கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதயம்

Page 1


Page 2


Page 3

9 iul î
நீர்வை பென்னயன்
நவயுகப் பதிப்பகம்
uu mr p iʼi Lu T 600T ib.

Page 4
முதற் பதிப்பு: பெப்ரவரி, 1970,
நவ யுகப் பதிப்பகம்
கொழும்பு-12, குமரன் அச்சகத்தில் அச்சிடப்பெற்றது.

சமர்ப்பணம்
எமது நாட்டுத் தொழிலாளர், விவசாயிகளுக்கும், அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகப்போராடி உயிர்நீத்த வீரத் தியாகிகளுக்கும்.

Page 5
பொருளடக்கம்
உதயம்
சங்கம்
மனிதன்
ஒளி
எதிரொலி ஒரே கொடியின் கீழ் சுயம்வரம் கதங்காலிகள் துரோக பரம்பரை
திரை
ரத்தக் கடன்
1966
1963
1965
1962
1966
1968
1967
1962
1965
1953
1969

மு ன்னுரை
இலங்கையில் கடந்த சில வருடங்களாக கலை இலக்கியத் துறையில் ஒரு புதிய திருப்பம்-பிரகாசமான உதயம்-ஒன்று ஏற்பட்டுள்ளது. இது சிறு அம்சமேயானுலும் எதிர்காலத் தில் பெரும் தாக்கம் ஒன்றை ஏற்படுத்த வல்லதாக இருக் கின்றது. கடந்தகால கலை இலக்கிய வரலாற்றிலிருந்து அடிப்படையாக மாறுபட்டு குளும்சத்தில் புரட்சிகரமான, மனிதகுல வரலாற்றில் மிக மகத்தான வர்க்கமாகிய பாட் டாளி வர்க்கத்துக்கும் அதன் தலைமையிலான புரட்சிகர வெகுஜனங்களுக்கும் இது சேவை செய்யும் புதிய கலாச்சார toir (5th. இந்த ஸ்தூலமான அம்சத்தைக் கிரகித்துக் கொள்ளாவிட்டால், இன்றைய சகாப்தத்தின் கலை இலக் கியக் கடமையை எம்மால் புரிந்துகொள்ளமுடியாது.
இன்றைய சகாப்தம் ஏகாதிபத்தியம் முற்றுமுழுதான அழிவை நோக்கிச் செல்வதும், சோஷலிஸம் உலகம் பரந்த வெற்றியை நோக்கிச் செல்வதுமான சகாப்தமாகும். இது மகத்தான மாஒ சேதுங் சிந்தனை சகாப்தமாகும்; உலகம் தழுவிய புரட்சியின் வெற்றிச் சகாப்தமாகும்.
தற்கால இலங்கையிலே தோன்றியுள்ள புரட்சிகரக் கலை இலக்கியம் என்றுமில்லாத வெகுஜனத்தன்மை வாய்ந்த தாகவும் புரட்சிகர குணும்சமுள்ளதாகவும் இருப்பதன் காரணம் இலங்கையில் புரட்சிகர நிலை அபிவிருத்தி உற்றுவரு வதும் சீனுவில் நடைபெற்ற மகத்தான பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் சர்வதேசத் தாக்கமுமாகும்.

Page 6
இலங்கையின் வட பிரதேசத்தில் நிலப்பிரபுத்துவத்தின் கொடுங்கோன்மையான சாதி அமைப்பைத் தகர்த்தெறிய வீறுகொண்டு கிளம்பிய 1966 அக்டோபர் இயக்கம் இலங் கையில் புரட்சிகரப் போராட்டத்தின் சிறுபொறியாக இருந் தாலும் பிரகாசமிக்க எதிர்காலத்தைப் பளிச்சென எடுத்துக் காட்டியது. அதன் பிரவாகத்தில் பிறந்தனவே தீண்டாமை ஒழிப்புச் சித்திரக் கண்காட்சி, குடி நிலம், சங்காரம் போன்ற நாடகங்கள், புரட்சிகரப் பாடல்கள் ஆகியவை, இவற்றில் குறைபாடு ஒரளவு இருந்தபோதிலும், இவை அடிப்படை யில் கடந்த கால கலை இலக்கியத்தன்மையிலிருந்து மாறுபட் டனவாகவும், நடைமுறையில் மக்களுக்குச் சேவை செய் வனவாகவும், எதிரிகளுக்குப் பாரதூரமான பாதிப்பு ஏற் படுத்துவனவாகவுமிருந்தன. இதைத் தொடர்ந்து சமீபத் திலே மலையகத்தில் புரட்சிகரப் பாடல்கள், சிந்துக்கள், புரட்சிகர நாடகங்கள் முதலியன காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பெருகிவருகின்றன. இவை இலங்கை முழுவதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்துவனவாகவும் அமைந் துள்ளன.
இதே காலத்துக்கு சிறிது முன்னதாகவே உருவாகிய கலாச்சாரப் புரட்சியின் முன்னேடியான சீன நிலப்பிரபுத் துவ எதிர்ப்பு போராட்டத்தையும் விவசாயப் புரட்சியையும் எடுத்துக்காட்டும் புரட்சிகரச் சிற்பங்களின் பிரகாசமான கலை இலக்கிய நோக்கும் அதன் தாக்கமும் இலங்கையில் புதிய கலை இலக்கியத்தை ஊடுருவிச் செல்வதை நாம் அவ தானிக்கமுடிகின்றது. ஆகவேதான் இன்றைய சகாப்தம் மகத்தான பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் சகாப்தமென அழைப்பது மிகப் பொருத்தமாகும்.
இந்த சகாப்தத்தின் கலை இலக்கியம், அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகிய வற்றைக்கொண்ட புதிய கலாச்சாரமாக அமைந்து, இலங் கையின் புதிய ஜனநாயகப் புரட்சிக்குச் சேவைசெய்வதுடன் நவீன திரிபுவாத நச்சுக்கெதிரான சளையாத போராட்டத்தை யும் நடத்த வேண்டியுள்ளது. இக்கலை இலக்கியத்தின் விசேஷ அம்சம் போராட்டத்தில் பிறந்து போராட்டத்துக்கே சேவை

செய்வதுடன் போராடும் மக்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதாகும். இது, போர்க்களத்திலிருந்துதான் சரியான போர்த்தந்திரோபாயங்கள் பிறப்பதுமட்டுமல்ல, போர்க் களத்திலிருந்துதான் புரட்சிகரக் கலை இலக்கியமும் பிறக் கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
கலை இலக்கியம் யாருக்குச் சேவைசெய்யவேண்டும் என்ற முக்கிய பிரச்சினையையும் இது தீர்த்துவைக்கின்றது. அடிப்படையில் புரட்சிக்கு சேவை செய்வதும் வர்க்கரீதியில் தொழிலாளர்கள் விவசாயிகள், போராளிகள், புரட்சிகரப் புத்திஜீவிகள் ஆகியோருக்கும் இது சேவைசெய்கின்றது. புரட்சியின் முன்னணிச் சக்திகளின் கலை இலக்கியமாக இது உருவாகி வளர்கின்றது.
புரட்சியை எதிர்ப்புரட்சி அடக்கி ஒடுக்கமுயல்வது போல புரட்சிகரக் கலை இலக்கியமும் பிற்போக்குவாதிகளா லும் அவர்களின் அரசு யந்திரத்தாலும் அடக்கி ஒடுக்கப் படும் அபாயம் உள்ளது என்பதையும் சமீப கால நிகழ்ச்சி ஒன்று எடுத்துக்காட்டுகின்றது. தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன மகாநாட்டு நிகழ்ச்சியில் உருவாகி வளர்ச்சியுற்ற குடிநிலம் என்ற நாடகம் விவசாய மாநாடு ஒன்றில் மேடை ஏறியபோது ஆளும் வர்க்கத்தின் ஆயுத சக்தியான பொலிஸ் படையால் சுற்றிவளைக்கப்பட்டு, நாடக ஆசிரியரை யும் நாடக பாத்திரங்களையும் சல்லடை போட்டுத் தேடி பெரும் தாக்குதலுக்குத் தயாரான சம்பவமொன்று சிறிது காலத்துக்கு முன் நடைபெற்றது. இது ஏன் ஏற்பட்டது? கடந்த வெகுஜனப் போராட்டங்களில் ஆயுதந்தாங்கிய பொலிஸ்படை பிற்போக்கு ஆளும் வர்க் கத்தால் மட்டுமல்ல, உள்நாட்டு நில உடமையாளர்களா லும், மதவெறியர்களாலும், மற்றும் தீய சக்திகளாலும் போஷிக்கப்பட்டு மக்களுக்கு எதிராக நீசத்தனமான தாக்கு தல்களைத் தொடுத்ததை இந்த நாடகம் அம்பலப்படுத்தியது. அத்துடன் அவர்களை இழிவுபடுத்தி, அந்த ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களை தூசாகக்கூட மக்கள் மதிக்காது நடத்திய வீரப் போராட்டங்களை நாடக பாத்திரங்கள் மூலமாக எடுத்துக்காட்டி, மக்களின் போராளிகளை ஏற்றிப் போற்றிய

Page 7
தாலும் ஆளும் வர்க்கத்தின் காவல்நாய்களின் பொலிஸ் படை. புதிய கலை உருவத்தை எதிர்க்க குண்டாந்தடிகளை உயர்த்தியது. "எதிரி எதை எதிர்க்கிருஞே அதை நாம் ஆதரிக்கவேண்டும்' என்ற தலைவர் மாஒ அவர்களின் கூற் றின் உண்மையை அங்கிருந்த மக்கள் அனைவரும் அன்று உணர்ந்தார்கள். அங்கு கூடியிருந்த விவசாயிகள் அந்த நாடகத்தை மனப்பூர்வமாகப் பாராட்டி பொலிஸ் படைக்கு எதிரான தமது வர்மத்தை மேலும் வளர்த்துக்கொண்டனர்.
இது எதிர்காலக் கலை இலக்கியக் கடமை எது என்பதை யும், அது எங்கு வளர்க்கப்படவேண்டுமென்பதையும் எமக்கு அறிவுறுத்துகின்றது. இன்று மக்களுக்கென்று எதுவுமில்லை. இருப்பது அனேகமாக ஏகாதிபத்தியவாதிகளுக்கும் நிலப்பிர புத்துவ சக்திகளுக்கும் அவர்களின் ஈட்டிமுனையான அதிகார வர்க்க முதலாளி வர்க்கத்துக்குமாகவே இருக்கின்றன. அவர்களுக்கான அரசு, அவர்களுக்கான ஆயுதப்படை. அவர்களுக்கான கலை கலாச்சாரம், அவர்களுக்கான சமூக அமைப்பு - எல்லாம் அவர்களுக்காகவே அமைந் துள்ளன. ஆகவே இன்று மக்களுக்காக எதுவுமில்லை. என்ற அடிப்படை உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே மக்களுக்கான சகலவற்றையுமுடைய வெகுஜன தளங்களை நாம் உருவாக்கவேண்டிய அவசியத்தை எமக்கு இது எடுத்துக்காட்டுகின்றது. அங்குதான் மக்களின் அதிகாரம், மக்களின் படை, மக்களின் கலை இலக்கியம் மக்களின் புதிய சமுதாய அடித்தளம் ஆகியவற்றை உரு வாக்க முடியும். இங்குதான் மக்களின் புரட்சிகர கலை இலக்கியமும் புதிய கலாச்சாரமும் நிலைபெற்று வளர்ச்சி யடைய முடியும்.
ஆகவே இன்று எம்முன்னுள்ள கலை இலக்கியக் கடமை ஆயுதப் போராட்டத்தின்மூலம் மக்கள் அரசியல் அதி காரத்தை கைப்பற்றும் வழிமுறைகளை ஆதரிப்பதும், அந்தப் போராட்டக் கடமையை முன்எடுத்துச் செல்வதை அடிப் படையாகக்கொண்டிருப்பதும் ஆகும். அதாவது இன்றைய கால அரசியலுக்கு முதலிடம் கொடுக்கும் "புரட்சிகர அர சியல் உள்ளடக்கமும் சீர்திருந்திய சிறந்த கலை உருவமும்' என்ற கோட்பாட்டில் ஊன்றி நிற்கவேண்டும்.

இன்றைய காவிய புருஷர்களான ஆயிரமாயிரம் புரட்சி கரப் போராளிகளை அரங்கிற்குக் கொண்டுவரும் புதிய கலாச்சாரம் பல்கிப் பெருக வேண்டும். இதற்கு இன்றைய எழுத்தாளர்கள் கலைஞர்கள் மக்களை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். கலை இலக்கிய கர்த்தாக்கள் என்று கூறப்படும் புத்திஜீவிகள் நகரங்களிலிருந்து கொண்டு கனவு காண்பதன் மூலமோ, சிலரிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல்களைக் கொண்டோ கற்பனரீதியிலான கலை உருவங்களையும் பாத் திரங்களையும் படைத்தால் அவை அடிப்படையில் குறையுள் ளனவையாக, கிராமப்புற உடையணிந்த நகரப்புறப் பாத் திரங்களாகவோ, தொழிலாளர் உடையணிந்த புத்திஜீவி களாகவோ தான் இருப்பார்கள். இது அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் பூர்ஷ"வா கருத்தோட் டத்தைக் கொண்டு செல்லும் திரிபுவாத கலை இலக்கிய உருவங்களாகவே அமையும். மக்கள் மத்தியில் சென்று மனப்பூர்வமாக கற்றுக்கொள்வது, பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டையும், புரட்சிகர உலகக் கண்ணுேட்டத்தை யும் எடுப்பது என்ற போராட்டப் பாதையை எழுத்தாளர் களும், கலைஞர்களும் எடுக்காதவரை ஒருபோதும் புரட்சிகர கலை இலக்கியத்தைப் புத்திஜீவிகளால் படைக்கவே முடியாது, இன்றைய புதிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளவும் மக்களைத் தெரிந்துகொள்ளவும் முதலாவதாக எழுத்தாளர்களும் கலைஞர்களும் மக்களுடன் ஒன்றிணைய வேண்டும். இரண்டாவதாக பாட்டாளி வர்க்க புரட்சிகர நிலைப்பாட்டைக் கைக்கொள்ளவேண்டும் மூன்ருவதாக மனப்பூர்வமாய் மக்களுக்குச் சேவைசெய்ய மாஒ சேதுங் சிந்தனையால் ஆயுதபாணியாகவேண்டும். இவையே புதிய வெகுஜன கலை இலக்கியம் உருவாகும் பாதையும், புரட்சிகர எழுத்தாளர் கலைஞர் உருவாகுவதற்கான பாதையுமாகும்.
'மக்கள்தான் மகத்தான சக்தி; மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குவதிலான உந்து சக்தி' என்ற உண்மையில் நாம் அழுந்தி நிற்கவேண்டும். மக்கள் மத்தியில் இருந்து வர்க்கப் போராட்டத்திலிருந்து கற்றுக் கொண்டு மக்களின் தீர்ப்புக்காக மக்களின் கலை இலக்கியத் தைப் படைப்பதுதான் எழுத்தாளர்களினதும் கலைஞர்களின

Page 8
தும் கடமையாகும். புதிய கலை இலக்கியம் மக்கள் மத்தியி லிருந்து எழுந்து திரும்பவும் மக்களுக்கு வழிகாட்டவும் அவர்களை முன்னேற்றவும் உதவவேண்டும். இதன்மூலம் புரட்சிகர கலை இலக்கியம் திரும்பவும் திரும்பவும் புனரமைக் கப்பட்டுத் தொடர்ந்து மக்களைப் புரட்சிப் பாதையில் முன் னெடுத்துச்செல்வதும் மக்களால் வழிநடத்தப்படுவதுமான கலை இலக்கியம் ஆகும்.
இந்தக் கலை இலக்கியத்தின் புதிய உதய காலத்தில் நீர்வை பொன்னையனின் உதயம் என்ற சிறுகதைத் தொகுதி வெளிவருகின்றது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் அவ ரால் எழுதப்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் புதிய உதய காலமான பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியினதும் இலங்கையின் புரட்சிகர எழுச்சியினதும் உதயகால உருவங்களும், கடந்த திரிபுவாத இருள் அடைந்த ஆணுல் வைகறை நோக்கி உள்ள காலத்து வடிவங்களும் இடம்பெறுகின்றன. ஆகவே நச்சுப் பூண்டையும் நறுமலர் களையும் இனங்கண்டு விமர்சன-சுயவிமர்சன வழியில் புதிய புரட்சிகர கலை உருவங்கள் உருவாக வாசகர்களும் ஆசிரி யரும் உதவுவார்கள் என நம்புகின்றேன்.
தோழர் நீர்வை பொன்னையன் ஒரு விவசாயக் குடும் பத்தில் பிறந்தவர். தொழிற்சங்க விவசாய இயக்க வேலை களில் ஈடுபட்டவர். இந்தக் கால அனுபவங்கள் அவரது அரசியல் முதிர்ச்சியின் படிப்படியான வளர்ச்சியுடன் கலை உருவங்களாக இச்சிறு கதைத் தொகுதியில் அடங்கியுள்ளன.
வீ. ஏ. கந்தசாமி.

என்னுரை
மேடும் பள்ளமும் எனது முதற் சிறுகதைத் தொகுதி. ஒன்பதாண்டுகளின் பின்பு உதயம் தொகுதியை உங் களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்
இந்த ஒன்பது ஆண்டுகளுக்குள் அரசியல் அரங் கில் ஏற்பட்ட மாற்றங்கள் சகல துறைகளையும், சிக்தனை களையும் பாதித்தன. இந்த மாற்றங்களுக்குள் கலை இலக்கியத் துறையும் உட்பட்டிருக்கின்றது குறிப்பாக 1956ம் ஆண்டிற்குப் பின் ஈழத்து கலை இலக்கியத்துறை யில் ஒரு விழிப்பும் எழுச்சியும் பிறந்து ஓரளவு மக்களின் வாழ்க்கையோடு இணைந்து முன் சென்றுள்ளன.
இக்கால கட்டத்தில் ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புணர்ச்சியும், தேசிய விழிப்பும் கூர்மையடைந் தன. இது கலை இலக்கியத்திலும் பிரதிபலித்தது இத் தச் சூழ்நிலையில் எழுத்தாளர்கள் ஸ்தாபன ரீதியாகத் திரண்டு இயங்கினர்கள். அவர்கள் இந்தியக் கலை இலக் கியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களிடையே பரவ லான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திஞர்கள். இதன் விளைவாகவே தேசிய இலக்கியம் என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.
இந்தக் கோஷத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்த அரசியல் நோக்கில் ஏற்பட்ட முரண்பாடுகளால்
தாமாகவே சிலர் இந்த இயக்கத்திலிருந்து நழுவிச் சென்றனர், இவர்கள் இலக்கியம் அரசியல் சார்பற்ற

Page 9
தாக இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டை, அதாவது “கலை கலைக்காகவே' என்ற தத்துவத்தை உரக்கக் கூவியபோதிலும் பிற்போக்கு அரசியல் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கே தமது எழுத்தைப் பயன்படுத்தி வருகின்றர்கள். இவர்களை முதலாளித்துவப் பத் திரிகைகளும், சாகித்திய மண்டலம் போன்ற பிற்போக்கு ஸ்தாபனங்களும் ஆதரித்து ஊக்குவித்து, ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புணர்ச்சியை மழுங்கடிக்க முயல் கின்றன. ஆணுல் இவர்கள் எப்படி முயன்ருலும் சரித் திரத்தின் முன்னேற்றத்தைத் தடுத்துநிறுத்த முடியாது.
இதே நேரத்தில் - தங்களை மக்கள் இலக்கியம் படைப்பவர்களாகப் பாவனை செய்துகொண்டு திரியும் ஒரு சில எழுத்தாளர்கள், மக்களுக்கும் தங்களுக்கும விளங்காத முறையில் சொற்சிலம்பமாடி எழுதியும், பாத்திரங்களைக் காண்பிப்பதன் மூலமாகப் போலி உணர்வுகளைத் தோற்றுவித்தும் மக்களின் புரட்சிகர மான உணர்ச்சிகளைத் திசை திருப்ப முயல்கின் ருர்கள் . இவர்களும் அடிப்படையில் பிற்போக்குவாதிகளே
கலை இலக்கியத்தின் ஊற்றுக்கண் மக்களே என உணர்ந்து, மக்களிடம் சென்று, அவர்களிடமிருந்து கற்று, அவர்களுக்கே அதைப் பட்டை தீட்டித் திருப்பிக் கொடுப்பதன்மூலம், மக்களுக்கு மேலும் போராட்ட உணர்வையூட்டி, தமது சூழ்நிலையை மாற்றித் தம்மைத் தாமே விடுதலை செய்வதற்காக நாம் கலை இலக்கியத் தைச் சிருஷ்டிக்கின்ருேம், தோழர் லெனின் கூறியது போல பாட்டாளி வர்க்கக் கலை இலக்கியம் என்பது முழுப் பாட்டாளி வர்க்கப் புரட்சி லட்சியத்தின் ஒரு பகுதியே. இந்த நிலைக்களத்தில் நின்றுதான் நாம் கலை இலக்கியம் சிருஷ்டிக்கின்ருேம்,
உதயம் தொகுதியிலுள்ள எனது சிறுகதைகளில் பெரும்பாலானவை போர்க்களத்திலிருந்து உதித்தவை இதற்கு விதிவிலக்கான இரண்டொரு கதைகளையும்
நீங்கள் காண்பீர்கள், கால அடைவில் இக்கதைகளை

வரிசைப்படுத்திப் பார்த்தால் எனது குறைநிறைகளையும் படிப்படியான வளர்ச்சியையும் நீங்கள் எடை போட முடியும். எனது இந்த முயற்சியின் வெற்றிதோல்வி கள் பற்றி தீர்ப்புக்கூற வேண்டியவர்கள் ஒரு சில எழுத தாளர்களும், 'மெத்தப்படித்த மேதை"களுமல்ல, பதி லாக இந்த நாட்டுத் தொழிலாளர்களும் விவசாயி களுமே. அவர்கள்தான் எனது ஆசான்கள், வழிகாட்டி கள், நீதிபதிகள் என்ற முறையில், அவர்களுக்கு உதயம் சிறுகதைத் தொகுதிகயைச் சமர்ப்பிக்கின்றேன்.
நீர்வை பொன்னையன்.
18, குவாறி ரோட், தெஹிவளை.

Page 10

உ த யம்
'94 it...... l' குழந்தையின் இனியதுயில்போல குடியிருந்த அமைதி
யைக் கலைக்கின்றது அவனுடைய கெம்பீரமான குரலொலி.
பதிலில்லை.
'ஐயா.'
மீண்டும் அவன் குரலெடுத்துக் கத்துகின்றன்.
'ஆரடா அவன்? விடியுது விடியமுந்தி வந்து கத்தித் துலைக்கிருன், ஆர், இஞ்சாலை வா பார்ப்பம்.'
அதிகாரத் தொனியில் கேட்டுக் கொண்டே, மான் குட்டிக்குத் தீன் ஊட்டியதை அரை குறையில் விட்டு விட்டு, எரிச்சலுடன் தனது கொல்லைப் புறத்திலிருந்து வெளியே வருகின்ருர் குளக்கட்டு இஞ்சினியர் செல்லப்பா.
'ஐயா அது நான் வேலுப்பிள்ளை. 9
*"டே ரைகர் விடடா காலை."
தனது கால்களைக் கட்டிப் பிடிக்கும் அல்ஷெசன் நாயிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கேற்றடிக்கு வருகின்ருர்,
'அட, நீயேயப்பா. வா மோனை வா. இப்பென்ன மானுேடையோ மரையோடையோ வந்தனி?"

Page 11
உதயம்
சேச்சில் சுருட்டை அடிக்கடி பத்தியதால், கறுத்துத் தடித்த உதடுகளை நாக்கால் தடவி ஈரப்பசுமை யாக்கிய படியே, வெளிறித் தொங்கும் தனது மீசையை ஒதுக்கி, முறுக்கி மேலே சுருட்டி விட்டுக் கொண்டே கேட்கின்ருர் இஞ்சினியர்.
"வெள்ளாமை விதைச்சாப்பிறகு இன்னும் ஒரு நாளா வது வேட்டைக்குப் போகேல்லை ஐயா. வேட்டைக்குப் போக எங்களுக்கு எங்காலை நேரம்? பகலிலை வயல் வேலை. இரவிலை. நெல்லுப் பயிரைப் பண்டி அடியாமல் பார்க்க காவல் கொட்டிலிலை விடிய விடியக் காவலிருக்க வேணும், நாங்கள் என்ன செய்யிறது?"
'உதெல்லாம் ஒரு சாட்டு வேலுப்பிள்ளை. அப்ப, நீங்கள் இப்ப ஒருதரும் இறச்சி தின்னிறேல்லையே? இப் பெல்லாம் நீங்கள் சங்கம் உண்டாக்கி, கூட்டம் கூட, பேப்பர் வாசிக்க நேரம் கிடக்கு உங்களுக்கு. வேட்டைக்குப் போகத்தான் நேரமில்லை, என்ன? எனக்கு இறச்சி தர உங்களுக்கு விருப்பமில்லை எண்டு சொல்லுங்கோவன். ஏன் வீண் சாட்டுகள் சொல்லிறியள்?"
உழைப்பினுல் உரமேறி வயிரம் பாய்ந்த தனது கைகளை முதுகுக்குப் பின்னல் கட்டிக் கொண்டு இஞ்சினியர் சொல்வதை அமைதியாகக் கேட்டுவிட்டு, மெளனமாக வானத்தை நோக்கியபடியே நிற்கின்ருன் வேலுப்பிள்ளை,
'ஐயா சங்க விசயம் வேறை. வேட்டைக்குப் போற விசயம் வேறை, தயவு செய்து சங்க விசயத்தை இப்ப கதைக்க வேண்டாம். நேரமில்லாததாலைதான் நான் வேட் டைக்குப் போறேல்லை. ’’
நிதானமாகக் கூறுகின்றன்.
'சரி, சரி. அது போய்த் துலையட்டும். இப்பென்ன விஷேசம்? ஏன் வந்தனி?*
'ஐயா எங்களை நீர்தான் காப்பாத்த வேணும்."

உதயம்
"நான் என்னப்பா உங்களைப் படைச்ச கடவுளே, உங்களைக் காப்பாத்துறதுக்கு?"
கேலியாகக் கேட்கின்ருர் இஞ்சினியர். 'இல்லை ஐயா, எங்கடை வயல் எல்லாம் எரிஞ்சு கருகிச் சாம்பலாகுது.
'அதுக்கு?" தனது இமைப் புருவங்களைக் கூட்டி உயர்த்துகின்ருர் இஞ்சினியர் செல்லப்பா.
"எங்கடை வயலுகளிலை உள்ள நெல் பயிருகளுக்கு தண்ணி., 9 p.
*" என்ன? தண்ணியா!'
ஒன்றுமே தெரியாதவர்போல வியப்பை வலிய வருவிக் கின்றர் தனது முகத்தில்.
'ஒமய்யா, தண்ணி."
‘'வேலுப்பிள்ளை, என்ன பயித்தியக் கதை பேசுகிருய். தண்ணியைப் பற்றி கதைக்கிறதை விட்டிட்டு வேறை ஏதா வது சொல்லு , '
'அப்படிச் சொல்லாதையுங்கோ ஐயா. நாங்கள் ஏழையள். வயலை நம்பித்தானே சீவிக்கிறனுங்கள். தண்ணி இல்லாட்டி பயிர் எல்லாம் எரிஞ்சு. . 9
'குளத்திலை நீர்மட்டம் குறைஞ்சு வருகுது. மீன்கள் இருக்கத்தான் இப்ப இருக்கிற தண்ணி காணும். வயலுக்கு விடத் தண்ணி இல்லை."
'அப்ப கிளாக்கராக்களுக்கும் ஒவசியராக்களுக்கும் குடுக்கிறியள்?'
"அது. அது அவை கவுண்மேந்து உத்தியோகத்தர். கவுண்மேந்துச் சட்டப்படி அவைக்குக் குடுக்க வேணும். "'
3

Page 12
உதயம்
இதிலை இவன் மடங்கிவிடுவன்."
பொய் சொல்லி அவனை ஏமாற்றி விட்டதாக எண்ணிய தனது சாமர்த்தியத்தை நினைத்து அடிமனதுள் குதூகலிக் கின்ருர்,
'அவைக்கு கவுண்மேந்திலையிருந்து மாதம் மாதம் சம்பளம் வருகுது. அதோடை வயலிலையும் நெல்லு விளைஞ்சு... போன போகமும் எங்களுக்குத் தண்ணி தராமல் அவைக்குக் குடுத்தியள். இந்தப் போகமும் இப்பிடிச் செய்யிறியள். இது ஞாயமே???
சென்ற போகமும் போதிய தண்ணீரின்றி வெள் ளாண்மை அழிந்ததால், சாப்பாட்டுக்கே வழியின்றிக் கூலிக்கு வேலை செய்து அரை குறைப் பட்டினியுடன் ஒரு மாதிரிக் காலத்தை ஒட்டியது, கிளாக்கராக்களுக்கு நல்ல விளைச்ச லெடுத்து சங்கத்திற்கு அவர்கள் கொடாமல் கள்ள விலைக்கு தனிப்பட்ட வியாபாரிகளுக்கு நெல்லை அதிக விலையில் விற்றது, இப்போகமும் விதை நெல்லுக்கு வழியில்லாமல் தனது இரண்டு மாடுகளை விற்று விதை நெல் வாங்கியது, எல்லாம் வேலுப்பிள்ளையின் மனக்கண் முன் தோன்றுகின்றன.
வேலுப்பிள்ளையின் கண்கள் குளமாகின்றன.
"அது எங்கடை விருப்பம். நீங்கள் ஆர் அதைக் கேக் கிறதுக்கு?*
இஞ்சினியர் வெடு வெடுப்பாகக் கேட்கின்றர்.
வேலுப்பிள்ளைக்கு தர்மாவேசம்.
"ஏன் நாங்கள் தண்ணிவரி கட்டிறம் தானே?
நிதானமிழக்காமல் கேள்வியைக் கேள்வியால் வெட்டு கின்ருன் வேலுப்பிள்ளை, அவனுடைய குரலில் கோபக் கனல் தெறிக்கின்றது.
4

உதயம
'வேலுப்பிள்ளை வீண்கதை பேசாதை. உன்ரை அலு வலை நீ பார். வேணுமெண்டால் .... உனக்கு மாத்திரம் தண்ணி. தாறன்......
இஞ்சினியருடைய குரலில் தணிவு.
ஒளி நிறைந்த வேலுப்பிள்ளையின் கண்கள் வியப்பில் விரிந்து மின்னுகின்றன.
"என்ன, வேணுமெண்டால் எனக்கு மாத்திரம்? ஐயா வேணுமெண்டால் எங்கள் எல்லாருக்கும் தண்ணி தர வேணும், இல்லாட்டி ?'
வேகமாக வெளியேறுகின்றன் வேலுப்பிள்ளை.
ke ※
“எனக்குமாத்திரம் தண்ணி.
“எனக்கு மாத்திரம் ஏன் இஞ்சினியர் தண்ணி தர வேணும்?
வயல் வரம்பில் சென்றுகொண்டிருக்கும் வேலுப்பிள்ளை யோசிக்கின்றன்.
இடது புறமாக உள்ள வயல்களை அவனது கண்கள் நோட்டம் விடுகின்றன. எவ்வித உடல் உழைப்புமற்ற கிளாக்கராக்களின் வயல்கள் அவை. வயல் எல்லாம் நீர் பரந்து, அந்தச் செழுமையில் பசும் பயிர்கள் குளுமையாகச் சடைத்து நிற்கின்றன. நீர் அளித்த செழுமையால் வயல் வரம்புகள் பச்சைப் புல்லால் மூடி மறைந்திருக்கின்றன. இப்பொழுது வேலுப்பிள்ளையின் கண்கள் சின்னையரின் வய லில் விழுகின்றன. சின்னையர் நல்ல உழைப்பாளி. அவர் இர வும் பகலும் வயலில்தான். ஆனல் வயலோ போதிய நீரின் றிக் காய்ந்து வெடித்திருக்கின்றது. பயிர்கள் எரிந்து கருகி யிருக்கின்றன.
"எனக்கு மாத்திரம் தண்ணி,"

Page 13
உதயம்
மீண்டும் வேலுப்பிள்ளையின் ஞாபகச் சுவட்டில் இஞ்சினி யரின் சொற்கள் தட்டுப்படுகின்றன, அதை ஒட்டிச் சிந்தனை அலைகள் விரிகின்றன.
"அவருக்கு என்னிலை நல்ல பற்றுதல். முந்தி அடிக்கடி நான் அவருக்கு மானிறைச்சி, மரைவத்தல், காய்கறி இன் னும் எத்தினையோ சாமான்கள் அவர் கேட்கிற நேரத்திலை சும்மா குடுக்கிறனன். அந்த நன்றியை அவர் இன்னும் மறக்கேல்லை."
"அவர் நல்லவர். ஆன இண்டைக்குக் கொஞ்சம்.
"ஏன் நானும் கடு கடுப்பாய்த் தானே அவரோடை கதைச்சுப்போட்டன். சீ, என்ன மடைவேலை செய்துபோட் டன். இனி நான் அவரோடை ஒரு நாளும் இப்பிடிக் கதைக்க மாட்டன், இண்டைக்கு நான் எந்தச் சனியனிலை முளிச்சனே?"
வாய்க்காலிலிருந்து வேலுப்பிள்ளையின் வயலுக்குள் தண் ணிர் மடைதிறந்து வேகமாகப் பாய்கின்றது.
பச்சைப் பசேலென்ற நெற் பயிர்களின் தொண்டை யளவிற்குத் தண்ணிர் தேங்கி நிற்கின்றது. பசுமையான பயிர் கள் மேல் மென் காற்று, அலைகளை விரித்துக் கொண்டிருக் கின்றது.
வேலுப்பிள்ளையின் கண்களில் புத்தொளி.
வயல் பொன் மயமாகிக் குலை குலையாக விளைந்த நெற் கதிர்கள் பாரம் தாங்கமாட்டாமல் தலை குனிந்து நிற்கின்றன.
அருவி வெட்டுப் பாடல், பாடலுக்கேற்ற தாளம், தாள லயத்திற்கேற்ற அசைவுடன் அருவி வெட்டுகின்றர்கள் ஆண்களும் பெண்களும்.
பத்துப் பதினைந்து சோடி மாடுகள் பூட்டி சூடுமிதியல் நடக்கின்றது.
நல்ல பொலி !

sogbulb
பக்கத்திலுள்ள வயல்காரர்கள் ஒருவரும் வேலுப்பிள் ளைக்கு அருவி வெட்ட வரவில்லை. வர மறுத்துவிட்டார்கள். கூலிக்கு ஆட்கள் பிடித்துச் சூடு மிதியல் நடக்கின்றது.
சங்கத்தில் மூட்டை மூட்டையாக நெல் குவிகின்றது.
கத்தை கத்தையாகக் காசு நோட்டுகள்.
திருமணக் கோலத்தில் வேலுப்பிள்ளையின் மகள்.
வேலுப்பிள்ளையின் மனைவி புதுப் பொலிவுடன் அவர் பக்கத்தில் புன்முறுவல் பூத்தபடியே நிற்கின்ருள்.
என்ருே இறந்துபோன அவள் மீண்டும் உயிர் பெற்று விட்டாளோ?
வேலுப்பிள்ளையின் அயலவர்கள், பக்கத்து வயல்காரர் கள் ஒருவரையும் காணவில்லை. அவர்கள் ஒருவரும்வரவில்லை.
ஏன் ? ?
"அவர்கள் வேறு, நான் வேரு?"
*அவர்கள் வேறு. அவர்களுக்குத் தண்ணியில்லை. விளைச்ச லில்லை. நெல்லில்லை. பணமில்லை."
"அவர்களுக்கு ஏன் தண்ணியில்லை?"
"அவர்களும் இஞ்சினியரோடை நல்லாய்த்தானே இருக்கின. அவருக்கு அவையஞம் சும்மாதானே சாமான் குடுக்கிறவை. அப்பேன் இஞ்சினியர் அவைகளுக்குத் தண்ணி குடுக்கேல்லை?
* எனக்கு ? ?
"எனக்கு மாத்திரம் தான் தண்ணி."
ஏன் ? ?
* நான் ? ?
‘ஓ, நான் விவசாய சங்கத் தலைவரல்லவா? அதுதான்
7

Page 14
D-gluo
இஞ்சினியர் எனக்குத் தண்ணி தந்தவர்."
"என்னை நம்பித்தானே அவையள் எல்லாரும் என்னைச் சங்கத்துக்குத் தலைவராக்கினவை."
"ஆன இப்ப நான்?"
அவை ? ?
'இப்பென்ன? எப்பவும் நாங்கள் ஒண்டுதானே?"
வேலுப்பிள்ளை சுய உணர்வு பெற்றுவிட்டானே?
'எனக்கு மாத்திரம் தண்ணி என்பதை நான் ஒருநாளும் ஒத்துக்கொள்ளமாட்டன்."
"எங்கள் எல்லாருக்கும் தண்ணி தரவேணும். இல் லாட்டி, ?
ck ※
பிறந்த ஊரிலுள்ள தங்கள் நிலபுலங்களை, ஒரு சில பணக்காரரின் நிலப்பசிக்கு இரைகொடுத்துவிட்டு வாழவழி யற்ற அவர்கள், காட்டை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
அவர்கள் இந்த இடத்திற்கு வந்தபொழுது
அன்று
அவள் கன்னி.
கன்னி என்ருலும் அவளில் களையில்லை, பருவத்தின் பூரிப்பும் செழுமையுமில்லை. ஈரப்பசுமையற்று, வறண்டு வெடித்துப் பிளந்துபோய், பள்ளம் திட்டியாகக் கிடக்கும் அவளுடைய உடலைப் பார்க்கும் எவருக்கும் அவள் மேல் பட்சாதாப மேற்படாமலிருக்க முடியாது.
அவளைப் பார்த்த அவர்களுக்கு வேதனை.
ஏன் ?
ஏஞ ?
அவர்கள் யார்?

உதயம்
மண்ணில் பிறந்து, உருண்டு புரண்டு, வளர்ந்துபருத்து, மண்ணுடன் போராடி, மண்ணையே உண்பவர்கள் அவர்கள்.
அவர்கள் மண் மக்கள் !
அவர்களுக்கு அவள் மேல் பாசம் - காதல்.
அவளுடைய மார்பகத்தை ஸ்பரிசித்து, கீறிக் கிழித்து, தங்கள் கரங்களால் அவள் உடலெல்லாம் தடவிக் கொடுத்து, அவளுடைய அங்கங்களை வரையிட்டுப் பண்படுத்திப் பொங் கிப் பூரிக்கும் அவளிதயத்திற்கு நீர்ப்பாச்சி, தங்களுடைய சக்தியின் ஒரு பகுதியைத் தியாகம் செய்து, அவளைப் பூரண பொலிவுடையவளாக்கப் பாடு படுகின்ருர்கள் அவர்கள்.
முள்ளுக்கு நடுவே மலர்ந்திருக்கும் ரோஜா மலரை ஒன்று மறியாத ஒரு குழந்தை பறிக்கும் பொழுது முட்கள் குத்துவதைப் போல, முன்பின் அனுபவமற்ற அவர்கள்; விஷப் பாம்புகள், கரடிகள், சிறுத்தைகள், காட்டு யானைகள் வாழும் காட்டிற்கு மத்தியிலிருக்கும் அந்தக் கன்னியை அடை வதற்கு அவர்கள் பட்ட இன்னல்கள், துன்ப துயரங்கள்? ஆபத்துக்கள் ?
நோயிலும் பட்டினியிலும் எத்தனையோ நாட்கள் அவர் கள் வாடுகின்ருர்கள். தங்களுடனிருந்த எத்தனையோ பேர் களுடைய இன்னுயிர்களைத் தியாகம் செய்கின்ருர்கள்.
எப்படியிருந்தும் அவர்கள் தங்கள் விடா முயற்சியைக் கைவிடவில்லை.
காலம் இறந்து பிறக்கின்றது.
அவர்களுக்கு வெற்றி !
அவள் இன்று தாய் !
அழகின் பிறப்பிடம்.
செல்வத்தின் இருப்பிடம்.

Page 15
உதயம்
அவர்களுடைய வியர்வையின் நாற்றம் இன்னும் அவள் உடலை விட்டுப் போகவில்லை. அவர்களுடைய சுவாசத்தின் சூடு இன்னும் அவளுடைய உடலுக்கு வெத வெதப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
அரசாங்க உத்தியோகஸ்தர் படையெடுப்பு.
வயல்கள் பெருகுகின்றன.
தண்ணிருக்குத் தட்டுப்பாடு.
அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்குச் சலுகை.
வயலையே நம்பி வாழும் அவர்களுக்குத் தண்ணியில்லை.
தங்களைப் பாதுகாக்க விவசாயிகள் ஒன்று சேருகின் ருர்கள்.
சங்கம் பிறக்கின்றது !
சங்கத்தின் தலைவன் வேலுப்பிள்ளை.
அவனுடைய வருகைக்காக அவர்கள் காத்திருக்கின் ருர்கள்.
c
வயல்களுக்கு மத்தியில் தன்னந் தனியணுய் குடை விரித்துக் கரியநிழல் பரப்பி நிற்கின்றது வீரை மரம்.
சந்திர வட்ட வடிவமாய் வயல்களைச் சுற்றிக் கோடு கீறியது போல பறட்டைக் காடு நீல வானத்தைத் தாங்கி நிற்கின்றது.
வீரை மர நிழலில் அவர்கள் எல்லோரும் காத்திருக் கின்றனர்.
பெரிய வாய்க்காலுக்கு மேற்குப் புறமாக உள்ள கிளாக்கராக்களின் வயல்களிலுள்ள நெற் பயிர்கள் தண்ணீர் குடித்த மூச்சில் கெம்பீரமாய் நிற்கின்றன.
0

உதயம்
பிள்ளையார் வாய்க்காலை அண்டினுற் போலுள்ள, வயல் களையே நம்பி வாழும் அவர்களுடைய வயல்களிலுள்ள பயிர் கள் தண்ணீரின்றி வாடிச் சோர்ந்து கருகியபடியே இருக் கின்றன.
கருகிச் செத்துக்கொண்டிருக்கும் தங்களுடைய பயிரைப் பார்த்த அவர்களுடைய உள்ளங்களில் தீ கனன்று கொண் டிருக்கின்றது.
கண்ணுக் கெட்டிய தூரத்தில் வேகமாக வந்துகொண் டிருக்கும் வேலுப்பிள்ளையைக் கண்டதும் அவர்களுக்குப் பெரும் ஆவல்.
*" என்னவாம் இஞ்சினியர்? '
குரல் எட்டக்கூடிய தூரத்தில் வேலுப்பிள்ளை வந்து கொண்டிருக்கும் பொழுது, எல்லோரும் விழுந்தடித்துப் போய்க் கேட்கின்றனர். கண்கள் வேலுப்பிள்ளையின் வாய் எப்போ திறக்கும் என்று ஆவல் நிறைந்து படபடக்கின்றன.
'தண்ணி தர முடியாதாம்.'
தலையில் கட்டியிருந்த சால்வையைக் கழற்றி முகத்து வியர்வையைத் துடைத்துக்கொண்டே வெறுப்புடன் கூறு கின்ருன் வேலுப்பிள்ளை, அந்தச் செய்கையில் ஏதோ ஓர் உறுதி சாயலிட்டது.
毅 ‘ஏணும் p s
ஏக்கம் நிறைந்த குரல்கள்.
*" குளத்திலை தண்ணி குறைஞ்சு போச்சாம்."
'அப்ப கிளாக்கராக்களுக்குக் குடுக்கத் தண் ணி Siriusmrčavu untuò?””
சந்தேகத் தொனியில் கந்தர் அம்மான் கேட்கின்ருர்,
* அதைக் கேக்கிறதுக்கு நாங்கள் ஆராம்? ''
வேலுப்பிள்ளையின் குரலில் ஆக்ரோஷம்.
- I

Page 16
உதயம்
முகத்தில் வெறு ப் புத் தாண்டவமாடுகின்றது. பொய்மையையும், கொடுமையையும் காலால் மிதித்து நசித்து அரைத்து விடத் துடிக்கும் வெறுப்பு அது.
'என்ன அதைக் கேட்கிறதுக்கு நாங்கள் ஆரெண்டா கேட்டான் இஞ்சினியர்? ஏன் நாங்கள் தண்ணிவரி கட்டிறேல் aunt GLD?' '
ஆவேசமாக ஒருவன் கத்துகின்ருன்.
அப்ப இனி என்ன செய்யிறது?’’ ஒன்றும் புரியாமல் சின்னத்தம்பி கேட்கின்ருன். ஆற்ருமை அவன் குரலில் இழையோடியிருக்கின்றது.
** கேட்டம் தரேல்லை. இனி வலோற்காரமாய்ப் பறிக்கிறதை
விட வேறை வழியில்லே." நிதானத்துடன் கூறுகின்ருன் வேலுப்பிள்ளை.
சின்னத்தம்பி வேலுப்பிள்ளையை நம்பிக்கையுடன் பார்க்கின்ருன். அந்தச் சொற்களில் கெம்பீரம் மட்டுமல்ல, சத்தியம் நிறைந்த தர்மாவேசம் இருக்கின்றது. தோளின் முறுகிய பலம் இப்பொழுது வேலுப்பிள்ளையின் நெஞ்சிற்கும் வந்து விட்டது.
"பறிக்கிற தெண்டால். 2 சின்னத்தம்பியையே கேட்கின்றன்.
* "நாங்களாய்ப் போய் பலவந்தமாய்த் தண்ணியைத் திறக்கவேண்டியதுதான்?’’
"அப்ப கோடு கச்சேரி.??? தயங்கியபடியே சின்னையர் கேட்கின்ருர்,
"ஏன் எங்கடை பக்கம்தானே ஞாயம் கிடக்கு. எங்க ளுக்கு ஒரு சட்டம், கிளாக்கராக்களுக்கு ஒரு சட்டமே?"
சின்னத்தம்பி குறுக்கிடுகின்றன்.
12

உதயம்
"ஞாயம் எங்கடை பக்கமிருந்தாலும் இஞ்சினியராக்கள் எங்களை எப்படியெண்டாலும் பொலிசிலை மாட்டாமல் விடு 6úðaði Gu?'''
சின்னையர் பீதியுடன் கூறுகின்றர். ** எங்களுக்கென்னப்பா, வெளியாலை இருந்தாலென்ன உள்ளுக்கை இருந்தாலென்ன, எல்லாம் ஒண்டுதானே ? எங்களிட்டைப் பறிபோக என்ன கிடக்கு ? ? வானத்தை வெறித்துப் பார்த்தபடியே கூறுகின்றன் வேலுப்பிள்ளை.
எதற்கும் தயார் என்ற தொணி அவனுடைய குரலில் தொனிக்கின்றது.
"அப்பென்ன செய்யச் சொல்லிருய்?’’ எல்லோரும் வேலுப்பிள்ளையின் முகத்தைப் பார்த்த படியே கேட்கின்றனர். அவனுடைய முகத்தில் உறுதி பிர காசிக்கின்றது. கண்களின் ஆழம் நிறைந்த, கூர்மையான பார்வையில் அபூர்வமான நம்பிக்கை மற்றவர்களுக்கு ஏற் படுகின்றது.
"நாங்கள் எல்லாரும் ஒண்டாய்ச் சேர்ந்து போய் வாய்க் காலைத் துறந்து தண்ணியை எல்லாற்றை வயலுக்கும் பாய விடுவம், வாறது வரட்டும். '"
உறுதியுடன் கூறிவிட்டு மண்வெட்டியை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு பெரிய வாய்க்காலை நோக்கிச் செல்லுகின்றன் வேலுப்பிள்ளை.
ஒரு கணம் சின்னையர் வீரை மரத்தடியிலேயே தயங்கி நிற்க நினைக்கின்றர். ஆனல் நிற்க முடியவில்லை. இந்தக் காடு கரம்பையை பயிர் விளையும் செழுமையான வயலாக்கிய இந்த வலிமையுடைய கரங்கள் உயர்ந்தால் அதற்குத் தோல்வியேயில்லை என்பது போல, வீரை மர நிழலிலிருந்த அவர்கள் எல்லோரும் ஒழுங்காய் ஒரே எண்ணத்துடன் நடக் கின்றனர். சின்னையரும் அவர்களோடு சேர்ந்து நடக்கின்றர். அவர்களுடைய கையிலிருந்த மண்வெட்டிகள் இப் பொழுது ஒரு புதிய வரலாற்றின் கதையை எழுதி வைக்கப் போகின்றன.

Page 17
சங்கமம்
Dira) Gisgib.
கடல் தாயின் மடியில் கிடந்து விளையாட ஆவலுடன், வான் முகட்டிலிருந்த கதிரவன், அடிவானத்தில் இறங்கி வந்து கொண்டிருக்கின்றன். ஆனந்தம் தாங்க முடியாத கடல் அன்னையின் இதய அலைகள் பொங்கி எழுந்து, துள்ளிக் குதித்து இன்பப் போதை ஊட்டுகின்றன.
கடற்கரை மைதானம். எங்கு பார்த்தாலும் தொழிலாளி வர்க்கத்தின் ரத்தத் தியாகத்தில் உதித்த செங் கொடிகள்.
மைதானத்து மத்தியில் ஒரு கம்பம் உயர்ந்தோங்கி நிற்கின்றது. கம்பத்தின் உச்சியில் கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கின்றது ஒரு பெரும் செங்கொடி,
பட்டொளி வீசிப் பறக்கும் கொடியின் செங்குளம்பை வானம், பூமி, கடல் எங்கும், ஆதவன் அள்ளி அப்பிக்கொண் டிருக்கின்றன். பிரபஞ்சமே அழகுடன் ஜாஜ்வால்யமாகத் திகழ்கின்றது.
கண்ணுக்கெட்டிய தூரத்தில், இரு திசைகளிலும் இரண்டு ஊர்வலங்கள்.
தமது இலட்சியப் பாதையில் வெற்றியீட்டி வீறுநடை போட்டு முன்னேறி வரும் கர்மவீரர்களைப் போல, மைதா னத்தை நோக்கி வருகின்றன தொழிலாளர்களின் ஊர்வலங் கள்,

siastroub
தூரத்திலிருந்து எழுந்து வரும் அலை ஓசையைப் போல, ஊர்வலங்களிலிருந்து கிளம்பிய கோஷங்கள் காற்றில் மிதந்து வந்து அவன் காதுகளில் மோதி அதிர்கின்றன.
அவன்?
பிரபஞ்சமே ஆனந்த வெறியில் மூழ்கித் திளைத்திருக் கின்ற வேளையில், அவன் ஏகசித்தனய் தவத்தில் முயங்கி நிற்கும் முனிவனைப் போல, அடிவானத்துக்கு அப்பால், எங்கோ எதையோ பார்த்துக்கொண்டு நிற்கின்றன்.
கடற் காற்று ஏதோ ஒரு கதையை முணு முணுத்துக் கொண்டிருக்கின்றது.
கடலின் கதையைக் கேட்கின்றன அவன்?
அவனுடைய இதயம் சோக கீதத்தை மீட்டுகின்றது. அது தோன்றிமறையும் மின்னலைப் போல, ஜனித்து கணப் பொழுதில் மரிக்கப் போகும், கண்களுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றை அறை கூவி அழைத்துக்கொண்டிருக்கின்றது.
அவன் தன்னைத் தானே வெறுக்கின்றன்,
ஏன் ?
ஆறு மாதங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம்.
: : 米
சிறு வயதிலிருந்தே, கிராமப் புறத்தில், துள்ளித் திரிந்துகொண்டிருந்தான் அவன்.
அவனுக்கு எதுவித கஷ்டமுமில்லாமல் சோறு போட்டு வந்த தந்தை ஒரு நாள் திடீரென்று இறந்துவிட்டார். அவ னுக்கும் தாயாருக்கும் வயிற்றுச் சோற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
உறவினர் ஒருவர் அவனுக்கு ஒரு தொழிற்சாலையில் ஒரு கூலிவேலை எடுத்துக் கொடுத்தார்.
15

Page 18
உதயம
சுதந்திரப் பறவையாகத் துள்ளித் திரிந்த அவனுக்கு ஒரே இடத்தில் நின்று வேலை செய்வது வேதனையைக் கொடுத் தது. தொழிற்சாலை அவனுக்குச் சிறைச்சாலையாகிவிட்டது.
காலம் கரைந்தது. அவனுடைய இதயச்சுமை கரையவில்லை.
திருட்டுத்தனமாக மாங்காய் பறிப்பது, குளத்தில் துள்ளிக் குதித்து நீந்துவது, மூங்கிற் காட்டிற்குள் ஒளித்து விளையாடுவது, நாணற்புல்லின் பூக்களை எடுத்து சோடித்து சாமியாடுவது, மாலை வேளைகளில் தன் வயதொத்த சிறுவர் களுடன் நிற்கும் பொழுது, புகையைக் கக்கிக்கொண்டு ஓடி வரும் புகைவண்டியைக் கண்டதும் கைகொட்டிக் குதித்து ஆர்ப்பரிப்பது, மாட்டுக்காரப் பையன்களுடன் திரிவது, பாட்டியின் ராஜா ராணிக் கதைகள், அன்னையின் அன்பு மொழிகள்,-என்ன சுகம்? எவ்வளவு இன்பம்? - இப்படி எண்ணற்ற தன் பாலிய நினைவுகள் ஜனிக்கும் பொழுது அவனுடைய கண்கள் குளமாகிவிடும்.
தொழிற்சாலை யந்திரத்தின் பேரிரைச்சல், எண்ணெய் நாற்றம், தூசிகள், தொழிலாளர்களின் அதட்டல்கள், வீதி களில் ஒடும் வாகனங்களின் அசுர வேகம், நகரத்து நாகரிகத் தின் போலி வேஷம், ஏமாற்றம் எல்லாம் அவனுக்கு வெறுப்பைக் கொடுத்தன. நகரத்தின் ஆத்மா மரணதேவ தையைப் பார்த்துப் பயந்து ஓலமிடுவது போலிருந்தது அவனுக்கு.
இதயத்தில் வேதனை.
வேலையில் வெறுப்பு.
எங்கேயாவது ஒடித் தொலைந்து விடுவோமா என்று அடிக்கடி அவன் எண்ணுவான். தனக்கும் தன் தாய்க்கும் வயிற்றுச் சோற்றுக்கு உழைக்கும் நிர்ப்பந்தம் அவனை அந்தத் தொழிற்சாலையில் ஒட்ட வைத்திருந்தது.
1 6

Fil LCD
கால தேவன் அவனுடைய உடலிலும் உழைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தினன். ஆனல் அவனுடைய முகத் தில் ஏனே வேதனைக் கோடுகள் அப்பிக் கிடக்கின்றன?
அவன் உடலில் உழைப்பின் திரட்சிவாலிபத்தின் வனப்புஉள்ளத்தில்-?
米 2k
திெர்பாராமலே அவனுடைய வாழ்க்கையிலே அவள் தட்டுப்பட்டாள்.
ஒரு வருடத்திற்கு முன்பு -
அன்று தான் அவள் அந்தத் தொழிற்சாலைக்கு வேலை செய்ய வந்தாள்.
பேதமை கலையாத பருவம், பருவத்துடன் போட்டி போட்டு வளர்ந்து வரும் அங்கங்கள், வரிந்து கட்டியிருக்கும் உடையைப் பிளந்து கொண்டு வெளியே எட்டிப் பார்க்கத் தவித்துக்கொண்டிருக்கின்றன. மழைக்காலத்தில் முளைக் கும் காட்டுக் கொடியைப் போல, அவளுடைய உடல் செழுமையுடன் மதாளித்து அழகைக் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
பழக்கப்படாத தொழில்.
வெட்கம்.
தடுமாற்றம்.
அவளுடைய பரிதாப நிலையைப் பார்க்க அவனுக்கு வியப்பு, சிரிப்பு; ஒருவித அனுதாபம்!
மதிய வேளை, உணவு நேரம்.
சிட்டுப் போலப் பறந்து வந்த அவள் தன் எதிரில் அவன் வருவதைக் கண்டாள். அவள் விழிகளில் மருட்சி; பீதி,
2 . 2, 17

Page 19
உதயம்
தன்னையறியாமலே அவன் வாய் விட்டுச் சிரித்து விட்டான்.
மடிந்திருந்த அவள் இதழ்கள் மலர்கின்றன.
கண்கள் கிறங்கின.
இருவருடைய பார்வையும் முட்டி மோதின. அந்த மோதலில் ஒளிப்பிளம்பு பிறக்கின்றது.
ஒரே ஒரு கணப்பொழுது.
அவள் முகத்தில் நாணம். தலை கவிழ்ந்தது. அவள் சென்றுவிட்டாள். அவளுடைய செளந்தர்ய லாஹிரியில் மூழ்கிய அவனு டைய இதயத்தில் அவள் வரையாத ஒவியமாகப் பதிந்து விட்டாள்.
அன்று அவனுல் வேலை செய்ய முடியவில்லை. அவளுக் கும் அதே நிலை.
அவனுடைய கண்கள் அவளைத் துரத்திக் கொண்டிருக் கின்றன. அவள் தப்ப முயல்கிருள். முடியவில்லை. அவ ளுடைய திருட்டுப் பார்வை அவளைக் காட்டிக் கொடுத்தது.
அடிக்கடி அவள் தன்னை மறந்த நிலையில் சிரிக்கின்ருள். தன்னைப் பறிக்க வருபவரைப் பார்த்து மலர் நகைப்பது போலிருந்தது அவளுடைய சிரிப்பு.
அன்றைய தினம் அடிக்கடி அவர்களுடைய விழிகள் கட்டித் தழுவுகின்றன. உதடுகள் காற்றில் முத்தமிடு கின்றன.
உணர்ச்சி அலைகள் பொங்கும் ஊமைப் பார்வையுடன் சில நாட்கள் கழிந்தன. பார்வை பேச்சாகப் பரிண மித்தது.
8

சங்கமம்
சந்திப்பு -
வேலை விட்டுச் செல்லும்பொழுது, கொண்டாட்ட தினங்களின் இரவுகளில் கடற்கரையில், அவர்கள் வசிக்கும்
சேரியிலுள்ள சந்துமுடுக்குகளில் இருவரும் சந்தித்தனர். இரவின் இருள் அவர்களுக்குக் காவல் புரிந்தது.
ஒருவருக் கொருவர்.
வாழ்க்கையில் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது. இருண்
டிருந்த அவனுடைய இதயம் அவளுடைய சுடரில் ஜ்வாலித்தது.
அவன் உழைப்பில் ஊக்கம் செலுத்தினன். சிறிது சிறி
தாகப் பணம் சேர்ந்தது.
அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி
ஏதோ திட்டம் வகுத்தனர்.
இருவரின் கற்பனைக் கோட்டைகள் வளர்ந்தன.
தொழிற்சாலை வளர்ந்தது.
தொழிலாளர்கள் பெருகினர்.
பிரச்சினைகள் தோன்றின.
தொழிற்சங்கங்கள் முளைத்தன.
முளைத்த தொழிற்சங்கங்கள் வளர்ந்தன.
அவன் தொழிற் சங்கத்தில் சேர மறுத்தான். கல்வி யறிவற்ற அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கடினமாக உழைக்கின்ருன் அவன். அவனுக்குக் கூலி கிடைத்தால் போதும் . கூலி குறைவோ கூடவோ என்ற பிரச்சினை அவனுக்கில்லை. அதைப்பற்றி அவனுக்கு அக்கறையில்லை.
9

Page 20
உதயம்
கிடைக்கும் கூலியில் ஒரு பகுதியை வயிற்றை வாயைக் கட்டி மிச்சம் பிடித்தான். தனக்காகவல்ல; தங்கள் இரு வருக்குமாக.
சிறிது சிறிதாகச் சேரும் பணத்தைக் கொண்டு ஒரு சிறு குடிசை கட்டவேண்டும், அதில் தாங்கள் இருவரும் தனிக் குடித்தனம் நடத்த வேண்டும், தங்கள் குடிசையில் தங்கச் சிலை போன்ற ஒரு குழந்தை இருந்து கொஞ்சி விளையாட வேண்டும், அதைத் தாங்கள் இருவரும் பார்த்து மகிழ வேண்டும் - என்பதுதான் அவனுடைய ஆவல். இதற் காகவே அவன் பாடுபட்டு உழைத்தான்.
அவன் ஆவல் நிறைவேறுமா?
தொழிற் சங்கத்தில் அநேக தொழிலாளர்கள் சேர்ந்தனர்.
அவனும் சேரவேண்டும் என்று சில வேளைகளில் எண் ணுவான். ஆனல் அவன் சேரவில்லை. தனது வேலை பறி போய்விடும் என்ற பயம் அவனுக்கு.
அந்தத் தொழிற்சாலையிலுள்ள தொழிற் சங்கங்களுக் கிடையில் போட்டி வளர்ந்தது.
ஒரு சங்கத்தின் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டனர்.
தொழிற்சாலை நிர்வாகம் கொடுக்க மறுத்தது.
தொழிலாளர்களுடைய உரிமைப் போராட்டத்தில் ஒரு தொழிற் சங்கம் குதித்தது.
பலன்?
வேலை நிறுத்தம்! வேலை போய்விடும் என்ற பயத்தினுல் சில தொழி லாளர்கள் பின்வாங்குகின்றனர்.
தொழிலாளர் மத்தியில் பிளவு, மோதல்!
20

சங்கமம்
ஒரு சங்கத்தின் தொழிலாளர் வேலைநிறுத்தம் செய் தனர். மற்றைய தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர்.
அவன்?
冰 米 ※
தொழிற்சாலையை நோக்கி வந்துகொண்டிருக்கும் அவனைச் சந்திக்கின்ருள் அவள்.
மின்னலைத் தன் மார்பகத்தில் சுமந்து கொண்டிருக்கும் மேகம், மழையைச் சொரியவா விடவா என்று சிறிது நேரம் தயங்கி நிற்பது போல, அவள் அவனுக்கு ஏதோ சொல் வதற்குத் தயங்கிக்கொண்டிருக்கின்ருள். சிறிது நேரம்தான்.
** நீ வேலைக்குப் போகாதை. 9 பயந்து பயந்து கூறுகின்ருள்.
* ஏன்? 9 p.
** எங்களோடை வேலை செய்யிற கன பேர் போகேல்லை, அதுதான். y
"அதுக்கு எனக்கென்ன?’’
“அவைக்கு மாழுய் நாங்கள் போகக்கூடாதாம். அது அநியாயமெண்டு சொல்லினை."
'போனல் என்ன செய்வினையாம்?" * நீ போனல் எல்லாரும் சேர்ந்து . . எனக்கு பயமாய்க்கிடக்கு. உனக்கு ஏதாவது நடந்தால்.
'இல்லை, நான் ஒருக்காப் போய்ப்பாப்பம் என்ன செய்யப் போருங்களெண்டு, **
** எனக்கு பயமாய்க்கிடக்கு, என்ரை ராசா நீ போகாதை .'"
**நான் வேலைக்குப் போகாட்டி முதலாளியாக்கள் என்னை வேலையிலையிருந்து விலத்திப்போடுவினை பிறகு நான் என்ன செய்ய?’’
21

Page 21
உதயம்
இதற்கு என்ன பதில் கூறுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. பயம் வேறு.
வேலைக்குச்செல்ல வேண்டாமென்று அவள் கெஞ் சினள். கண்ணிர் விட்டாள்.
அவளைப்போல எத்தனையோ தொழிலாளர்கள் முதல் நாளே அவனை வேலைக்குப்போக வேண்டாமென்று கெஞ்சிக் கேட்டனர்.
அவன் ஒருவருடைய சொல்லையும் கேட்கவில்லை. வேலைக்குச் செல்வது என்று பீஷ்மப் பிரதிக்ஞை செய்து கொண்ட அவன் அவர்களுடைய சொல்லைக் சேட்டான?
"'நான் வேலைக்கு கட்டாயம் போகப் போறேன். என்னை நீ தடுக்காதை, '
"அது அநியாயம், நீ போகக் கூடாது.' "என்னை மறிக்க நீ ஆர்??? அவன் வெடுக்கென்று கேட்டான். கொதி தண்ணிர் பொங்கிப் பாத்திரத்தின் மூடியைத் தூக்கி எறிவதுபோல, அவனுடைய உடலிலுள்ள ரத்தம் கொதித்து கோபத்தை வெளிக்கக்கியது.
நீ போறதண்டால் போ. ஆளு இனி என்னுேடை நீ கதைக்கக் கூடாது. எனக்கும் உனக்கும் இனிமேல் ஒரு தொடசலுமில்லை."
ஆவேசத்துடன் கூறினுள். அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அவள் சென்றுவிட்டாள்.
xk 米 23 மைதானத்தை நோக்கி தொழிலாளர்களின் இரு ஊர்வலங்களும் வருகின்றன.
ஊர்வலங்களை வெறித்துப் பார்த்தபடியே நிற்கின்ருன் அவன்.
22

சங்கமம்
கோஷங்கள் அவனுடைய இதயக் கதவில் முட்டி மோதுகின்றன.
'தொழிலாளர்களே.
ஒரு ஊர்வலத்திலிருந்து கிளம்புகின்றது அசுர கர்ஜனை.
'ஒன்று சேர்வோம்!'
மறு ஊர்வலத்திலிருந்து எழுந்த குரல்கள் வானைப் பிளக்கின்றன.
ஊர்வலங்கள் நெருங்கி வருகின்றன.
ஆயிரமாயிரம் தொழிலாளர்கள்!
* அப்பா எவ்வளவு பேர்?"
உற்றுப் பார்க்கின்றன்.
'அவர்கள்! என்னுடன் வேலை செய்தவர்களும்...??.
அவனுக்குப் பேராச்சரியம்!
* அப்போ, நான்?"
‘எப்படித்தான் சண்டை பிடிச்சாலும் தொழிலாளியள்
எண்ட முறையிலே நாங்கள் எல்லாரும் ஒண்டுதான்."
ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை நிறுத்தம் செய்த ஒரு தொழிலாளி கூறியது அவனுடைய நினைவுச் சுவட்டில் ஜனிக்கின்றது.
அவனுடைய இதயத்தில் புயல்.
ஆயிரமாயிரமாகத் திரண்டிருக்கும் இத்தனை தொழி லாளர்களிடையிலே காணப்பட்ட ஐக்கிய உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஒரு புதிய நம்பிக்கையைப் பீறிடச் செய்
கின்றது.
23

Page 22
உதயம்
மூடியிருக்கும் மழை இருளைப் பிளந்துகொண்டு வெளி வந்து ஒளிப்பிளம்பைக் கக்கும் மின்னல் கொடியைப்போல அவனுடைய உள்ளத்தில் ஒளிச்சுடர் பொங்கி எழுந்தது. உடலில் புத்துணர்ச்சி. தசைநார்கள் முறுகித் திரண்டு புடைக்கின்றன. ரத்தம் மின் வேகத்தில் முட்டி மோதிப் பாய்கின்றது.
வெறிகொண்டவணுக ஊர்வலத்தை நோக்கி அவன் ஒடுகின்றன்.
இரு ஊர்வலங்களும் கிட்ட நெருங்குகின்றன.
தொழிலாளர்களின் குரல்கள் அண்ட கோளங்களையும் அதிரவைக்கின்றன.
எதிர்த்திசைகளில் இருந்து வந்த இரண்டு ஊர்வலங் களும் ஒன்றை ஒன்று கட்டித் தழுவுகின்றன.
பிளவுபட்டிருந்த தொழிலாளி வர்க்கம் ஒன்று சேர்கின்றது!
பிரளய காலத்தில் பொங்கி எழும் கடல் அலைகளைப் போல, தொழிலாளி வர்க்க உணர்ச்சி பொங்கிப் பெருக் கெடுத்துப் பிரவாகிக்கின்றது.
'தொழிலாளர்களே ஒன்று சேர்வோம்!'
தொழிலாளி வர்க்க ஜனசமுத்திரத்திலிருந்து கிளம்பிய கோஷம் வானை முட்டி மோதுகின்றது. இந்த அதிர்ச்சியில் செங்கதிரோன் கடல்தாயின் மடியில் வந்து விழுகின்றன். உணர்ச்சிப் பிரவாகத்தில் கடல் அன்னையின் உடல் ரத்தச் சிவப்பாக மாறுகின்றது.
கிழக்கிலும், மேற்கிலும்- எட்டுத் திசையிலும் நட்சத்திரங்கள் பூக்கின்றன. செங்கொடியிலிருக்கும் நட் சத்திரங்களா கோடானு கோடியாகப் பிரபஞ்சம் அனைத் திலும் பூத்திருக்கின்றன?
"மேதினம் வாழ்க!”
24

சங்கமம்
வானமண்டலத்தையும் தாண்டிச் சென்று ஒலிக் கின்றது உணர்ச்சி நிறைந்த தொழிலாளி வர்க்கத்தின் வஜ்ரக் குரல்,
ஐம்புலன்களையும் அடக்கி மூச்சைப்பிடித்து, அடி வயிற்றிலிருந்து குரலெழுப்பிக் கோஷிக்கின்ருன் அவன்.
அவனுடைய கையை ஒரு மென் கரம் பற்றுகிறது.
ԱյITri ?
அவள்!
அசைந்தாடிக் கொண்டிருந்த செங்கொடி தொழிலாளி வர்க்க உணர்ச்சியின் பூரணத்துவத்தைக் கண்டு காற்றுடன் மோதி தன் ஆனந்த வெறியைப் பிரவாகிக்கின்றது.
இருவருடைய விழிகளும் இரண்டற்ற செளந்தர்யத் தில் சங்கமிக்கின்றன. அவற்றில் கண்ணிர்த் துளிகள்.
சோகக் கண்ணிரா?
இல்லை!
Gait
"மேதினம் வாழ்க!”
தொழிலாளி வர்க்கத்தின் புனித கோஷத்தில் பிரபஞ்சமே நடுங்குகின்றது.
Ar
冕5

Page 23
மனித ன் !
"நான் ஒரு முட்டாள்!’
நான் சொல்லவில்லை.
என்னை முட்டாள் என்று மற்றவர்கள் சொல்கிருர்கள்.
பிறர் ஒருவனை முட்டாள் என்ருல் அவன் முட்டாளாகி விடுவான?
முப்பது வயதை எட்டிப்பிடித்தவன் நான். பத்து வயதுப் பாலகனைக் குருவாக ஏற்றுக்கொண்ட என்னை மற்றவர்கள் முட்டாள் என்று எப்படிக் கூருமலிருப்பார்கள்?
ஆணுல் நான்?
நான் முட்டாள்தாஞ?
என்னை எனக்குத்தானே தெரியும்.
அவனை என் குருவாக ஏற்றதற்காக மற்றவர்கள் என்னை முட்டாள் என்று சொல்வதால் எனக்கு ஒன்றும் கெட்டுவிடவில்லை. அவர்கள் வேண்டுமட்டும் சொல்லி விட்டுப் போகட்டுமே.
அதனுல் என்ன?
அவன் என்றுமே என் குருதான்.
அன்று தொட்டு என்றும் அவன்.
அன்று.

மனிதன்
எப்போ என்று எனக்குச் சரியாக ஞாபகமில்லை.
நான் முதல் முதல் அந்தக் காரியாலயத்துக்கு வேலைக்குச் சென்ற அன்று காலை
நான் ஏதோ அவசரமாக எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
என் நெற்றிப் பொருத்துகளை ஊடுருவிச் சென்று, உடலெல்லாம் மின்சக்தியாய்ப் பாயும் ஒர் உணர்வு,
தலையில் ஒருவித தாக்கம்.
தாக்கத்தின் வேகத்தை, வலுவை என்னுல் சகிக்க முடியாத வேதனை.
எழுத்துவேலை முடியவேண்டும். எழுதிக்கொண்டே யிருக்கின்றேன்.
அக்கினிக் குழம்பில் மூழ்கும் தகிப்பு. தலையை உயர்த்துகின்றேன்.
அவன்!
அந்தக் கண்கள்!
இவ்வளவு சக்தியும் அந்தக் கண்களுக்கு எங்கிருந்துதான் வந்ததோ?
அவனுடைய விழிகள் பிரவகிக்கும் அந்தப் பார்வையை அள்ளி என் இதயத்துள் அமுக்கவேண்டுமென்ற தவிப்பு.
அவன் ஆடாமல் அசையாமல் என்னைப் பார்த்தபடியே நிற்கின்ருன்,
துடுக்குத்தனம் துள்ளி விளையாடும் அந்தக் குறு குறுக்கும் விழிகளுக்கு அடியில் ஒருவித சோகம் புதைந்து கிடக்கின்றது.
ஒன்பது பத்து வயதுத் தோற்றம்.
ரோஜா மலரைப்போல கவர்ந்திழுக்கும் தேஜஸ் சுடர் விட்டுக்கொண்டிருக்கிறது அவனது மேனியில்.
27

Page 24
உதயம்
அவனுடைய தோற்றத்தில் உலகத்தில் உதித்த ஞானி கள் அத்தனை பேரும் தோன்றி மறைகின்றர்கள்.
ஒருமுறையாவது அவனை அணைக்கவேண்டுமென்ற ,60 ل6hے
"இங்கே வா தம்பி"
அன்புடன் அழைக்கின்றேன்.
அவன் அசையாது நிற்கின்றன்.
**வரமாட்டாய்?’’
ஏக்கத்துடன் கேட்கின்றேன்.
எதுவித சலனமுமின்றித் தவ நிலையில் நிற்கின்ருன்.
அவனைப் பிடிக்க எழுகின்றேன்.
துள்ளிக் குதித்துக்கொண்டு அவன் ஓடிவிட்டான்.
எனக்கு ஏமாற்றம்.
அவன் விட்டுச்சென்ற அந்தப் பார்வையில் நான் மூழ்கித் தத்தளிக்கின்றேன்.
அவனுடன் பேசவேண்டும், அவனுடைய மழலை மொழி யைக் கேட்கவேண்டும் என்று எனக்கு ஒரே ஆவல்,
அவன் வருகைக்காக காத்திருக்கின்றேன்.
அடுத்த நாள் வந்தான். அதே மாதிரி ஒடிவிட்டான்.
எனது ஆவல் அதிகரிக்கின்றது.
மூன்ரும் நாள் வருகின்றன்.
கையில் ஒரு பந்து.
குழந்தைகளின் குறும்புத்தனம் ஜொலிக்கும் அவனது விழிகளைப் பார்த்த எனக்கும் குறும்புத்தனம் பிறக்கின்றது.
28

மனிதன்
மேசையிலிருந்த கடுதாசி ஒன்றை எடுத்துக் கசக்கி அவன் மீது எறிகின்றேன் .
திரிபுரமெரித்த கண்களாக மாறுகின்றன அவன் விழிகள்,
கையிலிருந்த பந்து மின்னல் வேகத்தில் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது.
என் கைக்குள் பந்து,
பந்தைத் தரும்படி கையை நீட்டுகின்றன்.
'வந்தால்தான் தருவேன்.'"
ஒன்றும் புரியாமல் திகைத்தபடியே நிற்கின்றன்.
"இங்கே வா...'
*அவனுக்குத் தமிழ் தெரிந்தால்தானே நீ சொல்வது விளங்கும்.”*
பக்கத்திலிருந்த எனது சிங்கள நண்பன் கூறுகின்றன்.
'மே எண்ட கோ. ”*
அரைகுறைச் சிங்களத்தில் அழைக்கின்றேன்.
விருப்பும் வெறுப்பும் கலந்த நிலையில் தலையை அசைக்கின்ருன்.
'வந்தால்தான் பந்து தருவேன்.'"
கனிவுடன் கூறுகின்றேன்.
அடிமேல் அடி வைத்து வருகின்றன்.
கிட்ட வர...
எட்டிப் பிடிக்கின்றேன் கையில்.
பந்தைக் கொடுக்கின்றேன்.
29

Page 25
உதயம்
தன்னை விடுவிக்க தனது கையை முறுக்கித் திருப்பி இழுக்கின்ருன்,
'நீ நல்ல பிள்ளை. நான் ஒன்றும் செய்யவில்லை. "'
அவனுடைய முதுகை அன்புடன் தடவிக் கொடுத்துக் கொண்டு கூறுகின்றேன்.
கூச்சத்தில் அவனுடைய முதுகு வளைந்து நெழிகின்றது. அவனுடைய ரோஜா இதழ்களின் கடைக் கோடியில் சிறு முறுவல் மின்னல் போல அரும்பி மறைகின்றது.
'என்ன, எழுதி முடிந்துவிட்டதா?’’ பக்கத்திலிருந்தவர் எனது கடமையை உணர்த்து கின்ருர்.
எனது பிடி தளர்கிறது. அவன் செல்கின்றன். சிறிது நேரம் அந்த மயக்கத்தில் லயிப்பு. கடமை உணர்வு தலைதூக்குகின்றது. நான் யந்திரமாகிவிடுகின்றேன். மீண்டும் அவன் தரிசனத்துக்காக என் இதயம் அழுகின்றது.
அடுத்த நாள் மாலை அவன் தரிசனம் கிடைக்கின்றது. அவன் நான் வேலை செய்யும் காரியாலயத்தின் ஒரு பகுதியில்தான் வசிக்கின்ருன் என்பதை அறிந்த எனக்கு ஒரே ஆனந்தம்.
நானும் அந்தக் காரியாலயத்தின் மறு பகுதியில்தான் இருக்கின்றேன்.
தினமும் என் அறைக்கு வருவான்,
30

மனிதன்
ஒய்வான வேளைகளில் நாம் குழந்தைகளாகி விடுவோம்.
கண்களை அகல விரித்து கைகளை அங்கு மிங்கும் ஆட்டிக்கொண்டு தனது பாடசாலை அனுபவங்கள், விளை யாட்டுக்கள் எல்லாவற்றையும் ஒன்றும் தவருது வர்ணித்துக் கொண்டே இருப்பான். அவற்றைக் கேட்டுக்கொண்டி ருப்பதில் எனக்குக்கொள்ளை இன்பம்
அவன் கூறுபவைகளைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் அவனுடன் சிங்களத்தில் சரியாகக் கதைக்க முடியாமல் நான் தவிப்பதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
நான் ஏதாவது சொல்லும்பொழுது இரு கன்னங் களையும் மலர்க் கரங்களால் தாங்கிக்கொண்டு கண்களை இமைக்காது, சிந்தனையை நிலைநிறுத்தி, சொல்வதெல்லா வற்றையும் மெளனமாகக் கேட்டுக்கொண்டேயிருப்பான் அவன்,
தினமும் காலை வேளையில் அவனது மழலைக் குரல்தான் என்னை நித்திரையிலிருந்து எழுப்பும்.
காலை ஆறு மணிக்கு முன்பே அவன் எனது அறைக்குள் நுளைந்துவிடுவான்.
“ DTDro“
அரைத் தூக்கத்தில் கிடக்கும் என் காதில் கணிரென அவன் குரல் ஒலிக்கும்.
நான் கண்களைத் திறக்காவிட்டால் அவனுடைய தளிர் விரல்கள் எனது இமைகளைத் திறக்கும்.
** அலுப்பாக இருக்கின்றது' என்று சில வேளைகளில் நான் கூறுவேன்.
எனது கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிறிது நேரம் என் அருகில் கிடப்பான், மீண்டும் எழுப்புவான்.
3.

Page 26
உதயம்
அதற்கும் நான் எழும்பாவிட்டால் தண்ணிர் ஊற்றப் போவதாக மிரட்டுவான்.
சிரிப்பும் கலகலப்புடனும்தான் தினமும் நித்திரை விட்டு எழுவேன். ஒருநாள்
“ “ LontLDIT...’’
'என்ன காந்தி??? காந்திதான் அவன் பெயர். 'எனக்குத் தமிழ் சொல்லித் தருவீர்களா?* ஆவலுடன் கேட்டான். அந்தக் கேள்விக்குள் சோகம் நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.
"ஓ! நன்றகச் சொல்லித் தருகிறேன்.' மகிழ்ச்சியுடன் கூறினேன். * 'இப்பவே சொல்லித்தா மாமா' 'அம்மா’ "அப்பா' என்ற இரு சொற்களுடனும் தமிழ்ப்படிக்க ஆரம்பித்து வைத்தேன் அவனுக்கு,
வர்ணப் படங்கள் நிறைந்த ஆரம்ப தமிழ்ப் புத்த கத்துடன் அடுத்த நாள் படிப்புத் தொடர்ந்தது.
இரண்டு மூன்று நாட்கள் சென்றன. ஆவலுடன் பாடங்களைப் படித்து வந்தான் அவன்.
ஒருநாள்
** LDfTDIT * *
"'என்ன காந்தி'
'உலகத்தில் பெரியது எது?"
2

மனிதன்
turror.’’
'இல்லை"
'அப்போ என்ன? நீ சொல்லு பார்ப்போம்"
'மனிதன்! "
"எனக்குப் புரியாத இந்த விசயம் இவனுக்கு எப்படிப் புரிந்ததோ ?
'உனக்கு எப்பிடித் தெரியும் காந்தி?' "
வியப்புடன் கேட்டேன்.
'அப்பா சொல்லித் தந்தவர்."
இடையிடையே கேள்விகளைக் கேட்டு அவனே பதிலும் சொல்லுவான்.
அன்று ஒரு பாடத்தை வாசித்துக்கொண்டிருந்தவன் இடையில் நிறுத்திஞன்.
'மாமா, நீங்கள் எங்களுடன் இங்கு இருப்பீர்களா அல்லது உங்கள் வீட்டிற்குப் போய்விடுவீர்களா?
திடீரென ஏதோ ஒர் எண்ணம் வந்தவனைப்போல கேட்டான்.
"ஏன் காந்தி???
'இல்லை, சொல்லுங்கோ. நீங்கள் எங்களுடன் கொழும்பில் இருப்பீர்களா?"
'ஓ! நான் இனிமேல் இங்கே தான் இருப்பேன்."
அப்படி என்ருல் நீங்கள் சிங்களம் படிப்பீர்களா?"
ஓ!'
"அப்போ நான் சொல்லித் தரட்டுமா?’’
ஆவலுடன் கேட்டான்.
33
2-, 3.

Page 27
உதயம்
"சரி சொல்லித்தா. நான் படிக்கின்றேன்."
மனதுக்குள் சிரித்துக்கொண்டே கூறினேன்.”*
** இன்றே. இப்போதே!'
அவனுடைய சொற்களில் வேகமும் உறுதியும் கலந்திருந்தன.
நான் அவனுக்குத் தமிழில் குரு.
அவன் எனக்குச் சிங்களத்தில் குரு.
வர வர அவனுக்கு தமிழ் படிப்பதில் ஆர்வம் குறையத் தொடங்கியது, நான் அவனை ஊக்கப்படுத்தியும் அவன தைப் பொருட்படுத்தவில்லை. ஆனல் அவன் எனக்குச் சிங்களம் சொல்லித் தருவதில் அக்கறை காட்டினன்.
சில நாட்களால் அவன் தமிழ் படிப்பதையே கைவிட்டான்.
எனக்குச் சிங்களம் சொல்லித் தருவதில் அவன் அதிக கவனம் காட்டினன். கவனம் மாத்திரமல்ல, ஒருவித அவசரமும் நிறைந்திருந்தது அவனுடைய செயலில்,
ஏன் இந்த அவசரம்?
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அவனுடைய அவசரம் அதிகரித்தது.
வாசிப்பது, எழுதுவது, வீட்டுவேலைகள் தருவது, பரீட்சைகள் வைப்பது, பரீட்சைகளில் சரியாகச் செய்தால் சீனி போளை தருவது - இப்படியே அவன் என்னைத் துரிதப்படுத்தினன்.
எதற்காக?
புரியாத புதிராகவே இருந்தது எனக்கு.
அன்று காலை அவன் என்னை எழுப்பும்பொழுது அவனுடைய மேல் கொதித்தது. திடுக்கிட்டுப் போய்
34

மனிதன்
நான் பார்த்த பொழுது அவனுடைய முகம் வாடிச் சோர்ந்திருந்தது.
அவனுக்கு சுரம்!
உடனே அவனை வீட்டிற்கு அனுப்பினேன். அன்று முழுவதும் அவன் வரவில்லை. எனக்கும் மனதில் அமைதியில்லை.
வேலை முடிந்து அவனுடைய வீட்டிற்குப் போனேன்.
கட்டிலுக்கருகில் அவனுடைய பெற்றேர் உட்கார்ந் திருக்கின்றனர்.
அவனுடைய கண்கள் மூடியிருக்கின்றன. கண்களின் கடைக்கோடியில் கண்ணிர்த்துளிகள்! அவனுடைய முகம் கருகிக்கிடக்கின்றது. சுரத்தில் அவன் துடித்துக் கொண்டிருக்கின்றன்.
எனக்கு வேதனை தாங்கமுடியவில்லை.
'காந்தி, 4 9 p
மெதுவாக அழைக்கின்றேன்.
அவனுடைய கை மெதுவாக உயர்கின்றது. அதைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்து அவ னுடைய தலையைத் தடவிக்கொடுக்கின்றேன்.
அவன் கண்கள் அரைவாசி திறந்துவிட்டு, மறுபடியும் மூடிக்கொள்கின்றன.
அன்று இரவு முழுவதும் அவன் பக்கத்திலேயே இருந்தேன்.
அவனுக்கு சுரம் இறங்கவில்லை.
மறுநாள் நான் வேலைக்குப் போகவில்லை.
என்னுடன் வேலை செய்பவர்களும் வந்து பார்த்து விட்டுச் சென்ருர்கள்.
35

Page 28
உதயம்
அவன் துடிக்கின்றன். டாக்டர் வந்து ஊசி போடுகின்ருர், இடைக்கிடை அவன் ஸ்மரணை இழக்கின்றன். "இந்த மொட்டு மலர்வதற்கிடையில்..."
ஏன் இந்த விபரீத எண்ணம் எனது உள்ளத்தில் தோன்றுகின்றது?
"சே, அப்படி ஒன்றும் நடக்காது. காந்திக்கு ஒன்றும் நடக்காது."
எனது உள்ளத்தைத் தேற்றுகின்றேன். " "மாமா நீ சிங்களம் படிக்கவேணும். கட்டாயம் சிங்களம். நீ படிப்பியா? இல்லாட்டி.."
ஸ்மரணை இழந்த நிலையில் அவன் கூறுகின்ருன். அவ்வளவுதான். அதற்குமேல் அவனல் பேச முடிய வில்லை.
'காந்தி நான் கட்டாயம் படிக்கின்றேன். நீதான் சொல்லித்தரவேணும்'
துக்கம் தொண்டையை அடைக்கக் கூறிக்கொண்டே வழிந்தோடும் என் கண்ணிரைத் துடைக்கின்றேன்.
அவனுக்கு நெடுமூச்செடுக்கின்றது. அங்கு மிங்கும் உடலை அசைக்கின்ருன். இடைக்கிடை 'தமிழ்' " " சிங்களம்' சொல்கின்றன். ஒன்றும் புரியவில்லை.
என்று ஏதோ
டாக்டரும் தொடர்ந்து ஊசி போடுவதும் மருந்து கொடுப்பதுமாக இருக்கின்ருர்,
மூன்ரும் நாள் சுரம் தணிய ஆரம்பித்தது. எனக்கும் மனதில் நிம்மதி ஏற்பட்டது. 36

மனிதன்
சில நாட்களால் அவன் எழுந்து உலாவினன். உடல் பலவீனமாக இருந்தது.
ஒரு மாதத்தில் அவனுடைய உடல் தேறியது. மறுபடியும் எனக்குச் சிங்களம் சொல்லித்தர ஆரம் பித்தான்.
ஒரு மாதம் வீணுகிவிட்டதே என்ற கவலை அவனுக்கு, அவனுடைய மனதை வருத்தக்கூடாதே என்றதற்காக அவன் விருப்பப்படியே நான் சிங்களம் படித்தேன்.
நாள் போகப் போக, என்னை அறியாமலே, எனக்குச் சலிப்புத்தட்டத் தொடங்கியது.
அவனுடைய செயல்கள் எனக்குத் தொல்லையாக மாற ஆரம்பித்தனவோ?
அவன் என்னைச் சிங்களம் படிக்கும்படி அவசரப் படுத்தினன்.
ஏன் இந்த அவசரம்? ஒருநாள். *"மாமா, வீட்டு வேலையைக் காட்டுங்கள்’’ வந்தது வருமுன்பே கேட்கின்றன். "நான் செய்யவில்லை' என் சொற்களில் சற்று கடு கடுப்பு.
"ஏன்? பீதியுடன் கேட்கின்ருன். ‘இனி நான் சிங்களம் படிக்கவில்லை." கோபமும், வெறுப்பும் கலந்த குரலில் கூறுகின்றேன்.
அவனுடைய முகம் கருகியது. உதடுகள் நடுங்கு கின்றன.
37

Page 29
உதயம்
மெள்ள எழுகின்றன். நான் அவனை வெறித்துப் பார்க்கின்றேன். திடீரென்று அவன் ஒடிஞன். என் நிலையை நான் உணர்ந்தேன். அவன் பின்னல் ஒடுகின்றேன். அவன் வீட்டிற்குள் ஓடிவிட்டான், என்ன செய்வதென்றறியாது, திகைத்துப்போய்
அவன் வீட்டு வாசலில் நிற்கின்றேன்.
அவன் விக்கி, விக்கி அழுகின்ருன். அவனுடைய
சோகக் குரல் எனது இதயத்தை அழுத்துகின்றது.
ஏதோ பேச்சுக் குரல். அவன் அழுதுகொண்டிருக்கின்றன். திடீரெனச் சிரிப்பொலி!
அவளு? இல்லை. அவனுடைய பெற்றேர்கள் கெக்கலியிட்டுச் சிரித்தபடி
வெளியே வருகின்ருர்கள்.
38
அவன் அழுதுகொண்டுதானிருக்கின்றன். எனக்கு ஒரே குழப்பம். அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்ருர்கள். "ஏன் சிரிக்கின்றீர்கள்??? பதட்டத்துடன் கேட்கின்றேன். **காந்தி அழுகின்றன். அதுதான் சிரிக்கிறம்." 'அதற்கு நீங்கள் ஏன் சிரிக்கவேண்டும்?"
"சிரிக்காமல் என்ன செய்கிறது?"

மனிதன்
அவனுக்கு அழுகை.
இவர்களுக்குச் சிரிப்பு.
எனக்கு?
'ஏன் சிரிக்கின்றீர்கள்?"
'அவன் ஏன் அழுகின்ருன் தெரியுமா?"
அவனுடைய தந்தை என்னைக் கேலியுடன் கேட்கின்ருர்,
"ஏன்?" s
'உம்மை இனித் தன்னல் காப்பாற்ற முடியாதாம், அதுதான் அழுகிருன்."
"என்னத்திலிருந்து என்னைக் காப்பாற்ற..?
'தன்னல் உம்மைச் சாவதிலிருந்து காப்பாற்ற முடியாதாம்.'
என்ன, என்னைச் சாவிலிருந்து.காந்தி என்னை சாவதில் இருந்து எப்படிக் காப்பாற்ற முடியும்?"
"நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சாவதிலிருந்து காந்தி என்னை எப்படிக் காப்பாற்ற முடியும்???
நீர் சிங்களம் шифф3, மறுத்துவிட்டீராம் அதுதான்.'
'சிங்களம் படிக்காவிட்டால் நான் ஏன் சாக வேண்டும்?"
"நீர் சிங்களம் படிக்காவிட்டால்;- இனிமேல் இனக்
கலவரம் வந்தால்."
'காந்தி..!"
39

Page 30
ஒளி
“என்ன விலை???
'ஏழரை ரூவாயெண்டால் எடணை.'
**அஞ்சு ரூவா...”*
* 'இல்லை?" "என்ன, அஞ்சு ரூவா தாஹியா? இல்லையா?* *" என்னணை பகிடியா பண்ணிருய்?’ 'சரி அஞ்சே கால்?? "ஏனணை கேக்கிருய், ஏழு ரூவாயிலை ஒரு சதம் குறைஞ்சாலும் தரன்.'
"ஏழு ரூவாய்க்குக் காணும். ஆறு ரூவாய்க்கு வாங்க லாம் போலை கிடக்கு."
மனதிற்குள் மதிப்புப் போடுகின்ருள் அவள்.
**எட மோனை, வாலைக்குலை விலை இப்ப நல்ல இறக்கம் . அஞ்சரை ரூவா எண்டால் தா, இல்லாட்டி வைச்சிரு.'
ஆறரை ரூவாய்க்கு விக்கலாம் போலை கிடக்கு. கடசி
ஆறகாலுக்கு வித்தாத்தான், சந்தைக் காசு இருவத்தைஞ்சு சதம் போக ஆறு ரூவாயாவது கையிலை வரும்."
வாழைக் குலைக்காரனுக்குத் தெம்பு பிறக்கின்றது.

ஒளி
“எணே, ஆறமுக்காலெண்டால் எடணை.' "சரி, கடசி விலை அஞ்சமுக்கால். தாறேண்டா தா. அதுக்கு மேலை இஞ்ச ஒருதரும் வாங்காயினை. என்ன, தாஹியே???
'எணை, இப்ப வாழைக்குலை சரியான நெருப்பு விலை. பூனைக்குட்டி போலை திரண்ட காய்; உந்த விலைக்கு ஆர் தரப்போருன். சும்மாபோணை.”*
**இந்தாடாப்பா, ஒரு பத்துச் சதத்தைக்கூட வச்சு வாங்கு. இஞ்ச புடி காசை'
"சும்மா விசர்க்கதை கதையாதயணை. ஆறமுக்காலிலை ஒரு சதம் குறஞ்சாலும் நான் தரன்.'
'சரி இன்னும் ஐஞ்சு சதத்தைக் கூடவைச்சு வாங்கு. புடி காசை, எடுக்கிறன் குலையை.'
*"எணே, மணிசனைச் சும்மா கரச்சல் பண்ணுதையணை. நான் குடுக்கேல்லை போணை.”
"எட, ஆகப்பெரிய விலை வைக்கிருய். சரி நீ வச்சிர்ராப்பா.'
கூறிக்கொண்டே அடுத்த குலைக்காரனிடம் செல்வது போலப் போகிருள்.
குடுக்கட்டோ. நாலாங்கேள்வி யாப்போச்சு, இனி வச்சிருந்தால் சிலவேளை ஐஞ்சு ரூவாய்க்குக் குடுக்க வேண்டி வந்தாலும் வரும்.'
வாலைக்குலைக்காரன் விற்கும் மன நிலைக்கு வருகின்ருன். "நான் கூப்பிடக் குடாது. கூப்பிட்டாச் சில வேளை குறைச்சுக் கேட்டாலும் கேப்ப, அவ திரும்பி வருவ தானே. வரட்டும் பாப்பம்."
அவளுடைய வரவை எதிர்பார்க்கின்றன் குலைக்காரன். 4.

Page 31
உதயம்
'ஆறு ரூவா...'"
இழுத்துக்கொண்டே கூறுகின்றர் அவர்.
அவள் திடுக்கிட்டுத் திரும்புகின்ருள். வியப்பில் அவள் கண்கள் விரிகின்றன.
சிரித்தபடியே அவர் நிற்கின்ருர்,
வாழைக் குலைக்காரனுக்கு ஆச்சரியம்,
"நான் கேட்ட குலையை இவர்...??
ஆத்திரம் பொங்கிக்கொண்டு வருகின்றது அவளுக்கு.
'என்ன, நானல்லே உந்தக் குலையைத் தீத்தஞன்...?’’
அவருடைய அசட்டுச் சிரிப்புத்தான் அவள் கேள்விக்குப் பதில் பேசியது.
'இந்தா ஆறு ரூவா விடு குலையை.”*
கூறியபடியே காசை நீட்டுகின்ருர் அவர்.
அவளுக்குப் பொறுக்கவில்லை.
‘என்ன, நான் தீத்த குலையை நீ வாங்கினல்."
அவர் ஒன்றும் பேசவில்லை. குலையின் "தாரைப் பிடிக்கின்ருர், அவளும் தாரைப் பிடிக்கின்ருள்.
'ஆறே கால்.
அவள் உதடுகள் அசைகின்றன. அரை குறையாகச் சத்தம் வெளிவருகின்றது. அக்குரலில் பயம், வெறுப்பு.
艇 *ஆறரை'
அலட்சியமாகக் கேட்கின்ருர்,
வாழைக் குலைக்காரனுக்குப் பெரும் அதிர்ச்சி.
'ஆறே முக்கால்’ 42

ஒளி
ஆவேசத்துடன் கூறுகின்ருள். 'ஏழு."
அவர் குரலில் ஏளனம் .
அங்கு கூடியிருந்த வாழைக்குலை வியாபாரிகளுக்குப் பெரிய ஆச்சரியம்.
*ஏழே கால்.'
நடுங்குகின்றது, அவள் தொண்டையிலிருந்து வந்த சத்தம்.
'எட்டு; வெட்டுறன்.'
கடு கடுப்புடன் கூறிக்கொண்டே குலையின் தாரில் ஒரு பக்கத்தை வெட்டிச் சீவுகின்ருர்,
அவன் பிடி தளர்ந்தது.
‘ஒரு நாளுமில்லாத வழக்கமாய்க் கிடக்கு. இவருக்கு இண்டைக்கு என்ன..."
அவளுக்குப் பேரதிர்ச்சி.
வாழைக் குலைக்காரனுக்கு ஆனந்தம் தாங்க முடிய வில்லை.
அடுத்தவனுடைய குலை வருகின்றது. ஆறு ரூவா தயங்கிக்கொண்டே கேட்கின்ருள்.
அவர் அவளைத் தொடர்கின்ருர்,
முடிவு?
அவருக்கு வெற்றி.
வியாபாரிகள் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் ஏதோ 'குசு குசு' என்று பேசுகின்றனர்.
அடுத்த குலை;-
அவருக்குத்தான்!
4á

Page 32
உதயம்
வேறு யாராவது வியாபாரி அப்படி நடந்திருந்தால், எல்லா வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து அவனுக்கு உடனே முடிவு கட்டியிருப்பார்கள். ஆனல் கனகர். ஒரு வியா பாரியும் கனகருக்கு எதிராக மூச்சுக் கூட விட முடியாது.
வேறு குலையைக் கேட்கின்ருள் அவள். கனகர் விட வில்லை. அவளைத் தொடர்கின்ருர்,
அவளுக்கு ஆத்திரம் எல்லை கடக்கின்றது. **இந்த அநியாயத்தைக் கேக்க ஒருதருமில்லையோ?” பொருமிக்கொண்டே அவள் கேட்கின்ருள்.
எல்லா வியாபாரிகளும், கனகருடைய அட்டகாசத்தை இவ்வளவு காலமும் பொறுத்துக்கொண்டுதான் வரு கின்றனர். காரணம், சர்வ வல்லமையுடைய அவருக்கு எல்லோரும் பயம்.
இன்று? 'இது சரியில்லை கனகர் அம்மான்.” பயத்துடன் ஒரு வியாபாரி கூறுகின்ருன். 'ஆரடா அவன், எனக்குச் சரி பிழை சொல்லுறது?’ கர்ஜிக்கின்ருர் கனகர் அம்மான். பதிலில்லை.
அடுத்த வாழைக்குலையை வாங்குவதற்கு விலை கேட் கின்ருள் அவள், அதிலும் கனகர் குறுக்கிடுகின்றர்.
'உப்பிடியெண்டால் இனி இஞ்சை என்னண்டு யாவாரம் செய்யிறது. அவளும் பிழைக்கத்தானே வேணும். கனகர் அம்மான் நீ செய்யிறது அவ்வளவு நல்லதல்ல. நீ எல்லாக் குலையையும் வாங்கினல் அவள் என்ன செய்யிறது? அப்படியெண்டால் நாங்களும் ...'
சில வியாபாரிகள் ஒன்று சேர்ந்து சின்னச்சிக்காக நியாயம் பேசுகின்றனர்.
44

ஒளி
"எடே ஒருதரும் இஞ்சை மூச்சுக்காட்டக்கூடாது. என்னை ஆரெண்டு தெரியுமே? கவனம்.”*
கனகர் எச்சரிக்கின்ருர்,
ஒருவருடைய தலையிலிருந்த வாழைக் குலையைப் பிடித்து இறக்குகின்ருள் சின்னச்சி.
'விலை என்ன?"
முந்தியடித்துக்கொண்டே விலையைக் கேட்கிருர் கனகர்.
சின்னுச்சி தன்னை மறக்கின்ருள், அவளுடைய உள் ளத்தில் கனன்றுகொன்டிருந்த கோபத் தீ ஜ"சவாலை விட்டுப் பொங்குகின்றது. முகம் விகாரமாகின்றது.
‘பாடேலை போவானே, உன்னை ஆனை அடிக்க."
சந்தை இரைச்சலைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கின்றது அவளுடைய வச்சிரக் குரல்.
திடீரெனக் குனிந்து இரு கைகளிலும் புழுதியை அள்ளுகின்ருள்.
*நீ பரி சாம்பலாப் போவாயடா.'
திட்டியபடியே கனகருடைய முகத்தில் புழுதியை வீசுகின்ருள்.
"என்னடி சொல்லிருய்?"
அவருடைய கர்ஜனை எல்லோரையும் கலக்குகின்றது. பல்லை "நற நற வென்று கடித்துக்கொண்டு அவளுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்து.
"ஐயோ, நாசமாய்ப் போவானே, உன்னைப் பேயடிக்க."
'அம்மான் விடு அவளே. விடியக் காத்தாலை ஒரு பொம்பிளையோடை சண்டை பிடிச்சால் பாக்கிறவை என்ன சொல்லுவினை. சீ. மானக்கேடாய், விடம்மான் அவளை."
45

Page 33
உதயம்
மூன்று நான்கு வியாபாரிகள் இருவரையும் பிடித்து இழுத்துப் பிரித்து விட்டு, கனகரை இருவர் கட்டிப் பிடித்திருக்கின்றனர்.
'இஞ்சை விடென்னை, அவளை ஒரு கை பாப்பம். என்னை விடுங்கோடா,’
அம்மான் திமிறுகின்ருர்.
**இப்பென்னடா செய்யப்போருய்? எங்கை இன் ணுெருக்காத் தொடடா பாப்பம்?’’
வாழைக் குலை வெட்டும் கத்தியை ஓங்கிக்கொண்டு ஒடு கின்ருள் சின்னச்சி.
'எணை, சின்னச்சி அக்கா எப்பன் பொறணை, கனகர் பொல்லாதவரணை, எப்பன்."
சில பெண்கள் சின்னச்சியை இழுத்துப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகின்றனர்.
'எடியே உன்ரை பல்லுக்கொட்டுவனடி, இஞ்சை வாடி. என்னை விடுங்கோடா,’
அம்மானை இறுகப் பிடித்து இழுத்துக்கொண்டுபோகின் றனர் சிலர்.
**விடுங்கோடா என்னை. நான் உயிரோடை இருந் தென்ன? கால்காசுக்குப் பெறுமதியில்லாத இந்தப் பிச்சைக் காரி என்னை இப்பிடிப்பேச நான் கேட்டுக்கொண்டு ஏன் இந்த உயிரை இனி வைச்சிருப்பான்?"
பிடித்திருந்தவர்களை உதறிவிட்டு, கொடுக்கை வரிந்து. கட்டியபடியே ஒடுகின்ருர் கனகர்,
சின்னச்சியும் கத்தியை ஓங்கியபடியே ஓடிவருகின்றள்,
१
‘ஐயோ
46

ஒளி
அலறியடித்துக்கொண்டு அவளைப் பிடிக்கின்ருரர்கள் 6) Gorff. அம்மானையும் ஓடிவந்து பிடிக்கின்ருர்கள் . זrrhé66חנן חשף6
* “எடே நான் கால்காசுக்குப் பெறுமதியில்லாட்டி உனக்கென்னடா? உன்னட்டைப் பணம் இருந்தால் உன் னுேடை வைச்சிரடா, நீ உந்தக் காசை எப்பிடிச் சேத்தனி யெண்டு ஊரைக் கேட்டால் தெரியும்.'
‘என்ரை பரம்பரையைப்பற்றி உனக்குத் தெரி யுமோடி? இத்தினை காலமாய் இந்த சுண்ணுத்திலை, ஒரு தம்பி தலை நிமிர்ந்து எங்களோடை ஞாயம் பேசேல்லை. எங்களைக் கண்டிட்டு தோளாலை சால்வை எடாதவன் இந்த ஊரிலை இல்லை. நான் சின்னத்தம்பி விதானையாற்றை பரம் பரை எண்டதை மறந்து பேசினயெண்டால் நீ இந்த லோகத்திலை உயிரோடை இருக்கிறதைப் பாப்பம், மரி யாதயாய் வாயைப் பொத்தடி.'
“ஒமடா, ஒ. உன்ரை பரம்பரையைப்பற்றி ஒரு தருக்கும் தெரியாதெண்டு நினையாதை, அந்தப் பத்தற்ரை முருகேசற்றை காணியைக் கள்ள உறுதி முடிச்சு தன்ரை பேரிலை எழுதினவனல்லே உன்ரை கொப்பன். எத்தினை பேற்ரை நம்பிக்கைச் சொத்தை அமத்தி எடுத்தனி நீ. இப் பவும் அந்தப் புள்ளையாற்ரை கோயில் வரும்படீலைதானே கல்வீடு கட்டிருய், ஊர் வாயை உலை மூடியாலை மூடிப் போடுவியே. நீ அந்த நாளேலை.'
‘விர்ரு என்னை; இப்ப உவளுக்கு என்ன வேணு மெண்டு கேட்டுப்பாப்பம், கூலிக்கு வேலை செய்துவேண்டித் திண்ட உந்த மானங்கெட்ட பரத்தேன்ரை குடலை
எடுத்து.'
தன்னை விடுவிக்கத் திமிறுகின்ருர் கனகர். அவருடைய கண்கள் செவ்வலரிப் பூப்போல சிவக்கின்றன. மார்பிற்குள் ஏதோ உருண்டு புரண்டு. ஜலகண்டமாக வியர்க்கின்றது.
47

Page 34
உதயம்
'உந்த ஐயனர் இருந்தா வாற சந்தைக்கு நீ இருக்க மாட்டாயடா.'
தொண்டை கிழியக் கத்துகின்ருள் சின்னுச்சி. கனகருக்கு மூச்சுத் திணறுகின்றது. அவருடைய கை மார்பை அழுத்திப் பிடிக்கின்றது. உடல் சோர்ந்து. "இனி இஞ்சை நிண்டென்ன செய்யிறது? குறுக்காலை போவான். விடியக் காத்தாலை என்ரை வாயிலை மண்ணைப் போட்டிட்டான்.
குமுறிக்கொண்டு தனது வீட்டைநோக்கி நடக்கின்ருள் சின்னச்சி. நடையிலை வேகம். நடைக்கிணைய அவளுடைய தலையிலிருக்கும் "கடகம்' அசைந்து கொடுக்கின்றது.
சந்தை இரைச்சல் அவளுடைய காதுகளிலிருந்து அழி கின்றது. இழக்கமுடியாத எதையோ ஒன்றை இழந்து விட்டதுபோலிருக்கின்றது அவளுக்கு. துக்கம் தொண் டையை அடைக்கின்றது.
"பத்துப் பதினைஞ்சு வரியமா நான் இந்தச் சுண்ணுச் சந்தேலை யாவாரம் செய்யிறன். ஒரு நாளும் இப்பிடி நடக்கேல்லை. இண்டைக்கு. அதுவும் இவனுேடை."
"அவன்ரை தலேலை இடியேறு விழ. உந்த ஐயணு ரிருந்தா உவனைக் கேப்பர்.
குமுறிக் கொந்தளிக்கின்றது அவள் உள்ளம். "இப்ப நான் வீட்டை போய்தான் என்னத்தைச் செய்யிறது? நாலு அரிசிக் கொட்டைக்கு ஆரிட்டைப் பல் லைக் காட்டிறது? அந்தச் சீட்டுக்காசு இன்னும் கட்டேல்லை, சீட்டுக்-காரி நெருக்கப்போருள். அண்டைக்கு வாங்கின கடன் அரிசி இன்னும் குடுக்கேல்லை. இண்டைக்கு ஆரிலை முழிச்சனே. நாசமாப் போவானலை."
அவளுடைய கண்கள் கலங்குகின்றன. இமைத் திரையில் கனகர் அம்மானுடைய உருவம் விஸ்வரூப மெடுக்கின்றது.
43

ஒளி
நன்ருக உயர்ந்து, அதற்கேற்றப்போலப் பருத்துப் பூரித்த உடல். தொந்தி வயிறு. அரையில் முழங்காலுக்கு மேல் கட்டப்பட்ட சாயவேட்டி, வயிற்றுடன் சாத்திச் செருகியிருக்கும் எண்ணெய் அழுக்குப் பிடித்த பெரிய "வல்லுவப் பை", தலையில் செம்பாட்டு நிறச் சால்வையால் முண்டாசுக்கட்டு. விரிந்து அகண்டு ‘பரந்த நெற்றியில், திருநீற்றுப் பட்டைக்கு மத்தியில், ஒரு சதப் பருமனில் சிவந்த குங்குமப்பொட்டு. கையில் வாழைக் குலை வெட்டும் பெரிய பளபளக்கும் கத்தி. கனகரைப் பார்த்தால் ஐயனர் கோவில் வேள்வியில் SLiru வெட்டுபவனுடைய பயங்கரத் தோற்றம். கனகருடைய கண்கள் G395rt Lurr வேசத்தில் தீயைக் கக்குகின்றன.
இந்த விகாரமான தோற்றத்தை மனக் கண்ணில் கண்ட சின்னுச்சியின் உடல் பயத்தில் S-2U-l -- Lih கொடுக்கின்றது.
"இண்டைக்கி ராத்திரி என்ன நடக்கப் போகுதோ? ஒரு
வேளை என்ரை வீட்டுக்குக் கல்லெறிஞ்சு. இல்லாட்டி 'நெருப்பு வைச்சு. "
அவளுடைய உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. நடையில் தயக்கம்.
*" என்ன சின்னச்சியக்கா இண்டைக்கு Gavar யோடை..”*
பழக்கப்பட்ட குரல். ஆனல் யார் என்று சின்னுச்சி கவனிக்கவில்லை.
y
'அரிசி , நெருப்பு . வீட்டை அந்தக் கன.
ஏதோ உளறிக்கொண்டே நடக்கின்ருள் அவள். என்ன சொல்லுகின்ருள் என்று அவளுக்கே தெரியவில்லை.
எதையோ பேசிக் கெக்கலியிட்டுச் சிரித்துக்கொண்டு செல்கின்றனர் இருவர்" “...4 金9

Page 35
உதயம்
"கனகற்றை சிரிப்புப்போலை. அவன் இப்ப சந்தேக்கை யல்லோ நிப்பன், இல்லை. சந்தோஷம் வந்தால் கனகரும் இப்பிடித்தான் சிரிக்கிறவர்."
கொடுப்பிற்குள் வெற்றிலையைச் சப்பிக் குதப்பிக் கொண்டு, "கடகட வென்று சிரிக்கும் கனகர் அம்மா னுடைய முகம் பளிச்சிடுகின்றது, அவளுடைய மனத் திரையில்.
சின்னச்சியின் அடி நெஞ்சிலிருந்து நீண்ட பெருமூச்சு எழுந்து வெளிவருகின்றது.
தலையிலிருந்த கடகத்தை" முற்றத்தில் போட்டு விட்டு வீட்டுத் தாழ் வாரத்தில் குந்துகின்ருள்.
அவளுடைய உணர்வு அலைகள் பொங்கி எழுகின்றன.
"முன்னம் முன்னம் நான் சந்தைக்குப் போன அண்டைக்கு. ‘ஒரு வாய் வெத்திலை தா புள்ளை, ** எண்டு என்னுேடை முதல் முதல் கதைச்சார் கனகர், நான் குடுத்த வெத்திலையைச் சப்பிக்கொண்டு, 'சோக்கான மாறு வெத்திலை. இப்பவே தண்ணி விடாய் மாறிட்டுது. உன்ரை கை பட்டதாலை தான் இப்பிடி உரிசையாக் கிடக்கு' எண்டு கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரிச்சார். எனக்கு வெட்கம்
வந்திட்டுது. தலையைக் குனிஞ்சன். 'என்ன புள்ளை வெக்கமாக் கிடக்கோ? வெக்கம் வருந்தானே இளசுகளுக்கு. மாறு வெத்திலை மாதிரி உன்ரை முகம் பசுமையா. அதையென்ன செய்யிறது, அவன் முருகேச னிருந்தால் உன்ரை பாடு." என்ரை கண்கள் கலங்க,
"புள்ளை, நீ ஒண்டுக்கும் யோசியாதை. இந்தச் சுண்ணுச் சந்தேக்கை நான் இருக்கும் வரையிலை உன்னுேடை ஒரு தம்பியும் மூச்சுக் காட்டாமைப் பண்ணிறன், உனக்கு காசு கீசு தேவையெண்டால் கேள், நான் தாறன். நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. இந்தக் கனகற்றை பேரைக் கேட்டா சுண்ணுச் சந்தையே கிடுகிடுக்கும்” எண்டு சொன்னர், அப்ப அவர் என்ன தங்கமான மணிசர்,
50

ஒளி
"அப்பா, என்ன மாதிரி தலையிடி மண்டையைப் புளக் குது! அந்தக் கட்டேலை போவான் என்ரை தலை மயிரைப் புடிச்சு இழுத்து.தலேலை எண்ணயோ தண்ணியோ..? நான் படுற பாட்டுக்கை. அவனும் என்ரை வாயிலை. எனக்கு ஆர் இருக்கினை கேக்க? அப்புவோ ஆச்சியோ...'
"என்ரை அப்பு நீ இண்டைக் கிருந்தால்..? என்ன மாய் பற்ருய் இருந்தவர் அப்பு, ஆச்சி செத்த அண் டைக்கு. "புள்ளை நீ தான் எனக்கு ஒரு.நீ ஒண்டுக்கும் மனம் நோவாதை, கோச்சியில்லை எண்டு நீ அழாதை, இந்தக் கட்டேலை உசிர் இருக்கு மட்டும் உன்னைக் கயிட்டப் படாமப் பாத்து, நல்ல இடத்திலை...' அப்பு நீ இருந்தா இந்தக் கனகன் இப்பிடி என்னை அடிக்க. '
அவளுடைய கன்னங்களில் கண்ணிர் வழிந்துஒடுகின்றது.
"அப்பு. நீதான் போட்டாய் ஆச்சீட்டை. ஐயோ ஆச்சி நான் இப்பிடி கயிட்டப்படுகிறதுக்கோ என்னைப் பெத்தனி? நீ இருந்தால். நான் படுகிற பாட்டை அவரா வது என்னுேடை இருக்க, நான் குடுத்து வைக்கேல்லை. என்ரை கலியாண வீட்டுக்கு கனகரிட்டைத்தானே அவரும் காசு மாறினதெண்டு சொன்னவர். அவர் இப்ப இருந்தா நான் சுண்ணுச் சந்தைக்கு ஏன் போப்போறன். அவர் என் னைக் கலியாணம் கட்டின நாளேலை ஒரு கரைச்சலு மில்லாமை எப்பிடிச் சீவிச்சம்.'
அவளுடைய உள்ளத்துச் சுமையைச் சுமந்துகொண்டு வந்த பெரு மூச்சு, காற்றுடன் சங்கமிக்கிறது.
"அவர் என்னிலை எப்பிடி அன்பாயிருந்தவர். 'என்ரை ராசாத்தி உனக்கு ஒரு குறைச்சலுமில்லாம ராணி போலை வைச்சிருப்பன். உன்ரை முகத்தைப் பாத்துக்கொண்டிருக்க என்ரை பசி மாறுது.’ எண்டு அடிக்கடி சொல்லுறவர். அப்ப, நானும் அவரும் மானத்தோடை, மற்றவேட்டை பல்லுக் காட்டாமை எங்கடை தேகத்தைப் புளிஞ்சு பாடு பட்டுச் சீவிச்சம். எப்பன் தலை இடி என்டால் அவர் படுற பாடு, எப்பிடி துடிப்பர்? இப்ப?
51

Page 36
உதயம்
"எத்தினை நாள் அவரிட்டை வாணஞ் செய்யாதை யெண்டு சொன்னன். அவர் கேட்டாத் தானே. அந்த ஐயனர் கோயிலிலை கொளுத்தின வாணந்தானே அவற்றை உயிருக்கு யமனய் வந்தது. இப்ப என்னை ஊரவை அடிக்க ஏனெண்டு கேக்க ஆர் இருக்கினை?
கதறி அழவேண்டும் போலிருக்கின்றது அவளுக்கு.
"ஐயோ! ஐயோ!! என்ரை."
ஐந்தாறு வீடுகளுக்கப்பால் கேட்கின்றது அவலக் குரல.
யார் குளறுகின்ருர்கள்?
அந்த அவலக் குரல் சின்னுச்சிக்குக் கேட்கவில்லையோ?
அவள் வேறு எங்கோ மானசீக உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிருள்.
*நான் ஆற்ரை குடியைக்கெடுத்தணுன்? எனக்கேன் இப்பிடி வந்துது. ஏன், இப்பதான் என்ன? பாடுபட்டுத் தானே நான் நாலு பணம் சம்பாதிக்கிறன். இந்தக் கட் டேலை உயிர் கிடக்குமட்டும் உழண்டுதான் சீவிப்பன். கனகர் என்னதான் செய்யப்போருர் எண்டதையும் பாப்பம். எப் பாலும் தட்டுப்பட்டா ஒரு ஐஞ்சைப் பத்தை அவரிட்டை மாறுறணுன்தான். அதுவும் சும்மாவே? வட்டிக்குத்தான். கடும் வட்டி. இனி உயிர் போனலும் அவரிட்டை நான் போமாட்டன். அவரில்லாட்டி, வேறை ஒருதரிட்டையும் மாறமாட்டனே? எனக்கு ஆர்தான் தராகினை? நான் ஒருதரிட்டையும் வாங்கிக்கொண்டு இல்லை எண்டு சொல் லேல்லை இவ்வளவு நாளும். பாப்பம் உவற்ரை கெட்டியை. அதை என்ன செய்யிறது, எனக்கு ஒரு பெத்த பிள்ளை இருந்தா.
"கனகனும் இப்ப கொஞ்சக் காலமாய், வரவரமோசம். காசு கையிலை புடிபடப்புடிபட கண்கடை தெரியாமல் ஆக்களோடை சும்மா கொளுவிக்கொண்டு வாருன்."
52

ஒளி
*போன சந்தையிலண்டு, அவள் சின்னச்சியை அவன் படுத்தினபாடு? அவள் வாங்கப்போன வாழைக்குலை எல்லாத் தையும் அவளை வாங்கவிடாமல் அவன் விலையைக் கூட்டிக் கேட்டான். இது அநியாயமெண்டு அவள் ஒரு சொல்லுச் சொன்னதுதான். உடனை அவளை அவன் பேசாத பேச் செல்லாம் பேசினதோடை, அவளை அடிக்கேக்கை நான் குறுக்கிட்டன். என்னையும் ஒருகை பாத்துத்தாறன் எண்டு சொன்னன்.
"சும்மா என்னை வெருட்டிருன் எண்டுதான் நான் அண் டைக்கு நினைச்சன். இப்பதான் எனக்கு விசயம் தெரியுது." "கேக்கிறதுக்கு ஆக்களில்லை எண்டுதானே அவன் என்னை இப்பிடிச் செய்தவன்."
"என்ரை ராசா என்னை நீ விட்டுட்டுப் போன பிறகு நான் படுற துன்பம்.
* "ஐயோ! சின்னச்சி வந்ததடி மாராயம்.' ஒட்டமும் நடையுமாக வந்த தெய்வானையின் குரல் சின்னுச்சியை நிச உலகிற்குக் கொண்டு வருகின்றது.
* " என்ன?.”* கனவுலகிலிருந்து கதைப்பவளைப் போலக் கேட்கின்ருள் சின்னச்சி.
*"ஐயோ, அவர் வாய்க்காலையும் மூக்காலையும் ரத்தமாச் சத்தி எடுத்து .'
"'என்ன, ரத்தமாய் சத்தி. ஆர்?" பதறிப் போய்க் கேட்கின்ருள். "எங்கடை கனகர் அம்மான் செத்து.' *" என்ன, கனகரா!' அவ்வளவுதான். அவளுடைய திறந்த வாய் மூட வில்லை. தெய்வானை அங்கிருந்து எப்போது சென்ருள் என் பதுகூடச் சின்னுச்சிக்குத் தெரியவில்லை.
53

Page 37
உதயம்
நேரம் போய்க் கொண்டிருக்கின்றது. பறை மேளமும் சாக்குரலும் ஊரை அழைக்கின்றன.
சின்னச்சி, ?
வெற்று வானத்தை வெறித்துப் பார்த்தபடியே இருக் கின்ருள். அங்கு எதைத்தான் தேடுகின்ருளோ? அவளு டைய உடலில் எதுவித ஆட்டமோ, அசைவோ இல்லை. பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டதைப் போன்ற உணர்வு அவளுக்கு.
சூரியன் எரிந்து கருகிக்கொண்டிருக்கின்றன்.
கனகர் அம்மானுடைய இறுதி யாத்திரை? சவம் போய்விட்டது. அது சின்னச்சிக்காகக் காத்துக்கிடக்க வில்லை.
இயற்கை அன்னையின் முகத்தில் துயரச் சுமை, கண் களில் சோகம். மரங்களின் நிழல்கள் விரிந்து, அதிலிருந்து
ஜனித்த இருள் தனது நீண்ட நாக்கை நீட்டி, தன் எதிரே யுள்ள வெளிச்சம் அனைத்தையும் மெளனமாக நக்கிக் கொண்
டிருக்கின்றது.
மயானத்தில் கனகருடைய உடல் செந்தீயில் உருகி எரிந்து கொண்டிருக்கின்றது. "கனகர் இப்ப.? திடீரெனச் சுய நினைவிற்கு வந்த சின்னுச்சி எங்கோ போவதற்கு எழும்ப, தனது கைகளை ஊன்ற.
கைகள் அசையவில்லை அவை செயலிழந்து விட் и-ботоит?
தனது கைகளை வெறித்துப் பார்க்கின்ருள். உடலிலிருந்து கைகள் பிணைப்பை இழந்து விட்டனவா? கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் சின்னச்சியின் நினைவுக்குகை திறக்கின்றது.
54

ஒளி
அவளுடைய உள்ளத்திலிருந்து உருகிப் பாயும் உணர்ச்சி வெள்ளம் கொந்தளித்துப் பொங்கி எழுகின்றது
"இந்தக் கைகள் எத்தினை நாள் கனகரைக் கட்டிப் பிடிச்சு."
"அவன் தானே என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவன்."
"ஏன் நான் மட்டுமே? என்னைப்போலை எத்தினை பேற்ரை மானத்தைப் பறிச்சவன்? எங்களெல்லாரையும் அவன் அடக்கி, ஒடுக்கித் தலை எடுக்கவிடாமல்.’
*அவன்செய்த அநியாயங்கள்அவளுடைய உள்ளத்தில் வெறுப்பு, கோபம். "மற்றவேன்ரை வயித்திலை அடிச்சு, அவையின்ரை வாழ்க்கையை நாசமாக்கிற உவனைப் போலை ஆக்களை நாங்கள் ஒழிச்சுக்கட்ட வேணும். அதுக்கு நாங்கள் எல் லாரும் ஒண்டாய்ச் சேரவேணும்."
"ஏன் இண்டக்கு எனக்காகத்தானே கன பேர் ஞாயம் பேசினவை."
"கணகனைப் போன்றவங்களுக்கு நாங்கள் எல்லாரும் பயப்பிட்டகாலம் மாறி விட்டுதெண்டு இப்பதான் தெரியுது. இப்ப நாங்கள் எல்லாரும் ஒண்டு. இனித்தான் எங்களுக்கு நல்லகாலம் வரப்போகுது."
அவளுடைய மனச்சுமை இறங்குகின்றது. இருட்டிவிட்டதை அவள் இப்போதுதான் உணரு கின்ருள்.
நிதானமாகக் குடிசைக்குள்சென்று குப்பி விளக்கை ஏற்றுகின்ருள்.
இருளை விழுங்கிய ஆனந்த வெறியில் விளக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது.
★
55

Page 38
எ தி ரொ லி
அட நாலு மணியாய்ப் போச்சு!
நான் வீட்டை போறதுக்கிடேலை இந்த வேலையை முடிச்சுப் போடவேணும். இல்லாட்டிச் சரியில்லை
நாங்கள் நேர்மையாய்த்தானே வேலை செய்யிறம். பத்துப் பதினைஞ்சு வரியமாய் மாடு மாதிரி உழைச்சுக்குடுக் கிறம் முதலாளிக்கு.
அண்டைக்கு முதலாளி சயிக்கிளிலை ஒடித்திரிஞ்சார். இண்டைக்கு அவர் எங்கடை உழைப்பாலை காறிலை ஒடுருர்,
நாங்கள் நேர்மையாய் உழைச்சுப் போட்டு உரிமை கேக்க கோவிச்சார் அண்டைக்கு; வேலையிலை இருந்து கலைச் சுப்போடுவன் எண்டு வெருட்டினர்.
இண்டைக்கு......
இண்டைக்கு ஐஞ்சு மணியோடை வேலை முடிஞ்சு போம். ஆறு மணிக்கு வீட்டை போய்விடுவன்.
இண்டைக்கு மாத்திரமென்ன, இனி ஒவ்வருநாளும் ஐஞ்சு மணியோடை வேலை விட்டிடும்.
இதுக்கு முந்தி. .
இந்தத் தொழிற்சாலை துவங்கின நாளிலையிருந்து, நேற்றுவரை நிலம் வெளிக்க வேலைக்கு வந்தால் இரவு பத்து மணிக்குத்தான் வீட்டை போவம்.

உதயம்
இண்டையிலையிருந்து ஒரு நாளைக்கு எட்டு மணித் தியாலம்தான் வேலை செய்வம்,
சம்பளம் அப்பவும் ஒண்டுதான்; இப்பவும் ஒண்டு தான்.
இண்டைக்குச் சம்பளம்!
இந்த மாதம் நூற்றம்டது ரூவாயெண்டால்தான் ஒரு மாதிரி சமாளிக்கேலும். ஆன?
என்ரை இந்த மாதச் சம்பளத்திலை முதலாளி இருவத் தஞ்சு ரூவா கழிச்சுப் போடுவர். மிச்சம் எழுவத்தஞ்சு ரூவாயை வைச்சுக்கொண்டு என்னத்தைச் செய்யிறது?
குழந்தைக்கு மருந்து வாங்க வேணும். இரண்டு கிழமை கூப்பன் அரிசி வாங்கின கடன் காசு சங்கக் கடைக் காரனுக்குக் குடுக்கவேணும் . அது குடுத்தாத்தான் இந்தக் கிழமை கூப்பன் அரிசி வாங்கலாம். சுந்தரத்திட்டை கைமாத்தாய் வாங்கின பதினஞ்சு ரூவா, சீலை வெழுத்த
கிTசி.
செல்லத்தின்ரை சீலையும் கிழிஞ்சு போச்சு, ஒரு சீலை வாங்க வேணுமெண்டுது.
செல்லம், நீ என்னைக் கலியாணம் கட்டி என்ன சுவத் தைக் கண்டாய்? நேரத்துக்கு நேரம் சாப்பாடோ நல்ல சீலை சட்டையோ ஒண்டுமில்லை. மற்றப் பொம்பிளையளைப் போலை கோயில் குளம், படம் ஒண்டுக்கும் நான் உன்னைக் கனகாலமாய் கூட்டிக்கொண்டு போறேல்லை. உன்ரை என்ன ஆசையைத்தான் நான் பூத்தி செய்தன்? நீயும் ஒண் டையும் வாய்விட்டுக் கேக்கிறேல்லை.
உண்மையாய் நீ வறுமை பொறுத்தனி செல்லம். ஏதோ நான் கொண்டாறதை வைச்சுக் கொதிப்பிச்சு, எங்க ளுக்கும் தந்து, பிள்ளையளையும் ஒரு மாதிரி வளக்கிருய். என்னுலை உனக்கு என்ன சுவம்?
நான் என்ன செய்ய?
57

Page 39
உதயம்
நானும் இராப் பகலாய் பாடுபட்டு உழைக்கிறன். இதுக்கு மேலை என்னுலை என்னதான் செய்யேலும்?
குழந்தையஞம் மூண்டாய்ப் போச்சு. அதுகளும் கால் கை வச்சு வளந்தால் சாப்பாடு சீலை சட்டை பள்ளிக்குடச் சிலவு?
என்ன கடைகெட்ட சீவியம்?
டோன மாதம் முதலாளி அந்த நூற்றம்பது ரூவா கடன் தராட்டி என்ரை மனுசியின்ரை பிள்ளைப் பெத்துச் சிலவுக்கு அந்தரப்பட்டிருப்பன். முதலாளி இரங்கினதாலை ஒரு மாதிரிச் சமாளிச்சன். அதுவும் மாதம் மாதம் என்ரை சம் பளத்திலை இருவத்தைஞ்சு ரூவா கழிக்கிறதெண்டுதான் கடன் தந்தவர். அதாலை இந்த மாதம் இருவத்தைஞ்சு ரூவா போன மிச்சம் எழுவத்தஞ்சை வைச்சுக் கொண்டு என்ன செய்கிறது? இது எதுக்குக் காணும்?
இந்த மாதம் கடனுக்குக் கழிக்க வேண்டாமெண்டு முதலாளியைக் கேட்டால்?- முதலாளி எப்பிடிச் சம் மதிப்பார்?
சங்கத்திலை சேர்ந்ததுக்காக எங்களிலை முதலாளிக்குச் சரியான கோவம்,
"என்னடா நேற்றுவரை எனக்கு முன்னலை நிண்டு கதைக்கப் பயப்பிட்டவங்கள் இண்டைக்குச் சங்கம் எண்டு சொல்லிக்கொண்டு என்ஞேடை சரி சமஞய்க் கதிரையிலை இருந்து கதைக்கவாருங்கள், என்னட்டைக் கூலி வேலை செய் கிறவங்கள். விடுவனே நான்? இதெல்லாம் அந்தக் கொம் யூனிஸ்ட் காறங்களாலைதான் வந்தது. இதை முளையிலை கிள்ளி எறியவேணும். இப்பவே மட்டம் தட்டாட்டி அவங்கள் என்னை மதியாங்கள். என்ரை மானம் போன பிறகு நான் எப்பிடி மனிசனுய்த் திரிகிறது? இந்தத் தொழிற் சாலையை மூடினுலும் நான் உவங்களோடை பேச்சு வார்த் தைக்குப் போவனே? போனப் போகுது. பாப்பம் உவங் கடை கெட்டித்தனத்தை ஒருக்கா"

எதிரொலி
ஒரு மாதத்துக்கு முந்தி நாங்கள் சங்கத்திலை சேந்து கோரிக்கையள் கேட்ட அண்டைக்கு, எங்கடை தொழிற் சாலைக்கு முன்னலை இருக்கிற கடை முதலாளிக்குச் சொன்ன ராம் எங்கடை முதலாளி,
எங்கடை கோரிக்கையளைத் தராட்டி நாங்கள் வேலை நிறுத்தம் செய்வம் எண்டு தவால் அனுப்பினம்,
** வேலை நிறுத்தம் செய்தால் உவங்களை அடிச்சுக் கலைச்சுப் போட்டு, வேறை ஆக்களை எடுத்து வேலை செய் விப்பன். என்னை ஆரெண்டு நினைச்சுக் கொண்டாங்கள் உவங்கள்?’
எண்டு மனேச்சரிட்டைச் சொல்லிவிட்டார் அண் டைக்கு.
ஆன நேற்று எங்கடை தொழிற்சங்கத் தலைவரையும் எங்களிலை மூண்டு பேரையும் கதிரையிலை இருத்திப் பேச்சு வார்த்தை நடத்தி, நாங்கள் கேட்ட கோரிக்கைகளையும் தாறன் எண்டு ஒப்புக்கொண்டார்.
அதே முதலாளியிட்டை இந்த மாதம் என்ரை கடன் காசைக் கழிக்க வேண்டாமெண்டு கேட்டால் அவர் எப் பிடிச் சம்மதிப்பர்?
அதுவும் அவருக்கு என்னிலை சரியான ஆத்திரம்.
போன வெள்ளிக்கிழமை இரவு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தன்.
என்ரை படலைக்கை ஒரு கார் வந்து நிண்டுது.
நல்ல இருட்டு.
ஆரெண்டு பாப்பம் எண்டு நான் விளக்கை எடுத்துக் கொண்டு வெளியாலை வந்தன்.
"சின்னத்துரை**
59

Page 40
எதிரொலி
கூப்பிட்டுக்கொண்டு முதலாளி முத்தத்திலை வந்து நிக்கிருர்.
நான் இவரை இப்பிடி வருவர் எண்டு எதிர் பார்க்கேல்லை.
இண்டைக்குத்தான் முதல் முதல் முதலாளி என்ரை படலையைத் திறந்தவர்.
நான் திகைத்துப் போனன்.
கொஞ்ச நேரம் என்னுலை வாய் துறக்கேலாமைப் போச்சு.
முதலாளியின்ரை முகத்தைப் பார்க்கிறன்.
நெத்தி நிறைய விபூதி, நடுவிலை பெரிய சந்தணப் பொட்டு.
"என்ன முதலாளி இந்த நேரத்திலை...'
'நான் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாலை வாறன். சும்மா உன்னையும் பாத்திட்டுப் போவமெண்டு வந்தன்."
"பொறுங்கோ முதலாளி, புட்டுவமெடுத்துக்கொண் டாறன்.'"
இல்லை, இல்லை. வேண்டாம் சின்னத்துரை. நான் கெதியாய்ப் போவேணும்.'
'அப்ப?'
"எப்பிடி உன்ரை மனுசி, பிள்ளையளின்ரை பாடு? சுவமாயிருக்கினமே?”
"ஓம் முதலாளி.'
* சிலவுப்பாடு???
'ஒரு மாதிரிச் சரிக்கட்டிறம்.”*
60

உதயம்
**உனக்குக் கஷ்டமெண்டால் இந்தா இதை வைச்சுச் சிலவளி. பிறகு பாப்பம்."
புது நூறு ரூவாய் நோட்டு.
மங்கின விளக்கு வெளிச்சத்திலை தெரியுது.
"வேண்டாம் முதலாளி. என்னட்டை இப்ப கிடக் கிற காசு சிலவுக்குக் காணும்.'"
'இல்லை, சின்னத்துரை சும்மா வைச்சிரு. குழந்தை பிறந்து பதினைஞ்சு நாளாகுது. ஒரு நோய் நொடியெண்டா லும் பரியாரி வீட்டை கொண்டுபோக, மனுசியின்ரை சிலவு பார்க்க, **
ஏன் இப்பிடி முதலாளி வந்து வலியக் காசு தாருர்? ஒருநாளுமில்லாத வளக்கமாய்க் கிடக்கு. அண்டைக்கு நான் அந்த நூற்றைம்பது ரூவா வாங்கப்பட்டபாடு. அவர் சொன்ன வேலை எல்லாம் செய்து, எவ்வளவு நேரம் மண் டாடி, பல்லுக்காட்டி வாங்க வேண்டிக் கிடந்துது.
இண்டைக்கு ஏன் முதலாளி இப்பிடி?
'முதலாளி நீங்கள் தந்த நூற்றம்பதிலை இன்னும் ஐம் பது ரூவா கிடக்கு. அது போதும் சிலவுக்கு '
**சும்மா கை காவலுக்கு வைச்சிரனப்பா. நீ இப்ப தரவேண்டாம். உனக்கு வசதியான நேரம் தாவன். இல் லாட்டி இதைச் சந்தோசத்துக்கு தந்ததெண்டு நினையன்."
முதலாளி சொல்லுற மாதிரியிலை இதுக்கை ஏதோ விசயமிருக்கவேணும். ஆஞ எண்ணெண்டு எனக்குப் புரி யேல்லை.
‘'தேவையெண்டால் நான் பிறகு உங்களட்டைக் கேக் கிறன் முதலாளி. **
"அப்ப வேறை என்ன, நான் வரட்டே?”*
'ஒ. அப்ப போட்டு வாருங்கோ முதலாளி"
6.

Page 41
உதயம்
"சரி. நான் போட்டு வாறன்’’ இரண்டு கவடு எடுத்து வைச்சார். 'அட நான் மறந்து போனன். ஒரு சின்ன விசயம்." திடீரென நிண்டு, திரும்பி என்னட்டை வாருர். *" என்ன முதலாளி.'" "சின்னத்துரை, நீ அந்தச் சங்கத்தாலை வில கிஞல்.'
ஒகோ. இதுக்குத்தானே இவர் இஞ்சை வந்து இவ ளவு நேரமும் இப்படி வளைஞ்சவர்.
எனக்குச் சரியான ஆத்திரம் வந்துது.
கோவத்தை வெளியிலை காட்டாமல் மனதுக்கை அடக் கிக்கொண்டு ஒரு மாதிரிச் சமாளிச்சன்.
'அதென்னண்டு நான் செய்யிறது முதலாளி? நான் தானே முதலாள் சங்கத்திலை சேர்ந்தது."
'அப்ப நான் செய்த உதவியளை நீ மறந்திட்டியே?’ "அது வேறை விசயம் முதலாளி.” "அப்ப நீ அதிலையிருந்து விலகமாட்டியே?" முதலாளி ஆத்திரத்தோடு கேக்கிறர். * 'ஏலாது முதலாளி. இதைக் கேட்டு நீர் குறை நினைக்க வேண்டாம்.""
கொஞ்ச நேரம் ஏதோ யோசிக்கிறதுபோலை நிக்கிருர் முதலாளி.
"இனி உனக்கு என்னைத் தேவையெண்டால் நீ சங்கத் திலையிருந்து விலகிவிடு. இல்லாட்டி.'
அவற்ரை குரலிலை வன்மம் தொணிச்சுது.
62

எதிரொலி
"அது முடியாது. *
நான் திடகாத்திரமாய்ச் சொன்னன்.
திடீரெனத் திரும்பி, சொல்லாமல் கொள்ளாமல் படலையைத் துறந்து போட்டு காறிலை ஏறி, கார்க் கதவை அடித்துச் சாத்தினர்.
கதவை அடிச்ச மாதிரியிலை அவற்ரை கோவம் தெரிஞ்சுது.
கார் இரைஞ்சுகொண்டு வேகமாய்ப் போய்ச்சுது அண்டையிலையிருந்து முதலாளி என்னுேடை முகம் குடுத்துக் கதைக்கிறேல்லை. எந்த நேரமும் வெடுசுடெண்டு எரிஞ்சு விழுவர்.
'உங்களுக்கு இருவத்தைஞ்சு ரூவா சம்பளம் கூட்டித் தாறன். உந்தச் சங்கத்திலையிருந்து விலகுங்கோ. '
எங்கடை சங்கத்திலை இருக்கிற சிலரின்ரை வீட்டை போய் முதலாளி கேட்டாராம்.
அவை ஒரு தரும் சம்மதிக்கேல்லை.
'உந்தச் சங்கத்திலையிருந்து நீங்கள் விலகி, எங்கடை ஆக்கள் துவங்கின சங்கத்திலை சேந்தால் உங்கடை கோரிக் கையெல்லாம் தாறன்.'
எங்கடை சங்கக் காரியதரிசியிட்டைக் கேட்டார். காரியதரிசி மறுத்துவிட்டார்.
நாங்கள் சங்கத்திலை சேந்ததை அறிஞ்சு சிலநாளையாலை நாலைஞ்சு பேரைப் புடிச்சு முதலாளியும் போட்டியாய் ஒரு சங்கம் துவங்கினர்.
எங்கடை சங்கம்தான் பெரிசு.
முதலாளி எங்கடை சங்கத்துக்கு ஏன் இவளவு பயப் படுகிருர் எண்டு தெரியேல்லை.
63

Page 42
உதயம்
"எங்களிலை முதலாளிக்குச் சரியான ஆத்திரம். அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது? உரிமையளைத் தந் திருந்தால் ஏன் இந்த அலைச்சல் அவருக்கு?"
எண்டு ஒருநாள் எங்கடை சங்கக் காரியதரிசி எங்களுக் குச் சொன்னர்.
'முதலாளிகள் உரிமைகளைத் தொழிலாளருக்கு இலகு வில் கொடுக்கமாட்டார்கள். தொழிலாளர்கள் போராடித்தான் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும்.”
தொழிற்சங்கத் தலைவர் கூட்டத்திலை சொன்னது உண்மை எண்டு இப்பதான் தெரியுது.
'நானும் தமிழன். நீங்களும் தமிழன். ஏனடா சிங் களவரிருக்கிற உந்தச் சிவப்புச் சட்டைக்காறற்றை சங்கத் திலை சேந்து என்னைச் சிங்களவனுக்குக் காட்டிக் குடுக்கிறியள்?"
எண்டு வேலாயுதமாக்களைக் கேட்டாராம் முதலாளி.
* முதலாளி இதுக்கு முந்தி, நீங்கள் தமிழன். நாங் கள் கூலிக்காறர். ஆன இப்பதானே நாங்களும் நீங்களும் தமிழன் எண்டு உணருறியள்? சிங்களவனெண்டால் என்ன, தமிழனெண்டால் என்ன, எங்களைப்போலை கஷ்டப்பட்டு உழைக்கிற ஆக்கள் எல்லாம் தொழிலாளியள்தான். நீங் கள் முதலாளியள் எல்லாம் ஒண்டு எண்டது சங்கம் உண் டாக்கின பிறகுதான் எங்களுக்குத் தெரியுது”
எண்டு சொல்ல நினைச்சுப்போட்டு பிறகு ஏன் வீணுய் முதலாளியோடை சண்டை பிடிப்பான் எண்டு பேசாமல் போனதாய் வேலாயுதம் சொன்னன்.
எங்களுக்குத்தான் சிங்களவன் தமிழன் எண்டு முத லாளி சொல்லுருர், ஏன் அண்டைக்கு மந்திரிமார் யாழ்ப் பாணம் வந்த நேரத்திலை எங்கடை முதலாளியும் மாலை போட்டவர்தானே, முத்தவெளிக் கூட்டத்திலை, அந்த மந்திரிமாரும் சிங்களவர்தானே.
64

எதிரொலி
முதலாளியாக்கள் தங்களைப்போலை பெரிய சிங்களவ ரோடை சேரலாம். ஏன் நாங்கள் எங்களைப்போலை சிங்களத் தொழிலாளியளோடை சேரக்குடாது?
நான் சிலநாளையில் நீர்கொழும்புக்கு லொறியிலை தேங்காயெண்ணை வாங்கப் போறஞன். எத்தனையோ தமிழர் களும் தேங்காயெண்ணை மில் வைச்சிருக்கின. ஆணு அவை சின்ன முதலாளியள். எங்கடை முதலாளி தன்னைப்போல பெரிய சிங்கள முதலாளியிட்டைத்தான் தேங்காயெண்ணை வாங்கிறவர்.
அவர் செய்யிறது சரி. நாங்கள் செய்யிறதுதான் பிழையோ?
'உந்தக் கொம்யூனிஸ்காறற்ரை சங்கத்திலையிருந்து விலகி எங்கடை தமிழ்த் தலைவர்மார் வைச்சிருக்கிற எந்தச் சங்கத்திலை சேந்தாலும், அவங்கள் கேக்கிறதைவிட இன் னும் கூட உரிமையள் குடுப்பன்."
முதலாளி தன்ரை கார் றைவருக்குச் சொன்னுராம். மற்றச் சங்கங்களிலை சேந்தால் சுவமாய் ஏமாத்தலாம். கொம்யூனிஸ்காறற்ரை சங்கத்திலை சேந்தால் ஏமாத்தேலா தெண்டு முதலாளிக்குத் தெரியும். அதுதான் அவர் நாங் கள் சேந்திருக்கிற சங்கத்துக்குப் பயப்படுகிறர்.
வேலை முடிஞ்சு மணி அடிக்குது. சரியாய் ஐஞ்சு மணி. என்ரை வேலையையும் முடிச்சிட்டன்.
கைகாலெல்லாம் எண்ணைப் பசை வழுவழுத்துக் கொண்டிருக்குது.
நாங்கள் மேல் கால்களைக் களுவிப்போட்டு உடுப்பு மாத்தினம்.
சம்பளம் எடுக்கப் போய் நிக்கிறம்.
65

Page 43
உதயம்
ஒவ்வொருதராய் முத்திரையிலை கையொப்பம் போட் டிட்டு முதலாளியிட்டை காசை வாங்குகிருரர்கள்.
முதலாளி ஒருதரோடையும் ஒண்டும் பேசல்லை.
காசை எண்ணிக் குடுக்கிருர்,
முதலாளி காசு எண்ணேக்கை அவற்ரை கையிலை போட்டிருக்கிற வைரக் கல்லு மோதிரங்கள் பளபளக்குது.
நான் போய் நிக்கிறன். "ஏன் கையொப்பத்தைப் போடன்."
வெடு சுடென்று கத்திருர் முதலாளி.
கையொப்பத்தைப் போட்டன்.
“ “ Fifi íß GLurro”
வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு சொல்லு ருர் முதலாளி.
நான் நிக்கிறன். "ஏன் நிக்கிருய்" முதலாளி அதட்டுகிருர்,
““ snits... ”
'உன்ரை சம்பளக் காசு நூறு ரூவாவையும் கடனுக் குக் கழிச்சாச்சு, அடுத்த மாதம் ஐம்பது ரூவாவையும் கழிக்கலாம். சரி போ.""
அவற்ரை முகத்திலை ஏளனம்.
என்ன செய்யிறதெண்டு எனக்குத் தெரியேல்லை. தலையைக் குனிஞ்சு கொண்டு வெளியாலை வாறன், என்னண்டு வெறும் கையோடை வீட்டை போறது?
குழந்தைக்கு மருந்து?
66

எதிரொலி
கடன்காறர்?
கூப்பன் அரிசி? “தொழிலாளர் பங்கு செலுத்தக்கூடிய ஒரு கடன்
நிதித் திட்டம் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முதலாளிமார் முன் தொகை வழங்குதல் வேண்டும்.'
எங்கடை இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம் முத லாளிமாருக்கு முன்வைச்ச பன்ரண்டு கோரிக்கையளிலை ஒண்டு எனக்கு ஞாபகத்திலை வருகுது.
எனக்குப் பின்னலை வந்த கந்தையா என்னை விலத்திப் போட்டு வேகமாய் நடக்கின்றன்.
தொழிற்சாலை வாசலிலை எங்கடை சங்கத்திலையிருக்கிற எல்லாரும் கூடி நிண்டு ஆரவாரமாய் ஏதோ கதைத்துக் கொண்டு நிக்கின.
நான் அவையஞக்குக் கிட்டப் போறன். எங்கடை தொழிற்சாலைச் சங்கத் தலைவரிட்டை ஒவ ருத்தரும் காசு குடுக்கினம்.
என்னைக் கண்டதும் சங்கத் தலைவர் நிக்கச் சொல்லு ருர், அவரின்ரை பார்வை ஒரு மாதிரி இருக்குது.
அவர் எனக்கு அருகில் வாழுர், நான் சிரிக்கப் பாக்கிறன். ஆணு ஏலாமல் கிடக்கு. என்ரை கையைப் பிடிச்சு தலைவர் காசை வைக்கிருர், நூற்றைம்பது ரூவா!
எனக்குத் திகைப்பு.
முதலாளியின்ரை ஐம்பது ரூபாவை இப்பவே கொண்டு போய் அவற்ரை மூஞ்சையிலை எறி.
'மிச்சம் நூறு.”*
67

Page 44
உதயம்
என்னுலை கதைக்கேலாமைக் கிடக்கு.
கண் கலங்குது.
'மிச்சத்தை நீ வீட்டை கொண்டு போ.'"
கெம்பீரமாகச் சொல்லுருர் தலைவர்.
நான் என்னுேடை நிக்கிற தொழிலாளியளைப் umri 60fpGåT.
அவையள் என்னை அன்போடு பாக்கின.
அவையள் ஒருதருக்கும் பயப்பிடாதவையளைப் போலை தலைநிமிந்து நிக்கின.
'உந்தச் சேட்டைக்கு இனி இடம் விடேலாது. இண் டைக்கு இரவு எட்டு மணிக்கு அவசரக் கமிட்டிக் கூட்டம். கமிட்டி அங்கத்தவர்மாருக்கு உடனை அறிவியும் மணியம்?
ஆத்திரத்துடன் கூறுகின்ருர் தலைவர்.
68

ஒரே கொடியின் கீழ்
நிர்மலமான நீலவானம். கன்னியின் நெற்றியிலுள்ள குங்குமத் திலகத்தைப் போல வானத்தின் இமைக் கோடியில் செங்கொடி,
உதயக் காற்று அவனுடைய உடலில் சிலிர்க்கின்றது. அஞயசமாக அவன் பஸ்சைச் செலுத்திக்கொண்டிருக் கின்றன்.
பனித்திரையைக் கிழித்துக்கொண்டு செங்கதிர்களைப் பரப்பியபடியே அடிவானத்தில் தலையை நீட்டுகின்ருன் உதய சூரியன்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் செங்கொடி அவன் கண்களில் படுகின்றது.
"என்ன? சிவப்புக்கொடி!" அவனுக்கு ஆச்சரியம். கண்ணுடிக்குள் பார்க்கின்றன். அவன் பின்னல் பஸ் கொண்டக்டர் நிற்பது தெரிகின்றது.
**வேலுப்பிள்ளை, என்ன சங்கதி வல்லை நெசவு மில்லடியிலை சிவப்புக் கொடி தெரியுது?”
"என்னண்டு தெரியேல்லை. ஏதாவது கூட்டம் நடக் கப்போகுதாக்கும்.'

Page 45
உதயம்
கொண்டக்டர் வேலுப்பிள்ளைக்கும் வியப்பு. சிவகுருவுக்குப் புதினம் அறிய ஆவல். உற்சாகத்துடன் பஸ்சை ஒட்டுகின்றன்.
செங்கொடியைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, அவனுடைய நினைவுச்சுடர் கொழுந்துவிட்டுப் படர்கின்றது.
"இந்தச் சிவப்புக் கொடிக்குக்கீழை நாங்கள் எல்லாரும் ஒண்டாய்ச் சேந்து நிண்டு போராட்டங்களை நடத்தினதாலை தான் இண்டைக்கு இவளவு உரிமையளையும் அனுப விக்கிறம்."
சிவகுருவினுடைய நெஞ்சு பெருமையில் நிமிர்கின்றது.
"கொம்பனி காலத்திலை நாங்கள் பட்ட கஷ்டங்கள் எவளவு? எப்பிடி மாடு போலை வேலை செய்தாலும் குறஞ்ச சம்பளந்தான். எட்டு மணித்தியாலத்துக்கு மேலை வேலை செய்தாலும் ஒவர்டைமுக்கு சம்பளமில்லை. சிலவேளை நாலஞ்சு மாதத்துக்குக் கூட சம்பளம் தராமல் கடத்துவான் கொம்பனி முதலாளி.
*முதலாளியின் அட்டகாசத்தை என்னண்டு சொல்லு றது?"
"சம்பளம் கேட்டால் நாங்கள் வீட்டைதிரும்பிப் போக வேண்டியதுதான். சம்பளத்தை அவன் தாற நேரம் வேண்ட வேண்டியதுதான். வேறை பேச்சில்லை."
"முதலாளியின்ரை வீட்டு வேலையள்கூட நாங்கள் செய்ய வேணும்.'
சிவகுருவின் இரத்தத்தில் சூடேறுகின்றது. நரம்புகள் முறுகிப் புடைக்கின்றன.
'துடக்கத்திலை எங்களிலை சிலபேர் தனித்தனியாகக் கிளர்ச்சி பண்ணி சரியான கரச்சல்பட்டம். நாலஞ்சு பேருக்கு வேலையுமில்லாமல் பேரச்சு."
70

ஒரே கொடியின் கீழ்
"கொஞ்ச நாளை யாலை நாங்கள் சிலபேர் ஒண்டாய்ச் சேர்ந்து ஒரு சங்கத்தைத் துவக்கினம் கேள்விப்பட்ட உடனை முதலாளி அதை உடைக்கப் பாடுபட்டான். அவ னுேடை எங்கடை தொழிலாளரிலை சிலபேர் சலுகைக்காக நிண்டினை,
‘எங்கடை சங்கத் தலைவரை வேலையிலிருந்து விலத் தினுன் முதலாளி.
"தலைவரை உடனே வேலைக்கெடுக்க வேண்டுமெண்டு நாங்கள் வேலை நிறுத்தம் செய்தம்.'
"சும்மா விட்டானே முதலாளி? காடையரை வைச்சு எங்களுக்கு அடிப்பிச்சான்.
ஆத்திரத்தில் பல்லை நெருடுகின்றன் சிவகுரு. "நாங்கள் விட்டுக் குடுக்கேல்லை. பதினஞ்சு நாள் வேலை நிறுத்தம் செய்தம். எங்களோடை நிண்ட சில தொழி லாளியள் இரகசியமாய் முதலாளியிட்டை காசை வாங்கிக் கொண்டு வேலைக்குப் போகத் துவங்கிச்சினை. அந்த வேலை நிறுத்தம் தோத்துது. நாங்களும் தலை குனிஞ்சு கொண்டு வேலைக்குத் திரும்பிப் போனம், அதோடை சங்கமும் போச்சு."
சிவகுரு வேதனை நிறைந்த நீண்ட பெருமூச்சு விடு கின்றன். அதுகாற்றில் சங்கமிக்கின்றது.
"கொழும்பிலையுள்ள ஒரு பஸ் கொம்பனியிலை வேலை செய்த திருநாவுக்கரசுவும் கந்தசாமியும் எங்கடை கொம் பணியிலை வந்து சேந்தினை. அவை வந்து சில நாளையிலை கொழும்பிலையுள்ள இலங்கை மோட்டார் தொழிலாளர் சங் கத்திலை எங்கள் எல்லாரையும் சேத்தினை இதுதான் பெரிய யூனியன். இந்த யூனியன் இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்துடன் சேந்திருக்கு. இப்ப எங்களுக்கு நல்ல பெலம். அதுக்குப் பிறகு எங்கடை யூனியனுக்கு முத லாளி பயம். நாலஞ்சு முறை போராடி சில உரிமையளை எடுத்தம்."
7 1

Page 46
உதயம்
பஸ் கொம்பனியளை தேசியமயமாக்க வேண்டுமெண்டு ாங்கடை யூனியன் கனநாளாய் போராடிச்சுது."
"பஸ் கொம்பனியளை தேசிய மயமாக்கியதுக்குப் பிறகு எங்கடை பாடு பிளையில்லை. எங்களுக்குச் சம்பளம் கூடிச் சுது. மாதாமாதம் சம்பளம் கிடைச்சுது, லீவு நாளுகள் சம்பளத்தோடை கிடைச்சுது. கொம்பனி காலத்தைப் போலை இப்ப கண்டபடி ஆக்களை வேலையிலையிருந்து நிப்பாட் டேலாது எட்டு மணித்தியால வேலை. ஓவர்டைமுக்கு சம்பளம். இன்னும் எத்தினையோ வசதியள் கிடைச்சிருக்கு. இதுகும் நாங்கள் மூண்டு நாலு வேலை நிறுத்தங்களைச் செய்துதான் எடுத்தம்."
*ஏன் இப்பவும் எங்கடை பாடு கரச்சல்தான். எங்களுக்குமேலை வேலை செய்யிற அதிகாரியள் எங்களிலை சவாரி விடப் பாக்கின. அதுவும் இந்த யூ. என். பி. அரசாங்கம் வந்தாப் பிறகு அதிகாரியள் தலைகால் தெரியா மல் பெரிய அட்டகாசம் பண்ணினை. உது எவளவு நாளைக் கெண்டு பாப்பம்."
"நாங்கள் உரிமைகள் கேட்டுப் போராடினல் அரசாங்கம் பொலீசைக் கொண்டு துவக்கைக் காட்டி எங்களை மிரட்டி அடக்கப்பாக்குது. அந்தத் துவக்கு எங்கடை கையிலை வரும்வரை எங்களுக்கு மீட்சியில்லை."
"எங்களைப் போலை இந்த நாட்டிலை உழைக்கிற தொழி லாளியள், விவசாயியள் போராட்ட மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிறவரைக்கும் எங்கடை பாடு நெடுகக் கரைச்சல்தான்."
"நாங்கள் அதுக்கு இப்ப இருந்தே தொழிலாளியள் விவசாயியளை ஒண்டாய்த் திரட்டி அரசியலறிவையூட்டி, போராட்டத்துக்குத் தயாரிப்புச் செய்யவேண்டும்."
போரட்ட உணர்வு சிவகுருவின் கண்களில் பிரகாசிக் கின்றது.
72

ஒரே கொடியின் கீழ்
மில்லை நோக்கி பஸ் வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறது.
"இந்த மில்லிலை வேலை செய்யிற தொழிலாளியளும் கிட்டடியிலைதான் சங்கம் துவங்கினதெண்டு கேள்விப் பட்டன். இவங்களும் போராடினுல்தான் உரிமையளைப் பெறேலும்.
மில்லுக்குக் கிட்ட பஸ் வருகின்றது. மில் தூங்குகின்றதா?
மில்லில் மயான அமைதி ! மனித நடமாட்டமேயில்லை மில்வளவிற்குள். பஸ்ஸிலிருப்பவர்களுக்குப் பேராச்சரியம். சுரண்டும் வர்க்கத்தையும் அதன் உடமைகளையும் பாது காக்கும் பொலீஸ் படை துப்பாக்கிகளுடன் மில் வாசலில் நிற்கின்றது.
மில்லிற்கு எதிர்ப்புறமாக தொழிலாளர்கள் ஆண் பெண் பேதமின்றி திரண்டு நிற்கின்றனர்.
உரிமைக் குரலைத் தாங்கும் சுலோகப் பதாகைகள் அவர்களுடைய கைகளிலிருக்கின்றன.
போராட்ட உணர்ச்சி கொப்பளிக்கின்றது, அவர்களு டைய முகங்களில்,
வேகமாக வந்த பஸ் மில் வாசலில் திடீரென நிற்கின்றது.
ஒரு பெண் தொழிலாளி கெம்பீரமாக பஸ்சிற்கு முன் வருகின்ருள்.
உழைப்பால் உரமேறிய உடல். அவளுடைய தோற்றத்தில் மிடுக்கு முகத்தில் உறுதி. "ஏன் வாசலில் நிக்கிறியள்?"
73

Page 47
உதயம்
"வேலை நிறுத்தம் செய்கின்ருேம்!" கணிரென அவள் குரல் ஒலிக்கின்றது. அது கடினம் நிறைந்த தொனி.
இந்த வார்த்தைகளை அவள் சொல்லுகையில் அவள் முகத்தில் பூரண பெருமிதம்.
''Jair?'" சிவகுரு வினவுகின்றன். அவனுடைய குரலில் தோழமை உணர்வு பிறக்கின்றது.
ஏன்??? பஸ்சினுள் இருந்தே இக்கேள்வி மற்றவர்களாலும் எழுப்பப்படுகின்றது.
"எங்களோடை வேலை செய்கிற ஒரு தொழிலாளியை வேலையிலே இருந்து விலத்திப் போட்டுது மில் நிர்வாகம்.' அவளுடைய கண்களில் கோபம் கொப்பளிக்கின்றது. 'வேலையிலையிருந்து விலத்தப்பட்ட தொழிலாளியை திரும்ப வேலைக்கு எடுக்கிற பேச்சுவாத்தை நடத்த எங்கடை சங்கம் மில் நிர்வாகத்தைக் கேட்டுது. மில் நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வரமறுத்தது. வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் நாங்கள் வேலைநிறுத்தம் செய்யவேண்டுமென்று சங்கம் முடிவெடுத் திருக்கு. அவருக்கு வேலை கிடைக்குமட்டும் நாங்கள் போராடுவம். நாங்கள் முந்தியைப் போல இல்லை, இப்ப, வேலைபோனலும் பறுவாயில்லை. எங்கடை சங்கமிருக்கு, அதைப் பாக்கிறதுக்கு."
உணர்ச்சி பொங்க அவள் கூறுகின்ருள். சிவகுருவின் கண்கள் பனித்தன. அவன் இதயம், அந்த நிமிசத்தில் அத்தொழிலாளர் களின் பேரணியோடு தன்னை இணைத்துவிட்டதை அவன் உணர்கின்றன்.
74

ஒரே கொடியின் கீழ்
பஸ்சிலுள்ளவர்களுக்கு மில்தொழிலாளர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர்.
இரண்டொரு தொழிலாளர்கள் நிதி உண்டியலுடன் பஸ்சிற்குள் ஏறுகின்றனர்.
சிறிது நேரம் மெளனம். சில்லறைக்குத்திகள் தகரத்திற்குள் குலுங்குகின்றன. பஸ்சிலுள்ளவர்கள் பேசாமலிருக்கின்றனர். சிவகுரு தன் சட்டைப் பைக்குள் கையை விடுகின்றன். ஐம்பது சத நாணயம் அவன் கைவிரல்களில் தட்டுப் படுகின்றது.
"மத்தியானச் சாப்பாட்டுக்கு? அவனிடமுள்ளது ஐம்பது சதம்தான். "இதிலும் பாக்கவா சாப்பாடு பெரிசு?" ஐம்பது சதத்தை அவன் உண்டியலுள் போடுகின்ருன். வேலுப்பிள்ளையும் உண்டியலுக்குள் பணத்தைப் போடுகின்றன்.
"ஏன் சும்மா இருக்கிறியள்? ஏதாவது உதவி செய்யுங் கோவன்.'
பிரயாணிகளைப் பார்த்து வேலுப்பிள்ளை கூறுகின்றன். கண்ணுடிக்குள் சிவகுரு பார்க்கின்றன். இராவேலை முடிந்து வீடு செல்லும் டிப்போ போமன் சின்னத்துரை, அவனுக்குப் பின்னலுள்ள சீற்றில் இருக் கின்றன்.
போமன் சின்னத்துரையின் கண்களில் வெறுப்புக் கலந்த கோபம்.
"பஸ் கோல்ரிங் பிளேஸ்' இல்லாத இடத்திலை பஸ்சை நிற்பாட்டியிருக்கிறன்.
75

Page 48
உதயம்
இப்பொழுதுதான் சிவகுரு உணருகின்றன். ஆளுலும் சத்தியத்தின் பக்கம் நிற்கும் அவன் இந்தச் சிறு தவறினல் துணுக்குறவில்லை.
"அதுக்கிப்பென்ன? பிறகுபாப்பம்." அவன் மனம் தளரவில்லை. பஸ்சிலுள்ள பிரயாணிகள் காசுகளை உண்டியலுக்குள் போடுகின்ருர்கள்.
போமன் சின்னத்துரையிடம் ஒரு தொழிலாளி உண் டியலை நீட்டுகின்றன்.
அவன் பார்த்தும் பாராதவனக இருக்கின்றன். தொழிலாளி உண்டியலைக் குலுக்குகின்றன். போமன் வெறுப்புடன் முகத்தை மறு பக்கம் திருப்பு கின்றன்.
கண்ணுடிக்குள் இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிவ குரு யன்னலால் வெளியே காறித் துப்புகின்றன்.
'இரண்டொருத்தர் காசுதராட்டி உங்கடை வேலை நிறுத்தம் நிண்டுபோமே? குடுக்கிற பழக்கமிருந்தால்தானே குடுப்பினை."
எரிச்சலுடன் கூறுகின்ருன் வேலுப்பிள்ளை. மில் தொழிலாளர் பஸ்சை விட்டு இறங்குகின்றனர். **உங்களுக்கு எவ்வளவு காசுவேணுமெண்டாலும் நாங் கள் சேத்துத்தரத்தயார். நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம். வெற்றி கிடைக்குமட்டும் நீங்கள் போரா டுங்கோ. நாங்கள் எப்பவும் உங்கடை பக்கம் நிப்பம்."" வேலுப்பிள்ளை ஆத்திரத்துடன் கூறுகின்றன். "எங்களுக்கும் கொஞ்ச நோட்டீசு தாருங்கோ. எங் கடை பஸ் தொழிலாளியளுக்கும் குடுக்கிறம்."
76

ஒரே கொடியின் கீழ்
கேட்டுவாங்கிய நோட்டீசைத் தனது கோட்டுப் பொக்
கட்டுக்குள் வைக்கின்றன் வேலுப்பிள்ளை.
பஸ் புறப்படுகின்றது.
பிரியமனமின்றி பஸ் மில் தொழிலாளர்களை விட்டுப் பிரிகின்றது.
பஸ் போகும் திசையை நோக்கியபடியே மில்தொழி லாளர்கள் கைகளை உயர்த்தி ஆட்டி வழி அனுப்பும் காட்சி சிவகுருவுக்கு சைற் கண்ணுடிக்குள் தெரிகின்றது.
"இப்பதான் இந்த மில் தொழிலாளியளுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு. இனி அவையை ஒருத்தரும் அசைக் கேலாது?"
சிவகுருவுக்கு உற்சாகம்.
நேரத்தைப் பார்க்கின்றன்.
"பத்து நிமிசம் லேட்."
"அதுக்கென்ன செய்கிறது?"
அவன் பஸ்சை வேகமாக ஒட்டுகின்றன்.
"எக்ஸ்பிறஸ் பஸ்தானே" ஒரு மாதிரி ஒடி நேரத்தைக் கவர்பண்ணி விடுவன்?
அவனுடைய மனதில் ஒருவித திருப்தி, அனுபவம் அதற்கும் பக்கபலமாகின்றது.
"நேரத்துக்குப் போகாட்டித்தான் இப்பென்ன வரப் போகுது?
"அப்பிடி ஏதாலும் றிப்போட் வந்தாலும் வரட்டுமே."
"இந்த மில்லிலை வேலை செய்யிற தொழிலாளியள் இவ் வளவு நாளும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பினை? முந்தி நாங்கள் கஷ்டப்பட்டது போலைதான் இப்ப இவையஞம். 77

Page 49
உதயம்
கடுமையான வேலை. குறைஞ்சசம்பளம். அதிகாரிகளின்ரை அட்டகாசம்.
‘இனி இந்தத் தொழிலாளியளுக்கு நல்ல எதிர்காலம்." யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் உடுப்பிட்டி எக்ஸ்பிறஸ் பத்து நிமிடங்கள் லேற்ருக வந்து நிற்கின்றது.
பிரயாணிகள் அவசரப்பட்டு இறங்குகின்றனர். பருத்தித்துறை போகும் பிரயாணிகள் இடிபட்டுக் கொண்டு ஏறுகின்ருர்கள்.
வேலுப்பிள்ளை பிரயாணிகளுக்கு டிக்கற் கொடுத்துக் காசுவாங்குகின்றன்.
பஸ்சில்வந்த போமனும் ருேட் இன்ஸ்பெக்ரர் பரமலிங் கமும் ஏதோ தன்னைக் காட்டிக் கதைப்பதை வேலை நிறுத்த நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டிருக்கும் சிவகுரு காண்கின்ருன்.
'பின்னுக்குப் போங்கோ. கீழை நிற்கிறவையும் வர வேணும்."
டிக்கட் கொடுத்துக்கொண்டே பிரயாணிகளுக்குக் கூறுகின்ருன்.
ஏறி நின்ற இடத்திலேயே நிற்கின்றனர் பிரயாணிகள். "எத்தினைதரம் உங்களுக்குச் சொல்லுறது? நீங்கள் மட்டும் போனல் போதுமே? சிங்களப் பகுதியிலை போய்ப் பாத்தால் தெரியும். பிரயாணியள் பஸ்சிலை ஏறினவுடனை நாங்கள் சொல்லாமலே பின்னுக்குப் போய் நிப்பினை, இஞ்சை? ஏனப்பா பின்னுக்குப் போங்கோவன். உங்க ளாலை நாங்கள் மற்றவையளை விட்டிட்டுப்போறதே? இனி வழியிலை நிக்கிற ஆக்களை என்ன செய்கிறது? போங்கோ பின்னுக்கு.""
உரக்கக் கத்துகின்றன்.
78

ஒரே கொடியின் கீழ்
மணி அடிக்கின்றது.
பஸ் நகருகின்றது.
கதைத்துக் கொண்டு நின்ற ருேட் இன்ஸ்பெக்ரர் பருத்தித்துறை டிப்போவிற்குப் போக சிவகுருவின் பஸ்சில் வந்து ஏறுகின்றன்.
பஸ் செல்கின்றது.
* "புட் போட்டிலை ஒரு தரும் நிக்க வேண்டாம். வேலுப்பிள்ளை ஆக்களை உள்ளுக்கை போகச்சொல்லு. புட் போட்டை மறைச்சால், ஆக்கள் ஏறுறது இறங்குகிறதை நான் எப்பிடிப் பாக்கிறது?"
'ஒருக்கால் சொன்னுல் கேட்டாத்தானே. தாங்கள் மட்டும் போளுல் காணும். அவைக்கு மற்றவையைப் பற்றிக் கவலையில்லை. இவை வழியிலை காத்துக் கொண்டு நிக் கேக்கை ஏத்தாமல் விட்டிட்டுப் போனுல் இவைக்கு என்ன மாதிரி இருக்கும்? போங்கோவனப்பா பின்னுக்கு.'
பஸ் வேகமாகப் போகின்றது. கல்வியங்காட்டுச் சந்தி கிட்டுகின்றது. நெசவாலையில் வேலை செய்யும் சுப்பவைசர் செல்லத் துரை உடுப்பிட்டி எக்ஸ்பிறகக்காக கல்வியங்காட்டு பஸ் கோல்டிங் பிளேசில் காத்துக்கொண்டு நிற்கின்ருன்.
இந்த பஸ்சில்தான் அவன் வழமையாகச் செல்வது. இதைத் தவறவிட்டால் அவன் ஒன்பதரை மணிக்குத்தான் வேலைக்குச் செல்ல முடியும். எட்டுமணிக்கு நெசவாலையில் வேலை தொடங்கிவிடும்.
சுப்பவைசர் செல்லத்துரை சிவகுருவின் கண்ணில் படுகின்றன். அவன் தன்னந்தனியாகவே நிற்கின்றன்.
சிவகுருவுக்கு சுப்பவைசர் செல்லத்துரையை நன்கு தெரியும்,
79

Page 50
உதயம்
பஸ் அதிகாரிகள் வைக்கும் 'பாட்டிகளுக்கு" செல்லத் துரை அடிக்கடி வருவான். பஸ் இஞ்சினியர் சண்முகத்தின் நெருங்கிய உறவினருங்கூட. இவன் வேண்டுமென்றே குற்றத்தைச் சோடித்து றிப்போட் செய்ததால்தான் நெச வாலையில் வேலை செய்த அந்தத் தொழிலாளி வேலை யிலிருந்து நீக்கப்பட்டான்.
செல்லத்துரை பற்றிய சகல விசயங்களையும் சிவகுரு அறிவான்.
சந்தியில் வந்ததும் பஸ் வேகம் குறைகின்றது. செல்லத்துரை பஸ்சை மறிக்கக் கையைக் காட்டு கின்றன்.
“வேலைக்குப் போப்போறியே? எங்கை போ பாப்பம்." சிவகுருவின் மனம் கறுவுகின்றது. சந்தி தாண்டியதும் பஸ் உறுமிக்கொண்டு வேகமாக பஸ் நிற்பாட்டுமிடத்தையும் கடந்து செல்கின்றது.
"நான் நினைச்சதை நீ செய்து போட்டாயடா Libiji Firsiir. ' '
வேலுப்பிள்ளை உணர்ச்சி ததும்பக் கூறுகின்றன். சிவகுரு பின்னுல் திரும்பிப் பார்க்கின்றன். கண்கள் கோபத்தீயைக் கக்கப் பழி தீர்க்கும் பார்வை யுடன் ருேட் இன்ஸ்பெக்ரர் இருக்கின்றன்.
சிவகுருவுடன் கதைக்க அவனுக்குப் பயம். 'உன்னைப் பாத்துத்தாறன்’ என்பதுபோல ருேட் இன்பெக்ரருடைய பார்வை இருக்கின்றது.
'அனுமதியில்லாத மில் வாசலில் எக்ஸ்பிறஸ் பஸ்சை நிற்பாட்டியது
பஸ் நிறுத்தவேண்டிய முக்கியமான பஸ்தரிப்பு இடத் தில் பஸ்சை நிற்பாட்டாமல் விட்டது80

ஒரே கொடியின் கீழ்
பிரயாணியை ஏற்ருமல் விட்டுவிட்டு வந்தது
'மேற் குறிப்பிட்டுள்ள குற்றங்களுக்காக உம்மை ஏன் தண்டிக்கக்கூடாது?"
பஸ் முகாமையாளரால், தனக்கு வழங்கப்பட விருக் கும் குற்றப்பத்திரம் சிவகுருவின் நினைவுச் சுவட்டில் உதிக் கின்றது.
உரிமைக் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் வல்லை நெச வாலைத் தொழிலாளர்களும் கெம்பீரமாகப் பறந்துகொண் டிருக்கும் செங்கொடியும் கிவகுருவின் மனக்கண் முன் நிற்கின்றது.
'இப்பென்ன தலைபோப்போகுதே? வாறது வரட்டுப் பாப்பம்."
சிவகுரு நிதானமாக பஸ்சைச் செலுத்திக் கொண்டிருச் கின்றன்.

Page 51
er uu tid 6). T tid
கணபதியார் தலையை நிமித்திப் பார்க்கின்ருர்,
அவருடைய பார்வை அந்தப் பாதையில் நிலைகுத்தி நிற்கின்றது.
"துலாக்கொடி போன்று நீண்டு செல்கின்றது அந்த ஒற்றையடிப் பாதை. அதன் இரு மருங்கிலும், தமது கை களை உயர்த்தி கால்களைத் தூக்கி நின்ருடும் நடன மங்கையர் களைப் போல கள்ளி மரங்கள் நிரையிட்டு நின்று நர்த்தனம் செய்கின்றன. காண்டைப் பற்றைகள் மெளனக் கோல மாய் சிரம் தாழ்த்தி நிற்கின்றன. இடையிடையே மூழிப் பற்றைகள். ஒரு ஆள் தட்டாமல் முட்டாமல் செல்ல முடி யாத இயற்கைச் செறிவுடைய இறுக்கமான பாதை அது.
நீர்வேலிக் கிராமத்தின் மேற்கெல்லைப் புறமாகச் செல் கின்றது இராச தெரு. அதன் மேற்கேயுள்ள தோட்டங் களுக்குச் செல்பவர்கள் அந்த ஒற்றையடிப் பாதையால் நடந்து பெரிய கிணற்றடித் தோட்டத்தைத் தாண்டித் தான் செல்லவேண்டும்,
பாதை வழியே சென்ற கணபதியாரின் பார்வை பெரிய கிணற்றடியில் தடைப்பட்டு நிற்கின்றது.
பெரிய கிணற்றடித் தோட்டமும், அந்த ஒற்றையடிப் பாதையும் கணபதியாரின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து ஒன்ருயிருக்கின்றன,

Fuu chu Jib
தனது இமைப் புருவங்களைக் கையால் அணைகட்டி, பஞ்சடைந்த கண்களை ஒடுக்கி, பெரிய கிணற்றடியைச் சுற்றி யுள்ள தோட்டத்தை ஒருமுறை நோட்டம் விடுகின்ருர் கணபதியார்.
பெரிய கிணற்றடித் தோட்டத்திலுள்ள கிணறுதான் அந்தப் பகுதியிலுள்ள கிணறுகள் எல்லாவற்றிலும் ஆழ மானது. சோழகக் காற்றுக் காலத்திலும் "மூவாயிரம் கண்டுக்கு விடாமலிறைத்தாலும் வற்ருத ஊற்றுடையது. எந்தப் பலசாலியும் அதிக நேரம் களைக்காமல் தனித்துத் துலா மிதித்துத் தண்ணிர் இறைக்க முடியாது.
தோட்ட நிலம்
நல்ல விளைச்சல் தரக்கூடியது, பசளையுள்ள இருவாட்டி நிலம்,
கிணற்றடியில் வந்து ஆடுகால் பூவரச மரத்துடன் சாய்ந்துகொண்டிருக்கின்ருர் கணபதியார். அவருடைய உள்ளத்திலே பணிபோல மங்கலாக இருந்த கடந்தகால நினை வலைகள் விரிகின்றன.
நாற்பது வருஷங்களுக்கு முன் -
ஒருநாள்.
மதியவேளை.
பெரிய கிணற்றடியில் மாடுகளுக்குத் தண்ணிர் வைத் துக்கொண்டு நிற்கின்ருன் கணபதிப்பிள்ளை.
'இந்தப் புல்லுச் சுமையை ஒருக்காத் தூக்கிவிடு'
ஒரு பெண்ணின் குரல்.
சத்தம் வந்த திசைக்குத் திரும்புகின்றன்.
செல்லம்மா!
ஆடுகால் பூவரச மரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ருள்.
83

Page 52
உதயம்
அவள் நீறுபூத்த நெருப்பு. யுகயுகாந்தரமாய்த் தவ மிருந்து எழுந்து வந்த தோற்றம்.
அவனை அவள் ஒரு மாதிரிப் பார்க்கின்ருள். அவளுடைய கண்கள் திரையிடப்பட்டு எதையோ எதிர்பார்த்துக் கொண் டிருப்பதுபோலிருக்கின்றது.
கணபதிப்பிள்ளையும் இமைக்காமல் அவளைப் பார்க் கின்றன்.
அவளுடைய கண்கள் அவனுடைய கண்களைச் சந்தித்த பொழுது கீழே கவிழ்கின்றன. இது அவளுக்குச் சுலபமாக மூச்சு விடுவதற்குச் சந்தர்ப்பமளிக்கின்றது.
அவனுக்கு அவளிடத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை,
அங்கு நிலவிய மெளனம் இயற்கை கண்மூடித் தியானத்திலிருப்பது போலிருக்கின்றது.
**நேரம் போட்டுது, தூக்கி விடு. * நிலத்தைப் பார்த்துக்கொண்டு கூறிய அவள்தான் முத வில் அங்கிருந்த மெளனத்தைக் கலைக்கின்ருள்.
"இந்த வெயிலுக்கை ஏன் அந்தரப்படுகிருய்? கொஞ் சம் வெய்யில் தணியட்டன். உதுக்கை போக உன்ரை கால் வெந்து போமே.”*
ஆதுரத்துடன் கூறுகின்றன் கணபதிப் பிள்ளை. "'என்ரை கால் வெந்தால் உனக்கென்ன? நான் நேரம் போட்டுதெண்ணிறன். அவர்கால் வேகிற கதை பேசுழுர்." "ஏன் செல்லம் வெடு சுடு எண்டு எரிஞ்சு விழுகிருய்? "நான் உன்ரை நன்மைக்குத்தான் சொன்னன்." "சாப்பாடு சமைச்சுப் போட்டு வாழைக்கிறைக்க வர வேணும். அதுதான்,'
84

சுயம்வரம்
அவளுடைய குரல் கணிகின்றது.
கொப்பர் எங்கை?"
**அவர் சந்தைக்குப் போட்டார்"
**செல்லம் உன்னை நான் ஒரு விசயம் கேக்க வேணு மெண்டு கனநாளாய்...”*
சிரித்துக் கொண்டே தனது தலையைச் சரித்து அவளை ஒரு மாதிரிப் பார்க்கின்ருன் கணபதிப்பிள்ளை.
'இப்ப நீ இந்தப் புல்லுச் சுமையைத் தூக்கிறியோ gaiva Gurt?'
கோபத்தை வலிய வருவித்துக்கொண்டு கேட்கின்ருள் அவள்,
"ஒரு வாய் வெத்திலையாவது காவன்.'
"வெத்திலையுமில்லை, ஒரு மண்ணுமில்லை. நேரம் போட்டுது. புல்லைத் தூக்கிறதெண்டால் தூக்கு. இல் லாட்டி.'
'இல்லாட்டி என்ன?*
'வீண்கதை பேசாதை; புல்லைத் தூக்கு. இல்லாட்டி உன்ரை வேலையை நீ போய்ப்பார். சும்மா அலட்டிக் கொண்டு நில்லாமல், நான் எப்பிடிப்போறதெண்டு எனக் குத்தெரியும். "'
**கடுகடுப்பாகக் கூறுகின்ருள்."
'சரி சரி பின்னைத்தூக்கு"
கூறிக்கொண்டே புல்லுச்சுமையை அவளுடன் சேர்ந்து அநாயசமாகத் தூக்குகின்ருன் கணபதிப்பிள்ளை.
அவள் தனது உதடுகளை உள்மடித்து மூச்சைப் பிடித்து உசாராகத் தூக்கும் பொழுது அவளுடைய கெம்பீரமான தோற்றம் அவனுடைய கண்களில் பதிகின்றது.
86

Page 53
உதயம்
புல்லுச்சுமையை தலையில் வைத்தபொழுது அவ ளுடைய கழுத்து முறிந்து விடும் போல் இருக்கின்றது.
"அடேயப்பா இந்தப் பாரத்தைச் சுமக்கிறவள் எவளவு பெலசாலியாயிருக்க வேணும்!"
அவனுக்கு வியப்பு.
புல்லுச் சுமையைத் தூக்கி வைத்துக்கொண்டு திரும் பும்பொழுது அவளுடைய சிவந்த உதடுகளின் கடைக் கோடி யில் சிறு முறுவல் வெடிக்கின்றது.
அவள் செல்கின்ருள். 'போறியே போ, உதெல்லாம் ஒரு நாளைக்குக் கேட்டுத் தாறன்’ ’
சிரித்துக் கொண்டே கூறுகின்ருன் கணபதிப்பிள்ளை.
நாலு அடிகள் எடுத்து வைத்த அவள் நிற்கின்ருள். அவளுடைய தலையிலுள்ள சுமை கடைக்கண் பார்வை எட்டு மட்டும் பின்னுக்குத் திரும்புகின்றது. கழுத்து நரம்புகள் புடைக்கின்றன. அவளுடைய கடைக்கண்பார்வையும், அவனுடைய நேரான பார்வையும் முட்டி மோதுகின்றன. அவள் மதுரமாகச் சிரிக்கின்ருள். அடுத்த கணம் அந்தச் சிரிப்பு இருண்ட ஆகாயத்தில் ஜனித்து மறையும் மின்னலைப் போலிருந்தது.
செல்லம்மா சின்னத்தம்பியின் செல்வமகள். அவ ளுக்குக் கூடப்பிறந்த சகோதரங்கள் என்று கூறிக்கொள்ள ஒருவருமில்லை. அவள் எல்லோருடனும் சரளமாகப் பேசு வாள். ஆனல் யாராவது அவளுடன் விதண்டாவாதம் பேசினல் அவள் லேசில் விட்டு வைக்க மாட்டாள். எல் லோருக்கும் அவள் மேல் பற்றும் ஒரு வித பயமும்.
எதுவித குறைவுமின்றி அவளை வளர்த்து வந்தார் சின்னத்தம்பி.
86

சுயம்வரம்
செல்லம்மா அவ்வளவு அழகியில்லாவிட்டாலும், அவ் ளிடம் ஒருவித கவர்ச்சியுண்டு. பருவம் அவளுடைய அழகுக்கு மேலும் மெருகூட்டியது.
'நில புலமில்லாதவனென்டாலும், நோய் நொடி யில்லாத, நல்ல முயற்சிக்காறனுக்குத்தான் என்ரை புள்ளை யைக் கட்டிக் குடுப்பன்.""
அடிக்கடி கூறுவார் சின்னத்தம்பி.
செல்லத்திற்குப் பல கல்யாணப் பேச்சுக்கால் வந்தும் சின்னத்தம்பியின் நிபந்தனை எல்லோரையும் பின்வாங்கச் செய்தது.
தனது மகளைப் பற்றி சின்னத்தம்பிக்குப் பெருமை.
கணபதிப்பிள்ளை கல்யாணப் பேச்சிற்கு சின்னத்தம்பி யிடம் ஒரு ஆளை அனுப்புகின்றன்.
**சும்மா சப்புச்சவருக்கு என்ரை மோளைக்கட்டிக் குடுக்க மாட்டன். நல்ல தைரியசாலியாய் சுறுசுறுப்பாய் முயற்சி செய்யிறவனுக்குத்தான் கலியாணம் செய்து வைப்பன். அதோடை பெரிய கிணத்தடித் தோட்டத் தையும் அவனுக்கு எழுதிக் குடுப்பன். அவளைக்கட்ட இந்தப்பகுதியிலை ஆருக்குத் தகுதியிருக்கு?"
கணபதிப்பிள்ளை அனுப்பிய ஆளிடம் வீருப்புச் பேசு கின்ருர் சின்னத்தம்பி.
சின்னத்தம்பி கூறியவற்றை அறிந்ததும் கணபதிப் பிள்ளைக்கு ஆத்திரம் பொங்கியது.
* மினக்கட்டான் வேம்படியில் சிலருடனிருந்து கதைத் துக் கொண்டிருக்கும் சின்னத்தம்பியிடம் செல்கின்றன் கணபதிப்பிள்ளை.
** என்ன ஏதோ கனமாய் ஞாயம் பேசினியாம்? நான் சும்மா லேசுப்பட்டவனே?"
87

Page 54
உதயம்
கோபாவேசத்துடன் சின்னத்தம்பியைப் பார்த்துக் கேட்கின்ருன் கணபதிப்பிள்ளை.
'கணவதி, நீ இதிலை வந்து மொக்கயினப் படாதை. உன்ரை வேலையை நீ போய்ப்பார். "
"என்ரை வேலையைப் பாக்க எனக்குத் தெரியும். நீ என்னகாணும் என்னைக் குறைச்சுப் பேசினியாம்."
'கணவதி நான் உன்னைக் குறச்சும் பேசேலை, கூட்டி யும் பேசேல்லை. ஆனல் ஒண்டு சொல்லுறன். என்ரை மோளை நல்ல முயற்சிக்காறனுக்குத்தான் கட்டிக்குடுப்பன்'
"ஏன் நான் குறஞ்சவனே?"
'நீ பெரிய முயற்சிக்காரனே?" கேலியாகக் கேட்கின்ருர் சின்னத்தம்பி. தனது உருண்டு திரண்ட புயங்களை ஒரு முறை பார்க் கின்றன் கணபதி.
"'சும்மாயிருந்து கொண்டு வட்டிக்கு வட்டி வாங்கி, மற்றவன்ரை உழைப்பைத் திண்டு வளர்ந்ததில்லை இந்தத் தேகம், மழை வெயிலெண்டு பாராமல் பாடுபட்டு உழைச்சுத் தின்னிறவன் நான். என்னுேடை வேலை செய்ய இந்தப் பகுதியிலை ஆர் இருக்கிருன்? எவனெண்டாலும் வரட்டன்
பாப்பம். "'
அகண்டு விரிந்து இரண்டாகப் பிளந்திருக்கும் தனது நெஞ்சிலடித்துக்கொண்டு ஆக்ரோசத்துடன் கூறுகின்ருன் கணபதிப்பிள்ளை.
'நான் சொல்லிற வேலையை உன்னலை செய்ய முடியுமே.”*
** என்ன வேலை???
'சொன்னல் செய்வியோ?"
88

சுயம்வரம்
"நீ சொல்லு. நான் செய்து காட்டிறனே இல்லையோ எண்டு பாப்பம்." *
'மூண்டு நீத்துப்பெட்டி குரக்கன் புட்டும், ஒரு சட்டி மரவள்ளிக் கிழங்குக் கறியும் திண்டிட்டு, பெரிய கிணத்
தடித் துலாவிலை ஆயிரம் கண்டுக்கு இறங்காமல் தனித் துலா மிரிப்பியோ?”
'எட உதொரு பெரிய வேலையோ? சரி நான் அப்பிடிச் செய்யிறன், ஆணுல்."
'என்ன? என்னண்டு சொல்லன்.”*
ஆவலுடன் சின்னத்தம்பி கேட்கின்ருர், 'நான் புட்டையும் கறியையும் திண்டிட்டு இறங்காமல் ஆயிரம் கண்டுக்கு துலா மிரிக்கிறன். உன்ரை மோள்...”*
"என்ன? என்ரை மோளுக்கென்ன?"
சின்னத்தம்பி பரபரப்படைகின்ருர்,
'உன்ரை மோள், அந்த ஆயிரம் கண்டுக்கும் கைவிடா மல் தண்ணி கட்டவேணும்.'
* "ஒ சரி.??
'இண்டைக்கும் நான் தயார்"
உறுதியுடன் கூறுகின்றன் கணபதிப்பிள்ளை.
அந்தப் பகுதியிலுள்ள ஆண் பெண் அனைவரும் பெரிய கிணற்றடியில் கூடி நிற்கின்றனர்.
ஒரே பரபரப்பு,
குரக்கன் பிட்டைச் சாப்பிடத் தொடங்குகின்றன் கணபதிப்பிள்ளை.
செல்லம் மாட்டுத் தொட்டிலுக்கருகாமையில் நின்று பார்க்கின்ருள்.
89

Page 55
உதயம்
அவள் முகத்தில் பீதி.
சாப்பாடு முடிந்து விட்டது.
கணபதி துலாவில் ஏறுகின்றன்.
செல்லத்தின் தகப்பன் கிணற்று மிதியில் நின்று தண் னிர் இறைக்கின்ருர்,
செல்லம் தண்ணீர் கட்டுகின்ருள்.
உச்சி வெய்யில்,
வியர்த்து வடிகின்றது கணபதிப்பிள்ளைக்கு. கால் களில் சோர்வு. மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்குகிறது அவனுக்கு.
நேரம் செல்லச் செல்ல வாய்க்காலில் ஒடிக்கொண் டிருக்கும் தண்ணிரின் வேகம் குறைகின்றது.
தண்ணிர் கட்டிக்கொண்டு நிற்கும் செல்லம் தலையை உயர்த்துகின்ருள்.
அவள் கணபதிப்பிள்ளையைப் பார்க்கின்ருள்.
அவளுடைய பார்வையிலே அவனுக்கு உற்சாகம் பிறக் கின்றது.
புதுத் தென்புடன் அவன் துலா மிதிக்கின்றன்.
அடிக்கடி செல்லம் அவனுக்கு உற்சாகமூட்டுகின்ருள்.
ஆளுல் அவளுக்கு?
வெய்யில் நெருப்பாய் எரிகின்றது.
செல்லத்தின் முதுகு வெய்யில் வெப்பத்தில் பொசுங்கு கின்றது. கால்கள் நடுங்குகின்றன. குனிந்தபடியே நின்று தண்ணிர் கட்டுவதால் இடுப்பில் தாங்க முடியாத வலி. கண்கள் கரிக்கின்றன.
90

சுயம்வரம்
அவளுடைய உடலிலிருந்து வடியும் வியர்வை வாய்க் காலில் ஒடும் நீருடன் சங்கமித்துத் தினைப்பயிருக்குப் பாய்கின்றது.
காய்ந்து வெடித்துப் பிளந்திருந்த நிலம் வேண்டு மட்டும் தண்ணிரை உறிஞ்சிக் குடிக்கின்றது.
தாய்ப் பாலுக்காக அழுதுவிட்டு, சோர்ந்து தூங்கும் குழந்தையைப்போல, தண்ணிர் இறைக்காததால் வாடிச் சோர்ந்துபோய் நிற்கின்றது தினைச்சாமிப் பயிர். ஒரு புறத்தில் இதைப் பார்க்கச் செல்லத்திற்கு வேதனை.
"இண்டைக்கு செழிக்கத் தண்ணீர் விட்டுக் கட்ட வேணும்."
நினைத்துக்கொண்டு வாய்க்கால் வரம்புகளிலுள்ள கோரைப் புற்களைப் பிடுங்கி வரம்பில் போட்டுவிட்டுத் தண் னிரை ஒரு பாத்தியிலிருந்து மற்றப் பாத்திக்கு மாறிக் கட்டு கின்ருள் செல்லம்.
ஒரு வாய்க்காலிலிருந்து அடுத்த வாய்க்காலுக்குச் செல்வதற்கு அவள் நாரியை நிமிர்த்துகின்ருள்.
தண்ணீர் இறைத்த பகுதியைப் பார்க்கின்றன அவள் கண்கள்.
பால் குடித்துவிட்டுக் கைகளையும் கால்களையும் அடித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைப்போல மென் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றன பயிர்கள்.
ஒரு புறம் தண்ணிரின்றிச் சோர்ந்து போய் ஏங்கி நிற்கும் பயிர். மறுபுறம் தண்ணிர் குடித்த தென்பில் கெம் பீரமாக நிற்கும் பயிர்.
செல்லம்?
ஒரு பாத்தியில் தண்ணிர் நிரம்பி வழியத் தயாராக நிற்கின்றது.
9.

Page 56
உதயம்
கட்டு மாறிவிட்டு மறுபுறம் திரும்புகின்ருள். இதற்கு முன்பு கட்டிய பாத்தியில் தண்ணிர் நிரம்பித் தெளிந்து போய் நிற்கின்றது.
நீலவானத்தின் மத்தியில் அவள் முகம்உற்றுப் பார்க்கின்ருள். முத்துப்போல வியர்வை கட்டி நிற்கும் தனது முகத் திலே புதுப் பொலிவைக் காண்கின்ருள்.
கணபதிப்பிள்ளையின் கெம்பீரமான பார்வையுடைய முகம் அவள் கண்முன் தோன்றுகின்றது.
அவளை அறியாமலே அவளுக்கு ஒருவித மயக்கம். தண்ணீரைப் பார்த்தபடியே நிற்கின்ருள். எவ்வளவு நேரம்தான் அப்படி அவள் நிற்கின்ருளோ? முத்துக் கட்டி நின்ற வியர்வைத் துளி ஒன்று தண்ணிரில் விழ, அது கலங்கி வட்டங்கள் போட்டு முகத்து நிழல் ஆடுகின்றது.
தன்னை மறந்த மோன நிலையிலே தண்ணிர் கட்டிக் கொண்டு நிற்கின்ருள் அவள்.
இறைப்பு முடித்த பொழுதுதான் அவளுக்குச் சுய உணர்வு வருகின்றது.
பெரிய கிணற்றடியில் ஒரே ஆரவாரம்! இத்தனை வருஷங்கள் சென்றும், நேற்றுத்தான் நடந் ததுபோன்ற இச்சம்பவம் கணபதியாரின் உள்ளத்தில் அழியாத ஓவியமாக இருக்கின்றது.
*செல்லம் இண்டைக்கு நீ உயிரோடை யிருந்தால்..?" ஆடுகால் பூவரசமரத்தோடு சாய்ந்தபடியே பெரிய கிணற்றடித் தோட்ட நிலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் கணபதியாரின் கண்களில் நீர் திரைவிரிக்கின்றது,

கரு ங் கா லிகள்
அவர்களுக்கு அவசரம். ஏன் இந்த அவசரம்? இது அவசர யுகந்தானே.
வேலைக்கு நேரமாகிவிட்டது. அதுதான் அவர்கள் அவசரமாகச் செல்கின்ருர்கள்.
அத்தொழிலாளர்களுடைய உடலில் சுறுசுறுப்பு. உள்ளத்தில் சோர்வு.
முதல் நாள் வேலை செய்யாத காரணமோ?
அப்படி என்ருல் உடலில் தானே சோம்பல், எதற்காக உள்ளங்களில் சோர்வு?
அது எல்லோருக்கும் தெரிந்த "ரகசியம்."
அதன் பலன்?
தோல்வி
விரக்தி,
வெறுப்பு
இதுதான் முடிவா? தோல்வி தானே வெற்றியின் தாய்.

Page 57
உதயம்
வெற்றி-வாழ்க்கையின் எல்லைக் கோட்டிலா?
வாழ்க்கையா? யார் அந்தத் தொழிலாளர்களுக்கா? அது பெயரளவில் மட்டும்தான். அதில் தேவை நித்திய மானது; மனித குலத்தின் ஜீவ நாடி. நேற்று, இன்று நாளையற்றது. தேவைக்காக முடிவற்ற போராட்டங்கள். அதில் மனிதனின் முன்னேற்றம்.
காலத்தின் கரைவு.
நேரத்தின் சந்திப்பு.
தொழிற்சாலை மணி அடிக்கின்றது. அதன் நாதத்தில் சோகம்.
சோகம்
மனிதனுக்கு மட்டும் தான சோகம்?
அத்தொழிற்சாலைக்குப் பெரிய கதவு. அதற்கு மத் தியில் சிறிய கதவு, எறும்புக் கூட்டமாக நுளைகின்றர்கள் தொழிலாளர்கள்.
தொழிலாளர்களின் குரல்கள் செத்து மடிகின்றன.
அப்படியென்ருல்?
யந்திரத்தின் ராட்சச கர்ச்சனை.
அவர்கள் மத்தியில் உயிர்த்துடிப்பில்லை.
யந்திரத்துடன் யந்திரமாகி விடுகின்றர்கள்.
நான்கு தொழிலாளர்கள் இப்பொழுது தான் வருகின் ருர்கள். அவர்கள் நடையில் தயக்கம்.
காரணம்?--
அவர்களை ஒருவன் கண்டு விட்டான். அவன் முழங்கை பக்கத்தில் நிற்பவனை இடிக்கின்றது. கண்களை வெட்டிப் பார்வையை மடக்குகின்றன். பார்வையில் அர்த்த புஷ்டி, உதடுகள் மெதுவாக அசைகின்றன.
94

கருங்காலிகள்
வந்தவர்கள் இதைக் கண்டு விட்டார்கள்.
அவர்கள் உடல்களில் நடுக்கம். முகங்களில் பீதி.
தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பு.
முகங்கள் வஞ்சத்தில் விகாரமாகின்றன. கண்களில் கோபத் தீ. அது எங்கிருந்துதான் வந்ததோ?
வந்தவர்களுடன் ஒருவரும் பேசவில்லை.
எப்படிப் பேசுவார்கள்?
ஒரு தொழிலாளியின் வெறித்த பார்வை, நால்வரிலும் நிலைகுத்தி நிற்கின்றது. அவனுடைய வாயில் தீ கனிந்து கொண்டிருக்கும் பீடி. வாய் நிறையப் புகையை இழுக் கின்ருன், லேபல் கருகிய பீடி பொரிந்து வெடிக்கின்றது. எரிச்சலுடன் அதை நிலத்தில் போடுகின்றன். அந்த பீடித் துண்டைக் குதிக்காலால் அழுத்தி மிதிக்கின்ருன். நால் வரையும் மிதித்துத் துவைப்பதாக எண்ணம் அவனுக்கு.
'தூ! நாய்ப் பிறவிகள்.'"
கூறிக்கொண்டு எரிச்சலுடன் காறித் துப்புகிருன் இன்னெரு தொழிலாளி.
ஏன்?
எல்லாத் தொழிலாளர்களுடைய கண்களும் அந்த நால்வரை வெறித்துப் பார்க்கின்றன. அவர்களுடைய
உள்ளங்களில் ஒரு வித வெறி. உடலில் துடிப்பு. நரம்புகள் முறுகிப் புடைக்கின்றன.
சம்மட்டியை எடுக்கிறது ஒருவனுடைய கை. அது மேலே ஓங்கி... .
அக்கையைப் பிடிக்கின்றன் பக்கத்தில் நின்றவன்,
கோபத்தில் அவன் உடல் கனலாகின்றது.
95

Page 58
உதயம்
காலில் இருக்கும் பிய்ந்த செருப்பைக் கழற்றுகின்றன் வேறு ஒருவன்.
'பாவம். அவங்களைச் சும்மா விடு. "'
அவனையும் தடுக்கிருன் வேருெருவன்.
""துரோகிகளுக்குப் பாவம் பழி பாக்கக் குடாது. அவங் கடை எலும்பை நொறுக்கவேணும். அப்பதான் சரியான பாடம் படிப்பாங்கள்.""
இன்னெரு தொழிலாளியின் குமுறலிது.
'இண்டைக்கு வெளியாலை வரட்டும். உவங்களை ஒரு கை பாக்கிறன்.""
ஆவேசத்துடன் ஒருவன் கூறுகின்றன்.
கடமையின் நிர்ப்பந்தம்.
திரும்பவும், அவர்கள் யந்திரமாகிவிட்டார்கள்.
அசுரவேகத்தில் யந்திரம் சுழல்கின்றது. அது, அவர் களுடைய பெருமூச்சுக்களில் தானே அவ்வளவு வேகமாகச் சுழல்கின்றது?
யந்திரத்தின் சுழற்சியில் நேரத்தின் அழிவு.
வெய்யில் வெப்பம், கழிவு எண்ணையின் நாற்றம் தகரக் கூரையின் வெக்கை; தூசிப்படலம் யந்திரத்தின் உறுமல்.
அழுக்கும் எண்ணையும் அப்பிக் கிடக்கும் அவர் களுடைய கந்தல் உடைகள் ஜலகண்ட வியர்வையில் தோய் கின்றன.
அவர்களுடைய உள்ளங்களில் உணர்ச்சி அலைகள் விம்மி வெடித்துக்கொண்டிருக்கின்றன.
வயிற்றில் பசி,
96

கருங்காலிகள்
தம்மைத் தாமே அழித்து, அந்த அழிவில் ஆக்கத்தைத் தந்துகொண்டிருக்கிருரர்கள் அத்தொழிலாளர்கள். அதில் அவர்கள் என்ன சுகத்தைத் தான் கண்டார்களோ?
மதிய வேளை, மனித யந்திரங்கள் ஒய்கின்றன. இரும்பு யந்திரத்தின் சுழற்சியும் நிற்கின்றது. சாப்பாட்டிற்கு எல்லோரும் செல்கின்றர்கள். கூட் டம் கூட்டமாக ஏதேதோ பேசிக்கொண்டு செல்கின்ருர்கள். நால்வரும் ஒரு தனிக் கூட்டம். பேச்சில்லை. ஒரு வருமே அவர்களுடன் பேசவில்லை.
தயக்கத்துடன் நால்வரும் செல்கின்றர்கள். தொழிற்சாலையின் எதிர்ப்புறம் பெரியசாலை. சாலை யின் இருமருங்கிலும் கடைகள்.
மந்தைக் கூட்டம் பிரிந்து செல்வதைப் போல் கடை களுக்குள் செல்கின்ருர்கள் தொழிலாளர்கள்.
நால்வரும் ஒரு கடைக்குள் செல்கின்றர்கள்.
அவர்களுள் ஒருவன் தன் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துளாவுகின்றன்.
நேற்றுக் கிடைத்த இருபத்தைந்து ரூபாயில் மிகுதியாக ஒரு புதுப் பத்து ரூபா நோட்டுக் கிடக்கின்றது.
அவனுக்கு அசுரப்பசி. “இண்டைக்கு நல்லாச் சாப்பிட வேணும்.' மனதிற்குள் சொல்லிக் கொள்கின்ருன் அவன்.
பெரிய கடை.
அங்கு தொழிலாளர் மயம்.
ஒரு மூலையில் காலி மேசை,
2- . 7. 97

Page 59
உதயம்
நால்வரும் உட்காருகின்றனர்.
ஒரே ஆரவாரம்.
தமது உழைப்பால் உலகை வாழ வைக்கும் அந்த மணி தத் தெய்வங்களுடைய வயிற்றில் ஜ"வாலித்து எரிகிறது பசித் தீ. அணையாத அத் தீயை அணைப்பதற்கு முயன்று கொண்டிருக்கிருர்கள் அவர்கள்.
நால்வரும்-?
அசைவற்றிருக்கின்ருர்கள்.
அவர்களிருக்கும் மேசை காலியாகவே இருக்கின்றது.
எல்லோரும் இவர்களை அடிக்கடி பார்க்கின்ருர்கள். கிண்டல் பேச்சுக்கள்; கேலிச் சிரிப்புக்கள்.
ஹோட்டல் தொழிலாளர்கள் ஒடியாடி வேலை செய்து கொண்டிருக்கிறர்கள்.
'என்ன கொண்டாறது?’’
கேட்டுக்கொண்டே வருகிருன் ஒருவன்.
அவன் தலையை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய முகத்தில் ஒரு சுழிப்பு. அடுத்த மேசைக்குச் சென்று விட்டான்.
நால்வரையும் புரிந்து விட்டானே அந்த ஹோட்டல் தொழிலாளி?
இதைக் கண்டுவிட்டார் கடை முதலாளி. அவர்
காணுதது போலவேயிருந்தார். அவருக்கு மனதிற்குள் வேதனை. ஆனல்.
இந்த நால்வருக்கும் ஒன்றும் புரியவில்லை. உணவு வரும் என்று அவர்கள் காத்திருக்கின்றர்கள். வரவில்லை. வெளியேறுகின்றர்கள். 98

கருங்காலிகள்
பசி அவர்களை விரட்டுகின்றது.
அடுத்த கடை.
இவர்களைக் கண்ட முதலாளி தவிக்கின்ருர்,
இங்கும் தோல்வி,
வெய்யிலின் வெப்பம் ஒரு புறம், பசி மறுபுறம், ஆருக வியர்த்து வடிகின்றது அவர்களுக்கு.
இப்போ அவர்களுக்கு வேண்டியது ஒரே ஒரு வயிறு சோறுதான்.
அதற்காக அவர்கள் சாலையிலுள்ள கடைகளின் படி களில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றர்கள்.
பலன்?
எங்கும் ஒரே விதமான "வரவேற்பு!”
தொழிலாளர்களின் கண் சிமிட்டல்கள், கிண்டல்கள், பேச்சுக்கள், கெக்கலிச் சிரிப்புக்கள், எல்லாமே அந்த நால் வருடைய உள்ளங்களையும் தைக்கத்தான் செய்தன. எல் லோரிலும் அவர்களுக்கு ஆத்திரம் தான்.
அதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. இப்போ அவர்களுக்கு வேண்டியது சோறு.
பசி குடல்களைச் சுருட்டி முறுக்குகின்றது. கண்களில் கரிப்பு.
எங்கு சென்ருலும் தோல்வி.
அவமானம்,
அவர்களுக்கு ஆத்திரம் தான். அதைப்பற்றி இப்போ எண்ணச் சக்தியில்லை.
சோறு!- நான்கு வயிறுகளும் ஒலமிடுகின்றன,
99

Page 60
உதயம்
தொங்கலிலுள்ள கடைக்குச் செல்கின்ருர்கள். அங்கு இரண்டொரு தொழிலாளர்கள் தானிருக்கின்றர்கள்.
நால்வரும் ஆவலுடன் சோற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருர்கள். அவர்களுடைய கண்கள் சோற்றுக்கு மன்றடுகின்றன.
கவனிப்பாரில்லை.
தொழிற்சாலையில் வேலை ஆரம்பிக்கப் போகின்றது. ஒருவன் கடை முதலாளியிடம் பாய்ந்து செல்கின்றன். "எவ்வளவு நேரமாய்க் காத்துக் கொண்டிருக்கிறது?’’
அவனுடைய குரலில் ஆத்திரம்.
முதலாளியின் முகத்தில் பயம். கண்கள் நாலு புறமும் நோட்டம் விடுகின்றன. இந்த நால்வரிடமிருந்து கிடைக்கும் பணம் கிடைக்க வழியில்லையே என்ற வருத்தம் வேறு.
முதலாளி மெளனியாக இருக்கின்ருர்,
"ஏன் பேசாமலிருக்கிருய்?"
பதிலில்லை.
"எங்களுக்குச் சும்மாவா சாப்பாடு தாருய்?"
மற்ற மூவரும் சேர்ந்து கொண்டனர்.
அவர்களுடைய குரலில் ஆவேசம். அங்கிருக்கும் எல் லோரையும் கொலைசெய்யவேண்டும் போலிருக்கின்றது அவர்களுக்கு.
'தந்தால்.’
முதலாளி தடுமாறுகின்றர்.
"எங்கடை காசில்லையோ?”
நால்வரும் கர்ச்சிக்கின்றர்கள், 00

கருங்காலிகள்
இனித் தப்பமுடியாது. வாறது வரட்டும்."
முதலாளிக்குத் துணிவு பிறந்தது.
'தம்பி இது தொழிற் சங்க விஷயம். பொல்லாதது. உங்களுக்குச் சாப்பாடு தந்தால் என்ரை வயித்திலை அடி விழும். நான் என்ன செய்ய? இஞ்சை உங்களுக்குச் சாப்பாடில்லை."
தயங்கியபடியே கூறிஞர் முதலாளி.
தொழிற்சாலை மணியின் நாதம் காற்றில் மிதந்து வந்தது.
நால்வர்?.
அவர்களுடைய நினைவுச் சுவடுகள் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.
என்ன, சோரு?
இல்லை. இருக்கமுடியாது.
அப்போ?
-?
0.

Page 61
து ரோ க பரம்ப ரை
ஐந்து மணி. ஆயுதந் தாங்கிய பொலிசார் உஷாராக நிற்கின்றனர்.
இருளை விழுங்கி ஏப்பம் விட்ட ஆனந்த வெறியில் ஒளிக்கதிர்களை அள்ளி வீசிப் பிரகாசித்துக்கொண்டிருக்கும் காந்த விளக்குகள், அசுர வேகத்தில் போவதும், வரு வதுமாக இருக்கும் ஜீப்புகளும், லொறிகளும் அவ்விடத்தில் என்றுமேயில்லாத பயங்கரத் தன்மையைக் கற்பிக்கின்றன.
கடலோடு அளைந்து வரும் உதயக் காற்றின் மென் கூதல்.
பிரிவின் சோகத்தால் வேண்டாவெறுப்புடன் இயங்கு வதைப் போன்ற இயந்திரங்களின் வேகங் குறைந்த ஒலி.
மனித நடமாட்டத்தின் அதிகரிப்பு.
வானத்திற்கு முண்டுகொடுத்தாற்போன்ற உயர்ந் தோங்கி நிற்கும் புகைக்குளாய் கக்கும் வெண்புகை வளையங் கள் வடக்காகச் சரிந்து சுருளிட்டு சிறு முகில்களாய்ப் படர்கின்றன.
நாள் முழுவதும் வேலையைக் கடமையாகச் செய்யும் யந்திரங்கள் இன்று கடமைக்காகப் பற்றுதலின்றி வேலை செய்துகொண்டிருப்பதை அவற்றின் இரைச்சல் ஒலியே பிரதிபலிக்கின்றது.

துரோக பரம்பரை
மாம்பிராயிலிருந்து வரும் தொழிலாளர்கள் மாங் கொல்லை ஒழுங்கையால் வந்துகொண்டிருக்கும் கூட்டத் தினருடன் ஒன்ருக தொழிற்சாலை வாசலை நோக்கி வீரநடை போட்டுக் கொண்டு வருகின்ருர்கள். மாவிட்டபுரம், மயி லப்பையிலிருந்து வந்தவர்கள் ஏற்கனவே தொழிற்சாலை வாசலை முற்றுகையிட்டு நிற்கின்றனர்.
தொழிலாளர் கூட்டத்தில் எழுச்சியின் சலசலப்பு.
"எங்கை பாலையாவைக் காணயில்லை?"
"அவர் அஞ்சாறு பேரோடை "குவாறி” கேற்றிலை நிற்கிருர்’
'மயிலு வாக்கள்?'
"வடக்குக் கேற்றிலை.”*
"பவர் ஸ்டேசனில் ஆர் நிக்கினை?'
"மாங்கொல்லை மகாலிங்கமாக்கள்."
"எங்கை- கேற்றுக்குள்ளை ஆர் கால் வைக்கிருன் எண்டதை ஒருக்காப் பாப்பம்."
மரியன் தம்பையாவின் குரல் ஆரவாரத்திலேயும் ஒங் கிக் கேட்கின்றது.
'எந்த விண்ணனஞலும் அவன்ரை காலை அடிச்சு முறிச்சுப் போடுவம்” மரம் கந்தையா சத்தியத்தின் கர்வத் துடன் கூறுகின்றன்.
வழக்கத்திற்கு மாருக கேற்றின் முன் மனிதக் குரல்கள் இன்று புதுவேகத்துடனும் தீவிரத்துடனும் ஒலிக் கின்றன. இதுவரை காலமும் தூங்கிக் கிடந்து, இன்று தம் உணர்வு பெற்றுவிட்ட அவர்களுடைய பேச்சுக் குரல்கள் நடக்க வேண்டியது நடந்துவிட்டதின் விளைவுகளே.
கருநீலவானத்தைப் போர்வையாகக் கொண்ட தொழிற்சாலை வாசலில், பிறக்கத் துடிக்கும் போராட்டத் தின் பரபரப்பு.
03

Page 62
உதயம்
தொழிற்சாலை வாசலை அண்டினற்போல் நாலு கவடு வடக்கே இருக்கும் "றெயில்வேக் கேற்றில் பொருத்தப் பட்டிருக்கும் சிவப்பு விளக்கைப் பிடித்த படியே, கேற்றில் சாய்ந்து கொண்டு நிற்கின்ருன் ஒரு தொழிலாளி.
காக்கி சேட் அணிந்த ராசா, நடப்பவை எல்லாவற் றையும் மேற்பார்வை பார்த்தபடி நிற்கின்றன்.
மிடுக்குடன் நிற்கும் நடுத்தர உயரமுள்ள அவனுக்குப் பின்னல் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பரித் துக்கொண்டு நிற்கின்றனர்.
அவர்களது குரலின் கருத்தை சிவப்பு எழுத்துக்களைத் தாங்கி நிற்கும், தொழிற்சாலை மதிலில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் பளிச்சிட்டுக் காட்டுகின்றன.
தொழிலாளி வர்க்கத்தின் பரித்தியாகத்தில் தோய்ந்து பிறந்த செங்கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருக் கின்றது.
ராசா, அமைதியாகக் கைகட்டிக்கொண்டு நிற்கிருன். யாரையும் கவரும் உறுதி அவன் கம்பீரமான தோற்றத்தில் விளங்குகிறது.
பதினன்கு வருடங்கள் மாடாக உழைத்த தொழி லாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கேட்டுப் போராட் டத்திற்குத் தயாராக நிற்கின்ருர்கள்.
சிந்தனையில் ஆழ்ந்து நின்ற ராசா, கைக்கட்டைக் குலைத்து, மீசையைத் தடவியபோது அவன் முகத்தில் ஆழ்ந்த தெளிவு பிரகாசித்தது.
'இம்மளவு தொழிலாளியளும் ஒண்டு சேர்ந்திருக் கிறம். எங்கை உந்த மனேச்சரவை ஏலுமண்டால் அசைக் கட்டும் பார்ப்பம்.""
நாம்பன் செல்லையா உறுதியோடு கூறிய குரல், தொழிலாளர் நெஞ்சில் மேலும் நம்பிக்கையை உறுதிப் படுத்திற்று.
04

துரோக பரம்பரை
மடிப்புக் குலையாத வெள்ளை லோங்சும், சேட்டும் அணிந்த ஒருவர் இப்பொழுதுதான் ராசாவின் பக்கத்தில் வந்து நிற்கிருர்,
பின்னல் நிற்கும் ஒரு தொழிலாளி தனது முழங்கை யால் ராசாவின் முதுகில் லேசாக இடிக்கின்றன்.
ராசா, தனக்கு அருகாக நிற்கும் உத்தியோகத்தரை நிதானமாகப் பார்க்கின்றன்.
உத்தியோகத்தரின் முகத்தில் லேசாகக் கவலை படர்ந் திருக்கிறது. தான், 'றெஸ்ற் கவுசி' லிருந்து வரும்போது கொண்டு வந்த பிறிஸ்டல் சிகறட் ஒன்றை எடுத்து ராசா விற்கு அலட்சியமாக நீட்டுகிருர்,
ராசா, கண்களாலேயே வேண்டாமென்று பதில் கூறுகிருன்,
உத்தியோகத்தர் முகத்தில் லேசாக வெறுப்புத் தட்டு கிறது. அதை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக தனது மூக்குக் கண்ணுடியைக் கழற்றித் துடைத்து விட்டு மீண்டும் போடுகின்ருர்,
அவர்- சுந்தரம், வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் சங்கத்துடன் சேர்ந்து பங்கு பற்ற விருக்கும் உத்தியோகத் தர் சங்கத்தின் தலைவர் கைவிரல் விட்டு எண்ணக்கூடிய உத்தியோகத்தர்களையுடைய * ட்ரொஸ்கிய" வாதிகளான சமசமாஜிகளின் சங்கத்தினுடைய பிரதிநிதியாக அங்கே நிற்கின்ருர்,
ராசா தனது காது மடலில் செருகியிருந்த பீடியை எடுத்துப் பற்ற வைக்கின்ருர்,
'சபாஷ்.வெற்றி!'
அடித் தொண்டையால் கத்திக்கொண்டே தொழி லாளர்களை இரு புறமும் தள்ளியபடி தண்ணிர்ப்பீப்பா வயிறு ஒன்று முன்னே வருகின்றது. களைத்து மூச்செறியும்
05

Page 63
உதயம்
அவன் தன் தலையில் சால்வையைத் "தலைப்பா' வாக கட்டியிருக்கின்றன்.
* 'எணை சம்பரி அம்மான் சத்தம் போடாதை போற வாற இடமெல்லாம் குளறுறதுதான் உன்ரை வேலை. ’’
ராசா கூறுவதைக் கவனிக்காமல் வெற்றிலை மடித்து வைத்திருக்கும் * சீமெந்துக் கடுதாசிச் சரையை தன் மடிக் குள்ளிருந்து எடுக்கின்ருர் சம்பரி அம்மான்.
'சரி, கிடந்தாய். இந்தா வெற்றிலையைப் போடு. “கீற் ஏற இன்னும் நேரம் கிடக்கு.”*
ராசா, சம்பரியிடமிருந்து புன்முறுவலுடன் வெற் றிலையை வாங்கிருன்.
சுந்தரம் கைக்குட்டையை எடுத்து சேட் கொலரை மிதத்தி விட்டு தனது கழுத்தையும் பிடரியையும் துடைக் கின்ருர், அவருடைய கைக்குட்டையிலிருந்து "ஈவினிங் இன் பரிஸ் சென்ரின் மணம் அவ்வேளை கம்மென்று வீசுகின்றது.
உறுமியபடியே தெருப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு ஜீப், தொழிற்சாலை வாசலில் வந்து நிற்கின்றது. ஜீப்பினுள் துவக்குகளைத் தாங்கிய பொலிசார் இருக் கின்றனர்.
திரண்டு நெடுத்த கறுப்பான மணியம், பொலிஸ் ஜிப்பை, பார்வையைக் கீழாக்கிப் பார்க்கின்றன்.
‘எங்கடை தலைவர் தன்ரை சின்னி விரலை ஆட்டினுல் போதும். நான் தனிய இந்தப் பொலிஸ்காரரைச் சம்பல் போட்டிடுவன்.”*
முஷ்டியை உயர்த்தி வன்மத்துடன் கூறுகிருன் மணியம்.
*எட எறிமாடா. எப்பன் சும்மா இரடாப்பா, நெடுக உனக்குச் சண்டித்தனந்தான். தரணம் வரேக்கை
06

துரோக பரம்பரை
நான் சொல்லுறன். நீ இருக்கேக்கை எங்களுக்கு என்ன குறை? கொஞ்சம் பொறு மோனை."
ராசா, மணியத்தைச் சாந்தப் படுத்துகிருன். எறி மாடன் மணியத்தைச் சாந்தப்படுத்தும் ராசாவின் குரலில் மதிப்பும், வாஞ்சையும் நிறைந்திருக்கின்றது.
'அண்ணை எவ்வளவு நாளைக்கெண்டு பொறுக்கிறது? இரண்டத்தா ஒண்டு இண்டைக்கு அறிய வேணும். சீவிக் கிற தெண்டால் நாங்கள் மனிதராய்ச் சீவிக்க வேணும். இல்லாட்டி இந்த உயிரேன்? பாடுபட்டு உழைக்கிற நாங்கள் எங்கடை உரிமையளைக் கேட்க, மனேச்சராக்கள் பொலிஸ் காரரைக் கொண்டு வந்து எங்களை வெருட்டப் பாக்கினை. நாங்கள் பயந்திடுவம் எண்டு அவை நினைக்கின. பொலிசும் எங்களைப் போலை மனுசர்தானே ! உந்தப் பொலிஸ்காரரை யென்ன உவங்களுக்குப் பெரியவங்களையும் ஒரு சுழட்டிலை விழுத்துவம்.”
காடேறி கந்தையாவின் அடங்கிய குரலில், ராசா மனதுள் புதிய வேகம் பெறுகிருன். என்றும் மெளன மாயிருக்கும் கந்தையாவிற்கு சொற்களவித்த உணர்ச்சி எங்கிருந்து திடீரெனத் தோன்றிற்று என அவனுக்கே விளங்கவில்லை.
''These labourers don't know Manners' (இந்தக் கூலிக்காரர்களுக்குப் பழக்க வழக்கம் தெரியாது)
கந்தையாவின் சொற்களைப் பிடிக்காத சுந்தரம் கையை உதறிக்கொண்டு வாய்க்குள் முணு முணுத்தான்.
உதய ஒளியில் மின்சார விளக்குகள் வெளிறுகின்றன. உத்தியோகத்தர்களில் ஒரு சிலர் சிகரட்டைப் புகைத் துக்கொண்டு தொழிலாளர்களைப் பார்ப்பதும், தங்களுக்குள் குசு குசுப்பதுமாய் நிற்கின்றனர்.
"We must use these labourers as our tool' (இந்தக் கூலிக்காரர்களை நாங்கள் எங்களுக்கு ஆயுதமாகப்
107

Page 64
உதயம்
பாவிக்கவேண்டும்) ஒரு உத்தியோகத்தர் கூறிவிட்டு விரல் இடுக்கில் புகைந்து கொண்டிருக்கும் சிகரட்டை இறுதியாகப் புகையை உறிஞ்சு இழுத்து ஊதிக்கொண்டு கட்டையை நிலத்தில் போட்டு சப்பாத்தால் மிதிக்கிருர்.
"எப்படி எண்டாலும் நாங்கள் உரிமை எடாமல் தொழிற்சாலைக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டம்.""
செல்லத்துரை உறுமுகிருன்.
வெளிறியிருந்த வானத்தின் அடிவயிறு குங்குமமாய்
சிவந்து, நிறக்குடல்களாய் கிழிந்து வானில் பரவி வருகின்றது.
காகங்கள் கரைகின்றன.
வானத்தின் கோடியில் விடிவெள்ளி தணற் பொட்டாய் மின்னுகின்றது.
தொழிற்சாலை விசில் ஊதுகின்றது.
தொழிற்சாலைக்குள்ளிருந்து “சிவ்ட் வேலை முடிந்த தொழிலாளர்கள் வெளியே ஆவலுடன் வருகின்றனர். அவர்களுடைய உடலெல்லாம் சீமெந்துத்தூசி அப்பிக் கிடக் கின்றது. இரவெல்லாம் கண்விழித்து வேலை செய்த களைப் பையும் மீறி வேலை நிறுத்தச் சக தொழிலாளர்களைச் சந் திக்கும் ஆர்வம் தலைதூக்க அவர்கள் வெளியே நின்றவர் களுடன் கலந்தனர். தோழமையின் ஆனந்தப் பேரொலி.
தொழிற்சாலை விசில் இரண்டாம் முறை ஊதிற்று. வெளியே நிற்கும் தொழிலாளர்கள் ஒருவரும் தொழிற் சாலைக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை.
"ராசா. அங்கை பார் அந்தச் சிமினிக்குள்ளாலை வாற புகை நிறம் மாறி ஒரு மாதிரிக் கறுப்பாய் வருகுது. என்ன சங்கதி?’
"புகையும் நிறம் மாறிவருகுது. மில் சத்தமும் ஒரு மாதிரிக் கேக்குது..?"
Η 08

துரோக பரம்பரை
'உள்ளுக்குள்ளே நிக்கிற மனேச்சரும், போமனுக் களும் விசயம் தெரியாமல் மிசினை முறுக்கி."
சந்தேகத்துடனும், மனக் கலக்கத்துடனும் ராசா கூறுகின்றன்.
"ஐயோ மண்விழுவாங்கள். ஒண்டும் தெரியாமல் கண்டபடி மிஷின்களை முறுக்கி, எல்லாத்தையும் நாசமாக்கப் போருங்களே. நாங்கள் புள்ளைமாதிரிப் பாவிச்ச மிஷின் கள். என்ன நடக்குமோ?"
மிஷினை இயக்கும் சம்பரி அம்மானின் கைகள் ஒன்றேடு ஒன்ருய்ப் பிசைகின்றன.
"இதாலை அவங்களுக்கென்ன நட்டம்? அவேன்ரை சொந்த முதலே? எங்கடை தானே இந்தத் தொழிற்சாலை. எங்களுக்குச் சோறு தாற இந்த மிஷினுகள் ஏதாலும் பிழைப் படட்டும் பிறகு. பிறகு.'
ஒரு தொழிலாளியின் குரல் தவிப்புடனும் கோபத் துடனும் முறுகிற்று.
தொழிற்சாலை யந்திரத்தின் இரைச்சல் படிப்படியாகக் குறைகின்றது.
'ஐஞ்சு இஞ்சினிலை மூண்டு நிண்டிட்டுது. இரண்டு தான் ஒடுது.”*
திடீரென்று ஒரு குரல் கூவிற்று.
"என்ன மூண்டு நிண்டிட்டுதா?*
"அதுவும் கொஞ்ச நேரத்திலை நிண்டிடுமாம். மில் ஒடுறதுக்கு "கறன்ரில்லாமல் நிண்டிட்டுதெண்டு மனேச்சர் பவர்ஸ்ரேசனுக்கு ரெலிபோன் பண்ணியிருக்கிருர், "'
பவர் ஸ்ரேசனிலிருந்து பைசிக்கிளில் வந்த மாங் கொல்லை மகாலிங்கம் ரெலிபோன் கம்பிகளைப் பார்த்த படியே ஆனந்தத்துடன் கூறுகின்றன்.
109

Page 65
உதயம்
"எங்கடை கந்தையா அண்ணை இல்லாமை ஒரு தம்பி யும் இஞ்சினை ஒடே லாது."
சம்பரி அம்மானின் குரலில் பெருமிதம்.
'இந்த மனேச்சராக்களைப் போலை நன்றி கெட்டது களே எங்கடை மிஷின்கள். அவையாலை ஒடப் பண்ணேலு மெண்டால் ஒடப்பண்ணட்டும் பாப்பம்? நாங்கள் எண்ணை தண்ணி வாத்து பிள்ளை போலை காத்த மிஷின்களடா அதுகள். நாங்களில்லாமல் அதுகள் அசையாது.”*
சம்பரி அம்மானின் குரல் ஒயமுன், இன்னேர் குரல் எழுந்தது.
** அங்கார் மனேச்சர்!"
வந்து கொண்டிருக்கும் மனேச்சரைக் சுட்டிக் காட்டு
கின்ருன் ஒருவன்.
சுந்தரத்தின் முகத்தில் சலனம் ஏற்படுகின்றது.
* ‘மனேச்சரைக் கூக்காட்டிக் கலைக்க வேணும். "' ஒரு கணம் யோசித்துவிட்டு பிடரியைச் சொறிந்தபடி ராசாவுக்கு சுந்தரம் சொல்கிருர் .
ராசா மெளனமாக நிற்கின் முன் ,
'After all we are officers, We must behave like officers' (எப்படி என்ருலும் நாங்கள் உத்தியோகத் தர்கள். உத்தியோகத்தர்கள் மாதிரியே பழகவேண்டும்.) ஒரு உத்தியோகத்தர் தனது சகாவிற்கு காதோடு கூறுகின்முர்,
மனேச்சர் சிறிது தூரத்தில் மிடுக்குடன் வந்துகொண் டிருக்கின்ருர்,
சுந்தரம் திரும்பவும் ராசாவைப் பார்க்கின்ருர்,
10

துரோக பரம்பரை
ராசா நிதானமாக நிற்கின்றன். "எப்படியென்ருலும் இவரைக் கூக்காட்டிக் கலைக்க வேணும்"
பதட்டத்துடன் மெள்ளக் கூறுகின்ருர் சுந்தரம். சிகரெட் புகைத்துக் கொண்டு நின்ற சில உத்தி யோகத்தர்கள் அரை குறை சிகரெட்டுகளை காலின்கீழ் போட்டு நசித்து அணைத்துவிட்டு அடக்க ஒடுக்கமாக நிற்கின்ருர்கள்.
மடிக்குள்ளிருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து ராசா ஒரு பீடியைப்பற்ற வைக்கின்றன்.
சுந்தரம், மனேச்சரை நோக்கிச் செல்கின்ருர், அவ ருடைய முகத்தில் பயம் பிதுங்கிற்று கால்கள் பதறு கின்றன.
''Good morning sir" (gill GLDITGoohil Garif.) நாக்குழற தட்டுத்தடுமாறிச் சொல்லுகின்றன் சுந்தரம். மனேச்சர் பதிலுக்குத் தலையை அசைத்துவிட்டு, கையிலிருந்த சிகரெட் டின்னைப் பிடிப்பின்றி சுந்தரத்திற்கு நீட்டுகின்ருர்,
''Thank you sir' (sitti g; GF(i) உள்ளம் பூரித்த சுந்தரம் சிகரெட்டை எடுக்க பயபக்தி யுடன் கையை நீட்டுகின்றன்.
இதைக் கண்ட ஒரு சில உத்தியோகத்தர்களின் முகத் தில் வெறுப்புணர்ச்சி படருகின்றது.
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டக் குரல் எழுப்பிக் கொண்டு நிற்கின்றனர்; அது போராட்ட உணர்வு நிறைந்த உறுதிமிக்க ஒலி,
愈
ll

Page 66
தி ரை
என் கால்கள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
அவருடைய வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற ஆவல் என் இதயத்தில் பொங்கித் ததும்புகின்றது.
அவர் பெரிய மனிதர். அந்தப் பெரியவருடன் நான் எப்படிக் கதைக்கப் போகின்றேன்? கதைக்கும்பொழுது ஏதாவது தவறு விட்டு விட்டால். அவர் என்ன நினைப்பாரோ? சிலவேளை நான் கேட்டுச் செல்லும் உதவியை அவர் செய்ய மறுத்து விட்டால்.
நான் தன்னந்தனியே வந்திருக்கக் கூடாது. என் நண்பனையும் என்னுடன் கூட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும், இருவருக்கும் பிரயாணச் செலவுக்குப் பணம்?. நண்பன் என் நிலையைப் புரிந்துதானே கடிதம் தந்திருக்கிருன்.
கடிதத்தை இன்னும் ஒரு முறை படித்துப் urtritu Gurrutb.
சட்டைப் பைக்குள் என் கையை விடுகின்றேன். இதென்ன, கைக்குட்டையல்லவா? என் கோகிலா இரண்டு வருடங்களுக்கு முன்பு, நாம் இருவரும் சர்வகலாசாலையில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது தந்த கைக்குட்டை,

திரை
கோகிலா, அன்று நாம் இருவரும் எவ்வளவு மனக் கோட்டைகள் கட்டினுேம்? எங்கள் படிப்பு முடிந்ததும் உத்தியோகம்; அதன் பின்பு.
எங்கள் படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் உருண் டோடிவிட்டன.
உனக்கு வேலையும் கிடைத்துவிட்டது.
எனக்கு?
"அத்தான்! எனக்குக் கிடைத்த இந்த வேலை உங்க ளுக்குக் கிடைத்திருக்கக் கூடாதா? என்ன செய்வது? நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். இந்த வருடம் முடி வதற்குள் உங்களுக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும்,' என்று, அன்று நீ கூறிஞயல்லவா. உன் வாக்கு பொன் வாக்காகட்டும்.'"
'எனக்கு வேலை கிடைக்குமட்டும் உன்னைப் பார்க்க நான் வரமாட்டேன்.’’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பு நான் கூறியபொழுது, நீ விட்ட பெருமூச்சின் இழை; அந்த இழையின் உயிர்த்துடிப்பு; இப்பொழுதும் என் இதயத்தை அறுத்துக்கொண்டிருக்கின்றது. அந்தக் கணப்பொழுதில் உன் கண்களின் இமைகளுக்கடியில் பரவித் தேங்கி நின்ற சோகம் கண்ணீராக மாறி.
எனக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று நீ எவ்வளவு ஆவலுடனிருக்கின்ரு ய் என்பது எனக்குத் தெரியும். உன் உள்ளத்து வேதனையை நான் என்னவென்பது?
கோகிலா ! இந்தத் தடவை எங்களுக்கு விடிவு காலம் வரத்தான் போகின்றது.
கைக்குட்டையை என் சட்டைப் பைக்குள் வைத்து விட்டு, கடிதத்தை எடுக்கின்றேன். அத்துடனிருந்த காசும்
கையுடன் வருகின்றது,
13

Page 67
உதயம்
பதினைந்து ரூபா. இது தொலைந்தால் நான் வீட் டுக்குத் திரும்பிப் போக முடியாது.
இந்தப் பதினைந்து ரூபாவை மாறித் தருவதற்கு என் ஆச்சி எவ்வளவு கஷ்டப்பட்டா.
ஆச்சி! இந்தக் காசை எனக்கு எடுத்துத்தர நீ எத்தனை படலைகளைத் திறந்து மூடினய் என்று எனக்குத் தெரியும். எங்கள் உறவினர் சிலரிடம் பணமிருக்கின்றதுதான்.
பணமுடையவர்கள் எப்படி பரோபகாரிகளாக இருக் கப்போகிருர்கள்? இறுதியில் நீ உன்னிடமிருந்த ஒரேயொரு தோட்டையும் "அடகு வைத்து வேண்டாம்.
ஏக்கத்தின் பிரதிபலிப்பு, மனிதனுக்கு எவ்வளவு வேண்டும்.
"இந்தத் தடவை என்ரை மோனுக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும்’ என்ற நம்பிக்கையுடன்தான் நீ என்னை வழியனுப்பியிருக்கின்ருய், உன் ஆசை நிராசையாகாமலிருக்க நான் பார்க்கச் செல்லும் பெரியவர் உதவி செய்வார் என்பதுதான் எனது நம்பிக்கையும்.
ஆச்சி! என் படிப்பிற்காக விற்கப்பட்ட உன் நகைகள் எல்லாவற்றையும் வாங்கி, உன் பாதாரவிந்தங்களில் படைத்து, உன் உள்ளத்தைக் குளிரச் செய்ய வேண்டும் என என் இதயத்தில் எந்த நேரமும் ஆவல் பொங்கிக் கொண்டுதாணிருக்கின்றது.
என்னுல் என்னதான் செய்ய முடியும்?
ஆச்சி! எனக்காக நீ செய்த பரித்தியாகங்கள் எனது சிந்தனைக்கும் எட்டாத அளவுக்குச் சிகரம் போல விஸ்வரூப மெடுத்து ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. எத்தனை நாட்கள் நீ பட்டினி கிடந்திருப்பாய், எத்தனை ஏச்சுப் பேச்சுக்களை, கேலிகளைக் கேட்டு உன் உள்ளம் வேதனைக்களமாக மாறி யிருக்கும். நீ இந்த உலகிலுள்ள அனைத்திற்கும் மேலான
Il II 4

திரை
சக்தி, இந்தப் பிரபஞ்சத்தையே இயங்க வைக்கும் உன் தாய்மைக்கு முன்னுல் நான் அணுவிலும் அணு. என்னுல் உனக்கு எதைத்தான் செய்யமுடிந்தது? எதைச் செய்ய (tpւգպւb?
நான் கொழும்பிற்கு வர அப்புவைக் காசு கேட்டேன். "'என்னட்டை நெடுகக் காசு விளையுதோ? இவ்வளவு நாளும் நான் பாட்டடி அடிச்சு உன்னைப் படிப்பிச்சு விட்டிருக்கிறன். நான் மற்றவங்களைப் போல குடிச்சு வெறிச்சுச் சிலவழிச்சஞ? நான் என்ரை சீவியத்திலை என்ன "சுவத்தைத்தான் அனுபவிச்சன்? கடசியிலை கண்டமிச்ச மென்ன? நான் உழைச்சதெல்லாம் உனக்குத்தானே சில வழிச்சன். இனியும் இந்தக் கிழவனைக் காசு கொண்டா, கொண்டா எண்டு நெருக்கினல் நான் என்ன செய்யிறது? எத்தினை தரம் நீ கொழும்புக்குப் போட்டு வந்தாய்? கொழும்புக்குப் போகப் போகவெண்டு நான் எத்தினை பேரிட்டைக் கடன் வாங்கித் தந்தன்? இன்னும் நான் எங்கை போய்த் துலைய? இனி நீ என்னிட்டை ஒரு சம்பாச் சல்லியும் கேக்கக்குடாது. நீ அறிஞ்சதைப் போய்ப் பார்," என்று சீறி விழுந்தாய். அப்படிக் கூறிவிட்டு, உன் மனதுக்குள் நீ பட்ட வேதனை, உன் கண்கள் கலங்கிக் குளமானது, எல்லாம் நான் அறிவேன். அதன் பின் நீ எத்தனை பேரிடம் கடன் கேட்டுத் திரிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும்.
அப்பு! நீதான் என்ன செய்வாய்? எவ்வளவு காலம் தான் உன்னல் கடன் பட முடியும்? பட்ட கடனைத் தீர்க்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் உனக்குத் திரும் பவும் யார்தான் கடன் தருவார்கள்?
இவ்வளவு கடன் பளுவையும் நீ எப்படித்தான் சுமக்கின்றயோ?
மண்ணுடன் போராடிச் சிதைந்த உன் உடலைப் பார்க்க எனக்கு உள்ளம் பொருமுகின்றது அப்பு. நான் தான் என்ன செய்வேன்?
115

Page 68
உதயம்
உன் கனவுகளை நனவாக்கத்தான் நானும் பாடுபடுகின் றேன். எனது பரீட்சை முடிவு வந்த அன்று இரவு நான் தூங்குவது போலக் கண்களை மூடிக்கொண்டு இன்பக் கோட் டைகள் கட்டியபடியே கிடந்தேன். அப்பொழுது நீயும் செல்லத்துரை அண்ணையும் கதைத்ததை நினைக்க இப்பொழு தும் எனக்குக் குமுறி அழவேண்டும் போலிருக்கின்றது.
"இனி எனக்கென்ன செல்லத்துரை. என்ரை மோன் படிச்சிட்டு வந்திட்டான். அவனுக்கு வேலை கிடைச்சு இரண்டு வரியத்துக்கை என்ரை கடன் எல்லாம் பறந்து போம். நான் ஈடுவைச்ச என்ரை தோட்டக் காணியையும் மீண்டுபோடுவன். பிறகு நானும் அஞ்சாறு நாளைக்குச் சுவமாயிருந்திட்டுக் கண்ணை மூடுவன். செல்லத்துரை! நான் கண் மூடுறதுக்கிடேலை என்ரை ஈடுவைச்ச தோட்ட நிலத்தை மீளாட்டி என்ரை நெஞ்சு வேகாது செல்லத்துரை, வேகாது." என்று நீ உள்ளக் குமுறலுடன் கூறியது, இப் பொழுதும் என் இதயத்தின் அடியில் அலறிக்கொண்டுதாணி ருக்கின்றது அப்பு.
என் படிப்பு முடிந்து இரண்டு வருடங்களும் முடிந்து விட்டன. உன் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே.
பிறந்தன்று தொட்டுச் சோகத்தின் மடியில் தவழ்ந்து வளர்ந்த எங்கள் இருளடைந்த வாழ்வு உதயசூரியனின் செங்கதிர்கள் பட்டுப் பிரகாசிக்கப்போகின்றது. அந்தப் புனித நன்னளை நீ காணத்தான் போகின்ருய் அப்பு!
உண்மையில் காலம் வந்துவிட்டது. துயரும் துன்ப மும் என்ருவது மறையத்தான் வேண்டும். துன்பம் என்றும் சாசுவதமானதல்ல. உங்கள் மகன் உங்கள் துய ரத்தைத் துடைத்தெறியத்தான் போகின்றன். இருந்து பாருங்கள். தோட்டமும் நீயுமாக எத்தனை வருடங்கள் கழித்திருப்பாய். மண்ணின் தரத்திலா புகையிலை விளைந் தது? எல்லாம் நீ சிந்திய வியர்வையின் உரம்தான். எமக்
116

திரை
கும் காலம் மாறத்தான் போகின்றது. உங்கள் துன்பத் திற்கு, பெருமூச்சிற்கு ஒய்வு கிடைக்கப் போகின்றது.
நான் பார்க்கப் போகும் பெரியவர் மனம்வைத் தால். கட்டாயம் அவர் உதவி செய்வார் என்பது எனது நம்பிக்கை.
பெரியவருடைய வீட்டிற்கு வந்துவிட்டேன். ‘கேட் டைத் திறந்துகொண்டு உள்ளே செல்கின்றேன்.
வெளியில் யாருமில்லை.
எப்படிக் கூப்பிடுவது?
பெயர் சொல்லி.,,. என்ன இப்படிப்பட்ட பெரிய மனிதரைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதா?
எனது அவல நிலையைப் போக்குகின்றது தூணில் பொருத்தப்பட்டிருந்த "எலக்றிக் பெல்."
"யாரது?"
கேட்டுக் கொண்டே ஒருவர் வருகின்றர். ஐம்பது
அல்லது ஐம்பத்தைந்து வயது வரையிருக்கும். உயரமான, சதைப் பிடிப்புள்ள உடல். முகத்தில் சிந்தனைச் சுமை,
நான் என்ன செய்வதென்றறியாது ஜீவாவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கின்றேன்.
என்ன வேண்டும்?" அதிகாரத் தொனியில் கேட்கின்ருர், கடிதத்தைக் கொடுக்கின்றேன். அதைப் படிக்கின்ருர், அவருடைய முகம் மலர்கின்றது. எனது உள்ளம் குளிர்கின்றது! "இரு தம்பி, உந்தக் கதிரையில்.""
17

Page 69
உதயம்
கதிரையைச் சுட்டிக் காட்டுகின்றர்.
"நீர் பட்டதாரியா? நம்பமுடியவில்லையே. இவ்வளவு படித்தும், தமிழ் ஆசிரியர்களைப் போல வேட்டியும் "நாஷ னலும்'. இப்படித்தானிருக்க வேண்டும் படித்தவர்களு டைய லட்சணம். இக்காலத்தில் எஸ். எஸ். ஸி. பாஸ் பண்ணுவதற்கு முன்பே, பிள்ளைகள் "சூட்டும் கோட்டும்". அதுவும் தமிழர்களில் அநேகர் தாங்கள் தமிழர் என்பதை மறந்தே வாழ்கின்ருர்கள். உங்களைப் போன்ற படித்த வாலிபர்கள்தான் எங்கள் ஆட்களுக்கு வழிகாட்ட வேண்டும்.'"
அவருடைய பேச்சு என் உள்ளத்தை எங்கோ இழுத்துச் சென்றுகொண்டிருக்கின்றது.
அறைக்குள் ஏதோ ஒரு சிறு ஒலி
என் உணர்வில் சிறு தடை.
யன்னல் பக்கம் என் கண்கள் சுழல்கின்றன.
பாலாவிபோன்ற மெல்லிய யன்னல் திரையின் அசைவு என் கண்களை நிலைகுத்தச் செய்கின்றது. அசையும் திரை யில் என் பார்வை குவிகின்றது.
காற்ரு?
தளிர் விரல்கள் யன்னல் திரையை அரை குறையாக நீக்குகின்றன.
மென் உடலின் ஒரு பகுதி.
வானத்தின் வெண் நீலப் பட்டுப் புடைவை, அதற் கிணையக் கருநீல ஜாக்கட், நீண்டு துவஞம் பின்னல்கள் கிளைவிடும் இடத்தில் சிவப்பு 'றிப்பன்" சுருங்கி விரிந்து வளைந்து மென் காற்றில் மிதந்து அசைகின்றது.
தாழம்பூ நிற மேனி.
முகம் தெரியவில்லை.
8

திரை
இவருடைய மகளோ?
அழிந்து செல்லும் கானல் மத்தியில் தோன்றும் மோகன அழகுடன் ஜாஜ்வல்யமாகத் திகழும் அந்த முகத்தின் ஒருபகுதி பக்கவாட்டாக-ஒரு கன்னம்.?
கோகிலா!
என் கண்களை என்னுல் நம்பமுடியவில்லையே. நான் காண்பது?
நான் எங்கிருக்கின்றேன்? நிஜமா? அனுஜிதமா?
நிஜத்துக்கும் அனுஜிதத்துக்கு மிடையில் நான் கிடந்து தவிக்கின்றேனு?
அவளுடைய விழிகள் பேசுகின்றன. உதடுகளில் முறுவல் அரும்பு கட்டி கலையா நிலையாகி என் இதயத்தில் நித்தியத்துவம் பெறுகின்றது.
'இன்றைய அரசாங்கம் தமிழர்களுக்குப் பார பட்சமாய்."
பெரியவரின் பேச்சுக் குரலும் என் காதில் விழுகின்றது. நான் காண்பது கனவல்ல.
என் முன்னல் பெரியவர்அறைக்குள் என் கோகிலாநான், இருவருக்கும் மத்தியில்-? கோகிலா இங்கு ஏன் வந்தாள்?
தனது உறவினர்கள் கொழும்பிலிருப்பதாக, என்ருே ஒரு நாள் அவள் கூறியது எனது ஞாபகச் சுவட்டில்
தட்டுப்படுகின்றது.
9

Page 70
உதயம்
கோகிலா ! இந்தச் சந்தோஷகரமான செய்தி உனக்கு இன்று, இப்பொழுதே தெரியப் போகின்றது. எங்கள் உள்ளத்துக் கனவுகள் நனவாகப் போகும் முதல் சம்ப வத்தைப் பார்த்து நீ ஆனந்த வெறிகொள்ளப் போகின்ருய்
'தம்பி! இப்போது தமிழர்களுக்கு உத்தியோகம் எடுப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. நான் சில நாட்களுக்கு முன் முயன்று, ஏழெட்டுப் பேருக்கு சில கம்பணியளிலை வேலை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். உமக்கு .'
கோகிலா பார்த்தாயா? எனக்கு வேலை கிடைக்கப் போகின்றது. அன்று நீ கூறிய வாக்குப் பொன் வாக்குத் தான்.
'இப்ப சிங்களவற்றை ஆட்சி நடக்குது. இனிமேல் அரசாங்கத்தில் உத்தியோகம் எடுப்பது கஷ்டம். தமிழர்
களுக்கென்ருல் எடுக்க முடியாதென்றே சொல்லலாம்
அமைதியாகக் கூறுகின்ருர் பெரியவர்.
அப்போ எனக்கு?,.
** இவ்வளவு தூரம் நீர் அலைந்து என்னிடம் வந் திட்டீர். என்ன செய்யிறது. நான் பங்காளியாக இருக்கும் ஒரு வெள்ளைக்காறன்ரை கம்பெனியில் உமக்கு ஒரு வேலை எடுத்துத் தர...'
ஆச்சி! எனக்கு வேலை. உன் ஆசை நிறைவேறி விட்டது! அப்பு.கோகிலா
ஏமாற்றத்தால் பளுவேறித் தாழ்ந்து இருண்டு விட்ட என் உள்ளத்தில் எமது எதிர்கால வாழ்க்கையின் நம்பிக்கைச் சுடர் ஜனிக்கின்றது.
எனக்கு வெற்றி! கோகிலா! உன் அத்தானுக்கு வேலை கிடைத்து விட்டது.
20

திரை
வெட்டிச் சுளிக்கும் மின்னலைப் போல அவள் அறைக் குள் அங்குமிங்கும் அலைவதும், அடிக்கடி ஜன்னல் பக்கம் வருவதுமாக இருக்கின்ருள்.
என்ன உன் அத்தானுக்கு வேலை கிடைத்து விட்ட தென்று தலைகால் தெரியாத எக்களிப்பினலா இப்படி அவ சரப்பட்டு, ஜன்னல் பக்கம் தாவித் தாவி வருகின்ருய். கொஞ்சம் பொறுத்துக்கொள். உதற்கெல்லாம் வட்டியும் (LP5 gll Drd....
'தம்பி ஒன்று கேட்க மறந்துவிட்டேன். உமது தகப்பனர் எந்த டிப்பாட்மென்டில் வேலை செய்கின்ருர்?’’
** அவர் கமம்செய்கின்ருர்' பெருமையுடன் கூறுகின்றேன்.
மழைகால வானத்தைப் போல இருள்கின்றது பெரிய வருடைய முகம்.
ஏன் இந்த மாற்றம்?
'இதற்கு முன் நீ ஒரு வேலைக்கும் முயலவில்லையா?*
அவருடைய குரலில் கடுகடுப்பு.
ஏன்?
எதற்காக "நீரிலிருந்து "நீ"?
இரண்டுங்கெட்டான் நிலையிலிருந்து தத்தளிக்கும் என் உள்ளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்துகின்றேன்.
'கடந்த இரண்டு வருடங்களாக அநேக வேலைகளுக்கு முயன்றேன். ஒன்றும் கிடைக்கவில்லை."
* ஏன் கிடைக்கவில்லை?"
வெட்டி முறித்துக் கேட்கின்ருர், நான் மெளனியாக இருக்கின்றேன்.
21

Page 71
உதயம்
'உன்னைப் போல எத்தனையோ பேர் படித்துவிட்டு வந்து "வேலை", "வேலை", என்று திரிகின்றர்கள். படித் தவர்கள் எல்லோருக்கும் கொடுக்க என்ன, வேலை சும்மா போட்டுக் கிடக்கா? படித்தவர்கள் உத்தியோகத்தைத் தவிர வேறு வேலை செய்யப்படாதா? ஏன் நீ யெல்லாம் தோட்டக் காரனுடைய மகன். கமம் செய்ய."
அதல பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் உணர்வில், நான் தத்தளிக்கின்றேன். அவர் என்ன சொல்கின்ருர் என்பதை என்னுல் உணர முடியவில்லையே.
**கண்டவன் நிண்டவன் எல்லாம் படிச்சிட்டு வர, உங்களுக்கு உத்தியோகம் தரவா அரசாங்கமும் நாங்களும் இருக்கின்ருேம்? எங்களுக்கு வேறு வேலை இல்லையா? எங்களைக் கேட்டுக் கொண்டா நீங்கள் படித்தீர்கள்?"
அவருடைய சொற்கள் என் இதயத்தை வெட்டிப் பிளக்கின்றன.
"என்ன சொல்கின்றீர்கள்? கண்டவன் நிண்டவன்.'
எனது குரலும் மாறுகின்றது.
'மன்னிக்கவும். உங்களிடம் வந்தேனே என் மேல் தான் தவறு."
நிதானத்துடன் கூறுகின்றேன்.
அவர் ரெளத்ர மூர்த்தியாகின்ருர்,
"என்னடா சொல்லுருய்? போடா வெளியாலை."
கையை உயர்த்திக் கொண்டு கர்ஜிக்கின்ருர்,
என்னை மறந்த நிலை.
"அவருடைய கழுத்தைப் பிடித்து நெரித்து."
என் கைகள் கதிரையை இறுகப் பிடிக்கின்றன.
及2别

திரை
நிதானத்தை நிலைநிறுத்திக்கொண்டு எழுகின்றேன்.
என் தலையை நிமிர்த்தி அவரை ஏறிட்டுப் பார்க் கின்றேன்.
அவருடைய தலைக்கு மேல், சுவரில்
எலிசபெத் மகாராணியின் படம்!
என் கண்களை மறைந்திருந்த திரை அகல்கின்றது.
எனக்கு தர்மாவேசம்.
* "எடே, உன்னைப்போலை அந்நிய ஏகாதிபத்தியத் தின்ரை கையாட்களை நாங்கள் கூடிய கெதியிலை ஒழிச்சுக்
கட்டுவமடா!'
நான் சபதம் கூறுகின்றேன்.
அவன் திகைத்தபடியே நிற்கின்றன்.
ஒரு புதிய பாதையில் என் கால்கள் அசுரவேகத்தில்
நடந்துகொண்டேயிருக்கின்றன.
丑25

Page 72
ரத் தக் கடன்
அவன் தலைமறைவாகி ஒரு மாதம்!
பொலிஸார் அவனைக் கைதுசெய்ய இராப்பகலாக அலைந்து திரிகின்றர்கள்.
அவன் அந்தக் கிராமத்தில்தான் இருக்கின்ருன்,
சின்னையாவை பொலிஸாரால் கைதுசெய்ய முடிய வில்லை.
ஏன்?
தண்ணிருக்கும் மீனுக்குமுள்ள உறவு அவனுக்கும் அந்தக் கிராமத்து மக்களுக்குமிருக்கின்றது.
அவனைக் கைதுசெய்து உள்ளுக்குள் தள்ளிவிட்டால், அந்தப் பகுதியிலுள்ள போராட்டம் நின்றுவிடும் என்பது சாதிவெறியர்களின் எண்ணம்.
அவனைப் போல நூற்றுக்கணக்காஞேர் அங்கு இருக் கின்ருர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
சின்னயா ஜாக்கிரதையாக, ஆளுல் துணிவுடன் நடந்து வருகின்றன்.
மார்கழிமாதத்துப் பின்னிரவுப் பணிக்காற்று, அவனு டைய உடலைச் சில்லிடவைத்து எலும்புக் குருத்துக்களைத் தாக்குகின்றது.

ரத்தக் கடன்
இரவு முழுவதும் நித்திரையின்மையால் அவனுடைய கண்கள் கரிக்கின்றன.
வயல்வெளியைத் தாண்டி வரும்வரை அவனுடைய தோழர்கள் அவனுக்குத் துணையாக வந்தார்கள்.
இப்போ பயமில்லை.
எந்த எதிரி வந்தாலும் இப்போ சின்னையாவைத் தொடமுடியாது.
பனங்கூடலினுரடாக வளைந்து நெளிந்து செல்கின்ற அந்த ஒற்றையடிப் பாதை நிற்சாமத்திற்குக்கொண்டுபோய் விடுகின்றது.
நிற்சாமம் சங்கானையில் ஒருபகுதி.
நிற்சாமத்தின் பெயரைக் கேட்டாலே விரோதிகளுக் குத் தொடை நடுக்கம்.
அங்கு வாழும் மக்கள் தங்கள் கைகளையே நம்பி வாழ் கின்றர்கள்.
அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமேயில்லை.
அவர்கள் நிலத்தில் தமது கால்களை நன்முக ஊன்றி நிற்கின்றர்கள். நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லாவிட்டா லும், நிலத்தில் நிற்கும் உணர்ச்சி மட்டும் அவர்களைவிட்டு ஒருபொழுதும் நீங்குவதில்லை. அவர்கள் உழைப்பினுல் பூமித்தாயைத்தொட்டு உணர்கின்ருர்கள். எப்படித்தான் அவர்கள் உழைத்தாலும் காலாதிகாலமாக உரிமைகள் மறுக் கப்பட்ட அடிமைகளாகத்தான் வாழ்ந்தார்கள்.
ஆனல் இப்போ?
சின்னையா நிற்சாமத்தை நோக்கி நடந்துகொண் டிருக்கின்றன்.
பனித்திரையினல் போர்த்தியிருக்கப்பட்டிருக்கின்ற குடிசைகள் விடிநிலவொளியில் அவனுடைய கண்களுக்கு மங்கலாகத் தெரிகின்றன.
85

Page 73
உதயம்
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கின்ற குடிசைகளிலே, பகலெல்லாம் கடுமையாக உழைத்த அலுப் பிலே மக்கள் அச்சமின்றி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக் கின்ருர்கள்.
அவர்களுக்குப் பாதுகாப்பாக, எதிரியை நுழையவிடா மல் இரவிரவாக காவல் காத்து நிற்கிருர்கள் அப்பகுதியின் வாலிபர்கள்,
கணபதியின் குடிசைக்குக்கிட்ட வந்த சின்னையாவின் கால்கள் அவனையறியாமலே ஒரு கணம் தயங்கி நிற்கின்றன.
ஒருநெடுமூச்சு. பின் அவன் கால்கள் அசைகின்றன. "இண்டைக்கு கணவதியண்ணை இருந்தால்...??
"போனவரியம் இந்த மாதத்திலைதான் தேத்தண்ணிக் கடையளை எங்களுக்குத் துறந்துவிடவேணுமெண்டு நாங்கள் போராட்டம் துவங்கினம். அதுக்கு கணவதியண்ணை முன் னுக்கு நிண்டார். ஒரு கிழமையாலை அவரை அவங்கள் ஒட்டியிருந்து சுட்டாங்கள்."
'தம்பி சின்னையா, நான் செத்துப் போனுலும், நீங்கள் இந்தப் போராட்டத்தை கைவிடக்கூடாது. எங்கடை உரிமையளை எடுக்குமட்டும் நீங்கள் போராடவேணும். நான் உயிர் தப்பிவந்தால் அவங்களுக்கு இந்தக் கடனைத் தீராமல்விடமாட்டன்!"
* அவர் சாகிறதுக்கு முதல்நாள் யாழ்ப்பாணம் பெரி யாஸ்பத்திரியிலை கிடந்துகொண்டு சொன்ஞர்."
"கணவதியண்ணை மாத்திரமே?
"எங்கடை வேலுப்பிள்ளை, பாலு, சரவணை அண்ணை, இன்னும் எத்தனைபேரை அவங்கள் சுட்டுச் சாக்காட்டினங் கள். எத்தனைபேரை அடிச்சுமுறிச்சாங்கள்? எத்தினை வீடு
26

ரத்தக் கடன்
களுக்கு நெருப்பு வைச்சாங்கள்? எங்கடை தோட்டம் துரவுகளை...
ஆத்திரத்தில் சின்னையா பல்லை நெருடுகின்ருன்.
"இவளவுக்கும் பொலிசு என்ன செய்துது?"
"சாட்டுக்கு நாலஞ்சு பேரை புடிச்சு இரண்டு மூண்டு நாள் அடைச்சு வைச்சிருந்திட்டு பிறகு வெளியாலை விட்டுது."
"ஆனல் நாங்கள் தற்பாதுகாப்புக்காக திருப்பித்தாக்கி ஞல், எங்களை உடனை புடிச்சு பொலிசு ஸ்டேஷனிலை அடைச்சு வைச்சு அடிச்சு எங்கடை எலும்பை நொறுக்கிருங்கள்."
"பொலிசும் அவங்கடை பக்கம்தான் எண்டு எங்களெல் லாருக்கும் இப்ப நல்லாய்த் தெரியும்.'
"பொலிசுக்கு நாங்கள் பயந்தகாலம் போட்டுது. "
'இதெல்லாத்துக்கும் வட்டியும் முதலுமாய்ச்சேத்து நாங்கள் அவங்களுக்கு......
"இப்ப ஒருக்கா அவங்கள் எங்களை அசைக்கட்டும் Lumri ub?”
சின்னையா தனது குடிசையை நெருங்குகின்றன்.
"அக்கா...
அரைகுறைத் தூக்கத்தில் கிடந்த செல்லம்மா திடுக் கிட்டு எழுகின்ருள்.
'ஆரது?"
"அது நான்தான், அக்கா, "'
கண்ணைத் துடைத்துக்கொண்டு குப்பி விளக்கை எடுத் துக்கொழுத்திவிட்டு, கதவைத் திறக்கின்ருள்.
"ஏனடாமோனை இவளவும் என்ன செய்தனி?'
27

Page 74
உதயம்
"இப்பதான் கூட்டம் முடிஞ்சுது. கந்தையாவாக்கள் இஞ்சை வந்தவையே?’’
*@ຄໍາອື່ນ. ஏன்?
'அவை கார் கொண்டாறதெண்டவை. விடியிறதுக் கிடேலை நாங்கள் வெளிக்கிட்டு, சில ஊருகளுக்குப்போக வேணும்."
“ TGår? .
"அந்த இடங்களிலையும் போராட்டம் துவங்கிட்டுது. அங்கையிருக்கிற ஆக்களோடையும் நாங்கள் தொடர்பு வைச்சு...”*
**எந்தெந்த ஊரடா தம்பி?*
செல்லம்மா ஆவலுடன் கேட்கின்ருள்.
'கொடிகாமம், அச்சுவேலி, மந்துவில், மட்டுவில் இன்னும் வேறை சில'"
செல்லம்மாவிற்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை.
அவளுடைய பெரிய கண்கள் சுடர்விட்டுப் பிரகாசிக் கின்றன.
'சரி சரி, நான் எல்லாருக்கும் தேத்தண்ணி வைக் கிறன். கந்தையாவாக்களும் வரட்டும். எல்லாரும் தேத்தண் ணியைக் குடிச்சிட்டுப்போங்கோ. இல்லை, சும்மா போனல் வெறுவயிறு புகையும். அவள் சின்னுச்சியிட்டை நாலு மரவள்ளிக் கிழங்கு வாங்கியந்து அவிச்சுத்தாறன்.'"
தாய்மை உணர்வோடு கூறுகின்ருள்.
"அதொண்டும் வேண்டாமணை, நேரம் போட்டுது. தேத்தண்ணியை வை. அது போதும்." செல்லம்மா அடுப்பைப் பற்றவைக்கின்ருள்.
செந் தீ நாக்குகள் சுழன்றெரிகின்றன.
28

ரத்தக் கடன்
"இனி எங்களுக்கென்ன? எங்களைப்போலை மற்ற ஊரு களிலையும் போராட்டம் துவங்கீட்டுது. *
'விடியப்போகுது, இவையளை இன்னும் காணேல்லை." அவளுடைய சிந்தனை தடைப்படுகின்றது. *" என்ன? ஒ, அவையளோ? வாறதெண்டால் வரு வினைதானே. ஏன் அந்தரப்படுகிருய்?'
""வாறவழியிலை ஏதாவது நடந்திருக்குமோ?" மனப்பதட்டத்துடன் கேட்கின்ருன் சின்னையா, "அப்பிடி ஒண்டும் நடவாது. நீ ஒண்டுக்கும் யோசி யாதை "'
ஆறுதல் கூறுகின்ருள் செல்லம்மா.
அமைதியைக் கிழித்துக்கொண்டு மோட்டாரின் இரைச் சல் வந்து அவர்களுடைய காதில் விழுகின்றது.
'கந்தையாவாக்கடை கார்தானே? ஒருக்கா நீ பாரக்கr???
பரபரப்புடன் அவன் கூறுகின்றன்.
குடிசைக்கு வெளியே அவள் வருகின்ருள்.
கிராமத்தின் எல்லைக்கோடியில் மோட்டாரின் வெளிச் சம் தெரிகின்றது.
'கார் வெளிச்சம்போலை தெரியேல்லை.”*
சந்தேகத்துடன் செல்லம்மா கூறுகின்ருள்.
அவனும் வெளியே வருகின்றன்.
கிழக்கு வானத்தின் அடிவயிற்றில் வெண்மை தட்டு கின்றது.
'சத்தமும் ஒரு மாதிரிக்கிடக்கு."
129

Page 75
உதயம்
அவனுக்கும் சந்தேகம்,
'வேறை ஆர் இப்ப வரப்போகினை?*
அவள் யோசனையுடன் வினவுகின்ருள்.
"ஒரு வேளை பொலிசு???
காவல் காத்துக்கொண்டு நிற்கின்ற வாலிபர்களின் விசில் சத்தம் காற்றைக் கிழித்துக்கொண்டு வருகின்றது.
நாய்கள் குலைக்கின்றன.
சின்னையா விழிப்படைகின்ருன்,
மோட்டார் வெளிச்சம் அவர்களுடைய குடிசையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.
"பொலீஸ் Tப்பு!"
அவன் திகைப்புடன் கூறுகின்றன்.
அவளுக்கும் சிறு பதட்டம்.
‘'இப்பென்ன செய்யிறது?"
அவனுடைய கேள்வி.
நிதான நிலைக்கு வருகின்ருள் அவள்.
'வாறது வரட்டும், நான் பார்த்துக்கொள்ளுறன். நீ போய் வீட்டுக்கை இரு.'
உறுதியுடன் கூறுகின்ருள் செல்லம்மா.
அவன் தயங்குகின்றன்.
**போ உள்ளை, கெதியாப் போ."
கதவைச் சாத்திவிட்டு முற்றத்திற்கு வருகின்ருள்,
படலையடியில் ஜீப் வந்து நிற்கின்றது.
130

ரத்தக் கடன்
அதிலிருந்து குதித்த பொலீஸ்காரர்கள் துப்பாக்கிகளு டன் ஓடிவந்து வீட்டைச் சுற்றி நிற்கின்றனர்.
செல்லம்மா வீட்டு வாசலில் கெம்பீரமாக நிற்கின்ருள். அவளது கண்களில் அசைவற்ற ஒளி நிறைந்திருக்கின்றது.
வாலிபர்கள் சத்தமிட்டபடியே ஓடிவருகின்ருர்கள். கிராமம் விழித்தது!
பலதிக்குகளிலுமிருந்து மக்கள் சின்னையாவினுடைய வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றர்கள்.
பொலீஸ் அதிகாரி செல்லம்மாவை நோக்கி விரைந்து வருகின்றன்.
அவனுடைய நடையில் அதிகாரத் திமிர்.
அவள் தனது பெரிய ஆழ்ந்த கண்களால் எதையோ வினவுவதுபோல பொலீஸ் அதிகாரியைப் பார்த்துக்கொண்டு நிற்கின்ருள்.
பொலீஸாரின் கடந்தகால அட்டகாசங்கள், கொடுமை கள் அவளுடைய மனத்திரையில் தோன்றுகின்றன.
"சந்தையடித் தேத்தண்ணிக் கடையுக்கை போய் எங் கடை பொடியள் தேத்தண்ணி கேச்க, கடைக்காறன் இரண்டு மூண்டு சோடாப் போத்திலுகளை உடைச்சுப்போட்டு, கடையுக்கைவந்து கலாட்டா செய்ததெண்டு பொலிசிலை பொய்முறைப்பாடு செய்தான். உடனை இந்தப் பொலீசுக் காறங்கள் எங்கடை பொடியளைப் புடிச்சு அடைச்சுவைச்சு, அடிச்சு அவங்கடை எலும்பை நொறுக்கிளுங்கள். அந்த நோ
மாறுறதுக்கு எத்தினை Sாதம் செண்டுது?"
"எங்களுக்காக ஞாயம்பேசின முருகேசுவின்ரை வீட்டை அவற்றை சொந்தக்காறச் சாதிவெறியர் அடிச்சு உடைச்சாங் கள். அவங்களை இந்தப் டொலீசுக்காறங்கள் ஒண்டும் செய் யேல்லை. ஆன கலகத்தை தூண்டிவிடுகிறதெண்டு முரு
13

Page 76
உதயம்
கேசுவை இவங்கள் பொலீசு ஸ்டேசனிலை வைச்சு ஏழெட்டுப் பேர் அடிச்சு, அவற்றை வயித்திலையும் சப்பாத்துக்காலாலே ஏறி மிதிச்சாங்கள்?
"சாதி வெறிக்கெதிராய் சுன்னுகத்திலையிருந்து ஊர் வலம் நடத்தின ஆக்களை இவங்கள் துவக்கு சுருேங்குகளாலை யும், பெற்ரன் பொல்லாலையும் அடிச்சு, சப்பாத்துக்காலாலை உதைச்சதை பாக்கேக்கை .
**சின்னையனை வரச்சொல்லு.'
பொலீஸ் அதிகாரியினுடைய முரட்டுக்குரல் செல்லம் மாவின் சிந்தனையைக் கலைக்கின்றது.
'அவன் இஞ்சை இல்லை."
உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு
நிதானமாகக் கூறுகின்றுள் செல்லம்மா.
'அப்ப, அவன் எங்கை?"
'அவன் இஞ்சை கனநாளாய் வரேல்லை. அவன் எங்கை யெண்டு எனக்குத் தெரியாது."
o o Gount uiu சொல்லாதை, அவனைக் கூப்பிடு. இல்லாட்டி..'
மிரட்டல்.
'எனக்குத் தெரியாதெண்டால் பிறகென்ன?"
அவனுடைய கண்களை அசையாமல் பார்த்துக் கொண்டே கூறுகின்ருள்.
அவளுடைய முகத்தில் வைராக்கியம்.
'பொய் சொன்னல் உன்ரை எலும்பெல்லாத்தையும்
நொறுக்கிப் போடுவன்ரி.'
உறுமுகின்றன் அவன்.
82

ரத்தக் கடன்
'அவனைப்பற்றி எனக்கொண்டும் தெரியாது. நீ செய் யிறதைச் செய்."
ஆக்ரோஷத்துடன் கூறுகின்ருள்.
*"எடியே, கனமாய்க் கதையாதையடி. உதைப்பண்டி, பொத்தடி வாயை."
கையை ஓங்கிக்கொண்டு பொலீஸ் அதிகாரி கூறு கின்றன்.
'இப்பென்ன செய்யப்போருய்?"
கோபாவேசத்தோடு செல்லம்மா கேட்டாள்.
“பொறடி செய்து காட்டிறன். சண்முகம் வீட்டை சோதி. இருந்தால் அவனை வெளியாலை இழுத்துக்
கொண்டா. ”*
"வீடு சோதிக்கிறதெண்டால் விதானையோடை வந்து தான் சோதிக்க வேணும்."
அவளுடைய பேச்சில் உறுதிதொனிக்கின்றது.
சண்முகம் தயங்கி நிற்கின்றன்.
"ஏன் நிக்கிருய் சண்முகம்? வேணுமெண்டால் இன் னும் இரண்டுபேரோடை போ , **
'வீட்டுக்கை ஒருதரும் போகேலாது."
சண்முகத்தினுடைய கண்களைப் பார்த்துக்கொண்டு உறுதியாகச் சொன்னுள் அவள்.
சண்முகம் முன்செல்கின்றன்.
அவனை இரு பொலீஸார் பின்தொடர்கின்றனர்.
எட்டுத் திசைகளிலுமிருந்து ஜனங்கள் உணர்ச்சிமய மான கொதிப்படைந்து கொந்தளிக்கும் வார்த்தைகளைக் 33

Page 77
உதயம்
கொட்டிக்கொண்டு வீட்டை நெருங்கிக்கொண்டிருக் கின்ருர்கள்.
அவர்களுடைய உள்ளங்களில் இவ்வளவு காலமும் பதுங்கிக் கிடந்த அவர்கள் அனுபவித்த சுரண்டும் வர்க்கத் தினதும், சாதிவெறியர்களதும் அடக்குமுறையினலும் கொடுமைகளினலும் எழுந்த வெறுப்புணர்ச்சி உயிர்பெற் றெழுந்து பொங்கிக் குமுறி, போக்கிடம் தேடி, முட்டி மோதிச் சாடிக்கொண்டிருக்கின்றது. அந்த உணர்ச்சியினல் அவர்களுடைய உள்ளத்தில் ரத்தக்கடன் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஜுவாலைவிட்டுக் கனன்றுகொண்டிருக் கின்றது.
வீட்டைச் சுற்றி நின்ற பொலீஸ்காரர்கள் ஒரே இடத் தில் வந்து குவிந்து நிற்கின்றனர்.
செல்லம்மா மக்கள் திரளை ஒருமுறை கண்ணுேட்டம் விடுகின்ருள்.
ஒன்றுபட்ட உணர்ச்சிப் பெருக்கோடு இரைந்து கொண்டு வருகின்றது பெரும் ஜனக்கூட்டம்.
செல்லம்மாவிற்கு புதுத்தென்பு பிறக்கின்றது.
சண்முகம் முன்னேறி வருகின்றன். "கிட்டவராதை, வந்தால்." செல்லம்மா எச்சரிக்கின்ருள். அவன் அசட்டுத் தைரியத்துடன் வந்துகொண்டிருக் கின்ருன்.
கையில் துப்பாக்கி இருக்கின்றதென்ற துணிவு அவனுக்கு.
அவன் அவளை நெருங்குகின்ருன்.
"எடே வீட்டுக்கை கால் வைச்சால்."
134

ரத்தக் கடன்
அவளுடைய வார்த்தைகள் தீப்பிழம்புபோல் சுழல் கின்றன.
சண்முகம் தனது கையிலிருந்த துப்பாக்கியால் செல்லம் மாவை ஒருபுறம் தள்ளிவிட்டு வீட்டுவாசலுக்குள் காலடி எடுத்துவைக்கின்றன்.
செல்லம்மாவின் கைகள் காற்றில் உயர்கின்றன. ஒரே பாய்ச்சல். சண்முகத்தின் நெஞ்சில் ஒரு அடி! அடுத்த கணம்அந்தப் பொலீஸ்காறனுடைய கையிலிருந்த துப்பாக்கி செல்லம்மாவின் கையில்!
பொலீஸ்காரர்களை திடீரென சுற்றிவளைக்கின்ருர்கள், போராட்ட உணர்வு நிறைந்த மக்கள். உத்வேக உணர்ச்சி யினுல் ரத்தம்பாய்ந்து சிவப்பேறிய அவர்களது கண்களில் வெஞ்சினத் தீ.
ஒரு பொலீஸ்காரன் ஆகாயத்தில் சுடுகின்றன். பொலீஸ்காரர்களை அசையவிடாது, அவர்களைக் கையே உயர்த்தாதபடி மக்கள் திரள் சுற்றிவளைத்து நெருக்குகின்றது. பொலீஸ் அதிகாரி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற் காக நாலுயுறமும் பார்த்துவிட்டு மெள்ள நழுவிச்சென்று Tப்பில் ஏறுகின்றன்.
பாய்ந்து சென்று மக்கள் ஜீப் வண்டியையும் சுற்றி வளைக்கின்றனர்.
கிழக்கு சிவப்புமயமாகிக் கொண்டிருக்கின்றது.
★
5

Page 78


Page 79
-
ές o 'f്fഞഖ??{ഴി
நீர்வை பொன்னே யன் போ ககு எழுத்தாளர், விவ 5 றியவர். விவசாயிகள், ெ பற்றி அறிந்தவர். | -91 ou i b K தானும் பகிர்ந்து கொண் டவ வேண்டுமென்ற வேண வா வீர உணர்வோடு வெளிவரு
அவருடைய கதைகள் மக்களுக்கு, சிறப்பாக தெ உதவும் கதைகள்: உத்ே ஒடுக்குமுறை, சுரண் டல் : தெறிந்து, விடுதலை பெற வி சாயிகளைச் சித்தரிக்கும் கன சாயிக 2ள ப் பற்றி இத் த6 உணர்வு வீறுடன் கொப்பளி கண்ணுேட்டத்திலிருந்து தீட் கள் மிக அரிதென்றே சொ
தொழிலாளர் விவசாயி 6) i j55ů (8 LITJ TLLLP E 21T, சித்தரித்து, மக்களுக்கு 1ே தமது சூழ்நிலை யை மாற்றி த வதற்கு உற்சாகமளிக்கும் க மேலும் வளர்க்கப் பாடுபட கதைகளைப் போன்ற, மேலு படைப்புக்களை முற்போக்கு புனைந்து ஈழத்து வரலாறு
என்று நாம் எதிர்பார்க்கின்
இன்று உலக ரீதியாக
சோஷலிஸம் வெற்றி வா கை யின் கதைகளிலும் சுரண்டு நோக்கிச் 25 మే 25 tub பெருகி வளர்வதையும் முடிகின்றது.
ܠ ܝ
D
6 | ||
(5LD
 

ன் கதைகள்
ஒரு பிரபல்யமான முற் ாயிகள் கடும் பத்தில் தோன் தாழிலாளர் பிரச்சினை களை ப் நடைய துன்ப துயரங்களைத் ர். அவற்றுக்கு விடிவுகாண அவருடைய சிறுகதைகளில் கின்றது.
வரலாற்றை முன் தள்ளி விட ாழிலாளர் விவசாயிகளுக்கு வகம் ஊட்டும் கதைகள் என்ற விலங்குகளை உடைத் ழையும் தொழிலாளர் விவ தகள், தொழிலாளர் விவ கைய முறையில் விடுதலை க்க, நிதானமான வர்க்கக் டப்பட்ட ஈழத்துச் சிறுகதை ht) 60 6) T լԻ -
களே பாத்திரமாகக் கொண் டு அரசியல் போராட்டங்களைச் பாராட்ட உணர்வு ஊட்டி, ம் மைத் தாமே விடுதலை செய் லா சிருஷ்டிகளை நாம் மென் ட வேண்டும். 'நீர் வை' யின் ம் சிறந்த கலை இலக்கியப் ந எழுத்தாளர்கள் பலரும்
முன்னேற பணிபுரிவார்கள் (8 (ց մ.
முதலாளித்துவம் மடிந்து, சூடி வருகின்றது "நீர் வை' ம் பழைய சக்திகள் அழிவை புதிய சக்திகள் வீறுடன் நாம் தெளிவாகக் கான
மாதகல் கந்தசாமி.
7.2.1967.
b, 6ì5 ff {{p th{{-12.