கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைகறை நிலவு

Page 1


Page 2


Page 3

6.) a) 56) AD Ŝ@) 6]
(அங்கையன் கவிதைகள்)
வை. அ. கயிலாசநாதன்

Page 4
3, bb USúI : LDiTij 25, 1977
திருமதி இராஜலட்சுமி அம்மாள் கயிலாசநாதன் H 2/1, அரசாங்க தொடர் மாடி கொழும்பு-4
விலை : ரூபா 2-50
சக்தி அச்சகம், 25 1/1, ஸ்ரான்லி வீதி,
turbuat sw b.

மு ன் னுரை
'கவிதை என்பது மேம்பாடுற்ற பேச்சு" என்பது பிர பல விமரிசகர் ஒருவரது கருத்தாகும். பேச்சு எவ்வாறு மேம்பாடு உறுகிறது? சாதாரண பேச்சு மொழியில் வரும் சாதாரணமான சொற்கள், கவிதையில் வருகை யில் மேம்பாடு பெறுவது எப்படி? இதுபற்றி விரிவாக விளக்குவதாஞல், அது கவிதைக்கலை பற்றிய ஆராய்ச்சி ஆகிவிடும். அத்தகைய ஆராய்ச்சியில் இறங்காது, கவி தைச்சொல் மேம்பாடு பெறுவதற்கான் . ஒரு வழி ஓசை ஒழுங்காக்கம் என்னும் உண்மையை மாத்திரம் இங்கு கருதுவோம்.
கவிதையில் வரும் ஓசை ஒழுங்காக்கம் பல்வேறு படித்தரங்சளில் நிகழும். பேச்சோசையை ஒட்டி அதற்கு மிகவும் கிட்டிய விதத்தில் நிகழும் ஒழுங்காக்கம் ஒரு வகை. இவ்வாறு பேச்சோசையை ஒட்டிஎழும் இயற்பாக் கள் நவீன கவிதையின் பிரதான கிளையாக வளர்ந்து வருகின்றன. இக்கவிதைகளில், பேசும் குரலை, அடிப்படை யாகக்கொண்ட ஓசையைக் கவிஞர்கள் தம் கருத்து வெளியீட்டின் பொருட்டும் கையாளுகின்றனர்: ஓசை ஒழுங்காக்கத்தின் பிறிதொரு வகை இசைக்கல்யை ட அதாவது சங்கீதத்தை-மிகவும் தழுவிய ஒன்முகும். இவ் வித ஒழுங்காக்கத்தின் பூரண நிலையை, சங்கத சாதித் தியங்கள் என்னும் இசைப்பாக்களில் நாம் காண்கிருேம்.
அங்கையன் கயிலாசநாதனின் கவிதைகள் சங்கீத சாகித்தியங்கள் அல்ல. (அங்கவையி 3 பாடல்கள் சங்கீத சாகித்தியங்களே என்பது குறித்தற்பாலது) எனினும் அவை இசைத்தன்மை மிக்கனவாக உள்ளமையை - அவை பாடுங்குரலை ஆதரிசமாகக் கொண்டு படைக்கப்பட்டுள் ளமையை - பாடற் சுவைஞர்கள் நிச்சயம் உணர்வார்கள்

Page 5
அவரது பாடல்கள் சில, மெல்லிசை அமைத்துப் பாே வதற்கென எழுந்தவை என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும். இந்த வகையில், "மணிக்குரல் ஒலித்ததே என்னும் பாட்டும், "மழைசிந்தும் கடலோரம் இளி நண்டு படங்கீறும்" என்னும் பாட்டும். " பட்டு இதழ்விரித்து என்னும் பாட்டும் மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளவை எனல் பிழை ஆகாது. இவை பொருத்த *ான இசையுடன் வானெலியில் அடிக்கடி ஒலிபரப்பாவது பெருமைப்படத்தக்க செய்தியாகும்:
அங்கையன் மெல்லிசைக்கென முழுக்க முழுக்க எழு திய பாடல்களைத் தவிர்ந்த ஏனைய பாடல்களிற்கூட இசைப்பாவினத்துக்குரிய பண்புகள் முதன்மை பெற்று நிற்பதையே நான் காண்கிறேன். கண்ணதாசன் போல மிகப்பல இசைப்பாடல்களை எழுதிக்குவிக்கா விட்டாலும், கயிலாசநாதனும், தம்பாட்டுக்களிலே, இலகுவில் மக்களை *ர்க்கும் இதமான சொற்பிரயோகங்களைக் கையாளும் வழக்கம் உடையவர். "சோமு’ என்னும் மீ. ப. சோமசுந் தரம் அவர்களின் பாட்டுக்களிற் காணப்படுவது போன்ற ஏக்க. சோக - இனிமை - இசைக் கலவை அங்கையனின் பாடல்களிலும், சிற்சில இடங்களிலே தலைகாட்டுகின்றன. சோமுவைப் போலவே அங்கையனும் வானெலியுடன் தொடர் பூண்டு இருந்தமையை நாம் நினைவுகூரலாம்: ஆயினும், வனெலிப்பணியைத் தொடங்கு முன்னரே அங்கையன் தம்கவிதைகளிற் பலவற்றை எழுதி முடித்து விட்டார் என்பது கருதத்தக்கது.
இனி, இசைப்பாக்கள் சிறந்த கவிதைகள் ஆகுமா என்ற ஐயமும் சிலரிடையே எழுதல் கூடும், காலம் சென்ற சிங்க்ளக் கவிஞர் மகா (g, கம சேகர அவர்கள் சிறந்த பாடலாசிரியரே எனினும், கவிஞர்என்று பார்க் கும்போது அவர் இரண்டாந்தரத்தவரே என்றும் சிலர் வாதிக்கிறர்கள். அது எவ்வாறயினும், ஈழத்துத் தமிழர்
y
 

ஆக்கி, ஈழத்துக் கலைஞர்கள் இசையமைத்து, ஈழத்துப் பாடகர்கள் குரல் கொடுத்து ஒலிப்பதிவான ஈழத்துப் பாடல்கள் என்னும் புதிய கலைத்துறை இப்பொழுது உருவாகி வருவதனை எவரும் மறுத்தல் இயலாது இத் துறையின் தொடக்க காலத்திலே, பல தயக்கங்களும் மயக்கங்களும் இருந்தன. இசைவாணர் எப்படிப் பாடு வரோ என்ற எண்ணம் எதுவும் இல்லாத புலவர்கள் இயற்றிய பாட்டுகளே, சங்கீத வித்துவான் ஏதோ ஒரு தாளத்தில், ஏதோ ஓர் இராகத்தில், தாம் தமது குரு விடம் கற்ற ஏதோ ஒரு கிருதி அல்லது கீர்த்தனத்தின் மெட்டிற்குள்ளே தி E த் து ப் பாடிவிட்டுப் போகும் போக்கே ஆரம்பகாலத்தில் இருந்தது. ஆணுல், ஆரம்ப காலத்துப் போக்குகள் பல இன்று மாறிவிட்டள தயக்க மயக்கங்கள் பல நீங்கி விட்டன. இன்றைய ஈழத்துப் பாடலாசிரியர், இசைவாணரின் போக்குகளை உணர்ந்தே எழுதுகிருர் இசைவாணரும் கவிஞரின் எண்ணவோட் டங்களையும் உண்ர்ச்சிச் சுழிப்புகளையும் மனங்கொண்டே இசையமைக்கிருர். ஆதலால், ஒரளவு திருபதிகரமான பாடல்கள் உருவாகி வருகின்றன. எஸ். ைே பரராஜசிங் கம், ஆர். முத்துச்சாமி, ரி. வி. பிச்சையப்பா முதலான இசையமைப்பாளர்கள் உருவாகி வருகின்றனர். இசைப் பா ஆசிரியர்களும் நூற்றுக்கணக்கி லே தோன்றிக் கொண் டிருக்கின்றனர். ஆஞ ல், இசைவாணர்களும் கவிஞர் களும் ஒருங்கே அமர்ந்து தமது படைப்புத் தொழிலில் ஈடுபடத்தக்க நெருக்கமான சூழல் இன்னும் தோன்ற வில்லை. அப்படியொரு நல்லுறவு ஏற்படுமாயின் திற பsான பல ஈழத்துப் பாடல்கள் பிறப்டெடுக்கும் என் பதில் ஐயமில்லை. அங்கனம் பிறப்பெடுக் குமாயின், ஈழத் தமிழ் மெல்லிசைக் கலை புதிய பரிமாணங்கள் பலவற் றைப் பெற்று விருத்தியடையும். அங் து ன ம் விருத்தி யடையும் இசைக்கலை வரலாற்றில் அங்கையன் கபிலாச நாதனின் பாட்டுகளும் திடமானதோர் இடம் பெற்றுத் திகழும் என்பது நிச்சயம்.

Page 6
கயிலாசநாதனின் கவிதைப் பொருள் பற்றியும் இங்கு சில சொற்கள் கூறுதல் வேண்டும். காதலும் குடும்ப வாழ்க்கையும் குழந்தைப் பேறும் கலையின்ப நுகர்வும் இவரது கவிதைகளின் உள்ளடக்கமாகத் திகழ்கின்றன. சமுதாயச் சச்சரவுகள் நீங்கி அமைதி பிறத்தல் வேண்டும் என்ற பொதுப்படையான நல்லெண்ணமும் அவர் கவிதைகளில் உண்டு. அத்துடன் இயற்கையை நயக்கும் போக்கும், அழகியல் ஈடுபாடும் ஆங்காங்கே காணப் படுகின்றன. இறையன்பும் ஈடுபாடும் சிலகவிதைகளிலே தெரிகின்றன.
இன்னும் மிகப்பல கவிதைகளையும் பிற கலையாக்கங் கள யும் செய்து, தமிழ்க் கலையுலகைக் கயிலாசநாதன் வளம்படுத்துவார் என்று ஈழத் தமிழுலகம் நம்பியிருந்தது. காலத்தின் கொடுமையால் அந்த நம்பிக்கை பாழாகி விட்டாலும், அவரது ஆன்மநாதம் நூலுருப் பெற்று வருவது தேறுதல் த ரும் செய்தியாகும். வரவேற்று உவந்து நயக்கத்தக்க இந்த நூலை அறிமுகம் செய்யும் பேற்றை எனக்கு அளித்தமைக்காக , நூல் வெளியீட் டாளர்க்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
3 1/1, சிறிபால ருேட், கல்கிசை,
இ. முருகையன்

உள்ளடக்கம்
S,
இறை வணக்கம்
பாவும் தாவும்
கோணேஸ்வரனே குறையா
நிலவே குளிராயோ?
காதல்
காலை மலர்
மண்ணின் புதுமைகள்
சுணக்காதே
தாமதந்தானே வருகை
முகிலில் மறைந்த முழுநிலவு
பாரினில் ஊர்வலம் போகுமடி!
காதல் பறந்த தம்மா
திரும்பாதோ?
நிழலும் வாழ்வும்
காதல் கீதம்
θα θ, ο
குழந்தை
மணிக்குரல் ஒலித்ததே
அத்தானைப் போலவொரு கோலம்
பட்டு இதழ்கள்
சமூகம்
பூவிட்ட கோயில் வாசல்
தகைமையும் தமிழரும்
மாற்றம்
பிளவுகள்
வேதனைச் சிரிப்பு
பொது
குது வைகறை நிலவு

Page 7
கடற்காற்று’ நாவலை நூலுருவில் வெளி பிட்டு, அபேட்சகர் அம்பலம்’ என்ற கட் டுரைத் தொகுதியை நூலுருவாக்கிக்கொண் டிருந்தவர், 'வைகறை நிலவு என்ற தலைப் பில் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளி யிடத் தயாரர கவிருந்தார்.
தமது எண்ணத்தை நிறைவேற்று முன்னரே அவரின் வாழ்வு திடீரென்று நிறைவேறிவிட். போது, அவர் தயாராக வைத்திருந்த கவிதை களின் முழுத் தொகுப்பையும் பெற முடி யாது போயிற்று.
பெறமுடிந்த கவிதைகளைக் கொண்டே அவர் ரின் எண்ணத்தை நிறைவுசெய்து " வைகறை நிலவு அவரது முதலாவது ஆண்டு நிறைவு தாளில் உதயமாகி றது.

சமர்ப்பணம்
எண்ணினுல் நெஞ்சம் வேகும் எழுதினல் கைகள் நோகும் அன்னைபோல் என்னைக் காத்து
அப்பணுய்க் கல்வி யூட்டி மண்ணிலே தவிக்க விட்டு
மண்ணையே மறந்து போன என்னருந் தமைய னேயுன்
இருமலர்ப் பாதம் போற்றி கண்ணீரால் உதிரத் தாலே
கலந்துநான் செய்த விந்த வண்ணமாந் தமிழை ஐயா
வழங்கினேன் உன்ற னுக்கே!

Page 8

இறை வணக்கம்
ஆழ்கடலை இருசுடரை அருமலையை
அருவியினை அழகோடு அமைத்துத்தந்தே சூழ்வினைகள் பலவோடும் மனிதசுற்றம்
சுதந்திரமாய் வாழவைத்து மறைந்துவிட்ட ஏழ்நிலையுங் கடந்தவனை மனத்திலேத்தி
என்றணுயிர்க் கவியமுதை ஏட்டிலுாற்றி காழ்சூடிக் கழல்சூடிக் கருத்தைத் தந்த
கடவுளினை வாழ்த்தியே வணங்குவோமே.

Page 9
பாவும் நாவும்
பல்லவி
வைய இருளில் வதைத்துக் கிடந்தேற்கு வெய்யில் எனவந்த வித்தகியே
அநுபல்லவி
பூமகளும் போற்றும் பூவுலகும் ஏற்கும் நாமகளே நின்பதம் நாம்பணிந்தோம்
சரணங்கள் பாடுங் குயிலதன் பாட்டினிலும் வண்ண ஆடும் மயிலதன் ஆடலிலும் பள்ளம் ஒடும் நதியசை ஒசையிலும் - வையம் கூடு மிடமெங்கும் நாடிடும் தெய்வம்
நீலத் திரைக்கட லோரத்திலும் அந்த நீண்ட விசும்பின் நிலவதிலும் கோலப் பசுமை ஒளியுடையாள் - என்றன் கோடி குறைகளைத் தீர்த்து வைப்பாள்
பாலைப் பழிக்கும் நிறமுடையாள் இந்தப் பாரைச் சுமக்கும் திறலுடையாள் வேலை நிகர்க்கும் விழியுடையாள் - வாணி வெள்ளை மலரதன் மேலுறைவாள்
திக்குத் தெரியாத காட்டிருந்தேன் வாணி தென்றலாய் வந்தே திசையளித்தாள் நெக்கி யுருகி நினைவழிந்தேன் - தேவி நெஞ்சச் சுமைகளைப் போக்கி விட்டாள்!

பா சினில் ஆயிரந் தெய்வமுண்டு இந்தப் பாமகள் போலொரு தெய்வமில்லை
பேரினில் நாமகள் ஆயினுமே - அவள் பெண்மையைக் கண்டவர் சாவறியார்!
நவநிதி போ லெனே நாடி வந்தாள் இந்த நானில வாழ்வதை ஈடேற்றத் தவமிது போலெனச் சார்ந்ததில்லை - அவள் தாளன்றி வேறினி வாழ்வு மில்லை.
கோணேஸ்வரனே குறையா நிலவே குளிராயோ?
தானே தோன்றித் தளிரார் பாத fBt-LDIt lg.
மானேர் விழியாள் மருங்கே யுறைய மகிழ்வோடு தேனே மலரே யெனப்பா டடியார் துதிகேட்கும் கோணேஸ் வரனே குறையா வின்பம் கொடுதேசா
நானுய் வளர்ந்துநற் றமிழால் நாமந் 5ð07 LůLumtuq தேனய் நினைந்து தினமும் விழைந்து தித்தித்தேன் ஏனுே நீதான் இடிபோ லிருந்தாய் இறைவா நற் கோணேஸ் வரனே குறையா நிலவே G56ofturm Guur?
உருவாய் உறைந்த வுனை நான் துதித்து உருகுங்கால் தருவாய் சுகமே தளரா இளமை தண் கல்வி திருவாய் மலர்ந்து அருளாள் நீலக் கிடல்வந்து பொருதப் பெயரா மலைவாழ் ஈசா பொறுப்பா Guust ?

Page 10
மந்தி குலைந்து மடுவிற் குதித்து மகிழ்ந் தாடும் வெந்து பொசுங்கு வெயிலின் கொடுமை
வேளையிலும் அந்தி நெருங்க அழகார் மயிலும் நடமாடிச் சிந்தை களிக்கும் மலைமேல் வாழும் சிவநேசா
நந்தா வனத்தின் நயனக் கிளிகள் இசைபாடும் செந்தா மரைகள் சிரிக்கும் ஆங்கே சின்ன இடை நந்தா விழியார் நாதா வெனவே நயந்துன்னே சொந்தம் பேசும் சுனையார் குன்றின் சிவனேவா!
நீலக் கடலை நெருங்கிக் கங்கை நீரென்றே மாலைக் கதிரோன் மறையும் போது மான்கூட்டம் வாலைக் குழைத்துக் கரை சேர் நீரில் வாய்வைக்கும் கோலச் செம்மை குறையாத் தென்றற்
(35T G60T # T!
வானும் பொழிய மலர்கள் இனிக்க மணம்சேர்க் கும் கானும் சதுக்கக் கடலிற் கலக்கும் காட்டாற்றில் மீனும் மிதக்கும் மானும் மிடற்றும் இன்பத்தில் நானும் இருக்க நலந்தா கோண மலைநாதா !
தங்க மணிகள் இசையோ டசையத் தலைகளிலே தங்கை குவித்துத் தா! தா! வென்றே தனிக்காதல் பொங்க நிற்கும் அடியார் மனமே புழுங்காமல்
அங்கை சிவக்க அளிக்கும் அருளே யாவாயோ?
会

தீபச் சுடரின் திறலால் தூய்மை தனைத் தேக்கிப் பாபக் களையும் பறந்தே போகப் பக்தர்களைச் சாபக் குழிமீட் டருளிச் சைவ வேதத்தின் தாபக் களை தீர் தலைவா தாள்கள் பணிந்தேனே!
உமையோ டுறைந்த வுனை நான் பரவி உயர்
பாட்டுச் சமையா திருந்தேன் அஃதென் சிறுமை சர்வே சா குமையே னினியோர் குறையும் உளதோ குவலயத் தில் தமிழால் மாலை பாலித் தணியத் தவறேனே :

Page 11
2. காதல்
கால மலர்
காலை மலரே கனிவுடைய செண்பகமே சோலைக் குயிலே சுவைநிறைந்த தேன்பழமே வேலைப் பழிக்கும் விழிடடைத்த பொற்குடமே நூலைப் பறித்து நுண்ணிடையில் ஏன் வைத்தாய்?
ஆனந்த ராகத்தின் அற்புதத் தேனிசையே நானந்தப் பொருளென்றே நாவாற் சுவைதரு
өuгr ur தேனுந்தன் இதழென்றே தெவிட்டாத இத
LoGifuur uiu ஏனுன்றன் இதழ்ச்சிவப்பை விழியேற்றுக்
கொண்டதுவோ?
அன்னம் நடைநடக்கும் உன்னடையைக்
கண்டதனுல் ஆதவன் ஒழிபெற்ருன் உன்னெழிலைக் கேட்டதனல் தென்னன் தமிழ்நிலைத்தாள் உன் குரலின் இனிமை யதால் இன்னும் எதைச்சொல்ல என்னிதயத் தின்ஒளியே?

மண்ணின் புதுமைகள்
சின்னக் குமரியின் வண்ணக் கதுப்பினிற் சிந்திய முத்துக்கள் எத்தனையோ ? - அவள் எண்ணத் தகிப்பினில் நண்ணிப் பறந்திடும் வண்ணக் கனவுகள் எத்தனை யோ?
பின்னற் சடைதனிற் குந்திய பூக்களிற் பின்னும் விழிகளும் எத்தனையோ? -- அவள் அன்ன நடையினை அள்ளத் தொடர்ந்திடும் ஆசை மனங்களும் எத்தனையோ ?
கன்னி மனத்தினை எண்ணித் தவித்திடும் காளேகள் நெஞ்சமும் எத்தனையோ - அவள் கன்னக் குழியது சொன்ன கதைகளைக் கண்டு களிப்பவர் எத்தனையோ?
காதல் மலரன்ன மோக முகைவிடும் காரிகை ஆசைகள் எத்தனையோ ? - அதில் சாதல் முடிவென்றே சாற்றிய போதிலும் சார்ந்து சிறப்பவர் எத்தனையோ?
கன்னற் குரலினிற் காலங்கள் போக்கிடக் காத்துக் கிடப்பவர் எத்தனையோ ? - அவள் காலடி மேவிய பாதையிற் போய்விழும் காதலர் பூமியில் எத்தனையோ ?

Page 12
பெண்ணைப் படைத்தவர் யாரெனக் கேட்டவர் பேசித் துடிப்பவர் எத்தனையோ? - மனப் புண்ணைப் புரை விடச் செய்திட்ட பூவையாற் பொன்றத் துடிப்பவர் எத்தனையோ?
மண்ணிற் புதுமையாய் வந்திட்ட மாதவள் மாண்புக் கலைகளும் எத்தனையோ? - கொடுஞ் சுண்ணக் கலவையுள் வீழ்ந்த புழுவெனச் சுற்றிப் புரளுவோர் எத்தனையோ?
கன்னங் கருமிருள் மின்னிய மின்னலாய்க் காடதிற் கண்டதோர் பாதையுமாய் - தினம் மின்னிக் கிடக்குமோர் பெண்ணையன்றி யிந்த மேதினி வாழ்க்கையிற் கண்டதென்ன?
சுணக்காதே நீ
உன்னை அழைத்தேன் ஒருசொல்லும் பதிலில்லை பின்னைஒரு கணந்தான் பொறுத் திருந்தேன் கண்ணே நீ, போனதுவுங் காதமோ? அன்றி என்னே தூரம்? எனக்கொ ருக்காற் சொல்லி விடேன்?

நீஎன்று வரைந்தேன்கண் நீலநிற மாயினவோ? ஆ!என்ற உன்குரலோ அறியேனே! ஏனேதான் சே! நீ பெண்ணல்ல பெண்ணென்றற் பேசவரும் வாஎன்ற போதேநீ வந்திருப்பாய் - நீ தெய்வம்!
உனக்காக உயிரிருக்கும் உறவிருக்கும் மொழியிருக்கும் சுணக்காதே நேரமில்லைச் சுறுக்காக வந்துவிடு! பிணக்கம் ஏன்? பெண் மயிவே!
உனக்காக இங்கொருவன் உலகமதிற் சுமையாக இருக்கின்றன்; நீயோ - எனக்காக வரவேண்டாம் தெய்வம் நான்! உனக்காக வந்துவிடு உறவு மலரும் - புத் துலகம் வளரும்!

Page 13
தாமதந்தானே வருகை
தாமதந்தானே வருகை! தனிமையில் வாடிநின்றேன், காதலிது
சோ கந்தானே நீ வராத வாழ்வினிலே வேதனைதான்
வாழ்வதாகும்
பூவந்க மான்விழியென் பொன்விளக்காய்ப்
பொலியா யோ?
நீதந்த பேரொளியில் நெடுநிலவும் மயங்கா தோ!
தனிமர நிழலில்நின்ருய் தங்கரதம் போலவன் ருே
வருவாய் என்றிருந்தேன் வந்துளனைக் காணவில்லை
காதலே இதுவென்ருல் கதிரவனும்
பொய்த்திடானே?
பெண்மையே பேருயிரே பேதலிக்க விடுதல்
நன்ருே? உன்னையே நம்பியிந்த உலகமதில் நானும்
வந்தேன் காதலே இருமையன்றே காரிகையே
கைகொடாயோ?
0

முகிலில் மறைந்த முழுநிலவு
வருஷம் முழுதும் மலர் சாற்றி - உன் வரவை ஒருநாள் எதிர்பார்த்தேன் பரிசம் ஏதும் இல்லையடி - என் பாவை எங்கோ மறைந்தனையோ?
முகிலில் மறைந்த முழுநிலவே - என் முன்றலில் மலர்ந்த மல்லிகையே அகிலில் எரியுந் தீபோல - என் அங்கம் எல்லாம் வேகுதடி!
காதல் என்ருல் கருவிருக்கும் - அந்தக் கருவில் ஏதும் உயிரிருக்கும் சாதல் ஒன்றே முடிவென்ருல் - அந்தச் சாவுக்கும் ஒருநாள் சாவுவரும்
அன்பே தேனே அருமருந்தே - நெஞ்சில் அழியா இடத்தைப் பெற்றவளே என்பே உருகிப் போகுதடி - என் எதிரில் ஒளிரும் நாள் எதுவோ?
நம்பும் நான்வரு வேன் என்ருய் - அந்த நாளும் வந்தே போனதடி வெம்பு கின்றேனே வேதனையால் - உன் விழிகள் ஒருநாள் திறக்காவோ?
l

Page 14
பேசும் விழியே பொற்குடமே - என் பிறவிப் பிணி தீர்ப்பாயென்றே நேசம் கொண்டு நினைந்திருந்தேன் - அந்த நினைவுக்கும் முடிவு வைத்தனையோ?
வாழ்வுக் கடலில் ஒடமென - என் வளமார் துணையாய் நீவந்தாய் தாழ்வுக் கிணற்றில் தள்ளிவிட்டாய் - உன் தகைமை ஈதோ நானறியேன்
துணையாய் இருப்பாய் எனநினைத்தேன் - உன் துயரே துணையாய்ப் போனதடி பிணையாய் வாழ்வில் ஏதுமில்லை - என் பிணையே! வாழ்வு பிழைத்ததடி
என்றே ஒருநாள் வருவாய்நீ - என் இதயம் அன்று நின்றிருக்கும் நன்ருே தீதோ நான் சொல்ல - முன் நாடி யாவும் அடங்கிவிடும்
அதனுல் அன்பே கேள்ஒன்று - உன் அயரா அன்பில் திளைத்தவன் நான் இதமானல்நாம் இணைந்திருப்போம் - வேறு விதமானல் நாம் மறந்திருப்போம்.

பாரினில் ஊர்வலம் போகுமடி
சித்திரைத் திங்கள் பிறக்குமென்ற இன்பச்
செய்தியைக் கேட்டுளம் துள்ளுதடி - நல்ல
நித்திரையும் பெரு நிம்மதியும் வந்து
நெஞ்சை நிறைக்கின்ற வேளையடி - மணப்
பத்திரிகை அச்சு வாகனத்தில் ஏறிப்
பாரினில் ஊர்வலம் போகுமடி - வாய்
முத்திரையில் கன்னம் முண்டிச் சிவந்திட
மூச்சுக்கள் வெந்து முயக்கம் பெற - இன்பம
அத்தனையும் ஒன்றும் ஆட்சியிலே பெண் மை ஆடி உறங்கிடும் போதினிலே - தோழி கத்துங் குயிலதன் கன்னற் குரலினில்
காதன் மொழிகேட்டுக் காக்களெல்லாம்
- மலர்
மொத்து மொத்தாகவே முன்னசைந் தாடிட
மூழ்கிடுவோம் மஞ்ச நீரோடை - நம்
சித்தங் குளிர்த்திடப் பாலித்த தெய்வத்தை
செந்தமிழால் ஏத்திப் பூசையிட்டு - கன்னித்
தத்தம் அளித்தவெம் தாய்தந்தையர் பேணி தாலியைத் தந்தவர் மேனியிலே - பணி
முத்தங்கள் பெய்து முறைக்கொண்டு வாழ்ந்துமே முன்னைப் பழமையை மீட்டுவந்து - மேலைத்

Page 15
தத் துவத்தால் கெட்டுத் தம்மை யழித்திட்ட
தாய்மொழி மாதரை ப் போலவன்றி - இப்
புத்தாண்டுபோல் நூறு புகழாண்டு தோற்றிட
புண்ணியங் கோடிகள் செய்வோமடி!
பண்ணுெடு மண்ணினிற் பாதம் வைத்தேஎழில்
பாவையர் ஆடிடும் ஆட்டங்கண்டேன் விண்னெடு சாய்த்தேனும் @Sffäu SG)öat u u fT ff —
கொண்ட வேட்கையை ஈடேற்ற வேண்டுமென்றே
மன்னனுய் நடைபோட்டு வந்தேன் அந்த மருள்
மான் விழிக் கூட்டத்தை அண்டி,இரு
கண்ணெடு கண்ணினை நோக்கி நின்றேன்- அவள்
காதலைக் கைப்பற்றி ஆளுகின்றேன்.
பெண்ணுெடு வாழ்க! அன்றி மற்று - ஓர்
பேறதைப் பாரதிற் கண்டவர் யார்?
எண்ணுக வையகம் எம்முடைமை - அதில்
ஏற்றமுற ஒரு பெண் கடமை!
4

காதல் பறந்ததம்மா
அன்ன நடையினில் ஆவி கலந்திட அள்ளிப் பருகி நின்றேன் - கரும்
பின்னற் சடையினில் பெய்மலர் கண்டுமே பின்னும் அருகிற் சென்றேன் - அவள்
என்னை உறுவிழி உற்றுக் கலந்ததும்
எண்ணக் கட லமிழ்ந்தேன் - என்
கண்ணை அவள்வழி விட்டதும் ஆங்கவள் காதலுக் கேங்கி நின்றேன் - வீதித்
திண்ணை மருங்கினில் தேனுறு பாய்ந்ததும்
தித்தித் தடங்க லுற்றேன் - இதழ்ப்
பண்ணையில் ஊறிய பாலமு தாயவள்
பற்கள் துலங்கிக் கண்டேன் - இனி
என்ன அவளென்னில் ஆசை கொண்டா ளென்று
அள்ள நெருங்கிச் சென்றேன் - அவள்
என்ன இதுஇங்கு எப்படி வந்தது?
என்று குரல் கொடுத்தாள் - நான்
என்னை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தனன்
எங்கும் எதுவுமில்லை - பின்
கன்னத்தில் வெட்டிய மின்னலைக் கண்டதும்
காதல் பறந்த தம்மா - அவள்
கன்னித் தமிழ்மகள் என்றுமே கண்டதும்
கருணை மலர்ந்த தம்மா .
ls

Page 16
கிரும்பா கோ? தரு த
6
அன்பும் பண்பும் அணியாகி - நல் அடக்கம் இனிமை மொழியாகி இன்பம் ஒன்றே என்றும் - என இருந்தாள் இன்று மறைந்தாளோ? முகிலைக் குழலாய் முடித்தவளை - சொல் மழையைத் தேனுய்த் தந் தவளை அகிலைப் போலே ஒளிவீசும் - அவள் அடைந்த திசையை அறிவேனே? நெஞ்சில் அன்பாய் நிறைந்தாளே - என் நி%னவின் நிழலாய் மலர்ந்தாளே அஞ்சி ஒடுங்கும் அவள் நடையை - நான் அருகில் இருந்து காண்பனெப்போ?
உள்ளம் இணைய உடல்பிணைய - எம் உறக்கம் நாளும் கிறக்கத்தில் கொள்ளும் அன்பின் சுமையிங்கே - இனிக் குறையும் நாளும் வாராதோ?
ஆடும் அழகில் அவளிருக்க - கண்டு அரங்கை நெஞ்சில் அமைத்தளித்தேன் தேடுங் கண்கள் அவளின்றி - இமை திரும்ப உறக்கங் கொள்ளாவோ?
காற்றிற் கலந்தாள் கீதம்போல் - நடுக் காட்டில் எரிந்தாள் பிணத்தைப்போல் சேற்றில் விழுந்த நறுமலரின் - மனச் சுகந்தம் இனியும் திரும்பாதோ?

நிழலும் வாழ்வும்
மழை சிந்தும் கட லோரம் இள நண்டு படம் கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதம் உந்தன் நினை வூறும் கலை கண்ட உரு வாகிக் களி கொண்ட நிலவே உன் கழல் சிந்தும் ஒளி கண்டு கவி யென்று மகிழ் வேனே
நிலை மாறும் புவி மீதில் நிதி யாக வந்தாய் உன்
நிழல் மீது என் வாழ்வும் நிலை யாகு மென் பேனே!
காதல் கீதம்
எங்கோ தொலைவில் நதியோரம் எனக்காய்ப் பூத்து மணம் பரப்பி வெங்கா னத்தில் விளை மணத்தை விதைக்கும் வண்ண நறுமலரே இங்கே உனக்காய் உலகமதில் இருக்கும் ஒருவன் நினைவுனக்குத் தங்கா திருக்கும் புதுமையினைத் தனியேன் எண்ணித் தவிக்கின்றேன்
7

Page 17
8
கோடி மலைகள் படர் தொடரில் குலவித் திரியும் மென் காற்றல் ஆடி அசைந்து உடல் வருந்தி அலைபோல் இன்பம் பெறுகின்ருய் பாடித் தணலிற் பாகா கிப் பரிவின் தவிப்பில் பதைக்குமெனக் கூடி மகிழ்ந்தால் உன் வண்ணம் குறைந்தா போவாய் சொல், மலரே!
சிந்தும் உன்றன் வண்ணந்தான் ஒதறிப் போகா திருக்கவெனச் சிந்தும் எந்தன் கண்ணீர்க்குச் சேர்ந்த வடிவம் கவிதையடி! எந்தன் மலரே! இளமனமே என்னுள் உயிராய் இருக்குமுனை வந்தங் கொலிக்கும் காதல்தன் வடிவக் கீதம் வருடாதோ?

சுகம்
கண்ணுக்குள் தவழ்ந்துவந்த ஓவியமே - என் கருத்துக்குள் மறைந்து நின்ற காவியமே பெண்ணுக்குள் புகுந்துவந்த போதிலும் நான் எண்ணத்துள் நீந்திடத் துடிப்பேனடி! (- உன்
வாழ்வது உனையன்றி வேறுஇல்லை - உன் வரவது தவிர்ந் தங்கு பாதை இல்லை சூழ்வது உனையன்றிச் சுற்றம்இல்லை - என் சு கத்துக்கு உனையன்றி யாரும் இல்லை
கரும்பென்ருல் உன்குரலின் கனிவு அன்றே? --இரு கயலென்ருல் உன்விழியின் சாயலன்ருே? அரும்பென்ருல் உன்முல்லைக் கோலமன்ருே? - என் அறமென்ருல் உன்னுேடு வாழ்தலன் ருே?
9

Page 18
3. குழந்தை
மணிக்குரல் ஒலித்ததே!
ஓ! மணிக்குரல் ஒலித்ததே ! தினத்ததும் உணர்ந்ததும் மணந்ததும் நடந்ததே! ஆ1ஆ! அது இனிமை
பொன் நிகர்த்த நம்கனக்கள் கைகூடும் நாளிதே - கனிந்த கன்னி வாழ்விலே நினைத்தவர் அகத்திடை சுகித்திடும் முகூர்த்தமே!
நல் வாழ்க்கையின் இன்பம் ஈடேற்றும் ஓசையே - குழந்தைச் செல்வம் வீட்டிலே! களிப்பிடை உதிர்த்திடும் சிரிப்பினில் ஒலிக்குமே!
20

அத்தானைப் போலவொரு கோலம்
அத்தானைப் போலவோரு கோலம் - என் அன்பே நீ தந்தாய் எந்நாளும் அத்தானைப் போலவொரு கோலம்
பித்தானேன் உன்னழகைக் கண்டு - நான் பெற்றேனே பேரின்பம் இன்று முத்தான உன்முகத்தின் பிம்பம் - வான முழுமதியம் பெற்றதுதான் இன்பம்
கையசைவோ பெய்மலர்கள் வாங்கும் - சிறு கால்நடையில் என்நினைவு தூங்கும் மைவிழிகள் அன்னைமுகம் பார்க்கும் - அந்த மயக்கத்திலே என்வாழ்வு பூக்கும்
பெற்றேனே பிள்ளையென உன்னை - வாழ்வில் பெற்றதொரு பேறு மினி என்னே முற்ருத இளமுகையே தேனே - என் முழு வாழ்வும் நிறைந்ததுவே மானே.
l

Page 19
பட்டு இதழ்கள்
22
ட்டு இதழ் விரித்து " சிரிக்கும் வட்ட முகம் அணைத்து - நான்
தொட்டு மகிழ்ந் திருப்பேன் - sd 2,07 5
தெய்வம் என உரைப்பேன்
வட்ட நிலா முகமும் - நெஞ்சில்
வாஞ்சிை எழும் சுகமும் - உன்னத்
தொட்டதால் வந்த தம்மா - சுவை
சொட்டிடும் தேன் பழமே
கான மயில்களின் ஆட்டம் - உன்றன்
கைகளிலே அங்கு தோற்றும் - தேவ
க் குயில்களின் பாட்டும்" நிந்தன் இன்ஜள மொழிநின வூட்டும்
தத்தித் தவழ்ந்து நீந்து - என்றன்
தாடை முகமெலாத், தந்து - முத்தம்
தித்திக்குதா என்று கேட்கும் - விழி தேன்மலர் பேலெனப் பார்க்கும்
தெய்வங்கள் ஆயிரம் உண்டு- ஒரு
தோற்றம் இதுவரை கண்டு - நால்
வனென்றே மனம் கொண்டேன் - அதை உன்வடிவு தன்னிற் கண்டேன்
محسیسو O) سس

4. சமூகம்
பூவிட்ட கோவில் வாசல்
வள்ளியே முருகா என்றே
வழங்கு நற்பெயரை இன்றே எள்ளியே நகைக்குஞ் சைவர்
இருக்கின்ற உலக மீதே வள்ளியும் முருகன் தானும்
வாழ்வுறக் கொண்ட பேரார் மெள்ளவே தள்ளப் பட்டார்
மேதினி நீதி யீதோ ?
கந்தனை வேலன் தன்னைக்
கைதொழு தரற்றி, நாளும் நிந்தனை செய்யுஞ் சைவர்
நிலமது நிலவுஞ் சூழல் தந்தனை முருகா வுன்னைத்
தாள்பணிந் தேற்று வோாகள் **கந்தனை" "வள்ளி' தன்னைக் காறியே உமிழ்வ தென்னே!
2岛

Page 20
24
வள்ளியைத் தெய்வ மென்று
வணங்கிடும் வாய்மை மக்கள் "வள்ளி'யைத் தள்ளி நிற்கும்
வகைமையை என்ன வென்போம் கொள்ளியை எடுத்துச் சைவக்
கொள்கையைக் கொல்வோர் தம்மை அள்ளியே எரிக்க வன்றி
ஆவது வேருென் றுண்டோ?
கள்ளுண்டு நல்ல சோற்றுக்
கறியினுக் கலைந்து கற்ரு உள்ளுண்டு வெட்டிப் பங்கு உவப்புட னிட்டு வீட்டில் மெள்ளுதல் செய்யுஞ் சைவ
மேன்மைகொள் மக்கள் மேனி ஒள்நுதல் நீறு தோற்றும் ஒப்புவீர் ஆக மத்தில்
பிறப்பினுல் ஒப்பர் எல்லாம்
"பிதற்றிய வள்ளு வத்தை மறப்புயல் என்று ஏத்தி
மனத்திலிட் டுரைக்கு மாக்கள் பிறப்பினுல் தாழ்ந்தா ரென்று பெரும்பழி சுமத்தி ஞரே குறத்தியை மணந்த கோவே
குவலயத் தமைதி யென்றே?

மாவிட்ட புரத்தில் வாழும்
மான்விழிக் கண்ணி வேந்தே பாவிட்டுக் கேட்ப தொன்று பாரினிற் பொதுமை ஓங்க ஆவிட்ட சாணத் தாலே
அடிபடு முன்னர் நீயும் பூவிட்ட கோவில் வாசல்
பொறிந்திடத் திறந்தி டாயே!
தகைமையும் தமிழரும்
உழவுந் தொழிலும் உலகத்துயர உரங்கொண்டு பழகுந் தமிழிற் பயிற்றுங் கவிதைத் திறங்கண்டு கழலுஞ் சுழலக் ககனத்திடையே போர்வென்று நிலவுந் தமிழர் நெஞ்சத்திற்கே நிகழ்ந்ததென்ன?
கங்கை முதலாய்க் கடாரமீருய்க் கைக்கொண்ட சிங்கத் தமிழர் நா மென்றிருந்து சிலகாலம் அங்கை குளிர அலமந்தெழுதி அரற்றியதும் சிங்க அரசின் அடிமைக்கெனவே செப்பிடுமின்
மூன்று பிரிவில் முடங்கிக் கிடந்த முன்னவர்க்கு ஆன்ற பொருளை அருளி மறைந்த அவைப்
புலவோர் தோன்றி யெம்மார் துயரங் களையத் துதிபாடி நோன்ரு லன்றி நுகருந் தகைமை நேராதே!
25

Page 21
பொய்யைக் கொன்று பொருமை நீக்கிப் புகழ்ச்சி Ավւ-6ծT செய்வ தொன்றே சிறந்த தாமென் சிந்தை மிக உய்யும் வழியின் உவந்து கலந்து முன்னிற்பின் அய்ய தமிழர் அரிய தகையோர் ஆகாரோ?
தலைவ னுெருவன் தரணி தனிலே தகைமையுடன் உலவி வருதல் உணராத் தமிழர் உறைவிடத்தில் சிலபேர் பொருமைச் சிறுமைநோயாற் சிறப்பற்ற உலவாக் கதைகள் ஒம்புங் காலம் ஓயாதோ?
மாற்றம
முன்னவர் போர்தொடுத்து மூவேந்த ராட்சி
567 LT fif மன்னவர் ஆனுேம் அந்த மகிமைகொள் மேடைப் பேச்சால் என்னதான் பழமைநம்முன் இருப்பினும் அதனை வீனே கன்னலென் றெண்ணி மாய்ந்து கண்டதுமேது முண்டோ?
26

ஆடையிற் றீப்பிடித்து அலமந்து நோவும்போது வாடையில் மெலிகின்ருளே வணிதையென்றலறும்
690ஆடவன் நிலையையொத்த அரசியல் மாற்றியாங் (3smrtř கோடியி லேனும்ஆட்சி கொண்டிருந் தகைமை வேண்டும்.
பிளவுகள்
பொருள்வளங் கலைவளம் மொழிவளம் - என்ற
புதுமைகள் பெருகுஞ்செந் தமிழர்க்கு
உருவளம் ஊர்வளம் ஒற்றுமை - அன்ர்ை உள்ளங்கள் மட்டுமே வேற்றுமை
அரசியல் ஞானத்தில் தந்தையோ - கொள்கை
ஆன்ற நற் கட்சியைப் பேணுவான்
உருவினில் இளையவப் பிள்ளையோ - மற்று
இடர்தரு கட்சியின் அங்கமே
இவ்வாரு ய்க் குடும்பத்தில ரசியல் - இரு
பிளவினைப் பகைமையைத் தோற்றிடும்
ஒவ்வாத நிலையினில் தமிழருள் - இன்னும்
எத்தனை பிளவுகள் கேண்மினே
பள்ளர் நளவர் நற்பாங்கற்ற-இன்னும்
பறையர் உலுத்த ரென் ருயிரம்
சொல்ல வொணுத சாதிகள் - நமைச் சோதனை செய்கின்ற வேதனை
27

Page 22
மெள்ள உரைத்திடப் போகுமோ - இந்த
மேதினி ஏடாக மாறினும்
அள்ளக் குறையாத சம்பவம் - சாதி
ஆட்சியால் ஏற்பட்ட தீங்குகள்
சாதிப் பிளவு ஒருபுறம் - எமைச்
சாடும் கொடுமைகள் கோடியோ?
வாதிட்டுந் தீர்க்க முடிந்திடா - இந்த
வண்டமி ழர்தம் பிளவுகள்!
மட்டக் களப்பினில் ஒர்குலம் - வட மாநிலத் தோன்றலும் ஒர்குலம்
வட்ட நிலாவினைத் தொட்டிடும் - வண்ண
மாமலை மக்களும் ஓர் குலம்
எட்டுத் திசையிலும் நம்மவர் - எனின் எங்கள் உதிரத்தார் என்றிடும்
நெட்டைக் கனவு நிலைத்திடும் - காலம்
நெருங்கி எமைவந்து சேர்ந்திடின்
பெட்டைக் கனவும் பலித்திடும் - தமிழ்ப பேதையர் வாழ்வும் உயர்ந்திடும்
விட்டுவிட் டாலோவில் வேதத்தைச் - சிறு
விட்டிலும் எம்மை இகழ்ந்திடும்
சிந்தனை ஞானஞ் சிறந்தவன் - பெருஞ்
சேர்க்கைவிஞ் ஞானத்தைக் கண்டவன்
முந்தைப் பழமையை விட்டுமே - விதி முந்திப் பழகிடல் வேண்டுமே
23

சாதி சமயப் பிராந்தியப் - பேதம் சாற்றும் இலக்கியம் யாவையும்
மோதி யொதுக்கி யகற்றியே - பொருள் மேன்மைகொள் நாட்டினை ஆட்சியை
ஒதியு ணர்ந்தவர் யாவரும் - முன்னே ஒன்று திரண்டு படைகொளப்
பாதை வகுத்தலே நன்றுகாண் - மற்றுப்
பாழும் பிளவுகள் ஆகவே
வேதனைச் சிரிப்பு
(சிரித்திரன் ஆசிரியர் திரு. சி. சிவஞானசுந்தரம் தாம் வரைந்த ஓர் ஓவியத்தை என்னிடம் கொண்டுவந்து கவிச் சித்திரமாக்கித் தரும்படி கேட்டார். ஒடுங்கி யதோர் பாதையோரத்தில் பசியால் நடுங்கும் ஒரு பெண். பக் கத்திலே அவளுடைய கக்கத்தைப் பற்றியவண்னம், பாலுக்காக ஏங்கி நிற்கும் பான்மையையுடைய ஒரு பாலகன் ஒட்டைக் குடிசையின் கூரையின்மேல் அவள் உண்டுவிட்டு உதறும் கைகளைப் பார்த்து காத்திருக்கும் இரு காகங்கள். மழையைத் தாங்காதுவிட்டாலும் நிழலையேனும் கொடுக்கச் சக்தியுள்ளனவான இரண்டு பெரிய மரங்கள். பொருளுடையோரின் இதயம்போன்ற மதிற் சுவர்.)
வீர சுதந்திரம் வேண்டி நின்ருேம் - பெரும் வீரரென்றே பறை சாற்றிவிட்டோம் ஆரமு துண்டவர் போலப் பத்தொன்ப தாண்டுகள் இன்று கழித்துவிட்டோம்.
29

Page 23
பேரதோ வீரர்நாம் பின்னு மென்ன - எம் போலொரு வீரர் இப் பாரில்இல்லை சீரினைச் சொல்லவோ நா க் கூசும் - அதைச் சிந்தையால் நோக்கிடிற் கண்கூசும்.
இங்கொரு காட்சியைக் காண்கின் றிர் - ஈழ அன்னையின் பிள்ளையாம் ஒர் ஏழை மங்கையின் ஒலமோ சோறு சோறு - என்று மாய்ந்திடும் கோலத்தில் என்ன உண்டு?
பக்கத்தில் கக்கத்தைப் பற்றி நிற்கும் - அவள் பாலற்குப் பாலுக்குப் பாதையில்லை வெட்கத்தில் மாற்ருரைக் கேட்க அஞ்சி - மீளா வேதனைத் தீயினில் வேவது மேன்?
நன்றியை மூலமாய்த் தந்து விட்டு - அன்னுள் நல்துணை நாடிடும் நாயினுக்கும் ஒன்றிடத் திக்கேதும் இல்லாமல் - அந்த ஒடையில் தூங்கிடும் காகத்திற்கும்
உண்ணக் கொடுத்தவள் கையோ இன்று - இங்கு ஒடிந்து மடிந்து கிடக்கின்றதே எண்ணக் கொதிப்பினில் இக் காட்சி - எம்மை என்றுதான் விட்டுமே நீங்கிடுமோ?
30

மேடையில் திட்டங்கள் தீட்டிவிட் டோம்
மேதினி மக்கள் உயரவில்லை - ஆணுல் ஆடையில் மானத்தைக் காத்துவிட் டோம் ஆவது ஒன்றுமே இல்லைக்கண்டீர். - இனி
கோடையில் பெய்கின்ற வான முண்டு - ஒரு கொள்கையில் வாழ்கின்ற மக்களில்லை வாடையில் நோகின்ருர் மக்கள் - இவர் வாழ்க்கையை ஈடேற்று வாருமில்லை.
3

Page 24
5.
குருது
பொது
நான் நினைத்த பேர்து நான் நடப் தில்லை வான் சிரித்த போது வளம் பொழிவ தில்லை
அன்பை ஏற்கு நெஞ்சம் அன்பு செய்வ தில்லை பண்பு பேசும் நெஞ்சம் பழகிக் கொள்வ தில்லை
ஏனே இந்த நீதி இவ் வையமீது மோதி தானே ஆட்சி செய்து தவிக்க விட்ட சூதோ?

வைகறை நிலவு
கூவிக் களித்தவக் குயிலின் குரலிசை குன்றி மடிந்ததுவோ? - இப்போ குன்றி மடிந்ததுவோ? ஆளிக் கலப்பினில் அன்பு முகம்பார்த்தோர் அயர்ந்து தூங்கினரோ? நின்னை மறந்து தூங்கினரோ?
மோனப் பெருவெளி மீதில் உலாவியே மோக ஒளி வீசி - உயிர்த் தாகக் குளிர் வீசி ஞானப் பழமென வந்து நடமிட்டே நயனக் கதைபேசி - காதல் நன்மை பலபேசி
காடும் நடுங்கும் கடுங்குளிர் தன்னிலே காற்றைத் துணைகொண்டு - கொடுங் கூற்றை எதிர்கொண்டு வாடும் நிலவேநீ வந்த வழியென்ன வாஞ்சையினற் ருனே? - மன வாஞ்சையி னுற்ருனுே?
வைகறைப் போதினில் வந்துநீ நிற்பதால் வாழ்த்துவா ரில்லையடி - நிலவே வாழ்த்துவா ரில்லையடி கையுறை வாங்கியே காரியம் பார்த்திடும் காசினி மக்கள் இவர் - தினம் காசிற்கு நெக்கும் இவர்
33

Page 25
கன்னி முகத்தினை உன்னதாய் பொய்கூறி கவிதை இயற்றிடுவார் - பெருங் கதைகள் அளந்திடுவார் பின்னை மகவிற்குப் பெற்றுமே தருவதாய்ப் பெருமை பேசிடுவார் - உன் பெருமை பேசிடுவார்!
கன்னங் கருமிருள் தன்னில் மயங்கியே கலங்கி நின்றேர்க்கே -வாய் புலம்பி நின்றேர்க்கே இன்னருளாய் ஒளி ஈய்ந்து மகிழ்ந்தனை என்னத்தைக் கண்டுவிட்டாய்? - உன மின்னலைப் போன்று விட்டார்
பச்சை யிளந்தளிா பாடும் இறகினம் பாரினில் உள்ளவெல்லாம் - மனுப் பாவியர் உள்ள மெல்லாம் இச்சையு டனுன்னே ஏந்திக் களித்துப்பின் ஏங்கித் த விக்க விட்டே - வானில் ஏகமாய் நிற்கவிட்டே
நித்திரைச் சுக நிம்மதிச் சேர்க்கையில் நீந்திக் களிக்கின்றர் - நின் நினைவை அழிக்கின்றர் இத்தரை மக்களின் இந்நிலை சுற்றிட எத்தனை நாள் வேண்டும்? - உனக்கினும் எத்தனை நாள் வேண்டும்?
34


Page 26


Page 27
'கலை என்பது செயல் : அழகு ஏற்படும் வகையி) வல்லதும் பற்றிய பல மான அறிவையும் ஆ ஆகவே, கலையிற் செயல் சுவை என்ற அம்சங்கள் (இந்துதருமம், பேரா
ჯჯჯგ. இவ்
ଶ) &! ஆண் 5 էք éᏂfᎢ Ꮆv এক্সপ্টেম) { (31 jf7 $ଶକ୍ତିଶ துவ
香芯》、量 நண்
இரு !
பட்டம் பெற்ற பின் பத்தி துறைகளிற் பெற்ற அனுபவ னும் உடையவராக அவர் இ ஒலிபரப்புத் துறையுட் புகு களே வானெலி நாடகங்களா கண்டுள்ளார். அவருடைய பாடல்கள் பலரும் அறிந்தன ஊக்கமும் கொண்டிருந்த க எப்படியாவது புதிய விடய களுக்கு அளிக்க வேண்டுமெ தனையிலே தோன்றும் கருத் கொடுப்பதில் ஆர்வம்மிகுந், இழந்துவிட்டமை இலக்கிய
தமிழ்த்துறை, யாழ்ப்பான வளாகம், 倭Q}蟹
蔷
 

திறமையைக் காட்டுவதும் .
ற் செய்வதும்; சுவைபயக்க காரியங்களுக்கு உதவுவது ற்றலையுமே குறிப்பதாகும். பயன் திறமை, அழகு, உள்ளன. *
நினைப் பல்கலைக் கழகம், பக்கம் 45
வாறு காலஞ்சென்ற அங் பன் கயிலாசநாதன் 1962ம் ாடு பேராதனைப் பல்கலைக் கத் தி ல் மாணவனுயிருந்த த்திலே எழுதினர். பல் க் கழக மாணவனுயிருக்கும் தே ஆய்வுக்கட்டுரைகள் தை, சிறுகதை ஆகியன 61 (Ա திலே வல்லவராயிருந்த அங் பன், எனது பல்கலைக்கழக பராகவும், மாணவராகவும் ந்தார் .
ரிகை, அச்சகவியல் ஆகிய மும் ஆக்க இலக்கியத் திற இறுதியாகக் கடமையாற்றிய ந்தார். பிறமொழிக் கதை க்கித் தயாரித்து வெற்றியும்
வானெலி வ, கலையுணர்வும், முயற்சி ாரண த்தாலே, அங்கையன் பங்க%ள வானெலி ரசிகர் ன்று செயல்பட்டவர். சிந் ந்துக்களுக்கு செயல் வடிவம் து அவரை 34 வயதிலேயே உலகிற்கு பேரிழப்பு ஆகும்.
நிதி அ. சண்முகதாஸ்