கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மண் மறவா மனிதர்கள்

Page 1


Page 2

மண்மறவா மனிதர்கள்
வி. ரி. இளங்கோவன்
வெளியீடு:
கொழும்பில் : பிரான்சில் :
V - DDT பதிப்பகம், முன்னோடிகள், 23, 33 அறத்துசா ஒழுங்கை, vt.elangovanayahoo.fr QahirՓմbպ - 06 T.P.: 0033950493232

Page 3
BIBLIOGRAPHICAL DATA
Title MAN MARAVA MANITHARKAL
(ACollection of Articles)
Author V. T. Elangovan
Edition September, 2011
Published by Uma Pathippakam,
23, 3/3 Arethusa Lane, Colombo 06. Sri Lanka
Distributed by : Lanka Book Depot (Pvt) Ltd
F.L.1-14, Dias Place, Gunasingapura, Colombo 12. Sri Lanka. T.P.:-2341942
Computer Typing : Global Graphics.
#14, 57th Lane, Wellawatta, Colombo 06 Sri Lanka. T.P. :- 2360678
ISBN : 955-1162-37-5

தமிழரசுக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர், இலக்கியப் பிரதிநிதி, சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம், நாடகம் அத்தனையிலும் ஆழத் தடம் பதித்தவர். சின்னஞ் சிறு வயதிலேயே எமக்கு இலக்கியப் போதையை ஏற்றி விட்ட அண்ணர்
நாவேந்தனுக்கு.

Page 4

அணிந்துரை
திரு. விரி. இளங்கோவன் அவர்களின் இந்நூலுக்கு *அணிந்துரை வழங்குவதில் மிக்க மகிழ்வுறுகிறுேண். அவர் மறைந்த சில முக்கியமானவர்களின் ஆளுமைகளைப் பற்றி, அவர்கள் மறைந்த சந்தர்ப்பங்களில் இரங்கலுரையாக எழுதியவற்றை ஒரு தனி நாலாகத் தொகுத்து வெளிளிடுகின்றார். காலஞ்சென்ற அப்பெரியார்கள் அனைவரும் வெவ்வேறு தறைகளில் சிறப்பான பங்களிப்புக்களைச் செய்தவர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்தறைகளில் ஆற்றிவந்த தொண்டும், பங்களிப்பும் அப்போதைய தமிழ்ச் சமூகம் நன்கறியும். ஆயினும் அவை பற்றிப் புதிய தலைமுறையினர் அறிந்திட வேண்டிய அவசியம் ஒன்று உண்டு. அதனைக் கருத்திற்கொண்டே திரு. இளங்கோவன் இந்நூல் வெளியீட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும்.
மறைந்த பெரியார்களை மட்டுமன்றி இளந்தலை முறையினரையும் கருத்திற் கொண்டு இந்நூலாசிரியர் செயற்பட்டுவருகின்றார். அதனை இந்நால்மூலம் நன்குணர முடிகிறத. தாம் நன்கு பழகியவர்களதம் அறிஞர்களதம் எழுத்தாளர்களதும் சீரிய பண்புகளை, ஆளுமைகளை, ஆற்றல்களை, தொண்டுகளை இதன் மூலம் நினைவுகூருகின்றார்.
இந்நூலாசிரியர் இளங்கோவன் இலக்கியத்தில் களம் பல கண்டவர். சிறந்த சிறுகதை ஆசிரியர். இளமைக்காலம் முதல் மார்க்சிய சிந்தனையை வரித்துக் கொண்டு, முற்போக்கு இலக்கிய உலகில் பிரகாசித்தவர். பிரான்சில் வாழ்ந்தாலும் தமிழ் வளர்ச்சியிலும் படைப்பிலக்கியப் பணிகளிலும் அக்கறையுடன் செயற்பட்டுவருபவர். இலங்கையரின் இலக்கியப் பணிகளைக் கூர்ந்த நோக்கி, இலக்கியச் செல்நெறிகள் பற்றிய விபரமான கிரகிப்புகளைக் கொண்டவர். இவ்வார்வம் காரணமாகவே இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்பவர்.

Page 5
இலங்கையில் அவரது நூல்கள் தொடர்ந்து வெளியிடப்படுவத பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
இந்நூலில் பதினேழு பெரியார்களைப் பற்றிய தமத மனப் பதிவுகளை நாலாசிரியர் நன்கு புலப்படுத்தியுள்ளார். இவர்களிற் பலர் எனக்கும் தெரிந்தவர்கள், தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறிந்தவர்கள். சீனச் சார்பு பொதுவுடைமைக் கட்சியின் ஆசான் என். சண்முகதாசன், பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன், நாவலாசிரியர் டானியல் என்றல்லாத மற்றவர்களும் தமது வாழ்நாளில் தத்தமது தறைகளில் தடம் பதித்தவர்கள். இவர்களுடைய வாழ்க்கைப் பணிகளையும் ஏராளமான தகவல்களையும் நாலாசிரியர் இந்நாலில் விபரமாக எழுதியுள்ளார். இவர்கள் அனைவரதும் பணிகளைத் தமிழ் மக்கள் நிச்சயமாக நினைவு கூரும் வகையில் நாலாசிரியர் எளிமையான மொழிநடையில்
சுருங்கக் கூறி விளங்க வைத்தள்ளார்.
உண்மையில் மேற்சொன்ன பெரியார்களின் சிந்தனைகள், பணிகள், பங்களிப்புப் பற்றி மேலும் விளக்கமான, விவரமான, விரிவான நால்களின் தேவையை நாலாசிரியர் உணர்த்தியுள்ளார். அன்னாரின் எழுத்துப் பணிகள் இன்று பிரதான நாலகங்களில் மட்டுமே பார்க்கக் கூடியவை. எவ்வாறாயினும் இளங்கோவின் இவ்வெழுத்து முயற்சிக்குத் தமிழ் கூறும் நல்லுலகு தனது மகத்தான வரவேற்பை வழங்க வேண்டும் என்பதே எமத வேண்டுகோள்.
88/3, 37ஆவது ஒழுங்கை, பேராசிரியர். சோ. சந்திரசேகரன் கொழும்பு ~ 06.

வாழ்த்துரை
இலக்கியம் படைத்தல் என்பது தவமியற்றல் போன்றது. தான் வாழும் சமூகத்துடன் படைப் பாளியொருவன் கொணி டுள்ள தாக்குறவுகளின் வெளிப்பாடாகவும், உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளின் உந்துதலாகவும் தான் அறிந்த, அனுபவித்த, ஆகள்சித்த பிரச்சினைகள் பற்றியதாகவும் ஒருவனது இலக்கியம் படைக்கும் முயற்சிகள் அமைகின்றன. தனது சிந்தனைகளையும், அனுபவங்களையும் கலைத்துவம் என்னும் தூரிகை கொண்டு அந்தப் படைப்பாளி ஏதோவொரு இலக்கிய வடிவில் தீட்டிவிடுகின்றான். ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் அனுபவச் சிதறல்கள், கலைக் கண்ணோட்டங்கள், மொழித்திறன்கள், ஊடுருவி நிற்கும் உணர்வின் கொந்தளிப்புகள் முதலானவை தனித்துவமானவை, அவரவர் அளவில் வேறுபடக் கூடியவை. இருப்பினும் சமூக அக்கறையுள்ள படைப்பாளியின் பேனாவானது சமூகப் பயன்பாடுள்ள எரியும் பிரச்சினைகளிலேயே தீவிர நாட்டங் கொண்டு உழைக்கிறது. சமூகத்திடையே புரையோடிப் போயிருக்கும் அழுக்குகளை அப் புறப் படுத்தத் துடிக் கிறது. சமூக அவலங்களையும் , அறியாமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிச் சமூக மாற்றத்தின் தேவைகளை உணர்த்துகிறது. பொருண்மையும், உண்மையும், கலைத்துவமும் கலந்த உயரிய இலக்கியப் படைப்புகளால், தான் விரும்பிய நோக்கத்தை மனிதம் தழுவியதாக எய்துவதற்கு அரும்பாடுபடுகிறது.
இத்தகைய மானுடம் பயனுற விரும்பும் இலக்கிய ஆக்க முயற்சிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் உழைத்துவருகின்ற படைப்பாளிதான் திரு. வி.ரி. இளங்கோவன். இலங்கையின் தீவகத்துப் பேரூரான புங் குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பாரம்பரியம்மிக்க கல்வியறிவிலும், கலையனுபவங்களிலும் ஆயுர்வேத

Page 6
மருத்துவத்திலும் சிறந்து விளங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது மூத்த சகோதரர்களான நாவேந்தன், துரைசிங்கம் ஆகியோரின் வழிகாட்டலில், பதினைந்தாவது வயதிலிருந்தே, பள்ளிப் பருவத்தில் இலங்கையின் மூத்த தமிழ்த் தினசரியான “வீரகேசரி” யின் நிருபராகப் பணியாற்றத் தொடங்கியவர். மெல்லமெல்ல அப்பத்திரிகையிலேயே கவிதை, சிறுகதை எனத் தனது ஆரம்பகால எழுத்துக்களை அறுவடை செய்தவர். இளமையிலேயே யாழ்ப்பாணம் ஆயுர் வேதக் கல்லூரியின் உதவி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றவர்.
‘மூலிகை’ என்னும் மருத்துவ சஞ்சிகையை நடத்தியவர். எழுபதுகளில் எழுத்தாளர் கே. டானியல் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் முற்போக்குச் சிந்தனையாளராகவும் உலக வியாபகமானதோர் பேரியக்க ஆதரவாளராகவும் உண்மையான அக்கறையுடன் செயற்பட்டவர். மக்கள் எழுத்தாளர் டானியலைத் தலைவராகக் கொண்ட மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயலாளராகச் செயற்பட்டவர். ‘மக்கள் இலக்கியம்’ என்னும் பத்திரிகையின் வெளியீட்டிலும் பங்குகொண்டவர். டானியல் நோயுற்றிருந்த இறுதிக்காலத்தில் அவரைத் தமிழ் நாட்டு:க்கு மருத்துவ சிகிச்சை பெறுதற்காக அழைத்துச் சென்று, அவரது இறுதிவரைக்கும் உடனிருந்து செயற்பட்ட உண்மையான நட்பாளர்.
பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன், பாரதிநேசன் வீ. சின்னத்தம்பி, கே. டானியல் போன்றோருடனான இளங்கோவனின் நட்புறவானது முற்போக்குச் சிந்தனைகள் அவரிடத்தே முகிழ்வுறவும், இடதுசாரி அரசியல் சார்ந்தோரது அறிமுகங்களும் நட்புகளும் பெருகிடவும் வழிவகுத்தது. அவர் இளமைத்துடிப்புடன் இலக்கிய உலகில் தனது எண்ணங்களைப் பதியம் போட்டார். தொழிலாளி பத்திரிகையில் முற்போக்கு கவிதைகளை எழுதினார். இலங்கையின் முக்கிய தினசரி, வார, மாத, ஏடுகளிலும் புலம் பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்பெற்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிறப்பு மலர்கள் போன்றவற்றிலும் காலத்துக்குக் காலம் இளங்கோவனது ஆக்கங்கள் பல இடம்பெற்றன. தனது முதல் படைப்பாகக் “கரும் பனைகள்” கவிதைத் தொகுதியை வெளியிட்ட இளங்கோவன் “சிகரம்”, “இது ஒரு வாக்கு மூலம்” என்னும் கவிதைத் தொகுதிகளையும் இளங்கோவன்

கதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பினையும், பல்வேறு கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இளங்கோவன் கதைகள் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினையும் பரிசினையும் பெற்றமை இளங்கோவனின் ஆக்க இலக்கியப் பணிக்குக் கிடைத்த கெளரவமாகும். இச்சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு வைபவம் பாரிஸ் நகரிலும் கனடாவிலும் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இளங்கோவன் கதைகள் நூலுக்கு அணிந்துரை நல்கிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள்,
“தமிழ்ப்புகலிட இலக்கிய வரலாற்றில் பிரான்ஸ"க்கு மிகக் காத்திரமான ஓர் இடமுண்டு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் நின்று நோக்கும் பொழுது பிரான்ஸின் புகலிடத் தமிழ் இலக்கியத்தில் ஓர் ஆழமான பன்முகப்பாடு உண்டென்பதை மறுப்பதற்கில்லை. அந்தப் பன்முகப்பாட்டுக்கு இளங்கோவனின் இச்சிறுகதைத் தொகுதி ஓர் விஸ்தரிப்பைக் கொடுக்கின்றது.” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது ஒவ்வொரு சிறுகதையும் உணர்வுபூர்வமான நிர்த்தாட்சண்யமான யதார்த்தமாக விளங்குகின்றன எனலாம்.
இளங்கோவன் கொடுமை கண்டு பொங்குமியல்பினர். சமூக நன்மைக்காக என்றும் உழைத்துக் கொண்டிருப்பதை விரும்புபவர். இலக்கியத்துறையில் அதிக ஈடுபாடு காட்டினும், ஏனைய பொதுப் பணிகளிலும் நாட்டமுள்ளவர். ஐக்கிய நாடுகள் தொண்டர் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் மூலிகை மருத்துவத்தை அறிமுகப்படுத்தும் தன்னார்வப் பணியாளராகப் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓராண்டு பணியாற்றி அந்நாட்டரசின் விருதுகளையும் பெற்றவர். நோய்நீக்கும் மூலிகைகள், ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள், நல்ல மனிதத்தின் நாமம் டானியல் ஆதியாம் கட்டுரை நூல்களை ஏற்கெனவே வெளியிட்ட இளங்கோவன், தாம் நெருங்கிப் பழகிய நல்ல மனிதர்களை, மறக்கமுடியாத அனுபவங்களை, அவர்கள் தம் பணிகளைப் பதிவு செய்திடும் வகையில் “மண்மறவா மனிதர்கள்” என்னும் இந்நூலைப் படைத்துள்ளார். இந்நூலில் அரசியல் தத்துவவாதிகள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூகத்

Page 7
தொண்டர்கள், கவிஞர்கள் எனப் பலதரப்பட்ட பதினேழு பவுண்பாளர்களை அறிமுகப்படுத்துகின்றார். இவர்களைப்பற்றி மக்கள் அறிந்திடும் வாய்ப்பினை நல்கியுள்ளார். வருங்கால சந்ததியினர் நிம்மவர்களின் பணிகளை அறிந்திட இத்தகைய நூல்கள் காலத்தின் தேவையாக உள்ளன. அதனை நன்குணர்ந்து “மண்மறவா மலிதர்களை'ப் படைத்திட்ட இளங்கோவனின் பணி பாராட்டற்குரியது. HSலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தன் தாயகத்தை மறவாது தமிழ்ப்பணியாற்றும் இளங்கோவனின் படைப்புலக விரிவு மேலும் நீட்சியடைய வேண்டும். அவை இறவாத புகழுடைய இலக்கிய நல் ரிேத்துக்களாகத் திகழ வேண்டும் என்பதே என் அவாவாகும். சமூகத்தை மின்கறிந்த படைப்பாளி இளங்கோவன். அவரது எதிர்காலம் சாதனைகள் பல படைத்திட வாழ்த்துகிறேன்.
[5ნზgჯაrfr, கலாநிதி, பண்டிதர் செ. திருநாவுக்கரசு M.A, யாழ்ப்பாணம். M. Ed, Ph.D S.L.E.A.S
19.05.2011
 

முன்னுரை
ஒரு சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கும். அவர்களுடன் பேச வேண்டும் போலிருக்கும். ஒரு சிலர் பேசினால் பிடிக்கும். எவ்வளவு நேரமானாலும் அவர்களுடன் பேசிக்கொண்டோ அல்லது அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டோ இருக்க வேண்டும்போல் தோன்றும். ஒரு சிலரைப் பார்த்தாலே பிடிக்காது. ஒரு சிலர் வாயைத் திறந்தாலே தூரப் போய்விடுதல் நல்லதுபோல் தோன்றும். இவையெல்லாம் அவரவர் ஆளுமை - தோற்றம் - கவர்ச்சியைப் பொறுத்தது என்பார்கள். விஞ்ஞான ரீதியான அணுகுமுறையின்படி பார்த்தால், மக்களோடு ஒருவரின் சொல் - செயற்பாடு - நடைமுறை வாழ்க்கை எப்படியிருக்கிறதோ அதற்கமைய அவர் மக்கள் மனங்களில் இடம்பிடிப்பார். என் வாழ்க்கை ஓட்டத்தில், மனதில் இடம்பிடித்த மனிதர்கள் - பெரியவர்கள் - நண்பர்கள் பலருண்டு. அவர்களில் பலரை யான் இழந்துவிட்டேன்.
ஏதோ ஒரு உந்துதலில் அத்தகைய மனிதர்கள் - பெரியவர்கள் ஒரு சிலரைப்பற்றி நான் அறிந்துகொண்டதை - என்மனதில் பட்டதை - எனக்குத் தெரிந்ததை - என் அனுபவத்தை எழுதியுள்ளேன். அவை பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டன. அவ்வாறான சில கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்படுகிறது. சமூகத்தில் பல தளங்களில் நின்று பணியாற்றிய மனிதர்கள் ஒருசிலரைப்பற்றி, புலம்பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினரும் அறிந்துகொள்ள இந்நூல் ஓரளவு உதவுமென நம்புகிறேன். இந்நூலை வெளியிடும் பதிப்பகத்தாருக்கும் அணிந்துரை நல்கிய பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கிய தமிழறிஞர் பண்டிதர், கலாநிதி செ. திருநாவுக்கரசு அவர்களுக்கும் என்நன்றி. எனது நூல்களுக்கு என்றும் ஆதரவு தரும் இலக்கிய இரசிகர்கள், நண்பர்களது ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன்.
~ வி. ரி. இளங்கோவன்.

Page 8
r
p 5j G3, .......
01. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘சண்' 15 02. அற்புதமான மனிதன் டானியல் 21 03. பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் 31
04. ‘சீனத்துச் சின்னத்தம்பி 37 05. அறிவுப் பசிக்கு உதவிய ஆர். ஆர். பூபாலசிங்கம் 43 06. ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை 5 07. எல்லோருக்கும் இனிய மனிதன் ஆர். சிவகுருநாதன் 57 08. அச்சக வித்தகள் செம்மல் ஆ. சுப்பிரமணியம் 63 09. மருத்துவக்கலையில் இலக்கியத் தமிழ் கண்ட
வித்தகன் விஸ்வபாரதி 67
10. தொண்டுக்கு ஒரு ‘திரு' 73 11. மக்கள் மனம் நிறைந்த தலைசிறந்த நிர்வாகி 79 12. நாடு போற்றும் எங்களுர்த் தமிழறிஞர்கள் 81
1. வித்துவான் சி. ஆறுமுகம்
11. வித்துவான் பொன். அ. கனகசபை
I.பண்டிதர் வி. வ. நல்லதம்பி
IV.கலாநிதி க. சிவராமலிங்கம் 13. பெண்கள் உரிமைகளுக்காகப் பெரிதும்பாடுபட்ட
வேதவல்லி கந்தையா 93 14. கவிஞர் சு. வில்வரத்தினம் 97
\\ ノ
 

A565rgs ............... J56igs ............
1. ஈழநாடு (யாழ்ப்பாணம்) 2. ஈழநாடு (பாரிஸ்)
3.
4
ஞானம் (இலங்கை)
. இணையத்தளங்கள்

Page 9
தோழர் நா. சண்முகதாசன்
மண் மறவா மனிதர்கள் 14 வி. ரி. இளங்கோவன்
 

டு) சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற
இலங்கையின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் மாஓ பாதை கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான என்.சண்முகதாசன் காலமான செய்தி, உலகெங்குமுள்ள கம்யூனிஸ்ட் புரட்சிகர சக்திகளுக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாகும்.
சண்
யாழ்ப்பாணம் நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்ட சண்முகதாசன் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக விளங்கிய காலம் முதல் புரட்சிவாதியாகச் செயற்பட்டு வந்தவர். காலஞ்சென்ற பிரபல சட்டத்தரணி எஸ்.நடேசன் கியூசி இவரது மாமனாராவார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய செயல்வீரனாகப் பணிபுரிந்த சண், கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இலங்கை
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த சணி மாக்ஸிசத் தத்துவங்களை ஏனையோருக்குச் சிறப்பாக எடுத்து விளக்கும் ஆற்றலும், விவாதத்
திறமை வாய்ந்தவராகவும் மிளிர்ந்தார்.
சண்ணிடம் மாக்ஸிசம் கற்றுக்கொண்டேன் எனப் பெருமைப்பட்ட பல தமிழ், சிங்களப் பிரமுகர்கள் பின்னர் சந்தர்ப்பவாதிகளாக மாறிக் கட்சிக்குத் துரோகமிழைத்து அவதூறு பொழிந்ததும் உண்டு.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் - ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினையின் போதும், பின்னரும் பல்வேறு விவாதங்களை நடாத்தி ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்துப் புகழ்பெற்றவர் இவர்.
மண் மறவா மனிதர்கள் 15 வி. ரி. இளங்கோவன்

Page 10
ஸ்ராலின் மறைவின் பின் சோவியத்தின் திரிபுவாதப் போக்கினை நிராகரித்தார். ஸ்ராலின், மாஓ கொள்கைகளை முன்னெடுத்தவர்கள் இலங்கை (Ceylon) கம்யூனிஸ்ட் கட்சியினர் எனவும், சோவியத் ரஷ்யா சார்பினர் பூரீலங்கா (Sri Lanka) கம்யூனிஸ்ட் கட்சியினர் எனவும் அழைக்கப்பட்டனர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக என்.சண்முகதாசன் தெரிவுசெய்யப்பட்டார். இக்கட்சியினர் பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகரப் பாதையை முன்னெடுத்தனர். சீனக் கலாசாரப் புரட்சியின் தாக்கம் உலகெங்கும் எதிரொலித்த காலமது. அப்போது சீனா சென்ற சண்முகதாசனுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைவர் மாஓவைச் சந்தித்து உரையாடினார். உலக கம்யூனிஸ்ட் தலைவர்களில் தலைவர் மாஓவைப் பலமுறை சந்தித்து உரையாடிய பெருமைக்குரியவர் சண்முகதாசன். இதனால் இவரது கருத்துகளுக்குச் சர்வதேச புரட்சிகர சக்திகள் மிகுந்த மதிப்பளித்தனர். வடபகுதியில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெருமை சேர்த்தது எனலாம். அன்றைய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமது பதவிகளையும் தமது வர்க்க நிலைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ள துரோகமிழைத்தவேளை, 1966 இல் யாழ். முற்றவெளிப் பொதுக்கூட்டத்தில் சண் விடுத்த அறைகூவல் வடபகுதியில் ஆலயப் பிரவேசப் போராட்டங்களுக்கும், தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களுக்கும் உந்துசக்தியாகியது.
சங்கானை - நிற்சாமம், கரவெட்டி - கன்பொல்லை, நெல்லியடி, சுன்னாகம், காங்கேசன்துறை, மட்டுவில், கொடிகாமம் உட்பட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள் குறித்து இலங்கை வானொலி மெளனம் சாதித்த வேளைகளில் பீக்கிங் வானொலி உண்மை நிலைகுறித்து தொடர்ந்து செய்திகளை ஒலிபரப்பியது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மகத்தான வெற்றிகளைக் கண்டது. சண் தலைமையில் கட்சி இதற்கு உறுதுணையாகவிருந்து பூரண ஆதரவு வழங்கியது.
1969இல் மே தினம் கொண்டாடத் தடைவிதிக்கப்பட்டபோது அத்தனை அரசியல் கட்சிகளும் பின்வாங்கிய நிலையில் தடையை
மண் மறவா மனிதர்கள் 16 வி. ரி. இளங்கோவன்

மீறி கொழும்பு, யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய இடங்களில் ஊர்வலமும் கூட்டமும் நடாத்தி வெற்றி கண்டது சண் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
1971 ஏப்ரல் கிளர்ச்சியின்போது சண்முகதாசனும் ஆயிரக் கணக்கான கட்சி உறுப்பினர்களும் அனுதாபிகளும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசினால் கட்சி சிதறடிக்கப்பட்டது. கட்சிச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. காட்டிக்கொடுப்பாளர்களை அரசு பயன்படுத்தியது. சுமார் ஒரு வருடத்தின் பின் சண் விடுதலையானார்.
தலைவர் மாஓசேதுங் மறைவின் பின் சீன ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் சீரழிவுப் பாதையில் செல்கிறார்களென சீனாவையும் அங்கு முன்வைக்கப்பட்ட மூன்று உலகக் கோட்பாட்டையும் சண் கடுமையாக விமர்சித்தார் - நிராகரித்தார். மாஓவின் கொள்கைகளையும் புரட்சிப் பாதையையும் முன்னெடுக்க உலகெங்குமுள்ள மாஓ பாதைக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். பல்வேறு நாடுகளில் மாநாடுகளை நடாத்தி கொள்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பும் ஆலோசனையும் வழங்கினார்.
இலங்கையின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரெனவும் நேர்மைமிக்கவர் எனவும் மதிக்கப்பட்ட இவர் தொழில் சம்பந்தமான வழக்குகளில் தொழிலாளர் சார்பில் ஆஜராகி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார். தொழிற்சங்க விடயங்களில் நிபுணராகவும் மாசற்றவராகவும் விளங்கினார் என்பதை எதிரிகளும் ஒப்புக்கொள்வர்.
தமிழ்த் தேசிய இனம் சொந்தக் காலில் நின்று சுயநிர்ணய உரிமைக்காக போராடுதல் தவிர்க்க முடியாதது எனக்குரல் கொடுத்தார். சிங்களப் புரட்சிகர சக்திகளுக்கு இதற்கான விளக்கங்களை அளித்தார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்க சம்மேளனத்தில் பணியாற்றிய விஜயவீரா போன்றோர் இனவாதம்பேசி
மண் மறவா மனிதர்கள் 17 வி. ரி. இளங்கோவன்

Page 11
இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் கட்சி அரசினாலும் சந்தர்ப்ப வாதிகளாலும் சிதறடிக்கப்பட காரணமாயிற்று என சண் குறிப்பிட்டுள்ளார். பின்னரும் பல்வேறு சந்தர்ப்பவாதிகள், காட்டிக்கொடுப்பாளர்களினாலும் கட்சியின் வளர்ச்சி தடைப்பட்டது. மதிப்புக்குரிய தோழர் சண் என்று அழைத்த சிங்களப் பிரமுகர்கள் சிலர் பின்னர் இனவாதத் தொனியோடு நாகலிங்கம் சண்முகதாசன் என்று தம்மை விளித்ததாக சண் வருத்தத்தோடு கூறியுள்ளார்.
இலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பலரும் அன்று சண்முகதாசன் தலைமையிலான கட்சியின் உறுப்பினர்களாக, அனுதாபிகளாக, ஆதரவாளர்களாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கைலாசபதி, கே.டானியல், இளங்கீரன், எச்.எம்.பி.மொகைதீன், சில்லையூர் செல்வராசன், செ.கணேசலிங்கன், என்.கே.ரகுநாதன், நீர்வைப் பொன்னையன், எம்.கே.அந்தனிசிலி, செ.யோகநாதன், யோ.பெனடிக்ற்பாலன், சுபத்திரன், புதுவை இரத்தினதுரை உட்படப் பலர் அன்று இந்தப் பாதையில் நடைபோட்டவர்கள் எனக் குறிப்பிடலாம்.
சர்வதேச தொழிற்சங்க அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான டொலர் சம்பளத்தில் பணிபுரிய அழைப்புகள் கிடைத்தும், கொள்கையிலிருந்து கொஞ்சம் வழுவி கோடீஸ்வரனாக வாழ வழியிருந்தும் கொண்ட கொள்கைக்காக இறுதிவரை சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். இவரது மனைவியும் இறுதிவரை இவருக்கு உறுதுணையாகவிருந்து கட்சிப் பணியாற்றியவர். இவரது தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளிலான மாக்ஸிச விளக்க நூல்கள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு நூல் என்பன புகழ்பெற்றவை. அரசியல் ஆர்வலர்கள் அவசியம் படிக்கப்பட வேண்டியவை. சர்வதேசப் புகழ்பெற்ற ஒரு நேர்மையான அரசியல், ஆசானும் தொழிற்சங்கவாதியுமான சண்முகதாசன் மறக்கப்பட முடியாத மனிதனாவார்.
- 10.02.1993 -
மண் மறவா மனிதர்கள் 18 வி. ரி. இளங்கோவன்

மண் மறவா மனிதர்கள் 19 வி. ரி. இளங்கோவன்

Page 12
ae
மண் மறவா மனிதர்கள் 20 வி. ரி. இளங்கோவன்
 

அற்புதமான மனிதன் டானியல்
டானியல் ஓர் அற்புதமான மனிதன்.
பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணித்து இறுதிமூச்சுவரை வாழ்ந்த சீரோன்.
என் கல்லூரி நாட்களிலேயே டானியல் சிறுகதைகளை வாசித்திருந்தேன். அந்தக் காலத்தில் நடந்த பல போராட்டங்களின் போதெல்லாம் டானியல் நாமம் பேசப்பட்டதை யான் அறிவேன். 1969-1970 காலத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உத்தியோகபூர்வப் பத்திரிகையான 'தமிழன்’ ஏட்டின் ஆசிரியராக, எனது மூத்த சகோதரர் நாவேந்தனின் வேண்டுகோளுக்கிணங்க யான் கடமையாற்றிய நேரத்திலேயே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ) யின் வடபிரதேச பிரமுகர்கள், எழுத்தாளர்களுடன் எனக்கு ஓரளவு தொடர்பு இருந்தது. அபிமானமும் இருந்தது.
திறமைமிக்க எழுத்தாளர்கள் பலர் அந்த அணியில் இருந்ததாலும், மக்கள் பிரச்சினைகள் சம்பந்தமான அவர்களது போராட்ட நடவடிக்கைகளும் என்னை அவர்கள் பால் ஈர்த்திருந்தது. அத்துடன் மார்க்ஸிச நூல்கள் வாசிப்பும், தொழிலாளி பத்திரிகை தந்த போதமும் என்னை அந்தப் பாதைக்கு ஈர்த்தன. ஆனாலும் 1972ஆம் ஆண்டளவில் தான் எனது மூத்த சகோதரர் நாவேந்தன் மூலம் டானியலுடன் பழக்கம் ஏற்பட்டது. நாவேந்தனின் இலக்கியப் பணி வெள்ளிவிழாவில் கலந்துகொள்ள ஏழாலைக்கு வந்திருந்த டானியலுடனும், கவிஞர் புதுவை இரத்தினதுரையுடனும் நிறையவே பேசினேன். பின்னர் புதுவை இரத்தினதுரை தொழில் நிமித்தம் எனது ஊரான புங்குடுதீவில் தங்கியிருந்தபோது தினசரி மாலைப் பொழுதுகள் இலக்கியப் பொழுதுகளாக அமைந்தன. அக்காலத்தில் தீவுப்பகுதியில் பல இலக்கியக் கூட்டங்களை ஒழுங்குசெய்து நடத்தியது ஞாபகம். பல்வேறு சவால்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் பல்வேறு இடங்களிலும் கருத்தரங்குகள் நடாத்தினோம்.
மண் மறவா மனிதர்கள் 21 வி. ரி. இளங்கோவன்

Page 13
இக்கூட்டங்களில் பிரதம பேச்சாளராக டானியல் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன் கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், புலவர் ஈழத்துச் சிவானந்தன், நாவேந்தன், சு.வில்வரத்தினம் உட்படப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பல இளந்தலைமுறை எழுத்தாளர், இலக்கிய இரசிகர்கள் உருவாக இக்கருத்தரங்குகள் உந்துசக்தியாக அமைந்தன.
1974இல் திருமலையில் நடைபெற்ற புரட்சிகர கலை இலக்கிய எழுத்தாளர் மாநாட்டில் டானியல், சில்லையூர் செல்வராசன், செ.கணேசலிங்கன், என்.கே.ரகுநாதன், புதுவை இரத்தினதுரை, நல்லை அமிழ்தன், திருமலை நவம் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட இளந்தலைமுறை இலக்கிய அணியுடன் நிறையவே பேசியது ஞாபகம். இவ்வாறு டானியலுடனான தோழமை வளர்ந்தது. கலை இலக்கிய - அரசியல் போராட்டமென எந்த நடவடிக்கையில் டானியல் இறங்கினாலும், அதில் முன்னணியில் நிற்கும் ஒருவனாக என்னை அவர் நெறிப்படுத்திச் சென்றார். இதன் தாக்கம் கலை இலக்கிய அரசியல் பிரமுகர்களிடையேயும் எதிரொலித்தது.
திறமையறிந்து தட்டிக்கொடுத்து, அரவணைத்துச் செல்லும் தோழமை நட்புணர்வு, மனிதாபிமானம் அவருடன் பழகிய யாராலும் மறந்துவிடமுடியாதது. ஒரு இராஜதந்திரிக்குரிய திறமையோடும், தலைமைத்துவத் தன்மையோடும் பல்வேறு சந்தர்ப்பங்களில், இலக்கிய, அரசியல், சமூக விடுதலைப் போராட்டச் சந்தர்ப்பவாதப் போக்குகளை அவர் முறியடித்திருக்கிறார்.
சிறுவயது முதல் அரசியல் தொடர்புள்ளவனாக ஈழத்தின் பலபகுதிகளுக்கு நான் சென்றுவந்திருந்த போதிலும், டானியலுடன் சேர்ந்து நான் வடபகுதியின் குச்சுக் குடிசைகள் நிறைந்த கிராமங்கள் உட்படப் போகாத கிராமங்களே இல்லை எனலாம். கலை இலக்கிய, அரசியல் நடவடிக்கையென எதற்கு அவர் புறப்பட்டாலும் உடன் என்னை அழைப்பது அவர் வழக்கம். அவர் கலந்துகொண்டு பேசும் அதிகமான கூட்டங்களில் எனக்கும் பேசவோ அல்லது கவியரங்கில் கலந்து கொள்ளவோ இடம் கிடைக்கும். நான் கிராமங்களை அவருடன் சேர்ந்து படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. மண் மறவா மனிதர்கள் 22 வி. ரி. இளங்கோவன்

9
1981தை 17, 18ஆம் திகதிகளில் சென்னை சி.எல்.எஸ் நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு டானியலுக்கு அழைப்பு வந்தது. ஏற்கனவே இந்தியா, சீனா செல்ல சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதும் அவற்றைப் புறக்கணித்துவிட்டவர் என அறிந்திருந்தேன்.
பூபாலசிங்கம் புத்தகசாலையில் என்னைக் கண்ட 'மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ‘டானியலின் பஞ்சமர் இம்முறை சி.எல்.எஸ்.கருத்தரங்கில் இடம்பெறவுள்ளதாக அறிகிறேன். எனக்கும் அழைப்பு வந்துள்ளது. டானியலைக் கட்டாயம் வரச் சொல்லுங்கள். சிவத்தம்பியும் வருவார் என நினைக்கிறேன்’ என்றார். இதனை டானியலுக்குச் சொல்லி, சென்னை செல்லுங்கள் என வலியுறுத்தினேன்.
தனிப்பட்டரீதியாக தனக்கு மாத்திரமன்றி, எமது இலக்கிய அமைப்பான ‘மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு அழைப்பு அனுப்புமாறு சென்னைக்கு கடிதம் எழுதினார். அதன்படி அமைப்பின் தலைவரான டானியலுக்கும் பொதுச்செயலாளரான எனக்கும் அழைப்பு வந்தது. பல சிரமத்தின் மத்தியில் பாஸ்போட் - விசா பெற்று சென்னை பயணமானோம்.
பேராசிரியர் சிவத்தம்பி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். டொமினிக் ஜீவாவும் வந்திருந்தார். சி.எல்.எஸ். - இயக்குனர் பாக்கியமுத்து வரவேற்று ஆவணசெய்து உதவினார். சிவத்தம்பி தலைமையில் பஞ்சமர்’ நாவல் (முதலாம் பாகம்) தனி அமர்வில் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த அமர்வில் பஞ்சமர் நாவல் குறித்து கட்டுரை சமர்ப்பித்துப் பேசினேன். டானியல் தனது இலக்கிய அனுபவம் குறித்து பேசினார், விளக்கமளித்தார். கட்டுரையும் சமர்ப்பித்தார். கருத்தரங்கில் கலந்துகொண்ட எழுத்தாளர் பலரும் டானியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடன் கலந்துரையாடினர். கேரளாவிலிருந்து வந்திருந்த சிறந்த எழுத்தாளர் நீல.பத்மநாபன், ‘சிகரம் செந்தில்நாதன், அக்னிபுத்திரன் உட்படப் பலர் மிக பாசத்தோடு டானியலோடு உரையாடினர். ராஜம் கிருஷ்ணன், தி.க.சி.,கவிஞர் கிருஷ்ணமூர்த்தி,
மண் மறவா மனிதர்கள் 23 வி. ரி. இளங்கோவன்

Page 14
வல்லிக்கண்ணன், சி.சு.செல்லப்பா, பேராசிரியர் சஞ்சீவி, அசோகமித்திரன் ஆகியோருட்பட பலர் கலந்துரையாடினர். தபால் மூலமாக நீண்ட காலம் டானியலோடு தொடர்பு கொண்டிருந்த தஞ்சை ப்ரகாஷ் தஞ்சாவூருக்கு அழைத்திருந்தார். அக்னிபுத்திரன் வீட்டிற்கு அழைத்து உபசரித்தார். கவிஞர் இன்குலாப் அக்னிபுத்திரன் வீட்டிற்கே வந்து டானியலோடும் என்னோடும் நீண்டநேரம் உரையாடினார். பேராசிரியர் நாகநாதன் வீட்டிற்கு அழைத்து உரையாடினார். அசோகமித்திரனும் வீட்டிற்கு அழைத்து உபசரித்தார். பா.செயப்பிரகாசம் உட்பட மற்றும் பல தோழர்கள் அழைத்துச் சென்று கலந்துரையாடினர். “தாமரை சஞ்சிகையில் பணியாற்றும் ரவீந்திரதாஸின் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்ற அழைத்தனர். இக்கூட்டத்தில் கல்யாணசுந்தரம், தா.பாண்டியன், இயக்குனர் பாலச்சந்தர், நடிகர் ராஜேஷ் உட்பட மற்றும் பலரும் உரையாற்றினர். தாமரை சோமுவின் நிலையறிந்து சிறு உதவியளித்து ஆறுதல் கூறினார்.
தஞ்சை சென்ற எம்மை ப்ரகாஷ் வரவேற்று உபசரித்தார். யாழ்ப்பாணம் வந்திருந்தபோது பழகிய பசு.கெளதமன் சென்னை கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாடியது மாத்திரமன்றி தஞ்சையில் தம் வீட்டிற்கும் அழைத்து உரையாடினார்.
எழுத்தாளர் சி.எம்.முத்து, கவிஞர் விச்வநாதன் உட்படப் பலர் தினசரி சந்தித்துக் கலந்துரையாடினர். டானியலின் வேண்டு கோளுக்கிணங்க கீழவெண்மணிக்கு ப்ரகாஷ் எம்மை அழைத்துச் சென்றார். அங்கு உயிருடன் கொளுத்தப்பட்ட ஏழைமக்களின் நினைவுச் சமாதிக் கல்லை பார்த்துக் கவலையுற்றார் டானியல். பல மணிநேரம் அங்குள்ள ஒடுக்கப்பட்ட கிராமத்து மக்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். தஞ்சையில் பல இலக்கிய நண்பர்கள் சந்தித்தனர்.
பின்னர் புதுக்கோட்டை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளின் அழைப்பின்பேரில் அங்குசென்று கலந்துரையாடினார். அடுத்து இராமேஸ்வரம் தலைமன்னார் வழியாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது இன்றும் ஞாபகமிருக்கிறது.
மண் மறவா மனிதர்கள் 24 வி. ரி. இளங்கோவன்

1986இல் மருத்துவ சிகிச்சைக்காகவும், கலை இலக்கிய நண்பர்களைச் சந்திக்கவும் தமிழகம் செல்லும்போது என்னையும் வருமாறு வலியுறுத்தி அழைத்தார் அதன்படி அங்கு சென்று சென்னை, மதுரை, தஞ்சை ஆதியாம் இடங்களில் மருத்துவ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட உடன்நின்று கவனித்துவந்தேன். சென்னை, தஞ்சை, பாண்டிச்சேரி, கும்பகோணம் ஆதியாம் இடங்களில் இலக்கியக் கருத்தரங்குகளில் டானியல் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் மார்க்ஸ், பொதியவெற்பன், இரவிக்குமார் ஆகியோர் இதற்கான ஒழுங்குகளைச் செய்தனர். பல பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் டானியலைத் தேடிவந்து உரையாடினர். மருத்துவமனைகளில் தங்கியிருந்தபோதும் நள்ளிரவு வரை இத்தகைய சந்திப்புகள் நீண்டன.
அவரது கிட்னி முற்றாகச் செயலிழந்திருந்தது. இரத்த அழுத்தம் அதிகரித்திருந்தது. நீரிழிவு நோயின் பாதிப்புக்கள் யாவும் அதிகரித்திருந்தன. “இத்தகைய நிலையிலிருப்போர் மயக்க நிலையில் இருப்பர், இவரால் எப்படி உலாவ முடிகிறது, உறுதியாகப் பேசமுடிகிறது என டாக்டர்களே டானியலின் உறுதியைப் பார்த்து வியந்தனர்.
இறுதியாக தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவேளை 1986 பங்குனி 23ஆம் திகதி காலை 8.40 மணியளவில் என் கையை இறுகப் பற்றியவாறு 'தம்பி.தம்பி. என ஏதோ சொல்ல விழைந்து முடியாத நிலையில் அவர் உயிர் பிரிந்தது. ஒருகணம் செய்வதறியாது திக்கித்து நின்றேன். விம்மி வெடித்து அழுதேன். டாக்டர்கள் தேற்றினர். தகவல் அனுப்புமாறு சொன்னார்கள். மறுகணம் பேராசிரியர் மார்க்ஸ் குடும்பம், வேல்சாமி ஆகியோருக்கு தகவல் அனுப்பினேன்.
டானியலின் உடலை மார்க்ஸ் வீட்டிற்கு கொண்டு சென்றோம். உடன் கொழும்பில் சில்லையூர் செல்வராசன், தம்பி வி.ரி.தமிழ் மாறன், என்.சண்முகதாசன் ஆகியோருக்கும், யாழ்ப்பாணத்தில் டானியல் குடும்பத்தாருக்கும், சென்னையில் செ.கணேசலிங்கன் உட்படப் பலருக்கும் தகவல் தெரிவித்தேன்.
மண் மறவா மனிதர்கள் 25 வி. ரி. இளங்கோவன்

Page 15
கணேசலிங் கண் சென்னையிலிருந்து வந்துசேர்ந்தார். கலங்கிப்போயிருந்த எனக்குத் தேறுதல் சொன்னார். பேராசிரியர் அ. மார்க்ஸ் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக டானியலின் உடல் வைக்கப்பட்டிருந்தது. முதுபெரும் எழுத்தாளர்கள் எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, கலாநிதி. து. மூர்த்தி, பேராசிரியர் இராம சுந்தரம், வே.மு. பொதியவெற்பன், ஜமாலன், பொ. வேல்சாமி, நா. விச்வநாதன், தஞ்சைப்ரகாஷ், தஞ்சை ராமமூர்த்தி, நெல்லியடி சிவம், சஞ்சயன் ஆகியோர் உட்படப் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 24ஆம் திகதி மாலை முன்னுாறுக்கு மேற்பட்ட கலை இலக்கிய அரசியல் நண்பர்கள் பின்தொடர செங்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில், செங்கொடி போர்க்கப்பட்ட டானியல் உடல் தஞ்சை இராஜகோரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
சிலிக்குயில் பதிப்பக அதிபர் வே.மு.பொதியவெற்பன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் தோழர்கள் பலர் அஞ்சலி உரைநிகழ்த்தினர். ஈற்றில் சிந்தும் கண்ணிரோடு அனைவர்க்கும் நன்றி தெரிவித்துப் பேசினேன்.
ஒரு புரட்சியாளனுக்கான அனைத்து மரியாதைகளுடனும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ளதெனவும், அவரது படைப்புகள் யாவும் தொடர் நீது அங்கு வெளியிடப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
1990 கார்த்திகை மாதம் தஞ்சை சென்ற யான் நேரே டானியல் சமாதிக்குச் சென்று பார்த்தேன். நினைவுச்சின்னம் அழகுற அமைக்கப்பட்டிருந்தது. தூறும் மழையில் நனைந்தவாறு நீண்டநேரம் அங்கிருந்துவிட்டு மார்க்ஸ் வீடு திரும்பினேன்.
தமிழகத்தில், கூட்டங்களில் எனது உரைகளைக் கேட்ட நண்பர்கள், அவற்றைப் பாராட்டி டானியலுக்குச் சொன்னபோது, அவர் சொன்ன வார்த்தைகள் என்மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாகவுள்ளது என ஒரு நண்பர் தெரிவித்தார்.
மண் மறவா மனிதர்கள் 26 வி. ரி. இளங்கோவன்

* இளங்கோவுடன் தான் 1981இல் சென்னை வந்தேன். ‘சி.எல்.எஸ். கருத்தரங்கிலும் மற்றும் சில கூட்டங்களிலும் அவன் பேச்சின் பின்னர் பலர் பஞ்சமர் முதல் பாகத்தைப் படிக்க ஆவலுற்றனர். பஞ்சமர் இரண்டாம் பாகமும் சேர்த்து இங்கு வெளியிட அழைப்புகளும் வந்தன. அவனோடு வருவது நாலைந்து பேரோடு வருவதுபோல் எனக்குத் தெம்பு தரும். ஒரு நல்ல தோழனாயப், பெற்ற மகன் போல என்னைக் கவனமாயப்க் கவனித்துக்கொள்ளும் வைத்தியனாய், இலக்கிய - அரசியல் பேச்சாளனாய் எனக்குப் பெரிதும் உதவி. அவனோடு இங்கு வருவதில் மாத்திரமல்ல, அங்கு நாட்டில்கூட எங்கும் அவனோடு போவதில் எனக்குத் தெம்பு அதிகம் - என்றவாறு அவர் நண்பர்களிடம் கூறியிருந்தார். இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கோட்பாட்டு ரீதியாகப் பிரிவுகள், பூசல்கள், பூகம்பங்கள் ஏற்பட்டபோதெல்லாம் சரியான கொள்கை வழியில் துணிச்சலோடு செயற்பட்டவர். போராட்டப் பாதையை முன்னெடுத்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ) பொதுச் செயலாளர் என்.சண்முகதாசன் டானியல் மறைவு குறித்து எழுதும்போது, ‘இந்த நாட்டின் இலக்கிய இயக்கத்திற்குப் பேரிழப்பு. நான் நல்ல தோழனை, அன்புள்ள நண்பனை இழந்துள்ளேன். அவர் அஞ்சாத போராளி, உண்மையுள்ள தோழர்' என இறுதி மரியாதை செலுத்தினார்.
சகல ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். கடின உழைப்பால் உயர்ந்தவர். இறுதிவரை உழைத்துக் கொண்டிருந்தவர், எழுதிக் கொண்டிருந்தவர். இறுதி நேரத்தில்கூட அவர் எழுதி முடித்து மார்க்ஸ் வீட்டு மேசைமீது விட்டுச்சென்ற குறுநாவல் ‘சாநிழல்', 'பஞ்சமர் இரண்டாம் பாகம் நாவலைத் திருத்தி அச்சுக்கு ஏற்றவகையில் எழுத பல நாட்கள் விடிகாலை வரை அவருடன் இருந்து உதவியது ஞாபகம். முதலில் எழுதிய பிரதியை வைத்துக் கொண்டு அழகாகக் கதையை அவர் சொல்லிக்கொண்டுபோக யான் அழகான கையெழுத்தில் அதனை எழுதிமுடித்தேன். பின்னர் அதனை 'சுருக்கெழுத்துத் தந்தை' இராமலிங்கத்திடம் கொண்டுபோய்க் கொடுத்து நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தாளராகக் கடமையாற்றிய கோபால் மூலம் தட்டச்சில்
மண் மறவா மனிதர்கள் 27 வி. ரி. இளங்கோவன்

Page 16
பதித்து எடுத்துவந்து கொடுத்தேன். அப்பிரதிகளே தஞ்சைக்கு அனுப்பப்பட்டு "பஞ்சமர் இரண்டு பாகங்களும் சேர்த்து ப்ரகாஷ் மூலம் முதலில் அச்சாகி வெளிவந்தது. அவ்வாறே ‘கோவிந்தன்', 'அடிமைகள் நாவல்களும் தட்டச்சில் பதித்து அச்சுப்பதிப்புக்கென தமிழகம் அனுப்பப்பட்டன.
அடித்தளச் சமூகத்தில் பிறந்த, ஐந்தாம் வகுப்பு வரை படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை ‘உன்னத இலக்கியம்’ எனப் போற்றுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் ஆய்வுசெய்கிறார்கள். ஜப்பானில் கூட பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. *சொல் அகராதி’க்கு டானியல் படைப்புகளிலிருந்து சொல் சேகரிக்கிறார்கள். தலித் இலக்கிய முன்னோடி என விமர்சகர்கள் மெச்சுகிறார்கள். ‘எங்கள் போராளி’, ‘எங்கள் மகன்’, என ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளங்களில் சுமக்கிறார்கள்.
மனிதாபிமானம்மிக்க அற்புதமான மனிதனை நண்பனை இழந்துவிட்டோம் என அவரைத் தெரிந்தவர்கள் இன்றுவரை கவலைப்படுகிறார்கள். புலம்பெயர்ந்த இளந் தலைமுறை படைப்பாளிகள், வாசகர்கள் வடபகுதியில் முன்னர் எங்கள் இனத்தின் வாழ்க்கை மறுபக்கத்தை, மறைக்கப்பட்ட வரலாறு உண்மை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள டானியலின் படைப்புகளை அவசியம் படித்துப் பார்க்கவேண்டும். ‘வரலாற்றைப் படைத்த நீ வரலாறாகிவிட்டாய்' எனப் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிட்டதுபோல
டானியல் நாமம் வரலாற்றுப்புகழோடு நீடு வாழும்.
- பங்குனி, 1994 -
மண் மறவா மனிதர்கள் 28 வி. ரி. இளங்கோவன்

சி.எல்.எஸ். கருத்தரங்கில் டானியல் உரையாற்றுகிறார்.
மண் மறவா மனிதர்கள் 29 வி. ரி. இளங்கோவன்

Page 17
பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன்
மண் மறவா மனிதர்கள் 30 வி. ரி. இளங்கோவன்
 

தான்தோன்றிக் கவிராயர் பல்கலை வேந்தர்
சில்லையூர் செல்வராசன்
‘தேனாகப் பொன்நிலவு திகழ்கின்ற ஓரிரவில்
தெய்வத்துள் தெய்வம், என் தா யானாள் எம் மனைமுற்ற மணல்திருத்தி அன்பொடு தன்
அருகணைத் தென் விரலைப் பற்றி *ஆனா’ என் றோரெழுத்தை அழித்தழித்தம் மணல் மீது
அன்றெழுதப் பயிற்ற, இன்றோ பேனாவைப் பிடித்தெழுதும் உரையெழுத்தும் கவியெழுத்தும் தலையெழுத்தாய்ப் பிழைப்பாய்க் கொண்டேன் நானான போதும் தம்நாளாந்தச் சோற்றுக்கும் ஆடைக்கும்
நலிவோர்க்காய்ப் பொருதளன் வா ளானாளே தமிழ் என்றிங்கன்ப ரெல்லாம் போற்றுகின்ற
ஆச்சி உனை முதலில் அடிபணிந்தேன் போற்றி
ஈழத்தில், கிராமங்கள் முதல் பல்கலைக் கழகங்கள் வரை இடம்பெற்ற விழாக்களில் ஏராளமான கவியரங்குகளுக்குச் சில்லையூர் செல்வராசன் தலைமை தாங்கியுள்ளார். அக்கவியரங்குகளின் போது மேடையில் சில்லையூர் எழுந்து தமிழ் வாழ்த்தாய் - தாய் வாழ்த்தாய் மேற்கண்ட பாடலை முதலில் உருகிப் படிப்பார். அவரது கண்கள் கலங்கும். கண்ணிர் ததும்பும். சபையும் அவரோடு சேர்ந்து உருகும். கண் கலங்கும். பின்னர் அவருக்கே உரித்தான கணிர் குரல் ‘நல்லார் வதிகின்ற யாழ்ப்பாணக் கோடியிலே.’ என்று ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். சபை அவர் பின்னாலே போகும். இதனை அன்று கேட்ட, பார்த்த மக்கள், இன்றும் அந்த மக்கள் கலைஞனை மறந்திருக்க LDT. LT856.
கவியரங்குகளின்போது கவிஞர்களை அறிமுகப்படுத்தும் அவரது பாணி தனித்துவமானது. நகைச்சுவையோடு பொருள் பொதிந்திருக்கும்.
இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சிகளில், இலங்கையிலும் கடல்கடந்து மற்ற நாடுகளிலும் அதிக மக்களால் கேட்கப்பட்டு,
மண் மறவா மனிதர்கள் 3 Ι வி. ரி. இளங்கோவன்

Page 18
பாராட்டுப்பெற்ற நிகழ்ச்சிகளான ‘தணியாத தாகம், கோமாளிகள் கும்மாளம் போன்றவற்றையும், அத்தானே அத்தானே. . . ., நல்ல குடும்பம், “ஊருக்கொரு கிராமிய வங்கி வந்ததால்.’ போன்ற பாடல்களையும் “சின்ன ராணியே. ஒ என் சின்ன ராணியே. போன்ற துள்ளிசைப் பாடல்களையும், 'கண்மணி ஆடவா. போன்ற சினிமாப் பாடல்களையும் எந்தக் கிராமத்து மக்களும் மறந்திருக்க மாட்டார்கள்.
சில்லையூரின் பன்முகப் பணிகளில், அவரது அரசியல் பாதையை அவர் காலமாகிய பின்னர் எவரும் சரிவரச் சொல்லவில்லை. எனினும் கலாநிதி சி.மெளனகுரு ஓரளவு கூறியுள்ளதை ஒலிநாடா ஒன்றில் கேட்க முடிந்தது.
அறுபதுகளின் நடுப்பகுதியில் சர்வதேசிய ரீதியாக பாதிப்பு ஏற்படுத்திய ரஷ்ய - சீன பிளவு காரணமாக இலங்கையிலும் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது யாவரும் அறிந்ததே. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளித்துவந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இந்தப் பிளவு எதிரொலித்தது. புரட்சிப் பாதையை வலியுறுத்திய, மாஓ பாதையை ஏற்றுக்கொண்ட சில்லையூர் செல்வராசன், கே.டானியல், என்.கே.ரகுநாதன் போன்றோர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆற்றல் மிகுந்த பல எழுத்தாளர்கள் இவர்களோடு திரண்டனர். இளம்படைப்பாளிகளுக்கு இந்தப் பாதையினரே நம்பிக்கை கொடுப்பவர்களாக மிளிர்ந்தார்கள். டானியல், சில்லையூர் போன்றோர் மக்கள் செல்வாக்குப் பெற்ற தனித்துவம் மிக்க படைப்பாளிகளாக மதிக்கப்பட்டனர். இதற்கு அரசியல் அணியும் உறுதுணையாகவிருந்தது. 1966 அக்டோபர் முதல் ஏற்பட்ட ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்’ போராட்ட எழுச்சிக்கு உந்துசக்தியாக இந்தப் படைப்பாளிகள் செயற்பட்டார்கள். வடபகுதியெங்கும் கருத்தரங்குகள் நடைபெற்றன. இதையொட்டி நடைபெற்ற விழாக்களில் இடம்பெறும் கவியரங்குகளுக்கு சில்லையூர் தலைமை தாங்கி எழுச்சியூட்டியதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
தொழிலாளி, வாகை, மக்கள் இலக்கியம் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளில் எழுச்சியூட்டும் கவிதைகளை இவர் தொடர்ந்து எழுதினார். புனைபெயர்களிலும் பல கவிதைகளை அப்போது எழுதினார்.
திருமலையில் நடைபெற்ற புரட்சிகர கலை இலக்கியப் படைப்பாளிகள்’ மாநாட்டின் தலைமைக் குழுவில் இடம்பெற்று
மண் மறவா மனிதர்கள் 32 வி. ரி. இளங்கோவன்

நெறிப்படுத்தினார். வடபகுதிக்கு சில்லையூர் வந்தால் அவரோடு இளங்கவிஞர் குழாமே சூழ்ந்திருக்கும். அவரது அன்புக்குரிய புதுவை இரத்தினதுரை, வி.ரி.இளங்கோவன், நல்லை அமிழ்தன், நந்தினி சேவியர், தேவி பரமலிங்கம், பாஷையூர் தேவதாசன், பொன் பொன்ராசா உட்படப் பல கவிஞர்களோடு சில்லையூர் பாட்டும் சர்ச்சையுமாக மகிழ்ந்திருப்பார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாஒ பாதை) பொதுச் செயலாளர் என்.சண்முகதாசனோடு சில்லையூர் நெருங்கிப் பழகியவர். கட்சி ஆதரவோடு நடக்கும் கூட்டங்களில் இடம்பெறும் கவியரங்குகளுக்கு சில்லையூர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார் - கலை இலக்கிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
மக்கள் எழுத்தாளர் கேடானியலின் உற்ற தோழர் சில்லையூர் செல்வராசன். தமிழகத்திற்கு மருத்துவ சிகிச்சைக் காகச் செல்லும்பொருட்டு கொழும்பு வந்த டானியலும், வி.ரி.இளங்கோவனும் சண்முகதாசன் வீட்டில் தங்கியிருந்த பின்னர் தமிழகம் புறப்படுவதற்கு முதல்நாள் (1986 தை 29) இரவு சில்லையூரின் அழைப்பின்பேரில் அவர் வீட்டில் தங்கினர். காலையில் விமான நிலையம் புறப்படுவதற்கு என டாக்ஸியில் ஏறுகையில் 'பத்திரமாய் போய்ச் சேர்ந்து வருத்தத்தைக் குணப்படுத்திக் கொண்டு வாங்கோ’ என்று சில்லையூரும் மனைவியும் கூறும்போது, ‘வந்து சேர்ந்தா கண்டுகொள்ளுங்கோ’ என்று டானியல் கூற சில்லையூர் கண்கலங்கி திக்கித்து நின்றார். இது அவர்களின் தோழமை, நட்பு, பாசம். பின்னர், டானியல் திரும்பி வராமலே தஞ்சாவூரில் காலமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கவிதை, இசைப்பாடல், நாட்டுக் கூத்து, பத்திரிகைத்துறை, விமர்சனம், புனைகதை, ஒலிபரப்பாளர், மேடை - வானொலி - திரைப்பட தொலைக்காட்சி எழுத்தாளர், நடிகர், பாடகர், தொடர்புசாதன ஆலோசகர், விளம்பரத்துறையாளர் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) என பல்துறையிலும் தனித்துவம் மிக்கவராக மிளிர்ந்தவர் சில்லையூர்.
தமிழ், சிங்களப் படங்களில் மாத்திரமல்ல அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாட்டினர் தயாரித்த ஆங்கிலப் படங்களிலும் அதிக ஊதியம் பெற்று நடித்த ஈழத்தவர் சில்லையூர் தான்.
மண் மறவா மனிதர்கள் 33 வி. ரி. இளங்கோவன்

Page 19
அதிக குறுந்திரைப் படங்களை பிரதி எழுதித் தயாரித்தவர் இவர். விவசாயம் சம்பந்தமான இவரது ‘கமம்" குறும்படம் பேர்லின் படவிழாவில் பாராட்டுப் பத்திரம் பெற்றது.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் பம்பாய் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 1988 இல் இந்தியா போபால் நகரில் 'ஆசியக் கவிதை விழாவில் தமிழ் கூறும் நல்லுலகின் ஒரே தமிழ்ப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். தனது அறிவு, ஆற்றலினால் அதிக ஊதியம் பெற்றவர் சில்லையூர். தோழமை நட்பைப் பெரிதும் மதித்தவர். எந்த நேரமும் நண்பர்கள், தோழர்கள் சூழவிருந்தால் அவர் மகிழ்ச்சியில் திளைப்பார். அதிக ஊதியம் பெற்றவர் என்றாலும் அவர் விட்டுச் சென்றது விலைமதிக்க முடியாத அவரது படைப்புகள் தான்!
‘ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி, தணியாத தாகம் திரைப்படச் சுவடி, ஞானசவுந்தரி (கூத்துப் பிரதி தொகுப்பு), ஊரடங்கப் பாடல்கள் (கவிதை), ரோமியோ ஜூலியற், தலைவர்கள் வழ்க மாதோ (கவிதை) சில்லையூர் செல்வராசன் கவிதைகள் (தொகுதி - 1) என்பன இதுவரை வெளிவந்த சில்லையூரின் நூல்களாகும். அச்சேற இன்னும் எத்தனையோ படைப்புகள் காத்திருக்கின்றன.
கெளரவ கலாநிதிப் பட்டம், மக்கள் பணியாளர், மக்கள் எழுத்தாளர் கே.டானியலுக்கு வழங்கப்பட வேண்டும் என முன்னார் யாழ்.பல்கலைக்கழக அதிகார வட்டத்திலேயே குரல் எழுப்பப்பட்ட தாயினும் அது அமுக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் கசிந்தன. யார் யாருக்கோ, என்ன தேவைகளுக்காகவோ பட்டங்கள் வழங்கப்படும் இன்றைய உலகில், ஒரு பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் கவனத்திற்குரியவராகத் தென்படாதது வியப்பல்ல. மக்கள் இதயங்களில் அந்த மகத்தான கலைஞன் காலங்கடந்தும் வாழ்வான்.
- ஐப்பசி, 1998 -
மண் மறவா மனிதர்கள் 34 வி. ரி. இளங்கோவன்

1950 களில் சில்லையூர் தினகரனிலும் அ. ந. கந்தசாமி சுதந்திரளிலும் பணியாற்றிய காலத்தில்,
வானொலிக் காலத்துறைச் சகபாடிகள் இ.வ. சில்லையூர், கே.எஸ். நடராஜன்,கா. சிவத்தம்பி, 'சானா சண்முகநாதன் ஆகியோர்.
மண் மறவா மனிதர்கள் 35 வி. ரி. இளங்கோவன்

Page 20
s
மண் மறவா மனிதர்கள் 36 வி. ரி. இளங்கோவன்
 

சீனத்துச் சின்னத்தம்பி
கடந்த செவ்வாய் இரவு (17-04-2001) 11 மணியளவில் அலறிய தொலைபேசி இனந்தெரியாத நெஞ்சுவலியோடு கூடிய மனவருத்தத்தைத் தந்தது. இலண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி இரவுச் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செய்தியொன்றை, நண்பரொருவர் இலண்டனிலிருந்து தொலைபேசியில் கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் என் தாயையும், பின்னர் எனது மூத்த சகோதரர் நாவேந்தனையும் இழந்து துன்பம் தோய்ந்திருந்த எனக்கு, அருமைத் தோழர், நண்பர், சகோதரர் எனப் பாசத்தோடு எம்முடன் நீண்ட காலம் பழகிய வீ.சின்னத்தம்பி வட்டுக்கோட்டையில் மரணமாகிய செய்தி மிகுந்த கலக்கத்தையும், மனவருத்தத்தையும் தந்துவிட்டது. இதனை எழுதும்போதும் எனக்கு ஏற்பட்டுள்ள இனந்தெரியாத நெஞ்சுவலி குறையவில்லை.
சீன பீக்கிங் வானொலி தமிழ் ஒலிபரப்பாளராகவும், அயல்மொழிப் பதிப்பக மொழிபெயர்ப்பாளராகவும் கடமை யாற்றிவிட்டு நாடு திரும்பியிருந்த சின்னத்தம்பி தம்பதிகளின் முன்னால். அன்பான பேச்சும், புன்னகையும், தேநீரும். . . * * * * * وليكي
எத்தனை நாட்கள் - எத்தனை பொழுதுகள் அவருடன் இணைந்து கலை இலக்கிய, அரசியல் பணிபுரிந்தமை எல்லாம் நினைவுக்கு வருகிறது. வட்டுக்கோட்டையில் யான் வசித்த காலத்தில் தினசரி மாலைப்பொழுதுகள் அவரைச் சந்திக்கத் தவறுவதில்லை. மற்றும் காலத்திலும், கலை இலக்கிய அரசியல் காரியாலயம் போன்று விளங்கிய மக்கள் எழுத்தாளர் கே.டானியலின் ‘ஸ்ரார் கராஜ்ஜில் அவரை அடிக்கடி சந்தித்ததுண்டு.
1981ஆம் ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் சென்னை * சி.எல்.எஸ். இலக்கியக் கருத்தரங்கில் கலந்துகொள்ளக்
மண் மறவா மனிதர்கள் 37 வி. ரி. இளங்கோவன்

Page 21
சென்றிருந்தவேளை, அந்த வாரமளவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ளச் சீனாவிலிருந்து வந்திருந்த சின்னத்தம்பி டானியலையும் என்னையும் சென்னையில் சந்தித்தார். ‘மூன்று உலகக் கோட்பாடு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, சீன அரசு சீர்குலைவுப் பாதையில் செல்கிறதெனவும், மாஒவின் கருத்துக்கள் அங்கு பின்தள்ளப்படுகின்றன, மாஓ பாதையாளர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நேரமது!
சென்னையில் டானியலைச் சந்தித்த சின்னத்தம்பி நீண்ட நேரம் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டார். அக்கால கட்டத்தில் சீனாவில் நடைபெற்றுவந்த மாற்றங்களை விபரித்தார். அலுவலகங்கள் தோறும் காட்சியளித்த தலைவர் மாஓவின் படங்கள் எவ்வாறு மாயமாய் மறைந்து கொண்டிருந்தன என்பதை அவர் வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தமை இன்றும் ஞாபகம். தொடர்ந்து சென்னையில் பல நண்பர்களைச் சந்தித்து அரசியல் விவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் சீனா திரும்பிய சின்னத்தம்பி ஒரு சில மாதங்களிலேயே சீனாவிலிருந்து குடும்பத்துடன் நாடு திரும்பிவிட்டார். தொடர்ந்தும் அங்கு கடமையாற்ற வசதியிருந்தும் மனச்சாட்சிக்கு விரோதமாகக் கடமையாற்ற முடிய வில்லையென அங்கு கல்விகற்றுக் கொண்டிருந்த பிள்ளைகளையும், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். நாடுதிரும்பியிருந்த சின்னத்தம்பி தம்பதிகளின் 16 வருட சீன அனுபவங்கள் குறித்து பேட்டிகண்டு பத்திரிகைக்கு அனுப்பியது இன்றும் நினைவிலுள்ளது. அவ்வேளை ‘தொழிலாளி பத்திரிகை, மக்கள் கலை இலக்கியப் பெருமன்றப் பணிகளில் ஈடுபட்டிருந்த எனக்கு அவர் பெரிதும் உதவினார். "மக்கள் இலக்கியம்' சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றினார்.
பின்னர் 1983இல் யான் ஐக்கிய நாடுகள் தொண்டராகத் தெரிவு செய்யப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கடமையாற்றச் சென்றிருந்த காலத்தில், ஒரு சில மாதங்கள் அவரைச்
மண் மmவா மனிதர்கள் 38 வி. ரி. இளங்கோவன்

சந்திக்கவில்லை. 1984ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் யான் நாடு திரும்பியிருந்தவேளை, நாட்டில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுவந்த போராட்ட எழுச்சி, தேசிய இனம் சுயநிர்ணய உரிமைக்காக எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி போராடுதல் முற்போக்கானதே எனச் சிங்கள மக்களுக்குச் சன்முகதாசன் அளித்துவந்த விளக்கம் என்பன உட்பட எத்தனையோ விடயங்கள் குறித்து அவருடன் விவாதித்ததுண்டு.
இந்திய ‘அமைதிப் படை வந்திருந்த காலம், யாழ். மக்கள் நல்லூர் கோவிலிலும் மற்றும் இடங்களிலும் இடர்ப்பட்டவேளை, பல்கலைக் கழகமும் தாக்குதல்களுக்குள்ளாகி இருந்த நேரத்தில் வட்டுக்கோட்டைக் கிராமத்தின் ஒரு பகுதி தான் ஓரளவு தாக்குதல் குறைந்த இடமாக இருந்தது. இதனால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், டாக்டர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உட்படப் பலர் இங்கு வந்து குவிந்திருந்தனர்.
இவ்வேளை சகல புத்திஜீவிகளையும் சந்தித்து, எல்லோரையும் ஒன்றுகூட்டி ஏகோபித்த குரலில், “இந்தியப் படையின் தாக்குதல்களை உடன் நிறுத்த வேண்டும், மக்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்ப உடன் அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற அத்தியாவசிய கோரிக்கைகளை, இந்தியா உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் அனுப்பவேண்டும் எனச் சிந்தித்து முன்னணியில் நின்று சின்னத்தம்பி செயற்பட்டார். அவருடன், எழுத்தாளர் ஐ.சாந்தன், மற்றும் ஒரு சிலருடன் யானும் வட்டுக்கோட்டையில் குவிந்திருந்த சகல புத்திஜீவிகளையும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஒன்றுகூட்ட உதவினோம்.
அன்று தென்னிந்தியத் திருச்சபை பேராயராக விளங்கிய அம்பலவாணர், யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர், உப அதிபராகக் கடமையாற்றிய இன்றைய பேராயர் எஸ்.ஜெபநேசன் உட்படப் பலரையும் சந்தித்துப் பேசினோம். யாழ்ப்பாணக் கல்லூரியில் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட தீர்மானங்களை உலக நாட்டுத் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கும் பணியில் சின்னத்தம்பி பெரிதும் பங்களித்தார்.
மண் மறவா மனிதர்கள் 39 வி. ரி. இளங்கோவன்

Page 22
புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிஞர்களில் ஒருவரான கார்த்திகேசன் விட்டுச்சென்ற பணிகளை மகள் இராணியும் கணவர் சின்னத்தம்பியும் தொடரத் தவறவில்லை. எந்த வேளையிலும் அவர்கள் வீடடில் விருந்தினர் இருப்பார்கள். அவர்கள் எந்த இனம், சாதி, சமயம், உத்தியோகம், தராதரம் என்ற பேதம் அந்த வீட்டில் கிடையாது. எல்லோருக்கும் உபசாரம் ஒரேவிதமாகத் தானிருக்கும். எந்த முற்போக்கான விடயங்களுக்கும் அங்கு ஆலோசனை, ஆதரவு ஒத்துைைழப்பு கிடைக்கும்.
டானியலின் தொழிலகத்தில் சில வருடங்கள் நிர்வாகப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். டானியலின் மறைவின் பின்னர், யுத்தக் கெடுபிடிகளும் அதிகரித்த சூழ்நிலையில் தொழிலகச் செயற்பாடுகள் முடங்கின. வீட்டு நிலைமை கருதிச் சில வருடங்கள் யாழ் உதயன்' தினசரிப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றினார்.
இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் பலவற்றிலும் கலை இலக்கிய, அரசியல் கட்டுரைகளை இளமைக் காலம் முதல் இறுதிக்காலம் வரை எழுதிவந்தார். தமிழ், ஆங்கிலம், சிங்களம், சீன மொழிகளை அறிந்திருந்த சின்னத்தம்பி இம்மொழிகளில் காத்திரமான பல கட்டுரைகளை எழுதிச் சர்ச்சைக்குரிய எழுத்தாளராகப் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் எழுதி வெளியிட்ட "ஓ கனடா’ என்ற நாவலும் ‘மக்கள் நேசன் கார்த்திகேசன் மாஸ்ரர்’ என்ற நூலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் எழுதி வைத்துள்ள 'சீன அனுபவ டையரி" சர்வதேச அரசியல் சித்தாந்தப் போராட்டங்களை விமர்சிப்பதாகவும், கலை இலக்கிய, அரசியல் பாதையை நெறிப்படுத்தும் அனுபவப் பதிவுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. ‘தம்பி’ என்று நண்பர்களாலும், பொதுமக்களாலும் அன்பாக அழைக்கப்பட்ட இவரது ‘மணிவிழா சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் சிறப்புற நடைபெற்றதெனச் செய்திகள் தெரிவித்தன. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள், உயர் அதிகாரிகள், பொதுநலத் தொண்டர்கள், பொதுமக்கள் பலரும்
மண் மறவா மனிதர்கள் 40 வி. ரி. இளங்கோவன்

கலந்துகொண்டு சின்னத்தம்பியின் பணிகளைப் பாராட்டி வாழ்த்துக் கூறினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சீனாவில் வசிக்கும்போது பிறந்த மகளுக்கு சீனோதயா என்றும், ரீலங்காவில் பிறந்த மகளுக்கு சிறிஉதயா எனவும் பெயரிட்டு பாசத்தோடு வளர்த்தார். அண்மையில் தான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய டாக்டர் சீனோதயாவுக்குத் திருமணம் நடந்தது. கணவரும் டாக்டராவார்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி சின்னத்தம்பியின் உயிரைப் பறித்துவிட்டது. இறுதி அஞ்சலி வட்டுக்கோட்டை இல்லத்தில் செவ்வாய் கிழமை (17-04-2001) நடைபெற்றது. முன்னேற்பாட்டின்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அன்றே உடல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கொடுக்கப்பட்டது. நாட்டு நிலைமை கருதி, வெளிநாடு வருமாறு உறவினர் பலர் அழைத்தும் இவர் அந்த அழைப்புகளை நிராகரித்திருந்தார். என்றும் மண்ணையும், மக்களையும் நேசித்த இவர் பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் தாய் மண்ணைவிட்டு இடம்பெயராது வாழ்ந்து முடித்தார்.
அடக்கமான, அன்பான வார்த்தைகளோடு முகம் மலர எவரையும் மதித்து வரவேற்கும் பண்பும், கொடுமைகளைச் சாடும் துணிச்சலும், சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக என்றும் குரல்கொடுக்கும் மனிதாபிமானியுமான சின்னத்தம்பியின் பணிகள் போற்றத்தக்கவை. அவரது நாமம் நின்று நிலைக்கும்.
- 18.04.2001 -
மண் மறவா மனிதர்கள் 41 வி. ரி. இளங்கோவன்

Page 23
News
Ynwyr
iiiiiiiiiiii
திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம்
மண் மறவா மனிதர்கள் 42 வி. ரி. இளங்கோவன்
 

அறிவுப் பசிக்கு உதவிய ஆர். ஆர். பூபாலசிங்கம்
தற்போதைய யாழ். நவீன சந்தைக் கட்டிடம் அப்போது கட்டப்படவில்லை. அந்த இடத்தில் தான் அன்றைய பஸ் நிலையம் அமைந்திருந்தது. அதற்கு மேற்குப் புறமாகக் கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம். அதனருகாமையில் மேற்குப்புறமாகத் தகரக் கூரைகளுடன் வரிசையாகப் பலகடைகள். அதிகமானவை குளிர்பானம், பிஸ்கட் முதலியன விற்கப்படும் கடைகள். அவற்றின் நடுவே ஒரு புத்தகசாலை.
அந்தப் புத்தகசாலையின் உள்ளேயும், வாசலிலும் தினசரி பல இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்களைக் 85IT600T6)TLb.
உள்ளே ஓர் உயர்ந்த கறுப்பு உருவம், வெள்ளை வேட்டி, அதற்கேற்ற வெள்ளை நாசனல் - சேட், சிவப்பு நிற “மவ்ளர்” தோளில் - சிலவேளை நாரியில் இறுக்கக்கட்டியபடி, சிலவேளை நெற்றியில் சந்தனப் பொட்டு, பளிச்சிடும் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரிக்கும் அழகு, அன்பாகப் பண்பாகப் பேச்சு. ஆமாம். அவர் தான் அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் ஆர். ஆர். பூபாலசிங்கம்.
அறுபதுகளின் முற்பகுதி. எனக்கு பன்னிரண்டு - பதின்மூன்று வயதிருக்கும். வாரவிடுமுறை தினங்களில் அல்லது பாடசாலை விடுமுறை நாட்களில் எனது மூத்த சகோதரர் நாவேந்தனின் அழைப்பின்பேரில் புங்குடுதீவிலிருந்து யாழ். வந்து அந்தப் புத்தகசாலையில் அவரைச் சந்திப்பதற்காகக் காத்துநிற்பேன்.
நாவேந்தன் அண்ணர் அங்கு வந்ததும் “எப்படி. நாவேந்தன்.” என முதலில் புத்தகசாலை உரிமையாளர் நலம் விசாரிப்பார். இருவரும் சில விடயங்களைப் பற்றி பேசிக்கொள்வர். பின்பு அங்கு நிற்கும்
மண் மறவா மனிதர்கள் 43 வி. ரி. இளங்கோவன்

Page 24
சக எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடன் அண்ணர் உரையாடிக்கொள்வார். சில பத்திரிகைகள் - நூல்களை எடுத்துப் பார்ப்பார் - வாங்கிக்கொள்வார். அவ்வேளை யானும் சில நூல்களை - பத்திரிகைகளை அங்கு புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
இப்படியாகப் பத்திரிகை - புத்தகங்களைப் புத்தகசாலையின் உள்ளே நின்று எடுத்துப் பார்ப்பதுவும், தேவையானவற்றை வாங்கிக்கொள்வதுவுமான பழக்கம் பூபாலசிங்கம் புத்தகசாலையில், யான் நாட்டைவிட்டுப் புறப்படும்வரை தொடர்ந்தது எனலாம்.
அந்தக் காலத்தில் இரசிகமணி கனக செந்திநாதன், சு. இராஜநாயகம், கே. டானியல், டொமினிக் ஜீவா, அம்பி, தேவன் - யாழ்ப்பாணம், நந்தி, தில்லைச்சிவன், சொக்கன், முருகையன், சோமகாந்தன், காரை சுந்தரம்பிள்ளை, அகஸ்தியர் ஆகியோரையும் பின்னர் அறுபதுகளின் பிற்பகுதியில் செ. யோகநாதன், தெணியான், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகியோருட்படப் பல பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் அந்தப் புத்தகசாலையில் தான் பலதடவைகள் பார்த்திருக்கிறேன் - பேசியிருக்கிறேன்.
கஸ்தூரியார் வீதியின் ஆரம்பத்தில் - ஆஸ்பத்திரி வீதியில் இருந்த, எமது ஊரைச் சேர்ந்தவரின் உணவகமான “பிருந்தாவனம் ஹோட்டல்” பிரசித்திபெற்றது. அதன் உரிமையாளர் பொன்னையா தமிழரசுக்கட்சியின் தீவிர விசுவாசி. எனது சகோதரரின் நண்பர். ஆரம்ப காலத்தில் தீவகத்தில், குறிப்பாகப் புங்குடுதீவில் தமிழரசுக் கட்சியை அறிமுகப்படுத்திய நாவேந்தன் அண்ணருக்கு உறுதுணையாக நின்ற மனிதர். 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தவேளை சத்தியாக்கிரகிகளுக்கு உணவளித்த பிரமுகர்.
அந்த உணவகத்தில் குடும்பமாக அமர்ந்து உணவருந்த தனித்தனியாகச் சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த ஒதுக்கிடங்களில் எனது சகோதரர் நாவேந்தன், அடுத்த சகோதரர் துரைசிங்கம் ஆகியோர் அமர்ந்து பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிவந்த பத்திரிகைகளை, புத்தகங்களை வாசித்தவாறு தேநீர்
மண் மறவா மனிதர்கள் 44 வி. ரி. இளங்கோவன்

அருந்துவர். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் எழுதிக்கொண்டிருப்பர். யானும் அதில் கலந்துகொள்வேன். பின்னர் மீண்டும் அருகிலுள்ள புத்தகசாலைக்குத் திரும்பி தாம் சந்திக்க வேண்டியவர்கள் - எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் அங்கு வந்தார்களா எனக் கண்டு பேசி மகிழ்வர். அவ்வாறு கலை இலக்கிய, அரசியப்ல்துறை சார்ந்த சகலரும் சந்திக்கும் - பேசிக்கொள்ளும், சிலவேளை புரிந்துணர்வோடு விவாதித்துக்கொள்ளும் - சர்ச்சைப்படும் இடமாகப் பூபாலசிங்கம் புத்தகசாலை விளங்கியதை யான் அன்று பாடசாலை மாணவப் பருவத்திலேயே பார்த்திருக்கிறேன். மிக இளம் வயதிலேயே கலை இலக்கிய, அரசியல் பிரமுகர்கள் பலரையும் பார்த்துப்பேசும் சந்தர்ப்பங்கள் எனக்கு சகோதரர் நாவேந்தன் மூலம் பூபாலசிங்கம் பூத்தகசாலையிலேயே அதிகமாகக் கிடைத்தது எனலாம்.
அந்தக் காலத்தில் பல்வேறு அரசியல் முரண்பாடு கொண்டவர்களும் அந்தப் புத்தகசாலையில் சந்தித்துக்கொள்வர். விவாதித்துக்கொள்வர். அவ்வேளை எனது சகோதரர் தமிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கியாக - அவர்களின் இலக்கியப் பிரதிநிதியாக விளங்கியவர். அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் நாவேந்தன், புதுமைலோலன் ஆகியோர் விளங்கினர் என விமர்சகர்கள் குறிப்பிடுவர். ஆர். ஆர். பூபாலசிங்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர். இருப்பினும் மற்றக் கட்சிகளின் பிரமுகர்கள் - இலக்கியவாதிகள் எவராயினும் அவரது புத்தகசாலைக்கு வரத்தவறியதில்லை. காரணம். பூபாலசிங்கம் அவர்களின் அன்பும் பண்பும் நிறைந்த பேச்சு - உபசரிப்பு. அத்துடன் அன்று மார்க்ஸிச நூல்களை இந்தியாவிலிருந்தும், கொழும்பிலிருந்தும் உடனுக்குடன் பெற்று வாசிக்க பூபாலசிங்கம் புத்தகசாலையே உதவியாக விளங்கியது.
மார்க்ஸிசக் கருத்துக்களைப் பரப்பும் பத்திரிகைகளை விநியோகித்ததின் காரணமாகப் பொலிசாரின் தாக்குதல்களுக்கும் பூபாலசிங்கம் அவர்கள் ஆளாகியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குப் பிரதேச சுயாட்சியே ஏற்றது எனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை வலியுறுத்தவும் அவர் தவறியதில்லை.
மண் மறவா மனிதர்கள் 45 வி. ரி. இளங்கோவன்

Page 25
கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ சார்பாகத் தம்மை இனங்காட்டி நின்றார். அதன் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய தோழமை உறவு இருந்தது. இருப்பினும் அன்று பலம்பெற்றிருந்த சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அவர் நேரடியாக எவ்வேளையிலும் முரண்பட்டதில்லை. எல்லோருடனும் அவர் தோழமையைப் பேணத் தவறவில்லை.
யாழ். புதிய பஸ் நிலையம் முன்பாக மூலைக்கடையில் பூபாலசிங்கம் புத்தகசாலை இயங்கியதுடன் அதன் கிளைகளும் நகரின் சில பகுதிகளில் இயங்கின. 1981 ஜூன் முதல் நாளில், தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்குக் கேடுசெய்யத் திட்டமிட்டவர்கள் கல்விக்களஞ்சியமாகத் திகழ்ந்த யாழ். பொதுசன நூல்நிலையத்தைத் தீயினால் பொசுக்கியபோது, பூபாலசிங்கம் புத்தகசாலைகளையும் விட்டுவைக்காமைக்குக் காரணம் அவற்றின் முக்கியத்துவமே.! எத்தகைய இழப்புகள் ஏற்படினும், துயர்கள் எதிர்வந்தபோதிலும் துவண் டுவிடாமல் விடாமுயற்சியால் புத்தகசாலையைத் தளிர்க்கவைத்தார்.
நூல்நிலைய எரிப்பை, உண்மை நிலைமைகளைத் தமது கட்சித் தலைவர்கள் மூலம் தென்னிலங்கையில் சிங்கள, ஆங்கில ஏடுகளில் வெளிவர ஆவன செய்தார். யாழ். பொதுசன நூலகத்தின் மீள்விப்புக்கு உதவும் பணிகளையும் மேற்கொண்டாரென அன்றைய மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ சார்புத் தலைவர்கள், தமிழக கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள், இலக்கியவாதிகள் யாராகினும் யாழ்ப்பாணம் வந்தால் அவர்களுக்குப் பூபாலசிங்கம் அவர்களின் வீட்டில் நிச்சயமாக உபசரிப்பு நிகழும். அவரது சொந்த ஊரான நயினாதீவைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் முன்மாதிரியானவராக, பெருமைக்குரியவராக, உதவுகின்ற பரோபகாரியாகத் திகழ்ந்தார்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலை இலக்கிய, அரசியல்வாதிகள் அத்தனைபேரினதும் அறிவுப்பசிக்குப் பூபாலசிங்கம் புத்தகசாலை ஓர் சத்திரமாகவே விளங்கியது எனலாம்.
மண் மறவா மனிதர்கள் 46 வி. ரி. இளங்கோவன்

எழுபதுகளின் பிற்பகுதியில் அப்புத்தகசாலையில் பத்திரிகை விற்பனைப் பகுதிக்கு யாழுர் துரை என்னும் எழுத்தாளர் பொறுப்பாக இருந்தார். வார மாத சஞ்சிகைப் பகுதிகளைத் தர்மராசா என்ற இளைஞர் பார்த்துக்கொள்வார். நண்பகல் வேளைகளில் தினசரி யான் அங்கு சென்று, அவர்களுக்குப் பக்கத்தில் நின்று, அன்று வந்த சகல பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுத் தேவையானவற்றை வாங்கிக்கொள்வது வழக்கம். அவ்வேளைகளில் மூத்த எழுத்தாளர், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா உட்படப் பல எழுத்தாளர்களும், ஆசிரியர்களும் அங்கு வந்து என்னைப் போன்றே அவர்களும் பத்திரிகை - சஞ்சிகைகளை மேலோட்டமாகப் பார்ப்பர்.
பத்திரிகைப் பகுதிப் பொறுப்பாளர் யாழுர் துரைக்கு உதவியாக அவரது மருமகன் ரவி என்ற உயர்தர வகுப்பு மாணவரும் அங்கு சிலவேளை நிற்பார். அவரும் சஞ்சிகைப் பகுதிப் பொறுப்பாளரும் எம்மைப்போன்று தினசரி வந்து பத்திரிகை - சஞ்சிகை வாசிப்போருக்கு “ஓர் குறிப்புச் சொல்” வைத்துத் தமக்குள் பேசிக்கொள்வர். அது என்னவெனில் (15/3) “பதினைந்தின் கீழ் மூன்று” சங்கக்காரர் என்பது. 15 - 0, 3 - C என்பதாகும். அதாவது ஒசியில் (OC) எல்லாம் படிப்பவர்கள் என்பதாகும். இது எமக்கும் தெரிந்திருந்தது.
ஒரு நாள் இவ்வாறு அவர்கள் தமக்குள் பேசிக்கொள்ளும்போது யான், “தம்பியவை. நீங்க. சின்னப் பிள்ளைகள். நாங்க. எத்தனையோ வருசமா இப்படித்தான் வந்து பார்க்கிறனான்கள். உங்களுக்குத் தெரியாவிட்டால் உள்ளே முதலாளி இருக்கிறார். கேட்டுத் தெரிஞ்சுகொள்ளுங்கோ.” என்று சிரித்துக்கொண்டே கூறினேன். அருகில் டொமினிக் ஜீவா புன்முறுவலோடு ஏதோவொரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
அன்று மாலை தோழர் பூபாலசிங்கம் அவர்களிடம். “தம்பியவை. அவர்கள் இலக்கியவாதிகள். எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். நம்பிக் கையானவர்கள். மரியாதைக்குரியவர்கள். அவர்கள் எதை எடுத்து வாசித்தாலும் ஒன்றும் சொல்லாமல் பண்பாக நடந்துகொள்ளுங்கள்.” என்று சொன்னாராம்.
மண் மறவா மனிதர்கள் 47 வி. ரி. இளங்கோவன்

Page 26
இந்தப் பண்பு - தோழமை தான் தோழர் பூபாலசிங்கம் அவர்களைச் சகல இலக்கியவாதிகள் மனதிலும் பதியவைத்தது.
பாரிஸில் அறிவுசார் தமிழ் புத்தகசாலையாக விளங்குவது “அறிவாலயம் புத்தகசாலை”. இதன் உரிமையாளர் நண்பர் சிவதாஸ். சிலவேளைகளில் யான் அங்கு பத்திரிகை - சஞ்சிகைகளை எடுத்து மேலோட்டமாகப் பார்க்கும்போது சிவதாஸ் பலர் முன்னிலையிலும் பகிடியாக, “இது என்ன யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை என்ற நினைப்போ..?’ என்பார். அப்போது யானும் அவருக்குப் பகிடியாக அதிரடி மறுமொழி சொல்வதுண்டு. அந்தளவுக்கு பூபாலசிங்கம் புத்தகசாலை இலக்கிய வாசகர்களின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் கூடமாக விளங்கியதை யாவரும் அறிந்திருந்தனர்.
மரணம் நிச்சயமானது தான். என்றாலும் இலக்கிய நெஞ்சங்களை யெல்லாம் தோழர் பூபாலசிங்கம் அவர்களின் மரணம் துயரில் ஆழ்த்திவிட்டது என்பது உண்மை.!
தமிழறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல, சிறுகக்கட்டி பெருக வாழ்ந்த பூபாலசிங்கம் அவர்களுக்குப் புத்திர சந்தானமும், புத்தக சந்தானமும் புகழ்பாடும் எச்சங்களாய் உள்ளன என்பது யாவரும் அறிந்ததே.!
தந்தையின் பணியை, அவரது விடாமுயற்சி, ஊக்கம், பரோபகாரம் யாவற்றையும் மனதில்கொண்டு அவரது மூத்த புதல்வர் பூரீதரசிங் இன்று முன்னெடுத்து வருகிறார். தந்தையின் பெயர் சொல்லும் புத்தக நிறுவனங்களை ஆலவிருட்சமாய் தளிர்க்கவைத்து, கொழும்பு, யாழ்ப்பாணம், லண்டன் நகரங்களில், ரீதரசிங் சகோதரர்கள் நற்பணிகளுக்கும் உதவிநின்று புகழீட்டி வருகிறார்கள்.
தோழர் பூபாலசிங்கம் நாமம் என்றும் நீடித்து நிலைக்கும்.!
மண் மறவா மனிதர்கள் 48 வி. ரி. இளங்கோவன்


Page 27
| list
■AsHMMMMMMMMMMMM
擱 ;};}
893SPPPih)
திரு. சி. இராமலிங்கம்
மண் மறவா மனிதர்கள் 50 வி. ரி. இளங்கோவன்
 
 
 

ஈழத்து தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை
நவீன சமுதாய வளர்ச்சிக்கேற்ப கலைகள் வளர்ச்சி பெறவேண்டும் - மொழி வளம்பெற வேண்டும். கால ஓட்டத்திற்கு - வளர்ச்சிக்கமைய ஒவ்வொரு மொழியிலும் நடைமுறைகள் துரிதமாகச் சாத்தியப்படுவதற்கு செயற்படுத்தப்படுவதற்கு சுருக்கெழுத்துத்துறை அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. இலங்கையிலும் சுயமொழியில் அலுவல்கள் ஆரம்பித்த காலத்தில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தேவை அவசியமாகப்பட்டது.
தமிழ்மொழியில், தமிழகத்து மூன்று பெரியவர்கள்
(எம்.சீனிவாசராவ், என். சுப்பிரமணியம், பி.ஜி.சுப்பிரமணியம்) மூவகைச் சுருக்கெழுத்து முறைகளை உருவாக்கி தமிழுக்கு அணி செய்தனர். இலங்கைக்கு 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் இச்சுருக்கெழுத்து முறைகள் எட்டவில்லை. இருப்பினும் 1951ஆம் ஆண்டில் இலங்கை வானொலி நிலையம் ஒரு தமிழ்ச் சுருக்கெழுத்தாளரையும், இரண்டு தமிழ்த் தட்டெழுத்தாளர்களையும் நியமனம் செய்தது. இதில் ஒரு தட்டெழுத்தாளராக நியமிக்கப்பட்ட சி.இராமலிங்கமே பிற்காலத்தில் ‘ஈழத்து தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை' எனப் போற்றப்பட்டார்.
தமிழகத்தில், சி.இராமலிங்கம் சுருக்கெழுத்தை நன்கு கற்றுத் தேறியிருந்தார். அக்காலத்தில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பரபரப்போடு சீர்திருத்தக் கொள்கைகளை விதைத்துக் கொண்டிருந்தது. அக்கொள்கைகளாலும் கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களின் பேச்சுவல்லமையாலும் இவர் பெரிதும் கவரப்பட்டார். அதே பாணியில் தானும் பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார். எவரோடு பேசினாலும் அவரைத் தன்வயப்படுத்தும் திறமை கைவரப் பெற்றவர். தி.மு.க.தலைவர்கள் பலரை நேரில் சந்தித்தும் உரையாடியுள்ளார்.
மண் மறவா மனிதர்கள் 51 வி. ரி. இளங்கோவன்

Page 28
1952ஆம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்க மொழிகள் கமிஷனின் மேற்பார்வையில் மருதானை ஆனந்தாக் கல்லூரியின் ஒரு பகுதியில் சிங்கள - தமிழ் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு முதன்முதலாக சிங்களச் சுருக்கெழுத்துப் போதிப்பதற்கு ஒருவரும், தமிழ்ச் சுருக்கெழுத்து போதிப்பதற்கு சி.இராமலிங்கமும் நியமிக்கப்பட்டனர். இந்நியமனத்திற்கென தமிழில் நடாத்தப்பட்ட தேர்வில் பலர் போட்டியிட்டும், வேகப் பரீட்சையில் முதன்மையானவராகத் திகழ்ந்ததின் மூலமே இவர் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனந்தாக் கல்லூரியில் தொடங்கப்பட்ட தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்பு 1959ஆம் ஆண்டிற்குப்பின் நிறுத்தப்பட்டது. ஆனால் யாழ்.பல்தொழில் நுட்ப நிறுவனத்தில் (முன்பு கனிஷ்ட தொழில் நுட்பக் கல்லூரி) சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இராமலிங்கம் இங்கும் போதனாசிரியராக அனுப்பப்பட்டார். 1974ஆம் ஆண்டு சம்மாந்துறை கனிஷ்ட தொழில் நுட்பக் கல்லூரியிலும் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இத்தொழில் நுட்பக் கல்லூரிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தமிழ்ச் சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பயிற்சிபெற்றுத் தேறினார்.
ஈழத்தில் ஒரு சிலர் ஆங்கிலச் சுருக்கெழுத்து முறையினைத் தழுவி, தனிப்பட்ட முறையில் தமிழ்ச் சுருக்கெழுத்து போதித்து வந்தபோதிலும் அம்முறைகள் சிறப்படைய முடியாமல் வழக்கொழிந்து போயின. தமிழில், சுருக்கெழுத்துப் பயிற்சிக்கென ஏரம்பமூர்த்தி என்பவரும், சுன்னாகம் ஆனந்தா கலைக் கல்லூரியினரும், திருமதி மகாலெட்சுமி இராமலிங்கமும் ஒவ்வொரு சுருக்கெழுத்துப் பாடநூல்களை வெளியிட்டனர். இராமலிங்கத்தின் உறுதுணையோடு, அவரது மனைவியும் ஈழத்தின் முதல் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி பெற்ற மாணவியுமான மகாலெட்சுமி இராமலிங்கம் வெளியிட்ட நூலே கல்விக் கூடங்களில் சுருக்கெழுத்து மாணவர்க்கான கைந்நூலாக நிலைத்துநிற்க முடிந்தது.
மண் மறவா மனிதர்கள் 52 வி. ரி. இளங்கோவன்

சுருக்கெழுத்துப் பயிற்சிக் கைந்நூல்
‘ஸலிலோவன் ஆங்கிலமுறை, "பிட்மன்' ஆங்கிலமுறை என்பவற்றைக் கவனத்திலெடுத்து எம்மண்ணின் மொழி வழக்குக்கமைய புதிய குறியீடுகளோடு, சொல்வதெழுதற் பயிற்சிகளையும் உள்ளடக்கியதாக, எம்மொழிக்கு ஒர் அணிகலனாக இந்நூல் விளங்கியது. இராமலிங்கம் போதித்த தமிழ்ச் சுருக்கெழுத்து முறையில் பயிற்சி பெற்றோரே பாராளுமன்றம், நீதிமன்றங்கள், அரசகாரியாலயங்கள் தொட்டு சாதாரண கந்தோர் வரை தமிழ்ச் சுருக்கெழுத்து - தட்டெழுத்தாளர்களாக நிரம்பியிருக்கின்றனர். இவர் அறிமுகப்படுத்திய முறையினால் தமிழ்ச் சுருக்கெழுத்தின் வேகம் அதிகரித்துள்ளதை தமிழக தமிழ்ச் சுருக்கெழுத்தாளரே பாராட்டினர். ‘தமிழ்ச் சுருக்கெழுத்து, என் ஆசிரியரின் கண்டுபிடிப்புக்களின் துணையுடன் வேகத்தில் இருமடங்கெய்தி வளம் பெற்றுள்ளது என அன்று தேசிய அரசுப் பேரவை - அரச அறிக்கை உதவி ஆசிரியரும், இலங்கையில் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர்களில் அன்று உயர்பதவி வகித்தவருமான எம்.ஏ.எம்.முகையிதீன் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளி விழா
1976ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் இராமலிங்கம் அவர்களின் பணியினைப் பாராட்டி வெள்ளி விழா நடத்தப்பட்டது. அன்று யாழ்.வீரசிங்கம் மண்டபம் ஈழத்து தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் தட்டெழுத்தாளர் பொதுமக்களால் நிரம்பி வழிந்தமை பெருமைக்குரியதாகும். சிறந்ததோர் வெள்ளி விழா மலரும் வெளியிடப்பட்டது. எத்துறையிலும் முன்னோடிகள் வாழும்போதே கெளரவிக்கப்பட வேண்டும் - பாராட்டப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டு "யாழ்.ஈழநாடு' மற்றும் கொழும்புப் பத்திரிகைகள் யாவும் கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டன. தமிழகத் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் பலர், தி.மு.க.தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன், புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் உட்படப் பலர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர்.
மண் மறவா மனிதர்கள் 53 வி. ரி. இளங்கோவன்

Page 29
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சி.இராமலிங்கம் இந்நாட்டிலே பெரும்பணி ஒன்றில் ஈடுபட்டு வந்திருக்கிறார். எத்துறையிலும் முன்னோடிகள் முழுமனதாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இலங்கையில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தையெனக் கருதப்படத் தக்கவர் அன்பர் இராமலிங்கம், அவர் நம்மவரின் மதிப்புக்குரியவர். - இவ்வாறு பேராசிரியர் க.கைலாசபதி அன்று குறிப்பிட்டுள்ளமை நினைவு கூரத்தக்கது.
* சுருக்கெழுத்துத் தந்தை கல்வித் துறையினரோடு மாத்திரமல்ல, கலை இலக்கிய, பத்திரிகைத் துறையினர் உட்படப் பல்துறையினரோடும் நெருங்கிப் பழகியவர். அவரவருக்குரிய மதிப்பளித்து அவர் பழகும் விதத்தினால் அவருக்கு நிறைந்த நண்பர் கூட்டம். தொழில் நுட்ப நிறுவனத்தில் அவர் தமிழ்ச் சுருக்கெழுத்துப் போதனாசிரியராகக் கடமையாற்றினும், அவர் அங்கு சர்வ வல்லமை கொண்ட - ஆளுமை மிக்க ஆசானாகவே மிளிர்ந்தார். இதற்குக் காரணம் என்றும் அவருக்கு மாணவர் அளித்த ஆதரவும் அன்பும் தான். அதேபோல் மாணவர் எந்த உதவி கேட்டுப் போனாலும் அவர் உதவத் தவறியதில்லை.
அக்காலத்தில் தொழில் நுடப் நிறுவன மாணவர் சங்க விழாக்கள் கலை இலக்கிய விழாக்களாக மிளிர அவர் பக்கபலமாக நின்று உதவினார். கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், புதுவை இரத்தினதுரை, லோகேந்திரலிங்கம், அன்பு ஜவகர்ஷா, நல்லை அமிழ்தன், இலங்கை வானொலி நாடகத்துறை கட்டுப்பாட்டாளர் கே.எம்.வாசகர் உட்படப் பலர் எம்மோடு விழாக்களில் கலந்து கொண்டமை ஞாபகம். கவியரங்கமானாலும் சரி, கருத்தரங்க மானாலும், பட்டிமன்றமானாலும் சரி யான் கலந்துகொள்ளும்போது அங்கு முன்வரிசையில் உட்கார்ந்து சபாஷ் போடும் என் ஆசானை எத்தனை வருடமாகிலும் மறக்கமுடியாது.
அந்நியப் படை அமைதி காத்த காலத்தில் நோயுற்று இருந்த ‘சுருக்கெழுத்துத் தந்தையை மரணம் தழுவிக் கொண்டது. ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் அவரது மாணவர்,
மண் மறவா மனிதர்கள் 54 வி. ரி. இளங்கோவன்

புத்திஜீவிகள் மத்தியில் பெருந்துயரத்தைக் கொடுத்த அவர் மறைவு அவரது குடும்பத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் அராலியை வாழ் விடமாகவும் கொணி ட அவர் என்றும் தமிழையும் , தமிழறிஞர்களையும், மண்ணையும் பெரிதும் நேசித்தவர். மண்ணை நேசித்த அந்தக் கலைஞன், முன்னோடி என்றும் மதிப்புக்குரியவரே!
- மார்கழி, 1990 -
மண் மறவா மனிதர்கள் 55 வி. ரி. இளங்கோவன்

Page 30
: {!!!
x
88: 繼
ክ(፳፬
11ItIII tijl llii
திரு. ஆர். சிவகுருநாதன்
மண் மறவா மனிதர்கள் 56 வி. ரி. இளங்கோவன்
 

எல்லோருக்கும் இனிய மனிதன்
ஆர். சிவகுருநாதன்.
எங்கள் வீடு ஒரு செய்தி நிறுவனம் போன்று பல்லாண்டுகள் இயங்கியது. மூத்த சகோதரர் நாவேந்தன் முதல் கடைசிச் சகோதரர் வரை எங்கள் சகோதரர்கள் யாபேருமே சுமார் நாற்பது வருடங்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவரெனக் காலத்துக்குக்காலம் பத்திரிகை, வானொலிச் செய்தியாளராகச் செயற்பட்டோம்.
நாவேந் தன் பதனாறு வயதல வீரகேசரியில ஒப்புநோக்காளராகச் சேர்ந்து சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு ஊருக்குத்திரும்பிச் சில வருடங்கள் வீரகேசரியின் நிருபராகச் செயற்பட்டார். துரைசிங்கம் அண்ணர் தினகரன் நிருபராக விளங்கினார். பின்னர் அக்கா ஞானசக்தி, சிவானந்தன் அண்ணர், யான், தங்கை சரோஜினி, தம்பி தமிழ்மாறன் என எல்லோருமே காலத்துக்குக்காலம் இலங்கையிலிருந்து வெளிவந்த சகல பத்திரிகைகளுக்கும் நிருபர்களாகக் கடமையாற்றினோம்.
வீரகேசரி, தினகரன் குறுாப், தினபதி குறுாப், டெயிலி மிரர் - ஈழமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாவற்றுக்கும் எமது வீட்டு மேசையிலிருந்து விதம்விதமாகச் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டன. இந்தியச் சஞ்சிகைகளுக்கும் செய்திகள், கட்டுரைகள் அனுப்பப்பட்டன.
அக்காலத்தில் யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் சிறப்புடன் இயங்கியது. சமாச விழாக்கள், யாழ் முற்றவெளியில் சமாசம் நடாத்தும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி, மரதன் ஓட்டப்போட்டி, வாணவேடிக்கை என்பன குடாநாட்டு மக்களைக் குதுாகலிக்க வைத்த காலம்.
“சமூகஜோதி” கேற் முதலியார் சி. தியாகராசா சமாசத்தின் தலைவராகவும் துரைசிங்கம் அண்ணர் செயலாளராகவும்
மண் மறவா மனிதர்கள் 57 வி. ரி. இளங்கோவன்

Page 31
கடமையாற்றினர். சமாசத்திற்கு இலங்கை வானொலியில் மாதமொருமுறை கதிராம சஞ்சிகை நிகழ்ச்சியில் இடம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய அந்நிகழ்ச்சியை மாதமொருமுறை துரைசிங்கம் அண்ணர் தயாரித்தளிப்பார். மாவட்டத்திலுள்ள சனசமூக நிலையங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு அந்நிகழ்ச்சியில் பங்குபற்றச் சந்தர்ப்பமளித்து வந்தார்.
அக்காலம் வானொலி கிராமசஞ்சிகை நிகழ்ச்சியின் பொறுப்பாளராக விவியன் நமசிவாயம் அவர்கள் கடமையாற்றி வந்தார்.
ஒரு தடவை வானொலி நிகழ்ச்சிக்கென அண்ணருடன் கொழும்பு வந்து கோட்டை வை. எம். சி. ஏ. விடுதியில் தங்கியிருந்தோம். வானொலி நிலையத்திற்குச் சென்று கிராமசஞ்சிகை நிகழ்ச்சியில் பங்குபற்றிவிட்டு வந்தோம்.
பின்னர் அண்ணர் “லேக்கவுஸ்” செல்வோம் என அழைத்துச் சென்றார். அங்கு தினகரன் ஆசிரியர் எம்மை அன்புடன் வரவேற்று உபசரித்தார். சிறுவனான என்னோடும் அன்பாக உரையாடினார். நீயும் பத்திரிகைக்கு எழுதுகிறாயா என ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டுப் பாராட்டினார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே யான் வீரகேசரி நிருபராக (டிசம்பர் 1966) நியமனம் பெற்றேன்.
எங்கள் வீட்டிலிருந்து சகல பத்திரிகைகளுக்கும் செய்திகள் அவைக்கேற்றவாறு அனுப்பப்படுவது அப்பத்திரிகை ஆசிரியர்களுக்குத் தெரிந்திருந்தது. அக்காலத்தில் ஒரு பத்திரிகையின் நிருபர் மற்றப் பத்திரிகைக்குச் செய்தி அனுப்புவது விரும்பத்தக்கது அல்ல. பத்திரிகை ஆசிரியர்கள் அப்படிச் செயற்படும் நிரபர்களைக் கண்டித்துவிடுவார்கள்.
ஆனால் அன்று தினகரன் ஆசிரியராக விளங்கிய சிவகுருநாதன் அவர்களோ, வீரகேசரி ஆசிரியராக விளங்கிய சிவப்பிரகாசம் அவர்களோ, அல்லது தினபதி ஆசிரியராக விளங்கிய எஸ். டி.
மண் மறவா மனிதர்கள் 58 வி. ரி. இளங்கோவன்

சிவநாயகம் அவர்களோ எமது செயற்பாடுகளைக் கண்டித்ததில்லை. காழ்ப்புணர்வு கொண்ட ஒரு சிலர், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட எமக்கெதிராக முறைப்பாடுகள், பெட்டிசங்கள் எழுதியனுப்பிய போதிலும் அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியப் பெருமக்கள் எமது செய்திகளின் உண்மைத் தன்மை, தரமறிந்து எமது எழுத்துப் பணியை மேலும் ஊக்குவித்தே வந்தார்கள்.
யான் “தினகரன் குறுாப்” நிருபராக நியமனம்பெற்ற காலம் முதல் கொழும்பு வரும்போதெல்லாம் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் அவர்களைச் சந்தித்துச் செல்வது வழக்கம். அவர் மூத்த சகோதரர் போன்றே என்னை “வா. தம்பி. வா’ என வரவேற்று உபசரிப்பார். வந்ததும் முன்னால் இருக்கவைத்து நீண்ட நேரம் பலதும் பத்துமாக உரையாடுவார் . அவரது நகைச் சுவை கலந்த பேச்சு சுவையாகவிருக்கும். சகோதரர்களின் உடல்நலம் - சுகம் விசாரிப்பார். இலக்கிய விடயங்கள் - சர்ச்சைகள் குறித்துப் பேசுவார். எனக்கு மிகத் தெரிந்த எழுத்தாளர்களின் நலம் விசாரிப்பார். அவரோடு பேசிக்கொண்டிருப்பது மிக மகிழ்ச்சியைக் கொடுக்கும். “தொடர்ந்து உற்சாகமாகச் செயற்படு. செய்திகளை எழுதியனுப்பு. நல்ல வருமானமும் கிடைக்குமல்லவா.” எனக்கூறி அவர் சிரிக்கும் பாணியே தனி அழகு தான்.
தினகரனில் எமது செய்திகள் அதிகமாகப் பிரசுரமாகும். அதிக செய்திகள் பிரசுரமாகையில், சில செய்திகளின் தலைப்பில் எமது அடையாளமாக “புங்குடுதீவு குறுாப் நிருபர்” எனப் போடாது, செய்தியின் கீழ் “தீவுப்பகுதி நிருபர்” எனப் பொருள்பட “திநி” என அடையாளமிடப்படும். தீவுப்பகுதிச் செய்திகள், யாழ். மாவட்டச் செய்திகள் மாத்திரமல்ல சிலவேளை எமக்குத் தெரிந்த “கொழும்புச் செய்திகள்” கூட நாம் எழுதிப் பிரசுரமாகியுள்ளன.
“செய்திகளில் திருத்தம் செய்யும் வேலை இருக்காது. தரமாக இருக்கும். அவை தெளிவான கையெழுத்தில் இருக்கும். எனவே அவை அப்படியே பிரசுரிக்கத்தக்கன” என உதவி ஆசிரியர்களுக்கும் எமது செய்திகள் குறித்து சிவகுருநாதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மண் மறவா மனிதர்கள் 59 வி. ரி. இளங்கோவன்

Page 32
எனது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் பலவும் புனைபெயர்களில்கூட தினகரனில் பிரசுரமாகியுள்ளன.
யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அவர் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்கள் சிலவற்றில் எனது உரையை, கவிதையைக் கேட்டபின் மனம்திறந்து அவர் பாராட்டியமை ஞாபகத்திலுள்ளது.
அவரது நல்மனது எவராலும் என்றும் மறக்க முடியாதது. அவர் எல்லோருக்கும் நண்பர். யாழ்ப்பாணம் வந்தால் அவர் மக்கள் எழுத்தாளர் கே. டானியலுடன் நட்புரிமையுடன் பேசிக்கொள்வார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடனும் அதே நட்புரிமையுடன் பேசுவார். அண்ணர் நாவேந்தன், துரைசிங்கத்துடனும் சகோதரன் போலப் பேசுவார். எல்லோருக்கும் இனியவராகவே இறுதிவரை வாழ்ந்தார்.
“பத்திரிகை உலகம்” போட்டி, பொறாமை, காழ்ப்புணர்வு மேலோங்கியது எனப் பலரும் கூறுவர். சந்தர்ப்பம் பார்த்துச் சதிசெய்து ஒருவரை வீழ்த்தித் தாம் முன்னேற வேண்டுமெனச் சந்தர்ப்பவாதிகள் காத்திருப்பர் எனக் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில், பத்திரிகை ஆசிரிய பீடத்தில் சுமார் நாற்பது வருட காலம் பணியாற்றியமை என்பது சாதனைக்குரியது. அந்த வல்லமை, ஆளுமை, எல்லோருடனும் நட்புடன் பழகும் தன்மை என்பன நல்மனிதனான சிவகுருநாதன் அவர்களை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது.
பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றியவாறே பட்ட மேற்படிப்பை மேற்கொண்ட அவர், “இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி” என்ற பொருளில் ஆய்வு நூலைச் சமர்ப்பித்து முதுகலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பல அண்டுகள்
தமிழ்ப்பணியாற்றியவர். இவரது பணிகளைப் பாராட்டி அரசு “கலாசூரி” விருதினை வழங்கிக் கெளரவித்தது.
மண் மறவா மனிதர்கள் 60 வி. ரி. இளங்கோவன்

தினகரன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இரண்டு தலைமுறை எழுத்தாளர்களை வெளிக்கொணர்ந்தாரென விமர்சகர்கள் குறிப்பிடுவர். சட்டத்துறையில் நுழைந்து படித்துச் சட்டத்தரணியாகவும், சட்டக்கல்லூரி பகுதிநேர விரிவுரையாளராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றினார்.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராக இரு தடவைகள் தெரிவுசெய்யப்பட்டுப் பணிபுரிந்தார். அச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் அவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது. சகல இன மக்களின் நன்மதிப்பையும் பெற்ற பண்பாளராக விளங்கினார்.
அவரது மறைவின்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், கலை இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் பலருட்பட ஏராளமான புத்திஜீவிகள் அஞ்சலி செலுத்தினர் என்பதை அறியும்போது அவர் நற்பண்புகள் புலனாகின்றன.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டதுபோல, சிவகுருநாதன் அவர்களிடம் ஒரு அங்கதச் சாயல் புன்னகையிருந்தது. இதனை யாவரும் அறிவர். அது அவரை எல்லோருடனும் நண்பனாக வாழவைத்தது.
அவரது படத்தை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வைத்து மதிப்பளித்துள்ளார்கள்.
நீண்ட காலம் பத்திரிகை உலகின் மதிப்புப்பெற்ற தலைமகனாக விளங்கிய சிவகுருநாதன் அவர்கள் எம்மக்களின் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்.
- 10. 03. 2003 -
மண் மறவா மனிதர்கள் 61 வி. ரி. இளங்கோவன்

Page 33
ܘ ܬܠܬܐ
|
திரு. ஆ. சுப்பிரமணியம்
மண் மறவா மனிதர்கள் 62 வி. ரி. இளங்கோவன்
 

புத்தக வர்த்தகர், அச்சக வித்தகர் செம்மல் ஆ. சுப்பிரமணியம்
தமிழில் நூல்கள் பதிப்பித்து வெளியிட்டோ, அல்லது எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டோ வெற்றி கண்டவர்கள், நல்வாழ்வு பெற்றவர்கள், பணம் சம்பாதித்துக் கொண்டவர்கள் மிகக் குறைவு. நமக்குத் தெரிந்த வரையில் ‘கல்கண்டு நிறுவன ஆசிரியர் காலஞ்சென்ற தமிழ்வாணன் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டு
இலாபம் பெற்றதாக அறிந்தோம். கவியரசர் கண்ணதாசன் எழுத்தின் மூலம் இலட்சக்கணக்கில் பெற்றிருந்தாலும் இறுதிக் காலத்தில் எவ்வளவு
வைத்துவிட்டுச் சென்றார் என்பது கேள்வி.
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன், சுஜாதா, கவிஞர் வைரமுத்து போன்ற ஒரு சிலர் தான் இன்றும் உழைக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் எனலாம். வெளியீட்டுத் துறையிலும் ஒரு சில பதிப்பகங்களே நீண்ட காலமாக இயங்குகின்றன. அவற்றில் எழுத்தாளனுக்குரிய பணத்தை, நூல் விற்பனை முடிவில் முறைப்படி கொடுப்பவர் யார் என்பது கேள்வி தான்.
நம்நாட்டில் தமிழையே மூலதனமாகக் கொண்டு வெற்றி பெற்றவர், அதிக பணத்தைப் பெற்றவர் என்றால் காலஞ்சென்ற பல்கலை வேந்தர்’ சில்லையூர் செல்வராசனைக் குறிப்பிடலாம். ஆனால் அவரும் கண்ணதாசனைப் போன்று இறுதிக் காலத்தில் எவ்வளவு பணம் வைத்துவிட்டுச் சென்றார் என்பது கேள்வி தான்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு பெருமகன் நூல் வெளியீட்டுத் துறையிலி சாதனை படைத்துள்ளார். நுாலி களை எழுதிய
எழுத்தாளர்களுக்கு வருட முடிவில் அவர்களுக்குரிய பணமாக
ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுத்துள்ளார். அவ்வாறு ஒரு சில வருடங்களில் பெற்ற பணத்தில எழுத்தாளர்கள் தங்கள் பெருந்தேவைகளையே பூர்த்தி செய்துள்ளார்கள். அந்த வெளியீட்டாளர் தான் புத்தக வர்த்தகர், அச்சக வித்தகர் யாழ்.சுப்பிரமணிய புத்தகசாலை அதிபர், காலஞ்சென்ற செம்மல் ஆ.சுப்பிரமணியம்.
மண் மறவா மனிதர்கள் 63 வி. ரி. இளங்கோவன்

Page 34
யாழ்.மத்திய கல்லூரியில் கல்விகற்றவர். குடும்ப சூழ்நிலை காரணமாக 1934இல் யாழ்.சிவன் கோவில் முன்பாக இயங்கிவந்த சரஸ்வதி புத்தகசாலையில் ஒரு விற்பனையாளராகச் சேர்ந்துகொண்டார். பின்னர், 1937ம் ஆண்டு 26வது வயதில், குடும்ப நகைகளை முதலீட்டிற்கு உதவியாகக்கொண்டு முறி சுப்பிரமணிய புத்தகசாலையை ஆரம்பித்தார். அக்காலத்தில், யாழ்ப்பாணத்தில் பஸ்ரியாம்பிள்ளை புத்தகசாலை, மோசேஸ் புத்தகசாலை, சுன்னாகம் புத்தகசாலை, பருத்தித்துறை புத்தகசாலை, வண்ணார்பண்ணை சண்முகநாதன் புத்தகசாலை, நல்லூர் லலிதா விலாச புத்தகசாலை முதலான புத்தகக் கடைகள் சிறயனவும் பெரியனவுமாக நடைபெற்று வந்தன. அன்று தனியார் பாடசாலைகள் தலைநிமிர்ந்து நிலவிய நேரத்தில் சபையார் வெளியீடுகள், திருமகள் வெளியீடுகள், வட இலங்கை வெளியீடுகள், மாக்மிலன் வெளியீடுகள், அமெரிக்க மிஷன் வெளியீடுகள், கத்தேலிக்க மிஷன் வெளியீடுகள் என்பன ஒருபுறமாயிருந்தன. முது தமிழ்ப்புலவர் நல்லதம்பியின் ஈழவாசக வரிசையும் உலாவந்தன. கொழும்பில் வெளியான வாகிட் பதிப்புக்கள், அப்போதிக்கரிஸ் பதிப்புக்கள், குணசேனா பதிப் புக் கள் முதலியனவும் தமிழ் நாட்டு கோபாலகிருஷ்ணகோன் பதிப்புக்கள், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக்கள், சென்னை சைவ சித்தாந்த சமாஜப் பதிப்புக்கள், அன்பு நிலைய வெளியீடுகள், ஹிக்கின் போத வெளியீடுகள், பாரி நிலைய வெளியீடுகள் என தமிழ், ஆங்கில, சமஸ்கிருத நூல்கள் புத்தகக் கடைகளில் நிறைந்திருந்தன. பாடசாலை நூல்களும் உபகரணங்களும் நிறைந்திருந்தன. சுப்பிரமணியத்தின் நேர்மை, நாணயம், கண்ணியம் என்னும் பண்புகளால் புத்தகசாலையின் பெயர் வியாபகமுற்றது. குடாநாட்டுக்கப்பாலும் தமிழ்பேசுமிடத்தவர் பலர் தங்கள் தேவைகளை இங்கிருந்தே பெற்றார்கள்.
எழுத்தாள நண்பர்களின் தூண்டுதலினால் பயிற்சி நூல்கள், வினாவிடை நூல்கள், உரைநடை விளக்கங்கள் என்பனவற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிப்பித்து முறி சுப்பிரமணிய புத்தகசாலையின் பெயரால் வெளியிட்டார். அவரது நண்பர்களாய், முன்னோடிகளாய் பண்டிதர் இராசையா, பண்டிதர் நடராசா, வித்துவான் சுப்பையாபிள்ளை, வித்துவான் பொன்.முத்துக்குமாரன், க.சி.குலரத்தினம் ஆகியோர் எழுத்தில் அவருக்கு கைகொடுத்தனர். ஆங்கிலம் வல்ல குறீநிவாசன், கார்த்திகேயன் ஆகியோரும் கைகொடுத்து ஊக்குவித்தனர். மணியத்தாரின் வெளியீடுகள் பாடசாலைகள், கல்லூரிகள் எங்கும் குவிந்தன. ஆசிரியர், மாணவர் மனங்களில் இடம்பிடித்தன.
மண் மறவா மனிதர்கள் 64 வி. ரி. இளங்கோவன்

மாணவர் சூழல் வாசகம், மாணவர் சமூகக் கல்வி, இந்து சமய பாடத்திரட்டு, கணித நூல்கள் - வேக்மன், ஹோல் அன் ஸ்ரீவன், பாரதச் செல்வம், இந்து நாகரிகம், தமிழ் மொழிப் பயிற்சிகள், பாலர் பாடல்கள், சிறுவர் கவிதைகள் - கதைகள் என்பன எத்தனையோ பதிப்புகள் பிரசுரமாகி இலங்கையெங்கும் விற்பனையில் சாதனை படைத்தன. சிறுவர் இலக்கிய நூல்கள், மற்றும் சில நூல்கள் இந்திய இறக்குமதி நூல்களின் விற்பனையை முறியடித்து வெற்றிகண்டன.
சுப்பிரமணியம் எழுத்தாளர்களிடம் அவர்தம் படைப்புகளை விலை கொடுத்து வாங்கி பதிப்புரிமையை ஏகபோகமாக்கியதில்லை. பதிலாக ஒவ்வொரு பதிப்புக்குமுரிய ஆதாயத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிடுவார். இரப்பவர்க்கு இல்லையென்னாது உதவியவர். தினசரி அவரிடம் பலர் உதவி பெற்றுச்செல்வர். பக்திப் பழமாக, நேர்மை, நாணயம் மிக்கவராக வாழ்ந்தார். விளம்பரம் விரும்பாத தர்மவானாக அமைதியாகவே வாழ்ந்தார்.
விலைவாசிகள் அதிகரித்த போதிலும், ஊழியர் ஊதியம் அதிகரித்த போதிலும் மணியத்தார் தமது சொந்த அச்சகத்தில் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டே வந்தார். சு.வேலுப்பிள்ளை. க.சொக்கலிங்கம் (சொக்கன்) சி.கார்த்திகேசு, இ.யூரீதரன், கல்விப் பணிப்பாளர் த.துரைசிங்கம், பா.சத்தியசீலன் போன்றோரின் கட்டுரைத் தொகுதிகள், இலக்கண விளக்கங்கள், செயல்முறை நூல்கள், குழந்தைப் பாடல்கள், சிறுவர் கவிதைகள் என்பன கல்வியுலகில் போதிய வரவேற்பைப்பெற்று நன்கு விற்பனையாகின.
ஆங்கிலத்தில் ‘ஜென்ரில் மென் அக்கிறிமென்ற் என்பது எவ்வித எழுத்துமில்லாமல் மனப்பூர்வமான ஓர் உடன்படிக்கையைக் குறிப்பதாகும். இத்தகைய உடன்படிக்கையே மணியத்தாருக்கும் எழுத்தாளருக்கு மிடையில் அருவமாக அமைவதாகும்.
“எத்தனையாயிரம் பிரதிகள் பதித்தீர்கள்? என்ன வீதத்தில் எமக்கு உரிமை தருகிறீர்கள்? - என்று ஒரு நாளாவது எந்த எழுத்தாளரும் அவரைக் கேட்டதில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவரின் எழுத்தாளன், ஐம்பத்தாறு ஆண்டுகளாக அவரின் நண்பன் இதைக் கூறினான். எழுத்தாளனுக்குரிய பணத்தை, குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே வீடு தேடிச்சென்று பக்குவமாக எண்ணிப்பாருங்கள் என்று கூறிக் கட்டுக்கட்டாகக் கொடுப்பது அவர் வழக்கம். இது
மண் மறவா மனிதர்கள் 65 வி. ரி. இளங்கோவன்

Page 35
உண்மையில் எம்மவர்க்கு ஆச்சரியத்தைத் தருவதாகும். இந்தக் காலத்தில் இப்படியும் மனிதரா? - என வியப்பே உண்டாகும்.
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க' என்பது தமிழ்ப் பண்பாடு. மணியத்தார் பண்பாட்டுக் கொடி படரும் கொழுகொம்பாக வாழ்ந்தார்.
முதுமையிலும் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்துவந்த காலத்தில் 06.02.1992ல் (81 வது வயதில்) மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. கற்றறிந்த பெரியோர், ஆசிரியர், மாணவர், தமிழ்ச் சான்றோர், தாயகப் பற்றாளர் கலங்கினர். செம்மல் சுப்பிரமணியம் புகழ் போற்றினர்.
‘கொள்வதும் மிகுதி கொள்ளார் கொடுப்பதும் குறைக்கார் பண்டக் கொள்விலை சொல்லி விற்று லாபமும் அதிகம் கொள்ளார் தெள்ளிய மனத்தினோடே சேர்ந்தவர்க் கினிமை செய்தார் வள்ளன்மை புகழை வேண்டா வழியினில் நிகழ்த்தி வந்தார்,
வாருங்கள் மாஸ்டர் உங்கள் புத்தக வகையாற் காசு சேருதற் குண்டு சற்றே இருங்கள் நான் கணக்குப் பார்த்துச் சீருறத் தருவேன் என்று முகமலர்வோடு சொல்லிக் கோருதற் கிடமேயின்றிக் கொடுப்பதற்கினியார் உள்ளார்.’
இவ்வாறு தமிழறிஞர் சொக்கன் சுப்பிரமணியத்தை நினைவு கூர்ந்தார். வாழ்வாங்கு வாழ்ந்த செம்மல் சுப்பிரமணியம் உண்மையில் தமிழ்த்தொண்டு செய்தோர் வரிசையில் வைத்து மதிக்கப்பட (8660, guish G3
- 05-02-1993
மண் மறவா மனிதர்கள் 66 வி. ரி. இளங்கோவன்

மருத்துவக் கலையில் இலக்கியத் தமிழ் கண்ட வித்தகன் விஸ்வபாரதி
அன்று அறுபதுகளில், நாட்டில் வடபகுதி எங்குமுள்ள பெரிய பாடசாலைகளின் நூல் நிலையங்களில் ஒரு சஞ்சிகை கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அறிவியல் சஞ்சிகையான அதனைக் கட்டாயம் வாசியுங்கள் என ஆசிரியர்கள் கூறுவார்கள். பின்னர் எழுபதில் அரசு மாறிய பின்னர் ‘தமிழகத்திலிருந்து இறக்குமதியாகும் நச்சு இலக்கிய ஆபாசக் குப்பைகளைத் தடை செய்யுங்கள்’ என்ற கோஷம் உரக்கக் கேட்டது. அதற்கமையச் சில சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டன. பல சஞ்சிகைகள் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அறிவியல் சஞ்சிகையென எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'கலைக்கதிர்' சஞ்சிகையின் இறக்குமதி அதிகரித்தது. கல்லூரிகள், நூல்நிலையங்கள் எங்கும் அது இடம்பெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், கலை இலக்கியத்துறையினர் எனப் பல்துறையினரும் அதனை விரும்பி வாசித்தனர்.
புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள், பல்துறைப் பட்டதாரிகள், ஆய்வாளர்களின் கட்டுரைகள் கலைக்கதிரில் இடம்பெறும். தமிழகத்து தரமான இலக்கியச் சஞ்சிகைகளில் எமது எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் அன்று இடம்பெற்றாலும் கலைக்கதிரில் எம்மவரின் படைப்புகள் இடம்பெறவில்லையே என்று நான் நினைத்ததுண்டு.
பின்னர் ஒரு நாள் (ஜூன் 1979) கலைக்கதிர் சஞ்சிகையைப் பார்த்த எனக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்பட்டது. சஞ்சிகையோடு என் மதிப்புக் குரிய மருத்துவ ஆசானினி - நண்பனின் வைத்தியசாலையை நோக்கிச் சென்றேன். என் நண்பன் விஸ்வபாரதியின் (வி.க.விஸ்வலிங்கம்) மருத்துவக் கலையில் இலக்கியத் தமிழ்' என்ற ஆய்வுக் கட்டுரை அதில் அழகுறப் பிரசுரமாகியிருந்தது.
கட்டுரை நன்றாகப் பிரசுரிக்கப்பட்டிக்கிறது என்று பாராட்டினேன். "உனக்கும் அதில் பெருமை தானே' என்றார். கையெழுத்துப் பிரதியாய் அதனைப் பார்த்துப் பாராட்டி, சிறந்ததோர் சஞ்சிகைக்கோ, பத்திரிகைக்கோ அனுப்புங்கள் என்று சொன்னது ஞாபகம் வந்தது.
மண் மறவா மனிதர்கள் 67 வி. ரி. இளங்கோவன்

Page 36
கலைக்கதிர் ஆசிரியர் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துவந்து வாசிக்கத் தந்தார். சித்த மருத்துவத்துறையில் இவரது ஆழ்ந்த புலமையையும், ஆய்வுத் திறனையும், எழுத்துவன்மையையும் பாராட்டியிருந்த கலைக்கதிர் ஆசிரியர், தொடர்ந்து எழுதுமாறும் அதற்கெனச் சன்மானம் உண்டெனவும் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். தொடர்ந்து இவரது பல ஆய்வுக் கட்டுரைகள் கலைக்கதிரில் இடம்பெற்றன. ஈழத்து ஒரு சித்த மருத்துவன் இத்தகைய ஆய்வுக் கட்டுரைகளைக் கலைக்கதிரில் எழுதி வந்தமை பாராட்டுக்குரியது எனப் பலர் வாழ்த்தினர். "மல்லிகையோடு விஸ்வபாரதியின் வைத்திய நிலையத்திற்கு வரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அங்கு இலக்கியக் கலந்துரையாடல் நடத்திவிட்டே செல்வார். மருத்துவ ஆலோசனைக்காக அங்குவரும் மக்கள் எழுத்தாளர் கே.டானியலை அன்போடு இருத்தி அவரிடம் "பஞ்சமர்’ நாவல் முதல் செங்கை ஆழியானின் பிரளயம், ஞானரதனின் ‘புதியயூமி” நாவல்கள் வரை அங்கமங்கமாகக் கருத்துக் கேட்பார். வடபகுதியின் சமூக வரலாற்றுப் போராட்டங்களின் உண்மைத் தார்ப்பரியங்களை உற்றுக் கேட் பார் . யாழ் . “ ஈழநாடு’ ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கோபாலரத்தினம், சபாரத்தினம், பெருமாள் உட்பட பலரும் நிர்வாக பீடத்தைச் சேர்ந்த சிலரும் விஸ்வபராதியின் உற்ற நண்பர்கள். மாலைவேளைகளில் ஈழநாடு ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த ஒருவரையாவது அவரது வைத்தியசாலையில் காணலாம். அன்று வெளிவந்த ஈழநாடு செய்திகள், கட்டுரைகள் சம்பந்தமாக அலசல் நடக்கும். ஈழநாட்டில் மருத்துவ, இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள் பல விஸ்வபாரதி எழுதிவந்தார்.
ஈழநாடு பத்திரிகையில், பல நாட்கள் தொடர்ந்து வடபகுதியைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் பெயர் பல பக்கங்களிலும் புகழ்ச் செய்தியாக பிரசுரமாகி வந்தது. ஒரு நாள் மாலை ஈழநாடு ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் முக்கியமான விஷயமொன்று என்று சொல்லியவாறு விஸ்வபாரதியிடம் வந்தார். ‘என்ன செய்தி சொல்லுங்கோ’ என்றார் விஸ்வபாரதி. அருகில் யான் கேட்டுக்கொண்டு நின்றேன். ‘இன்று காலை ஈழநாட்டிற்கு ஒரு போஸ்ற் கார்ட் வந்தது. அது அங்கு பெரிய சலசலப்பையும், ஒரு கட்டளையையும் பிறப்பிக்க வைத்துவிட்டது' என்றார். அதென்ன போஸ்ற் கார்ட். யாரோ இலக்கியத்துறை சம்பந்தமானவன் தான் எழுதியிருக்க வேணும். . சின்ன வாக்கியம். அத்தனை காரம். ‘என்ன வாக்கியம்..? என்ன வர. வர. ஈழநாட்டில் சவர்க்கார வாசனை வீசுகிறது. சவர்க்காரத்தைக் கைகழுவி விடுவதுபோல மக்கள் ஈழநாட்டையும் கைகழுவி விட்டால். கொஞ்சம் கவனம் எடுங்கள். - இது தான் வாக்கியம். நாங்கள் மண் மறவா மனிதர்கள் 68 வி. ரி. இளங்கோவன்

எல்லோரும் வாசித்து நிர்வாகத்திற்கும் அது போய்விட்டது. விளம்பரமாக வேண்டுமானால் அவர் பெயர் இடம்பெறட்டும் எனச் சொல்லப்பட்டது. தனிநபர் புகழ்பாட அனுமதிக்க முடியாது. அதனைச் சுட்டிக்காட்டிய அந்த ‘ஈட்டிக்கு நன்றி தான் சொல்லவேண்டும் என நிர்வாகம் பேசுகிறது.
நாங்கள் மனதுக்குள் சிரித்துக் கொண்டோம். ஏனெனில் ஈழநாட்டின் தரம் தாழக்கூடாதென ‘ஈட்டி’ என்ற பெயரில் அதை எழுதியதே விஸ்வபாரதி தான். எனக்கு மாத்திரமே அது தெரிந்திருந்தது. 'ஏதோ நல்ல காரியம் தானே நடந்திருக்கிறது.’ என்றார் விஸ்வபாரதி ‘ஓமோம்' என்றவாறு உசாராக நடந்தார் அந்த ஆசிரியப் பீடத்தைச் சேர்ந்த பெரியவர். இலங்கையில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி யாழ்.லங்கா சித்த - ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியாகும். இங்கு ஆரம்ப காலத்தில் இந்திய மருத்துவர்கள் கூடக் கடமையாற்றியுள்ளனர். இங்கு சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றியவர்களில் ஒருவர் ‘இராச வைத்தியர் வி.கனகசபை, இவரது இளைய புதல்வரே விஸ்வலிங்கம் (விஸ்வபாரதி) ஆகும். தந்தையாரின் அடிச்சுவட்டில் யாழ்.சித்த - ஆயுர்வேதக் கல்லூரியிலே கற்று, திறமைச் சித்திபெற்று அங்கேயே விரிவுரையாளராக நியமனம் பெற்றவர் விஸ்வபாரதி.
யாழ்.சித்த - ஆயுர்வேதக் கல்லூரிக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட கம்பஹா ஆயுர்வேதக் கல்லூரி அரசின் சகல உதவிகள் - நன்கொடைகளுடன் பெரும் ஸ்தாபனமாக மிளிர, யாழ்.சித்த - ஆயுர்வேதக் கல்லூரி அரசின் எவ்வித உதவியுமின்றி அல்லாடு வதையிட்டு விஸ்வபாரதியும் தமிழ் மருத்துவ அபிமானிகளும் பெருங்கவலை கொண்டிருந்தனர். வடபகுதியில் அன்று மாணவர் போராட்டங்களுக்கும், நிர்வாக மோதல்களுக்கும் பெயர்பெற்றது யாழ்.சித்த ஆயுர்வேதக் கல்லூரியாகும். யாழ்.ஈழநாடு பத்திரிகையின் முற்பக்க தலைப்புச் செய்தியாக அன்று ஒரு நாள் இடம்பெற்ற வைத்தியக் கல்லூரி ஊர்வலம் இன்றும் எனக்கு ஞாபகம். எத்தகைய போராட்டங்களின்போதும் விஸ்வபாரதி மக்கள் பக்கமும், மாணவர் பக்கமும், நியாயமான கோரிக்கைகளின் பக்கமுமே நின்றார். விஸ்வபாரதியிடம் நிறையவே கற்றுக்கொண்ட யான், கல்லூரி நிர்வாகம் சம்பந்தமான விடயத்தில் சிறிது காலம் முரண்பட்டு நின்றதுமுண்டு. பின்னர் ஒரு தடவை இதுகுறித்து விஸ்வபாரதி எனக்கு எழுதிய கடிதம் கல்மனதையும் கரைக்க வல்லது. இலக்கியத் தரமுள்ளது. அக்கடிதம் இன்றும் ஊரில் என் வீட்டில் உறக்கத்தில் இருக்கிறதோ தெரியவில்லை.
மண் மறவா மனிதர்கள் 69 வி. ரி. இளங்கோவன்

Page 37
அன்று புகழ்பெற்று விளங்கிய 'அகில இலங்கை சித்தவைத்திய சங்கத்தினி இணைச் செயலாளராகவும் விஸ் வபாரதி கடமையாற்றியுள்ளார். எழுத்தாளர் நாவேந்தன் பொதுச் செயலாளராக விளங்கிய ‘இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் விஸ்வபாரதி விளங்கினார்.
‘அன்று மன்னனுக்கு அடுத்த மரியாதை மருத்துவனுக்கு இருந்தது. யாழ்ப்பாண இராச்சியத்திலும் இந்த மரியாதை அன்று இருந்தது. மன்னனைப்போல சிவிகையில் போய்வரும் மதிப்பு மரியாதை மருத்துவனுக்குக் கிடைத்தது. எம் இறைவனுக்கு வைத்தீஸ்வரன் என்ற நாமம் உண்டு. அவன் பிறவிப் பிணி நீக்கி அருள்பவன். வைத்தியன் உடல் உளப் பிணி நீக்குபவன். அதனால் தான் இறைவனுக்கு அடுத்ததாக மருத்துவனை மக்கள் மதிக்கிறார்கள். நோயுற்றவனுக்கு மருத்துவனே கண்கண்ட கடவுள். - இவ்வாறு தொடங்கி நாடி சாஸ்திரம் வரை என் தந்தை கூறக் கேட்டும், பல சித்த மருத்துவப் பாடல்களின் உண்மைப் பொருள் என்ன என்பது குறித்தும் என் தந்தையோடு விஸ்வபாரதி தர்க்கிப்பதையும் பலமுறை பார்த்து யான் வியந் திருக்கிறேன்.
சுதேச மருத்துவத்தில் ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சிகள் மூலம் அதனை நன்கு வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பேரவாவும் கொண்டு நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்களை வளர்த்தெடுத்த விஸ்வபாரதியை பிற்காலத்தில் இனந்தெரியாத சோகம் கவ்விக் கொண்டது. நாட்டு நிலைமையும் இதற்கொரு காரணமாயிற்று. ஏட்டில் இருந்த மருத்துவ முறைகள் பலவற்றை நாட்டிற்கு உதவும்படி செய்த என் ஆசான் - நண்பனை இளம் வயதில், 1982 ஆவணியில் (39 வயதில்) மரணம் தழுவிக்கொண்டமை எவராலும் சகித்துக்கொள்ள முடியாதது. மருத்துவ, கலை இலக்கியம், பத்திரிகை, அரசியல் துறையினர் உட்படப் பெருந்தொகைப் பொதுமக்களும் அவரது இறுதிக் கிரிகைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நண்பர் பலரும், பொதுமக்கள் பலரும் மயானத்தில் கதறியழுதமை எவரையும் உருகிட வைத்தது. பத்திரிகைகள் அஞ்சலிக் கட்டுரைகள் பிரசுரித்தன. மல்லிகை சஞ்சிகை மனதை உருக்கும் அஞ்சலிக் கட்டுரை வெளியிட்டதெல்லாம் ஞாபகம். இறுதிவரை தன்னலம் கருதாது மண்ணையும் மக்களையும் நேசித்த, மருத்துவப் பணிபுரிந்த, எத்தனையோ சித்த மருத்துவர்களை உருவாக்கிய பண்பாளன், வித்தகன்
விஸ்வபாரதி என்றும் மதிப்புக்குரிய மனிதனே!
ஆவணி, 1992 -
மண் மறவா மனிதர்கள் 70 வி. ரி. இளங்கோவன்

沙
!
so, , , , , . sae は}
į ( )- o.
圖 么 oz.出*
~----'.: |-之 圈o.|* ..."丝---- N/%グ },,)
வி. ரி. இளங்கோவன் "
71
மண் மறவா மனிதர்கள்

Page 38
சர்வோதயம் க. திருநாவுக்கரசு
மண் மறவா மனிதர்கள் 72 வி. ரி. இளங்கோவன்
 

தொண்டுக்கு ஒரு திரு
ஒரு நாள் பகல் பதினொரு மணிக்குமேல் என நினைவிருக்கிறது. என் கிராமமான புங்குடுதீவில் என் வீட்டிற்கு அண்மையிலுள்ள ஒழுங்கையில் சென்றுகொண்டிருந்தேன். எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான் விடுமுறையில் வீடு வந்திருந்த நேரம். ஆவணி மாத வெயில் தகிப்பேறிக்கொண்டிருந்தது. அந்த வெயிலுக்குள் ஓர் உருவம் ஒழுங்கையில் அமர்ந்து கற்கள் பரவிக்கொண்டிருந்தது. யாரென அடையாளம் கண்டுகொண்ட எனக்கு அதிர்ச்சி. ‘என்ன அண்ணை கிராம சபை செய்யவேணி டிய வேலையை நீங்க செயப் து கொண்டிருக்கிறீங்க. இந்த வெய்யிலுக்குள்ள.' என நான் கேட்டேன்.
தம்பி. இந்த ஒழுங்கைக் கரையில கல்லுக் கொண்டுவந்து போட்டு எத்தனையோ நாளாப்போச்சு. அது சிந்தித் சிதறி போறவாற ஆட்களின்ர காலில் குத்துது. அதுதான் கொஞ்சம் கல்லைப் பரவி விடுவம் எண்டு பாக்கிறன். பிறகு யாரையும் பிடிச்சு கொஞ்சம் ஊரி கொண்டுவந்து போட்டா போக்குவரத்துக்கு நல்லா இருக்கும் தானே.” என்றார். அவரது வார்த்தைகளும் செயற்பாடும் என்னுள் எத்தனையோ சிந்தனை அலைகளைப் பரவி நின்றன.
அவர் தான், புங்குடுதீவு கிராமசபை அங்கத்தவராக, கிராமசபைத் தலைவர்களை உருவாக்கும் சக்திமிக்கவராக, நாடகக் கலைஞனாக, சிறந்த பேச்சாளனாக, தமிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கியாக, அதன் வாலிப முன்னணிப் பொதுச்செயலாளராக, சர்வோதய சிரமதான சங்கத்தின் உபதலைவராக, சர்வோதய அமைப்பாளராக, பத்திரிகையாளனாக, இதுவரை எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் வடபகுதிக்கு செய்த அபிவிருத்திப் பணியிலும் பார்க்க பன்மடங்கு பணியினை எந்தவித பிரச்சாரமுமின்றி அமைதியாகவிருந்து செய்தவர். இம் மண்ணைவிட்டு அகலாது தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ‘தொண்டர்’ க. திருநாவுக்கரசு.
மண் மறவா மனிதர்கள் 73 வி. ரி. இளங்கோவன்

Page 39
அறுபதுகளில் ‘புங்குடுதீவு இளைஞர் கழகம்’ பல்வேறு பணிகளில் வீறுநடைபோட்டது. மலேசியாவிலிருந்து நாடுதிரும்பியிருந்த ‘நல்ல மனிதர்’ வே.க. சோமசுந்தரம் இதன் தலைவராயிருந்து நற்பணிகள் யாவற்றுக்கும் உதவி ஊக்கமளித்தார். இளைஞர்களை ஒன்றிணைக்க உந்துசக்தியாக விளங்கினார் ஆசிரியர் சி. காராளபிள்ளை. இதன் செயலாளராகச் செயற்பட்டவர் கவிஞர், நல்ல கலைஞன் எனப் புகழ்பெற்ற ஆசிரியர் ஐ. சிவசாமி. சிவசாமியின் கதை வசனம், இயக்கத்தில் அன்று ஒரு நாடகம் உருவானது. அந்நாடகம் அன்று யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை நாடகப் போட்டியில், பல்வேறு புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் நாடகங்களுடன் போட்டியிட்டு முதற்பரிசினைப் பெற்றுக்கொண்டது. ‘வாழ்வுப்பலி’ என்ற அந்நாடகத்தில் பிரதம வில்லன் வேடத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார் திருநாவுக்கரசு. அந்நாடகத்தில் கதாநாயகனாகச் சிறப்பாக நடித்து “ஈழத்து சிவாஜி' என அன்று பலராலும் புகழப்பட்டவர், தமிழும் சைவமும் கண்களெனக் கொண்டு இன்று கனடாவில் வாழும் புலவர் ஈழத்துச் சிவானந்தன்.
இளைஞர் கழகத்தின் பொதுச்செயலாளராகத் தெரிவாகிய, *திரு முழுநேரமும் மக்கள் பணிகளில் ஈடுபட்டுழைத்தார். புங்குடுதீவு கிராமசபை அங்கத்தவரானார். இவரது ஆதரவு பெற்றவர்களே கிராமசபைத் தலைவராக முடிந்தது. நற்பணிகளுக்கு உதவுபவர் எனப் புகழப்பட்ட செல்வந்தர் “கலைவாணி தம்பித்துரையை கிராமசபைத் தலைவராக்க முன்னின்றுழைத்து வெற்றிகண்டார். அவர் மூலம் கிராமத்தில் பல நற்பணிகளை நிறைவேற்றினார். அதிலொன்று நல்லதோர் நூல் நிலையம் உருவாக்கப்பட்டதாகும்.
புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட ‘திரு’ அங்கு ஊழலற்ற நிர்வாகத்தை நடாத்த வழிகாட்டினார். தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணிச் செயலாளரான அவர் பிரச்சாரத்திற்காகச் சென்றுவராத கிராமங்களே தமிழர் பிரதேசத்தில் கிடையாதெனலாம். தலைவர்களினி முழு நம்பிக்கைக்குரிய செயல்வீரனாக, சிறந்ததோர் உணர்வூட்டும் பேச்சாளனாகத் திகழ்ந்தார். பாரதிதாசனின் கவிதை வரிகளை வீரவுணர்வோடு ஈற்றில் சொல்லிச் சொற்பொழிவை அவர் முடிக்கையில் கேட்டவர்கள் உணர்ச்சிப் பிழம்பாகிக் கைதட்டுவர்.
காலவோட்டத்தில் அரசியல்பாதை அவருக்குக் கசந்தது. அன்று ‘தமிழாசிரியர் சங்கத் தலைவராகத் திகழ்ந்த ஆசான் கு.வி.
மண் மறவா மனிதர்கள் 74 வி. ரி. இளங்கோவன்

செல்லத்துரை அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல் திருவுக்கு அபிவிருத்திப் பணிகளில் முழுநேரமும் ஈடுபட திடத்தைக் கொடுத்தன. யாழ். மாவட்ட அபிவிருத்தி சபை ஊர்காவற்றுறைத் தொகுதி உறுப்பினராக பின்னாளில் தெரிவு செய்யப்பட்ட வே.க. சோமசுந்தரம் திருவின் பணிகளை ஊக்கப்படுத்தி வந்தார். இவர்கள் மீது திரு பெருமதிப்பு வைத்திருந்தார். சாமி தம்பு அவர்கள் யோகாப்பியாசம், தியானம் என்பன குறித்து திருவுக்கு பெரிதும் அறிந்துகொள்ள உதவினார். யோகசுவாமி ஆச்சிரமத் தொடர்பும் அங்கு பணியாற்றும் சுவாமிகளின் ஆசிகளும், வாழ்த்துக்களும் திருவின் உள்ளத்தை செம்மையாக்கின. இல்லறவாழ்வை ஒதுக்கி பிரம்மச்சாரியாகவே பணிகளைத் தொடர்ந்தார். வித்துவான் பொன் அ. கனகசபை, பண்டிதர் சரவணனார் ஆகியோர் திருவின் தமிழறிவு வளரவும் பணிகள் சிறக்கவும் ஊக்கம் கொடுத்து வந்தனர்.
அகில இலங்கை சர்வோதய சிரமதான சங்கத்தின் தலைவர் கலாநிதி ஏ.ரி. ஆரியரெத்தினாவின் தொடர்பு திருவின் பணிகளுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அ.இ. சர்வோதய சிரமதான சங்கத்தின் உபதலைவராக திரு தெரிவானார். பலமுறை ஆரியரெத்தினாவை வடபகுதிக்கு அழைத்து, ஏழை மக்களின் வாழ்வையும், அபிவிருத்தி செய்யவேண்டிய பகுதிகளையும், அதன் அவசியத்தையும், அரசின் புறக் கணிப் பையும் அவருக்குத் தெளிவுபடுத்தினார் . வெளிநாடுகளிலிருந்து அபிவிருத்திப் பணிக்கென ஆரியரெத்தினா பெற்றுக்கொள்ளும் பணத்தில் வடபகுதிக்கென வருடந்தோறும் இலட்சக்கணக்கான ரூபாய்களை உரிமையோடு வாதிட்டுப்பெற்று வடக்கின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தினார்.
வடபகுதியெங்கும் சர்வோதய மலிவுவிலைக் கடைகள், குடிநீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு குடிநீர் விநியோகம், ஆங்காங்கே சர்வோதய நூலகங்கள், கிளிநொச்சி, மன்னாரில் விவசாயப் பண்ணைகள், வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவித்து விதைகள் விநியோகம், பஞ்சம் ஏற்படினும் அஞ்சாமல் வாழவென முருங்கை, சிறுதானியங்கள் விநியோகம், தேவையேற்படும் இடமெங்கும் தொண்டர்கள் சேவை, போக்குவரத்துக்கு வசதியாக வீதிகள், ஒழங்கைகள் அமைத்தல், அழகுபட அவற்றை விசாலித்தல், மழை வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு மரங்கள் நாட்டல், உவர்நீர் கிராமங்களில் புகுந்து விவசாயத்தைப் பாதிக்கா வண்ணமும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், கடல்நீர் கிராமங்களுக்குள் புகா வண்ணம் பாரிய அணைகள் அமைத்தல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க
மண் மறவா மனிதர்கள் 75 வி. ரி. இளங்கோவன்

Page 40
வீடுகள் தோறும் தொண்டர்கள் மூலம் நூல்கள் விநியோகித்தல், பாலர் பாடசாலைகள் அமைத்தல், சுகாதார நிலையங்கள் அமைத்தல், தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்தல், சுதேச வைத்திய நிலையங்கள் அமைத்தல், தமிழறிவை வளர்க்கவும், பழைய அருமையான நூல்களை பதிப்பித்து வெளியிடவும், கலை இலக்கியப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்ச் சங்கங்கள் அமைத்தல், சிறு கைத்தொழில்களை ஊக்குவித்து உதவுதல்-இப்படி எத்தனையோ ஆக்கப்பணிகளால் திரு தொண்டுக்கு ஒரு முன்னோடியானார்.
தபால்பெட்டியை ஏன் அங்கு வைக்கவில்லை. இந்த ஆசிரியரை ஏன் இடமாற்றம் செய்யவில்லை. அந்தக் கிராமசபையைக் கலைத்துவிட வேண்டும். இந்தப் பாடசாலைக்கு இவரையே அதிபராக நியமிக்க வேண்டும் - இப்படியான பெரும்பணிகளில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பி அயராது ஈடுபட்டுழைக்க, தொண்டர் திரு அமைதியாக ஆர்ப்பாட்டம் எதுவுமேயின்றி காலத்தால் அழியாத பெரும்சேவையை எம்மக்களுக்குச் செய்தார். ஊழல் பெருச்சாளிகளுக்குச் சிம்ம சொர்ப்பனமாகவும் வெறும் வாய்வீச்சுக்காரர்களுக்கு வேண்டா மனிதராகவும் திகழ்ந்தார். செயல்.செயல்.தொண்டு.சிரமதானம்.இதுவே அவர் மூச்சு.
ஆரியரெத்தினாவுடன் ஐரோப்பாவில் எண்பதுகளில் சுற்றுலாச் செய்தார். வெளிநாட்டவரின் ஊக்கம், உழைப்பு, வளர்ச்சி என்பவற்றைக் கவனித்துவந்து தொண்டர்களுக்கு எடுத்துரைத்தார். வெளிநாடுகளில் எம்மக்கள் உழைக்கும் கடின உழைப்பை எம் தாய் நாட்டில் செய்தால் நாம் சொந்தக் காலில் எழுந்துநிற்க முடியுமெனத் தொண்டர்களுக்கு விளக்கமளித்தார். பல மாதங்களுக்குப்பின், கொழும்பிலிருந்து எம் கிராமத்திற்கு அன்றொரு நாள் காரில் வந்திருந்த என் நண்பர் திகைப்புடன் என்னிடம் கேட்டார். வேலியின் ஒரு கதியால் தடி தள்ளி நடுகின்ற பிரச்சினைக்காக பெரிய கோட்டில் இருபது வருஷங்கள் வழக்காடிற எங்கட ஆக்களின்ர வேலியெல்லாம் வெட்டி எப்பிடி இந்த மாதிரி றோட்டு வந்தது.ஒவ்வொரு ஒழுங்கையும் பட்டினத்து பெரிய றோட்டு மாதிரிக் கிடக்குது. - என்றார். எல்லாம் தொண்டர் திருவின் பணியே என்றேன். எப்பிடிச் சனம் விட்டுக்குடுக்குது.என்றார். எல்லாம் சாம பேத தான தண்ட உபாயங்களைப் பயன்படுத்தித் தான் திரு சாதித்தார் என்றேன்.
வெளிநாடுகளிலிருந்து அபிவிருத்திக்கெனப் பெறப்பட்ட பணத்தில் வடபகுதிக்குரிய தொகையை தொடர்ந்து வழங்க மறுத்தமை,
மண் மறவா மனிதர்கள் 76 வி. ரி. இளங்கோவன்

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்குச் சர்வோதயம் வழங்கும் உதவி, திருவினாலேயே அறிமுகப்படுத்தப்பட்ட சிலரின் காட்டிக்கொடுப்பும் நம்பிக்கைத் துரோகமும், ஆரியரெத்தினாவின் கண்ணோட்டம் என்பன போன்ற பல பிரச்சினைகளால் திருவுக்கும் ஆரியரெத்தினாவுக்கும் இருந்த தொடர்பு தடைப்பட்டது. முறிந்தே போயிற்று. சர்வோதயம் என்ற பெயரில் தனித்துவமாகத் தொடர்ந்து இயங்கினார். வெளிநாடுகளிலிருந்து பல்வேறு உதவி பெற்று பணிகளைத் தொடர வாய்ப்பிருந்தது. ஆனால் ரீலங்கா அரசின் தொடர் நடவடிக்கைகளினால் அவை சாத்தியமற்றுப் போயின. தீவுப்பகுதிக்குள் ஆக்கிரமிப்பு இராணுவம் புகுந்ததும் அவரின் பணிகள் முடங்கின. யாழ் சிவதொண்டர் நிலையம், கொழும்புத்துறை யோக சுவாமிகள் ஆச்சிரமம் ஆகியவற்றோடு இணைந்து யாழ்ப்பாணத்தில் திருவின் பணிகள் தொடர்வதாகவும் புங் குடுதீவிலும் தொணி டர்கள் சிலர் செயற்படுவதாகவும் செய்தியொன்று கிடைத்தது.
தீவகம் பத்திரிகை பணிகளில் திருவுடன் செயற்பட்ட காலத்தில் அவரது எழுத்தாற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன். அவரது சிபாரிசுடன், நேர்முகப் பரீட்சையில் தோற்றிய பலரையும் வென்று ஐக்கிய நாடுகள் தொண்டராக (மூலிகை மருத்துவ - சமூக அபிவிருத்திப்பணி) தெரிவு செய்யப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் பணிபுரிந்ததும், அங்கு யான் பெற்ற பாராட்டுகளை அறிந்ததும் மகிழ்வோடு, அறிவுரைகள் பொதிந்து அவர் எழுதியவையும், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழா மலரை அழகுறப் பதிப்பித்துக் கொடுக்கும் பணியில் திருவுடன் செயற்பட்டமையும், கிளிநொச்சி - திருவையாறு விவசாயப்பண்ணையை உருவாக்க அன்று யானைக் காட்டில் திருவோடும் மற்றும் தொண்டர்களோடும் கழித்த நாட்கள் எல்லாம் மறக்கமுடியாதவை.
மெழுகுதிரியானது உருகி உருகி உலகுக்கு ஒளி கொடுப்பதைப் போல சமுதாய சேவையில் தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய திரு 03.10.2001இல் இவ்வுலகை நீத்தார் என்ற செய்தி எம் நெஞ்சையெல்லாம் கலங்க வைத்தது. அந்தத் திருமுகம் இன்று எம்மிடை இல்லை. ஆயினும் உண்டு. அவன் செய்த திருத்தொண்டுகள் - அளப்பரிய பணிகள். இன்றும் சரிஇனிமேலுந்தான்..!
-ஐப்பசி, 2001
மண் மறவா மனிதர்கள் 77 வி. ரி. இளங்கோவன்

Page 41
. H ཀྱག་ ལྷ་ HHHHHHH པ་ལས་རྒྱུ་(་་་་་་་་་་་་་་་་་
註
蝎
ಶಷ್ರ *55% 868**im 23:*፥ 1፱፱
欺
శ్లో
SHER
திரு. ઈી. சடாட்சர சண்முகதாஸ்
மண் மறவா மனிதர்கள் 78 வி. ரி. இளங்கோவன்
 

மக்கள் மனம் நிறைந்த
தலைசிறந்த நிர்வாகி
மக்கள் பணிகளில் தம்மை அர்ப்பணித்துச் செயலாற்றும் அரச நிர்வாகிகளில், யாவராலும் போற்றப்பட்ட தலை சிறந்த நிர்வாகிதான் சி. சடாட்சர சண்முகதாஸ்.
புங்குடுதீவில் பிறந்த சடாட்சர சண்முகதாஸ் புலமைப் பரிசில் மாணவனாக வேலணை மத்திய கல்லூரியில் கற்று பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகி, எழுபதுகளின் ஆரம்பத்தில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக மக்கள் பணிகளில் ஈடுபட்டார். இளமைக் காலத்தில் கொண்டிருந்த சேவை மனப்பாங்கு, இலட்சியநோக்கு, நேர்மைத்திறன் என்பவற்றிலிருந்து அணுவளவும் தளம்பாத சேவையாளனாக இறுதிக்காலம் வரை பணியாற்றி மக்கள் மனங்களில் நிறைந்தவர். எந்நேரமும் புன்சிரிப்பு தவழும் முகத்துடனேயே அவர் யாரையும் வரவேற்பார். வன்சொல் அறியாத பண்பாளர்.
எந்த ஒரு வேலையிலும் தான் பாண்டித்தியமுடையவர் என்ற செருக்கு அவருக்கு இல்லை. கருத்து வேறுபாடுகள் ஏற்படுமிடத்து அதனை மிகப் பணிவுடனும் மெதுவாகவும் தகுந்த வாதங்களுடனும் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார். நாம் பலவேளைகளில் அவரிடம் அறிவுரைக்காகச் செல்வதுண்டு. ‘வடக்குக் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டிலே தலைசிறந்த நிர்வாகி ஒருவரை நாம் இழந்து நிற்கின்றோம்’ என வடக்குக் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மிகுந்த கவலையோடு எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தான் கடமையாற்றிய பிரதேசங்கள் எங்கும் சேவையால் மக்கள் மனங்கவர்ந்தவர். பல்கலைக் கழகத்தில் பயின்ற காலம் முதல் இலக்கிய நேசனாக விளங்கியவர். பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்மன்ற வெளியீடான "இளங்கதிர்’ இதழின் ஆசிரியராக விளங்கியவர்.
மண் மறவா மனிதர்கள் 79 வி. ரி. இளங்கோவன்

Page 42
என்னைக் காணும் போதெல்லாம் இலக்கிய சம்பாஷனை செய்வார். அல்லது பிறந்த ஊருக்கு என்ன பணிகளைச் செய்யலாம் என்பது பற்றித் தான் சொல்வார். மக்கள் எழுத்தாளர் கே. டானியலின் அத்தனை நாவல்களையும் படித்துச் சுவைத்தவர். அவை குறித்து என்னோடு பேசிக்கொண்டவர்.
ஓர் உத்தமனுக்கு, ஒரு சான்றோனுக்குரிய குணா திசயங்களையும், பண்புகளையும் நன்னெறி ஒழுக்கங்களையும் பெற்றவராக மனச்சாட்சிப்படி, நீதி தவறாதவராக, எவ்வித பாகுபாடுகளுமின்றிச் சேவையாற்றித் தனக்கும் குடும்பத்துக்கும் புகழையும் கீர்த்தியையும் தேடியவர், அதனாலேயே மக்கள் அவரைப் போற்றுகிறார்கள், அவரது இழப்பைத் தாங்காது கவலையுறுகிறார்கள்.
புங்குடுதீவின் தேவைகளை நிறைவு செய்து ஊரை முன்னேற்ற வேண்டுமென்ற அவா அவருக்கு இறுதிவரை இருந்தது. தன்னாலியன்ற பணிகளை ஊருக்கு இறுதிவரை செய்தவர். பலரது வாழ்வுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக நின்று கைதுாக்கிவிட்டவர்.
வடக்குக் கிழக்கு மாகாணத்தின் நிர்வாக வரலாற்றில் அவரின் பெயரும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என வடக்கு கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தில் அவர் பல பதவிகளை வகித்துள்ளார். உட்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக, உள்ளுராட்சி ஆணையாளராக, உட்துறை அமைச்சின் பிரதிச் செயலாளராக, கிராம அபிவிருத்திப் பணிப்பாளராக, பேரவைச் செயலாளராக, கல்வி கலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளராக, முகாமைத்துவ அபிவிருத்தி, பயிற்சிப் பணிப்பாளராகப் பல பதவிகளை வகித்து நிர்வாகத் திறமையால் ஏனையோர்க்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். மக்கள் மனம் நிறைந்த யாவரினதும் மதிப்புக்குரிய நிர்வாகி, சேவையாளர் சடாட்சர சண்முகதாஸின் நாமம் என்றும்
மறக்கப்பட முடியாதது தான்.
- மார்கழி, 1994 -
மண் மறவா மனிதர்கள் 80 வி. ரி. இளங்கோவன்

நாடு போற்றும் எங்களுர்த் தமிழறிஞர்கள்
புங்குடுதீவு பல தமிழறிஞர்களைப் பெற்றிருக்கிறது. இங்கு பிறந்த தமிழறிஞர்கள் - கவிஞர்கள், எழுத்தாளர்கள் இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா, மலேசியா நாடுகளிலும் சிறப்புப் பெற்றிருக்கிறார்கள். இவர்களுள் இராமலிங்கச் சட்டம்பியார், குருமூர்த்திச் சாத்திரியார், பேராசிரியர் சி.இ.சதாசிவம்பிள்ளை, வித்துவான் சி. ஆறுமுகம், வித்துவான் பொன். அ. கனகசபை, பண்டிதர் வீவ. நல்லதம்பி, பண்டிதர் மு. ஆறுமுகம், க. சிவராமலிங்கம், த. திருநாவுக்கரசு, (நாவேந்தன்), கு.வி. செல்லத்துரை, புலவர் ஈழத்துச் சிவானந்தன், த. துரைசிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
புகழ்பெற்ற கல்லூரிகளில் தமிழ்ப் பேராசானாகவும், சிறந்த கலை இலக்கியப் பேச்சாளராகவும் விளங்கிய எம்மவர் நால்வர் குறித்து இங்கு நோக்குவோம்.
(1) வித்துவான் சி. ஆறுமுகம்
மேடையில் ஓர் உயர்ந்த உருவம், தேசிய உடை, ஒலிவாங்கி முன் வந்ததும் பாரதியார் பாடலை அற்புதமாகப் பாடுகிறார். சலசலப்புடனிருந்த சபை அமைதியாகிறது. பாடல் முடிந்ததும் கணிர் என்ற குரலில் பேச்சு ஆரம்பமாகிறது. சபை மெய்மறந்து அவர் உரையினைச் செவிமடுக்கிறது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது நம்முன்னோர் வாக்கு. இந்த உண்மையை வித்துவான் சி. ஆறுமுகம் அவர்கள் திருவாசகம் பூாடும்போது யதார்த்தபூர்வமாகக் கல்லூரி மாணவப் பருவத்திலேயே அறிந்தவன் யான். கல்நெஞ்சையும் கரையச் செய்யும் வகையில் அவர் பாடுவதைப் பாராட்டாதார் எவருமிலர். மண் மறவா மனிதர்கள் 81 வி. ரி. இளங்கோவன்

Page 43
YFELINHERE!
re H jį R སྐྱེ་
வித்துவான் சி. ஆறுமுகம்
மண் மறவா மனிதர்கள் 82 வி. ரி. இளங்கோவன்
 

“பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன்.” என்று பாடத் தொடங்கினாரானால் கேட்போர் உள்ளமெல்லாம் அந்தத் திருவாசகத் தேனில் மயங்கிடும் எனலாம். இவ்வண்ணம் திருவாசகப் பாக்களை மெய்யுருகப் பாடும் ஆற்றல் அவரது தனிச்சிறப்பெனலாம். அவ்வாறே பாரதியார் பாடல் களையும் பேச் சின் நடுவே பாடிச் சபையோரைத் தன்வசமாக்கிடுவார்.
புங்குடுதீவுக்குப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களில் ஒருவரான வித்துவான் சி. ஆறுமுகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றவர். குருதேவரெனப் போற்றப்பட்ட பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அன்புக்குரிய
மாணவர். சிறந்த பேச்சாளர். மண்மறவாத மாண்புடையர். சுன்னாகம்
ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் தலைமைத் தமிழாசானாக விளங்கியவர். நம்மூர் மாணவர் பலர்
அக்கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி பெறத் துணைபுரிந்தவர். இவரது ஆசிரியப் பணியின் மூலம் பயன்பெற்ற மாணவர்கள் பன்னூற்றுக் கணக்கானோர் உளர்.
இலக்கியப் பணி
வித்துவான் சி. ஆறுமகம் அவர்களின் பணிகள் பன்முகத் தன்மை வாய்ந்தவை. கல்விப்பணி, சமூகப் பணி, இலக்கியப் பணி, சமயப் பணி என அவற்றை வகுத்துக் கூறலாம். இயல்பாகவே
கவிதை எழுதும் ஆற்றல் படைத்த இவர் பல்வேறு கவிதைகளை
எழுதியுள்ளார். பாடசாலைக் கீதங்கள் முதல் ஆலய ஊஞ்சல் பாக்கள்
வரை அவை பல்கிப் பெருகியுள்ளன. வித்துவான் அவர்களின்
இலக்கியப் பணிகளில் குறிப்பிடத்தக்கது “கலைமதி” என்னும்
சஞ்சிகை வெளியீடாகும். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து
இச்சஞ்சிகையைத் தரமான முறையில் வெளியிட்டார். எனினும் அது நீண்டு நிலைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.
‘நல்லூரான் நாற்பது என்னும் கவிதை நூலையும் இவர் படைத்துள்ளார். மற்றும் பல சுவையான தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். வித்துவான் நாமம் என்றும் பேசப்படும்.
மண் மறவா மனிதர்கள் 83 வி. ரி. இளங்கோவன்

Page 44
||MBRU
l
t
စွီး
: HERBAIR
關
R
வித்துவான் பொன். அ. கனகசபை
மண் மறவா மனிதர்கள் 84 வி. ரி. இளங்கோவன்
 

(2) வித்துவான் பொன் அ. கனகசபை
பொன்கொடுதீவென அழைக்கப்படும் புங்குடுதீவு புகழ்பெற்ற புலவர்களையும், அறிஞர்களையும், தலை சிறந்த ஆசான்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் நல்கிய பெருமைக்குரியது, தமிழ்ச் செம்மொழிவளர்ச்சிக்குச் சலியாது தொண்டாற்றிய பேரறிஞர்களை மண் மறவாத மாண்புமிகு மனிதர்களைக் கொண்டது. அத்தகையோரில் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர்கள் இரு வித்துவான்களாவர். ஒருவர் வித்துவான் பொன்.அ.கனகசபை, மற்றவர் வித்துவான் சி. ஆறுமுகம். முன்னவரான கனகசபை ஆழ்ந்தடங்கிய தமிழ்ச்சான்றோனாவர். சங்க இலக்கியங்கள் முதல் ஈழத்து இலக்கியங்கள் வரை துறைபோகக் கற்றவர். தமிழிலக்கிய, இலக்கணப்புலமை வாய்ந்தவர். அமைதியான சுபாவம் கொண்டவர். ஆடம்பரமற்றவர். தமிழ்ப்பணியே தன் பணியாகக் கொண்டு இறுதிவரை இயங்கியவர். அவரது பணிகள் அளவிடற்கரியன.
சிறந்த காந்தியவாதி
கனகசபை அவர்கள் சிறந்த காந்தியவாதி. கதர் வேட்டி, கதர்சட்டை, கதர்சால்வை அணிந்து காட்சியளித்தவர். நிறைகுடம் தளம்பாது என்பதற்கு எடுத்துக் காட்டாக அனைவருடனும் அன்பாகப் பழகியவர். இலங்கை காந்தியசேவா சங்கத்தில் இணைந்து மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு போன்ற விடயங்களில் பெரும் பங்கு கொண்டு உழைத்தவர். தமது ஆசிரியப் பணிக்கு மேலாகச் சமூக சீர்திருத்தத்திற்காகப் பெரிதும் பாடுபட்டவர்.
சுவாமி சுத்தானந்த பாரதியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றோரைப் புங்குடுதீவுக்கு அழைத்து வந்து அவர்கள் தம் உரைகளை இங்குள்ளார் செவிமடுக்கச் செய்தவர்.
கல்விப் பணி
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் தமிழ்ப்
பேராசானாக விளங்கிய இவர் இறுதிக் காலத்தில் புங்குடுதீவு மண் மறவா மனிதர்கள் 85 வி. ரி. இளங்கோவன்

Page 45
மகாவித்தியாலயத்தில் உப அதிபராகக் கடமையாற்றினார். தம்மிடம் பாடம் பயிலும் மாணவர்க்குத் தமிழ் இலக்கணத்தை இனிக்கும் வகையில் போதிக்கும் திறமை படைத்தவர் வித்துவான் கனகசபை, அவரிடம் இலக்கணம் கற்பதே தனி இன்பமென அவரது மாணவர் பலர் என்னிடம் வாய்விட்டுக் கூறியுள்ளனர். அற்ப திறமை கொண்டோரும் தம்மைப் பேரறிஞரெனத் தம்பட்டமடித்துத் திரியும் இந்நாளில் வித்துவான் கனகசபை போன்ற அமைதியான அறிஞர்களை நாம் காண்பது அரிதாகும்.
இலக்கியப் பணி
இலங்கை அரசின் சாகித்திய மண்டலத்தினால் வெளியிடப் பெற்ற ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தை தமிழன்பர்கள் எவருமே மறக்கமுடியாது. பேராசிரியர், கலாநிதி ஆ. சதாசிவம் அவர்களால் தொகுக்கப்பெற்ற இந்நூல் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை - வளர்ச்சிப்பாங்கை அறிந்திடப் பெரிதும் உதவுகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளைத் தேடிக் கண்டறிந்து தொகுப்பதில் பெரும் பங்காற்றிய பெருமை வித்துவான் கனகசபை அவர்களையே சாரும். இவரது பயன்கருதாத இத்தமிழ்ப் பணியைப் பேராசிரியர் சதாசிவம் அவர்களே இந்நூலின் முகவுரையில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புங்குடுதீவில் வாழ்ந்த இராமலிங்கச் சட்டம்பியார் என்னும் புலவரின் பாடல்களையும் இந்நூலில் இடம்பெறச் செய்த பெருமையும் வித்துவான் அவர்களையே சாரும். இதுமட்டுமன்றித் தமிழ்ப்பேரறிஞர் மறைமலை அடிகளாரின் (சுவாமி வேதாசலம்) தாயார் புங்குடுதீவில் வாழ்ந்தவர் என்ற உண்மையையும் கண்டறிந்து கூறியவர் வித்துவான் அவர்களே யாவார்.
சர்வோதயப்பணி
வித்தவான் கனகசபை அவர்கள் வட பிரதேச சர்வோதய
இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். வடபிரதேச சர்வோதய இயக்க அறங்காவலர், தொண்டர் திருநாவுக்கரசின் அன்புக்கும்
மண் மறவா மனிதர்கள் 86 வி. ரி. இளங்கோவன்

மதிப்புக்கும் உரியவர். சர்வோதய இயக்கத்தின் பணிகள் பலவற்றுக்கும் உறுதுணையாக இறுதிக் காலம்வரை இருந்தவர்.
சமயப்பணி
சைவசித்தாந்த நெறியில் உறுதியான பற்றுக் கொண்ட வித்துவான் அவர்கள் சமய வகுப்புக்களை நடத்தியதோடு புங்குடுதீவு பெருங்காடு கந்தசுவாமி கோவிலிலும், சிவன் கோவிலிலும் இடம்பெறும் புராணபடனங்களிலும் பல ஆண்டுகளாகப் பங்குகொண்டவராவார். புராணங்களுக்கு உரை கூறும் இவரது ஆற்றல் பலரதும் பாராட்டைப் பெற்றதாகும். எல்லாவற்றுக்கும் மேலாகத் திருச்செந்துள்ப் புராணத்திற்கு இவர் எழுதிய உரை போற்றுதற்குரியதாகும். மரபு தவறாத வகையில் பல்வேறு கவிதைகளையும் இவர் இயற்றியுள்ளார். பல்வேறு ஆலயங்களுக்குரிய ஊஞ்சல் பாக்களையும் வித்துவான் கனகசபை இயற்றியுள்ளார். அவை என்றும் அவரது பெயரை நினைவூட்டும் வகையில் விளங்குகின்றன.
கல்விப் பணி, சமயப்பணி, இலக்கியப்பணி, சமூக சீர்திருத்தப்பணி ஆதியாம் பல்வேறு துறைகளில் தடம் பதித்து அளப்பரிய சேவையாற்றிய வித்துவான் பொன்.அ.கனகசபை அவர்களின் நாமம் என்றும் நம்மண்ணில் நின்று நிலைக்குமென்பதில் ஐயமில்லை.
மண் மறவா மனிதர்கள் 87 வி. ரி. இளங்கோவன்

Page 46
క్ష
H
பண்டிதர் வீ. வ. நல்லதம்பி
மண் மறவா மனிதர்கள் 88 வி. ரி. இளங்கோவன்
 

(3) பண்டிதர். வி. வ. நல்லதம்பி
பண்டிதர் நல்லதம்பி, அல்லது சேர்மன் நல்லதம்பி என்று யாவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர். கல்விப்பணி, தமிழ்ப்பணி, சமயப்பணி, சமூகப் பணியாற்றிப் புகழ்பெற்றவர். மிக இளம் வயதிலேயே சமூகப்பணிகளில் முன்னின்றுழைத்த இவர் முப்பதாவது வயதிலேயே புங்குடுதீவின் கிராமசபைத் தலைவராகத் தெரிவாகிப் பணியாற்றியவர். யாழ். மாவட்ட கிராமசபைகளின் சமாசத் தலைவராகவும் (1954) தெரிவு செய்யப்பட்டு யாவரினதும் மதிப்பினைப் பெற்றவர். அரசியல் துறையிலும் ஈடுபட்டுழைத்தவர். 1956ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின் போது வடபகுதியில் பலதொகுதிகளிலும் லங்கா சமசமாஜக் கட்சி போட்டியிட்டது. அவ்வேளை அக்கட்சியின் சார்பில் ஊர்காவற்றுறைத் தொகுதி வேட்பாளராக இவர் போட்டியிட்டார்.
தீவுப்பகுதி தமிழாசிரியர் சங்கத் தலைவராக, அகில இலங்கை பெற்றோர் ஆசிரியர் சங்க சம்மேளனத் தலைவராக, யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாச உபதலைவராகவும் பணியாற்றியவர். 1973ஆம் ஆண்டு புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் அதிபராகக் கடமையேற்று அங்கு க.பொ.த உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க ஆவன செய்தார். இருமாடிக் கட்டிடத்தை அமைத்து, அதிக ஆசிரியர்களைச் சேவைக்குப் பெற்று மகாவித்தியாலயத்தின் கல்வித்தரத்தை உயர்த்தினார். அத்துடன் வித்தியாலயத்தின் வெள்ளிவிழாவைச் சிறப்புற நடாத்தி இலக்கியத்தரம் மிக்க வெள்ளி விழாமலரையும் வெளியிட்டார். கவிதைகள், சிறுவர் பாடல்கள் பலவும் இவர் எழுதியுள்ளார். இறுதிக் காலத்தில் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசித்தபோதும் சைவசமயப் பணிகளில் ஈடுபட்டுழைத்தார். கனடா இந்து மாமன்றத்தை நிறுவிய பெருமையும் இவருக்குண்டு. 1999ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 23ஆம் திகதி இவருக்குக் கனடாவில் இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருது மாநகர மேயரால் வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் தமிழர் என்ற பெருமைக்கும் இவரே உரியவரானார். சைவநிதி என்னும் மலரை வெளியிட்டார். மொறிசியஸ் நாட்டில் நடைபெற்ற எட்டாவது உலக சைவ மாநாட்டில் சைவ சித்தாந்தக் கலாநிதி பட்டம் இவருக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். பண்டிதர் நல்லதம்பியின் நற்பணிகளை எம்மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
மண் மறவா மனிதர்கள் 89 வி. ரி. இளங்கோவன்

Page 47
IKE
NA
k
'
கலாநிதி க. சிவராமலிங்கம்
மண் மறவா மனிதர்கள் 90 வி. ரி. இளங்கோவன்
 

(4) கலாநிதி க. சிவராமலிங்கம்
பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என்றால் அவற்றுக்குத் தலைமைவகிப்பதற்கு இவரைவிட யாருளர் எனத் தமிழன்பர்களால் விதந்து போற்றப்பட்டவர் கலாநிதி சிவராமலிங்கம். அத்துடன் ஆங்கிலப் பேச்சுக்களையும் அழகாக மொழிபெயர்த்துப் பாராட்டுக்கள் பெற்றவர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் பல்லாண்டுகள் தமிழ்ப் பேராசானாகவும், பதில் அதிபராகவும் கடமையாற்றியவர்.
தமிழர் வாழும் நாடெங்கும் போற்றப்படும் சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள், சைவத் தமிழ்ப் பேச்சாளர்கள் பலரும் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறள் மாநாடுகள், பாரதி விழாக்கள், கம்பன் விழாக்கள், சேக்கிழார் விழாக்கள் எதிலும் இவரது தலைமையில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் அல்லது இவரது உரை இடம்பெறுவது யாவரும் அறிந்ததே.
சென்னை கிறிஸ்தவ கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுப் பட்டதாரியாக நாடு திரும்பிய இவரை யாழ். இந்துக்கல்லூரி அரவணைத்துக் கொண்டது. நாற்பது ஆண்டுகள் இங்கு கடமையாற்றி நீண்ட மாணவர் பரம்பரையையே உருவாக்கினார். வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியாற்றியவர். நல்லதொரு கல்விப் பாரம்பரியத்தை உருவாக்கியவர். அதன்வழி பல மாணவர்கள் அறிஞர்களாக, ஆய்வாளர்களாக, பேராசிரியர்களாக உருவாகி நாட்டிலும் சர்வதேசத்திலும் பிரகாசிக்க உதவியவர்.
இப்பேராசானுக்குப் பல பட்டங்களை மக்கள் அமைப்புகள் வழங்கிக் கெளரவித்துள்ளன. யாழ். பல்கலைக்கழகம் இவரது சமய, இலக்கிய, சமூகப் பணிகளைப் பாராட்டி “இலக்கிய கலாநிதி” பட்டத்தினை தேகாந்த நிலையில் வழங்கிக் கெளரவித்துள்ளது. இவர் பல்வேறு சஞ்சிகைகள், விழாமலர்கள், பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை நூலுருவாக்கம் பெறவேண்டும். தன் வாழ்நாளைத் தமிழ்ப்பணிக்கே அர்ப்பணித்த பேராசான் க. சிவராமலிங்கம் என்றும் தமிழன்பர் மனதில் நிறைந்திருப்பார்.
மண் மறவா மனிதர்கள் 91 வி. ரி. இளங்கோவன்

Page 48
※
திருமதி. வேதவல்லி கந்தையா
மண் மறவா மனிதர்கள் 92 வி. ரி. இளங்கோவன்
 

கள் உரிமைகளுக்காகப் பெரிதும் பாடுபட்ட வேதவல்லி கந்தையா
ஆண் ஆதிக்கம் மேலோங்கியுள்ள சமுதாயத்தில் பெண்களின் உரிமைகளுக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் அயராதுழைத்த மாதரசிகளில் குறிப்பிடத்தக்கவர் திருமதி வேதவல்லி 85560oġbu JIT.
பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சிக்கென யாழ். குடாநாட்டில் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் தமது கணவன்மாருடன் இணைந்து பல மாதரசிகள் தொண்டாற்றியுள்ளனர். அவர்கள் தமது சொத்துச் சுகம் எல்லாவற்றையும் இழக்க நேரிட்டும் கலக்கமின்றி, கொண்ட கொள்கையில் ஈடாட்டமின்றி இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள். பொதுவுடைமைக் கட்சியின் ஆதரவாளராக, உறுப்பினராக குடாநாட்டுச் சமுதாயத்தில் வாழ்வது என்பது வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிப்பதாகும். தமது கொள்கையில் இறுதிவரை வழுவாது எத்தனை துயர்வரினும் ஏற்று இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர்களுடைய வாழ்வின் பின்னால் அவர்களது மனைவிமாருக்கும் சமபங்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. இம்மாதரசிகள் தமது கணவர்களின் வாழ்க்கையில் துணைநின்று கஷ்டங்களின் மத்தியில் குடும்பப் பணியையும் பொதுப் பணியையும் நிறைவேற்றினார்கள். இந்தவகையில் ஆசிரியராக தம்பணியை ஆரம்பித்த திருமதி வேதவல்லி கந்தையா பொதுவாழ்க்கையில் தமக்கென ஒரு சுதந்திரமான பாத்திரத்தையும் வகித்து நாடுபோற்றும் நற்பெண்மணியாக விளங்கியவர்.
வட்டுக்கோட்டையில் 1920ஆம் ஆண்டு வேதவல்லி கந்தையா பிறந்தார். நீர்வேலியைச் சேர்ந்த பொதுவுடைமைவாதியான எஸ்.கே.கந்தையா என்பவரைக் கணவனாக வரித்துக்கொண்டார். ஆசிரியரான கந்தையாதான் முதன்முதலில் இலங்கையில் கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழாக்கம் செய்து பாராட்டுப்
மண் மறவா மனிதர்கள் 93 வி. ரி. இளங்கோவன்

Page 49
பெற்றவராகும். ஆண்களுக்குள்ள உரிமைகள், சுதந்திரம் பெண் களுக்கும் இருக்கவேணி டும் என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக்கமைய பல பெண்களை ஒன்று திரட்டி முற்போக்கு மாதர் சங்கத்தை உருவாக்கிக் குடாநாட்டுப் பெண்கள் மத்தியில் மறுமலர்ச்சியையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்திய திருமதி வேதவல்லி கந்தையா இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியிலும் உறுப்பினராக இருந்தார்.
தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரங்களிலும் முன்னின்று செயற்பட்ட அவர் கூட்டுறவு இயக்கப் பணிகளிலும் பெரிதும் ஈடுபட்டுழைத்தார். தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஆகிய மும்மொழிகளிலும் பரீட்சயமுடைய அவர் தலைமைத்துவப் பண்புகளுடன் மிளிர்ந்தார். நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் தமது ஆசிரியர் சேவையை தொடங்கிய இவர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் இறுதியாகச் சேவையாற்றி இளைப்பாறினார். இக்கல்லூரியில் இவரது மாணவனாக யான் பயின்றேன் என்பதில் எனக்குப் பெருமகிழ்வே!
யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம், யாழ். மாவட்ட கம்யூனிஸ்ட் மகளிர் அமைப்பு, யாழ். மாவட்ட மகளிர் குழு, யாழ். மாவட்ட ஐக்கிய நாணய சங்கங்களின் சமாசம், வலிகாமம் கிழக்குப்பகுதி மகளிர் குழுக்கள், நீர்வேலி சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி முறிமுருகன் மாதர் ஐக்கிய நாணய சங்கம் போன்ற பல அமைப்புகளின் தலைவராகவும், உபதலைவராகவும், போஷகராகவும் பணியாற்றிய திருமதி வேதவல்லி கந்தையா தமது சேவையின் திறத்தால் மக்கள் மனதில் நிறைந்தார். தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
இன்றைய சமூதாய அமைப்பை மாற்றியமைத்து, எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற புதியதோர் பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைத்தால் தான் பெண்கள் சமஉட்ரிமையுடன் தலைநிமிர்ந்து வாழலாம் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு இறுதிவரை அதற்காகவே உழைத்த திருமதி வேதவல்லி கந்தையா 1988ஆம் ஆண்டு காலமானார். சமுதாய முன்னேற்றத்திற்காகவே அயராதுழைத்த இம் மாதரசியின் நாமம் என்றும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.
மண் மறவா மனிதர்கள் 94. வி. ரி. இளங்கோவன்

மண் மறவா மனிதர்கள் 95 வி. ரி. இளங்கோவன்

Page 50
கவிஞர். சு. வில்வரத்தினம்
மண் மறவா மனிதர்கள் 96 வி. ரி. இளங்கோவன்
 

கவிஞர் சு. வில்வரத்தினம் சில நினைவுக் குறிப்புகள்
நேற்றுப்போல. சில நினைவுகள். வில்வனின் வயதுதானே எனக்கும். ஞாபகத்தில் இல்லாது எத்தனையோ போய்விட்டாலும். அழியாத நினைவுகள் பலவுண்டு.
சுப்பிரமணியம் வில்வரத்தினம். . என் நண்பன். புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தில் எங்கள் வீடுகளுக்கிடையில் அதிக தூரமில்லை. நீண்ட காலமாகப் பழகிவந்தவர்கள் நாம்.
எங்களுக்குள் எத்தனையோ விவாதங்கள். சர்ச்சைகள். உரக்கப் பேசிக்கொள்வோம்.
அடிக்கடி சந்திக்கத் தவறுவதில்லை.
அறுபதுகளின் இறுதிப்பகுதியில், கல்லூரி நாட்களிலேயே யான் வீரகேசரிப் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றத் தொடங்கியபோதிலும், எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இலக்கியத் துறையில் ஈடுபட்டேன். அக்காலத்தில், புகழ்பெற்ற எழுத்தாளர் செ. கணேசலிங்கத்தின் “குமரன்” சஞ்சிகை ஐந்து பிரதிகள் எனக்கு 6)l(bLD.
அதில் ஒன்றைக் கொண்டுபோய் நண்பன் வில்வனுக்குக் கொடுப்பேன்.
தவறாது காசு தந்திடுவான்.
அதனை வாசித்துவிட்டுச் சந்திக்கும் போதெல்லாம் உரத்த விமர்சனம் கொட்டுவான்.
எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் இறுதி ஊர்வலத்தில் வில்வன் கீதங்கள் பாடிவந்ததும், புங்குடுதீவு மணற்காடு மயானத்தில் பொன். சுந்தரலிங்கம் திருவாசகம் பாடிட எல்லோரும் கண்கலங்கி அழுது நின்றதுவும், பின்னர் புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் கோவில்
மண் மறவா மனிதர்கள் 97 வி. ரி. இளங்கோவன்

Page 51
முன்றலில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்ற என்னையும் வில்வன் அழைத்ததுவும் ஞாபகத்தில் வருகின்றன.
எழுபதுகளில் பலதடவை புங்குடுதீவில் இலக்கியக் கூட்டங்களை நடாத்தியிருக்கின்றேன்.
அக்கூட்டங்களில் கே. டானியல், நாவேந்தன், ஈழத்துச் சிவானந்தன், புதுவை இரத்தினதுரை, வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோருட்படப் பலர் கலந்துகொண்டமை இன்று ஞாபகம்.
அந்தக் கூட்டங்களில் நண்பன் வில்வன் எம்முடன் கவியரங்கில் கலந்து கொள்வார். அல்லது கருத்துரை வழங்குவார். வில்வனின் மூத்த சகோதரர் கருணாகரன் அக்கூட்டங்களை நடாத்துவதற்கு எனக்கு உதவிகள் புரிந்ததையும் மறக்கமுடியாது.
அன்று, வசந்தம் புத்தக நிலையத் தலிருந்து, சீனாவிலிருந்துவரும் புத்தகங்கள், தமிழில் வெளிவந்த மாக்ஸிசப் புத்தகங்கள், தொழிலாளி பத்திரிகை உட்படப் பலதும் கொண்டுவந்து நண்பர்களுக்குக் கொடுப்பது என் வழக்கம். அவ்வேளை எத்தகைய கருத்து முரண்பாடு இருப்பினும் முகங்கோணாது. பணம் தந்து வில்வன் அவற்றையும் வாங்கிக்கொள்வான். பின்னர் அவைபற்றிய அலசல்களிலேயே எமது சந்திப்புகளின் நேரங்கள் போய்விடும். தான் ஏற்றுக்கொண்ட கருத்தினை உரக்கச்சொல்லி வலியுறுத்துவது வில்வனின் வழக்கம்.
அத்தகைய குணம் என்னிடத்தும் உண்டு. இதனால் இருவரும் உரக்க வாதாடுவதைப் புதிதாகப் பார்ப்பவர்கள் “என்ன சங்கதியோ.” என ஆச்சரியப்படுவதும் உண்டு.
மனிதாபிமானமும், தொன்மை மரபு பேணலும், ஆன்மீகமும் அவன் வாதங்களில் இழையோடும்.
எப்படி நாம் பேசிக்கொண்டாலும், கள்ளமற்ற, மனந்திறந்து பேசும் எம் நட்பு என்றும் தொடர்ந்தது.
மண் மறவா மனிதர்கள் 98 வி. ரி. இளங்கோவன்

எண்பதுகளின் பிற்பகுதியில் யான் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் பிரான்ஸ் வந்துவிட்டேன். இருப்பினும் அவ்வப்போது பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் நண்பனின் படைப்புகளைப் பார்த்து மகிழ்வதுண்டு. என் சகோதரர் சிறிது காலம் நடாத்திய “திருப்பம்” சஞ்சிகையிலும் நண்பனின் எழுத்துக்கள் தொடர்ந்து வந்ததைப் பார்த்தேன்.
சில மாதங்களுக்கு முன்பு நண்பர் யேசுராசாவுடன் ஐரோப்பா வந்திருந்தான்.
பாரிஸில் அவனது கவிதைத் தொகுதியின் அறிமுக விழாவும் நடைபெற்றது.
சுமார் 770 கி.மீ தொலைவில் யான் வசிக்கும் துலூஸ் நகரிலிருந்து பாரிஸ் வந்து, விழாவில் நண்பனைச் சந்தித்து உரையாடினேன்.
கண்டதும் கட்டிப்பிடித்து “எப்படியடாப்பா. ...” என வாஞ்சையோடு பேசியதை மறக்க முடியவில்லை. பின்னர் இன்னுமொரு சந்திப்பிலும் கலந்துகொண்டு அவனுடன் நிறையவே பேசினேன்.
என் வயது நண்பன். . இடைநடுவில் போய்விட்டான். . அடுத்தடுத்து வரும் கலை இலக்கிய வாதிகளின் இழப்புகள் இதயத்தைக் கலங்கடிக்கின்றன.
காற்றுவெளிக் கிராமத்தின் காலத்துயர் சுமந்து கவிதைகள் தந்தவனே. முன்னணிக் கவிஞனாய் முகிழ்ந்து வந்தவனே.
உன் படைப்புகள் மூலம்.
எங்களுடன் பேசிக்க்ொண்டேயிருக்கிறாய். .
எப்படி மறப்போம் உன்னை.?
இயலாது. இயலாது.!
- “ஞானம்”, ஐனவரி, 2007 -
மண் மறவா மனிதர்கள் 99 வி. ரி. இளங்கோவன்

Page 52
இளங்கோவ ன் கதைகள்
* இலங்கை இலக்கியப் பேரவையின் விருது பெற்ற
சிறுகதைத் தொகுப்பு. * பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் அணிந்துரை
கொண்டது.
தொடர்புகளுக்கு:
கொழும்பில் : பிரான்சில் : லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், “முன்னோடிகள்” குணசிங்கபுர, V.T. Elangovan கொழும்பு 12. vtelangovanayahoo.fr
T.P.: 011 2341942 TP:0033950493232
 


Page 53
eius, gais segi --ՆՅԱՆ -165p:Ո: ஒப்பரிய பனிகளை
GET a gig SL S SAS J 0 S S படைத்துள்ளார் வருங்கால சந்ததியின்
リエ ○エ、エ (U /) ] エ、○エ @cm
6. SII sai si.
■m 、 。
பெற்ற இவரது முற்போக்கு ള്ളി ലൂബ
国、
酉s。)、
Distributed. By :
ANKA BOOK DEPOT (PWTC) 丐114,DiasPace Gunnasingapurra,
Colombo - 12.
el 0.1-2-34.942
 

Ti 5: エ @cm cm
வரித்து
is விருதுகள் 匾、 〔 、
78-955
isbn | III 978 - 5 3 E 7
Price: 150.00