கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2012.01

Page 1
== 霹 () RJaԱIdly 201:
எத்தனை எத்த ஏழைகள் வாழ்க நித்தழும்ஜியர் நித்திலிறுணு கொத்தியபூமன் །།།། ܡܒ ܲ கொள்கையி)
a ܡ݂ܵܬܝ
A.
ax இ&ண்x
=జిళ్లజోళ్లజోళ్లజోళ్ల இ
 

ாமல் இலக்கியம் இல்லை
டுவl)
னை பொங்கல்கள் வந்தன;
Tsofů SLUTTåă, G suflů60)GuGu! வையை நிலத்தினில் சிந்தியோர் V - A Üü 2ழில்இவூ,உழைப்பினைக்
懿臀 ர்ர்த்ம்ஸ்கிர்டுங்கோல் ஆட்சியும் விரிந்திடும்,அத்தினம் ஆசரதுமஜ9தத "\jရွှဲ#2႕ ஒபாங்குவோம்!
- செங்கதிரோலர்

Page 2
g கணக்கியலாளரா? பொறியியலாளரா? வைத்தியரா?
வேறு தொழிலாளரா? எங்ாகாடாக இருந்தாலும், எத்தொழிலாக இருந்தாலும் சுலபமான சுயதெரிவு முறையில் தெரிவு செய்திட குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனே!
விவரங்களுக்கு
திங்கள், புதன், வெள்ளி, மாலை 4:30 - 7:30 மணிக்கு உள்ளேயோ, சனி, ஓநாயிறு நண்பகல் 11:00 - 2:00 மணிக்கு உள்ளேயோ சர்வதேச - சகலருக்குமான, மூத்த - புகழ் பூத்த, "தனிமனித நிறுவனம்", திருமண ஆற்றுப்படுத்துநர் வேல் அமுதனைத் தொடர்புகொண்டு விசாரித்தறிக!
4873929 / 236O488 / 2.360694
முன்னேற்பாட்டு ஒழுங்குமுறை
8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு - 06
வாடிக்கையாளர் புதிய வரவுகளின் முக்கிய விவரங்களை வேல் அமுதனின் அலுவலக நேரம் தொலைபேசி ஊடாக அறிந்துகொள்ளலாம்.
 

இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை
தோற்றம் 30012008
(19)
தை2012(தி.வ.ஆண்டு-2043)
ஆசிரியர்: சொங்கதிரோன் Gg5T.(Sud/TP -065-2227876
O77-2602634 f56160T(6586) / E.mailSenkathirgopalagmail.com
துணை ஆசிரியர்: அன்படிகன் குளும்ை Gigsto06)(3uf/TP - 0777492861 L5660T(6556)/E.mail - croos aGDyahoo.com
தொடர்பு முகவரி செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு,
இலங்கை.
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road,
Batticaloa,
Sri lanka.
Orig.
mo
o ஆசிரியர் பக்கம் O அதிதிப்பக்கம்
> ஓர் ஊரின் கதை - நவம் 9 கலட்டியன் உயிர்த்தெழுந்த
ஞாயிறு (சிறுகதை) - தீரன் ஆர்.எம். நெளசாத்
O இஸ்லாமியத் தமிழ் என்னும்
சொல்லாட்சி ? - வாகரைவாணன்
O நறுக்குகள் - அலெக்ஸ் பரந்தாமன் 2-)
எறிகதிர் - அந்தனிஜீவா
மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள், பட்டியல் -1
O நினைவிடைதோய்தல்
- பொ.கந்தையா (காந்தி ஐயா) 29
()
0 வாழ்வு எதற்கு (கவிதை)
மருதூர் ஜமால்தீன் 30 0 தாய்ப்பாசம் (குறுங்கதை)
- வேல் அமுதன்) 31 0 °செல்லக்கிளி’ நாவல் நயவுரை 32
- ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் 9 உலகம் - காசிஆனந்தன் கதை 39
9 அமரர் கவிஞர்திக்கவயல் சிதர்முவின் 40
கவிதைகள்- பேராசிரியர் செ.யோகராசா
> சின்னது சிரிப்பானது உண்மையானது
- 05 - பாலமீன்மடு கருணா > கணினி (சிறுவர் அறிவியல் பாடல்)
- கவிஞர் ஏ.இக்பால்
> மீண்டும் ஒரு காதல் கதை-11 (தொடர்
நாவல்) - யோகா யோகேந்திரன்
45
9 சொல்வளம்பெருக்குவோம். 30
- பன்மொழிப்புலவர் தகனகரத்தினம் 52 S.) > கதைகூறும் குறள்-27 - கோத்திரன் 57) 6D G-)
O விசுவாமித்திர பக்கம்
> தமிழியல் விருது - 2011
O விளாசல் வீரக்குட்டி - மிதுனன்
ஆக்கங்களுக்டு ஆக்கியோரே பொறுப்பு

Page 3
ஆசிரியர் பக்கம்
30.01.2008 அன்று தன் கன்னி வீச்சை விசிறிய “செங்கதிர்’ பிறந்து - தவழ்ந்து - எழுந்து - நடைபழகி நான்காண்டுகளை நிறைவு செய்து இவ்வீச்சுடன் (வீச்சு - 49, ஜனவரி 2012) ஐந்தாம் ஆண்டில் நுழைகிறது. “செங்கதிர்’ இன் மூலதனம் இலக்கிய தாகமே. இலங்கைத் தமிழ்ச் சூழலில் இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினை மாதாந்தம் கிரமமாகக் கொணர்வது என்பது இலேசுப்பட்டதல்ல. பலவிதமான தடைகளையும், தடங்கல்களையும் தாண்டி “செங்கதிர்’ நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்றால் அதற்குக் காரணம் அதன் செல்நெறியே. அதனுடன் அக் கறையுள்ள எழுத்தாளர்கள் - கலைஞர்கள் - ஊடகவியலாளர்கள் - இலக்கிய ஆர்வலர்கள் அளித்த உற்சாகமும் ஊக்கமும் சேர்ந்துள்ளது என்பது சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியதாகும்.
அன்பானவர்களே! *செங்கதிர் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உங்கள் தொடர்ந்த ஆதரவை நாடி நிற்கின்றோம். நிதி குறைந்தவர்கள் காசுகள் தந்தும் நிதிமிகுந்தவர்கள் பொற்குவை ஈந்தும் “செங்கதிர்’ முன்னெடுத்துச்செல்லும் இலக்கிய வேள்விக்கு நெய் ஊற்றுங்கள். குறைந்தபட்சம் ஆண்டுச் சந்தாவாக ரூப்ா ஆயிரத்திற்கும் (1000/=) குறையாத அன்பளிப்பை வழங்கி எமது இலக்கியப் பயணத்தில் பங்காளராக இணைந்து, ‘இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய - பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ் என்ற மகுடத்துடனும், இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை’ எனும் தாரக மந்திரத்துடனும் வெளிவரும் “செங்கதிர் இன் இலக்கியப் பணியை விரிவுபடுத்த உதவுங்கள். நன்றி.
- செங்கதிரோன்.
6666):
உங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்கி விசங்கதிர்" இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
- 9 áFÍLII -
 

அதிதிப்பக்கம்
“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி, இலங்கையின் மூத்த எழுத்தாளர் திரு.நவரெத்தினம் ஆறுமுகம் (நவம்) அவரகளாவார.
தற்போது தமிழ்நாடு சென்னையில் மனைவியுடன் வசித்து வரும் எழுத்தாளர் நவம்( நவரெத்தினம் ஆறுமுகம்) அவர்கள் மட்டக்களப்புக்குத் தெற்கே நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ஆரைப்பற்றை (ஆரையம்பதி) கிராமத்தில் 03.10.1928 இல் பிறந்தார். தந்தை - சிற்றம்பலம் சீனித்தம்பி; தாய் - கந்தப்பர் வன்னமணி.
ஆரம்பக் கல்வியைத் தனது வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த ஆரையம்பதி நொத்தாரிஸ் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் 5b வகுப்புவரை கற்றுப் பின் 6 - 9ம் வகுப்பு வரை காத்தான்குடி மத்திய கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து பின் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இருவருட (1951- 1952) பயிற்சிநெறியின் பின் 1953 இல் முதல் ஆசிரிய நியமனத்தை இரத்தினபுரி மில்லவிட்டியா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பெற்று இங்கு ஐந்து வருடங்கள் கடமையாற்றித் தொடர்ந்து கிரான் அ.த.க. பாடசாலை, மயிலம்பாவெளி அ.த.க. பாடசாலை, கொழும்பு நில்வீதி அ.த.க. பாடசாலை, கிரான்குளம் அ.த.க.பாடசாலை, ஆன்ரயம்பதி மகாவித்தியாலயம் (ஓய்வு பெறும்வரை) ஆகிய பாடசாலைகளில் ஆசிரிய சேவையாற்றினார். 1958 இல் மட்டக்களப்பைச் சேர்ந்த லீலாவதியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். பயிற்றப்பட்ட ஆசிரியையான இவரது மனைவியும் கலை இலக்கியத் துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர்.
இவரது குடும்பம் கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டது. இவரது தாய்மாமன் பொன்னம்பல வைத்தியர் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞர், நாடக இயக்குநர். இவர் தயாரித்த ராமர் நாடகம்" இன்றுவரை பேசப்படுகிறது. அவர் பெயரால் ஆரையம்பதியில் பொன்னம்பல வைத்தியர் தெரு இன்றும் உள்ளது. நவம் அவர்களின் அக்கா தங்கமணி ஒரு பாடகி. மூத்த அண்ணன் கந்தையா ஒரு சங்கீத ஆசிரியர், நாடக நடிகர், ஒவியர், சிற்பி. அடிக்கடி நாடகங்கள் போடுபவர். அந்த நாடகங்களில் நவம் நடித்துள்ளார். இரண்டாவது அண்ணன் செல்லையாவும் ஒரு கலைஞரே. மிருதங்கம், தபேலா, மத்தளம், உடுக்கு ஆகியவற்றில் கைதேர்ந்தவர்.
9ேழி.

Page 4
எழுத்துப்பணி: காத்தான்குடி மத்திய கல்லூரியில் பயிலும்போது அங்கு அன்புமணியோடு சேர்ந்து ‘பாரதி” என்ற கையெழுத்து இதழை வெளியிட்டார். பள்ளி மாணவனாக இருந்தபோதே வீரகேசரி நாளிதழின் மட்டக்களப்புச் செய்தியாளராகப் பணிபுரிந்தார். 1945 இல் எழுத்துலகப் பிரவேசம் செய்த இவரது எழுத்துத் துறை பத்திரிகைகளுக்கு ஆசிரியர் கடிதம், கேள்வி பதில் என ஆரம்பித்து சிறுகதை - நாவல் - பயணக் கட்டுரை நகைச்சுவைக் கட்டுரை - மேடை / வானொலி நாடகம் எனப் பரிணாமம் பெற்றது. எழுத்துலகில் இவரை இனம் காட்டியவர் எஸ்.டி. சிவநாயகம் அவர்களே. சுதந்திரன், தினகரன், வீரகேசரி, தினபதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த அவர் நவம் அவர்களின் படைப்புக்களுக்குக் களம் கொடுத்து எழுதத் தூண்டினார்.
இவர் முதலில் கலந்து கொண்ட எழுத்துத்துறைப் போட்டி தமிழ் நாட்டின் குண்டுசி நடாத்திய கடிதப் போட்டியாகும். இப் போட்டியில் முதற் பரிசு கிடைத்து இலங்கைக்கான குண்டுசி நிருபராய் நியமிக்கப்பட்டார். தினகரன் நடாத்திய பிரசுரித்த படத்திற்குப் பொருத்தமான கதை எழுதும் போட்டியில் இவரது ‘மாசிலி வீணை" முதற்பரிசு பெற்றது. கொழும்பிலிருந்து வெளியான ‘தமிழின்பம் மாத இதழ் நடாத்திய கட்டுரைப் போட்டியிலும் முதற் பரிசு பெற்றார். இலங்கை வானொலி நடாத்திய விமர்சனப் போட்டியிலும் முதற் பரிசு பெற்றார்.
இவரது முதல் சிறுகதை ‘காணாமல் போன கணபதி” சுதந்திரனில் வெளிவந்தது. அப்போது இவருக்கு வயது 15. அதன் பின் எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் கேட்டுக் கொண்டபடி நீலவேணி தொடரை 1970 இல் எழுதினார். பின்னர் இந் நாவலை வீரகேசரி நாளிதழின் அச்சகப் பிரிவான மித்திரன் “பிரஸ்’ நிறுவனத்தார் நிழல் மனிதன்” என்ற தலைப்பில் வெளியிட்டனர்.
இவர் போட்டிகளில் கலந்து பெற்ற பரிசுகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது 1960 இல் இலங்கை எழுத்தாளர்களுக்கென்று கல்கி இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ‘நந்தாவதி”க்கே முதற்பரிசு கிடைத்தமை. இதன் மூலம் இவருக்கு இலங்கைத் தீவின் அடங்கலுக்கான ஓர் அங்கீகாரம் கிடைத்தது. முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.இராஜதுரை அவர்கள் நடாத்திய ‘சாந்தி’ என்ற மாத இதழில் “ஞானப்பெண்’ என்ற தொடர்கதையையும் எழுதியுள்ளார். “அழகுசுடும்” என்ற நாவலைச் சுதந்திரனில் தொடராக எழுதினார். நவம், எமன், வைரவன், ஸ்டாம்ப் என பல புனைபெயர்களில் எழுதிய போதிலும் ஆறுமுகம் எனும் இவரது இயற்பெயர் மறையும் விதத்தில் “நவம்’ என்னும் பெயரே பிரபல்யம் பெற்றுவிட்டது.
9ேங்கிய

வெளிவந்த நூல்கள்: 9 ‘நந்தாவதி (சிறுகதைகள்) - பூபாளம் வெளியீடு - 1, டிசம்பர் 1994 0 ‘வாரிசுகள்? - மித்ரவெளியீடு - 55, ஆகஸ்ட் 2011 0 ‘அழகு சுடும் (நாவல்) -2002 0 “குமரிமுதல் சென்னை வரை" -(பயணக்கட்டுரை 1963 - 1964)
மித்ர வெளியீடு, ஒக்டோபர் 2006. 0 நீலவேனி (நாவல்) - அச்சில் - (முன்பு நிழல்மனிதன்” எனும்
தலைப்பில் வீரசேகரி நிறுவனத்தின் மித்திரன் பிரசுரமாக வெளிவந்தது.)
இவரது படைப்புகள் பல வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, சுதந்திரன், கல்கி, குண்டுசி, தமிழின்பம், அமுதம் ஆகிய பத்திரிகைகள்/ சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் பலவும் 1978 இல் மட்டக்களப்பில் வீசிய பெரும் சூறாவளியில் அழிந்து போனமை பெரிய இழப்பே.
குடும்பம்: இவருக்கு இந்தும்தி, முகுந்தன், அரவிந்தன், கீதாஞ்சலி, நளாயினி என ஐந்து குழந்தைகள். இந்துமதி ஆரையம்பதி மக்கள் வங்கி ஊழியர். முகுந்தன் அமெரிக்காவில் புளோரிடா மனடி கம்யூனிட்டி கல்லூரியில் கணிதப் பேராசிரியர். மரபுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர். அரவிந்தன் ஜேர்மனியில் வசிக்கிறார். அரவிந்தன் (நவம் அரவிந்தன்) புதுக்கவிதையில் நாட்டமுள்ளவர். கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ‘காத்திருத்தல் (பூபாளம் வெளியிடு - 2 ஆகஸ்ட் 1995) எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். சிறுகதைகளும் எழுதியுள்ளார். கீதாஞ்சலி கனடாவில் வசிக்கிறார். மட்டக்களப்பின் மரபுக்கலையான நாட்டுக்கூத்தில் ஆர்வமுள்ளவர். நளாயினி அபுதாபியில் வசித்துப்பின் தற்போது கனடாவில் உள்ளார். பி.எச். அப்துல் ஹமீட் நடத்திய ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுவரை முன்னேறிச் சாதனை படைத்தவர். நவம், முகுந்தன், அரவிந்தன் மூவருடைய படைப்புகளையும் உள்ளடக்கியதே “வாரிசுகள்” நூலாகும்.
எழுத்தாளர் நவம் அவர்கள் நாட்டுப்பிரச்சினை காரணமாக 1991 இல் சென்னைக்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், சுவிச்சர்லாந்து உள்ளிட்ட சுமார் பதினாறு ஐரோப்பிய நாடுகளுக்கு மனைவியுடன் சுற்றுப்பயணம் செய்துள்ளார். கனடா ‘கீதவாணி’ வானொலியில் சித்ரா என்பவரும், லண்டன் வானொலியில் திரு.கருணானந்தராஜா என்பவரும், கனடா தமிழ் வானொலியில் வித்துவான் ஞானரெத்தினம் அவர்களும் இவரைப் பேட்டி கண்டனர். கனடா ‘உதயன்’ வார இதழ் பாராட்டு விழா நடாத்தியது. இந்தப் பயணத்தின்போது கிடைத்த சுவையான அனுபவங்களையெல்லாம் *மெளனயூமிகள்’ எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்த்திட்ட
இங்கி

Page 5
மிட்டுள்ளார். தமிழ்நாட்டில் திரைப்பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இவரது குடும்ப நண்பர். ‘புத்தனின் பெயரால்.” என்ற படத்துக்கு இந்தியத் தமிழில் எழுதப்பட்ட வசனத்தை இலங்கைத் தமிழில் எழுதும் வாய்ப்பை நவம் அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தார். பாலுமகேந்திரா இயக்கிய “ஜூலி கணபதி திரைப்படத்தில் ஒரு காட்சியில் நவம் அவர்களை நடிக்கச் செய்தார். கனடாவில் வாழும் இவரது பேரன் சாயிபவித்திரன் தயாரித்து வெளியிட்ட “சிறுக்கி’ என்ற குறும்படத்துக்குத் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
இவர் இலங்கையில் பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டிருந்த அக்காலத்தில் இந்தியாவிலிருந்து கலைஞர்கள் எழுத்தாளர்கள் என யார் வந்தாலும் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டுக் கொழும்புக்கு வந்து அவர்களைச் சந்தித்துப் பேட்டி எடுப்பதையும் இவர் வழக்கமாகப் கொண்டிருந்தார். இவர் முதன்முதல் பேட்டியெடுத்தது இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களைத்தான். தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. சண்முகம், வீணை எஸ்.பாலச்சந்தர், சந்திரபாபு, .பிரண்ட் இராமசாமி, ஜெமினிகணேசன், எம்.என்.ராஜம், கே.பி சுந்தராம்பாள் உள்ளிட்ட பலரை இவர் பேட்டி கண்டுள்ளார். கே.பி சுந்தராம்பாள் அவர்களது பேட்டியை “குமுதம் ஜங்சன்’ இதழில் திரும்ப எடுத்து வெளியிட்டிருந்தார்கள். ஜெமினிகணேசன் பேட்டியை மலேசியாவின் ‘தமிழ்நேசன்’ மறுபிரசுரம் செய்தது.
நவம் அவர்களது முதலாவது தமிழகப் பயணம் 1956 இல் ஆகும். அப்போது சென்னையில் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், அவ்வை சண்முகம், புத்தனேரி சுப்பிரமணியம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். டி.கே.எஸ். சகோதரர்கள், ஜெமினிகணேசன் ஆகியோரது அறிமுகத்தினையும் நட்பையும் பெற்றுக் கொண்டார். இரண்டாவது தமிழகப் பயணம் 1963 இல். தமிழகம், கேரளா என நான்குமாத காலச் சுற்றுப்பயணம். இந்தப்பயண அனுபவங்களைத்தான் *குமரிமுதல் சென்னை வரை” என்னும் பயணக் கட்டுரையாகச் சுதந்திரனில் தொடராக எழுதிப் பின்னர் நூலாக வெளிவந்தது.
அண்மையில் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய மூத்த படைப்பாளிகளுக்கான வவுனியூர் இராமகிருஷ்ண கமலநாயகி தமிழியல் விருதைப் பெற்றார். எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய மேலாளர் ஓ.கே. குணநாதன் அவர்கள் இவ்விருதைச் சென்னையில் இவரது இல்லத்திற்கு எடுத்துச் சென்று வழங்கினார். தற்போது அகவை 83 இலும் சோர்ந்துவிடாது இலக்கியப்பணியில் சுறுசுறுப்பாக இயங்கும் எழுத்தாளர் நவம் அவர்களை நூறாண்டுகாலம் வாழச் செங்கதிர்’ வாழ்த்தி மகிழ்கிறது.
இவர்
- செங்கதிரோன்.

ஒர் ஊரின்கதை.
ஆரைப்பற்றை. இதனை ஆரையம்பதி எனவும் அழைப்பர். இது நான் பிறந்த ஊர். இதனால் வாய்த்த பெருமை மகத்தானது. கிழக்கிலங்கை யிலுள்ள தொன்மையான ஒரு கிராமம். வரலாற்றுப் புகழ் கொண்டது. மதுரையோ, பூம்புகாரோ என இதனை நான் சின்ன வயசில் பிரமித்து மகிழ்ந்ததும் உண்டு. இப்பொழுதும் அந்த மையலிற் சுகிக்கின்றேன்.
- நவம்
தொன்மை வரலாற்றுடன் தொடர்புடையதினால், வேடர் வரலாறும் கிராமத்தின் அயலிலேயே பிணைந்துள்ளது. இலங்கையின் ஆதி குடிகள் இயக்கரும், நாகருமென்று மகாவம்சம் கூற விழைந்த போதிலும், ஆய்வாளர்கள் இவர்களை நாகரிகம் மிக்க திராவிட இன மக்களாக இனங்காணுகின்றார்கள். வேடர்களை விலக்கப்பட்ட இனமாக மகாவம்சம் சித்திரிக்க முனைந்த போதிலும், இலங்கையின் ஆதி குடிகளாக செழுமை சேர்த்தவர்கள் வேடர்கள்! தமிழ்க் கடவுளான முருகன் குற வள்ளியை மணம்புரிந்தது வேடுவ சாதியாரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைகிறது.
முருகனுக்கு கோயில் எழுப்பி, அறுபடை வீடுகண்டு, தமிழகத்தின் பக்தியும் தமிழும் செழித்தன. இதே மரபைப் பின்பற்றி கிழக்கிலங்கையிலும் முருகனினி அறுபடை வீடுகளாக - ஆறு ஸ் தலங்கள் பாராட்டுப்பெறுகின்றன. வடக்கே வெருகல் கங்கையின் கரையில் எழுந்தருளி இருக்கும் சித்திரவேலாயுதர் கோயில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோயில், கோயில் போரதீவு சித்திரவேலாயுதர் கோயில், மண்டுர் முருகன் கோயில், உகந்தை முருகன் கோயில், திருக்கோயில் சித் திர வேலாயுதர் கோயரில் ஆகிய ஆறுமே அவை. கதிர்காமத்தைப் போன்றே மண்டூர் முதலிய முருகன் கோயில் திருவிழாக்களிலே வேடுவக் கன்னிப் பெண்கள் கலந்து கொள்வதும், வேடர் பூசை , வேலன் வெறியாட்டம் என்பன நிகழ்வதும் வேடர்களின் தொன்மையையும் தமிழர்களுடான பக்தி உறவையும் நிலை நாட்டும். புலிஞன், மஞ்ஞன், காத்தான், காங்கேயன் ஆகியன வேடுவப் பெயர்கள். ஆரைப்பற்றை அயலிலே அமைந்துள்ள ஊர்கள் பலவும் இப் பெயர்களினால் இன்றும் வழங்கப் பெறுகின்றன. அவ்வூர்கள் அவ்வப்பெயர் கொண்ட வேடுவ அரசனின் பெயரால் நிலைத்துள்ளன என்பதை சுவாமி விபுலானந்தரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆரைப்பற்றைக்குப் படுவான் கரையில் அமைந்துள்ளது வேடன் கரை. அறுபடை வீடுகளுள் ஒன்றாக எண்ணப்படாவிட்டாலும் ஆரைப்பற்றைக்கு அணி சேர்ப்பது அங்கு எழுந்தருளியுள்ள முருகன் கோயில்.
)ோழி.

Page 6
கிழக்கிலங்கையின் தலைநகராக விளங்கும் மட்டக்களப்பிலிருந்து தென் திசையில் நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது ஆரைப்பற்றை. இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும், கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தெற்கில் ஐந்தாம் கட்டை மண்முனையும், தென் கிழக்கில் பாலமுனையும், தென்மேற்கில் மாவிலங்கைத்துறை. காங்கேயனோடையும், மேற்கில் புகழ்பூத்த மீன்பாடும் தேனாறாம் மட்டக்களப்பு வாவியும் அரண் செய்ய இவற்றுக்கிடையே மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரைப்பற்றை அமைந்துள்ளது. அதில் மா, பலா, வாழை, தென்னை, கமுகு, ஆல், அரசு, வேம்பு, வம்மி(கடம்பு), தேத்தா ஆகிய மரச்சோலை களுக்கிடையே இன்றும் ஒரு கவிதையாகவே ஆரைப்பற்றை காட்சியளிக்கிறது.
குல ஒற்றுமைக்கும் நட்புறவுக்கும் சாட்சி சொல்வதைப் போல குருகுலத்தோர் தெரு, வேளாளர் தெரு, சாண்டார் (பணிக்கர்) தெரு, செங்குந்தர் தெரு, வண்ணார் தெரு, பறையர் (சாம்பான்) தெரு, பொற் கொல்லர் தெரு ஆகிய குலப் பெயர்கள் கொண்டழைக்கப்படும் தெருக்கள் அணிசெய்கின்றன. அத்துடன் அலையன்குளம், ஆனைக்குளம், வண்ணான் குளம், வம்மிக் கேணி, தோணா, பால்வாத்த ஒடை ஆகியன என் ஊருக்கு நீர் வளம் சேர்க்கின்றன. அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர், குழல் போன்ற மரக் கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள். கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் கொட்டுத்தான். தண்ணிர் குளுகுளுவென்று இருக்கும். இந்தக் கிணற்றினைப் பார்த்த யாழ்ப்பாணப் பிரமுகர் ஒருவர் “மட்டக்களப்பார் வலு விண்ணரல்லே? மரத்தைத் தோண்டியல்லே தண்ணிர் எடுக்கினம்’ என்று கூறியதாக ஒரு கதை உண்டு.
ஆரைப்பற்றை என்ற பெயர் பற்றியும் பலவாறு வழங்குவர். ஆரை+பற்றை = ஆரைப்பற்றை. ஆரை என்பது நான்கு இலைகளைக் கொண்ட ஒரு செடி. இப்பகுதியில் இச்செடி பற்றை பற்றையாக வளர்வதால் ஆரைப்பற்றை என தாவரவியல் சார்ந்து தமிழ் மரபு பேணி இப் பெயர் ஏற்படலாயிற்று என்பார் ஒரு சாரார். ஆரை என்பது நீரோடையைக் குறிக்கும் என்றும், நீரோடைகள் இங்கு நிறையக் காணப்படுவதால் இப் பெயர் வந்ததாக இன்னொரு சாரார் கூறுவர். கம்பருக்கும் ஒளவையாருக்கும் வித்துவப் போட்டி நிலைத்ததாக இங்கு கதையுண்டு. அவ்விரு புலவர் மேதைகளும் வித்துவச் செருக்கைக் காட்டுவதற்கு இந்த ஆரைச் செடியைத் துணைக்கு அழைப்பார்களாம். ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் நடந்த போட்டியின் உச்சக் கட்டத்தில் கம்பர் ஏதோ சொல்ல அதற்கு ஒளவை ‘ஆரையடா சொன்னாயடா’ என்று சிலேடையில் பதிலடி கொடுத்தாராம்.
9ேர்.

எட்டே கால் லட்சணமே எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே- முட்டமேர் கூரையில்லா விடே குல ராமன் தூதுவனே ஆரையடா சொன்னாயடா.
ஆரைப்பற்றை என்ற பெயரினை தற்கால இளைஞர்கள் நாகரிகமாக ஆரையம்பதியாக அழைக்கத் துவங்கினரெனச் சிலர் தவறாகக் கருதுகிறார்கள் . ஆரைப் பற்றையையும் காத்தான் குடியையும் எல்லைவகுத்துச் செல்வது எல்லைவிதி. இந்த எல்லை வீதியிலே தமிழ் அடையாளம் பேண 1907 ஆம் ஆண்டில் கட்டப்பெற்ற திருநீலகண்டப் பிள்ளையார் கோயிலின் மணித்துணிலும், 1911ம் ஆண்டு விநாயகப் பெருமான் மீது பாடப்பட்ட பதிகத்திலும் ஆரையம்பதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆக ஆரையம் பதி என்ற பெயரும் பல தலைமுறைகளாகவே நிலைத்து வந்துள்ளது என்பது புலனாகும். ஆரையம்பதியில் மக்கள் குடியேறிய வரலாறு மட்டக்களப்பு மான்மியத்தில் பதிவாகியுள்ளது. இந்நூலே யாழ்ப்பாண வரலாறு சொல்லும் யாழ்ப்பாண வைபவமாலை போல மட்டக்களப்பின் வரலாற்றைச் சொல்லும் தொன்மையான நூலாகும். அதில் காணும் வரலாறு வருமாறு.
குலசேனன் என்கிற கலிங்க தேசத்தான் மகள் உலகநாச்சி என்பாள் இவள் தன் சகோதரன் உலகநாதனுடன் மட்டக்களப்புக்கு வந்தாள். வரும்பொழுது புத்த பிரானுடைய ‘தசனம்’, கைலைமலையில் பெறப்பட்ட ஸ்படிகலிங்கம் ஆகிய இரண்டு புனித சின்னங்களைக் கொண்டு வந்தாள். அப்பொழுது இலங்கையை மேகவண்ணன் என்கிற அரசன் அரசாண்டதாகச் சொல்லப்படுகிறது. அவ்வரசனிடம் உலகநாச்சி புத்த தசனத்தை அன்பளிப்புச் செய்தாள். அதனால் மகிழ்ந்த அரசன் அவள் விருப்பப்படி மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பிரதேசத்தைத் தானமாக வழங்கும்படி மட்டக்களப்புப் பகுதியை அப்பொழுது ஆண்ட தன் நண்பனான குணசிங்கனைக் கேட்டுக் கொண்டார் என்பர். இந்த குணசிங்கனின்
56)).
‘உலகுள்ளோர் புகழ்ந்து வாழ்த்த உற்றவர் விழுந்து போற்றத் தலைவனாய எழுநது மடடக களப்பில் இருந்த காலம் கலைவளர் கலியுகத்து
மூவாயிரத்து ஐநநூறு கடநத காலம புலவர்கள் பாடச் செங்கோல் ஒச்சினான் புரவலன் குணசிங்கன்.?
என “மட்டக்களப்பு மான்மியம்” வரையறை செய்கிறது. மேகவண்ணனின்
9ர்.

Page 7
விருப்பத்திற்கு இணங்க குணசிங்கன் உலகநாச்சிக்குக் கையளித்த பிரதேசமே மண்முனையாகும். இன்று மட்டக்களப்பினை அண்டிய நிர்வாக அலகுகள் மண்முனையை மையப்படுத்தியே வகுக்கப்பட்டு உள்ளன. காட்டைச் செப்பனிட்டு கலிங்கத்திலிருந்து பல குடும்பங்களை வர வழைத்து அதில் குடியேற்றி அப்பகுதியிலே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிகரத்துடன் கூடிய அழகிய கோயிலும் கட்டி குளமும் வெட்டுவித்தாள். இந்த இடம் இன்றும் சிகரம் என்றும் “கோயில்குளம்” என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வுலகநாச்சி குணசிங்கனின் சகோதரனான கிரசரன் என்பவனை மணந்து கனகசேனன், வள்ளி என இரண்டு மக்களைப் பெற்று வாழ்ந்து வந்தாள். தொடர்ந்து இந்தியாவிலிருந்து உலகநாச்சியின் அழைப்பின்பேரில் வந்தோர் வாவிக்குப் படுவான்கரையில் அமைந்த காணிகளிலும் குடியேறி விவசாய வாழ்க்கையை மேற்கொண்டனர். அவர்கள் தமது வழிபாட்டுக்காக கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றீசுவரர் ஆலயத்தை நிறுவினர். இந்தக் கோயிலின் சிறப்பு தேரோட்டமாகும். பெரிய தேர், சித்திரைத் தேர் ஆகிய இத்தேர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்ததாகக் கூறுவர். இந்தக் கோயிலின் தேர்த் திருவிழாவுடன் ஆரையம்பதி ரீ முருகன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உறவு வரலாற்றுக் காலம் முதல் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அமைதியாகவும் இயற்கையின் அருட் கொடையால் கிடைத்த தொழில்களையும் சுகித்து வாழ்ந்த இம் மக்களுடைய வாழ்க்கையிலே போர்த்துக்கேயரின் வருகை மாறுதல்களை நிகழ்த்துவதாயிற்று. 1505 ஆம் ஆண்டில் புயல் நிமித்தம் காலியில் கால் வைத்த போர்த்துக்கேயர் கோட்டை அரசுடன் தொடர்பு வைக்கலாயினர். கோட்டை ராஜ்ஜியம் அவர்கள் கைக்கு வந்ததும் இலங்கையின் ஏனைய பகுதிகளையும் தமது ஆட்சிக்கு உட்படுத்த முனைந்தனர். யாழ்ப்பாண ராஜ்ஜிய வீழ்ச்சிக்குப் பின்னர் கிழக்கில் இருந்த தமிழ்ப் பிரதேசங்களையும் தமது ஆட்சிக்கு உட்படுத்துவதில் தீவிரம் காட்டினர். போர்த்துக்கீசர் தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் தாம் சார்ந்த கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக இந்துக் கோயில்களை இடிக்கலாயினர். இவ்வாறுதான் உலகநாச்சியார் காலத்தில் கோயில் குளத்தில் கட்டப்பட்டிருந்த காசிலிங்கேஸ்வரர் கோயில் போர்த்துக்கீசரால் கி.பி 1627 இல் உடைத்துச் சிதைக்கப்படலாயிற்று. கோயில்குளம் தன் பொலிவை இழந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் வட திசையில் புலம் பெயர்ந்து தற்கால ஆரைப்பற்றை ஊரை நிறுவினர். போர்த்துக்கீசரால் சிதைக்கப்பட்ட ஆலயத்தில் இருந்த நிலைகள், படிக்கற்கள், கருங்கல், தூண்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து தமது புதிய குடியிருப்பில் முருகன் கோயில் ஒன்றைக்கட்டினர். இதுவே இன்றும் “முருகன் கோயில்’ என்றும் ‘கந்தசாமி கோயில்’ என்றும் ஆரையம்பதி மக்களால் பாராட்டப்படுகின்றது.
(10) 0itiúilifies am

இக்கோயில் ஆரம்பத்தில் பிள்ளையார் கோயிலாகவே இருந்ததென்றும் காலப்போக்கில் அது முருகன் கோயிலாக மாறியதென்றும் வரலாறு உண்டு. இச்சந்தரப்பத்தில் மூர்த்திகள் மாறிய வரலாறு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தில் நடந்தமையும் ஒப்பு நோக்கிப் பார்க்கத் தக்கது. அமிர்தகழியில் ஆரம்பத்தில் மாமாங்கேஸ்வரர் கோயிலில் ஈஷ்வரரே மூர்த்தியாக அமைக்கப்பட்டது என்றும் பின்னர் அது மாமாங்கப் பிள்ளையார் கோயிலாக மாறிற்று என்றும் கூறுவர்.
ஆரைப்பற்றையிலே கந்தசாமி கோயிலைத்தவிர பரமநைனார் ஆலயம், திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம், எள்ளுச்சேனைப் பிள்ளையார் கோயில், பேச்சி அம்மன் கோயில், காளி கோயில், சிவன் கோயில், கண்ணகி அம்மன் கோயில், ஆதி வைரவர் கோயில் ஆகிய பல கோயில்கள் வழிபாட்டுக்கு உண்டு. ஆரையம் பதியை நான்கு திசைகளிருந்தும் வரக்கூடிய கெட்ட ஆவிகளிலிருந்தும் பார்வை களிலிருந்தும் பாதுகாக்கும் முகமாக வடக்கிலும், மேற்கிலும் பரமநைனார் கோயில்களும், கிழக்கில் பத்திரகாளி கோயிலும், தெற்கில் ஆதிவைரவர் கோயில்களும் காவல் தெய்வங்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லுகின்றனர்.
மட்டக்களப்புப் பகுதியிலே வேளாண்மைச் செய்கை சித்திரை மாதம் வரை நீடிக்கும். அதனைத் தொடர்ந்து வைகாசி ஆனி மாதங்களில் கண்ணகி, மாரியம்மன், பேச்சியம்மன் சடங்குகள் நடைபெறும். அம்மன் கோயில் சடங்கு காலங்களில் ஊருக்குள் மச்சம் மாமிசம் உண்பது தவிர்க்கப்படும். ஊர் முழுவதும் தூய்மையும் பக்தி உணர்வும் குடி கொண்டு விடும். வேப்பிலை வாசமும் கமுகம் பூ வாசமும், சந்தன வாசமும், கற்பூர சாம்பிராணி வாசமும், தாமரை முதலிய பூக்களின் வாசமும் ஊர் முழுவதும் ஆக்கிரமித்து விடும். சிலம்பின் ஒசையிலும், உடுக்கின் ஒசையிலும் ஊரே ஒரு தெய்வீகக் கோலம் கொண்டுவிடும்.
மட்டக்களப்பு மாவட்டம் வடக்கே வெருகல் கங்கை முதல், தெற்கே குமுண (Kumna) ஆறுவரை பரந்து கிடந்தது. சுதந்திரத்திற்கு பிற்பட்ட மாறுபட்ட அரசியல் காரணங்களினால் 1963ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் ஒன்று தனியாக அதிலிருந்து கல்லியெடுக்கப்பட்டது. அதற்கு முன்னிருந்த நிலையை பிராமிக் கல்வெட்டுக்கள் ஐந்து நிர்வாகப் பற்றுக்களைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பினைக் குறிக்கின்றன. அவையாவன (1) கோரளைப்பற்று (வாழைச்சேனை, ஏறாவூர்) (2) விந்தனைப்பற்று (மகாஒயா) (3) மண்முனைப்பற்று (மட்டக்களப்பும் பிரதேசங்களும்) (4) வேகம் பற்று (இங்கினியாகல போன்றன) (5) சம்மாந்துறைப்பற்று (இதனுடன் அக்கரைப்பற்றும் பாணமைப் பற்றும் இணைத்துச் சொல்லப்படும்)
மட்டக்களப்புப் பிரதேசத்தில் தமிழரும் முஸ்லீம்களும் அடுத்தடுத்த பிரதேசங்களில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். குழல் புட்டு அவிக்கும்
0ேவழி.

Page 8
பொழுது மாவும் இடையிடையே தேங்காயும் இட்டு அவிக்கப்படுவது போல இவை அழகாக அமைந்துள்ளன என்று அக்காலப் பேச்சாளர்கள் குறிப்பிடுவது வழக்கம். இத்தகைய அமைதியைச் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அரசியல் வாதிகள் குலைத்துவிட்டமை நெஞ்சுக்கு வருத்தமாக உள்ளது. ஆனால் ஆரைப்பற்றை முஸ்லீம் கிராமங்கள் சூழ்ந்த பழம்பெரும் தமிழ்க் கிராமமாகச் செழித்து வளர்ந்துள்ளது. ஆரையம்பதியைச் சுற்றி காத்தான்குடி, காங்கேயன்ஓடை, பாலமுனை, ஒல்லிக்குளம் ஆகிய முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்கள் உள்ளன. தமிழ்க் கிராமத்தின் மணியோசை முஸ்லிம் கிராமங்களிலும் முஸ்லிம் கிராமங்களில் எழும் புனித தொழுகை ஒலி தமிழ்க்கிராமங்களிலும் கேட்பது தொன்று தொட்டு நிலவி வந்துள்ள தெய்வ பந்தமாகும். ஹஜ்ஜுப் பெருநாள் நோன்புப் பெருநாள் ஆகிய காலங்களில் காத்தான்குடி வீதிகளில் முளைத்து விடும் தற்காலிக பஜார்களில் தேன்குழல், அல்வா, தொதல், பூந்தி ஆகிய இனிப்பு வகைகளை உண்டு மகிழ்ந்தமை என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. தமிழ் நண்பர்களை வரவேற்று உபசரிப்பதிலும் அவர்கள் தேன்குழல் போன்ற தித்திப்பை இணைத்தனர். அவ்வாறே வேற்றுமை பாராட்டாமல் ஆரைப்பற்றையில் நடக்கும் கலை நிகழ்ச்சி போன்றவற்றில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொள்வதுண்டு.
ஆரைம்பதி நொத்தாரிஸ் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற நான் எஸ்.எஸ்.சி பரீட்சை சித்தி எய்தும் வரை காத்தான்குடியில் அமைந்துள்ள ஆறாம் குறிச்சி சென்றல் ஸ்கூலிலேயே படித்தேன். அக்காலத்தில் என்னுடன் நட்புப் பாராட்டிய ஆதம்லெப்பை, உதுமாலெப்பை, பாட்டுக்கார ஜவாத், இஸ்மாயில், இராசாத் தம்பி, H.M. அலி மற்றும் சில முஸ்லிம் நண்பர்களின் பெயர்களும் முகங்களும் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன. இன்று பிரபல எழுத்தாளராகத் திகழும் அன்புமணியும் கல்வி பயின்றார். அவரும் நானும் இணைந்து “பாரதி” என்ற கையெழுத்துப் பத்திரிகையை மாதந்தோறும் வெளியிட்டோம். பத்திரிகை நடத்தும் ஆசை பள்ளிப்பருவத்துடன் நின்று விடாது பிற்காலத்தில் அச்சுவாகன மேறிய “மலர்” என்னும் மாதப் பத்திரிகையை நடத்தி அன்புமணி திருப்தி கண்டார்.
அந்தக் காலத்தில் மட்டக்களப்பு வாவி போக்குவரத்திற்கான இலகு சாதனமாக அமைந்தது. கல்வீதிகள் அமைக்கப்படாத காலத்தில் நீர்ப்போக்குவரத்து செளகரியமானதாகவும் இருந்தது. ஆரையம்பதி, மட்டக்களப்பு வாவிக் கரையிலேஅமைந்த முக்கியமான துறைகளில் ஒன்றாகச் செழித்தது. தீர்வைத்துறை, கிட்டங்கித்துறை என்ற துறைகள் இருந்தன. இன்றும் இப்பெயர்கள் வழங்குகின்றன.
1924 ஆம் ஆண்டுதான் கல்லடிப்பாலம் கட்டப்படுவதாயிற்று. இப்பாலம் மட்டக்களப்பினையும் தென்பகுதியையும் புகையிரதப் பாதை மூலம்
(12) Fiúsas 20

இணைப்பதற்காகக் கட்டப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. இதற்கு முன்னர் மக்கள் போக்குவரத்துக்கூட வாவியின் ஊடாகவே நிகழ்ந்தது. வள்ளம், தோணி, ‘வோர்ட்’ ஆகியன பயன்படுத்தப்பட்டன. தேங்காய், கொப்பரா, அரிசி, தவிடு, கயிறு முதலியன உருக்கள்’ மூலம் இங்கிருந்து ஏற்றுமதியாகின. கொழுக்கி ஒடு, வெங்கலச் சாமான்கள் ஆகியன இங்கு இறக்குமதியாகின.
ஆரைப்பற்றையின் மேற்கு எல்லையாக இருக்கும் வாவி வடக்குத் தெற்காக முப்பத்திரெண்டு மைல் நீளத்திற்குப் பரந்து கிடக்கிறது. இந்த வாவி மீன்பிடிப்போருக்கு ஜீவனம் நடத்தும் வளத்தினை அளித்து வருகின்றது. மீன்பிடிப்போர், இறால்வலை வீசுவோர், நண்டுக்கூடு போடுவோர். வாவியில் நண்டுகளுக்கு மட்டுமன்றி ஓரா மீனுக்கும், செத்தல் மீனுக்கும் கூடு வைப்பதுண்டு. சில காலங்களில் வாவிக்கரையில் அத்தாங்கின் மூலம் இறால் பிடிப்பதுண்டு. தென்னோலை மடித்து இறால் கட்டுவதும் உண்டு. மட்டுறால் பிடிக்கும் காலத்தில் இது பம்பல். எங்கள் பகுதி மக்களுக்கு அது வாவியல்ல; தாய்ப்பால்!
இந்த வாவியிலேதான் என் தகப்பனார் தொழில் செய்து, எங்களை வளர்த்தார். என் சிறுவயதில் இரவு மீன் பிடிக்கத் தன் கூட்டாளிகளோடு தோணி தள்ளிய என் அப்பாவின் வருகைக்காகக் கூட்டத்தோடு கூட்டமாக நான் காத்துநிற்பேன். மட்டக்களப்பு வாவியுடன் அப்பாவுக்கு நல்ல தோழமை. வலை, தோணிச்சிரட்டை, சாப்பாடு கொண்ட உறி, வெற்றிலைக் குட்டான், தோணியில் அடித்து மீனைக்கலைக்கும் பொல்லு, சவள், கொல்லா ஆகியவற்றோடு தன் தொழில் கூட்டாளி சகிதம் அவர் ஆற்றில் தோணி தள்ளுவதே ஒரு கவிதை. இரவெல்லாம் மீன் பிடித்து அதிகாலையில் தோணி கரைதட்டிவிடும். கரையில் நிற்கும் நான் தோணி தரை தட்டுவதற்கு முன்னாலே ஆற்றில் இறங்கிவிடுவேன். அவ்வளவுக்குப் பொறுமை இருக்காது. ‘செக்கலோடு இரவு பிடித்த மீனை ஒதுக்கிவிட்டு விடியச்சாமம் பிடித்த உயிர் மீன்களாகத் தெரிந்து கறிக்கு எடுத்துக் கொள்வோம். இதற்குள் மீன் வியாபாரி கூடையோடு ஆற்றுக்குள் பாய்ந்து மீன்களைக் கோலி அள்ளிக் கொள்வான். மீன்கள் கூடைக்குமாறியதும் தோணியைக் கரைக்கு இழுத்து தண்ணி வடிவதற்காகக் குப்புறக் கவிழ்த்துவிட்டு ஈரவலையை அள்ளி சால்வைபோல் தோளில் போட்டுக் கொண்டு மறக்காமல் உறி, சிரட்டை, வெற்றிலைக்குட்டான், பொல்லு முதலியவற்றை எடுத்துக் கொண்டு வலையில் கட்டிய மரச்சில்லு ‘தாளம்’ போட வீட்டுக்கு வருவோம். அப்பொழுது அப்பாவின் உடம்பிலிருந்து ஓர் ஆற்றுமணம் வீசும். அந்தவாசனை இன்றும் எனக்கு இனிமையானதாக உணர்கின்றேன். மீன்களோடு இன்னொன்றையும் கொண்டுவருவார். அது கிண்ணம் பழம். ஆற்றின் மறுகரையில் வளரும் சதுப்புநிலக் கண்ணாச் செடியில் காய்ப்பது இது. பச்சை நிறத்தில் தலையில் ஒரு தொப்பி அணிந்தது போல அது தோன்றும். இத்தொப்பியைத் திருகி எடுத்தால் உச்சி சிவப்பாக இருக்கும். அதன் தொளதொளப்பைக் கொண்டு
9ேர்.

Page 9
பழுத்துவிட்டதை அறியலாம். காலையில் தண்ணிச் சோற்றில் தேங்காய்ப்பூ, உப்பு, கதிப்பாகச் சீனியுடன் கிண்ணம் பழத்தையும் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் நிறைவாக இருக்கும்.
எங்கள் பகுதியில் உள்ள தேசிய கனிகளுள் கிண்ணம் பழம் முக்கியமானது. வேறு தேசிய கனிகளும் உள. கிழக்குப்புறமாக காட்டு ரோட்டைத் தாணி டி கால வைத்தால் , குணுக்கு குணுக்கான பற்றைக்காடுகள். எங்கள் ஊரின் தேசியக் கனித்தோட்டம் இதுதான்! நாவல், முந்திரி, ஈச்சை, கறுக்கா, காரல், துவரை, மருங்கை, சேணை, கிளா, சிமிட்டி முதலிய தேசிய கனிகள் காலத்துக்குக் காலம் பழுத்துக் குலுங்கும். கணிகளென்றில்லை, எங்களுரில் சில தேசிய மலர்களும் உண்டு. கணங்காப்பூ (செண்பக மலர்), தாமரை, திருக்கொன்றை, வம்மி, கடம்பு, கோடைப்பூ (இது தோணாவில் வளரும் நீர்ப்பூ. பொங்கல் காலத்தில் இதற்கு ஊரில் பலத்த கிராக்கி). இவற்றுள் கணங்காவும், வம்மியும் பூக்கும் காலத்தில் ஊர் முழுவதும் இந்த மலர்களின் வாசனையில் நிரம்பி இருக்கும். ஆரையம்பதியின் தாவர இயலைக் குறிப்பிட்ட நான் இம்மண்ணுக்குரிய கீரைவகைகளையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். குமுட்டி, நத்தைச் சூரி, திராய், குறிஞ்சா, பால் குறிஞ்சா, முல்லை, முசுட்டை, மான்பாஞ்சான், வாதமடக்கி, மொசுமொசுக்கை, காரல், கானாந்தி எனப் பட்டியல் நீளும். இவற்றைச் சுவையாக ஆக்குவதற்கு எங்கள் கிராமத்திற்கென்றே தனிப்பாகமுறைகள் இருந்ததாக ஆரையம்பதி தாய்க்குலம் பெருமைப்படுவதை நான் அறிவேன்.
ஆரையம்பதி மக்களின் தொழில் பன்முகப்படுத்தப்பட்டது. தெருப்பெயர்களே சில குலத் தொழில்களைச் சொல்லும். அக்கரையில் - படுவான்கரையில் - களனி நிலம் கண்டு விவசாயம் செய்வோர் உண்டு. மீன்பிடித் தொழில், தும்புத்தொழில், கயிறு திரித்தல், தும்புத்தடி கட்டுதல், (மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இதற்கு நல்ல மானம்) வன்ல பின்னுதல், தோணி வெட்டுதல், வைத்தியம், சோதிடம், பிரம்புத் தொழில், மந்திரம் என இப்பட்டியல் நீளமானது. ஆங்கிலக் கல்வியின் வரவாலே பயன்பெற்று உயர் அரசாங்க உத்தியோகங்களிலே அமர்ந்தும் என் பிறந்த மண்ணுக்குப் பலரும் பெருமை சேர்க்கிறார்கள்.
எழுவானில் வங்காள விரிகுடாவும், படுவானில் மட்டக்களப்பு வாவியும் தழுவும் பிரதேசம் ஆரையம்பதி என்பது மீண்டும் அழுத்தம் பெறுவதை விரும்புவேன். கடலிலும் உப்புநீர் வாவியிலும் உப்புநீர். இதனாற் போலும் உப்பிட்டவரை உள்ளவும் நினைக்கும் நன்றி உணர்வு அம்மண்ணின் மைந்தருக்கு உண்டு. அத்துடன் அவர்கள் ரோஷம் பாராட்டும் மானவீரர்களாகவும் வாழ்கிறார்கள்.
நன்றி : “வாரிசுகள் - நவம், முகுந்தன், அரவிந்தன் - மித்ர வெளியீடு,
ஆகஸ்ட் 2001)
9ேர்.

கலட்டியன் உயிர்த்
தழுந்த ஞாயிறு
தீரன் ஆர்.எச். தொvைத்
பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் அந்தச் சமரசம் உலாவும் இடத்திலிருந்த ஒரு பழமையான கட்டாந்தரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தீடீரெனப் பிளந்தது. அதனுள்ளிருந்து மெதுவாக வெளியே வந்தான் கலட்டியன். 1698ம் ஆண்டு கலட்டியனை இங்கே புதைத்திருந்தனர். 2008 ல் வெளியே வந்த கலட்டியன் ஒரு கணம் திகைத்து நின்றான்.
ஒளிவெள்ளம் கூசியது. இது என்ன ஒளிமயம்.? பின் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு கூரப்பெற்றான். ஆ. நான் கலட்டியன். வீட்டுக்குப் போக வேண்டும். பயத்துடன் மெதுவாக மயானத்தை விட்டும் வெளிவந்தான். வீடு எந்தப்பக்கம்.? ஒரு உத்தேசமாக தெருவுக்கு வந்தான். இது நமது ஊருதானா..?
கலட்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை. நமது தெரு எவ்விடத்தில்..? கலட்டியன் தலை குழம்பிப் போய் தெருவில் நடந்தான். ஒருவரையும் அவனுக்குத் தெரியவில்லை. அவனையும் ஒருவருக்கும் தெரியவில்லை. 1698ல் தான் வசித்த வீடு தேடி நடந்தான் கலட்டியன்.
ஒரு இலக்கும் தெரியவில்லை. இல்லாத கால்கள் போகிறபோக்கில் நடந்து கொண்டிருந்தான் கலட்டியன். அவன் வாழ்ந்த இடத்தைக் காணவில்லை. கொங்றிட் கட்டிடங்கள் நீண்டுயர்ந்திருந்தன. எந்தப்பக்கம் திரும்பினாலும் சீமேந்துக் கட்டிடங்கள். 1600 களின் ஒரு தடயம் கூடக் காணப்படவில்லை. வீடு எந்தப் பக்கம்.? சும்மா ஒரு உத்தேச திசையில் நடந்த கலட்டியன் நகரத்தின் நவீன சந்தைப் பக்கம் வந்து சேர்ந்தான்.
கண்கவர் வர்ணக் கடைத்தெருக்கள். இனந்தெரியாத பொருட்கள் விற்பனைக்கிருந்தன. என்னென்ன பொருட்கள். இவற்றை எப்படிப் பாவிப்பது. என்றெல்லாம் புரியவில்லை. வழியில் ஒரு கடைக்குள் நுழைந்தான். இவையெல்லாம் என்ன. எலக்ரிகல் ஹிற்றர்கள் மாலைமாலையாய்த் தொங்கின. கொம்பியூட்டர்கள். அதன் ஸ்பீக்கர் மவ்ஸ் மொனிட்டர்கள் சகிதம் ஏராளமாய் அடுக்கப்பட்டிருந்தன. பேஸ் மைக்குகள் உருண்டை தட்டை வடிவங்களில் இயர்போன் இலவச இணைப்புகளுடன் பரத்தியிருந்தன. கல்குலேட்டர்கள் ஆயிரக்கணக்கில்
(6) 0itisfiles ag

Page 10
கண்சிமிட்டின. நியொன் பல்புகள் ஒளிவெள்ளம் பாய்ச்சிக் கொண்டிருந்தன. மைக்ரோ ஒவன்கள். ரைஸ் குக்கர்கள். ப்ருற் பிளண்டர்கள். வோஷிங் மெஷின்கள். கூரையில் சுவரில். விதவித வடிவத்தில் 'போன்கள். இவையெல்லாம். என்ன எதற்காக? நமது வீடு எந்தப்பக்கம்.?
கடைத் தொகுதியை விட்டும் வெளியே வந்தான். வாகன நெரிசல்கள். .. ஆ. எத்தனை விதவித கார்கள். பஸ்கள். ஒட்டோக்கள். பார வண்டிகள். டிப்பர்கள். மேலே உறுமிப்பறக்கின்ற விமானங்கள். இதெல்லாம் என்னென்ன வாகனங்கள். எப்படி இவ்வளவு வேகமாகவும் ஒழுங்காகவும் செல்கின்றன.? வாகனங்கள் தவிர சிறுவர்கள். பெண்கள். வாலிபர்கள். வயோதிபர்கள் ஆயிரமாயிரம் மனிதர்கள். நெரிசல்கள். எனின இது? நமக்குப் பிறகு இந்த ஊரில் ஒருவரும் மரணிக்கவேயில்லையா? கலட்டியன் மனிதவெள்ளத்தினூடே தனக்குத் தெரிந்த ஒரு முகம் தேடி நடந்தான். தன் இன மனிதர்கள் யாரையாவது தேடினான். . ஒரு முகம் கூடத் தெரிந்த முகமாயில்லை. வீடு எந்தப் பக்கம்.?
ஒரு இடத்தில் பெரிதாகச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒன்றும் புரியாவிட்டாலும் அந்த வீட்டின் உச்சியில் கட்டியிருந்த இரும்புக் குழாய்களிலிருந்துதான் அந்தச் சத்தம் வருகிறதென்றும் அது ஒரு பாடல் என்றும் புரிந்தது. என்ன மொழிப்பாடல்..? மொழியும் புரியவில்லை. எத்தனையோ பேரிடம் விசாரித்தான். கலட்டியனின் “காற்றுமொழி யாருக்கும் கேட்கவில்லை. தனது மொழி மனித மொழியல்ல என்று புரியாத கலட்டியன் கோபமுற்று சிலருக்கு அடித்தான். அடிபடவில்லை. சிலரின் கழுத்தை முறித்தான். முறிபடவில்லை. தனது இன்மைக் கைகளால் ஏதும் செய்ய முடியாதென்றுணர்ந்தான். “ஹோ..! என்று கத்தினான். விசாரிப்பதை விட்டு விட்டு தெருத்தெருவாக அலைந்தான். அந்தத் தெருக்களின் பெயர்களையும் கலட்டியனால் வாசிக்க முடியவில்லை. 1698வரை கலட்டியன் பள்ளிக்கூடமே தெரியாதவன். அந்நேரம் தான் கொஞ்சமாவது படித்திருக்கவில்லையே என்று கலட்டியன் இப்போது மிகமிக விசனப்பட்டான். நமது வீடு எந்தப்பக்கம்.? மறுபடியும் அலைந்து திரிந்தான் கலட்டியன். வீட்டைக் கண்டுபிடிக்கக் கூடிய எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.
அலைவதை நிறுத்திய கலட்டியனுக்குத் திடீரென ஒரு யோசனை பிறந்தது. நகரத்தின் உச்சியில் போய் நின்று பார்த்தால் பழைய குக்கிராமத்து எச்சசொச்சங்கள் ஏதும் தெரிகிறதா என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தான். உடனே நகரத்தின் கட்டிடங்களில் மிக நீண்டுயர்ந்திருந்த கட்டிட உச்சிக்கு ‘விசுக் கென்று தாவினான். வீடு எந்தப்பக்கம்.?
இப்போது நகர வீதிகள் எல்லாமே தெரிந்தன. ம். ரயில் த் தண்டவாளப்பாம்புகள் பின்னிப்பின்னிப் பிரிந்தன. கார்ப்பெட் தார் வீதிகள் மரவட்டைகளாக ஊர்ந்தன. ஒழுங்கைகள் மண்புழுக்களாக நெளிந்தன. நன்றாகக் குனிந்து தேடினான். இத்தனைக்கும் மத்தியில் தனது தெருவைத் தேடினான். தன் வீட்டுப் பக்கம் இருந்த பிரமாண்டமான ஆலமரத்தைத் தேடினான். வீட்டின் பின்பக்கமாகப் பரந்திருந்த
9ேர்.

பிராமண்ணமீசைப் புதர்களையும், வெண்மணற் பரப்பையும் புன்னலைச் சிறு காடுகளையும், மேய்ச்சல் தரையையும் தேடினான். ஒன்றையும் காணவில்லை. பார்க்குமிடமெல்லாம் நீண்டுயர்ந்திருந்த கட்டிடங்கள். கட்டிடங்கள், நிர்மாணங்கள், மாளிகைகள். எல்லாம் சீமெந்துக் காடுகள். பாரிய புகைபோக்கிகள். நவீனசெய்மதிக் கோபுரங்கள். வானியல் கருவிகள். விதவிதமாகப் பாரிய வாகனங்கள். மனிதர்கள். மனிதர்கள். மனிதர்கள். அடச் சே. அலுத்துப்போன கலட்டியன் அப்படியே கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்து விட்டான். வீடு எந்தப் பக்கம்? என் வம்சாவழியினர் யாவர்.? என் தெரு எது.? பதில்லாத கேள்விகள்.
செய்வதறியாது நவீன நகரத்தை பார்த்துக் கொண்டிருந்த கலட்டியனின் உணர்கண்களில் சட்டென ஒரு இடம் புலப்பட்டது.இது.? ஆமாம். இது ஒரு புனித தந்தையாரின் அடக்கஸ் தானம். சுற்றி வர நவீன தளமமைக்கப்பட்டு அதி உச்சப் பாதுகாப்பாக கொங் றீட் அறைக்குள்ளிருந்தாலும் அந்த அடக்கஸ்தானத்தின் தலைமாட்டில் ஊன்றப்பட்டிருந்த அதே பழைய ஒரு மரப்பலகையைக் கண்டான். அம்மரப்பலகையில் 1608 என்று பொழியப்பட்டிருந்தது. இந்த எழுத்துக்கள் மட்டும் கலட்டியனுக்குத் தெரியும். தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இதே மரப் பலகையில்தான் கலட்டியன் தலை சாய்த்திருப்பது 6p8585D.
அப்போது அந்த அடக்கஸ்தலத்தைச் சுற்றி எவ்விதமான கட்டிடங்களும் இருந்ததில்லை. வெறும் புற்றரையில் சற்று மேட்டுப் பாங்காக வெறும் மணல்மூடி யாரையோ இங்கே அடக்கம் செய்திருந்தார்கள். இதில் அடக்கப்பட்டிருப்பவர் ஒரு மகா புருஸர் என்றும் அவர் பல அற்புதங்கள் நிகழ்த்திய ஞானி என்றும் ஊர் மக்கள் கூறும் சம்பவங்களை கலட்டியன் கேள்விப் பட்டிருக்கிறான். அவன் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்னரே இவர் இறந்திருந்தார். அனைவரும் அவரது அடக்கஸ்தலம் வந்து மரியாதை செய்வதை கலட்டியன் கண்டிருக்கிறான் அந்த மரப்பலகையில் பொழியப்பட்டிருந்த 1608 க்குள் கலட்டியன் தன் விரலைவிட்டு எழுதிப் பார்த்த ஞாபகம் திடீரென வந்தது.
புதிய உத்வேகமுற்ற கலட்டியன் ‘விர்’ரென்று கீழே தாவி வந்து அம் மரப்பலகையில் குதித் தான். உடனே குனிந்து அந்த அடக்கஸ்தலத்தை முத்தமிட்டு மரியாதை செய்தான். புனிதரே என் வீட்டைக் காட்டியருளும் என்று பிரார்த்தித்தான். அடக்கஸ்தலத்தின் கால் பக்கம் மிக நெருங்கி நின்றிருந்தான். இன்னும் சில மனிதர்கள் பாதுகாப்பு அரணுக்கப்பாலிருந்து இந்த அடக்கஸ் தலத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தனர். இப்போதும் இதற்கு இருக்கும் ஆற்றலை எண்ணி வியப்படைந்த கலட்டியன் மீண்டும் புனிதருக்கு மரியாதை செய்து விட்டு வெளியே வந்தான். தான் வந்த வேலையில் குறியானான். வீடு இங்கிருந்து வடக்குப் பக்கமாகத்தானிருந்தது? இதிலிருந்து வடக்காகப் போகும் ஒ.? இதுதான் நமது தெரு. ரெட்டாலைத் தெரு. ரெட்டாலைகளைக் காணவில்லை. மேம்பாலம் குறுக்காக உயர்ந்திருந்தது. அதிநவீன கார்ப்பட் சாலை தெரிந்தது. வாகனங்களும் மனிதர்களும் அடர்ந்திருந்தனர். சந்தியில் பாரிய உயரத்தில் தொடர்பாடல் சேவை விளம்பரங்கள்.
ina. -

Page 11
அதி நவீன கட்டிடங்கள் கண்ணாடி அரிதாரம் அணிந்து பளபளத்தன. கச்சிதமாக நிர்மாணிக்கப்பட்டவை. மேலும் உயரமாகி உருவாகிக் கொண்டிருப்பவை. அனைத்தும் விண்ணை எட்ட ஆசைப்பட்டுக் கொண்டிருந்தன. கலட்டியனுக்குப் பயமாக இருந்தது. எங்கே பிராமண்ண மீசைப்புதர்கள். வெண்மணற் பரப்பு. புன்னலைச் சிறுகாடுகள். மேய்ச்சல்தரை.?
ரெட்டாலைத் தெருவில் நான்காவது வீடு கலட்டியனுடையது. தயங்கியபடியே அத்தெருவுக்குள் நுழைந்தான். ஒரு உத்தேசத்தில் நான்காவது வீட்டினை அடைந்தான். அவ்விடத்தில் மூன்றடுக்கு மாளிகை ஒன்று ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. மாபெரிய எழுத்துக்களில் “கலற்றியர் இன்டர்நஸனல் எக்ஸ்போர்ட் பிரைவெட் லிமிட்டட்” என்று பெயர்ப்பலகை. வாசிக்கத் தெரியவில்லை. கீழே. எழுபது வாகனங்கள் இரண்டாயிரம் மனிதர்கள் மின்னியல் கருவிகள் எல்லாம் பிரமிப்புடன் மிரட்டின. 1618 இல் கலட்டியன் புழுதியோடு ஒடித் திரிந்த இடம் எது.? எங்கே? அந்த வீடு.? யார் இவர்கள். என் வம்சாவழியினரா? என்ன மொழி பேசுகிறார்கள்.? இங்கு என்ன செய்கிறார்கள்.?
கலட்டியனுக்குள் ஒலித்த ஓராயிரம் கேள்விகளுக்கும் விடையளிக்க எவருமிலர். துன்பம் பெருகி விம்மித் தொண்டையை அடைத்தது. ஓரிடத்தில் உட்கார்ந்து அழுதான். தேற்றுவாரின்றி ஓய்ந்தான். பின் வெறுப்புடனும் விரக்தியுடனும் தன் வீட்டையே (?) பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மாளிகைக்குள் போவோரும் வருவோருமாக நூற்றுக் கணக்கில் மனிதர்கள். தானும் அதற்குள் நுழைந்து பார்த்துவிட ஆவல் கொண்டான் கலட்டியன். உடனே ‘விசுக்கென்று தாவி பிரதான வாயில் ஊடாக மாளிகைக்குள் நுழைந்தான். உள்ளே மாளிகையின் அமைப்பே வியப்பூட்டியது. எல்லா இடமும் சுற்றிப் பார்த்தான். தரையெல்லாம் அதி நவீன கம்பளி கார்ப்பட்டுக்கள். பிரமாண்டமான ஒளியூட்டிகள். சில்லென்ற குளிர் தளம். “ஜெலட்டினால் உருவாக்கப் பட்டிருந்த பெரியரெட்டாலை மரம். ஆம் செயற்கை மெழுகினால் அச்சு அசலாக வார்க்கப்பட்டிருந்த ரெட்ட்ாலை மரம். அதன் மெழுகு இலைகள். வாய் பிளந்தான் கலட்டியன். ம். இது நிச்சயமாக நம் வீடுதான். அதி நவீன ஆசனங்கள். பட்டுப்படுதாக்கள் போர்த்திய பாரிய மணிக்கதவங்கள். ஒரு மூலையில் செயற்கை நீர் வீழ்ச்சி. அதில் லவ்பேர்ட்ஸ்கள் வர்ணங்கள் பலவாய். நீர்க் காட்சிகள். மேற்குப் பக்கமாக பாரிய மீன் தொட்டி. பற்பல வர்ணங்களில் வியப்பூட்டும் பெரிய சிறிய மீனினங்கள். பற்பல விஞ்ஞானக் கருவிகள். எண்ண முடியா பெரிய பெரிய அறைகள்.
களைத்துப்போய் முன் தளத்திற்கு வந்தான். பளிங்குச் சுவர் ஓடுகள் பொருத்தி நீண்டுயர்ந்திருந்த சுவரின்மீது தலைக்கு மேல் வரிசையாக நான்கு புகைப்படங்கள் மாபெரிய பளிங்குச் சட்டங்களிடப்பட்டுத் தொங்கின. அப் புகைப்படங்களைக் கண்ட கலட்டியன் மாபெரும் அதிர்ச்சி அடைந்தான். “ஆஆஆ. மகனே!” என்று காற்றுமொழியால் கத்தினான்.
அந்தப் புகைப்படங்களில் முதலாவது இருப்பது கலட்டியனின் மகன்தான்.
9ேங்க

மிகப்பழைமையான மார்பளவு உருவப்படம். தலையில் விசிறிக் கட்டுத் தலைப்பாகையும் திவான்கள் அணியும் மேற்சட்டையும் அணிந்து கீழே "ஆவுடையார் அவக்கர் கலட்டியன் அவர்கள்’ 1659 - 1703 என்று பளபளக்கும் பித்தளைத் தகட்டில் பொழியப்பட்டிருந்தது. இது கலட்டியனின் மகனேதான். அடுத்த புகைப்படத்தில் வடநாட்டுக் கோட்டும் துருக்கித் தொப்பியும் அணிந்து கொண்டு கலட்டியனின் பேரன். கீழே ‘கோலமுழுதுடையார் கோசுத்தம்பி கலட்டியன் அவர்கள்’ 1690 - 1772 என்றிருந்தது. கலட்டியன் தன் மகன் நாற்பது வயதாக இருக்கும் போதே தனது தொண்ணுாறாவது வயதில் காலம் சென்றுவிட்டதால் பேரனின் முகம் தெளிவாக ஞாபகமில்லாவிட்டாலும் கூட மிக இலகுவாக இனம் கண்டு கொண்டான். அதற்கடுத்த புகைப்படத்தில் ஆங்கிலேயத் தொப்பியணிந்து பூரண கோட்சூட் சகிதம் காட்சியளித்தவரின் பெயர் ‘ஸர் ஆவுடையார் ஒதுமார் கலட்டியர் அவர்கள்’ 1720 - 1804 என்றிருந்தது. இந்த வரிசையில் இறுதிப் புகைப்படம் ஆங்கிலேய பாணி உடையுடன் ஆனால் மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு “கோசுக் கண்டு ஆவுடையார் செல்லக் கலற்றியர். இலண்டன் சட்டவாக்கசபை உறுப்பினர் அவர்கள்’ 1851 - 1940 எனக் காட்சியளித்தார். இப்புகைப்படங்கள் ஒவிய வரைபுகளாக அதி தெளிவான பிம்பங்களுடன் உயர்ரக வேலைப்பாடுமிக்க சட்டங்களுக்குள் அடக்கப்பட்டு வரிசையாயிருந்தன. கலட்டியனுக்கு வாசிக்கத் தெரியாமல் சும்மா தன் பரம்பரையினரின் செல்வத்தையும் கம்பீரத்தையும் வாய் பிளந்து பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். தனது பரம்பரையை ஒரே வரிசையில் கண்ட கலட்டியன் மகா திருப்தியுற்றான். புதை குழியை விட்டும் வெளியே வந்ததற்கு உண்மையில் மகிழ்ந்தான்.
இவர்களில் எவரும் தற்போது உயிருடன் இல்லை என உணர்ந்து பெருங்குரலெடுத்து அலறினான். சற்று நேரத்தில் தானாக அழுகையை நிறுத்தி விட்டான். மீண்டும் மிக விசித்திரமாகத் தன் பரம்பரையினரை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பெண் மக்களைத்தான் காணக் கிடைக்கவில்லை. நமது வம்சாவளியில் பெண் மக்களே இல்லையா எனச் சந்தேகப்பட்டான். பெண் மக்களை அல்லது பேரப் பெண்களில் ஒருவரையாவது காணமாட்டோமா என்று ஆதங்கப்பட்டான். அவனது ஏக்கம் உடனே தீர்ந்தது.
காரணம் அந்த மண்டபத்தின் வலது பக்க அறைச்சுவரில் அதி நவீன வர்ணமயமான ஒரு பெண்மணியின் பெரிய மார்பளவு புகைப்படம் தனியாகத் தொங்கியது. அதைக் கண்ட கலட்டியன் அதிர்ச்சியில் கத்தியே விட்டான். அப்படம் அவனது மனைவி சிங்கிண்ணிநாச்சியின் முகத்தைப்போலவே சாடையாக இருந்தது. அவ் வர்ணப்படத்தின் கீழே மிஸிஸ்.ஆர்.ஜே. கலட்டியர் அம்மணி (மாண்புமிகு அமைச்சர், தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சு) என்றிருந்தது. வாசிக்கத் தெரியாவிட்டாலும் அந்தப் பெண்மணியின் கம்பீரத்தில் கட்டுண்டு போயிருந்தான் கலட்டியன்.
அச்சமயம் மாளிகையின் முன் வாசல் பரபரப்பாகியது. கலட்டியன் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தான். சர்சரரென பல வாகனங்கள் வந்து முன் வாசலருகே நின்றன. பாதுகாப்பு வீரர்கள் வழிசமைத்து விட கறுப்புக்
9ேர்.

Page 12
காருக்குள்ளிருந்து இறங்கி வேகமாக நடந்து வந்தாள் ஒருநடுத்தர வயதுப் பெண்மணி விலையுயர்ந்த அதி நவீன நாகரீக ஆடையணிந்திருந்தாள். நெற்றி கழுத்து கைகள் காதுகள் முழுக்க வைரமும் தங்கமுமாக நகைகள் அணிந்திருந்தாள். அவற்றை ஒரு பொன்னாடையும் பூமாலைகளும் கொண்டு போர்த்தியிருந்தாள். அவளது முகத்தைப் பார்த்த கலட்டியன் மறுபடியும் ஆச்சரியரியத்துக்குள்ளாகி “யக்கோ. வ்’ என்று கத்தினான். ஏனெனில் அவள்தான் அந்தப் படத்திலிருந்த பெண்மணி.
அவளது வருகையைக் கண்ட சில பாதுகாப்புப் பணிப்பெண்கள் ஓடோடி வந்தனர். ஒருத்தி அவளது காலணிகளைக் கழற்றி விட்டாள். இன்னொருத்தி அவள் போர்த்தியிருந்த பட்டுப் பொன்னாடையை வாங்கினாள். மற்றொருத்தி கைப்பையைத் தாங்கினாள். அச்சு அசலாக தன் மனைவியின் முகச் சாயலைக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி பணிப்பெண்களை நோக்கி ஏதோ புரியாத மொழியில் மளமளவென்று சில கட்டளைகளைப் பிறப்பித்தாள். பணிப்பெண்கள் தலை சாய்த்து கீழ்ப்படிந்து அகன்றனர். அப் பெண்மணி வேகமாக நடந்து சென்று உள்ளிருந்த பிரத்தியேக அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
கலட்டியன் வெகு ஆவலாகத் தன் மனைவியைப் (போலிருந்தவளைப்) பின்பற்றிச் சென்று அறைக்குள் நுழைந்தான். அது ஒரு படுக்கையறை. அவள் தனது ஆடையை அவிழ்க்க ஆரம்பித்தாள். அவளது உடலின் அழகில் காமுற்ற கலட்டியன் வெகு ஆசையுடன் “யக்கோ வ். யக்கோ வ்’ என்று கூப்பிட்டான். அவளுக்கு அது ஒன்றும் கேட்கவில்லை.
அதேசமயம் அந்த அறைக்குள்ளிருந்த ஆடம்பரக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த ஒரு ஆடவன் இவளைக் கண்டதும் ஆவலாக ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டான். அப்படியே தூக்கிக் கொண்டு கட்டிலருகே சென்று கட்டிலில் அவளை அன்பாக எறிந்தான். அவள் மகிழ்ச்சியோடு கட்டிலில் விழுந்து கொண்டு “ஸோரி டார்லிங் நோ டைம்” என்று சிரித்தாள். அந்த ஆடவன் புன்னகைத்தபடியே அவளின் மீது சாய்ந்து கொண்டான். தன் மனைவியின் மீது யாரோ ஒரு அந்நியன் சாய்வதைக் கண்ட கலட்டியன் உச்சக் கோபத்துடன் “ஏ.ய்.” என்று கத்தினான். பக்கத்திலிருந்த பூச்சாடியை எடுத்து அந்த ஆடவனை நோக்கி எறிந்தான். பூச்சாடி கட்டிலில் மோதி ‘ணங்’கென்று விழுந்தது. அதனைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் ஏதோ சொல்லிச் சிரித்தனர். கலட்டியன் சீற்றத்தோடு பாய்ந்து அவர்கள் இருவருக்குமிடையில் விழுந்தான். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கலட்டியனின் மனைவியின் ஆடைகள் ஒவ்வொன்றாக உருவப்பட்டு.
கலட்டியன் உரத்த குரலில் “ஹே.ய் யக்கோ.வ்” என்று ஆத்திரமாகக் கத்தினான். அவர்களை எதுவும் செய்யமுடியாத இயலாமையை எண்ணிக் குமைந்தான். தான் தன் புதைகுழியை விட்டு வெளியே வந்ததற்காக முதற் தடவையாக வருத்தப்பட்டான். தன் கண்ணெதிரிலேயே நடக்கும் துரோகத்தைக் கண்டு துடித்தான்.
உடனே “ஹோ.!” என்று பெருங்குரலில் ஒலமிட்டு உயரக் கிளம்பி தன் புதைகுழியில் போய்விழுந்தான் கலட்டியன்.(2010).
9ேங்கி

“இஸ்லாமியத் தமிழ்”
என்னும் சொல்லாட்சி (?)
- வாகரைவாணன் தமிழ் நாட்டின் கொற்கை, கொடுமணல், ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானை ஒடுகளில் உள்ள தமிழ் எழுத்துக்களின் காலம் கி.மு. 800ம் ஆண்டை ஒட்டியதாக இருக்க வேண்டும் என்னும் தொல்லியல் ஆய்வாளர்கள் இராஜன், நடனகாசிநாதன் ஆகியோரின் கணிப்பு (பி.இராமநாதனின் “தொன்மைச் செம்மொழி தமிழ்” - பக்கம்-35) தமிழின் பழைமையைப் பெரிதும் பறைசாற்றும்.
இத்தகு தொன்மையும், பெருமையும் கொண்ட தமிழரின் தாய் மொழியாகிய தமிழ் ஆரம்பத்தில் வாய்மொழிப் பாடல்களாலும் பின் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியங்களாலும் செழுமை பெற்று இன்று உலகின் செம்மொழிகளில் (Classical Language) ஒன்றாகத் திகழ்கின்றது.
இலக்கிய வளம் மிக்க இம்மொழியை சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் நுழைந்துவிட்ட ஆரியர் என்னும் பார்ப்பனர் தமது சமயக் கருத்துக்களைப் பரப்பும் ஒரு கருவியாகக் கொண்டு அதில் வெற்றியடைந்தமைக்கு பிற்காலச் சங்க இலக்கியங்களான கலித்தொகை, பரிபாடல் , திருமுருகாற்றுப்படை என்பன சான்றாக அமையும்.
பார்ப்பனர் போன்றே வட இந்திய சமண, பெளத்த சமயத்துறவிகள் தம் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் பரப்பும் ஓர் ஊடகமாகவே தமிழைப் பயன்படுத்தி சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய அருந்தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகிற்கு அளித்தனர்.
இத்துறவிகளின் வழியிலேயே கி.பி. 16ம், 17ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் கால்பதித்த கத்தோலிக்கத் துறவிகளும், கிறிஸ்தவப் போதகர்களும் தமது சமயக் கருத்துக்களைத் தமிழர் மத்தியில் பரப்பும் நோக்குடனேயே தமிழைக் கற்று அதில் அரிய நூல்களை ஆக்கினர். இச்சமயச் சான்றோரில் கத்தோலிக்கத் துறவியான பெஸ்கி என்னும் வீரமாமுனிவரின் (கி.பி.1680 - 1747) "தேம்பாவணி" என்னும் காவியமும், கால்டுவெல் (1814 - 1891) என்னும் கிறிஸ்தவப் போதகரின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூலும் பெரிதும் குறிப்பிடத் தக்கவை.
ஆயினும் இவர்களைப் போலன்றி கி.பி. 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1310) வாளுடன் தமிழ் நாட்டிற்குள் பிரவேசித்த மாலிக் கபூர் என்னும் முஸ்லிம் படைத்தளபதி அங்கு பெரும் அதர்மத்தில் ஈடுபட்டதோடு தம்மினத்தவரின் ஆட்சிக்கும் அடித்தளம் இட்டான்.
இவ்வடித்தளத்திலேயே கி.பி 1330 ல் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட
0ேர்.

Page 13
இஸ்லாமியரின் கொடுங்கோலாட்சி ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த கால கட்டத்திலேயே தமிழரில் கணிசமானோர் கட்டாயத்தின் நிமித்தம் இஸ்லாமியராகினர்.
இவ்விதம் இஸ்லாமியராகிய தமிழர் (இம் மக்களை டாக்டர் மு.வ. அவர்கள் முஸ்லீம் தமிழர் என்பார்) சிலரின் வாரிசுகளே 17ம், 18ம் நூற்றாண்டுகளில் தமிழில் இஸ்லாமிய இலக்கியங்களைத் தந்தனர். அவற்றில் “சீறாப்புராணம்" என்னும் காவியமும் ஒன்று.
தம் சமய நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு தமிழில் பெரும்பாலான படைப்புக்களைத் தந்த சமணர், பெளத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்னும் சான்றோரில் ஒருவரேனும் அவ்வாக்கங்களை சமணத் தமிழ் என்றோ அல்லது இஸ்லாமியத் தமிழ் என்றோ குறிக்கவில்லை. இதுபோல் அச்சான்றோரின் ஆக்கங்கள் பற்றி எழுதிய பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார், அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி ஆகிய பெருமக்கள் அவற்றுக்கு சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், கிறிஸ்தவமும் தமிழும் அல்லது இஸ்லாம் தந்த தமிழ், கிறிஸ்தவம் தந்த தமிழ் என்றே மகுடம் சூட்டி மகிழ்ந்தனர்.
ஆனால், இந்த மரபுக்கு மாறாக சமய உணர்வோடும் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடும் “இஸ்லாமியத்தமிழ்’ என்னும் புதிய சொல்லாட்சியை இஸ்லாமிய எழுத்தாளர் சிலர் உருவாக்குவதாகத் தெரிகின்றது.
இது பற்றிக் கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர்கனி என்பவர் “ஞானம்’ சஞ்சிகையில் (நவம்பர் 2011 இதழ்) எழுதுகையில் “இஸ்லாமியத் தமிழ்’ என்பது கலைஞர் மு.கருணாநிதியின் கனவு என்று குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையானது.
கலைஞர். மு.கருணாநிதி தமிழ்ப்புலமை மிக்கவர்தான். ஆனால், அவர் தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் இயக்கங்களில் ஒன்றான திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்; முழுநேர அரசியல்வாதி. எனவேதான் தம் கழகத்தின் பக்கம் முஸ்லீம் களைக் கவர்நீதிழுக்கும் நோக்கத்துடனேயே “இஸ்லாமியத் தமிழ்’ என்னும் ஆசையை அவர்களுக்கு ஊட்டியிருக்கலாம். இது தான் உண்மையும் கூட. ஏனெனில் கலைஞர் அக்கலையில் கைதேர்ந்தவர்.
கலைஞர் மு.கருணாநிதியின் கனவு என்று கூறி நாகூர்கனியால் தெரிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியத் தமிழ் நீண்டகாலமாக வழக்கில் உள்ள தென்தமிழ், தண்தமிழ், இன்தமிழ், முத்தமிழ் என்பனபோல தமிழுக்கு அழகும் பெருமையும் சேர்க்காது என்பதோடு பிற சமயத்தவர் மனதில் அது கைக்கும் தமிழாகவே காலமெல்லாம் இருக்கும் என்பது திண்ணம்.
மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து பிரிந்து அதன்
கிளை மொழியாகி, பின் தனித்துவ மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்பனபோல் இஸ்லாமியத் தமிழ் என்றொரு தமிழ்
69ர்.

உருவானால் அதுவும் பின் தனி மொழியாகி தாய்த்தமிழின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துவதோடு அது வழக்கில் உள்ள பிரதேசத்தையும் குறுக்கி விடும். பலநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட தமிழின் வரலாறும் இதுதான்.
இஸ்லாமியத் தமிழ் என்பது நிச்சயமாக அரபுத்தமிழாகவே இருக்கும். இதற்குச் சீறாப்புராணமே ஏற்றசான்று. இதனால் மீண்டும் ஒரு ‘மணிப்பிரவாளம்’ தோன்றும் நிலை உருவானால் அதனைத் தடுத்து நிறுத்த மறைமலை அடிகளும் , பரிதிமாற் கலைஞர்களும் தேவைப்படுவார்கள்.
இந்நிலையில் அராபியர் என்னும் சொல்லுக்குள் அரபு என்னும் மொழி இருப்பது போல தமிழர் என்னும் சொல்லுக்குள் இருக்கும் தமிழை எப்படித் தமிழரால் தாரை வார்த்துக் கொடுக்க முடியும்?
இவ்விதமான சிந்தனைக்கும், எழுத்துக்கும் இனவாதம் என்னும் சாயம் பூசப்படலாம். அதற்காகத் தமிழர் கைகட்டிக் கொண்டிருக்க முடியுமா? தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் இனியாவது விழித்தெழுந்து தமிழைப் பிறரிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடல் வேண்டும்.
சிங்களு(தமிழ் இலக்கியப் பூடைப்புகளை மொழிபெயர்த்தற்கென நிதியமொன்றை உருவாக்குதல் சம்பந்தமாக பாராளுமன்ற 德 லி ஒத்திவைப்புவேளைப் ரேரண்ை யானின்றச் சமர்ப்பித்து மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வ்ர் பாராளுமன்ற | உறுப் பினர் . அவர கள ஆற்றிய் / உரையிலிருந்து.
“இலங்கையில் தமிழில் கலை இலக்கிய சிறு சஞ்சிகைகள் நீண்டகாலமாகப் பெரும் போராட்டத்துடனே வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த 46 ஆண்டுகளுக்கு மேலாக திரு டொமினிக் ஜீவா அவர்களை ஆரீய ாகக் கொண்டு "மல்லிகை’, டாக்டர் தி.ஞானசேகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “ஞானம்", அந்தனிஜிவா அவர்களை ஆசிரியராகக் கொண்டு “கொழுந்து", பரணிதரனை ஆசிரியராகக் கொண்டு "ஜீவநதி’, மட்டக்களப்பிலிருந்து செங்கதிரோன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு “செங்கதிர்” போன்ற பல சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய சிறு சஞ்சிகைகளுக்கு அரசமட்டத்தில் அனுசரணை வழங்கப்படல் வேண்டும். அரச நிறுவனங்கள் தமது விளம்பரங்களை அச்சஞ்சிகைகளுக்கு வழங்குதல் அவற்றுக்கு வழங்கும் அனுசரணைகளில் ஒன்றாக அமையலாம்.”
(நன்றி: பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) தொகுதி 204 - இல:05, 2011 நவம்பர் 25, வெள்ளிக்கிழமை)
69hōdia

Page 14
வழிான விரை அடுத்த வாக்கு வேமைக்கு முன்பு
கிடங்கிற்குள்
அலெக்ஸ் பரந்தாமன்
துக்குடியிருப்பு
(24) ssi Gos 202
 

எறிகதிர்
(இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து 2011 ஒக்டோபர் மாதம் 14, 15, 16ம் திகதிகளில் மூன்றுநாட்கள் ‘பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்” என்ற தலைப்பில் நடாத்திய தொடர் ஆய்வரங்கு சம்பந்தமாக மலையக கலை இலக்கியப் பேரவை இணந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்கு எழுதிய கடிதம்)
மலையகக் கலை இலக்கியப்பேரவை
திருமதி.சாந்தி நாவுக்கரசன் அவர்கள், 57 மஹிந்த பிளேஸ் பணிப்பாளர், கொழும்பு - 06 இந்து கலாச்சார 19.10.2011
அலுவல்கள் திணைக்களம், 248-1/1 காலி வீதி, கொழும்பு - 04.
பிரித்தானியர் ட்சியும் நவீனமயமாக்கமும்
அன்புடையீர் ! வணக்கம்.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்திய ‘பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்’ என்ற மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்குகளில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் குடியேற்றப்பட்ட சமூகமான மலையக சமூகம் முற்றும் முழுதாக புறக்கணிக்கப்பட்டதை என்னால் நேரடியாக அவதானிக்க முடிந்தது.
இந்து கலாசார திணைக்களம் வருடா வருடம் குறித்த பொருளில் மூன்று நாட்கள் ஆய்வரங்கை நடத்தி வருகிறதை அனைவரும் அறிவர். கடந்த சில ஆண்டுகளாக வரலாற்றுக் கருப்பொருளைக் கொண்டு நடத்தியது. இம்முறை 2011ம் ஆண்டு ‘பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்’ என்ற பொருள் பரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இக் கருத்தரங்கில் தமிழகத்தினி பல கலைக் கழகத்திலிருந்தும் மலேசியப் பல்கலைக்கழகத்திலிருந்தும் இலங்கையில் வடக்கு கிழக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தும் பேராசிரியர் பெருந்தகைகள் கலந்து கொண்டனர்.

Page 15
இந்த நிகழ்ச்சித் திட்டமிடலிலும் ஆய்வுக் கட்டுரையைத் தெரிவு செய்வதிலும் சில குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ‘பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும்போது குறிப்பாக இலங்கையைப் பொறுத்த வரையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிக முக்கியமானவை பெருந்தோட்டப் பொருளாதாரமும் தோட்டத் தொழிலாளர் உருவாக்கமும் முதன்மையானது.
இலங்கையின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் பெருந்தோட்டம் சார்ந்த இந்த மக்களின் பங்களிப்பு விரிவானது. இந்தச் சமூகம் பற்றி ஆய்வரங்கில் ஓர் ஆய்வுக் கட்டுரையாவது இடம்பெறாதிருந்தது பிரதான குறைபாடு மட்டுமல்ல ஒரு சமூகத்தை திட்டமிட்டுப் புறக்கணித்ததாகக் கருத வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த இரு நூற்றாண்டு காலமாக பிரதான காலவோட்டதிலிருந்து இந்தச் சமூகம் ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்டு வந்திருப்பது வரலாறு. இந்த ஆய்வுக் கருத்தரங்கிலும் இந்தச் சமூகம் ஒதுக்கப்பட்டு இலங்கையின் நவீன மயமாக்கல் பற்றிச் சிந்திப்பது நேர்மையான செயற்பாடானதல்ல.
மூன்று நாள் நடைபெற்ற ஆய்வரங்கில் பாண்டிச் சேரியில் இருந்து வருகை தந்த பேராசிரியர்.ஏ.சுப்பராயலு ‘பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பொருளாதார மாற்றங்கள்; மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக நாட்டார் இலக்கியத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் இ.முத்தையா *பிரித்தானியர் ஆட்சியும் தேசிய வாதமும்’ என்ற தலைப்பிலும்; மலேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கலாநிதி கிருஷ்ணன் மணியம் “தோட்டத் தொழிலாளர் குடியேற்றத் திட்டமும் மலேசியத் தமிழர் வாழ்வியலும்; மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்திய கற்கை துறை இணைப் பேராசிரியர் கலாநிதி குமரன் சுப்பிரமணியம் *பிரித்தானியர் வருகையின் பின் மலேசிய இந்தியர்களிடையே ஏற்பட்ட கலை கலாசார மறு மலர்ச்சி’ என்ற தலைப்பிலும்; மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய கற்கைத்துறை இணைப் பேராசிரியர் கலாநிதி மோகனதாஸ் ராமசாமி மலேசியாவில் பிரித்தானியர் ஏற்படுத்திய கல்வி மறுமலர்ச்சி” போன்ற கட்டுரைகள் இந்திய சமூகத்தைப் பற்றிய கட்டுரைகளாக இருந்தன. ஆனால் இலங்கையில் நடைபெற்ற ஆய்வரங்கில் இலங்கை வாழ் பெருந்தோட்டத்துறை பற்றி ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறவில்லை. இவ்வாறான கட்டுரைகளை அளிக்கச் செய்யும் தகுதி பேராசிரியர்களான சந்திரசேகரன், எம்.சின்னத்தம்பி, எம்.எஸ்.மூக்கையா, கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி சந்திரபோஸ், கல்வியாளரும் ஆய்வாளருமான எம்.வாமதேவன், தை.தனராஜ், மலையக ஆய்வாளரான சாரல்நாடன் எம் மத்தியில்
9ேர்.

இருக்கும் போது இவர் களைப் பார்வையாளர்களாகக் கூட அழைக்கப்படாதது இந்த சமூகத்தைத் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டதாகக் கருத வேண்டியுள்ளது.
ஆய்வுக் குட்டுரைகளைத் தெரிவு செய்த பேராசிரியர் செ.பத்மநாதன், அவருக்கு துணை நின்ற மூவர் குழுவான கலாநிதி.வ.மகேஸ்வரன், கலாநிதி ஹரீ பிரசாந்தன், முதுநிலை விரிவுரையாளரான ரகுபரன் போன்றவர்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மக்கள் வரிப் பணத்தில் திணைக்களத்தை நடத்தும் நிர்வாகத்தினர் இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் சரிநிகர் சமமாக நடத்த வேண்டிய பெரும் பொறுப்புள்ள வர்கள். ஆனால் திணைக்களம் நிர்வாகத்தை மேற்கூறிய ஆய்வுக் கருத்தரங்கக் குழுவினர் செயற்பட்டிருப்பது முறையானதல்ல. கருத்தரங்க இரண்டாவது நாளில் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர் ஒருவர் மலையகம் பற்றி ஓர் ஆய்வுரையாவது இடம்பெறவில்லையெனக் கேள்வி எழுப்பியபோது சம்பந்தப்பட்டவர்களால் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இத்தகைய குழு மனப் பாணி மை கொணி டவர்களை இது போன்ற ஆயப் வுக் கருத்தரங்குகளைத் திட்டமிடவும் ஆய்வுக் கட்டுரைகளைத் தெரிவு செய்வதற்கும் அனுமதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வண்ணம்,
அந்தனிஜிவா,
செயலாளர், மலையகக் கலை இலக்கியப் பேரவை O776612315.
கடிதப் பிரதிகள்: 9 மேதகு ஜனாதிபதி அவர்கள் 0 மாண்புமிகு கலாசார அமைச்சர் 9 மாண்புமிகு பிரதியமைச்சர், புத்தசாசன மற்றும் மத அலுவல்கள்
அமைச்சு 9 செயலாளர், புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு 0 மற்றும் மலையகத்தைச் சார்ந்த பாராளுமன்ற அமைச்சர்கள்
உறுப்பினர்கள் அனைவருக்கும் 9 கெளரவ பி.பி.தேவராஜ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் 9 பேராசிரியர். சோ.சந்திரசேகரன், காப்பாளர் மலையகக் கல்வி அபிவிருத்தி
மனறம.
60ர்.

Page 16
இடக்களப்பு மாநில
மணர்வாசனைச் சொற்கள் шtцдшGb - 1
மட்டக்களப்பு மாநிலம் எனப்படுவது வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே ஊவாமலைக்குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்ட நிலப்பரப்பாகும். தற்போது மட்டக் களப்பு மாவட்டத்தையும் அம்பாரை மாவட்டத்தையும் உள்ளடக்கிய பிரதேசம் எனக் கொள்ளலாம். இப்பிரதேசத்திற்கென இப்பிரதேசத்தில் மட்டுமே வழங்கி வரக்கூடிய வட்டார வழக்குத் தமிழ்ச்சொற்கள் ஏராளம் உள்ளன. அவை படைப்பிலக்கியங்களிலும் இப்பிரதேச எழுத்தாளர்களால் எடுத்தாளப்படுகின்றன. அத்தகைய மண்வாசனைச் சொற்களை “செங்கதிர் வாசகர்களுக்காக இப்பகுதியில் மாதந்தோறும் தொடர்ந்து தொகுத்துத் தருகிறார் எழுத்தாளரும் முன்னாள் வடகிழக்குமாகாண பணி பாட்டலுவல கள் திணைக் களப் பணிப்பாளருமான திரு.செ.எதிர்மன்னசிங்கம் அவர்கள்.
01. கருக்கல் : மாலைபட்ட நேரம் (அந்திப்பொழுது) 02. வெள்ளாப்பு : விடியற்சாமம் (அதிகாலை, வைகறை) 03. ஒள்ளுப்பம் : எப்பம், கொஞ்சம், சிறுக (குறைந்தளவு) 04. கரைச்சல் : அரியண்டம், தொந்தரவு 05. முசுப்பாத்தி : வேடிக்கை (மகிழ்ச்சியைப் பிரதிபலித்தல்) 06. மாய்மாலம் : நடிப்பு, புலுடா (பாசாங்கு) 07. நசுவுணி ; சோம்பல் 08. இளக்காரம் : சலுகை, விட்டுக்கொடுத்தல் 09. சுணக்கம் : தாமதம், பிந்திவரல் 10. பொல்லாப்பு : துன்பம், துயரம்.
 
 

3337636ğüğ6
பொ.கந்தையா (காந்தி ஐயா), திருகோணமலை.
ஐந்து வயதில் கிடைத்த அனுபவம்
யாழ்ப்பாணம் மாதகல் கிராமத்தில் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் நான் அரிவரி படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சைவப் பெரியார் வந்து பிரசங்கம் செய்தார். சுமார் நூறு பிள்ளைகள் படித்தோம். பிள்ளைகள் எல்லோரும் சைவ சமயத்தவர்கள்; ஆசிரியர்களும் சைவ சமயத்தவர்கள்.
நீங்கள் எல்லோரும் சைவ சமயத்தைச் சேர்ந்த சைவப்பிள்ளைகள். நீங்கள் இனிமேல் மரக்கறி உணவுதான் வாப்பிட வேண்டும். மாமிச உணவு சாப்பிடக்கூடாது. உயிர்களைக் கொன்று தின்பது பாவம். பாவம் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறினார்.
பாடசாலை விட்டதும் ஓடோடிச் சென்று அம்மாவிடம் நடந்ததைக் கூறி நான் இனிமேல் மாமிச உணவு சாப்பிட மாட்டேன் என்று உறுதியாகக் கூறினேன். அம்மா பெருமனதோடு உன் விருப்பம் போல் நடந்து கொள் என்று அனுமதி தந்தார்.
மரக்கறி உணவுதான் சத்து அதிகம். நோயும் அணுகாது. மாமிச உணவை ருசிக்காகவும் சத்துணவு என்ற மூட நம்பிக்கையாலும் சாப்பிடுகிறார்கள். நான் 93 வயதுவரை நோயின்றி இருப்பதற்கு மரக்கறி உணவும் ஒரு காரணம்.
வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் “கொலை புரிவார் தவிர மற்றை எல்லோரும் நமது குலத்தவரே என்று மனிதகுலத்தை இரண்டாகப் பிரித்துக் கொலை புரிவோர் ஒருசாதி என்றும் கொலை புரியாதோர் வேறு சாதி என்றும் பாடி வைத்துள்ளார். தமிழ் மூதாட்டி ஒளவைப் பிராட்டியார் “இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்’ என்று சாதியை இரண்டாகப் பிரித்துள்ளார்.
*கொலி லாண் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எலி லா உயிருந்தொழும்” என்று தெய்வப் புலவர் திருவள்ளுவநாயனார் திருக்குறளில் பாடியுள்ளார். திருக்குறள் படிப்பதற்கு மட்டும் உள்ள நூல் அல்ல; படித்து அதன்படி வாழ்வதற்கு வழிகாட்டும் உயர்ந்த நீதி நூல் g(35LD.

Page 17
நீதி வினிதடம் புரண்டு நிம்மதியதில் மிரனிரு சாதிப்பேய்தலையெடுத்து சமத்துவம் சிறகொடிந்து பாதியில் வாழ்வு வினாய் பாவங்க ளதற்கு ஊனாய் நாதியாய் நாமிங்கானால் நலிவதே புத்திசேர்க்கும்.
மணிணிலுமாசை வைத்து மனதிற்பொய்வேஷம்" தேக்கி கண்ணினாலன்பு கறி கருத்தில்தீப்பகை வளர்த்தும் உண்டிடப்பாய்ந்து செல்லும் estafson (86 II 605 (SLIII6DIIIs எண்ணிலே Iநாமிங்கானால் எதற்கொரு மனித நாமம்.
பழக்கமும் புதியதாகி பாசம் மனவெறுமையாகி வழங்கிடல் தீதென்றெணிணி வேற்றுமை பேசியெங்கும் உழலுவோர் உலுத்தனாகி உறவினை வெறுத்து நன்மை இழந்துமே வாழும்போது இழிநிலை பூணல் காட்சி இறையவன் மனுவென் பயிரை இவனியில் வினைத்தானறிவில் முறையற்று வாழ்தற்கல்ல மடியுமுன்திறமை சேர்த்து மறைவழி பற்றி வாழ்வில் மாணிபுயிர் இவனென்றுலகு நிறை பணிசெய்து வாழ்ந்தால் நித்திலம் செழிக்கும் உண்மை.
 

ரம் தாய்ப்பாடு
வேல்அமுதன்
எமது வீட்டு மின்சாரக் “கேற்றலின் சுருள் (Coil) எரிந்துவிட்டதால், புதிய ‘கேற்றல்’ வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எனது வீட்டுக்குக் கூப்பிடுதொலைவில் இருக்கும் மினி பொருள் விற்பனை நிலையத்திற்கு விரைந்தேன்.
விதம் விதமான அழகிய மின்பொருட்கள் வித்தியாசமான விலையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விவரங்களையும் விலையையும் விசாரித்தேன். விற்பனையாளர் சிங்களத்தில் விளாசித் தள்ளினார். எனக்குச் சிங்களம் ஓரளவு விளங்கும். ஆனால் பேச்சுச் சிங்களம் கம்மி.
நான் பியகம றோட், களனியாவில் வசித்து வந்தவன் என்றாலும், அங்கே வசித்து வந்த இடம் தமிழர் குடியிருப்பு என்பதால் பேச்சுச் சிங்களம் பரிச்சயம் இல்லை. விற்பனையாளரின் சிங்களத்தைக் கிரகித்துப் பதில் சொல்ல என்னால் முடியவில்லை, திக்குமுக்காடினேன்.
விற்பனை நிலையமுதலாளி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். அவர் எனது தவிப்பைக் கவனித்து, வாடியமுகத்துடன் நாம் நின்ற இடத்திற்கு விரைவாக வந்தார். உம்மை நியமித்தது தமிழ் வாடிக்கையாளரோடு தமிழிற் பேசவல்லவா? சிங்களம் சரியாகத் தெரியாதவரோடு ஏனப்பா சிங்களத்தில் வெளுத்து வாங்குகிறாய்? என விற்பனையாளருடன் எரிந்து விழுந்தார்.
ஏச்சின் பிரதிபலன் விடயம் நேர்த்தியாக நடந்தேறியது.
இருந்தும்,
“கூலி குடுத்தும் இப்ப தமிழனைத் தமிழில்பேச வைக்க முடியுது இல்லையே!’ என்ற வருத்தம் என்னை வலுவாக வருத்தியது.
0ேர்.

Page 18
செல்லக்கிளி - நாவல் நயவுரை 11.09.2011, மட்டக்களப்பு
(வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொதுநூல் நிலைய கேட்போர் கூடத்தில் 11.09.2011 அன்று நடந்தேறியது)
நூலாசிரிய : முகில்வண்ணன் நயவுரை : றுயி வலன்ரீனா பிரான்சிஸ், முதுநிலை விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை.
ஆசிரியர் அறிமுகம்: கல்முனையைச் சேர்ந்தவரும் சண்முகநாதன் என்னும் இயற் பெயரையுடையவருமான முகில்வண்ணன் அவர்கள் 1959 அளவில் எழுத்துலகில் பிரவேசித்தவர். கடந்த ஐந்து தசாப்தங்களாக எழுதி வருபவர்; தொழிலால் பொறியியலாளர். “அவள் ஒரு தமிழ் பெண்’, ‘இனியும் நான் இராமனி தான்’ எனினும் இரு சிறுகதைத் தொகுதிகளையும் 'ஆனந்தக் கண்ணிர்’ என்னும் இரு குறுநாவல்கள் அடங்கிய குறுநாவல் தொகுதி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். *செல்லக்கிளி (2011) என்னும் இந்த நாவல் அவரது நான்காவது வெளியீடாகும். இவற்றைவிட ஆறு சிறுவர் இலக்கியங்கள் உட்பட 12 ஆக்கங்கள் எதிர்காலத்தில் வெளிவரவிருப்பதாக அறிய முடிகின்றது.
*செல்லக்கிளி’ என்னும் நாவல் சென்னை காந்தளக வெளியீடாக சுமார் 300 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 15 அத்தியாயங்களில் கதை விபரிக்கப்படுகின்றது.
கதைச் சுருக்கம்: இக்கதையின் நாயகி ராஜேஸ் என்கின்ற ராஜேஸ்வரி வீட்டில் செல்லமாக "பேபி” என அழைக்கப்படுபவள். இரு அண்ணன்மாருக்கு ஒரே தங்கை; தந்தையை இழந்தவள்; மட்டக்களப்பு நகர்ப்புற பாடசாலையில் க.பொ.த.(உ/த) கற்பவள்; அழகும் அறிவும் நற்பண்பும் உடையவள்; மாமாங்கம் அவளது ஊர்.
வசதியான வாழ்க்கை வாழும் அவளது தாய் மாமனின் மகனான செல்வன், தனக்கு மனைவியாக அவள் வர வேண்டுமென விரும்புகின்றான்.ஆனால் சிறு வயது முதலே ஒன்றாகப் பழகி வந்ததால் ராஜேஸின் மனதில் வேறுபட்ட எண்ணம் எதுவும் இருக்கவில்லை. இந் நிலையில் சிங்களவாடியைச் சேர்ந்தவனும் நகரில் தொழில்புரிபவனும் விளையாட்டு வீரனுமான ரமேஸ் அவளது அழகில் மயங்கி அவளைச் சுற்றிச் சுற்றி வருகின்றான். பாடசாலைவிட்ட வேளையில் பாடசாலை தொடக்கம் பஸ் நிலையம் வரை அவளைத் தொடர்கின்றான்.
Gerásicos 202
 

அவனது நடவடிக்கைகளை அறிந்தும் காதலுக்கு இடம்கொடாமல் கல்வியிலே கண்ணும் கருத்துமாய் இருக்கிறாள் அவள். ஆனால் அவளது தோழிகள் அவனது காதலை ஏற்குமாறு அவளைத் தொடர்ந்து வற்புறுத்துகின்றார்கள். தற்செயல் சந்திப்புப் போல சில சந்திப்புக்கள் திட்டமிட்டு அவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.தோழிகளின் இடைவிடாத நச்சரிப்பும் ரமேஸின் நண்பர்கள் சிலர் ராஜேஸின் தோழிகள் சிலரின் Boy Friends ஆக இருப்பதும் ரமேஸ் கலந்து கொள்ளும் விளையாட்டு நிகழ்வுகளுக்குப் பலவந்தமாக அவளையும் இழுத்துச் செல்வதுமான சூழல்கள் அவள் மனதையும் படிப்படியாக மாற்றிவிட காதல் ரமேஸையும் ராஜேஸையும் இணைத்து வைக்கின்றது.
வீட்டாரின் எதிர்ப்புக்களையும் சமாளித்து விடுகின்றாள் ராஜேஸ். ஏமாற்றத்தைத் தாங்க முடியாத செல்வன் வெளிநாடு சென்றுவிடுகின்றான். செல்வனின் அக்கா அருந்ததி ராஜேஸ் மீது தீராத வன்மம் உள்ளவள். தனது தம்பியான செல்வனுக்கு அவளை மணம் முடித்து வைத்து அவளைத் தன் அடிமையாக்க நினைத்தவள் ரமேஸ் - ராஜேஸ் காதலால் தன் எண்ணம் தவிடுபொடியானதால் ராஜேஸைப்பற்றித் தரக்குறைவாக ஊரில் வம்பு பேசுகின்றாள்.
இந்நிலையில் தொழிலின் உயர் கல்விக்காக ரமேஸ் கொழும்பிற்குச் செல்ல நேர்கின்றது. அங்கு தங்கியிருக்கும் வீட்டிலுள்ள இளம் பெண் ஒருத்தி தந்திரமாக அவனை மதுவினால் மயக்கி தனக்கு இணங்க வைத்து விடுகின்றாள். மது மயக்கத்தால் தவறிழைக்கும் ரமேஸ் அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய நேர்கின்றது. இதனால் பாதிப்புறும் ராஜேஸஉம் அவளது குடும்பத்தினரும் நிம்மதியை இழக்கின்றனர். ரமேஸ் ராஜேஸைக் கைவிட்டமைக்கு ராஜேஸின் நடத்தையே காரணம் எனப் பிழையாக அவதூறினை அருந்ததி பரப்புகின்றாள். தனது வாழ்க்கையைச் சீர் குலைக்கவென்றே கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் அருந்ததியை வெல்லத் தன்னை முழுமையாக உணரும் ஒருவனுடன் மணவாழ்கையில் இணைய முடிவெடுக்கிறாள் ராஜேஸ். இதன் மூலம் தன் தாய்க்கும் சகோதரர்களுக்கும் கூட அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றும் அவள் நம்புகின்றாள். இரு குழந்தைகளுக்குத் தந்தையும் மனைவியை இழந்தவனும் சட்டத்தரணியுமான ஆனந்தனுக்கு இரண்டாம் தாரமாக அவள் வாழ்க்கைப்பட சூழல் கனிந்த வேளையில் அருந்ததியின் சூழ்ச்சியால் அந்தச் சம்பந்தமும் குலைந்து போகிறது.
எக்காலத்திலும் அருந்ததியால் தான் நிம்மதியாக வாழ முடியாது என உணரும் ராஜேஸ் தற்கொலை செய்து கொள்கின்றாள். அவளது அகால மரணம் தாயின் இறப்பிற்கும் காரணமாக அதனால் அக் குடும்பமே சிதைவுறுகின்றது.
கதையின் இறுதிக் கட்டத்தில் ராஜேஸஉற்கு வஞ்சகம் செய்த அருந்ததியினதும் ரமேஸினதும் குடும்ப நிலவரங்களை முத்தாய்ப்பாய்க் கூறிக் கதையை நிறைவு செய்கிறார் முகில்வண்ணன்.
9ேவழி

Page 19
1983 கலவரத்தால் பாதிப்புறும் ரமேஸ் குடும்பம் உடமைகள் யாவற்றையும் இழந்து உடுத்த உடையுடன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்து சேர்கின்றது. ராஜேஸின் வாழ் வினைச் சீரழிப்பதிலேயே தன் பொழுதுகளைக் கழித்த அருந்ததி தன் மகளைக் கவனிக்காமல் விட்டுவிடுகின்றாள். தன் இஷ்டத்திற்குத் திரியும் அவளது மகள் லாவண்யா காதலில் விழுந்து தாயாகும் நிலைக்குத் தள்ளப்படுகையில் அவளது காதலனும் கலவரத்தில் இறந்துவிடும் செய்தி கிடைக்கின்றது.
செல்லமாக வளர்க்கப்பட்ட ராஜேஸ் செல்லக்கிளியாக வாழ வேண்டியவள், ஆனால் செல்லாக்காசாக உலகைவிட்டே செல்லும் கிளியாக இதில் படைக்கப்பட்டுள்ளாள். அவளைச் செல்லக்கிளியாகப் பார்க்க நினைத்த சகோதரர்களுக்கும் தாய்க்கும் அவளை அன்பு செய்தோர்க்கும் ஏமாற்றமளித்து பறந்துவிடுகின்றாள்.
அவளது முடிவிற்குக் காரணமானவர்கள், அவளது நிம்மதியைக் குலைத்தவர்கள் அனைவருமே தமது நிம்மதியை இழக்கின்றனர்.
இந்நாவல் கூறும் கதை யதார்த்தமானதுதான். காதல் கதை. காதல் வளர்த்தெடுக்கப்படுவதும் தோல்வியில் முடிவதும் மீண்டெழ முயற்சிப்பதும் மனச் சமாதானத்திற்காகவும் சுற்றச் சூழலுக்காகவும் பொய்யாக வாழ முடிவெடுப்பதும் அது முடியாததென்ற முடிவில் தவறான முடிவுகளுக்கு எத்தனிப்பதும் இக் கதையின் பிரதான அம்சங்கள். வீண் பழியால் பிறர் வாழ்வைச் சீரழிக்கும் அருந்ததி போன்றவர்களும் காதலியைச் சந்தர்ப்பவசத்தால் கைவிட்டுச் செல்லும் ரமேஸ் போன்றவர்களும் இவர்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து வாழ முடியாமல் தோற்றுப் போகும் ராஜேஸ் போன்றவர்களும் இன்றும் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். களமும் சூழலும் காலமும் மாறினாலும் சில விடயங்களும் மனித நடத்தைகளும் மாறாதிருக்கின்றமை யதார்த்தமானது.
இக்கதையின் களம் மட்டக்களப்பு பிரதேசம் குறிப்பாக மட்டக்களப்பு நகராக முன்னைய காலங்களில் நாழும் பொழுதும் கலகலப்பாக இருந்த புளியந்தீவுப் பிரதேசம்.
கதை நிகழும் காலமாக 1970- 80 கள் அமைகின்றன. இப்போது 5060 வயதைக் கடந்திருப்பவர்கள் இக்கதைக் காலப்பகுதியில் இளைஞர்களாக இருந்திருப்பார்கள் என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதிலிருந்து அக்காலத்தை வரையறை செய்ய முடிகின்றது.
1985 இல் இவரால் எழுதப்பட்ட இக்கதை, 1990ம் ஆண்டுக் காலப்பகுதியில் தொடர் கதையாக தினகரன் பத்திரிகையில் வெளிவந்ததாகவும் அப்போதிருந்த சூழலால் பத்திரிகை மட்டக்களப்பிற்கு கிடைக்கப்பெறாமல் ஆசிரியர் உட்பட யாரும் இங்கு இதனை அறிந்திருக்கவில்லையென்றும் கொழும்பிற்குச் சென்ற சந்தர்ப்பமொன்றில் இது குறித்து அறிந்து பின்னர் சுவடிக் காப்பகத்தில் பிரதிகளைப் பெற்றுக் கொண்டதாகவும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
9ேங்கி

1970- 80 கள் காலப்பகுதியை மையமாக வைத்து புனையப்பட்ட இக் கதை நூலுருப் பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.
1. இக்காலத்திற்குரிய மட்டக்களப்புச் சூழல் அதன் மெருகும் இயல்பும் யதார்த்தமும் சற்றேனும் குறவுறாத வகையில் இந்நாவலில் வெளிக் கொணரப்பட்டிருப்பது.
2. இதனை உறுதியாகச் சொல் லக்கூடிய வகையில் அந்தக் குறிப்பிட்டகாலத்திலும் களத்திலும் நான் வாழ்ந்தவள் என்ற வகையில் அதனை உறுதியாக கூறக்கூடிய உரிமையும் அவற்றை நினைவில் மீளக் கொணர வாய்ப்பினை இந்நாவல் தந்தமையுமான நெகிழ்வு.
இக் கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள், ஆகியவற்றை கற்பனை என ஆசிரியர் குறிப்பிட்டாலும் அந்தக் காலத்து நடைமுறைகளும் சூழலும் யதார்த்தமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. உண்மைச் சம்பவங்கள் சில இணைக்கப்பட்டிருக்கின்றன.
இந்நாவலில் வருகின்ற விடயங்களோடும் பிரதேச களத்தோடும் குறித்த காலத்தோடும் எனக்கு மிகநெருக்கமான பிணைப்பு உண்டு. புளியந்தீவை பிறப்பிடமாகக் கொண்டு இளமைக் காலம் வரை அங்கேயே வாழ்ந்தவள் நான். நகர்ப்புற பாடசாலையில் கல்விக் காலம் கழிந்தது. இக்கதையில் குறிப்பிடப்படும் இடங்கள் மற்றும் சில சம்பவங்கள் என் நினைவில் வந்து போகின்றன.
குறிப்பாக இந் நாவலில் வரும் றஷிதியா ஹோட்டல் - அங்கு சுவைக்கும் ஐஸ்கிறீம் - பஸ் நிலையத்தின் அருகே இருந்த மில்க் பார் - பத்திரிகை விற்கும் சந்திக்கடை - முற்றவெளி - அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் - பிரமாண்டமான பொருட்காட்சி நிகழ்வு - அதில் பாடசாலை மாணவர்கள் பங்கு கொண்டமை ஆகியன குறிப்பிடத்தக்கன.
தற்போது போலில்லாமல் அன்றைய காலங்களில் மாணவிகள் பாடசாலைக்கு பஸ்ஸில் சென்று வருவார்கள். ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதைப்போல அந்த நாட்களில் மாணவ மாணவியர் பைசிக்கிளில் செல்வது குறைவு. அதிகமானவர்கள் பஸ்களிலே வந்து நகரின் மத்தியில் இருக்கும் பஸ் நிலையத்தில் இறங்கிப் பட்டாம்பூச்சிகள் போன்று வெவ்வேறு திசைகளில் தாம் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்வார்கள். ஸ்கூல்பேக் காவும் பழக்கமும் அப்போது இல்லை.
பஸ் நிலையம் காதலர்களின் சந்திப்பு நிலையமாகவும் காத்திருக்கும் நிலையமாகவும் இருந்த நிலைமைகள் நிறைந்த காலமது. செல்போன்கள் இல்லாத காலம். தபால்காரனே காதலர்களின் கடவுளாக இருந்த காலம். பாடசாலை விட்டதும் மாணவிகளின் பின்னால் ‘சைட்’ அடித்துக் கொண்டே
9ேங்கி

Page 20
பஸ் நிலையம் வரை சைக்கிளில் பவனிவரும் இளைய ஆண்களின் ஊர்வலம் நடக்கும். பின்னேர வேளைகளில் வெள்ளைப் பாலத்துக் கம்பிகளில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்குகளாய் இளம் பெண்களுக்கு நக்கலடிக்கும் . இதனை "சீனி போடுதல்’ என்ற அக்கால சொற்றொடராலேயே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளமை நயத்தற்குரியது.
கண்டிப்பாரும் தண்டிப்பாரும் இல்லாத விடலைக் கூட்டம் என அந்தக் காலங்களை எம் மனக்கண் முன் நிதர்சனமாகக் கொணர்கின்றார் ஆசிரியர்.
மாணவிகள் தம் பின்னால் அலையும் இளைஞர்களுக்கு வைக்கும் பட்டப் பெயர்கள் வெகு பிரபலம். இந்நாவலில் அவற்றுட் சில குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆடுபேல தாடி வைத்திருப்பவன். ஆட்டுக்காரன்; போகுமிடமெல்லாம் பின்னாலேயே அலைபவன் - பொலிஸ்நாய்; தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை எப்போதும் பேசுபவன் - லண்டன் மாப்பிள்ளை; முடியை வளர்த்திருப்பவன். ஹிப்பி என இவை வருகின்றன.
பாடசாலைக் காலமே இந்நாவலை ஆக்கிரமித்திருப்பதால் அந்தக் கால பாடசாலை உலகம் விவரணமாக விரிகின்றது. பொதுப் பரீட்சை முடிவுகள் அறிவிக்கப்படுவதும் மாணவர்களின் கூட்டம் அவற்றை அறிவதற்கு பாடசாலைக்குப் படையெடுப்பதுமான விவரணங்கள் இன்றநெற்றில் முடிவுகளை முன் கூட்டியே அறிந்துவிட்டு பாடசாலையை மறந்து விடும் இன்றைய தலைமுறை அறியாத ஒன்று. நாவலில் இந்நிகழ்வு பற்றிய விபரிப்பு அற்புதமாக அமைகின்றது.
காலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டாள் ராஜேஸ். பிள்ளைகள் எல்லோரும் கூடி நின்று கலகலத்துப் பேசிக் கொண்டிருந்தனர். முடிவறியும் ஆர்வம் ஒரு புறம். பல நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் அனைவருக்கும் அதிகம் கதைக்க வேண்டியிருந்தது.
தபாற்காரன் பாடசாலை வளவினுள் வந்ததும் எல்லோருடைய சத்தமும் அடங்கி அமைதி தோன்றியது. முடிவறியும் ஆவலில் கதைக்க வேண்டிய அனைத்தையும் மறந்து போயினர். சிலருக்கு மனம் திக் திக் என்றது. சிலர் என்ன முடிவு வந்தாலும் ஏற்கத் தயாராக இருந்தனர். கேற்றுக்கு வெளியே பல தாய் தந்தையர், சுற்றத்தார், ‘போய் பிரண்ட்ஸ்’ எனப் பலரும் கூடி நின்றனர். அதிபர் முடிவுகளை முறைப்படி வாசிக்க முன்னர் “பாடசாலைக்கு பெருமை தேடித் தந்த இருவரது பெஸ்ட் ரிசல்ட்டுகளை முதலில் அறிவிக்கின்றேன். நந்தினி நாலு டீ யும் நாலு சீ யும், ராஜேஸ் மூன்று டீ யும் நாலு சீ யும் ஒரு எஸ் உம் என்றார்’ என அவ்விபரிப்பு வருகின்றது.
டீ, சீ, எஸ், என்ற தரத்தில் க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறுகள் நிர்ணயிக்கப்பட்ட காலம் அது. தற்போது ஏ, பீ, சீ, எஸ் என வரும்.
36) GSüsilios 202

பாடசாலைக் காலத்தின் இன்னுமொரு இயல்பான நிகழ்வினையும் யதார்த்தமாக ஆசிரியர் குறிப்பிடுவதைக் காணலாம். அதாவது பாடசாலை ஆரம்பமாகும் முதல் நாளும் பரீட்சை முடிவுகள் வெளிவரும் நாளிலும் வகுப்புகள் நடப்பதில்லை என்பதை பாத்திரங்களின் உரையாடலினுடாக நாசூக்காகக் கூறிச் செல்கின்றார்.
இன்றெல்லாம் பாடசாலை தொடக்கம் முதல் நாட்களில் கதைத்துப் பரிமாறிக் கொள்ள இங்கு குறிப்பிட்டதைப் போல நீண்ட விடயங்கள் இருக்காது. அவ்வவ்போது எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ள செல்போன் இருப்பதால்.
பாடசாலைகள் பங்கு பற்றிய பொருட்காட்சி நிகழ்ச்சி பற்றிய விபரணமும் இந்நாவலில் வருகின்றது. ராஜேஸும் ரமேஸPம் சந்திக்கின்ற களமாக அது குறிப்பிடப்படுகின்றது. குறித்த காலப் பகுதியில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற பொருட்காட்சியும் மழை வெள்ளத்தில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பார்த்த அனுபவங்களும் உண்மையானவை. பொருட்காட்சிகளின்போது காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் அல்லது செய்முறை விளக்கங்களுக்காக அங்கு நிற்கும் மாணவ மாணவியரிடம் வேண்டுமென்றே வினாக்களைத் தொடுத்துக் கேலி பண்ணுவதும் ஆசிரியர்கள் அவ்விடத்திற்கு வந்தால் நழுவுவதும் இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில் இரு நேரப் பாடசாலை முறைமை நடைமுறையில் இருந்தமையையும் ஆசிரியர் கதையினுாடே புலப்படுத்திச் சென்றுள்ளார்.
மட்டக்களப்புப் பிரதேசத்திற்கேயுரிய தனித்துவமான பேச்சு வழக்குச் சொற்களும் மரபுகளும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டிருப்பது இந் நாவலின் மற்றுமோர் சிறப்பாகும். மட்டக்களப்பு வழக்கில் வாங்களன்’ (வாருங்கள்), “வந்தனான்’(வந்தேன்), “போனனான்’(போனேன்), ‘எண்ட’(என்னுடைய), ‘ஏவம் கேட்டல்’( ஒருவர் சொல்வதைக் கேட்காமல் நடந்து பாதிப்புறும் போது அதனையிட்டு தான் முன்பு சொன்னதை ஞாபகமூட்டிக் கேட்டல்), “பொடியன்கள்’(இளைய ஆண்கள்) எனப் பல சொற்களைக் கூறலாம்.
பாத்திரங்களின் உரையாடல்களாக அமையப்பெறும் பகுதிகளில் மட்டக்களப்பின் பிரத்தியேகமான வழக்குச் சொற்களையும் மரபுகளையும் அதிகம் காணலாம்.
இந்நாவலில் பாத்திர உரையாடல்கள், நிகழ்வுகள் ஊடாக கதை வளர்த்துச் செல்லப்படுகையில் சில இடங்கள்ல் ஆசிரியரும் தன் கருத்துக்களையும் சம்பவம் தொடர்பான அபிப்பிராயங்களையும் கூறிச் செல்வதைக் காணலாம். உதாரணமாக ‘செல்வன் வீட்டைக் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமே" (பக்-191) ‘இதுக்கு நாள்கால் காட்டியது அருந்ததி அல்லவா அதைப் பார்ப்போம்’ (பக்-209) கதையின் தொடர்ச்சிக்கு சிறு
0ேர்.

Page 21
நெருடலாக இது அமைந்தபோதிலும் தொடர் கதையாக இது வடிவமைக்கப்பட்டமையால் இத்தகைய அணுகுமுறையினை ஆசிரியர் கடைபிடித்திருக்கக் கூடும் என எண்ண இடமுண்டு.
அடுத்து இந் நாவலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னுமோர் முக்கியமான அம்சமுண்டு. அதாவது பாடசாலை மாணவியரான இளம் யுவதிகள் தம்மையொத்த தோழிகளுடன் உரையாடும் அம்சங்களையும் பிரத்தியேகமானதும் இரகசியமானதுமான விடயங்களை பரிமாறிக் கொள்ளும் தன்மைகளையும் மிகவும் துல்லியமாக பதிவு செய்துள்ளார். சுருக்கமாகக் கூறுவதாயின் ஆசிரியர் ஆணாக இருப்பினும் பெண்பிள்ளை களிடையே இடம்பெறும் தனிப்பட்ட உரையாடலை மிக நுணுக்கமாகக் கவனித்து அவற்றைப் பெண் கதாபாத்திரங்களின் ஊடாக இந்நாவலில் வெளிக் கொணர்ந்துள்ளார். நாவலை ஊன்றி வாசிப்போருக்கு அவற்றை அடையாளம் கண்டு கொள்வது சிரமமாயிராது.
நூலின் அட்டைப்படம் மட்டக்களப்புப் பிரதேசச் சூழலைக் குறிப்பாக கதை நிகழும் களம், மற்றும் கதையில் இடம்பெறும் முக்கிய இடங்கள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. முன் அட்டையில் மாமாங்கப் பிள்ளையார் ஆலயச்சூழல், பாடசாலை மாணவியர், காதலனும் காதலியுமான சோடி ஒன்று எனவும் பின் அட்டையில் பிரதான சந்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபரமும், முகில்வண்ணன் அவர்களது நிழற்படமும் அவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இன்றைய நவீன மாற்றங்கள் புளியந்தீவை ஆட்கொள்ளாத காலத்தின் பதிவுகளைத் தாங்கியுள்ள வகையிலும்,
மட்டக்களப்பு பிரதேசத்தின் வழக்காறுகளையும் பேச்சுவழக்கினையும் பதிவு செய்துவைத்துள்ள வகையிலும்,
இயல்பான சூழலில் சுதந்திரமான செயற்பாடுகள் நடைபெற்ற முறைமையினை வெளிக் கொணர்ந்த வகையிலும் இந் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது.
மிலி க் பாரும் , முற்றவெளியும் , றவுரீதியாஸ் ஹோட் டலும் , அதனருகேயிருந்த பேக்கரியும், பத்திரிகை விற்ற சந்திக் கடையும் ஒரு காலத்தின் நிஜங்கள். அவை வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டிடங்களோ வெளியோ அல்ல. நினைவுகளையும் வரலாற்றையும் பல்வேறு உணர்வுகளையும் ஒருமைப்பாட்டையும் சுமந்து நின்ற ஞாபகச் சின்னங்கள். இவற்றினூடாக உயிருள்ள கதையொன்றினை நகர்த்திச் சென்றதன் மூலம் அவற்றை வரலாற்றிலும் நிலை பெற வழி செய்துள்ளார் இந்நாவலின் ஆசிரியர்.
பழைமை எப்போதும் பவித்திரமானது. அதனை மெருகும் இயல்பும் குன்றாமல் அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பது என்பது எல்லோர்க்கும் சாத்தியப்படாதது. ஆயினும் அக் கையளிப்பைச் சாத்தியப்பாடுடையதாக்கி
AGíslo 22

என் போன்றவர்கள் வாழ்ந்து அனுபவித்த அந்தப் பழைய மட்டக்களப்பை எனது பிள்ளைகள் போன்றோருக்கும் அதற்கும் அடுத்தடுத்து வரவிருக்கின்ற தலைமுறைக்கும் ‘எழுத்துமுதுசொம்’ ஆக ஆசிரியர் தந்திருப்பதன் மூலம் இந்நாவல் மேலும் சிறப்புறுகின்றது. இது இந் நாவல் பெற்றிருக்கும் அனைத்துச் சிறப்புக்களிலும் சிகரமாக அமைகின்றது எனக் கூறுவதில் தவறில்லை.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் மிகச் சொற்பமானோரே நாவல் எழுதுகின்ற இன்றைய சூழலில் ஆசிரியர் தொடர்ந்தும் இத்துறையில் ஈடுபட்டு தனித்துவமான இடத்தினைப் பெற வேண்டும் என்பதே என் போன்றோரின் வேணவா. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.
9 boastf
தாமரையைக் கொத்திக் கிழித்து வீசவேண்டும் போல் மீனுக்குத் தோன்றியது.
குளத்துக்குத் தேன் அருந்த வந்த வண்டு மீனைப்பார்த்துக் கேட்டது:-
‘உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறாயே - ஏன்?
‘ஒன்றுமில்லை. காலம் முழுவதும் தன்னைத்தாங்கி நிற்கும் தண்ணிரைத் தாமரை இலை உருட்டி வெளியே தள்ளுகிறதே - இந்தத் தாமரைக்கு மனச்சாட்சியே இல்லைபார்.’
வண்டு புரிந்து கொண்டது.
அழுத்தமாக நெஞ்சின் அடியில் அது உச்சரித்தது.
“தாங்கும் தண்ணிரைத் தாங்காத தாமரை”
நன்றி- “காசி ஆனந்தன் கதைகள்’ 9.

Page 22
Nஅமற்கவிஞர்திக்கவயல்சிதர்முவின் கவிதைகள்
- பேராசிரியர் செ.யோகராசா
*திக்கவயல் தர்மகுலசிங்கம்” என்றில்லாமல் “திக்கவயல்” என்று கூட அழைக்கப்பட்ட - அறியப்பட்ட அமரர் திக்கவயல் தர்மகுலசிங்கம் “சுவைத்திரள் காரணமாகவே ஈழத்தில் மட்டுமல்ல சகல நாடுகளிலும் நன்கறிமுகமானவர். ஏனைய துறை ஈடுபாடுகள் யாவும் “சுவைத்திரள்’ என்பதனுள் மறைந்துவிட்டிருந்தன. கவிஞர் திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் என்ற பெயரில் ஈழத்துக் கவிதையுலகிலே அவருக்கென்றொரு இடமுள்ளது.
திக்கவயல் சி.தர்மு கவிதை எழுத ஆரம்பித்த சூழல் வித்தியாசமான தொன்று. “வேகமாக வளர ஆரம்பித்த என்னை ஈழநாடு, வீரகேசரி, ஈழமுரசு போன்ற பத்திரிகைகள் ஆசிரியர் பீடத்தில் அமர்த்திப் பதவிகள் தந்தன. இக்காலகட்டங்களில் ஞாயிறு பத்திரிகைகளுக்கும் சேவை செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் நல்ல கவிஞர்களின் கவிதைகளைத் தரம்பிரித்துப்போடுவதும் எனது வேலையானது. நல்லன இல்லாதவிடத்து அல்லனவும் பெருமளவில் இடம்பிடித்தன. இது பக்கத்தை நிரப்பும் பம்மாத்து வேலை என்று தெரிந்தும் செய்துவந்தேன். இந்நிலையில் நானும் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் வேரூன்றி வளர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நானும் கவிதைகளைப் படைக்கத் தொடங்கினேன்” என்ற அவரது கூற்று அது பற்றி விளக்குகின்றது. எனினும் திக்கவயல் சி.தர்முவின் கவிதைகள் பக்கத்தை நிரப்பும் பம்மாத்து வேலைகளாக வெளிப்படவில்லை. அவற்றுள் சில சமகால அரசியல், சமூக நிலைகளையும் அணி றாட நாட்டு நடப்புகளையும் வெளிப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன.
மேற்கூறியனவான ஈழத்தமிழ்ச்சமூகத்தின் பேரவலங்களில் ஒன்று தமிழ்இளைஞர்கள் பலர் சிறைக்கைதிகளாக நீண்டகாலமாக வாழ்க்கை நடாத்தி வருவதும் இத்தகையோர் சிலர் அவ்வப்போது தங்களது அவலங்களைக் கவிதைகளாக எழுதுவதுண்டு ‘சிறையில் பூத்த மலர்கள்’ என்ற பெயரிலே கல லடி றொபேட் கவிதைத் தொகுதியென்றினைக்கூட வெளியிட்டுள்ளார். எனினும் வெளியிலிருக்கும் படைப்பாளிகளெவரும் அவர்கள் பற்றி நினைவு கூர்வதரிது. மாறாக, களுத்துறைக் கைதிகளின் சிறைவாழ்வு பற்றி திக்கவயல் சி.தர்மு நீண்ட கவிதையொன்றினை எழுதியுள்ளார். அக்கவிதையின் ஒரு பகுதி
காலையினிலே தேநீர் வருவதிங்கு கைதிகளே இதற்குக் காவலிங்கு காற்சட்டைக் கைதியின் கையிலே பீடிகள் கொடுத்திங்கு எனக்கு உனக்கு எனப்பேணிகள்
@帖豐" ஈங்கு
 

குடைக் கம்பி அடித்துச் சீறிப் பழஞ்சீலைப் பொறியினிலே நெருப்பெழுப்பி இடைச்சி மேற்கடையும் ஒலி எழுப்பி ஒரு பீடி பிடித்திடுவோம் நாமிங்கு.
காவலர் காவலர் ஈங்கு உண்டு. அவர் கைதியைக் கைதியை அடிப்பதுண்டு தமிழனே தமிழனே எனக் கேட்பதுண்டு கேட்டுக் கேட்டுப் புடைப்பதுண்டு
மண்டைகள் மண்டைகள் பிளப்பதுண்டு மாண்டவர் மீண்டிலார் துடிப்பதுண்டு கண்டவர் அழுத கதையுமுனிடு காணாது போனதில் உண்மையுண்டு
சப்பாத்துக் காலால் உதைப்பதுண்டு கண்ட காட்சிகள் பலதும் உண்டு ஒப்புதல் வாக்குகள் அளிப்பதுண்டு ஒன்றும் புரியாமல் முழிப்பதுண்டு
காலையாய்க் காலையாய் விடிவதுண்டு - அவை மாலையாயப் மாலையாய் முடிவதுண்டு வாந்திகள் பேதிகள் வருவதுண்டு - அட பச்சோந்திகள் எனக் கேட்பதுண்டு பறைத் தமிழா பறைத்தமிழா என்றதுண்டு புலியா புலியா எனப் புடைப்பதுண்டு
வெளவால் வெளவால் வருவதுண்டு தலைகீழ் நிலையில் தொங்குவதுண்டு தமிழா தமிழா இவ்விதியே உமக்கும் எமக்கும் தலைவிதியே என்று என்று சொல்வதுண்டு
காவலர் காவலர் வருவதுண்டு அவர் தலைகீழாகப் பிடிப்பதுண்டு துணையாய்த் துணையாய்ச் சிலருண்டு அவர் மூக்கிலே மிளகாய் பிடிப்பதுண்டு ஆணுடம்பதனைப்பிடிப்பதுண்டு உங்களுக்கு உங்களுக்கு. ஆண்மை உண்டோ எனக் கேட்பதுண்டு

Page 23
ஆண்மையில் குண்டுசி அறைவதுண்டு உண்ணாவிரதம் நடப்பதுண்டு இதைக்கேட்டு இவ்விடம் சில பேர் வருவதுண்டு. இவர் உண்டு முடித்து வருவதுண்டு, உண்ணாதார் முகங்கோண இருந்ததுண்டு, மேலும் ஈங்கு சில தமிழர் Visit
வருவதுண்டு
மேற்கோள்பகுதி நீண்டுவிட்டதாயினும் கவிஞரது கவியாளுமை பற்றி விளங்கிக் கொள்வதற்கு இதுவொன்றே போதுமானது. கவிஞர் சிறைவாசம் செய்யாவிட்டாலும் கேள்விஞானமும் பத்திரிகைச் செய்திகளும் அவரை எழுதத் தூண்டியிருப்பினும் கைதிகளின் அவலநிலைமைதரும் துயரம் ஓரளவாவது மேற்கூறிய கவிதையிலே சித்திரிக்கப்பட்டிருப்பது கண்கூடு. வியட்னாம் யுத்தகளம் பற்றி அங்கு செல்லாமலே வியட்நாம் தேவதைகளின் தேவவாக்கு’ என்ற சிறந்த சிறுகதையொன்றை சிருஷ்டித்தவர் எழுத்தாளர் செ.கதிர்காமநாதன். அவ்வாறானதொரு வெளிப்பாடே மேற்கூறிய கவிதையும் என்று கூறுவதில் தவறில்லை!
இவ்வாறே ‘எங்கள் எம்.பிக்கு பகிரங்க கவிக்கடிதம்’ என்ற கவிதையும், கவிஞரது இன்னொரு கவிமுகத்தைக் காட்டுகின்றது.
அன்புள்ள அண்ணர் நீங்கள் பா.உ ராய்ச் சென்று பல நாட்கள் என் வீட்டில் அயல் வீட்டில் அடுத்த ஊரில் ஒட்டத் தந்த போஸ்டர் இன்னும் கிழியவில்லை
ஆனாலும் நீங்கள் வளர்த்துவிட்ட கொள்கையெல்லாம் கிழிஞ்சு போச்சாம். ஊராக்கள் சொன்னாங்கள் அவசர காலச் சட்டத்திற்கு நீங்களும் ஒத்துதல் தானாம்
வீட்டு மதிலில் ஒட்ட என்று சொல்லி கட்டுப் போஸ்டர் தந்திங்கதானே. அதில் சிலதில் சாணி அடி.! ஆடு மாடு கிழித்தெறிந்த விழுப் புண்கள்

ஆயினும் கவிஞரது கவிதைகளில் கணிசமானவை உயர்ந்த ஆரோக்கியமான மனிதமேம்பாட்டுச் சிந்தனைகளை முன்வைப்பனவாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு பின்வரும் கவிதைப்பகுதி:
உலகமொழி அத்தனையும் ஒரமதில் சேர்ப்போம் - இனி உலகமொழி மெளனம் என உலகினிலே சொல்வோம்
உலகமதம் அத்தனையும் வேலிமதில் சாய்ப்போம் - இனி உலகமதில் மனிதம் என்று புதிய மதம் செய்வோம்
தருமம் அதைச் சூது கவ்வும் வாழ்வதனைக் கொல்வோம் தரும மதைத் தருமம் கவ்வ வேண்டுமெனச் சொல்வோம்.
உத்தியோக மொழியென்று எதனையுமே சொல்லோம் சத்தியமாய் அன்புமொழி அகிலமதில் செய்வோம்
வீதிகளில் விடுகளில் விதிகளொன்று செய்வோம் சாதியில்லா நீதிகளில் போதனைகள் செய்வோம்.
99
கவிஞரது கவிதைகள் மேற்கூறியவாறு உள்ளடக்கச் சிறப்புகள் கொண்டிருப்பினும் உருவத்தில் பலவீனம் கொண்டவை என்பதனை மறுப்பதற்கில்லை! எனினும் திக்கவயல் தர்முவின் கவிதை மரபுக் கவிதையும் அன்று புதுக்கவிதையும் அன்று. அது உணர்வினால் உந்தப்பட்ட மறக்க முடியாத கவிதை என்று ஆய்வாளரொருவர் குறிப்பிட்டமை சிந்திக்கப்படவேண்டியது.
9ேங்கி

Page 24
(DGBSe
வீட்டிலே வேலை செய்ய ஒரு ஆள் வேண்டுமென்று அம்மா தேடிக் கொண்டிருந்தா. நான் ஒரு பயணம் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஒரு பையனைச் சந்தித்தேன். பேச்சுக் கொடுத்ததிலே சமையல் வேலை நன்றாகத் தெரிந்தவன் என அறிந்தேன். அம்மா சொன்னது நினைவில் இருந்ததால் அவனிடம் மேலும் பேச்சுக் கொடுத்ததிலே சிறு ‘கொட்டல்’ ஒன்றிலே வேலை செய்தவன் என்பதும் இப்போது வேலை ஒன்று தேடிக் கொண்டிருப்பதாகவும் அறிந்தேன்.
பேச்சுக் கொடுத்ததிலே கள்ளம் கபடம் இல்லாதவன் என அறிந்த நான் எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வர விருப்பமா என வினவினேன். அவனும் ஒம் என்று ஒத்துக் கொண்டான். அவனை என்னுடன் கூடவே அழைத்துச் சென்றேன். வீட்டுக்கு வந்ததும் அம்மாவுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தேன்.
அம்மா நடத்திய “இன்டர்வியூவிலே அவன் பாசாகி விட்டான். என்னென்ன சமையல் செய்யத் தெரியுமென அம்மா கேட்டா. “கொட்டல்’ ஒன்றிலே வேலை செய்ததால் பலவிதமான பலகாரங்களும் இடியப்பம், பிட்டு எல்லாம் செய்ய முடியும் என்று சொன்னான். அத்துடன் மாவிலே செய்யும் ‘வோளை’ (வோண்டாமாதிரி) யும் செய்யத் தெரியும் என்றான்.
அம்மா பகல் சாப்பாட்டுக்குப் பின் 2 மணி நேரம் தூங்குவது வழக்கம். அவனுக்கும் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு படுக்கப் போகுமுன் ஸ்டோர் ரூமிலே அலுமாரியிலுள்ள மா சீனி எல்லாம் காட்டி எங்க உனக்குத் தெரிந்த “வோளை செய் பார்ப்போம் என கூறிவிட்டுப் படுத்துவிட்டா.
வழக்கமாக மாலை தேனீருடன் ஏதாவது ‘டிபன்’ செய்வது வீட்டில் வழக்கம். நானும் ஏதோ வேலையாக வெளியே சென்று விட்டு புதுச் சமையல்காரனின் டிபன், தேனீர் எல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். அம்மாவும் அப்போதுதான் தூங்கி எழுந்து குசினிப் பக்கம் சென்றா. குசினிக்குப் போனவ என்னை அழைத்த விதத்திலே ஏதோ விபரீதமென அறிந்த நான் குசினிக்கு ஓடினேன். ஆகா! காட்டி விட்டான் அவன் கைவரிசையை.
ஒரு மாதம் சாப்பாட்டிற்கு வாங்கிய 7 கிலோ மாவுடன் 3 கிலோ சீனியையும் சேர்த்து “வோளை செய்து இரண்டு பெரிய வாளியிலே வைத்திருந்தான். சிரி சிரி என்று சிரித்து வீட்டிலுள்ள எல்லோரையும் கூப்பிட்டுக் காட்டுவதை விட வேறு என்ன செய்ய (ԼՔlգԱվԼՔ.
அன்று பக்கத்திலுள்ள உறவினர்கள் எல்லார் வீட்டிலும் டிபன் மா ‘வோளை’தான்.
38 - பாலமீன்மடு கருணா. இவழி, 2O2
 

சிறுவர் அறிவியல் பாடல்
கணினி தவிருர் ஏ.இக்/w
ADGB DG006 TU6T FförföllumGÕ - 666 D6õÕ Dõõu6õ (8566GBu LTLLLLLTLLL TTTTTTLL TGL LLLCTLCLL SL LsLLLLCTLLLLL So 606360) 6f 6ful 5 -
கணினி நிகழ்த்தும் விந்தைகள் = உலகின் கவன மிர்ப்பதை ஊடகம்
56Õ 56õ 655õ6õ Dõ56 560õgõ56 66D Õõ56Õ
LTTTTLL TLTLLTLLLLLTT LG0T LLTTLLLLLLL LLLL GMLLLTTC தருவதால் மறதி அகன்றது | 660. 610 febley)|fð I göflu III = II60
560Tib õõõi 560603u
so Golf 6) 6T656 (85.606E56 fab sp UIdaff LIGOTEDIT6 upuD6DIDITUIIII
Don so 6060DE508L 6.huhe Gir boofeof
5 8õ6606 UDTÄõ
LLLLLLTTTTL LLLLLLTTTTLLLLLLL LLLLLLLLLLMLC T LL
56,ofeof
6õ5 D5036 60fuõbib அர்த்தமுடனுல கின்றிதை - மிக அறிவு பூர்வமாயப் இணைத்திரும்
0LTMLLOLLL LLLLLLLLCCL TLLTMMLLLLLLLL0 S LLLL L LLLLLLLT0LT GEILI í 16 g h i jLEllen
LLLLLTTT LLLT CTTTTTT GTCCCTTLLLLLLLLCLLL LL LTLL TL LI60öÍ6OLdó öI60556öl földbill ICBD1
QEQIfð Ellu IIIöð 61ITðfÓld bíð = EE) 96O6O61 IS60Dun undtislbÄ)
f66dnu dibGYÖT AD60508 - 660060 66DD 65 6.a ful Gb056066f 66 futuolfo
9ேவழி, 202

Page 25
ஒரே மாதத்தில் மூன்று கெளரவங்களைப் பெற்ற ஆரையூர் இளவல்
பிரபல நாடகாசிரியரும்,நாடறிந்த இலக்கியவாதியுமான ஆரையூர் இளவல் கடந்த டிசம்பர் மாதம் (2011) eyp 60i Ol கெளரவங்களைப் பெற்றுள்ளார். அவை:
9 மணி முனைப் பற்று பிரதேச செயலகம் நடாத்திய இலக்கிய விழாவில் (09.12.2011) பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். இதை மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் நடாத்தினார்.
9 ஆரையம்பதியின் சமூக அபிவிருத்தி அமைப்பான ASDA நிறுவனம் 11.12.2011 ல் நடாத்திய வைபவத்தில் கெளரவிக்கப்பட்டார். பொன்னாடையும், விருதும் வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவரான சுஜாகரன் இதை நடாத்தினார்.
* கிழக்கு மாகாண சபை சமூக சேவைகள் திணைக்களம் நடாத்திய சிறந்த சிரேஸ் ட பிரஜை தெரிவில மண்முனைப்பற்றுபிரதேச செயலகத்தின் சிறந்த சிரேஸ்ட பிரஜையாகத் தெரிவுசெயப் யப் பட்டுப் பாராட் டிக் கெளரவிக்கப்பட்டதுடன் விருதும் வழங்கப்பட்டது. இவ்வைபவம் 15.12.2011 தன்னாமுனையில் நடைபெற்றது. கிழக்குமாகாணசபை சமூகசேவைப் பணிப்பாளர் இதை நடாத்தினார்.
- அன்புமணி 9ேவழி
 

மீண்டும் ஒரு காதல் கதை
(11)
- திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
ராதா இப்படி மாறி விட்டதற்கு வேறு வேறு காரணங்களையிட்டுச் சிந்தித்த கண்ணனுக்கு அவள் இன்னொருவனுக்கு மனத்தில் இடமளித்திருப்பாள் என எண்ணத் தோன்றவே இல்லை.
இது ஏன்? இது எப்படி? என அவனது மனசு அலறியது “என்னிடம் என்ன குறை கண்டாய் ராதா” என வாய்விட்டு அரற்றினான் கண்ணன்.
பொருத்தமான வயது, சமமான படிப்பு, ஒரே துறையில் தொழில், உரிமையுடன் சேர்ந்த உறவு, சிறு வயது முதலே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பழக்கம், ஒன்றாக உண்டு விளையாடி வளர்ந்த அன்பு இத்தனை இருந்தும் ராதா ஏன் இன்னொருவனிடம் மனத்தை இழந்தாள்.
அதுவும் திருமணமானவன், தாரமிழந்தவன், ஒரு குழந்தைக்குத் தந்தை, உத்தியோக ரீதியிலும் பொருளாதார நிலையிலும் அவளை விடக் குறைவானவன். மொழியாலும் மதத்தாலும் வேறுபட்டவன். அவனிடம் என்ன உணர்வை இவள் கண்டாள்? அவனுக்காக என்னை இழக்க எப்படி ராதாவுக்கு மனசு வந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு யோசனை பண்ணிக் குமைந்தான் கண்ணன். அவனுக்கு எதுவுமே புரிவதாயில்லை. அவள் ஏன் இப்படிக் கவலையாக இருக்கிறாள் என யோசித்தவனுக்கு கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையானது நிலைமை.
சில சமயங்களில் கண்ணனால் அவளைப் புரிந்து கொள்ள முடிவதில்லைத்தான். அவளது சில விருப்பங்கள், கருத்துக்கள், அவளது ரசனைகள், அவள் வெறுத்தொதுக்கும் விடயங்கள் அவனால் புரிந்து கொள்ள முடியாமல் போவதுண்டு.
அரிசி மணிகளைச் சுமந்து கொண்டு வரிசையாகச் செல்லும் எறும்புக் கூட்டத்தின் அழகை ரசிக்கவென்றே அம்மாவுக்குத் தெரியாமல் அரிசிகளைத் தூவிவைப்பாள். வரிசை தப்பாது அவைகள் அரிசிகளை
0ேவழி

Page 26
இழுத்துச் செல்வதைச் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அச்சமயங்களில் கண்ணன் வந்தால் “பார்த்தீங்களா அத்தான் தங்களைவிடப் பெரியதும் பாரமானதுமான அரிசிகளை இந்த எறும்புகள் இழுத்துக் கொணி டு போற வடிவை? அரிசியை இழுக்க முடியாதவங்களுக்கு மற்றவங்க சப்போட் பண்ணுவது ஆச்சரியமாக இருக்கல்லவா?’ என்பாள்.
இந்தச் சின்ன எறும்புகள் தமது எதிர்காலத் தேவைக்காகச் சாப்பாட்டைச் சேமிச்சு வைக்க வேணும் எனத் தெரிஞ்சிருக்கிறது எத்தனை பெரிய விடயம் என விழிகளகல வியப்பாள்.
திடீரென வானத்து வெண்முகில்களைக் காட்டி ‘அங்கே என்ன தெரிகிறது சட்டென்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்பாள்.
“என்ன தெரியுது? அழகான பஞ்சுபோல மேகக்கூட்டம் தான் தெரியுது.”
“சே. நீங்க சுத்த மோசமான ஆள்தான். ஆக. அப்பாவி நோயாளிகளை குத்தவும் வெட்டவும்தான் தெரியும். கொஞ்சம் கூட ரசனையே இல்ல”
“சரி எனக்குத்தான் ரசனை இல்ல. நீயே சொல் என்ன தெரியுது?
“அங்க பாருங்க, அந்தப் பக்கம் ஒரு பெரிய யானையும் ஒரு குட்டியானையும். இந்தப் பக்கம் ஒரு ஆறு போகிறது. ஆற்றின் ஒரு பக்கம் மரங்களும் பற்றைகளும், அந்தா பாருங்க ஆற்றின் மறுபக்கம் குட்டி குட்டி வீடுகள். தெரியுதா இல்லையா?”
அவனும் கவனித்துப் பார்ப்பான். பிரமிப்பாக இருக்கும். “அட. வெறும் மேகக் கூட்டத்திற்குள்ளே இவள் ஒரு உலகத்தையே காண்கிறாளே” என வியப்படைவான்.
கதைப் புத்தகங்களை ராதா வரி வரியாக ரசித்து வாசிப்பாள். சாண்டில்யன், மணியன், ர.சு நல்ல பெருமாள், ஜெயகாந்தன் கதைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தடவை அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது மணியனின் ‘கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு’ என்னும் அவுஸ்ரேலிய பயணக் கட்டுரையை வாசித்து “நான் எப்போவதாவது வெளிநாடொன்று போவதானால் எனது முதல் தெரிவு அவுஸ்ரேலியா தான்.” என்று சொல்லிச் சிரித்தது கண்ணனுக்கு அடிக்கடி நினைவுக்கு வரும.
கதைப்புத்தகங்களை வாசித்துவிட்டு அதில் வரும் பாத்திரங்களையிட்டும் சம்பவங்களையிட்டும் வெகுவாக விமர்சிப்பாள். சில சமயம் அவளது தொல்லை தாங்க முடியாமல் அவள் வற்புறுத்தி வாசிக்கக் கொடுத்த புத்தகங்களை வாசிப்பான். அவன் வாசித்து முடிந்ததும் அது பற்றி அவனிடம் அபிப்பிராயம் கேட்பாள். கண்ணன் திரு திருவென முழிப்பான். காரணம் அவனுக்கு கதையே நினைவில் இருக்காது.
9ேர்.

கதைகள் வாசித்து முடிந்ததும் அதில் வரும் கதா பாத்திரங்களையிட்டும் படிப்பினைகள் பற்றியும் மிக ஈடுபாட்டுடன் விழிகளில் ஆர்வம் மின்ன அவள் விமர்சிக்கும்போது அவளது கனவு விழிகளைக் கண்ணன் ரசிப்பானே தவிர அவளது கருத்துக்களைக் கவனிக்கவே மாட்டான்.
ஒரு தரம் கண்ணன் ரயிலில் கொழும்பு செல்லும்போது ரயில் நிலைய புத்தகக் கடையில் ஒரு கதைப் புத்தகத்தை வாங்கினான் பயணத்தின்போது வாசித்துவிட்டு ராதாவுக்குக் கொடுக்கலாமென்ற நோக்குடன்.
அது ஒரு துப்பறியும் நாவல். அதை வாசிக்க ஆரம்பித்ததும் அது மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. எதிர்பாராத திருப்பங்களுடன் எழுதப்பட்ட கதையின் போக்கு கண்ணனை வெகுவாகக் கவர ஒரே மூச்சில் அக்கதையை வாசித்து முடித்து விட்டான். அக் கதை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.
வீடு திரும்பியதும் அப்புத்தகத்தை வெகுவாகப் புகழ்ந்து வாசித்துப் பார்க்கும்படி கொடுத்தான் கண்ணன்.
மறுநாள் அவனிடம் “கதையா அது? சுத்த அலட்டல். இதைப்போய் வாங்கியிருக்கிறீங்களே” என்றாள்.
அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. எந்தக் கோணத்தில் இவள் ரசிக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. இம்மாதிரி விடயங்களில் அவள் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தாள். சினிமாவிலும் அப்படித்தான். அவள் வெகுவாக ரசித்துப் பார்த்த படங்கள் அவள் பாராட்டிப் பேசிய படங்கள் அவனைக் கவரவில்லை.
ஆனால் அவள் காட்டும் அன்பில், அக்கறையில், அவளிடம் சட்டென வெளிப்படும் செல்லக் கோபத்தில், அவளது நல்ல பண்புகளில், அவளது அழகில், அந்த அழகு விழிகள் படபடக்க அவள் பேசும் விதத்தில், பெரியவர்களிடத்தில் அவள் வைத்துள்ள மரியாதையில், நோயாளிகளிடம் அவள் காட்டும் பிரியத்தில் அவன் பல சந்தர்ப்பங்களில் மனம் நிறைந்து போனதுண்டு.
கண்ணன் இரண்டு வயதுச் சிறுவனாக ராதாவின் வீட்டிற்கு வந்தவன். அவன் வந்து ஒரு வருடத்தின் பின்புதான் ராதா பிறந்தாள். இருவரும் ஒரே வீட்டில் ஒருமித்து வளர்ந்தவர்கள். விளையாடும் நேரங்களிலும் உணவு உண்ணும் சமயங்களிலும் அவனுக்குப் பிரியமானதை அவனுக்கு விட்டுக் கொடுத்துவிடுவாள் ராதா. சாதாரணமாக விளையாடும் விளையாட்டுப் பொருட்களில் குழந்தைகளிடத்தே ஏற்படும் சண்டைகள் அவர்களுக்குள் ஏற்பட்டதே இல்லை.
தந்தை ரங்கநாதன் அவர்கள் இருவருக்கும் புத்தகப் பை, பேனா, குடை போன்ற பொருட்களை வாங்கி வரும் போதெல்லாம் கண்ணன் விரும்பியதை எடுக்கட்டும். நான் மற்றதை எடுக்கிறேன் என்பாள் பெரிய மனுஷியாட்டம்.
famiglia -

Page 27
அவனுடன் சண்டையிடுவது கோபிப்பது எதுவுமின்றி ஒரு நல்ல நண்பனுடன் பழகுவதுபோலப் பழகுவாள். கண்ணனைவிட ராதா இரு வகுப்புகள் குறைந்தவளாகக் கற்றதால் அவளுக்குத் தெரியாத விடயங்களை சொல்லிக் கொடுப்பான்.
கண்ணன் ஆறாம் வகுப்புக்கு வந்ததும் மட்டு நகரில் பிரபலமான ஒரு ஆண்கள் பாடசாலையில் அவனைச் சேர்த்தார் ரங்கநாதன். அப்போது ராதா நான்காம் தரம் படித்துக் கொண்டிருந்தாள். இரு வருடத்தின் பின் அவளை நகரிலுள்ள பெண்கள் பாடசாலையில் சேர்த்தார். இருவரும் ஒரே வானில் சென்று திரும்புவார்கள்.
ஒரு சமயம் கண்ணனுக்கு அம்மைபோட்டு அவன் அவதிப்பட்டபோது ராதாவே அவனைப் பரிவுடன் பராமரித்தாள்.
இப்படிப்பட்டராதா ஏன் இப்படி ஆனாள்? அவளுக்கு என்னதான் நடந்திருக்கும்? யாரையும் சாதாரணமாகக் கூட நோக வைக்க விரும்பாத இவள் என்னை நோகடிக்க எப்படித் துணிந்தாள். கண்ணனுக்குத் தன் தோல்வியை - ஏமாற்றத்தை ஜீரணிக்கமுடியவே இல்லை.
விடுதியில் அவன் சாதாரணமாக யோசித்துக் கொண்டிருந்தாலே அவனது நண்பர்கள் ஏகக் கலாட்டா பண்ணுவார்கள்.
“என்னப்பா கண்ணன்? ராதாவைத் தேடிப் போய்விட்டதோ மனசு? இங்க இருந்து பகல் கனவு காணாமல் ஒரு நடை மாமனார் வீட்டிற்குப்போய் ராதா தரிசனம் பண்ணிற்று வாயேன்” என்பார்கள்.
“இவனுக்குக் கொழுப்பு. மாமியார் வாய்க்கு ருசியாக சமைத்துப் போட. வருங்கால மனைவி அன்போட பரிமாற. ராஜா மாதிரி சாப்பிட வேண்டியவன் இங்க நம்ம சின்னப்புவின் உப்புச்சப்பில்லாத சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு கிடக்கிறான்” என்பார்கள்.
இப்படியெல்லாம் தன்னை அன்புடன் கிண்டல் பண்ணும் தன் நண்பர்களுக்கு இந்த விடயம் தெரிய வந்தால் நிலைமை என்னவாகும் என நினைக்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது.
தன் உணர்வுகளோடும் ஜீவனோடும் ஒன்றிப் போய்விட்ட ஒரு விடயம் அந்த உணர்வுகளிலிருந்தும். ஜீவனிலிருந்தும் பிய்த்து எறியப்பட்டால் அதை எப்படி அவனால் தாங்கிக் கொள்ள முடியும். யோசிக்க யோசிக்கப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு!
ஆயினும் அவனுக்கு ராதா மீதோ அந்தச் சிங்கள ஆசிரியன் மீதோ கோபமோ வெறுப்போ ஏற்படவில்லை. இவ்வாறான பேரிடியொன்றைத் தன் மீது போட்ட அவ்விருவர் மேலும் தனக்கு ஏன் ஆத்திரம் வரவில்லை என்பதும் அவனுக்குப் புரியவில்லை.
மிக அண்மையில் கூட தான் திருமணம் செய்ய இருந்த பெண்ணை

வேறு ஒருவன் கடத்திச் சென்றதால் அவ்விருவரையும் குத்திக் காயப்படுத்திய பக்கத்து ஊர்க்காரன் ஒருவனைப்பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
“எனக்கு ஏன் ராதா உன் மீது கோபமே வரவில்லை?” என தன்னைத்தானே கேட்டுக் கொள்ளத்தான் அவனால் முடிந்தது.
கதை தொடரும்.
பதிவு ஓ அவனால் முடியும் (சிறுகதைத் தொகுதி)
நீ.பி. அருளானந்தத்தின் "ஓ அவனால் முடியும் சிறுகதைத் தொகுதி நூலின் வெளியீட்டு விழா 20.11.2011 அன்று= செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் |கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை ட்மண்டபத்தில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக சாகித்யரத்னா பேராசிரியர் சபாஜெயராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக “ஞானம்’ ஆசிரியர் கலாபூஷணம் Dr. தி.ஞானசேகரன் அவர்களும் கலந்து கொண்டனர். வரவேற்புரை அந்தனிஜிவா (கொழுந்து ஆசிரியர்), நூல் அறிமுகவுரை எழுத்தாளர் திருமதி பத்மாசோமகாந்தன், வாழ்த்துரை லோறன்ஸ் செல்வநாயகம்(தினகரன்), முதற்பிரதியை சமூக ஜோதி புரவலர் ச.இலகுப்பிள்ளை பெற்றுக் கொண்டதுடன் நிகழ்வில் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
g
தொடர்பு: திருமகள் பதிப்பகம், தொ.பே.இல. 011-4967027
0ேர்.

Page 28
பன்மொழிப்புலவர். த. கனகரத்தினம்
சொற்கள் - பருபொருள் நுண்பொருள்: எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அம் மொழியில் ஒரு பொருட்குப் பல சொற்களிருப்பின் அவை பருப்பொருளில் ஒத்திருக்கலாம். ஆனால் நுண் பொருளைப் பார்க்கும் போது அவ்வாறு அவை ஒத்திருக்கமாட்டா. எனவே ஒரு பொருட் பல சொற்களெல்லாம் நுணி பொருள் வேறுபாடுடையனவே. ஒரு பொருள் பிற சொற்களை Synonym என ஆங்கிலத்திற் கூறலாம். சொற்களின் பொருளின் நுண்ணிய வேறுபாடுகள் சொல்லாக்கத்திலும் இடம்பெறுதல் வேண்டும்.
Wind என்பதற்கும் Air என்பதற்கும் காற்று அல்லது வளி என்ற Gagligibasó061T uu6öru(65ga-6ör(&pril b. Air (36 p., Wind (36) p. Air in motion is wind - Air 6T6örugb6f 96086 35|T6 Wind. 96.6) is prTuigi Air என்பதற்கும் Wind என்பதற்கும் தனித்தனிச் சொற்கள் தேவை.
தமிழிலுள்ள சொல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்தல் வேண்டும். காற்று என்பதற்குச் சூடாமணி நிகண்டில் 31 சொற்கள் உண்டல்லவா? தென்றல் என்பதற்கும் 5 சொற்கள் உண்டு. அவற்றைச் சேர்த்துக் கணக்குப் பார்த்தால் காற்று என்பதற்கு 36 சொற்கள் உண்டு. இந்தச் சொல்வளத்தை முறையாகப் பயன்படுத்தாமை யார் குற்றம். இது நம்மவரின் குறையேயன்றி மொழியின் குறையன்று. இதற்கென்றே 9 p5655356ft 36013 G3 IT p) G35 Tg5g) (Glossary of cluster Words) போன்றவற்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.
காற்றுடன் ஒத்த கருத்துள்ள பின்வரும் சொற்களை கவனத்திற் G5T6G86) JITLb.
Air - 616s Hurricane - g560p Wind - SITsibol Breeeze - Gg56p6ů Gale - 5(685IIgbo Whirl - supe)
Storm - Lu6)
9ேங்கி
 

மேலும், கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல் தெற்கிலிருந்து வீசும் இனிய மென் காற்று - தென்றல் மேற்கினின்று வீசும் வெப்பமான வன் காற்று - கோடை வடக்கினின்று வீசும் குளிர் காற்று - வாடை என்றவாறும் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன.
வினைச் சொற்கள் பற்றிய பயன்பாட்டில் உதாரணத்திற்காகப் பேசுதல் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். உரையாடுதலை அல்லது மொழியைக் கையாளுதலைப் பேசுதல் என்கிறோம். பேசாத நாளெல்லாம் பிறவா நாளே”. இதனையொத்த ஒரு பொருட் சொற்கள் பலவுள. அவற்றை மக்கள் சாதாரணமாக ஒரு பொருளில் வழங்கினாலும் நுண்ணியதாய் ஆராயின் வேறுபாடுகள் உள. பேசுதல் என்பதன் ஒரு பொருட் சொற்கள்.
அறைதல் - உரக்கச் சொல்லுதல்
உரைத்தலி - செய்யுட்கு உரை சொல்லுதல்
உளறுதல் - பயத்தினால் ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லுதல்
ஒதுதல் - காதில் மெல்லச் சொல்லுதல்
உ+ம் தலைவி தலையணை மந்திரம் ஒதினாள்
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
சொல்லுதல் - இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்
செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்
நவிலுதல் - பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்
பகர்தல் - பகிர்ந்து விலை கூறுதல்
பறைதல் - ஒன்றைத் தெரிவித்தல்
மொழிதல் - சொற்றிருத்தமாகப் பேசுதல் விளம்புதலி - பலர்க்கு அறிவித்தல்
ஈ, தா, கொடு என்றவற்றின் சொற்பிரயோகத்தை கூற வந்த தொல்காப்பியனாரும் “ஈ யென்கிளவி இழிந்தோன் கூற்றே தா என்கிளவி ஒப்போன் கூற்றே கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே” எனக் கூறியுள்ளமையும் சிந்தனைக்குரியனவாகுக.

Page 29
முன்னிடு கடந்த வருட நடுப்பகுதியில் செங்கதிரில் ஆரம்பிக்கப்பட்ட விசுவாமித்திர பக்கம் பற்றிப் பலரும் செங்கதிரோனுக்கு தொலைபேசியூடாக மகிழ்ச்சி தெரிவித்ததான செய்தி ஆச்சிரம ஒளிப்பதிவேட்டில் அச்சாகி இருந்தது. விசுவாமித்திரன் அந்தச் செய்தி அறிந்து மகிழ்ச்சியுற்றது என்னவோ உண்மைதான்.
2011 மே மாத செங்கதிரில் இரண்டாம் விசுவாமித்திரன் பற்றிய அறிமுகக் குறிப்பில் இருந்த கடும் காரம் பின்னர் காணப்படவில்லையென்றும் காட்டமாக உறைப்பாகத் தாருங்கள் என்று நேரடி அஞ்சல் செய்த நிகழ்வுகளும் உண்டு.
விசுவாமித்திர பக்கத்தில் முன்னிடு என ஆரம்பித்து தொடர்ந்து நோக்கல் என்ற தலைப்பில் சிலபடைப்புகளின் தரிசனப் பார்வை வெளியானது. விமர்சனம் என்ற பெயரில் கெட்டித்தனத்தைக் காட்டி நூலாசிரியரின் முயற்சியைக் கொத்திக் கிளறி நையாண்டி செய்யாமல் நூதனமாகச் சொல்லி நூல் நயம் கண்ட பகுதி அது. W
பின்னர் நோக்கல் என்ற பகுதியைப் போல ஆக்கல் என்ற பகுதியை அறிமுகம் செய்யும் அவா மேலோங்கியது. இரண்டாம் விசுவாமித்திரனின் ஆற்றல் இலக்கியத்தை - ஆக்க இலக்கியத்தை வெளிக் கொணர விரும்பி இந்த ஆக்கல் என்ற பகுதி அமைந்தது. 2011 நவம்பர் கதிரில் அது சிறுகதையாகப் பிரசவம் கண்டது.
இப்போது 2012 இல் தாக்கல் என்ற பகுதியைத் தரவும் இரண்டாம் விசுவாமித்திரன் சித்தம் கொண்டுள்ளான். செங்கதிரோனுடன் அது பற்றிக் கதைத்தபோது “செங்கதிரோனுக்கு வில்லங்கம் வராமல் எதுவும் செய்யலாம். அது இரண்டாம் விசுவாமித்திரனின் சுயம்’ என்று ஆதரவு தந்தார்.
தாக்கல் என்ற இந்தப் பகுதியில் கண்டனங்கள்தான் பிரசுரம் பெறும். அவதானமாகவே தாக்கல் என்ற பகுதியைக் கையாள வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக இந்தக் காலத்தில் புதுக் கவிதைச் சொந்தக்காரர்கள் சிலரின் இலக்கிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எதையாவது ஏவுகணையாக
69வது 202
 

எறிய அது நமது நல்ல கவிஞர்களின் தலைப்பாகையைத் தாக்கி அவர்களின் நாமத்திற்கும் பங்கம் ஏற்படுத்த வழியுண்டு என்பதால் அமைதிவழி நின்று தாக்குதல் தொடுக்கும் பொறிமுறை யொன்றுக்காகவும் விசுவாமித்திரன் காத்திருக்கிறான். இந்தக் கதிரில் புதுக்கவிதை எழுதுவோருக்கெதிரான தாக்குதலுக்கு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
விசுவாமித்திர பக்கம் என்ற விருட்சம் நோக்கல் என்ற கிளையை முதலில் கண்டது. பின்னர் ஆக்கல் என்ற இன்னுமொருகிளை. இப்போது தாக்கல் என்ற பிறிதொருகிளை. இவ்வாறாக விசுவாமித்திரபக்கம் விரிவடைந்து செல்வது காலத்தின் கட்டாயம் போலும்.
பன்முகத் தோற்றத்தில் சித்து விளையாட்டுக் காட்டும் இரண்டாம் விசுவாமித்திரனின் கைங்கரியங்கள் சொல்லில் அடங்காதவை. ஞானவழி நின்று மோனத் தவம் இயற்றும் அடியவனின் ஆற்றல் பல வகைத்து. செங்கதிர் வீச்சின் ஊடாக இனிவரும் காலங்களில் இதனை மாந்தி மகிழலாம்.
O O 85M8586ରD
புதுக் கவிதை என்ற பெயிரில் வர்ைமுறையில் ஈடுபடுவோருக்குக் கைவிலங்கு இடவேண்டும். கவிதை என்பது உள்ளுணர்வின் பாற்பட்டது. அது தரும் இன்பம் சொல்லி மாளாது. அனுபவம், வாழ்வின் துன்பியல் பற்றியதான புரிதல்கள், அடக்குமுறை, பிணக்குகள், மானுடவியல் எனவாகும் பலவாறான பன்முகத் தேர்வினுடாக கலை நயத்தோடு அது சொல்லப்படல் வேண்டும். இது நிகழும்போதுதான் கவிதையின் சுகப் பிரசவம் நிகழும்.
ஆங்கில மொழியறிவு படைத்தோரால் வேறு மொழியிலிருந்து இலக்கிய வடிவங்களை மொழி பெயர்த்தபோது சிறுகதை, நாவல் என்பன தமிழுக்கு வந்து சேர்ந்தன. அதே வழியில் வேறு மொழிகளில் இருந்து கவிதைகள் பெயர்ப்புச் செய்யப்பட்ட போது தமிழுக்குப் புதுக் கவிதைகள் அறிமுகமாயின. தொல்லை அன்றே தொடங்கிற்று.
கவிதைச் சிற்றிதழான ‘யாத்ரா ஆசிரியரும் பிரபல கவிஞருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் பத்திரிகையொன்றில் பல புதுக் கவிதைகளைப் படித்தால் விசர் வந்துவிடும் போல் இருக்கிறது எனத் தலைப்பிட்டு எழுதிய கட்டுரையில் “பொது மக்களை அசெளகரியத்திற்குள்ளாக்கும் இரண்டு தொல்லைகள் நீண்ட காலமாக இந்த நாட்டில் நிலவி வருகின்றன.
இவழி

Page 30
எந்த விற்பன்னர்களாலும் எந்த சக்திகளாலும் எந்த அதிகாரத்தாலும் கட்டுப்படுத்த முடியாதபடி அந்த இரு தொல்லைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்று நுளம்பு. மற்றது கவிதை - புதுக் கவிதை” என எழுதினார்.
ஈழத்துக் கவிஞரின் புதுக்கவிதை பற்றிய நிலைப்பாடு இதுவென்றால் இந்தியக் கவிஞர் இன்குலாப் அவர்கள் “கவிதை நூல்கள் எனக்குக் கிடைத்தால் நான் உடனேயே திறந்து படிப்பதில்லை. காரணம் பயம்” எனக் கூறுகின்றார்.
இந்தவகையான நிலைப்பாடுகள் புதுக்கவிதைகளின் அழிச்சாட்டியம் பற்றியும் நெருக்குவாரம் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. புதுக்கவிதையானது இன்று எடுப்பார் கைப்பிள்ளையாகி காணுமிடமெல்லாம் காட்சி தரும் நிலையினைக் கண்டு வருகின்றோம். யார் எழுதவேண்டும்? யாருக்காக எழுதவேண்டும்? என்ற விவஸ்தையே இல்லாமல் கவிதைகள் வெளிவரலாயிற்று.
“பூப்படையாப் பெண்களெல்லாம் பிள்ளை பெற வந்ததுபோல் யாப்பறியாப் பல பேர்கள் பாப்புனைய வந்துவிட்டார்” என்று செங்கதிரோன் எழுதிய ஒரு கவிதையில் புதுக்கவிதைப் புலவர்கள் மீது ஏற்கெனவே போர் தொடுத்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக புதுக்கவிதை எழுதுவோர் கவிதை வன்முறை மூலம் அச்சமூட்டி வருகின்றனர். புதுக்கவிதையில் வன்முறையா? விளங்கவில்லையே என்று நீங்கள் சொல்வது புரிகிறது. படிமம் என்கின்ற விஷ வாயுக்களை கவிதைக்குள் செலுத்துவதன் மூலம் வாசகர்களை மயக்கமுறச் செய்கின்றனர். அடைப்புக்குறிகளைப்போட்டு கவிதைகளைச் சிறைப்படுத்திச் சித்திரவதை செய்கின்றனர். படித்தவர்களும் பாமரர்களும் விளங்க முடியாதவாறு கவிதைகளை எழுதி எதையும் தெரிந்து கொள்ளும் தகவல் அறியும் உரிமையை மறுக்கின்றனர். வசனங்களை உடைத்து நொறுக்கிக் கவிதையாக்குகின்றனர். எண்ணிலடங்காத கவிதைகளை எழுதி இலக்கிய ஆக்கிரமிப்புச் செய்கின்றனர். மண்வாசனை என்ற பெயரில் அசிங்கமான சொற்களைப்பயன்படுத்துவதன் மூலம் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர். இவற்றைக் கவனத்தில் கொண்டால் புதுக்கவிதை எழுதுவோர் கவிதை வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பதில் என்ன பிழை? எனவேதான் “புதுக்கவிதை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோருக்குக் கைவிலங்கு இட வேண்டும்.”
- இரண்டாம் விசுவாமித்திரன்

“அப்போது நான் ஒரு சிறுவன். எனினும் ஒரு சம்பவத்தை இன்றும் என்னால் நினைவு கூர முடியும். ஒரு நாள் நள்ளிரவைத் தாண்டிய இரவு. எங்கள் மாமா வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பிரிட்டிஸ் இராணுவத்தினர் நுழைந்தார்கள். அவர்கள் எமது குடும்ப உறுப் பினர்களைக் கணி டபடி தாக்கினார்கள். அங்கிருந்த தளபாடங்களையும் அடித்து நொறுக்கினார்கள்.” இந்த நிகழ்வு நடந்தது ஜெருசலேத்திலுள்ள ஒரு வீட்டில். அந்த வேதனையான அனுபவங்களைப் பெற்ற அந்த ஒன்பதுவயதுப் பாலகன் முஹமட் யாசீர் அப்டெல் ரவூத் அரபாத்” என்பவன். பாலஸ்தீனத்தின் பெருந்தலைவராக உயர்ந்து நின்ற அரபாத் அவரது போராட்ட உணர்வின் முதல் “கீறல்' தனை இப்படிச் சொல்லியிருக்கிறார். அப்போது பாலஸ்தீனத்தின் தலைநகர் ஜெருசலேமாக இருந்தது. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்குள் அடங்கியும் கிடந்தது. யூதர்களுக்கும் பிரிட்டிஸ் சாருக்கும் எதிராக அப்போதே அங்கு எதிர்ப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஐந்து வயது முடியுமுன் தன் அன்னையை இழந்த அரபாத் மாமாவீட்டில் வந்து வாழநேர்ந்தது. அவர் வாழ்வின் துயரமான ஆரம்பகாலம். அந்த வயதில் இருந்து அந்திம காலம்வரை அவரது ‘ஓட்டம் ஓய்வை அளிக்கவில்லை.
அவரது பிறப்பிடம் எகிப்து - கொய்ரோ நகரம். அப்பா ‘ரவூப் குவட்வா அல் குசைனி’ ஒரு எகிப்திய புடவை வியாபாரி. அம்மா ய..வா அபுல் சவுட், ஜெருசலேமைச் சேர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் அறுவர். அம்மா 1933ல் "கிட்னி செயலிழப்புக் காரணமான நோயினால் காலமானார். இவர் பிறந்தது 1929 ஆகஸ்ட் 24. உதிர்ந்தது 11நவம்பர் 2004. எழுபத்தைந்து ஆண்டுகள் இடைவிடாத சுமைகளைத் தாங்கித் துணிந்து செயற்பட்டவர். அரபாத்தின் 19வது வயதில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு பாதியில் நின்றது. எனினும் தன் முயற்சியினால் 1952
1956 மீண்டும் இணைந்த அரபாத் கெய்ரோ பல்கலைக்கழகத்தில்

Page 31
பட்டதாரியானார். அந்த நாட்களிலேயே பாலஸ்தீனிய மாணவர் பேரவையின் தலைமைப் பொறுப்பையும் பெற்றிருந்தார். அதுதான் அவர் ஆரம்பகாலப் போராட்டத் தலைமைத்துவம்.
பாலஸ்தீன் மக்கள் பட்டுவரும் துயரங்கள் அரபாத் அவர்களின் இதயத்தைத் தொட்டன. 1964 நவம்பர் 13ல் ஆரம்பிக்கப்பட்ட “பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின்’ (PL.O) தலைவராக யசீர் அரபாத் அன்றைய எகிப்தின் அதிபரை - கேணல் நஸார் அவர்களையே முன்மொழிந்திருந்தார். அதன் பின்னரான சில தலைமை மாற்றங்களின் பின் யசீர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜோர்டானும், சிரியாவும், எகிப்தும் சேர்ந்து அரபாத் என்ற தலைவனை ஊக்கப்படுத்தி உயரவைத்தன. காஸா, ஜோர்டான் பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்களையும் அடாவடித்தனங்களையும் தடுத்து நிறுத்தவே பாலஸ்தீன விடுதலை இயக்கம், பாலஸ்தீன விடுதலை இராணுவத்தை உருவாக்க வேண்டியதாயிற்று. அரபாத் அவர் எதிரிகளால் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. போராட்ட உணர்வினர் எனினும் அவர் எப்போதும் போரைத் தேடிப்போனவர் அல்லர். அவரின் கீழ் இயங்கிய சில இயக்கங்கள் அவர் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டதால் ஏற்பட்ட சில பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு அவர்பதிலளிக்க வேண்டிய நிலையிலும் இருந்திருக்கிறார். அவரது புகழையும் சகிப்புத் தன்மையையும் எதிரிகள் கொச்சைப்படுத்தியும் இருந்தனர்.
அந்த எழுபத்தைந்து ஆண்டுகால வாழ்வுவரை பாலஸ்தீன விடுதலை அவர் உயிர்மூச்சாகவே இருந்தது. பல சோதனைகள், வேதனைகள், காட்டிக் கொடுப்புக்கள், கொலை முயற்சிகள், குடும்ப வாழ்வின் இடர்ப்பாடுகள் இவைகளையெல்லாம் இரகசியமாகவே ஏற்றுக் கொண்டவர். எவரிடமும் பகிர்ந்து கொள்ளாத பக்குவம் அவர் வாழ்வில் இருந்திருக்கிறது. அதுதான் அவரது தனித்துவம். 1964ல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து அவர் மாறிமாறி வதிவிடங்களைத் தேடவேண்டி வந்தது. எகிப்து, குவைத், ஜோர்டான், டுனிசியா, லெபனான், மேற்குக்கரை என அவர் வாழ்வின் பெரும்பகுதிகள் அலைக்கழிவுகளாகவே தொடர்ந்தன. அரபு நாடுகளில் பல அவரது அயராத உழைப்பை மதிக்கவில்லை. சிலர் மதிப்பதுபோல் நடித்தார்கள். ஆயினும் அந்நாடுகளை அவர் வெறுக்கவில்லை. தன் மக்களுக்கான போராட்டத்தில் அவர் சில தடவைகள் தனித்துவிடப்படார்; ஆனால் தளரவில்லை. அவர்பின்னால் மக்கள் இருந்தார்கள் - மகோன்னதமான
58) Músfies w

இலட்சியம் இருந்தது. அதுவே அவரைப் பலதடவைகள் காப்பாற்றியது.
1974ல் பாலஸ்தீன விடுதலை இயக்கம். PLA என்ற பாலஸ்தீன விடுதலை இராணுவம் என்பவற்றின் தலைமைப் பொறுப்பை ஒருசேர வகித்தார் அரபாத். எனவே இஸ்ரேலுக்காகிய போரில் அவர் ‘சுப்றீம் கொமாண்டர்’ என அழைக்கப்பட்டார். இஸ்ரேலுடனான போர்கள் எதிர்பார்த்த வெற்றியை எட்டா விடினும் ஆக்கிரமிப்பின் ஆதிக்கத்தை ஆடச்செய்தது என்பது சரித்திரத்தின் உண்மை. ஏகாதிபத்தியங்கள் துணை நிற்காமல் இருந்து அரபு நாடுகள் அனைத்தும் அவருக்குத் தோள் கொடுத்திருந்தால் சுதந்திர பாலஸ்தீனத்தை அரபாத் அடைந்திருப்பார். ஒரு புதிய சகாப்தத்தின் தலைவனுமாக உயர்ந்திருப்பார்.
அந்நாட்கள், உலகின் ஒப்பற்ற தலைவனாக ஓங்கி நின்றபோதுதான் 'ஒஸ்லோ’ ஒப்பந்தம் (1993) ஏற்பட்டது. மேற்குலக நாடுகள் அவரது வீரத்தை மதிப்பதுபோல் நடிந்து. தம் வலைக்குள் சிக்கவைத்தார்கள். அந்தச் சமாதானத்தில் நடந்து விட்ட இரு தவறுகள்தான் அவரது இடர்பாடுகளுக்குக் காரணமாயிற்று. ஒன்று தனது இராணுவச் சமநிலையைத் தக்கவைக்காதது. மற்றையது எல்லையற்ற பாலஸ்தீன இராச்சியத்தை - அதுவும் தான் முன்பு கேட்டதைவிடக் குறைந்த பரப்பளவு நிலத்தை ஒப்புக் கொண்டது. நேர்மை உள்ளம் கொண்ட அரபாத் புதிதாகப் பிறக்கும் தன் மக்களுக்கான பாலஸ்தீனத்தில் நிம்மதியாக வாழநினைத்தார். ஆண்டாண்டாக அலைந்து திரியும் மக்களுக்கு அமைதி தரலாமென எண்ணினார். ஆனால் அவரைச் சூழ்ச்சிவலையில் சிக்கவைத்த வஞ்சகக் கூட்டமோ மாற்றுக் கோட்பாடுகளுடன் இருந்தது. பேச்சுவார்த்தைகள் என்றும் நல்லெண்ண நகர்வுகள் என்றும் சமாதானத் தூதுகள் என்றும் நடத்தப்பட்ட நாடகங்களில் “அரபாத்” என்ற அரபு உலகின் விடிவெள்ளி வீழ்த்தப்பட்டது. பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டதன் பின்பே அரபாத் என்ற சிங்கம் அதன் குகைக்குள்ளேயே முடக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரால் தன் மக்கள் முன் தோன்ற முடியவில்லை. இதுதான் சமாதானம் பேசவந்த மேற்குலகம் - குறிப்பாக ‘நோர்வே போன்ற எவரும் அவரது அப்போதைய நிலையைக் கண்டு கொள்ளவே இல்லை. அவரது வீரம் மிக்க வாழ்வு வீணாகிப் போனது. நோபல் பரிசும் உலகத்தவர்களின் ‘நகாசுத் தனங்களான பாராட்டுகளும் அவரைக் குளிர வைக்கவில்லை. ஒரு காலத்தில் ஐ.நா. சபையில் கம்பீரமாக 61(ppbgs pilgirp “Today I have come bearing an olive branch and a freedom fighter's gun. Do not let the olive branch fall from my hand” 6095.fuuLDITES5 சொன்ன அநீதத் தலைவனின் தலை விதி சமாதானத் தாலி
9ேர்.

Page 32
மாற்றப்பட்டுவிட்ட சாபக்கேட்டை மக்கள் கண்டார்கள். புற முதுகில் குத்தப்பட்ட கொடுமையை எண்ணிக் கொதித்துப்போனார் அவர். தன் மக்களுக்காகப் போராடிய தலைவன் தனது சுதந்திரத்தையே இழந்து போனமைதான் வரலாற்றின் வடுவான கொடுமை.
அதன் பலன். ஒப்பற்ற அந்தத் தலைவன் உடல் நலம் குன்றலானான். கம்பீரமான தோற்றம் களையிழந்தது. 2004 ஒக்டோபர் 25 ல் அவர் உடல்நிலை மோசமானது. நவம்பர் 3 இல் அவர் பிரான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி சுகா’ வின் கூற்றுப்படி அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 11ல் பி.ப. 3.30 க்கு அவர் காலமானதாக உலகிற்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னான மக்கள் புலம்பல்கள் இன்றும் தொடருகின்றன. அரபாத் அவர்களின் வாழ்வு உலகில் சுதந்திரத்துக்காகப் போராடும் போராளிகட்கு ஒரு பாடமாகிறது. அங்கிருந்து படிக்க வேண்டியவைகள் நமக்கு ஏராளம் உள்ளன.
அவரது மரணம் ஒரு பெரிய சர்ச்சையாக நீடிக்கிறது. நஞ்சுகலந்த உணவின் மூலம் அது நடந்தது என்கிறார்கள். அமெரிக்க, இஸ்ரேல் அரசியல் வாதிகள் அந்த மரணத்தையே கொச்சைப்படுத்தினார்கள். ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையும், பிரான்சு டாக்டர்களும் அந்த மரணம் புற்று நோயால் ஏற்பட்டது என்றார்கள். ஏகாதிபத்தியங்கள் அவர் இறந்தபின்பும் அவருடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இன்றும் பாலஸ்தீனம் பரிதவிக்கிறது; வீழ்த்தப்பட்ட விடிவெள்ளிக்குப் பின் மீண்டும் ஒரு நட்சத்திரம் தோன்றுமா? என்ற ஏக்கத்துடன்.
“பகைவர்கள் தொழுது கூப்புகின்ற கையின் உள்ளும் கொல்லத்தக்க கருவி மறைந்திருக்கும். அவர்கள் அழுது விடுகின்ற கண்ணிரிலும் அதுபோல நம்மை அழிக்கும் வஞ்சகம் மறைந்திருக்கும். எனவே குறிப்பறிந்து காத்துக் கொள்க. அவர்கள் தொழுதாலும் அழுதாலும் அதில் ஏமாந்து நண்பரெனத் தெளிதல் கேடுபயக்கும்.” இது வள்ளுவம் சொல்லியிருக்கும் வாழ்க்கை நெறி. ஒப்பற்ற யாசீர் அரபாத் இந்த வரிகளால் அடையாளப்படுத்தப்படுகிறார்.
“தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா ரழுதகண் ணிரு மனைத்து”
9ேர்.
(கூடாநட்பு - குறள்: 828)

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும்
தமிழியல் விருது 2011
கடித்தா2ை &க்குவிட்// மையC ஆனததோறும் கழத்திலும் യമീശ്രമമീഊ് ഖഗ്ലൂിത്ര ഒബ്ജ ശ്രമിഴ് മc-ലീഗീയമ &த்தவித்தர் வர்ைனம் தமிழியன் வித்ததச வட்டமும் தவிறியன മില്ക്ക് മിഗ്രീജിത് മറ്റ്രിമ മഞു മത്രിസ്തുമൃം ൧യമമZിഞ്ഞ് മുഖ്ബ ഉട് മിത്രക്രമമ് ീ. മിത്രമല്ലിമ്മമം മിത്രക്രy uമuഖഗുമീത് മിഗ്ര് ഗമമ്മമ ൦൫൬് ിമക്രമി), മയ0് മിയമിdി-െം
உயர் தமிழியல் விருது . O எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பெறும் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி:
பேராசிரியர் சி.மெள்னகுரு
தமிழியல் விருதும் தமிழியல் வித்தகர் பட்டமும்
தமிழியல் வித்தகர் பட்டத்துடன் தலா ரூபா 15,000 பொற்கிழியுடன் வவுனியுர் றி இராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருது பெறும் தமிழிலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள்: கலாநிதி முல்லைமணி(வே.சுப்பிரமணியம்) நீர்வை பொன்னையன் சிற்பி சி. சிவவரவணபவன் திருமதி பத்மா (சோமகாந்தன் திருமதி அன்னலெட்சுமி கீரீஜதுரை சிவநெறிப்புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி
சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருது
2010ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 17 நூல்கள் தமிழியல் விருது பெறுகின்றன.
நாவல்:
ரூபா 10,000 பொற்கிழியுடன் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது பெறும் நாவல்: அல்-அஸமத் எழுதிய "அறுவடைக் கனவுகள் ரூபா 10,000 பொற்கிழியுடன் பம்பைமடு கந்தையா இரஞ்சிதமலர் தமிழியல் விருது பெறும் நாவல்: ஆ.மு.சி.வேலழகன் எழுதிய‘காணா இன்பம் கனிந்ததேனோ..!"
0ேவழி. 202

Page 33
சிறுகதை:
ரூபா 10,000 பொற்கிழியுடன் கல்விமான் க.முத்துலிங்கம் தமிழியலி விருது பெறும் நூல்: க.சட்டநாதன் எழுதிய *முக்கூடலி’ ரூபா 10,000 பொறி கிழியுடன் பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியலி விருது பெறும் நூல் : மு.சிவலிங்கம் எழுதிய ‘ஒப்பாரிக்கோச்சி’
கவிதை:
ரூபா 10,000 பொற்கிழியுடன் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தின் தமிழியல் விருது பெறும் நூல்: சாருமதி எழுதிய “அறியப்படாத மூங்கில் சோலை? ரூபா 10,000 பொறி கிழியுடன் கவிஞர் கலி லாறனி மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது பெறும் நூல்: மட்டுவில் ஞானக்குமாரன் எழுதிய “சிறகு முளைத்த தீயாக."
சிறுவர் இலக்கியம்:
ரூபா 10,000 பொற்கிழியுடன் வ.இராசையா தமிழியல் விருது பெறும் நூல்: கிண்ணியா எஸ். பாயிஸா அலி எழுதிய ‘தங்கமீன் குஞ்சுகள்’
காவியம்:
ரூபா 10,000 பொற்கிழியுடன் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருது பெறும் நூல்: ஜின்னாஹற் ஷரிபுத்தீன் எழுதிய *திரன் திப்பு சுல்தான் காவியம்’
நாடகம்:
ரூபா 10,000 பொற்கிழியுடன் கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது பெறும் நூல்: கலைஞர் கலைச்செல்வன் எழுதிய ‘மனித தர்மம்’
மொழிபெயர்ப்பு:
ரூபா 10.000 பொறி கிழியுடன் செந்தமிழிச் செலி வர் சு.ழரீகந்தராஜா தமிழியல் விருது பெறும் நூல்: வி.ஜிவகுமாரன் மொழிபெயர்த்த “இப்படிக்கு அன்புள்ள அம்மா”
நாட்டுக்கூத்து:
ரூபா 10,000 பொற்கிழியுடன் பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது பெறும் நூல்: மு.அருள்பிரகாசம் எழுதிய “மாவீரன் சங்கிலியன்’
இலக்கிய ஆய்வு:
ரூபா 10,000 பொற்கிழியுடன் வித்தியா கீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது பெறும் நூல்: கெகிறாவ ஸஹானா எழுதிய ‘ஓடும் நதி'
9ேங்கி

இசை ஆய்வு:
ரூபா 10,000 பொற்கிழியுடன் சுவாமி விபுலானந்த அடிகளார் தமிழியல் விருது பெறும் நூல்: லயன்ஸ் திலகம் போல், பத்தினியம்மா திலகநாயகம் போல் இணைந்து எழுதிய "இசைத்தமிழின் தொண்மையும் திண்மையும்’
ஆய்வுக்கட்டுரை:
ரூபா 10,000 பொற்கிழியுடன் புரவலர் ந.ஜெகதீசன் தமிழியல் விருது பெறும் நூல்: நுணாவிலூர் கா.விஜயரெத்தினம் எழுதிய ‘பண்டையத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’
பயணக்கட்டுரை:
ரூபா 10,000 பொறி கிழியுடன் அருட் கலை வாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது பெறும் நூல்: நிலா எழுதிய “இந்திய உலா?
விமர்சனக்கட்டுரை:
ரூபா 10,000 பொறி கிழியுடன் சிவநெறிப் புரவலர் சி.ஏ.இராமஸ்வாமி தமிழியல் விருது பெறும் நூல் கலாநிதி கந்தையா ரீகணேசன் எழுதிய ‘கலை இலக்கிய உலகு”
இனநல்லுறவு இலக்கியம்:
ரூபா 10,000 பொற்கிழியுடன் வணபிதா சந்திர அடிகளார் தமிழியல் விருது பெறுநர்: தர்மசிறி பண்டாரநாயக்க
சிறந்த குறுந்திரைப்படத்திற்கான தமிழியல் விருது:
2010ம் ஆண்டில் வெளிவந்து மிகச் சிறந்த குறுந்திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு தலா ரூபா.5,000 பொற்கிழியுடன் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது பெறும் இறுவட்டுக்கள்: “6J(6”, “ppTUů856Ť gLLDITUů"
ஓவியம்:
ரூபா 5,000 பொற்கிழியுடன் ஓவியர் டாக்டர் கிக்கோ தமிழியல் விருது பெறுநர்: ஓவியர் எஸ்.டி.சாமி
சிறந்த வெளியீட்டகம்:
ரூபா 5,000 பொற்கிழியுடன் புரவலர் எஸ்.சோலைமலைத்தேவர்
தமிழியலி விருது பெறுநர்: புரவலர் புத்தகப் பூங்காப் பணிப்பாளர் புரலர் ஹாசிம் உமர்
9 குறிப்பு: விருது வழங்கும் தினம் பின்னர். அறிவிக்கப்படும்
தகவல்: டாக்டர்.ஓ.கே.குணநாதன் மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்.
9ேர்.

Page 34
எலி லாரும் சொல் லித் தானி வாறாங்க. இது வரைக்கும் எத்தின தை புறந்திருக்கு. ஆனா நம்மப் போல ஏழைகளுக்கு எப்பவாவது நல்ல வழி புறந்திருக்காடா மாசிலானி ? இல் ல வேயில் ல. நெடுகவம் உரே தரித் திரச் சீவியம்தான்.
聯 “தைபுறந்தால் வழி புறக்குமெண்டு の面。©ባላታ©ሏ፡ 6ク (4. (多 நாம பிரிவறிஞ்ச நாளையிலிருந்து
iera
என்ன மாசிலான் வாய்க்க ஏதோ முணுமுணுக் கா? கொஞ்சம் சத்தமாத்தானி சொல லணி . அண்டைக்கு விளக்கீட்டில எண்ட பேரன் வெடி கொளுத்தியெறிஞ்ச
சத்தத்தில என்ட காதடச்சி துப்பரவா ஒரு இழவும் கேக்கிதில்ல. கொஞ்சம் பெலமாத்தான் சொல்லன்.
கேக் கிது. மெய் தானா நீயும் இதப் பத்தி யோசிச் சித்தான் இருக்கிறாப்போல!
அடே மாசிலான்! தை புறந்தா வழி புறக்குமெண்டு ஏன் சொல்றாங்க தெரியுமா? நம்மட சனங்களெல்லாம் அந்த நாளையில இந்த நாளையப்போல றோட்டுக்கீட்டு இல்லாத நேரம் அடுத்தடுத்த ஊர்களுக்கு காட்டு வழியால கோடை காலத்தில வத்திப்போய்க் கிடக்கும் ஆறுகள் வழியாகத்தான் நடையில போறவங்க. இந்த வழியெல்லாம் மாரி வந்து மழபெய்யத் தொடங்கினா வெள்ளம் போட்டு மூடுபட்டுப்போகும்.
புறகு வானம் நல்லா வெட்டாந்து தை மாசத்திலதான் ஆறுகளில தண்ணி குறையும். புறகும் ஆறுகள வழியாகப் பாவிக்கலாம். இது ஒவ்வொரு வருசத்திலயும் நடக்கிற வேலதான். இதத்தான் நம்மட பழையாக்கள் தைபுறந்தா வழி புறக்கு மெண்டு சொன்னவங்க. இப்ப உனக்கு விளங்குதா? இதத் தெரியாமத்தான் எல்லாரும் தைபுறந்தா என்னவோ ஊடு வாசலெல்லாம் பொன்னாகக் கொட்டப்போகுதெண்டு மாறுபாடாகச் சொல்லுறாங்க. உழைக்காம ஊட்டுக்க பூந்து படுத்தா எப்பிடிடா மாசிலான் வழி புறக்கும்? அதனாடி ஒவ்வொரு நாளும் தை மாசி பங்குனியெண்டு பாக்காம எல்லாரும் ஓடியோடி உழைக்க வேணும். தை மாசம் வழி புறக்குமெண்டு பார்த்துக்கொண்டிருந்தா நம்மள மூடி புத்து வளந்து போகும். புறகு முனிவர்கள் போல கண்ணமூடிக் கொண்டு தவம் செய்ய வேண்டியதுதான். சரி மாசிலான் மழ இருண்டு வாறாப்ப கிடக்கு. குடையும் கொண்டுவரல்ல. நான் வாறன்.
9ே.
 

“செங்கதிர்’ ஆண்டுச் சந்தா : ரூ.1000/-க்குக் குறையாத இயன்ற அன்பளிப்பு
* "செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் நேரில் வழங்கலாம்.
அலிலது * மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
இல . 13100158588996 க்கு வைப்பிலிடலாம். People's Bank (Town Branch) Batticaloa. Current account No.: 113100 138588996 - For bank deposit
அலிலது * அன்சல் அலுவலகம், மட்டக்களப்பில் மாற்றக் கூடியவாறு
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For money orders
* காசோலைகள்/காசுக்கட்டளைகளைதகோபாலகிருஸ்ணன் எனப் Gujba, Cheques/Money orders in Favour of T.Gopalakrishnan

Page 35
:5(5.K. f. ஸ்தாபகரும் முகாமைத் i 6.5II.GII: 077-781051
மின்னஞ்சல் : rhythm
வணசிங்கா பிரிண்டர்ஸ், 126/1, திருமலை வீதி, மட்டக்
 
 
 
 

Leólo 66D; DS/MN/CI/BR/1726 . ബ്രർജ്ജു :நின்றீர்களா?
"" මුණ්‍ය భట్ల ధ
sటై@లి టెలిప్మై
) / 075-4347053 isivaGyahoo.com
களப்பு. தொ.பே.இல. 0652227170