கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2012.01

Page 1


Page 2
வாழ்க வையகம்
இலங்கையில் முதன் முதல் எழுந்து நிற் மனமுவர்ந்து வ
53/1A,
Ranmalkrishna VVellavatta
Colombo - O T:]P O11-565
 
 
 

வாழ்க வளமுடன்
鹭 s Ա Ա (Ա
ாதகுலம் உப்ப அருள் தொடற்றினார்.
மாய் அறிவுக்கு ஒரு ஆலயம் கப் போகிறது. பாற்குவை தார்.
Road,
6. 3412, O71-4O423OO

Page 3
இதழ் வடிவமைப்
குளோபல் கிரபி
14, 57வது ஒழுங் கொழும்பு - 06. ே
வெளியீடு மற்றும்
AHAVILI
3, Torrington Ave Tel 011 - 25062
E-Mail : aha1vili.1v.
இ கற்பித்தல் ~ கற்றல் செயன்முறையில் கு
இல் வினைத்திறன் மிக்க நேர முகாமைத்துவம்
இ இன்றைய வகுப்பறைகளின் பாடநூலின்
இன மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்
ஆலோசனையின் முக்கியத்தவமும்
* கற்றலும் கற்பித்தவம்
* மனித உரிமையொன்றாக கல்வி பெறுவத
இ 2ம் மொழி கற்பித்தலும் தேர்ச்சிக் குறைப
இலி ஊக்கல்
இ கல்வியியல் எணாணக்கருக்கள் ~ 2
ܢܓܠ
ஜ
ஆவிதி
ஆவித் ஜனவரி 2012
 

க்ஸ்
கை, வெள்ளவத்தை, தொ.பேசி: 2360678
தொடர்புகட்கு :
nue, Colombo - 07.
72 iluthu(agmail.com
ஆசிசியத்துவ நோக்கு. g
ழ உளவியல்
பயன்பாடு
ட்டு இடைவிலகுவதும், வழிகாட்டல்
ற்கான உரிமை
ாடுகளும் தீர்வுகளும்
O4.
O 9
17
22 Ο
24
27
35
41
42
O 01

Page 4
ஆசிரியர் : V.S.இந்திரகுமார்
நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் குழு க.சண்முகலிங்கம் திருமதி பத்மா சோமகாந்தன்
ஆலோசகர் குழு : திருது.ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.
கலாநிதி உநவரட்ணம் முன்னாள் ஓய்வு நிலைப்பணிப்பாளர் - தேசிய கல்வி நிறுவகம்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி கொழும்பு பல்கலைக்கழகம்.
பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை - பேராதனைப் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் இரா.வை.கனகரட்ணம் தமிழ்த்துறை - பேராதனைப் பல்கலைக்கழகம்.
திரு.க.இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர் - தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
திரு.தை.தனராஜ் முதுநிலை விரிவுரையாளர் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,
திரு.P.தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகள் - சமூக கற்கைகள் நிலையம்
கல்விப்பீடம் திறந்த பல்கலைக்கழகம்.
லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர். கல்வி அமைச்சு.
திரு.கே.சாம்பசிவம் கல்வி முகாமைத்துவம் ஆலோசகள்.
திரு.ஜி.போல் அன்ரனி
முன்னாள் பிரதிபரீட்சை ஆணையாளர்.
திருமதி அருந்ததி ராஜவிஜயண் Uஆசிரிய ஆலோசகள் கொழும்பு கல்வி வலயம்.
ஆகவிதி ஜனவரி 2012
 

ஆசிரியரிடமிருந்து .
21ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நுழைந்திருக்கும் எம்முன் விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியின் சாதக பாதகங்கள் விரிந்து கிடக்கின்றன. மனிதகுல மேம் பாட்டிற்கான செயற்திட்டங்களை வகுப்பதில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மூன்றாம் உலக நாடான இலங்கை ஏனைய நாடுகளைப் போல் பல புதிய திட்டங்களை வகுத்து முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தேசியம், சூழலியல், தொழில்நுட்பப் புரட்சி, கல்வி என பல துறைகளிலும் முன்னேற வேண்டி யிருக்கிறது. ஆயினும் இலங்கையில் இன்றைய நிலையில் கல்வியும் அதன் தராதரமும் பேணப்படு கின்றதா? என்பது பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது. இதற்கொரு பெரிய உதாரணம் தான் அண்மையில் வெளியான கா/பொ/த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள். இன்றுவரை இப்பிரச்சி னைக்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை. பரீட்சைத் திணைக்களத்தின் முன் ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. பல அரசியல் கட்சிகளும் ஆசிரியத் தொழிற்சங்கங்களும் கல்வியோடு தொடர் புடைய பல அமைப்புக்களும் பரீட்சை பெறுபேறு களை இரத்துச்செய்யுமாறு ஒருமித்த கருத்தையே தெரிவித்து வருகின்றன. நீதிமன்றம் செல்லப் போவதாகவும் மாணவர்கள் சார்பில் மனித உரிமைகள் அமைப்பிடம் முறையிடுமாறும் பல ஊடகங்கள் கருத்துக்களை வெளியிடுகின்றன.
எது எவ்வாறாயினும் வெளிவந்த முடிவுகளில் எவ்வித மாற்றங்களையும் செய்வதற்கு பரீட்சைத் திணைக்களமோ அதன் அதிகாரிகளோ இசைவதாக இல்லை. பரீட்சை முடிவுகள் விரைவாக வெளிவர வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை களால் கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் அடம்பிடிக்கின்றனர். மேலும் Z புள்ளித்தர வரிசையில் மாத்திரம் தான் ஒழுங்கீன
O 02

Page 5
ங்கள் உள்ளன, பெறுபேறுகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளும் கல்வி அமைச்சரும் கூறிவருகின்றனர். ஆயினும் இந்நிலைமைகள் பற்றி ஒரு இறுதியான முடிவிற்கு பரீட்சை எழுதிய மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் வரமுடியாமல் உள்ளனர். இந்நிலைமையில் பரீட்சை எழுதிய மாணவர்கள் பல நிலைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒரு சில உயிரிழப்புக்களும் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைமை எதிர்காலத்தில் பரீட்சைகளும் அதன் முடிவுகள் தொடர்பிலும் பெரிய சந்தேகத்தினை ஏற்படுத்தலாம். அல்லது நம்பிக்கையற்ற ஒரு நிலையினையும் தோற்று விக்கலாம். நாட்டின் அபிவிருத்தியில் கல்வித்துறை ஆற்றி வரும் பங்களிப்பு மிக முக்கியமானது. அத்துறையில் ஏற்படும் தர மதிப்பீடுகள் கேள்விக் குள்ளாக்கப் படும் போது அத்துறை சார்ந்த அனைத்து செயற்பாடுகளும் மலினப்படுத்தப் பட்டுவிடும். தொழிநுட்பக் கோளாறுதான் காரணம் எனக்கூறி தகுதிவாய்ந்த அதிகாரிகள் தமது பொறுப்பைத் தட்டிக் கழித்திருப்பதானது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஒரு பகுதியில் தொழிநுட்பப் பிரச்சினை என்றால் வேறொரு பிரிவில் இப்பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும். அதுவும் முடியாமல் போனது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
அதேநேரம் கல்விக்காக ஒதுக்கப்படும் தேசிய வள ஒதுக்கீடு ஆசிய நாடுகளில் இலங்கையில் மிகக் குறைவாக இருப்பதும் இவ்வாறான நெருக்கடிகளுக்கான காரணமாகவும் இருக்கலாம். நாட்டின் கல்விக்கான தேசிய வள ஒதுக்கீடு மிகக்குறைந்த வீதத்தில் இருப்பது தெரிந் திருந்தும் அதற்கான சரியான திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகிறது. தற்போது
உதவித் ஜனவரி 2012

ஒதுக்கப்பட்டுள்ள வளங்களைக் கொணர்டு இவ்வளவு செய்ய முடியுமென்றால் (ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரையிலான கல்வி மற்றும் அனைத்து கல்விசார் நிருவாக செயற் பாடுகளும் உள்ளடங்கலாக) வள ஒதுக்கீட்டை இருமடங்காக உயர்த்தினால் கல்விச் சூழல் மிக முன்னேற்றகரமானதாக அமையும் என்பது உண்மை. இதற்காக நாம் செய்யவேண்டியது என்ன? இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியவர்கள் யார்? எமக்கான வளங்களை எவ்வகையில் பெற முடியும்? போன்ற பல வினாக்கள் எம்முன் உள்ளன. இவ்வினாக்களுக்கு விடை தேடவேண்டியது காலத்தின் கட்டாயம். இது தொடர்பில் கல்விசார் அமைப்புக்களும் ஆசிரியர் தொழிற்சங்கங்களும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக
தெரியவில்லை.
எனவே விழுது குழுமத்தினர் அகவிழி ஆசிரியர் சஞ்சிகையினூடாக எதிர்வரும் காலத்தில் ஓர் உன்னதமான ஆசிரியர் வாண்மைத்துவ அமைப்பினை கட்டியெழுப்பி அதனூடாக கல்விக் கான தர உறுதிப்பாட்டை மேம்படுத்த பல திட்டங்களை செயற்படுத்த தீர்மானித்து உள்ளனர். இதற்காக கல்விச் சமூகத்திடமிருந்து பல ஆலோ சனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க் கின்றனர். “நாம் முனைந்தால் முடியாதொன் றில்லை" அதற்கிணங்க கல்வியில் மேம்பாடு ஒன்றுதான் இன்று எமது சமூகத்தின் முன் எழுந்து நிற்கும் மிகப்பெரிய குறிக்கோளாகும். இக்குறிக் கோளை வெற்றிகரமாக நிறை வேற்றுவதற்கு தமிழ்க்கல்விச் சூழலில் உள்ள கல்வி வாண்மைத் துவசமூகம் ஒன்றிணைய வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.
ச.இந்திரகுமார்.
OO3

Page 6
முன்னுரை
மனிதன் இயல்பாகவே சமூகப்பற்றுடை யவன். பிறருடன் சேர்ந்து வாழ வேண்டுமென்ற விருப்பம் இயற்கையாகவே மனிதனிடம் அமைந்த தொன்றாகும். இயற்கையாக மட்டுமல்லாது கூடிவாழ வேண்டுமென்ற விருப்பம் அனுபவத்தி னாலும் எழுகின்றது. பொதுவாக மனிதன் தனது சமூக அடையாளத்தை பேணும் வகையில் குழு நடத்தைகளில் ஈடுபட்டு சமூகத்தில் தனது நடத்தை களைப் பலப்படுத்திக் கொள்கின்றான். இதன் விளைவாக மனித வாழ்வில் குழு நடத்தைகள் முக்கியம் பெறுகின்றன. இருப்பினும் தனது வாழ்நாளில் சில வேளைகளில் மற்றவர்களோடு போட்டியிட்டும் சில வேளைகளில் ஒத்துழைத்தும் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு மனிதன் தள்ளப்படு கின்றான்.
தனி மனிதனானவன் பிறருடன் சேர்ந்து குழுவாக இயங்க முற்படுகின்ற பொழுது அவனது நடத்தைமுறைகள் மாறுகின்றன. மனித நடத்தை யை விளக்கும் உளவியல் மனிதனது கூட்டு நடத்தை பற்றியும் ஆராய முற்படுகின்றது. ஒரு தனிமனித னின் சிந்தனை, உணர்ச்சி, செயல்கள் என்பன வெல்லாம் ஒரு குழுவின் உறுப்பினர்களாக செயற் படுகின்ற பொழுது மாற்றமடைகின்றன. பொது வாகத் தனிமனிதனாக இருக்கும் போது செய்யாத, செய்யத் துணியாத பல செயல்களை குழுவாகச் செயற்படும் பொழுது மனிதன் செய்வதை அனுபவத்தில் கண்டுள்ளோம். கல்விப்புலத்திலும் மாணவர்களின் ஆற்றல்களை மேம்பாடடையச் செய்வதில் குழுச் செயற்பாடுகள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. இந்த வகையில் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்பித்தல் - கற்றல் செயன்முறையிலே குழுச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகையில் குழு உளவியல் தொடர் பான விளக்கம் அவசியமானதாகும்.
குழு மனம்
உளவியலிலே குழுக்களின் மனப்போக் குகளையும் நடத்தைகளையும் விவரித்து விளக்கும்
அகவித் ஜனவரி 2012
 

உளவியல்
குழு மனவியல்" அல்லது "குழு உளவியல்" (Group Psychology) எனக் குறிப்பிடப்படு கின்றது. குழு உளவியல் குழுக்களின் உரு வாக்கத்திற்கான உளவியல் அடிப்படைகள், குழு நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் உளவியல்சார் காரணிகள், குழுநடத்தைகளை விளங்கிக்கொள் வதற்கான அணுகுமுறைகள் போன்ற பலவிடயங் களை ஆராய்கின்ற ஒரு துறையாகும்.
குழு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி ஒரு பொதுநோக் கத்தின் அடிப்படையில் செயற்படும் ஒரு அமைப்பு எனலாம். குழுவில் இடம்பெற்ற ஒவ்வொருவரதும் நடத்தைகள் ஏனையோர் மீது செல்வாக்குச் செலுத்து வதும் ஒருவர் ஏனையோரின் நடத்தையின் செல்வாக்கிற்கு உட்படுவதும் குழுச் செயற்பாட்டில் காணப்படும் ஒரு முக்கிய இயல்பாகும்.
பிசெல்மான் (Fishelman, 1998) மக்டுகலினால் முன்வைக்கப்பட்ட குழு மனம் பற்றிக் குறிப்பிடு கின்றார். மக்டுகல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மனம் உள்ளது போன்று குழுக்களுக்கும் “குழுமணம்” (Group mind) என்ற ஒன்று உண்டு என்றும் தனி மனிதன் எவ்வாறு தனது மனத்தின் அடிப்படையில் செயற்படுகின்றானோ அதே போன்று குழுக்களின்
e 04

Page 7
நடத்தைக்கும் குழுமணம் அடிப்படையாக உள்ள தெனவும் குறிப்பிடுகின்றார். குழு மனம் செயற்படுவதற்கு நான்கு அடிப்படை ஆக்க pia) as 6i (Underlying Conditions) gCD.55a) வேண்டுமென மக்டுகல் குறிப்பிடுகின்றார். 1. சிறிது காலமேனும் தொடர்ச்சியாகக் குழு
நிலைத்துஇருத்தல். 2. குறித்த குழுவினைச் சேர்ந்தவன் என்னும்
உணர்வு உறுப்பினர்களிடம் இருத்தல். 3. குழு உறுப்பினர்களிடையே சுதந்திரமான
கருத்துப்பரிமாற்றம் இருத்தல். 4. குழு நடத்தைக்கான சில மரபுகள் / விதிமுறை
களை உருவாக்கி இருத்தல.
தற்கால உளவியலாளர்கள் குழுக்களின் நடத்தைகளை விளக்க இப்படிப்பட்ட ஒரு குழு மனம் ஒன்று இருப்பதாக குழுக்கள் எண்ண வேண்டியதில்லை எனக் குறிப்பிடுகின்றனர். சமூக உளவியலாளர்கள் குழுமணம் என்பதைக் காட்டி லும் “குழுக்களது இயக்கசக்தி" (Group Dynamics) என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய் கின்றனர்.
குழு இயக்கவியலும் கல்வியில் அதன் Ulu 60LT(bLD.
சமூக உளவியலிலே குழு இயக்கவியல்
என்பது ஆராயப்பட்டு வருகின்ற ஒரு எண்ணக் கருவாக உள்ளது. குழு இயக்கவியல் தொடர்பான ஆய்வுகள் இரண்டாம் உலகப் போருக்குப்பின்னரே முக்கியத்துவம் பெற்றது. குழு இயக்கவியல் என்பது குழு உளவியலின் ஒரு முக்கிய அம்சமாகும். குழு இயக்கவியலானது குழுக்கள் எவ்வாறு தோன்று கின்றன. குழுக்கள் வளர்ச்சி அடைவதற்கு தேவை யான நிலைமைகள் என்ன குழுக்கள் நன்கு இயங்கு வதற்கு தேவைப்படும் சூழ்நிலைகள் யாவை குழுக்கள் எவ்வாறு தனிமனித நடத்தையை பாதிக் கின்றன என்ற வகையில் ஆய்வு செய்ய முற்படு கின்றது. குழு இயக்கவியல் தொடர்பான ஆய்வுகள் வெவ்வேறு சமூகச் சூழ்நிலைகளில் மாறுதலடை கின்ற மனித நடத்தைகளையும் குழுவில் காணப் படும் சமூகத் தொடர்புகளையும் புரிந்துகொள்ள வழிசெய்கின்றது.
தனி மனிதர்கள் ஒரு குழுவினுள் அங்கத் துவம் பெற்று இயங்குகின்ற பொழுது அவர்களது
ஆகவிதி ஜனவரி 2012

நடத்தையில் தனித்துவம் (Individuality) குறைந்து வருகின்றதொரு போக்கினை அவதானிக்கலாம். இம்மாற்றம் தனிமனிதர்கள் தனித்து நின்று செயற் படாது என்ன நோக்கத்திற்காக குறிப்பிட்டதொரு குழு உருவானதோ அந்நோக்கத்தை அடையும் வகையில் செயற்பட்டு, பொதுநலன் நோக்கிய செயற் றிட்டங்கள் வெற்றிபெறுவதற்கு உறுதுணையாக அமைகின்றன. இந்த வகையில் பொதுநலன் கருதி அமைக்கப்படும் குழுக்கள் பின்வரும் இயல்புகளை உடையதாகச் செயற்படுதல் வேண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
1. குழுவில் உள்ள அனைவரும் பொது நோக்கம் அல்லது இலட்சியத்தை அடையும் வகையில் செயற்படல்
2. ஒத்த மனப்பான்மையும் நடத்தைகளும் காணப்
படல்
3. குழு உறுப்பினர்களின் நடத்தை குழுவில் கட்டுப்படுத்தப்படுகிறது. குழுவின் மரபுகள், இலட்சியங்களை மதித்து குழு உறுப்பினர்கள் அனைவரும் நடத்தல்
4. உறுப்பினர் ஒருவரின் தேவையை பிற உறுப்பினர் கள் ஒவ்வொருவரும் தத்தம் தேவையை போன்று எண்ணிச் செயற்படல்
5. குழுவில் உள்ளோர் அனைவரும் ஒருவரோடு ஒருவர் நெருங்கிய தொடர்புகொண்டு ஒத்த கருத்துடன் செயற்படுதல் 6. குழு உறுப்பினர்களிடையே ஈடுபாடு, நம்பிக்கை, பரிவு ஆகியவை தோன்றுதல். இதனால் குழுவில் உள்ளோர் ஏனைய உறுப்பினர்களிடம் ஆலோ சனை பெறவும், அவர்களைப் பின்பற்றி நடக்கவும் முற்படுதல் 7. குழுவின் நடத்தையும் இயல்பும் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் பரவிக் காணப் படுதல். 8. குழு உறுப்பினர்களிடையே காணப்படும் தொடர்பு உளவியல் அடிப்படையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தல்.
குழுவாகச் செயற்படுகின்ற பொழுது மேற் குறித்த குணவியல்புகள் வளர்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைப்பதினால் பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர் ஆகியோர் மாணவர்களிடையே குழு நடத்தைகளை ஊக்குவித்து அவர்களது அறிவு, திறன்,
o05

Page 8
மனப்பாங்குகளை குழு செயற்பாடுகளின் மூலம் விருத்தி செய்வதற்கு முனைதல் சிறப்பானதாகும். தனி மனிதர்களிடம் காணப்படும் வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதற்கு குழு நடத்தையும் அதனால் வளர்கின்ற குழு உளவியல்சார் நடத்தைகளும் பக்க பலமாக இருக்கும். எனினும் குழுச் செயற் பாடுகளை வழிநடத்தும் ஆசிரியர்கள் பின்வரும் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தமது மேற்பார் வையை குழுவின் மீது செலுத்துதல் வேண்டும். குழுச் செயற்பாட்டின் பொழுது பின்வரும் குறைபாடுகள் ஏற்படல் தவிர்க்கப்படல் வேண்டும்:
• நிலையற்ற தன்மை வலுவுணர்ச்சியும் பொறுப்பற்ற நடத்தையும்
* உணர்ச்சிவயப்படுத்தலும் அறிவு பூர்வமான
சிந்தனையை குறைந்து காணப்படுதலும் * கருத்தேற்றத் தன்மை மிகுந்து காணப்படுதல்
• குறைந்த சகிப்புத்தன்மை ஓர் உறுப்பினரின் தூண்டலின் விளைவாக மற்றொருவரின் நடத்தை பாதிக்கப்படல்.
ஒரு ஜனநாயக நாட்டிலே குறிப்பாக பன்மைக் கலாசாரத்தை கொண்டுள்ள நாடுகளில் ஏனைய இனக்குழுக்களின் சமூக நெறிகளை அறிந்து ஏனையவர்களுடன் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான சமூகத் திறன்களை உருவாக்க குழு இயக்கவியலை பயன்படுத்துவது ஒரு சிறந்தநுட்பமாகும். கல்விச் செயற்பாடுகளில் குழு இயக்கவியல் பயன்பாடும் முக்கியத்துவமும் பின்வருமாறு அமைகின்றது:
ன மாணவர்களை ஜனநாயக முறையில் செயல்
படுத்துவதற்கு ஊக்குவிக்கின்றது. 2 தனித்து இயங்குவதைவிட குழுவாக இயங்கு கின்ற பொழுது மாணவர்களின் தேர்ச்சி, அடை வுமட்டங்கள் அதிகரிக்கின்றன. z கற்றல் செயற்பாடுகளில் குழுவாக இயங்குகின்ற பொழுது மாணவர்களிடையே கூட்டுணர்வு அதிகரித்து கற்றலுக்கான சிறந்ததொரு கவின் நிலையான சூழல் உருவாகின்றது. ஐ ஆசிரியர், மாணவர், நிர்வாக அங்கத்தவ foLGu (5(p6603Tijigaou (Corporate Spirit) வளர்க்கின்றது.
ஆவிதி ஜனவரி 2012

* பல்வேறு பொறுப்புகளை இலகுவாக நிறை
வேற்ற உதவுகின்றது.
a g) 6iral Iss6igiri saivaig (Inclusive Education) செயற்பாடுகளை முனனெடுத்துச் செல்வதற்கு உதவுகின்றது.
ஆசிரியர் ஒருவர் குழு இயக்க வியலை கற்பித்தல் கற்றல் செயன் முறையில் பயன்படுத்து கின்ற அதேநேரம் ஒவ்வொரு மாணவரினதும் தனித் திறமைகளையும் ஆர்வங்களையும் கவனத்தில் எடுத்தல் முக்கியமானதாகும். இதனால் குழு நடத் தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் தொடர்பான விளக்கம் அவசியமானதாகும்.
குழு நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
மாணவரது தனிப்பட்ட நடத்தையில் எவ் வாறு உளவியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றதோ அதே போன்று ஒரு குழுவினது நடத்தையிலும் பல்வேறு சமூக, உளவியல் காரணிகள் தாக்கம் செலுத்து கின்றன. குழுத்தலைவர், குழு உறுப்பினர்கள் ஆகியோரது இயல்புகள், குழுவின் பொதுநோக்கம், இலட்சியம், குழு செயற்படும் சூழ்நிலை என்பன ஒரு குழுவின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும்.
உளவியல் அணுகுமுறையின் அடிப்படை யில் குழுவினது நடத்தையை உருவாக்குவதில் ஒத்துணர்வு அல்லது பரிவு (Sympathy) கருத்தேற்றம் (Suggestion) பார்த்துச் செய்தல் அல்லது பின்பற்றல் (imitation) ஆகிய உளவியல் சக்திகள் காரணங் களாக அமைகின்றன. இவ்மூன்று உளவியல் சக்திகளையும், உளவியலாளர்கள் “பொதுப்போக்கு கள்" (General Tendencies) எனக் குறிப்பிடுகின்றனர். இப்பொதுப்போக்குகள் இயல்பூக்க நடத்தைகளில் இருந்து மாறுபட்டவை. இயல்பூக்க நடத்தைகளைப் போன்று அல்லாமல் பொதுப்போக்கு நடத்தைகள் நிலைமைக்குத் தக்கவாறு மாறுபாடு அடைந்தும் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறான மன வெழுச்சிகளுடனும் தொடர்பு கொண்டும் காணப் படுகின்றன. இதனால் குழு நடத்தைகளைக் கண் காணிக்கும் ஆசிரியர் குழுக்களினது பொதுப் போக்கு நடத்தைகளை அவதானித்து குழுக்கள் பிழையான வழியில் செயற்படாது இருப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் வேண்டும்.
-o 06

Page 9
கருத்தேற்றம்
குழு நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் பொதுப்போக்குகளில் கருத்தேற்றம் என்ற உளவியல் சக்தி குழுக்களது நடத்தையின் போக்கினைத் தீர்மானிக்கின்ற ஒரு வலுவான காரணியாக அமைகின்றது. கருத்தேற்றம் என்பது ஒரு நுட்பமான உளச் செயன்முறையாகும். பிறருடைய கருத்துகள், எண்ணங்களை நம்மையறி யாமல் நாம் ஏற்றுக் கொள்ளுதல் கருத்தேற்றம் எனப்படும். கருத் தேற்றத்தில் தற்கருத்தேற்றம், எதிர்மறைக்கருத் தேற்றம், எதிர்கருத்தேற்றம், மதிப்புக் கருத் தேற்றம் என கருத் தேற்ற செயன்முறைகள் பல வகைகளில் ஏற்படலாம்.
கருத்தேற்றம் என்பது கற்பித்தலில் இன்றி யமையாத ஒரு செயன்முறையாகும். பொதுவாக ஆசிரியர்கள் கூறும் கருத்துகளை மாணவர்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வார்கள். கற்பித்தல் - கற்றல் செயன்முறையில் கருத்தேற்றத்தினை ஆசிரியர் ஒருவர் விளைகிறனான முறையில் பயன் படுத்தல் வேண்டும். திறன்மிக்க ஆசிரியர் ஒருவர் தான் கற்பிக்கும் பாடம்சார்ந்த விடயங்களை மாணவர் மனதில் பதியச்செய்கின்ற செயற் பாட்டுடன் மட்டும் நிறுத்திவிடாது மாணவர்கள் அப்பாடத்தை நன்கு ஆராய்ந்து தாமாகவே கற்கும் முறைகளையும் கருத்தேற்றத்தின் மூலம் அவர்களின் மனதில் அமையும்படி செய்தல் வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் விளைதிறனான முறையில் கருத்தேற்றத்தினை உருவாக்குவதற்காக பின்வரும் உபாயங்களை ஆசிரியர் பயன்படுத்த
GTO.
ஆசிரியர் தான் கூறும் கருத்துகளுக்கேற்ற முன்மாதிரியாக நடத்தல்
 ைஆசிரியர் தான் கூறும் கருத்துகளில் தானும் வலுவான நம்பிக்கை உடையவராக இருத்தல்
இ கருத்தேற்றத்திற்கான மகிழ்ச்சியான துழலை
உருவாக்கல்
8 மாணவர்களிடம் அன்பை அடிப் படையாகக்
கொண்ட உறவை வளர்த்தல்
இ கூறும் கருத்துகளுக்கான ஆதாரங்களை
முன்வைத்தல்
அ குழு மனப்பாங்கினை விருத்திசெய்தல்.
அகவிதி ஜனவரி 2012

உயர் குழு மனப்பாங்கு
கட்டுப்பாடும் ஒழுங்கும் பாடசாலைச் சமூகத்தின் இன்றியமையாத பண்புகளாகும். பல் வேறு பொறுப்புக்களை நிறைவேற்றிட பாடசாலை யில் மாணவர் குழுக்களை அமைக்கின்ற பொழுது ஆசிரியர் ஒவ்வொரு மாணவனின் தனித் திறமைகள், ஆர்வம் என்வனவற்றை கருத்தில் எடுக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் அனைத்து மாணவர்களும் தத்தம் பங்கினை உணர்ந்து இயங்கக்கூடிய உயர்நிலைப் பட்ட மனப்பாங்கினை விருத்திசெய்யவதில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும்.
உயர்குழு மனப்பாங்கு என்பதனை நிதான மான மனப்பாங்கு எனலாம். குழு உறுப்பினர் ஒத்து ழைத்து ஒன்றாகச் செயற்படல், தலைவரிடம் பற்று றுதி வைத்திருத்தல், குழு இலட்சியங்களை அடைய முயற்சித்தல், ஒவ்வொருவரும் தத்தம் முழுத் திறனோடு செயலாற்றும் ஆர்வம் போன்ற உயர் பண்புகளை உள்ளடக்கியதாக உயர் குழு மனப் பாங்கு அமையும்.
உயர் குழு மனப்பாங்கினை மாணவர்களி டையே வளர்ப்பதற்கு ஆசிரியர் பின்பற்றக்கூடிய வழி முறைகள்:
1. திடமான குறிக்கோள், இலக்குகள் இருத்தல். இவைபற்றி ஒவ்வொரு குழு உறுப்பினரும் நன்கு அறிந்து இருக்கவும் ஏற்றுக்கொள்ளவும் செய்தல். 2. இலக்குகளை நோக்கி குழு முன்னேறுகின்றது
என்ற உணர்வினை வளர்த்தல். 3. குழுவின் சாதனைகள் பற்றிய பெருமிதத்தை குழு
உறுப்பினரிடையே எழச்செய்தல். 4. மதிப்பு, பிறரால் ஏற்கப்படல் போன்ற தனி உறுப்பினர்களது தேவைகளை குழு நடவடிக்கை களிலும் நிறைவுறச் செய்தல். 5. குழுவின் செயற்பாடுகள் குறிப்பிட்ட குழு அடையவிரும்பும் இலக்குகளோடு தொடர்பு கொண்டவை என்பதை உறுப்பினர்களை உணர ச்செய்தல்.
6. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை எழச்செய்தல் 7. எல்லா உறுப்பினர்களுக்கும் குழுச் செயல்களில்
சமவாய்ப்பு அளித்தல்.
O 07

Page 10
8. குழுவின் கட்டுக்கோப்பிற்கு மாறாக நடக்கும் உறுப்பினர்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்தல்.
9. சிறந்த தலைமையை உருவாக்குதல்.
முடிவுரை
இன்று கல்விசார் செயற்பாடுகளில் குழுக்
கற்றலானது முக்கிய இடத்தினைப் பெற்று வருகின்றது. கூட்டுறவுக் கற்றல், ஒன்றிணைந்த கற்றல், குழுக்கற்றல் என்ற பிரயோகங்கள் பரந்தளவில் கற்பித்தல் - கற்றல் செயற்பாடுகளில்
尋。
பெற்றோரும் கல்வியில்
பெற்றோர் பட்டயத்தின் படி பெற்றோருக்குள்ளான
தமது பிள்ளைகளுக்கான உடல் மற்றும் 2 வேறுபாடுகளுமின்றிய கல்வி மற்றும் சமூக, ஒ இலவசக் கல்வியின் நன்மைகளை உறுதிசெய்
தமது பிள்ளைகளுக்குப் பொருத்தமான மேற்கொண்ட தீர்மானங்கள் பற்றிய தமது கரு
தமது பிள்ளை தொடர்பான எந்தவொரு பிரச் சந்தித்தலும் அவர்களுடன் கலந்துரையாடலும்
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் உறுப்புரி
பாடசாலை அபிவிருத்திச் சங்க மட்டத் காணப்பட்டால் தொடர்புடைய அதிகாரிகளி
வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் அ தொடர்பான கணக்குகளைப் பரிசீலித்தல்.
பிள்ளைகளின் வேலைகள் தொடர்பான மு: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெற்றுக்கொள்
மாணவர்கள் வெவ்வேறு தரங்களில் வெளி முறை நடைபெறும் பெற்றோர் தினத்தில் ஆய்
பிள்ளைகளிடம் காணப்படும் ஏதாவது அங்கவீனர்களையும் பின்தங்கியோரையும் அனுமதித்தல்.
அரசாங்கக் கல்விக் கொள்கையை விளங்கி பங்கேற்றலும் ஒத்துழைப்பு வழங்கதலும் அபிவிருத்திக்கான ஆலோசனைகளை உருவ
அகவித் ஜனவரி 2012

பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க தாகும். கற்பித்தல் - கற்றல் செயன் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5E மாதிரி முறையில் அமைந்துள்ள கற்பித்தல் முறையிலும் குழுச் செயற்பாடுகள் முக்கிய இடத்தினைப் பெறு கின்றமை குறிப்பிடத்தக்கது. குழுச்செயற்பாடுகளை கற்பித்தல் - கற்றல் செயன்முறையிலே பயன் படுத்தும் ஆசிரியர்களுக்கு குழு உளவியல்சார் அறிவு அவசியமான தானதாக இருக்கின்ற அதே நேரம் குழு உளவியல்சார் அணுகு முறையானது சமூக முரண் பாடுகளைக் அகற்றி தேசிய ஒற்றுமையை வளர்ப் பதற்கான ஒரு சிறந்த உபாயமாகவும் அமை கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அவர்களது வகி பங்கும்
ா உரிமைகள்
உள அபிவிருத்திக்குச் சாதகமான எவ்வகையான ழுக்க மற்றும் ஆன்மீக மேம்பாடு மற்றும்
தல்.
கல்வி வகையைத் தீர்மானிப்பதில் பாடசாலை த்துக்களைத் தெரிவித்தல்.
சினை தொடர்பாகவும் அதிபர் அல்லது ஆசிரியரை
).
ஜமை பெறுதலும் பதவிவகித்தலும்.
நில் பாடசாலை வளங்களின் போதாததன்மை ன் கவனத்திற்கு கொண்டு வருதல்.
|ல்லது பிள்ளைகளிடமிருந்து சேகரிக்கப்படும் நிதி
ன்னேற்றம் பற்றிய அறிக்கையை ஆகக் குறைந்தது ளுதல்.
ப்படுத்திய அடைவுகளை ஆறு மாதங்களுக்கு ஒரு வுசெய்தல்.
உடல், உள குறைபாடுகளை அறிவித்தலும் பாடசாலை அல்லது விசேட நிறுவனங்களில்
க் கொண்டு கல்வித்திட்டமிடல் செயன்முறையில் மற்றும் சீர்திருத்தங்கள், புத்தாக்கம் மற்றும் ாக்குதலும்.
O 08

Page 11
நேரம்” என்பது ஒரு வரையறுக க ப பட ட வளமாகும். எல்லோருக்கும் நேரமானது பொது வாகவும், சமனாகவும் வரையறை செய்யப் பட் டுள்ளது. ஒருவருக்கு நாளொன்றுக்கு 24 மணித்தி யாலங்கள் அல்லது 1440 நிமிடங்கள் அல்லது 86,400 செக்கன்கள் கிடைக்கின்றன. அரச, கூட்டுத்தாபன, தனியார் அலுவலர்களுக்கு நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் அல்லது 480 நிமிடங்கள் என்ற ரீதியில் வாரம் 40 மணித்தியாலங்கள் அல்லது 2400 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வர்த்தகர்களைப் பொறுத்த வரை நாளொன்றுக்கு 10 மணித்தி யாலங்கள் என்ற நிலையில் வாரத்திற்கு ஐந்தரை நாட்கள் அல்லது 55 மணித்தியாலங்கள் பணிபுரி கின்றார்கள். மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஆறு மணித்தியாலங்கள் அல்லது கிழமையில் 30 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ் வாறாக ஒதுக்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைத் தடுத்து நிறுத்தவோ, பதிலீடு செய்யவோ, சேமித்து வைக்கவோ, மாற்றியமைக்கவோ முடியாது. இழந்த நேரம் இழந்ததாகவே கருதப்படும். இதனைச் சிறியோர் முதல் பெரியோர் வரை, உற்பத்தியாளர் அல்லது சேவையாளர் முதல் நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் வரை கவனத்தில் எடுக்க வேண்டும். நேரத்தைச் சேமிப்பதும் உகந்த வழியில் உபயோகிப்பதும் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். பணத்தை இழந்தால் சம்பாதிக்கலாம் நேரத்தை இழந்தால் மீண்டும் பெற முடியாது. நேர முகாமைத் துவம் பற்றி பீற்றர் டிறக்கர் என்னும் அறிஞர் கூறும் போது "நேரம் என்ற மூலவளம் மிக அரிதானது. அதனை முகாமைத்துவப்படுத்த முடியாவிடின் எந்த வித செயற்பாட்டையும் முகாமை செய்ய முடியாது." என்றார். நமது விலை மதிப்பற்ற ஆதனங்களில் நேரம் முதன்மையானது அதனை இழந்து விட்டால் திரும்பப் பெற முடியாது. எனவே வினைத்திறனாக
அகவிதி ஜனவரி 2012
 
 

நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். நேரம் ஒரு அழியாச் சொத்து, எமது வாழ்வினை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து வேலையிலும், தூக்கத்திலும், குடும்பவாழ்விலும் நேரத்தைக்கழிக்க முற்பட வேண்டும் என உளவல்லுனர்கள் கூறுவர். இந்த மூன்றில் ஒருபங்கான வேலைக்காக ஒதுக்கப்படும் நேரம் சரிவரப்பேணப்பட வேண்டும், இது அரச ஊழியமானாலும், வணிகமானாலும், படிப் பானாலும், சரி எதற்கும் நேரமுகாமைத்துவம் தேவை.
நேர முகாமைத்துவம் :-
குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் உச்சப் பயன்பாட்டைப் பெற அனைவரும் முயற்சிக்கும் போது முகாமைத்துவம் அதற்கு வழியமைக்கின்றது. எனவே, நேரத்தைத் திட்டமிட்டு முகாமைப்படுத்தி செயற்படுத்துவது வினைத்திறன் உடையதும், பயன் பாடுடையதுமான நடவடிக்கையாகும். ஒருவருக்கு தனது நோக்கை அல்லது இலக்கை அடைய தனது கடமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற நேர முகாமை பற்றிய அறிவு மிக அவசியமாகின்றது. "பணத்தை இழந்தால் சிறிதே இழப்போம் நேரத்தை இழந்தால் அனைத்தையும் இழப்போம்." என்கிறது ஆமோனியப் பழமொழி. சிறிதே இழந்தாலும் பணத்தை திரும்பிப் பெறலாம். நேரத்தை இழந்தால் மீட்டெடுக்க முடியாது. நேரத்தை குறித்து வையுங் கள். நிர்வகியுங்கள் உறுதிப்படுத்துங்கள். "ஒழுங்கு படுத்தப்பட்ட நேரம் உறுதிமிக்க மனத்திற்கு அடித் தளமாகும்" என்றார் பிட்மென் என்னும் சிந்தனை யாளன். நேரத்தை ஒழுங்குபடுத்தி கட்டுப்பாட் டுடன் செயலாற்ற வேண்டும். பாம்பே என்னும் அறிஞன் கூறும்போது "நான் வசிக்க வேண்டியது என்பது அவசியமல்ல ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப் பிட்ட இடத்தில் இருக்க வேண்டும்" என்கிறார். மடிவென் படாக்ஸ் என்னும் அறிஞன் நேரத்தை நழுவவிடாது முகாமை செய்து வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும். "முடியைப் பற்றி நேரத்தை இழுக்க வேண்டும்" என்கிறார். பலவந்தமும், அழுத்தமும் இல்லாத,
O09

Page 12
திறமையான செயலாற்றல் மூலம் கூடிய விளை வினைப் பெற நேரமுகாமைத்துவம் மிக முக்கியமா கிறது. நேரத்தை உங்களுக்கு சேவை செய்ய வையு ங்கள். கடினமும் அழுத்தமும் இன்றி திறமையான செயற்பாட்டின் மூலம் மிகப்பெரும் பலனைப்பெற நேரமுகாமைத்துவம் உதவுகின்றது.
நோக்கம்:-
நேர முகாமைத்துவமானது பல நோக்கங்களைக் கொண்டது. நேர முகாமைத்துவத்தின் மூலம் நல்ல பலனை அளிக்கக் கூடிய விதத்தில் அதன் முக்கியத் துவத்தை அதிகரிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உச்ச பயன்பாட் டைப் பெற வழிவகுக்க வேண்டும். எமது பலத்தையும் பலவீனத்தையும் நாம் அறிவோம். எனவே இவற்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு தெளிவான கருத்தை எம்மில் உருவாக்க வேண்டும். ஒவ்வொருவருடைய வேலை, கடமை, பொறுப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டு முன்னுரிமை என்ற அடிப்படையில் நோக்க வேண்டும். அவசரம் அவசியம் என்ப வற்றிற்கு முன்னுரிமையளிக்க வேண்டும். நேர முகாமைத்துவம் என்பது சுய முகாமைத்துவமாகும் இதன் முக்கிய நோக்கம் நேரத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்துவது அல்லது நேர முதலீட்டின் வருவாயை அதிகரிப்பது. (RETURN ON TIME INVESTED) 6TLD51 (515.5G5IT606T திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் அடைவதே எமது நோக்கமாகும்.
“எவனொருவன் நேர காலத்தின்படி செம்மை யாக வாழ்கின்றானோ அவன் நீண்ட நாட்கள் வாழ் வான். எவன் நேரத்தை தவறாகப் பயன்படுத்து கின்றானோ அவன் வாழ்ந்தாலும் வாழ்க்கையை இழந்தவனாகின்றான்” என்கிறார் அறிஞர் புலவர். ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்துக்குள் அல்லது திட்டமிட்டபடி செய்யமுடியுமா என்பதை அவதா னித்துச் செயற்பட வேண்டும். எமது அல்லது நிறு வனத்தின் குறிக்கோளை திட்டமிட்டபடி குறித்த நேரத்திற்குள் அடைய முனைவதே எமது நோக்க மாக இருக்கவேண்டும்.
நேரப் பயன்பாடு
காலத்தின் தேவைக்கேற்ப நேரத்தைப் பயன் அளிக்கக் கூடிய வீதத்தில் திட்டமிட வேண்டும்.
ஆவிதி ஜனவரி 2012
 

நேரத்தை வீணடிக்கும் காரணிகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்க வேண்டும். எந்தச் சிறந்த நிர்வாகியும் தனது நேரம் உண்மையாகப் பயன் பட்டது எனக் கண்டறிவதில் ஆர்வமுடைய வனாயிருப்பான். காலம் தாழ்த்துதல், பிற்போடு தல், காலம் கடத்தல், நேரவிரயம் என்பவற்றைத் தவிர்த்து உரிய வேலையை, உரியநேரத்தில், உரிய முறையில் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நேரச் சூறையாடலை இல்லாதொழிக்க வேண்டும். எனவே நேரப்ப யன்பாட்டை அதிகரிக்க வேண்டும். குறைந்த நேரத்தில் கூடிய, தரமான பயனைப் பெற முனைய வேண்டும். "நிமிடங்களை மதித்து கவனத்துடன் செயலாற்றினால் மணித்தியாலங்கள் தங்களுக்கு தாங்களே கவனமெடுக்கும்" எனச் செஸ்டர்பீல்ட் பிரபு கூறுகிறார். VIம் ஹென்றி அரசனது காலத்தில் தபால்பொதிகளில் "வேகமாகச் செல் வேகமாகச் செல் உனது உயிரைக் காப்பாற்ற வேகமாகச் செல்” எனப் பொறிக்கப்பட்டிருந்தது. தபால் சேவையானது போக்குவரத்து சீரற்ற காலகட்டத்தில் அரச தூதர்கள் கடிதங்களை நீண்ட தூரத்திற்கு கொண்டு சென்று விநி யோகித்தனர். மாதக்கணக்கிலும் நடக்க வேண்டிய காலம். அக்காலத்தில் வழியில் அநாவசியமாக தாமதித்துச் சென்றால் சிரச்சேதத்தைத் தவிர வேறு தண்டனையில்லை. எனவே தூதர்கள் தாமதியாது விரைந்த சென்று கடிதங்களை விநியோகித்தனர். இங்கு நேரம் சரிவரப் பயன்படுத்தப்பட்டது. அநாவசிய தாமதம் தவிர்க்கப்பட்டது. பாம்பே என்னும் அறிஞர் கூறும்போது நான் வசிக்க வேண்டி யது என்பது அவசியமல்ல ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டியது மிக அவசியம்" என்றார்.இதில் நேரப் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றது. எனவே நேரத்தை கைநழுவ விடாது பயன்படுத்த வேண்டும். நகரும் நாளிகையும், நாட்களும் எமது வாழ்வின் ஒவ்வொரு நாட்களையும் குறைக்கின்றன என்ற உண்மையை நாம் உணர்ந்து, ஒவ்வொரு செக்கனிலும் விழிப்புணர்வுடன் செய லாற்றிப் பயன்பெறவேண்டும்.
நேரம் தவறாமை
நேரத்திற்கு துயில் எழுதல், உரிய நேரத்திற்கு முன்பாகச் செல்லல் என்பவற்றை மனதிற் கொள்ள வேண்டும். மாணவன் பாடசாலைக்குச் செல்லும் போதும், அலுவலர் வேலைக்குச் செல்லும் போதும் உரிய நேரத்திற்கோ அன்றேல் முன் கூட்டிச் செல்வதனால் அமைதியான சூழலில் கடமையை ஆரம்பிக்கலாம். அப்படி வேலையை ஆரம்பிக்கும்
O 10

Page 13
போது மனதில் பதட்டம் ஏற்படாது, சோவியத் பிரதமராயிருந்த கோபர்சேவ் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாகனமொன்றில் சென்று கொண்டிருந்தார். சாரதியிடம் வேகமாக ஒட்டும்படி கட்டளையிட்டார். அதற்குச் சாரதியோ அதிவேக மாக ஒட்டு வது சட்டப்படி குற்றம் எனக் கூறி சாதாரண வேகத்தில் சென்றான். உரிய நேரத்திற்கு செல்ல முடியாது என உணர்ந்த பிரதமர் சாரதியைப் பின்னுக்கு இருக்கும்படி கூறிவிட்டு தானே வாகனத்தை ஒட்டிச்சென்று உரிய நேரத்திற்கு முன்னதாகவே சென்றடைந்தார். கூட்டத்திற்கு செல்ல தாமதித்திருந்தால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கும். எதற்கும் உரிய நேரத்திற்கு முன்னர் செல்வதை நாம் பழக்கமாக கொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய செயற்றி றனையும் உருவாக்க நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். எனவே சிந்தனைத் தெளிவான, ஒழுங்கான, உண்மையான எண்ணத்துடன் எதிர்காலத்தை முன்னோக்கி தந்திரோபாய அடிப் படையில் திட்டமிட்டு, பயனுறுதி வாய்ந்த நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். நேர முகாமை அறிவினைக் கொண்டிராத ஒருவர், தினமும் கடமை நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணித்தியாலங்களை விரயமாக்கு கின்றார். ஆனால் நேர முகாமை பற்றி அறிந்த ஒருவர் நாளாந்தம் கடமை நேரத்தில் இரண்டு மணித்தியாலங்கள் மீதப்படுத்துகின்றார். அறிஞர் காபட் என்பவர் கூறுகையில் "நான் எப்பொழுதுமே தயார் நிலையில் இருப்பேன் 10 மணிக்கு வேலை செய்வதாயின் 9 மணிக்கே தயார் ஆகிவிடுவேன். எனக்காக நான் யாரையும் ஒரு நிமிடம் கூட காத்திருக்கவிடுவதில்ல்ை" என்றார். குறித்த நேரத்திற்கு முன்பே ஆயத்தமாயிருப்பதால் நேரம் தவறுவதும் இல்லை. நேரத்தை விரயமாக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஷேக்ஸ்பியர் எனும் கவிஞர் கூறும்போது "மூன்று மணி நேரத்திற்கு முன்பே போவேனே ஒழிய ஒரு நிமிடமாவது தாமதிக்கமாட்டேன்" எனக் கூறு கிறார். இப்படி நேரத்தை சரிவர பயன்படுத்த வேண்டும்.
நேர ஒதுக்கீரும் திட்டமிடலும்
நாளாந்தம் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அதன்படி செயலாற்ற வேண்டும். பாடசாலை
மாணவர்களது நேரசூசி இதற்குச் சிறந்த உதாரண மாகும். முதல்நாளே அடுத்தநாள் வேலையைத்
ஜனவரி 2012

தெரிவு செய்து முன்னிலைப்படுத்தித் தயாரிக்கவும். இதில் அவசர அவசிய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். அன்று செய்ய வேண்டிய காரியங் களை அன்றே செய்து முடிக்க முயல வேண்டும். நேர முகாமையில் ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சீராக்க முடியும். அத்துடன் சுயகட்டுப்பாட்டை,
Systems
Creating
Processe
Afraf、
Emotion -
Inte
Muািsking== w/ecision
சுயநடத்தையை ஏற்படுத்த வழிவகுக்கும். மன அழுத்தங்கள் ஏற்படும் போது அவற்றைக் குறைக்க நேரமுகாமை வழிவகுக்கின்றது. ஒருவர் தனது வேலையை நன்கு நடைமுறைப் படுத்தவும் , உற்பத்தியை அதிகரிக்கவும், சேவையைச் சரிவரச் செய்யவும், நேர முகாமை பற்றி அறிந்திருக்க வேண்டும். இதன்மூலம் செய்ய வேண்டிய எமது செயற்பாடுகளை முதலில் நாம் திட்டமிட வேண்டும். அச்செயற்பாடுகளுக்குரிய நேரத்தினை ஒதுக்க வேண்டும். நாளாந்த செயற்பாட்டுத்திட்டத்தை முதல்நாளே தயாரிக்க வேண்டும். நேரசெயற்பாட்டுத் திட்டத்தை தயாரிக்கும் போது செய்யும் நேரத்தையும், செய்யும் வேலையையும் அட்டவணைப்படுத்துதல் வேண்டும். பின்பு அட்டவணைப் படுத்தப்பட்ட வேலைகள் செய்து முடிந்ததும் சரிபார்க்க வேண்டும். செய்து முடியாத வேலைகளை அடுத்த நாள் திட்டத்தில் சேர்த்துச் செய்ய முற்படவேண்டும். இதனாலன் றோ "நேரம் எடுத்துச் சிந்தித்து கருமங்களின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப திட்டமிடல்
-O 11

Page 14
வேண்டும்” என்கிறார் அறிஞர் பெஞ்சமின் பிராங்களின்.
கருமங்களைப் பேணல்
பொதுவாக நாம் கருமங்களைப் பிற்போட முயல்வதுண்டு. பிற்போடுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. ஒருவரது ஊக்கமின்மை அல்லது செயற்பாட்டில் ஆர்வமின்மை அல்லது விருப்ப மின்மை, செயற்பாடு வெற்றியளிக்குமோ அல்லது தோல்வியில் முடியுமோ என்ற மனோ பயம், பிறரைப் பழிவாங்க அல்லது பிறரை வீழ்ச்சியடையச் செய்யும் சதி கலந்த எண்ணத் துடன், நான் என்ற அகங்காரத்துடன் செயலாற்றுதல் என்பன நேர த்தைப் பிற்போட வழிவகுக்கின்றது. இப்படியாகப் பிற்போடுவதன் மூலம் எமது செயற்பாடுகள் பின்தள்ளப்பட்டு நிறுவனத்தின் இலக்கு நோக்கிய பயணத்திற்கு நாம் இடையூறாக அமைகின்றோம். அரச நிறுவனங்களில் கருமங் களை பின்போடுவதால் பொது மக்கள் உரிய சேவைகளை பெறமுடி யாது அலைந்து திரிவதை செய்தித்தாள்களில் காண்கிறோம்.
நேற்று என்பது ஒரு இரத்துச் செய்யப்பட்ட காசோலை, நாளை என்பது வாக்குறுதிச் சீட்டு, இன்று என்பது உடனடியாக கையிலிருக்கும் பணம் என்பதைக் கருத்திற் கொண்டு, இன்றைய பணத்தை அல்லது இன்றைய நேரத்தை நல்ல முறையில் பயனுறுதி வாய்ந்ததாகக் கழிக்க முற்பட வேண்டும். பணத்தைக் கூட உழைத்துப் பெறலாம். ஆனால் நேரத்தை உழைத்துப் பெற முடியாது. சிலர் காரியாலயம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்றும், தாம் வாழ்ந்தால் போதுமென்று நினைக் கின்றார்கள். தமது ஊழியர்களை தமக்கெதிரான எதிரணியினர் இருக்கின்றனரா என வேவுபார்க்க உந்துவதால், தமது நேரத்தையும் ஊழியர்கள் நேரத்தையும் வீண்விரயமாக்குகின்றனர். ஆனால் தனியார் நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ இலாப நோக்கை கருத்திற் கொண்டு செயற் படுவதால் அங்கு நேரம் பொன்னாக மதிக்கப்படு கின்றது. வேவு பார்க்கவேண்டிய அவசியமில்லை. சகலரும் சுறுசுறுப்பாக அன்றே அவ்வேலையைச் செய்துமுடிக்க முனைவதால் கருமங்கள் பேணப் பட்டு செயற்படுகின்றன. அரச அலுவலகங்களில் பிற்போடும் நடைமுறையினால் கருமங்கள் உரிய முறையில் உரிய நேரத்தில் பேணப்படாமை பெரும் குறையாகக் காணப்படுகின்றது. “ஒரு குறிப்பிட்ட
ஆவிதி ஜனவரி 2012

செயலைச் செய்து முடிப்பதிலோ, குறிப்பிட்ட சந்திப்பை நிறைவேற்றுவதிலோ அசட்டை காட்டு கின்றவன் பிறரால் ஒருபோதும் மதிக்கப்பட மாட்டான்” என்கிறார் கலாநிதி பீட்ச். நேரம் பறக்கிறது அல்லது ஊர்ந்து செல்கிறது என நாம் பல வேளைகளில் நச்சரிப்பது உண்டு. யாராலும் நேரத்தையும் கடல் அலையையும் இறுக்கிப்பிடிக்க முடியாது. ஒரு கருமம் சரியாக அல்லது சீர்பெற நடக்க வேண்டும் என்றால் அதை அதிக வேலை செய்பவரிடம் கையளியுங்கள் எனப் பலரும் கூறுவ துண்டு. ஏனெனில் அதிக வேலையைச் செய்பவர் புத்திசாலித்தனத் துடனும் வினைத் திறனுடனும் வேன்லயில் ஈடுபட்டு சரியான நேரத்தில் வேலையைச் செய்து முடிப்பான எனவே மற்றவர்களை சோம்பேறிகளாக்காது அவர்களையும் புத்திசாலித்தனத்துடன், வினைத்திறனுடன், விவே கத்துடன் செயலாற்ற ஊக்குவிக்க வேண்டும்.
நேரவிரயமும் தடைகளும்
வீண் அரட்டை, பொழுது போக்கு, திட்ட மிடாமல் வேலையை ஆரம்பிப் பதில் ஏற்படும் தாமதம், உரிய நடைமுறைகள் அல்லது உப கரணங்கள், ஆயுதங்கள் இல்லாமையினால் ஏற்படும் நேரவிரயங்கள், மற்றவர்களின் திருப்திக்காக செலவிடும் அநாவசிய நேரங்கள் போன்றவை நேரத்தை வீணடித்து விரயமாக்குகின்றன. வேலை செய்யும் போது பல இடர்பாடுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சில பிரச்சினைகள் எம்மால் ஏற்படுபவை. சில பிறரால் எமக்கு ஏற்படுபவை. எம்மால் எமக்கு ஏற்படும் பிரச்சினைகள் பல. ஒரு வேலையை நாம் ஒத்திப்போட முயல்கிறோம். அல்லது தாமதிக் கின்றோம். அல்லது வேலையை உரிய நேரத்தில் செய்யாது விடுவதால் அதிக நேரத்தை அவ் வேலைக்கு விரயமாக்குகின்றோம். அடுத்து, எந்த வேலையையும் 100 சதவீதம் சரியாகச் செய்ய வேண்டும் என்று அங்கலாய்க்கின்றோம். ஒரு தடையாகும். இதில் ஐந்து சதவீதம் தவறுகள் ஏற்படினும், அதில் நேரத்தை வீணடிக்காது தமது இலக்கை அடையப் பெற்றிருப்பின் நாம் திருப்தி யடைய வேண்டும். ஒருவர் தன்னால் அவ்வேலை யைச் செய்ய முடியாதுவிடின் மேலதிகாரிக்கு அறிவித்துச் செய்யக் கூடியவரைக் கொண்டு செய்விப்பதால் நேரம் மீதப்படுத்த வாய்ப்புண்டு. இதில் அடுத்தவரின் நேரம் விரயமாகின்றது என்பதை மனதிற்கொண்டு குறுகிய நேரத்தில் எதிர் கால
O 12

Page 15
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய வேலையை ஒழுங்குபடுத்தாமல் செய்வதும் தடையை ஏற்படுத்துகின்றது. எந்த வேலையைச் செய்ய நேரிடினும் அதை ஒழுங்கு படுத்த வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் அவசர, அவசிய வேலைகளை அடையாளம் கண்டு நேரத்தை ஒதுக்க வேண்டும். யார்? என்ன? எங்கு? எப்போது? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி எப்படிச் செய்ய வேண்டும் என்பதை வகுத்து ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். “காலத்தை வீணாக்குவதற்காக கடிகாரம் என்னைக் கண்டிக்கின்றது" என்கிறார் கவிஞர் க்ஷேக்ஸ்பியர். எதற்கும் காலத்தை வீணே விரயமாக்கக் கூடாது. ” எந்த விடயத்தையும் நாளை செய்வோம் என பிற்போடக் கூடாது. இப்போதே செய்து முடி" என்கிறார் அறிஞர் சோக்கிரட்டீஸ்,
உடனுக்குடன் செய்வதால் வேலையும் முடிவடைகிறது. தாமதமும் தவிர்க்கப்படுகிறது. “ஒரு சமயத்தில் ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதுதான் பல காரியங்களைச் செய்து முடிப் பதற்கான குறுக்கு வழி” என்கிறார் வணக்கத்திற் குரிய நிக்சர்ட் ஸெஸில்.
கடமைகளைப் பன்முகப்படுத்தலும், தொடர்பாடலும்.
கடமைகளையும், பொறுப்புகளையும், பகிர்ந்த ளிக்காமையும் தடைக்கான காரணியாகும். அனை த்து விடயங்களையும் ஒருவரால் செய்ய முடியாது. எனவே, பகிர்ந்தளித்துச் செயலாற்ற வேண்டும். தானே செய்ய வேண்டும் என்ற நப்பாசை தடை யையே ஏற்படுத்தும். இதனால் வேலைகள் குவிந்து விடும் பிறரிடம் கையளிக்கும் போது வேலைச் சுமையும் குறையும். வேலைகளும் சீர் பெற ஒழுங் காக நடைபெறும். மேலும், தொடர்பாடல் குறை பாடுகளும் ஒரு தடையாகும். செய்திகளைத் தெளி வாகக் கூற முடியாமை, புரிந்து கொள்ள முடியாமை, குழப்பநிலையில் செய்திகளை அமைப்பது, தேவை யற்ற விபரங்களை அடக்குவது என்பன நம்மால் ஏற்படுத்தப்படும் தடைகளாகும். எனவே, செய்தி யானது இலகுவாக, தெளிவாகப் புரிந்துணரக் கூடிய தாக இருக்க வேண்டும். இதற்காக தொடர்பாடலை சீரிய முறையில் தெளிவாக விளங்கிக் கொள்ளத் தக்கதாக செய்ய வேண்டும்.
தடைகளும் தடைதாண்டுதலும்
அகவிதி ஜனவரி 2012

எமக்குப் பல பிரச்சினைகள், தடைகள் பிறரினால் ஏற்பட வாய் ப்புண்டு. தமது அலுவலர் களுடன் மேலதிகாரி களின் திருப்தியின்மை யும் அசமந்தப் போக்கும் தடையை ஏற்படுத்தும், வேலை செய்விப்பவர் ஊழியர் செய்யும் தவறு களை சுட்டிக்காட்டிச் சீர் செய்ய வேண்டும். இதனால் பொது மக்கள் சேவை யைப் பெறுவ துடன் நேரமும் சேமிக் க பட் ப டு ம . ஒ ரு குழுவினரால் ஏற்படும் தடைகள் வேலைக்குப் பங்கம் ஏற்படுத்தும் பிறிதொரு காரணமாகும். காரியாலய அலுவலர்கள் ஒரு குழுவாக இயங்கவேண்டும். ஒன்றுக்கொன்று முரணானவர்களாக, தடையாக இருக்கக் கூடாது. நிறுவனத்தின் குறிக்கோளைக் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் அடைய அனுசரணையாக இருக்க வேண்டும். தனித்துவத்தைப் பேணி முரண்பட்ட போக்கில் நிறுவனம் இயங்கக் கூடாது. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். பல கிளைகள் இருப்பினும் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும். “ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற் காகத்தான் கடவுள் எமக்குக் கால்களை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்துள்ளார்”என்கிறார் எட்வின் ஆஸ்கர்.
மேலும் தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத் தும் தடைகள் பலவாகும். அழைப்புகள் விடயத் துடன் சுருக்கமாக இருக்க வேண்டும். தொலைபேசி அழைப்புகள் அலுவலக விடயத்துடன் இருப்பது விரும்பத்தக்கது. கேட்போர் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் இருக்க வேண்டும். மேலும் வாடிக்கை யாளர், பொது மக்கள் தொல்லை அதிகமாக தடையாகக் காணப்படின் அவர்கள் குறைகளைக் கேட்டு குறைந்த நேரத்தில் அவர்களது சேவையை அல்லது தேவையைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கூட்டங்களில் அதிக நேரத்தை விரயமாக்காது குறுகிய நேரத்தில் குறித்த விடயத் துடன் நிற்க வேண்டும். கூட்டங்கள் கூட்டுவதிலும் நிகழ்ச்சிநிரல் அமைத்துச் செயற்பட வேண்டும். பல கூட்டங்கள் அரட்டையிலும், தீர்மானமற்றும்
o 13

Page 16
நிறைவுபெறுகின்றன. கூட்டங்கள் பயனுறுதி வாய்ந்ததாக, தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாக, பிறரது எண்ணக்கருக்களுக்கு முக்கியத்து வமளிப் பதாகக் குறைந்த நேரத்தில் கூடி முடி வெடுக்க வேண்டும். நெப்போலியன் ஹில் எனும் அறிஞர் கூறும் போது" வாழ்க்கை என்பது ஒரு சதுரங்கப் பலகை. அதில் உங்களை எதிர்த்து ஆடுவது காலம். காய் நகர்த்துவதில் தயக்கம் காட்டினாலோ அல்லது உடனுக்குடன் நகர்த்தா விட்டாலோ உங்கள் காய்களை காலம் வெட்டிச் சாய்த்து விடும். சரிவரத் தீர்மானித்து செயலில் இறங்குங்கள். ஒரு பங்காளரை எதிர்த்து நீங்கள் ஆடிக்கொண்டிருக் கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எதற்கும் காய் நகர்த்துவதில் தயக்கம் காட்டாது சரிவரத் தீர்மானம் எடுக்க காலத்தை உரிய முறையில் பயன்படுத்துங்கள்" என்கிறார். எனவே காலத்தை சரி வரப் பேணி தடைகளைத் தாண்டி உரிய முறையில் பணியாற்றுங்கள்.
முக்கிய அம்சங்கள்
பொதுவாக நேர முகாமைத்துவத்தில் பின்வரும் விடயங்களை அவதானித்து அணுக வேண்டும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்படுகின்றனவா? சீராகத் தகவல்கள் கிடைக் கின்றனவா? பிறரின் தலையீடுகள் ஏற்படு கின்றனவா? தேவையற்ற அல்லது தேவைக் கதிகமான காகித வேலைகளில் நேரம் விரயமா கின்றதா? கூட்டங்களில் நேரம் வீணாகின்றதா? அலுவலர்களின் பிரச்சினைகள் நேரத்தை விழுங்கு கின்றதா? பயனுறுதியற்ற தொடர்பாடல் நேரத்தை வீணாக்குகின்றதா? உங்கள் நேரம் சிக்கல்களை சமாளிப்பதில் கழிகிறதா? என்ற விடயங்களை நன்கு அறிந்து உணர்ந்து இவற்றினைச் சுமுகமாகச் சீர் செய்து நேர முகாமையினை நிர்வகிக்க வேண்டும். "எந்த தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களது வேலை நேரத்தையும் அதிகப் படுத்திக்கொள்ள விரும்புவார்கள்" என்றார் அமெரிக்க கோடிஸ்வரர் அண்டுரூ கார்னகி.
உச்சப் பயன்பாட்டைப்பெறுவதற்கான வழி முறைகள்
நேர முகாமை என்பது நேரத்தைப் பயன் பெறும் முறையில் செலவிட மேற்கொள்ளப்படும் ஒரு சுயகட்டுப்பாட்டு முறையாகும். நேரமும், கடல லையும் எமக்காகக் காத்திருக்க மாட்டாது. ஆகை யால் இருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக்க போதிய பயிற்சி பெற வேண்டும். நேர நிர்வாகத்தை
அகவித் ஜனவரி 2012

ஒழுங்குபடுத்தும் போது எமது நேரம் எங்கெங்கு வீணாகிறது என அடையாளங்கண்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கும் நேரத்தை திட்டமிட்டு அட்டவணை தயாரித்து செய லாற்ற வேண்டும். எதற்கும் நேரத்தைத் திட்டமிட்டு வேலைகளுக்கேற்ப அட்டவணைப்படுத்தி தயாரி த்து செயலாற்ற வேண்டும். முதல் அடியை வைப்பதில்தான் ஆயிரம் கிலோமீற்றர் பயணம் ஆரம்பமாகியது. இப்பொழுதே முதல் அடியை எடுத்து வையுங்கள். எவ்வளவு தூரமும் உங்கள் காலடிக்கு வந்துவிடும். நேரத்தைத் தவற விடாதீர்கள். “முடிவு செய்வதில் தயக்கம் காட்டுவது காலத்தைக் களவாடும்” என எட்வர்ட்யங் கூறு கிறார். எனவே முடிவு எடுப்பதில் மனம் தளராது பாரபட்சமின்றி பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து உரிய நேரத்தில் முடிவெடுக்கவும்.
(1)பரற்ரோ விதி 20/80 யைப்பேணுவோம்
1897 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த விபரற்ரோ என்னும் அறிஞர் இத்தாலி நாட்டின் செல்வப்பங்கீட்டில் பல குறைகளைக் கண்டார். இத்தாலி நாட்டில் 80 சதவீதமான வளங்கள் 20 சதவீதமான சனத்தொகையினரிடம் இருப்பதை அவதானித்தார். இது விதி 20/80 என அழைக்கப்படு கின்றது. இந்த விதியை நமது நாளாந்த வாழ்வுடன் ஒப்பிடும் போது எமது வேலை நேரத்தில் 80 சதவீதமானது 20 சதவீத கோவைகளில் செலவிடப் படுகின்றது. 80 சதவீதமான அலுவலர்களின் நேரம் 20 சதவீதமான வாடிக்கையாளர்களுக்காகச் செல விடப்படுகிறது. 80 சதவீதமான வைத்தியர்களின் நேரம் 20 சதவீதமான நோயாளர்களுக்கு செல விடப்படுகின்றது. எமது வேலை நேரத்தில் 80 சதவீதமானது 20 சதவீத தொலைபேசிப் பாவனையில் செலவிடப்படுகின்றது. மேலும் எமது வேலை நேரத்தில் 80 சதவீதமானது 20 சதவீத தொடர்பாடலில் செலவிடப்படுகின்றது. எனவே இந்த விதிப்படி எமது பொது வாழ்வில் எடுக்கும் நடவடிக்கைகள் பல இருப்பினும் ஒரு சில மாத்திரமே முக்கியம் பெறுகின்றன. எனவே குறைந்த நேரத்தில் கூடிய பயனைப் பெறுவழிவகுக்க வேண்டும். எங்கள் நடவடிக்கைகள் 80 சதவீத பெறுபேற்றினைத்தரக்கூடிய 20 சதவீதமான வேலைகளில் முதன்மைப்படுத்தி மும்முரமாக செயற்பட வேண்டும். 80 சதவீத சிறந்த பயன் பாட்டை எமது உழைப்பின் 20 சதவீதத்தில்
O 14

Page 17
பெறப்படும் சந்தர்ப்பம் உண்டு. இது சிறந்த நேரக் கட்டுப்பாடாகும். “வாங்கக் கூடிய பொருளுக்கு பணம் அளவுகோலாக இருப்பது போல, வணிகத்துக்கு நேரம்தான் அளவுகோல்" என்றார் பிரான்சிஸ்பேகன். மேலும் "வீணாகிப்போன நேரத்திற்கு வருந்துவது இருக்கின்ற நேரத்தை வளப் படுத்தும் சக்தியைக் கெடுக்கும். நேரத்தை வீணாக்கு வதை நிறுத்திவிட முடியுமானால், இருக்கின்ற நேரமே பெரிய சாதனைகளை புரியப் போதுமானது" என்கிறார் ஆர்தர்பிரிஸ்பேன் என்னும் அமெரிக்க அறிஞர்.
(i) தரச்சுற்றுமுறையை நடைமுறைப்படுத்துவோம்.
உண்மையான பிரச்சினைகளை அடையாளம் காண தரச்சுற்றுமுறை உதவுகின்றது. குறித்த கடமையை உரிய நேரத்தில், உரிய ஒழுங்கில் முடிக்காவிடின் விடய தொடர்புள்ளவர்களுடன் தரச் சுற்றுக் கூட்டத்தின் மூலம் மேலதிகாரிகள் கலந்துரையாடி வசதிகளை ஏற்படுத்துவர். தரச் சுற்றின் முக்கிய நோக்கம் திட்டமிட்டு செயற்படுத்தி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாகும். தரச்சுற்றின் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தடைக்கும் தீர்வு காண முடிவதால் நேர விரயம் தவிர்க்கப்படலாம். தரமும் பேணப்படலாம்.
கலாநிதி வில்லியம் ஆஸ்வர் கூறியது: ஒரு சமயத்தில் ஒரு நாள் வாழ்க்கை போதுமானது. நளைய சுமையை நேற்றைய சுமையோடு சேர்த்து சுமையைச் சுமக்க முற்படும்போது அச்சுமையானது எமது உடலை அழுத்துவதுடன் உள்ளத்தையும் வெறுப்படையச் செய்கிறது. உணர்ச்சிகள் கூட சுக்கு நூறாகின்றன. நேற்றைய பற்றிய மீட்டலிலும், நாளைய பற்றிய கற்பனையிலும் நேரத்தை வீணாக்காது, இன்றைய பணிகளில் கவனம் செலுத்துங்கள். ஒரு சமயத்தில் ஒரு நாள் வாழ்க்கை போதும் என்பது இன்றைய தினம், இப்பொழுதே சீர்வர வாழவேண்டும் என்பதே பொருளாகும்.
(ii) நேரத்தை சேமிக்கும் வழி முறைகள்
ஒரு வேலையில் நட்டம் அல்லது பின்ன டைவு ஏற்பட்டால் கவலை கொள்ளக்கூடாது. ஒவ் வொரு வேலையையும் நீண்டகால, இடைக்கால, நிகழ்கால திட்டங்களாக வகுத்துக் கொள்ள வேண்டும். முதலில் புரிய வேண்டிய கடமைகளை முதலிலும் ஏனைய வற்றை அடுத்தும் செய்யத் திட்டமிட வேண்டும். பயனற்றவற்றை தவிர்க்க
அகவிதி ஜனவரி 2012

வேண்டும்.
நேரத்தை சரிவர பகிர்ந்தளிக்க பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவது சிறந்த பலனைத் தரும். வேலைகள் அதிகரிக்குமானால் முதன்மைப் படுத்தி இலக்கை நிர்ணயித்து உண்மையான நேர வேளையை மதிப்பீடுங்கள். அதிகமான வேலை களில் கவனம் செலுத்தாமல் ஒரே நேரம் ஒரு வேலையைச் செய்யுங்கள். முடியாத விடயங்களைக் காரணங்காட்டி முடியாது எனச் சொல்லி தவிர்த்து விடுங்கள். பின்போட வேண்டாம். இல்லையென மறுப்புச் சொல்ல நேரினும் காரணங்காட்டி மறுப்புச் சொல்லுங்கள். மேலும் கோவைகளைத் தேடுவதில் நேரத்தைக் கழிக்காதீர்கள். சகல அலுவலர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து தேடுவதைத் தவிர்த்து விடுங்கள்.
விருப்பமில்லையெனின் தள்ளிப் போடாதீர்கள். ஒவ்வொன்றுக்கும் அதற்கான நேரத்தைத் தீர்மானித்து அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள். விருப்பமில்லாதவற்றை கூடிய விரைவில் தீர்த்தால் நேரம் மீதப்படும். ஏனைய கடமைகள் தொடர வாய்ப்புண்டு. சிந்தித்தலுக்கும் நேரம் ஒதுக்கி செயற்படுங்கள். பிரயாணத்தின் போது வீண் அரட்டையடிக்காது கிரகித்தல் மூலம் செய்ய வேண்டியவற்றை முன் கூட்டியே மூளையில் கணனிப்படுத்துங்கள். இப்படிக் கிரகிப்பதால் நேர விரயத்தைக் குறைக்க இடமுண்டு. கிரகித்தல் குறைவுபடுவதால் விளங்காத்தன்மை ஏற்பட்டு கூடிய நேரம் இதற்குச் செலவிடப்படுகின்றது. "இப்படி செலவு செய்திருக்கலாம் எனின் பின்னர் வருந்து வதை விடுத்து உனது நேரத்தைப் பயன்படுத்திக் கொள்" என்கிறார் ரிச்சார்ட்பாக்ஸ்ட். நேரத்தைக் கடனாகப் பெற முடியாது. திரும்ப சம்பாதிக்கவும் முடியாது. கைநழுவிய நேரம் மறுபடியும் திரும்பி வராது. நழுவிய நேரம் நழுவியது தான். நேரத்தை
O 15

Page 18
நீங்கள் கட்டுப்படுத்தினால் உங்களை கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கடமை களை சரிவரச் செய்வீர்கள்.
(iv) ஒழுங்கமைப்பும் முகாமைத்துவமும்
அலுவலகங்களைச் சுத்தமாக வைத்திருங்கள், பொருட்களை உரிய இடத்தில் வையுங்கள். இதனால் தேடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம். ஜப்பானிய முகாமையாளர்கள் 5-"S" முறையைப் பின்பற்றுகின்றனர். அவையாவன (1) தேவையற்ற வற்றை நீக்க வேண்டும் (Seire) (2) பொருட்களை எப்போதும் ஒரே இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். (Seiton) (3) அலுவலக சூழலைத் துப்பரவாக வைத்திருத்தல் வேண்டும். (Sciso) (4) எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒழங்கமைப்பும் அலுவலக அமைப்பும் கொண்ட தரத்தினைப் பேண
வேணர் டும். (Seiketsu) (5) சுயாதீனமான நடத்தைக்கும் சிறந்த ஒழுங்கமைப்பு அலுவலக அமைப்பு என்பனவற்றிற்கு பயிற்றுதல் வேண்டும். (Shitsuke). மேற்கூறிய நடவடிக்கைகளை எப்போதும் பேணும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். இப்படி இந்த 5 - 'S' முறைகளைப் பேணுவதன் மூலம் நேரமுகாமைத்துவத்தை சீராகச் செய்ய முடியும். எனவே எதிர் காலத்தில் நேர முகாமைத்துவத்தைப் பின்பற்றி அதன் மூலம் எமது பழக்கவழக்கங்களையும், திறனையும் மேலோங்கச் செய்ய முடியும். “நேரம் என்ற மூலவளம் மிக அரிதானது. அதனை முகாமைப்படுத்த முடியா விடின், வேறு எந்த செயற் பாட்டையும் முகாமைத் துவம் செய்ய முடியாது" என்ற முகாமைத்துவ சிந்தனையாளர் பீற்றர் டிறக்கரின் கருத்தினை
esses, 826076) if 2012
 

மனதிற்கொண்டு நேர முகாமைத்துவமூடாக உச்சப் பயனைப் பெறுவோமாக. நேரத்திற்கு உயிருண்டு. அதனால் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் தான் நேரத்தை வீணாக்கும் போது நேரத்தைக் கொல்கிறோம். (King the Time) என ஆங்கிலத்தில் கூறுவார்கள். பயனுள்ள நேரமே உயிருள்ள நேரம். பயன்படுத்தாத நேரம் கொல்வதற்கு நிகராகும். எனவே நேரத்தை சரிவர திட்டமிட்டபடி பயன் படுத்தி நேரத்திற்கும் உயிரூட்டுவோமாக ஒருவரது வாழ்வு எழுபத்தாறு வருடங்கள் ஆயின் அதில் தூங்குவதற்கு 31 ஆண்டுகள், சாப்பிடுவதற்கு இரண்டு ஆண்டுகள், காத்திருக்க இரண்டு ஆண்டுகள், பொழுதுபோக்கு 09 ஆண்டுகள், சும்மா வீணே கழிப்பது 09 ஆண்டுகள் பாடசாலைகளில் (கட்டாயக்கல்வி) 13 ஆண்டுகள், வேலைபார்க்க 10 ஆண்டுகள் கழிகின்றன என ஆய்வுகளில் இருந்து தெரிய வருகின்றது. திட்டமிட்டு அதற்கேற்ப செயற்படுங்கள். திட்மிடும்போது நேரவிரயம், பொருள் விரயம், உழைப்புவிரயம் என்பன ஏற்பாடாமல் தவிர்த்து விடுங்கள். மனச் சோர்வும், உடல்சோர்வும் ஏற்படும். என்ன வேலை செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? எவ்வளவு நேரத்துக்குள் செய்ய வேண்டும்? எனச் சரிவர முன்கூட்டித் திட்டமிடுங்கள். வேலைகள் திட்ட மிட்டபடி நடைபெற்றனவா? என மீட்டுப் பாருங்கள். தேவையற்றவற்றை நீக்குங்கள். எனினும் தேவையற்றவை திட்டமிடும் போதே நீக்கி விடுவது பொருத்தமானது. பயனற்றவற்றில் நேரத்தை வீணாக்கி விடாதீர்கள். நேரம் தவறாமையை கடை ப்பிடியுங்கள். தாமதத்தை பின்போடுவதைத் தவிர்த்த விடுங்கள். இன்றே செய்யுங்கள். ஒரே முறையில் செய்யுங்கள். நிதானத்துடன், சாமர்த்தியமாக விவேகத்தை பயன்படுத்தி செயற்பட்டால் நேரம் வினைத்திறன்மிக்கதாக இருக்கும்.
“ஞாலம் கருதினும் கைகூடும் - காலம் கருதி இடத்தாற் செயின்"
என்றார் 2500 ஆணி டுளுக்கு முனர் திருவள்ளுவர் தனது திருக்குறளில் காலம் உணர்ந்து இடம் உணர்ந்து ஒருவன் செயற்பட்டால், இந்த உலகமே வேண்டும் என ஒருவன் நினைத்தாலும் அது நடக்கும் எனப் பொருள்படும். எனவே நேர முகாமைத்துவத்தை வினைத்திறன் மிக்கதாக அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் வாழ்வில் வெற்றிகளை ஈட்டலாம்.
O 16

Page 19
எழுவினாக்கள் :
1. பாடநூல் கற்பதற்கு ஒரு வழிகாட்டியாய்
அமைகின்றதா?
2. பாடநூல்கள் கற்பதை வரையறுகின்றதா?
3. கற்றலில் ஈடுபடுவோருக்கும் ஈடுபடுத்து வோருக்குமிடையே நெருக்கமான தொடர் பினை ஏற்படுத்துகின்றதா?
4. பாடநூல்கள் வாசிப்பு பாடப்புத்தமாக
பயன்படுத்துகின்றதா?
5. பாடநூல்கள் ஆசிரியரிடம் ஆக்கத்திறனை
உருவாக்குகின்றதா?
கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டின் பாடநூலுக்கு தனித்தன்மையான இடமுண்டு. இலங்கை பாடசாலை முறையில் பாடநூல் மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டியாகவும் ஆசிரியர்களுக்கு தமது கற்பித்தலுக்கான முழுமை யான சாதனமாகவும் கருதப்படுகின்றது. கல்வியின் ஆரம்ப, இடைநிலைகளில் பாடநூல் முதன்மை யான இடம் வகிக்கிறது. வல்லுநர்களால் கவனமாகத் தயாரிக்கப்பட்ட கற்றல் பொருள்களின் தொகுப்பே பாடநூலாகும். கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டில் ஆசிரியர், கையேடு, பயிற்சி நூல்கள், உசாத்துணை நூல்கள், அட்லஸ் என்பனவும் பயன்படுத்தப்படு கின்றன. இவற்றை எவ்வாறு, எதை, எப்பொழுது பயன்படுத்துவதென தெளிவாகக் காட்டுவது பாட நூலாகும்.
பாடநூல் வரைவிலக்கணம்.
உலக அறிவை களஞ்சியப்படுத்தி பாதுகாப்
பதுடன் அறிவை பகிர்ந்தளிக்கவும் பயன்படுத்தும்
ஒரு உபகரணமே பாடநூலாகும். Agarwalட1996.
ஒரு படிப்பு, கால அளவுக்குரியது. குறிப்பிட்ட
படிப்புப் பாடம் பல்வேறான தொடர்புகளை கொண்டது. மாணவர் - ஆசிரியர்களின் வகுப்பறைப்
2ஆவிதி ஜனவரி 2012
 

B.A. P
பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி
தேசிய கல்வி நிறுவகம் கொழும்பு நிலையம்.
பயன்பாடு என்பன பாடநூலின் சிறப்புப் பண்புகள் என அமெரிக்கப் பாடநூல் பதிப்பக நிறுவனம் கூறியுள்ளது.
வகுப்பறைக் கற்பித்தல் பெரும்பாலும் பாடநூல்களிலேயே தங்கியுள்ளது. ஆசிரியர் ஒரு குறைவான தகைமை உள்ளவராயின் பாடநூல்கள் அவரது கற்பித்தலுக்கு உதவுகின்றன. மேலும் மாணவர்களுக்கு முறையாக கற்றுக் கொள்வதற்கும் செயற்படுத்துவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், மேலதிக கற்றலுக்கும், அடிப்படையான உதவிகளை பாடநூல்கள் வழங்குகின்றன. Unesco உ1970.
இக்கருத்துக்களுக்கூடாக நோக்கும் போது பாடநூல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையான அறிவுத் தொகுதியைக் கொண்டதாகும். அதனுள் தரப்படும் கற்றல் பொருளானது தொடர்ச்சி, இணை ப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும். பயன்படுத்து வோரின் திறனுக்கேற்ப அது தயாரிக்கப்படுகின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட பாடநூல் அதற்கான வகுப்பு, பயன்படுத்தும் மாணவர்கள், கற்றல் நோக்கங்கள், கற்றல் பொருள்களின் முறையான அமைப்பு என்பன கவனத்தில் கொள்ளப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
இன்றைய வகுப்பறைகளில் பாடவேறுபாடு கவனத்தில் கொள்ளப்படாது ஆசிரியர்களால் பாடத்தை நடாத்திச் செல்வதற்கு துணையாக பாடநூல்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஆசிரியர் பாடத்தை கற்பிப்பதற்காக மாணவர் ஒவ்வொருவரையும் பாட அலகின் ஒவ்வொரு பகுதியையும் வாசிக்குமாறு முதலில் கூறுவார். பின்னர் அதற்கான மேலதிக விளக்கங்கள் ஏதும் விளக்கிக் கூறுவார். இவ்வாறே 40 நிமிட பாட செயற்பாடு முழுவதுமே வாசிப்பும் விளக்க முமாகவே அமைந்திருக்கும். இவ்விடத்தில் பாடநூல் வாசிப்பு - விளக்க நூலாகவே ஆசிரியரால் பயன்படுத்தப் படுகின்றது. வாசிப்பின் போது மாணவனின் தவறுகள் சுட்டிக் காட்டப்படுவதிலும் பார்க்க ஆசிரியர் பாடத்தை நடத்திச் செல்வதிலேயே அக்கறை உடையவராக இருப்பார்.
O 17

Page 20
எடுத்துக்காட்டாக வரலாற்றுப் பாடத்தை வாசிப்புப் பாடமாக நடத்துவதற்கு வரலாற்றுப் புத்தகம் தேவையில்லை. இதற்காக கதைப் புத்தகங்களையோ அல்லது சிறு நாவல்களையோ பயன்படுத்தலாம். பாடநூல் ஒரு வாசிப்பு - விளக்க நூல் என்ற கருத்திலிருந்து விலகி பாடநூல் மிகத் தேவையானது என்பதை பின்வரும் கருத்துக்களுக் கூடாக நோக்கலாம்.
பாடநூலின் அவசியம்.
1. ஆசிரியருக்கு வழிகாட்டல்
ஆசிரியர் தம் கற்பித்தலை திட்டமிடுவதற்கும் குறிப்புக்கள், ஒப்படைகள், செயல்பாட்டு விளக்கங்கள் என்பவற்றையும் பாடநூல்கள் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஆசிரியருக்கு எப்பொழுதும் பக்க பலமாய் திகழ்கின்றது. மேலும் கற்பிக்கு முறைகளை வகுப்பதற்கும், ஆசிரியருக்கும் வழிகாட்டுகின்றது.
2. மாணவர்களுக்கு அறிவை வழங்குதல் மாணவர் கள் எதை, எந்தளவு கற்கவேண்டும் என்பதை முன்கூட்டியே மாணவர்களுக்கு பாடநூல் வழங்குகின்றது. ஆசிரியரால் வழங்கப்படும் வீட்டு வேலைகள், ஒப்படை செயற்பாடுகள் போன்றவற்றிக்கும் பரீட்சைக்கு தயார்படுத் தவும் அத்துடன் உசாத்துணை நூலாகவும் பாடநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
3. கற்றல் சாதனங்கள் பற்றிய தகவல்களை தருதல்,
பாடநூல்கள் வெறும் கருத்துச் செறிவுடையதாக மட்டுமல்லாது ஆசிரியருக்கும், மாணவர் களுக்கும் கற்பித்தல் - கற்றல் செயல்முறைக்கு தேவையான சாதனங்கள், கருவிகள் போன் றவை பற்றிய தகவல்களையும் பாட நூல்கள் கொண்டிருப்பதால் மாணவர்கள் அவற்றின் மூலமாக தமது அறிவினை விரிவாக்கிக் கொள்ள முடியும்.
4. திறன்களை வளர்ப்பதற்கு துணையாதல் கணிதம், விஞ்ஞானம், செயல்முறை நுட்பத் திறன் , வரலாறு, புவியியல் போன்ற பாடங்களின் வரைதல் குறித்துக் காட்டுதல், செய்து காட்டுதல் முதலிய திறன்களை வளர்ப் பதற்கு பாடநூலில் உள்ள விடயதானங்கள் மாணவர்கட்கு துணைபுரிகின்றது.
அகவிதி ஜனவரி 2012

5. தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல்.
சமூக விஞ்ஞானப் பாடங்களைப் பொறுத்த வரையில் பாடநூலின் பொருளடக்கம் அதன் நோக்கங்களுக்கு ஏற்பவும் அவற்றை மாணவர் ஏற்கும் தன்மைக்கு ஏற்பவும் அமைந்திருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை, தேசிய ஒருமைப் பாட்டு உணர்வு, சமயம், மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள், உடையணி முறைகள், விழாக்கள் முதலிய கூறுகளால் வேறு பட்டிருக்கும் தன்மையிலிருந்து அனைவரும் ஒருவரே எனும் உணர்வினை பாடநூல்கள் வழங்குவதால் பாடநூல் முக்கியத்துவம் உடை யதாகும். பாடநூல் " ஒரு கற்பித்தல் முறையாக கற்பித்தல் நுட்பமாக பாடநூல்கள் அவசிய மானது. கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் உடையது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதனால் அதனை எவ்வாறு பயன் படுத்துவது என்பது பற்றி ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும்.
ஆசிரியர்களது வழிகாட்டலுடன் பாடநூல் களைக் கற்று தகவல்களைத் திரட்டிக் கொள்வது இம்முறைகளுள் ஒன்றாகும். இம்முயற்சிக்காக ஆசிரியர்களால் குறித்த விடயத்திற்கான பாட நூல்கள், உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள், படிவங்கள், படங்கள், வரைபுகள் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அத்துடன் ஆசிரியர் தான் கற்பிப்பதற்காக கொண்டுவந்த விடயதானத்தினை தொடர்புபடுத்தி மேற்குறித்த மூலகங்களைப் பயன்படுத்த விளக்கி, மாணவர்களை குறித்த பகுதிகளை வாசிக்கச் செய்து பின்னர் அவைகளைப் பயன்படுத்தி ஏதாவது விடயமொன் றைக் கட்டமைக்க அல்லது அறிக்கையொன்றை தயாரிக்க அல்லது ஒப்படை ஒன்றை செய்ய
O 18

Page 21
மாணவர்களை பணிக்க வேண்டும். இங்கு மாணவர்கள் முக்கிய விடயங்களை திரட்டி ஆசிரியரது வழிகாட்டலுக்கேற்ப குறித்த ஒப்படை யைப் பூரணமாக்க முயற்சி எடுப்பார்கள். இம்முறை யில் மாணவர்களே முக்கிய விடயங்களைத் திரட்டிக் கொள்வதால் அவ்விடயங்கள் மாணவர் மனதில் நீண்ட காலத்திற்கு ஞாபத்திற்கு நிலைத் திருக்கும்.
பாடநூலை ஒரு கற்பித்தல் முறையாகப் பயன்படுத்துவதை விட கற்பித்தல் நுட்பமாக பயன் படுத்துவது அதி சிறந்ததென தேர்ச்சி வாய்ந்த ஆசிரி யர்கள் கருத்தில் கொண்டுள்ளனர். கற்பித்தல் நுட்பம் என்பது கற்றல் - கற்பித்தல் செயன் முறைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள் வதற்கு உதவியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய உபாய வழிமுறையாகும். அதாவது பிரதான கற்பித்தல் முறைக்கு உதவியாக பல கற்பித்தல் நுட்பங்களை பயன்படுத்தி கற்பித்தல் மாணவரின் பல்வேறு திறன்களை மேம்படுத்த வழிவகுக்கும். உதாரணமாக கலந்துரையாடல் முறையின் போது பாடநூலை கற்பித்தல் நுட்பமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் பிரதான கற்பித்தல் முறை மேலும் செழுமையடையும் என்பதுடன் மாணவர்கள் கற்பதற்கு தொடர்ச்சியாக ஊக்கங்களைப் பெறுவர். ஏனெனில் பாடநூலில் உள்ள விடயங்களை ஆசிரியர் தொட்டுக்காட்டி செல்லும் போது மாணவர்கள் மேலதிக விளக்கங்களையும் பெறக் கூடிய வாய்ப்பு அதிகரிக்கும்.
பாடநூல்கள் கற்பதை வரையறுக்கின்றதா?
ஆசிரியர்கள் பாட நூலையே கற்பிப்பதால் பாடநூலின் உள்ள விடயங் களே தமது மதிப்பீட்டுக்கு பயன்படும் என கருவதால் பாட நூல்களில் உள்ள விடயத்தை அவ்வாறே மனப் பாடம் பண்ணுகின் றனர். அதனையே ஆசிரிய ரும் ஊக்குவிக்கின்றனர். உண்மையில் பாடநூல் கற்பதற்கான ஒரு வழி காட்டியே தவிர பாடநூல் தான் முழுமையான கற்றல் உபகரணமாகக் கருதுவது தவறாகும். பாடசாலை அடிப்படையாகக் கொண்டு கற்றல் செயல்முறை கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ஆவிதி ஜனவரி 2012
 

இதற்காக பாடநூலில் குறிப்பிட்ட விடயத்தோடு தொடர்பான மூலாதாரங்களை தேடியறிவதற்கு மாணவரை ஊக்குவிப்பதுடன் ஆசிரியர் வழிகாட்டி, பயிற்சி நூல், வரைபடங்கள், படங்கள் முதலிய வற்றையும் தொடர்புபடுத்தும் போது கற்க வேண்டிய பொருள் விரிவானது என்பது மாணவர்கள் அறிந்து கொள்வர். இன்று அறிவுத் தொகுதி விரிந்துபட்டு செல்வதால் எதைக் கற்பது என்பது ஆசிரியரால் நிச்சயமாக சுட்டிக் காட்டப்பட வேண்டும். மாணவனின் வகுப்பு வயது என்பன பொறுத்து எந்தளவு அறிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை ஆசிரியர் அறிந்து வைத்திருப்பாராயின் மாணவர் களை பாடம் தொடர்பாக சீராக்கம் செய்வது இலகுவானதாகும். பாடநூல்கள் ஆசிரியரின் ஆக்கத்திறனை மேம்படுத்துகின்றன்றதா?
பாடநூல் கற்பதற்கான அடிப்படைச் சாதன மாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் ஆசிரியர் பாடசாலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறான கற்றல் அனுபவங்களை வழங்குவதற்கு ஆசிரியர் தயாராக இருப்பாராயின் அவ் ஆசிரியர் ஆக்க திறனுடைய ஆசிரியராக குறிப்பிடலாம். இங்கு ஆக்கத் திறன் என்பது பாடத்தோடு தொடர்பான பல விடயங்களையும் மாணவர் மனக்கண்முன் நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தவராக ஆசிரியர் திகழவேண்டும். எடுத்துக் காட்டாக வரலாற்றுப் பாடத்தில் போர்த்துக்கீசர் இலங்கையை வந்தடைந்த போது இலங்கை கோட்டை, மலையகம், யாழ்ப்பாணம் என மூன்று இராசதானிகளைக் கொண்டிருந்தது என பாட நூலில் குறிக்கப்பட்டிருந்தால் அதனை அவ்வாறே கூறாது அப்பிரிவுகளை ஒரு இலங்கைப் புறவுருவப்படத்தில் குறித்து காட்டுவராயின் ஆசிரியர் ஆகக் சிந்தனைமிக்கவராவர். எனவே பாட நூல்கள் ஆசிரியரின் ஆக்கத்திறனை மேம்படுத்தக் கூடிய வகையில் தகவல்களையும், படங்கள், தரவுகள், வரைபுகள் என்பவற்றையும் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, பாடநூல்கள் கற்பித்தலின் குறிக் கோள்களையும், நோக்கங்களையும் நிறைவேற்றக் கூடிய வகையில் தகவல்களை தொகுக்கப்பட்டிருப் பதுடன் ஆசிரியரின் செயற்பாடுகளாகும். ஆக்கத் திறனுக்கும் வழிப்படுத்துவதாகவும் அமைந்திருத்தல் வேண்டும். கல்வியில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்நாளில் மாணவனின் தேவை களுக்கும் சூழ்நிலைகளுக்குமேற்ப பாட நூலை பயன்படுத்துதல் மிகச் சிறந்ததாகும்.
o 19

Page 22
எந்த சமூகத்தினதும் எதிர்கால நல்வாழ்வுக்கு முழுமையான கல்வி இன் றியமையாததாக உள்ளது. ஏனெனில் கல்வியினால் உருவாக்கப்படுகின்ற மானி டவளமானது அந்தச் சமு தாயத்தின் மிகவும் பெறுமதியானதொரு வளமெனக் கருதப்படுகின்றது. அதனை மையமாகக் கொண்டே நாட்டினது அரசு மக்களின் எதிர்கால நல்வாழ் வினை சிறப்பிக்க கல்வியை வழங்கி வருகின்றது. இலவசக்கல்வியை வழங்குவதன் மூலம் அனைத்து சிறார்களும் சீர்கல்வியை பெறுகின்ற வகையில் நாட்டினை அரசாண்ட அரசுகள் காலத்திற்கு காலம் கல்வியின் விருத்திக்காக பெருந்தொகைப் பணத்தினை செலவு செய்து வருகின்றன. மட்டு மன்றி காலத்திற் கேற்றவாறான கல்வி மறுசீரமை ப்புக்களையும் உருவாக்கி அதன் மூலமாக பிரஜை களின் தேவைகளையும் அவர்களது எதிர்பார்ப்புக் களையும் நிறைவேற்றக் கூடிய வாறான கல்வியில் மனித விருத்தி காணப்படல் வேண்டும் என்பதை பிரதான குறிக்கோளாகக் கொண்டு 21ஆம் நுாற்றாண்டுக்குகந்த நவீன கல்வியமைப்பினையும் உருவாக்கி அதனை நடைமுறைப் படுத்தியும் வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1988ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. அதன் அடிப்படையில் கூறப் பட்டுள்ள பல்வேறு அம்சங்களில் ஓர் அம்சமாக கட்டாயக்கல்வி அமைந்திருந்தது. அதன் அடிப் படையில் அன்றைய (1997) காலகட்டத்தில் ஐந்து வயது முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் சுமார் 14 வீதத்திற்கும் கூடுதலான பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை என்ற உண்மை தெரியவந்தது. இதற்காக வேண்டியே கட்டாயக் கல்வியின் வயதினை வரையறை செய்து அனைத்து சிறார்களும் கல்விகற்பது கட்டாய மாக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் மிக
அகவித் ஜனவரி 2012
 
 

|ட்டாளைச்சேனை.
அண்மைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள் பாடசாலையின் கல்வியைவிட்டு இடைவிலகுதல் எனும் விடயம் பரவலாக பேசப்படுவது அதிக மாகவே காணப்படுகின்றது. இது மிகவும் வேதனை யை தருகின்ற விடயமாகும். அரசு பாடசாலைக் கல்விக்காக பல பில்லியன் ரூபாய்களை செலவு செய்து மாணவர்களின் எதிர்கால விளைநிலங்களாய் நவீனத்துவமுடைய பாடசாலை அமைப்பினை ஏற்படுத்தி மாற்றமுறும் நவீன உலகின் மாற்றங் களையும் கருத்திற்கொண்டு அடிப்படையான விடயங்களையும், நாட்டினதும், மனித விருத்தி யினதும் மேம்பாட்டுக்கும் உந்து சக்தியாக மிளிரும் மாணவர்கள் கல்வியில் உயர்வடைதலை விட்டு விட்டு இடைநடுவில் கல்வியை முடித்துக் கொள் கின்றனர்.
இவ்வாறு பாடசாலைக்கல்வியை இடையில் கைவிடும் பல சிறார்கள் நாட்டின் பலபாகங்களிலும் காணப்படுகின்றனர். அந்த வகையில் நாட்டின் கரையோரப்பிரதேசங்கள், தொழிற்சாலைகள் அமை ந்துள்ள சுற்றுவட்டங்கள், சிறுசிறு கிராமப் புறங்கள், யுத்த சூழ்நிலைகள், புகலிடவாழ்வு நிலை போன்ற பகுதிகளில் தான் இவர்களது வெளியேற்றம் காணப்பட்டாலும் இன்னும் பல்வேறு அம்சங்களும் இவர்களது வெளியேற்றத்திற்கு காரணமாகவும் அமைகின்றன. பல அறிஞர்களினது ஆய்வுகளின் பிரகாரம் இந்நிலைக்கு பெரும்பாலும் பொருளாதார நிலையே முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுகின் றது. வறுமை காரணமாக பிள்ளைகள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆட்பட்டு விடுவதால் வேறு வழியின்றி கல்வியை இடை நடுவில் கைவிடவேண்டியுள்ளது. பெண் பிள்ளை கள் தனது தாய் வெளிநாடு செல்வதால் அல்லது மரணம் அடைவதன் காரணமாக வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு இவர்களது கல்வி ஒரு தடையாக காணப்படுகின்றமையால் இவ்வாறான மாணவர் களும் சமூகத்தின்கண் கட்டாயப்படுத்தப்பட்டு பாடசாலைக் கல்விக்கு முடித்துவிடுகின்றனர்.
o 20

Page 23
மேலும் , சிறார்கள் கல்விபெறுகின்ற உரிமையை இவ்வாறான பெற்றோர்களும் இவர்களது உறவினர்களும் மறந்து விடுகின்றனர். “யுனஸ்கோவின" சாசன முன்னுரையின் படி “சகலருக்கும் சமகல்வி வாய்ப்புக்களில் முழு நம்பிக்கைகொண்டு உண்மையான குறிக்கோளை தடையின்றித் தொடர்வதால் அறிவு, சிந்தனைகளை சுதந்திரமாக பரிமாறிக்கொள்ளுதல் என்பன அந்நாடுகளின் ஒவ்வொருவருடைய வாழ்க்கை பற்றிய முழுமையான, உண்மையான அறிவைப் பெறல், பரஸ்பர புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்ளுதல் எனும் நோக்கங்களுக்கும், மக்களுக் கும் இடையில் தொடர்புகளை அதிகரிப்பதற்கும், விருத்திசெய்வதற்கும் உடன்பட்டதாகவும் உறுதி செய்வதற்காகவும் இருத்தல் வேண்டும்" என சாசனத்தில் கையொப்பமிட்ட நாடுகள் தெரிவிக் கின்றன. இதில் இலங்கையும் ஒப்பமிட்டுள்ளதால் அனைவருக்கும் கல்வியை வழங்குதலில் இடை விலகல் ஒரு பிரச்சினையாக தோன்றியுள்ளது
எனலாம்.
மட்டுமன்றி சிறுவர்களின் உரிமைகளின் அடிப்படையில் அதன் 28, 29 ஆகிய சரத்துக்களின் படி கல்வியை எல்லாப்பிள்ளைகளும் பயில் வதற்கான உரித்துடையவர்கள். அரசு ஆரம்பக் கல்வியேனும் கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும். பிள்ளை கல்வி கற்பதன் மூலம் சிறந்த ஆளுமை, திறன்கள், உடல் உள விருத்திக்கு உதவுவதன் அவசியம் பற்றி பறை சாற்றும் அதேவேளை மாணவர்களும் இவற்றின் தாற்பரியம் தெரியாது இடைவிலகலில் இணைந்து கொள்கின்றனர். இவ்வாறான இடை
ஆவிதி ஜனவரி 2012
 

விலகும் மாணவர்கள் பல்வேறு ஒழுக்கக் கேடான நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். சில சந்தர்ப் பங்களில் வேலைக்காரர்களாகவும் ஈடு படுத்தப்படு கின்றனர். இதனைக் கருத்திற் கொணர் டே சட்டங்களை விதிப்பது மட்டுமன்றி இடைவிலகிச் செல்லாதிருக்கவே ஆரம்பக்கல்வி திருப்திகரமான தாக அமையவேண்டும் என்பதற்காக மாணவர் களைக் கவரும் வகையிலான செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வியைப் பெறத் தக்கதான வகையில் இன்றைய கல்விமுறை அமைந் துள்ள நிலையிலும் மாணவர்களின் இடைவிலகல் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
பாடசாலைகளில் இவையனைத்தையும் கருத்திற்கொண்டே ஆலோசனையும் வழிகாட்ட லும் எனும் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான ஆசிரியர்கள் பலர் மாணவர்களின் ஆலோசனையாளர்களாக மாறியுள்ள அதேவேளை மாணவர்களின் வெளி யேற்றத்திற்கும் (சிலர்) இவர்களே காரணமாகவும் அமைந்து விடுகின்றனர். உண்மையில் கடந்த (1998) கல்விச் சீர்திருத்தத்தின் படி மாணவர்களின் ஆலோசனை வழிகாட்டல் சேவையானது மிக அவசியமானதாக அமைகிறது. குறிப்பாக வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளல், மாணவர் களின் சரியான கற்கை நெறியை தெரிந்து கொள்ளல், பாடசாலையிலும் தனது வீட்டிலும், சமூகத்திலும் பல்வேறு அழுத்தங்களினால் ஏற்படுகின்ற தனிப் பட்ட பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காகவும் தேவையான ஒன்றாக கருதப்படுகின்றது. ஆலோ சனைச் சேவையானது திறம்பட பாடசாலைகளில் நடைபெறுகின்றபோது உண்மையில் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இடைவிலகலுக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும் சரியான முறையில் வழிகாட்டல் ஆலோசனை அமை யாததும் ஒரு பெருங்குறையாகும். ஆலோசனையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் சிலவற்றில் இவர்களது செயற் பாடுகள் போதியதரமற்று காணப்படுகின்றமையும் தெளிவாக அறியக் கிடைக்கக் கூடியதாக உள்ளது.
இதற்கு உதாரணமாக அண்மையில் ஒரு பாடசாலையில் ஒரு ஆசிரியை தனது வகுப்பு மாணவர்கள் வகுப்பறையை உரிய நேரத்திற்குள் சுத்தம் செய்யவில்லை என்ற காரணத்தினால் பாடசா லையை விட்டு வீடு செல்லுமாறு பணித்துள்ளார். மாணவர்களின் உரிமை, கடமை போன்றவைகளின்
O 21

Page 24
அடிப்படையில் மாணவர்களை பாடசாலையை விட்டு வெளியேற்றுகின்றமை மிகவும் பாரதுாரமான விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவும் சிலவேளைகளில் அம்மாணவர்கள் பாடசாலைக் கல்விக்கு முழுக்குப் போடலாம். எனவேதான் இடைவிலகலானது எவ்வடிவத்திலும் வரலாம். மேலும், இன்னொரு பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசனை பயிற்சி பெற்ற ஆசிரியர் தனது கடமையை வேறாக வைத்துவிட்டு பாட சாலையினது அதிபரின் வேலையை செய்வதிலும், அதிபர் இல்லாதபோது அதிபரது கடமையைச் செய்வதிலும் குறியாய் இருப்பதனாலும் வழி காட்டல் ஆலோசனை சரியாக கவனிப்பாரற்று கிடக்கிறது. இதனாலும் மாணவர்கள் தறிகெட்டுப் போவதற்கு வழிசமைக்கப்படலாம் அல்லவா இங்கே மாணவர்களின் சேர்வு வீதம் குறைந்தும், இடை விலகலானது கூடியும் காணப்படுகிறது. அதாவது சரியான வழிகாட்டல் ஆலோசனை இன்மையும் இதற்கு காரணமாக உள்ளது எனலாம். இவ்வாறு வெளியேறும் மாணவர்கள் கட்டாயக் கல்வி வயதினை உடையவர்கள் என்பது தெளிவு.
இவ்வாறான மாணவர்கள் தொழில் நடவடிக்கைகளில் சாதாரணமாக ஈடுபடுவதை காணக்கூடியதாகவும் உள்ளது. பெற்றோல் நிலை யங்கள், சில்லறைக்கடை விற்பனை நிலையங்கள், கடலில் மீன்பிடி வலையிழுக்கும் தொழில், ஆறு மற்றும் குளங்களில் மீன்பிடித்தல், உடைந்துபோன இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை கொள்வனவு செய்தல், வயலில் களைபிடுங்குதல், கொத்தன், தச்சுத்தொழில் போன்ற தொழிகளில் இடைவிலகிய பல மாணவர்கள் ஈடுபடுவதை யாவருமே பார்க்கின்றோம். ஆனால் இவர்களது படிப்பில் கவனம் செலுத்துவதில் இவர்களின் பெற்றோரோ? சமூகங்களோ? சமூக அமைப்புக்களோ பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் பாடசாலை களில் அமைக்கப்பட்டுள்ள கட்டாயக்கல்வி குழுவினர் இதற்கான நடவடிக்கைகளை சமூகத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படுகின்றபோது இவர்களது கல்வி நடவடிக்கைகளை மீள கட்டி யெழுப்ப முடியும். ஆகவேதான் பாடசாலையின் அதிபரானவர் சமூகத்தின் கண்ணாடியாக திகழ வேண்டும். அதிபர் பாடசாலையை மட்டும் கருத்திற் கொள்ளாது, அம்மாணவர்களின் போக்கு நடவடிக் கைகள் போன்றவைகளை அவர்களது பெற்றோர் களின் கலந்துரையாடல்கள் மூலமாகவும், விட்டு
அகவிதி ஜனவரி 2012

விட்டு வரும் மாணவர்களது மாதாந்த பட்டியல், இடைவிலகியவர்களின் பெயர் பட்டியல் களை பெற்று அவர்களது பெற்றோருக்கு விழிப்புணர்வினை வழங்கி, ஒத்துழைப்பை நாடுகின்ற போது நிச்சயம் பரிகாரம்கிடைக்கும்.
இடைவிலகலுக்கு இன்னும் சில காரணங் களாக கூறப்படுவது மாணவர்களுக்கு சரியான முறையில் கற்றல் - கற்பித்தல் நடைபெறாததும், தண்டனை வழங்கும் முறைகளும் காரணமாகக் கூறப்படுகின்றன. ஆசிரியர்கள் சரியான முறையில் மாணவர்களை இனங்கண்டு கற்பித்தலில் ஈடுபடுதல் அவசியமாகும். உண்மையில் மாணவரின் அறிவு மட்டம், குடும்பநிலை, மனோநிலை போன்றன மாணவனின் கற்றலில் தாக்கம் செலுத்து கின்றன. இதனைக் கருத்திற்கொள்ளாத ஆசிரியர்கள் மாணவர்களை நெருக்கீட்டிற்குள்ளாக்கி இருந்த கொஞ்ச நெஞ்சத்தையும் இல்லா தொழித்து அவனை பாடசாலைக்கே வராது செய்வதும் சில ஆசிரியர் களின் செயற்பாடுகளாக அமைந்துவிடுகின்றன. ஒருமாணவனின் கடந்தகால வாழ்வுக்கு ஆசிரியர் காரணமாக அமைந்துள்ளதை இந்த உதாரணம் மூலம் காணலாம். “மடையா நேரத்திற்கு பள்ளிக்கூடம் வரமுடியாவிட்டால் வீட்டில் நிற்க வேண்டியது தானே? ஆத்திரத்தில் ஆசிரியர்கள் இவ்வாறு ஏசுவதுண்டு. இவ்வாறு ஏசியதால் பாட சாலைக்கு கட் செய்துவிட்டதால், அம்மாணவனின் தாய் மெக்கானிக் ஒருவரிடம் கெஞ்சி அந்தக் கராஜில் சேர்த்துவிட்டார். இப்போது பள்ளிக்கூடம் போவ தென்றால் மிகவும் விருப்பநீ தான் இருந்தாலும் அந்தப்பழைய பள்ளிக்கூடத்திற் கல்ல" (பிள்ளை களின் உரிமைகள் - சமரசிங்க குணசேகர) என
O 22

Page 25
இம்மாணவன் கூறியுள்ளதைப் பார்க்கின்றபோது இவனின் கல்விக்கு ஆப்பு வைத்தவர்கள் (சில) ஆசிரியர்களே என்பதை சுட்டிக்காட்டுகின்றன. எனவேதானி ஆசிரியர் ஒவ்வொருவரும் மாணவனின் ஆலோசகர்களாக காணப்படுதல் வேண்டும். என அறிஞர்கள் கூறுகின்றனர்.
பாடசாலைக்கல்வியை இடையில் விடுபவர் களின் நிலையினை மேம்படுத்துவதில் பெற்றாரின் கடமையும் கட்டாயமானதாகும். பிள்ளையை பள்ளிக்கு அனுப்பினால் தனது கடமை முடிந்து விட்டது என்று வெறுமனே பெற்றாரும் இருந்து விடுவதால் பள்ளியில் நடைபெறுகின்ற எந்தவித மான நிகழ்வுகளிலும் பங்காற்றாது தான் ஒருபக்கம், தனது பிள்ளைகள் ஒருபக்கம் என உலாவித்திரியும்
பொதுக்கல்விக் குறிகா
1. பாடசாலைகளின் எண்ணிக்கை
அரச பாடசாலைகள்
தனியார் பாடசாலைகள் பிரிவேனாக்கள்
2. மாணவர்கள்
3. புதிய சேர்வுகள்
4. ஆசிரியர்கள்
5. மாணவர் ஆசிரியர் விகிதம்
6. மொத்த அரச செலவினம்
7. பரீட்சைப் பெறுபேறுகள்
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வெ இரு பத்திரங்களிலும் 35 புள்ளிகளுக்கு மே உ/தரத்திற்கு தகுதி பெறுவோர் 56.81% பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகு
அகவிதி ஜனவரி 2012

பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் கல்வியில் கரிசனை காட்டுதல் வேண்டும். அப்போதுதான் பாடசாலையின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். சமுதாய த்தினது கடமை இவ்வாறான மாணவர்களை இனங் கண்டு உரிய முறைகளில் அவர்களின் தேவைகளை ஓரளவாவது நிறைவேற்றி பாடசாலைக் கல்வியின் பால் திருப்பிவிடுவதானது சமூகத்தின் எதிர்கால பேற்றினை அதிகரிக்கின்ற செயற்பாடு களை செய்வித்த புண்ணியம் கிடைக்கும். எனவே, கல்விச் செல்வத்தை அள்ளி வழங்குவதில் ஆர்வ முள்ள அனைத்து நெஞ்சங்களும் உதவுவதால் பாட சாலைகளில் காணப்படுகின்ற இடை விலகலைத் தடுக்கலாம் என்பது திண்ணம்.
ட்டிகள்
9.662
94
658
4,100.000
332,000
224,000
19
ரூபா 92.5 பில்லியன்
ட்டுப் புள்ளிக்கு மேல் 11.8% ல் க/பாெ/த சாதரண தரப் பரீட்சை 58.83%
தி பெற்றவர்கள் 61.8%
-o 23

Page 26
கற்றல் என்பதற்கு மிகவும் திட்டவட்டமான வரைவிலக்கணம் கொடுப்பது கடினமானது. ஆயினும் கற்றலானது ஜீவராசிகளில் நடத்தை LDITsbpg,605 (Behavioral Change) grip JG55g/Lib gp(D5 செயற்பாடு எனக் குறிப்பிடலாம். இத்தகைய நடத்தை மாற்றமானது உடனடியாகவோ அல்லது காலம் தாழ்த்தியோ இடம்பெற முடியும். ஆனால் இந்நடத்தைக் கோலங்களில் ஏற்படும் மாற்றமானது இடம், மொழி, இனம், கலாச்சாரம், தனியாள் வேறுபாடு என்பவற்றிற்கு ஏற்ப மாற்றத்திற் குள்ளாகும்.
தற்கால கல்வி உலகில் கற்றல் என்பதே மிக முக்கிய தொனிப்பொருளாக விளங்குகின்றது. இது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய கற்றல் (Lean) அல்லது நடத்தை மாற்றம் (Behavioral Change) மனிதர்களில் மட்டும் இடம்பெறவில்லை. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் சகல ஜீவராசிகளிலும் நடத்தை மாற்றம் இடம்பெறுகிறது. இவ்வாறான நடத்தை மாற்றம் நிரந்தரமான தாகவோ அல்லது தற்காலிகமானதாகவோ இடம்பெறலாம். நடத்தை மாற்றம் நிரந்தரமானதாக அமைந்தால் அதன் பயனும் அதிகமாக இருக்கும்.
நடத்தை மாற்ற த்தை ஏற்படுத்த வல்ல கற்ற லானது உடல், உள இயக்கத்துடன் தொடர்புபட்ட தாகையால் கற்றல் என்பதனை பொதுவாக அறிந்து கொள்ளல், விளங்கிக் கொள்ளல், உணர்தல், தெரிந்து கொள்ளல், பெறுதல் போன்ற செயல்களை கற்றல் என கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கற்றலின விளைவுகளாக நடத்தை மாற்றங்கள் அமைவதுடன் இம்மாற்றங்கள் அறிவு (Knowledge) glpair (skill) LD60T'il IITig5 (Attitude) என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. கற்றல் நிகழ்வானது திட்டமிடப்பட்ட அடிப்படையிலும் எதிர்பாரா விதமாகவும் ஏற்படுகின்றது. மனிதர் களும் இடம், காலம், சூழல், இலக்கு என்பவற்றிற்கு ஏற்ப திட்டமிட்ட அடிப்படையில் கற்றலில் ஈடுபடுவது இன்றைய நவீன உலகின் தேவையாக
இகவிதி ஜனவரி 2012
 

உள்ளது. இதற்கு மாறாக திட்டமிடப்படாத முறை யிலும் எதிர்பாராவிதமாக கற்றல் நிகழ்கின்றது. இவ்வாறான கற்றல் நிகழ்வுகளால் ஏற்படும் நடத்தை மாற்றமானது அனுகூலங்களை ஏற்படுத்துவது போல சில வேளைகளில் பிரதி கூலங்களையும் ஏற்படுத் தலாம்.
பொருத்தமான ஒரு விடயத்தை பொருத்தமான நேரத்தில் முறையாகக் கற்று அதனை பொருத்தமான இடத்தில் உரிய சந்தர்ப்பத்தில் பயன்படுத்தினால் கற்றல் பயனுடையதாக அமையும்.
கல்வியானது மனித வாழ்வை மேன்மையுறச் செய்கிறது. அத்துடன் எதிர்காலச் சவால்களை பொருத்தமான வகையில் எதிர்கொள்ள வகை செய்கிறது. இத்தகைய கல்வியைப் பெற்றுக் கொள்ள உதவும் கற்றல் செயன் முறையினை சரியாக விளங்கிக் கொண்டு பொருத்தமான வகை யில் மாணவர்களை ஊக்குவிப்பதன் ஊடாக வினைத் திறன் வாய்ந்த மாணவர் சமூகத்தை உருவாக்க முடியும்.
கற்பித்தல் என்பதனை நோக்கும்போது கற்றல் செயன்முறையை இலகு படுத்துகின்ற கருமமே கற்பித்தலாகும். ஆயினும் தற்காலத்தில் கற்பித்தல் (Teaching) 6T6il 1560601 650 - 5ppai (Learning) at airp விடயமே முக்கியம் பெறுகின்றது. தற்போதைய நவீன கல்வி முறையில் வகுப்பறை கற்பித்தலில்
O 24

Page 27
(Class Room Teaching) FOLL IL golfluidsor
தற்போது கற்றலுக்கு வசதியளிப் போராக (Facilities to Learning) கற்றலுக்கு வழிகாட்டுவோராகவும் (Direct to Learning) 5(155Lil JG 576ipaOTir. 6TGOTC5a i தற்கால ஆசிரியர்களும் வினைத்திறன் வாய்ந்த கற்றலில் (Effective Learning) ஈடுபட வேண்டி யவர்களாக உள்ளனர். இதன் மூலமே தற்கால அறிவுசார் உலகில் சிறந்த ஆசிரியர்களாக மிளிர முடியும். எனவே ஆசிரியர்களும், மாணவர்களும் தமது அறிவையும் ஆற்றலையும் இற்றைப்படுத்த (update) வினைத்திறனுடனான கற்றலில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாகும்.
ஆயினும் கற்றல் செயன்முறையில் ஈடுபடும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு இருசாராரும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
அத்தகைய இடர்கள், பிரச்சினைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
1. பாடசாலைகளிலும், வீடுகளிலும் பெளதீக
ரீதியாக வளப்பற்றாக்குறை காணப்படல். 2. சிறப்பான முறையில் நேர முகாமைத்துவம்
கடைப்பிடிக்கப்படாமை. 3. ஆசிரியர் - மாணவர் தொடர்பில் ஏற்படும்
இடையூறுகள். 4. பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான
தொடர்பில் பூரண திருப்தியின்மை. 5. சுயகற்றலில் மாணவர்கள் ஈடுபடும் வீதாசாரம் குறைவுடன் மன அழுத்தத்திற்கு உள்ளாதல். 6. பொருளாதார பற்றாக்குறை. 7. பொழுதுபோக்குச் சாதனங்களின் அதிகரிப்பு.
அகவிதி ஜனவரி 2012
 

8. ஆசிரியர்களினதும், மாணவர்களினதும்
கல்விச்சுமை.
9. ஆரோக்கியமற்ற போட்டி நிலமை. 10. வளப் பங்கீட்டில் சமமின்மையும் குடும்ப
பொறுப்பும். 11. கற்றலின் பயனைக் குறைத்து மதிப்பிடும்
மனப்பாங்கு. 12. பணத்தின் அடிப்படையிலான சமூக அந்தஸ்து. 13. பாடசாலைகளில் காணப்படும் நில, இட
நெருக்கடி 14. விரும்பிய பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட
முடியாமை. 15. கல்வியில் நாட்டமின்மை. (உடற் பருமன்
போஷாக்கின்மை) 16. மொழிப் பாண்டித்தியமின்மை. 17. குழப்பகரமான, சிக்கலான நிர்வாக கட்ட
மைப்பு. 18. வெளிநாட்டு தொழில், கல்விமோகம். 19. பெற்றோர்களின் அசிரத்தை 20.மாணவர்களின் விருப்பிற்கேற்ப கற்றல்
துறையை தெரிவு செய்ய வாய்ப்பின்மை.
இத்தகைய இடையூறுகளை நீக்கி எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய மாணவர் சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் பலங்களை (Strength) 9155 figgil 6 ITtil'il 1855606T (opportunity) உரியவாறு பயன்படுத்துவதுடன் பலவீனங்களை (Weakness) நீக்கி சவால்களுக்கு (Thread) முகம் கொடுப்பதன் ஊடாக கற்றலின் பயனை அனுபவிக் கலாம்.
ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்நோக்கும் இடையூறுகளை நீக்குவதற்கு பின்வரும் நடவடிக்ை ககள் எடுப்பதன் மூலம் கல்வியின் பயனை கற்றல் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.
1. புரியும் மொழியில் தெளிவுடன் கற்றலில்
ஈடுபட வழிகாட்டுதல். 2. தேவையான வளங்களைப் பெற்றுக்
கொடுத்தல்.
3. திட்டமிட்ட அடிப்படையில் நேரத்தை
முகாமை செய்து செயற்பாடுகளில் ஈடுபடல்.
-O 25

Page 28
4. ஆசிரியர் - மாணவர்களிடையே சிநேகயூர்வ
உறவை விருத்திசெய்தல்.
5. பாடசாலைக்கும், சமூகத்திற்கும் இடை
யிலான உறவை பலப்படுத்தல். 6. சுற்றாடலில் காணப்படும் வளங்களை உச்ச
அளவில் பயன்படுத்தல். 7. பொருளாதார நிலையை உயர்த்த முயற்
சித்தல். 8. பொழுதுபோக்கு சாதனங்களை கட்டுப்
படுத்தல். 9. கல்விச் சுமையைக் குறைத்தல். 10. ஆரோக்கியமான போட்டி நிலையை
வளர்த்தல். 11. வளப்பங்கீட்டில் சமநிலையை பேணுதல்.
12. கல்வியின் சமூக அந்தஸ்தை உயர்த்த பாடு
படல்.
ஆசிரியர்களிடைே
மிகச் சிறந்த ஆசிரியர்
தகவல் தரும் வாக்கியங்கள்(informing) 凸5
மாணவர்களின் பாடம் சம்மந்தமற்ற விடயங்களை ஏற்றுக்கொள்கின்றார்.
மாணவர்களின் வினாக்களை மதிப்பிடுவதில்லை.
மாணவர்களின் வினாக்களை ஏற்றுக்கொள்கிறார்.
மாணவர்களின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்கிறார்.
மாணவர்களின் பதில்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. g
ஒருமுகப்படும் உரையாடல் ஆதரிக்கப்படுகின்றன. g
விளக்கம் வழங்கும் வினாக்களுக்குப் பதில் அளிக்கப்படுவதில்லை.
அகவிதி ஜனவரி 2012

l3.
l4.
15.
I6.
17.
I8.
19.
யே வேறுபாடுகள்
ட்டளையிடும் வாக்கியங்கள்(directing)
அவ்வாக்கியங்களைச் சாடுகின்றார்.(rebukes)
ாடம் சம்மந்தமற்ற வாக்கியங்களைப் பேசிகிறார்.
ாணவர்களின் பதிலை மதிப்பிடுவதில்லை.
ரச்சினையை முறைப்படுத்தும் கூற்றுக்களை
ருமுகப்படும்(Convergent) உரையாடல்களை
ருமுகப்படும் உரையாடல் விருப்பு வெறுப்பின்றி
பண அடிப்படையான சமூக அந்தஸ்தை நீக்க நடவடிக்கை எடுத்தல். வகுப்பறைகளில் பொருத்தமான கற்றல் சூழலை ஏற்படுத்தல். விரும்பிய பாடசாலைகளில் கல்வி கற்க வாய்ப்பளித்தல். ஆரம்ப வகுப்புகளில் மொழி அறிவை விருத்தி செய்யும் திட்டங்களை நடைமுறைப்படுத்தல். சீரான நிர்வாக கட்டமைப்புக்களை ஏற்படு த்தல். விரும்பிய துறைகளில் கற்பதற்கு மாணவர் களுக்கு வழிகாட்டல்.
வழிகாட்டல் பிறமொழிகளில் பாண்டித்தியம் பெற நடவடிக்கை எடுத்தல்.
மாறான ஆசிரியர்
பகிர்கிறார்.
மதிப்பிடுவதில்லை.
நிராகரிக்கப்படுகின்றன.
O 26

Page 29
அறிமுகம் Introduction
மேன்மை பெற்றதும், அவசியமானதும் மற்றும் அழிவற்றதுமான கல்விச் செல்வத்தின் முக்கியத்துவ மானது, எமது சமூகத்தில் அன்றிலிருந்து இன்று வரை நன்கு உணரப்பட்டும், போற்றப்பட்டும் வருகின்ற ஒன்றாகும். எண்ணும் எழுத்தும் கண் என்ப வாழும் உயிர்க்கு என்கின்றார் தெய்வப் புலவர் வள்ளுவர். கல்விச் செல்வமென்பது ஏனைய செல்வங்களைப் போலல்லாது அடுத்து வரும் பிறப்பு களுக்கும் கடத்தப்படுமொன்ற்ெனப் படுவதால் எழுமையும் ஏமாப்பு உடைத்து என்கின்றார். கேடுஇல் விழுச்செல்வமான கல்வியானது, மனிதர் களிடையேயான சமத்துவ மின்மையை நிவர்த்தி செய்யும் சாதனமாகவும், தனிமனிதனதும், சமூகத் தினதும், நாட்டினதும் மற்றும் மனித குலத்தினதும் வளர்ச்சிக்கு அடிப்படையான தாகவும் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்றுள்ள கல்வியைப் பெறுவதற்கான உரிமையானது, மனித உரிமை யொன்றாகவும் மனித உரிமைகள் அனைத்தையும் முழுமையாக அனுபவிப்பதற்கு அடிப்படையான தொன்றாகவும் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
கல்வி பெறுவதற்கான உரிமை மனித உரிமை யொன்றாகுமா?
Is Right to Education a Human Right?
ஒருவன் குடியியல், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு கல்வி அவசியமானதொன்று. கல்வியைப் பெறுவதற்கான மனித உரிமையை அனுபவிக்க முடியாத போது ஏனைய மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. மனித உரிமைகள் பற்றிய பல சர்வதேச சாசனங்களில் கல்வியைப் பெறுவதற்கான உரிமை மனித உரிமை யொன்றாக உள்ளடக்கப் பட்டுள்ளது.
மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடன LDIT601g, (Universal Declaration of Human rights)
ஆவிதி ஜனவரி 2012

மயொன்றாக கல்வி பெறுவதற்கான உரிமை TO EDUCATION AS A HUMAN RIGHT
A.Sarvesvaran Senior Lecturer Faculty of Law, University of Colombo.
ஒவ்வொருவரும் கல்விக்கான உரிமையைக் கொண்டுள்ளனர், ஆகக் குறைந்தது ஆரம்ப நிலைகளில் கல்வி இலவசமானதாக இருத்தல் வேண்டும். ஆரம்ப கல்வி கட்டாயமானதாக இருத்தல் வேண்டும். தொழினுட்ப மற்றும் உயர் தொழில்சார் கல்வியானது பொதுவாகக் கிடைக்கக் கூடியதாகச் செய்தல் வேண்டு மென்பதுடன், உயர் கல்வியானது எல்லோரும் தகைமை அடிப்படையில் சமமாகப் பெறக்கூடியதாக விருத்தல் வேண்டும் என்கின்றது.
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச கட்டுறுத்தானது (International Covenant on Economic, Social and Cultural Rights) கல்வி பெறுவதற்கான உரிமை பற்றிய பல ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது? இக் கட்டுறுத்தானது அரசுதிறத்தவர்கள், கல்விக்கான ஒவ் வொருவரினதும் உரிமையை அங்கீகரிக்கின்றன ரென்கின்றது. ஆரம்பக்கல்வி கட்டாயமானதாகவும் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கக் கூடிய தாகவுமிருத்தல் வேண்டுமென்கின்றது. இரண்டாம் நிலைக் கல்வியானது, குறிப்பாகப் படிப்படியான இலவசக் கல்வியின் அறிமுகப்படுத்தலினால், பொருத்தமான எல்லா வழிகளிலும் எல்லோருக்கும்
O 27

Page 30
பொதுவாக கிடைக்கக் கூடியதாகவும் அணுகக் கூடியதாகவும் செய்யப்படுதல் வேண்டுமென் கின்றது. உயர் கல்வியானது, குறிப்பாக படிப் படியான இலவசக் கல்வியின் அறிமுகப்படுத் தலினால், பொருத்தமான எல்லா வழிகளிலும் தகைமை யடிப்படையில் எல்லோரும் சமமாக அணுகப் படக் கூடியதாகச் செய்யப்படுதல் வேண்டு மென்கின்றது.
கல்வியில் பாரபட்சத்திற்கெதிரான சமவாய LDIT6015) (UNESCO Convention against Discri mination in Education).9JTS, $pigsalis6i, 56.67uigi பாரபட்சத்தை ஏற்படுத்துகின்ற நியதிச் சட்ட ஏற்பாடுகள், நிருவாக அறிவுறுத்தல்கள், நிருவாக வழக்கங்களை இல்லாதாக்குதல் வேணர் டு மென்பதுடன், கல்வி விடயத்தில் பொருத்தமான வழிகளால் சம சந்தர்ப்பத்தையும் நடாத்துகை யையும் முன்னேற்றும் தேசிய கொள்கை' யொன்றைத் தயாரித்துப் பிரயோகித்தல் வேண்டு மென்கின்றது:
இம்முக்கிய சர்வதேச சாசனங்களில் கல்வி பெறுவதற்கான உரிமை மனித உரிமை யொன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளமையானது, கல்வி பெறுவதற் கான உரிமை பற்றி சர்வதேச சமூகம் கொண்டுள்ள கரிசனையைக் காட்டுகின்றது. மனித உரிமைகள் என்பதனுள், பெண்கள், பிள்ளைகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆகியோருடைய உரிமைகளும் உள்ளடங்குகின்றன. இவர்கள் பற்றிய சர்வதேச சாசனங்களிலும் கல்வி பெறுவதற்கான உரிமையானது, மனித உரிமையொன்றாக உள்ளட க்கப்பட்டுள்ளது.
பெண்ணுரிமையொன்றாக கல்வி பெறுவதற்கான உரிமை, Right to Education as a Women Right.
ஒரு நாடு முழுமையாக அபிவிருத்தி யடைய வேண்டுமென்றால் கல்வியைப் பெறுவதற்கான உரிமை இருத்தல் வேண்டுமென்பதுடன், அந்த உரிமையை அனுபவிப்பதற்கான சமசந்தர்ப்பங்கள் பெண்களுக்கும் அளிக்கப்படுதல் வேண்டும். பெண்களின் உரிமைகள் பற்றிய இன்றைய சர்வதேச சாசனங்கள் ஆக்கப்படுவதற்கு முன்னரே பெண் விடுதலை பற்றி முரசு கொட்டிய பாரதியார், பெண் விடுதலைக் கும்மியில், “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்: எட்டு மறிவினில் ஆணுக்கிங்கேபெண்
அகவிதி ஜனவரி 2012

இளைப்பில்லை காணென்று" பாடினார்.
பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பது பற்றிய 3LDGITILILDITGorg/ (Convention on the Elimination of All Forms of Discrimination against Women) gigs, திறந்தவர்கள், கல்வியில் ஆண்களுக்குள்ளதைப் போன்ற சமஉரிமைகளைப் பெண்களுக்கும் உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை இல்லாதொழிப்பதற்கான எல்லா பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டு மென்கின்றது? இச் சமஉரிமைகள் என்பது, கற்களைப் பெறும்வழிவகை, சமதரத்திலான கற்கை வசதிகளையும் நிபந்தனைகளையும் பெறுவது, புலமைப் பரிசில்கள் மற்றும் நன்கொடை களிலிருந்து நன்மையைப் பெறுவதற்கான சமசந்தர்ப்பங்கள், விளையாட்டுகளிலும் உடற்கல்வியிலும் பங்கேற் பதற்கான சந்தர்ப்பங்கள், பாடசாலையை விட்டு விலகும் பெண் பிள்ளைகளின் சதவீதத்தைக் குறைப்பது என்பவைகளை உள்ளடக்குகின்றது.
எமது அரசியலமைப்பிலுள்ள சமத்துவத்திற் கான உரிமை பற்றிய வாசகமானது, பால் அடிப்படையில் பிரசைகளுக்கிடையில் பாரபட்சங் காட்டுவதற்கு எதிராகப் பாதுகாப்பளிக்கின்றது.
கடந்த காலங்களில் ஏற்கமுடியா வழக்கங் களின் செருகல்களாலும் மூட நம்பிக்கைகளாலும் பெண்களின் கல்வி உரிமை கணிசமானளவுக்கு மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், இன்று இந் நிலைமை மாறி வருவதனைக் காணமுடிகின்றது. ஆயினும், இந்நிலைமை முற்றாக மாறிவிட்டதெனக் கூற முடியாது.
சிறுவர் உரிமையொன்றாக கல்வி பெறுவதற்கான உரிமை.
Right to Education as a Child Right
சிறுவர்களின் உரிமைகளில் மிக முக்கிய மானது கல்வியைப் பெறுவதற்கான உரிமையாகும். சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயமானது (Convention on the Rights of the Child) figGui உரிமைகள் பற்றிய பல ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இச்சமவாயத்தின் நோக்கத்திற்காக “சிறுவர்” என்பது பதினெட்டு வயதிற்குக் குறைந்த ஆளொருவரென்கின்றது" இச் சமவாயமானது, அரச திறத்தவர்கள் கல்விக்கான சிறுவரின் உரிமையை
-O 28

Page 31
அங்கீகரிப்பதுடன் இந்த உரிமையை சமசந்தர்ப்ப அடிப்படையில் அடையும் வகையில் ஆரம்பக் கல்வியை கட்டாயமானதாகவும் எல்லாருக்கும் இலவசமானதாகவும் ஆக்குதல் வேண்டும். பொது மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி உட்பட வேறுபட்ட வகை இரண்டாம் நிலைக் கல்வியின் விருத்தியை ஊக்குவித்தல் உட்பட வேறுபட்ட வகை இரண்டாம் நிலைக் கல்வியின் விருத்தியை ஊக்குவித்தல் வேண்டும் என்பதுடன் அவை ஒவ்வொரு பிள்ளைக்கும் கிடைக்கக் கூடியதாகச் செய்தல் வேண்டும், அத்துடன் இலவச கல்வியை அறிமுகப்படுத்தல் மற்றும் தேவையானவர்களுக்கு நிதியுதவியளித்தல் போன்ற பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். பொருத்த மான வழிகளால் தகைமை அடிப்படையில் உயர் கல்வியானது எல்லோரும் பெறக்கூடியதாகச் செய்தல் வேண்டும். கல்விசார் மற்றும் தொழில்சார் தகவலும் வழிகாட்டலும் எல்லா பிள்ளைகளுக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும். பாடசாலைக்கு கிரமமான வருகையை ஊக்குவிக்கவும் பாட சாலையை விட்டு விலகுபவர்களின் சதவீதத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் என பல்வேறு கடப்பாடுகளைச் சுமத்துகின்றது.*
இச்சமவாயமானது, பிள்ளையின் கல்வி யானது, பிள்ளையினுடைய ஆளுமை, ஆற்றல்கள், உள மற்றும் உடல் இயலுமைகள் என்பவைகளை முழு அளவிலான விருத்தி செய்யும் வகையில் நெறிப்படுத்தப்படுதல் வேண்டுமென்கின்றது.* சிறுவரின் கல்வியுடன் தலையிடுவதான ஏதேனும் வேலையைப் புரிவதிலிருந்து பாதுகாக்கப்படுவதற் கான சிறுவரின் உரிமையை அரச திறத்தவர்கள் அங்கீகரிக்கின்றரெனவும் விளம்புகின்றது?
எமது நாட்டிலே, ஐந்து வயதிலிருந்து பதினான்கு வயது வரை கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும்" பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கமர்த்த முடியாதென்ற தொழிற்சட்டங்களின் கீழான சட்டத்தடையும்' பதினான்கு வயது வரையான சிறுவர்களின் கல்வியை உத்தரவாதப்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகளாகும்.
அகவிதி ஜனவரி 2012

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் உரிமை யொன்றாக கல்வி பெறுவதற்கான உரிமை.
Right to Education as a Right of Internally Displace People.
எமது நாட்டில் இலட்சக்கணக்கானவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் பல்வேறு பிரச்சனைகளைக் கொண்டு ள்ளார்கள். இப்பிரச்சினைகளுள் ஒன்றாகக் கல்வி பெறுவதற்கான உரிமை சம்பந்தப் பட்ட பிரச்சினையும் உள்ளது.
உள்நாட்டு இடம்பெயர்வு பற்றிய வழிகாட்டிக் G5s.It LIII (656i (Guiding Principals on Internal Displacement) உள்நாட்டில் இடம் பெயர்ந் தவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. இவை, நான்கு தாபிதமான மனிதநேய மற்றும் மனித உரிமை விடயங்களை உள்ளடக்கியுள்ளன. நாட்டிலுள்ள ஏனையவர்கள் அனுபவிக்கின்ற உரிமைகளையும் சுதந்திரங்களையும் உள்நாட்டில் இடம்பெயர்ந் தவர்களும் பூரண சமத்துவத்துடன் அனுபவித்தல் வேண்டுமென்பதுடன் இடம் பெயர்ந்தவர்கள் என்ற காரணத்துக்காக இந்த உரிமைகள், சுதந்திரங்களை அனுபவிப்பதில் ೫೧ಾಡ್ತಹಿಲ್ಟ! பாரபட்சத் காட்டுதலாகாது எனப்படுகின்றது.*
இந்த வழிகாட்டிக் கோட்பாடுகள், கற்பதற் கான உரிமைகள் பற்றிய ஏற்பாடுகளையும் கொண்டுள்ளன. ஒவ்வொருவரும் கற்கும் உரிமை யுடையவர். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், குறிப்பாக பிள்ளைகள் இந்த உரிமையை அனுபவிக்கும் வகையில் அதிகாரிகள் ஆரம்ப கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் பெறுதலை உறுதி செய்தல் வேண்டுமென்பதுடன், இக்கல்வி அவர்களின் கலாசாரத் தனித்துவம், மொழி மற்றும் மதம், என்பவைகளுக்கு மதிப்பளிப் பதாக அமைதல் வேண்டும் என்கின்றது. மேலும், கல்விசார் செயற்றிட்டங்களில் பெண்களும், சிறுமிகளும் பூரணமாகவும் சமமாகவும் பங்குபற் றலை உறுதிப்படுத்த விசேட முயற்சி செய்தல் வேண்டுமெனவும் ஏற்பாடு செய்கின்றது.9
உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களும் இந்நாட்டின் பிரசைகளே. அவர்களும் ஏனைய பிரசைகளுக்குள்ள அனைத்து உரிமைகளையும்
-o 29

Page 32
அனுபவிக்க உரித்துடையவர்களாவார்கள். இவ் வகையில், ஏனைய பிரசைகளைப் போன்று கல்விக்கான உரிமையையும் அனுபவிக்க இவர்கள் உரித்துடையவர்கள். எனவே, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், குறிப்பாக பிள்ளைகள் கல்வி பெறுவதற்கான உரிமையை அனுபவிக்கும் வகையிலும் மற்றும் அவர்களுக்குச் சமசந்தர்ப் பங்களை வழங்கும் வகையிலும் கல்வி தொடர்பான கொள்கைகள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படுதல் அவசியமானதாகும்.
அடிப்படை உரிமையென்றாலென்ன? What is Fundamental Right.
அடிப்படை உரிமைகளென்பது, அரசியல மைப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ள மனித உரிமை களின் பகுதியாகும். 1978 ஆம் ஆண்டு அரசியல மைப்பின் அத்தியாயம் II ஆனது "அடிப்படை உரிமைகள்" எனப் பெயரிடப் பட்டுள்ளது. இவ் அத்தியாயத்தில் பல்வேறு சுதந்திரங்களும் உரிமைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம், சித்திரவதைக்குள்ளா காமல் இருப்பதற்கான சுதந்திரம், சமத்துவத்துக் கான உரிமை, எதேச்சையாகக் கைதுசெய்யப்படா மலும் தடுத்து வைக்கப் படாமலும் மற்றும் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்துத் தெரிவித்தற் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கு சேர்வதற் கான சுதந்திரம், தொழிற்சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம், சொந்த கலாச்சாரத்தை அனுபவிப் பதற்கும் சொந்த மொழியை பயன்படுத்து வதற்குமான சுதந்திரம், தொழில் முயற்சியில் ஈடுபடு வதற்கான சுதந்திரம், நடமாடுவதற்கான சுதந்திரம் போன்றவைகள் அடிப்படை உரிமைகளாக உள்ள டக்கப்பட்டுள்ளன.
அடிப்படை உரிமைகள், ஆட்சித்துறை நடவடிக்கை மூலம் அல்லது நிருவாக நடவடிக்கை மூலம் மீறப்பட்டமை தொடர்பில் அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் முறையிட்டு நிவாரணம் பெற முடியும். இச் சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிடலாம்.
உதவித் ஜனவரி 2012

கல்வி பெறுவதற்கான உரிமை அடிப்படை
உரிமையொன்றாகுமா?
Is Right to Education a Fundamental Right?
அரசியலமைப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் பெரும்பாலானவைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு கல்வி அவசிய மானது. ஆயினும், கல்வி பெறுவதற்கான உரிமை அடிப்படை உரிமையொன்றாக எமது அரசியலமை ப்பில் உள்ளடக்கப்படவில்லை.
அரசியலமைப்பின் அத்தியாயம் VI ஆனது, "அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படை கடமைகளும்" என்ற அத்தியாயத்தைக் கொண்டுள்ளது. இதன் கீழுள்ள ஏற்பாடுகள் அரசை வழி காட்டுபவைகளாகமட்டுமுள்ளன. இவ் ஏற்பாடுகள் மீறப்படும் போது, வழக்கிட்டு நிவாரணம் பெறமுடியாது. "எழுத்தறிவின்மையை முற்றாக இல்லாதொழித்தலும், எல்லா நிலை களிலும் உலகளாவியதும் சமத்துவமானது மான கல்வி வாய்ப்புக்கான உரிமையை எல்லாப் பிரசை களுக்கும் உறுதிப்படுத்தலும் 17 அரசின் குறிக்கோள் களுள் ஒன்றென இந்த அத்தியாயத்தில் விளம்பப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பில், கல்விக்கான உரிமையானது நீதிமுறைப்பரிகாரம் பெறக்கூடிய அடிப்படை உரிமையொன்றாக வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டிராது, நெறிப்படுத்தும் கொள்கை களின் பாகமாக உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், இந்திய நீதித்துறை, அதனது நீதித்துறைச் செயலூக்கம் மற்றும் புதுமைச் சிருஷ்டிப்பு என்பவை களினுரடாக கல்விக்கான உரிமையை நீதி முறைப்பரிகாரம் பெறக்கூடிய அடிப்படை உரிமை யொன்றாக ஆக்கியது.
Bandhua Mukti Morcha V.Union of India* என்ற வழக்கில், உயர்நீதிமன்றமானது அரசியல மைப்பின் உறுப்புரை 21 இலுள்ள உயிர்வாழும் உரிமையும் மானிட கெளரவமும் கல்விக்கான வசதிகளையும் உள்ளடக்குமெனத் தீர்த்தது. Mohini Jain V.State of Karnataka ' என்ற வழக்கில் உயர்நீதிமன்றம் கல்விக்கான உரிமையானது உயிர் வாழும் உரிமை யென்பதிலிருந்து நேரடியாக எழுகின்றதென்பதுடன், உறுப்புரை 21 இன் கீழான
o 30

Page 33
உயிர்வாழும் உரிமையும் மற்றும் தனிநபர் கெளரவமும் கல்வியுடன் சேர்ந்திராத போது உறுதி யளிக்கப்பட முடியாததென்றது. இவ் வழக்கில் எல்லா மட்டங்களிலுமான கல்விக்கான உரிமை யானது பிரசையொருவரின் அடிப்படை உரிமை யொன்றெனத் தீர்க்கப்பட்டது. இதன் பின்னர், Unni
Krishnan V. state of Andhra Pradesh என்ற வழக்கில் அரசியலமைப்பின் பல்வேறு ஏற்பாடு களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய 14 வயதினைப் பூர்த்தி செய்யும் வரை இலவச கல்விக்கான உரிமை யொன்றைக் கொண்டிருப்பதாகத் தீர்த்தது.
6-14 வயது வரையான எல்லாப் பிள்ளை களுக்கும் இலவசமானதும் கட்டாயமானதுமான கல்வியை அரசு வழங்குதல் வேண்டுமென்பதனை அடிப்படை உரிமையொன்றாக ஆக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பிற்குத் திருத்த சட்ட மூலமானது கொண்டுவரப்பட்டுள்ளது.
எமது அரசியலமைப்பிலே கல்வி பெறுவதற் கான உரிமை மட்டுமல்லாது உயிர் வாழும் உரிமையும் அடிப்படை உரிமையொன்றாக வெளிப் படையாக உள்ளடக்கப்படவில்லை. ஆயினும், அரசியலமைப்பில் அங்கீகரிக்கப் பட்டுள்ள சமத்து வத்திற்கான உரிமையினூடாகக் கல்வி பெறுவதற் கான உரிமையை உயர்நீதிமன்றம் நிலை நாட்டி யுள்ளது.
அண்மையில் உயர்நீதிமன்றம் Karunathilaka V.Jeyalath De Silva21 என்ற அடிப்படை உரிமை
இகவிதி ஜனவரி 2012
 

மீறல் வழக்கில், பாடசாலை அனுமதி தொடர் பிலான பாரபட்சம் மற்றும் எதேச்சாதி காரமான முடிவுகள் என்பவைகளுக் கெதிரான தீர்ப்பினை வழங்கியது. இவ்வழக்கின் மனுதாரர் களாக 11 வயதினுடைய மாணவனொருவனும் ஆசிரியையான அவனுடய தாயாரும் இருந்தனர். அம் மாணவனின் தாயார் அம்பலாங்கொடவைச் சொந்த இடமாகக் கொண்டவர். கஷ்டப் பிரதேசங்களில் 5 வருடங் களுக்குப் பணியாற்ற வேண்டுமென்ற கட்டாய சேவையினடிப்படையில் 01-01-1990 இலிருந்து புத்தளத்திலுள்ள அற்ற வில்லுவ மேதானந்த அரசினர் பாடசாலைக்கு இடமாற்றஞ் செய்யப் பட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அவருடைய மகன், அவர் புத்தளத்தில் பணியாற்றிக் கொண்டி ருக்கையில் 1991 பெப்ரவரியில் பிறந்தானென்பதுடன் 1997 ஜனவரியில் ஆண்டு 1 இல் அனுமதிப்பதற்குத் தகுதியுடையவனாகினான். 1995 யூனிலிருந்து அவ் ஆசிரியை தன்னைத் தனது சொந்த இடமான அம்பலாங்கொடவிற்கு இடமாற்றஞ் செய்யுமாறு கேட்டு வந்தார். அவருடைய மகன் புத்தளத்திலுள்ள சென்.அண்ட்ரூஸ் ஆரம்ப பாடசாலையில் தனது கல்வியை ஆரம்பித்தான். இப்பாடசாலையில் ஆண்டு 5 வரை மட்டுமே வகுப்புகளிருந்தன. இவ்வேளையில், தாயாரான ஆசிரியை 15-06-2001 இலிருந்து அம்பலாங்கொட தர்மஷோக வித்தி யாலயத்திற்கு இடமாற்றஞ் செய்யப்பட்டார். தனது மகனையும் தனது நிரந்தர வதிவிடத்திலிருந்து 500 மீற்றர்கள் மட்டுமே தூரத்திலுள்ள அப்பாடசாலை யில் அனுமதிக்குமாறு அன்றிலிருந்து அவர் கேட்டு வந்தார்.
ஆனால், சுற்றுநிருபத்தின் வாசகம் 13 இற்கமைய வகுப்பில் 40 மாணவர்களுக்கு மேல் கொண்டிருக்க முடியாதென்ற காரணத்திற்காக அம்மாணவனுக்கு 2001 ஆம் ஆண்டில் ஆண்டு 5 இற்கான அனுமதி அதிபராலும் அதிகாரிகளாலும் மறுக்கப்பட்டது. வகுப்பொன்றில் 40 மாணவர் களைக் கொண்டிருப்பதென்ற வாசகமானது இறுக்கமானதாகப் பின்பற்றப்பட வில்லையென்பது வழக்கின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
வாசகம் 13 ஆனது,
ஆண்டு 2 இலிருந்து 11 வரையான (ஆண்டு ஆறு விலக்கலாக) வெற்றிடங்கள்.
(அ) பகிரங்க உத்தியோகத்தர்களாகவும் பாடசாலை
O 31

Page 34
அமைந்துள்ள பிரதேசத்தில் வசிப்பதற்கும் வந்துள்ள பெற்றோர்களின் / சட்டபூர்வ பாதுகாவலரின் பிள்ளைகளான மாணவர்கள்.
(ஆ) தங்களுடைய நிரந்தர வதிவிடத்தை பாடசாலை அமைந்துள்ள இடத்திற்கு மாற்றியுள்ள பெற்றோர்கள் / சட்டபூர்வ பாதுகாவலரின் பிள்ளைகளான மாணவர்கள். என்பவர்களால் நிரப்பப்படுதல் வேண்டுமென ஏற்பாடு செய்தது.
சுற்றுநிருபத்தின் வாசகம் 16 ஆனது, ஆண்டு 5 வரையுள்ள பாடசாலையில் கல்வி கற்று சித்தியடைந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் மாற்று பாட சாலையொன்றை மாகாண கல்விப் பணிப்பாளர் / வலய கல்விப் பணிப்பாளர் வழங்குதல் வேண்டுமென ஏற்பாடு செய்தது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவன் பாடசாலை அனுமதி கிடைக்காமையினால், 2002 ஜனவரியிலிருந்து பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாதிருந்தான். வீட்டிலிருந்து 500 மீற்றர்கள் தூரத்திலுள்ள பாடசாலையில் அவனுடைய தாயார் மற்றைய பிள்ளைகளுக்கு கற்பித்துக் கொண்டிருக்க அவன் வீட்டிலிருந்தானெனவும் நீதிமன்றம் விசனம் தெரிவித்தது. அவனுடைய இளைய சகோதரன் 2002 மார்ச்சில் அப்பாடசாலையில் ஆண்டு 1 இல் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
உயர்நீதிமன்றமானது, வாசகம் 13 இற்கமைய ஆண்டு 5 இல் அம்மாணவனை அனுமதிக்கக் கருதியிருத்தல் வேண்டுமெனவும், 1939 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்ககல்வி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 37(2) இற்கிணங்கும் வகையில் வாசகம் 16 இற்கமைவாக அதிகாரிகள் செயற் பட்டிருத்தல் வேண்டுமென்றும் தெரிவித்தது.
கஷ்டப் பிரதேசத்தில் பணியாற்ற வேண்டிய காலப்பகுதியின் இருமடங்கு காலப்பகுதிக்கு மேலாகப் பணியாற்றிய பின்னர் சொந்த இடத்திற்கு தாய் இடமாற்றம் பெற்றதனா லேற்பட்ட பயனை, அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையில் அனுமதி பெறுவதன் மூலம் அப்பிள்ளையும் அனுபவித்தல் வேண்டுமெனவும், இந்த விடயத்தை யதார்த்த மாகவும் மனிதாபிமானதாகவும் அணுகும் வகையில் தங்களுடைய தத்துவங்களைப் பிரயோகிக்கப் பிரதிவாதிகள் தவறிவிட்டனரெனவும் உயர்
2தவித் ஜனவரி 2012

நீதிமன்றம் தெரிவித்தது. நியாயமற்றதாகவும் ஏதேச்சாதிகாரமாகவும் செயற்பட்டு அனுமதியை மறுத்ததன் மூலம், அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) இனால் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள சமத்துவமென்பது மீறப்பட்டுள்ளதென உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அம்மாணவனை அப் பாடசாலையில் ஆண்டு 6 இல் சேர்க்குமாறும், ரூபா 25,000 இனை இழப்பீடு மற்றும் செலவு தொகையாகச் செலுத்துமாறும் நீதிமன்றம் கட்டளை யிட்டது.
சமத்துவத்திற்கான உரிமை மீறப்பட்டுள்ள தென்ற அடிப்படை உரிமை வழக்கினூடாக கல்விக்கான உரிமையை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் பண்டாரநாயக்க கல்வியின் முக்கியத்துவத்தையும் கல்விக்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் தனது தீர்ப்பில் முதன்மைப் படுத்தியுள்ளார். கல்வியைப் பெறுவதற்கான உரிமையானது அடிப்படை உரிமையொன்றாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்படாத போதிலும், கல்விக்கான உரிமையைப் பாதுகாப்பில் உயர் நீதிமன்றம் கொண்டுள்ள கரிசனையையும் இந்த வழக்கு உணர்த்தி நிற்கின்றது.
உயர்நீதிமன்றம் பல்கலைக்கழக கற்கை களுக்கான அனுமதி சம்பந்தப்பட்ட சமத்துவத்திற் கான உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பான பல அடிப்படை உரிமை மீறல் வழக்குகளிலும் முன்னேற்றகரமான தீர்ப்புகளை வழங்கி பல்கலைக் கழகக் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தி யுள்ளது?
அரசியலமைப்பிலுள்ள சமத்துவத்திற்கான உரிமை பற்றிய வாசகமானது, சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படு வதற்கும் உரித்துடையவர்கள்? எனவும் இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரசைக்கும் ஒரங்கட்டுதல் ஆகாது எனவும் விளம்புகின்றது. இச் சமத்துவத்திற்கான உரிமை யைப் புதுமைச் சிருஷ்டிப்பாகவும் நீதித்துறைச் செயலூக்கமாகவும் பயன்படுத்துவதன் மூலம், கல்வி பெறுவதற்கான உரிமையையும் மற்றும் கல்வி பெறுவதற்கான சமசந்தர்ப்பங்களையும் பெற வழிவகைகளைச் செய்யலாம். இம் முயற்சியானது
-o 32

Page 35
மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே பயனளிக்கக் கூடியதாகும். எனவே, சம சந்தர்ப்பங்கள் உள்ளடங் கலாகக் கல்வி பெறுவதற்கான உரிமையானது, அரசியலமைப்பிலே அடிப்படை உரிமையொன்றாக உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
தமிழ் மொழியில் கல்வி பெறுதற்கான உரிமை Right to Obtain Education in Tamil Language
தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் செறிந்தும் ஏனைய பிரதேசங்களிலே பரந்தும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ் மொழியிலே கல்வியைப் பெறுவதற்கான உரிமையை அனுபவிக்கக் கூடியவர்களாகவிருத்தல் அவசியமானதாகும்.
எல்லா வகையான இனரீதியான பார பட்சங்களையும் இல்லாதொழிப்பது பற்றிய Jira/G33 FLDG) ITULDIT601g, (International Convention on the Elimination of All Forms of Racial Discrimination) அரசு திறத்தவர்கள் எல்லா வகையான இனபார பட்சத்தையும் தடை செய்வ துடன் இல்லா தொழித்தல் வேண்டுமெனவும், மற்றும் இன, நிற அல்லது தேசிய வேறுபாடின்றி பல்வேறு வகையான மனித உரிமைகளை அனுபவிப்பதில் சட்டத்தின் முன் சமத்துவத்திற் கான ஒவ்வொருவரினதும் உரிமையை உத்தரவாத மளித்தல் வேண்டுமெனவும் தேவைப்படுகின்றது.* இவ் உரிமைகள், கல்வி மற்றும் பயிற்சிக்கான உரிமையும் உள்ளடக்குகின்றது.*
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பானது மொழி உரிமை பற்றி தனியானதொரு அத்தியா யத்தைக் கொண்டுள்ளது? இந்த அத்தியாயமானது இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் தல் வேணி டுமென ஏற்பாடு செய்கின்றது.* இந்த அத்தியாயத்தில் தேசிய மொழியில் கல்வி கற்பதற்கான உரிமை பற்றியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆள் ஒருவர் எந்த வொரு தேசிய மொழியிலும் கல்வி கற்பதற்கு உரித்துடையவராதல் வேண்டும் என்கின்றது. ஏதேனும் பல்கலைக் கழகத்தின் ஏதேனும் கற்கைநெறியில் அல்லது பகுதியில் அல்லது துறையில், ஒரு தேசிய மொழியே கல்வி மொழியாக இருக்கின்றவிடத்து, அத்தகய பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்னர் மற்றத் தேசிய மொழியில் கல்வி கற்றுவந்த மாணவர்களுக்கு அத்தகைய கற்கை
அகவிதி ஜனவரி 2012

நெறியில், பகுதியில் அல்லது துறையில், அந்த மற்றத் தேசிய மொழியையும் கல்வி மொழியாக ஆக்குதல் வேண்டும் எனவும் ஏற்பாடு செய்கின்றது.?? ஆயினும், மற்றைய தேசிய மொழி யானது, அத்தகைய வேறு பல்கலைக்கழகமொன்றின் அத்தகைய கற்கையின் கல்வி மொழியாக இருக்கு மாயின் இந்த ஏற்பாட்டிற்கு இணங்கியொழுகுவது கட்டாயமானதாகாது.
பகிரங்க சேவை, நீதித்துறைச் சேவை, மாகாணப் பகிரங்கச் சேவை, உள்ளூராட்சிச் சேவை அல்லது ஏதேனும் பகிரங்க நிறுவனம் என்ப வற்றுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்ளு வதற்கான ஏதேனும் பரீட்சையில் ஆளொருவர் ஒன்றில் சிங்களம் மூலம் அல்லது தமிழ் மூலம் அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் மொழியொன்றில் பரீட்சிக்கப்பட உரித்துடையவரென அரசியலமைப்பு ஏற்பாடு செய்கின்றது.* ஆயினும் இந்த உரிமை சில சந்தர்ப்பங்களில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான மொழித்தேர்ச்சி பற்றிய நிபந்தனை களுக்குட் பட்டதாகும்.
மொழி உரிமையானது, ஆட்சித்துறை நட வடிக்கையால் அல்லது நிருவாக நடவடிக்கையால் மீறப்பட்டமை பற்றி அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை பற்றி உயர் நீதிமன்றத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறலாம்.
முடிவுரை
Concluson
கல்வி பெறுவதற்கான உரிமையானது மனித உரிமையொன்றாக மனித உரிமைகள் பற்றிய முக்கியசாசனங்கள் அனைத்திலும் உள்ளடக்கப் பட்டுள்ளது. இந்த உரிமையானது, எமது அரசிய லமைப்பிலே அடிப்படை உரிமையொன்றாக உள்ள டக்கப்படவில்லை. ஆயினும், அரசியலமைப்பி லுள்ள சமத்துவத்திற்கான உரிமையினூடாகவும் ஏனைய நியதிச் சட்ட ஏற்பாடுகளினூடாகவும் இந்த உரிமையை அங்கீகரிக்கும் போக்கு காணப்படு கின்றது.
கல்வி தொடர்பான வளங்களை நாட்டிலுள்ள பாடசாலைகள் சமமாகக் கொண்டிருக்கவில்லை. இவ்வேறுபாடுகளைப் பிரதேசமொன்றிலுள்ள பாடசாலைக்களுக் கிடையேயும் வேறுபட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இடை யேயும் காணமுடிகின்றது. இந்நிலைமை கல்வி
-o 33

Page 36
தொடர்பான விடயங்களில் சமத்துவமின்மையை ஏற்படுத்துகின்றது. இது கல்வி தொடர்பான விடயங் களில் சமத்துவமின்மையை ஏற்படுத்துகின்றது. இது கல்வி தொடர்பான சமசந்தர்ப்பங்களை மறுப் பதுடன் உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகள் தொடர்பான சமசந்தர்ப்பங்களையும் மறுகின்றது. இதனால் மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் சாதனமாகிய கல்வியானது, மக்களிடையே சமத்துவமின்மையை ஏற்படுத்தும் பிரதான காரணிகளிலொன்றாகின்றது. கல்வி தொடர்பான வளங்களைச் சமமாகப் பகிர்வது மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு விசேட ஊக்குவிப்புகளை வழங்குவது உட்படப் பொருத்தமான வழிவகைகள் மூலம் இந்நிலைமை நிவர்த்திசெய்யப்படுதல் வேண்டும்.
கல்வி பெறுவதற்கான உரிமையையும் கல்வி தொடர்பான சமசந்தர்ப்பங்களையும் அடிப்படை உரிமைகளாக ஆக்கும் வகையில் அரசியலமைப் பானது திருத்தப்படுதல் வேண்டுமென்பதுடன், சர்வதேச சாசனங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள கல்வி பெறுவதற்கான இலக்குகளை அடையும் வகையிலும், மற்றும் பூகோளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் என்பவைகளால் ஏற்படக் கூடிய சவால்களுக்கு ஏற்ற வகையிலும், தரமான கல்வியையும் சம சந்தர்ப்பங்களையும் அளிக்கும் வகையில் கல்வி தொடர்பான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துசசெல்வது அவசியமானதாகும்.
Article 26.1
Article 13.
Article 3.
Article 4.
Article 10.
Article 12(1) & (12(2)
Article 1.
Article 28. Il
Article 29.
10 Article 32.1
Compulsory Attendance of Children at Schools Regulations, No.01 of 1997 made under Section 37 of the Education Ordinance No.31 of 1939; The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka, No. 1003/5 dated 25-1 - 1997.
அகவிதி ஜனவரி 2012

Section 10 of the Shop and Office Employees
(Regulation of Employment and Remuneration) Act, No. 9 of 1954.
Section 4 of the Minimum Wages (Indian Labour) Ordinance, No.27 of 1927 (As amended by the Amenment Act. No.25 of 2000.
Sections 13 and 14 of the Employment of Women, Young Persons, and Children Act, No.47 of 1956 (As amended by the Amendment Act, No.8 of 2003).
Sri Lanka has ratified the Minimum Age Convention, 1973
(ILO Convention, C 138).
13 Principal 1.1
4 Principal 23.1
5 Principal 23.2 16 Principal23.3
7 Article 27(2)(h)
18
9
20
AIR 1984 SC 802
1992 (3) SCR 658
AIR 1993 SC 2178
*" (2003) 1 Sri LR35.
22
23
24
De Silva V.University Grants Commission (2003) 1 Sri LR26 i.
Surendran V.University Grants Commission (1993) 1 Sri
LR344.
Perera V.University Grants Commission (1978-79-80)
Sri LR 128.
Seneviratne V.University Grants Commission (197879-80) 1 Sri LR 182.
Article 12 (1)
Article 12 (2)
25 Article 5.
26 . .
Article 5(e) (V)
27 Chapter IV
8 Article 19
9 Article 21.1
O Article 21.2 31
32
Article 22(5)
Article 126(1).
O34

Page 37
2ம் மொழியாக தமிழ் பிள்ளைகளுக்கு சிங்களமும் சிங்கள பிள்ளைகளுக்கு தமிழும் கட்டாய பாடமாக 6-9 வரை கற்பிக்கப்படுகின்றது. எல்லாப் பாடங்களிலும் சராசரிப் புள்ளிக்கு இது தேவையானதாகும். இதன்மேல் 10, 11 மாணவர் களை சுயமாக விடப்பட்டபோது விரல் விட்டு எண்ணக்கூடிய தொகையிலும் குறைவானவர்களே மேல் வகுப்பில் இதனை தொடர்கின்றனர். இதிலிருந்து 2ம் மொழியின் தேர்ச்சிக் குறைபாடு துலாம்பரமாகின்றது.
இதுவரை இருந்துவந்த கற்பித்தல் முறையில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கொடுக்கப் படும் வினாவும் பதிலும் எவ்வாறு என்பதை விளக்கு கின்றது. உதாரணமாக புத்தகம், பசி ஆகிய இரு சொற்களின் சிங்களச் சொல்லை தமிழில் எழுதுக. மாணவர் பதிலை (600 லலகிெ) என்ற சொற்களை சிங்களத்தில் எழுதியது சரியான போதும் அப்படியே எழுதியிருந்தால் அது பிழையான பதில் என்று புள்ளிகள் கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் புள்ளிகளைப் பெறுவதற்காக பொத படகினி என்ற சொற்களுக்கு சரியான புள்ளிகள் கொடுக்கப்படும். (சிங் களத்தில் அதன் சரியான உச்சிரிப்பு இல்லாதபோதிலும்கூட)
தற்பொழுது இந்த முறை மாற்றப்பட்டதாகவும், இப்பொழுது எல்லாம் சரி என்றும் மேலிடம் கூறு கின்றது. இருந்தபோதிலும் இது மாணவர்களுக்கு எவ்வாறு கிடைக்கின்றது என்பதை அடுத்தவருட
இகவிதி ஜனவரி 2012
 

சோதனையில் தெரியவரும்.
முன்பு இருந்த கற்பித்தல் முறையில் இது ஒரு தேர்ச்சிக் குறைபாடாகும். இதனால் மாணவர்கள் முன்னேற முடியாது. உதாரணமாக ஒரு குழந்தைக்கு Sugar Coted / Chocolate Coted 2600TGIT35 gig. 3CD55 கின்றதோ அதுதான் முதல் விருப்பமாகும். பான த்துக்கு “கோக் நத்துவ காமக் எப்பா" (Gல்ை 8ை8) டுைவி 50) என்ற விளம்பரத்துடன் இது தான் இன்றைய நிலை. இந்நிலையில் பழகியவர்கள் ஒரு வேளை விழுந்தால், சாதாரணமானவர்களுக்கு ஒரிடத்தில் முறிவு ஏற்படும் நிலையில் இவர்களுக்கு இரண்டு மூன்று இடங்களில் முறிவு ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.
சமீபத்தில் ஒரு சஞ்சிகைச் செய்தி "உடலைப் பலவீனமாக்கும் குளிர்பானங்கள்” - ஆராய்ச்சி கிறீஸ் நாட்டில் நடாத்தப்பட்டு உண்மை என்று நிரூபிக்கப் பட்டது.
1. எலும்பின் பலவீனம்
2. குளிர்பானம் அதிகரிப்பை பொறுத்து உடல்
உறுப்புக்கள் செயலிழக்கலாம்.
3. உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்படு
கிறது.
4. தசைகள் சக்தி இழக்கின்றன.
5. சிறுநீரகத்துக்கு மேலதிக வேலை கொடுத்து
பிரச்சினைகள்.
6. உடற்பருமன், நோய்கள் ஏற்படுகின்றன.
இதை விட எம்கண்களால் நேரடியாக காண
முடிந்த நிகழ்ச்சி NECTO சோடா குடித்த ஒருவருக்கு ஒவ்வாமை காரணமாக 5 நிமிடங்களுக்குள் கை கால்கள் உடம்பு முழுவதும் சிவப்பு சிவப்பாக தடிப்பு ஏற்படுகிறது. கண்ணுக்கு தெரிந்தது இது தெரியாதது எவ்வளவு?
நீங்களும் குளிர்ப்பான பிரியராகில் குறையுங்கள், கைவிடுங்கள். உங்கள் உடற் சுகாதாரத்தின் எதிர்காலத்தை கவனித்து காத்திடுவோமாக.
O35

Page 38
சிறியவர்கள் ஏன்? பெரியவர்களுக்கு கூட இன்றைய தேனீரை எடுத்துக்கொண்டால் 1940ம் ஆண்டுக்கு முன் எவருக்காவது இலங்கையில் தேநீர் அருந்தும்குடிக்கும் பழக்கம் இல்லை. அக்காலத்தில் லிப்டன், (8805) (6ெ8ecல்) புறுக் பொண்ட் னுெனுடய கனெயமயன்" (003)இg) கொம்பனி கிரமாப் புறங்களில் கூட தேநீரை (Plain Tea) ஒர் இடத்தில் தயாரித்து ஒவ்வொரு வீடு வீடாகக் கொண்டு சென்று இலவசமாக குடிக்கக்கொடுத்துப் பழக்கினார்கள். இப்பொழுது விளம்பரம் (Anytime is tea time) எல்லா நேரமும் தேநீர் வேளை. 1950ன் பிற்பகுதியில் இவ் விளம்பரம் பிரதான வீதிகள்ல் முதலில் காணப்பட்டது. 2,3 தசாப்பத காலத்தி னுள்ளேயே அனைவரும் முதலில் இவ்வாறு இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள்.
இதுபோலவே இரண்டாம் மொழிக் கல்விக்கும், இச் சீனி பூசப்பட்ட, சொக்லோட் பூசப்பட்ட முறைபோல சிங்களத்தையும் தமிழில் எழுதிப் படிப்பீத்தார்கள். அந்த முறையை கைவிட முடியாதவர்களாகவும், கைவிட்டால் உற்சாகம் அற்றவர்களாகவும், அதிக முன்னேற்றத்திற்கு உட்பட முடியாதவர்களாகவும் மேற்படிப்பில் இரண்டாம் மொழியை தவிர்த்து விடுபவர் களாகவும் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் கீழ் வகுப்பில் இருந்து, இரண்டாம் மொழி கற்பிக்கப் பட்டபோதும் சரியாக கற்றுக்கொள்ள முடியாத நிலைமையினால். 6ம் ஆண்டிலும், மீண்டும் இரண்டாம் மொழி அகரத்தில் இருந்தே ஆரம்பமா கின்றது.
இவை எல்லாவற்றையம் தவிர்ப்பதற்கு சிங்களத்தை சிங்களவர் போலவும் සිංහල අයෙක සේ සිංහලත් தமிழைத் தமிழர் போலவும் දෙමළ අයෙකු සේ දෙමළත් ஆங்கிலத்தை ஆங்கிலேயர் போலவும் (கற்கவேண்டும்) ඉOගයි අයෙකු සේ ඉOගායිත් උචචාරණය නිවැරදිව ඉගෙනීම කළ හැක உச்சரிப்பு பிழையின்றி கற்கமுடியும்.
மாணவர்கள் சுயமாக கற்கும் முறையைச் செயற்பாட்டில் கொண்டுவரவேண்டும். இதற்கு முதலில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் முதல் சில
அகவிதி ஜனவரி 2012

பாடங்களுக்கு கருத்தரங்கு மூலம் வழிநடத்தப்பட வேண்டும். வழியைத் தெரியாதிருந்த பெற்றோரால் பிள்ளைக்கு வழிகாட்ட முடியாது. ஆகவே முதலில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இரண்டாம் மொழி எழுத்துக்கள் சரியான முறையில் உச்சரிக் கவும் வாசிக்கவும் எழுதக்கூடியதாகவும் தெரிந் திருந்தால் தான் அவர்கள் பிள்ளைக்கு பிள்ளைக்கு வழிகாட்டு முடியும்.
இதனை மும்மொழிக் கல்வி ஸ்தாபனம் (Trilingual Educational Foundation) 5(555uisig, மூலம் செய்து காண்பிக்கிறார்கள். வழிநடத்து கின்றார்கள். மும்மொழி மூலம் சிங்களம், தமிழ், ஆங்கில மூலமும் ஆரம்பிக்கப்படுகின்றது. முதலில் சில பாடங்கள் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஆங்கில மூலமும் ஒன்றாகவே இருந்து கற்கமுடியும்.
எங்களிடம் இரண்டாம் மொழியை பயில வருபவர்கள், முன்பு இரண்டாம் மொழியை எதுவுமே தெரிந்திருக்கத் தேவையில்லை. ஆனால் தாய்மொழி எழுத்துக்கள் பூரணமாக தெரிந்து நன்கு வாசிக்க எழுத பயிற்சிகள் செய்ய தெரிந்தவர் களாகவும் இருக்கவேண்டும்.
பாடசாலை ஆரம்ப நிலையில் அல்லது முன்பள்ளிக் கல்வி நிலையில் இருப்போர்களுடன் பிள்ளைக்கு வழிகாட்டக் கூடிய பெற்றோரில் ஒருவரும் பிள்ளைகளுடன் பங்குபற்ற வேண்டும். இப்பெற்றோர்கள் பிள்ளைகளை சுய ஊக்கம் மிக்கவராக வளர்வதற்கு உதவுவார்கள். போட்டி களின் போது பரிசு பெறும் மாணவரின் பெற்றோ ருக்கும் பரிசு உண்டு. ஆரம்பத்தில் மாணவர்கள் எதுவுமே தெரிய நிலையில் புள்ளிகள் மிகக் குறைவாகவே அல்லது இல்லாமலே இருக்கக்கூடும். சிறியோர் முதியோர் யாவரும் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் தான் எமது வேகம் அமையும்.
மாணவர்கள் கல்வி கற்கும் இடத்தில் ஒரு சிறுவர்களுக்கான இரண்டாம் மொழி நூல்நிலையம் அமைத்திருப்பது சிறப்பானதாகும். அந்த முயற்சியில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது.
கருத்தரங்கு மாதத்தில் ஒருமுறையாவது நடத்தப் படும். இவ்விடத்தில் கற்றதைத் தவிர மேலதிகமாக பெற்றோரின் வழிகாட்டலில் மாணவர்கள் கற்பித் ததை மட்டும் மீட்டல் செய்தால் போதுமானதாகும்.
இரண்டாம் மொழிச் சொற்களை மாணவர்கள் விளங்கியோ விளங்காமலோ பாடமாக்கி பரீட்சைக்கு தவறான உச்சரிப்புடன் எழுதும் நிலை யிலும் பார்க்க, அவர்களுக்கு இரண்டாம் மொழிக்கு
-o 36

Page 39
ஒதுக்கப்பட்ட மூன்று வருடங்கள் (3, 4, 5) எழுத்துக்கள் பூரணமாக கற்பித்து இரண்டாம் மொழியிலேயே வாசித்து விளங்கி பதில் எழுதும் முறை சிறப்பானதல்லவா? கேட்கப்படும் கேள்விக்கு ஏற்றதான சிங்களச் சொல்லுக்குரிய தமிழ் உச்சரிப்பு எழுத்துக்களை படிக்காமலேயே இயல்பாகவே எழுதும் ஆற்றல் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அல்லவா. இந்நிலையில் 3-5 ஆண்டு மாணவர் களுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பாடமாக்கப்படும்படி கொடுக்கப்பட்ட 200-500 வரையான சொற்களைப் போல் எத்தனை மடங்கு சொற் களையும் அவர்கள் எழுதத்தயார். அது மட்டு மல்லாமல் இப்பொழுது சிங்களத்திலும் எழுதி வாசிக்க தயாராகியுள்ளது மிகச் சிறந்த நிலை யல்லவா?
மேலும் பட்டதாரிமட்ட சோதனைகளிலும் கூட மாணவர்கள் பாடமாக்கியே பரீட்சை எழுதுகி றார்கள் என்பதும், நூல்நிலைய புத்தகங்களைக்கூட வாசிப்பது மிக மிக அரிதாகவே இருப்பதாகவும் கல்வியிய லாளர்கள் மிகுந்த கவலைகளுடன் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆகவே மாணவர்களை ஆரம்ப நிலையிலும் வழிநடத்தும்போதும் அவர்களுடைய (Self Study) சுய கல்வி முறை நன்றாக ஊக்கப்படுத்தப்பட்டு வழிகாட்டப்பட்டிருத்தல் சிறப்பானதாகும். தவறின் வழிகாட்டிகள் தங்கள் கடமைகளை சரிவர நிறை வேற்றவில்லை என்பது இவ்வுலகில் கண்ணாணத் தவறினாலும் அடுத்ததில் நிச்சியம் என்பது திண்மம்.
இதுவரை உலகில் வளர்ந்த அதிவிவேகமுள்ள வாசிக்கும் திறன் கொண்ட பிள்ளை, பதினாறு வயதினுள், வாசித்து முடித்தது. (Encyclopedia Britannica Full Volume). Bg5 b5 356ðingSuurTir GolaFuiuggi. பியானோ மியுசிக் 24 மணித்தியாலங்களும் தூங்கும் நிலையிலும் கூட குறைந்த சத்தத்துடன் ஆகும். இவர் (1 2 3 4 5) வருடங்களில் வாசிக்கக்கூடியவைகள் பட்டியலிடப்பட்டு இருந்தன. உ+ம் : இரண்டாம் வருடத்தில் இலக்கணப் பிழையின்றி பூரணமான வசனங்களைச் சொல்வார்.
Gugijapa Gir gigsluiai) (Oldest Trilingual) L/556|Lib பழைமையான ஒரு மும்மொழி கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் இரண்டாம் மொழிக்கு பெற்ற புள்ளி 03 மட்டும்தான். சராசரி நிலை 15. ஒரு வழிகாட்டியின் துணையுடன் கற்று இரண்டாம் மொழிக்கு அந்த வருட இறுதியில் வகுப்பில் அதிககூடிய புள்ளிகளை பெற்றிருந்தார்.
2தவிதி ஜனவரி 2012

இப்பொழுது சராசரி நிலை 08. வழிகாட்டியின் கேள்வி, வகுப்பில் முதல் நிலைக்கு வருவதற்கு தடையாயிருப்பது என்ன? பதில் ஆங்கிலம்.
அதனையும் வழிகாட்டியின் துணையுடன் மேற் கொண்ட போது வகுப்பு நிலை முதல் மூன்றினுள் இருந்தது. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் அவனது வகுப்பில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று வகுப்பில் முதல் நிலையில் காணப்பட்டார்.
இவ்வாறு பலரும் பல வழிகளைப் பாவித்து மாணவர்கள் அதி உன்னத நிலைக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். நீங்களும் உங்களால் முடிந்த முயற்சியை மேற்கொள்ளலாம்.
இலங்கையின் பிரதான பாதையொன்றில் கொழும்பில் இருந்து ஏறக்குறைய 40 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து வந்து கல்வி கற்றுவிட்டு தினசரி திரும்பிச் செல்லும் ஒருவருக்கு இரண்டாம் மொழி கற்க வேண்டிய அதிஉச்ச விருப்பு ஏற்பட்ட நிலை
கல்வியில் மாணவர் ஊக்கம் எவ்வளவு இதனைச் சற்றுக் கவனிப்போம் அதிகாலையில் 2 மணிக்கு துயிலெழுந்து 4 மணிவரை வீட்டிலிருந்து படித்த பின் வீதிக்கு வந்து 4 மணிக்கு இருக்கும் ஒரே ஒரு பஸ் அதன் மூலம் பிரதான நகருக்கு நாலு கிலோ மீற்றர் தூரத்தை இலகுவில் அடைந்துவிட முடியும். தவறின், இருட்டு வேளையில் தனியே வீதியில் எவரும் அற்ற நிலையில் நாலு கிலோ மீற்றர் தூரம் நடக்க வேண்டும். பிரதான நகரை அண்மிக்கும் போது, ஏனைய மாணவர்களும் சேர்வார்கள். பஸ் 5 - 5.30 மணிவரையில் கொழும்பை நோக்கி ஆரம்பமாகும். பாடசாலைக்கு நேரத்துடன் வந்து மாலையில் கொழும்பில் இருந்து 2 பஸ்களின் மூலம் வீடு வந்து சேரும்போது, பகல் பொழுது முடிந்துவிடும். அன்றைய பாடங்களைப் பார்த்து 9 மணிக்கு முன் தூக்கத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு எழும்ப வேண்டும் என்ற கட்டாயத்திற்காகவேயாகும்.
இதுதான் தினசரி நிலை. தனியார் வகுப்புகளிற்கு (Tuition) சனி, ஞாயிறு மட்டும் தான் செல்ல முடியும். (Doctors, Accountants, Engineers) 606155ui, கணக்காளர், பொறியியலாளர் போன்ற உயர் நிலை ப்படிப்பை நோக்கமாகக் கொண்ட தாகும். அவர்களிடம் உங்களூரில் படிக்க முடியாதா என்று கேட்டால், அவை (Estate School) தோட்டப் பாட சாலைகள் என்ற பதில் தான் கிடைக்கும். இரண்டாம் மொழி கற்க வந்தவருடைய ஊக்கம், முயற்சி, கற்றல்
O 37

Page 40
பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதைவிட உற்சாகம் உயர்ச்சியானது அதற்கு பின்னர் வருவோம்.
இரண்டாம் மொழி எழுத்துக்கள் எதனையும் முன் தெரியாதவர் கற்கும் போது முதல் நாளிலேயே உயிர், மெய் எழுத்துக்கள், இரண்டாம் நாளில் அரிச்சுவடியில் ஒரு வரி மட்டும்தான் எழுதப்பட்ட நிலையில், அதனைத் தன்னிடம் தரும்படி கேட்டுவாங்கி 10 நிமிடத்தினுள் பின் அரைப் பகுதி முழுவதையும் பூரணப்படுத்திக் கொடுத்தபோது கூறிய வார்த்தை "எங்கள் மொழி எழுத்துக்களிலும் பார்க்க இவை எவ்வளவோ இலகுவானவையாகும்." அவரது தாயார் முதலில் பேசுவதற்கு மட்டும் தெரிந்திருந்தால் போதும் எனக் கூறியிருந்தார். உச்சரிப்பில் தவறுகள் ஏற்படும் எனக் கூறி, அம்முறை பிழையானது என்றும், இரண்டாம் மொழி எழுத்துக்களை முதலில் தெரிந்துகொண்டு கற்பதுதான் இலகுவானது, வேகமானது, முயற்சிக் கேற்ற உயர்ச்சி கொண்டுள்ளது என்றும் வழிகாட்டி விளக்கம் கொடுத்ததனாலேயே எழுத்து க்களில் இருந்து ஆரம்பித்தார். இப்பொழுது எழுத்துக்கள் பூரணப்படுத்துவதோ, வாசிப்பதோ, விளங்கிக் கொள்வதோ பிரச்சினையாக இருக்கவில்லை. கல்வி தொடர்ந்துகொண்டு சென்றது.
ஒருநாள் தாயார் “இவ்வளவு நாட்கள் படித்தும் இன்னும் பேசுவதாக காணோம்." என்று கேட்ட போது, அவர் செய்த பயிற்சி புத்தகத்தை காண்பித்து இப்பொழுது சுயமாகக் காலில் நிற்கும் நிலையில் உள்ளார். எண்றைக்கு நடப்பார், ஓடுவார் என்பதை குறிப்பிடமுடியாது என்றும், விரைவில் இடம் பெறலாம், என்பதையும் தெரியப்படுத்தியிருந்தார்.
அடுத்தவாரம் சென்றபோது தாயார் கூறியது "இப்பொழுது பேசமுடியும்.” எப்படித் தெரிய வந்தது? தொலைபேசியில் இரண்டாம் மொழி உரை யாடலை அருகில் இருந்து கேட்டபோது ஆகும்.
மேலும் சில நாட்கள் சென்றபோது வெளிநாடு சென்றவர். திரும்பி வந்துவிட்டார். பேசும்போது, தவறு என்ன? என்று கேட்கப்பட்டபோது, (இடுவிடுவி) நான் விரும்பம், (00 இைலி) எனக்கு விருப்பம். சிங்களத்தில் முதலாவது சரி, தமிழில் இரண்டாவது சரியாகும்.
நான் முதலில் அவ்விடத்திற்கு சென்றபோது தென்னோலையினால் (கிடுகு) வேயப்பட்ட ஒரு சிறிய வசதி குறைந்த இல்லமாகத்தான் காணப் பட்டது. எனினும், கல்வியின் ஆர்வம் மெச்சத் தக்கது. பின்னாளில் இதே நிலையத்தில் ஒரு மேல்
அகவிதி ஜனவரி 2012

வீடு உள்ள சிறப்பான மாளிகைபோல் காட்சி கொடுத்தது. வெளிநாடுகளுக்குச் செல்லும் வேளையில் வந்து ஆசிபெற்று செல்வார்கள். இப்பொழுது நிரந்தரமாகவே ஐரோப்பிய நாடொ ன்றில் பெற்றோர்களுடன் வசிக்கிறார்கள். முயற்சி யினாலும் பல வழிகளிலும் உயர்ச்சி பெற்று ள்ளார்கள்.
இலங்கையில் 5ம் ஆண்டு புலமைப்பரிசிலில் உச்சப்புள்ளிகளைப் பெறுவதற்காக முயற்சிகள் மிக மும்முரமாக நடைபெறுகின்றது. பாடசாலைகளை விட மேலதிகக் கல்வி நிலையங்கள் அமைக்கப் பெற்று பயிற்சிகளும் மாதிரிப் போட்டிகளும் வைக்கப்படுகின்றன. மற்றைய எல்லாப் பகுதி களிலும் முற்னேற்றத்தை நோக்கிக் காட்டினாலும் இரண்டாம் மொழி மட்டும் அதன் மாதிரியில் இருந்து பின்னோக்கிச் செல்லும்.
மாணவர் நிலைமையை சிறப்பாக ஆக்கும் நோக்கம் கொண்ட ஒருவர் மேற்படி பயிற்சி நிலைய முகாமையாளரிடம் குறிப்பிட்ட முறையைச் சிங்களப் பாடத்திற் சொல்லி அதனை செயற்படுத்து வதற்கு உதவி தருவதாக கூறியிருந்தார். முகாமை யாளர் அதற்கு விரும்பம் இல்லாமல் உதவியை ஏற்க மறுத்ததோடு கல்வி திட்டத்திற்கு கீழ்படிந்து நடந்துதான் ஒரு கீழ்ப்படிவான சேவையாளர் என்ப தையும் அதனால் பரீட்சார்த்தமாகக் கூட இம்முறை யை ஏற்கப்படவில்லை என்பதையும் குறிப்பால் தெரிவித்திருந்தார். உண்மையில் அந்த திருந்திய முறையில் சிங்களவர் போல சிங்களத்தைப் படித்து முயற்சி செய்யலாம். இதனால் சொற்கள் விளங் காமல் எதனையும் சோதனைக்காக பாடமாக்கத் தேவையில்லை. முதலில் எழுத்துக்கள், சொற்கள், வாசிப்பு பயிற்சிகள் எல்லாவற்றையும் முறையே முடித்தவர்களுக்கு இரண்டாம் மொழியை சொந்த மொழியில் எழுதுவது ஒரு பொருட்டல்ல. இது தேவையில்லாது விட்டாலும் கூட பரீட்சைக்காக எந்தச்சொல்லையும் மாணவர்கள் மிக இலாவ கரமாக எழுத முடியும். விளங்காததை தெரியாத சொல் எதனையும் இவர்கள் பாடமாக்கி சோதனை யில் இரண்டாம் மொழிக்கு கஸ்டப்படவேண்டிய நிலையில் இல்லை. உண்மையிலேயே மாணவரும் பயிற்சி, முயற்சி, உயர்ச்சி எனக்கொள்வாரானால் எவரும் இம்முறையில் வழிகாட்டிதான் மாண வருக்கு சிறப்பானதை செய்ததை எதிர்கால உலகம் வாழ்த்தும்.
தீர்வு: சிங்களம் கற்பதற்காக 3 ஆண்டுகள்
O38

Page 41
கொடுக்கப்பட்டும் ஆசிரியர்களுக்கு வேண்டிய பயிற்சிகள் கொடுத்தும் கூட முன்னோற்றம் இல்லை என்ற காரணத்தினால் 6ம் ஆண்டில் மீண்டும் அகரத்திலிருந்தே தொடங்க வேண்டிய நிலை மனவருத்தத்துக்கு உரியது. வழிகாட்டிகள் பூரண மாக எழுத்துக்களைக் கற்பித்திருந்தால் மாண வர்கள் முன்பு இருந்த பரீட்சை முறையில் கொடுக்கப்பட்ட சொற்களைப் போல் ஆயிரம் மடங்கோ அதற்கு மேலான அளவு சொற்களையோ படிக்காமல், பாடமாக்கமல் இயற்கையிலேயே சுயமாக எழுதும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள்.
கொழும்பில் அதிக காலத்திற்கு முன் ஆரம் பிக்கப்பட்ட ஒரு மும் மொழிப் பாடசாலை ஆசிரியருக்கு இரண்டாம் மொழியை ஆரம்பிப் பதற்கு சிறப்பான ஆசிரியரை பல காலமாக தேடிக் கொண்டிருந்தார். கிடைத்தவுடன் படிக்க ஆரம் பித்தார். சில நாட்டிகளில் ஒரு முழுமையான அட்டையில் அரைப்பகுதியை பூரணப்படுத்தி இருந்தார். மிகுதி அரைப் பகுதி பற்றிக் கேட்ட போது "அது இருக்கட்டும் நாம் வாசிப்போம்." என்றவர் 2, 3 பெரிய எழுத்துக்கள் உள்ள சொற்களைத் தான் வாசித்துக்காட்ட வேண்டும். ஆனால், புத்தகத்தை விரித்தபோது, முன்பக்கத்தில் சிறிய எழுத்தில் இருந்த பந்தி முன்னுரையாகும். அதனை வாசிக்கத் தொடங்கினார். இத்தனைக்கும் மிகுதி அரைப்பங்கு எழுத்துக்கள் எதனையும் எழுதவே இல்ல்ை அதிசயம்தான் இதற்குரிய காரணிகளை முதலில் ஆராய்வோம்.
அது ஒரு மும்மொழிப் பாடசாலை (Staf Room) ஆசிரியர்கள் அறையில் மேசையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பத்திரிகைகள் உண்டு. இரண்டாம் மொழிப் பத்திரிகையை ஒருவர் விரித்து வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறார். அருகில் இருக்கும் இவர் அப் பத்திரிகை எதனையும் கையில் எழுக்காமலே மிகப் பெரிய எழுத்துக்களை மட்டும் அருகில் இருந்தபடியே வாசிப்பார். கருத்துக்கள் முழுமையாக தெரியாவிட்டாலும் அன்றைய தின சுயமொழியில் உள்ள பத்திரிகை களையும், ஆங்கிலப் பத்திரிகைகளையும் பார்க்கும் போது கருத்துக்கள் ஒரளவு தெளிவாகும்.
என்னிடம் இருந்து இரண்டாம் மொழி வழிகாட்டலைப் பெற்று மிகக் குறுகிய காலத்தில் அரைப்பங்கு எழுத்துக்களை எழுதாமலேயே அமைப்பு முறையை மட்டும் விளங்கிக்கொண்டு
அகவிதி ஜனவரி 2012

வாசித்து கருத்தறிந்து உச்ச நிலைபெற்றவர் இவர்தான்.
இரண்டாம் மொழியைக் கற்க விரும்பும் பொற்றோர்களுக்கும் முதியர்களுக்கும் இளைஞர் களுக்கும் இவர் ஒரு சிறந்த உதாரணத்தை காட்டியுள்ளார் அதி விரைவாக அவர் இலக்கை அடைந்துள்ளார். பெற்றோர்கள் முதியோர்கள் முன்னேற்றமும், ஏன் இதுபோல் இருப்பதற்கு என்ன தடை? முறையான வழிகாட்டலில் ஆரம்பிக்க வில்லை என்பதைத் தவிர
When the first step is wrong
Everythink is wrong.
முதற்கோணல்
முற்றும் கோணல்
"පළමුව වැරදෙනාත්
සියල්ලම වැරදෙයි
பெரிய முயற்சிகள் எல்லாம் சிறிய இடங்களில் இருந்தே ஆரம்பமாகின்றன. ஒரு வகுப்பு மாணவர்கள் (08இல் 380) ஒரு வட்டம் ஒடுவோம் என்று தாங்களாகவே ஆரம்பித்தபோது சக மாணவர் ஒருவர் முந்திவிட்டார். அவரை நான் முந்தவேண்டும் என்று பயிற்சி எடுக்கத்தொடங்கியவர் முந்தியது மட்டுமல்ல தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டார். எல்லாப் பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டி முடிவுறும் நேரத்தில் பார்வையாளருக்காக ஒரு மைல் ஒட்டப்போட்டி நடைபெறும் குறிப்பிட்ட இம் மாணவன் எல்லா இடங்களிலும் முதல்இடம் பெற்றுவருவார். 1950 இறுதியில் ஒரு மைல் ஓட்டத்தில் 4 நிமிடங்களுக்கு குறைவாக எவருமே ஒடியதில்லை. குறிப்பிட்ட இம் மாணவனின் பெயர். மு.சோமேஸ்வர ஆனந்தன் எனது வகுப்பில் கல்வி கற்றவர் நண்பர். பின்னாளில் இவர் மிகக்
இ39

Page 42
கடுமையான முயற்சியில் ஈடுபட்டார். ஒரு முறை காற்பந்தாட்ட மைதானத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள பயிற்சி இடத்தில் இவர் பயிற்சியில் ஈடுபட்டி ருந்தார். கைகளை 2ம் ஒன்றாக இருக்க வேண்டிய இடத்தில் 2 1/2 - 3 அடி அகலப் பிடித்தபடி மேலும் கீழும் பயற்சியில் இருந்தார். மைதானத்தின் மேற்கு எல்லையில் இதனைப் பார்த் தரிருந்த வரிளையாட் டு ஆசிரியர் திரு.கிருபாகரன் உரத்த சத்தத்தில் "ஆனந்தன்” அப்படிச் செய்ய வேண்டாம் என்று கட்டளை யிட்டார்.
பாடசாலையில் பயிற்சியில் ஈடுபடும்வேளை யில் அவருக்கு வேண்டிய உதவிகளை மனப் பூர்வமாகச் செய்திருந்தேன். 8 முறை வட்டங்கள் ஒடவேண்டிய நிலையில் ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒருவர் ஓடுவதற்கு ஒழுங்கு செய்திருந்தேன். வேகம் நிலையாக இல்லாததனால் என்னை சைக்கிள் ஒன்றில் அருகில் ஒடும்படி சொல்லியிருந்தார். ஒவ்வொரு முறையும் ஒடும் சைக்கிள் நண்பர் களுடையது. மைதானத்தில் நெருஞ்சி முட்கள் இருந்தானால் மாணவர்கள் வீடு செல்லும்போது சில்லில் இருந்து காற்றுப்போய்விடும். அவர்களுக்கு கஷ்டமான நிலையை கொடுக்க விரும்பாததனால் வாடகைக்கு சைக்கிள் எடுத்து வந்து ஒடும்படி சொல்லியிருந்தார். 1955ம் ஆண்டு சைக்கிளின் வாடகை 1 மணித்தியாலத்திற்கு 15 சதங்கள் பயிற்சிகள் மேலும் மேலும் கடுமையாகிக் கொண்டிருந்தது. ஒரு மைல் தூரத்தை 3 முறை ஓடி பயிற்சி எடுப்பார். முதன்முறை இலகுவாக ஒடும் நேரம் இரண்டாம் முறை மிக கஷ்டமாக இருக்கும். மூன்றாம் முறையும் ஒடும் போது இழுத்துப் பறித்து அதே நேரத்தில் ஓடி முடிப்பார். பின்னாளில் நான்கு நிமிடங்களுக்குள் குறைவாக முதன்முதலாக ஒரு மைல் தூரத்தை கடந்த விவேகளிளுள் இவரும் ஒருவராவார்.
மிகக் கடுமையான முயற்சியின் போது உமிழ்நீர் பசைபோல நாக்கில் ஒட்டும் நிலையில் இருக்கும் என்பதையும் ஆனந்தன் கூறியிருந்தார். அவருடைய பயிற்சியும் முயற்சியும் அவருக்கு உயர்ச்சியைக் கொடுத்திருந்தது.
மாணவர்கள் கல்வியிலும் போட்டியாக படிக்க முயற்சித்தார்கள். சிங்களப் பாடத்தில் சாதராண மாக 70, 80 புள்ளிகளைப் பெற்றிருக் கொண்டிருந்தவர் தீடீரென 100 புள்ளிகளைப் பெற்றுவிட்டார். அவரை நான் முந்தவேண்டும்.
அகவித் ஜனவரி 2012

பெற்றோரைக் கட்டாயப்படுத்தி அவருடைய வழிகாட்டியே தனக்கும் வேண்டும் என்று கேட்ட போது கிடைத்தது. படிக்கும்போது மிக உற்சாகமான தொனியில் வேகமாக வாசித்தார். பின்னர் அவரும் 100 புள்ளிகளைப் பெற்றிருந்தார். பெற்றோருடன் வெளிநாடு செல்வது நிரந்தரமான பின் அவர் உற்சாகம் குறைந்துபோனது. முன்னையவர் தொடர்ந்த உற்சாகத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பிரபல பிரசுரிப் பாளரின் பயிற்சிப் புத்தகங்களையும் அவருக்கு கொடுத் திருந்தேன். பரீட்சையில் இலங்கையில் முதலாம் இடத்தை 1, 2 புள்ளிகளால் தவறவிட்டார். கொழும்பு மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்ற மாணவர் என்றும், முன் அட்டையில் அவருடைய படம் 3)LibGuibpg. 55605urti QCD5 (Specialist Doctor) ஒரு டாக்கடராவார்.
மும்மொழியாளராக இருப்பது விரும்பத்தக்கது. பல பயிற்சிகளை இதன் மூலம் கொடுக்கலாம். ஒரு இடத்தில் சிறுவர்களுக்கு சொல்வதெழுதல் (Dictation) கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட மாணவனுக்கு இது இரண்டாம் மொழியாக இருந்தபோதிலும் முதலாம் மொழி மாணவர் களுடனே பயில்கிறார். இருந்தாலும் 4/10 சரியாக இருந்தது. ஒரு வழிகாட்டியின் உதவியுடன் இவர் மும்மொழியாளராக இருந்ததனால், பயிற்சிகளைக் கொடுத்து பத்துக்கு பத்து சரியெடுக்க வழிகாட்டிய படி சுயமுயற்சி செய்தார். இப்பொழுது தாய்மொழி மாணவனுக்கு கூட இரண்டாம் மொழி மாணவனுக்கு சமனான புள்ளிகளை எடுக்கமுடிய வில்லை. சில நாட்களின் பின் சென்றபோது, பயிற்சிப் புத்தகங்களை பார்த்தபோது, பழையநிலை அடைந்திருந்தார். பெற்றோரும் அதனைக் கவனிக்க வில்லை. காரணம் பாடசாலையினால் கொடுக்கப் பட்ட List சொற்றெடரை தவறவிட்டுவிட்டார். வேறு மாணவர்களிடமிருந்து ஒன்றைப் பெற்று போட்டோப் பிரதி எடுத்து கொடுத்ததனால் மீண்டும் சிறப்பான நிலைக்கு வரமுடிந்தது. மும்மொழியாள ராதனால் இப்பயிற்சி சுயமுயற்சி இலகுவாக முடிந்தது.
நீங்களும் ஒரு சிறப்பான சுயமுயற்சியுடைய மும்மொழியாளராக வரவேண்டுமென ஆசிகூறி இக்
கட்டுரையை முடிக்கின்றேன்.
(மீண்டும் தொடர அடுத்த கட்டுரை 3G, 4G இலங்கையிலும் வெளிநாடுகளிலும். )
O 40

Page 43
ஊக்கல் - வரைவிலக்கணம்
“ஊக்கல்" ஒர் உள்ளார்ந்த செயன்முறையாகும். அது உள - உடல் செயன்முறையாகும். ஒருவர் யாதேனுமொன்றை விரும்புவதிலும் மற்றொருவர் அதனை விரும்பாதிருப்பதிலும் செல்வாக்குச் செலுத் தும் பிரதான காரணி ஊக்கல் என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
"ஊக்கல்" என்பதைக் குறிக்கும் ஆங்கிலப்பதம் "Motivation' g(5lb gigs. "Moveers' 6760)|lb aggar பதத்திலிருந்து தோன்றியுள்ளது. Moveers என்பதன் அர்த்தம் முன்னேறிச் செல்லல் என்பதாகும். எனவே Motivation என்பதைக் குறிக்கும் தமிழ்ப்பதமாகிய “ஊக்கல்" என்பது உயிரி முன்னேறிச் செல்வதற் காகச் செயற்படும் உந்து சக்தியைக் குறிக்கின்றது எனலாம்.
“ஊக்கல்" என்பதை வெவ்வேறு உளவியலா ளர்கள் வெவ்வேறு விதமாக வரைவிலக்கணப் படுத்தியுள்ளனர்.
“ஊக்கல்" என்பது கற்பவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை அல்லது தேவைகளை அவரது சூழலில் காணப்படும் பொருள்களின் பால் வழிப்படுத்தும் ஒரு செயன்முறையாகும்.
G.M. Blair & Others (1947)
"அது யாதேனும் பெறுபேற்றைப் பெறுவதற்காக ஆட்களை வழிப்படுத்தும், உந்தும் போக்காகும்”
"மனித நடத்தையைத் தூண்டி, நெறிப்படுத்தி மனித நடத்தையை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்தியாகும்"
Ball( 1977)
எனவே, ஊக்கல் என்பது யாதேனும் நடத்தைக்கு சக்தியை வழங்குகின்ற, அதாவது அதனை வழி
அகவித் ஜனவரி 2012
 
 

நடத்துகின்ற ஓர் உந்து சக்தியாகும் எனலாம். அது ஒருவரை யாதேனும் நடத்தையின் பால் வழிப்படுத்துகின்ற நனவு நிலையாகும் அல்லது நனவிலிநிலையாகும்.
ஊக்கல் நடத்தையொன்றின் சிறப்பியல்புகள்
ஊக்கலினால் நடத்தைக்கு மலர்ச்சியூட்டப் படுகின்றது. அம்மலர்ச்சியுடன் நடத்தைகள் தொடர்ச் சியாக நிலவும். அம்மலர்ச்சி தனியாளைச் செயற்படுத் தும், ஊக்கியானது யாதேனும் சிறப்பான குறிக் கோளை அடைவதற்காக தனியாளின் நடத்தையை வழிப்படுத்தும். ஊக்கிய நடத்தையில் தெரிவு செய்த இயல்புகள் அடங்கியுள்ளன. எனவே தனியாள் தெரிவு செய்து கொண்ட நடத்தையில் மாத்திரம் வழிப்படுத்தும்.
ஊக்கல் கொள்கைகள்
மனித ஊக்கல் தொடர்பான சில கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. guai,555 (65mGiró05 - Theory of Instinct
2. p 6Til (5. IL-5 G5ITGiró05 - Psycho-analytic Theory
3. G5606).5air (ossrairao.5 - Theory of Needs
4. சமூகக் கொள்கை - Social Theory
SL6) is his Glass660), (Theory of Instinct) ஊக்கல்கள் என்பவை ஒருவர் பரம்பரை மூலம் பெற்றுக்கொள்பவை என ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. எனவே அவை இயல்பூக்கங்கள் எனப்படுகின்றன. எனவே இயல்பூக்கம்" என்பது ஒரே வகையைச் சேர்ந்த அங்கி இனங்களுக்கேயுரிய சிக்கலான இயல்புகளாகும் எனக் குறிப்பிடலாம். ஒரு குறித்த ஊக்கமாயினும் வெவ்வேறு ஆட்டகளிடத்தே வெவ்வேறு மட்டங்களில் கூடியும் குறைந்தும் காணப்படலாம்.
இக்கருத்தை முன்வைத்த முன்னோடி மக்டுகல் (Mc Dougal) எனும் உளவியலாளராவார். மக்டுகல்
O41

Page 44
முன்வைக்கும் கருத்துப்படி, மனிதனின் உள்ளத்தில் இயல்பாகவே அமைந்த ஒருவித முனைப்பு காணப் படுகிறது. அவனது எண்ணங்களும் செயன் முறைகளும் அவ்வூக்கங்களினாலேயே நெறிப் படுத்தப்படும். அவர் அவ்வுணர்வுகளை இயல் பூக்கங்கள் எனும் பெயரிட்டுள்ளார். இயல்பூக்கங்கள் உருவாவதற்குப் பயிற்சி தேவைப்படுவதில்லை. தனியாள் விருத்தியின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவை தோன்றும் என மக்டுகல் காட்டியுள்ளார். எனவே தனியாளது விருத்தியின் வெவ்வேறு பருவங் களிலேயே வெவ்வேறு இயல்பூக்கங்கள் தொழிற்
படும்.
ஒருவரிடத்தே 14 வகையான இயல்பூக்கங்கள் காணப்படலாம் என மக்டுகல் குறிப்பிட்டுள்ளார். (இயல்பூக்கங்கள் 18 என அவர் பிற்காலத்தில் குறிப்பிட்டதாகவும் நூல்களில் பதிவாகியுள்ளது)
அவை வருமாறு:
உணவூக்கம் - Appetitive
ஆராய்வூக்கம் - Curiosity
போரூக்கம் Aggression
வெறுப்பூக்கம் - Repulsion
ஒதுங்கூக்கம் - Escape
திரட்டுக்கம் - Acquisitive
ஆக்கல் ஊக்கம் - Creative
பாலியலூக்கம் - Sex
மகலுக்கம் - Parental குழுவூக்கம் - Gregarious g56igolgig55&ndasLb - Self-assertion பணிவூக்கம் - Submissive 567667Gli355Lb - Self abasement சிரிப்பூக்கம் Laughter
மக்டுகலின் கருத்துப்படி ஒவ்வோர் ஊக்கலுக்குமுரிய மனவெழுச்சியும் செயன்முறையும் உண்டு
அகவிதி ஜனவரி 2012

ஊக்கம் ܝ ܝ -- ܗ --ܝܝܚ -- மனவெழுச்சி செயன்முறை
போரூக்கம் சினம் / கோபம் எதிர்த்தல்
ஒதுங்கக்கம் அச்சம்/பயம்/பீதி தப்பிச்செல்லல்/ஓடுதல்
பாலியலூக்கம் காதல் கூடுதல் −−−−−− −−−
குழுவூக்கம் பாதுகாப்பு குழச்செயல் -
தன்னெடுப்பூக்கம் - மேம்பாடு ஆதிக்கம் பணிவூக்கம் தாழ்வுணர்வு பின்பற்றல் திரட்டுக்கம் உடைமை திரட்டுதல் / சேகரித்தல்
ஊக்கம் மனவெழுச்சி செயன்முறை போரூக்கம் ஒதுங்கூக்கம் பாலியலூக்கம் குழுவூக்கம் தன்னெடுப்புக்கம் பணிவூக்கம் திரட்டுக்கம் சினம் / கோபம் அச்சம் / பயம் / பீதி / காதல் / பாதுகாப்பு மேம்பாடு / தாழ்வுணர்வு உடைமை / எதிர்த்தல் தப்பிச் செல்லல் / ஓடுதல் / கூடுதல் குழுச்செயல் ஆதிக்கம் பின்பற்றல்/திரட்டுதல்/சேகரித்தல்
ஊக்கங்கள் தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் மக்டுகல், மனவெழுச்சியின்றி ஊக்கங் கள் தோன்றவதில்லை எனக் குறிப்பிடுகின்றார். சில மனவெழுச்சிகள் எளிமையானவை. (உதாரணம் கோபம், பயம், காதல் ...) எளிமையான சில மனவெழுச்சிகள் ஒன்று சேர்வதால் சிக்கலான மனவெழுச்சிகள் உருவாகும்.
உதாரணம் : பொறாமை - இது கோபம், பயம், வெறுப்பு போன்ற எளிமையான மனவெழுச்சிகளின் சேர்மானத்தால் உருவாகும்.
ஊக்கல் கொள்கை தொடர்பாக முன்வைக்கப் பட்டுள்ள கண்டனங்கள் / விமர்சனங்கள்
1. ஊக்கல் கொள்கைவாதிகள் ஊக்கங்களாகக் குறிப்பிடுவன உணர்மையில் இயல்பான ஊக்கங்கள் அல்ல. அவை கற்றலின் பெறுபேறாகக் கிடைப்பனவாகும்.
-O42

Page 45
2. ஊக்கங்களைப் பட்டியற்படுத்த முடியுமாயினும், எல்லா ஊக்கங்களையும் அப்பட்டியலில் அடக்கிவிட முடியாது. காரணம், அது மிகச் சிக்கலான தொன்றா கையால், சந்தர்ப்பத்தைப் பொறுத்து வேறுபடத்தக்க தன்மையைக் கொண்டிருத்தலாகும்.
3. மக்டுகல் முன்வைத்துள்ள ஊக்கங்களுள் பெரும் பாலான உடல் சார்ந்தவை. அதாவது அவற்றினுள் பெரும்பாலானவை முதிர்ச்சியின் பெறுபேறு களாகும். எனவே அதன் மூலம் உள ஊக்கலுக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை.
உளப்பகுப்புக் கொள்கை
(Psycho-analytic Theory) இக்கருத்து சிக்மன் ஃபுரொய்ட் எனும் உளவியலாளரால் முன்வைக்கப்பட்டது. கார்ல் ஜூஸ், அல்பிரட் அட்லர் ஆகிய பரொய்டியவாதிகள் இருவரும் இக்கருத்தை மேலும் போசித்துள்ளனர்.
உளப்பகுப்புக் கொள்கையின்படி, மனித ஊக்கலின் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி நனவிலி நிலையில் உருவாகின்றது. எமது சில நடத்தைகளுக்கு பின்னணியாக அமையும் காரணங்கள் தொடர்பாக எமக்கு எவ்வித உணர்வுகளும் கிடையாது என உளப்பகுப்புக் கொள்கைவாதிகள் குறிப்பிடுகின்றனர்.
மனிதரில் ஊக்கல் நிகழும் விதத்தை விளக்குவதற்காக p676.5as 2.676TLb (Unconscious mind), 9Gd56) (Repression) போன்ற முதல்களை ஃபுரொய்ட் பயன்படுத்தியுள்ளார்.
எமது நனவு உள்ளத்தில் அடங்கியுள்ள தகவல்களை மீள நினைவு கூரலாமெனினும், நனவிலி உள்ளத்தில் பதிந்து காணப்படுபவற்றை மீள நினைவுகூர முடியாது. நனவு உள்ளத்தினால் செய்யக் கடினமான, அல்லது தாங்க முடியாத, மகிழ்ச்சியளிக்காத அழுத்தம் கொடுக்கத்தக்க வற்றை நனவு நிலையிலிருந்து நீக்குவதே ஒடுக்குதல் மூலம் செய்யப்படுவதாகும். அவ்வாறு, நனவிலி உள்ளத்தில் ஒடுக்கப்பட்டுக் காணப்படும்.
சில கடந்த கால அனுபவங்கள் பிற்காலத்தில் மீள வெளிக் கொணரப்படலாம். ஃபுரொய்ட் இனது கருத்துப்"படி, இவ்வாறான நிகழ்வுகள், திருப்தி பெறாத பாலியல் ஆசைகள் மற்றும் மூர்க்க உணர்வுகளுடன் தொடர்புடையவை. பிள்ளை வளரும் பருவத்தில் பிள்ளையிடத்தே காணப்படும் உணர்வுகள், செயற்பாடு
அகவிதி ஜனவரி 2012

களைச் சுயாதீனமாக வெளியிடச் சந்தர்ப்பம் கிடைப் பதில்லை என்பதை உணர முடிகிறது. காரணம் வளர்ந்தோர் அவற்றை அங்கீகரிக்காமையே. இவ்வாறான சில உணர்வுகள் நனவிலி உள்ளத்தடன் தொடர்புறு வதற்கான காரணம், அவற்றை வெளிப்படுத்தவதற்கு பிள்ளைக்குச் சந்தர்ப்பம் கிடைக்காமையாகும். பெரும் பாலும் பிள்ளையின் பாலியல் நடத்தைகள் ஒடுக்கப் படுகின்றன என்பதே ஃபுரொய்ட் இனது கருத்தாகும். அவற்றை நிறைவு செய்து கொள்ள பிள்ளை முனையும். இவ்வாறாக, நனவிலி உள்ளத்தில் அடங்கியுள்ள ஊக்கல் உந்துகையினால் மனிதன் வழிப்படுத்தப்படுகின்றான் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.
இக்கொள்கை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 1.பண்பாட்டுக் கோலக் கொள்கை-(Cultural PatenTheory)
2.களக் கொள்கை- (Field Theory)
பண்பாட்டுக் கோலக் கொள்கை
(Cultural Pattern Theory)
மாக்ரட் மீட், ரூத் பெனடிக் போன்ற சமூக மானுட வியலாளர்கள் கண்டறிந்த விடயங்களை அடிப்படை யாகக் கொண்டு இக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களது கருத்துப்படி, ஒருவரது நடத்தை அவரது பெற்றோர் அவரை வளர்க்கும் விதத்தில் தங்கியுள்ளது. இவர்கள், பசுபிக்குச் சமுத்திரத்தில் தனித்துக் காணப்படும் தீவுகள், ஆபிரிக்க கோத்திரங்கள், லத்தீன் அமெரிக்காவின் சில பிரதேசங்கள் போன்றவற்றில் நடத் திய ஆராய்ச்சிகள் மூலம், பெற்றோர்கள், பிள்ளைகள் வளர்த்தெடுக்கப்படும் விதம் தொடர்பாகக் கண்டறிப் பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இக் கொள்கையைக் கட்டியெழுப்பியுள்ளனர்.
இதனை ஓர் உதாரணம் மூலம் விளக்கலாம். அரபேஷ் (Arapesh), (p6ði (6) 35 Dij (Mudugumor) 6T 6ði Lu GMT சியுகினியாவில் வாழும் இரண்டு கோத்திரத்தினராவர். “அரபோத்" கோத்திரத்தினர் தமது பிள்ளைகளை அன்புடன் வளர்க்கின்றனர். எனவே அக்கோத்திரத்தைச் சேர்ந்த பிள்ளைகள் நல்ல நடத்தைகளைக் கொண்ட, மலர்ச்சியாக வளர்ந்தோராக உருவாக்கப்படுகின்றனர். வளர்ந்த பிள்ளை இவர்கள் பால்மறக்கின்றனர். அவர்களது நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்காக பெற்றோர் கடுமையான சட்டதிட்டங்களை விதிப்ப தில்லை. இவற்றின் விளைவாக அப்பிள்ளைகளிடத்தே மூர்க்கக் குணமோ போர்க்குணமோ உருவாவதில்லை.
தொடரும். நன்றி. கல்வி உளவியல், தேசிய கல்வி நிறுவனம்
-O 43

Page 46
பண்பாட்டு (ழ்லதனம் (CU (அகவிழி - டிசெம்பர் 2011 இதழின் குறிi கல்வியியல் எண்ணக்கருக்கள் (Conce
பியர் பூர்தியு என்பவர் பிரஞ்சு தேசத்தின் சமூகவியலாளர். இவர் பண்பாட்டு மூலதனம் (Cultural Capital) என்ற எண்ணக்கருவை அறிமுகம் செய்தார். மூலதனம் என்பது கார்ல் மார்க்ஸ் அறிமுகம் செய்த பொருளியல் கருத்து. உற்பத்திச் சாதனங்களை நிலம், கட்டிடங்கள், உட்கட்டமைப் புக்கள், தொழிற்சாலை, யந்திரங்கள், வாகனங்கள், புரளும் மூலதனம் ஆகியவற்றில் திரண்ட வடிவில் காணப்படும் செல்வத்தை மூலதனம் என்கிறோம். மூலதனம் என்னும் இக்கருத்தை பண்பாட்டுத் துறைக்கு விரிவு செய்யும் பியர்பூர்தியு மொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றில் உள்ள தேர்ச்சியும் அறிவும் கல்வியால் பெறப்படுவது. இவை மனிதர் உடைமை கொள்ளும் பண்பாட்டு மூலதனம் ஆகும் என்று கூறினார். பொருளியல் மூலதனம் எவ்வாறு பிறர் மீதான ஆதிக்கத்திற்கு உதவுகிறதோ, அவ்விதமே பண்பாட்டு மூலதனம் உயர்வகுப்பின் பகிர்வில் சமத்துவமின்மை நிலவுகிறது. சமூகத்தின் ஒட்டு மொத்தப் பணி பாட்டு மூலதனத்தின் பெரும்பங்கை உயர் வர்க்கங்கள் தமதாக்கிக் கொள்கின்றன. மருத்துவம், பொறியியல், சட்டம், கணக்கியல், சமூகவிஞ்ஞானங்கள், மனிதப் பண்பியல் போன்ற எல்லா உயர்கல்வித் துறை களிலும் சமூகத்தின் மேலோர் குழாம் (எயிட்ஸ்) தமது ஆதிக்கத்தை வைத்திருக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, இசை போன்றனவும் வர்த்தக முறையில் செயற்படும் தொழில் முறையா ளர்களின் ஆதிக்கத்தின் உள்ளன. கல்வி நிறுவன ங்கள் பண்பாட்டுத் துறையில் இருந்து வரும் நிலையை மாற்றமின்றித் தொடர்வதற்கான கருவிகளாக முதலாளித்துவத்தின் கீழ் செயற் படுகின்றன. சான்றிதழ்கள், "டிப்ளோமா" என்பன வற்றை வழங்கி பணி பாட்டு மூலதனத்தின் உரிமையை அவை சான்றுப்படுத்துகின்றன. கல்வி நிறுவனங்களின் மொழி, அவற்றின் விழுமியங்கள்,
அகவிதி ஜனவரி 2012
 

கல்வியியல் எண்ணக்கருக்கள் - 2
க.சண்முகலிங்கம்.
TURAL CAPITAL) புக்கள் என்ற பகுதி இவ்விதழில் இருந்து pts) என்ற தொடராக வெளிவருகிறது)
கல்விப் பெறுபேறுகள், பரீட்சை சான்றுபடுத்தல் பற்றிய நியமங்கள் ஆகிய யாவும் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்ற குழுக்களின் ஆதிக்கத்தை நீடிப் பதற்கான வழிமுறைகளே என்றும் பியர் பூர்தியு கூறுகிறார்.
கல்விமுறைக்குள் பிள்ளைகள் புகுவது இலகுவான தொன்றல்ல. மேலாதிக்கம் பணி பாட்டை (டொமினன்ற் கல்ச்சர்) உள்வாங்குதல் இதற்கான முன்நிபந்தனை, இதனை உள்வாங்கத் தவறும் பிள்ளைகளின் இடைவிலகல் தவிர்க்க முடியாதது. கல்வியில் வெற்றியும், தோல்வியும் மேலாதிக்கம் பண்பாட்டின் உள்வாங்குதலுக்கு சாதகமான மனப் பாங்குகள், நடத்தைகள் ஆகியவற்றையும் பிள்ளைகள் தம்வயமாக்குதலில் தங்கியுள்ளது. பியர்பூர்தியு “வித்தியாசம்" என்ற கருத்தையும் கூறியுள்ளார். கல்விக்கூடங்களின் கதவுகளை சாதாரண மக்களின் பிள்ளைகள் தட்டத் தொடங்கும் போது “வித்தியாசம்" உள்நுழைகிறது. போட்டி அதிகரிக்கும் போது தம்பிள்ளை பிற பிள்ளைகளை விட வித்தியாசமானவள் என்று காட்டுவதற்கான போட்டியில் பெற்றோர் இறங்குவர். "ரியுசன்” , ஆங்கிலம், கணினி, புலமைப் பரிசில் சித்தி, தமிழ்த்தினப் போட்டி, இசை, நடனம், அறிநெறிப் பாடசாலை என்று வித்தியாசங்களைக் காட்டு வதற்கான போட்டி அதிகரிக்கிறது. இறுதியில் பண்பாட்டு மூலதனத்தின் உற்பத்திச் செலவு அதிகரித்து இலவசக் கல்வி அர்த்தமற்றதாகி விடுகிறது. ஆங்கிலம், கணினி என்ற இரண்டினாலும் பெறக் கூடிய வித்தியாசம் மட்டுமே போதும் என்று நம்பி ஏமாறும் மத்திய தரவர்க்கம் சாரமற்ற இளந் தலைமுறை ஒன்றை உருவாக்குகிறது. இவ்வாறாகப் பண்பாட்டு மூலதனத்தின் பங்கினை நாம் விபரித்துச் செல்ல முடியும். பியர்பூர்தியுவின் பண்பாட்டு மூலதனம் என்ற எண்ணக்கரு கல்வி முறைமையின் பகுப்பாய்வில் பிரயோகிப்பதற்கு ஏற்ற சிறந்த பகுப்பாய்வுக் கருவியாக விளங்குகிறது.
O 44

Page 47
鬱
:· 鬚*
 


Page 48
Registered in the Depart
臀üu壹。
202, செட்டியார் தெரு, கொழும்பு-11 தொ.பே.இல. 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக்கடை 4யுஇ ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் தொ.பே,இல. 021-2226693
நியூ கேசவன் புக்ஸ்டோஸ் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே,இல: 051-2222504, O51-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 டீ புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல: 024-4920733
அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல. 067.2229540
புக் லாப் 20,22 சேர் பொன் ராமனாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல. 077-1285749
இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09 தொ.பே,இல. 011 - 2688102
கவிதா எல்ரோன இல:05 பஸ் தரிப்பிடம், வவுனியா தொ.பே,இல: 024 - 2222012
Gowariy 207 Wofend
Printed
 

ent Of POSS Of Sri Lanka. Under NO.QD/96/NEWS/2012
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-யு 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
திபே:இல.: 4515775, இறுதி
அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை தொ.பே,இல. 052-2258437
நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03 தொ.பே.இல. 026-2236266
சாய் புத்தகக்கடை 92. கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு-13 தொ.பே.இல: 2452736
குமரன் டிரேட் சென் აჯ 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா தொ.பே.இல. 052-2223416
பிரியங்கா புத்தகக் கடை பிரதான வீதி, 筠 பருத்தித்துறை தொ.பே,இல. 077-9303246
கொலேஜ் நிட்ஸ் புத்தகக்கடை 120, பிரதான வீதி, அட்டாளைச்சேனை 14 கை.தொ.இல. 077-3034469
அல்குரசி புத்தக நிலையம் 28இ1/2இ புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல. 066-3662228
ISSN 1800-1246
street |
! 3