கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 2011.11

Page 1
JofficũIff>[]Ê
尊 S53IDubé long Dog
 


Page 2


Page 3
த9உ8
கர வருடம் க Daof 2O
6eນGfໂອ໋ງ = இந்துசமய கலாசார அணு
இகுழு
செல்வி. ச ஆராய்ச்சி (
மலர் திருமதி. சாந் பணிப்
திரு. ம. சண் உதவிப் பணிப்
இல.248 1/1, காலி தொலைபேசி இல. 28
தொலைநகல் ܢܠ
 

ஆய்வுப்பிரிவு லுவல்கள் திணைக்களம்
rgfiມກໍ່ 1. நந்தினி
அலுவலர்
க்குழு தி நாவுக்கரன்
JT6Tit
ாமுகநாதன்
பாளர் (ஆலயம்)
வீதி, கொழும்பு - 04 52641 / 2552643
: 2552825 ノ

Page 4
6600
மனிதனுடைய நற்குணங்களில் சிறந் கேள்வி, செல்வம், குலம், பட்டம், பதவி என இல்லை யானால் ஒருவன் சிறப்புப் பெறமுடி
நாம் சமைத்த குழம்பில் புளி, காரம் இல்லையானால் உண்பதற்கு உகந்ததாக அ போல் வாழ்வுக்கு அடக்கம் இன்றியமையாத
திருவள்ளுவரும் தமது நூலாகிய தி கொடுத்து அடக்கமுடைமை' என்ற அத பாடியிருக்கிறார்.
பணிவு என்ற இந்த அரிய குணம் அ தமது வாழ்வில் சிறப்புறுவார்கள். தண் கிணற்றிலுள்ள நீரை முகக்கின்றது. அ அவர்கள்பால் தேங்கிக் கிடக்கும் அறிவு வெளி
பணிவதனால் ஒன்றும் நமக்கு இழிவு புலப்படுத்தும். துலாக்கோலில் தாழ்ந்த தட்டு பயனுடைய மரக்கிளைதாழ்ந்து இருக்கும். கா இதில் எதற்குப் பெருமை என்பதை எண்ணிட்
“அடக்கம் அமரருள் உ ஆரிருள் உய்த்து விடும்
என்ற குறள் நமது சிந்தன

500D
து விளங்குவது ‘பணிவு ஆகும். கல்வி, ப் பல இருப்பினும் பணிவு என்னும் அடக்கம்
LT5).
என்பன இருந்தாலும் உப்பு என்ற ஒன்று ஆகாது. உணவுக்கு உப்பு இன்றியமையாதது தாகும்.
ருக்குறளில் அடக்கத்திற்கு முக்கியத்துவம் நிகாரம் அமைத்துப் பத்துக் குறட்பாக்கள்
நேகருக்கு அமைவதில்லை. பணிவுடையார் ணிர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால் துபோல் ஆன்றோர்களிடம் பணிந்தால் ாளத்தை நாம் பெறலாம்.
வந்துவிடாது. அது நமது பெருமையையே க்குத்தானே பெருமை? காய்த்தும் பழுத்தும் ாய் கனி இல்லாத கிளைகள் உயர்ந்துநிற்கும். பாருங்கள்.
íIöGlh SILIÉIöIT6OLD
னக்குரியது.

Page 5
இந்து விவகாரப் பிற குருபூசைகள்
திணைக்களத்தினால் 60) 5F6) U 5FLD ULI நாயன்மார்கள், சந்தான குரவர்கள், சமய ஞானிகள் ஆகியோரின் குருபூசைத் தினங்கள் மாவட்ட ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
மாணிக்கவாசகர் குருபூசை
மாணிக்கவாசகர் குருபூசையை யாழ் மாவட்ட அபிவிருத்தி உதவியாளரான திருமதி. மா. அனந்தலெட்சுமி தலைமையில் 03-07-2011 ஆம் திகதி அன்று ரீ சித்தி விநாயகர் ஆலயம், அறநெறிப் பாடசாலை இணைந்து அருளம்பலம் ஞாபகார்த்த மண்டபத்திலும், 05-07-2011 ஆம் திகதி திருமதி. வி. மகிந்தினி தலைமையில் கரவெட்டி, விக்கினேஸ்வரா அறநெறிப் பாடசாலையிலும், திரு. ரி. பிரதீஸ்வரன் தலைமையில் அனலைத்தீவு, இராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்திலும் நடைபெற்றன.
குலச்சிறை நாயனார் குருபூசை
குலச் சிறை நாயனார் குருபூசை 04-07-2011 ஆம் திகதி அன்று திணைக் களத்தின் கொழும்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. க. நிர்மலா தலைமையில் வத்தளை, பக்தி வேதாந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுந்தரமூர்த்திநாயனார் குருபூசை
புத்தளம் மாவட்ட அபிவிருத்தி உதவி யாளர் திருமதி. விமலரஞ்சனி தலைமையில் 05-08-2011 ஆம் திகதி பங்கதெனிய ஐயனார் ஆலயத்திலும், 06-08-2011 ஆம் திகதி அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் திரு. க. குணநாயகம் தலைமையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற மண்டபத்திலும், யாழ் மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் திருமதி. வி. மகிந்தினி தலைமையில் வதிரி, ரீ பரமானந்தர் அறநெறிப்பாடசாலையிலும், 07-08-2011 அன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் திருமதி. சி. செல்வமலர் அவர்களின் தலைமையில்

வின் செயற்பாடுகள்
துறைநீலாவணை சுவாமி விபுலானந்தர்
அறநெறிப் பாடசாலையிலும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை சிறப்பாக நடைபெற்றது.
திருநாவுக்கரசு நாயனார் குருபூசை
கொழும்பு, மாவட்ட கலாசார உத்தி யோகத்தர் திருமதி. கருணானந்தராஜா நிர்மலா தலைமையில் 21-08-2011 ஆம் திகதி கொட்டாஞ்சேனை ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
இளையான்குடிமாறநாயனார் குருபூசை
29-08-2011 அன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் திருமதி. சி. செல்வமலர் அவர்களின் தலைமையில் பெரியகல்லாறு, மண்டபத்தடி பிள்ளையார் ஆலயத்தில் இளையான்குடிமாற நாயனார் குருபூசை நடைபெற்றது.
புண்ணிய கிராமம் நிகழ்ச்சி
இளைஞர் மத்தியில் உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுக்கவும் , மூத்தோர் இளையோரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தவும், இறை நம்பிக்கையுடன் கூடிய சிறந்த வாழ்க்கையை சமுதாயத்தில் நிலவச் செய்யும் பொருட்டு புண்ணிய கிராம நிகழ்ச்சித் திட்டம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தெரிவு செய்யப்பட்ட, மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் பொது மக்களை ஒன்று கூட்டி ஒழுக்கப் பண்புகளைப் போதிக்கும் வகையிலான இத்திட்டத்தின் கீழ் கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, யாழ்ப்பாணம் முதலான மாவட்டங்களில் புண்ணிய கிராம நிகழ்வுகள் நடாத்தப் பட்டுள்ளன. இவற்றில் 5,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இரத்தினபுரிமாவட்டம்
திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. க. நிர்மலா அவர்களின் ஏற்பாட்டில்
3 :-

Page 6
கோபுரம்
திணைக்களமும் காவத்தை இந்து மகா சபையும் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 23-07-2011 ஆம் திகதி புண்ணிய கிராம நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக காவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. எச். ரவி அவர்கள் கலந்து சிறப்பித்தார். இதில் சுமார் 200ற்கும் மேற்பட்டோர் பங்கு பற்றினார்.
திணைக்களமும், பலாங்கொட, காயத்ரி சிறார் மறுமலர்ச்சி ஒன்றியமும் இணைந்து இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 2608-2011 ஆம் திகதி அன்று புண்ணிய கிராம நிகழ்வை சிறப்புடன் நடாத்தியது.
திணைக்களம், ஹோப்டன் தோட்டம் பங்களா பிரிவு அன்னை ரீ சாரதா தேவி அறநெறி இல்லத்துடன் இணைந்து 07-08-2011 ஆம் திகதி புண்ணிய கிராம நிகழ் வொன்றினை ஏற்பாடு செய்து நடத்தியது. இந்நிகழ்வில் இந்து சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கண்டிமாவட்டம்
திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. க. நிர்மலா அவர்களின் ஏற்பாட்டில் 29-102011 ஆம் திகதி நாவலப்பிடடி ஆத்மஜோதி சமய சமூகநல ம்ேபாட்டு அமைப்புடன் இணைந்தும், 30-10-2011 ஆம் திகதி பூர் வாணி இந்து மன்றத்துடன் இணைந்தும் புண்ணியகிராம நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றிற்கு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.ம.சண்முகநாதன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார்.
புத்தளம் மாவட்டம்
புத்தளம் மாவட்டத்தில் 24-07-2011 ஆம் திகதி முந்தல், திரெளபதி அம்மன் அறநெறிப் Lu TL3FT 60) 6dus6ð புத் தளம் மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் திருமதி. ம. விமல ரஞ்சினியின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடை பெற்றது.

கார்த்திகை 2011
களுத்துறைமாவட்டம்
திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. க. நிர்மலா தலைமையில் 24-09-2011 ஆம் திகதி அன்று களுத்துறை, றி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பான மாவட்டம்
திணைக்களத்தின் யாழ் LDIT6 L அபிவிருத்தி உதவியாளர்களான திரு. எஸ். உதயபாலன் அவர்கள் தலைமையில் ரீ நயினாதீவு மலையிள் ஐயனார் ஆலயத்தில் 30-09-2011 ஆம் திகதியும், திரு. ரி. பிரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் வடலியடைப்பு பூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் 23-10-2011 ஆம் திகதியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்மீக எழுச்சிப்பட்டறை
இந்து சமய கலாசார திணைக்களம். இந்து சேவா சங்கத்துடன் இணைந்து இளைஞர்களுக்கான ஆன்மீக எழுச்சிப் பட்டறையை இரத்மலானை இந்துக் கல்லூரி யில் 12-12-2011 ஆம் திகதி தொடக்கம் 18-12-2011 ஆம் திகதி வரை நடாத்தியது. ஆரம்ப நாள் நிகழ்ச்சியில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திரு. ஏ.எம்.எபி. அத்தபத்து, கணக்காளர் திரு. எம்.ஜி. காண்டீபன், உதவிப் பணிப்பாளர் திருமதி. ஹேமலோஜினி குமரன் மற்றும் கொழும்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. க. நிர்மலா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இறுதி நாள் நிகழ்வு திணைக் களத்தின் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் தலைமையில் இடம் பெற்றது. இதில் மாநகர சபை உறுப்பினர் திரு. மனோ கணேசன், சட்டத்தரணி திரு. என். விஷ்ணுகாந்தன், கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை முகாமைப் பணிப்பாளர் திரு. தி. குமாரவேல், திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் திரு. எஸ். ஜெயசோதி, கலாசார உத்தியோகத்தர் திருமதி. க. நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
:-

Page 7
அறநெறிப் பாடசாலைப்
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள் என்பனவற்றின் கீழ் இந்து அறநெறிப் பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. அவை சிறப்பாக இயங்கும் பொருட்டு திணைக்களத்தினால் ஆசிரியர், மாணவர்களுக்கான நூல்கள், சீருடைகள், இசைக்கருவிகள் ஆகியன வழங்கப்படுவதோடு பாடசாலைகளுக்குத் தேவையான நிதியுதவி போன்ற உதவிகள் பலவற்றைப் புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தர்மாசிரியர் கருத்தரங்கு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தினால் அறநெறிப் பாடசாலை ஆசிரியர் களுக்குரிய தகுதிகாண் LuffL 60D3FULIT 5 தர்மாசிரியர் பரீட்சை நடாத்தப்படுகின்றது. இப்பரீட்சை வேதங்களும் ஆகமங்களும், சமய ஞானிகளும், சமயப் பெரியார்களும், சைவ சமய வரலாறு, பன்னிரு திருமுறைகள், கோயில்களும் கலைகளும் ஆகிய தலைப்புகளில் ஆழமான பாடநெறிகளைக் கொண்டமைந்தது. இப்பாட நெறிகளில் ஆசிரியர்களை திறமையுடையவர் களாக உருவாக்கும் வகையில் திணைக் களத்தினால வருடந்தோறும் தர்மாசிரியர் கருத்தரங்கு நடாத்தப்பட்டு வருகின்றது.
கொழும்பு மாவட்டம்
திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் ஜூலை 25ஆம் திகதியன்று கொழும்பு மாவட்டத்திற் குரிய கருத்தரங்கு பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கொழும்பு மாவட்டத்தின் 19 அறநெறிப்பாடசாலைகளில் இருந்து 45 ஆசிரியர்கள் பங்குபற்றினர். வித்துவான் வசந்தா வைத்தியநாதன், சைவப்புலவர் சு. செல்லத்துரை, திரு. செ. நவநீதகுமார், திருமதி. நித்தியவதி நித்தியானந்தன் ஆகியோர் மேகுறித்த தலைப்புக்களில் விரிவுரையாற்றினார்கள்.
இறுதிநிலைக் கருத்தரங்கு
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அறநெறிப் TIL GIFT 6006) உயர் வகுப்பு மாணவர்களுக்காக பரீட்சைகள் திணைக் களத்தினால் இறுதிநிலைப் பரீட்சை நடாத்தப் பெற்று வருகின்றது. இப்பரீட்சை இந்து சமய மெய்யியல், இந்து சமய வரலாறு, இந்து சமய இலக்கியம், இந்து சமய வாழ்வியல் ஆகிய பாடத் திட்டத்தைக் கொண் டமைந்தது. விரிவானதும் ஆழமானதுமான பாடநெறிகளைக் G) 35 T 60öïL60)LDUIT 65 இதற்குத் தோற்கும் மாணவர்களுக்கு விளக்கமளித்து ஊக்குவிக்கும்
-: 5

பிரிவின் செயற்பாடுகள்
வகையில் இக்கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பரீட்சைக்கு அறநெறிப் பாடசாலை மேற்பிரிவு மாணவர்களும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் தோற்றலாம்.
யாழ்ப்பான LDIT6) "Las கருத்தரங்கு திணைக்களப் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் தலைமையில் ஆனைப்பந் குரு குல மண்டபத்தில் நடைபெற்றது. விரிவுரைகள் திரு. தி ரீஸ்கந்தராஜா, திரு. நித்தியதசிதரன், சைவப்புலவர் க. கமலநாதன், சைவப்புலவர். கந்த சத்தியதாசன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
பொது அறிவுப்போட்டி
திணைக் களத்தினால் வருடந்தோறும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு பொது அறிவுப் போட்டி LuffL 60DBF நடாத்தப்பட்டு வருகின்றது. இவ் ஆண்டு 1609 அறநெறி பாடசாலைகளில் மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றினர். அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 89 பரீட்சை நிலையங்களில் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி பரீட்சைகள் சிறப்பாக நடைபெற்றது. இப் பரீட்சையில் சித்தி பெற்றோருக்கான பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கும் வைபவம் மார்கழி மாதம் 13 ஆம் திகதியன்று பம்பலபிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் ணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. சாந் நாவுக்கரசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தரம் இரண்டு முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்குதேசிய மட்டத்திலும் LDT 6. JLL மட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. ஏனையோர்க்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நூல்கள் உசாத்துனை விநியோகம்
அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கென அறநெறி பாடத்திட்டத்திற்கு 960) D.6) TEB வழங்கப்படுகின்ற சைவபோதினி, சைவ சமயம் ஆகிய பிரிவு சார் நூல்களும், பன்னிருமாத நினைவுகள், ஒளவையார் அறிவுச் செல்வம், அறநெறி அமுதம், இந்து மக்களுக்கு ஒரு கையேடு, திருக்குறள், திருவருட்பாமாலை ஆகிய துணை நூல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அறநெறி பாடசாலைகளுக்கு Gr LD Tj எண்ணாயிரம் நூல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Page 8
கோபுரம்
பதிவுசெய்தல்
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து சமய ஆலயங்கள், இந்து சமய நிறுவனங்கள் ஆகியவற்றின் கீழ் அறநெறிப் பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு 7 அறநெறிப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் சேவையை ஊக்குவிக்கும் முகமாக திணைக் களத்தினால் வருடாந்தம் இரண்டாயிரம் ரூபாய் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்கப்படு கின்றது. பதுளை, வவுனியா, புத்தளம், கம்பஹா, மன்னார் மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, மாத்தளை, களுத்துறை, மாத்தறை, அம்பாறை, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1033 ஆசிரியர்களுக்கு ஜூலை, செப்டெம்பர் மாதத்தில் வழங்கப் பட்டுள்ளது.
பண்ணிசை வகுப்புக்கள்
மாணவர்களை பண்ணோடு இசைபாடு பயிற்சியளிக்கும் முகமாக பண்ணிசையில் தேர்ச்சி மிகுந்த ஆசிரியர்கள் மூலம் பண்ணிசை வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான பாடத்திட்டத்தையும் இசைக் கருவி 856 TT60T சுருதி, தாளம் என்பனவற்றைத் திணைக்களம் வழங்கிவருகின்றது. ஆசிரியர் களுக்கான கொடுப்பனவும் திணைக்களத்தால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
மட்டக்களப்பில் பத்து ஆசிரியர்களுக்கும், யாழ்ப்பாணம், கொழும்பில் தலா ஒரு ஆசிரியருக்கும் பண்ணிசை ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சமய சொற்பொழிவுகள்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் சமய சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. இவை இந்து சமய விஷேட தினங்கள், விழாக்கள் ஆகியவற்றில் ஆன்மீகஞ் சார்ந்த தலைப்புக்களில் நடாத்தப்படுகின்றது.
கொழும்பு மாவட்டம்
கொழும்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர்
ருமதி. க. நிர்மலா அவர்களின் ஏற்பாட்டில் 28-06-2011 ஆம் திகதியன்று நுகேகொட தமிழ்
-: 6

கார்த்திகை 2011
வித்தியாலயத்திலும் , 27-08-2011 ஆம் திகதியன்று இராஜராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானத்தில் "சமய வாழ்வியல்" என்ற தலைப்பில் திருமதி. நித்தியவதி. நித்தியானந்தன் அவர்களும், 25-09-2011 அன்று மட்டக்குளி, ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் "வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் திருமதி. பவானி முகுந்தன் அவர்களும் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்கள்.
அம்பாறைமாவட்டம்
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் திரு. கி. குணநாயகம் அவர்களின் ஏற்பாட்டில் 10-06-2011 ஆம் திகதியன்று கல்முனை, விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் "சமய விழுமியங்கள்” என்ற தலைப்பிலும், 22-06-2011 அன்று ரீ மாமங்க வித்தியாலயத்தில் “சிவ சின்னங்களின் முக்கியத்துவம்” என்ற தலைப்பிலும் கலாபூஷணம் திரு. எஸ். பரமநாதபிள்ளை அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நாவலர் விழா
திணைக்களம் ஆறுமுகநாவலர் குரு பூசையை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் 17-12-2011 ஆம் திகதி சனிக்கிழமையன்று நாவலர் விழாவை சிறப்பாக நடத்தியது. திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி: ஹேமலோஜினி குமரன் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதிகளாக யாவட்ட அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் அவர்களும், தகைசார் பேராசிரியர் திரு. சி.க. சிற்றம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
விழாவிற்கு ஆசியுரையினை சிவபூர் தானு மகாதேவா குருக்கள் அவர்களும், வாழ்த்துரை யினை சுவாமி ஜாக்ரத் சைதன்யா அவர்களும் வழங்கினர். இந் நிகழ் வில் இணுவில் இளந்தொண்டர் சபை அறநெறிப்பாடசாலை மாணவர்களால் "நாவலர்’ நாடகமும், வெல்வில் அறநெறிப் பாடசாலை மாணவர்களால் பண்ணிசையும், மூளாய் ஞான ஒளி அறநெறிப் பாடசாலை மாணவர்களால் நடன நிகழ்வும் நடத்தப்பட்டன. இதில் சைவப்புலவர்கள், பெரியார்கள், சிறுவர்கள், LJ IT LEFT 60), 6) ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட சுமார் 400 பேர் வரையில் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் நாவலர் பெருமானின் திருவுருவப் படம் வெளியீடு செய்யப்பட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

Page 9
ஆராய்ச்சிப் பிரிவி
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஆய்வுப் பிரிவின் முக்கிய செயற்பாடுகளாக ஆய்வரங்கம் நடாத்து தலும் கட்டுரைகளை நூலாக்கம் செய்தலும், சாசனவியற் பயிலரங்கம், சைவ சித்தாந்த வகுப்பு ஆகியவற்றை நடாத்துதல், இந்து கலைக்களஞ்சியம் வெளியிடல், இந்து சமயம், தமிழ் இலக்கண இலக்கியம் சார்ந்த அரிய நூல்கள் மறுபதிப்புச் செய்தல், பஞ்சாங்கம் வெளியிடல், பண்பாடு, கோபுரம் ஆகிய பருவ இதழ்கள் வெளியிடல், உள்ளுர் எழுத்தாளர்களின் நூற்களை கொள்வனவு செய்தல் என்பன அமைகின்றன.
நூல் வெளியீடு
புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. கசியன். ஹேரத் அவர்களால் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள (335 L (8 Lu Tiff கூடத்தில் 13.11.2011 அன்று கிடைத்தற்கரிய நூல்களான சைவபோதம், உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு ஆகியவை வெளியீடு செய்யப்பட்டன.
05.12.2011 ஆம் திகதி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்துசமய ஆசிரியர்களுக்கான பயிலரங்கத்தின் தொடக்க வைபவத்தின் போது, பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் திரு. எஸ். தில்லைநடராசா அவர்களால் இந்துக் கலைக்களஞ்சியம் தொகுதி 11 வெளியீடு செய்யப்பட்டது.
சாசனவியல் பயிலரங்கு
திணைக்களத்தினால் பல்கைைலக்கழக மாணவர் களு க கென 560 66 பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இப் பயிலரங்கமானது நவம்பர் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை 10
-: 7

ன் செயற்பாடுகள்
நாட்கள் தொடர்ந்து திணைக்கள கேட்போர் கூடத்தில் இலவசமாக நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வருகைதந்த தமிழ்நாடு தொல பொருள் ஆயப் வாளர்களான பேராசிரியர். வி. வேதாசலம், பேராசிரியர். எஸ். இராஜகோபால் ஆகிய இருவராலும் இலங்கையின் பேராசிரியர்களான தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன், பேராதனைப் பல கலைக் கழக பேராசிரியர் 6f. மகேஸ்வரன், uTup. பல்கலைக்கழக பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் ஆகியோராலும் நடாத்தப்பட்டது. இவ்வகுப்பில் பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 65 வரையான பல்கலைக்கழக LDT600T6...f356i கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நூற்பொதிவழங்கல்
திணைக்களப் பதிப்பு நூல்களும், திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப் பட்ட நூல்களும் பொதி செய்யப்பெற்று நாடளாவிய ரீதியில் பொது நூலகங்கள், பாடசாலை, பல்கலைக்கழக நூலகங்கள் முதலடங்கிய 200 நூலகங்களிற்கு நூற் பொதிகளும், பாடசாலைகளில் பரிசில்கள் வழங்குவதற்கான நூல்களும் வழங்கப் பட்டுள்ளன.
உள்ளுர் எழுத்தாளர்களின் நூற்கொள்வனவு
இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு திணைக்களத்தினால் அவர்கள் எழுதிய நூல்கள் கொள்வனவு செய்யப்படு கின்றன. இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் நவம்பர் LDITg5 Lổ 6Ꮒl 60Ꭷ J உள்ளுர் எழுத்தாளர்கள் 45 பேரிடமிருந்து சமயம், இலக்கியம், கவிதை தொடர்பான 2412 நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

Page 10
கோபுரம்
வருடாந்த ஆய்வரங்கு
திணைக் களத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் ஆய்வரங்கமானது கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வாண்டு பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும் என்ற தலைப்பில் நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் இந்தியாவிலிருந்து ஆறு பேராசிரியர்களும், மலேசியாவிலிருந்து இரண்டு பேராசிரியர்களும் மற்றும் நம்நாட்டுப் பேராசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் ஆய்வரங்கை புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. கசியன் ஹேரத் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அன்றைய தினம் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப் பாகிய அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்’ என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது.
சைவசித்தாந்த வகுப்பு
வருடந்தோறும் திணைக்களத்தினால் சைவ சித்தாந்த வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு சென்னை, இராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தாக் கல்லூரி விரிவுரையாளர் சித்தாந்தச் செம்மணி திரு. சா. சரவணன் அவர்களால் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. முதன்முதலாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையில் 02.11.2011 ஆம் திகதி தொடக்கம் 11.11.2011 ஆம் திகதி வரை நடைபெற்ற இவ்வகுப்பில் சித்தாந்த சாத்திர நூலாகிய 'சிவஞான போதம்' 14.11.2011 ஆம் திகதி தொடக்கம் 23.11.2011
-: 8

கார்த்திகை 2011
ஆம் திகதி கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற வகுப்பில் உண்மைநெறி விளக்கம், கொடிக்கவி ஆகிய சித்தாந்த நூல்கள் நடத்தப்பட்டன.
இந்துசமய ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பயிலரங்கு
திணைக் களம் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இந்து நாகரிக பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிலரங்கம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அதன் முதற்கட்டமாக இம்மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை திணைக் களத்தின் கேட்போர் கூடத்தில் மத்திய, மேல் மாகாண ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இதில் இவ்விரு மாகாணங்களைச் சேர்ந்த 35 ஆசிரியர்கள் கலந்து பயனுற்றனர்.
கலாபூஷணம் விருது
கலாசார அலுவல்கள் திணைக்களம் கடந்த பல வருடங்களாகக் 'கலாபூஷணம்’ இனங்கண்டு, அவர்களுக்குக் 'கலாபூஷணம்’ விருதுக்குச் சிபாரிசு செய்யும் பொறுப்பு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தைச் சார்ந்ததாக உள்ளது. தமிழ்க் கலைஞர்கள் வாழும் மாவட்டங்களில் உள்ள அரச அதிபர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் அனுப்பப்பட்டு, அவர்களின் சிபாரிசுகளைப் பெற்று அந்த சிபாரிசுகளின் அடிப்படையிலும், வயது மூப்பு அடிப்படையிலும் தமிழ்க் கலைஞர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாண்டு 50 கலைஞர்கள் தெரிவு செய்யப் பட்டு விருது வழங்கும் நிகழ்வு 17.12.2011 ஆம் திகதியன்று கொழும்பு-7 ஜோன்.டி. சில்வா மண்டபத்தில் நடைபெற்றது.
3 :-

Page 11
நவராத்திரி விழாவினை முன்னிட்டு புத்தசாசான மத அலுவல்கள் அமைச்சு இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்திய தூதரகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வின் போது தமிழ் நாடு புகழ் பெற்ற கர்நாடக இசைப்பாடகள் டி. எம். கிருஷ்ணா
இசைக்கச்சேரி வழங்கினார் படத்தில் பிரதமர் மற்றும் பிரதி அமைச்சர், இந்திய தூதுவர் ஆகியோர் காணப்படுகின்றனர்.
 
 
 
 


Page 12
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநெச்சி மாவட்டங்களைச் சே கையளிக்கும் நிகழ்வின் போது பிரதமர் உரைய வழங்குவதையும் கலந்து கொண்ட சமயப்
 
 
 

ர்ந்த 240 சமய நிறுவனங்களுக்கு காசோலைகளைக் ாற்றுவதையும் பிரதமர் ஒருவருக்கு காசோலை
பெரியார்களையும் இங்கு காண்கிறீர்கள்.

Page 13
ஆய்வரங்கத்தில் திருமதி. சிவநந்தினி யோகேந்திரா மற்றும் மதவிவகார அமைச்சின் செயலாளர், பேரா கொள்ள வருகை தந்த இந்
ஆய்வரங்கின் தொட்
 
 

அவர்கள் மங்கள விளக்கேற்றுவதையும், புத்தசாசன சிரியர் சி. பத்மநாதன் மற்றும் ஆய்வரங்கில் கலந்து திய, மலேசிய பேராசிரியர்கள்
க்க வைபத்தின் போது

Page 14
திணைக்களத்தினால் நடத்தப்பட்ட "பிரித்தானியர் ஆ கொண்ட ே
ஆய்வரங்கின் தொடக்
 
 

ட்சியும் நவீன மயமாக்கமும்" என்ற ஆய்வில் கலந்து jnfluff56
க வைபவத்தில் போது.

Page 15
உதவிப்பணிப்பாளர் திரு. ம. சண்முகநாதன்
அவர்கள் சாசனவியல் பயிலரங்கின் ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்துகிறார்
 
 
 
 
 
 

திணைக்களத்தால் நடத்தப்பட்ட சாசனவியல் பயிலரங்கின் ஆரம்ப நிகழ்வில் பணிப்பாளர் உரை நிகழத்துகிறார்.
திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சாசனவியல் பயிலரங்கின் தொடக்க வைபத்தின் போது.

Page 16

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை மண்டபத்தில் பேராசிரியர் சா. சரவணபவன் அவர்களால் நடத்தப்பெற்ற சைவ சித்தாந்த வகுப்பின் ஆரம்ப நாள் நிகழ்ச்சி

Page 17
திணைக்களத்தால் கொழும்பில் நடாத்தப் பெற்ற சை சா. சரவணன் அவர்க
பேராசிரியர் சா. சரவணன் அவர்களுக்கு திணை
நினைவுச்சின்னட
 
 

வ சித்தாந்த வகுப்பின் நிறைவு வைபத்தில் பேராசிரியர் ள் உரைநிகழ்த்துகிறார்.
க்கத்தின் பணிப்பாளர் திருமதி. சாந்திநாவுக்கரசன் ம் வழங்கிய போது.
5

Page 18
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பிறந்த தி: கோவிலில் நடைபெற்
யாழ்மாவட்டம் அனலைதீவு இராஜேஸ் மாணிக்கவாசகர் குரு
 
 

M
னத்தினை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசாமி ற பூசை வழிபாடுகள்
bவரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற நபூசை விழா நிகழ்வு
6

Page 19
سجي
த்தில் அதி (B &L b6Lup
(UD60T
íT öfA6)Iö5ITL5hu uL bLJIT6iT éb6DuLI
னிட்
காரைநகா
 

மேதகு ஜனாதிபதி அவர்களின் பிறந்ததினத்தை ற்ற மரநடுகை நிகழ்வு.
క్ష్
ഭു
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினத்தன்று கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில்
ܬܐ
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் மரம் நாட்டும் நிகழ்வு.

Page 20
புதறானை ருநீசித்திவிநாயகள் ஆலய வேலைத்திட்ட நிக
 
 

ந்தில் நடைபெற்ற புண்ணிய கிராம ழ்ச்சியின் போது

Page 21
13-12-2011 ஆம் திகதியன்று நடைபெற்ற பொது அறிவுப் பே
 

) இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ாட்டி பரிசளிப்பு வைபவம்

Page 22

12-12-2011 ஆம் திகதி நடைபெற்ற இந்து இளைஞர் யுவதிகளுக்கான ஆன்மீக பயிற்சிப்பட்டறை வைபவம்

Page 23
கொழும்பு - 7 ஜோன் டீ சில்வா அரங்கில் 17-12-2011ல் நடை பெற்ற கலாபூஷண விருது வழங்கும் வைபவம்
مي 4.
 
 
 

21

Page 24

கொழும்பு - 7 ஜோன் டீ சில்வா அரங்கில் 17-12-2011ல் நடை பெற்ற கலாபூஷண விருது வழங்கும் வைபவம்

Page 25
திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 17-12-2011 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நாவலர் விழாவின் போது யாழ் அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், சின்மயா மிஷன் சுவாமி ஜாக்ரதி சைதன்யா, திணைக்கள கணக்காளர் திரு. எம். டி. காண்டீபன் உரை நிகழ்த்துவதையும் கூட்டத்தினரில் ஒரு பகுதியினரையும் மாணவர்கள் பரிசு பெறுவதையும்
படங்களிற் காணலாம். -ജ
 
 
 


Page 26

24

Page 27
இந்து ஆலயப் பிளின்
திணைக்களத்தின் ஆலயப்பிரிவு இலங்கையிலுள்ள இந்து BFLDU | ஆலயங்களைப் பதிவு செய்தல், அவற்றுக்கு நிதியுதவி அளித்தல், சிறுவர் இல்லங்களைப் பதிவு செய்து நிதியுதவி அளித்தல், அந்தணரல்லா தோருக்கு பூசகர் பயிற்சி அளித்தல், இந்து குருமார், பூசகர்களுக்கு அடையாள அட்டை வழங்கல் ஆகிய பணிகளை மேற்கொண்டுவருகின்றது.
அந்தனர் அல்லாதோருக்கு பூசகர் பயிற்சி
திணைக்களத்தினால் அந்தணர் அல்லாதோருக்கான இந்து பூசகர் பயிற்சி இவ்வாண்டு மட்டக்களப்பு இந்து கலாசார மையத்தில் நடை பெற்றது. ஜூலை மாதம் 17 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 01 திகதி வரை 15 நாட்களுக்கு இப்பயிற்சி இடம்பெற்றது. இதில் நாடளாவிய ரீதியிலிருந்து 40 பூசகர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியை திணைக் களத்தின் உதவிப்பணிப்பாளர் திரு.ம. சண்முக நாதன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
இப்பயிற்சிகளை நடாத்துவதற்கென இந்தியாவின் aśJ TLD ឬមTrfl56រ៉ា பேரவையைச் சேர்ந்த திரு. நாராயணன் பூரீ ஜீவநாதன், மரீ பக்ஷி சிவராஜன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். பக்திப் பாடல்கள்,
-: 2.

வின் செயற்பாடுகள்
பஜ  ைன ப் பாடல க  ைள பூர் ஜீவநாதனும், திருக்கோவில் வழிபாடு, ஆகம பூசை முறைகள், தத்துவங்கள், ஜோதிடம் ஆகியவற்றை பூர் பக்ஷி சிவராஜனும், இந்து தர்மம், கோவில் நிர்வாகம், பக்திமான்கள் கதைகள், உற்சவ தத்துவங்கள் பற்றி திரு. நாராயணன் அவர்களும் சிறப்பாக நடத்தினார்கள்.
பிரதம மந்திரி கெளரவ தி.மு. ஜயரத்ன அவர்களின்
யாழ்ப்பாண மாவட்ட விஜயம்
மாண்புமிகு பிரதம மந்திரி கெளரவ தி.மு. ஜெயரத்னா அவர்கள் 19.11.2011 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் ஆலயங் களுக்கு தலா ஒரு இலட்சம் நிதியுதவி வழங்கினார். இதில் யாழ் . மாவட்டத்தைச் சேர்ந்த 201 ஆலயங் களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆலயங்களுக்கும் நிதி யுதவி அளிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நிகழ்விற்கு பாரம்பரிய கைத் தொழில் சிறு தொழில் முயற்சி ਮ60)LD கெளரவ Lg6 6T6m) தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜி ஏ. சந்திரசிரி யாழ். ஆ. அசிஸ் கிளிநொச்சி மேலதிக ஆ. அசிர் ஆக யோர் பங் கு கொண டு சிறப்பித்தனர்.
5 :-

Page 28
தேவார மூவர் காட்(
மூவர் பாடிய தேவாரப் பாடல்களை 'மூவர் தமிழ்’ எனவும், 'தண்டமிழின் மேலாந்தரம் மிக்கவை எனவும், தனிப் பாடல்கள் சிறப்பித்துரைத்துள்ளன. தாக்கிற்றிரு ஞானசம்பந்தர், ’நயத்திற்குச் சுந்தரனார், சொற்குறுதிக்கப்பர் என்று மூவர் பாடற்றிறமும் குறிக்கப் பெற்றுள்ளன. சைவத்தின் மேற்சமயம் வேறில்லை. அதில்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் உறுதிப்பாட்டுடன் வாழ்ந்த தேவார மூவருடைய அனுபவ வாழ்வில், சிவபெருமான் அருவனாயும், உருவனாயும், உடனின்று உதவிய பெற்றியை பல அகச் சான்றுகளாலும், திருத்தொண்டர் புராணத்தாலும் நன்கு அறிய முடிகின்றது.
சம்பந்தர் முதற் பாடலில் மூன்று வழவங்கள் சம்பந்தர் ஞானப்பாலுண்டு தாம் பாடிய முதற் பாடலாகிய "தோடுடைய செவியன்’ எனத் தொடங்கும் பாடலிலேயே “என் உள்ளங் கவர் கள்வன்’ என்று சிவன் அருவ வடிவினை யும் ' விடையேறி’ என்று சிவன் உருவ வடி வினையும், "ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த’என்று சிவன் அருவுருவ வடி வினையும் குறித்திருக்கக் காணலாம்.
அருவனாய் நின்றுதவிய சிவன்
தேவார மூவர் வாழ்விலும் சிவன் அருவ வடிவினனாய் அவர்களுடைய உள்ளம், நெஞ்சம், மனம் ஆகியவற்றுள் கோயில் கொண்ருந்தமையினை,
‘என் உள்ளங்கவர் கள்வன்' 'நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’ மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை எனவரும் தேவார மூவருடைய முதற்பதிகத் தொடர்களே சான்று பகர்கின்றன.

ரும் சிவ வடிவங்கள்
திருக்கோவிலும் அகக்கோவிலும்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே என்று சிவனுறையும் கோயில் தோறும் யாத்திரையாகச் சென்று சிவனைப் பாடிப் பரவிய நாவுக்கரசர்,
நகமெலாம் தேயக் கையால்நாண்மலர் தொழுதுதூவி
முகமெலாம் கண்ணி மல்க முன்பணிந் தேத்தும்
- தொண்டர்
அகமலாற் கோயில் இல்லை.
என்று அடியார்தம் உள்ளமாகிய கோயிலே சிறந்த கோயில் என்று குறிப்பிட்டு, புறவழிபாடே அகவழிபாட்டின் அடிப்படை எனும் உண்மை யைப் புலப்படுத்தியுள்ளார்.
சிவன் உருவினனாய் நின்றுதவியமை
சிவபெருமான் பல்வகை வடிவங்கொண்டு தேவார மூவருடைய வாழ்வில் உடனிருந்து உதவிய பாங்கினைச் சேக்கிழார் காட்டி u_66TTT.
சீர்காழிக் கோயில் குளக்கரையில் தம் தந்தையாரைக் காணாது வருந்தி, ஞான சம்பந்தர் அழுது நின்றபோது, சிவபெருமான் உமையம்மையுடன் விடைவாகனராய்த் தோன்றி அவருக்குத் திருமுலைப்பால் கொடுக்குமாறு உமையம்மைக்குக் கட்டளை யிட்டார். அம்மை யாரும் பொற்கிண்ணத்தில் பாலைத் தந்துத
26:-

Page 29
கோபுரம்
வினார். சிவன் வடிவம் கொண்டு ஆற்றிய இவ் வருளாடலைத் திருஞானசம்பந்தர் புராணத்தில் ஐந்து பாடல்களில் சேக்கிழார் குறித்துள்ளார். இந்நிகழ்ச்சியைத் "தோடுடைய செவியன்’ எனும் பாடல் வாயிலாகவும், போதையார் பொற் கிண் ணத் தடிசில் பொல்லாதென’ எனுந் தொடர் வாயிலாகவும் சம்பந்தர் அகச்சான்றளித் துள்ளார். மேலும் சிவபெருமான் சம்பந்தருக்குத் திருவதிகையில் தம் திருநடனக் காட்சியைக் காட்டினார் என்று சேக்கிழார் குறித்துள்ளார்.
நாவரசர் வாழ்வில் சிவனருவன்
சிவபெருமான் தன் திருவடியைத் தன் தலைமீது வைக்க வேண்டும் என்று திருச்சக்தி முற்றம் என்ற ஊரில் நாவுக்கரசர் வேண்டிக் கொண்டார். அவ்வேண்டுகோளைச் சிவபெரு மான் ஏற்று அவரை நல்லூருக்கு வருமாறு பணித்தார். நல்லூருக்கு வந்த நாவுக்கரசர் தலைமேல் ‘உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்றவர் தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான் என்று சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். நாவுக்கரசரும்.
நனைந்தனையதிருவடியென் தலைமேல் வைத்தார் நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார் புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே.
என்பன போன்ற தொடர்களால் சிவன் தனக்குத் திருவடி சூட்டியமையைப் புலப்படுத்தியுள்ளார்.
நம்பியாண்டார். நம்பியும் நற்றவன் நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப் பெற்றவன்' என்று குறிப்பிட்டுள்ளார். கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள தாரா
சுரம் என்ற ஊரில் உள்ள சோழர் காலக்
கோயில் ஒன்றில் திருநாவுக்கரசருக்குச் சிவ
2

கார்த்திகை 2011
பெருமான் திருவடியைச் சூட்டும் காட்சி புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணமுடிகிறது.
கனவிலும் நனவிலும்
திருமறைக்காட்டில் உறங்கிய நிலையில் இருந்த திருநாவுக்கரசர் கனவில் தோன்றித் திருவாய் மூருக்கு வாவென்று பணித்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்ற ஊரில் அவருடைய பசியைத் தீர்க்க அந்தணர் வடிவு கொண்டு பொதி சோறு அளித்து அவர் பசிப் பிணியைப் போக்கியுள்ளார்.
முனிவரும் கயிலைக்காட்சியும்
கயிலை மலையின் ஒரு புறத்தே தளர்ந்த நிலையில் இருந்த நாவுக்கரசர் முன் சிவபெருமான் ஒரு முனிவராய்த் தோன்றி அருகில் உள்ள பொய்கையில் மூழ்குமாறு பணித்தார். பின் அவரைத் திருவையாற்றில் எழச் செய்து விடைவாகனராய் அவருக்குக் கயிலைக் காட்சியினைக் காட்டியுள்ளார்.
சுந்தரர் வாழ்வில் சிவன்
சிவபெருமான் வேதிய வடிவம் கொண்டு சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட் கொண்டார். திருவதிகையில் சித்தவட மடத்தின்கண் சுந்தரர் தலைமீது தன் திருவடியைச் சூட்டியுள்ளார். திருவாலம்பொழிலில் சுந்தரர் கனவில் தோன் றிச் திருமழபாடிக்கு வருமாறு பணித்துள்ளார். திருக்கடவையாற்றுாரில் அந்தணர் வடிவில் உமையுடன்போந்து, சுந்தரருக்கு வழிகாட்டி யுள்ளார். திருக்கருகாவூரில் வேதியராய் வந்து சுந்தரர் பசி நீங்க உணவளித்துள்ளார். திருக்கச்சூரில் உணவு இரந்து கொண்டு வந்து சுந்தரருக்கு அளித்துள்ளார். திருச்சுழியலில் சுந்தரர் கனவில் தோன்றித் திருக்கானப்பேர் வருமாறு பணித்துள்ளார். பல்வேறு காலங்
7:-

Page 30
கோபுரம்
களில் சுந்தரர் தோழனாயும், தூதனாயும் அமைந்து பரவையின் ஊடலைத் தணித்துள் ளார். இவ்வாறு சிவன் மானிட வடிவங்கொண்டு சுந்தரர் வாழ்வில் பல உதவிகளைப் புரிந்துள்ளார்.
மூவர் வாழ்வில் அருவுருவ சிவன்
மூவர் தேவாரத்துள் அருவுருவம் என்ற சொல் இடம்பெறவில்லையாயினும் இன்ன தென்றறிய வொண்ணா வடிவமாக அவ்வடிவம் குறிப்பிடப் பெற்றுள்ளது.
சிவனருவுருவ வடிவாம் இலிங்க வடிவைச் சம்பந்தர் பூக்களைக் கொண்டு போற்றி வணங்கியமை, ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்து ஏத்த அருள் செய்த என்னும் தொடரால் புலனாகின்றது.
நாவுக்கரசருடைய ‘சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” “என் போலிகள் பறித்திட்ட இலையும் முகையும் எல்லாம் அம்போதெனக் கொள்ளும் எனவருந் தொடர்கள் அவரியற்றிய அருவுருவ பூசனையைச் சுட்டிக் காட்டுகின்றன.
சுந்தரர் திருவாரூர் அருவுருவ வடிவாய் அமைந்துள்ள சிவலிங்கவடிவைப் புற்றிடங் கொண்ட அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோகேளிர் என்று குறிப் பிட்டுத் தம் ஆன்ம நாயக வடிவாகக் குறிப்பிட் டுள்ளார். மேலும் 'ஆரூரானை மறக்கலும் ஆமே எனும் தொடரால் அவ்வடிவைத் தம் மால் மறக்க இயலாமையையும், எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே எனும் தொடரால் ஆரூரைத் தாம் பிரிந்திருக்க இயலாமையையும் புலப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு தேவார மூவரும் தம் வாழ்வில் உருவனாயும், அருவனாயும் உடனிருந்து

கார்த்திகை 2011
உதவிய சிவபெருமானுடைய பல்வேறு தோற்ற நிலைகளையும், வடிவங்களையும், தம் பாடல்களின் வாயிலாகக் காட்டிச் சென் றுள்ளனர்.
சிவவழவை அழயார்க்குக் காட்டுதல்
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்னும் உயரிய நோக்கில் இறை யருளாளர்கள் தாம் கண்டு மகிழ்ந்த சிவவடி வத் தோற்றங்களை ஏனைய, சிவனடியார் கட்கும் காட்டி மகிழ வேண்டும் என்று கருதி னார். ஆதலின் அடியவர்களை, சீரார்கழலே தொழுவீர், அடியராயினீர், படிசெய் நீர்மை யின் பத்தர்காள் என்ற முன்னிலைப்படுத்தி விளித்து, கண்டோம் காணிர் கண்டுய்ம்மின் காணுமின்களே காண்க காண்மினே! என வருந்தொடர்களால் சிவனைச் சுட்டிக் காட்டி யுள்ளனர்.
கண்ணாய்க் காட்டும் சிவன்
சிவபெருமான் தம் அடியவர்களின் கண்களாய்த் தாமே அமைந்து, அனைத்தை யும் காட்டியுணர்த்தும் தன்மையினைக் காட்டு வித்தால் யாரொருவர் காணாதாரோ காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக்காவே' என்று நாவரசர் குறிப்பிட்டுள்ளார். ஆதலின் அவனரு ளின்றி சிவன் வடிவைக் காணவியலாது என்பதனை 'அவனருளாலே அவன்தாள் வணங்கி என்று மணிவாசகரும், அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்' என்று நாவுக்கரசரும் குறிப்பிட்டுள்ளனர்.
நாவரசர் கண்ட இறைவன்
சிவனருளால் தாம் கண்ட சிவனடிக் காட்சிகளை நாவுக்கரசர் ஓடினேன் ஓடிச் சென்றுருவம் காண்டலும், வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே, 'கண்டேன் அவர் திருப்
28:-

Page 31
Ga5 TLųJub
பாதம் கண்டறியாதன கண்டேன்’ எனவருந் தொடர்களால் புலப்படுத்தியுள்ளார்.
கண்டோம் காணிர்
நாவுக்கரசர் கோயில் எனப்பெறும் சிதம் பரத்தின் கண் பட்டாடையினை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து, கையில் பாம்பொன்றினை ஏந்திய சிவன் வடிவைத் தாம் கண்டதாகவும், வேதம் ஓதி வெண்ணுால் பூண்டு, சூலம், வீணை, கட்டங்கம் ஆகிய வற்றை ஏந்தி நிற்கும் அக்கபாலியாம் சிவவடி வினைச் சென்று காணிர் என்று அடியவர்களை ஆற்றுப்படுத்தியுள்ளார்.
பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன்றார்த்துப்
பகவனார் பாரிடங்கள்குழு நட்டம்
சிட்டராய்த் தியேந்திச்செல்வார் தம்மைத்
தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம் இந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணனூால் உண்டே ஓதுவதும் வேதமே வீணை யுண்டே கட்டங்கம் கையதே சென்று காணிர்
கறைசேர் மிடற்றெம் கபாலியார்க்கே
ஆ என்றுதாம் கண்ட சிவவடிவை அடியார்கட்குக் காட்டிக் காணிர் என்று கூறும் பாடல் ஆறாந் திருமுறையுள் காணப் பெறுகின்றது.
கண்டீரோ? காணிர்!
சந்தித்த கோவணத்தர் வெண்ணுரல் மார்பர் சங்கரனைக் கண்டீரோ” என்று அடியவர்களை நோக்கி கோவண ஆடையராய் வெண்ணுரல் மார்பினரான சங்கரனைக் கண் டீரோ என வினவும் நாவுக்கரசர் திருவலம்புரம் என்னும் தேவாரத் தலத்தில்,
மண்ண்ளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
மறையவனும் வானரும் சூழ நின்று கதநாகம் கையுடையார் காணிர்! -
என்று அறிவுறுத்தியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 

கார்த்திகை 2011
திருவழ காண்க!
முதுகாட்டில் சிவபெருமான் திருநடனம் ஆடும் காட்சியைச் சுட்டி, அவன் திருவடியைக் காண்க என்று கூறுமாறு, நாவுக்கரசர் பாடும் பறண்டையும் ஆந்தையும் பரந்துபல்பேய் கூடி முழுவக் குவிகமழ் கொட்டக் குறுநரிகள் நீடும் குழல் செய்ய வையம் தெளிய நினைப்பினக்காட் டாடும் திருவடி காண்க! - எனவும்
பொன்னையாள்
சிலம்பும் செறிபாடகமும் செழுங்கின்கினித் திரளும் அலம்பும் திருவடி காண்க! - எனவும்
தாம் கண்ட இறைவன் திருவடியைக் காண்க என்று ஏனையோர்க்குச் சுட்டிக் காட்டியுள்ளமை 35T600T6)Tib.
காணுமின்களே!
சீர்காழி என்னும் திருப்பிரமபுரத்தில் உறையும் சிவன் வடிவினை,
தோடுடைய செவியன் விடையேறிஓர்
தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடிபு"சியென்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட்பணிந்
தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுர மேவிய
பெம்மான் இவனன்றே!
என்று படர்க்கை நிலையில் சுட்டிக்காட்டி,
வானிலாச் சடைத் தோணிவன்புரத் தாணிநற் பொனைக் கானுமின்களே!
என்று பணித்துள்ளார்
காண்மினே!
மேலும் அப்பதியின் கண் மாதொரு பாகனாகச் சிவன் தோன்றும் காட்சியினைத்
9:-

Page 32
கோபுரம்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே என்று சுட்டிக்காட்டிக் காணுமாறு கூறியுள்ள சம்பந்தர் சிவன் உறையும் தேவாரத் தலமான திருத்தண்டலை நீனெறியைச் சுட்டிக்காட்டி,
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மலே
கரும்பும் துப்பியும் சூழ்சடையார்க் கிடம்
நெருங்கும் தண்டலை நீனெறி காண்மினே! என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்ருய்ம்மினே!
நாவுக்கரசரும் சம்பந்தரைப் போலச் சிவன் உறையும் பதியான திருக்காட்டுப் பள்ளியைக் கண்டுய்ம்மினே' என்று அடியவர் கட்கு அறிவுரை கூறுவாராய், கண்டனார் காட்டுப் பள்ளி கண்டுய்ம்மினே' என்று உய் வகை காட்டியுள்ளார்.
மனமொழிமெய்
இவ்வாறு சிவவடிவையும், வடிவம் காணப் பெறும் இடத்தையும் சுட்டிக்காட்டிய தேவார ஆசிரியர்கள் சிவன் அருவ வடிவினை மனம், மொழி, மெய்களால் உணர்ந்து போற்றி வணங்குமாறு,
மனம் நீல கண்டனை நின்று நினைமினே மொழி வட்டவார் சடையான் வண்ணம் வாழ்த்துமே
மெய் பெற்றம் ஏறும் பிரானடி சேர்மினே
என வருந் தொடர்களால் பணித்துள் ளனர். இவ்வாறு தேவார மூவரும் சிவன் வடிவையும், தலங்களையும் தாங்கள் மட்டும் கண்டு மகிழ்ந் திடாமல் ஏனைய அன்பர்களும் காணுமாறு காணிர்! காண்மின் கண்டுய்ம்தமின் என்று வழிகாட்டியுள்ளமை காணலாம்.
}

கார்த்திகை 2011
சுட்டு நிலைகள் (முன்னிலை - விளித்தல் - வேண்டுதல் - தன்மை
- படர்க்கை நிலைகள்)
முன்னிலையாகவும், தன்மை நிலை யிலும், படர்க்கை நிலையிலும் சிவபெருமானைச் சுட்டித் தேவார மூவரும் பாடியுள்ளனர்.
முன்னிலை
சிவபெருமானை முன்னிலைப்படுத்தி
உம், உமக்கு, உமக்கே, உன, உன், உனது, உன்னை, நும், நின், நீரே, நீ, நீர், நீயே என வரும் சொற்களால் தேவார மூவரும் விளித் துள்ளனர்.
9 b - உம் பொற்கழல் தேவர் வந்து
ରj600TME|85|''''
உமக்கு - உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
உமக்கே - மீளா அடிமை உமக்கே ஆளாய்
உன - உனகழல் தொழுதெழுவேன உன் - சிவனே உன் அபயம் நானே' உனது - அதுவோ உனது இன்னருள உனை - உறவிலேன் உனையன்றி
உன்னை - உன்னையல்லால் யாரை நினைக்
(386(360it'
நும் - நின்றது போலும் நும் பாண்மையே நின் - நின் திருவடி அடைந்தேன் நீரே - அழகன் நீரே"
- அப்பன் நீ" நீர் - என் கொல் நீர் குடிற்றே நீயே - ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே

Page 33
எது இக
உலகத்திலே எது இகழ்ச்சி என்று அறிவாளிகள் உள்ளத்தில் ஒரு வினா எழுவது இயல்புதானே! அதற்கு விடை தெரிந்து
செய்யாமல் இருக்கலாம்.
வீடு கட்டுவது, பாத்திரம் விளக்குவது, ஆடை தோயப் ப் பது என்று இந் தத் தொழில்களை நமது வீட்டில் ஒருவன் அல்லது ஒருத்தி செய்கின்றனர். இவை இழிந்தனவா 66 சிந்தித்தேன். இவை உயர்ந்த தொழில்கள். வீடு கூட்டவில்லையானால் எத்துணை அருவருப்பாக இருக்கும், விளக் காத பாத்திரத்தில் எப்படித் தண்ணிர் பருக முடியும்? தோய்க்காத துணியை உடுப்பது எத்தனை சுகக்கேடு? ஆகையால் இவை இழிந்த தொழில்கள் ஆகமாட்டா. தூய்மை புரியும் இனிய செயல்கள் இவை.
நமது வீட்டில் வேலைக்காரன் உணவு சமைத்துத் தருகிறான். உணவு மனிதனுக்கு இன்றியமையாதது. உயிர்நாடி போன்றது. உணவின்றி உயிர் வாழ்க்கை இயங்காது. அதனால் திருவள்ளுவரும் தமது வாழ்க்கைத் துணைவியாரின் பிரிவு குறித்து வருந்தியபோது அடிசிற் கினியாளே என்ற முதலில் உண வைக் குறித்துக் கூறினார். நளச் சக்கரவர்த்தி, பீமன் முதலிய மன்னர்களும் உணவு சமைக் கும் இனிய தொழிலைப் புரிந்தார்கள்.
ஒருநாள் தஞ்சையில் என் நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்தேன். காலையில் திண்ணையில் அமர்ந்து பல்குச்சியிட்டுப் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். ஒரு பெண்மணி சந்துவழியே சென்று மலம் அள்ளிக்கொண்டு
(
விட்டால் அந்த இகழ்ச்சியான செயலை நாம்"
V

சென்றாள். இதைக் கண்டதும் என் மனம்
உருகியது. 'பாவம்! இந்த அம்மை தன் வயிற்றை வளர்க்கும் பொருட்டு, நினைக்கக் கூட அருவருப்பாக உள்ள இந்த மலங்களை அள்ளிக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்து கொண்டு செல்கிறாள். பரிதாபம்!” என்று என் மனம் எண்ணி, மிகுந்த இரக்க முற்றது. அப்போது கண்ணிர்த்துளி சிந்தியது. நான் இந்த உலகையே மறந்திருந்தேன்.
என் நண்பர் வெளியே வந்து என்னைக் கண்டார். 'ஏன் சுவாமி அழுகிறீர்!’ என்று என்னைக் கேட்டார்.
நான், 'ஒன்றுமில்லை, அதோ செல்லுகிற சகோதரி மலத்தை அள்ளிச் சுமந்து போவ தைக் கண்டு ஒரு சாண் வயிற்றை வளர்க்கும் பொருட்டு இந்தத் தொழிலைப் புரிகிறாளே என்று நினைத்து என் மனம் குழைந்து உரு கிற்று’ என்றேன். -
அவர் சொன்னார். சுவாமி என் ஆசிரியர் இது பற்றி எனக்கு ஒருநாள் சொன் னார். இது இழிதொழில் அன்று. புனிதமான அன்புத் தொழில், நமது தாயார் நமது மலத்தை அள்ளினாள் அல்லவா? தன் குழந்தையின் மலத்தை அன்னை அன்பினால் அள்ளுகிறாள். இந்தப் பெண் இந்த வீட்டிலுள்ள அனைவரையும் தனது மக்களாக நினைத்து அத்தனை பேர் மலங்களையும் அள்ளுகிறாள். இது தூய்மை கலந்த தாய்மையில் செய்யும்
31:-

Page 34
கோபுரம்
புனிதத் தொழில், மலம் அள்ளுகிற பெண்ணை பாராட்ட வேண்டும் என்று என் ஆசிரியர் என்னிடம் கூறினார்” என்றார். இந்த அரிய கருத்தைக் கேட்டவுடன் எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆ1 ஆ என்ன அற்புதமான கருத்து மலம் எடுக்கும் தொழிலின் புனிதத்தை உணர்ந்தேன் என்று அன்று நான் கருதினேன். ஆகவே மலசுத்தி செய்யும் தொழில்கூட இழிந்ததன்று.
இனி, இழிந்த தொழில் எது என்று ஆழமாகச் சிந்தித்தேன்; ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிப்பதுதான் இழிந்தது என்று முடிவு கட்டினேன்.
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்,
எளிய பொருளாகிய தண்ணிரை, யாரும் போற்றக்கூடிய பசுவிற்கு வேண்டும் என்று கேட் பதும் மிகவும் இழிவு என்கிறார் திருவள்ளுவர்.
தெண்ணிர் அடுபுற்கை யாயினும் தாள்தந்த துண்ணலின் ஒளங்கினிய நில்.
தெளிந்த தண்ணீர் போன்ற புல் கஞ்சியா னாலும் உழைப்பால் வந்த அந்த உணவே மேலான அமுதம் போன்றது. 'போனகம் என்பது தானுழந் துண்டல்’ என்கிறார் ஒளவையார்.
கையில்லாத ஆடு மாடுகள் எல்லாம் உழைத்துத் தேடித் தம் பெருவயிற்றை நிரப்பிக் கொள்வதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். கையும் கருத்தும் படைத்த நாம் உழைத்து நம் சிறு வயிற்றைத் திருப்தி செய்யமுடியாதா?
ஒருவன் இரவச்சத்தை நன்கு உணர்ந் தவன். உழைத்து உண்ணும் உரமுடையவன்.

கார்த்திகை 2011
எங்கும் தொழில் கிடைக்கப்பெறாது உலைந் தான், அலைந்தான், பட்டினியால் வாடினான். உயிர் துடிக்கும் நிலை வந்தது. தள்ளாடிக் கொண்டு சென்றான். ஒருவர் திண்ணையில் அமர்ந்து பாசிப்பயறு, சுண்டல் உண்டு கொண் டிருந்தார். கேட்டு வாங்கியுண்ணாது உழைத்து உண்ணும் கொள்கையுடைய அவன், ஆபத்து 556) தருமமாக, "ஐயா! சிறிது உணவு கொடும்’ என்றான்.
உடனே இரண்டு பிடி சுண்டலைத் தந்தார். அதனை அவன் உண்டான். விக்கல் வந்தது. வீட்டுக்காரன் ஒடித் தண்ணீர் கொணர்ந்து நீட்டினான். விக்கல் கொண்டவன், “யான் யாசித்து நீர் பருகமாட்டேன்” என்றான்.
வீட்டுக்கு உடையவன், ‘என்ன ஐயா! சுண்டல் யாசித்து உண்டீரே" என்று வினவினான்.
'உயிர் துடித்தது: உயிருக்கு இறுதி வரும் தறுவாயில் வேறு செயலின்றி யாசித் தேன். இரண்டு பிடி சுண்டல் உண்டதனால் சிறிது நடக்கக்கூடிய வலிமை வந்துள்ளது. நடந்து சென்று அதோ தெரிகிற குளத்தில் நீர் குடிக்க வேண்டாமோ?’ என்று கூறிக் குளத்தை நோக்கி அவன் நடந்தான். இதனால் யாசிப்பதன் இழிவு நன்கு புலனாகிறது அல்லவா?
ஒரு புலவரை ஒருவன் நோக்கி, ‘புலவரே உலகில் அற்பமான பொருள் யாது?’ என்று கேட்டான்.
புலவர், 'துரும்பு’ என்றார்.
'துரும்பினும் அற்பமான பொருள் உளதோ? ”
“உள்ளது துரும்பினும் அற்பமானது பஞ்சு" "ஓ! பஞ்சினும் அற்பம் இருக்கிறதா? ’
32:-

Page 35
கோபுரம்
'ஐயா, இருக்கிறது. பஞ்சினும் மிகவும் அற்பமானவன் யாசிப்பவன்.”
‘என்ன ஐயா! நீர் கூறுவது பொருத்த மாக எனக்குத் தோன்றவில்லை. யாசிப்பவன் பஞ்சினும் அற்பமானவன் என்றால் பஞ்சைக் காற்று அடித்துக்கொண்டு போகவில்லை?” என்றான்.
'அதற்குத் தக்க காரணம் உண்டு. பஞ்சினும் அற்பமானவனை நெருங்கினால் நம்மையும் ஏதாவது யாசிப்பவன் என்று அஞ்சி காற்று செல்வதில்லை’ என்றார்.
நொய்தாடு திரணத்தில் நொய்தாகும் வெண்பஞ்சு
நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் - நொய்தான பஞ்சுதனில் நொய்தானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட்ப தறிந்து.
எத்துணை வறுமை வரினும் பிறரிடம் சென்று யாசிப்பது கூடாது என்று வறுமையின் உச்சியில் வாழ்ந்த குசேல முனிவர் உறுதி யுடன் இருந்தார். அவர் வயல்களில் உதிர்ந்த நெல்லைப் பொறுக்கும் தொழில் (உஞ்ச விருத்தி) புரிந்து, தம் குடும்பத்தைக் காப்பாற்றி னார். கண்ணனிடம் கூடத் தம் வறுமை நிலை
யைக் கூறி யாசித்தாரில்லை.
பிரிக்கமுடி பாலில் வெண்மையாகவும் பழத்தில் சுவையாக உன்னுடன் அல்லவா பின்னிப் பிணையும் நா
எமன் பாரபட்சமின்றி உயிர்களை இழுத்துச் செல்ப6 சிவபெருமானை மார்க்கண்டேயன் இறுகப் பற்றிய
எமன் பிடித்து இழுத்தால் என்னுடன் இறை6 அப்படிப் பிரிக்கமுடியாதபடி இறைவனோடு மனதால்
கூற்றுதைந்து என்பான் குற்றமும் குணம் கொன ஆற்றன் மிக்கனித்த அது பெருஞ்சோதி
 
 
 
 
 
 

கார்த்திகை 2011.
உத்தமன் கடவுளிடம்கூட அதனைக் கொடும், இதனைக் கொடும் என்று யாசிக்கமாட்டான். கடவுளைக் கூடும் அன்பினில் கும்பிடுவானே யன்றி, வீடும் வேண்டா விறலில் விளங்குவான்.
ஒரு பொருளை யாசிப்பவன் எத்துணைப் பெரியவனாயினும் குன்றிவிடுவான் என்ற நுட்பத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டே நெடியோனாகிய நெடுமால் மாவலியிடம் மூவடி மண் தானம் கேட்கச் சென்றபோது குள்ளராகச் சென்றார்.
ஒரு பெண் மணியின் அழகு ஒரு மகவைப் பெற்றவுடனே குன்றிவிடும். அது போல் பெரியோர் பெருமை ஒரு பொருளைப் பிறரிடம் சென்று கேட்டவுடனே கெட்டுவிடும்.
ஆகவே உலகிலே மிகவும் இழிவானது, தனக்கு என்று ஒன்றை ஏற்பதுவேயாகும்.
இத்தனை கருத்துக்களையும் அமைத்துச் சுருங்கக் கூறுவதில் மிக வல்லுநரான
ஒளவைப் பிராட்டியார். ‘ஏற்பது இகழ்ச்சி என்று இரண்டே சொல்லில் கூறிவிட்டார்.
● யாத பநதம கவும் கலந்துறையும் இறைவா! நானும் ள் வாராதோ
வன். அவனது பிடியிலிருந்து தப்ப வேண்டுமானால் துபோல நாமும் இறைவனைப் பற்றவேண்டும்.
பனை சேர்த்துத்தான் பிடித்து இழுக்க வேண்டும்.
இணைந்திருக்க முயல வேண்டும்.

Page 36
ol566LIIT
அருள் பொங்கும் ஆறு எங்கு ஓடுகிறது?
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான்!
சென்னையில் ஒடும் ஆறு அடையாறு, கூவம் என்றுதானே கூறுவார்கள். ஆமாம்! காவிரி, தென்பெண்ணை, பாலாறு இங்கு ஒட வாய்ப்பில்லை! இங்கு ஒடுவதோ அழுக்காறு கூவந்தான்! ஆனாலும் சென்னையை வடலூர் வள்ளலார் சிறப்பித்தது போல 'தருமமிகு சென்னையாக’ ஆக்குவது, இங்கு உள்ள ஆறு அருள் பொழியும் சிவாலயங்கள் தான்.
1300 ஆண்டுகட்கு முன் திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் வந்து வழிபட்டுப் பாடி அருளிய ஆறு தலங் களைத் தரிசிப்போம் வாருங்கள்!
ஆலய வழிபாடு
'கோயில் இல்லா ஊரில் குடி யிருக்க வேண்டாம்', 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று பாடியுள்ளார் அருந் தமிழ்க்கிழவி ஒளவையார்.
இன்று வீதிக்கு வீதி கோயில்கள்! ஊருக்குள் புதுப்புது ஆலயங்கள் தோன்றினா லும், பழமையும் மிக்க, ஆலயங்களை மறந்துவிடுவது தவறல்லவா?
ஆயிரம் ஆண்டுகட்கு முன்னே முன் னோர்கள் அன்று அமைத்துத் தந்த அருள் ஆலயங்களை இன்று நாம் மறந்து விடலாமா?
ஆலய வழிபாடு ஏன்?
கோ = தலைவன்: இல் = இல்லம், கோயில் என்பது ஆன்மாக்களின் தலைவனா

கிய இறைவன் வாழும் இடமாகும். இங்கு வழிபாடு நடந்தால் தான், தனிமனிதனும், ஊரும், நாடும் வளமோடும், நலமோடும் வாழ
லாம். கோயில்களில் குறைபாடு நேர்ந்தால், நாடாளும் மன்னன் அழிவான், மழை பொழியாது, நோய் வரும், திருட்டுப் பெருகிவிடும் என்கிறார் திருமூலர்.
“ஆற்றரு நோய்பமிக்க அவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான் திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.”
“முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள மாரிவளம் குன்றும் கன்னங் களவு மிகுந்திடும் காசினி என்னரும் நந்தி எடுத்துரைத் தானே"
- திருமந்திரம் 517, 518
எனவே நோயின்றி வாழ, திருட்டுப் பயமின்றி வாழ மழையால் வறட்சியின்றி வாழ ஆலயங் களைத் தரிசித்து வழிபாடு செய்வோம்.
தொண்டை நாட்டுத் தலங்கள் 32
தொண்ட நாடா? தொண்டை நாடா? நாம் தொண்டை நாடு என்றுதான் கூறுகிறோம். இது தவறு என்கிறார் வடலூர் வள்ளலார். தொண்டச் சக்கரவர்த்தி ஆண்ட நாடு தொண்ட நாடு என்று தனது "தொண்டமண்டல சதகம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இத்தகு தொண்டை நாடு சான்றோர் வாழும் நன்னாடு ஆமாம்!
34:-

Page 37
கோபுரம்
யானை உடையது சேர நாடு சோறு உடையது சோழ நாடு முத்தும் தமிழும் உடையது பாண்டி நாடு சான்றோர் உடையது தொண்டை நன்நாடு இதன் எல்லைகள் யாவை? மேற்கில் பவள மலை, கிழக்கில் கடல், தெற்கில் பெண்ணை(பினாகினி) நடுவே இருப்பதோ தொண்டை வளநாடு தற்போது சென்னை, கெங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் சேர்ந்த பகுதியாகும்!
தேவார மூவரால் பாடப்பெற்ற தலங்கள் 301 ஆகும். இதில் வடநாடு - 32, தொண்டை நாடு - 32, மகத (நடு) நாடு - 22, சோழ நாடு - 190, பாண்டி நாடு, - 15, ஈழநாடு - 2, சேர நாடு - 1, கொங்கு நாடு - 7 ஆகும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் பாடிய பதிகங்கள் 103,000 ஆகும். இவற்றில் நமக்குக் கிடைத்தவை 797 பதிகங்களாகும்.
இதில் பெருமை மிக்கவை தொண்டை நாட்டுத் தலங்கள் 32 இல் மூவரும் பாடிய பெருமைக்குரிய தலங்கள், திருக் காளத்தி, திருவாலங்காடு, திருக்கழுக்குன்றம், காஞ்சி புரம், திருவெற்றியூர் ஆகிய ஐந்தாகும்.
சுந்தரர் மட்டுமே பாடியவை திருப்பனங் காட்டுர், திருவெண்பாக்கம், ஒணகாந்தன்தளி, கச்சி அநேகதங்காவதம், வடதிருமுல்லைவாயில், திருக்கச்சூர் ஆகிய ஆறாகும்.
சம்பந்தர் மட்டுமே பாடியவை, கச்சிநெறி காரைக்காடு, குரங்கணில்முட்டம், மாகறல், திருவோத்தூர், திருவல்லம், தக்கோலம், இலம்பையங்கோட்டுர், திருவிற்கோலம், திருக்கள்ளில், திருவலிதாயம், திருவேற்காடு, திருமயிலாப்பூர், திருவிடைச்சுரம், அச்சிறுபாக்கம்,

கார்த்திகை 2011
திருவக்கரை, அரசிலி, இரும்பைமாகாளம் ஆகிய 17 தலங்கள் ஆகும்.
இனி தருமமிகு சென்னையில் அமைந் துள்ள, அருமையும் பெருமையும் பழமையும் மிக்க ஆறு தலங்களைத் தரிசிப்போம் வாருங்கள்!
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் பாடிய பெருமைக்குரியது திருவொற்றியூர் முதலிருவர் பாடியது திருவான்மியூர், திருவலிதாயம், திருவேற்காடு ஆகிய மூன்று தலங்கள் ஆகும்.
1. திருவருள் பொழியும் திருவெற்றியூர்
உலகம் அழிந்த ஊழிக்காலத்திலும், பிரளய வெள்ளம் சூழாமல் ஒற்றி (விலகி) நின்றதால் ஒற்றியூர் ஆயிற்று. அயோத்தி , ஆண்ட மாந்தாதா மன்னன் விதித்த வரியிலிருந்து அவ்வூர் இறைவனே, ஏட்டு வரியின் இடையில் ஒற்றியூர் நீங்கலாக என எழுதி ஒற்றி (விலக்கி) வைத்ததாலும் ஒற்றியூர் என்றாயிற்று. எழுதிய இறைவன் எழுத்தறிவும் பெருமான் ஆனார். ஆதிபுரி என்றும், புவியுட் சிவலோகம் என்றும் இவ்வூர் போற்றப்படுகிறது.
ஆதிசேடன், வாசுகி பூசித்த தலம். பாம்பின் படத்தைத் தன்னோடு ஏற்றுக் கொண்டு அக்னிவடிவாய் நின்றதால் படம்பக்க நாதராக, தானே புற்று வடிவில் எழுந்த சுயம்பு லிங்கமாக இறைவன் காட்சி தருகிறார். 18 நடனம் ஆடும் தியாகராஜப் பெருமான் கொலுமண்டபத்தில் வீற்றிருக்கிறார். கம்பனுக்கு அருளிய வட்டப் பாறை அம்மனும், தியாகராஜ சுவாமிகள், கபாலி சாஸ்திரிகள், இராமலிங்க வள்ளலார், ஆதிசங்கரர் ஆகியோருக்கு அருளிய வடிவுடைநாயகி அன்னையும் இத்தலத்திற்கு வருவோர்க்கு வரந்தரும் கருணை கொண்டவர்கள். அருண
35:-

Page 38
em
கிரிநாதர் இரு திருப்புகழ் பாடிய அருட்ஜோதி முருகன் அழகே வடிவானவர்.
இக்கோயிலின் உள்ளே பிரம்ம தீர்த்தம் வெளியே ஆதிசேட தீர்த்தக் குளங்கள். தல விருட்சம் அத்திமரம். சிறப்புமரம் மகிழமாகும்.
திருஞானசம்பந்தர் 11 பாடல்கள், திருநாவுக்கரசர் 55 பாடல்கள், சுந்தரர் 22 பாடல்கள் பாடியுள்ளனர். கமலை ஞானப்பிர காசர் தலபுராணம் பாடியுள்ளார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சங்கிலியாரை மணந்த தலமிது, கலியநாயனார் விளக்குத் தொண்டு செய்து நாயன்மாராக விளங்குமிடம்.
கம்பர், இராமாயணம் இயற்றியதும் பட்டினத்தார் முக்தி பெற்றதும், இரட்டைப் புலவர்கள், காளமேகம், பாம்பன் சுவாமிகள், மறைமலை அடிகள், தியாகராஜர் பஞ்சரத்னம் பாடியதும், தீட்சதர் பாடியதும் இத்தலப் பெருமைக்குச் சான்றுகளாகும்.
கலை மலிந்த சிற்பக் கூடமாகவும், அருள் செறிந்த ஆலயமாகவும் திகழும் இக்கோயிலின் பெருமையினை சோழர், பல்லவர், பாண்டியர், சாளுக்கியர், இராஷ்டிர கூடர், விஜயநகர் மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
2. மருந்தீசர் வாழும் திருவான்மியூர்
வால்மீகி முனிவர் வந்து இத்திருக் கோயிலை வழிபட்டதால், இவ்வூர் திருவான்மியூர் ஆயிற்று. காமதேனு பூசை செய்த சுயம்பு மூர்த்தியாய் மருந்தீசுவரர் இத்திருக்கோயிலில் திகழ்கிறார். இந்த ஊரிலும் தியாகராஜப் பெருமான் உள்ளார். அவர் வான்மீகி முனி

கார்த்திகை 2011
வருக்கு நடன தரிசனம் தந்தவர். திருஞான சம்பந்தர் 22 பாடல்களையும் திருநாவுக்கரசர் 11 பாடல்களையும் பாடியுள்ளார். இரு திருக் குளங்களும் தல விருட்சமாக வன்னி மரமும் 108 சிவலிங்கங்களும் இங்குள்ளன.
திரிபுரசுந்தர அம்பிகை மேல் பெரியசாமித் தூரன் கீர்த்தனைகள் பாடியுள்ளார். பாம்பன் சுவாமிகள் அப்பையதிட்சதர் போன்றோர் வழிபட்டு அருள்பெற்ற தலம்.
முதலாம் இராசேந்திரன் ஆயிரம் ஆண்டு களுக்கு முன், தன் நோய்நீங்க இங்கு தங்கி வழிபட்ட செய்தியைக் கல்வெட்டு கூறுகின்றது.
பூவை கல்யாணசுந்தர முதலியார் பாடி யுள்ள தலபுராணத்தை படித்தால் இக்கோயி லின் சிறப்புக்கள் விளங்கும்.
3. மகளின் உயிரை மீட்ட திருமயிலை
மயிலைப் பெயராக உடைய ஊர்கள் ஆறு உள்ளன. உமாதேவி மயிலாகத் தவ மியற்றியது மயிலாப்பூர். மயிலாக ஆடி சிவனுடன் சேர்ந்தது மயிலாடுதுறை. (மயூரம்) ஆகும். மயிலாடிய மற்றொரு தலம் மயிலாடி. மயில் உருவில் குன்றாக நின்று சூரபன்மன் தவம் இயற்றிய தலம் மயிலம். மயிலூர் செந்துரையாகும். மயூராசலம் குன்றக்குடி ஆகும்.
' கயிலையே மயிலை! மயிலையே கயிலை' என்று போற்றப்படும் திருமயிலையில் 1300 ஆண்டுகளுக்கு முன் சிவநேசச்செட்டி யாரின் மகள் பூம்பாவையின் சாம்பலைக் குடத்தில் கண்டு 11 பாடல்களைப் பாடி திருஞானசம்பந்தர் மீண்டும் அவரைப் பெண்ணாக உயிர்மீட்டு அழைத்த அற்புதம் நடந்த தலமிது.
36:-

Page 39
கோபுரம்
அருணகிரிநாதர் இத்தலத்தில் 10 திருப்புகழ் பாடி சிங்கார வேலவனின் அருள்
பற்றுள்ளார். அதில்,
"அழுகைவணி கார்குளத்தில் வனிதைஉயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா"
என்ற பூம்பாவை நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்.
இறைவன் கபாலீஸ்வரர், இறைவி கற்பகாம்பிகை. வாயிலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன், திருவள்ளுவதேவர் ஆகியோர் வந்து தரிசித்த தலம். புன்னை மரமும், பிரம்ம தீர்த்தமும் ஆலயத்திற்கு அழகு சேர்க்கின்றன.
அமிர்தலிங்கத் தம்பிரான் இயற்றிய தல புராணமும், உலா, கலம்பகம், யமக அந்தாதி யும் இத்தலப் பெருமைகளைக் கூறும்.
4. அனுமன் பூசித்த திருவலிதாயம் (பாடி)
- இராமனையே பூசித்தும், நினைத்தும், இதயத்தைக் கிழித்தபோதும் காட்டிய அனுமன், சிவனைப் பூசித்த சிறப்புக்குரிய தலம், இன்று பாடி எனப் புதுப்பெயர் பெற்ற திருவலிதாயம் ஆகும்.
திருவலிதாயநாதர், தாயம் மையை, பரத்துவாசமுனிவர், வலியன் என்னும் கருங் குருவியாக வந்து வழிபட்டு அருள்பெற்றதால் இவ்வூர் வலிதாயம் ஆயிற்று.
திருஞானசம்பந்தர் 11 பாடல்கள் பாடி இறைவனைப் போற்றியுள்ளார். திருக்குளம் பரத்வாஜ தீர்த்தம் தல விருட்சம் பாதிரிமரம்.
அருணகிரிநாதர் ஒரு திருப்புகழும்,
வடலூர் இராமலிங்க வள்ளலார் 10 பாடல் களும் பாடியுள்ளனர்.
 

கார்த்திகை 2011
பெளர்ணமி தோறும் இத்தலத்தை வழி படுவோருக்கு எல்லா நலமும் சேரும்.
5. வேண்டியதைத் தரும் திருவேற்காடு
திருவேற்காடு என்றதுமே கருமாரியம்மன் ஆலயம்தான் கண்ணில் தெரியும். ஆனால் இக்கோயிலில் பிற்காலத்தில் எழுந்து பெருமை சுமந்து நிற்கிறது. 1300 ஆண்டுப் பழையைச் சுமந்து நிற்கும் சிவன் திருக்கோயிலோ கருமாரியம்மன் கோயிலுக்குப் பின்னால் மறைந்து நிற்கிறது.
வடவேதாரணியம், வேற்காடு, வேலங் காடு, விஷம் தீண்டரப்பதி என்றெல்லாம் பெருமையுடன் பேசப்படும் இத்தலத்தின் இறைவன் வேதபுரீசர், இறைவி பாலாம்பிகை வேற்கண்ணியம்மை. அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய தலம். இலிங்கத்திற்குப் பின்னால் சிவனும், பார்வதியும் திருமணக் கோலத்தில் இங்கும் காட்சி தருவது எங்கும் காண இயலாத அருங்காட்சியாகும்.
திருஞானசம்பந்தர் 11 பாடல்களைப் பாடி யுள்ளார். மூர்க்கநாயனார் சிவனை வழிபட்டுத் தரிசித்த தலம். அருணகிரிநாதர் இரு திருப் புகழால் இங்கு முருகனைப் போற்றியுள்ளார்.
வேலாயுதர் தீர்த்தமும், தல விருட்சம் வெள்வேல மரமும் இங்குள்ளன.
இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டு கோயிலின் பெருமையைக் கூறுகிறது. குமரக் கடவுள் வெள்வேல மரத்தின் கீழ் சிவனைப் பூசித்த சிறப்புக்குரிய தலம் இது.
37:-

Page 40
கோபுரம்
6. வரந்தரும் வடதிருமுல்லை வாயில்
தொண்டைமான் பகைவருககு அஞ்சி பின்வாங்கிட, அவனது யானை, காலில் சிக்கிய முல்லைக்கொடியை வெட்டவெட்ட அதன்கீழ் சுயம்புலிங்கமாய் மாசிலாமணிசுவரர் வெளிப் பட்டார். நந்திதேவரைப் போருக்கு அனுப்பி வெற்றியும் தந்தார். இக்கோயிலில் நந்தி திரும்பிய நிலையில் உள்ளதும் சந்நதியில் 1 1 9 9 9 u IJLb, 2% 9||ọ சுற்றளவில் உள்ள, இரு எருக்கம் தூண்களும் கண்டு போற்றத் தக்கவை. மூலவர் சிவனுக்கு அபிஷேகம் இல்லை, ஆண்டுக்கு ஒருமுறை சித்திரைச் சதயத்தில் சந்தனக் காப்பு மட்டும் செய்வர்.
அம்பிகை கொடியிடை நாயகி கிரியா சத்தி தரும் தேவியாவார். மீஞ்சூருக்கு அருகிலுள்ள வேலூர் திருவுடையம்மன் இச்சா சக்தி தெய்வமாகவும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஞானசக்தி தெய்வமாகவும்,
அருமறையோனே! உனக்கே தலைப்படுவேனாக புதிதாக வியாபாரம் செய்யத் தொ உள்ள பழைய லாப நஷ்டக் கணக்ை புதுக்கணக்தைத் தொடங்குகிறான்.
ஆத்மசாதகனும் உலக வாழ்வில் 6 அப்படியே ஒதுக்கித் தள்ளி விடவேண்டு வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
அடித்தானும் நீயே அனைத் பிடித்தேன் உன் பைாற்பாதப்
 
 
 
 
 
 
 
 
 

கார்த்திகை 2011
மூன்று சக்திகளாக ஒரே சிற்பி செய்த திருவுரு வங்களாக உள்ளன. பெளர்ணமி வெள்ளி யன்று மூன்று சக்தி அம்மன்களையும் வழிபட் டால் மும்மடங்கு பலம் பெறலாம்.
சுந்தரர் 11 பாடல்களாலும் அருணகிரி நாதர் 3 திருப்புகழாலும் வடலூர் இராமலிங்க வள்ளலார் 11 பாடல்களாலும் இத்திருக்கோயி லைப் போற்றியுள்ளனர்.
இத்திருக்கோயிலில் பாதரசலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரம்ம தீர்த் தக் குளமும் தல விருட்சமுமாகிய முல்லைக் கொடியும் இங்கு சிறப்பாகும்.
திருமயிலை மகாவித்துவான் சண்முகம் பிள்ளை பாடிய தலப்புராணமும் சிவஞான முனிவர் பாடிய அந்தாதியும் சிறப்புடையதாகும்.
ற்ற பெருவாழ்வு வாழ நான்
பங்குபவன் முந்தைய வியாபாரத்தில்
க அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு
ற்பட்ட இனிய துன்ப அனுபவங்களை
ம். இறைவனின் இச்சைப்படி வாழும்

Page 41
பகைவனுக்
(அயோத்தி மாநகரில் வைணவத் துறவி ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம், சரயு நதியைக் கடந்து வேறு ஓர் இடத்திற்குப் போக வேண்டியிருந்தது. அது மழைக்காலம் வானத் தில் கரிய மேகங்கள் சூழ்ந்து மூட்டம் கண்டி ருந்தது. மழை எந்தச் சமயத்திலும் வந்துவிடும் போல இருந்தது. -
நதிக்கரையை நோக்கி நடந்தார். நதியில்,
ஆகவே, துறவி வெகு வேகமாக சரயு
சமீபத்தில் பெய்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு மிகுதியாக இருந்தது.
துறவி ஆற்றங்கரைக்கு வந்த சமயம், அங்கே ஒரேயொரு படகு இருந்ததைக் கண் டார். அதுவும் புறப்படும் தறுவாயில் இருந்தது. படகில், பணமும் பணபலமும் நிறைந்த மக்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்கள் துறவியைக் கண்டதும், அவரைத் தங்களுடன் படகில் பிரயாணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று நினைத் தனர். அத்தோடு துறவியைப் பற்றியும் அவரது உடையைப் பற்றியும் கேலியாகவும் பேசிச் சிரித்தனர்.
படகில் இருந்தவர்கள் அனைவரும் துறவியை நோக்கி, “இங்கே படகில் இடமே யில்லை. நாங்களே நெருக்கமாகத்தான் உட் கார்ந்து இருக்கிறோம். நீங்கள் வேண்டுமானால் அடுத்த படகில் வா’ என்று ஏகோபித்துக் கூவினர். அவர்களுக்கு துறவியை தங்களுடன் அழைத்துச் செல்லும் விருப்பம் இல்லை. ஆனால் அதைத் துறவியிடம் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகக் கூறினர்.
 
 

கருள்வாய்!
அப்போது மாலை சாய்ந்து இருள் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தப் படகைத் தவற விட்டால் அடுத்த படகு கிடைக்குமா என்று சந்தேகம், ஏனென்றால் காற்றும் வெள்ளமும் பலமாக இருக்கும் அந்த வேளையில்
படகுக்காரர் யாரும் அந்தப் படகை ஓட்ட முன் வரமாட்டார்கள். இரவில் வேறு படகு கிடைப் பதற்கு வழியில்லை என்பதை சந்நியாசி உணர்ந்தார். ஆதலால் அவர் அதே படகில் ஏறி ஆற்றைக் கடக்க நினைத்தார்.
அவர் படகுக்காரனிடம் தன்னையும் படகில் ஏற்றிச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். படகுக்காரனுக்கும் நிலைமை புரிந்தது. அவன் சில விநாடி யோசித்துவிட்டு 'நீங்கள் படகில் ஏறிக் கொள்ளுங்கள்’ என்று சொன்னான். பிறகு அவன் படகின் ஒரு முனை யில் ஒதுக்கித் துறவி உட்கார வழி செய்தான்.
படகில் இருந்தவர்கள் துறவி படகில் ஏறாமல் இருப்பதற்காக ஏதேதோ காரணங் களைச் சொல்லியும் தடுத்தும் பார்த்தன்ர். ஆனால் தெய்வச் செயலாக அவர்களுடைய முயற்சி எதுவும் பலிக்கவில்லை. துறவி மக்களுடைய தடைகளைப் பொருட்படுத்தாத வராகப் படகில் சென்று உட்கார்ந்தார். அவருடைய உதடுகள் பகவானின் திரு நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தனர்.
துறவிக்குப் படகிலே இடம் கொடுக்கக் கூடாது என நினைத்த மக்கள் பெரிதும் ஏமாற்ற மடைந்தனர். அவர் படகில் உட்கார்ந்து இருந் ததை வெறுக்கும் வகையில் அவர்களுடைய முகங்கள் மிகவும் அழகாக இருந்தன! தாங்கள் இவ்வளவு செர்ல் லியும் இந்த 9:-

Page 42
கோபுரம்
ஆண்டிப் பரதேசி படகில் ஏறிவிட்டானே! என்று அவர்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அத்தோடு "சரிசரி நாங்கள் இவ்வளவு சொல்லி யும் கேட்காமல் நீ படகிலே இடம்பிடித்துக் கொண்டாயா? போகட்டும். உனக்குப் புத்தி வரும் வகையில் சரியான பாடம் கற்பிக் கிறோம் என்று மனதிற்குள்ளாகவே கருவிக் கொண்டார்கள்.
துறவி படகின் ஒரு மூலையில் அமைதி யாக உட்கார்ந்திருந்தார். அப்போது அவருக்குத் துன்பம் தரும் வகையில் படகில் இருந்தவர்கள் ஏதேதோ சொல்லவும் செய்யவும் செய்தனர்.
துறவிக்கு அந்த மக்கள்மீது எந்தவித வெறுப்பும் இல்லை. மற்றவர்களைக் கோபிப்பது, வெறுப்பது என்பதெல்லாம் படகில் இருந்த துறவிக்குத் தெரியவே தெரியாத விஷயங்கள். மனதால் கூட மற்றவர்களுக்கு தீமை நினைப்பது என்பது அவருடைய அகராதி யிலேயே கிடையாது. அவர் மக்கள் தம்மை வாயில் வந்தபடியெல்லாம் தூற்றியதை உணர்ந்தவராகவே தெரியவில்லை.
படகில் உட்கார்ந்த துறவி தன் இரத்தத் திலேயே ஊறிய தமது இயல்பின்படி கண்களை மூடி ஆண்டவனின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குள்ளாகவே அவர் புறவுலக நினைவை இழந்து ஆழ்ந்த தியானத்தில் அமிழ்ந்து போனார். ஆகவே மற்றவர்கள் தம்மைப் பற்றிப் பேசும் கேலிப் பேச்சுக்களைக் கவனிக்க இயலாத நிலையில் இருந்தார்.
நடு ஆற்றிலே படகு போய்க்கொண்டிருந் தது கடுமையாகக் காற்று வீசியது, பிர யாணிகள் துறவியைக் கேலி செய்யும்

கார்த்திகை 2011
கைங்கரிய' த்தைத் தொடர்ந்து கொண்டிருந் தனர். வெளியுலக நினைவு இல் லாத துறவியோ அமைதியாக இருந்தார்.
துறவியின் மெளனம் படகில் இருந்தவர் களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்துவதாக அமைந்தது. சிலர் ஆற்றுநீரை கைகளால் வாரி துறவியின் முகத்தில் அடித்தனர். துறவி முழுக்க முழுக்க நனைந்துவிட்டார். அப்போது கூட தியானத்தில் இருந்த அவரிடம் எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. துறவி கண் களையும் திறவாமலே பகவானின் நினைவில் தேய்ந்திருந்தார். இதைக் கண்டதும் மக்களின் கோபம் அதிகமாகியது. ஒரு போக்கிரி ஆத் திரத்துடன் துறவியின் கழுத்தில் ஓங்கியடித் தான். அதைத் தொடர்ந்து பலரும் துறவியை அடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் உடல் நினைவு அறவே இல்லாததனால் துறவி மற்றவர்கள் தன்னை துன்புறுத்துவதை உணராமல் இருந்தார்.
'தண்ணிரை மேலே இறைத்தாலும் கண்களைத் திறக்கவில்லை. அடித்தாலும் அசையவில்லை. இனிமேல் இந்தத் துறவியை ஆற்றிலே பிடித்துத் தள்ளி மூழ்கச் செய்ய வேண்டியதுதான் என்று படகில் இருந்த மக்கள் முடிவு செய்தார்கள். அந்த முடிவுக்கு வந்த வுடன் அனைவருமாகச் சேர்ந்து துறவியை அசைத்து ஆற்றிலே தள்ள முயன்றனர்.
உண்மையான சாதுக்கள் எப்போதுமே பொறுமையின் கடலாக விளங்குவார்கள். மனித குலத்தின் வரலாறு முழுவதிலும் நாம் இதைப் பார்க்கிறோம்.
ஆனால் தன் அன்பிற்குரிய பக்தனுக்கு மக்கள் விளைவித்த துன்பங்களை அதற்கு
40:-

Page 43
கோபுரம்
மேலும் ஆண்டவன் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. துறவியை மக்கள் ஆற் றிலே தள்ள இருந்த சமயத்தில், வானத்தில் அசரீரியாக ஆண்டவனின் குர்ல் முழங்கியது. 'ஒ சாதுவே நீங்கள் ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். நீங்கள் அனுமதித்தால் இந்தக் கொடியவர்களை இந்த வினாடியே ஆற்றில் மூழ்கிச் சிதறச்செய்கிறேன்.”
படகில் இருந்தவர்கள் அத்தனை பேருமே இடியைப் போல முழங்கிய அசரீரியின் குரலைக் கேட்டு நடுங்க ஆரம்பித்தார்கள். பயத்தால் அவர்களுடைய இரத்தம் உறைந் தது போல ஆகிவிட்டது. முகங்க ளெல்லாம் சிவந்துவிட்டன. துறவியை அதிக அளவில் துன்புறுத்தியவர்கள் பரிதாபமாக விழித்தார்கள். சிலர் பயத்தினால் ஆடாமல் அசையாமல் கற்சிலையைப் போலக் கிடந்தார்கள். சிலருக்கு அடிவயிற்றைக் கலக்கியது. சிலரால் பயம் காரணமாகச் சரியாக மூச்சுக்கூட விடமுடிய வில்லை.
அசரீரியின் குரலைக் கேட்டதனால், அந்த சமயத்தில் துறவிக்குப் புறவுலக நினைவு திரும்பியது. தியானம் கலைந்த துறவிக்குப் படகில் இருந்தவர்களின் நிலைமை புரிந்தது.
萨学学拳拳拳拳学拳拳学学学学学学学学学学学学 *R
藻
激 স্বাক্ষ 器 e e e
நிர்க்குணப் பிரம்மமே உன்னுள் என்
R R
装 இறைவனை அடையவிடாமல் ஜீவர்கை எல்லைக்குள் நுழைந்துவிட்டால் மாயை அந்நிலையில் இறைவன் மாயையைத் த
葛 s s
யார் ஏன்னையே சரனடைகிறார்களே 孪
盛 ബ
இந்த மாயையைக் கடக்கிறார்கள் 藻、
 
 

கார்த்திகை 2011
மறுவினாடியே அவர் ஆண்டவனை நினைத்துக் கைகளைக் கூப்பி வணங்கியபடி, ' எனது அன்புக்கு உகந்த கருணைத் தெய்வமே இந்த மக்களும் உன் குழந்தைகளே அல்லவா? நீங்களே இவர்களை மன்னித்து அருள் புரியவில்லையானால், வேறு யார் அவ்விதம் செய்யப்போகிறார்கள்? அவர்கள் தாங்கள் யார் என்பதையும், இன்னதுதான் செய்கிறோம் என்பதையும் அறியாமல் இருக்கிறார்கள். என் தெய்வமே! தங்களுக்கு என்மீது உள்ள அன்பின் பெயரால், என் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து உங்களுடைய இந்தக் குழந்தை களை மன்னித்துத் திருவருள் புரியவேண்டு கிறேன். இவர்களுடைய பயத்தைப் போக்கி அருள்வீராக! இவர்களுக்கு அமைதி தரு வீராக! தங்களின் அன்புச் செல்வங்களாக இவர்கள் அனைவரையும் கருணைகூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். இவர்களுக்குத் தங்கள் தாமரைத் திருவடிகளில் மனப் பூர்வமாகப் பக்தி உண்டாகச் செய்யுங்கள்” என்று உள்ளம் நெகிழப் பிரார்த்தித்தார்.
ஆண்டவன் துறவியின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்தார். துன்பம் விளைவித்தவர்கள் சான்றோர்களாகத் திருந்தப் பெற்றுச் சிறந்த பக்தர்களானார்கள்.
*幾
姥 6Ol
னை ஒடுங்கச் செய்வாயாக! 器 菇 மயக்குவதே மாயையின் வேலை. இறைவனது ால் நம்மைத் தொடமுடியாது.
※
னது காலால் உதைத்துத் தள்ளிவிடுவான்.
ബസ്ക്
- கீதையில் ரு கிருஷ்ணர் :
惠 &#############************* ##
41:-

Page 44
கந்தட
வேதத்திலே உள்ள நுண்பொருட் களைப் பூதக் கண்ணாடிபோல் விரிவுபடுத்தி விளக்குவது புராணம். புராணம் என்ற சொல் லுக்குப் பழமை என்பது பொருள்.
புராணங்கள் இனிய அறங்களை விரித்துக் கூறும் புனிதமுடையன. புராணங்கள் பதினெட்டு, சிவபுராணம் பத்து, விஷ்ணுபுராணம் நான்கு, பிரம புராணம் இரண்டு, சூரிய புராணம் ஒன்று, அக்கினி புராணம் ஒன்று.
பதினென்புராணங்களின் கிரந்த எண் நான்கு இலட்சம். இதில் கந்தபுராணம் மட்டும் ஓர் இலட்சம் கிரந்தம் உடையது. ஏனைய பதினேழு புராணங்களும் மூன்று இலட்சம் கிரந்தம் உடையவை.
சிவபுராணம் பத்து. இவற்றுள் தலைசிறந் தது கந்தபுராணம். இம்மகாபுராணம் சனற்குமார சங்கிதை, சூதசங்கிதை, பிரமசங்கிதை, விஷ்ணு சங்கிதை, சங்கர சங்கிதை, சூரசங்கிதை என ஆறு பிரிவுகளுடன் கூடியது. இவை முறையே ஐம்பத்தையாயிரம், ஆறாயிரம், மூவாயிரம், முப்பதினாயிரம், ஆயிரம் சுலோங்களையுடையன.
இவற்றுள் சங்கர சங்கிதை பன்னிரண்டு கண்டங்களையுடையது. இதில் சிவரகசி கண்டம் ஏழு காண்டங்களையுடையது. பதின் மூவாயிரம் கிரந்தங்களைக் கொண்டது. இந்த சிவரகசிய காண்டம், சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம், உபதேச காண்டம் என ஏழு காண்டங்களைக் கொண்டது. இவற்றுள் முதல் ஆறு காண்டங்களைத் தமிழில் காஞ்சிபுரம் கச்சியப்பசிவாசாரிய சுவாமிகள்

IIGOOTib
ഗ്ഗ } .ܪܲܥ கின் * : e تعلیم } ;" الأع இதிருச்சூ ჩრტიíრjრმეტყaíრჩეMgf ஜதிருச்ருதிதானந்திரி
3.
×
குமரகோட்டத்துப் பெருமான் திருவருளால் பாடியருளினார். ஏழாவது உபதேச காண்டத் தைக் குகனேரியப்ப நாவலர் பாடினார்.
கந்தன் என்ற சொல் பகைவருடைய பராக்கிரமத்தை வற்றச் செய்கின்றவன் என்ற பொருளைத் தரும் என்று வடமொழி நிகண்டு கூறுகின்றது. ' சத்ரூன் சோஷயதி இதி ஸ்கந்த கந்தன் - ஆறு திருமேனிகள் ஒன்று கூடினவன் என்றும் பொருள்படும். கந்து - யானை கட்டுந்தறி, அன் - ஆண்பால் ஒருமை விகுதி, ஆன்மாக்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பவன் என்று பொருள்.
கந்தனுடைய புராணம் கந்தபுராணம். “கந்த புராணத்தில் இல்லாத பொருள் எந்தப் புராணத்திலும் இல்லை” என்று ஒரு பழமொழி யுண்டு. இதனை, பொருள் என்ற சொல்லை மாற்றி வேறுவகையாகப் பிதற்றுபவரும் உண்டு.
சைவ சித்தாந்தத்தை சூரபன்மனுக்குக் காசியர் கூறும் இடத்திலும், ஏகான்மவாதமாகிய மதத்தைச் சுக்கிரர் அவனுக்குக் கூறும் இடத்திலும் (உன்னை நீ பிரமமென்றே தெற் றெனத் தெளிதி) உலகாயத மதத்தை வியாழ பகவான் இந்திரனுக்குக் கூறும் இடத்திலும், சிவபரத்துவத்தைத் ததிசி யுத்தரப் படலத்திலும், பிறபொருள்களை ஆங்காங்கும் காணலாம்.
மேலும், கச்சியப்பர் சிறந்த வேதாகம விற்பன்னர். அவருக்கு நாயன்மார்களிடம் அதிக பற்று என்பதை, நாட்டுப் படலத்தில், நந்திமலையில் மேகம் மழைபொழிவதை, 2:-

Page 45
கோபுரம்
கண்ணப்ப நாயனார் வாயிலிருந்து மஞ்சனம் புரிவதுபோல் காட்சி தருகின்றது என்றும், பாலாற்றில் மீன்கள் எதிரேறி நீந்துவது, திருஞானசம்பந்தருடைய திருஏடு வைகை நதியில் எதிரேறியதை நிகர்க்கும் என்றும் கூறுவதனால் அறிக.
குளங்களில் குவளை மலர்கள் பூத்திருக் கின்றன. இவற்றைக் கண்டால் ஏனைய புலவர்க்கு வெறும் அழகும் கற்பனையுந்தான் தோன்றும். கச்சியப்பர் அதனைக் கண்ணுற்றார். திருவாரூரில் நமிநந்தியடிகள் நாயனார் தண்ணிரை வார்த்து விளக்குகளை ஏற்றியது போல் காட்சி தருகின்றன என்று அவர் கூறு கின்ற அழகு வேறு எந்தப் புலவரும் எந்தப் புராணத்திலும் கூறவில்லை.
"பாட்டியல் அளிமுதல் பதுமக் கோயிலில் நாட்டிய நிமலன்முன் நந்தி நீரிடை மாட்டிய பல்பெருஞ் சுடரை மானுமால் கோட்டுயர் தடந்தொறும் குவளை பூத்தவே"
- நாட்டுப்படலம்
" ஆரூர் நறுமலர்நாதன்
அடித்தொண்டன் நமிநந்தி நீரால் விளக்கிட்டமை நீனா டறியுமன்றே" - அப்பர்
விளக்கின் நீர்போல் குளமும், அதில் எரிகின்ற சுடர்போல் மலரும் காட்சி தருகின்றன கச்சியப்பருக்கு. அவருடைய பரந்த அறிவும் சிறந்த பக்தியும் இதனால் நன்கு புலப்படுகின்றன.
நன்றி மறந்தால் வரும் பெருங்கேடு, எல்லாவற்றையும் அழிக்கும் என்ற ஒரு சிறந்த அறத்தை இப்புராணம் வற்புறுத்துகின்றது. சூரபன்மன் தனக்கு வரந்தந்து வாழ்வு தந்த சிவபெருமானுடைய திருக்குமாரரை வணங்கி நன்றி பாராட்டாது அழிந்து ஒழிந்தான்.
மேலும் சிவமூர்த்தியே குகமூர்த்தி. சிவன் வேறு முருகன் வேறு அன்று. மணியும் ஒளியும் போல் ஒன்றென அறிக. இதனை அறியாது கெட்டான் சூரபன்மன். அவன்புரிந்த இப் பாவத்தை மற்றவர்கள் புரியக்கூடாது.

கார்த்திகை 2011
சிவத் துரோகிகளுடன் கூடினால் வரும் பெருந் துன்பத்தை இனிது எடுத்து விளக்குவது இப்புராணம், சிவநிந்தை புரிந்த தக்கனுடன் கூடிய அமரர் அஸ்வதி பாதகத்தின் பயனாக நூற் றெட்டு யுகம் சூரனால் துன்புற்றார்கள். ஆகவே தெய்வ நிந்தை புரிவோருடன் கூடுதல் கூடாது.
கந்தபுராணம் ஒரு பெரிய ஞான நூல். காவிய இலக்கணங்கள் யாவும் பொருந்தியது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கை யும் விளக்கி அவற்றைப் பெறும் வழிவகை களையும் வகுத்துக் கூறுவது இச்சிவநூல்.
"பிறையணி சடைமுடிப் பிரான்றன் காதைகள்
இறையுமோர் மறுவில யாவு மேன்மையே மறைபல சான்றுகள் வாய்மையே அவை அறிஞர்கள் நாடியே அவற்றைக் காண்கவே என்று கச்சியப்பர் கூறியதனாலும் அறிக.
கந்த புராணத்தின் பாடல்கள் மிகுந்த சுவையுடன் கூடியவை. ஒதுந் தோறும் உவகைத் தேனைச் சொரியும் உயர்ந்த நடை யுடையவை. அருள் வெள்ளம் போன்றவை. - “ஒளரிலான் குணங்குறியிலான்
செயலிலான் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான்
பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான்
மேலிலான் தனக்கோர் நேரிலான் உயிர்க் கடவுளாய்
என்னுள்ளே நின்றான்” என்ற இத்திருப்பாடலைப் பல முறையும் படியுங்கள். பொருளழகு, நடையழகு, தொடை யழகு, சொல்லினிமை முதலிய எல்லா நலங் களுக்கும் ஒரு கருவூலமாய் இருப்பதை அறியலாம்.
இத்தகைய தீந்தமிழ்ப் பாடல்கள் பலவும் அமைந்த பரந்த சிறந்த புராணம் கந்தபுராணம். இதனை ஒதுவோரும், செவிமடுப்போரும் எல்லா நலன்களையும் எளிதில் பெற்று இன்புறுவார்கள். 3:-

Page 46
திரு
60)őfos LDuló தனி னவர்களுக்கு வழங்கியுள்ள மிக உயர்ந்ததும் மிக எளிமையானதும் ஆன பொதுக் கொடை திருநீறு. சமஸ்கிருதத்தில் இதன் பெயர் விபூதி. இதன் பொருள் விலை மதிப்பற்ற செல்வம் அல்லது அமாநுவழிக ஆற்றல் என்பதாம். இறைவன் கருணையாகிய பராசக்தியின் வடிவம் இதுவாதலின் இது நமக்கு உயர் பெருங் கொடையாகவுள்ளது. எங்கும் எப்போதும் ஒன்றுங் கொடுக்காமலே இலகுவிற் பெறக்கூடியதாயிருத்தலின் இது எளிமை யானது. சைவசமயத்தவர் என்றுள்ள ஒவ் வொருவரும் தராதர வேறுபாடின்றித் தம் உடைமையாகக் கொள்ளுதற்குரிய தாகலின் இது அனைவருக்கும் பொதுவுடைமையாய் உள்ளது. இதனை ஏற்று அணிந்து கொள்ளாத எவருஞ் சைவர் ஆகார்.
அகஸ்தியர் தேவாரத் திரட்டு என்ற நூல் இருபத்தைந்து தேவாரப் பதிகங்களைக் கொண் டுள்ளது. ஒவ்வோர் பதிகத்தினதும் கருத்துப் பொருள் பெயரறியப்படாத முனிவர் ஒருவர் இயற்றிய பாடலொன்றிற் கொடுக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகமும் இவ்விருபத்தைந்தில் ஒன்று. இதன் கருத்துப் பொருளாக அவர் குறிப்பிடுவது நீற்றுப் பதிகம் நிகழ்த்துங்காலை மாற்றுப் பரையின் வரலாறா கும் என்பதாகும். மாற்றுப்பரை - பராசக்தி. இப்பதிகத்திலிருந்து திருநீறு பராசக்தியின் வரலாறு என்பதைக் கண்டறிய ரிஷி ஒருவர் வேண்டியதில்லை எனல் குறிப்பிடத்தகும்.
சம்பந்தர் இப்பதிகத்தில் திருநீற்றின் சிறப்பியல்புகளாக ஐம்பத்து நான் கைக்
- 4

நீறு
குறிப்பிடுகிறார். அவற்றில் அதிகப் பாங் கானவை சிவசக்தியின் குணங்களாகும். சம்பந்தர் திருநீற்றை மந்திரமாக இனங் கண்டுள்ளார். சித்தியார் 1-58 இற் கூறப் பட்டுள்ளதற்கிணங்க மந்திரத்தைச் சிவசக்தி தானே பிரேரித்துத் தானே அதிட்டித்துக் கொண்டிருக்கிறது. அதாவது அதனைத் தனது பூரண கட்டுப்பாட்டில் அல்லது செல்வாக்கில் இயங்க வைத்திருக்கின்றது என அறியப்படும். ‘முத்தி தருவது நீறு, போதந் தருவது நீறு என்பனவும் நோக்கத்தகும். முத்தி - வீடுபேறு: போதம் - ஞானம். இரண்டுஞ் சிவசக்தி ஒன்றானன்றி வழங்கப்படுமாறில்லை.
ஆகையால், நாம் திருநீறணிகிறோம் எனில் சிவனருளாகிய சிவசக்தியை அணி கிறோம் என்பதே அதன் தாற்பரியமாகும். எங்கள் நெற்றி முதலாம் உறுப்புகளில் நாங்கள் திருநீறு அணிதலால் அவ்வுறுப்புகள் சிவசக்தி உறையும் பரிசுத்த நிலையங் களாகின்றன. திருநீற்றை அணிகையில் ‘சிவ சிவ' என்ற மகா மந்திரத்தை உச்சரிக்கிறோம். இம்மந்திரம் திருநீற்றிற் பிரசன்னமாம்படி சிவசக்தியை வரவழைக்கும் ஆவாஹன மந்திரம் ஆகிறது. இங்கு சக்தி பிரசன்னமாதல் என்பது தயிரில் நெய் போல நீற்றில் விளங்கித் தோன்றுதல் என்றதாம். நாம் விபூதி அணியும் இடங்களில் நெற்றி நமது சிந்தனைகளுக்கிடம்: நெஞ்சு நமது உணர்வுகளுக்கிடம், நாங்கள் சரியான முறையில் விபூதி அணிதலால் நமது சிந்தனைகளும், உணர்வுகளும் சரியான வழியில் எழுமாறு தூண்டப்படுகின்றன.
சைவானுஷ்டான விதிப்படி திருநீறணிதல் அதில் சிவசக்தி பிரசன்னமாதற்குதவுகின்றது.
44:-

Page 47
கோபுரம்
அத்துடன் திருநீறே சிவசக்தி என்ற ஒருமைப் பாட்டை உறுதி செய்யும் நடைமுறையுமா கின்றது. சைவானுஷ்டான நடைமுறை அமை வில் திருநீறு சம்பந்தமான அம்சங்கள் ஆவன:
1. கையிற்கொண்ட திருநீற்றைப் பார்த்த வண்ணம் அதன் மேற் செறியுமாறு சங்கிதா மந்திரம் பதினொன்றும் உச்சரிக் கப்படுதலால் அம்மந்திரங்களிற் செறிவா யுள்ள மந்திர சக்தி திருநீற்றில், விசேட மாகப் பிரசன்னமாதல்.
2. மந்திர பாவனைகளாற் புனிதமாக்கப்பட்ட நீரை ஒரு மந்திர உச்சாணத்துடன் திரு நீற்றில் தெளித்து மற்றொரு மந்திரோச் சாரணத்துடன் குழைத்தல்.
3. குழைக்கப்பட்ட விபூதி உச்சி, நெற்றி, நெஞ்சு, தொப்புழ் என்பவற்றிலும் மற்று முள்ள உடற்பகுதிகளிலும் பிரம மந்திர உச்சாரணத்துடன் அணியப்படுதல். இப் பிரமமந்திரம் ஐந்திலும் பிரச்சன்னமா யிருக்குஞ் சிவசக்தி முறையே சிவானந்தம் வழங்கல், ஆணவ மலத்தை அமுக்கல், பிறப்பொழிவில் இளைப்பாற வைத்தல், காத்தல், படைத்தல் நிலைகளை நிர்வகித் திருப்பதாகும்.
4. குழைத்த விபூதியின் எச்ச சொச்சமாகக் கையில் ஒட்டியிருக்கக் கூடியதை மேலும் நீர்விட்டுக் கரைத்துப் பிரமமந்திரங்கள் ஐந்தையும் அதில் அழுத்திச் சிரசில் தெளித்தல்.
இவ்வனுட்டான விதிமுறையில் விபூதி முக்குறியாக அணியப்படுகிறது. இம்மூன்றும் முறையே கிரியா சக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி
-: 4

கார்த்திகை 2011
களைக் குறிக்கும். இச்சக்திகள் பராசக்தியின் அம்சங்கள் (காலாக்னிருத்திர உபநிஷத் 7-9) ஆகையால், திருநீற்றை நாம் சரியான முறையில் சரியான உட்பொருள் விளக்க உணர்வுடன் அநுட்டான விதப்பிரகாரம் அணி வோமானால் நமக்குள்ள இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி மூன்றும் தூய்மையுற்று உயர்நிலை பெறும். தவறான விருப்பங்கள் அல்லது எண்ணங்கள் நம்மில் தோன்றாமல் தடுக்கப்படும். பராசக்தி முன்னிலையில் நாமு ளோம் என்ற நமது பிரக்ஞையானது பெருந் தன்மையான தூய உணர்வுகளுக்கு மட்டுமே இடங்கொடுப்பதாயிருக்கும். நமது அன்னை உமாதேவி நம்மிற் பிரசன்னமாயிருப்பதாக உணர்வோம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மைத் தவறான செயலொன்றிற் செலுத்தச் சதியா லோசனை பண்ணுமாயினும் நம்மிற் சிவசக்தி பிரசன்னமாயுளதென்னும் நினைவெழுந்து ஆற்றலுடன் அச்சதியை எதிர்த்து அதனால் நாம் ஆளப்படும் நிலைக்கெதிர் அவற்றினை நாம் ஆளும் நிலையினை ஏற்படுத்தும். அங்ங்ணம் பராசக்தி இடங்கொள்ளும் புனித சிலையாயிருக்கும் நாம் எங்ங்ணம் தவறானதும் மடத்தனமானதுமான செயலொன்றில் ஈடுபடும் நிலைக்கு இறங்க முடியும்? இந்த இழிதரச் செயல் நமக்குச் சில உலகப் பேறுகளை ஆக்கலாம். ஆனால், நாம் இழிதரமான இப்பேற்றுக்காக நம்மிற் பதிந்திருக்குஞ் சிவசக்தியை அவமதித்தலாகாது என அவ் வேளை நம்பாட்டுக்கே சொல்லிக் கொள்கிறோம்.
சிவலிங்கமொன்றுக்கு அல்லது ஒரு தெய்வத்துக்கு அபிஷேகிக்கப்படும்போது திருநீற்றின் தெய்வீக விளக்கம் இன்னும் அதிகமாகப் பேசப்படுகின்றது. மெய்ஞ்ஞானி களின் கையால் வழங்கப்படுந் திருநீற்றுக்கும் இத்தகு மகிமை உளதாதல் உண்மையாகும்.
D

Page 48
கோபுரம்
திலகவதி அம்மையார் கையால் அப்பர் சுவாமிகளான மருணிக் கி யாருக்கு வழங்கப்பட்ட விபூதி அவர்பாங் செயற்பாடற்றுக் கிடந்த சிவ அன்பை உணர்ச்சி வசப்பட்ட வேகம்மிக்க அன்பாக மூண்டெழச் செய்திருக் கின்றது. பக்தி ஞானவான்களா யிருந்த 26)u பூசகர் கையால் வழிபடுவோர் விபூதி பெற்றுக் - கொள்ள ஆவல் கொண்டிருந்த காலமும் ஒன்றிருந்ததுண்டு.
நமது சமயாசாரியர் ஒவ்வொருவருமே திருநீற்றின் மகிமையைப் போற்றிப்பாடி அதனைப் பக்தி பூர்வமாக ஏற்றணியும்படி நம்மை உற்சாகப்படுத்தியுள்ளார்கள். ‘பூசில் தான் திருநீறே நிறையப் பூசி” - என மாணிக்க வாசகர் கூறுகிறார். இங்ங்ணம் நிறைய - நிறை வாகப் பூசுதல் பராசக்தியால் நமக்குள்ள உண்மையன்பைப் பிரதிபலிப்பதாகும். இதனை வெளிக்கச் செழிக்கப் பூசாதிருப்பது இதன் மேலுள்ள வேண்டா வெறுப்பு நிலையைக் காட்டுவதாகும். இதற்கு மரியாதை கொடாமை யைத் தெரிவிப்பதாகும். இது பராசக்தியின் இருப்பிடமென்பதை அறியாத மடமையுமாகும்.
திரபுரதகனம் செய்தவனே எனது கல்: பணம், பதவி இவற்றினால் உண் போனவுடனேயே மறைந்துவிடும்.
ஆனால் நான் பல சாஸ்திரங்கள் செய்தவன் என்று கல்வியறிவின் மூ வபருங்கருணையினால் மட்டுமே அழி ஒருவனுக்கு உகைப்பற்று இரு ஞானத்தையோ, மோட்சத்தையே
 
 
 
 
 
 
 
 

கார்த்திகை 2011
‘திருநீறுஞ் சிவாலயமும் உள்ளத்துட் செற்ற புலையர் பாற் செல்லாதே’ - என உமாபதி சிவம் தமது நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார். திருநீற்றுக்கும் சிவாலயத்துக்கும் நெஞ்சில் உரிய இடமளிக்காதோர் தூய்மையற்றோர், பாபகாரிகள் என்பது அவர் கருத்து. மாணிக்க வாசகர் மற்றோரிடத்தில் ‘வெண்ணிறனிகிலாத வரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே என் றருளிச் செய்துள்ளார். பொதுவில் சகலராலும் அஞ்சப்படுதற்குரிய நச்சுப்பாம்பு, கொடிய கூரம்பு என்பதற்குத் தாமஞ்சாராயினும் திருநீறு பூசத் தவறுஞ் சைவர்களைக் காணத் தாம் அஞ்சுவதாக இருக்கிறது அவர் திருவுள்ளம்.
சைவ உலகில் திருநீறு எங்குங் கிடைக் கத்தக்கது. இது எம்மால் வழிபட்டு வரப்பெறும் பசுவின் சாணத்தைச் சுட்டெடுக்கும் நீறாகும். சைவர்கள் குடியிருக்கும் எல்லாவிடங்களிலும் பசுக்கள் உள. இருந்தும், அதிர்ஷ்டவச மாகவோ அல்லது துரதிஷ்ட வசமாகவோ எங்கெங்கும் இது விலைக்கு விற்கப்படும் பொருளாய்விட்டது.
விச் செருக்கை நீயே நாசம் செய்குவாய்
Iடாகும் ஆணவம் அவை நம்மை விட்டுப்
ர் கற்றவன். நிறைய நூல்களை மனனம் ழலம் வரும் அகங்காரம் இறைவனது பும்.
குேம் வரையின் கேவனம் படிப்பு மட்டும் பாதராது. - ருரீராமகிருஷ்ணர்

Page 49
கோயில் ]
“உள்குவார் உள்ளத்தானை
உணர் வெனும் பெருமையானை உள்கினேன் நானுங் காண்பான் உருகினேன் ஊறியூறி எள்கினேன் எந்தைபெம்மான் இருதலை மின்னுகின்ற கொள்ளிமேல் எறும்பெனுள்ளம் எங்ங்னங் கூறுமாறே”
திருமுறை : 4-731
மனித வரலாற்றினை ஆராய்கின்றவர்கள் பல்வகைக்காரணிகளை அடித்தளமாகக் கொண்டு ஆய்வர். பெரும்பாலும் ஆதி நாகரீகங் 5560)6 புவியியல் அமைவினை அடிப்படை யாகக் கொண்டு பொருள் முறை ஊக்கினை மிகைப்படுத்துவர். அவ்வாறாய நோக்கிலேயே வரலாற்றின் படைக்கருவியாக ஆற்றுவெளி நாகரீகம் தோன்றியது.
ஒரு காலகட்ட வளர்ச்சிக்குப் பொருள் ஊக்கு உந்தலாக நிற்பதும், அதே காலத்தில் அவ்வூக்கினின்றும் எழும் நேர்முக மறைமுக எமுச்சிகளும் உந்தலாகி நிற்பதனையும் காணலாம். இவ்வெழுச்சிகளின், வரலாற்றின், சக்திமிகு உந்தலாகி நிற்பது பண்பாடேயாம்.
ஆற்றுவெளி நாகரீகம் ஒரு காலகட்ட வளர்ச்சி. அது இயற்கை தந்த கருவி. ஆற்று வெளிபோல், நமக்கு - தமிழுக்கு - உதவியாய்
நின்றதும் நிற்பதும் கோயில் நாகரீகம். கோயில்
நாகரீகம் மனளழுச்சிகள் உந்தல்களின் பரிண மிப்பு அன்பின் ஐந்தினைத் தான் தமிழர்க்கே கோயில் நாகரீகம் அமைய உதவுகிறது. அந்த அன்பின் ஐந்தினை பதங்கமாகி வேதநெறி

யோடு இயங்கியே சிவநெறி தளைத்தது. அன்பின் ஐந்தொழுத்திணைக்கு ஊர்தியாயது சங்கத்தமிழ். சங்கத்தமிழ் வேறொரு கிளை விட்டு அன்பொடு கூடி, திருவாய்மொழியாய், நெடுமால் நெறியாயிற்று. இவ்விரு நிலைகளும் அன்பின் விளைந்த தேறல்கள். அன்பினில் விளைந்த ஞானிகள் அன்பு வெளியே பக்தி நெறி. பக்தி நெறி தமிழ் நாகரிகத்தின் பழுத்த
LIU 60.
தமிழகத்திலே சங்கத்தமிழ்க் காலத்தின் பின் தலையெடுத்த தமிழ் திருநெறிய தமிழ். திருநெறிய தமிழை ஆற்றல்மிக்க இசைவடி வாக்கி, மக்கள் விரும்பும் உருவம் அளித்தவர் சம்பந்தர். சங்கத்தமிழ் தமிழர்க்கு இலக்கிய அழகியலை மட்டும் தந்ததொன்றன்று. பண் பாட்டு உந்தலின் வலுக்கூடமாயும் அது விளக்கியுள்ளது.
சம்பந்தர் தோற்றத்தோடு வேத நெறியில் ஒரு புரட்சி ஏற்பட்டது. ‘வேதநெறி தழைத் தோங்க” என்று சேக்கிழார் கூறியது வெறும் இலக்கிய அலங்காரமன்று. சிவநெறிய அமைச்சர் ஒருவரின் ஆராய்ச்சி முடிபு அது.
சம்பந்தர்க்கு முன் பரதகண்டத்தில் இருந்த வேதநெறியும் அதன் பல்துறைகளும் தருக்கமும் விசாரணைகளும் மலிந்தவை யாயிருந்தன. அவற்றோடு மாறுபட்ட புறச் சமயங்களும் தருக்கத்தைத் தீட்டுபவையாகவே விளங்கின. தருக்கநெறியும் விசாரணையும்
47:-

Page 50
கோபுரம்
மனிதனின் புத்தியைத் தீட்டி, நுழைபுலத்தை மட்டும் வளம்படுத்துபவையாயின. போருக்கு வாள் தீட்டுவதுபோல், நுண்மதியின் கூர்மையை வாதங்களும் மறுவாதங்களும் இன்னும் விரிவாக்கி, மனிதரிடை கசப்பையே வளர்த்தன.
தருக் கவியலாளரின் மெயப் யியல் ஆராய்ச்சி. முரண்பாட்டை அரண்படுத்தி பகைமை, காழ்ப்பு இரண்டையும் வளர்த்தன. நோக்கரிய நோக்கும் நுணுக்கரிய நுண் ணுணர்வுமான மெய்ப்பொருளை, புலநோக்கும், மதி நோக்கும் உணரவைக்கா. நுண்ணுணர்வு ஒத்துழைக்க வேண்டும்.
ஆளுடைய பிள்ளையார், சிவபாதவிரு
தயர் தவங்கிடந்து பெற்றபிள்ளை, திருநீற்றின் ஒளிவிளங்க வந்த சிவஞானக் கொழுந்து.
நாம் மேலே காட்டிய தேவாரத்தை நோக்குவோம். மெய்மையாம் செம்பொருள் வெறும் புத்தி விடயமன்று. உள்ளத்தில் உள்ள மாகி, உணர்வெனும் பெருமையாகி நிற்பது அது. தருக்கம் அதனைக் காட்டாது. உருக்கந் தான் அதனை உணரவைக்கும். உணர்வு என்பது தனியே சிந்தாத்தின் சிகரம் அன்று, சித்தம், உள்ளம், உடல் ஒருங்கிணைந்து முற் றுயர அறியும் ஒரு செயற்பாடு அது ஒரு முழுமை பற்றுகை அது. புத்தி அறிந்ததை உள்ளம் பற்றி நிற்கும் என்பது என்றும் உறுதியாகாது. அறிவு, ஞானம் என்பது சிவஞானமே. அது தருக்க, அதிபெளதிக அறிவன்று.
சிவஞானம் என்பது சேக்கிழார் கூறியது போன்று,
‘சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவ ஞானம்’ சிவனை எண்ணி எண்ணி உருகுவதே சிவஞானம் என்கின்றார் சேக்கிழார். (திரு.பு: 1978)

கார்த்திகை 2011
ஓரிடத்தில் நாவுக்கரசர் (4-782) “ஞானங் கற்றவர் தங்களோடும் உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்குஞ் சேயனானேன்’ என்கிறார். இங்கு ஞானங் கற்றவர் என்பவர் சிவஞானங் கற்றவர். அவர்களோடு உறவாடுவதால் உணர்வு பெற்றிலேன். இந்த உணர்வுதான் பக்தி. இந்த பக்தியின் முதிர்வுதான் ஞானம். சிவபாத இருதயந்தான் ஞானசம்பந்தம் பெறும்.
தருக்கவழி, அறிவியல்வழி, பெளதிக வதீத, விசாரணை வழி முடிவற்றவை. அவை உண்மை ஞானத்தை தரா. இதையே நம்மாழ்வார்
"குறிக்கோள் ஞானங்களால் எனையுழி செய்த தவமும் சிறிக்கொண்டு இப்பிறப்பே சிலநாளில் எய்தினேன்யான் உறிக்கொண்ட வெண்ணைப்பால் ஒளித்துண்ணுமம் மான்பின் நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயிர்கடிந்தே" என்கிறார்.
ஆளுடைய பிள்ளையாரே, "ஏதுக்களும் எடுத்த
மொழிகளாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்கம் நீங்கள் உறுவீர் மனம் பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்கிர் இறையே வந்த சார்மின்களே”
எனக் கூறுகிறார்.
அனுமானங்கள், உரைகள் இவற்றால் இறைவனை அடையமுடியாது. மனம்பற்றி வாழ் மின் என்கின்றபோது, இடையறாது மனத்தில் அவனை இருத்தி சிந்தித்து அன்பு கொண்டு வாழ்மின் என்பது சம்பந்தர் கருத்து.
48:-

Page 51
கோபுரம்
இவ்வாறாகப் புதிய ஒரு நெறியை. அன்பு நெறியை, பக்தி மார்க்கத்தை சம்பந்தர் தமிழ் மண்ணில் விதைத்தார். சங்கத்தமிழை திரு நெறிய தமிழ் ஆக்கினார். எட்டுத்தொகை, பன்னிரு தொகையாகிப் பதின்னான்கு சாத்திர மாயிற்று.
சம்பந்தரும் ஆழ்வார்களும் உழுது
‘விரும்பெனும் வித்தை வித்தி” இக்கனிவித்த
களத்தில்தான் சங்கரர் தோன்றி ஒப்பற்ற மெய்யியலை விரித்தார் எனும் பக்திமான் களைப் புகழ்ந்தார். தாமே பல பக்திப் பாடல்கள் ஆக்கினார். அவர் பின்வந்த இரா மானுஜர் பக்தியே அடித்தளமாகக் கொண்டு தம் விசுட்டாத்துவத்தை விரித்து விளக்கினார்.
கோயில் நாகரீகம் ஒப்பற்ற அன்புநெறி தந்த நாகரீகம். தமிழ் இனத்துக்கும் தனி உரிமையுடைய ஒன்று மட்டும் அன்று. எத்துணை காலம் செல்லினும் மானுட யாக்கை இருக்கும் வரை. மனிதனை இறைவன்மாட்டு இட்டுச் செல்லும் ஒப்புயர்வற்ற ஒரு தனிநெறி அதுவேயாம். இற்றை நாட்களில் இலங்கை யிலும் இந்தியாவிலும் எத்தனையோ தியான நெறிகள், யோக மார்க்கங்கள், வேதாந்த வகுப்புக்கள் ஒரு நாகரிகமாகத் தோன்றி வளர் கின்றன. இவை சில அடிப்படையில் நம்மைக் கோயில்களில் இருந்தும் பிரித்து விடுவதற்கான முறைகளாக அமைந்து விடுகின்றன. எந்தத் தனிப்பட்ட சுவாமியாரினதும் யோகநெறி, தமிழருக்கே அடிப்படையான பக்தி நெறியில் இருந்து நம்மைப் பிரித்துவிட வழிவிடக்கூடாது. எல்லோருடைய நெறிகளும் நம்மைக் கோயி லோடு பிணைப்பவையாக இருத்தல் வேண்டும். அவற்றைத்தான் நாம் ஏற்க வேண்டும்.
淡淡

கார்த்திகை 2011
கோயில் நாகரிகம் - பக்தி நாகரிகம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிண்ணியவை. வெகுசனத் தொடர்பு போற்றப்படும் காலத்தில் கோயிலைப் போல் மக்கள் உள்ளங்களை ஒருமுகப்படுத்தக்கூடிய வேறு சாதனம் நமக்குக் கிடையாது. கோயில் நம் இசை, நடனம், சிற்பம் யாவும் மறைந்துவிடும். கோயில்களோடு சார்ந்த கலை, இலக்கியம் இரண்டும் நம்மை அருட்டி, பக்குவப்படுத்தி, பண்பூட்டி இறைவழிப் படுத்துபவை. இறைவன், ‘உணர்வுசூழ் கடந்த தோர் உணர்வே இங்கு முதல் உணர்வு அறிவு, அறிவின் எல்லை கடந்த உணர்வோன் அவன் பிந்திய உணர்வு பக்தியால் வருவது, தனி அறிவியலின் நுண்மை ஒருபொழுதும் உணர்வாகாது. இங்குதான் கோயில் நாகரிகம் எம்மைப் பக்குவப்படுத்துகிறது. -
எங்கும் ஒடித்திரிந்து இறுதியில் அவை * புத்தியோகங்கள்’ ‘’ கூற்றாயினவாறு’ நிற்பதனை நாம் எல்லோரும் தவிர்த்தல் வேண்டும்.
"நான் என நிற்கும் ஞானம்
ஞானமன்று அந்த ஞானம் மேலான மாயிருக்க வொட்டா
மோன மின்றாகவே தான் தேனென ருசிக்கு மன்பால்
சிந்தை நைந்துருகும் வண்ணம் வாவென நிறைந்தா னந்த
மாகடல் வளைவதின்றே.
- தாயுமானவர்

Page 52
இடையில் பிற
60)ófouplb வைணவமும் இந்து மதத்தின் இரு கண்கள். இரண்டும் இணையும் போதுதான் தெளிவான பார்வை கிடைக்கும்.
ஆனால் ஒரு கணி மற்றொன்றை வெறுத்த சம்பவங்களும், அந்த வெறுப்பை இறைவன் தகர்த்த சம்பவங்களும் இந்துமதத் தில் உண்டு. அதில் மறக்கமுடியாதது ஒரு நிகழ்ச்சி பண்டாரிபுரத்தில் நிகழ்ந்தது.
பண்டாரிபுரம் என்றவுடன் பாண்டுறங்கன் நினைவுக்கு வருவார். அந்தத் திருத்தலத்தில் தான் வசித்தான் நரஹரி என்ற பொற்கொல்லன்.
இந்து மதத்தில் பற்றுக் கொண்டவன் நரஹரி. ஆனால், சிவபெருமானை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொண்டவன். வைண வத்தையும் அதன் தலைவரான திருமாலையும் வெறுத்துப் பழிக்கும் அளவுக்கு, அவனது சிவபக்தி எல்லை தாண்டியதுதான் சோகம்.
அந்த ஊரில் இருந்த ஒரு பணக்கார ருக்கு, குழந்தை ஒன்று பிறந்தது. நெடுநாட் கழித்துப் பிறந்த குழந்தை. பண்டரிநாதருக்கு வேண்டிக் கொண்டபடி அவர் திருமேனிக்கு பொன்னால் அரைஞாண் செய்து அணிவிக்க முடிவெடுத்தார் பணக்காரர். அந்த ஊரிலேயே சிறந்த பொற்கொல்லன் நரஹரிதான். அவனை அணுகினார். மறுத்துவிட்டான் நரஹரி. தான் வெறுக்கும் திருமாலுக்கு, தன் கையால் அரை ஞாண் செய்வதா?
செல்வந்தர் விடவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். கடந்த காலத்தில்

ந்தது ஞானம்
அவர் பலமுறை நரஹரிக்கு உதவிகள் செய்ததுண்டு. என்னசெய்வதென்று தவித்த நரஹரி, இறுதியில் ஓர் உடன்படிக்கைக்கு வந்தான். ‘நான் உங்கள் கடவுளின் கோயி லுக்கு வரமாட்டேன். காரணம் உங்கள் கடவுளைப் பார்க்க நான் பிரியப்படவில்லை. நீங்கள், அவரின் இடுப்பு அளவை அளந்து வாருங்கள். நான் அதற்கேற்ப நகை செய்து தருகிறேன்’என்றார்.
ஏதோ இந்த அளவாவது சம்மதித்தானே? என்று எண்ணியவாறு ஆலயத்திற்குச் சென்று செல்வந்தர், பண்டரிநாதரின் இடுப்பை ஒரு நூலால் அளந்துகொண்டு அந்த நூலை நரஹரியிடம் கொடுத்தார். அந்த நூலின் நீளத்திற்கு ஏற்ப அற்புதமான கலைநயம்மிக்க ஒரு தங்க அரைஞாணை செய்து தந்தான் நரஹரி.
மிக்க மகிழ்ச்சியுடன் அந்த அரை ஞாணை பணி டரிநாதருக்கு அணிவிக்க முயன்றபோது அது நான்கு விரற்கடை நீளத் திற்கு குறைவாக இருந்தது தெரிய வந்தது.
செல்வந்தர் இதை நரஹரியிடம் கூற, முதலிலேயே சரியான அளவு எடுக்காமல் வந்த செல் வந்தனை மனதில் கடிந்து கொண்டே, தேவைப்பட்ட நீளத்திற்கு அந்த அரைஞாணை அதிகரித்துத் தந்தான் நரஹரி.
இம்முறை சூட்டிப் பார்த்தபோது அந்த அரைஞாண் நான்கரை விரற்கடை நீளத்திற்கு அதிகமாக இருந்தது. திகைத்த செல்வந்தர் மீண்டும் நரஹரியை அணுகினார்.
50:-

Page 53
கோபுரம்
இம்மாதிரியே பலமுறை அடுத்தடுத்து செல்வந்தர் பண்டரிநாதரின் இடுப்பளவை அளந்து சென்றும் அதற்கேற்ப நரஹரி அமைத்துத் தந்த அரைஞாண் பண்டரி நாதருக்கு பொருந்தவேயில்லை.
* உனக்கு சரியான நகை செய்யத்
தெரியவில்லை” என்று குற்றம் சாட்ட துடித்து
விட்டான் நரஹரி தன் தொழிலை ஒருவர் குற்றம் சொல்வதா? “நீங்கள் சரியான அளவு கொடுக்காமல் வருகிறீர்கள்” என்றான். ‘அப்படி யானால் நீயே வந்து சரியான அளவை எடுத்துக் கொள்ளேன். அதுதானே உன் தொழில் தர்மம்?” என்றார் செல்வந்தர்.
தொழில் தர்மத்திற்கும் தனது கொள் கைக்கும் இடையே போராடிய நரஹரி ஒரு விந்தையான முடிவுக்கும் வந்தான். தன் கண்கள் இரண்டையும். துணியால் இறுக்கக் கட்டிக் கொண்டான். செல்வந்தரும் இன்னொரு வனும் பிடித்துக் கொள்ள பண்டரிநாதரின் சந்நிதிக்கு வந்தான். எச்சந்திதியில் பக்தர்கள் விழிகள் விரிய பண்டிதநாதரைத் தரிசனம் செய்தவர்களோ அந்தச் சந்நிதி இன்று மிக வித்தியாசமான ஒரு பக்தனைக் கண்டது.
பண்டரிநாதரின் சிலையை தடவிப் பார்த்தான். அவனுக்கு சூலமும் உடுக்கையும் தென்பட்டன. இடுப்புப் பகுதியைத் தொட்டான். அது புலித்தோலாகத்தான் அவனுக்குப்பட்டது. என்ன இது? சிவபெருமானின் தோற்றம் அல்லவா இது என்னை ஏமாற்றி சிவன் கோயி லுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். ஈசனின் சந்நிதிக்குள் நுழைந்துவிட்டு அவரைத் தரிசிக்காமல் இருப்பது குற்றமாயிற்றே சட்டென, தன் கண்களைச் சுற்றியிருந்த துணியை அகற்றினான்.

கார்த்திகை 2011
எதிரில் சங்கும் சக்கரமுமாக காட்சி யளித்தது திருமாலின் திருவுருவம். அவசர மாகத் தன் கண்களை மூடிக்கொண்டான். மீண்டும் இடுப்புப் பகுதியை அளவெடுக்க முயற்சிக்க, புலியாடை தென்பட்டது. திடுக்கிட்டு கண்களைத் திறந்தால், பட்டாடை அணிந்த பரந்தாமன்! இப்படி கண்மூடினால் சிவன், கண் திறந்தால் திருமால் என்று மாறிமாறி அனுபவம் ஏற்பட்டதில் நரஹரியின் அகக்கண் திறந்தது.
அரியும் சிவனும் ஒண்ணு என்பதை அவனுக்கு உணர்த்த, தன் இடையைப் பயன்படுத்திக் கொண்டார் இறைவன்.
தன்னிடையைக் கட்டுப்படுத்திய தாமோதரன்
இறைவனின் இடையைத் தொடர்புபடுத்தி இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு.
யசோதைக்குக் கடும்கோபம். பின் என்ன! ஊரிலேயே வளம் கொழிக்கும் இல்லமாகத் தன் வீடு இருந்தபோதிலும், இந்தக் கண்ணன் பிற கோபிகைகளின் வீட்டில் புகுந்து திருட்டுத் தனமாக வெண்ணெய் தின்கிறானே. அந்த கோபியர்கள், மாறிமாறி தன்னிடம் புகார் படிக்கிறார்களே!
கண்ணனுக்கு ஒரு சிறு தண்டனை யாவது அளித்தே தீர வேண்டும். மனத்தை இரும்பாக்கிக் கொண்டாள் யசோதை. ‘வெளி யில் செல்வதினால்தானே திருடுகிறாய். உன்னை வீட்டிலேயே கட்டி வைக்கிறேன்!
அங்கிருந்த உரலில், கண்ணனைக் கட்டுவதற்காக கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டாள். கயிற்றின் ஒரு முனையை உரலுடன் கட்டிவிட்டாலும், அதன் முனையை
1:-

Page 54
கோபுரம்
கண்ணனோடு இணைத்துக் கட்ட முடிய வில்லை. காரணம், கயிறு சிறியதாக இருந்தது. மேலும், பெரிதான ஒரு கயிறை எடுத்துக் கொண்டாள் யசோதை. இம்முறை அவளுக்கு நம்பிக்கை தோன்றியது. ‘இது நீளமான கயிறு. நிச்சயம் கட்டிவிட முடியும். ஆனால், அப்போதும் நீளம் சிறியதாகவே இருந்தது. குழம்பினாள் யசோதை. பல கட்டுக்கள் கொண்ட தன் வீட்டின் நீள அளவுக்கு வெகு நீண்ட கயிறு ஒன்றால் அவள் முயற்சிக்க, அப்போதும் தோல்வி
மனிதனின் அறிவுக்கும் ஆக்ரோஷத் துக்கும் கட்டுப்பட்டவனா இறைவன்? பக்தி தானே அவனை அடையக்கூடிய, அவனில் கரையக்கூடிய ஒரே மார்க்கம்!
mm mm mm mm
O நலலா
அறிவுச் சுடரே உலகம் என்ற பள்ளியில் என புகட்டுகிறாய்!
இவ்வுலகில் வரும் இன்பதுன்பங்கள் நாம்!
வருகின்றன.
நாமோ பாடம் கற்க வந்ததை மறந்துவி
I
விளையாடி வேடிக்கை பார்த்து விட்டுப் போ ஜீவர்களாகிய நாம் இந்த உலகம் எனு
பாடத்தைப் படிக்க வேண்டும்.
சில வேளைகளின் இன்பத்தை விடதுன்பமே

கார்த்திகை 2011
சோர்ந்துபோனாள் யசோதை. தான் தோற்றுவிட்டதாக உணர்ந்தாள். பாவமாக இருந்தது பரந்தாமனுக்கு. தன் இடுப்பை சிறியதாக்கிக் கொண்டார். கடைசியாக, ஒருமுறை முயற்சிக்கலாம்' என்று எண்ணிச் செயல்பட்ட யசோதைக்கு, இம்முறை வெற்றி கிடைத்தது.
தான் தாமோதரன் என்பதை நிரூபித்தார் திருமால். தாமோதரன் என்றால் கட்டுப்பட்டவன் என்று பொருள். பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டவர் பரமன் என்பது உலகமறிந்த
உண்மைதானே!
(சிரியன்
னக்கு நல் ஆசிரியனாய் இரந்து ஓயாது பாடம்
யார்? என்றபாடத்தை நமக்கு ஞாபகமூட்டவே
விட்டு ஒவ்வொரு பிறவியிலும் வெறுமனே
ாய் விடுகிறோம்.
ம் பள்ளிக்கூடத்தில் நான் ஆன்மா என்ற
சிறந்த ஆசிரியராக அமைகிறது.
- சுவாமிவிவேகானந்தர்
52:-

Page 55
LD6)Ib 3LI
ஒருவனுடைய வாழ்வு அவருடைய மனத்தின் நினைவு நலத்திற்குத் தக்கவாறுதான் அமையும்.
மனம் ஒரு கத்தி போன்றது. கத்தி மாம்பழம் நறுக்கவும் உதவும், பிறருடைய தலையை அறுக்கவும் உதவும். அதுபோல் மனம் நன்மை நினைக்கவும் ஆகும், தீமை நினைக்கவும் ஆகும். நலந் தீங்கு இரண்டுக்கும் நமது மனமே பரம காரணம் என்று உணர்க.
மனத்தில் நெடுங்காலமாக மாசு ஏறியுள் ளது. அந்த மாசினை நாம் அகற்ற வேண்டும் என்று முயல்வதில்லை." ஏன், மனதில் மாசு படிந்துள்ளது? ’ என்ற எண்ணமேயில்லை.
பாத்திரங்களை அன்றாடம் விளக்கு கின்றோம். பல் விளக்குகின்றோம், அன்றாடம் ஆடைகளைத் தோய்க்கின்றோம். கண்ணாடி முதலியவற்றைத் தினம் துடைக்கின்றோம். நமது மனதை மட்டும் துடைப்பதில்லை. பெரிய அறம் எது என்றால் மனத்தின் மாசினையகற்று தலாகும். மற்ற எல்லாம் ஆரவார நீர்மையவாம்.
மணத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற - திருக்குறள்
மனத்திலே தூய்மையில்லாதவர் புரியும் மாதவம் நன்கு பயன் தராது.
மனத்திலோர் தூய்மையில்லை வாயிலோர்
இன்சொல் இல்லை சினத்தால் செற்றம் நோக்கி தீவினை
விளிவன் வாளா

ால் வாழ்வு
புனத்துளாய் மாலையானே பொன்னிசூழ் திருவரங்கா எனக்கினி கதியென் சொல்வாய் என்னையா ளுடையகோவே! என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடு கின்றார்.
அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
அநங்கனார் மயல் ஆழத்தில் வீழ்ந்தேன் பழுக்கு முடருள் சேர்ந்திடுங் கொடியென்
பாவியென் எந்தப் பரிசுகொண் டுய்வேன் மழுக்கை யேந்திய மாசிலா மணிக்குள்
மன்னி யோங்கிய வளரொளிப் பிழம்பே வழுக்கிலார் புகழ் தணிகையென் னரசே
வள்ளலே என்னை வாழ்விக்கு மருந்தே. என்று அருட்பிரகாச வள்ளலார் முறையிடு கின்றார்.
மாசுடைய மனத்தினர் நினைத்த கரு மங்கள் ஒன்றுங் கைகூடா. மாசிலா மனத்தினர் நினைத்த கருமங்கள் தெய்வத் திருவருளால் அனைத்தும் இனிது கைகூடும். கன்மனங் கரைந்து நன்மணம் பெற்றோர் மனத்தை இறை வன் கோயிலாகக் கொண்டு வீற்றிருப்பான்.
நினைப்பவர் மனங் கோயிலாகக் கொண்டவன்
- அப்பர்
மருவ மடியார்கள் மனதில் விளையாடு மரகத மயூரப் பொருமாள் காண்
- அருணகிரிநாதர்.
மனத்திலே கோணலும் அமைந்துவிடு கின்றது. கோணல் மனம் படைத்தவர்கள் பலர்.
53:-

Page 56
கோபுரம்
கொடிய மனத்தால் தேடிய பாவம் எண்ணி றைந்தன. கோணல் மனம் படைத்தவர் நல்ல வர்களையும் அந்தக் கோணல் மனத்தாலே கண்டு, அவர்கள் மீது பழி பாவங்களைச் சுமத்திப் பேசுவார்கள்.
தூயவர்களைத் தீயவர்களாகவே பார்ப் பார்கள். கோணல் மனம் உள்ளவர்கள் நேர் வழியில் நடக்கமாட்டார்கள். கோணல் வழியில் தான் நடப்பார்கள். அவர்கள் நினைவிலே கோணல் பேச்சிலே கோணல் செயலிலே கோணல், இப்படி எல்லாமே கோணலாக அமைந்திருக்கும். இவ்வளவுக்கும் மூலகாரண மான மனத்தில் கோணல் இதுவேயாகும். ஆகவே அறிஞர்கள், தம் கோணல் மனமான இரும்பை ஞானத் தீயில் காய்ச்சி, நீதி நூலாகிய சம்மட்டியினால் அடித்து நிமிர்த்த வேண்டும்.
நாம் நமது மனத்தால் பிறரை நன்கு மதித்து அன்பு செய்தால், அவர்களும் நம்மை மதித்து அன்பு செய்வார்கள். நாம் அவர்களை மதியாதிருப்பின், அவர்களும் நம்மை மதியாது புறக்கணிப்பர்.
அன்றியும் நாம் மனைவியை உள்ளன் புடன் பேணிப் பிரியமாக நடத்தினால், மனைவி யும் உள்ளன்புடன் கள்ளங்கபடம் இன்றி நம்மைப் பேணி உபசரிப்பாள்.
நாம் மனைவியை சதா வெறுத்து ஒறுத்தால், அவளும் மறுத்து விடுவாள்.
யத் பாவம் தத்பவதி என்று வடமொழியில் கூறுவர்.
எப்படி நினைக்கின்றோமோ, அப்படி விளைகின்றது.

கார்த்திகை 2011
ஒரு நகரில் பெரிய சந்தனக் கட்டை விற்கும் வியாபாரி இருந்தான். அவன் பெரும் தனவந்தன்.
மாலை நேரத்தில் அந்நகரத்தையாளும் மன்னவர் தமது மணித்தேரின் மீது கடைவீதி வழியே சென்று, நகரவெளியில் போய் உலாவி விட்டு மறுபடியுந் தேரேறி அரண்மனை சேருவார்.
அங்ங்ணம் செல்லும்போது, சந்தனக் கட்டை வியாபாரி கடையை விட்டிறங்கி நின்று மன்னவரைக் கரங்கூப்பித் தொழுவார். மன்னரும் கைகுவித்துக் கும்பிடுவார். இப்படி தினந்தோறும் நிகழும்.
ஒருநாள் மன்னர் வழக்கம் போல் சென்றார். சந்தனக் கட்டை வியாபாரி எழுந்து நின்று வணங்கினார். மன்னவருக்கு அன்று என்னமோ அவர்மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது. பதிலுக்குக் கும்பிடவில்லை. காரணந் தெரியாத வெறுப்புணர்ச்சி, மனதில் அவரைப் பற்றிய அருவருப்பு, சந்தனக் கட்டை வியாபாரியான அவரை நினைத்துக் கொண்டு சென்றார்.
மன்னரிடம் மறுநாள் ஒரு மகான் வந்தார். அவர் திரிகாலஞானி மனத்தில் இருப்பதனை யறியும் மகிமை வாய்ந்தவர். அவரை அரசர் பெருமான் அஞ்சலிசெய்து, ஆசனத்தில் அமரச் செய்து, பாலுந் தேனும் தந்து உபசரித்தார்.
‘சுவாமி ஒரு சிறு சந்தேகம். கடை வீதியில் ஒரு சந்தனக் கட்டை வியாபாரி உள்ளார். அடியேன் அவ்வழியே போகும் பொழுது தினந்தோறும் அந்தச் செட்டியார் எழுந்து என்னைக் கைகூப்பித் தொழுவார். நானும் அவரை வணங்குவேன். நேற்று நான்
54:-

Page 57
கோபுரம்
போகும்போது அவர் என்னைத் தொழுதார். எனக்கு என்னவோ அவரிடம் காரணமில்லாமல் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. கும்பிடக் கை மறுத்து விட்டது. குருநாதா! இதன் காரணம் அறியாது மனம் தத்தளிக்கின்றது. எல்லாந்தெரிந்த தாங்கள்தான் இதனை விளக்க வேண்டும்” என்றார்.
சாதுமகான் ‘வேந்தரே! இந்த வினா விற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் கூறுவேன். இன்று நீர் போகும்போது உமது மனம் நினைக்கும் நிலைமையை நாளை என்னிடம் கூறும்” என்றார். மறுநாள் காலை மறுபடியும் சாதுமகான் அரசனிடம் வந்தார். அரசன் தொழுதான். ‘அரசே! நேற்று கடைவீதியில் செட்டியாரைக் கண்டீரா? உன் மனநிலை எப்படியிருந்தது?’ என்று சாது கேட்டார்.
é
‘சுவாமி! அந்த ஆள்மீது நேற்றும் எனக்கு ஒரே வெறுப்புத்தான் ஏற்பட்டது. அவனைச் சுட வேண்டும் போல் தோன்றியது” என்றான் மன்னன்.
“நல்லது” என்று கூறிவிட்டுச் சாது போய் விட்டார். மூன்றாவது நாள் வந்தார். ‘மன்னரே! இன்று மாலை உனக்கு அவனிடம் என்ன மாதிரி மனநிலை அமைகிறதென்று பார்த்துக் கூறு: நான் நாளை வருகின்றேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
அன்று மாலை அரசன் கடைவீதி வழியே போகும்பொழுது சந்தனக்கட்டை வியாபாரி எழுந்து வழக்கம் போல் கைகூப்பித் தொழு தான். அரசரும் அன்புடன் கைகுவித்துக் கும்பிட்டார். அன்று அச்செட்டியார் மீது ஒன்றும் வெறுப்பு ஏற்படவில்லை: அவருக்கு ஆச்சரியம். மனநிலை இப்படி மாறியதற்கு என்ன காரணம் என்று விளங்கவில்லை.

கார்த்திகை 2011
அடுத்தநாள் காலை அம்மகான் வந்தார். அரசனைக் கண்டு சிரித்தார். ‘இறைவனே! நேற்று உன் மனம் மாறியிருக்குமே? நீ கும்பிட்டிருக்க வேண்டுமே” என்று கேட்டார்.
‘ஆம் சுவாமீ! இப்படி மனநிலை மாறிய காரணத்தைத் தேவரீர் கருணை செய்து கூறவேண்டும்” என்றான் அரசன்.
‘வேந்தே! அதற்குரிய காரணத்தை நான் கூறுகின்றேன் கேள். அந்தச் சந்தனக் கட்டை வியாபாரியிடம் நிரம்பச் சந்தனக் கட்டைகள் இருந்தன. அவனுக்கு மூன்று நாளுக்கு முன் ஒரு புதிய நினைவு வந்தது.
‘நம்மிடம் சந்தனக்கட்டை ஏராளமாக இருக்கின்றதே! மன்னருடைய அரண்மனையில் யாராவது இறந்துவிட்டால் நம்மிடமுள்ள சந்தனக் கட்டை முழுவதுந் தீர்ந்துவிடுமே! (அரசர்கள் இறந்தால் அவர்களுடைய சரீரத் தைச் சந்தனக் கட்டையில் தகனம் புரிவது வழக்கம்.) ஆகவே, நமது மன்னரோ, மன்ன ருடைய தாயாரோ, மன்னருடைய மனைவியோ மாண்டால் நமக்கு நலம் விளையும்’ என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. இந்த நினைவு கொண்டபடியால் அவனிடம் உனக்கு வெறுப் புணர்ச்சி ஏற்பட்டது.
நான் நேற்று காலை அவனிடம் உள்ள சந்தனக் கட்டை முழுவதையும் விலைக்கு வாங்கிவிட்டேன். உடனே அவனுக்கு அந்தத் தீய எண்ணம் அகன்றது. அதனால் இன்று உனக்கும் அவனிடம் ஏற்பட்ட அருவருப்பு அகன்றது” என்று சாதுமகான் கூறினார்.
ஆதலால் நாம் நினைக்கின்ற தூய நினைவு, தீய நினைவு அலைகள் சென்று மீளவும் நம்பால் வந்து ஒடுங்குகின்றன.
5:-

Page 58
கோபுரம்
ஒரு குளத்தின் நடுவே கல் லை எறிந்தால் அலை புறப்பட்டு, ஒரு அலை மற்றொரு அலையையுண்டாக்கி, அந்த அலை வேறொரு அலையையுண்டாக்கி, முடிவில் கரையில் பேரலையாக மோதி, மறுபடியும் அந்த அலை சிறிது சிறிதாகத் தேய்ந்து புறப்பட்ட இடத்திலேயே சென்று முடிவு பெறு கின்றது. அதுபோல் நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்று தூய நினைவு அலை பிறரிடம் சென்று அவர்களிடமிருந்து மீண்டும் நம்மிடம் வந்து ஒடுங்குகின்றது.
அவன் கெட வேண்டும், இவன் கெட வேண்டும் என்ற எண்ணுகிற தீய நினைவு அலைகள் சென்று, மீளவும் நம்பால் வந்து நம்மைத் தாக்குகின்றன. ஆகவே தூய நினைவால் நாம் வாழ்வோம். தீய நினைவால்
淡淡
உயிர் இறைவன் என் உயிர் மூச்சாகட்டும்.
குரு அளித்த மந்திரம்தான். நம்மைத்துய் அது இறைவனுடன் நம்மைச் சேர்க்கும்ப
வாழ்க்கை எனும் ரயில்பயணத்தில் இறை வரை நமது மூச்சுக்காற்று நம் உயிரைக்க சிவப்புக் கொடியானால் இந்த உடலைவிட்
நமது உயிர் காக்கும் கவசமாக நமது நாடி வேண்டும்.
பகவானுக்கும் அவனது திருநாமத்திற்கும் வி

கார்த்திகை 2011
நாம் வீழ் வோம் . இந்த இரகசியம் வெகுபேருக்குத் தெரிவதில்லை. ஆகவே மனம் போல் வாழ்வு அமைகின்றது.
நல்மனம் படைத்தவர்க்கு நல்வாழ்வும், தீயமனம் படைத்தார்க்கு அல் வாழ்வும் உண்டாகும்.
மக்கள் யாவரும் இதனை நன்கு உணர்ந்து; உலகமெல்லாம் வாழட்டும், ஊரெல்லாம் வாழட்டும், உயிர்களெல்லாம் வாழட்டும், சராசரமெல்லாம் வாழட்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
நாடெங்கும் வாழக் கேடொன்றுமில்லை.
முனம்போல் வாழ்வு.
S淡江
O O Tep66i
(மைப்படுத்தவல்லது. அம்மந்திரத்தை ஒத ஒத ாலமாகிறது.
வன்பச்சைக் கொடிகாட்டிக்கொண்டிருக்கும் ாத்து வருகிறது. அவனது இச்சைமாறி அது ប្រ១_uម៉ារ៉ា ម៉ៃវិញ្ញាg. .
நரம்புகளில் இருந்து இறை நாமத்தால் நிரப்ப
த்தியாசமே கிடையாது.
- ருநீறிாலகிருஷ்ணர்
LLS SL LLL SLLL SLS LL LLLS SL SLLS SLLS SLL SLL LLL SLLLS SLLLS SS S SY SLLLS SLLL LLLL SL SLLS SLL LL LL LLL LL
56:-

Page 59
விஞ்ஞானமும் 6
னிெதன் தோன்றிய நாள் முதல் அவன்
தனக்கே உரிய பகுத்தறிவின் துணை கொண்டு
இயற்கையை வென்று வளர்ந்து வருகிறான். காடுகளில் அலைந்து திரிந்து கல் வீட்டில் வாழ்ந்த மனிதன் முதலில் காட்டைத் திருத்தி நாடாக்கக் கற்றுக் கொண்டான். கனியும் கிழங்கும் எங்கே கிடைக்குமென்று தேடித்திரிந்த நிலையை விட்டு அவன் தனக்கு வேண்டிய கனி, கிழங்குகளையும், பிறதானியங்களையும் தானே விளைவிக்கக் கற்றுக் கொண்டான்.
நாளடைவில் மனிதன் தன் அறிவைப் பல துறைகளிலும் செலுத்தி மாளிகைகள் கட்டி வாழவும், வாகனங்களில் விரைந்து செல்லவும், வானத்தில் பறக்கவும் மாகடலில் மிதக்கவும் வழிகள் கண்டான். உலகில் வாழும் பல பிராணிகளைத் தன் வாழ்வுக்கு உதவும்படி அடிமையாக்கிக் கொண்டான். பூமியில், இயற்கையில் கிடைக்கும் பொருள்களைத் தன் வாழ்க்கை வசதிக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக்கொள்ள ஒவ்வொரு நாளும் முயன்று பற்பல வெற்றிகள் கண்டான். விஞ்ஞான அறிவு வளர்ந்தது. கண்டம் விட்டு கண்டம் செல்வது அவனுக்குச் சாதாரண விஷயமாயிற்று. பிரபஞ்சத்தின் உண்மைகள் பல அவன் அறிவுக்கும் புலப்பட்டன. உலகையே ஆக்கவும், அழிக்கவும் 3al விஞ்ஞான அறிவைப் பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு மனிதன் விஞ்ஞானத் துறையில் முன்னேறினான்.
அணுவைப் பிளக்கும் வழியை அவன் கண்டான். அணுவுள் அணுவாக உள்ள அமைப்பைக் கண்டு அதையும் பிளந்து பார்த்தான். இன்னும் அதனுக்குள் உள்ள ஆக்கும அணுவையும் பிளந்தான். இப்படி

மய்ஞ்ஞானமும்
فيه ** **
※
விஞ்ஞானிகள் நிகழ்த்திய சாதனைகளைக் கண்ட பலர் விஞ்ஞானத்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமே இல்லையென்று கருதத் தொடங்கி னார்கள். கடவுள் சிந்தனை, பாவம், புண்ணியம், அவதாரப் புருஷர்கள் என்பவையெல்லாம் அவர் களுக்கு இரண்டாந்தர முக்கியத்துவமுடையன வாக அல்லது பொருளற்றனவாக ஆயின. ஒரு சிலர் விஞ்ஞான யுகத்தில் மெய்ஞ்ஞானத்துக்கு இடம் இல்லையென்ற அஞ்ஞானத்தில் அதனை எள்ளி நகையாடவுங் கூடச் செய்தனர்.
ஆனால் விஞ்ஞானத்தின் மூலம் அணுவை யும், பரமாணுவையும், ஆக்கும அணுவையும் ஒவ்வொன்றாகப் பிளந்து கொண்டே சென்ற விஞ்ஞானிகள், இறுதியில் அவற்றுக்கெல்லாம் ஆக்குமமாக யாவற்றுக்கும் அடிப்படையான மூலப் பொருள் ஒன்று இருக்கின்றது என்ற முடிவு கண்டனர். மனித முயற்சிக்கும் அறிவுக் கும் எட்டாத நிலையில் அந்த மூலப்பொருள் விளங்குவதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.
இன்று விஞ்ஞானிகள் கண்ட இந்த உண் மையைத் தான் நம் மெய்ஞ்ஞானிகள் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே கண்டு கூறியிருக்கிறார்கள்.
எதிலும் அரைகுறை அறிவு இருக்கும் போதுதான் சந்தேகங்கள் நிறையத் தோன்றும். விஞ்ஞானயுக ஆரம்பத்தில் மெய்ஞ்ஞான உண்மைகளை அப்படித்தான் பலர் சந்தேகித்துப் பரிகசித்தனர். ஆனால் இன்றோ மெய்ஞ்ஞானம் கூறும் உண்மைக்கும் விஞ்ஞானம் கண்ட
7:-

Page 60
கோபுரம்
உண்மைக்கும் ஒற்றுமை இருப்பதை முதிர்ந்த அறிவுடைய மாபெரும் விஞ்ஞானிகள் எல் லோருமே ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.
அகத்தால் உலகை ஆய்ந்து உண்மை கண்டார்கள் விஞ்ஞானிகள். ஞானிகளோ புறத்தால் உலகைக் காண முயற்சி செய் கிறார்கள். உலக சம்பந்தமான நுட்பங்களைத் தேடிக் கண்டறிவது சாதாரண அறிவு. ஆன்மா, இறைவன் முதலியவற்றைப் பற்றி அகத்தால் விசாரணை செய்தறிவது மெய்ஞ்ஞானம். கத்தியிலும் கூர்மையான மெய்ஞானத்தைக் கொண்டு நம்முடைய மெய்ஞானிகள் உண்மை கண்டார்கள். இதனை மாணிக்கவாசகர், ‘கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார்’ எனக் கூறுகிறார்.
அப்படிக் கூர்மையான மெய்ஞ்ஞான உணர்வோடு உண்மை காண முயலும் மெய் ஞானிகளின் நுண்ணிய கருத்துக்கு உட்படு கின்ற மூலப்பொருளானது அறிவைக் கத்தி யால் தீட்டி அணுவையும் பிளக்கும் வகையில் ஆராய்ந்து தேடினாலும் அந்த நுட்பமான ஆராய்ச்சிக்கும் அகப்படாதபடி மேலும் நுட்ப மான பொருளாக விளங்குகிறது. இதனையே, “அனுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க” என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.
‘விரிபொழின் முழுதாய் விரிந்த” மூலப் பொருளானது ‘அனுத்தரும் தன்மையில்’ நுணுக்கமானதாக விளங்குகிறது என்பதை இன்றைய விஞ்ஞானிகளும் கண்டறிந்து ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
உலகத்தைச் செயல்பட வைக்க ஓர் ஆற்றல் தேவை. பொருள்களின் இயக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பெரும்புகழ்

கார்த்திகை 2011
கொண்ட விஞ்ஞானி ஐசாக் நியூட்டன் வேற்று விசையால் தூண்டப்படாத வரையில் எந்தப் பொருளும் நின்றது நின்று கொண்டேயும், ஓடியது ஓடிக் கொண்டேயும் இருக்கும் என்று கூறினார். வேற்றுவிசையால் தூண்டப்பட்டா லொழிய நின்றது இயக்கமின்றி நின்று கொண்டேயிருக்கும் என்ற இயக்க முறைமை உண்மையைத்தான் நம் மெய்ஞானிகள்
“அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்று உணர்ந்து கூறினர். (அவன் என்றது உலகை இயக்கும் அந்த மாபெரும் ஆற்றலை உரு வகப்படுத்திக் கூறியதாகும். ‘நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய், நிற்பன நிற்இச் சொற்பதங் கடந்த தொல்லோன்’ என்ற மாணிக்கவாசகர் திருவாக்கிலும் பொருள்களின் இயக்கமுறை விதி குறிக்கப்படுவதைக் காண் கிறோம்.
வேறு விசையால் தூண்டப்பட்டால்தான் நிற்கும் பொருட்கள் அசையும். விசையின்றி ஒரு பொருளும் நிலைமாறாது.
அதேபோல வேற்று விசையால் அடக்கப் பட்டால்தான் அசையும் பொருட்கள் அடங்கி நிற்கும். வெளி ஆற்றலின் செயலின்றி அசை யும் பொருள்கள் அடங்கி நிற்கமாட்டா. இதனை விஞ்ஞானிகள் காட்சித்திறன் மூலம் கண்டறிந்து நிரூபித்துக் காட்டினார்கள். ஐசாக் நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுக்கு பல நூறு ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த நமது மெய்ஞ்ஞானி திருநாவுக்கரசர்,
"ஆட்டுவித்தால் யாரொருவர் அடாதாரே அசைவித்தால் யாரொருவர் அசையாதாரே”
என்று இயக்கமிலாப் பொருளுக்கு இயக்கம் உண்டாக்கும் ஒரு மூல அற்றல் இருப்பதைக் கூறாமல் கூறியிருக்கிறார்.
58:-

Page 61
கோபுரம்
இப்படி எல்லாவற்றிலும் சூக்குமமாகவும் யாவற்றுக்கும் அடிப்படையாகவும் ஒரு மூலப் பொருள் இருக்கிறதென்பதையும் அப்பொருளே அண்ட சராசரங்களையும் இயக்குவித்து வருகிறதென்பதையும் மெய்ஞ்ஞானிகள் கண் டறிவாறே. விஞ்ஞானிகளும் ஒப்பக் கண்டறிந் தனர் என்பதற்கு இதுபோல இன்னும் எத்தனையோ எடுத்துக் காட்டுக்கள் கொடுக் கலாம்.
உலகை ஆக்கியும், இயக்கியும் வருகிற ஒப்பற்ற ஒரு சக்தி இருக்கிறது என்ற அளவோடு விஞ்ஞானிகள் நின்றுவிட்டார்கள்.
மூலப்பொருளை உணர்ந்து அதன் ஒப்பற்ற ஆற்றலையும் அதன் இயக்கத்தையும் கூறிய நம் மெய்ஞ்ஞானிகளோ நம் ஆன்மா உய்வதற்காக அதனைப் போற்றி உய்யும் சில முறைகளையும் கூறியுள்ளார்கள்.
மனதுக்கு ஆக்கசக்தி உண்டென்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது. புவியின் ஈர்ப்புச் சக்தியைக் காட்டிலும் மனிதனின் மன ஆற்றல் அதிக சக்தியுடையது என்று ஜெ.பி. ரைன் என்பவர் கூறியிருக்கிறார். ஜடசக்திகளை விட மனச்சக்தி ஆற்றல் மிக்கது என்பதை மற்றும் பல அறிவியல் அறிஞர்களும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அந்த மனோசக்தியைப் பயன்படுத்தி ஆன்மாவுக்கு உய்வு தேடுவதற் காகவே மெய்ஞ்ஞானிகள் வழிபாட்டினை நமக்கு வற்புறுத்திக் கூறினார்கள்.
விஞ்ஞானிகள் தங்கள் நுட்ப அறிவின்
திறனால் பிரபஞ்சத்தின் உண்மை நிலையைக் கண்டு சொல்கிறார்கள். அவர்கள் மனித
Ne.
g
V

கார்த்திகை 2011
சொல்வன மனித வாழ்வுக்கு வசதிதேடி உதவு கின்றன. மெய்ஞ்ஞானிகள் அதற்குமேல் ஒருபடி சென்று ஆன்மா உய்வதற்கு வழிகாட்டு கிறார்கள். இதனை உணராமல் விஞ்ஞானம் கூறும் உண்மைக்கும் மெய்ஞ்ஞானம் கூறும் உண்மைக்கும் வேறுபாடோ மாறுபாடோ இருப்பதாக நினைப்பது பேதைமை.
விஞ்ஞான உண்மைகளை மனிதன் ஆக்கம், அழிவு என்ற இரண்டுக்குமே விருப்பம் போல் பயன்படுத்தலாம். ஆனால் மெய்ஞ்ஞான உண்மையோ மனித உய்வு என்ற குறியீட்டை மட்டும் இலக்காகக் கொண்ட தாகும்.
மெய்ஞ்ஞானிகளின் உபதேசத்தை மதிக்கும் மனிதன் விஞ்ஞர்ன அறிவை அழிவுப் பாதைக்குப் பயன்படுத்த நினைக்கமாட்டான். மெய்ஞ்ஞான நெறியை நம்பாத மனிதனோ, எந்த நிமிஷம் ஆணவத்தால் தன் சிந்தனையை எந்தத் திசையில் திருப்புவான் என்றே கூற
முடியாது.
ஆகவே விஞ்ஞான முன்னேற்றத்தால் நன்மை ஏற்பட வேண்டுமென்றால் மெய்ஞ்ஞான நெறியை உலகம் மதிக்கும் நிலையையும் உண்டாக்க வேண்டும் என்பது தெளிவாகும். மெய்ஞ்ஞான உணர்வுடன் கூடிய விஞ்ஞான முன்னேற்றமே மனிதனுக்கும் நல்வாழ்வும் உய்வும் தருவதாகும். இந்த உண்மையைத் தான் நாம் நமது மறைந்த மாபெரும் மேதை பண்டிதர் ஜவாஹர்லால் நேரு அவர்கள் இந்த யுகம் மெயப் ஞானமும் விஞ்ஞானமும் கலந்ததாக இருக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தார். இந்தியா மனித சமுதாயத்துக்கு வழங்கும் பேருண்மையும் இதுதான்.
始淡
59:-

Page 62
சமயம் என்று
சிமயம் என்றால் என்ன? சமைக்கப் பட்டது சமயம். மனிதன் தன் வாழ்வும் வளம் பெறவும் மாக்கள் தன்மையில் இருந்து விடுதலை பெற்று மக்கள் தம்மைப் பெறவும் வழியாகச் செயற்பட்டது அல்லது சமைக்கப் பட்டதுதான் சமயம் ஆகும். வேறு வகையாகக் கூறுமிடத்து மனிதனைப் பண்பாடு உடையவ னாக ஆக்குவது சமயம். பல்வேறு வகையான காட்சி நல்கும் இப்பரந்த உலகையும் அதில் உள்ளவற்றையும் காணும் ஒருவன் அவ்வேற் றுமையில் மயங்காமல் இவற்றிடையே ஓர் ஒற்றுமையைக் காண முயல்கிறான். அனைத் திற்கும் ஆணிவேராக அமைந்த ஒன்றை அறி கிறான். அறிவுக்கு அப்பாற்பட்ட பொருட்கள் உண்டு என்பதையும் அவை அனைத்தும் ஒரு வரன்முறைக்கு உட்பட்டு இயங்குவதைக் காண்கிறான்.
விஞ்ஞானியும் அதே காட்சியைக் காண் கிறான் எனினும் அவ் வரன்முறை பற்றிய ஆய்விலேயே தன் முழுக் காலத்தையும் செல விட்டு விடுகிறான். மெய்ஞ்ஞானி வரன்முறை பற்றிய ஆய்விலேயே தன் முழுக்காலத்தையும் செலவிட்டு விடுகிறான். மெய்ஞ்ஞானி வரன் முறையின் தோற்றத்திற்கும் ஒரு கருத்தா இருத்தல் வேண்டும் என்ற முடிவில் தோன்றி விடுகிறான். இவ்வெண்ணமே சமய வாழ்வின் அடிப்படையாக அமைந்துவிடுகிறது. சமயம் வெறும் குறிகளும், அடையாளமும் அன்று. சமயம் என்பது அவற்றைக் கடந்து நிற்பது. குறிகள், அடையாளங்கள் ஆகியன போற்றா மலே சிறந்த சமயவாதியாக வாழமுடியும். இவை அனைத்தையும் மேற்கொண்டு சமய விரோதியாய் வாழமுடியும். மனித மனத்தின்
-

జశ్ర ళ్మణ
* Gigaff.
:
刻 x:
క్తి ४६४ s "یہ U - சிசிஞர்னல்ர்ரன்)
மாசை அகற்றி, பண்புடையவனாய், ஒழுக்க
முடையவனாய் பிறருக்குப் பயன்படுபவனாய் வாழ முற்படுவதே சமய வாழ்க்கை ஆகும். இவற்றிற்கு அப்பால் அனைத்தையும் கடந்து நிற்கின்ற ஒன்றை - கடவுள் என்ற ஒன்றை - மனதில் ஏற்றுக் கொள்பவனாய் வாழ்பவனே &FLDulu - 6 IT35ulu T6) T6ôr.
எனவே கடவுள், மனித வாழ்வு என்ற இவை இரண்டினிடையே உள்ள தொடர்பு இவ்வாழ்வில் இருந்து கடவுளை அடையும் நெறி என்பவை பற்றி புகட்டுவதே சமயம் எனப்படும். இதுவே சமயம் எனின் பல்வேறு சமயங்கள் தோன்ற வேண்டிய இன்றியமை யாமை யாது என்ற வினா எழலாம். மக்கள் அனை வரும் ஒருபடியினராக இல்லையன்றோ? அவரவர்கள் வாழும் இடம் அந்த தட்ப வெப்ப நிலை, சுற்றுச் சூழ்நிலை என்பவற்றால் பாதிக் கப்படுவது ஒருபுறம் மேலும் இவை அனைத் தும் ஒன்றாக உள்ளநிலையில் வாழும் பல் வேறு மனிதரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் வளர்ச்சியும் பல்வேறு படிகளிலும் இருக்கக் காணலாம். எனவே இவர்கள் அனைவருக்கும் ஒரே சமயம் பயன்படுமாறில்லை. ஆகவேதான் ஒவ்வொரு கருத்தை வலியுறுத்திக் கூறும் பல்வேறு சமயங்கள் அவ்வக் காலத்திற்கு ஏற்பவும் இடத்திற்கு ஏற்பவும் தோன்றலாயின.
இந்த அடிப்படையை மனதுட் கொண்டு தமிழ்மொழியின் பரப்பை காண்டல் வேண்டும்.
60:-

Page 63
கோபுரம்
பிற்காலத்தில் வேற்று நாடுகளில் தோன்றி இந்நாட்டில் குடிபுகுந்த கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரண்டும் தவிர ஏனைய சைவம், வைணவம், ஜைனம், பெளத்தம் ஆகிய நான்கும் இம்மொழியின் மிகுதியான இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவமும் இஸ்லாமும் பிற்காலத்தில் இந் நாட்டில் பரவியமையின் அதற்கேற்ற முறையில் குறைந்த அளவு இம்மொழியில் இடம் பெற்றுள்ளன.
ஓர் இன மக்கள் பேசும் தமிழ்மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுக்காமல், அம்மக்கள் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை உலக மொழிகளுக்குள்ளே தமிழ்மொழி ஒன்றுக்கு மட்டும் உண்டு. வாழ்வுக்கு இலக்
类淡
- - - - - - - - - - - - - - - - -
l
உள்ளங்கவர் கள்வனே! நீ எந்நேரமும் என் இத இவ்வுலகில் ரோஜாமலர்ப் படுக்கையாகிவிடுமே.
ஆன்மீக வாழ்க்கை என்பது கத்திமுனை ே அதில் எப்படி நடப்பது என்ற யுக்தி தெரிந்து அப்போது கூர்மை மங்கிவிடும். உலகில் நடைபெறும் அனைத்தையும் சாட்
நம்பிக்கை இழந்து விடாதே. பாதை கத்த7முன தான். எனினும் எழுந்திரு. வினித்துக்கொன்,
-: {

கார்த்திகை 2011
கணம் வகுத்த தொல்காப்பியம் வாழ்வு நடை பெறுவதற்கு நிலைக்களமாயுள்ள இவ்வுல கையே ஐந்து பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன் றிற்கும் ஒவ்வொரு கடமைகளைக் கூறிச் செல்கிறது.
குறிப்பிட்ட ஒரு சமயத்தின் சாயல் பெறாமல் கடவுட் கொள்கை பற்றிப் பேசுதலின் தமிழரின் ஆதிநூல் என்று பேசப்பெறும் தொல் காப்பியத்தில் சமயம் இடம்பெறுகிறது என காண்கிறோம். இதனை அடுத்துத் தோன்றிய திருக்குறளிலும் தனியொரு சமயத்தின் சாயல் இன்றிக் கடவுட் கொள்கையும் சமயமும் பேசப் பெறுதலை அனைவரும் அறிவோம்.
33
- - - - - - - - - - - - - - - -
O
|க்தி
பத்தில் சஞ்சரித்தால் முட்களாய்க் குத்தும்
ான்று மிகக் கூர்மையானது. ஆனால்
கொண்டால் மிகவும் எளிமையானது.
சியாக இருந்து பார்ப்பதே அதற்குரிய யுக்தி.
னயின் நடப்பதைப் போன மிகவும் கடினமானது மனம்தனராதே.
- சுவாமி விவேகானந்தர்
1:-

Page 64
எம்மதமும்
ல்ெலா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவேயாகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன.
ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபாட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்.
எனவே எவரும் தாங்கள் பிறந்த
மதத்தைவிட்டு இன்னொரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.
கோயில், சர்ச், மசூதி, விகாரை முதலிய கட்டிடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட லாம். உள்ளேயிருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்கு களும் வேறாக இருக்கலாம். ஆனால் அநுக் கிரகம் செய்கிற பரமாத்மா மாறவில்லை.
ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ் வொரு வித ஜனக்கூட்டத்தின் மனப்பான்மை யையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து, அவரோடு சேர்வதற்கு வழிசெய் பவையே.
எனவே எவரும் தங்கள் மதத்தை விட்டு விட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டியதில்லை.
இப்படி மதம் மாறுகிறவர்கள் பிறந்த தங் களது மதத்தை குறைவுபடுத்துவது மட்டு மன்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள். கடவுளையும் குறைவு படுத்துகிறார்கள்.

தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாகச் சேரும் மதத்தையும் அவர் குறைவுபடுத்துகிறார் என்று ஏன் சுவாமிகள்
சொல்கிறார் என்று உங்களுக்குத் தோன்றலாம் சொல்கிறேன்.
கடவுள் எல்லா மதங்களுக்கும் பொது வானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரை குறுக்குவதால்தானே ஒரு மதத்தைவிட்டு இன் னொன்றில் சேருகிறார்கள். தங்கள் மதத்துக் கடவுள் பிரயோசனம் இல்லாதவர் என்று நினைத்து இன்னொரு மதத்துக்குத் தாவு கிறார்கள். மாறுகிற புதுமதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறீர்களா? இல்லை அப்படி நினைத்தால் மாறவே வேண்டாம்.
இவர்கள் தாங்கள் பிறந்ததிலேயே இருந்து வழிபட்டாலும் இப்போது இவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர் களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத் திற்கு அவசியம் ஏற்பட்டது. அதாவது தாங்கள் மாறுகிற புதுமதத்திற்கு, அதன் கடவுளுக்கும் கூட இவர்கள் குறுகலான எல்லைகட்டி விடுகிறார்கள். ஒரு மதத்திடம் கெளரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகெளரவப்படுத்தி விடுகிறார்கள்.
62:-

Page 65
கோபுரம்
மற்ற மதங்களுக்கும் நம் இந்து மதத்திற் கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் நம் முடைய இந்து மதம் ஒன்றுதான், “இது ஒன்றே மோட்சமார்க்கம்” என்று சொல்லாமல் இருக் கிறது. நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடை யாது. ஏனென்றால் ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே பல மதங் களுக்கு என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் இவ்விசால மனப்பாண்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும். வேதம் “ ஒரே சத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்’ என்கிறது.
கீதையில் பகவான் ' எவன் எந்த விதத்தில், எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தி யாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப் படுத்துகிறேன்’ என்கிறார்.
ஆழ்வார் ‘அவரவர் தமதமதறிவறி வகை வகை அவரவர் இறைவர்’ என்கிறார். இதனால் தான் மற்ற மதங்களில் செய்வதுபோல் மதமாற்றம் செய்வது. (Proselytisation) அதற்காகத் தண்டிப்பது தங்கள் மதத்துக்கு மற்றவரை திருப்புவது முதலான காரியங்களில் இந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை. நம்முடைய நீண்ட காலச் சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளுகிற விசயம் இது.
தூரகிழக்கு (Far East) முதலான தேசங் களில் பூரீ விஜய சாம்ராஜ்யம் முதலிய இந்தி இராச்சியங்கள் ஏற்பட்டபோதுகூட நிர்ப்பந்த LD5LDITs)p(3LD 96)606). Forced conversion

கார்த்திகை 2011
இல்லையென்றும் நம் கலாசாரத்தைப் பார்த்து சந்தோசப்பட்டு அன்னியர்களே தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திரக் காரர்கள் சொல்கிறார்கள்.
என் அபிப்பிராயப்படி ரொம்பவும் ஆதி காலத்தில் லோகம் முழுவதிலுமே வேதமதம் தான் இருந்தது. பிற்பாடு அங்காங்கே வெவ் வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சங்கள் குறைந்த பட்சம் இடிபாடுகளாக (Ruins) பழைய ஞாபகச் சின்னங்களாக(Relics) வாவது அங்கெல்லாம் இன்னமும் காணப் படுகின்றன.
இப்படித்தான் சொல்வதை ஒப்புக்கொள் ளாத ஆராய்ச்சிக்காரர்கள்கூட நம் பாரத நாகரிகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டார்களேயன்றி பலவந் தத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.
ஒருத்தனைப் புதுமதத்திற்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சடங்கு(Ritual) இருக்க வேண்டும். இப்போது “கன்வெர்ட் செய்கிற மதங்களில் எல்லாம் அப்படியொன்று இருக் கிறது. மற்ற எந்த மதத்தையும்விட மிக அதிக மான சடங்குகளைச் சொல்லுகிற இந்து சடங்குகளைச் சொல்கிற இந்து சாஸ்திரங் களைப் பார்த்தால் இப்படி நம்மதத்துக்கு மற்ற மதத்தினன் ஒருத்தனை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மதமாற் றத்தை விரும்புபவர்கள் அல்லர் என்பதற்கு அத்தாட்சி.
ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியது ஜட்காக்காரன், ரிச்சாக்காரன், டாக்சிக்காரன், என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக்கொண்டாலும் போகவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரலாம். 53:-

Page 66
கோபுரம்
வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டிபோடுவதைத் தவறு என்று சொல்வதற் கில்லை. அது அவர்கள் பிழைப்பு: ஆனால் , கடவுள் என்கிற ஒரே இலட்சியத்துக்கு அழைத் துச் செல்வதற்காக ஒவ்வொரு மதத்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம்.
நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவை தான். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் தெரியும்.
3.
은 o O. படிததுச சு மனிதர் பெரிதும் நேர்மையற்றவர்கள். முன்
影
எது எப்படிய்ாயினும் அவர்களை LD66T60fgig
张
虚 பிறர்மீது பாசமாக இருந்தால் மனிதர்கள் கொண்டதாக எண்ணி உன்மீது குற்றம் சும பாசமுடையவனாக இரு.
虚 வெற்றிக்குரியவான இருந்தால் நீ போலி சம்பாதித்தாய். எது எப்படியாயினும் வெற்றி * நீ நேர்மையானவனாகவும் ഉണഖ மற்ைவு
影
உன்னை ஏமாற்றிவிடலாம். எதுஎப்படியாய கபடமற்றவனாகவும் இரு. * நீ பல வருடங்களாக கட்டியெழுப்பியதைய எது எப்படியாயினும் கட்டியெழுப்பு * நீ மனஅமைதியும் மகிழ்ச்சியும் அடைந்த எப்படியாயினும் மகிழ்ச்சியாக இரு, * உன்னிடமுள்ள மிகச்சிறந்ததை இவ்வுலகி இல்லாமல் இருக்கலாம். எது எப்படியாயினு இவ்வுலகிற்குக் கொடு இறுதி ஆராய்வில் நீ ஆண்டவனுக்கும் இடையிலானதாகும். எது மனிதர்களுக்கும் இடையிலானதாக என்று

கார்த்திகை 2011
இப்படியே அந்தந்த மதத்தவர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால் பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்ல்ா வ்ளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலகவேண்டிய தில்லை.
மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் அனுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரேபோல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதத்தவர் களும் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம். யூனிபர்மீடி' அவசியமில்லை. ‘யூனிடி இருப்
始被列 அவசியம்.
O வைத்தவை! பின் முரண்பாடானவர்கள். சுயநலமுடையவர்கள்.
து விடு.
அதனை சுயநலம். அந்தரங்க உள்நோக்கம்
த்துவார்கள். எதுஎப்படியாயினும் பிறர்மீது
நண்பர்களையும் உண்மையான எதிரிகளையும் கொள். இல்லாதவனாகவும் இருந்தால் மனிதர்கள் பினும் நேர்மையானவனாகவும் கள்ளம்
ாரோ ஒருவர் ஓர் இரவில் அழித்துவிட முடியும்.
ால் மனிதர்கள் பொறாமைப்படுவார்கள். எது.
ற்குக் கொடு.அது என்றுமே போதுமானதாக றும் நீபெற்றுக் கொண்டுள்ள மிகச்சிறந்ததை நீ புரிந்து கொள்வாய். அந்த ஆராய்வு உனக்கும் எப்படியாயினும் அந்த ஆராய்ச்சி உனக்கும் இருந்ததில்லை. - அன்னை தெரேசா
64:

Page 67
துறவிக்குவே
இறைவனை நெருங்கிவிட்ட ஞானிக்கு அரசனும் துரும்பாகி விடுகிறான். (
கன பரிமாணத்தில் அளவிடமுடியாததாக இருக்கும் ஆலமரத்தைக் தெரியாத காற்றுச் சாய்த்துவிடுகிறது.
துறவிக்கு வேந்தன் துரும்பு!
சொத்து சுகங்களில் எவனுக்கு பற் றில்லையோ அவனுக்கு இறைவனைத் தவிர எல்லாமே துச்சம்.
நான்தான் என்ற ஆணவம் போகிக்கு வரும். அது யோகிக்கு வராது.
எல்லாவற்றையும் கடந்தநிலை ஞானி யின் நிலை.
என்னுடையது என்று சொல்ல இறை வனைத் தவிர அவனுக்கு எதுவுமில்லை.
கடவுள் ஒருநாள் பூமிக்கு வந்தார்.
தஞ்சாவூர் மிராசுதார் ஒருவரைச் சந்தித் தார்.
அந்த மிராசுதார் ஒரு பெரிய தஞ்சை நிலப்பரப்பைக் காட்டி ‘இவையெல்லாம் என் னுடையவை என்றார்.
தன்னுடைய சொத்துக்களை ஒவ்வொன் றாகக் காட்டி, இவை எல்லாம் எனக்கே சொந்தம் என்றார்.
கடவுள் அமைதியாக அவர் உடம்பைச் சுட்டிக் காட்டி 'இது எனக்குச் சொந்தம் என்றார்.
-: 6

ந்தன் துரும்பு
ஆனால் பற்றற்ற துறவியின் சடலம் எரியும்போது கூட இந்த நெருப்பு அவர்கள் ஊணஉடலை எரிப்பதோடு நின்றுவிடுவ
ல்லை. ஞான ஒளியையும் பரப்புகிறது.
ஞ 69
புறப்பட்ட இடம் எவனுக்குத் தெரிகிறதோ, அவனுக்குத்தான் போய்ச் சேர வேண்டிய இடமும் தெரியும்.
ஜனநாயகத்தில் ஐந்து வருட காலம் என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வருகிற வனே அந்தப் பதவி நிரந்தரமானது போல ஆடத் தொடங்கிவிடுகிறான்.
அவன் மந்திரியான உடனே அரசாங்கக் கார்கள் ஓடி வருகின்றன.
அதிகாரிகள் சலாம் போடுகிறார்கள். பொலிஸ்காரர்கள் சல்யூட் அடிக்கிறார்கள். அதே பொலிஸ்காரர்கள் ஒரே சமயத்தில் அதே மந்திரியைக் கைது செய்கிறார்கள்.
தான் நியமித்த நீதிபதியாலேயே அவன் விசாரிக்கப்படுகிறான்.
தான் நிர்வகித்த சிறைச்சாலைக் குள்ளேயே அவன் குடியேறுகிறான்.
மற்றவர்களை எப்படி நடத்தினானோ அப்படியே அவனும் நடத்தப்படுகிறான்.
ஆனால் பற்றற்ற துறவிக்கோ இந்தச் சிக்கல்கள் எவையும் இல்லை.
S5:-

Page 68
- கோபுரம்
தன் உடலுக்காக ஒரு "சோப்பு க்கூட அவள் வாங்குவதில்லை.
கங்கையில் தண்ணிர் ஓடினால் அவன் குளிக்கிறான். அது வற்றிவிட்டால் அவன் கிணற்றுத் தண்ணீரை நாடுகிறான்.
ஆனால் பதவி மோகக்காரனோ ஒரு புதிய கங்கையை உற்பத்தி செய்ய விரும்புகிறான்.
‘விடப்போகுதுயிர் விட்டவுடனே உடலை சுட்டுவிடப் போகிறார் சுற்றத்தார் என்கிறார் பட்டினத்தார்.
மேலும் விழுந்து உற்றார் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே குற்றாலத்தானையே கூறு என்கிறார்.
மரணம் நிச்சயம் என்பது தெரிந்தும் பெரிதும் ஆசையாலும் ஆணவத்தாலும் அலை மோதுகிறான்.
- ஆனால் ஞானிக்கு ஒருவகை ஆணவம் வருகிறது. அந்த ஆணவம் வென்றும் விடுகிறது.
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்றாரே அப்பர் சுவாமிகள். அவர் கடைசி வரையிலே தன்னை ஒரு இறைவனின் குடிமகனாகக் கருதினாரே தவிர ஒரு அரசனின் குடிமகனாகக் கருதவில்லை. அப்பருக்கு ஏற் பட்ட ஆணவம் அத்தகையது. -
ஒரு பஞ்சப்பரதேசி, துறவி, சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.
குளிர் காலத்தில் வெய்யில் காய்வதற் காக ஆற்று மணலிலே துண்டைவிரித்து அவன் படுத்திருந்தான்.
உலகத்தையே வெல்ல புறப்பட்ட மகா அலெக்சர்ன்டர் அவன் அருகே வந்தான்.

கார்த்திகை 2011
ஞானி அவனைக் கவனிக்கவில்லை.
கால்மேல் கால்போட்டபடி சூரியகிர ணங்களில் குளித்துக் கொண்டிருந்தார் ஞானி.
நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன் என்றான் வந்தவன்.
அப்படியா? என்று சாதாரணமாகச் சொன்னார் ஞானி.
6, ஞானியே! உனக்கு என்ன வேண்டும் கேளிர் நாணி தருகிறேனர் 1’ என றார்
அலெக்சாண்டர். -
'எனக்கு ஒரு உதவி வேண்டும் என்றார் ஞானி. --
என்ன வேண்டும். பொன் வேண்டுமா?
பொருள் வேண்டுமா? மாளிகை வேண்டுமா? என்று கேட்டான் அலெக்சாண்டர்.
ஒன்றும் வேண்டாம் நீ கொஞ்சம் விலகி யிருக்க வேண்டும். உன் நிழல் வெய்யிலை மறைக்கிறது என்றார் ஞானி.
அலெக்சாண்டர் என்றால் உலகமே நடுங்கும், ஞானி நடுங்கவில்லை.
அலெக்சாண்டரின் ஆணவத்தை ஞானி யின் ஆணவம் தோற்கடித்தது.
காரணம் ஞானிக்குத் தேவை என்று எதுவும் இல்லை. - யாரிடம் இருந்து எதையும் எதிர்பாராத ஆணவம், தன்னம்பிக்கை. -
ஆசை வ்யப்பட்ட ஆணவம் திமிர். - ஒரு ஞானியிடம் ஒரு பணக்காரன் போனான் "இதோ பார்! நான் வந்திருக்கிறேன்’ என்றான்.
66:- -

Page 69
கோபுரம்
ஞானி அமைதியாக அவனைப் போகும் படி கையசைத்தார்.
பின் எப்பொழுது வருவது என்று அவன் கேட்டான்.
‘நான் செத்த பிறகு வா’ என்றார் அவர்.
'நீ செத்த பிறகு நான் வந்து என்ன செய்வது என்றான் அவன்.
‘நான் என்றால் "நான் அல்லடா! நான் வந்திருக்கிறேன்’ என்றாயே, அதில் உள்ள நான்’ என்ற ஆணவம் செத்த பிறகு வா’ என்றார் அவர்.
மனிதர்களுக்கு வெற்றிவரும்போது இந்த ஆணவம் கூடவே வரும்.
அடிவிழும்போது, அதுவும் நாய்க்குட்டி போல் அடங்கிவிடும்.
ஆனால் ஞானியின் ஆணவம் இறை வனைச் சந்திக்கின்றவரை நீடிக்கும்
காரணம், அந்த ஆணவம் தன்னை அறிந்து கொண்டதற்கான தத்துவ விளக்கம்.
" மனிதர்களைப் பார்த்து இறைவன் இரண்டு முறை சிரிக்கிறான்” என்றார் ரீ இராம கிருஷ்ணபரமஹம்சர்.
'இது என் சொத்து. இது என் சொத்து’ என்று பங்காளிகள் சண்டையிடும்போது ஒரு முறை சிரிக்கிறானாம் ஆண்டவன்.
நோயாளியைப் பார்த்து மருத்துவர்
6
கவலைப்படாதே! நான் இருக்கிறேன்
}}
-:

கார்த்திகை 2011
உன்னைக் குணப்படுத்திவிடுகிறேன் என்று சொல்லும்போது இரண்டாவது தடவையாகச் சிரிக்கிறானாம் ஆண்டவன்.
உலகச் சொத்துக்களுக்கே ஆண்டவன் தான் அதிபதி. நாமெல்லாம் குத்தகைக்காரர் களே. உலகத்தில் தலைசிறந்த - முடிவான டாக்டர் ஆண்டவனே. மற்றவர்களெல்லாம் தற்
காலிகமானவர்களே.
வாழ்க்கை அரங்கில் எவனுடைய ஆணவ மும் செல்லுபடியாகாது.
ஆனால் ஞானியின் ஆணவம் உலகத் தையே ஆட்டுவிக்கும்.
சொல்லப்போனால் அதற்குப் பெயர் ஆணவம் அல்ல. தெய்வீக உணர்ச்சியின் திரட்சி ஆன்மசக்தி!
ஞானி இறைவனுடைய காலாக நிற்க விரும்புகிறான். மனிதனோ இறைவனுடைய தலையே தான் என்று எண்ணுகிறான்.
"ஆணாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வாணாளும் செல்வமும் மண்ணரசும்
யான் வேண்டேன் தேனார் பூஞ்சோலைத்
திருவேங்கடச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே நாவேனோ?”
என்று இறைஞ்சினார் குலசேகர ஆள்வார்.
வானமும் பூமியும் வேண்டாம் ஞானமும்
அருளுமே வேண்டும் என்பதுதான் துறவியின் வேண்டுகோள்.
இப்படிப்பட்ட துறவிக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை.

Page 70
Laraofu Id
உலகத்தில், ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலையில் பிறந்திருப்பதற்குக் காரணம், அவரவர் முன்பு செய்த புண்ணிய பாவத்திற்குத் தக்கபடி ஆண்டவன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிலைமையில் பிறக்கும்படியாகச் செய்திருப்பதேயாகும்.
ஒருவன் செய்கிற நன்மையும் தீமையும் பல வகைப்படும். பிறர் அறியும்படி செய்வது, அறியாதபடி செய்வது, தான் உணர்ந்து செய்வது, உணராமற் செய்வது, பயன் கருதிச் செய்வது, பயன்கருதாது செய்வது, தீமை யாகத் தோன்றியது நன்மையாகப் பயன் கொடுப்பது, நன்மை போலத் தோன்றியது தீய பயனைக் கொடுப்பது என்பன அவ் வகைகள். ஒருவன் இப்பிறவியில் செய்த நன்மைக்கும், தீமைக்கும் பயனாக இன்ப துன்பம் இவ்வுலகிலேயே அனுபவிப்பதும் உண்டு. ஒருவன் மற்றவனுக்குச் செய்யும் நன்மைக்குப் பதிலாக அவனே இவனுக்கு நன்மை செய்துவிடுவதையும், கூலிக்கு வேலை செய்பவன் வேலை செய்த வினைக் குப் பயனாக உடனே கூலியாகப் பயனைப் பெறுவதையும் இவ்வுலகிலேயே வினையின் பயனைப் பெறுவதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஒருவன் கைம்மாறு கருதாமல் பிறருக்கு நன்மையான காரியம் செய்தால் அந்த வினை நல்வினையாகப் பதிவு செய்யப்படுகிறது. அது மறுபிறவியில் முன் செய்த புண்ணியமாக வருகிறது. ஒருவன் செய்த தீயகாரியத்தின் பயனை இவ்வுலகத்தில் அனுபவியாதிருந்தால் அது அவனுக்கு மறுபிறவியில் பாவமாக வருகிறது. பிறர் அறியமுடியாமல் மறைத்துச் செய்தாலும் அவையெல்லாம் தவறாமல் பதிவாகிவிடும். புண்ணிய பாவங்கள் மனத்

púb LIIT60IDÍÎb
ரூலரு சோமசுந்தர ಆಲ್ರೌ 靴、 వ్లో T ಕ್ವತ್ಥನ್ತು। සද්ද 来
aro II flatsoir is ※
தினாலும் வாக்கினாலும் உடலின் செய்கை யினாலும் உண்டாகின்றன. தனித்தனியே புண்ணியத்திற்கு உரிய பலனையும், பாவத்திற் குரிய பலனையும் கடவுள் விதித்தபடி அனு பவித்தே தீரவேண்டும். ஒன்றை ஒன்றிலிருந்து கழிக்க முடியாது. ஒருவர் செய்த வினையை மற்றவர் அனுபவிக்கவும் முடியாது. அவரவர் செய்ததன் பயனை அவரவரே அனுபவிக்கும் படி செய்கிறார் கடவுள்.
நாம் செய்வனவற்றிற்கு எல்லாம் கடவுளே பொறுப்பு என்று கூறுதல் கூடாது. அவர் நமக்கு ஒவ்வொரு பிறவியிலும் உடலைக் கொடுத்து, உயிரை அதிற் புகுத்தி, உலகத்திலுள்ள பலவகைப் போகப் பொருட் களையும் கொடுத்துப் பேருபகாரம் செய்கிறார். இதனாற் பயன்பெறுபவர்கள் நாமே அல்லாது கடவுளல்ல. மேலும், அவர் நமக்கு ஒவ்வொரு பிறவியிலும் இந்த உலகம் என்னும் பள்ளிக் கூடத்தில், அனுபவமாகிய பாடம் போதிக்கின்ற உபாத்தியாயராகவும் இருந்து, நமக்கு அறிவைப் புகட்டி வருகிறார். இப்படி அனுபவ பாடம் படிப்பதும் அறிவு பெறுவதும் நாமே யல்லாது கடவுளல்ல. இன்னும் அவர் நமக்கு வைத்தியநாதராக இருந்து நமது அறியாமை யாகிய நோயை நீக்குவதற்காக, இனிப்பு மருந்தாகிய இன்பத்தையும், கசப்பு மருந்தாகிய துன்பத்தையும் அவரவர் தேவையறிந்து கொடுத்து வருகிறார். இதனால் அவர் பக்ஷ
S8:-

Page 71
கோபுரம்
பாதமுடையவர் ஆகார். ஓர் அரசர் குடிகளின் நடத்தைக்குத் தக்கபடி அவரவர்களுக்குப் பலவித தண்டனைகளும், பலவித பரிசுகளும் தருவது பக்ஷபாதகமான செயலன்று.
ஒரு சிலர், மனிதரைப் படைத்தவர் கடவுளேயாதலால், மனிதரின் கெட்ட குணச் செயல்களுக்கும் அவரே பொறுப்பாளி அல் லவா என்று கேட்பதுண்டு. கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை. அவைகள் அநாதியாய் உள் ளவைகளே. பற்பல உடல்களையும், அவை உலாவுவதற்குரிய உலகத்தையும், அதிற் பற்பல பொருட்களையும் படைத்து, அவற்றில் அவ்வுயிர்களை வாழவைத்து, ஒரு நியதிப்படி அவைகளின் குறைகளையும் போக்கி, அவற் றின் அறிவையும், ஆற்றலையும் வளர்ப்பது தான் அவர் செய்யும் உபகாரம். இம்முறை யிலேதான் கடவுள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பஞ்சகிருத்தியங்களையும் நம் பொருட்டாகச் செய்து வருகிறார். தம் பொருட்டாக அன்று.
இவ்வாறு, எம்மனிதனாலும் செய்ய முடியாத பேருபகாரத்தை, நமக்குச் செய்து வரும் ஆண்டவனிடம் நாம் என்றும் நன்றி யுடையவர்களாய் இருக்கவேண்டும். அவனைச் சிந்தித்து வந்திக்க வேண்டும். அவன் வகுத்துள்ள நன்னெறியில் நடந்து அவனை அடைய முயலவேண்டும்.
கடவுளை எந்தப் பெயர் சொல்லியும் வழிபடலாம். அவரவர் வழிபாட்டின் தரத்திற்கு ஏற்ற பயன் அவரவர்க்குக் கிடைக்கும். அங்கு இங்கு எனாதபடி, எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி, அருளோடு நிறைந்து இருக்கின்ற அவ்விறைவனை, சிறந்த குருவினிடத்திலும் கண்டு வழிபடலாம். ஆலயத்திலுள்ள திருவுரு வங்களிலும், ஆன்மார்த்த பூசைக்கு உரிய வடிவங்களிலும் வழிபடலாம். ஆண்டவனுக்கு பிறர் கூறும் பெயர்களைப் பழித்தல் பாவமாகும்.

கார்த்திகை 2011
உயிர்களிடம் காணப்படும் ‘நான்’ என்ற முனைப்பு, “எனது” என்ற மமதை, காமம், குரோதம், உலோபம், பொய், கொலை, களவு முதலிய குற்றங்கள் எல்லாம் உயிர்களைப் பிணித்துள்ள அறியாமையிலிருந்து கிளம்பின வையே. தன்னலம், ஆசை, கோபம், பகை போன்ற குறைபாடுகள் இல்லாமல் பிற உயிர் களுகளுக்கு இதம் (நன்மை) செய்தல் புண்ணியம்: அவற்றிற்கு அகிதம் (தீமை) செய்தல் பாவம். இதை ஆன்மாக்களுக்கு உணர்த்துவதற்காகத் தான், ஆண்டவனது நியதிப்படி, புண்ணிய பாவச் செயல்கள் அமைந்து, அவைகளுக்குரிய இன்பமும் துன்பமும் ஊட்டப்பெறுகின்றன. பிறருக்குச் சம்பந்தம் இல்லாமல் தனக்குத் தானே செய்து கொள்ளும் புண்ணிய பாவங்களும் உண்டு. பணமிருந்தால் தான் புண்ணியம் செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. புண்ணியம் தேடுதற்குப் பணம் அத்தியாவசியமில்லை. நல்ல மனம்தான் முதன்மையாகத் தேவை. மனத்தால், வாக்கால், காயத்தால் புண்ணி யத்தைப் பெரிய அளவில் தேடிக் கொள்ள முடியும். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என்றார் ஆன்றோர். மனம் திருந்த வேண்டுமானால் எல்லா உயிர் களிடத்திலும் கருணை காட்டும் அன்புக் கடலாகிய ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்து பூசித்து வரவேண்டும். அப்போது நமது மனம் திருந்துவதோடு இறைவன் உயிர்களிடம் காட்டும் கருணையும், அவன்பால் நாம் கொள்ளும் அன்பும் நம் உள்ளத்தில் பிரகாசிக்கும். எனவே மக்கள் வாழ்க்கையின் முதன்மையான தேவை அன்பு என்னும் உண்மையை அனைவரும் உணர்வார்களாக. நன்மையே கடைப் பிடித்துப் புண்ணியச் செயல்களையே புரிந்து மக்கள் இகபர செளபாக்கியங்களை எய்துவார்களாக!
淡淡淡
59:-

Page 72
இந்து மதமு
இந்துமதம் தனி மனித ஒழுக்கம் என்றும் சமூக ஒழுக்கம் என்றும் ஒருபோதும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
சமூகம் என்பது தனிமனிதர்களின் கூட்ட மைப்பு என்பதால் தனிமனிதர்களின் ஒழுக்கங் களின் தொகுப்பே சமூக ஒழுக்கம் என்று ஆயிற்று.
தனிமனிதன் தனது வாழ்க்கையில் ஒழுக்கமற்று நடந்துகொள்ளும்போது ஒட்டு மொத்தமான சமூக ஒழுக்கத்தை அது பாதிக் கிறது என்பதில் சந்தேகமில்லை.
எனவே, தனி மனித ஒழுக்கத்தை இந்து நீதி நூல்கள் பெரிதும் வற்புறுத்தின.
நற்செயல்களைப் புண்ணியம் என்றும், தீய செயல்கள் பாவம் என்றும் அழைக்கப் பட்டன.
புண் ணியம் செய்தவனுக்கு நலம் ஏற்படும் என்றும், பாவம் செய்கிறவனுக்கு கஷ்டம் விளையும் என்றும் சொல்லப்பட்டது.
இந்தத் தத்துவம் செயல்களுக்கு விளைவுகள் இருந்தே தீரும் என்கிற அடிப் படையில் உருவாயிற்று.
நல்ல செயல்களின் விளைவு நன்மை யாக இருக்கும்; தீய செயல்களின் விளைவு தீயதாக இருக்கும்.
ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் இறைவன் சாட்சியாக இருந்து அவனுடைய செயல்களைக் கண்காணிக்கிறான் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ம் ஒழுக்கமும்
ஜீவாத்மா பிரும் மாத்மாவின் ஒரு
பகுதியே என்கிற தத்துவத்தின் சாயலை இதில் பார்க்கமுடியும்.
விதி வசமே எல்லாம் நடைபெறுகிறது என்று இந்துக்கள் அழுத்தமாக நம்புவதாக ஒரு கருத்து உண்டு. இது சரியான கருத்தல்ல.
முன் ஜென்மத்தின் கர்ம பலன் இந்த ஜென்மத்தில் சில போக்குகளை மனித குணத்தில் தோற்றுவிக்கிறது என்று இந்துக்கள் நம்பினார்கள்.
இது விதி மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம் என எண்ணுவது
தவறு.
முன் ஜென்ம கர்ம பலன் இந்த ஜென்மத் தில் சில பல போக்குகளுக்குக் காரணமாக இருந்தாலும் நம்முடைய நற்செயல்களின் மூலம் இந்தப் போக்குகளை மாற்றிக் கொண்டு விடமுடியும் எனவும் இந்து சாஸ்திரங்கள் அழுத்தமாகவே சொல்லுகின்றன.
கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவதைத் தான் இந்துமதம் வற்புறுத்துகிறதே தவிர, கர்ம பந்தத்துக்கு நிரந்தர அடிமையாக இருப்பதை இந்துமதம் ஏற்றுக் கொள்ளவில்லை.
புண் ணிய காரியங்களின் மூலம் ஒவ்வொருவனும் கர்ம பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விடமுடியும் என்று இந்துமதம் போதிக்கிறது.
ஆகவே இந்துமதம், ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் முன்கூட்டியே தீர்மானிக்கப்
70:-

Page 73
கோபுரம்
பட்டிருப்பதாகக் கூறுகிறது எனச் சொல்லுவது அபத்தம்.
மனித முயற்சியை இந்து மதம் ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டதில்லை.
லெளகீக ஒழுக்கமும், ஆன்மீக ஒழுக்க மும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றிலிருந்து இன்னொன்று பிறக்கிறது.
இந்து சாஸ்திரங்கள் சம்ஸ்காரங்களை விட ஆத்ம குணங்களையே பெரிதாக மதித்துப் போற்றுகின்றன.
சடங்குகளே சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தனிமனிதனின் ஒழுக் கமே ஆத்ம குணம் என்று சொல்லப்படுகிறது.
சடங்குகளை சிரத்தையோடு செய்து விட்டு ஒழுக்கக் கேடான காரியங்களில் ஈடுபடு கிறவனுக்கு ஆத்ம விமோசனம் ஒருபோதும் கிட்டாது என்பது இந்துமதம் அளித்துள்ள தெளிவான தீர்ப்பு.
மேலே சொன்ன விஷயங்களைக் கொண்டு பார்க்கின்றபோது தனி மனித விஷ யத்துக்கு இந்து மதம் சிறப்பான முக்கியத் துவம் கொடுத்திருப்பது தெரியவரும்.
கீதை ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறது. நன்னடத்தையும், நற்செய்கையும் ஆரம்பத்தில் கசப்பானதாகவும், கடினமானதாகவும் இருக்கும் என்பதில் சந்தேக மில்லை.
ஆனால் அதில் தொடர்ந்த பயிற்சி ஏற்பட்டுவிட்ட பிறகு நல்ல காரியங்களைச் செய்வதைப் போல சுகமான அனுபவம் வேறு

கார்த்திகை 2011
எதுவும் இருக்கமுடியாது என்றும் கீதை வற்புறுத்திச் சொல்லுகிறது.
நம்மைவிட பெரியவர்களிடம் பக்தியும், நமக்கு சமனானவர்களிடம் சகோதர பாசமும், நமக்குக் கீழானவர்களிடம் இரக்கமும் நம்முடைய செயல்களில் வெளிப்படுவது நன்ன டத்தைக்கான மார்க்கம் என்று இந்து சாஸ் திரங்கள் சொல்லுகின்றன.
பாவம் செய்தவர்களுக்கு விமோசனமே இல்லை என்று இந்துமதம் சொல்லவில்லை.
நம்முடைய புராணக் கதைகளில் தெய்வங்களும், ரிஷிகளும் சாபம் கொடுத்த பிறகு, சாபம் பெற்றவர்கள் தாங்கள் செய்த தவறுக்கு வருந்தியபோது, அவர்களுக்கு சாப விமோசனத்துக்கான வழியையும் சொல்லிக் கொடுத்தார்கள்.
தவறுகளை உணர்ந்து அதற்காக வருந்துவதே போதுமான தண்டனை என்று இந்துமதம் கற்றுக் கொண்டிருக்கிறது.
பிராயச்சித்தம் என்கிற சொல்லுக்கு இந்து மதத்தில் விசேஷமான அர்த்தம் உண்டு. இதையே தமிழில் கழுவாய் என்று சொல்லு வார்கள்.
ஒருவருக்கு ஒருவன் தீமை செய்து விட்டால், அதற்காக வருந்தி அந்தத் தீமை யைப் போக்கும் வகையில் பாதிக்கப்பட்ட வனுக்கு நன்மை செய்வதை பிராயச்சித்தம் என்று சொன்னார்கள்.
இதன் அடிப்படைத்தத்துவம் மனமாற்றம்தான்.
தவறு செய்வது மனித இயற்கை. அதுபோலவே தவறு என்று உணர்ந்தவுடன்
71:-

Page 74
கோபுரம்
அதற்காக வருந்தி மனமாற்றம் பெறுவது மனிதன் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்க நெறி.
அஹிம்சை இந்துமதத்தின் ஆணிவேர் என்று முன்னமே குறிப்பிட்டுள்ளேன்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி எவ்வுயிருக் கும் தீங்கு இழைக்காமல் இருப்பதே அஹிம்சை நெறியாகும்.
இந்துக்கள் இந்த அஹிம்சை வழியையே ஆதார வழியாகவும் கொண்டிருந்தார்கள்.
உயிர் காக்கும் சூரியனுக்கு பொங்க லிட்டு வாழ்த்துக் கூறினார்கள். உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால் நடைகளுக் கும் அது போலவே வழிபாடு செய்தார்கள்.
கலைமகளைப் பூஜித்தவர்கள் வாழ்க்கைக் குப் பயன்படும் கருவிகளையும் பூஜித்தார்கள்.
இதெல்லாம் மூட நம்பிக்கைகள் அல்ல: உயிர்களை நேசிக்கும் மனோபாவம். தனக்கு உதவும் அனைத்துக்கும் நன்றி செலுத்திடும் சீரிய கொள்கை.
இந்த மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளும்போது அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனப்பக்குவம் தானாகவே வந்து விடுகிறது.
பார்க்கப் போனால் இந்துமதம் உருவாக் கிய பண்டிகைகளும், திருவிழாக்களும் கூட ஒழுக்கத்துக்கான ஒரு பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
சிலர் கேட்கக்கூடும், அனைத்து உயிர் களையும் நேசிக்கும் இந்துமதம் தீண்டத் தகாதவர்கள் என்று மனித இனத்தின் ஒரு பிரிவினரை ஒதுக்கி வைத்தது எப்படி என்று.

கார்த்திகை 2011
எந்த அமைப்பிலும் சில தீமைகள் இடைக்காலத்தில் வந்து புகுந்து விடுவதைப் போல இந்து சமூக அமைப்பில் இடைக் காலத்தில் புகுந்த தீமைதான் இது.
இந்து மதக் கோட்பாடுகளில் தீண்டா மைக்கு எந்த விதமான அங்கீகாரமும் இல்லை.
ஆச்சாரம் என்பதே ஒழுக்கம் தான். சமூகத்தில் மேலாதிக்கம் பெற விரும்பியவர்கள் சில தீய ஏற்பாடுகளுக்கு சாசுவதமான அங்கீகாரம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள்.
மற்றபடி இந்து மத ஆச்சாரம் என்பது உயிர்கள் அனைத்தையும் நேசிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் உருவானது தான்.
ஓர் இந்து அக ஒழுக்கம், புறஒழுக்கம் என்றும் இரண்டு வெவ்வேறான அல்லது முரண்பட்ட ஒழுக்க நியதிகளைக் கடைப் பிடிப்பது சாத்தியமில்லை.
ஆன்ம பலமே ஓர் இந்துவின் மிகப் GÌLuíflu u Lu6dLib.
இந்த ஆன்ம பலம் அவனுடைய ஒழுக் கத்திலிருந்துதான் அவனுக்குக் கிடைக்கிறது.
ஆகவே ஒரு இந்துவின் வாழ்க்கையில் மனத்தூய்மை இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது.
நல்ல மனம் நல்ல நடத்தைக்குக் காரணமாகிறது. தனிமனிதர்களின் நன்னடத்தை சமூக ஒழுக்கத்துக்குப் பாதுகாப்பாகிறது.
சமூக ஒழுக்கம் சிறப்பாக அமையும் போது தவறான பாதையில் செல்லுகின்ற தனி
2:-

Page 75
S= -
மனிதர்களின் நடத்தைகளைக் கண்டித்துக் கட்டுப்படுத்தும் சக்தி சமூகத்துக்கு ஏற்பட்டு விடுகிறது.
இந்து சமூக வாழ்க்கையில் தனி மனித ஒழுக்கமும் இவ்வாறு தான் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன.
இதனாலேயே இந்து சமய வாழ்க்கை, ஒழுக்கம் என்கிற அரணால் பாதுகாக்கப்பட்ட உன்னத வாழ்க்கை ஆகவும் இருந்தது.
நெறிகளைப் பொறுத்தவரையில் இல்லறத் தில் வாழ்கின்றவர்களுக்கு ஒருவகை நெறியும் துறவறத்தில் வாழ்கின்றவர்களுக்கு வேறொரு நெறியும் இருந்தன.
ܚܢܢ ܝ�ܲܢ ܝܓ ܟܓ ܫ ܝܚܬܐܓ ܘܬܐܘ ܚܬܐ
6T6öTLD6OTC3LD.
-
புறத்தாக்குதல்களை பயமின்றி எதிர்நோ
கசப்பான ஏதோ ஒன்று நடக்கும்போது தாக்கும்போதுபதிலுக்குப்பதில் அதேவன் அசைக்க முடியாதபடியிருப்பது கோடி மட
அப்படி இருப்பது கோடி மடங்கு ஆற்றல்
இங்கி அடிப்பது எனிது. ஆனான் அடிக்கா
இறைவா! உம்மிடமே தஞ்சம் அடைகிறேன் எதிர்பார்த்து காத்திருப்பது அதைவிடக் கழக

கார்த்திகை 2011
இல்வாழ்க்கையும் சரி, துறவு வாழ்க்கை யும் சரி, இரண்டு அறங்களாக அல்லது தர்மங்களாக இந்துக்களால் கருதப்பட்டன.
வாழ்வியல் லட்சியம் இரு சாராருக்கும் வெவ்வேறாக இருந்ததால் நெறிகளும் வேறு பட்டும் மாறுபட்டும் இருந்தன. ஆனால் முரண்பாடு இருக்கவில்லை.
பொதுவாக இந்து ஒழுக்கம் என்பது தனி மனித விமோசனத்தையும் சமூக பொறுப்புக் களையும் ஆதாரமாகக் கொண்டு அமைந் திருந்தது என்பதுதான் உண்மை.
53
]றல்
ாக்கும் ஆற்றலை விரைவாய்ப் பெற்றிடு
பிறர் சொல்லோ செயலோ உன்னைத் முறையைச் செய்வதைவிட அமைதியுடன்
ங்கு கடினமானது.
வாய்ந்ததாகும்.
ரன் அடங்கி இருப்பது மிகக் கடினமானது.
* என்று கூறிவிட்டு அவன் செயனை
7மானது.
- சுவாமி விவேகானந்தர்

Page 76


Page 77


Page 78
spoila) st
இத்
சேரல்
முகவரி .
LS Y S0LS SY Y SSLSL S SS SS SSL S YSLLSS 0S SS SS SSSSS SLS0 S SLS 0SS S0SS S0S S S0SS S0 SS
 

ANPA DU
နှီးနှီး
క్ష్ gigs திகதி:
இ
蟹
ஜ்
SS S S S S S S S S S S S S S S LSL SL SL S SS Y Y 0S 0S
S S S S S SL S SS S SL S SL S S S S SLL LSL SL S LSL S SL S SS SS SS SSL SSL S S S LS S S S S S S S S S S S L S S L L LS
S SSL SSL SL L L LSL L S LSL LSL S L S LS S SL L SS SL SL L L S SS SS SSL SSL S S SL S SL S LS S SL S S S S L SLL S SSL