கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்

Page 1


Page 2


Page 3

கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெனர்கள்
வி. சசினர்னத்தம்பி
சி. டி. சி. வெளியீடு துலுாளம், பிரானர்ஸ்.

Page 4
கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்
ஆக்கம் : வி. சின்னத்தம்பி
முதற்பதிப்பு : வைகாசி 2001
வெளியீடு : ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மையம்
துலுாஸ், பிரான்ஸ்.
C D C EUROPE ORENT B P 229
31000 TOULOUSE
FRANCE.
Tél. : 0561 55 0013 Fax: 05 6155 0013
06 759871 28

AA/LW6
சர்வதேச மாதர் தினத்தையொட்டி, இக்கட்டுரை கடந்த வருடம் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதாகும்.
சன வானொலியிலும், அயல்மொழிப் பதிப்பகத்திலும் சுமார் 16 வருடங்கள் தமிழ்ப்பணியாற்றிய தோழர் வி. சசினர்னத்தம்பி இதனை எழுதியுள்ளார்.
கம்யூனிஸ் இயக்கத்தினர் வளர்ச்சிக்கென, ஆரம்ப காலத்தில் எத்தனையோ பெண்கள் தமது கணவனர்மாருடனர் இணைந்து தொண்டாற்றியுள்ளனர். அவர்களிர் தமது சொத்துச் சுகம் எல்லாவற்றையும் இழக்க நேரிட்டும், அவதூறுகளையும்பழிப்புரைகளையும் கேட்க நேரிட்டும் கலக்கமினர்றி, கொண்ட கொள்கையில் ஈடாட்டமின்றி இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக, உறுப்பினராக யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழ்வது எண்பது வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடிப்பதாகும்.
தமது கொள்கையில் இறுதிவரை வழுவாது, எத்தனை துயர்வரினும் ஏற்று இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர்களுடைய வாழ்வினர் பினர்னால் அவர்களது மனைவிமாருக்கும் சமபங்கு உண்டு எணர்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள், கணவர்மாரினர் கம்யூனிஸ் இயக்கப் பணிகளுக்கு அன்று உறுதுணையாகவிருந்து உதவிய மாதரசிகள் சிலர் குறித்து தோழர் வீ சினர்னத்தம்பி சுருக்கமாக எழுதியுள்ளார்.
3

Page 5
இதில் குறிப்பிடப்பட்ட மாதரசிகளிர் மாத்திரமினர்றி, கம்யூனிஸ் இயக்கப் பணிகளுக்கு அனர்று உதவிய தமிழ்ப் பெண்களர் பலர் உண்டு. அறுபதுகளினர் பிற்பகுதியில், திண்டாமை ஒழிப்பு போராட்டங்களில் நேரடியாகக் களத்தில் நின்று போராடிய இளம்பெனர்களர் சிலர் இன்றும் ஈழத்தில் வாழ்கிறார்கள்.
கடந்த மாதம் 17- ம் திகதி (77- 04- 2001) அருமைத் தோழர் வீ சினர்னத்தம்பி வட்டுக்கோட்டையில் காலமாகிவிட்டார். அர்ைனாரது விருப்பத்திற்கமைய இந்நூல் இங்கு பிரசுரமாகிறது. அரசியல் ஆர்வலர்களுக்கும், வரலாற்று ரீதியாகவும் முற்போக்குப் பார்வையுடனும் சந்திப்பவர்களுக்கும், பெணர்களுக்கும் இந்நூல் சிறிதேனும் பயனர்படுமென நம்புகிறோம்.
வி. ரி. இளங்கோவனர் 01- 5- 2001

கம்யூனரிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெனர்களர்
சர்வதேச மாதர் தினம் மார்ச் சீ-ம் திகதி அனுவுர்டிக்கப்படுகிறது. இப்பொழுது உலகம் பூராவும், பொதுவாக பெனர்களினர் நிலைமையையும், உரிமைகளையும் கணக்கிலெடுக்கும் நாளாக இத்தினம் அமைந்துள்ள போதிலும் ஆரம்பத்தில் சோவுதலிலத்திற்கான போராட்டத்தில் உலக உழைப்பாளிப் பெனர்களினர் ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் நாளாகவே இது அமைந்தது.
மார்ச் சீ-ம் திகதி சர்வதேசிய மாதர் தினமென இன்று உலகில் சகல நாடுகளிலும் அனுவந்டிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் இத்தினத்தினர் மூலகர்த்தாக்களர் கம்யூனிஸ்ட்டுகள் என்பது நினைவு கூரப்படவேண்டிய ஒரு விஷயமாகும். இந்த ஸ்தாபகர்களினர் ஆரம்ப நோக்கங்களை இணர்றைய மாதர் தினமும் அதனர் நினைவைக் கொண்டாடும் மாதர் ஸ்தாபனங்களும் எவ்வளவுக்கு நிறைவேற்றுகின்றன எனர்பது ஆராய்விற்கு உரிய ஒரு பொருளாகும்.
5

Page 6
சர்வதேசிய மாதர் தினத்தினர் சுருக்கமான வரலாறு Altludongly 1970-ம் ஆண்டு டெனர்.மார்க்கினர் தலைநகரான கோப்பெனர்ஹேகெனில் நடைபெற்ற பெனர் சோடிலினப்டுகளினர் இரண்டாவது சர்வதேசிய மாநாட்டில், ஜேர்மனர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த annur as tai (Clara Zetkin) 67aia) at Isaiadafusai பரேரணையினர்பேரில் மார்ச் 8, சர்வதேசிய மாதர் தினமாக நிறுவப்பட்டது.
முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடப் பரந்துபட்ட பெண்களை அணிதிரட்டுவதே இதர்ை நோக்கமாகும்.
சர்வதேசிய மாதர் தினம் முதலில் 1971-ம் ஆண்டில் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டெனர்மார்க், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் அனுசரிக்கப்பட்டது. ரவித்யாவில் முதனர்முதலில் 1913-ம் ஆணர்டு இத்தினம் அனுபவத்டிக்கப்பட்டது.
2000-ம் ஆண்டு சர்வதேசிய உழைப்பாளி மாதர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் இலங்கையினர் வடபுலத்தில் சோஷலிலத்திற்காக உழைத்த சில பெண்மணிகளை நினைவுகூருதல் பயனுள்ளதாகும்.
கடந்த நூற்றாண்டினர் 30-ம் ஆணர்டுகளில் எமது நாட்டில் பரவிய சோவுதலிலக் கருத்துகளால் கவரப்பட்டுப் பல இளைஞர்களர் தமது வாழ்வையே இந்த இலட்சித்திற்கு அர்ப்பணித்தார்கள். இலங்கை பூராவும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சுரண்டலற்ற, அடக்குமுறையற்ற, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை அமைப்பதென்ற கம்யூனிஸ் இயக்கத்தினர் பணியில் இரண்டறக் கலந்துகொண்ட இந்த
6

இளைஞர்கள் வாழ்க்கையினர் சகல சுகபோகங்களையும் துறந்து தாம் வரித்துக்கொண்ட கம்யூனிஸ்
முழுவதும் பாடுபட்டு உழைத்தார்கள்.
தெற்கில் டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்க முதல் வடக்கில் மு. கார்த்திகேசனர் வரையிலான இந்த இளைஞர்களினர் பட்டியல் கணிசமானளவு நீண்டதாகும். இவர்களினர் இலட்சிய வாழ்க்கையைப் பற்றிய விபரமான ஆய்வு நூல்கள் வெளிவருவது அவசியமாகும்.
உலகில் இன்றுவரை ஆணி மேலாதிக்கம் நிலவி வருகின்றது என்பது ஒரு யதார்த்தமாகும். இந்த நிலைமையில் சமுதாயத்தினர் முனர்னேற்றத்தில் பங்குபற்றிய பெண்களினர் பாத்திரம் சரியான பரிமாணத்தில் எடுத்துக் கூறப்படுவதில்லை. கம்யூனிஸ் இயக்கம் உட்பட முற்போக்கு இயக்கத்துக்கும் இந்தக் கூற்று ஓரளவு பொருத்தமானதே.
இலங்னையினர் வடபுலத்தில் கம்யூனிஸ் இயக்கத்தினர் வளர்ச்சியில் பெண்கள் ஆற்றிய பங்கு அவர்களுடைய கணவர்ைமார்களினர் சேவையினர் பகுதியாகவே கருதப்படுகிறது. தமது துணைவர்களினர் போராட்ட மனமுவந்து பங்குகொண்ட மாதரசிகள் சில வேளைகளில் ஆணர்களிலும் பார்க்கக் கூடுதலான பங்களிப்பைச் சமூகத்துக்கு நல்கியுள்ளனர்.
காலஞ்சென்றவர்களான திருமதி வேதவல்லி கந்தையா, திருமதி தங்கரத்தினம் கந்தையா, திருமதி பரமேஸ்வரி சணர்முகதாசனர், திருமதி வாலாம்பிகை கார்த்திகேசனர், திருமதி பிலோமினம்மா டானியல் முதலியோர் தமது கணவர்களினர் வாழ்க்கையில் துணைநின்று பல்வேறு கவுத்டங்களினர் மத்தியில் குடும்பப் பணியையும், பொதுப்பணியையும் நிறைவேற்றினார்கள்.
நர

Page 7
ஆசிரியைகளான திருமதி வேதவல்லி கந்தையா, திருமதி தங்கரத்தினம் கந்தையா ஆகியோர் பொதுவாழ்க்கையில் தமக்கென ஒரு சுதந்திரமான பாத்திரத்தையும் வகித்து நாடுபோற்றும் நற்பெண்மணிகளாக விளங்கினார்கள்.
சம்பிரதாயமும், சடங்குகளும் மலிந்த எமது சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக உள்ள எத்தனையோ தடைகளைத் தானர்டியும், பரம்பரையான வழக்கங்களை மீறியுமே இப்பெனர்கள் வாழவேண்டியிருந்தது.
சாதாரணமான யாழ்ப்பாணப் பெணர்களிர் எனர்ற நிலைமையை உடையவர்களாக இவர்களிர் வாழவில்லை. சொத்துச்சகம், நகைநட்டு, வீடுவாசல் இவற்றுக்கான பொருளாயத ஆசைகள் அற்றவர்களாக அல்லது ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவே இவர்களுடைய வாழ்க்கை பொதுவாக அமைந்தது.
சுருக்கமாகக் கூறினர் இந்தப் பெண்மணிகள் முற்போக்கான மனிதர்களாக, புரட்சிகரமான மனிதர்களாக வாழ்ந்து மறைந்தார்களர். இவர்களுடைய வாழ்க்கை பொருளாதார ரீதியில் கணினர்க் காவியம் எனர்று அழைக்கப்படக்கூடும் என்றாலும் ஆத்மாதியில் புரட்சிக் காவியமே ஆகும்.

∞
S.
|-

Page 8
மாதர் உரிமைகளுக்காக உழைத்த வேதவல்லி
தருமதி வேதவல்லி கந்தையா வட்டுக்கோட்டையில் (1920 - 1988) பிறந்தவர். நீர்வேலியில் எஸ். கே. கந்தையா எனும் பொதுவுடமைவாதியான ஆசிரியரைத் திருமணம் புரிந்தவர், ஆசிரியர் கந்தையா தானர் முதன்முதலில் இலங்கையில் கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழாக்கம் செய்தவர் எண்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி வேதவல்லி ஆண்களுக்கு உள்ள உரிமைகளிர் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக்கமையப் பல மாதர்களை ஒன்று திரட்டி முற்போக்கு மாதர் சங்கத்தை உருவாக்கி யாழ்ப்பானத்து மாதர் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக இருந்தார்.
1()

திருமதி வேதவல்லி சாதி ஒழிப்புப் பிரசாரங்களில் முணர்னின்று செயற்பட்டார். கூட்டுறவு இயக்கப் பணிகளிலும் ஊக்கத்துடனர் ஈடுபட்டார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லுநரான திருமதி வேதவல்லி பேரினவாதத்தினர் Jesu urruugšanas parzysgfluuiaé singflugvöggsmiri,
திருமதி வேதவல்லி நிர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தமது ஆசிரியர் சேவையைத் தொடங்கி கோப்பாய் கிறிஸ்தவ கல்லுாரியில் அதிபராகத் தமது சேவையைப் பூர்த்தி செய்தார்.
யாழ். மாவட்ட கம்யூனிஸ்ட் மகளிர் அமைப்பு, யாழ். மாவட்ட மகளிர் குழு, யாழ். மாவட்ட ஐக்கிய நாணய சங்கங்களினர் சமாசம், வலி. கிழக்குப் பகுதி மகளிர் குழுக்கள், நிர்வேலி சமுதாய முனர்னேற்றக் கழகம், நீர்வேலி நூறீமுருகனர் மாதர் ஐக்கிய நாணய சங்கம் போனர்ற பலரக அமைப்புகளினர் தலைவராகவும், போஷகராகவும் பணியாற்றி திருமதி வேதவல்லி மக்ககளுக்குத் தொண்டாற்றினார். அவர் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். முதலாளித்துவ சமுதாய அமைப்பை அழித்தொழித்து புதியதோர் பொதுவுடமைச் சமுதாயத்தை அமைத்தால் தானர் பெண்களும் மற்றும் மக்களும் சம உரிமையுடனர் வாழலாம் என்று திருமதி வேதவல்லி திடமாக நம்பி அதற்காக உழைத்தார்.
11

Page 9
.3.0.0, 4.2. יל.
ருமதி தங்கரத்தினம் கந்தையா
 
 
 
 

எதேச்சாதிகாரத்தை
எதிர்த்த தங்கரத்தினம்
திருமதி வேதவல்லி போலவே திருமதி தங்கரத்தினம் கந்தையாவும் வட்டுக்கோட்டையில் (1920 - 1989) பிறந்தவர். உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி கற்று ஆசிரியை ஆகியவர்.
தொழிற்சங்கவாதி, சமூக சேவகி, கம்யூனிலப் போராளி, இலங்கை முற்போக்கு மாதர் முனர்னணியினர் தலைவர்களுள் ஒருவரான திருமதி தங்கரத்தினம் தொல்புரம் மாதர் சங்கத்தினர் இயங்குசக்தியாகவும் விளங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுப்பினரான இவர், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை ஒனர்றினர் செயலாளராகவும் பணிபுரிந்தார்.
திருமதி தங்கரத்தினத்தினர் அரசியல் கொளர்கைப் பிடிப்பு இலக்கிய அந்தஸ்து பெற்றுள்ளது. காலஞ்செனர்ற டானியல் தமது நாவல் ஒனர்றில் அவர் தொடர்பான நிகழ்ச்சி ஒனர்றைக் குறிப்பிட்டுள்ளார்.
சங்கானையில் ஒரு பாடசாலையில் அது நிகழ்ந்தது. சரஸ்வதி பூஜைத் தினம், உணர்டிவகை செய்வதற்காகத் தேங்காயை தாழ்த்தப்பட்ட மாணவி ஒருத்தி துருவ முற்பட்டபோது மற்ற ஆசிரியர்கள் அதைத் தடுக்க முனைந்தார்கள். ஆசிரியை தங்கரத்தினம் ஏனர் அம்மாணவி துருவக்கூடாது எனர்று கூறி அவரைத் துருவவிட்டார். விளைவு, இரவில் பாடசாலை எரிக்கப்பட்டது.
13

Page 10
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராகவும், பினர்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் சேவையாற்றிய திருமதி தங்கரத்தினம் இவற்றினர் காரணமாக எத்தனையோ இடர்களைச் சந்தித்தார். அரசியல் மேடைகளில் கூட தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோரால் பெயர் சுட்டித் தாக்கப்பட்டார்.
ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும், ஒரு ஆசிரியர் சங்கத் தொழிற்சங்கவாதி என்ற முறையிலும், ஒரு சமூக சேவகி என்ற முறையிலும் அவர் இந்த எதிர்ப்புக்களுக்கு முனர் துவண்டுவிடாமல் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகப் போராடினார்.
இந்து மகாசபை (Hindu Board) பாடசாலைகளில் படிப்பித்த திருமதி தங்கரத்தினம் 12 தடவைகளுக்குக் குறையாமல் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்து போர்ட்டினர் பலம் வாய்ந்த செயலாளரான 4W இராசரத்தினத்துக்கு எதிராக அவர் நேருக்குநேர் நினர்று போராடினார்.
அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றபோது திருமதி தங்கரத்தினம் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டார். தேர்தல் கூட்டங்களில் கம்யூனிண்ட் கட்சி, இடதுசாரி அபேட்சகர்களுக்கு ஆதரவாக அவர் உரையாற்றினார்.
குடும்ப வாழ்விலும் கம்யூனிஸ் இலட்சியத்தைக் கடைப்பிடிப்பதில் அவர் முனர்னுதாரணமான பங்கை வகித்தார். நான்கு புத்திரர்களையும் இரண்டு d புத்திரிகளையும் பெற்ற அவர் தனது பிள்ளைகளின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஓர் அணர்னையாகத் திகழ்ந்தார். பினர்ளைகள் பொதுவாக முற்போக்குக் கொள்கைகள் உடையவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
14

திருமதி தங்கரத்தினம் ஒரு தாயார் என்ற முறையில் தமது பிள்ளைகளை வளர்க்க வறுமையுடனர் போராடினார். அதற்காகத் தமது கொள்கையில் அவர் FIL/TILLö Jean Luuaflaðaman).
கம்யூனிஸ் இயக்கப் பணிபுரிந்த பரமேஸ்வரி
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரேயொரு தெரிவு செய்யப்பட்ட பருத்தித்துறை பாராளுமனர்ற உறுப்பினரான காலஞ்சென்ற பொனர். கந்தையாவினர் துணைவியாராகவும், பினர்னர் இலங்கையினர் மாபெரும் மார்க்லினவாதியான எனர். சண்முகதாசனினர் துணைவியாராகவும் திருமதி பரமேஸ்வரி கம்யூனிஸ் இயக்கத்தினர் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி அளவிடற்கரியது.
வடமராட்சி, நெல்லியடியில் செல்வக் குடும்பத்தில் தோன்றிய பரமேஸ்வரி தமது வாழ்க்கையில் போதியளவு வறுமையையும் அவதூறுகளையும் சந்தித்தார். ஏனர், ஒரு நேரச் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைமையில் கூட அவர் இருந்திருக்கிறார். கந்தையா எனர்ற மார்க்விஸத் தத்துவ அறிஞருக்கும், சண்முகதாசனர் என்ற கம்யூனிஸ் செயல்வீரனுக்கும் உறுதுணையாக இருந்த பரமேஸ்வரியினர் வாழ்க்கை ஒரு புனிதமான புரட்சி வாழ்க்கையாகும்
15

Page 11
16
 

கம்யூனிஸ்க் கொள்கைகள் காரணமாக விடுவாசல் இழந்து, வருமானம் அற்று அவர் வாழ்ந்த காலத்தை அறிந்தோர் அவருடைய திடமனத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
திருமதி பரமேஸ்வரி உணர்மையில் தமது துணைவருக்கு நல் மனைவியாய், நல் மந்திரியாய், நல் சேவகியாய், ஏனர் நல் ஆசானாய்க்கூட விளங்கினார். அவர்களுடைய படைப்புகளை எழுதும் பணியைப் பெரும்பாலும் அவரே செய்தார்.
கம்யூனிஸ் இயக்கத்திலும் தொழிற்சங்க இயக்கத்திலும் ஏற்பட்ட எத்தனையோ துரோகச் செயல்களை அனுபவித்தவர் பரமேஸ்வரி. இன்று தோழர், நண்பர். நாளை துரோகி, விரோதி என்ற நிலைமையிலும் கம்யூனிஸ்ட்டுகளுடனர் வாழ்ந்தவர் பரமேஸ்வரி.
அறிவும், கலை இலக்கிய ஆர்வமும் உடைய திருமதி பரமேஸ்வரி 50-ம் ஆண்டுகளினர் பிற்பகுதியில் இலங்கை வானொலியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளையும் செய்தார் என அறியவருகிறது. பி0-ம் ஆண்டுகளினர் இறுதியில் அவர் உத்தியோகபூர்வ ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்தார் எனத் தெரியவருகின்றது.
17

Page 12
- - - - - - - - - -
------ -
ட.ால
18
, ...
 
 

கார்த்தியினர் கீர்த்திக்கு வழிவகுத்த வாலIம்பிகை
தருமதி பரமேஸ்வரி போலவே, திருமதி வாலாம்பிகையும் கார்த்திகேசனர் எனர்ற கம்யூனிஸ்ட்டைக் கைப்பிடித்த காலம்முதல் ஒரு பூரண கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த உத்தமப் பெண்மணி ஆவார். கம்யூனிஸ்ட் கார்த்திகேசனினர் வாழ்க்கையும், வாலாம்பிகை கார்த்திகேசனினர் வாழ்க்கையும் ஒனர்றே ஒனர்று. அவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.
கம்யூனிஸ்ட் எனர்ற முறையில் கார்த்திகேசனர் பூரணமானதோர் வாழ்க்கை வாழ உதவியவர் திருமதி வாலாம்பிகை ஆவார். கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் கூட்டங்களில் உரையாற்றித் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது தவிர அவர் நேரடியாக அரசியல் வேலைகளில் ஈடுபடவில்லை. ஆனால் அவருடைய குடும்ப வாழ்வினர் ஒவ்வொரு கணமும் அரசியல் மூச்சுப்பட்டதாகவே அமைந்தது.
40-ம் ஆண்டுகளினர் ஆரம்பத்தில் கார்த்திகேசனினர் துணைவியாகியது முதல் அக்காலக் கம்யூனிஸ்ட்டுகள் அனுபவித்த அத்தனை இடர்களையும் அவரும் அனுபவித்தார். இறக்கும்போதும் சொந்த வீடற்றவராகவும், நகைநட்டு அற்றவராகவுமே அவர் இருந்தார்.
19

Page 13
35 ஆண்டுகளாக அவர் விட்டுப் பாரத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவர் குடும்ப நிர்வாகத்தைத் திறம்படச் செய்தார். ஓய்வு ஒழிச்சல் இல்லாது வந்துகொணர்டேயிருந்த விருந்தினர்களை உபசரித்தல், பிள்ளைகளை வளர்த்துக் கல்வி அளித்தல், நிதி நிலைமைக்கு ஏற்பப் பொருள்களை வாங்கிக் குடும்பத்தை நடத்துதல் ஆகிய அனைத்தையும் அவரே கவனித்தார். கார்த்திகேசனினர் குடும்ப வாழ்க்கையினர் சிறப்பு அனைத்தும் திருமதி வாலாம்பிகைக்கே உரியதாகும்.
திருமதி வாலாம்பிகை இன, மத, சாதி பேதங்களைப் பாராட்டாத ஒரு பெண்மணி ஆவார். இர்ைனும் கூறுவதென்றால், ஏழைகள், தொழிலாளர்கள்பால் அவர் அபரிமிதமான அர்ைபும், கருணையும் காட்டினார். அவர்களுடைய குழந்தைகளையும் அன்புடனர் கவனித்தார்.
தனது இறுக்கமான பொருளாதார நிலையிலும் கவுத்டப்பட்ட உறவினரினர் பிள்ளைகளிர் பலரைத் தம்முடனர் வைத்து வளர்த்துக் கல்வியூட்டியதுடனர், பல ஏழைப் பிள்ளைகளுக்குக் கல்விக்காகப் பணஉதவியும் புரிந்தார். நோயுற்றிருந்த இறுதிக் காலத்தில் கூட அவர்களுடைய 1943-ம், 4-ம் ஆண்டுகளினர் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கையை நினைவூட்டிய போதெல்லாம் அவருடைய கனர்களில் பிரகாசமான ஒளி வீசியதை அவதானிக்க முடிந்தது.
20

கார்த்திகேசனர் மாஸ்ரரைப் போலவே நகைச்சுவையாகப் பேசும் திறமை படைத்தவர் திருமதி வாலாம்பிகை. சில வேளைகளில் மிகவும் காரமாகவும் அவருடைய நகைச்சுவை அமைந்துவிடும். மார்க்விஸம் பேசும்’ ஒருவர் தாடியுடனர் வந்தார்.
தாடி வைத்தால் எல்லோரும் மார்க்லிலவாதியாகிவிட முடியுமா எனர்றார் திருமதி வாலாம்பிகை,
போலிகளைக் கண்டுணரும் திறமை திருமதி பரமேஸ்வரி, திருமதி வாலாம்பிகை ஆகியோரிடம் அமைந்திருந்தது. ஆனால் கட்டுப்பாடு கருதி தமது கருத்துக்களைக் கட்டுப்படுத்திக் கொண்ட பெண்மணிகர்ை அவர்கள்,
21

Page 14
22
 

அர்ைபுத் தேவதை பிலோமின7ம்மா
மக்களர் எழுத்தாளர் கே. டானியலினர் துணைவியார் திருமதி பிலோமினம்மா மேற்கூறிய பெண்மணிகளிலும் பார்க்கப் பல விஷயங்களில் வேறுபட்டிருந்தாலும் முற்போக்கு இயக்கப் பணிகளுக்கும், கம்யூனிஸ்ட் இயக்க வேலைகளுக்கும் அவர் ஆற்றிய பங்கும் இவர்களுடைய பங்கிற்குக் குறைவானது அல்ல,
சமூகத்தினர் அடித்தட்டில் தோன்றி, நித்திய வறுமையில் உழனர்ற ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட திருமதி மிலோமினம்மா, பிற்காலத்தில் அவர்களுடைய பொருளாதார நிலைமை முனர்னேறியபோதும் பல்வகைப் போராளிகளை முகங்கோணாது உபசரிக்கும் ஓர் அற்புதப் பெண்மணியாகவே திகழ்ந்தார்.
சடுதியாக வந்திறங்கும் விருந்தினர்களை உபசரித்துவிட்டு வெறும் சோறுணர்ட திருமதி பிலோமினம்மாவும், இதே நிலைமையில் மீதமிருக்கும் இரசத்திற்கு வெந்நீரைவிட்டு வெறும் சோற்றை உண்ட திருமதி வாலாம்பிகையும் ஒத்த தனர்மை உடையவர்களிர் ஆவர்.
வந்தவர்கள் அணர்னனர் தம்பியா, அக்கா தங்கையா, உறவினர்களா? இல்லவே இல்லை. இலட்சியங்களால் இணைந்தவர்கள். இவை எல்லாம் தனக்கும் புரியும்
23

Page 15
என்ற பாங்கில் திருமதி பிலோமினம்மா ஒரு மெளனத்தாயாக, அர்ைபுத் தேவதையாகக் asina suam? in unmi.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உரிமைப் போராட்டங்களினர் வெற்றியில் திருமதி பிலோமினம்மா போன்றவர்களுக்கும் நிச்சயமான பங்குண்டு.
NAS さリレ
NA
13
24

சி. டி. சி. வெளியீடுகள்,
/7
/7
//
பாப்பா பாடல்களர்
பத்மா இளங்கோவனர்
கரும்பனைகள்
வி. ரி. இளங்கோவனர் கவிதைகளர்
சிகரம்
வி. ரி. இளங்கோவனர் கவிதைகளர்
இது ஒரு வாக்குமூலம்
வி, ரி, இளங்கோவணர் கவிதைகள்
கரும்பனைகளர்
கவிதைகளிர்- ஒலித்தட்டு (சி. டி.,)
மாணவீரனர் கும்பகருணனர் நாவேந்தனர்
மகதலேனா மரியாளர்
(குறுங்காவியம்)- நாவேந்தனர்
நாவேந்தனர் நினைவலைகள்
நல்ல மணிதத்தினர் நாமம் டானியல்
தொகுப்பு- வி. ரி. இளங்கோவனர்
LDøí Lungpamir LoaØstfløsniaGamíf
62ifl... nfl, gamTzáï6a5/7A2n6zvio
எனர் கதை
கே. டானியல்
25

Page 16
விரைவில் வெளிவரவுளர்ளன.
L நெஞ்சிலிட்ட த"
கே. டானியல்
L பூமரங்கள்
கே. டானியல்
L அப்பா வருவார்
வி. ரி. இளங்கோவனர் சிறுகதைகள்
தொடர்புகளுக்கு
சி. டி. சசி
தொலைபேசி இல. 05 61 $3 40 13 06 75 98 71 2፴
தொலைநகல் இல. 45 41 33 மி0 13
26

மக்கள் G நசன் கார்த்திகேசன் மாஸ்ரர்
வி. சின்னத்தம்பி
27

Page 17


Page 18


Page 19
. . . .