கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2012.02

Page 1
2கiஇt
 


Page 2


Page 3
கவிதைகள் 键
மன்னூரான் ஷிஹார் இதனஞ்சயன் வேலணையூர் தாஸ்
சபா.ஜெயராசா
 
 
 

繆

Page 4
2012 மாசி இதழ் - 41
பிரதம ஆசிரியர்
(56)TLD6Di Liggifolyai
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துஷ்யந்தன்
பதிப்பாசிரியர்
கலாநிதி தகலாமணி
தொடர்புகளுக்கு : கலை அகமீ சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அலீவாய் வடமேற்கு அலிவாய்
ලිඛිබffiගයී.
ஆலோசகள் குழு:
திரு.தெனிையான் திரு.கி.நடராஜா
வதாலைபேசி 0775991949 0212262225
E-mail: jeevanathy(Gyahoo.com
வாங்கித் தொடர்புகள் Ki Bharaneetharan
Commercial Bank Nelliady A/C - 810802 1808
CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக் களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக்
புதி விட்ட நிலை சிந்திப்பது ெ சாதன விருத் பெருகிவிட்ட வாழ்க்கை, எ u 6ör6ODŁp GBLJT type) வாழ் 65 L60 peopti. 356CD6Tä5 Götti வகைகளே (i இே விட்டதோ எ இலக்கியப் ப போன்று தயா U6OLLILJö65. 6.3.g35 LILs இந் 35600r (3600TTL வழியே, பை நான்கு படிற ஆயத்தநிலை நிலை என்ற 6.35|Teireit (36)
66 டனும் மன6ெ தகவல்களை இடம்பெறும். பட்டதன்று : யிலேயே மு களின் ஒழு களுக்கான பார்க்கும் நி 356060s Liao it
கொண்டு ப6
Glassisitoit LIG b UGOLCL156061T6 63tb60LDL 5606055 55. படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
8 -ខ្សែទឺuff
ஜீவநதி H
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை வறாண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்தி ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
பைப்பாற்றலும் உளவியற்
a bassassif up
ப சகத்திரத்தில் (Millennium) ஒரு தசாப்தம் கடந்து யில், இன்றைய மனித வாழ்வைக் குறித்துச் சற்றுச் ாருத்தமானது. விஞ்ஞான, தொழில்நுட்ப, இலத்திரனியற் நதிகளால் மனித வாழ்வில் வாய்ப்புகளும் வசதிகளும் ன என்பது உண்மைதான். ஆனால், யந்திரப்பாங்கான திலும் வேகம், நின்று நிதானித்துச் செயற்படும் பொறுமை ன்றவை ஒரே அச்சில் பதித்த வார்ப்பு ரீதியான (stereo க்கை நடைமுறைகளையும் எம்மில் தோற்றுவித்து நாம் மறுக்கவியலாது. எமது உணவுப்பழக்க வழக்கங் க் கைவிடும் அளவுக்கு உடனடித்தயாரிப்பு உணவு nstant food) இன்று பிரபல்யம் பெற்றுவிட்டன. தவேளை இதே நிலைமை இலக்கியத்திற்கும் ஏற்பட்டு ான்ற ஐயப்பாடு இன்று எழுவது தவிர்க்கவியலாதது. டைப்புகள் பல உடனடித் தயாரிப்பு உணவுப்பண்டங்கள் ரிக்கப் பட்டவையாகவே தோற்றமளிக்கின்றன. இலக்கியப் iன பெருமளவிலான முயற்சிகளோ, அக்கறையோ மை கண்கூடு. நிலையில் படைப்பாற்றல் விருத்தி பற்றிய உளவியற் ம் இங்கு கவனத்திற்குரியது. அக்கண்ணோட்டத்தின் டப்பாற்றல் என்பது கணநேர நிகழ்வன்று. அதுகுறித்த நிலைகளினூடாக ஏற்படும் விருத்தியின் பெறுபேறு. அடைகாக்கும் நிலை, ஒளிரும் நிலை, மீட்டுப்பார்க்கும் இந்த நான்கு படிநிலைகளையும் படைப்பாளிகள் அறிந்து |ண்டும். ஆயத்த நிலை என்பது புற முரண்பாடுகளை ஒரு கருப்பொருள் பற்றிய தரவுகளுடனும் தகவல்களு பழுச்சி பெறும் நிலையாகும் அடைகாக்கும் நிலையில் ஒன்றிணைத்து செப்பனிடும் தொழிற்பாடு உள்ளத்தில் அடைகாக்கும் நிலைக்குரிய காலவீச்சு வரையறைக்குட் அதேவேளை, அடுத்த படிநிலையான ஒளிரும் நிலை ண்பாடுகளுக்கான விளக்கம் கிடைக்கப்பெற்று, தகவல் ங்கமைப்பில் புதிய வடிவமும் உருவாகி, முரண்பாடு தீர்வும் உணரப்படும். இறுதிப்படிநிலையான மீட்டுப் லையில் உள்ளத்துப் பதிவு வெளிப்படுத்தப்படும். அது பாக உருப்பெறும். டைப்பாற்றல் விருத்தியின் படிநிலைகளைக் கவனத்திற் டைக்கப்பெற்ற படைப்புகளே சீரஞ்சீவிகளாக இன்றும் கின்றன.
க.பரணிதரன்
பிரதம ஆசாயர்

Page 5
இன்றைய தமிழ் சமுதாயத்தின் நிலையை மேம்படுத்தும் பணியில் இலக்கிய ஆக்குநர்களின் பங்களிப்பும் முக்கியமானது. காதலையும், அவலங் களையும் பற்றிய ஆக்கங்கள் போதும், இனி நம்பிக்கையைத் தரவல்ல ஆக்கங்களே இன்றைய தேவை என்பதையும், தமிழ் சமூக அநீதிகளைச் சீர் செய்ய வேண்டும் என்ற கருத்துகளை மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் முன்வைத்துள்ளமை நல்ல கருத்து. அவ்வாறே ஜீவநதி ஆசிரியர் க.பரணிதரன் அண்மையில், ஜீவநதிக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் சமூக அங்கத்தவர்களை ஆற்றுப்படுத்துவ தாகவே அமையவேண்டும், அவற்றையே ஜீவநதி வரவேற்பதாகவும் கருத்து வெளியிட்டிருந்தார். இவை பற்றி இலக்கிய ஆக்குநர்கள் சிந்தித்து ஆக்கபூர்வமாகச் செயற்படுவது நல்லதென்று கருதுகின்றேன்.
சமுதாய மேம்படுத்தல் இரண்டு முறைகளில் செய்யப்படலாம். ஒன்று சமூகத்திலுள்ள தனித்துவமான நல்ல அம்சங்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்க்க முயலுதல், மற்றையது. சமூகத்தில் நிலவும் கேடான நிலைகள் ஏற்படாது தடுத்து நிறுத்துதலும் அவற்றை நீக்குவதுமாகும். எனவே இலக்கிய ஆக்குநர் கள் இந்த இரண்டு பணியையும் செய்வது சமுதாயத்தை மேம்படுத்துவதாக அமையும். மாற்றங்கள் இந்த நூற்றாண்டில் இடம்பெறாவிட்டாலும் ஆயிரம் வருடங் களின் பின்னாவது அவை ஏற்படட்டும் என்று கருதி நல்மாற்றங்களுக்கான வித்துக்களை விதைப்பதே இலக்கிய ஆக்குநர்களின் பணியாகும் என்று கருது கின்றேன். இக்கட்டுரையானது மேற்குறிப்பிட்ட இரண்டாவது முறையில் சமுதாயத்தை மேம்படுத்தல் பற்றியே மையம் கொள்கின்றது.
இலக்கிய ஆக்குநர்கள் அறிவுரீதியான புரிதலில் மேலானவர்கள் என்ற ஊகத்தோடு இன்றைய தமிழ் சமூகத்தில் மாற்றப்படவேண்டிய யதார்த்தங் களைக் கருத்தில் கொண்டு பின்வரும் பரிந்துரைகளை
ஜீவநதி
 
 

அவர்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். இங்கு குறிப்பிடப் படுபவை முழுமையானவையல்ல என்பதால் சமூகத்தில் நிலவும் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கபூர்வமான கருத்துகளை வழங்கும் ஆக்கங்களை உருவாக்க முயற்சிக்கலாம்
() தமிழ் சமூதாயம் O தமிழர்களைப் பிறர் நலம் கொண்ட சமுதாயமாக உருவாக்குதல் O சொந்தச் சமுதாயத்தை மேம்படுத்தும் ஆவலை உருவாக்குதல் O மாற்றுக்கருத்துகளை மதிக்கின்ற போக்கின் நன்மைகள் O பெரியோர் இளைஞர், யுவதிகளுக்கு முன்னு தாரணமாக விளங்குதல்
(2) சாதிய சமத்துவம் O சாதிய சமத்துவமின்மை இருசாராரையும் உளவியல் ரீதியான முதிர்ச்சியின்மையில் வைத் திருப்பதை விளக்குதல் O சாதிய சமத்துவத்தை உருவாக்குதல்
(3) 6Uaiaofub O பெண்கள் சமத்துவமின்மையால் பெண்களின் உளநலன் பாதிக்கப்படுதல் O பெண்கள் சமுதாயத்தை உருவாக்க வல்ல நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன் வைத்தல். O தமிழ் பண்பாட்டிலுள்ள நல்ல விழுமியங்களைத் தூக்கி எறியாததாக அமைவது மிக அவசியம்.
(4) கல்வித்துறை O சிறந்த ஆசிரியர்களின் வாழ்க்கை முறை ஆளுமைப் பண்புகள், கற்பித்தல் திறன்கள், சமூக அக்கறை,

Page 6
O சிறந்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி மான்கள் உருவாகப் பங்களிப்புச் செய்யும் காரணி களை விளக்குதல்
O சுயநலம் கொண்ட பொறுப்பற்ற, ஒழுக்கக்கேடான இத்துறை சார்ந்தோரை உருவாக்கும் காரணிகள், அவ்வாறு உருவாகுவதைத் தடுக்கும்முறைகள் Q கல்வித்துறைக் கொள்கைகளில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் O தமிழ்சமுதாயத்தின் கேட்டிற்கு கல்வித்துறையினரின் பங்களிப்பை விளக்குதலும் தடுக்கும் முறைகளும். 0 மாணவர்களை அழிக்கும் செயலில் ஈடுபடும் ஆசிரியர்களைத்திருத்தும் ஆக்கங்கள் O மனச்சாட்சிப்படி நடத்தல், சமூகத்தின் நிதி, சொத்து என்பனவற்றை மக்களுக்குப் பயன்படுத்தல் O பல்கலைக்கழக மாணவர்கள் கற்பது மக்கள் பணத்தில் என்பதை உணரச் செய்தல் 0 தமிழ்ப் பண்பாட்டில் வரவேற்கும் முறைகள் 0 "வரவேற்பு வதையை” “பகிடி வதை" என எழுது வதை நிறுத்தச் செய்தல். அவ்வாறே சிலர் ஈடுபடும் வதைவரவேற்பு எவ்வாறு நல்ல மாணவர்களின் நற் பெயரையும் கல்வியையும் பாதிக்கின்றது என்பதை விளக்குதல் O பல்கலைக்கழக மாணவர்களிடம் சமூகம் எதிர் Ljmfů j606) O அவர்களின் இலவச கல்விக்கு மக்களின் பணமே செலவாகின்றது எனவே பொறுப்போடு படித்து அம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் எனும் ஆவலைத் தூண்டுவதல், O வேலைவாய்ப்பை அரசிடமிருந்து எதிர்பார்த் திருக்கும் காலத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் முறைகள் 0 சுயதொழில்முயற்சிகளுக்கான வாய்ப்புகள் O கல்விக்கு கைத்தொலைபேசி, தொலைக்காட்சி, இணையத்தளத்தேடல், எவ்வாறு தடையாக உள்ளது
(5) eggfugb O வாக்களிக்கும்போது எந்தெந்த அடிப்படைகளில் வாக்களிக்கவேண்டுமென நெறிப்படுத்துதல் 0 சேவை மனப்பான்மை, நற்பண்புகள் கொண்ட அரசியல் தலைவர்களை உருவாக்கும் முறைகள் O தம் வாக்குகளால் அரசியல் தலைமைத்துவங்களி லுள்ள அழுக்குகளை அகற்ற முடியும் என்று நம்பி செயற்படும் மக்களை உருவாக்கல். 0 மக்களுக்குச் சேவை செய்யாதவர்களை, மக்கள் நலனில் அக்கறை அற்றவர்களை ஓரம்கட்ட வழி செய்தல் O அரசியல் நியமனங்களால் இடம்பெறும் தீய விளைவுகளை எடுத்துக்கூறித் தடுத்து நிறுத்தச் செய்தல்,
ஜீவநதி 4

(6) agar uafutata56i O சாதி, சமய, உறவு அரசில் ஆதரவின் அடிப்படை யில் நியமனம், பதவி உயர்வு, பயிற்சி பெறுதல் என்பனவற்றை நிறுத்துதல் O பெறுகின்ற சம்பளத்தை நினைத்தாவது கடமை உணர்ச்சி,பொறுப்புணர்ச்சியுடன் செயற்படல் O சொந்த மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஆவலை இவர்களில் உருவாக்கும்முறைகள் O மக்களோடு பண்போடும் புரிந்துணர்வோடும் நடந்துகொள்வோரின் கதைகள் O அரச பணியாளர்கள் தம் பணிமனைக்கு வரும் பொதுமக்களை ஏமாற்றும் முறைகள் O சமத்துவ உரிமை மறுக்கப்பட்ட சாதியினர், ஏழைகளின் பிரதேசங்களுக்கு வரும் திட்டங்களில் செய்யும் குழறுபடிகள். O இவர்களுக்கு வரும் உதவித் திட்டங்கள் அவர் களைப் போய்ச் சேரவிடாது தடுக்கப் பயன் படுத்தும் யுக்திகளும் இதை மக்கள் எவ்வாறு நிறுவனரீதியாக, சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றியடைவது. O நல்ல வீதிகளை உரிய அதிகாரிகள் சரியான முறையில் செய்வதற்கு மக்கள் செய்யக்கூடிய நடை முறையான செயற்பாடுகள் O கட்டட ஒப்பந்தங்களைச் சுயநலத்துக்குப் பயன் படுத்திப் பொதுமக்களை ஏமாற்றுவதைத்தடுத்தல் O கட்டட ஒப்பந்தங்கள் உரிய காலத்தில் செய்யப் படாது நிதிதிரும்பிச் செல்வதை நிறுத்தல், O இலஞ்சம்வாங்கிச்சேவை வழங்குவதைநிறுத்துதல்
(7) உடற்குணமாக்குநர்கள்(வைத்தியர்கள்) O கிளினிக் நாட்களில் உடல்நலம் பாதிக்கப் பட்டோரின் நேரத்தை, கஷ்டங்களைக் கருத்தி லெடுத்துச் செயற்படத்தூண்டுதல் O மக்களின் துன்பத்தைக் கருத்திலெடுத்து பண ஆசையினால் செயற்படுவதைத்தடுத்தல் O வைத்தியசாலையைச் சுத்தமாக வைக்கத் தூண்டுதல்(அதிகாரிகளும் பொதுமக்களும்) O மக்களின் அறியாமையால் கணவன்-மனைவி உறவில் ஏற்படும் பிரச்சினைகளும் அத்தகைய அறியாமைகளைப் போக்குதலும்
(8) sāhu (Urfassir O மக்களை ஏமாற்ற இவர்கள் மேற்கொள்ளும் யுக்திகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
(9) ஏமாற்றுப்பேர்வழிகள் O மக்களை ஏமாற்ற இவர்கள் மேற்கொள்ளும் உளவியல் நுட்பங்களை விபரித்தல் O எத்தகைய ஆளுமைப் பண்புகள் கொண்டோர் இலகுவில் ஏமாற்றப்படுகின்றார்கள்
-இதழ் 41

Page 7
(0) காதல் இதுபற்றிய ஆக்கங்கள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்குவது இளம் சந்ததியை நெறிப்படுத்துவதாக Ցi60)ւՕեւկլք:
Q உண்மையான நட்பு, காதல், பாலின்ப வேட்கை என்பனவற்றிடையேயான வேறுபாடுகள்.
0 காதலில் உண்மைத் தன்மை, அர்ப்பணிப்பு, தியாகம் போன்றவற்றின் அவசியம்.
O திரைப் படங்களின் செல்வாக்கின் அடிப்படையில் காதல் நடத்தைகள், மொழிநடைகள் என்பனவற்றை கடைப் பிடித்து காதலும் திருமண வாழ்வும் தோல்வியில் முடிவதை விளக்குதல்,
O காதலிக்க விரும்புவோர்தாம் விரும்புபவர் பற்றிப் போதியளவு தகவல் சேகரித்த பின்னர் காதலிக்க ஆரம்பித்தலின் நன்மைகள்.
O காதலிக்க விரும்புபவரில் எதிர்பார்க்கப்படும் நற்பண்புகள்.
O காதலர் தம் பொறாமைப் பிரச்சினைகளைத் தம் உறவை மேம்படுத்தும் முறையில் கையாளும் வழி முறைகள்.
0 காதல் தோல்விகளை வளர்ச்சி தரும் முறையில் கையாளும் திறன்கள்.
0 காதல் தோல்வியால் தற்கொலை செய்யும்போது பாதிக்கப்படுவோரும் பாதிக்கப்படும் விதங்களும்,
O சாதி மாறித் திருமணம் செய்ய விரும்புவோர்தம் பெற்றோரை, உறவினரை, நண்பர்களை, சமூகத்தை எதிர்கொள்ளத் தம்மை எவ்வாறு அதற்கு ஆயத்தம் செய்ய வேண்டும்.
() திருமணப் புரோக்கர்கள் O இவர்கள் பயன்படுத்தும் ஏமாற்று யுக்திகளை வெளிக்கொணர்ந்து அவற்றைத் தடுக்கும் முறை களை முன்வைத்தல்
(2) குடும்ப வாழ்வு O திருமண வாழ்வுக்கு உளவியல், அறிவு, ஆன்மீக, சமூக ரீதியாக ஆயத்தப்படுத்த முயற்சிகளை மேற் கொள்ளும் முறைகள். O குடும்ப ஒற்றுமையை வளர்த்தல், 0 அன்புறவை மேம்படுத்தும் முறைகள் O ஏனைய குடும்பங்களுக்கு முன்மாதிரியாகத் திகழுதல் O தம்பதியர் தம் பிரச்சினைகளை ஆக்க பூர்வமாகத் தீர்க்கும்முறைகள். 0 அயலவரோடு ஒற்றுமையாகவும்அவர்களுக்குஎவ்வகை யிலும் இடைஞ்சல் ஏற்படுத்தாது வாழும்முறைகள். O அயலவருடன் பிரச்சினை ஏற்படும்போது பண்பான முறையில் அல்லது சட்டத்திற்கு உட்பட்ட முறையில் தீர்த்தல்.
ജഖി-6

(3) பிள்ளை வளர்ப்பு
O சிறுவர்கள், இளைஞர்கள் தம் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தைகள் எவை, ஏற்றுக் கொள்ளப் படாத நடத்தைகள் எவை என்பதை பெற்றோர், பெரியோர் எடுத்துரைக்க வேண்டியதன் அவசியமும் அதற்கான பொருத்தமான முறைகளும். O கேட்டதெல்லாம் கொடுத்துப் பிள்ளைகளைக் கெடுக்கும் பெற்றோரில் மாற்றம் ஏற்படுத்துதல்.
O கைத்தொலைபேசி, கம்பியூட்டர், வாகனம் எந்தப்
பிள்ளைக்கு எந்த வயதில் என்ன தேவைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை விளக்கும் ஆக்கங்கள். O இன்ரநெற் தேடலில் இடம்பெறும் சீரழிவுகளை யும், பிள்ளைகளை எவ்வாறு இதில் கண்காணிப்பது, நெறிப்படுத்துவது. O தொலைக்காட்சி பார்த்தல் பிள்ளைகளின் கல்வி யில் ஏற்படுத்தும் சீரழிவுகள் O தொலைக்காட்சியை ஆக்கபூர்வமாகப் பயன் படுத்தும் முறைகள். O நல்லொழுக்கம், துப்பரவு, குடும்பப்பொறுப்பு,
பெற்றோருக்கு நன்றி காட்டல், சமயம் கூறும்
நற்கருத்துகளின் படிவாழ்தல்.
O ஆடம்பரமின்றி அழகாக உடுத்தும் முறைகளும்
அவை சமூகத்திலும் தனிநபரது திருமண வாழ்விலும் ஏற்படுத்தும் விளைவுகளும் O நன்றி உணர்வை வளர்த்தல் O சமய போதனையின்படி வாழும் ஆன்மீகத்தை வளர்த்தல்
(4) பிறரின் உண்மையான ஞணத்தை அறிதல் O பிறரின் கபட நோக்கங்கள், பொய்களை அடை யாளம் காணும் நுட்பங்கள்
(5) உணர்ச்சிக் கையாளல் O மனச்சோர்வை, கோபத்தை, பொறாமையை இறப்புத்துயரைநல்லமுறையில்கையாளும்முறைகள் O இவற்றை வெற்றிகரமாக மேற்கொண்டோரின் கதைகள் O அங்கப் பாதிப்பு அல்லது இழப்பைச் சந்தித்தோர் தம் திறமைகள், வளங்கள் என்பனவற்றை அடை யாளம் கண்டு வாழ்வைக் கட்டி எழுப்புதலும் இதில் வெற்றிகரமாகச் செயற்படுவோரின் கதைகளும், O பெற்றோரை இழந்து வாழ்வை வெற்றிகரமாக மேற்கொள்ளுவோரின்கதைகள். O தீராத நோயால் பாதிக்கப்படுவோர் எஞ்சிய காலத்தை மகிழ்ச்சியோடும் அர்த்தம் கொடுக்கும் முறையிலும் வாழும் முறைகள் O காணாமல் போனோரின் குடும் பத்தவர் சட்டரீதியாகமேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்
இதழ் 4

Page 8
O காணமல் போனோரின் குடும்பங்கள் தம் வாழ்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் முறைகள். O உளநலம் குன்றியோரைச் சமூகம் புரிந்துணர் வோடு ஏற்று உதவும் மனப்பாங்கை உருவாக்குதல் O உளவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் பெற்றோர் மட்டில் சமூகப் புரிந்துணர்வை வளர்த்தல்
(6) உறவுப் பிரச்சினைகளை ஆரோக்கியமாகத் தீர்க்கும் மூறைகள்
(7) 56orểFrgắ fóleo 0 பெண்கள் ஆடை அணிதல் பற்றிய சமூக எதிர் பார்ப்பு. O ஒழுக்கக் கேட்டுக் காரணிகளை விளக்குதலும் தடுக்கும் முறைகளும், O கீழ்த்தர உணர்ச்சிகளை தூண்டி ஒழுக்கக்கேட்டை விளைவிக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைப் பகுதிகளை எதிர்த்து அவற்றை நிறுத்த நெறிப்படுத்தும் ஆக்கங்கள்.
(8) sāhudarguib
O ஒருவர் இதில் ஈடுபடும்போது அது எவ்வாறு அவரது பெற்றோர் சகோதரர், பிள்ளைகள், துணையாள், ஊர், நாடு என்பனவற்றைப் பாதிக்கின்றது. O வறுமையில் விபச்சாரத்தை விடுத்து வேறு எந் தெந்த முறைகளில் தம் பொருளாதாரப் பிரச்சினை களைத்தீர்க்கலாம் O விபச்சார வலையுள் விழுத்த சமூகக் கிருமிகள் பயன்படுத்தும் தீயநுட்பங்களை எளிதில் அடையாளம் கண்டு விலக்கும் முறைகள்.
(9) துர்ப்பழக்கங்கள் O மது, போதைப் பொருள், புகைத்தல் அடிமைத் தனங்களுக்கு உட்படாதிருத்தல்
O குடிக்குமாறு அல்லது போதைப்பொருள் அல்லது புகைத்தலுக்குப் பிறர் நிர்ப்பந்திக்கும்போது எவ்வாறு பண்போடு மறுப்பது O இத்தகைய அடிமைத்தனங்களிலிருந்து எவ்வாறு பலர் மீண்டார்கள்.
(20) நீலப்படங்கள் O நீலப்படங்கள் பார்ப்பதால் ஏற்படும் உளவியல், ஆன்மீகரீதியான பாதிப்புகள் O கணவன்மனைவிஉறவில்ஏற்படுத்தும்தீயவிளைவுகள் O பிறர் அறிமுகம் செய்ய முயலும்போது தவிர்க்கும் முறைகள் O இதற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற் கான வழிமுறைகள் O பார்ப்பது பிடிபடும்போது ஏற்படும் சமூகரீதியான பாதிப்புகள்
εξωIE5-- 6

O இப்படங்களை விநியோகிக்கும் நிலையங்கள் இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் O இவற்றை வைத்திருந்து பிடிபடும்போது ஏற்படும்
சட்டப் பிரச்சினைகள்
(2) சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
O சிறுவர்கள் பாலியல் துர்ப்பிரயோகத்திற்கு உள்ளாகும் சூழலை விளக்குதல் O பாலியல் துர்ப் பிரயோகத்தைத் தடுக்கப் பெற்றோரும் சமூகமும், உட்படும் சிறுவர்களும் மேற் கொள்ளக்கூடிய செயற்பாடுகள் O சிறுவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வோர் அப்பழக்கத்திலிருந்து வாழ வழிகாட்டும் முறைகள்
(22) பதின்வயதுக் கற்பம் O பதின்மக் கற்பம் ஏற்படுத்தும் உடல்ரீதியான பாதிப்புகள் O பதின்மக் கற்பத்தால் திருமணத்திற்குச் செல்லும் போது ஏற்படும் உறவுப் பிரச்சினைகள், பிள்ளை வளர்ப்புப் பிரச்சினைகள்.
(23) கருக்கலைப்பு O கருக்கலைப்பின் உளவியல் விளைவுகள் O கருக்கலைப்பை விட பிள்ளையைப் பெற்று வளர்க்க அல்லது சட்ட ரீதியா வளர்க்கக் கொடுக்கும் முறைகள் O இதில் ஈடுபடும் வைத்தியர்களை நிறுத்தச் செய்யும் முறைகள் O தாம் விரும்பாத கற்பத்தை நல்ல முறையில் கையாளும் முறைகள்
(24) கருத்தடைப் பொருட்கள் பயண்படுத்தல் O இவற்றைப் பயன்படுத்துவதால் கணவன் மனைவி உறவில் ஏற்படும் பிரச்சினைகள் O பயன்படுத்துவதால் விளையும் தவறான மனப்பாங்குகள் O இவற்றின் அறிமுகம் கலாச்சாரச் சீரழிவுக்குக் காரணமாக இருத்தல்
(25) களவு Oதிருடர்கள் எந்த முயற்சி செய்தும் களவில் வெற்றி கொள்ள முடியாத முறையில் வீட்டின் கூரைகள், யன்னல்கள், கதவுகளை உருவாக்கும் முறைகள் Oகளவைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளும் முறைகள் Oகள்வர்கள் வீட்டைக் கண்காணிப்பது பற்றி விழிப்படையச்செய்யும் முறைகள் Oகளவெடுத்த பொருட்களை மலிந்த விலையில் வாங்குவது எவ்வாறு களவை அதிகரிக்கும் என்பதை விளக்குதல்
இதழ் 41

Page 9
(26) கொலை O கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கும் முறைகள் O கொலை செய்தோர், செய்யப்பட்டோரின் குடும்பங்கள் அனுபவிக்கும் அவலங்கள் O கொலையாளிகள் உருவாகும் சூழல்களையும் அவற்றைத் தடுக்கும் முறைகள்
(27) விபத்து
27.1. வீதி விபத்து O பாதசாரிகள் எடுக்க வேண்டிய முற்காப்பு நடத்தைகள் C பஸ்சாரதிகள் பணஆசையால், போட்டி மனப் பான்மையால் அதனை ஒட்டும்போது அவர்களால் விளையும் அனர்த்தங்களும் பயணிகள், சாரதி. போன்றோரின் வாழ்வும், அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுதல் O வீதி விபத்துகளைத் தடுக்கும் ஆலோசனைகள் O சாரதி பயிற்சியில் உட்புகுத்த வேண்டிய புதிய அம்சங்கள் R O விபத்து வார்ட்டிலுள்ளோரின் நோவுகளும் வலிகளும், அங்க இழப்புகள் O விபத்துகளைத் தடுப்பதில் இலங்கைப் போக்கு வரத்துச்சபை தனியார் பஸ் சங்கம் என்பவற்றின் பங்களிப்பு O விபத்துகளைத்தடுப்பதில் பொலிசாரின் பங்களிப்பு O தமக்குச் சொந்தமான மிருகங்களை வீதியில் நடமாட விடுவதை நிறுத்தச் செய்தல்
27.2. வீட்டு விபத்து O வீட்டிலுள்ள பாலகர்கள் பல்வேறு விபத்துக்குள்ளா வது பற்றிய விழிப்புணர்வூட்டல் O இவற்றையும் ஏனைய வீட்டு விபத்துகளை தடுக்கும் முறைகள்
28. காணிப்பிரச்சினை தீர்த்தல் O வாளைவிட வழக்கின் வழி காணிப்பிரச்சினை தீர்ப்பது மேலானது என்பதை வலியுறுத்தல் O அநியாய காணி அபகரிப்பை நிறுத்த நீதிமன்றத்தை நாடும் முறைகளை விளக்குதல் O காணி விலையை முக்கிய காரணமின்றி உயர்த்துவதைத் தடுத்தல் O தம் காணி விலையை உயர்த்தக் காணிக்காரர்கள் பின்பற்றும் யுத்திகள் O வெளிநாட்டார் வந்து காணிவிலையை எவ்விலை யிலும் வாங்குவது ஏழைகளின் வாழ்வைச் சிதைக்கும் செயல் என்பதை விளக்குதல்
 
 

சோதனைகளின் சுற்றிவளைப்புக்களால் சோகத்தை மட்டுமே சொந்தமாக்கிக்கொணர்டு சோபையிழந்து நிற்கும் சொல்லேருழவர்களே!
பூமிப்பந்தைப் புரட்டியெடுத்துப் புடம்போடவேணர்டிய நாம் புறங்கையில் முகந்தாங்கி பொருளற்ற பாவனையில் புருவஞ் சுருக்குவதோ?
அகிலத்தைப் புதுப்பித்தற்காய் -நாம் ஆற்றவேண்டிய பணிகள் ஆயிரமாயிரம் ஆற்றப்படாமல் அப்படியே!
சாயம் பூசப்பட்ட சம்பிரதாயங்களாலும் சாக்கடையாய்நாறும் சாதியக் கொள்கையாலும் சரிந்து கிடக்கும் - இந்த சமுதாயத்தை மெல்ல -நம் சமத்துவ எழுத்துக்களால் சரிக்கட்டுவோம்!
விழுந்துகிடக்கும் நம் சமுதாயத்தின் விழுமியங்கள் ஒவ்வொன்றாய் எழுந்து நிற்கும்படியாக -நம் எழுத்தாணிகளை ஏந்திப் பிடிப்போம்!
நாவில் ஒன்றும் நடத்தையில் மற்றொன்றும் எழுத்தில் ஒன்றும் இதயத்தில் இன்னொன்றுமாய் பொதுவுடைமை பேசும் போலி எழுத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு புரட்சி எழுத்துக்களால் - ஒரு புதுவுலகம் படைப்போம்!
போர்முனையும் ஏர்முனையும் - இங்கு புரியத் தவறியதை நம் பேனா முனைகொணர்டு பெரும்பணியாய் ஆற்றிடுவோம் புதிய தலைமுறையே புயலெனவே புறப்படுவாய்!
-மன்னுரான் ஷிஹார்
65, 41

Page 10
வேவிலூர் வீரபத்திரர் கோவிலில் ஆண்டுப் பொங்கல் மடை என்றும் சொல்லப்படும். ஆடு, கோழி வெட்டி காணிக்கை செலுத்திய அந்நாளில் அதனை வேள்வி என்றனர். நான் சிறுவனாக இருந்த காலத்தில் அந்த வேள்வியைப் பார்க்கப் போவதுண்டு பளபளக்கும் கனமான கூரிய கத்தியின் ஒரே வெட்டில் ஆட்டின் தலை வேறு உடல் வேறாய் விழும், கொட்டும் இரத்தம் தரையைச் சிவப்பாக்கும். சேவல்களும் வெட்டப்பட்டு தலைகளும் உடல்களும் ஒன்றாய் குவிந்திருக்கும்.
ஓர் இளைஞர் இயக்கம், தெய்வம் இருக்கும் கோவில் முற்றத்தில் மிருக பலியா? என்ற கேள்வியுடன் செய்த எதிர்ப்புப் பரப்புரையின் பயனாக, பரம்பரையாகப் பின்பற்றப்பட்டுவந்த அவ்வழக்கம் தடைசெய்யப்பட்டது.
ஏறக்குறைய இருபதாண்டுகள் எனக்கு அந்த வேள்வியைப் பார்க்கும் பேறு வாய்க்கவில்லை. இடம் பெயர்ந்து தூரத்து ஊர்களில் தங்கியிருந்த பின் சொந்த ஊர் திரும்பியிருக்கும் நிலையில் அந்தப் பொங்கல் விழாவின் umulbufu பூசை அநுட்டானங்களையும் கலை ஆட்டங்களையும் காணும் ஆவல் உந்த, அன்று காலையில் புறப்பட்டுகால்நடையாகவே சென்று ஒன்பது மணியளவில் கோவிலை அடைந்தேன்.
செவ்விளநீர்க்குலைகள் பழ வாழைக்குலைகள் மாதுளை, மாம்பழம், பலாப் பழம், கரும்பு முதலியன வாசலில் குவிந்திருக்க, மாவிலை, குருத்தோலைத் தோரணமும் மலர் மாலை, மணி மாலைப் பந்தலுமாக விழாக் கோலம் களை கட்டியிருந்தது. பத்து மணிக்குப் பூசை ஆரம்பமாகும். அதை ஊருக்கு உணர்த்துவது போல் கோபுரத்து வெண்கல மணியின் கணிர் கணிர் ஓசை உரத்து ஒலித்தது. பூசகர் வெள்ளைத் துணியினால் வாயை மறைத்து புறங் கழுத்தில் முடிந்திருந்தார். கைகள் மட்டும் படையல் காரியங்களில் ஈடுபட்டிருந்தன. உதவிக்கு இருவர் அருகில் தேவையை உணர்ந்து பூசைப் பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
வெளி மண்டபத்தில் நின்று பறையறையும் கலைஞர் மூவரில் இருவரும் இளைஞர்கள். மூன்றாம வர், தம்பட்டம் தட்டுகிறவர் சற்றே வயதானவர். விழா வின் கதாநாயகர் போல் காட்சியளிக்கும் இவர்கள்
 

பச்சை சிவப்பு அகலக் கரை வேட்டி உடுத்தியிருந் தார்கள். அதே ரக சால்வை அரையில் சுற்றியிருக் கிறார்கள். வியப்பூட்டிய இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது? அரசியல், சமூக, கலாசார மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு ஒரு இளைஞர் அணி இயங்கி யதே. அந்நாளிலா? முன்னாளில் நான் கண்ட பேரிகை வாத்தியக் கலைஞர்கள் கரை இல்லாத மங்கலான வெள்ளை வேட்டியும் அதன் மேல் அதே நிறத்தில் ஒரு துண்டும் கட்டியிருப்பார்கள். இன்றைய காலம் இளைஞர் கைகளில், 羲
ஒரே தாளத்தில் அவர்கள் எழுப்பும் சத்தம் சூழலை அதிர வைக்கிறது. அறுபத்துநான்கு அரிய கலைகளில் ஒன்று தான் இப்பறை வாத்தியம். அவர்களின் கைகள் இயங்கும் நுட்பமும் ஓசையும் ஒரு பண்டைய மக்கள் கலாசாரத்தைப் புலப்படுத்துகிறது.
பன்னிரெண்டு மணியாகிறது. எண்ணெய்த் தீபங்களின் ஒளிவெள்ளம் கர்ப்பக்கிரகத்தில் நிறைந்து உள்ளது. வீரபத்திரர் விக்கிரகம் பளபளக்கிறது. வெளி மண்டபத்தில் இருப்போர் அந்த அற்புதக் காட்சி கண்டு கை கூப்பிக் கும்பிடுகிறார்கள். வெற்றிலை, பாக்கு, பழ வகை படையல் நடை பாதை தவிர்த்து படி வரிசையில் வைக்கப்படுகிறது. இடையிடையே இளநீர்க் குரும்பை கள் மூழ் சீவியனவாய், அவற்றில் கற்பூர வில்லைகள் வைக்கப்படுகின்றன. மண்டபத்தின் இரு கரையிலும் வாழை மடல்களில் கற்பூர வில்லைகள் வைக்கப்படு கின்றன. வெள்ளிப் பட்டி சுற்றிய பிரம்பு முதல் பாத படி (மிதியடி) வரை வாசலில் ஒரு புறம் சிறப்பிடம் வகிக்கின்றன. 藻、
பூசாரி கை மணி எடுத்து கணிர் கனிர் என சத்தம் எழ அடிக்கிறார். ஒரு தொண்டர் சங்கு எடுத்து ஊதுகிறார். ஒரு சிறுவன் சேமக்கலம் தட்டுகிறார். எல்லா கற்பூர வில்லைகளும் கொழுத்தப்படுகின்றன. புதிய ராகத்துடன் பறை முழங்குகிறது. கோபுரத்து மணி உச்ச தொனியில் ஒலிக்கிறது. உதவியாளர் கொடுத்த கற்பூர தீபத்தை வாங்கிய பூசாரி வீரபத்திரருக்கு நைவேத்தியம் செய்கிறார். தொடர்ந்து முக்கண் தீபம், பஞ்ச தீபம் எனப் பல விளக்குகள் வீரபத்திரருக்கு

Page 11
ஒளியூட்டின. இறுதிப் பேரொளி கோபுர வடிவில் அடுக்குத் தீபம். அதனை உதவியாளர் எடுத்து உறுதியாகப் பற்றி அவதானத்துடன் பூசகர் கையில் தருகிறார். அவர் இரு கைகளாலும் தீபத்தை ஏந்தி மெல்ல மெதுவாக மூல நாயகருக்கு ஒளியேற்றுகிறார். பக்தர்களின் அரோகரா ஒலி காற்றில் கலந்து கீதமா கிறது. அதேநேரம்பறை வாத்தியத்தின் நாதம் மற்றொரு ராகத்துக்கு மாறியது. அதன் அதிர்வும் வேகமும் அச்ச மூட்டுகின்றன. பூசாரி கையிலிருக்கும் தீபம் தளம்புகிறது. குறிப்பறிந்து தீபத்தை ஏற்றுக் கொண்டார் உதவியாளர். பூசாரி ஆடுகிறார். அவர் மீது கலையை ஏவி விட்ட பெருமை இந்தப் பொல்லாத பறை மேளக் கலைஞர் களைச் சாரும். அவரை ஒய விடாமல் ஆட்டுவிப்ப தற்கோ இன்னும் யாரையாவது ஆட்டுவிக்கவோ ஒரே பாணியில் தொடர்ந்து அறைகிறார்கள். என் அருகில் நின்ற ஒருவர் அடசிக் என்றார். தொப்பென விழுந்தார். எழுந்து ஓடினார். ஒரு தொண்டரிடமிருந்த தண்ணீர் செம்பை பறித்து நீரை தனது தலையில் கொட்டினார். செம்பை போட்டு விட்டு ஆடுகிறார். ஆடிக் கொண்டே கோயிலுள்ளே போகிறார். ஒரு பிரம்பு எடுத்து கழுத்தில் வைத்துக்கொண்டு ஆடி ஆடி வருகிறார்.
பலருடைய கவனமும் ஆடும் பூசாரியின் மேல். தெய்வம் ஆடுவது கலை. ஆட்டுவிப்பதும் கலை. அமைதியாய் நின்று பூசை செய்தவர் ஆச்சரியமூட்டும் ஆட்டம் ஆடுகிறார். ஆடிக் கொண்டே பறையறையும் மூவருக்கும் முகத்தில் தண்ணீர் வீசி, ஈர நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்கிறார். பக்தர்கள் சிலருக்கும் அதே போல் அருள் புரிகிறார். வாய் திறந்தாரில்லை. கோயில் உள்ளே விரைகிறார், பூண் பிரம்பு, நீள் பிரம்பு சங்கு வெள்ளி வேல், சூலம், சிலம்பு, வளையல், பாத படி, கத்தி, கைக் கோடரி இன்ன பிற ஆயுதங்களிலிருந்து கைக் கோடரியை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு வீர நடையில் திரும்பி வருகிறார். கிழக்கு வானம் பார்த்து அதனை ஓங்கி எறிவது போல் மூன்று முறை ஓங்கி விட்டு உதவியாளர் கொடுத்த மூன்று எலுமிச்சைப் பழங்களை அத்திசையில் வீசுகிறார். அடுத்தவரின் ஆட்டம் என்னாச்சு? ஒ. அவர் ஆடிக் களைத்துப் போய் அந்தா இருக்கிறார். ஒரு துன் அருகில்,
வெளிமண்டபத்தின் இடதுபக்கம் ஒன்று, வலது புறம் மரநிழலில் ஒன்று, முற்றத்தில் மருத மரம் அடியில் ஒன்று, அரச மரத்தின் அருகில் ஒன்று எனக் கோயில் கொண்டிருக்கும் துணைத் தெய்வங்களுக்கும் பூசாரி ஆடிக் கொண்டே, ஏற்கனவே வைக்கப்பட்ட படையல் ஒழுங்கில் கற்பூர தீபம் காட்டுகிறார். நிறைவாக, வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர்க் குரும்பை, எலுமிச்சை பழம் எடுத்துக் கொண்டு வெளியே போகிறார்கள். வேலியோரம் அவற்றை தரையில்
ஜீவநதி

படைத்து கற்பூரம் கொழுத்தி எலுமிச்சை பழம் வெட்டி கழிப்பு செய்து விட்டுத் திரும்புகிறார்கள். இனி இரவு மடை பொங்கல். முற்றத்தில் வரிசையாக புதுப் பானைகள் வைத்து புத்தரிசி இட்டுப் பொங்குவார்கள். இரவுப் பூசையின்போது பல கலை ஆட்டங்களும் காணலாம்.
பகல் பூசை நிறைவுற்றது. பக்தர்களுக்கு திரு நீறு பிரசாதம் வழங்கப்பட்டது. அடுத்து அன்னதானம்.
பந்தி வைக்க வெளி மண்டபம் தயார் செய்யப்படுகிறது.
ஆண்கள் ஒரு புறம் பெண்கள் எதிர்ப் பக்கம் வரிசையாக, அமர்ந்திருக்க அவர்கள் முன்னால் வாழை இலை வைக்கப்பட்டு சோறு கறி பரிமாறப்படு கிறது. பருப்பு வைக்கும் வரை பார்த்திருக்கிறார்கள். என் கண்கள் பறை வாத்தியக் கலைஞர்களைத் தேடுகின்றன. இசையுலகில் தனியிடம் வகிப்பது அவர்களுடைய கலைப் பணி பல நூறு இசை வாத்தியக் கருவிகள் இசையுலகில் புதிது புதிதாய்" தோன்றிய பின்னரும் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கலையாக பறை விளங்கும் விந்தையென்ன ஒரு பண்டைய கலையை இன்றைய இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் அரங்கேற்றும் ஆற்றல் கண்டு என் நெஞ்சம் மகிழ்ந்தது. அவர்கள் ஒரு மரநிழலில் பாயில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நான் உண்டு முடித்து எழுந்து போய்கைகழுவும் நேரம் அவர்களும் எழுந்து வந்தார்கள். அவர்களுடன் பேசும் ஆவல் உந்த கூடவே சென்று அவர்களுடன் அமர்ந்தேன்.
தம்பிநீங்கள் எந்தஊர்?" சொன்னார்கள். "நீங்கள் நன்றாக வாசிக்கிறீங்கள். இளம் வயதில் இந்த வாத்தியத்தைப் பழகி உழைக்க ஆரம்பித்திருக்கிறீங்களே நீங்கள் பள்ளியில் எது வரை படித்திருக்கிறீர்கள்?."
"நான் ஏ.எல்." என்றான் தலைமைக் கலைஞன்.
"நான் ஓ.எல். மற்ற இளைஞன் சொன்னான். "நான் ஓ.எல். எடுத்தனான். பெயில்." என்றான் தம்பட்டக் கலைஞன்.
நீங்கள் ஏன் தொடர்ந்து படிக்கவில்லை.? "பண வசதி இல்லை. அய்யா. எங்களுக்கு அப்பா இல்லை. எங்கட உழைப்பு குடும்பத்துக்குத் தேவை. s:
இந்த தொழிலுக்கு தொடர்ந்து அழைப்பு வருமா? இந்த வருமானம் போதுமா?."
"இப் பொங்கல் காலம். ஆவணி வரையும் நல்ல வருமானம். அதன் பிறகு கூலி வேலைக்கும் GB TG86b.*
நீங்கள்மூன்று பேரும் ஒரேகுடும்பமா?.

Page 12
ஒ. சகோதரர்கள்." "நீங்கள் சா வீட்டுப் பணிக்கு போற g566 peout?..." ঠুঃ
*போறது தான். அதுக்கெண்டு வேற மேளம் இருக்கு. ஆனாலும் இப்ப எல்லாரும் எங்களைக் கூப்பிடுறதில்லை. சிலர் பான்ட் வாத்தியத்தை விரும்பி பிடிக்கிறார்கள். வேறு சிலர் பறை இல்லாமலே அலுவலை முடித்துக் கொள்கிறார்கள். காலம் அப்பிடி.
“உங்களுடைய வாத்தியம் உயிரோட்ட மானது. ஆச்சரியமூட்டும், இராகம், ஒசை. ஒரு பழம் பெரும் கலையை நீங்கள் காப்பாற்றி வருகிறீர்கள். பாராட்டுகிறேன்."
நன்றி அய்யா. உங்களைப் போன்ற நல்லெண்ணம், நல்ல மனம் கொண்ட பெரியார்களின் பாராட்டுக்களால் நாங்கள் உற்சாகமடைகிறோம். நன்றி.”
ஒரு முச்சக்கர வண்டி வந்து வாசலில் நின்றது. அதைப் பார்த்ததும் மூவரும் நாங்கள் புறப்படுகிறோம் என்றார்கள் இருவர் தங்கள் கைப் பையை எடுத்துக் கொண்டு கோவிலின் பின் புறம் போனார்கள். சேட்டும் களிசானும் அணிந்து கொண்டு திரும்பி வந்தார்கள் தம்பட்டக் கலைஞன் மட்டும் அதே வேட்டியுடன் ஆயத்தமானான்.இனி இரவு வேள்விக்கு வருவார்கள்.
அன்ன தானப் பந்தியில் அமர்ந்து பசியாறிய பின் அங்கும் இங்குமாய் இருந்து இளைப்பாறுகிறார்கள். "இன்னும் சாப் பிட வருவார்கள். சோறு கறி எஞ்சியிருக்கு அதற்குப் பொறுப்பான பெண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாப்பிட்டு வீடு திரும்பும் சில பேருக்கு பொதிச் சோறும் கொடுத்து அனுப்புகிறார்கள்.
நேரம் மூன்றரை மணி "வெயில் தணியட்டும், போகலாம்" என்றெண்ணியவனாய் வடக்கு வீதியில் ஒரு மர நிழலில் அமர்ந்தேன். தேமா மரம் வெள்ளைப் பூக்களுடன் தலைக்கு மேல் நிழல் குடை விரித்திருந்தது. என் கண்கள் கிழக்கே தெரிந்த தென்னந் தோப்பை தரிசித்தன. ஐதாக பனையும் இடையிடையே கொய்யவும் கிஞ்ஞாவும், நிலை தளம்பாது நிறைவான குலை களுடன் நிற்கும் தென்னைகள், வட்டு விட்டு விழுந்து விடும் நிலையில் தொங்கும் பனங் காய் குலைகள், பற்றைக் காடும் பாழடைந்த இல்லங்களும் காணும் மண்ணில் அதிசயமாய் ஒரு பொய்கை,
“என்ன தம்பி தனிமையில இருக்குறீர்?" கேட்டவாறு என் அருகில் வந்தமர்ந்தார் ஒரு பெரியவர். திரும்பிப் பார்த்தேன். அவர் நெற்றியையும் நெஞ்சையும் கைகளையும் திருநீறும், சந்தனமும் அலங்கரித்தன. அவர் தோற்றம் எனக்கு முன்னாளில் அறிமுகமாயிருந்த பூசாரியை நினைவூட்டிற்று. இவர் தானோ அவர்? என்ற ஐயமும் எழுந்தது. பார்த்தால் நல்லவராய் தெரிகிறது. கேட்டுவிடலாம் எனத் துணிந்தேன்.
ஜீவநதி 1
 

"அய்யா. முன்னாளில் இந்தக் கோவில் பூசாரியாக இருந்தாரே வேல்சாமி என்று. இன்னும் இருக்கிறாரா?”
அவர் என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் என்னிடம் கேட்டார்: "தம்பி எந்த ஊர்?.
மீண்டும் சந்தேகம், இவர் தான் அவரோ? சிறு தயக்கத்துடன் பதிலளித்தேன் : நான் பக்கத்துர் சந்திரபுரம். பொங்கல் பார்க்க வந்தனான். நான் விசாரித்தவர் இந்தக் கோயிலுக்கு விளக்கு வைக்கிறவர்.”
"அவர் செத்துப் போனார். போய் ஆறு வருசமாச்சு.”
"அப்படியா. நான் கன காலம் ஊரில இல்லை. வெளியூரிலை இருந்திட்டு போன மாசம் தான் திரும்பினனான். அய்யா. இந்தக் கோயில் இருக்கிற காணியும் அவருடையதுதானே?.
ஒ. இது மட்டுமில்ல. கிழக்காலே தெரிகிற இருபது பரப்பு தென்னங் காணியும் அவற்ர தான். அங்கால தோட்ட நிலம் ஆறு பரப்பு. மேற்குப் பக்கம் இரண்டு துண்டு. இரண்டும் முப்பது பரப்பு. ஒன்டு வித்திட்டார். மற்றது மூத்த பிள்ளைக்கு சீதனமாய் கொடுத்தார்."
"அவருடைய வீடு தோட்டம் நடுவில் இருந்த ஞாபகம். இப்போ அவற்ரபிள்ளையன்."
"அவர் போன பிறகு தோட்டம் செய்ய ஆட்களில்லை. மனுசி இங்காலை ஒரு சின்ன வீடு கட்டி. அந்தா தெரியுது வெள்ளையாய். இரண்டு பெண் பிள்ளையளோடை இருந்தவ. அவவும் நாலு மாசத்துக்கு முன்னம் இறந்திட்டா. இப்ப பெண் பிள்ளைகள் இரண்டும்தான் அதில இருக்குதுகள்.
தனியாவா? சகோதரர்கள் இல்லையா?. "ஆண் சகோதரம் ஒண்டு தானே. அவனும் கலியானம் செய்த பிறகு டெங்கு காச்சலால செத்திட்டான். பெண் பிள்ளையன் நான்கு. இரண்டு பேருக்கு அவர் இருக்கிறபோதே கலியாணம் செய்து வைச்சார். இங்கே இருக்கிற மூத்தவளுக்கு மாப்
DH இதழ் 41

Page 13
பிள்ளை தேடி அவர் அலுத்துப் போனார். வயசும் நாப்பத்தைஞ்சு. மற்றவளுக்கு நாற்பது இருக்கும்."
"இந்தப் பிள்ளைக்கு ஒரு கலியாணத்தை வைக்கலாமே அய்யா. இந்நாளில் பெண்கள் நாற்பத்தை கலியாணம் முடிக்கிறார்களே. மூத்தவளுக்கு உ யிருக்கும். சீதனத்துக்கும் காணி, வீடு இருக்கே. உங் போன்ற ஊர்ப் பெரியவர்களின் கடமை. ஒரு சமூகத் ெ என்று நான் சொன்னால் அது தவறு என்பீர்களா, அய்யா?.
அவர் மெல்லச்சிரித்தார். நான் மெளனமாய் அவர் முகம் பார்த்திருந்தேன். ஒரு கணம் கண்மூடி. கண் திறந்தார். தம்பி. அந்த இடத்தில் ஒரு சிக்கல். ஒரு வேரூன்றியிருக்கிறது. உம்முடைய ஆர்வத்தையும் அறி நான் மெச்சுகிறேன். அதே நேரம் என்ன சிக்கல் எ சொல்லுகிறேன் கேளும். தாய் இருக்கிறபோதே மூன்று மதம் மாறினார்கள். அது யேசுவை வணங்குற ஒரு பிரிவாம். பொது மக்கள் கூடுகிற இடத்தில போய் பிரசங்கம் பன்னிறதும் மதப் பிரசார புத்தகம் விற்பதும் சேவை, தொண்டு என்று சொல்லிக் கொண்டு இந்தப் யளும் போய் வருகினம். நூறு வீதம் சைவ மக்கள் வாழு இது. இங்கிருந்து ஒரு குடும்பம். இள வயதிலிருந்ே கோயிலை பராமரித்து பூசித்து வந்த வேல்சாமியின் பிள் தகப்பனையும் மதிக்கவில்லை. இன சனம் என்ன சொல்லு என்றும் கவலைப்படவில்லை. யார் தூண்டுதலாலோ மத அயலவரின் வெறுப்புக்கு உள்ளாகிப் போன நிை அவர்களின் அலுவல்களில் யாரும் தலையிடத்துணிகிறதில்
"அய்யா. மதம் மாறுகிறது. ஒன்றும் குற்றமில்லை. அதை விட மோசமான மாற்றங்கள் கண் ( நடந்து கொண்டிருக்கு. நீங்கள் இந்த சிறு மாற்றத்தைக் க காட்டி அந்தப் பிள்ளைகளை ஒதுக்கி வைக்கிறது அநா ஒரு அறிவாளி தனக்குச் சரி எனத் தோன்றும் காரியத்ை எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நிறைவேற்றத் து செயலாற்றுவான். இவ்விடத்தில் எனக்குள் இன்னொரு எழுகிறது. வேல்சாமி இறந்த பிறகு இந்தப் பிள்ளை வேண்டிய அன்பாதரவு கிடைத்ததா? அவர் வாழ்ந் காலத்தில் நிலவிய செல்வாக்கு அற்றுப் போக. அவர்கள் 3 நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். அதனால் அரவணைக் அண் பு மதத்தில் இணைய வேண் டிய நிர் ப் ஏற்பட்டிருக்கலாம். எங்கே வசதி வாய்ப்புக் கிடைக் அங்கே தாவுதல் மனித இயல்பு மதத்தின் பெயரால் மண்ணிலே பிறந்து வளர்ந்து வாழ எத்தனிக்கு குழந்ை வாழ வைக்காமல் ஒதுக்கி வைக்கும் மனிதம் வாழும் ம என்று நான் சொன்னால் பெரியவர் உங்களுக்கு என் மீது வரலாம்."
"இல்லை. தம்பி நீர் கூறுவதெல்லாம் நிய கருத்துக்கள் தான். நான் ஏற்றுக் கொள்கிறேன். சமுதாயம் ஒப்புக் கொள்ள வேண்டுமே. ஒத்துழைப்பு இ6 தனி ஒருவனால் ஆகிய காரியமா இது?.
ஜீவநதி ༤༤---

/Z4/WAY. lí2í IlíFGf
அன்று பட்டங்களாய். விண்ணிலே பல வண்ணங்கள் கலைஞர்களின் கைவண்ணங்கள்
இன்று பட்டங்களுக்காய். கலை கற்றலென்று கலைந்தோம் எண்ணங்கள் சிறகடிக்க கையில் போத்திலுடன் மண்மோதும் என் கன்னங்கள்
மனதோடு குறுகும் வாழ்க்கைகள் கனதியாய் காே நீளும் வார்த்தைகள்
சுயங்கள் தொலைந்து பயங்கள் பற்றி நிற்க அபயம் கொடுக்கும் அபாயங்கள்
நீ யார்? உனக்கென்ன அடையாளம்? சிரிக்க வைக்கும் கோணங்கள் வெளியார் கேட்க மட்டும்
திகைக்க வைக்கும் பானங்கள்.
ஒய்ந்து போகும் வேளை ஒய்யாரமாய் உண்ணலாமென்றுதான் பாய்ந்து மேய்ந்து படித்தோம் ஆய்ந்து ஓய்ந்ததெல்லம் அந்நிய அம்சங்கள் தான்.
நாம் எழுந்திருக்க - பின் எழுந்து நடக்க. ஏதாவது உபாயமிருக்குமா? உழுதுண்டு உயர்ந்த மண்ணில் தொழுதுண்டு தொண்டு செய்து புளுவாய்ப் போன எண் மனதைப் பழுதுபார்க்க பரிகாரம் உண்டா?
அன்று நூல்களில்லாமல் பட்டங்களில்லை - இன்று பட்டங்களே நூல்களிடம் விலை பேசுகின்றன
ஏதோ பட்டங்கள் பறக்கின்றன நூல்களை நம்பி.
இதனஞ்சயன்
இதழ் 41

Page 14
தோற்ற மயக்கங்கள் பற்றி தத்துவார்த்தமாய் நிறையவே பேசப்பட்டுள்ளது. தோற்ற மயக்கத்தினால் பாம்பாகத் தெரியும் கயிறுபற்றி அத்வைதம் பேசும். பிரமமே உண்மைப் பொருள் எனக் காண இயலாத வகையில் கயிறாகக் கிடக்கும் இவ்வுலகைப் பாம்பாக மயங்கும் ஆன்மாக்கள் பற்றி தின்று கொழுத்த மடத்துச் சாமிகள் புலம்பட்டும்; உங்கள் முன்னே இருக்கும் வீடும் துணையும் பிரச்சினைகளும் பொய்யாகிவிடுமோ என பாரதி கேட்டதை அறிவோம். எமக்கு முன்னால் விசுவ ரூபங்கொண்டுள்ள யதார்த்தங்களும் பிரச்சினைகளும் தொடர்பிலான தோற்ற மயக்கங்கள் பற்றி இக்கட்டுரை (3Ljörth.
நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் கானோம் என்ற மரபுத் தொடர் இது தொடர்பில் நினைவுக்கு வரும். துரத்தும் நாயிடமிருந்து தப்புவதற்கு கல்லைத் தேடும்போது கிடைப்பதுமில்லை, கொட்டிக்கிடக்கும் கல் குவியலைக் காணுகையில் நாய் எதுவும் துரத்துவதுமில்லை என்ப தாக இதற்கு பொதுவழக்கில் பொருள்கொள்வது மரபு. இதுவும் ஒரு தோற்ற மயக்கமே. இங்கு மறை பொருளாய் உறைந்துள்ள உண்மை தெரிந்த பின்னர் நாய் துரத்துவதோ கொட்டிக் கிடக்கும் கற்களோ காணாமல் ஓடிவிடும்.
கைதேர்ந்த சிற்பியால் தத்ரூபமாய்ச் செதுக் கப்பட்ட நாயின் சொரூபத்தை வறட்டுவாத நோக்கில் அணுகும்போது, அது உண்மையில் வெறும் கல்தானே என்ற எண்ணம் தோன்றும் அழகியல் நோக்கு மேவிய கலைப்பித்தருக்கு அது உயிர்ப்பான நாயாகவே தோற்றம் காட்டிகல் கண்ணில் படாமலேபோகும். சமூகப் பார்வைகொண்ட யதார்த்தவாதிக்கு கல்லில் உண்மைத்
ஜீவநதி
 

தோற்றமுடைய நாய் போன்ற அழகிய சிற்பம் தெரியும். அகநிலைவாதத்தப்பெண்ணங்களுக்கு இடமளிக்காத இந்த சமூகப் பார்வை கைவரப்பெறாத முந்திய இரு தோற்றங்களும் மயங்கிய மனநிலையின் பாற் பட்டவை.
எமது பிரச்சினைகளின் தீர்வுக்கு மார்க்சி யத்தை பிரயோகிப்பதில் வெளிப்படும் தோற்ற மயக்கங்களைக் கண்டு இறுதியில் சரியான மார்க்சிய அணுகு முறையை வந் தடைவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்ள இக்கட்டுரை முயலும்.
எமது சமூகம் எதிர்நோக்கும் சாதிய தேசியப் பிரச்சினைகளைப் போதியளவு கவனத்திற் கொள்ளா மல் மார்க்சியத்தை வறட்டுத்தனமாக வர்க்கப் பிரச்சினைக்குரியதாக மட்டுப்படுத்திய தோற்றமயக்கம் எம்மிடமிருந்தது. அத்தகைய வறட்டுத்தனத்தில் மார்க்சியத்தை வெறும் வர்க்க பேதம் பற்றி மட்டும் பேசும் கல்லாக்கியபோது சாதியவாதிகளும் தேசிய வாதிகளும் தத்தமக்கானவையே உண்மைத்தோற்ற மாய்க் காட்சிப்படுத்தி ஏனையவற்றைக் காணவிய லாமலாக்கி முன்னெடுத்த செயற்பாடுகள் மென்மேலும் பிரச்சினைகளை இடியப்பச் சிக்கலாக்குவதற்கு வாய்ப்பானது. இலங்கையில் இனத் தேசியவாதமும் இந்தியாவில் தலித்திய வாதமும் இவ்வகையில் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் அவற்றால் மேலும் சிக்கலாக்கப்பட்ட நெருக்கடிகளிலிருந்தும் மீட்சிபெற்று தீர்வினை எட்டுவதற்கு மார்க்சியத்தைப் பிரயோகிக்க இயலுமா?
மார்க்சியத்தை வெறும் வர்க்கப் பிரச்சினைக் குரியதாக குறுகித் தறித்து அணுகும் போது சாதியப்
இதழ் 41

Page 15
பிரச்சினையினதும் தேசியப் பிரச்சினையினதும் முழுமைப்பரிமாணங்களைக் காணத்தவறுவோம்; மார்க்சியம் கண்டுகாட்டிய வர்க்கப் பார்வையில் சாதி தேசியப் பிரச்சினைகளை அணுகாமல் சாதியவாத தேசியவாதப் பார்வைகளில் தீர்க்க முயன்ற முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயுள்ளமை தெளிவு. சாதி தேசியம் என்பவற்றை ஏன் வர்க்கப் பார்வையில் அணுக வேண்டும்?
அடிப்படையில் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள் எவரோ, அவர்களே ஆளும் வர்க்கங்களாக அமைந்து உடைமையற்று உற்பத்தி சக்தியை விற்கும் உழைப்பாளர்களை சுரண்டுகின்றனர். ஏதோ சில உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒரு பகுதி சுரண்டலுக்கு உள்ளாகும் மத்திய தர வர்க்கங் களும் உள்ளன. இன்றைய உற்பத்தி சாதனங்களும் உற்பத்திக் கருவிகளும் உற்பத்தி சக்தியின் அபார வளர்ச்சியும் முற்றிலும் சமூக உழைப்பின் பேறானவை; பல்வேறு வழிகளால் அத்தகைய சமூக உடைமை சில தனிநபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விருத்திக்கு பிரதான காரணியான பாட்டாளி வர்க்கம் இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் தனது உற்பத்திசக்தியை விற்று இவற்றை உருவாக்கியிருந்தது. அந்தப் பாட்டாளி வர்க்கம் புரட்சிவாயிலாக தனியுடைமையைத் தகர்த்து சமூக உடைமையாக மாறவேண்டிய நியாயப்பாட்டினை சாத்தியமாக்கும் போது அனைத்து வகையான ஏற்றத் தாழ்வுகளும் அற்றுப்போகும்.
சுரண் டலின் வடிவங்களாயே தேசியப் பிரச்சினைகளும் சாதியப் பிரச்சினைகளும் உள்ளன. அந்தவகையில், சுரண்டல் ஒழிக்கப்படும்போது தேசிய சாதி ஒடுக்குமுறைகளும் அற்றுப்போய்விடும். பாட்டாளி வர்க்கப் புரட்சிவாயிலாக பூரண சமத்துவத்தை வென் றெடுக்கும் இலக்கினை அடையவொட்டாமல் திசை திருப்பும் நோக்குடன் முதலாளித்துவ சக்திகள் இரண்டாம் நிலைக்குரிய தேசியவாத சாதியவாத முரண் பாடுகளை தூண்டிவிடுவதாகக் கருதப்பட்டதுண்டு.
ஆயினும், பாட்டாளிவர்க்கப் போராட்டங்கள் தீவிரமாக முனைப்படைந்திருந்து மார்க்சியம் வெளிப் படக்காரணமாக இருந்த மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சிவாயிலாக சோஷலிஸத்தை வென்றெடுக்க இயலவில்லை. லெனினிஸம் என்ற விருத்தியை எட்டிய கிழக்கு ஐரோப்பாவினதும் ஆசியா வினதும் பகுதிகளையுடைய ருஷ்யாவில் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் விவசாய வர்க்கத்தையும் ஐக்கியப் படுத்தி ருஷ்யப்பாட்டாளி வர்க்கத்தால் முன்னெடுக்கப் பட்ட புரட்சிவாயிலாகவே சோவியத் யூனியன் வெற்றி கொள்ளப்பட்டு சோஷலிஸத்தை கட்டமைத்துக் காட்ட முடிந்தது. இதற்காக மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எழுப்பிய "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்ற
ஜீவநதி


Page 16
காண்கிறோம். முதலாளித்துவத்தின் உச்சநிலை யடைந்த ஏகாதிபத்திய நாட்டினால் ஒடுக்கப்பட்ட தேசம் முழுமையும் சமூக வர்க்கமாகச் சுரண்டப்படுகிறது. இவ்வாறு சமூக வர்க்கமாயுள்ள ஒடுக்கப்பட்ட தேசம் ஏகாதிபத்தியத்திலிருந்து பெறும் விடுதலை உலக முதலாளித்துவத்தின் ஒரு பிடியைத் தகர்ப்பதாகும்.
தனது நாட்டில் முதலாளித்துவத்தைத் தகர்ப்பதற்கு அவசியமான போர்க்குணத்தை ஏகாதி பத்திய நாட்டின் பாட்டாளிவர்க்கம் கையூட்டுகளினால் இழந்து போய்விட்டாலும், அதன் முன்னணிப் படை யான கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடு தலைக்கு தன்னாலான பங்களிப்பை நல்கியுள்ளது.
பெறும்போது மட்டுமே சிதைக்கப்பட்ட தமது நாட்டின் போர்க்குணம் மீட்டெடுக்கப்பட்டு தமது விடுதலையை யும் வெற்றிகொள்ள இயலும் என்கிறவகையில் அவர் களுடைய நாட்டை முன்னிறுத்திய "தேசிய நலனை" விடவும் சர்வதேச நலன் அவர்களுக்கு அவசியமான தாகிறது. ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலை இவ்வகை யில் சோஷலிஸ் நிர்மாணத்தின் பகுதியாக அமைவ தால் இங்கு தேசப்பற்று சர்வதேச நலனின் பகுதியாக முடிகிறது.
அதேவேளை இந்தத் தேசவிடுதலை எந்த வர்க்க நலனை முன்னிறுத்தி வென்றெடுக்கப்படுகிறது என்பதிலேயே வரலாறு முன்னோக்கி நகர்கிறதா இல்லையா என்பது அமைந்திருக்கும் என்பதையும் கவனத்திலிருத்துவது அவசியமாகும். முதலாளித்துவ நோக்கில் விடுதலை பெற்ற இலங்கை, இந்தியா போன்ற தேசங்கள் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டமைத்து முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடக்காண் கிறோம். உடைமைகள் ஏதுமற்ற பாட்டாளிவர்க்கம் மட்டுமே சகல வர்க்கங்களது இருப்பையும் தகர்த்து புத்துலகம் படைக்கும் புதிய வரலாற்றினைப் படைக்க வல்லது என்கிற வகையில் மக்கள் சீனம், கியூபா போன்ற பாட்டாளிவர்க்கச் சிந்தனையை முன்னெடுத்த தேசிய விடுதலைகளே உள்நாட்டு நெருக்கடிகள் இன்றி மக்களினதும் தேசிய இனங்களினதும் பிரச்சினை களைத் தீர்த்து வரலாற்றை முன்னோக்கி நகர்த்திச் செல்லக்காண்கிறோம். அந்த வகையில் சோஷலிஸத் துடன் இணைந்த தேசியமே ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டவல்லதாயுள்ளமை தெளிவு.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சம வாய்ப்புகள் இருந்தபோதிலும், இந்தியாவினுள் தேசிய இனப் பிரச்சினைகளும் ஊழல்களும் மலிந்து அதன் வளர்ச்சியைப் பாதிக்கின்றன; தவிர, அயல்நாடுகளில் தலையீடு செய்து, அவற்றின் சுயாதிபத்தியத்தைத் தகர்த்து தனது அபிலாஷைகளை நிறைவேற்ற இந்திய ஆளுந்தரப்பு தொடர்ந்து முயற்சித்தவண்ணமுள்ளது.
ஜீவநதி

சொந்த நாட்டினுள் தனது மக்களை ஒடுக்கியவாறு, ஏனைய தேசங்கள் மீதும் மேலாதிக்கம் புரிந்த வண்ணமே இந்திய ஆளும்கும்பல் முன்னேற்றத்தை எட்ட முயல்கிறது. மாறாக, சோஷலிஸ் சீனம் அதிக விலையேற்றமற்ற வணிகத்தை ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் அதேவேளை, அந்தந்த நாடுகளின் இறைமையை மதித்து அவற்றின் அரசியலில் தலை யிடாத வகையிலான உறவையே பேணுகிறது. தனது மக்களினதும் தேசிய இனங்களதும் சுயநிர்ணயத்தை மதிக்கும் பாட்டாளிவர்க்க நலன்சார்ந்த சோஷலிஸ்ப் பண்பின் பேறு இது.
ஆக, சமூக ஒடுக்குமுறையாக உள்ள தேசியப் பிரச்சினையின் தீர்வில் எந்த வர்க்க நலன் - நோக்கு என்பன முன்கையெடுத்தன என்பது மிகுந்த முக்கியத்துவத்துடன் கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. பாட்டாளி வர்க்கப்பார்வை என்பது உலகப்பாட்டாளி வர்க்க இயக்க அனுபவங்களின் தொகுப்பான மார்க்சிய லெனினிய மாஓ சேதுங் சிந்தனையைக் கற்பதன் வாயிலாகவும், அதன் வழி காட்டலோடு சொந்தச்சமூகப் பிரச்சினைத் தீர்வுக்குப் போராடுவதன் வாயிலாகவும் புடமிடப்படுவதாகும். பாட்டாளிவர்க்கம் தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுக்கும் போது அதன் வாயிலாக எமது நாட்டின் பாட்டாளிவர்க்கச் சிந்தனை விருத்தி யுற இயலும்; சமூக வர்க்கமாக ஒடுக்கப்படும் பிரிவினர் போராடும் சூழலில் அந்தப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கப் பார்வையில் எவ்வாறு அணுகி எத்திசை வழியில் போராட்டத்தை முன்னெடுப்பது என்பதே அவசியம் பெறும். அவ்வகையில் தேசிய இனப் பிரச்சினை இலங்கையில் முதன்மை பெற்றுள்ளது.
11
இலங்கைச் சமூகம் பிரித்தானிய ஏகாதிபத்தி யத்திடமிருந்து விடுதலை பெற்றபோது இலங்கை தேசியம்" ஓரளவுக்கு உயிர்ப்புடையதாயிருந்தது. மிகுந்த விலைகொடுத்த போராட்டங்கள் வாயிலாக விடுதலையை வென்றெடுத்த இந்தியாவில் இந்தியத் தேசியம் உணரப்பட்ட அளவுக்கு இல்லையெனினும் இலங்கைத் தேசிய உணர்வு இங்கே முற்றாக இல்லாமலும் இல்லை. இந்தியத் தேசியக்கருத்தியலின் தாக்கத்தினாலும் இங்கு இலங்கைத் தேசியம் அர்த்த முடையதாகியிருந்தது. அதைவிடவும், எமக்கான புவியியலும் பொருளியல் நலனும் அதற்கான உயிர்ப்பை வழங்கியிருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே முதன் முதலில் வணிக நாட்டத்தைப்பெற்று சிங்களச் சமூகத்தி லிருந்து உருவாகிய தேசிய முதலாளிவர்க்கம் உடனடி யாகத் தனக்கான போட்டியை முஸ்லிம் வணிகர் களிடம் முகம்கொள்ள நேர்ந்தது. அந்தவகையில்
இதழ் 41

Page 17
முதல் இனக்கலவரம் 1915இல் முஸ்லிம்களுக்கு எதிரான தாக அமைந்தது. முஸ்லிம்களது அரசியல் கோரிக்கை யை முன்னெடுப்பதற்கு ஏற்றதாக சட்டசபையில் தமக்கான பிரதிநிதித்துவத்தை இஸ்லாமியர்கள் கோரிய போது, ஒரேமொழியைப் பேசுகிற வகையில் தாமே அதனைப் பிரதிபலிக்க இயலும் எனக்கூறி இலங்கைத் தமிழர் முஸ்லிம்களுக்கு எதிரான நிலை எடுத்தமையால் சிங்களப் பேரினவாதிகளுடனேயே இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் கூட்டுச் சேர்ந்திருந்தனர். அவ்வகையில் இலங்கைத் தேசிய உணர்வே இலங்கைத் தமிழர்களிடம் மேலோங்கியிருந்தது.
இரண்டாவது இனக்கலவரம் முப்பதுகளில் இந்திய வம்சாவழித் தொழிலாளர்களுக்கு (குறிப்பாக துறைமுகத் தொழிலாளர்களாய்ப் பெரும்பான்மையி னராக இருந்த மலையாளிகளுக்கு) எதிரானதாக இடம்பெற்றது. சிங்களத் தொழிலாளிவர்க்கத்திடமே இலங்கைத் தேசியத்தைவிட சிங்களத் தேசியம் முனைப்புறத்தொடங்கியதன் அறிகுறி இது. அப்போது அந்த இந்திய வம்சாவழித் தொழிலாளர்களை அணி திரட்டிய நடேசய்யர் இலங்கை எமது தாயகம் என முழக்கமிட்டு, இலங்கைத் தேசியக் கருத்தியலை இந்திய வம்சாவழித் தொழிலாளர்களிடம் விதைக்கத் தொடங்கியிருந்தார்.
சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கி, சிங்கள மக்களுட்பட அனைவரை யும் பாதிப்படையச் செய்வதனை முதன்முதலில் இனங் கண்ட தலைவராக நடேசய்யர் திகழ்ந்தார். சிறுதேசிய இனங்களில் பெரும்பான்மையினராகவும், பெரும் தொழிலாளர் பட்டாளமாயும் விளங்கிய இந்திய வம்சா வழித் தோட்டத் தொழிலாளர்களை அவர் ஸ்தாபன மயப்படுத்தி அரசியல் விழிப்பூட்டினார். பாரதி வளர்த் தெடுத்த இந்தியத் தேசியம்- தமிழினத் தேசியம் என்பன இணக்கமுற்ற வடிவில், சாதியத் தகர்ப்பும் பெண் விடுதலையும் கொண்டதான வீரியமிக்க கருத்தியலைக் கையேற்றவராக நடேசய்யர் இங்கு இயங்க முற்பட்ட போது தமிழகத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய பெரியாரித்துடனும் உறவுடையவராக இருந்தார். பின்னர் "இந்திய வம்சாவழித் தமிழர்” என்ற அடையாளத்தை ஒழித்து "மலையகத் தேசிய இனம்” என்பதாய் ஆகும் இலங்கையர் என்பதற்கான அடையாளங்கொள்ள ஏற்ற கருத்தியலை நடேசய்யர் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பரப்பினார். மலையக மக்களது தேசிய நலனைச் சிங்களப் பேரினவாத சக்திகளிடமிருந்து வென்றெடுக்க முனையும் போது இனவாதம் மேலோங்கி விடாத வகையில் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் வலுவான ஐக்கியத்தைப் பேணினார்.
இத்தகைய பலம்பொருந்திய தேசிய இனத்தை வலுவிழக்கச் செய்துவிட வேண்டும் என்ற எத்தனிப்பை
ஜீவநதி

பெரு முதலாளிவர்க்க சிங்களப் பேரினவாதம் முன்னெடுத்தது. மலையக மக்களின் குடியுரிமைப் பறிப்பு சுதந்திர இலங்கையில் சிறு தேசிய இனங்களுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலாய் அமைந்தது. இதனையும் பெருமுதலாளிவர்க்க நலன் பேணும் இலங்கைத் தமிழ்த்தலைமை அமைச்சரவை யில் அங்கம் வகித்தவாறு ஆதரித்தது என்பது பெரும் வரலாற்றுத்துயர். பின்னர் 1962இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரால் தேசிய முதலாளித்துவச் சிங்களப் பேரினவாதம் மலையக மக்களில் கணிசமா னோரை இந்தியாவுக்கு நாடுகடத்தியபோது, தொகை ரீதியில் சிறுதேசிய இனங்களில் முதல்நிலையினர் என்பதையும் மலையக மக்கள் இழந்தனர். இத்தகைய இரு நடவடிக்கைகளினாலும் அவர்களது அரசியல் ஆளுமை முற்றாகத் தகர்க்கப்பட்டு நாலாம் இடத்துக்குத்தள்ளப்பட்டனர்.
அடுத்துப் பெரியதாக இருந்த இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான பேரினவாதத்தின் தாக்குதல் எழுபதுகளில் தொடக்கம்பெற்று, எண்பதுகளில் உள்நாட்டு யுத்தம் என்ற கோரவடிவத்தை எடுத்தது. அதற்கு எதிராகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத் தமிழ்த் தேசியம் ஐக்கியப்படுத்தவேண்டிய சிங்கள் உழைக்கும் மக்களோடு கைகோர்க்கத் தவறியது மட்டுமன்றி, மற்றொரு சிறுதேசிய இனமான முஸ்லிம் மக்களைப் பகைத்து சிங்களப் பேரினவாதத்துடன் கூட்டுச்சேர நிர்ப்பந்தித்ததன் வாயிலாக தனது தோல்விக் கான அடித்தளங்களைத் தானே தேடிக் கொண்டது. தமிழ் இனவாத அச்சுறுத்தலிலிருந்து சிங்கள மக்களையும் நாட்டையும் மீட்டதாக வீர வசனங்கள் பேசியவாறு சிங்களப் பேரினவாத அதிகாரக்கும்பல் ஒட்டுமொத்தமாய் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும்போது, தமது மீட்சிக்காகப் போராட இயலாத வகையில் சிங்கள உழைக்கும் மக்கள் கையறு நிலைக்கு ஆளாகி யுள்ளனர். ஆண்ட பரம்பரைத் தமிழ்ப்பேரின வாதம் இவ்வகையில் சிங்களப் பேரினவாதத்துக்கு பேருதவி நல்கியுள்ளது.
ஆக, நவீன இலங்கைவரலாறு ஏகாதி பத்தியத்துக்கு எதிராக முழுநாடும்போராடவேண்டிய தாகவும், பேரினவாதத்துக்கு எதிராக சிறுதேசிய இனங்கள் போராட வேண்டியதாகவும் அமைந் துள்ளது. ஒவ்வொரு தேசிய இனங்கள் மத்தியில் சுரண்டுவோர்க்கும் உழைக்கும் மக்களுக்கும் இடை யில் போராட அவசியங்கள் உள்ள போதிலும், சமூக வர்க்கமாய் ஒடுக்கப்படும் தேசிய இனவடிவம் அதனை மறக்கடித்து தேசிய இன நலன்களை வென்றெடுக்கப் போராடும் அவசியத்தை வலியுறுத்திவிடுகிறது.
அதற்காக சிறுதேசிய இனங்களின் மக்கள்
இதழ் 41

Page 18
தத்தமது சுரண்டற் கும்பல்களிடம் தமது கோரிக்கை களை முற்றாகத் தாரைவார்த்துவிடக்கூடாது இனத் தேசிய நலன் எனக்கூறி சுரண்டற் கும்பல் தனது தேவைகளை நிறைவுசெய்து கொண்டு உழைக்கும் மக்களை நட்டாற்றில்விட்டுப் பேரினவாதிகளோடு கை கோர்த்து தமது சொந்த மக்களை ஒடுக்குவதற்கும் தயங்குவதில்லை என்ற விழிப்புணர்வுகொள்ளல் அவசியம் அதேபோன்று, சிங்கள மக்களில் பெரும்
எதிராகப் போராடித் தமது வாழ்வாதாரங்களை வலுப் படுத்த விருப்பங்கொண்டுள்ளனர்; அதனை வெற்றி கொள்ள வேண்டுமாயின் பேரின வாதத்துக்கு எதிராக சம உரிமைகளுக்காகப் போராடும் சிறுதேசிய இனங் களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வலி யுறுத்திப் போராடி, அனைத்து மக்களையும் ஐக்கியப் படுத்தச் சிங்கள மக்கள் முன்வரவேண்டும்.
இவ் வகையில் வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக மட்டுமன்றி தேசிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இனத்தேசியங்கள் முன்னெடுக் கும் போராட்டங்கள் வாயிலாகவும் வரலாறு வளர்ந்து செல்கிறது என்கிற விடயம் உலக மார்க்சிய (குறிப்பாக தென்னமெரிக்க மார்க்சிய) சிந்தனையாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. எம்மைப்பொறுத்தவரை சமூக வர்க்கமாய் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிச் சுரண்டப்படும் இத்தகைய முறை தேசிய உருவாக்கத்தை சாத்தியப் படுத்திய முதலாளித்துவத்துடன் தான் தோன்றிய தென்றில்லை; எமது சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் வர்க்கங்களாக இன மரபுக் குழுக்கள் தகர்ந்து உருவாகி யதல்ல ஆளும் சாதிகளான இன மரபுக்குழுக்களால் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதிகளாக மாற்றப்பட்ட இன மரபுக் குழுக்களை சமூக வர்க்கங்களாக ஆக்கிச் சுரண்டுவதன் வாயிலாகவே எமது வரலாறு இயங்கி வந்துள்ளது. முழுமையாக வர்க்கப்பிளவுறாத இத்தகைய சாதிச் சமூகத்தில் மார்க்சியப் பிரயோகம் எவ்வடிவில் சாத்தியம் என்பதே எம்முன் உள்ள பிரச்சினையாகும்.
111
கூர்மையான வர்க்கப்போராட் அரசியல் உலைக்களத்தில் மார்க்ஸ் தனது ஆய்வை மேற்கொண்ட மையால் வரலாற்றுச் செல்நெறியை சாதிமுறைச்சமூகம் எவ்வகையில் ஏற்படுத்திவந்தது என்பது குறித்துக் கவனங்கொள்ள இயலவில்லை. இந்தியா குறித்த பிரித்தானிய அறிஞர்களது குறிப்புகளை அடிப்படையாக வைத்தே மார்க்ஸ் இந்தியச் சமூகத்தை அறிய முடிந்தது. மாற்றமுறாது இனமரபுக் குழு வாழ்வைச் சாதிகளாக நீடித்துக் கொண்டிருக்கும் தேங்கிப்போன சமூகமாய் இந்தியாவை மார்க்ஸ் ஆரம்பத்தில் பார்த்தார். அந்தப் பழைய வாழ்முறை தொடர்வதன் வெளிப்பாடாக
ஜீவநதி

மாட்டையும் குரங்கையும் வழிபடுவோராய் இந்துக்கள் உள்ளனரெனக் கண்டார். அந்நியத் தலையீடுகளும் மதவிவகாரங்களுந்தான் இந்தியாவை இயக்கியதே யன்றி, இந்தியாவுக்கெனச் சொந்தமான வரலாறு கிடையாது எனக் கருதினார். இத்தகைய ஆசிய உற்பத்திமுறையினைக் கொண்டுள்ள அரபுச் சமூகத்தில் முகமது நபியினால் மதமூடாகவே ஒரு புரட்சியை எவ்வாறு ஏற்படுத்த இயலுமாயிருந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற அவா வினையும் மார்க்ஸ் வெளிப்படுத்தியிருந்தார். இறுதிக் காலத்தில் மார்க்ஸ் பாட்டாளி வர்க்க இயக்கச் செல் நெறி பற்றி மட்டுமன்றி தேசிய விடுதலைப் போராட்டங் கள் குறித்தும் அக்கறைக் கொண்டிருந்தார். ஆயினும் இவை பற்றியதான கோட்பாட்டு உருவாக்கங்களை ஏற்படுத்துமுன்னர் மரணம் முந்திக் கொண்டது.
இந்தியாவில் சாதிச் சமூகம் தனக்கான பிரத்தி யேக வரலாற்றுச் செல்நெறியைக் கொண்டிருந்தது. இங்கும் மதவடிவிலான பண்பாட்டுப் புரட்சிகள் வாயி லாக சமூக மாற்றங்கள் நிகழ்ந்தேறின. விவசாய வாழ்
பிராமணச் சாதியினரும் பெற்றிருந்த அதிகாரங் களைத் தகர்த்து வணிகச் சாதியினரது நலன்களுக்கான சத்திரிய ஆட்சி வலுப்பெற ஏற்றதாக பெளத்த சமண சமயங்களின் எழுச்சி அமைந்தன. இதனால் வலு விழந்த பிராமண மதம் ஏழெட்டு நூற்றாண்டுகளின் பின்னர் புதிய இனமரபுக்குழுக் கடவுளர்களை இணைத்துப் புதிய மதமான இந்து சமயத்தை வடிவமைத்தது; கி.பி. 4ம் நூற்றாண்டில் அந்தப் புதியதான இந்துசமய எழுச்சி விவசாயச் சாதிகளது ஆதிக்கத்தை வென்றெடுத்து இந்திய முறையிலான நிலப் பிரபுத்துவம் 7ம் நூற்றாண்டிலிருந்து எழுச்சி கொள்ள வழிகோலியது.
புதிய வரலாறு படைப்பதிலும் பண்பாட்டுப் புரட்சிக்கான அவசியத்தை நாம் புரிந்துகொள்வது அவசியம். அதேவேளை பல்வேறு போராட்ட வடிவங்களது இணைப்புகள் வாயிலாக பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறையோடு உழைக்கும் மக்களின் ஆட்சியை வென்றெடுப்பது அவசியமாகும். இதற்கான வழிமுறையை யாழ்ப்பாணத்தில் 1966 ஒக்ரோபர் 21 எழுச்சிமார்க்கம் "சாதிமுறை தகரட்டும் சமத்துவநீதி ஓங்கட்டும்" என்ற முழக்கத்தின் வாயிலாக அணி திரட்டிய மக்கள் போராட்டங்கள் வாயிலாக கற்றுத்தந்த வகையில் தொகுத்தெடுப்பது அவசியம்.
எந்தவொரு சாதியையும் எதிரிச்சாதியாக இலக்கு வைக்காமல், மார்க்சிய வழிகாட்டலில் பாட்டாளி வர்க்க நலனை முதன்மைப்படுத்திய சமூக மாற்ற இலக்குடையதாக அப்போராட்டம் அமைந் திருந்தது. சாதிய நோக்கில் பெரியாரியம் மற்றும் தலித்தியவாதம் எதிரிச்சாதியை கட்டமைத்தபோது
இதழ் 41

Page 19
சாதிகளிடையே மோதல்கள் வளர்ந்தனவேயல்லாமல் ஆரோக்கியமான வளர்ச்சிகள் எட்டப்படவில்லை என்பதற்கு இந்தியாவில் உதாரணங்கள் அனந்தம்.
சாதிய - இனத்தேசிய விடுதலையில் சமூக மாற்ற இலக்கு வென்றெடுக்கப்படுவதற்கு ஏற்றதாக ஆளும் சாதி மற்றும் பேரினவாதப்பிரிவின் உழைக்கும் மக்களுடனும் ஜனநாயக நல்லெண்ணம் கொண்டோரு டனும் ஐக்கியப்படுவது அவசியம் என்பதையே ஒக் ரோபர் 21 எழுச்சி மார்க்கம் எமக்கு கற்றுத் தந்தது. அதே வேளை வலுவான பண்பாட்டு ஒடுக்கு முறையையும் சாதி தேச ஒடுக்குமுறைகள் கொண்டுள்ளன. முதலாளித்துவ வளர்ச்சியில் உதயமான ஏகாதிபத்தியம் துப்பாக்கிகளுடன் மட்டுமல்லாமல் பைபிளுடனும் வந்தமை குறித்துப் பேசப்பட்டுள்ளது. அவ்வாறே சாதியொடுக்குமுறை தொடங்கும்போதே பிராமணியம் சமூக பண்பாட்டு ஏகாதிபத்தியமாய்ச் செயற்படத் தொடங்கியிருந்தது.
மருதத்தினை மேலாதிக்கத்தில் வேளாண்மைச் சமூகமான வேளாளர் ஏனைய திணைகளை ஆட்சிப் படுத்தியபோது வட இந்தியா வளர்த்தெடுத்த பிராமணி யத்தை தமக்கானதாக ஏற்றுக்கொண்டு பிராமணச் சாதியரையும் நிலவுடையமையாளராக்கினர். அதே வேளை, தமது அதிகாரத்தைப் பிராமணர்க்கு தாழ்ந்த தாக ஆகிவிடாமற்பார்க்கும் வகையில் சைவ சித்தாந் தத்தைக் கட்டமைத்துக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் வெள்ளாள மேலாதிக்கமே ஆன்மீகத் தலைமையையும் கையகப்படுத்தி ஒரு சாதிப்பிரிவினர் என்கிறவகையில் பிராமணருக்கு இடம்வைக்காத வரலாற்றை இயக்குவ தற்கு சைவசித்தாந்தம் உதவிக்கரமாய் அமைந்தது. இவ்வகையிலான சமூக பண்பாட்டு ஏகாதிபத்தியமாய் ஆளும் சாதி அமைந்தவாறே சுரண்டல் நிகழும் எமது
O இனி எப்படி
O சந்தையின் நான் வாழ்வின் வசீகரங்களை பாடிக் கொண்டிருக்கிறேன் பனிமலர் சாரல் அடிக்கிறது வானவில் வர்ணம் சேர்க்கிறது நிலவு பொழிகிறது காதல் எண்ணம் மூழ்கிறது கண்ணுள்ளே ஆயிரம் மின்னல் அதுவென்ன வானத்து ரம்பையும் ஊர்வசியும் இறங்கி வருகிறார்கள் இனி என்ன இவர்களை வர்ணிக்க வார்த்தை சேர்க்க வேண்டும் தனங்களை உவமிக்க பழைய தமிழ் பாடல்களை அலச வேண்டும் நான் வசீகரங்களை
ஜீவநதி
 

சமூகத்தில் பண்பாட்டுப் வலியுறுத்தப்பட
இவை குறித்து உரையாடல் அவசியம்; இ. இங்கு தவிர்ப்போம். கும் இடமின்றி, களுக்கு ஆட்படாமல் தேடுவோம். பாட்டா பிறப்பெடுத்த புதிய கையேற்போம். பெற்று வந்த
ஏகா (3LHUIT Lub distà
அதனை
அது
மாக மார்க்சியம் காலகட்டமே நீடிக்கி விடுதலைப்
பிரயோகமாக
றினைக் பிரயோகிக்க ஏற்றதான இக்கட்டுரையின் அ உந்துதல் உருவாக்கப் தேடலை மேலும் விரிந்த இயலும்! என்ற தோற்ற யின் அவசியத்தை
"உலகத் தேசங்களே.தலித்
இக்கவிதையை
亚码一 இதழ் 41

Page 20
கே .gif டேவிட்
சந்திப்பு - பரணி
எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் என்ற பெயர் இக்ைகிய
பரிச்சயமானது. “வரலாறு அவளைத் தோற்றுவிட்டது” என்ற இவரது முதாைவது நாவல் வீரகேசரி வெளியீடான வெளிவந்து அன்றைய நாளிலேயே
66 eboothfascisshun IIGOth. இடதுசாரிச் சிந்தனை கைாண்ட டேவிட் மனிதாயப் பண்புகளின் முக்கித்துவத்தைத் தனது படைப்புகளினூடாக உணர்த்தி வருபவர். அண்மையில் இக்ைகித்திற்கான கலாபூஷணம் விருதையும் இவரி பைற்றுக் கொண்டார்.
ஜீவநதி
பரணி - pries6ft 36t
கிராமத்தைப் பிறப்பி மோகனதாஸ் 6. எங்களுக்கு மூத்த த6 இச்சனநமூக நிலை நிலையமாக 2 d516. இச்சனசமூக நிலை முக்கிமாக வாலிபர்க இன்றும் இ நாதன், செ.யோகநா எழுத்தாளர்கள் இ கொண்டிருந்தனர்.இ கிடைத்தன. அப்போ அரசியல் அமைப்பின் வீ.ஏ.கந்தசாமி விடெ இருந்தன. இவைகளு இச்சனசமூகநிலைய. பட்ட இனத்தவர்களும் சனசமூகநிலையம் வி நானும் இவ எனக்கு அப்போது இ மோகனதாஸ் சனசமூ இல் அப்போது எனக்கு பத்திரிகைக்கு அனு மேற்குறிப்பிட்ட எழுத் படைப்பின் உருவம், ! எழுதுகின்ற ஆவல் எழுதினேன். அவர்க நம்பிக்கை எனக்கு ஏ உற்சாகப்படுத்தி என் ஆசிரியர் அமரர் கூறிக்கொள்வதில் பெ
இதுவரை நிராகரிக்கப்பட்டதில்6 நினைக்கின்றேன். எழுத்தாளன் என்ற படைப்புகள் பெற்ற அ
பரணி - இலக்கியம் 6 விளக்கம் யாது?
கே.ஆர்.டேவிட் - சங்க காலத்தில் எ( அப்படைப்புகளின்பே வாழ்ந்த காலத்தின் கேள்விக்குரிய விை எண்ணுகின்றேன். Ll செய்வதுதான் இலக்கி
 

கியப்பிரவேசம் பற்றிச்சுருக்கமாகக்கூறுங்கள்?
நான் தென்மராட்சிப் பிரதேசத்திற்குட்பட்ட மட்டுவில் வடக்குக் மாகவும், வளர்விடமாகவும் கொண்டவன். இக்கிராமத்தில் க நிலையம் என்ற சமூகஸ்தாபனம் ஒன்று அமைந்துள்ளது. லமுறையினரின் முயற்சியால் கொட்டில் வடிவில் உருவான ம் எங்களுடைய காலத்தில் வசதியான ஒரு சனசமூக ற்றது.இக்கிராமத்துமக்களில் எழுபத்தைந்து வீதமானவர்கள் பத்தோடு மின நெருக்கமாகத் தொடர்புபட்டிருந்தனர். ர் முன்னணியில் நின்றனர்.
Bějšalį jij ligjůj:6ð பேசப்படுகின்ற கேடானியல், என்.கே.ரகு நன், யோபெனடிக்பாலன், நீர்வை பொன்னையன் போன்ற சனசமூகநிலையத்தோடு மிக நெருக்கமான தொடர்பு வர்களோடுமிகச்சரளமாகப் பழகுகின்ற வாய்ப்புகள் நமக்குக் து நான் மாணவனாக இருந்தேன். இவர்களோடு இடதுசாரி முக்கியஸ்தர்களான சிகசெந்தில்வேல் மாதகல் வகந்தசாமி ான்னம்பலம், கே.ஏ.மணியம் போன்றோரின் தொடர்புகளும் க்கு மேலால் சிங்கள், முஸ்லீம் நண்பர்களின் தொடர்புகளும் த்திற்கு இருந்தது. பல்வேறுபட்ட சமூகத்தினரும் பல்வேறு சேர்ந்து இயங்கிய ஒரு சனசமூகநிலையமாக மோகனதாஸ் lளங்கியது. ர்களைப்போல் எழுத்தாளனாக வரவேண்டும் என்ற எண்ணம் நக்கவில்லை. எழுதவேண்டும் என்றொரு எண்னக்கருவை கநிலையந்தான் எனது மனதில் ஏற்படுத்தியது. முதலில் 1966 நஇருபத்தொரு வயது - புகலிடம் என்ற கதையை சுதந்திரன் |ப்பினேன். அவர்களும் பிரசுரித்தார்கள். இதன் பின் தாளர்களில் அமரர் செ.யோகநாதன் அவர்கள் எனக்கு ஒரு உள்ளடக்கம் பற்றி சில குறிப்புக்களைத் தந்தார். அதன் பின் எனக்கு ஏற்பட்டது. அதன் பின்பு வீரகேசரி பத்திரிகைக்கு 3ளும் பிரசுரித்தார்கள். நானும் எழுதலாம் என்றொரு ற்பட்டது. தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். என்னை மிகவும் னைப் புடம் போட்டவர் எனது மதிற்பிற்குரிய சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள்தான் என்பதையும் இங்கு ருமையடைகின்றேன். நான் எழுதிய ஆக்கங்களில் ஒன்றாவது பத்திரிகைகளால் Dல என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதென இப்போது பல்கலைக்கழகத்தினாலும், அரசினாலும், அங்கீகாரத்தைப் பெற்றுள்ளேன். பொதுமக்களால் எனது ங்கீகாரத்தைகாலம்தான்கூறவேண்டும்.
ன்பது உயர்ந்தோர் மாட்டே என்ற கூற்றுப் பற்றிய உங்களின்
இலக்கியம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற இக் கூற்று pந்த இலக்கியகாரர்களின் குரலாகும். படைப்புக்களும், * பொருட்களும், அப்படைப்புக்களைப் படைத்த படைப்பாளி
பிரசவங்கள் என்பதைப் புரிந்து கொண்டு தங்களின் யை நோக்குவது புரிதலுக்கு இலகுவாக இருக்குமென டைப்புக்களை படைப்புக்குரிய காலத்தில் நின்று ஆய்வு பத்தர்மமாகும்.
H இதழ் 41

Page 21
தங்களால் குறிப்பிடப்பட்ட கருத்து மேற் கிளம்பிய காலத்தில் படைப்புகளைவிட படைப்பாளியே முக்கியமானவனாகக் கருதப்பட்டான். அதுமட்டுமல்ல, படைப்புக்களும் ஜனரஞ்சகம் பெறாமல், சமுதாய அந்தஸ்துள்ளவர்களாலேயே பேசப்படுகின்ற ஒரு கழலும் இருந்திருக்கின்றது. சமுதாய அந்தஸ்த்து என்று அங்கு குறிப்பிடுவது குலம் அரச ஆசீர்வாதம், பொருளாதார ai போன்ற பலம்சார்ந்நதவர்களையே குறிக்கின்றது.
இன்னும் தெளிவாகக் கூறினால் உயர்ந் தோரால் இலக்கியம் படைக்கப்பட்டு உயர்ந்தோரால் அந்த இலக்கியங்கள் பேணப்பட்டுள்ளன. அதனால்த்தான் இலக்கியம் என்பது உயர்ந்தோர்மாட்டே என்ற கருத் தாக்கம்உருப்பெற்றுள்ளது எனலாம். - பிரித்தானியரின் வருகைகக்கு பிறகு, இலக்கித்தில் ஏற்பட்ட ஜனரஞ்சகப் பங்களிப்புகள் மேற் கூறப்பட்ட கருத்துதைநிராகரித்துள்ளதை இலக்கி வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.
"கானமயிலாடகண்டிருந்தவான்கோழி தானும் அதுவாகப்பாவித்து-தன் பொல்லாச்சிறகை விரித்தாடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி" என்று பாரதிகூறியிருப்பதை இங்கு மனங்கொள்ளலாம்.
பரணி - கல்வியில் உயர்நிலைபெற்று உயர்பதவியும் வகித்த நீங்கள் உங்களுக்குப் படைப்புத்துறையில் ஆதர்ச வழிகாட்டியாக அல்லது உங்களின் படைப்புத்திறனைத் தூண்டியவராக யாரைக்கருதுகின்றீர்கள்?
கே.ஆர்.டேவிட் - இக்கேள்விக்குரிய பதிலை உங்களது முதலாவது கேள்விக்குரிய பதிலில் சுருக்கமாகக் கூறி யுள்ளேன். ஆரம்பகாலத்தில் எனது படைப்புகளுக்கு அமரர் செ.யோகநாதன் அவர்கள் ஆலோசகராகவும் அமரர் சிரித்திரன் சுந்தர் அவர்கள் தூண்டுகோலாகவும் துணை யாகவும் இருந்துள்ளனர்.
இவைகளுக்கு மேலால், நான் பெற்றுக்கொண்ட தேடிக்கொண்ட பல்வேறுபட்ட அனுபவங்களே எனக்குத் துணையாக இருந்துள்ளன. என்று தான் கூறவேண்டும். எனது உத்தியோகதோரணையில் இலங்கையில் பலபாகங் களிலும் வாழ்ந்துள்ளேன். நான் முதன்முதலில் நூலுாக வெளியீடு செய்தது மலையகமக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவலாகும். தவிர, சகல பிரதேசமக்களோடும் மட்டுமல்லாது சகல பிரதேச எழுத்தாளர்களோடும் மிக நெருக்கமாகப் பழகியுள்ளேன். அவர்களிடம் இருந்து நான் பெற்றுக் கொண்ட அனுபவங் களும் ஆலோசனைகளும் என்னை வளப்படுத்தியுள்ளன என்று கூறுவதுதான் சரியானதாகும்.
ஒரு எழுத்தாளனுக்கு தெளிவான ஒரு தளம் அவசியமானதாகும். அத்தளத்தை நான் திகவும் ஆளமாக வும், அகலமாகவும், கூர்மையாகவும், பலமாகவும் வளர்த்து வைத்துள்ளேன் என்பதுதான் உண்மை.
ஜீவநதி
-

பரவி- பொதுவாக எழுத்தாளர்கள் தாம் சில கோட்பாடு களை வரித்துக் கொண்டு படைப்பிலக்கியத்தில் ஈடுபடு வதாகக் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு நீங்கள் வரித்துக் கொண்ட கோட்பாடுகள் பற்றிக்
குறிப்பிடுவீர்களா?
கே.ஆர்.டேவிட் - இது மிக முக்கியமானதொரு
கேள்வியாகும். ஏனெனில் இலக்கியகாரர்களுக்கு மட்டு
மல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்க்கையை
9
நெறிப்படுத்துவதற்கு தெளிவானதும் உறுதியானதுமான ஒரு தளம் அவசியமாகும். அதே மனிதனைப்பற்றியும், சமுகத்தைப் பற்றியும் எழுத்து மூலம் பதிவுகளை மேற்கொள்ளுகின்ற படைப்பாளிக்கு மேலும் நிதானமான ஒரு தளம் இருப்பது அவசியமாகும். S.-------
தங்களால்குறிப்பிடப்பட்டகோட்பாடுகள் କ୍ଷୌp கருத்தையே தளம் என்ற சொல்லில் நான் குறிப்பிடு கின்றேன். சமகாலத்து இலக்கியப்படைப்புகளை அவ தானித்தால் அவற்றில் ஒருவிதமான இலக்கியத்தளம்பல் இருப்பதைக் காணமுடியும் இந்தத் தளம்பலுக்கு சரியான தளமின்மையே காரணமாகும்.
நான் மாணவனாக இருந்த காலத்திலேயே அமரர்களான Vபொன்னம்பலம், மாதகல் விகந்தசாமி, வி.ஏகந்தசாமி, கே.ஏ.மணியம் போன்றோரிடம் மாக்ஸிச தத்துவங்களைக் கற்றுத் தெளிவடைந்துள்ளேன். மாக்ஸிச தத்துவங்கள் பற்றியும், மாக்ஸிச தத்துவங்களில் தேசிய சர்வதேசப் பரப்புகள் வகிக்கின்ற பங்குகள் பற்றியும் மிகத் தெளிவானபார்வைகளைசிறுகச்சிறுகஉருவாக்கியுள்ளேன். இந்த மண்ணில் நிகழ்கின்ற அனைத்து மனித முரண்பாடுகளுக்கும் பொருளாதார அரசியல் அமைப்பே அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன என்பதைப் பூரணமாக நான் நம்புகின்றேன். இறந்தகால வரலாற்றுத் தெளிவும் நிகழ்கால இயங்கியல் விஞ்ஞானப் புரிதலும் இவைகளின் தொகுப்பில் எதிர்கால விளைவுகள் பற்றிய தீர்க்க தரிசனப் பார்வையும் ஒரு படைப்பாளிக்கு நிச்சய மாக இருக்க வேண்டும். இத்தீர்க்கதரிசனப் பக்குவத்தை செறிவான வாசிப்புப் பழக்கத்தினாலும், நேரடி அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதினாலுமே பெற்றுக் கொள்ள முடியும்,
நான் இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்துள்ளேன். சகல இன மக்களோடும், சகல சமூக மக்களோடும், சகல வர்க்க மக்களோடும் மிக நெருக்க மாகப் பழகியுள்ளேன். இத்தொடர்புகளுக்கு எனது ஆசிரிய தொழில் சிறந்த ஊடகமாக அமைந்திருந்தது.
எழுபத்தியோராம் ஆண்டு காலப் பகுதியில் நான் நுவரெலியா மாவட்டத்தில் கடமையாற்றினேன். இங்கு தான் எனது முதலாவது வெளியீடான நாவலை எழுதினேன். இந்த நாவலில் வருகின்ற பாத்திரங்கள் அனைத்தும் எனக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தனர். மனித உணர்வுகளின் அவலங்களை நான் மலையகத்தில்தான் புரிந்து கொண்டேன்.
இலங்கை மண்ணைப் பொறுத்த வரை,
இதழ் 41

Page 22
இலங்கை மிகச் சிக்கலான பூகோள அரசியல் அமைப்பையும், சர்வதேச வல்லரசுகளின் பார்வைக்குட் பட்ட ஒரு கேந்திர நிலையமாகவும் அமைந்துள்ளது. இத்தீவில் மாக்ஸிசசிந்தனைகள் விளையுமா என்றொரு கேள்வி பலரிடம் எழுந்திருப்பதையும், மாக்ஸிச சிந்தனைகள் தோற்று விட்டன என்றொரு அபிப்பிராயம் நிலவுவதையும் நான் மறக்கவில்லை. இந்நிலைக்குக் கூட தெளிவானதும், உறுதியானதுமான தளம் இன்மையே காரணமாகும்.
"மாக்ஸிசம் இந்த மண்ணில் நிலவுகின்ற முரண்பாடுகளை வேரறுக்கின்ற மாபெரும் சக்தி என அமரர் கைலாசபதி அவர்கள் கூறிய கருத்தை மனங் கொள்வது அவசியமானதென எண்ணுகிறேன்.
பரணி - இன்று பொதுவாக வாசிப்பு ஆர்வம் குறைந்து வருவதாகச் சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்தைக்கூறுவீர்களா?
கே.ஆர்.டேவிட் = நீங்கள்கூறுகின்றகருத்தில்எனக்கும் உடன்பாடுண்டு. "இலக்கியம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்று கூறிய சங்க காலத்தில், இக்கருத்திற் கேற்ப அன்றைய சமூகம் எவ்வளவு பொருத்தப்பாடான தாக இருந்ததோ, அதே போன்று, "வாசிப்புப் பழக்கம் அருகி விட்டது” என்று கூறு மளவிற்கு இன்றைய சமூகம் பொருத்தப்பாடானதாக இருக்கின்றதென்பதே என் அபிப்பிராயமாகும்.
இன்று அஞ்சல் பரிவர்த்தனைப் பரம்பல் வீதம் பெருமளவு குறைந்து விட்டதாகப் பேசப்படுகின்றது. இந்நிலைக்கு கைத் தொலைபேசியின் நேரடித் தொடர்பாடலே காரணம் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். புறாவின் கால்களில் செய்திகளைக் கட்டியனுப்பிய மனிதன் - இன்று பல்லாயிரம் மைல் களுக்கப்பால் வாழுகின்ற தங்களின் உறவுகளுடன் முகம் பார்த்துக் கதைக்கின்ற (SKYPE) அளவுக்கு விஞ்ஞானத்தில் வளர்ந்துள்ளதை இங்கு கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
பார்வைப் புலனை மட்டும் பயன்படுத்தி - வாசிப்பின் மூலம் நிழல்களாக நமது மனக் கண்ணில் கண்டவற்றை, இப்போது நேரடிக் காட்சிகளாக நாம் காண்கின்றோம். மனிதனின் சகல புலன்களையும் நிறைவு படுத்துகின்ற விஞ்ஞான சாதனங்கள் நமது கைகளில் இருக்கும்போது, கருத்து நிலையிலுள்ள வாசிப்பு பழக்கத்தை மறப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
சம காலக் கல்வித் திட்டங்களிலும், காட்சிப் படுத்தலுக்கும் நேரடி அனுபவங்களுக்கும் முக்கியத்து வம் கொடுக்கப்படுவதையும், சாதாரண நிலையிலுள்ள பாடசாலைகளில் கணினிச் செயற்பாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
சமூக - விஞ்ஞான வளர்ச்சிகளுக்கேற்ப கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் அவசியம் என்பதை மறுக்க முடியாத அதே வேளை மிகப் பெரும்
ஜீவநதி 2

வரலாறுகள் பதிவாகியுள்ள நூல்கள் புறக்கணிக்கப்படு வதால் மனித சுவடுகள் மறக்கப்பட்டு, மனிதன் நிகழ் காலத்துணர்வோடு மட்டும் வாழ முற்படும்போது, எதிர்பார்க்காத சமூக ஆபத்துக்கள் ஏற்படத் தான் போகின்றது. 溪 滚
பரணி  ைஏதோ ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற உந்தல் ஒருவரிடம் இருப்பது மட்டும் அவர் படைப்பாளியாக வருவதற்குப் போதுமானதா?
கே.ஆர்.டேவிட் - நான் எனது இருபத்தோராவது வயதில் முதற் கதையை எழுதியபோது ஏதாவ தொன்றை எழுதுவோம் என்ற எண்னத்தில் தான் எழுதினேன். இப்போது எனக்கு அறுபத்தேழு வயது SN6ODŮ Lju நாற்பத்தாறு வருடங்களும் ஏதாவ தொன்றை எழுதுவோம் என்று எழுதியிருந்தால். வாசகர்களும் இலக்கிய உலகமும் என்னை என்ன செய்திருக்கும்.?
ஏதாவதொன்றை எழுதுவோம் என்ற நோக்கம் எழுத்துலகில் கால் பதிக்கும் முதற் புள்ளியாக அமையமே தவிர மக்களுக்கான படைப் பாளியாக்கி விடாது. ஏதாவதொன்றை எழுதுவோம் என்ற சிந்தனை இதைத் தான் எழுத வேண்டும் என்ற இறுதிப் புள்ளியைச் சிறுகச் சிறுக அண்மிக்க வேண்டும். அதில் தான் நியாய பூர்வமான வளர்ச்சியைக் காணமுடியும்.
தண்ணிரில் நீந்துவது எப்படி? என்ற அறிவியல் ரீதியான விளக்கத்துடன் கடற்கரை மணலில் படுத்து, பயிற்சி பெறுவதன் மூலம் நீச்சல் காரனாகி விட முடியாது. நீச்சல் பற்றி பெற்றுக் கொண்ட அறிவியல் ரீதியான அடிப்படை விளக்கத் தோடு தண்ணீரில் இறங்க வேண்டுமு. சில தடவைகள் மூச்சுத் திணறி, கண்கள் சிவந்து, தடிமல் வரத் தான் செய்யும். அதன் பின்பு நீச்சல்தானாகவே வந்து சேரும். இந்த நீச்சலுக்குத் தினசரி பயிற்சி கொடுப்பதன் மூலம் பாக்குநீரிணையைக் கடக்கின்ற பலம் வந்து சேரும்.
இந்தச் சமுதாயமும் பாக்கு நீரிணை போன்றதுதான். அதில் நீச்சல்காரன் போன்றவன் தான் படைப்பாளி, அனுபவம் தான் படைப்பாளியின் பலம். அந்தப் பலந் தான் படைப்பாளியின் தளமாகும். தளம் உறுதியானால், தாளம் தவறாது!
பரணி = எழுத்துலகில் நின்று நிலைக்காத சில படைப்பாளிகளின் ஒரு சில படைப்புகளை மாத்திரம் சிலாகித்து கூறிக் கொண்டு இலக்கியத் திறனாய்வு செய்யும், திறனாய்வுப் போக்கு ஆரோக்கியமானதா?
கே.ஆர்.டேவிட் = இலக்கியப் பரப்பில் படைப்பாளி, படைப்புக்கள் என்பவற்றோடு திறனாய்வும் ஒரு முக்கிய கூறாகவே கொள்ளப்படுகின்றது. திறனாய்வு என்பது விஞ்ஞான அடிப் படையிலானதொரு இலக்கிய சத்திரசிகிச்சையாகும்.
இதழ் 41

Page 23
பத்துப் பிள்ளைகளைப் பெற்றவளுக்கு மட்டு மல்ல, ஒரு பிள்ளையைப் பெற்றவளுக்கும் பூரணமான தாய்மை அந்தஸ்துண்டென்பதை மறுக்க முடியாது. அந்த ஒரு பிள்ளை பன்றிக் குட்டியாக இல்லாமல், யானைக் குட்டியாக இருந்து விட்டால் அந்த யானைக் குட்டியும், அந்த யானைக் குட்டியின் தாயும் சமூகப் பார்வைக்குப் படுவது தவிர்க்க முடியாததாகும்.
ஆனால், தங்களின் கேள்வியில் நின்று நிலைக்காத என்ற கருத்து நிலை, இக்கேள்விக்கு புதியதொரு கோணத்தை புலப்படுத்தி நிற்கின்றது. நின்று நிலைக்காமல் போனதற்கு படைப்பாளியின் சுய விருப்பு - வெறுப்புகளும் காரணமாக 56OLDuj6Drth, இலக்கிய அங்கீகாரம் அற்ற நிலையும் இன்னொரு காரணமாக இருக்கலாம். முதலாவது காரணத்திற் குரியவராக அவர் இருப்பின், அவரை மனிதாபி மானத்துடன் மன்னித்து அவரது படைப்புகளைத் திறனாய் வு செய் வதில் தவறில்லை. ஆனால் இரண்டாவது காரணத்துக்குரியவராக இருந்தால் அவர் தனது படைப்புத் தொழிலை நிறுத்திக் கொண்டமைக் காக அவர் மீது அனுதாபப்படல்ாமே தவிர, அவரது படைப்புகளைத் திறனாய்வு செய்ய முற்படுவது ஆரோக்கியமான முயற்சியென்று கொள்ளமுடியாது.
அரச சபையில், பாஞ்சாலிக்குத் துகிலுரிந் ததைப் பார்த்து துரியோதனனும், துச்சாதனனும் திருப்திப்பட்டிருக்கலாம், பெருமைப்பட்டிருக்கலாம். ஆனால், பாஞ்சாலிக்குத் துயிலுரியும் சந்தர்ப்பத்தில் பாண்டவர்கள் பொறுமை காத்ததும், துரியோதனனுக் கும், துச்சாதனனுக்கும் ஏற்பட்ட வரலாற்று முடிவுகளுந் தான் நமக்குப் பாடமாக அமைகின்றன என்பதை புதிரிந்து கொள்வோம்.
படைப் பாளிக்கு மட்டுமல்ல. திறனாய் வாளருக்கும் தளமும் தர்மமும் அவசியமாகும்.
பரணி- பின்நவீனத்துவம் பற்றிய சரியான புரிதலுடன், பின் நவீனத்துவப் படைப் புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றனவா?
கே.ஆர்.டேவிட் = சம காலத்துக்கு மிகப் பொருத்த மான கேள்வியிது. பின்நவீனத்துவக் கொள்ளை பற்றிப் பேசிக் கொள்வதற்கு முன்பு, பின்நவீனத்துவக் கொள்கைக்கு முன்பு ஏற்பட்ட கொள்கை மாற்றங் களையும், அக்கொள்கை மாற்றங்களின் புரிதல் நிலைகள் பற்றியும் மேலோட்டமாகப் பார்த்துக் கொள்வது, பின்நவீனத்துவக் கொள்கைப் புரிதல் பற்றிய விளக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்குமென நம்புகிறேன்.
1930 - 1940 "ஈழகேசரிக் காலம், அந்நிய ஏகாதிபத்தியத்திற்கெதிரானதும், மதப் போட்டிகள் நிறைந்த காலம், 1940 - 1950 மறுமலர்ச்சிக் காலம்.
ஜீவநதி

சமூக சீர்த்திருத்தங்கள், ஒழுக்க விழுமியங்கள் பற்றிப் பேசப் பட்ட காலம், 1950 - 1960 தேசிய விழிப்புணர்வுக் காலம்'. நமது மண், நமது மொழி என்ற கொள்கைகளின் வெளிப்பாட்டுக் காலம், 1960 - 1980
வரைவர்க்க முரண்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்ட காலம் 1980 - இன்று வரை தமிழ்த் தேசிய எழுச்சிக் காலம். விடுதலை இயக்கங்களின் தோற்றங்களும்
ஆயுதப் போராட்டங்களும் நிறைந்த காலம்.
மேற்குறிப்பிட்ட காலங்களை அவதானிக் கின்றபோது, அக்கொள்கைகளுக்கான அடிப்படைத்
தேவைகளும் கொள்கை மாற்றங்களுக்கான காரணங் களையும் மிக இலகுவாக நம்மால் புரிந்து கொள்ளக்
கூடியதாகவுள்ளது. ஏனெனில் கொள்கை மாற்றங் களுக்கான காரணிகள் நாம் வாழ்ந்து கொண்டிருக் கின்ற தமிழ் தேசிய மண்ணிலேயே நிகழ்ந்திருக் கின்றன. அது மட்டுமல்ல, கொள்கை மாற்றங்களுக் கான காரணிகளாக நாமே இருந்திருக்கின்றோம்.
இன்று ஏற்பட்டுள்ள பின்நவீனத்துவக் கொள்கையானது நமது மண்ணில் கருத்துதேற்றம்" செய்யப் பட்டு,? ஊக்குவிக்கப் படுகின்றதொரு கொள்கையே தவிர, நம்மால் ஏற்படுத்தப்பட்ட G85rreire05uebao.
சர்வதேச வல்லரசு நாடுகள், தங்களின் வல்லரசுத் தன்மையைத் தொடர்ந்தும் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கோடு உலக மயமாதல் என்றொரு கொள்கையை அறிமுகப்படுதுதினர். இக்கொள்கை 1970இல் அறிமுகப்படுத்தப்பட்டு 1990இல் உச்ச நிலையை அடைந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த உலக மயமாதல் கொள்கையின் பரம்பல் காரணமாகவே பின்நவீனத்துவக் கொள்கை யின் வருகையும் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல. தங்களின் ஐந்தாவது கேள்வியில் உள்ளடங்கியுள்ள "வாசிப்புக் குறைவு என்பதற்கும் இப் புதிய கொள்கையே அடிப்படைக் காரணம் என ஆய்வாளர் கூறுகின்றனர்.
எனவே, நமது மண்ணில், நமது மக்கள் மத்தியில் பிரசவிக்காததொரு கொள்கையாக்கத்தைப் புரிந்து கொள்வதிலும், புரிந்து கொண்டவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் நமது படைப்பாளிகளிடம் ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகள் இயல்பானவையாகும்.
பின்நவீனத்துவக் கொள்கையானது சகல இலக்கியக் கோட்பாடுகளையும், மூத்த எழுத்தாளர் களின் கருத்துக்களையும் முற்றாக நிராகரித்து, புதிய சொல்லாட்சியுடன் தரிசனங்களை மட்டும் பதிவாக்கு வதே இலக்கியப் படைப்புகளாகும். என்ற கருத்து வலியுறுத்துகின்றது. இந்நிலைகள் காரணமாக பின்நவீனத்துவக் கொள்கை இன்று ஒரு தளம்பல் நிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றதெனலாம்.
இதழ் 41

Page 24
சினிமா என்ற கலை வடிவத்தை மிகை மனோபாவத்தின் அறுவடையாகவே தமிழ்ச் சூழலில் இனங்காண முடிகிறது. வர்த்தக ரீதியான வெற்றியே குறிக்கோளாகிப் போனதால், நகைப்புக்கிடமான எண்ணற்ற விடயங்களை தமிழ்த் திரைப்படங்களில் அவ தானிக்க dipigafśpg. கமராவின் மொழியை முதன்மைப் படுத்தாது வசன தோரணங்களின் ஆதிக்கம் வலுவடைந் 5TGÖ, STỪ fa 26TIL5Lib (Visual media) airtaatre5uis கேட்கும் வகையில் இழிவடைந்தது. எனினும் இத்தகைய * வட்டத்திலும் அரிதாக சில பாராட்டத்தக் விடயங்களும் இடம்பெறவே செய்கின்றன.
குறி என்பது ஒரு பொருளைச் சுட்டுவதாகும். பிறிதொரு பொருளுக்காக e பொருளின் புலத்தில் தானே நின்று கொள்வது குறியீடு (Symbol) எனபேடும் இயக்குனர் ஒருவர் காட்சிப்படுத்த எண்ணும் ஒன்றினை நேரடியாக உணர்த்தாமல் இன்னொரு காட்சியின் மூலம் வெளிப்படுத்துவதே குறியீட்டு உத்தியாக கொள்ளப்படு கிறது. தமிழ்த்திரைப்படங்களில் பல சந்தர்ப்பங்களில் குறியீடு பார்வை {###F அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அக்காட்சிகளில் இடம் பெறும் அழகியல் நுணுக்கமற்ற தன்மையானது. ஒருவித ஒவ்வாை யினையே ஏற் படுத்தியது. ப மொழிப்படங்களில் பார்வையாள வின் உணர்வில் ஊடுருவி ஒருவித கலையனுபவத் சுவறும் குறியீடானது தமிழில் ஆளுமைமிக்க ஓரிரு இயக்குனர்களால் மட்டுமே அலாதியாகத் பட்டுள்ளது.
உதிரிப் பூக்கள் திரைப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் செய்தி ஒன்றின் பரவுதலை தந்திக் சிம்பிகளைக் காட்சிப்படுத்துவதனூடாக உணர்த்துகிறார்.
 

Amores perros 676TD 5laDJúUL55lai 8TUGGlorTGS வெளிவந்த ஆய்த எழுத்து திரைப்படத்தில் இயக்கனர் மணிரத்னம் அற்புதமான குறியீடு ஒன்றினைக் கையாண்டுள்ளார். திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி சென்னைத் துறைமுகம் பகுதியிலுள்ள நேப்பியர் பாலத்தில் இடம்பெறுகிறது. தலைமைசெயலகம், ଗଅଁ ଚଁପେଁପେଁt}} பல்கலைக்கழகம், அருகேயுள்ள மீனவப் பகுதி என்பவற்றை இணைக்கும் இப்பாலம் மிகச்சிறந்த குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. "மகாநதி
திரைப்படத்திலே சிறைச்சாலை பற்றிய பதிவுகள் சிறப்புற வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறை என்பது வெளியே உள்ள சமூகத்தின் ஒரு குறியீடாகவும் இப் படத்தில்
நிவேதிதாசுட்டிக் காட்டியுள்ளார்.
பண்புகளை இயக்குனர் சிம்பு தேவன் இம்சை அரசன் 28 புலிகேசி திரைப்படத்திலே திறம்பட
சித்திரித்துள்ளார். வரலாற்றுக் கதையிலே எள்ளலுடன் பதிவு
யீடுகள் நுணுக்கமானவை. சாதிச் சண்டை மைதானத்தினுடாக கிரிகெற் விளையாட்டினை இருநாடுகளுக்கு இடையேயான போராக எதிர்கொள்ளும் மன நிலையை அழகுற உணர்த்துகிறார். பன்றிக்கேடயம் பெறும் சச்சிதானந்தம் இந்திய கிரிக்கெற் ஜாம்பவானை கிண்டல் செய்யும் பாத்திரப்படைப்பாகும்
"அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப் படத்தில் தென்னங்கீற்றில் விழுகின்ற மழைத்துளிகள் அடைமழையாகப் பொழிவதைக் குறியீடாகக் silig நாயகியின் சங்கீதத் தேர்ச்சியினை இயக்குனர்
கையாளப்பட்டுள்ளது" என்று சாரு
பின் நவீனத்துவத்தின்
செய்யப்பட்டிருக்கும் சமகாலக் குறி
-டஇதழ் 4 滚

Page 25
பாரதிராஜா உணர்த்தியுள்ளார். தொடர்ந்து ஓடுபாதை (Train TracK) LDT.g6g, "affairgro" gla(DULUL556) ஆள்மாறாட்டத்தின் குறியீடாக அமைகின்றது. நடிகர் ரஜனிகாந் பெரும்பாலான படங்களிலே "சென்ரி மென்ற்” என்ற வகையிலே கையாளப்படும் பாம்பு சந்திரமுகி திரைப்படத்திலே குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"குருஷேத்திரம் முழுமையான குறியீட்டில் அமைந்த திரைப்படமாகும். நாயகன் இந்தியாவையும், நாயகி காஷ்மீரையும், நாயகனின் மகன் தமிழகத்தை யும், வில்லன் பாகிஸ்தானையும், வில்லனின் நண்பன் அமெரிக்காவையும் சுட்டி நிற்கின்றார்கள். குறியீட்டைத் தவிர படத்திலே குறிப்பிடத்தக்க அம்சங்கள் எவையுமே இல்லாமையால் அனைத்துத் தரப்பினரும் பட்டத்தை புறக்கணித்துவிட்டனர்
தமிழ்த்திரைப்படங்களில் பாலியல் சார்ந்தும், வன்முறை சார்ந்ததுமான குறியீடுகள் பார்த்துப் பார்த்து சலிப்படைந்த தன்மையுடனேயே அமைந்துள்ளன. அருவருப்பினைத் தரத்தக்க குறியீடுகளையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உதாரணமாக "சிங்கம் புலி திரைப்படத்திலே தாய்ப்பசுவோடு கன்றினையும் ஒருவர் ஒட்டிச் செல்லும் காட்சி, நாயகன்(நடிகன் ஜீவா) ஒரு பெண்ணோடும், அவளது தாயோடும் கொண்டுள்ள உறவைப் பிரதிபலிக்கக் கையாளப்பட்டுள்ளது. இத்தகைய சிரங்கு சொறிச் சிந்தனைகளை தமிழ்த்திரைப்படங்களிலே தான் காணலாம். "காதல் திரைப்படத்திலே நாயகி பூப்படை யும் தருணத்தில் நீர்க்குழாயிலிருந்து நீர் கொண்டும் காட்சி இடம்பெறுகின்றது. இதே திரைப்படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் உலகசினிமாவுக்கு நிகரான இன்னொரு குறியீட்டினைப் பதிவு செய்தவர் என்பது வியப்பான உண்மையாகும். நாயகியின் motorbike accelerator ஐ நாயகன் அதிகரிக்கும் போது ஆசனத்திலிருக்கும் இருவரது பொருள்களும் அதிர்விலே நெருங்கி வருகின்றன. உளநெருக்கத்தின் உன்னத குறியீடாக இக்காட்சி அமைந்துள்ளது. பூவில் வண்டு தேன் அருந்துதல் பல திரைப்படங்களில் கலவியின் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. பூவுக்குள் பூகம்பம் திரைப்படத்திலே தேன் கூட்டைச்சிதைத்து தேன் எடுத்துக் குடித்தலை பாலியல் வன்புணர்ச்சியின் குறியீடாகக் காட்டியுள்ளனர்.
வன்முறைக்கான குறியீடும் எண்ணற்ற
εξωΙΙΒ:δl-E
 
 
 
 
 

படங்களிலே இடம்பெற்றுள்ளது. ரோஜாப் பூவைச் சிகரெட்டால் சுடுதல், மான் மீது புலி பாய்தல் போன்ற வலிந்து திணிக்கப்பட்ட குறியீடுகளை இயக்குனர் Tராஜேந்தர் பயன்படுத்தியுள்ளார். அறைமுழுவதும் பரந்துள்ள குருதியில் பல்லி தத்தளிப்பது "ஹேராம்" திரைப்படத்தில் வன்முறையின் குறியீடாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகன் அடிவாங்கு வதே நகைச்சுவையான தமிழ்சினிமாவில், வடிவேல் அடிவாங்குவதையும் வாழைக்காய் பஜ்ஜி போடுவ தாகக் குறியீடு செய்வது பார்வையாளனின் பொது அறிவினைக் கேலி செய்யும் "போக்கிரித்தனமாகும்.
“போராளி" திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி யில் நாயகன் இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் கால் பதித்தவாறு பயணம் செய்வதை உளவியல் ரீதியான குறியீடென்று இயக்குனர் சமுத்திரக்கனி குறிப்பிடுகின்றார். ஆனாலும் அக்காட்சி மூன்றாந்தர நாயகனை அறிமுகப்படுத்தும் சராசரிக் காட்சியாகவே அமைந்துள்ளது.
இளையதளபதி(?) விஜய் நடித்த படங் களிலும் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. தலைவரின் பிறந்த நாளுக்கு கைவிரலை வெட்டி அனுப்பும் புத்திசாலி ரசிகர்களின் அறிவாற்றல் காரணமாக, அக்காட்சிகள் குறைந்தபட்சம் கைதட்டல், விசிலடித்தல் கூட இல்லாமல் கவனிப்பாரற்றுப் போய்விட்டன. "கில்லி திரைப் படத்திலே நாயகன் வாழும் "அம்பேத்கார் நகர்" என்பதன் பின்னுள்ள அரசியல் புரிந்து கொள்ளப்படாததைப் போலவே, "சுறா" திரைப்படத்தில் நாயகன் வாழும் யாழ்நகர் பற்றிய குறியீடும் வெளிச்சத்திற்கு வரவில்லை. விஜய் ரசிகர்களின் புத்திக்கூர்மை ஈழத்தமிழர்கள் செய்த புண்ணியத்தின் பயனாக மழுங்கடிக்கப்பட்டுப் போனமையும் மகிழ்ச்சிக்குரியதே இல்லையேல் மீனவ சமூகத்தலைவன், மக்களுக்கான போராட்டம், மரண வதந்தி, உயிரோடு மீளுதல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி (7ம் அறிவு போல) இன்னொரு அபத்த நாடகத்தை அரங்கேற்றியிருப்பார்கள். திருமலை திரைப்படத்தின் எழுத்துச் சீர் திருத்தமற்ற தலைப்பும், குருவிக்கூடும் நாயகனின் பண்பினை (ப்ரியமுடன் திரைப்பட தாஜ்மஹால் போல) கூட்டும் குறியீடுகளாகும்.
பாடல்கள், இடைவேளை, படத்தோடு பொருந்தாத நகைச்சுவைப்படுத்தி, pelvic movement கொண்ட நடனங்கள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு, வணிக வெற்றியை மட்டும் மையப்படுத்தாது அழகியல் நுணுக்கத்தோடு தமிழ்த்திரைப்படங்கள் வெளிவரும் போது உன்னத குறியீடுகள் இடம்பெறும் வாய்ப்பு உருவாகும். அதுவரை சராசரிக் குறியீடுகளைச் சகித்துக் கொள்ள வேண்டியது தமிழர்களின் தலைவிதியாகும்.
இதழ் 41

Page 26
அது சின்னக்காலம்.
பாட்டியைக் கேட்போம்
“அவன் காலே செருப்பு” என்றார் LIITLIQஅரக்கனின் பேச்சு எப்படி இருக்குமென்று (835L'08LJITLíb. பாட்டி, "அதனை நடித்துக்காட்டல் பாவம்" என்றார். அது சின்னக்காலம்!
அரக்கர் இப்போ தோன்றுதல் இல்லைஆனால்,
உலாவருகின்றனர்!
orââ
எங்கள்கிராமம்
போர்த்துக்கொண்டது.
பனைமரங்கள் மட்டும் நடந்தவற்றை மறைக்காது தம்முள்ளேபேசிக்கொண்டன.
அப்படி என்னநடந்தது என்றுஅள்ளமுடியாத அளவுக்குப் பிரபஞ்சச்சிதறல்
பனையருகே நின்ற மரங்கள் புதியதலைகளைச்சூடிக்கொள்ள வார்த்தைகளுக்கு என்னபஞ்சமா?
*函一一g
 
 
 
 

வூற்றிக்கன்
அறிவின் ஊற்றுக் கண்
அயராதநல் வாசிப்பு
அன்பின் ஊற்றுக் கண்
அன்பானதாய் மனசு
தெளிவின் ஊற்றுக்கண்
தீவிரமான உன் சிந்திப்பு
ஒளியின் ஊற்றுக்கண்
உத்தமர்தம் நேசிப்பு!
பண்பின் ஊற்றுக்கண்
பக்குவமாம் நல்நடத்தை
பணிவின் ஊற்றுக் கண்
பண்பட்டோர் நல்லிதயம்!
பணத்தின் ஊற்றுக் கண்
பகல்வேஷநாடகங்கள்
பகட்டின் ஊற்றுக் கண்
பளபளப்பின் மோகங்கள்!
அகந்தையின் ஊற்றுக் கண்
அறிவிலியின் வீண் பெருமை
அச்சத்தின் ஊற்றுக் கண், தன்
பலமறியாபேதமைகள்!
கவிதையின் ஊற்றுக் கண்
கவிஞனது உணர்வலைகள் கலைஞனது ஊற்றுக் கண், அவன்
கால் பதித்த இலட்சியங்கள்!
ஷெல்லிதாசன்
4 - ΘδΦύρ 41

Page 27
t്
lశ గెస్టిక్స్ప్రెస్లా
இலங்கையின்
இதயமாய் மலையகம்
வியர்வை சிந்திவருந்துவோரில் ஒருவராமெம்மினம். அதிகாலைச் சேவலோடு அவசரமாயெழும்பிடும் அவசியத் தொழிலாளிகளாம்-சூரியோதயம் அஸ்தமிக்கும் வரை 羲、
சுழன்றிடும் இயந்திரங்களாய். சுழற்றியடிக்கும் காற்றானாலும்
மரங்களாய்நாமும் நின்றிடணும்
கூடைமட்டுமே
நிரம்பிடணும் ن அவர்களுக்கெம் குறைகளொன்றும் கேட்டிடாது பாதம் கடுகடுக்க & பாரமாயினும்- அவர்களுக்கெம் V பட்டினியொன்றும் பாதித்திடாது. தேசம் வளரவே-எம்
தேகம் வருத்தினோம்
வையம் செழிக்கவே -எம் வியர்வை ஊற்றினோம். வறுமை மட்டும்பலனாய்க்கொண்டோம் வசந்தத்தைநாமும் வாழ்வில் தொலைத்தோம்
விடியலின் வழிதனை தேயிலைச் செடிதனில் தேடுகின்றோம் விடைகாணா ஒளிதனிலே தொடர்ந்தும்போகின்றோம்.!!!
த.எலிசபெத் (தலவாக்கலை)
 
 
 
 
 
 
 
 
 
 
 

& Ye ے گھیر صےسر میلا؟,
ஒருஆத்தீருழ் காத்திருப்பு எனது மணர்ணின் காத்திருப்பு எனது மக்களின் காத்திருப்பு எனது காத்திருப்பு சுற்றத்தை இழந்தபின்பு சுதந்திரத்தை விட்ட பின்பு தன்மானம் போனபின்பு நம்பிக்கை-அவநம்பிக்கை ஆனபின்பு கடைசியாய் ஒரு காத்திருப்பு மரணத்திற்காய் மட்டுமே.!
e V
செங்குருதிஓடி செக்கச் சிவந்து மனித உடல் உக்கி அழுகிஅழுக்காக்கி நஞ்சாகிப் போன எம்மணர்ணில் அவநம்பிக்கைவிதையாகி ஏமாற்றம் செடியாகிதுன்பதுயர பெருவிருட்சங்கள் s: கொடுவனமாக்கிப் போன எம்மணர்னை வெட்டித்திருத்தி 2 (LPgl பணிபடுத்தி நம்பிக்கைவிதை விதைத்து மகிழ்ச்சியைப் பயிராக்க என்றாவது வருவான
உழவன் ஒருவன் ସ୍ନିଗର୍ଦtool காத்திருக்கிறது எம்மணர்

Page 28
fff
கல்லில் வடி 26III (Bags. 6frgia e
தசை ஆை ஆழ்த்தியது. ଧ୍ମାଛଧରt;$(tୋକ୍ଷ
aly அவளது சே இயற்கையில் மழை கொழி பறக்கின்றன.
சற்
கம்பமற்று 6 தம்பம் இற்று கரைந்தது ம வடுப் போலத்
து எல்லையற்ற இப்
kEت
ប្រះ கொடிகளின் துன்பத்தை ம தத்துவம்போ
ජී66| முற்றியதால் ஐ வருகிறான் வி வில்லை. தா. ஆழ்ந்தும் எ நிம்மதியைத் திருப்தி
e.g. பார்வையில் வருகின்றன. லக்ஷ்மனாக பொறுப்புத்தெ
ဍပဲéဓံဂုံးpဓÚÚ‡ဓါးနှီ;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிச்சயமுள்ளவர்களுக்த இந்தக் கதை TLTTTLTCLLT SeL LL TLTTTLLOTLLLLS LLLLLLTTTTS TTTT ந்தவில்லை.
鲁 லையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் வீரியத்தைத்துள்ளவைக்கும் மோகன வடிவம் ஓர் அபூர்வ கத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் ந்துவைத்தானோ என்று தோன்றும் அளவிற்கு லாகிரியை ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் - டைபடாத சோகம் மிதந்து பார்க்கிறவர்களின் வெறும் யான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று சாபத்தின் விளைவு.
கலிகை, தக் காட்டுப் பாதையில் கல்லில் அடித்துவைத்த சோகமாக, கத்தைப் பேதமற்ற கண் கொண்டு பார்க்கும் துறவி போன்ற மடியிலே கிடக்கிறாள். சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. க்கிறது. தூசும்தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; தன்நினைவற்றதயஸ்வியாக -கல்லாக கிடக்கிறாள். றுத் தூரத்திலே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து கற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். வனையும் அபேதமாகத்தான் போஷிக்கிறது. எனும் சற்றுத் தூரத்திலே இந்தத் தம்பதிகளின் குடும்பக் கூடு வீழ்ந்ததுபோல, இவர்களுக்கு நிழல் கொடுத்த கூரையும் வீழ்ந்து பொடியாகிக் காற்றோடு கலந்துவிட்டது. சுவரும் விஞ்சியது திரடுதான். இவர்கள் மனசில் ஏறிய துன்பத்தின்
தென்பட்டது அது. த்திலே கங்கையின் சலசலப்பு அன்னை கங்கை, இவர்களது சோகத்தை அறிவாளோ என்னவோ! படியாக ஊழி பல கடந்தன. தம்பதிகளுக்கு. நநாள்.
பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமைதான். என்றாலும் பசுமையும் நிழலும், இழைந்துவரும் காற்றும் உலகின் றைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் தரும் சமய ல, இழைந்து மனசில் ஒரு குளுமையைக் கொடுத்தன. ன் சிங்கம் போல, மிடுக்கு நடை நடந்து எடுத்த கருமம் உண்ட மகிழ்ச்சியை மனசில் அசைபோட்டுக்கொண்டு நடந்து விசுவாமித்திரன். மாரீசனும் சுவாகுவும் போன இடம் தெரிய கை என்ற கிழட்டுக் கொடுமை நசித்து விட்டது. நிஷ்டையில் ரியோம்பியும் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தரும் சாதனமாகத் தன்னை ஆக்கிக் கொண்டதில் ஒரு
க்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறான். என்ன பரிவு இரண்டு குழந்தைகள் ஒடிப்பிடித்து விளையாடி அவர்கள் வேறு யாருமல்ல; அவதார சிசுக்களான ராம ளே. அரக்கர் நசிவை ஆரம்பித்து வைத்துவிட்டு, அதன் 5ரியாமல் ஓடிப் பிடித்து வருகிறார்கள்.
உம் புழுதியைக் கிளப்புகிறது. முன்னால் ஓடி வருகிறான் துரத்தி வருபவன் ராமன் புழுதிப் படலம் சிலையின் மீது
இதழ் 41

Page 29
என்ன உத்லாகமோ என்று உள்ளக் குதூகலிப் புடன் திரும்பிப் பார்க்கிறார் விசுவாமித்திரர். பார்த்தபடியே நிற்கிறார்.
புழுதிப் படலம்சிலையின் மீது படிகிறது. எப்போதோ ஒரு நாள் நின்று கல்லான இதயம் சிலையுள் துடிக்கிறது போன போன இடத்தில் நின்று இறுகிப் போன ரத்தம் ஓட ஆரம்பிக்கிறது. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி உயிருள்ள தசைக் கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது. 3
கண்களை மூடித் திறக்கிறாள் அகலிகை. பிரக்ஞை தெரிகிறது. சாபவிமோசனம் சாபவிமோசனம்
தெய்வமே மாசுபட்ட இந்தத் தசைக்கூட்டம் பவித்தரம் அடைந்தது.
தனக்கு மறுபடியும் புதிய வாழ்வைக் கொடுக்க வந்த தெய்வீக புருஷன் எவன்? அந்தக் குழந்தையா?
அவன் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறாள். ராமன் ஆச்சரியத்தால் பார்க்கிறான்.
விசுவாமித்திரருக்குப் புரிந்துவிட்டது. இவள் அகலிகை. அன்று இந்திரனுடைய மாய வேஷத்துக்கு ஏமாறிய பேதை கணவன்மீதிருந்த அளவுக்குள் அடங்காத பாசத்தின் விளைவாக 56 9. Lb6o I, Lorru (866255T6 ஏமாறி மாசுபடுத்திக் கொண்டவள்; கோதமனின் மனைவி அவ்வளவையும் ராமனிடம் சொல்லுகிறார். அதோ நிற்கும் பற்று இருக்கிறதே; அதில் வலை முட்டையில் மோனத் தவங்கிடக்கும் பட்டுப்பூச்சி போலத் தன்னை மறந்து நிஷ்டையில் ஆழ்ந்து இருக்கிறான். அதோ அவனே எழுந்து 6, LTG360Ti
நிஷ்டை துறந்த கண்கள் சாணை தீட்டிய கத்தி பால் சுருள்கின்றன. உடலிலே, காயகற்பம் செய்ததுபோல் வலு பின்னிப் பாய்கிறது. மிடுக்காக பெண்ணின் கேவலத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாதவனைப் போலத்தயங்கித்தயங்கிவருகிறான். :
மறுபடியும் இந்தத் துன்ப வலையா? 好盲目 விமோசனத்துக்குப் பிறகு வாழ்வு எப்படி என்பதை மனசு அப்பொழுது நினைக்கவில்லை. இப்பொழுதோ அது பிரம்மாண்டமான மதிலாக அவனது வாழ்வைச் சுற்றியே மண்டலிக்கிறது. அவள் மனமும் மிரளுகிறது.
ராமனுடைய கல்வி, தர்மக்கண் கொண்டு பார்த்தது. தெளிவின் ஒளி பூண்டது. ஆனால் அநுபவச் சாணையில் பட்டை பிடிக்காதது வாழ்வின் சிக்கலின் ஒவ்வொரு நூலையும் பின்னலோடு பின்னல் ஒடியாமல் பார்த்த வசிஷ்டனுடைய போதனை. ஆனால் சிறுமையை அறியாதது புது வழியில் துணிந்து போக அறிவுக்குத் தெம்பு கொடுப்பது. 羲
உலகத்தின் தன்மை என்ன இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்துகிறது மனசுக்கும் கரனசக்தியின் நிதானத்துக்கும் கட்டுப்படாமல் நிகழ்ந்த ஒரு காரியத்துக்கா பாத்திரத்தின் மீது தண்டனை? அம்மா" என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணங்குகிறான் grp 禦 戀
Vs
ܐ
ஜீவநதி
༤༤ 《2

*8 ரிஷிகளும் (ஒருவன் துணிச்சலைடு அறிவாகக் கொண்டவன் மற்றவன் பாசத்தையே தர்மத்தின் அடித்தலமாகக் கண்டவன்) சிறுவனுடைய நினைவுக் கோணத்தில் எழுந்த கருத்துக்களைக் கண்டு குதுகலிக்கிறார்கள் எவ்வளவு லேசான, அன்புமயமான, துணிச்சலான உண்மை
நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக்கொள்ளுவதுதான் பொருந்தும் என்கிறான் விசுவாமித்திரன் மெதுவாக
குளுமை பூண்ட காற்றில் அவனது வாதக் கரகரப்புரஸ்பேதம்காட்டுகிறது.
கோதமனும், அவள் பத்தினியும், அந்தத் தம்பமற்றுத் திரபேறிப் போன மேடும் அவ்விடத்தை விட்டு அகலவில்லை. முன்பு உயிரற்றிருந்த இடத்தில் ஜீவகளை துவள நினைத்தது.
Ft ECM UGö 6NaFTBäs6EDES GBEFTED GS mréssoas மாற்றியமைக்க வந்த சக்திகள் அவ்விடம் விட்டுப் பெயர்ந்துவிட்டன. மிதிலைக்குப் பொழுது சாயும் பொழுதாவது போக வேண்டாமா? மனவினை இரு கைகளை நீட்டிஅழைக்கிறதே
கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது. தன் நாக்கையே பொசுக்கி வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது?
"என்ன வேண்டும்? என்றான் கோதமன். அறிவுத் திறம் எல்லாம் அந்த உணர்ச்சிச் சுழிப்பிலே அகன்று பொருளற்ற வார்த்தையை உந்தித்தள்ளியது.
பசிக்கிறது என்றாள் அகலிகை, குழந்தை
(36.
அருகிலிருந்த பழனத்தில் சென்று கனி வர்க்கங்களைச் சேகரித்து வந்தான் கோதமன். அன்று, முதல் முதல் மனவினை நிகழ்ந்த புதிதில் அவனுடைய செயல்களில் துவண் ஆசையும் பரிவும் விரல்களின் இயக்கத்தில் தேக்கத்தில்காட்டின.
அந்த மணவினை உள்ளப் பரிவு பிறந்த பின்னர்ப் பூத்திருந்தாலும் ஏமாற்றின் அடிப்படையில் பிறந்ததுதானே பசுவை வலம் வந்து பறித்து வந்தது தானே! என்று கோதமனுடைய மனசு, திசைமாறித் தாவித்தன்னையே கட்டுக் கொண்டது.
அகலிகைபசிதீர்ந்தாள் ళ్ల அவர்களது மனசில் பூர்ணமான கனிவு இருந்தது. ஆனால் இருவரும் இருவிதமான மனக் கோட்டைகளுக்குள் இருந்துதவித்தார்கள்.
கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்பதே ggöagged acapag
அகலிகைக்குத் தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை
சாலையோரத்தில் பத்திருந்த மலர்கள் அவர்களைப் பார்த்துச்சிரித்தன. s
2 - - --ΘΦί 41

Page 30
*) அகலிகையின் விருப்பப் படி, ஆசைப் படி அயோத்தி வெளி மதில்களுக்குச் சற்றுத் ஒதுங்கி, மனுஷபரம்பரையின் நெடி படராத தூரத்தில், சரயூ நதிக் கரையிலே ஒரு குடிசைகட்டிக் கொண்டு தர்ம விசாரம் செய்து கொண்டிருந்தான் கோதமன். இப்பொழுது கோதமனுக்கு அகலிகை மீது பரிபூர்ண நம்பிக்கை. இந்திரன் மடிமீது அவள் கிடந்தால் கூட அவன் சந்தேகிக்க மாட்டான். அவ்வளவு பரிசுத்தவதியாக நம்பினான் அவன். அவளது சிற்றுதவி இல்லாவிடின் தனது தர்மவிசாரமே தவிடுபொடியாகிவிடும் என்ற நிலை அவனுக்கு ஏற்பட்டது. அகலிகை அவனை உள்ளத்தினால் அளக்க முடியாத ஓர் அன்பால் தழைக்க வைத்தாள். அவனை நினைத்துவிட்டால் அவள் மனமும் அங்கங்களும் புது மணப் பெண்ணுடையன போலக் கனிந்துவிடும். ஆனால், அவள் மனசில் ஏறிய கல் அகலவில்லை. தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி விசேஷமாகக் கூர்ந்து பார்க்கக்கூட இடங்கொடாதபடி நடக்க விரும்பினாள். அதனால் அவள் நடையில் இயற்கையின் தன்மை மறைந்து இயல்பு மாறியது. தன்னைச் சூழ நிற்பவர்கள் யாவருமே இந்திரர்களாகத் தென்பட்டார்கள்; அகலிகைக்குப் பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. அந்தக் காலத்திலிருந்த LLtTTTLL TMOTOLLmLmLCSLmTL TLeLLtLGLLGL LLLLLLTTmTLS TMTT தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத் தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக்கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள்.
வாழ்வே அவளுக்குநரகவேதனையாயிற்று. அன்று மரீசி வந்தார். முன்னொரு நாள் ததிசி வந்தார். மதங்கரும் வாரனாசி செல்லும்போது கோத மனைக் குசலம் விசாரிக்க எட்டிப் பார்த்தார். அவர்கள் மனசில் கனிவும் பரிவும் இருந்தபோதிலும் அகலிகையின் உடம்பு குன்றிக் கிடந்தது. மனசும் கூம்பிக் கிடந்தது. அதிதி உபசாரங்கூட வழுவிவிடும்போல் இருந்தது. ஏறிட்டுச் சாதாரணமாகப் பார்க்கிறவர்களையும் களங்கமற்ற கண் கொண்டு பார்க்கக் கூசியது. குடிசையில் ஒளிந்து 635 for Liter.
கோதமனுடைய சித்தாந்தமோ இப்பொழுது புதுவித விசாரணையில் திரும்பியது. தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செய்பவர்களுக்கே சுயப்பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு அதனால் மனுஷவித்து முழுவதுமே நசித்துவிடும் என்றாலும் அது பாபம் அல்ல; மனலயிப்பும், சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலிடு பாடுமே கறைப்படுத்துபவை. தனது இடிந்துபோன குடிசை யில் மறுபடியும் பிறர் கூட்டிவைத்த ஒரு தன்மையில் இருந்துகொண்டு புதிய கோணத்தில் தன் சிந்தனையைத் திருப்பிவிட்டான் கோதமன். அவனுடைய மனசில் அகலிகை மாசு அற்றவளாகவே உலாவினாள் தனக்கே
εξωII55-ΕΣ

அருகதை இல்லை; சாபத் தீயை எழுப்பிய கோபமே தன்னை மாசுபடுத்திவிட்டது என்று கருதினான்.
சீதையும் ராமனும் உல்லாசமாகச் சமயா சமயங்களில் அந்தத் திசையில் ரதமூர்ந்து வருவார்கள். அவதாரக் குழந்தை கோதமனின் மனசில் லக்ஷ்ய வாலிபனாக உருவாகித் தோன்றினான். அவனது சிரிப்பும் விளையாட்டுமே தர்மசாஸ்திரத்தின் துண்டா விளக்கு களாகச் சாயனம் (வியாக்கியானம்) பண்ணின. அந்த இளம்தம்பதிகளின்பந்தந்தான் என்ன? அதுகோதமனுக்குத் தனது அந்தக்காலத்து வாழ்வை ஞாபகப்படுத்தும்
அகலிகையின் மனப் பாரத்தை நீக்க வந்த மாடப்புறா சீதை அவளது பேச்சும் சிரிப்பும் தன்மீதுள்ள கறையைத் தேய்த்துக் கழுவுவன போல் இருந்தன அகலிகைக்கு அவள் வந்த போதுதான் அகலிகையின் அதரங்கள் பன்சிரிப்பால் நெளியும். கண்களில் உல்லாசம் உதயவொளிகாட்டும்.
வசிஷ்டரின் கண்பார்வையிலே வளரும் ராஜ்ய லக்ஷ்யங்கள் அல்லவா? சரயூ நதியின் ஓரத்தில் ஒதுங்கி இரு தனி வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் ஜீவன் களிடையே பழைய கலகலப்பைத் தழைக்க வைத்து வந்தார்கள்
அகலிகைக்கு வெளியே நடமாடி நாலு இடம் போவதற்குப் பிடிப்பற்று இருந்தது. சீதையின் நெருக்கமே அவளது மனச்சுமையைநீக்கிச்சற்று தெம்பை அளித்தது. பட்டாபிஷேக வைபவத்தின் போது அயோத் திக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தாள். ஆனால் அரண்மனைக்குள் ஏற்பட்ட உணர்ச்சிச் சுழிப்புக்குத்தான் என்ன வலிமை! ஒரே மூச்சில் தசரதன் உயிரை வாங்கி, ராமனைக் காட்டுக்கு விரட்டி, பரதனைக் கண்ணிரும் கம்பலையுமாகநந்திக்கிராமத்தில் குடியேற்றிவிட்டது.
மனுஷஅளவைகளுக்குள் எல்லாம் அடை படாத அதீதசக்தி, ஏதோ உன்மத்தவேகத்தில்காயருட்டிச் சொக்கட்டான் ஆடியதுபோல், நடந்து முடிந்துவிட்டது.
வசிஷ்டர்தான் என்ன, சர்வ ஜாக்கிரதையோடு மனுஷதர்மத்தின் வெற்றியாக ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக் கக் கண்ணில் எண்ணெயூற்றி வளர்த்தார். அவருடைய கணக்குகள் யாவும் தவிடுபொடியாகி, நந்திக்கிராமத்தில் நின்றெரியும் மினுக்கு வெளிச்சமாயிற்று. M
சரயூ நதிக் குடிசை மறுபடியும் தம்பமற்று விழுந்தது என்று சொல்ல வேண்டும். கோதமன் தர்ம விசாரமெல்லாம் இந்தப் பேய்க் காற்றில் கறை போயிற்று. மனசில் நம்பிக்கை வறண்டு சூன்யமாயிற்று.
அகலிகைக்கோ? அவளது துன்பத்தை அளந்தால் வார்த்தைக்குள் அடைபடாது. அவளுக்குப் புரியவில்லை. நைந்து ஓய்ந்துவிட்டாள். ராமன் காட்டுக்குப் போனான். அவன் தம்பியும் தொடர்ந்தான்; சீதையும் போய்விட்டாள். முன்பு கற்சிலையாகிக் கிடந்த போது மனசு இருண்டு கிடந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் மனப்பாரத்தின் பிரக்ஞை மட்டும் தாங்க dipigu J66B6EDED.
இதழ் 41

Page 31
கருக்கலில் கோதமர் ஐபதபங்களை முடித்துக் கொண்டு கரையேறிக்குடிசைக்குள் நுழைந்தார்.
அவர் பாதங்களைக் கழுவுவதற்காகச் செம்பில் ஐலத்தை ஏந்திநின்ற அகலிகையின் உதடு அசைந்தது.
“எனக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. மிதிலைக்குப் போய்விடுவோமே
சரி, புறப்படு; சதானந்தனையும் பார்த்து வெகு நாட்களாயின என்று வெளியே இறங்கினார்கோதமர்.
இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள். இருவர் மனசிலும் பளு குடியேறி அமர்ந்திருந்தது. கோதமர் சற்று நின்றார்.
பின் தொடர்ந்து நடந்து வந்த அகலிகை யினுடைய கையை எட்டிப் பிடித்துக் கொண்டார் நடந்தார்; truuju TG85 6T6öppnTT.
இருவரும் மிதிலைநோக்கிநடந்தார்கள். பொழுது புலர்ந்துவிட்டது. கங்கைக் கரைமேல் இருவரும் சென்று கொண்டிருக்கிறார்கள்.
யாரோ ஆற்றுக்குள் நின்று கணிரென்ற குரலில் காயத்திரியைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஐயம் முடியுமட்டும் தம்பதிகள் கரையில் எட்டிக் காத்துநின்றார்கள்.
சதானந்தா என்று கூப்பிட்டார் கோதமர். "அப்பா.அம்மா" என்று உள்ளத்தின்மலர்ச்சியைக் கொட்டிக்காலில் விழுந்து நமஸ்கரித்தான்சதானந்தன்.
அகலிகை அவனை மனசால் தழுவினாள். குழந்தை சதானந்தன் எவ்வளவு அன்னியனாகிவிட்டான், தாடியும் மீசையும் வைத்துக்கொண்டு ரிஷி Lorráif!
கோதமருக்கு மகனது தேஜஸ் மனசைக் குளமை யூட்டியது.
சதானந்தன் இருவரையும் தன் குடிசைக்கு அழைத்துச்சென்றான்.
சிரமப்பரிகாரம் செய்து கொள்ளுவதற்கு வசதி செய்துவைத்துவிட்டு, ஜனகனது தத்துவ விசார மண்டபத்துக்குப்புறப்படலானான்.
கோதமரும் உடன் வருவதாகப் புறப்பட்டார். மகனுக்கு அவரை அழைத்துச் செல்லுவதில் பிரியந்தான். நெடுந்தூரத்துப் பிரயாணமாச்சே என்று ரத்த பந்தத்தின் பரிவால் நினைத்தான். ஊழிகாலம் நிஷ்டையில் கழித்தும் வாடாத தசைக்கூட்டமா, இந்த நடைக்குத் தளர்ந்துவிடப் போகிறது? அவனுக்குப் பின் புறப்பட்டார். அவருடைய தத்துவ விசாரணையின் புதிய போக்கை நுகர ஆசைப் UüLT6öt toő6öt.
மிதிலையின் தெருக்கள் வழியாகச் செல்லும் போது அயோத்தியில் பிறந்த மனத்தொய்வும் சோகமும் இங்கும் படர்ந்திருப்பதாகப் புலப்பட்டன கோதமருக்கு அடங்கிவிட்டபெருமூச்சுகாற்றினூடே கலந்து இழைந்தது.
ஐனங்கள் போகிறார்கள், வருகிறார்கள்; காரியங்களைக் கவனிக்கிறார்கள்; நிஷ்காம்ய சேவை போல எல்லாம் நடக்கிறது; பிடிப்பு இல்லை; லயிப்பு 36b606).
ஜீவநதி

திருமஞ்சனக் குடம் ஏ ல்லும் அந்த யானையின் நை விறுவிறுப்பு இல்லை; உடன் செல்லும் அர்ச்சகன் முகத்தில் அருளின் குதுகலிப்பு இல்லை 8 溪 స్టళ్ల
இருவரும் அரசனுடைய பட்டிமண்டபத்துக்குள் நுழைந்தார்கள் சத்சங்கம் சேனா சமுத்திரமாக நிறைந்
ஜனகன் கண்களில் இவர்கள் உடனே தென்பட்டார்கள். 搬 :::xs 鳞、
அவன் ஒ LTSuð அர்க்கியம் முதலிய உபசாரங்கள் செய்வித்து அழைத்துச் சென்று அவரைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் 65ffair traffi. ళ్ల
ஜனகனுடைய முகத்தில் சோகத்தின் சோபை இருந்தது. ஆனால் அவன் பேச்சில் தழுதழுப்பு இல்லை; அவனுடைய சித்தம் நிதானம் இழக்கவில்லை என்பதைக் 35sfigugi.
என்னத்தைப் பேசுவது என்று கோதமர் சற்றுத் ਨੁLiਲੀ §
ய ராஜ்யத்தில் உணர்ச்சிக்கு மதகு அமைக்கவில்லை" என்றான் ஜனகன், மெதுவாகத்தாடியை நெருடிக்கொண்டு.
ஜனகனின் வாக்கு வர்மத்தைத் தொட்டு விட்டது.
"உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும் என்றார்கோதமர். w 。
துன்பமும் பிறக்கும், உணர்ச்சியைப் பயன் படுத்திக் கொள்ளத் தெரியாது போனால், ராஜ்யத்தைக் 85 e608 படும்போது அதற்கும் இடம் போட்டு வைக்க வேண்டும் இல்லாவிட்டால் ராஜ்யம் இருக்காது என்றான் ஜனகன்,
29-இதழ் 41

Page 32
தங்களதோ? என்று சந்தேகத்தை எழுப்பினார் கோதமர். •
நான் ஆளவில்லை ஆட்சியைப் புரிந்து கொள்ளமுயலுகிறேன் என்றான் ஜனகன்.
இருவரும் சற்று நேரம் மெளனமாக இருந்தார்கள் K ဗွို
தங்களது தர்மவிசாரணை எந்த மாதிரி யிலோ? என்று ဓါp;tjjpIrgé கேட்டான் ஜனகன், ಜ್ಞ "இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; இனிமேல் தான் புரிந்துகொள்ள முயலவேண்டும்; புதிர்கள் பல புலன்களையெல்லாம் கண்ணியிட்டுக் கட்டுகின்றன. என்று சொல்லிக்கொண்டேஎழுந்தார் கோதமர்.
மறுநாள் முதல் அவர் ஜனகன் மண்டபத்துக்குப் போகவில்லை. பத்தியிலே La) புதிர்கள் ஹிமாசலத்தைப் போல ஓங்கிநின்றன. தனிமையை விரும்பினார். ஆனால் நாடிச் ဓါ#øbရစ္ဓါရုံမ္ဟုန္ဟစ္ခ္ရလေ }ួយខ្សe, ஒடிந்துவிடக்
அசோக மரத்தடியில் தான் பொழுதைக் கழிக்கிறார் என்றார் சதானந்தர்.
நிஷ்டையிலா? 3666b; C3LT860&ugo." “அலை அடங்கவில்லை என்று தனக்குள்ளே மெதுவாகச்சொல்லிக்கொண்டான் ஜனகன்.
*****
அகலிகைக்கு நீராடுவதில் அபார மோகம் இங்கே கங்கைக் கரையருகே நிம்மதி இருக்கும் என்று தனியாக உதய காலத்திலேயே குடமெடுத்துச் சென்று விடுவாள்
இரண்டொரு நாட்கள் தனியாக நிம்மதியாகத்
தனது மனசின் கொழுந்துகளைத் தன்னிச்சையோடு படரும்படி விட்டு அதனால் சுமை நீங்கியதாக ஒரு திருப்தியுடன் குளித்து முழுகி விளையாடிவிட்டு நீர் கொண்டு வருவாள்.
இது நீடிக்கவில்லை.
குளித்துவிட்டுத் திரும்பிக் குனிந்த நோக்குடன், மனசை இழைய விட்டுக் கொண்டு நடந்துவந்து கொண்டிருந்தாள்
எதிரே மெட்டிச்சப்தம் கேட்டது. ரிஷிபத்தினிகள் யாரோ அவர்களும் நீராடத்தான் வந்துகொண்டிருந்தார்கள் அவளைக் கண்டதும் பறைச்சியைக் கண்டது போல ஓடி விலகி அவளை விறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
அவள்தான் அகலிகை" என்பது தூரத்தில் கேட்டது. கோதமனுக்கு அன்று அடிவயிற்றில் பற்றிக் கொண்டு பிறந்த சாபத் தீயைவிட அதிகமாகச் சுட்டன அவ்வார்த்தைகள். KK - அவள் மனசு ஒரேயடியாகச் சுடுகாடு மாதிரி வெந்து தகித்தது. சிந்தனை திரிந்தது. "தெய்வமே சாப
 
 
 

விமோசனம் கண் டாலும் பாப விமோசனம் கிடையாதா? என்று தேம்பினாள். K
யந்திரப் பாவை போல அன்று கோதமருக்கும் சதானந்தருக்கும் உணவு பரிமாறினாள் மகனும் அன்னியனாகிவிட்டான் அன்னியரும் விரோதிகளாகி விட்டார்கள் இங்கென்ன இருப்பு? என்பதே அகலிகை யின் மனசு அடித்துக்கொண்ட பல்லவி 签斑 கோதமர் இடையிடையே பிரக்ஞை பெற்றவர் போல் ஒரு கவளத்தை வாயிலிட்டு நினைவில் தோய்ந்திருந்தார். ঠু இவர்களது மன அவசத்தால் ஏற்பட்ட பளு
சதானந்தனையும் மூச்சுத்திணறவைத்தது.
பளுவைக் குறைப்பதற்காக, அத்திரி முனிவர் ஐனகனைப் பார்க்க வந்திருந்தார். அகத்தியரைப் பார்த்துவிட்டு வருகிறார். மேருவுக்குப் பிரயாணம். ராமனும் சீதையும் அகத்தியரைத் தரிசித்தார்களாம். ខ{6+66 இருவரையும், நல்ல இடம் பஞ்சவடி அங்கே தங்குங்கள் என்று அகத்தியர் சொன்னாராம். அங்கே இருப்பதாகத்தான் தெரிகிறது" என்றான்சதானந்தன்
நாமும் தீர்த்த யாத்திரை செய்தால் என்ன? என்று அகலிகை மெதுவாகக் கேட்டாள். 漫
புறப்படுவோமா? என்று கைகளை உதறிக் கொண்டு எழுந்தார் கோதமர்.
இப்பொழுதேயா? என்றான் சதானந்த & i 缀 எப்பொழுதானால் என்ன? என்று கூறிக் கொண்டே மூலையிலிருந்த தண்டு கமண்டலங்களை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கினார் கோதமர். W
அகலிகை யின் தொடர்ந்தாள். சதானந்தன் மனம்தகித்தது.
Z பொழுது சாய்ந்து, ரேகை மங்கிவிட்டது. இருவர் சரயூ நதிக்கரையோரமாக அயோத்தியை நோக்கிவந்துகொண்டிருக்கிறார்கள். &
பதினான்கு வருஷங்கள் ஓடிக் கால வெள்ளத்தில் ஐக்கியமாகிவிட்டன. அவர்கள் பார்க்காத முனிவர்கள் இல்லை; தரிசிக்காத க்ஷேத்திரம் இல்லை. ஆனால் மனநிம்மதி மட்டிலும் அவர்களுக்கு இல்லை.
வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக் கோயில் போல திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கைலயாங் கிரியைப் பணிச்சிகரங்களின்மேல்நின்று தரிசித்தார்கள். தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை உருவகப்படுத்தின பாலையைத்தாண்டினார்கள்.
தம் உள்ளம் போலக் கொழுந்துவிட்டுப் புகை மண்டிச் சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலை களை வலம்வந்துகடந்தார்கள் 8
தமது மனம் போல ஓயாது அலைமோதிக் கொண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப் பின்னிட்டுத்திரும்பினார்கள். KK
தம் வாழ்வின் பாதை போன்ற மேடு பள்ளங்
LLYiGii ii i i i i iG GMGiGiiiGiiiiiiiiGiiiiiiii i iSiST 41

Page 33
களைக் கடந்து வந்துவிட்டார்கள்.
இன்னும் சில தினங்களில் ராமன் திரும்பி விடுவான்; இனி மேலாவது வாழ்வின் உதயகாலம் பிறக்கும் என்ற ஆசைதான் அவர்களை இழுத்து வந்தது.
பதினான்கு வருஷங்களுக்கு முன் 56öt 5 ULI குடிசை இற்றுக் கிடந்த இடத்தை அடைந்தார்கள்.
இரவோடு இரவாக, குடியிருக்க வசதியாகக் கோதமர் அதைச் செப்பனிட்டார். வேலை முடியும்போது உதய வெள்ளி சிரித்தது. -
இருவரும் சரயூவில் நீராடித்திரும்பினார்கள். கணவனாருக்குப் பணிவிடை செய்வதில் முனைந்தாள் அகலிகை. இருவரது மனசும் ராமனும் சீதையும் வரும் நாளை முன்னோடி வரவேற்றது. இருந்தாலும் காலக் களத்தின் நியதியை மனசைக் கொண்டு தவிர, மற்றப்படித்தாண்டிவி முடியுமா?
ஒருநாள் அதிகாலையில் அகலிகை நீராடச் சென்றிருந்தாள். 綫
அவளுக்கு முன், யாரோ ஒருத்தி விதவை குளித்துவிட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தாள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை; ஆனால் எதிரே வந்தவள் அடையாளம் கண்டு கொண்டு விட்டாள். ஒடோடியும் வந்து அகலிகையின் காலில் சர்வாங்கமும் தரையில்படவிழுந்து நமஸ்கரித்தாள்.
தேவி கைகேயி தன்னந்தனியளாக பரிசனங் களும் பரிவாரமும் இல்லாமல், துறவியாகிவிட்டாளே!
குடத்தை இறக்கிவைத்துவிட்டு அவளை இரு கைகளாலும் துக்கி நிறுத்தினாள். அவளுக்குக் 6.Da5CBastaöt GaFuj6ò fu 66ð60D6D.
"தர்ம ஆவேகத்திலே பரதன் தன்னுடைய மனசில் எனக்கு இடம் கொடுக்க மறந்துவிட்டான்" என்றாள்கைகேயி,
குரலில் கோபம் தெறிக்கவில்லை: மூர்த்தண்யம் துள்ளவில்லை. தான் நினைத்த கைகேயி வேறு பார்த்த கைகேயி வேறு. படர்வதற்குக் கொழுகொம்பற்றுத் தவிக்கும்மனசைத்தான் பார்த்தாள் அகலிகை,
இருவரும் தழுவிய கை மாறாமல், சரயவை saé 555Tñasa. 繳
பரதனுடைய தர்ம வைராக்கியத்துக்கு யார் காரணம்?" என்றாள் அகலிகை, அவளுடைய உதட்டின் கோளத்தில் அநுதாபம் கனிந்த புன்சிரிப்பு நெளிந்து மறைந்தது.
"குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால் குழந்தையைக் கொன்றுவிடுவதா? என்றாள் SDSGSU.
குழந்தைக்கும் நெருப்புக்கும் இடையில் வேலி போடுவது அவசியந்தான் என்று எண்ணினாள் அகலிகை. ஆனால் எரிந்தது எரிந்ததுதானே?" என்று கேட்டாள். எரிந்த இடத்தைச்சுத்தப்படுத்தாமல் சாம்பலை அப்படியே குவித்து வைத்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருந்தால் | lo Gið போதுமா?"என்றாள்கைகேயி
 
 
 
 
 
 
 
 
 
 
 

"சாம்பலை அகற்றுகிறவன் இரண்டொரு நாட்களில் வந்து விடுவானே என்றாள் அகலிகை.
"ஆமாம்" என்றாள் கைகேயி அவள் குரலில் பரம நிம்மதி தொனித்தது. grips at எதிர்பார்த்திருப்பது பரதனல்ல, கைகேயி
மறுநாள் அவள் அகலிகையைச் சந்தித்த பொழுது முகம் வெறிச்சோடியிருந்தது. மனசு நொடிந்து கிடந்தது.
"ஒற்றர்களை நாலு திசைகளிலும் விட்டு அனுப்பிப் பார்த்தாகிவிட்டது. ராமனைப் பற்றி ஒரு புலனும் தெரியவில்லை. இன்னும் நாற்பது நாழிகை நேரத்துக்குள் எப்படி வந்துவிடப் போகிறார்கள்? பரதன் பிராயோபவேசம் செய்யப் போகிறானாம். அக்கினி குண்டம் அமைக்க ஏற்பாடுசெய்து வருகிறான் என்றாள் ప888aa; 雛 క్ష
பரதன் எரியரில் தன் னை அவித்துக் கொள்ளுவது தன் மீது சுமத்தப் பட்ட ராஜ் ய மோகத்துக்குத் தக்க பிராயச்சித்தம் என்று அவள் கருதுவதுபோல இருந்தது பேச்சு ॐ
சற்று நிதானித்து நானும் எரியில் விழுந்து விடுவேன்; ஆனால் தனியாக அந்தரங்கமாக என்றாள் கைகேயி அவள் மனசுவைராக்கியத்தைத்தெறித்தது.
பதினான்கு வருஷங்கள் கழித்து மறுபடியும் அதே உணர்ச்சிச் சுழிப்பு அயோத்திக்கு ஏற்பட்ட சாபத்தீடுநீங்கவில்லையா?
அகலிகையின் மனசு அக்குத் தொக்கு இல்லாமல் ஓடியது. தனது காலின் பாபச் சாயை என்றே சந்தேகித்தாள்.
*வசிட்டரைக் கொண்டாவது அவனைத் தடைசெய்யக்கூடாதோ? என்றாள் அகலிகை,
"பரதன் தர்மத்துக்குத்தான் கட்டுப்படுவான்; வசிட்டருக்குக் கட்டுப்படமாட்டான் என்றாள் கைகேயி.
மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச்சத்துரு என்று கொதித்தாள் அகலிகை
தன்னுடைய கணவர் பேச்சுக்குப் பரதன் ஒரு வேளை கட்டுப்படக் கூடாதோ என்ற நைப்பாசை மறுபடி யும் அயோத்தியில் துன்பச் சக்கரம் சுழல ஆரம்பித்து விடக்கூடாதே என்ற பீதி,
கோதமன் இணங்கினான். ஆனால் பேச்சில் J6B6ör öst 66B6B6B.
பரதனை உண்டு பலிகொள்ள அக்கினிதேவன் விரும்பவில்லை. அனுமன் வந்தான்; நெருப்பு அவிந்தது. திசைகளின் சோகம், கரை உடைந்த குதுகல வெறி யாயிற்று.தர்மம் தலைசுற்றியாடியது.
வசிட்டனுக்கும் பதினான்கு வருஷங்கள் கழிந்த பிறகாவது கனவு பலிக்கும் என்று மீசை மறை வில்சிரிப்புத்துள்ளாடியது.
இன்ப வெறியில் அங்கே நமக்கு என்ன வேலை என்று திரும்பிவிட்டான்கோதமன்
சீதையும் ராமனும் தன்னை பார்க்க வருவார்
31 H_____ 接 65tp:41

Page 34
கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள். வரவேற்பு ஆரவாரம் ஒடுங்கியதும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி வந்தார்கள் 8 ரதத்தைவிட்டு இறங்கிய ராமனது நெற்றியில் அநுபவம் வாய்க்கால் வெட்டியிருந்தது. சீதையின் பொலிவு அநுபவத்தால் பூத்திருந்தது. இருவர் சிரிப்பின் லயமும்மோக்ஷலாகிரியை ஊட்டியது.
ராமனை அழைத்துக்கொண்டு கோதமன் வெளியே உலாவச் சென்றுவிட்டான். XX தன் கருப்பையில் கிடந்து வளர்ந்த குழந்தை யால் சுரக்கும் ஒரு பரிவுடன் அகலிகை அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். இருவரும் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்கள்.
ராவணன் தூக்கிச் சென்றது. துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் சீதை ராமனுடன் சேர்ந்து விட்ட பிறகு துன்பத்துக்கு அவளிடம் இடம் ஏது?
அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகைதுடித்துவிட்டாள். 新 *அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்? என்று G38Est reċir X 3.
"அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை அமைதியாக
அவன்கேட்டானா?" என்றுகத்தினாள் அகலிகை; அவள் மனசில்கண்ணகி வெறிதாண்டவமாடியது.
அகலிகைக்கு ஒருநீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த ខ្ញា?
இருவரும் வெகுநேரம் மெளனமாக இருந்தனர். "உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச்சிரித்தாள் சீதை
உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள். அகலிகை வார்த்தைவறண்டது.
நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகி விடப் போகிறதா உள்ளத்தைத் தொடவில்லையானால்?
நிகழ்கால
தர்மத்தின் முகம் தரிசித்து தொழுகின்ற அதர்மப் பிரம்மாக்கள் சர்வமும் நானெனும் சமஸ்தானத்துள் சதியின் முகவரிகளால் எழுதப்படும் வாழ்வின் விதிகள் வாழவொணர்ணாப் பக்கங்களை விரிக்கிறது கர்வமும் கனல் கக்க
அல்வாயூர்
ஜீவநதி, 毯
 
 

நிற்கட்டும்:உலகம் எது?" என்றாள் அகலிகை
வெளியில் பேச்சுக் குரல் கேட்டது. அவர்கள் ßbtôt Messi -frffs6ff.
சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை.
ராமன் மனசைச் சுட்டது காலில் படிந்த தூசி அவனைச் சுட்டது. ష్రభథళ్ల
ரதம் உருண்டது. உருளைகளின் சப்தமும் ஓய்ந்தது. 8
கோதமன் நின்றபடியே யோசனையில் ஆழ்ந் தான். நிலைகாணாது தவிக்கும் திரிசங்கு மண்டலம் அவன்கண்ணில் பட்டது. & 艇
புதிய யோசனை ஒன்று மனக்குகையில் மின்வெட்டிப் பாய்ந்து மடிந்தது. மனச்சுமையை நீக்கிப் பழைய பந்தத்தை வருவிக்க, குழந்தை ஒன்றை வரித்தால் என்ன? அதன் பசலை விரல்கள் அவள் மனசின் சுமையை இறக்கிவிடாவா?
உள்ளே நுழைந்தான். அகலிகைக்கு பிரக்ஞை மருண் நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்கவேண்டிய இந்திர நாடகம் மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.
கோதமன் அவளைத்தழுவினான். M கோதமன் உருவில் வந்த இந்திரன் வேடமாகப் பட்டது அவளுக்கு அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி:
கோதமன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.
அகலிகை மீண்டும் கல்லானாள். மனச்சுமை மடிந்தது.
来来字来来
கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப் பாலைவனத்தின் வழியாக விரைந்து கொண்டி ருந்தது. அதன் குதிகாலில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது. 漆 அவன்தான் கோதமன். அவன் துறவியானான்.
O O நகர்வுகள்
கொதிக்கும் தேசத்தில் வாழ்வின் கனவுகள் கருகிச் சாகின்றன வீழ்ந்தது வீழ்ந்ததுதான் இனியிங்கு எழுச்சியின் மீட்சி இல்லையெனும் கணிணுதல் நிகழ்காலம் நகரும் கோலம்.
சி.சிவநேசன்

Page 35
யார் இந்த புதுமைப்பித்தன்
தமிழச்சிறுகதை உலகில் தனக்கென்ற மான அடையாளங்களைக் கொண்டு சிறுகதைக் கு வரைவிலக்கணம் கூறுபவராகவும் வகைகூறுபவராகவும் அமைந்தவர் இவர். இவருடைய சிறுகதை அனுபவங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு வரப்பிரசாதமாகவும் வரமாகவும் அமைந்தன. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பல புனை பெயர்களில் சிறுகதை எழுதியுள்ளார். வெ.கந்தசாமிப்பிள்ளை, கவிராயர், சொ.வி, ரசமட்டம், கூத்தன், நந்தி, சுக்ராச்சாரி, கபாலி, மாத்ரு, நந்தன், இறுதியாக புதுமைப் பரித்தன். இப்புதுமைப்பித்தன் என்ற பெயர் அவருடைய நிலையான பெயராக பதிவாக்கப்பட்டது.
புதுமைப்பித்தனது சிறுகதை உலகப் பிரசண்ணமூம் அதன் காத்திரமூம்
கட்டுரை ஆசிரியராகவும் பத்திரிகை ஆசிரிய ராகவும் சிறுகதை எழுத்தளராகவும் விளங்கிய இவர் ஆரம்ப காலத்தில் வசதியான குடும்பத்தில் இருந்து தன் எழுத்துத்துறை அனுபவத்திற்காக வறுமைச் கழலை வலிந்து கொண்டவர். தழுவல்கதைகளையும் எழுதி யுள்ளார். கவிதைகளில் ஆர்வம் காட்டியுள்ளார். மணிக் கொடி காலத்தின் பிரதான எழுத்தாளரான புதமைப் பித்தனின் கதைகள் அவர் வாழ்நாளிலேயே வெளியான போது பல மாற்றங்கள் இலக்கணம் சார்ந்தும் மொழிநடை சார்ந்தும் பொருள் சார்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களிலும் அவர் இலக்கியப் பார்வை செலுத்தியுள்ளார்.
புதுமைப்பித்தனின் படைப்பினுடாக அவரது இலக்கிய அடையாளங்களை நோக்குகையில் பொதுவான யதார்த்தப் பார்வையுடன் மரபில் இருந்து வேறு. பார்வையை வெளியிட்டுப் பார்க்கின்ற சிந்தனைகளைக் கொண்ட புதுமைப்பித்தனில் இருந்து மரபில் ஊறிப் போன பழமைவாதிகளும் நவீன சிந்தனைகளைச் சகித்துக் கொள்ளாதவர்களும் விலகியபோனதில் வியப்பில்லை. "இவர்கள் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும் இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாக வும் அதை ஆதரித்துப் பேசுவதாகவும் "மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சில விடயங் களை நேருக்குநேர் பார்க்கக் கூசுகிறேன்" எனக் கூறும் இலக்கியம் சார்ந்த ஒரு பட்டவர்த்தனமான போக்கை
ஜீவநதி- H
 
 
 
 
 

புதுமைபித்தனிடம்காணலாம்.
புதுமைப்பித்தனின் படைப்பில், படைப்பிற்கும் வாழ்க்கைக்குமான ஓர் உறவின் நெருக்கம் காணப்படு கின்றது. இவர் சிறுகதை மர்மங்களை நன்கறிந்த வராகவும் காணப்படுகிறார். இவரின் படைப்புக்கள் பெரும்பாலும் நம்பிக்கை வறட்சித் தன்மை கொண்ட னவாகவும் ஒவ்வொரு கதையும் வாழ்க்கை சார்ந்த அனுபவமுத்திரை கொண்டதாகவும் காணப்படுகின்றன. புதுமைப்பித்தனின் படைப்பாக்கங்களின் சாராம்சத்தை ஒற்றைச் சொல்லில் உருவகப்படுத்துவோமானால் முரண்பாடு என்ற சொல்தான் மனதில் வரும் என்கிறார் இரா.வெங்கடாசலாபதி இவர் புதுமைப்பித்தன் பற்றிக் கூறும்போது, வாழ்க்கையின் அடியான எல்லா அனுபவங்களையும் எதிர்மறையாக நோக்கி சில புரியாதஉண்மைகளைபுரிய வைக்க முயற்சித்துள்ளார். ॐ* மோசனம். தமிழ் வாழ்வின்
வெவ்வேறு கோலங்களை யும் காட்டி அதன் முழப் பரப்பும் தன் அனுபவத்திற்கு வந்து விட்டதான படிப்பை வாசகனுக்கு அளித்திருப்பது புதமைப் பித்தனின் மிகப் பெரிய சாதனை இந்த சாதனை சார்ந்த வீச்சு அவருக்கு மட்டுமே உரித்தானது எனக்குறிப்பிடுகின்றார்.
அவருடைய படைப்பினுள் புகும்போது முதலாவதாக தெரிவது மொழி நடை ஒரு படைப்பாளி யின் மொழி எந்தளவிற்கு வாசகனின் மனதை நெருடு கின்றதோ அந்தளவிற்கு படைப்பின் வெற்றி தங்கி யுள்ளது. அவரது மொழி சுலபமானது, யதார்த்தமானது, இரச பேதம் பொதிந்த துள்ளல் நடை என்றெல்லாம் விமர்சகர்கள் கூறியுள்ளனர். உண்மையில் இது புதுமைப்பித்தனின் ஒரு தனித்துவம், அவர் கூற்றும் அவர் படைப்பும் அதனை உறுதிப்படுத்துகின்றன. வெவ்வேறு காலங்களிற்குரிய வெவ்வேறு சேதிகளை ஒரே வாக்கியத்தில் இணைப்பதும் பழைமையான செய்தியை ஒட்டி ஒரு புத்தம்புதிய செய்தியை இணைப்பதும் அவருக்குக் கை வந்த கலை, அவரது எழுத்தில் மிக தீவிரமான சிந்தனைத் தெறிப்பும் அநாயாசமாக வெளிப்படுகிறது.
அடுத்து அவரது கதாபாத்திரங்கள் பற்றி நோக்கின்,தம் தரப்பில் சேர வேண்டிய நியாயங்களுக்கு போராடி வெற்றி பெறுபவனாக காணப்படும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு வகையில் சமூகத்தின்
函}一 இதழ் 41

Page 36
எழுமாற்றாகவே காணப்படுகின்றது. 97இற்கு மேற்பட்ட சிறுகதைகள் இதனை நியாயப்படுத்துகின்றன. அவ்வகை யில் சாப விமோசனத்தை நோக்கின், பெண் வேதனை களையும் பெண்ணின் மரபு நசிவுகளையும் துல்லியமாக எடுத்துக் காட்டும் துணிகரமான படைப்புக்களில் இதுவும் ஒன்று. மரபில் இருந்து வேறுபட்டு, யதார்த்தப் பார்வையும் வெளியீட்டுப் பார்வையில் விமர்சனமும் கொண்ட புதுமைப்பித்தனின் கதை மரபால் ஊறிப் போன பழைய மரபுவாதிகளுக்கு சற்றும் ஏற்புடையதல்ல. இதனை அவர்கள் வெறுப்பார்கள் என புதுமைப்பித்தன் அஞ்ச வில்லை. அவரே குறிப்பிடுகிறார். 藻
"ராமாயண பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் இருக்கலாம். அதை நான் பொருட் படுத்தவில்லை" என்கிறார். துணிகரமான எழுத்தாளுமை இக்கதையிலும் தெரிகிறது. இக்கதையில் பெண்ணிய வாதியாக இன்று கேள்வி கேட்டும் ஒரு வக்கீலாகவும் தோன்றி இறுதியில் நீதிபதியாக முடிவினையும் அவரே காட்டியுள்ளார். பெண் சார்ந்த பிரச்சினைகளை இவரது பல கதைகள் சுட்டுகின்றன. மரபினடியான பெண் நசிவுகளைக் காட்டிய புதுமைப்பித்தன் இதில் மரபின் தவறுகளையும் சுட்டுவதைக் காணலாம்.
அகலிகை கதை சாப விமோசனம் என்ற பெயரால் அழைக்கப்படும் இக்கதையூடாக இவரின் படைப்பின் அடையாளத்தினையும் ஆளுமையினையும் கதையின் கரு, பாத்திரங்களின் பதிவு/வியாக்கியானம், கதை கூறும் பாங்கு மொழி, அணி, களம், மூடிய சமூகத்திற்கு கூறும் சேதி என்பவற்றினூடாக அறிந்து கொள்ளலாம். இக்கதையின் கருவானது பழைய மரபினால் பெண்ணின் ஆத்ம உணர்வு நசிவுண்டு போகும் தொடர் நிலை வழிச் சமூகத்திடையே பெண் இன்றும் சுமைகளுடனும் சோகங்களுடனும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதை உணர்த்து கிறது. புதுமைப்பித்தனின் சமூகவியல் பார்வையில் பெண் மரபு தரும் நோவுடனேயே வாழ வைக்கப்படுகிறாள் என்பது இக்கதையின் கருப் பொருளாகும். தமிழ் சமூகத்தில் ஆண் சார்ந்த எல்லா தவறுக்கும் பெண்னே வகைகூறுபவளாகவும் அமைந்துள்ளாள் என்ற உண்மையை மன வருத்தத்தோடு நோக்கிய புதுமைப்பித்தன் பழைய சம்பிரதாய மரபுகளை இக்கதையூடாக உடைத்தெறிய முற்படுகின்றார். ஆண் இருவர் விட் தவறுக்காக பெண் இங்கு தண்டிக்கப்படுகின்றாள். சந்தேகப்பட்ட பெண்ணின் தவற்றை சரி செய்ய, சந்தேகம், சமூக பயம் கொண்ட ஆண் எவ்வாறு பொருத்தமுடையவன் என்ற நிதர்சனமான கேள்வியுடன் புரட்சிகரமாக கருவை பூரணமாக்கின்றார். பெண்ணியச் சிந்தனைவாதியின் இதயத் துடிப்பு மிக நிதானமாக கேட்பதை உணரலாம். சமூகத்தில் மாற்ற முடியாததும் என்றும் நிலைபேறுடையது மான மரபுகள் இங்கே உடைத்தெறியப்படுகின்றன. தவறுகளுக்கு ஆண், பெண் அடிப்படையில் நீதி கூறக் கூடாது. இந்திரன் என்ற தேவலோக அரசன் பெண்ணின் உடல் இன்பத்திற்காக
ஜீவநதி 3.

தன்னிலை இழக்கிறான். முற்றும் உணர்ந்த முனிவருக்கு மாயக் கோழி இந்திரனின் கழ்ச்சி. ஆனால் தண்டனை யும் சாபங்களும் பெண்ணுக்கு இது எந்த வகையில் நியாயம்? இது இதிகாச புராண கேள்வியல்ல. புதுமைப் பித்தன் தான் வாழ்ந்த காலத்தில் சாபங்களும் தண்டனை களும் பெண்ணுக்குரியன தப்பிதங்களும் மகுடங்களும் ஆணுக்குரியன. ஆண் என்றும் வாழ்வில் ஏகப் பிரதிநிதியா? எல்லா வகையிலும் முனைப்புள்ளவனாக ஆண் காணப்படுகிறான். இது தமிழ் மரபு. இதனை புதுமைப்பித்தன் முற்றாக வெறுக்கிறார். இவ்வெறுப்பு சாப விமோசனம் என்ற படைப்பில் வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. சாபம் பெற்ற அகலிகை கல்லாகக் கிடந்து இராமபிரானின் காலடி விமோசனம் அடைந்து எழுகிறாள். ஆனால் இராமன் விமோசனம் வழங்கத் தகுதியற்றவன். தன் மனைவியாகிய சீதையை சந்தேகத்தின் பெயரில் தீக்கு எரித்த அந்த இராமனின் காலடியா எனக்கு விமோசனம் வழங்கியது எனக்கேட்டு மீன்டும் அகலிகை கல்லாகின்றாள். ஆண் ஆதிக்கம் கொண்ட அணுக்கிரக புருஷர்களினால் பெண்மை தூக்கி யெறியப்படுகிறது. இங்கு அகலிகை, கௌதமன், இந்திரன் இராமன், சீதை போன்ற புராதன பூஜிக்கப்பட்ட பாத்திரங்களை நவீன காலத்திற்கேற்ப உள விகாரம் பெற்ற பெண்ணாகவும் ஆணாகவும் படைத்துள்ளார். மரபுக்கு எதிராக நின்று பெண் சார்ந்த ஒரு போராட்ட மாகவே இக்கதையை வடித்துள்ளார். இதில் வரும் ಅ.56kಾæ என்றீபிரதான பாத்திரத்தின் அவலம், மனப் போராட்டம் என்பவற்றை உளவியல் தேடலின் பகைப் புலத்தை அடிப்படையாக கொண்டு தத்ரூபமாக எடுத்துரைக்கிறார். கணவன் மனைவிக் கிடையேயான தாம் பத்திய வாழ்வில் கீறல் விழுந்த போராட்டம் இரண்டு p615,565556pLGBujuteCT (Burgu Lub LD60T5Teb பிழையறியாத மனைவியை தண்டித்த அவனுக்கு மனம் போராட்டம். இதே போராட்டம் அகலிகைக்கும் காணப்பட்டது.
கோதமனுக்குதான் ஏற்றவனா என்பதே.
அகலிகைக்குதான் ஏற்றவனாஎன்பதே. மரபு ரீதியான உளப் போராட்டத்தினை தெளிவு படுத்துகிறது.
"வாழ்வே அவளுக்கு நரக வேதனையாயிற்று. அகலிகைக்கு ஏற்பட்ட மன வருத்தம், போராட்டம் என்பவற்றை உணர்ந்துகொள்ளக்கூடியதாக உள்ளன.
பாத்திரப் பதிவு/வியாக்கியானங்கள்
சாப விமோசனம் என்ற கதையில் வரும் பழைய மரபு சார்ந்த ஒவ்வொரு பாத்திரத்தையும் அந்தக் காலத்தின் உணர்வுகளையும் பதிய வைக்கும் முகமாக வடிவமைத்துள்ளார். பாத்திரங்களை வாசகர் முன்னிலைப் படுத்தும்போது, மனதில் பாதிப்புகளையும் பதிவு களையும் ஏற்படுத்தும் விதமாக பாத்திர வர்ணனையை மேற்கொண்டார். அகலிகையை அவர் அடையாளப் படுத்தும்போது,
H இதழ் 41

Page 37
"சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்து போன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ள வைக்கும் மோகன வடிவம். ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்று பிறந்து தன் கனவை யெல்லாம் கல்லில் வடித்து வைத்தானோ என்று தோன்றும் அளவிற்கு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்த பதுமையின் கண்களில் ஒரு சோகம் - சொல்லிலே அடைபடாத சோகம் - மிதந்து, பார்க்கின்றவரின் வெறும் தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு. அன்று சாபத்தின் விளைவு. அவள் தான் அகலிகை"
இவ்வாறு கதாபாத்திரத்தின் அறிமுகப் பதிவினை மேற்கொள்ளும்போது, இப்பாத்திரம் ஓர் ஈர்ப்பினை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வர்ணித்துள்ளார். கவிதை நடையோடு சேர்ந்த சொற்கள், வார்த்தைக்கு வார்த்தை உணர்ச்சி வேகமும் கொண்ட சொற் தளங்கள் இவரின் படைப்பாளுமையின் சிறப்பே.தவிரவும், காமத்தைக் கொண்டு சோகத்தில் ஆழ்த்தியது' என்ற வியாக்கியானப் படுத்தலினூடே வாசகரின் ஆவலைத் தூண்டும் வகையில் கதையைத் தொடக்கி வைப்பதும் இவரின் படைப் பாளுமையின் சிறப்பியல்பைக் காட்டுகிறது.
இங்கு நடமாடும் கதை மாந்தர்கள் ஒவ்வொரு வருக்கும் தன் கதையின் களத்தேவைக்கேற்ப பதிவாக்க மும், கருத்துருவமும் கொடுத்துள்ளார். இராமன், ஜனகன், சீதை, கோசலை, பரதன், விசுவாமித்திரர், கெளதமர், சனாதனர் என்ற பாத்திரங்களைத் தேவைக்கேற்ற வகையில் பதிவாக்கம் செய்வதும் சிறப்பே. கெளதமன் அகலிகை புதல்வனான சதானந்தனை அறிமுகம் செய்யும்போது "சதானந்தன் எவ்வளவு அந்நியமாகி விட்டான். தாடி மீசையும் வைத்துக்கொண்டுரிசி மாதிரி என்று சூழ்நிலை காலஇடைவெளியைபுரிய வைக்கின்றார்.
651ógub epengoanopub
சாப விமோசனம் என்ற கதையை உணர்ச்சிச் சுழிப்பினை வெளிப்படுத்தும் வார்த்தை பிரயோகம் கொண்டும் உள விலக்காறுகளைப் பகைப் புலமாகக் கொண்டும் உணர்ச்சியும் அறிவும் கலந்து அழகாக நகர்த்திச்சென்றுள்ளார். எடுத்துக்காட்டு1. "மாசுபட்ட இந்த தசைக் கூட்டம் பெளத்திரம் அடைந்தது" - அகலிகை 2. "உலகத்தின் தன்மை என்ன இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்துகிறது. மனசுக்கும் கரனசக்தியின் நிதானத்திற்கும் கட்டுப்படாமல் நிகழ்ந்த ஒரு பாத்திரத்தின் மீது தண்டனை? காரியத்துக்காக ராமன்நிலை
உவமைத் தொடர் பயன்படுத்தப்படல்
அகலிகை கௌதமன் சாபத்தின் அவர்களின் சோக நிலைக்கூடாக, 1. தம்பதிகளின் குடும்பக்கூடுகம்பம்அற்றுவீழ்ந்ததுபோல” 2.இவர்கள் மனசில் ஏறியதுன்பத்தின் வடுப் போல 3.மோனத்தவம் இருக்கும் பட்டாம்பூச்சிபோல
ஜீவநதி 3.

4. கண்கள் சாணை தீட்டியகத்தி போல 5. பெண் கேவலத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாதது போல - 6. காயகற்பம் செய்வதுபோல 7. பறைச்சியைக் கண்டதுபோல இவ்வாறு உவமையணிகளை பயன்படுத்துகிறார். களம் என்று நோக்கின, சொற் பிரயோகம் கழ்நிலை விபரிப்பு என வாசகரை முன்னிறுத்தி அழைத்துக் கொண்டு செல்வதை காணலாம். முற்றினும் பழைய இதிகாச காலத்திற்குச் செல்லும் ஓர் உணர்வு ஏற்படுவதாக விபரித்துள்ளார். 戮
இக்கதையூடாகச் சொல்லும் சேதி பெண் மரபுகளுக்கும் இடையில் குற்ற மிளைக்கப்படாமல் தண்டிக்கப்படுவார். சமூகத்தில் சாப விமோசனம் எக்காலத்தில் மிக மலிவாக மேற்கிளம்பும், அகலிகை மனதால் தவறு இழைக்கவில்லை. மனதால் தவறு இழைக்காதவளை நீ ஏற்றுக் கொள் என விசுவாமித்திரர் கூற அகலிகை குற்றமற்றவள் என கெளதமனும் எண்ண. சமூகம் அவளை நீராடச் செல்லும்போது ரிஷி பத்தினிகள்ப 8 கண்டது போலச் ஓடி விலகி பின்னர் அவள் தான் அகலிகை என்றார்கள் இங்கு விமர்சன நோக்கு நீதிக்கு முரண்பட்டது. இது எக்காலத்திற்கும் உரியது.
தெய்வமே சாப விமோசனம் கண்டாலும் பாவ விமோசனம் கிடையாதா? என அகலிகையின் வேதனையின் உணர்ச்சிச் சுழிப்பினைத் தெளிவாகக் காட்டுகிறார். தான் சமூகம் இறுதியாக பழைய மரபை உடைத்து பெண்ணின் தனித்துவத்தை போற்றும் (pöLDET5, diploo நிதானமாக, ஆனால் பலவீனமாக நிறைவு செய்துள்ளார். கெளதமன் தாம் வாழ்வில் ஏற்பட்ட வடுவை நீக்க அகலிகையுடன் மீண்டும் உறவு முறைக்குள் உட்படுத்துகிறார்.
கோதமன் அவளை தழுவினான். கோதமன் உருவில் வந்த இந்திரன் வேடமாகப்பட்டது. அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி." 漆签 கோதமன் கைக்குள் சிக்கி கிடந்தது ஒரு கற் சிலை. அகலிகை மீண்டும்கல்லானாள்.
ஆணாதிக்க வெறி பிடித்த இந்த சமுதாயத்தில் பெண்களின் பிரச்சினைக்குத் தீர்வு அவள் சடமாவதா? என்ற பலவீனமான கேள்வி பதுமைப்பித்தனின் படைப் பின்மீது கேட்கப்படின் தன்னைத் தானே கல்லாக்கும் துணிவினாலும் நிறைவேற்றும் தன்மையினாலும் பெண்ணின் தனித்துவம் வந்து சேர்கிறது என்பதே கதாசிரியர் உணர்த்துவதாகும் தொகுத்து நோக்கின் பழைய மரபினடியே ஒரு புதிய பெண்ணிய சிந்தனை யைக் கருவாக கொண்டு ஐயமற்ற கதை தெரிவினாலும் கவிதை நடை சார்ந்த எழுத்தோவியத் தினாலும் மிக யதார்த்தமான உளவியற் பகைப்புலத் தன்மை கொண்ட உயிர்ப்புறு பாத்திரங்கள் மூலம் சிந்தனைத் தூண்டலுக் குரிய அழகிய படைப்பாக புதுமைப்பித்தனின் சாப விமோசனம் விளங்குகிறது.
இதழ் 41

Page 38
"வீட்டுக்காரர். வீட்டுக்காரர்." குரல் கேட்டு அருந்ததி துருவிய தேங்காய்ச் சிரட்டையை போட்டு விட்டு விரைந்தாள் படலைக்கு. அங்கே ஒருவன், நடுத்தர வயது தானிருக்கும், முன் வாயில் இரண்டு பல் இல்லை, அழுக்கேறிய உடை ஆனால் பரந்தசிரிப்பு நின்றிருந்தான்.
அருகே உந்துருளி ஒன்று சிறிய ரகமானது நிறுத்தப்பட்டிருந்தது. பின் ஆசனத்தில் விறகு தடிகள் ஓர் ஆள் அளவு உயரத்துக்கு அடுக்கப்பட்டிருந்தன என்ன வேணும் உங்களுக்கு? ஆரத் தேடுறீங்கள்? சற்று பரபரப்படைந்தவளாகவே கேட்டாள் அவள்.
தியாகு ஐயா இருக்கிறாரோ? இல்லையே, கொஞ்சம் முன்னமாத் தான் அலுவலா வெளிய போயிற்றார். ஏன் கேட்குறீங்கள்? இப்ப வருவாரோ நேரம் செல்லுமோ? அவர் எப்ப எப்ப வாறாரோ எனக்குத் தெரியாது அவர் இல்லாட்டி என்னம்மா, அவருக்கு குடுக்கத் தான் இந்த கொள்ளிகளக் கொண்டு வந்த நான் கதவ நல்லாத் திறவுங்கோ. பறிச்சுப் போட்டு போறன்!” அருந்ததிக்கு ஆச்சரியமான குழப்பமாகவே இருந்தது: "அவர் ஏன் உங்களிட்ட கொள்ளிக்கு சொல்லுறார்? இங்க போதுமான கொள்ளி சுள்ளி எல்லாம் கிடக்கே நீங்க வீடு மாறிவந்துட்டீங்களோ?
"இல்லையம்மா. நான் சரியாத் தான் வந்து நிற்கிறன் இலக்கம் 1001 தியாகராயா எண்டு எழுதியிருக்கே தபால் பெட்டியிலt"
"ஐயோ என்னட் இப்ப காசும் இல்ல, விறகு தேவையும் இல்ல, அவர் சொல்லியிருக்கவும் இல்ல! என்று சொன்னவள் பின்வாங்கி வாயிலை சாத்த எத்தனித்தாள் "ஐயோ, அம்மா நீங்க காசு தரத் தேவையில்ல. நான் இதச் சும்மா தான் தாறன் படலையத் திறவுங்கோ, பறிச்சிற்றுப் போறன். இனி வாறது மழை காலமெல்லே. உங்களுக்குப் பிரயோசனமாயிருக்கும்"
*சும்மா தர உமக்கென்ன விசரே! ஏனப்பா வேணாம் வேனாம் எண் வில்லாங்கப்படுகிறாய்! "உங்களுக்கு ஒண்டும் விளங்காது அது எனக்கும் ஐயாவுக்கும் மட்டும் தான் தெரியும் அந்த ஐயா எனக்குத்
TTTTYGDuDDDDuDuuDuDDiGDAAS H3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெய்வம் அம்மா (அவர் செய்த உதவிக்கு) இதுவும் செய்வன். இன்னமும் செய்வன்!" என்று சொன்னவன் அவளிடமிருந்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காது, வாயிலைத் தள்ளித் திறந்து கொண்டு பாரச் சுமையோடு உந்துருளியை தள்ளிக் கொண்டு உள்ளே போனான் அவ்வளவு விறகுகளையும் மளமளவென்று பறித்து விட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் போனான். போகும்போது அவன் உச்சரித்த வார்த்தை அவள் செவிகளில் விழுந்தது.
“எனக்கு அவர் தெய்வமம்மா! அவருக்கு நன்றிக் கடனாக நான் என்னாலானதைச் செய்வன்!" கடைசியாக அவன் உச்சரித்த வார்த்தை அவளைச் சிந்திக்க வைத்தது முப்பது வருடமாக குடும்பம் நடத்தும் அவளுக்கு தன் கணவனைப் பற்றியா தெரியாது மிகவும் இரக்க சுபாவம் உள்ளவன் ஆரும் கேட்டால் காணும், தொண்டைக்குள் இருந்து எடுத்துக் கொடுப்பார்! இவர் ஏதோ பெரிய தொகையை இவனுக்கு கொடுத்திருக்க வேணும். வரட்டும்
அன்று பின்னேரம் வாயிலைத் திறந்து உள்ளிட்ட தியாகராயாவுக்கு முற்றத்தில் கிடந்த விறகைப் பார்த்ததும் ஆச்சரியமாகவே இருந்தது! "என்னப்பா விறகு முற்றத்தில ஏராளமா கிடக்கு அடுக்களையிலும் விறகு தாராளமா அடுக்கியிருக்கு ஏன் வேண்டின நீர்? உமக்கு காசு மெத்திப் போச்சோ இந்தப் பேச்சைக் கேட்டு அருந்ததிக்கு சிரிப்புத் தான் வந்தது! ஆனால் வெளிக்காட்டவில்லை நான் கேட்க வேண்டிய கேள்விய நீங்க கேட்குறீங்கள் என்ன, ஆரோ ஒருவன் மோட்டச் சயிக்கிளில விறகுகள் ஏத்திக் கொண்டு வந்து உங்கட பேரச் சொல்லித் தான் கூப்பிட்டான். இவ்வளவு விறகையும் பறிச்சுப் போட்டு காசும் வாங்காமல் அந்த ஐயா தெய்வம் எண்டுற்றுப் போறான் கால தாண்டித் தாண்டித் தான் நடக்கிறான். தன்ர பேர் பாலேந்திரா எண்டும் சொன்னான். இதென்ன விசர் கூத்து உங்களுக்கு விசரா, அவனுக்கு விசரா: அருந்ததி கொஞ்சம் உச்ச ஸ்தாயியில் தான் பேசினாள் தியாகராயாவுக்கு எல்லாம் புரிந்தது. இந்த
இதழ் 41

Page 39
சூட்சுமத்தின் நாயகன் அவர் தான் இதழ் விரிக்காமல் இலேசாகச் சிரித்தார், மர்மச்சிரிப்பு
"என்ன பேசாம இருக்குறீங்க யாரவன்? ஏன் விறகு பறிச்சான்? நீங்கள் காசு குடுக்காமலா பறிச் சான்? அவள் கேள்விக் கணைகளால் துளைத்தாள்! அவர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறி னார் மெளனம் அவளுக்கு மேலும் சினத்தைமூட்டியது: நீங்க என்ன நடத்தியிருக்கிறீங்க எண்டு எனக்கு விளங்குது உங்களையா எனக்குத் தெரியாது! அவன் ஒண்டுக்கும் வழி இல்லாதவன் மாதிரி பல்ல இளிச்சுக் கொண்டு புலம்பியிருப்பான்! நீங்கள் பெரிய கொடை வள்ளல் எம்.ஜி.ஆர். மாதிரி கிடக்கிறதை எல்லாம் அள்ளிக் குடுத்திருப்பீங்கள்! அவன் நன்றிக் கடன் செய்யுறன் எண்டு எப்பன் விறகுத் தடியப் போட்டுற்று பேய்க்காட்டிப் போட்டுப் போயிற்றான். பிள்ளைகள் அங்க பனி குளிருக்க கிடந்து எவ்வளவு கஸ்ரப்பட்டு அவலப்பட்டு இந்தக் காசுகள அனுப்புதுகள் தெரியுமா தெரிஞ்சிருந்தும் இப்படி அநியாயமா வீசி எறியுறீங்களே காச
தியாகராசா மனைவியின் பேச்சுக்கு பதிலு ரைக்காமல் மெளனமாக அப்பால் போனார். இவளோடு கதைத்து சமாளிக்கவே முடியாது என்று எண்ணினாரோ என்னவோ அவர் படுக்கையிலே சாய்ந்தார். மனைவி யின் தொணதொணப்பு - புறுபுறுப்பு வெகு நேரமாக அவர் காதை அரித்துக் கொண்டே இருந்தது என்றாலும் அவர் மனதில் ஒரு பூரிப்பு, மன நிறைவு இருந்து ஆட்சி செய்ததைக் காணக் கூடியதாகவே இருந்தது மனைவிக் குத் தெரிந்தோ தெரியாமலோ தனக்கு சரியெனப் பட்டதைச் செய்வதும்,அவளின்நச்சரிப்பு எச்சரிப்புகடும் வார்த்தைகளின் உச்சரிப்புகளால் அபிஷேகம் செய்யப் பட்டுபழக்கப்பட்டுப் போனவர் அவர் ஆகையால், @@@! பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்சியப் படுத்தி விட்டு நடந்ததை நினைத்து பூரித்திருந்தார் நடந்தவற்றை நினைவோட்டத்தில் விட்டு பார்த்தி ருந்தார். சுகந்தமாயிருந்தது.
அன்புவழிபுரத்தில் அறிவகம் சனசமூக நிலையம் என்று ஒன்று இருக்கிறது. நீண்ட காலமாக இயங்கி வருகிறது. ஊர்ப் பிரமுகர்கள் நல்லெண்ணம் கொண்டவர்கள் சேர்ந்து நடத்தி வருகிறார்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அங்கே இருக்கும். நல்ல இடத்தில் அதை அமைத்திருக்கிறார்கள் பக்கத்திலே இந்துக் கோவில் உண்டு தேவ கானம் தென்றலிலே தவழ்ந்து வரும் முன் பக்கத்தை அண்டி கலைமகள் வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு பாடசாலை உண்டு. கடைகண்ணிகளும் பரவாயில்லை.
அப்பகுதியில் குடிசன நெருக்கம் அதிகமுண்டு. என்றாலும் இந்த சனசமூக நிலையத்துக்கு சனம் அதிகம் சேருவதில்லைத் தான் பள்ளி விட்டால் குளிர்களி (ஐஸ்கிறீம்)க்காரனைச் சுற்றி கூடும் கூட்டத்தில் பாதியும்
ஜீவநதி
 

இங்கே வராது நமது இனத்தின் முன்னேற்றம்
இப்படியிருக்கிறது! இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்
என்றும் புரிகிறது முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில், ஏன் யப்பான் நாட்டில் கூட தரிப்பிடத்திலோ, பயணிக்கையிலோ தேவையில்லாமல் பேசிக்
கொண்டிருக்க மாட்டார்கள்! பத்திரிகையையோ
நூலையோ தான் வாசித்துக் கொண்டிருப்பார்கள் பிள்ளைகள் தொலையில் இப்படி சொல்லியிருக் கிறார்கள் தியாகராசாவுக்கு
இந்த அறிவகம் சனசமூக நிலையத்துக்கு அடிக்கடி போய் எதையாவது வாசிக்கும் பழக்கம் தியாகராசாவுக்கு அங்கே தான் பாலேந்திரா அறிமுக மானான் இவருக்கு எப்போது இல்லா விட்டாலும் எப்போதாவதோ என்றாலும் அங்கே அவனை தரிசிக்கலாம். முன்னால் இருந்து பத்திரிகையோ
புத்தகமோ வாசித்துக் கொண்டிருப்பான் போகும் போது இவனது துவிச்சக்கரத்தைப் பார்த்ததும் இவன்
விறகு ஏற்றித் திரிந்து விற்பவன் என்று புரிந்தது பின் ஆசனத்தில் நான்கு தடிகள் குத்துக் கல்லாக நிமிர்ந்து நின்று அவன் தொழிலைக் காட்டிக் கொடுத்தது விறகு விற்று முடிந்ததும் வீடு போகும் வழியில் அங்கே அறிவகம் வந்து வாசித்து அறியக்கூடியவற்றை அறிந்து செல்வது அவன் வழக்கம். இது நல்ல பழக்கம் தானே! பொதுவாக இப்படிப் பாடுகேடான வேலை செய்பவர் களிடம் இம்மாதிரி நல்ல பழக்கங்கள் இருப்பதில்லை!
இவன் தியாகராசாவின் கவனத்தை ஈர்ந்தது இதனால் தான் அந்தச் சனசமூக நிலையத்தை அண்டி ஓர்
அளவான ஆல மரம் நிழல் பரப்பி நிற்கும். அது அந் நிலையத்து முன் மண்டபத்துக்கும் நிழல் கொடுக்கும் ஊரவர் சிலர் அங்கு கூடி ஊர்ப் புதினங்கள், அரசியல் விவகாரங்களை கதைத்துக் கொண்டிருப்பர். பாலேந்திராவை அங்கேயும் காணலாம்.
சில அநியாய அக்கிரமங்களை உணர்வு பூர்வமாக கதைப்பதையும் கவனித்திருக்கிறார் இப்படிக் கண்டு பழக்கமே தவிர ஒரு நாள் கூட இருவரும் பேசி
பழகியதில்லை இப்படியாக கண்ணுக்கு விருந்தளித்து
வந்த அவனை சில நாள்களாகக் காணவில்லை! நாட்கள் சென்று கொண்டே இருந்தன, ஆனால் ஆள் 6igG36 &6b6(peof
அவன் தரிசனம் கிடைக்காமல் போன பின்னர் தான், இவர் மனதில் அதுவொரு குறையாகப் பட்டது மனதைக் குடைவதாயிருந்தது அவரையும் அறியாமல் அவர் மனதில் அவனுக்காக ஏதோ இனம்பரியாத ஒன்று இருந்திருக்கிறது!
அவர் வாசிகசாலைக்கு வருபவர்களிடம் விசாரித்துப் பார்த்தார். ஒரு விபரமும் தெரியவில்லை எங்கேயோ இருந்து வருபவன், அதிலும் விறகுவெட்டி, யார்தான் அக்கறைகாட்டப் போகிறார்கள்
நாட்கள் கொஞ்சம் சென்றிருக்கும், ஒரு நாள்

Page 40
அங்கே தரிசனமானான் அவன் நின்ற கோலத்தைப் பார்க்கதியாகராசாவுக்குதூக்கி வாரிப் போட்டது
. ஓர் ஆள்ளவு விறகு கட்டி திருகோணமலை யின் ஏற்ற இறக்கங்களில் எல்லாம் சளைக்காமல் ஒடித் gßfu quib அவனா இவன் நம்பவே முடியவில்லையே!. இரண்டு தடிகளில் ஊன்றி மெள்ள மெள்ள நடந்து வந்தான் தாடி தலையெல்லாம் வளர்ந்து முகமே சரியாகத் தெரியவில்லை குரல் தான் ஆளை இனம் காட்டியது பிச்சைக்காரக் கோலம் ------
"ஐயா காட்டுக்க கொள்ளி கொத்தப் போன இடத்தில யாரோ பதுங்கி இருந்து வெடி வச்சுப் போட்டான் ஐயா! இவ்வளவு நாளும் ஆசுப்பத்திரியில் கிடந்து வாறன் ஐயா! தொடை எலும்பு முறிஞ்சு போச்சுது ஏதோ செய்து பொருத்தியிருக்கிறாங்கள். அவங்கள் தான் இந்த இரண்டு தடியையும் தந்தவங்கள்! கொஞ்சக் காலத்தால சுகம் வரும் எண்டாங்கள். இப்ப என்னால தொழில் செய்ய ஏலாதையா என்ர பிள்ளை குட்டிகளக் காப்பாற்றுங்கோ ஐயா..!"
நல்ல மனிதன், கடுமையான பாட்டாளி. இப்போது பிச்சைக்காரனாகி விட்டான் ஒரு சாதாரண மனிதன் எப்படி பிச்சைக்காரன் ஆகிறான் என்று தெரி வித்து விட்டான் அவன் எப்படியொரு உழைப்பாளி பயனாளி இப்படி அநியாயப்படுத்திப் போட்டார்களே! பாவிகள் இதை விட கொன்றிருக்கலாமே! அது. இதை விடப் பெரிய பாவமாகப் பட்டிருக்காதே! என்னே பரிதாபம் அவனைக் காண்கையில் கண்ணீர் கசிந்தது. தியாகராசாவுக்கு மற்றவர்களுக்கும் தான். கையிலே மடியிலே பையிலே இருந்த சில்லறைகளைக் கொடுத் தனர் தியாகராசாவும் சில்லறை போட்டதற்காக வேதனைப்பட்டார். அடுத்த முறை தாள் காசு கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். எல்லோருக்கும் அவன் உண்மை நிலவரம் புரிந்து களிவிரக்கம் பிறந்திருக்கிறது!
இடைக்கிடை வாசிகசாலைக்கு வருவான். முன்னர் போல் இடையீடின்றி வருவதில்லை வந்தால், அவனைக் கண்டால் தியாகராசா அவனுக்காகவே எடுத்து வைத்திருந்த நூறு ரூபா தாளை அவன் கேட்காமலே கொடுத்துப் போடுவார். மற்றவர்கள் அந்தளவில்லை! சில்லறையையும் GasTGB355 patti febopt தவர்களாகி விட்டனர் வேறு இடங்களிலும் அவன் பரிதாபக் கோலத்தில் நின்று கையேந்துவதைக் கண்டு பரிதாபப்பட்டிருக்கிறார் இப்படிப் பரிநாசம் செய்தவர் களை நினைத்தால், இவர்களுக்கெல்லாம் ஒரு பேரழிவு வராதா இறைவா என்று தான் குமுறுவார்.
பாடுபட்டு உழைத்துண்டு குடும்பம் நடத்தி உயர்த்தி வந்த அப்பாவி மனிதன், அழுதழுது பிச்சை எடுக்கும் நிலையைப் பார்க்குந் தோறும் தியாக ராசாவுக்கு இதயத்தில் இருந்து இரத்தம் கசிவது போலிருக்கும் இதை இப்படியே நீடிக்க விடலாகாது
ஜீவநதி-8

மற்றவர்கள் போல் அவரால் அலட்சியமாய் இருக்கவியலாது ஏதாவது செய்து அவனை உசுப்பி விட வேண்டும், ஆறுதலளிக்க வேண்டும். நடை வியாபாரம் செய்து பிழைக்க ஏதாவது உதவித்தொகை யாகக் கொடுத்தால் என்ன என்று அவர் சிந்தித்திருந்த வேளை, அவன் கண்ணிலே தென்படவே இல்லை ஆளைச் சில நாளாகக் காணவே இல்லை. என்ன நடந்திருக்கும்! 滚
தியாகராசா வாசிகசாலையில் வாசித்துக் கொண்டிருந்த வேளை, உந்துருளியின் குடுகுடு சப்தம் கேட்டு நிமிர்ந்தார். பாலேந்திரா தான் உந்துருளியால் இறங்கி நின்றிருந்தான் இது என்ன அதிசயம்! காண்பதென்ன கனவா, நனவா! ஒரு மனிதன் வாழ்க்கையில் இப்படியெல்லாம் திடீர் திடீரென்று மாற்றங்கள் அதிசயங்கள் நிகழுமா அவன் சவரம் செய்து முடி வெட்டி புதுப் பொலிவுடன் காட்சியளித் தான் ஒரு காலை மெள்ள இழுத்து இழுத்து நடந்து வந்தான்! தியாகராசாவின் முகத்தில் கேள்விக் குறியைப் புரிந்து கொண்டுதானாகவே பதிலிறுத்தான். தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உதவி செய்ய தொண்டு நிறுவனமொன்று முன்வந்ததாகவும் வைத்தியர் கிராம சேவகர்களின் சான்றிதழ்களைக் காட்டி உறுதிப்படுத்த அவர்களிடம் உதவி பெற்றதாகவும் கூறினான். அவர்கள் கொடுத்த பண உதவியால் அரைப் பழசாக இருந்த இந்த உந்துருளியை வாங்கியதாகவும் கூறினான் தன்னால் ஈருருளியை உழக்கி ஓட முடியா தென்றும் இந்த உந்துருளியால் சிரமமில்லாமல் தன் தொழிலை நல்ல படியாக நடத்தக் கூடியதாக இருப்ப தாகவும் சொன்னான் காயப்பட்டுக் கிடந்தபோது பட்ட கடன்களையும் அந்தப் பணத்திலே அடைத்ததாகவும் கூறினான்.
அவன் கூறிய இந்த விசயத்தை அறிந்ததும் தியாகராசாவுக்கு மனம் பரவசமானது ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் தான். அவன் நல்லவர்களைக் கைவிடுவதே இல்லை என்று நினைத்துக் கொண்டார். அதன் பிறகு முன்னரிலும் சிறப்பாகவே அவன் தொழில் நடைபெறலாயிற்று வாசிகசாலை வரவும் தொடரலாயிற்று தியாகராசா பாலேந்திரா
உறவும் வளரலாயிற்று அரிசியில் இருந்து அரசியல் வரையில் பல கதைகளும் பேசிடுவர்
卧一 ۔۔۔۔۔۔۔ -இதழ் 41

Page 41
இப்படியாக காலம் கடந்து கொண்டிருக்கை யில், பாலேந்திராவின் வருகை நின்று விட்டது என்னவாயிற்று இவனை எங்கே போய்த் தேடலாம்! யாரிடம் அறியலாம்? துவரங்காட்டில் இருப்பதாகச் சொன்னான். சாம்பல் தீவுக்குப் பக்கமாக இருக்கும் காட்டில்தான் தொழிலுக்குப் போவதாகவும் சொன்னான். எங்கே போய் தேடுவது துவரங்காட்டில் சின்னதாக ஒரு பலசரக்கு கடை உண்டு, அதற்கு பின்னதாக ஒரு ஒற்றையடிப் பாதை போகும். ஏற்றம் ஏறிப் GEumas, வேண்டும் அங்கே போய் பார்ப்போமா, என்று யோசித்தார். இவர் இப்படியாக யோசித்து யோசித்து காலம் கடத்தி செயலில் இறங்கும் முன்னே பாலேந்திரா ஒரு நாள் அவர் முன் தோன்றினான். இவரைப் போல் பலருக்கு இப்படியொரு பலவீனம் துரிதமாக செயலில் இறங்க மாட்டார்கள்
அவன் ஒரு காலை இழுத்து இழுத்து நடந்து தான் வந்தான். அவன் தன்நிலைமையை விளக்கினான்.
என்ர மோட்ட சயிக்கிள் பழுதுபட்டுப் போச்சுது ஐயா திருத்தக் கொண்டு போன இடத்தில, ஏதோ பூசர் பழுதாப் போச்சுது எண்டு சொன்னாங்கள் புதுசு போட ஆறாயிரம் வேணுமாம் அந்தளவு காசு இல்லாததில தொழிலும் இல்லாமல் இருக்கிறன் மோட்டச் சயிக்கிளால கொள்ளி வித்து உழைச்சனான் தான் இருக்கிற வீடு கொட்டில் வீடு புதிதாக வீடு கட்டுவம் எண்டு அத்திவாரத்துக்க உழைச்சகாசெல்லாம் கொட்டிப் போட்டன் இப்ப உழைப்பும் நிண்டு போச்சு சீவியத்துக் கும் பாதையில்ல. அவன் அங்கலாய்ப்பு அவருக்கு விளங்கியது. பார்க்கப் பரிதாபமாகவே இருந்தது இது இவனுக்கு உதவுவதற்கு நல்ல தருணம் மிகவும் பிரயோசனப்படும், புண்ணியம் கிடைக்கும் அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார் இப்ப உமக்கு ஒரு ஆறாயிரம் ரூபாகிடைத்தால்காணும் என்ன, திரும்பவும் நல்லபடியாத் தொழில் செய்வீர் இல்லையா?”ஒம் ஐயா, இந்த உதவியச் செய்தீங்க எண்டால் உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும் என்ர குடும்பத்த காப் பாற்றுங்கோ ஐயா நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை, நாளை விட்டு அடுத்த நாள் வாரும் (வங்கி திறக்கும் நாள்). நான்காசோட வருவன். நீர் இங்க வாரும் நீங்க GöffTGögypg5 2-coör6pLouT eeuurts" நம்பிக்கையோட வாரும் கடவுள் உம்மக் கைவிட மாட்டார்
அவன் அரை குறை மனதோடு தான் போனான் இப்படியும் நடக்குமா சொன்னவாறு நடக்குமா! அநியாயப் பூமியில் இப்படியும் மனிதர் இருக்கின்றனரா? பெரிய எதிர்பார்ப்போடு பாலேந்திரா திங்க என்று சனசமூக நிலையத்துக்கு வந்தான் என்ன eួចំgអ្វីម្លៃខែ कीujाकgाका இவனுக்கு முன்னதாகவே வந்து இவனுக்காகக் காத்திருந்தார் இவனைக் கண்டதும் அவர் எழும்பி வெளியே வந்தார். ஆட்கள் எவரும் இல்லாத i autorsů பார்த்து இருவரும் ஒதுங்கினர் தியாகராசா பைக்குள் இருந்து காசை எடுக்க எத்தனமானார் அதைக்
 
 
 
 
 

கண்ட பாலேந்திரா வின் விழிகள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன உண்மையில் இப்படியும் நடக்குமா! "நான் நீங்கள் சொன்னதுக்காக சும்மா வந்து பார்த்தன். இப்படி நீங்கள் செய்வீங்கள் எண்டு எதிர்பார்க்கவே இல்லை! இத இங்க தராதீங்க ஐயா என்ர வீட்ட வந்து தாங்க. என்ர வீட்டு நிலவரத்தையும் நீங்கள் அறியத் தானே வேணும் நான் சொல்லுறது பொய்யில்ல எண்டு தெரியத்தானே வேணும்!"
அவர் மறு பேச்சின்றி தன் உந்துருளியில் அவனை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் பாலேந்திரா பின்னால் இருந்து வழி காட்டினான். தியாகராசா மிக நிதானமாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். பாதை ஏற்றமும் இறக்கமும், தாரும் கிறவலும், இடிஞ்சதும் தகர்ந்ததும், மழை தாராளமாகப் பெய்து விட்டதால் பள்ளப் பகுதியில் சேற்றுத் தண்ணீர், பாதசாரிகளுக்கு வாரி இறைத்தது
எப்படியோ அன்புவழிபுரம் தாண்டி செல்வ நாயகபுரம், கடந்து துவரங்காட்டைச் சென்றடைந் தனர் இந்தப் பக்கமெல்லாம் தியாகராசா இதற்கு முன்னம் வந்ததில்லை. வர வேண்டிய தேவையும். இருக்கவில்லை படுபிற்போக்கான இடங்கள் என்ற சிந்தனை வேறு திருகோணமலையை, மலைக்குப் போக இல்லையா என்று தான் கேட்பது பழக்கம் இங்கே போன இடம் நின்ற இடம் எல்லாம் கற்களும் கற் பாறைகளுமே நிரம்பியிருந்தன ஓர் ஏற்ற முகட்டில் ஏறியதும்பாலேந்திரா நிறுத்தச் சொன்னான் தியாகராசா நிறுத்தினார்.
கரையில் சிறிதாக ஒரு பலசரக்குக் கடை தெரிந்தது. ஒரு பெண் தான் அந்தக் கடைக்குள் இருப்பது தெரிந்தது இரண்டு பேர் கடைக்கு முன்னால் நின்றனர். ஏதோ வாங்கப் போலும்
பாலேந்திரா உந்துருளியை வாங்கி தள்ளிக் கொண்டு அந்தக் கடைக்குப் பின்னால் நிறுத்தி விட்டு வந்தான்.
"சைக்கிள் பாதுகாப்பா இருக்கும் છtiin, வாங்க போவம் என்று அவர் கையப் பிடித்து அழைத்துச் சென்றான். தியாகராசா அவனை விட வயதில் மூத்தவர். கஷ்டப்படாமல் வாழ்ந்து பழக்கப் பட்டவர். இந்த ஏற்றமான கற் பாதையில் நடந்து பழக்கமில்லாதவர் ஆகையால் தான் கை லாகு கொடுத்து அழைத்துச் செல்கிறான்! அவன் பிடியில் இருக்கும்போதே தியாகராசா நடை பயில மிகுந்த சிரமப்பட்டார் ஏற்றம். பெரும் கற்கள் சிறு கற்கள். மழைக்கு நிலமிளகி செருப்புக் காலுக்கு சறுக்கி விழுத்தப் பார்க்கிறது பாலேந்திராவின் பிடியம் அரவணைப்பும் இல்லாவிட்டால் அவர் விழுந்தே இருப்பார் இது என்ன இயேசு பிரான் சிலுவை சுமந்த கல்வாரி மலையோ இப்படியான கஷ்டப் பிரதேசங் களில் குடியிருப்போரின் விதியென்ன விதியோ ஆங்காங்கே குடில் வீடுகள் நிலத்தோடு படுத்துக் LSSiiiiii Li iMiMii i ii i ieiiiiLie ieieeieA TTT 00

Page 42
கிடந்தது தெரிந்தது!
கடைசியாக ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். இது தான் ஐயா என்ர வீடு வாங்கோ உள்ளே (8 ft (36 flo"
வீடா இது, ஏதோ பழைய ஒலைகளை கும்பமாக அடுக்கி விட்டது போல ஏதோ கிடந்தது! இதற்குள்ளும் மனிதன் உள்ளிடுவானா சுற்றிவளைத்து பார்த்தார். வேலியும் இல்லை. படலையும் இல்லை. முற்றத்தில் வேம்பு ஒன்று நின்றது.
பக்கத்தில் அத்திவாரம் போட்டிருந்தது. ஆங்காங்கே கொட்டிலுகள் தென்பட்டன. தியாகராசா ஒரு குகைக்குள் நுழைவது போன்ற உணர்வோடு அக்குடிசையினுள் புகுந்தார் பகல் நேரம் என்றாலும் உள்ளே இருள்கப்பியிருந்தது நான் சொன்னனே ஐயா, அவர் தான் இவர் பாலேந்திரா அறிமுகப்படுத்தினான். வாங்கோ ஐயா. இருங்கோ ஐயா என்று கிழிந்த பாயை உதறி விரித்தாள் மனைவி தியாகராசா கண் களால் துழாவி இருப்பிடத்தைப் பார்வையிட்டார். 856tf மண்ணால் குந்து கட்டி கிடுகுகளினால் மறைப்புச் செய்து, ஒலையால் வேயப்பட்டு ஏதோ வீடு என்ற பெயரில் இருக்கிறது மழைக்கும் ஒழுகும் போலுள்ளது. பொலித்தீன் பைகள் ஆங்காங்கே செருகப்பட்டிருந்தன குடும்ப அங்கத்தரை பார்த்தார். மனையாள் மெலிந்த சின்ன உருவம் எத்தன நாள் பட்டினி கிடந்திரும் தெரியாது மானத்தை மறைக்க ஏதோ போட்டிருந்தாள் மூன்று சிறுவர்கள் நின்றிருந்தார்கள். பெரியவனுக்கு பத்தோ பதினொன்றோ இருக்கும் வயது. இவர்கள் யார்,
"éè6b60o€b 8gu urT. (3LugrÜJ uíhasfr60b6IT&56ñr — Loğ56öT பிள்ளைகள் மகன ஆமி பிடிச்சு அடைச்சு வைத்திருந் தாங்கள் ஐயா. அந்த நேரம் பார்த்து மகன் பொஞ்சாதி ஆரோ ஒருவனோ ஒடிப் போயிறாள் மகன் விடுதலை யாகி வந்தவுடனே வேறொருத்திய கூட்டிக் கொண்டு போய் குடும்பம் நடத்துகிறான் இந்தப் பிள்ளைகள் இப்ப நாங்க தான் பார்க்கிறம் என்ர acocម្មសិទ្ធៈ வாழ்க்கை தான் நாசமாப் போச்சு இந்த பிள்ளைகள எண்டாலும் நல்லாக்கி வைப்பம் எண்டால் இடைஞ்சல் கள் வந்தபடி இருக்கு V
தியாகராசாவுக்கு இவன் கதையைக் கேட்க TTTYSiDS SL GLGGiGDDDLDLGGGD DDGGDDiiuDiDDi D Diii ii iiTSY
 
 
 

மேலும் வருத்தமாக இருந் தது நாட்டுப் பிரச்சினையால் வரும் துயரங்களை விட நம் இளைய சமுதாயத்தின் பொறுப் பற்ற தனத்தால் தறுதலைப் போக்கால் வரும் கஸ்ர நஷ்டங்கள் ஏராளம் என்று நினைத்துக்கொண்டார்.
பெரியவனைப் பார்த்து கேட்டார், தம்பி என்ன படிக்கிறாய்? ஏன் இன்டைக்கு பள்ளிக்கூடம் GUT35&6b606bune X&XX
"கொப்பியில்லாமல் பள்ளிக்கூடம் வரக்கூடா தெண்டு வாத்தியார் சொல்லிப் போட்டார்! அது தான் போக இல்ல? எத்தின கொப்பி வாங்க வேணும் : எவ்வளவு செலவு வேணும்? ஐந்து கட்டுக் கொப்பி நாலு வேணும் ஐந்நூறு ரூபாவெண்டாலும் வேணும். தியாக ராசா சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு தாளை எடுத்து நீட்டினார். அதை வாங்கிய சிறுவன் பயபக்தியோடு அவரைப் பார்த்துக் கொண்டு நின்றான்! தம்பி, மிருகத்துக்கும் மனிதனுக்கும் என்ன வித்தி யாசம் சொல்லும் அவன் பதில் சொல்லத் தெரியாமல் விழித்து நின்றான் மிருகங்களும் எங்களப் போல சாப்பிடுதுகள் தண்ணி குடிக்குதுகள் குட்டி போடுதுகள் குடும்பம் நடத்துதுகள். Graborið Grintasserij GB imreo செய்யுதுகள். அப்பிடியிருக்க இதுகளுக்கும் எங்களுக் கும் என்ன வேறுபாடு?பையன்மீண்டும்மெளனம் தம்பி கவனமாகக் கேள் கல்வியறிவு எங்களுக்கு இருக்கிறதால தான் கற்கிறதால தான் நாங்கள் வேறு பட்டு உயர்ந்து நிற்கிறம் மனிதத் தன்மை வளர்ந்து மாமனிதன் ஆக வேணுமெண்டா கல்வி தான் கை கொடுக்கும். நல்லாப் படிக்க வேணும் பாலேந்திராவும் மனைவியும் தேவ தூதன் வந்து தங்களுக்கு அருள் பாலிப்பதை பார்ப்பதுபோல் பார்த்துநின்றனர்.
நீங்க இவர் திரும்பவும் தொழில் செய்ய ஏதேனும் உதவி செய்தீங்கள் எண்டால் புண்ணியமா யிருக்கும் அவரே எல்லாத்தையும் பார்த்திருவாரு
"மோட்ட சயிக்கில திருத்தி திரும்ப தொழில் துவங்க இன்னும் ஆறாயிரம் வேணுமெண்டா சொன்ன நீர்?"ஒமுங்கோ ஐயா இருவரும் சேர்ந்து தலையை ஆட்டிச்சொன்னனர்.
தியாகராசா கைப் பைக்குள் கையை விட்டு காசுத் தாள்களை எண்ணி நீட்டினார் பாலேந்திராவை நோக்கி நீங்க அவவுட்டத் தான் குடுங்கோ ஐயா, அவ தான் வீட்டு நிதி மந்திரி என்றான் வேடிக்கைச் சிரிப்போடு. அவள் முன்னே வந்து பயபக்தியோடு இரு கரத்தாலும் வாங்கிக் கொண்டாள்
தியாகராசா மீண்டும் வீட்டை நோட்டமிட்டார். கூரையைக் கவனித்தார். பொத்தல்களால் வானம் தெரிந்தது மழைக் காலம் துவங்கி விட்டது! நேற்று இரவு கூட நல்ல மழை நன்றாக ஒழுகி ஓடி யிருக்கும்! இரவு முழுக்க நித்திரையில்லாமல் எப்படியெல்லாம் அவலப்பட்டிருப்பார்கள் வீடு நல்ல ஒழுக்குப் போல ସ୍ନିଗର୍ୟ୍ଯାt(୫ படுத்தெழும்புரீங்கள் *SG856ër seu unr

Page 43
கேட்குறீங்கள் இரவு முழுக்கநித்திரையில்லாமல் குந்திக் கொண்டு இருந்த நாங்கள் ஒழுக்கில நனைஞ்சு ஒரு பக்கத்துச் சுவர் விழுந்து போச்சுது! அதால வெள்ளம் தண்ணி வந்து உள்ளிடுது: "இத மேய எவ்வளவு காசு வேணும்? நல்ல சாம்பல தீவு மட்டை யால வேயறதெண்டால் மூவாயிரம் வேணும். தற்காலிக மாக தறப்பாள் போட்டு சமாளிக்கிற தென்டால் ஆயிரத் ஐந்நூறு ரூபா வேணும் ஐயா!"
அவர் மீண்டும் பையை துழாவி மூவாயிரத்தை p5 g6try.
"ஐயோ வேண்டாம் ஐயா! நீங்க செய்த உதவி இவ்வளவுமே காணும் உங்கள மேலும் மேலும் கஸ்ரப் படுத்துறது எங்களுக்கு மனக் கஸ்ரமாயிருக்கு அவர் உழைக்கிறதுக்கு வழி திறந்து விட்டு இருக்குறீங்கள் இவ்வளவுமே காணும். இனி அவர் உழைச்சு எல்லாப் பிரச்சினையையும் தீர்த்துப் போடுவார். நீங்க உங்கட காசுகள வீணாக்காதீங்கள் ஐயா இந்தப் பேச்சைக் கேட்டதும் அவருக்கு மனைவி அடிக்கடி பேசுவது காதில் ரீங்காரமிட்டது. பிள்ளைகள் அங்க பனிகுளிருக்கக் கிடந்து ஆனமான சாப்பாடும் இல்லாமல் நித்திரயும் இல்லாமல் ஓய்வும் இல்லாமல் உழைச்சு அனுப்புற எல்லாம். எங்கேயோ கிடந்த பரதேசிகளுக்கும் மூதேசிகளுக்கு கொடுத்து பாழ்படுத்துறிங்களோ!
"அவர் உழைச்சு சேர்க்கும் மட்டும் ஒழுக்கு வீட்டுக்ககிடந்து உத்தரிக்கப் போறிங்களோ"
அவர் வில்லங்கமாக பணத்தை அவர்கள் கையில் திணித்தார். &:Ý
அவர் நிதானமாகப் பேசினார் இப்படி இனி நான் உங்களுக்கு உதவி செய்ய மாட்டன் இனி நீங்கள் தான் உழைச்சு முன்னேற வேணும் அதுக்கான வழியத் தான் திறந்து விட்டிருக்கிறன். அது தான் என் போன்றவர்கள் கடமை இனி நீங்கள் ஆரிட்டையும் கை நீட்டக்கூடாது! நானும் இந்த உதவிகள் எல்லாம் சும்மா செய்ய இல்ல சுயநலத்தோட தான் செய்யறன் சேர்த்து வைச்ச புண்ணியம் தான் சந்ததியக் காக்குமடா எண்டு ஒரு சினிமாப் பாட்டுக் கேட்டிருப்பீங்கள். இப்படியான உதவிகள் செய்தாத்தான் என்ர பிள்ளைகள் நல்லாயிருக் குங்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி உதவியாக வாழ்வதுதான் அர்த்தமுள்ள மானிடவாழ்க்கை:
அவர்கறியவற்றை மிகக் கவனமாக மரியாதை யாக ஏற்றனர். இந்தாள்ற நல்ல மனதுக்குத் தான் நல்வாயிருக்கிறார். கடவுளும் அருள் செய்கிறார் என்று நினைத்தார்களே என்னவோ, பயபக்தியுடன் அவரைப்
அவள் போக எழந்தார். "ஐயா போகாதீங்க காப்பிட்டுப்போங்க"ஐயோ நீங்கபடுகிற கஸ்ரத்துக்குள்ள எனக்குச் சாப்பாடு போட உங்களால ஏலுமா என்று LLLLLL LLL LLTTS STLTTTT TTT TeLLLTTMLLLSS S LtmLTTS TTmtTa சாப்பிட்டீர்?" என்று கேட்டார், சாப்பிட இல்ல அவன்
శీతాక ༼ར་841

தயங்கித் தயங்கி சொன்னான். அவர் கேள்விக் குறியோடு அவர்களைப் பார்த்தார்? இனித்தானையா நாங்கள் எல்லோரும் சாப்பிடப்போறம் நீங்களும் எங்களோடகூட சேர்ந்து சாப்பிட்டுத் தான்போகவேனும் இவ்வளவு உதவியச் செய்து போட்டு வாய் நனைக்காம போகப்படாது அவர்கள் அன்புக் கட்டளையை அவரால் தட்ட முடியவில்லை! அவர்களும் அவரோடு கூடியிருந்தனர். எல்லோரும் வாட்டியெடுத்த பானோடும் தேநீரோடும் சங்கமமாயினர் 毅
இவர் முன்னாலும் அந்தப்பண்டம் தான் வைக்கப் பட்டது தியாகராசா புன்னகையோடு அவற்றைப் பார்த்தார். இது எள்ளல் புன்னகையாகவும் இருக்கலாம். ஏனெனில் இவர் இப்படியொரு சாப் பாட்டை வாழ்நாளில் கண்டறியாதவர். அதுவும் மதிய நேர உணவா இது ஏதோ அவர்கள் மனத்திருப்திக்காக, நான் உங்களில் ஒருவன் என்று காட்டுவதற்காக முண்டி விழுங்கினார் எப்படியோ சாப்பிட்டு முடித்தார். ಇಣಿ இனியும் தாமதிக்க முடியாது என்னால், மனைவி
எனக்காக இன்னும் சாப்பிடாமல் காத்திருப்பாள். நான்
கதியாப் போக வேண்டும் என்று எழுந்தார். எழுந்து நின்று சொன்னார்:"நீங்கள் உழைச்சுநல்லவாற வழிய நான் காட்டியீருக்கிறன். நீங்கள் நல்ல நல்லபடியா வாழ வேண்டும். இனி யாரிட கையேந்தக் கூடாது ஏற்பது இகழ்ச்சி என் வேண்டும். எதிரிக்கு கூட கேடு நிை & பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதுவொன்றே போதும், உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும். என்று
666
கூறி நிறுத்தியவர் மீண்டும் அவர்களைப் பாத்துச் சொன்னார் நான் செய்த இந்த உதவியை நீங்கள் யாருக்கும் சொல்லக்கூடாது முக்கியமாக என்ர
வீட்டுக்குத் தெரியக்கூடாது என்று கண்டிப்பாக கூறிய அவர் நடக்க முற்பட்டார். பாலேந்திராவும் மனைவியும் அவர் முன்னே வந்து அவர் காலில் விழுந்து வணங்கினர். அவர் சினந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். கடவுளைத் தவிர நீங்கள் யாரையும் வீழ்ந்து வணங்கக் கூடாது. கடவுளுக்கு உரிய மரியாதையை யாருக்கும் செலுத்தக் கூடாது நானும் உங்களப் போல ஒரு மனிதன் தான். எனக்கு எந்த மரியாதையும் வேண்டிய தில்லை இது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஆற்றவேண்டிய கடமை
என்றாலும் பாலேந்திரா குடும்பம் அவரை அரவணைத்தபடி இறக்கத்தில் சறுக்கி விடாமல் அரவணைத்து அழைத்து சென்று வழியனுப்பி வைத்தனர். அவர் தடுத்தும் கேட்காமல் மீண்டும் அவர் காலைத் தொட்டுக்கும்பிட்டனர். அவர் போகும் போது இப்படிநினைத்தார்."இதைவிடப் பெரிய உதவியை மிக நெருங்கிய உறவினருக்குச் செய்திருக்கிறேன். அவர்கள் நன்றியைக் காட்டவில்லை. எரிச்சல் பொறமையையே காட்டினர். ஆனால் பிறத்தியார் தினையளவு செய்த உதவியை பனையளவாகவே கொள்கின்றனர்.
!-ക്രി 41

Page 44
கதைகள்தா
தனது காகோலைக்கு பணம் கொடுப்பதற்கு அது எழுதப்பட்ட தனது வங்கிக்கணக்கில் பணம் போதியளவு இல்லாதபோது "வரைந்தவரைத் தொடர்பு கொள்ளவும்" எனக் குறிப்பெழுதி அக்காசோலையைத் திருப்ப வேண்டாம் எனக் கூறிவிட்டுச் சென்ற கனவான் வேறொரு குறிப்பு எழுதக்கூடியதாகத் தானே ஒழுங்குகள் மேற்கொண்டார். ---- வேறொரு வங்கியில் கணக்கை ஆரம்பித்தார். எமது வங்கி இருந்த இடத்தைவிடத் தூரமான இடத்தி லுள்ள வங்கியிலேயே அந்தக் கணக்கைத் தொடங் கினார். அந்தக் கணக்கிற்குரிய காசோலையொன்றை எழுதி எமது வங்கியிலுள்ள தனது கணக்கில் வரவு வைக்குமாறு வைப்பிலிட்டார்.
நான் இக்கட்டுரையில் உபயோகிக்கும் சொற் பிரயோகங்கள் வங்கியியல் சார்ந்தவையாகவும் ஆங்கிலத்தில் வங்கியில் உபயோகிக்கும் பதப்பிர யோகங்களை இயன்றவரையில் தமிழில் மொழி பெயர்த்து எழுதுபவையாகவும் இருக்கும். காசோலை வரைவது காசோலையை அல்லது பணத்தை வைப்பி லிடுவது என்பன போன்றவற்றை வங்கியில் கணக்கு வைத்திருப்போர் விளங்கிக் கொள்வார்களென நம்பு கிறேன். இன்று பெரும்பாலானவர்கள் வங்கி வாடிக்கை யாளர்களாக இருக்கின்றனர். எனவே நான் எழுதுவதை விளங்கிக் கொள்வார்களென்ற எதிர்பார்ப்பு என்னிட முள்ளது என்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசிய மெனக்கருதுகிறேன்.
வங்கியில் நடைமுறைக் கணக்கொன்றை ஆரம்பித்து வைப்பிலிடும் பணத்தை காசோலைகளை
ஜீவநதி w
 

Guiresa,Gríbaf Feniniuastralið
எழுதியே பெற்றுக்கொள்ள முடியும் காசோலைகளை அச்சிட்டு வங்கியே தன்னிடம் கணக்கு வைத்திருப் போருக்கு வழங்கும். காசோலையை வங்கிக் கரும பீடத்தில் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் பெற கணக்கை வைத்திருப்பவரே வரவேண்டும். காசோலையைப் பொறுத்தவரை கணக்கு வைத்திருப்பவர் அதை எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தால் எவரும் அதைக்கொடுத்துப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் பணத்திற்குப் பதிலாகக் காசோலையை எழுதிக் கொடுத்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி நடைமுறைக்கணக்குவைத்திருப்போருக்கு இருக்கிறது.
உதாரணமாக ஒருவரது சம்பளம் வங்கிக் கணக்கிற்கு வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டு வாடகைக்கு ஒரு காசோலையையும், கடைக்காரருக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைக்கு மற்றொரு காசோலையையும் எழுதிக் கொடுத்துவிட்டு வங்கிப் பக்கம் போகாமலே இருந்துவிடலாம்.
காசோலையைப் பெற்றவர்கள் அவரது கணக்கிருக்கும் வங்கிக்குப் போய் காசைப் பெறத் தேவையில்லை. அவர்களுக்கு வேறு வங்கியில் வேறு ஊரில் கணக்கிருந்தாலும் அவரவர் கணக்கில் தமக்குக் கிடைத்த காசோலைக்குரிய பணத்தைப் பரிதாற்றஞ் செய்து காசோலையை வைப்பிலிட்டவரின் கணக்கில் வரவு வைக்கும்.
இது முன்னைய நடைமுறை. இன்று இலத்தி ரனியல் சாதனங்கள் மூலம் உடனடிப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. அத்துடன் இலத்திரனியல் கணக்குகள் மூலம் காசோலையோ வேறு பத்திரங்களோ இன்றியே பணப்பரிமாற்றஞ் செய்யலாம். அந்தக் காலத்தில் மேற்குறித்த நடைமுறையே இருந்தது.
வைப்பிலிட்ட காசோலையை அந்த வங்கி காசோலைக்குரிய வங்கிக்குத் தபால் மூலம் அனுப்பி, அதற்குப் பணம் வழங்கப்பட்டதா அல்லது ஏதாவது காரணத்திற்காகத் திருப்பப்பட்டதா? என அவ்வங்கி யிடமிருந்து பதில் தபால் மூலம் வந்த பின்பு கணக்கில் அத்தொகையை வரவு வைக்க ஒரு வாரமும் செல்லக்கூடும்.
இந்தத்தொகை வந்துவிடும் என்று கருதி அக்கணக்கு வைத்திருப்பவர் காசோலையை எழுதிக் கொடுக்க அது வைப்பிலிட்ட காசோலை பற்றிய பதில்
-இதழ் 41

Page 45
வருமுன்பே வங்கியில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பங் களும் உண்டு. பணம் பற்றிய பதில் வராவிட்டால் இக் காசோலைக்குப் பணம் கொடுக்க முடியாது. அதே வேளை காசோலையில் 'வரவு வைக்க வேண்டியவை பற்றிய விபரம் அறியப்படவில்லை என்ற குறிப்பை எழுதியே காசோலையைத் திருப்புவார்கள். "வரைந்த வரைத் தொடர்பு கொள்ளவும் என எழுதக்கூடாது.
இந்த நடைமுறையின் படி குறித்த கனவானின் கணக்கில் பணமில்லாவிடினும் அவரது வேறு வங்கியின் காசோலை வைப்பிலிடப்பட்டுப் பதில் வராதிருப்பதால் 'வரவு வைக்க வேண்டியவை பற்றிய விபரம் அறியப்பட வில்லை. என்ற குறிப்பையே அவரது காசோலை களுக்கு நான் எழுத நேர்ந்தது.
இதில் மேலுமொரு வேடிக்கை என்ன வென்றால் அவர் எமது வங்கியில் வைப்பிலிட்ட காசோலைகளும் இதே குறிப்புடன் திரும்பி வரும். அந்த வங்கியில் எங்கள் வங்கிக்குரிய காசோலைகளை வைப்பிலிட்டு அவை பணம் பரிமாற்றத்திற்காக எமக்கு அனுப்பப்படுவதையும் அவதானிக்க முடிந்தது. எனவே ஒரே வகைத் திருவிளையாடலை அங்கேயும் செய்கிறாரென்று ஊகிக்க முடிந்தது.
அத்தகையவர்களின் செயல்களால் வரைந்த வரைத் தொடர்பு கொள்ளவும் என்ற குறிப்பிற்கு அடுத்த நிலையில் மற்றக் குறிப்பும் வங்கியால் கருதப்படும் நிலையேற்பட்டது. ஒரு கணக்கில் இக்குறிப்புக்களுடன் காசோலைகள் பல திரும்புமாயின் கணக்கு வைத்திருப் பவருடன் தொடர்பு கொண்டு நிலையை மாற்ற முயன்று முடியாவிட்டால் வங்கிகணக்கை மூடிவிடும்.
தனது வங்கிக் காசோலைகள் பணம் கொடுக் காது திரும்புவதை வங்கி விரும்புவதில்லை. தனது வாடிக்கையாளர் நம்பகரமானவராக இருக்க வேண்டும் மென்றே அது விரும்புகிறது. பணமின்றிக் காசோலை திரும்புவதைத் தவிர்ப்பதற்குச் சகல முயற்சிகளையும் அது எடுக்கும்.
இதற்காகத்தான் நடைமுறைக்கணக்கை ஒருவர் ஆரம்பிக்க வேண்டுமென்றால் தகுந்த ஒருவர் அவரைச் சிபாரிசு செய்ய வேண்டுமென வங்கி கோருகிறது. சிபரிசு செய்பவர் அதன் காரணத்தையும் முக்கியத்துவத்தையும் விளங்கிக் கொள்ளாமல் தனது விபரங்களை எழுதிக் கையொப்பமிடுவதே பெரும் பாலும் நடைபெறுகிறது. கணக்கை ஆரம்பிப்பவரின் நிதி நிலையையோ நாணயத்தையோ பற்றி எதுவும் தெரியாமலே பல்லாண்டுகள் நாம் அறிந்த ஒருவர் என வருடக்கணக்கைப் போட்டுக் கொடுப்பார். முகத்துக்
நூல் அறிமுகத்திற்கு தங்கள் நூலின் இரு பிரதிக
 

கெதிரே முடியாது என்று கூறமுடியாத நிலை சமூகத்தில் மரியாதைக்குரியவர் கேட்கும்போது அவருக்கு உதவுவது பெருமை அல்லது முறை என்பன போன்ற காரணங்களுக்காகக் கையொப்பமிட்டுவிட்டுச் சென்று விடுவார்கள் வங்கி அவரிடம் எழுத்து மூலம் கேட்டாற் கூட நான்சிபாரிசு செய்கிறேன் என்று பதிலும் அனுப்பிவிடுவார்கள். இதனால் வங்கியும் ஏமாற நேருவதுண்டு. இதன் காரணமாக ஓரிருவர் தாம் பெறும் காசோலைப் புத்தகத்திலுள்ள கணிசமான காசோலைகளைக் கணக்கில் í söðrtfjNeð EðfrupGð பெருந்தொகைகளுக்கு எழுதி பலரை ஏமாற்றி விடுவார்கள். S ·
இப்படி பணமின்றி காசோலை எழுதினால் வங்கி கணக்கை மூடிவிடும். ால் அத்துடன் அவர்கள் கணக்கு விடுவது முடிவுறாது வேறொருவர் பெயரில் கணக்கை ஆரம்பித்து அதே கதையைத் தொடர் வார்கள். இப்படிச் சிறிது காலம் மீண்டும் வேறொரு வங்கியில் தமது பெயரில்கணக்கை ឃ្លាge.
இதற்காகவே ஒருவர் æíäæä ஆரம்பித்ததும் அவர் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கக்கூடிய வங்கி களிடம் குறித்த நபர் அவ்வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாரா என இந்த வங்கி விசாரித்துத் தெரிந்து கொள்ளும். தற்போது கணினி இவ்விபரங்களை இலகுவாகத் தந்துவிடும் முன்பு இதைக் கண்டறிவது கடினமான செயல். இதற்கு பெயர் முதலெழுத்து ஒழுங்கில் கணக்கு வைத்திருப்போரின் பெயர்களைப் பதிவு செய்திருக்கும் ஏட்டில் தேடிப்பார்த்துத்தான் பதில் கூறலாம். அவசியத்தை உணராது அவசரத்தில் கண்கள் ஏட்டின் மேல் மேய்ந்தால் பெயர் மறைந்திருந்து விளையாடிவிடும். 3: &
அடையாளஅட்டை அறிமுகப்படுத்தப்படாத காலத்தில் மற்றொரு பிரச்சினையும் இருந்தது. சில பெயர்கள் பெரும்பாலும் மக்கள் விரும்பி வைப்பன வாயிருக்கும். கந்தையா, பொன்னையா போன்ற பெயரும் ஒன்றாக அமைந்துவிடுவதுண்டு. இருவருக்கு இவ்வாறு தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்குமானால் தந்தையின் தந்தையுடைய பெயரை அறிய முடியுமானால் அறிந்த இருவரையும் வேறுபடுத்துவர். அடையாள அட்டைவந்தபின் இந்தத் தொல்லைகள்தீர்ந்து விட்டன. சாதாரணமானவர்கள் இந்த நடைமுறை களாலும் சட்டதிட்டங்களாலும் தடுக்கப் பட்டு விடுவார்கள். ஆனால் ஏமாற்றவென்றே இருப்பவர்கள் பல்வேறு வகைகளில் கண்களில் மண்ணைத்தூவ முயல்வார்கள். அப்படிப்பட்ட சிலரைப் பார்ப்போமா?
(GoBinginipkin) t புத்தகங்களை அனுப்புவர்கள் ளை அனுப்ப வேண்டும்
3H இதழ் 41

Page 46
அந்தனி ஜீவாவின் அரை
ஒசக்கு காலங்கள்
பாடசாலை மாணவனாக இருந்த காலமே எனக்கு வசந்த காலமாகும். எனது ஆரம்பக்கல்வியை வீட்டிலிருந்து ஒன்றரை மைல் தூரமுள்ள சுவர்ணா வீதியிலுள்ள தமிழ்ப்பாடசாலையில் கற்றேன். பின்னர் இரண்டாம் வகுப்பிலிருந்து பம்பலப்பிட்டியிலுள்ள சென்.மேரிஸ் T anreso6ouesto 6trario.ererð semó 66Oor கற்றேன். பாடசாலை காலங்களை மீண்டும் இரை மீட்டிப்பார்க்கின்றேன்.
இப்பொழுது அதை நினைத்துப் பார்க்கும் பொழுது அத்தகைய வசந்த காலம் மீண்டும் வராதா எனஏங்குகின்றேன். 88ল্প8 பாடசாலையில் ஆண்கள் பெண்கள் வந்து கலந்து படிக்கும் பாடசாலை அதிபர் கத்தோலிக்க கன்னியாஸ்திரி மாணவர்களின் மீது பரிவும் பாசமும் கொண்டவர். ஆண் பெண் என்ற வேறுபாடின்றி ஒரு பாசமிகுந்த தாயாக எங்களுக்கு வழி காட்டும் ତର୍ଗୀର୍ଣ୍ଣଶୀର୍ଥists திகழ்ந்தவர்.
பாடசாலையில் எனக்குப் படிப்பித்த இரண்டு ஆசான்கள் என்னை இனங்கண்டு ஊக்குவித்தார்கள். அந்த இரண்டு ஆசிரியர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றேன்.
ஆசிரியர் சந்தானம் என்பவர் எனக்குள்
பதுங்கியிருக்கும் கலையுணர்வை தூண்டி விட்டவர். அவரே எழுதி தயாரித்த நாடகத்தில் எனக்கு முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது. பாடசாலை கட்டட நிதிக்காக நடத்தப்பட்ட கலைவிழாவில் ஆசிரியர் சந்தானம்
ஜீவநதிட
 

நாற்றாண்டு அனுபவங்கள்
ாடியினிகதை
எழுதிய "அந்தோ நாகரிகம்" என்ற சீர்திருத்த கருத்துக்களைக் கொண்டநாடகம் இடம்பெற்றது.
கலை நிகழ்ச்சியில் பாடசாலையின் பழைய மாணவரான ஜெ.பி.ரொபர்ட் நெறிப்படுத்திய ஒரு மணித்தியால நாடகத்தில் கவின் கலை மன்ற நடிகர்கள் நடித்தார்கள். அந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்த காலஞ்சென்ற நடிகர் ஏராஜபாண்டியன் என் நடிப்பை பெரிதும் பாராட்டினார்.
எனக்கு கல்வியோதித்த இன் னொரு பெண்மணியான ஆசிரியை திருமதி.எம்.பெர்னாண் டோவை குறிப்பிட வேண்டும். இவர் நீர்கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்னுடைய இலக்கியத் திறமையை எழுதும் திறமையை ஆர்வமூட்டியதோடு நிறைய தேடி வாசிக்க வேண்டும் என்ற அறிவுரை 56pGub போதித்தவர். அப்பொழுது எமக்குப் பாட நூலாக கம்பராமாயணத்தின் சுந்தர காண்டமும், மகாகவி பாரதியாரின் பாரதி கவிதைகளும் அமைந்திருந்தன.
கம்பரின் காவியத்தை அந்த ஆசிரியை சிறப்பாக படிப்பிப்பார். அந்தக் காவியச்சுவையில் மாணவர்களாகிய நாங்கள் ஒன்றித்துப் போய் விடுவோம். ჯ
மகாகவி பாரதியாரின் கவிதைகளை திரும்ப VX திரும்ப படிப்பேன். அவை பெரிதும் என்னைப் பாதித்தன. "பாட்டுக்கொரு புலவன் என்ற கட்டுரை எழுதி அந்த ஆசிரியையிடம் கொடுத்தேன். அதனைப் படித்த அவர் ஆச்சரியத்துடன் உனக்கு நன்றாக எழுத வருகிறது எனக்கூறி, அப்பொழுது நீர்கொழும்பி லிருந்து வெளிவந்த மானவர் குரல் சஞ்சிகைக்கு அனுப்பிவைக்கும்படி கூறினார்.
திடீரென ஒரு நாள் மாணவர் குரல் ஆசிரியரான மனோகரன் என்னைப் பாடசாலைக்கு தேடிவந்து மாணவர் குரலைத் தந்தார். எனது விழிகள் வியப்பால் விரிந்தன. அந்த மாணவர் குரல் சஞ்சிகை யில் எனது "பாட்டுக்கொரு புலவன் கட்டுரை இடம் பெற்றிருந்தது. நான் மனோகரனை அழைத்துச் சென்று அதிபரிடம் அறிமுகப்படுத்தினேன். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். 缀
பாடசாலை ஓய்வு நாட்களில் கொழும்பு

Page 47
பொது நூலகமே எனது ஞான இல்லமாக அமைந்தது. அங்கே தான் முதன்முதலில் ஜெயகாந்தன் அறிமுக மானார். அவருடைய "தேவன் வருவரோ" என்ற சிறுகதை தொகுதியைப் படித்தேன். ஒரு தடவைக்கு இரண்டு மூன்று முறை படித்தேன். அதன் பின்னரே சிறுகதை ஜாம்பவான் புதுமைப்பித்தன் கதைகளைப் படித்தேன். அதில் ஒரு புதுமையும் பித்தமும் கலந்து இருப்பதைக் கண்டேன். அவருடைய ஒரு நாள் கழிந்தது, 'பொன்னகரம் போன்ற கதைகளை சக மாணவர்களிடம் கூறி மகிழ்ந்தேன். இது போன்ற கதை களையும் எழுத வேண்டும் என்ற அவா மனதில் எழுந்தது.
பதினைந்து வயது இளைஞனான நான் எனது வீட்டிற்கு அருகிலிருந்த என்னைப்போன்ற இலக்கி ஆர்வம் கொண்டவர்களுடன் தமிழகத்திலிருந்து வெளிவந்த கரும்பு, கண்ணன், தமிழ்வாணனின் கல்கண்டு ஆகிய வாங்கி வாசிப்போம். கரும்பு என் விருப்பத்துக்குரிய பத்திரிகை.
பாடசாலையில் படித்த காலத்தில் நான் எட்டாம் வகுப்பில் படித்தபோது ஒன்பதாம் வகுப்பில் படித்த பாடகர் முத்தழகு எனது நெஞ்சிற்கு நெருக்கமான நண்பர். அவர் இன்று இலங்கையில் மிகப்பெரிய பாடகர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட அதிகமான தமிழ்ப்படங் களில் பாடிய பாடகர் அவர். அன்று முதல் இன்று வரை அவருடனான நட்பு தொடர்கின்றது.
அதேபோல பாடசாலையில் இன்னொரு நண்பர் துரைசாமி இன்று அவர் பத்திரிகையுலகில் எஸ்டிபிசாமி என்றறியப்படும் ஓவியர். பாடசாலையில் படித்த காலத்தில் எனக்கும் அவருக்கும் நெருக்கமான உறவு ஏற்படக் காரணமாக அமைந்தது கையெழுத்துப் பத்திரிகை. பாடசாலையில் மாணவர் மத்தியில் கையெழுத்துப் பத்திரிகையை இருவருமாக சேர்ந்து உருவாக்கினோம். ஒவியர் சாமி படங்கள் வரைவார். நான் கதை கட்டுரைகள் எழுதுவேன். நான் படித்த நல்ல விடயங்களை பத்திரிகையில் பதிவு செய்வேன்.
எனது அன்பிற்கு பாத்திரமான அந்த ஆசிரியை எனது முயற்சிகளை ஊக்குவிப்பார். அந்த ஆசிரியைக்கு இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள். அந்த நால் வருமே உடன்பிறப்புகள் போல என் மீது அன்பு காட்டு வார்கள். நான் எழுதியவற்றை அந்த ஆசிரியை யிடத்தேயே படிக்க கொடுப்பேன். அந்த ஆசிரியையும் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர். மு.வரதராஜனின் நாவல் களைப் படித்துவிட்டு என்னிடம்தருவார்.
என் எழுத்துக்களை பத்திரிகையில் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. வீரகேசரி வார இதழில் சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தேன். முதன்முதல் எனது கவிதையொன்று சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. பின்னர் வீரகேசரி,
ஜீவநதி H4

தினகரன் போன்ற பத்தரிகைகளின் சிறுவர் பகுதியில் எனது எழுத்துக்கள் இடம்பெற்றன.
வீரகேசரி தினசரியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாணவர் கேசரி என்ற பகுதி வீரகேசரியில் முழுப்பக்கமாக வெளிவரும். அதற்கு பொறுப்பாக இருந்தவர் யாழ் நங்கை" என்று அனைவராலும் அறியப்பட்ட பெண் படைப்பாளியான திருமதி அன்ன லட்சுமி இராஜதுரை முகம்தெரியாத என்னுடைய எழுத்துக்களை பிரசுரித்து எனக்குமுகவரிதந்தார்.
தழிழகத்திலிருந்து வெளிவந்த சிறுவர் சஞ்சிகைகளை தேடி வாங்கிப் படித்த பொழுது எனது இனிய இலக்கிய நண்பர்களான, பழனியப்பன் அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். மற்றொரு நண்பர் கதிர்வேல் என்பவர் இந்துக்கல்லூரியில் படித்து வந்தார். நாம் மூவருமாக எங்களிடம் இருந்த சிறு சேமிப்பை வைத்து கொண்டு கரும்பு என்ற சஞ்சிகையை அச்சில் கொண்டுவந்தோம்.
*கரும்பு என்ற சஞ்சிகையை எவ்வாறு
அச்சில் கொண்டு வந்தோம் என்ற கதை சுவாரஸ்ய
மானது நண்பர் பழனியப்பன் பணியாற்றும் சரத் அச்சகம் நுகேகொடை என்ற இடத்தில் இருந்தது. நண்பர் பழனியப்பன் அச்சுக்கோப்பாளராகவும், அச்சிடும் இயந்திரத்தை இயக்குபவராகவும் இருந்தார். சரத் அச்சக முதலாளி தமிழ் சிங்கள் மொழிகளை நன்கு பேசக் கூடிய நல்லிதயம் படைத்த மலையாளி. அவரிடம் ஒரு ஞாயிற்றுக் கிழமை நாங்கள் மூவரும் சென்று எங்களின் எண்ணத்தை தெரிவித்தோம். ga எங்களை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு எங்களால் சஞ்சிகை ஒன்றை நடத்த முடியுமா? என்ற கேள்வியைக் கேட்டார்.
நாங்கள் தயாரித்து எடுத்துச் சென்ற கையெழுத்து பத்திரிகையை அவரிடம் காட்டினோம். அவர் எங்கள் முயற்சியைப் பாராட்டியதோடு அவரது அச்சகத்தில் பணியாற்றும் பழனியப்பனிடம் அச்சக ஓய்வு தினங்களில் வந்து அச்சுக் கோர்த்து, சஞ்சிகையை அச்சிடு படியும் சஞ்சிகைக்குரிய தாள்களுக்குரிய தொகையைமட்டும் தரும்படியாகக் கூறினார், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவருக்கு நன்றி கூறினோம். எங்களுடன் இருந்த கதிர்வேல் என்ற நண்பருக்கும் அச்சுக்கோர்க்கும் அனுபவம் சிறிது உண்டு. நானும் அச்சுக்கோர்க்க பழகிக் கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் அச்சகம் மூடிய பின்னர் இரவு ஏழமணி வரை மூவருமாக இச்சஞ்சிகையை அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டோம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாட்களில் காலை 8 மணி முதல் இரவு ஏழு மணிவரை எங்கள் கனவு நனவாக செயல்பட்டோம். - சஞ்சிகைக்குகரும்பு என்று பெயரிட்டோம். ,
D 41

Page 48
நாச்சியாதீவு பர்வீன்
அனுராதபுரம், வடமத்திய மாகாணத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் ஒன்று, 1980 களுக்கு முன்னர் பெரும்பான்மையினராக தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம்கள் இந்த பிரதேசத்தில் வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இதையும் தாண்டி பெரும் பான்மை சிங்கள அரசர்களின் பழமை வாய்ந்த தலை நகராக இது விளங்கியதும், சிங்கள பவுத்த மக்களின் புனித பிரதேசமாக இது அடையாளப்படுத்தப்பட்டிருப் பதும் சிறுபான்மையினரின் இருப்பையும் வரலாற்றை யும் இன்றுகளில் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரான வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தமிழர்கள் பரவலாக வாழ்ந்த பிரதேசங்கள் இன்று பெரும்பான்மை சகோதரர்கள் வாழ்கின்றார்கள், அவ்வாறே ஆரம்ப காலங்களில் தமிழர்கள் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ்ந்த பிரதேசங் களில் இன்று தமிழ் பேசும் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் 2.63rgolo.
அந்த வகையில் அனுராதபுர மாவட்டத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமப்புறமக்கள் தங்களது வேலைப்பளுக்களை குறைக்க, சோகங்களை மறக்க, மற்றும் குழந்தைகளை துங்க வைக்க, சிறுவர் களின் விளையாட்டின் போது என்று ஒரு கிராமத் தானின் ஒவ்வொரு அசைவுகளிலும் ஒவ்வொரு கணத் திலும் இந்த நாட்டார் பாடல்கள் சம்பத்தப் படுகிறது. இந்த நிலை இன்று இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றது. இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனை களின் வளர்ச்சிகளும், மலிவானதாக கிடைக்கின்ற நவீன பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் ஓய்வற்ற கல்விச் செயற்பாடு என்பன சிறுவர்களையும் பெரியவர் களையும் இந்த நாட்டார் பாடல்களை பாடுவதற்கும், கிராமிய விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கும் நேர மின்மையும் அதுபற்றிய அறிவின்மையும் சரியான முறையில் அது ஊடுகடத்தப்படாமையும் நாட்டார் பாடல்களின் அழிவுக்குஅடிப்படைக்காரனங்களாகும்.
ஜீவநதி
 

ஆராரோ.ஆரிவரோ.
ஆறடிச்சி. நீயழுத. என்று தொடங்கும் குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாட்டு இன்று வெறுமனே சினிமாவில் மட்டும் தான் இப்போது கேட்க முடிகிறது, ஆனால் இந்த தாலாட்டு பரவலாக எல்லாப்பிரதேசத்திலும் பாடப்பட்ட ஒரு தாலாட்டுப் பாடலாகும் அனுராதபுர மாவட்டத்திலும் இது பரவலாக பாடப்பட்டது. இப்போது வழக்கொழிந்து போய் இந்தப் பாடல் இல்லாமல் போய்விட்டது இது தவிரவும்
ஆதியானநாயனுக்கு
அடங்கலான புகழுமாம
நீதியான மொழிநமக்கு
நித்தமும்சலவாத்து சொல்வோம் என்று ஆன்மீகத்தை பாடலின் மூலமாக குழந்தை களுக்கு ஊட்டுகின்ற பாங்கும் கிராமப்புறங்களில் இருந்து வந்தது ஆனால் அது இன்று அருகிவருகின்றது எனலாம்.
ஆரம்ப காலங்களில் மக்கள் கிராமங்கள் தோறும் சென்று தமது தொழில்களை செய்து வாழ்க்கை நடாத்தி வந்தனர் அந்த வகையில், நாச்சியாதீவு கிராமத்துக்கு தொழில் நிமித்தம் வந்த ஒரு குழுவினர் இப்படி பாடியுள்ளார்கள், இந்தப்பாடல் கிராமத்தின் வனப்பையும் வளத்தையும் பாடுவதோடு இந்த மக்களின் குண இயல்புகளை அழகாக கோடிட்டு காட்டுகிறது.
எட்டு எடுத்துவைத்து வாடி
என் பொண்னே பொண்னே
நாட்டுல நல்ல ஊரு
நாச்சியாதீவுக்கு போவோம்.
இவ்வாறே சிறுவர்களின் விளையாட்டுப் பாடல்கள் பலவும் காலாவாதியாகி காணாமல் போய்விட்டது
சங்கிலிப்புங்கிலி
கதவத்தொற
நான்மாட்டேன் வேங்கப் புலி
U5 DfT Lesgorge66Trr
சிறுவர்கள் சங்கிலிபோல கைகளை பிடித்து வட்டமாக இருக்க ஒருவர் பசுமாடாக அந்த சங்கிலி வட்டத்திற்குள் இருப்பார் அந்த பசுமாட்டை வேட்டை யாட வேங்கைப்புலியாக ஒருவர் சங்கிலியை சுற்றி பாடும் விளையாட்டுப்பாடல்தான் இது இவ்வாறே,
கீச்சிமூச்சிதாம்பாளம் கீயாமீயா தாம்பாளம் மாச்சிமாச்சிதாம்பாளம் LDITuu LDITuung,5FLibunra Tuñó
YYMGGGeiiiGiG i i ii i ii iSiTTT 41

Page 49
இந்தப்பாடல் வெவ்வேறு பிரதேசத்திற்கு ஏ வேறுபடும், ஆனால் எங்கள் கிராமத்தில் வெகு அண் மட்டுக்கும் விளையாட்டின் போது பாடப்பட்ட பாடலாகு இப்போது சிறுவர்கள் விளையாடுவதுமில்லை, அ இந்தப்பாடல்கள் தெரியவும் மாட்டாது. இப்படி பல பாடல்கள் இன்று சுவடே தெரியாமல் அழிந்து போய் 6 பரவலாக காணப்படுகிறது இது போல ஊஞ்சல் பாடல்க பிரபல்யம். அனுராதபுர கிராமங்கள் சிங்கள மொழி கிராமங்களை அணி டியதாக இருப் பதனால் கலாச்சாரங்களையும், அவர்களின் கிராமிய அசைவுகள் பொழுதுகளில் அடையாளப்படுத்தும் வகையில் பாடல்களும் விளையாட்டுக்களும் பரவலாக காணப்படுகி
கோம்புட்டுகோம்புட்டு
என்ற பாடல் கிராமப்புறங்களில் பிரபல்யம், அ{ விளையாட்டுக்கள் சிங்கள கலாச்சார அடைய அடையாளப்படுத்துகிறது.தலைகாணி அடித்தல், சாக்கோ மரம் ஏறுதல் இப்படி பல உள்ளன இவைகள் ஆதிகாலத் களின் வீர விளையாட்டுக்களின் பட்டியலில் உள்ளடங்கி பின்னரே அது பரவலாக எல்லோரினாலும் பயன்படுத்த வும் ஒரு தகவல் உண்டு.
எப்படியோ அனுராதபுர மாவட்ட தமிழ் பேசு கிராமங்கள் தோறும் பண்டைய மரபு முறை சார் மூதாதையர்கள் ஊடு கடத்தப்பட்ட பல கிராமத்து இன்றுகளில் வழக்கொழிந்து போய் விட்டது என்பதும் ஆழமான ஆய்வு அவசியம் என்பதும் ஆழமான உன பொதுவாகவே அனுராதபுர மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களான நாச்சியாதீவு, க இக்கிரிகொல்லாவெவ நேகம, ஹோரோவப்போதான கிராமங்கள், அனுராதபுர எட்டூர் கிராமங்கள் என்று த முஸ்லிம்கள் இன்று பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கு களாகும் முஸ்லிம்களின் பாரம்பரிய நாட்டாரியளுடன் ணைந்தகோலாட்டம்,கசீதாக்கள், கவ்வாலிமரபுப்பாடல் திருமணத்தின் போது ரப்பான் அடித்து பெண் பாடும் பாடல்கள், மாப்பிளை அழைத்து வரும் போது பாடல்கள் என்று இஸ்லாமிய மரபோடு ஒட்டிய பல சார்ந்த அம்சங்களை இன்று அவதானிக்க முடியவில்லை, ஆனால் கிழக்குமாகாணத்தின் பல கிராமங்கள் இந்த நாட்டாரியல் பாடல்கள் பாடப்படுவதும் அ பரம்பரைக்கு ஊடு கடத்தப்படுவதும் ஆரோக்கியம களாகும். எப்படியோ அனுராதபுர மாவட்ட மக்களின் வ அதனோடு தொடர்புபட்ட நாட்டாரியல் பாடல்களும் அர் சுகங்களை துக்கங்களை வெளிப்படுத்தும் மிக நுண்ண ஒரு காலத்தில் இருந்தது இப்போது அவை இல்லாது பரம்பரைக்கு அது தெரியாத சூழ்நிலையில் அது பற்றி பார்வைக்கும், ஆய்வுக்கும் ஒரு முன்னோட்டமாக இர் பயன்படுத்தமுடியும் என்பது எனது அபிப்பிராயம்.
 
 
 
 
 

محصص M ற்றாப்போல 1601 a மைக்காலம் මී%) 5ம் ஆனால் ఫ## வர்களுக்கு Girge6ffGi5. கிராமத்து A. விட்ட நிலை அன்பாலே ഞെക ഖെ ஆத்திரப்பட்டு நாளும் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ளும் இங்கு . A... .
பேசுகின்ற துண்பத்தில் மூழ்கிடாதே gী[B] 56া துயரினை தேடிடாதே! ளையும் சில 0. கிராமியப் இன்பமாய் இனிதாய் வாழு ன்ற : ஈடில்லா நட்பை ஆளுநீ
உன்னவர் என்று என்நாளும் உயர்வுடன் மதிக்க பழகு! வ்வாறே சில O Teा ங்களை முன்னைய வாழ்வை மறந்து பூம : தன்னையே பெரிதாய் எண்ணும் தில் த ழா இன்றைய மனிதன் வாழ்வு lu தாகவுte, எணர்ணவே கவலைதானே? ப் படுவதாக 0. 28 ம் முஸ்லிம் மென்மையாய் பேசல் இலகு ந்த அல்லது வண்மையை அழுத்தல் இழிவு
பாடல்கள் பெண்மையாய் பிறந்தோரிதனை அது பற்றிய பேணியே காத்தல் அழகு. ன்மையாகும் Oe மிகப்பெரிய யாருக்குமாக நின்று வாழ்வில் Gost Galoist, பேருக்கு கோபம் கொண்டு ா விசி ஹத ஊருக்கும் உலகுக்கும் தமிழ் பேசும் உன்னதம் காட்டும் வாழ்வு. ம் பிரதேசங் 滚 Ox:
பின்னிப்பி நாவினை அடக்கி வாழு 356T, 、溪 '8883: 溪
------------ நற்சுவை சேர்த்து உண்ணு கள் சேர்ந்து
LuTL['uLJ(BLíb நாவினை அடக்காவிடிலோ நாட்டரியல் நாளுமே துன்பமாமே?
Ox ીદb இன்னும் ঠু றிய ஏணி உண்னை து அடுத்த இறக்கியே தள்ளக்கடும் னே நிகழ்வு பாறியே விழுந்திடாதே உண் ாழ்க்கையும். முன்னையவாழ்வை எண்ணு. த மக்களின் Ox சிய தளமாக வாழத்தான் பிறந்துவிட்டோம் போப் புதிய " வாழ்வதின் தத்துவத்தை நாமும்
த குறிப்பை அன்புடன் வாழ்வோம் நாமே!
வதிரி.சி.ரவீந்திரன்
இதழ் 41

Page 50
அவை இலக்கிய வட்டத்தின் 33 ஆவது நிகழ் எழுத்தாளர் தெணியான் தலைமையில் நடைபெற்றது. இலக்கியமும்” என்னும் தலைப்பில் உரையாற்றினா விருதுபெற்றமைக்காக கே.ஆர்.டேவிட்டை பாராட்டும் நீ மு.அநாதரட்சகன், வே.சிவராஜலிங்கம் ஆகியோர் நன்றியுரையை கலாநிதிதகலாமணி நல்கினார்.
2) தம்புசிவாவின் மூதசம் சிறுகதைத்தொகுதி வெளியீட் பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையில் நடைபெற ருநீகணேசன் நிகழ்தினார். நூல் ஆய்வுரையை திரு. சிவா கே.ஆர்.டேவிட்,கலாநிதிவ.மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்
 
 

Ujáíáí
2012.01.22 அன்று அல்வாயில் உள்ள கலைஅகத்தில் இந்நிகழ்வில் எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் நானும் எனது நிகழ்வின் இரண்டாவது அம்சமாக கலாபூஷணம் கழ்வு இடம்பெற்றது. வாழ்த்துரைகளை ப.செல்லத்துரை, வழங்கினர். ஏற்புரையை கே.ஆர்.டேவிட் கூறினார்.
டுவிழா 2012.01.14 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் றது. நூல் அரங்கேற்றவுரையை கலாநிதி கந்தையா சுப்பிரமணியம் நிகழ்தினார். சிறப்புரைகளை எழுத்தாளர் த்தினர். ஏற்புரையைதம்புசிவா நிகழ்த்தினார்.

Page 51


Page 52
உரிமையாளர்கலாநிதிரு. கை
 

STAURANT
V A Vailable
○○○。 2226, 2323
மனிஅவர்களாலீமதி கலர்ஸ்டுறுவனத்தில் அசிட்டு