கியது.
'இந்தச் சுவரையும் பழுது பார்த்து அடைக்காவிடடால திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருடு வார்கள்
செல்வந்தனுடைய மகன் தந்தையை எச்சரித்தான் அதே புத்திமதியை அயலிலுள்ள ஒரு முதிய வரும அவனுக்குக் கூறினார்.
அன்று இரவு உண்மையில் அந்தச் செல்வந்தனின வீடடில் பெரும் தொகைப் பணம் திருட்டுப் போய்விட்டது
செல்வந்தன் தன்னுடைய மகனின் விவேக ப புத்திக காக அவனை மெச்சிப் பாராட்டினான்.
அதேவேளை திருட்டு சம்பந்தமாக தனக்குப் புத்திமதி கூறிய அயலவரான அந்த முதியவாைர் சர்தேகித்தா ஸ்
3 ta

—" - - - - உலகத்து நாட்டார் கதைகள்
3t) வெவ்வேறு பாதைகள்
ஆற்றங்கரையோரம் இரண்டு பானைகள் பக்கம் பக்க மாக இருந்தன. ஒரு பானை செம்பு மற்றது மண், ஆறு பெருக்கெடுத்தது. இரண்டு பானைகளும் ஆற்றுநீரால் அடித்துச் செல்லப்பட்டன. மண் பானை செம்புப் பானை யிலிருந்து தூர விலகிச் செல்ல முயற்சித்தது. "பயப்படாதே நான் உனக்கு ஒரு கெடுதியும் செய்ய மாட்டேன். எனக்கு அருகே நீ வா’ செப்புப் பானை மண் பானைக்குக் கூறியது
இல்லையில்லை! நான் வேண்டுமென்றே விலகிச் செல்ல வில்லை. ஆனால் தற்செயலாக நாங்கள் இரண்டு பேரும ஒருவருடன் மற்றவர் முட்டி மோத நேர்ந்தால் உனக்கு ஒன்றுமே நேரிடாது. ஆனால் எனது முடிவு? அதோகதிதான அதனால்தான் நான் இயன்றவரை உன்னிட மிருந்து விலகிச செல்ல முயற்சிக்கிறேன்’ என்று மண் பானை கூறியது.
, D

Page 31
நீர்வை பொன்னையன்
31. ஆகாயக் கோட்டை
ஒரு நாட்டின் பிரதம மந்திரி பொதுமக்களுக்கு நன்மை விளைவிக்கும் திட்டங்களை வகுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம் புகழைத் தேடுவதில் ஆவலாக இருந் தார். ஆனால் அவருக்கு உருப்படியான திட்டங்களை வகுக் கும் ஆற்றலோ, அறிவோ எள்ளளவும் இல்லை. அவர் பெரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்று எந்த நேரமும் கற்பனை செய்து கொண்டிருப்பார்.
பிரதமரிடமிருந்து பாராட்டையும், அவரிடமிருந்து சலுகைகளையும் பெறும் நோக்குடன் ஒரு பாரிய திட்டத் துக்கான ஆலோசனையைக் கூறுவதற்கு முன்வந்தான் ஒரு மனிதன்.
'தலைநகரிலுள்ள பழைய ஏரியின் சேற்றை வாரி எடுத்து அதை ஆழப்படுத்தினால் எண்ணுறு சதுர மைல் செழிப்பான நிலத்தைப் பெற்று விவசாயம் செய்ய முடியும்’ என்று அம்மனிதன் ஆலோசனை கூறினான்.
பிரதமருக்குப் பெருமகிழ்ச்சி. 'ஏரியை ஆழப்படுத்து வதற்குமுன் அதற்குள் நிறைந்திருக்கும் தண்ணிரை என்ன செய்வது?" பிரதமர் அந்த மனிதனை வினவினார். 'பழைய ஏரியிலுள்ள நீரை நிரப்புவதற்கு அதற்குப் பக்கத்தில் அதே அளவுள்ள ஒரு புதிய ஏரியை வெட்டினால் பிரச்சினை தீர்ந்து விடும்" என்றான் அந்த ஆலோசகன்.
பிரதம மந்திரி அந்த ஆலோசகனுடைய மூளைத் திறனை மெச்சிப் பாராட்டியதுடன் அத்திட்டத்தை உடனே அமுல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டான்.
Ο
38

உலகத்து நாட்டார் கதைகள்
32. கான மயிலாட . . .
ஒரு புகழ்பெற்ற அழகி இருந்தாள். அவளுக்கு நெஞ் செரிவு நோய் வரும்பொழுது, அந்த அழகி அயலவர்களின் முன்னிலையில் தன் இரண்டு கைகளையும் தன் மார்புக்குக் குறுக்கே வைத்துக் கொண்டு முகத்தைச் சுழித்து, தன் வேதனையை வெளிப்படுத்துவாள்.
அயலவர்கள் அவளுக்காக அனுதாபப்படுவார்கள். அதே கிராமத்திலுள்ள அவலட்சணமான பெண் ஒருத்தி அழகியின் இச்செயலை அவதானித்தாள். அழகியின் இந்த வேதனைத் தோற்றம் மிக ரம்மியமானது என்று அவள் நினைத்தாள்.
அவள் அயலவர்களைக் காணும்பொழுது அந்த அழகியைப்போல, தன்னுடைய இரண்டு கைகளையும் தன் மார்புக்குக் குறுக்கே வைத்துக்கொண்டு முகத்தைச் சுழித்து தான் வேதனைப்படுவதாகவும் பாவனை செய்தாள்.
பணக்காரர்கள் அவளைப் பார்த்தவுடன் வெளியே வரத் தயங்கியதுடன் தங்கள் வீட்டுக் கதவுகளை அடித்துச் சாத்து வார்கள். ஏழைகள் அவளைக் கண்டதும் தங்கள் மனைவி மக்களைக் கூட்டிக்கொண்டு ஒட்டமெடுப்பார்கள். பாவம்! அவள் அழகியினுடைய முகச்சுழிப்பையும் வேதனையையும் பார்த்து வியப்படைந்தாள். ஆனால் அழகியினுடைய செயலும் அவளது வேதனைத் தோற்றமும் ஏன் அழகாக இருக்கின்றது என்று அந்த அவலட்சணமானவளுக்குப் புரியவில்லை.
()
39

Page 32
நீர்வை பொன்னையன்
33. பிறவிக் குணம்
ஒரு பூனை ஓர் இளைஞன் மீது காதல் கொண்டது அவனுடைய அன்பைப் பெறுவதற்கு, தன்னை ஒரு அழகிய பெண்ணாக மாற்றிவிடும்படி காதல் தெய்வமான வீனஸ்ஸை வேண்டிக் கொண்டது. பூனையின் பலவீனத்திற்காக அனு தாபம் கொண்ட வீனஸ் தெய்வம், ஒரு பேரழகான பெண் னாக அதை உருமாற்றம் செய்தது. இளைஞன் அந்தப் பெண்ணின் பேரழகில் மயங்கி அவளைத் தனது மனைவி யாக ஏற்றுக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் இளைஞனின் வீட்டு மண்டபத்தில இருக்கும்பொழுது, உருவம் மாற்றப்பட்ட பூனையின் குணாம்சத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக் கிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் நோக்கத்துடன் ஒரு எலியை அந்த மண்டபத்திற்குள் ஓட விட்டது வீனஸ். எலியைக் கண்டதும் அந்தப் பெண் தனது நிலையை மறந்து திடீரெனப் பாய்ந்து அந்த எலியைப் பிடித்தாள். இதனால் கோபமடைந்த வீனஸ் தெய்வம் அப்பெண்ணை மீண்டும்
பூனையாக உருமாற்றம் செய்துவிட்டது.
Ο
40

உலகத்து நாட்டார் கதைகள்
34. சமயோசிதம்
ஒர் ஆட்டு மந்தையை ஓநாய் துரத்திச் சென்ற பொழுது ஓர் ஆட்டுக்குட்டி விரைவாக ஒட முடியாமல் பின் தங்கி விட்டது. ஓநாயிடமிருந்து இனித் தப்பிச் செல்ல முடியாது என்று உணர்ந்து, முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்து விட்டது ஆட்டுக்குட்டி, "நான் நிச்சயமாக என்னை உங்க ளுக்கு இரையாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் சிறிது நேரம் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன். ஆகவே நீங்கள் இசையை மீட்டுங்கள். நான் ஆடுகிறேன்’ என்று ஆட்டுக்குட்டி கூறியது. ஓநாய் அதற்கு உடன்பட்டு இசை மீட்டியது. ஆட்டுக்குட்டி நடனம் ஆடியது. இந்த இசையைக் கேட்ட நாய்கள் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள அவ்விடத்திற்கு வந்தன. அங்கு வந்த நாய்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னால்
முடிந்தளவு விரைவாக ஒடித் தப்பிக்கொண்டது ஓநாய்.
Ο
41

Page 33
நீர்வை பொன்னையன்
35. குளத்திற்குள் இருந்த சந்திரன்
ஒரு வணிகன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் ஒரு கிராமத்தை அடைந்த பொழுது ஒரு குளத்தைச் சுற்றிப் பெரும் திரளான மக்கள் கூடி நின்றதைக் கண்டான். அவர்கள் வாருகோல்கள், துடைப்பங்கள், ஈட்டிகள் ஆகிய வற்றைக் குளத்திற்குள் விட்டுத் துழாவிக் கொண்டிருந் தார்கள். என்ன சமாச்சாரம்? என்று அவன் அவர்களைக் கேட்டான்.
'சந்திரன் குளத்திற்குள் இடறி விழுந்து விட்டது! நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் அதை வெளியே எடுக்க முடியவில்லை’ என்று அவர்கள் கூறினார்கள். வணிகன் உரத்துச் சிரித்தபடியே 'வானத்தைப் பாருங்கள் அங்கே சந்திரன் இருக்கின்றது. குளத்து நீரில் அதனுடைய நிழல் தான் தெரிகிறது' என்று கூறினான். ஆனால் அவன் கூறி யதை அவர்கள் கேட்கவில்லை. அவனைத 4 டி h fகள்.
Y
 

உலகத்து நாட்டார் கதைகள்
36. குதிரையோ குதிரை!
ஆயிரம் மைல் தொடர்ச்சியாக ஓடக்கூடிய குதிரையை வாங்குவதற்கு ஓராயிரம் தங்கக் கட்டிகளைக் கொடுப்பதற் குத் தயாராக இருந்தான் ஒரு மன்னன். மூன்று வருடங் களாக அவன் முயற்சி செய்தும் அவனால் அத்தகைய ஒரு குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
"மாண்புமிகு மன்னராகிய தங்களுக்கு நான் அத்தகைய தொரு குதிரையைக் கொண்டு வந்து தருகிறேன்’ என்று ஒருவன் முன்வந்தான். மன்னனும் அதற்கு உடன்பட்டான். அவனுக்கு மன்னன் ஆயிரம் தங்கக் கட்டிகளைக் கொடுத் தான். குதிரை வாங்கச் சென்றவன் மூன்று மாதங்களுக்குப் பின் திரும்பி வந்தான். திரும்பி வந்தபொழுது அவன் ஐந்நூறு தங்கக்கட்டிகளைச் செலவு செய்து ஒரு குதிரை யின் மண்டை ஒட்டைக் கொண்டு வந்தான். மன்னனுக்குக் கடும் கோபம் மூண்டது. 'எனக்கு உயிருள்ள குதிரைதான் வேண்டும். செத்த குதிரையின் மண்டை ஒட்டினால் எனக்கு என்ன பிரயோசனம்? ஐந்நூறு தங்கக்கட்டிகளை நீ ஏன் வீணாகச் செலவு செய்தாய்? பதில் கூறு' என்று மன்னன் கர்ச்சித்தான். 'ஒரு இறந்த குதிரையின் மண்டை ஒட்டிற்கு ஐந்நூறு தங்கக் கட்டிகள் செலவு செய்தால் ஒரு குதிரைக்கு மேலும் அதிகமாகச் செலவு செய்வீர்கள் அல்லவா? மக்கள் இதை அறிந்ததும் உண்மையாக நீங்கள் ஒரு சிறந்த குதிரையை வாங்க விரும்புகிறீர்கள் என்று தெரிந்து, தம்மிட
43

Page 34
நீர்வை பொன்னையன் முள் வெற்றில் மிகச் சிறந்த ஒரு குதிரையை விரைவில் உங்களுக்கு அனுப்பி வைப் பார்கள்' என்று (ருதிரை வாங்குவதற்குச் சென்று, குதிரையின் மண்டை ஒடடுடன் திரும்பி வந்தவன் கூறினான். மன்னன் அத்தகைய ஒரு மிகச் சிறந்த குதிரைக்காக இன்றும்தான் காத்துக் கொண்டிருக் கின்றான்
)
لمس لم
 

உலகத்து நாட்டார் கதைகள்
37. பழக்கதோஷம்
'அம்மா நீ நாயிலும் பார்க்கப் பெரியதாக இருக்கின் றாய். அத்துடன் நீ வேகமாக ஓடுவாய்; மோப்பம் பிடிக்கும் ஆற்றலும் அதிகம். அது மாத்திரமல்ல, உன்னைப் பாதுகாப்ப தற்கு உன்னிடம் கொம்புகளும் இருக்கின்றன. ஆனால் நீ ஏன் வேட்டை நாய்களுக்கு இப்படிப் பயந்து சாகின்றாய்?" என்று ஒரு மான் குட்டி தன்னுடைய தாயைக் கேட்டது. 'குழந்தாய், இவைகள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன என்று எனக்கு நன்றாகத் தொயும். அப்படியிருந்தும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன், எனக்கே தெரியாமல் எனது கால்கள் தம்மால் முடிந்தளவு வேகத்தில் என்னைக் கொண்டு ஓடுகின்றன’ என்று தாய் தன் குட்டிக்குப் பதில்
கூறியது.
Ο
45

Page 35
நீர்வை பொன்னையன்
38. பிரசவ வேதனை
முன்னொரு காலத்தில் ஒரு பெரிய மலையில் "கடகட’ வென்று உருளுகின்ற பெரும் சத்தம் கேட்டது. மலைக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு விட்டது. அது எதைப் பிரசவிக்க இருக்கின்றது? என்பதைப் பார்ப்பதற்கு மலைக்குச் சமீபமாக வும் தூரத்திலும் இருக்கின்ற மக்கள் பேராவலுடன் திரண்டு வந்து மலையடிவாரத்தில் கூடி நின்றார்கள். அங்கு கூடி நின்ற மக்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கும் ஊகங்களுக்கும் பின்பு மலைக்குள்ளிருந்து திடீரெனத் துள்ளிக் குதித்து வெளியே வந்தது ஒரு சிறிய சுண்டெலி
Ο
46
 

உலகத்து நாட்டார் கதைகள்
39. பாதுகாப்பு
உயர்ந்தோங்கிய ஒரு வீட்டின் கூரையின்மேல் ஓர் ஆட்டுக்குட்டி ஏறி நின்று கொண்டிருந்தது. கீழே ஓர் ஓநாய் அவ்வழியால் சென்று கொண்டிருந்ததை அந்த ஆட்டுக் குட்டி கண்டு அதைக் கேலி செய்து சிரித்தது. "கோழையே! நீ என்னை நிந்திக்கவில்லை. நீ ஏறி நின்று கொண்டிருக் கின்றாயே அந்த உயரமான இடம்தான் என்னைக் கேலி
செய்து நிந்திக்கின்றது' என்று ஒநாய் கூறியது.
Ο
47

Page 36
நீர்வை பொன்னையன்
40. புதுவகை இரக்கம்
ஓர் ஓநாயின் தொண்டைக்குள் எலும்புத் துண் டொன்று சிக்கிக் கொண்டது. இதனால் வேதனை தாங்க முடியாமல் ஓநாய் ஓடிக்கொண்டிருந்தது. இந்த உபாதை யிலிருந்து மீள்வதற்கு தனக்கு உதவும்படி அவ்வழியால் போய் வருவோரை மன்றாடிக் கேட்டது. அப்படி உதவு பவர்களுக்குத் தான் சன்மானமளிப்பதாகவும் உறுதியளித் தது. அதனுடைய பரிதாபமான நிலையைப் பார்த்து, வேண்டு கோளையும் வாக்குறுதியையும் நம்பி ஒரு கொக்கு தனது நீண்ட கழுத்தை ஒநாயின் தொண்டைக்குள் விட்டு சிக்கியிருந்த எலும்புத் துண்டை வெளியே எடுத்தது. அதன் பின் வாக்குறுதியளிக்கப்பட்ட சன்மானத்தைக் கொக்கு கேட்டது.
‘நன்றி கெட்ட அற்பப் பிராணியே! ஒநாயாகிய என் னுடைய வாய்க்குள் உனது கழுத்தைச் செலுத்திவிட்டு, பின் எவ்வித பாதிப்புமின்றி அந்தக் கழுத்தை வெளியே திருப்பி எடுத்த பின் சன்மானமா கேட்கின்றாய்?" அசட்டை யாக இளித்து, தனது கோரப் பற்களைக் காட்டிக்கொண்டு கேட்டது ஓநாய்.
Ο
48

உலகத்து நாட்டார் கதைகள்
41. இரண்டு பெண்டாட்டிக்காரன்
ஓர் ஆண், ஒன்றுக்கு மேற்பட்ட (பல)பெண்களைத் திருமணம் செய்யக்கூடிய ஒரு காலமிருந்தது. அப்பொழுது இளமைக்கும் முதுமைக்கும் இடைப்பட்ட ஒரு பிரமச்சாரி யிருந்தான். அவனுக்கு அப்பொழுதான் தலைமயிர் நரைக்க ஆரம்பித்த காலம். அவன் இரண்டு பெண்களை ஒரே நேரத் தில் காதலித்து இருவரையும் திருமணம் செய்தான். ஒரு மனைவி இளமையானவளாகவும் அழகுடையவளாகவும் இருந்தாள். அவள் தனது கணவன் தன்னைப்போல இளமைத் தோற்றமுள்ளவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள். மற்ற மனைவி தனது கணவன் தன்னைப் போல முதிய, தனக்குப் பொருத்தமான தோற்றமுடையவ னாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆகவே, இளமைத் தோற்றமுடைய மனைவி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது கணவனின் தலையில் உள்ள நரை தட்டுப்படுகின்ற ஒவ்வொரு வெள்ளைத் தலைமயிரையும் பிடுங்கினாள். முதுமைத் தோற்றமுடைய மனைவி அவனு டைய தலையில் உள்ள ஒவ்வொரு கறுப்பு மயிரையும் பிடுங்கியெடுப்பதில் ஆர்வம் காட்டினான். இறுதியில் தனது தலையில் ஒரு மயிரைத்தானும் தனது இரண்டு மனைவி மாரும் விட்டு வைக்கவில்லை என்பதை அவன் அறியும் வரை அவர்கள் இருவரும் தன்மீது காட்டி வந்த அக்கறைக் கும், அன்புக்கும் அவன் பெரிதும் நன்றியும் சந்தோஷமும் உடையவனாக இருந்தான்.
Ο
49

Page 37
நீர்வை பொன்னையன்
42. மதிமயக்கம்
ஒரு மத ஊர்வலத்தில் ஒரு விக்கிரகத்தைக் கழுதை ஒன்று சுமந்துகொண்டு சென்றது. ஊர்வலம் பட்டினத் தினூடாகச் சென்று கொண்டிருக்கையில் அங்குள்ள மக்கள் எல்லோரும் பயபக்தியுடன் விக்கிரகத்திற்கு வணக்கம் செலுத்தினர். மக்கள் எல்லோரும் தன்னைத்தான் வணங்கு கின்றனர் என்று கழுதை நினைத்தது. அளவுக்கதிகமாகப் பெருமிதமும் கர்வமும் கொண்டது. அது முன்னுக்கு ஒரு அடிகூட எடுத்து வைக்காமல் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. கழுதையின் சொந்தக்காரன் இதை உணர்ந்தான். ‘அற்பத்தனமான முட்டாள் பிராணியே, மக்கள் வணக்கம் செலுத்துவது உனக்கல்ல. உன் முதுகிலுள்ள விக்கிரகத்துக்குத்தான்’ என்று கூறி கழுதைக்குக் கம்பால் விளாசினான்.
Ο
50
 

உலகத்து நாட்டார் கதைகள்
43. கற்பனாவாதிகள்
ஒரு ஓவியன், இளவரசன் ஒருவனுக்கு ஓவியங் களைத் தீட்டி வந்தான்.
"ஓவியம் தீட்டுவதற்கு மிகக் கஷ்டமானவை எவை? இளவரசன் ஒருநாள் ஒவியனைக் கேட்டான்.
‘நாய்கள், குதிரைகள் போன்றவை' என்று ஒவியன் கூறினான்.
'மிகச் சுலபமானவை எவை?’ சந்தேகத்துடன் வினவி னான் இளவரசன்.
"பிசாசுகளும் பூதங்களும்.’’ ஒவியனின் பதிலிது. ‘என்ன பிசாசுகளும் பூதங்களும், தீட்டுவதற்கு சுலப LOT 60.Teo6) jujt?”
இளவரசன் ஆச்சரியமாக ஒவியனைப் பார்த்துக் கேட்டான்.
"ஆமாம், பிசாசுகளும் பூதங்களும்தான். ஏனென்றால் நாய்களையும் குதிரைகளையும் எல்லோருக்கும் நன்கு தெரியும். தினசரி நாங்கள் அவைகளைப் பார்க்கின்றோம். ஆகவே அவைகளின் உருவங்களை அப்படியே வரைவது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால் பிசாசுகளும் பூதங்களும் திட்டவட்டமான உருவ அமைப்புகள் இல்லாதவை. அவை களை ஒருவரும் நேரடியாகப் பார்த்ததில்லை. ஆகவே நாங்கள் அவற்றை நினைத்தபடி வேண்டிய உருவத்தில்
51

Page 38
நீர்வை பொன்னையன்
வரையலாம். அதனால்தான் அவைகள் ஓவியம் தீட்டுவதற்கு சுலபமானவையாக இருக்கின்றன.”
ஒவியன் பதில் இளவரசனுக்குப் புரிந்ததோ என்னவோ?
O
52
 

உலகத்து நாட்டார் கதைகள்
44. பொல்லைக் கொடுத்து அடி வாங்குதல்
சில புறாக்கள் ஒரு பருந்துக்குப் பயந்து எப்பொழுதும் விழிப்புடன் இருந்து வந்தன. அவைகள் எதிரியின் தாக்கு தலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற உபாயங்களைக் கையாண்டு தங்கள் புறாக்கூட்டைத் தமக் குச் சமீபமாக வைத்துக் கொண்டிருந்தன. தனது திடீர்த் தாக்குதல்கள் வெற்றியீட்டாமலிருப்பதை உணர்ந்த பருந்து ஒரு மாற்று உபாயத்தைக் கைக்கொண்டது. "எதற்காக நீங்கள் எந்த நேரமும் இப்படிப் பயந்துகொண்டே வாழ்கின் றிர்கள்? என்னை நீங்கள் உங்களது அரசன் என்று ஒப்புக் கொண்டு உங்களது பாதுகாப்புப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்களானால, உங்களைப் பாதுகாப்பதற்கு உத்தர வாதமளிப்பேன்’ என்று பருந்து கூறியது.
அது கொடுத்த வாக்குறுதிகளைப் புறாக்கள் நம்பி ஏற்றுக் கொண்டு பருந்தைத் தங்கள் அரசனாக்கச் சம்மதித்த துடன் பாதுகாப்புப் பொறுப்புக்களையும் அதனிடம் ஒப்ப டைத்தன. தன்னைப் பலப்படுத்திக் கொண்வுடனே தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பாவித்து பருந்து நாளொன் றுக்கு ஒரு புறா வீதம் கொன்று தின்று கொண்டு வந்தது. தனது முறை வரும்வரை பார்த்துக் கொண்டிருந்த புறா ஒன்று ‘எமது பாதுகாப்பை நாமே எமது எதிரியிடம்
53

Page 39
நீர்வை பொன்னையன் ஒப்படைத்த எமக்கு இது ஒரு சரியான ஏற்ற தண்டனை தான்’ என்று கூறியது.
ஒரு எதிரியிடம் அல்லது ஒரு கொடுங்கோலனிடம் தமக்குரிய அதிகாரத்தைத் தாமாகவே ஒப்படைத்தவர்களுக் கெதிராகவே அந்த அதிகாரம் பாவிக்கப்படும் என்பதில் வியப்பில்லை.
Ο
54
 

உலகத்து நாட்டார் கதைகள்
45. பெறுமதி
பேட்டுக் கோழிகளுக்கு ஒரு சேவல், பண்ணை யிலுள்ள வைக்கோலில் உணவு தேடிக் கொண்டிருந்தது. வைக்கோலை அது கிளறிக் கொண்டிருக்கையில் சேவலின் காலில் ஒரு ஆபரணம் தட்டுப்பட்டது. "ஓ! ஆபரணமே, உனக்கு மதிப்புக் கொடுப்பவர்களுக்கு நீ மிகச் சிறப்புடைய ஒரு பொருளாகத்தான் இருப்பாய் என்பதில் எதுவித சந்தேக முமில்லை. ஆனால் எனக்கு உலகத்திலுள்ள மதிப்பு மிக்க எல்லா முத்துக்களிலும் பார்க்க ஒரு வால் கோதுமைத் தானி யத்தைத் தந்தால் போதும். அதுதான் எனக்குப் பெருமதிப்பு டையதாகும்."
இந்தச் சேவல் விவேகமுள்ளதாக இருக்கின்றது. ஆனால் தங்களால் விளங்கிக் கொள்ள முடியாத மதிப்பு டையவற்றை இகழ்ச்சி செய்கின்ற அறிவற்ற அநேகர் இருக் கத்தான் செய்கின்றார்கள்.
Ο

Page 40
நீர்வை பொன்னையன்
46. மதி கெட்ட காகம்
ஒரு மதி கெட்ட காகம் மயில் போட்ட மயிலிறகுகள் சிலவற்றை எடுத்து, தன்னுடைய இறகுகளுடன் பொருத் திக் கொண்டு தனது பழைய சகாக்களை இகழ்ச்சியாகப் பேசியதுடன், அழகுடைய பறவைக் கூட்டத்தில் தானும் சேர்த்தி என்று பெருமை பேசித் தன்னை எல்லோருக்கும் அறமுகப்படுத்தியது. தங்களுக்கிடையே திடீரெனப் புகுந்த அந்தக் காகத்தை அவை இலகுவில் இனங்கண்டு விட்டன. அதனுடைய இரவல் இறகுகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு தங்களுடைய அலகுகளால் அந்த மதி கெட்ட காகத்தைக் கொத்தித் தாக்கிக் கலைத்தன. பெருமளவு காயமடைந்த
துர்அதிஷ்டமான காகம் கடுங் கவலையடைந்தது.
நடந்தவற்றை மறந்து தன்னை மன்னித்து அவர்களு டைய கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்படி தனது பழைய சகாக்களை அது வேண்டிக் கொண்டது. ஆனால் அது காட்டிய பகட்டுத்தனத்தையும், டாம்பீகத்தையும் தங்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வந்த காகக் கூட்டம், அந்த மதி கெட்ட காகத்தை தங்களுடைய சமூகத்திலிருந்து விலக்கி வைத்தன. 'உனக்கு இயற்கையால் வழங்கப்பட்ட அழகு டன் திருப்தியடைந்திருந்தால் உன்னுடைய சகாக்களது புறக்கணிப்பிலிருந்தும் உனக்குக் கொடுக்கப்பட்ட தண் டனையிலிருந்தும் நீ தப்பியிருக்க முடியும்’ என்று சகாக்கள்
Ο
56

உலகத்து நாட்டார் கதைகள்
47. கால விரயம்
கோடை காலத்தில் எறும்பொன்று தானியத்தைச் சேமித்து வைத்திருந்தது. அத்தானியத்தில் ஒரு சிறிதளவை உறைபனிக்காலத்தில் ஒரு நாள் வெளியே இழுத்து வந்தது. பசியினால் இறக்கும் தறுவாயிலிருந்த வெட்டுக்கிளி யொன்று தன் உயிரைக் காப்பாற்றுவதற்கு தனக்கு, ஒரு கவளம் தானித்தைத் தந்து உதவும்படி எறும்பைக் கேட்டது. "சென்ற கோடைக்காலத்தில் நீ என்ன செய்து கொண்டிருந் தாய்?’ என்று வெட்டுக்கிளியை எறும்பு வினவியது.
"ஓ! நான் சோம்பேறியாயிருக்கவில்லை. கோடை காலம் முழுவதும் நான் பாடிக் கொண்டிருந்தேன்'. 'கோடை காலம் முழுவதும் நீ பாடிக்கொண்டிருந்தபடியால் உறை பனிக் காலம் முழுவதும் நீ ஆடிக்கொண்டேயிருக்கலாம்’ என்று எறும்பு சிரித்துக் கொண்டு கூறியபடியே தனது தானியக் களஞ்சியத்தை இழுத்து மூடியது.

Page 41
நீர்வை பொன்னையன்
48. ஜீவகாருண்யம்
ஒரு நாட்டின் அரசனுக்குப் புத்தாண்டின்போது புறாக் களைப் பரிசளிப்பது வழக்கமாக இருந்தது. இது மன்னனுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக இருந்தது. அவன் புறாக்களைப் பரிசாகக் கொடுக்கின்றவர்களுக்கு சன்மானங்கள் வழங்கு வான்.
இந்த வழக்கத்திற்கான காரணத்தை அரசனிடம் ஒரு அறிஞர் கேட்டார்.
‘என் கருணையை அதாவது ஜீவகாருண்யத்தை வெளிப்படுத்துவதற்குப் புத்தாண்டு தினத்தன்று நான் புறாக்களை விடுதலை செய்கின்றேன்' என்று அரசன் கூறினான்.
'நீங்கள் புறாக்களை விடுதலை செய்வது போற்றுதற் குரிய விஷயம்தான். நீங்கள் புறாக்களை விடுதலை செய்ய விரும்புகின்றீர்கள் என்பதை அறிந்து உங்கள் பிரஜைகள் அதாவது குடிமக்கள் உங்களை மகிழ்விப்பதற்காகப் பல ஆயிரம் புறாக்களை வலை விரித்துப் பிடிக்கின்றார்கள்.
'இந்த வேளையில் அநேக புறாக்கள் இறக்கின்றன. உண்மையில் நீங்கள் புறாக்களைக் காப்பாற்ற வேண்டு மென்று விரும்பினால், மக்கள் அவைகளைப் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும். புறாக்களை நீங்கள் விடுதலை செய்வதற்காக, அவைகளை மக்கள் ஆயிரக் கணக்கில் பிடிப் பதற்குத் தூண்டுதல் செய்கின்றீர்கள். இதனால் நீங்கள் பல் 58

உலகத்து நாட்டார் கதைகள் லாயிரக்கணக்கான புறாக்களுக்கு விளைவிக்கும் படுநாசத் துக்கு உங்களுடைய அன்பு அதாவது கருணை ஈடாகுமா?”
அறிஞர் கோபாவேசமாக மன்னனைப் பார்த்துக் கேட்டார்.
மன்னனால் எதுவித பதிலும் கூற முடியவில்லை.
59

Page 42
நீர்வை பொன்னையன்
49. எண்ணெய்ச் சட்டியிலிருந்து
நெருப்புக்குள்
ஒரு சமையல்காரன் ஒரு நாள் உயிருள்ள மீன்கள் சிலவற்றை எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டுப் பொரித்துக் கொண்டிருந்தான். எண்ணெய்ச் சட்டியிலுள்ள எண்ணெ யின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க தங்களால் அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை மீன்கள் உணர்ந்தன. வெப்பத்தைக் தங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலைமைக்கு வந்த மீன்கள் எல்லாம் நெருப்புக்குள் பாய்ந்தன. விவகாரத்தைச் சீர் செய்வதற்குப் பதிலாக மீன்கள் இப்பொழுது முன்பிருந்த நிலைமையிலும் பார்க்க மிக மோசமான நிலைமைக்குள் தங்களை உட் படுத்தியுள்ளன.
Ο
60
 

உலகத்து நாட்டார் கதைகள்
50. தியாகம்
ஒரு இளவரசன் முப்பது இறாத்தல் எடையுள்ள ஒரு வில்லை எடுத்து வளைக்க முடியாதவனாக இருந்தான். அப்படியிருந்தும் தான் ஒரு சக்திவாய்ந்த, பலமுள்ள வில் வித்தைக்காரன் என்று எல்லோரும் தன்னை அழைக்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.
தன்னுடைய வில்லை வளைக்கும்படி தனது பணியாட் களுக்குக் கூறினான். அவர்கள் அந்த வில்லை முறிக்க தூக்குவதற்கு முயல்வதுபோல் பாசாங்கு செய்து நடித்து விட்டு தங்களால் அந்த வில்லை தூக்க முடியவில்லை என்றும், தங்கள் மன்னனால்தான் அதைத் தூக்கி வளைக்க முடியும் என்றும் கூறினார்கள்.
'இந்த வில் தொண்ணுறு இறாத்தல் எடையுள்ளது. இந்தப் பாரிய வில்லை மாட்சிமை தங்கிய மாமன்னனாகிய தங்களால்தான் தூக்கி வளைக்க முடியும். வேறு எவராலும் இந்த வில்லைத் தூக்கி வளைக்க முடியாது’ என்று அரசனி டம் பணியாட்கள் கூறுவார்கள்.
இந்தப் பாராட்டு அரசனுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
முப்பது இறாத்தல் எடையுள்ள அந்த வில்லை, தனது வாழ்வில் இறுதிக்காலம் வரை தொண்ணுறு இறாத்தல் எடையுள்ளது என்று நம்பிக் கொண்டிருந்தான். பெயரள வில் அந்த வில் தொண்ணுறு இறாத்தல் எடையுள்ளதே
G甘

Page 43
யொழிய உண்மையில் அது முப்பது இறாத்தலேதான். அந்த இளவரசன் வெறும் புகழுக்காக உண்மையைத் தியாகம்
நீர்வை பொன்னையன்
செய்தான்.
62
 

உலகத்து நாட்டார் கதைகள்
51. இரண்டு பைகள்
ஒவ்வொரு மனிதனும் தன்னுடன் இரண்டு பைகளை எடுத்துச் செலகின்றான். ஒன்று அவனுடைய முன்பக்க முள்ளது. மற்றது அவனுடைய பின்பக்கமுள்ளது. இவை இரண்டிற்குள்ளும் தவறுகள் நிறைந்துள்ளன. பின்புற முள்ள பையில் அவனுடைய சொந்தத் தவறுகள் நிறைந் துள்ளன. அவனுக்கு முன்பக்கமுள்ள பையில் அவனுடய அயலவனின் தவறுகள் நிறைந்துள்ளன. ஆகவே மனிதர் களுக்கு அவர்களுடைய சொந்தத் தவறுகள் தெரிவதல்லை. ஆனால் அவர்களுடைய அயலவனுடைய தவறுகளைப் பார்ப்பதை அவர்கள் ஒருபொழுதும் தவறவிட மாட்டார்கள்.
Ο
63

Page 44
நீர்கால பொன்னையன்
52. இரை
ஒரு நாள் வேட்டைக்காரன் ஒருவன் அம்பு வில்லுடன் வேட்டைக்குச் சென்றான். அவன் ஒரு ஆட்டைக் கண்ட பொழுது, அதன்மீது அம்பை எய்து ஆட்டைக் கொன்றான். செத்த ஆட்டை அவன் தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு கரடி எதிர்ப்பட்டது. உடனே வேட்டைக்காரன் ஆட்டைத் தரையில் போட்டுவிட்டு கரடி மீது அம்பை எய்தான். கரடி காயப்பட்டது. ஆனால் அது சாக வில்லை. காயப்பட்ட கரடி கோபம்கொண்டு வேட்டைக் காரன்மீது பாய்ந்து அவனைக் கடித்துக் குதறி அவனைக் கொன்றபின் அந்த மனிதனுக்குச் சமீபமாகத் தானும் விழுந்து செத்தது. இறந்தவர்களுடைய இரத்ததை மோப்பம் பிடித்த ஓர் ஓநாய் அந்த ஆடு, மனிதன், கரடி, அம்பு, வில்லு எல்லாம் கிடக்கின்ற இடத்துக்கு வந்தது. 'நான் கஷ்டப் பட்டு வேட்டை ஆடி உணவு தேடாமலே நீண்ட நாட் களுக்கு உண்பதற்கு எனக்கு இப்பொழுது போதிய உணவு இருக்கின்றது” என்று மகிழ்ச்சியுடன் ஒநாய் தனக்குத் தானே கூறிக்கொண்டது. இவை முழுவதையும் நான் ஒரே நேரத்தில் உண்ணாமல் ஒன்றையும் மிச்சம் விடாமல், சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். முதலில் நான் மிகக் கடினமான தைச் சாப்பிட்டுவிட்டு பின்பு மென்மையானதையும் உருசி யுள்ளதையும் சாப்பிடுவேன்’ என்று குதூகலமாகக் கூறிய ஒநாய் முதலில் வில்லின் நாணைத் துண்டு துண்டாக்க முயன்றது. அது வில்லின் நாண் கயிற்றைக் கடித்தபொழுது
64

உலகத்து நாட்டார் கதைகள் அது துண்டு துண்டாக அறுந்ததும் உடனே வில்லு திடீரென விசையுடன் துள்ளி ஒநாயை உக்கிரமாகத் தாக்கியடித்தது. இத்தாக்குதலினால் ஓநாயும் இறந்தது. அதன்பின் தூரத்தி லுள்ள ஒநாய்கள் சில மோப்பம் பிடித்து அந்த இடத்திற்கு கூட்டமாக வந்து ஆடு, வேட்டைக்காரன், கரடி ஆகிய வற்றையும் தங்களது சக பாடியான ஒநாயையும் தின்று
தீர்த்தன.
O
65

Page 45
நீர்வை பொன்னையன்
53. ஆசை வார்த்தை
கிணற்றுக்குள் விழுந்த ஒரு நரி அதற்குள்ளிருந்து வெளியே வர முடியாமல் நீண்ட நேரம் தவித்துக் கொண்டி ருந்தது. அப்பொழுது அந்த இடத்திற்கு ஒரு ஆடு வந்தது. அதற்குத் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. 'கிணற்றுக் குள் போதியளவு தண்ணிர் இருக்கின்றதா? அது நல்ல தண்ணிரா?" என்று ஆடு நரியைக் கேட்டது. நரி தான் அனு பவித்துக் கொண்டிருந்த ஆபத்தை மறைத்து, பாசாங்கு செய்து "நண்பனே நீ கீழே இறங்கி வா. இங்கு போதியளவு நல்ல தண்ணிர் இருக்கின்றது. நீ வேண்டியளவு தண்ணிர் குடிக்கலாம். தண்ணிர் நல்லதாக இருக்கின்றபடியால் என்னால் முழுவதையும் குடிக்க முடியாமல் இருப்பதுடன் போதியளவு இருக்கின்றபடியால் அது வற்றாமலுமிருக்கின் றது' என்று நரி கூறியது. இதைக் கேட்ட ஆடு பரபரப்படை யாமல் கிணற்றுக்குள் குதித்தது. நரி தனது நண்பனின் கொம்புகளை அனுகூலமாக்கிக்கொண்டு இலாகவமாக வெளியே வந்தது.
'உனக்கு இருக்க வேண்டியதிலும் பார்க்க அரைவாசிப் புத்தி இருந்திருக்குமானால், கிணற்றுக்குள் குதிப்பதற்கு முன் ஒருமுறை சிந்தித்துப் பார்த்திருப்பாய்' என்று ஏமாற்ற மடைந்த ஆட்டுக்கு நரி கூறியது.
O
66

உலகத்து நாட்டார் கதைகள்
54. வலிமை
வில் வித்தையில் சிறந்த ஒரு வேட்டைக்காரன் ஒருநாள் மலைப் பிரதேசத்திற்கு வேட்டையாடச் சென்றான். அவன் காட்டிற்குள் வந்ததைக் கேள்விப்பட்ட காட்டு மிருகங்களுக்கு திடீரெனப் பெரும் திகில் ஏற்பட்டது. ஆனால் சிங்கம் மாத்திரம் வேட்டைக்காரனை எதிர்த்துப் போராடுவதற்கான தனது மன உறுதியை வெளிப்படுத்திய பொழுது "நில் என்னுடைய தூதுவன் வரும்வரை நீ பொறுத் துக் கொள். அவன் உனக்கு ஒரு சிறு விடயம் சொல்ல வேண்டியிருக்கிறது” என்று வேட்டைக்காரன் கூறியபடியே சிங்கத்தின்மீது தனது அம்பை எய்து அதைக் காயப்படுத்தி னான். சிங்கம் காயத்தினால் ஏற்பட்ட வலியைத் தாங்க முடியாமல் அடர்ந்த காட்டிற்குள் ஓடியது. சிங்கம் ஓடி வருவதைக் கண்ட ஒரு நரி அதைத் தடுத்து நிறுத்தி சிங்கத்திற்குத் தைரியமூட்டி எதிரியுடன் போராடும்படி கூறியது. 'முடியாது; என்னைப் போராடும்படி தூண்டாதே. வேட்டைக்காரன் அனுப்பிய அந்தத் தூதுவன் அவ்வளவு கூர்மையும் வலிமையுமுடையவனாக இருப்பதென்றால், அதை அனுப்பியவனுடைய வலிமை எவ்வாறானதாக இருக்கும்?’ என்று சிங்கம் கூறிக்கொண்டு ஒடித் தப்பியது.
Ο
67

Page 46
நீர்வை பொன்னையன்
55. ஆற்றாமை
ஒரு நாள் ஓநாய் ஒன்று, ஓர் ஆட்டைப் பிடித்துத் தன்னுடைய மறைவிடத்திற்குக் கொண்டு சென்றது. செல்லும் வழியில் ஒரு சிங்கம் எதிர்ப்பட்டு ஆட்டைப் பறித்துச் சென்றது. தனக்குச் சொந்தமான ஆட்டை சிங்கம் கொள்ளையடித்துச் செல்வது ஒரு அவமானகரமான செயல் என்று தூரத்தில் நின்ற சிங்கத்திற்குக் கேட்கக்கூடியதாக ஒநாய் உரத்துக் கத்திக் கூறியது. ‘உன்னுடைய சிறந்த நண்பனான இடையன் உனக்கு ஆட்டைச் சொந்தமாகத் தந்துள்ளான் என்று நான் நினைக்கிறேன்’ என கேலியாகச்
சிரித்துக்கொண்டே சிங்கம் ஒநாய்க்குக் கூறியது.
Ο
68
 

உலகத்து நாட்டார் கதைகள்
56. தக்க தண்டனை
கடுமையான குளிர்காலம். ஒரு பாம்பு கடுங்குளிரினால் விறைத்துச் சாகும் தறுவாயில் குற்றுயிராய்க் கிடந்தது. அவ் வழியால் சென்று கொண்டிருந்த ஒரு கிராமவாசி அப்பிராணி யின் அவல நிலையைக் கண்டு அனுதாபப்பட்டு, அதைத் தூக்கித் தனது மார்புடன் அனைத்துக் கொண்டு தன்னு டைய வீட்டுக்கு அதை எடுத்துச் சென்றான். அங்கு அந்தப் பாம்பின் உடலுக்கு உஷ்ணமேற்றுவதற்கு அதை அடுப்பங் கரையில் வைத்தான். சிறிது நேரத்தில் பாம்பின் உடலில் சூடேறி அது பழைய நிலைக்கு வந்தவுடன் அந்தக் கிராம வாசியின் பிள்ளைகளைத் தாக்கத் தொடங்கியது. கருணை யினால் எந்தக் கிராமவாசி பாம்பின் உயிரைக் காப்பாற்றி னானோ அவனே கடுஞ்சினம்கொண்டு ஒரு மண்வெட்டி யினால் அதே பாம்பை அடித்துக் கொலை செய்தான்.
O

Page 47
நீர்வை பொன்னையன்
57. விழிப்பு
ஒரு மனிதன் சில குரங்குகளை வளர்த்து வந்தான். குரங்கு எஜமான் என்று அவன் அழைக்கப்பட்டான்.
ஒவ்வொரு நாளும் அவன் தன்னுடைய குரங்குகள் எல்லாவற்றையும் வரிசையாக நிற்கச் செய்து, மலைப் பிரதேசத்திலுள்ள வித்துக்களை அவைகள் சேகரித்துக் கொண்டு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுவான். அத்துடன் ஒரு முதிய குரங்கை அவற் றுக்குப் பொறுப்பாக நியமித்திருந்தான். குரங்குகள் சேகரித் துக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்கின்ற வித்துக்களில் பத்தில் ஒரு பங்கு வித்துக்களை அவைகள் உண்பதற்கு அவன் கொடுத்து வந்தான். எஜமான் எதுவித வேலையும் செய்யாமலே ஒன்பது பங்கு வித்துக்களை அபகரித்து வந்தான். ஏதாவது ஒரு குரங்கு அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அக்குரங்கிற்குக் கடுமையான சாட்டை யடி கொடுப்பான். தண்டிக்கப்பட்ட குரங்கு அந்தச் சவுக்கடி யினால் பல நாட்கள் வேதனைப்பட வேண்டியிருக்கும். இதனால் குரங்குகள் எல்லாம் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்தாலும், துயரம் நிறைந்த வாழ்க்கையை அனுபவித் தாலும் தங்களது எஜமானுக்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுப்பதற்கு, அதாவது அவனது கட்டளையை மீறுவதற்குப்
பயப்பட்டன.
70

உலகத்து நாட்டார் கதைகள் 'இந்த மலைகளிலுள்ள மரங்கள் எல்லாவற்றையும் எங்களுடைய எஜமானா நட்டு வளர்த்தவர்?’
'இல்லை. அந்த மரங்கள் எல்லாம் தாமாகவே முளைத்து வளர்ந்தன" குரங்குகள் எல்லாம் ஒரே குரலில்
'அப்படியானால் அந்த மரங்களின் வித்துக்களை ஏன் நாங்கள் எல்லோரும் சேர்த்து அவருக்குக் கொடுக்க வேண்டும்? அவருடைய அனுமதியைப் பெற வேண்டும்?" குரங்குகள் சிந்திக்கத் தொடங்கின.
"நாங்கள் விரும்பினால் அதாவது வேண்டிய எவரும் மலைக்குச் சென்று வித்துக்களைச் சேகரிக்கலாம்தானே? அவருக்கு நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும்? அவருக்கு வித்துக்கள் தேவையென்றால் அவரே போய் அவற்றைச் சேகரிக்கலாம்தானே? அந்தச் சிறிய குரங்கு கேட்டது. குரங்குகள் எல்லாவற்றிற்கும் வியப்பு.
'நாங்கள் எல்லாரும் ஏன் எஜமானுக்கு கீழ்ப்படிந்து அடிமைகளாய்க் கஷ்டப்பட்டு வேலை செய்து, நாங்கள் சேகரித்த விதைகளை அவருக்கு வரியாய்க் கொடுக்க வேண்டும்?'அந்தச் சிறிய குரங்கு கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த எல்லாக் குரங்குகளுக்கும் அந்த சிறு குரங்கின் வார்த்தைகளில் உள்ள உண்மை புலப்படத் தொடங்கியது.
அன்று இரவு எஜமான் நித்திரை செய்து கொண்டிருக் கின்ற நேரத்தில் அவனுடைய களஞ்சியத்தை உடைத்து அதற்குள் இருந்த எல்லா வித்துக்களையும் கைப்பற்றின. அதன் பின்னர் அவைகள் எல்லாம் மலைப் பிரதேசத்திலுள்ள காட்டிற்கு தப்பி ஓடி விட்டன. எஜமான் அவைகளின் வருகையை எதிர்பார்த்திருந்து இறுதியில் செத்து மடிந்தான். Ο
71

Page 48
நீர்வை பொன்னையன்
58. போலி அன்பு
மனிதன் இறந்த பின்பு அவனுக்குத் தான் எதுவித தொந்தரவையும் கொடுக்காமல் அல்லது அவனுடைய உடலைக் கடித்துக் கிழித்துக் குதறாமல் இருப்பதைப் பிரஸ் தாபித்து, மனிதன் மீது தனக்குள்ள அளவு மீறிய அன்பைப் பற்றி பெருமிதமாய்க் கூறி டம்பமடித்தது ஒரு கரடி. 'நீ எப்பொழுதாவது உயிருடனிருக்கின்ற மனிதனைக் கடித்துக் கொன்று அவனுடைய உடலை உண்ணாமலிருந்திருப் பாயானால் உன்னுடைய அன்பு பற்றிய இக்கூற்றை நான் பெறுமதி மிக்கதாகக் கருதிக்கொள்வேன்’ என்று நரி
நிதானமாகக் கூறியது.
O
72
 

உலகத்து நாட்டார் கதைகள்
59. பேரரசை
ஒரு இறைச்சிக் கடைக்காரனுடைய கடையில் இறைச்சித் துண்டொன்றை ஒரு நாய் திருடியது. அது தனது வீட்டிற்குச் செல்வதற்கு ஒரு ஆற்றை நீந்திக் கடந்து கொண்டருந்தது. அப்பொழுது தண்ணீரில் அது தன்னு டைய நிழல் பிரதிபலிப்பதைக் கண்டது. இன்னுமொரு நாய்தான் மற்றொரு இறைச்சித் துண்டுடன் நிற்கின்றது என்று அந்த நாய் எண்ணி அந்த இறைச்சித் துண்டையும் பறித்தெடுப்பதற்கு அது முயற்சித்த பொழுது தன் வாயில் இருந்த இறைச்சித் துண்டை அந்த நாய் இழக்க நேரிட்டது.
Ο
73

Page 49
நீர்வை பொன்னையன்
60 கொக்கரிப்பு
இரண்டு சேவல்கள் மனிதர்களைப்போல மூர்க்கமாய்ச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இறுதியில் கடுமையாகக் காயமடைந்த சேவல் ஒரு கோழிக்கூட்டிற்குள் நுழைந்து பதுங்கி ஒளித்துக் கொண்டிருந்தது. சண்டையில் ஜெயித்த சேவல் பறந்து சென்று வீட்டுக் கூரையின் உச்சியில் இருந்து கொண்டு தன் வெற்றியை உலகத்திற்கு பிரகடனப்படுத்து வதற்கு தன் சிறகுகளை அடித்து உரத்துக் கூவிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஆகாயத்தில் பறந்து வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகு ஒன்று திடீரென கீழே பறந்து வந்து, கூவிக்கொண்டிருந்த சேவலை இறாஞ்சி, தூக்கிக் கொண்டு சென்றது. அதே வேளை தோல்வியுற்று ஒளித்துக் கொண்டிருந்த சேவல் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அவர்கள் எதற்காகச் சண்டையிட்டார்களோ அந்த மாட்டெருக் குவியலைத் தனது உடைமையாக்கிக் கொண்டது.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
61. பயம் தெளிந்தது
ஒரு தடவைகூடச் சிங்கத்தைப் பார்த்திராத நரி ஒன்று முதல் தடவையாக ஒரு சிங்கத்தைப் பார்க்க நேரிட்டது. அதைப் பார்த்தவுடன் நரி இறந்து போகுமளவுக்குப் பீதி கொண்டு வெருண்டு பதறியது. இரண்டாந் தடவை சிங்கத்தைப் பார்த்தபொழுது இன்னும் அதற்குப் பயமிருந் தாலும் அது பயத்தை வெளிக்காட்டாமல் சமாளித்துக் கொண்டது. மூன்றாவது தடவை சிங்கத்தைப் பார்த்த பொழுது நரி அதற்குக் கிட்டச் சென்று, 'நீ எப்படி இருக் கின்றாய்' என்று கேட்குமளவிற்கு நரிக்கு மனத் துணிவு ஏற்பட்டது.
O
75

Page 50
நீர்வை பொன்னையன்
62. தீர்க்கதரிசனம்
ஒரு பிரதம மந்திரி தனது சொந்த இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்குத் திக்விஜயத்தை மேற்கொண்டார்.
'உமது செளகரியத்திற்காக இந்த ஆற்றைக் கடப் பதற்கு நீர் அரசாங்க வேலைகளுக்காக உத்தியோக பூர்வ மாகப் பயன்படுத்தும் படகை நீர் உபயோகப்படுத்தலாம்." தன்னை வழிஅனுப்பி வைக்க வந்த ஒருவருக்கு பிரதம மந்திரி கூறினார்.
பிரதமரை வழி அனுப்பி வைக்க வந்தவர் உத்தியோக பூர்வப் படகை எடுப்பதற்குத் துறைமுகத்திற்குச் சென்றார். அங்கு துறைமுகப் பொறுப்பதிகாரி இருக்கவில்லை. அவர் எங்கோ சென்றுவிட்டார்.
துறைமுகத்தில் அநேக படகுகள் கட்டிவைக்கப்பட்டி ருந்தன. உத்தியோகபூர்வ படகு எது என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
'இங்கு கட்டப்பட்டிருக்கின்ற நூற்றுக்கணக்கான படகுகளில் உத்தயோகபூர்வ உபயோகத்திற்குரிய படகு எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?" துறைமுக அதிகாரி சிறிது நேரத்திற்குப் பின் வந்தபொழுது வினாவினார்.
சிதைந்த பின்கட்டுத் தளங்களையும் உடைந்த துடுப் புக்களையும்கொண்ட ஒருபடகு கட்டப்பட்டிருக்கின்றது.
"அதோ, அங்கே கட்டப்பட்டிருக்கின்றதே அதுதான் உத்தியோகபூர்வ அலுவல்களுக்குப் பாவிக்கப்படுகின்ற 76

உலகத்து நாட்டார் கதைகள் படகு' என்று அந்தச் சிதைவுற்ற பழைய படகைச் சுட்டிக் காட்டினார் துறைமுக அதிகாரி.
பயணம்செய்த இருந்தவர் உத்தியோகபூர்வ படகை இலகுவில் கண்டுபிடித்து விட்டார். ஆனால் ஆற்றைக் கடப் பதற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது அந்தப் படகு, அவர் ஒருவாறு சமாளித்து ஆற்றைக் கடந்து விட்டார். அந்தப் பழைய படகில் கரை சேர்ந்ததும் அவர் வானத்தை வெறித்துப் பார்த்தபடி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடியே தனக்குத்தானே கூறினார்.
'அரசாங்கம் மக்களை இந்த உத்தியோக்பூர்வ படகைப் போலத்தான் பாவிக்கின்றது. இது மக்களை வதைக்கின்றது. நிச்சயமாக இந்த அரசாங்கம் இகழ்ச்சிக்குரிய வகையில் தோல்வி அடையும்."
Ο
77

Page 51
நீர்வை பொன்னையன்
63. அளவு கடந்தால் . . .
ஒரு வியாபாரியின் கடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தேன் பானை சரிந்து விழுந்து உடைந்தது. அதிலிருந்து சிந்திய தேனை உண்பதற்கு தேனிக்கள் படையெடுத்து வந்து குவிந்து வேண்டிய மட்டும் அருந்திக் கொண்டி ருந்தன. இறுதித் துளி தேனைச் சாப்பிட்டு முடிக்கும் வரை அவை அந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தன. கடைசி யில் அவைகளின் கால்களிலிருந்த தேன் இறுகி அந்த இடத் திலேயே ஒட்டியதனால் தேனிக்களால் பறக்க முடிய வில்லை. ‘ஒரு மணி நேர சந்தோஷத்தை அனுபவிப்பதற் காக எங்களுடைய வாழ்வையே பறிகொடுத்துவிட்ட பரிதாபத்திற்குரிய பிராணிகளாகி விட்டோமே" என்று இனிமையான தேன் பானையில் ஒட்டித் திணறிக் கொண்டிருந்த தேனீக்கள் கூறி வருந்தின.
Ο
78
 

உலகத்து நாட்டார் கதைகள்
64. உண்மை கசக்கும்
ஒரு ஆரம்ப பாடசாலை வகுப்பறையில் இருந்து கொண்டு, ஒரு சிறிய கட்டுரையை எழுதுவதற்குத் தயார் செய்து கொண்டிருப்பதாக நான் கனவு கண்டு கொண்டிருந் தேன். அந்த நேரத்தில் ஒரு அபிப்பிராயத்தை கட்டுரையில் எப்படித் தெரிவிப்பது என்று ஆசிரியரிடம் கேட்கின்றேன்.
'அது மிகவும் கடிமையான விஷயம்’ தனது தடித்த மூக்குக் கண்ணாடிக்குள் ளால் பக்கவாட்டாக என்னைப் பார்த்துக்கொண்டு ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்.
'இது தொடர்பாக நான் ஒரு கதையைச் சொல்கின் றேன்’ என்று அவர் கதை கூறத் தொடங்குகின்றார். கதையைக் கேட்கும் ஆவலுடன் நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
“ஒரு குடும்பத்தில் ஒரு ஆண்குழந்தை பிறக்கும் பொழுது, முழுக் குடும்பமுமே ஆனந்தப்படுகின்றது. அந்தக் குழந்தைக்கு ஒரு வயது வந்தபொழுது விருந்தினர்களுக்குக் காட்ட அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வருகின் றார்கள். அவர்களுடைய பாராட்டுதல்களைப் பெறுவதுதான் அவர்களது நோக்கமாக இருக்கின்றது.
‘இந்தக் குழந்தை பெரும் செல்வந்தனாக வரும்’ என்று ஒருவர் கூறுகின்றார். இப்படிக் கூறியவருக்குச் சன்மானம் வழங்கி அவருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் அக்குழந்தையின் குடும்பத்தினர்.
79

Page 52
நீர்வை பொன்னையன்
'இந்தக் குழந்தை ஒரு பெரிய அதிகாரியாக வரும்’ என்று மற்றொருவர் கூறுகின்றார். அவருக்கும் சன்மானங்கள் வழங்குகின்றனர் குழந்தையின் குடும்பத்தினர்
'இந்தக் குழந்தை ஒருநாள் இறக்கும்’ என்று இன் னொருவர் கூறுகின்றார். அப்பொழுது அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவரைத் திட்டி அவரைக் கடுமையாக அடித்து உதைக்கின்றனர்.
'அந்தக் குழந்தை என்றாவது ஒருநாள் இறப்பது நிச்சயம். இது முற்றிலும் உண்மை. ஆனால், அந்தக் குழந்தை செல்வந்தனாக இருக்கும் அல்லது ஒரு பெரும் அதிகாரியாக வரும் என்பது சிலவேளை நடக்கக்கூடும் அல்லது நடக்காமலுமிருக்கலாம். அப்படியிருந்தும் ஒரு சந்தோஷமான விஷயத்தை அல்லது பொய்யைக் கூறி யவர்கள் சன்மானங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படு கின்றனர். ஆனால் உண்மை கூறியவருக்கு அடி உதைகள் கிடைக்கின்றன.”
"ஆனால் நீ! நீ என்ன சொல்ல விரும்புகின்றாய்? ஆசிரியர் என்னைக் கேட்கின்றார். "நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அதே வேளை நான் அடி உதைகளை வாங்குவதற்கும் தயாரில்லை. அப்போ நான் என்ன கூறுவது?"
"அப்படியென்றால் ஆ! அப்படியென்றால் பார்! எனது வார்த்தைகள். ஒ எனது? ஒ! அது. அது வந்து அந்தக் குழந்தை குழந்தைதான்!"
Ο
8O

உலகத்து நாட்டார் கதைகள்
65. எட்டாப் பழம்
ஆதிகாலத்தில் ஒட்டகம் தனக்குக் கொம்புகளைத் தந் துதவும்படி வியாழத் தெய்வத்தை வேண்டித் துதி செய்தது. ஏனெனில் ஏனைய மிருகங்களுக்குக் கொம்புகள் வழங்கப் பட்டுள்ளன. அக்கொம்புகள் தனக்கு இல்லை என்று ஒட்ட கத்திற்குத் துக்கமாக இருந்தது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்படி வியாழனைப் பிரார்த்தித்துக் கேட்டது. ஆனால் வியாழன் ஒட்டகத்திற்குக் கொம்புகளைக் கொடுக்க மறுத்தது மாத்திரமல்ல, அது கொடுத்த தொந்தரவுக்காக அத னுடைய காதுகளையும் துண்டித்துக் குறுகிய காதுகளாக்கி விட்டது.
Ο
8

Page 53
நீர்வை பொன்னையன்
66. மாதுளை - அப்பிள் - முட்புதர்
மாதுளம் பழத்திற்கும் அப்பிள் பழத்துக்குமிடையில் அழகு பற்றி ஒரு போட்டி நடைபெற்றது. இரண்டுக்குமிடை யில் வார்த்தைகள் உச்சக் கட்டத்தையடைந்தன. ஒரு பயங்கர கட்டத்தையடைந்த பொழுது சமீபத்திலுள்ள ஒரு முட் புதர் தனது தலையை நீட்டி, ‘நீங்கள் வாக்குவாதப் பட்டது போதும், மேற்கொண்டு எமக்கிடையில் இனிமேல் போட்டி இருக்க வேண்டாம்” என்று கூறியது.
Ο
82
 

உலகத்து நாட்டார் கதைகள்
67. மாற்றம்! மாற்றம்!
தனக்கு நல்ல அளவாகப் பொருந்தக் கூடிய சிறிய மேலங்கி ஒன்றைத் தயாரித்துத் தரும்படி சந்திரன் தனது அம்மாவைக் கேட்டது.
‘'நீ இப்பொழுது பூரண சந்திரனாய் இருப்பாய். பின்னர் பாதிப் பிறைச் சந்திரனாயிருப்பாய். அதன்பின், அதுவுமின்றி இதுவுமின்றி ஒன்றுமேயல்லாமலிருப்பாய். உனக்கு என் னால் எப்படி ஒரு அளவான மேலங்கியைத் தயாரித்துத் தர முடியும்?’ என்று தாய் சந்திரனைக் கேட்டது.
Ο
83

Page 54
நீர்வை பொன்னையன்
68. வேட்டை நாய்
ஒரு வேட்டை நாய் இளமையாயிருந்த காலத்தில் தலை சிறந்ததாக இருந்தது. வேட்டையாடும்பொழுது தனது எஜமானுக்கு மிகத் திறமையாகச் சேவையாற்றி உதவியது. காலம் செல்லச் செல்ல, கடும் உழைப்பினாலும், வயோதிபத் தினாலும் அதனுடைய உடல்நிலை தேய்ந்து பலவீனமான தாகிவிட்டது. ஒரு நாள் காட்டுப்பன்றியொன்றுடைய காதைக் கெளவிப் பிடித்தது அந்த நாய். அதனுடைய பற்கள் ஆட்டம் கண்டிருந்தடியால் நாயின் பிடி தளர, பன்றி தப்பி ஓடிவிட்டது. இதனால் கோபமடைந்த வேட்டைக்காரன் கடுைைமயாகக் கண்டித்ததுடன் தண்டனையும் கொடுத் தான். 'உங்களுடைய வயோதிப ஊழியனான என்னை மன்னித்து விடுங்கள்! என் உடல் பலம் குன்றி விட்டதே யொழிய என்னுடைய மன உறுதி குறையவில்லை. நான் இப்பொழுது எப்படி இருக்கின்றேன் என்பதையல்ல, நான் முன்பு எப்படி இருந்தேன் என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்’ என்று தனது எஜமானுக்கு அந்த வேட்டை நாய் கூறியது.
Ο
84

உலகத்து நாட்டார் கதைகள்
69. கிறிச்சிடும் சக்கரங்கள்
ஒரு கரடு முரடான றோட்டில் பாரவண்டி ஒன்றை எருது மாடுகள் இழுத்துச் செல்கின்ற வேளை, அதன் சக்கரங்கள் கிறீச்சிட்டுப் பெரும் சத்தம் எழுப்பிக் கொண்டி ருந்தன. "இந்தப் பாரத்தை இழுத்துச் செல்பவர்கள் சத்தம் போடாமல் மெளனமாய்ச் சென்று கொண்டிருக்கும் பொழுது காட்டுமிராண்டிகளே! நீங்கள் ஏன் சத்தம் போடுகின்றீர்கள்?" என்று சக்கரங்களைக் கேட்டான் வண்டிக்காரன்.
Ο
85

Page 55
நீர்வை பொன்னையன்
70. நயவஞ்சனை
ஒரு கோழி சுகவீனமுற்றிருக்கின்றது என்பதை அறிந்த பூனை தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதற்கு, கோழிக் கூட்டுக்குச் சென்றது.
'எனது அருமை நண்பனே, உனது சுகம் எப்படி? உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? உனக்கு என்ன தேவை? நீ சொன்னால் போதும். அது இந்த உலகத்தில் எந்தப் பகுதியிலிருந்தாலும் நான் உனக்குக் கொண்டு வந்து தருவேன். ஆனால் நீ உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். நீ ஒன்றுக்கும் அஞ்சத் தேவையில்லை’ மெதுவாகக் கோழிக் கூட்டுக்கருகில் சென்று கூறியது.
'மிக்க நன்றி. நீ இந்த இடத்தைவிட்டுப் போனால் போதும். எனக்கு எதுவித அச்சமுமில்லை. நான் விரைவில் சுகம் அடைந்து விடுவேன்’ என்று கோழி கூறியது.
Ο
86
 

உலகத்து நாட்டார் கதைகள்
71. மலைகளை அகற்றிய
மூடக் கிழவன்
ஆயிரக்கணக்கான அடிகள் உயரமுள்ள மூன்று மலை கள் இருந்தன. இந்த மலைகளுக்கு வடக்கேயுள்ள ஒரு கிராமத்தில் தொண்ணுறு வயதுடைய ஒரு முதியவர் இருந்தார். அந்தக் கிராமத்திலுள்ளவர்கள் அவரை மூடக் கிழவன் என்று அழைத்தனர்.
முதியவர் வசித்த கிராமத்தில் வசிப்பவர்கள் அயல் கிராமத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இந்த மலை களைச் சுற்றித்தான் செல்லவேண்டும். இது அவர்களுக்குப் பெரும் சிரமமாயிருந்தது. இந்த விவகாரம் பற்றி ஆலோசிப் பதற்கு அந்த முதியவர் தனது குடும்பத்தவர்களை ஒன்று
கூடமடினாா.
'இந்த மலைகள் மூன்றையும் வெட்டித் தகர்த்து இவற்றை அகற்றித் தரையை சமப்படுத்தனால், தெற்குப் புறத்திலுள்ள கிராமத்துக்கு ஒரு பாதையை அமைக்க முடியும். இதனால் எதிர்காலத்தில் எல்லோரும் நன்மை யடைய முடியும். இதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உழைக்க வேண்டும்’ என்று அந்த முதியவர் கூறினார். அவருடைய ஆலோசனைக்கு எல்லோரும் உடன் பட்டனர். ஆனால் அவருடைய மனைவி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
87

Page 56
நீர்வை பொன்னையன்
‘ஒரு சிறிய குன்றைத்தானும் வெட்டி மட்டம் செய் வதற்கு இந்த வயோதிப காலத்தில் உனக்குப் போதிய உடற் பல மில்லை. அப்படியிருக்கும்பொழுது இந்தப் பெரிய மூன்று மலைகளையும் உன்னால் எப்படி வெட்டி அவற்றை இல்லாமல் செய்ய முடியும்?’ என்று மனைவி முதியவரைக் கேட்டாள்.
'நாங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்தால் இலகுவில் மலைகளை அகற்றிவிட முடியும்’ என்றார் முதியவர்.
“நாங்கள் வெட்டி எடுக்கின்ற மண்ணையும் கற்பாறை களையும் என்ன செய்வது? எங்கே போடுவது?’ மீண்டும் மனைவி கேட்டாள்.
“அவை எல்லாவற்றையும் கடலுக்குள் போடுவோம்’ முதியவர் விட்டுக்கொடுக்காமல் கூறினார்.
உடனே மூடக் கிழவனும் அவரது மகனும் பேரப் பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து மலைகளை வெட்டத் தொடங்கினர். அவர்கள் வெட்டுகின்ற மண்ணையும் கற் களையும் கூடைகளில் நிரப்பிக்கொண்டு சென்று கடலுக் குள் கொட்டினர்.
அப்பொழுது அயல் வீட்டிலுள்ள ஒரு விதவையின் ஏழு வயதுச் சிறுவன் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்தான். அவர்கள் மண்ணையும் கல்லையும் ஒரு தடவை கடலுக்கு எடுத்துச் சென்று கொட்டிவிட்டுத் திரும்பி வருவதற்குப் பல மாதங்கள் பிடித்தன.
அந்தக் கிராமத்தலுள்ள ஒரு புத்திசாலி அவர்களைக் கேலி செய்து இந்த முட்டாள்தனமான வேலையைக் கை விடும்படி புத்தி கூறினார். ஆனால் இதற்கு மூடக்கிழவன் ஒரு பெருமூச்சுவிட்டு விட்டுப் பின்வருமாறு கூறினார்.
‘'நீ ஒரு சோம்பேறி. இந்த விதவையின் ஏழு வயது டைய மகனுக்கு இருக்கின்ற அறிவுதானும் உனக்கில்
88

உலகத்து நாட்டார் கதைகள் லையே. இந்த மலைகளை வெட்டி அகற்ற முன்பே நான் இறந்துவிடக்கூடும். ஆனால் எனது மகன் இருக்கின்றான். அவன் என்னுடைய வேலையைத் தொடர்ந்து செய்வான். அவனுக்குப் பின்னர் அவனுடைய மகன் அந்த வேலையைத் தொடர்வான். இப்படியே தலைமுறை தலைமுறையாக எமது சந்ததியினர் இந்த மூன்று மலைகளையும் தொடர்ந்து வெட்டிக் கொண்டேயிருப்பர். ஆனால் இந்த மூன்று மலை களும் வளரவே முடியாது. வெட்ட வெட்ட அவைகள் குறைந்து கொண்டே போகும். ஒரு காலத்தில் இவை இல்லா மலேயே போய்விடும். ஆகவே நாங்கள் எங்கள் வேலை யைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்போம்’ முதிய வருடைய வார்த்தைகளில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தது.
புத்திசாலிக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. அவ்விடத்தை விட்டகன்றான்.
Ο
89

Page 57
நீர்வை பொன்னையன்
72. குட்டுப்பட்டாலும் . . .
ஓர் ஓநாயினால் துரத்திச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்று பாதுகாப்புத் தேடி ஒரு கோயிலுக்குள்ளே புகுந்தது.
"நீ கோயிலுக்குள்ளேயிருந்தால், புரோகிதர் உன்னைப் பிடித்துக் கொன்றுவிடுவார். நீ உயிர் வாழ வேண்டுமென் றால் வெளியே வந்துவிடு”
ஆட்டுக்குட்டியை வெளியே வரும்படி கூப்பிட்டது ஒநாய்.
'அப்படியே நடக்கட்டும். உன்னால் கடித்துக் குதறப் பட்டு இறப்பதிலும் பார்க்க தெய்வத்திற்குப் பலியாவது மிகச் சிறந்தது” என்று ஆட்டுக்குட்டி ஓநாய்க்குக் கூறியது.
Ο
90
 

உலகத்து நாட்டார் கதைகள்
73. போகத் தகாத இடம்
ஒரு கடற்பறவை திடீரெனப் பாய்ந்து ஒரு மீனைப் பிடித்து விழுங்குவதற்கு முயற்சிக்கையில், மீன் அதன் தொண்டைக்குள் சிக்கி கடற்பறவை மூச்சுத் திணறி, கப்பல் தளத்தில் சாகும் தறுவாயில் கிடந்தது. அந்த வழியே சென்று கொண்டிருந்த ஒரு பருந்து கடற்பறவையின் அவல நிலை யைக் கண்டது. கடற்பறவைக்கு உதவி செய்யாமல் "உனக்கு வேணும்; இந்தத் தண்டனை உனக்கு வேணும். வான் பறவையாகிய நீ எதற்காக கடலிலுள்ள மீன்களுடைய விசயத்தில் தலையிடுகின்றாய்?’ என்று கூறி விட்டுச் சென்றது பருந்து.
91

Page 58
நீர்வை பொன்னையன்
74. குருட்டுச் சிந்தனை
வெட்டுக்கிளியின் கீச்சொலியைக் கேட்ட கழுதை அதன் இன்னிசையால் மகிழ்ச்சியடைந்தது. ‘இவ்வளவு இனிமையாகப் பாடுவதற்கு என்ன உணவை நீங்கள் அருந்துகிறீர்கள்?’ என்று வெட்டுக்கிளிகளைக் கேட்டது கழுதை. தாங்கள் பனித்துளிகளை மாத்திரம்தான் அருந்து வதாக வெட்டுக்கிளிகள் கூறின. கழுதை அதேமாதிரி, பனித் துளிகளை மாத்திரம் உண்பதை மேற்கொண்டு விரைவில்
பட்டினியால் செத்து மடிந்தது.
Ο
92
 

உலகத்து நாட்டார் கதைகள்
75. தந்திரம்
ஒரு நாய்க்கும் ஒரு சேவலுக்கும் நட்பு ஏற்பட்டது. அவையிரண்டும் ஒன்றாகப் பயணத்தை மேற்கொண்டன. இரவு வந்தபொழுது அவையிரண்டும்ஒரு காட்டின் மத்தியில் தாங்கள் நிற்பதை உணர்ந்தன. சேவல் ஒரு மரத்தில் பறந்து ஏறிக் கிளைகளுக்கு மத்தியில் தங்கியது. அதேவேளை நாய் ஒரு மரத்தின் அடியில் நித்திரை செய்தது. விடிந்து கொண்டு வரும்பொழுது சேவல் தன் பழக்கத்தின்படி உரத்த குரலில் கூவியது. சேவலின் கூவல் சத்தம் ஒரு நரிக்குக் கேட்டது. சேவலைப் பிடித்துத் தின்னும் நோக்கத்துடன் நரி சேவல் இருந்த மரத்தின்கீழ் வந்து நின்றது.
‘'நீ ஒரு அழகான சிறிய பறவை. சக பிராணிகளுக்கு நீ எப்பொழுதும் உதவுபவன். நீ கீழே இறங்கி வா. நாம் இரு வரும் ஒன்றாகப் பாடி மகிழ்வோம்" என்று சேவலை அழைத் தது நரி,
“என் அருமை நண்பனே! அந்த மரத்தடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆளை எழுப்பி அழைத்து வா!' என்று சேவல் நரிக்குக் கூறியது. தூங்கிக் கொண்டி ருந்த அந்த ஆளை நரி எழுப்பியபோது, நாய் திடீரென நரியைப் பிடித்துக் கடித்துக் கொன்றது.
Ο
93

Page 59
நீர்வை பொன்னையன்
76. நரபலி
ஓர் இளவரசன் அயல்நாடு ஒன்றின்மீது படையெடுத் துத் தாக்குவதற்குத் தீர்மானித்தான். தனது பிரஜைகளில் எவராவது இதற்கு எதிர்ப்புக் கிளப்பினால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தான். இளவரசனின் அரண்மனை மேற்பார்வையாளன் தன்னுடைய எஜமானது முடிவை எதிர்க்க எண்ணினான். ஆனால் அவனுக்கு அப்படிச் செய்யத் துணிவில்லை. இதற் குப் பதிலாக அவன் ஒரு கவண் கயிற்றையும் சிறு கற்களை யும் எடுத்துக்கொண்டு அரண்மனைக்குப் பின்புறமாகவுள்ள தோட்டத்திற்குச் சென்றான். அதிகாலையில் அவனுடைய உடை, பனியில் நனைந்து ஈரமாகுமட்டும் அவன் அலைந்து திரிந்தான். மூன்று நாட்களாக அதிகாலையில் அவன் இப்படி யே திரிந்தான்.
‘பனியில் உனது உடை ஈரமாகும் வரை அதிகாலை யில் தோட்டத்தில் நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?” இளவரசன் அவனை வினவினான்.
அரண்மனை மேற்பார்வையாளன் கூற ஆரம்பித்தான். "அதோ தோட்டத்தில் ஒரு மரம் இருக்கின்றது." அவன் இழுத்து நிறுத்தினான். 'சரி கூறு' இளவரசன் அவனை அச்சுறுத்தினான். 'அந்த மரத்தில் ஒரு சில்வண்டு இருக்கின்றது. அதற் குப் பின்னால், அந்த வண்டை இரையாகப் பிடிப்பதற்கு ஒரு
94

உலகத்து நாட்டார் கதைகள் கும்பிடு பூச்சி இருப்பதை அறியாமல் சில்வண்டு ரீங்கார மிட்டுக் கொண்டு பனித்துளிகளைப் பருகிக் கொண்டிருக் கின்றது. அந்தக் கும்பிடு பூச்சிக்குப் பின்புறமாக ஒரு சிட்டுக் குருவி இருப்பதை அறியாமல் அந்தச் சில்வண்டை இரை யாகப் பிடிப்பதற்கு தனது இரண்டு முன்னங்கால்களையும் உயர்த்திக்கொண்டு கும்பிடு பூச்சி முன்னுக்குக் குனிந்த படியே தயார் நிலையில் இருக்கின்றது."
“அதற்கு நீ ஏன் பனியில் நனைந்து கொண்டு அலைய வேண்டும்?"
இளவரசன் ஒன்றும் புரியாமல் அவனைக் கேட்டான்.
‘இரை தேடிப் பொறுமையுடன் காத்திருக்கின்ற கும்பிடு பூச்சியைக் கழுத்தில் கெளவிப் பிடிக்கக் காத்திருக் கின்ற சிட்டுக்குருவி, தன்னைக் கவண் கல்லால் அடித்து வீழ்த்துவதற்கு ஒரு மனிதன் தயார் நிலையில் நிற்கின்றான் என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை. தங்களுக்குப் பின் னால் உள்ள பேராபத்தை உணர்ந்து கொள்ளாமல் தமக்குப் பின்புறமாக இருக்கின்ற ஒன்றின்மூலம் இலாபம் பெறு வதற்கு ஆவலாக இருக்கின்றன இந்த மூன்று சிறிய பிராணிகளும்."
‘நன்றாய் எடுத்துக் கூறினாய்’
இளவரசன் நன்றியுணர்வுடன் தனது அரண்மனை மேற்பார்வையாளனைப் பார்த்துக் கூறினான்.
தனக்கு நேர இருக்கின்ற பேராபத்தை உணர்ந்த இள வரசன், அயல்நாட்டின் மீது படையெடுத்து முற்றுகையிடு வதற்கான தனது திட்டத்தைக் கைவிட்டான்.
Ο
95

Page 60
நீர்வை பொன்னையன்
77. தன்னால் முடியாததை . . .
'குழந்தாய்! நீ ஏன் வளைந்து வளைந்து நடக்கின் றாய்? நேராக நிமிர்ந்து நட' என்று தனது குஞ்சுக்குக் கூறியது ஒரு நண்டு.
'அம்மா, எப்படி நடக்க வேண்டும் என்று காட்டு பார்ப்போம். நீ நிமிர்ந்து நடக்கிறதைப் பார்க்கும்பொழுது நானும் உன்னைப் பின்பற்றி நிமிர்ந்து நடப்பதற்கு முயலு வேன்’ என்று குஞ்சு நண்டு தனது தாய்க்குக் கூறியது.
Ο
96
 

உலகத்து நாட்டார் கதைகள்
78. வாக்குறுதிகள்
பணக்கஷ்டம் ஏற்பட்ட ஒருவன் தனது நண்பனிடம் தானிய உதவி கேட்டுச் சென்றான். நண்பனோ ஒரு பிரபு.
'நல்லது; நான் உனக்கு உதவுவேன். நான் தானிய வரி வசூலிக்க இருக்கின்றேன். அது வசூலித்து முடிந்ததும் நான் உனக்கு நூறு தங்கக்கட்டிகள் தருவேன். சரிதானே? பிரபு பெருமையுடன் கூறினான்.
உதவி கேட்டு வந்தவனுக்கு வெறுப்பும் கடுங்கோபமும் ஏற்பட்டது. அவன் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு பின் வருமாறு கூறினான்.
‘நேற்று நான் இங்கு வரும் வழியில் என்னை யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. நான் சுற்றுமுற்றும் பார்த்த பொழுது, சாலையிலுள்ள ஒரு வரண்ட குழியில் ஒரு நண்டு கிடப்பதைக் கண்டேன்."
'நண்டே! நீ இங்கு எப்படி வந்தாய்? நான் வினவி னேன்.
"நான் கிழக்கேயுள்ள சமுத்திரத்தைச் சேர்ந்தவன். என் னைக் காப்பாற்றுவதற்கு ஒரு பீப்பா தண்ணிர் தருகின் றாயா?’ என்று நண்டு களைத்துச் சோர்ந்தபடியே கேட்டது. “சரி; நான் கிழக்குத் தேசத்திலுள்ள இளவரசனிடம் மிக விரைவில் செல்ல இருக்கின்றேன். அவருடைய அனுமதி கிடைத்த உடனே மேற்குத் தேசத்திலுள்ள ஆற்றிலிருந்து உனக்கு வேண்டியளவு தண்ணிரைத் தருகின்றேன்’ என்று
கூறினார்.
97

Page 61
நீர்வை பொன்னையன்
நண்டு வேதனையுடன் கூறியது, 'நான் வாழ்வதற்கு அத்தியாவசியமான நீரிலிருந்து வெளியே எடுத்து அப்புறப் படுத்தப்பட்டிருக்கின்றேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு பீப்பா தண்ணிரை நீ தந்தால் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், நீ எனக்கு வெறும் வாக்குறுதியை மட்டும் தருகின்றாய். நீ எனக்கு உதவத் தவறினால், என்னை நீ மீன் சந்தையில்தான் பார்க்க (1plգեւյմ).''
'இதயமற்றவர்களுக்கு எதைக் கூறினாலும் அவர்களு டைய மண்டையில் ஏறவா போகின்றது?’ என்று பிரபுவுக்குக் கூறினான்.
இக்கதையைக் கேட்ட பிரபு, ஒன்றுமே தெரியாதவர் போல் உதவி கேட்டு வந்த நண்பனை அலட்சிய பாவத் துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
"நான் இந்த இரக்கமற்றவனிடம் ஏன் வந்தேன்’ என்று நினைத்தபடியே வெளியேறினான்.
Ο
98
 

உலகத்து நாட்டார் கதைகள்
79. கழுகும் அம்பும்
ஒரு வேட்டைக்காரன் கழுகு ஒன்றின்மீது குறிவைத்து அதனுடைய இதயத்தில் அம்பால் தாக்கினான். அடிபட்ட கழுகு மரணவேதனையில் தனது தலையைத் திருப்புகை யில், தன்னுடைய சொந்த இறகுகளாலேயே அம்புக்குச் செட்டை கட்டப்பட்டிருப்பதைக் கண்டது. ‘எங்களால் வழங்கப்பட்ட ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் எவ்வளவு ஆழமானவையாகவும் எங்களுக்கு வேதனை தருவனவாகவு மிருக்கின்றன’ என்று கழுகு தனக்குத்தானே கூறி விசனப்
. لقيـا بـالا
O
99

Page 62
நீர்வை பொன்னையன்
80. எதிர்பார்ப்பு
ஒரு நாள் ஒரு ஞானி, இளவரசன் ஒருவனைப் பார்க்கச் சென்றார். அவரது உடை மிகவும் கந்தலாக இருந்தது.
‘மகானே! நீங்கள் இந்த அலங்கோலமான, அருவருப் பான வெறுக்கத்தக்க உடையில் வந்திருக்கின்றீர்களே, என்ன காரணம்?"
ஞானியைப் பார்த்துக் கேட்டான் இளவரசன். 'இந்த உடையிலும் பார்க்க மிக இழிவான, வெறுத் தொதுக்கத்தக்க உடைகள் இருக்கின்றனவே ஞானி கவலையுடன் கூறினார்.
'அந்த உடைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? அவைகள் யாவை?’ இளவரசன் கேட்டான்.
“அவைகள்தான் போர்க்கவசங்கள். உலகில் வெறுத்து ஒதுக்கத்தக்கவை அந்த உடைகள்தான்.'
இளவரசன் ஒன்றும் புரியாமல் கேட்டான். ‘பனிக் காலத்தில் குளிராக இருக்கின்றது. கோடை காலத்தில் வெப்பமாக இருக்கின்றது. காலத்துக்குத்தக்க உடைகளை அணிகின்றோம்.
ஆனால் போர்க்கவசங்கள் மக்களைக் கொல்லும் நோக்குடன் பாவிக்கப்படுகின்றன. ஆகவே, போர்க்கவசங் களிலும் பார்க்க, கேடுகெட்ட உடைகள் எவையுமில்லை. நான் வறியவனாக இருப்பதால் எனது உடைகள் கந்தலாக
100

உலகத்து நாட்டார் கதைகள் இருப்பது இயற்கை. ஆனால் பத்தாயிரம் யுத்த இரதங் களையும் அளவற்ற செல்வங்களையும் வைத்திருக்கின்ற ஒரு இளவரசர் நீங்கள். அப்படியிருந்தும், மனிதர்கள் இந்தக் கேடுகெட்ட போர்க்கவசங்கள் அணிவதை நீங்கள் விரும்பு கின்றீர்களே. இதை என்னால் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை நீங்கள் புகழை விரும்புகின் றிர்களோ? இதனால் எத்தனை மனிதர்களுடைய தலைகள் வெட்டிக் கொல்லப்படுகின்றன! அவர்களுடைய உடல்கள் குத்திக் கிழிக்கப்பட்டுக் குதறப்படுகின்றன. எண்ணற்ற பெரியவர்களும் சிறியவர்களும் வதைக்கப்பட்டுக் கொல்லப் படுகின்றார்கள். கேவலம் வெறும் புகழுக்காக போர்க்கவசங் களை அணிந்து கொண்டு யுத்தத்தை செய்ய விரும்புகின் றிர்கள். இதிலும் பார்க்கக் கேவலமான, இழிவான செயல் வேறு என்ன இருக்க முடியும்? இல்லாவிட்டால் நீங்கள் இதனால் வேறு என்ன இலாபத்தை எதிர்பார்க்கின்றீர்கள்? நீங்கள் பிறருக்குத் தீங்கு செய்ய நினைத்தால் அவர்கள் உங்களுக்குத் தீங்கு செய்ய முனைவார்கள்தானே? நீங்கள் அவர்களுடைய உயிர்களுக்குப் பேராபத்தை உண்டாக் கினால் அவர்கள் உங்களுடைய உயிருக்கு தீங்கு விளைவிப் பார்கள். யுத்தத்தின் மூலம் பிறருக்கும் உங்கள் சொந்த மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதைத் தவிர நீங்கள் வேறு எந்த இலாபத்தையும் அடையமுடியாது. நான் உங்களைப் போல அதிகாரத்திலிருந்தால் எக்காரணத்திற்காகவும் யுத்தம் செய்ய மாட்டேன்."
ஞானி ஆணித்தரமாகக் கூறினார்.
இளவரசனால் இதற்கு ஒன்றுமே கூற முடியவில்லை. Ο
1 O1

Page 63
நீர்வை பொன்னையன்
81. கழிவிரக்கம்
ஒரு சிங்கமும் கரடியும் இறந்த ஒரு மானுடைய பிரேதத்தைக் கண்டன. அந்தப் பிணம் யாருக்கு உரியது என்பதை நிலைநாட்டுவதற்காகச் சிங்கமும் கரடியும் நீண்ட நேரம் சண்டையிட்டன. இந்த மோதல் உக்கிரமாக இருந் ததால் அவை இரண்டும் எதற்காக மோதிக் கொண்டனவோ, அதைத் தொடக்கூட முடியாதளவுக்கு இரண்டும் களைத்து, சக்தியிழந்து, உயிர்போகும் தறுவாயில் மூச்சிரைத்துக் கொண்டு கிடந்தன. அவ்வேளையில் அந்த வழியால் ஒரு நரி வந்து கொண்டிருந்தது. சண்டையிட்டு சக்தியிழந்து ஆதரவற்ற நிலையில் கிடந்த அந்த இரு மிருகங்களுக் கிடையிலிருந்த மானுடைய பிரேதத்தை நரி இழுத்துச் சென்றது. ‘ஒரு அயோக்கியனுக்கு இரவு உணவைக் கொடுப்பதற்காக, ஒருவருடன் ஒருவர் மோதி ஒருவரை யொருவர் காயப்படுத்தி எமது சக்தி அனைத்தையும் இழந்து போயிருக்கின்ற பரிதாபத்துக்குரிய பிராணிகளாக நாம் இருக் கிறோம்’ என்று அவை தமக்குத் தாமே கூறிக் கொண்டன.
O
 

உலகத்து நாட்டார் கதைகள்
82. யதார்த்தம்
‘அம்மா என்னால் பார்க்க முடியும்!" என்று ஒரு மூஞ் சூறுக் குஞ்சு தனது தாய்க்குக் கூறியது. உடனே தாய் ஒரு சாம்பிராணிக் கட்டியைக் குஞ்சுக்கு முன்னால் வைத்து விட்டு, 'இது என்ன என்று சொல்லு பார்ப்போம்’ என்று கேட்டது. "இது ஒரு கல்லு' குஞ்சு கூறியது. 'ஓ! என் அருமைக் குழந்தையே, உன்னால் பார்க்க முடியாதது மாத்திர மல்ல, உன்னால் முகர்ந்து பார்த்து மணத்தைக்கூடச் சொல்
முடியவில்லை’ என்று தாய் மூஞ்சூறு கூறியது.
O
103

Page 64
நீர்வை பொன்னையன்
83. அடிமைத்தனம்
கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புறா ஒன்று தன்னுடைய குடும்பத்தில் பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று எண்ணிப் பெருமிதப் பட்டது. 'ஓ, அற்பப் பிராணியே, இதற்காகப் பெருமைப் படுவதை நிறுத்து. நீ எவ்வளவுக்கு எவ்வளவு குஞ்சுகளை வைத்திருக்கின்றாயோ, அவ்வளவு குஞ்சுகளும் அடிமை களாய், கொடுமையாய் நடத்தப்படுகின்றார்கள்’ என்று காகம் கூறியது.
Ο
O4.
 

உலகத்து நாட்டார் கதைகள்
84. கருணை
யுத்த காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு கொம்பு ஊதுபவன், தன்மீது கருணை காட்டும்படி மன்றாடினான். "அன்புள்ள கண்ணியவான்களே, என்னை விட்டு விடும்படி உங்களை மன்றாட்டமாகக் கேட்கின்றேன். எந்தக் காரணமு மில்லாமல் என்னைக் கொல்லாதீர்கள். நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. ஒருவரைத்தானும் கொல்லவில்லை. இந்தக் கொம்பு வாத்தியக் கருவியை மாத்திரம்தான் வைத்தி ருக்கிறேன். இந்த வாத்தியத்தைத்தான் நான் யுத்த களத் தில் ஊதினேன்’ என்று பணிவாகக் கூறினான். 'அதே கார ணத்திற்காகத்தான் உன்னைச் சிறைப்பிடித்து, தண்டனை யாகக் கொல்லப் போகின்றோம்’ என்று அவனைச் சிறைப் பிடித்தவர்கள் கூறினார்கள். 'நீ மிக விரைவில் சாகப் போகின் றாய். ஒருவரையும் நீ கொல்லவில்லைத்தான். சண்டை பிடிப்பதற்கு உற்சாகமில்லாத நீ, சண்டை பிடித்து இரத்தம் சிந்தி ஆட்களைக் கொல்வதற்கு உனது வாத்தியத்தை ஊதி மற்றவர்களுக்கு உற்சாகமூட்டித் தூண்டி விட்டாயே. அந்தக் குற்றத்திற்காகத்தான் உன்னைத் தண்டிக்கின்றோம்’ என்றார்கள்.
Ο

Page 65
நீர்வை பொன்னையன்
85. மடியில் கனம்
சில வாத்துக்களும் கொக்குகளும் ஒரே வயலில் ஒன்றா கவே உணவு உட்கொண்டிருந்தன. அவ்வேளை திடீரென ஒரு வேட்டைக்காரன் வந்து அவைகள் மீது தாக்குதல் செய்தான். உடல் பாரம் குறைவாக இருந்ததால் கொக்குகள் பறந்து தப்பித்துக் கொண்டன. ஆனால் உண்டு நன்றாகக் கொழுத்திருந்த அவைகளின் உடல் பாரத்தால் அழுத்தப் பட்டுக் கொண்டிருந்த வாத்துக்கள் எல்லாம் தப்பிக்கொள்ள முடியாமலிருந்தது. வேட்டைக்காரன் அந்த வாத்துக்கள்
எல்லாவற்றையும் பிடித்துச் சென்றான்.
Ο
i
106
 
 
 
 

உலகத்து நாட்டார் கதைகள்
86. சமயோசிதம்
நாயினால் கடிபட்ட ஒநாய் ஒன்று மிகவும் துக்கமா யிருந்தது. நகரக்கூட முடியாத நிலையிலிருந்த அந்த ஓநாய், அவ்வழியால் சென்றுகொண்டிருந்த ஒரு ஆட்டைக் கூப்பிட்டு, அருகாமையில் ஒடிக்கொண்டிருக்கின்ற நீரோடை யிலிருந்து தனக்குச் சிறிதளவு தண்ணிர் கொண்டு வந்து தரும்படி மன்றாட்டமாகக் கேட்டது. 'நீ எனக்குக் குடிக்கத் தண்ணிர் கொண்டு வந்து தந்தால் உனக்கு நானே இறைச்சியைக் கொண்டு வந்து தருவேன்’ என்றது ஓநாய். “சரி, சரி எனக்கு அதில் சந்தேகமில்லை. ஆனால் தண்ணிரைத் தருவதற்கு உனக்குக் கிட்ட நான் வந்தால், என்னை உடனே துண்டு துண்டாகக் கடித்து என்னுடைய
இறைச்சியை நீயே சாப்பிடுவாய்’ என்று ஆடு கூறியது.
Ο
107

Page 66
நீர்வை பொன்னையன்
87. வெற்றி யாருக்கு?
இருவரில் யார் அதிக பலமுடையவர் என்பது சம்பந்த மாக, காற்றுக்கும் சூரியனுக்குமிடையில் பெரும் சர்ச்சை யெழுந்தது. ஒரு வழிப்போக்கன் தன்னுடைய மேலங்கியை எவ்வளவு விரைவாக அகற்றக்கூடியதாக எவர் செய்கின் றாரோ, அவர்தான் அதிக பலசாலி என்று உடன்பாட்டுக்கு சூரியனும் காற்றும் வந்தன. காற்று வீச ஆரம்பித்துத் தனது பலம் முழுவதையும் ஒன்றுதிரட்டிக் கடும் குளிராக மூர்க்கத் தனமான பெரும் புயலாக அடித்தது. எவ்வளவுக்கெவ்வளவு கடும் குளிராகவும் மூர்க்கமாகவும் காற்று அடித்ததோ அவ் வளவுக்கவ்வளவு வழிப்போக்கன் தன்னைச் சுற்றி தனது மேலங்கியை இறுக்கமாகப் பிடித்தபடியே இருந்தான். காற்றினால் அவனுடைய மேலங்கியை அகற்றச் செய்ய முடியவில்லை. அதன்பின் சூரியன் தனது முயற்சியைத் தொடங்கியது. சூரியனுடைய உஷ்ணமான கதிர்கள் அங்கி யிலுள்ள ஈரலிப்பையும் குளிர்த்தன்மையையும் அகற்றிய துடன் அந்த வழிப்போக்கனுடைய உடலுக்கு உஷ்ணத்தை மேலும்மேலும் அதிகமாகக் கொடுத்தது. இதனால் வழிப் போக்கனுடைய உடலெல்லாம் வியர்த்து வடிந்தது. வியர் வையையும் உஷ்ணத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு வந்த வழிப்போக்கன், தனது மேலங்கியை உடலி லிருந்து அகற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டான். இறுதியில்
சூரியன் வெற்றி வாகை சூடினான்.
O
108

உலகத்து நாட்டார் கதைகள்
88. மாடும் இலையானும்
ஒரு மாட்டின் தலையைச் சுற்றிச் சுற்றி ரீங்காரம் செய்து கொண்டிருந்த ஒரு மாட்டிலையான், இறுதியாக அதனுடைய கொம்பில் உட்கார்ந்தது. தான் மாட்டின் கொம்பில் இருந்து அதற்கு இடைஞ்சலை உண்டு பண்ணுவதற்காகத் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி மாட்டைக் கேட்டுக்கொண்டதுடன் பின்வருமாறு கூறியது. "எனது சுமைஉங்களுக்கு அசெளகரியமாக இருந்தால் தயவு செய்து கூறுங்கள். இந்தக் கணமே நான் உங்களுடைய கொம்பைவிட்டுப் போய் விடுவேன்"
‘ஓ! அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ என்னுடைய கொம்பில் இருந்தால் என்ன இருக்காவிட்டால் என்ன? எனக்கு எல்லாமே ஒன்றுதான். உண்மையைக் கூறப் போனால் நீ என்னுடைய கொம்பில் இருக்கின்றாய் என்று எனக்கே தெரியாது. நீ சொல்லித்தான் எனக்குத் தெரியும்’ என்று கூறியது மாடு.
Ο
109

Page 67
நீர்வை பொன்னையன்
89. தேவ பிரார்த்தனை
ஓர் இடையனுடைய மாடு ஒன்று காணாமல் போய் விட்டது. அவன் அந்த மாட்டைத் தேடி காடு, மலை எல்லாம் அலைந்தான். அவனால் அதைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. மாட்டுத் திருடனைக் கண்டுபிடிக்க உதவினால், அவைகளுக்கு ஒரு ஆட்டைப் பலி கொடுப்பதாக அவன் காடு, மலைகளிலுள்ள தேவதைகளுக்கு நேர்த்திக் கடன் வைத்தான். அதேவேளையில், அவன் ஒரு மலை உச்சி விளிம்பில் நின்று பார்த்தபோது, அவனுடைய அழகான மாட்டின் பிணத்தருகில் ஒரு சிங்கம் நிற்பதைப் பார்த்தான். இப்போது சந்தோஷமற்ற அந்த மனிதன், அந்த மாட்டுத் திருடனின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு தனது மாட்டைப் பணயம் வைப்பதாக, தேவதைகளைப் பிரார்த்தித் தான.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
90. காலம் கடந்த ஞானம்
ஒரு விறகுவெட்டி ஒருநாள், காட்டுக்குள் வந்து தனது கோடரிக்கு ஒரு பிடி தந்துதவும்ப்டி மரங்களை மிகவும் பணி வாகக் கேட்டான். அவனுடைய வேண்டுகோள் மிகவும் பணி வானதாக இருந்தபடியால் பாரிய மரங்கள் அவனுடைய கோரிக்கைக்கு உடன்பட்டதுடன், அசோக மரம்தான் அவனு டைய தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டுமென்று தீர் மானித்தன. உடனே, அவனுடைய தேவை பூர்த்தி செய்யப் பட்டது. மரம் வெட்டி தனது கோடரிக்குப் பிடி போட்ட உடனே காட்டில் தன்னைச் சுற்றி நின்ற மிக உயரமான மரங் களை எல்லாம் தறித்து வீழ்த்தினான். காலம் கடந்துவிட்டது என்பதை உணர்ந்த செந்தூர மரம் ஒன்று “ஆரம்பத்திலேயே நாங்கள் விட்டுக் கொடுத்ததால்தான் நாம் சகலத்தையும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்' எமது பணிவுள்ள அவ யவங்களை நாம் தியாகம் செய்யாமல் இருந்தால் நாங்கள் இன்னும் காலாதிகாலமாக நிலைத்து நின்றிருப்போம்" என்று
தேவதாரு மரத்துக்கு ரகசியமாகக் கூறியது.
Ο
111

Page 68
நீர்வை பொன்னையன்
91. சந்தேகம்
தனது குடும்பம் தான் மிகப்பெரியது என்று ஒவ்வொரு மிருகமும் அடம்பிடித்து மிருகங்கள் மத்தியில் பெரும் குழப் பம் ஏற்பட்டது. இறுதியில் அவை இப்பிணக்கைத் தீர்க்க, பெண் சிங்கத்திடம் சென்றன. 'ஒரு ஈற்றில் எத்தனை குட்டி களை நீ போடுவாய்' என்று அந்தப் பெண் சிங்கத்தைக் கேட்டன. "ஒரே ஒரு குட்டியைத்தான் நான் போடுவேன். ஆனால் அந்தக் குட்டி சிங்கக்குட்டியாகத்தான் இருக்கும்’
என்று பெருமிதமாகக் கூறியது அந்தப் பெண் சிங்கம்.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
92. யார் அழகு?
எந்தப் பட்சி மிக அழகானது என்று தூக்கனாங் குருவி யும் அண்டங்காகமும் சர்ச்சைப்பட்டுக் கொண்டிருந்தன. "உனது அழகு கோடை காலத்துக்கு மாத்திரம்தான். ஆனால் என்னுடைய அழகோ எத்தனையோ குளிர் காலங்களுக்கும் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருக்கின்றது' என்று அண்டங் காகம் தூக்கணாங் குருவியைப் பார்த்துக் கூறியது.
Ο
113

Page 69
நீர்வை பொன்னையன் -----
93. ஆயத்தம்
ஒரு மனிதன் பயணம் செய்வதறகு த தயாராகிக கொண்டிருந்தான். அவனுடைய நாய் கதவடியில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த எஜமான், 'வாயைப் பிளந்து கொண்டு எதைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றாய்? என் னுடன் பிரயாணம் செய்வதற்கு நீ உடனே ஆயத்தமாயிரு' என்று கூறினான். 'எஜமானே! நான் தயாராகத்தான் இருக் கின்றேன். ஆனால் நீர்தான் உமது மூட்டை முடிச்சுக்களைக் கட்ட வேண்டியிருக்கின்றது' என்று நாய் எஜமானனைப் பார்த்துக் கூறியது.
D
14
 

உலகத்து நாட்டார் கதைகள்
94. கபடத்தனம்
வேட்டைக்காரர்களால் துரத்திச் செல்லப்பட்ட ஒரு நரி, மரம் தறித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனிடம் சென்று, தான் மறைந்து இருப்பதற்கு ஒரு மறைவிடம் தந்துதவும்படி கெஞ்சிக் கேட்டது. அந்த மரம்வெட்டி தனது குடிசையை சுட்டிக் காட்ட நரி அதற்குள் சென்று ஒளிந்து கொண்டது. வேட்டைக்காரர்கள் வந்து 'ஒரு நரியைக் கண்டாயா?" என்று மரம் வெட்டியைக் கேட்டார்கள். இல்லையென்று மரம்வெட்டி கூறினான். ஆனால் அவன் தனது ஒரு விரலால் தன்னுடைய வீட்டு மூலையைச் சுட்டிக் காட்டினான். ஆனால் மரம்வெட்டியின் அந்தக் குறியீட்டை வேட்டைக் காரர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றார்கள். வேட்டைக்காரர்கள் அவ் விடத்தை விட்டுச் சென்று விட்டார்கள் என்பதை அறியாத நரி, மரம்வெட்டிக்கு ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் திருட்டுத்தனமாக வெளியேறியது. "உனக்கு பாதுகாப்பளித்த விருந்தாளிக்கு ஒரு வார்த்தை நன்றிகூட சொல்லிக்கொள்ளாமல் நீ திருட்டுத்தனமாகச் செல்வது சரி யானதா?’ என்று நரியைக் குறை கூறினான் மரம்வெட்டி, 'நீ ஒரு அருமையான இனிய விருந்தாளியாகத்தான் இருக் கின்றாய். உன்னுடைய நாக்கைப் போலவே, உனது விரலும் மிக நேர்மையானதாக இருந்திருந்தால், உனக்கு நன்றி கூறாமல் உன்னுடைய விட்டைவிட்டு நான் ஒரு பொழுதும் நிச்சயமாகச் சென்றிருக்க மாட்டேன்’ என்று நரி கூறியது.
Ο
115

Page 70
நீர்வை பொன்னையன்
95. பயனற்ற முயற்சி
ஒரு விரியன் பாம்பு ஒருநாள் ஒரு கொல்லனுடைய பட்டடைக்குச் சென்று இரை தேடியது. அங்கு ஒன்றுமே அகப்படாததால் இறுதியில் அது ஒரு இரும்பு அரத்தைக் கண்டு அதற்கு அருகில் சென்று அதைக் கடித்துக் கொண்டி ருந்தது. 'மற்றவர்களை என்னுடைய பற்களால் கடிப்பது தான் என் தொழில். ஆகவே என்னிடமிருந்து நீ எதையுமே பெற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறி தன்னைத் தன் பாட்டில் விட்டுவிடும்படி அரம் விரியன் பாம்பைக் கேட்டது.
Ο
116
 

உலகத்து நாட்டார் கதைகள்
96. மீன் குஞ்சின் சாணக்கியம்
மீன் பிடித்துத் தனது ஜீவனத்தை நடத்துகின்ற ஒரு செம்படவன் மீன் பிடிக்கச் சென்றான். அவன் நீண்ட நேரமாகத் தூண்டில் போட்டுக் கடுமையான உழைப்பின் பின் ஒரு சின்னஞ் சிறிய மீனைத்தான் பிடித்தான். 'என் னைக் கொல்லாதே, என்னை விட்டுவிடு, நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். நான் இப்போது மிகச் சிறிய மீனாக இருக்கின்றேன். ஆகவே உனது உணவுக்குப் போதாமல் இருக்கின்றேன். நான் பெரியதாக இன்னும் வளரவில்லை. இப்போது என்னைத் தண்ணிருக்குள் விட்டுவிடு; நான் பெரிதாக வளர்ந்த பின்பு உனது உணவுக்குப் போதுமானதாக இருப்பேன். அப்பொழுது நீ வந்து என்னைப் பிடித்து உன் உணவுக்குப் பயன்படுத்தலாம்’ என்று மீன்குஞ்சு கூறியது. 'இல்லையில்லை, இப்பொழுது நீ என் பிடியிலிருக்கிறாய். ஆனால் நீ தண்ணிருக்குள் சென்றபின் 'இயலுமானால் நீ என்னைப் பிடித்துப் பார் பார்ப்போம்’ என்று உனது மனநிலை மாறி, எனக்குச் சவால் விடுவாய்' என்று செம்படவன் கூறினான்.
Ο
117

Page 71
நீர்வை ப்ொன்னையன்
97 சரணாகதி
ஒரு குதிரை தனக்கென ஒரு பெரிய புல்தரை முழு வதையும் மொத்தமாக வைத்திருந்தது. ஆனால் ஒரு மான் வந்து அந்தப் புல் வெளியில் புல்லை மேய்ந்ததுமல்லாமல் அந்தப் புல்வெளியைப் பாழ்படுத்த முற்பட்டது. இதனால் கோபம் கொண்ட குதிரை, மாண்னத் தண்டிக்க ஆவல் கொண்டு ஒரு மனிதனை அணுகியது. 'சரி நான் உனக்கு உதவி செய்வதற்குத் தயார். ஆனால் ஒரு நிபந்தனை, உனது வாய்க்குள் புல்லைத் திணித்துவிட்டு, உன்னுடைய முதுகில் நான் ஏறியிருக்க அனுமதித்தால் மாத்திரம்தான் மானுக்கு எதிரான ஆயுதங்களை என்னால் கண்டுபிடிக்க முடியும்" என்றான் அந்த மனிதன். குதிரை அதற்கு உடன்பட்டது அதன் பிரகாரம் மனிதன் குதிரையின் முதுகில் ஏறிக் கொண்டான். ஆனால் அவன் மான் மீது நடவடிக்கை எடுத்து அதைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அந்த நேரத்திலிருந்து
குதிரை மனிதனுக்கு அடிமையாகி விட்டது.
KD
 

SMSMMMSMSSS iSSSiSSiSSiSiSMSMSMSMMSSS SS SS SS M M M MS iAS LaTT TTL TLL TTTTT
98. ри ђа
புதருக்குள் பதுங்கியிருநத முயல் ஒன்றை வெளி யேற்றி அதைச் சிறிது தூரம் துரத்திச் சென்றது வேட்டை நாயொன்று. ஆனால் முயல் தன்னால் முடிந்தவரை ஓடித் தப்பிச் சென்று விட்டது. அந்த வழியே வந்து கொண்டிருந்த இடையன் இதை அவதானித்தான். இருவரில் முயல்தான் மிகச் சிறந்த ஒட்டக்காரன் என்று கூறியதுடன் நாயைக் கேலி செய்தான். 'ஒரு பிராணி தனது இரவு உணவிற்காக ஓடிக் கொண்டிருந்தது. மற்றைய பிராணி தனது உயிரைக் காப் பாற்றுவதற்காக ஒடிக்கொண்டிருந்தது' என்று வேட்டை
நாய் கூறியது
Ο
119

Page 72
நீர்வை பொன்னையன்
I 60Tio اif ID[Tab .99
எதிர்காலத்தில் தமக்கிடையில் சமாதானமாக இருப்ப தற்குத் தாங்கள் விரும்புவதாகக் கூறும்படி ஒநாய்கள் முன்பு ஒரு நாள் ஆடுகளிடம் தூது ஒன்றை அனுப்பி வைத்தன. இந்த ஜிவமரணப் போராட்டத்தை நாங்கள் ஏன் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க வேண்டும்? இந்தத் துரதிருஷ்ட வசமான சண்டைக்கு அந்தத் தீய நாய்கள்தான் காரணமாக இருக்கின்றன. அந்த நாய்கள் எமக்கு எதிராகத் தொடர்ந்து குலைத்து எமக்கு ஆத்திரமூட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தக் காவல் நாயைகளைத் துரத்தி விட்டால் எமக்கிடை யில் ஏற்படவிருக்கும் நட்புறவுக்கும் சமாதானத்திற்குமிடை யில் எதுவித முட்டுக்கட்டையும் இருக்க முடியாது என்று ஒநாய்கள் அந்தத் தூதுவனிடம் சொல்லி அனுப்பின. முட்டாள்தனமான ஆடுகள் ஓநாய்களின் சமாதானத்திற்கான கூற்றை நம்பி, தமக்குக் காவலாயிருந்த நாய்களை விரட்டி விட்டன. இதனால் அந்த ஆட்டு மந்தைக் கூட்டம் சிறந்த காவல்காரரும் பாதுபாப்பாளருமான நாய்களை இல்லாமல் செய்ததுடன், அவைகளின் துரோகத்தனமான விரோதிக்கு இலகுவில் இரையாகி விட்டன.
Ο
120

உலகத்து நாட்டார் கதைகள்
100. Ꮷ,ᎥᏤᏧᏁᎶ6ᎠᏧ1Ꮴ
ஒரு கிராமத்தில் சிறந்த நீச்சல் வீரர்கள் இருந்தார்கள். ஒருநாள் அக்கிராமத்தினூடாகச் சென்ற ஆறு திடீரெனப் பெருக்கெடுத்தது.
அபாயத்தையும் பொருட்படுத்தாத ஒரு டசின் மக்கள் ஒரு சிறிய படகில் ஆற்றைக் கடந்து செல்லத் தொடங்கினார் கள். நடு ஆற்றில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்தப் படகு கவிழ்ந்தது. படகில் சென்றவர்கள் நீந்தத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன் எவ்வளவோ முயற்சித்தும் சிறிதளவு தூரம்தான் அவனால் முன்செல்ல முடிந்தது.
‘எங்களிலும் பார்க்க நீ எவ்வளவோ சிறந்த நீச்சல் வீரன். நீ ஏன் பின் நிற்கின்றாய்?" அவனது சகாக்கள் கேட் டனர்.
'என்னுடைய இடுப்பைச் சுற்றி ஓர் ஆயிரம் நாணயங் களை நான் கட்டி வைத்திருக்கின்றேன்’ என்று அவன் கூறினான்.
'அவற்றை நீ ஏன் அப்பால் வீசவில்லை? உடனே அவற்றை நீ வீசித் தொலை."
நாணயங்களை எறிந்து விடும்படி மற்றவர்கள் அவ னைத் தூண்டினார்கள்.
அவன் சகாக்கள் கூறியதைக் கேட்கவில்லை. தான் ஆபத்தில் சிக்கியுள்ளான் என்று அவனுக்குத் தெரிந்திருந் 121

Page 73
நீர்வை பொன்னையன்
தும், நண்பர்கள் கூறியதை அவன் பொருட்படுத்தவில்லை. தனது தலையை மாத்திரம் அவன் அசைத்தான்.
அவனுடைய சகாக்கள் ஆற்றின் அக்கரைக்குச் சென்று விட்டார்கள்.
'முட்டாளே! நாணயங்களை எறிந்துவிடு. நீ தண் னில் மூழ்கி இறந்து விடப் போகிறாய். நீ செத்தால் இந்தப் பணத்தினால்உனக்கு என்ன பயன்?" சகாக்கள் சத்தமிட்டுக் கூறினார்கள்.
அவன் மீண்டும் தலையை மாத்திரம்தான் அசைத் தான். சிறிது நேரத்தில் அவன் நீரில் மூழ்கி விட்டான்.
Ο
122
 

உலகத்து நாட்டார் கதைகள்
101 மேதாவி
மெத்தப் படித்த ஒரு மேதாவிக்கு ஒரு கழுதை தேவைப்பட்டது. அவர் சந்தைக்கச் சென்று ஒரு கழுதை யை வாங்கினார்.
இக கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அந்த மேதாவி ஒரு உறுதியை எழுதத் தொடங்கினார். அவர் பக்கம் பக்கமாக உறுதியை எழுதிக் கொண்டிருந்தார். அவர் அநேக பக்கங் களை எழுதி முடித்தாலும் கழுதை என்ற வார்த்தை அந்த உறுதியில் இடம் பெறவில்லை. கழுதை விற்றவன் இதை அவதானித்தான். உறுதியை விரைவில் எழுதி முடிக்கும்படி அவன் மேதாவியை க் கேட்டான்.
"கழுதையின் விலைக்கான பணம் பெற்றுக் கொள்ளப் பட்டது. சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இதற்குப் பொறுப் பாளிகள். இவை இரண்டும் உறுதியில் தெளிவாகக் கூறப் பீெற்றிருந்தால் போதுமானது. மேற்கொண்டு வேறு விடயங் கள் தேவையில்லை’ என்று கழுதை விற்றவன் மேதாவிக் குக் கூறினான்.
‘'நீ பொறுமையிழக்க வேண்டாம். நான் இனிமேல்தான் கழுதைக்கு வர இருக்கின்றேன்’ என்று மேதாவி கூறி விட்டு உறுதியைத் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கின்றார்.
கழுதை விற்றவனோ திரிசங்கு நிலையிலிருக்கின் றான்
Ο
123

Page 74
நீர்வை பொன்னையன் ܙܡܚܙܚ ܚܚܬ• -ܗܝ-- ”
102. Of
புதிதாக நியமனம் பெற்று வந்த ஒரு உயரதிகாரி உள்ளூர்ப் பிரமுகர்களையும் இசைக் கலைஞர்களையும் உப சரிக்க ஒரு பெரிய விருந்து வைத்தான். அங்கு கேளிக்கை உச்சக்கட்டத்தை அடைந்தபொழுது ஒரு பாடகன் இசை யுடன் பாடத் தொடங்கினான்.
'பழமை ஒழிந்து போகட்டும் புதுமையே வருக, தீய தாரகை ஒழிந்து போகட்டும், அதிர்ஷ்ட தாரகைய்ே வருக, வருகவே' என்று பாடகன் பாடினான்.
அதிகாரிக்கு தலைகால் தெரியாத மகிழ்ச்சி.
'இந்தப் பாடலை யார் இசைத்தது?" அதிகாரி கேட்டான்.
'ஒரு புதிய அதிகாரி இங்கு வரும் பொழுது இப்படிப் பாடுவது எமது பட்டினத்தில் தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கின்ற ஒரு பழைய மரபு' என்று பாடகன் கூறினான்.
அதிகாரிக்கு விளக்கெண்ணெய் குடித்ததுபோல் இருந்தது.
Ο
124

உலகத்து நாட்டார் கதைகள்
103. தற்பெருமை
திமிங்கிலங்களும் டொல்பின் மீன்களும் இரு பகுதி களாகப் பிரிந்து ஒன்றுடனொன்று மோதிக் கொண்டன. இந்த மோதல் பெரும் யுத்தமாக மாறியது. இந்த யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும்பொழுது, சின்னஞ் சிறிய நெத்தலி மீன் ஒன்று மோதிக் கொண்டிருக் கின்ற இரு தரப்பினருக்கிடையிலுள்ள பிணக்கைத் தீர்த்துச் சமதானத்தை ஏற்படுத்த முயற்சித்தது. இதைஅறிந்த டொல் பின் மீன்கள் “நீ எங்களைச் சமாதானப்படுத்தி ஒற்றுமைப் படுத்துவதிலும் பார்க்க, இந்தச் சண்டையில் நாங்கள் இரு தரப்பினரும் செத்து மடிவதையே நாங்கள் விரும்புகின் றோம்’ என்று கூறின.
Ο
125

Page 75
நீர்வை பொன்னையன்
104. கெட்டிக்காரன் புளுகு . . .
போர்க் கவசங்களையும் ஈட்டிகளையும் தயாரித்து விற்று வந்தான் ஒருவன். 'எனது கவசங்கள் உறுதி யானவை. அவற்றை எந்தக் கூர்மையான ஈட்டியினாலும் துளைக்க முடியாது. அது மாத்திரமில்லை. என்னுடைய ஈட்டிகள் மிகவும் கூர்மையானவை. அவைகளால் துளைக்க முடியாத கவசம் எதுவுமில்லை’ என்று அவன் புளுகித் தள்ளினான்.
அவனுடைய கவசங்களும் ஈட்டிகளும் அதிக கிராக்கி யுடன் விற்பனையாகிக் கொண்டிருந்தன.
'உனது கவசங்களில் ஒன்றினை உன்னுடைய ஈட்டி யொன்று தாக்கினால் என்ன நடக்கும்?' ஒருவன் அந்தப் புளுகனைக் கேட்டான்.
அதற்கு அந்த அண்டப்புளுகனால் ஒரு பதிலையும் கூற முடியவில்லை.
அவனுடைய (கட்டு வெளிப்பட்டதும் வியாபாரம் சரிந்து விழுந்தது.
Ο
126

உலகத்து நாட்டார் கதைகள்
105. நீதிதேவன்
முயலின் குடியுரிமையை அங்கீகரிப்பதற்கு ஒரு சட்டத்தை இயற்றி விட்டு, அதை முயலுக்கு எடுத்துக் கூறச் சென்றது ஒரு பாம்பு.
‘இன்றிலிருந்து நான் உன்னுடைய அனுமதியில்லா மல் உனது இருப்பிடத்திற்குள் நுழைந்தால் நீ என் மீது வழக்குத் தொடர முடியும்.”
பாம்பு இதை முழுமனதுடன் கூறியது. அப்படியிருந்தும் தான் கூறியபடி அது செய்ய முயலுமா என்று பாம்பிற்கே தெரியாது. பாம்பின் சட்டத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் முயலுக்கு இல்லை என்று பாம்பு நினைத்தது. அத்துடன் முயல் தன்னை நம்பவில்லை என்ற சந்தேகமும் பாம்பிற்கு இருந்தது. ஆகவே பாம்பு தன்னுடைய சந்தேகத் தைத் தீர்ப்பதற்காக முயலைப் பரிசோதிக்கத் தீர்மானித்தது.
உடனே பாம்பு முயலுடைய வளைக்குள் எது வித கேட்டுக் கேள்வியுமின்றி முயலுடைய அனுமதியில்லாமல் வேண்டுமென்றே அத்துமீறிச் சென்று ஒரு சிறிய முயல் குட்டியைக் கொன்றது. அதன் பின்னர் அது வெளியே வந்து முயல் தனக்கு எதிராக வழக்குத் தொடரும் என்று காத் திருந்தது.
முயல் வெளியே வரவில்லை. பாம்பு ஆத்திரத்துடன் மீண்டும் முயலுடைய வளைக்குள் சென்று அதைக் கைது செய்தது.
127

Page 76
நீர்வை பொன்னையன்
'நீ ஏன் சட்டத்துக்கு அமைய நடந்து கொள்ள வில்லை?’ பாம்பு கோபத்துடன் முயலைக் கேட்டது.
'பெரியவரே, என்ன சட்டம்? யாருடைய சட்டம்?" என்று முயல் கேட்டது.
‘நான் உன்னுடைய அனுமதியில்லாமல் உனது வளைக்குள் சென்றால், நீ என்மீது வழக்குத் தொடரலாம் என்று ஒரு சட்டம் இயற்றியுள்ளேனல்லவா, அதன்படி 露 ஏன் என்மீது வழக்குத் தொடரவில்லை?”
'பெரியவரே! நீர் தான் கொலைகாரன். இப்பொழுது நீரே நீதிபதியாகவுமிருக்கின்றீர். நான் யாருக்கு எதிராக வழக்குத் தொடர்வது? எங்கே நான் வழக்கைத் தொடர்வது?" என முயல் அடக்க ஒடுக்கமாகக் கேட்டது.
முயலுடைய கேள்விக்குப் பாம்பினால் சரியான பதிலைக் கூற முடியவில்லை. அது கோபாவேசம் கொண்டு முயலைக் கொன்றது. அதன்பின் முயலைத் தின்றது
'நான் சட்டத்திற்கு அமைய முயலைக் கைது செய் தேன். அது மாத்திரமல்ல கைது செய்த உடனே வழக்கு விசாரணை செய்ததையும், தண்டனை வழங்கியதையும் முற்று முழுதாக, சட்டத்தை அனுசரித்து, சட்டத்தின்படியே தான் செய்தேன்’ என்று பாம்பு பெருமையுடன் தனது செயலை உலகத்திற்குப் பிரகடனப்படுத்தியது.
Ο
128

உலகத்து நாட்டார் கதைகள்
106. புலமை
ஒருவன் சிவில் நிர்வாகப் பரீட்சைக்கு தோற்றுவதற் காகத் தலைநகரத்திற்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் அவனுடைய தோல் பையை யாரோ திருடி விட் டார்கள்.
'போனால் போகுது பை. அந்தத் திருடன் எனது தோல் பையைத் தானே திருடினான். அதற்குள் இருக்கின்ற பொருட்களை அவனால் திருட முடியாது’ என்று அவனுடன் சென்றவனுக்குக் கூறினான். 'ஏன்?" என்று மற்றவன் கேட்டான்.
"தோல் பையைத் தானே திருடன் எடுத்தான். அந்தப் பையினுடைய திறப்பு இப்பொழுதும் என்னிடம்தானே இருக்கின்றது. திருடனால் திறப்பில்லாமல் அந்தச் தோல் பையைத் திறக்க முடியாது’ என்றான் அந்த மூளைசாலி.
அவனுடைய அபார மேதாவித்தனத்தைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர்.
Ο
129

Page 77
நீர்வை பொன்னையன்
107. கோழிக் கள்ளன்
அயலவர்களிடமிருந்து தினசரி ஒரு கோழியைத திருடும் வழக்கமுடைய ஒரு மனிதனிருந்தான்.
'திருடுவது தவறு" என்று யாரோ ஒருவர் அவனுக்குக கூறினார்.
"சரி, நான் திருடுவதைக் குறைத்துக் கொள்கின்றேன்" என்றான் கோழிக் கள்ளன்.
‘எப்படி?"
'இன்றிலிருந்து ஒரு மாதத்தற்கு ஒரு கோழியைத் திருடுவேன். அடுத்த வருடம் கோழி திருடுவதையே முற் றாக நிறுத்தி விடுவேன்' என கோழித் திருடன் வாக்குறுதி யளித்தான்.
தான் தவறு செய்கின்றேன் என்று அவனுக்குத் தெரிந் திருப்பதால், அத்தவறை அவன் உடனடியாகத் திருத்தி யிருக்க வேண்டும். அடுத்த வருடம்வரை ஏன் காத்திருக்க வேண்டும்?
KD
30

உலகத்து நாட்டார் கதைகள்
108. இரட்டை நாக்கு
சாலை ஓரத்தில் ஒரு கிணறு தோண்டப்பட்டது. கடந்த காலத்தில் தமது தாகத்தைத் தீர்ப்பதற்கு ஒரு துளி தண்ணிர் தானும் பெற்றுக்கொள்ள முடியாமலிருந்த மக்க ளுக்கு இந்தக் கிணறு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தக் கிணற்றைத் தோண்டிய மனிதனை மக்கள் மெச்சிப் பாராட்டினார்கள்.
சிறது காலத்தின் பின்னர் ஒருநாள் இரவு தன்னுடைய வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு மனிதன், தவறி அந்தக் கிணற்றுக்குள் வீழ்ந்து இறந்து விட்டான். உடனே அந்தக் கிணறு வெட்டுவதற்காக அந்த இடத்தைத் தேடிப் பிடித்து அந்தக் கிணற்றைத் தோண்டிய மனிதனை அதே மக்கள் குறை கூறித் திட்டினார்கள்.
Ο
3

Page 78
நீர்வை பொன்னையன்
109. ஆற்றல்
எந்த ஒரு மிருகத்தையும் அவருடைய கையில் கொடுத்தால், அதைத் தடவிப் பார்த்து அது என்ன மிருகம் என்று உடனே அந்தக் கண்பார்வையற்றவர் கூறி விடுவார். ஒருதடவை ஒரு ஓநாய்க் குட்டியைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தனர். அதை அவர் தடவிப் பார்த்துவிட்டு, 'இது ஒரு நாய்க்குட்டியா அல்லது ஓநாய்க்குட்டியா? இதனுடைய தாய் ஓநாயா அல்லது நாயா? என்று என்னால் கூறிக்கொள்ள முடியாமலிருக்கின்றது. ஆனால் ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்திற்குள் இந்தக் குட்டியை நம்பி விட முடியாது என்பதை என்னால் நிச்சயமாகக் கூற முடியும்' என்று அவர் கூறினார்.
Ο
132
 

உலகத்து நாட்டார் கதைகள்
110 காமாலைக் கண்ணன்
ஒரு மனிதனுக்குத் தங்கம் தேவைப்பட்டது. ஒருநாள் காலை அவன் பகட்டாக உடை அணிந்து கொண்டு சந்தைக் கடைப் பகுதிக்குப் புறப்பட்டான். அவன் நேரடியாக ஒரு தங்க வியாபாரியின் கடைக்குச் சென்றான். அங்கு வைக்கப் பட்டிருந்த தங்கக் கட்டிகளில் ஒன்றை அவன் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
அந்த மனிதனைப் பிடித்து ஒரு பொலிஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தனர் மக்கள்.
'நீ ஏன் தங்கக் கட்டியைத் திருடினாய்?' என்று அதிகாரி அவனைக் கேட்டார்.
'நான் தங்கக்கட்டியை எடுக்கும்பொழுது, நான் ஒருவரையும் காணவில்லை. தங்கக்கட்டியை மாத்திரம் தான் பார்த்தேன்’ என்றான்.
அவனது பதில் அதிகாரிக்குப் புரிந்ததோ என்னவோ அவனைத் தங்கம் திருடியதற்காக பொலிஸ் நிலையத் திற்குப் பிடித்துச் சென்றார்.
Ο
133

Page 79
நீர்வை பொன்னையன்
111. யதார்த்தவாதி
ஒரு தலைசிறந்த ஓவியன் சண்டையிடுகின்ற இரண்டு காளை மாடுகளின் ஒவியத்தைத் தீட்டிக் காட்சிக்கு வைத்தான்.
அந்த ஓவியத்தைப் பார்த்த எல்லோரும் அற்புதமானது என்று பாராட்டினார்கள்.
“பாருங்கள்! எவ்வளவு உற்சாகமாக அவை காட்சியளிக் கின்றன. உண்மையில் அவை உயிருள்ள காளைகளைப் போலத்தான் தோன்றுகின்றன!" ஒரு பார்வையாளர் புகழ்ந் தார். ஒவியனுக்கு உச்சி குளிர்ந்தது. அவன் அந்த ஒவியத் தை மிக அரிதான பட்டுத்துணியில் பொருத்தி இரத்தினக் கற்கள் பதித்த பொல்லுகளில் தொங்கவிட்டு, தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட பெட்டியில் அதைப் பத்திரமாக வைத்தான்.
அந்தத் தலைசிறந்த சிருஷ்டியை ரசிக்கக் கூடியவர் களைத் தவிர வேறு எவருக்கும் அவன் அந்த ஒவியத்தைக் காட்டுவதில்லை.
புழு பூச்சிகள் அதை அரித்துத் தின்பதைத் தவிர்ப் தற்கான முன் எச்சரிக்கையாக வெயிலில் அதைத் தொங்க விட்டிருந்தான்.
அப்பொழுது மாடு மேய்க்கும் பையன் அவ்வழியே வரும்பொழுது அந்த ஒவியத்தைப் பார்த்தான். உடனே உரத்துச் சிரித்தான்.
134

உலகத்து நாட்டார் கதைகள் 'சிறுவனே, ஏன் சிரிக்கின்றாய்? ஒவியத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?’ என்று ஓவியன் கேட்டான்.
சிறுவன் தொடர்ந்து சிரித்துக்கொண்டேயிருந்தான். 'நீ எதற்காகச் சிரிக்கிறாய்? இந்த எருதுகளைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? இவை உயிருள்ள காளைகளைப் போலிருக்கின்றனவல்லவா?’ என்று வினாவினான் ஒவி uj66T.
சிறுவன் சிரித்துக் கொண்டேயிருந்தான்.
“இந்த ஒவியத்தில ஏதாவது பிழையிருக்கிறதா?”
'காளை மாடுகள் பொருதி தங்களுடைய கொம்பு களால் முட்டி மோதுகின்ற நேரத்தில், தங்களுடைய வால் களைத் தங்களுடைய பின்பக்கத் தொடைகளுக்கிடையில் வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்திலுள்ள காளைகள் தங்களுடைய வால்களை மேலே தூக்கி விசிறிக் கொண்டிருக்கின்றன. இப்படி எருதுகள் இடிபட்டுக் கொண்டிருப்பதை நான் காணவில்லை’ என்று அந்த இடைச் சிறுவன் கூறினான்.
ஓவியன் ஒரு பதிலும் கூற முடியாமல் மலைத்துப் போய் நின்றான்.
Ο
135

Page 80
நீர்வை பொன்னையன்
112 இரட்டை வேடம்
ஒரு காலத்தில் மிருகங்களுக்கும் பட்சிகளுக்குமிடை யில் ஒரு உக்கிரமான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அந்த யுத்தம் எப்பொழுது தீரும் என்ற நிச்சயமற்ற நிலை நீடித்துக் கொண்டிருந்தது. வெளவால் தனது இரட்டை உருவமைப் புத் தன்மையை சாதகமாகப் பாவித்துக் கொண்டு, தான் நடுநிலை வகிப்பதாகக் கூறி யுத்தத்தில் பங்குபற்றாமல் ஒதுங்கியிருந்தது. காலம் செல்லச் செல்ல மிருகங்கள் வெற்றியீட்டக்கூடிய சாத்தியப்பாடு நிலவியபொழுது அந்த வெளவால் மிருகங்கள் பக்கம் சேர்ந்து போரில் மும்முரமாக ஈடுபட்டது. சிறிது காலத்தின்பின் பட்சிகள் வெற்றியீட்டக் கூடிய நிலைமை ஏற்பட்டபொழுது வெளவால் பட்சி களுடைய பக்கம் சேர்ந்து போரில் ஈடுபட்டது. இறுதியில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டபொழுது வெளவாலின் நடத்தையை இரு தரப்பினரும் ஒரே மாதிரிக் கண்டித்த துடன் ஒரு தரப்புக்கூட வெளவாலைத் தமது நம்பிக்கைக் குரியதாகத் தம்முடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் வெளவால் இயலக்கூடியளவு ஒளிந்து வாழக்கூடிய நிலை ஏற்பட்டது. தன்னுடைய முகத்தை வெளவால் வெளியே காட்ட முடியாமல் மரப்பொந்துகளிலும், இரவு நேரத்தைத் தவிர பகல் வேளையில் வெளியே வருவதற்கு மனத்
துணிவற்ற நிலையிலும் வாழ்ந்து கொண்டிருந்தது.
Ο
136

உலகத்து நாட்டார் கதைகள்
113. விடாப்பிடி
கருணை உள்ளம் கொண்டவன் தான்தானென்று கூறித் திரியும் ஒரு மனிதன், ஆமை ஒன்றைப் பிடித்தான். அதை அவன் சூப்பாகத் தயாரிக்க விரும்பினான். ஆனால் அதை வெட்டிக் கொன்ற பழியைத் தான் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.
ஒரு சட்டி நிறையத் தண்ணிரைக் கொதிக்க வைத்து விட்டு அந்தச் சட்டிக்குக் குறுக்கே ஒரு தடியை வைத்தான்.
'நீ இந்தத் தடிமேல் ஏறிக் குறுக்காக நடந்து சட்டியைக் கடந்து சென்றால், நான் உன்னை விடுதலை செய்வேன்’ என்று ஆமைக்குக் கூறினான்.
தனது மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஆமை இறுதி முயற்சியில் இறங்கியது. அசாத்தியமான அந்த வேலையை அது ஒருவாறு நிறைவேற்றிவிட்டது.
'நன்றாகச் செய்தாய். ஆனால் மீண்டும் ஒருதடவை தயவு செய்து இந்த முயற்சியைச் செய்து முடி' ஆமைக்குக் கூறி தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்துமாயிருந்தான்.
ஆமையின் கதி?
Ο
137

Page 81
நீர்வை பொன்னையன்
114. அடங்காப் பிடாரி
சாலை வழியே தனது எஜமானனால் ஒரு கழுதை துரத்திச் செல்லப்பட்டது. அது விரைவாகப் பாதை மாறிச் சென்று மலைத்தொடரின் செங்குத்தான பகுதிக்கு, தன்னால் இயலுமானவரை வேகமாக ஒடிச் சென்றது.
அந்தக் கழுதை செங்குத்தான பகுதியிலிருந்து ஆழ மான பள்ளத்தாக்கில் விழுப்போகும் தறுவாயிலிருந்தது. இதைக் கண்ட கழுதையின் எஜமானன் ஒடிச் சென்று அதனு டைய வாலில் பிடித்து அதைப் பின்னுக்கு இழுத்து அதைக் காப்பாற்றுவதற்கு முயன்றான். ஆனால் கழுதை அதற்கு இடம் கொடுக்கவில்லை. அது தன்னால் இயன்றவரை எதிர் த்திசையில் இழுத்தது. "நன்று! நீ எஜமானாக இருக்க விரும் பினால் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அடங்காப் பிடாரியான ஒரு மிருகம் தான் நினைத்தபடி தனது சொந்த வழியில் செல்வதுதான் நல்லது' என்று கூறி தனது பிடியைத் தளர விட்டான்.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
115. அச்சுறுத்தல்
ஒரு சிங்கமும் கழுதையும் ஒன்றாக வேட்டைக்குச் செல்வதற்கான ஒரு உடன்பாட்டுக்கு வந்தன. அவை இரண்டும் விரைவில் ஒரு குகையருகே வந்தன. அக் குகைக்குள் கட்டாக்காலி ஆடுகள் நின்றன. சிங்கம் குகை வாசலில் நிலை கொண்டிருக்க, கழுதை குகைக்குள்ளே சென்றது. அது ஆடுகளுக்கு அச்சமூட்டுவதற்கு, தனது கால்களைத் தரையில் உதைத்து, உரத்துக் கத்தியது. ஆடு கள் அச்சத்தில் குகைக்கு வெளியே வரும்பொழுது சிங்கம் அநேக ஆடுகளைக் கைப்பற்றியது. இதைப் பார்த்த கழுதை வெளியே வந்தது. தான் சிறப்பாகச் சண்டை போட்டு ஆடு களை வெளியேற்றவில்லையா? என்று சிங்கத்தைக் கேட் டது. "ஆம், உண்மைதான். நீ ஒரு கழுதைதான் என்று எனக் குத் தெரிந்திருக்காவிட்டால், நிச்சயமாக நீ என்னையும் அச் சுறுத்தியிருப்பாய் என்று நான் உனக்கு உறுதியாகக் கூறு கின்றேன்’ என்று சிங்கம் சொன்னது.
Ο

Page 82
நீர்வை பொன்னையன்
116. ஆலோசனை
ஒரு வைத்தியர் நோயாளி ஒருவனுக்குச் சிகிச்சை யளித்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த நோயாளி இறந்து விட்டான். 'என்னுடைய நண்பர் மது குடிப்பதைக் கை விட்டு, சரியானபடி தன்னுடைய உடலைப் பாதுகாத்தி ருந்தால் அவர் இன்று இப்படி பிணமாகக் கிடக்கும் நிலை மை ஏற்பட்டிருக்காது!" என்று மரண வீட்டில் இருந்த உற வினர்களுக்குக் கூறிக் கொண்டிருந்தார் அந்த வைத்தியர்.
"ஐயா! இதை இப்பொழுது கூறுவதில் எதுவித பயனு மில்லை. உம்முடை நோயாளி உயிருடனிருந்த பொழுது நீர் இந்த விடயங்களை அதாவது ஆலோசனைகளைக் கூறி யிருக்க வேண்டும்’ என்று ஒரு உறவினர் கூறினார்.
Ο
40
 

உலகத்து நாட்டார் கதைகள்
117. எதிர்பார்ப்பு
ஒரு வீதியால் சென்று கொண்டிருந்தனர் இரண்டு வழிக்போக்கர்கள். அவர்களில் ஒருவன் ஒரு கைக்கோடரி யைக் கண்டெடுத்தான்.
'இதோ பார், எதைக் கண்டெடுத்துள்ளேன்’ என்று கோடரியை எடுத்தவன் கத்தினான். “நான் எடுத்தேன் என்று சொல்லாதே. நாங்கள் எடுத்தோம் என்று சொல்’ எனக் கூறினான் மற்றைய வழிப்போக்கன், சிறிது நேரத்தின் பின்னர் கைக்கோடரியைத் தொலைத்த சில ஆட்கள் வந்தனர். அவர்களில் ஒருவன் கைக்கோடரி வைத்திருந்த வழிப்போக் கனைத் திருடன் என்று குற்றம் சுமத்தினான். ‘ஐயோ நாங்கள் எடுக்கவில்லை’ என்று கூறினான் கோடரியை வைத்திருந்த வழிப்போக்கன். 'நாங்கள் எடுக்கவில்லை என்று சொல்லாதே. நான் எடுக்கவில்லை என்று சொல்லு' என்றான் மற்றைய வழிப்போக்கன். அவனது எதிர்பார்ப்பு?
Ο
141

Page 83
நீர்வை பொன்னையன்
118. தன்வினை தன்னைச் சுடும்
ஒரு கழுதையும் நரியும் ஒரு உறுதியான உடன்பாட் டிற்கு வந்து பின் வேட்டையாடச் சென்றன. செல்லும் வழியில் அவை ஒரு சிங்கத்தைச் சந்தித்தன. தமக்கு ஏற்பட விருக்கின்ற ஆபத்தை நரி உணர்ந்தது. தனக்கு எதுவித தீங்கும் ஏற்படுத்தவில்லை என்று சிங்கம் உத்தரவாதமளித் தால், தன்னால் இயலுமானளவு கழுதையை ஏமாற்றி அதைப் பொறியில் சிக்க வைப்பேன் என்று நரி கூறியது. அப்படிச் செய்வதாகச் சிங்கம் உத்தரவாதமளித்தது. உடனே கழுதையைப் பொறியில் சிக்க வைப்பதற்கு நரி திட்டமிட் டுச் சதி செய்தது. கழுதை பொறியில் அகப்பட்ட பின்னர் அதைத் தனது அடுத்த உணவுக்காகப் பத்திரமாக ஒதுக்கி வைத்த சிங்கம், தன்னுடைய உடனடி உணவுக்கு நரியைக்
கொன்றது.
Ο
142
 

உலகத்து நாட்டார் கதைகள்
119. மாற்றுவழி
தன்னுடைய ஒட்டகத்தின்மீது இயன்றவரை கூடுத லான சுமையை ஏற்றினான் ஒரு அராபியன். பின்னர் அவன் ஒட்டகத்தைப் பின்வருமாறு கேட்டான். 'குன்றின் மேல் ஏறிச் செல்ல நீ விரும்புகின்றாயா? அல்லது கீழே இறங்கிச் செல்வதை விரும்புகின்றாயா?"
‘ஐயனே! சமதரையில் குறுக்காகச் செல்கின்ற பாதை மூடிக் கிடக்கின்றதா அல்லது திறந்து கிடக்கின்றதா?’ என்று ஒட்டகம் வெறுப்புடன் அராபியனைப் பாாத்துக் கேட்டது.
O

Page 84
நீர்வை பொன்னையன்
120. மீனவன்
ஒரு மீனவன் மீன் பிடிப்பதற்கு ஆற்றுக்குச் சென்றான். அவன் ஆற்றில் தனது மீன் வலையை வீசிப் பரப்பிவிட்டு, ஒரு நீண்ட கயிற்றில் ஒரு கல்லைக் கட்டி வலையின் இரண்டு பக்கமுமுள்ள தண்ணிரைஅடித்துக் கலக்கினான். வலைத் துவாரங்களூடாக மீன்களை உள்ளே ஒட்டுவது தான் அவனது நோக்கம்.
இச்செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற அவ னைப் பார்த்த அயலவன் ஒருவன், மீனவனிடம் சென்றான். தண்ணிரை அடித்துக் கலக்கி அதைக் குடிக்க முடியாதபடி சேற்று நீராக்கிக் கொண்டிருப்பதற்காக மீனவனைக் கடுமை யாகக் கண்டித்தான். ‘ஐயனே! மன்னிக்கவும். நான் இப்படிச் செய்வதை நீர் விரும்பாமலிருக்கலாம். ஆனால் நான் தண் னிரை இப்படி அடித்துக் கலக்குவதன் மூலம்தான் என்னு டைய ஜீவனோபாயத்தைப் பெறுகின்றேன்’ என்று அந்த மீனவன் அயலவனுக்குக் கூறினான்.
Ο
44

உலகத்து நாட்டார் கதைகள்
121. மூளை இல்லாத நரி
ஒரு நடிகனுடைய வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்தது ஒரு நரி, அங்கிருந்த பல்வேறு பொருட்களை எல்லாம் கிளறித் தேடுதல் நடத்தியது. இறுதியாக மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு முகமூடியைக் கண்டெடுத் ඊශ්‍රී].
'உண்மையில் இது ஒரு மிகச் சிறந்த அழகான தலை தான். ஆனால் இந்தத் தலைக்கு மூளை இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரும் துயரமாக இருக்கின்றது” என்று அந்த நரி கூறியது.
Ο
145

Page 85
நீர்வை பொன்னையன்
122. கண்ட பாவனையில் . . .
மலை உச்சியிலிருந்த கழுகு ஒன்று திடீரெனக் கீழே பறந்து வந்து ஒரு ஆட்டைத் தூக்கிச் சென்றது. இந்தத் தீரச் செயலைப் பார்த்த ஒரு காகம், தானும் அதேபோல வீரச் செயலைச் செய்ய வேண்டுமென நினைத்தது. அதுவும் திடீரெனக் கிழே பறந்து வந்து ஒரு ஆட்டைத் தூக்கியது. ஆனால் காகத்தின் கால் நகங்கள் ஆட்டின் உரோமங்களில் சிக்கியது மாத்திரம்தான். அதனால் ஆட்டைத் தூக்க முடிய வில்லை. உடனே காகம் பறக்க முயற்சித்தது. அது தனது இறக்கைகளை அடித்துப் பறப்பதற்கு மீண்டும் முயன்றது. அதனுடைய முயற்சியில் தோல்வி கண்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இடையன் காக்கையைப் பிடித்து அதனுடைய இறக்கைகளை வெட்டினான். பின்னர் இரவு அதைத் தனது பிள்ளைகளுக்கு காட்டினான்.
"அப்பா ! இது என்ன பறவை? இதை ஏன் கொண்டு வந்தீர்கள்?’ என்று அவனுடைய பிள்ளைகள் கேட்டனர். “இந்தப் பறவையைக் கேட்டால், தான் ஒரு கழுகு என்று சொல்லும். ஆனால் நான் கூறுவதைக் கேட்பீர்களானால் இது ஒரு காகம் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும்’ என்று தந்தை கூறினார்.
Ο
146

உலகத்து நாட்டார் கதைகள்
123 ஏமாற்றம்
ஒரு புறாவுக்குக் கடும் தாகம் ஏற்பட, தண்ணிர் நிறை ந்த ஒரு கண்ணாடிக் குவளையைக் கண்டது. அது உடனே தனது சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி அந்தக் கண் ணாடிக் குவளையை நோக்கி விரைந்து பறந்தது. அது சென்ற வேகத்தில் தன்னெதிரேயுள்ள பலகையில் மோதி யது. இதனால் அதன் சிறகுகள் ஒடிந்து எதுவித உதவியு மின்றி தரையில் வீழ்ந்தது. அவ்வேளை அவ்வழியே சென்ற மனிதன் புறாவைப் பிடித்தான். தான் பார்த்த தண்ணிர் நிறைந்த கண்ணாடிக் குவளை, ஒரு விளம்பரப் பலகையில் வரையப்பட்டது என்பதைப் புறாவினால் உணர முடிய வில்லை.
Ο
147

Page 86
நீர்வை பொன்னையன்
124. சூரியனின் திருமணம்
முன்னொரு காலத்தில் மிகவும் கடுமையான உஷ்ணம் நிரம்பிய கோடை காலத்தில் சூரியன் திருமணம் செய்யப் போவதாகக் கூறப்பட்டது. இந்தச் சமாச்சாரத்தை அறிந்த பட்சிகளும் மிருகங்களும் மகிழ்ச்சியடைந்தன. மற்ற எல்லா பிராணிகளையும் விட, தவளைகள் இந்த வைபவத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஒரு விடுமுறை நாளையும் தீர்மானித்தன. ஆனால் சந்தோஷமடைவதிலும் பார்க்க இது ஒரு மிகவும் துக்ககரமான வைபவம் என்று வயது முதிர்ந்த ஒரு தேரை அப்பிராணிகளின் மகிழ்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது. 'இப்போதே எங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவிற்கு, தனியொரு சூரியனால் சதுப்பு நிலத்தைக் கூட வரட்சியடையச் செய்ய முடியுமானால், சூரியன் திரு மணம் செய்து ஒரு அரை டசின் சிறிய சூரியன்களைப் பெற்றெடுத்தால் எமக்கு என்ன நடக்கும்?” என்று முதிய
தேரை கூறியது.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
125. இறுமாப்பு
புதிதாகப் பயிரிடப்பட்ட நிலத்தில் ஒரு கூட்டம் கொக்குகள் சென்று அங்கிருந்த பயிர்களை அழித்தன. கமக்காரன் கற்களில்லாமல் வெறும் கவணைச் சுழற்றி வீசி, கொக்குகளை விரட்டிக் கலைத்தான். ஆனால் அவன் வெறும் கவண் கயிற்றை மாத்திரம்தான் காற்றில் வீசித் தங்களை விரட்டிக் கலைக்கின்றான் என்பதைக் கண்டறிந்த கொக்குகள், அவன் கவண் கயிற்றை வீசுவதைக் கவனத்திற் கொண்டு மிரண்டு கலைந்து பறந்து செல்லாமல் பயிர்களை அழித்துக் கொண்டேயிருந்தன. இதன்பின் கமக்காரன் கவண் கயிற்றில் கற்களை வைத்து வீசினான். இதனால் பறந்து செல்லாமலிருந்த அநேக பறவைகள் கொல்லப் பட்டன. 'இந்த மனிதன் எங்களைச் சும்மா அச்சுறுத்து வதுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. அவன் எங்களைக் கொன்று ஒழித்துக் கட்டுவதற்குத் தீர்மானித்து விட்டான். ஆகவே நாங்கள் சித்திரக் குள்ளனின் நாட்டிற்குச் செல்வோம்" என்று கொக்குகள் கூறி அவ்விடத்தை விட்டுப்
பறந்து சென்றன.
Ο
1 49

Page 87
நீர்வை பொன்னையன்
126. பொறுமை
ஓர் உயர்ந்த பதவியைப் பொறுப்பேற்கவிருந்தான் ஒரு மனிதன். அவனுடைய நெருங்கிய நண்பன் அவனை வழி யனுப்பி வைப்பதற்காக வந்தான்.
“உயர் பதவியை ஏற்கின்ற நீ ஒன்றை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். அதாவது நீ எப் பொழுதும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றான் நண்பன்.
தான் அப்படியே பொறுமையைக் கடைப்பிடிப்பேன் என்று மனிதன் அடித்துக் கூறின்ான்.
அவனுடைய நண்பன் இந்தப் புத்திமதியை மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினான். மூன்று தடவைகளும் அந்த மனிதன் நண்பனின் புத்திமதியை ஏற்றுக் கொள்வ தாக வாக்குறுதியளித்தான். அவனுடைய நண்பன் இந்தப் புத்திமதியை நான்காவது தடவையாகக் கூறியபொழுது அந்த மனிதனுக்குக் கடுங்கோபம் வந்தது.
அவனுடைய நண்பன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட படி கூறினான். “பார்! பொறுமையாக இருப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. பொறுமையாக இருக்கும்படி நான் ஒரு சில தடவைகள் கூறினேன். உடனே பொறுமையிழந்து நீ கோபப்படுகின்றாயே’ என்று கூறினான்.
அந்த மனிதன் தலைகுனிந்தான்.
150

உலகத்துநாட்டார் கதைகள் 'நான் ஒரு முட்டாள் என்று நீ நினைத்துக் கொண்
டாயா? இந்த அற்ப விடயத்தை நீ ஏன் திரும்பத் திரும்பக்
கூற வேண்டும்?"
கோபத்துடன் கத்தினான் அந்த உயர் பதவி வகிக்க
இருந்த மனிதன்.
Ο
151

Page 88
நீர்வை பொன்னையன்
127 முடிவில்லாத வார்த்தைகள்
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு ஒரேயொரு மகள் மாத்திரமிருந்தாள். "எந்த ஒரு மனிதன், முடிவு பெறாத ஒரு கதையை எனக்குச் சொல் கின்றானோ, அவன்தான் இளவரசியைத் திருணம் செய்ய முடியும்’ என்று அரசன் கூறினான். அநேகர் முயற்சித்தனர். ஆனால் ஒருவரும் வெற்றி பெறவில்லை. சகலரும் தோல்வி யுற்ற பின் இறுதியாக ஒரு மனிதன் வந்தான். அவனை அரசனுக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டது. அவன் உட னடியாகவே கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அவன் அரசனுக்குக் கூறினான். 'ஒருமனிதனிடம் சிறிதளவு தானி யமிருந்தது. சில வெட்டுக்கிளிகள் அந்தத் தானியத்தைச் சூழ்ந்தன. ஒரு வெட்டுக்கிளி வந்து ஒரேயொரு தானிய மணியை எடுத்துச் சென்றது. அதன்பின் மற்றுமொரு வெட் டுக்கிளி வந்து ஒரு தானிய மணியை எடுத்துச் சென்றது. அதன்பின் மற்றுமொரு வெட்டுக்கிளி வந்து ஒரு தானிய மணியை எடுத்து சென்றது. அதன்பின் மற்றுமொரு வெட்டுக்கிளி.’ அதைக் கேட்டுக் கொண்டிருந்த அரசனுக் குக் களைப்பேற்பட்டது. "எனக்குத் தூக்கம் வருகின்றது. நீ போய் மற்றுமொரு முறை வரலாம்’ என்று அரசன் கூறினான்.
அந்த மனிதன் அப்படியே செய்தான். அடுத்த நாள் அவன் திரும்பி வந்து கதையை ஆரம்பித்தான். 'மற்றுமொரு வெட்டுக்கிளி வந்து ஒரு தானிய மணியை எடுத்துச் சென் றது. மற்றுமொரு வெட்டுக்கிளி வந்து ஒரு தானிய மணியை
152

உலகத்து நாட்டார் கதைகள் எடுத்துச் சென்றது." அந்த மனிதன் இதையே திரும்ப திரும் பக் கூறிக்கொண்டிருந்தான்.
கதை கேட்டுக் கொண்டிருந்த அரசன் களைப்படைந் தான். அவன் அந்த மனிதனுக்குக் கூறினான், 'உனது கதைக்கு முடிவே இல்லை. நீ வெற்றி பெற்றாய். இளவரசி யைக் கூட்டிச்சென்று நீ திருமணம் செய்துகொள்." அந்த மனிதன் அப்படியே செய்தான்.
O
153

Page 89
நீர்வை பொன்னையன்
128. உழைப்பின் மகிமை
ஒரு கன்னிப்பசு வயல் வெளிகளில் சுதந்திரமாக ஒடித் திரிந்து கொண்டிருந்தது. அதனுடைய கழுத்தில் ஒரு கணப் பொழுதாவது நுகத்தடி பட்டதில்லை. கடும் உழைப்புக்குத் தன்னை ஒப்புவித்து உழுது கொண்டிருக்கின்ற ஒரு எருது மாட்டை அந்த இளம் பசு அதன் அடிமைத்தனத்திற்காகக் கண்டித்தது. எருது ஒன்றுமே கூறவில்லை. தன்பாட்டிலே வேலை செய்து கொண்டேயிருந்தது. எருதுக்கு ஒருநாள் விடுமுறை கிடைத்தது. ஆனால் கன்னிப் பசுவை பலி கொடுப்பதற்காக அதன் எஜமான் அதைப் பலிபீடத்தடிக்குக் கொண்டு சென்றான். “நீ வீணாகப் பொழுது போக்குவதற்கு இதுதான் முடிவென்றால், உன்னுடைய விளையாட்டிலும் பார்க்க எனது வேலை சிறப்புடையதாக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். என்னுடைய கழுத்தில் கோடரி விழு வதிலும் பார்க்க நுகத்தடி இருப்பதை நான் விரும்புகின்
றேன்’ என்று எருது கூறியது.
O
154
 

உலகத்து நாட்டார் கதைகள்
129. ஆதாம் - ஏவாள்
‘கடவுள் ஒரு பொழுதும் பார்த்திராத ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். அது என்னவாக இருக்கும்?"
“இப்பொழுது அப்படியிருக்க முடியாது. ஏனென்றால் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அவர் உலகைப் படைத்தார். உலகிலுள்ள எல்லாவற்றையும் படைத்துள்ளார் அவர். இப்பொழுது நீ சாமர்த்தியமுள்ளவன் என்று கூறுகின்றாய். அப்படியானால் கடவுள் ஒரு பொழு தும் பார்த்திராத ஒன்றை நீ கூறு பார்ப்போம்.”
“நல்லது, எனக்குச் சமமானவனை நான் கண்டிருக்கின் றேன். ஆனால் கடவுள் அப்படி ஒரு பொழுதும் பார்த்த தில்லை."
“நீ கூறுவது சரி. தனக்குச் சமமானவனைக் கடவுள் ஒரு பொழுதும் பார்த்ததில்லை. ஆனால் ஒருதடவை இறைவ னுக்குச் சமதையாக, பிசாசு இருக்க முயற்சித்தபொழுது அந்த வகையில் நீ அவருக்குச் சமமானவனாக இருப்பாய் என்பது கடவுளுக்குத் தெரியும்."
'ஆகவே, ஏவாளின் தூண்டுதலால் ஆதாம் அறிவுக் கனியைப் புசித்தான். இதனால் ஏவாள் குழந்தையைப் பிரசவிக்க வேண்டும் என்றும் மனிதன் எப்பொழுதும் அவளுடைய எஜமானனாக இருக்க வேண்டும் என்று இறைவன் சாபமிட்டார். அத்துடன் மனிதன் இறக்கும்வரை நெற்றி வியர்வை சிந்தி நிலத்தில் பயிர் செய்து உழைக்க,
155

Page 90
நீர்வை பொன்னையன் அந்த உழைப்பை ஆதாம் உண்ண வேண்டும். மேலும் மனிதன் இந்தப் பூவுலகிற்கு மீண்டும் திரும்பி வர வேண்டும்
என்றும் ஆண்டவன் சபித்தார்.’
(D
156
 

உலகத்து நாட்டார் கதைகள்
130. காற்றும் தண்ணிரும் சண்டை . . .
காற்று ஒரு பெண். தண்ணிரும்கூட ஒரு பெண். அவை இரண்டும் பேசிக் கொண்டிருப்பதையே விரும்பு கின்றன. திருமதி காற்று சமுத்திரக் கரைக்குச் செல்லும். அங்கு இருந்துகொண்டு அது பெருமிதமாகப் பேசிப் புளுகிக் கர்வம் கொள்ளும், திருமதி தண்ணிரும் திருமதி காற்றும் உயர் குலப் பெண்களைப் போல தங்களுடைய பிள்ளை களைப்பற்றி டம்பமாகப் பேசிப் பெருமைப்படுவர்.
‘என்னுடைய பிள்ளைகளைப் பார்! என்னிடம் எல்லா முண்டு. உலகத்திலுள்ள மிகப் பெரிய பொருளும், சின்னஞ் சிறிய பொருளுமுண்டு. அவை ஒவ்வொரு வர்ணத்திலும் ஒவ்வொரு உருவ அமைப்பிலுமுள்ளன!" என்று திருமதி தண்ணிர் கூறுகின்றது.
காற்றுச் சீமாட்டி தண்ணிர் அம்மையாரிலும் பார்க்க உரத்து ஜம்பமடித்தது. 'உலகத்திலுள்ள மற்றப் பிள்ளை களிலும் பார்க்க பெருமளவு வேறுபாடுடையவர்கள் என்னு டைய பிள்ளைகள். அவர்கள் நடக்கின்றார்கள். பறக்கின் றார்கள். தண்ணிலும் நீந்துகின்றார்கள். பாடுகின்றார்கள், பேசுகின்றார்கள், அழுகின்றார்கள், சூரியனிடமிருந்து அவர் கள் எல்லா வர்ணங்களையும் பெற்றுக் கொள்கின்றனர். கட வுளே! என்னுடைய பிள்ளைகள் எவ்வளவு மகிழ்ச்சியுடைய வர்களாயிருக்கின்றார்கள். என்னுடைய பிள்ளைகளைப் போல வேறு எவரிடமும் பிள்ளைகளைக் காண முடியாது.” திருமதி காற்றினுடைய பிள்ளைகளின் பெருமை களைப் பற்றிக் கேட்டறிந்த திருமதி தண்ணிர், சலிப்ப
157

Page 91
நீர்வை பொன்னையன் டைந்தாள். அத்துடன் வெறுப்படைந்தாள். அவைகளைக் கடுமையாக வெறுத்தாள். ஒருநாள் திருமதி காற்றின் பிள்ளைகள் 'அம்மா! எங்களுக்கு கடுந்தாகமாக இருக்கின் றது. நாங்கள் குடிப்பதற்குக் குளிர்ந்த தண்ணிர் எடுக்க முடியுமா?’ என்று தாயைக் கேட்டன. 'பிள்ளைகளே! தண் னிர்ச் சீமாட்டியிடம்தான் தண்ணிர் இருக்கின்றது. நீங்கள் அவளிடம் போய்க் கேளுங்கள். ஆனால் உடனே நீங்கள் என்னிடம் திரும்பிவிட வேண்டும்’ என்று காற்று கூறியது.
காற்றின் பிள்ளைகள் தண்ணிடம் சென்றன. தமது தாகத்தைத் தீர்ப்பதற்கு வந்த பிள்ளைகளைப் பிடித்து மூழ்கடித்தாள் திருமதி தண்ணிர்.
தனது பிள்ளைகள் வீடு திரும்பாததனால், காற்றுப் பெண் மனக் குழப்பமடைந்து கவலைப்பட்டாள். உடனே அவள் நீர்ப் பெண்ணிடம் சென்றாள். தனது பிள்ளை களைப்பற்றித் தண்ணிடம் கேட்டாள். “வணக்கம், நீரம்மா! இன்று நீர் என்னுடைய பிள்ளைகளைப் பார்த்தீரா?"
'இல்லையே!" நீரம்மா கூறினாள்.
தன்னுடைய பிள்ளைகள் நீரம்மாவின் வீட்டிற்கு வந் தார்கள் என்று நன்கு தெரியும். ஆகவே தன்னுடைய பிள் ளைகளைக் கூப்பிட்டபடியே சமுத்திரக் கரைக்கு காற்றம்மா சென்றாள். அங்கு நின்று தன்னுடைய பிள்ளைகளை உரத்த குரலில் அழைத்தாள். ஒவ்வொரு தடவையும் அவள் தன்னுடைய பிள்ளைகளைக் கூப்பிட்டபொழுது, தண்ணி ரின் மேல் வெள்ளை இறகுகள் மிதந்து வந்தன. அதனால் தான், அலைகளின்மேல் வெள்ளை நுரைகளை நாம் காண் கின்றோம். காற்று அம்மா இழந்த தன் குழந்தைகளை அழைக்கின்ற பொழுது நீரின் மேலே வருகின்ற வெண் இறகுகள் தான்.அவை,
நீரின் மீது புயற்காற்றை நீங்கள் பார்க்கும்பொழுது தங்களுடைய பிள்ளைகளுக்காக காற்றும் நீரும் நடத்து கின்ற சண்டைதான் அது!
Ο
158

உலகத்து நாட்டார் கதைகள்
131. கஞ்சத்தனம்
முன்னாரு காலத்தில் பாயா உ என்பவன் தோட்டக் கங்காணியாக இருந்தான். அவன் தோட்டத்திலிருந்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு நகரத்திலுள்ள தனது இரண்டு மனைவிகளுக்கும் கொடுப்பதற்கு அடிக்கடி செல்வான். உணவுப் பொருட்களைத் தன் மனைவிமார் களுக்குக் கொடுக்கும் பொழுது பின்வருமாறு கூறுவான்: “நீ உணவு சாப்பிடும்பொழுது உன்னுடைய கை விரல்களை விரிக்க வேண்டும்’ இப்படி அவன் கூறும்பொழுது அவன் என்ன அர்த்தத்தில் கூறுகின்றான் என்று முதல் மனைவி யால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதேவேளை அவனுடைய இரண்டாவது மனைவிக்கும் இவ்வாறே கூறு வான். நான் அவர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்கும்பொழுது, நீங்கள் மாத்திரம்அந்த உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. மற்றவர்களுக் கும் அவற்றைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். ஏனென் றால் நீங்கள் மாத்திரம் அவற்றை வைத்திருக்கக்கூடாது. ஏனைய மக்களுடன் பங்கிட்டு உண்ணவேண்டும் என்று வலியுறத்தினான். இரண்டாவது மனைவி இதைச் சரியாகப் புரிந்து கொண்டு தன் கணவன் கூறியபடியே செய்வாள்.
முதல் மனைவி உணவு சமைக்கும் பொழுது, தான் மாத்திரம் அதை உண்பாள். அதன்பின், அவள் வெளியே சென்று வானத்தை நோக்கி தனது கை விரல்களைப் பரப்பி விரித்தபடியே 'நான் சாப்பிடும்பொழுது என்னுடைய விரல்
159

Page 92
1ibab) பொன்னையன்
.5)ள விரித்துப் பரப்ப வேண்டுமென்று பாயா உ கூறுவார். 1 ன் அப்படியே செய்கின்றேன்’ என்று கூறுவாள். பாயா உ வளுக்குப் போதியளவு பன்றி இறைச்சியையும் உப்பிட்ட மீனையும் கொண்டு வந்து கொடுப்பான். ஆனால் அவள் அவை அனைத்தையும் தானே உண்பாள். தனது இரண்டா வது மனைவிக்குப் பாயா உ உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்கும் பொழுது அவள் ஏனைய மக்களுடன் அந்த உணவுப் பொருட்களைப் பங்கிட்டுக் கொடுப்பாள்.
சிறிது காலத்தின் பின்னர் பாயாஉ இறந்து விட்டான். விரித்துப் பரப்பிய முதல் மனைவிக்கு எவருமே ஒன்றும் கொண்டு வரவில்லை. அவள் தன்னந் தனியாகவே இருந் தாள். ஆனால் ஏனைய மக்களுடன் தன்னுடைய உணவுப் பொருட்களைப் பகிர்ந்துகொண்ட இரண்டாவது மனைவி க்கு அநேகர் உணவுப்பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தனர். அவளுக்கு ஒருவர் ஒரு பசுவைக் கொண்டு வந்து கொடுத்தார். மற்றொருவர் அவளுக்குச் சீனி கொடுத் தார். இன்னொருவர் கோப்பி கொடுத்தார்.
ஒருநாள் முதல் மனைவி இரண்டாவது மனைவியிடம் சென்று 'சகோதரி, பாயா உ இறந்த நாளிலிருந்து நான் பட்டினியாக இருந்து வருகின்றேன். எனக்கு ஒருவரும் ஒன்றுமே கொண்டு வந்து தருவதில்லை. ஆனால் பார், உனக்குக் கனபேர் அதிக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து தருகின்றார்கள்’ என்று கூறினாள்.
இரண்டாவது மனைவி கேட்டாள், ‘நன்று பாயா உ உனக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுக் கும் பொழுது அவைகளை நீ என்ன செய்தாய்?"
'நான் மாத்திரம் அவற்றைச் சாப்பிட்டேன்’ என்று முதல் மனைவி கூறினாள்.
160

உலகத்து நாட்டார் கதைகள்
'உன்னுடைய கைவிரல்களை விரிக்க வேண்டும் என்று பாயா உ சொன்ன பொழுது நீ உன்னுடைய விரல் களை விரித்திருக்க வேண்டும். நீ என்ன செய்தாய்?"
'நான் சாப்பிடும்பொழுது என்னுடைய விரல்களை நான் காற்றில் விரித்தேன். ஆகாயத்தை நோக்கித்தான் விரித்தேன்’ என்றாள் முதல் மனைவி.
இதைக் கேட்டு இரண்டாவது மனைவி சிரித்தாள். ‘நன்று. நீ காற்றில் உன்னுடைய விரல்"ளை விரித்தாய். அப்படியானால் காற்றுத்தான் உனக்கு உணவுப் பொருட் களைக் கொண்டு வந்து தரவேண்டும். என்னைப் பொறுத்த வரை, நான் எந்த மக்களுக்கு என் உணவுப் \ பாருட்களைப் பகிர்ந்து கொடுத்தேனோ அந்த மக்களே இப்பொழுது எனக்கு உணவுப் பொருள்களைத் தருகின்றார்கள்’ என்று அவள் கூறினாள்.
61

Page 93
lர்வை பொன்னையன்
132. இன்பதுன்பங்கள்
முன்னொரு காலத்தில் ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் வீடு நிறையப் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந் தார்கள், ஆனால் அவர்களுக்கு ஒரு சிறு துண்டு நிலம்தான் இருந்தது. அவர்கள் அனைவரும் இரவு பகலாகக் கடுமை யாக உழைத்தும் தங்களுடைய உயிர்களை உடலில் வைத் திருக்கக் கூடிய போதுமான வருமானத்தைப் பெற முடியாமல் ஏழ்மையில் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் இசையையும் கீதங்களையும் நேசித்து எப்பொழுதும் பாடிக்கொண்டே ஆனந்தமாக வாழ்ந்தார்கள்.
சிறிது காலத்தின்பின் ஒரு நாள் அவனது மனைவி திடீரென இறந்து விட்டாள். இது அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் மரண அடியாக இருந்தது. அவர்களது வீட்டில் சோக கீதங்கள் மாத்திரம்தான் ஒலித்துக் கொண்டி ருந்தன.
அவர்களுடைய வீட்டிற்குச் சமீபமாக ஒரு பெரும் பிரபு வசித்து வந்தார். அந்த மனிதனுடைய துயர வாழ்க்கையைப் பார்த்த பிரபு, ஒரு நாள் அவனுடைய வீட்டிற்கு வந்து ஒரு பணமுடிப்பை மேசைமீது வைத்து விட்டு அவனுக்கு எத்தனை பிள்ளைகள் என்று வினாவினார்.
தனக்குப் பத்துப் பிளைகள் என்று அம்மனிதன் கூறினான். 'உன்னுடைய இந்தச் சின்ன வீட்டிற்கு பத்துப் பிள்ளைகளும் அளவுக்கு அதிகமல்லவா? இடம் சரியான
162

உலகத்து நாட்டார் கதைகள் நெருக்கடியல்லவா? நீ இந்தப் பணமுடிப்பை எடுத்துக் கொண்டு உனது பிள்ளைகளில் ஒன்றை எனக்குத் தந்து விடு. உனது வசிப்பிட நெருக்கடி ஓரளவுக்குக் குறைந்து விடும்’ என்றார் பிரபு.
மனிதன் தனது பிள்ளைகள் அனைவரையும் அழைத் தான்.
'இந்தப் பிரபு எனக்கு ஒரு பண முடிப்பைத் தந்துள் ளார். அதற்குப் பதிலாக உங்களில் ஒருவர் அவருடன் செல்ல வேண்டும். அவருடன் செல்பவர் நல்ல உணவை உண்ண முடியும். பஞ்சணை மெத்தையில் உறங்க முடியும். அவருடன் செல்வதற்கு உங்களில் யார் விரும்புகின் நீர்கள்?’ என்று கேட்டான்.
பிள்ளைகள் அழுது புலம்பினார்கள்.
“பிரபுவே! எனது பிள்ளைகளில் ஒருவர்தானும் உங்க ளுடன் வருவதற்கு விரும்பவில்லை’ என்று அந்த மனிதன் கூறினான்.
பிரபு சிறிது நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தார். ‘சரி, வருவதும் வராததும் உங்களைப் பொறுத்தது. உங்களது பாடல்களின் சத்தம் என்னுடைய நித்திரையைக் குழப்புகின்றது. நீங்கள் இந்தப் பணத்தை வைத்திருக் கலாம். ஆனால் நீங்கள் பாடுவதை நிறுத்த வேண்டும்’ என்று பிரபு நிபந்தனை விதித்தார்.
"சரி, அப்படியே செய்கின்றோம்’ என்று மனிதன் பிரபு வின் நிபந்தனைக்கு உடன்பட்டதுடன் பணத்தை ஏற்றுக் கொண்டான். பிரபுவும் சென்று விட்டார்.
சிறிது நாட்கள் அந்த மனிதனுடைய வீட்டில் அமைதி நிலவியது. ஆனால் ஒரு நாள் திடீரெனப் பிள்ளைகளில் ஒருவன் பாடத் தொடங்கினான். அவனுடைய பாடல் துயரம்
163

Page 94
நீர்ணவ பொன்னையன்
மிக்கதாக இருந்ததால் அவனுடைய சகோதரர்கள், சகோதரி கள் அனைவரதும் கண்களிலிருந்து கண்ணிர் பெருகியது.
அந்த மனிதன் பண முடிப்பை எடுத்துக்கொண்டு பிரபுவின் வீட்டிற்குச் சென்றான்.
'மன்னித்துக் கொள்ள வேண்டும் பிரபுவே! எனது பிள்ளைகளையோ அல்லது அவர்களது இசையையோ உங்களால் பணத்திற்கு வாங்க முடியாது’ எனக் கூறி பண முடிப்பை அந்தப் பிரபுவின் மேசையில் வைத்துவிட்டு அந்த ஏழை மனிதன் புறப்பட்டான்.
அன்று தொடக்கம் அந்த ஏழையின் வீட்டில் இன்ப துன்பப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.
அவர்கள் அனைவரும் பட்டினியினால் இறந்திருக்கா விட்டால், இன்றுங்கூட அவர்களுடைய கீதங்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
Ο
164
 

உலகத்து நாட்டார் கதைகள்
133. புதையல் தேடிய முட்டாள்கள்
ஒரு விவசாயி மரணவேளையை நெருங்கிக் கொண்டி ருந்தான். பயிர்ச் செய்கையில் வெற்றியீட்டுவதற்கான வழி முறைகளைத் தன் புதல்வர்களுக்குக் கூற விரும்பினான். அவன் அவர்களை அழைத்து, பின்வருமாறு கூறினான். “என் அருமைப் பிள்ளைகளே! இப்பொழுது நான் எனது வாழ்விலிருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கின்றேன். எனது திராட்சைத் தோட்டத்தைத்தான் நான் உங்களுக்குச் சொத்தாக விட்டுச் செல்கின்றேன். அதற்குள்தான் பெரும் செல்வம் இருக்கின்றது” என்று கூறிவிட்டு அவன் இறந்து விட்டான். அந்தத் திராட்சைத் தோட்டத்திற்குள் பெரும் புதையல் இருக்கின்றது என்று ஊகித்த புதல்வர்கள் அந்த வயோதிபத் தந்தை இறந்த உடனேயே தங்களிடமுள்ள கலப்பைகள், மண்வெட்டிகள் போன்ற எல்லாக் கமத்தொழிற் கருவிகளையும் கொண்டு சென்று தோட்டத்தில் வேலை செய்தார்கள். அந்த நிலத்தை உழுதும் வெட்டியும் மீண்டும் மீண்டும் மேலும் கீழுமாக மண்ணைப் புரட்டிக் கிளறி உழுதார்கள். உண்மையில் அவர்களால் எதுவித புதையலை யும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக அவர் கள் தரையை மீண்டும் மீண்டும் உழுதமையினால் பண் படைந்த நிலம் முன்னெப்பொழுதுமில்லாதவாறு பெரும் விளைச்சலைக் கொடுத்தது. அந்த இளம் விவசாயிகள் பாடு
பட்டதற்குப் பலன் கிடைத்தது.
Ο
165

Page 95
நீர்வை பொன்னையன்
134. இரு தலைக்கொள்ளி
ஒரு மனிதனுக்கு இரண்டு புதல்விகள். ஒரு மகளை ஒரு விவசாயிக்கும் மற்றவளை மட்பாண்டம் செய்யும் ஒருவ னுக்கும் திருமணம் செய்து வைத்தார் தந்தை. சிறிது காலத் தின் பின் தந்தை விவசாயம் செய்பவனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர்களுடைய வாழ்க்கை எப்படியிருக் கின்றது என்று மகளை வினவினார். மிகச் சிறப்பாக இருக் கின்றது. எங்களுக்குத் தேவையான எல்லாம் தாராளமாக இருக்கின்றன. நாங்கள் சந்தோஷமாக வாழ்கின்றோம். ஆனால் நீங்கள் ஒரே ஒரு பிரார்த்தனைதான் செய்ய வேண் டும். அதாவது எமக்குக் கடும் மழை பெய்தாக வேண்டும். அப்பொழுதுதான் எங்களுடைய பயிர்களுக்குப் போதிய நீர் கிடைக்கும் என்று முதலாவது மகள் கூறினாள்.
தந்தை மட்பாண்டம் செய்பவனுடைய மனைவியிடம் சென்றார். அவர்களுடைய வாழ்க்கை எப்படி என்று மகளைக் கேட்டார். எங்களுக்கு எதுவித குறையுமில்லை. எங்களுக் குத் தேவையான எல்லாமேயிருக்கின்றன. நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்கின்றோம். ஆனால் இந்த நல்ல காலநிலை அதா வது கடும் வெய்யில் தொடர்ந்து இருக்க வேண்டும். இதற் காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த வெப்ப மான காலநிலை தொடர்ந்தால்தான் நாங்கள் செய்கின்ற மட் பாண்டங்கள், ஓடுகள், பானைகள் எல்லாம் இந்த வெப்பத் தில் உலர்ந்து காயும் என்று கூறினாள் இரண்டாவது மகள்
66

உலகத்து நாட்டார் கதைகள் ‘ஐயோ! நான் என்ன செய்ய? நீ வெய்யில் வேண்டு மென்று அதற்காக என்னைப் பிரார்த்தனை செய்யும் படி சொல்கின்றாய். உன் சகோதரி மழை வேண்டுமென்று என் னைப் பிராத்தனை செய்யச் சொல்கின்றாள். நான் எதற்காகப் பிரார்த்தனை செய்ய முடியும்?’ என்று தந்தை கூறினார்.
Ο
167

Page 96
நீர்வை பொன்னையன்
135. தற்பெருமை
ஒரு தேவதாரு மரம் ஒரு முட்புதருக்குத் தன்னைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ‘உன்னால் எவரு க்கும் எதுவித பிரயோசனமுமில்லை. ஆனால் என்னைத் தவிர்த்து விட்டு, தானியக் களஞ்சியத்தையோ அல்லது வீட் டையோ எவராலும் எப்படிக் கட்டமுடியும்? என்னை உபயோ கிக்காமல் ஒன்றையுமே கட்ட முடியாது’ என்று கூறிப் பெரு மைப்பட்டது.
'நன்று ஐயனே! மரம் வெட்டிகள் தங்களுடைய கோடரிகளுடனும் வாள்களுடனும் இங்கு வரும்பொழுது தேவதாரு மரமாக இருக்க விரும்புவாயா அல்லது முட் புதராக இருக்க விரும்புவாயா?’ என்று தேவதாரு மரத்தைக் கேட்டது முட்புதர், தேவதாரு மரம் மெளனமாகத் தலை குனிந்து நின்றது.
Ο
168
 

உலகத்து நாட்டார் கதைகள்
136. ஆறாவது அறிவு
இல்லாத மனிதன்
முன்னாரு காலத்தில் அனன்சி என்றொருவர் இருந் தார். அவர் உலகிலுள்ள பொது அறிவு முழுவதையும் தான் தான் வைத்திருக்க வேண்டுமென விரும்பினார். இதனால் தான் ஏராளமான பணத்தைச் சேகரிக்க முடியம். அத்துடன் பெருமளவு அதிகாரத்தையும் வைத்திருக்க முடியுமென்று எண்ணினார். ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய கவலைகளுடன் வருவார்கள். தங்கள் கவலைகளைத் தீர்ப்ப தற்குத் தன்னுடைய ஆலோசனைகளைக் கேட்பார்கள். அவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்கு அவர்களிடம் தான் ஆலோசனைக்கான கட்டணப்பணம் அறவிட முடியும் என்று எண்ணினார்.
அனன்சி தன்னால் சேகரித்துக் கொள்ளக்கூடிய அறிவு அனைத்தையும் சேகரிக்க ஆரம்பித்து, அவைகளை ஒரு பெரிய பைக்குள் பொதிந்து வைத்தார். அவர் தேடித் தேடிப் பார்த்து இனி எந்தப் பொது அறிவையும் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலைமை வந்தது. அவர் ஒரு உயர்மான மரத்தின் உச்சிக் கொப்பில் அந்தப் பொது அறிவு பொதிந் துள்ள பையை மறைத்து வைக்கத் தீர்மானித்தார். ஏனெனில் ஒருவராலும் பொது அறிவை எட்ட முடியாது என்பதால் அப்படிச் ஈெ': விரும்பினார்.
169

Page 97
நீர்வை பொன்னையன்
அனன்சி பொதுஅறிவு நிரம்பிய பையின் வாய்ப் பகுதி யைக் கயிற்றினால் சுற்றிக் கட்டி அந்தக் கயிற்றின் இரண்டு தலைப்புக்களையும் தன்னுடைய கழுத்தைச் சுற்றிக் கட்டிய தால் அந்தப் பை அவருடைய வயிற்றின்மீது கிடந்தது. அவர் அந்த உயரமான மரத்தின்மேல் ஏறத் தொடங்கினார். அவரு டைய முயற்சிக்கு அந்தப் பை இடையூறாக இருந்தபடியால் அந்த மரத்தில் அவரால் வேகமாக ஏற முடியாமல் இருந்தது. அவர் கடுமையாக முயற்சித்தார். ஆனால் மரத்தில் ஏற முடிய வில்லை. மீண்டும் மீண்டும் அவர் முயற்சித்துக் கொண்டி ருந்தார். அவ்வேளை அவருக்குப் பின்புறமாகத் திடீரென உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. அவர் திரும்பிப் பார்த்தார். அந்த மரத்தடியில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்ததை அவா கனடாா.
‘'நீ எவ்வளவு முட்டாள் மனிதனாய் இருக்கிறாய்! நீ இந்த மரத்தின் முன்பக்கமாக ஏற வேண்டுமென்றால் உன் னுடைய வயிற்றுப் பக்கமாக இருக்கின்ற பையை நீ பின் பக்கமாகப் போட்டிருக்க வேண்டும். நீ ஏன் அப்படிச் செய்ய வில்லை?” என்று அச்சிறுவன் அனன்சியைக் கேட்டான். உலகத்திலுள்ள பொதுஅறிவு எல்லாவற்றையும் ஒரு பெரிய பையில் அடைத்து வைத்த பின்பு இந்தச் சாதாரண சிறுவனு டைய வாயிலிருந்து இந்தப் பெரிய பொது அறிவு நிறைந்த கேள்வியைக் கேட்டபொழுது அனன்சிக்குக் கடுங்கோபம் வந்தது. உடனே அனன்சி பொது அறிவு நிரப்பி வைக்கப் பட்ட பையை எடுத்துத் துண்டு துண்டாகக் கிழித்தார். உடனே அப்பையில் நிரம்பியிருந்த பொது அறிவு அனைத் தும் காற்றில் சிதறி உலகெங்கும் பரவியது. இதனால் உலகிலுள்ள ஒவ்வொருவரும் பொது அறிவின் சிறுபகுதி யைப் பெற்றனர். ஆனால் அவர்கள் எவரும் பொது அறிவை முழுமையாகப் பெறவில்லை.
O
170

உலகத்து நாட்டார் கதைகள்
137. கட்டையன் நெட்டையனாக
வர முயலுதல்
சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சித்திரக் குள்ளன் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் பெரிய உடல்வாகுடையவனாக வளருவதற்கு விரும்பினான். அயற்புறத்திலுள்ள மிகப் பெரிய வஸ்தாதுவிடம் சென்று நான் எப்படிப் பெரிய உடலைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கேட்டறிந்து கொள்ளப் போகின்றேன் என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் அந்தச் சித்திரக் குள்ளன். ஆகவே பெரிய உடலையுடைய குதிரையிடம் சென்றான் அவன். 'திரு குதிரையார் அவர்களே! உங்களுடைய உடலைப் போன்ற பென்னம்பெரிய உடலை நான் எப்படிப் பெற்றுக் கொள்ள முடியும்? என்று உங்களிடம் கேட்டறிந்து கொள்ள நான் வந்திருக்கின்றேன்" என்று சித்திரக்குள்ளன் கூறினான்.
'நல்லது! நீ பெருந்தொகையான தானியத்தைத் தின்று விட்டு இருபது மைல்கள் தூரத்தை நீ சுற்றிச் சுற்றி வேகமாக ஓட வேண்டும். சிறிது வேளையின் பின் நீ என்னைப் போல பெரிய உடலையுடையவனாக வளர்ந்து விடுவாய்' என்றது குதிரை.
ஆகவே குதிரை கூறியபடியே சித்திரக்குள்ளன் செய் தான். அவன் பெருந் தொகையான தானியத்தைத் தின்றான். அளவுக்கதிகமான தானித்தைத் தின்றதால் அது அவனு டைய வயிற்றில் புண்ணை ஏற்படுத்தியது. அவன் தொடர்
171

Page 98
நீர்வை பொன்னையன்
ந்து ஓடியதால் அவனுடைய கால்களில் காயம் ஏற்பட்டது. அவனுடைய இந்த முயற்சி அவனுடைய உள்ளத்தைப் பாதித்தது. ஆனால் அவன் முன்பிருந்ததைப்போலக் குள்ள னாகவேயிருந்தான். குதிரை கூறிய ஆலோசனை ஏன் எள்ள வேனும் பயன் தரவில்லை என்பதைப்பற்றித் தனது, வீட்டிலி ருந்தபடியே சிந்தித்தான். ஆகவே நான் எருது மாட்டைப் பார்க்கச் செல்லப் போகின்றேன் என்று கூறிக் கொண்டான். அவன் எருதிடம் சென்றான். 'எருதாரே! உம்முடைய உடலைப் போல, பென்னம் பெரிய உடலை நான் எப்படி வளர்த்தெடுக்க முடியும்? அதற்கு ஒரு வழி சொல்லித் தாரும்’ என எருதை அவன் கேட்டான்.
‘'நீ பெருமளவு புல்லைத் தின்று விட்டு திரும்பத் திரும்பக் காற்றை உள்ளுக்கு இழுத்து ஊதி விட வேண்டும்." என்றது எருது.
சித்திரக்குள்ளன் எருது கூறியதை அப்படியே செய் தான். அவனுடைய வயிற்றில் புல் காயத்தை ஏற்படுத்தியது. அது மாத்திரமல்ல; திரும்பத் திரும்பக் காற்றை ஊதி யமையால் அவனுடைய தொண்டை பாதிக்கப்பட்டது. ஆனால் அவன் முன்னரைப் போலவே சின்னஞ் சிறிய குள்ள னாகவேயிருந்தான். குதிரை சொன்ன ஆலோசனை பலன் தரவில்லை. எருது கூறிய ஆலோசனைகூட எதுவித பலனையும் தரவில்லை. ஏன் என்று அவன் தனது வீட்டி லிருந்தபடியே சிந்தித்தான். சிறிது நேரத்தின்பின் சதுப்பு நிலத்தின் நடுவேயிருந்த ஒரு ஆந்தை அலறிய சத்தம் குள்ளனுக்குக் கேட்டது. 'தீய மக்களுக்குக் கெட்ட காலம் வரப் போகின்றது” என்பதைப் போதிப்பது போலிருந்தது, ஆந்தையின் இந்த அலறல் சத்தம்.
நான் எப்படிப் பெரிய உடலை உடைய மனிதனாக வர முடியும் என்று ஆந்தையை நான் கேட்கப் போகின்றேன்
172

உலகத்து நாட்டார் கதைகள் என்று முடிவுக்கு அவன் வந்தான். உடனே அவன் ஆந்தை யிடம் சென்றான்.
‘'நீ ஏன் பெரிய உடலையுடைய மனிதனாய் வருவ தற்கு விரும்புகின்றாய்?" என ஆந்தை அவன்ைக் கேட்டது. மற்றவர்களுடன் சண்டை போடும்பொழுது பெரிய உடலி ருந்தால் மற்றவர்களை இலகுவில் வெல்ல முடியும் என்பதற் காகத்தான் நான் அதை விரும்புகின்றேன் என்றான் குள்ளன். 'உன்னுடன் சண்டை போடுவதற்கு எவாவது எப் பொழுதாவது முயன்றார்களா?’ என்று ஆந்தை கேட்டது. 'இல்லை" என்றான் குள்ளன்.
'நல்லது சண்டை போடுவதற்கு எதுவித காரணமு மில்லாவிட்டால் நீ இப்பொழுது இருப்பதிலும் பார்க்கப் பெரிய உடலை வைத்திருக்க வேண்டிய காரணம் எதுவு மில்லையே!’ என்று கூறியது ஆந்தை. ‘நான் பெரிய உடலை வைத்திருந்தால் ஒரு நீண்ட தூரத்திற்குப பார்க்க முடியும்’ என்று இறுதியாக அவன் கூறினான். 'நீ ஒரு மரத்தில் ஏறி அதன் உச்சியில் நின்று ஒரு நீண்ட தூரத்தைப் பார்க்க முடியும்தானே. உன்னைப் பொறுத்தவரை உன் னுடைய உடலை இப்போதிருப்பதைப் பார்க்க மேலும் பெரி தாக்குவதற்கு எதுவித காரணமுமில்லை. ஆனால் உன்னு டைய மூளையை மிகவும் பெரிதாக்குவதற்கு விசாலப் படுத்துவதுதான் சிறந்த காரணமாகும்’ என்று ஆந்தை கூறியது.
Ο

Page 99
நீர்வை பொன்னையன்
138. அகந்தையின் விளைவு
ஒருநாள் ஒரு பல்லியும் ஒரு தவளையும் ஒரு வேலி யின் வெடிப்பிற்கூடாகச் செல்வதற்கு முயற்சித்தன. இன்று தவளை நிமிர்ந்து இருப்பதைப் போல அந்த நாட்களில் பல்லியும் நிமிர்ந்திருந்தது. “கடவுள் கிருபை இருந்தால் இந்த வெடிப்பிற்கூடாக நான் செல்வேன்’ என்று தவளை கூறியது. அது முயற்சித்து, மீண்டும் மீண்டும் முயற்சித்து நசிந்து அந்த வெடிப்பிற்கூடாகச் சென்றுவிட்டது, வெற்றி கரமாக, ஆனால், பல்லி மிகவும் கர்வம் கொண்டதாக இருந் தது. “கடவுளின் கிருபை இருந்தாலென்ன, இல்லாவிட்டா லென்ன இங்குள்ள இந்த வெடிப்பிற்கூடாக என்னால் வெற்றிகரமாகச் செல்ல முடியும்" என்று அகந்தையுடன் கூறியது. அது கூறிவிட்டு அந்த வெடிப்பிற்கூடாகச் செல்ல முயற்சித்தது. அவ்வேளை மரக்குத்தி ஒன்று அதன்மேல் விழுந்து பல்லி நசிந்து தட்டையாக வந்தது.
அதனால்தான் இன்னும் பல்லி தட்டையாக இருப் பதுடன் தூசிப்படலத்தின்மீது தனது வயிற்றினால் ஊர்ந்து செல்கின்றது. அதேவேளை தவளை நிமிர்ந்து தத்தித் தத்திப் பாய்ந்து செல்கின்றது.
(D
174

உலகத்து நாட்டார் கதைகள்
139. உலகில் நீதியே இல்லை
தான் எவ்வளவு நன்மை செய்ய முயறசித்தாலும் அந்த நற்செயலுக்காக ஒருபொழுதாவது நல்ல பெயரைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று யாரோ ஒருவனுடன் கதைத்துக் கொண்டிருக்கும்பொழுது பிசாசு ஒன்று முறையிட்டது. அது உண்மையில் அப்படித்தானா? என்று தனக்குத் தெரியாது என்று மற்றுமொரு ஆள் சொன்னபொழுது "சரி, நான் என்ன எண்ணுகிறேன் என்பதை உனக்குக் காட்டுகிறேன்" என்று பிசாசு கூறியது.
ஆகவே பிசாசு கடவுளிடம் சென்று நீங்கள் பாதையில ஒரு கல்லை வைத்தால் அதன்மீது நாளொரு பணப்பையை வைக்க முடியும். இது ஒரு நல்ல செய்தி அல்லவா? என்று கடவுளிடம் கேட்டது. கடவுள் பாதையில் ஒரு பெரிய கல்லை வைத்தார். பிசாசு அதன்மேல் ஒரு பணப்பையை வைத்தது. அந்தப் பாதை வழியே நடந்து வந்து கொண்டிருக்கின்ற யாரோ ஒருவன், தான் எங்கு சென்று கொண்டிருக்கின்றேன் என்பதைப் பார்க்காமல் பாதையில் கிடந்த கல்லில் கால் இடறி விழுந்தான். 'எந்தப் பிசாசு இந்தக் கல்லை இதில் போட்டது? இந்தக் கல்லில் எனது விரல் தடுக்கி இடிபட்டு, நசிந்து விட்டதே' என்று அந்த வழிப்போக்கன் கூறினான். அதன்பின் அவ்வழியே வந்து கொண்டிருந்த மற்றுமொரு மனிதன் அதில் கிடந்த பணப்பையைக் கண்டெடுத்தான். உடனே அவன் மேலே பார்த்தபடியே 'நான் சென்று
175

Page 100
நீர்வை பொன்னையன் கொண்டிருக்கின்ற வழியில் இந்தப் பணப்பையை அனுப்பி வைத்தமைக்காக, கடவுளே, உமக்கு எனது மனமார்ந்த நன்றி கள்' என்று அந்த மனிதன் கூறினான். 'பார்த்தாயா? நான் என்ன எண்ணுகின்றேன் என்பதை நீயே பார்த்தாயல்லவா? உலகில் நீதியே இல்லை என்று நான் உனக்குக் கூறினேன் அல்லவா?’ என்று பிசாசு கூறியது.
Ο
176
 

உலகத்து நாட்டார் கதைகள்
140. கோழிகளின் சகிப்புத்தன்மை
முன்னொரு காலத்தில் கோழிகள் ஒவ்வொரு சனிக் கிழமை இரவும் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்தன. அந்த நடன நிகழ்ச்சிகளுக்கு பிடில் வாத்தியம் வாசிப்பதற்கு ஆந்தையை நியமித்தன. ஆந்தை தன்னுடைய பெரிய கண் களைக் கோழிகள் பார்த்து விடக் கூடாதென்பதற்காக விடியு முன்பே அந்த இடத்தைவிட்டுச் செல்வதில் எப்பொழுதும் கவனமாக இருந்தது. சென்ற தடவை ஆந்தை கோழிகளுக் காகப் பிடில் வாசித்துக் கொண்டிருக்கையில் அது நேரத்தைக் கவனிக்கவில்லை. நன்றாக விடிந்துவிட்டது. பகல் ஒளி ஆந்தையைப் பிடித்துக் கொண்டது. இந்தநேரத்தில், பேட்டுக் கோழிகள் ஆந்தையின் பெரிய கண்களைப் பார்த்த பொழுது வியப்படைந்ததுடன் அச்சம் கொண்டு கத்திய படியே அறையைவிட்டு வெளியே ஓடின.
அன்றிலிருந்து ஒரு ஆந்தையின் நிழலைக் கூடக கோழிகளால் பார்த்துச் சகிக்க முடியாமலுள்ளது
AD

Page 101
நீர்வை பொன்னையன்
141. வாழ்க்கை பற்றிய சண்டை
ஒருநாள் நாயும பூனையும் தாங்கள் ஒரே பாதையிலே யே சென்று கொண்டிருப்பதைக் கண்டறிந்தன.
'பிறக்கின்ற மனிதன் இறப்பான். இது நிச்சயம். இறக் கின்ற மனிதன் திரும்பி வரமாட்டான். அவன் செத்தது செத்ததுதான். செத்தவன் ஒரு நாளும் மீண்டடெழுந்த தில்லை’ என்று பூனை வாதிட்டது. "மனிதன் செத்தாலும் அவன் திரும்பி வருவான். அவனால் வர முடியும். செத்தவர் கள் மீண்டும் பிறக்கிறார்கள்’ என்று நாய் வாதிட்டது.
‘நன்று; இறப்பையும் பிறப்பையும் பற்றி இறைவன் என்ன கூறுகின்றார் என்பதை நாம் அறிவோம். அவரிடம் நாம் போய்க் கேட்போம்” என்றது பூனை. அடுத்த நாள் இறைவ னிடம் செல்வதற்கு அவைகள் இரண்டும் உடன்பட்டன. ஆனால் பூனை அவ்விடத்தை விட்டகன்ற உடனேயே பூனைக்கெதிராக ஒரு சூழ்ச்சியைத் திட்டமிட்டுச் செயற்பட ஆரம்பித்தது நாய், பூனைக்கு வெண்ணெயில் அதிக ஆசை யுண்டு என்று நாய்க்குத் தெரியும். பூனை செல்லவிருக் கின்றன பாதை நெடுகிலும் இடைக்கிடையே வெண்ணெ யை வைத்தால் ஒவ்வொரு இடத்திலும் நின்று அதைத் தின்பதற்கு நிற்க வேண்டியிருக்கும். இதனால் பூனையின் பிரயாணத்தில் தாமதம் ஏற்படும். அதேவேளையில் தான் கடவுளின் வீட்டிற்கு முதலில் சென்றுவிட முடியும் என்று நினைத்தது. இதன்படி நாய், பூனை செல்லும் வழியில்
178

உலகத்து நாட்டார் கதைகள் இடைக்கிடையே வெண்ணெயை வைத்தது. பூனையும் நாயைப் போலவே செயற்பட்டது. கடவுளுைைடய வீட்டை நோக்கி நாய் செல்லும் வழியில், இடைக்கிடையே எலும்புத் துண்டுகளைக் கடித்துச் சுவைப்பதில் நாய்க்குப் பெரும் ஆசை உண்டென்பதைத் தெரிந்த பூனை, நாய் செய்வதைப் போலவே தானும் செய்தது.
அடுத்த நாள் காலை நேர காலத்துடனே அவை கடவுளி னுடைய வீட்டை நோக்கிப் புறப்பட்டன. முதலில் நாய் சிறிதளவு வெண்ணெய் வைத்த இடத்திற்கு, அவை இரண் டும் வந்தன. பூனை தனது நாசியைக் காற்றில் உயர்த்தி மோப்பம் பிடித்து நாயினுடைய சூழ்ச்சியைத் தெரிந்து கொண்டது. ஆகவே அது தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் நிற்காமல் சாவதானமாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் எலும்புத் துண்டு வைத்த இடத்திற்கு நாய் வந்ததும் அது நின்றது. எலும்பைக் கடித்துச் சு வைக்கும் அதனுடைய உணர்வை அதனால் கட்டுப் படுத்த முடியவில்லை. அது தரித்து நின்று எலும்புத் துண்டு களைக் கடித்துச் சுவைத்துவிட்டு அடுத்த இடத்திலும் சென்று அப்படியே செய்தது.
பூனை இறைவனுக்கு முன்னால் வந்து தலை குனிந்து வணக்கித் தனது கேள்வியை முன்வைத்தது. 'மனிதன் இறந்தால் அவன் அப்படியே செத்துப் போவானா? அல்லது அவன் மீண்டும் வருவானா? அதாவது அவன் மீண்டும் உயிர் பெற்றெழுவனா?’ என்று மிகவும் பணிவாக இறைவனைக் கேட்டது பூனை.
‘நல்லது; நீ இதைப்பற்றி என்ன நினைக்கின்றாய்?" என்று கடவுள் பூனையைக் கேட்டார். ‘மனிதன் செத்தவன் செத்தவன்தான். அவனால் திரும்பிவர முடியாது. அதாவது அவனால் மீண்டும் உயிர் பெற்றெழ முடியாது. செத்தவன்
179

Page 102
நீர்வை பொன்னையன் --
செத்தவன்தான்' என்றது பூனை 'அது சரியென்று எனக்குத் தோன்றுகிறது. அப்படித்தான் நானும் எண்ணுகின்றேன். செத்த மனிதன் செத்தவன்தான். அவனால் மீண்டும் உயிர் பெற்றெழ முடியாது’ என்று இறைவன் கூறினார்.
இப்பொழுது நாய் வந்தது. அதே கேள்வியை அது இறைவனிடம் கேட்டது. 'நல்லது; இதே கேள்வியைத் தான் பூனையும் என்னிடம் கேட்டது' என்று கடவுள் நாய்க்குக கூறினார். 'மக்கள் செத்தால் அவர்கள் செத்தவர்கள்தான் என்று எனக்குப் பூனை கூறியது. அது சொன்னதுதான் சரி என்று எனக்குத் தோன்றுகின்றது."
"ஆனால் நீ இங்கு வந்து கொண்டிருக்கிறாய் என்ப தைக்கூட உன்னால் உனது மனதில் வைத்திருக்க முடிய வில்லை. அதனால்தான் நாயாகிய நீ இங்கு தாமதமாக வந் திருக்கின்றாய். ஒவ்வொரு இடத்திலும் இருக்கின்ற ஒவ் வொரு எலும்புத்துண்டையும் கண்டதும் நீ எதற்காக இங்கு வந்துகொண்டிருந்தாய் என்பதைக்கூட நீ மறந்து விட்டாய். ஆகவே அது பூனை சொன்ன மாதிரி அபபடியே இருக்கும். மக்கள் இறந்தால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்றெழ மாட் டார்கள்."
Ο
18O
 

--- - - - ------- உலகத்து நாட்டார் கதைகள்
| 42 விழிப்பு
ஒரு வீடடில திருடச செனறான ஒரு கள்வன். அந்த வீடடிலுள்ள நாய்க்கு இறைச்சித் துண்டொன்றைப் போடுவ தன் மூலம் அதைக் குரைக்காமல் செய்ய முயன்றான். "ஒடு நீ ஓடிவிடு; உன் மேல் எனக்குச் சந்தேகம். ஏனென்றால் நீ அளவுக்கதிகமாக எனக்கு அன்பு காட்டுகிறாய். அதுதான் நீ ஒரு பெரும் கள்ளன் என்று என்னை நம்பச் செய்கின்றது" என்று கூறிய நாய், கள்ளன் போட்ட இறைச்சியைத் தொடக் கூட வில்லை
Ο
181

Page 103
நீர்வை பொன்னையன்
143. பரிமாற்றம்
மலைப்பிரதேசத்தில் வேட்டையாடிப் பெருந்தொகை இறைச்சியுடன் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான் ஒரு வேடுவன். அதே வேளை பெருந்தொகை மீனைப் பிடித் துக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான் ஒரு மீனவன். வரும் வழியில் இருவரும் சந்திக்க நேரிட்டது. மீன் உண்ண வேண்டும் என்ற விருப்பம் வேட்டைக்கார னுக்கு ஏற்பட்டது. அதேபோல இறைச்சி உண்ண வேண்டும் என்ற ஆசை செம்படவனுக்குத் தோன்றியது. ஆகவே தம் மிடமுள்ள ஒரு பகுதியை மற்றவருக்குப் பரிமாறிக் கொண்ட னர் இருவரும். தினசரி மீனையும் இறைச்சியையும் பரிமாறிக் கொள்வதை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர். இதை அவதானித்த ஒருவர் கேள்வியெழுப்பினார். இந்த மாற்ற முடியாத பரிமாற்றத்தின் மூலம் தங்களுடைய சாப்பாட் டிற்கான அபிலாஷையை அவர்கள் அழித்து விடுவார்களா? அல்லது அவர்கள் ஒவ்வொருவரும் தனது சொந்த சாப்பாட் டுச் சுவை  ான அபிலாஷைக்கு மீண்டும் திரும்பி விடு வார்களா?
Ο
182

உலகத்து நாட்டார் கதை:
144. பயன்பாடு
புத்திசாலித் தந்தையின் வசமிருந்த ஒரு திராட சைத தோட்டத்தை வாரிசு உரிமையாகப் பொறுப்பேறறான் அவருடைய இளம் புதல்வன். அந்தத் திராட்சைத் தோட்டத் தைச் சுற்றிப் பெரும் புதர்கள் வளர்ந்திருந்தன. அந்தப் புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களைப் பெற முடியாது. அவை அனாவசியமானவை, பிரயோசனமற்றவை என்று எண்ணினான். உடனே அந்தத் திராட்சைத் தோட்டத்தைச் சுற்றியிருந்த புதர்கள் அனைத்தையும் அவன் கிளறி எறிந்து அழித்தான். அந்தத் தோட்டத்தைச் சுற்றி வேலியாயமைந் திருந்த அந்தப்புதர்கள் அகற்றப்பட்டமையால் மனிதர்களும் விலங்குகளும் அந்தத் தோட்டத்திற்கு இலகுவாகச் செல் வதற்கு வழிவகுக்கப்பட்டு அதற்குள்ளிருந்த திராட்சைக் கொடிகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களைப் பெறமுடியாவிட்டாலும் திராட் சைக் கொடிகளுக்கு அவை பாதுகாப்பான வேலியாய் அமைந் திருந்தன என்பதை அவன் காலம் கடந்தே உணர்ந்தான்.
Ο
183

Page 104
நீர்வை பொன்னையன் - -
145 முலகாரணம் யாா?
மாலுமிகள் நிறைந்த ஒரு கப்பல. கடல அலைகளில மேலும் கீழுமாகத தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருப்பதை ஒரு குடியானவன பார்த்தான்.
"ஓ கடலே! ஈவிரககமற்ற வஞ்சகத்தனமான இயற்கைச சகதியான நீ உன்னை நம்பி வந்த எல்லோரையும் அழித் தொழிக்கின்றாயே’ எனறு குடியானவன் திட்டினான்.
‘எங்களை நீ வீணாகத் திட்டாதே. இந்தக் குழப்டத திற்குக் காரணம் நானல்ல என்மீது காற்று வீசும்போது எனக்கு அமைதியும் ஓய்வுமிலலாத அலைகள் எப்பொழுதும் மோதிக் கொண்டேயிருக்கும். ஆனால் காற்று இல்லாதபோது என்மீது நீங்கள் கப்பலில் சென்றால, உங்களுடைய பூமித் தாயிலும் பார்க்க நான்தான் சாந்தமானவன், அமைதியானவன் என்று நீயே கூறுவாய்' எனக் குடியானவனுக்குக் கடல கூறியது
(D
84

உலகத்து நாட்டார் கதைகள்
146. போலி வைத்தியம்
தவளை ஒன்று சதுப்பு நிலத்திற்குள்ளிருந்து வெளியே வந்து, சகல நோய்களையும் குணப்படுத்துவதற்காகத்தான் தான் வந்திருப்பதாக உலகத்திற்குப் பிரகடனம் செய்தது.
'மனிதனால் முன்னொரு பொழுதும் அறியப்பட்டிராத சிறந்த மருந்துகளின் உரிமையாளனும், ஒரு மிகச் சிறந்த வைத்தியனும் நான். ஆகவே என்னிடம் வாருங்கள் உங் களது நோய்களை நான் குணப்படுத்துவேன்’ என்று அது கத்தியது.
"உனது நொண்டி நடையையும் உன்னுடைய உடலி லுள்ள கொப்புளங்களையும் சுருக்கங்களையும் உன்னால் குணப்படுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட உன்னால் மற்றவர்களுடைய நோய்களை எப்படிக் குணப்படுத்த முடியும்?’ என்று ஒரு நரி அத் தவளையைக் கேட்டது.
செய்யும் தொழிலைச் சரிவரச் செய்வதால் புகழும் பெய ரும் தாமாகவே வரும் என இதன் மூலம் அறிய முடிகிறது.
Ο

Page 105
நீர்வை பொன்னையன்
147 போதனை
ஒருநாள் சிறுவன் ஒருவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். அவன் மெதுமெதுவாகத் தன்னை யறியாமலே ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டான். அவனுக்கு நீந்தத் தெரியாதபடியால், அவன் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
அவ்வேளை, ஆற்றங்கரையோரமாகச் சென்று கொண் டிருந்த ஒரு வழிப்போக்கனை அச்சிறுவன் கண்டான். தன்னைக் காப்பாற்றும்படி வழிப்போக்கனைச் சிறுவன் கெஞ்சிக் கேட்டான். அந்தச் சிறுவனுடைய அசட்டுத் தைரி யம் பற்றி ஒரு விரிவுரையை நிகழ்த்திப் போதித்துக் கொண் டிருந்தான் வழிப்போக்கன்.
"ஐயா! என்னை முதலில் காப்பாற்றங்கள். அதன் பின் உங்களுடைய விரிவுரையை எனக்கு வாசித்துப் போதி யுங்கள்!” என்று அந்தச் சிறுவன் கூறினான்.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
148. அழுதவன் சிரித்தால் . . . ?
ஒரு கிராமத்தில் அந்தணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன். அந்த மகன் இளமையிலேயே மிகுந்த அறிவுள்ளவனாக விளங்கினான். அக்கிராம மக்கள் எல்லோரும் தன் மகனைப் புகழ்வதை எண்ணிப் பெருமைப் பட்டான் அந்தணன். அதனால், தன் மகன்மீது உயிரையே வைத்திருந்தான். அந்த மகனுக்குப் பதினாறு வயது நடந்து கொண்டிருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை கடும் நோய்வாய்ப்பட்ட அவன் திடீரென இறந்து விட்டான். தன் மகன் இறந்துவிட்டான் என்பதை அறிந்த அந்தணன், அந்த உடல்மீது விழுந்து அழுது புலம்பினான். தாங்க முடியாத சோகத்தால் அவன் கண்ணிலிருந்து கண்ணிர் ஆறாகக் கொட்டியது. பலர் ஆறுதல் கூறியும் அந்தணன் அமைதி அடையவில்லை.
இறந்தவனின் உடலை எரிப்பதற்காக ஊர் மக்கள் சுடு காட்டிற்கு எடுத்துச் சென்றனர். தீச்சட்டியைச் சுமந்துவாறு அழுது கொண்டே சென்றான் அந்தணன். அப்பொழுது அந்த வழியாக வயது முதிர்ந்த துறவி ஒருவர் வந்தார். அந்த ணனின் துன்பத்தைக் கண்டு அவருடைய அருளுள்ளம் வருந்தியது. எப்படியேனும் அவனுக்கு உதவ வேண்டு மென்று நினைத்தார்.
உடனே, அவர் தாம் பெற்றிருந்த கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றலால், தம் உடலை விட்டு நீங்கி அந்த இளைஞ
187

Page 106
நீர்வை பொன்னையன் னின் உடலுக்குள் புகுந்தார். பாடையில் இருந்த மகன் உயிர் பெற்றதைக் கண்டு அந்தணன் பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் உயிர் பெற்றெழுந்த இளைஞனோ முதலில் அழுதான். சிறிது நேரம் கழித்துச் சிரித்தான். இதுவரை தனக் கிருந்த உடலை விட்டு நீங்கியதற்கு அழுதான் இளமை யான உடலில் புகுந்ததற்காகச் சிரித்தான்
188
 

உலகத்து நாட்டார் கதைகள்
149. தண்டனை
ஒரு பறவையை வேட்டைக்காரன் தன்னுடைய வலை க்குள் பிடித்துக் கொண்டான்.
அப்போது அப்பறவை “எஜமானே! என்னை ஒன்றும செய்யாமல் விட்டுவிடுங்கள். மற்றப் பறவைகளை ஏமாற்றி உங்கள் வலைக்குள் சிக்க வைப்பதற்கு உதவி செய்வேன்" என்று அந்தப்பறவை பயத்துடன் கூறியது.
'இல்லை, நீ எப்படிக் கூறினாலும் நான் உன்னை விட்டு வைக்கப் போவதில்லை. நீ என்னிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது. இதில் நான் உறுதியாகவுள்ளேன் ஏனென்றால் தன்னுடைய நண்பர்களுக்குத் துரோகம் செய்பவர்களுக்கு மரணத்தைவிடத் தகுதியான தண்டனை வேறொன்றுமிருக்க முடியாது' என்று வேட்டைக்காரன் அந்தப் பறவைக்குக் கூறினான்
D
2/

Page 107
நீர்வை பொன்னையன்
150. பறத்தற் போட்டி
முன்னொரு காலத்தில் எல்லாப் பறவைகளும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு அரசன் தேவை என்று தீர்மானித் தன. ஏனெனில் மற்ற எல்லாப் பிராணிகளும் தமக்கென ஒரு அரசனை வைத்திருந்தன. மிருகங்கள் எல்லாவற்றிற்கும் சிங்கம் அரசனாக இருக்கின்றபடியால் பறவைகளுக்கு ஒரு சபையை அமைப்பதற்கு அவை சிங்கத்திடம் சென்றன.
கூட்டம் கூட்டப்பட்டபொழுது, எல்லாப் பறவைகளும் ஒன்று சேர்ந்தன. “குனிப்றே" என்ற பட்சிதான் மிகச் சிறிய பறவை. ஆனால் அதற்கு அகந்தை அதிகம். அது தனது உரு வத்தைப் பற்றிச் சிந்தித்தாலும், அது ஒரு முடிவுக்கு வந்தது. தன்னால் அரசனாக இருக்க இயலும் என்று இறுதியாக வெளிப்படையாகத் தனது முடிவை அறிவித்தது. இதனால் மற்றப் பறவைகள் எல்லாம் பெரும் வியப்படைந்தன.
ஆனால், இந்தச் சின்னஞ் சிறிய பறவையின் அறிவித்த லால் அவைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிங்கம் இந்த சிறிய பறவையின் அறிவித்தலைப் பற்றி யோசித்தது. இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது? என்று பறவைகள் நினைக்கின்றன என்று அவற்றையே கேட்டது. பறவைகள் எல்லாம் தங்களுக்குள்ளேயே கதைத்தன. தன் னால்தான் அதிக உயரத்திற்குப் பறக்க முடியும் என்று வல் லூறுக்குத் தெரியும். ஆகவே எந்தப் பறவையினால் ஆகக் கூடிய உயரத்திற்குப் பறக்க முடியும் என்பதைப் பார்ப்பதற் காக ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று மற்றப் 190

உலகத்து நாட்டார் கதைகள் பறவைகள் தீர்மானிக்கக்கூடும் என்று வல்லூறு எதிர் பார்த்தது. நான் இதை மனதில் வைத்துக்கொண்டுதான் போட்டி வைக்கும்படி கூறுகின்றேன் என்று மற்றப் பறவை கள் நினைக்கக்கூடும் என்பதால், வல்லூறினால் தன்னு டைய ஆலோசனையைக் கூறிக்கொள்ள முடியவில்லை
'நான் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகின்றேன ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் இதற்கு உடன்படுவீர் களா? என்று எனக்குத் தெரியாது’ என்று அதிர்ஷ்டவசமாக வானம்படி கூறியது. ‘சொல்லு; நீ என்ன சொல்ல விரும்பு கின்றாய் என்று நாங்கள் அறிய விரும்புகின்றோம்’ என்று மற்றப் பறவைகள் கூறின. 'யார் மிகவும் இனிமையாகப் பாடக்கூடியவன் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூறமாட்டேன். ஏனென்றால் நான் ஒரு இராகத்தைப் பாடினால் நான்தான் இலகுவில் வெற்றி அடைவேன் என எனக்கு நன்றாய்த் தெரியும்’ என்று வானம் பாடி கூறியது.
"ஆனால் எங்கள் அனைவருக்கும் இறைவன் ஒன்றை வழங்கியுள்ளார். அதுதான் இறக்கைகள். ஆகவே யாராக இருந்தாலும் எவர் ஆகக்கூடிய உயரத்திற்குப் பறக்கின் றாரோ அவரைத்தான் நாங்கள் அரசனாக்க வேண்டும்' என்றது வானம்பாடி, இதைக்கேட்டதும் வல்லூறுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஏனென்றால் இத்தகைய எண்ணத் தைத் தான், அது தன்னுடைய மனதில் நீண்ட காலமாக வைத்திருந்தது.
'இதுதான் மிகச் சிறந்த திட்டம்’ என்று துள்ளிக் குதித்தபடியே கூறியது வல்லூறு. 'குனியிறே என்ற பட்சி உட்பட எல்லாப் பறவைகளும் இந்த ஆலோசனைக்கு உடன்பட்டன. ஆனால், குனிபிறே" என்ன திட்டத்தைத் தன் னுடைய மனதில் வைத்திருக்கின்றது என்று ஒருவருக்கும் தெரியாது.
191

Page 108
நீர்வை பொன்னையன்
இந்தப் பறககும் போட்டி ஆரம்பித்தது. போட்டியில் கலந்து கொண்ட வல்லூறினுடைய முதுகுப் பக்கத்தில் சரியான நடுப்பகுதியில் ‘குனிபிறே மறைந்து இருந்தது ஒருவருக்கும் தெரியாது. ஏனென்றால் ‘குனிபிறே மிகவும் சின்னஞ்சிறியதாக இருந்ததால் அது மற்றப் பறவைகளி னுடைய கண்களுக்குத் தெரியவில்லை. அது மாத்திரமல்ல; குனிபிறே தன்னுடைய முதுகிலே இருக்கின்றது என்பதை வல்லூறினால் கூட உணர்ந்துகொள்ள முடியவில்லை. ஆகவே, அவைகள் போட்டியைத் தொடங்கின. சிறிது நேரத் தில் அவை பார்த்தபொழுது வல்லூறு அதிக உயரத்திற்குப் பறந்து சென்று விட்டது என்பதை, பறவைகள் எல்லாம் கண்டுகொண்டன. 'வல்லூறுதான் முதலாம் இடத்தைப் பெற்று, அதற்கான பரிசையும் தட்டிக் கொண்டது. ஆகவே அதுதான் எங்களுடைய அரசன்’ என்று பறவைகள் எல்லாம் கூறின. ஆனால் வல்லூறு கீழே இறங்கி வந்தபொழுது குனி பிறே மிக உச்சியிலே நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பறவைகள் குனிபிறேதான் வல்லூறிலும் பார்க்க மிக உயர த்தில் பறந்து கொண்டிருக்கிறது. எனவே எமது அரசன் குனி பிறேதான்; வல்லூறு அல்ல; என அவை ஏற்றுக் கொண்டன.
Ο
 

- உலகத்து நாட்டார் கதைகள்
15 வன்னெஞ்சம)
ஒரு மனிதன தன்னுடைய குதிரையுடனும கழுதை யுடனும் தனது பிரயாணத்தை மேற்கொண்டான். அவன குதிரையை விட்டுவிட்டு, கழுதைமீது ஒரு பெரும் சுமை யை ஏற்றிக் கொண்டு சென்றான். பெரிய சுமையினால் கழுதை உடல் வருத்தம் கண்டு கஷ்டப்பட்டது. இதனால் குதிரையைப் பார்த்து, "நீ இந்தச் சுமையின் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டால் என்னுடைய உடல் வருத்தம் நீங்கும் இல்லையேல் இந்தச் சுமை விரைவில் என்னைக் கொன்று விடும்" எனக் கூறியது.
ஆனால் குதிரையோ, கழுதையின வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் தனது பயணத்தை மேற்கொண்டது. கழுதை மெளனமாகப் பொதியை நொண்டி நொண்டிச் சுமந்து சென்று இறுதியில் வீழ்ந்து செத்தது. இதைப் பார்த்த எஜமான், கழுதை மீதிருந்த பொதியை அகற்றி குதிரைமீது ஏற்றியதுடன் கழுதையின் பிணத்தையும் ஏற்றும்படி கூறி னான்.
'ஐயோ! என்ன துரதிருஷ்டம், கழுதையின் பொதியில ஒரு பகுதியை நான் ஏற்றிருந்தால் இப்பொழுது முழுச் சுமையுடன் கழுதையின் பிணத்தையும் சுமக்க வேண்டி யிருககாதே’ எனக் குதிரை மெய் வருந்தியது.
(D
193

Page 109
நீர்வை பொன்னையன் -
152 சம யோசிகும்
ஒரு சிங்கமும, நரியும, கழுதையும் வேட்டைக்குச் சென்றன. அவற்றுக்குப் பெரிய இரை ஒன்று அகப்பட்டது. அந்த இரையைப் பங்கு போடும்படி சிங்கம் கழுதைக்குக் கூறியது. கழுதை மூன்று சம பங்குகளாக அந்த இரையைப் பிரித்து விட்டு, தாங்கள் விரும்பிய பங்கை எடுக்கும்படி நண்பர்களுக்குக் கூறியது. சிங்கம் கோபம் கொண்டு கழுதை மீது பாய்ந்து அதைத் துண்டு துண்டுகளாகக் கிழித்தது. அதன் பின் பங்குகளைப் பிரிக்கும்படி நரிக்குக் கூறியது. அந்த இரையின் ஒரு சின்னஞ்சிறிய பகுதியைத் தனக்கு ஒதுக்கி விட்டு பெரும்பகுதியைச் சிங்கத்திற்குப் பிரித்து வைத்தது நரி, 'ஆ நண்பனே! இப்படிப் பாரபட்சமற்ற முறை பில் பங்கு பிரிப்பதற்கு உனக்கு யார் கற்றுக் கொடுத்தது?" எனச் சிங்கம் நரியைக் கேட்டது.
கழுதையினுடைய தலைவிதியிலும பார்க்க வேறு ாடம எனக்குத் தேவையில்லையே' என நரி கூறியது.
Ο
194

உலகத்து நாட்டார் கதைகள்
153. விருந்தோம்பற் போட்டி
அனன்சியின் பிறந்த நாள அனறு தனனுடன் விருந்து உண்பதற்கு அவன் எல்லா மிருகங்களையும் அழைத்தான். ஆமையுங்கூட அந்த மிருகங்களுடன் விருந்துக்குச் சென் றது. ஆனால் ஆமை வருவதை அனன்சி விரும்பவில்லை. மிருகங்கள் எல்லாம் உணவு உண்ணச் செல்வதற்கு முன் சாப்பிடப் போகின்ற எல்லா மிருகங்களும் அவை சாப்பாட்டு மேசைக்கு வருவதற்கு முன்பே தங்களுடைய கைகளைக் கழுவிக்கொண்டு வரவேண்டும் என்று திடீரென அனன்சி கூறினான். எல்லா மிருகங்களும் அப்படியே செய்தன. ஆமையும் தன் கைகளைக் கழுவிச் சென்றது. ஆனால் அது திரும்பி வரும்பொழுது அதனுடைய கைகள் அசுத்தமாகி விட்டன. ஆமை தன் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க மீண்டும் முயற்சித்தது. ஆனால் வேறு எந்தவொரு வழி யிலும் அசுத்தம் இல்லாமல் வைத்திருக்க முடியவில்லை. ஆகவே அனன்சியினுடைய மேசையில் உணவருந்த ஆமையினால் செல்ல முடியவில்லை.
ஆமை தோல்வியுடன் அவ்விடத்தை விடடகன்றது. 'அணன்சி சூழ்ச்சியினால் என்னை ஏமாற்றிவிட்டான். ஆனால் நானும் அவனைச் சூழ்ச்சியினால் ஏமாற்றுவேன்' என்று ஆமை தனக்குத்தானே கூறியது.
ஆமை ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தது. தன்னிடம் விருந்துண்பதற்கு அது எல்லா மிருகங்களுக்கும் அழைப்பு அனுப்பியது. அனன்சியும் நிச்சயமாக வருவான் என்று ஆமைக்குத் தெரியும். அனைவரும் வந்ததும் தன் 195

Page 110
நீர்வை பொன்னையன் --ட -
னுடைய விருந்து தண்ணின் கீழ்தான நடககும் என்று ஆமை எல்லோருக்கும் அறிவித்தது. அனன்சி தான் பாரம் குறைந்தவன் என்பதால் அவனால் தண்ணிருக்கடியில் நீந்தி உணவு உண்கிற இடத்துக்குச் செல்ல முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அவன் ஒரு அரைக் கால் சட்டையையும் ஒரு மேல் சட்டையையும் இரவல் வாங்கி அணிந்துகொண்டான். அவன் தன் சட்டைப் பைக குள் கற்களை நிரப்பிக் கொண்டான். கற்களினால் பாரம் அதிகரித்த அவன் தண்ணின்கீழ் நீந்திச் செல்லக்கூடியதாக இருந்தது. விருந்து மேசை ஏற்பாடு செய்யப்பட்டு எல்லோ ரும் சாப்பிட ஆயத்தமானார்கள். அனன்சி தன்னுடைய மேல் சட்டைக்குள் கற்கள் நிரப்பி வைத்திருக்கின்றான் என்பது ஆமைக்குத் தெரிய வந்தது. உணவு சாப்பிட மேசையடிக்கு வருவதற்கு முன்னர் நீங்களெல்லோரும் உங்கள் மேல் சட்டைகளை அகற்றிவிடவேண்டும் என்று ஆமை கூறியது இதைக் கேட்டதும் அனன்சிக்குக் குழப்பம் ஏற்பட்டது அவன் அதைப் பற்றிச் சிந்தித்து, தனக்குத் தானே கூறினான் ‘என்னுடைய மேல்சட்டையை நான் அகற்றினால் நான மீண்டும் தண்ணிருக்கு மேலே மிதந்து செல்ல வேண்டி வரும். ஏனென்றால் என்னுடைய மேல் சட்டைப் பைக்குள் இருக்கும் கற்கள் என்னைத் தண்ணிரின் கீழே அமுக்கி வைத்திருக்கின்றன."
ஆகவே அவன் தன்னுடைய மேல் சட்டையை அகற்று வதற்கு மறுத்தான். ‘விருந்து கொடுக்கும் நீ எதை விரும்பி னாயோ அதையே செய்தாய். நான் எனது விருந்தைக கொடுக்கும்பொழுது நான் விரும்பியதையே நீங்கள் செய்ய வேண்டும். உன்னுடைய மேல் சட்டையை அகற்ற வேண் டும்’ என்று அனன்சிக்கு ஆமை கூறியது. தன்னுடைய மேல்சட்டையை அகற்றிய உடனே அனன்சி தண்ணின் மேலே மிதந்தான். ஆகவே அன்று அவனுக்கு எந்த உண
கிடைக்கவில்லை அவன் தோல்வியுடன் சென்றான்
)
196

SS - ܝ - ܙ - ܚ -- -- -- --- --- உலகத்து நாட்டார் கதைகள்
154 விசாரணை
படைத் தளபதி கிளெமனுடைய ப்ருத்திப் பண்ணை யில், ஒரு வருடம்வெட்டுக்கிளிகள் சென்று அங்குள்ள பருத்திப் பயிர்கள் அனைத்தையும் அழித்தொழித்துவிட்டன. இதனால் தளபதிக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டது. அவன் பெருமளவு பணத்தைச் சேர்த்து வைக்காததனால் தனது பண்ணையில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்குப் போதிய உணவையையோ உடையையோ அவனால் வழங்க முடியாதிருந்தது. ஆகவே அங்கு வேலை செய்து கொண்டி ருந்தவர்கள் தங்களால் இயலுமான வரை திருட ஆரம்பித் தார்கள்.
ஒரு வாரத்திற்குள் அந்த வேலையாட்களில் சிலர் கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல் லப்பட்டனர்.
ஒரு நாள் தளபதி கிளெமனுடைய பண்ணைக்கு ஒரு நாட்டாண்மைக்காரன் வந்து ஜோன் என்பவனைக் கைது செய்தான். ஜோனுடன் அடுத்த பண்ணையில் வேலை செய்த மற்றும் இருவரையும் கைது செய்தான். அவர்கள் மூவர் மீதும் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு ஒரே நாளில் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அந்த மூவரில் இருவர் வெள்ளையர்கள். இருவரும் முதலில் விசாரிக்கப்படுவார்கள் என்பது அவனுக்குத் தெரியவந்தது. ஆகவே அவர்கள் கூறும் பதில்களைப் போலவே தன்னு டைய முறை வரும்பொழுது தானும் கூறுவதற்குத் தீர் மானித்தான் ஜோன்.
197

Page 111
நீர்வை பொன்னையன்
°55 இரண்டுவெள்ளையர்களில் முதலாமவன் மீது ஒரு குதிரையைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
'நீ குற்றவாளியா? அல்லது சுத்தவாளியா?" என்று முதலாவது வெள்ளையனைக் கேட்டார் நீதிபதி.
'நான் குற்றமற்றவன். ஏனென்றால் இந்தக் குதிரை குட்டியாக இருந்த காலத்திலிருந்தே நான் இதை வைத்தி ருந்து வளர்த்து வருகின்றேன்’ என்று முதலாவது வெள்ளை யன் கூறினான். அவன் சுத்தவாளி என்று நீதிபதி கூறி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இதன் பின்னர் இரண்டாவது குற்றவாளியான வெள் ளையனுடைய முறை வந்தது. அவன் ஒரு பசுவைத் திருடி னான் என்று அவன்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
'நீ குற்றவாளியா? அல்லது சுத்தவாளியா?" நீதிபதி அவனைக் கேட்டார்.
'நான் சுத்தவாளி” என்றான் இரண்டாவது வெள்ளை
U6.
‘எப்படி?’ என்றார் நீதிபதி. 'இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த காலத்தில் இருந்தே நான் இதை வைத்திருந்து வருகின்றேன்” என்றான் இரண்டாது வெள்ளையன்.
இந்த வழக்கும்தள்ளுபடியாயிற்று. வெள்ளைக்காரன் விடுதலை செய்யப்பட்டான். ஜோன் என்ற கறுப்பினத்தவன் குற்றவாளிக் கூண்டிலேற்றப்பட்டான்.
'நீ குற்றவாளியா? அல்லது சுத்தவாளியா? நீதிபதி அவனைக் கேட்டார்.
‘நான் சுத்தவாளி. ஏனென்றால் அது ஒரு ஒற்றைச் சில்லு வண்டியாக இருந்த காலத்திலிருந்தே இந்தப் பார வண்டியை நான் சொந்தமாகவே வைத்திருக்கின்றேன்" என்று ஜோன் என்ற கறுப்பு இனத்தவன் கூறினான்.
O
198

உலகத்து நாட்டார் கதைகள்
155. கண்ணாற் கண்டது
கடற்கரையோரமாகச் சில வழிப்போக்கர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கரையோரத்திலிருந்த ஒரு குன்றின் உச்சிக்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பார்த்த பொழுது, தூரத்தில் ஏதோ ஒன்று மிதந்து வந்து கொண்டி ருந்தது. முதலில் அது ஒரு பெரிய கப்பல் என்று அவர்கள் எண்ணினர். ஆகவே அது துறைமுகத்திற்குள் வரும்வரை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். கரைக்கு அண்மையாக வந்து கொண்டிருக்கையில், அது கப்பலாகத் தெரியவில்லை. ஆனாலும் அது ஒரு படகு என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அது கடற்கரையில் தரை தட்டியபொழுது, அது ஒரு விறகுக் கட்டுத்தான்; வேறொன்றுமில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
Ο

Page 112
-------------------------------------۔ – . --------------------------------------۔۔۔۔ uJ661 آ6tD60 آئ6'all T) || 61 (66 اُh)
156. [რ (წიu)dd 6ბI
ஒரு மனிதன் 'பிளாகமூர்' என்ற ஒரு மிருகத்தை விலை கொடுத்து வாங்கினான். அந்த மிருகம் கறுப்பாக இருந்தது. முன்பு வைத்திருந்தவரின் கவனயீனத்தால் தான் அது கறுப்பாக இருக்கின்றது என்று அவன் நினைத்தான். அவன் அதை வீட்டிற்குக் கொண்டு சென்று உடனேயே அந்தக் கறுப்பு மிருகத்தை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்வதற்குத் தீர்மானித்தான். அதைக் கழுவுவதற்குத் தேவையான சவர்க்காரம், சுரண்டி எடுப்பதற்கான உபகர ணங்கள், தேய்த்துக் கழுவுவதற்கான பிறஷ்கள், கடதாசி. அரத்தாள்கள் எல்லாவற்றையும் கொள்வனவு செய்தான். அதன்பின் தன்னுடைய வேலையாட்களைக் கூப்பிட்டு அந்தப் பிளாக்மூர் மிருகத்தைக் கழுவத் தொடங்கினான். அந்த மிருகத்தை மீண்டும் மீண்டும் தண்ணில் தோய்த்து மணித்தியாலக் கணக்காகக் கழுவினார்கள். ஆனால், எதுவித பயனுமில்லை. அதனுடைய தோல் கறுப்பாகவேயிருந்தது. பிராணி மட்டும் இறந்து மணித்தியாலக் கணக்காகிவிட்டது.
Ο
200

உலகத்து நாட்டார் கதைகள்
157 ஆழம் அறியாது காலை விடுதல்
ஒரு குரங்கு உயரமான மரமொன்றில் இருந்து, ஆற் றில் சில மீனவர்கள் தங்களுடைய வலைகளை வீசுவதைப் பார்த்தது. அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைக் குரங்கு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது.
மீனவர்கள் தங்கள் வலைகளை ஆற்றில் வீசி விரித்து விட்டுத் தமது இராப் போசனத்தை உண்பதற்காகச் சிறிது தூரம் சென்றமர்ந்தனர். மீன் பிடிப்பவர்கள் என்ன செய்தார் களோ அதைத் தானும் செய்து பார்க்க வேண்டுமென்று குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தது. அது அந்த மீன்பிடி வலைகளில் ஒன்றைத் தானும் விரிக்க முயற்சிக் கையில் அதற்குள் சிக்குண்டது குரங்கு.
அது வலைக்குள்ளிருந்து வெளியே வர முடியாமலிரு ந்தபொழுது “இது எனக்குக் கிடைத்த சரியான தண்டனை" ஏனென்றால் மீன் பிடிப்பது பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் இருக்கையில் இந்த விசயத்தில் தலையிட எனக்கு என்ன உரிமையுண்டு?’ என்று குரங்கு கூறியது.
Ο
201

Page 113
நீர்வை பொன்னையன்
158. கசாப்புக் கண்டக்காரன்
இறைச்சி அடிப்பதற்காக வளர்க்கப்பட்ட மாடுகள் கசாப்புக் கடைக்காரனுக்கு ஒரு முடிவைக் கட்டத் தீர்மானி), தன.
ஏனென்றால் அவனுடைய தொழிற்கலை அந்த மாடு களின் அழிவுக்காகத்தான் பயன்படுத்தப்பட்டது. ஆகவே ஒரு நாள் மாடுகள் எல்லாம் ஒன்று கூடி இச்செயற்பாட்டிர் குத் தங்களுடைய கொம்புகளைக் கூர்மைப்படுத்தின.
அவ்வேளை, உழவுத் தொழிலை நீண்ட காலமாகச் செய்து வந்த ஒரு எருது, 'எனது நண்பர்களே, நீங்கள் செய்யப்போகும் செயற்பாடு பற்றி மிகக் கவனமாக இருக்க, வேண்டும். கசாப்புக் கடைக்காரர் தங்களது தொழிலை நுட்பமாகச் செய்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கு பதிலாக, இந்தத் தொழில் திறமையற்றவர்களிடம் நாங்கள் அகப்பட்டுக் கொண்டால் இரட்டிப்பு மரணத்தை அனு விக்க வேண்டியிருக்கும். ஏனெனில் கசாப்புக் கடைக்காரர் களில்லாவிட்டாலும் மனிதர்களால் மர்ட்டிறைச்சி உண்ண11 மலிருக்க முடியாது என்பதை நிச்சயமாகக் கூற முடியும்' என்று தனது சகபாடிகளுக்குச் சொன்னது.
( )
2O2

உலகத்து நாட்டார் கதைகள்
159, நோக்கம்
ஒரு இளம் பன்றி ஒரு ஆட்டுப்பட்டிக்குள் இடம் பிடித்துக் கொண்டது. ஒரு நாள் இடையன் பன்றியை இனம் கண்டு கொண்டான். அவன் பன்றியைப் பிடித்தான். அது தனது பலம் எல்லாவற்றையும் ஒன்று திரட்டிக் கீச்சிட்டுக் கத்திப் போராடியது. இதை ஆடுகள் அவதானித்தன.
'இடைக்கிடையே எஜமான் எங்களைப் பிடிக்கின்றார். அப்போது நாங்கள் உன்னைப் போலக் கத்திக் குளறுவ தில்லையே’ என்று ஒரு ஆடு கூறி, பன்றியைக் கண்டித் ඊශ්‍රී].
'உண்மைதான் எங்களைப் பொறுத்தவரை அது மாதிரியல்ல. உங்களை எஜமானர் உங்களது கம்பளி மயிருக் காகப் பிடிக்கின்றார். ஆனால் எம்மைப் பொறுத்தமட்டில் அவர் எம் இறைச்சியைப் பொரிப்பதற்காகத்தான் எம்மைப் பிடிக்கின்றார்” என்று பன்றி அந்த ஆட்டுக்குக் கூறியது.
Ο

Page 114
நீர்வை பொன்னையன்
160. அடைக்கலம்
ஒரு மாட்டை, சிங்கம் துரத்திச் சென்றது. மாடு குகைக் குள் ஒடிச் சென்றது. அந்தக் குகைக்குள் ஒரு கட்டாக்காலி ஆடு வசித்து வந்தது. குகைக்குள்ளே ஓடி வந்த மாட்டை அந்த ஆடு தன்னுடைய கொம்புகளால் இடித்துத் துன்புறுத் தியது.
"உனக்குப் பயந்துதான் நான் இந்தத் துன்புறுத்தலைச் சகித்துக் கொண்டிருக்கின்றேன் என்று நீ எண்ணாதே. இந்த இடத்தை விட்டுச் சிங்கம் சென்ற உடனேயே ஒரு மாட்டிற் கும் ஆட்டிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை நான் உனக்குக் காட்டுவேன்’ என மாடு தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்த அந்த ஆட்டுக்குக் கூறியது.
Ο
204
 

உலகத்து நாட்டார் கதைகள்
161. 6la, Tío
ஒரு ஆடு மந்தைக் கூட்டத்திலிருந்து பிரிந்து பின் தங்கி விட்டது. இடையன் அந்த ஆட்டை அதனுடைய சக பாடிகள் கூட்டத்துடன் சேர்ப்பதற்கு, சகல வழிகளிலும் முயற்சித்தான். அதைக் கூப்பிடுவதன் மூலமும் விசில் அடிப் பதன் மூலமும் அதனுடைய கவனத்தை ஈர்க்க முயற்சித் தான். அவனுடைய முயற்சிகளுக்கு எதுவித பயனுமேற்பட வில்லை.
இறுதியாக அவன் ஒரு கல்லை எடுத்து அந்த ஆட்டின் மீது இலக்கு வைத்து எறிந்தான். அவன் எறிந்த கல் ஆட்டின் கொம்பில் பட்டது. கொம்பு முறிந்தது. இதனால் இடையன் பீதியடைந்தான். இதைப்பற்றித் தன்னுடைய எஜமானுக்குச் சொல்ல வேண்டாம் என்று அவன் ஆட்டைக் கெஞ்சி மன்றாடிக் கேட்டான்.
'நான் ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன ஆனால், என்னுடைய உடைந்த கொம்பு முழுக் கதையையும்
சொல்லிவிடுமே" என ஆடு கூறியது.
Ο

Page 115
நீர்வை பொன்னையன்
162. உப்பு
ஒரு அங்காடி வியாபாரியிடம் ஒரு கழுதையிருந்தது. கடற்கரையில் உப்பு மலிவான விலையில் கிடைக்கும் என்பதை அந்த வியாபாரி அறிந்தான். அவன் உப்பு வாங்கு வதற்காகத் தன்னுடைய கழுதையுடன் கடற்கரைக்குச் சென்றான். அவன் கழுதைமீது ஏற்றக்கூடியளவுக்கு மேலாக உப்பை வாங்கினான். அதை அவன் கழுதையின் மேல் ஏற்றி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். அவன் கழுதையுடன் ஒரு பாறையின் ஒரமாகச் சென்று கொண்டிருந்தான். அப் பொழுது பாறையின் ஓரத்தில் கழுதை வழுக்கி, கீழேயுள்ள நீரருவியில் வீழ்ந்தது. கழுதையின் முதுகின் மேலிருந்த உப்பு அருவி நீரில் கரைந்தது. இதனால் கழுதையின் முதுகி லுள்ள பாரம் இல்லாமல் போய்விட்டது. கழுதை சுலபமாகக் கரையேறியது. அதன்பின் அது பாரமேதுமின்றி மகிழ்ச்சி யுடன் உல்லாசமாக வீட்டிற்குச் சென்றது.
அடுத்த நாள் அந்த அங்காடி வியாபாரி கழுதையுடன் கடற்கரைக்குச் சென்றான். அவன் முதல் நாளிலும் பார்க்க இரண்டு மடங்கு உப்பை வாங்கி, கழுதைமீது ஏற்றிச் சென் றான். அவன் கழுதையுடன் வீடு திரும்பும்பொழுது அந்தப் பாறையடிக்கு வந்தபொழுது, கழுதை வேண்டு மென்றே முதல் நாளையைப்போல நீரோடைக்குள் விழுந்தது.
அடுத்த நாள் அவன் கழுதையுடன் கடற்கரைக்குச் சென்று கடற் பஞ்சைக் கொள்வனவு செய்து கழுதை மீது
20՛

- உலகத்து நாட்டார் கதைகள் ஏற்றிச் சென்றான். கழுதை நீரோடைப் பக்கம் வந்தது வழமைபோல நீரோடைக்குள் விழுந்தது. அது திரும்பத் திரும்பப் புரண்டது. கடற்பஞ்சு நன்றாக நீரை உறிஞ்சிச் கொண்டது. அந்தக் கழுதை வீடும் திரும்பும் பொழுது அதன் மீதிருந்த சுமை குறைவதற்குப் பதிலாக இரண்டு மடங்காச இருந்தது.
Ο
2O7

Page 116
நீர்வை பொன்னையன்
163. தலை இல்லாமல் . . .
ஒரு முயல் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் ஒரு பெரிய வான்கோழி ஒரு திட்டி மீது இருந்து தூங்கிக் கொண்டிருக்கின்ற கொல்லைப் புறத்தைக் கடந்து சென்றது. ஒவ்வொரு மாலையும் அந்த முயல் வான்கோழி யைப் பார்ப்பதற்கு அந்த இடத்தில் நிற்க வேண்டியிருந்தது. அப்பொழுது வான்கோழி தன்னுடைய தலையை என்ன செய்துவிட்டது என்று முயல் வியப்பில் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.
இறுதியாக ஒரு நாள் மாலை முயலுக்கு அவ்விடயம் பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல் அளவுக்கு மீறிவிட்டது. அதற்குத் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியவில்லை. அது திட்டியின்கீழ் வந்து நின்றது. "வணக்கம் திரு. வான் கோழியாரே!' என்று முயல் கூறியது. 'வணக்கம்!’ என்று வான்கோழியும் தன்னுடைய தலையை உயர்த்திக் கொண்டு கூறியது. 'வான் கோழியாரே நான் கேட்பதற்காக என்னை மன்னிக்க வேண்டும் உமக்குத் தலை இருக்கின்றதா?” என்று கேட்டது முயல், "நிச்சயமாக எனக்குத் தலையிருக் கின்றது. என்னுடைய தலை இங்கேதான் இருக்கின்றது’ என்று தன்னுடைய சிறகின் கீழ் தலையை வைத்துக் கொண் டிருந்தபடியே வான்கோழி கூறியது.
முயல் பார்த்தது. பார்த்தது. ஆனால், வான்கோழியின் தலையை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வான் 208

உலகத்து நாட்டார் கதைகள் கோழி தன்னுடன் கதைக்க விரும்பவில்லை, அல்லது அத னுடைய தலை எங்கே இருக்கின்றது என்பதைக் காட்ட விரும்பவில்லை என்று நினைத்தது முயல். இந்த எண்ணத் துடன் அது தன்னுடைய வீட்டிற்குச் சென்றது. வான்கோழி கள் நித்திரை செய்யச் செல்லும்போது தங்களுடைய தலை களை அகற்றி ஒரு புறம் வைத்துவிட்டுத் தூங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா?’ என்று முயல் தனது மனைவி யைக் கேட்டது. அதன் காரணமாக அவற்றால் நன்றாகத் தூங்குவதற்கு முடிகின்றது. நானும் வான்கோழியைப் போலத்தான் செய்யப் போகின்றேன். ஏனென்றால் தலையில் லாமல் தூங்குவது சிரமக் குறைவாக இருக்கும். உண்மை யில் இப்படித் தூங்குவதற்குத் தலையே தேவையில்லை. நீ கதைக்க வேண்டுமென்றாலும், உனக்குத் தலை தேவை யில்லை. ஏனென்றால் வான்கோழி என்னுடன் இப்படித்தான் தலையில்லாமல் மிகவும் இலகுவாக என்னுடன் கதைத்தது” என்று முயல் கூறியது.
அவனுடைய மனைவி அவனுக்கென்று ஏதாவது தொன்று சொல்வதற்கு முன்பு, அவன் ஒரு கோடரியை எடுத்துத் தன்னுடைய தலையை வெட்டிவிட்டான். மனைவி அவனுடைய தலையை மீண்டும் பொருத்து வதற்கு முயற்சித்தாள். ஆனால் அவள் எப்படி முயன்றும் அதை அவளால் மீண்டும் பொருத்த முடியவில்லை.
Ο
209

Page 117
நீர்வை பொன்னையன்
164. குதிரைகள் வெளியே நிற்கின்றன
ஒரு கறுப்பு இனத்தவன் தரை மார்க்கமாக மோட்சத திற்குச் சென்று கதவைத் தட்டினான். சென். பீற்றர் வெளியே வந்து 'யார் அது?’ என்று வினவினார். 'அது நான்தான்” என் றான் கறுப்பன். “நீ நடந்து வந்தாயா அல்லது வாகனத்தில் வந்தாய்ா?’ என சென்.பீற்றர் வினவ, நான் நடந்துதான் வந்தேன்’ என்றான் கறுப்பன். "வாகனத்தில் வராதபடியால் நீ உள்ளே செல்ல முடியாது’ எனப் பீற்றர் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
கறுப்ப்ன் அந்த இடத்தை விட்டகன்றான். அவன ஐந்து மைல்கள் அந்த வீதிவழியே திரும்பி வரும்பொழுது, ஒரு வெள்ளையனைச் சந்தித்தான். “வெள்ளை மனிதரே. நீர் எங்கே செல்கின்றீர்?’ எனக் கறுப்பன் வினாவினான். "நான் மோட்சத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றேன்’ என் றான் வெள்ளையன். 'நடந்து சென்றால் நீ மோட்சத்திற்குப் போக முடியாது. அவர்கள் உன்னை உள்ளே போக விட மாட்டார்கள்' எனக் கூறினான் கறுப்பன். நான் உனக்கு ஒரு குதிரையாக இருப்பேன். நீ கால்களைப் பரப்பி என்மேல் ஏறியிருந்து கொண்டு மோட்சத்திற்குப் போகலாம். நீ மோட்ச வாசலை அடைந்ததும் கதவைத் தட்டப் பீற்றர் வந்து நீ யார் என்று கேட்கும் பொழுது நான் வெள்ளையன் என்று கூறி னால், நீங்கள் இருவரும் உள்ளே வரலாம் என்பார்’ எனக் கூறினான் கறுப்பன்.
21 O

உலகத்து நாட்டார் கதைகள் 'மிகவும் நன்று. நீ குனிந்து நில், நான் உன் முதுகின் மேல் ஏறியிருக்கின்றேன்" என்றான் வெள்ளையன். கறுப் பன் குனிந்து நிற்க வெள்ளையன் தன் கால்களைப் பரப்பி அவனுடைய முதுகில் ஏறி இருந்தான். அவர்கள் இருவரும் மோட்ச வாசலை அடைந்தனர்.
வெள்ளையன் கதவைத் தட்டினான். 'யார் அங்கே?" எனக் கேட்டபடி பீற்றர் வந்தார். 'அது நான்’ என்றான் வெள் ளையன். “நீ நடந்து வந்தாயா அல்லது வாகனத்தில் சவாரி செய்து கொண்டு வந்தாயா?" என்று கேட்டார் பீற்றர். "நான் சவாரி செய்துதான் வந்தேன்’ என வெள்ளையன் கூறினான். ‘சரி, நீ உள்ளே செல்லலாம். உன்னுடைய குதிரையை வெளியே கட்டி வைத்துவிட்டு உள்ளே போகலாம்." சென். பீற்றர் இப்படிக் கூறினார்.
Ο
211

Page 118
நீர்வை பொன்னையன்
165. ஒற்றைக்கால் வான்கோழி
ஒரு கனவான் இருந்தான். அவன் சரியான உலோபி. ஆகவே அவன் ஒரே ஒரு வேலைக்காரனை மாத்திரம் வைத் திருந்தான். அந்த வேலைக்காரன் சமையல் செய்வது, உணவு பரிமாறுவது, தோட்டம் செய்வது, மற்றும் எல்லா வேலைகளையும் செய்பவனாக இருந்தான். ஒரு நாள் கனவான் அந்த வேலையாளை அழைத்து ஒரு வான்கோழி யைச் சமைக்கச் சொன்னான். அந்த வான்கோழியை விசேஷ வைபவத்திற்குச் சமைப்பதற்காகவே கனவான் வளர்த்து வந்தான். அதை இன்றே சமைக்க வேண்டுமென்று அவனுக் குத் தோன்றியது. ஆகவே அதைச் சமைக்கும்படி கூறினான்.
வேலைக்காரன் வான்கோழியை வெட்டிச் சமைத்தான். அது நல்ல மணம் வீசியது. ஆகவே அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு வந்தது. ஆகவே அவன் அந்த வான்கோழியின் ஒருகாலைச் சாப்பிட்டான். பின்னர் தான் சமைத்த கோழியைச் சாப்பாட்டு மேசையில் வைத் தான். அவன் அதை மேசையில் வைத்தபொழுது, அவன் சாப் பிட்டு முடித்த வான்கோழியின் காலிருந்த பாகத்தைக் கீழ்ப் பக்கமாக வைத்தான். கனவான் களைப்படைந்து கடும் பசி யுடன் வந்தான். அவன் சாப்பிட உட்கார்ந்தான். சமைத்து வைக்கப்பட்டிருந்த வான்கோழியை மறுபக்கமாகப் புரட்டி வைத்தான். அப்பொழுது அதனுடைய ஒரு கால் இல்லாம லிருந்ததை அவன் கண்டான். உடனே அவன் வேலைக்கார னைக் கூப்பிட்டான்.
212

உலகத்து நாட்டார் கதைகள் வேலைக்காரன் வந்தபொழுது, 'வான்கோழியின் ஒரு காலுக்கு என்ன நடந்தது?" என்று கேட்டான். 'எஜமானே, வான்கோழிக்கு ஒரு கால்தான் உண்டு’ என்றான் வேலைக் காரன். அதே நேரத்தில் அவன் ஜன்னலூடாக வெளியே பார்த்தான். வெளியே ஒரு வான்கோழி நின்றதை அவன் கண்டான். அந்த வான்கோழி தனது ஒரு காலைத் தனது இறகுகளுக்குள் மறைத்துக் கொண்டு ஒற்றைக்காலில் நிற்பதை அவன் அவதானித்தான். அதைத் தனது எஜமானுக்குக் காட்டினான் அவன்.
‘சூ! என்று எஜமான் சத்தமிட்டார். அந்த வான்கோழி மிரண்டு ‘க்ளக்’ எனச் சத்தமிட்டுக் கொண்டு ஓடியது. ‘அங்கே பார்! வான்கோழிக்கு இரண்டு கால்கள் இருக்கின் றன’ என்று எஜமான் கூறினார். எஜமானே கோப்பையிலிருக் கின்ற வான்கோழியைப் பார்த்து “சூ’ என்று நீங்கள் சத்த மிட்டீர்களா?’ என்று கேட்டான்.
'இல்லை’ என்று எஜமான் கூறினார். கோப்பையில் இருக்கின்ற வான்கோழியைப் பார்த்து “சூ’ என்று நீங்கள் சத்தமிட்டிருந்தால் அது மற்றக் காலையும் வெளியே நீட்டி யிருக்கும்’ என்று வேலையாள் கூறினான்.
Ο
213

Page 119
நீர்வை பொன்னையன்
166. கொம்பு மிருகங்களின் விருந்து
கொம்புள்ள மிருகங்கள் சில சேர்ந்து ஒரு பெரிய விருந்தை வைப்பதற்குத் தீர்மானித்தன. கொம்பு இல்லாத மிருகங்களைத் தவிர, கொம்பு உள்ள சகல மிருகங்களும் விருந்திற்கு அழைக்கப்பட்டன. நாயும், பூனையும் இந்த விருந்து பற்றி அறிந்தன. அவை தாங்களும் இந்த விருந்தில் பங்குபற்ற விரும்பின. ஆகவே அவை சுறுசுறுப்பாக இயங் கின. அவை இரண்டும் ஒரு வெள்ளாட்டைக் கொன்று அதனுடைய கொம்புகள் இரண்டையும் எடுத்தன.
நாய் அரைவாசி இரவுக்கு அந்தக் கொம்புகளைப் பாவிப்பதென்றும் மிகுதி இரவுக்குப் பூனை அக்கொம்பு களைப் பாவிப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி நாய், கொம்புகளை அணிந்துகொண்டு முதலில் விருந்து மண்டபத்திற்குச் சென்றது.
அது விருந்தில் கலந்து கொண்டிருக்கையில் பூனை யை மறந்துவிட்டது. ஆடல், பாடல்களில் ஈடுபடும்பொழுது மற்றெல்லாவற்றையும் மறந்து விடுவர் அநேகர். தான் வெளியே வரவேண்டிய நேரம் கடந்தும், நாய் வெளியே வரவில்லை.
நீண்ட நேரமாகிவிட்டது. நாய் வரவில்லை. பூனை விருந்து நடக்கின்ற மண்டபத்தின் கதவடிக்குச் சென்று, நின்று பார்த்தது. நாய் வரவில்லை. "சகோதர நாயாரே! சகோதர நாயாரே!’ என்று திரும்பத் திரும்ப பூனை
214

உலகத்து நாட்டார் கதைகள் கத்தியது. நாய் வரவில்லை, 'சகோதர நாயாரே! சகோதர நாயாரே!" என்று திரும்பத் திரும்பப் பூனை கத்தியது.
நாய் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. நீண்ட நேரத்தின் பின் மீண்டும் பூனை கத்தியது. விருந்திற் குத் தலைமை தாங்கிய ஓநாய்க்குப் பூனை கத்திய சத்தம் கேட்டது.
அது வெளியே வந்தது. அது கடுங்கோபம் கொண்டது. ‘ஓடு ஒடு, தூர ஓடிப் போ. இங்கே நாயுமில்லை. ஒன்றுமே இல்லை ஒடிப் போ’ என்று ஒநாய் கோபத்துடன் கத்திவிட்டு உள்ளே சென்றது. பூனைக்குக் கோபம் வந்தது. அது திரும்பி வந்து “சகோதர நாயாரே! சகோதர நாயாரே!” என்று உரக்கக் கத்தியது. இந்தத் தடவை நாய் வெளியே வந்தது.
“சத்தம் போடவேண்டாம்’ என்று பூனையை அடக்க முயற்சித்தது. “சத்தம் போட்டு விருந்துண்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம். இங்கே எந்தவொரு நாயு மில்லை. நீ போய் விடு’ என்று நாய் கூறியது.
இதைக் கேட்ட பூனைக்குக் கோபம் கட்டு மீறியது. அது பைத்தியம் பிடித்த மாதிரி உரத்த குரலில் கத்திக் கொண்டே இருந்தது.
இக்கூக்குரலைக் கேட்டு மாடு வெளியே வந்தது. பூனையின் முறைப்பாட்டை அது கவனமாகக் கேட்டது. “இங்கே சில வேளை நாய் இருக்கக்கூடும். நாங்கள் அதைத் தேடிப் பார்க்கின்றோம்' என்று கூறிவிட்டு உள்ளே சென்றது
உள்ளேயிருந்த மிருகங்கள் நாயைத தேடின. நாயும் அவற்றுடன் சேர்ந்து தேடியது. இறுதியில் மிருகங்கள் நாயைக் கண்டு பிடித்தன. அவை நாயிடமிருந்து கொம்பு களைப் பறித்தெறிந்துவிட்டு அதை அடித்தன.
215

Page 120
நீர்வை பொன்னையன்
நாய் அலறிக் கொண்டு வெளியே ஓடியது. அது வெளியே ஒடும்பொழுது பூனையைச் சந்தித்தது. நாயும், பூனையும் வாதாடத் தொடங்கி இறுதியில் சண்டை பிடித் தன. தான் கடுமையாகத் தாக்கப்படுவதைக் கண்ட பூனை, நாயினுடைய உதட்டின் ஒரு மூலையில் தன்னுடைய நகங்களால் கீறி பெரிய காயத்தை ஏற்படுத்தியது.
ஒரு நாயின் உதட்டை நீங்கள் அவதானித்தால் அதனு டைய மூலையில் ஒரு மறு எப்பொழுதும் இருக்கும். இத னால் தான் நாயும் பூனையும் ஒருபொழுதும் ஒற்றுமை யில்லாமல் தொடர்ந்தும் சண்டை பிடித்துக் கொண்டே
யிருக்கும்.
O
216
 

-- உலகத்து நாட்டார் கதைகள்
167. சந்தேகத்துக்கு உரியது
ஒரு வேட்டை நாய் ஒரு முயலைத் துரத்தியது. நீண்ட துரம் அதைக் கலைத்துச் சென்று இறுதியாகப் பிடித்தது. முதலில் நாய் அந்த முயலைக் கடித்தது. அதன்பின் அதைத் தனது நாக்கினால் நக்கியது. முயலுக்கு ஒன்றுமே புரிய வில்லை. 'நீ எனது எதிரியாயிருந்தால் என்னை ஏன் உனது நாக்கினால் அன்புடன் நக்கிக் கொஞ்சி விளையாடுகின் றாய்?’ என்று முயல் நாயைக் கேட்டது.
சந்தேகத்திற்குரிய நண்பன் நிச்சயமாக ஒரு எதிரி யிலும் பார்க்கப் படுமோசமானவன். ஒரு மனிதன் ஒன்றில் இதாயிருக்கவேண்டும் அல்லது அதாயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவனை எப்படிக் கையாள முடியும் என்று எமக்குத் தெரியும்.
KD
21 7

Page 121
நீர்வை பொன்னையன்
168. மூவர்
மூன்று இளைஞர்கள் வேட்டைக்குச் சென்றனர். அவர் கள் காட்டிற்குள் நடந்து நடந்து வெகுதூரம் சென்றபின், ஒரு சிறு வெளியுள்ள இடத்தை வந்தடைந்தனர். அவ்விடத்தில் ஒரு வாழை நின்றது. அவ்வாழையில் நன்றாகப் பழுத்த ஒரு வாழைக்குலை இருந்தது. அந்த வாழைப்பழத்தைத் தின்பதற்கு மூவருக்கும் ஆசையாக இருந்தது. 'நீ வாழையில் ஏறி, பழத்தைப் பிடுங்கி வா. நாங்கள் எல்லோரும் சாப்பிடுவோம்’ என்று பெரும் தலையனுக்குப் பெரும் வயிறன் சொன்னான். 'நான் ஏறினால் எனது தலை முறிந்து விழுந்துவிடும். என்னால் ஏற முடியாது. நீதான் ஏறு’ எனப் பெரும் தலையன் பெரு வயிறனுக்குக் சொன்னான். 'என்னுடைய வயிறு பெரியதாக இருக்கின்றது. ஆனபடியால் என்னால் ஏற முடியாது. சரி, நீ ஏறி வாழைப்பழத்தைப் பிடுங்கி வா’ என்று பெரு வயிறன் ஊசிக்காலனுக்குச் சொன்னான். 'என்னால் ஏற முடியாது. நான் ஏறினால் என்னுடைய மெலிந்த கால்கள் முறிந்து நான் கீழே விழுந்து விடுவேன்; ஆகவே நீதான் ஏறு' என்றான் ஊசிக்காலன்.
அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பரிகசித்து, சீண்டிக் கொண்டிருந்தனர். இறுதியில் பெரும் தலையன் வாழையில் ஏறினான். அவனுடைய பெரும் தலை பின்னுக்கு சாய்ந்தது. அவன் கீழே விழுந்தான். அவனுடைய தலை நொருங்கியது. இதைப் பார்த்த பெருவயிறன் சிரித்தான்.
218

உலகத்து நாட்டார் கதைகள்
தன்னுடைய பெரிய வயிறு வெடிக்கும் வரை அவன் சிரித்
தான். அவனுடைய பெரு வயிறு வெடித்தது.
இப்புதினத்தை மற்றவர்களுக்குக் கூறுவதற்கு ஊசிக்
காலன் ஓடினான்.
அவன் ஓடிக்கொண்டிருந்தபோது அவனுடைய ஊசிக்
கால்கள் முறிந்தன.
Ο
219

Page 122
நீர்வை பொன்னையன்
169. அர்த்தமுள்ள பெயர்கள்
மழை பெய்ய ஆரம்பித்த பொழுது, நல்ல புல்லைத் தேடிக் கொண்டு தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் ஒரு ஆடு சென்று கொண்டிருந்தது. திடீரெனப் பெரிய மழை கொட்டத் தொடங்கியது. மழையில் நனையாமலிருப்பதற் குப் புகலிடத்தைத் தேடிச் சென்ற அந்த ஆடு ஒரு பாறை யின் கீழ் ஒதுங்கியது. அந்தப் பாறை ஒரு சிங்கத்தின் குகை என்று ஆட்டுக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்த ஆடும் அதன் குட்டிகளும் தன்னுடைய குகைக்குள் வந்து கொண்டி ருப்பதைக் கண்ட சிங்கம் இடிமுழக்கம் போலக் கர்ச்சித்தது.
சிங்கத்தின் கர்ச்சனையினால் தாயாடும், குட்டிகளும் மிகவும் அச்சமுற்று மிரண்டன. "குருவானவரே, வணக்கம்!” எனத் தாயாடு கூறியது. "மாலை வணக்கம்!’ என்று சிங்கம் க்கூறியது. "இக் குட்டிகளுக்கு ஞானஸ்ஞானம் செய்வதற்கு நான் ஒரு குருவானவரைத் தேடிச் செல்கிறேன். ஏனெனில் இவர்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும்’ என்று ஆடு சொன் னது. ‘நான் அந்தக் காரியத்தைச் செய்கிறேன்’ என்றது சிங்கம். இந்தக் குட்டிக்கு "இராப்போசனம்', 'மற்றக் குட்டி க்கு நாளைக் காலைப் போசனம்', உன்னுடைய பெயர் நாளைய இராப் போசனம்’, ‘என்று கூறியது.
ஆட்டுக்கு இப்படிக் கூறிவிட்டுத் திடீரென உரத்துக் கர்ச்சித்தது சிங்கம். ஆடும் குட்டிகளும் மிரண்டன. குட்டி களின் இதயங்கள் பட்’ பட் என அடித்தன 'இந்தக்
220

உலகத்து நாட்டார் கதைகள் குட்டிகளுக்கு என்ன நடந்தது?’ எனத் தாய் ஆட்டைக் கேட் டது சிங்கம். "இங்கே கடுமையான வெப்பமாயிருக்கின்றது. வெப்பம் அதிகரிக்கும்பொழுது அவை பயப்படும். அத்துடன் அவற்றால் கடும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாம லிருக்கின்றது. ஆகவே ஏன் அவை வெளியே சென்று குளிர் காற்றை வாங்க முடியாது?’ என்று ஆடு சிங்கத்தைக் கேட்டது. 'இரவுச் சாப்பாட்டு நேரம் வரை குட்டிகள் வெளியே செல்லலாம்" என்று சிங்கம் உடன்பட்டது. 'ஆனால், அவை கண்டிப்பாக இரவுச் சாப்பாட்டு நேரம் வருவதற்கு முன்பே இங்கு திரும்பி வந்துவிட வேண்டும்’ என்றது சிங்கம். இருட்டுவதற்கு முன்னரே, இயன்றளவிற்கு ஓடித் தப்பித்துச் சென்று விடவேண்டுமெனத் தன்னுடைய இரண்டு குட்டிகளுக்கும் காதுக்குள் மெதுவாகத் தாயாடு கூறியது. ஆட்டுக் குட்டிகள் வெளியே சென்றன.
மாலை வேளை வந்ததும் ஆட்டுக் குட்டிகள் திரும்பி வராததைக் கண்ட சிங்கம் கோபத்தில் கர்ச்சித்தது. இவ் வளவு நேரமாகியும் ஆட்டுக் குட்டிகள் திரும்பி வராததை யிட்டுத் தான் விசனப்படுவதாகத் தாயாடு கூறியது. இருட்டு வதற்கு முன்னர் தான் அவற்றைத் தேடிப் பிடித்து வந்து விடுவதாகவும் அது சொன்னது. இதற்குச் சிங்கம் உடன் பட்டது. தாயாடு வெளியே வந்தவுடன் வேகமாகத் தப்பி
ஓடத் தொடங்கியது.
Ο
221

Page 123
நீர்வை பொன்னையன்
170. அழகுப் போட்டி
ஒரு சிறுத்தைப் புலியும், ஒரு நரியும் தம்முள் எந்தப் பிராணி அழகானது என்று ஒரு போட்டியை நடத்தின. தன்னுடைய எண்ணற்ற புள்ளிகளின் அழகை, சிறுத்தை முன்னெடுத்துக் காட்டியது. 'பல வர்ண உடலிலும் பார்க்க பல் திறமையுள்ள ஒரு மூளையை உடையவராயிருப்பது
மிகச் சிறந்தது” என்று நரி பதிலளித்தது.
Ο
222
 

உலகத்து நாட்டார் கதைகள்
171. பலி
நன்றாகக் கனிந்த பழங்களையும், மிருதுவான இளங் கிளைகளையும் கொண்ட ஒரு திராட்சைக் கொடி படர்ந் திருந்தது. ஒரு கட்டாக்காலி ஆடு வந்து திராட்சைக் கொடி யின் பட்டையைக் கடித்து உரித்துத் தின்றதுடன் அதனு டைய இளம் துளிர்களையும் கடித்து நாசமாக்கியது. “சில நாட்களுக்குள் பலி கொடுப்பதற்காக உன்னைக் கொண்டு வருவார்கள். அந்த நேரத்தில் நீ எனக்கு விளைவித்த கேட் டிற்காக நான் உன்மேல் பழி தீர்த்துக் கொள்வேன். என்னு டைய பழச்சாறு, உன்னுடைய நெற்றியின்மேல் மரணத்தின் பனித்துளிகளாய்க் கொட்டுவதன்மூலம் நான் வஞ்சம்
தீர்த்துக் கொள்வேன்’ என்று திராட்சைக் கொடி கூறியது.
Ο
223

Page 124
நீர்வை பொன்னையன்
172. பிரார்த்தனை
ஒரு பருந்து நீண்ட காலமாகக் கடும் சுகவீனமுற்றிருந் தது. 'அம்மா! நீ அழாதே. இந்தக் கொடிய நோயிலிருந்தும் கடும் வேதனையிலிருந்தும் மீட்சி பெற வேண்டுமென்று நீ தெய்வங்களிடம் சென்று பிரார்த்தனை செய்!” என்று தன்னு டைய தாய்க்கு நோய் வாய்ப்பட்டிருந்த அந்தப் பருந்து கூறியது. "ஐயோ! குழந்தாய் நான் எந்தக் கடவுளிடம் சென்று பிரார்த்தித்து யாசிப்பேன்? எல்லாத் தெய்வங்களினது பலி பீடங்களிலிருந்தும் திருடிய நான், எந்தக் கடவுளிடம்
சென்று பிரார்த்திப்பேன்?’ என்று தாய்ப் பருந்து கூறியது.
O
224
 

உலகத்து நாட்டார் கதைகள்
173. காஞ்சோன்றி
வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது காஞ்சோன்றிச் செடி பட்டது. உடனே அவனுடைய உட டெல்லாம் தடித்து எரிவு கண்டது. அவன் வேதனை தாங்க முடியாமல் தன்னுடைய தாயிடம் ஓடிச் சென்று முறையிட் டான். “நீ அதன்மீது முட்டியபடியால்தான் அது சொறிகின் றது. அடுத்த தடவை நீ அந்தக் காஞ்சோன்றிக் செடி மீது முட்டுவதற்குப் பதிலாக அதனை உன் உடலுடன் நன்றாக இறுகப் பற்றிக் கொண்டால், அதனால் உனக்கு கெடுதி செய்ய முடியாது!’ எனத் தாய் கூறினாள்.
Ο
225

Page 125
நீர்வை பொன்னையன்
174. அடையாளம்
பித்தளைப் பாத்திரங்களைச் செய்கின்ற ஒரு கன்னான் இருந்தான். அவனிடம் ஒரு சிறிய நாய் இருந்தது. அவன் பித்தளை உலோகத்தைச் சுத்தியலால் அடித்துப் பாத்திரங் களைச் செய்து கொண்டிருந்த வேளையில், அவனுடைய அந்த நாய் அவனுக்கருகில் அமைதியாக நித்திரை செய்து கொண்டிருக்கும்.
ஆனால், அவன் தனது இரவுச் சாப்பாட்டை உண்ண உட்கார்ந்தால், நாய் எழுந்து தனது வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். ஒரு எலும்புத்துண்டை நாய்க்கு எறிந்து விட்டு "சோம்பேறி நாயே! நான் பட்டடையில் சுத்தியலால் அடித்து, சத்தம் உண்டாக்கி வேலை செய்து கொண்டிருக்கும் வேளைகளில் நீ அச்சத்தத்தைக் கேட்டுக் கொண்டு தொடர் ந்து நித்திரை செய்வாய். ஆனால் என் பற்களின் நறநற வென்ற சத்தத்தைக் கேட்டவுடனே நீ விழித்துதெழுந்து விடுகின்றாய்” என்று கூறினான் கன்னான்.
Ο
226

உலகத்து நாட்டார் கதைகள்
175. தண்டனை
ஒரு நாள் சிங்கம் ஒன்று விவசாயக் கொல்லை ஒன்று க்குள் புகுந்துவிட்டது. விவசாயி அதைப் பிடிக்க விரும்பி, கொல்லையின் வாயிலை மூடிவிட்டான். தான் வெளியே வர முடியாது என்பதைக் கண்ட சிங்கம், உடனே ஆடுகளைத் தாக்கிக் கொன்றது. அதன் பின் மாடுகளைத் தாக்கியது. அதன் பின் சிங்கம் தன்னையும் தாக்கக் கூடும் என்று பயந்த விவசாயி கொல்லையின் வாயிலைத் திறந்து விட்டான். உடனே சிங்கம் விரைவாக வெளியேறி ஒடித் தப்பியது.
இவை அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்த விவசாயினுடைய மனைவி, தன்னுடைய ஆடு மாடுகளை இழந்ததால் கவலையடைந்த தனது கணவனைப் பார்த்து 'தூரத்திலே கண்டதும் தூரத்திலேயே வைத்திருக்க வேண் டும் அந்தப் பிராணியை. அதை விடுத்து நீயே விரும்பி அந்த மிருகத்தைத் தடுத்து வைத்திருந்த உனது முட்டாள்தனத் திற்குத் தகுந்த தண்டனை கிடைத்திருக்கின்றது' என்று உரத்துக் கூறினாள்.
Ο
227

Page 126
நீர்வை பொன்னையன்
176. குளிர்
ஒரு விவசாயி கடுமையான உறைபனிக் குளிரினால் அவனுடைய பண்ணை வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க நேரிட்டது. உறைபனி அவனுடைய பண்ணை வீட்டை முற்று முழுதாக மூடிக் கொண்டிருந்தமையினால், அவனுக்கு உணவு நெருக்கடி ஏற்பட்டது. வெளியே சென்று உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாமையினால் அவன் தன்னுடைய செம்மறி ஆடுகளை உண்ண ஆரம் பித்தான்.
மோசமான காலநிலை தொடங்கியிருந்ததால், அவன் தன்னுடைய செம்மறி ஆடுகள் எல்லாவற்றையும் கொன்று தின்று முடித்து விட்டான். அதன்பின் அவன் வெள்ளாடு களை உண்டு முடித்தான். அந்தக் கொடுமையான கால நிலையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவன் உழவுக்குப் பயன்படுத்தும் எருது மாடுகளைச் சாப் பிட்டான்.
'நிலைமையைப் பார்க்கும்பொழுது தனக்காக உழை த்த எருது மாடுகளுக்குக் கருணை காட்டாத எஜமான், எங்களை எப்படி விட்டு வைப்பார்? ஆகவே நாங்கள் தப்பி ஓடி விடுவோம்’ என்று நாய்கள் ஒன்றுக்கொன்று கூறிக் கொண்டு ஓடத் தொடங்கின.
Ο
228

உலகத்து நாட்டார் கதைகள்
177. பாதுகாப்பரண்
ஒரு நகரம் எதிரியினால் முற்று50கயிடப்படப் போகும் பேராபத்து எதிர்பார்க்கப்பட்டது. அதைத் தடுப்பதற்கு நகரத்தைச் சுற்றி, பாதுகாப்பரண் ஒன்று அமைப்பது பற்றி ஆலோசிப்பதற்கு ஒரு சபை கூட்டப்பட்டது. பாதுகாப் பரணை அமைப்பதற்கு, செங்கல்லைப்போல வேறு எந்த ஒரு பொருளும் உறுதியானதாக இருக்க முடியாது என்று செங்கல் கொத்தன் கூறினான். இதற்கு மரம் தான் மிகவும் பொருத்தமானது என்று தச்சன் கூறினான். தோல் பதனிடு பவன் எழுந்து "ஐயன்மீர்! சொல்ல வேண்டியவையெல்லாம் சொல்லி முடிந்துவிட்டது. ஆனால் இந்த வேலைக்கு தோலைப்போல வேறு எந்த ஒரு பொருளும் உறுதியானதாக
இருக்க முடியாது’ என்று கூறினான்.
Ο
229

Page 127
நீர்வை பொன்னையன்
178. மீன்
ஒரு மீனவன், தான் கடலுக்குள் வீசியிருந்த வலையை வெளியே இழுத்தெடுத்தான். அந்த வலைக்குள் சகல வித மான மீன்களும் நிறைந்திருந்தன. சின்ன மீன்கள் எல்லாம் வலையிலுள்ள துவாரத்தினுடாக வெளியே தப்பி சென்று கடலின் ஆழத்துக்கு நீந்தி ஓடிவிட்டன. ஆனால் பெரிய மீன்கள் எல்லாம் வெளியே செல்ல முடியாமல் வலைக் குள்ளேயே கிடந்தன. மீனவன் அவை எல்லாவற்றையும் பிடித்துப் படகுக்குள் வலித்துப் போட்டான்.
எமது முக்கியமின்மை அடிக்கடி எமது தற்பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக இருக்கின்றது
Ο
230
 

உலகத்து நாட்டார் கதைகள்
179. தவளை
ஒரு குளக்கரையில் சிறுவர்கள் கூட்டம் ஒன்று விளை யாடிக் கொண்டிருந்தது. அவர்கள் தண்ணிருக்குள் அநேக தவளைகளைக் கண்ட பொழுது, அவை மீது அவர்கள் கற் களை எறிந்தார்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் அநேக தவளைகளைக் கொன்றார்கள். அவை எல்லாவற் றிலும் பார்க்கத் துணிவுடைய தவளை ஒன்று தண்ணிருக்கு வெளியே தனது தலையை உயர்த்தி 'சிறுவர்களே உங்களு டைய இந்தக் கொடூரமான விளையாட்டை உடனே நிறுத் துங்கள். உங்களுக்கு எது விளையாட்டாக இருக்கிறதோ அது எங்களுக்கு மரணமாக இருக்கின்றது என்பதைக் கவ
னத்திற் கொள்ளுங்கள்!’ என்று கூறியது.
Ο
231

Page 128
நீர்வை பொன்னையன்
180. அன்பான அழைப்பு
ஒரு உயர்ந்த குன்றின் செங்குத்தான பாறையின விளிம்பில் ஒரு ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அதை ஒரு ஒநாய் கண்டுவிட்டது. ஆடு நிற்கின்ற அந்த உயரமான இடத்திற்கு ஒநாயால் செல்ல முடியாமல் இருந்தது. ஏனென் றால், தலையைச் சுற்ற வைக்கின்ற அந்த உயரமான இடத் திற்கு ஏறிக் கொண்டிருக்கும்போது பயத்தினால் கால் தவறிக் கீழே விழுந்துவிடக் கூடும். ஆகவே கீழே இறங்கிவரும்படி ஆட்டை அன்புடன் அழைத்தது அந்த ஓநாய்.
அது மாத்திரமல்ல "மிகவும் ருசியான, போதியளவு புல் லும் இங்கே இருக்கின்றது. கீழே இறங்கி வா!’ என்று ஒநாய் ஆட்டை அன்புடன் அழைத்தது. 'மன்னிக்கவும், என்னை நீ அழைப்பது என்னுடைய உணவுக்காக அல்ல. உன் னுடைய இரவுச் சாப்பாட்டுக்காகத்தான் நீ என்னைக் கீழே இறங்கி வரும்படி கூப்பிடுகின்றாய்" என்று ஆடு கூறியது.
(D
232

உலகத்து நாட்டார் கதைகள்
181. அசட்டுத் தைரியம்
ஒரு கழுதையும் சேவலும் ஒரு பண்ணையில் ஒன்றாக வசித்து வந்தன. ஒரு நாள் கடும்பசி கொண்ட சிங்கம், அந்த வழியால் செல்லும்பொழுது நன்றாகக் கொழுத்திருந்த அந்தக் கழுதையைக் கண்டது. உடனே அந்தக் கழுதை யைத் தனக்கு உணவாக்கத் தீர்மானித்தது சிங்கம். சேவல் கூவுகின்ற சத்ததைப்போல, சிங்கம் வேறொன்றையும் வெறுப்பதில்லை. சிங்கம் பண்ணை வழியால் செல்வதைக் கண்ட சேவல் கூவத் தொடங்கியது. இது தற்செயலாக நடந்தது. சேவலின் கூவல் சத்ததைக் கேட்ட சிங்கம், அந்த இடத்தைவிட்டு விரைவாக ஓடியது. ஒரு பறவைக்குப் பயந்துதான் சிங்கம் அப்படி வேகமாக ஓடுகின்றது என்பதை நினைத்து, பெருமளவு சந்தோஷப்பட்டது கழுதை.
முன்னால் ஓடுகின்ற மிருகங்களின் அரசனான சிங்கத் தைத் தான் துரத்திச் செல்கிறேன் என்ற எண்ணத்தில் பெரும் ஆனந்தம் அடைந்த கழுதை, சிங்கத்தின் பின்னால் பாய்ந்து ஓடியது. சிங்கத்திற்குக் கிட்ட கழுதை சென்றதும், திடீரெனத் திரும்பி ஒரு நொடியில் அதன்மீது பாய்ந்து கழுதைக்கு முடிவு கட்டியது.
O
233

Page 129
நீர்வை பொன்னையன்
182. நிதானம்
ஒரு நாள் மூர்க்கத்தனமான புயலினால் ஏற்பட்ட பெரும் அலைகளால் ஒரு கப்பல் மேலும் கீழுமாகத் தூக்கி எறியப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தது. திடீரென அந்தப் புயல் அடங்கி, கொந்தளித்த கடலலைகள் அமைதி யடைந்தன. இதனால் உற்சாகமடைந்த மாலுமிகள் மகிழ்ச்சி மேலீட்டால் துள்ளிக் குதித்தனர். அனுபவத்தின் மூலம் ஞான திருஷ்டியடைந்த சுக்கானி, “நாங்கள் சந்தோஷத்தை அனுபவிக்கும் பொழுது நிதானத்துடனும் அடக்கத்துடனு மிருக்க வேண்டும். அதேபோல கஷ்டம் வரும்பொழுதும் முணுமுணுக்கக் கூடாது. வாழ்க்கை இன்பமும், துன்பமும் கலந்தது என்பதை மறக்கக்கூடாது' என்று கூறினான்.
Ο
234
 

உலகத்து நாட்டார் கதைகள்
183. ஆபத்து
சிங்கத்தினால் துரத்திச் செல்லப்பட்ட ஒரு மாடு தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, ஒரு ஆட்டுத் தொழு வத்தை நோக்கி ஓடியது. ஒரு ஆடு, தொழுவத்தின் வாசலில் குறுக்காக நின்று மாட்டை உள்ளே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. 'நல்லது, எனக்கு முன்னால் நிற்கின்ற உன்னிலும் பார்க்கப் பெரும் ஆபத்தான எதிரி எனக்குப் பின்னால் இல்லாமலிருந்தால், ஒரு மாட்டிற்கும் ஒரு ஆட்டிற்கும் இடையிலுள்ள பலத்தின் மூலம் உடனடி யாகவே உனக்குப் பாடம் புகட்டியிருப்பேன்’ என்று மாடு
கூறியது.
Ο
235

Page 130
நீர்வை பொன்னையன்
184. சுமை
பெரும் சுமையுடன் சென்று கொண்டிருக்கின்ற ஒரு ஒட்டகத்தினுடைய முதுகில் இருக்கும் வாய்ப்பு ஒரு இலையானுக்குக் கிடைத்தது. தான் மிகவும் உயரத்தில் இருப்பதை எண்ணி அந்த இலையான் பெருமகிழ்ச்சி அடைந்தது. ஒரு நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்ட தன் பின்னர் அவை இரண்டும் மாலையில் ஒரு தொழு வத்தை அடைந்தன. இலையான் மெதுவாக இறங்கி வந்து தரையிலமர்ந்ததும், “இதோ பார், நான் உன்னை மேலும் களைப்புறச் செய்ய விரும்பாதபடியால் உடனடியாகவே உன் மீதிருந்து கீழே இறங்கி வந்து விட்டேன். நீ இனி உபத்திரவப்படத் தேவையில்லை" என்று கூறியது.
'உனக்கு நான் நன்றி கூறுகின்றேன். நீ என் மீது இருந்தபொழுது உன்னுடைய பாரத்தை என்னால் உணர முடியாதது மாத்திரமல்ல, நீ கீழே இறங்கிய பின்னரும் எது வித பாரமும் குறைந்ததை என்னால் உணர முடியவில்லை” என்று ஒட்டகம் பதிலளித்தது.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
185. தற்பெருமை
ஒரு மாட்டிலையான் பலப்பரீட்சை பார்ப்பதற்கு ஒரு எருதிற்குச் சவால் விட்டது. இந்தச் சமரைப் பார்ப்பதற்கு மக்கள் எல்லோரும் வந்து குவிந்தனர். களத்தில் நீ என்னைச் சந்திக்க வந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் என்னு டைய எண்ணப்படி இந்தச் சமர் சிறியதாக இருந்தாலும், உன்னுடைய முடிவின்படி நான் பெரியவன் என்று நினைத்து நீ இங்கு வந்துள்ளாய்” என்று இலையான் எருதிற்குக் கூறி யது. இவ்வாறு அது கூறியபடியே காற்றில் பறந்து கொண்டே எருதின் அச்சுறுத்தல்களிலிருந்து நழுவித் தப்பித்தது.
அதைப் பெருமளவு ஏமாற்றிக் கொண்டிருந்தது. இப் பொழுது எருது தன்னுடைய கழுத்தின் பலத்தை மனதில் கொண்டு, இந்த இழிவான அற்ப எதிரியை இகழ்வாகக் கருதிக் கொண்டால் தன்னைத் தொந்தரவு செய்யும் இப் பிராணியைப் பெரிதுபடுத்தி மனப்பிராந்தி கொள்வதெல் லாம் வீணான செயலாகும் என்று எண்ணிக் கொண்டது.
Ο
237

Page 131
நீர்வை பொன்னையன்
186. மனச்சாட்சி
மனித எலும்புகளுக்காக ஒரு நாய் நிலத்தைக் கிளறிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு புதையலை அது கண்டது. பெரும் செல்வத்தைப் பெற்றுக்கொள்ள வேண் டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு, இந்தப் புனித இடத்தை மாசுபடுத்திக் கடவுளை நித்தித்ததற்கான தண்டனையைத் தான் அனுபவிக்க வேண்டும் என்று நாய் நினைத்தது. இத னால் உணவு உட்கொள்வதையும் மறந்து அந்தத் தங்கப் புதையலைப் பாதுகாப்பாகக் காவல் புரிந்து கொண்டிருந்தது. இப்படியே உணவின்றிக் காவல் புரிந்து கொண்டிருக்கையில் நாய் பட்டினியால் செத்து விட்டது. மரத்தின் மேலேயிருந்து அவதானித்துக் கொண்டிருந்த ஒரு கழுகு 'ஓ! நாயாரே, திடீரெனக் கிடைத்த அரச செல்வத்தைப் பாதுகாப்பதற்காக உணவு உண்பதையே மறந்து நீதிக்காக மரணத்தையே மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாய்” எனக் கூறியது.
O
238
 

உலகத்து நாட்டார் கதைகள்
187. நன்றியுள்ள நாய்
உணவைக் கொடுப்பதன் மூலம் நாயைத் தன்வசப் படுத்திவிடலாம் என்று ஒரு திருடன் முயற்சித்தான். அவன் அந்த நாய்க்கு ஒரு துண்டு றொட்டியைப் போட்டான். “கவனமாக நீ கேட்டுக்கொள். என்னுடைய எஜமானுடைய சொத்தைப் பாதுகாப்பதற்காகக் குரைக்கின்ற என்னுடைய நாவை உன்னுடைய றொட்டித் துண்டின் மூலம் உன்னால் அடக்கிவிட முடியம்என்று நீ நினைக்கின்றாயா? அப்படி நினைத்தால் நீ பெரிய தவறு விடுகின்றாய். திடீரென நீ காட்டும் பரிவின் மூலம் நீ எதுவித பலனும் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு நான் அலட்சியமாய் இருக்கக் கூடாது என்று என்னையே நான் எச்சரிக்கை செய்துகொண்டு விழிப்பாய் இருக்கின்றேன்’ என்று நாய் கூறியது.
Ο
2リで ジー ح KNS
2S2O
୧୪ ※, resa FLF ޗަރހުS
239

Page 132
நீர்வை பொன்னையன்
188. சிற்பத்தின் விலை
தன்னைப்பற்றி மனிதர்கள் எவ்வளவு மதிப்பு வைத்தி ருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள, புதன் தெய்வம விரும்பியது. அது மாறுவேடம் இட்டுக் கொண்டு ஒரு சிற்பி யின் சிலைக்கூடத்திற்குச் சென்றது.
அங்கு வைக்கப்பட்டிருக்கின்ற சிலைகளின் விலை யை அறிய விரும்பி, வியாழத் தெய்வத்தின் சிலையைக் காட்டி, அதனுடைய விலை என்னவென்று புதன் சிற்பியைக் கேட்டது. அரை அவுன்சு வெள்ளி உலோகத்தின் விலை எனச் சிற்பி கூறினான்.
புதன் தெய்வம் விழுந்து விழுந்தது சிரித்தது. அடுத்து வைக்கப்பட்டிருந்த வியாழத் தெய்வத்தின் அழகான மனைவியினுடைய சிலையைக் காட்டி அதனுடைய விலை என்னவென்று கேட்டது புதன். சிற்பி அச்சிலையினுடைய விலையை இன்னும் கூடுதலாகச் சொன்னான். இப்பொழுது தன்னுடைய சிலை புதனுடைய கண்ணில் பட்டது. இந்தச் சிற்பி தன்னுடைய இலாபத்தை அதிகரிப்பதற்கு, சொர்க்கத் தில் தூதுவனாக நான் இருக்கின்றபடியால் என்னுடைய சிலைக்கு மற்றைய சிலைகளின் விலையிலும் பார்க்க 10 மடங்கு விலையைக் கூட்டிச் சிற்பி சொல்வான் என்று எண்ணி, புதன் தெய்த்தின் சிலையினுடைய விலை என்ன வென்று புதன் கேட்டது.
240

உலகத்து நாட்டார் கதைகள் 'நல்லது, முன்பு நீ கேட்ட அந்த இரண்டு சிலை களுக்கும் நான் கூறிய விலைக்கு நீ அவற்றைக் கொள்வனவு செய்தால், புதன் தெய்வத்தின் சிலையை எதுவித பேரமும் பேசாமல் அதை நான் உனக்குச் சும்மாவே கொடுத்து விடுவேன்’ எனச் சிற்பி கூறினான்.
Ο
24

Page 133
நீர்வை பொன்னையன்
189. சிங்கக் குகை
ஒரு மனிதன் சிங்க வேட்டையாடுவதற்காகக் காட்டிற் குச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் அவன் ஒரு மரம்வெட்டியைச் சந்தித்தான். ‘சிங்கம் செல்கின்ற தடத்தை நீபார்த்திருக்கிறாயா? அதனுடைய குகை எங்கி ருக்கின்றது என்று உனக்குத் தெரியுமா?’ என்று மரம் வெட்டியை அவன் கேட்டான்.
"ஒமோம். எனக்கு நன்றாகத் தெரியும். தடத்தை மாத்திர மில்லை; சிங்கத்தையே நான் உனக்குக் காட்டுகின்றேன்" என்று மரம்வெட்டி கூறினான். இதைக் கேட்டதும் வேட் டைக்காரனுக்குப் பயத்தில் முகம் வெளுறி, அவனுடைய பற்கள் கிடுகிடு என்று அடித்தன. அவன் ஒருவாறு சமாளித் துக்கொண்டு, ‘ஒ! மிகவும் நன்றி. நான் சிங்கம் செல்கின்ற தடத்தை மாத்திரம்தான் பார்க்க வேண்டுமென்று கேட்டேன் சிங்கத்தையல்ல" என்று கூறினான் வேட்டைக்காரன்.
Ο
242

உலகத்து நாட்டார் கதைகள்
190. அறியாமை
ஒரு ஓநாய் ஒரு பண்ணையில் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அவ்வேளையில், அது 'ஒட்ஸ்’ தானியம் விளைந்து கொண்டிருந்த வயல் பகுதிக்கு வந்தது. ஆனால், "ஒட்ஸ்’ தானியத்தை ஒநாயினால் உண்ண முடியாதபடி யால், அது அந்த இடத்தை விட்டகன்றது. அந்த ஓநாய் சென்று கொண்டிருக்கையில் ஒரு குதிரையைச் சந்தித்தது. ஒட்ஸ் தானியம் விளைந்திருக்கின்ற இடத்திற்கு ஒநாய் அந்தக் குதிரையைக் கூட்டிச் சென்றது.
‘நன்றாக விளைந்திருக்கின்ற ஒட்ஸ் தானியத்தை நான் உனக்குப் பார்த்து வைத்திருக்கின்றேன். நான் அதை ருசித்துக்கூடப் பார்க்கவில்லை. அதை நான் உனக்காகத் தான்பேணிக் காத்து வைத்து இருக்கின்றேன். நீ அந்த ஒட்ஸ் தானியத்தைச் சாப்பிடும்பொழுது உன்னுடைய பற் களிலிருந்து எழுகின்ற இசை ஓசையைக் கேட்பதற்கு விரும்புகின்றேன்’ என்று ஒநாய் கூறியது.
'என் இனிய தோழனே! ஒநாய்கள் ஒட்ஸ் தானியத்தை உண்ணக் கூடியதாய் இருந்தால், உன்னுடைய செவிப் புல னுக்குரிய உணவை விட உன்னுடைய பசியைத் தீர்ப்ப தற்கு நீ முதலில் முயன்றிருப்பாய்’ என்று குதிரை கூறியது.
Ο
243

Page 134
நீர்வை பொன்னையன்
191. அமைதியான கடல்
ஒரு இடையன் தனது மந்தைக் கூடடத்தைப் புல மேய விடுவதற்கு, கடற்கரைப் பக்கம் கொண்டு சென்றான். கடல், மூச்சே விடாமல் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதை அவன் அவதானித்தான். இதனால், அந்தக் கடல்மீது கப்ட லோட்ட வேண்டுமென்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. ஆகவே அவன் தனது மந்தைகளை விற்றுவிட்டு இப்பணத் தில் பெருமளவு பேரீச்சம் பழத்தைக் கொள்வனவு செய் தான். அந்தப் பழப்பொதிகளை ஒரு கப்பலில் ஏற்றிச் சென் றான். கப்பல் சிறிது தூரம் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெரும் புயல் ஏற்பட்டது. இதனால் அக்கப்பல் பாறையில் மோதிக் கடலில் மூழ்கியது. இடையன் தனது பேரீச்சம்பழப் பொதிகளை இழந்தான். ஆனால் அவன் கடும் பிரயத்தனப் பட்டு நீந்திக் கரை சேர்ந்தான். கடல் அமைதியடைந்த பொழுது அவனுடைய நண்பர்களில் ஒருவன் அவனிடம் வந்தான். கடல் அமைதியாயிருப்பதைப் பார்த்து வியப்ப டைந்து அதைப் பாராட்டியதுடன் அவன் பின்வருமாறு கூறினான். 'என் அருமை நண்பனே! கடலின் மேற்பரப்பு அமைதியாய் இருப்பதைப் பார். அந்த அமைதியான மேற) பரப்பு உன்னிடம் பேரீச்சம் பழப்பொதிகளை எதிர்பார்த்து
இருக்கின்றது” என்று கூறினான்.
)
244

உலகத்து நாட்டார் கதைகள்
192. தவறான பாதை
ஒரு அன்னப் பட்சியின் வெண்மையான அழகுள்ள இறகுகளைப் பார்த்து ஒரு அண்டங் காகம் பொறாமைப் பட்டது. அந்த அன்னம் வசிக்கின்ற தண்ணின் காரண மாகத்தான் அதன் இறகுகள் அவ்வளவு அழகாக இருக்கின் றன என்று காகம் நினைத்தது. ஆகவே அது தன் வசிப் பிடத்தை விட்டுச் சென்று ஆறுகளிலும் நீரோடைகளிலும் வசிக்கத் தொடங்கியது. ஆற்று நீரிலும் நீரோடைத் தண் ணிலும் அண்டங் காகம் மூழ்கித் தன்னுடைய இறகுகளை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தியது. இதனால் காகத்திற்கு எதுவித பயனும் கிடைக்கவில்லை. அதனுடைய இறகுகள் எப்பொழுதும்போலவே கறுப்பாகவே இருந்தன. ஆனால் வழமையாக உண்ணுகின்ற உணவு கிடைக்காமல் விரை வில் செத்து மடிந்தது.
Ο
245

Page 135
நீர்வை பொன்னையன்
193. சேவலின் கூவல்
ஒரு வயோதிபப் பெண்ணிருந்தாள். அவளுக்கு இரண்டு வேலைக்காரப் பெண்கள். அந்த வயோதிப மாது மிகவும் சிக்கனமானவள். அதிகாலையில் சேவல் கூவத் தொடங்கிய நேரம் தொட்டு வேலை செய்வதற்கு அந்தப் பெண்களை அவள் எழுப்பி, கடுமையாக உழைக்கச் செய்வாள்.
அதிகாலையிலேயே நித்திரை விட்டெழும்புவதை அப் பெண்கள் விரும்பவில்லை. தங்களை எஜமானி அதிகாலை யிலே எழுப்புவதற்கு இந்தச் சேவல் கூவுவதுதான் காரண மாக இருக்கின்றது. ஆகவே அந்தச் சேவலின் தொண்டை யைத் திருகி அதைக் கொன்று விடுவதற்கு அவர்கள் தங்க ளுக்குள்ளேயே முடிவெடுத்தார்கள். உடனே அவர்கள் சேவ லைக் கொன்று விட்டார்கள். தனது வழமையான எச்சரிக்கை அழைப்பை இழந்த அந்த எஜமானி, தான் நீண்ட நேரம் தூங் கினால் வேலைக்காரப் பெண்களை எழுப்ப முடியாதே என்று அச்சமுற்று நேரம் சரியாகத் தெரியாமல் நடு ஜாமத்திலேயே அந்த வேலைக்காரப் பெண்களை நித்திரை விட்டெழுப்பி விடுவாள். இது நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தது.
Ο
246

உலகத்து நாட்டார் கதைகள்
194. இலையான்
'வண்டிச் சில்லின்மீது நான் எவ்வளவு தூசைக் கிளப்பு கின்றேன்? குதிரையின் பின்பாகத்தின் மேலிருந்து கொண்டு நான் எவ்வளவு வேகமாக வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கின்றேன்?’ என்று கூறி ஒரு ஈ தற்பெருமைப் படுகின்றது.
247

Page 136
நீர்வை பொன்னையன்
195. U Jo
ஒரு தடவை ஒரு நாய் ஒரு ஓநாயைத் துரத்திச் சென்றதும் தன்னுடைய வலிமை, தான் துரத்திச் சென்ற வேகம், தன்னைக் கண்டு ஓநாய் ஓடிய ஒட்டம், எல்லாவற் றையும் சிலாகித்து நாய் ஜம்பமடித்தது. ‘உன்னைக் கண்டு நான் பயந்துவிட்டேன் என்று நீ நினைத்துக் கொள்ளாதே. உன்னுடன் வேட்டையாட வந்து கொண்டிருந்த எஜ மானைக் கண்டுதான் நான் உண்மையாகப் பயந்தேன்'
என்று ஓநாய் கூறியது.
Ο
248
 

உலகத்து நாட்டார் கதைகள்
196, முகம்
கோழிக் குஞ்சுகள் சுகவீனமுற்றிருக்கின்றன என்று ஒரு மூஞ்சூறு கேள்விப்பட்டது. அது ஒரு மயிலின் தோகை யை அணிந்து கொண்டு, கோழிக் குஞ்சுகளைப் பார்க்கச் சென்றது. “ஓ, அருமையான குஞ்சுகளே! நீங்கள் விரைவில் சுகமடைவீர்கள். உங்களுக்கு இப்போ எப்படியிருக்கின்றது? உடல்நிலை எப்படி?” என்று மூஞ்சூறு கோழிக்குஞ்சுகளைக் கேட்டது. 'உன்னுடைய மூஞ்சியைப் பார்த்துக் கொண்டி ருக்கும்வரை நாங்கள் நோயாளிகளாகத்தானிருப்போம்’
என்று மூஞ்சூறுக்குக் கூறின கோழிக்குஞ்சுகள்.
Ο
249

Page 137
நீர்வை பொன்னையன்
197 நன்றி
'உனக்கு இவ்வளவு அடிகளையும் தந்து, காதுகளை முறுக்குவதன் மூலம் கடுமையான உபாதைகளையும் உண்டாக்குகின்ற உன் எஜமானுக்கு நீ எப்படி உனது வாலை ஆட்டி உன் பிரியத்தைக் காட்டுகின்றாய்? எனக்கு இது பெரும் வியப்பாக இருக்கின்றது” என்று ஒரு பெண் பன்றி ஒரு வேட்டை நாயைக் கேட்டது. "அவர் எனக்குக் கொடுக் கின்ற அடிகளுடனும் உபாதைகளுடனும் அவர் எனக்குத் தருகின்ற நல்ல சோற்றுக் கவளங்களையும் அன்பான வார்த் தைகளையும்ஒப்பிடுகையில், நான் பெரும் இலாபத்தைப் பெறுபவனாக இருக்கின்றேன்' என்று வேட்டை நாய்
கூறியது.
Ο
250
 

உலகத்து நாட்டார் கதைகள்
198. மகிழ்ச்சி
ஒரு அன்னம் இறந்து கொண்டிருக்கையில், அது பாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு நாரை “ இப்படிப் பாடுவது இயற்கைக்கு முரணான ஒரு விஷயமாயிருக்கின்றது. இதற்கு என்ன காரணம்?’ என்று அன்னத்தைக் கேட்டது. "என்ன காரணமென்றால் கண்ணி வலைகள், துப்பாக்கிகள் அல்லது பட்டினி ஆகியவற்றின் அச்சுறுத்தல்கள் இல்லாத ஒரு புதிய நிலையை நான் தற்பொழுது அடைந்து கொண்டி ருக்கின்றேன். இத்தகைய ஒரு விடுதலை நிலையில் மகிழ்ச்சியடையாதவர் எவராக இருக்க முடியும்?' என்று அன்னம் கூறியது.
Ο
251

Page 138
நீர்வை பொன்னையன்
199. நெருப்பு
மெழுகையும் செங்கல்லையும் பற்றி ஒரு கேள்வி எழுந்தது. ஒவ்வொரு அடி அடிக்கும் பொழுதும் செங்கல் ஏன் உடைந்து நொருங்கக் கூடியதாக இருப்பதுடன் மெழுகு ஒவ்வொரு அடிக்கும் தாக்குப் பிடித்து, எல்லாத் தாக்குதல் களையும் தாங்கிக் கொண்டு இப்படி உறுதியுடனிருக் கின்றது. மெழுகு இந்த விஷயத்தை நன்றாக ஆராய்ந்து இறுதியில் இதற்கு ஒரு தத்துவ விளக்கத்தைக் கொடுத்தது. நெருப்பில் செங்கல்லையிட்டு எரிக்கும்பொழுது இந்த எரிப்பு அதை இப்படிக் கடினமாக்குகின்றது. அதேபோல இந்த எரிப்பினால் வருகின்ற உஷ்ணம் மெழுகையும் கடின மாக்கும் என்று ஒரு அபிப்பிராயமிருந்தது. ஆனால் உஷ்ணம் ஒன்றை உறுதிப்படுத்திக் கெட்டியாக்குகின்றது. மற்றதை உருகச் செய்கின்றது.
O
252
 

உலகத்து நாட்டார் கதைகள்
200. தோகை
ஒரு மயிலும் கொக்கும் நண்பர்களாகச் சேர்ந்திருந்தன. அவ்வேளையில் மயில் தனது தோகையை விரித்ததுடன், அதேபோன்ற இறகுகளைக் கொண்ட ஒரு தோகையைக் காட்டும்படி கொக்கிற்குச் சவால் விட்டது. இதற்கு, கொக்கு தனது இறகுகளை விரித்துத் காற்றில் மிதந்து பறந்து கொண்டு, தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி மயிலைக் கேட்டுக் கொண்டது. மயிலினால் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
'உன்னுடைய இறகுகளைப் பற்றி நீ பெருமையாகப் பேசுகின்றாய். உண்மையில் அவை கண்ணுக்கு அழகாகத் தான் இருக்கின்றன. ஆன்ால், சேவையைப் பொறுத்த மட்டில், அவை எந்த வகையிலும் பொருத்தமானவை யாகவோ அல்லது பயனுடையவையாகவோ இருக்க வில்லை’ என்று கொக்கு கூறியது.
O
253

Page 139
நீர்வை பொன்னையன்
201. மன்னிப்பு
பறவைகளுக்கு எதிராக மிருகங்கள் மீன்களுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டன. இதையடுத்து யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், மீன்கள் தங்க ளுடைய பங்கைச் செலுத்துவதற்குப் பதிலாக, தரை மார்க்க மாகத் தாங்கள் அணிவகுத்து நடந்து செல்ல முடியாமலிருக் கின்றது என்று தங்களது மன்னிப்புக் கோரலை அனுப்பி வைத்தன.
O
254
 

உலகத்து நாட்டார் கதைகள்
202. திறமை
ஒரு மனிதனும் ஒரு வனதேவதையும் மிக நெருக்க மாகச் சேர்ந்திருந்தனர். ஒருநாள் மனிதன் தனது வாயில் தன் விரல்களை வைத்து அவை மீது ஊதினான். 'இப்படி நீ ஏன் செய்கின்றாய்?’ என வனதேவதை மனிதனைக் கேட்டது. 'ஏனென்றால், எனது கைகள் கடுமையாகக் குளிர்ந்து போயி ருக்கின்றன. அவற்றைச் சூடாக்குவதற்காகத்தான் நான் இப்படிச் செய்கின்றேன்’ என்று மனிதன் கூறினான். தன்னு டைய கஞ்சியை மனிதன் தனது வாயினால் ஊதிக் கொண்டி ருப்பதை மற்றுமொரு தடவை வனதேவதை அவதானித்தது. "இப்பொழுது இதன் அர்த்தம் என்ன?’ என்று வனதேவதை கேட்டது. "ஓ! அதுவா? என்னுடைய கஞ்சி கடும் சூடாக இருக்கின்றது. அதைக் குளிர வைப்பதற்காகத்தான் நான் இப்படிச் செய்கின்றேன்’ என்றான் அந்த மனிதன்.
'இல்லை, உனது அதே வாயினால் குளிரையும் சூட் டையும் ஊதி உண்டாக்கிக் கொள்கிற தந்திரோபாயம் உன் னிடமிருந்தாலும் உன்னைப்போல என்னால் அதைச் செய்ய முடியாது’ என்று வனதேவதை கூறியது.
Ο
255

Page 140
நீர்வை பொன்னையன்
203. பயன்படாத பாதுகாப்பு
ஒரு மாட்டின் பாதத்தில் ஒரு சுண்டெலி கடித்துவிட்டு, தன்னுடைய வளைக்குள் புகுந்து கொண்டது. இதனால் மாடு தனது கால்களால் தரையைத் துளைத்து மிதித்ததுடன், தன் தலையைக் காற்றில் ஆட்டிச் சுழற்றிக் கொண்டு கடும் கோபத்துடன் தன்னுடைய எதிரியை எல்லாத் திசையிலும் பார்த்துத் தேடியது. ஆனால் அது ஒருவரையும் காண வில்லை. மாடு கோபத்தின் உச்சக் கட்டத்தை அடைந்த வேளை, சுண்டெலி தன் தலையை வெளியே நீட்டி மாட் டைப் பார்த்துச் சிரித்தது. "உனது கொம்புகள், உன் பெரிய பகட்டுக்கள், எல்லாம் பயனற்றவை. என்னைப் போன்ற ஒரு அற்பனான சுண்டெலி உன்னையும் மிஞ்சிவிட்டது. ஏனென்றால் உன்னாலேயே உனக்கு உதவி புரிய முடியாம லிருப்பதை நான் இப்போ இங்கு பார்க்கின்றேன்' என்றது சுண்டெலி.
O
256
 

உலகத்து நாட்டார் கதைகள்
204. தீர்ப்பு
புறாவைத் துரத்திச் சென்ற ஒரு ராஜாளிப் பறவையை நாட்டுப்புற மனிதனொருவன் பிடித்துக் கொண்டான். 'உனக்கு எந்தக் கெடுதலையும் நான் ஒரு பொழுதும் செய்யவில்லை. ஆகவே நீ எனக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டாய் என்று நான் நம்புகின்றேன்’ என்று ராஜாளி மன் றாட்டமாகக் கூறியது. 'நல்லது, புறா உனக்கு என்ன தீங்கு செய்தது? உனது சொந்த வாதத்தின்படி நீ எப்படிப் புறாவை நடத்தினாயோ, அதே போலவே நீயும் நடத்தப்படுவதை எதிர்பார்ப்பதுதான் நியாயம்’ என்று நாட்டுப் புற மனிதன் கூறினான்.
Ο
257

Page 141
நீர்வை பொன்னையன்
205. ஒரு மனிதனின் மகிழ்ச்சி
ஆப்கானிஸ்தானிலுள்ள காபூல் நகரிலுள்ள மனிதன் ஒருவன் ஒரு தடவை இந்தியாவுக்குச் சென்றான்.
அவன் ஒரு இந்திய வீதியில் நடந்து கொண்டிருக்கை யில் பல்வேறு வகையான அமைப்புகளிலும், உருவிலும், அளவுகளிலும் சகல விதமான இனிப்புப்பண்டங்கள் ஒழுங்காக ஒரு கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான்.
அந்த ஆப்கானிஸ்தானியனுக்கு இரண்டொரு இந்து ஸ்தானி வார்த்தைகள்தான் தெரிந்திருந்தன. அவன் இனிப்புப் பண்ட வியாபாரியிடம் சென்று விசேஷ சுவையுள் ளதாகத் தோன்றுகின்ற ஒரு பிரத்தியேக இனிப்புப் பண்டத் தைச் சுட்டிக் காட்டினான். அவன் அதனுடைய பெயர் என்ன என்று கேட்கிறான் என்று ஊகித்த வியாபாரி “கஹாஜா' என்று கூறினான்.
‘கஹாஜா’ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங் களுண்டு. ‘இனிப்புகள்’ என்று ஒரு அர்த்தம். 'உண்ணுங் கள்’ என்பது மற்றைய அர்த்தம். காபூலிலிருந்து வந்த ஆப்கானிஸ்தானியனுக்கு 'உண்ணுங்கள்’ என்ற இரண் டாவது அர்த்தம்தான் தெரிந்திருந்தது. ஆகவே அவன் அந்தக் குறிப்பிட்ட விசேட இனிப்புப் பண்டத்தை ஆவலுடன் கை நிறைய அள்ளி ஆசை தீரச் சாப்பிட்டான்.
258

உலகத்து நாட்டார் கதைகள் ஆப்கானிஸ்தானியன் சாப்பிட்ட இனிப்புப் பண்டத்திற் கான பணத்தைக் கொடுக்கும்படி வியாபாரி கேட்டான். வியாபாரி என்ன கூறுகின்றான் என்பதைப் புரிந்து கொள் ளாது அவன் அந்த இடத்தை விட்டு அகல முயன்றான். இதனால் கோபமடைந்த இனிப்பு வியாபாரி, பொலிசிடம் முறைப்பாடு செய்தான். பொலிஸ்காரன் ஆப்கானிஸ்தானி லிருந்து வந்த அந்த மனிதனைக் கைது செய்தான்.
கைது செய்யப்பட்ட அந்த ஆப்கானிஸ்தானியனுடைய தலைமுடியை வெட்டி மொட்டையடித்த பின்னர் தலையில் தார் பூசினர். அதன்பின் அவனை ஒரு கழுதை மேல் ஏற்றி மேளதாளத்துடன் ஊர்வலமாகக் கொண்டு சென்று பட்ட ணத்திற்கு அப்பால் விட வேண்டுமென்று பொலிஸ் அதி காரி கட்டளையிட்டான். அப்படிச் செய்தால்தான் சட்டத்தை மீறுபவர்கள் எப்படித் தண்டிக்கப்படுகின்றனர் என்று உலகின் ஏனைய பகுதியிலுள்ளவர்களுக்குத் தெரியவரும் என்றான் அந்தப் பொலீஸ் அதிகாரி.
இந்தியாவில் இப்படிப்பட்ட தண்டனை கொடூர மானது, மிருகத்தனமானது என்று கருதப்பட்டாலும் காபூலி லிருந்து வந்த ஆப்கானிஸ்தானியன் இதை ஒரு வேடிக்கை விளையாட்டென்று நினைத்தான். அது மாத்திரமல்ல; தன்னை இப்படி வீதி வழியே ஊர்வலமாகக் கொண்டு சென்றமை தனக்குக் கிடைத்த உபசாரமும் கெளரவமும் என்று நினைத்தும் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
அவன் நாடு திரும்பியதும் "இந்தியா எப்படியிருந்தது?" என்று மக்கள் கேட்டனர். 'பிரமாதம். அது ஒரு வசீகரமான நாடு. அத்துடன் செல்வந்த நாடாகவுமிருக்கின்றது. அங்கு பணம் கொடுக்காமலே விரும்பியதைப் பெற்றுக் கொள்ள லாம். வேண்டுமானால் அங்கே நீ ஒரு கடைக்குச் சென்று நீ
259

Page 142
நீர்வை பொன்னையன் விரும்பிய ஒரு குவியல் இனிப்புப் பண்டத்தைச் சுட்டிக் காட்டினால் உனக்கு வேண்டியளவு அவற்றை உண்ணும்படி அவர்கள் உனக்குக் கூறுவார்கள். அதன் பின்னர் பொலீஸ் வந்து உனது தலை முடியையும் சிரைத்து, தலை மீது தார் பூசி ஒரு கழுதை மேல் உன்னை ஏற்றி, இனிமையான இந்திய வாத்திய இசையுடன் பட்டணத்து வீதிகளில் உன்னை ஊர்வலமாக அழைத்துச் சென்று வழியனுப்பி வைப்பார்கள். இவை எல்லாம் இலவசம். இந்தியா எவ்வளவு அழகான நாடு. இந்திய மக்கள் விருந்தோம்பும் பண்பிலே தாராளமானவர்கள். அவர்கள் எவ்வளவு அழகானவர்கள்’ என்று கூறி மகிழ்ந்தான் அந்த ஆப்கானிஸ்தானியன்.
Ο
260
 

உலகத்து நாட்டார் கதைகள்
206. தவம்
ஒரு ஆற்றங்கரையில் தெய்வீகத் தன்மையுள்ள ஒரு மனிதன் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அப் பொழுது தெய்வீகத் தன்மை பெற்ற மற்றுமொரு மனிதன் தன்னுடைய துறவு நடைமுறைகளினாலும் கடும் தவத் தினாலும் தான் பெற்றுக் கொண்ட அதீத ஆத்மீகச் சக்தியின் வலுவை மற்றைய தெய்வீகத் தன்மையுடையவனுக்கு எடுத் துக்காட்டி, தன்னுடைய செல்வாக்கினையும் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ள விரும்பினான். ஆகவே, அவன் முதலா வது துறவி இருந்த இடத்தை நோக்கி ஆற்றின் நீர் மேல் நடந்து வந்தான்.
முதலாவது துறவி அமைதியாக இருந்த இடத்திற்கு இரண்டாவது துறவி வந்து 'சிறிது கணப்பொழுதிற்கு முன்னர் நான் என்ன செய்தேன் என்று நீ பார்த்தாயா?" என்று கேட்டான்.
"ஒமோம், நான் பார்த்தேன். நீ வந்ததைப் பார்த்தேன். ஆற்றுக்குக் குறுக்காகத் தண்ணின் மேல் நீ நடந்து வந் ததை நான் பார்த்தேன். நீ அதை எங்கு கற்றுக் கொண் டாய்?’ என்று அநாயாசமாகக் கேட்டான் அவன்.
"இமய மலையடிவாரத்தில் பண்னிரண்டு வருடங்க ளாக நான் யோகாசனத்தையும் கடுமையான தவத்தையும் செய்ததுடன் ஒற்றைக் காலில் நின்றும், ஒரு வாரத்தில் el)
26

Page 143
நீர்வை பொன்னையன் நாட்கள் உண்ணாவிரதமிருந்தும் இந்த ஆத்ம சக்தியை நான் பெற்றேன்’ என்று இரண்டாவது துறவி கூறினான்.
'உண்மையாகவா?’ என ஆச்சரியப்பட்டுக் கேட்ட துறவி, இந்தக் கருமத்தைச் செய்வதற்கு நீ ஏன் இவ்வளவு தொல்லைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாகி இதைக் கற்றுக் கொண்டாய்? நீ ஏன் இவ்வளவு வேதனையை அனு பவித்தாய்? எங்களுடைய படகோட்டிக்கு இரண்டு பென்னி கள் கொடுத்தால் இந்த ஆற்றைக் கடப்பதற்குத் தன்னு டைய வள்ளத்தில் உன்னைக் கொண்டு வந்திருப்பானே’’ என்றான்.
Ο
262
 

உலகத்து நாட்டார் கதைகள்
207 மருமகன்
ஒருநாள் அக்பர் மன்னரும் பீர்பாலும் வேட்டைக்குச் சென்றிருந்தனர். அப்பொழுது அக்பர் ஒரு வளைவான மரத் தைச் சுட்டிக் காட்டி 'இந்த மரம் ஏன் வளைந்திருக்கின் றது?’ என்று பீர்பாலைக் கேட்டார்.
பீர்பாலோ. “காட்டிலுள்ள எல்லா மரங்களினதும் மரு மகனாக இருக்கின்ற காரணத்தினால் அந்த மரம் வளைந் திருக்கின்றது” என்றான்.
'அப்படி ஏன் கூறுகின்றாய்?’ என்றார் அக்பர். “ஒரு நாயின் வாலும் ஒரு மருமகனும் எல்லா வேளைகளிலும் வளைந்தே இருக்கின்றன’ என்றான் அவன். 'என்னுடைய மருமகன் கூடவா நேர்மையற்றவனாக இருக்கின்றான்?* மன்னன் கேட்டான்.
'மாட்சிமையுடைய மன்னனே! அது உண்மைதான்’ பீர்பால் கூறினான்.
சில நாட்களின் பின் பீர்பால் மூன்று சிலுவைகளைக் கொண்டு வந்தான். ஒரு சிலுவை தங்கத்தினால் செய்யப் பட்டது. மற்றது வெள்ளியினால் செய்யப்பட்டது. மூன்றா வது இரும்பினால் செய்யப்பட்டது.
'நீ ஏன் மூன்று சிலுவைகளைச் செய்தா யென்று அக்பர் கேட்டார்.
"மேன்மை தங்கிய மன்னனே, ஒரு சிலுவை உங்க ளுக்கு. மற்றையது எனக்கு. மற்றையது மேன்மை தங்கிய தங்களுடைய மருமகனுக்கு’ என்றான் பீர் பால்.
263

Page 144
lர்கவை பொன்னையன்
'என்ன? எங்களைச் சிலுவையில் அறையவா?’ வியப் புடன் கேட்டார் அக்பர்.
"ஆமாம்! எங்களை வைத்து அறையத் தான் இந்தச் சிலுவைகள். ஏனென்றால் நாங்கள் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருடைய மருமகனாகத்தானிருக்கின்றோம்’ என்று கூறினான் பீர்பால்.
'நல்லது. அப்போ எனது மருமகனைச் சிலுவையில் வைத்து அறையாமல் அவனைத் தப்பிச் செல்ல விட்டு விடுவோம்’ எனக் கூறினார் அக்பர்.
Ο
264
 

உலகத்து நாட்டார் கதைகள்
208 மோட்சத்தின் வழி
ஒரு ஊரில் ஒரு குரு இருந்தார். அவர் பெரும் செல் வந்தர். அவருக்கு நாடு முழுவதிலும் நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தனர்.
அந்தச் சீடர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தடவை வீதம் விஜயம் செய்வதற்கு அவருக்குப் பன்னிரண்டு வரு டங்கள் எடுத்தன. அதாவது ஒரு சீடனிடம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் அவரால் விஜயம் செய்ய முடிந்தது.
இப்படியே அவர் சுற்றுலாச் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு தடவை ஒரு குறிப்பிட்ட பட்டணத்தின் சுற் றுப்புறத்தில் வந்துகொண்டிருக்கையில், அவரை நடு வீதி யில் ஒரு மனிதன் தடுத்து நிறுத்தினான். அந்த மனிதன் ஒரு முட்டாளைப்போல் நடந்து கொண்டான். அவன் நட்டநடு றோட்டில் நின்றபடியே, குரு தன்னிடம் கதைக்கும் வரை அவருடைய பல்லக்கை நகர விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தான். குரு பொறுமையிழந்தவராக இருந்தார். ஆனால் அவர் அந்த மனிதனுடன் ஒரு நிமிடம் கதைப்ப தற்கு ஒப்புக் கொண்டார். 'உனக்கு என்ன வேண்டும்? விசனத்துடன் கேட்டார் குரு.
'நான் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறேன். நீர் பெரிய குருவென்றும், உமக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழி தெரியும் என்றும் அநேக மக்கள் எனக்குக் கூறியுள் ளனா" எனறான அவன.
265

Page 145
நீர்வை பொன்னையன்
இதைக் கேட்ட குரு சிரித்தார். 'நீ மோட்சத்திற்குப் போக விரும்புகின்றாயா? அது மிகவும் சுலபமான காரியம். நீ ஆகாயத்தை நோக்கி உன்னுடைய கைகளை உயர்த்திக் கொண்டு அப்படியே நில். நீ மோட்சத்திற்குப்போய் விடு வாய்" என்றார் குரு.
'அவ்வளவுதானா?” என்று அதிசயித்தான் அவன். அவன் வேறு கேள்விகளைக் கேட்குமுன் பல்லக்குத் தூக்குபவர்களிடம் விரைவாகச் செல்லும்படி கட்டளை யிட்டார் குரு.
பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் அதே வழியினால் பிரயாணம் செய்யும் சந்தர்ப்பம் மீண்டும் குருவுக்கு ஏற்பட்டது. அந்தப் பட்டணத்தின் சுற்றுப்புறத் தில் குரு வந்துகொண்டிருக்கையில் வானத்தை நோக்கித் தனது இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அந்தக் குரு கண்டார். அந்த மனிதனுடைய தாடியும் தலைமுடியும் நரைத்துவிட்டன. அவனுடைய கைநகங்கள் நீளமாக வளர்ந்துள்ளதுடன் அசுத்தமானவையாயிருந்தன. அவனது உடை கிழிந்து கந்தல் கந்தலாக இருந்தது. அவன் ஒன்றையும் பொருட் படுத்தாதவனாக நின்றிருந்தான். அவனுடைய கண்கள் வானத்தைப் பார்த்தபடியேயிருந்தன.
குரு அவனை அண்மித்ததும், திடீரென அந்த மனிதன் வானத்தை நோக்கி மெதுவாக எழுந்து கொண்டிருந்ததை அவதானித்தார். உடனே அவர் தம்முடைய பல்லக்கிலிருந்து கீழே இறங்கி, வானத்தை நோக்கி உயர்ந்து சென்று கொண்டிருந்த அந்த மனிதனுடைய இரண்டு கால்களை யும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இந்த வழியின் மூலம் தான் அந்தத் குருவினால் மோட்சத்திற்குச் செல்ல முடியும். O
266

உலகத்து நாட்டார் கதைகள்
209. புத்தி மட்டும் போதாது
நான்கு பிராமணர்கள் இந்தியாவின் LU 6M) பகுதிகளுக்கும் சென்று சகல வகையான அறிவையும் பெருமளவில் பெற்றுக் கொண்டனர். அவர்களில் ஒவ்வொருவரும் தத் தமது பல்வேறு வகையான திறமைகளையும் ரகசிய தந்தி ரோபாயங்களையும் ஒவ்வொருவருக்கும் செய்து காட்ட விரும்பினர்.
ஆகவே அவர்கள் நால்வரும் ஒரு காட்டில் சந்தித்தனர். அவர்களின் ஒருவன் அந்த இடத்தில் ஒரு எலும்புத் துண்டைக் கண்டெடுத்தான். அது ஒரு புலியினுடைய தொடை எலும்பு, 'இந்த எலும்புத்துண்டை வைத்துக் கொண்டு இந்த மிருகத்தின் முழு எலும்புக்கூட்டையும் என்னால் உருவாக்க முடியும்’ என்றான் அவன். அதை அப்படியே செய்தும் முடித்தான்.
‘அந்த எலும்புக் கூட்டுக்குத் தோல், தசை, ரத்தம் ஆகியவற்றை என்னால் கொடுக்க முடியும்’ என்று இரண்டாவது பிராமணன் கூறினான். அதன்படி செய்து முடித்தான். “இதற்கு எப்படி உயிரைக் கொடுப்பது என்று எனக்குத் தெரியும்’ என்று மூன்றாவது பிராமணன் கூறினான்.
நான்காவது பிராமணனோ “சிறிது பொறுத்துக் கொள். இதற்கு உயிரைக் கொடுக்க வேண்டாம். உன்னுடைய ஆற்றலை நாங்கள் நம்புகின்றோம்’ என்று மூன்றாவது பிராமணனுக்குக் கூறினான்.
267

Page 146
நீர்வை பொன்னையன்
'ஏதேனும் ஒரு சாதனையைப் புரியக் கூடிய ஆற்றலை வைத்துக்கொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்தாம லிருப்பதில் என்ன பயன்? என்னுடைய இந்தத் திறமையை நான் முன்னெப்பொழுதும் பயன்படுத்தியதில்லை. இப் பொழுதே எனது திறனைச் செயல்படுத்துகின்றேன். இந்தச் சடலத்திற்கு நான் இப்பவே உயிரூட்டுகின்றேன்." மூன்றா வது பிராமணன் பிடிவாதமாகக் கூறினான்.
"அப்படிச் செய்யத்தான் வேண்டுமென்று நீ பிடிவாதம் கொண்டிருந்தால், நான் இந்த மரத்தின் மேல் ஏறும் வரை தயவு செய்து பொறுத்திரு’ என்று நான்காவது பிராமணன் பதற்றத்துடன் கூறிவிட்டு, மரத்தின் மேலேறினான்.
சிறிது நேரத்தின் பின் மூன்றாவது பிராமணன் தன் னுடைய மந்திர தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி அந்தப் புலியின் உடலுக்கு உயிரைக் கொடுத்தான். புலிக்கு உயிர் வந்த உடனேயே அதற்குக் கடுமையான பசி ஏற்பட்டது. எதையாவது உடனே சாப்பிடுவதற்கு நான்கு புறமும் பார்த் தது. அது மூன்றாவது பிராமணனைக் கண்டது. ஒடக்கூட முடியாமல் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த மூன்று பிராமணர்கள் மீதும் அந்தப் புலி திடீரெனப் பாய்ந்தது. அவர்கள் எல்லோரையும் கொன்று அவர்களது உடல்களைக் கிழித்துக் குதறி அந்த இடத்தில் அவர்களது எலும்புகளைத் தவிர ஏனையவற்றைக் கபளிகரம் செய்தது.
O
268

உலகத்து நாட்டார் கதைகள்
210. விரக்தி நீங்கியது
விரக்தியடைந்த மனிதன் ஒருவன், ஒருநாள் ஒரு பெரிய மரத்தின் கீழ் அமர்ந்திருந்தான். அப்பொழுது அவ் விடத்துக்குச் சமீபமாகப் படர்ந்திருந்த ஒரு பூசணிக்கொடி அவனுடைய கண்ணில் பட்டது.
“அட கடவுளே! இந்த மெல்லிய கொடிக்கு இத்தகைய பெரிய காயையும், இந்தப் பென்னம்பெரிய மரத்திற்குச் சின்னஞ்சிறிய காயையும் கொடுத்திருக்கின்ற நீ எவ்வளவு முட்டாள்! இப்போ இந்தப் பாரிய மரத்தில் பூசனிக்காயையும் இந்த மெல்லிய பூசனிக் கொடியில் சிறிய காயையும் நீ காய்த்திருக்கச் செய்தால் உன்னுடைய புத்திசாலித்தனத்தை நான் வியந்து பாராட்டுவேன்’ என்று கூறிக் கொண்டான். இப்படி அவன் கூறி முடிக்கையில் அந்தப் பெரிய மரத்திலி ருந்து அந்தச் சிறிய காய் அவனுடைய தலையில் விழுந்தது. உடனே அவன் திகைப்படைந்தான்.
‘ஓ கடவுளே! எப்படியென்றாலும் உண்மையில் நீ பெரிய புத்திசாலியாகத்தானிருக்கின்றாய். இந்தப் பாரிய உயரமான மரத்திலிருந்து என்னுடைய தலையில் ஒரு பூசணிக்காய் விழுந்திருந்தால் என் கதி என்ன? கடவுளே உனது புத்திசாலித்தனமும் உனது பெருந்தன்மையும் உண்மையில் மகத்தானவைதான்' என்று, விரக்தி நீங்கி அந்த மனிதன் மன நிறைவுடன் கூறினான்.
Ο
269

Page 147
நீர்வை பொன்னையன்
211. நான்கு பேருக்குச்
சமமான ஒருத்தி
ஒரு அடக்கமான மனிதன், ஒரு வெட்கமற்ற மனிதன், ஒரு கோழை, ஒரு வீரன், ஆகிய நான்கு பேரைக் கொண்டு வரும்படி பீர்பாலுக்கு அக்பர் மன்னன் கட்டளையிட்டான். 零
பீர்பால் அடுத்த நாள் ஒரு பெண்ணைக் கொண்டு வந்து அக்பர் மன்னனுக்கு முன் நிறுத்தினான்.
'நான் நாலு பேரைக் கொண்டு வரும்படி உன்னிடம் சொன்னேன். ஆனால் நீ ஒரே ஒரு ஆளைத்தான் கொண்டு வந்திருக்கிறாய். எங்கே மற்றைய ஆட்கள்?’ என்றான்.
'உலகத்திற்கே தஞ்சமளிக்கும் மன்னவனே, நீங்கள் கூறிய நான்கு வகையான ஆட்களின் எல்லாக் குணாம்சங் களையும் இந்த ஒரே பெண் வைத்திருக்கின்றாள். அதனால் தான் நான் இவளைக் கொண்டு வந்துள்ளேன்' என்று பீர்பால் கூறினான்.
'அதெப்படி?’ அக்பர் மன்னனின் கேள்வி. 'தன்னுடைய மாமன் மாமியினுடைய வீட்டில் இருக் கின்ற பொழுது இப்பெண் அடக்கத்தின் காரணமாக தனது
வாயே திறக்க மாட்டாள்.
270

உலகத்து நாட்டார் கதைகள்
ஒரு திருமணத்தின்போது ஆபாசமான அவதூறுப் பாடல்களை வெட்கமின்றி அவள் பாடும் பொழுது அவளு டைய தந்தை, சகோதரர்கள், மாமன், மாமி அவளுடைய குலத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் அப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவள் எள்ளவும் வெட்கப்படவில்லை. இவ்வேளை அவள் வெட்கமற்ற வளாக இருக்கிறாள்.
இரவு வேளையில் அவள் தன்னுடைய கணவனுடன் இருக்கும்போது “உள்ளுக்குத் தனியாகப் போகப் பயமா யிருக்கிறது” என்று கூறிப் பக்கத்திலுள்ள களஞ்சிய அறைக் குள் தனியாகச் செல்ல மாட்டாள். ஆனால் அவள் வேறு ஒருவனிடம் காதல் கொண்டாளானால் நட்ட நடு இரவில் கடும் இருட்டில் தன்னந்தனியாளாய் ஆயுதம் எதுவுமின்றி, கொள்ளைக்காரர்களுக்கோ அல்லது தீய ஆவிகளுக்கோ பிசாசுகளுக்கோ எள்ளவும் எதுவித பயமுமின்றி, தன்னு டைய காதலனைச் சந்திப்பதற்கு அவள் அச்சமின்றி வீரத்துடன் செல்கின்றாள்.’
இதைக் கேட்ட அக்பர் மன்னன், “நீ உண்மையைத் தான் சொல்கிறாய்" என்று பாராட்டிக் கூறி, பீர்பாலுக்கு சன்மானம் கொடுத்தான்.
Ο

Page 148
நீர்வை பொன்னையன்
212 இடம் நோக்கிய அறிவு
ஒருநாள் அக்பர் மன்னன் தன்னுடைய அரண்மனை முற்றத்தில் ஒரு கோட்டைக் கீறினான்.
"இந்தக் கோட்டில் எந்த ஒரு பகுதியையும் அழிக்காமல் இதை மிகக் குறுகலாக்குங்கள்’ என்று கட்டளையிட்டான். திகைக்க வைக்கும் இந்தச் சிக்கலான கேள்வியினால் எல்லோரும் பெரும் குழப்பமடைந்து ஸ்தம்பித்து நின்றனர். பீர்பாலுடைய முறை வந்ததும் அவன் அக்பர் கீறிய கோட்டுக்குப் பக்கத்தில் அதிலும் பார்க்க ஒரு நீளமான கோட்டை உடனே கீறினான்.
Ο
272
 

உலகத்து நாட்டார் கதைகள்
213. நட்பு
குளத்திலுள்ள ஆபையும் குகையில் வசிக்கும் நரியும் நல்ல நெருக்கமான நண்பர்களாயிருந்தன. ஒரு தடவை அவை இரண்டும் குளக்கரையிலிருந்து பலதையும் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தன. அவ்வேளை அந்த இடத்திற்கு ஒரு சிறுத்தைப் புலி வந்தது. நரி பீதி கொண்டு ஓடித் தப்பித்துக் கொண்டது. ஆனால் ஆமைக்குத் தப்பி ஒடு வதற்கோ அல்லது ஒளித்துக் கொள்வதற்கோ போதியளவு வேகமாகச் செல்ல முடியாது போய்விட்டது. அதனால், சிறுத்தைப் புலி ஒரே பாய்ச்சலில் பாய்ந்து தனது வாயினால் ஆமையைக் கெளவிப் பிடித்தது. அதை நன்றாகச் சுவை த்துச் சாப்பிடுவதற்காக ஒரு மரத்தடியில் சென்று படுத்தது. ஆமையின் ஒடு மிகவும் கடினமாக இருந்தபடியால் சிறுத்தைப் புலியின் நகங்களாலோ அல்லது பற்களாலோ அதை பிளக்க முடியவில்லை. சிறுத்தையின் இந்தப் போராட்டத்தை தனது குகையிலிருந்து பார்த்துக் கொண்டி ருந்த நரி, குகையிலிருந்து வெளியே வந்து சிறுத்தையிடம் சென்றது. எதுவித கபடத்தனமும் இல்லாமல் மிக மரியாதை யுடன், "இந்த ஆமையின் கடினமான ஒட்டை உடைப்பதற்கு எனக்கு ஒரு சுலபமான வழி தெரியும்’ என்றது. “அது என்ன வழி?’ என்று சிறுத்தைப் புலி ஆவலுடன் கேட்டது. "இந்த ஆமையை அப்படியே குளத்துத் தண்ணிருக்குள் நனைத் துப் போட்டு விடு. பின்னர் அந்த மிருதுவான ஓட்டைப் பிளந்து ஆமையைச் சாப்பிடலாம்” என்று அது ஆலோசனை கூறியது.
273

Page 149
நீர்வை பொன்னையன்
'இந்தப் புத்தி எனக்கு வரவில்லையே. இது எவ்வளவு நல்ல ஆலோசனை’ என்று கூறி விட்டு ஆமையைச் சிறுத்தை குளத்திற்குள் போட்டது. இதைவிட ஆமை, நரியிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்.
Ο
274
 

உலகத்து நாட்டார் கதைகள்
214. முட்டாளாக்கிய நீண்ட தாடி
ஒரு நாள் மாலை ஒரு மதகுரு எண்ணெய் விளக்கில் பழைய புத்தமொன்றைப் படித்துக் கொண்டிருக்கையில், 'நீண்ட தாடியுடைய மனிதர்கள், வழமையாக முட்டாள் களாக இருக்கின்றார்கள்’ என்ற ஒரு வாக்கியத்தைப் படித்தார்.
தன்னுடைய அறிவுடைமைக்காகத் தான் எல்லோ ராலும் மதிக்கப்பட வேண்டும் என்பதை அவர் எப்பொழுதும் விரும்பி வந்துள்ளார். ஆனால், அவருடைய பட்டணத்தில் அவர்தான் மிகவும் நீளமான தாடியை வைத்திருந்தார். ஆகவே, இதனால் தன்னை எல்லோரும் பெரும் முட்டாள் என்றுதான் நினைப்பார்கள் என்று எண்ணினார். இந்த எண்ணத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. இதனால் அவருக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் விளக்கு அவரது கண்ணில் பட்டது. எதுவித தயக்கமுமின்றி அவர் தனது தாடியைத் தன்னுடைய கை முஷ்டிக்குள் திரட்டிப் பிடித்துக் கொண்டு அதனுடைய தலைப்பை விளக்கில் கொளுத்தினார்.
அவருடைய தாடி மிக நீளமானது; அழகானது; பட்டுப் போல மிருதுவானது. அது எண்ணெய் விளக்கில் தீப் பிடித்துச் சுவாலையாக எரிந்தது. அவரது கை விரல்களை எரிந்து கொண்டிருக்கின்ற தீ சுட்டதும் தாடியைப் பிடித் திருந்த தனது கைப்பிடியை விட்டார். உடனே எரிந்து
275

Page 150
நீர்வை பொன்னையன்
கொண்டிருந்த தீ ஜுவாலை அவருடைய மீசையில் பிடித்த துடன் கண்களின் புருவ மயிர்களிலும் பற்றிக்கொண்டு அவருடைய தலையிலுள்ள மயிரிலும் படர்ந்து எரிந்தது.
நீளத்தாடியுடைய மனிதர்கள் எல்லோரும் முழு முட்டாள்கள் என்பதை அவர் இப்பொழுது தெரிந்து கொண்டிருப்பார்.
O
276
 

உலகத்து நாட்டார் கதைகள்
215. எப்படிச் சொல்வது?
பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்ட ஒரு ஜமீந்தார் இருந்தார். அவர் முன்கோபி என்று பெயர் எடுத் தவர். அத்துடன் அவர் ஒரு இருதய நோயாளியும்கூட. இதனால் அவருடைய பணியாளர்களுக்கு எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் கடுமையான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
ஒரு தடவை அவர் நகரத்திற்கு விஜயத்தை மேற் கொண்டிருந்த பொழுது ஒரு சில முக்கிய செய்திகளுடன் ஒரு வேலையாள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தான்.
'நீ என்னுடைய வீட்டிலிருந்து வந்திருக்கின்றாமா? அங்குள்ள அனைவரும் சுகமாக இருக்கின்றார்களா?’ என்று அந்த வேலையாளை எஜமான் கேட்டார்.
'எஜமானே! எல்லோரும் மிக நன்றாகத்தான் இருக்கின் றார்கள். ஆனால் கறுப்பு நாய் மாத்திரம் செத்து விட்டது” என்றான்.
'பாவம், அது ஏன் செத்தது? நான் வீட்டை விட்டுப் புறப்பட்ட பொழுது அது நன்றாகத்தானே இருந்தது” என ஜமீந்தார் கூறினார்.
"அது நன்றாகத்தானிருந்தது. ஆனால் அது சாப்பிட்ட உணவு செமிக்காததால் செத்துவிட்டது. அவ்வளவு பெரும் தொகையான இறைச்சியை அது சாப்பிட்டால் எப்படிச் சாகாமலிருக்க முடியும்?"
277

Page 151
நீர்வை பொன்னையன்
'என்ன இறைச்சி?" 'குதிரை இறைச்சி." "நாய்க்குக் குதிரை இறைச்சி எங்கிருந்து கிடைத்தது?" "எங்களுடைய குதிரை லாயத்திலிருந்துதான்,' ‘என்ன? எங்களுடைய குதிரைகள் செத்து விட்ட னவா?”
"ஆமாம். அவைகளுக்கு உணவு கொடுப்பதற்கு குதிரைகளைப் பராமரிப்பவர்கள் இல்லாவிட்டால் அவை களால் எப்படி உயிருடனிருக்க முடியும்?”
“ஏன்? பராமரிப்பாளர்களுக்கு என்ன நடந்தது?" "அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க ஒருவருமில்லா விட்டால் அவர்கள் எப்படி உணவு உண்பார்கள்? மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டால் அவர்களுக்கு என்ன நடக் குமோ? அதுதான் குதிரை பராமரிப்பவர்களுக்கும் நடந்தது" என்றான் வேலையாள்.
‘'நீ என்ன சொல்கிறாய்? அவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்கப்படவில்லை? அவர்களை மேற்பார்வை செய்பவ னுக்கு என்ன நடந்தது?"
‘மேற்பார்வையாளர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பதற்குச் சமையலாட்கள் இல்லாமலிருக்கும் பொழுது அவர்களால் எப்படி உயிருடனிருக்க முடியும்?” 'ஏன் சமையலாளர்களுக்கு என்ன நடந்தது?" ‘எஜமானே! சமையலறையில் தீப் பிடித்தது. அந்த நெருப்பு வீடு முழுவதும் பரவி அங்குள்ள ஒவ்வொருவரும் கொல்லப்பட்டபொழுது சமையலாள் எப்படி உயிருட னிருக்க முடியும்?”
Ο
278

உலகத்து நாட்டார் கதைகள்
216. மெக்காவரை பார்த்த மதகுரு
பக்தி நிறைந்த ஒரு தம்பதியர் ஒரு முஸ்லீம் மத குருவை விருந்திற்கு அழைத்தனர். அந்த மதகுரு அந்த தம்பதியரின் வீட்டுப் படியைக் கடக்கும் பொழுது 'சூ வெளியே போ, சூ வெளியே போ” என்று ஒரு மிருகத்தைத் துரத்திக் கலைப்பதுபோல, திடீரெனக் கத்தினார்.
'இப்படி ஏன் கத்துகின்றீர்கள்?’ என்று அந்த மத குருவை விருந்திற்கழைத்தவர்கள் கேட்டனர்.
“மெக்காவிலுள்ள புனித கஃபாவிற்குள் ஒரு நாய் உள்ளே செல்வதற்கு முனைவதை இப்போது நான் பார்க் கின்றேன். அதுதான் அந்த நாயை நான் துரத்தினேன்” என்று அவர் பதிலிறுத்தார்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள மெக்கா வரையான தூரத்தில் நடக்கின்றதைப் பார்க்கக்கூடிய இந்த மதகுருவினுடைய ஆன்மீக சக்தியைக் கண்டு விருந்துக்கு அழைத்த தம்பதியினர் பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ஆனால் அந்த வீட்டிலுள்ள ஒரு பெண்ணிற்கு அந்த மதகுருவின் கூற்றில் சந்தேகம் ஏற்பட்டது.
அவள் அந்த மதகுருவுக்கு உணவு பரிமாறும் பொழுது இறைச்சிக் கறியைச் சோற்றுக்கு அடியில் மறைத்து வைத் தாள். தன்னுடைய சோற்றுத் தட்டைத் தவிர மற்ற எல்லாத் தட்டுகளிலும் இறைச்சிக்கறி இருந்ததைப் பார்த்தார் Ln35(5(b.
279

Page 152
நீர்வை பொன்னையன்
‘என்ன பார்க்கின்றீர்கள்? உங்களுக்கு ஏதாவது தேவையா?’ என்று அந்தப் பெண் மதகுருவைக் கேட்டாள். எல்லாருடைய சோற்றுத் தட்டுக்களிலும் கறி இருப்பதை நான் பார்க்கின்றேன். என்னுடைய சோற்றுத் தட்டில் எந்த வித கறியையும் காணவில்லையே' என்று மதகுரு கூறி னார்.
'ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள மெக்கா வரை உங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் உங்கள் முன்னுள்ள உங்களது தட்டிலுள்ள சோற்றுக்குக் கீழே என்ன இருக்கின்றது என்பதை உங்களால் பார்க்க முடியாதா?’ என்று அந்தப் பெண் கூறினாள்.
Ο
280
 

உலகத்து நாட்டார் கதைகள்
217. ஆடு அல்ல; புலி.
கர்ப்பமுற்றிருந்த ஒரு பெண்புலி, ஒரு ஆட்டுப் பட்டிக் குள் பாய்ந்தது. அது அப்படிப் பாய்ந்ததனால் அதற்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ஒரு புலிக்குட்டியை ஈன்ற பின் அது இறந்து விட்டது.
இரக்க மனம் படைத்த ஆடு, அந்தப் புலிக்குட்டிக்குப் பாலூட்டி, தங்களில் ஒன்றாக அதை வளர்த்தது. அந்த ஆடுகள் புல் தின்னும்பொழுது தானும் புல்லைச் சாப்பிட் டது. அவை கத்தியபொழுது தானும் ஆடு கத்துவது போலக் கத்தியது. அப்படி அது கத்தினாலும் அதனுடைய சத்தம் விசித்திரமாயிருந்தது. அந்தக் குட்டி ஒரு புலியைப்போல வளர்ந்தது. ஆனால் அதனுடைய குணம் ஒரு ஆட்டினு டையதைப் போலிருந்தது.
ஒரு நாள், மிகச் சிறப்பாக வளர்ந்த புலி இந்தப் புல் தின்னும் புலிக்குட்டில்ய வியப்புடன் பார்த்தது. அந்தப் பெருத்து வளர்ந்த புலி அந்தப் புலிக்குட்டிக்குக் கிட்ட வந்ததும் ஆடுகள் எல்லாம் சிதறி ஓடின. ஆனால் புலிக்குட்டி அதே இடத்தில் நின்றது. அது பயத்தால் கத்தியது. பெரிய புலி அதற்கு அருகில் வந்து கதைத்து நட்பாகி அதை இழுத்துச் சென்று பின்வருமாறு கூறியது. 'தண்ணிரில் உன்னைப் பார். சரியாக நீ என்னைப்போலவே இருக்கிறாய். நீ ஒரு ஆடல்ல. நீ ஒரு புலி."
281

Page 153
நீர்வை பொன்னையன்
புல்லுத் தின்னும் புலி அதை நம்பவில்லை. தன் னிலும் பார்க்க அது வேறுபட்டதல்ல. பெரிய புலி அந்தக் குட்டிப் புலியைப் படிப்படியாக நம்பச் செய்தது. தொடக்கத் தில் அந்தக் குட்டிப் புலி இறைச்சியைத் தொடவில்லை. அத்துடன் அது புல்லைத் தின்று ஆட்டைப் போலவே கத்தியது. ஒரு நாள் பெரிய புலி அந்தக் குட்டிப் புலியை ஒரு துண்டு இறைச்சியைத் தின்ன நிர்ப்பந்தித்தது. குட்டிப் புலியும் இரத்தத்தின் ருசியை விரும்பியதுடன் அது புல் தின்பதையும் ஆடுபோல் கத்துவதையும் நிறுத்தியதுடன், தான் ஒரு ஆடு அல்ல புலி என்று உணர்ந்தது. இதன்பின் அது பெரிய புலியுடன் சென்று அது புலியைப் போலவே வாழ்ந்தது.
282
 

உலகத்து நாட்டார் கதைகள்
218. பகற் கனவுகள்
திருத்தவே முடியாத அளவுக்குக் கற்பனைகளில் மூழ்கி விடும் பழக்கமுள்ளவர்களான ஒரு வறிய தம்பதியினர் வசித்துக் கொண்டிருக்கின்ற வீட்டின் அயலில் கோபால் பஹார் வாழ்ந்து வருகின்றார். ஒருநாள் தங்களுடைய பகல் கனவுகள் பற்றி, ஒருவருடன் மற்றவர் வாய்ச் சண்டை பிடித்துக் கொண்டிருப்பதைக் கோபால் தற்செயலாகக் கேட்டுக் கொண்டிருக்க நேரிட்டது.
“எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்ததும் நான் ஒரு பசு மாடு வாங்கப் போகிறேன்’ என்று கணவன் கூறினான்.
"அப்போ, நான் அதிலிருந்து பால் எடுப்பேன். அதற்கு எங்களுக்கு அநேக பானைகள் தேவைப்படும். நான் பானை கள் வாங்குவதற்குச் செல்வேன்” - அவனுடைய மனைவி. அடுத்த நாள் அவள் வெளியே சென்று பானைகள் வாங்கி வந்தாள். ‘என்ன வாங்கினாய்?’ என்று கணவன் அவளைக் கேட்டான்.
‘ஓ, பானைகள் தான் வாங்கினேன். ஒரு பானை பாலுக்கு, அடுத்த பானை மோருக்கு, ஒன்று வெண்ணெய் க்கு, மற்றது நெய்க்கு."
'அது பெருந்தொகை, ஆனால் ஐந்தாவது பானை எதற்கு?
"அது எங்களிடமுள்ள மேலதிகப் பாலை என்னுடைய சகோதரிக்கு எடுத்துச் செல்வதற்கு."
‘என்ன? உன்னுடைய சகோதரிக்குப் பால் எடுத்துச் செல்வதற்கா? இதை நீ எவ்வளவு காலமாகச் செய்து வருகின்றாய்?"
283

Page 154
நீர்வை பொன்னையன்
கத்தினானன் கணவன். கோபம் பொங்கி எழ அவன் பானைகளை எடுத்து அவை எல்லாவற்றையும் அடித்து நொருக்கினான்.
‘நான்தான் பசுவைப் பராமரித்து அதிலிருந்து பாலை எடுக்கிறவள்’ மனைவி சுருக்கென்று பதிலிறுத்தாள்.
"துப்புக் கெட்டவளே! நாள் முழுவதும் நான் வியர்வை சிந்தி உழைத்து ஒரு பசுவை வாங்கினேன். அதன் பாலை நீ உன்னுடைய சகோதரிக்குக் கொடுக்கிறாய்! முதலில் நான் உன்னைக் கொல்வேன்’ கர்ச்சித்துக் கொண்டு கணவன் சில பானைகளையும் சட்டிகளையும் தன்னுடைய மனைவியின் மேல் எறிந்தான்.
இந்த விவகாரம் அளவுக்கு மீறிச் செல்கின்றது என்ற எண்ணிய கோபால் தன்னுடைய அயலவர்களின் வீட்டிற் குள் சென்றான்.
'இப்போ என்ன நடந்தது?’ அயலவர்களிடம் கேட்டான்
"இப்பெண் எங்களுடைய பசுவிலிருந்து கிடைக்கன்ற பாலைத் தனது சகோதரிக்குக் கொடுத்துக் கொண்டிருக் கின்றாள்.'
"ஓ! உண்மையாகவா? இப்போ என்னுடைய காய்கறித் தோட்டத்திற்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று எனக்குத் தெரிகின்றது’ கோபால் கூறிக்கொண்டு ஒரு தடியை எடுத்துத் தனது அயலவனுக்குக் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தான்.
'உன்னுடைய பசு மாடு என்னுடைய அவரைக் காய் கள், வெள்ளரிக் காய்கள் எல்லாவற்றையும் தின்று கொண்டி ருக்கின்றது. நீ அதை விட்டிட்டுப் பார்த்துக் கொண்டிருக் கின்றாய்."
Ο
284

உலகத்து நாட்டார் கதைகள்
219. கனவு
"நான் ஒரு கனவு கண்டேன்’ என்று ஒருநாள் அரசன் கூறினான். 'உனக்குத் தெரியுமா தென்னாலி இராமா! நீயும் நானும் முன்பின் அறியாத ஒரு இடத்தில் நடந்து கொண்டி ருந்தோம். நீயும் நானும் மாத்திரம்தான்."
இரண்டு குழிகளுக்கிடையில் சென்று கொண்டிருக் கின்ற ஒரு பாதைக்கு நாங்கள் வந்தோம். அவற்றில் ஒரு குழி தேனால் நிரப்பப்பட்டிருந்தது. மற்றையது ஒரு சாக்கடை.
அதில் கழிவுப் பெருட்களும், சிறுநீரும், மலமும் நிரம்பி யிருந்தன.
பாதை மிகவும் ஒடுங்கியதாக இருந்தது. ஆனால் நாங்கள் அதைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
நீயும் நானும் மிகக் கவனமாக இந்தப் பாதையில் நடந்து கொண்டிருக்கையில், நாங்கள் இருவரும் வழுக்கி விழுந் தோம். தேன் நிரம்பியுள்ள குழிக்குள் நான் விழுந்தேன். மலம் நிரம்பியிருந்த குழிக்குள் நீ விழுந்தாய்.”
அரசவையிலிருந்த எல்லோரும் சிரித்து, கரகோஷம் செய்தார்கள். தென்னாலி இராமன் என்ற தொந்தரவு கொடுக்கின்ற இந்தப் பிராணி, குறைந்த பட்சம் கனவி லென்றாலும் பெற்றுக்கொள்ள வேண்டிய தண்டனையைப் பெற்றுக் கொண்டான் என்று அரசவையிலிருந்த அனை வரும் மகிழ்ச்சியடைந்தனர்.
285

Page 155
நீர்வை பொன்னையன்
அரசன் மேலும் தொடர்ந்து கூறினான். ‘நான் என்னாழி குடிக்கக் கூடியளவு தேனைக் குடித்துவிட்டு எப்படியோ ஏறி, பாதைக்குத் திரும்பி வந்தேன். ஆனால் பாவம் நீ, தொடர்ந்து மலக்குழிக்குள்ளிருந்து அவஸ்தைப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றாய்.
நீ பாதையை நோக்கி மேலே ஏறி வந்ததும் அப்படியே மீண்டும் மலக்குழிக்குள் விழுகின்றாய். இந்தத் தடவை தலைகீழாக வழுக்கி விழுந்தாய். அப்பொழுது நான் விழித் துக் கொண்டேன்."
அரசவையிலிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தென்னாலி இராமன் மாத்திரம் சிரிக்கவில்லை.
அடுத்த நாள் காலை இராமன் அரச சபைக்கு வந்தான். இந்தத் தடவை தன்னுடைய ஒரு சொந்தக் கனவுடன் வந்தான்.
"அது நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. நீங்கள் தேன்குழியிலிருந்து ஏறி வெளியே வந்தீர்கள். நான் அநேக தடவைகள் முயற்சி செய்து கடைசியாகப் பாதைக் குத் திரும்பி வந்தேன். ஆனால் நாங்கள் இருவரும் அந்த நேரத்தில் இருந்த நிலையில் எங்களுடைய வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலைமையிலிருந்தோம்.
அப்படியான நிலைமையில் எங்களால் போகத்தான் முடியுமா? ஆகவே உங்களுடைய உடலிலிருந்த தேன் முழு வதையும் நான் என்னுடைய நாக்கினால் நக்கி எடுத்தேன். அப்போ, அதேபோன்று என்னுடைய உடலை நீங்கள் சுத்தப்படுத்தினிகள்."
O
286

உலகத்து நாட்டார் கதைகள்
220. சாந்தி பெறுவதற்கு
'எனக்கு ஒரு கடைசி விருப்பமுண்டு. நான் இறப்ப தற்கு முன் ஒரு இனிப்பு மாம்பழத்தைப் புசித்து ருசிக்க வேண்டும்’ என்று மரணப் படுக்கையிலிருக்கின்ற அரசனுடைய தாயார் கூறினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது மாம்பழம் பெறக்கூடிய பருவகாலமல்ல. அரசன் தன்னுடைய தூதர்களை உடனடி யாக மாம்பழத்தைப் பெற்று வரும்படி திக்கெட்டும் உள்ள தூர இடங்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தான்.
ஒரு சிறிய மாங்கனியை அவர்கள் தேடித் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பல வாரங்கள் எடுத்தன. அது கால தாமதமாகிவிட்டது.
இந்த இடைக்காலத்தில் அரசனுடைய தாயார் இறந்து விட்டார். தனது இறந்து கொண்டிருக்கின்ற அன்புத் தாயின் எளிமையான இறுதி ஆசையைத் தன்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்று வேதனை அவனுடைய இதயத் தைப் பெருமளவு தாக்கி அவனைப் பெரும் துயருக்குள் ளாக்கியது. மேலும், அதிருப்தி ஏற்பட்டுள்ள அந்தத் தாயின் ஆவி தினமும் அரச மாளிகைக்கு வந்து தன்னை அச்சுறுத் திக் கொண்டிருக்கும் என்று அவன் பயந்தான்.
ஆகவே பிராமணர்களைத் தனது அரசவைக்குக் கூப்பிட்டுத் தனது தாயாரின் ஆத்மா சாந்தி பெறுவதற்கு என்ன செய்யவேண்டுமென்று அவர்களைக் கேட்டான்.
பிராமணர்கள் அதற்குப் பின்வரும் தீர்வைக் கூறினர்!
287

Page 156
நீர்வை பொன்னையன்
'நூறு பிராமணர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு தங்க மாம்பழத்தைச் செய்து, அரசன் அவர்களுக்குத் தான மாக வழங்க வேண்டும்" என்பதுதான் அத்தீர்வு.
‘அப்படிச் செய்தால்தான் அரசனின் தாயாருடைய ஆத்மா சாந்தி பெறும்!" என்றார்கள்.
ஆகவே, அரசன் தன்னுடைய மாளிகையிலுள்ள பொற் கொல்லர்களை அழைத்து நூறு தங்க மாம்பழங்களைச் செய்யும்படி கட்டளையிட்டதுடன், அந்தத் தானத்தை வழங்குவதற்கு ஒரு அரச விருந்தை வைப்பதற்கு ஒரு நல்ல நாளையும் நிச்சயித்தான்.
அந்த அரச விருந்திற்குப் பிராமணர்கள் சென்று கொண்டிருக்கையில், தென்னாலி ராமனின் வீட்டைத் தாண்டித்தான் அவர்கள் செல்ல வேண்டியிருந்தது.
அப்பொழுது தென்னாலி ராமனுடைய வீட்டு வாசலில், இரும்புக் கம்பியினாலான சூட்டடுப்பில் நன்றாகக் கனிந்த சிவப்பு நெருப்புத் தழல்கள் கனன்று கொண்டிருந்தன.
“இந்தச் சூட்டுக் கோலால் சூடு போட்டுக் குறி இழுக்கப் பட்ட எந்தவொரு பிராமணனுக்கும் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு தங்க மாம்பழங்கள் வழங்கப்படும் என்று எங்களு டைய அரசன் நேற்று எனக்குக் கூறியுள்ளான்’ என தென்னாலி ராமன் அந்தப் பிராமணர்களுக்குக் கூறினான்.
பேராசை பிடித்த அந்தப் பிராமணர்கள் குறி போடு வதற்கு இணங்கினர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சூட்டுக் கோலால் சூடு போட்டு குறி இழுக்கப்பட்டது. சிலர் ஒன்றுக் கும் மேற்பட்ட குறிகளைப் போடுவித்தனர்.
சூடு போடப்பட்ட வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் முனங்கிக் கொண்டே அரசனுடைய மாளிகைக்குச் சென்றார்கள். ஆனால் அங்கு அவர்கள் அரசனிடமிருந்து ஆளுக்கொரு தங்க மாம்பழத்தைத்தான் பெற்றுக் கொண்டார்கள்.
288

உலகத்து நாட்டார் கதைகள் சூடு போடப்பட்டதால் ஏற்பட்ட தழும்புகளை அவர்கள் அரசனுக்குக் காட்டி மேலும் மாம்பழங்களைக் கேட்டார்கள். அவர்கள் மேல் அரசன் கோபம்கொண்ட பொழுது, அவனுடைய பிரியத்துக்குரியவனான விகடகவி தென்னாலி ராமன் தங்களுக்கு என்ன செய்தான் என்பதைக் கூறினான். அரசன் கடுங்கோபம் கொண்டு, தென்னாலி ராமனைக் கூப்பிட்டு விளக்கம்கேட்டான்.
‘மேன்மை தங்கிய அரசே, எனது தாயார் இறக்கும் பொழுது அவர் மூட்டு வாதத்தால் அவஸ்தைப்பட்டார். அவருடைய மூட்டுக்களில் சூடான கம்பியால் குறி இழுத் தால் அவர் குணமடைந்து விடுவார் என்று உள்ளூர் வைத்தி யர்கள் கூறினர். நான் அப்படிச் செய்வதற்கு முன்னரே, பாவம் எனது தாயார் இறந்துவிட்டார். அரசே! உங்களுடைய இறந்த தாயாரின் ஆத்மா சாந்தி பெறச் செய்வதற்கு இந்தப் பிராமணர்களுக்குத் தங்க மாம்பழங்களை மேன்மை தங்கிய தாங்கள் கொடுக்கின்றீர்கள் என்று நான் கேள்விப்பட்ட பொழுது அதே மாதிரி நானும் செய்ய வேண்டுமென நினைத்தேன்.
தற்பொழுது எங்கள் இருவரது தாய்மார்களும் சாந்தி பெற்றுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த புனித பிராமணர்களுக்கு நன்றி!" என்று அந்த விகடகவி கூறினான்.
Ο

Page 157
நீர்வை பொன்னையன்
221. மேளம்
ஒரு வறிய பெண்ணுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். பட்டணத்திலுள்ள செல்வந்தக் குடும்பங்களுக்கு அவள் தானியங்களை அரைத்துக் கொடுப்பதுடன் வீடுகளையும் கூட்டிக் கழுவிக் கொடுப்பாள். அவள் செய்யும் வேலை களுக்கு அவர்கள் தானியத்தைக் கூலியாகக் கொடுப்பார்கள். அந்தத் தானியத்தைக் கொண்டு அவள் வாழ்க்கையை நடத்தினாள்.
ஆனால், அவளால் தன்னுடைய மகனுக்கு நல்ல உடை களையோ அல்லது பொம்மைகளையோ ஒரு பொழுதும் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. ஒரு தடவை அவள் சந்தைக்குச் செல்லும் பொழுது சிறிது தானியத்தை விற்று, சந்தையில் உனக்கு நான் என்ன வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று தன்னுடைய மகனைக் கேட்டாள். 'ஒரு மேளம். அம்மா, எனக்கு ஒரு மேளம் வாங்கிக் கொண்டு வா’ என்று உடனே கூறினான்.
தன்னுடைய மகனுக்கு ஒரு மேளத்தைத் தன்னால் வாங்கிக் கொடுக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். அவள் சந்தைக்குச் சென்றாள். தானியத்தை விற்று, கொஞ் சம் கடலை மாவையும் கொஞ்சம் உப்பையும் வாங்கினாள்.
தனது மகனுக்கு ஒன்றையும் வாங்கிக் கொள்ளாமல் வெறும் கையுடன் வருகின்றேனே என்று அவள் கவலைப் பட்டாள். ஆகவே அவள் வரும்பொழுது ஒரு அழகான தடித்
290

உலகத்து நாட்டார் கதைகள் துண்டைக் கண்டாள். அவள் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து தனது மகனிடம் கொடுத்தாள். அதை என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.
அப்படியிருந்தும் அவன் விளையாடச் செல்லும் பொழுது அதைத் தன்னுடன் எடுத்துச் செல்வான். ஒரு வயோதிபப் பெண் தன்னுடைய சூளை அடுப்பைச் சாணி வறட்டியின்மூலம் பற்ற வைத்து எரிக்க முயன்றாள். நெருப்பு பற்றிக் கொள்ளவில்லை. சுற்றுப்புறம் எங்கும் புகை பரவி அந்த மூதாட்டியின் கண்களில் நீர் வரச் செய்தது.
அவ்வழியில் சென்று கொண்டிருந்த சிறுவன் நின்று அவள் ஏன் அழுகின்றாள் என்று அவளைக் கேட்டான். தன்னுடைய அடுப்பைப் பற்ற வைத்துச் சமையல் செய்ய முடியவில்லை என்று அவள் கூறினாள். ‘என்னிடம் நன்றாகக் காய்ந்த ஒரு தடித்துண்டு இருக்கிறது. அதைக் கொண்டு நீ உனது அடுப்பைப் பற்ற வைக்கலாம்’ என்று அச்சிறுவன் கூறினான்.
அந்த மூதாட்டி சந்தோஷமடைந்தாள். அவள் அந்தத் தடியைக் கொண்டு அடுப்பைப் பற்ற வைத்து ரொட்டி தயாரித்து அச்சிறுவனுக்கு ஒரு துண்டைக் கொடுத்தாள்.
அச்சிறுவன் அந்த ரொட்டியை எடுத்துக்கொண்டு பானை வனைபவனுடைய மனைவியின் வீடு வரை நடந்து வந்தான். அவளுடைய குழந்தை கையை உயர்த்தியபடியே அழுது கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் அவ்விடத்தில் நின்று குழந்தை ஏன் அழுகின்றது என்று கேட்டான். 'குழந்தை பசியில் அழுகின்றது அதற்கு உண்ணக் கொடுப் பதற்கு என் வீட்டில் ஒன்றுமில்லை’ என்று பானை செய்பவ னுடைய மனைவி கூறினாள்.
தன்னுடைய கையிலிருந்த அந்த ரொட்டியை பசியில்
அழுது கொண்டிருக்கின்ற அந்தக் குழந்தைக்குக் கொடுத் 291

Page 158
நீர்வை பொன்னையன் தான். அந்தக் குழந்தை அழுவதை நிறுத்திவிட்டு ஆவலு டன் அந்த ரொட்டியை உண்டது. பானை வனைபவனு டைய மனைவி அந்தச் சிறுவனுக்கு நன்றியுடையவளாக இருந்ததுடன் அவனுக்கு ஒரு பானையையும் கொடுத்தாள். அவன் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஆற்றங்கரைக்கு வந்தான். அங்கு துணி வெளுப்பவனும் அவனுடைய மனைவியும் சண்டை பிடித்துக் கொண்டிருந் தார்கள். அச்சிறுவன் நின்று, ஏன் அவன் தனது மனைவி யைத் திட்டிக்கொண்டு அடிக்கின்றான் என்று துணி வெளுப்பவனைக் கேட்டான். 'என்னிடம் இருந்த ஒரே பானையை இவள் உடைத்து விட்டாள். துணி வெளுப் பதற்கு முன் அவற்றை அவிப்பதற்கு இப்பொழுது என்னிடம் பானை இல்லை’ என்று அவன் கூறினான்.
'இந்தா, சண்டை பிடிக்காதே. இந்தப் பானையை எடுத்து நீங்கள் பாவிக்கலாம்’ என்று சிறுவன் கூறினான். இப்படிப்பட்ட ஒரு பெரிய பானை கிடைத்ததும் துணி வெளுப்பவன் சந்தோஷமடைந்தான். அதற்குப் பதிலாக அவன் அந்தச் சிறுவனுக்கு ஒரு மேலங்கியைக் கொடுத் தான்.
சிறுவன் நடந்து கொண்டிருந்தான். அவன் ஒரு பாலத்துக்கு வந்தான். அங்கு ஒரு மனிதன் ஒரு சட்டை கூட இல்லாமல் குளிரில் நடுங்கிக் கெண்டிருந்ததை அவன் கண்டான். அவனுடைய சட்டைக்கு என்ன நடந்தது என்று அந்த மனிதனை அவன் கேட்டான். “இந்தக் குதிரைமீது நான் நகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தேன். கொள் ளைக்காரர்கள் என்னைத் தாக்கிவிட்டு என்னிடமிருந்த எல்லாவற்றையும், எனது சட்டையையும்கூட எடுத்துச் சென்று விட்டார்கள்’ என்று அந்த மனிதன் கூறினான்.
'கவலைப்படாதே, இந்த கோட்டை நீ வைத்துக்
292

உலகத்து நாட்டார் கதைகள் கொள்' என்று சிறுவன் கூறினான். மனிதன் அந்தக் கோட்டைப் பெற்றுக்கொண்டு 'நீ மிகவும் கருணையுள்ள வனாக இருக்கின்றாய். நான் இந்தக் குதிரையை உனக்குத் தருவதற்கு விரும்புகிறேன்’ என்று கூறினான்.
அவன் அந்தக் குதிரையைப் பெற்றுக் கொண்டான். இதன்பின், அவன் ஒரு திருமண கூட்டத்தனர் இருந்த இடத்துக்கு விரைவாகச் சென்றான். அங்கு வாத்தியக் கோஷ்டியினரும் ம்ணமகனும் அவனுடைய குடும்பமும் ஒரு மரத்தடியில் கவலையுடன் இருந்தனர். அவர்கள் ஏன் இப்படிக் கவலையுடனிருக்கிறார்கள் என்று அந்தச் சிறுவன் கேட்டான். ‘நாங்கள் திருமண வீட்டிற்கு ஊர்வலமாகச் செல்ல வேண்டும். ஆனால் மணமகன் ஏறிச் செல்வதற்கு ஒரு குதிரை வேண்டும். குதிரை கொண்டு வர வேண்டிய மனிதன் இன்னும் வந்து சேரவில்லை. மணமகன் நடந்து செல்ல முடியாது. நேரம் சென்று விட்டது. திருமணத்திற் கான சுபநேரத்தை நாம் இழந்துவிட நேரும்’ என்று மண மகனின் தந்தை கவலையுடன் கூறினான்.
உடனே, அந்தச் சிறுவன் தனது குதிரையை அவர் களுக்குக் கொடுத்தான். அவர்கள் சந்தோஷப்பட்டனர். இதற்குப் பதிலாகத் தான் என்ன செய்ய வேண்டும் என்று மணமகன் கேட்ட பொழுது, 'உங்களுடைய வாத்தியக் கோஷ்டியிலுள்ள மேளங்களில் ஒன்றை நீங்கள் வேண்டு மானால் எனக்குத் தரலாம்’ என்று சிறுவன் கூறினான். சிறுவனுக்கு அந்த மேளத்தைக் கொடுக்கும்படி மேளக் காரனை மணமகன் கேட்டான். அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள இருக்கும் பணத்திற்குத் தான் ஒரு புதிய மேளத் தைச் சுலபமாக வாங்கிக் கொள்ள முடியும் என்று மேளக் காரனுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அவன் மேளத்தைச் சிறுவனுக்குக் கொடுத்தான்.
293

Page 159
நீர்வை பொன்னையன்
தனது தாயைப் பார்க்க வீட்டிற்கு விரைவாகச் சென் றான். மேளத்தை அடித்துக் கொண்டு வீதி ஓரத்திலிருந்து கிடைத்த ஒரு தடித் துண்டுடன் ஆரம்பித்து, அந்த மேளத் தைத் தான் எப்படிப் பெற்றுக் கொண்டான் என்று அவளுக்கு
விரிவாக எடுத்துக் கூறினான்.
Ο
కర్త
294

உலகத்து நாட்டார் கதைகள்
222. கடவுள் எங்கும் உள்ளார்
ஒரு முனிவருக்கு அநேக சீடர்கள் இருந்தார்கள். அவர் களுக்கு தனது நம்பிக்கையை அதாவது 'கடவுள் எங்கு மிருக்கின்றார்; எல்லாவற்றிலுமிருக்கின்றார். ஆகவே நீங்கள் எல்லாவற்றையும் கடவுளாகக் கருதிக் கொள்ளவும்; அவற் றிற்கு நீங்கள் சிரம் தாழ்த்திக் கொள்ள வேண்டும்’ என்று போதித்தார்.
ஒரு சீடன் ஏதோ ஒரு செய்தியை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஒரு மதம் கொண்ட யானை வேக மாக ஓடி வந்து கொண்டிருந்தது. அதனுடைய பாகன் “வழி யை விட்டு அப்பால் ஒடுங்கள், வழியை விட்டு அப்பால் ஒடுங்கள். இது மதம் கொண்ட ஒரு யானை’ என்று கத்தினான்.
அந்தச் சீடனுக்குக் குருவினுடைய போதனை ஞாபகத் திற்கு வரவே, அவன் வழியை விட்டு ஓட மறுத்தான். "கடவுள் என்னில் இருப்பது போல இந்த யானையிலுமிருக் கின்றார். கடவுளால் எனக்கு எப்படித் தீங்கு செய்ய முடியும்’ என்று அவன் எண்ணி அன்பும், பக்தியும் நிறைந்தவனாய் அந்த இடத்தில் அப்படியே அசையாது நின்றான்.
யானைப் பாகன் பித்துப் பிடித்தவனாய், 'வழியை விட்டு அப்பால் ஒடு. இல்லாவிட்டால் உனக்குத் தீங்கு நேரிடும்’ என்று கத்தினான். ஆனால் அந்தச் சீடன் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. அந்த மதம் கொண்ட யானை
295

Page 160
நீர்வை பொன்னையன் தனது துதிக்கையினால் அவனைத் தூக்கிச் சுழற்றி விட்டுச் சாக்கடையில் வீசியது. பாவம்; அந்தச் சீடன் படுகாயம் ஏற்பட்டு இரத்தம் வடிய அப்படியே கிடந்தான். அத்துடன் கடவுள் தனக்கு இப்படி ஏன் செய்தார்? என்று நினைத்துக் குழப்பம் அடைந்து நம்பிக்கையிழந்தான்.
அவனுடைய குருவும் சீடர்களும் அவனக்கு உதவி புரிய வந்து, அவனை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். ‘கடவுள் எல்லாவற்றிலுமுள்ளார் என்று நீங்கள் எனக்குக் கூறினீர்கள்; இதோ பாருங்கள்! கடவுள் எனக்கு என்ன செய்திருக்கின்றார்?’ என்று அவன் குருவுக்குக் கூறினான்.
‘கடவுள் எல்லாவற்றிலுமுள்ளார் என்பது உண்மை. யானை உண்மையில் கடவுள்தான். அதேபோல யானைப் பாகனும் கடவுள்தான். பாதையை விட்டு விலகும்படி அவன் கூறினான். அவன் சொன்னதை நீ ஏன் கேட்கவில்லை?" என்றார் குரு.
Ο
296
 

உலகத்து நாட்டார் கதைகள்
223. சுவர்களுக்கு அதைக் கூறு!
ஒரு வறிய விதவை தனது இரண்டு மகன்மாருடனும் மருமகள் மார்கள் இருவருடனும் வசித்து வந்தாள். அவர்கள் நால்வரும் நாள் முழுவதும் அவளைத் திட்டித் தீர்ப்பதுடன் கொடுமைப்படுத்தினர். தன்னுடைய துன்ப துயரங்களைக் கூறுவதற்கு ஒருவர் தானும் கிடைக்கவில்லை.
அவள் தனது துயரங்களைத் தன்னுள்ளேயே வைத்துக் கொண்டிருந்தமையால் அவள் உடல் பாரமாகிக் கொழுத்துக் கொண்டே வந்தது. அவளுடைய மருமகள்மாரும் மகன்மா ரும் அவளைக் கேலி செய்வதற்கு, அவளது உடற் பருமனை ஒரு துரும்பாகப் பாவித்தனர். அவள் நாளுக்கு நாள் கொழு த்து உடல் பருமனடைந்து வருவதைப் பரிகாசம் செய்தது டன் அவளைக் குறைவாக உண்ணும்படியும் கூறினர்.
ஒரு நாள், அந்த வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வேறு எங்கோ சென்று விட்டனர். அவ்வேளை அவள் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிந்து, துயரத்தின் காரணமா ய்ப் பட்டணத்திற்கு வெளியே சென்றுவிட்டாள். அந்த இடத்தில் கைவிடப்பட்டு, பாழடைந்த நிலையிலுள்ள ஒரு வீட்டைக் கண்டாள். அதற்குக் கூரையில்லை. அவள் உள்ளே சென்றாள். தான் அதிகம் தனிமைப்பட்டவளாகவும் அதிகம் துயரமுடையவளாகவும் இருப்பதை அவள் உணர்ந் தாள். அத்துடன் இத்துன்பத்தைத் தான் இனிமேல் தாங்கிக் கொள்ள முடியாமலிருப்பதையும் உணர்ந்தாள். அவள் யாருக்காவது தன்னுடைய துயரத்தைக் கூற வேண்டி யிருந்தது.
297

Page 161
நீர்வை பொன்னையன்
ஆகவே, தன் முன்னாலுள்ள சுவருக்கு அவளது முதல் மகனுக்கெதிரான தனது துயரக்கதைகளை அவள் கூறி னாள். அவள் கூறி முடித்த உடனே அவளுடைய துயரங் களின் பாரத்தினால் அந்தச் சுவர் இடிந்து விழுந்து நிலத்தில் ஒரு குவியலாகக் கிடந்தது. அதேவேளை, தன்னுடைய உடலில் சிறிது பாரம் குறைந்ததை அவள் உணர்ந்தாள்.
பின்னர், அவள் இரண்டாவது சுவர் இருந்த திசைக்குத் திரும்பி, தனது முதல் மகனுடைய மனைவி செய்யும் கொடுமைகள் பற்றிய கதைகளைக் கூறினாள். இரண்டாவது சுவரும் இடிந்து வீழ்ந்ததுடன், அவளுடைய உடல் இன்னும் பாரம் குறைந்தது. இரண்டாவது மகனுடைய தொல்லை களை மூன்றாவது சுவருக்குக் கூறி அதையும் தகர்த்து விழச் செய்ததுடன், தனது இரண்டாவது மகனுடைய மனைவி கொடுக்கும் தொந்தரவுகளைக் கூறி நான்காவது சுவரையும் இடிந்து விழச் செய்தாள்.
செங்கற்களும் கட்டிடத்தின் இடிந்து வீழ்ந்த சிதைவு களும் சூழ நின்று கொண்டிருந்த அவள், தன்னுடைய உட லும் உள்ளமும் பாரம் குறைந்து குறைந்து மிக லேசானவை யாக வந்து விட்டதை உணர்ந்தாள். அவள் தன்னைப் பார்த்த பொழுது, உண்மையாகவே தனது பாரம் குறைந்து விட்டதையும் தன்னுடைய துர்ப்பாக்கிய நிலையைத் தான் வெற்றி கொண்டு விட்டதையும் அவள் கண்டுகொண்டாள். இதன் பின் அவள் வீடு சென்றாள்.
Ο
298

உலகத்து நாட்டார் கதைகள்
224. உயர்ந்தது
ஒரு நாள் ஒரு மனிதன் தன்னுடைய வயலுக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒரு எலியைப் பிடித்தான். அவன் அதை வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு பெட்டிக்குள் விட்டான். பின்பு அதை அவன் வெளியே எடுத்த பொழுது அந்த எலி ஒரு அழகான பெண்ணாக மாறியது.
அவளைப் பார்த்தபொழுது, "இந்த அழகான பெண் ணை ஒரு பெரும் மனிதனுக்குத் திருமணம் செய்து வைக்க முடியுமானால், இதன்மூலம் நான் பெரும் அநுகூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்’ என்று அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
ஆகவே, இந்த உலகிலுள்ள மிக உயர் அந்தஸ்துள்ள ஒரு மனிதனைத் தேடிச் சென்றான். அவன் தனது குலத்தின் தலைவனைச் சந்தித்தான். “இந்த உலகில் நீங்கள்தான் மிக உயர்ந்த அந்தஸ்துடைய மனிதர். எனது வளர்ப்பு மகளை நீங்கள் திருமணம் செய்வதை நான் விரும்புகின்றேன்" என்று கூறினான்.
'நான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பு கின்றேன். ஆனால், உலகிலுள்ளவர்களில் மிக உயர்ந்த அந் தஸ்து உடையவரைத்தான் உனது மகள் திருமணம் செய்து கொள்வதை நீ விரும்புவதாகக் கூறுகின்றாய். தண்ணிர் என்னிலும் பார்க்க மிக உயர்ந்தது. ஏனெனில், நான் ஆற்று வெள்ளத்தில் இறங்கும் பொழுது அது என்னை அடித்துச் சென்று விடும்’ என்று அவர் கூறினார்.
299

Page 162
நீர்வை பொன்னையன்
இதன்பின், அவன் நீரிடம் சென்றான். அவன் நீரின் தலைவனிடம், குலத் தலைவனுடன் கதைத்தது போலவே கதைத்தான். ‘நான் வலிமையுடையவனோ அல்லது உயர்ந் தவனோ அல்ல. நான் அமைதியாக இருக்கையில் காற்று வந்து வீசி அலைகளை எழுப்பியது. ஆகவே, காற்றுத்தான் என்னிலும் பார்க்க மிக உயர்ந்தது.” என்றது நீர்.
ஆகவே, அந்த மனிதன் காற்றிடம் சென்றான். ஆனால், ‘என்னிலும் பார்க்க மலை அதிக வலிமையுடையது; நான் எப்படி வீசினாலும் அதை ஒரு அங்குலம்கூட அசைக்க முடியவில்லை என்று காற்று கூறியது. ஆகவே அவன் மலையிடம் சென்றான்.
“ஆம் எல்லாவற்றிலும் பார்க்க நான் வல்லமையுடை யவன்தான். காற்றினால்கூட என்னை அடித்துச் செல்ல முடியாது. ஆனால், ஒரு எலி அது விரும்பிய பக்கத்தைக் குடைந்து செல்ல முடியும். ஒரு எலிக்கு முன் நான் சக்தி யற்றவன்’ என்று மலை கூறியது. எங்கே போவதென்றே அந்த மனிதனுக்குத் தெரியவில்லை. அவன் வீட்டிற்கு வந்த பொழுது அப்பெண் எலியாக மாறி விட்டாள்.
Ο
3Os

உலகத்து நாட்டார் கதைகள்
225. இராமனுடைய ஒவியம்
தன்னுடைய மாளிகையின் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் என்று அரசன் விருழ்பினான். ஆகவே அவன் ஒரு ஓவியனை அழைத்து ஓவியங்களை வரையச் செய்தான். அந்த ஒவியங்கள் நன்றாக ரசிக்கப் பட்டுப் பாராட்டப்பட்டன. ஆனால் இராமன் கேள்விகளை எழுப்பினான். ரூபக் குறிப்பில் வரையப்பட்ட உடல் ஒவியத் தின் முன்னின்று ‘இந்த உடலின் மறுபக்கம் எங்கே? உடலின் மற்றைய பக்கங்கள் எங்கே?' என்று கபடத்தன மின்றிக் கேட்டான். 'அவற்றைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா?’ என்று அரசன் சிரித்துக் கொண்டே கேட்டான். 'ஓ! அப்படித்தான் ஒவியங்கள் வரையப்படுகின்றன! இப்பொழுது எனக்குப் புரிகிறது” என்று இராமன் கூறினான்.
ஒரு சில மாதங்களின் பின்னர் தென்னாலி இராமன் அரசனிடம் வந்து “மாதக் கணக்காக இராப்பகலாக நான் ஓவியக் கலையைக் கற்று வருகின்றேன். உங்களது சுவர் களில் ஒவியங்கள் சிலவற்றை நான் வரைய விரும்பு கின்றேன்." என்றான்.
'பிரமாதம்! பழைய மங்கிய ஓவியங்களை அழித்து விட்டு, புதிய ஓவியங்களை நீ ஏன் வரையக்கூடாது?’ என்று அரசன் கூறினான். தென்னாலி இராமன், பழைய ஓவியங் களின் மேல் வெள்ளையடித்து அழித்துவிட்டு அந்த இடத்
301

Page 163
நீர்வை பொன்னையன் தில் தன்னுடய புதிய ஓவியங்களை வரைந்தான். ஒரு காலை அங்கும், ஒரு கண்ணை இங்கும், ஒரு கை விரலை மற்றுமொரு இடத்திலும் அவன் வரைந்தான். உடலின் அத் தகைய உறுப்புக்களினால் சுவர்களை மூடினான். அதன் பின், தன் கைவண்ணத்தைப் பார்ப்பதற்கு அவன் அரசனை அழைத்தான். தனது சுவர்கள் மீதுள்ள இந்தத் துண்டிக்கப் பட்ட உறுப்புகளினால் வியப்பும் திகைப்பும் அடைந்த அரசன் "இங்கு நீ என்ன செய்கின்றாய்? ஓவியங்கள் எங்கே?*
“ஒவியங்களில், மிகுதியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும். என்னுடைய உன்னத படைப்பை நீங் கள் இன்னும் பார்க்கவில்லை." அதன் பின் ஒரு சில பச்சை வர்ணக் கோடுகளை மாத்திரம் கொண்ட ஒரு வெற்றுச் சுவரடிக்கு அரசனை அழைத்துச் சென்றான்.
“இது என்ன?’ எரிச்சலுடன் அரசன் கேட்டான். 'அது, ஒரு பசு புல்லைத் தின்று கொண்டிருக் கின்றது.’
"ஆனால், பசு எங்கே?’ கேட்டான் அரசன். “புல்லைத் தின்ற பின்பு, பசு அதனுடைய மாட்டுக் கொட்டிலுக்குச் சென்று விட்டது” தென்னாலி இராமன் சொன்னான்.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
226. விகடகவி
தென் இந்தியாவில் தென்னாலி என்று கூறப்படுகின்ற ஒரு கிராமத்தில், ஒரு கெட்டிக்காரப் பிராமணச் சிறுவன் இருந்தான். அவனுடைய பெயர் இராமன். அந்தப் பையனு டைய பார்வையிலும் கெட்டித்தனமான போக்குகளிலும் நாடோடியான ஒரு சந்நியாசிக்கு ஆழ்ந்த பிடிப்பு ஏற்பட்டது. ஆகவே, அவர் அந்தச் சிறுவனுக்கு ஒரு மந்திரத்தைப் போதி த்தார். “நீ காளி கோயிலுக்கு ஒருநாள் இரவு சென்று, அங்கு ள்ள பெண் தெய்வத்தின் முன் நின்று, இந்த மந்திரத்தை முப்பது இலட்சம் தடவைகள் உச்சாடனம் செய்தால், காளி தெய்வம் தனது ஆயிரம் முகங்களுடன் தோன்றுவாள். நீ அவளைப் பார்த்து, பீதி கொள்ளாமலிருந்தால், நீ கேட்பதை அவள் உனக்குக் கொடுப்பாள்’ என்று கூறினார்.
இராமன் ஒரு சுப நாளுக்காகக் காத்திருந்து, தனது கிராமத்திற்கு வெளியேயுள்ள அந்தக் காளி கோவிலுக்குச் சென்றான். அங்கு அவன் சந்நியாசி கூறியபடியே செய்தான். அவன் முப்பது இலட்சம் தடவை அந்த மந்திரத்தைக் கூறி முடித்தவுடனே, ஆயிரம் முகங்களும் இரண்டு கைகளு முடைய பெண் தெய்வம் அவன்முன் தோன்றியது. அந்தத் தெய்வத்தின் பயங்கரமான தோற்றத்தைப் பார்த்து அந்தச் சிறுவன் எள்ளளவும் பயப்படவில்லை. அவன் கெக்கலியிட் டுச் சிரித்தான். பெரும் பீதியைக் கொடுக்கின்ற இந்தத் தெய் வத்தின் முன் எவரும் எந்த நேரத்திலும் சிரிப்பதற்குத் துணிய மாட்டார்கள்.
303

Page 164
நீர்வை பொன்னையன்
'சின்னஞ் சிறு முட்டாளே, நீ என்னைப் பார்த்து ஏன் சிரிக்கின்றாய்?"
"ஓ! தாயே எங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கும் பொழுது, மனிதர்களாகிய நாங்கள் எமது மூக்குகளைத் துடைப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகின்றோம்! எங்களுக்கு ஒரு மூக்கும் இரண்டு கைகளும் இருந்தும்கூட நாங்கள் எவ்வளவு தொல் லைக்குள்ளாகின்றோம். ஆயிரம் முகங்களையுடைய உங்க ளுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டால், நீர் வடிந்து கொண்டிருக்கின்ற அந்த ஆயிரம் மூக்குகளை இரண்டு கைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு உங்களால் எப்படிச் சமாளிக்க முடியும்?"
காளிக்கு மூர்க்கமான கோபம் வந்தது. 'நீ என்னைப் பார்த்துக் கேலி பண்ணிச் சிரிப்பதால் சிரிப்பினால், மட்டும் உன்னுடைய ஜீவனோபாயத்தை நடத்துவாய். நீ ஒரு விகட கவியாக, சிரிப்பூட்டுபவனாக இருப்பாய்’ என்று காளித்தாய் கூறினாள்.
"ஓ! ஒரு வி - க - ட - க - வி. அது பயங்கரமானது. அது முன்பின் நோக்காக ஒத்த கருத்துடைய சொல். அதை முன் னிருந்து பின்னாகவும், பின்னிருந்து முன்னாகவும் வாசித் தால் அதாவது இடப் பக்கத்திலிருந்து வலப் பக்கமாகவும் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும் படித்துப் பார்த்தால் விகடகவியாகவே இருக்கும்’ என்று இராமன் பதில் கூறி னான். இராமனுடைய கெட்டித்தனத்தால் ஒரு சாபத்திலிருந் தும்கூட ஒரு ஹாஸ்யத்தைக் கண்டான் என்பதைக் காண, காளிதேவிக்குத் திருப்தி ஏற்பட்டது. அவள் உடனடியாகச் சாந்தமடைந்து, "நீ ஒரு விகடகவியாகவே இருப்பாய். அது வும் நீ ஒரு அரசனுடைய விகடகவியாகத் தானிருப்பாய்' என்று கூறி விட்டு மறைந்து விட்டாள்.
இதன் பின், இராமன் அரசனின் விகடகவியாக வாழத் தொடங்கினான்.
Ο
3O4.

உலகத்து நாட்டார் கதைகள்
227 இந்த உலகமும் அந்த உலகமும்
இரு நண்பர்கள் ஒரு தெருவில் சந்தித்தனர். அவர்கள் எதிர்த்திசைகளில் சென்று கொண்டிருந்தனர். ஒருவர் ஒரு பெண்ணிடம் சென்று கொண்டிருந்தார். மற்றவர் ஒரு மதக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அந்த மதக் கூட்டத் தில் ஒரு பெரும் பிரசங்கியும் கதை சொல்பவருமான ஒருவர் அன்றைய தினம் பிரசங்கம் செய்ய இருந்தார்.
மதக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த மனிதன், 'அந்தப் பெண்களிடம் நீ ஏன் போக விரும்புகின்றாய்? சமயக் கூட்டத்திற்கு என்னுடன் நீ வா! பிரசங்கி உத்வேக மூட்டுகின்ற ஒரு பேச்சாளன். அவரால் ஆட முடியும்; பாட முடியும்; தெய்வங்களையும் ஞானிகளையும் பற்றி அதிசய மான கதைகளை அவர் கூறுவார். என்னுடன் நீ வா!" என்று மற்றவருக்கு அந்த மனிதன் கூறினான்.
"என்னுடன் நீ ஏன் வருகின்றாயில்லை? 6T66Tg)60Lu வளைப் போல நான் உனக்கு ஒரு அழகான கவர்ச்சியான பெண்ணை ஏற்பாடு செய்து தருகின்றேன். மந்தமான மத விவகாரங்களில் நீ ஏன் நேரத்தை வீண் விரயம் செய்ய விரும்புகின்றாய்?’ என்று மற்ற மனிதன் கூறினான்.
அவர்களில் ஒருவர் மற்றவரை இசைய வைக்க முடிய வில்லை. ஒவ்வொருவரும் தத்தமது வழியில் சென்றனர்.
ஆனால், சமயக் கூட்டத்திற்குச் சென்றவருக்கு, அன்று சமய விவகாரங்களில் மனதை ஒருமுகப்படுத்த முடிய
305

Page 165
நீர்வை பொன்னையன் வில்லை. ஒரு அழகான பெண்ணுடன் தன்னுடைய நண்பன் அனுபவித்துக் கொண்டிருந்த இன்ப மயமான நேரத்தை மாத்திரம்தான் அவனால் நினைக்க முடிந்தது. அதே வேளை ஒரு பிரசங்கியினுடைய பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டி ருந்து இங்கு தான் நேரத்தை விரயம் செய்து கொண்டிருப் பதாக அவன் நினைத்தான்.
அதே வேளை பெண்ணுடன் இருந்த அந்த மனிதனால் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை. ஞானிகளைப் பற்றியும் தெய்வங்களைப் பற்றியும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம் நன்மையைப் பெறுவதுடன் சொர்க்கத்தில் ஒரு இடத்தையும் தேடும் முயற்சியில் தன்னு டைய நல்ல நண்பன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற அதே வேளை, ஒரு அற்பப் பெண்ணுடன் முட்டாள்தனமாகத் தன் னுடைய வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றேன் என்பதை மாத்திரம்தான் அவனால் எண்ணக் கூடியதாக இருக்கின்றது.
அதனால்தான், அந்த உலகத்திற்காக இந்த உலகத் தையும் இந்த உலகத்திற்காக அந்த உலகத்தையும் இரு வரில் ஒருவரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
Ο
306

உலகத்து நாட்டார் கதைகள்
228. வாய்க்குள் ஒரு நாரை
ஒரு பண்டிதன் ஒருநாள் தனது வீட்டிற்குச் செல்லுகை யில் ஒரு வயலைக் கடந்து கொண்டிருந்தான். அவ்வேளை யில் அவனுக்குக் கடுமையான இருமல் ஏற்பட்டு நிலத்தில் துப்பினான். அவன் துப்பிய எச்சிலுடன் ஒரு வெள்ளை இற கைத் தான் துப்பியிருந்ததைப் பார்த்து அவன் ஆச்சரியப் பட்டான். அவனால் அதை விளங்கிக் கொள்ள முடிய வில்லை. அதைப் பற்றி அவன் பெரும் குழப்பமடைந்தான். அவன் திரும்பத் திரும்ப மனதைப் போட்டு அலட்டிக் கொண்டதுடன் அதை அவனால் மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் தன்னுடைய வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியைக் கூப்பிட்டு “ஏதோ ஒன்று என்னைச் சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதை நான் யாராவது ஒருவருக்குச் சொல்ல வேண்டும். ஆனால், அதை நான் உனக்குக் கூறினால், நீ அதை வேறு ஒருவருக் கும் சொல்ல மாட்டாய் என்று நீ எனக்கு வாக்குறுதி தரு வாயா?’ என்று கேட்டான்.
“நிச்சயமாய் நான் ஒருவருக்கும் சொல்ல மாட்டேன். நான் வாக்குறுதியளிக்கின்றேன்."
ஆனால் அதை அவளால் காப்பாற்றிக் கொள்ள முடிய வில்லை.
'இதை எவருக்கும் சொல்வதில்லை என்று எனக்கு வாக்குக் கொடு, இந்த இரகசியத்தைக் காப்பாற்றுவேன் என்று நான் பண்டிதருடைய மனைவிக்குக் கூறியுள்ளேன். 3O7

Page 166
நீர்வை பொன்னையன் இன்று என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா? பண்டிதர் வயலில் ஒரு பெரிய முழு நாரையைத் துப்பி யுள்ளார். பண்டிதர்கள் காய்கறிகள் மட்டும் உண்பவர்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அது உண்மையோ, என்னவோ! என்று ஒருத்தி மற்றொருத்திக்குக் கூறினாள்.
“ஒரு முழு நாரையா? அது பெரிய பறவை! இது எப்படி நடக்க முடியும்? அதிசயமான மனிதன்! ஆனால் என்னை நம்பு. நான் எவருக்கும் சொல்லமாட்டேன்.”
இதன் பின் பண்டிதருடைய வாயிலிருந்து அநேக நாரைகள் பறந்தன என்று அயலவனுக்கு கேட்டது. பண்டி தருடைய வாயிலிருந்து நாரைகளும் கொக்குகளும் வேறு பெரிய பறவைகளும் வெளியே வந்து பறந்தன என்று அன்று மாலைக்கிடையில் பட்டணம் எங்கும் பரவி விட்டது. அந்தப் பட்டணத்தைச் சுற்றியிருந்த கிராமங்களில் எல்லாம் இந்தப் புதினம் பரவியது.
இந்த ஆச்சரியமான நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குப் பண்டி தருடைய வீட்டிற்குத் தங்களுடைய மாட்டு வண்டிகளில் கிராமத்தவர்கள் வந்தனர். இது ஒரு அற்புதமான விஷயமாக இருக்கக்கூடும் என்று அவர்கள் நினைத்துத்தான் கிராம வாசிகள் அங்கு வந்தனர். எல்லாப் பருமனிலும், நிறங் களிலும் தூர நாடுகளிலிருந்து வந்த அநேக பறவைகள் பண்டிதருடைய வாய்க்குள் இருந்து வெளியே வந்து ஆகாய த்தையே இருட்டாக்கி விட்டன என்ற வதந்தி எங்கும் பரவியது.
பாவம் பண்டிதருக்குப் பைத்தியம் வந்து விட்டது. அவர் வெளியே ஒடி, இச்செய்திகள் செத்து மடியும் வரை, அதாவது இதற்குப் பதிலாகப் புதிய செய்திகள் பரவும் வரை ஒரு மரத்தில் மறைந்திருந்தார்.
O
308

உலகத்து நாட்டார் கதைகள்
229. அகிம்சை
ஒரு கெட்ட பாம்பு, வீதியால் போவோர் வருவோரைத் தாக்கித் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரு தெய்வீகத் தன்மையுடைய மனிதர் அந்த வழியால் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பாம்பு, அம் மனித ரைக் கடிப்பதற்கு அவரை நோக்கி ஓடியது. அவர் அதை மன அமைதியுடன் பார்த்து 'நீ என்னைக் கடிக்கப்போகின்றாயா? சரி கடி!” என்று கூறினார்
இந்த எதிர்பாராத, வழமைக்கு மாறான பதிலினால் அந்தப் பாம்பு அடங்கிவிட்டதுடன் அந்தப் புனித மனிதனின் அன்பிற்குக் கட்டுப்பட்டது. ‘நண்பனே கேள்!. இப்போதிலி ருந்து நீ ஒருவரையும் கடிப்பதில்லை என்று எனக்கு வாக்குக் கொடுப்பாயா?’ என்றுகேட்டார். பாம்பு உடன்பட்டு ஆம் என்று தலையாட்டியது. அப்புனித மனிதர் தன்பாட்டில் சென்றார். பாம்பு அதன் களங்கமற்ற அகிம்சை வாழ்வை ஆரம்பித்தது.
அந்தப் பாம்பு தீங்கு செய்யும் வழக்கத்தைக் கைவிட்டு சாந்தமானதாக மாறி விட்டதென்ற அந்தச் சுற்றுப் புறத்தி லுள்ளவர்கள் உடனே தெரிந்து கொண்டனர். சிறுவர்கள் கூட ஈவிரக்கமின்றி அதற்குத் தொல்லை கொடுத்தனர். அவர்கள் அந்தப் பாம்பின்மீது கற்களை எறிந்து காயப் படுத்தியதுடன் அதன் வாலைப் பிடித்து அதைச் சுற்றிச் சுழற்றி நிலைத்தில் இழுத்துச் சென்று துன்பங் கொடுத்தார்
309

Page 167
நீர்வை பொன்னையன் கள். அப்புனித மனிதனுக்குத் தான் கொடுத்த வாக்கிற்காகப் பாம்பு துன்பத்தை அனுவித்தது.
அதிர்ஷ்டவசமாக அந்தத் தெய்வீக மனிதர் அந்த வழியால் வர நேரிட்டது. அவர் தம்முடைய புதிய சீடனைப் பார்க்க விரைந்தார். பலராலும் தாக்கப்பட்டுக் கடுமையாகக் காயப்படுத்தப்பட்ட அந்தப் பாம்பின் பரிதாபகரமான நிலை மையைக் கண்டு அவர் மனம் இரங்கி வேதனைப்பட்டார். அதற்கு என்ன நடந்ததென்று அவர் அதைக் கேட்ட பொழுது, “ஓ, என் சுவாமி! நான் ஒருவரையும் கடிக்கக் கூடா தென்று நீர் எனக்குக் கூறினிர். அதற்கமைய நான் ஒருவரை யும் கடிக்கவில்லை. ஆனால் மக்கள் ஈவிரக்கமின்றி என்னை இப்படித் தாக்கியுள்ளார்கள்’ என்று பலவீனமாகக் கூறியது.
“ஒருவரையும் கடிக்கக்கூடாதென்றுதான் நான் உனக் குக் கூறினேன். ஆனால் நீ சீறக் கூடாதென்று நான் சொல்ல வில்லையே!” என்று அந்தத் தெய்வீக மனிதர் கூறினார்.
Ο
 

உலகத்து நாட்டார் கதைகள்
230. தோட்டியின் கனவு
அரண்மனையிலுள்ள அரசியின் கழிவறையைச் சுத்தஞ் செய்கின்ற பெண் ஒருநாள் சுகவீனமுற்றாள். ஆகவே அந்த வேலையைச் செய்வதற்கு அவள், அதே வேலை செய்கின்ற தனது கணவனை அங்கு அனுப்பி வைத்தாள். அவன் அரண்மனைக்குச் சென்ற பொழுது, அரசியின் கழிவறைக் குழியிலிருந்து இரவு கழிக்கப்பட்ட மல வாளியை அகற்றக்கூடிய வகையில் அவன் அரண்மனைப் பின் கதவால் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டான்.
மலக் குழியிலுள்ள வாளியை அகற்றுவதற்கு அங்கு அவன் சென்ற பொழுது, அக்குழியின் மேலுள்ள ஆசனத்தில் அரசி அமர்ந்திருந்தாள். அந்தத் தோட்டி மேலே பார்த்த பொழுது அரசியின் கால்கள் அவன் கண்களில் பட்டன. அக் கால்கள் பட்டுப்போல வழவழப்பானவையாகவும் அழகான வையாகவும் மல்லிகை மலரின் இதழ்களைப்போல மிருது வானவையாகவும் இருந்தன.
அந்தக் கால்களில் கணப்பொழுது ஏற்பட்ட வெட்டுத் தோற்றம், அவனைஅரசிமீது அளவற்ற மோகம் கொள்ளச் செய்தது. அவள் எப்படிப்பட்ட அழகுடையவளாக இருப் பாள் என்று அவன் கற்பனை செய்யத் தொடங்கினான். அவன் சிரமப்பட்டு நடந்து வீடு சென்றும்கூட, அவனுடைய மனம் அரசியின் கால்கள் மீதே லயித்திருந்தது. அவள் நினைவு அவனை ஆக்கிரமித்ததனால் உண்ணவோ உறங்க
C வில்லை.
6Հյո (ւpլգա- 6ᏈᎠ 311

Page 168
நீர்வை பொன்னையன்
அவன் இப்படி ஏன் வருந்துகின்றான், இதற்கென்ன காரணம்? என்று அன் மனைவி அவனைக் கேட்டபொழுது தனது வேதனைக்கான காரணத்தை அவன் மனம் விட்டுக் கூறினான். அரசி தனக்கே உரியவள், ஆகவே அவளைத் தனக்கு வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தான்.
'அட கடவுளே!’, என்று கூறிய அவள் ‘உன்னால் அரசியை எப்படி அடைய முடியும்?' என்று கணவனைக் கேட் டாள். “நீ ஒரு தோட்டி, உனக்கு வேறு பெண் வேண்டு மென்றால் எங்களால் அதற்கு முயற்சித்துப் பார்க்க முடியும். ஆனால் அரசியை நீ மறந்துவிடு. சாதாரண மக்கள் அவளது கணப்பொழுது தரிசனத்தைக் கூடப் பெற முடியாது” என்று அவள் கூறி, அரசியினுடைய கால்களினுடைய கற்பனைத் தோற்றத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து அவனைத் திசை திருப்ப முயனறாள.
ஆனால் அவள் வெற்றி பெறவில்லை. அவனுடைய நினைவுகள் அதே பொருளைச் சுற்றி வட்டமிட்டு, அவளில் அவை சுழன்று கொண்டிருந்தன.
அவன் சித்தக் கோளாறுள்ளவனாகச் செயற்பட்டான். அவன் தனது உடைகளை மாற்றிக் கொள்ளவில்லை. உண் ணவில்லை, உறங்கவில்லை. கடைசியாக அவன் தன்னு டைய வீட்டைவிட்டு வெளியேறி நாடோடியாக அலைந்து திரிந்தான்.
ஒரு நாள் அவன் ஒரு ஆலமரத்தின்கீழ் இருந்த பொழுது, அவன் வேறொன்றையும் பற்றியல்லாமல் அரசி யின் அழகைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கையில், கிராமவாசிகள் சிலர் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். உணவோ உடையோ இன்றி ஒரு கணமேனும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தியான நிலையில் நாட்கணக்காக அவன் இருந்ததை அவர்கள் அவதானித்து வந்தனர்.
312

உலகத்து நாட்டார் கதைகள் அவனை ஒரு ஞானியாக எண்ணி அவன் மீது அவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கி, அவனுக்கு உணவுகள் உடை கள் போன்றவற்றைக் காணிக்கைகளாகக் கொண்டு வந்து வழங்கினர்.
ஆனால், அவற்றின்மீது அவன் அக்கறையற்றவனாக இருந்தான்.அவனது அசிரத்தை அவனுடைய தெய்வீகத் தன்மை என்று அவர்களுக்கு அதிக நம்பிக்கையை மாத்திரம் ஏற்படுத்தியது. அவனைச் சுற்றித் திரண்ட அவனுடைய பக்தர்கள் சீடர்களைக் கொண்ட ஜனத்திரளை, அவன் கவனத்திலெடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு மாதத்திற்குள் அவன் பெரும் புகழ் பெற்றவனாக வந்ததுடன் அவனுடைய புகழ் நாடெங்கும் பரவியது. ஆனால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
அரசிகூட அவனைப் பற்றிக் கேள்விப்பட்டதுடன் அந்த தெய்வீக மனிதனிடம் விஜயம் செய்ய விரும்பினாள். அவள் தன்னுடைய பரிவாரத்துடன் வந்து அவன் முன் நின் றாள். அவள் அவன்முன் சாஷ்டாங்கமாக விழுந்து அவனை வணங்கி, அவனுடைய பாதங்களைத் தொட்டுத் தனது கண்களில் ஒற்றி, அவன் முன் தன் காணிக்கைகளைப் படைத்தாள்.
அவன் எள்ளளவும் அவளைப் பார்க்கக்கூடவில்லை. அவள் யார்? என்று அவனுக்குத் தெரியாது. அவள் யார் என்று அவன் கேட்கக்கூடவில்லை. அது அவனுக்கு எள் ளளவும் தேவைப்படவுமில்லை.
அவனுடைய ஆசை அவ்வளவு ஆழமானதாக இருந்
ததால், அவனுக்கு எள்ளளவும் ஆசை இல்லாத ஒரு நிலை க்கு அவனைக் கொண்டு சென்று விட்டது.
Ο
313

Page 169
நீர்வை பொன்னையன்
231. சொர்க்கத்துக்குச் சென்றான்
ஒரு நெசவாளனுக்கு வயல் ஒன்று இருந்தது. தேவ லோகத்தின் அரசன் இந்திரனுடைய யானை, ஒவ்வொரு நாளும் அந்த நெசவாளனுடைய வயலுக்கு வந்து அங்குள்ள பயிர்களை மேய்வதுடன் அந்த வயலைப் பாழ்படுத்தியது. எந்த மிருகம் வந்து தன்னுடைய வயலை இப்படி நாசம் செய் கின்றது? என்று தன்னுடைய நெசவாள நண்பர்களை அவன் கேட்டான். “ஊரவரின் திரிகைக் கற்கள் இந்த அழிவு வேலை யைச் செய்யக்கூடும், இரவு வேளையில் அவை விழித்தி ருந்து உனது வயலுக்கு வந்திருக்கக்கூடும்’ என்று அவனு டைய நண்பர்கள் கூறினார்கள். ஆகவே அந்த நெசவாளன் தன்னுடய கிராமத்திலுள்ள எல்லாத் திரிகைக் கற்களையும் கட்டி வைத்தான். அப்படி இருந்தும் அவனுடைய வயல் முன்னரைப் போலவே தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வந்தது. மீண்டும் அவன் தன்னுடைய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தனான். 'இந்தக் கிராமத்திலுள்ள உரல்கள் இந்த அழிவுவேைையச் செய்யக்கூடும். எல்லோரும் நன்றாக நித்திரை செய்கின்ற வேளையில், இரவில் அவை எழுந்து வந்து உன்னுடைய வயலை நாசம் செய்யக்கூடும்’ என்றார் கள் நண்பர்கள். ஆகவே அவன் எல்லா உரல்களையும் கட்டி வைத்தான். ஆனால் அழிவுவேலை தொடர்ந்தது மாத்திர மல்ல, அது இன்னும் படுமோசமாக நடந்தது.
இதன்பின்னர் அவன் ஒரு இரவு தன் வயலுக்குச் சென்று காவல் செய்துகொண்டிருந்தான். அப்பொழுது
314

உலகத்து நாட்டார் கதைகள் அவன் எதைப் பார்த்தான்? ஒரு யானை வானத்தில் பறந்து வந்து கீழே இறங்கி, அவனுடைய வயலிலுள்ள பயிர்களை மேய்ந்து கொண்டிருந்ததை அவன் பார்த்தான். மேய்ந்த பின்னர் அது மேலே பறந்து செல்வதற்கு எழுந்த வேளை அவன் திடீரெனப் பாய்ந்து அந்த யானையினுடைய வாலை இறுகப் பிடித்துக் கொண்டான். ஆனால் அவன் யானையைப் பிடித்தது யானைக்குத் தெரியவில்லை. அது தேவலோகத் தில் உள்ள இந்திரனுடைய அரச சபைக்குப் பறந்து சென் றது. யானையுடன் அவனும் சென்றிருந்தான். அங்கு அவன் ஒரு மூலையில் அமர்ந்திருந்து தேவ கன்னிகைகள் பாடு வதைக் கேட்டான். அவனை ஒருவரும் பொருட்படுத்த வில்லை. அத்துடன் அவன் தெய்வங்களின் சமையல் அறை க்குள் சென்று, அங்குள்ள தெய்வீக உணவு வகைகளை உட்கொண்டான். அடுத்த நாள் இரவு யானை திரும்பிப் பூமி க்கு பறந்து வந்த பொழுது, அவன் அதனுடைய வாலைப் பிடித்துக் கொண்டு தனது வீட்டுக்குத் திரும்பி வந்தான்.
அவன் பூமியில் வந்திறங்கியவுடனேயே, தான் பார்த்த அதிசயங்களைப் பற்றித் தன் நண்பர்களுக்குக் கூறினான். "இந்தத் துர்ப்பாக்கியமான இடத்தில் இருந்து என்ன பிரயோ சனம்? என்ன அணுவித்தோம்? ஆகவே நாங்கள் எல்லோரும் இந்திரனுடைய சொர்க்கத்திற்குச் செல்வோம்!’ என்றான். அவன் கூறியதைக் கேட்ட அனைவரும் அவனுடைய ஆலோசனைக்குச் சம்மதித்தனர். அந்த இடத்திலுள்ள பயிர்கள் அனைத்தையும் மேய்ந்த பின்னர், யானை இந்திர லோகத்திற்குத் திரும்பிச் செல்வதற்குப் பறக்க ஆரம்பிக் கையில், நெசவாளன் முதலில் அதனுடைய வாலில் இறுகப் பிடித்துக் கொண்டான். அவனுடைய கால்களை அவன் மனைவி பற்றிக் கொண்டாள். அத்துடன் அவனுடைய உற வினர்களும் மனிதச் சங்கிலியாய் ஒருவரை ஒருவர் பிடித் துத் தொங்கிக் கொண்டிருந்தனர். தான் தூக்கிச் சென்று 315

Page 170
நீர்வை பொன்னையன் கொண்டிருந்த மனிதப் பொதியைப் பற்றி யானை தெரிந்து கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ இல்லை. அந்த மனிதர்களைத் தூக்கிக்கொண்டு அது காற்றினூடாகப் பறந்து சென்றது.
அவர்கள் மிக உயரத்திற்குச் சென்று கொண்டிருந்த பொழுது நெசவாளன் தானே தன்னுள் பின்வருமாறு நினைக்கத் தொடங்கினான். ‘என்னுடைய நெசவுத் தறியை எடுத்து வரத் தவறிய நான் எத்தகைய முட்டாள்." இந்த எண்ணத்தினால் அவன் கவலையடைந்து தனது கை களைத் திருகிய பொழுது தனது கைப்பிடியைத் தளர்த்தி னான். அப்பொழுது யானையின் வாலைப் பிடித்திருந்த கை விடுபட்டது. உடனே அவனும் அவனைப் பிடித்திருந்த எல்லோரும் மீண்டும் தரையில் வந்து வீழ்ந்தனர்.
Ο
316
 

உலகத்து நாட்டார் கதைகள்
232. சிரிப்பது ஏன்? அழுவது ஏன்?
ஒரு முஸ்லிம் பிரசங்கி தம்முடைய பள்ளிவாசலில் பாவிகளைப் பற்றியும் நரகத்தில் அவர்களுக்காகக் காத்திருக் கின்ற சித்திரவதைகள் பற்றியும் உணர்ச்சிகரமாகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அவர் மிக நுணுக்கமாகவும் திறமை யுடனும் பேசிக் கொண்டிருக்கையில், சபையில் கூடியிருந் தவர்களில் ஒரு வறிய விவசாயி கண்ணிர் சிந்தி அழுது கொண்டிருப்பதைக் கண்டுவிட்டார்.
'ஆ! நீ செய்த பாவங்களுக்காக மனம் நொந்து அழு கின்றாய்; அப்படித்தானே?’ என்று அந்த விவசாயியைப் பார்த்துக் கேட்டார். அத்துடன் தமது பிரசங்கம் சபையிலி ருந்தோர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எண்ணிப் பெருமகிழ்ச்சியடைந்தார்.
'எனது வார்த்தைகள் உன்னுடைய இதயத்தைத் தொட்டுள்ளன அல்லவா? நரகத்தில் ஏற்படவிருக்கின்ற சித்திரவதைகள் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீ செய்த பாவங்களை நீ நினைவு கூருகின்றாயல் லவா? அப்படித்தானே?’ என்று அந்த விவசாயியைக் கேட்டார் பிரசங்கியார்.
'இல்லை, இல்லை!" என்று தனது கண்ணிரைத் துடைத்துக் கொண்டு கூறினான் விவசாயி. 'நான் செய்த பாவங்களைப் பற்றி நான் நிைைனக்கவில்லை. ஆனால் 317

Page 171
நீர்வை பொன்னையன் சென்ற வருடம் சுகவீனமுற்று இறந்துவிட்ட என்னுடைய ஆட்டுக் கடாவைப் பற்றி நான் நினைத்து அழுதேன். எத்த கைய பெரிய இழப்பு அது? என்னுடைய அந்த முதிய ஆட்டுக் கடாவுக்கு உங்களுடைய அழகான தாடியைப் போல, தாடியிருந்தது. இரண்டு தாடிகளும் ஒரே மாதிரி யானவையாக இருந்தன. இந்த இரண்டு தாடிகளும் ஒத்திருந்ததைப்போல நான் ஒரு பொழுதும் வேறெங்கும் கண்டதில்லை. அதனால் தான் நான் எனது ஆட்டுக் காடாவை நினைத்து அழுதேன்!" என்று விவசாயி கூறினான்.
அதைக் கேட்டு, சபையிலிருந்த அந்தக் கிராமத்து மக்கள் சிரித்தனர். பிரசங்கி, புனித குர்ஆன் நூலுக்குள் தஞ்சம் அடைந்தார்.
O
318
 

உலகத்து நாட்டார் கதைகள்
233. தந்திரத்தை வென்ற தந்திரம்
கங்கை நதிக்கரையில் ஒரு நாவல் மரத்தில் ஒரு குரங்கு வசித்தது. நாவற் பழங்கள் மிகச் சுவையுள்ளவை யாகவும் அபரிமிதமாகவுமிருந்தன. அப்பழங்களை ஒருநாள் குரங்கு உண்மையாகச் சுவைத்துக்கொண்டிருந்த வேளை, ஆற்றிலிருந்து ஒரு முதலை வெளியே வந்தது. குரங்கு சில நாவற் பழங்களைக் கீழே போட்டுவிட்டு 'இவை உலகத் திலே மிகச் சிறந்தவையாக உள்ளன; இவை அமிர்தம் போல சுவையுள்ளன' என்று கூறியது. முதலை அவற்றை உண்டது. அவை உண்மையில் அபார சுவையுள்ளவை.
குரங்கும் முதலையும் நண்பர்களாகி வந்ததுடன், அந்த அதிசயமான மரத்தின் பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டு அதனுடைய நிழலிலிருந்து கதைப்பதற்கு முதலை ஒவ் வொரு நாளும் குரங்கிடம் போய் வந்தது.
ஒரு நாள் முதலை தன் வீட்டிற்குச் செல்லும் பொழுது தன்னுடைய மனைவிக்குச் சில பழங்களை எடுத்துச் சென்றது. "இவை அபாரமாயுள்ளன. உண்மையில் இவை அமிர்தத்தைப்போலச் சுவையானவையாக இருக்கின்றன. இவற்றை எங்கிருந்து பெற்றாய்?" அவனுடைய மனைவி கேட்டாள்.
"கங்கைக் கரையிலுள்ள ஒரு மரத்திலிருந்து இவை பெறப்பட்டவை' என்று கூறினான்.
319

Page 172
நீர்வை பொன்னையன்
'ஆனால், உன்னால் மரத்தில் ஏற முடியாதே. அவ ற்றை நீ மண்ணிலிருந்து பொறுக்கினாயா?"
“இல்லை. மரத்தில் வசிக்கின்ற ஒரு குரங்குதான் என் னுடைய புதிய நண்பன். அப்பழங்களை எனக்குக் கீழே போடுவான். நாங்கள் ஆனந்தமாகக் கதைத்துக் கொண்டி ருப்போம்.”
‘ஓ! அதுதானா நீ வீட்டுக்குத் தாமதமாக வருகிறாய்? அத்தகைய பழத்தைச் சாப்பிடுகின்ற குரங்கினுடைய இறைச்சி எவ்வளவு சுவையானதாக இருக்கும்! அதனுடைய இதயம் மோட்சத்தைப் போலச் சுவையுள்ளது. நான் அதைச் சாப்பிட ஆசைப்படுகின்றேன்" என்று முதலையின் மனைவி கூறியது.
பேச்சுப் போகிற போக்கை முதலை விரும்பவில்லை. 'உன்னால் எப்படி அவ்விதம் சொல்ல முடியம்? குரங்கு எனது நண்பன்! உனக்கு அது ஒரு மைத்துனன்,'
ஆனால் அதனுடைய மனைவி அதை ஏற்றுக் கொள்ள வில்லை. 'அதனுடைய இதயம் எனக்கு வேண்டும். இந்தக் குரங்கிடம் நீ ஏன் அவ்வளவு பிடிப்பாக இருக்கின்றாய்? அதன் இதயத்தைக் கொண்டு வா. இல்லாவிட்டால் நான் சாகும்வரை பட்டினி கிடப்பேன்’ என்றது முதலையின் மனைவி.
அதனுடைய பொறாமையையும் தீய நோக்கத்தையும் அகற்றுவதற்கு முதலை தன்னாலியன்றளவு முயற்சித்தது. ஆனால் அதனால் முடியவில்லை. தனது முதுகின்மீது குரங்கை ஏற்றி, ஒரு சாப்பாட்டிற்குத் தனது வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு முதலை உடன்பட்டது.
அடுத்த நாள் குரங்கைத் தனது வீட்டிற்கு வரும்படி முதலை அழைத்தது. "எனது மனைவி உன்னைப்பற்றி எவ் வளவோ கேள்விப்பட்டிருக்கின்றாள். நாவற்பழங்களை 320

உலகத்து நாட்டார் கதைகள் அவள் விரும்புகின்றாள். என்னுடன் உன்னை வீட்டிற்கு வரும்படி அவள் கேட்டுள்ளாள். நீ மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து எனது முதுகின் மேல் இருந்தால், நான் உன்னை எனது வீட்டிற்குக் கூட்டிச் செல்வேன்."
'நீ ஒரு முதலை. தண்ணிரில் நீ வசிக்கின்றாய். என் னால் நீந்தக்கூட முடியாது. நான் நீரில் மூழ்கி இறந்து விடு வேன்’ என்று குரங்கு கூறியது.
'ஓ! அப்படியில்லை. நான் உன்னை எனது முதுகின் மேல் ஏற்றி மிகக் கவனமாக எடுத்துச் செல்வேன். நாங்கள் தண்ணிரில் வசிப்பதில்லை. ஆற்றின் நடுவிலுள்ள சூரிய ஒளி நிறைந்த ஒரு தீவில் நாங்கள் வசிக்கின்றோம். என்னு டன் வா. நீ அங்கு சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கலாம்.” குரங்குக்கு நம்பிக்கையூட்டித் தூண்டப்பட்டு அது கீழே இறங்கி வந்தது. முதலையின் மனைவிக்குக் கொடுப் பதற்குக் கை நிறைய நாவற் பழங்களைக் கொண்டு வந்தது.
ஆற்றினூடாக முதலை நீந்திச் செல்கையில், பாரதூர மான குற்ற உணர்வு அதைத் தாக்கியது. குறைந்தபட்சம் தான் என்ன செய்கின்றேன் என்று சொல்லக்கூட இல்லாமல் அதனுடைய இதயத்தைத் தன் மனைவிக்கு உணவாக்குவ தற்காக, தனது நண்பனைத் தன் வீட்டிற்குக் கூட்டிச் செல்வதற்கு அதனுடைய மனச்சாட்சி இடம் கொடுக்க வில்லை.
'நான் உன்னுடன் மனம் விட்டுக் கதைக்க வேண்டும். உனது இதயத்தை எனது மனைவி உண்பதற்காக உன்னை இன்று வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரும்படி என்னை அனுப்பியுள்ளாள். அதைத்தான் அவள் விரும்பினாள். அவ ளுடைய விருப்பத்துக்கு மாறாக என்னால் செல்ல முடிய வில்லை’ என்று முதலை கூறியது.
"ஓ! அதுதான் அவளுக்கு வேண்டுமா? எனது இதயம் இதை முன்னரே நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? அதை
321

Page 173
நீர்வை பொன்னையன் நான் கீழே கொண்டு வந்து உனது மனைவிக்குக் கொடுப்ப தில் மகிழ்ச்சியடைந்திருப்பேன்’ குரங்கு சொன்னது.
'நீ என்ன அர்த்தத்தில் சொல்கின்றாய்?’ முதலை கேட்டது.
‘நான் செல்கின்ற இடங்களுக்கு எனது இதயத்தை நான் எடுத்துச் செல்வதில்லை. நான் கீழே இறங்கும்பொழுது வழமையாக அதை மரத்தில் விட்டுவிட்டு வருவேன். நாங்கள் திரும்பிப் போவோம். அதை எடுத்து உங்களுக்கு நான் தருகிறேன்.”
முதலை திரும்பிக் கரையை நோக்கி நீந்தி வந்தது. அதனுடைய முதுகிலிருந்து குரங்கு விரைவாக வெளியே தாவிப் பாய்ந்து பாதுகாப்பிற்காக மரத்தில் ஏறிக் கொண்டது.
322
 

உலகத்து நாட்டார் கதைகள்
234. ஒன்று, இரண்டு, மூன்று.
தன்னைப்போலச் சக்தி படைத்தவர்கள் உலகில் வேறு எவருமில்லையென்று தன் இதயத்தில் நம்பிக்கையை வளர்த்திருந்தார், செல்வந்தரும் சக்தி படைத்தவருமான ஒரு ராஜா. ஆனால் அவர் அதைப்பற்றி எவருக்கும் கூறவில்லை. தாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று மற்றவர் கள் ஊகித்துள்ளார்களா? என ஒரு நாள் அவர் அறிய முயன் றார். ஆகவே அவர் தனது உத்தியோகத்தர்கள், வேலைக் காரர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து, ‘என்னுடைய மனதில் என்ன எண்ணியிருக்கின்றேன், சொல்ல முடியுமா?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களில் அநேகர் தம் ஊகங்களைக் கூறினார்கள். ஆனால் ஒருவராலும் ராஜா வைத் தங்களுடைய பதில்கள் மூலம் திருப்திப்படுத்த முடிய வில்லை.
இதன்படி, தம்முடைய மனதிலுள்ளதை ஊகிக்கக் கூடிய யாராவது ஒருவரைக் கண்டு பிடித்துத் தனக்குத் தரும்படி தம்முடைய மந்திரிக்குக் கட்டளையிட்டார். இந்த மேதையைக் கண்டு பிடிப்பதற்குச் சரியாக ஒரு மாத கால அவகாசத்தை மந்திரிக்குக் கொடுத்தார். ஆனால் எதுவித பலனுமில்லை. காலக்கெடு கிட்டக்கிட்ட வந்துகொண்டி ருக்கையில் மந்திரி நம்பிக்கையிழந்து அவஸ்தைப்பட்டார். ஆனால் காலக்கெடு முடிந்தது. குறித்த தினத்தன்று சரியான மனிதனைத் தான் கண்டுபிடித்துத் தருவேன் என்று அவரு டைய மகள் அவரைத் தேற்றினாள். 'சரி என்ன நடக்கப் போகின்றதென்று இருந்து பார்ப்போம்!" என்று கூறி விட்டு
323

Page 174
நீர்வை பொன்னையன் அந்த வேலையைச் செய்யும் பொறுப்பைத் தன்னுடைய மகளிடம் ஒப்படைத்தார்.
குறிக்கப்பட்ட அந்தத் தினம் வந்தபொழுது அவரு டைய மகள் ஒரு முட்டாள் மனிதனைத் தன் வீட்டுக்குக் கொண்டு வந்தாள். அந்த முட்டாள் ஒரு இடையன். அவனை ராஜாவிடம் கூட்டிச் செல்லும்படி அவள் தனது தந்தைக்குக் கூறினாள். தனது மகளுடைய ஆள் தேர்வினால் அவர் பெரும் திகைப்படைந்தார். ஆனால் அவருடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் அந்த முட்டாள் இடையன் சரியான பதிலைக் கொடுப்பான் என்று மகள் வலியுறுத்திக் கூறினாள். மந்திரி வேறு எந்த மாற்று வழியையும் கண்டு பிடிக்க முடியாமல் தன்னுடைய மகளுடைய முடிவை நம்பி ஏற்றுக் கொண்டு அந்த இடையனை அரசவைக்குக் கூட்டிச் சென்றார்.
அரசவை ஏற்கனவே கூடி விட்டது. ராஜா மந்திரிக்காகக் காத்திருந்தார். மந்திரி இடையனை ராஜாவின் முன் கொண்டு நிறுத்தினார். இடையன் ராஜாவைப் பார்ப்பதற்குத் தன்னுடைய கண்களை உயர்த்தியபொழுது, ராஜா தன்னு டைய ஒரு கை விரலை உயர்த்திக் காட்டினார். இதற்கு இடையன் தன்னுடைய இரண்டு விரல்களையும் உயர்த்திக் காட்டினான். இதன்பின் ராஜா தன்னுடைய மூன்று விரல் களையும் உயர்த்திக் காட்டினார். ஆனால் இதற்கு அந்த இடையன் தன்னுடைய தலையைக் கடுமையாக ஆட்டி விட்டு வெளியே ஒடுவதற்கு முயற்சித்தான். உடனே ராஜா சிரித்துக் கொண்டதுடன் பெருமகிழ்ச்சி அடைந்தார். அத் தகைய ஒரு கெட்டிக்கார மனிதனைத் தனக்குக் கூட்டிக் கொண்டு வந்து தந்தமைக்காக மந்திரிக்குப் பெறுமதி கூடிய சன்மானத்தையும் வழங்கினார்.
மந்திரி திகைத்தார். என்ன நடந்தது? என்று அவரால் உணர்ந்து பார்க்க முடியவில்லை. அதைத் தனக்கு விளக் கும்படி அவர் ராஜாவை இரந்து வேண்டினார்.
324

உலகத்து நாட்டார் கதைகள் 'நான் ஒரு விரலை உயர்த்தியபொழுது ‘நான்ஒருவன் மாத்திரமா அரசன்?’ என்று அவனைக் கேட்டேன். அவன் இரண்டு விரல்களை உயர்த்திப் பிடித்ததன் மூலம் 'கடவு ளும் இருக்கின்றார்!’ என்று எனக்கு ஞாபகப்படுத்தினான். அவரும் என்னைப்போல வலிமை படைத்தவர் என்ற அர்த் தத்துடன் அவன் அப்படிச் செய்தான். பின்னர், "அப்படி யாரா வது மூன்றாவது வலிமையுடையவன் உள்ளானா?" என்று நான் அவனைக் கேட்ட பொழுது 'அப்படி மூன்றாவதாய் ஒருவன் இருக்கிறான்" என்பதை அவன் கடுமையாக மறு தலித்தான். உண்மையாக இந்த மனிதன்தான் என்னுடைய எண்ணங்களைச் சரியாகப் புரிந்து கொண்டவன். நான் மாத்திரம் தான் வலிமை படைத்தவன் என்று இது காலவரை நான் நினைத்து வந்துள்ளேன். ஆனால் என்னைப்போல் வலிமை படைத்த கடவுளுமிருக்கின்றார் என்பதையும், ஆதலால் அப்படி மூன்றாவது ஆள் இல்லை என்பதையும் அவன் எனக்கு ஞாபகப்படுத்தினான்.” என்றார் ராஜா.
பின்னர் அவர்கள் எல்லோரும் அவரவர் வழியில் சென்ற னர். ராஜாவுக்கும் அவனுக்குமிடையில் என்ன பரிமாற்றம் செய்யப்பட்டது? என்று அந்த முட்டாள் இடையனை அன்றிரவு மந்திரி கேட்டார். 'எனக்கு மூன்று ஆடுகள்தான் சொந்தமாக இருக்கிறது எஜமான். நீங்கள் ராஜாவுக்கு முன்பு கொண்டு போய் நிற்பாட்டிய பொழுது அவர் ஒரு விரலைக் காட்டினார். அதன் அர்த்தம் என்னவென்றால் என்னுடைய ஆட்டில் ஒன்று அவருக்குத் தேவைப்பட்டது. அவர் ஒரு பெரிய ராஜாவாக இருப்பதால் நான் அவருக்கு இரண்டைக் கொடுக்க விரும்பினேன். ஆனால் அவர் மூன்று விரல் களைக் காட்டிய பொழுது அவர் என்னிடமுள்ள மூன்று ஆடுகளை அதாவது எல்லா ஆடுகளையும் கேட்கின்றார். அவர் அளவுக்கு அதிகமாகக் கேட்கின்றார் என நான் எண்ணி னேன். ஆகவே நான் அப்பாலே ஓட முயன்றேன்’ என்று அந்த முட்டாள் இடையன் விளக்கினான்.
Ο
325

Page 175
நீர்வை பொன்னையன்
235. மாறுபட்ட வாழ்க்கை
நாம் இறக்கும் பொழுது எங்களுக்கு என்ன நடக்கின் றது? என்பதைப்பற்றிச் சில விடயங்களை அறிந்து கொள் வதற்கு ஒரு பிராமணன் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப் பிடித்துத் தெய்வங்களைப் பிரார்த்தனை செய்தான். இறுதியில் தெய்வங்கள் அவனுக்கு அனுசரணை வழங்கின. ஒரு நாள் காலையில் அவன் ஆற்றில் நீராடிக் கொண்டி ருக்கையில், அவனுடைய ஆத்மா அவனை விட்டு வெளி யேறி ஒரு தீண்டத் தகாத, செருப்புகளைத் தைப்பவனு டைய குழந்தையின் உடலில் புகுந்து கொண்டது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி, தந்தையாக வந்தான். இதன் பின்பு அவன், தான் உண்மையில் ஒரு பிராமணன் என்பதைத் திடீரென அறிந்தான். ஆகவே, அவன் எல்லாவற் றையும் கை விட்டு வேறு ஒரு நாட்டிற்குச் சென்றான்.
அவன் அந்த நாட்டை அடைந்த பொழுதுதான் அந்த நாட்டின் அரசன் வாரிசின்றி இறந்தான். ஒரு வாரிசைத் தெரிவு செய்தவதற்கு ஒரு யானையையும் ஒரு இராஜாளிப் பறவையையும் அந்த நாட்டைச் சுற்றி அனுப்புவது அந் நாட்டு வழக்கமாகும். அமைச்சர்களும் மூத்த குடியினரும் அந்த வழக்கத்தின்படி யானையையும் இராஜாளியையும் அனுப்பி வைத்தனர்.
யானையும் இராஜாளியும் தெரிவு செய்கின்றவர் யாராய் இருந்தாலும் அவரை அந்த நாட்டு மக்கள் அரசனாக ஏற்றுக் கொள்வார்கள். செருப்புத் தைப்பவனின் உடலாய்க் கொண்ட பிராமணனை யானையும் இராஜாளியும் அரச 326

உலகத்து நாட்டார் கதைகள் பதவிக்குத் தெரிவு செய்தன. யானை அவன் முன் தலைகுனிந்ததுடன் அவனுடைய கையில் இராஜாளி உட்கார்ந்தது. இதன்மூலம் எல்லா மக்கள் முன்னிலையில் அவன் அரசனாகப் பிரகடனம் செய்யப்பட்டான்.
ஒருசில வருடங்களின் பின் தீண்டாச் சாதியானாகிய அந்தச் செருப்புத் தைக்கும் செம்மானின் மனைவி, அவன் எங்கிருக்கின்றான் என்று அறிய வந்து, அவனிடம் சென்று சேர்ந்து கொண்டாள். மக்கள் ஊர்க்கதை பேசத் தொடங்கி, கேள்விகளை கேட்கத் தொடங்கி, அரசன் ஒரு செம்மான் என்றும் அவனுடைய மனைவிகூட, கீழ்சாதியில் பிறந்தவள் என்றும் விரைவில் தெரிய வந்தது. இதனால் மக்கள் பெரும் கோபம் கொண்டனர். சிலர் கலகம் செய்தனர். சிலர் நாட்டை விட்டு ஓடினர். சிலர் தங்களைத் தாங்களே வதைத்துக் கொண்டனர். ஏனையோர் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் சமூகத்திலிருந்து தாம் விலக்கி வைக்கப்படுவர் என்று பீதி கொண்டனர். அரசன் இந்தக் குழப்பத்தையும் அவமானத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்தான். அவனுடைய ஆத்மா வெளியேறி யது. அந்த ஆத்மா ஆற்றங்கரையில் இது வரையும் தகனஞ் செய்யப்படாமல் விடப்பட்டிருந்த பிராமணனுடைய பிரேதத்திற்குள் உடனடியாகச் சென்று மீண்டும் புகுந்து கொண்டது. பிராமணன் தன்னுடைய வீட்டிற்குச் சென்றான். அவனுடைய மனைவி கதவடியில் அவனைக் கண்ட பொழுது, ‘நீங்கள் திரும்பி வந்து விட்டீர்கள்! எவ்வளவு விரைவாக நீங்கள் நீராடிவிட்டு உங்களுடைய காலைப் பிரார்த்தனையை முடித்து விட்டீர்கள்!’ என்று கூறினாள். பிராமணன் ஒன்றுமே கூறவில்லை. அவன் ஆச்சரியப் பட்டுப் பார்த்து வியப்புற்றுக் கூறினான். “ஒருவர் இறக்கும் பொழுது இது நடக்கக்கூடிய காரியமா? இவை எல்லாம் உண்மையில் நடந்தனவா? அல்லாவிட்டால் நான் கனவு கண்டேனா?”
327

Page 176
நீர்வை பொன்னையன்
இது நடந்து ஒரு வாரத்தின்பின், ஒரு மனிதன் அந்தப் பிராமணனுடைய வீட்டு முற்றத்தில் வந்து நின்றான். ஐந்து தினங்களாகத் தான் ஒன்றும் உண்ணவில்லை என்று கூறி உணவு தரும்படி இரந்து கேட்டான். ஒரு செம்மான் அரச னாக வந்து முழு ராஜ்யத்தையும் மாசுபடுத்திவிட்டதால், தன்னுடைய நாட்டிலிருந்து தன்னால் முடிந்தவரை வேகமா கத் தான் ஓடி வந்துவிட்டதாக அவன் கூறினான். தோஷத்தி லிருந்து தப்பித்துக் கொள்வதற்கு எல்லா மக்களும் நாட்டி லிருந்து வெளியே ஒடுகின்றார்கள் அல்லது தங்களைத் தாங்களே எரித்துக் கொள்கின்றார்கள் என்றும் அவன் சொன்னான்.
அந்தப் பிராமணன் அவனுக்குச் சிறிது உணவைக் கொடுத்தான். ஆனால் அவன் ஒன்றும் கூறவில்லை. “இத்த கைய விஷயங்கள் எப்படி நடக்க முடியும் ?’ என்று அவன் எண்ணினான். "நான் ஒரு செம்மானாக இருந்து ஒரு குடும் பத்தை நடத்தினேன், பல வருடங்களாக! அதன் பின் அநேக வருடங்களாக நான் ஒரு அரசனாக ஆட்சி செய்தேன். இது ஒரு கனவு என்று நான் இப்பொழுதுதான் நம்பத் தொடங்கி யிருந்தேன். அதற்கிடையில் இந்த மனிதன் என்னுடைய வீட்டிற்கு வந்து அந்தச் சம்பவங்கள் உண்மையென உறு திப்படுத்துகின்றான். ஆயினும் இன்று காலை எமது வீட்டி லிருந்து நான் நீண்டநேரமாக இல்லாமலில்லை என்று மனைவி கூறுகின்றாள். அவளை நான் நம்புகின்றேன். ஏனென்றால் அவள் ஒருநாள்கூட முதுமையடைந்தவளாகத் தென்படவில்லை. அது மாத்திரமல்ல, இந்த இடம்கூட எந்த வகையிலும் மாற்றமடையவில்லை. ஒருவேளை நேரம் வெவ்வேறு வேகங்களில் அசையக்கூடியதோ? ஒரு குறிப் பிட்ட நிலைமையில் ஒருநாள் ஒரு யுகத்திற்குச் சமமா யிருக்குமோ? வேறு சில நிசீலைமைகளில் ஒரு யுகம் ஒரு நாளுக்கு சமமாயிருக்குமோ? அப்படி ஒருவேளை இருக்கக் கூடும்!" இப்படி அவன் யோசித்தான்.
Ο
328

உலகத்து நாட்டார் கதைகள்
236. சொல்லாத கதைகள்
கொந்த் என்னும் ஒரு விவசாயி தன்னுடைய வயலில் வேலை செய்வதற்கு ஒரு கூலியாளை வைத்திருந்தான். ஒரு நாள் கொந்தின் மகனும் அவனது மனைவியும் வசிக் கின்ற தூரத்திலுள்ள கிராமத்திற்கு கொந்தும் கூலியாளு மாகச் சென்றனர். செல்லும் வழியில் வீதியோரமாக உள்ள ஒரு சிறிய குடிசையில் அவர்கள் தங்கினார்கள். தங்கள் இரவு உணவைச் சாப்பிட்ட பின்பு 'எனக்கு ஒரு கதை சொல்லுங் கள்’ என்று கொந்தின் உதவியாளன் கேட்டான். ஆனால் கொந்த் களைப்புற்றிருந்தபடியால் அவன் தூங்கி விட்டான். அவனுடைய உதவியாளன் விழிப்பாயிருந்தான். அவனு டைய எஜமானுக்கு நான்கு கதைகள் தெரியும். அவற்றைச் சொல்லுவதற்கு அவன் கடும் சோம்பலுள்ளவனாயிருக் கின்றான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
கொந்த் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபொழுது அவனு டைய வயிற்றிலிருந்து நான்கு கதைகள் வெளியேறி அவனுடைய உடல்மீது அமர்ந்துகொண்டு ஒன்றுடன் மற்றது கதைக்கத் தொடங்கின. அவை கடும் கோபமுடை யவையாக இருந்தன. “இந்தக் கொந்திற்கு, சிறுபராயத்தி லிருந்தே எங்களை நன்றாகத் தெரியும். ஆனால் எங்களைப் பற்றி அவன் ஒரு பொழுதும் ஒருவருக்கும் சொல்ல மாட்டான். அவனுடைய வயிற்றுக்குள் எதுவித பிரயோசன முமின்றி நாம் ஏன் தொடர்ந்து இருக்க வேண்டும்? அவனை நாங்கள் கொன்று போட்டு வேறு யாராவது ஒருவருடன்
329

Page 177
நீர்வை பொன்னையன்
இருப்போம்" என்று அவை கூறிக்கொண்டன. அவனுடைய உதவியாளன் நித்திரை கொள்வது போலப் பாசாங்கு செய்து கொண்டு அவை கூறிய சகலவற்றையும் மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டு கிடந்தான்.
முதலாவது கதை கூறியது, “கொந்த் தனது மகனுடைய வீட்டைச் சென்றடைந்து, தனது இரவுச் சாப்பாட்டை உண்பதற்கு உட்காருகையில், அவனுடைய முதல் வாய் உணவைக் கூரிய ஊசிகளாக நான் மாற்றி விடுவேன். அதை அவன் விழுங்கும் பொழுது அந்த ஊசிகள் அவனைக் கொன்று விடும்.’
இரண்டாவது கதை சொன்னது, 'அவன் அதிலிருந்து தப்பித்துக் கொண்டால் வீதியோரத்தில் நான் ஒரு பெரிய மரமாக மாறி, அவன் அந்த வழியால் சென்று கொண்டி ருக்கையில் அவன்மேல் விழுந்து அவனைக் கொல்வேன்.” மூன்றாவது கதை கூறியது, 'அதுவும் வேலை செய்ய வில்லையென்றால் நான் ஒரு பாம்பாக மாறி அவனுடைய காலடிக்கு ஓடிச் சென்று அவனைக் கடிப்பேன்."
நான்காவது கதை கூறியது, “அதுவும் பலிக்காவிட்டால் அவன் ஆற்றைக் கடக்கையில் தண்ணின் ஒரு பெரிய அலையைக் கொண்டு வந்து நான் அவனை அடித்துச் செல்வேன்.”
அடுத்த நாள் கொந்தும் அவனது உதவியாளனும் அவனுடைய மகன் வீட்டைச் சென்றடைந்தனர். அவனது மகனும் மருமகளும்அவனை வரவேற்று அவனுக்கு உணவு தயாரித்து அவன் முன் அதை வைத்தனர். ஆனால் கொந்த் தனது முதலாவது வாய், உணவை உதடு வரை உயர்த்திக் கொண்டு செல்கையில், அவனுடைய உதவியாள் அவனு டைய கையிலிருந்த அந்தக் கவளத்தைத் தட்டி வீழ்த்தி யதுடன் 'அந்த உணவில் பூச்சியுள்ளது” என்று கூறினான்.
330

உலகத்து நாட்டார் கதைகள் அவர்கள் அதைப் பார்த்தபொழுது அந்தச் சோறு முழுவதும் கூரிய ஊசிகளாக இருப்பதைக் கண்டனர்.
மறுநாள் கொந்தும் அவனுடைய உதவியாளனும் திரும்பிச் செல்வதற்குத் தமது பிரயாணத்தை ஆரம்பித்தனர். அவ்வழியில் வீதிக்குக் குறுக்காக ஒரு பெரிய மரம் சரிந்து நின்றது. ‘அந்த மரத்தைத் தாண்டி நாம் வேகமாக ஒடு வோம்’ என்று அவனுடைய வேலையாள் கூறினான். அவர் கள் அந்த மரத்தை வேகமாகக் கடந்தபொழுது பெரும் சத்தத்துடன் அந்த மரம் சரிந்து வீழ்ந்தது. அவர்கள் அருந் தப்புத் தப்பினார்கள். சிறிது நேரத்தின் பின் ஒரு பாம்மை அவர்கள் கண்டனர். வேலையாள் அதை ஒரு தடியினால் உடனே அடித்துச் சாகடித்தான். அதன் பின் அவர்கள் ஆற்று க்கு வந்தனர். அவர்கள் ஆற்றைக் கடக்கையில் ஒரு பெரிய அலை அவர்களை நோக்கி வேகமாக வந்தது. ஆனால் வேலையாள் கொந்தைப் பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து விட்டான்.
அவர்கள் ஓய்வெடுப்பதற்கு ஆற்றங்கரையில் அமர்ந் திருந்தினர். "நான்கு தடவைகள் நீ என்னைக் காப்பாற்றியுள் ளாய். எனக்குத்தெரியாக சில விஷயம் உனக்குத் தெரியும். என்ன நடக்கவிருந்தது என்பதைப்பற்றி நீ எப்படித் தெரிந்து கொண்டாய்?" என்று கொந்த் அவனைக் கேட்டான். “நான் அதை உமக்குச் சொன்னால் நான் ஒரு கல்லாக மாறி விடுவேன்’ என்று வேலையாள் சொன்னான். 'ஒரு மனிதன் எப்படிக் கல்லாக மாற முடியும்? சொல்’ என்று கொந்த் கூறினான். 'நல்லது நான் கூறுகின்றேன். ஆனால் நான் ஒரு கல்லாக மாறும் பொழுது உமது மருமகளின் குழந்தையைக் கொண்டு வந்து எறியுங்கள். நான் மீண்டும் மனிதனாக மாறி விடுவேன்’ என்று வேலையாள் கூறினான்.
ஆகவே வேலையாள் தனது கதையைக் கூறினான்.
331

Page 178
நீர்வை பொன்னையன் உடனே அவன் கல்லாக மாறினான். கொந்த் அவனை அந்த இடத்தில் விட்டுவிட்டுத் தனது வீட்டுக்குச் சென்றான். சிறிது நேரத்தின் பின் அவனுடைய மருமகள் அதைப்பற்றிக் கேள்விப்பட்ட பொழுது தானாகவே அந்த இடத்திற்குச் சென்று தானாகவே அந்தக் கல்லுக்கு எதிராகத் தன் பிள்ளையை எறிந்தாள். வேலையாள் மீண்டும் உயிர் பெற்றான்.
ஆனால் கொந்த் அந்த வேலையாளைத் தனது வீட்டில் வைத்திருக்க மறுத்ததுடன் அவனை வேலையிலிருந்து நீக்கினான். அதனால்தான் இப் பிரதேசத்தில் கொந்தை மக்கள் ஒருவரும் நம்புவதில்லை. ஒரு கொந்தை அல்லது ஒரு பெண்ணை அல்லது கனவை ஒருவரும் நம்புவதில்லை
என்று ஒரு பழமொழி உண்டு.
Ο
332
 

உலகத்து நாட்டார் கதைகள்
237. தங்கநிறப் பறவை
தங்க நிறப் பறவையொன்று மரக்கிளையில் இருக்கை யில் "எனக்குப் பொருத்தமான தங்க நிற உணவு எப்போது கிடைக்கப் போகின்றது?" என்று ஏங்கியது.
இதைப்பற்றி அப்பறவை சிந்தித்துக் கொண்டிருக்கை யில், ஒரு பலாமரத்தில் பலாப்பழம் ஒன்று நன்றாகப் பழுத் திருந்ததை அது அவதானித்தது. அவ்வேளை ஒரு காகம் அங்கு வந்து அப்பழத்தைக் கொத்திக் குடைந்து தின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்து தங்க நிறப் பறவை மகிழ்ச்சியடைந்து சிரித்தது. பழத்தை காகம் தின்றுவிட்டு பறந்து சென்ற பின், பறவை அப்பழத்திற்கு அண்மையில் சென்று அதில் ஒரு பகுதியை கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
தன் உடலின் நிறத்திற்குப் பொருத்தமான நிறத்தை யுடைய உணவு கிடைத்த மகிழ்ச்சியில் பறவை பாடத் தொடங்கியது.
ஒரு செவ்விளநீர் மரம் அப்பறவையின் கண்ணில் பட்டது. அந்த மரத்திலுள்ள தென்னம் பூக்களும் இளநீரும் தனக்குக் கிடைத்த உணவும் தன் உடல் நிறமும் ஒரே தங்க நிறமானவையாக இருக்கின்றன என்ற நினைப்பில் பறவை ஆனந்தப்பட்டது.
தென்ன மரத்திலிருந்தபடியே தான் வைத்திருக்கும் பலாப்பழத்தை அது உண்டுகொண்டிருக்கையில், ஆகாயத் 333

Page 179
நீர்வை பொன்னையன் தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு கழுகு தன் உணவிற் காக அந்தத் தங்கநிறப் பறவையை பிடித்துச் சென்றது.
கழுகு அந்தப் பறவையைக் கொண்டு பறந்து செல்கை யில், தன் உடல் தோற்றத்தை எண்ணித் தற்பெருமை கொண்டு செய்த பெரும் தவறிற்காக மனம் வருந்திக் கொண்டிருக்கையில் மேலே, மேலே உயரப் பறந்து கொண்டிருந்த கழுகு, தங்க நிறப் பறவையைக் கொன்று தின்றது.
Ο
334
 

உலகத்து நாட்டார் கதைகள்
238. நிறைவேற்ற இயலாத காரியம்
ஒரு கழுகு குயிலொன்றிற்கு வானம்பாடியின் அந்தஸ் திற்கு பதவி உயர்வு கொடுத்தது. அதனுடைய புதிய பதவி யினால் குயில் தற்பெருமையடைந்தது. அது ஒரு மரக்கிளை யிலிருந்து பாட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அது தன்னைச் சுற்றி ஒரு பார்வையை வீசியது. அதைச் சுற்றி பறவைகள் பறந்து கொண்டிருந்தன. சில பறவைகள் குயிலைப் பார்த்து கேலி பண்ணிச் சிரித்தன. சில பறவைகள் குயிலைத் திட்டின. குயிலுக்குக் கோபம் வந்தது. அது கழுகிடம் விரைந்து சென்றது. பறவைகளுக்கு எதிராக அது
"என்மீது கருணை காட்டுங்கள். தங்களது ஆணை யின்படி இந்தக் காடுகளுக்கு என்னை வானம்பாடியாக பதவி உயர்வு தந்து நியமித்தீர்கள். ஆனால் இப்பறவைகள் எனது பாட்டைக் கேட்டு, என்னைக் கேலி பண்ணிச் சிரிக்கின்றன. எனக்கு அவமானமாக இருக்கின்றது." என்று குயில் மன வேதனையுடன் கூறியது.
"நண்பனே! நான் ஒரு அரசன். ஆனால் நான் கடவுளல்ல. ஒரு குயிலுக்கு வானம்பாடி என்ற பட்டத்தைத் தான் என்னால் சூட்ட முடியும். ஆனால் ஒரு குயிலிலிருந்து ஒரு வானம்பாடியை என்னால் உருவாக்க முடியாதே" என்று கழுகு கூறியது.
Ο
335

Page 180
நீர்வை பொன்னையன்
239. விடாமுயற்சி
ஒரு மனிதன் ஒரு நாள் கடலில் படகு ஒட்டிக் கொண்டிருந்தான். அவ்வேளை அவனுடைய விலையுயர்ந்த முத்து ஒன்று கடலில் தவறி விழுந்துவிட்டது. உடனே அவன் கரைக்கு விரைந்து வந்தான். அவரை கரையில் நின்ற படியே கடலிலுள்ள நீரை அள்ளித் தரையில் ஊற்றிக் கொண்டிருந்தான். மூன்று நாட்களாக அவன் தொடர்ச்சியாக கடல் நீரை வெளியே இறைத்துக் கொண்டிருந்தான்.
நான்காவது நாள் கடலிலிருந்து ஒரு கடல் தேவதை வெளியே வந்தது. "நீ இந்த கடல் நீரை ஏன் வெளியே இறைக்கின்றாய்?" என்று கடல் தேவதை அந்த மனிதனைக் கேட்டது. "எனது முத்து ஒன்று கடலில் தவறி விழுந்து விட்டது. அந்த முத்தை எடுப்பதற்காக இந்தக் கடலிலுள்ள நீரை வெளியே இறைத்துக் கொண்டிருக்கின்றேன்" என்று அந்த மனிதன் பதிலளித்தான். "நீர் இறைப்பதை நீ எப் பொழுது நிற்பாட்டுவாய்?" என்று தேவதை அந்த மனித னைக் கேட்டது.
"கடல் நீர் வற்றிய பின்னர்தான், நான் நீர் இறைப்பதை நிறுத்துவேன்" எனக் கூறினான்.
கடல் தேவதை உடனே கடலுக்குள் மூழ்கி அந்த மனி தனுடைய முத்தை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தது.
O
336

உலகத்து நாட்டார் கதைகள்
240. நம்பிக்கைத் துரோகம்
காட்டில் கடும் வரட்சியினால் குடிப்பதற்கு ஒரு சொட்டுத் தண்ணிர் கூடக் கிடைக்கவில்லை. இதனால் கடும் தாகமடைந்த நாக பாம்பொன்று அயல் கிராமத்திற்கு சென்றது. அங்கு ஒரு வீட்டிலுள்ள குழந்தையொன்று பெரிய பாத்திரத்திலுள்ள தண்ணில் விளையாடிக் கொண் டிருந்தது. அதனுடைய தாய் வீட்டிலில்லை
அந்த வீட்டிற்குச் சென்ற நாக பாம்பு பாத்திரத்திலுள்ள தண்ணிரைக் குடித்தது. அப்பொழுது அந்தக் குழந்தை தண்ணிரைக் குடித்துக்கொண்டிருந்த பாம்பின் தலையில் ஒரு தேங்காய்ச் சிரட்டையினால் தண்ணிரை அள்ளி ஊற்று கின்றது. அத்துடன் அது தனது கையாலும் காலாலும் பாம்பை அடித்து விளையாடியது. பாம்பு குழந்தையை ஒன் றும் செய்யவில்லை. அது வயிறு நிறையத் தண்ணிரைக் குடித்துவிட்டு சென்று விட்டது.
இரண்டு மூன்று நாட்களாக பாம்பு அந்த வீட்டிற்கு சென்று தண்ணிர் குடித்து விட்டு வந்தது. ஒரு நாள் அப்படிச் சென்று கொண்டிருக்கையில் ஒரு விரியன் பாம்பு வழியில் அதைச் சந்தித்து. "நண்பனே நீ எங்கே தண்ணி குடித்தாய்?"என்று நாகத்தைக் கேட்டது.
"நான் அப்படி ஓரிடத்திலையும் தண்ணி குடிக்கேல் லையே. இந்த வரட்சி காலத்திலை தண்ணி எங்கு கிடைக் கப் போகுது" என்று நாகம் கூறியது.
'நண்பா! நீ அப்பிடிச் சொல்லாதை. நீ எங்கையோ தண்ணி குடித்திருக்கிறாய், எங்கை குடிச்சனி எண்டு 337

Page 181
நீர்வை பொன்னையன் எனக்குச் சொல்லு" விரியன் வற்புறுத்திக் கேட்டது.
நாகம் தொடர்ந்து சில நாட்கள் தான் தண்ணிர் குடித்த இடத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்ல. விரியன் பாம்பின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் இறுதியில் அந்த இடத்தைக் கூறியது.
"அந்த வீட்டுக்கு நான் சென்றேன். அங்கு ஒரு குழந்தை ஒரு பெரிய பாத்திரத்திலுள்ள தண்ணில் விளை யாடிக் கொண்டிருந்தது. நான் மெதுவாகச் சென்று தண்ணிரைக் குடித்தேன். குழந்தை என் தலையில் தண் னிரைக் கொட்டியது. அது தன்கை காலால் என்னை அடித்தது. நான் குழந்தைக்கு ஒண்டும் செய்யவில்லை. நான் தண்ணியைக் குடித்துவிட்டு வந்துவிட்டேன். அதைப் போல நீயும் அங்கே போய் தண்ணியைக் குடித்துவிட்டு வா. உன்னால் அது இயலாது. எப்படியெண்டாலும் நீ ஒரு தடவை முயற்சித்துப் பார். ஆனால் குழந்தைக்கு ஒரு கெடுதியும் செய்து விடாதை."
விரியன் பாம்பை அந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அதன் பின்னால் சென்று நாகம் மறைந்திருந்து பார்த்தபடியே இருந்தது.
விரியன் தண்ணிர் குடிக்கின்றது. குழந்தை பாம்பின் தலையில் நீரைக் கொட்டுகின்றது. தன் கையாலும் காலா லும் பாம்பை அடிக்கின்றது. வயிறு நிறைய தண்ணிரைக் குடிக்கும்வரை விரியன் குழந்தைக்கு ஒன்றும் செய்ய வில்லை. தண்ணி குடித்து முடிந்தபின் விரியன் குழந்தை யின் தலையில் கடித்தது. குழந்தை மயங்கி விழுந்தது.
நாகம் உடனே ஓடிவந்து குழந்தையின் தலையிலுள்ள விஷத்தை உறுஞ்சி எடுத்தது. குழந்தைக்கு உணர்வு திரும்பி வந்தது. நாகம் விரியன் பாம்பைத் துரத்திச் சென்று அதனைக் கடித்துச் சாகடித்தது. அன்றிலிருந்து விரியனும் நாகமும் கடும் எதிரிகளாயிருந்து வருகின்றன.
Ο
338

உலகத்து நாட்டார் கதைகள்
241. அவமதிப்பு
பயங்கரமான குரலையுடைய கழுதையை நண்பனாகக் கொண்டிருந்தது ஒரு சிங்கம். ஒரு நாள் அவை இரண்டும் காட்டிற்குள் பக்கம் பக்கமாக நடந்து சென்று கொண்டி ருந்தன. "உனக்கு ஒரு நல்ல இனிமையான நண்பன் கிடைத் திருக்கின்றான்! இந்தக் கழுதையின் பக்கத்தில் நடந்து செல்ல உனக்கு வெட்கமில்லையா?" மரத்தின் மேலேயிரு ந்த ஒரு காகம் கேலியாக சிங்கத்தைக் கேட்டது. "என்னால் பயன்படுத்தக்கூடியவர் எவராயிருந்தாலும் அவரை என் பக்கத்தில் நடந்து செல்வதற்கு நான் அனுமதிப்பேன்" என்று சிங்கம் நிதானமாகப் பதிலளித்தது.
O
339

Page 182
நீர்வை பொன்னையன்
242. ஏமாற்றம்.
வயோதிபம் காரணமாக, ஒரு குரங்கின் கண் பார்வை மிகவும் பலவீனமடைந்தது. "இது ஒரு துரதிருஷ்டமான விடயமல்ல. அது மாத்திரமில்லை. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விசயமுமல்ல" என்று மனிதர்கள் சாவதனமாகக் கூறியது குரங்கிற்குக் கேட்டது. "கண்பார்வை குறைந்து வருவருவதற்கு மூக்குக் கண்ணாடியைக் கொடுத் தால் எல்லாம் சரி. பார்வை சரியாகிவிடும்." என்று குரங்கு அறிந்தது. உடனே அது அரை டசின் கண்ணாடிகளை வாங்கியது. கண்ணாடிகளை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தது. பின்னர் அது சில கண்ணாடிகளை தனது உச்சந்தலையில் வைத்தது. சில வற்றை தன் வாலில் கட்டியது. சில கண்ணாடிகளை முகர்ந் தது. அவற்றை தன் நாக்கினால் நக்கிப் பார்த்தது. ஆனால் அந்த மூக்குக் கண்ணாடிகள் குரங்கின் கண் பார்வையில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
"மனிதர்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் கேட்பவர் கள் சரியான முட்டாள்கள். அவர்கள் மூக்குக் கண்ணாடி பற்றி சொன்னவை எல்லாமே படு பொய்யேயன்றி வேறொ ன்றுமேயில்லை" என்று கூறி அந்த முட்டாள் குரங்கு மூக்குக் கண்ணாடிகளை கற்பாறைகள் மீது வீசியடித்தது அது. மூக்குக் கண்ணாடிகள் அனைத்தும் நொருங்கித் தூளாகின.
O
340

உலகத்து நாட்டார் கதைகள்
243. தண்டனை
ஒரு பல்லியும் உடும்பும் நண்பர்களாயிருந்தன. அவை நட்பாயிருக்கையிலேயே இரண்டும் சச்சரவு பட்டு, தங்களு டைய வால்களால் ஒன்றை மற்றது தாக்கியது. ஒன்றை மற்றது அடித்துக் கொள்கையில் பல்லி தோல்வி கண்டது. அது புறமாய் விழுந்து கிடந்து மூச்சு வாங்கிக் கொண்டி ருந்தது.
அந்த இடத்தில் ஒரு கறையான் புற்றுக் கிடந்தது. உடும்பு அந்தப் புற்றுக்குள் நுழைந்து கொண்டது.
தூரத்திலே வசிக்கின்ற வேடன் ஒருவன் வேட்டைக்குச் சென்றிருந்தான். வேட்டையாடியும் அவனுக்கு எதுவித இரையும் கிடைக்காமல் திரும்பி வந்து கொண்டிருந்தான்.
"நண்பனே எங்கே போகின்றாய்?" என்று பல்லி அவனைக் கேட்டது.
"நான் வேட்டைக்குப் போனேன். எனக்கு ஒரு இரை யும் கிடைக்கவில்லையே" என்று வேடன் கூறினான்.
"உடும்பு ஒன்று இந்தப் புற்றுக்குள் நுழைந்து விட் டது. புற்றுக்குள் இருக்கின்றது. புற்றை வெட்டி அந்த உடும்பை பிடித்துச் செல்லு" என்று பல்லி கூறியது.
வேடன் தனது கிராமத்துக்குச் சென்று ஒரு புற்று வெட்டியை எடுத்து வந்தான். அவன் புற்றை வெட்டத் தொடங்கினான். அரைநாள் முழுவதும் அவன் அந்தப்
341

Page 183
நீர்வை பொன்னையன் புற்றை வெட்டினான். மிக ஆழமாக வெட்டியும் அவனால் அந்த உடும்பைப் பிடிக்க முடியவில்லை. மிகச் சிரமப்பட்டு வெட்டியும் இரை கிடைக்காததனால் வேடன் கோபம் கொண்டான். அந்தப் புற்றுவெட்டியினால் அந்தப் பல்லியை அடித்துக் கொன்றான்.
Ο
342
 

உலகத்து நாட்டார் கதைகள்
244. குருட்டுக் கோழி
ஒரு கோழி தனது கண்பார்வையை இழந்து விட்டது. அது தனது உணவைத் தேடுவதில் தன் கால்களால் நிலத் தைக் கிளறுவதைப் பழக்கமாக்கிக் கொண்டது. அக் கோழி கண் பார்வையை இழந்திருந்தாலும் சுறுசுறுப்பாகவே தன் உணவைத் தேடுவதில் ஈடுபட்டிருந்தது. குருட்டுக் கோழி சுறுசுறுப்பாக நிலத்தைக் கிளறுகின்ற வேளையில் கிடைக் கின்ற உணவை, கூர்மையான கண்பார்வையுடைய கோழி எதுவித பிரயாசையுமில்லாமல் தட்டிப் பறித்து உண்டு வந்தது. மற்றொருவருடைய உழைப்பின் பயனை, பார்வை யுடைய கோழி கஷ்டப்பட்டு உழைக்காமல் சுலபமாக அனுபவித்துக் கொண்டிருந்தது. கண் பார்வையுடைய கோழி நிலத்தைக் கிளறுவதற்குப் பதிலாக தனது மிருதுவான பாதங்களைப் பாதுகாத்துக் கொண்டு மற்றவருடைய கடும் உழைப்பில் தங்கியிருந்தது. குருட்டுக் கோழி தனது, உணவுக்காக கோதுமைத் தானியத்தைப் பெறுவதற்கு நிலத்தைக் கிளறிக் கொண்டிருக்கும் வரை, விழிப்புள்ள கோழி அதன் உணவை திருடிக் கபளிகரம் செய்து கொண்டே யிருக்கும்.
O
343

Page 184
நீர்வை பொன்னையன்
245. மூடப் பறவை
ஓர் ஊரிலேயுள்ள கற்பாறையில் பட்சியொன்று முட் டைகளிட்டது. அந்தப் பட்சி அந்த முட்டைகளை அடை காத்து வருகையில் குஞ்சுகள் பொரித்தன.
ஒரு நாள் பட்சி உணவு தேடச் சென்ற பொழுது காட்டில் மீ என்ற ஒரு மரத்தைக் கண்டது. அந்த மரத்தி லுள்ள மலர்கள் சொரிந்து நிலத்தை மூடியிருந்தன. பட்சி அந்த மலர்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தெடுத்து, தான் வசிக்கின்ற பாறைக்கு எடுத்துச் சென்று அவற்றை அங்கு பரப்பியது.
"நான் உணவு தேடிக்கொண்டு திரும்பிவரும்வரை இந்த மலர்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தன் குஞ்சுகளுக்குக் கூறிவிட்டு உணவு தேடச் சென்றது பட்சி.
சூரியன் மேலே ஏறிக்கொண்டிருந்தான். அவனுடைய கடுமையான வெயில் பாறையில் பரப்பப்பட்டிருந்த மலர் களைத் தகித்தது. வெயில் சூட்டில் மலர்கள் காய்ந்து சுருண்டுவிட்டன.
உணவு தேடிக் கொண்டு திரும்பி வந்த பட்சியின் கண்களுக்கு மலர்கள் தென்படவில்லை.
என் குஞ்சுகள்தான் அந்த மலர்களைத் தின்றுவிட்டன என்று பட்சி எண்ணியது.
344

உலகத்து நாட்டார் கதைகள் "அந்த மலர்களுக்கு என்ன நடந்தது?" என்று பட்சி குஞ்சுகளைக் கேட்டது.
"நாங்கள் அவற்றைத் தின்னவில்லை. என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது" குஞ்சுகள் கூறின.
கடும் கோபம் கொண்ட பட்சி அந்தக் குஞ்சுகளை பாறையில் மோதியது. குஞ்சுகள் எல்லாம் செத்துவிட்டன.
தேவலோகத்தில் "சாகர" என்றொரு அரசனிருந்தான். அவனுடைய தாமரைச் சிங்காசனத்தில் கடுமையான சூடு ஏறியதால் அரசன் கடும் மழையைப் பொழிந்தான்.
காய்ந்த சுருண்டிருந்த மலர்கள் மழைநீரில் நனைந்து, ஊறி பொருமி அந்தப் பாறையை மூடி மறைத்தன. இதைப் பார்த்த அந்த பட்சி "ஐயோ! எனது முட்டாள்தனத்தால் என் குஞ்சுகள் எல்லாவற்றையும் சாகடித்து விட்டேனே " என்று கவலையில் கதறியழுதது.
Ο
345

Page 185
நீர்வை பொன்னையன்
246. வீம்பு
"உன்னுடைய் பலத்தையும் பருமனையும் வைத்துக் கொண்டு நீ வீறாப்புப் பேசலாம்" தீக்கோழிக்கு சிட்டுக் குருவி கூறுகின்றது; "ஆனால் என்னைப் போல நீ ஒரு திறமையுடைய, உயரப் பறக்கக்கூடிய பறவையாக ஒரு பொழுதும் இருக்க முடியாது. உன்னைப்போல என்னால் அதிக தூரத்திற்குப் பறக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் நான் உயரப் பறக்கின்றேன். அப்படி உன்னால் உயரப் பறக்கமுடியுமா? முடியவே முடியாது" என்று சிட்டுக் குருவி அமைதியாகச் சொன்னது. தீக்கோழி மெளனமா
யிருந்தது.
Ο
346
 

உலகத்து நாட்டார் கதைகள்
247. தற்பெருமை
ஒரு சிங்கம் முயலொன்றை நட்புரிமையுடன் தனது உற்ற நண்பனாக ஏற்றுக் கொண்டது.
"பரிதாபத்துக்குரிய வாழ்க்கையை நடத்துகின்றது ஒரு சேவல். அதனுடைய கூவல் சத்தம் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, உங்களை ஒடச் செய்யப் போதுமானது என்று கூறுவது உண்மைதானா?’ என்று சிங்கத்தை அந்த முயல் கேட்டது.
"அப்படிக் கூறுவது உண்மைதான். வழமையாக பெரிய மிருகங்களாகிய நாம் சில அற்ப பலவீனங்களால் பீடிக்கப் பட்டுள்ளோம் என்பது ஒரு பொதுவான உண்மை. ஒரு பன்றி யின் உறுமல் சத்தம் யானைக்கு அதிர்ச்சியையும் பயத் தையும் ஏற்படுத்துகின்றது என்பதை நீ அறிவாய் தானே" என்று சிங்கம் முயலுக்குக் கூறியது.
"உண்மையாகவா" முயல் ஆச்சரியத்துடன் கேட்டது.
"நாங்கள் நாய்களுக்கு ஏன் இவ்வளவு மோசமாகப் பயப்படுகின்றோம் என்பதை இப்பொழுதுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது" என்று முயல் வியப்புடன் கூறியது.
O
347

Page 186
நீர்வை பொன்னையன்
248. மழை முகிலின் கருணை
ஒரு நாடு வரட்சியினால் பெருமளவு பாதிக்கப்பட்டி ருந்தது. அவ்வேளை ஒரு பெரும்மழை முகில் அந்த நாட்டின் மேலாக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அந்தக் கரு முகில் அந்நாட்டைக் கடந்து சென்று கொண்டி ருந்ததேயொழிய ஒரு சொட்டு மழைத்துளியாவது அங்கு பெய்யவில்லை. இப்பொழுது அந்தக் கருமுகில் கடலுக்குள் ஒரு பெரிய பாட்டம் மழையைப் பொழிந்தது. இதைத் தொடர்ந்து அந்த முகில் அருகாமையிலுள்ள மலைக்குக் கேட்கக்கூடியதாக தனது கருணை நிறைந்த செயல்பற்றி டம்பமடித்தது. ஆனால் மலையோ பின்வருமாறு கூறியது. "உனது இத்தகைய தாராளத் தன்மையினால் நீ என்ன நன்மையைச் செய்தாய்? உனது இச்செயலைப் பார்த்து எவரால்தான் கவலைப்படாமலிருக்க முடியும்? நீ அந்த வரட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தின் மீது உனது பெரு மழையைப் பொழிந்திருந்தால் அந்த முழு நாட்டையுமே கொடிய பஞ்சத்திலிருந்து உன்னால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் கடலைப் பொறுத்த வரை, நீ அதற்கு நீரை வழங்காவிட்டாலும், அதனிடம் ஏற்கனவே தாராளமான தண்ணி இருந்துள்ளது." முகில் வெட்கித் தலை குனிந்தது.
Ο
348

உலகத்து நாட்டார் கதைகள்
249. தன்வினை . . .
ஒரு ஊரில் ஒரு இளவரசனும் இளவரசியும் இருந் தார்கள். ஒரு நாள் அவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டி ருந்தபொழுது, தனக்கு ஒரு கதை சொல்லும்படி தன் கண வனைக் கேட்டாள் இளவரசி, ஒருவருக்குமே தெரியாத கதையொன்று தனக்குத் தெரியுமென்று கூறி அதை அவன் இளவரசிக்குச் சொன்னான்.
கதையை இளவரசன் கூறிக்கொண்டிருக்கையில் அதை ஒரு பிராமணன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு தனது வீட்டிற்குச் சென்றான். ஒருவருக்கும் தெரியாத கதை ஒன்று தனக்குத் தெரியுமென்று தன் மனைவிக்குக் கூறி னான் பிராமணன். அக்கதையைத் தனக்கு சொல்லும்படி அவள் கணவனைக் கேட்டாள். அவன் கூற மறுத்தான். நீண்ட நேரம் அவள் அவனை மன்றாடி வேண்டிய பின்னர் தான் அக்கதையை அவன் மனைவிக்குச் சொன்னான்.
மறுநாள் அந்தப் பிராமணனின் மனைவி அந்தக் கதையை இளவரசிக்குக் கூறினாள். "இக்கதை உனக்கு எப்படித் தெரியும்" என்று இளவரசி அவனைக் கேட்ட பொழுது, அக்கதை தனக்கு ஏற்கெனவே தெரியுமென்று பிராமணனின் மனைவி சொன்னாள்.
இக்கதை ஒருவருக்குமே தெரியாது. தனக்கு மாத்திரம் தான் தெரியுமென்று என் கணவர் கூறினார். நேற்றுத்தான் இக்கதையை அவர் எனக்குச் சொன்னார். இன்று அதை இவள் எனக்குச் சொல்கின்றாள். அது மாத்திரமல்ல,
349

Page 187
நீர்வை பொன்னையன்
ஏற்கெனவே இக்கதை தனக்குத் தெரியுமென்று இவள் சொல்கிறாள். ஆகவே தன்னுடைய கணவன்தான் இவளு க்குச் சொல்லியிருக்க வேண்டும், தன் கணவனுக்கும் இவளுக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்று இளவரசன் மீது அவள் சந்தேகம் கொண்டாள்.
தன் கணவன் மீது சந்தேகம் கொண்ட இளவரசி, அவனுக்குத் தண்டனை கொடுக்கும் நோக்குடன் வேறு ஒரு இளவரசனுடன் தான் தொடர்பு வைத்துக் கொண்டாள். தன் மனைவி வேறு ஒருவனுடன் உறவு வைத்துள்ளாள் என் பதை அறிந்த கணவன் கடும் சினம் கொண்டான். உடனே இளவரசன் தன் மனைவியைக் கொன்றான்.
சிறிது காலத்தின் பின், என் மனைவி இப்பொழுது என் னுடனிருந்தால் எனக்கு எவ்வளவு நன்றாக இருக்கும் என்று இளவரசன் எண்ணினான். அவள் மறுபிறவியெடுத்து இப்பொழுது இந்த நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் என்று நினைத்த இளவரசன் அவளை நாடு முழுவதும் தேடி அலைந்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் மற்றைய இளவரசனைக் கண்டான். எனது மனைவியை நீ பார்த்தாயா என்று கேட்டான். நேற்று பகல் வேளை அந்தக் காட்டுப்பகுதியில் நான் அவளைக் கண்டேன் என்று மற்றைய இளவரசன் கூறினான்.
தன்னுடைய மனைவியைத் தேடி அடர்ந்த காட்டிற் குள்ளே ஆழமாக வெகுதூரம் சென்றான் இளவரசன். அப் பொழுது அங்கு வந்த கரடி ஒன்று அந்த இளவரசனை அடித்துக் கொன்றது.
Ο
350

உலகத்து நாட்டார் கதைகள்
250. வெண்கலச் சிலை
சிறந்த ஒரு சிற்பக் கலைஞன் அழகான ஒரு வெண் கலச் சிலையை வடித்திருந்தான். திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அந்த உன்னத சிருஷ்டி உருகிவிட்டது. உருகிய நிலையிலுள்ள அந்த உலோகப் பொருள் மற்று மொரு சிற்பக் கலைஞனுடைய கைக்குச் சென்றது. அந்தச் சிற்பியினுடைய மகிழ்ச்சிகரமான உளி அந்த வெண்கல உலோகத்திலிருந்து மற்றுமொரு சிலையை உருவாக்கியது. தற்போதைய சிலை முன்னைய சிலையிலிருந்து வேறுபட்ட தன்மையைக் கொண்டதாக இருந்தது. ஆனால் இச் சிலையின் வேலை நுட்பம் கலையம்சம் கொண்டதாகவும், உணர்ச்சி வெளிப்பாடு அபூர்வமானதாகவுமிருந்தது. பொறாமை என்ற அரக்கன் இந்தச் சிலையைப் பார்த்து தனது கோரப் பற்களை நெருடினான். இந்தச் சிலை பார்வை க்கு சுமாரானதாகத்தானிருக்கின்றது. ஆனால் முன்னைய சிலையின் உலோகத்தை இவன் பெற்றிருக்காவிட்டால் இந்தச் சிற்பியினால் இந்தச் சிலையை எப்படிச் செய்திருக்க முடியும்?" எனக் கூறி பொறாமைத் தீ தனது மனதைத் தேற்றிக் கொண்டது.
O

Page 188


Page 189

ஞ்ஞானம், பொருளியல், பனிட்ட பொதுமதி தவிர
ாண்டு கால முயற்சி ஒன்றின் பேறு ந்தப் பணி மிகவும் பாரியது; பரந்து