கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கோவன் கதைகள்

Page 1

邀

Page 2

இளங்கோவன் கதைகள்
வி. ரி. இளங்கோவன்
வெளியீடு:
உமா புதிப்பகம், 521/1B, காலிவீதி, கொழும்பு - Oe.

Page 3
இளங்கோவன் கதைகள் (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர் வி. ரி. இளங்கோவன்
பதிப்புரிமை ஆசிரியருக்கு
ISBN: 955-1162-12-9
முதற்பதிப்பு 2006, வைகாசி
நூல் வடிவமைப்பு, அச்சுப் பதிப்பு : கிறிப்ஸ், 70/7, கனல் வீதி, ஹெந்தளை, வத்தளை.
வெளியீடு : உமா பதிப்பகம், 521/1B, காலி விதி, கொழும்பு - 06
ഖിഞ്ഞേ : 200,00

முன்னோடிகள்
S
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
s
நாவேந்தன்
கே. டானியல்

Page 4

"நீர்த்தாமசண்யமான யதார்த்தம்"
- முன்னுரையாக ஒரு குறிப்பு
இளங்கோவனின் இச்சிறுகதைத் தொகுதியில் அவர் தமது முகவுரையிலே குறிப்பிட்டுள்ளதற்கிணங்க, ஈழத்துத் தமிழரின் பிரான்ஸ் நிலைப்பட்ட வாழ்க்கையனுபவங் களே தளமாக அமைந்துள்ளன.
இத்தொகுதியில் இடம்பெறும் சிறுகதைகளை வாசித்த பொழுது நிர்த்தாட்சண்யமான யதார்த்தம்' என்ற சொற்றொடரே என் மனதினுள் மேலோங்கி நிற்கின்றது.
சமஸ்கிருத இலக்கிய விமர்சன முறையில் த்வனிப்' பொருள் என ஒர் இலக்கிய நடைமுறையை மிக விரிவாகவே ஆராய்ந்துள்ளனர். ஒரு விடயத்தைச் சொல் லுகின்ற எடுத்துரைப்புமுறை அதிற் பயிலும் மொழியின் நடை என்பன எழுதப்படும் பொருள் பற்றிய ஆசிரியரது கருத்தினைத் தொனிப் பொருளாக உணர்த்தும் முறைமை இது. (விடயப் பொருள் என்ற கருத்துடைய "theme" எனும் ஆங்கிலச் சொல்லுக்கு யாரோ ஒருவர் தொனிப்பொருள் என்று கூறிவிட இலங்கையில் இன்று தொனிப்பொருள்

Page 5
என்பது விடய உள்ளடக்கத்தைக் குறிப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஓர் அவல நிலை உள்ளது) இங்கு நான் த்வனி என்பதை அதன் மூலச்சொல்லில் உள்ள"tone"என்ற கருத்திலேயே பயன்படுத்துகின்றேன்.
தமிழ்ச் சிறுகதை மரபில் புதுமைப்பித்தனின் கதைகள் பலவற்றில் த்வனிப் பொருளின் அற்புதமான தொழிற் பாட்டைக் காணலாம். 'எப்போதும் முடிவிலே இன்பம், 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் போன்ற புதுமைப் பித்தனின் கதைகளை வாசிக்கும் பொழுது த்வனிப் பொருளுக்குள்ள சமூகக் குறிப்புரை முக்கியத்துவம் புலப்படும்.
நண்பர் இளங்கோவனின் இக்கதைகளை புதுமைப் பித்தனது படைப்புக்களுடன் ஒப்பிட்டு நான் ஆராய விரும்பவில்லை. புதுமைப்பித்தனது சிறுகதைகளின் பிரதான அம்சங்களான மொழிநடை, அதன் ஈடிணையற்ற செழுமை ஆதியனவற்றை இத் தொகுதியிலே நிச்சயமாகக் காணமுடியவில்லை. எனினும், இளங்கோவனின் கதை கூறும் மனநிலை மிகத் துல்லியமாகப் புலப்படுகின்றது. புகலிட வாழ்க்கையில் தெரியப்பட்டுள்ள பெறுமான மாறுபாட்டு அவலத்தை இளங்கோவன் 'பிய்த்து வைக்கிறார்."
தமிழ்ப் புகலிட இலக்கிய வரலாற்றில் பிரான்ஸுக்கு மிகக் காத்திரமான ஒர் இடமுண்டு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் நின்று நோக்கும்பொழுது பிரான்ஸின் புகலிடத் தமிழிலக்கியத்தில் ஒர் ஆழமான பன்முகப்பாடு உண்டென்பதை மறுப்பதற்கு இல்லை. அந்தப் பன்முகப்பாட்டுக்கு இளங்கோவனின் இச் சிறுகதைத் தொகுதி ஓர் விஸ்தரிப்பைக் கொடுக்கின்றது
- 6 -

என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். இச் சிறுகதை களுக்குரிய 'கைவினைத் திறனும் மொழியாட்சியும் இணைய வேண்டிய அளவுக்கு இணைந்திருப்பின் இத்தொகுதியின் இலக்கிய மதிப்பு இன்னும் முக்கியப் பட்டிருக்கும். ஆனால், இளங்கோவனோ அடிப்படையில் சிறுகதையாசிரியரல்லர். தன் கவிதையாக்கங்களுக்கே அவர் முக்கியத்துவம் கொடுப்பவர். இத்தொகுதியோ அடிப்படையில் சமூக அவதானிப்புக்களாகவே அமைந் துள்ளன. இந்தக் கதைகளினூடே நமது பாரம்பரியச் சமூகப் பெறுமானங்களினது தகர்வினை, இடிபாட்டைக் காண்கிறோம்.
அண்மைக் காலத்தில் தமிழ்ப் புகலிட இலக்கியத்தை மேற்கூறிய பெறுமான மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தில் ஆராய வேண்டிய ஒரு தேவையுள்ளது.
இச்சிறுகதைகளினூடே மேற்கிளம்பும் பாத்திரச் சித்திரிப்புச் செழுமைக்காக இளங்கோவனை வாழ்த்து கின்றேன்.
இறுதியாக, ஒரு குறிப்பு அவசியமாகின்றது. இளங் கோவன் தனது முகவுரையில் இலங்கையின் முற்போக்கு எழுத்து முறைமைக்கும் தனக்குமிருந்த அனுபவத் தொடர்ச்சிகளைக் குறிப்பிடுகின்றார். இலங்கையின் பிரதான முற்போக்கு எழுத்தாளர்களை முற்போக்கு இலக்கிய நிலை நின்று மதிப்பிடுவதற்கு வேண்டிய இளந் தலைமுறை ஆள்வலு இல்லாதுள்ள இன்றைய வேளையில் டானியல் போன்றோரது நினைவு இத்துறையிலுள்ள பாரிய எதிர்பார்ப்புக்களை சூசகமாகச் சுட்டுகின்றதென லாம். நண்பர் இளங்கோவனுக்கு எனது வாழ்த்துக்கள்.
அன்புடன், கொழும்பு கார்த்திகேசு சிவத்தம்பி O7. O3. 2006

Page 6
என்னுரை
சின்னஞ்சிறு வயதிலேயே பழந்தமிழ் இலக்கியப் போதனை எனக்கு அடுப்படியிலேயே கிடைக்க ஆரம்பித்தது.
ஆமாம். ஒழுங்காகக் கையெழுத்துப் போடத் தெரியாத என் தாயிடம் நான் கேட்ட பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள், கதைகள், புராண, இதிகாச நீதிக்கதைகள் ஏராளம். ஏராள்ம். .
பல்லாயிரம் பாடல்களை மனதில் வைத்திருந்து, சமய சந்தர்ப்பங்களில் அவற்றைக் கூறி விளக்கும் ஆற்றல் எமது பெற்றோருக்கு இருந்தது.
இதனால் தான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் இலக்கிய விருப்பும் பரிச்சயமும் ஏற்பட்டதெனலாம்.
மூத்த சகோதரர் நாவேந்தன் (திருநாவுக்கரசன்) பத்து வயதிலேயே பாரதியாரின் "பாஞ்சாலி சபதத்தை வாசிக்க என் தாயார் அப் பாடல்களைக் கூறி விளக்கம் கூறுவாராம்.
- 8

அப்படியே தான் எங்கள் வளர்ச்சி.!
எழுபதுகளின் நடுப்பகுதியில் ஒரு சில சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் எழுதினேன். அவற்றைத் தோழர் கே. டானியலிடம் வாசித்துக் காட்டினேன்.
சமுதாயப் பார்வை இருப்பினும் வாழ்வின் வளத்துக்கு வழிகாட்டுவனவாக, நம்பிக்கையூட்டுவனவாக அமைய வேண்டும். ஆபாச வர்ணனைகள் மேலோங்காமல் பார்க்க வேண்டும்" என்றார். அத்துடன், "உனக்குக் கவிதை தான் நன்றாக வருகிறது. அதனால் தொடர்ந்து கவிதையில் கவனஞ் செலுத்து' என்றார்.
அப்போது ஒரு சில கதைகள் பிரசுரமாகின.
கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் ஒரு கதை பரிசு பெற்றது ஞாபகம்.
உள்ளக் கொதிப்பு, உணர்வுத்தூண்டுதலின் போது எழுத வருவது கவிதைகளாகவே அமைந்தன.
நாட்டிலும், புலம்பெயர்ந்த பின்னரும் மேடை, வானொலி, தொலைக்காட்சிக் கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கிச் சொன்ன கவிதைகள் ஏராளம். அதற் கெனவே அதிகம் கவிதைகள் எழுத வேண்டியிருந்தது. சிறிது காலம் சிறுகதைகள் எழுதவில்லை.
பாரிஸ் வந்த நாட்களில் 'பாரிஸ் ஈழநாடு’ ஆசிரியர் நண்பர் எஸ்.எஸ்.குகநாதன் வேண்டுகோளுக்கிணங்க இலக்கியப் பகுதி சிறப்புற சிறிது காலம் உதவினேன். அப்போது சில கதைகளும் எழுதினேன்.

Page 7
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள, உலகில் மிகச் சிறந்த விமானங்கள் தயாரிக்கப்படும் அழகிய, அமைதி மிக்க நகரான துலூஸ் நகரில் கடந்த பன்னிரண்டு ஆண்டு களுக்கு மேலாக வசித்துவருகின்றபோதிலும் அவ்வப் போது ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் இலக்கியப் பயணங்கள் போவதுண்டு. அவ்வேளைகளில் 'ஏன் அதிகம் எழுதுவதில்லை." என நண்பர்கள் கேட்பதுண்டு. இயந்திர வாழ்வின் நெருக்கடிக்குள்ளும், சாம வேளைகளில் விழித்திருந்து மனதில் நீண்ட காலமாகப் புடம் போட்டு வைத்திருந்த சில கதைகளை எழுதி முடித்தேன். அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகின.
சிறு வயது முதல் மூத்த சகோதரர்களின் பாதையில், கலை, இலக்கிய, அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தாலும், நானாக விழிப்புணர்வு பெற்றுச் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் முற்போக்கு இலக்கிய இயக்கத்தினரால் கவரப்பட்டேன்.
அருமைத் தோழர் கே. டானியல், பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், பாரதிநேசன் வீ சின்னத்தம்பி போன்றோரின் தோழமை. நட்பு, வழிகாட்டுதலுடன் ஏராளமான இளந் தலைமுறையினரை அன்று இலக்கிய அணியில் இணைத்திட்டோம்.
கே. டானியல் தலைவராக விளங்கிய 'மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயலாளராகவும் பணி யாற்றிட முடிந்தது.
ஏற்கனவே மூன்று கவிதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுப்புகள் எனப் பதினைந்துக்கு மேற்பட்டநூல்களை
- 10

வெளியிட்டிருப்பினும் இச்சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டில் எனக்கொரு திருப்தி.!
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் யாவும் கற்பனை வாசகங்கள் அல்ல. என்றும் சமூகத்தில் உறவாடி, மக்களுடன் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் - உண்மை யான, உணர்வுபூர்வமான சம்பவங்களின் வெளிப்பாடு களை, உள்ளக் கொதிப்புக்களை எழுத்தில் வடித்துள்ளேன்.
புலம்பெயர்ந்த மண்ணில் சாதாரண மனிதர்களது நிறை குறைகள், வசதி வாய்ப்புகள் தேடும் ஆவலாதி, ஒரளவு அவை கிடைத்தவுடன் குடும்ப வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், மனித நேயம் மறக்கடிக்கப்படுவது எனக் கண்டுணர்ந்த, சில வெளிப்பாடுகளின் பதிவுகள் இக் கதைகளில் அடக்கம்..!
எவ்வகையிலும் பணம் தேடும் வாஞ்சை, போலிக் கெளரவம், அறிவீனங்கள் பலவற்றுடன் இடறுப்பட்டு ஒடும் எம்மவர் பலரின் மத்தியில் மனித நேயம் மிக்க படைப்பாளியாக வாழ நினைப்பது விசித்திரமாகவே சிலருக்குத் தோன்றும். என் செய்வது. காலம் 'கடத்தி விட்ட வாழ்வு.!
உண்மைகள் சிலவற்றை வலியுறுத்தித்தான் சொல்ல வேண்டும். அது சிலருக்குக் கசப்பாகவும் இருக்கலாம்.
ஆனால் "மக்களிடம் கற்றுப் புடமிட்டு மக்களிடம் கொடுப்பதுவே மக்கள் இலக்கியம்” என்பர். இவையும் மக்களிடம் பெற்ற, கற்றுக்கொண்ட அனுபவங்களின் சத்திய வெளிப்பாடுகளே..!
- 11 -

Page 8
எனது சிறுகதைகளை மனமுவந்து வெளியிட்ட பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களுக்கு என் நன்றிகள். .
இச்சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கும், அறிமுக உரை வழங்கிய பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களுக்கும் இத்தொகுதியினை வெளியிடச் சகல வகையிலும் உழைத்து அச்சிட்டு வெளிக் கொணர்ந்த சகோதரர் த. துரைசிங்கம் அவர்களுக்கும் இந்நூலை அழகுற அச்சிட்ட "கிறிப்ஸ் நிறுவனத்தினருக்கும் எனது நன்றிகள். இனி. வாசகர்களே. . உங்கள் கருத்துக் களையே வேண்டுகிறேன்.
வி. ரி. இளங்கோவன் Appt-241, Entrée-6, 115 rue Bonnat, 31 400 Toulouse, France. Tel. +335 6155003 e-mail: vitelangovanGyahoo.fr

26.86.T.
3.
?የ•
2.
Se
வெயிலும்பனியும்.
குண்ணிரும் எண்னெயும்.
ஒரு நிர்வாகசயை கூடுகிறது.
இப்படியுமா?
3buteofs
திறப்புவிழா
பிறழ்வு
ஒளிக்கீற்று.
தீயை வளர்க்கிறார்
ஒப்பரேஷன்"
elůum subsumňl
ஒன் இடம் மாறினான்
கிழக்கு நோக்கிய மேற்கு மனிதன்
காத்திருந்கு புன்னகை

Page 9

வெயிலும் பணியும்.
அது ஒரு மாசி மாதம். . பிற்பகல் நாலரை மணியி ருக்கும். ஹாலிலுள்ள 'கனப்பே'யில் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த தங்கம்மாவுக்கு புரக்கேறியது போலிருந்தது. கண்கலங்கி நீர்த்துளி விழுந்தது. உரத்துச் செருமி அடக்கிக் கொண்டார்.
ஒரு கையால் நாரியைப் பிடித்துக்கொண்டும் மறு கையால் 'கனப்பே'யின் மூலையைப் பிடித்துக் கொண்டும் எழுந்து, மெல்ல நடந்து குசினி மேசையிலிருந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்துக் குடித்துக் கொண்டார்.
மீண்டும் ஹாலுக்குள் வந்து பல்கணிப் பக்கமாகவுள்ள கதவுத் திரைச்சீலையை விலக்கி, கண்ணாடிக் கதவினூடே வெளியே பார்த்தார். மங்கல் பொழுதின் அழகிற்குள்
- 15

Page 10
புகுந்து, தேங்காய்ப் பூவை வானத்திலிருந்து கொட்டியது போல் பனிப்பூக்கள் பறந்து கொண்டிருந்தன.
"ஆஹா. என்ன அற்புதமாயிருக்குது." தங்கம்மா எல்லாக் கவலைகளையும் மறந்து பனிப்பூக்கள் கொட்டு வதை நீண்டநேரம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். குளிர் உறைந்த கண்ணாடியில் முகம்பட்டு ஜில்லெனக் குளிர்ந்த போதும் அவர் பார்வையை விலக்கவில்லை.
குதிக்காலில் ஏற்பட்ட விறைப்பு நாரி வரை வந்து முதுகுத்தண்டு வழியாக தோள்பட்டைவரை வந்து வலியெடுத்தபோது தான் தங்கம்மா பார்வையை விலக்கி மெல்ல மெல்ல நகர்ந்து மீண்டும் 'கனப்பேயில் வந்து அமர்ந்தார்.
அது மூன்றுபேர் இருக்கக்கூடிய நீண்ட "கனப்பே." கால்களை மெல்ல மெல்ல நீட்டி, தலைக்கும் குசனை' அணைவைத்து படுத்துக் கொண்டார்.
'பணி கொட்டுறதைப் பார்க்க என்ன தான் வடிவா இருந்தாலும் சுவாத்தியத்துக்கு நம்ம நாடு மாதிரி வருமா. நம்ம பிள்ளையளப் பிடிச்சுக்கொண்டுபோய் சிறையில் பூட்டி வைச்சிருக்கிறாங்கள் எண்டு சொல்லுவினமே. அந்த சிறை வாழ்க்கையும் இப்பிடித்தான் இருக்குமோ...'
மீண்டும் கண்கலங்கத் தொடங்கியது. அவர் உயிரோட இருந்தா எனக்கு இந்த நிலைமை வருமா. என்ர ராசா. சாப்பிட்டுட்டு படுக்கப் போனவர் தான். அரை மணித்தியாலம்கூட இருக்காது. கட்டிலால விழுந்தார். பேச்சு மூச்சு இல்லை. அப்பு எங்கள
- 16

விட்டுட்டுப் போய்ச் சேர்ந்திட்டார். இந்த வைகாசி யோட இருபத்திநாலு வருஷம் முடியப் போகுது."
இந்த சின்னக் கண்ணால எத்தனை காட்சியளக் கண்டிட்டன். வாத்தியார் வேலை பார்த்ததால கிடைச்ச அவர்ர பென்சன வைச்சுக் கொண்டு பிள்ளையள வளர்க்க நான் பட்டபாடு. ஏதோ. வயல் காணியளில நெல்ல விளைவிச்சும். வளவுக்குள்ள எல்லாப் புரோசனங் களையும் வடிவாப் பராமரிச்சும், காலநேரம் பார்த்து வீட்டுத் தோட்டம் போட்டும். படாதபாடெல்லாம் பட்டு இதுகள வளத்தன்."
அவர் போகேக்க. இவன் தம்பிக்குப் பதினாறு வயசு. நல்லது. கெட்டதுகளப் பாக்க அவருக்குக் குடுத்து வைக்கல்ல."
என்ர அண்ணன் கண்ணையா. அவர் இருக்கேக்க எத்தனை தரம் கேட்டிருப்பான். வடிவுக் குஞ்சான வசந்தாவை தருவியே தங்கச்சி. நான் இப்பவே கொண்டு போய் பூப்போல வளக்கிறனெண்டு.
அவர் போனதும் நாங்க எல்லாருக்கும் இளக்காரமாப் போயிற்றம். அண்ணன்ர மூண்டு பெடியன்களும் கனடாவில. அவன் நடுவிலுப்பெடியனுக்கு வசந்தாவை செய்து வைப்பமெண்டு. நான் நடந்த நடையிலதானே எனக்குக் குதிவாதம் வந்திருக்க வேணும்."
'கடைசியில பெடியனுக்கு ஒரு இடமும் சரிவராமப் போய். அவன் பெடியன்தான் எனக்குக் கடதாசி எழுதி வசந்தாவைக் கேட்டவன். என்ர மருமகன் என்ர ரத்தம் தானே. அதுக்குக் கூட என்ர சகோதரம் எவ்வளவு காசு ரொக்கம் தருவாயெண்டு. விடாப்பிடியா நிண்டு. நாலு
- 17

Page 11
லட்சம் காசா வாங்கினவன் எல்லோ. . நான் சும்மாவே விட்டனான். வீடு வளவையும் எழுதிக் குடுத்து எல்லா நகையும் போட்டு முறைப்படிதானே அனுப்பினனான்.
s
'பிள்ளையும் கனடா போய் இப்ப இரண்டு குஞ்சு களோட ஏதோ சுக பலமா இருக்குதுகள். இவன் பெடியன் பாலன் தான் என்னட்ட பென்சன் காசையும் பறிச்சு சோக்கடிச்சவன். படிப்பையும் குழப்பிப் போட்டான். என்ன செய்யிறது. செல்லம் குடுத்து அக்கம்பக்கம் விடாம பொத்தி வளத்தன். ஆனா. அவன் கூட்டாளிமாரோட சேந்து பழகாத பழக்கமெல்லாம் பழகிட்டான். சனத்தின்ர கதையளக் கேக்க சங்கயினமாப் போச்சு.
“எட மோனை. இப்பிடித் திரியாதை. நாட்டு நிலமையும் மோசமாகி வருகுது. நீ மோனை. ஏதாவது வேலையைத் தேடி உன்ர வாழ்க்கையைப் பார்க்க எண்டு நித்தமும் அழுதழுது கெஞ்சிக்
வேணும்.
கேட்டன்."
"அம்மா. நான் கப்பலுக்குப் போகப் போறன். காசு
ரெடி பண்ணு.” எண்டு ஒரு நாள் சொன்னான்."
'அவன் சொன்ன தொகை காசுக்கு நான் என்ன செய்வன். வயல் காணியள அறாவிலைக்கு வித்தன். மனுசன்ரநினைவா வைச்சிருந்த தாலிக்கொடி. இரண்டு சோடிக் காப்பு. ஒரு அட்டியல். பதக்கம் சங்கிலி. . எண்டு என்னட்ட இருந்த நகை எல்லாம் வித்துக் காசாக்கினன். இருந்த ஒரு தேயிடை ஒற்றப்பட்டு சங்கிலி மட்டும்தான் என்ர கழுத்தில...'
- 18 م.

ஆறு மாதம் கொழும்பில நிண்டு. சோக்கடிச்ச பிறகு. கப்பல் ஏறியிட்டன் எண்டு பம்பாயில இருந்து கடிதம் போட்டான். பிறகு கனகாலம் கடிதமே இல்லை. . நான் வேண்டாத கடவுள் இல்லை."
'பக்கத்து வீட்டு ராசம்மா தான் எனக்கு உதவி. நாடும் குழம்பிக் கொண்டு வந்தது. தபால் போக்குவரத்தும் குறைஞ்சு போச்சுது. எண்டு சொல்லிச்சினம்."
ஒரு வருஷத்துக்குப் பிறகு ஒரு நாள் கள்ளியங்காட்டுப் பெடியன் ஒருவன் வீடு தேடி வந்தான். வந்தவன் தான் பாலாவோட கப்பலில வேலை செய்யிறதெண்டும். இப்ப லீவில வந்ததெண்டும் சொல்லி. பாலா தந்ததெண்டு கடிதமும் காசு 25,000 ரூபாயும் தந்தான். என்ர. முருகா எண்டு. கையெடுத்து கும்பிட்டு வாங்கினன்.”
"அம்மா. நான் அடுத்த மாதம் பம்பாய் போய் கப்பல் ஏறுவன். பிறகு கப்பல் எகிப்துக்குப் போகும். பிறகு பிரான்சுக்குப் போகும். அப்ப. நானும் பாலனும் பிரான்சில இறங்கியிருவம். அங்க அகதி அடைக்கலம் கேட்கலாமாம். அங்க தொழில் வசதிகள் இருக்காம். நீங்க. ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. பிரான்சில இறங்கினவுடன பாலன் கடிதம் போடுவான்." அந்தப் பெடியன் சொல்லிற்றுப் போச்சுது. பெரிய ஆறுதலா
தம்பி பாலனும் பிரான்சுக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாகப் போகுது. பிரான்சுக்கு வந்து இரண்டு வருஷத்தில என்னையும் கொழும்பில வந்திருக்க ஒழுங்கு செய்திற்றான். ஊரில நிலைமை மோசமாகிப் போச்சுது. போட்டது போட்டபடி விட்டுட்டு வெளிக்கிட்டனான் தான். வீடுவளவு என்னமாப் போச்சுதோ. ஆரு கண்டம். .

Page 12
கொழும்பில இரண்டு இடத்தில மாறி மாறி பதினொரு வருஷம் இருந்திட்டம். என்ர பென்சன் காசு எனக்கு மட்டுமட்டாகக் காணும். ஆனாலும் அவள் பிள்ளை வசந்தா இருந்திட்டு ஐஞ்சு. பத்து எண்டு அனுப்புவாள். இவனும் அப்பிடித்தான் அனுப்பினவன். எனக்கென்ன செலவு. அங்க எல்லாக் கோயிலுகளுக்கும் போனன். மாறி மாறி பிள்ளைகளுக்கெண்டு அருச்சினை தான் செய்தன்."
அப்ப ஒரு நாள் தான் பக்கத்து வீட்டில இருந்த குடும்ப மொண்டு அறிமுகமாச்சு. அதுகளுக்கு மூண்டு பொம்பிளைப் பிள்ளையஸ். ஒண்டு கலியாணம் செய்து கனடா போயிற்றுதான். இரண்டாவது ஏதோ பேச்சுக் காலோ. அல்லது காதல் கீதலோ தெரியாது. சுவிசுக்குப் போகப் போறனெண்டு சொல்லிச்சுது. அதுகளும் தகப்பன் இல்லாததுகள். கனடா போன பிள்ளைதான் இடைக்கிடை கொஞ்சம் காசு அனுப்பிறதாம்.'
"இந்தப் பிள்ளையள வைச்சுக்கொண்டு நான் என்ன செய்யப் போறன்.” தாய் ம்னிசி என்னைக் காணும் போதெல்லாம் கண்ணிர் விடும். ஒருமூக்கு மின்னி நகை யும் இல்லையெண்டு சொல்லும். எனக்கும் அப்பதான் ஒரு நினைவு வந்தது. எந்தப் பகுதி ஆக்களெண்டு விசாரிச்சன் தூரத்து அடியில எங்களுக்கு உறவாத் தான் வந்திச்சுது.
'பிள்ளையின்ர சாதகத்தை வாங்கிக்கொண்டுபோய் மகனின்ர சாதகத்தோட பொருத்தம் பார்க்க தெகிவளைச் சாத்திரியிட்டக் குடுத்தன். எண்பது வீதம் நல்ல பொருத்தம். செய்யலாம் எண்டான்."
- 20

'மகன் ரெலிபோன் எடுக்கேக்க விஷயத்தைச் சொல்லி முற்றாக்கிப் போட்டன். அப்ப அவனுக்கு நஷனாலிற்றி யும் கிடைக்கேல்ல. சிங்கப்பூருக்குப் பொம்பிளையை அனுப்பச் சொன்னான். எனக்கு உடல்நிலை சரியில்லாததால போக முடியேல்ல. பொம்பிளையையும் அதுகளின்ர ஒண்டவிட்ட அண்ணன் முறையான ஒருவனையும் சேத்து அனுப்பிவைச்சன். அங்க செலவு. பொம்பிளைக்கான நகை நட்டு எல்லாம் என்ர செலவு தான். ஏதோ நல்லவிதமா கலியாணமும் நடந்து இரண்டு கிழமையால பொம்பிளை கொழும்பு திரும்பிச்சுது."
அந்தக் கையோட கொஞ்ச நாளையில பாலனுக்கும் நாஷனாலிற்றி கிடைச்சிட்டுது. பிறகு ஆறு மாதத்துக் கிடையில மருமகளும் பிரான்சு போயிற்றா. . தாய் மனிசி. அதுதான் சம்மந்தி. என்னை கையெடுத்து
கும்பிட்டுது. அது நல்ல பிறவி.
இப்ப இரண்டு வருஷத்துக்கு முந்தி இவன்
கொழும்புக்கு வந்து என்னவோ அலுவல் எல்லாம் பாத்து
இவன் என்னையும் இஞ்ச கொண்டுவந்திட்டான்."
இஞ்ச வந்து பாத்தா இவன் இரவு பகலா றெஸ்ரோ றன்ற் வேலையெண்டு பறந்து திரியிறான். அவளும் அங்க தான் வேலையெண்டு பகலா இரவா ஒடித் திரியிறாள். ஏதோ கார்வைச்சிருக்கிறதால அலுப்பில்லாம ஒடுதுகள் போல. .
'இரண்டு கடுவன்கள் பெத்து வைச்சிருக்கிறாள். ஐயோ. . அதுகளின்ர நெட்டூரம் தாங்கேலாது. மத்தியானம் இரண்டும் பள்ளிக்கூடத்தில சாப்பிட்டு பின்னேரம்தான் வருவினம். நான்தான் மத்தியானம் சோறு கறி காய்ச்சி வைக்கிறது. .
- 2 -

Page 13
"அதை இரவு கடுவன்கள் சாப்பிடாங்கள். அவங் களுக்கு 'சான்விச் செய்து குடுக்கவேணும். இல்லை யெண்டாரொட்டிசுட்டு அதோடஏதோ பெரிய பேனை மாதிரி இறைச்சி உறுண்டையாம். அதைப் பொரிச்சோ அல்லது அதுமாதிரி இருக்கும் இன்னுமொரு உறுண்டையை சின்னன் சின்னதாக வெட்டிப் பொரிச்சு இருக்கவேணும். படுக்கப் போகேக்க பால் காச்சி அதுக்குள்ள 'சொக்கோளா பவுடர் எண்டு போட்டுக் குடுக்கவேணும்.'
நடுச்சாமத்தில தாய் தகப்பன் வரும்வரை அறைக்குள்ள பிரெஞ்சு ரி. வி. பாத்தபடி இருப்பாங்கள். கதவில சத்தம் கேட்டவுடன. போத்துக்கொண்டு படுத்திருவாங்கள். நான் ஏதும் சொன்னா. 'அப்பம்மா சாப்பாடு தரேல்ல. அது நல்ல சாப்பாடு இல்ல. பாலுக்குள்ள உப்பை போட்டுத் தாறா. “ எண்ட மாதிரி கோள் சொல்லு வாங்கள். இது ஆர்ர பரவணிக் குணமோ தெரியாது. .'
சாமத்தில வந்து அவன் கொஞ்சநேரம் தமிழ் ரி. வி. பார்ப்பான். எனக்குத்தானே நித்திரை வராது. நானும் போயிருந்து செய்தி கேட்பன். அப்பிடித்தான் காலமை யும் கொஞ்சநேரம் அவனோட இருந்து பாப்பன். பிறகு அவை வெளிக்கிடைக்க. அவள் பொடிச்சி அந்த ரி. வி. ரிமோட்டை ஒளிச்சுவைச்சுப் போட்டு போவா. நானும் அதை தேடுறதில்லை. இது அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் தம்பி “ரி.வி.யில பகல் முழுக்க சுனாமி அடிச்ச தெல்லாம் காட்டினாங்களாம். பாத்திங்களா. அம்மா." எண்டு கேட்டான். நான் ஒண்டும் பேசயில்லை. "ஏனம்மா. பாக்கேயில்லையா..." எண்டு திருப்பித்
- 22

திருப்பிக் கேட்டான். நான் என்ன சொல்லுறது. “அது தான் ரிமோட்டைக் காணேயில்லையே”. எண்டன்."
அவள் சொன்னாள். 'பகல் முழுக்க அவ ரி. வி. பாத்தா கறண்ட் பில் எங்க வரும். பிறகு ஏதோ இரவிரவா அறைக்குள்ள அடிபிடிப் பட்டினம்.'
ஒரு கிழமையா அவ என்னோட மூஞ்சி நீட்டினபடி தான். மூக்கு மின்னி தொட்டு சகலதும் போட்டு நான் அனுப்பின பொம்பிளை. இப்ப எனக்குக் கணக்கு வழக்குப் பாக்குது. .
'ஏதோ அவளின்ர சிக்கனத்தால தான். மாடிவீடு
வளவும் வாங்கி. நகைநட்டும் அந்த மாதிரி வாங்கி வைச்சுக் கொண்டு வாழுதுகள். அவையின்ர சந்தோஷம் பாத்திற்றன். .'
'எனக்கு. என்ர ராசா. கண்மூடின இடத்தில கிடந்து தான் போகவேணுமெண்டு ஆசை. ஒண்டுக்கு மேலே ஒண்டு எண்டு இரண்டு 'சொக்ஸும் போட்டுக்கொண்டு இங்க. இந்தக் குளிருக்க. இந்த நாட்டில கிடந்து சாக வேணுமா..?
‘என்ன சுவாத்தியமான நாட்டை விட்டுட்டு. . எப்ப தான் நாட்டுப் பிரச்சினைதீருமோ.. ம். என்ர முருகா.
D. . . . . . . .
நீண்ட பெருமூச்சு. .
'குதிக்கால் கொதிக்குது. கால் நரம்பெல்லாம் இழுக்குது. டொக்டரிட்ட கொண்டுபோய் காட்டினா. சலரோகம் வந்திற்றுது எண்டு சொல்லி குளிசை தந்திருக்கிறார். மூக்கால. கண்ணால ஒடுது. தலை
- 23 -

Page 14
கொதிக்குது. சளி அடைப்பு. கண் மூடி ஒரு நிமிஷம் நித்திரை கொள்ளவிடாது. அஞ்சாறு குளிசைகளையும் போட்டுக்கொண்டு பகல் பொழுதில இந்த இடத்தி லேயே கிடந்து நினையாது நினைச்சு அழுகிறன்."
அவள் பிள்ளை வசந்தாவும் "கனடாவுக்கு வாஅம்மா." எண்டுதான் கேக்கிறாள். ஒருக்கா இஞ்ச வந்து பாத்திற் றும் போனாள். இஞ்சயே இப்பிடியெண்டா. கனடா குளிர கேள்விப்பட்டதும். நான் அந்தப் பக்கம் திரும்பி யும் பாக்கமாட்டன் எண்டுசொல்லிப் போட்டன்."
இப்பிடியே இந்த சிறை வாழ்க்கை எத்தனை நாளைக்கோ. . என்ர சீவன் எங்க தான் . எப்பிடிப் போகப் போகுதோ..?. ம்..!"
- 24

குண்ணிரும் எண்னெயும்.
6 ந யினாதீவு நாகபூஷணியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு அள்ளுப்பட்டு அந்நாட்களில் சனங்கள் போவார்கள். புங்குடுதீவின் குறிகாட்டுவான், இறுப்பிட்டித்துறைமுகங்கள் சனங்களால் நிரம்பி வழியும், அதுபோலத்தான் எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ச் சனம் ஐரோப்பாவுக்கு அள்ளுப்பட்ட காலம்.
ரஷ்யாவின் "ஏரோபுளட்" விமானமூலம் குறைந்த செலவில் மொஸ்கோ வழியாக பேர்லின் வந்து குவிந்து கொண்டிருந்த நேரம்.
செல்வரத்தினமும் அவ்வாறே பேர்லின் வந்து சேர்ந்தவன். 'காம்பிலிருந்து பின்னர் அங்கு தங்கி, இங்கு தங்கி என அலைந்து ஒருவாறு பாரிஸ் வந்து சேர்ந்தான். பன்னிரண்டு பேர்தங்கியிருந்த ஒர் அறையில், ஒருவனாக முடங்கிக் கொண்டான்.
- 25 -

Page 15
அவனவனின் காலைப்பிடிக்காத குறையாகக் கெஞ்சி மன்றாடி பொலிசுக்குப் போய் விசாவுக்குப் பதிந்து, தமிழில் "கேஸ் எழுத ஆயிரம் 'பிராங்கும் அதனைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க ஆயிரத்து இருநூறு ‘பிராங்"கும் கொடுத்து அகதி அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்தான். அந்தக் காலம் அகதிகளை வரவேற்பது போலிருந்தது. விண்ணப்பித்த தமிழரில் அதிகமானோர்க்கு விசா கிடைத்தது. பத்து வருட விசாக் கார்ட் கைக்குக் கிடைத்ததும் செல்வரத்தினத்திற்கு இலட்சக்கணக்கில் பணம் 'சுவிப்பில் வந்த மாதிரி . . மகிழ்ச்சி.
கொஞ்சச்சம்பளத்தில் பதினான்கு மணித்தியாலம் வரை 'றெஸ்ரோறன்ரில மாடா அடிச்சுக் குடுத்துக் கொண்டி ருந்தவன், ‘விசாக் கார்ட் கைக்கு வந்ததும் ஏற்கனவே சொல்லிவைத்திருந்த ஒரு சில றெஸ்ரோறன்ற் படிகளில் ஏறி இறங்கினான். விசா இருக்கிறதெனக் காட்டி வேலை கேட்டான். ஒரு பிரெஞ்சு றெஸ்ரோறன்ரில் வேலை கிடைத்ததில் அவனுக்குப் பெரும் திருப்தி.
"புளோஞ்சர் வேலைதான். வந்து குவியும் சாப்பிட்ட எச்சில் கோப்பைகள், கிளாசுகள், கரண்டிகள் உட்பட யாவற்றையும் கழுவித்துடைத்து அடுக்க வேண்டும். காய் கறி, வெங்காயம் உட்பட சகலதும் வெட்டிக் கொடுக்க வேண்டும். சமையலுக்குப் பொறுப்பானவர் சொல்லும் வேலைகளைச் செய்தாக வேண்டும்.
குசினியில் பொறுப்பானவர் ‘செவ்" அவருக்கு அடுத்த பதவியில் மூவர். உதவியாளர் இருவர். அடுத்து புளோஞ்சர் இருவர். இவ்வாறாக எட்டுப் பேர் இரவுபகல் மாறி மாறி அந்தக் குசினிப் பகுதியில் வேலை செய்வர்.
- 26 -

அது பாரிஸ் நகரின் பிரபலமான ஒரு சந்திக்கு அருகாமை யில் அமைந்துள்ள பெரிய உணவகம் தான்.
விசாக் கார்ட் கிடைத்து நிரந்தர வேலை உறுதியானதும் 'பிரமுகர்’ ஒருவருக்கு ஆயிரம் பிராங் கொடுத்து அழைத்துக் கொண்டு அகதிகளுக்கான ஐ.நா. அலுவலகத் திற்குச் சென்று இரண்டு வருடமாக கொழும்பில் தவித்துக் கொண்டிருக்கும் தன் குடும்பத்தினை இங்கு அழைக்க விண்ணப்பம் கொடுத்தான்.
கொழும்பில் வத்தளைப் பகுதியில் ஒரு தமிழ்க் குடும்பத் தினர்தங்கியிருந்த வீட்டின் ஒரு அறையில் செல்வரத்தினத் தின் மனைவியும் நான்கு வயது மகளும் தங்கியிருந்தனர். மாதாமாதம் அவர்களுக்கு 1500 பிராங் உண்டியல் மூலம் அனுப்பிவிடுவான். அது அங்கு சுமார் 15,000 ரூபா வரையில் கிடைக்கும்.
பாரிஸ் புறநகர் பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தின் கடைசி மாடியான ஆறாம் மாடியில் ஒரு சிறிய ஸ்ரூடியோ வீடும் எடுத்து விட்டான். அதற்கு வாடகை 2800 பிராங்.
வீடு இருப்பதாகக் காட்டி, விமானக் கட்டணமும் செலுத்தி குடும்பம் வந்துசேர பதின்மூன்று மாதங்களாகி விட்டது. ஆயினும் அவனுக்கு அளவுகடந்த மகிழ்வு 5rroծr.1
இரவு பகலென வேலை செய்து மாதம் 1500 பிராங் சீட்டும் கட்டிவந்தார்.
மனைவி தங்கமலரை பிரெஞ்சு படிக்கவென வெளி
நாட்டவருக்கென இலவசமாக நடாத்தப்படும் ஒரு
- 27

Page 16
பாடசாலையில் சேர்த்தார். சமூகசேவைப் பகுதியினரைத் தேடி விசாரித்துச் சில உதவிகள் பெறமுடிந்தது. அவர்களின் சிபார்சில் தான் பிரெஞ்சுப் பாடசாலையும் கிடைத்தது.
ஆனால் மூன்று மாதம் அங்கு போய்வந்தும் தங்க மலருக்குப் பிரெஞ்சில் அரிச்சுவடி தானும் விளங்க வில்லை. பின்னர் தமிழர் நடத்தும் பிரெஞ்சுப் பாட வகுப்புக்கெனக் காசுகட்டி மூன்று மாதம் தங்கமலரை அனுப்பினார்.
இப்போது தங்கமலர் பிரெஞ்சு மொழியில் வணக்கம் கூறவும், இலக்கங்கள் சில எண்ணவும், பத்திரங்களில் பெயர், முகவரி நிரப்பவும் தெரிந்துகொண்டுவிட்டாள். கடைகளில்போய் பொருட்களை வாங்கி வரவும் பழகி விட்டாள்.
ஒரு சிறிய ஹோட்டலில் அறைகளைக் கழுவித் துடைத்துத் துப்புரவு செய்யும் வேலையும் பெற்று விட்டாள். அங்கு இரு தமிழ்ப் பெண்களுடன் சேர்ந்து தான் நான்கு மணித்தியால வேலை. இதற்குள் கர்ப்பம் தரித்து விட்ட தங்கமலருக்கு ஆண்குழந்தை பெறத்தான் விருப்பம்.
கர்ப்பமான காலம் தொடக்கம் பிரசவம்வரை எவ்வித கட்டணமுமின்றி சகல பரிசோதனைகளும் இலவசமாகக் கிடைக்கும் வசதி.
நான்காம் மாதத்தில் 'ஸ்கனர் செய்து பார்த்துவிட்டு ஆண் குழந்தையாயிருக்கலாம் என டாக்டர் சொன்னார். “பெண் குழந்தை' என்றால் கருவைக் கலைத்து விடலாமென்று தான் செல்வரத்தினமும் தங்கமலரும்
- 28 -

பேசிக்கொண்டனர். இருவரும் வேலைசெய்து காசு சேர்க்கவும் இடைஞ்சல் இருக்காதெனத் திட்டமிட்டி ருந்தனர். ஆனால் ஆண் குழந்தையென்று அறிந்ததும் மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்று வளர்க்க எண்ணினர்.
இருவருமாக வேலைசெய்து, சிக்கனமாக வாழ்வைக் கடத்தி, சீட்டுப் பிடித்து மூன்று அறைகள் கொண்ட ஒர் அப்பார்ட்மென்ட் வீடும் வாங்கிவிட்டனர்.
மூத்த மகள் மாலினிக்கு பதினைந்து வயதிலேயே காதல் அரும்பி விட்டது. இரண்டு வருடக் காதல் கனிந்து அவர்கள் தனிக் குடித்தனம் சென்றுவிட்டனர். தற்போது அவள் சுப்பர்மார்சே ஒன்றில் 'கஷியராக வேலை செய் கின்றாள்.
அவர்களை செல்வரத்தினமும் மனைவியும் அங்கீகரிக்க வில்லை. "வேதக்காரப் பெடியனாம். அதுக்கும்மேல அவர்கள் எந்தப் பகுதி ஆட்கள் எண்டும் தெரியாது." துக்கம் விசாரிச்ச பலரிடம் அவர்கள் இப்படிச் சொல்லி அழுது கொட்டினர்.
கைகழுவியிற்றம்' என்று சொன்னவர்கள் ஒரு வருடத் திற்குப் பின் பேரன் பிறந்ததை அறிந்ததும் பட்டும் படாமலும் பழகிக்கொள்ள ஆரம்பித்தனர். பேரனை அடிக்கடி பார்க்க ஆசைகொண்டனர்.
மகன் நிரேஷ். பதின்நான்கு வயதாகிவிட்டது. கொலிச்"சில் படிக்கிறான். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்க்கும் செல்லப்பிள்ளை.
சோறு கறி அவனுக்குப் பிடிக்காது. 'மக்டொனால்ஸ்" சாப்பாடு, "பிசா. இவைதான் அவனுக்கு விருப்பம்.
- 29

Page 17
அவர்களின் வருமானத்தை அவன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருந்தான்.
அவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பியர் குடிக்கிறான், சிகரெட் குடிக்கிறான் எனப் பலர் செல்வரத்தினத்திடம் சொல்லிவந்தனர்தான்.! பலமுறை இதனை அவர் மகன் நிரேஷிடம் கேட்டுப் பார்த்திருக்கிறார். மெளனம் தான் பதிலாக. . கண்டித்துக் கத்திப் பேசியும் பார்த்தார். ஆனால். .
நினைத்த சாப்பாடு வேணும். சோறு கறி வேண்டாம். மத்தியானம் பாடசாலை கன்ரீன் சாப்பாடு. அதற்குக் காசு கட்ட வேண்டும். மற்ற வேளைகளில் வீட்டில் சான்விச் செய்து கொடுக்கவேண்டும். 'மக்டொனால்ஸ்’ சாப்பாடு, "பிசா" தான் அடிக்கடி வேண்டும். அதனை வாங்கிவந்து கொடுக்க வேண்டும். சிலவேளைகளில் தானே போன் செய்து வீட்டிலிருந்தே "பிசா வருவித்துக்கொள்வான்.
சாப்பாட்டில்தான் இப்படி அழிக்கிறான் என்றால் சிநேகிதர்மாரோடு சேர்ந்து இந்தப் பதினாலு வயதிலேயே சிகரெட், பியர் என்று அழிவு. .
ஒரு நாள். . பகல் வேலை முடிந்து களைப்புடன் மெற்ரோ வில் வந்திறங்கிய செல்வரத்தினம் வீட்டிற்கு நடந்து வருகிறார். அந்த அடுக்குமாடித் தொடர் வீடு மெற்ரோ நிலையத்திலிருந்து அதிக தூரமில்லை. 250 மீற்றர் தூரமிருக்கும். நேரம் பிற்பகல் நான்கு மணியாகி விட்டது. வீட்டிற்கு வந்து சிறிது இளைப்பாறி விட்டு மீண்டும் ஆறு மணியளவில் இரவு வேலைக்குப் புறப்பட வேண்டும்.
- 30 -

வீதிக்கருகில் ஒரு சிறிய பூங்கா. அங்கேயுள்ள சாய்மனை வாங்கிலில் நான்கு இளவட்டங்களிருந்து உரத்த சத்தமிட்டுக் கதைப்பது கேட்டது. செல்வரத்தினம் உற்றுக் கவனித்தார். ஒரு கறுவல் பெடியன், ஒரு அடைக் கலப்புப் பெடியன், ஒரு பிரெஞ்சுப் பெடியன், அவர்களுடன் மகன் நிரேஷ். . எல்லோர் கையிலும் சிகரெட்.. வாங்கிலில் பியர் போத்தல்களும் இருக்கின்றன.
ஆத்திரம் பொங்கி வந்தது அவருக்கு...!
"நிரேஷ் . உன்ர பப்பா வாறார்.” அடைக்கலப்புப் பெடியன் சொன்னான். "அவருக்குப் பலமுறை சொல்லி யிற்றன். என்ர விஷயத்தில தலையிட வேண்டா மெண்டு. இது எங்கட சுதந்திரம். ஒண்டுக்கும் யோசிக் காதையுங்கோ. அவர் இந்தப் பக்கம் வரமாட்டார்."
'வீட்டுக்கு வரட்டும். இரண்டில ஒண்டு இண்டைக்குப் பாக்கிறன். செல்வரத்தினம் நறுமிக்கொண்டு விறுவிறு வென வீட்டை நோக்கி.
“எடியே ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையெண்டு செல்லம் குடுத்து வளத்து என்னத்தைக் காணுற. . குசினி வெக்கையிலும். பனிக்குளிரிலயும் நான் மாடா உழைச்சு முப்பதோட கூடிய முப்பத் தொண்டும் கொண்டுவந்து போட்டன். அதுக்கு கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்தன். . மூத்ததை பொன் குஞ்சு எண்டு பொத்திப் பொத்தி வளத்தன். அது என்ர பரம்பரை மானம் மரியாதை எல்லாத்தையும் காத்தில பறக்கவைச்சுப் போச்சுது. ஏதோ ஒரு பேரப் பெடியினைக் கண்டிட்டு உசிரோட இருந்தன். இந்தப் பொடி. இந்த வயதில ஆடாத ஆட்டமெல்லாம் ஆடத் தொடங்கீற்றுது."
-31 -

Page 18
தங்கமலர் மனுசனின்ர கொதியைக் கண்டதும் வாயே திறக்கவில்லை. கண்கலங்கியபடி தேத்தண்ணி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தா. தேத்தண்ணிப் பேணியை கையில் எடுக்கும் போது நிரேஷ் வீட்டிற்குள் வந்தான்.
தேத்தண்ணிப் பேணி குசினி மேசை மேலே போய் பெருத்த சத்தத்துடன் விழுந்தது. உருத்திர மூர்த்தியாக எழுந்து போய் நிரேஷின் சட்டையில் பிடித்து உலுப்பினார்.
“என்ன பழக்கமடா பழகிறாய். என்ன செற்" சேரு கிறாய். வெட்கக்கேடு. இந்த வயதில உனக்கு சிகரெட், பியர் எல்லாம் வேணுமா. உன்ரை மேசை லாச்சியிக்கை சிகரெட் பெட்டி. பல்கனியிலயும் சிகரெட் கட்டை கிடக்குது. நீயென்ன. பெரிய ஆளாயிற்றையோ. ." என்றவாறு அவன் கன்னத்தில் இரண்டு அடி. தலை மயிரைப் பிடித்து, தலையை கீழே அமத்தி முதுகில் இரண்டு அடி.
"ஐயோ. என்ர முருகா. இதென்ன. பிள்ளையைக் கொண்டு போடாதையப்பா..." இடையில் புகுந்து மனுசன் ஓங்கிய அடிகள் சிலதையும் வாங்கிக்கொண்டு மகனைப் பிடித்து அவனது அறைக்குள் விட்டு கதவைச் சாத்தினார்.
என்றவாறு தங்கம்
செல்வரத்தினம் உரத்து மூச்சு இழுத்தவாறு வந்து 'கனப்பேயில் அமர்ந்து தமிழ்த் தொலைக்காட்சியைப் போட்டுப் பார்த்தார்.
பத்து நிமிடம் கூடக் கழிந்திராது. வாசல் கதவுபலமாகத் தட்டப் பட்டது. தங்கம் கதவைத் திறந்தார். மூன்று பொலிசார் வீட்டிற்குள் வந்தனர்.
- 32

"யார் நிரேஷ். என்ன பிரச்சினை." என விசாரித்தனர்.
"நான்தான் ரெலிபோன் செய்தனனான். இந்த வீட்டில ஒவ்வொரு நாளும் பிரச்சினை. எனக்கு ஒவ்வொரு நாளும் பேசுறார். அடிக்கவாறார் அப்பா. இப்ப என்ர முகத்தில நல்லா அடிச்சுப் போட்டார். பாருங்கோ. கன்னத்தில கைவிரல் அடையாளத்தை. முதுகிலயும் அடிச்சதால நோகுது. எனக்கு நிம்மதியா படிக்க முடியுதில்லை. ஒருத்தரோடையும் சேரக் கூடாதெண்டு கட்டளை போடுறார். எனக்குச் சுதந்திரம் வேணும்."
"அம்மாவோட பிரச்சினை இல்லை. இவருக்குத்தான் நல்லா விளங்கப்படுத்துங்கோ."நிரேஷ் பிரெஞ்சு மொழி யில் நீண்ட வாக்குமூலம் கொடுத்தான்.
செல்வரத்தினம் பொலிசாரால் கொண்டு செல்லப் பட்டார். பொலிஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது. கண்ணிர்விட்டு அழுதவாறு, செல்வரத்தினம் தனக்குக் தெரிந்த பிரெஞ்சு மொழியில்தான்பட்ட கஷ்டங்களையும்
பிள்ளைகள் மீதுள்ள பாசத்தையும் கொட்டிச் சொன்னார்.
“பிள்ளைகளை அடிப்பது குற்றம். உம்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதபடியாலும் உமது நிலைமைகளை விளங்கிக் கொண்டபடியாலும் உம்மை விடுதலை செய்கிறோம்.” எனக் கூறிய பொலிசார் இந்த நாட்டுச் சட்டங்கள் குறித்தும், பிள்ளைகளின் உரிமை, சுதந்திரம் குறித்தும் நீண்ட விளக்கமளித்து அடுத்த நாள் மாலை ஐந்து மணியளவில் அவரை விடுதலை செய்தனர்.
- 33

Page 19
சமூகசேவை அலுவலகத்திலுள்ள குடும்பநல ஆலோச கரிடம் சென்று ஆலோசனை பெறவேண்டுமெனவும் கூறித்தான் அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு வந்த செல்வரத்தினம் ஒரு கிழமை வெளியே தலை காட்டவில்லை. வேலைக்கும் உடல்நிலை சரி யில்லையென லீவு போட்டார். சமூகசேவை அலுவலகத் திற்குச் சென்று ஆலோசனை பெற்று வந்ததோடு சரி. வீட்டிற்குள்ளேயே. முடங்கியபடி..
ஹாலிலுள்ள 'கனப்பே'யிலிருந்தவாறு தமிழ்த் தொலைக்காட்சி பார்ப்பார். அதிலேயே படுத்தும் கிடந்தார்.
மகனை வீட்டைவிட்டு கலைத்துவிடவும் மன மில்லை. தான் வெளியேறி தனியே வாழவும் முடியாது. பிள்ளைகளைப் பார்க்காமல் வாழ முடியுமா..?
மனைவி தங்கத்தைப் பார்க்க அவருக்கு கண்ணீர் வருகிறது. அவளுக்கும் அவ்வாறே. .
ஒரு கிழமையின் பின்னர். வளர்ந்து கடித்துக் கொண்டி ருந்த தாடியையும் நன்றாகச் சேவ் செய்துவிட்டு உசாராக வேலைக்குப் போனார். பகல்வேலை முடிந்து வரும்போது வழியிலுள்ள இத்தாலி "பிசா" கடையில் இரண்டு பெரிய "பிசா' வாங்கிக்கொண்டு வந்தார்.
கதவைத் திறந்ததும், மகன் வந்து 'மிக்க நன்றி என்று பிரெஞ்சில் சொல்லியவாறு தகப்பனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பிசா பெட்டியை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் போனான்.
-34

ஒரு சில நாட்களின் பின்னர். றெஸ்ரோறன்ரில் திருத்த வேலைகள் நடைபெறுவதால் ஒரு கிழமை செல்வ ரத்தினத்திற்கு லீவு. சனிக்கிழமை மாலை ஏழு மணி யிருக்கும். "பப்பா. இண்டைக்கு என்ர மூன்று நண்பர்கள் என்னட்ட வருகினம். ஒடிப்போய் "பிசாவும், கொக்கோ கோலாவும், 'சான்விச் பாணும் வாங்கிக் கொண்டு வாங்கோ. அம்மா. “சான்விச்" நல்லபடியாச் செய்ய வேணும்.” பிரெஞ்சும் தமிழும் கலந்த மொழியில் நிரேஷ் சொன்னான். செல்வரத்தினம் கூடையையும் தூக்கிக் கொண்டு வீதியில் இறங்கினார்.
- 35

Page 20
ஒரு நிர்வாகசயை கூடுகிறது.
சிவட்டம் நடைபெறுவதற்கான ஆயத்த வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. கெளரவ செய லாளர் இருநாட்களுக்கு முன்பாகவே அங்கத்தவர்கள் எல்லோருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்தல் கொடுத்துவிட்டார். அங்கத்தவர்கள் எல்லோரும் கூட்டத்தில் தவறாது பங்குபற்றுவது வழமை. ஞாயிற்றுக் கிழமையில் கூட்டத்தை நடத்துவது எல்லோருக்கும் வசதி. .
சங்கத் தலைவர் ஆனந்தன் ஞாயிறுகாலை ஒன்பது மணிக்கே புறப்பட்டுவிட்டார். இடையில் வாங்க வேண்டிய பொருட்களையும் வாங்கிக்கொண்டு பத்து மணிபத்து நிமிடபளவில்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆஜராகிவிட்டார்
-36 -
 

எதிர்பாராத பிரச்சினை ஒன்று வந்துவிட்டதால் கொஞ்சநேரம் தாமதமாக வருவதாகச் செயலாளர் தொலைபேசியில் சொன்னார்.
இந்த ஆளைப் பாருங்க.. எல்லாரையும் நேரத்தோட வாங்க எண்டுபோட்டு தான் பிந்தி வாறாராம். . தலைவர் புறுபுறுத்துக்கொண்டார்.
சங்க அமைப்பாளர்குலரத்தினா வீட்டில் தான் கூட்டம் வழமையாக நடைபெறும். மற்றவர்களின் வீட்டில் சங்கக் கூட்டத்தை நடாத்துவது பிரச்சினைகளை உருவாக்கி விடும். கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெறு வதுண்டு. இப்படியான விவாதங்களை தமது வீடுகளில் நடத்துவதற்கு அவர்களின் 'இல்லத்தரசிகள் இடங் கொடுக்கமாட்டார்கள் தானே...!
அமைப்பாளர் குலரத்தினா பிரமச்சாரியெனச் சொல்லிக் கொள்பவர். தனியாகவே வசிப்பவர். சகோதர இனத்தைச் சேர்ந்தவராகினும் அற்புதமான இதயமுள் ளவர். இரண்டு அறை. பெரிய ஹோல். குசினி . பிரச்சினை இல்லாத இடம். .
ஹோலில் நீண்ட மேசை சுற்றிவர எட்டுக் கதிரைகள். பக்கத்தில் மூன்று பேர் அமரக்கூடிய 'கனப்பே . . தலைவர் கொண்டுவந்த பொதியைக் குலரத்தினாவிடம் கொடுத்தார். அவர் அதிலுள்ள பொருட்களை எடுத்து மேசையில் வைத்தார்.
பொருளாளர் போல்ராஜாவும் வந்துவிட்டார். அவர் கொண்டு வந்த 'கொர்பியர் வைன் போத்தல் ஒன்றினைக் குலரத்தினாவிடம் கொடுத்தார். அவர் ஒருவிதமான புன்சிரிப்புடன் அதனை வாங்கிச் சென்று குசினி
- 37

Page 21
மேசைக்குக் கீழே வைத்தார். பொருளாளர் பெயரளவில் தான். . அவரது பங்களிப்பு அவ்வளவுதான். அவரது நிலமை அப்படி. கேட்டால் என்றும்போல் "வறுமை வாய்ப்பாட்டை வாசிக்கத் தொடங்கிவிடுவார். ஆனால் பிரச்சினையில்லாத மனுஷன். கூட்டத்தில் அதிகம் பேசமாட்டார். சிலவேளை உச்சக்கட்டங்களில் "நேயர் விருப்பம்"போல் சில கேள்விகள் கேட்பார்.
செயலாளர் வருவதற்குக் கொஞ்சம் சுணங்குமாதலால் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைப்பாளர் தலைவரிடம் கூறினார். குதிரைக் கடைக்குப் போயிருந்த விஜயபாலா உட்படச் சில அங்கத்தவர்களும் வந்துவிட்டனர்.
இது என்ன சங்கக் கூட்டம் என நினைக்கிறீர்கள்.?
இலங்கையில் ஐந்தாம் வகுப்புவரையுள்ள சிறிய ஆரம்ப பாடசாலைகளுக்கே புலம்பெயர்ந்த நாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். நிர்வாகசபைக் கூட்டமென நடத்துகிறார்கள். 'ஒன்றுகூடல்' என விளம்பரம் கொடுக்கிறார்கள். பல போட்டிகள் நடக்கு மென அறிவிக்கிறார்கள். அந்தப் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்போ அல்லது அதற்குக் கீழ் படித்தவர்களோ நிர்வாகிகளாக செயற்படுகிறார்கள். ஒடி ஒடிப் பல விதத்திலும் உழைத்துச்சீட்டுப்பிடித்துச் சேமித்து வைத்தி ருக்கும் பணத்தை, இலங்கைப் பெறுமதியில் பெருக்கிப் பார்த்தால், அவர்களை அறியாமலே ஒரு பிரமிப்பு, அகங்காரம், நெஞ்சு நிமிர்தல் ஏற்பட்டுவிடுகிறது. என்ன செய்வது. .
ஒன்றுகூடல்' விழாக்கள் பல நடாத்தி, கோட் சூட்" போட்டு படங்கள் பலவும் எடுத்து பத்திரிகைகள் பலவற்றுக்கும் அனுப்பி விடுகிறார்கள். பத்திரிகையில்
- 38 -

வெளிவந்த ‘செய்திகள், படங்கள் பலவற்றையும் பெரிய அளவில் போட்டோ கொப்பி செய்து “பிரேம் போட்டு வீட்டு வாசல் பக்கமாக மாட்டி வைத்துக் கொள்கிறார்கள்.
இந்த 'மனிதாபிமானிகள் சங்கம் வித்தியாசமான ஒரு அமைப்பு. மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை அவர்களது கூட்டம் நடக்கும். குறிப்பிட்ட ஒரு சில விடயங்கள் என்றில்லாமல் சர்வதேச சகல சமாச்சாரங்களும் அங்கு அலசி ஆராயப்படும். விவாதிக்கப்படும். காரசாரமாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படும். சின்னத்தனமான விடயங்கள் அங்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. கூட்ட முடிவில் எல்லோரும் கசப்புணர்வு இல்லாத நண்பர்களாகவே கலைவார்கள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழமைபோல. .
தலைவர் ஆனந்தன் கொண்டுவந்திருந்த ஜொனிவாக்கர் விஸ்கிப் போத்தலையும், குளிர்சாதனப் பெட்டியிலிருந்த 'பெரியர் சோடாவையும் எடுத்து மேசையில் வைத்துக் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு குலரத்தினா கூறினார்.
இந்தச் சங்கத்தில் இன மத வேறுபாடுகள் எதுவும் கிடையாது. நட்புணர்வே பெரிதாக மதிக்கப்படுகிறது. ஆனாலும் சிலவேளைகளில் உச்சநிலைகளில் அங்கத்தவர் ஒரு சிலர் இன ரீதியாகக் குறிப்பிடும் வார்த்தைகள் சில வற்றை தம்மை அறியாமலே உதிர்ந்து விடுவதுமுண்டு. அவ்வேளைகளில் தலைவரோ அல்லது செயலாளரோ குறுக்கிட்டு அத்தகைய வார்த்தைகளை வாபஸ் பெற வைத்துவிடுவர்.
சுத்தமாகக் கழுவிய "கிளாசுகள் சிலவும் மேசையில் வைக்கப்பட்டன. தலைவர் அவற்றை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.
- 39

Page 22
நல்லாக் கழுவினதுதான்." எனப் பிரெஞ்சு மொழியில் குலரத்தினா சொன்னார். தலைவர் சொண்டுக்குள் சிரித்துக் கொண்டார்.
தலைவர் 'விஸ்கி"யை திறந்து ஒவ்வொரு கிளாசிலும் சம அளவாக ஊற்றினார்.
ஒவ்வொருவரும் கிளாசுகளை எடுத்துக் கொண்டனர் "சிங்சிங். உங்கள் ஆரோக்கியத்திற்காக." என்று கிளாசு களை உயர்த்திப் பிடித்து ஒன்றோடு ஒன்று முட்டிவிட்டு முதலாவது இழுவையை ஆசையோடு ஆரம்பித்தனர்.
தலைவர் ஒரு போத்தல் “ஜெனிவாக்கர் விஸ்கியும், நான்கு கிலோ எலும்புடன் கூடிய மாட்டிறைச்சியையும் கொண்டு வந்திருந்தார். அவர் புகைக்கும் "டுனில் சிகரெட் பெட்டியும் கைவசம்.
குலரத்தினாவுக்கு மாட்டிறைச்சிக் கறிதான் விருப்பம். மற்றையோரும் அப்படியே. ஆட்டிறைச்சி சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. கோழி இறைச்சி அலுத்துப் போன ஒன்று.
எல்லோருக்கும் எண்ணெய், கொழுப்பு ஒத்துக் கொள்ளாது. உடல்நிலை அப்படி.
"மச்சாங். ஆனந். நீங். இறைச்சிக் கறியை வையுங்க. நாங் . பருப்புக் கறியும் சம்பலும் போடுறது. சோறு போட்டாச்சு. சரிங் தானே. "
தலைவர் ஆனந்தன் இறைச்சியை சிறுசிறுதுண்டுகளாக வெட்டத்தொடங்கினார். ஏற்கனவே சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தாலும் எலும்புகளில் கூட சிறு கொழுப்புப் படிவோ, சவ்வோ இல்லாமல் ஆறுதலாக இறைச்சியைத்துப்புரவாக வெட்டி முடித்தார்.
- 40

முதலாவது ரவுண்டு முடியும் தறுவாயில் செயலாளர் உலகநாதன் வந்துசேர்ந்தார்.
“மன்னிக்க வேணும். திடீரென ஆட்கள் வீட்ட வந்திற் றினம். ஒரு மாதிரி அவையை அனுப்பிப்போட்டு காரை எடுத்துக் கொண்டு வந்திற்றன். பிள்ளையஸ் ஒரு மாதிரிப் பாத்தினம். தெரியும்தானே. புத்தகப் பிரச்சினை. சந்திக்கு சந்தி மூண்டெழுத்து’ நிக்கிறாங்கள். எல்லாம் இந்த அடையாரால வாற பிரச்சினை. ம். கூட்டம் தொடங்கீற்றீங்களே. எங்க. அரைப் போத்தல் பாஞ்சிற்றுது போல..."
ஆனந்தன் ஒரு கிளாசை உலகநாதனுக்குப் பக்கத்தில் எடுத்து வைத்தார். அதில் அளவாக விஸ்கியையும் சோடா வையும் ஊற்றி ஒரே மூச்சில் இழுத்தார் உலகநாதன்.
இறைச்சிக்குள் கொஞ்சம் சூரியகாந்தி எண்ணெய் விட்டு, கணக்காக உப்பைத் தூவி, வெங்காயம், யாழ்ப்பாண ஸ்பெஷல் மிளகாய்த்தூள், கறுவாப்பட்டை சிறு துண்டு, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, மற்றும் வாசனைப் பொருட்களும் அளவாகப் போட்டு நன்றாகப் புரட்டி உருட்டிக் கொஞ்ச நேரம் ஊறவைத்தார் ஆனந்தன்.
பருப்புக் கறிக்கு மிளகு மற்றும் மாசுக் கருவாட்டுத்தூள் என்பனவும் சேர்த்துச் சுவையாக வைத்தார் குலரத்தினா. அத்துடன், பைக்கற்றில் உள்ள தேங்காய்ப்பூவை எடுத்து அதற்குள் சீனக் கடையில் வாங்கிய 'மிளகாய், உப்பு' என்பன அரைத்த கலவை, மாசுக் கருவாட்டுத்தூள், தக்காளிப் பழம், சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து சம்பல் போட்டு முடித்தார்.
- 41 -

Page 23
ஒரு போத்தல் முடிந்து உலகநாதன் கொண்டுவந்த போத்தலும் திறக்கப்பட்டுவிட்டது. விஜயபாலாவுக்கு கொஞ்சம் உஷ்ணமாகவிருந்தது. "தலைவரே. இறைச்சிக் கறி தானாக வேகும். நீங்க இஞ்ச வாங்க. இந்த ஈராக் பிரச்சினையைப் பற்றி என்ன சொல்லுறீங்க. அமெரிக்கன் செய்யிறது சரியா. சொல்லுங்க.."எனச் சிங்களம் கலந்த பிரெஞ்சில் கேட்டார்.
இறைச்சி வேகும் சட்டியைத் திறந்து கரண்டியால் ஒரு பிரட்டல் செய்துவிட்டு தக்காளிப் பழமும் வெட்டிப் போட்டுவிட்டு வந்து மேசைக்கருகிலிருந்து தனது "டுனில்" சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு தலைவர் பேசத் தொடங்கினார்.
“உலகத்தின்ர பொலிஸ்காரன் தானெண்டு நினைச்சுக் கொண்டு தொடந்து அநியாயம் பண்ணிறான் அமெரிக்கன். ஜப்பானில அணுக் குண்டைப் போட்டு லட்சக்கணக்கான சனத்தை எரிச்சான். அங்க இண்டைக் குப் பிறக்கிற பிள்ளையஸ் கூட ஊனமாகப் பிறக்குதாம். வியட்னாமில எல்லா அநியாயமும் செய்து, எத்தனையோ வருஷங்களுக்குப் புல் பூண்டே முளைக்காத அளவுக்கு எரிகுண்டுகளைக் கூடப் போட்டுப் பாத்தான். கடைசியில என்ன நடந்தது. தங்கட ஆக்கள லட்சக் கணக்கில பறி குடுத்திற்று நல்லா அடிவாங்கி முகத்திலகரி பூசிக்கொண்டு தப்பினோம் பிழைச்சோமெண்டு ஓடினான். இண்டைக்கும் அங்க காணாமப் போனதங்கட ஆக்களைத் தேடி வியட்னாமுக்கு காவடி எடுக்கீனம். அதுக்குள்ள விழுந்தனான். மீசையிலமண் புரளயில்லை. எண்ட மாதிரி. தங்கட வீரத்தைக் காட்ட "ரம்போ. கிம்போ..” எண்ட மாதிரிச் சினிமாப் படங்கள் எடுத்து
- 42 -

உலகத்து அப்பாவிச் சனங்களுக்கு விளையாட்டுக் காட்டுறாங்கள். எல்லா நாடுகளிலயும் அவங்களால தானே. பிரச்சினை. . ஈராக்கில இவங்களுக்கு என்ன வேலை. சதாம் உசேன் சர்வாதிகாரியெண்டா அதை அந்த நாட்டு மக்களோ. பக்கத்து அரபு நாட்டு மக்களோ பாத்துக் கொள்ளட்டும். இல்லை. இவங்கடகையுக்க மடங்குற ஐக்கிய நாடுகள் சபை பாக்கட்டுமன், ஏன் இவன் படை கொண்டு போனவன். பெரிய பாறைகள, கொங்கிறிற் தளங்கள உடைத்து ஆழத்துக்குப் பாயும் புதிய குண்டுகளப் பரிசோதிக்கவும், வேற புதிய ஏவுகணை களைப் பரிசோதிக்கத் தானே ஆப்கானிஸ்தானுக்குள்ள போனவன். அதால அங்கயிருந்த தலிபான் ஆட்கள் சரியெண்டு சொல்லேல்ல. .
ஆப்கானிஸ்தானிலயிருந்து ரஷ்யப் படையளைக் கலைக்கப் பின்லேடனுக்கு வெள்ளை மாளிகையில விருந்து கொடுத்து ஆயுதங்களும் குடுத்தது இவை தானே. ஏன் ஈரான், ஈராக் சண்டையில சதாம் உசேனுக்கும் அள்ளிக் குடுத்தவை தானே. பிறகு தங்கட ஆட்டத்துக்கு, சுரண்டலுக்கு சதாம் உசேன் இடம் குடுக்கேல்ல எண்ட உடன பிரச்சினை கிளப்பியிருக்கீனம். . எண்டாலும் சதாம் சுத்தமான ஈராக்கிய ஆமிக்காரன்தான். சரண டையேல்லைத் தானே. இவங்கள் தான் கொள்ளைக் காறங்கள். ஆக்கிரமிப்புக்காறங்கள். எண்டு சொல்லி யிருக்கிறான். பாத்தியளே. ஈராக் அவங்களுக்கொரு வியட்னாமாகத் தான் முடியும் பாருங்கோ..."
தலைவர் ஆனந்தனின் நீண்ட சொற்பொழிவை எல்லோரும் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண் டிருந்தனர். "என்ன விளங்கி எல்லோரும் தலையை
- 43 -

Page 24
ஆட்டிக் கொண்டிருக்கிறீங்க. . எனக்குத் தான் தமிழ் அப்படியே விளங்காட்டிலும், விஷயம் விளங்கிச்சு. . ஆனாச்சிலருக்கு..” எனச்சிறு புன்னகையுடன் கூறினார் குலரத்தினா. . தலைவர் ஆனந்தனும் புன்னகைத்துக் கொண்டார்.
இறைச்சிக் கறியை ஒடிப்போய்ப் பார்த்த ஆனந்தன். “நல்ல காலம் இன்னும் கொஞ்ச நேரம் எண்டா அடிப் பிடிச்சிருக்கும்.” என்று சொல்லிக்கொண்டு அதனை இறக்கி வைத்தார்.
ஒரு கோப்பையில் இறைச்சிக் கறி கொஞ்சம் போட்டு மேசையில் கொண்டுவந்து வைத்தார் குலரத்தினா. உஷ்ணம் கூடி ஹோலுக்குள் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்த விஜயபாலா முள்ளுக்கரண்டியால் சில இறைச்சித் துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். தலைவரும் கறியை ருசித்துவிட்டுச் சிகரெட் புகையை வளையங்களாகத் தள்ளிக்கொண்டிருந்தார்.
எப்போதும் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் போல்ராஜா கிளாசுடன் போய் 'கனப்பே'யில் இருந்து கொண்டார். அவருக்கு இந்தக் கதைகள் என்னவோ செய்தது. “ஒரு பாட்டுப்பாடுங்கோவன்.” என்றார்.
உலகநாதனுக்கும் பாட்டுப்பாட ஆசையாத்தான் இருந்தது.
"மச்சாங்.. எங்கட நாட்டில எப்ப பிரச்சினைதீரும். எங்கட நாட்டுச் சனங்கள் எல்லாம் எப்ப சண்டை, பிரச்சினை இல்லாம வாழுற காலம் வரும். என்ன வளமான நாட்டை பதவி . தங்கட இலாபங்களுக்காக சுடுகாடா மாத்துறாங்கள். மாறி. மாறி பதவிக்கு வாற
- 44 س

எல்லோரும் ஒண்டைத்தான் செய்யுறாங்கள். நாட்டைப் பற்றி சிந்திக்கிறவங்கள் குறைஞ்சுகொண்டு போகுது. எல்லாத்துக்கும் பின்னணியில தலைவர் சொன்ன மாதிரி உலகப் பொலிஸ்காரனும் அவங்கட உறவுக்காரங்களும் தான் காரணம் என்ன..” என இழுத்தார்குலரத்தினா.
தலைவருக்கோ இன்னும் ஒரு விளக்கம் கொடுக்க வாய்
உன்னியது. அதற்குள் போல்ராஜா உரத்துச் சொன்னார். "பொலிக்ரிக்ஸ் வேணாம். பாட்டுப் பாடுங்கோ.”
இதுதான் தருணமென உலகநாதன் எழுந்தார். "யாருக்காக இது யாருக்காக . " எனக் கிளாசையும கையில் ஏந்திக்கொண்டு சிவாஜி கணேசனையே விஞ்சி விட்ட நினைப்பில் பாடிக் கொண்டே நடிக்கத் தொடங்கினார். பின்னர் "பாவாடை தாவணியில் பார்த்த Ф— (фouшоп... ... ” என உருக்கமாகப் பாடினார். சும்மா சொல்லக் கூடாது. . நன்றாகத்தான் பாடினார். அவர் வாழ்க்கையோடு இணைந்த பாடலாய் இருக்கலாம். அப்படி உருக்கம். தலைவரும். "ஆஹா. . ' என ஒத்தூதத் தொடங்கி விட்டார். போல்ராஜாவும் மெல்லிய குரலில் 'கனப்பேயியில் இருந்தவாறே இணைந்துபாடி சுருதிகூட்டினார்.
இரண்டாவது போத்தல் முடிவதற்குள், கூட்டத்தில் எப்போதாவது சில வேளைகளில் வந்து நுழையும் இந்திரனும் அவருடன் வேலைசெய்யும் காந்தனும் வந்து சேர்ந்தனர். இந்திரன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்வார். ஒப்பந்த அடிப்படையில், கட்டிட நிர்மாண நிறுவனமொன்றில் மேசனாக வேலை செய்கின்றார். அவருக்கு உதவியாகக் காந்தன். .
مه 45 -

Page 25
இருவருக்கும் ஊற்றிக் கொடுத்ததோடு இரண்டாவது போத்தலும் முடிந்துவிட்டது. அடுத்த போத்தல் வாங்கு வதானால் தொலைதூரம் போகவேண்டும். ஞாயிற்றுக் கிழமையல்லவா. ...! நேரம் இரண்டரை மணியைத் தாண்டி விட்டது. இந்திரனும் காந்தனும் மூன்று மணிக்கு மேல் வேலைக்குப் போகவேண்டு மென்று சொன்னதால் அவர்களுக்குச் சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்தார் குலரத்தினா. . சாப்பாட்டை மிகவேகமாகக் கொட்டிக் கொண்டு அவர்கள் புறப்பட்டு விட்டனர். அவர்கள் அப்படித்தான் . சிலவேளைகளில் வருவர் . தமது காரியத்தைப் பார்த்துக்கொண்டு போய் விடுவர். பிரச்சினை இல்லை. .
கட்டிலுக்குக் கீழிருந்த பெட்டியிலிருந்து "போதோ வைன்' போத்தல் ஒன்றை எடுத்துவந்து மேசையில் வைத்தார் குலரத்தினா. அவரிடம் எப்பொழுதும் ஒரு பெட்டி வைன்' அதாவது ஆறு போத்தல் இருப்பில் இருக்கும். விஸ்கி ஓடி முடிய வைன் வந்து இறங்குவது 6) paOLD. . . . . . மூன்றாவது போத்தல் வைன் ஒடிக் கொண் டிருந்தது.
"இவன் தவேந்திரன் குடும்பமா லண்டனோட போய் சேந்திற்றான். . என்ன நோக்கமோ." என இழுத்தார் உலகநாதன். “அவன் எங்கதான் ஒரு இடத்தில இருந் திருக்கிறான். பிரான்சிலேயே நானறிய ஆறு இடத்தில வீடு மாறி இருந்திருக்கிறான். எங்க போய்த்தான் என்ன. சும்மா. பிள்ளையளின்ர படிப்பையும் குழப்பிக் கொண்டு. . " தலைவர் கூறி முடிக்கு முன்பு அமைப் பாளர் சாப்பாட்டுக்குக் குரல் கொடுத்தார்.
- 46 -

சோறு, கறிகள், சம்பல், களுத்துறையிலிருந்து வந்த 'அச்சாறு' எனப் பல மேசைக்கு வந்தன. அவரவர் விரும்பியபடி போட்டுச் சாப்பிட்டனர். குலரத்தினா ஒரே தடவையில் நிறையப் போட்டுச் சாப்பிடுவது வழக்கம். இரண்டாவது தடவை போட்டுச் சாப்பிடமாட்டார். தலைவர் சாப்பாட்டுப் பிரியர். எந்த நிலையிலும் இரண்டு தடவை போட்டு வெட்டுவார். உலகநாதரும் அப்படியே. . ரசித்துச் சாப்பிடுவார். விஜயபாலா கொஞ்சச் சோறு, அதேயளவுக்கு கறியும் போட்டு வேகமாக ‘வெட்டிவிட்டு எதையோ பறிகொடுத்து விட்டுத் தேடுவது போன்ற யோசனையில் சிகரெட்டும் கையுமாக ஆழ்ந்துவிடுவார். போல்ராஜா ஒருமுறை போட்டுக்கொண்டதோடு நீண்டநேரமாகப் போராட்டம் நடத்திக்கொள்வார். அவருக்கு 'உசார் கூடினால் உணவு இறங்குவது கஷ்டம் . .
ஒருவாறாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டனர். "யாராவது ஒரு பிரச்சினையைக் கிளப்ப, தலைவர் அதற்கு விளக்கங் கொடுக்கத் தொடங்க... இனி கூட்டத்தைத் தொடர முடியாத நிலை. ஒத்தி வைப்போம். நான் வேலைக்குப் போகிறேன். தலைவர் விரும்பினால் இந்தக் கட்டிலில ஒய்வெடுக்கலாம். சரி தானே. என்று கூறியவாறு குலரத்தினா ஒரு கட்டிலில் தனது வேலையை. நித்திரையை அணைத்துக் கொண் டார். உலகநாதன் "கனப்பேய்"யில் ஆழ்ந்த உறக்கத்தில். அடுத்த அறையில் விஜயபாலாவும் போல்ராஜாவும் அப்படியே.
- 47

Page 26
மாலை ஏழு மணிக்குப் பின் எல்லோரும் எழுந்து கொண்டனர். எல்லோரும் தேநீர் குடித்தனர். குலரத்தினா காரில் யாவரையும் ஏற்றி, அவரவர் வீடு நோக்கிக் கூட்டிச் (6)σσότροπri.
இப்படியாக “மனிதாபிமானிகள் சங்க” மாதாந்தக் கூட்டம், ஏனைய பல 'பழைய மாணவர் சங்கங்களின்' நிர்வாகசபைக் கூட்டங்கள் போல் இல்லாமல் அமைதி யாக, சந்தோசமாக, வழக்குகளுக்குப் போகும் பிரச்சினை இல்லாமல் இனிதே நடந்து முடிந்தது.
- 48 -

இப்படியுமா?
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட அதிவேக இரயில் வண்டி காங்கேசந்துறையை நோக்கி விரைகிறது. அது அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் ஆதியா மிடங்களில் மட்டும் தரித்துச் செல்லும். அதே போன்று கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட அதிவேக இரயில் வண்டிகள் தலைமன்னார், திருமலை, மட்டக் களப்பு, பதுளை, அம்பாந்தோட்டை ஆதியாமிடங்களை நோக்கியும் செல்கின்றன.
இந்த அதிவேக இரயில் வண்டிகள் பிரான்ஸ் நாட்டி லிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவாகும். மணிக்கு 250 கி. மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.
இலங்கையில் புதிய கல்வித்திட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகள்
- 9 م.

Page 27
கட்டாய பாடங்களாக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. ஆறாம் ஆண்டிலிருந்து மாணவர்க்குத் தாய்மொழியோடு மற்ற இரு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஒன்பதாம் ஆண்டிலிருந்து எந்தத்துறைகளில் ஊக்கம் காட்டுகிறார்களோ அந்ததுறைகளில் மேற்படிப்பு தொடர வசதி.
இலங்கை நான்கு மாநில நிர்வாகப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பிரதேசம், கரை யோரப் பிரதேசம், கண்டிப் பிரதேசம், மலையகத் தமிழ் பிரதேசம். இவற்றுள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மை யாக வாழும் இடங்கள் ஒன்றிணைக்கப்பட்ட தனி அலகு.
அரசகரும மொழியாக தமிழும் சிங்களமும் அங்கீகரிக் கப்பட்டு செயற்படுகின்றன. சகல திணைக்களங்களிலும் தகுதி அடிப்படையிலேயே ஊழியர் நியமனங்கள். இரு மொழியிலும் இலங்கை முழுவதும் தொடர்புகொள்ள வசதி. மதச்சார்பற்ற நாடாக இலங்கை ஒளிர்கிறது. இன வாதம், மதவாதம், பிரதேசவாதம் பேசுவது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். மத்திய அரசாங்க ஆயுதப் படைகள், மாநிலத் தொண்டர் படை மாநில பொலிஸ் பிரிவு ஆகிய வற்றுடன் மாநகரப் பொலிஸ் பிரிவுகளும் இயங்கு கின்றன.
மத்திய அரசாங்க ஆயுதப் படைகளில் திறமை அடிப்படையில் சகல மக்களும் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மாநில தொண்டர் படைகளும் இணைந்து
அந்தந்த பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகளில்
-50 -

ஈடுபட்டுள்ளனர். ஆறுகள் குளங்கள் முதல் கிராமம் தோறுமுள்ள சிறு குளங்கள், கேணிகள்வரை ஆழமாக்கப் பட்டு அணைகள் அமைக்கப்பட்டு நீர் தேக்கப்பட்டு நீர்ப்பாசன வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலை யகத்தின் மண் வெள்ளத்தால் அள்ளுண்டு போகாமல்
பாதுகாக்க நடவடிக்கை.
விவசாய நடவடிக்கைகள்துரிதகெதியில். அரிசி, உப உணவுப் பொருட்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டு நீண்ட காலமாயிற்று. விவசாயத்தில் தன்னிறைவுபெற்று அரிசி, உபஉணவுப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. பஞ்சத் தால் அவலப்படும் நாடுகளின் மக்களுக்கென நன்கொடை யாக உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
கிராமங்கள் தோறும் வைத்தியசாலைகள். மாவட்டந் தோறும் சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகள். இவ்வைத்திய சாலைகளில் சித்த ஆயுர்வேதப் பிரிவுகளும் சகல வசதிகளுடன் இயங்குகின்றன. நோய்களுக்கேற்ப அந்தந்த சிகிச்சைப் பிரிவுகளில், சுதேச மருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களும் கலந்தாலோசித்து சிகிச்சை அளிக்கிறார்கள். இவ்வைத்திய சாலைகளில் வெளிநாட்டு மாணவரும் பயிற்சி பெறுகிறார்கள். கிராமங்களில் வீடுகள் தோறும் சென்று மருத்துவத் தொண்டர்கள் ஆரம்ப சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், வயோதிபர் பராமரிப்பு நிலையங்களில் அதிக வசதிகள். சராசரி வயது 91 ஆகக் கணிக்கப்படுகின்றது. கைத்தொழில் வளர்ச்சி அபரிதமாக. குண்டூசியிலிருந்து கப்பல்கள் வரை செய்யப்பட்டு ஏற்றுமதிக்குத் தயாராகின்றன.
-۔ 51 ۔

Page 28
ஜனாதிபதியும் இரு உபஜனாதிபதிகளும் தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். ஜனாதிபதி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் உபஜனாதிபதிகள் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களாக இருப் பார்கள். அவ்வாறே சிறுபான்மை இனங்களைச் சேர்ந் தோரும் ஜனாதிபதியாக வருவதற்கு அரசியலமைப்பில் வழியுண்டு. தேர்தல்களில் ஒழுங்கீனங்கள் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். நீதித்துறை உச்ச அதிகாரங் கொண்ட தாக விளங்குகின்றது.
தேசியக் கொடியுடன் மாநிலங்களில் அம்மாநிலக் கொடிகளும் ஏற்றப்படுகின்றன. மகாவலி கங்கை வடக்கே தொண்டமனாறுடன் கலக்கிறது.
நயினாதீவு தினசரி பல்லாயிரம் பல சமயத்து மக்க ளாலும் தரிசிக்கப்படுகிறது. கதிர்காமம் யாத்திரிகர்களால் எப்போதும் நிரம்பியே காணப்படுகிறது. சிவனொளிபாத மலையிலும் அப்படியே. பெளத்த, சைவ மக்கள் இங்குள்ள ஆலயங்களுக்கு ஒற்றுமையாக வந்து வழிபாடு செய்கிறார்கள். அரசியலமைப்பின் பிரகாரம் மதங்களுக்கு முன்னுரிமை இல்லையாயினும் அவரவர் தமது சுய விருப்பின் பிரகாரம் தமது வழிபாடுகளைச் செய்து கொள்கிறார்கள்.
ஏற்கனவே உள்ள பெரிய கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள் தவிரப் பொதுமக்களுக்கெனப் புதிதாக அமைப்பதாயின் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். எல்லா மக்களுக்குமான வேலை வாய்ப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேவைக் கேற்றதான சம்பளத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் தேவைக்கதிகமான சொத்துக்கள் மாநில
- 52

அரசினால் சுவீகரிக்கப்பட்டுத் தேவையானோருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரதேச மக்களும் தத்தமது கலாசாரம், பண்பாடுகளைப் பேணிடவும் தமது தாய்மொழியில் சகல தொடர்புகளையும் மேற்கொள்ளவும் வசதி செய்யப் பட்டுள்ளது. இலங்கையெங்கும் சகல மக்களும் சமத்துவம், சகோதரத்துவம் பேணி அன்னியோன்னி யமாக இலங்கை மாதாவின் புத்திரர்களாக வாழ்வதைப் பார்த்து “இப்படியா." எனப் பிற நாடுகள் வியக்கின்றன.
இப்படியான ஒரு மாற்றம் இலங்கைத் திருநாட்டில் வராதா என மனத்தால் ஏங்கினான் ஒரு மனிதன்.
'மனித உயிர் எவ்வளவு மலினமாகிவிட்டது. சுயநல அதிகார பீடத்தினர் தம் நலன்களுக்காக பொன்னான நாட்டைச் சாம்பல் மேடாக்கிறார்கள். இனப் பிரிவினை யையும் மதபேதங்களையும் வளர்க்கிறார்கள். அகதி முகாம்களாக எம்நாடு மாறிவருகிறது. நாட்டின் எதிர் காலத்தை, வளர்ச்சியைப்பற்றிச் சிந்திப்போர் குறைந்து விட்டனர். மனிதத் தன்மையற்ற, திட்டமிட்ட நாச வேலைகளும் அழிப்புகளும் பெருகி, அந்நிய ஆதிக்க சக்தி களின் வேட்டைக்காடாக எம்நாடு மாறுவதை மனிதத் தன்மையுள்ளவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும். யுத்தம் ஒழிந்து எல்லா மக்களும் சம உரிமை யுடன் வாழும் காலம் வராதா..?
இப்படி. எத்தனையோ எண்ணங்களைக் கொட்டிப் பேசுவான் அந்த மனிதன். என் நண்பன். ஆம் பிரான்ஸ் நாட்டின் துலூஸ் நகரத்தில் வசித்த, இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்த மனிதன்,
- 53 -

Page 29
அடிக்கடி. . இப்படியான ஒரு மாற்றத்தை எண்ணிப்பார் "மச்சாங்’. . என என்னுடன் பேசிக் கொண்டவன்.
களுத்துறையில் ஆறு சகோதரிகளுக்கு ஒரேயொரு சகோதரனாகப் பிறந்து கொழும்பில் உயர்கல்லூரியில் கல்வி கற்றவன். வசதியான குடும்பத்துச் செல்லப்பிள்ளை யாக வளர்ந்தவன். இரு சகோதரிகள் டாக்டர்களாகப் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவர் இலண்டனில் டாக்டரான வாழ்க்கைத் துணையுடன் வாழ்கிறார். தந்தையார் விட்டுச்சென்ற வியாபாரத்தைக் கவனித்து வந்தவனுக்கு ஒரு காதலி இருந்தாளாம். பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் அவளையும் பூனைப்படை தீர்த்துக் கட்டிவிட்டதாம். அதனால் விரக்தியுற்றவனுக்குப் பின்னர் பல்வேறு நெருக்கடிகளாம். . இதனால் புலம்பெயர்ந்து 1991இல் பிரான்ஸ் வந்து சேர்ந்தான்.
பிரான்ஸில் ஒரு சில வருடங்கள் மிகுந்த கஷ்டப் பட்டான். வாய்த்த நண்பர்களும் அப்படி. . பின்பு பிரெஞ்சு மொழியும் ஒரளவு கற்று பகுதி நேர வேலையும் செய்து தன்னை நிலைப்படுத்தியும் வந்தான். ஒரிரு தமிழ்க் குடும்ப நண்பர்களுடனேயே நெருங்கிப் பழகி வந்தான். பணத் தட்டுபாடு ஏற்பட்டால்கூட அந்த ஒரிரு நண்பர் களிடமே உதவியும் பெறுவான். அல்லது இலண்டனி லுள்ள அக்காவிடம் கேட்டுப் பெறுவான்.
மனதில் வஞ்சகம், சூது, பொறாமையற்ற அற்புதமான இதயம் கொண்ட அந்த நண்பனின் பெயர்குலரத்தினா. . எனத் தொடங்கி நீளும் பெயர். ஜோர்ஜ் என்பது தான் அவனது செல்லப்பெயர். அந்தப் பெயரில் அவனைத் தெரியாத இலங்கைக் குடும்பத்தினர் பிரான்ஸ் துலூஸ்
- 54

நகரில் கிடையாது. அத்தனை மக்களினதும் இதயங் கவர்ந்த இனியவன். . நல்லவன். . எம்மவர் எவராவது உதவி கேட்டால் இயன்றவரை உதவுவான்.
இலங்கையில், தந்தையரின் வியாபாரத்தின் பொருட்டு பல வாகனங்கள் இருந்தனவாம். அதனால் அவன் இளமைக் காலத்திலேயே சிறந்த வாகனச் சாரதியாகவும் இருந்தான். இங்கு அவனது நெருங்கிய ஓரிரு நண்பர் குடும்பத்தினர்துலூஸ் நகரிலிருந்து ஐரோப்பாவின் எந்த நாட்டிற்கோ நகரத்திற்கோ போவதென்றால் அவன்தான் வாகனம் ஒட்டிச் செல்வான்.
அன்றும் அவ்வாறே. . அவனது நெருங்கிய நண்பன் உலகநாதன் குடும்பத்தினர் பாரிஸ் நகரம் போகையில். . காரை அவனே ஒட்டிச் சென்றான். அதிகாலை மூன்று மணியளவில். பெருந்தெரு பெற்றோல் நிலைய மொன்றில் காரை நிறுத்திக் கோப்பி குடித்து சிகரெட்டும் புகைத்துவிட்டுப் புறப்பட்டனர். அரை மணித்தியாலம் கடந்திருக்கும். . பெருந்தெருவில் கார் சுமார் 110 கி.மீ. வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. திடீரென என்ஜின் இயங்க மறுக்கிறது. . ஒருவாறு காரை பக்கவாட்டில் செலுத்தி நிறுத்திவிட்டு என்ஜினை தொடர்ந்து இயங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். . வெளியில் ஒரே பனிப்புகார். அது கார்த்திகை மாதப் பிற்பகுதி. . அருகில் வரும் வாகன வெளிச்சமே பணிப் புகாரில் தெரிவது கஷ்டம். அதிகாலை 3.30 மணி கடந்த வேளை. . பின்னால் வந்துகொண்டிருந்த பார வண்டி பக்க வாட்டில் நின்றுகொண்டிருந்த காரை அடித்து நொருக்கிச் சென்றது. . அந்தோ..!
-55

Page 30
அந்த மனிதன் ஜோர்ஜின்தலையின் பிற்பகுதியில் பலத்த அடி. அவனுக்கு நினைவு மயங்கி வந்தது. காரில் ஜோர்ஜ்க்குப் பக்கத்தில் முன் ஆசனத்தில் இருந்த உலகநாதனுக்கு அதிர்ஷ்டவசமாகச் சிறுகாயம்தான்..!
"என்ர அம்மாள் ஆச்சியே. . என்று கத்தியவாறு தனது பக்கத்துக் கதவை உதைத்துத் திறந்துகொண்டு இறங்கிய உலகநாதன் பின் ஆசனத்தில் காயங்களுடன் முனங்கிக் கொண்டிருந்த மனைவியையும் இரு பிள்ளை களையும் கீழே இறக்கிவிட்டான். "ஜோர்ஜ். . மச்சான். ஜோர்ஜ். என்று அவனை அழைத்தால் “ம். ம். ம்..” என்ற சத்தமே அவனிடமிருந்து வந்தது. அம்புலன்ஸ். ஹெலிகொப்டர். எல்லாம் வந்து அனை வரையும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றன.
உலகநாதன், மனைவி, பிள்ளைகள் காயங்களுடன் ஒரு வாறு தேறி விட்டனர். ஆனால் ஜோர்ஜ். கோமா நிலை யிலேயே இருந்தான். இலண்டலிருந்து, டாக்டர்களான அக்காவும் கணவரும் வந்து பார்த்தனர். மார்கழி LDnig5lb பிறந்து மறுநாள். அவனது ஆவி பிரிந்து விட்டது.
துலூஸ் நகரிலிருந்து சுமார் 600 கி.மீ தூரத்திலுள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த அவன் உடலை இறுதி வேளை போய்ப் பார்த்த எனக்கு. . . அந்த மனிதனை. நண்பனை. கூவி அழைத்தேன். கதறி அழுதேன். கண்ணிர்விட்டேன். எண்ண அலைகள் மோதக் கலங்கி நின்றேன்.
அவனது விருப்பப்படி உடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு களுத்துறையில் தகனஞ்செய்யப்பட்டது.! 52 வயதில் அவன் வாழ்வு முடிந்துவிட்டது. ஆனால்.
- 56

நாங்கள். . நண்பன் உலகநாதன் குடும்பம் அவனை நினைந்து நினைந்து ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளது.
நான் அவனைக் கடைசியாக அவனது வீட்டில் சந்தித்த போது. "மச்சான். . ரெலிபோனைத்துக்கி வைச்சிற்று நித்திரை கொள்ளாதை. . தனி ஆளா இருக்கிறனி. . ரெலிபோன் தான் உனக்குதவி. ரெலிபோன் வேலை செய்யாட்டி. எங்களுக்குப் பயமா இருக்கும். உனக்கு என்னாச்சோ. எண்டு நினைப்பம். ..” என்று நான் கூறியதும். . “மச்சாங் அப்படி ஏதும் நடந்தா. நீங்க தானே பாப்பீங்க. . லண்டன் அக்காக்கு அறிவிச்சு. ‘என்னை." களுத்துறைக்கு அனுப்பிப் போடுங்கோ. LD55Tiši... ... ” என்றல்லவா கூறியிருந்தான். அப்படியே ஆகிவிட்டதே..!
ஒன்றரை வருடத்திற்கு மேலாகியும் அந்த இனிய நண்பனை மறவாது தினசரி நினைத்துக்கொள்கின்றேன். அவன் எண்ணத்தில் நிறைந்த இலங்கைத் தாய் நாட்டில் என்று சாந்தியும் சமாதானமும் நிலைக்கும்.? சமத்துவம், சகோதரத்துவம் பேணப்படும். .? நம்பிக்கை தானே வாழ்க்கை. ..!
- 57

Page 31
Go ITigra526) அழைப்பு மணியை அழுத்தமாக அழுத்தி னான் உதயகுமார். நேரம் இரவு பதினொன்று முப்பதுக்கு மேலாகிறது. சிரிப்பை வலுவில் வரவழைத்துக் கொண்டு வந்த சில்வியாகதவைத் திறந்தாள்.
"மாலை வணக்கம். . ஷெரி. வாங்கோ.” எனப் பிரெஞ்சு மொழியில் கூறியவாறு அவனின் கன்னங்களில் முத்தமிட்டு அணைத்தவாறு வரவேற்பறைக்குக் கூட்டிச் சென்றாள். உள்ளே அறையில் ஒரு கட்டிலில் ஒன்பது வயதுப் பிள்ளை ஜெசிகா உறங்கிக் கொண்டி ருந்தாள். பக்கத்தில் மறுகட்டிலில் தாய்க்கிழவி அரை உறக்கத்தில்.
"ஷெரி. சாப்பிடுவோமா .." எனக் கேட்டாள். “வேண்டாம். நான் சாப்பிட்டுவிட்டேன்." என்றான் உதயன், "நோ. நோ. கொஞ்சம் எனக்காக. சான்விச்
-58 -
 

சாவது சாப்பிடுங்கோ." என்றவாறு உதயனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு குசினிக்குள் சென்றாள்.
"ஏதாவது குடிக்கத் தரவோ..."வைனை எடுங்கோ." என்றான் உதயன். ஒரு ‘போதோ வைன்' போத்தலை எடுத்துத் திறந்து கொடுத்தாள். உதயன் அதனை வாங்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்து மேசையில் அதனை வைத்துவிட்டு உட்கார்ந்தான். இரண்டு 'கிளாசுகளைக் கொண்டுவந்து வைத்தாள். அதனுள் வைனை ஊற்றி, ஒரு கிளாசை உதயனிடம் நீட்டினாள். உதயன் ஒரு இழுவை யில் அதனை உறிஞ்சிவிட்டு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அவளும் வைனை சிறிது உறிஞ்சிவிட்டு ஒரு சிகரெட் வாங்கி மூட்டிக்கொண்டாள்.
உதயன் பாரிஸ் நகருக்கு வந்து பதினைந்து வருடங் களுக்கு மேலாகிறது. பிரெஞ்சு பிராஜாவுரிமையும் கிடைத்து நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துப்புரவு வேலை செய்யும்போதுதான் அவன் சில்வியாவைச் சந்தித்தான்.
காலை ஏழு மணிக்கு ஹோட்டலில் துப்புரவு"பகுதியில் சமூகமளிக்கவேண்டும். அங்கு பொறுப்பாகவுள்ளவள் சமூகமளித்துள்ளவர்களுக்கு எத்தனை அறைகள் எனப் பங்கிட்டுக் கொடுப்பாள். நான்கு மணித்தியாலம், ஆறு மணித்தியாலம் என வேலைசெய்வார்கள். ஒரு மணித்தி யாலத்தில் நான்கு அறைகள் வரை சுத்தம் செய்வார்கள்.
உதயன் பாரிஸ் வந்த காலத்தில் பகுதி நேரமாக சிறுசிறு வேலைகள் தான் செய்துவந்தான். பின்னர் நண்பன்
-59 -

Page 32
ஒருவனின் சிபார்சின் பேரில் இந்த வேலை கிடைத்தது. அங்கு ஆறுக்கு மேற்பட்ட பெண்களும் இரு ஆண்களும் தான் வேலை. உதயனோடு வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒருவனும் வேலை செய்தான்.
சுத்தம் செய்வதற்கு முன்பு ஒரு தள்ளு வண்டியில், அறை களுக்குரிய கம்பளிகள்,துவாய்கள், குளியலறைதுப்புரவுக் கான மருந்து, கண்ணாடி, மேசை என்பன துடைப்ப தற்கான மருந்து, "சம்போபக்கெற்றுகள், சிறிய சவர்க்காரக் கட்டிகள், “ஜெல் மூசோன்பக்கெற்றுகள் போன்றவற்றைத் தேவைக்கேற்றவாறு எடுத்து அடுக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான பதிவேட்டில் அவை குறித்துப் பதிந்து பின்பு, தூசி இழுக்கும் "மெசினை'யும் தள்ளிக்கொண்டு ஒவ்வொரு அறையாகச் சென்று கட்டில்களில் “பெட்சீட்" கம்பளி, தலையணை உறை என்பனவற்றை மாற்றி மலசல கூடம் உட்பட யாவும் பளிச்செனத் துப்புரவு செய்ய வேண்டும்.
அங்கு அறையில் தங்கிச் சென்றோர், அல்லது தங்கி யிருப்போர் மிச்சமாக விட்டுள்ள சாப்பாட்டுப் பொருட் களைத் துப்புரவு செய்வோர் சிலர் எடுத்து ஒரு பையில் போட்டு மறைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்வது முண்டு. சிலவற்றை அங்கேயே சாப்பிடுவதுமுண்டு. அறையில் தங்கியிருப்போர் சிலர் கட்டிலில் தலையணைக்குக் கீழ் சில்லறைக்காசு சந்தோசமாக வைத்திருந்தால் அதனையும் எடுத்துக்கொள்வர். அறையில் தங்கியிருப்போரின் விலை யுயர்ந்த பொருட்கள் சிலவற்றை ஒரு சிலர் திருடிவிடுவது முண்டு. அந்த ஹோட்டலில் ஒரு தடவை அவ்வாறு நடந்து விசாரணை நடைபெற்று இருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதுமுண்டு.
- 60

அங்கு அறிமுகமாகிய சில்வியாவின் நட்பு கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்கிறது. பாரிஸ் புறநகர் பகுதியில் சில்வியா குடியிருக்கிறாள்.
தற்போது உதயன் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்றான். காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் ஐந்து மணிவரை வேலை. சிலவேளை மேலதிக வேலையும் செய்வான். சனி பிற்பகல், ஞாயிறு விடுமுறை. விரும்பினால் சனி பிற்பகலும் வேலைசெய்ய முடியும். மருந்துகள், இரசாயனப் பொருட்கள் பெட்டிகளில் அடைக்கப்படும் தொழிற்சாலை. உதயனைப் பொறுத்த வரையில் அது இலகுவான வேலை. நல்ல சம்பளம், மாதம் 1650 ஈரோவுக்குமேல் கிடைக்கும்.
உதயன் கடந்த சில வருடங்களாக இரண்டு இடங்களில் சீட்டுக் கட்டிவந்தான். சீட்டு எடுத்த பணத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளான். கொஞ்சக் காசைகடை வைத்தி ருக்கும் நண்பன் ஒருவனுக்கு வட்டிக்கும் கொடுத் துள்ளான். அவனது நீண்டநாள் இலட்சியம், ஈழத்தவரின் பொதுவான நினைப்புப்போல. . “ஒரு வீடு வாங்க வேண்டும். அத்துடன் ஒரு பலசரக்குக் கடை அல்லது 'றெஸ்ரோறன்ற் திறக்கவேண்டும்’ என்பது தான்..!
பலவிதமாகவும் உழைத்து வங்கியில் ஒரு இலட்சம் ஈரோவுக்கு மேல் சேர்த்துவிட்டான். அந்தப் பணத்தை இலங்கைப் பெறுமதியில் பெருக்கிப்பார்த்தவாறுநித்திரை கொள்வதில் ஆனந்தம் அதிகம்தான்..!
வீண் செலவு எதுவும் கிடையாது. ஒய்வுவேளையில் தண்ணி அடிக்கும் பழக்கமுண்டு. அதுவும் அதிகமான வேளை "ஒசியில்'தான்.
- 61 -

Page 33
பாரிஸ் புறநகரில் மெற்றோ 'வில் போய் இறங்கக்கூடிய இடத்தில் ஒரு சிறிய ஸ்ரூடியோ அறையில்தான் தங்கி யிருக்கிறான். தூரத்து உறவினனான ஈஸ்வரமூர்த்திதான் அவனது அறைத் தோழன்.
ஈஸ்வரமூர்த்திக்கு ‘சுப்பர் மார்சே ஒன்றில் காவலாளி வேலை. சில நாட்கள் பகலிலும். சில நாட்கள் இரவிலும் வேலைசெய்ய வேண்டும். மனைவி, பிள்ளைகள் கொழும்பில். மாதா மாதம் பணம் அனுப்பவேண்டும்.
முப்பத்தெட்டு வயதுக்கு மேலாகியும் உதயனுக்கு திருமணம் செய்துவைக்கவில்லையே என ஊரில் வசிக்கும் பெற்றோருக்குப் பெருங்கவலை.
அயல் கிராமமான உரும்பிராயைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணைப் பேசிவைத்துவிட்டு. உதயனுக்கு வற்புறுத்திக் கடிதம் எழுதியிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பட்டதாரியான பெண்ணுக்கு வயது முப்பது. சீதனப் பிரச்சினை, செவ்வாய் தோசம் என இழுபட்ட கல்யாணம் இப்போது தான் பொருந்தியுள்ளது. பன்னிரண்டு இலட்சம் காசு வீடு வளவு, நகை எனப்பெற்றோர்பேசி முடிவுசெய்துள்ளனர்.
"சான்விச் சைக் கொண்டுவந்து மேசையில் வைத்தாள் சில்வியா. ஒரு போத்தல் முடிந்து, இன்னொரு போத்தல் வைனும் காலியாகிறது. நல்ல தூக்கம் வருவது போலிருந்தது. அறையிலுள்ள கட்டிலுக்கு உதயனை அணைத்தவாறு அழைத்துச் சென்றாள்.
காற்சட்டையையும் "சேட்டையும் தள்ளாடித் தள்ளாடிக் கழற்றி எறிந்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான் உதயன். சில்வியாவும் பக்கத்தில்...!
- 62 -

அதிகாலை நான்கு முப்பது. . எழுந்து சென்று சலம் கழித்து விட்டு மீண்டும் வந்து படுத்தான். அவனது கறுத்த மார்பில் காடாக வளர்ந்திருந்த மயிர்களுக்கிடையில் சில்வியாவின் சிவந்த கரங்கள் நுழைந்து துளாவியபடி இருந்தன. . அவளை இறுக்கி அணைத்தவாறு அவளது பிடரிப்பக்கமாக, அரையடி நீளமான செம்பட்டை மயிரை அவன் ஒரு கையால் கோதியபடி கிடந்தான்.
ஷெரி. உங்களைப்போல. ஒரு பிள்ளை பெற எனக்கு ஆசை. எவ்வளவு நாளாக கேட்கிறன். . சொந்தமாகத் தொழில் தொடங்கின பிறகு பாப்பம் எண்டு சொல்லிக் கடத்திறியள்.நீங்க தொழில் தொடங்கினா. நான் இப்ப செய்யிற நாலு மணித்தியால வேலையையும் விட்டுட்டு. உங்களுக்கு உதவுவன்தானே. . அப்ப பிள்ளை பிறந்தாலும் இடைஞ்சல் இல்லைத்தானே. . ஜெசிகா வுக்கும் ஒன்பது வயது முடிஞ்சுது. அவள் தன்ர அலுவல் களைத் தானே பாப்பாள். அவளும் ஒரு சகோதரம் வேணுமெண்டு சிலநேரம் கேக்கிறவள். என்ன ஷெரி.
姆》
சொல்லுங்கோவன். .
yy
th. . . . . ம். .ம். . அதுக்கென்ன. . "நாங்க. 'மேரியில போய் ரெஜிஸ்ரர் கல்யாணம்
செய்வமா. . எத்தனை நாளைக்கு இப்படி. . நண்பர்
களா இருக்கிறது."
"உன்ர குப்பன்' போர்த்துக்கீசுக்காரனோட இப்ப
தொடர்பில்லையா. .
"அவன் விசரன். கிழட்டுக் குடிகாறன். என்னட்ட குடிக்கிறதுக்குத் தான் வாறவன். குடிச்சுப்போட்டு.
- 63 -

Page 34
கனப்பேயில பிரண்டு போய் கிடந்திட்டுப் போயி ருவான்."
"உனக்கு நாப்பது வயசு முடிஞ்சும். தக்காளிப்பழம் போலத் தான் இருக்கிற. . " அணைப்பால் இறுக்கி அவளை உறிஞ்சிமுத்தமிட்டான்.
“நான் கேட்டதுக்கு ஒண்டும் சொல்லுறியள் இல்லை." செல்லச் சிணுக்கம் போட்டாள் சில்வியா.
“சரி. சரி. அடுத்த மாதம் .நான் "மேரி"யில . நாள் கேட்டுச் சொல்லுறன்..” என்றான்.
ஆசையாக. அவனது கறுத்த உதடுகளைக் கவ்வி இழுத்து முத்தமிட்டாள். காலை பத்துமணிக்குமேல் சோம்பல் முறித்தான். கால். கை. மூட்டுகள் உளை வெடுத்தன.
"சில்வி. சில்வி. ஷெரி. . எழும்புங்கோ.”
அவள் எழுந்துபோய் கோப்பி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள்.
கோப்பியைக் குடித்துவிட்டு எழுந்தவனிடம். "ஷெரி. . காசு. ஏதும் இருக்குதோ. வாடகைக் காசு கட்டேல்ல. ஏஜென்சிக்காரன் கடிதம் அனுப்பிப் போட்டான். இருந்தா. தாங்கோ. ஷெரி. .”
வாடகைக் காசு முழுவதும் கட்ட இப்ப என்னட்ட காசு இல்லை. . இருநூறு ஈரோ தான் இருக்கு. . ” என்று சொல்லி எடுத்துக் கொடுத்தான்.
வெளியில் எந்தவித செலவும் செய்யாத உதயன் இந்த விடயத்தில் மட்டும் காசு கொஞ்சம் இழக்குவான்.
-64 -

வாடகை, மின்சாரம், தண்ணிர் காசு கட்டவேண்டும் என அடிக்கடி சில்வியா அவனை அணைத்துக்கேட்டு வாங்கிக் கொள்வது வழக்கம்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து மணிகடந்துவிட்டது. தனது அறையில் கட்டிலில் கால் கையை எறிந்து குப்புறக் கிடந்தான் உதயன்..!
ஒரு 'விஸ்கிப் போத்தல், முருங்கைக்காய், சின்ன வெங்காயம், ஆட்டிறைச்சி, நொருங்கிய பசுமதி குறுணி அரிசி உட்பட இன்னும் சில பொருட்களுடன் அறைக்கு வந்து சேர்ந்தான் ஈஸ்வரமூர்த்தி வந்தவனுக்கு, உதயன் கிடக்கும் கோலத்தைப் பார்த்ததும் ஆத்திரமாக இருந்தது. "இரவு றுாமுக்கும் வராம. சரக்கிட்ட போயிற்று வந்து களைச்சுப்போய் கிடந்து மூசுறார். ..” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
இறைச்சி மற்றும் பொருட்களை குசினி மேசையில் வைத்து விட்டு, குளிர்சாதனப் பெட்டியில் இருந்த தண்ணிர் போத்தலை எடுத்தான். விஸ்கிப் போத்தலைத் திறந்து ஐஸ் தண்ணிரும் கலந்து ஒரு "கிளாசை" ஒரு மூச்சில் இழுத்துவிட்டு. உரத்த செருமலுடன். உதயனைத்தட்டி எழுப்பினான்.
“டேய். உதயன். எழும்படா. .ராத்திரி சரக்கிட்ட போயிற்று வந்து, இப்ப பகல் முழுவதும் உடம்பு உளைவில் கிடக்கிறாய் போல. என்ன. உன்ர அம்மா எனக்குக் கடிதம் போட்டிருக்கிறா. . நேற்றுத் தான் கிடைச்சுது. . உன்னோட கதைப்பமெண்டா. . நீயும் இரவுறுாமுக்கு வரேல்ல. ..” என இழுத்தான் ஈஸ்வரன்.
“என்ன சொல்லி எழுதியிருக்கிறா..” எனக் கேட்டான்.
- 65 -

Page 35
"உனக்குப் புத்திசொல்லி இந்தக் கலியாணத்துக்கு ஒழுங்கு செய்யட்டுமாம். பாவமடா. அவையள். . உன்ர வயதைப்பற்றி கவலைப்படுகுதுகள். உன்ர திருக் கூத்துகள் அவையஞக்கு தெரியுமா. நல்ல பிள்ளையா. இந்தக் கலியாணத்தைச் செய்யடாப்பா. நல்ல சீதனமும்
99)
பேசி வச்சிருக்கினம். . என அன்பாகச் சொன்னான்
ஈஸ்வரன்.
எனக்கும் முந்தநாள் கடிதம் கிடைச்சதுதான். நான்
என்ன விசரனே. ஒம். சொல்லி நேற்றுக் கடிதம் எழுதிப்
99.
போட்டிட்டு தான் மற்ற வேலைக்குப் போனனான். .
மற்ற வேலையெண்டு. அவளிட்ட தானே போய் கிடந்திற்று வந்திருக்கிற. . அவளையஸ் உன்னை உரிச்சுப் போடுறாளையஸ். காசுகளை அழிச்சுத்துலைக்காதை.
... I
"நான். . எல்லாம் காரியத்தோடதான் . அவள் வாடகைக் காசு கொடுக்கவெண்டு. அடிக்கடி "செக்' கேப்பாள். என்ர பேரில "செக் குடுத்தா. பிறகு ஆபத்தா முடியும். நான். காசாத்தான் கொஞ்சம் உதவி செய்யிற னான். . அவள் எனக்கெண்டு பிள்ளை பெற வேணு மாம். அதோட கலியாணத்தை ரெஜிஸ்ரர் பண்ணுவ மெண்டு ஆக்கினை பண்ணுறாள். அவள் காரியத்தோட தான்... . பிள்ளை பிறந்தா காசு. அதைச்சாட்டி என்னட்டையும் தொந்தரவு செய்து காசு பிடுங்கலாம். . வீட்டு வாடகைக்கு நான் செக் குடுத்தனெண்டு புறூவ்" பண்ணலாம். எண்டு பெரும் பிளான். இதுகளெல்லாம் எனக்கு விளங்காதே. . ராத்திரியோட அவளைக் கை
99
கழுவியிற்றன். .
- 66 -

艇《
அப்ப. எப்ப ஊருக்குப் போற. கலியாணம். தாய் தகப்பனை கடைசிக் காலத்தில் மனவருத்தப்பட விடக்
y y
கூடாதெல்லே. .
“எல்லாம் எனக்குத் தெரியாதே. வாற மாதம் 15ம் திகதி மட்டில. சிங்கப்பூருக்கு பெம்பிளையை கூட்டிக்கொண்டு வரச்சொல்லி விபரமா எழுதிப் போட்டிட்டன். ரெலிபோனிலையும் விபரமா நாளைக்கு கதைப்பன். மாதவன்ர ஏஜன்சிக்குப் போன்பண்ணி சிங்கப்பூருக்கு 'ரிக்கற்றும் ஒழுங்கு பண்ணியிற்றன். பிறகென்ன. உனக்கும் இப்பதான் என்னைப்பற்றி சரியா விளங்கும்.” என்றான் உதயன்.
பிரசாவுரிமை இருந்தாலும் உதயனுக்கு ஊருக்குப் போக கொஞ்சம் பயக்கெடுதி. யாழ் இந்துக் கல்லூரியில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நான்கு பாடங்கள் மாத்திரம் சித்தியடைந்துவிட்டு ஏதோவொரு இயக்கத் துக்குப் பின்னால் திரிந்து நாட்டாமை செய்து காசும் திரட்டிச் சோக்கடிச்சவன்'. நிலமை மோசமானதும் தோட்டக் காணியையும் அறாவிலைக்கு விற்றுப்போட்டு, பிள்ளையை வெளிநாட்டுக்கு ஒடு’ எனத் தாய் தகப்பன் அனுப்பிவைச்சவர்கள். அதனால் இப்பவும் ஊருக்குப் போக கொஞ்சம் யோசனை..!
“சிங்கப்பூரில கலியாணம் முடிஞ்சு. . பொம்பிளை ஊருக்குத் திரும்பினதும். ஒரிரு மாசங்களில் 'பொன்சர் செய்து கூப்பிடலாம் என்ற திட்டம்."
"சரி. கலியாணம் முடிஞ்சதும் உன்ர "பிளான்” என்னடாப்பா."
- 67 -

Page 36
"ஆவணி 20 ம் திகதி மட்டில கலியாணம். அக்டோபரில் ரெஸ்ரோறன்ற் எடுத்திருவன். இப்பவே 'அட்வான்ஸ்' குடுத்திற்றன். அப்ப. முந்திப் பிந்தி மனுசியும் வந்து சேந்திடும். ஏஜன்சிக்காரனிட்ட. . புதுசா கட்டிற வீடு ஒண்டுக்கும் அட்வான்ஸ்' கட்டிப் போட்டன். 'பாங். லோனும் ஒ. கே.!" மனுசி வந்ததும் புதுவீட்டில . நிம்மதியான சீவியம். . கடையையும் மனுசி பாத்துக்கொள்ளும். படிச்ச மனுசிதானே. நான் வேலையை விடமாட்டன். “ரெஸ்ரோறன்ற் நல்லா நடந்தா பிறகு பாத்து வேலையை விடலாம். மனுசிக் கெண்டு கொஞ்ச நகையும் 'மோகன் கடையில் ஒடர்
帅外
குடுத்திருக்கிறன் . . இப்ப என்ன சொல்லிற. . .
"நீயடா யமன் தான்ரா. எல்லாம் சுழிச்சுக் காரியம் பாத்திடுவ..! நான் தான் மனுசி பிள்ளையஞக்கு இஞ்ச. இந்தக் குளிரில மாடா உழைச்சு காசு அனுப்புறன். அவை. அங்க . கொழும்பில சொகுசுச் சீவியம். நாம படுற கஷ்டம் அவைக்குத் தெரியுமா. என்னவோ. நீ புத்திசாலியடா. . எல்லாம் தெரியும். வெல்லுவாய். அது சரி. உன்ர சரக்கை. . என்ன 'பிளான்'."
f
அது . ராத்திரியோட கைகழுவியிற்றன். எண்டு தானே சொல்லுறன். இனி அவளிட்ட வேலையில்லை. . அது அழுகினதக்காளிப்பழம் மாதிரி. அவளைக் கை கழுவினதைக் கொண்டாட வேணுமல்லே. உடம்பைக் கழுவிப்போட்டு வாறன். விஸ்கியை முடிச்சுப் போடாதை. . இறைச்சியை நீதான் ருசியா சமைப்பாய்
அதைக் கவனி. ."
- 68

உதயன் எழுந்து குளியலறைக்குள் போய் நன்றாக உடம்பைக் கழுவிவிட்டு வந்து அமர்ந்தான். அவன் மனதிலும் உடலிலிருந்தும் அந்தப் போர்த்துக்கீச வழிவந்த 'சில்வியா'நினைவை, மணத்தைக் கழுவி. . .
இருவரும் விஸ்கியை ஊற்றி 'சிங்சிங்' சொல்லி ஒரே மூச்சில் ஒவ்வொரு 'கிளாசை இழுத்தனர். வெளியே பாரிஸ் நகர வர்ண ஜால ஒளிவிளக்குகளை ஜன்னலூ டாகப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துக் கொண்டனர்.!
- 69

Page 37
திறப்பு விழா
கொழும்பில் அந்தச் சிறிய 'லொட்ஜ்’ திறக்கப்பட்டு சில மாதங்கள் கடந்துவிட்டன். அதன் உரிமையாளரான தர்மபாலன் கொழும்பில் இன்று தமிழ் வர்த்தகப் புள்ளி களில் ஒருவனாகி விட்டான். இளைஞனான அவனுக்கு ஒரு புடைவைக் கடையும் சொந்தமாக இருக்கிறது. நகைக் கடையொன்றிலும் பங்கிருக்கிறது. நகை, புடைவை வியாபாரம் சம்பந்தமாக அவன் அடிக்கடி சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொங் எனப் பறந்து திரிவான்.
அவனது மூத்த சகோதரியின் கணவர்தான் நந்தன். வயது நாற்பத்தொன்று. மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை. ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மனேஜராகப் பல வருடங்களாக வேலை பார்த்தவன். நிறையச் சம்பளம். இலாபங்கள் கிடைத்தன. மிகுந்த செலவாளி. இரவு எட்டு,
- 70 -
 

ஒன்பது மணிவரைகூட வேலைகளைக் கவனிப்பான். பின்னர் மதுவில் மூழ்கித்தான் நித்திரைக்குப் போவது வழக்கமாகி வந்தது. நண்பர்களும் அதிகம். எவ்வளவு பணம் கிடைத்தாலும் மிச்சம் பிடிக்கத் தெரியாத பேர்வழி வேலையில் நேர்மை இருந்தது. இளகிய மனம்.! இவனது நடவடிக்கைகள் காலப்போக்கில் நிறுவனத்தின் உரிமையாளருக்குப் பிடிக்காததால் இருவருக்குமிடையில் முரண்பாடுகள் முற்றின. வேலையைத் தூக்கியெறிந்து விட்டுப் புறப்பட்டுவிட்டான்.
மைத்துனர் வேலையிழந்ததை அறிந்த தர்மபாலன், அவனை அழைத்து தனது 'லொட்ஜை' கவனிக்கும்படி விட்டுவிட்டு தனது வியாபாரப் பயணங்களில் கவனஞ்செலுத்தி வந்தான்.
அந்த 'லொட்ஜ்’க்கு ஒரு நாள் மாலை வந்துசேர்ந்தாள் பூரீதேவி.தூரத்துமுறையிலான சிறிய தகப்பன் ஒருவருடன் வந்து றும் எடுத்துத் தங்கினாள். மறுநாள் அந்த மனுஷன், தான் வேலைக்குப் போகவேண்டுமெனக் கூறி ஹட்ட னுக்குப் பயணமாகிவிட்டார். அவர் தலவாக்கொல்லை தோட்டத்துப் பாட்சாலையொன்றில் ஆசிரியராம். அவர் போகும்போது மனேஜரான நந்தனிடம், தம்பி. பிள்ளை கலியாணம் முற்றாகி "பாரிசுக்குப் போக வந்திருக்குது. மாப்பிளைப்பெடியன் அங்கயிருந்து பிரயாண ஒழுங்குகள் செய்திருக்கிறான். போகுமட்டும் கொஞ்ச நாள் இஞ்ச தங்கட்டும். காசு தருவா பிள்ளை. . நான் வேலைக்குப் போக வேணும். பாத்துக் கொள்ளும். தம்பி. . ’ என்று சொல்லிவிட்டுப் போனவர் பின்னர் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
- 71

Page 38
'லொட்ஜில் வேலை அதிகமில்லையாததால் நந்தன் நண்பர்களுடன் பகலிலும் வெளியில் சென்று மதுஅருந்தத் தொடங்கி விட்டான். அவனோடு நல்லபடி பழகுவது போல நடித்த பூரீதேவியிடம் 'லொட்ஜைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டே அவன் வெளியே செல்வான். 'லொட்ஜில் மலையகத்துப் பையன் ஒருவனும் உதவிக்கு நின்றான். 'லொட்ஜின் கீழ் தளத்தின் முன் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள்ளிருந்து பூரீதேவி நிர்வாகம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
ஒரளவு போதையில் வரும் நந்தனை அணைத்துச் சென்று அறையில்துங்கவைப்பாள். சாப்பாடு எடுப்பித்துக் கொடுப்பாள். அவன் வேண்டாம் என்றாலும் சாப்பிடுங்கோ." என மனைவி போலப் பரிவாக ஊட்டி விடவும் தொடங்கினாள்.
அவன் லொட்ஜில் இல்லாத வேளையில் 'பாரிசு’க்குத் தொலை பேசி எடுத்துக் கதைப்பாள். பாரிசிலிருந்து குணரெத்தினம் தனது மனைவியாக வரவிருப்பவள் பற்றி கற்பனையில் மிதந்தவாறு கதைப்பான். அவனுக்கும் சில பிரச்சினைகள் இருந்தன. பாரிஸ் வந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் நிரந்தர விசா கிடைக்கவில்லை. ஆனாலும் இரவுபகல் பாராமல் பலவிதமாக உழைத்து ஊருக்கு நிறையப் பணம் அனுப்பியிருந்தான். பெற்றோர் ஒழுங்குசெய்த திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்துப் பெண்ணைப் பாரிசுக்கு அழைக்கவும் 'ஏஜன்சி'யை ஒழுங்கு செய்திருந்தான்.
பெண் நல்லெண்ணெய்க் கறுப்பு என்றாலும் கவர்ச்சி யிருந்தது. வயது இருபத்தினான்கு கடந்துவிட்டது. அவனுக்கும் முப்பத்தெட்டு வயதாகிவிட்டதே.!
- 72

அடிக்கடி குணமும் கொழும்பில் லொட்ஜிற்கு தொலைபேசி எடுத்து மணிக்கணக்கில் கதைப்பதில் அதிக பணத்தை வீணடிக்க வேண்டியிருந்தது. பூரிதேவியின் வேண்டுகோளின்படி இப்போது அவன் தொலைபேசி எடுப்பது குறைவு. அவள்தான் அடிக்கடி “லொட்ஜ்’ தொலைபேசியில் நீண்டநேரம் பேசுவது வழக்கமாகி விட்டது.
இரவுவேளையில் போதையில் வரும்போது இன்னு மொரு போத்தலும் கையில் கொண்டுவருவான் நந்தன்..! அறையிலிருந்து அவன் குடிக்கும்போது, இவள் எடுப்பித்த சாப்பாட்டிலிருந்து இறைச்சித் துண்டை எடுத்து அவனுக்கு ஊட்டிவிடுவாள். தனது அறையில் தனியாகப் படுத்திருக்கப் பயமாகவிருக்கிறதென்ற சாட்டில் அவனது அறையில் வந்து படுத்தவள் பின்பு மனைவி போன்று இரவில் அவன் அறையில் ஒன்றாகத் தங்கிவிடுவாள்.!
நந்தனின் அணைப்பிலிருந்தவாறே பாரிசிலிருக்கும் குணத்துடன். ‘என்னங்க. எப்ப என்னை கூப்பிடப் போறிங்க... . இஞ்ச எத்தனை நாள். உங்களை நினைச்ச படியே இருக்கிறது. . உங்களிட்ட வந்தாத்தான் எனக்கு நிம்மதி." என்று சிணுங்குவாள். அப்போது அழாதேயடி ராசாத்தி. .' என நந்தன் அவளை மர்மமாகக் கிள்ளுவான். இப்படி நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. லொட்ஜின் வருமானத்தையே அவள் உறிஞ்சிவிட்டாள். நந்தனும் எல்லாப் போதையாலும் உருக்குலைந்து கொண்டே. .
ஏஜென்சிக்காரனின் ஏற்பாட்டின்படி ஒரு சிலருடன் சேர்ந்து அவள் சிங்கப்பூர் வந்து, பின்னர் அங்கு மலேசியா விசா பெற்று கோலாலம்பூர் வந்து சேர்ந்தாள்.
- 73 س

Page 39
கோலாலம்பூர் புறநகர் பகுதியில் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் ஒன்பதாம் மாடியில் ஒரு வீட்டில் ஆறு பெடியன்களுடன் மூன்று பெண்களென ஏஜன்சிக்காரனின் ஏற்பாட்டில் தங்கியிருந்தனர். அந்த மூன்று பெண்களில் பூரீதேவிக்கு மட்டும் சிறப்புச் சலுகை தான். மற்றவர்கள் எல்லோரும் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு இருப்பினும். பூரீதேவி. கொழும்பில் தேடிக்கொண்ட பணத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டே புறப்பட்ட
வளாச்சே..!
பாரிசிலிருந்து குணத்தின் ஏற்பாட்டின்படி பூரீதேவிக்கென அட்வான்சாக இரண்டு இலட்சம் ரூபா கொழும்பில் ஏஜன்சிக்காரரின் பினாமியிடம் கொடுக்கப் பட்டது. மிகுதி பாரிசுக்கு பூரீதேவி வந்து சேர்ந்ததும் தந்துவிடுவதாக பாரிசிலிருக்கும் ஏஜன்சிக்காரரின் மைத்துனர் மூலமாக ஏற்பாடு...!
பாரிசுக்கும் இலண்டனுக்கும் கனடாவுக்குமென அங்கு தங்கியுள்ளோர் கனவுகள் பல சுமந்து காத்திருக்கின் றனர். அங்குள்ள இருபது வயது இளைஞன் மீது பூரீதேவிக்கு ஒரு கண்...! அவனது உயரம், கவர்ச்சித் தோற்றம் எல்லாம் அவளை என்னவோ செய்தது. .
அந்த வீட்டின் நடு ஹோலில் இளைஞர்கள் ஆறுபேரும் உறங்குவர். ஒரு அறையில் பெண்கள். முறை வைத்து எல்லோரும் மாறி மாறி சமைத்துச் சாப்பிடுவார்கள். ஏஜன்சிக்காரன் ஹோட்டலில் தங்கியிருப்பார். இடைக் கிடை வந்து பார்த்து சமையலுக்குரிய பொருட்கள் வாங்கப் பணம் கொடுத்துச் செல்வார்.
- 74

அறையில் புழுக்கமாக இருக்கிறதென்று, பூரீதேவி குசினிக்குள் நல்ல காற்றோட்டமென அதற்குள் தனது படுக்கையை வைத்துக் கொண்டாள். தான் சமைக்கும் போது வாட்டசாட்டமான அந்த இளைஞன் இலிங்க ’ எனக் கூறி
நாதனுக்கு "சாப்பிடுங்கோ தம்பி. . உபசரிப்பாள். அவனும் 'அக்கா. அக்கா. எனக்கூறி வழியத் தொடங்கினான். ஒரு சில நாட்களில் அவனை யும் இரகசியமாக இரவுவேளை குசினிக்குள் அழைத்துக் கொண்டாள். இந்த விளையாட்டு மற்ற இளைஞர் களுக்கும் சாடைமாடையாகத் தெரியத் தொடங்கி விட்டது. இதனை ஏஜன்சிகாரனுக்கும் பற்ற வைத்து விட்டார்கள். மறுநாள் ஏஜன்சிக்காரன் வந்து இலிங்க நாதனைக் காரில் கூட்டிச்சென்று காட்டுப்பகுதி யொன்றில் அவனை இறக்கிவிட்டு விபரம் கேட்டான். இலிங்கநாதன் அப்படி ஒன்றுமில்லையென மறுத்தான். 'இரண்டு அடி கையாலும் காலாலும் விழுந்தது. உடுப்புகளைக் கழற்றடா...' என நிர்வாணமாக விடப் பட்டான். கார் சென்றுவிட்டது. இலிங்கநாதன் நிர்வாண மாக பற்றை ஒன்றிற்குள்மறைந்துகொண்டான். பிற்பகல் மூன்றரை மணிக்கு விடப்பட்டவனை ஏழரை மணி யளவில் வந்து உடைகளைக் கொடுத்து ஏஜன்சிக்காரன் கூட்டிச்சென்று, வீட்டில் ஒழுங்காக இருக்க வேண்டு மெனச் சொல்லி விட்டுவிட்டான்.
ஏஜன்சிக்காரன் நடராஜன் 'பாஸ்போர்ட் மற்றும் அலுவல் எனக் கூறி பூரீதேவியைக் கூட்டிச்சென்றான். ஒரு உணவகத்தில் புகுந்து உணவருந்தினர். நடராஜனின் ஊரில் தனக்கும் நெருங்கிய உறவினர் உண்டென்றும் அந்த
- 75

Page 40
வகையில் நடராஜன் தனக்குக் கிட்டிய உறவினர் என்றும் பூரீதேவி புதிய 'புராணம்’ ஒன்றைத் தொடங்கினாள்.
ஏஜன்சி நடராஜனுக்கு விளக்கம் அதிகம். இவளைப் போல எத்தனை பேரை அவன் நாடுநாடாகக் கொண்டு சென்றவன். . அங்க வீட்டில தங்க வசதி குறைவு. நீ. ஹோட்டலில் தங்கலாம்." என பூரீதேவியை அழைத்துச் சென்றான். அங்கு ஹோட்டலில் நடராஜனுடன் அறை யில் ஒன்றாகத் தங்கினாள். பகல் நேரத்தில் அந்த அப்பாட் மென்ட் வீட்டிலும் இரவில் நடராஜனுடன் ஹோட்ட லிலுமாகச் சில நாட்கள். .
ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அங்கிருந்து ஒரு குழுவுடன் சேர்ந்து பூரீதேவி அனுப்பப்பட்டாள். ஈரான், துருக்கி வழியாக ஒரு மாதப் பயணத்தின் பின் பாரிஸ் வந்து சேர்ந்தாள். அந்தக் குழுவில் வந்த எல்லோரும் பூரீதேவிக்கு மரியாதை. ஏனெனில், நடராஜன் என்ர கிட்டிய சொந்தக்காரர். என்ற பூரீதேவியின் வெருட்டல். இலிங்க நாதனுடன் மட்டும் அன்பாகப் பேசிக் கொள்வாள். வாட்டசாட்டமாகக் கவர்ச்சி நாயகனாகப் புறப்பட்ட இலிங்கநாதன் இப்போது மலேரியாக் காய்ச்சலால் தொடர்ந்து வாட்டப்பட்டவன் போன்ற தோற்றத்தில் தான் வந்து சேர்ந்துள்ளான்..!
இலிங்கநாதனின் மூத்த சகோதரர்கள் இருவர் இருபது வருடங்களுக்கு மேலாக இலண்டனில் இருக்கின்றனர். நல்ல வசதிகளுடன். ...! ஏஜன்சி நடராஜனின் பினாமி யிடம் இலண்டனில் அவர்கள் நிறையப் பணம் கொடுத்து இலிங்கநாதனை விரைவில் இலண்டனுக்கு அனுப்புமாறு கேட்டுள்ளனர்.
- 76

பாரிசுக்கு பூரீதேவி வந்ததும், குணம் அவளுக்குரிய மிகுதிப் பணத்தை நடராஜனிடம் உடன் கொடுக்க முடிய வில்லை. சீட்டு எடுத்துக் கொடுக்க முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை. பூரீதேவி பாரிஸ் புறநகர் பகுதியில் நடராஜன் ஒழுங்கு செய்த இடத்தில் மற்றவர்களுடனேயே தங்கியிருந்தாள்.
இலிங்கநாதனும் மற்றும் ஒருவரும் இலண்டனுக்கு இரயில் மூலம் செல்ல ஏற்பாடு. இலிங்கநாதன் மூலமாக இலண்டனிலிருந்து அதிக பணம் பெற்றுவிட்ட பூரீதேவி, தன்னையும் உடன் இலண்டனுக்கு அனுப்புமாறும் முழுப் பணமும் தான் உடன் தருவதாகவும் கூறிப் பணத்தினை நடராஜனிடம் கொடுத்தாள்.
நடராஜனுக்குத் திகைப்பு. 'இவளிடம் ஏது இவ்வளவு பணம்?'அவனால் ஊகிக்க முடிந்தது. அவனுக்கென்ன. பணம் வந்தால் சரிதானே...!
பூரீதேவி, இலிங்கநாதன், மற்றும் ஒருவர் இரயிலில் இலண்டனை நோக்கி. அவர்களது படத்துடன்கூடிய மலேசியப் பாஸ்போட்டில் பிரயாணம் தடங்கலின்றி.
பாரிசில் குணம். ஏக்க வாய்வு பிடித்தவன் மாதிரி. . நிரந்தர விசா இல்லை. வீட்டுக்காரர் ஊரிலிருந்து பேசியனுப்பிய பொம்பிளை. எவ்வளவு செலவு வைச்சுப் போட்டு இப்பிடிப் பறந்திட்டாள்...' எனப் பிதற்றியவாறு விஸ்கிப் போத்தலுடன் குடித்தனமாகி விட்டான்..!
இலண்டனில் அகதி அந்தஸ்தும் பெற்று, தன்னிலும் நான்கு வயது குறைந்த இலிங்கநாதன் வீட்டில் சொகுசு களுடன் பூரீதேவி. மாதாமாதம் இலங்கையிலிருக்கும்
- 77

Page 41
பெற்றோருக்கும் காசு அனுப்புகின்றாள்...! இரண்டு வேலை" என்று இரவு பகல் பாராது ஆலாய்ப் பறக்கின்றான் இலிங்கநாதன்..!
விரைவில் 'தேவி ரெக்ஸ்ரைல்ஸ்’ திறப்புவிழா இலண்டனில் சிறப்புற நடைபெறவுள்ளது. ஒன்பது வயதுச் சிறுமியொருவரின் நடன அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள இலண்டன் வரும் பிரபல தமிழக சினிமா நடிகை ஒருவர் இத்திறப்பு விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 78

வேலையிலிருந்து தன் இருப்பிடம் திரும்பிய நாதன் அவசர அவசரமாகக் காக்கைக் குளிப்புக் குளித்துவிட்டு, எப்போதாவது விசேஷமாக அணிவதற்கென மெத்தைக் குக் கீழே மடித்து வைத்திருந்த காற்சட்டை, சேட்டை எடுத்து மாட்டிக் கொண்டான். சப்பாத்துக்குள்ளிருந்து கருவாட்டு நாற்றம்டித்துக் கொண்டிருந்த காலுறையை எடுத்து கட்டிலுக்குக் கீழ் ஒரு மூலையில் எறிந்துவிட்டு, தோய்த்துப் போட்டிருந்த 'ரெனிஸ்' காலுறையை எடுத்து மாட்டி, ஒரளவு நல்ல நிலையிலுள்ள "ரெனிஸ்" சப்பாத்தை பும் எடுத்துப் போட்டுக் கொண்டான்.
நண்பன் ஜெகனுக்கு ஞாபகப்படுத்துவதற்காகத் தொலைபேசியை எடுத்து, அரை மணித்தியாலத்திற்குள் ஜெகனை விரைவாக வருமாறு கூறினான்.
- 79

Page 42
கண்ணாடி முன் நின்று தலையைச் சீவிவிட்டு பின் பக்கமாகத் திரும்பித் திரும்பி தான் இளமையாக இருக்கிறேனா என எத்தனையோ எண்ணங்களில் இமைகளை வெட்டி வெட்டிப் பார்த்தான்.
‘இவன் ஜெகனை இன்னும் காணேல்ல. எயர் போட்டுக்குப் போறதெண்டால் சரியான நேரத்துக்குப் போகவேணும். இவனுக்கு எத்தனை தரம் சொல்லிற்றன். சரி. நானும் அவனைக் குறை நினைக்கேலாது.
அவன்ர வானைப் (van) பிடிச்சுக்கொண்டு போனா நானென்ன காசே குடுக்கிறனான். எப்பவாவது பெற்றோல் அடிச்சுவிடுவன். அவனோட ஒத்துத்த்ான் போக வேணும். பின்னேரம் அஞ்சரை மணிக்கு ஒர்லி எயர்போட் டில நிக்கவேணும் எண்டு சொன்னனான். இப்ப நேரம் நாலு மணியாப் போச்சு. றோட்டு இறுகிச்சு தெண்டா நேரத்துக்குப் போக ஏலுமோ தெரியா. பாவம். என்ர சகு அங்கை இருந்து தனியாக் களைச்சுப்போய் வருவாள். நானும் நேரத்துக்கு அங்கை போய் நிக்காட்டி பயந்திடுவாள்.'
ஜன்னலால் எட்டி எட்டிப் பார்ப்பதும் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும் கண்ணாடியில் பார்ப்பதுமாக நின்ற நாதனுக்கு ஒவ்வொரு நிமிடமும் தவிப்பில் கழிந்துகொண்டிருந்தது.
'சதா மச்சான் ஆறு மணிக்குத்தான் வேலையால வருவான். பிறகு எட்டு மணிக்கு மற்ற வேலைக்குப் போயிருவான். அவன் றுாமில் தங்கிறதிலும் பார்க்க வேலையளில தான் நேரத்தைக் கழிக்கிறான். அவனுக்கு எயர் போட்டுக்கு வர நேரமும் இருக்காது. லீவும்
- 80 -

எடுக்கேலாது. ஏதோ அவன்ர புண்ணியத்தில இந்த றுாமில இவ்வளவு நாளும் காலத்தைக் கடத்திற்றன். அவனும் பாவம் முப்பத்தொன்பது வயதாகியும் கலியாணம் காட்சி இல்லாம மாடாய் உழைக்கிறான். என்ர சகு வந்து சேருறதில் அவனுக்குந் தான் எவ்வளவு சந்தோஷம். சதா உண்மையில் ஒரு நல்ல பிறவிதான். .' மாடிக்குக் கீழே கோர்ண் சத்தம் கேட்டதும் மின்னல் வேகத்தில் கதவைப் பூட்டிக் கொண்டு ஆறாவது மாடியிலிருந்து அந்தப் பழைய மரப்படிகளில் குதித்து ஓடி வந்தான்.
ஜெகனின் 'றெனோல்ட் வான் ஓர்லி எயர்போட்டை நோக்கி விரைந்தது. இடையில் வாகன நெருக்கடியில் ஊர்ந்து போக வேண்டியும் இருந்தது.
"நாலரை மணிக்கே றோட்டு இறுகீட்டுது. எத்தனை மணிக்கு போய்ச்சேரப் போறமோ தெரியாது." வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான் நாதன்.
சரியாக ஐந்தரை மணிக்கே விமான நிலையத்தைப் போய்ச் சேர முடிந்தது. அவசர அவசரமாக ஒடிப்போய், எதிர்பார்த்த கொழும்பிலிருந்து வரும் 'கே. எல். எம்.' விமானம் வந்துவிட்டதா என நேர அட்டவணையை ஜெகன் பார்த்தான். அந்த விமானம் இருபது நிமிடம் தாமதமாகும் என அதில் குறித்திருந்ததை ஜெகன் விளக்க மாக நாதனுக்குச் சொன்னான்.
நேரம் ஆறு மணியைத் தாண்டிவிட்டது. அந்த விமானத்தில் வந்த பலர் சூட்கேசுகள், பொதிகள் என இழுத்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். நாதனுக்கு ஒரு இடத்தில் நிலைகொள்ளவில்லை. அங்கும்
-81 -

Page 43
இங்கும் நடப்பதும் எட்டி உள்ளே பார்ப்பதுமாகத் தவியாய் தவித்தான்.
“என்ன மச்சான் சகுவை இன்னும் காணேல்லை.” என அடிக்கடி ஜெகனைக் கேட்டபடி நின்றான். "ஆள் இப்ப வரும் மச்சான். கொஞ்சம் பொறுமையாநில்லு.”
"மச்சான். அங்கை பார். பச்சை உடுப்பிலை ஒரு ஆள் . சகு மாதிரித் தெரியுது.”
“ஓம் மச்சான். பச்சைப் பஞ்சாபியில.. எங்கட நாட்டு மூஞ்சியிலதான் ஒரு ஆள் வருகுது.”நாதனின் முகத்தில் நூறு மின்னல் பிரகாசம் வெட்டி வெட்டி அடித்தது.
“விறு விறெண்டு வந்தவள் பிறகேன் மச்சான் அதிலை போய்நிக்கிறாள்.” என்று ஒருவித ஏக்கத்தோடு கேட்டான் நாதன்.
'உனக்கு இதொண்டும் விளங்கிறேல்லை மச்சான். ஏதோ அப்ப மாட்டு வண்டில்ல வந்த மாதிரி ரஷ்யன் ஏரோபிளைட்டில’ வந்து இறங்கீற்றீங்க. பரிசுக்கு வந்து பத்து வருசத்தில இண்டைக்குத் தான் எயர்போட் பக்கம் வந்திருக்கிறாய் போல. கொஞ்சம் பொறுமையா நில்லு. அப்ப என்னெண்டு கொழும்புக்குப் போய் கலியாணம் செய்து வந்தியோ தெரியாது. பெலிற்றில லக்கேஜ் எடுத்துக் கொண்டெல்லே வரவேணும். அதுதான் தங்கச்சி அங்க நிக்கிறா.” என்று ஜெகன் சொன்னதும் பெண்களின் சிரிப்புப்போல் நளினத்தோடு கொடுப்புக் குள் சிரித்துக்கொண்டான் நாதன்.
பென்னம்பெரிய சூட்கேசை இழுப்பதும், இழுக்க முடியாது தவிப்பதுமாக தோளில் மாட்டியிருந்ததையும் இறக்கி வைப்பதும் தூக்குவதுமாக அந்தரப்பட்டு
- 82 -

அவலப்பட்டு மெல்ல மெல்ல வந்துகொண்டிருந்தாள் சகுந்தலா.
‘சகு. சகு." என்று கூவியவாறு இரண்டு கைகளையும் உயர்த்தித் துள்ளியபடி நின்றான் நாதன். சகுவைக் கண்டதும் நாதனுக்கு அவனை அறியாமலே கண்கள் கலங்கிவிட்டன. சகுந்தலா கண்களில் நீர் வழிய பொங்கி வரும் விம்மலையும் அடக்கிக் கொண்டு 'இந்தச் சூட்கேசை இழுங்கோப்பா." என்று பெரிய சூட்கேசைக் காட்டினாள்.
"ஏனம்மா கண் கலங்கிறாய்.” என்று சகுவின் கண்ணி ரைத் துடைத்துவிட எண்ணியவனாய் அவளை உற்றுப் பார்த்தான் நாதன். பின்னர் ஏதோ வெட்கம் வந்தவனாய், அவள் தோளில் மாட்டியிருந்ததையும் வாங்கித் தன் தோளில் மாட்டியவாறு சூட்கேசை இழுக்க முயன்றான். அதுவோ பாறாங்கல்லுப் பாரம். அதை அசைப்பதே பெருங் கஷ்டமாக இருந்தது. “என்னண்டம்மா இதைக் கொண்டு வந்தனிங்க. சரியா கஷ்டப்பட்டிருப்பீங்க போல கிடக்கு."
"அதெல்லாம் பிறகு சொல்லுறன். இப்ப அதை இழுத்துக் கொண்டு வாங்கோவன்.”
“ஜெகன் கொஞ்சம் 'ஹெல்ப் பண்ணடாப்பா. சகு. இவர் என்ர சிநேகிதன் ஜெகன். இவற்ற வானிலதான் வந்தனான்.”
“வணக்கம். தங்கச்சி."
இருவருமாக சேர்ந்து இழுத்தும் தள்ளிக்கொண்டும் ஒருவாறாகக் கொண்டுவந்து வானில் ஏற்றிக்கொண்டு
83 -

Page 44
புறப்பட்டனர். "களைப்பாய்க் கிடக்கு. ஜெகன். சகுவும் களைச்சுப் போயிருக்கு. வாற சந்தியில இருக்கிற தமிழ் றெஸ்ரோறன்ரில ஒருக்கா நிப்பாட்டன். ஏதும் குடிப்பம்."
வழியில். பெருத்த நீண்ட வீதிகளையும் வானளாவிப் புகை கக்கி நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களையும் ஜாலம் காட்டும் வர்ண விளக்குகளையும் சில அரை நிர்வாண விளம்பரப் பலகைகளையும் பாதாளத்தில் ஒடுவது போன்ற ஆற்றின் மேம்பாலங்களையும் இடை யிடையே உயரமாக எழுந்து புகை கக்கும் புகையிலைப் போறணை போன்ற பெரிய புகைபோக்கிகளையும் ‘வானில் இருந்தவாறே பார்த்துக்கொண்டு வந்த சகுந்தலாவுக்கு அந்த செப்டம்பர் மாத மென்குளிரிலும் வியர்த்துக்கொண்டிருந்தது.
சகுந்தலா தனக்கு ஒரு பிளேன் ரீ மட்டும் போதும் என்றாள். “ஏனப்பா இது தமிழ்க் கடை தானே. இஞ்ச வடை, போண்டா எல்லாம்தானே இருக்கு சாப்பிடுமன்." தனக்கு ஒன்றும் வேண்டாம் என்றும், வாய் கைப்ப தாகவும், சத்தி வருவது போலிருப்பதாகவும் சகுந்தலா சொன்னாள். அவர்கள் வீடு வந்துசேர இரவு ஒன்பது மணியாகிவிட்டது.
சதா வீட்டுக்கு வந்து அடுத்த வேலைக்கும் போய்விட்ட அறிகுறி தெரிந்தது. அவனது சாரம் கட்டிலில் எறிந்து கிடந்தது. அந்த வீடு ஒரு பழைய கட்டிடத்தில் கடைசி மாடியாகவுள்ள ஆறாவது மாடியில் ஒரு ஸ்ரூடியோ வாகும். பெரிய ஒரு அறை. அறையின் ஒரு மூலையில் சிறு குசினி. குசினிக்கு ஒரு பக்கத்தில் 'பாத்ரூம்" அதற்கருகில் வெளிக்கதவு. கதவைத் திறந்து இரண்டு அடி கால்
- 84 -

வைத்தால் அறை. அறையையும் குசினியையும் பிரித்து ஒரு பக்கமாகத் தற்போது திரைச்சீலை போட்டிருந் தார்கள். அறைக்குள் ஒரு பெரிய பழைய கட்டில், அதில் ஆள் உட்கார்ந்தால் கிறீச் என்று சத்தம் எழும். கட்டிலின் பின்பக்கமாகப் பழைய உடைவுகள் கண்ட ஒரு அலுமாரி. அச்சிறிய அலுமாரியின் மேல் பிள்ளையார், லட்சுமி, முருகன் சேர்ந்த ஒரு படமும் பக்கத்தில் லூட்ஸ் மாதா சொரூபமும் புகைமண்டி இருந்தன. கட்டிலுக்குக் கீழே இரண்டு சோடி பழைய சப்பாத்துக்களும் சில ஊத்தைக் காலுறைகளும் பரவிக் கிடந்து வாசனை வீசிக் கொண் டிருந்தன. மூலையில் இருந்த குசினியில் ஒரு சிறிய ஆட்டம் கண்ட பழைய மேசை அதன் ஒரு பக்கத்தில் நெளிந்த, கரி பிடித்த ஒரு அலுமினியப் பானையும், பல வருடப் பாவனையைக் காட்டும் கீறல்கள் கண்ட ஒரு இரும்புக் கறிச்சட்டியும், அதேபோன்ற இன்னொரு சிறிய கறிச்சட்டியும், தேநீர்ச் சாயமேறிய நான்கு 'கிளாசு'களும் இருந்தன. அந்த மேசையின் மறுபக்கத்தில் இரண்டு அடுப்புகள் கொண்ட காஸ் குக்கரும்', மேசையின் கீழ் காஸ் சிலிண்டரும் இருந்தன.
அறையில் குசினியைப் பிரித்து திரைச்சீலை போடப் பட்ட பகுதியை ஒட்டி, மடித்து வைக்கப்பட்ட ஒரு பழைய மேசையும், மடிக்கப்பட்ட இரண்டு பழைய கதிரைகளும் இருந்தன.
'இதுதானாப்பா. நீங்க இருக்கிற வீடு.” அறைக்குள் வந்த சகுந்தலா கேட்டபடி, "ஊரில ஒரு அறையோடு கூடிய எங்கட சிறிய கொட்டில் வீடு
பரவாயில்லை" என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
- 85 -

Page 45
அவசர அவசரமாக நாதன் போட்டுக் கொடுத்த தேநீரைக் குடித்து விட்டு, பிறகு சந்திப்போம் என்று கூறி விட்டு ஜெகன் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான்.
அவனது புதிய 'றெனோல்ட்' வானும், அதனை ஒட்டிய லாவகமும், வழியில் தேநீர் குடித்தபோது நாதனைக் காசு கொடுக்க வேண்டாமென்று தானே கொடுத்ததும், அவனது வசீகரத் தோற்றமும், அன்பான பேச்சும், ஜெகனைப்பற்றி சகுவின் மனதில் நல்ல அபிப்பிராயமே ஏற்பட்டிருந்தது.
“பரிஸிலை வீட்டின்ர அருமை உனக்குத் தெரியா தப்பா. ஏதோ மச்சான் சதாவின்ர புண்ணியத்தில நான் இதுக்கை ஒடுங்கிக் கொண்டு இருக்கிறன். அவன் நாலும் தெரிஞ்சநல்ல மனுஷன். ஏதோ நான் குடுக்கிற கொஞ்சக் காசைப்பற்றிக் கூடச் சிந்திக்காம என்ர வீடு மாதிரி என்னை இங்கை இருக்கவிட்டிருக்கிறான். நான்தான் அதிக நேரம் இங்க இருக்கிறனான். அவன் வேலை. வேலை எண்டு ஒடித்திரியிறவன். இப்பிடி ஒரு வீடு வாடகைக்கு எடுக்கிற தெண்டாலே பத்தாயிரம் பிராங்குக்கு மேலே மாதச் சம்பளப் பட்டியல் காட்ட வேணும். மூண்டு மாதமோ அல்லது அதுக்கு மேலோ அட்வான்ஸ் குடுக்கவேணும். வாடகை கிட்டத்தட்ட 3500 பிராங்குக்கு மேலே வரும். அதோட லைற் காசு, குடியிருப்பு வரியெண்டு கணக்க கட்டவேண்டும். அதுவும் வீடு குடுக்கிற ஏஜென்சிக்கு எங்களை ஆராவது "ரெக்கமன்ட் பண்ணினாத்தான் எங்கட தோலுகளுக்கு வீடு தருவாங்கள். அதுக்கும் தலையால கிடங்கு கிண்டுறமாதிரி அலைஞ்சு திரிஞ்சு அலுவல் பார்க்க வேணும். இப்பிடிப்பட்ட வீட்டிலேயே எங்கடசனம் எட்டுப் பேருக்கு மேலே இருப்பாங்கள். இது
-86 -

எங்கட அதிர்ஷ்டமப்பா. சரி இதெல்லாம் கிடக்கட்டும். நீர் போட்டுக்கொண்டுவந்த உடுப்புக்களை மாத்தி ஒரு குளிப்புப் போடும். களைப்புத் தீரும். அதுக்குள்ள குஞ்சாவுக்கு என்ர கைவண்ணத்தில ஒரு சமையல் செய்யிறன்.” என்றான் நாதன்.
"இதுக்குள்ள எங்கையப்பா உடுப்பு மாத்திறது.” "ஏனப்பா. வெட்கப்படுறியே. ‘கேட்டின் சீலையை இழுத்துப் போட்டு. உடுப்பை மாத்தும். நான் இஞ்சை குசினிப் பக்கமா நிக்கிறன்." என்று சொல்லியவாறு மேசைக்குப் பக்கத்தில் மூலையோடு இருந்த பழைய 'பிரிட்ஜில் இருந்த ஒரு கோழியைத் தூக்கிக் குசினித் தொட்டிக்குள் வைத்த கறிச்சட்டித் தண்ணிருக்குள் போட்டான்.
"ஏனப்பா. தண்ணி ஐஸ்ஸாக் குளிருது...” என்று கத்தினாள் சகுந்தலா, "ஆ. ஆ. கொஞ்ச நேரம் பொறப்பா. அந்தச் சிவப்புப்புள்ளி போட்ட பைப்பை யும், நீலப் புள்ளி போட்ட பைப்பையும் கொஞ்சம் கொஞ்சமாதிறந்து கணக்கான சூட்டில குளியும்.”
“ஊரில செம்பாட்டுத் தோட்ட ஆழக் கிணத்தில குளிச்சா என்ன மாதிரி இருக்கும்.” என்று எண்ணியவாறு இரு பைப்புகளையும் ஒரளவு சமமாகத் திறந்து, சூடும் குளிருமாக அவலப்பட்டு ஒருவாறு குளித்து முடித்தாள் சகுந்தலா.
மஞ்சள் அமெரிக்கன் அரிசிச் சோறும், கோழிக் குழம்பும், பருப்புக் கறியும், மிளகாய்ப் பொரியலும் கொஞ்ச நேரத்துக்குள் செய்து முடித்துவிட்டான் நாதன். சகுந்தலா தலையைத் துடைத்து, முடியை வாரிவிட்டுக்
-87 -

Page 46
கொண்டு வரவும், நாதன் சாப்பிடுவமம்மா’ என்று சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.
“வீட்டுக்காரர் இப்ப சாப்பிட வருவாரோ.”
'அவன் வர இரண்டரை மணிக்கு மேலே செல்லும். இப்ப நாங்கள் சாப்பிடுவம்.”
'நீங்கள் நல்ல ருசியாச் சமைக்கப் பழகியிருக் கிறீங்கப்பா.”
அவர்கள் சாப்பிட்டு முடிய இரவு பதினொன்றரை மணியாகி விட்டது.
“இது அவன் படுக்கிற கட்டில். இப்ப எங்களுக்குத் தந்திட்டான். நான் பெட்சிற்றைப் போட்டு வழமையாகக் கீழே படுக்கிறனான். இப்பதான் இந்த கேட்டின் சீலை யைப் போட்டுவிட்டவன். தன்ர தலையணையையும் பெட்சீட்டையும், கம்பிளியையும் கேட்டினுக்குப் பக்கத்திலை வைக்கச் சொன்னவன். நாங்கள் இந்தக் கடடிலில படுக்கலாம்.”
இரண்டரை மணிக்கு வந்து குசினித் தொட்டிக்கு மேலுள்ள சிறிய ரியுப் லைற்றைப் போட்ட சதாவுக்கு கோழிக் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது. சப்பாத்தைக் கழட்டி வாசல் கதவுப் பக்கம் போட்டுவிட்டு கேட்டின் சீலையின் மேல் தொங்கிய சாரத்தை எடுத்து அதற்குள் புகுந்துகொண்டு, கோழிக் குழம்பு, பருப்போடு ஒரு சிறு வெட்டு வெட்டினான். அது அவனுக்கு விருந்துச் சாப்பாடு போல் இருந்தது. விரைவாகவே சிறிய ரியுப் லைற்றை அணைத்துவிட்டு கேட்டின் சீலைப் பக்கமாக தலையை வைத்து வாசற்பக்கமாகக் காலை நீட்டி படுத்துக் கொண்டான்.
- 88 -

அந்த நிசப்த இருளில் எலியின் சத்தம் போன்று அந்தப் பழைய கட்டில் இடைக்கிடை கீறீச்சிட்டுக்கொண்டது. இடைக்கிடை குசுகுசு சத்தங்களும் சதாவின் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே அவன் ஆழ்ந்த உறக்கத்தில் போய்விட்டான். காலை ஏழு மணிக்கு அவன் வேலைக்குப் புறப்பட வேண்டும். வேலைக் களைப்பி னால் படுத்தவுடனேயே நித்திராதேவி அவனை அணைத்துக் கொள்வாள். ரயிலின் சத்தம் போன்று அவனது குறட்டை ஒலி அந்த வீடெங்கும் எதிரொலித்தது.
பாரிஸிலிருந்து சில நூறு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மலைப் பாங்கான அந்தச் சிறிய கிராமத்திலுள்ள சுகாதார விடுதிக் கட்டிலில் அரைத் தூக்கத்திலிருந்த நாதனுக்கு, பாரிஸில் அந்த முதல்நாள் குடும்ப வாழ்க்கை கனவில் படக்காட்சிபோல் தெரிந்தது.
இருந்தாற்போல், சகுந்தலாவும் வான் வைத்திருந்த ஜெகனும் புதுமணத் தம்பதிகள் போன்ற உடையோடு ஒரு திருமண வீட்டில் தம்பதிகளுக்கு அறுகரிசி போட்டு வாழ்த்துவது போல் காட்சிகள் தெரியவே, திடுக்கிட்டு பாதகத்தி தோறை' என்றுகத்தியவாறுபடுக்கையிலிருந்து எழுந்தவனுக்கு இரத்தமாக வாந்தி வந்தது.
பிரசாவுரிமை கிடைத்ததும் கொழும்புக்குப் போய், புரோக்கர் ஒழுங்குசெய்த செம்பாட்டுக் கிராமத்துப் பெண்ணை கொழும்புக்கு அழைப்பித்துத் தன் செலவி லேயே திருமணம் செய்துகொண்டவன் நாதன்.
அன்று கொழும்புக்கு வரும்போது கையில் நாலு பிளாஸ்ரிக் காப்பு போட்டுக்கொண்டு வந்த சகுந்தலா. இன்று.
- 89 -

Page 47
சகுந்தலா இந்த ஒன்பது வருடத்தில் இரண்டு பிள்ளை களுக்குத் தாய். இரண்டு வீடுகளுக்குச் சொந்தக்காரி. ஒர் இந்தியன் றெஸ்ரோரன்'டுக்கும், ஒரு பலசரக்குக் கடைக்கும் சொந்தக்காரி சாரதி அனுமதிப் பத்திரமும் பெற்றுத் தனக்கென விலையுயர்ந்த புதிய 'றெனோல்ட் காரும் வாங்கியுள்ளாள். கடை வேலைகளுக்கென இரண்டு வான்களும் இருக்கின்றன.
அவள் பாரிஸுக்கு வந்த காலத்தில் பிரெஞ்சு மொழி ஆரம்ப வகுப்புப் படித்தாள். பலர் நண்பராகினர். ஜெகனின் உதவியால் கொஞ்சக் காலம் பீரோ கிளினிங்' வேலை செய்தாள். அவனின் உதவியோடு மூன்று அறை கொண்ட ஒர் அப்பாட்மென்ட் வாங்கினாள். பின்னர் பாரிஸின் புறநகர் பகுதியில் தனி வீடொன்றும் வாங்கி விட்டாள்.
ஐந்து வருடங்கள் வரைதான் நாதன் அவளுடன் பிரச்சினைகளோடு குடும்பம் நடாத்தினான். குடிகாரரைக் கண்டாலே தூர விலகிய அவன், இன்று மனக்கவலைக்கு மருந்தென்றும், சிறிது நித்திரைக்கு வழியென்றும் மதுவைத் தொடர்ந்து அணைத்துக் கொண்டு. . நிலைமை மோச மாகிட, கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஆஸ்பத்திரி, நண்பர்கள் வீடு, சில வேளை தெருவும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தன. ஈரல் முற்றாகப் பாதிப் படைந்து, இரத்த வாந்தி எடுத்த நிலையிலேயே ஆஸ்பத்திரியே தஞ்சமென அவன் வாழ வேண்டிய தாயிற்று.
பல தடவை பிள்ளைகளைப் பார்க்க ஆசைப்பட்டுக் கேட்ட போது, அவர்கள் அவரது பிள்ளைகள் இல்லை யென்று சகுந்தலா சொல்லி அனுப்பிவிட்டாளாம்.
-90 -

பல ஆஸ்பத்திரிகள் மாறி மாறித் தற்போது இந்தச் சுகாதார நிலையத்தில் சாவை எதிர்கொள்ளும்வரை ஒய்வென வைத்திருக்கிறார்களாம்.
பாரிஸில், தமிழர்களது பொது வைபவங்களில் சகுந்தலா இப்போது பிரமுகர் வரிசையில்தான். . ஏற்கனவே திருமணமாகி, இலங்கையில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டு விட்டு, பாரிஸில் பகட்டாகத் திரியும் ஜெகனோடு சகுந்தலா ஒரே வீட்டில் வாழ்வது பற்றி யாரும் ஒன்றும் சொல்லிவிட முடியாதாம். இது ஐரோப்பிய வாழ்க்கை.
பிரசவ வார்ட்டின் படுக்கையில் சகுந்தலா. அவள் கையில் 'பெண்ணுரிமை விடுதலை’ என்ற புத்தகம். இன்னும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அவளுக்குக் குழந்தை பிறக்கவுள்ளது. இது மூன்றாவது குழந்தையென்ற படியால் அவளுக்கு இப்போது வேதனை பெரிதாகத் தெரியவில்லை.
சகுந்தலா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி நாதனுக்கும் எட்டிவிட்டது.
இரத்த வாந்தியெடுத்து மயக்கமுற்ற நாதனைச் சுமந்த வாறு அம்புலன்ஸ் வண்டி நகரத்து ஆஸ்பத்திரியை நோக்கிக் கடுகதியில் விரைந்து கொண்டிருக்கிறது.
-91 -

Page 48
நேரம் பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகிறது. வீட்டிற் குள் புழுக்கம். மனதிற்குள்ளும். . காதைக் கிழித்துக் கொண்டிருந்த வானொலிப் பெட்டியை நிறுத்தினார். துவாயை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கைத் தடியை எடுத்துத் தட்டித்தட்டிப்பார்த்தவாறு கார்த்திகேசு மாஸ்ரர் வீட்டுப் படியால் மெல்ல இறங்கி நடக்கிறார்.
வளவில் கறுத்தக்கொழும்பான் மாமரம் இந்தத் தடவை அதிகமாகக் காய்த்திருக்கிறது. அடிவளவில் உள்ள விளா மரத்தால் பழங்கள் விழுந்துகிடக்கின்றன. பலா மரமும் பெரிய அளவுகளில் காய்த்திருக்கிறது.
கண்கள் இரண்டும் நன்றாக மங்கிப்போய்விட்டன. பார்வைதுப்பரவாகத் தெரியவில்லை. காலை வேளையில் மாத்திரம் சிறிது ஒளிக்கீற்றுப் போல் தெரியும். அந்த
- 92
 

ஒளிக்கீற்றில்கூட எந்தப் பொருளையும் அடையாளம் காண்பது சிரமம்.
கைத்தடியின் உதவியுடன் காலடியை கணக்காக வைத்தவாறு அவரால் வளவில் எந்த மூலைக்கும் தட்டுப்படாமல் போய்வர முடியும். மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையைக் கைத்தடி யால் ஒரு தட்டுத் தட்டிவிட்டு அதில் மெல்ல சாய்ந்தார். மாமரச்சருகொன்று அவர் மார்பில் பறந்துவந்து விழுந்தது. அதனைக் கீழே தட்டிவிட்டவரின் எண்ணங்கள் பின் நோக்கி நகர்கின்றன. . .
மூத்த மகள் தாமரைச்செல்வி. . அவளது மூன்று செல்லப் பெண் குஞ்சுகள். அவர்களைத் தூக்கித் திரிந்த, மழலை பொழிந்த ஒவ்வொரு கணங்களும் நினைவுத் திரையில் வருகின்றன. ஏதோ விதமான விம்மல்...! கண்கள் கனத்தன. பெரிதாக ஒருமுறை செருமி. நெஞ்சுப் பாரத்தைக் குறைக்க முயற்சித்தார்.
பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றி, பிற் காலத்தில் ஒரு மகாவித்தியாலயத்தின் அதிபராகி ஒய்வு பெற்றவர் கார்த்திக்ேசு. வளைந்து கொடுக்காத பிடிச்சிராவிக் குணம். சற்றுக் கொதிக்குணம் கொண்ட கார்த்திகேசுவிடம் எந்த வேளையிலும் எதிர்த்தொரு வார்த்தைதானும் பேசாத பணிவுள்ளம் கொண்டவர் அவர் மனைவி யோகேஸ்வரி.
முதல் பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் பெண்கள், நடுவில் மூன்று ஆண் பிள்ளைகள். பெண் பிள்ளைகள் இருவரையும் யாழ் நகரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் தான் சேர்த்துப் படிப்பித்தார். க. பொ. த. உயர்தரப்
س 93 -

Page 49
பரீ.சை சித்திபெற்ற மூத்த மகள் செல்விக்கு தமிழ் இலக்கிய இரசிகத்தன்மை அதிகம். கவிதை, கதை, கட்டுரை வாசிப்பதில் அலாதிப் பிரியம். கவிதைகள் சிலவும் எழுதிப்பார்த்தாள். ஒரு நாள் தான் படித்த கல்வி நிலையத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்குத் தன் தோழியுடன் சென்றிருந்தாள். மேடையில் முழங்கிய ஒரு கவிஞன் அவள் மனதில் நிறைந்து விட்டான். அவன் கவிதைகளை உச்சரித்தவிதம், பேச்சின் உணர்ச்சி, அவன் தோற்றம் எல்லாம் அவளை.
கார்த்திகேசு மாஸ்ரர் அந்த நாள் வரை, தினசரி கடமை முடிந்து பாடசாலையால் வரும்போதும், பத்தொன்பது வயது நிரம்பிய, பருவ எழில் பொங்கி நின்ற தன் மகளை குழந்தையென்று எண்ணித் தானோ, இனிப்பு, "கன்டோஸ்’ அல்லது பழவகை ஏதாவது கொண்டுவந்து "செல்வி..” என மகளை அழைத்து அவளிடம் கொடுத்து மகிழ்ந்தவர்.
மகளின் காதல் செய்தி காதில் விழுந்ததும் திக்கித்துப் போய் விட்டார். அவரால் நம்பவே முடியவில்லை. அன்பு பொழிந்த மகளிடம் முகம் கொடுத்துப் பேச முடிய வில்லை. சாப்பிடவும் முடியாமல் சில தினங்கள் தவித்தார். முகச்சவரம் செய்யாததால் தாடியும் கடிக்கத் தொடங் கியது. பாடசாலையில் சக ஆசிரியர்களிடம் வழமை போலச் சரிவரப் பேசமுடியவில்லை. சக ஆசிரியரும் கார்த்திகேசுவின் உற்ற நண்பருமான வேலுப்பிள்ளை மாஸ்ரர் அன்று பாடசாலை மதிய இடைவேளையின் போது. .
“என்ன மாஸ்ரர். இந்தக் கோலம். ஒரு கிழமையா கேக்கிறன். ஒண்டுமில்லை. ஒண்டுமில்லையெண்டு. பேசாமல் போறிர். என்ன. பிரச்சினை. என்னட்ட
-94 -

சொல்லும். என்னால உதவ முடியுமெண்டா. உதவுறன்." என்றார்.
"ஒண்டுமில்லை.” கார்த்திகேசரின் கண்கள் கலங்கு கின்றன. "மாஸ்ரர். என்ர. பிள்ளை. மூத்த மகள். என்ன செல்லமா. வளர்த்தனான். ஆரையோ. விரும்பு றாளாம்.” கிணற்றுக்குள்ளிருந்து வந்த குரல்போல.
வேலுப்பிள்ளையர் நிமிர்ந்து உட்கார்ந்தார். “கார்த்தி. அட. இதுதானா. விஷயம். இதுக்குத் தானா. தாடி வளத்துக் கொண்டு. யோசிச்சுக்கொண்டு திரியிறாய். இது இந்தக் காலத்தில சின்ன விஷயமப்பா. அந்தந்த வயசில இப்படி ஏதும் குறுக்கிடும்தான். ஒண்டு சொல்லட்டோ. பிள்ளைக்கு கல்யாணத்தைச் செய்து
வையன்."
"ஆரைச் செய்து வைக்கச் சொல்லுறாய்.” என்று சற்று உரக்கக் கேட்டார் கார்த்திகேசர்.
"பிள்ளைக்குப் புத்தி சொல்லி ஒரு நல்ல இடத்தில செய்து வையன்."
"அவள் வளந்து நல்லாப் படிச்சு உத்தியோகம் கிடைச்ச வுடன என்ர அக்காவின்ர மகனைத்தான் செய்துவைக்க வேணுமெண்டு. அக்காவோட எப்பவோ கதைச்சு வைச்சனான். இப்ப இதைக் கேள்விப்பட்டவுடன. என்னால நம்ப முடியல்ல. அவள் குழந்தைப் பிள்ளை. போன கிழமையும் பள்ளிக்கூடத்தால நான் போனவுடன். அப்பா. சொக்களேற். கொண்டந்தனிங்களோ.."எண்டு ஓடிவந்தவள். அவள் எப்படி . .?”
-95 -

Page 50
“எட. என்னப்பா. நீ. ஐம்பத்திரண்டு வயதுக்கு மேலாகியும் சின்னப்புள்ள மாதிரி பேசுறாய். பிள்ளைக்கு இப்ப என்னவயது. அவள் பெரிய பிள்ளை. பத்தொன்பது வயது முடிஞ்சுதெண்டு சொன்னனி. . சரி. சரி. நான் சொன்னபடி செய். ஒண்டுக்கும் யோசிக்காதை. ஒண்டு சொல்லுறன். பிள்ளை விடாப்பிடியா நிண்டா. புத்தி சொல்லிப்பார். இல்லாட்டி அதிகம் ஒண்டும் யோசிக் காதை. கடுமையா பேசிப்போடாத. இந்தக் காலத்துப் பிள்ளையஸ். அந்தப் பெடியனையே விசாரிச்சுச் செய்து வை." என்று இழுத்தார் வேலுப்பிள்ளை மாஸ்ரர்.
"நான். நம்ம சிநேகிதன் பண்டிதர் நல்லதம்பியிட்ட விசாரிச்சனான். பொடியன் நல்ல இடத்துப் பெடியன் தான். பண்டிதர்ர சொந்தக்காரப் பெடியன் தானாம்.” என்று மெல்ல இழுத்தார் கார்த்திகேசர்,
“பின்னென்ன.. யோசிக்கிற. அவங்கள் அந்த மாதிரி இடத்து ஆட்களப்பா. அறிவாளிகள். படிச்ச பரம்பரை யள். எல்லாம் நல்லதா நடக்கும். ஒப்பேற்றிவை.சரியே." என்று முத்தாய்ப்பு வைத்தார் வேலுப்பிள்ளையர்.
கார்த்திகேசு மாஸ்ரருக்கு மனது ஒரளவு தெளிந்தது. "கன்டோஸ் பக்கெற்றுடன் வீடு சென்றார். மகளை அன்பாக அழைத்து "கன்டோஸை" கொடுத்து விபரம் கேட்டார்.
ஒரு கிழமைக்குப் பிறகு இண்டைக்குத் தான் மகளோட அன்பா பேசுறார். மனைவி யோகேஸ்வரிக்கும் மனது குளிர்ந்தது. மகளின் பிடிவாதத்தை அறிந்துகொண்ட மாஸ்ரர், மெளனமாகச் சம்மதத்துக்கு சமிக்ஞை காட் டினார். ஆனாலும் உரிய முறைப்படி இரு பகுதியினரும்
-96 -

பேச்சுக்கள் நடத்தித் திருமணம் ஒப்பேற ஆறு வருடங் களுக்கு மேலாகிவிட்டது.
மகளும் மருமகனும் அரசாங்க உத்தியோகம் பார்க்கத் தொடங்கி விட்டனர். அடுத்தடுத்து மூன்று பேரப் பிள்ளைகள். பெண் குஞ்சுகள்.!
மூத்த பேத்தி இளநிலா. பப்பாப்பழம்போல. இள மஞ்சள் நிறத்தில். அத்தனை பேருக்கும் செல்லச் சிட்டு. அழகாலும் அறிவாலும் அனைவரையும் ஈர்த்திடுவாள். இரண்டாவது பேத்தி. நாவல் பழத்தழகி. பேரனின் பிரியத்துக்குரிய சூட்டி. இரவும் பகலும் பேரனின் தோளில் கிடந்தால் தான் அவளுக்கு உறக்கமே வருமாம்.! மூன்றாமவள் வார்த்தெடுத்த சித்திரம். ஆறு மாதக் குழந்தையாக. .
அத்தனையும் நினைக்க. நினைக்க. பொங்கி வருகிறது விம்மல். கண்ணிர். கண்களை மூடி மூடித் திறக்கிறார். வாயைக் கையால் பொத்தி. செருமி. செருமி. நினைவுத் தொடரில்.
யுத்த மேகங்கள். கொடுமைகள் . மனித உயிர்கள் மலிவாகிப் போய்விட்டன. தினசரி ஏக்கடி. பங்கர்’ வாழ்க்கை. பொருட்கள் தட்டுப்பாடு. ஆயுதங்கள் முதன்மையாகிவிட்டன.
மகள் குடும்பம் புலம்பெயர்ந்து சென்றுவிட்டது. அதேபோல மூன்று ஆண்மக்களும் புலம்பெயர்ந்து விட்டனர். கடைசி மகளும்நுண்கலைப்பட்டதாரியாகிக் கலியாணமும் ஒப்பேறி புலம் பெயர்ந்து விட்டனர். மனைவி யோகேசு மாத்திரம். . வெறுமையான வாழ்க்கை. கடிதங்கள்தான் உறவாடிக்கொண்டிருந்தன.
- 97

Page 51
சருகுகளின் மேல் கோழி, நாய், பூனை நடந்து சிறிது சலசலத்தாலும். ஆரோ வருகினம். என்ர பேத்தியள் வாறாங்க.."என்றுதான் அந்தச்சத்தத்தை உற்றுக்கேட்பார்.
எல்லாப் பிள்ளைகளுக்கும் திருமணமாகி பதின்மூன்று பேரப் பிள்ளைகள் வந்துவிட்டனர்.
'ஏதோ மனுசி யோகேசோட. எல்லாம் பேசிப் பேசி ஒருவாறு பொழுது போச்சுது. இரண்டொருக்கா. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும். . அவளின்ர. நாலா வதாப் பிறந்த பெடியன். என்ர பேரனையும். இன்னும் பாக்க முடியல. பாப்பம். அவங்களுக்கும் காலம் சரி வந்ததும் வருவினம். அதுமட்டும் என்ர சீவன் கிடக்கும். ம். . s
'கண் பார்வை மங்கினாலும் கண்ணாக எனக்கிருந்த யோகேசும் ஒருநாள் காச்சல்ல ஒரு சொல்லு. சொல்லாம போயிற்றா. . சட்டென வீசின காத்தில அணைஞ்ச விளக்குப்போல. யோகேசு சட்டென போயிற்றா. இப்ப. இந்தக் கைத்தடியோட தான் பேசிக்கொண்டு வாழுறன். இரண்டு வருஷத்துக்கு முந்திக் கூட. எல்லா இடமும் சைக்கிளில போய் அலுவல் எல்லாம் பாத்து வந்தனான். . இப்ப. இந்த கைத்தடி .'
பின்னேரத்தில. ஒரு போத்தல் பனங்கள்ளு கொண்டு வந்து தந்திற்று போனவன். இப்ப அதுக்கும் தட்டுப்பாடா போயிற்று. இரவு நித்திரை வாறதுக்காக. ஒரு றாம்" சாராயம் எடுக்கிறன். ஆனாலும் சரியா நித்திரை வரமாட்டுதெங்குது. .'
'நேற்று வந்த கடிதத்தைப் பார்த்த பிறகு. என்னவோ. ஒரு மாதிரி உசாரா இருக்குது. என்ர மூத்த மகள்
- 98

குடும்பம் வருகுதாம். என்ர பேத்தி. இளநிலா எப்பிடி வளர்ந்திருப்பாள். யூனிவசிற்றிப் படிப்பு முடிச்சிற்றா ளாம். சட்டப் படிப்பு படிச்சிருக்கிறாளாம். இங்கிலிசும் பிரெஞ்சும் அந்த மாதிரிப் பேசுறாளாம். இங்க கொழும்பில சட்டப் பேராசிரியராயிருக்கிற சிறிய தகப்பனிட்டச் சொல்லி ஏதோ சட்ட ஆய்வு செய்யப் போறாளாம். யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்தைப் பத்தின ஆய்வாம். என்ர பேத்தி. கொஞ்சக் காலம் இஞ்ச
தங்கப் போறாளாம். .
வந்த கடிதத்தை அந்த மனுசி வாசிச்சுக் காட்டின நேரம் தொடக்கம் எனக்கு முப்பது வயது குறைஞ்ச மாதிரி இருக்குது.'
"சரி. அடுத்த கிழமை பிள்ளைகுடும்பம் வரமுதல் இஞ்ச எல்லா வசதிகளும் செய்துவைக்க வேணும். மாம்பழம், பலாப்பழம் எடுத்து வைக்கவேணும். அந்த மனுசியிட்ட சொல்லி விறாத்துக் குஞ்சுகளும் சேவல்களும் வாங்க வேணும். வீடு வளவுதுப்பரவாக்கி, வீட்டுச் சாமான்கள் ஒழுங்காக்கவேணும்.'
ஓர் உரத்த செருமலுடன் கைத்தடியை எடுத்துத் தட்டித் தட்டிக் கொண்டு வீச்சாக நடந்து வீட்டுக்குள்வந்த கார்த்திகேசு மாஸ்ரர், வானொலிப் பெட்டி இருக்கு மிடத்தை அளந்து நடந்தமாதிரி நேரேபோய் அதனை இயக்கினார்.
நாளை முதல் கொழும்புக்கும் யாழ் நகருக்கும் நேரடி சொகுசு பஸ் சேவை ஒழுங்காக நடைபெறவுள்ளது. மதவாச்சியிலும் வவுனியாவிலும் மட்டும் சோதனை நிலையங்கள் இயங்கும். பயணிகள் சிரமமின்றி இரவு
- 99 مه

Page 52
பகல் பிரயாணம் செய்யலாம்." எனச் செய்தியறிக்கை தொடர்ந்தது.
மாஸ்ரரின் கண்களில் ஒளிக்கீற்று. சிறிது மின்னல் கோடுகள் தெரிந்த மாதிரி. எழுந்து கைக்கெட்டிய மாதிரி இருந்த சிறிய கிளாசு நிறைய "மென்டிஸ் சாராயத்தை ஊற்றி ஒரே மூச்சில் இழுத்தார். ஒரு செருமல். gp lğFITJTTTğ#5... .. மேசையில் அந்த மனுசி போட்டு மூடி வைத்திருந்த சாப்பாட்டைப் பல நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவாகச் சாப்பிட்டு முடித்தார். அவருக்கு வயது குறைந்துதான்விட்டது போலும்.!
- 100 -

தீயை வளர்க்கிறார்
au
னெக்கு அவனை நீண்ட காலமாகத் தெரியும். அவன் பிறந்த கிராமமும் நான் பிறந்த கிராமமும் அடுத்தடுத்துள்ள தீவுகள்.
அவன் முதன்முதலில் ஆசிரியனாகக் கடமையேற்றது நான் பிறந்த கிராமத்தில், எனது சகோதரர் அதிபராகக் கடமையாற்றிய கணேச மகாவித்தியாலயத்தில்தான். பின்னர், அவன் காதலித்துக் கல்யாணம் செய்த கிராமத் திலேயே நானும் காதலித்து கல்யாணம் செய்தேன்.
இப்போது அவனது வீடு எங்கள் வீட்டிற்கு முன்னா லுள்ளது.
1990 பிற்பகுதி வடபகுதியெங்கும் பொம்மர்களும் 'ஹெலிகளும் இஷ்டப்படி கண்ட இடங்களெல்லாம்
- 101 -

Page 53
அழிப்பு வேலை செய்தபோது. ஒரு நாள். பகல் 11 மணி யிருக்கும்.
சங்கானை உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கையெழுத்திடச் சென்றிருந்தேன். பேரிரைச்சலோடு மூன்று பொம்மர்கள் வந்தன. உதவி அரசாங்க அதிபர் காரியாலயம், கடைகள் யாவும் இழுத்து மூடப்பட்டன. மக்கள் சிதறி ஓடினர். பதுங்கிடம் தேடினர். என் நண்பர் உபதபாலதிபர் நடாவும் நானும் மாடிக் கட்டிடமொன் றின் மூலையில் நின்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந் தோம். “பொம்மர்கள் நீள்வட்டமடித்து இரு முறை சுற்றி வந்தன.
நாங்கள் வந்து கொண்டிருந்த ஒழுங்கையிலிருந்து பார்க்கக்கூடியதாக ஒரு மைல் தூரத்திற்கப்பால் பொம்மர்கள் பெருத்த சத்தத்துடன் நான்கு தடவை கீழே குத்தி இறங்கி நிமிர்ந்து பறந்தன.
மனதுக்குள் ஒரே ஏக்கம். தவிப்பு. உபதபாலகத்துக்கு வந்து சேர்ந்ததும் நண்பர் நடா அங்கு தர்மப் பணத்துக் காகக் காத்து நின்ற இரு ஏழை வயோதிபர்களுக்கு அவசர அவசரமாகப் பணம் கொடுத்தார்.
அப்போது வீதியால் சைக்கிளில் வந்த ஒரு பையனிடம், “எங்க குண்டுகள் விழுந்தது” என நண்பர் கேட்டார்.
"சந்தியில் தான் நாலு குண்டும். உங்கட. மாஸ்ரர் ரவி ஐயா போயிற்றார். அதோட ஒரு இளம் பிள்ளை. இரண்டு சின்னப் பிள்ளைகள். பாக்கேலாது.”
இருவரும் ஓடி வந்தோம். "இளம் பெண்ணும், சின்னப் பிள்ளைகளும் துண்டுதுண்டாய் போயிற்றாம்.” யாரோ வழியில் சொல்லிக் கொண்டு போனார்கள்.
- 102

அப்போதுதான் ரவியைச் சிலர் வீட்டிற்குள் தூக்கிக் கொண்டு வந்தார்கள். 'வயிற்றில் ஒரு சின்னத் துண்டு பறந்துட்டுது. அந்த இடத்திலேயே உயிர் போயிற்றுது' பக்கத்தில் ஒருவர் சொல்லிக் கேட்டது. என்னால் நம்ப முடியவில்லை.
சிரித்த முகத்தோடு என் நண்பன் ரவி படுத்திருந்தான். வயிற்றைச் சுற்றிக் கட்டியிருந்ததுணியில் நிறைய இரத்தம் தோய்ந்திருந்தது.
அவன் தலையைத் தடவியவாறு ஓவென்று வாய்விட்டு அழுது விட்டேன். அருகில் நின்ற அவனது சகலன் நல்ல தம்பி என்னை அணைத்துக் கொண்டார். முதல் நாள் இரவு பன்னிரண்டு மணி வரை "கேற்றடியில் நின்று கதைத் தோம். "சனம் உணவுப் பொருள்களுக்கு கஸ்ரப்படுகுது. எப்படியும் உதவவேணும். நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒத்துழைக்க வேணும்” என்று சொன்னான்.
அவன் அரசியல் வேலை செய்யவில்லை. அரச உத்தி யோகத்தை ஒழுங்காகச் செய்தவன். மக்களைப் பற்றியே யோசித்தான்.
கடந்த பல நாட்களாக் நண்பர் பலருடன் சேர்ந்து சாவகச்சேரி, கொடிகாமம் போன்ற இடங்களுக்கெல்லாம் சைக்கிளிலேயே சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வந்தான். கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைக்கக்கூடியதாகப் பங்கீட்டு முறையில், மலிவு விலையில் அவற்றை விநியோகிக்க ஒழுங்கு செய்தான். சந்தியில் அதற்கென ஒர் இடத்தையும் தெரிவு செய்து அதில் வைத்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த முன்மாதிரியையே பல கிராமத்து ஆட்களும் பின்பற்றினரே.
- 103 تـ

Page 54
உணவுப் பொருட்கள் வழங்கும் வேளையிலா குண்டு களைப் பொழிவது? எல்லோரும் பதுங்கிடம் தேடி ஓடிட, ஏழைகளுக்கு உதவிய நீயும், ஏதுமறியாச் சிறுவர்களும், அவர்களை அழைத்துப் போக வந்த அப்பாவி இளம் பெண்ணும் பலியாகி விட்டீர்களே...! என் மனதில் ஆயிரம் எண்ணக் கீற்றுக்கள்.
எனக்கும் அவனுக்கும் கொள்கையளவில் பலத்த முரண்பாடுதான். ஆனாலும் அவன் மக்களை நேசித்தான். மக்களுக்கு உதவத்துடித்தான். உள்ளந் திறந்து பேசுவான். அதனால் அவன் மீது மரியாதை. நட்பு.
சட்டப்படி உடலைப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெறவும், உடலைக் கெடாமல் அடுத்த நாள் வரை பாதுகாக்கும் பொருட்டும் அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவன் வீட்டில் மூத்த மகன். அவனுக்கு பொறுப்புகள் பல இருந்தன. அவனுக்கும் மூன்று பாலகர்கள். இந்த பொறுப்புக்களை யார் சுமப்பர்.
எண்ணிப் பார்க்காதவர் அங்கில்லை.
அரச வைத்திய சான்றிதழ் பெற்றால், அது பின்னர் அந்தப் பாலகர்களின் எதிர்காலத்துக்கு ஏதோ ஒரு வழியில் உதவும் என்பது எமது எண்ணம். ஏனெனில் அவன் அரச ஊழியன். கடமை தவறாத நல்லதோர் ஆசிரியன். வீட்டில் நின்றோர் பலரும் தடுத்தனர். நிலைமை அப்படி,
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு தெரிந்த ஒருவரின் காரில் உடலை எடுத்துச் சென்றோம். அப்போது வழி யெங்கும் ஹெலியும் பொம்பரும் பறந்தபடி. நீண்ட தூரத்துக்கு காரை ஹெலிதுரத்தியது. தொடர்ந்து சுட்டுக் கொண்டு வந்தது.
- 104 س۔

கார் ஒடிய வேகம், புளிய மரங்களுக்கிடையில் அதனை மறைத்தது; நாங்கள் நிலத்தில் படுத்துக்கொண்டது; சரமாரியாகச் சுட்டுத் தள்ளியபின் ஹெலி திரும்பியது; பின்னர் துரித வேகத்தில் கார் வைத்தியசாலைக்குள் புகுந்தது; எல்லாமே கனவு போல் தான் இருந்தது.
பரிசோதனை முடிந்து, சான்றிதழ் பெற்று உடலையும் பதப்படுத்திக்கொண்டு வீடு வந்து சேர்க்க மாலை ஏழரை மணிக்கு மேலாகிவிட்டது.
காருக்கு வெளிச்சம் இல்லை. ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தது சாரதியின் திறமைதான் வீதியில் வேறு வாகனங்கள் நடமாட்டமும் அரிதுதானே. என் மனைவிக்கு நான் எங்கு சென்று வந்தேன் எனத் தெரியாது. என்னைக் காணாது கலங்கிப் போயிருந்தவர் முற்றத்தில் என்னைக் கண்டதும் ஒடி வந்து கேட்டாள்.
"எங்கே போய்விட்டு வந்தீர்கள். நல்லதம்பி அண்ணை. வருத்தக் காற மனுஷன் அவரை இந்த நேரத்திலை தனிய ஆஸ்பத்திரிக்கு போக விடுறதே. அதுவுமில்லாமல். ரவி.." என்னால் பேச முடியவில்லை. கண்கள் முட்டிப் GB untu GaoT.
என் மூன்று வயது மூத்த மகள் வந்து, "அப்பா. ஏன் கீதா அக்கா வீட்டில அழுது கேட்குது. என்ன நடந்தது” என்று கேட்டாள்.
பேச்சு வரவேயில்லை. கண்ணிர் முட்டி சேட்டில் துளி விழுந்தது. ரவியும் நானும் அவனது வீட்டு முற்றத்திலி ருந்து இரவு நெடுநேரம் வரை பல விடயங்களும் கதைத்துக்கொண்டிருக்க, என் மூத்த மகளும் அவன் ஒரே
- 105 -

Page 55
மகள் கீதாவும் "லைற் வெளிச்சத்தில் எத்தனை நாள் ஒடி விளையாடியிருப்பார்கள்.
பல நாட்கள் சென்றும். என்மகள் நடுச்சாமத்தில் திடுக் கிட்டெழுந்து என்னை எழுப்பிக் கேட்பாள். "அப்பா. கீதா அக்காவின் அப்பா செத்துப் போயிற்றாரா. இனி வரவே மாட்டாரா. கீதாவும் என்னைப் போல அப்பா வின்ர செல்லம் தான். பாவம் அப்பா.”
என் கண்கள் நிறைந்துவிடும். மகளை இறுக அணைத்துக் கொள்வேன்.
இப்போது என் மகளுக்கு ஐந்து வயது கூட நிரம்ப வில்லை. பொம்மர் சத்தம் கேட்டால் எல்லோரையும் "பங்கருக்குள் ஓடி விடுமாறு முதலில் கூவி அழைப்ப துடன், ஒரு வயது கூட நிரம்பாத தங்கச்சியையும்தூக்கிக் கொண்டு "பங்கருக்குள் ஒடுகிறாள்.
பங்கருக்குள்ளும் விளையாட்டுப் பொருட்கள்.
“கீதா அக்காவை அழ வைச்ச. அவளின்ரைஅப்பாவை சாக்காட்டின “பொம்பரை ஒரு நாளைக்கு." அவள் கையில் அந்த சீனத் தயாரிப்பு விளையாட்டுத்துப்பாக்கி. பேரிரைச்சலோடு சீனத் தயாரிப்பு 'சகடை விமானம் எங்கோ தூரத்தில் பீப்பா குண்டைத் தள்ளிவிட்டுப் போகிறது.
என் காதுகளுக்குள்ளிருந்து இன்னும் இரைச்சல் சத்தம் போகவில்லை. மகள் வெளியில் வந்து நிமிர்ந்து பார்க்கிறாள்.
س- 106 -

ஒப்பரேஷன்"
“மெல்ல. மெல்ல. மெதுவாதுக்கி வையுங்கோ. தம்பி கவலைப்படாதேயும். கொழும்பில எல்லாம் சரிப் படுத்திக்கொண்டு வாரும். இந்த நேரத்தில அம்புலன்ஸ் கிடைச்சதே பெரிய காரியம். பத்திரமா படுத்திரும். அழக்கூடாது. நம்பிக்கையோட இருக்க வேணும். சரிதானே.”
அம்புலன்ஸ் வண்டியில் ஸ்ரெச்சரோடுதுரக்கி அவனை ஏற்றி அனுப்பும்போது, கலங்கிய கண்களோடு அந்த நேர்ஸ் சொன்ன பரிவான வார்த்தைகள். அவன் மனம் வருந்திக்கொண்டிருந்தது. அவன் கண்கள் கலங்க அந்த நேர்ஸை பரிவோடு பார்த்தான்.
“மீண்டும் இவங்கள பார்ப்போமா. என்னை ஏன் பிழைக்க வைக்க முயற்சிக்கிறாங்கள். எனக்கு ஏன்
- O7

Page 56
வாழ்க்கை. ஆருக்காக நான் வாழ வேணும். எனக்குப் போல வேதனையள் ஆருக்கும் வந்திருக்குமா. கடவுள் எண்டு ஒருத்தன் இருக்கிறானா. இருந்தா. எனக்கு ஏன் இவ்வளவு வேதனையள். நான் ஆருக்கு என்ன கெடுதி செய்தன். ஐயோ. என்ர செல்வம் எல்லாத்தையும் இழந்திற்றேனே. என் மனோ. என்ர ராசாத்தி. உன்னைப் பறிகொடுத்த பின்னும் நான் உயிரோடிருக்க வேணுமா. கிளிக்குஞ்சு போல பெத்துத் தந்த பிள்ளை யையும் இழந்தேனே. இனி நான் ஏன் சீவிக்க வேணும். ஆரிட்ட சொல்லி அழுவேன். ஐயையோ..!"
அம்புலன்ஸ் பரந்தன் சந்தியைக் கடந்து வேகமாக விரைகிறது.
சலம் போவதெற்கென கொழுவியிருந்த குழாய் பொருத்தப்பட்ட இடத்தில், சலவாசலில் வலி தாங்க முடியவில்லை. ஓவென்று கத்த வேண்டும் போலிருந்தது. பக்கத்திலிருந்த ஆளிடம் சொன்னான். கத்தினான். "ஐயோ. இந்தக் குழாயை ஒருக்காகழட்டி விடுங்கோ."
அம்புலன்ஸ் கிளிநொச்சி ஆஸ்பத்திரி வாசலில் நின்றது. அவசரமாக டாக்டர் வந்து யாழ். ஆஸ்பத்திரியில் கொடுத்ததுண்டினை வாங்கிப் பார்த்தார். பின் அவனைப் பார்த்தார்.
"சொறி. நான் அதைக் கழட்ட மாட்டன். இப்படியே கொழும்புக்குக் கொண்டு போங்கோ. கொழும்பு ஆஸ்பத்திரிக்குத்தான் துண்டு எழுதியிருக்கு நான் அதில் கைவைக்கப்படாது.” அம்புலன்ஸ் மீண்டும் ஒடுகிறது. அவனுக்கு உயிரே போவது போலிருக்கிறது.
- 108

"நான் மாத்திரம் பிழைக்க இவ்வளவு கஸ்ரப்பட வேணுமா. என்ர மனுசி. பிள்ளை பிளைச்சிடும் எண்டா எவ்வளவு கஸ்ரத்தையும் தாங்கியிருப்பேனே. நான் பாவி. எனக்கேன் இப்பிடி ஒரு நிலை.”
பிள்ளை பிறந்து பத்து நாளாகவில்லை. எங்கும் ஒரே பிரச்சினை. சண்டை. இதுவரை காணாத கேட்டிராத சத்தங்கள். நிகழ்வுகள். ஆயிரமாய். ஹிந்தி மொழிச் சத்தங்கள். இரண்டாம் நாளே பெரியாஸ்பத்திரியி லிருந்து துண்டு வெட்டி கொண்டு வந்திருந்த தாயையும், பிள்ளையையும் பதுங்குகுழிக்குள் எத்தனை மணித் தியாலம் தான் வைத்திருப்பது.
கூரைக்கு மேலால் விசில் ஊதினமாதிரி சத்தத்தோடு போகிறது ஷெல். அருகில் எங்கோ விழுந்து இரண்டு, மூன்று பயங்கரச் சத்தங்கள் கேட்கிறது.
அவளுக்கு காய்ச்சல் வந்து நடுங்குகிறது. பிள்ளையின் காதுக்குள் எப்போதும் பஞ்சு அடைத்தபடிதான். தொடர்ந்து இப்படியே வைத்திருக்கப் பயமாகவிருந்தது. சூட்டுச் சத்தங்களும் கேட்கத் தொடங்கிவிட்டது. கார் ஒன்றைத் தேடிப் பிடித்து பக்கத்துக் கிராமமொன்றுக்குக் கூட்டிச் சென்று ஒரு வீட்டில் கெஞ்சி இடம் கேட்டு வைத்திருந்து விட்டு மானிப்பாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் காட்டினான். அவர்கள் கைவிரித்து விட்டனர். பெரியாஸ்பத்திரிதான் இனிக் கதி.!
ரொம்பச் சிரமப்பட்டு பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து வார்ட்டில் சேர்த்தான். அன்று ஒரு டாக்டர் தான் அத்தனை வார்ட்டையும் கவனித்துக் கொண்டிருந்தார். அங்கும் ஒரே நெருக்கடி
- 109

Page 57
அந்த டாக்டரும் மறுநாள் இல்லை. ஊழியர்களும் குறைவு. பலர் ஆஸ்பத்திரியில் அடைபட்டுக் கிடந்தனர். வெளியில் போகவே பயமாகவிருந்தது.
ஒரு நேர்ஸ் அவனிடம் வந்தாள். கை நிறைய அம்பிசிலின் கப்சூல்களை அள்ளி அவனிடம் கொடுத் தாள். 'ஆறு மணித்தியாலத்துக்கு ஒரு தரம். இரண்டு கப்சூல்கள் வீதம். நோயாளியை ஒரு தரம் உற்றுப் பார்த்துவிட்டு அந்த நேர்ஸ் பறந்து மற்றக் கட்டிடத்துக்குள் போனாள். இப்போது அவன்தான் அங்கு நேர்ஸ் மாதிரி. மனைவியையும் பார்த்துக் கொள்வதோடு. வேறு சிலருக்கும் இயன்றவரை உதவினான்.
அவளைத் தூக்கி வைத்து அழுகையைத் துடைத்து அவளுக்கு கப்சூல்களைக் கொடுத்தான். தொடர்ந்து படுக்கையில் கிடந்ததால் ஏற்பட்ட புண்களைக் கழுவித் துடைத்துவிட்டான். வார்ட்டில்கிடைக்கும் சாப்பாட்டை, கொண்டு வந்திருந்த ஹோர்லிக்ஸை கொடுத்துக் கொண்டிருந்தான். மனைவியோடு பக்கத்தில் பச்சிளம் குழந்தை. பாலூட்ட அவளால் முடியாது. அவள் பால் குழந்தைக்குக் கூடாதாம். அந்த நேர்ஸ் சொல்லியிருந் தாள். குழந்தையை தெரிந்த ஒருவர் மூலம் வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான்.
அங்கு கொண்டுபோய் நான்கு நாட்களுக்குள்ளேயே குழந்தைக்குக் காய்ச்சல், இடைக்கிடை பிரச்சினை கூடுவதும் குறைவதுமாகவிருந்ததால் பரிகாரியிடமும் கொண்டுபோய் காட்ட முடியாத நிலை. சரியான உண வில்லை. அங்கு வந்து ஐந்தாவது நாள் குழந்தை இறந்து விட்டது. அவனுக்குத் தெரியாது. அன்று அந்த
- 110

வார்ட்டுக்கு வந்த நேர்ஸ் இவனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டுச் சொன்னாள். 'தம்பி. பாலசிங்கம். உம்மைப் பார்க்க பரிதாபமாக இருக்கு. கலியாணம் முடிச்சுப் பதினைஞ்சு மாசம் எண்டு சொன்னீர். இப்ப அவவின்ர உடம்பில ரத்தத்தில கிருமி கலந்திற்று. சரியாக கவனிக்காததால இந்த நிலை. இங்க டாக்டர்மார் இல்லை. நீங்க கொண்டு வந்த நேரம் அந்த நல்ல டாக்டர் இங்க இல்லை. அவர் போயிற்றார். நேர்ஸ்மார் கூட இப்ப ஒழுங்காக வரமுடியாத நிலை. நான் கூட இங்கதான்தங்கி யிருக்கிறன். கிட்டத்தட்ட நான் ஒரு அநாதை மாதிரி. என்ர வாழ்க்கை அப்பிடி. சனத்துக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யிறது தான் எனக்குக் கடவுள் தந்ததொண்டு எண்டு நினைச்சு இங்கேயே இருந்து இப்ப வேலை செய்யிறன். இவ பிழைக்கிறது கஸ்ரம். மனதைத் திடப்படுத்திக்கொள்ளும். ஏதாவது வழியில கஸ்ரப் பட்டு வீட்டுக்குக் கொண்டு போக முடிஞ்சா கொண்டு போகப் பாரும். பிறகு இங்க தகனம் பண்ணக் கூட கஸ்ரமாக இருக்கும். இந்தக் கப்சூல்களை நான் சொன்ன மாதிரி தொடர்ந்து குடும். கவலைப் படாதேயும்”
அவனுக்குத் தலை சுற்றியது. எங்கேயோ போய் விழும் ஷெல் என்ர தலையில விழாதா, என்ர மனுசி என்னை விட்டு போறதுக்குள்ள இதில ஷெல் விழுந்தா நானும் சேர்ந்து என்ர ராசாத்தியோட போயிடுவேனே. இதுக்குத் தானா இவ்வளவு கஸ்ரப்பட்டு இங்க கொண்டு வந்தனான். அன்று காலை அவள் கண் சிறிது தெளிவாகத் திறந்திருந்தது. பக்கத்தில் வருமாறு கூப்பிட்டவள், "சோறு தாங்கோ” என்றாள். தன் கையை மெல்லத்தூக்கி அவன்
- 111 -

Page 58
கண்களைத் துடைத்தும் விட்டாள். வார்ட்டில் திரிந்து சோறு வாங்கி வந்தான். தண்ணிர்ச் சாப்பாடே வேண்டாம் என்றவள் இன்று சோறு கேட்பது அவனுக்கு ஒருவிதம் தென்பாகவும் வியப்பாகவும் இருந்தது. அவளை முன் பக்கமாகத் தூக்கித் தன் மார்பில் சாய்த்து வைத்து, இடது கையால் அணைத்துக் கொண்டு குழந்தைக்குக் கொடுப்பது போல, சோற்றைக் குழைத்து தீத்திவிட்டான். இரண்டு கவளம் சாப்பிட்டாள். பின்பு சாப்பிட முடியவில்லை.
கண்களில் நீர் வடிந்தது. “அழாதே’ என்று சொல்லித் துடைத்து விட்டான். திருமணமான நாள் முதல் இன்று வரையான ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண்முன் படமாக ஒடிக்கொண்டிருப்பது போலிருந்தது. உலரப் போட்ட ஈரத் துணியிலிருந்து துளித் துளியாய் நீர் சொட்டுவது போல அவன் கண்களிலிருந்தும் நீர் சொட்டிற்று.
அவன் மார்பில் அவள் சாய்ந்து படுத்திருந்தாள். என்னென்னவோ நடந்து போன நினைவுகள் வந்து மோதுகின்றன. “எனக்கு அப்பா. அம்மா. இல்லை. நீங்கதான் எனக்கு எல்லாம். உங்களைதூர இடத்துக்குப் போய் உழைக்க விடமாட்டேன். என்ன கஸ்ரம் வந்தாலும் நீங்க இங்கதான் இருக்கோணும். எனக்கு நீங்க தான். உங்களுக்கு நான்தான்."
ஆறு மாதத்துக்கு முன்பு கடுமையான காய்ச்சல் வந்த போது விடிய விடிய விழித்திருந்து குடிநீரும் மருந்தும் தந்து சொன்னவை. வாயைக் கழுவி விட்டான்.
இவன் கண்களையே அவள் பார்த்துக் கொண்டு. "அழாதேயுங்கோ. எனக்கு என்னவோ ஒரு மாதிரி
112 -

இருக்கு. நீங்க அழப்படாது. நல்லா இருக்கோணும். உங்க பெரியக்காவின்ர காணியை எப்பிடியும் மீட்டுக் கொடுக்கோணும். அவையள் பாடு கஸ்ரம். பார்த்துக் கொள்ளுங்கோ. நான் உங்கட மனோதானே. என்ர கையை உங்கட கையுக்கை பொத்தி வைச்சிருங்கோ.” அதுக்கு மேல் அவளால் பேசமுடியவில்லை. அப்படியே வைச்சிருந்தான். அடிக்கடி அவள் நெஞ்சைத் தொட்டுப் பார்ப்பான். மூக்கின் மேல் கையைப் பிடித்துப் பார்ப்பான். அவள் தலையை அணைத்துக் கொள்வான். கண் கலங்கு வான். இப்படி. பிற்பகல் மூன்று மணியிருக்கும் அவளிடமிருந்து மூச்சே வரவில்லை. அவள் கண்கள் அவனையே பார்த்த வண்ணம் நிலை குத்தி நின்றன.
ஒவென்று அழுதான். வார்ட்டில் போவோர் வருவோர் என ஆட்களே இல்லை. பக்கத்து வார்ட்டில் நின்ற ஒரு சிலர் வந்து பார்த்தனர். ஆறுதல் கூறினர்.
அங்கு நேர்ஸ் வந்தாள். 'தம்பி. பாலசிங்கம். அழாதை யும். நடக்க வேண்டியதைப் பாரும். வில்லூண்டிக்கு வண்டி பிடிச்சுக் கொண்டு போய் எரிக்க காசு ஏதும் வைச்சிருக்கிறீரோ. இப்ப அதுவும் கஸ்ரம். வழியில. பிரச்சினையாம். ஒண்டு செய்யும். இங்க ஆஸ்பத்திரி வளவில சில உடம்புகளை கொழுத்தியிருக்கிறாங்க. இதையும் இங்க கொழுத்த பெமிஷன் கேட்டு இங்கேயே எரியும். யோசிக்காதேயும். நடக்க வேண்டியதை பாக்க வேணும். எழும்பி வாரும். முதல்ல அதுக்கு பெமிஷன் கேட்டுப் பாப்பம்” நிலைமைகளை அந்த நேர்ஸ் விளங்கப் படுத்தியதால் ஒருவாறு அனுமதி கிடைத்தது. ஆஸ்பத்திரி வளவில் தேடித் திரிந்து உடைந்த கட்டில் கால்கள், மரத்
- 113 -

Page 59
துண்டுகள், தடிகள், குச்சிகள், சருகுகள், கழிவுப் பஞ்சுக் குவியல்கள் எல்லாம் சேர்த்து ஒரு பெரிய மரத்துக்குக் கீழே அவளைத் தகனம் செய்தான்.
இரவு முழுவதும் 'ஒரு' ஜாம் வெற்றுப் போத்தலை அருகில் வைத்துக்கொண்டு அவள் எரிந்து, அந்தச் சாம்பல் ஆறும் வரை காவல் இருந்தான். அந்தப் போத்தலுக்குள் அந்தியேட்டிக்கென எலும்புச் சாம்பலை எடுத்தான்.
தலைமாட்டில் சாம்பல் போத்தலுடன் இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே இருந்தான். வெளியில் ஒரளவு நிலைமை சரிவந்ததும், வீட்டிற்குப் போகுமுன் அந்த நேர்ஸ் வந்து கதைத்துவிட்டு நூறு ரூபா கொடுத்தாள். இவன் வேண்டாமென்று மறுத்த போதும், “இந்த சகோதரத்தால் இவ்வளவுதான் இப்ப தரமுடியும் தம்பி. பிடியும். வீட்டை போய் ஆகவேண்டியதைப் பாரும்" என்று சொல்லி அதனைக் கைக்குள் திணித்து விட்டுப் போய்விட்டாள்.
“இப்படிப்பட்ட நல்ல சனத்தாலதான்.” வீட்டிற்குப் போனவனுக்கு மேலும் அதிர்ச்சி. குழந்தை இறந்த செய்தி. என்ன செய்வது என்றே தெரியாமல் ஒருமாதம் வரை வீட்டில் அடைபட்டுக் கிடந்தான். பெரியக்கா புருஷனோடு போய் அந்தியேட்டியை முடித்துவிட்ட திருப்தி,
“சின்னக்காவின் கலியாணத்துக்கென ஈடு வைத்த பெரியக்காவின் காணியை மீட்டுக் குடுக்கவேணும். என்ர ராசாத்தி கடைசியா சொன்ன விஷயம். வட்டியோட நாப்பதாயிரம். எப்பிடி உழைச்சு மீழுவன். அதை மீட்டுக் கொடுக்க மட்டுமாவது நான் உயிரோடயிருக்க வேணும்”
- 114

நினைத்துப் பார்த்தவனுக்கு தலை சுற்றியது. சைக்கி ளோடு விழுந்தவனை ஒரு சிலர் கூட்டி வந்து வீட்டில் சேர்த்தனர். வீட்டில் அவனைக் கவனிக்க யாருமில்லை. ஒரே மச்சான். அவன் வண்டி பிடித்து அவனது பெரியக்கா வீட்டில் கொண்டு போய் விட்டான். அவ்வளவுதான் மச்சானின் மனிதாபிமானம்.
“என்ர ராசாத்தி இருந்தா. இப்பிடியா." அவன் மீண்டும் பெரியாஸ்பத்திரியில். ஒரு கிழமை வார்ட்டில் சிகிச்சை
“தலையில இரத்த உறைவாம். ஏதோ கட்டியாம். உடன் பெரிய ஒப்பறேசன் செய்யவேணுமாம்." அந்த நேர்ஸ் அடையாளம் கண்டு உதவினாள். கொழும்பு பெரியாஸ் பத்திரிக்கு அம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
கொழும்பு ஆஸ்பத்திரி வாசலில் அம்புலன்ஸ் நின்றது. "ஐயோ. அம்மா. இதைக் கழட்டுங்கோ..." ஒரு அற்றென்டன் வந்தான். ஸ்ரெச்சரில் அவனைத் தூக்கி ஏற்றி விட்டு அந்தக் குழாயைப் பிடுங்கி விட்டான். "ஐயோ.." அவனுக்கு உயிர் போய் வந்தது. ரத்தமும் சலமும் ஒன்றாகப் போனது.
வார்ட்டில் படுக்கை கிடைத்து. உணவும் பரவா யில்லை. கொழும்பில் முன்னர் கடையில் வேலை செய்த போது கற்றுக் கொண்ட சிங்களம் கை கொடுத்தது. ஒருவாறு சமாளித்தான்.
தலையில் நரம்புகளில் வீக்கம். கட்டி. ஒப்பறேசன்' நினைக்க அழுகைதான் வந்தது. தலையை ஒட்ட வழித்து விட்டார்கள். மொழிங்குத் தோற்றம் என்பார்களே. அப்படி. இவனுக்கு சிறிது சந்தோஷம்."என்னை யாரும் இங்கு வந்தாலும் அடையாளம் காண முடியாது."
- 115 -

Page 60
பெரிய டாக்டர் ஒரு தமிழர். அவரைக் கண்டதும் ஒடிப் போய் கும்பிட்டான். தன் கதையைக் கூறி கெதியில் தன்னை யாழ்ப்பாணம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டான்.
'தம்பி. இப்பிடி என்னோட கதையாதையும். பாவ மாகத்தானிருக்கு. உமக்கு நான் நேரடியா உதவ முடியாது. இது டொக்டர் அமரதேவாவின்ர வார்ட், அவர்தான் உமக்கு ஒப்பறேஷன் செய்வார். நான் அவருக்கு போனில் உம்மைப்பற்றி சொல்லுறன். இப்பிடி என்னட்ட வராதையும். என்னையும் சந்தேகப்படுவாங்கள். சந்தேகப் பார்வை இங்கேயும் அதிகம். நீரும் கவனமாயிரும்.”
அவனது கன்னப் பக்கமாக சரிபாதி தலையைப் பிளந்து ஒப்பறேசன் நடந்தது. மறுபக்கமும் ஒப்பறேசன் செய்ய வேண்டுமென்றும் அதற்கு கொழும்பில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பத்தாயிரம் ரூபா கட்டி படம் எடுத்து ஒப்பறேசன் செய்யுமாறும் கூறி, பாதித் தலை ஒப்பறேசன் முடிந்த சில நாட்களில் துண்டு வெட்டி அனுப்பி விட்டனர்.
சீதன வீடு, தாலிக்கொடி, நகைகள், வீட்டுப் பொருட்கள், போட்டிருந்த மோதிரம், அவன் உழைத்துத் தேடியவை எல்லாவற்றையும் மனைவி வீட்டாரே சொந்த மாக்கிவிட்டனர். அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை, அவனது பழைய சைக்கிளைத் தவிர.
"பெரியக்கா குடும்பம் பாவம். நாலு பொம்பிளைப் பிள்ளைகள். இவையின்ர காணியை மீட்டுக் குடுக்க வேணும். வட்டியோட நாப்பதாயிரம். என்ர ராசாத்தி கடைசியா சொல்லிப் போட்டுப் போனது. அதை
- 116

கட்டாயம் மீளவேணும். அதுவரையாவது நான் சீவிக்க வேணும். எனக்கு இனி ஒப்பறேசன் எதுவும் வேணாம். சா. வந்தால் வரட்டும். உழைக்கவேணும். உழைத்து அதை மீட்டுக் குடுக்கவேணும்.
ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தான். பெரியாஸ் பத்திரியிலிருந்து மரணச் சான்றிதழ். அவன் மனைவி இயற்கை மரணமடைந்திருந்ததாக அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.
அதிகாலை . சூரிய உதயத்தோடு . மாட்டு வண்டில் சத்தங்கள். பாலசிங்கம் எழுந்து தினது பழைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சுன்னாகம் சந்தையை நோக்கி மீண்டும் போகிறான்.
- 117

Page 61
அப்பா வருவார்!
அன்புள்ள அப்பாவுக்கு, இரண்டு மாதங்களுக்கு முந்திய திகதியிட்ட உங்கள் கடிதமும் காசும் கிடைத்தன. அப்பா. மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் எல்லோர் குடும்பங்களிலும் போலத்தான்நம் குடும்பத்திலும்.
உங்கள் சின்னக்கா, எங்கள் ஆசை மாமி கடந்த 2ம் திகதி காலமாகி விட்டார். முதல் நாள் இராசா பெரியப்பா வீட்டிற்குப் போய்விட்டு வீடு போனவர், இரவு காய்ச்சல் வரவே, மறுநாள் ஆஸ்பத்திரி போனார். அன்றிரவே போய் விட்டார். மூளைக் காய்ச்சலாய் இருக்கலாமாம்.
இராசா பெரியப்பா நிலை கலங்கிப் போய்விட்டார். "படித்துப் பட்டதாரியாகி பெரிய உத்தியோகம் பார்த்துக் கொண்டு சீரோடும் சிறப்போடும் இருக்கிறாய் என பெருமையோடு இருந்தோம். இப்படி அரை வயதில் போய்விட்டாயே" என்று கதறி அழுதார்.
- 18
 

மாமியின் இரு குழந்தைகளையும் நினைக்க அழுகை தான்! என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறினார்கள். அழுகை வருகிறது. எழுத முடியவில்லை.
இராசா பெரியப்பா வீட்டில் வைத்துத் தான் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தன. எல்லோர் அலுவலகங் களிலுமிருந்து நிறைய ஆட்கள் வந்தார்கள். 'கவலைப் படாதீர்கள் அப்பா மாமி புகழோடு போய் விட்டா'
தீவுப் பகுதி ஆசிரியர் எல்லோருக்கும் யாழ்ப்பாணத்தில் தான் தற்காலிக இடம் போட்டுக் கொடுத்துள்ளார்கள். இந்து மகளிர்கல்லூரியில் பிற்பகல் நேர வகுப்புக்கள் தீவுப் பகுதிப் பிள்ளைகளுக்கென நடக்கின்றன. அம்மா அங்கு தான் படிப்பிக்கப் போகின்றா. குட்டி மாமாதான் சைக்கிளில் பத்திரமாக கூட்டிப் போய் கூட்டி வருவார். அம்மாவுக்கு ஒய்வில்லை. கஷ்டம்தான். சரியாய் கறுத்து மெலிந்து போய்விட்டா. சாப்பாட்டைக் கவனிப் பதில்லை. தங்கச்சியவையைப் பார்க்கவேணும், பாடசாலை வேலைகள், பயிற்சிகள் செய்து முடிக்க வேணும். தங்கச்சியவை ஒரே குழப்படி, அம்மாவை ஒரு வேலையும் செய்ய விட மாட்டினம். சின்னத் தங்கச்சியை நான்தூக்கி வைச்சிருப்பேன். ஆனால் அவள் என்னோடு சேரமாட்டாளாம். அவள் இப்போதே நடக்கத் தொடங்கி விட்டாள். நல்லாய் கதைக்கிறாள். பெரிய தங்கச்சி தாத்தாவின் செல்லம். எந்த நேரமும் தூக்குக் காவடிதான்.
என்னோட எல்லாரும் செல்லம்தான். ஆனால் நான் ஒருவருடனும் செல்லமில்லை. சில வேளை அழுகை வரும். அப்பா வீட்டிலிருந்தால்..' என்று நினைப்பேன். நான் அப்பாவின் செல்லம் தானே! கடிதங்கள் பருத்தித் துறைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர்
- 119 س

Page 62
இங்கு தருகிறார்கள். உங்கள் கடிதங்கள் சிலவேளை ஒரு மாதத்திலும், சில வேளை இரண்டு மாதங்கள் கழித்தும் கிடைக்கின்றன. நான் கவனமாகத் தான் படிக்கிறேன். பெரிய தங்கச்சிக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிறேன்.
அன்ரிக்கு ஏப்ரலுடன் படிப்பு முடியுதாம். படிப்பு முடிந்து அவ வீட்டிலிருந்தால் எங்களுக்கு கொண்டாட் டம் தான்.
அப்பா. சந்தியில், முன்னர் உங்கள் வைத்திய சாலைக்குப் பக்கத்து வீடு இராமநாதற்ற பேத்தி விஜி இயக்கத்திற்குப் போய் விட்டாளாம். தகப்பன் அங்குதான், சுவிஸிலிருந்து கனகாலமா உழைச்சு அனுப்பி குடும்பத்தைப் பார்த்தவர் எண்டு தெரியும் தானே. ஜி.சி.ஈ. நல்ல ரிஸல்ட் எடுத்த பிள்ளை. ஏ.எல். படிக்காம இயக்கத் துக்குப் போயிற்று. ஏ. எல். படிக்கச் சொல்லி, காசு அனுப்புகிறதெண்டும் தகப்பன் எழுதியிருந்தவராம். இந்த மண்ணை இப்போது மீட்காமல், எப்போது மீட்பது? என்று தாய்க்கும் தகப்பனுக்கும் வேறு வேறாகக் கடிதம் எழுதி வைச்சுப் போட்டு போயிட்டுதாம். தகப்பனுக்கு, கடிதத்தை சுவிசுக்கு அனுப்பினா, அந்த மனுஷன் மூளையை விட்டிடும் என்று தாய் தலையில அடிச்சு அழுதுபோட்டு பேசாம இருக்கிறா. தமையன்மார் சுயநலத்தோட வெளிநாடு பறக்க, அந்தப் பிள்ளை மட்டும் இயக்கத்துக்குப் போயிற்றுது அப்பா.
மக்கள் கடை அலுவல் பார்க்கும்போது குண்டு விழுந்து செத்த உங்கள் "பிறெண்ட் ரவி மாஸ்ரருடைய குடும்பத்தை, சகோதரி கனடா வரச்சொல்லிக் கேட்டவை யாம். அவைக்குப் போக விருப்பமில்லை. அந்த மாஸ்ரரின்ர இழப்பு உங்களை எத்தனை நாள் அழ
- 120 -

வைத்தது! இன்று எனக்குத் துணை பிறெண்ட்” 1ாஸ்ரரின்ர மகள் கீதாதான்.
கீதாவும் அப்பாவின் செல்லம்தான். பாவம் அப்பா வைப் பற்றியே அடிக்கடி கதைப்பாள். நீங்களும் ரவி மாஸ்ரரும் அவர்களது வீட்டு முற்றத்தில் கதிரையைப் போட்டுக் கொண்டு இரவு பத்து - பன்னிரண்டு மணி வரை இருந்து உலக நடப்புகள், அரசியல் பற்றியெல்லாம் கதைக்க நானும் கீதாவும் முற்றத்தில "லைற் வெளிச்சத்தில ஒடி விளையாடினதைப்பற்றியெல்லாம் நினைச்சுப் பார்த்துகீதாவுக்குச் சொல்வேன். அவள் அழத்தொடங்கி விடுவாள். எனக்கும் அழுகை வந்துவிடும்.
பள்ளிக்கூடத்திலும், இப்படித்தான் ஒவ்வொரு பிள்ளை களும் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி எங்களை அழ வைத்து விடுகுதுகள்.
எங்கள் அழுகை எப்போது நிற்கும் அப்பா அரசுப் பெரியப்பாவைப் பார்க்க கவலையாயிருக்கிறது. இன்னும் பென்ஷன் கிடைக்கவில்லையாம். ஆசை மாமியின் இழப்பும் அவரை வாட்டிவிட்டது. "பெரியண்ணா என்றுருகி ஒரு கவிதை எழுதி யிருந்தார். படிக்க அழுகை தான் வருகிறது. இப்போதும் குடிக்கிறார்தான். வீட்டிற்கு வந்தபோது என்னோடு செல்லமாகக் கதைத்தார். 'குடிக்காதேயுங்கோ பெரியப்பா’ என்றேன். 'இப்போது இங்கு குடிவகை இல்லையே. இல்லாவிட்டால் நானெப்படி குடிப்பேன்? என்று சொன்னார். அவர்களது வீட்டுப் பக்கம் பலர் இடம் பெயர்ந்து விட்டனர். பலாலியிலிருந்து ஒரே "ஷெல்லடி, அவர்களை எங்கள் இடத்துக்கு வந்து, ஒரு வீடு பார்த்து இருக்குமாறு சொன்னேன். கண்ணன் அண்ணாவிற்கு
9.
என்றழைப்பாயே..
- 121 -

Page 63
நூலகர் வேலை கிடைத்தது. ஆனால் அவர் போகவில்லை. அவரும் பெரியக்காவும் வெளிநாடு போய் மேற்படிப்பு படிப்பதுதான் நல்லதென பெரியப்பா சொல்கிறார். ஆனால் பெரியம்மா பிள்ளைகளைப் பிரிந்து தனியே இருக்கமுடியாதென அழுகிறா. என் செய்வது அவர்கள் நிலை அப்படி
போன மாதம் எங்கள் வீட்டு சந்தியில் மூர்த்தி மாமா கடைப் பக்கமாக நான்கு குண்டுகள் போட்டதால் மூன்று பேர் அந்த இடத்திலேயே செத்துப் போயினர் மூர்த்தி மாமா கடை மேல் மாடி தூள்தூளாகிவிட்டது. சுவர்கள் பிளந்து போய் நிற்கின்றன. ஆனால் அவர் இப்போதும் அதற்குள்ளிருந்து மரக்கறி வியாபாரம் செய்கிறார். குண்டு விழுந்தபோது காயப்பட்ட கிழக்கூரைச் சேர்ந்த விசுவ லிங்கம் என்பவர் நேற்றுச் செத்துப்போனார்.
அப்போது உடைந்த எங்கள் வீட்டு ஓடுகள் எல்லாம் ஒருவாறு மாற்றிவிட்டோம். ஆனால் ஜன்னல் கண்ணாடி கள் ஒன்றும் மாற்றவில்லை. அவசியமில்லை என தாத்தா சொன்னார்.
காரைநகரிலிருந்து ஒவ்வொரு நாளும் ஷெல் அடித்த படிதான். எங்கள் பகுதியில் ஒன்றும் விழவில்லை. ஆனால் மேற்குப் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் ஷெல் விழுந்து, தகப்பன் தலை பிளந்து செத்துப் போயிற்றாம். தாய்க்கும் பிள்ளைகள் இருவருக்கும் கடுங்காயமாம். பாவங்கள்.
தாத்தா யாழ்ப்பாணம் போய் வங்கியில் தான் பென்ஷன் எடுக்கிறார். சைக்கிளில் தான் கஷ்டப்பட்டு ஓடிக் கொண்டு போய் வருவார். போட்டி போட்டு முன்னுக்கு
- 22

நின்றால் தான் காசு கிடைக்குமாம். அவ்வளவு நெருக்கடி. ஆயிரம் ரூபாதான் ஒரு நாளில் எடுக்க முடியும். சுபாவுக்கு தொழில்நுட்ப கல்லூரி பரீட்சை முடிந்துவிட்டது. தொடர்ந்தும் அங்கு வேறொரு வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளா. வவுனியா பல்கலைக்கழகக் கல்லூரியில் வகுப்பு இவ்வருடம் தொடங்கவில்லையாம். அதற்கு அனுமதி கிடைத்தாலும் அவவுக்கு அங்கு போக விருப்பமில்லை. ராணுவம் எந்நேரமும் முன்னேற முயற்சிக்கலாம் என்று எதிர்பார்த்தபடியே தான் சனங்கள் இருக்கின்றனர். ஹெலியிலிருந்து எச்சரிக்கை நோட்டீஸ் போடுறாங்கள். பலாலியிலிருந்து வானொலி மூலமும் சொல்கிறார்கள். இயக்கத்தினரும் உஷாராக இருக்கின் றனர். சனங்கள் எதையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். வேறு வழியில்லைத் தானே. எங்கு தான் ஒட முடியும். உங்கள் நண்பர் இரத்தினம் மாமாவின் புதிய பாடல்கள் சில கெசட்டில் வந்துள்ளன. அற்புதமாக இருக்கின்றன. அடிக்கடி கேக்க ஆசை. றேடியோ கேட்க பற்றறி வேணுமென்று தாத்தா நிற்பாட்டிப் போடுவார்.
"விரைவில் நாங்கள் அங்கு போய்விடலாம். அப்பா கூப்பிடுவார்” என்று அம்மா தினம் தினம் எங்களுக்கு ஆசை வார்த்தை கூறுகிறா. எனக்கென் அப்பா பக்கத்தி லிருக்க வேணுமென்றுதான் ஆசை
தம்பி மாமா முன்னர் போலத்தான். வருத்தக்காற மனுஷன். சைக்கிளில ஒவ்வொரு நாளும் பத்திரிகைக் கந்தோருக்கு போய்த்தான் வாறார். எந்தப் பிரச்சினை என்றாலும் மனுஷன் தன்ர கடமைக்கு ஒழுங்காகப் போகுது. ஆச்சியைப்பற்றி ஒரு செய்தியும் கிடைக்க வில்லை. கவலைதான். ஆசை மாமியின் இழப்பும்
- 123

Page 64
அவவுக்குத் தெரியாது. செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாரம் தீவுப் பகுதிக்கு போகவுள்ளது. இராசா பெரியப்பா அவர் களுடன் கதைத்துள்ளார். அவர்கள் போய் வந்த பின்தான் ஏதும் விபரம் அறியலாம்.
பெரிய மாமி, மாமா, தாசன் மச்சான் எல்லோரும் தீவிலிருந்து வந்து நல்லூரில் பாலன் மச்சான் வீட்டிலிருக் கின்றனர். தாசன் மச்சான் கோப்பாய் ஆசிரிய பயற்சிக் கலாசாலைக்குப் போகின்றார். மாமாவுக்கு உடல் நிலையும் சரியில்லை.
மலர் மாமி வேலையும் படிப்பும்தான். பறந்து திரிகின்றா. வருஷம் ஒரு சோதனை பாஸ் பண்ணுறா. இடமாற்றம் வந்ததாம். அரசாங்க அதிபர் கொழும்பில் கதைத்து நிறுத்தியுள்ளாராம். அவவுக்கு ஒரு கல்யாணம் இராசா பெரியப்பா பேசி ஒழுங்காக்கியுள்ளார். காசு மூன்று லட்சம் வேணுமாம், நாங்களும் கொடுத்துதவ வேணுமென்று அம்மா சொன்னா.
எங்களிடம் தான் என்ன இருக்குது கொடுத்துதவ. காப்பு இரண்டும் என்ர சங்கிலியும் ‘போராட்ட நிதிக்கு" கொடுத்து விட்டது தெரியும்தானே. 'கொடி மட்டும் தான் இருக்குது. அதைத்தான் வித்துப் போட்டு கொடுத் துதவ வேணுமென்று அம்மா சொன்னா. உங்கள் எண்ணம் என்ன? கல்யாணம் ஒப்பேறினா எல்லோருக்கும் சந்தோஷம்தானே. இந்த நிலைமையிலும் சனம் சீதனம் கேட்கிறதை விட்டபாடில்லை அப்பா!
இங்கு எல்லா நிலைமைகளையும் பார்த்துத் தொடர்ந்து படிப்பது கஷ்டம் என்று வடக்கு வீட்டு குணரத்தினம் கிளாக்கரின் மகள் 'கொழும்பு போய் படிக்கிறா.
- 124 -

வீட்டாரும் போன கிழமை கொழும்புக்கே போய் விட்டனர். வெளியிலிருந்து காசும் வருமாம். கொழும்பி லேயே இருக்கப் போயினமாம். இப்போது அந்த வீட்டில் காங்கேசன்துறையிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஒரு குடும்பத்தை இருத்தியுள்ளோம்.
"கெதியில அப்பாவிடம் போய்விடுவோம்’ என்று ஆறுதல் சொல்லி எங்களை நித்திரை கொள்ளவிட்டு அம்மா கண் கலங்குகின்றா. நானும் நித்திரை போல மெளனமாகக் கிடந்து அழுவேன்.
எனக்கு அங்கு வருவது விருப்பமில்லை அப்பா. அம்மாவுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஆனால் அவ இப்படி எழுத மாட்டா.
எங்கள் தாத்தா, அம்மம்மா, அன்ரி, தேவி அன்ரா, பெரியன்ரா, பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள், மாமியாக்கள், அக்காக்கள், அண்ணாக்கள், ஆச்சி, என்ர பிறெண்ட் கீதா என்று எங்கடசனங்களை எல்லாம் இங்க விட்டுட்டு, அங்க வந்து நாம் எப்படி சந்தோஷமாக இருக்கமுடியும் அப்பா.
அப்பா. நீங்கள் தானே, 'மண்ணை நேசிக்கவேண்டும், மக்களை நேசிக்க வேண்டும்’ என்று சொல்லித் தந்தீர்கள். உங்கள் புத்தகத் தட்டிலிருந்து பல புத்தகங்கள் வாசித்து விட்டேன். டானியலின் 'கானல்’ நாவல் அபாரம். சில விடயங்கள் விளங்குவதில்லை. அம்மா முன்னர் பலமுறை வாசித்ததாகச் சொன்னா. பாடசாலைப் பாடங்களும் கவனமாகப் படிக்கிறேன்.
அப்பா. நீங்கள் இங்கு வாருங்கள். கெதியில வாருங்கள்! ஏதோ சனத்தோட சண்மா நாங்களும்
- 125 -

Page 65
வாழுவம். நான் அப்பாவின் செல்லம்தானே! என் விருப்புகள் எல்லாம் உங்களுக்குப் புரியும்தானே! லீலா அன்ரா அங்கு மாமாவிடம் வந்து சேர்ந்து விட்டாதானே. கண்டு கதைத்தீர்களா? அன்ராவின் ஆச்சி அவுஸ்தி ரேலியா போய் சேர்ந்துவிட்டாவா? இங்கு தினசரி செய்திகள் ஏராளம். எதை எழுதுவது எதை விடுவது. எல்லாம் வந்து பாருங்கள்!
எப்போது இங்கு என்னருகில் அப்பா?
அன்பு மகள்
இளநிலா 5, பங்குனி 1992, வட்டுக்கோட்டை
- 126 -

ஏன் இடம் மாறினான்
ஏன் இடம் மாறினான்?
ஆனந்தனுக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்தது. இரண்டு நாட்களாகிறது. இன்னும் பன்னிரண்டு நாட்களுக்குள் அவன் கொழும்புக்கு பயணமாக வேண்டுமாம். இட மாற்றத்தை எதிர்த்து தண்லமை அலுவலகத்திற்கு மனுச் செய்திருந்தான்.
அவன் தான் பிறந்த ஊரில் கடமையேற்று இரண்டு வருடங்கள்தான்பூர்த்தியாகியிருந்தது. நான்கு வருடங்கள் கடமையாற்ற உரிமையிருந்தும் அதற்குள் திடீர் இட மாற்றம்.
அவனால் அந்த இடமாற்றத்தை ஜீரணிக்க முடிய வில்லை. உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரமளிக்கப் பட்ட அதிகாரி அவன். தனது கொள்கைக்கேற்ப கற்றுக்
- 127

Page 66
கொண்டவைக்கேற்ப சகல மக்களும் அவன் பார்வையில் ஒரே மாதிரியே. இயன்றவரை பணி புரியத்துடித்தான்.
ஊரில் குடிநீருக்காக வாடும் மக்கள் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஆவன செய்தான். தேவையான இடத்து புதிதாகச் சனசமூக நிலையம், நூல் நிலையம் அமைத்திட உதவினான். தொற்று நோய்த் தடுப்பு, தாய் - சேய் நலப் பணிமனை, ஆயுள்வேத மருத்துவ சேவை இப்படிப் பல. ஆனந்தனின் உற்ற நண்பன் செல்வம் நல்லதோர் புகைப் படப் பிடிப்பாளன். அந்நியப் படை அப் பிரதேசங்களில் ‘அமைதி காத்த காலத்தில் செல்வத்தின் கமரா, பல நிகழ்ச்சிகளைப் படம் பிடித்திருந்தது. அவை உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகளில் பிரசுரமாக ஆனந்தன் உதவி செய்ததுண்டு.
முன்னர் ஒரு தடவை குமுதினிப் படகில் கடற்படைக் கழுகுகள் நிகழ்த்திய கொலை வெறியின் தாக்கத்தையும் செல்வம் புகைப்படம் பிடித்தது மாத்திரமன்றி, அதில் பலியானவர்களின் உடல்களை அக்கோரத்தையே வீடியோக்கமரா மூலம் படம் பிடித்திருந்தான். அவை உள் நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகளுக்கும், மனித உரிமை நிறுவனங்களுக்கும் போய்ச் சேர்ந்தது உண்மைதான்.
ஊரிலும் அடுத்துள்ள கிராமங்களிலும் நடந்த அந்நியப் படையினரின் அட்டூழியங்களும் செல்வரத்தினத்தின் கமராவுக்குத்தப்பவில்லை. படையினரின் கண்களுக்கும் அவன்தப்பவில்லை.
ஒரு நாள் அவனும் நண்பர்கள் இருவரும் கைது செய்யப் பட்டு முகாமில் அடைக்கப்பட்டனர். சித்திரவதைகளும்,
- 128

விசாரணைகளும் பலவிதம். ஊரில் நல்ல பிள்ளையென மதிக்கப்பட்ட அவனை விடுவிக்க மக்கள் திரண்டனர். அந்த மக்களுடன் ஆனந்தனும்.
நூற்றுக்கு மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் பெண்கள் அந்தப் பிரதேச பெரிய முகாமுக்கு படையெடுத்தாற் போலச் சென்றனர். எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடாத செல்வத்தையும் அவன் நண்பர்களையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரினர். முகாம் பெரியவரின் கடுமை யான எச்சரிக்கை தான் பதிலாகக் கிடைத்தது.
ஆனந்தன் இயன்றவரை வாதாடிப் பார்த்தான். செல்வமும் நண்பர்களும் வன்முறையாளர்களல்ல; அவர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு உதவுபவர்கள்; அவ்வளவுதான்; அவர்களை விடுதலை செய்யுங்கள் எனக் கேட்டான். முடிவு பூச்சியம் தான். இருப்பினும் என்ன..! ஆனந்தன் உட்பட முப்பதுக்கு மேற்பட்ட ஆண்களும், ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்களும், முதியவர்கள், குழந்தைகள் உட்பட முகாம் வாசலின் ஒரமாக சத்தியாக் கிரகம் இருந்தனர். அவ்வப்போது படையினரின் கடும் எச்சரிக்கைகள் வந்தன. கலங்கவில்லை ஒருவரும். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை இது நீடித் தது. ஒரு தடவை ஒரு பெரிய ட்ரக்" வண்டி இவர்களின் ஊடாகச் செல்ல எத்தனித்தது. எவருமே அசையவில்லை.
ஐந்து முப்பது மணியளவில் முகாம் பெரியவர் மேஜர் ஆனந்தனைத் தனியே அழைத்தார். 'எல்லாம் உமது ஏற்பாடுதானே.? இல்லை. இது சனங்களின் ஏற்பாடு. என்றான். கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தண்ணிர்துளி விழுந்த மாதிரி மேஜர் சீறினார். பின்னர் அடங்கி விசாரித்தார்.
129 -

Page 67
நீர் ஒர் அரசாங்க அதிகாரி என்பது எமக்குத் தெரியும். உமது நம்பிக்கையில் அவர்களை விடுதலை செய்கிறேன். ஆனால் தொடர்ந்தும் அவர்கள் எமக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எமது நடவடிக்கை மிகவும் கடுமையானதாக இருக்கும்’ என்றார் மேஜர் முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் சில நாட்களில் இனந்தெரியாதவர்களால் திரும்பி வராத இடத்துக்கு அனுப்பப்படும் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்துள்ளதை ஆனந்தன் அறிவான்.
இரண்டு நாட்களாகவில்லை. காலை ஆறு மணியிருக் கும். ஆனந்தன் வீட்டிற்கு முன்னால் வீதியில் இரண்டு ஜீப், நான்கு ட்ரக்" நிறைய படையினர். அவனது வீட்டுக் கேற்’ பலாத்காரமாகத் திறக்கப்பட்டு வீட்டுக் கதவு தட்டப் பட்டது.
அப்போது தான் அவன் மனைவி குசினியில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவர்களது ஒரு வயது மகள் தந்தையின் மேல் கால் போட்டபடி நித்திரையில் இருந்தாள்.
கதவில் அடித்த சத்தத்தில் குழந்தை விழித்துக் கொண்டு மிரண்டது. குழந்தை தன் மீது போட்டிருந்த காலை எடுத் ததும், கதவுச்சத்தம் கேட்டதும் ஆனந்தனுக்கு என்னவோ போலிருந்தது. இதற்குள் மனைவி ஓடி வந்தாள். 'பக்கத்து ஐயர் வளவுக்குள்ளால் தப்பி ஒடுங்கோ. அரக்கர் வந்து நிக்கிறாங்கள்."
ஒன்றுக்கும் பயப்படாதே. குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆனந்தன் முன் அறைக்கு வந்து கதவைத் திறந்தான்.
م 130 مـ

மனைவியும் பக்கத்தில். கதவின் முன்நின்ற படையினர் இருவர், அவனை "கேற்றின் முன் ஜீப்பிலிருக்கும் பெரிய வரிடம் வருமாறு அழைத்தனர்.
படிகளால் இறங்கியவன் வளவை ஒரு முறை நோட்ட மிட்டான். வளவைச் சுற்றி வெளிப்புறமாக மரங்களோடு மரங்களாக அவர்கள்.
ஜீப்பின் அருகில் அவன். “எப்படி ஊர்நிலவரம்.? 'ஒரு பிரச்சினையுமில்லை." என்றான். "அப்படியா வாருங்கள் என்னுடன் சிறிதுதுரம் இந்தப் பக்கமாக போய்க்கொண்டு
பேசுவம்."
அவனுக்குப் பல விடயங்கள் படமாக விரிந்தன. அவர்கள் குறிவைத்து விட்டார்கள் என்பது புரிந்தது. “இங்கேயே பேசுவோம்’ என்றான்.
"பரவாயில்லை பிள்ளையை மனைவியிடம் கொடுத்து விட்டு ஜீப்பில் ஏறுங்கள். போய்க்கொண்டே பேசுவோம்.” என்றார் மீண்டும் பெரியவர்.
இதற்கிடையில் அவர்களில் ஒருவன் வந்து குழந்தை யைப் பிடுங்க ஆனந்தன்ை ஒருவன் கையில் பிடித்தான். ஆனந்தனின் மன்ைவி பாய்ந்து பிள்ளையைப் பிடித்துக் கொண்டு கத்தினாள்.
"மிஸ்டர் ஆனந்தன். ஜீப்பில் ஏறலாம்” பெரியவர் கண்டிப்பான குரலில் சொன்னார். “மனைவி, பிள்ளையை விட்டு இப்போது வரமுடியவில்லை. மன்னிக்கவேணும்"
சில விநாடி அமைதிக்குப் பின். "மிஸ்டர் ஆனந்தன். நீர் ஊரில் பெரிய ஆளோ. எமக்கு எதிராக எதுவும் செய்து விட முடியும் என்று நினைக்கிறீரோ. ஜீப்பில் ஏறும்.”
131.

Page 68
திடீரென அவர்களில் நான்கைந்து பேர் பாய்ந்து வந்து ஆனந்தனை இழுத்தனர். மனைவியையும் குழந்தையையும் வேலியோடு சாய்த்தனர். செல்ல மகள் "அப்பா” என்று கத்தினாள்.
ஜீப்பில் ஏற்றுவதற்காக அவனை இழுத்து வந்தனர். எல்லோருக்கும் திகைப்பு. எங்கிருந்து இப்படி வந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர்; அதிகமானோர் பெண்கள். ஜீப்பைச் சுற்றி இருபதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறார்கள், மாணவிகள்
ஆனந்தனைத் தாய்மார்கள் சூழ்ந்து கொண்டனர். அத்தனை வாகனங்களைச் சுற்றியும் சனங்கள் வந்து கூடினர். வளவுக்குப் பின்னால் மரங்களோடு நின்ற படை யினரும் ஓடி வந்து சேர்ந்தனர். படையினர் சத்தம் போட்டு எச்சரிக்கை செய்ய, சனங்களும் 'ஆனந்தனை விடுங்கோ என்று கூச்சல்,
ஜீப்பிலிருந்து மேஜர் பாய்ந்து கீழே இறங்கினார். இடுப்புப் பட்டியில் கை வைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்று பார்த்தார். படையினர்துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்தபடி. "உனக்குச் சுட வேண்டுமானால் எங்களைச் சுடு; தம்பியைத் தொடாதே. எங்கள் மக்களை அழிக்காதே. கருணாமூர்த்தி தோன்றிய மண்ணில் பிறந்த உங்களுக்குக் கருணையே இல்லையா." ஒர் இளம் பெண் மேஜரைப் பார்த்துக் கத்தினாள். "அண்ணாவில் கை வைக்காதே." சிறுவர்கள் சத்தமிட்டனர்.
'ஆனந்தன் சட்டவிரோதமாக என்ன செய்தான்." அறுபது வயது ஐயர் அம்மா முன்னால் வந்த மேஜரின் முகத்திலடித்தாற் போல் கேட்டா.
- 132

மேஜர் மனதில் என்னவோ நினைத்துக் கொண்டு சிரித்தான்.
'பிள்ளைகளை அநியாயமா பிடிச்சுக் கொண்டு போகாதீங்க. என்னை வேணுமெண்டாச் சுடுங்க.
ஆனந்தனை ஒன்றும் செய்யாதீங்க."
எழுபத்தேழு வயது நிறைந்த, சிவன் கோவில் மார்க் கண்டேயக் குருக்கள் கைத்தடியை ஊன்றிப் பிடித்தபடி மேஜருக்குச் சொன்னார்.
அவ்வளவுதான்.
அதற்குள் என்னென்னவோ சத்தங்கள். இரைச்சல்கள் பெண்கள் மத்தியிலிருந்து. சிலர் கை நிறைய மண். படையினர் பலர் பாய்ந்து சனத்திற்கு எதிர்ப்புறமாக அணிவகுத்து நின்றனர். சனங்களில் பலர் வாகனங்களைச் சுற்றி அமர்ந்துவிட்டனர்.
“என்ன இது” சத்தமாகக் கத்தினார் மேஜர் “வந்த வழியே போங்கோ”சனங்கள் சத்தமிட்டனர். சனங்களை வழிவிடுமாறும், தான் ஒருவரையும் கைது செய்யவில்லை யென்றும் உரத்துச் சொன்னார் மேஜர் ‘என் சேவைக் காலத்தில் இது என் முதல் அனுபவம். உன்னைப் பின்பு சந்திக்கிறேன்." என்று ஆனந்தனை நோக்கி மெதுவாகச் சொன்னார்.
வாகனங்கள் மெல்ல ஊர்ந்தன. "அந்நியக் கழுகுகளுக்கு எங்கள் மண்ணில் இடங்கொடுக்கவே கூடாது. எங்கள் கால்களில் நாங்கள் நிற்கவேணும்” ஒரு மாணவி சத்த மாகச் சொன்னாள்.
- 133

Page 69
தெருவில் எழுந்த புழுதி வாகனங்கள் சென்ற திசையை மறைத்தது. கண்களில் கண்ணிர்ததும்ப, சனங்களின் மத்தி
யில் அவன்.
மனைவியின் கையிலிருந்த செல்ல மகள் "அப்பா' என்றவாறு அவனிடம் தாவினாள்.
இடமாற்ற உத்தரவை எதிர்த்துச் செய்திருந்த மனுவின் பிரகாரம், சிறிது பரிகாரம் போல் மறுநாள் செய்தி வந்தது.
ஒரு கிழமைக்குள் வவுனியா அலுவலகத்தில் அவனைக் கடமையேற்கும்படியான அறிவுறுத்தல்தான் அது. தொழிற்சங்க ரீதியாக அதனையும் எதிர்த்து மனுச் செய்ய முயற்சித்தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவன் இடமாற்றடம் பெற்றுச் செல்வது தான் அவனுக்குப் பாதுகாப்பானது என சனங்கள் வலியுறுத்தினர்.
வவுனியாஷைக்கு இடம்பெயர்ந்த அவன், விடுதலையான மறுநாளே கொழும்புக்கு புறப்பட்டு போய்ச் சேர்ந்து, ஜேர்மனி செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்த நண்பன் செல்வத்துக்கு ஊருக்கு செய்யவேண்டிய பணிகள் குறித்து கடிதம் எழுதினான்.
- 134 -

கிழக்கு நோக்கிய மேற்கு மனிகுன்
Dத்தியான உணவுவேளை முடிந்து பூட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார்தியாகர்.
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள துலூஸ் பெருநகரின் பிரதான இரயில் நிலையத்திற்கு அண்மையி லுள்ளது தென்னிந்திய இலங்கை உணவகமான “யாதவா”
இதன் உரிமையாளர் தியாகர் என அழைக்கப்படும் Suurt35UTart.
இவருடன் இவரது மனைவி, ஒரு வேலையாள். மூவரும் தான் உணவகத்தினை இயக்கி வருகின்றனர். இது ஒரு சிறிய உணவகம்,
சுமார் முப்பது பேர் ஒரே நேரத்தில் உணவருந்தக்கூடிய இடவசதி கொண்டது.
- 135

Page 70
அன்று மத்தியானம் அருகிலுள்ள அலுவலகங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் வந்து சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டனர். அவர்களில் அதிகமானோர் காசுக்குப் பதிலாக உணவுக்கென வழங்கப்படும் "ரிக்கற் தான் கொடுத்துச் சென்றனர்.
இந்த 'ரிக்கற்றுகளைச் சேர்த்து ஒரு கட்டாக அதற்குரிய அலுவலகத்திற்கு அனுப்பினால் இரண்டு கிழமையில் அதற்கான தொகை சிறிது கழிவு நீக்கி வந்துசேரும்.
இப்படி வந்துசேரும் தொகையில் ஏதாவது கடனை அல்லது கொடுக்குமதியைச் சரிக்கட்டிவிடுவார்தியாகர். இந்த 'ரிக்கற் புத்தகம் அலுவலகங்களில் பணி புரிபவர் களுக்கு மிகுந்த கழிவுடன் கிடைக்கும்.
இதனால் வாடிக்கையாளர்களும் உணவகத்தினரும் நன்மையடைவர் என்றே கூறலாம்.
ஒருவர் திடீரென உள்ளே வந்தார். வாட்டசாட்டமான உருவம். அழகாக உடையணிந் திருந்தார்.
பிரான்ஸின் வடபகுதியைச் சேர்ந்த கலப்பில்லாத பிரெஞ்சு மனிதர் என்று கூறிவிடலாம். வெளிர் நீலக் கண்கள்.
“மன்னித்துக்கொள்ளுங்கள். நேரம் பிந்தி வருகிறேன். சாப்பிடலாமா." என்று கேட்டார்.
நேரம் பிந்தினாலும் ஏன் வருமானத்தை இழப்பான். என்ற எண்ணத்தில். "ஆம். சாப்பிடலாம். உட்காருங்கள்." என்றார் தனக்குத் தெரிந்த பிரெஞ்சு உச்சரிப்பில் தியாகர்,
- 136 س

"சலாட், மரக்கறி சமுசா, கோழிக்கால் தண்டூரி, பசுமதிச் சோறு, பருப்புக்கறி. அத்துடன் "போதோ வைன்” போத்தல் என "மெனு புத்தகத்தைப் பார்த்து ஒடர் கொடுத்தார் வந்தவர்.
தியாகரும் நல்ல ஒடர் எனச் சந்தோஷத்துடன் ஒடி ஒடி வேலை செய்தார். மத்தியானச் சாப்பாட்டுக்கு வருபவர் களில் அதிகமானோர் விரைவுச் சாப்பாடு எனக் குறைந்த விலைச் சாப்பாட்டையே வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அவசரமாகப் போய்விடுவர்.
இரவுச் சாப்பாட்டுக்கு வருவோரில் சிலரே, நல்ல சாப்பாடு" என விலை கூடிய சாப்பாட்டைத் தெரிவுசெய்து குடிவகையும் எடுத்துக் கொள்வது வழக்கம். அப்படியான தெரிவின் போது தான் தியாகருக்கும் இலாபம் அதிகரிக்கும்.
உழைப்பதில் அதிக பணத்தை அரசு பல வகைகளிலும் வரிகளாகப் பெற்றுவிடும். மருத்துவக் காப்புறுதி, பென்சனுக்கான கட்டுப்பணம், ஒவ்வொரு சாப்பாட்டுக் கும் 19.6% வீதம் அரசுக்கு வரி, சமூகக் கொடுப்பனவுக் கான வரி, மாகாண மாவட்ட, மாநகர சபைகளுக்கான வரிகள், காஸ்", மின்சாரம், தொலைபேசி என்ற செலவுகள் எல்லாம் முடிந்து இன்றைய நிலையில் இலாபம் பெறுவது மிகவும் சிரமமானதுதான்.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் தனக்கேற்ற வேறு வேலைகள் இந்நகரில் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில்தான், சுதந்திரமாக இயங்கலாம்' என்ற முடிவில் 'யாதவா'உணவகத்தை வங்கிக் கடன் உதவியுடன் தியாகர் ஆரம்பித்தார்.
- 137

Page 71
ஒரு 'கிளாஸ் வைனை இழுத்துவிட்டு 'சலாட்டைச் சாப்பிட்டு முடித்தார். பின்னர் இன்னும் கொஞ்சம் வைனைக் குடித்துவிட்டு சமுசாவைச் சாப்பிட்டார். மிக நன்றாயிருக்கிறது என்றார்.
இது பிரெஞ்சுக்காரரின் நல்ல பண்புகளில் ஒன்று.
நன்றாயிருந்தால் உடனேயே மனந்திறந்து பாராட்டி விடுவார்கள்.
'யாதவா உணவகத்தின் மரக்கறி சமுசா மற்ற இந்திய உணவகங்களில் வழங்கப்படும் சமுசாவைவிட கொஞ்சம் வித்தியாசமானது.
வீட்டில் தயாரிப்பது போன்று மாவை முறைப்படி குழைத்து, அத்துடன் அவித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கப்பட்ட மசாலா வகைகளை அதனுள் பொதிந்து பொரித்து எடுக்கப்படுவதாகும். இதனைச் சுடச்சுட சாப்பிட்டவர்கள் மிக நன்றாயிருக்கிறது என்று கூறிச் செல்வதே வழக்கம்.
பசுமதிச் சோற்றையும் பருப்புக் கறியையும் கலந்து சாப்பிட்டுக் கொண்டு இடைக்கிடை கோழிக்கால் தண்டூரியையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்கள் கலங்கின. உறைப்புக் கூடி விட்டதோ எனத் தியாகர் நினைத்துக்கொண்டார்.
"சாப்பாட்டில் காரம் கூடிவிட்டதோ..?” "இல்லை. இல்லை. சாப்பாடு நன்றாயிருக்கிறது. எனக்கு என் மகனின் ஞாபகம் வந்துவிட்டது.” என்று சொல்லும்போதே அவருக்குப் புரக்கேறியது.
உரத்துச் செருமி, இருமிவிட்டுத் தண்ணிர் குடித்தார்.
- 138 -

"நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா அல்லது பூரீலங்கா வைச் சேர்ந்தவரா.?"
"நாங்கள் இலங்கைத் தமிழர்.”
"அப்படியா. நல்லது. நீங்கள் நல்ல கலாசாரத்தை உடையவர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை அற்புத LDлт60Tegi]...
எனது நண்பர் பாண்டிச்சேரி தமிழ்ப் பெண்ணை மணந்து அங்கேயே வாழ்கிறார். விடுமுறையில் வருடம் ஒருமுறை இங்கு வந்து போவார்.நான் இருமுறை அங்கு போயுள்ளேன்.
அவர் அங்கு ஒரு தொழில் நிறுவனம் நடத்துகின்றார். அத்துடன் பிரெஞ்சு மொழியும் கற்பித்து வருகிறார். அவருக்குத் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் நன்கு தெரியும்.
இந்து தத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்பனவும் ஓரளவு கற்று வருகிறார். இரு குழந்தைகளுடன் அவர்கள் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகவுள்ளதை நான் பார்த்துப் பாராட்டினேன்.”
சாப்பிட்டு முடித்துவிட்டு மிகுதியாகவிருந்த வைனை யும் கொஞ்சமாகக் குடிக்கிறார்.
“உங்கள் மகனின் ஞாபகம் வந்ததாகச் சொல்லிக் கவலைப்பட்டீர்கள். மகன் எங்கே இருக்கிறார்.?”
"அது பெரிய கதை. அதனை உங்களுக்குச் சொல் வதில் கொஞ்சம் ஆறுதல். ஏனெனில். உங்களுக்குத் தான்குடும்ப வாழ்க்கையின் அருமை. பாசம் புரியும்.”
வைனை உறிஞ்சுகிறார்.
- 139

Page 72
நீலக் கண்கள் சிவந்து கலங்கி ததும்பி நிற்கின்றன. ‘நான் பிரான்சின் வடகிழக்கிலுள்ள ஸ்ரார்ப்பூக் நகரத்தைச் சேர்ந்தவன்."
“உங்களுக்கு ஸ்ரார்பூக் நகரைத் தெரியுமா..?” "ஆம். இரு முறை அந்நகருக்கு வந்திருக்கிறேன். அங்கு எனக்குத் தெரிந்தவர்கள். எங்கள் நாட்டவர் சிலர் இருக்கிறார்கள்."
"நான் அங்கு ஒரு நிறுவனத்தின் பணிப்பாளராக இருக்கிறேன். நாலாயிரம் ஈரோவுக்கு மேல் சம்பளம். மற்றும் வசதிகள்.
இரண்டு வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்தேன்.
அவள் வேறு ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளராகக் கடமையாற்றினாள். பின்னர் எங்கள் நிறுவனத்திலேயே அவளுக்குக் காரியதரிசிப் பதவி பெற்றுக் கொடுத்தேன். ஒரு வருடம் சந்தோஷமாகவே கழிந்தது.
செல்ல மகன் பிறந்தான். நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.
ஆனால் அவள் ஊதாரித்தனமாகத் தனது சம்பளத்தை யும் செலவு செய்து எனது சம்பளத்தையும் முடித்து விடுவாள்.
குடும்பம் என்பதை மறந்தவளாக வாழ முற்பட்டாள். சிக்கனம் என்பதே தெரியாது. மகனின் வேலைகளைக்
கூட கவனிக்க மாட்டாள்.
அதிகமாகக் குடிக்கவும் தொடங்கிவிட்டாள்.
- 140

எனது பணம் மட்டும் தான் அவளுக்குத் தேவைப் பட்டது.
மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வது முதல் அவனுக்கு உணவு கொடுத்து படுக்கைக்கு அனுப்புவது வரை நானே செய்ய வேண்டியிருந்தது.
அவள் "டிஸ்கோ. கசினோ..” எனப் பணத்தைச் செலவு செய்து திரிந்தாள்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை எழுந்தது. தனது சுதந்திரத்தில் தலையிட வேண்டாமெனக் கூறிக் கொண்டு அவள் புதிய நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு இரவு நேரங் கழித்தே வீடு வருவாள். மகனுக்காக எல்லாவற்றையும் பல மாதங்களாகப் பொறுத்துக் கொண்டேன்."
"இன்னொரு சிறிய வைன் போத்தல் தாங்கோ.” மீண்டும் வைனை உறிஞ்சிக்கொண்டு தொடர்ந்தார். “ஒரு நாள் பொறுமை எல்லை மீறி. அவள் வார்த்தை களால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவள் முகத்தில் இரு முறை அறைந்துவிட்டேன்."
அவள் உடனே "பொலிஸை வரவழைத்துவிட்டாள். பொலிஸார் நீதிமன்றத்துக்குக் கொண்டு போய் விட்டனர்.
அவள் புதிய நண்பனுடன் எங்கோ போய் இருந்து விட்டாள்.
மகன் என்னைவிட்டுப் போக மறுத்துவிட்டான்.
- 41 -

Page 73
பொலிசார் மகனைத் தாயிடம் கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் மகன் அப்பாவுடன் தான் இருக்கப் போகிறேன் எனப் பொலிஸாரிடம் நேரேயே கூறி விட்டான்.
அவள் பின்னர் நீதிமன்றத்தில், மகனைத் தன்னிடம் தரும்படி வாதாடினாள். மகனைத் தாயிடம் கொடுக்கும் படி நீதவான்தீர்ப்பளித்துவிட்டார்.
மகன் நீதிமன்றத்தில் அழுதபடியே அவளுடன் போனான்.
என் உயிரையே பறித்துக்கொண்டு போனதுபோல் இருந்தது.
எத்தனையோ இரவுகள் நித்திரையின்றி இருந்தேன். மகனின் விளையாட்டுப் பொருட்களைப் பார்க்கும் போதெல்லாம் அழுகையே வரும்.
எனது நிலையை எனது வழக்கறிஞர்நீதிமன்றத்தில் கூறி, மாதம் ஒரு நாள் மகனைப் பார்க்க அனுமதி பெற்றுத் தந்தார்.
ஆனால் அதுவும் நான்கு மாதங்களுக்குமேல் நீடிக்க வில்லை.
அவளுக்கும் மகனுக்குமென பெருந்தொகைப் பணம் மாதந் தோறும் செலுத்துகிறேன். அவள் அந்தப் பணத் துடன் புதிய நண்பர்களோடு நன்றாகக் குடித்துக் கும்மாளம் போடுவதாக அறிகிறேன்.”
"நீங்கள் விவாகரத்துப் பெறவில்லையா..?”
“அவள் புதிய நண்பனுடன் வாழ்கிறாள் என்பதை நீதி மன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.”
- 142 -

அப்படி நிரூபித்தால்தான் விவாகரத்து கிடைக்கும். அது சுலபமான வேலையல்ல.
இங்குள்ள சட்டங்கள் அப்படி. பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துக் கெடுத்து வருகிறார்கள்.
பெண் விடுதலை எனக் கோஷம் போடுவதெல்லாம் போலித்தனமானவை.
ஆண்களுக்குத்தான் நீதி கிடைக்கவில்லை. என்ன செய்வது.
என்னைப் போன்ற தந்தையின் நிலையில் இருந்து பார்த்தால்தான் பிரச்சினையை உணர முடியும்.
பாசப் பிரச்சினைக்கு முன் சட்டத்தை நீட்டக்கூடாது.
கண்ணிர் நிறைந்துவிட்டது. துடைத்துக்கொண்டு. இங்கு துலூஸ் நகருக்கு புதிய நண்பனுடன் ஓடிவந்து விட்டாள்.
நான் கடந்த சில மாதங்களாக மகனைப் பார்க்க முடிய வில்லை. நீதிமன்றத்தில் மனுச்செய்தபோதுதான் அவள் இங்கிருப்பதாகப் பதில் கிடைத்தது.
மகனைப் பார்க்க இங்கு வந்தேன். மகனை ஒளித்து வைத்து விட்டு தன்னைத் தாக்க வந்ததாகக்கூறி பொலி சாரை வரவழைத்து விட்டாள்.
நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்தினர். அவளும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாள். ஏன் அவளைத் தாக்கச் சென்றீரென நீதிபதி கேட்டார்.
- 143 -

Page 74
நான் மகனைப் பார்க்கத்தான் அந்த வீட்டைத் தேடி அதன் வாசல்வரைதான் போனேன். மகனைத் தான் அழைத்தேன். அவள் ஒளித்துவைத்துவிட்டு பொலிசாரை அழைத்தாள் என உண்மையைச் சொன்னேன்.
என்னிடம் மிகப் பிரியமான மகனுக்கு ஏதும் தீங்கு செய்து விடுவாள் என மனம் வருந்திக் கூறினேன்.
பிள்ளையின் பாதுகாப்பு நலன் கருதி குறிப்பிட்ட காலம்வரை பிள்ளைதாயுடன்தான் இருக்க வேண்டும். நீர் அங்கு வீட்டில் போய் பிரச்சினை கொடுக்க வேண்டாம். இங்கு நீதிமன்றத்துக்கு வந்து மகனை மாதத்திற்கொரு தடவை பார்க்கலாம் என்றார் பாசம் புரியாத நீதிபதி.
முதலில் என் மகனைக் கண்ணில் காட்டுங்கள் என்று உரக்கக் கத்தினேன். அடுத்த தவணையின்போது அழைத்து வருவதாக அவள் சொன்னாள். கடந்த மாதம் தான் இது நடந்தது.
இந்த ஒரு மாதமும் ஒரு வருடம்போல் இருந்தது. இன்று காலை தான் மகனை என் முன் அழைத்து வந்தார்கள்.
என் செல்ல மகன் "பப்பா." என்று கத்தியவாறு ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.
நீதிமன்றம் முடியும்வரை தான் என் மகன் என்னுடன் இருந்தான். என் முகத்தைத் தடவியவாறு சொன்னான்."
"பப்பாகவலைப்பட வேண்டாம். நான் உங்கள் செல்ல மகனாகவே என்றும் இருப்பேன். எனக்கு இப்போது ஏழு
வயது முடிந்துவிட்டது. இன்னும் ஐந்து வருடங்கள் பொறுங்கள். அதன்பின் நான் உங்களிடமே வந்து
- 144

விடுவேன். அதன் பின் சட்டம் எங்களைப் பிரிக்க முடியாது. நான் பாடசாலையில் எங்கள் ஆசிரியரிடமும் என் கவலைகளைச் சொன்னேன். அவர் உளவியல் ஆசிரியரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் என் பிரச்சினைகளைக் கேட்டு எனக்கு ஆலோசனை கூறினார். ஐந்து வருடங்களுக்குப் பின் "பப்பாவுடன் இருக்கலாம்.” இப்போது நன்றாகப் படிக்கிறேன். "மம்மாவின் போக்குகள் குறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம்."
"பப்பா. நன்றாகச் சாப்பிட்டு நன்றாக இருக்க வேண்டும். ஐந்து வருடங்கள் விரைவில் கழிந்துவிடும். உங்களுக்கு நேரங் கிடைக்கும்போது இங்கு வந்து என்னைப் பாருங்கள். கவலைப்படக்கூடாது. பப்பா." "ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்துக்கப்பாலிருந்து மாத மொரு முறை இங்கு நீதிமன்றத்துக்கு என்னால் வர (ԼՔւգ-պԼDո...?"
"எனக்கு எத்தனை வேலைகள் அங்கு இருக்கின்றன. இந்த நீதித்துறைக்கும் சட்டங்களுக்கும் எங்கள்."
விக்கல் எடுக்கிறது. விம்முகிறார். எனக்கும் கண்கள் கலங்கி என்னவோ செய்தது. "கவலைப்படாதீங்க. ஐந்து வருடம் மிக விரை வாகவே ஓடி விடும். உங்கள் மகன் புத்தியுள்ள பிள்ளை. உங்களைக் கவலைப்படக்கூடாது என்றல்லவா சொல்லி யிருக்கிறான். நீங்கள் மகனுக்காகவேனும் கவலைப் படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.” என மனதார ஆறுதல் வார்த்தைகள் கூறினேன்.
- 145 -

Page 75
"இந்திய மண் ஒரு புண்ணிய பூமி. அந்த மண்ணில் பிறப்பதை பெருமையாக நினைக்க வேண்டும். அங்குள்ள கலாசாரம் எனக்குப் பிடித்தது.
ஒரு சில புறநடையானவர்கள் எங்கும் இருப்பார்கள் தான்.
ஆனால் அந்த பூமி.
மகன் என்னிடம் வந்ததும், அவனையும் அழைத்துக் கொண்டு வருடந்தோறும் பாண்டிச்சேரி செல்லவிருக்கி றேன். அங்கு என் நண்பர் எல்லா உதவிகளும் செய்வார்.
எனக்குத் தெரியும். உங்கள் நாட்டிலும் அரசியல் பிரச்சினைகள்; அதனால் இங்கு அதிகம் பேர் வந்திருக் கிறீர்கள்.
அங்கு பிரச்சினை தீர்ந்தால். நானும் கட்டாயம் அங்கும் போவோம்."
"அந்த நாள் எப்போது வரும் என்று தான் எம்மவர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்." என்றேன்.
"சாப்பாட்டுக்குரிய பணத்தைவிடஐந்து ஈரோ மேலதிக மாக வைத்துவிட்டு மீண்டும் ஒரு நாள் கட்டாயம் சந்திப் போம்” என்று கூறி கைகுலுக்கி விடைபெற்றார் அந்த மனிதர்.
- 146

காத்திருந்கு புன்னகை.
ழுெபதுகளின் பிற்பகுதி -
பயங்கரவாதத்தடைச்சட்டம் அமுலாகியிருந்தது. வடபகுதியில் பயங்கரவாதத்தை ஆறு மாதங்களுக்குள் அடக்கவென விசேடமாக பிரிகேடியர் ஒருவர் யாழ்ப் பாணம் அனுப்பப்பட்டிருந்தார்.
இரவோடிராவாக கறுப்புக் காரில் வருபவர்களால் பலர் கடத்தப்பட்டுக்கொண்டிருந்த இருண்ட காலத்தின் தொடக்கம்.
நள்ளிரவு வேளை கறுப்புக் காரில் வந்தவர்களால் நவாலியில் ஒரே வீட்டைச் சேர்ந்த இருவர் கடத்திச் செல்லப்பட்டு சொல்லொணா வகையில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமாகியபின் அல்லைப்பிட்டி -
- 147

Page 76
பண்ணை வீதியில் வீசப்பட்ட அதிர்ச்சிச் செய்தி வடபகுதி மக்களை உலுப்பிய காலம்.
அந்தக் கல்லூரி க.பொ.த. உயர்தர வகுப்புகலைப்பிரிவு மாணவர்களில் ஒருவன் சிவானந்தன். அதிபர், ஆசிரியர் களின் விருப்புக்குரிய சிறந்த மாணவன்.
அவன் படிக்கின்ற பாடங்களில் சமஸ்கிருதமும் ஒன்று. அவனது தமிழ் அறிவை மெச்சிய சமஸ்கிருத ஆசிரியர் சமஸ்கிருதம் கற்பதன் மூலம் மொழி, இலக்கிய அறிவு மேலும் வளம் பெறும் எனக்கூறி அவனைக் கட்டாயமாக சமஸ்கிருதம் கற்க வைத்தார்.
கல்லூரியில் நடைபெறும் கலை இலக்கிய நாடக விழாக்கள், போட்டிகள் பலவற்றிலும் சிவானந்தனுக்கும் பரிசுகள் காத்திருக்கும்.
அதேபோன்று இன்னுமொரு. சுவர்ணலதா. பெயருக்கேற்ற அழகுக்கொடி. கலை இலக்கிய நாடக விழாக்கள், போட்டிகள் யாவற் றிலும் அவள் ஒளிர்வாள். சிவானந்தனும் சுவர்ணலதாவும் ஒரே வகுப்பில் கற்றாலும் இருவருக்கும் எல்லா விடயங் களிலும் போட்டிதான்.
அவர்களின் தர்க்கங்களுக்குச் சமஸ்கிருத வகுப்பு மிக்க வசதி. ஏனெனில் அந்த நேரம் வேறு மாணவர் குறைவு. மாணவிகளே அதிகமாக வகுப்பில் இருப்பர்.
போட்டிகள், விழாக்கள் எல்லாம் அவர்கள் இதயங் களிலும் ஒருவரையொருவர் மறக்கமுடியாதபடி செய்து கொண்டுதான் வந்தன.
- 148 -

கல்லூரி அதிபர்தான் அந்த வகுப்புக்கு ஐரோப்பிய வரலாறு கற்பிப்பார். அந்த வகுப்பு அவனுக்குப் பிடித்த LDITGðlgj1. -
ஒரு நாள் தனது ஐரோப்பிய வரலாறு கொப்பியைப் புரட்டி பிரெஞ்சுப் புரட்சி பற்றிய விடயத்தை ஆர்வத் தோடு படித்தபின் கொப்பி மட்டையின் உட்பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்தான். அதில் ஆங்கிலத்தில் தீட்டப்பட்டிருந்த வாக்கியம் அவனை எண்ண அலைகளில் மிதக்க வைத்தது.
"சாகும் வரை உன் சுவர்ணாவை நினைவில் வைத்திரு” இந்த வாசகம் நினைவில் ஆடிக்கொண்டே இருந்தது. ஆயினும்.அதிலும் மேலாக. பரீட்சைக்கு இன்னும் நான்கு மாதங்கள்கூட இல்லை. ஏப்ரலில் நடைபெறவுள்ள பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவிலும், கலைப்பிரிவிலும் மிகச் சிறந்த சித்தியினைப் பலர் பெறுவரென அதிபரும் ஆசிரியர்களும் எண்ணி யிருந்தனர்.
சிவானந்தன் சீர்திருத்த எண்ணங்களும், கருத்துக்களும், இனவுணர்வும், தமிழ் அபிமானமும் நிறையப் பெற்றவன். அவனது பெற்றோர் இலக்கியப் புலமை மிக்கவர்கள். அவ்வாறே அவனது சகோதரர்களும் இலக்கியத்துறையில் ஈடுபட்டவர்கள்.
இந்தத் தன்மைகள், தீவிரப் போக்குகள் சுவர்ணாவுக்கு அவ்வளவாய்ப் பிடிப்பதில்லை. வாழ்வுக்கான வழி தேட வேண்டும். இந்த விடயத்தில் அவள் தெளிந்த முடிவுள் ளவள். அவள் குடும்ப சூழ்நிலையும் அப்படி.
- 149 -

Page 77
ஏப்ரலில் பரீட்சை.
கிறிஸ்மஸ் தினத்திலிருந்து சிவானந்தனும் அவனது வகுப்பைச் சேர்ந்த இரு நண்பர்களும் தலைமறைவாகி விட்டனர்.
சுவர்ணாதுபுடித்துப்போய்விட்டாள்.
“ஒரு சொல்லுச் சொல்லாமற் போய்விட்டாயே சிவா." என மனதுக்குள் அழுதாள். வெள்ளிக்கிழமையில் கோவி லுக்குத் தாயுடன் போகும் போதெல்லாம் சிவா நல்லபடி இருக்கவேணும் என்று வேண்டிக்கொள்வாள்.
பல மாதங்களாகச் சிவா காடு, மேடு என நாட்டின் பல பகுதிகளைச் சுற்றி நடந்தான். மக்களைச் சந்தித்தான்.
அரைப்பட்டினி, சிலவேளை முழுப்பட்டினியாகவும் இருக்க வேண்டியிருந்தது. அபாயங்களை அடுத்தடுத்துச் சந்தித்தாலும் நுண்ணிய அறிவாலும், சாதுர்யத்தாலும் உயிர் தப்பி வந்தான். பல மாதங்கள் இந்தியாவிலும் கழிந்தது.
நண்பர்கள் - தோழர்கள் பலரை இழந்தான்.
மனிதநேயம் மிக்க அவனை, தொடர் அராஜகங்கள், கொலைகள் மனவருத்தமடையச் செய்தன.
எல்லாவற்றையும் துறந்துவிட்டு எழுத்துத்துறையில் மட்டும் ஈடுபட்டு வந்தான். புனைபெயர்களில் கட்டுரை, கவிதை, கதைகள் தொடர்ந்து எழுதி ஓரளவு மன ஆறுதல் அடையினும் அவனுள் ஏதோ ஒரு கனல் எரிந்து கொண்டே இருந்தது.
வீட்டாரிடமிருந்து பலமுறை திருமணப்பேச்சு வந்தது. அந்தப் பேச்சே வேண்டாமெனக் கண்டிப்பாக
- 150 -

அவர்களுக்கு எழுதி விட்டான். அவன் மனதிலிருந்து சுவர்ணாவின் நினைவை அழிக்க முடியவில்லை. பத்திரிகை நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தான். பல்வேறு நெருக்கடிகளும் வந்து கொண்டிருந்தன.
பத்திரிகைத்துறைக் கருத்தரங்கொன்றில் கலந்துகொள்ள லண்டன் செல்லச்சந்தர்ப்பம் கிடைத்தது.
நண்பர்களின் அழைப்புகளுக்கிணங்க ஐரோப்பா விலுள்ள பல நாடுகளுக்கும் சென்றான். நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் ஐரோப்பாவிலேயே தங்கிவிடத் தீர்மானித்தான்.
பல்கலைக்கழக பட்டதாரியாகிவிட்ட சுவர்ணாவுக்கு திருமணப் பேச்சு நடந்தது. “படத்தைப் பார்த்ததும் மாப்பிள்ளைக்குப் பிடிச்சுப் போச்சு. சீதனமும் தேவை யில்லையாம். நீங்கள் குடுத்து வைச்சனிங்கள்." புரோக்கர் இனிக்கப் பேசினார்.
தகப்பனை இழந்த சுவர்ணா இந்த விடயத்தில் அதிஷ்டக்காரிதான்' என அவளின் தாய் மனம் குளிர்ந்தது.
பிரெஞ்சுப் பிரசாவுரிமையுடைய தர்மராஜனின் அழைப்பில் கவர்னா பாரிஸ் வந்துதூரத்து உறவில் சிறிய தாய் முறையான ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தாள்.
ஒரு மாதத்தில் திருமண வரவேற்புபசாரத்தை சிறிய அளவில் நண்பர் மட்டத்தில் மட்டும் நடத்துவோம் எனவும் வசதியுள்ள சிறிய வீடொன்றும் வாடகைக்கு எடுக்கவுள்ளதாகவும் தர்மராஜன் கூறியிருந்தான்.
சுவர்ணா பாரிஸ் வந்துசேர்ந்து பத்து நாட்கள் கூடக் கழியவில்லை. ஒரு தொலைபேசி அழைப்பு அவளுக்கு வந்தது.
می۔ 151 -

Page 78
ஜெனிபர் என்ற இளம்பெண் அவளை அவசியம் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தாள்.
குழந்தையொன்றையும் கூட்டிக்கொண்டு வந்த அந்த அழகிய பெண், தானும் தர்மராஜனும் கணவன் மனைவி யாக ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் வாழ் வதாகக் கூறினாள்.
தன்னுடன் கொண்டு வந்திருந்த “ஒலிவியா” என்னும் மூன்று வயதுப் பெண் குழந்தைக்கும் தர்மராஜன்தான் தந்தை என்றும் கூறி, தாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட படங்கள் யாவற்றையும் காட்டிக் கண்ணிர் சிந்தினாள்.
தனது பெற்றோர் ரியுணியன் தீவைச் சேர்ந்தவர்கள் என்றும் தனது தந்தையின் மூதாதையர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினாள்.
தான்தமிழ்ப் பெண்ணாகவே இயன்றவரை அவர் மனம் கோணாமல் நடந்து வருவதாகவும், அவரது கபட நோக்கத்துக்கு இடமளித்து தனது வாழ்க்கைக்குத் துரோகம் செய்துவிட வேண்டாமெனவும் அவள் பிரெஞ்சு ஆங்கிலம், தமிழ் கலந்து இரந்து கேட்டாள்.
சுவர்ணாவுக்கு என்னவோ செய்தது. தலைவலித்தது. "கவலைப்படாமல் போங்கோ" என அவளை அனுப்பி வைத்தாள்.
தான் தங்கியிருந்த வீட்டு உறவுக்காரப் பெண்ணிடம் இது குறித்துக் கேட்டாள். இது உண்மைதான் என உறுதிப் படுத்திக் கொண்டபின் தர்மராஜனுக்குத் தொலைபேசி எடுத்தாள்.
முதலில் மறுத்த தர்மராஜன் பின்னர்.
- 152

“இது சின்ன விஷயம். அவளோட சிநேகிதியாத்தான் பழகினனான். அவள் ஒரு கலப்புச் சாதிக் கழுதை.
நீங்கதான் மனுசியப்பா, உங்களுக்கேன் சந்தேகங்கள். இன்னும் இரண்டு கிழமையில கலியாணம் முடியும். நாங்க நல்ல வீட்டுக்கும் போயிருவம். ஆக்களின்ர கதை யளக் கேட்டு மனதைக் குழப்பிப்போடாதையுங்கோ." என இழுத்தான். சுவர்ணாவுக்கு கோபம் தலைக்கேறியது.
நான்கு வார்த்தைகள் உறைக்கச் சொல்லிவிட்டு “வையடா போனை" என்றும் சொல்லி விட்டாள்.
தற்போது சுவர்ணாவுக்கு அகதி அந்தஸ்தும் கிடைத்தது விட்டது. ஓரளவு பிரெஞ்சும் படித்துவிட்டு ஒரு 'சுப்பர் மார்சேயில் வேலையும் பெற்றுவிட்டாள். ஞாயிறு தினங்களில் தமிழ் வகுப்பும் நடத்துகிறாள்.
இரண்டு வருடங்களுக்குப் பின் ஒரு நாள். பாரிஸில் ஒருநூல் வெளியீட்டு விழா. தமிழ் ஆசிரியை ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு போயிருந்தவளுக்கு அதிர்ச்சி.
பிரபல எழுத்தாளர் ஆனந்தன் தலைமை வகிப்பார் என விளம்பரத்தில் இருந்தது. ஆனால் மேடையில் ஆனந்தன் பெயரில் இருந்தவர்.
சுவர்ணாவுக்கு ஒருவித ஆனந்தம். மறுபுறம் ஆச்சரியம்.
விழா இடைவேளையின் போது மேடைக்கு அருகில் சென்று ஆனந்தனுக்கு வணக்கம் சொன்னாள்.
"நீங்கள் சிவா தானே.” என்று கேட்டாள்.
- 153 -

Page 79
"ஒமோம். சுவர்ணா. நீங்க கூட்டத்துக்கு வந்தவு டனேயே கண்டனான், ஆனா.” என இழுத்தான்.
“என்ன ஆனா. நான் கலியாணம் செய்யவெண்டு இஞ்ச வந்தனான். ஆனா - அவன் இஞ்ச குடும்பகாறன் - அதை அறிஞ்சதும் கலியாணமே வேணாமெண்டிட்டு சின்னம்மாவோடதான் இருக்கிறன். வேலையும் செய்யிறன்.
உங்களைப் பாத்து எத்தனை வருஷம். ஒரு செய்தியும் உங்களைப் பற்றித் தெரியேல்ல. எத்தனை நாள் அழுதிருப்பன். அம்மாவின்ர கரைச்சலால தான் இஞ்ச வர ஒமெண்டனான். இப்ப. அதில ஒரு.”
சிவானந்தன் புன்னகையுடன் தனது தொலைபேசி இலக்கத்தை அவளிடம் கொடுத்துவிட்டு விழாவைத் தொடர்ந்தான்.
இந்தச் சிரிப்பைப் பார்க்க எத்தனை காலம்.
சுவர்ணா ஆனந்தத்தில் மிதந்தாள்.!

ydörgó. • • •
வீரகேசரி
தினகரன் தினக்குரல் பாரிஸ் - ஈழநாடு உதயன் - கனடா வண்ணத்துப்பூச்சி (ஆண்டு மலர்) - ஜேர்மனி பூவரசம் பொழுது - சிறப்பு மலர் (2001)
956
நூலாசிரியரின் ஏனைய நூல்கள்
கரும்பனைகள் (கவிதைகள்) சிகரம் (கவிதைகள்) இது ஒரு வாக்குமூலம் (கவிதைகள்) மண் மறவா மனிதர்கள் (கட்டுரைகள்) நோய் நீக்கும் மூலிகைகள் ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள் இளங்கோவன் கவிதைகள்
நல்ல மனிதத்தின் நாமம் டானியல்
- 155

Page 80


Page 81
இளங்கோவன் கதைகள் இளங்கோவனின் இச்சிறுகதைத் தொகுதி குறிப்பிட்டுள்ளதற்கிணங்க ஈழத்துத் தமிழ் வாழ்க்கையனுபவங்களே தளமாக அம்ை இடம்பெறும் சிறுகதைகளை வாசித்தபொ யதார்த்தம் என்ற சொற்றொடரே என் மன இளங்கோவனின் கதை கூறும் மனநிலை புலப்படுகின்றது. புகலிட வாழ்க்கையில் ெ மாறுபாட்டு அவலத்தை இளங்கோவன் பி தமிழ்ப் புகலிட இலக்கிய வரலாற்றில் பிர இடமுண்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக நோக்கும்பொழுது பிரான்ஸின் புகலிடத் து பன்முகப்பாடு உண்டு அந்தப் பன்முகப்பு இச்சிறுகதைத் தொகுதி ஓர் விஸ்தரிப்பை ஏற்றுக்கொள்ளவே வேண்டும் წყჭჭჭ இச்சிறுகதைகளினூடே மேற்கிளம்பும் பா இளங்கோவனை வாழ்த்துகின்றே
இரு தசாப்த ar கவிஞரும் முற்ே முதன்மையாள
 
 
 
 

யில் அவர் தமது முகவுரையிலே
ரின் பிரான்ஸ் நிலைப்பட்ட
ந்துள்ளன. இத்தொகுதியில்
32-23 நிர்த்தாட்சண்யமான ܐܸܣܛ?
தினுள் மேலோங்கி நிற்கின்றது
மிகத் துல்லியமாகப் 葱
தரியப்பட்டுள்ள பெறுமான
ஸுக்கு மிகக் காத்திரமான ஓர்
ழிலக்கியத்தில் ஓர் ஆழமான
க்கு இளங்கோவனின்
s கொடுக்கின்றது என்பதை
லத்துக்கு முன்னரே நானறிந்த பாக்கு அணியின் ஒரு
இளங்கோவன்
|Sub, ၉လွှဲရလေ ငြီးငေါ့၍ujကြီး பத்திரிகை সোনািচ্ছা!
பாராட்டையும்
ISBN 955-1162-12-9
|
9" 7895.51' 1621 22