கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்ல மனிதத்தின் நாமம் டானியல்

Page 1
தொகுப்பு வி, ரி. இளங்கோவலர்
 

圈) sae|::ti여|-
|×
燕) )No
シ
器*)
| T: sae 器闇歴 闇闇槳歴 sae 繭ェ|- ェ韶
闾
sae |: : : : 3 | .器)sae
·- *) -器)闇· 器)|× ェ

Page 2


Page 3

தொகுப்பு வி. ரி. இளங்கோவன்
C DC EUROPE ORENT B P 229 31000 TOULOUSE FRANCE.
Tél. & Fax : 0561 55 00 13

Page 4
நல்ல மனிதத்தின் நாமம் டானியல் ( சில பதிவுகள் )
முதற்பதிப்பு : சித்திரை 2001
தொகுப்பு பதிப்புரிமை : வி. ரி. இளங்கோவன்
வெளியீடு: ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மையம்
துலுால், பிரான்ஸ்.
NALLA MANITHATHTHIIN NAAMAM DANIEL
Première édition : Avril 2001
C D C EUROPE ORENT
B P 229
31000 TOULOUSE
FRANCE.
Tél. & Fax : 0561 55 0013

பதிப்புரை
தோழர் டானியல் ஓர் அற்புதமான மனிதர்.
பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்து இறுதி மூச்சுவரை வாழ்ந்த சீரோன்.
அந்த மக்கள் படைப்பாளியுடன் சுமார் பதினான்கு ஆண்டு காலம் நெருங்கிப் பழகினேன். அவரது அரசியல், கலை இலக்கிய இயக்கத்தோடு ஒன்றி நடந்தேன்.
அவர் கண்ட அரசியல், கலை இலக்கியக் களங்களில் எல்லாம் பங்களிப்புச் செய்ய எண்ணையும் இணைத்துக் கொண்டார்.
இறுதிக் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும் கலை இலக்கிய நண்பர்களைச் சந்திக்கவும் டானியல் தமிழ்நாடு சென்றபோது, அவரது அழைப்புக்கிணங்க யானும் உடன் சென்றேன்.
தமிழகம், பாண்டிச்சேரி எங்கும் இலக்கியச் சந்திப்புக்கள், கூட்டங்கள், நீரிழிவு நோய்க்கு மருத்துவ சிகிச்சை, கண்ணுக்கு லேசர் சிகிச்சை என சுமார் ஏழு வாரங்கள் கழிந்தன.
தஞ்சாவூர் தங்கசாரதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது 1986 பங்குனி 23-ம் திகதி காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடன்நின்ற எண் கையை இறுகப்பற்றியவாறு 'தம்பி. தம்பி. என்று ஏதோ சொல்ல விழைந்து முடியாத நிலையில் அவர் உயிர் பிரிந்தது எனக்கு வாழ்வில் மறக்க முடியாத சோக நிகழ்வு.

Page 5
அந்த மனிதனின் இலக்கியப் படைப்புகள், பணிகள் மகத தானவை. எந்த இலக்கிய மேடையிலும் டானியலின் பணிகள் குறித்து யான் சொல்வதுண்டு.
இன்றைய இலக்கிய இளந்தலைமுறையினர் டானியல் குறித்து ஓரளவு அறிந்து கொள்ளும்பொருட்டு அவரைப்பற்றி பலர் குறிப்பிட்டுள்ளவற்றை சுருக்கமாகத் தொகுத்துத் தந்துள்ளேன். தற்சமயம் கையில் கிடைத்தனவற்றின் சிறு தொகுப்பே இது.
ஏற்கனவே 1986-ல், டானியல் தனது இலக்கிய வாழ்வு பற்றி எழுதிய கட்டுரையை “என் கதை’ என்ற தலைப்பில் சிறு நூலாக வெளியிட்டிருந்தேன். அதன் வெளியீட்டு விழாவும் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் யாழ்நகரில் சிறப்புற நடந்தது.
விரைவில் டானியலின் குறுநாவல் ஒன்றை வெளியிடவுள்ளோம்.
இலக்கிய இரசிகர்கள், நண்பர்களது ஆதரவு எமது வெளியீடுகளுக்கு என்றும் கிடைக்கும் என நம்புகிறேன்.
- வி. ரி. இளங்கோவனர்.

வரலாற்றைப் படைத்த நீ
வரலாறு ஆகிவிட்டாய்
வரலாற்றைப் படைத்த நீ வரலாறாகிவிட்டாய். உன் மறைவால் நாங்கள் படும்வேதனை உனக்குத் தெரியும். தோழமையையுணார்ந்த உனக்கு எங்கள் உணர்ச்சி புரியாதுவிடாது. அந்த வேதனைக்குள் தாங்க முடியாத சோகத்தினுள், நன்கு இனம்பிடிபடாத ஓர் இறுமாப்பும் தலைதுாக்குகிறது. எங்கள் டானியல் மரணத்திலும் எழுத்தாளனாகவே கெளரவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டான். மற்றையோர் மரணம் குடும்பச் சடங்கு. நண்பர்கள் செலுத்தும் இறுதி அஞ்சலி. ஆனால் உனது மரணமோ, உனது வாழ்க்கையைப்போல, இலக்கிய நிகழ்வு, வாசகர் கையறுநிலை. தஞ்சாவூரில் நீ மறைந்தபொழுது நாவலாசிரியன் எண்பதற்காகவே போற்றப்பட்டாய். 'நீ ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவன்' எண்பதற்காகவே உனக்கு அந்த இறுதிச் சிறப்பு.
நீ பிடித்த சிவப்புக்கொடி இறுதிவரை உண்னைவிடவில்லை.
டானியல். உண்மையில் எத்தனை நாட்கள் தேற்றிக்கொள்கிறோம். உனது மறைவு எமக்கு ஒரு பேரிழப்பு. அண்மைக் காலத்தில் நீ எமது மிக முக்கிய நாவலாசிரியனாக முகிழ்த்துக் கிளம்பினாய்.

Page 6
நீண்டகாலப் போராட்ட அனுபவம், மனித உறவுகள பற்றிய எண்ணத்தெளிவு, வரலாற்றின் போக்குப் பற்றிய மார்க்ஸிஸ் விளக்கம், உனது அண்மைக்கால நாவல்களை, ஈழத்தின் தலைசிறந்த நாவல்களாக ஆக்கிக்கொண்டு வந்தன. கதைப்பின்னலுக்கு அப்பால நிற்கும் மனித உறவுச் சிக்கலை,உனது இறுதி நாவல் 'கானல்" மிகச் சிறப்பாகச் சித்தரிக்கிறது.
உனக்குத் தெரிந்த யாழ்ப்பாண வாழ்க்கை, யாழ்ப்பாணத்தவர் மறைக்கவிரும்பும், மறுக்கவிரும்பும் யாழ்ப்பாண வாழ்க்கை. சைவத் தமிழ்ப் பாரம்பரியம், மிக்க கவனத்துடன் கட்டியெழுப்பிய சமூகப் பாரம்பரியத்தின் இருண்ட பகுதியை நீ வெளிச்சம்போட்டுக் காட்டியவன்.
அதனால் உண்னைப் பலர் விரும்பவில்லை. .
ஆனால் நீயோ உனக்குத் தெரிந்த அந்த உண்மையினை மறைக்கத் தயாராக இருக்கவில்லை. அந்த ஒரு இலக்கிய நேர்மைக்காகத்தான், அந்த நேர்மையின் படைப்புச் செழுமைக்காகத்தான் நீ இன்று இலக்கிய வரலாற்றுப் புலவனாகியுள்ளாய்.
டானியல். நீ என்றுமே உனது கருத்துக்களை விட்டுக்கொடுத்தவண் அல்ல. அரசியலில் நாங்கள் இருவரும் ஒரே வண்ணத்தின் இருகோடுகள். எது கெட்டியானதென்பது பற்றி எத்தனை தடவை சண்டையிட்டிருப்போம்.
நீ ஒரு நல்ல நண்பன். அற்புதமான படைப்பாளி.

படைப்பாளிகள் மறைவதில்லை. ஏனெனில் அவர்கள் தாங்கள் விரும்பும் உலகத்தை தங்கள் எழுத்துக்களில் வெண்றெடுத்து விடுபவர்கள். நீ அழிக்க விரும்பிய உலகம் உண் எழுத்துக்களில் உள்ளது. அது விரைவில் அழிந்துவிடும். டானியல்.
உண்புகழ் எழும். நீ நிச்சயமாக வாழ்வாய்!
- பேராசிரியர் கார்த்திகேச சிவத்தம்பி (ஈழநாடு வாரமலர், யாழ்ப்பாணம் )
30 - 03 - 1986

Page 7
டானியலின் வாழ்வும் இலக்கியமும்
அரசியல் மூலம் இலக்கியத்தைச் செழுமைப்படுத்தியவர். இலக்கியத்தின் மூலம் அரசியலுக்கு வலுவூட்டியவர். சமூக சீர்திருத்தப் போராளி டானியல் இல்லை என்றால் தனித்துவமான எழுத்ாளர் டானியல் இருக்க முடியாது. இருப்பினும் எழுத்தாளராகவே அவர் மக்கள் முன்னிலையில் தோன்றுகின்றார்.
போராளி டானியலுக்கும் எழுத்தாளர் டானியலுக்கும் இடையில் முரண்பாடு கிடையாது.
சொல்லும் செயலும் இணைந்த வாழ்க்கை டானியல் வாழ்க்கை. தமிழ் எழுத்தாளர் எவரிடமும் காணப்படாதது இந்தச் சிறப்பு.
டானியல் அவர் கூற்றுப்ப்டியே அறிவு ஏற்பட்ட பராயம் தொட்டு பொதுவுடமை இலட்சியத்திண்பால் ஈர்க்கப்பட்டு அதனை முன்னெடுத்துச் செல்லும் இயக்கங்களின் சளையாத தொண்டனாகச் செயற்பட்டார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பின்னர் புரட்சிகர எழுத்தாளர் அமைப்புகள், சிறுபாண்மைத் தமிழர் மகாசபை, பின்னர் திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆகியவற்றில் அவர் எப்பொழுதும் சுறுசுறுப்பான முக்கியமான பாத்திரம் வகித்தார்.
யாழ். வெலிங்டன் சந்தியில் டானியல் நடத்திய வெல்டிங் கராஜ்ஜின் முன்னால் உள்ள வாங்குகளும், இரும்புக் கதிரைகளும் எத்தேையா வகை மனிதர்களைச் சந்தித்திருக்கின்றன. பலதரப்பட்டவர்கள் டானியலை நாடி அங்கு வந்து உரையாடல் நடத்தி ஆலோசனை கேட்டு இலக்கியப் படைப்புகளைப் பெற்றுச் சென்றிருக்கின்றனர்.
6

டானியல் கலந்து கொண்ட அரசியல் - இலக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் திட்டமிடும் களமாக "ஸ்ரார் கராஜ்’ அமைந்தது. தனது தொழிலிலும் பார்க்க அரசியலுக்கும், இலக்கியத்துக்கும் முதலிடம் கொடுத்தவர் டானியல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அதுபோலவே பலதரப்பட்ட நண்பர்களைப் பெற்றுக் கொண்ட டானியல், கோட்பாடு, கொள்கையெண்று வரும்போது நட்பிலும் பார்க்கக் கொண்ட இலட்சியத்துக்கே முதலிடம் கொடுத்தவர் என்பதும் உலகறிந்த உணர்மை.
அவர் முன்னின்று நடத்திய இலக்கிய உலகப் போராட்டங்களிலும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும் அவருடைய தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் பலர் அவருடன் நண்கு பழகியவர்களும், அவருடைய நண்பர்களும் ஆவர். டானியல் ஒரு நடுநிலையாளன் அல்ல. ஒரு பக்கச் சார்புடையவர். ஒரு வர்க்கச் சார்புடையவர். உலகின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்தை எடுத்த டானியல் அந்த மக்களின் நலனுக்கு உகந்த விஷயங்களிலேயே ஈடுபட்டார். தான் ஆதரிக்கும் மக்களின் நலனுக்குப் பாதகம் என்று அறிந்த கணமே அவர் எந்த விஷயத்தையும், எந்த மனிதனையும் எதிர்த்துப் போராடத் தயங்கியதேயில்லை.
டானியல் தாழ்த்தப்பட்ட மக்களின் சுகதுக்கங்கள், போராட்டங்களின் வெற்றி தோல்விகள் ஆகியவற்றையே தமது இலக்கியப் படைப்புக்களின் கருப்பொருளாகக் கொண்டார். எழுத்தாளர் டானியலின் இந்தச் சிறப்பை இழிவுபடுத்தும் முயற்சியில் சிலர், டானியலுக்கு சாதியைப் பற்றித்தான் எழுதத் தெரியும் என்று விதண்டாவாதம் பேசியதுண்டு. ஆனால் ஒரு எழுத்தாளண் அல்லது கவிஞன் அல்லது கலைஞன் எதனைக் கருப்பொருளாகக் கொள்கின்றான் எண்பதை மற்றவர்கள் அவனுக்காகத் தீர்மானிக்க முடியாது என்ற அடிப்படையை, உண்மையை இந்த நேரத்தில் இவர்கள் மறந்துவிடுகின்றார்கள்.
T

Page 8
டானியலின் சிறுகதைகளிலும், நாவல்களிலும் வரும் பாத்திரங்களும் அவற்றின் கதையும் தமிழ்ச் சமூகத்தின் சாதி அமைப்பில் கீழே கிடந்து நசியும் மக்களும், அவர்களுடைய வாழ்க்கையும் ஆகும். நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு ஊடாக இந்த மக்களை அவர் தனது படைப்புளில் முன்னடத்திச் செல்கின்றார். தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, அடக்கி ஒடுக்கபட்ட மக்களைப் பொறுத்தவரை டானியலின் இலக்கியம் சமகால இலக்கியம். உண்மை நிலைமையினை உணராதவர்கள் அல்லது உண்மை நிலைமையினை மறைக்க முற்படுவோர் டானியலின் இலக்கியம் சமகால இலக்கியம் இல்லை என்று மாத்திரமல்ல, அது அவசியம் தானா என்று கூடக் கேள்வி எழுப்ப முடியும்.
டானியல் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு வானவீதியில் வலம்வந்து இலக்கியம் படைத்த எழுத்தாளனல்ல. அவர் தனது வாழ்வுடனும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வுடனும் தொடர்புடைய, தனக்கு நன்கு தெரிந்த, ஏதோ விதத்தில் தான் தொடர்பு கொண்ட விஷயங்களை வைத்தே கதை செய்தார்.
இத்தகைய யதார்த்த எழுத்தாளன் எத்தகைய எதிரொலிப்பை மக்கள் மத்தியிலிருந்து பெறுவார் எண்பது ஒரு கேள்வி. ஆனால் டானியலைப் பொறுத்தவரையில் எதிரிகளிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அவருடைய படைப்புகள் பெற்ற எதிரொலிப்பு அவருடைய படைப்புகளின் வெற்றியையே காட்டி நிற்கின்றன.

இலக்கியத்துக்கு இலக்கணம் கண்டது போல் டானியல் போன்றவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு விமர்சனம் எழுதி முன்னுக்கு வந்த சிலர், தாம் முன்னர் செய்த விமர்சனங்களை நிராகரித்து சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காகப் புதிய திருத்தப்பட்ட கருத்துக்களை முன்வைத்ததை இலக்கிய அபிமானிகள் அறிவார்கள். ஒன்றில் அவர்கள் முதலில் வைத்த கருத்துக்கள் தவறாக இருக்க வேணடும். அல்லது பின்னர் கூறிய கருத்துக்கள் தவறாக இருக்கவேண்டும். இரண்டும் சரியானதாக இருக்க முடியாது. டானியலின் படைப்புகளைச் சிறுமைப்படுத்த இவர்கள் எடுத்த முயற்சி படுதோல்வி அடைந்தது.
டானியல் மக்கள் பல்கலைக்கழகத்தில் கற்றுப் பயிற்சி பெற்ற எழுத்தாளர். மக்களிடமிருந்து, மக் க்கு மக்கள் மொழியில்’ என்பதைத் தாரகமாகக் கொண்ட டானியலின் இலக்கியம் ஈழத்து மக்கள் இலக்கியப் பரப்பில் என்றும் மணம் பரப்பும் என்பதில் சந்தேகமில்லை.
- வி. சசினர்னத்தம்பி / arcassent - 23 - 3 - 1968 )

Page 9
ஈழத்தின் பண்பாட்டு நாவலாசிரியன் மறைந்துவிட்டான்
ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்ற டானியல் அனுபவக் கல்வி நிரம்பப் பெற்றவர். புனைகதைகளுக்கு ஒருவகையான நடையினையும், அரசியல் சமூக விடயங்களைப் பற்றிக் கூறுமிடத்து ஒருவகை நடையினையும் கையாளுவதிலே அவருக்கிருந்த தேர்ச்சி அதிசயிக்கப்படத்தக்கதொன்றே. தன்னுடைய முதல் நுாலான "டானியல் கதைகள்' தொகுதிக்கு முன்னுரை எழுதும்போது 1963ல் பின்வருமாறு எழுதினார்.
‘குஞ்சு பொரிக்க வைக்கப்படும் முட்டையில் படிப்படியாக ஏற்படும் மாற்றம் நம் பார்வைக்குப் புலனாவதில்லையானாலும், இறுதியில் மாற்றங்களிலான ஸ்துால வடிவத்தை நாம் பார்த்து உணர முடிகிறது. முதல் விநாடியின் மாற்றத்தைப் புறக்கணித்துவிட்டு மறு விநாடியினர் மாற்றம் ஏற்படுவதில்லை. ஒன்றையொன்று உள்ளடக்கி, உள்ளடக்கியே ஸ்துால வடிவான பெருமாற்றத்துக்கு வழி பிறக்கிறது. பிரபஞ்ச வளர்ச்சியின் இந்தச் சரித்திரப் போக்குக்கு, இலக்கிய வளர்ச்சியின் போக்கும் எந்த வகையிலும் மாறுபட்டதல்ல."
10

எவ்வளவு இறுக்கமான தர்க்கரீதியான நடையெண்பதை நான் இங்கு விளக்க வேண்டியதில்லை. ஈழநாடு, வீரகேசரி, மரகதம், சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்களிலே ஆரம்பத்தில் டானியல் சிறுகதைகள் எழுதி இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். அவற்றில் வெளிவந்த கதைகளைத் தொகுத்து 1963ல் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ‘டானியல் கதைகள்’ என்ற பெயரிலே வெளியிட்டது. இதற்கு அணிந்துரை எழுதிய தற்போதைய யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் 'கடந்த சில காலமாக யாழ்ப்பாணத்தில் வளர்ந்துவரும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் சிலருள் டானியலும் ஒருவர் என்பது பற்றி எனக்கு எவ்வித ஐயமுமில்லை. நான் படித்த அளவிலே டானியலின் சிறுகதைகளிலே திட்டவட்டமான கருத்துக்களைக் காண்கின்றேன். மனித குலத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையும் அவருக்கிருக்கின்றது'. இவ்வாறு சிறுகதை ஆசிரியராகத் தமிழ் இலக்கிய உலகிலே பிரவேசித்த டானியலின் மேலும் 13 சிறுகதைகள் வீரகேசரி பிரசுரத்தினரால் "உலகங்கள் வெல்லப்படுகின்றன" என்னுந் தொகுதியாக 1974ல் வெளியிடப்பட்டது. சிறுகதை ஆசிரியராக ஆரம்பித்த டானியலுக்கு அவருடைய நாவல்களே தமிழ் கூறும் நல்லுலகத்தில் புகழிட்டிக் கொடுத்தது. "பஞ்சமர்’ என்னும் முதல் நாவல் வெளிவந்தபோது டானியல் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராகிவிட்டார். பழுத்த மரந்தான் கல்லடிபடும் எண்பார்கள். கருத்து முதிர்ச்சியும், இலக்கிய ஆக்க உணர்வும், அனுபவ முதிர்வும் அவருடைய பஞ்சமர் நாவலிலே காணக்கூடியன. இவை கருத்து வேறுபாட்டுக்கும் இடமளிப்பன. பலராலே ஒரு எழுத்தாளன் விமர்சிக்கப்பட்டால், அது அந்த எழுத்தாளனுக்கு ஒரு பெருமையாகும். பஞ்சமர் முதல் பாகம் வெளிவந்த பின்னர் போராளிகள் காத்திருக்கின்றனர்” என்னும் நாவல் வெளியாகியது. பின்னர் பஞ்சமர் இரண்டு

Page 10
பாகங்களும் ஒன்றாகச் சேர்த்துத் தமிழகத்திலே வெளிவந்தது. தாமரை, சரஸ்வதி போன்ற இதழ்கள் மூலம் சிறுகதையாசிரியராக டானியலை அறிந்திருந்த தமிழ்நாட்டு வாசகர்கள் பஞ்சமர் நாவலுடன் அவரை நாவலாசிரியராகவும் தரிசித்தனர். தொடர்ந்து
கோவிந்தன், பூமரங்கள், அடிமைகள்' என்னும் நாவல்களை அவர் எழுதி வெளியிட்டார். டானியல் மறைவதற்கு முன்னர் வெளிவந்த நாவல் 'அடிமைகள். அது தமிழகத்திலே வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர் 'ஒரு தேர்ந்த இலக்கியக்காரன் என்கிற மட்டத்திலே குறுகிவிடாது- தம்சொந்த வாழ்க்கை நடைமுறையாலும் சமூக மாற்றத்திற்காகச் சமராடும் ஒரு சரியான போராளியாகவும் பரிணமித்திருப்பதே இம்மக்கள் கலைஞனின் மகத்துவமாகும்’ என்று டானியல் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
டானியலின் நாவல்களிலே கையாளப்பட்டுள்ள மொழியின் ஓர் அம்சம் பற்றி ஆங்கில ஆய்விதழ் ஒன்றிலே நான் எழுதிய கட்டுரையில் டானியலை ஒரு
பண்பாட்டு நாவலாசிரியன்’ எனக் குறிப்பிட்டுள்ளேன்.
யாழ்ப்பாணத்துத் தமிழர்களுடைய உள்நோக்குகள், சமூக உணர்வு, நடைமுறைகள், நம்பிக்கைகள், மரபுகள் ஆகியனவற்றுடன் அவர்களுடைய நாளாந்த மொழி வழக்கினையும் நன்கு அவதானித்துத் தன்னுடைய நாவல்களிலே பேணியுள்ளமை அவரை ஒரு பண்பாட்டு நாவலாசிரியன்’ என்று கூறுவதற்கு ஆதாரமாகின்றது. தன்னுடைய 16 ஆவது வயதிலேயே ஊர்ப்புதினங்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்ட டானியல் தமது 21வது வயதிலே ஒரு பொதுமை நோக்குடைய அரசியல் இயக்கவாதியாகிவிட்டார்.
2

திண்டாமை தொடர்பான எதிர்ப்புப் போராட்டங்களிலே கள அனுபவம் பெற்றவர். இதனாலே அவர் இலக்கியக் கலைஞனாக மட்டுமன்றி ஒரு முற்போக்கு அரசியல்வாதியாகவும் இருந்தார். 'சாதி ஒழிப்பு' பற்றி அவர் எழுதிய ஓர் அறிக்கை, 'இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக் குரல்’ என்பன அவருடைய பிற எழுத்தாகும்.
டானியல் எளிமையான தோற்றத்தையுடையவர். நண்பர்களை நேசிப்பவர். நண்பர்களுடைய துன்பத்திலே உடனடியாகப் பங்குகொள்பவர். கணி தெரியாமல், ஒரளவு பார்வை குறைந்த போதிலும் மோட்டார் சைக்கிளிலே நண்பர்கள் நலன் விசாரித்தமை எனக்கு நன்கு தெரியும். தனிமனிதனாக வாழாமல், இயக்கபூர்வமான வாழ்வுடனும், நெஞ்சுநேர்ந்த நண்பர்களின் தொடர்புடனும் டானியல் வாழ்ந்தமையாலேயே அவர் ஒரு மக்கள் கலைஞனாக மிளிர முடிந்தது. அவருடைய நாவல்களினுாடாக வலிமையற்ற மக்களின் துண்பங்களையும் அவற்றினின்று விடுபட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் நம்பிக்கையான எண்ணங்களையும் வெளிப்படுத்த முடிந்தது.
டானியல் தமிழ் இலக்கிய உலகிலே தனக்கென ஓர் இடம் பிடித்துவிட்டார். இந்த வகையிலே தமிழும் தமிழ் இலக்கியமும் வாழுங் காலம்வரையும் டானியலும் தமிழ் மக்களிடையே வாழ்வர். ஒரு நேர்மையான துணிச்சலுடைய மக்கள் கலைஞனுக்கு எங்கள் இறுதி அஞ்சலிகளைச் செலுத்துகிறோம்.
- பேராசிரியர் அ. சண்முகதான் (ஈழமுரசு வாரமலர், யாழ்ப்பாணம் ) பங்குனி 1986
13

Page 11
கே. டானியல்தமிழின் தலித் இலக்கிய முன்னோடி
தாழ்த்தப்பட்ட மற்றும் மலையின மக்களின் அவலங்களைத் தமிழ்ப்படைப்புகளாக கு. சின்னப்பபாரதி, பூமணி போன்றோர் பட்ைத்துள்ளனர். இவர்களுக்கும் டானியலுக்கும் ஒரு முக்கிய வேறுபாடுண்டு. தமிழகத்தைக்காட்டிலும் சாதிக் கொடுமைகள் மலிந்திருந்த யாழ்ப்பாணப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுள் ஒருவராகவே பிறந்து தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுஜன அமைப்பு ஒன்றை நிறுவி அவர்களது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய டானியலின் படைப்புகள் அனைத்துமே சாதிப் பிரச்சினையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை என்பது தவிர அனைத்திலுமே அவர் ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஒருவராய் நின்று அவர்களின் குரலை ஒலித்திருக்கிறார். இதற்காக அவர் விமர்சகர்களால் கடுமையாகச் சாடப்பட்டதும் உண்டு.
டானியல் அதிகம் படித்தவரல்ல. புதிய புதிய இலக்கிய உத்திகள், நவீன சிந்தனைகள் முதலியவைகளையெல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டவருமல்ல. எதார்த்தவாத இலக்கிய வடிவத்தை அவர் தாண்டியதில்லை. தலித்துகளுக்கான போராட்ட இலக்கியத்தின் வடிவம் மைய நீரோட்ட வடிவத்திலிருந்து மாறுபட்டிருக்க வேண்டாமா? என்கிற கேள்விகளையெல்லாம் அவரிடம் யாரும் கேட்டதுமில்லை. எனினும் கூட, இன்றளவும் தமிழின் தலித் இலக்கிய முன்னோடி எண்று சொன்னால் டானியலைத் தவிர வேறு யாரும் நம் நினைவுக்கு வருவதுமில்லை.
- அ. மார்க்ஸ்
* மனுசங்க."
செப்டம்பர்-அக்டோபர் 1990 14

டானியல் ஒரு நினைவு
டானியல் யார்? என்ன அவர் சாதனை? இப்படி நினைந்துருக என்ன அவர் செய்துவிட்டார்? டானியல் ஒர் அற்புதமான மனிதர்- கலைஞர்மனிதாபிமானி- எல்லாவற்றுக்கும்மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி- நாவலாசிரியர். 'பஞ்சமர்’ என்ற நாவல் இலங்கைத் தமிழர் வார்ப்பு.
இதன் நிரூபணம் தான் பஞ்சமர்’ என்ற நாவல். தமிழகத்தில் இந்த நாவலைப் பூரணமாக்கி நான் வெளியிட்டேன்.
LLLLLLLLLLLLLLLLLLLLS SLLLLLLLLLLLLLLLL LLLLLLSS S SSS S LLLYLL0YLLLLLLYLLLLLLLL
தமிழின் நவீன எழுத்தைப் பெற்றெடுத்த பல எழுத்தாளர்களைப் போலவே கே. டானியலும் தமிழ்நாட்டில் வெளிவந்த சிறந்த இலக்கிய இதழான சரஸ்வதியில் தம் இலக்கிய வெளியீட்டைத் துவக்கினார். அதன் பின் சரஸ்வதியின் மிக முக்கியமான மூன்று படைப்பாளிகளில் ஒருவராய் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோருடன் இலங்கை எழுத்தில் முதற் படைப்பாளியாய் சரஸ்வதியில் தொடர்ந்து சிறுகதைகளைப் படைத்தார். சரஸ்வதி இதழில் கே. டானியலின் உருவம் முகப்புப் புகைப்படமாய் அட்டையில் 1951ல் பிரசுரம் செய்யப்பட்டு பாராட்டப்பட்டார். சரஸ்வதியுடன் நில்லாது ப. ஜிவானந்தம் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த ‘தாமரை கலை இலக்கிய ஏட்டிலும் எழுதினார், ஏராளமாய். ஏராளமான பத்திரிகைகள் தமிழகத்தில் இருந்தும் வெளியிட, பாராட்டு இருந்தும் மறுமலர்ச்சி ஏடுகளைத் தவிர வேறெதிலும் எழுதாத பிடிவாதத்தை மேற்கொண்டார். இலங்கையில் அத்தனை பத்திரிகைகளிலும் எழுதியும்- தமிழகத்தில் ஜனரஞ்சக இதழ்களில் எழுதாமல் ஒதுக்கும் துணிவு இருந்தது இவருக்கு
15

Page 12
தமிழகத்தில் டானியல் நாவலாசிரியராய்த் தெரியவந்தது பஞ்சமர் இரண்டு பாகங்களும் இணைந்து வெளிவந்த பிறகு தான். 1981ல் இந்தியா வந்த டானியல் இந்தியாவின் மிகச் சிறந்த கலையழகு மிகுந்த கட்டிடங்களையோ கோயில்களையோ காணப்போகவில்லை. கீழ்வெண்மணியில் உயிருடன் கொளுத்தப்பட்ட ஏழைமக்களின் நினைவுச் சமாதிக் கல்லைத்தான் போய்ப் பார்த்தார். இரண்டு மணி நேரம் அங்குள்ள நசுக்கி ஒடுக்கப்பட்ட கிராமத்து மக்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். தஞ்சை நகரம் வந்து என்னுடன் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கி எங்களது முப்பதாண்டு உறவின் செய்திகளைப் பேசித் திர்த்தார் டானியல். யார் பேச்சையும் செவி கொடுக்கும் பணிவு, தஞ்சையில் நிறைய இலக்கிய நண்பர்கள் தோன்றினர்.
நேர்மையும் துணிவும் பணிவும் அவரது குணங்கள். அவரது படைப்பு முழுவதும் பாமரர்களைப் பற்றியதே. பெரிய அறிவு எதையும் அவர் தேடியதில்லை. உறவு ஒன்றே அவரது தேடல். டானியலின் நாவல் தனித்துவம் வாய்ந்தவை. மக்களின் மொழியும் உள்ளடக்கமும் யாழ்ப்பாணத்துத் தமிழ் நடையும் அந்த மூடத்தனங்களை முறித்தெறிந்த தெளிவும் அவரது வெற்றிகளாய் உயர்ந்தன. நீண்ட தமிழ் மரபில் கலப்பற்ற நிஜத்தை- உண்மைகளை அப்படியே மண்மணம் மாறாது படைப்புகளாக்கியவர் டானியல். நூறாண்டு இலங்கைத் தமிழரது ஜாதி வரலாற்றையும் அதனை எதிர்ெெகாண்ட போர்களையும் அதனாலேயே நேர்ந்த அழுக்குகளையும் அசிங்கங்களையும் அப்பட்டமாய் ஏற்றுக்கொண்டவை டானியலின் படைப்புகள் ஆகும். அவரது படைப்புகளில் கண்ட குறை அவரது மக்களின் குறைகள். அவரது மரபின் குறைகள். அந்த மண்ணின் புழுதியின் குறைகள். அவரது குறைகள் எப்போதும் அவர்
16

எல்லாரையும் நம்பி உண்மைகளையே எழுத்தாக்க முயன்றதே. இவைகளை அறிந்த நண்பரும்கூட இவைகளை நம்பவும் மறுத்த சோகமே அவரது வரலாறு.
டானியல் என்ற மனிதனின் படைப்புகள் அவரிலிருந்து வேறுபட்டதல்ல என்பது ஒன்றே அவரைத் தமிழ் இலக்கியத்தில் தனித்துயர்த்தி நிற்கும். அவர் வாழ்க்கை வேறு, அவர் இலக்கியம் வேறு அல்ல. அவரது எழுத்து, அவரது எண்ணம், அவரது நெஞ்சு மூன்றும் மூன்று வழியல்ல. அவரது ஒரே வழி. இந்தச் சத்தியப் பாதையில் அவர் பட்டவை நிறைய. காலம் அவரது படைப்பின் வலிமையை நிரூபிக்கும்.
- ப்ரகாவுத் (தர்பம் - ஆவணி 1986)
SSTLSLqL LqLLLL SLLLL SLqL SLALLLL SLLLLL S LLLuL SLqLS TuqL SLTLLL S TuqLLL S LLLLSL LqHL LLuLLL L LLLLL S LLLuuuL S LLuLLSL LLLLLLLLuLS LLLLLL
‘டானியல் சக்திமிக்க இயக்கம் ஒன்றைக் கட்டி வளர்த்தவர். அவர் மிகச் சிறந்த எழுத்தாளராக மட்டுமின்றிச் சிறந்த தொழில்நுட்ப நிபுணராகவும், சிறந்த மனிதாபிமானியாகவும் திகழ்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் டானியலின் நூல்கள் பற்றிய ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டும்."
- சசிபாரதி.
(ஈழநாடு - 18- 4 - 1986)
17

Page 13
எனது நினைவலைகளில் கே. டானியல்
கே. டானியல் என்னுடன் எமது கட்சியில் மட்டும் இணைந்ததோடு நில்லாது, எமது சமூகத் தாபனமான அகில இலங்கைச் சிறுபாண்மைத் தமிழர் மகாசபையுடன் அமரர் யோவேல்போல் தலைவராக இருந்த காலத்தில் இணைந்து அச்சமூகத்தாபனம் நடத்திய சாதி ஒழிப்புப் போராட்டங்களில் எல்லாம் முன்னின்று கலந்து சொல்லடியும், கல்லடியும், கம்படியும் பட்டபோதிலும், 'அடிமை விலங்கறுப்போம் - அதில் ஆயுதங்கள் செய்திடுவோம் கொடுமை மிக மலிந்த - இக் குவலயத்தை மாற்றிடுவோம்" - என்று அஞ்சாது பணியாற்றினான். சம ஆசனம், சம போசனம் போராட்டத்திலும் சரி, தேநீர்க் கடைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம் போன்ற போராட்டங்களிலும் சரி, எந்த எந்தப் பகுதியில் சாதியின் பெயரால் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது, அவர்களின் உறைவிடங்கள் எரிக்கப்பட்டபோது, சாதி வெறியர்கள் துப்பாக்கி கொண்டு விலங்கு வேட்டையாடியது போன்று அப்பாவி மக்களைச் சுட்டுப் பொசுக்கிய போதெல்லாம் எங்களுடன் தோளோடு தோளர்கொடுத்து போராடிய ஒரு வீரம் செறிந்த போராளி கே. டானியல்.
யார், யாருக்கு விடுதலை வேண்டுமோ அவர்களுக்கிடையே இருந்துதான் போராட்டங்கள் வெடிக்க வேண்டும், அப்போராட்டங்களுக்கு அவர்களே தலைமைதாங்க வேண்டும்" என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு செயற்பட்டார். எமது சமூகத் தாபனமான அகில இலங்கை சிறுபாண்மைத் தமிழர் மகாசபையின் தொண்டனாக மட்டுமல்லாது சில ஆண்டுகள் உபதலைவராகவும் கடமைபுரிந்தார். இதுபோன்றே எமது கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
18

1963 இன் பின்னர் எமது கட்சியைவிட்டும், சமூகத் தாபனத்தைவிட்டும் வெளியேறியபோதிலும் அவரது இலட்சிய வேட்கையில் எதுவித மாற்றமுமின்றித் தீவிர அரசியல் போக்குடைய அரசியல் தாபனத்துடனும் திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்துடனும் இணைந்து தனது பணியினைத் தொடர்ந்தார். எமது இயக்கத்தை விட்டு வெளியேறிய போதிலும் சமூக ரீதியான பொதுப்பிரச்சனைகளின் போதெல்லாம் அவ்வப்போது என்னைச் சந்தித்து ஆலோசனைகள், கலந்துரையாடல் செய்யப் பின்னின்றதில்லை.
ஆற்றல்மிக்க படைப்பாளியாக, விடாமுயற்சியுடைய உழைப்பாளியாக, இலட்சியப்பற்றுமிக்க போராளியாக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் கே. டானியல். சாதாரண ஆசிரியர்களிடம்கூட முறையாகக் கல்வியினை முழுமையாகப் பெறமுடியாத கே. டானியல் இன்று பல்கலைக்கழக பேராசிரியர்களால் போற்றிப் புகழப்படுகின்றார் என்பதை நினைக்கும்போது மக்களுக்காக வாழ்பவர்கள் என்றும் மக்களால் மதிக்கப்படுவார்கள் எண்ற உண்மை புலனாகின்றது. எனது நினைவலைகளில் கே. டானியலின் நினைவுகள் என்றும் பசுமையானவை.
- 67zí5. 4. arzúyzovJfiumö
(முன்னாளர் பா. உ. ) (ஈழநாடு வாரமலர்- 20 - 4 - 1980 )
19

Page 14
மக்களை எஜமானர்களாகக் கருதி மக்கள் இலக்கியம் படைத்த டானியல்
தன் வாழ்நாளில் பெரும்பாலான பகுதியை 'பஞ்சமர்’ என அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து. அவர்களின் போராட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டு மக்கள் இலக்கியம் படைத்தவர் டானியல்.
பெரிய பெரிய கல்லுாரிகளில் படிப்பதற்கோ அல்லது பல்கலைக்கழகங்களில் புகுவதற்கோ டானியலுக்கு வாய்ப்பு வசதிகளிருக்கவில்லை. ஆனால் அவரது எழுத்துக்கள் அங்கெல்லரம் பேசப்பட்டன. விமர்சிக்கப்பட்டன.
மக்களிடம் தான் நான் கற்றேன், மக்களுடன் தான் நாண் வாழ்ந்தேன், எனது பேனாவும் அதே மக்களுக்காக, பஞ்சப்பட்ட மக்களுக்காகவே எழுதும் எனக் கூறி தன் இறுதிக்காலம்வரை ஓயாமல் எழுதிக்கொண்டேயிருந்தார்.
வடக்கில் புரையோடிப்போயிருக்கும் சாதிப் பிரச்சினைகள் பாரிய நெருக்கடியாக விசுவரூபமெடுத்த சமயங்களில் எல்லாம் களத்தில் நின்றவர்களுடன் தோளோடு தோளர் நின்று போராடியவர் டானியல்.
இவரது இலக்கியங்களைப் படித்த பேராசிரியர்கள் கூட அவற்றை ஆவணங்களாகப் பாதுகாக்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.
வெறுமனே எழுத்தாளர்கள் என்ற நாமத்துடன், எழுதாமல் சோம்பிக் கிடந்த பலருக்கு டானியல் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இரவுப் பொழுதில் நீண்டநேரம் கண்விழித்திருந்து எழுதிக் குவித்தமையை பொறுக்கமாட்டாமல் தானோ தெரியவில்லை, அவரது கண்களும் அவருக்கு எதிரிகளாயிருந்தன.
20

கண்பார்வை படிப்படியாக குறைந்துகொண்டு வந்தபோதிலும் எழுதுவதையும், படிப்பதையும் அவர் நிறுத்திவிடவில்லை. நோயின் உபாதையால் ஒய்வெடுத்த வேளையிலும் கூட அவர் எழுதிக்கொண்டு தானிருந்தார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்ப காலம் முதல் அக்கறையுடன் செயற்பட்டு வந்த டானியல், சர்வதேச அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் இலக்கியக் கோட்பாடுகளினாலேற்பட்ட முரண்பாடுகளினாலும் அந்த மூத்த அமைப்பிலிருந்து வெளியேறி தனிவழி செல்லாமல், மற்றுமொரு இலக்கிய இயக்கத்தை கட்டி வளர்த்தாரென்பதும் இலக்கிய உலகமறிந்த செய்தி.
எழுத்தாளர்களை உபசரிப்பதிலும், விருந்தோம்புவதிலும் டானியல் தனித்துவமாகவே திகழ்ந்தவரெனலாம்.
சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதுடன் நின்றுவிடாமல் தான் சார்ந்து நின்ற அரசியல் இயக்க ஏட்டில் அவ்வப்போது சாதிப் பிரச்சினைகள் தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதிவந்தார்.
மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்தபோது டானியலும் அதில் ஒரு பங்காளியாக நின்று செயற்பட்டார். பஞ்சமருக்காக குரலெழுப்பியதற்குப் பரிசாக அரசாங்க விருந்தாளியாக தடுப்புக்காவலில் அனுபவமும் அவருக்குண்டு.
ஒரு மனிதாபிமான முற்போக்கு எண்ணங்கொண்ட படைப்பாளியை ஈழத்து இலக்கிய உலகம் இன்று இழந்துவிட்டது.
- ரஸ்ஞானி ( வீரகேசரி - 30 - 3 - 1986 )
21

Page 15
ர் இலக்கியவாதியின் மளனம்
டானியல் மறைந்துவிட்டார். நம்பமுடியாத செய்தி. அவர் என் கண்களில் மோட்டார் சைக்கிளில் ஒடிக்ெெகாண்டே இருக்கின்றார். அவர் மோட்டார் சைக்கிளில் ஒருபக்கம் சரிந்திருந்தே ஒட்டுவார். ‘என்ன டானியல் உது இடப்பக்கம் சரிவோ' என்று ஒரு நாளர் அவரிடம் கேட்டேன். "இடப்பக்கம் சரிந்திருந்து ஓடுவதில் ஒரு சக்தி பிறக்கிறது' எனச் சிரித்துக் கொண்டே கூறினார். ஆம், அவர் வாழ்க்கையை இடது சாரியாகவே ஒட்டி முடித்தார். நானும் எனது நண்பன் அனவரதவிநாயகமூர்தியும் 'உதயம்' சஞ்சிகை நடாத்திய காலமது. அதில் நாம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றார் டானியல். உதயம் காலத்தில் ஆரம்பமான எமது நட்பு 'கரு' முகில்கள் மோதாத நிர்மலமான வானத்தின் கீழ் தொடர்ந்தது. சிரித்திரன் அச்சக யந்திரந்தில் பழுது ஏற்பட்டால் உடுக்கை இழந்தவன் கைபோல் அவரின் நட்பு உதவ முன்வரும்.
அவரின் சிறுகதைகள் ரமணியின் ஓவியங்கள் பின்னணியாய் இனிமை சேர்க்க சிரித்திரனை அணி செய்ததை வாசகர்கள் மறக்கவேமாட்டார்கள். மாதா மாதம் பதினைந்து சிரித்திரன் பிரதிகளுக்கு மேல் அவர் தனது இந்திய எழுத்தாள நண்பர்களுக்கு அனுப்புவதற்கு தவறுவதில்லை. எழுத்தாள நண்பர்கள் இலங்கை வந்தால் அவர்களை சிரித்திரன் காரியாலயம் அழைத்துவந்து அளவளாவிப் பேசிப் போவதில் ஆனந்தம் கண்டவர்.
மேடையில் மண்வாசனை இலக்கியம் படைக்க வேண்டுமென்று புழுதி பறக்கப் பேசுவார்கள் எமது இலக்கிய இருதயங்கள். டானியல் பேசவில்லை. செயல்பட்டார். மணிவாசனை மணங்கமள இலக்கியம் படைத்தார். இரு சாகித்திய பரிசுகளையும் தனது சாதனையால் சுவீகரித்துக் கொண்டார்.
22

புரட்சி எழுத்தாளர் டானியல் மேடையில் புன்னகைப் பூக்கள் உதிர்த்திப் பேசுவார். பேச்சு உதாரண தோரணங்களால் நிறைந்து குலுங்கும். அவரின் நா மென்மையானது. பேனா கூர்மையானது.
கலைஞனின் உள்ளம் படம் பிடிக்கும் பதிவு நாடாப்போன்றது. துல்லியமான உணர்வுகளும் அழுத்தத்தை ஏற்படுத்தும். சமூக உயர்வு தாழ்வுகள் அவரின் மனதைப் பாதித்தது. அந்தப் பகைப்புலனின் புகைப்பட ஓவியங்களே அவரின் இலக்கிய ஆக்கங்கள்.
வறுமை அவரை மேற்படிப்புப் படிகள் ஏறாமல் இழுத்துப்பிடித்தது. இருந்தும் எழுதுவேன் என்று வேகம் கொண்டார், எழுதினார். இறுதி மூச்சுவரை எழுதினார்.
இந்தக்கலை உள்ளம் தஞ்சாவூர் கலை மண்ணில் தலைவைத்து உறங்குவதற்கு அங்கு போனதோ தெரியவில்லை. தனது கடமையைச் செம்மையாகச் செய்த சாந்தியில் டானியல் துாங்குகிறார். செந்நிற ஆடையால் மூடித் துாங்குகிறார்.
- சுந்தர் (சிரித்தரணர் - சித்திரை 1986)
23

Page 16
டானியலின் பன்முகப் பணி ஆய்வு செய்யப்படவேண்டியது
காலஞ்சென்ற எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் இலக்கியப் பணிகள் பரந்து விரிந்த மிக ஆழமான ஆய்வுக்குரியவை. டானியல் அவர்களின் இலக்கியப் பணிகளி மாத்திரமன்றி சமூக- அரசியற் பணிகளும் ஆய்வு செய்யப்படவேண்டியவையாகும்.
இலக்கியம், சமூகம், அரசியல் என்ற மும்முனைப்பட்ட நிலையில் வைத்து டானியல் அவர்களை நோக்கும் பொழுது தான் டானியல் அவர்களின் ஸ்தானத்தை மிகச் சரியான கணிப்புக்கு உள்ளாக்கி அன்னாரின் உயர் நிலையை நிறுவுதல்கூடும். அத்தகைய நிறுவுதலுக்கான செயற்பாடுகள் டானியல் அவர்களின் மறைவின் பின்னர் இனிமேற்றாண் செய்யப்படல் வேண்டும். அத்தகைய செயற்பாடுகளுக்கான முனைப்புக்கள்- குறிப்பாக இல்க்கியப் பணிகள் பற்றிய ஆய்வுகளுக்கான இணைப்புக்கள் தற்போது மேற்கிளம்புவதனை அவதானிக்க முடிகிறது.
டானியல் அவர்கள் வர்க்க சிந்தனையுடன் தமது இலக்கியப் பணியினை இறுதிக்காலம்வரையில் மிகச் சிறப்பாகச் செய்துவந்த ஒருவர். தமிழர் சமுதாயத்தில் வர்க்க அடிப்படையில் அடிநிலை மக்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமை விலங்குகளை அறுத்தெறியும் நோக்குடன் இலக்கியங்களைப் படைத்துக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி. பஞ்சமர் நாவலைத் தொடர்ந்து இந்தப் பஞ்சப்பட்ட மக்களுக்காக எழுதுவதொன்றே தமது இலக்கியப் பணி என்ற சத்தியநோக்குடன் எழுதிக் கொண்டிருந்தார்.
LLLLLLLLLLLL SLLLLLLL0LLLLLLL S S LLLLLLLLLLLLLLLLLLL
- தெணியானர். (முரசொலி - 23 - 3 - 1989)
24

நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்
கே. டானியல்
டானியல், நோயினால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் மிகவும் உற்சாகமாக எழுதினார். சில நாவல்களை எழுதுவதற்காக ஆதாரங்கள் தேடி குக்கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்தார்.
நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கற்பனையில் வாழ்ந்து இலக்கியம் படைக்கவில்லை. அவரது பாத்திரங்கள் வட மாகாணத்தின் ஆத்மாவைப் பிரதிபலித்தவர்கள்.
டானியலின் பாத்திரப்படைப்புகளை அவதானித்தவர்கள்- எங்கே - டானியல் சட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கப் போகின்றாரோ என எண்ணியதுமுண்டு.
டானியலிடம் பல குறிப்பிடத் தகுந்த குணாதிசயங்கள் அமைந்திருந்தன. துணிவுடன் கருத்துக்களை சொல்லுவார். எதிர்விளைவுகளைப் பற்றி கவலைப்படமாட்டார். தனக்குச் சரியெனப்பட்டதை தயங்காமல் வெளியிடுவார்.
1981 ஆம் ஆண்டு யாழ். நூலகம் எரிக்கப்பட்டபொழுது தமிழ் உலகம் வெகுண்டெழுந்தது. டானியல் மிகவும் அமைதியாக தென்மராட்சியில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த மாணவர்களை வீதியில் மறித்து அவர்களின் புத்தகங்களைப் பறித்த உயர் சாதியினர் அவற்றை தீயிட்டுக் கொளுத்தியதை சுட்டிக்காட்டி, இரண்டு சம்பவங்களுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை’ எனறாா.
- லெ. முருகபூபதி ஈழநாடு பாரில் 25 10-16 tonga, 1993
LLLLLLLLLLLL SSLLLLLLLLLLLLLLLL SLLLLLLLLLLLLLLLLLLL

Page 17
நினைத்துப் பார்க்கிறேன்
வட மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக டானியல் ஒலித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் எல்லாக் கிராமங்களிலும் இவரது காலடிச் சுவடுகள் பதிந்திருக்கும். தானும் ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்தவன் என்பதை இவர் மறக்கவில்லை.
ஆரம்ப காலங்களில் இவர் பல தொழில்களைப் பார்த்துள்ளார். சலவைத் தொழிலாளி, கள்ளுக் கொட்டில், கடல் தொழில், கூலித் தொழில், கால்நடை வளர்ப்பு, திந்தை பூசுதல், குளிர்பான வியாபாரம், பழைய இரும்பு வியாபாரம், வெல்டிங் கடைச்சல் ஆகிய பல்வேறு தொழில்களைப் பார்த்துள்ளார். இதன் லமே இவர் பலவித அனுபவங்களை பள்ளி சல்லாமலே கற்றுள்ளார், மக்களில் ஒருவனாக வாழ்ந்து கற்ற அனுபவம் மக்கள் படைப்பாளியாக டானியலை மிளிர வைத்துள்ளது.
இவரால் எழுதப்பட்ட 'பஞ்சமர்’ நாவல் 1973-ம் ஆண்டின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. பஞ்சமர் நாவலின் முதல் பாகம் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்காகப் போராடிய குற்றத்திற்காக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது எழுதியது. அந்த நாவலை எழுதிய பொழுது, நாவலை முடிக்கும்வரை அக்கிராம மக்கள் குடிக்கொருவராக நாளர் வீதம் உணவளித்து ஒவ்வொரு நாளர் பாதுகாப்பையும் கிராமத்தவர்களே கூட்டமைத்து நேரம் வைத்து செய்த அந்தப் பணி தனக்காக அளிக்கப்பட்டதல்ல என்றும், தான் சார்ந்த கொள்கைக்காகவே அளிக்கப்பட்டது என்று ஒருமுறை அவர் என்னிடம் நெஞ்சைத்ெெதாடும் விதத்தில் கூறினார்.
26

'மனிதன் என்னே அற்புதமானவன்” என்று சொன்னான் மக்களைப் பற்றி எழுதிய மக்கள் படைப்பாளி மாக்ஸிம் கார்க்கி. அத்தகைய அற்புதமான மனிதன் தான் கே. டானியல் என்ற மக்கள் படைப்பாளி. வறுமையில் பிறந்து வளர்ந்து தன்னுடைய விடா முயற்சியினாலும் உழைப்பினாலும் உண்னத நிலைக்கு வந்திருக்கும் கே. டானியல் என்ற மானுடன் தான் தஞ்சாவூரில் காலமாகும் வரை சாமானிய மனிதனாகவே வாழ்ந்துள்ளார். இயக்கத்தையும் எழுத்தையும் தன் இரு கண்கள் போலவே நேசித்துள்ளார்.
"கிராமப்புறத்தை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பி அந்த மண்ணில் தன் காலடியை இறுக்கப் பதிக்க மனமற்ற எந்த ஒரு சிருஷ்டி கர்த்தாவும் மக்கள் பணி செய்ய முற்படுவது மிகவும் வேடிக்கையானது' என்று கே. டானியல் கூறும் கருத்துக்களைப் படைப்பாளிகள் மனதில் பதியவைப்பது அவசியமாகும்.
தன்னுடைய இலக்கிய சிருஷ்டிகளைப் போலவுே வாழ்க்கையிலும் இலக்கிய மனிதனாக வாழ்ந்து மறைந்த மக்கள் படைப்பாளியான கே. டானியலை இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் முன்மாதிரியாக் கொள்ள வேண்டும்.
- அந்தணி ஜூவா
கரனர் வாரமஞர்சரி ک196 -- 3 س- 909
27

Page 18
'கானல்’ பதிப்புரையில்.
இதுவரை காலமும் தமிழில் ‘தலித்’ இலக்கியமெனும் எமது தாழ்த்தப்பட்ட மக்களின் 'கருப்பிலக்கிய'த்திற்குக் கட்டியங் கூறி நிற்பவை டானியலின் புனைகதைகள தான். அதிலும் குறிப்பாக அவரது 'பஞ்சமர் வரிசை நாவல்கள்". இவை சாராம்சத்தில் கருப்பிலக்கியங்களாய் வேரூன்றி நின்றாலும் தம் பரிமாணங்களின் புடைப்பெயர்ச்சியினால் சிவப்பிலக்கியங்களாகவும் விசும்பளாவுகின்றன. இங்கே தான் இருக்கிறது எங்கட டானியலின் தனித்துவம்.
விமர்சனங்களை முகங்கோணாமல் ஏற்றுக் கொள்ளும்
க்குவம்- அவற்றின் நியாய உணர்வினை அங்கீகரித்திடும் அதே தருணத்தில் தன் பக்கமுள்ள தார்மீக நியாயங்களை விட்டுக்கொடுக்காமல் வலியுறுத்தும் அழுத்தந்திருத்தம்- மேதாவித்தனமாகத் தன்மீது வீசப்படும் தத்துவக் கொக்கிகளை எல்லாம் எங்கையோ நாம் சந்தித்த குக்கிராமத்துப் பாட்டனின் பாணியில் தனக்கேயுரிய குட்டிக் கதைகள் மூலம் அனாயாசமாய்த் தட்டி விட்டுவிடும் லாவகம்- இவை எல்லாம் அவரிடம் கதைக்கையில் எமக்கு அனுபவம் ஆனவை. அவரது நாவல்களில் மிகவும் நாசூக்காக அடக்கி வாசித்து அவர் பாலியலைக் கையாளும் கலை நுட்பத்தை 'ஆஹா அது கவிதை லார்’ என நயம் பாராட்டுவார் பசித்தமானுடம் கண்ட எங்கள் கரிச்சான் குஞ்சு.
ஏலவே அடிமைகள் பதிப்புரையில் நான் சுட்டிக் காட்டியதுபோல அண்று சுந்தரராமசாமி அவர்களாலும் இன்று எம். வி. வெங்கட்ராம் அவர்களாலும் கூட டானியலின் நாவல்களை மட்டும் அறிந்த அளவில் அவரை அரசியல்வாதியாக அடையாளங்காண முடியவில்லை என்பதுதான் தோழர் டானியலின் கலை மேதைக்குச் சரியான சான்றாதாரங்கள்.
28

இறுதி முத்தாய்ப்பாக அவரது எழுத்தில் நான் அவதானித்த இன்னோரம்சம் இதுதான். அவரது எழுத்துமுறை மீதான விமர்சனங்களுக்கெல்லாம் அவரது பாத்திரங்கள் மூலமாகவும் நாவற்போக்கின் ஊடாகவுமே கலாபூர்வமாகப் பதிலளிக்கும் அவரின் குரல் அவரது நாவல்களில் எனக்கு அருமையாகக் கேட்கிறது.
கண்ணுக்கும் நீரிழிவிற்கும் மருத்துவம் பார்க்கவும்இங்குள்ள இலக்கியவாதிகளையும் தோழர்களையும் சந்தித்து அளவளாவவும்- அச்சான ‘கானலைப் பார்க்கும் ஆசையிலுமாக அவர் எம்மிடையே நின்றார். ஏறத்தாழ இவர் எதிர்பார்த்து வந்த இவற்றை எம்மால் இயன்ற அளவு ஈடேற்றி வந்தோம். மதுரையிலும் சென்னையிலும் கண் மருத்துவமும் ஒருவாறு முடிந்தது. நீரிழிவும் கூட ஒரு கட்டுக்குள் நின்றது.
சென்னையிலும், புதுவையிலும், குடந்தையிலுமாக எங்களாலான அளவில் இலக்கியச் சந்திப்புகளை எமக்கிடையே சிறப்புற நடாத்தி முடித்தோம். அவருக்கும் மனநிறைவாயிருந்தது.
மீண்டும் ஒரு கண்ணில் அறுவை மருத்துவமும் செய்துகொண்டு தஞ்சையில் தங்க சாரதா மருத்துவ மனையில் தங்கிச் சிகிச்சை எடுத்துவந்தார். 'கானல்" அச்சாவதுதான் கானலாய் நீண்டு கொண்டிருந்தது அவர்க்கு. அந்தநிலையில் அவரைச் சந்தித்தேன். ஈழத்திற்கு திரும்புவது குறித்த பேச்சு வந்தபோது உடன் நின்ற இளங்கோவிடம் அவர் "இஞ்சேரடாப்பா, இஞ்ச நின்றே போயிருறன். அங்க போய் ஆமியின்ர துவக்கால சாகிறதிலும் பார்க்க இஞ்ச நின்றே போயிருறன். எனக்கான காரியத்தை இவையளர் வடிவாச் செய்வினம். நீ போவன்." என நகைத்தார்.
29

Page 19
அப்பொழுதுகூட, 'ஏதேது வம்பாப்போச்சு ப்ரகாஷ் பரவாயில்லை பஞ்சமரோடு விட்டார். மார்க்ஸ் விடேல்லை. அப்பரை முடிச்சே போட்டார் எண்டு எங்களுக்கல்லோ பழிவரும் என்றேன் நான்.
பகிடியாக்கிடக் கென்று நகைத்துக் கிடந்தோம் நாங்கள்.
இது தான் எமக்கிடையே இறுதிச் சந்திப்பு
அவரைக் கடைசியாய் ஒருமுறை கண்ணாரக் கண்டு விம்மி வெடித்து வெப்ராளம்திர- காலமெல்லாம் எந்த மக்களின் ஆட்சி அதிகாரத்திற்காக தன் பேனாவையும் ஆண்மாவையும் அர்ப்பணித்தாரோ அந்த பஞ்சம மக்களுக்கும் ரத்த வாரிசுகளான அவரது பிள்ளைகளுக்கும் அவரது பூத உடலை அனுப்பிவைக்க எம்மால் ஆகவில்லை. இறுதி ஊர்வலத்தினை வீடியோவாக எடுத்துவைத்துள்ளோம் ஈழத்திற்கனுப்ப. ஆனபோதிலும் எமது தோழமையின் சார்பிலும் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பிலும் அவரது பூதஉடலுக்குச் செங்கொடி போர்த்தி செவ்வணக்கம் செலுத்தினோம்.
மதநம்பிக்கையற்றவர்களைப் புதைக்கும் மயானத்தில்பட்டுக்கோட்டை அழகிரியின் சமாதிக்கு முன்பாகபுரட்சிகர இயக்கத் தோழர்களும் எழுத்தாளர்களும் புடைசூழ ஒரு புரட்சியாளனுக்குரிய சகல மரியாதைகளோடும் அவரை செவ்வணக்கம் செலுத்திச் செவ்வடக்கம் செய்தோம். ஆம்! எங்களில் அவர் அடக்கமானார்.
‘இன்றைய சூழலில் அவர் காரியம் ஈழத்தில் முடிந்திருந்தால்கூட, இத்தனை சரியாக இறுதி மரியாதை செலுத்தி இருக்க எங்களால் முடியுமா என்பதுகூடச் சந்தேகம் தான். அத்தனைச் சரியாக உங்கள் கடமையை நிறைவேற்றியிருக்கிறீர்கள்’ என்றார் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் தோழர் செ. கணேசலிங்கண்.
30

ஒரு தோழனுக்கு தோழனாக- மகனுக்கு மகனாகமருத்துவனுக்கு மருத்துவனாக தோழர் டானியலுடன் உடன் நின்று பராமரித்த கவிஞர் வி. ரி. இளங்கோவன் எமது தோழமைக் குடும்பத்தார்க்கும் தோழர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டிவிட்டு, குறிப்பாக எங்கள் அருமைச் சகோதரி ஜெயா மார்க்ஸ் அவர்களின் பணிவிடைகளைப் பணிக்கப்பனிக்க நினைவு கூர்ந்தார். இறுதி முத்தாய்ப்பாக, "எங்கட வீட்டுப் பெண்கள் கூட இந்த அளவுக்குச் செய்யேலாது. எங்கட அக்கா அந்த அளவுக்குச் செய்தார்கள், ராவெண்டும் பகலெண்டும் பாராமே" என ஒரு சிறு பிள்ளையாய் விம்மி வெடிக்கிறார். நாமும் தான்.
LLLLLLLLSLLLL S SLLLLLLLLLYS S LL000LLLLLLLLLLLL
SqSqH uSLSLS TuL SLSL SLL L SLL SLL S L S LS LLLLL LqLqSLLL LLLLL S LLLLL LLLL LLLuuuL S uL LSLuuSLuLT
தோழர் டானியல். இதைக் கேட்கும்பொழுதே கறுஞ் சிறுத்தைகளின் உரிமைக்குரல் செவிகளை எட்டத்துவங்கி விடுகிறது. தனது வாழ்க்கையை முழுவதும் பஞ்சமரின் விடுதலைக்காக இணைத்துக் கொண்ட அம் மாமனிதன் நம்மிடம் இருந்து மறைந்து போய்விட்டார். ஆனால் அவரது படைப்புகளோ தோழர் டானியலை நம்மிடம் வாழவைத்து விட்டது.
LLLLLLLL S SL0LLLLLLLL00 S S S LLLLL00L0LLLL
- விடியல் பதிப்பகம்
பஞ்சகோணங்கள்’ பதிப்புரை
ஆகஸ்ட் 1993

Page 20
பஞ்சப்பட்ட மக்களிண் குரல் தலித் இலக்கியத்திற்கு முன்னுதாரணமான நாவல்
தமிழ்ப் படைப்பிலக்கியத்திலேயே டானியலின் பங்களிப்பு முதன்மையாய் முழுமையாய் அர்ப்பணிப்புள்ளதாய் உள்ளது. இன்றைக்குப் பேசப்படும் தலித் இலக்கியத்துக்கு டானியலின்
பஞ்சமர்’ நாவலே அடியெடுத்து, முண் உதாரணமாக விளங்குகிறது.
யாழ்ப்பாணக் கிராமங்களில் சமூக அமைப்பு முறை இரண்டு தலைமுறை காலத்துக்கு முன்னர் எவ்வளவு குரூரமாக இருந்ததென்பதை டானியல் நிர்வாணமாகக் காட்டுகிறார். உயர்சாதி மக்களின் மேலாதிக்க மனோநிலையை சின்னச்சின்ன வார்த்தைகளிலும் நடத்தைகளிலும் பளிரென்று சித்திரமாக உணர்த்துகிறார். வகை மாதிரி பாத்திரங்கள் போல வருகிற அவர்கள் உண்மையானவர்களாக நமக்கு
அறிமுகமாகிறார்கள்.
டானியலின் மனிதர்கள், இலக்கண முறைப்படி வருபவர்கள் அல்ல. அவர்கள் சமுதாய நிலையில் அதன் களத்தில் குறையோடும் குற்றங்களோடும் இழைக்கப்பட்டவர்கள். பொய்யும் வர்ணனைகளுமற்ற எளிமையானவர்கள். அவர்கள் கை கால்கள் அழுக்கானவைதான். ஆனால் நடத்தை, மானிட அண்பையும் நேயத்தையும் வேராகக் கொண்டிருப்பவை.
படித்துக்கொண்டிருக்கிறபோதே தமிழ்நாட்டின் பஞ்சப்பட்ட மக்களின் குரல்களும் பஞ்சமரில் கேட்கவே செய்கின்றன.
- எஸ். சுந்தரமூர்த்தி (இந்தியா டுடே - மாசி 6-20, 1990)
32

என் பார்வையில்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி, அவர்களின் போராட்டங்கள் பற்றி எழுதுகிற எழுத்தாளர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். ஆனால், இரண்டிற்கும் ஒரு வேறுபாடு இருக்கின்றது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்களில் பெரும்பாலோர் அந்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட நடுத்தர வர்க்கத்தையும், மேல்தட்டு வர்க்கத்தையும் சேர்ந்தவர்கள். குறவஞ்சி பாடிய திரிகூடராசப்பக் கவிராயரிலிருந்து, நந்தனார் சரித்திரக் கிர்த்தனை பாடிய கோபாலகிருஸ்ணபாரதி, தாகம் நாவல் எழுதிய சின்னப்பபாரதி உட்படப் பெரும்பாலோர் இந்த நியதிக்குள் அடங்குவர். அந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே இருந்து தோன்றிய ஒரு சிலரும் மிகவிரைவில் அவர்களிடமிருந்து விலகி நகரங்கட்கு வந்து தாம் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போகிறார்கள். ஆனால் ஈழத்தில் அப்படியில்லை. பஞ்சமர் நாவலாசிரியர் டானியல் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களர் மத்தியில் தோன்றியவர். அவர்களோடு அவர்களுக்காக வாழ்பவர். அந்த மக்களுக்காகப் போராடுபவர்.
இந்நாவலில் நான் வியக்கும் விசேட அம்சம் இதன் இலக்கியச் சுவை, புத்தகத்தை எடுத்துப் பிடித்தால் படித்த முடிக்கும் வரை விறுவிறுப்பாகச் சுவை குன்றாமல் நகர்த்திச் செல்லப்பட்டிருக்கிறது. இதனால் தான், வழக்கமாக நமது படைப்புகளில் அழகியல் இல்லை என்று சொல்லுபவர்கள் கூட 'பஞ்சமர்" பற்றி அந்தக் குறையைச் சொல்ல தமிழகத்தில் முயற்சிக்கவில்லை. ஒருவேளை இனித் தொடங்கலாம்) அவர்கள் சொன்ன குறைகளெல்லாம் இது தான்மேல்தட்டு வர்க்கத்தின் ஊழல்களை பொட்டுக்கேடுகளை மட்டுமே படம் பிடித்துக் காட்டுகிறார் எண்பது. இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்கள் கூட மேல்தட்டு மக்களிடம் பிழைகள் இல்லை என்று சொல்லத் துணியவில்லை.
- பேராசிரியர் அ. மார்க்ஸ் (பஞ்சமர் வெளியீட்டுவிழா - செர்ைனை)
1962 33

Page 21
நான் இந்த வட்டார வழக்கில் எழுதப்படுகிற நாவல்களையே படிப்பதில்லை. நான் “கார்க்கி பத்திரிகை நடத்தும்போது திருநெல்வேலித் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களையும், இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களையும் பிரசுரிப்பதே இல்லையென்ற விரதமே வைத்துக் கொண்டிருந்தேன். அதேபோல அந்த மனநிலையோடேயே இப் பஞ்சமர்’ நாவலையும் வேண்டா வெறுப்பாகவே தான் ப்டிக்க ஆரம்பித்தேன். ஆனால், நாவலைப் படிக்கப் படிக்க நாவலின் சிறப்பை அறிந்து கொண்டேன். மிகவும் அழகாக இந்நாவல் செய்யப்பட்டிருக்கிறது. அழகியல் ரீதியாக மிகவும் சிறப்பான நாவல் இது. பொதுவாக மார்க்ஸிசக் கொள்கையின் வழியில் இலக்கியம் படைக்கிறோம் என்று சிலர் அப்படியே தமது கட்சிக் கோட்பாடுகளை நேரடியாகப் புகுத்திவிடுகின்றனர். டானியலின் நாவலில் இப்படி வெளிப்படையான பிரச்சாரங்கள் இல்லை. சம்பவங்களைச் சித்தரிப்பதன் வாயிலாகவே சொல்லப்பட வேண்டிய கோட்பாடுகள் சரியான முறையில் வலியுறுத்தப்படுகின்றன. இந்த நாவலைப் பிரசுரிப்பதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டுமென்று இந்த நாவலின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. பிரசுரிப்பதற்கென்ன, படிப்பதற்கே ரொம்பவும் துணிச்சல் வேண்டும்.
- கவிஞர் இளவேனில்
1982
சமீபத்தில் நான் படித்தவற்றுள் மிக அருமையான நாவல் இது. சிறந்த அழகியல் அம்சத்துடன் சம்பவங்களை யதார்த்தமாக இணைப்பதில் பஞ்சமர்’ நாவலாசிரியர் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
- பத்மா எம். ஏ. (ஆங்கில இலக்கிய ஆய்வாளர்)
1982
34

இத்தகைய உண்னதமான ஒரு நாவலை விமர்சிக்கும் தகுதி எனக்குக் கிடையாது. கணையாழி போன்ற பத்திரிகைகளும், ஜெயகாந்தன், ராமசாமி போன்ற எழுத்தாளர்களும் பார்ப்பனியத்திற்கு ஆதரவான கதைகளைப் படைத்துக் கொண்டிருக்கும்போது, சாதிக்கு, திண்டாமைக்கு எதிரான இத்தகைய நூல் வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது.
- வித்தியாவுதங்கர் (திரைப்பட உதவி இயக்குனர்)
1982
சாதிக் கொடுமைகளைச் சித்தரிக்கின்ற அருமையான நாவல் இது. சாதிகள் இங்கு முற்போக்காளர்கள் மத்தியில் கூட இரத்தத்துடன் கலந்திருப்பது வருத்தத்திற்குரிய விசயம். சாதிக் கொடுமைகளை வைத்து இலக்கியம் படைக்கிற கணேசலிங்கன், டானியல் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள். தமிழகத்தில் இத்தகைய (பஞ்சமர்) நாவல்கள் தோன்றவில்லையே என்று வருத்தப்பட்டார்கள். இத்தகைய நாவல் தோன்றுவதற்கு இங்கே வலுவான அரசியல் இயக்கங்கள் இல்லை. டானியலுக்கு இயக்கம் துணைசெய்திருக்கிறது. டானியலும் தமது பங்களிப்பை சிறப்பாகவே நிறைவு செய்துள்ளார்.
- கவிஞர் அரிபுத்திரன்
1982 இந்த அற்பு தமான நாவலின் ஒவ்வோர் அம்சமும் என்னைக் கவர்ந்தது. ஈழத்து நாவல்களுக்கு அடிக்குறிப்புப் போட்டால் தான் புரிந்துகொள்ள இயலும் என ஒரு அறிஞர் கேலி செய்ததாகக் கேள்விப்பட்டேன். அடிக்குறிப்போடு தருவதெல்லாம் இலக்கியத்திற்கு இழிவானது ஆகாது. காப்பியம் போலத்தான் புதினமும். சங்கப் பாடலுக்குக் கொடுக்கும் மரியாதையை ரகுநாதன், ஜெயகாந்தண், டானியல் போன்றோருக்கும் கொடுக்கிறோம்.
- டாக்டர் இளவரசு
1982 3S

Page 22
டானியலை எனக்கு 25 வருடங்களாகத் தெரியும். அவரது பல எழுத்துக்களை நான் படித்திருக்கிறேன். அவர் யாருக்காக, எதற்காக எழுதுகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அவர் வர்க்க அரசியலில் இறுக்கமுள்ளவர். நாவலில் இவர் தேர்ந்தெடுத்த கருப்பொருள் பஞ்சமருக்காக” மட்டுமல்ல. மற்றப் பல எழுத்துக்களிலும் அவர் இதைச் செப்பமாகச் சாற்றியிருக்கிறார்.
- தொ. சி. ரகுநாதனர்
பலாத்காரம் எண்பது ஒரு கொள்கையல்ல. சரியான ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்ல எடுக்கப்படும் வழிகளில் ஒன்றாக பலாத்காரமும் அமைந்துவிடுகிறது. இது தவிர்க்கப்பட முடியாததாகும். பஞ்சமர்’ நாவலில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருப்பதை ஆங்காங்கே அவதானிக்கலாம்.
- பாரதிப்பித்தனர் (பஞ்சமர் ണ്.டுவிழா- தஞ்சை)
198 டானியலின் நீண்டகால இலக்கியப் பார்வையின் ஊடாகப் பிறந்தது 'பஞ்சமர்’ நாவல். தமிழ்ச் சமூகத்தின் மிகப் பிற்போக்கான சம்பவங்களைத் துணிகரமான முறையில், நிதானத்துடன் இவர் வெளியே கொண்டு வந்துள்ளார். சமபந்தி போசனம் போன்ற செயற்பாடுகள் இன்று, நேற்றுத் தோன்றியவையல்ல. அதில் பங்கு கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆயினும், சாதிப் பிரச்சினை தீர்வ தற்குப் பதில் வளர்ந்தே வந்துள்ளது. அடிப்படையில் அது திரும் காலம் வரை இந்த அம்சம் கொண்ட இலக்கியங்கள் பிறப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது.
- ஆர். சிவகுருநாதனர்
'தினகரன் ஆசிரியர்'
பஞ்சமர்” வெளியீட்டுவிழா- கொழும்பு
36

டானியலின் எழுத்துக்கள் தமிழுக்குச் சொந்தமானவை
‘டானியலின் எழுத்துக்கள் தமிழுக்குச் சொந்தமானவை. அவரை தமக்கென்று எப்பகுதியினரும் உரிமை பாராட்ட முடியாது. அவர் எல்லோருக்கும் சொந்தமானவர்.'
- செங்கை ஆழியானர்.
'சங்க இலக்கியங்களைவிட டானியலின் நாவல்கள் சிறந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் டானியலின் படைப்புகளை மக்கள் வாசிக்கவே செய்வர். டானியலின் நாவல்களில் கையாளப்பட்ட சொற்பிரயோகங்கள் தரவுகள் பற்றி ஜப்பானிய நாட்டுப் பேராசிரியர்களே வியந்து பாராட்டுகின்றனர். இவரின் நாவல்களில் காணப்படும் சொற்பிரயோகங்களை டாக்டர் பட்டங்களுக்குப் படிக்கப் பல ஜப்பானியர்கள் முனைந்துள்ளனர். டானியலின் படைப்புகள் ஜப்பானையும், யாழ்ப்பாணத்தையும் நெருங்கிவர இணைக்கின்ற பாலமாக அமைந்துள்ளன. டானியலின் சொற்பதங்களையிட்டு ஆராயும் பணியை அவருக்குச் செய்கின்ற பெரும்பேறாக நான் கருதுகிறேன்."
- மனோன்மணி சண்முகதான்.
‘டானியல் அடிமட்ட மனிதன். யாழ்ப்பாணத் தமிழரின் பெருமையின் மறுபாதியைக் காட்டியவர். அவதானிப்புத் திறமையுடையவர். இம்மூன்றும் அவரின் சிறப்புக்களாகும். இதனால் தான் அவரின் படைப்புக்கள் தலைசிறந்தனவாக விளங்குகின்றன." - கலாநிதி சி. மெளனகுரு.
37

Page 23
நல்ல மனிதத்தின் நாமம் டானியல்
ஒப்பாரி ஒன்றெழுதி உரத்தபடி கத்துதற்கு
ப்போது என்றால் இயலாது.
சமரகவி,
சொல்லி, விழி நீரைச் சொட்டுதற்கும் முடியாது.
கல்வெட்டுக் காரக் கவிஞன் நானல்ல.
என்றாலும் உந்தன் இறப்பெண்னைக் கொல்கிறது.
இன்றல்ல. நேற்றல்ல.
இருபத்து வருடங்கள்
ஒன்றாக நின்ற உறவு அழுகிறது.
“LTayfusü'
நல்ல மனிதத்தின் நாமம்
உலகத்தை
வெல்லப் புறப்பட்டு வெண்சிறகு அசைத்திட்டுத்
துாரப்பறக்கத் துடித்த புறா ஒன்று
கார எழுத்தினர் கரங்கள்
யாருக்கும்
பாரவிலங்கினர் பளுவென்றால். ஒடிப்போய்
அந்த விலங்கை அகற்றத் துடித்தவொரு
பந்தத்தின் நள்மம்
“Torfuusi”.
பண்டிதரும்,
வித்துவான் பரம்பரையும்,
பேனாவைக்
கொண்டிருந்த காலத்தில் கொடிபிடித்த கலைஞனிவன்
சாதிக்கெதிரான சமர்க்களத்தில்
முன்னின்று
நீதிக்கே என்றும் நிழல் விரித்த ஆலமரம்.
நாடெல்லாம் சுற்றி நடந்த புயற்காற்று.
கூடுடைத்து நின்று கூவத் துடித்த குயில்.
திண்டாமை யென்ற சிறுமைக்கு எதிராகப்
பூண்டோடதை அறுக்கப் புறப்பட்ட போராளி.
38

டானியலின்.
தனிமனித வாழ்வில் தவறிருக்கும்.
ஓரிரண்டு ‘மினிப்பிழைகள் வந்து முகம்காட்டிச் சென்றிருக்கும். ஆகா புனிதனென்றோ, அவனல்லோ மனிதனென்றோ, தேவாரம் பாடும் தேவை எனக்கில்லை. எனக்கும் அவருக்கும் இடையினிலே முரண்பட்டு பிணக்குப் பிரிவென்று போய் முடிந்த நாட்களில், முன்னாளிற் போட்ட முடிச்சவிழ்ந்து போகாமல், அன்போடு எண்ணை அரவணைத்த கைகளது. வையத்தை ரட்சிக்க வந்த பிதா என்பது போல். பொய்யுரைத்துச் சும்மா புலம்புவதில் லாபமில்லை. வானமரன் என்று
வார்த்தைகளால் கோலமிட்டுப் போனவரைப் பற்றிப் புளுகுவதில் லாபமில்லை. என்றாலும், டானியலின் எழுத்தெல்லாம் பேர் சொல்லும் இன்றல்ல.
இன்னும் இருநூறு ஆண்டுகளின் பின்னாலும் நின்று பேசும், பேர் சொல்லும் பஞ்சமரை நாங்கள் படிக்கும் வரை
நெஞ்சமதில் உந்தன் நினைவு படிந்திருக்கும். தஞ்சையிலே. மணிணில்
சங்கமித்த டானியலே! உன்னோடு முன்னர் உலவிவந்த நாட்களெல்லாம் என்னுடைய நெஞ்சில் இறப்பு வரை வாழ்ந்திருக்கும் அந்த நினைவுகளை அடிக்கடி நான் மீட்டெடுத்துச்
சந்திப்பேன்.
உன்னைச் சாவு பறித்திடுமா?
சென்று வருக!
திரும்பி வரா விட்டாலும்
நன்றியென்ற ஓர் உணர்வை
நான் சுமந்து நிற்கின்றேன். - புதுவை இரத்தினதுரை
39 ( ஈழநாடு வாரமலர் )
ک196 سے 4 سے ک06

Page 24
ஒரு ஜீவசமாதியின் செஞ்சோதி
( தோழர் டானியல் நினைவாக )
அம்மாலயம் ஒழுங்கையில் 6L
மாக்ஸ் வீட்டு மேஜை மேலாலை அபூர்ணமாக் கிடக்கு ஆவியிற் 'சாநிழல்' படித்த அந்திம நாளிலும் பிறந்த ஒங்கட
அந்தக் குறுநாவல்
‘எங்கையோ பொறந்து எப்படியோ வளர்ந்து இப்படியா ஆச்சு கடைய்சியில தாத்தா கதை?
சிலோன் தாத்தாவோடும் 01 பிலிப்பைன்சு மாமனொடும் 02 ಖ್ವY* கதைச்சதிலை ாட்டுவிட்ட பிரியத்தில் எண்பிஞ்சுமகள் அனுக்குட்டி இப்படித்தான் எனைக்கேட்டாளர்!
"வருத்தக்கார மனுஷனைப் போட்டு எண்னத்துக்கு அலைச்சனிங்கள் வடிவா ரெஸ்ட்டோட வாழவைக்க மாட்டாமே
எனக்கேட்டோர் ஆதங்கம் எனக்குப் புரிந்தாலும் உனைப் புரியாக் கேள்வியிது!
01 டானியல் 02 வி. ரி. இளங்கோவன்
40

இதில் எனக்கில்லை லவலேசம் உள்ளூர மனக்கிலேசம் ஏனெனிலோ நானறிவேன்.
இலக்கியம் உனக்கு சுபாவம் இயக்கந்தான் உன் சுவாசம் தோழமை உனக்கு ரத்தபந்தம் வாழ்க்கையே உனக்கு யுத்தகளம்!
பஞ்சமரில் தொடங்கிய நம் பாசத்தின் பயணத்தில். யாழின்ரை தமிழில் நாம் கதைச்சோம் எம்.தஞ்சை மண்ணில் உமைப் புதைச்சோம்!
எம்மோடும் எம்மணர்னோடும் இரண்டறக் கலந்ததும் ஜீவசமாதியின் செஞ்சோதி!
வித்துவச் செருக்குடன் விமர்சனக் கூற்றுவர் தமதுபாசக் கயிறுகளுடன் உனைநேர் காணவந்தபோது. எம்புதுமைப்பித்தனின் பொக்கைவாய்க் கிழவிபோல் V6UTTTLLTéFLADTLL அவர்களை நீ எதிர்கொண்டாய்.
a -6.UT5. பாமரத்தனமான பதில்களின் கதைப்பில் இணர்டலெக்சுவல் ஈகோக்களை எள்ளி நகையாடிப் போனாய்!
உனது எழுத்துக்களின் பரிமாணத்தில் அழுத்தந் திருத்தமாய் விழுத்தி மல்லாத்தினாய்!
41

Page 25
ஈழத்தின் பெறுமதியில் உன் சமாந்தரச் சமூக வாழ்க்கை அபூர்வமான ஆவணங்களாகவும் கலாபூர்வமான கருவூலங்களாகவும் காத்திரமாய் நின்றொளிரக்
காலகாலமும் ரசவாதம் புரிந்தாய்
‘தலித்’களிள் இடிமுழக்கமாய்த் தமிழ்ப் புனைகதை தகத்தகாயமான துன்னாலேதான்!
இழிசனர் வழக்கென முகஞ்சுளித்த இலக்கியச் சனாதனிகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கும் எதிரதாக உமது பஞ்சமர்” களுக்கூடாக எமது தோளர்களும் இதோ வியூகங்கள் வகுக்கிறது!
உலகளாவிய தோழமை அவாவி
உயர்த்திப் பிடித்த செம்பதாகை எம்தோளர்களின் விசையில் எழுகிறது!
மானுடநேயம் மலர்ந்திட மலர்ந்திட
மலர்த்திய துாய செம்பிரகாசம் எம் நம்பிக்கை ஒளியாய்ச் சுடர்கிறது!
போராளியே உணர் எழுத்தின் உக்கிரம்
துார துாரமும்
கரங்களில் உயரும் துவக்குகளாய்த்தான் தொடர்கிறது!
- துர்யமுகி
பங்குனி 1983
42

தோழர் டானியல்
மக்களிடம் படித்து புடமிட்டு மக்களிடம் கொடுப்பதுவே உன் வழி,
ஒடுக்கப்பட்ட மக்களின் நுகத்தடிகளை உடைத்தெறிவேன் எண்பது உன் கர்ஜனை,
பேசித்தீர்க்கும் காலம் போய்விட்டது போராடித் திர்ப்போம் என்பது உன் அறைகூவல்,
குடிசைகளைச் சுற்றியுள்ள முட்களை வெட்டத் துணிந்தவன் நி,
சிறைக் கம்பிகளுக்குள்ளும் உன் சுவாசம்
மக்களும் இலக்கியமுமே,
உன் மூச்சுக் கனல் எத்தனை கோவில்களைத் தேநீர்க் கடைகளைத் திறக்க வைத்தது,
திண்டாமைப் பாறையைத் தகர்த்த வெடிகளில் நீ வைத்த கெந்தக்ம் எவ்வளவோ,
43

Page 26
எத்தனை நாடுகளில் உன் படைப்புகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன,
இழிசனர் வழக்கென உண் எழுத்தைக் w கேலி செய்தனர் சிலர், கேலிசெய்தவர் கேள்வியாகிவிட்டார். உன் இலக்கியம் வரலாறாகிவிட்டது!
- 196 O மாமனிதன் டானியல்
நான்கு முழத்தில் கட்டும்வேட்டி நன்கு மடித்த பருத்திச்சட்டை காலில் வலு குறைந்தாலும் கவனித்து ஊன்றும் பாதம்,
மூக்கில் தொங்கும் கண்ணாடி முகமலர நோக்கும் மெண்விழி தாக்க முடியாத உரநெஞ்சு தைரியம் தான் உயிர்மூச்சு,
தோழமை தான் வாழ்வு துயரங்கள் கடந்த பாத்ை ஆழமான சமூகப் பார்வை அற்புத மாகுமாம் படைப்புகள்,
இருண்ட பகுதிக்கு வெளிச்சம் எதிர்நீச்சல் சிறைவாசம் கூட மருண்ட தில்லை நாளும் மாமனிதன் தான் டானியல்!
- afi, fi, gemiâlasmavavi
1986
A4

தாரகையாய் வாழ்ந்தாயே தாரணியில் டானியலே!
கொள்கைக் கொலுவிருந்து கூர்மை தனைவளர்த்து உள்ளக் கருத்துகளை ஒதும் எழுத்துகளால் அள்ளி வழங்கியநல் அன்பார்ந்த டானியலே தெள்ளு தமிழ் மொழியாளர் செந்தார கைமணியே
செந்தார கைமணியாய்ச் செல்வாக்குப் பெற்றுயர்ந்த நந்தா மணிவிளக்கே நாடறிந்த டானியலே செந்தேன் மொழியெடுத்துச் சீரார்ந்த சித்திரங்கள் தந்தாயே இந்தத் தலத்தினுக்குச் சாந்தி செய்ய
சாந்திநிறை வாழ்வு சமதர்மச் சக்தியென்றே ஏந்தி வழிநடந்தாய் எத்தனையோ போர்தொடுத்தாய் மாந்தருக்குள் சாதிபேதம் மாகொடிய நோயென்றே திந்தமிழிற் செப்பிச் சிறுகதைகள் செய்தாயே!
செய்தாய் சிறுகதைகள் சீர்நாவல் கட்டுரைகள் மெய்யாய் மிளிர்வதனை மேலும் விளங்கவைத்தாய் பொய்தேர் புரட்சிகளைப் புண்மைகளை போக்கும் நிறை கையால் எழுதிவைத்தாய் காரியமார் டானியலே!
காரியத்திற் கேற்றபல காரணங்க ளைவிளக்கும் தாரகையாய் வாழ்ந்தாயே தாரணியில் டானியலே பெரிகையே பேணிபுரட்சிப் பேச்சாளும் பெற்றியனே திரமுயர் செம்மணியே தேவனடி சேர்ந்திரோ!
- கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரை (ஈழதாடு - 39 - 3 - 1986)
A5

Page 27
காத்திராததேண் டானியல்
‘டானியல் கதைகள்’ என்றால் பஞ்சமர்’ ‘உலகங்கள் வெல்லப்படுகின்றன’! ஏனிந்த உறக்கமோ தஞ்சை மண்ணில் போராளிகள் காத்திருக்கின்றனர்!
"இலங்கையி லிருந்து இலக்கியக் குரல்" இயங்கிடச் செய்த தனில், துலங்கிடக் கோவிந்தன்' போன்ற வற்கு துணைநின்று தோளர் கொடுத்தாய்!
நாவலுக்கும் உனக்கும் நெடுந்துார மென்றுரைத்த நாவடக்கி நவீனம் செய்து, ஆவலுடன் நாம்படிக்க ஆக்கித் தந்திட்டு ஆகினையே "நெடுந்துாரம் டானியல்
பூமரங்கள்’ ஆயிர மாயிர மிங்கே பூப்பினும் இவர்க்கு 'அடிமைகள் தாமடையும் 'கானல்’ நிலைமை கண்டு 'தண்ணிர் வார்த்த குடிமகன்!
இலக்கியக் கொள்கையா 'பஞ்ச கோணங்கள் இருப்பதை வெறுத்த தலைவன், கலக்கிய குட்டையாய் இலக்கியம் படைப்பதை கண்டித்து வெகுண்டெழுந்தவண்
மையக்குறி இழந்து விட்ட சலனமாய் 'முருங்கையிலைக் கஞ்சி குடித்தோம்! பையப்பைய நகரும் வாழ்வுக் காலம் 'சொக்கட்டான்' என வென்றதோ?
A6

மக்கள் இலக்கியம்’ படைத்து மண்ணை மணக்க வைத்த தகலுமோ? உக்கிப் போகச் சாதித் தியை உழைத்த நாட்கள் மறக்குமோ?
சங்கானை, மாவை, நிச்சாமம் தோன்றி சங்காரம் செய்த அணி, பங்காளன் மட்டெண் றில்லா ஆயுதப் பாங்கான தேயுனது பணி!
இலக்கியத் தெழுச்சி ஊட்ட வந்தும் இதயம் நிரம்ப வில்லை, களத்தில் குதித்த லொன்றே நியாயம் கண்டதில் பங்கு கொண்டாய்!
திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தீமூட்டி ஒளி பகர்வதெதை? துாண்டா மணிவிளக் கென்ன விளங்கி துாண்டிட இல்லை டானியல்
மக்கள் கலை இலக்கியப் பெருமன்றம் மகிமையுறு அமைப்பி ழந்தது! மக்களிடம் கற்றதை மக்களிடம் தருகின்ற மனதுமோ காற்றாய் ஆனது
L0L0LLLLLLLLL S SSS S LLLLLLLL S 0LLLLLLLLL0LL00L0LLLL
- தேவி பரமவிங்கம் ( தினகரனர் - 19 - 4 - 1986)
47

Page 28
பஞ்சமர் தந்தோன்
தஞ்சையிலே நீத்தார்
சிங்கமாய் ஊர்வலங்கள் சிவப்புக்கொடி காட்டியே சிறையதையும் சென்றதையும் நானறிவேன்! சிந்தையிலே பெரியோர்கள் சிறியோரெனப் பாராய் நீ! சிரித்ததுவாய் வரவேற்கும் பண்பும் கண்டேன்!
சங்குகளாய் பாட்டிசைக்கும் கடலோர மீனவர்க்காய் சரித்திரமும் படைத்ததையும் தெரிவேன் நான் சரியென்று தெரிந்தாயே சமரதுதான் செய்யவஞ்சா சாவரைக்கும் பயங்கொள்ளா துணிந்த நெஞ்சா
வஞ்சகமே மனத்திலில்லை வார்த்தைகளில் அர்த்தமுணர்டு வழங்குரைகள் பல்கலைக்கழ கம்ஈறாய்! வகுத்தபெரு மன்றமும்தான் வளர்வதற்கு உரமிடுவோம் வானுலகம் சென்றாலும் மறக்க மாட்டோம்!
தஞ்சாவூர் தன்னிலே தங்கியிருந்த நேரத்திலே தர்மிஷ்ட நாட்டினது நிலைகேட்டாய் தகுதியாய் உன்னுடலை தக்கநண்பர் புதைத்தார்கள் தலைவாநி செத்தாலும் தயங்க மாட்டோம்! கண்மீதில் உறக்க மின்றி கட்சியதன் வேலை பார்த்திர்! மண்மீதிலே “மாவோ' தந்த மதிவுரைகள் எமக்குச் சொன்னிர்! வெண்ணிறத்தில் உமது ஆடை வெகுகாலம் கண்டேன் அண்ணா!
எண்ணியெண்ணி ஏக்கம் கொண்டேன் எப்படித்தான் மறப்பேன் அண்ணா! தாழ்குலத்தோர் மட்டு மல்ல தமிழருக்காய் எழுதி வைத்தீர்!
- பாஷையூர் தேவதாசனர் (தனகரனர் - 23 - 4 - 1986)
48

அமரர் டானியலுக்கு.
தன்னம்பிக்கை யெல்லாம் மக்கள் மீது வைத்தவனே, மக்களிடம் கற்று மக்களுக்குக் கொடுத்தவனே,
நீ 7 போலிகளைப் பின் பற்றாதவன்பொய்யானவற்றை உரித்துக் காட்டியவன் தனக் கென்று வாழாது பொது வாழ்வில் சகல புகழ் கிர்த்திகளையும் தனதாக்கிக் கொண்டவன். நீ மகா பேறு பெற்றோன்.
பேரையும், புகழையும் நீ தேடவில்லைஉன் செயலோட்டம் அவைகள் உண்னை ஆரத்தழுவியனஉன்னை முடிவுற அறியமுடியாதோர் இன்றுமுளர் நுனிப்புல் மேய்தல் முடிவுறவில்லைஆழ்ந்து போன ஆற்றலினால் , நாணயத்தின் இரு பக்கங்களின் செம்மை கணர்டோம் சங்ககாலம் ஒரு பக்கம் சமகாலம் உன் ஆக்கம் ஆனது.
- 6. mavi , ølur sviptrarfr (தினகரனர். 4ே - சி - 1986)
49

Page 29
எழுத்தாளர் டானியலுக்கு தஞ்சை அளித்த சிறப்பு
புகழ்பெற்ற நாவலாசிரியரும், அடக்கி ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடிவுக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயல்பட்டவருமான டானியல் தமக்கேற்பட்ட உடல்நோயை மாற்றிக் கொள்வதற்காகத் தமிழகம் சென்று அங்கு வைத்தியம் செய்தார் எனினும் அவர் அமரராகிவிட்டார். அவரின் இறுதிநாட்கள் பற்றித் தோழமை’ நுால் வெளியீட்டு நிறுவனம் டானியல் நண்பர்களுக்கு அனுப்பிய கடிதம் இங்கு பிரசுரமாகிறது.
தோழமை சார்பில் திரு. மார்க்ஸ்
எழுதிய கடிதம் இது.
திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க அடைப்பாளரும் மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவரும் புகழ்பெற்ற நாவலாசிரியருமான தோழர் கே. டானியல் அவர்களின் மரணச் செய்தியை அறிந்திருப்பீர்கள்.
காலம் எல்லாம் அவர் எந்த மக்கள் மத்தியில் நின்று எந்த மக்களுக்காகப் போராடினாரோ அந்த மக்களுக்கும், அவரது இதர தோழர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தச் செய்தியைத் தாங்கள் அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
50

அச்சாகிக் கொண்டிருந்த அவரது 'கானல்’ நாவல் வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பத் திட்டமிட்டிருந்த தோழர் இடைக்காலத்தில் வலது கண்ணிலுள்ள "காட்ராக்ட்டை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவதற்காக மீண்டும் மார்ச் 19-ந் திகதி அண்று தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த நாள் டாக்டர் ராமையாவால் அவருக்குக் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் உடல் நலமாகவே இருந்தது. தோழர் இளங்கோவனும் இதர தஞ்சைத் தோழர்களும் அவர் அருகிலேயே இருந்து அவரை மிகக் கவனமாகக் கவனித்துக் கொண்டார்கள்.
மார்ச் 23-ந் தேதி காலை எட்டு மணிக்கு தோழர் டானியலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகில் தோழர் இளங்கோவன் இருந்தார். தங்கசாரதா மருத்துவ மனையிலிருந்த டாக்டர்கள் அனைவரும்
வந்து அனைத்துச் சாத்தியமான சிகிச்சைகளும் சய்தனர். எனினும் காலை 8-40 க்கு அவரது உயிர் பிரிந்தது.
நீரிழிவு நோய் மற்றும் அதன் விளைவுகளான கண்நோய், "கிட்னி பாதிப்பு முதலியவற்றிற்கான சிகிச்சைக்காக சென்ற ஜனவரி 30-ந் நாளர் அவர் இங்கு வந்தார். அவருடன் தோழர் வி. ரி. இளங்கோவனும் வந்திருந்தார்.
தஞ்சையிலுள்ள தங்கசாரதா மருத்துவமனையில் புகழ்பெற்ற நீரிழிவு மருத்துவரான டாக்டர் தனபாலன் அவர்களால் நீரிழிவு நோய் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பிண்பு மதுரையில் உள்ள
அரவிந்தா கண் மருத்துவமனையிலும் செண்ணையிலுள்ள ‘சங்கர் நேத்திராலயா” கணி மருத்துவமனையிலும் தோழரின் கண்நோய்க்கு லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
51

Page 30
உடல்நலம் முன்னேறிய நிலையில் சென்னையிலும், பாண்டிச்சேரியிலும், குடந்தையிலும் தோழர் டானியல் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு தனது இலக்கியப் பார்வைகளையும் அனுபவங்களையும் விளக்கிப் பேசினார்.
தமிழகத்தில் அவர் இருந்த மட்டும் இங்குள்ள தோழர்களாலும், இளங்கோவனாலும் அவர் மிகக் கவனமாகக் கவனித்துக் கொள்ளப்பட்டார். தமிழகத்தில் சாத்தியமான மிகச் சிறந்த வைத்திய வசதிகள் அவருக்கு வழங்கப்பட்டன.
நீரிழிவு நோயின் உச்சத்தால் கிட்னி, இருதயம் முதலியவை பாதிக்கப்பட்டிருந்ததின் விளைவாகவே இப்படி நிகழ்ந்து போயிற்று என டாக்டர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
டானியல் அவர்களின் உடல் தஞ்சை வடக்கு வீதியிலுள்ள தோழர் மார்க்ஸ் அவர்களின் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், சென்னையிலும் மற்றும் இதர தமிழ் மாவட்டங்களிலுமிருந்த அவரது அனைத்து உறவினர்களுக்கும், தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் செய்திகள் தெரிவிக்கப்பட்டன.
தமிழகத்தின் மிகமுக்கியமான செய்தி நாளிதழ்களாகிய 'இந்து' 'இந்தியண் எக்ஸ்பிரஸ்" 'தினமணி' உட்படப் பல இதழ்கள் செய்தி வெளியிட்டன. அகில இந்திய வானொலியிலும் சென்னைச் செய்தியிலும் செய்தி அறிவிக்கப்பட்டது.
மார்ச் 23-ந் திகதி காலை 9 மணிமுதல் அவரது உடலுக்கு தோழர்கள் நண்பர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணமிருந்தனர்.
52

புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தஞ்சைக்கிளையின் சார்பாகவும் "தோழமை வெளியீட்டு நிறுவனத்தின் சார்பாகவும் தோழரின் உடலுக்கு செங்கொடி போர்த்தி அஞ்சலிகள் தெரிவிக்கப்பட்டன.
டானியலின் உடலை எவ்வித மதச் சடங்குகளுமின்றி நல்லடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
வடவாற்றங்கரையிலுள்ள ராஜாகோரி மயானத்தில் கடவுள் நம்பிக்கையற்ற தோழர்கள் உடல் புதைக்கப்படும் இடத்தில் பட்டுக்கோட்டை அழகிரியின் சமாதிக்கு எதிரில் மாலை 5-30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலிக் கூட்டத்திற்குத் தோழர் வே. மு. பொதியவெற்பண் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஒரு புரட்சியாளருக்கான அனைத்து மரியாதைகளுடனும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்படும். அவரது படைப்புகள் அனைத்தும் வெளியிடப்படும். விரைவில் அவரது படத்திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொடர்ந்து எழுத்தாளர்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும் அஞ்சலிச் செய்திகள் வந்தவண்ணமுள்ளன. இறுதி நிகழ்ச்சிகள் வீடியோ எடுக்கப்பட்டு அவரது உறவினர்க்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளது.
- ஈழநாடு வாரமலர் 207 els 4 - 196
53

Page 31
K. Daniel
With the death of K. Daniel, the literary movement of this country has suffered a great loss. I have lost a good comrad and a dear friend. - -
From his young days, Daniel played an active part in the activities of the Jaffna branch of the Ceylon Communist Party. But his greatest contribution was as one of the leaders of the mass movement for the eradication of caste' and untouchability during the second half of the nineteen sixties. -
It was the movement that rocked the caste-ridden Jaffna society and succeeded in removing some of the disabilites suffered by the so-called depressed castes, including the ban on temple entry to Harijans.
A well-known and respected Tamil novelist, his novels skilfully exposed the rottenness of the feudal caste system, that is still prevalent in the North. He won the Sri Lanka Sahitya Mandalaya prize for his novel “Panchamar”. which exposed cast slavery. His fame as a novelist was not confined to Sri Lanka. He was well known in Tamil Nadu where he had many admirers - many of whom were present at his funeral at Tanjore.
Daniel was a firm supporter of the Communist Party to the last. I derive some comfort from the fact that he stayed with me in Colombo just prior to his departure for medical treatment to Tamil Nadu where, unfortunately, he died and now lies buried.
I pay my last respects to a courageous fighter and a loyal comrade.
N. sanmugathasan
"Daily News'
March 1986
54
 

கே.
55

Page 32
யாழ். (மார்கழி 1979 பெருமன்ற"க் கருத்தரங்கில் டானியல்
தலைமையுரையாற்றுகிறார். அருகில் மன்றப் பொதுச்
ஆனைப்பந்தி கலைக் கல்லுாரியில்
) நடைபெற்ற மக்கள் கலை இலக்கியப்
செயலாளர் வி. ரி. இளங்கோவன் காணப்படுகிறார்.
56
 

(ரென்னை சி. எல். எஸ்." நண்பர் வட்டத்தினர் 1984 ஜனவரி 17, 18ம் திகதிகளில் நடாத்திய எழுத்தாளா u Ity, Sri கருத்தர்ங்கில், 'பஞ்சமர் நாவல் (முதலாம் பாகம்) தனியொரு அமர்வில் விமர்சனத்துக்கு எடுத்துக்கெட் பட்டபோது, இந் த அமர்விற்குத் 亚 3ல  ைம தா 而, பேராசிரியர் கா - சிவத்தம்பி, விமர்சன تا 6 - (ت( { iآل ، வியல் mit ihri Gí. I ff. இளங்கோவன் ஆகியோருடன் டானாயல காணப்படுகின்ருர்,

Page 33
சென்னை 'சி. எல். எஸ்." நண்பர் வட்டத்தினர் 1981 தை 18-ம் திகதி நடத்திய எழுத்தாளர், வாசகர் கருத்தரங்கில் "பஞ்சமர்’ நாவல் (முதலாம் பாகம்) குறித்து வி. ரி. இளங்கோவன் உரையாற்றுகிறார்.
58
 

சென்னை கருத்தரங்கில் (1981) கலந்துகொண்ட எழுத்தாளர்களில் ஒரு பகுதியினர். முன்வரிசையில் வல்லிக்கண்ணன், சிவத்தம்பி, சி. சு. செல்லப்பா ஆகியோரும், இரண்டாவது வரிசையில் டொமினிக் ஜீவா, வி. ரி. இளங்கோவன், கே. டானியல், பசு. கெளதமன் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
59

Page 34
i
|
&
 
 

§§#:
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் (1979) நடைபெற்ற திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டு மேடையில் முன்னணித் தலைவர்கள் கே. டானியல், எஸ். கிருஸ்ணபிள்ளை, எஸ். ரி. எண். நாகரத்தினம் ஆகியோர் அமர்ந்துள்ளனர். வி. ரி. இளங்கோவன் உரையாற்றுகிறார்.
6

Page 35
தஞ்சாவூரில் (1982) நடைபெற்ற 'பஞ்சமர்" (இருபாகங் களும் அடங்கியது) நாவல் வெளியிட்டுவிழாவில் கலாநிதி து. மூர்த்தி, பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர் உரை யாற்றுவதையும், விழாவிற்குத் தலைமைதாங்கிய பேராசிரியர் பாரதிப்பித்தன்,பேராசிரிய்ை திருமதி டோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் டானியல் :ேடையில் இருப்பதையும் படத் *j,. JR' «h, i ) b ö öi 8, .
62
 

ள்நசை வடக்கு விதி:பிலுள்ள G3t. U argħi futuri LρΓτή ή σή) (2-4 3.86) அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள டானியலின் உடலுக்கு, "தோழமை" வெளியீட்டு நிறுவ்னப் பதிப்பாசிரி பர் கவிஞர் வே. மு. பொதிய்வெற்பன், பழம்பெரும் எ(புத்
th o Ꮷ" . . . ........ ے“:قهِ.fm "فلم __ - காளர்கள் எம்.வி. வேங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, ஆகியோ
In -
Ꭵ ᏣᏡll Ꮣ1 ] sᏓᎳ Ꮆb1 LDᎶ05 ᏞᏝ ᏧᎦᎶᎼᎢ Ꮷ (& bᏠ # Ꮷ68Ꭲ ,
நாவலாசிரியர் செ கணேசலிங்கன், வி. ரி. இளங்கோவன்
ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத் துகின்றனர்.

Page 36
tygowyzw"
‰io :`:
Wi፻፭' ... , CA , ,
;;;;;;;;ہ:ابلاغیات
:::
MWK
டானியல் காலமாகிய பின், நல்லுார் யாழ். மாநகரசபை மண்டபத்தில் (கார்த்திகை 1986) நடைபெற்ற டானியலின் 'எண்கதை’ நூால் வெளியீட்டுவிழாவில் வி. ரி. உரையாற்றுகிறார். விழாவுக்குத் தலைமைவகித்த பேராசிரியர் சண்முகதாஸ், சொக்கன் ஆகியோர் மேடையில் காணப்படுகின்றனர்.
64
 
 
 
 

Mწ.
整
逃
திருகோணமலையில் தாகம் கலை இலக்கிய வட்டத்தினர் நடத்திய டானியல் நினைவஞ்சலிக் கூட்டத்தில் வி. ரி. உரையாற்றுகிறார். கூட்டத்திற்குத் தலைமைவகித்த எழுத்தாளர் வ. அ. இராசரத்தினம், எழுத்தாளர் அருள் சுப்பிரமணியம் ஆகியோர் மேடையில் காணப்படுகின்றனர்.
65

Page 37
66
 

S- "。ー
&ነw, リ
67

Page 38
68
 

69

Page 39
சி. டி. சி. வெளியீடுகள்
1.
பரிசு
சிறுவர் மஞ்சரி ஆசிரியர்: பத்மா இளங்கோவன்
சங்கப்பலகை
கவி மஞ்சரி ஆசிரியர்: மாகவி விரவாகள் பாப்பா பாடல்கள் ஆக்கம்: பத்மா இளங்கோவன் கரும்பனைகள் வி. ரி. இளங்கோவன் கவிதைகள்
ஒலித் தட்டு (சி. டி.)
சிகரம்
வி. ரி. இளங்கோவண் கவிதைகள்
கரும்பனைகள்
வி. ரி. இளங்கோவன் கவிதைகள்
எண்கதை
கே. டானியல் இது ஒரு வாக்குமூலம் வி. ரி. இளங்கோவண் கவிதைகள் மானவீரன் கும்பகருணன்
நாவேந்தனர் நான் ஒரு பிச்சைக்காரன் நாவேந்தனர் மகதலேனா மரியாளர் ( குறுங்காவியம் ) நாவேந்தன் நாவேந்தன் நினைவலைகள்
70


Page 40


Page 41
_