கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாப்பா பாடல்கள்

Page 1
JmpjLJM ||
 

jrj_6\bj],၅†

Page 2

aa
arra
60S6
aa
LJITLJILJIT LJITL-...
(a
இளங்கோவன்
பத்மா

Page 3

பாப்பா பாடல்கள்
பத்மா இளங்கோவன்
CDC EUROPE ORIENT క్ష 5, RUE DENFERT ROCHEREAU, za 1 31000 TOULOUSE,
N FRANCE.
is-A
05 61 63 4969 Fax : 05 61 63 4969 0.561 SS OO 13

Page 4
JmůLJr LJIL-6ůě56ří
முதற்பதிப்பு : மார்கழி 1999
ஆக்கம் : பத்மா இளங்கோவன்
வெளியீடு : ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மையம்
துலூஸ், பிரான்ஸ்.
(C) பதிப்புரிமை : வி. ரி. இளங்கோவன்
PAAPPAA PAADALKAL (Des chansons pour les enfants)
Première Edition : Décembre 1999
Auteur : Pathma Elangovan
Editeur : V. T. Elangovan
CDC EUROPE ORIENT 5, RUE DENFERT ROCHEREAU, 31000 TOULOUSE,
FRANCE. Te. 05 61 63 4969 Fax - 05 6163 4969
0.561 5500 13

பதிப்புரை
இலக்கியம் ஒரு சமுதாயத்தின் நிலைப்பாட்டினைப் பிரதிபலிப்பதாக, ஆரோக்கியத் தன்மையை வளர்த்தெடுப்பதாக, தேவையை நோக்கியதாக அமைதல் வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் அடுத்த சந்ததி தமிழர்களாக, தமிழ் பேசத் தெரிந்தவர்களாக, தம் அடையாளத்தைத் தொலைக்காதவர்களாக வாழவேணர்டியது அவசியமாகும். அவ்வாறு வாழ்வதற்கு உறுதுணையாக, சிறுவர் இலக்கியங்கள் நவீன கண்ணோட்டத்துடன் தமிழில் படைக்கப்பட வேண்டும்.
இந்தப் பணியில் ஒர் அடி எடுத்துவைத்து “பரிசு? சிறுவர் மஞ்சரியை வெளியிட்டு வருகின்றோம். தற்போது என் தாயார் - ஆச்சியின் நினைவாக பாப்பா பாடல்கள் நுாலினை வெளியிடுகின்றோம்.
பாலர் கல்வியில் விசேட பயிற்சிபெற்ற, முன்னாள் ஆசிரியரான எண் துணைவியார் பத்மா இளங்கோவன் எழுதி, பத்திரிகைகளில் வெளிவந்த பாலர் பாடல்கள் பலவும் கைவசம் இல்லையாயினும், ஞாபகத்திலிருந்த ஒரு சில பாடல்களையும், மற்றும் சில பாடல்களையும் உடன் எழுதி அன்பு மாமியாரின் நினைவாகத் தொகுத்துத் தந்துள்ளார். இதனை சி.டி.சி. வெளியீடாக உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
வி. ரி. இளங்கோவண் Lu'Lurgarfuur.

Page 5
யார் பெற்றபிள்ளை என்றாலும் யார் கொண்டுதான் வந்தாலும் பேர் என்னவென்று கூடத்தான் பெரிதாய்க் கேட்காமல் உடன் தாவென்று வாங்கி அணைத்து தரமறிந்து மருந்து ஊட்டி போவென்று நோய் நீக்கி பிடி இந்தா என்று பல பொருளும் கொடுத் துதவும் புண்ணியவதி எங்கள் ஆச்சி, பாலோடு தமிழ் கலந்துாட்டி பாரினில் புகழ்பெறத் தமிழ்
e
V
V8 O
பெற்ற தாயாய் எனைக்காத்த உற்ற துணைவரின் அன்னையே, A Sata s சோதித் திருநாளில் சொர்க்கவாசலென போய்விட்டாய் மீனாட்சிபாதம் மாமியே மகிமைசேரக் காணிக்கை இது!
4
 
 
 

வைத்திய சிரோன்மணி அமரர் வீரவாகு தம்பிராசா அவர்களின்
அன்பு மனைவி திருமதி சிவபாக்கியம் தம்பிராசா புங்குடுதீவு - 1
1999 - 11 - 22 1915 سے 12 -- 5

Page 6
፻፳፻፳፻፶፭፻፩
--
|Wh
፳m ;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புங்கையூர் சிவன்
நான் வணங்கும் கோவில் நல்ல சிவன் கோவில் மீனாட்சி சுந்தர னார் தான் ஆளும் கோவில்,
ஆறு வேளைப் பூசை அனு தினமும் நடக்கும் அடித்திடும் மணி ஓசை அன்பர் காதில் இனிக்கும்,
அடுக்கு மாடிக் கோபுரம் அழகாய் எழுந்து நிற்கும் அடுக்கு அடுக்குத் திபங்கள் அடியார் நெஞ்சை உருக்கும்,
கணக்க பூவும் கொண்டு காலை மாலை செல்வேன் கல்வி செல்வம் வேண்டி கடவுளர் பாதம் தொழுவேன்,
புங்கை ஊர் தண்ணில் பொலியும் சிவன் கோவில் எங்கு இருந்த போதும் எண்ண வைக்கும் கோவில்!
T

Page 7

பாலர் நேசன் யேசு
பாலர் நாங்கள் கூடுவோம் பாலன் புகழ் கூறுவோம் புனிதன் நாமம் போற்றுவோம் புதிய இசை பாடுவோம்,
பாலர் நேசன் யேசு
பாதை வழி பேசு கவலை நமக்குத் துாசு கழுவ வேண்டும் மாசு,
உன்னைப் போல எண்ணி உயிரை எல்லாம் நேசி கல்வி செல்வம் வேண்டி கர்த்தரைத் தான் யாசி,
பெற்ற வரை மதிப்போம் பெருமை களைச் சேர்ப்போம் கற்ற வழி செல்வோம்
கலைகள் பல வளர்ப்போம்,

Page 8
O
 

சின்னப் பாவை
சின்னச் சின்னப் பாவை சிரிக்கும் நல்ல பாவை வண்ணக் கையை நீட்டி வடிவாய் என்னை அழைக்கும்,
கண்ணைச் சிமிட்டிக் காட்டும் காலைத் தூக்கி நடக்கும் ஆடச் சொன்னால் ஆடும் அழகிய சின்னப் பாவை,
றோசா என்ற பேரு நானே வைத்தேன் பாரு எனக்கு நல்ல தோழி இந்தப் பாவை தானே!
11

Page 9
புதுச்சட்டை
அழகிய புதிய சட்டையே அம்மா தைத்துத் தந்தாவே அணிந்தே அழகு பார்த்தேனே அம்மா அள்ளி அணைத்தாவே,
அப்பா வந்து பார்த்தாரே அசந்து போயே நின்றாரே அள்ளி முத்தம் தந்தாரே அழகிய குட்டி என்றாரே,
எந்தண் புதிய சட்டையை எனது தோழியர் யாவர்க்கும் அணிந்து சென்றே காட்டுவேன் அன்பாய்ப் பேசி மகிழ்வேன்,
12


Page 10
உதைபந்து
வட்ட வட்டப் பந்து வடி வான பந்து கிட்டு மாமா தந்த கறுப்பு வெள்ளைப் பந்து,
எட்ட எட்ட போயும் கிட்ட வந்து சேரும் துட்ட குணம் போக்கும் தோழ மையைச் சேர்க்கும்,
வட்ட நிலாப் போல வடிவில் அழகு தானே தட்டி விளை யாட தக்க நண்பன் இதுவே,
உலகக் கிண்ணம் பெறவே
உதைத்து நன்கு ஆடியே வெற்றி கொண்டது பிரான்சு
வாழ்த்தி நின்றது பரிசு!
14


Page 11
பூந்தோட்டம்
எங்கள் வீட்டுப் பூந்தோட்டம் எங்கும் நிறைய மலர்க்கூட்டம் இங்கு தானே என் நாட்டம் இதனால் இல்லை மணவாட்டம்,
வண்ண மலர் ரோசா வாச முள்ள மல்லிகை கண்ணைப் பறிக்கும் கடதாசி காண இனிய கனகாம்பரம்,
சின்ன இதழ் முல்லை சிவந்த அடுக்குச் செவ்வந்தி என்னைத் தினம் இழுக்கும் எழுந்து காலை போவேன்,
கொய்து மலர் வைப்பேன் கூடம் அழகு சிறக்கும் பார்த்து அம்மா ரசிப்பார் பாவை நானும் மகிழ்வேன்!
16
 

R R
፩ኳ
øs -oas Y 2.
8-።
இதன்
ጴለ4[ኳ'ነኅኳ፳&. .... "
d is: &፩ -: & A: $3.
is' } E. it. 豁聊机”, '! * ' { {•ቖ W' ,› { { ,«* ჩზჭეშმწჭკუა ჭწ"id" it( "%."
': * Ray ... v .
翰 آمار از 郤、 > .'鸟 臀 y k .* .°-;; . *خط'
- : a
ኳisኳ ፍ‛. '* በቕ፡- .‰ክ ̊,W . 高况 VM
ج .ჯჭეზW リ ::: : E„ ایانی eTeALLrr000AyT
リ忍 يب 曦兹絮 کاخ S a 勒 . 葱毅蜗鼹 SBOR l: ' 4 x କୁଁ : ؟!؟ .
Vše:
Ro:MFწ # * *ক্ষয় R 鯊*證
ზჭჭჭ;°. , . *ზჭეჭგ8ჭწo
r
(3/
A.
برتتے*
భ?

Page 12
பழகு கணினி
இந்த நாளின் அதிசயமே - இது எமக்குக் கிடைத்த பொக்கிசமே எதையும் கேட்டு அறியலாமே - இது எளிதாய் விளக்கும் கணினியே,
விந்தை பல நுட்பங்களே - இது விடை சொல்லும் கணத்திலே வளர்ந்த நாடுகளின் அறிமுகமே - இது வளரும் எமக்கு நற்குருவே,
இருந்த இடத்தில் கதைக்கலாமே - இதில் எழுதி எங்கும் அனுப்பலாமே சிறந்த வழிமுறை பலதுமே - இதில் சேர்த்துள்ளார் மின்னலை தனிலே,
சின்ன வகுப்பு முதலே - நீர் சிறந்து விளங்க வேணும் என்ன விலை கொடுத்தாலும் - இதை வாங்கிப் பழகிக் கொள்வீர்!
18


Page 13
அழகு
பாக்கு இடித்துப் போடும் பொக்கை வாய் அழகு பால் மணம் மாறா பச்சை வாய் அழகு,
எட்டாமல் குளத் திருக்கும் இனிய தாமரை அழகு கிட்ட கொடி மணக்கும் குண்டு மல்லிகை அழகு,
ஒடை நிலத்தருகே நன்கு ஓங்கி வளரும் புல்லழகு வாடைக் காற்றோடு வரும் வண்ண முகில் அழகு,
குளிர் கொஞ்சும் மார்கழி கொட்டும் பனி அழகு தளிர் மீதுலாவும் வெண் புறாக் கால் சிவப்பழகு,
20

கூடற்பனை நடுவே ஓடும் குறுக்கு வழி அழகு தேடிப் படிப்பதற்கு நல்ல திருக்குறளர் தான் அழகு!

Page 14
பனை மரம்
பனை மரமாம் பனை மரம் பாரில் ஒரு நெடு மரம் பாரி போலே வாரித் தரும் பெருமை மிக்க பனை மரம்,
பசியைப் போக்க பனம் பழம் புழுக் கொடியல் கிழங்கு பூரான் தாகம் தீர்க்க கருப் பணியும் தேனைப் போல நுங்கும் உண்டு,
வீடு கட்ட மரம் சிலாகை வேய நல்ல ஒலை தரும் வேண்டும் விறகு தந்து உதவும் வைரம் மிக்க பனை மரம்,
கடகம் பெட்டி சுள கென கவின் பொருட்கள் தான் என வித விதமாய் பயன் தரும் விந்தை யான ஒரு மரம்,
22

கற்பக தருவாய் உர முடனே காத்து நிற்குது எம் மண்ணை எக்கதி வரினும் எம் பனையை என்றும் காப்பது எம் கடமை!

Page 15
எங்கள் பாட்டி
பாட்டி எங்கள் பாட்டி
பாசம் நிறைந்த பாட்டி
கேட்க நல்ல கதைகள்
கூறும் எங்கள் பாட்டி,
ஒளவைப் பாட்டி சொன்னதை
அழகாய் எடுத்து விளக்குவார்
செவ்வை நெறிகள் இதுவென
சுட்டி எமக்குக் காட்டுவார்,
கரும்பு போல இனித்திடும்
கதைகள் பலவும் கூறுவார் விரும்பி நாங்கள் கேட்டிட
வீரர் கதையும் கூறுவார்,
அம்மா அப்பா சொல்வதையே
ஏற்று நடக்க வேண்டுமென்றார்
எம்மால் இயன்ற உதவிகளை
எவர்க்கும் செய்தல் நன்றென்றார்,
4

நாடு சிறக்க வாழ்ந்திட்ட நல்லவர் கதைகள் சொல்லிடுவார் வீடும் நாடும் போற்றிடவே வாழ்ந்திட வேண்டும் என்றிடுவார்,
கெட்டது கோபம் ஒழியென்றார் கேட்டது கிடைக்கும் படியென்றார் பாட்டி சொல் கேட்போமே
பாரில் உயர்வாய் வாழ்வோமே!

Page 16
அம்மா சொன்ன சொல்
அம்மா எந்தன் அம்மா அன்பு நிறைந்த அம்மா அள்ளி என்னை அணைத்து ஆசை முததம தருவா,
சோறும் கறியும் சுவையாய் சமைத்தே உண்ணத் தருவா சின்னக் கதைகள் சொல்லியே சிறந்த வழிகள் காட்டுவா,
அழகாய்ச் சட்டை தைத்து அணிந்தே அழகு பார்ப்பா ஆசை யுடனே பள்ளிக்கு எண்னை அழைத்துச் செல்வா,
அப்பா அடிக்க வந்தால் ஓடி வந்து தடுப்பா
என்ன பிழை செய்தான் எனது பிள்ளை எண்பா,
தவறு ஏதும் செய்தால் தடியை எடுக்க மாட்டா தயவாய் எனக்குச் சொல்லி
திருந்தி நடக்க வைப்பா,
26

குறும்புத் தனங்கள் செய்தால் கூட இருந்து ரசிப்பா பொறுப் புடனே பொறுமையும் பேண வேண்டும் எண்பா,
கல்வி கற்றுத் தேர்ந்து கலைகள் பலவும் தெரிந்து உலகம் போற்ற உயர்ந்தால் உண்மை இன்பம் என்ப்ா,
எந்தண் ஆசை அம்மா எனக்குச் சொன்ன சொல்லை அன்புத் தோழர் நீங்களும் ஏற்றால் இன்பம் தானே!

Page 17
பள்ளி செல்வோம்!
பள்ளி செல்வோம் தோழரே படிக்கச் செல்வோம் நாங்களே துள்ளி ஓடித் தோழரே தேடிச் செல்வோம் பள்ளியே,
ஆடிப் பாடி ஆசையாய் அன்புத் தோழர் நாங்களே கூடி ஒன்றாய்க் கற்கவே கூடும் இடம் பள்ளியே,
பந்து அடித்து ஆடுவோம் பாய்ந்து குதித்து ஒடுவோம் வந்து ஒன்றாய்க் கூடுவோம் வகுப்பில் அறிவைத் தேடுவோம்,
வகுப்பு அறையில் ஆசிரியர் விளக்கி வைக்கும் பாடங்கள் அகத் திரையில் எங்களுக்கு,(3 அழிந் திடாத ஒவியமே, p\,
அறிவினையே நாம் பெற்று காசினியே வாழ்த்தி நிற்க கற்போமே பள்ளி சென்று,
28
 
 
 
 
 

நாளை உயர்ந்த மனிதனாய் நல்ல பணிகள் செய்திட வேளை இதுவே கற்றிட விரைந்து செல்வோம் பள்ளியே,
அன்பு நிறைந்த ஆசிரியர் அணைத்து நிற்கும் தோழர்கள் என்றும் நெஞ்சில் நிறைகின்ற இனிய பள்ளி மறப்போமா?
毅 தி 豹 پیداللہ t WF 臀 لکھے ീ','r' կի i 11,'ހަހުރި 须 محتھ
. 4 ஜ ഗ്ഗ
مما
ت

Page 18
மியா மியாப் பூனையார்
மியா மியாப் பூனையார் மிக்க அழகுப் பூனையார் மீனும் சோறும் திண்னுவார்
மீசைக் காரப் பூனையார்,
கண் இரண்டும் வட்டமாம் கடும் இருட்டில் மின்னுமாம் நான் வளர்க்கும் பூனையார் நல்ல வெள்ளைப் பூனையார்,
சின்னக் காதை ஆட்டியே சிறிய அசைவும் கேட்பாரே மின்னல் போலத் தாவியே மடக்கி இரை புசிப்பாரே,
பாலை விரும்பிக் குடிப்பாரே பதுங்கி எலியைப் பிடிப்பாரே பஞ்சு போல மென்மையே பார்க்க ஆசை பெருகுமே,
வந்து காலை நக்குவார் வாலைச் சுழற்றிக் குந்துவார் பந்தை உருட்டி ஓடுவார் பக்கம் வந்தே துாங்குவார்,
30

மரத்தின் மேலே ஏறுவார் மெல்லக் குதித்து இறங்குவார் குரங்கு போலும் தாவுவார் குழந்தை போலும் கத்துவார்,
கோபம் வந்தால் சீறுவார் கொதியில் ந்கத்தால் கீறுவார் பதுங்கி எழுந்துபாய்வதில் புலிக்குத் தம்பி அவரல்லோ!

Page 19
வட்ட நிலா
வட்ட நிலா பாரடா வானில் வலம் வருகுதே எட்டிப் போய் தொட்டிடவே எனக்கும் ஆசை பெருகுதே,
தீபன் வந்து பாரடா தங்க ஒளி வீசுதே பாமா வந்து பாரடி பால் நிலாப் பொழியுதே,
நிலக் கடல் நடுவிலே நீந்தும் ஒளிப் படகென ጰ§ அழகாய் அசைந்து வருகுதே ஆசை அதனுள் தாவிட,
ஆம் ஸ்ரோங் என்பவர் அழியாப் புகழ் பெற்றாரே அழகு நிலா மீதிலே அடி பதித்தார் முதலிலே,
32
 

அவர் நடந்த பாதையில்
அடுக்காய் முயற்சி நடக்குதே தொடரும் ஆய்வு வெற்றியில்
தொடலாம் நாமும் நிலவினை!

Page 20
வண்ணப் பூக்கள்
வண்ண வண்ணப் பூக்கள் வகை வகையாய்ப் பூக்கள் எண்ண முடிய வில்லை எங்கும் நிறை பூக்கள்,
மண்ணில் வசந்தம் வந்தால் res ஜி ۔۔۔۔۔ மலர்ந்து சிரிக்கும் பூக்கள் (T, கண்ணைப் பறிக்கும் அழகு ZCSழ் \多ー
காண இனிய நிறங்கள், R
பட்டாம் பூச்சி பூவில் பறந்து வந்து அமரும் A
பருகும் தேனை நன்றாய்
பறந்து போகும் விரைவாய், /,
பாடும் தேனி கூட W பூவில் தேனைக் குடிக்கும் கூடு கட்டி எமக்கு குடிக்கத் தேனைக் கொடுக்கும்,
34
 
 

மண்ணை அழகு செய்யும் மலர்ந்து வாசம் வீசும்
வணக்கத் திற்கும் வருமே வாழ்த்த உதவும் பூக்கள்!
35

Page 21
கடிகாரம்
இர வெண்ண பக லென்ன எப் போதும் இயங் கிடுமே ஒய் விண்றி உறக்க மின்றி ஒடி ஒடி உழைத் திடுமே,
கால நேரம் காட்டி நிற்கும் கடமை களைச் செய்ய வைக்கும் உல கத்தில் செயல் எல்லாம் ஒழுங் காக இயங்க வைக்கும்,
கொஞ்சம் நாம் துாங்கி விட்டால் கூவித் தான் எழுப்பி விடும் துாங் காமல் உழை என்று தக்க நல்ல புத்தி சொல்லும்,
பன்னி ரெண்டு மணிக் குள்ளே பக்குவ மாய்ச் சுற்றி வந்து பகல் இரவு கணிக்க வைக்கும் பாரில் பெரிய உழைப் பாளி
36


Page 22
குட்டித் தம்பியின் கொஞ்சு தமிழ்
அக்கா மூவர் எங்களுக்கு அன்புத் தம்பி ஏகன் தான் 'சொக்கா’ போலே எங்களுக்கு செல்லத் தம்பி இனிக்கின்றான்,
அக்கா என்றே அழைத்திடுவான் அணைத்துமுத்தம் தந்திடுவான் பக்கம் வந்தே கூத்துக்கள் பலவும் காட்டி மகிழ்கின்றான்,
புத்தகம் எடுத்து நான் படித்தால் பறந்தே தானும் வந்திடுவான் சித்திரம் நன்றாய்க் கீறிடுவான் சிங்கார மாகப் பாடுகின்றான்,
கண்ணைச் சிமிட்டி கையைக்காட்டி கணக்கக் கதைகள் சொல்கின்றான் பிரெஞ்சும் தமிழும் கலந்தெடுத்து பெரிதாய் விளக்கம் தருகின்றான்,
38

அக்கா இங்கே வா என்பான் அன்பாய் “பொம் பொம் தா என்பான் 'சொக்கா இல்லை போ என்றால் ‘சவப்பா’ அக்கா எண்கின்றான்,
அழகுத் தமிழை எங்களைப்போல் ஆசைத் தம்பி கதைத்திடவே அவலம் கொள்வதும் ஏன்தானோ அகதி வாழ்வின் நிலைதானோ!

Page 23
எந்த நிறமும் ஏற்றம் தான்!
செம்மஞ்சள் நிறத்தொரு நாய் - எங்கள்
சிறிய வீட்டில் வளருது சிந்தா என்று அழைப்போம் - அது செல்லமாய் ஓடி வரும்,
குட்டிகள் போட்டது சிந்தா - கன்னங் கறுப்பு நிறத்தொரு குட்டி 叠,● கட்டிச் சந்தனம்போலொரு குட்டி - வெள்ளைக் கொக்கு நிறத்தொரு குட்டி,
எந்த நிறம் ஆயினும் - அவை ஏற்றம் தான் சிந்தாவுக்கு இந்த நிறம் வேண்டாமென - அது எப்போதும் கழிப்பதில்லை,
வெள்ளைக் குட்டியைக் கேட்டாளர் - மல்லிகா விரும்பிக் கொடுத்தாளர் அம்மா உள்ளம் விரும்பிக் கொடுத்தோம் - அன்று உத்தமனோடு சந்தனக் குட்டி,
40

சிந்தாவின் குட்டி சோலோ வந்து காலை நக்கும் குந்தி இருக்கும்:கட்டிலில் கண்ணை மூடித் துாங்கும்,
கன்னங் கறுதத குட்டி - என் கவலை போக்கும் சின்னக்குட்டி என்ன விலை கொடுத்தாலும் - அதை எவர்க்கும் கொடுக்க மாட்டேன்!

Page 24
42
 

பரிசு
அப்பா தந்த புத்தகம் அழ கான புத்தகம் நல்ல கதைகள் சொல்லுது என்னைப் பாட வைக்குது,
எனக்கு நல்ல பரிசென்று அம்மா மெல்லச் சொன்னாவே தம்பி தனக்கும் கேட்டானே தாத்தா வாங்கிக் கொடுத்தாரே,
சின்னஞ் சிறுவர் நாங்களும் சிரித்து மகிழ்ந்து படித்திட தங்க மான புத்தகம் நமக்குக் கிடைத்த பரிசன்றோ!
43

Page 25
செங்கரும்பு
எங்கள் வீட்டு முற்றத்திலே எழுந்து நிற்குது செங்கரும்பு எவர்க்கும் ஆசை பெருகிடுமே இனிய கரும்பைச் சுவைத்திடவே,
சலசலத் தாடும் காற்றினிலே சங்கீதம் பாடும் காதினிலே கரும்புச் சோலையின் பேரழகு கண்ணைப் பறிக்கும் ஒரழகே,
சுவைகளில் இனிப்பைத் தருகின்ற சிறப்பைக் கொண்டது கரும்பாகும் சீனி சர்க்கரை கற்கண்டாய் சுவைத்து மகிழத் தந்திடுமே,
விழாக்கள் பூசைகள் வந்திட்டால் விரும்பிக் கேட்பர் கரும்பினையே வேண்டும் கரும்பைக் கொடுப்பதிே விருப்பம் தானே எங்களுக்கு,
அம்மன் கோவில் விழாவிற்கு
அள்ளிக் கொடுப்போம் கட்டாக சின்னஞ் சிறுவர் சேர்ந்திட்டால் சுவைப்போம் கரும்பை விருப்புடனே,
44
 

அழகும் சுவையும் தருகின்ற
இனிய கரும்பைப் போலேநாம் இனிமை கொஞ்சப் பேசிட்டால் என்றும் இன்பம் பொங்கிடுமே!

Page 26
எங்கள் ஆசிரியர்
எங்கள் ஆசிரியர் நல்லவர் எங்களில் அன்பு கொண்டவர் எளிதாய் விளக்கம் தருவதிலே என்றும் அவரே வல்லவர்,
அம்மா போலே அணைத்திடுவார் ஆசை பொங்கப் பேசிடுவார் வெளியே அழைத்துச் சென்றிடுவார் வேடிக்கை பலவும் காட்டிடுவார்,
கதைகள் எமக்குச் சொல்லிடுவார் கணக்கும் சொல்லித் தந்திடுவார் பிழைகள் செய்தால் பொறுப்புடனே பார்த்துத் திருத்தம் செய்திடுவார்,
ஆட்டம் பாட்டு எல்லாமே அண்பாய்ச் சொல்லித் தந்திடுவார் கேட்டது சொல்லித் தருவாரே கோபம் கொள்ளார் ஒருபோதும்,
நன்றாய்ப் படிக்க வேண்டுமென்பார் நல்லது செய்யச் சொல்லிடுவார் அன்பாய்ப் பழகுதல் நன்றென்பார் அவர் சொற்கேட்டல் எமக்கின்பம்!
46

நல்லதையே விரும்பு
பெற்றவர் சொற்களை என்றும் பேணி நடக்க விரும்பு கற்றிடக் குருவை நாடி கல்வியை பெற்றிட விரும்பு,
கற்றவர் தம்மைச் சேர்ந்து குணத்தினைத் தேட விரும்பு மற்றவர் சொல்லை மதித்து மேன்மையாய் வாழ விரும்பு,
கோபத்தை மெல்ல ஒதுக்கி கனிவாய்ப் பேச விரும்பு பாவ வழிகளை மறந்து புனிதத் தொண்டை விரும்பு,
தோழமை கொண்டு பழகி துன்பத்தை ஒழிக்க விரும்பு வாழ்வில் இன்பம் எவர்க்கும் வேண்டும் என்றே விரும்பு,
சொன்னதைச் செயலில் காட்டி சொர்க்கத்தைக் காண விரும்பு என்னரும் தோழா என்றும் ஏழைக்கு உதவ விரும்பு!
47

Page 27
பாடு பாப்பா பாடு
பாப்பா நீங்கள் படித்திடவே
பாட்டுக்கள் உண்டு நிறைவாக சோக்காய் நீங்கள் பாடிடலாம் சுட்டித் தனமாய் ஆடிடலாம்,
பாட்டில் அறிவைத் தேடிடலாம் பண்பாய் வாழப் பழகிடலாம் ஏட்டில் உள்ளதைக் கற்றிட்டால் என்றும் இன்பம் பெற்றிடலாம்,
பாட்டி கதைகள் கேட்பதைப்போல் பாட்டும் கதைகள் சொல்லிடுமே படித்து நீங்கள் இன்புற்றால்
பெறுவோம் மகிழ்வை நாங்களுமே!
 

வெளிவந்துவிட்டது:
பரிசு معهم
சிறுவர் மஞ்சரி ༼སྐལོག །དེ་
G 2 مضس.
எழுச்சிக் கவிஞர் வி. ரி. இளங்கோவனின் 2,
தேர்ந்தெருக்கப்பட்ட கவிதைகள் 莒
அவரது குரலில் ஒலிக்கின்றன. 7,
ஒலித்தட்டு
an KIA &5.5JDLJG)6OresGr
தொகுத்தளிப்பவர்
‘ரி. ஆர். ரி. தர்ஷன்
தொடர்புகளுக்கு: 侬 CD C EUROPE ORIENT 5 rue Denfert Rochereau,
31000 Toulouse,
FRANCE. Tél. : 0561 63 4969 Fax OS 61 6349 69
05 61 5500 13

Page 28
பாப்பா பாடல்கள்
 

வெளிவந்துவிட்டது.
சிறுவர் மஞ்சரி
தேர்ந்தெருக்கப்பட்ட கவிதைகள் Sorgo8o SCSICO
ஒலித்தட்டு
soos
ரி. ஆர் ரி. தர்ஷன்
தாடர்புகளுக்கு CDC EUROPE ORIENT 5 rue Denner Rocherea
3000 Toulouse
FRANCE Tél. : 05 01 66 49 69 OS 61 (63. 4959
OS 6. SS OO

Page 29
LIITIL IF
 

ா இளங்கோவன்