கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கரும்பனைகள்

Page 1


Page 2


Page 3
* கரும்பனைகள்
-விரி. இளங்கோவன் கவிதைகள்.
* (C) உரிமை : நுாலாசிரியருக்கு
* முதற் பதிப்பு : கார்த்திகை 1991
* வெளியீடு : ரஜனி பதிப்பகம்
கொழும்பு - பாரிஸ்.
* ஒவியம் ; சாம்சன்
* Alqaisinuououu
அச்சுப்பதிப்பு: காவேரி பதிப்பகம்,
பாரிஸ், போன்: 42 81 53 96
KARUMPANAKA
A Collection of Poems in Tami by
V.T. ELA NGO VAN * (C) : V.T. ELANGOVAN
First Edition : October 1991. Published by Rajani Kuhanathan,
Rajari Publications, 11, rue Rodier, 75009 Paris. Art by Sampson Printed by Kavery Pathipakam, 96
Paris , Phone: 42 81 53 96
费
MR EL A NGO VAN TH AMB I RAJAH APT 24 1
ll B5 RUE BONNAT
3 l (; OO TOULOUSE
, FRA/WCE.

கரும்பனைகள்
வி. ரி. இளங்கோவன்
ரஜனி பதிப்பகம் கொழும்பு - பாரிஸ்

Page 4

மக்களிடம் படித்து புடமிட்டு மக்களுக்கே கொடுத்த மனதில் நிறைந்த மக்கள் எழுத்தாளன் கே. டானியலுக்கு.

Page 5
நன்றி.
ஈழநாடு
தினபதி
பாரிஸ் ஈழநாடு தொழிலாளி
OSAJTGES
euposlav) s
மேகம் மக்கள் இலக்கியம்
ஒசை (பாரிஸ்) சிந்து கலையமுதம் மனஓசை (தமிழ்நாடு) செந்தாரகை சாவி

அணிந்துரை
தீவுப்பகுதியில், கல்வித்துறையிலும், சுதேசவைத்தியத்திலும் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது தந்தையார் வைத்தியர் வீரவாகு தம்பிராசாவுடன் யான் நெருங் கிப் பழகியவன். பழந்தமிழிலக்கியத்திலும், சுதேசமருத்துவத்தி லும் நிறைந்த அறிவும், அரசியல் ஈடுபாடும், ஆர்வமுமுள்ளவர் அவர். வள்ளுவன் வாக்குக்கொப்ப, வைத்தியரது பிள்ளைகள் யாவ ரும் சிறந்த கல்விமான்களாகி தமிழ்இலக்கியப் படைப்பாற்ற லிலும், கல்வித்துறையிலும் இன்று முதன்மை பெற்று தந்தை யின் பெயரை நிலைநிறுத்தியுள்ளனர். இளங்கோவனது மூத்த சகோதரர் இருவர் சாகித்திய மண்ட லப் பரிசில் பெற்ற எழுத்தாளர்கள்; கல்வியாளர்கள். இளைய சகோதரர் சர்வதேச சட்டத்துறை நிபுணர். மூத்த சகோதரர்களது அடியையொற்றி இலக்கியத்துறையில் ஈடுபட்ட எனது மாணவன் இளங்கோவன், காலச் சுழற்சியில் அன்று ஒரு தீவிர இடதுசாரி கட்சி ஈடுபாடு கொண்டவராக மாற்றம் பெற்றார். சமூகத்தில் புரையோடிப்போயிருந்த புண் களை, கறைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுழைக் கும் ஒரு சமூக வைத்தியனாகத் தன்னை வரித்துக்கொண்டார். தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து வருகையில் இவரும் அதற்கேற்ப படைப்புகளை உருவாக்குவதையிட்டு யான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

Page 6
இவர் எனது மாணவனாக இருந்த காலத்திலேயே தமிழ்தினச ரிகளுக்கு நிருபராக விளங்கியவர். அப்போது ஆங்கிலப் பத்தி ரிகைகளுக்கும் செய்திகளை அனுப்புவதற்காக அடிக்கடி எனது உதவியை நாடிவருவார். ஆங்கிலத்தில் செய்திகளை எழுதிக்கொண்டு, ஆங்கிலமும் கற்றுச்செல்வார். பின்னர் பலவேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் ஆசிரிய ராக விளங்கியதையிட்டு மகிழ்ந்ததுண்டு. சித்த - ஆயுர்வேதப் பட்டதாரியாக விளங்கும் இவர், ஐ.நா. தொண்டனாக (U.N.V) பிலிப்பைன்ஸ் நாட்டில் மூலிகைமருத் துவ, சமூக அபிவிருத்திப் பணியாற்றி, விருதுகள் பெற்றதை பத்திரிகையில் பார்த்து, அவரது ஆங்கில ஆசிரியன் என்ற வகையிலும் இறும்பூதெய்தினேன். தீவகத்தில் கல்வித்துறையில் தலைநிமிர்ந்து நிற்கும் ஒரு குடும் பத்தைச் சேர்ந்த இவரது "கரும்பனைகள்" என்னும் கவிதைத் தொகுதி இங்கு வெளிவருகையில், இதற்கு அணிந்துரை வழங்குவதில் பெருமைப்படுகின்றேன். இவரிடத்து புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொண ரும் வகையில் இவரது நூல்கள்பல மேலும் வெளிவந்து தமிழ் இலக்கிய உலகிற்கு செழுமை சேர்க்கவேண்டுமென அவாவு கின்றேன்.
"கந்தகோட்டம்" சி.காராளபிள்ளை பி.ஏ அனலைதீவு. ஸ்தாபக காப்பாளர்,
பாரிஸ் தமிழர்கல்விநிலையம்
பிரான்ஸ்.

முன்னுரை
இது எனது முதல் கவிதைத் தொகுதி இலக்கிய, மருத்துவ நூல்களைச், சஞ்சிகைகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தும், பத்திரிகைத்துறையில் பல வருடங்கள் பணியாற்றியிருந்தும் இக்கவிதைத் தொகுதிப் புறப்பாட்டில் ஒரு புத்துணர்வு.
மின்விசிறி சுழல நான்கு சுவர்களுக்குள்ளிருந்தும், மண்டபங்களுக்குள்ளேயே மணித்தியாலங்களைச் செலவிட்டு மக்களைப் படித்தும்
புரட்சிக் கவிதை படைத்திட்ட கவிஞனல்ல நான் !
மக்களுக்கான கவிதைகளில் வார்த்தை ஜாலம் பண்ண
எனக்குத் தெரியாது. புதுக்கவிதை என்ற பெயரில் ஒருவித வித்துவத் தன்மை காட்டி, அர்த்தங்களுக்காக அவர்களையே தேடவைக்கும் புதியமரபுப் பண்டிதத் தன்மையில் கவிதை வாழாது.
வாழுங் கவிதை வடிவத்தில் இல்லை என்ற கூற்றில் எனக்குச் சம்மதமே!
சீனத்தளபதிலுாசுனின் எழுத்தாண்மை என்னைக் கவர்ந்தது. தோளை நிமிர்த்தி துணிவோடு சமராடத் தெரியாதவன்

Page 7
ஆண்மையின்றி பேனா பிடிக்கக் கூடாது. சும்மா 'சானா மானா எழுதுவதால் சரித்திரங்கள் மாறாது.
கவிதைகள் இன்ரிமை தருவது எப்போது ? கவிஞனுக்கு இனிமை கொடுப்பன எவை எனக்கு உடன்பாடு இதுதான் - நடைமுறை சொல்ல வைக்கிறது. சொல்வது நடைமுறையில் கிடைத்தது.
கிராம மண்ணின் புழுதி முற்றங்களில் தோட்டங்களில், வயல்களில் குந்தி எழுந்து உறவாடி, உற்றுப்பார்த்து கஷ்டங்களைக் கேட்டு கவலைகளைப் பகிர்ந்து வேதனைகளைச் சுமந்து அணிவகுப்பில் கலந்து ஆர்ப்பாட்டங்களில் நின்று அடிபட்டு, அடைபட்டு பெற்ற அனுபவங்கள் பிறப்பித்த உணர்வுகள் பல -
கவியரங்குகளின் மூலமும் கவிஞனாகக் கண்டிருப்பர் பலர். பிரபல கவிஞர்கள் அத்தனை பேருடனும் அரங்குகளிலும் நின்றேன்.
புத்தகமாய் தொகுத்து கவிதைத் தொகுதி வெளியிட எண்பத்தாறில் முயற்சி நடந்தது. அருமைத் தோழர் கே. டானியலின் மறைவின்யின் அதுவும் நின்றுவிட்டது.

எழுதியவை எல்லாவற்றையும் பிரசுரமானவை பலதையும் சேர்த்துவைக்க முடியவில்லை. அவல நிலைகளாலும் வசிப்பிட மாற்றத்தாலும் தொலைந்து போன, அழிந்து போன படைப்புக்கள் பல.
கையில் கிடைத்தவற்றைத் தொகுத்துத் தருகின்றேன். என்னையும், என்கவிதைகளையும்
எண் மனைவியின் முயற்சியால் இத்தனையும் வந்துசேர்ந்தன.
அரங்கக் கவிதைகள் அதிகமானவற்றை அச்சில் வருவதில் தவிர்த்துள்ளேன்.
மக்கள் உணர்வுகள் மக்கள் பிரச்சினைகள் மக்கள் எழுச்சிகள், மனதைத் தொட்டவை எழுத்தில் வருகையில் எப்படி விளங்கும் ?
எனக்கு ஐயமில்லை ! அவ்வளவு தான் ..!
வாழவேண்டிய அவலச் தழ்நிலை,

Page 8
என்னைப் புரிந்துகொண்ட ரஜனி பதிப்பகத்தார் துரிதகதியில் இதனை வெளியிடுவது மனதுக்கு மகிழ்ச்சியே. நன்றி அவர்க்கு என்றும் உரியது !
வி. ரி. இளங்கோவன் "சிகரம் "
சிவன்கோவில் வீதி, புங்குடுதீவு 3.
いT Eしかッのール"N
/l5, Hy، ءde هم عزىéraسام Del Gl
933 -e, Seu Yrałfi
WRCovo to
****العذاعى مهن ممممع A

o கரும்பனைகள்
பாதையும் பயணமும்
உன்.
ஈரப்பிடிப்பான இனிய வாசகங்களைப் படித்ததினால் குடத்தடிச் சாக்கென குளிர்ந்து நிற்கிறேனே.
பொழிந்துவிட்ட பொழிவுகளின் பின், காரமிளகாயை அரைத்தாலும் கவலைப்படுவேனோ,
asir.
சிந்தனைகளுக்கு காது கொடுத்தவனை, பஞ்சாலாத்தி காட்டி படுக்கவைக்க முடியுமோ.
உன். வச்சிர சக்தியால் வலிமை பெற்றவனை, கூழக் கைகளால் குட்டிட முடியுமோ,
2. Gör... கங்கையிலே குளித்து காலாறியவனை, கிணற்றடி வாய்க்கால் கீழே தள்ளிடுமோ,

Page 9
0 வி. ரி. இளங்கோவன்
உன். விளைச்சலை வேண்டி பாதை நீளலாம். ஆனால். பயணம் தொடரும், வழியில்,
குத்தும் காரைமுட்கள் காலடியில் கசங்கியே மாழும் ! - 1979

O கரும்பனைகள்
மாற்றம்
வானுயர்ந்த பனைகள் வளைந்தாடும் தெங்குகள் கோடைச் சோளகப் புழுதிகள் குறுக்காய் கட்டிய மதில்கள் வாசல் நிமிர்ந்த கோவில்கள் வர்ணம் மின்னும் வீடுகள் அந்தவூரின் கோலங்கள்.! ஒ. அந்தவூரின் கோலங்கள்!
விடியும் வரை திருவிழா விண்ணிடிய வானம் கோடையிடி மேளம் கொடிபோல ஆட்டம் கோஷ்டி சின்னமேளம் தடித்த கரை வேட்டி தாளமிடும் பெரியவர்கள் முட்டி நிறைந்த கள்ளு முழுக்கக் குடித்த வயிறுகள்
1-6upólv6oug)pasó sug. பாதகஞ் செய்பவர்கள் குடிதண்ணிர்க் கிணற்றை கூடுகட்டி வைப்பவர்கள் ஒ. அந்தவூரின் கோலங்கள்.!
பள்ளிப் பருவத்திலே பலதுமே பார்த்துத்

Page 10
O வி. ரி. இளங்கோவன்
துள்ளித் திரிந்த துடிப்புகள் எல்லாம் மெல்ல வந்து மேனியை உராய்கிறது. மென்று விழுங்கி மெதுவாக நிமிர்ந்தால் நகரத்துப் படிப்பில் நாலாறு விஷயம் தெரிகிறது.
அரசியல் பேசியதும் அகன்ற கார்ப் பவனிகளும் ஹோட்டல் குடியிருப்பும் குடித்து வெறித்ததுவும் கும்மாளம் அடித்த கதை கனமாக வந்து கனவாகப் போகிறது.
எழுந்த முன்னால்
எழுபத்தொன்று வருகிறது ஏப்ரல் மாதம் ! வானொலி வார்த்தைகளில் பத்திரிகைப் படைப்புகளில் - அது
பயங்கரமாய்" தெரிகிறது !
விடிவை நோக்கி வெளிக்கிட்ட கூட்டமாம் அவசரப்பட்டதினால் அவலப்படுகிறதாம், அவலங்கள் எல்லாம் அடிமனதைத் தொடுகின்றன.
இந்த நாட்டின் இளைய தலைமுறை ஏணிப்படி எழுந்தது ? எண்ணிய மனது எங்கெல்லாமோ ஓடியது.

வாய்க்கால் சமைக்குமுன்பே வெள்ளத்தைப் பாய்ச்சியதால் o கரும்பனைகள் வந்தவினை விளைத்ததிது.
சரியாக வாய்க்கால்
சமைக்கும் பணி
சனத்துக்குத் தெரியவேண்டும்.
வேளை வரும்போது வெள்ளத்தைப் பாய்ச்சவேண்டும்.
வழியிலுள்ள கருக்குக் கற்றாழைகள் முருக்க முற்றல்கள் குருக்குத்தி வாழைகள் கோணற் புளியடிகள் வெளவால்கள் வாடிடும் கொக்குகள் கூழக் கடாக்கள் குட்டும் வல்லுாறுகள் எல்லாமே எந்தன் கண்ணுக்குத் தெரிகின்றன.
வரண்டபிரதேச வரம்புகளுக்கிடையே வளரும் வரகுகள் அகன்ற வாய்க்கால் செழிப்பில் ஆடி அசையும் நெற்பயிர்கள் கூம்பிய மலைச்சரிவில் குருத்தாய் சிரிப்பவை தட்டை மலைச் சரிவில் தளைக்கும் றப்பர்
ஈழமெங்கும் இனிதாய் எழும்பயிர்கள் எல்லாமே இணைந்து நாளை இந்நாட்டிற்கு நன்றாய் வாழ்வளிக்கும் ! - 1976

Page 11
O வி. ரி. இளங்கோவன்
விடிவைநோக்கி.
ஆட்சியை மாற்றினால் அவலங்கள் குறையும் அரிசியும் கிடைக்கும் ஆடைகளும் கிடைக்கும் காடுகளும் வெட்டலாம் கமங்களும் செய்யலாம் உற்பத்தி பெருகும் உழுதவன்வாழ்வு சிறக்கும் வேலைகள் பெறலாம் வெளிநாடு பறக்கலாம்.' என்றெல்லாம் எண்ணி இருந்த சிலர்வாழ்வும் சென்றிட்டதின்று சிறிதும் விடியவில்லை அம்மா போய் அரியணையில் ஐயா வந்தார் !
ஆள்வோர்கள் மாறினால் தாழ்வுகள் அகலும் தோள் கொடுத்து ஒவ்வொருமுறையும் மக்கள் ஆட்சியை மாற்றிய மாட்சி பேசினர் காட்சிகள் பின்னர் கண்டதென்ன ?
முன்னுக்குப் பின்னது குறைந்ததல்ல மின்னலுக்குப் பின்னே மழைவருதல் போல மக்கள் தொல்லைகள் மலையில் மோதினர் உக்கல் ஜனநாயக ஒட்டைகள் தெரிந்தன,
ஐம்பதுக்கு ஐம்பது, அடுத்துக் கேட்டது சமஷ்டி பிரதேசசபை, பிறகது மாவட்ட சபை ஆறம்சக் கோரிக்கை, அதுவும் இல்லாமல் பின்னர் சில பேச்சுவார்த்தைகள்" இப்படித்தானே எம் மேடைத் தருமர்கள் பணயமிட்டார் தம் பதவிகளைக் காத்து நின்றார் புள்ளடி போட்டே புதுவாழ்வு கேட்டோம் புரியாத அடிமைகளாயிருந்தோம் பல நாள் !

அரிசி விலை அளவு கடந்தேறுகிறது - அம்மியிலே ஆட்டும் அத்தனையும் ஆனைவிலையாகிறது மண்ணெண்ணெய் விலை மாதமொரு விலை மாப்பண்டம் அத்தனையும் மறந்த நிலை உள்ளத்து உணர்வுகளை கொட்டியிங்கே ஊருக்குச் சொன்னாலும் உள்ளே போகும் நிலை ஐயா இஷ்டம் அழகான தர்மிஷ்டம் ஆயுதங்கள் சிலரிடத்தில் அது தன்னிஷ்டம் !
பொறுமைக்கும் பொருளில்லை, பொருளிலர் தங்களது வறுமைக்கும் விடிவில்லை , வாழ்வெமக்கு வேண்டுமெனில் உறுதியொன்று செய்வோம், உள்ளத்தேயுள்ள பொறுதியென்னும் பொய்மையை உடைத்திடுவோம்,
வரட்சியுற்றோர் வாழ்வு வளம்பெற போராடுதலே புரட்சி, அது பூகம்பம் என்னருந் தோழா இனியுமேன் தயக்கம் பன்னரு மிடிமையில் நாடு நலிவுற பாட்டுக்கள் படைப்பது பகிடிதான் - எனினும் ஆட்சிகள் செய்வோர் குலுக்க மடைந்திட வேட்டெனப் பறக்கும் பாட்டுகள் மலரட்டும் விடிவை நோக்கி வீரர்கள் எழட்டும் !
I9ZZ

Page 12
O வி. ரி. இளங்கோவன்
அக்டோபர் அறுபத்தாறு
காலாதி காலமதாய் கைகூப்பி வாழ்ந்தவர்கள் நாலா புறமும் நசுங்குண்டு கிடந்தவர்கள் தாலாட்டுப் பாடிய தலைவர்களைத் தான் வீசி வேலாயுதம் பிடித்து வெகுண்டெழுந்த நாளிதுவே !
தீண்டாதவனே வெளியே போ - ஆலயக்கதவைத் தாண்டாதுடனே வெளியே போ - என்ற வேண்டா மனிதரை விரட்டுதற்கு - தொகையாய் வீறிட்டெழுந்தோர் நாளிதுவே !
எண்ணி எண்ணி நொந்து கிடந்தவர்கள் ஏனோ தானோ என்று இருந்தவர்கள் பண்ணும் செயல்கள் பாவமென நினைத்தவர்கள் மண்ணில் திரண்டெழுந்த மகத்தான நாளிதுவே !
1976
(அக்டோபர் அறுபத்தாறில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜ இயக்கப் போராட்டம் ஆரம்பம்/

O கரும்பனைகள்
வெகுஜன இயக்க எழுச்சி
ஊனுரு மனிதக் கூட்டமிங்கு உருக்குலைந்தழிவதைத் தடுக்க பேருரு வெடுத்த இயக்கம் - பெற்ற வெற்றிகளோ பலப்பல !
சுன்னாகத்திலிருந்து ஓர் ஊர்வலம் சீனாவுக்கும் இது அம்பலம் அக்டோபர் அறுபத்தாறு - அன்று அகிலமெல்லாம் அறியவைத்தது நன்று !
வாழ்வுக்கு வேண்டி வாடுகின்ற கூட்டம் தாழ்வை நிமிர்த்தி சரிசெய்ய விழைகின்ற ஏழையர்கள் கூட்டம் எழுந்து ஒன்றாய் தோளை நிமிர்த்தி துணிவோடு நடந்தது,
உள்ளத்தால் உயர்வடைந்ததார் - வர்க்க உணர்வால் ஒன்றாய் நின்றார், கள்ளத்தால் வெல்ல நினைத்தோர் - தலைகவிழ கதை முடிக்க கனன்றெழுந்தார்,
பூ விரிந்ததென தேனீக்கள் பெண்கள் தாவி வந்தார்கள் தரித்திரம் தொலைக்கவே செல்லக்கிளி என்ற பெயர் அன்று மல்லர்க்கு யமன் நன்று நன்று !

Page 13
o வி. ரி. இளங்கோவன்
மாவலி வெள்ளமென வாலிபர் கூட்டம் மாத்தலைவன் சிந்தனைகள் வலிமைக்கு ஊட்டம் தீவிரமாய் இயங்கிடவே திசைக ளெங்கும் தீயவர்க்கு பிடித்ததுவோ குலைநடுக்கம் !
திண்ணையிலே படுத்திருந்தார் - சிலர் சின்னக் கதைகளையே சொன்னார் எண்ணத்தை எங்கையோ விட்டு ஏலாதெனக் கேலி செய்தார் கண்ணான கலாச்சாரம் பண்பாடு காற்றினிலே போவதுவோ என்றார் எண்ணெயிலாத் திரிபோலக் கருகி இருளெனவே புகைந்து கிடந்தார்,
கந்தன் கோவில் கதவினையடைத்தவர்கள் நிந்தனை செய்து நீதியையொழித்தவர்கள் குளத்திலே மலம்கொட்டி வைத்தவர்கள் கையைவெட்டி காதலை முறித்தவர்கள் தண்ணிர்க்கிணற்றைத் தட்டியால் மறைத்தவர்கள் தோட்டத்தைப் பறித்து துரத்திவிட்டவர்கள் சுட்டுப்பொசுக்கி சுடலையில் போட்டவர்கள் கட்டையிலேபோக, கனன்றது பேரியக்கம் !
- 1979
(தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டையொட்டி எழுதியது. )
O

0 கரும்பனைகள்
இன்றையஸ்பெஷல் 1979
சட்டங்கள் பல ஆக்கிவிட்டோம் சமபந்தி இங்கும் நடத்திவிட்டோம் பாதியில் ஒற்றுமை குலைத்துவிடாதீர் பாழாகும் தமிழினம், பட்டுவிடும்விடுதலை,
ஒற்றுமையைக் காட்டவே ஒருஎம். பி ஒதிவந்தவரே அன்று செனட்டர் உண்மையாய் பலபேர் மெம்பர் கனத்தையை மூடவல்ல உதவிமேயர்,
சத்தியமாய் சாதி ஒழிந்துவிட்டது சண்டை பிடித்து சாகாமலிருப்பீர் பண்டைய பெருமையை பாழாக்காதீர் கண்ட கட்சிகளில் காலைவிடாதீர்,
சங்கானையை ஷங்காய் ஆக்காதீர் சாக்களைச் சந்திக்கப் போகாதீர் மாவிட்டபுரத்தில் மாஒ வேண்டாம் மானம் பேணத் தவறவேண்டாம்
போடுங்கள் புள்ளடியை புதியசின்னத்தில் போராடுவோம் இன்றே பாராளுமன்றத்தில்" என்றுசொல்லி எக்காளமிட்டோர். இன்று) ஏனோ வாளிதுாக்கி வண்டில்இழுக்கிறார் ?
- 1979
* சாவகச்சேரி எம். பி. தலைமையில், கக்கூஸ் வண்டில்
இழுத்து சாதி ஒழிப்பு நடவடிக்கை
செய்தி
11

Page 14
O வி. ரி. இளங்கோவன்
குடிநீர் உச்சி வெயில் கொளுத்தி எறிக்குது
ஊமையாய் சில உள்ளங்கள் வேகுது கிணற்றினுள்ளே தண்ணீர் கிடக்குது கிள்ளிட முடியாமல் கரங்கள் துடிக்குது
ஊரில் இருப்பதோ ஒரு சில கிணறுகள் உண்ணும் நீரோ அவைகளிலிருக்குது தண்ணீர் அள்ளத் தடை போடுகிறார் தரித்திரம் எவரிடத்தில் இங்கு பார் !
முக்கி முனகி இருந்தது காணும் மூடியே முந்தி வாழ்ந்தது போதும் முறுக்கிய கயிறாய்ச் சேர்ந்தெழும்பும் மூளும் போது மீட்சியைத் தேடும் !
சாதி முறையினைச் சாடி அழிப்பீர் சமத்துவம் பேணச் சங்கற்பம் செய்வீர் மனிதர் உரிமையை மனிதர் மறுக்கும் மடமையை அழிக்க, மக்களே எழுவீர் ! - 1979
12

o கரும்பனைகள்
எழுந்துவாருங்கள்
எழுந்து வாருங்கள் தோழர்களே - இனி எதிர் நின்றே கேட்போம் - ஓர் எழுச்சி இங்கே காண்போம் கஞ்சி தானும் கிட்டாமல் காலம் கழிப்பதை விடுப்போம் - நம் கணக்கினைச் சரி பார்ப்போம் !
"சம்பள வுயர்வு அதர்மக் கேள்வி சனாதிபதிக்கெதிரான அநியாய வேள்வி வேலையிழந்தவர் வீதியிலே நில்லும் விரும்பினால் மன்னிப்பு விரைவினிலே கேளும் எண்பத்திமூன்றிலும் இருப்பது நானே - நீர் எகிறிக் குதிப்பது தினம் வீணே !
உத்தமர் வார்த்தை கேட்டீர் -இனி உறங்குதல் முடியுமோ உமக்கே தொல்லைகள் தலைக்கு மேலே - அவை தொலைத்திடச் சித்த மில்லையே தனித்து நின்றது போதும் - தளை தகர்த்திட தலைகளைச் சேரும் !
1980 ( 1980-ல் நடைபெற்ற நாடுபரந்த பொது வேலைநிறுத்தத்தின்போது எழுதியது.)
13

Page 15
o வி. ரி. இளங்கோவன்
(1980)
அறுவடை
தையிலே அறுவடையென்று - சிரத்
தையிலே பயிர் செய்தும் பையிலே ஏதும் இல்லை - அகப்
பையிலே ஏது வரும் ? கையிலே வலிமை இருந்தும் - உண்
கையிலெ துயரே எழும் மையிலே வார்த்த சித்திரமும் - வறு
மையிலே துவண்டு விழும்
மடியிலே அழுங்குழந்தை - தாய்
மடி பார்த்தும் துடித்திடவே வடிக்கின்றான் கண்ணிரை - க
வடி ல்லா மனத்தாலே கடி மனது டையார் - தமக்
கடியாளாய் உழைத்தானே விடிவேதும் கண்டானா ? - அவன்
விடியும் வரை இருப்பானா ?
உதிரத்தை பிழிந்தெடுத்து - அவன்
உதிர்த்தானே வியர்வையே பதினைந்து மணி நேரம் ஐம்
பதிலும் உழைத்தானே புதிதாக எது கண்டான் - அவன்
புதிராகி நின்றானே குதித் தாடும் வர்க்கத்தார் - தம்
குதிரெடுத்தால் வாழ்வானே !
14

O கரும்பனைகள்
விடுதலைப்பெண்ணோடு.
வேதம் உன்னிடம் ஒதவில்லை வீணே பொழுதைக் கழிக்கவில்லை வாதம் புரிந்துன்னுடனே யென் வாழ்வைச் சூனிய மாக்கவில்லை மோதும் எந்தன் நெஞ்சலையின் மோகன ராகப் பேதமில்லை வேதனைத் தீயை மூட்டிட்டே விரைந்து எங்கே சென்றாயோ ?
தண்ணென ஒளிர்வது நீயாயனாய் தவழும் கொடியாய் நானானேன் கண்ணுள் சிரித்துக் கதைபேசி கனவில் நினைவில் நீயானாய் பண்ணின் சுவையின் பொருளாக பாவின் ஜூவத் துடிப்பாக என்னுள் வாழும் நினைவுகளில் இனிய கவிதை நீயானாய் !
உன்னை எண்ணின் உள்ளத்தே காற்றா கிடுமோர் புத்துணர்வு தன்னை மறவா நிலைதன்னில் தாவும் மனமோ குளிராகும் சொன்ன கதைகள் நினைவிலையோ சோகம் என்பது வாழ்வாமோ என்ன விலையும் கொடுப்போம்
இனிய வெண்புறாவே வா ! - 1979
15

Page 16
9 வி. ரி. இளங்கோவன்
இருள் விலக.
காரிருள் தொடர நீயுமிங்கு கண் துயில்வாயோ - அடே பாரினில் விடுதலைக் குரலுமுன் பக்கமாய் கேட்கலையோ, ஊரினில் நடக்கும் கொடுமைகளுன் உள்ளத்தைச் சுடலையோ - அடே நாரியினை முறிக்க வந்தாலும் நரிபோல் கிடப்பாயோ !
தெருவினில் போகப் பயமோ - அடே தீயவர்கொடுமை ஓங்கவோ இருப்பினில் இருக்க நினைப்போ - அடே எழுந்துதான் பாக்காயோ, திருநிறைந்த பூமி அழியவோ - அடே திரவியமெலாம் நாசமாகவோ கருமை எங்கும் படியவோ - அடே கண்களைத் திறக்காயோ !
சிறைகளில் எம்மவர் சாகவோ - அடே சிந்திக்க மனதில்லையோ கறை படிந்திட்ட வாழ்வோ - அடே காரியந்தனை அறியாயோ, உறைவிடந் தானும் எரியவோ - அடே ஊர்முழுதும் புகையவோ பறை கொட்டியவர் சிரிக்கவோ - அடே பாரத்தை உடைத்தெறியாயோ !
- 1983
16

O கரும்பனைகள்
புதுமைப்புலவன்
நெறிகெட்ட மனிதர் வாழ்வின் நித்திரை கலைத்துப் பாவால் புதுநெறி காட்டிச் சென்ற புதுயுகக் கவிஞன் சுபத்திரன் !
சாதியின் நெறியைச் சாடிச் சம்த்துவ வாழ்வு காண தாதியில் லாததோர் தம்மை தாளுமே பாடிச் சென்றான் !
கவித்துவக் கருத்து முற்றிக் கனிந்திட்ட பொருளின் ஆழம் புவியினிற் புதுமை பாவில் புகுத்திய புதுமை யாளன் !
- 1979 (கவிஞர் சுபத்திரன் நினைவாக )
17

Page 17
p கரும்பனைகள்
தோழர்டானியல்
மக்களிடம்படித்து ւյւմ)ւ6 மக்களிடம் கொடுப்பதுவே உன் வழி,
ஒடுக்கப்பட்ட மக்களின் நுகத்தடிகளை உடைத்தெறிவேன் என்பது உன் கர்ஜனை,
பேசித்தீர்க்கும் காலம் போய்விட்டது போராடித் தீர்ப்போம் என்பது உன் அறைகூவல்,
குடிசைகளைச் சுற்றியுள்ள முட்களை வெட்டத்துணிந்தவன் நீ
சிறைக் கம்பிகளுக்கும் உன் சுவாசம்
மக்களும் இலக்கியமுமே,
18

o stil. fl. இளங்கோவன்
உன் மூச்சுக் கனல் எத்தனை கோவில்களைத் தேநீர்க் கடைகளைத் திறக்க வைத்தது,
தீண்டாமைப் பாறையைத் தகர்த்த வெடிகளில் நீ வைத்த கெந்தகம் எவ்வளவோ,
எத்தனை நாடுகளில் உன் படைப்புகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன,
இழிசனர் வழக்கென உன் எழுத்தைக் கேலி செய்தனர் சிலர், கேலி செய்தவர் கேள்வியாகிவிட்டார் உன் இலக்கியம் வரலாறாகிவிட்டது !
- 1986
19

Page 18
O வி. ரி. இளங்கோவன்
பிலிப்பைன்சில் ஒருநம்பிக்ை
பிரியத்திற்குரிய பிலிப்பைன்ஸ் தோழனே ஜாப்"
வைனாஸ், வைனாஸ். '
நீங்கள்
சொந்தக் காலில் நின்று பிடித்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடிப்பவர்கள்
மலைச்சரிவுத் தோட்டங்களில் சோள வயல்களில். மக்கள் பணிகளில் உங்களைச் சந்தித்தது ஞாபகம் !
மக்களில் தங்கி நில்லுங்கள் என்பதன் அர்த்தத்தை அப்போதைய சம்பவமொன்று புரிய வைத்தது - நினைவிருக்கிறதா?
எனக்கு நம்பிக்கை !
மார்க்கோஸின் அராஜகப் பிசாசுகளுக்குத் தினமும் அதிரடி கொடுக்கிறீர்கள்.
நுாற்றுக்குமேல் கணக்கிட்டு அறிக்கைகளில் மாத்திரம் உங்களைத்தினம் அழிப்பதில் அவர்களுக்கு சந்தோஷம்.
20

o கரும்பனைகள்
குன்றுகளில் குக்கிராமங்களில் கடற்கரைகளில் நீபா குடிசைகளில் காணும் முகங்களில்தான் எத்தகு பிரகாசம் !
எங்கள் நாட்டு உத்தமரும்' உங்கள் உத்தமருக்கு ச் சளைத்தவரல்ல, ஒரே நிலைதான் !
புதிய மக்கள்படைத் தோழா, எங்கள் அடுத்த சந்திப்பு புயல் ஒய்ந்து வசந்தம் வரும்போதாகட்டும்
- 1994 * வைனாஸ் - பிலிப்பைன்ஸ் , மின்டனாவோ மாநிலத்தில்
வணக்கம் என்று பொருள்படும். * நீபா - கிடுகு போல வீடு வேய பயன்படும் ஒருவகை ஒலை.)

Page 19
o கரும்பனைகள்
22
பெரிய மனிதன்
மனிதாபிமானத்தை மனச்சாட்சியை
அறுதியாய் விற்றுவிடு.
கொழுத்த சீதனம் கொழும்பில் பிசினஸ் ஊரில் மதிலோடு வீடு உலாவரக் கார் இவைகளையே கனவுகாண் !
நினைவில் வைத்திரு ! ஊரிலிருக்கும் கோவிலில் ஒன்றிரண்டு திருவிழா
செய்ய வேண்டும் !
விற்றுச்சுட்டு விபரம் தெரியாமல் வரும் பேமாளியாகப் பார்த்து
பிசினஸில்
பங்காளியாக்கு !
ஆறே மாதத்தில் பங்காளியை அமுக்கிவிடு.
நாமம் போடு !
p604560pu/
காணியை அடமானம் வாங்கி வட்டிக்கு
காசு கொடு. கொஞ்சம் கொஞ்சமாக அடமானப் பொருளை
அறுதியாக்கிடு !

பஸ் ஸ்ரொப்பில் சுவர் எழுப்பி அப்பன் பெயரையும் சேர்த்து எழுதி வை!
தமிழ் வளர்ச்சிக்கு நன்கொடை கொடுத்ததாக நாலு பத்திரிகைகளில் நன்றாய் விளம்பரம் செய் !
எச்சரிக்கை !
சாதி, சமயம், மானம் பேணத் தவறாதே.
வட்டிக் காசு குறைகிறதென்று வருத்தத்துடன் சொன்னாலும் மன்னிக்காதே!
பொய், புரட்டல் சுரண்டல், சுற்றுமாற்று ஏப்பம் விடுதல் எள்ளளவும் மறக்காதே!
உழைப்பால் முன்னேறியதாக ஊருக்குச் சொல் !
களரின் வரலாற்றில் பெரிய மனிதன் ரீதான் போ !
1979
o வி. ரி. இளங்கோவன்
23

Page 20
LSLSLS SLSM LLLLLMMSMSLLS0L
24
எங்கே ஒழிவிர்
அமெரிக்கா கண்ணியமாகக் கவனிக்கவில்லையாம். ஸ்பெயின்
மறுத்துவிட்டதாம்.
சிங்கப்பூரும்
கைவிரித்துவிட்டதாம்,
மார்க்கோவின்
கருணை மனுவை பரிசீலிக்க எந்த நாடும் முன்வருகுதில்லையாம்,
பிலிப்பைன்சில்
காலணிகளை கழிவுப் பொருட்களை மட்டுமே கைவிட்டுச் சென்ற மன்னர்' மார்க்கோஸ"ம், இமெல்டாவும் மனம் வருந்துகின்றனராம் அடைக்கலம் தேடி,
நாளை.
எங்கள் உத்தமர் எந்த நாட்டிற்கு மனுச்செய்வார்?
- 1986

O கரும்பனைகள்
உன்னதம்
குஞ்சா. என் இதயக்கூட்டில் புகுந்த வெண் புறாவே,
இந்த பிலிப்பைன்சின் இளமொட்டுக்கள், எலுமிச்சம்பழச் சிரிப்போடு என்னை உரசும் போது எத்தனை நாள் சிரிப்போடு சமாளிப்பது ?
'பக்கிளா "என்னும் பகிடியும் வரும் போலிருக்கிறது. ஆண்மையைப் பழித்தால் அடுத்தென்ன நடக்கும் ?
கட்டுக்குள் கிடக்கிறது உயிர்மூச்சு, இரவுகள் நீடித்துக் கொல்லுகின்றன.
என் இல்லறப்பூசையில் உன்னைக் கொலுவைத்தபின் இதயவாசலைத் தேவதைகள் தட்டினாலும் திறக்கமுடியவில்லை. வலிக்கிறது !
25

Page 21
o வி. ரி. இளங்கோவன்
மலர்களின் இருப்பிடத்தில் '
7 ff0.
சந்தக்குரல"ம்" சன்மிக்கேலும் சந்தோவர உபசாரங்களும்
டொலர்களும் பிசோக்களும்
பிறந்த மண்ணில் வாழ்வே உன்னதம் !
அக்டோபரில் அங்கு உன்மடியில் ! - 1934
* பக்கிளா - அலி வேடம். * மலர்களின் இருப்பிடம் - பிலிப்பைன்ஸ், ஷம்போங்கா நகர், * சந்தக்குரஸ் - உல்லாசக் கடற்கரையுள்ள ஒரு தீவு * சன்மிக்கேல் . பியர்,
* பிசோ - பிலிப்பைன்ஸ் நாணயம்,
26

மகளே என்னிடம்வா
அரைத்த முக்கூட்டு மாத்திரை அம்மியிலே கரைகிறது.
வாங்கிய
கிலுக்கட்டி
பெட்டிக்குள் மெளனமாய் கிலுங்குகிறது.
சித்திரம் போட்ட சின்னத்துவாய் உன் சயனத்தை வேண்டிக் கிடக்கிறது.
பெண்குஞ்சே தான் என்று பேடிடமே பந்தயம் போட்டேன்.
சொன்னபடி வந்தாய் ஏனோ சுடுநீர் விட
வைத்தாய்.
ஆடி முப்பதிலே வந்துவிட்டு அடுத்த நாள் ஏன் பறந்தாய்.
என் முதல்
இளவரசியே.
உனக்காக வைத்த
கொலுவைக் கலைக்கவில்லை.
மீண்டும்
என்னிடமே வா !
O கரும்பனைகள்
1985
(முதல் பெண்குழந்தை பிறந்து,
மறைந்ததையிட்டு எழுதியது. )
27

Page 22
" ஆகஸ்ட் 1991
28
ஒ.என் இளநிலா.
முதல் பிறந்து போன. இளவரசியை மீண்டும் வேண்டி கொலு வைத்தேன்,
சொன்னபடி வந்தாள் மகள் அநேகா. என் இளநிலா, போச்சியில் பாலுாட்ட பொழுதெல்லாம் பேசிட படுக்கையிலும் பார்த்திட முகம் கழுவிட முழுகிக் குளித்திட முத்தங் கொடுத்திட முன்னால் நான் வேண்டும் அம்மா பின்னால் தான்,
துள்ளி வருவதும் துாங்க வருவதும் ஒடித் திரிவதும் ஒழுங்கையில் நடப்பதும்
கன்டோஸ் ' கேட்பதும் காக்கா கிளி காட்டுவதும் என்னுடனே தான், அப்பன் மார்பில் அழகாய் போட்டகால், கழுத்தைச் சுற்றிய கனக மணிக்கரங்கள். நித்திரை கொள்ளும் அழகு நினைவைவிட்டு அகலவில்லை, பாரிஸிலிருந்து பார்க்க பனிக்கிறது கண்கள் ! ஓ. என் இளநில: எப்போது மீண்டும்

கரும்பனைகள்
எங்கள் மக்கள்
எங்கள் மக்கள் பலர்
அச்சத்துடனேயே பாதையில் நடக்கிறார்கள் - ஆமிக்காரருக்கு மட்டும் அஞ்சியல்ல, எங்கள் போராளிகள் ஒட்டும் வாகனங்களின் வேகத்திற்கும் அஞ்சித்தான்.
எங்கள் மக்கள் பலர் பெரிதும் கவலைப்படுகிறார்கள் - ஈழம் கிடைக்கவில்லையே என்று மட்டுமல்ல ; வெளிநாடுகளிலிருந்து வரும் ‘ராவ்ற்று கள் நின்றுவிடுமோ
என்றும்தான்.
எங்கள் மக்கள் பலர் மோதிக் கொள்கிறார்கள் . ராணுவத்துடன் மட்டுமல்ல; இயக்கங்களின் பெயரைச் சொல்லி தமக்குள்ளாகவேயுந்தான் !
2
9

Page 23
o வி. ரி. இளங்கோவன்
எங்கள் மக்கள் பலர் கொல்லப்படுகிறார்கள் - பயங்கரவாதியென்ற பெயர்துட்டப்பட்டு மட்டுமல்ல, சமூகத் துரோகியென்ற அட்டையைச் சுமந்தவாறும்தான்.
எப்படியிருப்பினும் எங்கள் நாட்டில் வாழும் மககள பலரும நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் - இறப்பை அறிந்து மாத்திரமல்ல, பிறக்கப் போகும் புதிய பூமியைக் காண்போம் என்றுந்தான் ! 1935 سے
30

O கரும்பனைகள்
நிமிர்வு
பேரன் சேகர்
ஆச்சியின் சேலைத் தலைப்பால்
முகத்தைத் துடைக்கிறான்.
ஜெர்மனியிலிருக்கும் பெரியண்ணாவிடமிருந்து செய்தியொன்று மில்லையாம்
இத்தாலியில்
செந்தில் மாமா
சிறையிலிருக்கிறாராம்.
இயக்கத்துக்குப் போன சின்னண்ணா இப்போ தலைமையை எதிர்க்கும் குழுவிலாம்.
அம்மா இப்போ
வவுனியாவில்
பெரியக்காவுக்கு துணையாம். இந்தியாவில் படிக்கும் சின்னக்கா காசில்லாமல் பட்டினி கிடக்கவேண்டியிருக்காம்,
அப்பாவுக்கு
இந்த மாதம்
பென்சன் வரவில்லையாம்.
போனமாதப் பென்சன் செக்கை'
ஓரிடமும் மாற்ற வழியில்லையாம் கோட்டையிலிருந்து குறிபார்ப்பதால் சென்ட்ரல் கொலிச்சு க்குப் போகப் பயமாயிருக்காம்,
ஆச்சியின் கரங்கள்
சேகரின் முதுகினைத்
தடவுகின்றன.
- 1985
31

Page 24
° °nl... fl. 96 rši (3a, 11 onui
பாக்குத் தொடுகடலே.
ஏ. பாக்குத் தொடுகடலே . ஏன் பரிதவிக்கிறாய், உனக்கும் சீக்குப் பிடித்ததுவா, சிந்தனையில் குழப்பமா தாக்குப் பிடிக்க முடியாவகையில் தருக்கர் பாய்கிறாரா உன்மீது?
எனக்குத் தான் வேதனை அடிகள், விழுப்புண்கள் மாசிப் பணித்துளியில் மோசமாய் வலிக்கிறது.
பாக்குத் தொடுகடலே - நீ எனக்குத் தாய்க்குச் சமனானாய் எந்தன் அம்மாவைத் தான் எமன்கள் சுட்டுப் பொசுக்கினரே, என் காயம் கழுவிச் சுகப்படுத்தத் தாய்போலுன் உப்புக் காற்றே போதும் உரம் பெறுவேன் நான்,
என் இனிய காதலியை இழந்தவன் நான், சொந்தமாக்க நினைத்திருந்தவேளை - ஓர் இரவு காக்கி நெடுமாடர் கடத்திப் போயினர் கண்காணா இடத்துக்கு , இன்றுவரை சேதியில்லை இனியவள் எலும்பும் கிட்டவில்லை.
அந்திமாலை நேரம் - என் அழகியுடன் உந்தன் மடிமீது ஒடி உலாவர நினைத்திருந்தேன் , சிந்தைக் கினியவளின் - செம் மா அதரந்தானும் முட்டா எந்தன் இதழ்தனை - உன் வெப்பக்
32
காற்றே தொட்டுச் சுவைக்கட்டும் !

o கரும்பனைகள்
நள்ளிரவில், கடிநாய்களின் கெடுபிடி வேளையிலும் - எனைக்கண்டால் விரைவாகச் செயற்பட்டு, வேகவைத்து சோறளிக்கும் சோதரியும் இன்றில்லை,
சேற்றில் புரளும் எருமைகள்போல் நேற்றைய பொழுது கலக்கினர் பேடிகள் பெண்கள், பிள்ளைகள் தமைக்கூடப் பிடித்தனர், பயப்பிராந்திகூடச் சுட்டனர், பொசுக்கினர் . சுடரென் சோதரியும் வெந்த சோறானாள்,
சித்திரவதைக்காளாகிச் சிறையில் பூட்டப்பட்ட ஐயா - இன்று பத்திரமாய் இருப்பாரா ? பதில் ஒன்றும் தெரியவில்லை,
எங்கள் வீடு எரிக்கப்பட்டு நெடுநாளாயிற்று - நீண்ட ஆக்கிரமிப்புக் கரங்கள் - எம் பூமியை நசுக்குகின்றன,
காக்கிச் சட்டைகளின் காலடியில் தாக்கப்பட்டு கிடக்கிறது எம் தாயகம் துாக்கி நிமிர்த்தித் துயர் துடைக்கத் துணிந்தோம், துாளாகும் துரைத்தனங்கள் !
ஏ. பாக்குத் தொடுகடலே - ஏன்
பரிதவிக்கிறாய், படுந்துயர்
போக்கும்படி எமைப்பார் ! - இங்கு காக்கை , கழுகுகள் தாக்குப்பிடிக்கா, தாயகம் மீட்கும் பணியில் - எந்தச் சாக்களும் எம்மைச் சளைத்திட வைக்கா, ஒரு போராளியின் தாக்க மெதுவுந் தாங்கி - உயர் டயரியிலிருந்து. தேக்க விருட்சமாய் தழைப்போம் நாம் ! -- - - - 1995
33

Page 25
o S. f. இளங்கோவன
சத்திர சிகிச்சை
வாத ரோகமா வயிற்றாலடியா - இல்லை வாய் சத்தியெடுத்து சன்னிப் பிதற்றலா.
நெஞ்சுப் பதறலா கைகால் நடுக்கமா நிலை தடுமாறலா நித்திரையே இல்லையா.
காய்ச்சலா - இல்லை கபம் சளி இருமலா பேச்சு வருகுதில்லையா புறமெங்கும் கடியா.
பருத்துவரும் சீழ் கட்டா பாக்குப்போல் புற்றுக் கட்டியா - இல்லை தொற்றுநோய் இதுதானோ தொடர்வது அந்த எயிட்ஸ் தானோ.
சத்திர சிகிச்சை நடக்குமோ -இல்லை சாவு தான் இங்கு மிஞ்சுமோ. சித்த - ஆயுர்வேதம் தெரிந்தோரே சத்தியமாய்ச் சிந்தியுங்கள் !
1939

ல கரும்பனைகள்
திரும்பிப்பாருங்கள்
நாட்டைக் கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்,
வடக்குக் கிழக்கெங்கும் இரத்த ஆறு ஓடவில்லையா, கண்ணிர்க் கடலை நீங்கள் காணவில்லையா,
புதையுண்டு போன மண்டை ஒடுகளின் கணக்குத் தெரியவில்லையா,
சிதைந்து கிடப்பது ஆலயங்கள் மட்டுந்தானா,
பீடங்களில் ஆரவாரம் ஆராதனைகள் பெளத்தத்தின் பேரில்தானா,
மழித்த மண்டைகளின் போர்வைக்குள் மறைவது தர்மமும் சேர்ந்தா, புத்தர் தொடக்கம் புனிதர்கள் வரை சொன்னதையெல்லாம் செய்ய மறந்தனரா,
35

Page 26
36
() Alah, if (wika (Bayatı EA siv
பறக்கும் கொடிகள் எதில் தோய்ந்தன, அடிக்கடி விரியும் அரசியலமைப்புச் சட்டம் எவரது கேடயம் ?
நுாற்றுக்கணக்கில் மந்திரிகள், செயலாளர்கள் ஆடும் நூாதனம் எந்தப் பெரிய நாட்டில் ?
ஏங்கிக் கிடக்கும் எம்மவர் கண்களில் எப்போதும் ஈட்டிமுனைகளா பாய்வது ?
விடிவு பிறக்குமென்று வெந்தணலில் கிடப்பது எத்தனை நாள் ?
அடிக்கும் புயலில் கட்டிடங்கள் சாயலாம். ஆனால் . கற்பகதருக்கள் ?
- 1990

O கரும்பனைகள்
ஒரு யாழ்ப்பாணக் கடிதம் சேர்ந்துவருவன.
இரண்டு மாதமாகிறது கொழும்பிலிருந்து கடிதம் வந்துசேர,
ஏன் நேற்று வரவில்லை.? மரக்காலையில் வேலை செய்த தம்பி
தடுபட்டு இறந்து போனானாம். விறகு வெட்ட வந்தவன் சொன்னான்.
வயலுக்குப் போக உதவியில்லை டாக்டரிடம் துண்டு வாங்கிய நமது நல்லதம்பி
லக்டோஜன் தேடி நாள் முழுதும் அலைந்தானாம்,
37

Page 27
வி. ரி. இளங்கோவன்
LLSSMSSSLSSLSLSSLSLSSLSSSSSCSCLSLSLLTLLLLSSSL
38
மூன்று நாட்களாக
பால்காரனும் வரவில்லை ! பண்ணையில் வேலை செய்த பையன் பால் சைக்கிளோடு குண்டுக்கு இரையாகிப் போனானாம்
நேற்று வித்தியாலயத்திற்கு முன்னால் ஏனாம் சனக்கூட்டம்.? அதிபரான அண்ணரைக் கேட்டேன். கழுத்தில் காட்போட்டுடன் யாரோ கம்பத்தில் கிடந்தானாம்,
யுனிவர்சிற்றி" இன்று பூட்டாம். இரண்டு பெடியன்களுக்கு வாசலில் ஹெலி ச்சூடாம்,
இன்று தங்கச்சி கச்சேரிக்குப் போகவில்லை, சுண்டுக்குளியில் குண்டு விழுகிறதாம்,
செய்திகளும், இழப்புகளும் சேர்ந்தே வருகின்றன. நம்பிக்கையுந் தான் !
- 1991

0 கரும்பனைகள்
இவைகளையேபாருங்கள்
நாங்கள் இந்த மண்ணில் நின்றும் கவிதை படைக்கிறோம்.
இரத்தங்களும் தசைகளும் எங்கள் எதுகை மோனைகள்.
உரக்கக் கேட்கும் வேட்டொலிகள் எம் கவிக்குச் சந்தங்கள்,
கண்ணிரும் வியர்வையும் கலந்தொன்றாய் - எம் கவிதையில் வடியும்.
வான், நிலவு, மலர் தென்றல், அழகெல்லாம் குருதியில் கலந்தே வரும்,
இப்போதைக்கு எங்கள் எழுதுகோலில்
இவைகளையே பாருங்கள் !
- 1990
39

Page 28
40
n a, s, W (4i Susit
கரும்பனைகள்
நாங்கள் கரும்பனைகள்.
சுட்டெரிக்கும் வெயில் பேய்மழை, துறாவளி எல்லாம் எங்களுக்குப் பழகிப் போனவை.
வானத்துப் பொசிப்பில் மண்ணின் வளத்தில் வைரமாய் நிமிர்வோம் நாம் !
வானத்தில் இடிமுழக்கி வட்டுக்கு வெடிவைத்து ஒலை சில வெட்டிவிட்டு உருக்குலைந்தோம் நாமென்கிறார் உண்மை தெரியாதோர்.

o கரும்பனைகள்
நாங்கள் கரும்பனைகள் எங்களுக்கு எந்தக் கழுகுகளும் பாத்திகட்டி ஊற்றுநீர் வார்ப்பது இல்லை.
வடலிகள் சில வாட்டப்படலாம் பாளை வருமுன்னே பாழ்படுத்திடலாம் மேலைக்காற்று வந்து மோதிப்பார்க்கலாம்.
கனத்த விதைகள் முளைத்தே நிமிரும் கற்பக தருக்கள் காயாது ஒருநாளும்,
நாங்கள் கரும்பனைகள் வானத்துப் பொசிப்பில் மண்ணின் வளத்தில் வைரமாய் நிமிர்வோம் நாம் !
- 1990
41

Page 29


Page 30
இளந்தலைமுறையின் பல்கலைவேந்தன் எனப் பாராட்டுப் பெற்றவர்.
பத்திரிகைகள் பலவற்றில்
ஆசிரியராகப் பணிபுரிந்தவர். மருத்துவ, இலக்கிய நுால்கள் பலவற்றை வெளியிட்டவர். ஐ. நா. தொண்டராக (UNV) பிலிப்பைன்ஸில் பணிபுரிந்து விருதுகள் பல பெற்றவர் கே. டானியல் தலைவராக: விளங்கிய மக்கள் கலை இலக்கியப் : பெருமன்றத்தின் செயலாளராகப்
பணிபுரிந்தவர்.