கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் போராளிகள்

Page 1

( ( ( ( | : : : : : : : : |-|- -
----

Page 2

6U6 Uோராளிகள்
வீ சின்னத்தம்பி
கொழுந்து பிரசுரம் 65Z, tapasólöø thGGJTGJŪ 67aBigpitõity — O6

Page 3
6L60 3LIII II6fibef
ஆக்கம் 3 வீ. சின்னத்தம்பி
முதற்பதிப்பு: ap65ITéf 2001 (firefret)
LifLifa DID: வி.ரி.இளங்கோவன்
இரண்டாவது பதிப்பு: 2012 இல் சர்வதேச மகளிர் தினத்தை
முன்னிட்டு கொழுந்து பிரசுரமாக வெளியிடப்படுகிறது.
பின்னிணைப்பாகச் சில பெனி போராளிகளின் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
PEN POORALIGAL
V. SINNATHAMBY
C. W.T. ILLNGOVAN
FIRST EDITION - 2011
2ND EDITION - INTERWATIONA WOMEN'S DAY 2012
ISBN 978 - 955 - O9355 - OO - O
RS. 5O/-

இரண்டாம் பதிப்பு சில பதிவுகள்
பெண் போராளிகள் என்று நாம் போற்றும் புகழ்பூத்த பெண்மணிகள் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் அல்ல. கருத்து ரீதியாக சமுதாய மாற்றத்திற்காக பெரும்பங்களிப்புச் செய்தவர்கள். சர்வதேச ரீதியாக போராடிய கிளாரா ஜெட்கின் முதல் நமது வடபகுதி இடதுசாரி இயக்கத்தின் முன்னோடி வேதவல்லி கந்தையா வரை பெண் போராளிகள் தான். இலங்கையிலும் சீனாவிலும் (வானொலி) இடதுசாரிக்கருத்துக்களை முன்னெடுத்த வீ. சின்னத்தம்பி நம் தாயகத்து பெண் போராளிகளைப் பற்றி “கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்" என்ற தலைப்பில் ஞாயிறு தினக்குரலில் எழுதி வந்தார். அதனைப் பின்னர் தோழர் வி.ரி.இளங்கோவன் முயற்சியால் சிறு நூலுருவம் பெற்றது. ஐரோப்பிய நாடுகளில் இந்நூல் அறிமுகப் படுத்தப்பட்டது.
ஆனால், இலங்கையில் உள்ளவர்களுக்கு இந்நூல் கிடைக்கவில்லை. அதனால் 2012 சர்வதேச மகளிர் தினத்தின் போது இந்நூலை கொழுந்து பிரசுரமாக வெளியிடுவதுடன், இதன் பின்னிணைப்பாக சில பெண் போராளிகளின் குறிப்புகள் இடம்பெறுகின்றன. இது காலத்தின் தேவையைக் கருதி வெளியிடப்படுகிறது. இதனை வெளியிடுவதற்கு உரிமையளித்த திரு விரி. இளங்கோவனுக்கும் இதனை பதிப்பித்து வெளியிடத் தூண்டிய எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் அவர் களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
தோழமையுடன் அந்தனி ஜீவா E-mail: kolundu(a)gmail.com

Page 4
இலங்கை மலையக தொழிற்சங்க வரலாற்றில் போராளியாகத் திகழ்ந்த மீனாட்சி அம்மையாருக்கு இச்சிறு நூல் காணிக்கை
 

முதற் பதிப்பிற்கான பதிப்புரை
சர்வதேச மாதர் தினத்தையொட்டி, இக்கட்டுரை கடந்த வருடம் “ஞாயிறு தினக்குரல்" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதாகும்.
சீன வானொலியிலும், அயல்மொழிப் பதிப்பகத்திலும் சுமார் 16 வருடங்கள் தமிழ்ப்பணியாற்றிய தோழர் வீ. சின்னத்தம்பி இதனை எழுதியுள்ளார்.
கம்யூனிஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்கென, ஆரம்ப காலத்தில் எத்தனையோ பெண்கள் தமது கணவன்மாருடன் இணைந்து தொண்டாற்றியுள்ளனர். அவர்கள் தமது சொத்துச் சுகம் எல்லாவற்றையும் இழக்க நேரிட்டும், அவதூறுகளையும் பழிப்புரைகளையும் கேட்க நேரிட்டும் கலக்கமின்றி, கொண்ட கொள்கையில் ஈடாட்டமின்றி இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக, உறுப்பினராக யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழ்வது என்பது வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடிப்பதாகும்.
தமது கொள்கையில் இறுதிவரை வழுவாது, எத்தனை துயர் வரினும் ஏற்று இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர்களுடைய வாழ்வின் பின்னால் அவர்களது மனைவிமாருக்கும் சமபங்கு உண்டு என்பதை மறுக்க (UPigulfgil.
அந்தவகையில் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள், கணவர் மாரின் கம்யூனிஸ இயக்கப் பணிகளுக்கு அன்று உறுதுணையாகவிருந்து உதவிய மாதரசிகள் சிலர் குறித்து தோழர் வீசின்னத்தம்பி சுருக்கமாக எழுதியுள்ளார்.
இதில் குறிப்பிடப்பட்ட மாதரசிகள் மாத்திரமன்றி, கம்யூனிஸ் இயக்கப் பணிகளுக்கு அன்று உதவிய தமிழ்ப் பெண்கள் பலர் உண்டு.

Page 5
அறுபதுகளின்பிற்பகுதியில், தீண்டாமை ஒழிப்புப்போராட்டங்களில் நேரடியாகக் களித்தில் நின்று போராடிய இளம்பெண்கள் சிலர் இன்றும் ஈழத்தில் வாழ்கிறார்கள்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி (7 -O4 - 2001) அருமைத் தோழர் வீ. சின்னத்தம்பி வட்டுக்கோட்டையில் காலமாகிவிட்டார்.
அன்னாரது விருப்பத்திற்கமைய இந்நூல் இங்கு பிரசுரமாகிறது.
அரசியல் ஆர்வலர்களுக்கும் வரலாற்று ரீதியாகவும் முற்போக்குப்
பார்வையுடனும் சிந்திப்பவர்களுக்கும், பெண்களுக்கும் இந்நூல் சிறிதேனும் பயன்படுமென நம்புகிறோம்.
வி.ரி.இளங்கோவன்
O.O.5.2OO
வீ. சின்னத்தம்பி எழுதிய முதற்பதிப்பு கட்டுரைகளை மறுபதிப்பாக வெளியிட விருப்பம் தெரிவித்த கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவாவுக்கு இரண்டாம் பதிப்பாக வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவித்தேன். அதற்கு முக்கிய காரணம் தாயகத்தில் வாழும் நம்மவர்கள் இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்பதே என் அவா. இத்தகைய பெண்மணிகள் இளந்தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக அமைவார்கள் என்பது என் நம்பிக்கை,
வி.ரி.இளங்கோவன்
O1.O3.2O12

கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்
சர்வதேச மாதர் தினம் மார்ச் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இப்பொழுது உலகம் பூராவும், பொதுவாக பெண்களின்நிலைமைகளையும், உரிமைகளையும் கணக்கிலெடுக்கும் நாளாக இத்தினம் அமைந்துள்ள போதிலும் ஆரம்பத்தில் சோஷலிஸத்திற்கான போராட்டத்தில் உலக உழைப்பாளிப் பெண்களின் ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் நாளாகவே இது eleCDLD55g.
மார்ச் 8 ஆம் திகதி சர்வதேசிய மாதர் தினமென இன்று உலகில் சகல நாடுகளிலும் அனுஷ்டிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் இத்தினத்தின்மூலகர்த்தாக்கள் கம்யூனிஸ்ட்டுக்கள் என்பதுநினைவுகூரப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். இந்த ஸ்தாபகர்களின் ஆரம்ப நோக்கங்களை இன்றைய மாதர் தினமும் அதன் நினைவைக் கொண்டாடும் மாதர் ஸ்தாபனங்களும் எவ்வளவுக்குநிறைவேற்றுகின்றன என்பது ஆராய்விற்கு உரிய ஒரு பொருளாகும்.
சர்வதேச மாதர் தினத்தின் சுருக்கமான வரலாறு வருமாறு:
1910 ஆம் ஆண்டு டென்மார்க்கின் தலைநகரான கோப்பென்ஹேகெனில் நடைபெற்ற பெண் சோஷலிஸ்டுகளின் இரண்டாவது சர்வதேசிய மாநாட்டில், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிளாரா செட்கின் (Clara Zetkin) என்ற பெண்மணியின் பிரேரணையின் பேரில் மார்ச் 8 சர்வதேசிய மாதர் தினமாக நிறுவப்பட்டது.
முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடப் பரந்துபட்ட பெண்களை அணிதிரட்டுவதே இதன் நோக்கமாகும்.
7

Page 6
சர்வதேசிய மாதர் தினம் முதலில் 1911 ஆம் ஆண்டில் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் அனுசரிக்கப்பட்டது. ரஸ்யாவில் முதன்முதலில் 1913 ஆம் ஆண்டு இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு சர்வதேசிய உழைப்பாளி மாதர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் இலங்கையின் , வடபுலத்தில் சோஷலிஸத்திற்காக உழைத்த சில பெண்மணிகளை நினைவுகூருதல் பயனுள்ளதாகும்.
கடந்த நூற்றாண்டின் 30 ஆம் ஆண்டுகளில் எமது நாட்டில் பரவிய சோஷலிஸக் கருத்துகளால் கவரப்பட்டு பல இளைஞர்கள் தமது வாழ்வையே இந்த இலட்சித்திற்கு அர்ப்பணித்தார்கள்.
இலங்கை பூராவும், இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சுரண்டலற்ற அடக்குமுறையற்ற, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை அமைப்பதென்ற கம்யூனிஸ் இயக்கத்தின் பணியில் இரண்டறக் கலந்து கொண்ட இந்த இளைஞர்கள் வாழ்க்கையின் சகல சுகபோகங்களையும் துறந்துதாம் வரித்துக்கொண்ட கம்யூனிஸ இலட்சியத்தின் வெற்றிக்காக தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்தார்கள்.
தெற்கில் டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க முதல் வடக்கில் மு. கார்த்திகேசன் வரையிலான இந்த இளைஞர்களின்பட்டியல் கணிசமானளவு நீண்டதாகும். இவர்களின் இலட்சிய வாழ்க்கையைப் பற்றிய விபரமான ஆய்வு நூல்கள் வெளிவருவது அவசியமாகும்.
உலகில் இன்றுவரை ஆண் மேலாதிக்கம் நிலவி வருகின்றது என்பது ஒரு யதார்த்தமாகும். இந்த நிலைமையில் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் பங்குபற்றிய பெண்களின் பாத்திரம் சரியான பரிமாணத்தில் எடுத்துக் கூறப்படுவதில்லை. கம்யூனிஸ் இயக்கம் உட்பட முற்போக்கு இயக்கத்துக்கும் இந்தத் கூற்று ஓரளவு பொருத்தமானதே.
இலங்கையின் வடபுலத்தில் கம்யூனிஸ் இயக்கத்தின் வளர்ச்சியில்

பெண்கள் ஆற்றிய பங்கு அவர்களுடைய கணவன்மார்களின் சேவையின் பகுதியாகவே கருதப்படுகிறது. தமது துணைவர்களின் போராட்ட வாழ்விலும், கஷ்டவாழ்விலும் தியாக வாழ்விலும் மனமுவந்து பங்குகொண்ட மாதரசிகள் சில வேளைகளில் ஆண்களிலும் பார்க்க கூடுதலான பங்களிப்பைச் சமூகத்துக்கு நல்கியுள்ளனர்.
காலஞ்சென்றவர்களான திருமதி வேதவல்லி கந்தையா, திருமதி தங்கரத்தினம் கந்தையா, திருமதி பரமேஸ்வரி சண்முகதாசன், திருமதி வாலாம்பிகை கார்த்திகேசன், திருமதிபிலோமினம்மா டானியல் முதலியோர் தமது கணவர்களின் வாழ்க்கையில் துணைநின்று பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் குடும்பப் பணியையும், பொதுப்பணியையும் நிறைவேற்றினார்கள்.
ஆசிரியைகளான திருமதி வேதவல்லி கந்தையா, திருமதி தங்கரத்தினம் கந்தையா ஆகியோர் பொதுவாழ்க்கையில் தமக்கென ஒரு சுதந்திரமான பாத்திரத்தையும் வகித்து நாடுபோற்றும் நற்பெண்மணிகளாக விளங்கினார்கள்.
சம்பிரதாயமும், சடங்குகளும் மலிந்த எமது சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக உள்ள எத்தனையோ தடைகளைத் தாண்டியும் பரம்பரையான வழக்கங்களை மீறியுமே இப்பெண்கள் வாழவேண்டி யிருந்தது.
சாதாரணமான யாழ்ப்பாணப் பெண்கள் என்ற நிலைமையை உடையவர்களாக இவர்கள் வாழவில்லை. சொத்துச்சுகம், நகைநட்டு, வீடுவாசல் இவற்றுக்கான பொருளாதாய ஆசைகள் அற்றவர்களாக அல்லது ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவே இவர்களுடைய வாழ்க்கை பொதுவாக அமைந்தது.
சுருக்கமாகக் கூறின் இந்தப் பெண்மணிகள் முற்போக்கான மனிதர்களாக, புரட்சிகரமான மனிதர்களாக வாழ்ந்து மறைந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கை பொருளாதார ரீதியில் கண்ணீர்க் காவியம் என்று அழைக்கப்படக்கூடும் என்றாலும் ஆத்மரீதியில் புரட்சிக் காவியமே ஆகும்.

Page 7
மாதர் உரிமைகளுக்காக
10
உழைத்த வேதவல்லி
திருமதி வேதவல்லி கந்தையா வட்டுக்கோட்டையில் (1920 - 1988) பிறந்தவர். நீர்வேலியில் எஸ்.கே. கந்தையா எனும் பொதுவுடைமை வாதியான ஆசிரியரைத் திருமணம் புரிந்தவர். ஆசிரியர் கந்தையா தான் முதன் முதலில் இலங்கையில் “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை தமிழாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி வேதவல்லி ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக் கமையப் பல மாதங்களை ஒன்று திரட்டி முற்போக்கு மாதர் சங்கத்தை உருவாக்கி யாழ்ப்பாணத்து மாதர் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத் தினார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக இருந்தார்.
திருமதி வேதவல்லி சாதி ஒழிப்புப் பிரசாரங்களில் முன்னின்று செயற்பட்டார். கூட்டுறவு இயக்கப் பணிகளிலும் ஊக்கத்துடன் ஈடுபட் டார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லு
 

நரான திருமதி வேதவல்லி பேரினவாதத்தின் அபாயத்தை நாடறியக் கூறிவந்தார்.
திருமதி வேதவல்லிநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தமது ஆசிரியர் சேவையைத் தொடங்கி கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியில் அதிபராகத் தமது சேவையைப் பூர்த்தி செய்தார்.
யாழ். மாவட்ட கம்யூனிஸ்ட் மகளிர் அமைப்பு, யாழ். மாவட்ட மகளிர் குழு, யாழ். மாவட்ட ஐக்கிய நாணய சங்கங்களின் சமாசம், வலி, கிழக்குப் பகுதி மகளிர் குழுக்கள், நீர்வேலி சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி முரீமுருகன் மாதர் ஐக்கிய நாணய சங்கம் போன்ற பலரக அமைப்புகளின் தலைவராகவும், போஷகராகவும் பணியாற்றி திருமதி வேதவல்லி மக்களுக்குத் தொண்டாற்றினார். அவர் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
முதலாளித்துவ சமுதாய அமைப்பை அழித்தொழித்து புதியதோர் பொதுவுடமைச் சமுதாயத்தை அமைத்தால் தான் பெண்களும் மற்றும் மக்களும் சம உரிமையுடன் வாழலாம் என்று திருமதி வேதவல்லி திடமாக நம்பி அதற்காக உழைத்தார்.
1 I

Page 8
எதேச்சாதிகாரத்தை எதிர்த்த தங்கரத்தினம்
12
திருமதி வேதவல்லி போலவே திருமதி தங்கரத்தினம் கந்தையாவும் வீட்டுக்கோட்டையில் (1920 - 1989) பிறந்தவர். உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி கற்று ஆசிரியை ஆகியவர்.
தொழிற்சங்கவாதி, சமூக சேவகி, கம்யூனிஸப் போராளி, இலங்கை முற்போக்கு மாதர் முன்ன னியின் தலைவர்களுள் ஒருவரான திருமதி தங்கரத்தினம் தொல்புரம் மாதர் சங்கத்தின் இயங்கு சக்தி யாகவும் விளங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை ஒன்றின் செயலாளராகவும் பணி புரிந்தார்.
திருமதிதங்கரத்தினத்தின் அரசியல் கொள்கைப் பிடிப்பு இலக் கிய அந்தஸ்து பெற்றுள்ளது. காலஞ் சென்ற டானியல் தமது நாவல் ஒன் றில் அவர் தொடர்பான நிகழ்ச்சி ஒன் றைக் குறிப்பிட்டுள்ளார்.
சங்கானையில் ஒரு பாட
 

சாலையில் அது நிகழ்ந்தது. சரஸ்வதி பூஜைத் தினம். உண்டிவகை செய்வதற்காகத் தேங்காயை தாழ்த்தப்பட்ட மாணவி ஒருத்தி துருவ முற்பட்டபோது மற்ற ஆசிரியர்கள் அதைத் தடுக்க முனைந்தார்கள். ஆசிரியை தங்கரத்தினம் ஏன் அம்மாணவி துருவக்கூடாது என்று கூறி அவரைத் துருவவிட்டார். விளைவு, இரவில் பாடசாலை எரிக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராகவும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் சேவையாற்றிய திருமதி தங்கரத்தினம் இவற்றின் காரணமாக எத்தனையோ இடர்களைச் சந்தித்தார். அரசியல் மேடைகளில் கூட தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோரால் பெயர் சுட்டித் தாக்கப்பட்டார்.
ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும் ஒரு ஆசிரியர் சங்கத் தொழிற்சங்கவாதி என்ற முறையினும் அவர் இந்த சமூக சேவகி என்ற முறையிலும் அவர் இந்த எதிர்ப்புகளுக்கு முன் துவண்டுவிடாமல் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகப் போராடினார். : ی
இந்து மகாசபை (Hindu Board) பாடசாலைகளில் படிப்பித்த திருமதி தங்கரத்தினம் 12 தடவைகளுக்குக் குறையாமல் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்து போர்ட்டின் பலம் வாய்ந்த செயலாளரான இராசரத்தினத்துக்கு எதிராக அவர் நேருக்குநேர் நின்று போராடினார்.
அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றபோது திருமதி தங்கரத்தினம் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டார். தேர்தல் கூட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரி அபேட்சகர்களுக்கு ஆதரவாக அவர் உரையாற்றினார்.
குடும்ப வாழ்விலும் கம்யூனிஸ இலட்சியத்தைக் கடைப்பிடிப்பதில் அவர் முன்னுதாரணமான பங்கை வகித்தார். நான்கு புத்திரர்களையும் இரண்டு புத்திரிகளையும் பெற்ற அவர் தனது பிள்ளைகளின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஓர் அன்னையாகத்திகழ்ந்தார். பிள்ளைகள் பொதுவாக முற்போக்குக் கொள்கைகள் உடையவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி தங்கரத்தினம் ஒரு தாயார் என்ற முறையில் தமது பிள்ளைகளை வளர்க்க வறுமையுடன் போராடினார். அதற்காகத் தமது கொள்கையில் அவர் ஈடாட்டம் அடையவில்லை.
13

Page 9
கம்யூனிஸ் இயக்கப் பணிபுரிந்த பரமேஸ்வரி
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரேயொரு தெரிவு செய்யப்பட்ட பருத்தித்துறை பாராளு மன்ற உறுப்பினரான் காலஞ்சென்ற பொன்.கந்தையாவின் துணை வியாராகவும், பின்னர் இலங் கையின் மாபெரும் மார்க்ஸிஸ் வாதியான எண். சண்முகதாசனின் துணைவி யாராகவும் திருமதி பர மேஸ்வரி கம்யூனிஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி அளவிடற் கரியது.
வடமராட்சி, நெல்லியடியில் செல்வக் குடும்பத்தில் தோன்றிய பரமேஸ்வரி தமது வாழ்க்கையில்
போதியளவு வறுமையையும் அவ தூறுகளையும் சந்தித்தார். ஏன், ஒரு நேரச் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைமையில் கூட அவர் இருந்தி ருக்கிறார். கந்தையா என்ற மார்க் ஸிஸத் தத்துவ அறிஞருக்கும், சண் முகதாசன் என்ற கம்யூனிஸ செயல்வீரனுக்கும் உறுதுணையாக இருந்த பரமேஸ்வரியின் வாழ்க்கை ஒரு புனிதமான புரட்சி வாழ்க்கை யாகும்.
14
 

கம்யூனிஸக் கொள்கைகள் காரணமாக வீடுவாசல் இழந்து, வருமானம் அற்று அவர் வாழ்ந்த காலத்தை அறிந்தோர் அவருடைய திடமனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
திருமதி பரமேஸ்வரி உண்மையில் தமது துணைவருக்கு நல் மனைவியாய் நல் மந்திரியாய் நல் சேவகியாய் ஏன் நல் ஆசானாய்க்கூட விளங்கினார். அவர்களுடைய படைப்புகளை எழுதும் பணியைப் பெரும்பாலும் அவரே செய்தார்.
கம்யூனிஸ் இயக்கத்திலும் தொழிற்சங்க இயக்கத்திலும் ஏற்பட்ட எத்தனையோ துரோகச் செயல்களை அனுபவித்தவர் பரமேஸ்வரி, இன்று தோழர், நண்பர். நாளை துரோகி, விரோதி என்ற நிலைமையிலும் கம்யூனிஸ்டுகளுடன் வாழ்ந்தவர் பரமேஸ்வரி,
அறிவும் கலை இலக்கிய ஆர்வமும் உடைய திருமதி பரமேஸ்வரி 50 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இலங்கை வானொலியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளையும் செய்தார் என அறியவருகிறது. 60 ஆம் ஆண்டுகளின் இறுதியில் அவர் உத்தியோகபூர்வ ஒரு கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினராகவும் இருந்தார் எனத் தெரியவருகின்றது.
15

Page 10
கார்த்தியின்
கீர்த்திக்கு
வழிவகுத்த வாலாம்பிகை
16
திருமதி பரமேஸ்வரி போலவே, திருமதி வாலாம் பிகையும் கார்த்திகேசன் என்ற கம்யூ னிஸ்ட்டைக் கைப்பிடித்த as TeoLib முதல் ஒரு பூரண கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த உத்தமப் பெண்மணி ஆவார். கம்யூனிஸ்ட் கார்த்திகே சனின் வாழ்க்கையும் வாலாம்பிகை கார்த்திகேசனின் வாழ்க்கையும் ஒன்றே ஒன்று. அவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.
கம்யூனிஸ்ட் என்ற முறை யில் கார்த்திகேசன் பூரணமான தோர் வாழ்க்கை வாழ உதவியவர் திருமதி வாலாம்பிகை ஆவார். கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் கூட்டங்களில் உரையாற்றித் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது தவிர அவர் நேரடியாக அரசியல் வேலைகளில் ஈடுபடவில்லை. ஆனால் அவரு டைய குடும்ப வாழ்வின் ஒவ் 66 indb கணமும் அரசியல் மூச்சுப்பட்ட தாகவே அமைந்தது.
4O ஆடம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கார்த்திகேசனின் துணைவியாகியது முதல் அக்காலக்
 

கம்யூனிஸ்ட்டுக்கள் அனுபவித்த அத்தனை இடர்களையும் அவரும் அனுபவித்தார். இறக்கும் போதும் சொந்த வீடற்றவராகவும், நகைநட்டு அற்றவராகவுமே அவர் இருந்தார்.
35 ஆண்டுகளாக அவர் வீட்டுப் பாரத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவர் குடும்ப நிர்வாகத்தைத் திறம்படச் செய்தார். ஓய்வு ஒழிச்சல் இல்லாது வந்துகொண்டேயிருந்த விருந்தினர்களை உபசரித்தல், பிள்ளைகளை வளர்த்துக் கல்வி அளித்தல், நிதி நிலைமைக்கு ஏற்பப் பொருள்களை வாங்கிக் குடும்பத்தை நடத்துதல் ஆகிய அனைத்தையும் அவரே கவனித்தார். கார்த்திகேசனின் குடும்ப வாழ்க்கையின் சிறப்பு அனைத்தும் திருமதி வாலாம்பிகைக்கே உரியதாகும்.
திருமதி வாலாம்பிகை இன, மத சாதிபேதங்களைப் பாராட்டாத ஒரு பெண்மணி ஆவார். இன்னும் கூறுவதென்றால், ஏழைகள், தொழிலாளர்கள் பால் அவர் அபரிதமான அன்பும், கருணையும் காட்டினார். அவர்களுடைய குழந்தைகளையும் அன்புடன் கவனித்தார்.
தனது இறுக்கமான பொருளாதார நிலையிலும் கஷ்டப்பட்ட உறவினரின் பிள்ளைகள் பலரைத் தம்முடன் வைத்து வளர்த்துக் கல்வியூட்டியதுடன், பல ஏழைப் பிள்ளைகளுக்குக் கல்விக்காகப் பண உதவியும் புரிந்தார். நோயுற்றிருந்த இறுதிக் காலத்தில் கூட அவர்களுடைய 1943 ஆம், 44 ஆம் ஆண்டுகளின் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கையை நினைவூட்டிய போதெல்லாம் அவருடைய கண்களில் பிரகாசமான ஒளி வீசியதை அவதானிக்க முடிந்தது.
கார்த்திகேசன் மாஸ்ரரைப் போலவே நகைச்சுவையாகப் பேசும் திறமை படைத்தவர் திருமதி வாலாம்பிகை, சிலவேளைகளில் மிகவும் காரமாகவும் அவருடைய நகைச்சுவை அமைந்துவிடும். மார்க்ஸிஸம் "பேசும்” ஒருவர் தாடியுடன் வந்தார். "தாடி வைத்தால் எல்லோரும் மார்க்ஸிஸவாதியாகிவிட முடியுமா” என்றார் திருமதி வாலாம்பிகை.
போலிகளைக் கண்டுணரும் திறமை திருமதிபரமேஸ்வரி, திருமதி வாலாம்பிகை ஆகியோரிடம் அமைந்திருந்தது. ஆனால் கட்டுப்பாடு கருதி தமது கருத்துக்களைக் கட்டுப்படுத்திக் கொண்ட பெண்மணிகள் அவர்கள்.
17

Page 11
அன்புத் தேவதை பிலோமினம்மா
மக்கள் எழுத்தாளர் கே.டானியலின் துன்ணைவியார் திருமதி பிலோமினம்மா மேற்கூறிய பெண்மணிகளிலும் பார்க்கப் பல விஷயங்களில் வேறுபட்டிருந்தாலும் முற்போக்கு இயக்கப் பணிகளுக்கும் கம்யூனிஸ்ட் இயக்க வேலைகளுக் கும் அவர் ஆற்றிய பங்கு இவர்களு டைய பங்கிற்குக் குறைவானது அல்ல.
சமூகத்தின் அடித்தட்டில் தோன்றி, நித்திய வறுமையில் உழன்ற ஒருவருக்கு வாழ்க்கைப்
பட்ட திருமதி பிலோமினம்மா,
18
பிற்காலத்தில் அவர்களுடைய பொரு ளாதார நிலைமை முன்னேறிய போதும் பல்வகைப் போராளிகளை முகங்கோணாது உபசரிக்கும் ஓர் அற்புதப் பெண்மணியாகவே திகழ்ந்
தார.
சடுதியாக வந்திறங்கும் விருந்தினர்களை உபசரித்துவிட்டு வெறும் சோறுண்டதிருமதி பிலோமி னம்மாவும் இதே நிலைமையில் மீத மிருக்கும் இரசத்திற்கு வெந்நீரை விட்டு வெறும் சோற்றை உண்ட
 

திருமதி வாலாம்பிகையும் ஒத்த தன்மை உடையவர்கள் ஆவர்.
வந்தவர்கள் அண்ணன் தம்பியா, அக்கா தங்கையா, உறவினர்களா? இல்லவே இல்லை. இலட்சியங்களால் இணைந்தவர்கள். இவை எல்லாம் தனக்கும் புரியும் என்ற பாங்கில் திருமதி பிலோமினம்மா ஒரு மெளனத்தாயாக அன்புத் தேவதையாகக் காட்சியளிப்பார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உரிமைப் போராட்டங்களின்
வெற்றியில் திருமதி பிலோமினம்மா போன்றவர்களுக்கும் நிச்சயமான பங்குண்டு.
I9

Page 12
தொடர்புகளுக்கு.
ழுந்து
685
5ア,
த பிளேஸ்
蚌 கொழும்பு - 06
LD5él
20
 


Page 13

கிய சஞ்சிகை