கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானவீரன் கும்பகருணன்

Page 1
LDTT60 கும்பக
நா6ே
 

வீரன் ருணன்
வந்தன்

Page 2

மானவீரன் கும்பகருணன்
நாவேந்தன்
P 229
Tél. & faX : 0561 55 0013

Page 3
மானவீரன் கும்பகருணன்
இரண்டாம் பதிப்பு : ஆவணி 2000
ஆக்கம் : வி. ரி. திருநாவுக்கரசு
( நாவேந்தன் )
வெளியீடு : ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மையம்
துலுாஸ், பிரான்ஸ்.
(C) பதிப்புரிமை : வி. ரி. இளங்கோவன்
MAANA VIRAN KUMPAKARUNAN RECUEILLEMENT D'ARTICLES DE RAMAYANAM
Deuxième édition : Août 2000
Auteur : V.T.Thirunavukkarasu
( Navendan )
Editeur : V. T. Elangovan
C D C EUROPE ORIENT B P 229 3000 TOULOUSE FRANCE.
Tél. & Fax : 0561 55 0013

இரண்டாம் பதிப்பு
அண்மையில் காலமாகிய பிரபல எழுத்தாளர் நாவேந்தன், கம்பராமாயணத்தில் தன்னுளங்கவர்ந்த பாத்திரப்படைப்பான கும்பகருணனை தனக்கேயுரித்தான அழகு தமிழில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தந்துள்ளார்.
‘மானவீரன் கும்பகருணன்' என்ற பெயரில் இந்நூால் 1992-ல் யாழ். நிலாப் பதிப்பகத்தால் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இந்நூால் கலைமாணிப் பட்டப்படிப்புக்கு உப பாடநூலாக இருந்த பெருமையுடையது.
தனது படைப்புகள் யாவற்றையும் இங்கு எமது வெளியீடாக வெளியிட வேண்டுமென அவர் இறுதிக் காலத்தில் வேண்டிக்கொண்டதற்கமைய அவை யாவற்றையும் படிப்படியாக வெளியிடத் திர்மானித்துள்ளோம்.
அந்தவகையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் கம்பராமாயண காவியப் பாத்திரமான ஒரு மானவீரனைத் தரிசிக்கும் பொருட்டு 'சி. டி. சி. சார்பில் இந்நூாலை வெளியிடுகின்றோம்,
பதிப்பாசிரியர்
சி. டி. சி. 2000 -- 08 -س 01

Page 4

மானவீரன்
கும்பகருணன்
நாவேந்தன்
நிலா பதிப்பகம் 7. முதலியார் ஒழுங்கை, யாழ்ப்பாணம்.

Page 5
MANA VEERAN KUMPAKARUNAN
Althor
: V.T. Thirunavukkarasu.
("NAVENDAN")
First Edition. ; July, 1992.
Offset by : Evergreen (Private) Ltd.
Colombo 15.
Published by : NILA PATHIPAKAM,
7, Mudaliyar Lane, Jaffna.
முதற் பதிப்பு : ஜூலை, 1992.
(C) உரிமை : பதிப்பகத்தாருக்கே.
வெளியீடு நிலா பதிப்பகம்.
7. முதலியார் ஒழுங்கை, யாழ்ப்பாணம்.
விலை : ரூபா 25/ プ。

பதிப்புரை
என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்ட கவியரசர் கம்பர் படைத்த ஒப்பற்ற காவியம் கம்பராமாயணம். இதற்கு நிகரானதோர் காவியம் வேறிலதெனலாம். அத்தகு சிறப்புமிகு காவியத்தில் வரும் பாத்திரங்களில் நம் நெஞ்சம் கவர்ந்தவன் கும்பகருணன். அவன் மாணவீரன். மாநிலம் போற்றும் மாண்புடையன். அவனது சிறப்பினைக் காவிய நோக்கில் ஆய்ந்து நம்சிந்தையெலாம், தோள்களெலாம் பூரிக்கும் வகையில் அறிமுகம் செய்கிறார் இந்நூலாசிரியர். நாடறிந்த எழுத்தாளர் திரு.நாவேந்தன் அவர்கள்.
நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்' எனப் போற்றப்படுமிவர் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாகக் கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், திறனாய்வு ஆதியாம் பல் வேறு துறைகளில் ஈடுபட்டுத் தனக் கெனத் தனியான தோர் முத்திரை பொறித்துக் கொண்டவராவார். இவரது "வாழ்வு" சிறு கதைத் தொகுதி இலங்கை சாகித்திய மண்டலப் பரிசிலைப் பெற்றமையும், குறிப்பிடத்தக்கது. மானவீரன் கும்பகருணனை அறிமுகம் செய்யும் இந்நூலைத் தொடர்ந்து இதே வரிசையில் மேலும் பலநூல்கள் வெளிவரவுள்ளன.
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் அறிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் இந்நூலை உவந்தேற்றுக் கொள்வரென நம்புகிறோம். க.பொ.த.ப. சாதாரணதர வகுப்பினருக்கும், கலைமுதற்றேர்வு, கலைமாணிப்பட்டப் படிப்பினருக்கும் இந்நூல் பெரும் பயன் நல்குமெனக்கருது கிறோம்.
நன்றி
பதிப்பகத்தார்.

Page 6
என்னுரை
கும்பகருணன் என்னுளங்கவர்ந்த மானவீரன்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அழியாத பாத்திரப் படைப்பில் கும்பகருணனே பொற்கிரீடமாவான். காப்பிய அமைதிக்கேற்ப இராமன் - சீதை - இராவணன் - மண்டோதரி முதலானோர் காப்பியத்தலைவர், தலைவியர்களாகினாலும் கும்பகருணனுக்கான தனியிடம், தலைமையிடம். வேறொரு வருக்குமில்லை. அவன் வேதங்களில் முனிவர்களையும், வீரர்களில் மூவரையும், புலனொடுக்கங்களில் எப்புனிதரையும் வென்று நிற்கும் பெற்றியான்.
தமிழுலகு இராமனையும, சீதையையும் இலக்கு வனையும், இராவணனையும், இந்திரசித்தையும், மண்டோ தரியையும் அறிந்து கொண்ட அளவுக்கு இந்த மகத்தான மான வீரனை அறிந்துகொள்ளவில்லை. அக்குறையை இந்நூல் ஓரளவேனும் நிவர்த்தி செய்யின் அதுவே யான் பெறும் பெரும்பயனாகும்!
நாவேந்தன்

மானவீரன் கும்பகருணன்
தன்னேரிலாத மாணவீரன் கும்பகருணன். இராமனையும், இலக்குவனையும், குரங்கினத்துப் பெருவீரர்களையும் கலக்கிய மாவீரர்கள் இராவணன், கும்பகருணன், இந்திரசித்து என்னும் வில்லாண்மையும், மல்லாண்மையும் விவரிக்க வொண்ணாப் பல்லாண்மையும் மிக்க முப்பெருவீரர்களேயாவர். இவர்களுக்கு நிகராக இராமன் பக்கலிலோ, இராவணன் பக்கலிலோ வேறெவருமிலர். இவர்களிலே கும்பகருணன் தனித்தன்மை வாய்ந்தவன். அரக்கர் குலத்துப் பிறந்தும், அளவிறந்த பெருவீரம் படைத்தும், தேவர்களின் வஞ்சனையால் உலையாத ஊக்கம் வேண்டித் தொலையாத தூக்கமே கைவரப் பெற்று வஞ்சிக்கப்பட்டவன். அரக்கர் குலமானம் அவனதுடலின் ஒவ்வோரணுவிலும் பரந்து செறிந்து முழங்கிக் கொண்டிருந்தது. அவன் நீள்துயிலிற் கிடந்தாலும் அவன் பெரு வீரத்தையெண்ணி, யெண்ணி வானவரும், தானவரும் அஞ்சிக்கிடந்தனர்.
அரக்கர்கோன் அவனைத் தன் இளவல் என்று எண்ணி எண்ணி இறும்பூதெய்தினான். தொலையாத் துயிலில் மூழ்கிக் கிடந்தாலும் உலையாத பேரறிஞனாக அவன் விளங்கினான். விழித்திருக்கும் போதும், துயிலில் வீழ்ந்திருக்கும் போதும் அறத்தின் திறத்தையே அவன் உள்ளம் ஆய்ந்து கொண்டிருந்தது. " திசையானை விசைகலங்கச் செருச்செய்து மருப்பொசித்த, இசையாலே நிறைந்த புயத்து இராவணன்" மீது அவன் கொண்டிருந்த அன்புக்கு ஆழநீளம் அறியமுடியாது. தான் வாழ்வது தமையனுக்காகவே என்ற தெள்ளிய உணர்வு மிக்க சீர்த்தியான் கும்பகருணன். அவன் கம்பீரமான தோற்ற முடையவன். மலைகளைப் பந்தாடும் வலிமை மிக்கவன்.

Page 7
{
பேருணவும், நறவும் மாந்தி பெருவலி படைத்த இராவணன் பின்னோனான அவன் மாற்றலர் கண்டு மயங்கும் மாமலை 1
சிவந்த் கண்கள், கடலின் அலைகள் வளைந்ததைப் போன்ற புருவங்கள், இடி முழக்கம் போன்ற குரல், பருத்த கைகள், வீரக்கழல்களனிந்த வீறார்ந்த பாதகள், பெரிய செவிகள், மலையின் குகைபோன்ற முக்கு. அவன் எழுந்திருக்கும் பேர்தே இராவ்ணன் நின்று கொண்டிருக்குந்தகைய தோற்றப் பொலிவையுடையவன். தமையனாகிய இராவணன் மீது மட்டுமன்றி, தம்பியாகிய விபீடணன் மீதும், அர நகர் குலத்தின் ஆடவர், மகளிர் மீதும் அடங்காப் பற்றுடையவ61. தன்னுயிரே போயினும் அரக்கர் மானமும் வீரமும் பின்னடைதல் கூடாது என்னும் பெரும் இலட்சிய நெருப்பினைத் தன்னகத்தே தாங்கியவன் இந்தக் கும்ப கருணன்.
அரக்கர்களுக்குரிய தோற்றமும், பெரும் ஏற்றமும் எய்தப் பெற்றிருப்பினும் கும்ப கருணன் தன்னேரிலாத ஞானியாவான். நீதிதவறக்கூடாது. மகளிர் கற்பு கோடக்கூடாது, நன்றிமறக்கக்கூடாது என்னும் நற் பண்புகளின் உறை விடமானவன். போரென்றால் அவன் உள்ளம் 'களிக்கும். நெருப்பை நீராக்குவான். நீாை நெருப்பாக்குவான். ஆனால் நீதி கோரும் போது குழநதையைப்போல் மனம் குழைந்து வருந்துவான். நெருப்பாக நெட்டுயிர்ப்பான் !
இலங்கையின் உயர்ந்த மதில்களையுடையதும், பல நிலைகளைக் கொண்டதுமான கோபுரங்களையுடையதும் அவன் மாளிகை. அப்பெருமாளிகையிலே மலர் மஞ்சத்திலே தேவமகளிரும், இயக்கமகளிரும், அரக்கமகளிரும், அவனது மேனி நறுமணம் வீசச் சாமரை இரட்ட அப்பெருவீரன் நீள்துயிலில் ஆழ்ந்து கிடந்தான். அப்பொழுதுதான் இராமனுடன் செய்த முதல் நாட் போரிலே,

*வாரணம் பொருதமார்பும் வரையினை எடுத்த தோழும் நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்படவுரைத்த நாவும் தார் அணி மவுலிபத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடி லங்கை புக்கான்
கும்பகருணன் முன்னவனான இராவணன். வரலாறு காணாத அத்தோல்வி அரக்கர் கோனை ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியது. இனி எவர் சென்று இப்பகை முடிப்பர் என்று மாளிகைபுக்க இராவணனைப் பலரும் பலவாறு தெருட்டினர்
"இனிநான் போர்க்களத்திற்குப் போய்த் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? பொறுமையில் பூமி தேவியைப் போன்றவளும், மூங்கில் போன்ற தோள்களை உடையவளுமாகிய சீதை இராமனது உடம்பினைப் பார்த்து நெருப்புப் போலக் கொடுமை வாய்ந்த அவனது வீரச் செய்கையையும் பார்த்திருப்பதால் அவளுக்குக் காமனும், நாமும் ஆகிய அனைவரும் நாய் என்று சொல்வதற்குத் தகுதியுடையவர்கள் அல்லவா?" என்று இரங்கினான் இலங்கேசன். அவ்வேளையில் அரக்கர் கோனுக்கு அறிவுரை புகன்று கொண்டிருந்த மாலியவான் முதலானவர்களைப் புறந்தள்ளி, அமைச்சன் என்னும் தகுதிபெற்ற மாயையில் வல்ல மகோதரன் இராவணனிடம் வந்:ான்.
அரசனே, கைலைமலையை அசைத்தவனே! மும் மூர்த்திகளும் உன்னிடம் போரிட்டுத் தோற்றுப் போக, இரண்டு மனிதர்களுக்கு அயருதியா? உன் இளையவனான கும்பகருணனை மறந்து விட்டாயா? அவனைப் போருக்கு அழைத்து அனுப் புவையாகில், அவனது கம்பீரமான உடம்பைக் கண்டதுமே இந்த மனிதர்கள் இருவரும், வானரக்கூட்டமும் ஒடி ஒளியாரோ? அவ்வாறு ஒளியாது வந்து போரிட்டாலும் அவர்களால் உயிர் தப்பிச் செல்லவும் முடியுமோ? ஆகையால் குரைகழல் அணிந்த கும்பகருணனை உடனே அழைத்துப் போருக்கு அனுப்புக என்று இராவணன் இதயம் இதமுறச் சொன்னான் மந்திரி மகோதரன்.

Page 8
I கும்பகருணன் துயில் எழுதல்
மகோதரன் உரைத்த வார்த்தைகள் இராவணனை மகிழ்ச்சியடையச் செய்தன. 'நல்லது நவின்றாய்" எ ன மகோதரனை வாழ்த்திவிட்டுக் கும்பகருணனைத் துயில் எழுப்பி வாருங்கள் என்று எமதுரதர் போன்ற நான்கு கிங்கரர்க(ை1 கும்பகருணன் மாளிகைக்கு அனுப்பினான்.
அவர்கள் விரைது சென்று கும்ப கருணன் துயிலும் பெரிய அரன்மனை வாரிலை அடைந்தனர். 'அரசனே, நீ விழித்துக் கொள்!" என்று தம்கைகளில் உள்ள தண்டுகளினால் அவனது தலையிலும் பாதிலும் தாக்கினர். கும்பகருணன் அசையவில்லை. அவர்களுடுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. உறங்கிக் கொண்டுள்ள கும்பகருவனே, "உனது மாயவாழ்வு இன்றுடன் தாழ்வுறத் தொடங்கி விட்டது. இனியாவது எழுந்திருந்து எமதுரதர்கரிேன் கைகளிலே போய் உறங்கு, உறங்கு என்று முணுமுணுறுத்த படியே எழுப்பி அலுத்தனர். பின்னும் கும்பகருணன் எழுந்திராதது கண்டு, இராவணனிடம் ஒடிச்சென்று வணங்கி 'கும்பகருணனைக் கடுந் துயிலில் இருந்து எழுப்ப முடியாதுள்ளது" என்று முறையிட்டனர். அது கேட்ட இராவணன் ஆயிரம் மல்லர்களையும் அவர்கள் சேனைகளையும் உடன் சென்று கும்பகருவினைத் துயில் எழுப்பி வாருங்கள் என்று பணித்தான்.
ஆயிரம் மல்ல களும் கும்ப கரு ை என் வாயிலை அடைந்ததும், அவனது மூச்சுக்காற்றினால் ஊதியெறியப் பட்டவர்களாகி, அதனைத்தடுக்க ஒருவர்  ையோடொருவர் கையைப் பிணைத்துக்கொண்டு மனிதச்சங்கிலியாக மாறி ஒருவாறு உள்ளே புகுந்தனர். அவனை எழுப்பும் வழியறியாது அவனது உடலைத் தொடுதற்கும் அஞ்சினராய்த் தாரை, சின்னம் ஆகிய கருவிகளை அவனது சாதுகளில் பொருத்திப் பேரொலி எழுப்பினர். இவையும் பயன்தராததைக் கூண்டு பெரிய

கதாயுதங்கள். சப்மட்டிகள், Hட்டி கள் போன்றவற்றினால் அவனது தாடைகள், சந்துகள், மார்பு, தலை ஆகிய இடங்களில் தாக்கியும் அவன் துயில் நீங்கியபாடில்லை. இஃதறிந்த இராவணன் பெரிய ஆயிரம் குதிரைகளை அவன் மீதூர்ந்து, தாறுமாறாக உழக்கச் செய்தும் அவன் துயில் நீங்காதது கண்டு அயர்ந்த்ான். பின்னர் ஆயிரம் இராக்கதர்கள் சூலம், மழு, வாள் கொண்டு தாக்கியும் அவன் எழாதது கண்டு, இராவணனின் ஆணையை மீண்டும் சிரமேற் கொண்டு, உறங்குகின்ற கும்பகருணனின் அருகே சென்று அவனது இரண்டு கன்னங்களிலும் நீண்ட இரும் புலக்கைகள் கொண்டு கைகள் சலிப்பத் தாக்கினார்கள். அதனால் கும்பகருணன் (றெந்தவன் உயிர் பெற்று எழுந்தமை போலத் தான் தூங்கும் இடத்தை விட்டுப் புரண்டு எழுந்தான். அவன் ள்முந்ததைக் கண்டு திக்குயானைகளும் சூரியன், பிரம்மன், திருமால், சிவன் முதலான அனைவரும் நடுக்கமடைந்து, ஏக்கமடைந்தனர்.
அவன் எழுந்து நின்ற போது தலை விண்ணுக்குமேலாக உயர்ந்தது. உடல் மண்ணையும், விண்ணையும் மறைத்தது. கண்கள் இரண்டும் இரண்டு மாபெருங்கடல்களாகத் திகழ்ந்தன. பசி அவன் வயிற்றைக் கிள்ளியது. பலநூறு வண்டிகள் நிறைந்த சோற்றையும், பலநூறு குடங்கள் நிறைந்த மதுவையும் ஆயிரக்கணக்கான விலங்குகளின் இறைச்சியையும் உண்டும், ஒரு சிற்றுண்டி அருந்தியவன் போலவே திகழ்ந்தான்.
இவ்வாறு விளங்கிய கும்பகருணனைப் பணியாளர்கள், அவனது தமையனாகிய இராவணன் அழைத்தனன் என்ற சொற்கேட்டதும், அந்த இலங்காபுரியே ஆர்ப்பாட்டஞ் செய்யுமாறு புறப்பட்டுப் போய், சந்திரனைத் தொடுமாறு ஓங்கியுள்ள இராவணனது அரண்மனையை அடைந்தான். அடைந்த வேகத்திலேயே தம்முன்னோனான இராவணனை, நிற்கும் ஒருமலை நிலத்திற் படுத்தாற் போலப் பூமியில் வீழ்ந்து
வணங்கினான்.

Page 9
O
அது கண்ட இராவணனும், நிலை பெற்ற ஒரு மலை நீண்ட கால்களுடன் நடந்து வந்த மற்றொரு மலையினைத் தழுவிக் கொண்டது போன்ற தன்மை உடையவனாய். தன் திரண்ட தோளினால் கும்பகருணனை இறுகத் தழுவிக் கொண்டான். அவனைத் தன்னுடன் உட்கார வைத்தான். மதுவையும், இறைச்சியையம் குடங்களில் வரிசையாக நிரப்பி வரச் செய்து அவனை உண்ணச் செய்தான். கடல்நுரை போன்ற வெண்பட்டாடையை அவனுக்கு உடுத்தினான். பல ஒளி மிகுந்த நவமணிகளை வரிசை, வரிசையாக அவன் உடலின் பலபக்கங்களிலும் அணிவித்து அழகு செய்தான். செஞ்சாந்து பூசினான். வீரபட்டம் சேர்த்தினான். சிவன் அருளிய கவசத்தை அவன் மார்பில் பூட்டினான்.
III கும்பகருணன் போருக்குச் செல்லுதல்
அப்பொழுது அழகு மிளிர்ந்த, எல்லையற்ற பெரு வீரமுடையவனான கும்பகருணன், தனது கொடிய தோற்றத்தின் கம்பீரம் ஒளிவீச, தமையனான இராவணனைப் பார்த்து என்ன காரணத்தால் இந்தப் போருக்காயத்தமான செயல்கள் செய்யப்படுகின்றன என்று கேட்டான். அதற்கு இராவணன் "வானரர் கூட்டமும், மனிதர் இருவரும் எமது இலங்காபுரியைச் சூழ நின்று அழிவு செய்கின்றனர். நீ போருக்குச் சென்று அவர்களைக் கொன்று மீள்வாயாக" என்றான்
அப்பொழுதுதான் பெருவீரனான கும்பகருணனது அறச்சினம் வெளிப்பட்டது. கம்பன் ய, ருக்குமில்லாத பெருமையைக் கும்பகருணனுக்குக் கொடுக்கின் )ான்.
ஆனதோ வெஞ்சமம் அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ, புகுந்ததோ பொன்றுங்காலமோ!”

என்று மனம் நொந்து விழிகள் நீர்சிவப்ப மொழிகின்றான். "திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ, இது விதியின் வண்ணமே!” என்று பேசுகின்றான். திட்டியென்பது ஒரு விடப்பாம்பு, ஏனைய நச்சரவங்கள் கடித்தால் மட்டுமே கடியுண்டவர் உயிரிழப்பர். ஆனால் திட்டியெனும் பாம்பின் பார்வை எவரில் படுகின்றதோ அக்கணமே அவர் உயிரிழப்பர். கும்பகருணன் சீதையின் கற்பின் மேன்மையை 'திட்டியின் விடமாகச் சிலாகித்துப் பேசுவது அவனது அறந்தவறாத பண்புக்கும், உயரிய ஒழுக்கத்திற்கும் ஒரு உரைகல்லாகும்! இவ்வாறு பல்வேறு அறநெறிகளை பணிவுடன் எடுத்துக் கூறியும் தம்முன்னோன் அவற்றை ஏற்காத போதும் அவன் நல்வாழ்வு கருதிப் பின்னும் பேசலானான்.
"தையலைவிட்டு அவன் சரணம் தாழ்ந்து நின் ஐயறு தம்பியோடு அளவளாவுதல் உய்திறம் அன்று எனின், உளது வேறும் ஓர் செய்திறம் அன்னது தெரியக் கேட்டியால் . fre
சீதையைச் சிறையிலிருந்து மீளச் செய்து, இராமனின் நட்பைப் பற்றிக்கொண்டு, உன்தம்பியாகிய அறிஞன் விபீடணனுடன் சேர்ந்து கொள்ளுதல் நன்று. இல்லையேல் முறைமுறையே எமது வீரர்களும், படைகளும் அழிந்து ஒழிந்து போதலைக் கண்டு மனம் வருந்தாது, ஒரு சேரவே எமது முழுவலிமையையும் பகைவர்மீது செலுத்திப் பார்ப்பது உகந்ததாகும். கும்பகருணன் இவ்வாறு கூறியதும் இராவணன் சினந்தெழுந்தான்.
"உன்னை நான் அழைத்தது ஆலோசனை கேட்பதற் காகவன்று. மனிதர்களையும், குரங்குகளையும் கும்பிட்டு வாழ்வதற்கு ஆலோசனை சொல்லும் அமைச்சன் நீ அல்லை. உனக்கு என்ன வீரம் இருக்கிறது? நன்றாக மதுவும், மாமிசமும் புசித்து விட்டாய். இனிப்போய் கணக்கில்லாக்காலம்வரை உறங்கு. உறங்கு" இவ்வாறு கும்பகருணன் மனம் வெதும்பப்

Page 10
12
பழியுரை பகன் றாண் இராவணன் , கும்ப கருணன் இவ்வார்த்தைகளைக் கேட்டு நெஞ்சம் நெட்டுயிர்த்தாண். தமையனின் பாதங்களில் ) மீண்டும் மலைபோல் வீழ்ந்து வணங்கினான். தனது சூலப் படையைக் கரத்திலே வாங்கினான். இன்னும் ஒன்று உள்ளது. கேட்டருள்கவென்று கூறினான்.
"என்னை வென்றுளl எனில் இலங்கைகாவல உன்னை வென்றுயருதல் உண்மை ஆதலால் பின்னை நிண்றெண்ணுறுதல் பிழை அப் பெய்வளை தன்னை நன்களிப்பது தவத்தின் பாலதே"
"இற்றை நாள் வரையான் முன் செய்தன குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய பெற்ற னென் விடையெனப் பெயர்ந்து போயினான்!”
கும்பகருணன் ஆட்சி செய்யாவிட்டாலும், ஏனைய அரக்கவீரர்களைப் போலத்தன்னைத் தானே புகழ்ந்து பறை гтфрj திரியாவிட்டாலும் வாழ்வின் பெ ரும் பகுதியை நீள்துயிலிலே கழித்திருந்த லும் அறத்தின் மே ம்ையை 6یJ6ör உணர்ந்திருந்தான். முக்காலத்தையும் சீர்து கிப் பார்த்துத் தெளியும் பேரறிவு அவனுக்கு இருந்தது. அதனாலேதான் சொன்னான் "என்னை வென்று விட்டார்கள் யின் உன்னை வென்று விடுதல் மிகமிக எளிமையானது. ஆ தன் பின்னரும் நான் கூறும் அறவழியில் நடக்கத் தவறக் கூட து! இவ்வளவு காலமும் உனது உணவையுண்டு, உனது மாளிகையிலே வாழ்ந்து, உனது தம்பியென்றிருந்த நான் (1தாவது பிழை செய்திருப்பின் அருள் கூர்ந்து மன்னித்துவடுங்கள். இனி உங்கள் முகத்தினில் விழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடையாது. விடை தருக" இவ்வாறு கூறிவிட்டுக்கும்பகருணன் போர்க்களம் நோக்கிச் சென்றான். இராவணன் பணிப்பின்படி பெரும்படைகள் அவனைச்சூழச் சென்றன.

3
கும்.கருனoolது தேர் அவனுக்குரிய ஆற்றலுக்கெ:த்தது. ஆயிரம் சிங்கங்கள், ஆயிரம் யானைகள், ஆயிரம் பூதங்கள் பூட்டப் பெற்றன. அவனைச் சூழவந்த படைகள் தே! மரம், சக்கரம், சூலம், மழு, வேல், உலக்கை, வாள், தண்டு, எழு, வில், வல்லையம், கணையம் இவ்வாறான பல்லாயிரக் கணக்கான ஆயுதங்களை ஏந்திச் சென்றன. போர்த்தொழிலில் வல்ல கும்ப கருணன் தெளிந்த ஞானியாவான். மீட்டும் இலங்கைக்குச் செல்வது அவனால் முடியாதது. அதை அe:னும் விரும்பவில்லை. எனவே தனது போராற்றல் முழுவதனையும் களத்திடைக் காட்டி வீர சுவர்க்கமெய்தலே அவனது கருத்தாக மிளிர்ந்தது. அதற்கேற்ப அவன் நடந்து கொண்டான்.
அளவுக்கு மீறிய மதுவையும், மாமிசத்தையும் பணியாளர்கள் கொண்டு வந்து கொடுக்கக்கெடுக்க வாங்கியருந்தினான். அவனுக்குப் போதை வரவில்லை. ஞானப் பாதையே தெரிந்தது. அவனைக் கண்டதுமே வானரக் கூட்டமும், எமனும் நடுநடுங்கினார்கள். இனி நாம் எங்கே ஒடித்தப்ப முடியும் என்று ஏங்கினார்கள்
1V இராமன் - கும்பகருணன் - சுக்கிரீவன்
விபீடணன்
பொன்னாலாகிய தேரில் வந்து கொண்டிருக்கும் கும்பகருணனை இராமன் பார்த்தான். கும்பகருணனது தோற்றமும், ஏற்றமும் இராமனை அவன்பால் ஈர்க்கச் செய்தன. அறந்தவறாத நெறியுடையவனும், யார்க்கும் அந்சாத ஆண்மையுடையவனும், பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து விளங்குபவனுமான அவனைப் பார்த்ததும் இராமன் உள்ளத்தில் எண்ணற்ற யூகங்கள் 1ழுந்தன. இவன் யார்? இராவணனா? அப்படியானால் இவனது தேரிலே வீணைக் கொடிபறக்க வில்லையே. சீறிப்பாயும் சிங்கக் கொடிபறக்கிறது. சூரியனது

Page 11
14
ஒளி கூட இவனது உடலில்பட்டு மறைகிறது. வானர சேனையோ இவன் வருகையைக் கண்டதும் தலைகெட்டு, நிலைகெட்டுத் தறிகெட்டு ஓடுகிறது. இவன் யார்? வீடணனைத் தேடுகிறான்.
தேவர்களாயினும், மூவர்களாயினும், அசுரர்களாயினும் அரசியல் பதவிமோசம் அவர்களை அலைக்கழிக்கின்றது. அவர்களில் ஒருவன் விபீடணன். காரணம் காட்ட முடியாதவற்றுக் கெல்லாம் கடவுட்டன்மை சார்த்துவ்து கவிஞரியல்பு அவ்வாறே களத்தில் சிங்கஏறாக வந்து கொண்டிருக்கும் இவன் யார் என்று வீடணனை இராமன் கேட்கிறான் !
மூதறிஞனான கும்பகருணன் எங்கே? அறத்தின் பெயரால் அரசியல்லாபந்தேடி மாற்றாரின் பாதுகையைத் தலைமேற்சுமந்து சேவகம் செய்யும் விபீடணன் எங்கே? இராமன் கேட்டதும் விபீடணன் சொல்கிறான். "சிங்கஏறுபோல இத்தேரில் இவர்ந்து வரும் இவன் இலங்கைவேந்தன் பின்னவன். எனக்கு முன்னோன். கூற்றுவனும் அஞ்சும் குரைகழல் கொண்ட கும்பகருணன். கூரிய சூலத்தான். சிவன் அருளைப் பெற்றவன். இவனைக்கண்டதுமே தேவர்கள் அஞ்சி அழிவார்கள். முனிவர்களும் அஞ்சுவார்கள். காற்றினும் கடிய வேகமுடையவன். இந்திரன் தோற்றோடுமாறு தனது சூலப்படையைச் செலுத்தி வெற்றிமாலை பூண்டவன். எவ்வித தாழ்ச்சியுமில்லாத தருமமிகு குணத்தான். ஊழிக்காலம் வரை உறங்கும் இயல்பினன். இவனது வீரத்திற்கு அளவே கிடையாது. இராவணனுக்கே "பிறன்மனைவியை விரும்புதல் தருமம் அன்று எனத் தனது இடிபோன்ற சொற்களால் எடுத்துணர்த் தியவன். ஆயினும் நல்லுரை கேளாத தமையனை வெறுத்து 

Page 12
6
பயனற்றது. கும்பகருணைனை மட்டுமே நாய் ஆராய வேண்டும். கும்பகருணனிடம் வடணன் செல்கிற ஒன்... வானரப் படைகளையும், அரக்கர் படைகளையும் கடந்து அண்ணனாகிய கும்பகருணன் முன்னே வீடணன் வந்து, அவன் தாள்களில் விழுந்து வணங்குகிற, ன்.
முக்காலங்களையும் உணர்ந்த, பற் ற்ற பேரறிஞனாகிய கும்பகருணனும் தம்பியாகிய வீடணலை இறுக்கத்தழுவிக் கொள்கிறான். அவனது அன்புள்ளம் பேசுகிறது. "நீ இராமனிடம் அபயம் பெற்றது நல். து. பின்னர் ஏன் இங்கு வந்தாய்? பிறன் மனைவியை விரும்புவதால் எமது குலத்தின் பெருமை அழிந்து விட்டது. எம்மைக் கொல்வதற்காக இராமன் இங்கே வந்து நிற்கிறான். அவனையடைந்து இம்மையும் மறுமையும் அழியாப்புகழ் பெற்.) நீ என்னைப் போன்ற "இழிந்த குணத்தையுடைய அரக்கனிடம் மீண்டும் வரலாமோ? நாங்கள் எல்லாம் மாண்டபின்ார். எங்களுக்குரிய எள், நீர்க்கடன் நல்கி இறுதிக்கிரியைகளை யன்றோ செய்தல் வேண்டும்.?
இவ்வார்த்தைகளில் பேரறிஞனான கும்பகருணன் தம்பியைப் புகழ்கின்றனோ, எள்ளி நகைக்கின்றானோ என்பது கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பருக்கே ஐயமாகிவிட்டது. ஆனால் வீடணன் விடவில்லை. தொடர்ந்தும் இராமனிடம் சரணடையுமாறு கும்பகருணனை இரந்து கேட்பதுடன், இராமன் தனக்குத் தரும் இலங்கையரசையும், பிற செல்வத்தையும் உனக்கு அளித்து உனது ஏவலில் பணிந்து நிற்பேன் என்கிறான். விபீடணன் ஒழுக்கமுள்ளவன், ஞானமுள்ளவன் என்று அப்பழுக்கு ஏதுமற்ற கும்பகருணனாலேயே போற்றிப்புகழப் பட்டாலும் அவனைப் பற்றிய ஐயத்திற்கிடமான பல விடயங்கள் கம்ப ராமாயணத்தில் நிறைந்து கிடக்கின்றன. முதலில் தனது உடன் பிறப்பும், ஒரே சகோதரியுமான சூர்ப்பனகையை இலக்குவன் மானபங்கப் படுத்தியது குறித்து அவன் ஏதும் கவலைப்பட்டதாகவே இல்லை. மாறாக அ1ள் மீதே பழி சுமத்தினான்.

17
இராவணன் வெகுண்டு. எழுந்து சீதையைப்பர்ண சாலையுடன் பெயர்த்தெடுத்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்த போது, தனது மகளாகிய திரிசடையைச் சீதையின் காவலுக்கு அனுப்பிவைத்து அண்ணனின் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாகச் செயற்படுகிறான். பின்னர் இராம தூதனாக வந்த அனுமான் இலங்கையிற் செய்த பேரழிவுகள்ையெல்லாம் பார்த்துக் கொண்டு பேசாதிருந்தது மட்டுமல்ல, இந்திரசித்து நள்கபாசத்தால் அனுமனைப் பிடித்து வந்து'இராவணன் முன் விட்டபோது அனுமன் பேசிய தூதனுக் கொவ்வாத மொழிகளைக் கேட்டு இராவணன் 'இவனைக் கொல்லுங்கள் " என்று உத்தரவிடுகிறான். அப்போது மட்டும் விழித்துக் கொண்ட விபீடணன் 'தூதுவனாக வந்த ஒருவனைக் கொல்லதல் அறமாகாது" என்று தடுக்கிறான். அதனை இராவணன் ஏற்றுக் கொண்டமை அவனது பேராண்மையைப் புலப்படுத்துகின்றது. அனுமனின் வாலில் புத்தி புகட்ட அரக்கர் கொழுத்திய, தீயினால் அனுமன் இலங்கையையே சுட்டெரித்தான். இதுவா தூது வந்தவன் செய்கின்ற கடமையும், பணியும்? சீதைக்கு காவலிருந்த திரிசடை தான் கண்ட கனவு பற்றிக் கூறிச் சீதையைத் தேற்றுகிறாள். அவள் கண்ட கனவுகளின் உட்பொருளென்ன...?
"இராவணன் தேகம் முழுதும் எண்ணெய் பூசித் தென்திசை நோக்கிச் செல்கின்றானாம். மண்டோதரி - மாபெரும் கற்பரசியின் தலை மயிர் விரிந்து நெய்விளக்குகளில் எரிந்து பொசுங்குகின்றனவாம். பேரிகைகளும் மற்றும் வாத்தியங்களும் தாமே அடிப்பாரற்று ஒலிகிளப்பி உடைகின்றனவாம். திருமகள் கையில் விளக்கேந்தி இராவணேசன் மாளிகையை விட்டு, விபீடணன் இல்லத்திற்குச் செல்கின்றாளாம். இதனால் சீதை சிறை மீட்கப்படுவது உறுதி என்றும் இராவணனும், அரக்கர் குலமும் அழிவது உறுதி என்றும்" திரிசடை w கூறுகிறாள். இதிலே சீதையின் நலனைப்பார்க்கிலும் திரிசடையின் பேராசைகளும், விபீடணன் இலங்கை மன்னனாகிவிட வேண்டும்

Page 13
18
என்று அவள் துடிக்கின் ) துடிப்புமே முன்னிற்கின்றன. அப்பனுக்கேற்ற பிள்ளை தி ரிசடை. ஐயமேயில்லை, வாலியைக் கோழைத்தனமாக ஒளிந்திருந்து அம்பெய்து கொன்றதும், சுக்கிரீவனுக்கு முறையற்ற விதத்தில் வாலியின் ஆட்சியைக் கவர்ந்து கொடுத்ததும் இராமன் எவ் (1ளவு தூரம் 'மனநோய்வயப்பட்டிருந்தா " என்பதனை ஐயமற விளக்கும். அதுபோன்று திரிசடைக்கும் பிபீடணனுக்கும் மனப்பாதிப்புக்கள் அவர்களையறிந்தும், அறிய 'மலும் செயற்பட்டுள்ளன. இதனை இலக்கியச் சக்கரவர்த்திய பன அமரர் ராஜாஜியே தமது 'சக்கரவர்த்தி திருமகன்' எ rற நூலில் அழுத்தம் திருத்தமாக எடுத்துக்காட்டியுள்ளார். ம6 னவியரைப் பிறரிைடம் பறிகொடுத் தவர்கள் ஒத்த உணர்ச்சியா ஒன்று சேர்ந்தனர். இராமனுக்கும், சுக்கிரீவனுக்கும் நட்பு ஏற்ப வேறுகாரணம் எதுவுமேயில்லை. தருமமோ அதருமமோ த ைது ஆட்சியைத் தம்பி பரதனுக்குத் தாரை வார்த்த இராமன், வா பியின் ஆட்சியைப் பA)ாத்காரமாகவே சுக்கிரீவனுக்குப் பரிசாகக் கெடுக்கிறான். துணைக்கு சுக்கிரீவனது வாணர சேனைப்படையின் ஐ தவியைச் சீதையைத் தேடுவதிலும், இராவணனுடனான யுத்தத் திலும் உதவிபுரியுமாறு கேட்டுக்
கொள்கிறான்..!
இதற்குப் பின்னரும் சுக்கிரீவன் என்ன செய்தான்? ஆட்சியுரிமையைப் பெற்றுக் கொண்டதும் இராமன் விதித்த காலக்கெடு முடிந்த பின்னரும் கிட்கிந்தையில் அரசபோகத்திலும், வானரமகளிரின் சிற்றின்பலீலைகளிலும் பொழுதைக் கழிக்கின்றான். அளவுக்கு மீறிநறவருந்தி மலர்ப்படுக்கையில் பருவமங்கையர் தரும் 'இன்பக்கதகதப்பில் தன்னைமறந்து காலங்கழிக்கிறான்.இவனது இச்செயலை நினைந்து அனுமனும், அங்கதனும் ஏனைய வானர் சேனைத்தலைவர்களும் வெய்துயிர்கின்றனர். காலங்கடந்ததும் இராமன் சினம் மூழப்பெற்றவனாகி இலக்குவனைச் சுக் கிரீவனிடம் அனுப்புகிறான். "வாலியை பட்டுமல்ல, சொன்னவாக்குறுதியை மறந்து தூங்குகின்ற உன்னையும், வானரக்கூட்டத்தையுமே

19
ஒரே அம்பினால் ஒழித்துக்கட்டிவிடுவேன் என்று உணர்த்திவா" என்று அனுப்புகிறான்
எப்பொழுதும் அண்ணன் சொல்மீறாத இலக்குவன் ஆறாச் சினத்துடன் கிட்கிந்தையை அடைந்த போது அனைவருமே அஞ்சினர். அனுமன், அங்கதன் ஆகிய இருவரும் செய்த புத்தி பூர்வமான யுத்திகளினால் வாலியின் மனைவியான தாரை தனது தோழியருடன் வெளியே வந்து நயவுரை புகன்று இலக்குவன் சினத்தை ஆற்றுகிறாள். அவளது தோற்றம் இலக்குவனுக்கு தசரதனை இழந்த தனது தாயாரின் நிலையை மனக்கண்முன் கொணர்கிறது. சினம் சிறிது நீங்கப்பெற்ற இலக்குவனை அனுமன் சுக்கிரீவனிடம் அழைத்துச் சென்று, அவனை இலக்குவனிடம் மன்னிப்புக் கேட்கச் செய்ததுடன், இலக்குவனுடனேயே இராமனிடம் செல்லச் செய்கிறான். சுக்கிரீவன், அனுமன் அங்கதன் மூவரும் முதலில் இலக்குவனுடன் சென்று இராமனைத்தரிசித்து, தம்பிழைக்கு மன்னிப்புக் கேட்டு, அவன் ஏவலில் நிற்பதாகப் பணிந்து வேண்டினர். அதுகண்ட இராமனும் மனங்குளிர்ந்தான். இங்கே நாம் நோக்க வேண்டியது உளவியல் ரீதியாக இராமனும், சுக்கிரீவனும், திரிசடையும், வீடணனும் ஒரே தன்மைத்தராகவே காணப்படுகின்றனர். அரசியல் அதிகார வெறியும், சிற்றின்பக் கேளிக்கைகளும் அவர்கள் முன்னே படம் விரித்து ஆடுகின்றன. தெய்வத்தன்மை என்ற போர்வை ஒன்று இல்லாவிட்டால் இவர்கள் மிகமிக் சாதாரணர்களே. அதிலும் அனுமனுக்குச் சீதை பற்றி இராமன் கூறிய அங்க அடையாள விபரங்களும், அனுமனுடன் சீதை பேசிய பான்மையும், அனுமன் கூறிய மாறுத்தரங்களும் தமிழ்ப்பண்பாட்டின் எல்லைக்குத் தொல்லைதருவனவாம். எனினும் காப்பிய அமைதிகருதிக் கவிச்சக்கரவர்த்தி கூறியவற்றை நாம் ஏற்றுக் கொள்வோமாக. இந்த நிலையிலே தான் போர்க்களம் புகுந்த கும்பகருணனைத் தம்பக்கம் சேர்த்துவிட்டால் பெரிதும் நயன்பயக்கும் என்று சுக்கிரீவன் கூறிய கூற்றை இராமனும் ஏற்றுக் கொண்டான். அதற்கமையத் தன் முன்னேவந்து

Page 14
2O
நின்ற வீடணனைப்பார்த்து மூவுலகும் வியக்கும் முடிவில் பேராற்றலுஸ்ள கும்ப கரு ண ன் பேசுகின்றான். வீடணன் கண்களிலே நீர் தாரை தா6 ரயாக மல்கத் "தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் வள்ள லான” கும்பகருணன் கூறுகின்றான்.
வீடணன் முன் வைத்த சான்றுகள் எல்லாம் கும்பகருணனது மானவீரத்தின் முன் பொடிப்பொடியாக உதிர்ந்தன. அதே நேரத்தல் மாசுமறுவற்ற அவன் மனமும் தம்பி என்னும் பாசத்தால் தடுமாறியது. அண்ணன் அரக்கர் கோனை எண்ணினான். மாதரசி மண்டோதரியை எண்ணினான். மாபெரும் வீரர்களான இந் நிரசித்து, அக்ககுமாரன், அதிகாயன் முதலாய பற்பல வீரர்க6ை எண்ணினான். தருமம் பிழைத்தது தான் தம்முன் செய்கையால், ஆனால் தான் பிழைத்துவிட்டால் அரசருக்குரிய தனித்துவம, ன பெருவீரமன்றோ பிழைத்துவிடும் என் மனம் சாம்பினான். இந்த மானிடனான இலக்குவன் தன் தங்கை சூர்ப்பனகையை ԼD/, னபங்கப்படுத்தியை து எண்ணினான். அவன் இதயம் எரிமலையாகக் கனன்றது.
கும்பகருணனது 1 னப்பக்குவம் அறத்தின் பாற்பட்டது. மறத்தின் மேம்பட்டது. மனவிலும் பிறனுக்குக் கேடு சூழா நெஞ்சம் அவனது. மண்ணையும், விண்ணையும் இடிக்கும் தோள்களும், மாற்றலர் 45ண்டு மறுகும் தோற்றமும் பெற்ற பெற்றியனான அவன் இராவணன் பாற் கொண்ட பாசத்தில், இராமன் மீது இலக்குவன் கொண்ட அன்பினிற் சிறிதும் தாழ்ந்தவன் அல்லன், பிறன்மனை நோக்கப் பேராண்மை யுடையவன். பதவி வேட்டைக்காகத் தன்னைப் பணயம் வைக்காத பண்பினன். மறலியும் அவனது விறலினைக் கண்டு மருள்வான். அவன் நெஞ்சத்தில் நிலைத்திருந்ததெல்லாம் இலங்கைவேந்தனின் கொற்றமும் செற்றமும் கோடக்கூடாது என்பதும், அரக்கர் குல வீரமும், தீரமும் அணையக் கூடாது என்பதுமே. இதற்கு மாறாக நிகழ்ந்த சில நிகழ்வுகள் அவனுள்ளத்தை வருத்தின தம் முன்னோன் செய்த பிழையும், தம்பிவீடணன் நிலையும்

2
தங்கை சூர்ப்பனகை மானக் கேடுற்றதும், பெருவலிபடைத்த இராமன் தருமமே துணையாகத் தன் இளவலுடனும், வானரச் சேனையுடனும் யுத்தகளத்தில் நிற்பதுவும், இலங்கை வேந்தன் முதன் நாட் போரில் வறியனாக இலங்கை மீண்டதும், தான் புகன்ற அறிவுரையை ஏற்கமறுத்ததும், போரிலே அரக்கர் பக்கம் அவதியுறும் என்ற தீர்க்கதரிசனமும் அவனது நெஞ்சை நெகிழ்த்தன. எனினும் அரக்கர் கோன் தம்பியாகிய அவன் இலங்கை அரசினை நச்சி, நிலையில்லாத நீர்க் கோல வாழ்க்கையை நம்பி, என்றும் அழியாத மாணவரத்தை மண்டியிடச் செய்ய விரும்பினான் அல்லன். பரதனிலும், இலக்குவனிலும், குகனிலும் ஏனைய இராமன் பக்கத்து வீரன் எவரிலும் காணமுடியாத சிறப்புகள் ஒருங்கமைந்த ஒப்பற்ற பெருவீரனாக உள்ளத்திலும், வீரத்திலும் உயர்ந்து விளங்கினான் கும்பகருணன்
ஒரு தத்துவ ஞானியைப் போல அல்ல தத்துவ ஞானியாகவே மாறித் தனது தம்பி வீடணனுக்கு அந்த உண்மையைத் தெருட்டினான்.
"நீர்க் கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர்கொடாது அங்குப்போகேன் தார்க்கோல மேனி மைந்த என்துயர் தவிர்த்தி ஆயின் கார்க் கோல மேனியானைக் கூடுதி கடுதின் ஏகி"
என்ற வரிகளில் அவனது தன்னலந் துறந்த வீர நெஞ்சம் வெளிப்படுகிறது. போரில் வாழ்வதும், வீழ்வதும் இயல்பே. "என்னை நம்பிப் போர்க்கோல்ம் செய்துவிட்ட எம்முன்னவனுக்காக உயிர் கொடுப்பதல்லால் வ்ேறொரு கருமமும் எனக்குத் தெரியாது என்று வீரவுரை புகன்றான் கும்பகருணன். "அம்மட்டோ; மூன்று உலகங்களையும் ஒரு சேர ஆட்சி செய்த ஒருவனான இராவணன், வண்டுகள் மொய்க்கின்ற அழகிய மலர் மாலையை அணிந்த வீரனாகிய இராமன் சுட்டெரிக்கும் அம்புகளைச் செலுத்தும் போது சுற்றிலும் வாடுகின்ற கொடுஞ்சேனையோடும், மற்றுள்ள சுற்றத்தாரோடும்,

Page 15
22
உடன்பிறந்த தம்பி அருகே இல்லாமல், பகைவரான தேவரும் பிறரும் பார்க்குமாறு அநாதையாக மண்மீது மாண்டு கிடப்பதற்கு உரியவனோ?
"தும்பி அம் தொடையல் வீரன் சுடுகணை துரப்பச்சுற்றும் வெம்பு வெஞ் ச்ேனையோடும் வேறு உலா கிள்ைளுரோடும் உப்புரும், பிறரும் காண ஒருவன் மூவுலகை ஆண்டு தம்பியரின்றி மாண்(கிடப்பனோ தமையன் மண்மேல் "
என்று தன்னை மறந்த ஆவேசத்தில் ஆர்ப்பரிக்கிறான். தனது வீரத்தை எண்ணி, வீடணனின்துரோகத்தை எண்ணி வீரார்ந்த சொன்மழைபெய்கின்றான்.
“செம்பு இட்டுச் செய்த இஞ்சித்திரு நகர்ச் செல்வந்தேறி வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையைவாழ்த்தி
அம்பு இட்டுத் துன்னங் கொண்ட புண்ணுடை நெஞ்சோடுகய கும் பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்”
என்று வீரமுழக்கஞ் செய்கிற, ன். போர் வீரன் விரும்புவது இது ஒன்றைத்தானே வெற்றி அல்லது வீரமரணம். எது, எதற்காகவோ என் தழையனின் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி வாழ்வதா? அதுவும் நானா..? கூற்றையும் ஆடல் கொண்ட இந்தக் கும் கருண்னா அப்படி மாறுவான்?
இப்பொழுது கும்பகருணன் தத்துவஞானச் செருக் கிலிருந்து விடுபட்டு வீர மோட்சம் அடைவத ய போர்க்குணத்தின் சிகரமாக விளங்குகிறான். அனுமன், அகதன், சுக்கீரீவன், இராமலக்குவணர்கள், நீலன், சாம்பவான் மற்றும் குரங்குச் சேனைகள் அனைவரும் மூடுபனிபோல மறைய இவ்வுலகைச் சுற்றி வருகின்ற சூரியன் போல நான் வளங்குவேன் என்று அடித்துக் கூறுகிறான்.

23
ஆலகாலவிடத்தைக்கண்டு அஞ்சி ஒடிய தேவர்கள் போல என்னைக்கண்டு வானர சேனைஓடவும், உலகமுமே பிரளயகாலம் வந்துவிட்டதென்றெண்ை ஒடவும் நான் என் சூலத்தைக் கையில் ஏந்திக் கொண்டு காற்றாடி போலத்திரிவேன். இராமன் ஆயினென், இலக்குவன் ஆயினென், அல்லது வேறு எவராயினுமென் என் எதிரே விந்து நிற்கட்டும். 961 frigin உயிரோடு மீள விடாமல் அழித்து விடுவேன் என்று அறை கூவினான் கும்பகருணன். ஆகவேண்டியது உரியகாலத்தில் ஆகியேதிரும். அழிய வேண்டியதும் அவ்வாறே எனவே எம்மைநினைத்து இரங்காமல் இங்கிருந்து செல்என்று வீடணனைப் பணித்தான் 9 Gusevär.
இவ்வுரை கேட்ட வீடன்ை தன் தமையனான கும்பகருணனை மீட்டும் விழுந்து விணங்கவும் தம்பி மீதுள்ள பாசம் மீதுாரக் கும்பகருணனும் அவை இறுக்கத்தழுவி மேலும் பேசுதற்கு எதுவும் இல்லை யென்பதனையுணர்த்த விபீடணனும் மீண்டும் இராமனிடம் சென்றான் சென்று "கும்பகருணன், குலமானம் &oldioksi uominar என்றலும், இராமன் வீடணனைப் பார்த்து "உன் கண்முன்னேயே உன் அண்ணனை அறுத்து வீழ்த்துதல் இனியதன்று என்பதால் இவ்வாறு ஏவினேன். இனிநாம் செய்யக்கூடியது ஒன்று மில்லை. விதியை விலக்குவார் աnհP areծrmյ வீடணனுக்குத் தேற்றம்புகன்றாண்1
இவ்வாறிருக்க அரக்கர்படையும் குரங்குப்படையும் கோரமாக மோதிக் கொண்டன. தேர்கள் ஓடின. குதிரைகள் ஓடின, யானைகள் ஓடின, இரத்த ஆறு ஓடியது. கொடிகள் ஆடின. உடற் குறைகள் ஆடின. பேய்கள் ஆடின. பருந்துகளும் மற்றும் பறவைகளும் வானத்தே *மிட்டு ஆடின. தேவர்கள், மற்றும் மூவர்களும் அஞ்சிஆடினா.

Page 16
24
V கும்பகருணன் போர்
கும்பகருணன் தனது சீயக் கெ. டிபறக்கும் தேரில் காற்றிலும் கடிது இவர்ந்து களத்தி ைவந்தான். அவன் வந்ததேரின் வேகத்தைத் தாங்கமாட்டாமலே வானரக்கூட்டத்தில் பாதி அழிவுற்றது. பாதி) அஞ்சி ஓடிற்று. கும்பகருணன் தனது வேலின் நுனியில் படிந்துள்ள இரத்தத்தினைப் பார்த்தபடியே வந்தான்ேயன்றி தூசிபோலப்பறந்து மாழும் குரங்குப்படை களைப்பார்த்தானில்லை. அவன் நீண்டதடக்கைகள் போர்க்களம் எங்கும் பரவிநீண்டன. அகப்பட்டி வானரர்களையெல்லாம் பற்றி யெடுத்து ஒன்றுடனொன்று மோதிக் கொன்றான். சிலவற்றைப் பிடித்து மலைகளில் மோதுவான். விண்வெளிகளில் வீசுவான். கடலிடத்தே புகும்படி எறிவான். கால்களால் உதைப்பான். சாந்தாகும்படி அரைப்பான். ஆத்திரமிகுதியால் ஆயிரக்கணக்கான வனரங்களைத் தன் வாயில் போட்டு மென்று உமிழ்வான் இன்னும் பல்லாயிரவற்றைப் பற்றியரைத்துச் சந்தனம் போலத் தன் எல்லையற்ற பருத்த உடலில் பூசுவான். நீருக்குள் மூழ்கவைப்ப ான். நெருப்பினில் வாட்டியெடுப்பான். எட்டுத்திசைகளிலும் விட்டெறிவான். புதர்களிலும், மரங்களிலும், கடலிலும், மலைகளிலும், பொன்றிய வானரக்கூட்டங்களின் உயிரிழந்த உடல்கள் தொங்கிக்கொண்டிருந்தன. வானரர் சேனையோ முடிந்து வட்டது என்ற எண்ணமே வானரப்படைத் தலைவர்களுக்கு வந்துதித்தது.
இதனைக்கண்ட நீலன் என்ற வானரத்தலைவன் கும்பகருணனுடன் போருக்கு வந்தான். ஒரு பெரியமலையைப் பெயர்த்தெடுத்துக்கும்ப கருணன் மேல் விட்டெறிந்தான். அதனைக் கும்பகருணன் தனது சூலப்படையால் ாள்தூளாக்கினான். அதுகண்ட நீலன் ஆத்திரம் தாங்காது ஓடிப்போய் கும்பகருணனது தேரிலும், பிறபாகங்களிலும் இடியெனக் குத்தினான். தனது கால்களால் பலமுறை உதைத்தான்.

2)
நீலன் கைகளும் கால்களும் சலிந்தனவேயன்றி கும்பகருணன் வெஞ்சியமாக விளங்குதலைக்கண்டு வெருண்டான். அப்பொழுதே "ஒழிந்துபோ' என்று முழங்கியபடி யே கும்பகருணன் முழக்கமிட்டு தனது இடக்கையால் நீலனை அடித்தான். ஆயுதமில்லாமல் நின்ற அவன் மீது இரக்கப்பட்டுக் கும்பகருணன் தனது சூலப்படையை ஏவவில்லை. நீலன் ஓலமிட்டபடியே வீழ்ந்தான். அதுகண்ட வாலிகுமாரனான அங்கதன் நீண்ட ஒரு பெரிய மலையைப் பெயர்த்து வந்து 'கும்பகருணன் இறந்தான்' என்று வானவரும் ஏனையோரும் வாழ்த்த அவன் மீது வீசினான். கும்பகருணன் நிமிர்ந்து நின்று அப்பெருமலையினைத் தனது ஒரு தோளிலே எளிதாகத் தாங்கிக்கொண்டான். மலை தூளாகிச் சிதறி வீழ்ந்தது. அங்கதன். அலமந்து நின்றான். அவன் ஆத்திரம் தணியவில்லை. கும்பகருணன் அவன் மீது வலி மிக்க வயிரத்தண்டு ஒன்றை ஏவினான். ஆன்ால் அங்கதன் அதனைத்தனது பெரியகைகளால் பிடித்துக் கொண்டான். பின்னர் அத்தண்டுடன் கண்கள் தீயெழக் கும்பகருணன் முன்னே வந்து நின்றான்.
கும்பகருணன் அங்கதனைப் பார்த்தான். தன்விழிகளில் தீப்பொறி பறக்க ஏளனமாக அவனைப்பார்த்துச் சிரித்தான். நீயார்? சுக்கிரீவனா? அவனது புதல்வனான அங்கதனா? இலங்கைய்ைத் தீயிட்டுக் கொளுத்திய அனுமனாP விரைவில் கூறுக என்று முழங்கினான். அதற்கு அங்கதனும் உன் தமையனான இராவணனைத் தனது வாலினாற் பிணைத்து எல்லாத் திசைகளிலும் தாவிச் சென்று சிவபெருமானை வணங்கிய வாலியின் புதல்வன் யான் என்றான்.
கும்பகருணன் நகைத்தான். "உன் தந்தையை ஒளித்து நின்று கொன்ற இராமனின் சேவகனாக வந்த நீ அதே வேலையை மீண்டும் செய்யாவிட்டால் உலகத்தார் உன்னைப் பழிப்பார்கள். என் மும்முன்ைச் சூலம் உன் முதுகின் வெளிப்புறம் பட்டு, அதுவும் ஒரு வால் போல விளங்கக்

Page 17
26
கையும் காலும்தொங்க உயிரிழப்பதற்காகவே இங்கு வந்துள்ளாய்!” எனச் சொன்னான்.
இதனால் பெருங் கோபங் கொண்ட அங்கதன் தான் கொண்டிருந்த வயித்தண்டினால் கும்பகருணனை அடித்தான். அவ்வயிரத்தண்டு கும்பகருணனது வலிய மேனியிற் பட்டு நூறு கூறாய் முறிந்தது. அதன் பின்னரும் அங்கதன் தன்னைத்தாக்க வருதல் கண்ட கும்.கருணன் கொடுத்த ஒரே ஒரு அடியினால் பூமாதேவிய்ே கதறிபழுமாறு கத்திக் கொண்டு அங்கதன் கீழே வீழ்ந்தான். ஆத்திரம் அடங்காத கும்பகருணன் தனது சூலப்படையைக் கையில் எடுத்தான். அதுகண்ட அனுமன் கும்பகருணன் முன்னே வந்தான். பெருமலை ஒன்றைப் பெயர்த்து வந்து கும்பகருணனது நெற்றி மீது பதியுமாறு வீசி ஆர்ப்பரித்தான். நெற்றியில் பதிந்த அம்மாபெரும் மலையைக் கும்பகருணன் ஒரு சிறு உருண்டையை எடுப்பது ' போல எடுத்து, அனுமன் மார்பினில் எறிந்து தன் திரண்ட தோள்களைத்தட்டி ஆர்ப்பரித்தான்
வானரர் அங்கதனைப் பாதுகாப்பாகத் தூக்கிச் சென்றனர். மீண்டும் ஒரு மாபெரும் மலையைப் பெயர்த்தெடுத்த மாருதி கும்பகருணனைப் பார்த்து இவ்வாறு கூறினான் "இந்த மலையை உன்மீது எறிவேன். கண்ணிமைக்கும் பொழுதில் aloir ஆற்றல் அழியும். அவ்வாறு நேராவிட்டால் உன்வலிமை பெரிது.அதன் பின்னர் நான் உன்னுடன் போர் செய்யமாட்டேன்" அதனைக் கேட்ட கும்பகருணன் நகைத்தான். "நீ வீசும் மலையைத்தாங்குவது மட்டுமல்ல சிறிது தளர்ச்சியடைந்தாலும் நான் உனக்குத் தோற்றவன் ஆவேன். எங்கே அந்தமலையை வீசு" என்றான். அனுமன் ஆத்திரத்துடன் வீசியதும் அம்மாமலை கும்பகருணன் தோளில் பட்டுப் பொடிப் பொடியாக உதிர்ந்தது கும்பகருணன் முன்னரைப் போலவே நகை செய்தவாறு நின்றான்.

27
இதனைக் கண்டதும் அனுமன் அயர்ந்தான். இவனது வலிமைக்கு எட்டுத்திக்கு மலைகளும் இணையாகா. இவன் அழகிய தோள்களை எவராலும் அசைக்கமுடியாது. ஒருவேளை இராமனது அம்புகள் இவனைப் பிளக்க நினைத்தால் பிளக்கலாம் என்று எண்ணியபடியே அனுமன் அந்த இடத்தை விட்ட கன்றான்.
வானரர் சேனை தாறுமாறாக அழிந்து விட்டது. அங்கதன் மயங்கிவிழுந்தான். அனுமன் தோற்று வந்தான். இவற்றைப்பார்த்த இலக்குவன் கண்கள் கோபத்தால் சிவந்தன. அரக்கர் தானை மீது அடுசிலை தொடுத்து ஆயிரமாயிரம் பகழிகள் பெய்து ஆரவாரித்து நின்றான். அரக்கர்சேனை பலமாகப் பாதிக்கப்பட்டது அரக்கமகளிர் பல்லாயிரவர் தமது மங்கலநாணிழந்தனர் எனறு கம்பர் கூறுகின்றார் இவ்வாறு இலக்குவன செய்த கொடும் போரைக்கண்டு கும்பகருணன் வியந்தான். 'திரிபுரங்களை எரித்த சிவபெருமான் போலவன்றோ இவன் விளங்குகின்றான் என்று எண்ணினான். உடனே காற்றிலும் கடிது செல்லும் தனது தேரைச் செலுத்திக் கொண்டு இலக்குவன் முன்வந்தான் கும்பகருணன். இருவருக் குமிடையே பெருஞ்சமர் மூண்டது. இலக்குவன் அனுமன் தோளில் ஏறிப்போர் செய்தான். வானரர் கூட்டம் ஆரவாரித்தது. இலக்குவனும் கும்பகருணனும் நேருக்கு நேர் முகங் கொடுத்து வீரவாதம் செய்தனர்.
"நீ இராமனுக்குத் தம்பி. நான் இராவணனுக்குத் தம்பி. நாம் இப்போது போரிடப் போகிறோம். தேவர்களும் இதனைப்பார்க்க வந்துள்ளனர். ‘நாம் போர் முறைகள் கடவாத மரபுக்கமையப் போர்விளைப்போம். எங்கள் ஒரே தங்கையை குற்றமற்றவளை - கொடுங்கோப வெறிகொண்டு அவளது மூக்கினையும், கூந்தலையும் அறுத்தவன் நீ உனது கைகளை இந்த மண்ணில் நான் வீழ்த்துவேன். முடிந்தால் காத்துக் கொள்!" என்று முழங்கினான் கும்பகருணன்! அதற்கு இலக்குவன் விடைகூறாது "என் வில் லினாலேயே இவற்றுக்குப் பதிலளிப்பேன்" என்று கொடிய யுத்தத்தைத் தொடங்கினான்.

Page 18
28
பெரும்போ நிகழ்ந்தது. மாறி மாறி இருவர் விடும் பகழிகளை இருவரும் அறுந்தெறிந்து ஓய்விலாச்சமரில் மேம்பட்டனர். கும்ப கருணது அம்புமழையால் வானரக் கூட்டம் வலியிழந்து ஒழிதலைக்கண்டு வருந்திய இலக்குவன், அனுமனின் வருத்தத்தைக் கண்டு மேலும் ஆவேசமுற்று, மழையெனப் பகழிகள் தூர்த்து கும்பகருணனது தேரையும், யானைகளையும், பூதங்களையும் கூறு கூறாக அழித்தான். (ரம்பகருண்ன் வில்லும் அழிந்தது.
இதனால் அளவிடற்கரிய கோபாவேசத்தனாகிய கும்டகருணன் “இன்றே இந்த இலக்குவன் உயிரைக்குடிப்பேன்" எனத் தனது சூலப்படையுடன்நிலத்தில் குதித்தான். இலக்குவனும் அதற்கமைய அனுமன் தோளினைவிட்டிறங்கி நிலத்திடை வந்தான். மீண்டும் வானரர் சேனை ஆரவாரம் மிக்கது. அப்போது இராவணன் தன்தம்பியாகிய கும்பகருணனுக்கு உதவ மேலும் கடலனைய பெரும்படையினை அனுப்பினான். அவற்றின் எண்ணிக்கை அளவிறந்தது. அப்படையினைக் கண்டதும் மீண்டும் வானரர் கூட்டம் நிலை குலைந்து ஓடியது. இலக்குவனும் கும்ப கருணனுடன் போர் செயய்ய விரும்ப்ாமல் புதிதாக வந்த அரக்கர் சேனையை அழிக்கப் புகுந்தான். இதுகூடக் கும்பகருணன் வீரத்திற்கு இலக்குவன் அஞ்சியமை யையே புலப்படுத்துகின்றது. போர்க்களம் ரத்தகளமாகிக்கிடந்தது. வீரர்கள் தலைகள், கைகள், கால்கள், குதிரைகள், யானைகள், யாளிகள், பூதங்கள், தேரின் உடைந்த பாகங்கள் யாவும் பெருக்கெடுக்கும் இரத்த ஆற்றினால் அள்ளப்பட்டு பெரிய கடலிடத்துச் சென்று சேர்ந்து ஒதுங்கிநின்றன. இந்நிலையிலும் போர் உக்கிரமாகவே நடைபெற்றது. அப்பொழுது 'சுக்கிரீவன் கு:பபகருணனோடு போரிட வந்த என். அப்போரினைப் பார்க்கத்தேவர்களும் விண்ணில் விரைந்தனர்.
"சுக்கிரீவன் ே ருமலையொன்று விடுத்து கும். க்ருனன் மீது வீசினான். அ 1x)cலயோ மாமலை . அதிலே யானைகளும்

29
மலைப்பாம்புகளும் குடியிருந்தன..! அப்பெருமலையைக் கும்பகருணன் தன் உள்ளங்கையால் பற்றிக் கொண்டான். அதுகண்ட அரக்கர் சேனை எழுப்பிய வாழ்த்தொலி விண்ணையும் மண்ணையும் நிறைத்தது. கும்பகருணன் பின்னர் அந்த மலையை சுக்கிரீவன் கண்முன்னேயே மாவைப்பிசைவதுபோலவே பிசைந்து எறிந்தான். அது கண்ட தேவர்கள் நடுநடுங்கினர். சிற்றந்தாளாத கும்பகருணன் தனது சூலப்படையைச் சுக்கிரீவன்மீது ஏவுதலும் அனுமன் பாய்ந்து வந்து அதனைப்பற்றி முறித்தான். சூலம் முறிந்த ஒலி அண்டத்தைப் பிளந்தது. அது கண்ட கும்பகருணன் அனுமனைப்பார்த்து நீ பெருவீரர்களில் ஒருவன் தான். நீ என்னோடு வந்து போரிடு. போரில் நீ சொன்னபடி நான் செய்வேன். என்று கூறிப்புன்முறுவல் பூத்தான். அனுமனோ "முன்பு உன்னை எதிர்த்துப் போரிட மாட்டேன் என்று கூறிப் போரை முடித்துக் கொண்டேன். இனியும் வந்து போரிடுவது பிழையாகும்" என்று கூறி அவ்விடம் விட்டகன்றான். கும்பகருணன் சூலப்படையை இழந்தான். வேறு ஆயுதம் பெறவுமில்லை. களத்தைவிட்டு அகலவுமில்லை. அப்பொழுது சுக்கிரீவன், கும்பகருணன் மீது பாய்ந்து அவனைத் தன்வலிய கைகளால் குத்தினான்.
போரெனில் இரும்பினும் இறுகிய இதயம்படைத்த கும் கருணன்'சுக்கிரீவனைப் பார்த்து! உன் வீரம் சிறந்தது' என்று கூறியபடியே அவனை நெருங்கி இறுக்கிப்பிடித்தான். முறையாகப் போரிட்டான். சுக்கிரீவன் அறிவுதளர்ந்து மூர்ச்சித்து வீழ்ந்தான். அரக்கர் சேனை ஆரவாரித்தது. கும்பகருணன் சுக்கிரீவனை அப்படியே வாரி எடுத்து இலங்கை ஏகத் தொடங்கினான். இது கண்ட் வானரச் சேனை இராமன் திருவடிகளில் வீழ்ந்து வ்ணங்கி ‘இனி எமக்கு அரசர் யார்? என்று கூக்குரலிட்டு, ஆயிரம் பெயர்கள் சொல்லி இராமனை அர்ச்சித்தனர். இராமனும் "எனது சிறந்த நண்பனான சுக்கிரீவனைக்கும்பகருணன் இலங்காபுரிக்கு எடுத்தேகுவானாயின் பெருங்கேடுசூழும்" என நினைத்து வானரர் குரலுக்கு இசைந்து,

Page 19
3()
தனது வில்லை வளைத்து அம்பு மழை பொழிந்து மண்ணிலும், விண்ணிலும் கும்பகருணன் செல்லும் வழிகளைத் தடுத்து நின்றான்.
இராமனது அம்பு மழையால் திக்குகள் மறைந்தன. சூரிய ஒளியும் மறைந்தது . மண்ணும், விண்ணும் ஒரே இருட்டாக மாறிவிட்டிருந்த61. இதனைக்கண்ட கும்பகருணன் ஆற்றாத பெருஞ்சினத்தோடு திரும்பிப்பார்த்தான்.
பேரழகுபெற்றவனாகிய் இராமனைக்கண்டதும் கும்பகருணனது மனதிலே எழுந்த சீற்றம் நெருப்பெனக் கான்றது. அவன் வாயிதழ்கள் துடித்தன. புயங்கள் நெடுத்து உயர்ந்தன. அவன் எழுப்பிய வீரமுழக்கத்தால் மலைகளும், காடுகளும் சரிந்து வீழ்ந்தன குரங்குக் கூட்டத்திற்காகவன்றோ என்னை எதிர்க்கவந்துள்ளாய்? உன்செயல் மிகவும் நயக்கத்தக்கது என்று நவின்றான், நகைத்தான், அடலேறனைய கும்பகருணன்.
V இராமன் - கும்பகருணன் போர்!
கும்பகருணன் இராமனைப் பார்த்து 5 கூறினான்; "நான் பெருவீரன். எனக்கு இழுக்கு ஆகக்கூட. து என்பதால் உன் தம்பியாகிய இலக்குவன் மீது கோபம் 9ெ 1ள்ளவில்லை. அவனுக்கு வாகனமாக வந்த அனுமன் துே கோபம் கொள்ளவில்லை. உன்னை விரும்புகின்ற, வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன் மீதுகூடக் கோபம் கொள்ளவிலலை உன்னையே நான் தேடித்திரிந்தேன்."உன்சேனை எனக்கு முன்!ற்கமுடியாது. உன்தம்பியே ஒதுங்கி ஓடிவிட்டான். அனுமன் அஞ்சி நடுங்கி அகன்றான். வெறும் வாய் வீரம் பேசிய இந்தச் சுக்கிரீவனை ஒரே அடியினால் மூர்ச்சிககச் செய்து எடுத்து வந்தேன். இப்பொழுது நீ இந்த வாரத்தைக்க்ாக்க என் முன் வந்து நிற்கிறாய். உன்னிடம் போர் புரிந்து என் அண்ணன் மனதிலுள்ள கவலையை மாற்றுவேன். இந்தச் சுக்கிரீவனை எனது

3
பிடியிலிருந்து விடுவிப்பாயானால் சீதையையும் விடுவித்த வனாவாய். "என்று ஆர்ப்பரித்தான் கும்பகருணன். இதனைக் கேட்ட இராமன் புன்னகை புரிந்தான். "சுக்கிரீவனை எடுத்துவந்த உன்தோள்களை அறுத்து வீழ்த்தாவிட்டால் நான் உனக்குத் தோற்றவன் ஆவேன்" என்று ஆவேசமாக முழங்கினான். இதன்பின் இருவருக்கும் கொடிய போர் மூண்டது. இராமன் தனது அம்பறாத்தூணியிலிருந்து கும்பகருணனை ந்ோக்கி அம்புமாரி பெய்தான். கும்பகருணனது நெற்றியிலும், தலையிலும் இராமபாணங்கள் உள்டுருவின. இரத்தம் ஆற்று நீராக வடிந்து ஒடியது. அதனால் உணர்வு வரப் பெற்ற சுக்கிரீவன், கும்பகருணனது மூக்கையும், காதுகளையும் கடித்து எடுத்துக் கொண்டு வானர சேனையைச் சென்றடைந்தான். குரங்குப்புத்தி இது வென்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
இராமபாணங்களால் அயர்ந்த கும்ப கருணன் சுயவுணர்வினை மிகவிரைவில் பெற்றதும் தனக்கும், அரக்கர் குலத்துக்கும் நேர்ந்த இழுக்கை எண்ணினான். கேடகமும் வாளும் ஏந்தி விந்தான். அவனது வாளின் சுழற்சியால் விண்மீன்கள் உதிர்ந்தன. ஆதிசேடன் நெளிந்து வளைந்து பூமியை அதிரச் செய்தான். அவனது ஆரவாரம் எல்லையற்றுப் பெருகி , அனைவரையும் அஞ்சி நடுங்கவைத்தது. குரங்குப் படைகளை வாளினாலும், கேடகத்தாலும் கொன்று குவித்தான். எங்குபார்த்தாலும் குரங்குப் படையே இறந்துகிடந்தன. இதனைக்கண்ட சாம்பவான் இனியும் கும்பகருணனைக் கொல்லாவிட்டால் நம்பக்கலில் எவரும் எஞ்சுவாரிலர் என்று இராமனிடம் பணிந்து வேண்டினான், தூண்டினான்.
“இராமனும் ஒருமுடிவு காண்பதே நன்று' என்று களத்திடை நண்ணினான். இருவர்போரிலும் நீண்ட நேரம் படைக்கலன்கள் பேசின. இராமபாணங்கள் தாறுமாறாக முறியச் கும்பகருணன் சிதற அடித்தான். கும்பகருணனது வாளி இராமன் துண்டாக்கவே அவன் அக்கணத்தே மற்றெ வயிரவாள் பற்றி முழக்கமிட்டான். இராமன் மீண்டும் அவனது

Page 20
32
வலிய வாளையும் கேடச த்தையும் பல்ல 1ம் பகழிகள்
செலுத்தி அழித்தான். அப்பொழுது மீண்() இராவணன் அனுப்பிய பெரும்படை களத்திடை வந்தது.
குதிரைப்படை, தேர் படை, யானைப்படை, காலாட்படை ஆகிய நாற்படைகளும் சூழ்ந்து நிற்க கும்பகரு ைன் கூற்றையும் ஆடல் கொண்ட வீரனாகக் களத்திலே தனித்துநின்றான். இராமன் அப்படைகளை எதிர்த்து நின்றான். கும்பகருணனும் தன்னிடத்தேயுள்ள அளவற்ற சக்திபொருந்திய முச்சிலைச் சூல்ப்படையை ஏந்திவந்தான். அப்பொழு فا அவனால் அரக்கர்தானை அழிவதனைத் தடுக்கமுடியவில் ல.இராமனது சரமாரியால் தன் பெரும் படை ஒழியத தனித்துநின்ற கும்பகருணனைப் பார்த்து இராமன் இவ்வாறு சொன்னான். "உன்படை வீரர்கள் அழிந்தனர். நீ தேைய நிற்கிறாய். நீதிமானாகிய வீடண்னுடன் பிறந்தவன் நீ. அத அால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். திரும்பிச் செல்கிரா யா? அல்லது இப்பேர்தே என்னுடன் போரிட்டு இறக்கிறாயா? உன்கருத்து என்ன? நீ செய்த பாவங்கள் தீரவில்ல்ை. விணன் மூலம் அழைத்த போதும் வரவில்லை. எல்லாவகையான செல்வமும் உனைவிட்டு நீங்கலாயிற்று. நீண்ட உறக்கத்த சன்பின், இறப் பதற்காக இங்கே வந்துநிற்கின்றாய்?" இ. புரை கேட்ட கும்பகருணன் கூறினான் - “நீ கூறியளல்லாடே இருக்கட்டும். உங்களாலே மூக்கிழந்த சூர்பனகைபோல, நா: ம் மூக்கிழந்து காதிளந்து நிற்கிறேன். எனது நீதியுரையை எம் முன்னவன் கேட்டானில்லை. மானமிழந்து பகைவர் ந ைக்க கும்பிட்டு வாழும் வாழ்க்கையை நான் கணமும் விரு ப மாட்டேன். மாறாக, உங்கள் தோளையும், தலையைபு வாளினால் துணித்து உயிரினைப் பருகி என் அண்ணன் ம. ழச்,சீதையின் அழகை அவனுக்குக் கொடுப்பதற்கே பந்துள்ளேன். பேடியரைப்போலப் புலம்புவது என் போன்ற சுத்த வீரர்களுக்குத் தகுதியாகாது. இத்தகைய புன் மொழிகளைப் புகல்வதும் உன் போன்றோர்க்குத் தகுதியாகாது "

፲፭6}
இவ்வாறு கூறிமுடித்ததும் தனது கொடிய சூலப் படையை வலக்கையிலிருந்து இடக்கைக்கு மாற்றிக் கொண்டு, வலக்கையால் மாபெரும் மலையொன்றினைப் பெயர்த்தெடுத்து விண்ணில் எழுந்து, தீப்பொறிபறக்க இராமன் தலை மீது வீசினான் கும்பகருணன்.
ஆனால் இராமனது அம்பு அம்மலையைப் பொடி செய்தது. அவன் கைவேலினைத் துண்டாக்கியது வேறொரு அம்பு, இராமன் தனது அம்புகள் கும்பகருணன் மீது பட்டு முறிகின்றனவே தவிர அவனது நெஞ்சைப்பிளக்க வில்லையே என்று அவதியுற்றான். பின்னர் ஆராய்ந்து "இது சிவன் அளித்த கவசம்’ என்று ஒர்ந்து அதற்குரிய அம்பினைச் செலுத்தி அக்கவசத்தை அறுத்தான் இராமன். அக்கவசம் மேருமலையை வலம்வரும் சூரியன் விழுந்தது போலக் கீழே விழுந்தது ! கவசம் இழந்ததும் கடுஞ்சினங் கொண்ட கும்பகருணன் வலிய நீண்ட கதாயுதம் ஒன்றினைப் பற்றிக் கொண்டு குரங்குப் படையைச் சாந்து போல அரைத் தான். இராமன் அக்கதாயுதத்தையும் தன் அம்புகளால் துண்டுபடச் செய்தான். கும்பகருணன் மீண்டும் வாளும் கேடகமும் கொண்டு தோன்றினான்.கும்பகருணன் இவ்வாறு வாளை ஏந்தியதும் வாணர சேனை எல்லா வழிகளாலும் ஓடியது. தேவர்களும் தலைநிமிர்ந்து பார்க்கமுடியாமல் தம் தலைகளைக் குனிந்து கொண்டனர். இதைக்கண்ட இராமன் கும்பகருணனது வலக்கரத்தை தன் வலிய அம்பினால் துணித்தான். தோளுடன் துண்டிக்கப்பட்ட வலது கரத்தினையே வலிய ஆயுதமாக மாற்றிக் கொண்டான் கும்பகருணன். அந்தக் கரத்தினாலேயே பல்லாயிரக்கணக்கில் குரங்கு வீரர்களைக் கொன்று குவித்தான். அவனைப் பணிந்துஉயிர் பிழைத்தவர் தவிர, எஞ்சியோர் யாவரும் இறந்துபட்டனர் இராமன் பக்கத்திலிருக்கவே இவ்வாறு சூறாவளியாகக் கும்பகருணன் போரிடுதல் கண்டு இராமனே அயர்ந்தான். அற்றுப் போகாத கையைக் காட்டிலும் அற்றுப்போன கையே இராமனுக்கு அபாயமாகத்தெரிந்தது.

Page 21
34
தேவர்களும், வானரரும், கும்பகருணனது இடக்கரத் தையும் துணித்திடுக என்று இராமனிடம் இரந்தனர். இராமனும் அதற்கிசைந்து கும்பகருணனின் இடக்கரத்தையும் துணித்து கடலில் ஓர் அணை அமைந்திருப்பது போல வீழச்செய்தான். இப்பொழுது கும்பகருணன் தனது இருகரங்களையும் இழந்து மந்தர மலையினைப் போலச் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். இது கண்டு தேவர்களும், வானரசேனையும் கடலொலியென ஆரவாரித்து மகிழ்ந்தனர்.
கரங்கள் இரண்டினை இழந்த போதும் களத்திடைக் கும்பகருணன் காற்றெனத் திரிந்தான். தனது கால்களால் எட்டியுனிதத்தும், முட்டிமிதித்தும், உழக்கியும் குரங்குக் கடலைத் தன் கால்களால் கலக்கினான். இவ்வாறு காற்று, நெருப்பு, நீர், ஆகாயம் முழுதுமே நிறைந்து அழிவு செய்து உயிர்களைக் குடிப்பவனாகி, சினம் மிகுந்த எமனும், அஞ்சாமை கொண்டவர்க்கு அரசனும் ஆகிய கும்பகருணனது அடலாண்மை தாங்காத இரர்மன் மீண்டும் தனது கூரிய அம்பு ஒன்றினால் அவனது வலக்காலைத் துண்டித்தான். களத்திற்கு வரும் போதே தன் காலத்தையும் கணித்து வந்தவனான கும்பகருணன் தனது ஒற்றைக்காலுடன் நொண்டி நொண்டி நடந்தான். மற்றெருகால் இல்லாமையால் வானத்தை எட்டும் ւսւդ- Զ-ահibéն நின்று வாயினால் அருகில் நின்றவற்றை எல்லாம் கடித்து ஏந்தியவாறு ஒரு சுழல் காற்றுப்போல வட்டமிட்டு எதிர்ப்பட்ட அனைவரையும் கொன்றான். மிதித்து அழித்தான், வதைத்தான், சிதைத்தான். இதனைச்சகிக்கமுடியாத இராமன் கும்பகருணனது மற்றொரு தோளையும் வெட்டி வீழ்த்தினான். இராமனின் அம்புகளால் கும்பகருணனின் இரண்டுகைகளும், இரண்டு கால்களும் அறுபட்டன. பெரிய மலையைப் போன்ற அவனதுடல் இரண்டுலட்சம் அம்புகளால் முதுகுவழியே வெளிப்படுமாறு துளைக்கப்பட்டது. அவனது சிவந்த கண்களிலிருந்து வெளிப்பட்ட அக்கினிச்சுவாலை இருமடங்காகப் பெருகியது. பெருங்கோபம், ஆரவாரத்துடன், பெய்கின்ற வானத்தில் தோன்றுகின்ற இடியைக் காட்டிலும் மிகுதியாக வளாந்தது.

35
VII இராமன் கை நடுங்குதல்
கால்கள் இல்லை, கரங்கள் இல்லை. ஆனால் அவனது போராற்றலும் பேராற்றலும் முடிந்தபாட கவில்லை.
"கைஇரண் டொடு கால்களும் துணிந்தன
கடுவரைபொருவும் தன் மெய் இரண்டு நூறாயிரம் பகழியால்
வெரிற் உறத் தொளை போன செய்யகண் மொழித் தீச் சிகை இருமடி
சிறந்தது செழிப் போடும் பெய்யும் வானிடை இடியினும் பெருத்தது
வளர்ந்தது பெருஞ்சீற்றம் !"
தனது மூச்சுக் காற்றுக்களை வேகமாகத் திசைகளில் செல்லுமாறு ஊதக் குரங்குப்படைகள் இடியினால் இறப்பவை போலத் தாக்கப்பட்டு இறந்து அழிந்தன. நெருப்புமிழும் கண்களையுடைய கும்பகருணன் தன்னிட மிருந்து பிறக்கும் தீச்சுவாலையினால் திசைகள் யாவும் தீயந்து போக, மூங்கில்கள் நிறைந்த மலை ஒன்றைத் தனது நாக்கு வானத்தைத் தடவுமாறு வளைத்து நீட்டி, ஏந்தி எடுத்து பேய்களின் ஆரவாரத்தைக் கொண்ட போர்க்களம் தீய்ந்து போக தனது வாயினால் வெகு தூரம் செல்லுமாறு ஊதினான். அந்த வீரச் செயலைக் கண்ட இராமனும் தனது தாமரை மலர் போன்ற கை நடுங்க நின்றான்.
தீயினால் செய்த கண்ணுடையான் எழும்
விசையினால் திசை தீய வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால்
விசும்புற வளைத்து ஏந்தி பேயின் ஆர்ப்புடைப் பெருங்களம் எரிந்து எழ
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப் புற்றான்!”

Page 22
38
இறுதி வரை பொருதுதலே இலட்சியமாகக் கொண்ட மானவீரனின் மறத்தன்மை கண்டு இராமனே விதிர் விதிர்த்து கை நடுங்கினான் என்றால் அவன் பெருவீரத்துக்கு இணையாக எதனைச் சொல்லலாம்?
இராமாயணக் காப்டயத்துப் போர் நாயகன், கூற்றையும் ஆடல் கொண்ட கும்பகருணனே என்பதில் எள்ளளவும் ஐயத்திற்கு இடமேயில்லை. அன்றியும் தன்னலங்கருதாது இனநலத்திற்காக இன்னுயிரை அர்ப்பணித்த கும்பகருணன் என்றும் அழியா அமரன்.
VI கும்பகருணன் இராமனை வேண்டுதல
அரசராயினும், ஆன் றோராயினும், சான்றோராயினும், வேறெவராயினும் அனைவருக்கும் முப்பெருநிலைகள் P-67. பிறத்தல் - வாழ்தல் - இறத்தல். இம்மூன்று நிலைகளிலும் பழிபிறங்காப் பண்புடையாராய் வாழும்பாங்கு மிகச் சிலருக்கே பொருந்துவதாகும். ஏனையோரெல்லாரும் ஏதோ ஒரு நிலையில் ஈனப் பட்டு, மானந்துறந்து தம் பெயர் மங்கப் பெறுகின்றனர். ஆனால் மானவீரன் கும்பகருணன் வாழ்வில் ஒருபோதும் அந்நிலை ஏற்படவில்லை. பெருன்மவாய்ந்த குடும்பத்தில் பிறந்தான். பெருந்தவஞ்செய்தான். பெறர்க்கரும் பெரும் வரங்களைப் பெற்றான். வானவர் வஞ்சனையால் ஊழிக்காலம் உறங்கப்பெற்றும் உயரிய நெறியினின்றும் அவன் வழுவினான ல்லன். அரசபோகத்தையோ, அழகியற்போகத்தையோ, புகழின் போகத்தையோ அவன் நாடினானல்லன். குலமானம் குறைவறப் பெற்றான். செய்ந்நன்றி மறவாச் செம்மைபூண்டான். போரில் வீரசுவர்க்கம் புகுதலே மேலெனக் கொண்டான். உயிர் துறக்குந் தறுவாயிலும் உண்மை துறவாத் தன்னிலையை -மானவேட்கையை, குலப்பற்றை தன்னேரில்லாத வீரனுக்குரிய தகைமையோடு இராமனிடமே நேரில் கேட்டுக் கொள்கின்றான்.

37
ஒருகணம் தன் தமையனை - அவனுக்கு நேரப்போவதை எண்ணித் துக்கித்தான். மறுகணம் தன்தம்பி வீடணனை எண்ணி இதயம் பதைப்புறுகின்றான். ஈற்றிலேதான் தன்னை நினைத்துப் பார்க்கிறான். போரிலே சாதல் என்பது கும்பகருணனுக்கு அமிழ்தம் அருந்துவது போன்றது. "ஆனால் பகைவர்களான முனிவர்களும், தேவர்களும் "மூக்கில்லா முகம்" என்று ஏளனத்தோடு என்முகத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் அவ்வாறு காணாதபடி என்கழுத்தை அறுத்திடுக. அறுத்தபின்பு எனது பெரிய தலையைக் கரிய கடலுக்குள் மறைத்துவிடுவாயாக. உன்னிடம் எனக்காக நான் வேண்டிக் கொள்வது இதுவே!"
மூக்கிலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும் நோக்குவார் நோக்காமை நுண்கைணயால் என்கழுத்தை நீக்குவாய் நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள் போக்குவாய் இதுநின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்"
இவ்வாறு இராமனிடம் கும்பகருணன் கேட்டதும் அதனை மறுப்பது முறையன்று என்று கருதிய இராமன், தனது வலிமை வாய்ந்த பெரியவில்லில், உயர்ந்த நீண்ட நாணைப்பூட்டி, ஓர் அம்பைச் செலுத்தி அதனால் கும்பகருணனது தலையைக் கொய்தான் கொய்ததலையை, கடிய வாயு அத்திரத்தினால் பாதாளம்வரை ஆழ்ந்துள்ள கரிய கடலின் மிக ஆழமான் பகுதியில் அழுந்துமாறு செய்தான்.
இவ்வாறு மான வீரனான கும்பகருணன் பிற்ப்புமுதல் இறப்பு வரை மானமொன்றே பெரிதெனக் கொன்டு, செய்ந்நன்றிமறவாது மாற்றல்ரும் ஏற்றிப்புகழும் வீரமரணம் எய்தினான்.

Page 23
38
X கம்பர் கண்ட கும்பகருணன்,
கம்பராமாயணம் ஒரு வழிநூலாகும். மூலநூல் வான்மீகி இராமாயணம். இவற்றினைவிடப் பல இந்திய மொழிகளிலும் இராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் கம்பரா மாயணத்திற்கு நிகரான இராமாயணங்கள் வேறு எம்மொழியிலும் இல்லை என்று பேரறிஞர்களான அமரர்கள் ராஜாஜி, தெ.பொ.மீ, டாக்டர் மு.வ. ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அறிஞர் அண்ணா முதலான பலர் அறுதியிட்டுக் கூறியுள்ளனர். கம்பனது பாத்திரப்படைப்புக்கள் உயிரோடும், உணர்வோடும் உலாவுபவை. ஒவ்வொருபாத்திரமுமே தன்னேரிலாப் படைப்பாகக் கம்பன் கவித்திறனால் மிளிருகின்றது. ஆனால் ஒட்டுமொத்தமாகக் கம்பராமாயணத்தைப் பார்க்கும் போது பல்வேறு காப்பிய முரண்பாடுகள் தோன்றுகின்றன. தமிழர் பண்பாட்டுக் கொவ்வ்ாத சில சங்கதிகளும் ஆங்காங்கே தலைகாட்டுகின்றன. இஃது கவிச்சக்கரவர்த்தி வேண்டுமென்று இழைத்த தவறுகளல்ல. வான்மீகிராமாயணத்தில் மூழ்கியெழுந்த அருட் டுணர்வுகள் அவரையுமறியாமலே அவரது பாத்திரப்படைப்புகளில் புகுந்து கொண்டிருக்கலாம். கம்பன் படைத்த பாத்திரப்படைப்புகளில் எவருமே குனிறகாண முடியாத அவன், பேருணவும், நறவும் மாந்தி, வானவர் இழைத்த வஞ்சனையால் ஊழிக்காலம்வரை துயின்று கொண்டிருந்தான் என்பதனைத்தவிர அவன்மீது ஏதும் குற்றம் குறை காணமுடியாது. நறவும் , ஊனுமருந்துதல் வால்மீகி ராமாயணத்தில் "தெய்வ அவதாரங்கள்" எனப் புகலப் படுபவர்களுக்கே இயல்பாக அமைந்துள்ளது. அவ்வாறிருப்ப அரக்கர்கோன் பின்னோனான கும்பகருணன் நறவும் ஊனும் அருந்தியதில் எதுவித ஈனமுமில்லை. அவன் இல்வாழ்க்கையை விரும்பினானில்லை. அரச போகத்தை விரும்பினானில்லை. அழகிய மாதரும் அமளி மிசை அரும்பும் கலவியின்பத்தைக் கருதினானில்லை. இவற்றுக்கு மாறாக வீரத்திலும், மானத்திலும்,

39
நன்றி மறவாமையிலும் இராமாயணப் பாத்திரங்களிலேயே தன்னேரிலாத சிறப்புடையவனாக விளங்குகிறான் கும்பகருணன்.
நீதியை நிலைநிறுத்த அவன் தயங்கியதில்லை. மூவுலகும் ஒருங்கே ஆண்ட தன் முன்னோன் இராவணனைப்பார்த்தே "பிறன்மனை நயப்பது கேடுதரும்" என இடிக்குரலில் எடுத்துரைத்தான். ஆனால் அண்ணனுக்காக ஆருயிர் துறப்பதே தன் கடன் என்று போர்க்களம் புகுந்தான். இராவணன் தம்பியாகிய வீடணனை வெகுண்ட போதும், கும்பகருணன் அவ்வாறு வெகுளவில்லை. அறத்தின்பாற்பட்டு அவன் ஒழுகுதலிலும் நியாயமுண்டு என்றே கருதினான். சூர்ப்பன்கை இலக்குவனால் முக்கறுபட்டு வந்த போதும், இராவணன் மீது தன்கணவனைக் கொன்ற முன்பகையைச் சீதையின் ஒப்பிலா அழகை வருணிப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள முயன்றபோதும், வெள்ளை உள்ளத்தினனான கும்பகருணன் ஒரு 6r6rfu மனிதனான இலக்குவனால் என்தங்கை மூக்கறுபடுவதா என்றே வெய்துயிர்த்தான். இராவணன் மனைவியரைத் தன் அன்னையர் டோலும் , அவன் புதல்வர்களைத்தன் புதல்வர்கள் போலும்,அரக்கர் குலத்தின் மானமே தன்மானம் என்றும் தருக்கி வாழ்ந்தவன் கும்பகருணன்,
யுத்தகளத்திடையே தம்பி வீடணனுக்கு அவன் செய்த தர்மஉபதேசத்தில்
"நீர்க்கோல வாழ்வை நச்சி." என்று தொடங்குகிறான். இது கும்பகருணன் ஒருவனாலேயே தெரிந்து கொள்ளக்கூடிய, அனுபவிக்கக்கூடிய எதிர் கொள்ளக் கூடிய ஏற்றமாகும். இதற்கு நிகராக இலக்குவனோ, பரதனோ, சீதையோ, திரிசடையோ, வீடணனோ, வேறு எவருமோ பேசியது கிடையாது. பெருமையடையவும் முடியாது. மல்லார்ந்த பெருவீரனான கும்பகருணனைக் காப்பியக் கட்டுக் கோப்புக்காக கம்பர் நீண்ட துயிலினான், நறவும், ஊனும் அருந்துவான் என்றும், அவனையும், அரக்கரையும், அரக்கமகளிரையும் "அழக்ற்றவர்கள்,

Page 24
4O
கோரமான வடிவத்தையுடையவர்கள்" என்று வருணித்து இருந்தாலும் பாடலுக்குப் பாடல் காட்சியும் கருத்தும் மாறு படுதலைக் கம்பராமாயணத்தை ஊன்றிக் கற்பவர்கள் தளகித்தறிவர். அனுமனே இராவணன் மனைவியராகிய மண்டோதரியையும், தானிய மாலியையும் பார்த்து, "இவர்கள் தாம் சீதையோ என்று ஐயுறுகின்றான். மண்டோதரி மயன் மகள். ஆனால் தானிய மாலி அரக்கர் மகளன்றோ
கும்பகருணனைப் போன்ற பெருவீரனை கம்ப ராமாயணத்தில் மட்டுமன்று, உலகப்பெரும் காப்பியங்களிலும் காணல் அரிது. தன்னலந்துறந்த அவன் தியாக வாழ்க்கையையும், அஞ்சாமையையும், அறத்தின்பாற் கொண்ட பற்றும் இனமானமும் என்றும் வாழும்படி யாகக் கம்பர் தம் கவித்திறனாலே அவனை ஒப்பாரும் மிக்காருமில்லாத பெருவீரனாக உலவ விட்டிருக்கிறார். கம்பராமாயணம் என்றோ முடிந்த ஒரு காப்பியம் அன்று. இன்றும், என்றும் இந்த உலகு உள்ளளவும் நின்று நிலைக்கக்கூடிய பெருங்காப்பியமாகும். அந்த அளவில் மானவீரனான கும்பகருணன் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கக் கம்பர் கும்பகருணனை உத்தம பாத்திரமாக எமக்குத் தந்துள்ளார்.
முற்றும்

添、
1}, yo #, ታ...f, }} [ | .
s, t) ཏན་ “நாவேக்கன்
● ● ●
لـ
m --- - ---
-- - - ܫ ܪܝܚܗ ܚ ܚܫ ܚ ܚܚܝ ܝܚ

Page 25
  

Page 26
嵩
 


Page 27
நாவேந்தன் பை
நுாலுருவில்.
நான் ஒரு பிச்சைக்
தலைவர் வண்ணியச
சிறி அளித்த சிறை
வாழ்வு - சிறுகதை
(சாகித்திய மண்டலப்
தெய்வ மகன் - சி
சிலப்பதிகாரச் செ
மாவட்ட அபிவிருத் கரிக்க வேண்டும்?
டாக்டர் ஜோன்ஸ்க
டாக்டர் ஜோன்ஸ்கட
பெருநெருப்பு - நா
மகதலேனா மரியா

டப்புகள்
காரன்
சிங்கம்
)
த் தொகுதி பரிசு பெற்றது - 1964)
றுகதைத் தொகுதி
ந்நெறி
திச் சபைகளை ஏன் பகிஷ் -
పై
டர் வரலாறு
டர் - நாடகம்
ாடகம்
ள் - குறுங்காவியம்