கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2012.02

Page 1
50வது ஆண்டை நோக்கி.
LIGOLITaf
பத்திரிை
பெப்ரவரி 2012
 
 

|6წ)ბ% 4
பர் : Quartaff ஜீவா
NÄN
\
N S
S
N W N
S
N
NNNNNNNNNNNNNNN N.
N
S
XXXXXXXX
RINN N
R
RS
Ä
W
W
N

Page 2
$திருமண சேவை
தங்கள் தேடல் உள்நாட்டிலா, வெளிநாட்டிாை? கணக்கியலாளரா, பொறியலாளரா, வைத்தியரா, வேறு தொழியியலாளரா?
எந்நாடாக இருந்தாலும், எத்தொழியியலாளராக இருந்தாலும் சுலபமான
esses.
夔 O O s சுய தெரிவு முறையில் தெரிவு செய்திட.
விவரங்களுக்கு -
திங்கள், புதன், வெள்ளி மாலை 4.30-7.30 மணிக்கு உள்ளேயோ, சனி, ஞாயிறு நண்பகல் 11.00 - I/32.00 மணிக்கு உள்ளேயோ சர்வதேச - சகலருக்குமான, WIWITIS: ಲೈಟ್ತಿ - புகழ் பூத்த, a தனிநபர் நிறுவனம்"
திருமண ஆற்றுப்படுத்துநர்
ஒழுங்குமுறை முகவரி
8.3.3 மெற்றோ மாடிமனை, தொலைபேசி
(வெள்ளவத்தை காவல் 4873929 நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம், 288088
38ஆம் ஒழுங்கை வழி) 236069 55ஆம் ஒழுங்கை,வெள்ளவத்தை, கொழும்பு 06.
வாடிக்கையாளர் வரவுகளின் முக்கிய
விவரங்களை வேல் னின் அலுவல்கநேரம் தொலைபேசி ဓါန်” ခြီးကြိုစ့် ဒွိ ဒွိန်းဟိုးမိုးနှီး
 
 
 
 

ஆடுதல் டாடுதல் சித்திரம் &வி బ్రిస్తోkథళtuభరణాళభరణిథు బ్లభ1భith
R&id:&t &ërgji si t'i si 8pit
§§ಣ್ಣಿàಿ§#
ஐ.லகப் பாராளுமன்ற வரலாற்றிலே:ே
Liġibg336it sriġ,l- e37535 N L. BFF JTA L. E. JE.BA.L... A żFr6b கை மல்லிகை. இதனை நாடாளுமன்றப் g3s List sigsists) frt. (04. 7, 200i) Ligs சய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது. அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலு னுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச்
ஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை நோக்கி. பெப்ரவரி
393 ീഡൂ نور%/مهر//C ർഗ്ഗഢ© الرمالد
ல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி, ரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல. அது ர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க
OffG). 椰 ல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு; கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள் :
C
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te : 2320721 mallikaiJeeva@yahoo.com
புதியதேர்ை இலக்கிய இலி, புவிந்துணர்வுடன் திரளுகின்றது.
வேறெந்தக் காலகட்டத்தையும் விட, இன்று கலை - இலக்கியத் தளத்தில் ஆரோக்கியமானதும், சந்துஷ்டியானது
மான காரியங்கள் நடந்தேறி வருகின்றன.
அரசியல் களத்தைப் போலில்லாமல், கலை இலக்கியத்துறை
சம்பந்தப்பட்டவர் கள் - மூவின மக்கள்
கலைஞர்கள் - ஒருங்கு சேர்ந்து, பரஸ்பரம்
புரிந்து கொண் டுள்ள அடிப்படையில் இயங்கி வருவதை நடைமுறையில்
கவே
பார்க்கும்போது, மெய்யா
மனநிறைவு ஏற்படுகின்றது.
எதிரும் புதிருமாக இருந்த இரு மொழிகளையும் சார்ந்த படைப்பாளிகள், கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்த மண் பட்ட கஷ்ட நிஷ்டுரங் களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஒரு புதிய பூமியை இந்த மண்ணில் உரு வாக்கித் தருவதற்காகச் சமீபகாலமாகத் திட்டமிட்டுச் செயலாற்றி வருவதைச் சில காலமாக இந்த மண்ணின் கலை இலக்கி யச் செயற்பாட்டை உற்று உணர்ந்தவர்
கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.
இலங்கையின் தலைநகரில் நடந் தேறி வரும் இந்தக் கலை இலக்கியப் புத்துணர்ச்சி நிச்சயமாக நாளை ஒரு பூச லற்ற நவ இலங்கையைச் சிருஷ்டித்துத் தரும் என மெய்யாகவே நம்புகின்றேன்.

Page 3
இந்த மண்ணில் நேற்றுவரை வாழ்ந்து வந்த புத்திஜீவிகள், இலக்கியச் சுவைஞர்கள், ரசனை மிக்க பல்வேறு ரசிகர்கள் மவுண்றோட்டையும், மரினா பீச்சையுமே தமது கனவில் அடிக்கடி கண்டு சுவைத்து வந்தனர்.
பொது இடத்தில் பிரபல சினிமாக் காரன் தோன்றப் போகின்றான் என்றால், நம் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதல் இடத்தைப் பிடிப்பதற்குக் கங்கணம் கட்டி, தமது வீரதீரத்தை நிலை
நாட்டிக் களிப்பார்கள்.
இன்று நிலைமை எல்லாமே மாறி விட்டது.
உள்நாட்டு யுத்தம், இனக் கெடுபிடி கள், ராணுவத் தலையீடுகள், சமகாலத் தில் கசப்பான அநுபவங்களை எமக்குப் கற்றுத் தந்துள்ள போதிலும்கூட, இந்த மண்ணில் காலூன்றி, சற்று நின்று நிதான மாகச் சிந்தித்துச் செயற்பட இந்த இளமைக்கால யுத்த நெருக்கடிகள் இந்த மண்ணில் வாழும் இளந்தலைமுறையின ருக்கும் நமக்கும் பல்வேறு வழிகளிலும் புதிய புதிய அறிவை, புதுப் புது ஞானோப தேசங்களைக் கற்றுத் தந்துள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முற்று முழுதான சிங்களப் புத்தக வெளியீட்டு நிறுவனம் - கொடகே பதிப் பகம் நாடு பூராவும் பல்வேறு மட்டங்களில் பரந்து வாழும் தமிழ்ப் படைப்பாளிகளின் 40இற்கும் மேற்பட்ட படைப்புகளைத் தனது பெயரில் வெளியிட்டு, வெளியீட்டு
விழாக் களையும் பரந்துபட்ட மட்டத்தில் நடாத்தி புதிய இலக்கியப் பாதைக்கு வழி சமைத் திருக்கின்றது. இது இந்த மண்ணின் வரலாற்றில் நமக்கொரு புதிய
பாடம்.
நேற்று வரைக்கும் எதிர் எதிர் இனங் களாகக் கற்பிக்கப்பட்டு, அரசியல்வாதி களினால் உசுப்பேற்றப்பட்டு வந்த சிங்கள - தமிழ் - முஸ்லிம் படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றார்கள் என்றால், இந்தப் புதிய தேசிய ஒருமைப்பாட்டின் வரலாற்றிற்கு அத்தி வாரம் இட்டவர்களே நமது சிங்கள - தமிழ் - முஸ்லிம் எழுத் தாளர்களைத் தான் என்பதை நான் சுட்டிக்
காட்ட விரும்புகின்றேன்.
இன்றைய காலகட்ட அனுபவப் பின்புலம் காரணமாக முன்கூட்டியே இந் நாட்டு மூவினக் கலைஞர்களும், எழுத் தாளர்களும் தங்கள் தங்களது அநுபவப் பின்புலத்தில் ஒரு நவீன, சந்துஷ்டி நிரம்பிய மானுட நேசிப்பும் கொண்ட ஒரு நவ இலங்கையை வருங்காலத்தில் உருவாக்கியே தீருவோம் என்ற ஆழமான இலக்கியச் சபதமெடுத்து, தத்தமது கலை இலக்கியத்துறையில் பரபரப்பு இல்லாமல், அதேசமயம் திட்டுமிட்டுச் செயற்பட்டு வரு வதைத் தினசரிப் பத்திரிகைகளில் இன்று செய்தியாகப் பார்த்து இந்த மண்ணையும், மூவின மக்களின் எதிர்காலச் சுபீட்சத்தை யும் நெஞ்சார நேசிக்கும் அனைவருமே மனநிறைவு கொள்ளலாம்.
عسد کہ خعہسمقصہسیL>
emmam

50-வது ஆண்டை நோக்கி47-வது ஆண்டு மலர் வெளியீடீடு விழா!
மல்லிகையின் நீண்ட நெடுங்காலத் திட்டமிது அரை நூற்றாண்டு இலக்கியக் கனவு
வது ஆண்டை அண்மித்து, அரை நூற்றாண்டுக் காலமாக-50 لவெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிலக்கிய ஏடு மல்லிகை என்ற இலக்கியச் சரித்திரத்தில் இலக்கியப் பெறுமதியை ஈட்டிக்கொள்ள வேண்டும் என்பதே நமது ஆரம்பகால அசைக்க முடியாத செயற்பாடாக இருந்து வந்துள்ளது.
இடையே வரப்போகும் இரண்டு ஆண்டுகளையும் கடந்து விட்டால், அடுத்து வரப்போகும் 2015ஆம் ஆண்டு ஜனவரியில் 50-வது ஆண்டு மல்லிகை மலர் சும்மா ஜாம். ஜாம் என உங்கள் ஒவ்வொருவரது கரங்களிலும் தவழ்ந்து விளையாடும்.
மிகப் பெரிய பாரிய வேலைத்திட்டம் இது. இலக்கியத் துறையைச் சார்ந்த பலரையும் இந்தப் பாரிய இலக்கியப் பணியில் தோளோடு தோள் நின்று ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
காரணம் சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றிலேயே அரைநூற்றாண்டுக் காலமாக மக்கள் மத்தியில் நின்று நிலைத்துப் பேர் சொல்லி வருவது மல்லிகையின் கடந்தகாலப் பெருமைகளில் ஒன்றாகும்.
இன்றைய காலகட்டத்தில் இருந்து இலக்கிய நெஞ்சங்கள் பரிபூரண ஒத்துழைப்பும் நல்லாதரவும் தந்தால்தான் அந்த மலரை வெகுச் சிறப்பாக வெளிக்கொணர முடியும் என மெய்யாகவே கருதுகின்றோம்.
இடைக்கால உள்நாட்டு கொடிய யுத்தத்திற்கு மத்தியிலும் மல்லிகை இதழ் ஒழுங்கு தவறாமல் வெளிவந்து கொண்டேயிருந்தது. இதழுக்கு மூலப்பொருட்கள் கிடைக்க முடியாத கட்டத்தில் நாம் பட்ட சொல்லொணா மனக்கஷ்டங்களையும், பாரிய தினசரிச் சிரமங்களையும் இன்று ஆறுதலாக இருந்து நினைத்துப் பார்க்கின்றோம்.
அடிப்படையான மனஉறுதியும், எடுத்த காரியத்தை எந்தச் சிரமங்கள் குறுக்கிட்டு தடுக்க முனைந்தாலும் அந்தப் பாரிய நெருக்கடிகளை ஆக்கபூர்வமான வழிமுறைகளில் அவற்றை ஏணிப்படிகளாகப் பயன்படுத்தி, மல்லிகை நின்று, நிமிர்ந்து செயற்பட்டு வருகிறது.
மல்லிகையின் தொடர் வாசகர்களுக்கு இவையனைத்துமே நன்கு தெரிந்தவைதான். ஆனாலும், நிச்சயமாக நம்புங்கள். வருங்காலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முத்திரையை மல்லிகை 50-வது ஆண்டு மலரில் பதித்தே தீரும். இது சர்வ நிச்சயம்!

Page 4
ÓILIMLfiLILíð
இதழியல் பெறுமானங்களுக்காகக் குரல் கொருக்கும்
9db (8LIITITIT6f
- வீ.தனபாலசிங்கம்
பாரதியைப் பற்றி நீங்கள்தான் மல்லிகைக்காக எழுத வேண்டுமென்பது தனது விருப்பம் என்று எனது அன்புக்குரிய டொமினிக் ஜீவா கேட்டபோது, என் மனதுக்குள் எழுந்த கேள்வி - என்னுடன் பணியாற்றுகின்ற ஒருவரைப் பற்றி நானே எழுதினால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது அவ்வளவு நல்லதாகத் தோன்றாதல்லவா? ஆனால், பாரதியைப் பற்றி எழுதுவதற்கு அதுவும் தினக்குரலின் பிரதம ஆசிரியர் என்ற வகையில் எழுதுவதற்கு எனக்கு நாளடைவில் வாய்ப்புக் கிடைக்காமற் போய்விட்டால் என்ன செய்வது? என்ற இன்னொரு கேள்வியும் உடனடியாகவே மனதிற்குள் எழுந்தது.
அதனால் மல்லிகை அளிக்க முன்வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் விடுவது எது விதத்திலும் பொருத்தமானதாக இருக்காது என்ற முடிவுக்கு வருவதற்கு எனக்கு நீண்ட நேரம் எடுக்கவில்லை.
நான் மிகவும் இளவயதில் வடமராட்சியில் இருந்து கொழும்புக்கு தொழில் வாய்ப்புக் காக வந்தவன். நீண்ட காலமாக, அதாவது மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான கால மாகப் பத்திரிகைத்துறையில் பணியாற்றுகின்ற போதிலும், வடபுலத்தில் பெருவாரியான நெருக்கடிகளுக்கு மத்தியில் அதுவும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பத்திரிகை யாளர்களாகப் பணியாற்றியவர்களுடன் தனிப்பட்ட முறையிலும் அந்நியோன்யமாகவும் பழகக் கூடிய வாய்ப்பு எனக்குத் துரதிர்ஷ்டவசமாகக் கிடைக்காமற் போய்விட்டது.
கொழும்பில் இருந்து கொண்டு பணியாற்றிய ஊடகவியலாளர்களில் பலர் வடபுலத்து அவல நிகழ்வுப் போக்குகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டும், கட்டுரைகளை எழுதி யும், வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்கியும் வந்திருக்கின்ற போதிலும், களத்தில் பணியாற்றியிருக்கக் கூடிய ஊடகவியலாளர்களுக்குக் கிடைத்த அனுபவம் அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
மல்லிகை பெப்ரவரி 2012 率 4.

அத்தகைய கள அனுபவத்தைக் கொண்ட ஒரு பத்திரிகையாளருடனான எனது நேரடியானதும் நெருக்கமானது மான அனுபவம் பாரதியுடனான அறிமுகத் துடனேயே ஆரம்பமாகியது. 1992ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ஒருநாள் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் நான் ஓர் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை, பிரதம ஆசிரியர் சிவனேசச் செல்வன் அவர்களின் அறைக்குள் ஓர் உயர்ந்த, பருமனான இளைஞன் பிரவேசிப் பதைப் பார்க்கிறேன்.
அடுத்து அன்று செய்தி ஆசிரியராக இருந்த எனது ஊரைச் சேர்ந்தவரான நடராஜா அவர்களை அழைத்து சிவனேசச் செல்வன் அவர்கள் அந்த இளைஞனுக்கு ஏதாவது பரீட்சை கொடுத்துப் பாருங்கள் என்று கேட்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். நடராஜா அவர்களின் இயல்பான ஒரு பழக்கம் எவரையாவது பரீட்சைக்குட்படுத்த வேண்டுமென்றால், ஆங்கிலச் செய்தி ஒன்றை மொழிபெயர்க்கு மாறு பணிப்பார். இன்று வரை பயிற்சிப் பத்திரிகையாளர்களாகச் சேர வருபவர் களை அத்தகைய ஆங்கிலப் பரீட்சைக்கு உட்படுத்தும் பழக்கம் தொடர்ந்து கொண் டேயிருக்கிறது. அதில் இருக்கின்ற சரியின் அளவுக்கு, அதில் ஏதோ ஒரு விதத்தில் தவறும் இருக்கின்றது என்பது, எனது இது கால வரையான பத்திரிகைத்துறை அனுப வத்தின் வாயிலாக என்னால் உணரக் கூடியதாக இருந்த ஒர் உண்மை.
அந்தப் பரீட்சைக்குப் பிறகு மறு நாளோ, சில நாட்கள் கழித்தோ பாரதி வீர கேசரி ஆசிரிய பீடத்தில் நடராஜா அவர்
களின் கீழ் தினசரிப் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். பாரதி எத்தகைய சுபாவம் கொண்டவர்? எத்தகைய ஆட்களை அவருக்குப் பிடிக்கும்? எந்தெந்த விடயங் களை விரும்பக் கூடியவர்? எதைப் பற்றிப் பேசினால் விரும்பிக் கேட்கக் கூடியவர்? 6T66TLusogs Guj606)n Lib அறிவது மிகவும் கடின மான விடயங்கள் என்பதைப் புரிந்து கொள் வதற்கு எனக்குப் பல நாட்கள் எடுக்க வில்லை. ஏனென்றால் அவரிடமிருந்து அபிப்பிராயத்தைப் பெறுவதென்பது மிகவும் கஷ்டமான காரியம். இதை ஆரம்பகால கட் டத்திலான எனது அனுபவத்தின் ஊடகவே நான் கூறுகின்றேன்.
என்னவோ தெரியவில்லை. என்னிடம் ஒரு பழக்கம். ஒருவருடைய உடல் மொழி யைப் பார்த்தே அவரின் இயல்புகளைப் பெருமளவுக்கு இனம் கண்டுவிட இதுகால வரை முடிந்திருக்கிறது. சில விதிவிலக்கு களும் துரதிர்ஷ்டவசமாக இருக்கவே செய் கின்றன. பாரதியின் உடல் மொழி அவர் எவருக்கும் தீங்கு செய்ய நினைக்கக் கூடியவர் அல்ல என்ற ஒரு பிரதிமையே, அவருடன் நான் நெருக்கமாகப் பழகாமல், எட்ட இருந்தே அவதானித்து முடிவெடுக்கக் கூடிய வாய்ப்பை வழங்கியது. இதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை என்பதை அவ ருடன் பழகுகின்றவர்கள் ஏற்றுக்கொள் வார்கள் என்பது எனது நம்பிக்கை.
பாரதியைப் போன்ற அந்த நேரத்தைய இளம் வடபகுதி பத்திரிகையாளர்கள் கூடுத லான அளவுக்கு அல்லது மிகையாக அரசியல் உணர்வு கொண்டவர்களாகவே இருந்திருக்க முடியும். அதற்குப் பாரதி விதி விலக்கானவராக இருக்கவில்லை. அவர்
மல்லிகை பெப்ரவரி 2012 தீ 5

Page 5
வீரகேசரியில் பணியாற்றத் தொடங்கி சில மாதங்கள் கடந்து விடுவதற்கு முன்ன தாகவே அன்றைய எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிருவாக இயக்குநர் எம்.ஜி.வென்சஸ்லாஸ் அவர்கள் பாரதியை அழைத்து இலங்கையின் இன வாத அரசியல் வரலாற்றைப் பற்றிய ஒரு ஆய்வைச் செய்யுமாறு பணித்ததாகக் கேள்விப்பட்டேன். பாரதியினுடைய அரசி யல் உணர்ச்சியும், ஆர்வமும் காரணமாக, அவரால் வெளிக்காட்டப்பட்ட பத்திரிகைத் துறைப் பங்களிப்பை வென்சஸ்லாஸ் அவர் கள் தெளிவாக அடையாளங் கண்டதன் காரணமாகவே அத்தகைய ஒரு பணியை அவரிடம் ஒப்படைக்கத் தீர்மானித்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அந்த நேரத்தில் வீரகேசரியில் அரசியல் செய்தியாளர்கள், சிரேஷ்ட நிருபர்கள், பத்தி எழுத்தாளர்கள் என்று கூறிக்கொண்டு எத்தனையோ பேர் இருந்த போதிலும், முகாமைத்துவமே முன் வந்து பாரதியிடம் அதை ஒப்படைத்தது.
பாரதியினால் செய்யப்பட்ட அந்த ஆய்வை இறுதியில் ஒரு நூலாக வெளியிட வேண்டுமென்பதே வென்சஸ்லாஸ் அவர் களின் நோக்கமாக இருந்தது என்று பின் னர் ஒரு தடவை நடராஜா என்னிடம் சொன்னதாக ஞாபகம். பாரதியின் அந்த வரலாற்று ஆய்வு தொடர்ச்சியாக வீரகேசரி வார வெளியீட்டால் 20 - 30 வாரங்கள் பிரசுரிக்கப்பட்டன. பின்னரான நிகழ்வுப் போக்குகள் அந்தக் கட்டுரைகள் நூலாக வெளிவருவதற்கான அருமையான வாய்ப்
பைத் தரவில்லை.
பாரதியைப் பொறுத்தவரை அவரின்
குடும்பப் பின்னணி எழுத்துலகிற்கு அந்நிய தானதல்ல. இன்று யாழ்ப்பாணப் பல் கலைக்கழகமாக மாறியிருக்கும் திருநெல் வேலி பரமேஸ்வரா கல்லூரியின் கணித வியல் ஆசிரியராகத் திகழ்ந்தவரும், எழுத் தாளருமான சு.இராஜநாயகம் அவர்களின் இரண்டாவது புதல்வர் பாரதி. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்த இராஜநாயகம் லங்கா சமசமாஜக் கட்சியின் ஒரு அனு தாபி, அக்கட்சியில் உறுப்பினராக இருந் தாரா? இல்லையா? என்பது பாரதிக்கும் தெரியவில்லை. சிறுகதை, நாவல்கள் எழுதுவதில் பெயரெடுத்த இராஜநாயகத் துக்குக் குடாநாட்டில் இருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையின் 10ஆவது ஆண்டு விழாவில் நாவலுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. அவர் 1998இல் மறைந் தார். அப்போது பாரதி என்னுடன் தினக் குரலில் பணியாற்றினார்.
பாரதியின் பத்திரிகைத் துறை வாழ்க்கை 1984 - 85 காலகட்டத்தில் யாழ்ப் பாணத்தில் இருந்து வெளியான முரசொலி தினசரியில் ஓர் உதவி ஆசிரியராகவும், நிருபராகவும் ஆரம்பித்தது. இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையை அடுத்து இந்தியப் படையினரின் வருகை யைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகப் பாரதி தனது பெற்றோருடன் கொழும்பு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.
தினக்குரலைத் தொடங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலகட் டத்தில் என்னுடன் பணியாற்றுவதற்கு
மல்லிகை பெப்ரவரி 2012 奉 6

எவரையும் முந்திக் கொண்டு வந்தவர் பாரதி என்பதை என்னால் என்றென்றைக் கும் மறக்க முடியாது. அவ்வாறு துணிச் சலை வெளிக்காட்டிய இன்னொருவர் இன்று லண்டன் பி.பி.சி.யில் இருக்கும் பூ.சீவகன். 1997 ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்ட தினக்குரலில் நான் 2004 ஏப்ரல் வரை செய்தியாசிரியராகப் பணியாற்றினேன். எம்மையெல்லாம் அழைத்து வந்த மூத்த பத்திரிகையாளர் பொன்.இராஜகோபால் தினக்குரல் ஆரம்பித்து மூன்று மாதங்களுக் குள்ளாகவே இறந்து விட்டார். இரவு பகலா கத் தினக்குரலுக்காகப் பாடுபட்டதன் விளைவாகவே அவரது உடல்நிலை அந் தளவுக்கு விரைவாக மோசமடைய வேண்டி யேற்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
நாளடைவில் பாரதி தினக்குரல் ஞாயிறு பதிப்பின் பொறுப்பைக் கவனிக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டார். ஆனால், அவருக்கு ஞாயிறு தினக்குரலின் ஆசிரியர் என்ற பதவி முறைப்படி வழங்கப்படா மலேயே அவரிடம் வேலை வாங்கப்பட்டது. முறைப்படியாகப் பதவிகளை வழங்காமல் திறமைகளைப் பயன்படுத்தி வேலை வாங்குவது என்பது ஒன்றும் இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதுமையான விடயமுமல்ல. ஆனால், சிவனேசச் செல்வன் அவர்கள் இலங்கை இதழியல் கல்லூரியின் விரிவுரையாளராக விரும்பி, பிரதம ஆசிரியர் பதவியைக் கைவிட்டுச் சென்ற பிறகு 2004 ஏப்ரலில் என்னை தினக்குரலின் பிரதம ஆசிரியராக, அதுவும் ஏப்ரல் முட்டாள் தினத்தில் நியமிப்பதற்கு நிருவாகம் முன்வந்தது அல்லது முன்வர வேண்டியேற்பட்டது. அந்த வேளையில்
நான் முன்வைத்த ஒரே நிபந்தனை என் னுடன் ஆரம்பத்தில் இருந்தே தினக் குரலில் பணியாற்றும் பாரதிக்கு ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பதவியை உத்தி யோகப்பூர்வமாக வழங்க வேண்டும் என்ப தேயாகும். அவ்வாறு செய்யா விட்டால் நான் செய்தி ஆசிரியராகவே இருந்து விட்டுப் போகிறேன். பிரதம ஆசிரியராக நான் ஆசைப்படவில்லை என்று தினக் குரல் நிறுவனத்தின் அன்றைய தலைவர் எஸ்.பி.சாமி அவர்களிடம் நேரடியாகவே நான் கூறிவிட்டேன். அவர்கள் அந்த நிபந்த னையை ஏற்பதற்கு எந்தத் தயக்கத்தையும் காட்டவில்லை.
ஊடகவியல் துறையைப் பொறுத்த வரை ஆசிரிய பீடத்துக்கும் முகாமைத்து வத்துக்கும் எப்போதுமே ஒரு விதமான சஞ்சலமான உறவே இருக்கும். நான் ஆரோக்கியமான ஊடகத்துறையில் நாட் டம் கொண்டவர்கள் இருக்கக்கூடிய ஆசிரிய பீடங்களைப் பற்றி மாத்திரமே இதைக் குறிப்பிடுகின்றேன். அத்தகைய சஞ்சலமான உறவு நிலை பலவிதமான நெருக்கடிகளைத் தோற்றுவித்திருக்கிறது. அத்தகைய சூழ்நிலைகளில் ஆசிரிய பீடத்தின் முதன்மைக்காகவும், இதழியற் பெறுமானங்களுக்காகவும் குரல் கொடுப்ப வர்களுடன் தன்னை உறுதியாக அடை யாளப்படுத்தி நிற்பதற்கு அதுவும் தொழி லுக்கே ஆபத்து வரக்கூடியதாகத் தோன் றும் இடர்மிகு சூழ்நிலைகளில் கூடப் பாரதி ஒருபோதுமே பின்னின்றதில்லை. சகலதிற்கும் மேலாக அவரை நான் நேசிப் பதற்கு இதுவே பிரதான காரணமாகும்.
மல்லிகை பெப்ரவரி 2012 奉 7

Page 6
முதற் பார்வையிலேயே அவனை அவளுக்குப்பிடித்துப் போய்விட்டது. பெண்ணை மேயாத, கனிவாக நோக்கும் கண்கள். முகத்தில் மகிழ்ச்சியின் மலர்வைக் காட்டும் கணக்கான புன்னகை. உதிர்க்கும் சொற்களில் சிக்கனம். எல்லாமே அவள் எதிர்பார்த்த மாதிரி அமைந்திருந்தது. இப்படி ஒரு பொருத்த மான மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டு வரும் வல்லமை அப்பாவுக்கு இருக்கும் எனச் சுகுணா எதிர்பார்த்திருக்கவில்லை.
கலியாணப் பேச்சு ஆரம்பித்த பின்னர் இடையே சீதனம், வீடு வாசல் என்று இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவள் மனது கலங்கித் தவித்தது. எதையும் வற்புறுத்த வேண்டாம் என்ற அவனது கோரிக்கையை, அவனது பெற்றோர்களால் நிராகரிக்க முடியாமையால் தடங்கலின்றி எல்லாம் சுமுகமாக நிறைவேறி ஒரு நல்ல நாளில் அவள் அவனைக் கைப்பிடித்தாள். தன்னைவிட இந்த உலகில் வேறு யாருமே கொடுத்து வைத்தவர்கள் இல்லை என்ற பெருமிதம் அவளுக்கு கணேசனும் அவளைப் போலவே மகிழ்ந்தான்.
புதுப் பாதணிகளும் வெட்டுப் புண்களும்
- ச.முருகானந்தன்
அம்மா அப்பாவைப் பிரிந்து, அவன் வேலை செய்யும் ஊருக்கு அவனோடு தனிக்குடித்தனம் புறப்பட்ட போது அவள் கலங்கத்தான் செய்தாள். பெற்றோர், சகோதரர், உற்றார், பிறந்து வளர்ந்து ஓடிக் களித்த வீடு, கிராமம் அனைத்தையும் பிரிந்து போகும் போது அவள் கலங்கினாள். எனினும், அம்மா வடித்த கண்ணிர் அவளையும் அழ வைத்து விட்டது.
எல்லாம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவனது அருகிலிருந்து பயணிக்கை யில் புதியதொரு சொர்க்கம் தெரிந்தது. பின்னர் புதிய இடம் வந்து புது வீடு குடிபுகுந்த ஆரம்பத்தில், அம்மாவின் அருகின்மை அவள் மனதை நெருடி னாலும், அதை எல்லாம் பின் தள்ளும்படி அவனது அன்பும் அரவணைப்பும் தேனாய் இனித்தது.
ஊரின் வசந்தங்களை எல்லாம் பிரிந்து அவனோடு வந்து விட்டதற்காக அவள் ஒருபோதும் வருந்தியதே இல்லை. அவனுடனான தனிக்குடித்தனம் இலை தளிர்க் காலமாய் இனித்தது. அவனது அன்பான தொடுகை அவளைப்
மல்லிகை பெப்ரவரி 2012 & 8

பொலிவு கூட்டி மெருகாக்கியது. ஒரு சிறுமி போல வளைய வந்தவளை அவ னது விரல்கள் வனைந்து வனைந்து நளினமாக்கி ஒரு யுவதியாக்கியது. அவனும் இவ்வுலகை மறந்து அவளில் தேனுண்டு மயங்கிய வண்டாய் ஒட்டிக் கொண்டான்.
அவனது அணைப்பில் அவனது தோள்களில் முகம் புதைத்திருக்கும் போதெல்லாம் இந்தப் பூமிப் பந்தே சொர்க்கபுரியாக இருந்தது அவளுக்கு. ஒரு வசந்த காலமாக விரிந்திருந்த இந்த நாட்கள் அவன் மடி சொர்க்க பூமியாக இனித்தது. அம்மாவைப் பிரிந்து வந்தாலும், மீண்டும் ஓர் இனிய பாதுகாப்பான கருவறைக்குள் வந்துவிட்டதாக அவள் ஆனந்தம் கொண்டாள். அவனும் அளவிட முடி யாத அன்பைச் சொரிந்து, அவளை அதில் மூழ்க வைத்துத் தானும் மகிழ்ந் தான். தேம்பலும் தழுவலுமாக அவள் அவனைப் பின்னிக் கிடந்து முத்தத் தில் குளித்து மோகத்துள் அமிழ்ந் தாள்.
இந்த இனிமை, இன்ப சுகம் காலம் காலமாக நீடித்து, கடைசி வரை தொடரும் என அவள் நினை வில் சந்தோசித்துக் கொண்டிருந்த போதுதான் ஒருநாள் அவன் அந்தச் சந்தேகச் சேற்றை வீசினான். அவள் அதிர்ந்து துவண்டு போனாள்.
'நீ யாரையாவது காதலித்திருக் கிறாயா?’ வார்த்தைகளில் கடுப்பு இல்லா விட்டாலும், தவிப்பு தெரிந் தது. இப்போது என்ன சொல்வது என்று யோசித்தாள். சொன்னாலும்
சிக்கல். சொல்லாது விட்டாலும் சிக் கல். எங்கேயோ கேள்விப்பட்டதால்
தானே இப்போது கேட்கிறான்.
அவள் யோசித்துக் கொண்டிருக் கும் போதே அவன் கேட்டான், “உனக்கு சுரேனைத் தெரியுமா?”
அவள் அதிர்ந்து அவனை நோக்கி னாள். எனினும் தன்னைச் சுதாகரித் துக் கொண்டு 'ஓ. தெரியுமே. யூனியில் ஒன்றாகப் படித்தோம்.”
அவன் சிறிது நேரம் மெளனமாக அவளை நோக்கினான். பின்னர் அவளிடம் தனது சட்டைப் பையிலி ருந்த கடிதத்தை எடுத்து நீட்டினான்.
அவள் பதட்டத்துடன் அதை வாங்கிப் படித்தாள். அது ஒர் அநாம தேயக் கடிதம். அவளையும் சுரேனை யும் தொடர்புபடுத்திப் படு ஆபாச மாக எழுதப்பட்டிருந்த கடிதம். யாரோ பொறாமை பிடித்தவர்கள் கேவலப் படுத்தி எழுதியிருந்தார்கள். படிக்கும் போதே அவள் கண்கள் கலங்கின.
இருவரிடையேயும் சிறிது
மெளனம் திரையிட்டிருந்தது.
அவள் ஏதாவது சொல்வாள் என அவன் எதிர்பார்த்தான். அவன் ஏதா வது கேட்பான் என அவள் காத்திருந் தாள். இரண்டுமே நடக்கவில்லை.
அவன்தான் மெளனத்தைக்
கலைத்தான்.
”உனக்கு யாராவது கோபக்காரர் கள் இருக்கிறார்களா?”
மல்லிகை பெப்ரவரி 2012 & 9

Page 7
"அப்படிப்பட்ட யாருடையாவது வேலையாகத்தான் இருக்க வேண் டும்.” அவன் கூறியபோது அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. இருப்பினும்
இன்னும் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது.
இந்தச் சம்பவத்திற்குப்பிறகு மன
தில் ஒருவித நெருடல், எவ்வளவு தான் இயல்பாக நடந்தாலும் மனதில் ஏதோ ஒர் இடைவெளி போல உணர்ந்தாள். அவனும் அவளைச் சந்தேகிக்கிறான் என்றில்லை. ஆனா லும் அவன் மனதிலும் ஒரு சிறு கீறல் போல.
“சுகுணா” என்று அவன் அழைக் கும் போது கூட ஒரு வேறுபாட்டை உணர்ந்தாள். அந்த உணர்வு கூட வெறும் கற்பனை தானோ என்றும் எண்ணினாள். கணேசனின் நிலையும் அப்படித் தான். இருவருக்குமிடை யில் ஒர் இடைவெளி ஏற்பட்டுள்ள தாக ஒர்கணம் எண்ணினாலும் மறு இல்லை என்று எண்ணினான். சுகுணா நல்ல மனைவியாக இருக்கிறாள். அன்பை அள்ளிச் சொரிகிறாள். இதற்கு மேல் என்ன வேண்டும் என்று அவன் சமாதானப்படுத்திக்
கணமே அப்படியேதும்
தன்னைச் கொண்டான்.
சுகுணாவோ சமாதானமடைய வில்லை.
அவள் காதலித்தாளா? தன்னைத் தானே பலமுறை கேட்டுக் கொண்ட கேள்வியை இப்போது மறுபடியும்
கேட்டாள். சுரேன் என்னைக்
காதலித்தான். நான் அவனைக் காதலித்தேனா? சுகுணாவின் மனதில் தெளிவில்லாத குழப்பம்.
ம். இளவயதுக் காதல் எத்தனை பேரின் வாழ்வைப் பாதித்து விடு கிறது! படிக்கும் காலத்தில் படிப்பை. இன்னும் சிலரில் ஒரு வேகத்தில் கூட்டிக்கொண்டு ஓடிப் போய், பின் சிரமப்பட்டு., இன்னும் சிலரில் காதல் முறிவில்., கலியாணமாகி சென்ற பின்னும் பழைய காதல் குடும்ப வாழ்வில் இன்னும் சிலரை என எத்தனை பேரை பாதித்து விடு கிறது.
காதலில் வெற்றி பெற்று மணம் முடித்தவர்கள், ஒருவகையில் அதிர்ஷ் டசாலிகள்தான். ஆனாலும் அப்படித் திருமணம் முடித்த சிலர் கூட நிறைவின்றி, புரிந்துணர்வின்றி.
அன்று இரவு முழுக்கச் சுகுனா வால் தூங்க முடியவில்லை. சாம்பல் தட்டப்பட்ட, நீறுபூத்த நெருப்பு போல, சுரேனின்நினைவுகள் சுழன்று சுழன்று வந்தன. எவ்வளவு நாட்கள் ஒரு நல்ல நண்பனாகப் பழகினான்.
திடீரென்று ஒருநாள் அவன் அந்தக் குண்டைத் தூக்கிப் போட்ட போது.
ம். அவள் ஓரளவு எதிர்பார்த் ததுதான்.
ஓர் நாள் அவள் மதிய போச னத்தை முடித்துக் கொண்டு வளாகத் துக்குள் வந்தபோது சுரேன் அவளை எதிர்பார்த்து வாசலில் நின்றான்.
மல்லிகை பெப்ரவரி 2012 & 10

உற்சாகச் சிரிப்புடன் வரவேற்கும் அவன் அன்று சற்றுக் குழப்பமாகக் காணப்பட்டான். அவனது உடைகள் பளிரென்றிருந்தது. தலைமயிர் அழ காக வாரி இழுக்கப்பட்டுப் பளபள என்றிருந்தது. அருகில் வந்தவனால் அவள் முகத்திலிருந்து தன் கண்களை எடுக்க முடியவில்லை.
புதிதாக அவளை நோக்குபவன் போல், 'உங்களிடம் ஒன்று கேட்க லாமா?’ என்று கேட்ட சுரேனின் கேள்வியின் பின்னே முக்கியமான விடயம் இருப்பதை உணர்ந்து கொண்டாள் சுகுணா. அவளையே பார்த்துக் கொண்டிருந்த சுரேன் தோளில் விழுந்து முன்புறமாக அவள் மார்பில் நடமாடிக் கொண்டிருந்த கூந்தலை நோக்கியபடி மெல்லிய சிரிப்பினை உதிர்த்தான். அவள் சற்றுத் தயக்கத்துடன் அசையாமல் நின்றாள். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை ஊகிக்க முடிந்தது. ஆனாலும் இத்தனைநாள் சிநேகமாகப் பழகியும் அதை எங்கே எப்படி ஆரம்பிப்பது என்று தெரியா மல் தயங்கும் அவனைப் பார்க்க சுகுணாவுக்குச் சிரிப்பாக இருந்தது.
6
சுகுணா. உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு.” இதைச் சொல்வதற் கிடையில் அவன் முகம் வியர்த்து விட்டது. அதேவேளை சுகுணாவின் கால், கை எல்லாம் பதறுவது போல இருந்தது. கண்களில் ஈரப்பசை தலை குணிந்தது.
“சுகுணா.”
அவள் பதில் சொல்லவில்லை. விடு விடு என்று அவ்விடத்தை விட்டு நடந்தாள். ஒம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் போகும் அவளை ஏக்கத்துடன் பார்த் துக் கொண்டிருந்தான், சுரேன்.
ஒவ்வொரு நாளும் பல தடவை கதைத்துப் பேசும் அவர்கள் அடுத்த இருநாட்கள் பேசிக்கொள்ளவில்லை. அதற்கடுத்த நாள் அவன் கலா சாலைக்கு வரவில்லை. அவன் வரா ததை அவதானித்தாள் சுகுணா. கூடவே அவள் மனதிலும் கடந்த இரு நாட்களாகக் குழப்பம்.
அடுத்த நாளும் அவன் விரிவுரை களுக்கு வராத போது சுகுணாவின் உள்ளம் தவித்தது. அவள் என்ன செய்து விட்டாள் என்று அவன் வகுப்புகளுக்கு வராமலிருக்கிறான். இருந்தும் மனம் கேட்காமல் அவனது அறை நண்பன் குகனைக் கேட்டாள். அவனுக்கு சுகமில்லை என்று அவன் கூறியதும் அவள் அதை நம்ப மறுத் தாள்.
“என்ன வருத்தம் குகன்?”
”எல்லாம் உம்மாலைதான்.”
அவளுக்குப் புரிந்தது.
“என்னிலை என்ன பிழை?”
‘ஆசையை ஊட்ட அவனோட பழகிப் போட்டு இப்ப பேசாமலிருந் தால் உதுக்கென்ன அர்த்தம். எல்லாப்
மல்லிகை பெப்ரவரி 2012 辜 11

Page 8
பெட்டையஞம் இப்படித்தான். தங் கட சுயநலங்களுக்காகப் பல்லைக் காட்டிப்பழகிறது. பிறகு நட்பு மட்டுந் தான் என்கிறது.”
"ஏன், ஒரு பெடியனும் பெட்டை யும் சிநேகிதமாகப் பழகக் கூடாதே? அப்படிப் பழகினால் காதல் மட்டும் தானா?”
'உந்த வியாக்கியானம் தேவை யில்லை. இப்ப இரண்டிலை ஒண்டைச் சொல்லும். விருப்பமோ இல்லையோ?”
அவளுக்கு அவனது கேள்வியில் கோபம் வந்தது.
‘தானாகக் கணியாததை ஏன் தட்டிக் கணிய வைக்கப் பார்க் கிறியள்? இல்லை எண்டு போய்ச் சொல்லும்.” கோபத்துடன் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்
Sr:G6ððrir.
அவளது உள்ளமும் உடலும் பட படத்துக் கொண்டிருந்தது.
மறுநாளும் அவன் பல்கலைக் கழகத்திற்கு வரவில்லை. நண்பன் குகன் அவளிடம் வந்தான். “அவன் உன்னால சோறு தண்ணி இல்லாமல் கிடக்கிறான். நான் போய் சொன்ன நேரத்தில இருந்து பச்சைத் தண்ணி கூட குடிக்கவில்லை.”
சுகுணாவுக்குதிக் என்றது. என்ன பைத்தியக்காரத்தனம் என எண்ணி னாள். எனினும் அவள் மனது தவித் தது. விரிவுரைகளில் மனம் செல்ல வில்லை. மனது அவனையே நினைத்
ტჭნl.
மாலை விரிவுரைகள் முடிந்ததும் சிநேகிதி மலரையும் அழைத்துக் கொண்டு அவன் தங்கியிருக்கும் வீட் டிற்குச் சென்றாள். அவளைக் கண்ட தும் வாடி வதங்கிப் போயிருந்த அவன் முகம் மலர்ந்தது.
'இது என்ன முட்டாள்தனம்? நீங்கள் ஒரு ஆண்பிள்ளை. இப்படி ஒரு பெட்டைச்சிக்காக மனம் தளர்ந்து GurresGavmTLDIT?”
'நீங்கள் வருவியளெண்டு எனக் குத் தெரியும். இனி எனக்குக் கவலை இல்லை. என்னில விருப்பமில்லை யெண்டு சொல்ல எப்படி மனம் வந்தது?”
"சுரேன். இது படிக்கிற காலம். படிப்பு முடிந்த பின்னர் இதைப் பற்றி யோசிக்கலாம். முதல்ல படிச்சு நல்ல நிலைமைக்கு வரப் பாருங்க.”
படிப்பு முடிந்த பின்னரும் அவன் அவளிடம் வந்தான். இப்பொழுதும் அவள்பதிலின்றிச்சிரித்தாள். அவனுக் குக் குழப்பமாக இருந்தது.
‘சுரேன். என்னால உங்கட படிப்பு குழம்பக் கூடாது. அப்படிக் குழம்பிப் போயிருந்தால் உங்களை நம்பியிருக்கிற உங்கட பெற்றோர், உங்கடதங்கைகளுடைய திருமணம், தம்பிகளுடைய படிப்பு இவையெல் லாம் பாதிக்கப்படும் என்கிறதால தான் பிறகு சிந்திப்பம் எண்டு சொன் னேன். எனக்கு என்னுடைய பெற் றோர் பார்த்திருக்கிறார்கள். நிச்சய தார்த்தம் கூட முடிஞ்சுது. மாப் பிள்ளை பேர் கணேசன்.”
மல்லிகை பெப்ரவரி 2012 & 12

அவள் கூறியதும் அவன் அதிர்ந்து போய் நின்றான்.
’கட்டாயம் உங்களுக்கு எனது திருமண அழைப்பிதழ் அனுப்புவன்.
வாங்க.”
இதுதான் நடந்து முடிந்த கதை. இன்று அதுவே திரிபுபடுத்தப்பட்டு.
சுகுணா கலங்கினாள். இப்போ தெல்லாம் கணேசன் அவளைக் கண்டு உருகிப் போவதில்லைப் போல் அவளுக்குத் தோன்றியது.
அன்று இரவு அவள் அவனது அணைப்பை நாடியபோது, “கொஞ் சம் தள்ளிப்படும் சுகுனா’ என்றான். அவள் ஒருகணம் ஒடுங்கிப் போனாள். அவனது குரலிலிருந்த அந்நியம் புதி தாக இருந்தது. இப்படி வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வரும் என அவள் எதிர்பார்க்கவில்லை. எத்தனை இரவு கள் அவன் கட்டிலில ‘குகுணா. சுகுணா என்று கட்டி அணைத்திருக் கிறான். இன்று.?
முன்னர் என்றால் ஒருபோதும் அவளை வித்தியாசமான உடையில் கண்டால், குளித்துவிட்டு குளியலறை யில் இருந்து வெளியே வந்தால் சும்மா இருக்க மாட்டான். கனக்கும் நிஜங் கள். இனிக்கும் நினைவுகள்.
அவள் குளியலறையிலிருந்து அலையலையாக விழுந்த கூந்தலைத் துடைத்தபடி வெளிப்பட்டாள். அவளை நோக்கி வந்த அவன் கண்கள் குறும்பாக அவளை நோக்கிப் பளிச்
'குளிச்சிட்டு வாங்க. என்று அவள் சொன்னதையும் கேட் காமல் காற்றுப் புகமுடியாத நெருக் கத்தில் அவளை அணைத்தான்.
சிட்டன.
இன்னொரு நாள்.
சமையலறையில் வேலைகளை முடித்துக் கொண்டு கலகலவென்று சிரித்துக் கொண்டு அறைக்குள் வந் தாள். நைற்றி அணிவதற்காகத் திரும் பினாள். அதற்குள் அவளது முன்னால் அவன். மெல்லிய நைற்றியை முழு தாக அணிய முன்னதாக, பொத்தான் கள் பூட்டப்படாத திறந்த நிலையில், உள்ளே இருந்த அழகு மெல்ல வெளியே எட்டிப் பார்த்த நிலையில் அவளை அணைத்தான்.
“சீ... கொஞ்சமும் பொறுமை யில்லை.” அவள் செல்லமாகக் கடிந்து கொண்டு அவன் தோள்களில் சாய்ந் தாள். அப்புறமாய்.
அந்த வேகம். அந்த ஆசை எல்லாம் எங்கே போனது?
மனது சூம்பிச் சுருங்கியது.
மறுநாள் அவன் அலுவலகம் போன பின்னர் தோழி சுபத்திரா வந்திருந்தாள். இவளது முகத்தின் இருளை இனம் கண்டு விசாரித்தாள்.
“ஒண்டுமில்லை சுபா.”
‘'நீ இல்லை என்று சொல்லும் போதே ஏதோ இருப்பது புரிகிறது. சொல்லு. மனது ஆறும்.”
சுபத்திரா காலத்திலிருந்து அவளது தோழியாக
சர்வகலாசாலைக்
மல்லிகை பெப்ரவரி 2012 & 13

Page 9
இருப்பவள். இவளை விட ஒரு வருடம் முன்னதாகவே திருமணம் செய்து கொண்டவள். உண்மையான அக் கறையுடன்தான் கேட்கிறாள். சுகுணா தோழியிடம் எல்லாவற்றை யுமே கூறினாள்.
சுபத்திரா சிரித்தாள்.
'இனியும் நீங்கள் புதுமணத் தம்பதியர் அல்ல. மோகம் முப்பது நாள். ஆசை அறுபது நாள். இனி இப் படித்தான். நீயும் மாறியிடுவாய். ஆரம்பத்திலை ஆண்களை விட பெண்களுக்கு ஆசை அதிகம் இருக்கு மாம். கொஞ்சக் காலம் கடந்தால் பெண்கள் தான் ஆண்களை விட விரைவிலேயே துறவறம் பூணுவார்
களாம்.”
“என்ன சொல்லுற சுபா?’ புரியா மல் கேட்டாள், சுகுணா.
"இல்லறத்துள்ளேதுறவறம்” கண் களைச் சிமிட்டிய சுபத்திரா கலகல வென்று சிரித்தாள். சுகுணா வியப் போடு அவளை நோக்கினாள்.
“சுகுணா. இவ்வளவு காலமும் நீங்கள் இருவரும் அதை மட்டும்தான் யோசிச்சிருப்பியள். வாழ்க்கையின் அடுத்த கட்டங்கள் இனித்தான் ஆரம்பம். இனி குடும்பத்தின் எல்லா அம்சங்களையும் பற்றி யோசிக்கிற காலம். அதோட இருவருக்குமிடை யில் உள்ள முரணான விடயங்கள் வெளித் தெரியத் தொடங்கும். இந்த நேரத்தில்தான் கணவன் மனைவி யரிடையே புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்பும் தேவை. புதுப் பாதணி
கள் கடித்து வெட்டும் புண்கள் ஏற்படு கிற காலம். அளவான பாதணி கூட ஆரம்பத்தில் கடிக்கத்தான் செய்யும். போகப் போக சரியாயிடும். மற்றும் படி கணேசனுக்கு உன்னில விரும்ப மில்லாமலில்லை. தப்பெண்ணமும் இல்லை. தப்பெண்ணம் இருந்தால் சண்டை போட்டு அமர்க்களப்படுத்தி யிருப்பார் நீநினைக்கிற மாதிரி கணே சனுக்கு உன்னில விருப்பம் இல்லா மலில்லை.”
சுபத்திரா சொல்வதை ஆச்சரியத் தோடு கேட்டுக் கொண்டிருந்த சுகுணாவுக்குத் தெளிவு ஏற்பட்டது. தான் தப்புக் கணக்கு போட்டு விட்ட தாக உணர்ந்தாள். புதுச் செருப்பு ஏற்படுத்திய வெட்டுக்காயம் மாறி விட்டது போல் இருந்தது.
மாலையில் கணேசன் அலுவலகத் தால் திரும்பிய போது, அவளுக்குப் பிடித்தமான தொதலை நீட்டினான். “சுகுணா. இன்றைக்கு ஒரு மகிழ்ச்சி யான நாள்' என்று கூறியபடி தனது பையைத் திறந்து ஒரு பார்சலை நீட்டினான்.
அழகான சேலை. அதுவும் அவளுக்குப் பிடித்த இளமஞ்சள் நிறத் தில்! மகிழ்ச்சியுடன் அவளைநிமிர்ந்து நோக்கினாள்.
"உன்னைப் பெண் பார்க்க கடந்த வருடம் இதே நாளில்தான் வந்திருந் தேன் சுகுணா.” தான் மறந்துபோய் விட்டதை அவன் ஞாபகம் வைத் திருந்து பரிசும் வாங்கி வந்ததை நினைக்கும் போது அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்தது.
மல்லிகை பெப்ரவரி 2012 & 14

இரசனைக் குறிப்பு :
முற்போக்குச் சிந்தனையாளர் லெனின்
மதிவானம் நூல் : (8LITITöfinfluLIŤ
Ö5.60)ö56DITöfLId5 -
dfelJDöb
மாற்றத்துக்கான
இயங்காற்றல்
- LDT.LIT6vérslæLib
ஈழத்து முற்போக்கு இலக்கியம், மக்கள் இலக்கியம் ஆகியவற்றின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் க.கைலாசபதி, மார்க்சிய வழியில் இலங்கையில் சமூக மாற்றத்தைத் ஏற்படுத்தத் தனது சிந்தனையையும், எழுத்தையும் அர்ப்பணித்தவர். ஈழத்துத் தமிழிலக்கியம் உசார் கொண்டெழுந்து, தமிழக இலக்கியவாதிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர். இவரது தமிழிலக்கியப் பணி சம்பந்தமாக நூல்கள் பல வெளிவந்துள்ளன. அண்மைக்கால அறுவடையாக, பேராசிரியர் க.கைலாசபதி - சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல் என்றொரு நூலை, லெனின் மதிவானம், கொழும்பு, குமரன் புத்தக இல்லம் ஊடாக வெளியிட்டுள்ளார். இந்நூலாசிரியர் லெனின் மதிவானம்; பேராசிரியர் க.கைலாசபதியின் விமர்சன, ஆய்வுகளுக்கு அடிச் சரடாக இருந்த மார்க்சிய கோட்பாட்டின் தீவிர உபாசகர். முற்போக்குச் சிந்தனைகளைத் தனது எழுத்துகளாலும், மேடைப் பேச்சுகளாலும் மக்கள் மயப்படுத்தி வரும் சுறுசுறுப்பான இளைஞர். இலங்கைக் கல்வி அமைச்சின் நிர்வாக சேவை அதிகாரி.
எட்டுத் தளங்களில் பேராசிரியரின் வாழ்வையும், தமிழ் இலக்கியத்தையும் நிலைப் படுத்தி வழிபாடு செய்துள்ளார். இங்கு வழிபாடு' எனும் போது அங்கீகரித்துள்ளார் என்பது
மல்லிகை பெப்ரவரி 2012 & 15

Page 10
பொருந்தும். பேராசிரியரின் இரு கட்டுரை களும் நூலில் மறுபிரசுரம் பெற்றிருக் கின்றன.
அவரது எழுத்துக்களில் சிலாகித்துப் பேசப்படுகின்ற ஓர் அம்சம்தான் அவரது எழுத்து நடையாகும் (பக் 15) என எல்லோ ரும் பொச்சடிப்பது போல், லெனின் மதி வானமும் பொச்சடித்துள்ளார். மிகச் சரி யான கணிப்பே
எவருமே கண்ணுக்குள் போடக் கூடிய உடல்வாகு பேராசிரியருக்குக் கிடைத்திருந்தது அவரது யோகம் எனலாம். அவரது எடுத்துரைப்பு நடையும் அதே போல், பிசிறற்றதாகத் தெளிந்த நீரோடை யாக நீளும், அவருக்கு இத்தன்மை வாலா யமாக உதவியது எடுகோளில் அவர் பெற் றிருந்த பூரண தெளிவெனலாம். இந்நூலை வாசித்த பின் லெனின் மதிவானத்துக்கும் இத்தகையதொரு எடுத்துரைப்பு நடை தேறியிருந்ததைக் கண்டு மகிழ முடிந்தது. பாராட்டுக்கள்.
பேராசிரியர் க.கைலாசபதி கோலாலம் பூரில் 5.4.1933இல் பிறந்த்வர். ஆனால் பெற் றோரின் பூர்வீகம் யாழ்ப்பாணந்தான். ஆரம்பக் கல்வி பிறந்த மண்ணிலேதான் கிடைத்தது. பதின்மூன்றாம் வயதில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். யாழ். இந்துக் கல்லூரி, கொழும்பு றோயல் கல் லூரி, இலங்கைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வியைப் பெற்று உயர் கல்விமானானார். பெர்மிங்காம் பல்கலைக் கழகம் கலாநிதிப் பட்டத்தை அளித்தது. கல்வித் தகைமைகளுக்கு அமைவாக - 'தினகரன்’ பத்திரிகை உதவி, பிரதம ஆசிரியர், பல்கலைக் கழக விரிவுரை யாளர், இந்து நாகரிகத்துறைத் தலைவர்;
யாழ். பல்கலைக் கழக முதலாவது 19741977) வளாகத் தலைவர் ஆகிய பத்திரிகை, கல்வித் துறைகளின் தகைசார் பதவிகளை அலங்கரித்து - வெளிநாடுகளின் கல்விப் புலமையாளர்களின் உயர் கணிப்பைப் பெற்று ஈழத்துக்குப் ஏற்படுத்தினார்.
பெருமையை
தமிழுக்கும் தமிழிலக்கியத்துக்கும் ஒப்பியல் துறைக்கும் அவர் ஆற்றிய பாரிய பணிகள் அவரது பெயருக்கு என்றும் கட்டியம் கூறக் கூடியவை. தமிழ் ஒப்பியல் நோக்கில் சுவாமி விபுலானந்தர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வையாபுரிப்பிள்ளை ஆகி யோருக்கு நிகராக வைத்துப் பேசப்படு கிறார்.
நான்கு ஆங்கில ஆய்வு நூல்கள் அடங்கலாக 23 அரிய நூல்களை வெளி யிட்ட பேராசிரியர் 6.12.1982இல் கால
DT6OTTfr.
மேற்படித் தகவல்களோடு; இந்நூல் - பேராசிரியரின் முற்போக்கு மார்க்சிய சிந்தனை வளம், ஈழத்துத் தமிழ் மரபிலக்கி யத்தைப் புரட்டிப் போட்டதையும் பேசு கின்றது. ஈழத்தில் மண்வளம், பண்பாட்டுக் கோலங்கள் என்பன படைப்புகளில் தரிசன மிட 1950கள் வழி சமைத்ததை இலக்கிய நோக்கர்கள் நன்கறிவர். ஈழத்து முற் போக்கு இலக்கியம் சிலிர்த்தெழுந்து அகில உலகிலும் சிறகசைத்தது. இவ்வெழுச்சிக் குப் பிதாமகர்களாக இருந்தவர்களில் பேரா சிரியர் க.கைலாசபதியுமொருவர் என்பதை ஈழத்து இலக்கிய வரலாறு எண்பிக்கும். இலக்கியம் சமுதாயத்தை விபரிப்பதாக மட்டுமன்றி, அதனை மாற்றும் கருவி யாகவும் இருக்க வேண்டும் (பக்.15) என்ற இலக்கில் மார்க்சிய சிந்தனைகளையும்,
மல்லிகை பெப்ரவரி 2012 & 16

கோட்பாடுகளையும் உள்வாங்கி, எழுச்சி கொள்ள ஈழத் தமிழ் இலக்கியத்தை நெறிப் படுத்தினார். இது மரபிலக்கியத்தை நிரந்தர மாக முடக்கியது. யதார்த்தம், மண் வாசனை, முற்போக்கு என்பன படைப்பு களில் ஊடுருவுவதுக்குத் தன்னாலான வற்றை முன்னெடுத்தார்.
ஆகாயத்தில் பறக்கும் பறவைகளாக, கற்பனா உலகில் தமது ஆக்கங்களுக்குத் தொனிப் பொருளைத் தேடி அலைந்த தென் னிந்திய தமிழிலக்கியப் படைப்பாளிகள் போலல்லாது, ஈழத் தமிழ்ப் படைப்பாளிகள், தம் முன் நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கைக்குள் நுண்ணிதான தேடுதல் செய்து, படைப்பாக்கங்களுக்குத் தொனிப் பொருளைக் கண்டெடுத்து, புகைப்படம் பிடித்தது போன்று வாழ்க்கையைக் கலா ரூபப்படுத்தினர். குச்சுகளுள்ளும் குடில் களுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருந்த அவல வாழ்க்கை படைப்புகளில் தரிசனம் காட்டின. ரஷ்ய, சீன இலக்கியங்களை இனங்காட்டின. இதனால் கெம்பியெழுந்த மரபுவாதிகள் இழிசனர் வழக்கு’ என ஏளனப்படுத்தி ஓரங்கட்ட எத்தனித்தனர். ஆனால் பேராசிரியர் க.கைலாசபதி போன்ற மார்க்சிய சிந்தனையாளர்களால் இவ்வகையான யதார்த்த, முற்போக்கு இலக்கியப் படைப்புகள் விதந்துரைக்கப் Lull-gs.T6), இப்படைப்புகள் இம்மண்ணில் நிலைத்தன.
சமுதாயத்தில் கீழ்த் தட்டிலிருக்கும் மாந்தரைச் சித்திரிக்கும் எழுத்துக்கள் யதார்த்தம், முற்போக்கு என்ற அடைவு களைப் பெற்றாலும், கூர்ந்து நோக்கின் &!6თ6)u uum6ყub அத்தகையப் பண்புகளைப் பெற்றிருக்காது என்பதை நாம் அறியலாம்
(பக்.11) என இந்நூலாசிரியர் லெனின் மதிவானம் கருதுவது விசனத்தை ஏற்படுத் துகிறது. இது பேராசிரியரின் நிலைப்பாட் டையும் முரண்படுத்துவதாகவே உள்ளது
ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தங் களது படைப்புகளை வாசகர்கள், திறனாய் வாளர்கள் முன் பரத்துகின்றனர். இவை களை நுண்ணிதாக வாசிப்பவர்கள் வகைப் படுத்திக் காட்டுகின்றனர். கணிசமான படைப்பாளிகளுக்கு இதற்கு முன் தமது படைப்புகள் எந்த வகையானதென்பது தெரியாதிருக்கும். இத்தகைய தேடலில் படைப்புகளில் கண்டெடுத்தவைதான் யதார்த்த வாதம், இயற்பண்பு வாதம், சோஷலிய யதார்த்த வாதம் என்பவை களாகும். இவைகள் குறித்தான விளக்க மும் இந்நூலில் கிடைக்கின்றது. மஜிக்கல் றியலிசம் என ஒன்று இருப்பதாகவும் ஆய் வறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர். இதை யும் அறிந்திருப்பது நன்று. சொல்லப் போனால் இவைகளின் வெளிப்பாடு வாசிப் பின் ஆழத்தைக் காட்டுவதாக அறியலாம்!
ஈழத்து இலக்கிய அமைப்புகளுக்கும் பேராசிரியரின் பங்களிப்பு இருந்ததா? என் பதுக்கான அறிதலும் இந்நூலில் கிடைக் கின்றது. ஈழத்து முற்போக்கு இலக்கிய வாதிகளின் முகாமாக இருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப் பட்ட காலை பேராசிரியர் பேராதனை பல் கலைக்கழக மாணவராக இருந்திருக் கிறார். இச்சங்கம் முற்போக்குக் கோட்பாடு களில் தங்கி இருக்கப் பெரும்பணி செய் தார். அகில உலகச் சோசலிச நாடுகள், சர்வதேச ரீதியில் பிளவுண்டதால் இச்சங்க மும் பெரும் பின்னடைவுக்குள்ளானது. இதன் பின்னரே, பேராசிரியர் இலங்கை
மல்லிகை பெப்ரவரி 2012 率 17

Page 11
தேசிய கலை இலக்கியப் பேரவையைத் தன்னோடு அடையாளப்படுத்திக் கொண் டார். ஆனால், இந்த உறவை ஏற்காதது போல் லெனின் மதிவானம் நூலில் 'கசப்பு களைக் கொட்டியுள்ளார்.
தேசிய கலை, இலக்கியப் பேரவை யின் அதிகாரப்பூர்வ வெளியீடான 'தாயகம் மாசிகையை 1974ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்கப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். பேரவை யின் இலக்கிய அமர்வுகளை வடிவமைத் துள்ளார். இறுதிக் காலங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் தேசிய கலை இலக் கியப் பேரவையோடு இணைந்து இயங்கி யிருக்கிறார். இவையனைத்தும் இந் நூலில் (பக்:47) தான் உள்ளன.
அவரது பங்களிப்பு இப்படியிருக்க, பேராசிரியர் 6ஆவது நினைவு தினத்தில் பேரவை அவரது நான்கு நூல்களை வெளி யிட்டுள்ளது. (பக்.31) நினைவு தினங்களில் இளம் புத்திஜீவிகளையும் உரையாற்ற வைத்து அவரது பணிகளை சகல மட்டங் களுக்கும் பரத்தி வருகின்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் க.கைலாசபதி அரங்கு அமைக் கப்பட்டிருப்பது பிரசித்தமான விடயம். கொழும்பு 6இல் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணியகத்துக்கு வருகை தருவோர் கண்டி ருப்பர் அதில் பேராசிரியர் க.கைலாசபதி கேட்போர் கூடம் அமைந்திருப்பதை, பேரவையின் மாதாந்த இலக்கியக் கூட்டங் கள் அனைத்துமே இந்தக் கூடத்தில் நட்ை பெறுகின்றன.
இவைகள் போதாதா? பேராசிரியரைப் பேரவையும்; பேரவையின் செல்நெறியை பேராசிரியரும் அங்கீகரித்ததென்பதுக்கு இவைகளனைத்தும் வலிந்து செய்யப் LILL-606 IUlt
பேராசிரியர் க.கைலாசபதி மலையகக் கலை இலக்கியப் பேரவையுடன் தொடர்பு பட்டு, அதன் செயலாளராகவிருந்த அந்தனி ஜீவாவையும் நெறிப்படுத்தியதாக (பக்:47) நூலில் தகவலுண்டு.
எனவே பேராசிரியர் ஒரு நிறுவன ரீதி யாக இயங்கி கலை இலக்கியப் பணி களைச் செய்திருப்பதை அறிய முடி கின்றது.
மேலைத்தேய வல்லரசுகள், கீழைத் தேய நாடுகளில் கசிந்துருகும் தாற்பரியம் இன்றைய வாசகனுக்குச் சொல்லி விளங் கத் தேவை இல்லை. இன்றைய இலங்கை யில் அவைகள் அரங்கேற்றிக் கொண்டி ருக்கும் நாடகங்கள் அதன் உள்நோக்கங் களைப் புகட்டும். இந்நூலில் காணப்படும் (பக்.73) பேராசிரியர் க.கைலாசபதியின் 'உலகத் தமிழாராய்சி மாநாடு - பின்னணி யும் பின் நோக்கும்’ என்ற கட்டுரை அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடு களின் அரவணைப்பை நன்கு படம் பிடித் துக் காட்டுகின்றது. இப்பின்னணியில் அமைக்கப்பட்ட அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மன்றம் அமைப்பைச் சதிகார ஸ்தாபனங்களில் ஒன்றென வகைப்படுத்து கின்றது.
1974ஆம் ஆண்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற, நான்காவது அகில உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் இன்னமும் சில
மல்லிகை பெப்ரவரி 2012 & 18

மூத்த கல்விமான்களின் மனசின் பிடிக்குள் இருக்கும். இந்த அசம்பாவிதங்களில் உயிர் நீத்தவர்களுக்கு, இம்மண்டபத்துக்கு முன் பாக நிறுவப்பட்டுள்ள நடுகைக் கற்களும் இன்றைய இளைய சந்ததிக்கும் அதை நினைவு கூறும். இதில் தமிழர் கூட்டணிச் சக்திகளின் முழுப் பலம் (பக்.77) இருந்த தாகக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இம் மகாநாட்டில் முற்போக்கு இடதுசாரிகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லையென்ற குற்றச் சாட்டையும் நூல் முன்வைக் கின்றது.
பேராசிரியர் க.கைலாசபதி கம் யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததைச் சுபைர் இளங்கீரன் நினைவு (பக்:32) கூர்ந்ததாகவும், அவர் இந்துக் கல்லூரியில் மாணவராக இருந்த காலத் திலிருந்து இறக்கும் வரையில் நேர்மை மிக்க பொதுவுடைமைவாதிக்குரிய செயற் பாடுகளும், சிந்தனைகளும் அவரிடம் இருந்ததாகவும் நூலில் தகவல்கள் கிடைக்கின்றன. 'கைலாசபதி போஸ்ட்ரர் ஒட்ட வரவில்லை. எங்களுடன் வாங்கில் இருந்து பிளேன்டி குடிக்க வரவில்லை என்று அவரைச் சிறுமைப்படுத்தக் கூடாது. மார்க்சிய அணி பெரும் பரப்பைக் கொண் டது.’ எனப் பிரபல சிறுகதை ஆசிரியர் என்.கே.ரகுநாதன் நூலொன்றில் குறிப் பிட்டிருப்பதாகத் தகவலொன்றும் காணப் படுகின்றது.
பேராசிரியர் க.கைலாசபதி கொம் யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்க வில்லையென்பதைக் கூறும் கொம் யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர்கள் இன் னமும் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கின்றனர். அவர்கள் சுபைர் இளங்கீரன் கூற்றை மறுக்கின்றனர்! கட்சி யின் மூல விசையான வர்க்க, சாதி சமத்து வத்தை அடியொற்றியே போஸ்டர் ஒட்ட வரவில்லை, தேநீர் குடிக்க வரவில்லை என்ற உணர்வுகள் எழுந்திருக்கலாம்! இந்த விடயத்தை அவர்கள்; ஈழத்து கொம் யூனிஸ்ட் வாதிகளுக்கு ஆசானாக அன்று வாழ்ந்த தோழர் மு.கார்த்திகேசனின் வர்க்க, சாதிய ஊடாட்டங்களோடு உரைத் துப் பார்த்து இந்த அடைவைப் பெற்றி ருக்கலாம்
ஒரு மார்க்சியவாதி என்ற தளத்தில் பேராசிரியர் க.கைலாசபதி, அவரது சம காலத்தவர்களான மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ.) போன் றோரைக் கண்டுகொள்ளாது விட்டதும் கேள்விக்குரியதே புரட்சிகரச் சித்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடி யாது (பக்:32) எனப் பொதுவானதொரு
உண்மை நூலிலுமுண்டு. ஆத்மீக சிந்தாந்
தங்களில் கருத்தூன்றி மு.தளையசிங்கம் சாத்வீக ரீதியில் இயங்கியவர். சமத்துவ சமுதாயம் என்ற நிலைப்பாட்டில் - மார்க் சியம், வர்க்க, சாதீய ஒடுக்குமுறைகளை எதிர்ப்பது. அதனை அடியொற்றியே இன்றும் இடதுசாரிகள் சாதியத்துக்கெதி ராகக் குரலெழுப்புகின்றனர். தான் பிறந்த மண்ணிலேயே மு.தளையசிங்கம் பொதுக் கிணற்றில் சகல சாதியினரும் நீர் அள்ள உரிமை மறுக்கக் கூடாதெனச் சாத்வீகப் போராட்டம் நடத்தியவர். அப்போராட்டத் தில் பொலிசார் தாக்கியதால் ஏற்பட்ட நோயால் உயிரைத் தியாகம் செய்தவர். அப்படி இருந்தும், அவரது இந்த முற்போக்
மல்லிகை பெப்ரவரி 2012 & 19

Page 12
கான போராட்டத்தை கைலாசபதியும் அவ ரது அணியினரும் மெச்சாதது ஒரு தலைப் பட்சமானதே. எனவேதான், மு.த.வின் பங்குப் பணி குறித்து கைலாசபதி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை என்று இன்றும் மேடைகளில் சிலர் குற்றஞ் சாட்டு கின்றனர். இதை சில முற்போக்கு அபி மானிகள் ஏற்கவும் செய்கின்றனர்.
ஒரு வகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும், புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வெவ்வேறு வகை யில் கைலாசபதி உதவியுள்ளார் (பக்:61) எனவும் நூலாசிரியர் லெனின் மதிவானம் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழிலக்கியத் தில் மொழி ஆள்கையாலும், வசனக் கட் டமைப்பாலும், தொனிப் பொருள்களாலும் புதுமைப் புரட்சி செய்தவர் எஸ்.பொன்னுத் துரை (எஸ்.பொ). கைலாசபதியும், அவரது மார்க்சிய அணியினரும் அவரைத் தள்ளி வைத்து இருட்டடிப்புச் செய்ததை நூலா சிரியர் அறிந்திருக்கவில்லையா? எஸ். பொ. மார்க்சியம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை விமர்சித்தவர். தமிழகம் வியக்கத்தக்க வகையில் சிறு கதை படைத்த சிறுகதையாசிரியர்.
ஈழத் தமிழன் இன்று தனது இருப்புப் பற்றி உரத்துச் சிந்திக்க வேண்டிய நிலை முற்று முழுதாகக் கனிந்து விட்டது. குந்தி இருக்கக் கையளவுகூட நிலமற்று அந்தரிக் கிறான். இந்த விடயம் குறித்துப் பேராசிரி யர் க.கைலாசபதி 'செம்பதாகை' என்ற ஏட்டில் எழுதி இருப்பதாகவும் அவைகள் நூலாக ஆவணப்படுத்த வேண்டுமெனவும் நூலாசிரியர் வேண்டுகோளை முன்வைத் துள்ளார். இடது சார்பான தமிழ்த் தேசியத்
தையே அவர் விரும்பியதாகக் கூறப்படு கிறது. 'தமிழ்த் தேசியம்' என்றாலே சிங் களப் பேரினவாதத்துக்கு முகம் சிவக்கும். இன்றைய அவர்களது கண்ணோட்டத்தில் இடதும் வலமும் ஒன்றேதான் 1982ஆம் ஆண்டில் காலமான பேராசிரியர் காலமாகி மூன்று தசாப்தங்களாகி விட்டன. இன் றைய நிலையில் அவர் வாழ்ந்து கொண்டி ருந்தால் இடது தமிழ்த் தேசியம் என்ற நிலைப்பாட்டில் நிற்பாரா? அவரது அணி யினருக்கு இன்றைய தமிழ்த் தேசியம் குறுந்தேசியமாகி விட்டதே!
கைலாசபதி சுமந்து வந்த மக்கள் இலக்கியம் சார்ந்த பதாகையை முன் னெடுத்து வருகின்ற ந.இரவீந்திரனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதென அங்கீ கரிக்கும் லெனின் மதிவானம், கைலாசபதி விட்டுச் சென்ற ஆய்வின் தொடர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் ந.இரவீந்திர னுக்கு முக்கிய இடமுண்டு என்பதை இலங்கை - இந்திய விமர்சகர்கள் சுட்டிக் காட்டுவர் என இன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்துக்கு பழைய வாய்ப்பாடு களை மறக்க வைக்கும் புதிய சிந்தனை களை ஊட்டி வரும் சிந்தனையாளர் ந.இரவீந்திரனை இனங்காட்டியுள்ளார்.
ஆக, ஒர் அபிமானியின் நோக்கில் ‘பேராசிரியர் க.கைலாசபதி - சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல்’ என்ற நூலில் பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய சங்கதிகள் பரத்தப்பட்டுள்ளன. அவரைப் பற்றி மேலும் அறிதல் செய்ய நூல் தூண்டு கின்றது.
தொடர்புகளுக்கு : குமரன் புத்தக இல்லம் - கொழும்பு.
மல்லிகை பெப்ரவரி 2012 奉 20

வெள்ளிப் பாதை
மூலம் : கலாநிதி அபுல் எயிட் தாவுபூத் (அல்ஜீரியா)
தமிழில் : இப்னு அஸ்மைத்
கட்டிலில் அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டிருந்தாள். கனத்த இருள் வீடெங்கும் பரவியிருந்தது. அவளது கணவன் கடைத் தெருவிலிருந்து இன்னமும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவன் வரும் வரையில் கதவைத் திறந்து வைத்திருப்பதற்கு மறந்து விட்டமை அவளது ஞாபகத்தில் வந்தது. அவளிடமிருந்து கொட்டாவி ஒன்று வெளியேறியது.
அவளது நாளாந்த வேலைகளில் முடிவொன்றும் தென்படாமலே இருந்தது. விறகு சேகரித்தல், தண்ணிர் கொண்டு வருதல், தானியங்களை ஆலைக்குக் கொண்டு சென்று இடித்துக் கொண்டு வந்து சமையல் செய்தல், ஐந்து பிள்ளைகளையும் பராமரித்தல் போன்ற வேலைகளை அவள் அவளது கணவனின் வேலைகளுக்கும் மேலதிகதாகச் செய்ய வேண்டியிருந்தது.
அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவன் என்ன வகையான மனிதன்? அல்லது கணவன்? கடைத்தெரு என்பது அவனைப் பொறுத்த வரையில் வீட்டைப் போலாகியுள்ளது. அவனது பகல் பொழுதும், இராப் பொழுதின் வரும் பகுதியும் கடைத் தெருவில் தான் கழிகின்றன. நித்திரை கொள்வதற்காகவும், உணவு உண்பதற்காகவும் மட்டுமே அவன் வீட்டுக்கு வருகின்றான். அவள் அவனை மறந்துவிட முயற்சி செய்தாள். என்றாலும் இரவு கனவுகளினூடாக அவன் அவளது மனதில் குடிகொண்டு விட்டான்.
அவளுக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டது. அவன் அவளது கணவன். அவளது ஐந்து குழந்தைகளினதும் தகப்பன். எனவே அவனை மோசமாகத் திட்டுவதற்கு உரிய பலத்தை அவளால் திரட்ட இயலாது. அவன் வீட்டுக்கு வந்து அமர்வதற்கு முன்பதாகவே அவளை நோக்கிக் கேட்டான், “பாண் எங்கே?” அவள் கதவின்கால் திடுக்கிட்டுப் பார்த்தவாறே பதிலளித்தாள்.
"ஏன் இரவுச் சாப்பாடு கடைத் தெருவில் கிடைக்கவில்லையா?” அவளது கோபத்தை அவளது விழிகளில் அவன் கண்டான்.
“இரவுச் சாப்பாடு எங்கே என்றுதான் நான் கேட்டேன்.”
மல்லிகை பெப்ரவரி 2012 率 21

Page 13
'ஏன், நான் சொன்னேனே. இரவுச் சாப்பாடு கடைத்தெருவில் இருக்கும்.”
அவளது அடங்காத் தன்மையை அவனால் பொறுத்துக் கொள்ள இயலாமற் போய்விட்டது. அவளது தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் அறைந்து, அப்படியே தள்ளி விட்டான். அவள் அழுது கொண்டே தரையில் விழுந்தாள்.
‘என்னைக் கொலை செய்! கொலை செய். எனக்கு உன்னுடன் வாழ்க்கை நடத்துவது கசந்துவிட்டது. எனக்கு இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. பிள்ளை களின் சுமையையும் என் முதுகில் நீ சுமத்தி விட்டாய். இப்போது உனது சுமையையும் சுமக்கும்படியா கூறு கிறாய்?"அவள் தரையில் உட்கார்ந்து அழுதவாறே புலம்ப ஆரம்பித்தாள்.
"ஆட்கள் வயல்களில், தோட்டங் களில் எல்லாம் வேலை செய்கிறார் கள். ஆன்ால். நீ. கடைத் தெரு வெங்கும் வெறுமனே சுற்றித் திரிந்து கொண்டு வாய் பார்த்துக் கொண்டி ருக்கிறாய். எனது கண்ணுக்குப்படாத வகையில் அங்கேயே கிடந்தால்
எவ்வளவு நல்லது பிள்ளைகளுக்குச்
சாப்பிடக் கொடுக்காத ஒரு தந்தை எனது பிள்ளைகளுக்குத் தேவை யில்லை.”
கண்களையும், துடைத்துக் கொண்ட அவள், மீண்டும் ஆரம்பித்தாள்."என்னால் முடிந்தளவு தான் பிள்ளைகளுக்குச் சாப்பிடக்
மூக்கையும்
கொடுக்க முடியும். அதிலே அவர் களது வயிறுகள் நிரம்புவதில்லை. அதனால் பிள்ளைகள் பசியுடன் தூங்குகிறார்கள். இந்த வீட்டில் எல் லோரும் எப்போதும் பட்டினியோடு தான் வாழ்கிறார்கள்.”
தலையைத் தூக்கி அவனது முகத்தைக் கூர்மையாகப்
அவள்
பார்த்தாள்.
இது எனது விதி. நான் கல் யாணம் முடிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நல்லதாக இருந்திருக்கும்.” அவன் மீண்டும் அவளுக்கு ஒரு அடி அடித்து விட்டு, அவளது பார்வையில் இருந்தும், அந்த வீட்டிலிருந்தும் வெளியேறினான்.
அவனுக்கு முன்னால் இப்படிக் கதைப்பதற்கு இந்தளவு பலம் எப்படி கிடைத்தது என்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் வெளி யேறி போனதன் பின்னர் அவள் சோர்ந்து போய் விட்டதாக உணர்ந் தாள். அவனை மிகவும் மோசமாகத் திட்டிவிட்டதாக எண்ணினாள். அவள் பேசிய விதம் அவனது ஆண்மைக்குப் பொருத்தமானதா காதோ! என அவள் சிந்தித்தாள். பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பினைச் சுமத்தியது தொடர் பில் உண்மையிலேயே அவன், அவனைப் பற்றியே வேதனைப்பட வேண்டும். இவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய அவளது பெற்றோர்களை அவள் நினைத்துப் பார்த்தாள்.
மல்லிகை பெப்ரவரி 2012 தீ 22

அவளால் மேலும் நித்திரை கொள்ள இயலாது போயிற்று. எழுந்து சென்றுமுகத்தைக் கழுவினாள். இரவு நேரம் எவ்வளவுதூரம் கழிந்து விட்ட தென்பது அவளுக்குத் தெரியாது. அவளது பிள்ளைகளின் பயன்பாட்டுக் காக ஒலிவ் எண்ணெய் கொண்டு வரு வதற்காக அவள் அதிகாலையிலேயே புறப்பட்டுச் செல்ல வேண்டி இருந் தது. இதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை. எனினும் செல்ல வேண்டிய பாதை மிகவும் கடினமான தாக இருந்தது.
அவள் மீண்டும் கட்டிலுக்குச் சென்று அவளது மூத்த மகனின் தோளை உலுக்கி அவனை எழுப் பினாள்.
“மகன் எழுந்திருங்கள். எழுந் திருங்க மகன்.”
அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தான். தன்னை ஏன் தனது தாய் எழுப்பினாள் என்பதை அவன் அறிந்திருந்தான்.
அவளது கணவன் திரும்பிப் போய்விட்டான். ஏனைய பிள்ளை களை வீட்டில் தனியே விட்டு விட்டு அவளால் எப்படி வெளியே செல்ல முடியும்? அவள் வீட்டின் கதவைத் திறந்து பாதையைப் பார்த்தாள். பாதை ஒரமாக யாரோ உட்கார்ந் திருப்பது தெரிந்தது. அது அவளது கணவன் தான் என்பதை அவளால் இனங்காண முடிந்தது. அவன் இன்னமும் அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கவில்லை. அவள் தனது
மூத்த பிள்ளையின் கையைப் பிடித் துக் கொண்டு வீட்டிலிருந்து வெளி யேறினாள்.
கெகடஸ் மரங்களால் எல்லை யிடப்பட்டிருந்த ஒரு குறுக்கு வழி யினுாடாக அவள் தனது மகனுடன் முன்னேறினாள். அவளது மகன் திரும்பித் திரும்பிப் பின்னால் பார்த் தான். சற்றுநின்றவாறே தனது தந்தை இன்னமும் பாதை ஒரமாகக் கீழே
உட் கார்ந்து இருக்கிறாரா? என்
பதைப் பார்த்தான். அவள் அவனைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்
6.
‘வா என்னுடன் போகலாம்” மகன் அவளுடன் ஒட்டிக் கொண் டான்.
“நீ பயந்து விட்டாயா?”
“இல்லை.”
99
“பின்ன.
'ஏன் அம்மா அப்பாவுடன்
போகவில்லை?”
‘அப்பா வீட்டைப் பார்த்துக்
கொள்வதற்காக இருக்கிறார்.”
களவு போகக் கூடிய ஒன்றும்
எங்களுக்கு இல்லையே?”
‘உனது தம்பி தங்கைகளைப்
பார்த்துக் கொண்டு அப்பா இருப்
yy
ւյmri.
“அவர்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை.”
'யார் கண்டது?”
மல்லிகை பெப்ரவரி 2012 தீ 23

Page 14
‘நானும் அவர்களுடன் இருந் திருக்கலாம்’ மகனின் வார்த்தை அவளுக்கு வேதனையை உண்டாக் கியது. அவள் மகனின் ஒரு கையைப் பற்றியவாறு வேறொரு பாதையில் திரும்பிச் சென்று கொண்டிருந்தாள். மகன் மீண்டும் கதைக்க ஆரம் பித்தான்.
“எங்களது அப்பா தொழிலேதும் செய்வதில்லையே. ஏன்?"
'அவருக்கு தொழிலேதும் கிடைக்கப் போவதில்லை.”
தனது மகனின் முன் தனது கண வரின் குறைபாடுகளை மறைக்கும் தேவை அவளுக்கு ஏற்பட்டது. என்றாலும் மகன் திரும்பத் திரும்ப கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.
‘அப்படி என்றால் அக்கம் பக் கத்து வீடுகளில் இருப்பவர்கள் வயல் வேலைகளை எப்படித் தேடிக் கொள் கிறார்கள்?”
அவளுக்குப் பதிலேதும் கூறத் தோன்றவில்லை. தனது கணவனின் பலம் வாய்ந்த கரங்களையும், கால் களையும் நினைத்துப் பார்த்தாள். தொழில் செய்ய வேண்டுமென்றால், தொழிலொன்றைத் தேடிக் கொள் வது அவனுக்கொன்றும் கடினமான காரியமல்ல. மகன் தனது தாயின் கரத் தைப் பலமாகப் பற்றிக் கொண்டான்.
"நான் பெரியவனானதும் அம்மா வுக்கு உதவி செய்வேன்.”
அவளது கணவன் அவளது நினை வுக்கு வந்தான். அவன் மீண்டும்
கடைத்தெருவுக்குச் செல்லாதிருந் தால் நித்திரை கொள்வானாக இருக்க வேண்டும். இல்லா விட்டால் எனது வார்த்தைகளால் கோபப்பட்டு என்னை அடிப்பதற்குத் தயாராக இருக்கக் கூடும். எனது வார்த்தை களை அவனால் இலகுவில் மறக்க இயலாதிருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.
நிலவொளியின் ஊடாக அவர்கள் சென்று கொண்டிருந்தனர். மகன் வானத்தில் உதித்திருந்த நிலவைப் பார்த்தான். இரவு நேரங்களில் உலாவு கின்ற ஆவிகளைப் பற்றிய நினைவு அவனுக்குள் வந்தது. ஆவிகள் பற்றி அவன் தனது தாயிடம் கேட்டான்.
“மயானத்தை அண்மித்து விட்ட தால் நீ பயந்து விட்டாயா மகனே?” தாய் கேட்டாள்.
அவன் மெளனமாக இருந்தான். "ஆண் பிள்ளைகள் ஆவிகளுக் குப் பயப்பட இல்லையா?” என்றாள் தாய்.
மாட்டார்கள்
அவன் எதுவுமே சொல்லாமல் முன்னால் பார்த்தான். நிலவொளியில் காற்றுக்கு அசைகின்ற இலைகள் ஆவி களைப் போலத் தோற்றம் காட்டின. 'அம்மா. நாங்கள் திரும்பிப் போவோம்.”அவன் சற்று நின்றான். ‘நாங்கள் இன்னும் முன்னால் செல்ல வேண்டும்.”
‘பேய் எங்களைச் சாப்பிட்டு விடும்.”
“வறுமைதான் மகனே எங்களது
9y
பேய்.
மல்லிகை பெப்ரவரி 2012 & 24

“முன்னால் செல்லுவதற்கு எனது கால்களில் பலமில்லை அம்மா.”
"நாங்கள் திரும்பிச் சென்று விட் டால் நாளை காலை எங்களுக்கு ஒலிவ் எண்ணெய் இல்லாது போகும் மகனே.”
‘நாங்கள் இறந்து விடுவோம் அம்மா.. எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.”
“என்னுடன் வாருங்கள். நாங்கள் போவோம்.”
‘ எனது மயிர்கள் சிலிர்த்து விட்டன அம்மா.”
“என் பின்னால் வாருங்கள்.”
எனது காதுகள் அடைத்து விட்டன.”
"ஆண்பிள்ளையைப் போல் இரு மகன். கடவுள் எங்களுடன் இருக் கிறார்.”
“அதோ பேய்.”
‘இல்லை அது வேறு ஏதோ ஒன்று.”
‘அது எங்களைக்
விடும்.”
கொன்று
“ஒருபோதும் இல்லை.”
“இல்லை. கொன்று விடும்.”
‘உன்னைக் காப்பாற்ற நான் இருக்கிறேன் மகனே.”
‘அம்மா. இப்போது அந்தப் பேய் மறைந்து விட்டது."சற்று நேரம் கழித்து அவன் கூறினான்.
அவள் சுற்றிலும் பார்த்தாள். எது வுமே தென்படவில்லை. நிலவொளி யில் அசைகின்ற மரமொன்றை ஆவி யாகத் தனது மகன் கண்டிருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.
“மகன். அது கெகடஸ் மரத்தின் கிளை. நிலவொளியில் அப்படித் தெரிகிறது.”
‘ஆவி நினைத்து நாங்கள் மனதால் பயந்து விட்டோம்.”
என்று பொய்யாக
"ஆமாம் அம்மா. அம்மா, நாங்கள் போகின்ற பாதையில் வெள்ளி நிறத் தில் நிலவொளி இருக்கிறதல்லவா!”
"அடடா ஆமாம்.”
"நாங்கள் இந்த நிலவொளியிலே
முன்னேறிச் செல்வோம்.”
அவள் முன்னால் சென்று
கொண்டிருந்தாள். அவளது மகன்
அவளுக்குப் பின்னால் சென்று
கொண்டிருந்தான். அவர்கள் செல் லும் பாதை நிலவொளியால் வெள்ளி நிறமாகியிருந்தது.
அவர்கள் மயானத்திற்கு அருகில் வந்து விட்டிருந்தனர். நிலவின் கதிர் கள் பட்டுக் கல்லறைகள் மின்னிக் கொண்டிருந்தன. அவளது கணவ னுடன் வாழுகின்ற வெறுப்பு மிக்க வாழ்க்கையை விட ஒரு கல்லறைக் குள் அடங்கிவிடக் கிடைத்தால் எவ்வளவு நல்லதென நினைத்துக் பிள்ளைகளுக்குத் தனது கடமைகளை நிறைவேற்றாத தந்தையைக் கொண்ட அவளது
கொண்டாள்.
மல்லிகை பெப்ரவரி 2012 சீ 25

Page 15
பிள்ளைகளை அவள் நினைத்துப் பார்த்தாள்.
சில அடிகள் அவள் முன்னால் சென்றாள். அவளுக்குப் பின்னால் யாரோ அடியெடுத்து வைக்கும் ஒசை கேட்டது. அவளது இதயம் வேக மாகத் துடிக்க ஆரம்பித்தது. அவள் மகனை தன்னருகே இழுத்துக் கொண்டாள். பின்னால் வரும் நபர் தன்னை கொன்று விடக் கூடும் என அவளுக்குள் ஒர் உணர்வு ஏற்பட்டது. அச்சத்துடன் அவள் பின்னால் திரும் பிப் பார்த்தாள். பின்னால் வந்து கொண்டிருந்தது அவளது கணவன் என்பதை அவளால் இனங்காண முடிந்தது. அவள் கோபத்துடன் அவனை நோக்கினாள்.
‘எங்களை மயானத்திற்கு அனுப்புவதற்காகவா நீ வந்தாய்?”
அவனது பதில் கிடைக்கும் வரை யில் காத்திராமல் அவள் தொடர்ந்தும் அவன்ைத் திட்டித் தீர்த்தாள். அவள்
திட்டித் தீர்த்து முடிந்த பிறகு அவன் பேசலானான்.
“தாமதிக்க வேண்டாம். பிள்ளை கள் தனியாக வீட்டிலே இருக்கிறார் கள்.’’ அவன் மெல்லிய குரலில் கூறினான்.
அவன் அவளைக் கடந்து முன்னால் சென்றான்.
‘நான் வேலை ஒன்று தேடப் போகிறேன்', சென்ற அவன் கூறினான்.
அவளைக் கடந்து
இந்த இறுதி வார்த்தைகளைக் கேட்ட அவளது கோபம் பறந்தோடி விட்டது.
அவனைத் திட்டித் தீர்த்த விதம் பற்றி நினைத்துப் பார்க்கும் போது அவளது இதயம் உருகி ஓடுவதாக அவளுக்குப் பட்டது. அவளது உதடு கள் பிரிந்து மெல்லி புன்னகை யொன்று பூத்திருப்பதை நிலவொளி யில் காணக் கூடியதாக இருந்தது.
N
புதுoனத் தம்பதிகளை toன0ார
வாழ்த்துகின்றோம்
மல்லிகை ஆசிரியரின் மகன் திலீபன் - வாசுகி தம்பதியினரின் மூத்த மகள் செல்வி. தர்ஷனா அவர்களுக்கும், திரு. திருமதி. சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வன் செல்வன். தயானந்தன் அவர்களுக்கும் கொழும்பில் வெகு சிறப்பாகத் திருமணம் இனிதே நிறைவேறியது.
மணமக்களை மல்லிகை சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்.
- ஆசிரியர்
少
மல்லிகை பெப்ரவரி 2012 தீ 26

இரு பெரும் கலைஞர்கள் சிவாஜிகணேசன் - செளந்தராஜன்
பற்றிய ஒரு நோக்கு
- துரை. மனோகரன்
தமிழ்த் திரையுலகம் காலத்துக்குக் காலம் பல்வேறு கலைஞர்களைக் கண்டிருக்கிறது. பொதுவாக எல்லோரும் திறமை மிக்கவர்களே. ஆயினும், ஒரு சிலர் அபாரமான திறமை கொண்டவர்களாக விளங்கியுள்ளனர். அவர்களில் இருவர் சமகாலத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசனும், ரி.எம்.செளர்ந்தரராஜனும் ஆவர். இருவரும் ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் தமது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளனர். சிவாஜிகணேசனால் செளந்தர ராஜனும், செளந்தரராஜனால் சிவாஜிகணேசனும் புகழ் பெற்றனர். ஒருவர் நடிகர் திலகமானால், மற்றவர் பாடகர் திலகம்.
சிவாஜிகணேசனின் உண்மையான பெயர் கணேசமூர்த்தி. சின்னையா மன்றாயர், ராஜா மணி அம்மாளின் நான்காவது மகன்தான் அவர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பாடுவதும், நாடகத்தில் வசனம் பேசுவதும் கணேசமூர்த்திக்குப் பிடித்தமான விடயங்கள். 1928இல் பிறந்த அவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது, கம்பளத்தார் கூத்து என்ற பெயரில் கட்டபொம்மன் நாடகத்தை அவரது ஊரான விழுப்புரத்தில் நடத்தினர். அந்த நாடகத்தைப் பார்த்ததிலிருந்து தாமும் ஏன் கட்டபொம்மனாக நடிக்கக் கூடாது என்ற தணியாத தாகம் கணேசமூர்த்திக்கு ஏற்படத் தொடங்கியது. அவ்வேளையில் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் மதுரை முீ பாலகான சபாவினர் திருச்சியில் முகாமிட்டு நாடகம் நடத்தினர். நாடகம் முடிந்து சபாவினர் மூட்டை முடிச்சுகளோடு கிளம்பும் போது தாமும் அந்த நாடகக் கம்பெனியில் சேர விரும்புவ தாகத் தமது விருப்பத்தைக் கணேசமூர்த்தி தெரிவித்து, வீட்டிலே சொல்லிக் கொள்ளாமல் அவர்களுடனே சென்றார். நாடகக் கம்பனியில் கணேசமூர்த்தி கணேசனானார். அக்கம்பனி யில் அவருக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்து அவரைச் சிறந்த நடிகராக்கியவர், சின்ன பொன்னு சாமி படையாச்சி என்பவர். சிறு வயதிலேயே சீதை, சூர்ப்பனகை, பரதன், இந்திரஜித், நூர்ஜ ஹான், தேவகி போன்ற பல பாத்திரங்களில் கணேசன் நடித்துள்ளார். பின்னர் ராஜபார்ட் நடிகராகவும் நடித்துப் புகழ்பெறத் தொடங்கினார்.
வி.சி.கணேசனைச் சிவாஜிகணேசனாக்கிய நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தது. 1946ஆம் ஆண்டு சென்னையில் திராவிடக் கழகத்தின் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுக்காக சி.என்.அண்ணாத்துரை சிவாஜி கண்ட இந்துராஜ்யம் என்ற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆர்.தான் சிவாஜியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அண்ணாத்துரையின் நீண்ட வசனங்களைப் பேசுவதில் அவருக்குச் சிரமம் இருந்த
மல்லிகை பெப்ரவரி 2012 & 27

Page 16
தால், நாடகம் நடப்பதற்கு ஒரு வாரம் இருக் கும் நிலையில் சிவாஜியாக நடிக்க மறுத்து விட்டார், எம்.ஜி.ஆர். உடனடியாக வி.சி. கணேசனைச் சிவாஜியாக நடிக்குமாறு அண்ணாத்துரை கேட்டுக் கொண்டார். கணேசன் முடிவில் தயங்கினாலும், அண் ணாத்துரை நம்பிக்கையூட்டவே, அவர் எழு திய தொண்ணுாறு பக்க நாடக வசனங்களை யும் ஏழு மணித்தியாலத்திற்குள் மனனம் செய்து நடித்தும் காட்டினார். கலைகள் மீது அதிகம் அக்கறையில்லாத ஈ.வே.ரா. பெரியார், அந்த நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசும்போது அதனை மிகப் பாராட்டி, கணேசனை அழைத்து, "நீதான் கணேசனா? இன்று முதல் நீ சிவாஜி” என்று புகழ்ந்துரைத்தார். அன்றுமுதல் வி.சி.கணே சன் சிவாஜி கணேசன் ஆனார். பெங்களூரில் 'விதி' என்ற நாடகத்தில் சிவாஜிகணேசன் வில்லனாக நடித்தபோது, பெரியாரும் இந்த நாடகத்தைப் பார்த்தார். நாடகம் முடிந்த பின் னர், நாடக நடிகர்களைப் பார்ப்பதற்காக அவர் மேடைக்கு வந்தார். வந்தவர் சக்தி கிருஷ்ணசாமியைப் (பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் கதை - வசனகர்த்தா) பார்த்து, சிவாஜிகணேசனைப் பற்றிக் குறிப் பிடும்போது, "உங்களுக்குத் தெரியுமா? நான் அவனுக்குச் சிவாஜி என்ற பட்டமெல்லாம் கொடுத்திருக்கிறேனே. அதையெல்லாம் நாட கத்தில் போடுவதில்லையா?’ என்று கேட்டார்.
சிவாஜிகணேசன் நாடக நடிகராக விளங்கியபோது, பி.ஏ.பெருமாள் என்பவரும், ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும் இணைந்து, அப்போது பிரபலமாக மேடையேற்றப்பட்டுக் கொண்டிருந்த 'பராசக்தி' நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். நாடகங்களில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்த பெருமாள், பராசக்தியில் கதாநாயகன் பாத்
திரத்திற்கு அவரையே போட வேண்டுமென்று தீர்மானித்தார். ஆனால், மெய்யப்பச் செட்டி யார், "ஏம்பா இந்தப் புதுப் பையனைப் போட்டு விஷப்பரீட்சை செய்கிறீர்கள்? கே.ஆர்.ராமி சாமி அல்லது டி.ஆர்.மகாலிங்கம் போன்ற வர்களை நடிக்கச் சொல்லிப் படத்தை முடி யுங்கள்” என்று தெரிவித்தார். ஆனால், பெரு மாள் சிவாஜியையே நடிக்க வைப்பதென்று பிடிவாதமாக இருந்தார். பராசக்தியில் நடித் துக் கொண்டிருக்கும் போதே பி.ஏ.பெரு மாளின் அனுமதியுடன் பூங்கோதை’ என்ற திரைப்படத்திலும் அஞ்சலிதேவியுடன் சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்தார். பராசக்தி (1952) ஒரே இரவிலேயே சிவாஜி கணேசனின் பெயரைப் பட்டி தொட்டியெல் லாம் உயர்த்தி விட்டது. தமிழ்த் திரை யுலகுக்கு, அதுவரை காண முடியாத ஒரு புதிய சிறந்த நடிகர் கிடைத்து விட்டார். பரா சக்தியில் சிவாஜியைப் போட்டதற்கு ஆரம் பத்தில் எதிர்ப்புத் தெரிவித்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், பின்னர் அந்த நாள்’ (1954) படம் எடுக்கும் போது, ‘ஏம்பா மற்றவர்களைப் போட்டு விவடிப்பரீட்சை செய்கிறீர்கள்? சிவாஜியை வைத்து எடுங்கள்” என்று குறிப் பிட்டார். பராசக்தி, வெளிவந்து சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தபோது, தமது நண்ப ரான நடிகர் வீ.கே.ராமசாமியின் வீட்டுக்குச் சென்று திரும்பும் போது சிவாஜிகணேசன் சொன்ன வார்த்தைகள் ‘ராமசாமி அண்ணே, இந்தச் சினிமா உலகம் எதிர் காலத்திலே என் கையில தான்.” அவர் கூறியபடியே தமிழ்த் திரையுலகின் எதிர் காலம் சில தசாப்தங்கள் அவரது கை யிலேயே இருந்தது.
செளராஷ்டிர மொழியைத் தாய்மொழி யாகக் கொண்ட தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் (ரி.எம்.செளந்தர ராஜன்) 1923இல் மதுரையில் பிறந்தவர்.
மல்லிகை பெப்ரவரி 2012 奉 28

மீனாட்சி அய்யங்கார் - வெங்கடம்மாள் தம் பதியரின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த வர், அவர். சிறுவயதில் பாடசாலையில் படிக்கும்போது பாட்டு, நடிப்பு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவராக வளர்ந்தார், செளந்தர ராஜன். தந்தையோடு கோயில் மண்டபத்தில் பஜனை பாடித் தமது இசைத் திறமையை வளர்த்துக் கொண்டார். வளர்ந்து கொண்டி ருந்தபோது, தியாகராஜ பாகவதர் பாடல் களை, அவர் போலவே ரி.எம்.எஸ். பாடி மகிழ்வார். அவர் போலவே ரி.எம்.எஸ் ஸ0க்கு இனிய குரல் வாய்த்திருந்தது. பாக வதர் பாடல்களுடன், பி.யூ.சின்னப்பா, வீர. செல்லப்பா முதலியோரின் பாடல்களையும் நிகழ்ச்சிகளில் பாடி வந்தார், செளந்தரராஜன். கே.பி.சுந்தராம்பாள், யூ.ஆர்.ஜீவரத்தினம் முதலியோரின் பாடல்களிலும் இயல்பான ஈடுபாடு அவருக்கு இருந்தது.
செளந்தரராஜனின் இளவயது நண்ப ராக இருந்த செளராஷ்டிர இனத்து இளைஞ ரான பாப்ஜி ஜனார்த்தன் என்பவர், இவரது திறமையை நன்குணர்ந்து இவருக்கு, உற் சாகமூட்டியும், வழிகாட்டியும் வந்தார். இசை யில் இயல்பாகவே ஈடுபாடு கொண்டிருந்த செளந்தரராஜன் முறையாக இசை கற்றுக் கொள்ள விரும்பியபோதிலும், அதற்கான பொருளாதார வசதியின்றித் தவித்தார். பாப்ஜி ஜனார்தனும், அவரது நண்பரான மிருதங்க வித்துவான் பரிட்சித் பாகவதர் என்பவரும் காரைக்குடி ராஜாமணி அய்யங்கார் என்ற சங்கீத வித்துவானிடம் செளந்தரராஜனை முறைப்படி இசை பயில ஏற்பாடு செய்தனர். அவரிடம் இசை பயின்ற செளந்தரராஜன், 1945இல் மதுரையில் தமது முதல் இசைக் கச்சேரியை நிகழ்த்தினார்.
தமது குரல் வளத்திலும், திறமையிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த செளந்தர
ராஜன், சினிமாவில் பாடிப் புகழ் பெற வேண் டும் என்று தணியாத தாகம் கொண்டார். ஆனால், இனிய குரல் வளமும், திறமையும் இருந்தும், சினிமா வாய்ப்பு செளந்தரராஜ னுக்கு இலகுவில் கிடைக்கவில்லை. பல் வேறு முயற்சிகள் செய்து, சுந்தர்ராவ் நட்கர்னி என்ற இயக்குநரின் உதவியால், அவர் இயக்கிய ’கிருஷ்ண விஜயம் (1950) படத்தில், சுப்பையா நாயுடுவின் இசையில் முதன் முதலில் சினிமாவில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. தியாகராஜ பாகவதர் ‘சிந்தா மணி' படத்தில் பாடிய 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி' என்ற மெட்டில் அமைந்த ராதா நீ என்னை விட்டுப் போகாதேடி என்ற பாடலைச் செளந்தரராஜன் நரசிம்ம பாரதிக் காகப் பாடினார். தியாகராஜ பாகவதரையே தமது ஆதர்சமாகக் கொண்டிருந்த செளந்தர ராஜன், அந்தப் பாடலை அவர் போலவே பாடி னார். இப்பாடலோடு மேலும் மூன்று பாடல் களையும் கிருஷ்ண விஜயம் படத்திற்காக அவர் பாடினார்.
இதன் பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘மந்திரிகுமாரி (1950)யில் ஜி.ராமநாதன் இசையில் 'அன்னமிட்ட வீட்டிலே கன்னக் கோல் சாத்தவே என்ற பாடலைப் பாடி னார். ஆனால், அந்தப் பாடல் எம்.ஜி.ஆருக் காகப் பாடப்படவில்லை. சாதாரணமான ஒரு பாத்திரத்திற்காகவே பாடப்பட்டது. பின் னர் வெளிவந்த 'தேவகி (1951) படத்தில் ஜ.ராமநாதன் இசையில் ஒரு பிச்சைக் காரன் பாடுவதாக அமைந்த பாடலைப் பாடினார். எம்.ஜி.ஆர். நடித்த ‘சர்வாதிகாரி (1951)யில் இரு பாடல்களைச் செளந்தர ராஜன் பாடினார். ஆனால், அப்படத்திலும் எம்.ஜி.ஆருக்காகப் பாட முடியவில்லை. 'கல்யாணி' என்ற படத்தில் கே.ராணியுடன் சேர்ந்து இனிப் பிரிவிலாமலே வாழ்வோம்
மல்லிகை பெப்ரவரி 2012 奉 29

Page 17
உலகிலே வானொலியில் கேட்க முடிகிறது) என்ற
(இப்போதும் இப்பாடலை
பாடலையும், மேலும் இரு பாடல்களையும் செளந்தரராஜன் பாடினார். வளையாபதி (1952) என்ற படத்தில் ஜமுனாராணியுடன் இணைந்து, குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால், குளிர்தாமரை மலர்ப் பொய்கை கண்டேன் என்ற பாடல் களை எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசை யில் பாடினார். அத்தோடு, இன்னொரு பாடலையும் அவர் பாடினார். சர்வாதிகாரி, தேவகி, கல்யாணி, வளையாபதி ஆகி யவை தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப் பட்ட போது, தாம் தமிழில் பாடிய சகல பாடல்களையும் தெலுங்கிலும் செளந்தர ராஜனே பாடினார் என்பது குறிப்பிடத்தக் கது. செளந்தரராஜன் சினிமாவில் பாடு வதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருந்த போது ஏ.எம்.ராஜா, சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா ஆகி யோர் புகழ்பெற்ற பாடகர்களாக விளங் கினர்.
செளந்தரராஜன் இதுவரை சினிமாவுக் காகப் பாடியதெல்லாம் சென்னைக்கு வெளி uG86oGSu. அதனால் அவரால் புகழ்பெற்ற பாடகராக அதுவரை வரமுடியவில்லை. சென்னையில் பாடினால் தான் புகழ் பெற லாம் என்ற நிலை இருந்தது. மற்றைய புகழ் பெற்ற பாடகர்கள் எல்லாம் சென்னையில் பாடியவர்களே. அதனால், ஏ.வி.எம். நிறு வனத்திற்குச் சென்று, ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரைச் செளந்தரராஜன் சந்தித்தார். அப்போது ஏ.வி.எம்.மின் தயாரிப்பில் இருந்த ‘செல்லப்பிள்ளை (வெளிவந்தது 1955இல்) யில் தங்கவேலுவுக்காக இரண்டு பாடல்கள் பாடும்படி சொன்னார், மெய்யப்பச்
செட்டியார். ஆனால், சுதர்சனம் இசையில் ரி.எம்.எஸ்ஸனக்கு ஆறு பாடல் களுக்கு மேல் கிடைத்தன. செளந்தரராஜன் தம்மோடு அதிகமான பாடல்களைப் பாடிய புலபாக சுசீலாவோடு (பி.சுசீலா) முதல் பாடல் பாடியது செல்லப்பிள்ளையிலேயே.
சிவாஜிகணேசனும், எம்.ஜி.ஆரும் முதலும் கடைசியுமாகச் சேர்ந்து நடித்த "கூண்டுக்கிளி (1954) படத்தில் ஒரு கோரஸ் பாட்டைச் செளந்தரராஜனுக்குக் கொடுத் திருந்தார், இசையமைப்பாளர் கே.வி.மகா தேவன். பாடல் ஒலிப்பதிவின் போது அங் கிருந்த பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ், மேலும் சில பாடல்களைச் செளந்தர ராஜனுக்குக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இன்னொரு பாடல் வி.என்.சுந் தரத்தோடும், கோஷ்டியினரோடும் அவர் பாட வாய்ப்புக் கிடைத்தது. கூண்டுக்கிளி படத்தில்தான் செளந்தரராஜன் முதன் முதலாகச் சிவாஜிகணேசனுக்குக் குரல் கொடுத்தார். விந்தன் எழுதிய 'கொஞ்சும் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி ஆக்கிவிட்டுக் கெட்டிமேளம் கொட்டுவது சரியா தப்பா?’ என்ற பாடல்தான் அது.
சிவாஜிக்குச் செளந்தரராஜன் பாடி யதும், எம்.ஜி.ஆரும் அவர் தமக்காகப் பாட வேண்டுமென விரும்பினார். தாம் நடித்த மலைக் கள்ளனில் (1954) செளந்தர ராஜனைப் பாட வைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலைச் செளந்தரராஜன் எம்.ஜி. ஆருக்காக முதன்முதலில் பாடினார். அதே படத்தில் நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை யின் தமிழன் என்றொரு இனம் உண்டு - தனியே அவர்க்கொரு குணம் உண்டு’
மல்லிகை பெப்ரவரி 2012 & 30

என்ற பாடலைத் படத் தலைப்புப் பாட Gorrass (Title Song) Gafsirissy UIT.g65T uttg னார். சுப்பையா நாயுடு இசையமைத்திருந் தார்.
செளந்தரராஜன் இப்படியெல்லாம் பாடி யிருந்த போதிலும், அவர் புகழ்பெற்ற பின் னணிப் பாடகராக விளங்கத் தொடங்கியது ‘தூக்குத் தூக்கி (1954) படத்தில் இருந்து தான். தூக்குத் தூக்கியில் தமக்காகச் சிதம் பரம் ஜெயராமன் பாட வேண்டுமெனச் சிவாஜி விரும்பினார். மற்றையோர் திருச்சி (86 om as 5T 56öT Lurr (86u6oTGGALID607 66bilið பினர். ஆனால், லோகநாதன் கேட்ட தொகையைத் தயாரிப்பாளர்களால் கொடுக்க முடியவில்லை. திருச்சி லோக நாதன், "இதோ பாருங்க. ரேட்டில குறைச் சுக்க முடியாது. அப்படிக் குறைச்சுப் பாட ணும்னா மதுரைப் பையன் (செளந்தர ராஜன்) புதுசா பாட வந்திருக்கான். அவங் கிட்டப் போய் பேசிக்குங்க” என்று அவர் களிடம் தெரிவித்தார். அவர்களும் செளந்தர ராஜனைத் தேடிச் சென்று ஒப்பந்தம் செய் தனர். செளந்தரராஜன் பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட சுந்தரி செளந்தரி நிரந்தரியே, பெண்களை நம்பாதே கண்களே பெண் களை நம்பாதே, ஏறாத மலைதனிலே ஆகிய பாடல்களைச் சிவாஜிகணேசனுக் குப் போட்டுக் காட்டினார்கள். அதுவரையில் சிதம்பரம் ஜெயராமனே தமக்கு அந்தப் படத்தில் பாட வேண்டும் என்று விரும்பி யிருந்த சிவாஜி செளந்தரராஜனைப் பார்த்து, "நல்லா பாடியிருக்கீங்க. எல்லாப் பாட்டுக்களையும் நீங்களே பாடுங்க..' என்று அன்பாகக் கூறி, அவரின் முதுகில் தட்டிவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து சிவாஜிகணேசனின் குரலுக்கும், நடிப்புக்
கும் பொருத்தமான பாட்டுக் குரலாகச் செளந்தரராஜனின் குரல் விளங்கத் தொடங் கியது. சிவாஜிகணேசனை ஒரே இரவில் பராசக்தி எழுப்பி விட்டதைப் போல, செளந்தரராஜனை ஒரே இரவில் தூக்குத் தூக்கி ஒரே தூக்காக உயரத் தூக்கி விட்டது.
ரி.எம்.செளந்தரராஜன் சிவாஜிகணே சனுக்குக் குரல் க்ொடுக்கும்போது, அடி வயிற்றில் இருந்து காற்றை எழுப்பிப் பாடு வார். எம்.ஜி.ஆருக்குக் குரல் கொடுக்கும் போது, மூக்கின் வழி காற்றை எழுப்பிப் பாடுவார். மற்றைய நடிகர்களுக்கு, அவர் களுக்கு ஏற்ற முறையில் பாடுவார். செளந்தரராஜன் பல நடிகர்களுக்கும் குரல் கொடுத்த போதிலும், சிவாஜிகனே சனுக்கே அவரது குரல் கச்சிதமாகப் பொருந்துகிறது. 'வணங்காமுடி (1957) படத் தில் இடம்பெறும் கர்நாடக இசை சார்ந்த பாடலுக்குச் சிவாஜிகணேசன் வாயசைத்து நடித்த போது, அவரது கழுத்து நரம்புகளும் புடைத்திருந்தமையைப் பார்த்தபோது, சிவாஜிகணேசன் தான் பாடுவதான பிரமை தமக்கேற்பட்டதாகச் செளந்தரராஜன் கூறி யிருக்கிறார். பொதுவாகவே சிவாஜியின் படங்களில் அவருக்காகச் செளந்தரராஜன் குரல் கொடுக்கும் போது, பார்ப்பவர்களுக் கும் சிவாஜியே பாடுவது போன்ற பிரமை ஏற்படும். இதைப் பற்றிச் சிவாஜிகணேசன் பின்வருமாறு கூறியிருக்கிறார் : “படமெடுக் கும் போது பாடுகிறவர் சுருதிக்கு கூடவே நானும் பாடி நடிப்பேன். இன்றுவரை அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். ஏனென்றால், அந்தப் பாடலுடனும் ஒன்றி இருப்பதற்காக. இன்னொருவர் பாடுகிறார். நாம் வாயசைக்கிறோம் என்று தெரியாமல்
மல்லிகை பெப்ரவரி 2012 $ 31

Page 18
இருந்ததற்கு காரணமே, நான் அந்தப் பாடலைச் சுருதியோடு பாடியதனால்தான். டி.எம்.சௌந்தரராஜன் பாடினாரா, சிவாஜி கணேசன் பாடினாரா என்று வித்தியாசம் தெரியாமல் இருக்க, வாயசைப்பு மட்டு மில்லாமல் பாடலைப் போட்டு, படப்பிடிப்பு நிகழும்போது பாடல் வரிகளை கூடவே நானும் பாடியிருக்கிறேன்.”
செளந்தரராஜன் சிவாஜிகணேசனுக் குப் பாடும்போது, அரைவாசி நடிப்பை அவரே முடித்திருப்பார். சிவாஜியின் நடிப்புக் குத் தேவையான அத்தனை உணர்ச்சி பாவங்களையும் தமது குரல் மூலம் செளந் தரராஜனே கொண்டு வந்திருப்பார். அதைத் தமது மேம்பட்ட நடிப்பின் மூலம் மேலும் சிறப்பாக்கிக் கொள்வார், சிவாஜிகணேசன்.
இந்த இருபெரும் கலைஞர்களுக்கும் இருந்த அபாரமான கற்பனா சக்திதான் இருவரதும் வெற்றிக்கும் முழுமுதற் காரணம் எனலாம். சிவாஜிக்காகப் பாடு வதற்கு முன், அவர் தம் நடிப்பில் எவ்வெ வற்றை வெளிக்காட்டுவார் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றாற் போலச் செளந் தரராஜன் பாடுவார். சிவாஜிகணேசனும் தமது பாத்திரம் பற்றிக் கற்பனை செய்தே நடிப்பார். குறிப்பிட்ட பாத்திரம் தொடர்பாக இருவரதும் கற்பனைகள் காட்சியின் போது ஒன்றாகச் சங்கமிக்கும்.
இருவரதும் அர்ப்பணிப்பு உணர்வு களுக்கும் ஒவ்வொரு சான்றைக் கூறலாம். சாந்தி (1965) திரைப்படத்தில், 'யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?’ என்றொரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. கண்ண தாசன் பாடல் எழுதி, விஸ்வநாதன் இசை யமைத்து, செளந்தரராஜன் பாடியது, அப்
பாடல். அப்பாடல் காட்சியைப் படமாக்கு வதற்கு சிவாஜிகணேசனிடம் நேரம் கேட்ட போது, சில நாட்களாக அதனைத் தள்ளி வைத்துக் கொண்டே வந்தார். யார் மீதாவது சிவாஜிக்குக் கோபம் இருக்கிறதா? என்று படப்பிடிப்புக் குழுவினர் யோசித்தார்கள். மெதுவாகச் சிவாஜியை அணுகிக் கேட்ட போது, “கண்ணதாசன் அந்தப் பாடலை நன்றாக எழுதியிருக்கிறார். விஸ்வநாதன் நன்றாக இசையமைத்திருக்கிறார். செளந் தரராஜன் அண்ணன் சிறப்பாகப் பாடியிருக் கிறார். இந்த நிலையில் நான் சிறந்த நடிப் பைக் காட்டவில்லை என்றால், ப்பூ. இவ் வளவுதானா? என்று நினைத்து விடுவார் கள். ஆகவே, அந்தப் பாடல் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது” என்று கூறி, அந்தக் காட்சியில் வித்தியாசமான தமது நடிப்பை வெளிப்படுத்தினார். காட்சியும் நன்றாக அமைந்தது.
உயர்ந்த மனிதன்' (1968) படத்தில் இடம்பெறும் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! என்ற பாடலில் செளந்தரராஜன் சிவாஜிகணே சனுக்கும், மேஜர் சுந்தரராஜனுக்கும் மாறி மாறிக் குரல் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலில் மூச்சுவாங்கிப் பாட வேண்டி யிருந்தது. பாடல் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக, ஒலிப்பதிவுக்கான ஆயத்தங்களைச் செய்யச் சொல்லிவிட்டு, ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒடியோடி இளைத்த நிலையோடு வந்து செளந்தரராஜன் பாடி னார். பாடல் அற்புதமாக அமைந்தது. இத் தகைய அர்ப்பணிப்பு உணர்வு அவரிடம் இருந்தது.
சிவாஜியின் நடிப்பாளுமையில், அவ
மல்லிகை பெப்ரவரி 2012 & 32

ரது நாடகக் குருவான சின்ன பொன்னு சாமிப்பிள்ளை படையாச்சியின் பங்கு எவ் வளவு இருக்கிறதோ, அதைப் போன்று செளந்தரராஜனின் குரல் ஆளுமையில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனின் பங்கு நிறைய உண்டு. ’கணிர்னு பாடு. குரல் மிதக்கிற மாதிரி இருக்கக்கூடாது. ஸ்வரஸ் தானங்கள் அழுத்தமா விழனும், பாட்டு தெள்ளத் தெளிவா இருக்கணும். பாட் டோடப் பொருளை உணர்ந்து பாடணும் என்று ஆலோசனை வழங்கி, அவரது குரல் வளத்தையும், பாடும் திறமையையும் வளர்த்து விட்டவர், ராமநாதனே. தமது குரலை ஆண்மைத்தன்மை கொண்டதாக,
கம்பீரமானதாக, இனிமையானதாக வளர்த்துவிட்ட பெருமை ஜி.ராமநாதனுக்கே உரியது என்று நன்றியுணர்வோடு
எப்போதும் சொல்லிக் க்ொள்வார், செளந் தரராஜன். ஐம்பதுகளின் ஆரம்ப காலத்தில் கே.ஜமுனாராணியுடனும், கே. ராணி யுடனும் செளந்தரராஜன் பாடிய பாடல் களைக் கேட்டவர்கள், ஐம்பதுகளின் நடுப் பகுதியில் இருந்து வளர்ச்சியடைந்து வந்த அவரது குரல் வளத்தையும், தனித்துவத் தையும் நன்கு உணர்வர். ஆரம்ப காலத் தில் அவர் பாடிய டூயற் பாடல்கள் அவரது தனித்துவத்தைக் காட்டவில்லை.
தமிழ்ச் சினிமா நடிகர்களில் தமிழ் உச்சரிப்புக்குப் பெயர் போனவர், சிவாஜி கணேசன். பராசக்தி (1952), மனோகரா (1954), வீரபாண்டிய கட்டப்பொம்பன் (1959) போன்ற படங்களில் இடம்பெறும் கம்பீர மான வசனங்களை மாத்திரமல்லாது, பிர தேச மொழிப் பிரயோகத்தையும் (கொங்கு நாட்டுப் பிரதேச வழக்கு - மக்களைப் பெற்ற மகராசி - 1957), பிராமண சமூகத்துப் பேச்சுவழக்கையும் (வியட்னாம் வீடு - 1970)
சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார், அவர். செளராஷ்டிர மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும், பாடல்களில் தமிழ் உச்சரிப்பைச் சிறப்பாகக் கையாண்ட வர், செளந்தரராஜன்.
தமிழ்ச் சினிமாவின் உயர்ந்த நட்சத் திரம் சிவாஜிகணேசன். இந்தியத் திரையுல கில் சிவ்ாஜிகணேசன் ஏற்று நடித்தது போன்ற விதம் விதமான பாத்திரங்களை நடித்தவர்கள் வேறு யாரும் இல்லை. அதைப் போன்று, இந்தியத் திரையுலகில் செளந்தரராஜனைப் போல விதம் விதமான பாடல்களைப் பாடிச் சாதனை புரிந்தவர்கள் யாரும் இலர். செளந்தரராஜன் தமிழில் உச்சஸ்தாயியில் பாடிய ஒரு பாடலை ஹிந்தியில் மொஹமட் ராஃபி பாட வேண்டி யிருந்த போது, அந்தப் பாடலைச் செளந்தர ராஜன் மாதிரிப் பாடுவதென்றால் தாம் செத்துப் போய்விடுவார் என்று சொன்னா செளந்தர ராஜனும் கடும் உழைப்பாளர்கள். அந்த உண்ழப்பு ஒருவருக்கொருவர் நன்கு பயன்
Ill-5).
ராம். சிவாஜிகணேசனும்,
சிவாஜிகணேசன் 1952 முதல் 1999 வரை 287 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றுள் 8 தெலுங்குப் படங்களிலும், மலையாளத்திலும், ஹிந்தியிலும் இவ் விரண்டு படங்களிலும் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் தமிழில் 7 படங் களிலும், தெலுங்கில் 7 படங்களிலும், 2 கன் னடப் படங்களிலும், ஒரு மலையாளப் படத் திலும், ஒரு ஹிந்திப் படத்திலும் நடித்
56T6TTITFT.
ரி.எம்.செளந்தரராஜன் பட்டினத்தார் (1962), அருணகிரிநாதர் (1964), கல்லும் கனியாகும் (1968), கவிராஜ காளமேகம்
மல்லிகை பெப்ரவரி 2012 * 33

Page 19
(1978) ஆகிய படங்களில் பாடி நடித்தார். கல்லும் கனியாகும் என்ற படத்தைப் பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவனுடன் சேர்ந்து தயாரித்து, இருவரும் நடித்தனர். கவிராஜ காளமேகம் வழக்குப் பிரச்சினை யால் எல்லா இடங்களிலும் வெளியாக வில்லை. கே.ஆர்.விஜயாவுடனும் ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெளி வரவில்லை. "பலப்பரீட்சை’ (1976) என்ற படத்திற்குச் செளந்தரராஜன் இசையமைத் துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையுலகில் இளையராஜா வின் வருகை, திரைத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, ரி.எம். செளந்தரராஜனின் செல்வாக்குக்கும் சரிவை ஏற்படுத்திவிட்டது. செளந்தரராஜன் புகழோடு இருந்த காலத்தில, அவருக்குத் தெரிந்த ஒருவர், கஷ்டப்பட்டுக் கொண்டி ருந்த இளையராஜாவையும், கங்கை அமரனையும் அவருக்கு அறிமுகப்படுத்தி, அவரது இசை நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கொடுக்குமரறும் கேட்டுக்கொண்ட்ார். செளந்தரராஜனும் தமது இசைக் குழுவில் அவர்களுக்கு வாத்தியங்கள் வாசிக்க வாய்ப்பு வழங்கினார். தமது இசை நிகழ்ச்சி களின் போது சிலவேளைகளில் இளைய ராஜாவைச் செளந்தரராஜன் கண்டித்தும் உள்ளார். பின்னர், இளையராஜா இசைய மைப்பாளராக வந்த பின்னர், சுமார் 25 பாடல்களைச் செளந்தரராஜன் அவரது இசையமைப்பில் பாடினார். அதேவேளை, இளையராஜாவால் செளந்தரராஜனுக்கு அவமதிப்புகளும் ஏற்பட்டன. செளந்தர ராஜனும் பதிலுக்கு இளையராஜாவை விமர் சித்தார்.
இந்த நிலையில், யாருடைய பாடல் கள் சிவாஜிகணேசனின் நடிப்புக்குப் பலம் சேர்த்தனவோ, அந்தச் செளந்தர ராஜனையே, சிவாஜிகணேசன் இளைய ராஜாவின் வரவினால் ஒதுக்கத் தொடங் கினார். மலேசியா வாசுதேவன் செளந்தர ராஜனுக்குப் பதிலாகச் சிவாஜிகணேசனுக் குக் குரல் வழங்கத் தொடங்கினார். ஆனால், அவரது குரல் செளந்தரராஜனின் குரலுக்கு இணையாகாது. சிவாஜி கணேசனின் பிற்காலப் படங்களில் செளந் தரராஜனால் மட்டுமே சிறப்பாகப் பாடக் கூடிய பாடல்களைப் பிற பாடகர்கள் (ஜேசு தாஸ் போன்றோர்) பாடும்போது பரிதாபமாக இருக்கிறது. இந்த விடயத்தில் சிவாஜி கணேசன் நன்றி மறந்தவராகவே பிற்காலத் தில் செயற்பட்டார் என்றே கூறவேண்டும்,
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தமது ஆட்சிக் காலத்தில் சிவாஜிகணே சனின் சிலை திறப்பு விழாவின் போது, செளந்தரராஜனைப் பாடுவதற்கு அழைத் திருக்கலாம். ஆனால், அவர் சீர்காழி கோவிந்தராஜனின் மகனையே பாடுவதற்கு அழைத்திருந்தார். செளந்தரராஜன் எம்.ஜி. ஆருக்காக, திரைப்படத்திற்கு வெளியே கட்சிப் பாடல்கள் பாடியமை அதற்குக் காரணமாக இருக்கலாம். சிவாஜிக்காகக் குரல் கொடுத்த செளந்தரராஜனை, அவரது சிலை திறப்பு விழாவில் பாட வைப்பதே முறைமை. கருணாநிதி கலைஞரது திறமையைப் பார்க்காமல், கட்சி அரசி யலையே பார்த்திருக்கிறார்.
சிவாஜிகணேசனின் வாரிசுகளில் பிரபு நடிகராக விளங்குகிறார். பல படங்களில் நடித்திருந்தாலும், தந்தையின் இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. நான்
மல்லிகை பெப்ரவரி 2012 & 34

அறிந்தவரையில், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ‘வெள்ளைரோஜா (1983) என்ற படத்தில் நடித்திருக்கிறார். (பிரபுவும் அதில் நடித்துள்ளார்.) பிற படங்களில் நடித்ததாகத் தெரியவில்லை. செளந்தரராஜனின் புத்திரர் களான பால்ராஜூம், செல்வகுமாரும் பாடிப் பாடித் தமக்கும், தந்தைக்கும் புகழ் சேர்க் கிறார்கள். ஆனால், அவர்களாலும் செளந் தரராஜனுக்கு இணையாக முடியவில்லை.
நடிகர் கமலஹாசன் சொல்வது போல், சிவாஜிகணேசனுக்குப் பின்வந்த நடிகர்கள் பலரிடம் அவரின் நடிப்புச் சாயல் இருக் கத்தான் செய்கிறது. அது போன்றே ரி.எம். செளந்தரராஜனைப் பின்பற்றிப் பாடும் பாடகர்களும் உளர். கோவை செளந்தர ராஜன் (சொந்தப் பெயர் சீனிவாசன்), மலேசியா வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி போன்றோரை இவ்வகையில் குறிப் பிடலாம்.
இருபெருங் கலைஞர்களான சிவாஜி கணேசனும், ரி.எம்.சௌந்தரராஜனும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது, அவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களது ரசிகப் பெருமக்களுக்கும் பெருமையைத் தருகிறது. இலங்கையில் இந்த இரு பெருங் கலைஞர்களும் பாராட்டிக் கெளரவப்படுத் தப்பட்டுள்ளனர். செளந்தரராஜனுக்கு இலங்கையில் கெளரவம் வழங்கப்பட்ட போது, ஒருபெரும் கலைஞனுக்குப் பாடி யதில் நான் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டார். உண்மையில் சிவாஜிகணே சனும், ரி.எம்.சௌந்தரராஜனும் தமிழ்த் திரையுலகுக்கு மட்டுமல்ல, இந்தியத் திரைப்பட உலகுக்கே கிடைத்த அரும் பெரும் கலைஞர்கள்.
N
Happy Poto
Excellent Photographers Modern Computerized Photography For Wedding Portraits &
Child Sittings
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Te: 2526345
மல்லிகை பெப்ரவரி 2012 தீ 35

Page 20
வீதி நாடகம்
– Elt JፀDfl 8ህ ህ.∂;
அது ஒரு தனியார் தோட்டம்.
பத்து வருடங்களாக எங்கள் நிறுவனம் அந்தத் தோட்டத்தில் பல சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறது.
முன்பள்ளி உருவாக்கம், சிறு சேமிப்பு, நாளாந்தத் தொடர் மாலை சுயகற்றல் நிகழ்வு, இளைஞர் உருவாக்கம் எனப் பல வேலைத் திட்டங்கள். அதில் முன்பள்ளி உருவாக்கம் என்பதுதான் முதலில் நாங்கள் அந்த தோட்டத்தில் ஆரம்பித்த முதல் வேலைத் திட்டம்.
உண்மையில் அது வெறும் முன்பள்ளி சிறுவர்களை உருவாக்கும் வேலைத் திட்டம் மட்டுமல்ல, மக்களோடு தொடர்பு கொள்வதற்கு, கலந்துரையாடுவதற்கு, ஒருங்கிணைவதற்கு, ஏனைய சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப் பதற்கு ஒரு தோட்டத்திற்கான நுழைவாயில் தான் 'மொண்டிசேரி.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையகத்தில் முன்பள்ளி உருவாக்கம் என்பது பரவலாக்கப்படவில்லை. முதலாம் வகுப்பிற்குப் போகும்வரை பிள்ளை காம்பறாவில் தான் சிறுவர்கள் வளர்வார்கள். அந்த பிள்ளைக் காம்பறா அகதி முகாமைவிட மோசமாகவே காணப்படும். தகரத்தையே சுவராகவும் கூரையாகவும் கொண்ட அந்த மண் காம்பறாவிற்குள் குழந்தைகளைத் தாய்மார்களின் சேலையில் தொட்டில் கட்டி ஆட்டுவார்கள். அங்கு காணப்பட்ட குறைந்தபட்ச வசதி என்பது தொட்டில் கட்டுவதற்காகக் கூரையில் குறுக்காகப் போடப்பட்டிருக்கும் சில றிப்பைகள்தான்.
எண்பதுகளின் தொடக்கத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மலையகத்தில் அறிமுகமாகியபோது அந்நிறுவனங்கள் முன்னெடுத்த முதல் வேலைத் திட்டம் தோட்டங்களில் முன்பள்ளிகளை நடாத்துவது தான்.
அதுவரையில் நகர்புறத்துப் பிள்ளைகளுக்கு மட்டும் 'கொன்வென்ட் நேசரி என்ற நிலை மாறி தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகளும் முன்பள்ளி போகத் தொடங்கினார்கள். இன்று பிரிடோ போன்ற நிறுவனங்கள் இருநூற்றுக்கும் மேற்பட்ட முன்பள்ளிகளை நடாத்துவது அரசு சார்பற்ற நிறுவனங்களின் சில ஆக்கப்பூர்வமான பணிகளுக்குச் சாட்சியாகிறது.
மல்லிகை பெப்ரவரி 2012 & 36

நாங்கள் அத்தோட்டத்தில் நடாத் திக் கொண்டிருக்கும் முன்பள்ளிக்கு ஒரு தனி வரலாறு உண்டு. முதலில் மாரி யம்மன் கோயில் கல்யாண மண்டபத் தில்தான் ஆரம்பித்தோம். கல்யாணம், சாமி கும்பிடு, பஜனை என அடிக்கடி தடைப்பட்டதால் வகுப்பை நிறுத்த வேண்டியிருந்தது. மழைக் காலத்தில் கூரைத் தகரம் காற்றில் பறக்கச் சிறுவர் கள் நனைந்துக் கொண்டே மழைப் பாட்டுப் பாடினார்கள். பின்பு பாடசாலை அதிபர் அணுக்கிரகத்தால் பாழடைந்த பழைய ஆசிரியர் 'குவாட்டர்ஸ் கிடைத் தது. அதில் சில காலம் நடாத்திக் கொண்டிருந்தோம். புதிதாகத் திருமணம் முடித்த ஆசிரியத் தம்பதிகள் அங்கு குடியேற அங்கிருந்து துரத்தப்பட்டோம்.
தோட்ட நிர்வாகத்துடன் பேசியதால் கைவிடப்பட்ட ஒரு சலூன் கிடைத்தது. சிறிது காலம் அங்கு நடாத்தினோம். அது மறுபடியும் சலூன்ானதால் மூடிக் கிடந்த ஒரு தோட்ட உத்தியோகத்தரின் வீட்டில் நடாத்துகிறோம். அந்த வீடு ஒரு வழக்கிலிருப்பதால் எந்த நேரம் அங் கிருந்து பிறிதொரு இடத்திற்கு இடம் மாற வேண்டிவரும் என்று தெரியாததால் ஒரு முன்பள்ளிக்கான கட்டிடத்தைக்
கட்ட மக்களுடன் கலந்தாலோசிக்கவே
அத்தேர்ட்டத்திற்குப் போய்க்கொண்டிருக் கிறோம். என்னோடு செயற்திட்ட ஒருங் கிணைப்பாளர் கீதாவும், புதிதாகப் பணி
யில் சேர்ந்த அருணும் கூட வரு
கிறார்கள்.
நாங்கள் கொழுந்து மடுவத்தை அடைந்த போது பி.ப. 2 மணி. இன்று 2.30 மணிக்கு வேலை விடுகிறார்கள்.
கொழுந்து நிறுப்பதற்கு முன்பாகவே கூட்டத்தை நடாத்தி விடும்படி பெரிய கணக்கப்பிள்ளை ஆலோசனை கூறி னார். மலையகத் தோட்டங்களில் மதம் சம்பந்தமான கூட்டங்கள் அல்லது தொழிற்சங்கக் கூட்டங்களைத் தவிர
சமூகச் செயற்பாட்டுக் கூட்டங்களுக்கு
மக்களை ஒன்றிணைப்பது மிகவும் கடினம். அதற்கு நேரமும் ஒரு காரணம். முப்பது நாளும் வேலையிருந்தால் வேலை முடித்துக் கொழுந்து நிறுத்து வீட்டிற்குப் போய் ஒரு கோப்பை "டஸ்ட் டீ குடித்து விட்டுக் கூட்டத்திற்கு வந்தால் சமைப்பது யார்?
பால் நிலைச் சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் என்றெல்லாம் பேசி னாலும், வீட்டிலும் காட்டிலும் உழைக் கும் இயங்திரங்களாகச் சுழன்றுக் கொண்டிருப்பவர்கள் யார்? பெண் தொழி லாளர்கள்தானே! அவர்களுடன் ஒரு சேரப் பேசுவதற்கு உகந்த இடம் கொழுந்து மடுவம்தான். அதனால் தான் கொழுந்து நிறுக்கும் நேரத்திற்குக் சென்றிருக்கிறோம். தோட்டத் தலைவர் மார்களும் சில இளைஞர்களும் வந்தி ருப்பது ஆறுதலைத் தருகிறது.
முன்பள்ளி ஆசிரியை சுருக்கமாக இக்கூட்டத்தின் நோக்கத்தைக் கூறி, என்னைப் பேச அழைக்கிறாள். அத் தோட்டத்தில் முன்பள்ளிச் செயற்பாடு கடந்து வந்த பாதைகளைக் கோடிட்டு காட்டி முன்பள்ளிக்கான ஒரு நிரந்தரக் கட்டிடம் தேவையா? எனக் கேட்டேன்.
அனைவருமே நிரந்தரக் கட்டிடத் தின் தேவையை ஏகமனதாக ஏற்றுக்
மல்லிகை பெப்ரவரி 2012 & 37

Page 21
கொண்டார்கள். தோட்ட நிர்வாகத்திட மிருந்து நிலம் வாங்குவது, பட்ஜட் தயாரிப்பது, பணம் திரட்டுவது போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஒரு கமிட்டியைத் தெரிவு செய்யுமாறு சொன் னேன். சில முன்பள்ளிச் சிறுவர்களின் பெற்றோர்களும் இளைஞர்களும் தாங் களாகவே முன்வந்தார்கள். ஐவரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி னோம். நிதி எவ்வாறு திரட்டுவது என்று யோசித்த போது "நிறுவனத்திடமிருந்து நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
"ஒரு லட்சம் ரூபாய்” எனச் சொன் னேன். ஒரு நம்பிக்கையில்தான். இது தொழிலாளர்களின் நிலை குறித்து "புரெஜெக்ட்” எழுதிப் பணம் எடுக்கிறார் கள் என விமர்சகர்கள் சாடும் செயற் பாடல்ல. உள்ளூரிலேயே நலன் விரும்பி களிடம் கேட்டு வாங்கலாம் என்ற நம்பிக்கை தான். நிறுவனம் ஒரு லட்சம் கொடுக்கிறதென்றால் “பெற்றோர்களே நீங்களும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும். இது யாரோ ஒருவரோ, ஒரு ஸ்தாபனமோ கட்டிக் கொடுக்கும் கட்டிட மாக நீங்கள் உணரக் கூடாது. இது எங்களது பங்களிப்புடன் கட்டப்பட்ட கல்விக் கூடம் என்ற உரிமையுடன் நீங்கள் உணர வேண்டும்" என்றேன்.
அய்யய்யோ இது பணம் சுரண்டும் செயல் என்று சிலர் நகரத் தொடங்கி னார்கள். சில பெற்றோர் எங்கள் பிள்ளைகள் படிக்கவில்லையே நாங்கள் ஏன் தர வேண்டும் என்றார்கள்.
"அன்பான பெற்றோர்களே, ஒரு
தோட்டத்தில் முன்பள்ளி கட்டுவதற்கு படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தான் பங்களிப்பு செய்ய வேண்டும். மற்ற வர்களுக்கு இதில் பங்கு இல்லை என எண்ண வேண்டாம். இதை ஒரு சமூகச் செயற்பாடாக பாருங்கள். எதிர்கால சமூ கத்தின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியம்” என்றார் புதிய பணியாளர் அருண்.
கூட்டத்தில் சலசலப்பேற்பட்டது: திட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா பேசத் தொடங்கினாள்.
"நமது சமூகத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை யும் ஆர்வமும் பெற்றோர்களுக்கு முன் னொருபோதும் இல்லாத வகையில் கூடி யிருக்கிறது. இது வரவேற்கத்தக்கச் செயலே. ஆனால் இன்னும் நாம் கல்வி கலாசாரமற்ற சமூகமாகவே வாழ்கிறோம். கல்வி என்பது நம் வாழ்வின் உயிர் மூச்சு என்பது இன்னும் உணரப்பட வில்லை. சமூக விடுதலைக்கான அடிப் படை ஆயுதம் கல்வியே! அதில் நாம் ஏனைய சமூகங்களுடன் பின்தங்கியே இருக்கிறோம். தெற்காசிய நாடுகளில் இலங்கை 91% எழுத்தறிவு கூடிய நாடாக காணப்பட்டாலும், மலையகத்தில் 71% படிப்பறிவு காணப்படுகிறது. படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் மாண வர்களின் எண்ணிக்கை தோட்டப் பகுதி யிலேயே அதிகம் காணப்படுகிறது. ஓ.எல் பரீட்சைக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் 50 மாணவர்கள் தோற்றினார்கள் என் றால் 5 மாணவர்களே சித்தி பெறுகிறார் கள். இதற்குக் கடந்தகால வரலாறும் காரணியாக அமைகிறது.
மல்லிகை பெப்ரவரி 2012 சீ 38

தேயிலைத் தோட்டங்களை பிரிட் டிஷ்காரர்கள் நடாத்திய போது கல்வி முழுமையாக மறுக்கப்பட்டது. தனி முத லாளிகள் பொறுப்பேற்றப்போது கட்டைச் சுவர் பள்ளிக் கூட்டங்களை 5ம் வகுப்பு வரை தோட்ட நிர்வாகம் நடாத்தியது. நகர்புறத்தில் மத அமைப்புகள் நடாத் திய பள்ளிக் கூடங்களில் நகர்ப்புற வர்த்தகர்களின் பிள்ளைகளும் தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் மட்டுமே படிக்க வாய்ப்புக் கிடைத்தது. WW.கன்னங்கரவினால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டப்போது நாம் முற் றாகப் புறக்கணிக்கப்பட்டோம். எண்பது களுக்குப் பின்புதான் படிப்படியாக ஆசிரிய நியமனங்கள் என நாம் கல்வி யில் முன்னேறுகிறோம். போஷாக் கின்மை, சுற்றுப்புறச் சூழல், கால நிலை, ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் பயிற்சி யின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணிகளும் ஒரு எதிர்கால தலை முறையின் கல்வி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே கல்விக் கலாசாரத்தை வளர்த்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிட்டால் வரலாறு எம்மைப் பழி தீர்க்கும். அப்படி ஒரு கல்வி கலாசாரத்தை உருவாக்க ஆதார மாய், அச்சாணியாய், அடிப்படையாய், அத்திவாரமாய் அமைவது முன்பள்ளி உருவாக்கம். எனவே பெற்றோர்களே சங்கம், சமயம், என் பிள்ளை, உன் பிள்ளை என்ற பேதங்களை எல்லாம் மறந்து ஒன்றாக இணைவோம். கட்டி டத்தை கட்டுவோம்” என பொரிந்து தள்ளினாள்.
எதற்குமே கைதட்டிப் பழக்கப்பட்ட சமூகம் கைதட்ட மறந்து நின்றது. மறத் தலுக்கான காரணம் பேசிய வார்த்தை களும் தொனியும் அவர்கள் உள்ளத்தை இன்னும் தைத்துக் கொண்டிருந்தன. என் றாலும் இரண்டு நாள் சம்பளம் தருவ தற்குத் தயக்கம் காட்டினார்கள். காரணம் இந்த மாதத்தில் சாமி கும்பிடு.
இளைஞர் குழுத் தலைவர் ரமேஷ் பத்தனை ழரீபாத கல்லூரியில் பயிற்சி முடித்துவிட்டு நியமனத்திற்காகக் காத்து கொண்டிருப்பவன். முன்வந்தான்.
"ஒவ்வொரு வருஷமும் சாமி கும் புடுகிறோம். எப்படிக் கும்பிடுகிறோம்? 5 நாள் வேலை நிறுத்தி, ரதம் இழுக் கிறோம். எங்கேயோ இருந்து நடனக் கலைஞர்களை அழைத்து வந்து நாட்டி யம் ஆடுகிறோம். ஐந்து நாளும் 'ஸ்பீக் கர்’ பூட்டிக் குத்தாட்டப் பாடல்களை ஒலிபரப்புகிறோம். இவை எல்லாவற்றை யும் தவிர்க்க முடியாதா? 3 நாட்களில் திருவிழா கும்பிடாட்டி சாமி கோவிச் சிக்குமா? 3 நாட்களில் திருவிழா கொண் டாடி விட்டு இரண்டு நாள் சம்பளத்தைக் கொடுத்தால் ஒரு கட்டிடம் உருவாகுமே! கல்விப் பணி கடவுள் பணி இல்லையா? இது சாமி கும்பிடுவதற்கு சமமாகாதா?” என ஆத்திரப்பட்டான்.
மறுபடியும் கூட்டத்தில் சலசலப்பு. அவன் பேசியது தெய்வ நிந்தனைச் செயல் எனச் சிலர் சத்தம் போடத் தொடங்கினார்கள்.
திடீரென்று 'அம்புலன்ஸ்' வண்டி வேகத்தில் ஒலியெழுப்பிக் கொண்டு, ஒரு வெள்ளை வாகனம் வந்தது. அது
மல்லிகை பெப்ரவரி 2012 & 39

Page 22
வட்டமடித்துத் தரிப்பிடத்தில் நிற்பதற்கு முன்பதாகக் கதவைத் திறந்து கொண்டு ஓர் இருபது இளைஞர் யுவதிகள் குதித் தார்கள். எல்லோரும் ஒரே விதமான கறுப்பு நிற அரைக்கை சட்டை, ஊதா நிற 'ட்றவுசர் போட்டிருந்தார்கள். தலை யைச் சுற்றி வெள்ளை நிறத்தில் ஒரு பட்டி கட்டியிருந்தார்கள். முன்னால் இறங்கிய இளைஞன் ஒரு பெரிய பறையைக் கையில் வைத்திருந்தான். அனைவரும் இறங்கும் வரைக் கூட அவன் காத்திருக்கவில்லை. மிக உறுதி யுடன், வீரமுடன் நெஞ்சை நிமிர்த்தி மிக லாவகமாக அந்தப் பறையை அடிக்கத் தொடங்கினான்.
ஏழேழு வருஷமாக என்னாத்தக் கண்டோம் தோட்டக் காட்டில் வேல செஞ்சி என்னாத்தக் கண்டோம் நாங்க எதத்தான் கண்டோம் நாங்க எதத்தான் கண்டோம்
676ÜT 946) 16öT UTLÜ LITL 9595Ü பாடலை உள்வாங்கிப் பாடிக்கொண்டு அனைவரும் வட்டமாக அமர்ந்தார்கள். மக்கள் பசி மறந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாட்டு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே சிலர் எழுந்து சென்று மாரியம்மன் கோயில் போன்ற வடிவில் நிற்க சிலர் முன்பள்ளிச் சிறுவர் களைப் போல் உள்ளே அமர்ந்தார்கள். மழை பெய்வதையும் புயல் காற்றில் கூரைத் தகரம் பறப்பதையும் ஒரு மிமிக்ரி கலைஞன் ஒலி எழுப்ப, உள்ளே பிள்ளைகள் கூனிக் குறுகுவதை நிகழ்த் திக் காட்டினார்க்ள்.
பிறகு முன்பள்ளி ஆசிரியை பாட சாலை அதிபரிடம் மன்றாடிப் பழைய ஆசிரியர் குவார்ட்டஸ்சில் இடம் கேட் பது, அங்கிருந்து தற்போது இந்தக் கூட் டம் நடைபெறும் மட்டும் நடந்த சம்பவங் களை நிகழ்த்திக் காட்ட மக்களின் கண்களில் கண்ணிர்த் துளிகள்,
தோட்டத் தொறப்புல வேல செஞ்சி தொடர்ந்தாப்புல ஒழச்சாலும் எங்க முன்பள்ளி இடிஞ்சித்தாங்க கெடக்குது - அத எண்ணித்தாங்க எம் மனசு பாடுது 61601 9616öT UITL
"நிறுத்துய்யா” என்று ஒரு குரல்.
‘சாமி கும் புடறதல பாதிப் பணத்தை தாறோம்” எனக் கர்ஜிக்க,
"அது முடியாது. ஆத்தா கோவிச் சுக்குவா” என இன்னொருவர் மறுக்க, அந்த மிமிக்ரி கலைஞன் உடுக்குச் சத்தத்தை இசைக்க தொடங்கினான்.
வட்டமாக அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து முடியை விரித்துக் கொண்டு "டேய் இந்த வருஷம் எனக்கு திருவிழா கொண்டாடுறத மூணு நாள்ள முடிச்சிட்டு, மிச்ச நாள் சம்பளத்தை என் கொழந் தங்க படிக்க ஸ்கூல் கட்றதிற்கு கொடுங் கடா. இல்லன்னா எனக்கு பொல்லாத கோவம் வரும். இது ஆத்தாவோட ஆணை” என்று மிக இயல்பாக சாமியாடி னாள். மிமிக்ரி கலைஞன் ரூட்டை மாத்தி வெஸ்ட்டன் மியூசிக் போட ஒரு வன் எழுந்து "மை பியுப்பல் ஐ நீட் எ டீசன்ட் 'பிரீ ஸ்கூல் பில்டிங் "போர் மைச் சில்ரன் - பளிஸ் கோப்பரேட்" என்றான்.
மல்லிகை பெப்ரவரி 2012 奉 40

நிகழ்வு நிறைவு பெற அங்கு ஓர் அமைதி நிலவியது. வீதி நாடக தலை மைக் கலைஞன் எழுந்து சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த அத்தனைத் தொழி லாளர்களின் கண்களையும் உற்றுப் பார்த்துச் சாமிக் கும்புடா? முன்பள்ளியா? சடங்கு சாஸ்த்திர சம்பிரதாயமா? - கல்வி வளர்ச்சியா? கோயிலுக்கு ஒலி பெருக்கியா? குழந்தைகள் பயில முன் பள்ளி கட்டிடமா? என வினாத் தொடுத் துக் கொண்டிருந்தான். அவனது உத்தி மிகக் கச்சிதமாய் வேர்க் அவுட் ஆனது.
கங்காணியும் கோயில் கமிட்டித் தலைவருமான கோவிந்தசாமித்தான் முதலில் பேசினார். “இந்த முறை மூன்று நாளைக்கே சாமி கும்புடு வைப்போம். இரண்டு நாள் வேலை செய்து பள்ளிக் கூடம் கட்ட எல்லோரும் ஒத்துழைப் போம்’ ஒன் த ஸ்பொட்டில் அந்தத் தீர்மானத்தை அனைவருமே கைத்தட்டி ஆரவாரித்தார்கள். மலையகத் தோட்டப் புற மக்களின் மத்தியில் மதம் என்பது இரத்த நாளங்களுடன் பின்னிப் பிணைந் திருக்கிறது. அந்த உணர்வையே ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு, கல்வி வளர்ச் சிக்கு ஒர் உத்தியாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட திருப்தி எமக்கு.
“வெல்டன் ரமேஸ்" என எங்கள் சமூக நல நிறுவனத்தின் வீதி நாடகக் குழுத் தலைவரின் கரங்களை குலுக் கினேன். அவர்கள் பயிற்சி எடுத்தபோது ஒரு முறையாவது சென்று நான் ஒத்தி கைப் பார்க்கவில்லை. மக்களின் மன நிலையைத் துல்லியமாக உள்வாங்கிச் சரியான நேரத்திற்கு வந்து சாதித்திருக் கிறார்கள். சின்னச் சாதனை தான் என்
றாலும், ஒரு நீண்ட பயணத்திற்கான சில முன்னோக்கிய அடிகள். அங்கு நின்ற மக்கள், கோயில் கமிட்டித் தலைவர்கள் சிறுவர்கள், இளைஞர் யுவதிகள் கணக்கப்பிள்ளை உள்ளிட்ட உத்தி யோகத்தர்கள் அனைவரும் முன்பள்ளி கட்டுவதற்காக நிர்வாகம் ஒதுக்கிய இடத்தைச் சென்று பார்வையிட்டோம்.
அடிப்படை வசதிகளைத் கொண்ட அழகான ஒரு முன்பள்ளி, அங்கு பயிலும் குழந்தைகள் என கண்ணில் மின்னலாய் ஒரு காட்சி விரிந்தது.
புதுoனத் தம்பதிகளை வாழ்த்துகின்றோம்!
கடந்த அரைநூற்றாண்டு காலத் திற்கும் மேலாக மல்லிகையை உளமார நேசித்தவரும், பொதுவாக ஈழத்து எழுத்தாளர்கள் மீது தனி அபிமானம் கொண்டவருமான திரு.திருமதி. குலேந்திரன் தம்பதிகளின் மகள் செல்வி. கமலாவரினி அவர்களுக்கும், திரு. திருமதி. நடராஜபிள்ளை தம்பதிகளின் மகன் செல்வன். சக்தியேந்திரகஜன் அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பில் வெகு சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.
புதுமணத் தம்பதிகளை மல்லிகை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர்
N أمـ
மல்லிகை பெப்ரவரி 2012 奉 41

Page 23
ഞങ്ങfബക്സ് LT
காலஞ்சென்ற கலாபூசணம் BameD១ (១១១៣mff
- என். நஜ்முல் ஹூசைன்
ல்ெலோருக்கும் நடைபெறும் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. வாய்ப் புக் கிடைத்தாலும், கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. ஆனால், நடைபெறும் அனைத்து இலக்கியக் கூட்டங்களிலும் மனமுவந்து கலந்து கொண்ட ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்ற ஒரு கேள்வியை முன்வைத்தால், அந்த கேள்விக்கு பதில் சொல்லத் தமிழ் இலக்கிய நெஞ்சங்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் இருக்கப் போவதில்லை. கோவை அன்ஸா என்பதுதான் அந்த மனிதர் என்பது அனை வருக்கும் தெரியும்.
எங்கே இலக்கியக் கூட்டம் நடந்தாலும், முதல் ஆளாய் அங்கு பிரசன்னமாகி, கூட்டத்தை நடத்துவோருக்கும், அதில் பங்களிப்புச் செய்தோருக்கும் வாழ்த்துத் தெரிவித்துத் தனது நல்ல மனதை வெளிக்காட்டியவர்தான் கோவை அன்ஸார்.
அப்படியான நல்ல மனம் படைத்த கலாபூணம் கோவை அன்ஸார் கடந்த 10-01-2012இல் எம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி அகால மரணமடைந்து 6.LITsi.
அவரது மரணம் தமிழ் உலகில் இலக்கியம் படைக்கும், இலக்கிய உலகோடு தொடர்பு வைத்திருக்கும் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால் அது மிகைப்படுத்தி சொல்லப்பட்ட ஒன்றல்ல.
நம் நாட்டு தமிழ் இலக்கிய உலகில் அவரை அறியாத அல்லது அவருக்குத் தெரியாத யாருமே இருக்க முடியாது - மிக அண்மையில் இலக்கிய உலகம் புகுந்த இளையவர்களைத் தவிர.
அவ்வளவு துாரம் தமிழ் இலக்கிய உலகோடு அவருக்குத் தொடர்பு இருந்தது. கொழும்பு தலைநகரிலே நடந்த கூட்டங்களுக்கு மாத்திரமல்ல, கொழும்புக்கு அப்பால் பிற பிர்தேசங்களில் நடந்த கூட்டங்களில் கூட, மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டிருக்கிறார்.
மல்லிகை பெப்ரவரி 2012 & 42
 

அத்தனை எழுத்தாளர்களுடனும், கவிஞர்களுடனும், பேச்சாளர்களுடனும் நேரடி தொடர்பு வைத்திருந்த ஒரே மனித ராக கோவை அன்ஸார் திகழ்ந்தார். எனக் குத் தெரிந்த வரையில் அத்தனை பேரது வீட்டுக்கும் சென்றுள்ள ஒரே ஒருவர் அன் ஸார்தான். அந்தக் காலத்தில் எழுதிய இளம் எழுத்தாளர்கள் எல்லாம் கோவை அன்ஸாருடன் மிக நேசமாக இருந்தனர்.
1955ம் ஆண்டு நாடக இயக்குநர் தங்கையா என்ற டீகலைதாசனோடு ஏற் பட்ட தொடர்பு அவரை தமிழ் மீது ஆர்வம் கொள்ள வைத்தது. நிறைய வாசிக்க ஆரம்பித்தார். பல இலக்கியத் தகவல் களை மற்றவருக்குச் சொல்லும் அளவிற் குத் தமிழ் இலக்கிய உலகு பற்றிய அறிவு அவருக்கு இருந்தது. பிறகு வலம் புரி கவிதா வட்டம் (வகவம்) என்ற கவிதை அமைப்போடு அவருக்கு ஏற்பட்ட தொடர்பு கவிதையின் பால் அவருக்கு பெரும் நாட்டத்தைக் கொண்டு வந்தது.
இலங்கையில் ஜனரஞ்சக பத்திரிகை யான 'சிந்தாமணி' மணிக்கவிதை பகுதி யில் இவரது முதல் கவிதை பிரசுர மானது. அதைத் தொடர்ந்து பல தேசியப் பத்திரிகைகளில் இவரது கவிதைகள் பிர சுரமாகின. ரோணியோ சஞ்சிகைகள் பிர பலமான காலத்தில் கவிஞர் வாழைத் தோட்டம் எம்.வளருடன் இணைந்து 'வதனம்’ எனும் ரோணியோ சஞ்சி கையை நடாத்தினார்.
இவரது கவிதை ஆர்வத்தைப் பார்த்த புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், இவர் நோய்வாய்ப்பட்டிருந்த வேளை, இவ ரது தொகுதியொன்றை வெளியிட்டு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண் டார். அதன் பயனாக ’கனவுகளின் பிர
சவம்' என்ற அவரது தொகுதியை 2010 இல் வெளியிட்டு அதனால் கிடைத்த அனைத்து பணத்தையும் கோவை அன் ஸாருக்கு வழங்கி, அன்னாருக்குப் பெரும் ஆத்ம திருப்தியை வழங்கினார். தனக் குக் கிரமமாக பணஉதவி வழங்கி தான் நடமாட துணை புரிபவர் புரவலர் ஹாசிம் உமர்தான் என்று அடிக்கடி நன்றியுடன் அன்ஸார் நினைவுகூர்ந்து வந்தது குறிப் பிடத்தக்கது.
இலக்கிய ஆர்வலர் என்று தன்னைப் பெருமையுடன் அடையாளப்படுத்தி வந்த கோவை அன்ஸாரது இலக்கிய பங்களிப் பினை அங்கீகரித்து இலங்கை அரசு 2010ல் அவருக்கு ‘கலாபூசணம்’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
'கனவுகளின் பிரசவம்' என்ற அவ ரது நூல் வெளியீடும், 'கலாபூசணம் விரு தும் அவருக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருந்தது. அந்த உந்துதலே உடல் தளர்ந்திருந்தாலும் கூட அவரை நடமாட வைத்தது. தன்னால் முடிந்த அளவு இலக்கியக் கூட்டங்களுக்குப் பிரசன்னமா வதையும், கவிதைகள் எழுதுவதையும் அவர் விடவில்லை.
இலங்கை தமிழ் பத்திரிகைகள் அனைத்தும் அவரது மறைவு குறித்து முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளி யிட்டிருந்ததும் பத்திரிகை நிறுவனங் களில் அவருக்கிருந்த நன்மதிப்பை வெளிப்படுத்துகிறது.
75வது வயதில் எம்மை விட்டுப் பிரிந்த கலாபூசணம் கோவை அன்ஸாரது நினைவு என்றும் இலக்கிய உள்ளங் களில் நிலைத் திருக்கும் என்பது திண்ணம்.
மல்லிகை பெப்ரவரி 2012 & 43

Page 24
தொலைபேசியின் மறுபுறத்திலிருந்து அந்தக் குரல் “உங்கள் மாணவி சந்திரபிரபாலினி பேசுறன். என்னை நினைவிருக்கிறதா?” என் மெளனத்தை உடைத்தது அவள் வின7. உங்களையும் உங்கள் அழகிய ஊரையும் நாற்பதாண்டாகியும் நினையாதொரு போதும் இருந்ததறியேன். உங்கள் ஊர் சந்தித்த அவலம் பற்றி ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறன் எப்படி இருக்கிறாய் சந்திரா?” அவள் மெளனத்தை ஊடுருவியது என் வினா. மகாலட்சுமி, மங்கையர்திலகம், பரமேஸ்வரி எல்லோரும் திருமலையில் குடியிருக்கிறம். தினமும் ஊருக்குப் போய் வாறம் - வேலைக்கு!” "ஓ! என்ன வேலை பார்க்கிறாய்?" "கிராம அலுவலர் திலகம் விவசாய அலுவலர் பரமேஸ் ஆசிரியை நீங்கள் நன்றாகப் படிப்பித்ததால் எங்கள் வகுப்பார் எல்லோருமே Nతో
நல்ல நிலையில் இருக்கிறம்.” Nص
ليلا
(ஓர் ஆசிரியனைச்
لاکھ
சிலிர்க்க வைக்கும் கணங்கள்)
பயிற்சி முடியப் பணி புரியப் போன பழம்பெரும் கிராமம் தம்பலககமம் வானுற நிமிர்ந்த கோபுரத்தைப் பார்த்தபடி மகா வித்தியாலயம்
மல்லிகை பெப்ரவரி 2012 率 44

பக்கத்தில் சிறிய மருத்துவமனை குழ நெல் வயல்கள். ஆறேழு எருமைகளைக் கொண்டு சேற்றுழவு செய்யும் விடலைப் பையன்கள் குரல் காட்டும் ஓசை தேனும் மினும் பாலும் தயிருமாய் செழித்த மணி. முன்னணிப் பாடசாலைகளை நோக்கி
ரியூற்றறிகளை நோக்கி ஓடாத பிள்ளைகள்! ஆங்கிலமும் இலக்கியமும்
676o7 LITL/5jas677 கருத்தூன்றிக் கற்கும் மாணவர் குழு திருமலையில் நடக்கும் போட்டிகளில் வெற்றி "சியவஸ்’வுக்குக் கொழும்புவரை போன திருக்கூட்டம் ஓ! என்ன உன்னதமான நாள்கள்!
'இத்தனை நாளாய் ஏன் தொடர்பு கொள்ளத் தோனேல்லை உனக்கு?”
நீங்கள் இங்கிலாந்து போனதாக யாரோ சொன்ன7ர்கள்.” "போனதுண்மை, படிப்பு முடிய மீண்டதுமுணர்மை!” "குடியுரிமை பெற
யோசிக்கேல்லையே?”
'இல்லை மகளே இந்த மண்ணின் அவலங்களுக்குச் சாட்சியாயப் மக்களுடைய உத்தரிப்புக்களில் பங்காளியாயப் இருப்பதென்பது எப்பவோ முடிந்த காரியம்!”
"என் தொலைபேசி எண் கிடைத்ததெப்படி?” "எங்கள் பிரதேச செயலர் யாழ்ப்பாணத்தவர். நான் எழுதிய அறிக்கையை வாசித்தவர். "எங்கை படிச்ச நீங்கள்?’ என்று கேட்டார். உங்கள் பெயரைச் சொன்னன்!”
"உங்கள் வகுப்பில் முன்னணியில் நின்ற பூரணம் என்ன செய்கிறாள்?”
நல்லாப் இருக்கிறாள், அவுஸ்திரேலியாவில், உங்களுக்குக் குலசிங்கத்தை நினைவிருக்கே?” "ஒமே7ம், வலு கெட்டிக்காரன்” "அவன் இங்கை பல்கலைக்கழகம் போய்ப் பிறகு புலமைப் பரிசில் பெற்று கேம்பிறிட்ஜ் போனவன்.”
மல்லிகை பெப்ரவரி 2012 & 45

Page 25
முன்மாரித் திடலிலிருந்து கேம்பிறிட்ஜ/ அவ்வூரிலேயே பின்தங்கிய குறிச்சி அது! என் நெஞ்சு விம்முகிறது. "பூரணம் குலசிங்கத்தைக் கட்டினவள்." என் சிந்தனை கலைகிறது. "அப்ப நீ” "குலசிங்கத்தின்ரை அண்ணன்தான் என் கணவர் d#5/T6007/TLD6nÖ (3i //Tuy/ 6) f7i L L/Tff. | 767760)677.567f76.3606). "
வாயடைத்துப் போனேன். வராதாம் ஒரு சொல்லும் "என் நடிக மணிகள் எப்படி இருக்கிறார்கள்?" "கோணேசண்ணன் நோயாளி வேளைக்கே ஒய்வுபெற்றிட்டார் 'அரசரத்தினம்? "முகாமிலை பாம்பு கடிச்சுச் செத்துப் போனான்."
"ஆங்கிலத்தில் திறமைசாலி (5/5/577.7/72" "5/76007/TLD6ů (3 JTuÚ6)ý L/TIŤ : தங்கராச7 தானே திலகத்தைக் കI'l2601ഖഞ്ഞ്” ஓம் சேர், திலகமும் நானும் திருமலையிலிருந்து
ஒன்றாகத்தான் வேலைக்குப் போற நாங்கள் உங்களைப் பற்றிக் கதைப்பம், அடிக்கடி!' "பரமேஸ்வரியின் மகள்?" "பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கிறாள். அவளைப் பார்க்க வரும்போது
タク
உங்களையும் வந்து காணறமே!”
தொலைபேசி உரையாடல் நிறைவுபெறுகிறது. அன்றிரவும் அடுத்து வந்த இரவுகளும்
உறங்கமுடியவில்லை என்னால்!
காரணம் - முன்மாரித் திடலிலிருந்து கேற்றிட்ஜ் போன குலசிங்கம் குறித்த பெருமையா?
என் மாணவிகளைக்
கைம்மைக் கோலத்தில் கானும் அச்சமா? போர்ப் புயலில்
இளங்குருத்துக்கள் உதிர்ந்து போக
இவ்வுடல் சுமந்து வாழும் குற்ற உணர்வா?
குழம்பிப் போகிறேன்.
மல்லிகை பெப்ரவரி 2012 & 46

இந்த மண்ணுக்கு உழைத்தவர்களை - நாம் அடிக்கடி நினைவு கூரவேண்டும்!
வீரகேசரியாழ். நிருபர் செல்லத்துரை
- டொமினிக் ஜீவா
பத்திரிகைச் செய்தித்துறைக்குள் வரு9வதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரேயே நான் இவரைத் தெரிந்து வைத்திருந்தேன்.
அந்தக் காலத்தில் நம்மில் பலர் இவரது பெயரைக் குறிப்பிடும்போது, அச்சுவேலிச் செல்லத்துரை என்றே குறிப்பிடுவார்கள்.
ஆரம்ப காலகட்டங்களில் இவர் சுன்னாகத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழகேசரி என்ற வாராந்த இதழில் தான் தொடர்ந்து பங்களிப்புச் செய்து கொண்டிருந்தார்.
வடமாகாணத்தில் அன்று ஈழகேசரி வார இதழ் பலராலும் பேசப்பட்டதொரு வார இதழாகும். பல்துறை எழுத்தாளர்களை அது உருவாக்கித் தந்தது.
ரஸிகமணி கனக செந்திநாதன் வெகு அக்கறை எடுத்து, அடிக்கடி விஷயதானம் செய்துவந்த வார இதழ், அதுவாகும்.
காரணம், அந்த வார இதழின் பொறுப்பாளர் குரும்பசிட்டியைச் சேர்ந்தவர். பலராலும் ஈழகேசரிப் பொன்னையா என்றே குறிப்பிட்டுப் பேசப்பட்டவர். அழைக்கப்பட்டவர். பத்திரிகை உலகில் இந்தப் பெயர் அன்று பிரபலமாக விளங்கியது.
தமிழகத்தில் இலக்கியத்துறையைச் சார்ந்த எந்தப் பிரமுகர் வடபகுதிக்கு வந்தாலும், ஒருதடவை ஈழகேசரிப் பண்ணைக்கு வந்து போவது தவிர்க்க முடியாத ஒரு செயலாக அன்று கணிக்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டங்களில் அந்த வார இதழுக்கு ஆசிரியர் பொறுப்பில் இருந்து கடமை புரிந்தவர் திரு. சோ.சிவபாதசுந்தரம் என்பவர். இவர் பிற்காலத்தில் லண்டன் சென்று பி.பி.சி.யில் கடமையாற்றியவர். பிற்காலத்தில் தமிழகத்தில் காலூன்றி, அங்கேயே இறுதிக்காலம் வரைக்கும் வாழ்ந்து மடிந்தவர்.
அந்தக் காலத்தில் கொழும்பு செல்லும் தபால் புகையிரதம், காங்கேசன்துறையில்
மல்லிகை பெப்ரவரி 2012 & 47

Page 26
இருந்து யாழ்ப்பான புகையிரத நிலை யத்தைச் சரியாக ஏழேகால் மணிக்கு வந் தடையும். அந்த வண்டியின் கடைசிப் பெட்டியில் தபாலில் கடிதங்களைச் சேர்க் கும் பகுதியும் இணைக்கப்பட்டிருக்கும்.
அந்த வண்டியில் தான் தனது இறுதிச் செய்திக் கடிதங்களை அவசர அவசரமாக எழுதி, சேர்ப்பிக்க அவசரம் காட்டி இயங்கி வருவார், நிருபர் செல்லத்துரை.
இதில் முக்கியமாகக் கவனிக்கக் ՑԻ.ԼԶul சம்பவம் என்னவென்றால் நிருப ரினது தலைக்கறுப்பை புகையிரத மேடை யில் கண்டதன் பின்னர்தான் ஸ்டேசன் மாஸ்டர் பச்சைக்கொடியை அசைத்துப் புகையிரதம் புறப்படச் சைகை காட்டுவார்.
சோசி மீது அபார நம்பிக்கை வைத் திருந்த ரஸிகமணி அவர்கள்தான் செல்லத் துரையை ஈழகேசரி ஆசிரியருக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவராவார்.
ஈழகேசரியில் இடைக்கிடையே செய்திச் சேவை செய்து கொண்டிருந்த செல்லத்துரை கட்டம் கட்டமாக வீரகேசரி யில் செய்திப் பகுதிக்கு நிருபராக நியமனம்
செய்யப்பட்டு, தொடர்ந்து இயங்கி வந்தார்.
ஆரம்பத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்தெழுத ஓர் இடமும் கிடைக்க வில்லை. எனவே, நான் தொழில் புரிந்த கஸ்தூரியார் வீதியிலுள்ள கடையின் பின் பக்கத்து அறையில் இருந்து தான் தனது தினசரிக் கடமைகளை ஆற்றி வந்தார்.
அந்தக் காலத்தில் இவரை ஒரு பாத்திரமாக உருவகப்படுத்தி, செய்தி வேட்டை என்றொரு சிறுகதையை எழுதி, என்று பிரபலமாக விளங்கிய சுதந்திரன்
வார இதழில் பிரசுரித்தேன். அந்த வார இத ழின் ஆசிரியர், திரு. எஸ்.ரி.சிவநாயகம் அவர்கள்.
நாங்கள் பலர் அன்று சுதந்திரன் வார இதழில்தான் எமது ஆரம்பகாலப் படைப் புக்களை அரங்கேற்றம் செய்து வந்தோம். நான், எஸ்.பொன்னுத்துரை, டானியல், என்.கே.ரகுநாதன், த. ராஜகோபாலன் போன்றோர்.
பிற்காலத்தில் பாராளுமன்றப் பிரதி நிதியாக விளங்கிய சி.ராஜதுரை, முற். போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளர் பிரேம்ஜி போன்றவர்கள் திரு.சிவநாயகம் அவர்களினது ஆசிரிய ஆளுகையின் கீழ் தான் புடம் போடப்பட்டு, மெருகேற்றப் LULLL-601 fr.
அந்தப் பெரும் பட்டறையில் ஆரம்ப காலப் பத்திரிகைத்துறையில் நடைபோடப் பழகிய நிருபர் செல்லத்துரை, பிற்காலத் தில் வடபகுதி அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய ஒர் ஆற்றலுள்ள செய்தி யாளராகக்கூட ஒரு காலகட்டத்தில் மிளிர்ந் தார் என்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.
பல எழுத்தாளர்களையும் அவர் இனங்கண்டு, தனது முழு ஆதரவையும் நல்கினார்.
என்னுடைய இலக்கிய வளர்ச்சியில் என்றுமே ஆத்மார்த்திக ஆதரவு நல்கி வந்ததை இன்றும் என்னால் மறக்க முடிய 68leზ6öა6სა.
முதன் முதலில் 1961-ல் தண்ணீரும் கண்ணிரும் என்ற நூலுக்கு எனக்குப் படைப்பு இலக்கியத்திற்கான சாஹித்திய
மல்லிகை பெப்ரவரி 2012 & 48

மண்டலப் பரிசு கிடைக்கப் பெற்று, நான் கண்டி சென்று, அன்றைய பிரதமர் முரீமாவோ பண்டாரநாயக்காவின் கையால் பரிசு பெற்றுப் பகல் யாழ்தேவியில் யாழ்ப் பாணம் திரும்பிய தினமன்று, எனக்கு அன் றைய யாழ்ப்பான மேயர் துரைராஜா அவர் களால், புகையிரத நிலையத்தில் வெகு சிறப்பானதொரு வரவேற்பு நிகழ்த்தப் LIL-L-5).
என் வாழ்வின் திருப்பத்திற்கே அந்தப் பிரமாண்டமான வரவேற்புத்தான் அத்தி வாரம் இட்டு ஆரம்பித்து வைத்தது என எண்ணுகின்றேன். நினைத்துப் பார்க் கின்றேன்.
அடுத்த நாளுக்கு அடுத்த அடுத்த நாள் வீரகேசரி நாளிதழில் கட்டம் கட்டி,
மிகப் பிரதானமான செய்தியாக்கியிருந்தார், யாழ். நிருபர் செல்லத்துரை. இதை என் வாழ்க்கையிலேயே மறக்க மாட்டேன்.
என்னை மாத்திரமல்ல, பல இளம் எழுத்தாளர்களினது மேடைப் பேச்சுக் களை, கருத்துக்களை எல்லாம் செய்தி களாக்கி, எம்மில் பலரைப் பொதுசனங் களுக்கும், இலக்கியத்துறைக்கு அப்பாலும் வெகுசனங்களுக்கு மத்தியிலும் அறிமுகப் படுத்தி வைத்தது, இவரது பேனாதான். அது இன்றும் நினைத்து நினைத்துப் பெருமைப் படத்தக்கதொன்றாகும்.
வட பிரதேசத்துத் தமிழ்த் தலைவர்கள் பலரை மக்கள் மத்தியில் பிரபலமடையத் தனது பேனாவின் வல்லமையைக் கடைசி வரை பயன்படுத்தி, அவர்களை மக்கள் மத்தி யில் பிரபலப்படுத்தியதுடன், பலரைத் தேர் தல்களிலும் வெற்றி வாகை சூட, ஒயாத செய்திப் பிரசுரத்தின் மூலம் முக்கிய பங்கு
வகித்த வட பிரதேசத்துப் பத்திரிகையாளர் கள் மத்தியில் தனிச் சிறப்புப் பெற்றுத் திகழ்ந் தவர், வீரகேசரிச் செல்லத்துரை.
அவர் நோயுற்றுப் படுத்த படுக்கையாக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் எழுந்து நட மாட முடியாமல் இருந்த சமயத்தில் கூட, இவ ரது பேனாவின் மூலம் பட்டம் பதவி பெற்றவர் கள் இவரை வந்து பார்க்கவில்லை என்று வெகு ஆதங்கப்பட்டார், செல்லத்துரை.
இவர் கொழும்பு மருத்துவமனையில் இருந்தபொழுது, நானும், பூபாலசிங்கம் முரீதர சிங்கும் சென்று உடல்நலம் விசாரித்தோம். கடைசியில் இவரது இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டு, துக்கம் அனுஷ்டித்தோம்.
ܠܐ
ཡཛོད༽། 0ண0க்களை (oன0ார
வாழ்த்துகின்றோம்!
திரு.திருமதி. இராமச்சந்திரன் தம்பதிகளின் மகன் செல்வன். இரமணன் அவர்களுக்கும், திரு.திருமதி. முநீவரதராஜன் தம்பதிகளின் மகளும், வளர்ந்து வரும் இளம் சிந்தனையாளன் முரீபிரசாந்தனின் சகோதரியுமான செல்வி. யோகலட்சுமி அவர் களுக்கும் சமீபத்தில் கொழும்பில் வெகு சிறப்பாகத் திருமணம் நடை பெற்றது. புதுமணத் தம்பதிகளை மல்லிகை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர்
மல்லிகை பெப்ரவரி 2012 & 49

Page 27
உல்லாச விடுதியின் உப்பரிகையில், அரைக் கீற்று நிலா, மங்கிய ஒளியில் காய்ந்து கொண்டிருந்தது. அந்த விடுதிக்குள்ளிருக்கும் உணவுச்சாலையும், மது மேசைகளுங் கூட மங்கிய வெளிச்சத்துக்குள் தான் அடங்கியிருந்தன.
அந்த மது மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் அவர்கள் கொழு கொழுவென்று கொழுக்கட்டையாக இருந்தார்கள். அந்த நால்வரும் நண்பர்களாக இருக்க வேண்டும். வியாபாரிகளாகவும் தெரியவில்லை. வேறு தொழில் செய்பவர்களாகவும் புரிந்து கொள்ள முடியவில்லை. பளிச்சிடும் வெள்ளை ஜிப்பா உடை. வெள்ளை வேட்டி அவர்களைச் சுற்றி இரண்டு மூன்று 'ஜிப்பா சட்டை மனிதர்கள் கைத் துப்பாக்கிகளுடன் அக்கம் பக்கத்தில் நோட்டமிட்டுச் சென்றார்கள். அவர்கள், இவர்களின் 'பொடிகார்டுகளாக இருக்கலாம். நேரம் செல்லச் செல்லத்தான் ஒட்டல் குசுகுசுப்பு மூலமாகத் தெரிய வந்தது, அவர்கள் மந்திரிகள் என்று.
முந்திரி இட்ட. தீ!
- மு.சிவலிங்கம்
மந்திரி யார்.? தந்திரி யார்.? என்று அடையாளம் கண்டுகொள்ள முடியா விட்டாலும், ஒட்டு மொத்தமாக அவர்கள் பெரும் புள்ளிகளாகத் தெரிந்தார்கள்.
ஆறு மணி வரை பன்சலையில் அமர்ந்திருந்து பன கேட்டு விட்டு, சற்று முன்னர்தான் வந்திருந்தனர். வெண்சட்டை உடுத்தி, வெண்ணிறப் பூக்களான பிச்சி, அரலி, நித்திய கல்யாணி என வெள்ளை நிறங்கள் தூய்மையைக் கூறும் தத்துவமாக நிறைந்த தாம்பூலத் தட்டோடு, மலர்களைப் புத்த பகவானின் பாதங்களில் சொரிந்து, கரங்களை உயர்த்தி, கண்களை மூடி தியானம் புரிந்து மூச்சு இறைக்க பயபக்தியுடன் பன்சலையை விட்டு அவர்கள் சற்று முன்புதான் வந்திருந் தார்கள். பெளத்த ஆலயத்தில் மனத்தூய்மையைக் காட்டும் வெள்ளை நிறமே வேதாந்தமாகவிருக்கும் போது, கருணையே வடிவான கெளதமர் மட்டும் காவியில் இருந்தார்!
“பகவானும் வெள்ளை நிறத்தில் 'பார்ளிமென்டு உடையில் அமர்ந்திருந்தால் என்ன..?” என்று ஓர் அரசியல் கிறுக்கன் என்றாவது ஒரு நாளில் குட்டையைக் குழப்பலாம். அதுவும் சட்டமாகலாம்.!
மல்லிகை பெப்ரவரி 2012 & 50

-(- - - --
வெண் சட்டைக்காரர்கள் களைப் பாகவிருந்தனர். வெயிட்டரைக் கூப்பிட்டு, வள்ளிக்கிழங்கு கஞ்சி கேட்டனர். யாழ்ப் பாணத்து மேல்மட்ட விடுதிகளில், யாழ். பண்பாட்டு உணவுகளுக்கே முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருந்தன. வந்தவர் களும் வந்த நாள் முதல் இன்றுவரை யாழ். உணவுகளையே விரும்பி உண் கின்றார்கள். ஊதா நிறத்தில் ஒருவித வாசனையுடன் சுவை தரும் அந்தக் கிழங்கு கூழ் மருத்துவக் குணம் நிறைந் தது என்று வெயிட்டர் சொல்லிச் சென் றான். தென்னிலங்கை வாசிகள் பிரமித் துப் போனார்கள். யாழ்ப்பாணத்து பாரம் பரிய உணவுகள் எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை. பனங் கிழங்கு, பனம் பழம், பனங் கள்ளு, பனம் பணி யாரம், பனங் கருப்பட்டி, பனங் கற் கண்டு, பனாட்டு, ஒடியல், அதுபோல எள்ளு, எள்ளுருண்டை, நல்லெண் ணெய், திராட்சை, திராட்சை வைன், விதத்தால் ருசி தரும் மாம்பழங்கள்.
அவர்கள் பட்டியல் இட்டு ஆராய்ச்சி யில் இறங்கினார்கள். இறால், நண்டு, கணவாய் எனும் கடல் உணவு.
“மகே அம்மே செக்ஸி கேம மச்சான்..!" என்றான் ஒரு தந்திரி. எல் லோரும் சத்தமிட்டுச் சிரித்தார்கள். "யாழ்ப்பாணத்து முருங்கைக்காயை மறந்து விட்டாயே..? முருங்கா எதுக்கு நல்லம் தெரியுமா?” எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
திடீரெனக் கைதொலைபேசி ஒரு வருடைய பொக்கட்டிலிருந்து ஓசையை
எழுப்பியது. அவர்கள் நிசப்தமாகினார் கள். ஒருவன் எழுந்து ஒதுங்கிச் சென்று மெதுவாகப் பேசினான்.
“வெடே ஹரித.?”
"ബ്രി..!"
வார்த்தைகளைப் பரிமாறிக் கொண் டனர். எழுந்து சென்றவன் தொடர்ந்து பேசினான். m
"நீங்க தங்கியிருக்கும் ஒட்டல்ல எல்லாமே இருக்கு. நீங்க கேட்டதெல் லாம் கிடைக்கும். அதுவும் கிடைக் கும்!” என்று பல்லை இளித்தான்.
“அதுவும் கிடைக்குமா..?” மறுபுறத் திலிருந்தவர்கள் சத்திமிட்டுச் சிரித்தது கூட கேட்டது.
-(- - - - -
வள்ளிக் கிழங்கு கஞ்சியைக் குடித்து விட்டு நேரத்தைப் போக்கிய வர்கள், அவசர அவசரமாகக் குளியல் போட்டு விட்டு, மொட்டை மாடியில் வந்த மர்ந்தனர்.
‘வெயிட்டர். தல் ராத் எக்க விஸ்க்கி.!" என்றார்கள். பனங் கள்ளை யும், விஸ்கியையும் கலந்து அடித்ததில் புதிய சுவையை அவர்கள் கண்டு பிடித் தார்கள்! திடீர் கிக்! உடம்புக்கு ஒருவித சுகம்.
பனங் கள்ளு போத்தல்களும், விஸ்கி போத்தல்களும் மேசையில் வந்து குவிந்தன.
"கணவாய், றால் டெவெல்ட் பண் ணிக் கொண்டு வாங்க..!" என்று ஒருவன்
மல்லிகை பெப்ரவரி 2012 $ 51

Page 28
வெயிட்டருக்கு ஒடர் போட்டான்.
"நேத்து மாதிரி நண்டு, எறைச்சி செஞ்சிக் கொண்டு வாங்க.!” என்றான் இன்னொருவன்.
“சின்ன வெங்காயம், அமு மிரிஸ் நெறைய வெட்டிப் போட்டு கொண்டு வாங்க..!" என்றான் மற்றுமொருவன்.
கலவைக் குடி ஒரு நொடிக்குள் அவர்களை குதூகலப்படுத்தியது.
நண்டு இறைச்சியும், நெஞ்சறை ஒட்டுக்குள் பதப்படுத்திய "டிஷ் ஆக வந்தது! கணவாயும், இறாலும் வந்தது!
"அம்மட்ட வுடு.!" என்றான் ஒரு வன். “அம்மட்ட சிறி.!" என்றான் மற் றொருவன். 'அம்மா சோறு. டொப்பே டொப். கியலா வெடக் நே.!” என்றான் இன்னுமொருவன்.
இன முறுகலுக்கு முந் தய காலத்தை நினைத்து அவர்கள் மயக்க நிலையிலும் கதை பேசினார்கள்.
எழுபதுகளில் தேசிய உற்பத்திக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, கிராமத்து உற்பத்திகள் பொதுச் சந்தைக்கு வந்தன. கிராமிய உற்பத்தி களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டங்களை அன்றைய அரசு முன் கொண்டு வந்தது.
அந்த சுதேசிய வருமானம் தான். தென்னங் கள்ளிலும். பனங் கள்ளிலும். தென்னஞ் சாராயத்திலும், பனஞ் சாரா யத்திலும் உயர்வைக் காட்டியது. சீமைக் குடி வகைகளோடு உள்நாட்டுச் சரக்குகளும் சமதையாகக் கலந்தன.
அன்றொரு காலம் இருந்தது. பனங் கள்ளுக்காகவே தென்னிலங்கை உல்லாசப் பயணிகள் யாழ்ப்பாணத் துக்கு படையெடுத்து வந்தனர். மாவிட்ட புரம் கந்தசுவாமி கோயில் கிணற்றில் குளித்து விட்டு, அப்படியே கூவில் கட லோரமாக பொடிநடை நடந்தால் கோர்ப்ப ரேஷன் கள்ளுக் கொட்டில்கள் கண் களை மயக்கிக் கொண்டிருக்கும். ஒவ் வொரு ரகத்தில் நண்பர்கள் கூட்டம் அமர்ந்திருப்பர். பனை மட்டை, பாக்கு மட்டை, தென்னை மட்டை இவைகளில் இரு பக்கக் கைப்பிடியோடு குவளைகள் செய்யப்பட்டிருக்கும். வாடிக்கையாளர் கள் உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பார்கள்.
கள்ளுக் கொட்டில்களில் ஆட்டு இரத்தப் பொரியலே பிரதான 'பைட்ஸ் ஆக வாடை வீசும். சுண்டல் பொட்டல மாக இலைகளில் வாங்கி அப்படி அப் படியே வாயில் கொட்டிக் கொண்டு அரைப்பார்கள். வெறியேறியவர்களின் உதடுகளில் கறுப்பு, வெள்ளை, செம் பட்டையாக ஆட்டு மயிர் ஒட்டியிருக்கும். மயிராவது மண்ணாங்கட்டியாவது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டி ருக்கும் அந்தச் சூழல், 'நம் வாழ்வில் காணா, சமரசம் உலாவும் இடமாக விருந்தது. ஒரு பக்கம் தொழிலாளர்கள், விவசாயிகள், கடைச் சிப்பந்திகள், ஆப்பீஸ் லிகிதர்கள். மறுபுறத்தில் பென் சன் நண்பர்களான வக்கீல்கள், டாக்டர் கள், என்ஜினியர்கள், ஸ்டேஷன் மாஸ் டர், போஸ்ட் மாஸ்டர் இன்னும் திணைக் கள உத்தியோகத்தர்கள் என்று சீனியர் சிட்டிசன்களும் அமர்ந்து பிதற்றிக் கொண்டிருக்கும் சந்தோஷச் சூழல்,
மல்லிகை பெப்ரவரி 2012 季 52

அந்த அந்திப் பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருக்கும்.
"அந்த குட் ஒல்ட் டேய்ஸ் இனி திரும்பி வராது" என்று பெருமூச்சோடு, அந்த மேசையில் ஒருவன் விஸ்கியை உறிஞ்சியபடி கவலை மேலிடச் சொன் னான்.
"அத்த ஹப்பன் பரண கத்தாவ..!" "விட்டுத் தள்ளு பழைய கதையை' என்று ஒருவன் வெறுப்பாகச் சொன்னான். இனங்கள் இணைந்து வாழ்ந்த ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கக்கூட அவன் விரும்பவில்லை. எவ்வளவுதான் ஆரியக் கூத்தாடினாலும் அவர்கள் நால் வரும் தங்கள் காரியத்தில் கண்ணா யிருந்தார்கள். தாங்கள் மினக்கிட்டு வந்த காரியம் நல்லபடியர்க நடைபெற வேண் டும் என்று "ஜெபித்துக் கொண்டிருந் தார்கள்.
இறாலை சுவைத்துக் கொண்டிருந்த ஒருவன் சற்று நிமிர்ந்து முள்ளுக் கரண்டியை நீட்டிப் பேசினான்.
"நாங்கள் இன்று யாழ்ப்பாண நகரத் தில் இருக்கவில்லை. யாழ்ப்பாண ராஜ் ஜியத்தில் இருக்கிறோம். இந்த நாட்டின் மூளை வளம் இங்கிருந்துதான் ஊற் றெடுத்தது. ஒரு காலத்தில் நமது தேசத் தின் இயக்கமே இவன்கள் தான் என்ற நிலை இருந்தது. இங்குள்ள மண், இங் குள்ள உழைப்பு, இங்குள்ள உணவு, இங்குள்ளவன்களின் மூளை எல்லாமே அபாரமானது! அவை காலத்தால் கச்சித மாக அடக்கப்பட்டு விட்டன” என்றெல் லாம் உணர்ச்சிவசப்பட பேசினான்.
அவர்கள் தலைக்கேறிய போதை யிலும் நிதானமாக உரையாடிக் கொண் டிருந்தார்கள். அவர்கள் படிப்பாளிகளாக வும், சிந்தனைவாதிகளாகவும் காணப்பட் டார்கள். நாட்டையும், சொந்த இனத்தை யும் நினைக்கும் போது, அறிவாளிகளா கவும், அடுத்த இனங்களை நினைக்கும் போது மடையர்களாகவும் இருந்தார்கள்.
மொட்டை மாடியில் அந்த மது மேசை சிறிது நேரம் மெளனத்துக் குள்ளாகியது. அவர்களுக்குப் போதை கொஞ்சம் இறங்கியிருந்தது. “இன்றைய இரவு பழங்களாகவே இருக்கட்டும்” என் றான் ஒருவன். "ஆமா. வயிறு ரொம்ப அப்செட்டா போச்சு” என்றான் அடுத் தவன்.
யாழ்ப்பாணத்து முக்கனிகளும் கோப்பை கோப்பையாக வந்தன. அவர் கள் சுவைத்து, சுவைத்துச் சாப்பிட்டார் கள். அலாவுதீனும் அற்புத விளக்கும் மாதிரி கேட்டதெல்லாம் கிடைத்தன. தேனாமிர்தமாக இனிக்கும் ஒரு இளஞ் சிவப்பு பலாச் சுளையைப் பார்த்த QP(b வன் அதிசயப்பட்டுப் போனான். “எங்க ஊரில் மஞ்சள் நிறத்தில்தான் பலாச் சுளை இருக்கும்” என்றான்.
அவர்கள் உடல் தினவெடுத்துள்ள தாக உணர்ந்தார்கள். ஒருவன் தெளி வாகப் பேசினான். மீண்டும் அதே வார்த் தையைச் சொன்னான். “நாங்கள் இன்று யாழ்ப்பாண ராஜ்யத்தில் இருக்கிறோம். நகரத்தில் அல்ல” என்று சங்கிலி மன் னனை நினைவுபடுத்தினான். அவன் போர்த்துக்கீசரோடு மோதிய தீரத்தை விளக்கினான்.
மல்லிகை பெப்ரவரி 2012 & 53

Page 29
‘ராஜ்யங்கள் வெள்ளைக்காரன் களோடு மறையட்டும்” என்றான் ஒருவன்.
“சில சரித்திரங்கள் பாதுகாக்கப் படனும், சில சரித்திரங்கள் திருத்தப் படணும். சில சரித்திரங்கள் அழிக்கப் படனும்” என்றான் மற்றுமொருவன்.
‘வரலாற மாத்த முடியுமா?” என்றான் ஒருவன்.
"ஏன் முடியாது.? வரலாற மாத்து வது என்பது ஊருக்குள்ளே புது ரோடு போடுற மாதிரி சூழலே மாறிப்போய் விடும்.” பதிலைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
அவர்கள் அரசியல் வினா விடை யில் வரலாற்றை மீட்டிக் கொண்டி ருந்தார்கள்.
ஒரு மந்திரி கேட்ட கேள்விக்கு ஒரு தந்திரி பட்டென்று பதில் சொன் னான்.
“போர்த்துக்கீசரை தெரியுமா?"
"அவன்கள் ரட்டவல் அல்லன்ன சூரயா..! எஹெமய் நேத."
"அவர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டு பிடிச்ச ராஜ்யம் எது?”
“யாழ்ப்பாண ராஜ்யமே!”
“காரணம், இங்குள்ள குடிமக்கள் தீரர்கள். அரசன் முதல் ஆண்டி வரை புத்திசாலிகள். போர்த்துக்கீசருக்கு சவாலே யாழ்ப்பாண மக்கள்தான்.”
"அப்போ யாழ்ப்பாணத்தைப் பிடிக்க முடியாமல் லிஸ்பனுக்கு திரும்பிப் போய் 6' fresóTF?”
“இல்லை. அவர்கள் மன்னாரைப் பிடித்தார்கள். முத்துக் குளித்தார்கள். கடல் செல்வங்களைக் கொள்ளையடித் தார்கள்.”
“சுதேசிய கலாச்சாரங்கள், அந்நிய ஆட்சிக்கு எதிரானவை என்றார்கள். இந்துக் கோயில்களை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். திருக்கேதீஸ் வரம் பெரிய கோயிலை நொறுக்கினார் கள். அதன் கட்டிடப் பொருட்களை, மன்னாரில் கோட்டை கட்டுவதற்குப் பாவித்தார்கள்."
'ஆஹா கோபுரம் வீழ்ந்து, கோட்டை எழும்பியது.” ஒருவன் அட்ட காசமாகச் சிரித்தான்.
"அப்புறம் என்ன நடந்தது."
“இரண்டாம் சங்கிலியன் காலத்தில் யாழ்ப்பாணத்தைப் பிடித்தார்கள்.”
“முழு ராஜ்யத்திலும் ஐநூறு இந்துக் கோயில்களை அழித்து விட்ட தாக போர்த்துக்கீசத் தலைவன் ஒருவன் எக்களிப்பு கொட்டினானாம்.!"
“கோயில் சிலைகளையெல்லாம் மர்மமான இடங்களில் புதைத்து மறைத் g5 freibo Tib."
"அது மட்டுமா? நல்லூர் கந்தசுவாமி கோயிலை தரை மட்டமாக்கினார்களாம்."
"ஆமா! நல்லூர் யாழ்ப்பாண ராஜ் யத்தின் அன்றைய தலைநகரமல்லவா?”
“கோயிலும், கோபுரமும் குட்டிச் சுவ ராகியது. கோயில் கட்டிடப் பொருட் களை யாழ்ப்பாணக் கோட்டை கட்டு வதற்குப் பாவித்தார்களாம்!”
மல்லிகை பெப்ரவரி 2012 தீ 54

“கோட்டைகள் கட்டுவதற்கு கோயில் சாமான்கள் சக்தியுள்ளதோ?” ஒருவன் கிண்டலடித்தான். எல்லோரும் சிரித்தார்கள். அவனது நகைச்சுவை யைப் புறந்தள்ளி ஒருவன் இடையில் குறுக்கிட்டுப் பேசினான். அவன் நிதான மாக, மெதுவாகப் பேசினான்.
“நல்லூர் கோயிலை போர்த்துக்கீசர் அழிக்கும் முன்பு சப்புமல் குமாரயா அரசன் 1450ல் அழித்தான். அந்தக் கோயில் தமிழரின் பூர்வீகச் சொத்து. 1248ல் நல்லூர் குருக்கள் வலவில் கட்டப்பட்டது.”
“சப்புமல் குமாரயா கோயிலை அழித்தும் பிரயோஜனம் இல்லாமல் போனதுதானே?”
"ஆமாம்!” "கோயிலை அழித்தவனை மக்கள் சபித்தார்கள். அவனை மனச்சாட்சி உறுத்தியது. தவறு செய்து விட்டதை நினைத்து வருந்தினான். மீண்டும் அதே இடத்தில் புதிய கோயிலை கட்டி வைத்தான்."
“ஊ மோடயா" ஒருவன் கோபப் ULLT6öT.
"அந்தக் கோயிலுக்குத்தான் போர்த் துக்கீசர் கேம் கொடுத்தார்களோ?” அவர்கள் சிரித்தார்கள்.
"போர்த்துக்கீசர் கோயிலுக்கு மட்டும் "கேம்’ கொடுக்கவில்லை. சங்கிலி அரசன் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த நல்லூர் சரஸ்வதி மஹால் புத்தக சாலையையும் கொழுத்தி சாம்பலாக்கி னார்கள். இங்குள்ளவன்களை முட்டாள் களாக்க வேண்டுமானால், இவன்கள்
மூளைக்குத் தீனி போடும் புத்தகங் களை அழிக்க வேண்டும் என்றார் களாம்!”
"சரஸ்வதி மஹால் நூல் நிலை யத்தைப் பற்றி இன்றைக்கும் இணையத் தளம் சொல்லுவதென்ன?”
"The Royal repository of all literary output of the Kingdom”
“எமது ராஜ்யம் பெற்றெடுத்த அனைத்து இலக்கியத் தோன்றலினதும் அரச களஞ்சியம்.”
மொட்டை மாடியில், அந்த அறைக் குள் வட்டமிட்டு அமர்ந்திருக்கும் மந்திரி, தந்திரிகள் வெறுமனே அரசியல்வாதிகள் மட்டுமல்ல. அறிவுஜீவிகளாகவும் இருந் தார்கள். அவர்கள் தங்களது வரலாற்றை விட, அந்நியரின் வரலாற்றை அறிந்து கொள்வதில் அக்கறையாக இருந் தார்கள்.
"வரலாற்றில், புத்தகங்களை எரித் தக் கொடுரம் இலங்கையில் போர்த்துக கீசருக்குப் பின்னர், ஜெர்மனியில் ஹிட்ல ராலும் நடத்தப்பட்டது" என்றும் அவர்கள் நினைவுபடுத்தினார்கள்.
ஓர் இனத்தை ஒடுக்குவதற்கு, அவர் களது கலாச்சாரத்தையும், கல்வியையும் அழிக்க வேண்டுமென்ற சித்தாந்தத்தில் அலி பூட்டோவும் தயங்கி நிற்கவில்லை. வங்கதேச விடுதலை எழுச்சியாளர்களை ஒழிப்பதற்கு முன்பு, அந்நாட்டு அறிவு ஜீவிகளான கலைஞர்களை, எழுத்தாளர் களை, மருத்துவர், என்ஜினியர், மாண வர்களை, பேராசிரியர்களை அந்த பாகிஸ்தான் தலைவன் கொன்று குவித்தான்.
மல்லிகை பெப்ரவரி 2012 தீ 55

Page 30
“இப்படியும் ஒரு அரசியல் தியரி இருப்பதை இப்போதுதான் நான் தெரிந்து வருகிறேன்” என்று ஒருவன் “ஜோக்” விட்டான்.
அவர்கள் பேசிப் பேசி களைப் படைந்திருந்தார்கள். ஒருவன் விடுதி அழைப்பு மணியை அழுத்தினான். பனங் கற்கண்டு கலந்த செவ்விளநீர் கொண்டு வரும்படி சொன்னான்.
உடலும், மனமும் குளிர இளநீர் அருந்திவிட்டு, அவர்கள் அமைதியாக தியானம் செய்வது போல ஒருவருக் கொருவர் பேசிக்கொள்ளாமல் அமர்ந் திருந்தார்கள்.
–Ge- Ө- Ө
இந்த மந்திரி, தந்திரி யார்.? இந்த விடுதியில் தங்கி என்னவெல்லாமோ பேசுகிறார்கள். என்னவெல்லாமோ செய் கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளா கவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார் களே! இவர்களது கொழும்பு - ஜப்னா ட்ரிப் ஒர் உல்லாச நோக்கம் நிறைந்த தல்ல. சதி நிறைந்த நோக்கமாக இருக் கலாம் என அறிய முடிகிறது.
இந்த மந்திரி தந்திரிகள் குற்றம் புரிய வந்தவர்களாக, ஒட்டல் ஊழியர் கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிக்கொள்ள முடிந்தது.
ф- ф– Ө
ஒரு குளிர் தரும் பணி இரவு!
வருசத்தை ஞாபகப்படுத்திப் பார்த்த போது, 1981ஆம் ஆண்டு நினைவில் நின்றது. மே முப்பத்தொன்றும், ஜூன்
முதலாம் திகதியும் ஒன்றாய் இணைந்
தன.
மன்னார் திருக்கேதீஸ்வரத்தின் கோபுரம் சரிந்தது போன்று, நல்லூர் கந்தன் கோபுரம் சரிந்தது போன்று, நல்லூர் சரஸ்வதி மஹால் நிலையம் எரிந்தது போன்று,
யாழ்ப்பாண ராஜ்யத்தின் இன்னு மொரு புத்தகக் கோபுரம், அண்டவெளி யில் தணலைப் பாய்ச்சி, முழு ஊருக் குமே தனது கடைசி வெளிச்சத்தைக் காட்டி, புகை மண்டலத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது!
தொண்ணுாறாயிரம் புத்தகங்களின் ஆன்மாக்கள் பிரிந்து தகனமாகிப் போன சாம்பல் மேட்டை உலகம் வந்து பார்த்து அதிர்ந்து நின்றது.
எரிந்து, கருகி எலும்புக்கூடாக நிற்கும் அந்தப் புத்தக வீட்டின் அருகில் ஒரு பெரியவர் தனித்து நின்று கொண்டி ருந்தார்.
முன்னை இட்ட தீயையும், பின்னை இட்ட தீயையும், அன்னை இட்ட தீயை யும் சொல்லிப் புலம்பிய பட்டினத்தாரை நினைத்த அவர், “இவன்கள் இட்ட தீயை என்னவென்பது?" என்று மனதுக் குள் கேள்வி எழுப்பினார்.
அவரது கையைக் கோர்த்து நின்ற பேரக்குழந்தையின் தலையைக் கோதிய படி ஏக்கத்தோடு கேட்டார்.
“உன் தலைமுறையைப் பற்றி, பின்னால் வரும் சந்ததியினருக்குச் சொல்ல இந்த தேசத்தில் அரசியல் இருக்குமா?” அவன் குழந்தை. அவனுக்கு என்ன புரியப் போகிறது?
மல்லிகை பெப்ரவரி 2012 & 56

உனர்வுகள் உடையக் காத்திருக்கும் மருதமுனை
ஜமிலின் கவிதைகள்
உடையக் காத்திருத்தல் கவிதைகள் பற்றிய ஒரு பகிர்வு
- எல்.வளிம் அக்ரம
"ஒரு போர்வீரனின் உறையிலிருக்கும் வாளைப் போன்று மிகவும் கூர்மையானது கவிதை. அது எந்தக் கொம்பனுக்கும் அடங்காமல் எல்லாத் திக்கிலும் பகிரங்கமாக நெஞ்சை நிமிர்த்தி திரிகிறது. அவலங்களைக் கண்டு பாடுவதும் அநீதிகளுக்கு எதிரான துணிச்சல் மிக்க குரலாக ஒலிப்பதுமே கவிதையின் குணம். கவிதையின் கரங்களை வெட்டிச் சாய்த்த பின்னரும் அதே வேட்கையுடன் திரிகிறது, போர் வீரனின் வாளைப் போன்று."
ஜமீலின் "உடையக் காத்திருத்தல்" கவிதைப் பிரதிகளின் பின்னட்டைக் குறிப்பே இங்கு கட்டமிடப்பட்டுள்ளது. கவிதை என்ற ஒரு ஆவணத்தின் மீதான பிரக்ஞைபூர்வமான கருத்துக்கள் அவை.
ஜமீல் (1969), மருதமுனையில் பிறந்தவர். 1993ம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற் கான தேசிய விருதைப் பெற்றவர். இவரது முதலாவது கவிதைப் பிரதி "தனித்தலை யும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்” (2007) யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும், தடாகம் இலக்கிய வட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றது. இவரது மிக அண்மைய தொகுதியே இந்த "அடையக் காத்திருத்தல்"
கிழக்கிலங்கைக்கென்று தனித்துவமான கவிதை அடைவுகளை நாம் வரலாற்றின் கண் கண்டுள்ளோம். ஆமு.சரிபுதீன், நீலாவணன், எம்.ஏ.நுஹற்மான், பசில் காரியப்பர், சோலைக்கிளி என்ற இந்த நீட்சியில் பிறந்த ஒரு ஆளுமையாக ஜமீலின் கவிதை களைக் காணுகின்றேன்.
கவிதைகளின் பரிமாண உடைவுகள் மரபின் மீட்சி அல்லது புனரடைவுகள்
பற்றி நிறைய விமரிசனக் கட்டுரைகளைக் கண்டுள்ளோம். கவிதையின் கட்டமைப்பு
அதன் வெளிப்பாட்டு அழகு அதன் சமூகத் தளங்கள் மீதான வாசிப்பு என்ற
நிலைகளைக் கண்டு கவிதையின் தரங்களை நாம் நமக்குள்ளும் பிறருக்கும்
கருத்துப் பகிர்கின்றோம். இந்த கவிதைத் தரத்தின் ஒரு உயிர்ப்பை ஜமீலின் மல்லிகை பெப்ரவரி 2012 率 57

Page 31
கவிதைகளின் வரைபுகளில் இருந்து பகிர முனைவது இக்குறிப்பின் நோக் காகும்.
மனிதன் நாளாந்தக் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் இன்னும் அதிகார மையங்களின் இருப்புக்களுக்கும் இடை யில் வாழுகின்ற உணர்வுள்ள உயிரி. அவனது வாழ்வின் எல்லாக் கணங் களிலுமிருந்து கவிதை ஒன்றுக்கான தருணங்கள் உயிர்க்கின்றன. இந்தச் செய்தியை பதிவு செய்வதே ஜமீலின் கவிதைகள் தருகின்ற மிக முக்கிய அனுபவமாகும். வாழ்வில் மனிதன் எதிர் கொள்கின்ற அனைத்து நிலைசார்ந்த உணர்வுகளின் உடைப்புகளின் போதான நிலைகளிலும் கவிதைகள் பிறக்கின்றன என்ற ஒரு அடைவை ஜமீலின் இக்கவிதைகள் நமக்குத் தரு கின்றன.
சில கவிதைகள் கடந்த கால ஈழப் போரின் பக்க விளைவுகள் பற்றி பேசு கின்றன. சில கவிதைகள் நாம் முன்னர் சொன்னது போன்று நுண்ணுர்வு சார்ந்த நிகழ்வுகளின் செப்பனிடப்பட்ட படிமங் களாக உரைக்கின்றன். இவரது முதலா வது கவிதைத் தொகுதியில் இருந்த முஸ்லிம் தேசியத்தின் மீதான உட் சாய்வுத் தன்மை இத்தொகுதியில் மீள வும் ஒளிக்கின்றது எனலாம். ஆனால் அவ்வாறான கவிதைகள் தமது கவிதை மொழிக் கட்டமைப்பில் ஒரு புதிய அனுபவமாக அமைகின்றது. இன்னொரு தளத்தில் சொல்வதானல் அவை, அரி தாக ஒளிர்கின்றன.
இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஒஸ்வொரு அனுபவத்தைப்
பகிர்கின்றது. யுத்தம், வன்முறை, ஆக் கிரமிப்பு, ஆட்கடத்தல், இடப்பெயர்வு, பெண் விடுதலை, குழந்தை உளவியல், இன்னும் நமது புற நிலை சார்ந்த சம்ப வங்கள் மற்றும் அகவுணர்வு சார்ந்த நிலைகள் என்ற நீட்சியில் இவரது கவிதைகள் தடம் பதிக்கின்றன.
முஸ்லிம் தேசக் கவிதைகள்:
இவரது உம்மா என்ற கவிதை 1990 களில் வடக்கிலிருந்து இடம்பெயர்த முஸ்லிம்களின் அகதி வாழ்வை குறியீட் டுடன் காட்டுகின்றது. தாய் நிலத்தின் மீதான ஈர்ப்பு அதன் தாக்கம் அனைத் தும் இந்தக் கவிதைகளில் ஊறியிருக் கின்றன. குறிப்பாக தாய் நிலமும் தாயும் ஒன்று என்ற கருதுகோளை நிலைநாட்டு கின்றது அக்கவிதை. (உம்மா - தாய்)
உம்மாவின் கண்களை வாசித்தபோது பனைமட்டை வெட்டிய எனது கண்களுக்காக பிடுங்கி வைத்ததாகச் சொன்னார்கள் (gdbLDT JÈ 1 l)
கடந்த முப்பது வருட போரின் அபத்த நிலைகளையும் அதன் தாக்கங் களையும் எதிர்கொண்ட சந்ததியினர் என்ற நிலையில் அதற்கான அரசியல் தீர்வுகள் பற்றியும், அதில் சமூகம் சார்ந்த இருப்பிடம் அல்லது தரப்பு என்ற நிலைகளையும் பற்றி ஒரு ஏளனக் கவிதையை இவர் சுயம் என்ற தலைப் பில் நம்முடன் பகிர்கின்றார். முஸ்லிம் களது அரசியல் கையாலாகத நிலை பற்றிய பிரக்ஞையை நம்முள் விதைப் பதே இக்கவிதையின் குறியாக இருப்பது அவதானிக்கத்தக்கது.
மல்லிகை பெப்ரவரி 2012 & 58

சிறு பூச்சி உட்பட/இங்கு எல்லாமே! மிகச் சுதந்திரமாக திரிகின்றன/தனது எல்லை கடந்து/எனது பறவைகள்/ தொலைவில் சென்று உரையாடி வரு கின்றன(எனது தென்றல் மரங்களோடு/ உரசி உரசிப் பாடுகின்றது/எனது நதி நாணல்களோடு/குழைந்து குழைந்து பேசு கின்றது/ஆனால் எனது தரப்பின்/சுயம் மட்டும் நசிந்தே கிடக்கின்றது/ மறிக் காகப் பதுங்கும் நாய்களினது/பெருத்த பாதங்களின் கீழாக. (சுயம் பக் 13)
வடகிழக்கெங்கிலும் இடம்பெற்று வந்த இடம்பெற்று வருகின்ற நில ஆக்கிர மிப்பின் வடிவங்கள் பற்றி அவ்வப்போது கவிதை எதிர்வினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக கிழக்கில் முஸ்லிம் எல்லைக் கிராமங்களில் புத்தர் சிலைகளின் அடை யாள அச்சுறுத்தல் அதீதம். இந்த ஆக்கிர மிப்பு சட்டகத்தை நோக்கி தமது இனத் தின் மற்றும் மண்ணின் மீதான காதலாக இந்தக் கவிதை இருப்பது குறிப்பிடத்தக் கது. அந்த அகராதியில் ஜமீலின் ஆக்கிர மிப்பு என்ற கவிதையும் முக்கியமானது.
உறங்கி விழித்தபோது என் வீட்டில் நடு விறாந்தையில் சாவகாசாமாக உட்கார்ந்திருந்தார் புத்தர் வெளியே வந்து பார்த்த போது நான் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இருக்கவில்லை புதிதாக ஒரு அரச மரம் மட்டும் நின்றது (ஆக்கிரமிப்பு பக் 46)
போர் பற்றிய கவிதைகள்:
இவரது இத்தொகுதியில் பதிவான கவிதைகள் பெரும்பாலும் போரின்
இறுதிக்கட்ட சம்பவங்கள் பற்றியான நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதாக இருக் கின்றது. உதாரணாக புரிதல் என்ற கவிதை சமாதானம் பற்றிய பிரக்ஞை யைப் பதிவு செய்கின்றது. எது முதலில் என்ற கவிதை பேரூந்துகளில் குண்டு வெடித்த சம்பவங்களை நினைவூட்டுகின் றது. போரின் இறுதிக்கட்ட அனுபவங் களில் நமக்கு முக்கியமானவையாக இருப்பது இந்த பேருந்து குண்டு வெடிப் புக்கள். அருகில் இருக்கின்ற இளை ஞனை அல்லது யுவதியைக் கூட ஒரு தீவிரவாதி என்ற வழக்கில் கணக்குப் போடும் அன்றைய பொழுதுகள் மன துக்கு அருவருப்பூட்டுபவை. அந்தக் கவிதை பின்வருமாரு அமைகின்றது.
காணாமல் போன தம்பியைத் தேடி நானும் வகுப்பு நண்பனுமாக பிரயாணம் செய்கின்றோம் வடக்குப் பக்கமாக சோதனைச் சாவடியைத் தாண்டி பேரூந்து தரிப்பிடத்தில் நிற்கின்றது வெளியில் இரண்டு சிறுவர்கள் போட்டி போட்டு பலூன் ஊதுகின்றார்கள் இதில் எந்த பலூன் முதலில் வெடிக்குமென்று நாங்கள் பந்தயம் செய்கின்றோம் அதற்குள்ளாக வெடித்துச் சிதறுகின்றது பேருந்து
குண்டு வெடிப்பில் இறந்த சடலம் அல்லது பிணங்கள் பற்றிய செய்திகள் நமது செவிகளை அதிகம் ஆக்கிரமித் துள்ளன. இந்தச் செய்திகள் தருகின்ற சோக நிலைகள் நமது மனப் புண்ணில் ஒரு வடுவாக இருப்பது கவனிக்கத் தக் கது. இவ்வாறான தகவல்களை பின்வரும் கவிதை பதிவு செய்கின்றது.
மல்லிகை பெப்ரவரி 2012 & 59

Page 32
கழிவு நீர் வழிந்தோட/சாலை தோறுமாக /கட்டப்பட்டிருக்கின்றது வடிகான்கள் நீர் வழிந்தோடாத/வடிகான்களை திறந்து பார்த்த போது/ஊதிக்கிடக்கிறது பிணங் கள். பிணங்களை அகற்றிய பிறகும்/ பாய்ந்தோடுகிறது ரத்தம்/சற்று முன் கொல்லப்பட்ட சடலத்திலிருந்து (வடிகான் Luis 28)
பெண்ணியக் கவிதைகள் :
பெண்ணியம் என்ற மரபார்ந்த ஒரு அரசியல், கவிதைகள் என்ற பரிணாமத் தையும் பாரிய வீச்சையும் குவியச் செய கின்ற தன்ைைய நாம் அவதானிக்கின் றோம். பெண் விடுதலை என்பது ஒரு சாதரண கருத்தியலில் இருந்து இன்று அது கூர்ப்படைந்து அரசியல் அவதானத் தையும் உடலியல் விடுதலையையும் நமக்கு விதந்துரைக்கின்றன. பெண் விடு தலை அரசியல் சார்ந்த கவிதைகளின் தளங்கள் தனக்கேயான அழகுடன் விரிந்து செல்லும் கவிதைப் பரப்பில் ஜமீ லின் பெண்ணிய அடையாளக் கவிதை களும் கவனத்தைத் தருகின்றன.
மாட்டுக்கு குறிவைத்த மட்டில்/பொசுங்கி வெந்து/பெரும் தழும்புடன் திரியிது/ எனது சிறு பராயம்? வயற்காடுகளிலும் /போரிடதினது வாடிகளிலுமாக. பின் நாக்கை தொங்கவிட்டயுைம்/தெரு நாய் களினது வன்மங்களாலும்/வக்கிரப் பார்வைகளாலும்/விரட்டி விரட்டிக் குதறப் படுகின்றது/என் தாவணிக் காலம். திரு மணத்தின் பின்னர்/எல்லா அதிகாரங் களோடும்/பெருக்கெடுக்கிறது/என் மீதான சித்திரவதைகள்/பெயர் சொல்லத் தெரி யாத/ஒரு கொடிய மிருகத்திடமிருந்து (Jä5 12)
இந்தக் கவிதை பற்றி எந்த விளக்க மும் உங்களுக்குத் தேவை இல்லை என்பதே எனது கணிப்பு.
பின்வரும் நாட்டுப் புறத்தி என்ற கவிதையும் பெண்ணியத்தின் மரபார்ந்த விடுதலையை நமக்குச் சொல்லித் தரு வது கண்டு நாம் வியக்கலாம். இந்தக் கவிதை இத்துணை நாகரீக மாற்றங் களையும் நவீனத்துவ உலகையும் ஆக்கிரமிக்கின்ற ஒரு சூழ்நிலையில் கிராம மக்களது வீடுகளில் பெண்களின் அபத்தமான நிலையை அப்பட்டமாக படம் பிடித்துள்ளது என்றால் அது மிகை யன்று.
பெட்டகத்தில் மிக நேர்த்தியாக/ பரப்பி வைக்கப்பட்டிருக்கும்/பட்டுப் பிடவைகளின்/நிறங்களின் பகட்டிலும்/கை நிறைய மின்னும்/வளையல்களின் கிலு கிலுப்பிலும்/காகம் கரையும் முன்னர்/ வாசலில் கோலம் வரைவதோடும்/ ருசி பாதமாய் சமைத்துக் கொட்டுவதோடும் /பிள்ளை ஈண்டு தள்ளுவதோடும்/ இன் னும் தலைமாட்டில் உறங்கும் / வெற் றிலை வட்டாவோடும் முடிந்து வந்திருக் கின்றது உனது விடுதலை பற்றியதான /மிக நீண்ட வரலாறு (பக் 57)
இவரது பெண்ணியக் கவிதைகள் பெண்களின் உடல் அரசியல் சார்ந்த வசனங்களால் விரசப்படுத்தவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை பதிவு செய்யும் அதேவேளை, நவீன பெண்ணி யக் கவிதைகளின் உடல் அரசியல் வசனங்களுக்கு ஆட்படாதமை ஒரு குறை யாகவும் சொல்ல முடியும்.
இனி, ஜமீலின் கவிதைகளில் தெரி கின்ற கவித்துவ உள்ளம் மிக எளிமை
மல்லிகை பெப்ரவரி 2012 & 60

யான வரைபுகளால் நிரப்பட்டுவந்துள்தை காணலாம். கவிதைகளுக்காக அவர் கை யாண்டுள்ள சொற்களை அன்றாட சூழ லில் இருந்து நமக்குப் பகிர்ந்துள்ளமையா னது, இவரது முக்கியத்துவமாக குறிப்பிட லாம். வாசகனை அதீத பிரக்ஞை களுக்கோ அல்லது குறியீட்டு வடிவங் களுக்கோ சிக்க வைக்காது மிக எளிய உரைவடிவில் கவிதை உடைப்புகளுக் குள் நீந்துகின்றார்.
இவரது எல்லாக் கவிதைகளும் ஒரு விதமான இறுதி முடிவுகளைத் தரு கின்றன. அதாவது கவிதைகளின் முடிவு கள் தருகின்ற அனுபவங்கள் எல்லாக் கவிதைகளிலும் ஒரே விதமானதாக இருப் பது கண்கூடு. இதுவே இவரது தனித்துவ மாகவும் அதேவேளை இயலாமையாகவும் காண முடிகின்றது.
இவ்விரண்டு தன்மைகளும் என்னைப் பொறுத்தமட்டில், இவரது முந்தியக் கவிதை நூலுக்கும் இந்த நூலுக்குமான
வேறுபாட்டை நமக்கு கட்டியம் கூறு கின்றது.
இது தவிர, இவரது கவிதைகளில் கிழக்கிலங்கைப் பிரதேச மொழிவழக்குச் Gay Ti56i (Regional Language) (5p)d கிடுகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத் தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களது வாழ்வை ஒரளவு பிரதிபலிக்கின்ற சொற்கள் இங்கு பதிவாகியிருக்கின்றன. இதிலும் வழக்கொழிந்து வருகின்ற பிர தேச வழக்குச் சொற்கள் பதிவாகியுள் ளதை பின்னுரையில் கவிஞர் அலரி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு படைப்பாளியை எத்துணை நாகரீக மாற்றங்கள் அல்லது உலகமய மாதலின் மாற்றங்கள் ஆட்கொண்டாலும் அவனது ஆத்மாவை அவனது மண்ணை விட்டுப் பிரிக்க முடியாது என்பதை ஜமீலின் கவிதைகள் உரத்த குரலில் அறைந்து, ஒலிக்கின்றன.
மல்லிகை பெப்ரவரி 2012 & 61

Page 33
கத்தி சொல்ல வேண்டிய ஒரு கவிதை!
— B០០១១
ஜடமாய் பிறந்த இரும்பின் இருப்பு!
கத்தி - சலனம் ஏதுமின்றி அப்பாவி வெறும் "சும்மா கிடக்கிறது ஜடம் அது! அதோ பார்!
கைமாறுதலில் கடுமையான கூரானாலும் கூட, உடந்தைக்கு ஏற்ப பார்த்தால் குத்தாது கண்ணை பாத்திரமாக்கப்படும் தானாய் ஏதுமே செய்யாத ஊமை நடிகன் அது. விறைந்த உடல் அது.
அதே பார்! சமையலுக்கு ஆகார கர்த்தா சலனம் ஏதுமின்றி வெறிக்கு மரண வாகனம்! "சும்மா கிடக்கிறது மருத்துவத்திற்கு நோய் நிவாரணி! அப்பாவி கத்தி!
மல்லிகை பெப்ரவரி 2012 : 62
 
 

காலத்தால் அழிக்க முடியாகு
od 3708 Gurugg
- கே. பொன்னுத்துரை
தினமும் தான் பொழுது புலர்கிறது, இருட்டுகிறது. ஆனாலும் ஒரு சில நாட்களின் விடியல் ஏதோ ஒரு வகையில் மக்களின் மனதில் ஆழமாகத் தடம் பதிப்பதாக அமைந்து விடுகிறது.
இலங்கை இலக்கியத்தை பொருத்தவரை யில் காலத்தால் அழிக்க முடியாத ஒர் காலைப்பொழுது தான் 11.12.2011, எட்டயப் புரத்தின் மைந்தன் மகாகவி பாரதி இவ்வுல கிற்கு அவதரித்த தினம். மக்கள் மனதில் இந்த திகதி எப்படித்தான் மறந்து போகும்.
இலங்கைக்கு அன்றே சேதுவை மேடுறுத்தி பாலம் போட்டவன் அல்லவா அவன். அவனின் பிறந்த தினத்தில்தான் ஓர் முக்கிய நிகழ்வு நடந்தேறுகிறது, இலங்கை இலக்கியத்தின் ஓர் சரித்திர நிகழ்வாக அரங்கேறுகின்றது. கொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தி பூரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள மணி மஹால் மண்டபத்தில் (1.12.2011) காலை 11 மணிக்கு கவிஞர் மேமன்கவி தலைமையில் அந்த நிகழ்வு நடந்தேறுகிறது.
இலங்கை இலக்கிய தளத்தில் சுமார் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இயங்கி கொண்டு ஓர் சிற்றிதழை அரை நூற்றாண்டை நோக்கி நடத்தி கொண்டிருக்கும் சிற்றிதழ் சிற்பி மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவிற்கு, புத்தளம் மாவட்டத்தில் ஆனைமடு பிரதேசத்தில் இயங்கி கொண்டிருக்கும் தோதன்ன அபிவிருத்தி நிலை யத்தின் பணிப்பாளராக செயல்படும் பிரபல எழுத்தாளரும், சிறுவர் இலக்கிய கர்த்தாவுமான சிட்னி மாகஸ் டயஸ் அவரின் படைப்பான "முல்லைத்தீவ் ஸியா" என்ற சிங்கள நாவலின் தமிழ் மொழிப்பெயர்ப்பான “முல்லைத்தீவு தாத்தா” என்ற நூலை பிரபல படைப்பாளியும், "மல்லிகை’ ஆசிரியருமான டொமினிக் ஜீவா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து, அந்த நூலை அவரிடம் கையளிக்கும் வைபவம் நடந்தேறிய காலை பொழுதைத்தான் காலத்தால் அழிக்க முடியாத காலை பொழுது என்றேன்.
சிட்னி மாக்ஸ் டயஸ் என்பவர் என்ற படைப்பாளி ஆணைமடு பிரதேசத் தில்
மல்லிகை பெப்ரவரி 2012 奉 63

Page 34
வாழ்பவர். சிறுவர் 'இலக்கியங்கள் பலவற்றை படைத்தவர் அத்துடன் சிறு வர் இலக்கியங்கள் மூலம் வரலாற்றில் வடுக்களை அகற்றலாம் என்ற எண்ணத் தில் மாறா நம்பிக்கை கொண்ட படைப் பாளி. இவர் படைத்த பல சிறுவர் இலக் கியங்கள் பல விருதுகளையும், பரிசு களையும் பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் இன நல்லுற வுக்கான தமிழியல் விருதையும் பெற்ற
6) J.
நூலினை கையளித்து உரையாற் றிய அவர் ஒரு சிறு சஞ்சிகையைத் தொடர்ந்து ஐம்பது வருடங்களை நோக்கி பயணிக்கும் இவர் தனது இந்த வயதிலும் அயராது சஞ்சிகைத் துறை
யில் பயணம் செய்வதை பார்க்கும்போது மிரமிக்க வைக்கிறது.
இலங்கையின் இனப்பிரச்சனை
கடந்த பல தசாப்தங்களாக நிலவி வந்
தாலும் அதன் தாற்பரியத்தினை முக்கிய மானவர்கள் புரிந்துக் கொள்ளமல்
இருப்பது தான் வேடிக்கையானது."
இலங்கை மக்களின் சமூக ஒற்று மைக்கு காலம் காலமாக மேடைகளில் பேசிவரும் அரசியல்வாதிகள் எதுவுமே செய்யாமல் காலத்தை கடத்தி வரும் காலகட்டத்தில் இந்த இனப்பிரச்சனை எங்கு ஆரம்பமாகியது என்று இனம் காண்பதில் அக்கறை காணவில்லை என்றே நினைக்கிறேன். அல்லது அவர் களுக்கு தெரந்தாலும் தெரியாத மாதிரி நடிக்கிறார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சமூகத்தின் படைப்பு கள் ஏனைய சமூகத்தினருக்கு சென்ற ഞLഖg| ഉണങ്ങേ, LITL5|Tങ്ങബ IDTങ്ങiബ] களுக்கு ஏனைய மொழி படைப்பாளர்
களை அறிய கூடிய வாய்ப்புக்கள்
அறவே இல்லாது ஒழிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் தமிழ் சமூ கத்தை பெரும்பான்மை சமூகத்திற்கு மிக மோசமாக சித்தரித்தலும் மிக நுட்ப மாக நடந்தேறியதை காணலாம். கல்வித் துறைக் கூட இவ்விடயத்தில் தமிழ் பேசும் இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வியல் அம்சங்களையும், அவர்களது தேவைகளையும் கூட பெரும்பான்மை சிங்கள மாணவர்கள் அறியக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.
இந்த பாரிய விளைவுகளை நாம் முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறி வித்து போது அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் கடும்போக்குடைய சிங்கள இனவாதிகள் எம்மை தாக்கவும் முற்பட்ட னர். வளர்ந்து வரும் இளம் சமுகத்தினர் தான் நாட்டின் செயல்பாடுகளை புரிந்து
மல்லிகை பெப்ரவரி 2012 & 64
 

கொள்ள கூடியவர்கள். அதனால்தான் நானும் எமது அமைப் பினரும்
இளைய சமூகத்திற்கு இலக்கியங்களு டாக இனமுறிவு நிலைகளின் காரண காரியங்களை தெளிவுபடுத்த விரும்பி எமது படைப்புகளில் தமிழ்பேசும் மக் களின் நிலமைகளை மிக தெளிவாக சிங்கள ஆக்க இலக்கியமாகக் கொண்டு வந்து பிரசுரமாக்கினோம். அவர்கள் படைத்த இலக்கியங்களை சிங்கள மொழியில், மொழிப்பெயர்த்து வெளி யிட் டதுடன், படைப்பாளிகளையும் பெரும் பான்மை சிங்கள மக்களிடையே அறி முகப்படுத்தினோம். அவ்வாறான செயற் பாடுகள் மூலம் எதிர்காலத்தில் ஓர்
உன்னத மாற்றத்தை காணலாம் என்றே
எண்ணுகிறோம்.
அன்று பாடப் புத்தங்களின் மாற்றம் தேவை என்று நாம் உரத்துக் கூறிய போது கண்டுகொள்ளாமல், இன்று கல்வி அமைச்சரே அதனை காலத்தின் கட்டா யம் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த "முல்லைத்தீவு தாத்தா” சிங்களக் கதையில் எமது நாட்டில் ஏற் பட்டுள்ள பல விடயங்களை மிகவும் தெளிவாக எழுதியுள்ளேன். எனது நண் பர்கள் இதனை சகோதர மொழியான தமிழ் மொழியிலும் பெயர்க்க வேண்டு மென கேட்டுக் கொண்டனர். எனக்கும் அது சரியெனப் பட்டது. அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தவர் தான் 'மல்லிகை டொமினிக் ஜீவா. இன முரண்பாடுகள் உச்சகட்ட நேரத்தில் கூட தனது மல்லிகை சிற்றிதழில் சிங்கள படைப்பாளிகளை மிகவும் துணிச்சலாக அட்டைப்படமாக வெளியிட்டு இனமுரண்
களை அறுக்க முற்பட்டவர். அதனை அவர் ஒரு சிலரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்கு அல்லாது இன முரண்பாடுகளை வேறுரோடு அறுத் தெறிய வேண்டுமென்பதற்காகவே அதனை செய்தவர். இவ்வாறானவர் களுக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம், அதற்காகவே இந்த “முல்லைத்தீவு தாத்தா'வை இவருக்கு சமர்ப்பணம் செய்ய எண்ணினேன். இதனால் நான் மட்டுமல்ல எமது சமூகம் சார்ந்த சமர்ப்பணமாகவே இதனை கருதுகிறேன்.
தமிழ்மொழியில் வெளிவரும் சஞ் சிகைகள், பத்திரிகைகள் பல சிங்கள ஆக்க இலக்கிய கர்த்தாக்களை வெகு வாகவே அறிமுகப் செய்துள்ளமை நான் நன்கு அறிவேன். அந்தளவு எமது சிங்கள ஊடகங்கள் செய்தனவா என்பது கேள்வி குறியாகவே உள்ளது" என்றார்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா நன்றி தெரிவித்து உரையாற்றும் போது 'இந்த நிகழ்வை ஏற்கனவே எமக்கு தெரியப்படுத்தி இருந்தால் நாம் இதனை இதைவிடச் சிறப்பாக ஏற்பாடு கள் செய்திருப்போம். இலங்கையில் இலக்கியத்தை முன்னெடுத்து செல் வதில் அதிகம் விலை கொடுத்தவர்கள் நாம் தான் வசதி குன்றிய நிலையிலும் அரச ஆதரவு இன்றி எமது தமிழ் இலக் கிய முயற்சிகளில் சோடை போகாது செயல்ப்பட்டு வந்துள்ளோம்.
மற்றும் இந்நிகழ்வில் திக்குவலை கமால், அந்தனி ஜீவா ஆகியோரும் உரையாற்றினார்கள்.
மல்லிகை பெப்ரவரி 2012 : 65

Page 35
சமூகத்தின்
கண்களுக்கு நான் ஒரு சுதந்திர பறவை 9 GαστGαοιριύlσύ
நான்
ஒரு கூண்டுக்கைதி இல்லை இல்லை
நிரந்தரக் கைதி
என் கைகளுக்கு விலங்குகள் போடவில்லை ஆனாலும்
ஆனாலும்
எண் கைகள் சங்கிலி கொண்டு இறுக்கிப்
பினைக்கப்பட்டுள்ளது
στGστ அசைவுகள் ஒவ்வொன்றும் அணு அணுவாய் அவதானிக்கப்படும் ஆனால் -
நான் ஒன்றும் தேசத்துரோகி
csgoG)
நான் .
- எஸ்.மதி
στGστGστΠGύ
முடிந்தது கம்பிகளுக்கு உள்ளே நின்று GumrGafleGö கவிதை கிறுக்கியபடி பறக்கும் கரிச்சான் குருவியை ஏக்கமாய் பார்க்க மட்டும்தான்
Upguqub ••••••••••••• O. O.
மல்லிகை பெப்ரவரி 2012 & 66

பேருந்து முழுவதும் துயரக் கூக்
C) C) குரல்கள் ஒலித்தன, “பாவம் பரிதாபம்" அந்தச் என்றவாறாக, அந்தப் பேருந்தில் மயக்க முற்று அந்தச் சிறுவன் வீழ்வதை அவர்கள் கண்ணுற்றனர். பயணிகள் பேருந்தை சிறுவனே நிறுத்தி, அவனை வெளியே கொணர்ந்தனர். ஒருவர் அவனது குதிகால்களை உராய்ந் O) துத் தேய்க்க, இன்னொருவர் அவனது குற்றவாளி உள்ளங்கைகளை அழுத்தியபடியிருக்க, CO மூன்றாமவர் அவரது மடிமீதில் அவனது தலையை சாய்த்துப் பிடித்திருக்க, நான்கா மவர் அவரது கைக்குட்டையின் உதவி கொண்டு அவனுக்கு காற்று விசிறியபடி ஜெஹாங்கீர் யிருந்தார். யாரோ நீர் கொண்டு வந்தார். மற்றவர் நீரை அவனது முகத்தில் தெளித் ஆங்கிலத்திலிருந்து தார். இவ்வெல்லா அக்கறைகளின் காரண 穆 e மாகவும், மெல்ல மயக்கம் தெளிந்து அந்தச் தமிழுக்கு:- கெகிறாவ சிறுவன் நிமிர்ந்து :
ஸ"லைஹா கூட்டம் சந்தோசத்தில் ஆரவாரித்தது.
"இதுதான் நீ மயக்கமுற்ற முதல் தடவையா? அல்லது அடிக்கடி இப்படி கழுவதுண்டா, உனக்கு?" இன்னொருவர் கேள்வி தொடுத்தார்.
(9
மூன்றாவதாய் ஒரு நபர் சகபயணிகளுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார், “பஸ்ஸிலே உண்மையில் கூட்டம் ரொம்பத்தான் அதிகம். சின்னவன் பாவம் மூச்சுத் திணறியிருப்பான். இந்தத் தள்ளுகையும், நெருக்குதலும் பலசாலியான ஆரோக்கியமான மனிதனையே கூட மூச்சுத் திணறச் செய்யக் கூடியது அல்லவா”.
அருகிருந்து சிறுவனை இன்னொருவர் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தாரர், "கடவுளின் தண்டனையெனச் சொல்லப்படும் காக்காய் வலிப்பு ஏதும் இல்லையே உனக்கு?” இந்தக் கேள்வியால் சிறுவனின் கண்களில் நீர் நிரம்பிற்று. கீழுதட்டை பிதுக்கி தொலைவை வெறித்தான் அவன். உள்சட்டையின் பாக்கெட்டை கூட்டத் தினரிடையே காட்டி அவன் சொன்னான், 'யாரோ என் பணத்தை பிக்பாக்கெட் அடித்து விட்டார்கள் ஐயா"
வியப்புற்று அவர்கள் அவனது சட்டைப் பையை சோதனையிட்டனர். அவனது சட்டை அம்மக்களினால் எல்லாத் திசைகளுக்கும் இழுக்கப்பட்டது. ஆதலினால் சற்றையில் அவனது சட்டை கிழிந்து சிதைந்து போயிற்று. ஒருவர் தனது படுபயங்கர சோதனையின் முடிவின் பின் தனது கூற்றை இப்படிக் கூறி முடித்தார். "ஐயாமார்களே,
மல்லிகை பெப்ரவரி 2012 & 67

Page 36
இந்தச் சட்டையின் பை ஒரு கத்தரி கொண்டே வெட்டப்பட்டிருக்கிறது."
சட்டென்று மற்றவர் தன் மறுப்புக் கூற்றினைத் தெரிவித்தார் இப்படி: "இல்லையில்லை ஐயா, நிச்சயமாக இது சவரக்கத்தி - ப்ளேட் ஒன்றின் வேலை
y
தான.
"நான் சொல்வதைக் கேளுங்கள். கத்தரிதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" கேலியாய்த் தொடர்ந்தான் அவன. "ப்ளேட், வெட்டப்பட்ட சட்டைப் பைக்குள் எங்கேனும் வைக்கப்பட்டிருக கும். நன்கு தேடிப்பாருங்கள்."
“தேவையில்லை, தேவையில்லை. இந்த வெட்டைப் பாருங்கள். நேராக யிருக்கிறது. இது ப்ளேட் ஒன்றால் மட்டுமே முடியும்." அழுத்திச் சொன்னவன் தொடர்ந்து சொன்னான், “என்னை மன் னித்து விடுங்கள். மறுத்துப் பேசுகிறேனே என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இது கத்தரி வெட்டு என்றால் நிறைய வளைவு கள் அதிலே இருக்க வேண்டும். அப்படி ஒன்றையும் தான் காணோமே?”
இந்தக் கருத்தால் முதலாமவன் ஒன்றும் அமைதியடைந்து விடவில்லை. இரண்டு தரத்தார்களும் தத்தமக்கென ஆதரவாளர்களை ஒன்று திரட்டிக் கொண்டு தமது கருத்திலேயே பிடிவாத மாக இருக்க, விவாதங்கள் தொடர்ந்தன. அவர்களது விவாதங்களுக்கு ஆதரவான கருத்துக்களை தேடி காரணங்கள் கற்பித்துக் கொண்டிருக்க படுபயங்கர மான, ஆக்ரோஷமான வாதப்பிரதிவாதங் களால் இரு படையணிகளாகப் பேருந்துப் பயணிகள் பிளவுற்றனர், கத்தரிப் படை யணி, ப்ளேட் படையணியென வாதங்கள் தொடர்ந்தன. கத்தரி ஆதரவாளர்களது
மனிதன் ஒருவன் தன் குரலை உயர்த்தி உச்சஸ்தாயியில் சொன்னான் "நீர் மிக அநாகரிகமாக நடந்து கொள்கிறீர். உங் கள் வாதத்தை நிரூபிக்கிற ஆதாரங்கள் எதுவும் கிடையாது பாருங்கள்."
அதன் விளைவாக ப்ளேட் ஆதர வாளன் பொறுமையிழந்து கத்தக் தொடங்கினான். “உங்களிடம்தான் நாக ரீகம் கொஞ்சம் கூடயில்லை. கீழ்சாதி வம்சத்தினரிடம் மேன்மக்களின் நற் குணங்களை எப்படித்தான் எதிர்பார்க்க முடியும்?”
விவாதங்கள் சூடு பிடித்தன. கருத் துக்கள், முரண்பாடுகள் பெருகிக் கொண்டே போயின. இந்த விடயம் பெரு கிப் பெரும் சண்டையாய் மூண்டது. முக்கியமானவர்களுக்கப்பால், இரு படை யணியினருக்குமிடையே பெருங் குழப் பங்கள் உருவாகின. கத்தரிப் படையணி ஒரு குழுவை உருவாக்க, ப்ளேட் படை முகாமினரோ ஒரு கட்சியை ஆரம் பித்தனர். இரு கட்சிகளும் தத்தமது கூட் டங்களை பிரத்தியேகமாக வைத்தனர். குற்றச்சாட்டுக்கள் சுதந்திரமாய் சுழன் றடிக்க, காரண காரியங்கள் தத்தமது கருத்துக்களுக்கு ஆதரவாய் முன்வைக் கப்பட்டன. ப்ளேட் மனிதர்கள் கத்தரி மனிதர்கள் பற்றி பட்டவர்த்தனமாய் கருத் துச் சொல்லினர் இப்படி,
"மக்களை எப்போதும் ஏமாற்றி வரும் கூட்டம் இது. தமது வயிற்றை நிரப்பி உடம்பு வளர்க்குமிவர்கள் சாதாரண மனிதனின் எதிரிகளும் கூட. அவர்களது செயற்பாடுகள் குறித்து அவர்கள் விளக்க மளிக்க வேண்டுமெனக் கோருகிறோம் நாங்கள். பிரிவு 370 இன்படி அச்சட்டத் தின் பரிசுத்தத்தன்மை மீதில் இவர்கள்
மல்லிகை பெப்ரவரி 2012 & 68

ஏதேனும் குறுக்கீடு செய்ய நேர்ந்தால், நாம் மிக உறுதியாக இங்கே இவ் விடத்தே சொல்கிறோம். இங்கே ஒரு இரத்த ஆறுதான் ஓடும். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்கப் போவ தில்லை."
கூட்டம் இக்கருத்தோடு சம்மதிக் கிறாற் போல பெரிய கைதட்டல் வழங்கி ஆர்ப்பரிக்க, ப்ளேட் மனிதனோ தொடர்ந்து பேசிக் கொண்டே போனான்.
கொஞ்சமும் குறைச்சலின்றி கத்தரி மனிதனும் இது மாதிரியேயான கருத்துக் களைத் தனது ஆதரவாளனுக்கு முன் வைக்கத் தொடங்க, உணர்ச்சி மேலீட் டால் இரு குழுவினருக்கும் பெருஞ் சண்டை மூண்டது. கற்கள் வீசியெறியப் பட்டதில் மக்கள் பலர் காயமுற்றனர். நிறைய பேர் அபாய கட்டத்தில் இருந்
தார்கள். காவல்துறை விரைந்து வந்தது. கண்ணிர்ப் புகைப் பிரயோகங்களும், தடி யடிப் பிரயோகங்களும் நடந்தேறி அவற் றாலும் இயலாதென்கிற நிலையில் துப் பாக்கிச் சூடுகள் கூட நிகழ்த்தப்பட்டன.
0 0 ()
மக்கள் எவருமற்று தெரு வெறிச் சோடிக் கிடந்தது. எங்கனும் அமைதி குடிகொண்டிருந்தது. பேருந்து தொலை வில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு கலகத்தை ஏற்படுத்தினான் என்கிற குற்றச்சாட்டின் பெயரில் சிறுவன் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டிருந்தான்.
From:- 'The Stranger Beside Me'- Short Stories from Kashmir-UBS Publishers' Distributers Ltd New Delhi 1994
Λ உங்கள் கவனத்திற்கு
மல்லிகை மலர், இதழ் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள், உறவுகொள்ள நினைப்பவர்கள், தத்தமது ஆக்கங்களை அனுப்ப எண்ணுபவர்கள், நூல்களின் விமரிசனங்களை எதிர்பார்ப்பவர்கள் அனைவரும் நேரடியாகவே மல்லிகை ஆசிரியருடன் தொடர்பு கொள்வது கண்டிப்பாக
விரும்பப்படுகின்றது.
மல்லிகை பெப்ரவரி 2012 奉 69

Page 37
響:::::::::::
:
發 ::::::::::::::::::::: 變
ప్రస్ట్రీ 70
ரவரி 2012
மல்லிகை பெ
 
 
 

- விடாமினிக் ஜீவா
S, மல்லிகை ஆரம்பித்த காலகட்டத்தில் நம்மில் பலர் மல்லிகை இதழ் தொடர்ந்து வெளிவரும், அது அரை நூற்றாண்டு காலம்வரை தொடர்ந்து வெளிவரும் என நம்பவில்லை. இந்தத் தகவலாவது உங்களுக்குத் தெரியுமா?
கேகாலை. அ.அன்புநேசன்
* இதையும் விடப் பல தகவல்கள் எனக்கு முன்னரே நன்கு தெரியும். இத்தகைய தகவல்களை ஏற்கனவே தெரிந்து, மனதில் பதிய வைத்த வண்ணம் தான் நான் மல்லிகையை ஆரம்பித்தேன். என்னை நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும், எனது ஆற்றலும் ஆளுமையும்.
O O. O.
S மல்லிகை என்றொரு இலக்கிய ஏட்டைத் தொடங்கி நடத்தி வரவேண்டும் என்ற மன உந்துதலை யார் தந்தது? என்ன நோக்கத்துடன் அவ்விதழை ஆரம்பித்தீர்கள்?
வேலணை. எஸ்.சிவதாசன்
* மெய்யாகச் சொல்லப் போனால், சென்னையில் விஜயபாஸ்கரன் என்பவர் சரஸ்வதி என்றொரு மாத இதழை ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்த இதழில் நான் பல காலமாகச் சிறுகதைகள் எழுதி வந்துள்ளேன். எனது முதற் சிறு கதைத் தொகுதியும், முதன்முதலில் பூரீலங்கா சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொண்டதுமான தண்ணீரும் கண்ணிரும் என்ற தொகுதியை அந்தச் சரஸ்வதி நிறுவனம்தான் முதன்முதலில் வெளியிட்டது. அந்தக் காலகட்டத்தில் நான் சென்னைக்குச் சென்றிருந்தேன். நண்பர் ஜெயகாந்தனை முதன் முதலில் விஜயபாஸ்கரனுடன் சென்று பார்த்தேன்.
மல்லிகை பெப்ரவரி 2012 & 71

Page 38
அந்த இலக்கிய நேசிப்பின் அருட் டுணர்வின் வெளிப்பாடுதான் மல்லிகை இலக்கிய இதழின் வரவாகும்.
சிற்றிலக்கியத் தமிழ் ஏடுகள் இங் கும் சரி, தமிழகத்திலும் சரி ஒரு சில ஆண்டுகளில் தத்தமது ஆயுளை முடித் துக் கொண்டு விடும் என்ற இலக்கிய வாதிகளின் அவலக்குரலை முறியடிப் பதற்காகவே சபதமெடுத்து இதுவரை காலமும் உழைத்து வந்துள்ளேன்.
தமிழ் இலக்கிய வரலாறு, மல்லி கையை என்றென்றுமே ஞாபகத்தில் வைத்துப் போற்றி வரும்.
O O O
S உங்களது கால இலக்கிய நடவடிக் கைகளுக்கும், இன்றைய கால இளந் தலைமுறை இலக்கியப் பரம்பரை யினரின் சமகால இலக்கிய நடவடிக்கை களுக்கும் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?
சுன்னாகம் எம்.ழுநீதரன்
* எங்கள் காலத்தில் பருத்தித்துறை யில் ஒர் இலக்கியக் கூட்டம் நடை பெறுகின்றதென்றால் போக வர 36 மைல்கள். மாலை சைக்கிளில் புறப் பட்டு விடிகாலை இரண்டு மூன்று மணிக்குத்தான் திரும்பி வருவோம். அத்தனை இலக்கிய வெறி.
இன்றுள்ள ஆர்வம் மிக்க இலக் கிய இளந்தலைமுறையினர் பக்கத்தே
இலக்கியக் கூட்டம் நடந்தாலும் அந்தப் பக்கமே எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், புதுக்கவிதை என்ற சாட்டில் ஏதோ ஏதோ எல்லாம் எழுதி அனுப்புவதில் கவனம் செலுத்துவார்கள்.
O O. O.
RS உங்களது நீண்டகால இலக்கிய நண்பர் ஜெயகாந்தனைப் பற்றிய ஒரு விதமான தகவல் எதுவும் சமீபத்தில் அவரது தற் போதைய சுகநலம் எப்படி?
தெரியவில்லையே,
நீர்கொழும்பு. எம்.குமணன்
* அவர் உடல் நல மில்லாமல் வீட்டிலே ஒய்வெடுத்துக் கொண்டி ருப்பதாகக் கேள்வி. வெளியார் தொடர்புகள் அனைத்தும் துண்டித் துக்கொண்டுள்ளதாக அறிகின்றேன்.
S நீங்கள் இதுவரை காலமும் இலக்கிய நண்பர்களை எந்த வகையில் தேர்ந் தெடுத்துப் பழகி வருகின்றீர்கள்?
புத்தளம். எஸ்.சிவநேசன்
* உண்மையைச் சொல்லுகின் றேனே. நான் நண்பர்களைத் தேர்ந் தெடுத்துப் பழகி வந்தவனல்ல. அந்தக் காலத்தில் இருந்தே நண்பர் கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்துப் பழகி வருகின்றனர்.
201/4, முரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

நீங்கள் தரமான இலக்கியச் சுவைஞரா?
'மல்லிகைப்பந்தல் வெளியீடுகளைத் தொடர்ந்துபடியுங்கள்
கடந்த 46 ஆண்டுகிளுக்கு மேலாக நமது மண்ணைச் சார்ந்த படைப்பாளிகளின் பல்துறைப்பட்ட நூல்களை வெளியிரு வருகின்றது. மல்லிகைப்பந்தல் நிறுவனம்
மல்லிகைப்பந்தல் வெளியீடுகளை நீங்கள் வாங்கும் பொது அதனது ஆதரவு மல்லிகை மாத இதழுக்கும் சுவறுகின்றது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்
மல்லிகைப் பந்தல் விதாலைபேசி: 232072

Page 39

§§§§@₪]],500ïsol TĒĻĒĻĪS “ZĘ0|||||0||0||0 EĻIEMEĻJESSIIBIBLIISISTÍNolos
/.../, o