கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூலக நிறுவனம் 10000

Page 1
noolahamf
 

AHAM
DATION
5 10000
Dundation.org

Page 2

NOOLAHAM FOUNDATION
நூலகம் 10000 சிறப்பு மலர்
25-02-2012

Page 3
நூலகம் 10000 நிகழ்வினை நடாத்த உத்தேசித்துப் பல்வேறு ஆளுமைகளையும் அமைப்புக்களையும் அணுகியபோது சிலர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். அத்தகைய வாழ்த்துச் செய்திகளைத் தொகுக்கும் நோக்குடன் வேறு பலரையும் அணுகினோம். குறுகியகால இடைவெளியில் கிடைத்த வாழ்த்துச் செய்திகளைத் தாங்கியதாக இப்பிரசுரம் அமைகிறது.
நூல் நூலகம் 10000 சிறப்பு மலர் பதிப்பாளர் நூலக நிறுவனம் 6,6061556T b ... w.noolahamfoundation.org பதிப்பு 25.02.2012
இந்தத் தொகுப்பு நூலின் உள்ளடக்கம் அனைத்தும் நூலக நிறுவனத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக இருக்குமென்றில்லை. வாழ்த்துச் செய்திகளில் உள்ள கருத்துக்கள் அவற்றை எழுதியவர்களுடையவையே.
2

நூலக நிறுவனம்
பணி இலக்கு
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்தி, பாதுகாத்து, அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்.
நோக்கங்கள்
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எழுத்து, அச்சு, பல்லூடக, இலத்திரனியல் வளங்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், எண்ணிமப்படுத்திப் பேணுதல், அவ்வகைச் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தல்.
விளிம்புநிலை, மைய சமூகங்களினது இனவரைவியலையும் பேச்சு மொழிகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், சடங்குகள், நாட்டாரியல், விளையாட்டுக்கள், மருத்துவம், சட்ட முறைமைகள், நிர்வாக முறைமைகள், தொழிற்கலைகள், கலைகள் போன்ற அறிவுத் தளங்களையும் ஆவணப்படுத்தல், பாதுகாத்தல், எண்ணிமப்படுத்திப் பேணுதல்.
அறிவு, தகவற் சேவைகளைக் கட்டற்ற திறந்த முறையில் வழங்கி இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான கல்வி,
ஆய்வு, அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தல்,
ஆவணவியல், நூலகவியல் தகவல் அறிவியல் சீர்தரங்கள், தொழில்நுட்பங்கள், செயலாக்கங்கள், துறைசார் குழுமங்களைத் தொடர்பாடல், வலையமைப்பாக்கம், இணைந்து செயலாற்றுதல் மூலம் கட்டமைத்தல்

Page 4
பத்தாயிரம் ஆவணங்கள் பல்லாயிரம் வாசகர்கள்
நூலக வலைத்தளத்தில் (www.noolaham.org) நூல்விபரப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் எண்ணிக்கை 2011 நவம்பர் இறுதியில் பத்தாயிரத்தினைத் தாண்டியுள்ளது.
2011 யனவரி வரை பதிவு செய்யப்பட்டுள்ள ஈழத்து வெளியீடுகளின் விபரம் வருமாறு:
மொத்த பதிவுகள் 10,118 நூல்கள் 3,538 இதழ்கள் 3,615 பத்திரிகைகள் 1,738 6666)6. 1,227
இந்தப் பதிவுகள் தொடர்பான பகுப்புக்களின் விபரம் வருமாறு:
இதழ்த் தலைப்புக்கள் 400 பத்திரிகைகள் தலைப்புக்கள் 23 எழுத்தாளர்கள் 2012 வெளியீட்டு ஆண்டுகள் 102
மேலும் நூலக வலைத்தளத்தினைப் பார்வையிட்டுப் பயன்படுத்தும் வாசகர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த யூலையில் இருந்து ஒவ்வொரு மாதமும் வருகைதரும் வெவ்வேறான வாசகர் எண்ணிக்கை 10,000 இனைத் தாண்டியுள்ளது. வலைத்தளப் புள்ளிவிபரங்கள் வருமாறு:
மாதம் வாசகர் பக்கங்கள் 2011/01 7,000 160,175 2011/02 7,516 166,355 2011/03 8,815 207,552 2011/04 8,093 175,307 2011/05 9,161 200,513 2011/O6 9,100 175,267 2011/07 10,859 216,972 2011/08 10,877 284,775 2011/09 11,879 238,139 2011 110 9,986 229,590
2011f11 10,782 247,623

நூலக நிறுவன மைல்கற்கள்
0 நூலகத் திட்டம் தொடங்கப்பட்டது 2005 9 நிதி பயன்படுத்திய முதற் செயற்றிட்டம் 2006 9 முதலாவது அலுவலகம் 2007 9 முதல் நிதிச் சேகரிப்புச் செயற்பாடு 2OO7 0 முதல் இணைந்த செயற்றிட்டம் 2007 9 நூலக நிறுவன அமைப்பு 2008 0 அலுவலர்கள் இணைக்கப்பட்டனர் 2009 0 முதலாவது ஆண்டறிக்கை (2008 க்கானது) 2009  ைநூலக நிறுவன வலைத்தளம் 2010 0 நூலக நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது 2010 9 செய்திமடல் ஆரம்பிக்கப்பட்டது 2011 0 முதலாவது வியூகத் திட்டமிடல் 2011
நூலக வலைத்தள மைல்கற்கள்
நூலக வலைத்தளம் இந்திய மொழி எண்ணிம நூலகங்களில் முக்கியமானதொன்றாகும். 2005 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த எண்ணிம நூலகம் 10,000 க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களைக் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது.
 ை100 ஆவணங்கள் டிசம்பர் 2005  ை5,000 ஆவணங்கள் டிசம்பர் 2009  ை10,000 ஆவணங்கள் நவம்பர் 2011
இலங்கைத் தமிழ் ஆவணங்கள் அல்லாத சுமார் 500 க்கும் அதிகமான மின்னூல்கள் பற்றிய விபரங்கள் அயலகம் எனும் பகுதியில் சேகரிக்கப் பட்டுள்ளன. மேலும் ஏறத்தாள 3000 நிறுவனங்கள், வலைத்தளங்கள் தொடர்பான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

Page 5
நூலகம் 10000
நூலகத் திட்டத்தின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா
இடம் சங்கரப்பிள்ளை மண்டபம், கொழும்புத் தமிழ்ச் சங்கம்
காலம்
25.02.2012 (சனிக்கிழமை)
நேரம் Drtsos) 04.00 - 07.30
நிகழ்ச்சி நிரல்
மங்கள விளக்கேற்றல் 04.00- 04.03
அகவணக்கம் O4.03 - O4.05
வரவேற்பு நடனம் "நடனசபாபதி கவுத்துவம்" 04.05 - 04.15
வரவேற்புரை O4.15 - 04.20

“மகாகவி கலையரங்கம்" மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் O4.20 - 04.50
இயக்குனர் உரை 04.50 - 05.00
"ஆற்றுகைகளே பேணுதல்கள்" மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்குழு 05. OO - 05.40
பங்களிப்பாளர் கெளரவிப்பு O5.40 - 05.55
"பெங்கோலி" கிராமிய நடனம் O5.55 - 06.00
கவியரங்கம் "வாழ்க்கை எழுதுகின்ற வாசிப்புப் புத்தகம்" தலைமை - கவிஞர் சடா கோபன் கல்நூல் - கவிஞர் த. வி. ரிசாந்தன் காய்ந்த ஒலைச்சுவடி - கவிஞர் க. ஹரிஸன் கடதாசிப்புத்தகம் - கவிஞர் தி. சுகந்தன் மின்நூல் - கவிஞர் மு. மயூரன் O6.OO - O6.40
வில்லுப்பாட்டு "காதல் இராச்சியம்" பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் O6.40 - O7.20
நன்றியுரை O7.20 - O7.25

Page 6
நூலகம் 10000 வாழ்த்துச் செய்திகள்
எழுத்தாளர் மேமன்கவி
இன்றைய காலகட்டத்தில் 'வாசிப்பின் இடம்' என்பது மாறி விட்ட சூழலில், அச்சடிக்கப்பட்ட நூலை வாசித்தல் என்பது மாறி, மின்நூலாக வாசித்தல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அத்தோடு அம்முறையானது நூல்கள் பலரைச் சென்று அடைய வழியும் வகுத்து இருக்கிறது.
அத்தகைய சூழலைப் பயன்படுத்தி ஈழத்து நூல்களை, பிரசுரங்களை ஓர் இடத்தில் சேர்த்து வைக்கும் நூலகம் நிறுவனத்தின் பணி குறிப்பிடத்தக்கதும் பாராட்டத்தக்கதுமான ஒரு பணியாகும். அவ்வாறன பணியானது, பெரும் பெருட் செலவினையும், மனித உழைப்பையும் வேண்டி நிற்கிறது என்பது பலர் அறியாத ஒன்றாகும்.
ஒரு சில மணித்தியாலங்களில் முடிந்து போகும் பெரும் விழாக்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரமுகர்கள், இத்தகைய வழி முறையில் நூல்களை மின் நூல்களாக்கி, பராமரிக்கும் பணிக்கும் ஆதரவு அளிக்க முன் வரவேண்டும்.
பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டு இயங்கும் நூலகம் நிறுவனம் அதன் மூலம் உலக அளாவிய ரீதியாக ஈழத்து பிரசுரங்கள் சென்று அடையவும், இலகுவாக அறிந்து கொள்ளவும் வழி வகுத்து இருக்கிறது.
ஏழு வருட காலத்தில் 10000 ஈழத்துப் பிரசுரங்களைத் தம்மகத்தே கொண்டிருக்கும் நூலக நிறுவனத்திற்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
மேமன்கவி

எழுத்தாளர் குணேஸ்வரன்
நூலக வலைத்தளத்தின் ஏழாண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நூலகம் 10,000 என்னும் நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆவணமாக்கலும் அதைப் பகிர்தலும் என்ற உயரிய நோக்கோடு செயற்பட்டு வரும் நூலக வலைத்தளம் இதுவரையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிப்புக்களை ஆவணமாக்கியுள்ளது.
எமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த போர்ச்சூழல் எல்லாவற்றையும் காவு கொண்டிருக்கின்ற நிலையில் இணையவெளியில் எமது தேட்டங்களைப் பாதுகாத்தல் என்பது ஒரு புதிய முயற்சியும்கூட
குறிப்பாக ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அவர்களது கற்கைநெறிகளுக்குத் துணைசெய்யக்கூடியவை. எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏனையவர்களுக்கும் வாசிப்பினூடாகத் திருப்தியைத் தரக்கூடியவை. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்பேசும் மக்களின் ஆவணங்களாக எதிர்கால சந்ததிகளுக்கு கையளிக்கக்கூடியவை.
நூலகத்தின் தொடர் செயற்பாடுகளுக்காக பலர் தனியாகவும் கூட்டாகவும் உதவியிருக்கிறார்கள். தன்னார்வ தொண்டு அடிப்படையில் பல நண்பர்கள் இணைந்து செயற்பட்டு வருகிறார்கள். இந்த முயற்சிகள் மகிழ்ச்சி தரக்கூடியவை. இவை மேலும் தொடரவேண்டும்.
நூலகத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் புதிய நூலகம் செய்திமடலின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயற்படக்கிடைத்தமை இவ்வேளை எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஈழத்துப் படைப்பாளிகளும் இதுபோல பலவிதத்தில் இணைந்து செயற்படவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நூலகத்தின் பயனை அனுபவித்து வரும் ஓர் ஆய்வாளனாக, நூலகத்துக்கு நன்றி தெரிவித்து அதன் தொடர் வளர்ச்சிக்கு வாழ்த்துக்களைக் கூறுவதில் மிக்க மகிழ்ச்சிடைகிறேன்.
சு. குணேஸ்வரன் யாழ்ப்பாணம்.

Page 7
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற நூலுடன் தொடங்கிய தங்களுடைய நூலகம், எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து, பத்தாயிரம் நூல்களை எண்ணிமப்படுத்தி, உலகளாவிய ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் புத்தகப் பிரியர்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அறிவுப் பசியைப் போக்குவதுடன், வருங்கால சமுதாயத்திற்குப் பாதுகாத்துவரும் தங்களின் பணி சிறப்பு மிக்க பணியாகும்.
"புனிதம் உற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப, நூலகப்பணியைத் திறம்படச் செய்துவரும் தங்களுடைய அரும்பணி மேலும் சிறப்புறவும் நூலகம் 10,000 என்னும் விழா சிறப்படையவும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுந்தர் கணேசன்
இயக்குநர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தரமணி, சென்னை
தமிழ் மரபு அறக்கட்டளை
நூலகம் எனும் இணையம் சார் சேவை இன்று ஏழாவது ஆண்டை நிறைவு செய்து நிற்பது கண்டு மகிழ்கிறேன். இன்று 10,000 நூல்களை மின்னாவணப்படுத்தி வைத்திருக்கிறது என்பது சாதாரணச் செயல் அல்ல. இந்த மாபெரும் சாதனைக்கு தொடர்ந்து உழைக்கும் ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துக்கள். இப்பயணம் மேலும் தொடர்ந்து இன்னும் பல புதிய மைல் கற்களைத் தொடவேண்டுமென விழைகிறேன்.
முனைவர் நா.கண்ணன் தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை www.tamilheritage.org
10

விருபா து. குமரேசன்
எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தில் இருந்த தமிழ்ப் புத்தகங்கள் எவை?
இன்று யாராலுமே பதில் சொல்ல முடியாத ஒரு நிலை. ஆனாலும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் 1960 களில் தொடங்கிய தமிழ் நூல் விவர அட்டவணை என்ற தொலைநோக்கு முயற்சி அதன் ஆரம்ப SIs) பதிப்பாசிரியர்களான அ.ச.ஞானசம்பந்தன், மு.சண்முகம் போன்றவர்களின் திட்டமிடலின்படி முற்றிலுமாக இறுதிவரை சென்றிருக்குமானால், யாழ்ப்பாண நூலகத்தில் எரிக்கப்பட்ட தமிழ்ப் புத்தகங்களின் பட்டியலை தருவதாக இருந்திருக்கலாம்.
1960 களில் தமிழ் நூல் விவர அட்டவணை முயற்சியில் அவர்கள் எழுதிய பதிப்புரையின் ஒரு பகுதி
. இத்தொகுதியில் குறித்த நூல்களுள் சில தமிழகத்திலும், பாரத நாட்டின் புற பகுதிகளிலும், இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய மேனாடுகளிலும், பர்மா, மலேயா முதலிய கீழை நாடுகளிலும், இலங்கை யாழ்ப்பாணத்திலும் உள்ள பழைய நூல் நிலையங்களிலும் காணுதல் கூடும். ஏட்டுச் சுவடிகளைச் சேகரிப்பதைப்போல் இந்நூல்களையும் தேடிப் பெற்று, ஆராய்ச்சிப் பொது நூலகத்தில் வைத்துப் போற்ற வேண்டுவது மிக அவசியமாகும். பெரும்பாலான பழைய நூல்கள் இந்நிலையத்தில் இருப்பதால், எஞ்சிய நூல்களையும் இத்துடன் சேர்த்து வைத்தால், ஆராய்ச்சி அறிஞர்களுக்கு ஒர் இடத்தில் அச்சில் வந்த பழைய தமிழ் நூல்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டும். . (1964, முதல் தொகுதி, நான்காம் பகுதி)
இவ்வாறு அவர்கள் 1964 இல் விரும்பியதை தொலைநோக்குடன் செயற்படுத்தியிருந்தால் 1981 இல் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தில் இருந்த தமிழ்ப் புத்தகப் பட்டியலை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். தவிரவும் இன்றளவில் தமிழகத்தில்கூட தமிழில் வெளியான அனைத்துத் தமிழ் நூல்களையும் ஒரே இடத்தில் பெறக்கூடிய நிலை தோன்றவில்லை. மொத்தத்தில் அத் தமிழறிஞர்களின் விருப்பம் நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில் ஈழத் தமிழர்களின் நூல்களை இன்றைய தொழில்நுட்ப உதவியுடன் ஒரே இடத்தில் சேமித்துக் காட்சிப்படுத்தும் நூலகமாக noolaham.org உள்ளது. இதனை ஆதரிக்கவேண்டியது தமிழர்கள் அனைவரின் கடமையாகும். அரசியல், லாப நோக்குகளைப் புறந்தள்ளி இதுவரையில் நூலகத்திற்கு தங்கள் புத்தகங்களைத் தராத பதிப்பகங்ளும், எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களை
11

Page 8
ஆவணப்படுத்துதலுக்குத் தர முன்வர வேண்டும் என்று என் விருப்பத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
து. குமரேசன் W Viruba.com
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தம் இருப்பின் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வுக்கு என்றுமில்லாத அளவுக்கு ஆட்பட்டுள்ள காலம்
ஓசைப்படாமல் பறிமுதல் செய்யப்படுவதைப் பார்த்து நிற்பதைத்தவிர குரல் எடுத்துப் பேசமுடியாத நிலை எமது சமூகம் ஒரு கல்விச் சமூகம் என்பதை உலகுக்குப் பறைசாற்றிநின்ற யாழ்ப்பாண நூலகம் எரிந்தவேளை நெருப்பு சுவாலைவிட்டு எரிந்தது. இன்று சுவாலைகள் கண்ணுக்குப் புலனாகாதபடி காட்டுத்தீ பரவுகிறது. இத்தகு சூழ்நிலையில் சமூகத்தில் உள்ள பொறுப்புணர்வு வாய்க்கப் பெற்றவர்களுக்கு உள்ள சுமை அதிகம். அவரவர் தத்தமது ஆற்றலுக்குத் தக்க பணியை ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அந்த வகையில் தகவல் தொழில் நுட்ப அறிவும் சமூக உணர்வும் வாய்க்கப்பெற்றவர்களாய் நம்மத்தியில் உள்ள ஒரு குழுவினர் பணபலம் அற்ற நிலையிலும் எமது அடையாளத்தைப் பேணவேண்டும் என்ற மனோபலம் ஒன்றையே நம்பி ஊக்கத்தோடு உழைத்து வருகின்றனர். அவர்களது நூலக நிறுவனம் இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்திப் பேணுவதோடு உலகின் எப்பகுதியில் உள்ள எவரும் இருந்த இடத்தில் இருந்தபடியே பயன் கொள்ளவும் தக்கவகையில் செய்யும் பணி போற்றுதலுக்கு உரியது.
அப்பணியில் அவர்கள் இறங்கி ஏழு வருடங்களைப் பூர்த்தி செய்யும் நிலையில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்திவிட்ட பூரிப்பில் நூலகம் 10000 இனைக் கொண்டாடுவது எம்மையும் பூரிக்க வைக்கிறது. அந்தப் பூரிப்போடு அவர்கள் பணி மேலும் சிறக்கவும் தொடரவும் வேண்டுமென வாழ்த்துகின்றோம்!
மு.கதிர்காமநாதன்
தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
12

யாழ்ப்பான அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் நோக்குடன் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நூலகத் திட்டமானது தனது செயற்பாட்டின் ஏழாவது ஆண்டை நிறைவு செய்து இவ்வருடம் 8ஆவது ஆண்டிற் காலடி பதிக்குமுகமாக "நூலகம் 10,000" எனும் தொனிப் பொருளில் விழா முன்னெடுக்கப்படுவதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
தகவல் வளங்களை எண்ணிம (Digital) வடிவத்தில் கொண்டுள்ள நூலகங்கள் எண்ணிம நூலகங்களாகும். இந்த வகையில் நவீன தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய சூழலில் தற்கால சமூகத்தினரின் தேவைக்கேற்பத் தமிழ் சமகால அறிவு பகிரப்படும் மிக முக்கிய வலைத்தளங்களில் ஒன்றாக விளங்கும் wwwnoolaham.org எனும் வலை முகவரியில் இயங்கிவரும் இத் தமிழ் எண்ணிம நூலகத்தினை இணையத் தொடர்புள்ள அனைவரும் இலகுவாகவும், இலவசமாகவும் அணுகக்கூடியது . இதன் சிறப்பம்சமாகும். நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள், ஆய்வேடுகள், நினைவு மலர்கள், விழா மலர்கள், ஆய்விதழ்கள், FlyFF6D6) மலர்கள் உள்ளிட்ட சகலவிதமான எழுத்தாவணங்களையும் தாங்கி நிற்கிறது இந்த நூலகம். 1,700க்கும் அதிகமான எழுத்தாளர்களதும், 1,100 க்கும் அதிகமான பதிப்பாளர்களதும் ஆக்கங்களாக 2012 ஜனவரி வரை 10,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்கள் இந்நூலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது இதன் சிறந்த வளர்ச்சிப் போக்கின் பிரதிபலிப்பாகும்.
இத்தகைய தமிழின் மிகப்பெரும் இணைய எண்ணிம நூலகமான இதனை எதுவித இலாப நோக்கங்களும் இல்லாத தன்னார்வக் கூட்டுமுயற்சியாகச் செயற்படுத்தி வரும் இதன் ஆக்கத்தினருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், வருமானத்தைக் கருத்தாகக் கொண்டு மக்களின் சீரிய வாழ்வினைப் பாழ்படுத்துகின்ற இழிவான இணையத்தளங்கள் போலல்லாது இன்றைய சமுதாயத்தை நன்முறையில் வளப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் இவ்வாறான அளப்பரிய சேவைகளை வழங்க எனது மனமார்ந்த
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருமதி இமெல்டா சுகுமார் அரசாங்க அதிபர்மாவட்ட செயலர், யாழ். மாவட்டம்.
3

Page 9
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
நூலக திட்டம் ஏழாவது வருடத்தை செயல்திறனோடு செய்வதை இட்டு மனமகிழ்ச்சி அடைகின்றேன். இத்திட்டம் தமிழ் மக்களை மட்டுமல்லாது ஏனையோருக்கும் உதவும் ஒரு பாரிய முயற்சியாக முகிழ்த்துள்ளது.
அறிவையும், அறிவு சாதனங்களையும் முடக்கி வைப்பதில் ஒரு பயனுமில்லை. அவை சகல திக்குகளையும் சென்றடைந்து மக்கள் கூட்டங்கள் அதனால் பயன் பெற்று, விடயங்களை அலசி ஆராய்ந்து ஆக்க பூர்வமான வாத பிரதிவாதங்களை முயற்சி மேலும் மேலும் வளர்ந்து மானிடத்தை மகிழ்விக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி
செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
புதினப்பலகை குழுமத்தினர்
நூலகம் நண்பர்களுக்கு வணக்கம்.
இலட்சிய தாகம் கொண்ட உங்கள் செயற்பாட்டால் இணையவெளியில் பத்தாயிரம் ஈழத்து நூல்கள் சேமிக்கப்பட்டிருப்பது கேட்டு மனம் குதூகலிக்கின்றது. உற்சாகம் கொள்கின்றது.
எறும்புகள்போல மனம் சலிப்புறாது சிறுகச் சிறுகச் சேகரித்த சுறுசுறுப்பையும் ஓயாத உழைப்பையும் உங்கள் பணியில் காணமுடிகின்றது.
உங்களின் இலட்சிய தாகத்திற்கும், சமூக ஆர்வத்திற்கும் உங்களுக்கு தோள்கொடுத்து நின்ற ஆர்வலர்களுக்கும் உளங்கனிந்த நன்றிகள்.
உங்கள் பணியில் நாங்களும் இணைத்திருந்போம், தோள்தருவோம் என்னும் உறுதிமொழியுடன்,
கி.பி.அரவிந்தன் புதினப்பலகை குழுமத்திற்காக
14

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்
"மெல்லத் தமிழினிச் சாகும்." என்றார்கள் பலர், உலகமயமாக்கலின் வேகத்தினால், தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் புரட்சியினால், சகல சமூகங்களினதும் பொருளாதார வளர்ச்சி ஆங்கில மொழியின் தேர்ச்சியில் தங்கி நிற்க ஆரம்பித்ததனால், இவ்வகையான பயங்கள் எம்மனதில் உருவாகின. அந்த நேரத்தில் எமது பிணிக்கொரு மருந்தாக உருவாகியதே நூலக நிறுவனமாகும். தமிழ் வழக்கொழிந்து போய்விடுமோவென்ற பயத்தினை ஒழித்து, எந்தத் தொழில்நுட்பம் அதன் அழிவுக்கு காரணமாகும் என்று நினைத்தோமோ அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அது நித்திய வாழ்வைப் பெறுவதற்கு இது உதவியது என்றால் மிகையாகாது. அனைத்துத் தமிழ் நூல்களையும் இணையத்தளங்களில் ஏற்றும் இந்தக் கடினமான பணியினை தொண்டரடிப்படையில் இயங்கிய குழுவினைக்கொண்டு சாதித்தது நூலக நிறுவனத்தின் அடுத்த சிறப்பாகும். அறிவுருவாக்கத்தில் மொழியின் பங்கு பற்றி உணர்ந்து தமிழ் மொழியில் சமூக, விஞ்ஞான, அரசியல் நூல்கள் வெளிவரவேண்டுமென்று பாடுபடும் எம்மைப் போன்ற பலருக்கும் நாம் பணி செய்யும் அமைப்புக்களுக்கும், நூலக நிறுவனம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததில் ஐயமில்லை.
தமிழ் பேசும் உலகம் இருக்கும்வரை நூலக நிறுவனமும் இருக்கும். அதனுடைய பணி மெமேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்,
சாந்தி சச்சிதானந்தம் பிரதம நிறைவேற்று அலுவலர் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்.
நூலகர் பூரீகாந்தலட்சுமி
தமிழின் உயிரை வலிமையுற நிறுத்தி இணைத்தற்கரிய இணைய வளங்கள் அனைத்தையும் இணைய வழி இணைத்து இசைவுண்டாக்கி, சக்திமுதலாய் நிமிர்ந்து நிற்கும் நூலக நிறுவகம் தனது வரலாற்றுப் பயணத்தில் ஏழாண்டுகளை நிறைவு செய்து நிற்பது மகிழ்ச்சிக்குரியது.
இன, மத, மொழி, பிரதேச அரசியல் எல்லைகள் கடந்து தமிழின், தமிழரின் இருப்புக்களை பாதுகாத்து வெறுவெளிகள் நிரப்பும் தகவற் பெருவெளியாக விரியும் இந்நிறுவகம் ஆச்சரியப்படத்தக்க
S

Page 10
புதியதொரு முயற்சி
தமிழின் சோர்ந்த விழியில் ஒளி சேர வைக்கும் சூரியனாய் காலம் இயங்கி, இலங்கி வரலாறு காத்து அறிவே துணிவாகி நிற்கும் நிறுவகத்தின் இருப்பு எமக்கெல்லாம் வியப்பூட்டுவது
நாமே தமிழ் விதைத்து எமக்கே அறுவடையாய் நின்று பயன்தரும் விளைநிலமான நூலக எண்ணிம நூலகத்தை (noolaham.org) அரைத் தசாப்தங்களுக்கும் மேலாய் நூலகப் பகுப்பாக்க அறிவினால் வரம்பு திருத்தி உரம் சேர்க்க எனக்குக் கிடைத்த உரிமை பெருமை தருவது
அறியாமை விலக்கி அசையாமையில் அசைவு காட்டும் உலகத் தமிழின் அறிவிசையாய் நின்று நிறுவகம் முன்னெடுக்கும் சமூக அறிதிறன், ஆவணவாக்கம் உள்ளிட்ட எண்ணிம நூலகம் சார் விழிப்புணர்வுச் செயற்திட்டங்கள் மகத்தானவை
தமிழறிவை ஒளியுறச் செய்யும் மின்சக்தியைத் தன்னுள் தேக்கி வைத்திருக்கும் மின்னலாய் நிற்கும் இதன் சமூகப் பங்களிப்புகள் ஆளுமை மிக்கவை
சென்றது கருதாது நாளை சேர்வது நினைக்காது இலாபநோக்கற்ற குழும உழைப்பே இதன் எளிமைக்குச் சான்று
தளராது வளரும் தமிழறிவே குறியாக இணையத்தில் தமிழறிவின் குறியாக இலங்கும் இதன் கூர்மை வலியது
இணையவழி மொழியின் இருப்பை ஆவணப்படுத்தும் பாரிய பணியில் இணைந்துகொண்டுள்ள மனித ஆளுமைகளுக்கு எனது பாராட்டுகள். ஆண்டுகள் கடக்கும் காலச்சுமைகளைத் தாங்கிக்கொள்ள நூலக நிறுவகத்துக்குப் புதிய ഞെക്ക് முளைத்திடட்டும்.
எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பூரீகாந்தலட்சுமி, அ கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
6.02.2012
16

Dr. Rajesh Venkatasubramanian
Project Noolaham is an indispensable digital archive for Sri Lankan Tamil culture. It is an umbilical cord through which the culture of Sri Lankan Tamils passes to Tamilnadu, The researchers in Tamilnadu benefit immensely from access to innumerable literary genres ranging from newspapers, magazines, pamphlets and monographs produced by the dynamic Tamil speaking population across the Palk Strait, AIF this in front of a computer brings an additional element of solidarity, a sense of belonging with the Tamil speaking population of Sri Lanka. The team of dedicated volunteers and the leadership together comprising Project Noolaham deserves a salute for their services to the Tamil language and Tamil culture. It is worthy of emulation for anyone interested in the art of preservation of Culture, congratulate the team and wish all the very success for their future ventures. Please be assured of my solidarity and support for the project from Tamilnadu,
Dr. RajeshWenkatasubramaniam Adjunct Faculty, Department of Humanities and Social Sciences, Endian institute of Technology Madras,
எழுத்தாளர் முருகபூபதி
நூலகம் வலைத்தளம் தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து எட்டாவது ஆண்டில் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது என் போன்ற படைப்பாளிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வரப்பிரசாதமாகும்.
சுமார் ஏழு ஆண்டு காலத்துள் நூலகம் வலைத்தளத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் இணைக்கப் பட்டிருப்பதானது மிகப்பெரிய சாதனைதான். இதற்காக கடுமையாக இரவு பகலாக உழைத்தவர்களின் பணி விதந்து போற்றுதலுக்குரியது. வாசிப்பு மனிதர்களை முழுமையாக்கும். இயந்திரகதியில் இயங்கும் எம்மவர்கள் வாசிப்பதற்கு நேரத்தை தேடுவதற்கும் ஒதுக்குவதற்கும் போராடிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் நூலகம் வலைத்தளம் அரிய சேவையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் சிதறுண்டு வாழும் இக்காலத்தில் அவர்களுக்குத்தேவைப்படும் அரிய சில நூல்களையாவது இலகுவாக பார்வையிடவும் படிக்கவும் நூலகம் வலைத்தளம் சிறப்பாக வழிவகை செய்திருப்பதானது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது.
ஆய்வாளர்கள், விமர்சகர்கள் தமது படைப்புகளுக்கு தேவைப்படும்
17

Page 11
உசாத்துணை நூல்களை இலகுவாகப்பெற்றுக்கொள்வதற்கு எவரது தயவையும் எதிர்பார்க்காமல் நேரடியாக தொடர்புகொள்ளவும் நூலகம் வலைத்தளம் உதவுகின்றது.
நூலகம் கொழும்பு அணியினர் நூலகம் 10,000 எனும் நிகழ்வினை
நடத்துவதற்கு ஒழுங்குசெய்திருப்பதையிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்தெரிவிக்கின்றேன்.
முருகபூபதி அவுஸ்திரேலியா
ஆவணப்பட இயக்குனர் சோமிதரன்
நூலகங்கள் அழிக்கப்பட்ட மண்ணில் ஆவணங்களைத் தேடுவது எத்தனை கடினமானது என்பதை எனது எரியும் நினைவுகள் ஆவணப்படத்தின் உருவாக்கத்தின் போது நான் உணர்ந்தேன். எதோ ஒன்றைப்பற்றி ஆவணப்படம் எடுக்க வேண்டுமானால் நாம் தகவல்களை எங்கு போய்த் தேடுவோம்? பெரும்பாகம் நூலகத்திற் தானே? எமது துயரம் நாம் ஆவணப்படுத்துவதே எரிந்த நூலகத்தைக் குறித்தல்லவா? இன்று புலம்பெயர்ந்து போயுள்ள தமிழர்களால் காவிச்செல்ல முடியாத நூல்கள் எழுத்தாவணங்கள் பல இன்று அவர்கள் அறைக்கே வந்து விடுகின்றது. இதைச் சாத்தியப்படுதியது தன்னார்வலர்களின் நீடித்த உழைப்பால் உருவான நூலகம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைந்து போயிருந்த பல அரிய நூல்களை ஆவணங்களை இப்போது உலகத்தின் எந்த பகுதியில் இருந்தும் பெற்று விட முடிகிற அரிய வாய்ப்பை உலகத் தமிழர்களுக்கு நூலகம் தந்திருக்கிறது. தனியே இலக்கிய நூல்களின் திரட்டாக மட்டுமல்லாமல் முழுமையான அனைத்து நூல்களிற்கான திரட்டாகவும் இருப்பதுடன் நுலகத்தின் மிகத்தனிச்சிறப்பு யாதெனில் பத்திரிகைகள் பிரதி ஆவணங்கள் என இலங்கைத்தமிழர்களின் எல்லா அச்சுப்பதிவுகளையும் ஆவணப்படுத்துவது. எப்போதும் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற ஒரு ஆவணப்பட இயக்குனனுக்கு நூலகம் என்பது மிகப்பெரும் கொடுப்பனை. எமது ஆய்வுத் தேடலுக்கான சுமையைப் பாதியாகக் குறைத்து காத்திரமான படைப்பை உருவாகுவதற்க்கான ஒரு பெரும் தளமாக நூலகம்
இருக்கிறது.
சி. சோமிதரன்
18

சிலம்பு அமைப்பு
தரணியில் தமிழின் எதிர்கால தொடர்பு - ஊடகப் பவனிக்கான ஆவணப் பதிவேற்றலில் அரும்பணியாற்றிவரும் நூலகம் குழுமத்தினரரை இருகரம் கூப்பிப் பாராட்டுகிறோம்!
நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் கடந்த பல நூற்றாண்டுகளாக அரசுகளின் அரவணைப்பின்றித் தனிமைப்படுத்தப்பட்ட போதும், தன்னலமல்லாத தமிழார்வலர்களின் அர்ப்பணிப்புகளால்தான் புதிய தொழில்நுட்பங்களின் வருகையிலும் மிடுக்குடன் உலக பவனி வருகின்றதென்பது மறுக்கப்பட முடியாத கருத்தாகும். இத்தகைய அர்ப்பணிப்புகளின் வரலாற்று யதார்த்தத்தை நாம் வாழும் இன்றைய புதிய தகவற்தொழில் நுட்ப யுகத்தில் தமிழ் தன்னைத் தகவமைத்துக் கொண்டு தங்குதடையின்றிப் பயணிப்பதில் நேரடியாகவே காணமுடிகிறது.
பதினேழாம் நூற்றாண்டில் அச்சு இயந்திர வாகனமேற்றத்திலும், இருபதாம் நூற்றாண்டில் தொடங்கிய கணனி மற்றும் இணைய வலையேற்றத்திலும் இன்று தொடரப்படும் புத்தம் புதியதான தொழில் நுட்பங்களிலும் தமிழின் பயணம் தொடர்வது மெய்சிலிர்க்க தன்னலமற்ற தொண்டர்கள் காலத்தால் அழியாத மதிப்புக்குரியவர்கள்.
காலத்தின் பதிவுகளை எதிர்காலச் சந்ததியினருக்குக் கிடைக்கும் வண்ணம் பாதுகாப்புடன் விட்டுச் செல்வதானது மானுட வாழ்வு இருத்தலின் மிக உன்னதமானதொரு பணியாகும். இத்தகையதொரு அரும்பணியைத் தொடங்கி எட்டாவது ஆண்டாகத் தொடர்ந்துவரும் நூலகம் குழுமத்தினர் ஈழத்தில் வெளியான 10000 நூல்களை இணைய வலையேற்றம் செய்ததானது வார்த்தைகளால் வரையறை செய்ய முடியாத மதிப்புக்குரிய செயலாகும்.
இத்தகைய அரும்பணிக்காக நூலகம் குழுமத்தினரை இருகரம் கூப்பி மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவிப்பதில் பாரிஸ் சிலம்பு அமைப்பு பெருமை கொள்கிறது. அத்துடன் தொடரும் தங்களது பணி மேலும் சிறக்க தமிழார்வ நேசத்துடன் கைகுலுக்குகிறது.
வாழ்த்துகள் தொடரட்டும் அரும்பணி வளமுடன்
க. முகுந்தன் செயலாளர்
சிலம்பு அமைப்பு
19

Page 12
கண்டிக்குளி மகளிர் கல்லூரி
"தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச்சாலை
சர்வகலாசாலையைப் போல் எங்கும் வேண்டும்" என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் கருத்தைப் பிரதிபலிக்கும் இன்றைய வாசிப்புக்குகந்த நூலகம் தாண்டி இன்று நாம் நவீனத்துவத்திற்கு ஏற்புடைய இணைய நூலகம் என்ற புதிய தளம் நோக்கிப் பயணிக்கின்றோம்.
மனிதன் - வாசிப்பு என்ற இருநிலைத் தொடர்பு இன்று மனிதன் - தொடர்பாடல் தொழில்நுட்பம் - வாசிப்பு என்ற மூவழித்தொடர்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது புதிய கற்றல் நாகரிகம் (Learning Culture) ஒன்றை முனைப்புப் பெறச் செய்துள்ளது.
இன்றைய இலத்திரனியல் யுகத்தில் தனியே மானிட செயற்பாடாய் இருந்தவை அனைத்தும் உலகமயப்படுத்தப்பட்ட நிலையில் வாசிப்புமுறைகூட தனது வரம்பு கடந்து புதிய மாற்றத்தை உள்வாங்கியுள்ளது. தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை, சுவடிகளைப் பதிவு செய்ய இவ் நூலக நிறுவனம் எடுத்திருக்கும் முயற்சி நிச்சயம் காலத்தால் கெளரவப்படுத்தப்படவேண்டியதொன்றாகும். தமிழுக்காய் இவர்கள் உருவாக்கிய தனிப்பெரும் இணைய நூலகம் தனது சேவைக்காலத்தில் ஏழு ஆண்டுகளைக் கடந்து பத்தாயிரம் பதிவுகளை எண்ணிம வடிவத்தில் ஆவணப்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரியது.
தமிழர்கள் தமக்கான நூல்களைத் தேடி அலைந்த கால்கள் நிலைத்திருக்க, எமது தேடல் நிறைவு பெறாது நாம் தவித்திருக்கும் நிலையை மாற்றி இன்று இணையம் மூலம் நாம் இருந்த இடம் தேடி நூலகம் நுழைந்திருக்கிறது. தமிழ் தரும் தகவல்களை ஓரிடத்தில் இருந்து பதிவு செய்யக்கூடிய உதவி கிடைத்திருக்கிறது.
இவற்றை எல்லாம் உயர் எண்ணங்கொண்ட, தன்னார்வ முயற்சி கொண்ட இளைய சமூகம் முனைப்புடன் நின்று உருவாக்கி உள்ளது. உண்மையில் தமிழருக்கு நீங்கள் தருமுதவி பெரிது. மிகப்பெரிது. நிச்சயமாய் தமிழ் கூறும் நல்லுலகு தலைவணங்கும் உங்கள் பணி தரணியுள்ளவரை தடம் பதிக்கும் என்ற நம்பிக்கையுடன் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
அதிபர் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
20

வேம்படி மகளிர் கல்லூரி
பொதுவாக நூலகங்கள் ஒவ்வொரு மனிதனதும் அவன் சார்ந்த சமூகத்தினதும் முன்னேற்றத்துக்கு ஆற்றும் பங்களிப்பு அளவிடற்கரியது. அவ்வாறான நூலகங்களை எந்த இடத்திலிருந்தும் எந்நேரமும் யாரும் பயன்படுத்தக் கூடியவகையில் ஏற்படுத்தும் இணையநூலகம் எனும் வசதி மிகவும் வரப்பிரசாதமான ஒன்று.
இந்தவகையில் இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்கக்ளை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதுடன் தகவல் வளங்களையும் கிடைக்கச் செய்கின்ற அரும்பெரும் பணியை செய்துவருகின்ற நூலகத்திட்டத்தின் 7வது ஆண்டு நிறைவையொட்டி நூலகம் 10000 எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள ஆண்டுவிழாவில் வெளியிடப்பலவுள்ள சிறப்பு மலரிற்கு ஆசிச் செய்தி கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்பணி மேன்மேலும் வளர இறைவனின் ஆசியை வேண்டுகிறேன்.
அதிபர் வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம்
தமிழ் விக்கிப்பீடியர் இரவிசங்கர்
நூலகத் திட்டம் ஏழாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுவதையும் பத்தாயிரம் நூல்களை ஆவணப்படுத்தியுள்ளமையையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டு காரணங்கள்: 1. இத்திட்டத்தில் பணியாற்றும் பலருடன் மற்ற திட்டங்களிலும் பங்களித்து வருவதால், ஒரு நண்பனாக நூலகம் குழுவினரின் சாதனையைக் கண்டு மகிழ்கிறேன். 2. சங்கத் தமிழர் காலத்துக்குப் பிறகு, தமிழர்கள் - அதுவும் இளைஞர்கள் - அதுவும் அரசு சாராமல் - அதுவும் இலங்கையின் தற்கால அரசியற் சூழலில் - மொழிக்காக ஒன்றிணைந்து ஏதாவது உருப்பபடியாகச் செய்திருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்கிறேன்.
இலங்கைத் தமிழரின் அறிவை ஆவணப்படுத்துவதற்காக அப்பால், நூலகம் திட்டம் பல முக்கியமான விசயங்களுக்காக குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி.
21

Page 13
* நமது சமூகத்தில் இனம், சமயம், பொருளாதாரம், சுற்றுச் சூழலை முன்னிட்டுத் தன்னார்வமாகவும் அமைப்பாகவும் செயல்படும் வழக்கம் இருக்கிறதே தவிர, வரலாற்றை ஆவணப்படுத்தல், மொழி வளர்ச்சி ஆகியவை குறித்துத் தன்னார்வமாகவும் தொழில் நேர்த்தியோடும் செயல்படுவது குறைவு.
* இலங்கைத் தமிழர் தொடர்பான முயற்சியாக இருந்தாலும் உலக அளவில் பரந்தும் தகுந்த இடங்களில் பிற நாடுகளில் வாழும் தமிழரின் பங்களிப்பையும் ஏற்றுச் செயற்படுவது பாராட்டத்தக்கது, முன்மாதிரியானது. * அரசு சார்ந்தும் மூத்தவர்களாலும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடையே, நூலகம் திட்டம் முற்று முழுதாக இளைஞர்களால் கனவு காணப்பட்டு செயல்வடிவம் பெற்றிருக்கிறது. நூலகம் திட்டத்தின் வியூகத் திட்டமிடல் சந்திப்புகள் சிலவற்றில் கலந்து கொண்டிக்கிறேன் என்ற முறையில், அவர்கள் எவ்வளவு தொலை நோக்குடனும் ஆழமாகவும் தீர சிந்தித்தும், அனைவரையும் கலந்துரையாடி வெளிப்படையாகவும் தங்கள் செயல் திட்டங்களை வகுக்கிறார்கள் என்பதை அறிவேன். இந்தச் செயற்பாடு தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதியது. பாராட்டத்தக்கது. ஒரு சிலரின் படிப்பறையில் தொடங்கிய இத்திட்டம் ஒரு முறையான இலாப நோக்கற்ற நிறுவனமாக வளர்ந்து நிற்பதற்கு இதுவே காரணம்.
* இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரை நேரடியாகவே அறிவேன் என்ற முறையில், அவர்கள் எவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வின் கணிசமான நேரத்தை இதற்கு ஒதுக்குகிறார்கள், இத்திட்டம் குறித்த சிந்தனையோடே செயல்படுகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். இந்த அர்ப்பணிப்பு உணர்வு மிக மிக அரிது.
* இதே திட்டத்தைத் தமிழகத்துக்கும் விரிவு படுத்தலாமே என்று கோரிய போது, தங்கள் வளங்களுக்கு நோக்கங்களுக்கு உட்பட்டு இலங்கைத் தமிழரின் அறிவை ஆவணப்படுத்துவதே இயலும் என்று உறுதியாக இருந்தார்கள். எல்லாவற்றையும் செய்யப் போய் போதிய வளமும் குவியமும் இல்லாமல் தேக்கமடையும் திட்டங்கள் பல உள்ளன என்பதால், இந்த உறுதியும் தெளிவும் நன்று.
* தமிழ் என்றாலே தமிழ்நாடு என்றில்லாமல், இலங்கைத் தமிழரின் அறிவை ஆவணப்படுத்துவதன் மூலம் தமிழ் மொழிக்கு உள்ள பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும் இலங்கைத் தமிழரின் அறிவை உலகில் எங்கிருந்தும் அணுகத்தக்கதாகச் செய்கிறது. தவிர, நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அங்கு தனித்து வளர்ந்த தமிழறிவு
22

மரபை உணரச் செய்கிறது.
*நூலகம் திட்டத்தால் உந்தப்பட்டும் வழிகாட்டப்பட்டும் இன்னும் ஒரு சில திட்டங்களாவது தோன்றும் தோன்றியுள்ளன.
எழுதிக் கொண்டே போகலாம். ஆனால், வெறும் வாழ்த்து
சொல்வதோடு நிறுத்த விரும்பவில்லை. இந்தத் திட்டத்துக்கு எப்படி அனைவரும் பங்களிக்கலாம்?
*நூல்களின் மின்னாக்கத்தில் உதவலாம். * தளத்தின் தொழில்நுட்பப் பராமரிப்புக்கு உதவலாம். * இயன்ற பணத்தை நன்கொடையாக அளிக்கலாம்.
*நண்பர்களுக்கு இத்திட்டம் குறித்து தெரிவிக்கலாம்.
ஏதாவது ஒன்றைச் செய்வோமே?
வாழ்த்துகளுடன்,
இரவி சென்னை, இந்தியா
தமிழ் விக்கிப்பீடியர் மயூரநாதன்
நூலகம் ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டும், அது 10,000 ஆவணங்களையும் தாண்டி வளர்ந்து வருவதையிட்டும் அதன் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் தொடர்பிலான நூல்களையும் பிற ஆவணங்களையும் சேகரித்துப் பலருக்கும் பயன்படும்படி இணையத்தில் வழங்குவது ஒரு மிகப் பெரிய சேவை. இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறிக்கிடக்கும் ஒரு காலகட்டத்தில் நமது பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், கல்வி, அறிவியல் போன்ற பல்வேறு துறைகளையும் சார்ந்த அறிவு வளங்களை ஓரிடத்தில் எல்லோரும் அணுகத்தக்கவகையில் பேணுவது ஒரு முக்கியமான தேவை. இதை உணர்ந்துகொண்டு தற்காலத் தொழில் நுட்பங்களின் உதவியுடன் இத் தேவையைப் பூர்த்தி செய்ய விழையும் நூலகம் திட்டம் உலகத் தமிழருக்கு ஒரு வரப்பிரசாதம்
எனலாம்.
23

Page 14
நூலகத்தை அடிக்கடி பயன்படுத்திப் பயனடையவர்களுள் நானும் ஒருவன். எனது தனிப்பட்ட ஆய்வுத் தேவைகளுக்கும், தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்புக்கான உசாத்துணைத் தேவைகளுக்கும் நூலகத்தை நான் பயன்படுத்தி வருகிறேன். நூலகத் திட்டம் இல்லையேல் எனக்கு வேண்டிய பல ஆவணங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கொண்டு பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இதற்காகத் தனிப்பட்ட முறையில் எனது நன்றிகளை நூலகத்துக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கானவர்கள் நூலகத் திட்டத்தால் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
இத்திட்டம், வருங்காலத்தில் மேலும் பல்லாயிரக்கணக்கான நூல்களையும் பிற ஆவணங்களையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து வரும் தலைமுறையினருக்கும் பயன்படும்படி வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள்.
இ. மயூரநாதன் ஐக்கிய அரபு அமீரகம்
எழுத்தாளர் இளங்கோவன்
அன்புள்ள நூலகம் தளத்தின் பொறுப்பாளர்களுக்கு, வணக்கம்.
ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள், இதழ்களை இணையத்தில் யாவரும் பயன்படுத்தும்வண்ணம் இலவயமாக அளித்துவரும் தங்கள் பணி பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. தமிழகத்தில் இத்தகு பணிகளில் சில அன்பர்கள் மட்டும் ஈடுபட்டுத் தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த அளவு ஒத்துழைப்புடன் இத்தகு உயரிய தமிழ்ப்பணிகளைச் செய்துவருகின்றனர். உலக அளவில் தமிழை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள யாவரும் பாராட்டுக்குரியவர்களே!.
நூலகம் தளத்தில் உள்ள சில நூல்களை என் தனிப்பயன்பாட்டுக்கு இறக்கிவைத்துள்ளேன். அதுபோல் தமிழக அளவில் நான் கலந்துகொள்ளும் தமிழ் இணையப் பயிலரங்குகளில் நூலகம் தளத்தினை அறிமுகம் செய்துவருகின்றேன்.
தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகின்றேன்.
முனைவர் மு.இளங்கோவன் புதுச்சேரி, இந்தியா

பேராசிரியர் வி.பி. சிவநாதன்
கலை பண்பாடு வரலாறு இலக்கியம் போன்ற எங்கள் முதுசங்களை அடுத்துவரும் சந்ததிக்கு கையளிப்பதற்காக அரும்பாடுபட்டு வரன்முறையாக தொகுத்து பாதுகாக்கும் நூலகம் நிறுவனத்திற்கும் அதை வினைத்திறனுடன் செயற்படுத்திவரும் இளைஞர்களிற்கும் நன்றியுடன் எங்கள் வாழ்த்துக்கள் என்றும் உண்டு இதையிட்டு தமிழ் சமூகம் பெருமையடைகிறது
இவ்வாறான முயற்சி தமிழ்சமூகம்பற்றிய பூர்விகத்தை அறியமுற்படுபவர்கட்கும் எந்தளவு முதுசத்தை தம் சொத்தாக வைத்திருக்கின்றனர் என்பதை எல்லோரும் அறிவதற்கு அடிப்படையாக உள்ளது என்பதுடன் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதியாக உள்ளது.
இங்கும் உலகில் பரந்துபட்டுவாழும் எம்மவர்கள் தங்கள் பூர்விகத்தை இனிவரும் சமூகத்திற்குமுன் உதாரணமாகக் காட்டுவதற்கு உதவியாக இருக்கிறது. இவையெல்லாம் இன்று எமக்கு அவசியமாகவுள்ளது என்பதை யாவரும் உணர்கிறோம். காலத்தின் உண்மையான தேவையை அறிந்து மிகப் பெரும்சேவை செய்கின்றவர்களை என்றும் மறக்கமுடியாதது என்பதற்குமப்பால் சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்
பேராசிரியர் வி.பி. சிவநாதன் தலைவர், பொருளியல்துறை யாழ் பல்கலைக்கழகம்
கலாநிதி த. கலாமணி
நூலக நிறுவனம் தனது ஏழாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். எதிர்காலவியல் நோக்கில், இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி, ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தலானது அளப்பரிய சமூகப் பணியாகும். இவ்வகையில் இச்செயற்பாடுகளுக்கான ஊக்கத்தை வழங்கி, தகவல் வளங்களையும் அறிவு சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் நூலக நிறுவனம் ஆற்றிவரும் பணி மெச்சத்தக்கது.
இன்று தமிழ் மரபின் வேர்களைத்தேடும் பணியில் பலர் முனைப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இம்மரபுத்தேடலுக்கான ஆதாரங்களைப்
25

Page 15
பெற்றுக்கொள்வதில் நிறைந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தகவல்களையும் தரவுகளையும் பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களின் போதாமை, பெறுமதி மிக்க ஆவணங்கள் களஞ்சியப்படுத்தப்படிருக்காமை, கிடைக்கக்கூடிய ஆவணங்களும் தரவுகளும் முறைவழியாக்கம் செய்யப்பட்டிருக்காமை போன்ற சவால்களை எதிர்நோக்கியவாறே ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இச்சவால்களை எதிர்கொள்ள நேரிடும் நிலையிலே தான் நூலக நிறுவனம் ஏழு வருடங்களாக ஆற்றிவரும் பணி பொருண்மை உடையதாகின்றது. எதிர்கால சமூகம் நம்பிக்கை கொள்ளும் வகையில் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் பரந்துபட்டுள்ளதோடு ஒழுங்கமைக்கப்பட்டும் உள்ளது. ஆயினும், நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் இன்னும் விரிவுபட வேண்டும். அதனூடாக ஆற்றப்படக்கூடிய பணிகள் அநேகம் உள்ளன. அந்தப் பணிகளை நூலக நிறுவனம் ஆற்றும் என்ற நம்பிக்கை இன்று பலரிடம் துளிர்த்துள்ளது. இப்பணியில் நூலக நிறுவனம் தொடர்ந்து வெற்றி பெறவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
கலாநிதி த. கலாமணி தலைவர்
சட்டத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் ச. சத்தியசீலன்
தமிழ்கூறும் நல்லுலகிற்றுக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக நூலக நிறுவனம் கடந்த பல்லாண்டுகளாகத் தன்னிகரற்ற சேவையை வழங்கிவருகின்றது. இலங்கையிலிருந்து தமிழில் வெளிவந்த, தமிழரால் எழுதப்பட்ட தமிழ் - தமிழர் தொடர்பான வெளியீடுகளில் இணையத்தில் கிடைக்கும் அனைத்தையும் ஓர் இடத்தில் தேடி அடையக்கூடிய வகையில் பதிவுசெய்துவருகிறது. தமிழில் வெளிவந்து எளிதிற் கிடைக்க முடியாதுள்ள நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், சஞ்சிகைகளையும் இலகுவாகக் கிடைக்கக் கூடிய அரிய சேவையினை இவர்கள் ஆற்றிவருகின்றார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களென அனைவரும் பயனடையும் வகையில் எண்ணிம ஆவணப்படுத்தல் முயற்சிகளிலே நூலக நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
26

அரசியற் பிரச்சினையால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் வாழும் தமிழர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி, அவர்கள் அனைவரிடையேயும் தாய்மொழியாம் தமிழால் உறவை வளர்க்கும் முயற்சியில் நூலக நிறுவனம் ஈடுபட்டிருப்பது பாராட்டுதற்குரியது.
இலாபநோக்கற்ற, தமிழ்சமூக மேம்பாட்டைக் கருத்திற் கொண்ட உலகளாவிய வகையில் ஈழத்து எழுத்தாளர்களை அறிமுகஞ்செய்து வைக்கின்ற உன்னத பணியினை ஆற்றிவரும் நூலக நிறுவனத்தின் சேவைகள் மேலும் வளர வாழ்த்துகிறேன். நண்பர் பத்மனாப ஐயர் தலைமையிலான ஆளணியினர் சிறப்பாக இளைய தலைமுறையைச் சேர்ந்த கணினி நிபுணத்துவ அறிவுடன் உலகின் பல பாகங்களிலும் உலாவரும் சகோதரங்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வியத்தகு சேவையை ஆற்றிவரும் நூலக நிறுவனத்தின் வருடாந்த வரவுசெலவு அறிக்கையைப் பார்க்கும் போது ஆச்சரியப்படாமல் எவருமே இருக்கமுடியாது.
வாழ்க அவர்கள் பணிகள், வளர்க அவர்தம் தொண்டு.
பேராசிரியர். ச. சத்தியசீலன்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.
பேராசிரியர் சபா. ஜெயராசா
எண்மத் தொழில் நுட்பத்தின் எழுபுலத்தில் தமிழியலின் வளர்ச்சிக்குத் தாங்கள் ஆற்றிவரும் பணிகள், புலமைநிலையிலும், கட்டற்ற அறிவுப் பரவல் நிலையிலும் பாராட்டுக்குரியவை.
தகவற் புரட்சியோடிணைந்த அறிவுப் பிரவாகச் சூழலில் தாங்கள் மேற்கொண்டுவரும் வினைப்பாடுகள் மேலும் விரிவுக்கு உட்படுத்தப்படும் உயிர்ப்பு விசைகளுடன் சங்கமித்து முன்னெழும் முயற்சிகளின் தருக்கநிலை ஏற்றங்களைப் புலப்படுத்துகின்றன.
27

Page 16
தகவல் விசும்பில் நிகழ்த்தப்படும் ஆவணப்படுத்தலை பொருண்மிய இலாபம் கருதாத மனித நேய நடவடிக்கையாகவும், அறிவுநேய நடவடிக்கையாகவும் மேற்கொள்ளும் வினைப்பாடுகள் புதிய சமத்துவ விளிம்பின் நுழைவாயிலை நோக்கிய நகர்ச்சியாகவும் கருதத்தக்கவை.
பணிகள் தொடரவும், விரிவு பெறவும் விளைவேற்றம் பெறவும் வாழ்த்துக்கள்.
சபா. ஜெயராசா
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
நூலக நிறுவனம் 7வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ் வேளையில் வெளியிடப்படுகின்ற மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். எமது வரலாறு, இலக்கியம், மொழி, பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காறுகள் என்பனவற்றை எண்ணிமமாக்கி (Digital) இணையத்தினூடாகப் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கி வருகின்ற செயற்பாடானது மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.
இச் செயற்திட்டத்தின் மூலம் Fritsa) மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் அதிகளவு பயன் பெறுகின்றனர். அத்துடன் புதிய எழுத்தாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
361) TL. நோக்கற்ற இத் தன்னார்வ நிறுவனத்திற்கு நன்கொடையாளர்கள் பல உதவிகள் வழங்குவதன் மூலம் இந் நிறுவனத்தின் வளர்ச்சியை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என நினைக்கின்றேன்.
இன்றைய சமுதாயத்தின் தேவைக்கும், இணையத்தின் பயன்பாட்டுத் தேவைக்கும் நூலக நிறுவனத்தின் செயற்பாடு ஒரு வழிகாட்டியாகும்.
இந்நிறுவனம் மேலும் அளப்பரிய சேவையாற்ற வேண்டுமென எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.
V. Ganesarajah
அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
28

சுவர்கள் இல்லாத நூலகம்
- ரவிக்குமார் -
"எனது தந்தையர் நாடு இறந்துவிட்டது அவர்கள் புதைத்தார்கள் அதை நெருப்பில்
நான் வாழ்கிறேன் வார்த்தை என்ற என் தாய் நாட்டில்"
ஜெர்மனியைச் சேர்ந்த ரோஸ் ஆஸ்லேண்டர் (1901-1988) என்ற கவிஞர் எழுதிய இந்தக் கவிதை யுத்தத்தால் சிதைக்கப்படும் எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தக்கூடியது. வீடு தகர்க்கப்படும்போது, சொந்த நிழலும்கூட எரிந்து போய்விடும்போது, நாடென்று உரிமை பாராட்ட எதுவும் இல்லாமல்ஆகிவிடும்போது ஒரு மனிதனிடம் எஞ்சியிருப்பது சொல் மட்டும் தான். அவன் அதைக்கொண்டு முதலில் ஒரு இருப்பிடத்தை உருவாக்குகிறான். மரங்களையும் கனிகளையும் பறவைகளையும் வானத்தையும் சொற்களால் படைக்கிறான். பின்னர் ஒரு நாட்டையே உருவாக்குவது அவனுக்கு சாத்தியமாகிறது. 'மெளனத்தில் உறைந்திருக்கிறது வரலாறு, அந்த வரலாற்றை மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டே இருக்கிறது வார்த்தை,
புத்தகங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதை எரிக்கிற மூடத்தனமும் இருந்து வந்திருக்கிறது. மதத்தின் பெயரால், அதிகாரத்தின் பெயரால் வரலாறு நெடுக லட்சக்கணக்கான நூல்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் அறிவாற்றலுக்கு அடையாளமாகத் திகழ்ந்த நாளந்தாவின் நூலகம் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால் எரியூட்டப்பட்டபோது அந்தத் தீ பல மாதங்கள்வரை அணையாமல் எரிந்துகொண்டே இருந்ததென வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். நூல்களின்மீதான வெறுப்பு அறிவு குறித்த அச்சத்திலிருந்து எழுகிறது. நூல்களை எரிப்பதன்மூலம் அறியாமை இருளைப் பெருகச்செய்யவேண்டும் என்பதே ஆதிக்கவாதிகளின் நோக்கம். ஆனால் ஒரு நூலை எரிக்கும்போது அதிலிருந்து எழும் புகை எரிப்பவனின் நெஞ்சுக்குள் புகுந்து அவனது
29

Page 17
மூளையை மங்கச் செய்கிறது. ஏற்கனவே அவனுள் இருக்கும் இருள் இன்னும் அடர்ந்து வெளியெங்கும் பரவுகிறது. அதில் சூரிய கிரணங்களும் மறைந்து போய்விடுகின்றன. நூல்களை எரிக்கும் நாட்டில் எப்போதும் இரவுதான். நிலவுகூட இல்லாத இரவு.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நூலகம் எரியுண்டபோது அதைக் கண்டு குமுறியவர்கள் மீண்டும் அப்படியொரு நூலகத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டிருப்பார்கள். அந்த விருப்பம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஈடேறியது என்றாலும், இது எத்தனை நாளைக்கு ?" என்ற கேள்வி ஒவ்வொரு நெஞ்சிலும் எழாமல் இல்லை. நூல்கள் காகிதத்தால் தயாரிக்கப் படுகின்றன. காகிதம் நெருப்பின் உணவு நெருப்போ ஆதிக்கவாதிகளின் தோழன்.
குழந்தையின் அறுக்கப்பட்ட குரல்வளையிலிருந்து பெருகும் குருதியைப்போல பாய்கிறது காலம். அதில் அடித்துச் செல்லப்படுகிறது ஏதிலிகளின் வாழ்க்கை. இந்த அவலத்தை மறுத்து, எதிர்த்து எழுந்ததுதான் நூலகம் என்ற பெருங்கனவு. எரிக்கமுடியாத எண்வயத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் இன்று பத்தாயிரம் நூல்களைத் திரட்டியிருக்கிறது.
எண்வயத் தொழில் நுட்பம் தமது வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் வியாபித்துவிட்டது. அது இல்லாமல் இன்று கலைப் பொருட்களின் பரிவர்த்தனை சாத்தியமில்லை. இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில் நாம் எல்லோரும் எண்வயத்தொழில் நுட்பத்தால் பிணைக்கப் பட்டிருக்கிறோம். அச்சுத் தொழிலில் அது 6 FTST Dis சாத்தியப்பாடுகளை அடையாளம் காட்டியிருக்கிறது. அதையொட்டி உலகிலுள்ள பல நாடுகள் இன்று எண்வய நூலகங்களை (டிஜிட்டல் லைப்ரரிகளை) உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றை சுவர்கள் இல்லாத நூலகங்கள் என்று குறிப்பிடுகிறார் ராபர்ட் டார்ன்டன் என்ற சிந்தனையாளர்.
மங்கோலியாவில் தேசிய எண்வய நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது, டச்சுக்காரர்கள் 1470 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தம் நாட்டில் வெளியான அத்தனை அச்சுப் பிரதிகளையும் எண்வயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், ஃப்ரான்ஸ் அரசாங்கம் எண்வய நூலகம் ஒன்றை உருவாக்கும் திட்டத்துக்காக 750 மில்லியன் ஈரோக்களை ஒதுக்கியிருக்கிறது. ஜப்பான் அரசாங்கம் இரண்டே ஆண்டுகளில் தமது நாட்டில் இருக்கும் அனைத்து நூல்களையும் எண்வயப்படுத்துவதென அறிவித்து தீவிரமாக இதில் ஈடுபட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, நார்வே எனப் பல்வேறு நாடுகளும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. இப்படி சிறிய நாடுகள்
30

செய்யும்போது நாம் ஏன் செய்யக்கூடாது என நினைத்த அமெரிக்கா அதற்கான பணிகளை வேகவேகமாகச் செய்துவருகிறது. நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி ஆஃப் அமெரிக்கா என்ற திட்டம் அறிவு சேகரங்களை அமெரிக்கர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொதுவாக்குவது என்ற நோக்கத்தோடு துவக்கப்பட்டிருக்கிறது.
நூல்களை எண்வயப்படுத்தி அவற்றை இணையத்தின்மூலம் வழங்கும் திட்டத்தை கூகுள் நிறுவனமும் துவக்கிவிட்டது. உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் அச்சிடப்பட்ட நூல்கள் அனைத்தையும் எண்வயப்படுத்தவேண்டும் என்பதே கூகுளின் நோக்கம். சுமார் ஒன்றரைகோடி நூல்களை அது ஸ்கேன் செய்து எண்வயப்படுத்தி யிருக்கிறது. ஆனால் சட்டரீதியான சிக்கல்களில் அந்தத் திட்டம் சிக்கிக்கொண்டு இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராமல் கிடக்கிறது.
இந்திய அரசும்கூட தேசிய எண்வய நூலகம் ஒன்றை உருவாக்கிகொண்டிருக்கிறது. பெங்களூரிலிருக்கும் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அந்தத் திட்டத்தில் சுமார் ஆறாயிரம் தமிழ் நூல்கள் தற்போது உள்ளன. ஆனால் இப்படியான அரசாங்க ஆதரவோ அல்லது கூகுள் நிறுவனம் போல வியாபார நோக்கமோ இல்லாமல் செயல்பட்டு வருகிறது நூலகம் திட்டம். இது மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.
எண்வயத் தொழில் நுட்பத்தில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் இ ரீடர்கள் சில காலாவதியாகும்போது உண்டாகும் பிரச்சனைகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். நூலகம் திட்டத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் இந்தத் தொழில்நுட்பப் பிரச்சனையை உணர்ந்திருப்பார்கள்.
இலங்கை போன்ற, இன முரண்பாடுகள் கூர்மைப்பட்டிருக்கும் சமூகங்களில் ஓர் இனம் தனது அறிவுச் சேகரங்களைக் காப்பாற்றி அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது எண்வயத் தொழில்நுட்பம் அதைச் சரியாகப் புரிந்துகொண்டு நூலகம் திட்டம் சரியான காலத்தில் துவக்கப்பட்டிருக்கிறது.
நூலகம் திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் பங்களிப்புச் செய்யவேண்டும்.தற்போது தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் நடுவாந்தர மற்றும் சிற்றிதழ்களின்
3.

Page 18
எண்வயப் பிரதிகளைப் பெற்று அவற்றையும் நூலகத்தில் சேர்க்கவேண்டும். நூல்களை ஸ்கேன் செய்து இணையத்தில் ஏற்றுவதற்கு தமிழ்நாட்டிலிருப்பவர்கள் தன்னார்வத்தோடு முன்வரவேண்டும். ஈழத் தமிழ் நூல்களைக் கைவசம் வைத்திருப்போர் அவை குறித்த விவரங்களை நூலகத் திட்டத்தின் பொறுப்பாளர்களோடு பகிர்ந்துகொண்டால் யாழ் நூலகத்தைவிடவும் மிகப்பெரிய நூலகத்தை உருவாக்கிவிடமுடியும். தற்போது பத்தாயிரம் நூல்களோடு உருவாகியிருக்கும் நூலகம் இன்னும் இரண்டே ஆண்டுகளில் லட்சம் நூல்கள் கொண்டதாக வளரும் என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது.
நூலக நிறுவனத்தினைத் தொடர்பு கொள்ள
Address Noolaham Foundation, No 7, 57th Lane, Colombo-06
Telephone --94. 112 363261
Email noolahamfoundationQgmail.com
Digital Library www.noolaham.org
Web www.noolahamfoundation.org
32

Printed by : V
്ര
SRI DIGITA
pRESS
Drint Solutions اصTot"
Digital 8 Offset Prin ině ( ܠܒܟ Visiting Cards
Digital Banner Printing s 歓/ Letterheads Duplo Printing ܓܹܓy : Certificates A3 Color Photo Copy 1 M, Booklets A3 Color Scanning ay Posters
Sticker Printing Leaflets
Graphic Designing D Cards
DVD / VCD Covers 8 Labels Souvenirs
Laminating (Gloss 8 Matte) Magazines Binding (6 Categories) Greeting Cards Hard Binding with Cover Printing Invitation Cards ypesetting (English, Tamil, Sinhala) Thank you Cards
Hoime H 0777 275 489
Te || FaX = 0112.581 735
Email: teleworldOymail.com No. 40-B1, Galle Road, Colombo - 06

Page 19
క 011 2507 607
அழையுங்கள்
 
 

வசதிக்காக
டவடிக்கைகளும்
முதல் 30 ഖങ്ങ)