கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2010.09

Page 1

க்கிய சஞ்சிகை

Page 2
( -U த்த | தரமான தங்க நகைகளு 7
NAGALING
92
Design Monufactur Sovereign G JeUe
101, Colombo
Te : O81 .
டு CENTR SU
SUPPLIERS TO CONFE
Decallers in canlı find; Food Colours, Food Chemi
76 B, Kings Tel : 081-2224187, 081
 

ਰ ר
-ആ=-
ஆ
ఆస్రి
Brs Ond ers of 9292KT old Quality Illery
Street, Kandy
2232545
AL ESSENCE PPLIERS ||
CTIONERS & BAKERS
of Food essences |
als, Cake Ingredients etc. || |
treet, Kandy 2204480, 081-4471563

Page 3
பகிர்தலின் gpoot | Gfhílaoith
ஆழமும்
பெறுவது
ஞானம்
ஆசிரியர் : தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் ஓவியர் கெளதமன் தலைமை அலுவலகம் ! ಜGirlಣ್ಣ. தொடர்புகளுக்கு. தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06. தொலைபேசி : 011-2586013
O777-306506
+61 02 80077270
தொலைநகல்: 011-2362862 E-mail : editor Ggnanam.info Web : www.gnanam.info
வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புகள்: SWift Code := H BLI LKLX T. Gnanasekaran Hatton National Bank - Wella Watte Branch A/C No. 009010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துக! புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 

இதழினுள்ளே else
O கவிதைகள்
எஸ். முத்துமீரான் 14
வை. சாரங்கன் 23
எம்.எச். முகம்மது நளிர் 24శా"
ஜின்னாஹ் .ഴ്സ് 27
தி. ஜெயசீலன்,ாழு" རྒྱ་ཚོ་ 4
ஈழபாரதி 51; ',
e கட்டுரைகள்
எஸ். முத்துமீரான்
கலாநிதி நா. சுப்பிரமணியன் 10
சாரனா கையூம் 18
செங்கை ஆழியான் 19
சிற்பி 33
o சிறுகதைகள்
தேவராசா முகுந்தன் O7
ஸ்கரிய்யா தாமிர்/அஷ்ரப் சிஹாப்தீன் 15
ச. முருகானந்தன் 24
வி. ஜீவகுமாரன் 30
o நேர்காணல்
தெளிவத்தை ஜோசப்/தி. ஞானசேகரன் 38
6 பர்மிய பிக்கு சொன்னகதைகள்
கவிஞர் சோ, ப. 42
0 நூல் மதிப்புரை
குறிஞ்சி நாடன் 47
o சமகான கனை இனக்கிய
நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை 52
உ பத்தினழுத்து
மானா மக்கீன் 36
கே. விஜயன் 45
e வாசகர்பேசுகிறார் 56
ட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு சிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
முறைதவறும்ப
நூல் பதிப்பாக்க முயற்சிகள் இப்போது அதிகரித்தவ அச்சுத் தொழில் நுட்ப விருத்தியும் இந்தப் பதிப்பாக்க மு இலக்கியத் துறையைப் பொறுத்தவரை பெரும்பா6 தொகுதிகளாகவும் வெளிவருகின்றன.
சமீபகாலங்களில் வெளிவருகின்ற பெரும்பாலா பின்பற்றப்படுவதில்லை என்பதைக் காணக்கூடியதாக
சிறுகதைகளையோ, கவிதைகளையோ அல்லது தொகுக்கப்படும் போது சில நடைமுறைகள் பின்பற்ற சஞ்சிகையில், பத்திரிகையில் அல்லது வேறெந்த ஊடக ஆண்டுகளையும் குறிப்பிடுதல் வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்படவேண்டிய தேவைக்கு சில சொந்தக்காரரான எழுத்தாளர் பற்றிய ஆய்வுகள் பே சஞ்சிகையில் அல்லது பத்திரிகையில் வேறு ஏதாவது வாசகர்கள் ஏதாவது கருத்துக்களைத் தெரிவித்திருக்கி0 அவர் எதாவது மாற்றங்கள் செய்துள்ளாரா? அந்த 6 படைப்புகளுக்குமிடையில் வளர்ச்சிப்போக்குகள் தெ6 அறிவதற்கு அப்படைப்புகள் வெளியான சஞ்சிகையின் முக்கியமாகின்றன.
இத்தகைய குறிப்புகளின் முக்கியத்துவம் பற்றி நூல்களிலும் இத்தகைய தவறுகள் தொடர்ச்சியாக ந எனவேதான் இத்தகைய தவறுகள் திட்டமிட்டே இடம்ெ ஞானம் சஞ்சிகையில் வெளியான படைப்புகளை 2008ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருது சொந்தக்காரர் அ. ச. பாய்வா. இவரது இத்தொகுதியில் புற்றுநாவல்' என்ற வெறொரு கதையும் ஞானத்தில் வெ சிறுகதைத் தொகுதியில் இடம் பெறவில்லை.
மலையக எழுத்தாளர் பிரமிளா செல்வராஜாவின் ப வெளிவந்துள்ளது. இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ம சஞ்சிகையில் வெளிவந்தவை. ஆனால் இந்தத் தொகு பந்தல் வெளியீடான இந்தத் தொகுப்பில் இத்தகைய தள ஆப்டீனின்சிறுகதைத் தொகுப்பில் உள்ள 'காய வெளிவந்தபோதும் அத்தகவலும் அவரது மல்லிகைப்
இந்த ஆண்டு வெளிவந்த கல்வயல் வே. குமாரசா சில கவிதைகள் அதே மகுடத்தில் ஞானம் சஞ்சிை தொகுப்பிலும் இதே தவறு காணப்படுகிறது. ஞானம் சஞ் brഞ്ഞrtILബിbങ്ങാ.
எதிர்வரும் காலத்தில் இத்தகைய தவறுகள், இ ஆரோக்கியமான செயற்பாடாக அமையும். இதனை வேண்டுமென வேண்டுகிறோம்.
 

ந்தின் பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் பிப்பெருக்கும் மேவு மாயின், ல் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார்.
நிப்பு முயற்சிகள்
க்ண்ணம் இருக்கின்றன. filosofusio ன்பாடும் நவீ யற்சிகளைப் பரம்பலாக்கியிருக்கின்றன. ான நூல்கள் கவிதைத் தொகுதிகளகவும், சிறுகதைத்
ன தொகுதிகளில் சில மரபுரீதியான நெறிமுறைகள் இருக்கிறது.
ஏனைய இலக்கியப் படைப்புகளையோ நூல் வடிவத்தில் றப்படுதல் மரபாகும். அப்படைப்புகள் முன்னர் எந்தச் த்தில் வெளிவந்தன என்ற விபரங்களையும் வெளிவந்த
முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அந்தப் படைப்புக்குச் ற்கொள்ளப்படும்போது அந்த எழுத்தாளர் குறிப்பிட்ட து படைப்புக்களைக் தந்திருக்கின்றனரா? அவைபற்றி ன்றனரா? பதிப்பாக்கம் செய்யும்போது அந்தப் படைப்பில் ழுத்தாளரின் முந்திய படைப்புகளுக்கும் பிற்பட்டகாலப் ன்படுகின்றனவா போன்ற விடயங்களை ஆய்வுசெய்து
பெயரும், வெளிவந்த ஆண்டுகள் பற்றிய குறிப்புகளும்
நன்கு அறிந்த எழுத்தாளர்களின், பதிப்பாளர்களின் டைபெற்று வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. றுகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. மட்டும் இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பெற்ற நூலான 'ஆத்ம விசாரம் சிறுகதைத் தொகுதியின் உள்ள மகுடக்கதையான 'ஆத்ம விசாரம் சிறுகதையும் ளியானவை. ஆனால் இவையற்றிய குறிப்பு ஏதும் அந்தச்
ாக்குப்பட்டை என்ற சிறுகதைத் தொகுப்பு இவ்வாண்டில் குடக் கதையும் ஏனைய இரண்டு கதைகளும் ஞானம் ப்பில் அந்த விபரங்கள் காணப்படவில்லை. மல்லிகைப் பறுகள் இடம்பெறுவது பெரும் வியப்பாக இருக்கிறது. ப. ப்பட்டவன்’ என்ற கதை ஞானம் சஞ்சிகையில் ந்தல் பதிப்பில் குறிக்கப்படவில்லை.
மியின் முறுகல் சொற்பதம்’ என்ற கவிதைத்தொகுதியின் sயில் வெளியானவை. அந்த முதுபெரும் கவிஞரது சிகையில் வெளிவந்த கவிதைகள் என்ற குறிப்பு எங்கும்
ருேட்டடிப்புகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கருத்தில் கொள்ா
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர்க

Page 5
தேசத்தின் கண்?ன மானா மக்கீன் இலங்ை இலக்கிய இணைப்பு
- கலாபூஷணம், பன்னூலாசிரிய
FFழத்து இலக்கியவானில் இன்று ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு சில முஸ்லிம் படைப்பாளிகளில் நண்பர் எம். எம். மக்கீன் அவர்களும் ஒருவர் என்பது பேருண்மை, இலக்கிய உலகில் எல்லோராலும் மானா மக்கீன்' என்று அழைக்கப்படும் இவர், இலக்கியத்தில் பன்முக வெளிப்பாடுள்ள தனித்துவமான படைப்பாளி, ஆளுமைமிக்கவர்.
கடந்த 50 ஆண்டுகளாக கலை, இலக்கியம், இதழியல் மற்றும் ஆய்வுத் துறைகளில் துள்ளிவரும் புள்ளிமான். பலருக்கும் முன்னோடி. இலங்கை - தமிழக இலக்கிய இணைப்புப் பாலம் இரு நாடுகளிலும் பல கெளரவங்களையும் விருதுகளையும் பொற்கிழிகளையும் பெற்றவர். 40 நூற்களைப் படைத்திட்ட பன்னூலாசிரியர்.
கல்வி அறிவில்லாப் பெற்றோர் (முத்து முகம்மது நூறுல் ஹஃபீலா) அவரை உயர்த்த எடுத்துக் கொண்ட சிரமங்களும், திக்குவல்லை எம். ஏ. முஹம்மது மாஸ்டர் கொழும்பு ஸாஹிராவில் ஊட்டிய தமிழ் அறிவும் 12-13 ஆம் பிராயங்களில் கல்கண்டு இதழால் ஏற்பட்ட தாக்கமும், எழுத்தார்வமும் ஒன்றிணைந்து 'வீரகேசரி', 'தினகரன்' பாலர் பக்கங்களில் தடம் பதித்ததும், சுதந்திரன் மாணவர் மன்றம் பகுதியில் ஆக்கங்கள் வழங்கியும், வானொலி 'சிறுவர் மலர்' நிகழ்ச்சியில் வாராவாரம் வலம் வந்தும் தமிழக ‘கண்ணன்', பூஞ்சோலை', 'அமுதம் சிறுவர் சஞ்சிகைகளில் இடம் பிடித்தும், எழுத்துத் துறையில் புடம் போட்டுக் கொண்டார்.
முன் குறித்த திக்குவல்லை எம். ஏ. முஹம்மது அவர்கள் இலங்கையின் பிரபல முஸ்லிம் நாடக ஆசிரியராகவும் விளங்கினார். அவர், மானா போன்ற பலருக்கு நல்ல நாடகப் பயிற்சியை அளித்து வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்து கலைத்துறையில் முன்னேற உதவினார். இக்காலகட்டத்தில் மாணவ நிலையில் கலைஜோதி என்னும் கையெழுத்துப் பத்திரிகையும் நடாத்தி அப்பொழுது ஸாஹிறா அதிபராக இருந்த அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ், ஆசிரியர், தமிழ் அறிஞர் எஸ். எம். கமால்தீன் ஆகியோரின் அன்பையும் பாராட்டுதல்களையும் பெற்றார்.
அந்த 50-60-70 களில் 'கல்கண்டு தமிழ் வாணன், ரேடியோ மாமா எஸ். சரவணமுத்து, சுதந்திரன்' எஸ். டி. சிவநாயகம், அதன் ஆசிரிய பீடத்தை அலங்கரித்த எம். எச். எம். இப்ராஹிம், எம். துரைசாமி, பிரேம்ஜி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

TT6 க - தமிழக
பாலம்
ர் எஸ். முத்துமீரான் 接黏
ஞானசுந்தரம், தினகரன்’ கே. கைலாசபதி, இ. சிவகுருநாதன் ‘வீரகேசரி' சில்லையூர் செல்வராசன் ஆகியோர் ஒவ்வொரு காலகட்டங்களில் அவரது எழுதுகோலை ஊன்றி உழச் செய்துள்ளனர். கடைசியானவர் நாடகத்துறை வளர்ச்சிக்கும் உரமூட்டினார்.
இலக்கியவாதியாக இதழாளனாக, வானொலி நாடக எழுத்தாளராக, மேடை நாடக நெறியாளராக தயாரிப்பாளராக, பொப் இசை நிகழ்ச்சிகள் அமைப்பாளராக பல பரிமாணங்கள் தொடாதது கவிதை வரிகள் மட்டும்
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் ஈடுபட்டு எதிர்நீச்சலிட்டு முத்திரை பதிப்பது மானா மக்கீனுக்குக் கைவந்த கலை! எந்த விடயமானாலும் புதுமையாகவும், புரட்சியாகவும் அதைத் தனித்துவமாகவும், செய்ய வேண்டுமென்ற ஆவலுடன், எவருக்கும் தலை குனியாது நெஞ்சுயர்த்தி செய்து முடிக்கும் திறமையும் பக்குவமும் உள்ள அவர், மனித நேயமும் நண்பர்களை உள்ளத் தூய்மையோடு மதித்தொழுகும் பண்பும் நிறையப் பெற்ற ஊடகவியலாலர்
1962ம் ஆண்டு, இவர் கொழும்பு தெமட்டக்கொட வை, எம். எம். ஏ. பேரவையின் இலக்கியச் செயலாளராக இருந்து, அகில இலங்கைரீதியாக பேரவைசார்பாக நடாத்திய சிறுகதை, வானொலி நாடகப்போட்டிகள் மூலம் இன்று இலங்கையில் புகழ் பெற்று விளங்கும் முஸ்லிம் படைப்பாளிகளான கவிஞர். எம். ஏ. நுஹ்மான், எஸ். முத்துமீரான் போன்றவர்களை வெளிச்சமிட்டுக்காட்டிய பெருமைக்குரியவர், சூத்திரதாரியும்
5i_L.
அப்பொழுது யாழ்ப்பாணத்தில் சில மாணவர்கள் ஒன்றிணைந்து சுரபி' என்னும் மாணவர் சஞ்சிகையை வெளியிட்டனர். அதற்கு அங்கே பிரபலமாக இருந்த விவேகானந்தா அச்சகம் பக்கபலமாக நின்றது. அதன் ஆசிரியர் குழுவில், கொழும்பு மக்கீனையும் இணைத்ததோடு மக்கீன் பதிலளிக்கிறார் என சுவையான கேள்வி - பதில் பகுதிகளையும் நடத்தப்பணித்தனர். (பேரா. கைலாசபதி முதன் முதலில் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிப்பார்த்ததும் இந்த சுரபி யில் தான்)
மேலும், இதற்குச் சற்றுப் பிந்திய காலகட்டத்தில் யாழ் மண் இவரை அரவணைத்த விதம் அலாதியானது.
படைப்பிலக்கியவாதியாக்கினார் சிற்பி
அப்பொழுது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இலக்கியப்
பெண்ணாகக் கலைச்செல்வி வலம் வந்த அறுபதுகளில்
3

Page 6
தமிழக மணிக்கொடியை நினைவுபடுத்திய அவ்விதழில், முதலாவது சிறுகதைப்போட்டிக்குள் நுழைந்த எம்.எம்.மக்கீன் மூன்றாம்பரிசைத்தட்டிக்கொண்டுபரபரப்ப்ை ஏற்படுத்தினார். முன்பின் சிறுகதை எழுதியிராத ஒரு கொழும்பு முஸ்லிம் இளைஞன் எவ்வாறு ஆனைக்கோட்டை இளவல் ஒருவனை உருவாக்கி அவனதுமொழிநடையில் பேசவைத்தான் என்பதே பேச்சாக இருந்தது.
1962ம் ஆண்டு ஐப்பசி கலைச்செல்வியில் அதன் ஆசிரியர் கவிஞர் சிற்பி சரவணபவன் இவர் பற்றிய குறிப்பொன்றை எழுதும் போது, 'இலங்கை வானொலியில் இவருடைய நாடகங்களும்,ஒலிச்சித்திரங்களும் அடிக்கடி இடம் பெறுகின்றன. மருதானையில் வாழுமிவ்ர், மாருதானையையும் ஆனைக்கோட்டையையும் இணைத்து அசல் யாழ்ப்பாணப் பாத்திரமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். என்று சிறப்பாகச் சொன்னது இவர் பெற்ற பெருமையென்றே கூறலாம்.
அவர் எழுதிய கதைகளில் றகுமத்தும்மா மிகப் பிரபல்யமானது. தாயின் பாசத்தையும், அன்பையும் சிறப்பாக வெளிப்படுத்தி அவரால் எழுதப்பட்ட இக்கதை இலங்கையின் முதன் முதலாக வெளியிடப்பட்ட முஸ்லிம் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது பெரிய சிறப்பு. தமிழக இதழ்களும் மறுபிரசுரம் செய்துள்ளன.
பேராதனைப் பல்கலைக்கழக பலாடியம் மலரின் ஆய்வாளரும் கல்விமானுமாகிய எஸ். எச். எம். ஜெமீல் அவர்கள், எம். எம். மக்கீன், டொமினிக் ஜீவா, ரகுநாதன் போன்றோரினால் சிறுகதைஈழத்திலும் வளர்ச்சியடைந்துதமிழ் மொழியின் பரந்த வளர்ச்சிக்கு சேவை செய்கின்றது என்று 1962ல் குறிப்பிட்டுள்ளார்.
மானா மக்கீன் எண்ணிக்கையில் குறைந்த அளவில் சிறுகதைகளைப் படைத்திருந்தாலும் இவருடைய கதைகள் ஒவ்வொன்றும் கொம்பன்குட்டிகளைப்போன்றுகொழும்புவாழ் மக்களின் மண்வளச்சொற்களினால் உருவாகியயதார்த்தபூர்வ கதைகளாகும்.
வானொலி நாடக வித்தகர்
வானொலி நாடகத்துறையின் மானாவின் பங்கு மிகச்சிறப்பானது. இலங்கை வானொலியில் 1961ம் ஆண்டிலிருந்து இவர் தட்டெழுத்தாளராக கடமைபுரிந்த காலத்தில் சிறப்பான வானொலி நாடகங்களை தமிழ்நாடக அரங்கிலும் முஸ்லிம் பிரிவு நாடகப்பகுதிக்கும் எழுதி மிகப் பிரபல்யமான வானொலி நாடக எழுத்தாளராக விளங்கினார்.
இவரால் எழுதப்பட்ட வளைந்து செல்லும் வானவில், சிற்பியின் கண்ணீர்', 'பிள்ளைபாய்' நெப்போலியன்' 'ஜோன் ஆப் ஆர்க்' என்னும் வானொலி நாடகங்கள் அன்று பலராலும் போற்றிப் புகழப்பட்டன.
ஆங்கில நாடகங்களின் அறிமுகம்
தமிழ்மேடை நாடகத்துறைக்கு, புகழ்பூத்த நாடகங்களான
அல்பிரட் ஹிட்ச்சாக்கின் டயல் எம் போர் மர்டர், அகதா
கிறிஸ்டியின் ‘விட்னஸ் போர் தி பிரசிகியூசன்',
4.

ஆர்தர் வட்கின் நொட் இன் த புக் போன்றவைகளை 1960-61களில் தமிழ் வடிவங்களாக அறிமுகப்படுத்தியும், பிரபல சிங்கள நாடக மேதை தயானந்த குணவர்த்தனவின் ஆமை ஒடு நாடகத்தை கிளரிக்கல் கிளாஸ் திரி ஆகவும் வழங்கி கலைப்பாலம் அமைத்தவரும் அவரே. இவை பின்னர் வான்ொலி வடிவங்களும் பெற்றன.
Gingh, ONE SETPLAY6Tgh 96, 5MLäuGOLDü36 நடக்கும் முழுநேரத்தமிழ்நாடகங்களை இவரே இலங்கையில் அறிமுகம் செய்தார். பின்னரே தமிழகத்தில் கே. பாலசந்தர் அதனை பழக்கப்படுத்தினார்.
துடிதுடிப்பான ஊடகவியலாளர்
சுதந்திரன், தினகரன், தினபதி ஆகிய தினப்பத்திரிகைகளின் ஊடகவியலாளனாக சுழன்று கொண்டிருந்த இவர், நடைச்சித்திரங்கள்,பக்திஎழுத்துக்களை எழுதிப் புகழடைந்தார். தினகரனில் 1976-77களில் தினமும் கடைசிப்பக்கத்தில் வழங்கிய கண்டதுண்டா, கேட்டதுண்டாவும் பின்னர் நான்காண்டுகள் வாரமஞ்சரியில் வழங்கிய அந்த ஆறாம் பக்க லைட்ரீடிங் பகுதியையும் படித்துப் பரவசப்படாதவர்கள் மிகமிகக் குறைவு. இன்றைக்கும் இவரது பெயர் லைட்ரீடிங்குடன் இணைத்துப்பாராட்டப்படுகின்றது.
ஆய்வெழுத்தாளரானார்!
மானா இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை படைத்தளித்து பன்னூலாசிரியராகிப் பெரும் சாதனை புரிந்துள்ளார்.
சினிமாக்காரர்களின் வரலாற்றை மட்டும் அறிந்தால் போதுமென்று பேரானந்தம் அடைந்து கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களின் பார்வையைத் திசை திருப்பி அவர்கள் தம் பாரம்பரிய வரலாறுகளை, இலங்கைத் தொடர்புகளுடன் இணைத்து நல்ல தரமான ஆய்வு நூல்களை எழுதிய நன்றிக்காக இவரை தமிழக முஸ்லிம்கள் பாராட்டிய முத்தமிழ் வித்தகர்', ஆய்வு இலக்கியச் சுடர்', ஆய்வு தமிழ் ஆற்றுநர் எனப் பட்டங்கள் சூட்டி கெளரவித்துள்ளதுடன் 17 ஆண்டுகளுக்கு முன் (1993) ஒரே ஆண்டில் இரு தடவை பொற்கிழிகளும், மீண்டும் 2001இல் ஒருதடவையும் பொற்கிழியும் வழங்கப்பெற்றவர் அவர்.
அவற்றை தஞ்சாவூர்- அய்யம்பேட்டை 14வது அல்குர்ஆன் மாநாட்டுப் பந்தலிலும், மற்றொன்றை வி. ஜி. பி. (சந்தோஷம்) சந்தனம்மாள் அறக்கட்டளையாலும் அடைந்தார். இன்னொன்றை"வரலாற்றில் இலங்கையும் காயல் பட்டினமும்” நூலுக்காக காயல்பட்டின மக்கள் சார்பாக அந்நகரப் பெருங்கொடை வள்ளலான எல்கேஎஸ் தங்க மாளிகை எம்.அக்பர்ஷா வழங்கினார்.
அத்தோடு, உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர், பேங்காக் தொழிலதிபர் ஏ. றஃபீயுத்தீன், இலங்கை -கீழக்கரை இனிய தொடர்புகள் ஆய்வுக்கு சென்னை விழாவில் தங்கப்பதக்கமும் சூட்டி மகிழ்ந்தார்.
மேலும்1994ல் தமிழ்நாடுமுஸ்லிம்பத்திரிகையாளர் சங்கம் வழங்கிய எழுத்து வேந்தன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 7
அதே ஆண்டில், தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் கழகம் சூட்டிய 'தமிழ் மாமணி’ எனவும் பற்பல பட்டங்கள் விருதுகள் வந்தடைந்தன.
இவரது 70-வது அகவையைக் கொண்டாடும் வகையில், 2007 டிசம்பர் 15ல் சென்னை, பாரதியார் இல்லத்தில் மானாவுக்கு ஒரு பிறந்தநாள் பாராட்டு விழா நடைபெற்றது. ஆய்வுத் தமிழ் ஆற்றுனர் எனப் பட்டம் வழங்கப்பட்டது. அவரது 30வது நூலூக்கும் வெளியீட்டு விழா நடந்தது.
இதற்கு அடுத்த நாள், அதாவது 16ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஒரு விழாவில், மானாவின் கலை இலக்கியப் பங்களிப்புக்காக இலக்கிய நிறைமதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஒரு படைப்பாளருக்கு இரண்டு நாடுகளில் அடுத்தடுத்த தினங்களில் கெளரவம் வழங்கப்பட்டது. அபூர்வமான ஒரு நிகழ்வு
பலருக்கு முன்னோடியாகவும், 6)6Of உருவாக்கியவராகவும் திகழும் அவரை அந்தச் சென்னை வைபவத்தில் வாழ்த்திப் பேசிய கவிவேந்தர் மு. மேத்தா ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுப்பேசினார்.
இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தின் பழம்பெரும் முஸ்லிம் ஊர்களில் செய்திகளையும் சிறப்புகளையும் ஆவணப்படுத்தும் மானா மக்கீன் எழுத்துப் பணிகள் பாராட்டவும் போற்றப்படவும் தக்கவை. ஆனால் தமிழக முஸ்லிம் இலக்கிய அமைப்புகள் அவருக்குச் செய்த கைம்மாறு எதுவுமில்லை. ஆனால் இந்துப் பெருமக்களால் ஒரு பன்னாட்டுத்தமிழுறவுமன்றம் நினைக்கிறதுசெய்கிறது என கவிவேந்தர் மு.மேத்தா எடுத்துக் காட்டினார்.
உலகில் எங்கெல்லாம் தமிழ் உள்ளங்கள் உள்ளனவோ அவர்களுக்கு எல்லாம் இணைப்புப் பாலமாக இருப்பது அங்குள்ள பன்னாட்டுத் தமிழுறவு மன்றம். அதன் நிறுவனராகவும், உலக அமைப்பினராகவும் திகழ்பவர் பெருங்கவிக்கோ T (p. சேதுராமன். இயக்குநராக இருப்பவர் அவரது மைந்தர் பாவலர் வா. மு. சே. திருவள்ளுவர். அவர்களிருவரது ஏற்பாட்டிலேயே மானா மக்கீனுக்கான வைபவங்கள் நடந்தன.
அச்சமயம், மானா மக்கீன் அவர்களைப் பற்றி பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அவர்கள்
சுறுசுறுப்பாளர் அன்பின்
சுடர்மிகு அறிவின் பண்பர் விறுவிறுப்பாளர் சோர்வை
வென்றுநில் எழுத்திச் செம்மல்
தமிழ் ஆர்வலர்களே!
சர்வதேச எழுத்தாளர் விழாவிற்கு இன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

உறுதியின் உறுதியாக
உன்னத வரலாறெல்லாம் தறுகண்மை புதுக்கிக் காக்கும்
தமிழ்மானா மக்கீன் அம்மா
என்று போற்றுவது பொருத்தமானதே.
இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை அரசினால் தமிழ்மணி', 'கலாபூஷணம்’ ‘தாஜுல் உலூம் ஆகிய பட்டங்களினாலும் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இன்றைய சனாதிபதியினால் “தேசத்தின் கண்’ என்னும் சாகித்திய விருதினை 2005ல் 'மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுடன் இணைந்து பெற்ற பெருமைக்குரியவரும் கூட
இலங்கை அரசின் கலைத்துறை சம்பந்தமான முக்கிய நியமனங்களில், 1969ல் இலங்கைக் கலைக்கழக இஸ்லாமிய நுண்கலைக்குழு உறுப்பினராகவும் செயலாளராகவும், தமிழ் நாடகக் குழு அங்கத்தவராகவும், தேசிய நாடக விருதுகள் தேர்வாளராகவும் நல்ல சேவையாற்றியுள்ளார். இத்தோடு, 1992ம் ஆண்டு முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் திரை நாடகத் தணிக்கைச் சபை அங்கத்தவராகவுமிருந்து சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இன்று 74 ஆம் அகவையில் இருந்தாலும், இருபத்து நாலு இளைஞனுக்கொப்பாக திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் தன்னிகரற்றவரான இவரது இதயத் தாமரையில் கடந்த 37 ஆண்டுகளாக 'நிழலாக நின்று அமைதி நிம்மதியான வாழ்க்கைக்கு 'ஒளி' வழங்கிக் கொண்டிருக்கும் துணைவியார் நூர் (ஒளி) மின்ஷா, அவர்தம்பக்கபலத்தில் தனது இலட்சியக் கனவுகளைப்பூர்த்தி செய்த மக்கள், வைத்தியக்கலாநிதி அஞ்சானா, (திருமதி. பிரதீம்) பொறியியலாளர் அஸிம் அகமது ஆகியோரோடு ஆனந்தமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மானாவைப் பற்றி, பேராசிரியரும் தென்னிந்திய இஸ்லாமியக் கழகச் செயலாளருமான மு. சாயபு மரைக்கார், மானா மக்கீன் புயல் வேக எழுத்தாளர்' என்று 1996இல் அடையாளமிட்டதை நாமும் ஏற்று, இவர் இன்னும் பல்லாண்டு பேனாவுடன் வாழப் Syariġġâ'GuTh.
திருமானாமக்கீன் முகவரி‘தமிழ்மணி' - “தேசத்தின் கண்‘மானாமக்கீன், B-54-12 தேசிய வீடமைப்புஅடுக்கம், கொழும்பு-10,தொ. பே: 011-2332225 அலைபேசி:0778898917
ன்னும் 127 நாட்களே இருக்கின்றன.

Page 8
9. இயல் ச. ஹன்டி பேரின்பநாயகம்
தமிழ்ச் சமூகத்தின் முக்கிய
ஆளுமைகளில் ஒருவரான ஹன்டி பேரின்பநாயகம் அவர்களினால் 1962இல் எழுதி வெளியிடப்பட்ட ஆட்சி இயல் எனும் இந்நூல் மீள் பதிப்பாக தற்போது வெளிவருகின்றது. அரசியல் யாப்புக்கள், அரசியல் நிறுவனங்கள், அரசியல் எண்ணக்கருக்கள் என்பவற்றின் நடைமுறைப் பிரயோகம் அரசறிவியல் கல்வியில் முக்கியமான ஒன்றாகும். அவற்றை அக்கால கட்டத்தில் வாழ்ந்து அனுபவித்த அறிஞர்களினாலேயே திறமையாக வெளிப்படுத்த முடியும். ஹன்டி பேரின்பநாயகம் இவ்வனுபவங்களை தர்க்க ரீதியாக மிகவும் எளிமையான வெகுசன மொழிநடையில் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆட்சி இயல் பற்றிய அறிமுகத்தை முதலாம் பாகத்திலும், இலங்கை ஆட்சி இயல் முறையினை இரண்டாம் பாகத்திலும், பிரித்தானிய ஆட்சி முறையினை மூன்றாம் பாகத்திலும், பொதுநலவாய அமைப்பினை நான்காம் பாகத்திலும் தந்திருக்கின்றார். மொத்தத்தில் அரசறிவியல் மாணவர்களுக்கும் அரசியல் ஆர்வலர்களுக்கும் பயனுள்ள தகவல்களை தர்க்க ரீதியாக இந்நூல் வழங்குகின்றது.
ஆட்சி இயல்
ச. ஹன்டி பேரின்பநாயகம்
ISBN 978-955-659-254-2 விலை 600.00 Luš5ä56:it: Xvi-+- 363
O O O ஈழத்து அறிஞர் ஆளுமைகள் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
இருபதாம் நூற்றாண்டிலே புகழோடு வாழ்ந்த பாவலர் துரையப்பாபிள்ளை, 2 A வித்துவான் கணேசையர், அறிஞர் ஆளுமைகள்
பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் ஆகிய ஈழத்து அறிஞர்கள் நால்வரின் ஆளுமைகளை எடுத்துக்காட்டுவதாக இந்நூல் அமைகின்றது.
ISBN 978-955-659-249-8 விலை 37500 பக்கங்கள்: Vi+144
குமரன் புத்
B3- C3, Rannya Place coronto, o rei. 242
3 Meigai Vinayagar Street, C.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள்
பேராசிரியர் கா. சிவத்தம்பி
இத்தொகுதியிலே ہے جسے 彗 இலங்கையின்
ஆங்கிலவாட்சிக்
காலத்திலேயும் அதன் | பின்னரும் ஈழத்து இலக்கிய
உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய இடத்தைப் பெறுகின்ற பின்வரும் பதினொருவர் பற்றிய அறிமுகவாய்வு இடம்பெற்றுள்ளது: ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, ச. வயித்தியலிங்கம்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம், வண. தனிநாயகம் அடிகளார், பேராசிரியர் ம. முஹம்மது உவைஸ், பேராசிரியர் சு வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி,
ISBN 978-955-659-242-9 விலை 60000 பக்கங்கள்: 3 + 249
விபரியபுராணம் காட்டும் வாழ்வியல் கலாநிதி மனோன்மணிசண்முகதாஸ், ச. லலிசன்
சேக்கிழாரது கருத்துகளை அறியவும் உணரவும் உதவும் இத்தொகுப்பில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கந்தரர்,
TT திருநீலகண்டர் சிறுதொண்டர், கண்ணப்பர் என்னும் ஐவருடைய அன்புநெறி பற்றிக் கட்டுரையாளர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரிய புராணம் காட்டும் இளமை என்ற கட்டுரை - பெரியபுராணத்தில்
பதிவுசெய்யப்பட்டுள்ள இளமை பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. புராணங்களின் கட்டமைப்புகள் பற்றிய அறிமுகம் ஏனைய கட்டுரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. செய்யுள் நடையில் அமைந்த சேக்கிழாரின் பெரிய புராணம் என்னும் பேரிலக்கியத்தைக் கற்க இளம்தலைமுறைக்கு இத்தொகுப்பு நூல் ஒரு திறவுகோலாக அமையும்.
ISBN 978-955-659-248-1 விலை 400.00 பக்கங்கள்: xi -195
தக இல்லம்
13097608, E-mail: kurin bhiki@gma
Bennai - 600 026, le 2362 2630

Page 9
அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை
'ടൈഗ്രഭ)
( LD ல் வ | ன ம் சிவந்திருந்தது. கதிரவன் கடலினுள் துயில் கொள்ளச் சென்று கொண்டிருந்தான். கதிரவனும் களைத்து விட்டா னோ? உழைத்துக் களைத்த மக்களைச் சுமந்த வண்ணம் பம்பலப்பிட்டிப் பக்கமிருந்து வந்த ரயில்கள், வெள்ளவத்தை ஸ்ரேசனில் சிறிது ஒய்வெடுத் துப் பின் தெஹிவளைப் பக்கமாய் விரைந்தன. தொலைவில் நகர்ந்துகொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சங்கள் இலேசாய்த் தெரியவாரம்பித்திருந்தன.
நிர்வாகசபைக் கூட்டம் நடைபெறும் கிளப்பின் வாகனத் தரிப்பிடத்தில் கார்களும் பஜிரோக்களும் நிறைந்திருந்தன. தரிப்பிடத்தின் ஒரமாயிருந்த விறாந்தையில் ட்றைவர்மார் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். மாதாந்தம் இரண்டாவது புதன்கிழமையில் இவர்களும் சந்தித்துக் கொள்கிறார்கள் போல.
இவனுக்குக் களைப்பாகவிருந்தது. அலுவலகம் முடிவடைந்த பின்னர், மூன்று பஸ்களில் மாறிமாறி ஏறி, சனநெரிசலில் வியர்வை பிசுபிசுக்க நசிந்து வந்து, வெள்ளவத்தைச் சந்தியில் இறங்கி, கடற்கரையில் உள்ள இந்தக் கிளப்' வரை நடந்து வருவதென்றால். மற்றவர்களுக்கென்ன ஏசி பொருத்தப்பட்ட கார்களிலோ வான்களிலோ பஜிரோக்களிலோ அலுங்காமல் வந்து இறங்கியிருப்பார்கள். கூட்டம் முடிந்த பின் குடித்துத் தள்ளாடினால் அவர்களைத் தூக்கி வாகனங்களில் ஏற்றி வீடுகளில் இறக்கிவிட ட்றைவர்மார் காட்ஸ் விளையாடிய படி காத்திருக்கிறார்களே! தங்களின் சொந்தக் கொம்பனிகளிலிருந்தோ கறுவாத்தோட்ட, பம்பலப்பிட்டிப் பக்கமாயுள்ள சொகுசு வீடுகளிலிருந்தோ நேரத்துடன் வந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் கல்லூரியில் வெள்ளைக்காரப் பாதர் மாரிடம் கற்ற பங்சுவாலிற்றியை தற்போதும் தாம் கடைப்பிடிப்பதை எண்ணித் தங்கள் ஷேர்ட் கொலர்களை உயர்த்தி விட்டிருக்கலாம். இவனைப் போல அலுவலகம் முடிவடையும் வரை காத்திருந்து, நேரத்தைக்
தேவமுகுந்தன், நிர்மலன் யாழ்ப்பாணத்தின் கடலே கொண்டவர். இவர் இ பல்கலைக்கழகம் என்பவ நிறுவகத்தில் செயல் திட்ட திறந்த பல்கலைக்கழகத்தி குறைவான சிறுகதைக:ை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 

(Burraig 2O1Oểo
ஆகிய பெயர்களில் எழுதிவரும் தேவராசா முகுந்தன், ாரக் கிராமமான கொழும்புத் துறையை பிறப்பிடமாகக் இலங்கை திறந்த பல்கலைக்கழகம், மலேசிய புத்ரா ற்றின் பழைய மாணவனாவார். இலங்கை தேசிய கல்வி அதிகாரியாக பணியாற்றிய இவர் தற்போது இலங்கை தில் விரிவுரையாளராகக் கடமை புரிகிறார். பத்துக்கும் ா எழுதியுள்ளார்.
குறித்துத் தரும் இயந்திரத்தினுள் அட்டையைச் சொருகி ஒப்பிமிட்டு, வெளியே வரவேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை.
2
இவன் உள்ளே நுழைந்தபோது, வழமைபோலவே கூட்டம் தொடங்கியிருந்தது. மிஸ்ரர் பிரான்சிஸ் கணக்கறிக்கையை வாசித்துக் கொண்டிருந்தார். இவனுக்குத் தெரியத்தக்கதாய் மிஸ்ரர் பிரான்சிஸ்தான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் கொழும்புக் கிளையின் பொருளாளராய் தொடர்ச்சியாய் இருக்கிறார். இவரென்ன ஆயுட்காலப் பொருளாளரோ? ஆயுட்காலப் பொருளாளர் ஆயுட்காலத் தலைவர், ஆயுட்காலச் செயலாளர் என்று ஒன்றியத்தின் அனைத்து முக்கிய பதவிகளிலும் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் தானே அமர்ந்திருந்து அழகு பார்க்கிறார்கள்.
மிஸ்ரர் அன்ரனிப் பிள்ளையின் அருகில் வெறுமையாயிருந்த ஆசனத்தில் அமரப் போனவனிடம்,
"யங் மேன் யூ ஆ ஒல்வேஸ் லேட்" என்றபடி மிஸ்ரர் பாக்கியநாதர் கணக்கறிக்கையின் பிரதியையும் கையொப்பமிடும் தாளையும் நீட்டினார்.
“தாங்ஸ் அங்கிள்"
அந்த மண்டபத்தின் மேற்குப்புறம் சுவரில்லாமல் வெளியாய் இருந்தது. கூரையை அழகிய தூண்கள் தாங்கியிருந்தன. இவன் வெளியே பார்வையைச் செலுத்தினான். வெண்மணலின் தென்னைகளுக்குக் கீழே மெல்லிய வெளிச்சத்தில் வட்டமேசைகளில் சுற்றிவர இருந்த சிலர் மெதுவாய்க் கதைத்தபடி குடித்துக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த நீச்சல் தடாகங்களின் நீலநிறத் தண்ணீரில்
7

Page 10
ஆண்களும் பெண்களுமாய் நீந்திக் கொண்டிருந்தனர். கிளப்பையும் கடற்கரையையும் பிரிக்கும் கம்பிவலை வேலி நீண்டிருந்தது. வேலிக்கப்பால் கருமையாய்த் தோன்றிய கடலின் மேனியின் இடையிடையே வெண்ணிறக் கோடுகளாய் தோன்றிய அலைகள் கரையை நோக்கி வந்தன.
மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழ்கள் உமிழ்ந்த ஒளிக்கதிர்கள் கூட்டத்திலிருந்த பலரின் வழுக்கைத் தலைகளில் பட்டுத் தெறித்தன.
1 படுகதிர், தெறிகதிர், படுபுள்ளியிலுள்ள செவ்வண் இவை மூன்றும் ஒரே புள்ளியில் சந்திக்கும்.
2. படுகதிர் செவ்வணுடன் அமைக்கும் கோணமாகிய படுகோணம், தெறிகதிர் செவ்வனுடன் அமைக்கும் கோணமாகிய தெறிகோணத்திற்குச் சமனாகும்.
பத்தாம் வகுப்பில் சயன்ஸில் ஞானப்பிரகாசம்மிஸ்ஸிடம் படித்த, ஒளித்தெறிப்பு விதிகள் இவன் நினைவுக்கு வந்தன. ஒப்பமான மேற்பரப்புக்கு மட்டுந்தான் இரண்டாவது விதி பொருந்துமென்றால் இவ்ர்களின் வழுக்கைத் தலைகள் ஒப்பமானவையா? இவனுக்கு இலேசாகச் சிரிப்பு வந்தது.
வரவு - செலவு அறிக்கையைப் புரட்டிப் பார்த்தான். ஒன்றியத்தால் இரண்டு வாரங்களுக்கு முன் ஹொட்டேல் ட்ரான்ஸ் ஏசியாவில் நடத்தப்பட்ட கிறிஸ்மஸ் டினர் டான்ஸ் வைபவத்தின் வரவு - செலவுகளை, மிஸ்ரர் பிரான்சிஸ் தானொரு ஓய்வுபெற்ற பட்டயக் கணக்காளர் என்பதை எல்லோருக்கும் நினைவுபடுத்தவோ, என்னவோ நவீன கணக்கியல் முறைகளைப் பயன்படுத்தி தயாரித்திருந்தார். அறுபது பக்கங்களைக் கொண்ட நூலாய் அவ்வறிக்கை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. அறிக்கையின்படி பல ஆயிரம் ரூபாய் பலரிடமிருந்து வருமதியாயிருந்தது. அவற்றை வசூலித்தால் இலாபமாக ஆயிரத்து முன்னூறு ரூபாய் தேறும் இவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. மடையர்கள் குடியும் சாப்பாடும் கேளிக்கையும் தான் இவர்களுக்கு முக்கியமாகிப் போனவையா? இன்றுடன் இவ்வொன்றியத்திலிருந்து விலகிவிட வேண்டுமெனத் தீர்மானித்தான்.
ஆளுக்கு ஆயிரம் ரூபாய் சேர்த்துக் கொடுத்திருந்தாற் கூட அந்தப்பிள்ளைகளுக்கு ஒரு மாதத்திற்கு சாப்பாடு கொடுத்திருக்கலாமே!
3 அன்பான பழைய மாணவர்களே!
என்று ஆரம்பித்திருந்த இவனது கல்லூரி அதிபரின் ஈமெயில் யாழ்ப்பாணத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும்பிரதான பாதை மூடப்பட்டதற்காலச் சூழ்நிலையில் கல்லூரிச் சிறார்களில் பலர் போதிய உணவு உட்கொண்டு வராமையால் தினமும் வகுப்பறைகளில் மயங்கி விழுகிறார்கள். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் சமைத்த உணவு கல்லூரியால் வழங்கப்படுகிறது. இதற்காக தினமும் ஐயாயிரம் ரூபாயளவில் செலவு செய்ய நேரிடுகிறது. கல்லூரியின் நிதிநிலைமையில் இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது இயலாத விடயம். எனவே பூமிப் பந்தெங்கும் பரந்து வாழும் கல்லூரியின் பழைய மாணவர்களே, உங்கள் சகோதரர்களுக்கு
உணவளிக்க உதவிடுவீரெனத் தொடர்ந்து,
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
இறைபணியிலுள்ள வண. பிதா அன்ரன் அருமைநாயகம்

என நிறைவடைந்திருந்தது.
அன்றும் அலுவலகம் முடிவடைந்து இவன் கூட்டத்திற்கு போனபோது அது ஆரம்பமாகியிருந்தது பசியால் வாடும் கல்லூரி மாணவர்களுக்கு உதவிபுரிய நிதிதிரட்டுவதற்காய் கிறிஸ்மஸ் டினர் ஒழுங்கு செய்வது பற்றிக் கலந்துரையாடினர் நட்சத்திரக் ஹொட்டேல்களில் சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர வேறெதையும் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட இந்த பழககளுக்கு இயலாமலிருப்பது பற்றி இவனுக்கு வேதனையாயிருந்தது
டினர் டான்ஸைத் தவிர்த்து நிர்வாகக் குழுவிலிருப்பவர்களிடம் தலா இரண்டாயிரமும் பொதுக் குழுவிலிருப்பவர்களிடம் ஆயிரம் ரூபாயும் சேகரித்து அனுப்புவது சிறந்ததென இவன் சொன்னபோது பலர் ஏளனமாய்ச்சிரித்தார்கள். ஒருவர் கூட இவனுக்கு ஆதரவாய்க் கதைக்கவில்லை.
டினர் டான்ஸின் மூலம் குறைந்ததுஐந்து இலட்சமாவது சேகரிக்கலாமெனவும் ஆட்களிடம் பணம் சேர்த்தால் இருபத்தையாயிரத்திற்குக் குறைந்த தொகையைத்தான் சேகரிக்கலாமென்றும் ஆங்கிலத்தில் மிஸ்ரர் பிரான்சிஸ் சொன்னார். புதிய தலைமுறையினர் நவீன பாணியில் சிந்தித்துத் செயற்பட வேண்டுமென்று மிஸ்ரர் அலோசியஸ் இவனுக்கு இலவச ஆலோசனை கூறினார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2

Page 11
டினர் டான்ஸின் நினைவாக சிறப்பு மலரொன்று வெளியிடுவதென்றும் அதிலே விளம்பரங்களை பிரசுரிப்பதன் மூலம் பெருமளவு பணத்தைத் திரட்டலாமென்றும் மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளை சொன்னார். நிர்வாகத்திலுள்ளவர்கள் சிறப்பு மலருக்கு ஆளுக்கு இரண்டு விளம்பரங்களையாவது சேகரித்து தந்து, மூவாயிரம் ரூபாய் பெறுமதியான டினர் ரிக் கெட்டுக்களில் பத்தினை விற்க வேண்டுமெனவும் தீர்மானித்துக் கூட்டம் கலைந்தது. 米 米 米
ஹொட்டேல் ட்ரான்ஸ் ஏசியாவின் போல் றும் கல்லூரியின் வர்ணங்களைக் கொண்ட சோடனைகளாலும் பலூன்களாலும் எழிற்கோலம் பூண்டிருந்தது. மண்டபத்தின் நடுவில் பெரிய கிறிஸ்மஸ் மரம் வர்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. அதனடியில் சிறிய குடிலில் பாலகன் யேசு.
வட்டமேசைகளில் தூய வெண்ணிறத் துணிகள் விரிக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி கோர்ட் அணிந்த ஆண்களும் விலையுயர்ந்த ஆடையணிந்த பெண்களும் அமர்ந்திருந்தார்கள். மேலைத்தேய இசை காற்றில் கலந்தொலித்தது.
'சைலன்ட் நைட், ஹோலி நைட். ஒரே மாதிரியான அழகிய ஆடையணிந்த சிறுவர் சிறுமியர் கிறிஸ்மஸ் மரத்தினடியில் நின்று கரோல் கீதங்களை இசைத்தனர். இன்ரர்நஷனல் ஸ்கூல்களில் படிக்கின்ற மிஸ்ரர் பிரான்சிஸ், மிஸ்ரர் அலோசியஸ், மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளை. ஆட்களின் பேரப்பிள்ளைகள் போல, ஏழ்மைச்சூழலில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த பாலகன் யேசுவை நட்சத்திரக் ஹொட்டேலின் ஆடம்பரச் சூழலில் இக்குழந்தைகள் வரவேற்றுப்பாடுகிறார்களே, அவர் வருவாரா? அவர்களுக்கு அருகிலிருந்த குடிலை எட்டிப் பார்த்தான். பலருக்கும் அலங்காரப்பொருள்போல் ஆகிவிட்டபாலகன்யேசு, மந்தைகள் சூழ நிற்க கன்னி மரியாளின் மடியில் உறங்கியிருந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இவனின் கல்லூரியில் பசியால் மயங்கி விழும் சிறார்களின் நினைவு இவன் மனதில் வந்தது.
ஐரோப்பாவிலிருந்துமறைபணியாற்ற வந்த துற்விகளால், ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி பச்சைப் பசேலென்ற புல்வெளி நிறைந்த மைதானத்தில் கடற்கரைப் பக்கமிருந்து குபுகுபுவெனச் சோளகக் காற்று வீசும். கம்பீரமான நிமிர்ந்து நிற்கும் கட்டடங்கள். ஓங்கி வளர்ந்த மலை வேம்புகள். எட்டு வருடங்களுக்கு முன் இவன் கற்ற கல்லூரி. இவன் மட்டுமா அங்கு கற்றான்? உலகம் போற்றும் பலர் கூட அங்குதானாமே கற்றார்கள். இன்று அங்கு உணவுக்கு வழியின்றி பசியால் மயங்கி விழும் சிறார்கள். அவர்களுக்கு உணவளிக்க பழைய மாணவரிடம் உரிமையுடன் கையேந்தும் கல்லூரி அதிபர்.
மேசைகளில் மதுப்போத்தல்கள் நிறைந்திருந்தன. இளம் பெண்களைக் கொண்ட நடனக் கோஷ்டியொன்று பாண்ட் இசைக்கேற்ப நடனமாடியது. இந்த டான்ஸ் குறுப்பை தனது அலுவலகச் சிங்கள நண்பர் மூலமாய் 'சீப்பாய்ப் பிடித்ததாக மிஸ்ரர்பாக்கியநாதர், பெருமை பொங்க இவனிடம் சொன்னார். ஓ! மிஸ்ரர் பாக்கியநாதருக்கும் பல இடங்களிலும் செல்வாக்கு இருக்கிறது போல.
மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளையும் மிஸ்ரர் லோரன்ஸ்சும் தங்கள் பருத்த'வண்டிகளை தூக்கியபடி நடனக் கோஷ்டிக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

அருகிற் சென்று நடனமாடியது இவனுக்குச் சிரிப்பாயிருந்தது. பரிசாரகர்கள் வெற்றுப்போத்தல்களை எடுத்து புதிய போத்தல்களை மேசைகளில் வைத்தனர். சிலர் பெரிதாய் தங்களுக்குள் ஜோக் சொல்லிச் சிரித்தனர்.
பாலகன் யேசுவின் வருகையை மதுவருந்திக் களிக்கின்றனரோ? மூன்றாம் வகுப்பில் முதல் நன்மை பெறுவதற்கு ஆயத்தப்படுத்திய காலங்களில் கண்ணாடியணிந்தசிஸ்ரரின் பிரம்புக்குப்பயந்துபாடமாக்கிய பத்துக் கட்டளைகளை மனதில் சொல்லிப் பார்த்தான். அவற்றுடன் மருவருந்தாமல் இருப்பாயாக!' என்பதனையும் சேர்த்து திருச்சபை பதினொரு கட்டளைகளாக்கினால், இவர்கள் மதுவருந்தாமல் விடுவார்களோ?
பெரும்பாலான ஆண்கள் குடித்தபடி பழைய கதைகளைப் பேசியபடியிருக்க சிறார்களும் பெண்களும் சாப்பிடத் தொடங்கியிருந்தனர்.
பலவிதங்களில் சமைக்கப்பட்ட இறைச்சிவகைகள்,மீன் வகைகள், நூடில்ஸ், இடியாப்பம், புரியாணி, பிரைட் றைஸ். இன்னும் இவனுக்குப் பெயர் தெரியாத உணவு வகைகளால் ஃபுஃவே'நிறைந்திருந்தது.
கிறிஸ்மஸ் மரத்தினடியில் ஆண்களும் பெண்களுமாய் சோடியாய் இசைக்கேற்ப நடனமாடினர். மின்விளக்குகள் பல்வேறுவர்ண ஒளிகளை உமிழ்ந்தன.
பசியால் மயங்கி விழும் சிறார்களுக்கு உணவளிக்க குடித்து விருந்துண்டு நடனமாடிப் பணம் சேர்க்கிறார்களே! இக் கூட்டத்தில்தானுமொருவன் என்ற நினைப்பெழதன் மீதே இவனுக்குப் வெறுப்பாயிருந்தது. நூடில்ஸை கரண்டியால் எடுத்தவன் அதை வாயினுள் வைக்காமல் மீண்டும் கோப்பையினுள் இட்டான்.
4 "யங் மேன் வாட் ஆ யூ திங்கிங்’ என்று மிஸ்ரர் அன்ரனிப்பிள்ளை இவனைப் பார்த்துக் கேட்டபோது, சிந்தனைகள் கலைய அவரைப் பார்த்துப் புன்னகைத்து சபையை நோக்கினான்.
மிஸ்ரர் பிரான்சிஸ் கணக்கறிக்கையை வாசித்துமுடித்த களைப்பில் மேசைகளில் இருந்த 'மினரல் வோட்டரைக் குடித்தார். கிளப்பின் பணியாள் மேசைகளில் போத்தல்களையும் கிளாஸ்களையும் அடுக்கத்தொடங்கினான். வருமதியாகவுள்ள மிகுதிப் பணத்தை உடனடியாகச் சேகரிக்க வேண்டுமெனவும் இலாபமாய்க் கிடைக்கக்கூடிய ஆயிரத்துமுந்நூறு ரூபாவுக்கான செக்கை மறுநாளே பதிவுத் தபால்மூலம் அதிபருக்கு அனுப்பி வைப்பதாக தலைவர் அலோசியஸ் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார். கூட்டத்திலிருந்தவர்கள் கரகோஷம் செய்தனர்.
இவனுக்கு தொடர்ந்தும் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. வெறுப்பாயிருந்தது. இவர்கள் இனிக் குடித்துக் கூத்தாடி வீடுகளுக்குத் திரும்பும்வரை இவனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இளைய தலைமுறையினரிடம் ஒத்துப்போகும் தன்மை, சமூக இசைவாக்கம் என்று. பல விடயங்கள் அற்றுப் போய்விட்டதாக ஆங்கிலத்தில் புலம்புவார்கள்.
இவன் தலையை மேற்குத் திசையை நோக்கித் திருப்பி நீச்சல் தடாகங்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

Page 12
தோற்றுவாய்
திறனாய்வு என்ற சொல் தகுதியை மதிப்பிட்டறிதல் என்னும் பொருள் தருவது என்பதும் விமர்சனம் என்ற வட சொல்லுக் குரிய பொருளில் தமிழில் வழங்கி வருகின்றதென்பதும் பொதுவாக அறியப்பட்ட செய்திகளாகும். மிழிலக்கியத் துறையில் ass:8& இலக்கியத் திறனாய்வு என்ற தொடரை உருவாக்கியளித்தவர் தமிழ் மூதறிஞராகத் திகழ்ந்த பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் ஆவார். அவர் 1948ஆம் ஆண்டிலே சிலப்பதிகார ரசனை என்ற நூலுக்கு எழுதிய் அணிந்துரையிலே இலக்கியத் திறனாய்வு என்ற சொல்லாக்கத்தை உருவாக்கிக் கையாண்டவர் என்பதும் தொடர்ந்து, தமது இலக்கியக்கலை என்ற நூலிலும் இதனை அவர்பயன்படுத்தினார் என்பதும்பேராசிரியர் முனைவர்பாக்டர் க.பஞ்சாங்கம் அவர்கள் தரும் ஆய்வுத் தகவல்களாகும். (நூல் தமிழ் இலக்கியத்திறனாய்வு வரலாறு-4ஆம்பதி 2007 ப.12) அ. ச. ஞானசம்பந்தனாரின் சமகாலத்தவரான பேராசிரியர் மு. வரதராசனாரும் இலக்கியம் தொடர்பான தமது எழுத்துகளில் விமர்சனம்என்ற சொல்லுடன் திறனாய்வு என்ற சொல்லையும் பயன்படுத்தி வந்துள்ளார் என்ற தகவலையும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்கள் மேற்சுட்டிய தமது நூலில் தந்துள்ளார். இவ்வாறு வழக்கில் வந்த இச்சொல் வரலாற்றில் நிலைத்துவிட்டது. இச்சொல் குறிக்கும் பொருண்மையை மையப்படுத்திய சிந்தனைத்தொடர் இது.
இலக்கியத் திறனாய்வு என்ற செயன்முறையானது இலக்கிய ஆக்கங்களின் நிலைபேற்றை தீர்மானிப்பது ஆகும். அது புறநிலையாக நின்று நடுநிலைப்பாங்குடன் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அவ்வாறு மேற்கொள்ளப்படும்இச்செயற்பாடானதுமுதலாவதுநிலையில், குறித்த இலக்கிய ஆக்கத்தின் தகுதியை இனங்கண்டு, வரலாற்றில் அவ்வாக்கத்துக்குரிய இடத்தை தீர்மானிப்பதோடு வாசகருக்கு (அதாவது சமூகத்திற்கு) அவற்றை விளக்கியுரைக்கின்றது. இவ்வாறு விளக்கியுரைக்கும் செயற்பாட்டிலே அது, படைப்பாளியின் ஆளுமையை இனங்காட்டுவதோடு அவ்வாளுமையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் முன்வைக்கின்றது. அத்துடன் வாசகருடைய கொள்திறன் - சுவைத்திறன் - வளர்வதற்கான ஆலோசனைகளையும் வழங்குவதாக அது
O
 
 

- புதிய எல்லைகள்)
- கலாநிதி நா. சுப்பிரமணியன்
அமைகின்றது. நிறைநிலையில் மேற்கொள்ளப்படும் இலக்கியத் திறனாய்வுச் செயற்பாட்டின் பொது இலக்கணம் இதுதான். இவ்வாறு நிறைநிலையில் மேற்கொள்ளப்படும் திறனாய்வுகள் இலக்கிய வளர்ச்சியை நெறிப்படுத்தி அதன் மூலம் சமூகபண்பாட்டு அம்சங்களைச் செப்பனிட்டு முன்னெடுப்பதான பணியையும் ஆற்றுகின்றன.
திறனாய்வு என்ற சொல்லின் வரலாறு அதன் செயன்முறையின் இயல்பு மற்றும் பயன்பாட்டுநிலை என்பன தொடர்பான பொதுக் குறிப்புகள் இவை.
இவ்வாறான இலக்கியத்திறனாய்வுச்செயற்பாட்டிற்கான அணுகுமுறைகள் மற்றும் அளவுகோல்கள் என்பவற்றைநல்கும் கோட்பாட்டுத் தளங்களாக அமைபவை இலக்கியக் கொள்கைகள்' எனவும் திறனாய்வுக் கொள்கைகள்' எனவும் இருவகைப்படுவன. இலக்கியக் கொள்கைகள் எனப்படுவன இலக்கியங்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையான கருத்து நிலைகள் ஆகும். இலக்கியத்தின் இயல்பு அதன் கட்டமைப்பு முறைமைகள் மற்றும் பயன்பாட்டுநிலைகள் முதலியனவாக படைப்பாளியும் இலக்கிய சமுதாயத்தினரும் கொண்டுள்ள கருத்துநிலைகளே இலக்கியக்கொள்கைகள்எனப்படுகின்றன. இக் கொள்கைகளே இலக்கியப்படைப்பொன்றுக்கு வடிவம் நல்குகின்றன. இக்கொள்கைகளின் தளத்தில் உருவாக்கம் பெற்ற இலக்கியத்தின் தகுதியை மதிப்பிடுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் அளவுகோல்கள் என்பனவே திறனாய்வுக் கொள்கைகள்' எனப்படுவனவாகும் நிறை நிலையில் மேற்கொள்ளப்படும் ஒரு இலக்கியத் திறனாய்வுச் செயன்முறையானது மேற்படி இருவகைக் கொள்கைகளின்
இவ்வாறாக, திறனாய்வுச் செயன்முறை மற்றும் அதன் அடிப்படையானகோட்பாட்டம்சங்கள் ஆகியஇருநிலைகளையும் உள்ளடக்கியதான திட்டப்பாங்கான விரிவுபெற்ற பொருட்பரப்பானது இலக்கியத் திறனாய்வியல்' என்ற பெயருடன் கல்விசார்ந்த ஒரு ஆய்வுத்துறையாக விளங்குகின்றது.
இவ்வாறான ஆய்வுத்துறை தமிழில் உருவாகி வளர்ந்துள்ள முறைமை எத்தகையது? என்ற வினாவை முன்னிருத்தித் தமிழின் இலக்கியத் திறனாய்வியற் பரப்பு முழுவதையும் தொகுத்து நோக்கிச் કોuિ மதிப்பீட்டுக்குறிப்புக்களை முன்வைப்பதே இக்கட்டுரைத் தொடரின்நோக்கமாகும். இவ்வாறுநோக்குவதற்குக் காரணம் அமைந்த முக்கிய அம்சமொன்றைச் சுருக்கமாகவேனும் இங்கு முதலில் சுட்டுவது அவசியம் எனக்கருதுகிறேன். அந்த அம்சம் திறனாய்வுச்சூழலின் தேக்கநிலை ஆகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர்

Page 13
திறனாய்வுச் சூழலின் தேக்கநிலை
தமிழ் இலக்கியச் சூழலில் - குறிப்பாக ஈழம், தமிழகம் மற்றும் புகலிட நாடுகள் ஆகியவற்றின் தமிழிலக்கியச் சூழல்களில் இலக்கியத்திறனாய்வு என்ற செயன்முறையானது ஒரு தேக்கநிலை எய்திவருகின்றது என்பது கடந்த பல ஆண்டுகளாக பலராலும் அவ்வப்போது உணரப்பட்டுள்ளது. சிலர் இதனை வெளிப்படையாகவே எடுத்துரைத்துள்ளனர். இத்துறை சார்ந்து இயங்கிநிற்பவன் என்ற வகையில் நானும் பலகாலமாக இதனை உணர்ந்துள்ளேன்.
இங்கே சுட்டப்படும் தேக்கநிலைக்காரணிகள் இருநிலைகளில் புலப்படுகின்றன. இவற்றுள் ஒன்று, திறனாய்வு சார்ந்த செயற்பாடுகளிற்பல, கருத்தாழமற்ற நிலையிலான அபிப்பிராயங்காளகவும் புகழ்பாடுதல் அல்லது குற்றங்குறை சுட்டுதல் என்ற செயன்முறைகளாகவும் மட்டும் அமைந்துவிடுகின்றமையாகும். மற்றொரு காரணி, திறனாய்வுக் கோட்பாடுகள் தொடர்பாக நடைபெறும் கருத்தாழமிக்க விவாதங்களினின்று பெரும்பான்மையான இலக்கியவாதிகள் - படைப்பாளிகள் மற்றும் திறனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் ஆகியோருட் பலர் - அந்நியப்பட்டு நிற்கின்றமையாகும்.
இவற்றுள் தேக்கநிலையின் முதலாவது காரணியானது இலக்கிய வெளியீடுகளை மையப்படுத்தி மேடைகளில் நிகழ்வனவாகிய ஆய்வுரை மற்றும் இதழ்களில் பதிவாகும் மதிப்புரை ஆகியவற்றிற் புலப்படுவதாகும். இவ்வுரைகள் திறனாய்வுச் செயன்முறை சார்ந்தனவேயாகும். ஆனால் இவற்றை நிகழ்த்துவோருட்பலர் திறனாய்வாளருக்குரிய பொறுப்புணர்வுடன் கொள்கைகளின்தெளிவுடன் இம்முயற்சிகளை மேற்கொள்வதில்லை. இம்முயற்சிகளை மேற்கொள்வோரிற் பலருக்கும் தத்தம் பல்வேறு பணிகளுக்கு மத்தியில், இலக்கிய ஆக்கங்களை முழுமையாக வாசிக்க வாய்ப்புக் கிடைப்பதில்லை. வாசிக்கமுடிந்தாலும் அவ்வாக்கங்களின் தகுதி அல்லது தகுதியின்மைபற்றி ஆழமாகச் சிந்திக்கவும் அத்துறைசார் புலமையாளர்களுடன் கருத்துப்பரிமாற்றங்களை நிகழ்த்தித் தெளிவு பெறவும் சந்தர்ப்பங்கள் கிட்டுவதில்லை. இந்நிலையில் அபிப்பிராயம் என்ற வகையில் பாராட்டாக அல்லது கண்டனமாகச் சில விடயங்களைச் சுட்டுவதோடு தமது கடமையை அவர்கள் நிறைவுசெய்துகொள்கிறார்கள்.
இவ்வாறான சூழல் தொடர்பாக குறிப்பாக, திறனாய்வுகளை நூல் வெளியீட்டு மேடைகள் புகழ்பாடும் மேடைகளாகியுள்ளதன் அவலநிலை தொடர்பாக ஞானம் இதழொன்றில் (ஜூலை2006) ஆசிரியத் தலையங்கத்தில் இடம்பெற்றமுக்கியகூற்றுகள் சில ஆசிரியரின் மொழியிலேயே இங்கு முன்வைக்கப்படுகின்றன.
இந்த நூல்வெளியீட்டுவிழாக்களுக்குச் சென்றாலோ சலிப்புத்தான் ஏற்படுகிறது.
P நூல் விமர்சனம் என்றபெயரில் நிகழும் அளவுகட்குமீறிய புகழுரைகளும் புனைவுரைகளும் கவலையைத் தரும்படி இருக்கின்றன.”
நூல்விமர்சனத்தினையார்செய்வதுஎன்றவிவஸ்தையே இல்லாது விமர்சன உரைகள் எடுப்பார்கைப்பிள்ளையாக' மாறியிருக்கும்ஒருநிலையைக் காணக்கூடியதாகஇருக்கிறது" தகுதிவாய்ந்த தகுதியற்ற நூல்கள் வெளிவரும்போது அவற்றை நேர்மையான முறையில் இனங்காட்டுவது விமர்சகர்களின் கட்டாயக் கடமை, நேர்மையான விமர்சகர்களும் விமர்சனங்களும் தோன்றாதவரை நமது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

நாட்டின் படைப்பிலக்கியம் உயர்வடையும் என எதிர்பார்க்கமுடியாது"(பக்1-3)
பொறுப்புள்ள ஒரு இதழாசிரியரின் இக்கூற்றுகள் மேலே நான் சுட்டிய அவதானிப்புக்களின் ஒரு பகுதியை உறுதிசெய்கின்றமை வெளிப்படை
இலக்கியத் திறனாய்வுச் செயற்பாட்டைக் கொள்கைத் தெளிவுடனும் பொறுப்புணர்வுடனும் மேற்கொள்ளக் கூடிய பலர் தமிழ்ச் சூழல்களில் உளரெனினும் அவர்களிடமிருந்தும் கூட முழுமையானதிறனாய்வுகளைப்பெற்றுக்கொள்ளமுடியாதநிலை நம்மிடத்தில் உளது. காரணம் அவர்களுட்பலர்தத்தமக்கெனச் சிறப்பான ஈடுபாடுள்ள துறைகளில் ஆழமான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டிருப்பதன் காரணமாகத் தொடக்கத்திலேயே மறுத்துவிடுகின்றனர். அவ்வாறன்றிஒப்புக்கொள்பவர்கள் கூட தத்தமக்கென அணிகள் சார்ந்து (குழுமனப்பான்மையுடன்) செயற்படுபவர்கள் என்பதால் நடுநிலையான ஆக்கமான திறனாய்வுரைகளை அவர்களிடமிருந்து பெறமுடிவதில்லை என்ற கவலையைப் படைப்பாளிகள் பலர் தெரிவித்துவருகிறார்கள்.
இவற்றையெல்லாம் விட முக்கியமானதும் அடிப்படையானதுமான ஒரு அம்சம் இலக்கிய அறிமுகக் களங்களான மேடைகளும் இதழ்களும் விரிவான ஆழமான திறனாய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பளிப்பதில்லை என்பதாகும் அதிகபட்சம்20 நிமிடங்கள் என வரையறுக்கப்படும் மேடைவாய்ப்புகளில் (சில மேடைகளில் 15 நிமிடங்கள்) குறித்த ஒர் ஆக்கம்பற்றி ஆழமாகவும் முழுமையாகவும் திறனாய்வுரை நிகழ்த்தி நிறைவுசெய்வது மிகவும் சிரமமானது.
பெரும்பாலான இதழ்களில் குறித்த ஒரு ஆக்கத்துக்கான மதிப்புரைக்கு ஒன்று அல்லது இரண்டு பக்கங்களுக்கு மேல் இடம் கிடைப்பதில்லை. இதனால் மதிப்புரைகள் என்பனவாக அமையவேண்டிய பல திறனாய்வுக்குறிப்புகள் நூல் அறிமுகம் என்ற'வாமனாவதாரம் எய்திவிடுகின்றன.
மேற்சுட்டிய இரண்டாவது காரணி- அதாவது இலக்கியத் திறனாய்வுதொடர்பான கோட்பாட்டுநிலை விவாதங்களினின்று சராசரிஇலக்கியவாதிகள் அந்நியப்பட்டு நிற்கும் நிலை-பற்றித் தெரிந்து கொள்வதற்கு தமிழின் கடந்த முப்பதாண்டுகளின் இலக்கியத் திறனாய்வியல் வரலாற்றை சற்று நுனிந்து நோக்க வேண்டும். V−
ஏறத்தாழ 1980 வரையான நவீன தமிழிலக்கிய திறனாய்வியற் சூழலில் "அழகியலா? அல்லது உள்ளடக்க அம்சமா?” என்ற இருதுருவநிலைசார்ந்த வினாக்களை மையப்படுத்திய விவாத நிலையே நிலவிவந்தது. இலக்கிய ஆக்கமொன்றை அநுபவத்தின் பதிவுஎன்றநிலையிலே அணுக வேண்டும் என்பது அழகியலாளரின் பொதுவான நிலைப்ப்ாடாகும். அவ்வாக்கம், சமூகத்தின் பிரச்சனை மையங்களை இனங்காட்டுவதாக அமைந்துள்ளதா என்ற வகையில் நோக்குவது உள்ளடக்க வாதிகளின் அணுகுமுறையாகும்.
முறையே, தூய அழகியல்வாதிகள் மற்றும் மார்க்ஸிய சிந்தனையாளர்களிடையே நிலவிவந்த விவாத நிலை இது. இந்த விவாத நிலையைத் திசைதிருப்பி சமூகத்தின் ஒட்டுமொத்த ஆளுமை என்றவகையில் மொழியியல் மற்றும் உளவியல் முதலான சிந்தனைத் தளங்களை நோக்கி இட்டுச்செல்வதான முயற்சிகள் 1980களின் தொடக்கமுதல் உருவாயின. இக்காலப்பகுதியிலிருந்து தமிழில் அறிமுகமாகிவந்த அமைப்பியல் (ஸ்ட்ரக்ஷரலிஸம்), பின்அமைப்பியல் (போஸ்ட் ஸ்ட்ரக்ஷரலிஸம்), மற்றும் பின்
11

Page 14
நவீனத்துவம் (போஸ்ட் மொடேணிஸம்) ஆகிய புதியவகைகளான இலக்கியதிறனாய்வியல்சார் சிந்தனைகளும் அவற்றுடன் தொடர்புடைய பார்வைகள், அணுகுமுறைகள் எனத்தக்க வகையில் தமிழ்ச் சூழலில் அடிபதித்த பல்வேறு இஸங்களும் ஏற்படுத்திய திசைதிருப்பம் இது.
இவ்வாறான புதுவரவுகளை மையப்படுத்திதமிழ்ச்சூழலில் குறிப்பாகத்தமிழக இலக்கியச்சூழலில் கனதியான விவாதங்கள் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. "மேற்படி புது வரவுகளின் தகுதிப்பாடு யாது? தமிழ் இலக்கியச் சூழலுக்கு இவை பொருந்தக் கூடியவையா? அவசியமானவை தாமா? முதலான வினாக்கள் இவ்விவாதங்களின் மையப் பொருண்மைகளாக அமைந்தன. இத்தகு விவாதங்களை குறிப்பாக மார்க்ஸியவாதிகளே அதிகம் நிகழ்த்தியுள்ளனர்.
கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் தமிழகச் சூழலில் நடைபெற்றுவந்துள்ள இவ்வகை விவாதங்கள் தமிழ் இலக்கியத் திறனாய்வியலுக்குப் புதிய வளம் சேர்த்துள்ளன என்பதை முதலில் நாம் இங்கு கருத்திற் கொள்ளவேண்டியது அவசியம். ஆனால் அதேவேளை மேற்படி புதிய சிந்தனைகள் மற்றும் அவைதொடர்பாக நிகழ்ந்துள்ள விவாதங்கள் என்பவற்றின் பலாபலன்கள் தமிழ்ச் சூழலின் பெரும் பான்மை இலக்கியவாதிகளிடம் உரியவாறு சென்று சேரவில்லை என்பது இங்கு நமது கவனத்துக்குரியது. இன்னும் தெளிவாகக்கூறுவதானால் நமது சமகால படைப்பாளிகள் மற்றும் திறனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் ஆகியோருட் பலர் மேற்சுட்டிய சிந்தனைகள் சார் விவாதங்களிலிருந்து அந்நியப்பட்டு நின்றனர்- நிற்கின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிவதாகும். இவர்களுள் ஒரு சாரார் இவற்றைப்பற்றிக் கவனம் செலுத்தாமலே அலட்சியப்படுத்தி நிற்பவர்கள், இன்னொருசாரார் வெளிப்படையாகவே இவற்றைக் கண்டித்து ஒதுக்குபவர்கள்.
இந்நிலைமைக்குப் பல காரணங்களைக் கூறலாம். இவற்றுள் முக்கியமானதும் அடிப்படையானதுமான காரணம், மேற்சுட்டியபல்வேறுபுதியசிந்தனைகளுக்கும் அவைதொடர்பில் நிகழ்ந்துள்ள விவாதங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த - இப்பொழுதுவரை கூட பயன்படுத்தப்பட்டுவருகின்ற - மொழி நடை ஆகும். உயர்நிலை ஆய்வுகளில் பயன்படுத்துவதான கட்டிறுக்கமான மொழிநடையிலேயே மேற்படி புதுவரவான அமைப்பியல்முதலிய'இஸங்கள் பலவும்தமிழில் அறிமுகமாயின. மொழியியல், மற்றும் மெய்யியல் படித்தவர்களும் மட்டுமே ஓரளவாவது புரியக்கூடியதான கலைச்சொற்கள் இவற்றில் மிகுதியாகப் பயின்றன என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும். இதனால், இவற்றைவாசித்தறியமுயன்றபலருக்கு தொடக்கத்திலேயே இவை சலிப்பை ஏற்படுத்தின. இவை தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டோரும் கிட்டத்தட்ட இதேவகை மொழிநடையையே பயன்படுத்தி வந்துள்ளனர் - படுத்துகின்றனர். மேற்சுட்டிய அந்நியப்பாட்டிற்கான முக்கிய அடிப்படை இது. மேற்குறித்த வகையான சிந்தனைகளின் அருட்டுணர்வில் உருப்பெற்றுள்ள சில படைப்புகள் கூட - குறிப்பாக தமிழகத்தின் முக்கிய இலக்கிவாதிகளான தமிழவன் மற்றும் கோணங்கி முதலியவர்களின் சில படைப்பாக்கங்கள் சராசரி வாசகருக்குப் புரியாதநிலையில் - அந்நியப்பட்டு நிற்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. (மேற்சுட்டிய தமிழவன் அவர்களே அமைப்பியலைத் தமிழ்ச் சூழலுக்கு 1980களில் அறிமுகம் செய்தவராவார்)
12

சமகாலத் தமிழிலக்கியத் திறனாய்வுச் சூழலின் தேக்கநிலை தொடர்பான சில விளக்கங்கள் மேலே முன்வைக்கப்பட்டன. இவ்வாறான தேக்கநிலை உடைத்தெறியப்பட வேண்டிய ஒன்று என்பதிலும் சமகாலத் திறனாய்வியலானது செயன் முறையிலும் கோட்பாட்டுத் தளங்களிலும் புதுவேகத்துடன் இயங்கவேண்டும் என்பதிலும் தமிழ் இலக்கிவாதிகள் மத்தியில் கருத்துவேறுபாடுகளுக்கு இடமிருக்கும் என நான் கருதவில்லை.
தமிழின் இலக்கியத் திறனாய்வானது விரிவான தளங்களில் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கருதுவதற்கு அடிப்படையான வேறு இரு முக்கிய சூழல்சார் காரணிகளையும் இங்கு கவனத்துக்கு முன்வைக்க விரும்புகிறேன். அவற்றுள் ஒன்று, கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதுகள் மற்றும் பரிசுகள் என்பன கட்டமைத்துள்ள மாயத்தோற்றமாகும். இன்னொன்று, 'கணிப்பொறிச்சாதனத்தின் பயன்பாட்டுநிலைகளில் ஒன்றான பதிவிறக்க(டெளன்லோடிங்) வாய்ப்பின் எதிர்விளைவு ஆகும்.
விருதுத் தேர்வுகள் கட்டியெழுப்பி வந்துள்ள - கட்டியெழுப்பி வருகின்ற மாயத் தோற்றம்
இலக்கிய ஆக்கங்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுகள் என்பவை நடுநிலைப் பண்புடனான திறாய்வின் அடிப்படையில் ஒப்பியல் பார்வையில் பொறுப்புணர்வுடன் தீர்மானிக்கப்பட வேண்டியவை. ஆனால் நடைமுறையிலே இவ்வகைத் தேர்வுகள் பலவும் அப்படி அமைவதில்லை. அதிகார பீடங்களின் தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளுக்கும்குழுமனப்பான்மைகளுக்கும்ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு, இந்திய சாஹித்ய விருது முதலியனவாக அரசு சார்பாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்துள்ள விருதுகளிற் பல அவ்வவ்வாண்டுகளின் தகுதிவாய்ந்த ஆக்கங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதும் அதிகாரசார்பான சிலரின் சாதாரண ஆக்கங்களுக்கேகிடைத்துவந்துள்ளனஎன்பதும்தமிழ்இலக்கிய உலகம் அறிந்துள்ள பொதுவான செய்திகளாகும். அரசுசார்பற்ற நிறுவனங்களின் பரிசுத்தேர்வுகள் பலவற்றில் அதிகாரச் சார்பு என்பதற்குப் பதிலாக குழுமனப்பான்மை ஆதிக்கம் செலுத்திவருகின்றமை வெளிப்படை இவ்வாறான நிலைகளால் தரமான ஆக்கங்கள் ஒதுக்கப்படுவதும் தகுதியற்றவை முன்னிலைப்படுத்தப் படுவதுமான நிகழ்வுகள் வரலாறுகள் ஆகிவிட்டன. இவ்வாறு தகுதியற்றவை விருது பெறும் நிலை அண்மைக்காலங்களிலே மிக அதிகரித்து வருகிறது. குறித்த விருதுகளைப்பெறுவதற்காகஒவ்வோராண்டும்இலக்கியவாதிகள் மேற்கொண்டுவந்துள்ளதரமற்ற அணுகுமுறைகள் பற்றிஞானம் உட்பட சமகாலத் தமிழிலக்கிய இதழ்கள் பல அவ்வப்போது வெளிச்சம்போட்டுக்காட்டிவந்துள்ளன.
தரமற்ற ஆக்கங்கள் விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப் படுதல் என்பதுஒருமாயத்தோற்றமாகும். திறனாய்வியல் என்ற தகுதிகாண் செயன்முறைக்குச் சவாலாக பொய்மையான தோற்றமொன்றை இவ்வகை விருதுகள் கட்டியெழுப்பி வந்துள்ளன என்பது வெளிப்படை திறனாய்வுத்துறையில் ஈடுபாடுகொண்டோர் புது வேகத்துடன் செயற்பட்டு இந்த மாயகற்பிதங்களை முறியடிக்க முன்வரவேண்டும். இதற்கு முதற்படியாக அவர்கள் சமகால இலக்கிய வெளியீடுகள் தொடர்பான முறையான திட்டப்பாங்கான திறனாய்வுக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 15
கருத்துக்களைத் துணிவுடன் முன்வைத்துத் தகுதியானவற்றை இனங்காட்ட வேண்டும். இவ்வாறான விழிப்புணர்வும் செயல்வேகமும் இன்றையகாலத்தின் கட்டாயமாகிறது.
பதிவிறக்கப் (டெளன்லோடிங்) வாய்ப்பின் எதிர்விளைவு
கணிப்பொறியின் பதிவிறக்கத் தொழில்நுட்பமானது ஓர் அறிவுச்சாளரம் என்ற வகையில் மிகுபயன் விளைவித்து வருவது வெளிப்படை. தமிழ்க் கல்விச் சமூகம் இதனை நன்குணர்ந்துள்ளது என்பதால் இதுபற்றி விரித்துப் பேச வேண்டுவதில்லை. இங்கே எதிர்விளைவு எனச் சுட்டப்படும் அம்சம்பிறமொழிகளிலிருந்துபதிவிறக்கம்செய்யப்பட்டுசிற்சில மாற்றங்களுடன் மூலம் சுட்டாமலே புதுவகைப்படைப்புகளைத் தருவதற்குள்ள வாய்ப்பாகும். இவ்வகை முயற்சிகள் ஒருவகையில் இலக்கியத் திருட்டு என்ற வகை சார்ந்தது. கணிப்பொறிசார் பதிவிறக்க முறைமை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே பிறமொழிகளிலிருந்து திருடும் முயற்சிகள் தொடங்கி விட்டன. ஆனால் இப்பொழுது அவ்வகை முயற்சிகள்,அசுரகதியில் நிகழத் தொடங்கிவிட்டன. தமிழகச் சூழலில் அண்மைக்காலங்களில் பெருந்தொகையான ஆக்கங்களைத் தந்துவரும் படைப்பாளிகள் சிலரை டெளன்லோடிங்எழுத்தாளர்கள்'எனஎள்ளிநகையாடும்போக்கு அண்மையில் உருவாகியுள்ளமை இங்கு நமது கவனத்துக்குரியது.
மேற்சுட்டியவாறான பதிவிறக்க எழுத்தாக்கங்கள் அதிகரிக்கும் போது தமிழ் இலக்கியச் சூழலானது அவற்றை உரியவாறு கண்காணிக்கவும் வரலாற்றில் அவற்றிற்குரிய இடத்தைத்தீர்மானிக்கவும்தன்னைத்தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தமிழின் இலக்கியத் திறனாய்வுச் செயன்முறையானது விரிவான தளங்களில் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பதற்கும் அதற்கேற்ற வகையில் அதன் பார்வைகளும் கோட்பாட்டம்சங்களும் தொடர்பான சிந்தனைகள் விரிவும் வளர்ச்சியும் எய்தவேண்டும் என்பதற்குமான அடிப்படைகள் சில இதுவரை மேலே நோக்கப்பட்டன. இவற்றுக்கான தூண்டுதலை இலக்கியவாதிகளுக்கு ஏற்படுத்தும் ஒரு ஆர்வமுயற்சியாகவே இச்சிந்தனைத்தொடர் இங்குதொடங்கப்படுகின்றது.
பண்டைய திறனாய்வு மரபுகளையும் உள்ளடக்கிய தொகுநிலைப் பார்வை
இவ்வாறான முயற்சியை மேற்கொள்ளும் போது எங்கிருந்து தொடங்குவது என்ற வினா எழுந்தபோது, சமகாலத்தை மட்டும் மையப்படுத்தாமல் பண்டைய தமிழ் இலக்கியத்திறனாய்வுமரபுகளையும்உள்ளடக்கியபார்வையாக அமைந்தால் இச்சிந்தனையோட்டத்தில் ஒருமுழுமை ஏற்படும் என்ற எண்ணம் தோன்றியது. இவ்வாறு கருதியதற்கான முக்கிய காரணி நவீன திறனாய்வியல் சூழலில் இயங்க வேண்டியவர்கள் தமிழரின் திறனாய்வு மரபுகள் பற்றிய தெளிவான பார்வைகொண்டவர்களாகவும் திகழ வேண்டும் என்பதேயாகும்.
இரண்பாயிரம் ஆண்டுகளுக்குமேற்பட்டகாலவரலாற்றுத் தொடர்ச்சி கொண்டதாகத்திகழும் தமிழ் இலக்கிய மரபானது தனக்கெனச் சிறப்பான திறனாய்வுப் பாரம்பரியங்களையும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

கொண்டிருந்தது. ஆனால் இப்பாரம்பரியங்கள் சார்ந்த கருத்துநிலைகள் மற்றும் செயன்முறைகள் என்பன 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை திறனாய்வியல் என்ற ஒரு தனி ஆய்வுமுறையாக உருவாக்கம்பெற்றிருக்கவில்லை என்பதுநாம் இங்குகருத்துட்கொள்ளவேண்டியமுக்கிய வரலாற்றம்சமாகும். பண்டைத் தமிழ் மரபிலே இலக்கியத் திறனாய்வு தொடர்பாக, நிலவிவந்த கருத்து நிலைகள் - குறிப்பாக இலக்கியக்கொள்கைசார்கருத்தாக்கங்கள்-இலக்கணமரபின் ஒருகூறான பொருளிலக்கணம்' என்ற வகைமைக்குள் அமைந்திருந்தன. மொழியின் எழுத்திலக்கணம் மற்றும் சொல்லிணக்கணம்' என்பன போல இலக்கியத்தின் இலக்கணம்' என்றவகையில் பொருளிலக்கண முறைமை பண்டைய தமிழில் உருவாகியிருந்தது. இதற்கான தொன்மையான சான்றாக எமக்குக் கிடைப்பது கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதான தொல்காப்பியம் என்ற இலக்கண நூலின்பொருளதிகாரம் என்றபகுதியாகும். இது இலக்கியத்தின் கட்டமைப்புக் கூறுகளான உள்ளடக்கம், உணர்த்துமுறை, உருவம் மற்றும் பயன்பாட்டுநிலை முதலியன தொடர்பாக அக்காலப்பகுதியில் நிலவிவந்த கருத்துக்களின் பதிவாகும். மேற்படி தொல்காப்பியப் பொருளதிகாரமானது இன்றைய நோக்கிலேபண்டைத்தமிழரின் கவிதையியல்"எனக் கணிக்கப்படுவதாகும்.
தொல்காப்பியத்துக்குப்பிற்பட்ட காலப்பகுதியில் மேற்படி பொருளிலக்கணம் என்ற வகைமையானது பல கூறுகளாகபாட்டியல், யாப்பியல் மற்றும் அணியியல் முதலிய பெயர்களில் தனித்தனி இலக்கண முறைமைகளாக - விரிவுபெற்று வளர்ந்துவந்தன என்பதே வரலாறு
பண்டைத்தமிழ்மரபிலே ஒரு ஆக்கத்தின் தகுதிகாண்பது தொடர்பாக நிலவிவந்துள்ள செயன்முறைகள் தொடர்பான பலசெய்திகளும் சான்றுகளும் உள.
இறையனார் களவியல் என்ற இலக்கண நூலுக்கு எழுதப்பட்ட உரைகளை உருத்திரசன்மன் என்ற ஊமைப்பிள்ளை தகுதிகண்ட முறைமை, கம்பராமாயணம், கந்தபுராணம் முதலிய பலநூல்கள் அரங்கேறும்நிலைகளில்எதிர்கொண்டபிரச்சினைகள் முதலியனவாகவழங்கிவரும்கதைகள்,பாயிரம்மற்றும்சாற் முதலிய பெயர்களிலான சான்றுரை முறைமைகள், இலக்கிய - இலக்கண ஆக்கங்களின் பொருண்மைகளை விரித்துரைக்கும் வகையில் உருவான உரைகள் மற்றும் திருக்குறளின் விமர்ச்ன இரத்தின மாலை' என்ற கணிப்பைப் பெற்றுள்ள திருவள்ளுவமாலை என்ற ஆக்கம் முதலியன இவ்வகைகளுக்கான முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். (இத்தகையவைதொடர்பானவிரிவானசெய்திகள்மற்றும் ஆய்வுக் குறிப்புகள் பின்னர் முன்வைக்கப்படவுள்ளன)
ஏறத்தாழ 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையான வரலாற்றுப்போக்குத்தரும்காட்சிஇதுதான். அக்காலப்பகுதியை அடுத்தே இலக்கியத் திறனாய்வியல் ஒரு தனி ஆய்வுத்துறையாகத் தமிழில் உருவாகத் தொடங்குகிறது. மேற்சுட்டிய பண்டைய சான்றுகளூடாகப் புலப்படும் தமிழரின் தொன்மையான திறனாய்வியல் அம்சங்களையும் கடந்த ஒரு நூற்றாண்டுக்காலப்பகுதியில் ஒரு ஆய்வியல் என்றவகையில் உருவாகி வளர்ந்த திறனாய்வியல் அம்சங்களையும் தொகுத்துநோக்கி, அவற்றினூடாகப் புலப்படும் முக்கிய கூறுகளை விவாதிப்பதான அணுகுமுறையில் இந்த சிந்தனைத் தொடர் வளர்த்துச் செல்லப்படவுள்ளது.
(தொடரும்)
13

Page 16
குஞ்சுகளைக் கொன்றழித்த
கைலாயம் பிறந்தனவே. 0ோகின்ற வழியில், மெல்லாத
 

慧
赣
அமர்ந்திருந்து பேசுகிறான்
படைப்புகள் அனைத்துலே 0ரறனின் சொத்துக்கள். உயிர்க்கொலைகள் செய்பவரை உடனழித்து கொன்றிடுவோம்!" என்றரக்கன் சொன்னவுடன், மதுவெறில் இருந்த மற்றவர்கள் எல்லோரும், பக்கத்திலிருந்த 0ாவைகளைத் தேறனரே! தனிoனித சுதந்திரத்தை தரணியிலே காப்பாற்ற, ஐயனின் ச0ைக்கு
பறந்து சென்ற பறவைகளை, 0ரவம் வல்லுறுக் கூட்டங்கள் வட்டமிட்டுத் துரத்துவதை எழன் 0ார்த்து சீக்கின்றான். ஏகன் ஏ0ள் 50দুঞ্জ) { நீற்டையில் மூழ்கிக் கொண்டிருக்கிறான். ஆலயங்களில், அதயார்கள், ஒதாடர்ந்து ඌද්odègg! GoacG5 கொண்றருக்கின்றனர். ஐயனின் நேத்திரங்கள் திறக்குமா?

Page 17
одаштај சிறுகதை
24ᏛᎧ% 笼 al
அபூ ஃபஹத் கொஞ்சம் தடுமாற்றத்துடன் கூடி மெதுவான நடையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அந்த ஒடுக்கமான நடைப்பகுதியில் மஞ்சள் நிற மின் விளக்கின் அடர்த்தியற்ற ஒளி சிதறிக்கிடந்தது.
அந்தப்பாதையில் நிறைந்திருந்தகனத்த அமைதியினா அவனுக்கு அசெளகரியம் போல் இருந்தது. எனவே அவன் உரத்த குரலில் பாட ஆரம்பித்தான்.
"நான் ஓர் ஏழை. எதுவுமற்றவன்.” அவனது கர்ண கடூரக்குரல் மிகவும் இனிமையானது என்றுதனக்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.அதே உரத் குரலில் “நான் ஒரு பாடகன்” என்று உரத்துச் சொல்லி கொண்டான். மக்கள் வாய்திறந்தபடி மெய்மறந்திருப்பது போலவும் அவனை நோக்கிக் கையசைப்பது போலவு கரகோஷம் செய்வதுபோலவும் கற்பனை செய்துகொண்டான் எனவே சத்தமிட்டுச் சிரித்தான்.தனது சிகப்புநிறசால்வைை நுனியில் பிடித்துப்பின்புறமாக இழுத்துவிட்டுக் கொண்டுபா ஆரம்பித்தான். “நான் ஓர் ஏழை. எதுவுமற்றவன்.”
அவன் அணிந்திருந்த சாம்பல் நிறக் காற்சட்டைை மஞ்சள் நிறத்திலான பழைய இடுப்புப் பட்டி கொண்( கட்டியிருந்தான். அந்தப்பாதையில் அவன் நுழைந்தபோதுமின் விளக்கின் ஒளியை விட இருட்டு அதீதமாக இருந்தது சுவரோரத்தில் ஒரு கறுப்புநிற ஆட்டைக் கண்டதும் அவனுக் ஆச்சரியம் உண்டானது. திகைப்பில் அவன் தன்னையறியாம வாயைத் திறந்தபடி பார்த்தான்.
நான் குடிக்கவில்லை. என்னால் சரியாகப் பார்க் முடிகிறது. அட மனிதா. எதைப் பார்க்கிறாய். இது ஒர் ஆடு இதன் சொந்தக்காரன் எங்கே?' என்று தனக்குத் தா6ே கேட்டுக் கொண்டான். அந்த ஒடுக்க வழிப்பா.ை வெறிச்சோடிப்போயிருந்தது. அந்த ஆட்டைப் பார்த்து கொண்டே நான் குடித்தா இருக்கிறேன்' என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான்.
கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு தனக்கு தானே சொல்லிக் கொண்டான். “இறைவன் கருணை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 

1939 su fluLITGSlair LLD su 56slau பிறந்த ஸகரிய்பா தாமிர் அரபுச் சிறுகதையின் ஜாம்பவான். சிறுவர் இலக்கியத்தில் செல்வாக்குச் செலுத்தியவர். சுயாதீனப் பத்திரிகையாளரும் கூட. சவூதி அரேபியா மற்றும் சிரியத் தொலைக் காட்சிகளிலும் கடமை புரிந்தவர். ஏழுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
யுள்ளவன். நான் அபூ ஃபஹத் என்பது எனக்குத் தெரியும். அபூ ஃபஹத் ஒரு வாரமாக இறைச்சி சாப்பிடவில்லை”
அபூ ஃபஹத் ஆட்டின் மீது பரவி அதை முன்புறமாக இழுத்தான். ஆனால் அதுநகர மறுத்தது. அதன்கொம்புகளைப் பற்றி மீண்டும் இழுத்தான். ஆனால் சுவருடன் உறைந்து போனது போல் ஆடு அசைய மறுத்தது. அவன் ஆட்டை முறைத்துப்பார்த்தான். பின்பு சொன்னான்:-"நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். உன்னுடைய தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்கிறேன்.”
அபூஃபஹத் ஆட்டை அலாக்காகத் தூக்கித் தோளில் வைத்தான். அதன் கால்களிரண்டையும் தனது கைகளால் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பாடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். சில கணங்களில் அவன் பாட்டை நிறுத்தினான். அந்த ஆட்டின் நீளமும் பாரமும் திடீரென அதிகரித்து விட்டது போல அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணத்தில்"என்னை விட்டு விடு” என்று ஒரு குரல் அவனது காதில் விழுந்தது. நெற்றியைச் சுருக்கியபடி, 'மது அருந்துவது இறைவனின் சாபக்கேட்டுக்குரியது” என்று சொன்னான்.
இன்னும் சில கணங்களில் அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது. "என்னை விட்டுவிடு. நான் ஓர் ஆடு அல்ல'
ஆட்டைப் பிடித்தபடி அவனது நடையை நிறுத்தினான். அந்தக் குரல் மற்றொரு முறை ஒலித்தது. "நான் ஜின் அரசனின் மகன். என்னை விட்டு விட்டால் நீ கேட்பதை யெல்லாம் தருவேன்.”
அபூ ஃபஹத் இதை விரும்பவில்லை. பதற்றத்துடன் வேகமாக நடக்கத் தொடங்கினான். அந்தக் குரல், “ஏழு சாடிகள் நிறையத் தங்கம் தருவேன்’ என்றது.தங்கக் காசுகள் கீழே விழுந்து எழும் சப்பதத்தையும் வீடு முழுக்கவும் நிலத்தில் தங்கக் காசுகள் பரவிக்கிடப்பதையும் அபூ ஃபஹத் கற்பனை பண்ணினான். ஆடு தப்பிச் சென்றது. கற்பனையிலிருந்து மீண்டு மகிழ்ச்சி நிறைந்த குரலில் “எனக்குக் கொடு” சத்தமிட்டான்.

Page 18
ஆயினும் தான் மட்டும் தனியனாக அந்த ஒடுக்க வழிப்பாதையில் நின்று கொண்டிருப்பது சில நிமிடங்களில் அவனுக்கு உறைத்தது. ஆடு அவனது கண்ணில் படவில்லை. சில கணங்கள் அதே இடத்தில் அசையாமல் நின்று விட்டு வேகமாக நடக்கத் தொடங்கினான்.
வீட்டை அடைந்ததும் தனது மனைவி உம் ஃபஹதை நித்திரையிலிருந்து எழுப்பி நடந்ததைச் சொன்னான். கேட்டுக் கொண்டிருந்து விட்டு உம் ஃபஹத் சொன்னாள் - “நீ குடித்திருக்கிறாய்"
"அப்படிக் குடிக்கவில்லை. மூன்று கிளாஸ் மட்டும்.” “ஒரு கிளாஸ் குடித்தாலே உனக்குப்போதையாகிவிடும்” தான் அவமானப்படுத்தப்படுவதாக அபூ ஃபஹத் நினைத்தான். சவால் விடும் குரலில் சொன்னான் - "ஒரு பரல் மதுவை அருந்தினாலும் எனக்குப்போதை வராது.”
உம் ஃபஹத் ஒரு வார்த்தை பதில் பேசவில்லை. பூத கணங்களில் விளையாட்டுக்களைப் பற்றிச் சிறு வயதில் கேட்டிருந்த கதைகளைப் பற்றிய கற்பனையில் மூழ்கினாள்.
அபூஃபஹத் உடையை மாற்றிக்கொண்டுமின் விளக்கை அணைத்து விட்டுக் கட்டிலில் மனைவியின் அருகில் சாய்ந்தான். திடீரென 'தனது தந்தையுடைய தங்கத்தைத் தருமளவும் நீ அதைத் தப்பிச் செல்ல விட்டிருக்கக் கூடாது" என்று சொன்ன உம் ஃபஹத் சற்றுத் தயக்கத்துடன் “நாளைக்கும் போய் தப்பிச் செல்ல விடாமல் பிடித்துக் கொள்” என்றாள்.
அபூஃபஹத் கொட்டாவி விட்டான். கவலையுடன் "எப்படி அதைக் கண்டுபிடிப்பது?" என்றாள்.
"அதே வழியில் உன்னால் காணமுடியும். பிடித்து வீட்டுக்குக் கொண்டு வா. தங்கம் தருமளவும் நாம் அதைப் போக விடாமல் வைத்துக் கொள்ளுவோம்”
"என்னால் அதைக் காணமுடியாது” “ஜின்கள் பூமியின் கீழுள்ள ஆறுகளில் வசிக்கின்றன. இரவானதும் பூமியின் மேற்பரப்புக்கு வந்து விடியும் வரை
16
 

விளையாடித் திரிகின்றன. தமக்குப் பிடித்தமான இடமாக இருந்தால் மீண்டும் வருகின்றன. நாளை அந்த ஒடுக்க வழிப்பாதையில் ஆட்டை உன்னால் பார்க்க முடியும்."
அபூ ஃபஹத் தனது கையை மனைவியின் மார்பில் நடுவே வைத்தான். அதை அசைக்காமல் சொன்னான்:-"நாம் பணக்காரர்களாகிவிடுவோம். ஒரு பெரிய வீடு வாங்குவோம்"
"தோட்டத்துடன் சேர்ந்த வீடு' "நாம் ஒரு வானொலிவாங்குவோம்." "ஒரு பெரிய வானொலிப்பெட்டி" "ஆடை கழுவும் இயந்திரமொன்றும்." "உடைந்த கோதுமையைச் சாப்பிடுவதைத் தவிர்ப்போம்" "வெள்ளைப் பாண் சாப்பிடுவோம்” உம் ஃபஹத் குழந்தை போல் சிரித்தான். பக்கத்தில் படுத்திருந்த அபூஃஹத்,"உனக்கு ஒரு அழகான சிவப்பு ஆடை வாங்கித் தருவேன்" என்றான்.
செல்லக் கோபத்துடன் உம் ஃபஹத் கிசுகிசுக்கும் குரலில் “ஒன்றே ஒன்றுதானா?” என்று கேட்டான்.
"உனக்கு நூறு ஆடைகளை வாங்கித் தருகிறேன்” எனறான,
சில கணங்கள் அமைதியாக இருந்த அபூ ஃபஹத் அவளிடம் கேட்டான்:-"எப்போது குழந்தை பெறுவாய்"
"மூன்று மாதங்களுக்குப்பிறகு, "அது ஒர் ஆண்குழந்தையாகத்தான் இருக்கும்" "அவன் நம்மைப் போன்று கஷ்டப்படக் கூடாது." "அவன் பசியில் இருக்கக்கூடாது." "அவனுக்கு சுத்தமான அழகான ஆடைகள் இருக்க வேண்டும்”
"அவன் எந்த வேலையும் செய்யக் கூடாது.” "அவன் நல்ல பாடசாலையில் கற்க வேண்டும்." "வீட்டுக்காரனால் வாடகை கேட்கும் நிலையில் அவன் இருக்கக்கூடாது."
"அவன் வளர்ந்து ஒரு வைத்தியனாக வேண்டும்."
"அவன் ஒரு சட்டத் தரணியாக வேண்டும் என்பது எனது விருப்பம்"
வைத்தியராகவிரும்புகிறாயா அல்லது சட்டத்தரணியாக விரும்புகிறாயா என்று அவனைக் கேட்டு முடிவு செய்வோம்’
ஒரு பற்றுதலோடு அவனைப் பிடித்துக் குறும்புத்தனத்துடன் கேட்டாள்:- "இரண்டாவது கல்யாணம் செய்யமாட்டாயா? அவளுடைய காதை நிமிண்டி விட்டு,"ஏன் செய்யவேண்டும்? இந்தப் பூவுலகிலேயே அதி சிறந்த பெண் நீதான்' என்றான். -
இருவருக்கும் நடுவே மகிழ்ச்சி ததும்பும் ஆழமான அமைதி நிலவியது. அபூ ஃபஹத் சட்டெனத் தன்னை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 19
மூடியிருந்த போர்வையை உதறினான். அவன் எழுந்துநின்ற போது உம் ஃபஹத் கேட்டாள்."உனக்கு என்ன வேண்டும்?"
"நான் இப்போதுபோகிறேன்." “எங்குபோக? "ஆட்டைப்பிடிக்க” "நாளை வரை பொறுத்திரு. இப்போது உறங்கு” ஒரு வித அவசரத்துடன் மின் விளக்கை ள்ரிய விட்டுத் தனது உடையை அணிய ஆரம்பித்தான்.
"இன்றைக்கு அதைக் காணமுடியாமல் போகலாம்" "அதை நான் தேடிப்பிடிப்பேன்." அவனது மஞ்சள் நிற இடுப்புப் பட்டியை அணிய உம் ஃபஹத் உதவியவேளை அவளிடம் சொன்னான்-அதை ஒரு போதும் விடமாட்டேன்."
தான் ஒரு துணிச்சலான கருமத்தை நிறைவேற்றப் போவதாக அவன் எண்ணிக்கொண்டான். தனது குத்துவாள் அவனுக்குத் தேவை. வளைந்த முனையுள்ள மெலிதான ஆனால் மிகக் கூர்மையான குத்துவாள் அது.
வீட்டை விட்டு வெளியிறங்கி மிக வேகமாக ஒடுங்கிய வழிப்பாதைக்கு வந்து சேர்ந்தான். ஆனால் அங்கு ஆட்டைக் காணவில்லை. அவனுக்கு அதுபெரும் ஏமாற்றமாக இருந்தது. அந்த வழிப்பாதை வெறிச்சோடியிருந்தது. ஒடுங்கிய வழிப்பாதையின் இருமருங்கிலும் இருக்கும் வீடுகளின் யன்னல்களூடாக வெளிச்சம் எதுவும் கசியவில்லை. விளக்குகள் எல்லாமே அணைக்கப்பட்டிருந்தன.
அபூ ஃபஹத் தனது பின்புறமாகச் சுவரில் சாய்ந்து அசையாமல் அப்படியே நின்றிருந்தான். சற்று நேரத்தில் ஒரு சிறிய சத்தம் அவனது காதில் விழுந்தது. அதைத்தொடர்ந்து ஒரு குடிகாரன் தள்ளாடியபடி சுவரில் முட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அவன் தனது கரகரப்பான குரலில்"ஏய். நான் ஒரு மனிதன்."என்று சத்தமிட்டபடி வந்தான்.
அபூஃபஹதை அண்மித்ததும் தனதுதள்ளாட்டநடையை நிறுத்தினான். பெரிதாக மூச்சு விட்டபடி திகைப்புடன் அபூஃபஹதைப்பார்த்தான். தடுமாற்றத்துடன் கேட்டான்:-"நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
நடந்துகொண்டிருக்கிறேன்." குடிகாரன் தனது நெற்றியைச் சுருக்கினான். முகத்தில் ஆர்வம் மின்னக் கேட்டான்:- "நானும் பெண்களை விரும்புகிறேன். அவளுடன் படுப்பதற்குக் கணவன் போகும் வரை காத்திருக்கிறாயா? அவன் போனதும் உனக்குக் கதவு திறப்பாள் அல்லவா?
அபூ ஃபஹதுக்கு அந்த வார்த்தைகள் வேதனையளித்தன. அவனுக்கு அருவருப்பாக இருந்தது. குடிகாரன் தொடர்ந்து கேட்டான்:- "அவள் அழகாக இருப்பாளா?”
அபூஃபஹத்கோபத்துடன் கேட்டான்:-"எந்தப்பெண்?"
நீயாருக்காகக் காத்திருக்கிறாயோ அவள்” "போய்விடு”
நானும் உனக்குப்பங்காளியாக இருக்கிறேன்." அபூ ஃபஹதுக்குப் பொல்லாத கோபம் உண்டாயிற்று. இந்தக் குடிகாரன் வந்து கலாட்டாப் பண்ணுவதால் ஆடு வராமல் விட்டுவிடுமோ என்று பயந்தான். கடும் சீற்றத்துடன் அவனைப்பார்த்துச்சொன்னான்:-"போய்விடுஇங்கிருந்து. இல்லாவிட்டால் உன் மண்டையைப் பிளந்துவிடுவேன்"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

குடிகாரன் ஏப்பம் விட்டபடி கோபாச்சரியத்துடன் கேட்டான்:-"நீ எனக்குச் சொல்கிறாயோ? யார் நீ? சற்று அமைதியடைந்து பின்னர் மீண்டும் சொன்னான்:- "வந்து எனது மண்டையை உடைத்துப்பார்.வா."
அபூ ஃபஹத் சொன்னான்:- "போய்விடு. உனது மண்டையை உடைக்கும் அவசியம் எனக்கு இல்லை."
குடிகாரன் கோபத்துடன் சொன்னான்:- "இல்லை. இல்லை. வந்து என் மண்டையை உட்ை"பின்னால் நகர்ந்து ஒரு வகைக் களிப்புடன் மீண்டும் சொன்னான்:-"நான் உன்னைச் சல்லடையாக்குவேன்’சொல்லிக்கொண்டே தனது பைக்குள் கைவிட்டு நீளமான ஒரு குத்துவாளை வெளியே எடுத்தான்.
அபூ ஃபஹதின் கை விரைவாக அவனது இடுப்புப் பட்டியை நோக்கி நகர்ந்தது. தனது குத்து வாளை வெளியே எடுத்தான். குடிகாரன் வேகத்துடனும் எச்சரிக்கையுடனும் அபூ ஃபஹ்தின் அருகில் வரத் தனது குத்து வாளை உயர்த்தி அவனை நோக்கி வீசினான் அபூ ஃபஹத். குத்துவாள் தன்னில் படாமல் மின்னல் வேகத்தில் குடிகாரன் விலகினான். தனது கையிலிருந்த குத்துவாளை அபூ ஃபஹதின் நெஞ்சருகே வைத்து வாங்கிக் கொள் என்றான்.
அபூ ஃபஹத் களிமண் சுவருடன் ஒட்டிச் சாய்ந்திருந்தான். இரண்டாவது முறையாகக் குத்திய குடிகாரனின் குத்துவாளை எதிர்த்து இரண்டாவது முறையாகத் தனது குத்துவாளை உயர்த்தினான். குடிகாரன் அபூஃபஹதின் வலது தோளில் குத்த அவனதுகை தொங்கிப் போய் கையிலிருந்த குத்துவாள் கீழே விழுந்தது. அவன் நிலைகுலைந்தான்.
குடிகாரன் சத்தமிட்டுக் கத்திக் கொண்டே குதித்துக் குதித்துத் தன் குத்து வாளால் அபூ ஃபஹதைக் குத்தினான். அபூஃபஹதுக்கு மூச்சுத் திணறியது. கைகள் கால்கள் யாவும் சட்டெனப் பலமிழந்ததுபோல் உணர்ந்தான்.
குடிகாரன் தொடர்ந்து குத்தினான். அவன் அபூ ஃபஹதின் வயிற்றில் குத்தி இழுத்த போதுகுடல் கொத்தாக வெளியே வர, அதை அபூ ஃபஹத் தனது கையை வைத்துத் தாங்கிப் பிடித்தான். இரத்தத்தில் நனைந்த குடற்றொகுதி சூடாக இருந்தது. நடுக்கத்துடன் பின்புறமாக நிலைதடுமாறிச் சாய்ந்தான்.
குடிகாரன் சற்று நேரம் அபூ ஃபஹத் அருகே நின்றான். குத்து வாளை எறிந்து விட்டு ஒடத் தொடங்கினான்.
“ஏழு ஜாடிகள் நிறையத் தங்கம்” என்று ஆடு சொல்வது அபூ ஃபஹதுக்குத் தூரத்தில் கேட்டது. கொட்டப்பட்ட தங்கக் காசுகள் ஒவ்வொன்றும் சின்னச் சூரியனைப் போல் பிரகாசித்தன. அபூ ஃபஹத் தேய்ந்த குரலில் ஆட்டை நோக்கி முணுமுணுத்தான்;-“மெதுவாக. மெதுவாக."
குறிப்பு
1. இறைவன் மனிதர்களையும்ஜின்களையும்படைத்துள்ளனர் என்று குர்ஆன் சொல்கிறது. ஜின்களும் மனிதர்களைப் போலவே உலகில் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் வெகு அபூர்வமாகவேமனிதர்களின் கண்களுக்குத்தென்படுவர் என்பது ஐதீகம்.
17

Page 20
ஸ்லாத்தையும் இஸ்லாமிய விழுமியங்களையும் பாதுகிரிக்க வேண்டிய பொறுப்புமுஸ்லிம்களுக்குடையது.
மேற்கத்திய காழ்ப்புணர்ச்சியே இன்று இஸ்லாத்திற்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றதென்பது மறுக்கமுடியாத 9 GTGOLn.
'வல்காவிலிருந்து கங்கை வரை சாத்தானிய வசனம் லஜ்ஜா' மற்றும் நபிகள் நாயகம் கேலிச் சித்திரம் வரை ஆராய்ந்துப் பார்க்கும் பொழுது, சிலுவையுத்தத்திற்குப் பின் ஏற்பட்ட மற்றுமொரு யுத்தமாகவே இதைக் கருதலாம்.
மேற்கத்தியவாதிகள்,இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தபலவீனப் படுத்த முஸ்லிம்களையே ஆயுதமாகப் பாவிக்கத் தவறவில்லை. மிர்ஸாவைக் கூலிக்கமர்த்தி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்திக்குதூகலிக்கின்றனர். சாத்தானிய வசனம் எழுதிய சல்மான் ருஷ்திமும்பையில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து இங்கிலாந்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளைத் தகர்க்க முடுக்கி விடப் பெற்றவர். இது போன்றஒருவரேதஸ்லிமா நஸ்ரீன். இவரதுலஜ்ஜா'நூல்பற்றி வங்காளத் திரைப்பட இயக்குனர் மிருஸான் சென், "இந்த நூலில் குறிப்பிடத்தக்க கதையோ சிறப்போ எதுவும் இல்லை. வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் போக்கே இதில் உள்ளது." என்று குறிப்பிட்டிருப்பது நோக்கற்பாலது.
தஸ்லிமா, இலக்கிய மாணவியாக இருந்ததே இல்லை, அவர் சூடான ஓர் அரசியல்பிரச்சனை"என்கிறார்,பேராசிரியர் சிராஜுல்இஸ்லாம்சவுத்திரி. இக்கூற்றையும்சற்றுசிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தஸ்லிமா, லஜ்ஜா" வைத் தவிர கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது கருப்பொருளாக ஆண் எதிர்ப்பையும் கட்டுப்பாடற்ற பாலியலையும் ஒழுக்கப் பிறழ்வுகளையும் ஆதரிப்பதாகவே அமைந்துள்ளன.
இதிலிருந்து தஸ்லிமாவுக்கு, தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தாக்கம் நன்கு புலனாகின்றது. இதைக் கொண்டு, தஸ்லிமாவை புரட்சிகர எழுத்தாளர் என்று கருத முடியாது. அதற்கான கருத்தாழமோ எழுத்தாற்றலோ அவரிடம் இருக்கவில்லை.
லஜ்ஜா தடை செய்யப்படுவதற்கு முன் அறுபதாயிரம் பிரதிகள் விற்பனையானதென்று பிரமாதப்படுத்திக் கொண்டனர். இதற்கும் காரணம், வயது வந்தவர்களுக்கு மட்டும்என்றுமட்டுப்படுத்தப்பெற்ற நூல்களை வாலிபர்களும் வயோதிபர்களும் தேடிப்பிடித்து படிப்பதுண்டல்லவா? அந்த வரிசையில்லஜ்ஜா'அமைந்துவிட்டது.
பென்குயின் நிறுவனத்தார் தஸ்லிமாவுக்குப் பணம் கொடுத்து இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை எழுதச் செய்தது அவரது திறமை கண்டல்ல. இஸ்லாத்தின் மீது கொண்ட வெறுப்போடு எழுதுவதால், அதைத் தங்களுக்குச்
18
 

சாதகமாக்கிக் கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள், 易 S தஸ்லிமாவின் நூல்களை ZᏃ;Ꮓ27 ● விளம்பரப்படுத்தவும் மலிவு விலையில் விற்கும் முகவர் 2- مگئے களைத் தேடிக் கொண்டதும் சாரனா கையூம் தஸ்லிமாவுக்குத் தெம்பை
ஊட்டியதெனலாம்.
பெண் செக்ஸ்வால்டிபற்றி வெளிப்படையாக இவர் எழுதியிருந்தார். புத்தகங்களின் தலைப்புஇதைப்படம்பிடித்துக்காட்டும்.இவர், எழுதிய ஒரு கதையில் வெறுத்துப் போன இரு குடும்பத் தலைவிகள் தங்கள் செக்ஸ் வாழ்வைப் பற்றிப் பேசுவதாக வருகிறது. இவர் கொஞ்சம் ஓவராகப் போகக் கூடியவர். ஒருதரம் இவர் ஆண்களைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கும்படி பெண்களைத் தூண்டினார்” என இந்தியா டுடே குறிப்பிட்டிருந்தது.
இதுஒழுக்கக் கேட்டின் விளிம்பைத்தொடும்கருத்தாகும் தஸ்லிமாயார்?
பாக்காவிலிருந்து50கிமீதுரத்தில்அமைந்துள்ளமையின் சிங்என்னும்சிறுகிராமத்தில்பிறந்தவர். மூன்றுதிருமணங்களைச் செய்து விடுபட்டு பலரோடு திருமணமற்ற வாழ்வு நடத்தியவர். பாக்பராகப்படித்தவர். எதுஎவ்வாறாயினும்தஸ்லிமாவின்பேச்சும் செயலும் முன்னுக்குப் பின் முரணிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.நேர்காணல்களின்போதுதான்கூறியதை மற்றோரிடத்தில் மாற்றியும் திரித்தும் கூறும் சுபாவமுடையவர். இதிலிருந்து தஸ்லிமா ஒருவகையான மனவழுத்த நோயாளியா என்றுகேட்கத்தோன்றுகின்றது.
தஸ்லிமா முஸ்லிம் குடும்பமொன்றில் பிறந்திருந்தாலும் இவரிடம் இஸ்லாமிய அடிப்படை அறிவுகூட இல்லாமிலிருப்பது வேதனைக்குரியது. முஸ்லிம்கள் குர்ஆனை தங்களுடைய உயிரிலும் மேலாக மதிப்பதைதஸ்லிமா உணரத்தவறியதோடு, குர் ஆனிலும் மாற்றம் கொண்டு வர வேண்டுமென்று குறிப்பிட்டது பாரதூரமான குற்றமாகும்.
குர்ஆனைப் பற்றி இறைவன் கூறும் பொழுது, "அதை நாங்களே இறக்கினோம்; அதை நாங்களே பாதுகாப்போம்" என்றுவாக்களித்துள்ளான்.
அடுத்து, பெண்ணுரிமை என்று பீற்றிக் கொள்ளும் தஸ்லிமா, இஸ்லாம் வழங்கியுள்ள பெண் உரிமைகள் என்ன என்பதை மறந்துபேசுவது, ஏதோ ஒரு தூண்டலினாலே ஆகும். தஸ்லீமா கோரும் பெண்ணுரிமை என்ன? ஒழுக்கக்கேடும் கட்டுப்பாடற்ற பாலியல் சேட்டைகளுமே தவிர வேறில்லை. விபச்சாரத்தில்ஈடுபடும் ஆண்களை அதைவிட்டும் தவிர்த்துக்கொள்ளச்சொல்லவில்லை. மாறாகப்பெண்களைப் பார்த்து ஆண்களைப் போல் நீங்களும் செய்யுங்கள் என்று உபதேசிக்கிறார். இஃதொரு பழிவாங்கல் செயலல்லவா?
இஸ்லாம் ஏனைய மதங்களை ஏளனம் செய்வதையோ அலட்சியம் செய்வதையோ அனுமதிக்கவில்லை.
அப்துல்காதரோ, அப்துல்லாஹ்வோதனிப்பட்டமுறையில் செய்யும் தவறுகளுக்கு இஸ்லாம் ஜவாப்தாரியல்ல.
தஸ்லிமா, ஆராய்ந்து பாராமல் செய்த தவறுகளை பணத்திற்காக-புகழுக்காக மேலும்தொடராமல், எழுத்தாற்றல் இருந்தால், அதைப் பெண்களின் மேன்மை கருதி, இதய சுத்தியோடு பயன்படுத்தி, தன்னை மாயவலையிலிருந்து விடுவித்துக்கொள்வதேதஸ்லீமாசெய்யும்பிராயச்சித்தமாகும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 200

Page 21
நல்லதொரு சிறுகதை மூன்று இலக்கணங்களைக் கொண்டமையும். விமர்சகர்கள் சொல்வதைப் போல பலவற்றையல்ல. அம்மூன்று இலக் கணங்கள் வருமாறு:
1. நல்லதொரு கருவை அல்லது உள்ளடக்கத்தைக்
கொண்டிருக்கும்.
2. ஏற்றதொரு வடிவத்தை அல்லது உருவத்தைக்
கொண்டிருக்கும்.
3. சிறுகதைக்குரிய நேர்த்தியைக் கொண்டிருக்கும்.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளில் சிலிர்க்க வைக்கும் உள்ளடக்கத்தை தெரிவு செய்கிறார்கள். ஆனால் நல்ல சிறுகதை படைக்கப்படுவது எழுத்தாளனின் ஆளுமையைப் பொறுத்தது. சிறுகதை நிகழும் கள விபரணை, நடை, உத்தி, பாத்திரங்கள், உவமானங்கள், எல்லாவற்றிக்கும் மேலாக சமுகச்செய்தி எனப்பலவற்றைப் பொறுத்தது. நல்ல சிறுகதைகளுக்கு நல்ல சிறுகதைகளே உதாரணம். அவ்வகையில் ஆனந்தனின் தண்ணீர்தாகத்தை கடந்த முறை ஆராய்ந்தோம். இம்முறை இலங்கையர் கோனின் வெள்ளிப்பாதசரம் சிறுகதையை ஆராய்வோம்.
இலங்கையர்கோன் ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர். இவரது இயற்பெயர் ந. சிவஞானசுந்தரம் ஆகும். இவரது முதற் சிறுகதை மரிய மகதலேனா. 1930இல் கலைமகளில் வெளிவந்தது. கலைமகள், சூறாவளி, மணிக்கொடி, பாரதத்தாய், சக்தி, சரஸ் ஆகிய தமிழக ஏடுகளிளும் ஈழகேசரி, கலைச்செல்வி, ஈழநாடு, வீரகேசரி, தினகரன் ஆகிய இலங்கைப் பத்திரிகைகளிலும் நிறைய எழுதியுள்ளார். எல்லாமாக முப்பது சிறுகதைகளை எழுதியிருப்பார். அவற்றில் பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாக வெள்ளிப் பாதசரம் வெளிவந்துள்ளது. இத்தொகுதி பல்கலைக்கழகப் பாடநூலாகவுள்ளது. இலங்கையர்கோன் ஆங்கிலப் புலமை மிக்குடையவர். பிற மொழிப் புனைகதைகளை மொழிபெயர்த்துள்ளார். பல மேடை நாடகங்களை எழுதியுள்ளார். இலங்கை நிர்வாகசேவை அதிகாரியான இவர் எழுதிய உன்னதமான சிறுகதை வெள்ளிப்பாதசரம். 1942இல் ஈழகேசரியில் வெளியானது. இவரது இன்னொரு சிறப்பான சிறுகதையாக வஞ்சம் கருதப்படுகின்றது.
வெள்ளிப்பாதசரத்தின் கரு அல்லது உள்ளடக்கம் மிக எளிமையானது. செல்லையா, நல்லம்மா என்ற தம்பதி யினரிடையே ஏற்பட்ட ஊடல் சம்பந்தமானது மிகச்சிறியதொரு கருவை ஆசிரியர் அற்புதமானகதையாக உருவாக்கியுள்ளார். வல்லிபுரக்கோயிலிற்குச் செல்கின்றனர் இக் குடும்பத்தினர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 

- செங்கை ஆழியான் க. குணராசா
அங்கு மனைவியின் அழகுக் கால்களுக்கு கணவன் வெள்ளிப்பாதசரம் சோடியை அணிந்து எழில் சேர்க்கிறான். பாதசரங்களில் ஒன்றை அவள் மணலில் தவறவிட்டுவிட்டாள். கோபமுற்ற கணவன் தன்னையறியாமல் “கொஞ்சம் கவனமாக வாறதுக் கென்ன? உனக்கு ஆட்டம் மெத்திப் போச்சுது. ஊதாரி நாய்' என்று ஏசிவிடுகிறான். தான் கொண்டு வந்த பணத்தில் பெரும் பகுதியை அவன் வெள்ளிப்பாதசரம் வாங்கச் செலவு செய்திருந்தான். கணவனின் சுடு சொற்களை அவளால் தாங்கமுடியவில்லை. ஊடல் கொள்கிறாள்.'போதும் உங்களோட கோவிலுக்கு வந்த வண்டவாளம். இனி நடையைக் கட்டுவம்” செல்லையா தன் தவறைப்புரிந்துகொள்கிறான். நல்லி ஆத்திரத்தில் சொல்லிப் போட்டன், இஞ்சை பார். அவள் பிடிவாதமாக வேண்டாம் இப்பவே போகவேனும் வண்டியைக் கட்டுங்கோ என்கிறாள். இக்கதையை இரண்டு பகுதிகளாக சர்வசாதாரணமாக ஆசிரியர் எழுதியுள்ளார். முதல் பகுதியில் கோயிலுக்கு வருதலும் பாதசரம் வாங்கலும் இரண்டாம் பகுதியில் அவர்கள் அடையும் கழிவிரக்கமும் காட்டப்படுகின்றன. ஆரம்ப காலக்கதையாதலால் இரண்டு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. நவீன சிறுகதைகள் பெரிதும் நனைவோடையில் எழுதப் படுவதால் அவ்வாறு பிரிக்கப்படுவதில்லை. வெள்ளிப் பாதசரம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருப்பது சிறுகதை உருவத்தைப் பாதிக்கவில்லை. தான் நினைத்த கருவை ஒழுங்குமுறையில், கூறிவிடுவது ஆரம்பகாலச் சிறுகதைகளில் பின்பற்றப்பட்டது. அது இச் சிறுகதையிலும் பின்பற்றப் படுவதால் அது, சிறுகதையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை. கதை சொல்லும் பாங்கினாலே சிறப்புறும் சிறுகதை இதுவாகும். தனது கதையை விபரிக்க அவர் இரண்டு களங்களை அதாவது இரண்டு பகைப்புலங்களைத் தெரிவு செய்துள்ளார். ஒன்று வல்லிபுரக் கோயில், மற்றையது வல்லைவெளி, இரண்டு பகைப் புலங்களையும் அற்புதமாகக் காட்டுகிறார். அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. எவ்வளவு சனம்பார்த்தியளா இதுக்கால எப்படிப்போறது என அவள் மட்டுமா வியக்கிறாள்? கோயில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலை மலையாகக் குவிந்திருந்தன. கோயில் வீதிகளில் கடைகள், தவில்காரன் தாள வரிசைகளை மெய்மறந்து பொழிந்து கொண்டிருந்தான். பஞ்ச கச்சம் அணிந்த பூசகர்கள் அங்கும் இங்கும் ஒடித்திருந்தனர். என வருணிக்கிறார். யாழ்ப்பாணக் கலாசாரத்தில் வல்லைவெளி முக்கியமானது. இங்கு நிலத்தடியிலிருந்து கிளம்பும் எரிவாயுக்கள் கொள்ளி வாய்ப்பிசாசுகள் என மக்களை நம்ப வைத்திருந்தன. அதனால் வல்லைவெளியில் இரவில்பயணம் செய்யப்பயப்படுவர். இந்தப்
19

Page 22
பகைப்புலத்தை ஆசிரியர் தனது கதையில் தக்கவாறு பயன்படுத்தியுள்ளார். ‘சின்ன மனிதர்களையும் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் வெளி. எங்கோ தொலைவில் நிலத்தில் இருந்து இரண்டடி உயரத்தில் பொட்டிட்டதுபோன்று தோன்றிய ஒளிகொஞ்சம் கொஞ்சமாக ரோட்டை நோக்கி நகர்ந்து வந்தது. செல்லையா அதைக்கண்டதும் அதை நோக்கிகாறியுமிழ்ந்தான்.பயத்துடன் அவனை நெருங்கிய மனைவியின் இடையை நோக்கி அவன் தனது இடது கரத்தை நகர்த்தினான் ஊடல் தீர்ந்தமையை ஆசிரியர் இவ்வாறு பகைப்புல ஆதாரத்தில் அற்புதமாகச் சித்தரிக்கிறார்.
இக்கதையில் பெரிதான உத்தி கையாளப்படவில்லை. சிறுகதைகளில் மூவகையான உத்திகள் ஈழத்தில் கையாளப்படுகின்றன. தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற வரிமுறையில் சாதாரணமாக ஒழுங்குமுறையில்தான் கருதிய கருவை விபரித்துவிடும் சிறுகதைகள் பலவுள்ளன. தன்னிலையாக அல்லது படர்கையாக அல்லது பாத்திரங்கள் வாயிலாக விபரித்தல். கடிதங்களை மூலமாகக் கொண்டு கடிதமூலம் கதையை விபரித்தல் இன்னொரு முறை உத்தி இரண்டுமுறைகளுக்கும் கதாசிரியர்நல்ல கதைசொல்லியாக இருக்கவேண்டும்.வெள்ளிப்பாதசரம் நல்ல கதைசொல்லியால் எழுதப்பட்டுள்ளது இன்னொரு வகை உத்தி நனவோடை உத்தியாகும். கண்டதை, உணர்ந்ததை சொன்னதை வைத்து கருவோடு சம்பந்தப்பட்டவற்றை எண்ணுவது இதுவாகும். இந்த உத்தியில் காலநீட்சிகவனத்தில் அடங்காது.இன்றுபல எழுத்தாளர்களாலும் விரும்பப் படுகின்ற உத்தி. அடுத்த சிறுகதைகளில் இந்த உத்தியைப்பார்ப்போம்.
வெள்ளிப்பாதசரம் மிக எளிமையான அழகான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. அழகான உரை நடையினால் வெற்றி பெற்ற சிறுகதை இதுவாகும். ஆசிரியரின் உரைநடையில் ஓர் இலக்கிய அழகு காணப்படுகின்றது. உதாரணமாக குஞ்சுப்பெட்டி,அடுக்குப்பெட்டி, தையல்பெட்டி மூடல் பெட்டி, பின்னல் பெட்டி ஊ. எத்தனை வகை? பாத்திரங்கள் அவற்றின் பாசையிலே பேசுகின்றன. ஆசிரியர் வழங்கு தமிழைப் பயன்படுத்துகின்றார். மேற்கே சூரியன் மறைந்தான். கிழக்கே சந்திரன் உதயமானான் என்பதை தனக்கேயுரிய தமிழில் அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக்கிரணங்கள் பனைமரங்களின் தலைகளை இன்னும் தடவிக்கொண்டிருந்தன. கிழக்கு அடிவானில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்திருந்தான் என ஆழகாகக் கூறுகிறார்.
நல்லதொரு சிறுகதையின் நேர்த்தியை பாயாசத்திற்கு முந்திரிபோல கையாளும் ஏற்ற உவமைகள் எடுத்தியம் புகின்றன. முத்தையும் வைரத்தையும் பொடியாக்கிச் சிதற விட்டதுபோன்ற அந்தவெண்மணற்பரப்பில் கன்னித்தாயின் உள்ளத்திலே அன்பு வெள்ளம் பாய்வது போல நிலவு வெள்ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச்சந்திரனின். குவளை மலரைப் பழித்த அவளது விழிகள். குண்டுசியால் துளைக்கப்பட்ட றப்பர் பலூன்போல நல்லம்மரின் உற்சாகம் அப்படியே சப்பளிந்து போய்விட்டது. யாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலப்பவாடை போல பனைமரங்கள் மெளனப்பூதங்கள் போல் வரிசையாக நின்று ஆலவட்டம் பிடித்தன” வெளியின் நடுவே தேங்கிநின்ற நீரோடை ஒரு அரக்கனின் மார்பில் அணியப்பட்ட மரகதத்
20

தகடுபோலஜ்வாலித்து'வான முகட்டின் உச்சியில் தொங்கிக் கொண்டிருந்த பளிங்கு தகடு போன்ற சந்திரதீபம் கீழே விழுந்துவிட எத்தனிப்பது போல கனிந்து பிரகாசித்தது தண்ணீர் தாகத்திலும்பார்க்க இக்கதையில் பயன்படுத்திய உவமைகள் அதிகமாக இருப்பதைக் காணலாம்.
இக்கதையில் செல்லையா, நல்லம்மா என்று இரண்டு பாத்திரங்கள் வருகின்றன. இரண்டு பாத்திரங்களும் சராசரி மனிதர்கள் என்பதும் தாம் செய்தவற்றிற்காக பச்சாதாபப் படுபவர்கள் என்பதும் நன்கு தெளிவாகின்றது. ஒருவர் மீது ஒருவர் கொண்ட மிகுந்த அன்பையும் ஆசிரியர் ஏற்றவிடங்களில் புலப்படுத்துகிறார்.தன் மீதுகோபம்கொண்ட மனைவியின் முன் வெற்றிலைச் சரையை வைக்கும் போது செல்லையாவின் அன்புவெளிப்படுகிறது.பசிகிடக்கமாட்டாரே என்று அவள் மருகும் போது அவள் அன்பு புலனாகின்றது. ஓரிடத்தில் பெட்டை உனக்காக வேணுமெண்டால் என்ரை உசிரையும் கொடுத்துவிடுவேன்' என்கிறான். முரன்படாமல் பாத்திரங்களை வளர்த்துள்ளார்.
இச்சிறுகதையில் ஒரு முழுமையிருக்கிறது. இச்சிறுகதையின் சமூகப் பயன்கள் என்ன? அப்படியொன்றும் இல்லை. தம்பதியினரிடையே ஏற்பட்ட பிணக்கை (ஊடலை) அற்புதமான தனது உரை நடையால் முழுமையான
இலக்கியமாக்கியுள்ளார்.
9lGIJGIGíslŮ UTIgGUFU
- இலங்கையர்கோன்
தின் வீட்டிற்கு ஒரு அடுக்குப் பெட்டியும், தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டுமென்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும்,மலைமலையாகக் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையல்பெட்டி, மூடல்பெட்டி, பின்னல்பெட்டி.ஊர் எத்தனை வகை அருகில் மாட்டைய விழ்த்து அதன்வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணும் கருத்துமாக நின்றதன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி, “மாடு தன் பாட்டுக்கு நிக்கட்டும் வாருங்கோ” என்று கெஞ்சினாள்.
அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னுந் தடவிக் கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தது.
அன்று வல்லிபுரக்கோவில் கடைசித் திருவிழா “எவ்வளவுசனம்பாத்தியளே! இதுக்காலை எப்பிடிப்போறது” என்று கூறி நல்லம்மா தன் கணவன் அருகில் ஒதுங்கினாள். செல்லையா தோளில்கிடந்த சால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு, “பயப்பிடாமல் என்னோடை வா” என்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.
கோவில் வீதிகளிலும், கடைகளிலும் காணப்பட்ட தெல்லாம் நல்லம்மாவின் மனதில் ஒரு குதூகலத்தை உண்டாக்கின. வாய் ஓயாது தன் கணவனுக்கு ஏதோ சொல்லிக்கொண்டு சென்றாள். ஐந்து வயதுச்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 23
சிறுமியைப்போல்,முழங்கால்கள் தெரியும்படி தன் ஆடையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு வீதியைச்சுற்றி ஒரு “கெந்தல்” போடவேண்டும்போல அவளுக்குத் தோன்றியது.செல்லையா மெளனமாக, தன் மனைவியின் குதூகலத்தில் மெய்மறந்து, அவள் இழுத்த வழி எல்லாம் போய்க்கொண்டிருந்தான்.
யாழ்ப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப நிலத்தைத் தம் தளராத முயற்சி ஒன்றினாலேயே வளம்படுத்தி, சீவியம் நடத்தும்புதல்வர்களில் அவன் ஒருவன், இரக்கமற்றயூமியுடன் தினசரி நடத்தும் போரினால் அவனுடைய தசை நார்கள் முறுக்கடைந்து வச்சிரம்போல் இருந்தன. மன ஒருமைப்பாட்டினால் வாய் மெளனமாக இருந்தது.
மூன்றுமாதங்களுக்கு முன்னர்தான் அவன் தனக்கு ஒரு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக்கொண்டான். அவளுடைய கலகலத்தவாயும், விடை இல்லாத ஒரு கேள்வியைக் கேட்பதுபோல, அவனுடைய பார்வையை முறித்து நோக்கும் அவளுடையவிழிகளும், மார்பின் பாரம்தாங்கமாட்டாததுபோல் ஒசியும் நூல் இடையும்,நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. சதா மண்ணைக் கிண்டுபவனுக்குமண்ணிற்குள் எத்தனையோரகஸ்யங்களும், மணங்களும் புதுமைகளும் மறைந்திருக்கும்; ஆனால் அவைகளைவிட மேலான ரகஸ்யங்களும்,மணங்களும் புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனைமறைந்துகிடக்கின்றன! ஒ வாழ்வு எவ்வளவு அற்புதமானது செல்லையா இன்று அணிந்திருக்கும் நாற்பது ரூபா பெறுமதி உள்ள மாறுகரைச் சால்வையைவிட அதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? கோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ்டப்படி கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தனர். மூலைகளில் கிடத்தப்பட்டிருந்த, கைக்குழந்தைகள் அழுதன. பஞ்சகச்சம் அணிந்த பூசகர்கள் அங்கும் இங்கும் ஓடினர். இந்த ஆரவாரங்களுக்கிடையில் கர்ப்பக்கிருகத்தில் மணிச் சத்தம் கேட்டது. கூப்பிய கைகள் தலைகளுக்குமேல் உயர்ந்தன.செல்லையா ஒரு தூணருகே கைகளைக் கட்டியபடி சனங்களின் தலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றான். நல்லம்மா அவனருகில் கைகூப்பியபடி மூலஸ்தானத்தை ஒருதரம் பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்தாள். எங்கோ தொலைவில் இருளில் சில தீபங்கள் மின்னின. அவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. அதற்குப் பின்னால் அதுதானோ வல்லிபுரப்பெருமாள்?
திருமண்பிரசாதம்பெறுவதற்கு ஆரவாரப்பட்டசனங்கள். ஒரு பக்கத்தில் மேளச்சமா ஆரம்பமாகவே அவ்விடம் நோக்கி நகர்ந்தனர்.
செல்லையாவும் நல்லம்மாவும் கோயிலை வலம்வந்து வணங்கினர்.
தவில்காரன் தாளவரிசைகளை மெய்மறந்து பொழிந்து கொண்டிருந்தான். அவனுடைய குடுமியவிழ்ந்த தலையோடு வேறும் ஆயிரம் தலைகள் அசைந்தன. நல்லம்மாவுக்குச் சிரிப்பாகவிருந்தது. தன் கணவனின் உடலோடுதன் உடலை உராய்ந்துக்கொண்டு"எல்லோருக்கும்பைத்தியம்பாருங்கோ' என்றாள். மெனியான செல்லையா மெளனம் கலைந்து “போதும் இனி வாணை வெளியாலை போவம்" என்றான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர்'2010

பைத்தியம் தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவத்திற்குப் பின்னால் மறைந்திருந்து அறிதுயில் கொள்ளும் அந்த வல்லிபுரப்பெருமாளுக்குமா பைத்தியம்?
வெளி வீதிகளிலும் தெருக்களிலும் சன சமுத்திரம் அலைமோதிப் புரண்டது. முத்தையும் வைரத்தையும் பொடியாக்கிச் சிதறிவிட்டது போன்ற அந்த அகன்ற வெண் மணற்பரப்பில் கன்னித்தாயின் உள்ளத்திலே அன்புவெள்ளம் பாய்வதுபோல நிலவுவெள்ளத்தை அள்ளிப்பெருக்கும் முழுச் சந்திரனின் கீழ் இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலையி லிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்.
சர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்தல்களை ஒருதடியால் அடித்துஜலதரங்கம் வாசித்தான். மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒரு கைவிளக்கின் அருகில் உட்கார்ந்து பொலிஸ்காரர்களின் காக்கியுடுப்பு எங்காவது தெரிகிறதா என்று கடைக்கண்ணால் பார்த்தபடி ஒன்றுக்கு நாலுக்காரன் “ஓடிவா ஓடிவா - போனால் கடலைக் காசு, வந்தால் தேத்தண்ணிக்காக”என்று ஓலமிட்டான்.
நல்லம்மாவும் செல்லையாவும் தம்மை அறியாமலே ஒரு வளையற் கடையின் முன்னால் போய் நின்றனர். விளக்கொளியில் சுடர்விடும் கண்ணாடி வளையல்களின் லாவண்யத்தில் நல்லம்மாவின் மனம் லயித்தது. செல்லையா அவளுக்கு ஐந்து ஜதை வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். ஒரு கண்ணாடிப் பெட்டியில் அழகாக வளைத்துவைக்கப்பட்டிருந்த புதுமாதிரியான ஒரு பாதசரம் செல்லையாவின் கண்களை ஈர்த்தது. நெருக்கமாகப் பின்னப்பட்ட வெள்ளி வளையம் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் குண்டும் வேல் போன்ற ஒரு தகடும் தொங்கிக் கொண்டிருந்தன. முகப்பில் சிங்கமும், அதுபோன்ற ஒரு பாதசரம் அவன் முன் ஒருபோதும் பார்த்ததில்லை. அவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.
குவளைமலரைப்பழித்த அவளது விழிகள் “காஸ்லைட்” ஒளியில் அகல விரிந்து பளபளத்தன.
அவளிடம் சாதாரணமான காற்சங்கிலிகூட இல்லை. உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அவளுடை கணைக் கால்களில் இதுபோன்ற ஒரு பாதசரத்தை அணிந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை செல்லையாவின் மனதில் தோன்றியது. இந்த ஆசையோடு வேறு எத்தனையோ ரகஸ்யமான இன்பநினைவுகள் அவன் உள்ளத்தை மயக்கின. அதை எப்படியும் வாங்கிவிட வேண்டும்! அதன் விலை என்னவென்று கடைக்காரனைக் கேட்டான்.
"முப்பத்தைந்து ரூபாய், வேறு விலை கேட்க வேண்டாம்” செல்லையாவின்மடியில் முப்பத்தொரு ரூபாய்தான் இருந்தது”
"இருபத்தைந்து தரலாம். சமானைக்குடுத்துப்போடு” “தம்பி! இது நாட்டுப் பெண்கள் போடுகிற கால்ச் சங்கிலிகள் அல்ல. ராசாத்தியின் கால்களுக்கேற்றது. இந்தியாவிலிருந்து ஸ்பெஷலாய் வந்தது. உமக்கு இது சரிவராதுராசா. கடைசி விலை முப்பது ரூபாய் குடுப்பீரா?
“சரி இந்தா”
2

Page 24
பாதசரங்கள் கைமாறி, அவ்விடத்திலேயே நல்லம்மாவின் பாதங்களில் ஏறின.
வெண் மணலில் கால்கள் புதைய இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றிவந்தனர். மிச்சமாக இருந்த ஒரு ரூபாயைக் கொண்டு ஒரு தையற் பெட்டியும் வாங்கி, ஆளுக்கொரு சர்பத்தும் குடித்தனர். அடுக்குப்பெட்டி வாங்கவில்லை.
நல்லம்மாவின் கால்கள் ஓய்ந்துபோயின "இனி வண்டிலடியில் போய்க் கொஞ்சநேரம் இருந்திட்டு, திருவிழாப் பார்த்துக்கொண்டு விடியப்போவம்" என்று இருவரும் முடிவு செய்தனர்.செல்லையா அவளை ஒரு சனக்கும்பலுக்கூடாகக் கையில்பிடித்து நடத்திக்கொண்டுசென்றான்.கும்பல் கழிந்து கொஞ்சம் வெளியான இடத்திற்கு வந்ததும் நல்லம்மா திடீரென நின்று தன் இடக்காலை உயர்த்திக் கையால் தடவிப்பார்த்தாள்.
"ஐயோகாற்சங்லியைக் காணேல்லை. “என்ன வடிவாகப்பார்” “ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளை கழண்டு விழுந்து போச்சு”
“கொஞ்சம் கவனமாக வாறதுக்கென்ன? உனக்கு ஆட்டம் மெத்திப்போச்சு, ஊதாரிநாய்”
மறு கணம் செல்லையா தன் நாக்கைக் கடித்துக் கொண்டான்.
குண்டூசியால் துளைக்கப்பட்ட றப்பர் பலூன்போல் நல்லம்மாவின் உற்சாகம் அப்படியே சப்ளிந்து போய்விட்டது. மூன்றுமாதமணவாழ்க்கையில் இன்றுதான்முதல்தடவையாக இப்படி ஏச்சுக்கேட்கவேண்டி வந்தது. அதுவும் அம்பலத்தில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு. அவள் மனதில் கோபம், அவமானம், துயரம் முதலிய எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே தோன்றின.கண்களில் நீர்மல்கியது.
“போதும் உங்களோடை கோவிலுக்கு வந்த வண்டவாளம் இனிநடையைக் கட்டுவம்"
செல்லையா ஒரு படி கீழே இறங்கினான். “நல்லி, ஆத்திரத்திலை சொல்லிப்போட்டேன், இஞ்சைபார்.”
நீங்கள் வராட்டி நான் தனிய கால்நடையாய்ப்போறன்,வழியிலை காறுக்குள்ளைவசுவுக்குள்ளை ஆப்பிட்டுநெரிஞ்சுபோறன்.”
செல்லையா மறுவார்த்தை பேசாமல் தன் திருக்கல் வண்டியை இழுத்து, மாட்டை அவிழ்த்துப்பூட்டினான். அவன் ஆண் மகன்.
95
米 。米 米 மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத்திற்குஎற்பகரடுமுரடான ரோட்டில்வண்டிச்சக்கரங்கள் கடக் கடக்' என்று சப்தம் செய்தன. யாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலபாவாடை போல் வளைந்துகிடந்த ரோட்டின் இருமருக்கிலும் நெடிய பனைமரங்கள் மெளனப் பூதங்கள்போல் வரிசையாக நின்று ஆலவட்டம் பிடித்தன.
செல்லையா நாணயக் கயிற்றை இளக்கிவிட்டு, மாட்டின் கால்களுக்கிடையில் தன் காலை வைத்தான். ரோசம் மிகுந்த அந்த இளம் காளை உன்மத்தம் கொண்டதுபோல் ஏற்காலைத் தன் ஏரியில்பட்டும்படமாலும் தாங்கிக்கொண்டு பறந்தது. ஆத்திரத்தில் சிந்தனையில்லாமல் கூறிய வார்த்தைக்கு இவ்வளவுகோபமா? நிலத்தில் வியர்வை கொட்ட கைகால்கள்
22

வலியினால் செயலற்றுப்போக, புகையிலைத் தோட்டத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும். அவன் ஆண்பிள்ளை,இரண்டுவார்த்தைபேசஉரிமை உண்டு. அதைப்பெண் பொறுத்துப் போனால் என்ன? கொண்டுபோன காசெல்லாம் அவளுக்காகத்தானே செலவுசெய்தான்.தனக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்கிக்கொள்ளவில்லையே.
கால்கள் வண்டியின் பின்புறம் தொங்கப்போட்டுக் கொண்டு, வண்டிலின் கீழ் ஒடும் ரோட்டைப் பார்த்தபடி நல்லம்மா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எவ்வளவு அற்ப காரியம்
ஒரு கஷ்டமும் இல்லாமல் திருவிழாப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாக வந்திருக்கலாமே. எல்லாம் அவளுடைய பிழைதான்.கணவன் இரண்டுவார்த்தைகடுமையாகச்சொல்லி விட்டால்தான் என்ன..?
மாடு களைப்பினால் பலமாக மூச்சுவாங்கியது. நெல்லியடிச் சந்தியில், ஒரு பூவரச மரத்தின் கீழ் செல்லையா வண்டியை நிற்பாட்டினான். அந்த நடு யாமத்திலும் கோவிலுக்குப்போவோர்களுக்காக கடைகள் எல்லாம் திறந்து வைக்கப்பட்டிருந்தன. சந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தார்கள். தேனீர்க்கடைகளில் தேனீர் அடிக்கும்"கடகட”என்ற சத்தத்தை விட மற்றெங்கும் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டிருந்தது.
செல்லையா மாட்டின் களைதீர அதைத் தடவிக் கொடுத்தபின் ஒரு தேனீர்க்கடை இருந்த பக்கமாகச் சென்றான்.அவனுடைய மடியில் ஆக ஐந்து சதம்தான் இருந்த தென்பது நல்லம்மாவுக்குத் தெரியும். அன்று மத்தியானம் வீட்டில் சாப்பிட்டதுதான். அதன்பிறகு ஒன்றுமே இல்லை. "ஐயோ அவருக்கு எவ்வளவு பசியாயிருக்கும் வாய் திறந்து ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாரே” என்று அவள் அங்கலாய்த்தாள். அவளுடைய இருதயம் இளகிக் கரைந்தது. தன் கணவனுடைய மனதின் பண்பும் அவன் தன்பால் வைத்துள்ள அன்பின் அழகும் அவள் மனதில் தெளிவாயிற்று. விவாகம் செய்துகொண்ட புதிதில் ஒருநாள் அவன் கூறிய வசனம் ஒன்றை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள். “பெட்டை உனக்காக வேணுமெண்டால் என்ரை உசிரையும் கொடுத்துவிடுவேன். நீஒன்றுக்கும் பயப்படவேண்டாம்”
அவளுடைய நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவதுபோல் இருந்தது.கண்கள் பொருமி உவர்நீரைப்பொழிந்தன.தன் கணவனை ஒரு குழந்தைப்போல் மடியில் வைத்துத்தாலாட்டி அவனுடைய உடலின் ஆயாசத்தையும் மனக் கவலையையும் போக்க வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.
செல்லையா வாயில் ஒரு சுருட்டுடன் வந்து, மனைவியருகில் ஒரு வெற்றிலை பாக்குச் சுருளை வைத்துவிட்டு அவளுடையமுகத்தைப்பார்த்தான்.அவளுடைய கண்ணிர்தோய்ந்த முகத்தின் ஒளி அவனை உலுக்கியது. தன்னுடைய நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையால் அவளுடைய கண்ணிரைத் துடைக்கவேண்டும் என்று அவன் மனம் அவாவியது. “என்ன நல்லம்.” நல்லம்மாவின் கண்ணிர்வடிந்த முகத்தில் நாணம் கலந்த ஒரு புன்னகை அரும்பியது."ஒண்டும் இல்லை,உங்களுக்குப்
தொடர்ச்சி28ம்பக்கம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 25
கண்ணீர் அஞ்சலி)
கவிஞர். வைத்தியகலாநிதி வை
யாழ்ப்பாணம் அளவெட்டி, கூத்தஞ் அளவெட்டிசீனன்கலட்டி ஞானோத பழைய மாணவரான இவர்,யாழ்பல் கவிதை,சிறுகதை ஆகிய துறைகளில் சங்கமம் நிகழ்ச்சியில் திரு சிதம்பரப்பி தினமுரசு,தினக்குரல், தினகரன், வீ (மருத்துவ பீட மாணவர் ஒன்றிய வெளியாகியுள்ளன.தெல்லிப்பளைக் மூன்றாண்டுகள் கவிதை,சிறுகதை, செயலகம் நடாத்திய சுகாதாரவார கட் போட்டியில் "மூப்பு' எனும் சிறுகதைக் போட்டியில் சிறப்புப் பரிசு 2008 ஆகியவற்றைப் பெற்றவர். இவர் 1 பிரசுரித்து அன்னாருக்கு அஞ்சலிசெலுத்துகிறோம்.
கடலில் புதையும் நாகரீகம்
பீடிகைகள் பலமாக விருந்த இரவொன்றில் நிலா தொலைந்து போயிற்று மெல்லிய பனியாடைக் கடலில் நிலாதேடிப் புறப்பட்ட அனைவரும் பிணங்களாகக் கரை மீள்கிறோம்
நடுக்கடலில் எழும் வெள்ளை நுரைகளுக்குக் கீழாய் Q(5 துவாரகாபுரி புதைந்திருக்கலாம் இன்றும் கடலே வராத ஒரு கற்கிடங்கிலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எமது வேர்கள் கர்ப்பம் தரித்திருப்பதாக அறிகிறேன்
உலகத்தின் விரல்களால் பிரிக்க முடியாத போர்வைக்குக் கீழே துப்பாக்கிச் சூடொன்றில் மகனையிழந்த தாய், கச்சான் விற்றுப் பிழைக்கிறாள்
நாகரீகங்கள் தண்ணிருக்கடியில் புதைவதன் ரகசியம் புரிகிறது
அலெக்சாண்டிரியா, பூம்புகார் துவாரகாபுரி இன்னுமின்னும் பெயர் தெரியாதவைகளோடு ஒருநாள் யாழ்ப்பாணமும்
அகழ்வுகள் மிஞ்சுவது சிலம்போ, குழலோ, வாளோ அன்றி துப்பாக்கி ரவைகளே பின்னர் தலையில்லாமல் மிதக்கும் நிலத்திணிவொன்று
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 

சாரங்கன் அகாலமரணமடைந்தார்
மாவைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் சாரங்கன் 09.09.1980ல் பிறந்தவர். யார் யவித்தியாசாலை யாதெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றின் லைக்கழக மருத்துவபீடத்தில் கல்விகற்றுமருத்துவராகப் பதவிவகித்தவர். எழுதிவரும் இவரது முதலாவது கவிதை, இலங்கை வானொலியில் இதய |ள்ளை சிவகுமாரின் குரலில் 1995ல் ஒலிபரப்பானது. இவரது கவிதைகள் ரகேசரி, மித்திரன், ஞானம், மல்லிகை, நான் (உளவியல் சஞ்சிகை, நாடி வெளியீடு, வைகறை-கனடா, நிலாச்சாரல் .com ஆகியவற்றில் கோட்டமட்டதமிழ்மொழித்திறன் போட்டிகளில் 1996-1998வரைதொடர்ந்து கட்டுரைப்போட்டிகளில் முதற்பரிசுபெற்றவர். வலிகாமம் வடக்கு பிரதேச டுரைப்போட்டியில் முதற்பரிசு 1993, 'தூண்டி’ இதழ்நடாத்திய சிறுகதைப் காக முதற்பரிசு 1998. கம்பன் கழகம் நடாத்திய ‘மகரந்தச் சிறகு கவிதைப் மரணமடைய முன் ஞானத்திற்கு அனுப்பி வைத்த கவிதைகளை இங்கு
- ஆசிரியர்
மாவிலாறு
இந்தப் பிறவியின் இறுதிமணித்துளியை உலர்வலயக் காடொன்றின் காய்ந்துபோன மரவடிக் கட்டைக்குள் ஒளித்து வைத்துள்ளேன்
விழுந்து வெடிக்கும் குண்டுகளில் தப்பி விவரமறியாமல் விளையாடும் சிறுவர்களை வென்று இந்தப் பிறப்பின் இறுதி மணித்துளி என்னைச் சேரும் கணம் அரிதானது
அதற்கு முன் நிறைவேற்ற வேண்டிய சில கடமைகளை நிற்கின்ற நீர்ப்பரப்பின் மேலாக ஆவியாய் உணர்கிறேன்
கடந்த காலத்தின் ஊஞ்சல் கயிறொன்றில் வழியும் தேன் துளியில் மெனமாக விருந்த என் ஓலைக் குடிசை தீப்பிடித்துள்ளது
மூண்டதீயை அணைக்காமல் அருகிலிருக்கும் ஆறு அமைதியாய் நகர்கிறது
குடிசை ஓடையை காதலித்த தாம்?
யார் தடுத்தும் நிற்காமல் அழகான நுரைகளுடன் ஓடுகிறது மாவிலாறு
23

Page 26
“இரவிலிருந்தே உடம்பைப் போட்டு அடித்தது. போலிருந்தது இலட்சுமிக்கு வெளியே மழை அடைமழையாகப் பொழிந்து கொண்டிருந்தது. குளிரைத் தாங்கிக் கொள்வது கஸ்டமாக இருந்தது. அவளுக்கே கஸ்டமென்றால் பாவம் குழந்தைக்கு எப்படி இருக்கும்? மகனைச் சரித்து தன் உடலோடு அணைத்தபடிதானும் சரிந்துபடுத்தாள். பசிமறுபுறம் வயிற்றை விறாண்டியது. இரவும் சாப்பிடாததால் அதிகாலையிலேயே பசி எடுத்தது. பசி எடுத்த குழந்தைக்கு முலைக்காம்பை உவியக் கொடுத்து ஓரளவு அழுகையை நிறுத்தி மறுபடி உறங்க வைத்துவிட்டாள். நிலாவும் கஞ்சியுடன் உறங்கிவிட்டாள்.
அதிகாலைச் சேவல் கூவியது. அதைத் தொடர்ந்து மரங்களிலிருந்த சேவல்கள் ஒவ்வொன்றாக அருண்டு கூவத் தொடங்கியதும் இலட்சுமி கண்விழித்தாள். மழை ஒய்ந்திருந்தது. விடிந்தும் விடியாத இருள் சூழ்ந்த மைமல் பொழுது அவளோடு ஒட்டிக்கிடந்த குழந்தை இப்போது அருகே மல்லாந்து கிடந்தது. சேலையால் போர்த்தி குளிரின் தாக்கத்தை குறைக்க முயன்றாள். மூத்தவள் மறுபுறம் படுத்திருந்தான்.
அதிகாலைக்குளிரில் எழுந்து பனி விலகாத பொழுதில் பனிபடர்ந்த கொழுந்துகளைக் கொய்து கூடையை நிரப்பி துரிதமாக செயற்பட்டவள் தான். எனினும் இந்த நடுவயதிலே உடல்சோர்ந்து முன்னரைப் போல செயற்பட முடியாதவளாகிவிட்டாள். பழைய நினைப்புடன் அதே மன ஒர்மத்துடன் எழ நினைத்தும் உடல் கேட்க மறுத்தது.
இந்த இரண்டு மூன்று வருடங்களில் இலட்சுமி உடல் தளர்ந்து சற்று உருமாறித்தான் போய்விட்டாள். தன் கைகளை மடக்கி தலையணையாக்கிக் கொண்டு படுத்தாள். தேநீர் குடித்தால் தேவலை போலிருந்தது. எழுந்து தண்ணிரைக் கொதிக்க வைப்பதற்கு முடியாமலிருந்தது. கூடவே இப்போது அடுப்பு மூட்டுவதற்கு ஈர விறகுகளுடன் போராட வேண்டும மண்ணெண்ணெய் துளிகூட இல்லை.
மூத்தவள் நிலாமதியை எழுப்பிதேநீர்வைக்கச்சொல்லலாம் பாவம், எட்டேவயதுச் சிறுமியான அவள் குளில் குறண்டிப்போய் படுத்திருக்கிறாள். அவளுக்குபசியாக இருக்கும் அடுத்தசம்பளம் எப்போது கிடைக்கும்? இன்னும் நாலைந்து நாட்கள் சுணங்கும் அதுவரை எப்படிச் சமாளிப்பது? . எனது பசி இருக்கட்டும் பிள்ளைகளின் பசியையாவதுபோக்கவேண்டுமே. கையிலயொன்று, வயித்திலொன்றாக அவளை விட்டுவிட்டுப் போன கருப்பையாவை நினைத்து மனதில் கடிந்துகொண்டாள். ம். அனுசரித்து போயிருக்கலாம். "நான் தான் தெரியாத
24
 

L22ಿಕ್ರಿಣಿ
胃
தனமாக நடந்து விட்டேனோ? முதற் தடவையாக அவளது மனம் கருப்பையாவுக்காக ஏங்கியது. புல்லானாலும் புருஷன்; கல்லானாலும் கணவன் என சகித்துக் கொண்டு போயிருக்கலாமோ?”
“ம். நான் முட்டாள் தான் அவசரக்காரி இல்லைன்னா மனிசன் தெனமும் குடிச்சிட்டு வாரான்னு அவனைத் திட்டித் தீர்த்தனால் தானே விட்டுட்டு ஓடினான்? குடிச்சு அழிச்சாலும், சமயங்களில் அவனோடு சண்டை போட்டாலும் கூட அவளோட அன்பாக, அக்கம் பக்கம் பார்க்காமல் தானே இருந்தான். குடிச்சிட்டு வந்ததற்கு ஏசாது விட்டால் சண்டையே வராது. அசடு வழியச் சிரித்துக் கொண்டு, மிஞ்சி மிஞ்சிப் போனால் கெட்டவார்த்தைகளில் பிதற்றிக் கொண்டிருப்பான். இலட்சுமிக்கு உடம்புக்கு ஏலாத நாளிலும், அவனுக்கு அது வேணும் அவள் மறுத்தாள் சண்டைதான். இப்போ எனக்கும் தேவை போலிருக்கிறதே!
“ம். இந்தத் தோட்டத்தில எந்த ஆம்புளை தான் குடிக்கலை?. இதை நான் பெரிசு படுத்தி அவரோடு சண்டையிட்டு அவரை வெரட்டியிருக்கலாமா? தவறு என்னது தான்'இலட்சுமி மனதுக்குள் மறுதலித்தாள்.
வெளியே மரங்களிலிருந்து சொட்டுச் சொட்டாய் தண்ணிர் சிந்திக் கொண்டிருந்தது. மறுபடி முகட்டை வெறித்துப்பார்த்தாள். லயக்கூரைத்தகரங்கள் ஒட்டைவிழந்து லயக்காம்பிராவில் சில இடங்களை நனைத்திருந்தது. ஏன் எமது வாழ்வு இவ்வளவு நரகமாக இருக்கிறது? என்றாள். இது ஒரு சாபக்கேடுதானோ?
பூழை படிந்திருந்த கண்களைத் துடைத்து, இமைகளை வெட்டி அகலமாக்கிக் கொண்டாள். அக்கம் பக்கத்தில லயங்களிலிருந்தவர்கள் எழுந்துவிட்ட சல சலப்பு கேட்டது உடலில் கணகணப்பை உணர்ந்தாள். எழும்ப முடியவில்லை கருப்பையா இருந்திருந்தால் இவளுக்கு இயலாதவேளைகளில் எழுந்து அடுப்பைப் பற்றவைப்பான். இவள் எழும்பும் போது நீர் கொதித்து விடும். எவ்வளவு ஆறுதலாக இருக்கும்.
இலட்சுமி, எழுந்திருப்பதற்காக கையை ஊன்றப் போனாள். நாரி உழைவெடுத்தது. இந்த இலட்சணத்தில் இன்றுமலை ஏறி வேலை செய்த மாதிரித்தான் என எண்ணிக் கொண்டாள். மற்ற நாட்களில் இந்நேரம் ரொட்டிதட்டி முடித்து கொழுந்தெடுக்க புறப்பட தயாராகிவிடுவாள். இன்று உடம்பு நார் நாராய் போனதாக உணர்ந்தாள். கண்கள் சாம்பல் பூத்ததாய்மயங்கிருந்தன. எழுந்திருக்கலாமா விடலாமா என்று இலட்சுமி விரல்களைச் சொடுக்கிட்டு விட்டு, மூத்தவள் நிலாவை எழுப்பினாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 27
"அடிநிலா. எந்திரடி.விடிஞ்சிட்டு.” நிலாவோ அசையாது மரக்கட்டை போல் படுத்திருந்தாள் இதற்கிடையில் வாசலில் அரவம், தலையை நிமிர்த்தி பார்த்தாள். "ஏய் லெட்சுமி. புறப்படலியா? பெயர் பதியு நேரமாயிடுச்சி."அடுத்த லய ஆராயி குரல்கொடுத்தாள்.
இலட்சுமி வாசல் பக்கம் பார்த்தாள் ஆராயி உரப்பையும் கையுமாக புறப்பட தயாரான நிலையில் நின்றாள். இலட்சுமி கையூன்றி எழுந்து மகளையும் தட்டி எழுப்பினாள். நில சிணுங்கிகொண்டே எழுந்தாள். "அம்மா பசிக்குது'
இதற்கிடையில மெதுவாக எழுந்த இலட்சுமிக்கு தலை சுற்றுவது போலிருந்தது பதறிப்போய் சுவரில் கைகளை பதித்து பின்னர் சுவரிலேயே சாய்ந்தாள். பூமி சுழல்வது போலிருந்தது உடல் ஒரு பக்கம் காய்வது போலவும், கண்கள் இருட்டிக் கொண்டும் வந்தது. தட்டுத் தடுமாறும் அவளைப் பார்த்த ஆராயி'என்னடி செய்யுது?’ என்று கேட்டாள் "தலைபாரமா சுத்திக்கிட்டுவருது வாய் எல்லாம் கசந்து வாந்தி வாராப் போல குமட்டிக்கிட்டு வருதுக்கா" “என்னடி, ஏதாச்சும் வித்தியாசமா..? "இல்லைக்கா. அவரு விட்டுட்டுப் போயி ஒரு வருசமாகப் போகுது. அப்படி இல்லைக்கா.” "அப்படீன்னா யாராவது அமுக்கிட்டாங்களா" "என் கூட இந்த மாதிரி வம்புதும்புக்கு வந்தா நறுக்கிடுவேன். ஆமா.”அவளது உறுதியான பதிலில் ஆராயி ஆடிப்போனாள் "ஒன் மேலே அக்கறையால தானே கேட்டேன். நாம சரியா இருந்தாலும், இந்த ஒலகம் இருக்க விடாம தொந்தரவு பண்ணுமடி தனியா ஒரு பொண்ணு இருந்தா இளசுகள் முதல் கிழடுகள் வரை வீணி வடிக்கும்.சீ.கேடு கெட்ட ஆம்புள ஜன்மமடி.”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 

இலட்சுமி போசாமலிருந்தாள்
" ஓம் புரிசன் இருந்தா பயமில்ல. அவன் எடுபட்டு போயிட்டான்.மேட்டு லயத்தில அந்த ஆட்டக்கார குமரியோட குடித்தனம் நடாத்திறான். அதுசரி, இப்ப ஒன்னால மலைக்கு ஏற முடியுமா?. நான் புறப்படட்டுமா?"
பித்தமாய்தான் இக்கணும் வெறுவயிறு அக்கா.பசியில வயிறும் பிறாண்டுது. பிள்ளைகளுக்கும் பசி நான் வேலக்கு போகாட்டி சம்பளத்தில் பிடிச்சிடுவாங்க. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் இலட்சுமி கூறியதும் ஆராயி பரிதாபத்துடன் நோக்கினாள்.
“எடி ஆத்தா. எங்கிட்ட கேட்டிருக்கலாமே. சித்தே இரு. இந்தா இந்த ரொட்டியைத் தின்னு கஞ்சிஇருந்தா குடி. இல்லாட்டி நான் கொண்டாந்து தரவா?" வறுமையிலும் பங்கிட்டுண்ணும் ஆராயியைப் பார்க்க மனது சிலிர்த்தது இலட்சுமிக்கு,
"அம்மா பசிக்கி.பசிக்குது” என நிலா அவளது சேலைத்தலைப்பை பிடித்தபடி சிணுங்கினாள். ஆராயி தந்த ரொட்டியில் பாதியை அவளுக்குக் கொடுத்து விட்டு ஒத்தாப்புக்கு சென்று கரியால் பல்துலக்கி வாயைக் கொப்பளித்து விட்டு வந்த இலட்சுமிக்கு திக் என்றது நிலா தனது பாதியை திண்டுவிட்டு இவளது பாதி ரொட்டியையும் தின்ன ஆரம்பித்திருந்தாள்.
ஓடிவந்து இலட்சுமிநிலாவிடமிருந்த ரொட்டித் துண்டைப் பறித்தெடுத்தாள். " போடி. ஒங்கப்பனைப் போல எப்பவும் பெரிய வயிறடி. அம்மாவைப்பற்றி சித்தேனும் யோசிச்சியா?. ரொட்டி தின்னாத்தான் தம்பிப் பாப்பாவுக்கு பால் வரும். அம்மாவும் பசியடங்கி மலைக்கு கொழுந்து பறிக்கப் போகலாம்.”
ఫ్రాకికీ ;2 = لہجے میر. டிகாழும்பு தமிழி?"
- 25

Page 28
தாய் பறித்தெடுத்த ரொட்டியை வாயூறப் பார்த்தபடி ஏக்கத்துடன் காட்ட இல்லியாம்மா?’ என்றால் நிலா. “இல்லையடி. வெறும் சாயா குடிப்பியா?. அதுக்கும் சுடுதண்ணியில்ல. கஞ்சிஇருக்கு தர்ரேன்.”என்றபடி ஒரு கையிலிருந்த ரொட்டியை கடித்துண்டபடி மறுகையால் மண்பானையை அருகே நகர்த்தினாள். பானைக்குள்கையைப் போட்டு துளவியபோது உள்ளே அதிக சோற்றுப்பருக்கைகள் இருக்கவில்லை. திடீரென்று மீண்டும் தலைச் சுற்றி, காதை அடைத்தது. உண்டரொட்டியைசத்தியெடுத்துவிட்டால் வயிறு மீண்டும் வெறு வயிறாகி கொதிக்கும் ஒரு வாறு அடக்கிக் கொண்டாள்.
"அம்மா. பசிக்குது. கஞ்சி. கஞ்சி.” மறுபடி நிலா கூப்பாடு போட்டாள். இலட்சுமி பேணிகளில் எடுத்துகஞ்சிை பாதிபாதிஊற்றினாள்.
“எனக்கு எப்பன் ஊத்துறே. ஓம் பேணியும் பெரிசு.” என அடம்பிடித்த நிலாவின் முதுகில் ஒன்று போட்டு வைத்தாள். "ஐயோ அம்மா என்னக் கொல்லுறாங்க மீண்டும் கூச்சல் போட்ட நிலாவை கடிந்தபடி "போடி போ ஒனக்கு கஞ்சியுமில்ல கிஞ்சியுமில்ல." என்று கூறிவிட்டு மடமட என்று இருபேணிகளிலுமிருந்த கஞ்சியை குடித்தாள் இலட்சுமி, வயிற்றுக்கொதி இப்போதுதான் சற்றுதணிவதாக தெரிந்தது. 9.
இதற்கிடையில “ கஞ்சி.கஞ்சி. பசிக்கி." என்று ஓலமிட்டு அழுதாள் நிலா. இப்போது அவளைப் பார்க்க இலட்சுமியின் பெற்ற மனம் துடித்தது. "பாவம்பிள்ளை”என நினைத்துக்கொண்டாள்.
"அம்மா வேலைக்குபோகணும். அந்திக்கு திரும்பிவந்து கடையிலகடனா அரிசிவாங்கி சோச்சகாச்சிதாறேன்"
நிலாவைத்தேற்றிவிட்டுகுழந்தையையும்தூக்கிகொண்டு புறப்பட்டாள் இலட்சுமி மடுவத்தில் குழந்தையை விட்டு விட்டு அவள்பெயர்பதியப்போனபோதுகண்டக்கரய்யாசீறிவிழுந்தார்." “எல்லாரும்வேலைக்குப்போயாச்சி.இப்பவாவாறே?
"இல்லைய்யா.சொகமில்ல.விடிய காத்தாலஎழும்பவும் முடியல்ல."என கெஞ்சினாள்.
22ம்பக்கத்தொடர்ச்சி பசிஇல்லையே?’வெளிக்கிடுங்கோவென்,கெதியாய் வீட்டை போவம்”
செல்லையா அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டான். மாட்டின்வெண்டயம்மறுபடிபனந்தோப்புகளில்எதிரொலித்தது.
வல்லை வெளி இந்த அகன்ற பூமிப்பரப்பின் மகிமையை அறிந்ததுபோல், இதுகாறும் வேகமாக ஓடிவந்த மாடு, தன் கதியைக் குறைத்து அடிமேல் அடி எடுத்துவைக்க ஆரம்பித்தது.
பேய்க்காற்றுஹோ'என்று சுழன்று அடித்தது. வானம் கவிந்து, நாற்புறமும் நிலத்தைக் கவ்விக்கொண்டிருந்தது. வெளியின் நடுவே தேங்கி நின்ற நீரோடைஒருஅரக்கணதுபிரமாண்டமானமார்பில் அணியப்பட்ட மரகதச் சரடுபோல் ஜ்வலித்தது. வான முகட்டின் உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த பளிங்குத் தகடுபோன்ற சந்திரதீபம் கீழே விழுந்துவிட எத்தனிப்பதுபோல் கனிந்து பிரகாசித்தது.
சின்ன மனிதர்களையும் பெரிய, எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்த வெளிப்பிரதேசத்தில்தான் “மணல்திடலின் ஜீவநாடி நவநாகரீக முறைகளால் நலிந்து
26

“சரி...சரி. கிளாக்கரய்யா வீட்டை கூட்டித் துடைக்கணும். சமயலும் செய்யனும். அங்கிட்டு போ. பதியுறேன்.”அவரது பதில் அவளுக்கு ஆறுதல் அளித்தது.
கிளாக்கரய்யாவின் விடுதிக்கு போனபோது அவர் வெளியே பூந்தோட்டத்தில் நின்றிருந்தார். “இலட்சுமியா போ. போயி எல்லாம் துப்பரவாக்கி கழுவு.” என்றார். அவள் குசினிக்குள் சென்றபோது பழைய சாதம் இருந்தது. வதவத என்று சாப்பிட்டாள். உணவுஉள்ளிறங்கியதும் வயிறு அழுதது. நிலா நினைவு வந்தது. "பாவம், கஞ்சிய கொடுத்திருக்கலாம். பள்ளிக் கூடத்தில பிஸ்கட் கொடுக்க பத்து மணியாகும். பிள்ளை பசிதாங்கமாட்டாள்."என பலவாறு எண்ணியபடி துரிதமாக வேலைகளைச் செய்தாள் இலட்சுமி. “மத்தியானச் சாப்பாடு பிரச்சனையும் தீர்ந்தது. சாப்பிடலாம்”
வேலைக்குப் போன கிளாக்கரய்யாமதியம் திரும்பிவந்த போது சமையல் வேலை அனைத்தையும் முடித்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தாள் இலட்சுமி. ஐயா வந்ததைக் கண்டதும் குளியலை பாதியில் நிறுத்திவிட்டு வந்து உணவு வகைகளை எடுத்து வைத்தாள்.
சாப்பிட வந்த கிளக்கரய்யா"எடி லெச்சுமி. நீஇப்ப நல்ல வடிவாயிட்டாயடி.எங்கே ஒம்புரிசன்,திரும்பிவந்தானா?”என்று கேட்டபடி அவளை உற்று பார்த்தார். இலட்சுமிக்கு அவரது உள்நோக்கம் புரிவது போலிருந்தது. மனதுக்குள் கறுவிக் கொண்டாள்,"கிழடுக்குஇளம்பொம்புளஒடம்புதேவைப்படுதோ?”
'நீசாப்பிட்டியா?. சாப்பிடு. மிச்சமிருந்தா வீட்டுக்கும் எடுத்துப் போ.” ஆடு நனையுதென்னு ஓநாய் அழுவது இலட்சுமிக்குப் புரிந்தது. கிளாக்கரய்யாவை அனுசரிச்சுப் போனால் சில நன்மைகள் கிடைக்கும்தான் என ஒரு கணம் எண்ணியவள், மறுகணமே தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். “பொம்புளக்குமானம் தான் பெரிசு’
சாப்பிட்டு முடிந்த கிளாக்கர் அவளை நெருங்கி வந்த போது அவள் பத்திரகாளியானாள். “இந்த வேல மட்டும் எங்கிட்டவெச்சிக்காதீங்க."ஆமா.”சாப்பிடாமலே விடுவிடு என புறப்பட்டு செல்லும் இலட்சுமியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கிளாக்கர்.
படாமல், இன்றும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக்கொண்டிருக்கிறது.
எங்கோ வெகுதொலைவில், நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பொட்டிட்டது போன்ற ஒரு ஒளிதோன்றி, கொஞ்சம் கொஞ்சமாக ரோட்டை நோக்கி நகர்ந்து வந்தது. செல்லையா அதைக் கண்டதும், அதை நோக்கிக் காறியுழிந்தான். நல்லம்மா "அது என்ன” என்று கேட்டாள். "ஆரோ மீன்பிடிகாரர் சூள் கொண்டு போறான்கள்” என்று பொய் சொல்லி, செல்லையா மாட்டின்வாலைப் பிடித்து முறுக்கினான்.
அந்த வெளிச்சம் ரோட்டைக் கடந்து வேகமாக மற்றப் பக்கத்தில் போய்பக்என்று அவிந்தது.
செல்லையாவின் மனம் வல்லை வெளிபோல் விரிந்தது, மெய் மறந்து ஒரு மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. தன் குரலை எழுப்பி “ஞானகுமாரி" என்ற தேவகாந்தாரி ராகப்பாட்டைப் பாடினான். அவனுக்குப்பசி இல்லை, தாகம் இல்லை, தூக்கம் இல்லை, எத்தனை கொள்ளி வாய்ப் பிசாசுகள் சேர்ந்தும் அவனை என்னசெய்துவிட முடியும்?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 29
ஆழிசூழ் இலங்கையில்நாம் பிறந்த தொன்றே அதியுயர்ந்த மனிதகுலப் பேற தாகும் வாழுகின்ற ஒவ்வொருவர் தமக்கும் இஃது
வழிவழியாய் வாழ்ந்தசொந்த மண்ண தாகும் யாழொலியை விஞ்சுதமிழ் மொழியும் இங்கு
சேர்ந்தொன்றிச் சிங்களமும் பன்னு றாண்டாய் தோழமையோ டரசோச்சுந் தீவு மாகும்
திக்கெட்டும் புகழ்கொண்ட துவீப மாகும்
பல்லினத்தோர் வாழுகின்ற பூமி இங்கு
பிறந்தவர்கள் அனைவருமே ஒருதாய் மக்கள் எல்லோர்க்கும் உரிமையொன்றாம் என்றிட் டாலே இனவாத நிலைமாறும் ஏற்கா ருண்டோ எல்லையிட்டுத் தனித்தனியாய் ஆட்சி மாற்றம் ஏற்றாலும் நாடொன்றே இங்கு வாழ்வோர் தொல்லையற வாழ்வதெனில் நிலபு லன்கள்
தேவையுள்ளோர் தமக்காக வேண்டு மாமே.
இந்துமுஸ்லிம் சிங்களவர் பறங்கி யர்கள்
என இனத்தால் நான்காகி மதத்தி னாலே இந்துஇஸ்லாம் பெளத்தகிறிஸ்த் தோர்க ளென்றே இனங்கான நான்காகி வாழ்ந்திட்டாலும் சொந்தம்நாம் அனைவருமே இந்நாட் டின்பால்
தேவைகளும் உரிமைகளும் சமமா யானோர் சொந்மொவ்வோர் அங்குலமும் இங்குள் ளோர்க்கே
சேர்ந்தொன்றிச் சமவுரிமை கொண்டு வாழ்வோம்
புரவலர்புத்தகப்பூங்க முன்பொருபோதும் நூல்வெளியிடாத எழுத் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் ஐ அணிந்துரை ஆசிரியர்பற்றியவிபரம், இரண * மொழி ஆகியவற்றை இணைத்துகீழ்க்காணு மூவர்ண அட்டைப்படஒவியத்தையும் சேர்த்து அனுப்பலாம்.
எழுத்தாளருக்கு 300 பிரதிகள் இலவசமாக வழங்கப்படுவே
எழுத்தாளருக்கே வழங்கப்படும். இலங்கை எழுத்தாளர்கள் யா ஏற்றுக்கொள்ளப்படாத பிரதிகள் எழுத்தாளருக்குத்திருப்பி அனுப்பப்படு தொடர்பு முகவரி : தேர்வுக்குழு, புரவலர் புத்தகப் பூங்கா, !
தொ. பேசி: 077 4161616, 078 1 -- -- -- ܠ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 

வழிவழியாய் வந்ததெனச் சொந்தம் பேசும்
வரலாற்றுப் பின்னணிக்கு இன்று நாட்டில் வழியில்லை சனப்பெருக்கம் உலக மெங்கும் வரையற்றுப் பெருகுவது கண்கூ டாகும் வழியில்லை வேறுநிலச் சுவந்தார் தம்மின்
வேண்டாத நிலங்களினைப் பகிர்ந்த விக்கும் வழிவந்தே யாகிடுதல் வேண்டும் நாட்டை
வழிநடத்தும் ஆட்சிபொறுப் பேற்க வேண்டும்
வந்தவர்கள் என்றுமலை நாட்டார் தம்மை
வாதிப்பதால்என்ன நேர்மை உண்டாம் வந்தவரே அனைவரும்நாம் பின்நோக் குங்கால்
வரலாறே பதில்கூறும் பிணக்கு நாட்டில் வந்ததெலாம் பெரும்பான்மை ஒன்றே எல்லா
வரங்களுமே பெறவேண்டும் என்பதாற்றான் வந்தமைதி சூழநாட்டி லெலார்க்கும் இன்றெ
வகுத்துநிலம் அளித்திடவும் வேண்டும் என்போம்.
கொடுப்பவர்க்குக் கொடுப்பதனைக் கொடுத்துவிட்டால்
கேடுவெவ்வேறுருவத்தில் உதயமாகா அடித்தெடுக்கும் நிலைதோன்றக் கருவாயாகும் அனைத்தும்நம் சொந்தமென அபகரித்தல் பிடித்தமுயல் தமக்குமூன்றே கால்களென்று
பிடிவாதம் பேசுவதால் பயனுண்டாமோ மடத்தலையில் கொக்கணையக் காத்து நிற்க
மடையர்களோ மற்றவர்கள் சிந்திப் பாரோ?
எதிர்காலச் சந்ததியென் றெலார்க்கும் உண்டாம்
இனமதத்தால் வேறுண்டோர் என்றிட் டாலும் வதிபுலத்தால் ஒன்றென்ற வரலாற் றாலே
வேண்டுமெதிர் காலத்தில் கூடி வாழும் பொதுவிதிக்குள் ஒன்றாதல் புரிந்து ணர்வின்
பக்குவமும் வேண்டுமதில் தூய்மை வேண்டும் மதிகொள்ளின் இவைநாடு ஏற்றம் காண
மற்றொன்றும் வேண்டாவே வாழி நாடே
ாமாதம் ஒருநூல் வெளியீட்டுத்திட்டம்
தாளர்களின் நூல்கள் இத்திட்டத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன. எழுத்தாளர்கள் தமது படைப்பின் இரண்டு பிரதிகளோடு என்னுரை ண்டுபுகைப்படங்கள், முன்னர் நூல்கள் வெளியிடவில்லை என்ற உறுதி னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். எழுத்தாளர் விரும்பினால்
தாடு, வெளியீட்டு விழா நடத்தி அதில் கிடைக்கும் பணம் முழுவதும் பேரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் நூல் ஆக்கத்திற்கு }ம். இல 25, அவ்வல் சாவியா ரோட் கொழும்பு - 14.
5318503
27.

Page 30
அடைக்கப்பட்ட நுண்ணறை இரும்புத்திரை திறப்பு இல்லாத ஆமைப்பூட்டு கொட்டும் சூடு
நான்கு சுவர்களுக்குள்ளும் மேலும் கீழும் இருசுவர்கள் தனிமை, வெறுந்தரை நுளம்புகள் ஈக்கள் அங்குவரக் கட்டுப்பாடு இல்லை. பெறுமதியில்லா உயிர்கள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் படுகுழி பாம்புக்கு புற்றுக்குள் சுதந்திரம் இருக்கிறது. எறும்புக்கு பொந்துக்குள் உணவு சேமிக்க வசதி கிடக்கிறது. ஒளிந்துவாழும் எலிக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கிறது.
 

அணுக்குண்டுக்ளின் எஜமான் >:s அணுஉலைகளின் உரிமையாளன் அண்டப் புளுகன் அமெரிக்காவின் முதல் அரக்கனை மட்டும் அங்கு எப்போதும் காண்கிறேன் என் அறைக்குள் பாவம் சுவரில் தொங்குகிறான். உருண்ட உலகம் திரண்டு வந்து என்மேல் உருளுவது போலொரு பிரமை பிறந்தமேனி நானோ திறந்தமேனி பிள்ளைபிறந்தவுடன் முதலில் மூடும்பகுதி ஊர்க்குருவியொன்றும் என்னைப்பார்த்து வெட்கிக் கொண்டது. சுவர்ப்பல்லிகூட வேறிடம் தாவிக்கொண்டது. வெள்ளைநிற நாய்கள்மட்டும் ܢ என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. விடியும் பொழுதுகளெல்லாம் iş இரவாக இருக்கக்கூடாதா என்கிறது என்மனம் இரவிலும் வெளிச்சம்போட்டு என்மானம் வாங்கப்பட்டது. இன்னும் தொழவில்லை குனிந்து என் அறைக்குள் இடமில்லை.

Page 31
பினம் மட்டும் அழுதழுது தொழுகிறது. ಹ್ಯಾbomb நீரில் வழு எடுத்த உடல்
ழுச்செய்ய நீரின்றித் தவிப்பு தயமுமுக்கு மண்ணுமில்லை. எல்லாம் துப்பாக்கிச் சன்னங்கள் இயற்கைக் கடன்களுக்கும் கணநேரந்தான் சுத்தமாக்கவும் தண்ணில்லை ஐயறிவு ஜீவனுக்குள்ள இடமது பூனைகூட மண்தோண்டிக் கழிவு புதைக்கும் சோற்றுக்குத் தவிடு ஒருநாள் கறிக்குக் கணக்கம் புழு தகரத்திலடைக்கப்பட்ட பன்றியின் பிட்டச்சூப்பு வாந்தியின் மிகைப்புத்தான் மீதி கழுகுக்கண்கள் என்னை அம்பாகத் தைக்கும் மனிதப் பார்வைகள் அங்கு இல்லை எல்லாம் வெறிகொண்ட விலங்குகள் மறைந்த சூரியனும் என்னைச் சுடுகிறது எண்ணெயில்லை எரிபொருளுமில்லை என்மனம் மட்டும் எரிகிறது. ܗܡ ஆணியின்றிச் சுவரில் அடிக்கப்படுகிறேன் சொல்வார்த்தைகளால் நிந்தனையின் உச்சங்காண்கிறேன்.
என்செம்மேனியில் இடைக்கிடையில் கருமை நிறப்புள்ளிகள்
உதட்டிலும் ஊறிப்போன நிறைபுண்கள், அது அராஜகத்தின் அழுத்தம் குடித்த குறைச்சிகரட் சுட்ட தழும்புகள், ஒன்றுஆற மற்றொன்று பழுக்கிறது
க்களின் பகல்நேர உணவுகள் அவை,
என்மர்ம உறுப்புகள் வீங்கிப்புடைத்திருக்கிறது உதைபட்டு,
ன்ே கழுத்து நரம்புகள் அழுக்குப்படிந்த பாதணிகள்கண்டு பதறும் ஏறி மிதிப்பான் கஜருல்அஸ்வத் கல்லை எத்தனையோ தடவைகள் முத்தமிட்ட நான்
 

ராக் காட்டின் அழகிரைப் அபூகர் வதைமுகாம்களிலும் உம்முகள் பூக சிறைகளிலும் கியூபாவின் குவான்னோமா
சிறையிலும் சித்திரவை GöIGITATGGTGTGGING குரலாக ஒலிக்கிறது இக்கவிதை
கழுத்தேறிமிதித்த பாதணிக்குள் தினமும் முத்தமிடுகி புனித குர்ஆன் மலக்குழிக்குள் சுருட்டி வீசக்காண்கிறேன். கால்மிதிக்குள்போட்டு மிதிக்கக் காண்கிறேன். இறைவேதம் இகழப்படக் காண்கிறேன் இத்தனைக்கும் நான் கலங்கவில்லை, அழுததில்லை இறைவேதநிந்திப்புக்குமட்டும் கண்ணிவிட்டழுகிறேன். என்னிதயத்தின் கண்ணிர் குருதியாகச் சிந்தக் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் அல்லாஹற்விடம் வேண்டிக்கொள்கிறேன்.
றேன்

Page 32
*ஜீவா. பிளிஸ். கொஞ்ச நாளைக்கு அழுகிற
கதைகளை எல்லாம் விட்டுட்டு நல்ல கதைகளாக எழுதடா.
தொலைபேசியில் மறுமுனையில் செவ்வந்தி - யாழ்ப்பாணத்தில் இருந்து.
“நல்ல கதைகள் எண்டு நீ எதைச் சொல்லுறாய்” “கொஞ்சம் சிரிக்கிற கதைகளாய்.” “சிரிக்கிற கதைகள்தான் நல்ல கதைகளா.” "ஜீவா. பி(B) ஒனஸ்ட். என்னோடை இலக்கியம் கதைக்காதை. சண்டைகள். அழுகைகள். கவலைகள். களைச்சுப் போனமடா. உங்களுக்கு என்ன? சொகுசா இருந்து கொண்டு எழுதுகிறியள். அதே சொகுசோடைதான் பிணங்களை ரீவியிலைதான் பார்த்தனிங்கள். நாங்கள் வேலைக்கு போகும் போதும் வரும் போதும் அதுகளைத் தாண்டிக் கொண்டு போயிருக்கிறம். திரும்பி வரும் பொழுதும் அதே பிணங்களைத் தாண்டிக் கொண்டு வந்திருக்கிறம். அப்ப மணம் கொஞ்சம் கூடி. இலையான்களும் அதிகளவில் மொய்த்திருக்கும். உனக்குத் தெரியுமா எத்தினை நாட்கள் நாங்கள் அடுப்பிலை கூட்டி வைச்ச கறியளை இறக்காமலே ஒடியிருக்கிறம். திரும்பி வந்து பார்க்கேக்கை நாய்கள் அதைத் திண்டிருக்கும். காணுமடா ஜிவா நாங்கள் பட்ட பாடுகள். இப்ப கோட்டோடையும் ரையோடையும் வந்து நல்லூருக்கு முன்னாலை நிண்டு படம் பிடிச்சுக் கொண்டு போகிறியள்.” செவ்வந்தி டெலிபோனில் பொரிந்து தள்ளினாள். நான் மெளனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன் - இவ்வளவு நாளும் இலங்கைப் போருக்கு மெளனச்சாட்சியாய் இருந்தது போல. -
செவ்வந்தி என் முதல் ரசிகை. கூட்டாஞ் சோறு ஆக்கி விளையாடியது தொடக்கம் அவள் என் நண்பி. இப்போ அவள்
யாழ்பல்கலைக்கழகத்தில். நான் டென்மார்க் நகரசபையில்.
அவளுடன் கதைத்து முடிந்தது தொடக்கம் அவள் சொன்ன விடயங்கள் எனக்குள் அசைபோட்டுக் கொண்டு இருந்தன.
இந்த சம்மருக்கு எந்த பிளைட்டிலும் இலங்கைக்கு நேரடி ரிக்கற் எடுப்பது சுலபமில்லை.மௌன சாட்சியாயும். மெளனப் பங்காளிகளாகவும். மெளனப் போராளிகளாய் இருந்த அனைவரும் யாழ்ப்பாணம் போகிறார்கள்.
சிங்கள யாத்திரிகர்களின் பஸ்களும், வெளிநாட்டுத் தமிழரின் பஸ்களும் தான் இப்போது அதிகமாக ஏ9 பாதையை
30
 

நிறைத்திருக்காம் என போய் வந்த என் நண்பர்கள் சொல்லக் கேள்வி.
முருகண்டியில் பழையபடி கற்பூர வாசனை பரவத் தொடங்கீட்டுதாம்.
நல்லூர் வீதிகளில் போதியளவு கித்துள் பனங்கட்டி வாங்கலாமாம். வீதியோரம் எல்லாம் லாபாய். லாபாய் என்ற சத்தம் தானாம்.
இருக்கட்டுமே. முடிந்தளவில் சந்தோஷமாய் இருக்கட்டுமே. எல்லோரும் சந்தோஷமாய் இருக்கட்டுமே. முட்டி மோதி 兖 விடாது சந்தோஷமாய் இருக்கட்டுமே.
செவ்வந்தியின் ஆசைக்கு அவளின் அகராதியில் ஒரு நல்ல கதைதான் எழுதிப் பார்ப்போமே.
"எல்லோரும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்” செவ்வந்தி சொல்லுமாப்போல் இருந்தது.
முயன்றுதான் பார்ப்போமே. கவலை வேண்டாம். கண்ணிர் வேண்டாம். போர் வேண்டாம்.
அரசியல் எப்படியிருக்கும்? அரசியல் என்றால் சந்தோஷமா?. கவலையா?. துரோகமா?. ஏமாற்றா?. உண்மையா?. பொய்யா?. புத்திசாதுரியமா?
1. சந்தோஷமான 2. நல்ல 3. குடும்ப 4 அரசியல் கதை ஒன்று பண்ணித்தான் பார்ப்போமே.
இடம் டென்மார்க். - பெரியதும் சிறியதுமான 406 தீவுகளில் பெரிதும் மக்கள் வசிப்பது 73 தீவுகளில் தான். மிகுதிகள் அதிகமாக பருத்திதீவுகள் போன்றவை. சம்மரில் மட்டும் தம் சொந்தப் படகுகளில் போய் வருவார்கள் - குளிர்ந்த பியரும் வாட்டும் இறைச்சியும் எடுத்துக் கொண்டு தங்கள் சொந்த மனைவிமாருடன் அல்லது கள்ளக் காதலிகளுடன்.
இந்த 73 தீவுகளிலும் அதிகமான மக்களைக் கொண்ட3 தீவுகளில் தான் கல்தோன்றா மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய எங்கள் மூத்த குடிகள் 80-90களில் அகதிகளாய் வந்து தற்சமயம் டெனிஷ்குடியுரிமை உடையவர்களாக மாறி. சராசரி டெனிஷ்மக்களை விட வசதியாக வாழுகின்றார்கள்.
அந்தக் காலத்தில் வந்தவர்களில் அதிகம் பேர், “நான் தான் துரையப்பாவைச் சுட்டனான். நான்தான் துரையப்பாவைச் சுட்டனனான்’ என்னும் பொழுது ஒரு பொலிஸ் அதிகாரி கேட்டாராம் உங்கள் நாட்டில் எத்தனை துரையப்பாக்கள் இருக்கின்றார்கள் என்று.
அவ்வாறே இப்போ வருகிறவர்களும் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்ப தங்கள் கேஸ்களை சிறுகதைகளாக, நாவல்களாக, குறுநாவல்களாக, தொடராக கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் இந்த நாவலாசிரியர்களுக்கு சில வேளை புவியியல் தெரியாததால் வழக்கே தள்ளுபடியாகிவிடுவதும் உண்டு. முள்ளிவாய்க்காலில் இருந்து படகில் முப்பது நிமிடத்தில் மண்டபம் காம்புக்கு வந்தேன் என்று சொல்லுபவரைதான் எடுத்து என்ன செய்வது என்று டென்மார்க் அதிகமாகவே யோசிக்கத் தொடங்கி விட்டது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 33
எது எப்படியோ ஏழு ஏழு சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு இரண்டு வரிகளில் “பொய்மையும் நன்மை பயக்குமெனில்” என்றதும் போல மிஸிஸ். வாசுகியின் கணவனார் சொல்லி விட்டுப் போனது எங்கள் இனத்துக்கு எவ்வளவோ வாய்த்துத்தான் விட்டது.
மேலாக. 'உன்ரை மந்தையிலை எத்தனை ஆடு இருக்கு? என்ரை மந்தையிலை இத்தனை ஆடு இருக்கு” என்னுமாப் போல. 'நீ எத்தனை அகதியை வைத்திருக்கிறாய் நான் இத்தனை அகதியை வைத்து இருக்கின்றேன்” என வட்டமேஜையைச் சுற்றி இருந்து கொண்டு சுங்கானையும் இழுத்துக் கொண்டு ஐரோப்பா நாடுகள் பேரம் பேச வெளிக்கிட்டதும். ஒரு கையால் அகதிகளை ஏந்திக் கொண்டு மறு கையால் ஆயுதங்களை ஐரோப்பா நாடுகள் விற்கப் புறப்பட்டதும் தான். கொழும்பே தெரியாத எத்தனையோ பேர் கொப்பனேகனுக்கு வர வழி வகுத்தது.
80களில் பதினாயிரம் வைத்திருந்த எங்களையும் இங்கு வந்த எங்கள் பிள்ளைகளையும் ஊருக்குப் போன பொழுதும் எங்கள் உறவுகளே கைகட்டிக் கொண்டு கொஞ்சம் எட்டவாக மரியாதையாக கதைப்பதற்கும் காரணம் இந்த நாடுகள் கொடுத்த பணம் தானே?
எதுவாயினும் அடுத்ததொரு தரப்படுத்தல் ஐரோப்பாவில் என்றால் அது எங்கள் ஆசிய நாட்டுப் பிள்ளைகளால் என்னுமளவிற்கு இலங்கை, வியட்னாம், பாக்கிஸ்தான் பிள்ளைகளால் பல்கலைக்கழகங்கள் நிரம்பிவழிகின்றன.
எங்கள் பிள்ளைகளுக்கு பின்னால் டெனிஸ் நேர்ஸ்மார் செல்ல சந்தோஷமாயும் இருக்கிறது-இனத்துவேஷம் இங்கும் பகிரங்கமாக வெளித்தோன்றி விடுமோ என பயமாயும் இருக்கிறது.
அதோ. வெள்ளைக் கோட்டுடன் கழுத்தில் ஸ்ரெதஸ்கோப் மாட்டிக் கொண்டு போகிறாளே ஒரு பெண். அவளில் இருந்து தான் செவ்வந்திக்கான என் கதை ஆரம்பிக்கின்றது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 

பெண்-பெயர் மாலதி வயது 25 - மருத்துவர். பயிற்சிக் காலம் முடிந்து ஓராண்டு.
ஆண் - பெயர் மயூரன் வயது 28 - கணணித்துறையில் எஞ்ஜினியர்.
இருவரும் எங்கோ ஆளை ஆளை சந்தித்து இருவரும் விரும்பி விட்டார்கள்.
இருவருக்கும் நல்ல தொழில், நல்ல வருமானம், மாப்பிள்ளையின் தாய் தந்தையரும் சகோதரங்களும் டென்மார்க்கில் தான் - அவ்வாறே பெண்ணின் தாய் தகப்பன் சகோதரங்களும்
உண்மையில் இரு பகுதிக்கும் காசு என்று எந்த தேவையும் இருக்கவில்லை.
உழைப்பு இருக்குதோ இல்லையோ. வாழ்வில் நிம்மதி இருக்குதோ இல்லையோ. மாத முடிவில் வங்கிக் கணக்கில் பணம் நிரம்பும். கிறடிற் காட்டில் அதை உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் உருவி இழுத்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் திருமணம் என்று வந்த பொழுது மாப்பிள்ளை பகுதி எக்கச்சக்கமான சீதனம் கேட்டார்கள். அல்லது அவர்கள் குடும்பத்திற்கு இனம் சனம் பகுதியில் மரியாதை இல்லையாம். மகனுக்கு வேறு ஏதாவது குறைபாடு இருக்கு எண்டு சனம் குசுகுசுக்குமாம்.
வழமைபோல் பெற்றோருக்கு முன் மாப்பிள்ளைப் பையன் மெளனம். என்னவென்றுதான் இந்த மாப்பிள்ளைப் பையன்களுக்கு சீதனம் பேசும் பொழுது மட்டும் அப்பா அம்மாவை எதிர்த்து எதையும் செய்ய மாட்டேன் என்ற அடக்க ஒடுக்கம் வந்து விடுகிறதோ தெரியாது. அது கொக்குவிலில் என்றாலும் சரி. கோயம்புத்தூரில் என்றாலும் சரி. கொப்பனேகளில் என்றாலும் சரி.
பெண் வீட்டார்கள் முழித்தார்கள். டென்மார்க்கில் வீடு வாசல். நகை. நட்டு. என்றது போக வெள்ளவத்தையில் பிளட் வேணுமாம் - தங்களுக்காக இல்லையாம் - பிள்ளைகள் கொழும்புக்கு போனால் - உரிமையோடு தங்கிவரலாம். பிரச்சினைகள் தீர்ந்தபடியால் இனி % அடிக்கடி கொழும்புக்கு போய் வரலாமாம் - மாப்பிள்ளையின் தாயார் உறுதியாக சொல்லிவிட்டா.
நாள் கிட்டக் கிட்ட மாப்பிள்ளை வீட்டில் இருந்து கொழும்பில் இருந்தும் யாரோ நகைக்கடைக்காரர் சம்மந்தம் பேசி வருகினமாம் என பெண்வீட்டாரின் காதுபட கதைக்கத் தொடங்கி விட்டார்கள்.
நாள் குறித்த திருமணம் தள்ளிப் போகக்கூடாது என்பது GL6GT65 'LIT if யாவரினதும் பிரார்த்தனையாக இருந்தது.
ஆனால் பணம் வேண்டுமே? அவர்கள் இருந்த நகரத்தில் அன்றைய காலை, மதிய, மாலைப் பதிப்புகள் அனைத்தும் இந்தச் செய்திதான். கலியாணம் நடக்குமா
31

Page 34
இல்லையா என்று ஒரு பட்டிமன்றமே அன்ரிமார்களுக்கு இடையில் நடந்து கொண்டேயிருந்தது. வெங்காயம் உரிக்கையில் கண் எரிந்தால் கூட புறங்கையால் கண்ணைக் கசக்கிவிட்டு பக்கத்து வீட்டுக்கு டெலிபோன் பாயும்- கடைசி நேர களவிபரம் அறிவதற்கு அவசரத்திற்கு ஒரு வீட்டிற்கும் ஒரு டெலிபோன் எடுக்க ஏலாது. எல்லாத் தொலைபேசியும் என்கேஜ்ஜாக இருக்கும். புருஷன்மார் வேலையால் வந்ததும் அவர்களுக்கு தேத்தண்ணீர் கிடைத்ததோ இல்லையோ நொறுக்குத்தின்பண்டங்கள் போதுமாய் கிடைத்தது.
திருமணநாளிற்கு ஒரு கிழமைக்கு முதல்நாள். மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீதனத்தொகையையுடன் மாப்பிள்ளையின் தந்தையாருக்கு பட்டு வேட்டியும் தாயாருக்கு விலை உயர்ந்த சாமுத்திரிகா பட்டுச்சேலையும் மைத்துனர் மைத்துணிச்சினிகளுக்கு அழகிய கைக்கடிகாரமும் அன்பளிப்பாக கொடுத்தார்கள்.
மேலாக வெள்ளவத்தையில் கட்டி முடிக்கப்பட்டு முடியும் தருவாயில் இருந்த கட்டிடத்தின் உறுதியும் வெள்ளைக் காகிதக் கவருக்குள் வைக்கப்பட்டிருந்தது. அதில் அரச முத்திரையும் பதிந்து இருந்தது.
முதன்முதலாக மருமகளைக் கட்டிமாமியார் முத்தமிட்டார். எங்கள் வீட்டுக்கு வந்த மஹாக்ஷமி என பாராட்டினார். மாமானார் வழக்கம் போல மனைவி முன் அடக்க ஒடுக்கமாக சிரித்தபடி நின்றார்.
ஊருக்குத்தான் கொஞ்சம் - சப்பென்று போய்விட்டதுஇனி எந்த வீட்டில் எப்போ எள்ளும் கொள்ளும் வெடிப்பதோ. அதுவரை சின்னத்திரைத் தொடர்கள்தான் தஞ்சம்.
திருமணமும் சந்தோஷமாக நிறைவேறியது. பெண்ணும் கணவன் வீட்டுடன் வந்து விட்டாள். வாழ்க்கை வழமைக்குத் திரும்பி விட்டது. மாமியாரே மகனுக்கும்மருமகளுக்கும் காலையில் எழுந்து சாப்பாடுகட்டி வழிஅனுப்பிவைப்பார்.பின்பகல் முழுக்க அக்கம்
கலாபூஷணம் புனோ
ஞாபகார்த்தச் சிறுக (அனுசரணை புலோலியூர் 8
முதற் பரிசு - இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு -
* ஏனைய எட்டு சிறுகதைகளுக்கு தாை ரூபா * முன்னர் பிரசுரமான கதைகள் போட்டியில் * கழுத உறையின் இடது பக்க முைையில் கை ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி - 2070 எ அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் கிளை அலுவலகம் - 3
போட்டி முடிவு திக முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் க
32
 
 

பக்கத்துடன் மருமகளின் புகழ் பாடுவதிலேயே பொழுது போய்விடும்.
'மருமகள் இல்லாவிட்டால் ஆஸ்பத்திரியே தவித்துப் போய்விடுகிறதாம்”
"மருமகள் கை வைத்த ஒப்பிரேஷன் எதுவும் பிழைப்பதில்லையாம்"
“மருமகளை லண்டன் ஆஸ்பத்திரி ஒன்று வரச் சொல்லிக் கேட்டதாம். மாமா மாமியை விட்டு விட்டு தான் வர மாட்டேன் என பிள்ளை மறுத்து விட்டதாம்” இப்படியே ஒரு மாதம் ஓடி விட்டது. முதல் மாத சம்பளத் துண்டை வழமைபோல் மகன் கொண்டுவந்து தாயின் கையில் பவ்வியமாக கையளித்தான்.
அவ்வாறே புதுமருமகளும். சோபாவில் இருந்தபடியே பார்த்த பொழுது மாமியார் மேலும் கொஞ்சம் சாய்ந்தார்.
“என்ன மாலதி. உமக்கு எப்பிடியும் முப்பதாவது வரும் எண்டு எல்லோரும் சொல்லிச்சினம்’
“ஓம் மாமி. சரியாய் முப்பத்தி மூன்றாயிரத்து ஐந்நூற்றி அறுபது குறோன்கள் வர வேண்டும்”
"ஆக எட்டாயிரத்து ஐந்நூற்றி அறுபது குறோன்கள் தானே வந்திருக்கு
“ஓம் மாமி கொழும்பிலை பிளட்ஸ் வாங்கவும், கலியாணத்துக்கும், சீதனத்திற்கும், நகைகளுக்கும் எடுத்த கடனுக்குமாதாமாதம்25 ஆயிரம்குறோன்கள் கழிக்கிறாங்களே” என்றபடி சுமதி தனது ரீயை கலக்கி எடுத்துக் கொண்டு வந்து மாமியாருக்குமுன்னால் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
ரீவியில் “கலக்கப்போவது யாரு”நிகழ்ச்சி ஆரம்பித்துக் கொண்டு இருந்தது.
மாமனாருக்கு மருமகளைக் கட்டி முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது.
கொஞ்சம் கற்பனை-கொஞ்சம் நிஜம்
பூர் க. சதாசிவம்
eső Gyaco 2olo
5. சதாசிவம் குடும்பத்தினர்) ரூபா 3000/-
- ரூபா 2000/-
ரூபா 1000/-
500/- வழங்கப்படும். சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. ாபூஷணம் புலோலியூர் க. சதாசிவம் 7க் குறிப்பிடல் வேண்டும்.
B, 462 ஒழுங்கை, கொழும்பு - 06. தி = 30.09.2010
தைகள் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது
-ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 35
20Guà ఇల と霧派59
22. பிரச்சினைக்குரிய ஒரு சிறுகதை,
ஓர் இலக்கியச் சஞ்சிகை ஆசிரியரின் மனநிலை, எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கும் தனிப்பட்ட எழுத்தாளர்களின் மனநிலை, எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்குமிடையே குறிக்கத்தக்க ஒருவேறுபாடு உண்டு எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் ஆக்கங்களைப் பற்றி ஏனைய எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் போன்றோர் என்ன நினைக்கின்றார்கள்? வரவேற்றுப் பாராட்டுகின்றார்களா? இல்லையா? என்பவற்றை அறிந்துகொள்வதிலேயே குறியாக இருக்கின்றார்கள். ஆனால், சஞ்சிகை ஆசிரியன் தன்னுடைய ஆக்கங்கள் சம்பந்தமாக மட்டுமல்லாமல் ஏனைய சில எழுத்தாளர்களின் - தான் தெரிவு செய்துள்ள எழுத்தாளர்களின் ஆக்கங்கள் சம்பந்தமாகவும் வாசகர்களின் கருத்தை அறிந்துகொள்ள அவாவுகின்றான்.
சஞ்சிகையின் ஆசிரியர் ஒருவருக்குக் கிடைக்கும் ஆக்கங்கள் பல்வேறு தரத்திலானவையாக இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். இலக்கியத் தரமானது எனத் தான் கருதுபவற்றையே தன்னுடைய சஞ்சிகையிலே வெளியிடலாம் எனத் தான் தீர்மானிப்பவற்றையே அவர்- தெரிவு செய்வார். ஆகவே தன்னுடைய இத்தகைய தெரிவுகளை வாசகர்கள் அங்கீகரிக்கின்றார்களா? தன்னுடைய இலக்கியத் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா? என்பதை அறியும் ஆவல், சஞ்சிகை ஆசிரியனிடம் இருப்பது இயல்பானதுதான்.
பொருளாதாரத்தின் அடிப்படையில், 'கலைச் செல்வியின் நிலை நித்திய கண்டம், பூர்ண ஆயுசு தான். குறிப்பிட்ட மாதத்திற்குரிய கலைச்செல்வி வெளிவருமா? எப்போது வெளிவரும்? என்ற கேள்விகளுக்குரிய விடை தெரியாமலேயே கலைச்செல்வி'இதழ்களைத்தயாரிக்கும்வேலைகளில் அடிக்கடி நான் ஈடுபட்டேன். ஆனால் இதழ்வெளிவந்தவுடன், முன்னைய கவலைகள் எல்லாம் பறந்துவிடும்; வாசகர்களின் பிரதிபலிப்பு என்ன என்பதை அறிந்துகொள்ளும் ஆவலே மேலோங்கும். தமக்குப் பிடித்தவற்றை மனந்திறந்து பாராட்டுகின்ற - பிடிக்காதவற்றை நாகரிகமாகக் கண்டிக்கின்ற - குறை, நிறைவுகளை விமர்சன ரீதியாகச் சுட்டிக்காட்டுகின்ற - வாசகர்கள் பலர் அக்காலத்தில் இருந்தமை கலைசெல்வியின் வளர்ச்சிக்கு அதன் இலக்கியத் தரத்தைக் காப்பாற்றுவதற்கு உதவியதென்றே கூறவேண்டும்.
1961- வைகாசி இதழில் வெளியான ஒரு சிறுகதை, அதே ஆண்டு ஆனி மாதக் கலைச்செல்வி யின் அட்டைப்படம் ஆகியவை சம்பந்தமாக வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பற்றிக்குறிப்பிடுவது, கிட்டத்தட்ட அரைநூற்றாண்டின் முன்னர் கலை இலக்கியம் சம்பந்தமான மக்களின் பார்வையை ஓரளவாவது அறிந்து கொள்வதற்கு உதவும் எனக் கருதுகின்றேன். சிறுகதையின் தலைப்பு-மன்னிப்பாரா? அதை எழுதியவர்,பவானி இந்த நாட்டிலுள்ள பெண் எழுத்தாளர்களுள் அவருக்குத்தனி இடம் உண்டுஎன்பதைப்பலர் அறிந்திருக்கலாம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 

கதைச் சுருக்கத்தைக் கூறுவது, அந்தச் சிறுகதைக்கோ, கதாசிரியருக்கோ நீதிசெய்வதாக இருக்காது சுருக்கத்தை மட்டும் வாசிப்பவர்கள் அது சாதாரண, பத்திரிகைரகக் காதல் கதைதான் என்ற முடிவிற்கே வருவார்கள். மூர்த்தி - சுசீலா ஆகிய இருவருக்கிடையே அரும்பிய காதல், மிகப் பண்பான முறையில் வளர்ந்து வருவதை - குணக் குன்றான சுசீலாவின் குலம், திருமணத்தை நோக்கி அந்தக் காதல் முன்னேறுவதற்குத் தடைக்கல்லாக இருப்பதை-சமுதாயக் கட்டுப்பாட்டுக்குமாறாக நடப்பதையும்,தம் ஒரே மகன் மூர்த்தியை இழப்பதையும் கனவிலும் விரும்பாத அவனுடைய பெற்றோரின் பரிதாப நிலையை-சமூக யதார்த்தத்தையும் அதன் அடிப்படையில் உருவாக்கித் தம்மை உருக்குலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த பிரச்சனைகளையும் நன்கு உணர்ந்து கொண்ட அந்தக் காதலர்களின் சிந்தனை ஒட்டங்களை - பெற்றோரின் மன நிலையையும் சமுதாயப்போக்கையும் பற்றிக் காதலர் இருவருமே சிந்தித்து கசப்பு வெறுப்பு, பகைமை உணர்ச்சி போன்றவை சிறுதுமின்றி, பரஸ்பர அன்பு, மதிப்பு, புரிந்துணர்வு முதலியவற்றின் அடிப்படையில் இருவருமே தாமாகவே பிரிந்திருந்தமை ஆகியவற்றை-அதீத கற்பனைக் கலப்பின்றி எளிய இனிய தமிழ் நடையில் எத்துணை சிறப்பாக - கலாபூர்வமாக ஆசிரியர் கூறியுள்ளார் என்பவற்றையெல்லாம் நன்கு உணர்ந்து ரசித்து மகிழ வேண்டும் என்றால் மூலக் கதையை முழுமையாகவாசிக்கவேண்டும்
மூர்த்தி-சசீலா ஆகியோர் மீது வாசகர்கட்கு அனுதாபம் ஏற்படும் வகையிலும், அதேவேளை மூர்த்தியின் பெற்றோர் மீது வெறுப்பு ஏற்படாத வகையிலும் மிகப் பக்குவமாகக் கதையை வளர்த்துச் சென்ற கதாசிரியை- வெறொரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்வதற்குச் சுசிலா சம்மதித்ததாகவும் காட்டிய கதாசிரியை, திருமணம் நடப்பதற்கு முந்திய இரவில் அவள் நடந்து கொண்ட முறையை விபரமாகக் கூறி, அவளை மட்டுமல்லாமல், இந்தச் சிறு கதையையும் பிரச்சனைக்குரிய" தாக்கிவிட்டார்
கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்துறையில் மாற்றங்கள் பல, மிக வேகமாக ஏற்பட்டு வருகின்றமை நமது கவனத்தைக் கவர்கின்றது. உருவத்தில் உள்ளடக்கத்தில், உத்திகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர்கின்றோம் ஆண் பெண் உறவு,ஒழுக்கம்சம்பந்தமாகப்புதியநிலைப்பாடுகள்-கருத்துக்கள் வெளிவருவதையும் காண்கின்றோம். இவற்றுக்குப்பழக்கப்பட்ட இப்போதைய வாசக மனங்கள், சுசீலா எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ளவே இல்லை. பவானி சிறந்த எழுத்தாளர்தான், மறுக்கவில்லை. னால் மன்னிப்பாரா எழுதியதை மன்னிக்கவே முடியாது என எழுதியிருந்தார் வேலணை இரா. சிவச்சந்திரன்,எப்படித்தான் உங்களுக்குமனம் வந்தது? பெண் சமுதாயம் உங்களை மன்னிக்குமோ?" எனக் கேட்டிருந்தார் வெள்ளவத்தை வா. சிவனடியான், "மூர்த்தியும் சுசீலாவும்
33

Page 36
இறுதியில் ஒன்றாகவே மீளா நித்திரை செய்து விட்டனர் எனக் கதையைமுடித்திருந்தால்கதை அன்பின்புனிதத்தின் எல்லையை அடைந்திருக்கும்' என்பது திருக்கோணமலை கமலா விஸ்வலிங்கம் அவர்களின் கருத்து
கதையின் முடிவை என் மனமும் ஒப்பவில்லை. எழுத்தாளருடன் தொடர்பு கொண்ட போது, “கதையைப் பிரசுரிக்காவிட்டாலும் பரவாயில்லை. கதையின் முடிவைத் தயவுசெய்து மாற்ற வேண்டாம். எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு'எனத் தெரிவித்தார்.
கதையை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தேன். கதையின் முடிவுதான் புரட்சிகரமானதாக ஆட்சேபனைக்குரியதாகத் தோன்றினாலும், தேவையற்ற வசனங்கள்,வர்ணனைகள் விபரங்கள் இன்றிகதைநன்றாகவே கட்டுக்கோப்பான முறையிற் சொல்லப்பட்டிருந்தது. எழுத்தாளர்களுக்குரிய கருத்துச் சுதந்திரத்துக்குமதிப்பளித்து, ஒரு பரிசோதனையாகக் கதையை வெளியிடலாமா என்ற கோணத்திற் சிந்தித்துப் பார்த்தபோது, புதுமைப் பித்தனின் "பொன்னகரம்’ நினைவுக்கு வந்தது. நோயாளியான ஏழைக் கணவனைக் காப்பாற்றுவதற்காக அம்மாளு துணிச்சலாகச் செய்த செயலை, சமுதாயத்திலுள்ள அத்தனை ஏழைப் பெண்களும் செய்வர் என்ற முடிவிற்கு யாரும் வரமாட்டார்கள். ஏன் சமுதாயத்தில் ஒரு பெண்கூட, அம்மாளுவைப் போல் நடக்காமற்போகலாம் தனி ஒருவனுக்கு உணவில்லையெனிற் சகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின் தர்மாவேசமே, சமுதாய நலன் கருதிய புதுமைப்பித்தனிடமும் இருந்திருக்க வேண்டும். அம்மாளுவையும் கணவனையும் போன்ற ஏழைகள் உருவாவதற்குக் காரணமான சழுதாயத்தைச் சாடுவதற்காகவே புதுமைப் பித்தன் "அம்மாளு”வைப் படைத்தார் என்றுஞ் சொல்லலாம். கதை அவள் தன் கற்பை விற்றாள் என்பதை வாசகர்கள் நம்பும் வகையிற் சொல்லப்பட்டிருந்தது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அந்த அளவுக்குமிகமிகத்தெளிவாக “மன்னிப்பாரா" அமையவில்லை எனக் கருதலாம். இது ஒரு பலவீனமான காரணந்தான் என்றாலும், கதையை வெளியிடத் தீர்மானித்தேன். முன்னர் குறிப்பிட்டபடி 1961வைகாசிஇதழில் அது வெளிவந்தது.
எழுத்தாளன் கதையை எழுதி முடித்த பின்னர்தான் (வாசகர்களிடம்) கதை ஆரம்பமாகின்றது என்று சொல்லப்படுவதுண்டு ஆயுர்வேத வைத்தியராகப்பணிபுரிந்து கொண்டு எழுத்தாளராகவும் தன் பெயரை நிலை நாட்டிய இலுப்பைக் கடவை எஸ். எல். சவுந்தரநாயகம் அவர்களும் வவுனியாவில் அரசஊழியராகக்கடமையாற்றியகதுளசிகாமணி (செந்தாரகை) அவர்களும் இருவேறு கோணங்களில் இந்தக் கதையைத் தொடர்ந்து எழுதினார்கள். சவுந்தரநாயகம் எழுதிய கதை 1961 - ஆடி, ஆவணி “கலைச் செல்வி'யிலும், செந்தாரகையின் கதை 1961 - கார்த்திகை இதழிலும் வெளியிடப்பெற்றன. “கலைச்செல்விவைகாசிஇதழில்பவானி" எழுதிய “மன்னிப்பாரா?” என்ற கதை இலக்கிய உலகில் பிரச்சினைக்குரிய ஒரு கதையாக அமைந்துவிட்டது. பொழுது விடிந்தால் வேறொருவன் கழுத்தில்மாலையிடவிருக்கும் சுசீலா, ஏற்கனவே தான் காதலித்த மூர்த்தியுடன் அன்றிரவு நடந்து கொள்ளும் முறை, கற்பு நெறிக்குப் புறம்பானதல்ல என்பது கதையின் முடிவு, கற்பு, மனச்சாட்சி, ஆகியவற்றின் விளக்கங்களுடன் அந்தமுடிவைமாற்றியமைக்கின்றார் சவுந்தர நாயகம்"-வைகாசிஇதழில்பவானி’எழுதியகதையின்முடிவை மாற்றியமைத்துச் சவுந்தரநாயகம் எழுதிய கதையைச் சென்ற
34

இதழிற் படித்தீர்கள். பவானியின் முடிவை ஏற்றுக் கொண்டு இலட்சியக் கதாநாயகன் ஒருவனைப் படைக்கின்றார் செந்தாரகை”- ஆகிய எனது அறிமுகக் குறிப்புக்களிலிருந்து
இலக்கியப் பிரக்ஞையுடைய வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையிலமைந்த இந்த மூன்று கதைகளையும் வெளியிட்டமை, “கலைச் செல்வி’யின் இலக்கியப் பணிகளுட் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையும்என்றேநான்கருதுகின்றேன். “கலைச்செல்வி" வாசகர்கள் பலரின் அதிருப்தியைச் சம்பாதித்த ஆனி இதழின் அட்டைப்படத்தை “ஞானம்” வாசகர்களும் இப்போதுபார்வையிடலாம். சர்ந்தர்ப்பம்கிடைக்கும் போதெல்லாம் - மூவர்ண ஒவியம், புளொக் செய்யக் கூடிய அளவுக்கு விளம்பர வருவாய் ஆகியவை கிடைத்தல் - “கலைச்செல்வி’ மூவர்ண அட்டைப்படத்துடன் வெளிவந்ததுண்டு. புதிய ஓவியர்கள் சிலர், புகழ் பெறும் நோக்குடன் தம் கைவண்ணங்களைக் “கலைச்செல்வி’க்கு அனுப்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். அப்படிக் கிடைத்ததே இந்த ஒவியம். வாசகர்களிடம்விரசஉணர்ச்சியைத் தூண்டிவிடும் நோக்கம் கலைச்செல்விக்கு என்றுமே இருந்ததில்லை. இந்தப் படம் அப்படியான ஒன்று என நான் கருதவுமில்லை. மஞ்சரிஎன்ற இந்த ஒவியர் யார் என்பதை என் ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. மட்டக்களப்பைச் சேர்ந்த “குமார்” என்பவராக இருக்கக்கூடும். இலவசமாகக் கிடைத்த ஒரு மூவர்ண ஒவியத்தைப் பயன்படுத்தலாம் என நினைத்தேனே தவிர, வாசகர்கள் எந்த அளவுக்கு அதை வரவேற்பார்கள்என்பதைப்பற்றிநான் சிந்திக்கத்தவறிவிட்டேன். இப்படியான அட்டைப்படங்களைப் போடுவதால் உங்களுக்குப் பெருமை இருக்கலாம். ஆனால் கலைச்செல்வியின் மானமல்லவா போய்க்கொண்டிருக்கிறது என எழுதினார் ஆரவயல்பிட்டி கேசன். 'இம்முறை “கலைச்செல்வி’வியைக் கண்டதும் கண்ணீர் வடித்தேன், அட்டைச் சித்திரத்தின் ஆபாசத்தைக் காண நேர்ந்ததே என்பதற்காக என்பதுயாழ்ப்பாணம்மூர்த்தியின்வருத்தம்'இது போன்ற முகப்புச் சித்திரங்கள் “கலைச்செல்வியின் மதிப்பைக் குறைப்பவை” என எச்சரித்தார் யாழ்ப்பாணம் p நீக்கலஸ்" அட்டைப்படம் அரும்ை- கலைச்செல்வி வயது வந்தவர்கட்கு மட்டும் என்றிருந்தால்"எனத் திருநெல்வேலி தமிழ் வண்ணன் நக்கலடித்தார். அட்டையைக் கிழித்து அடுப்பிலிட்ட பின்தான் செல்வியைத்தொட்டுச்சுவைக்கமனம்வந்தது'என அச்சுவேலி க.இராசரத்தினம்தன் வெறுப்பை வெளியிட்டிருந்தார். மார்புத்துணிநீக்கிமாணவரின் வாழ்வுயர்வைச்
சீர்செல்விஅட்டை சிதைக்கிறதானாலும்
பரவுகிறோம் உங்கள் தமிழ்ப்பண்பு எனக்கவிதையில் கிண்டலடித்தவரின் பெயர்,துரதிஷ்டவசமாக (இப்போது என்னிடமுள்ள) கலைச்செல்வியிற் காணப்படவில்லை; யார் அதை எழுதியிருப்பார் என்பதை என்னால் ஊகிக்கவும் முடியவில்லை.
சந்தா, விளம்பரம், விற்பனை, விநியோகம் முதலியவற்றிற் கவனம்செலுத்திக்கொண்டே, கதை,கட்டுரை,கவிதை, ஓவியம் போன்றவற்றைத் தெரிவு செய்வதிலும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டிய காலமாக இருந்ததுகலைச்செல்விக்காலம்
இனி அடுத்த இதழில்)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 37
(சமகால கலை இ
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலச் அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 2
அடுத்துவரும் இதழில் இடம்பெறும். 200
* ஞானம் ?
உள்நாடு
தனிப்பிரதி : epLIIT 50/= ஆண்டுச் சந்தா : 5LIIT 800/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 3000/= ஆயுள் சந்தா : 5r 20000/=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகே அனுப்பலாம். மணியோடர் வென்னrவத்தைதபால் நிலையத்தி மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாக மேலதிகச் செலவின்றி சந்தா அனுப்பும் வழி உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியி T. Gnanasekaran, Hatton National Bank - Weilawa நடைமுறைக் கணக்கு இலக்கம் - 009010344631 என் கணக்கில் வைப்பு செய்து வங்கி ரசீதை எமக்கு அனுப்பு வேண்டும்.
7வனிநாடு ஓராண்டு Australia (AUS) 35 Europe (e) 25 India (Indian Rs.) 500 Malaysia (RM) 50 Canada ($) 35 UK (£) 15 Other (US $) 25
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 

SYLS S SS SS S SSL SL SL S S S S S S S S S S
------ e s a -
*இலக்கியக் ga亡L酗, قال له فتعله res
gil Dlí 囚5m画圆un圆叫"
而岛历n 可四鲈1记 马可酮uá时呜 للا trů o.o. ※|琶6強颱,聰 தடுமாறி வாசிச்சுப் : $|卧umü போறாரே?’
品品uan副 6 6াটি] | : ព្រួ u៣ម៉ែ 可四蟲可
திருடி போட்டிக்கு :
த் தட்டிக் als statio (6 : அனுப்பி பரிசுகளைத '' ཏུumཀྱm ། 6 ཡི 5it...་ @m函函-°留|泷
భ ugamủlâ606uẵ -- --
}லக்கிய நிகழ்வுகள்)
as36T 5கிய நிகழ்வுச் செய்திகளை தருக்கமாக எழுதி எமக்கு
o - லுன் 0ஆம் திதித்துமூன்னர் கிடைக்கும் செய்திகள் பிற்படில் அச்செய்தி பிரசுரிக்கப்படமாட்டாது.
sihui
‘函ám町 @ରା 国5mü回函叫 கதை, கவிதைகளைத
- கே. பொன்னுத்துரை
تعاقلتلك
சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப Swift Code : HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி :
T. Gnanasekaran Gnanam Branch Office
UIT 3-B, 46th Lane, Wellawatte. நில்
ஞானம் விளம்பர விகிதம் - பின் அட்டை : et 10000/= Iல் முன் உள் அட்டை : LIIT 8000/= te ScöT e Gir அட்டை : esT 8000/= ಗ್ಲು உள் முழுப்பக்கம் : gr 5000/= =/3000 அரைப்பக்கம் : ரூபா هو "اة
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
70 1 OO 50 70 950 1 400 95 140
கு ஒருவருடம் ஞானம் இனமாக அனுப்பப்படும்
35

Page 38
ெச ம் பெற IT பூழி
Gurriro!
சித்தியமாக - மிக
மிக சத்தியமாக - இப்பொழுது நான் எழுப்பப் போகிற ஒசை தான்
செம்மொழிமாநாடு குறித்த இறுதியானது. இனி குரல் எழுப்பேன்! அன்புகூர்ந்து ஞானம் இடம் வழங்குமா.
இத்தடவை மாநாட்டு மலர் பற்றியது. மேலே இங்கே காணப்படுவதுமுன்-பின் அட்டைகளின் தோற்றம்
மாநாட்டுக்குப் போகாவிட்டால் என்ன, மணக்க மணக்க மலர் வீடு தேடி வந்துவிட்டது
எப்படி வந்தது என்போருக்கு எப்படி எப்படியோ என்பது தான் பதில்
மொத்த நிறை இரண்டு கிலோவுக்கு நூறு கிராம் குறைவு சுமார் 450 பக்கங்கள். 152 பேரின் கைவண்ணங்கள். மறைந்தும் மறையாத ஒவியர்கள் உட்பட வகை வகையான சித்திரங்கள்.
இரண்டே இரண்டு இலங்கையரைத்தவிர (பேரா. கா. சிவத்தம்பி, திரு பாலகுமார்) வேறெவரினதும் (இருப்போர் - இறந்தோர்) குறிப்புகளோ, தகவல்களோ, கட்டுரைகளோ கவிதைகளோ கிடையாது. 152 பேரினது பங்களிப்புகளிலும் இலங்கையர் "மிகவும் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளனர். அதுவும் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆதிபிதாக்கள், அமைப்பாளர்கள் (குறிப்பாக வண. தனிநாயகம் அடிகளார்) நினைவுகூரப்படவில்லை.
அதுமட்டுமல்ல,340 ஆம் பக்கத்தில் வரலாற்றுப் புதினங்கள் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ள சென்னை,சேலையூர் கலாநிதி தி. இராசகோபால், நமது திருகோணமலை தி. த.
சரவணமுத்துப் பிள்ளை அவர்களது 1895 ஆம் ஆண்டு
மோகனாங்கி பற்றி எழுதும் போது, புதினத்திற்குரியவர் இலங்கையர் என்பதைக் கெட்டிக்காரத்தனமாகத் தவிர்த்து அவரை ஒரு தமிழகக்காரராகக் கணிக்கவிட்டுவிட்டார். அந்தோ, பரிதாபம்
மேலும் 100க்கு 95 விழுக்காடு முனைவர்களினதும்
மாநாட்டு மலரில் IL saoil...! ஆசைக்கு இரண்டே ရွှံ့052\Ú
(கலாநிதிகள்) பேராசிரியர்களுமே பக்கங்களை நிரப்பியுள்ளனர்.
முஸ்லிம் அறிஞர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு (அல்லது ஒதுக்கல்) மொத்தமாகவே 152 பேரில் ஆறு முஸ்லிம்களின் கைவண்ணமே அதிலும் ஒருவர் மலேசியா
மொத்தத்தில், தொல்லியல் பகுதியையும், அறிவியல் தமிழ் பக்கங்களையும் கிழித்து எடுத்துக் கொண்டு குப்பைக் கூடை போன்றஒன்றில் போடவேண்டிய ஒன்றே இந்த மணக்காத மலர்
பெண் உடம்பை எழுதுதல் - உரத்த சிந்தனை
"பெண் உடம்பை எழுதுதல் என்ற நவீன பெண்ணியத்தின்
போக்கை கிருஷாங்கினி, தயமந்தி, வைகைச்
செல்வி, உமாமகேஸ்வரி முதலியோரின் கதைகளில்
பெரிதுதும் காண முடிகிறது.
36
 

こエAVクリ
"கிருஷாங்கினியின் மலரினும். என்ற சிறுகதை பிரவசவேதனை, உடம்பின் உறுப்புக்கிழிபடுதல்,சத்திரசிகிச்சை என்கிற சூழலை வைத்துக் கொண்டு பெண் உடம்பின் தனித்தன்மைகளை அழித்தல் போன்றவற்றை முன்வைக்கிறது. அதுபோலவே புஷ்பித்தல் என்ற கதை சடங்காகும் பெண்படும் அவஸ்தைகளை இலக்கியமாக முன்வைக்கிறது. கூடவே கருக்கலைப்பு, நிகழ்வில் பெண் உடம்பு படும் பாட்டையும் பேசுகிறது. இவையெல்லாம் பெண் மொழியால் மட்டுமே சாத்தியமாகக்கூடியவை
தமிழகக் கலாநிதி புதுச்சேரி, க. பஞ்சாங்கம் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து அவருக்கு நன்றி தெரிவித்து நமது பெண்ணிய படைப்பாளிகளுக்கு எனது ஓசை எதுவுமின்றி சமர்ப்பித்துவிட்டு அடுத்த ஒலியை எழுப்பச் செல்கிறேன்.
மிகமிக முக்கியமான ஒரு நூலில் “தமிழ்? இல்லை!
தொல்காப்பியத்திலேஐந்துஇடங்களிலும்,சிலப்பதிகாரத்தில் 21 இடங்களிலும், புறநானூற்றில் 21 இடங்களிலும், அப்பர் தேவாரத்தில் ஏழு இடங்களிலும், சுந்தரர் தேவாரத்தில் 48 இடங்களிலும், திருஞான சம்பந்தருடைய தேவாரத்தில் 248 இடங்களிலும் நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் 93 இடங்களிலும் தமிழ் என்ற சொல் வருகிறது. ஆனால். ஆனால்? திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லவே இல்லையாம்
வரலாற்று ஆய்வுச் செம்மல் எனப் பெரியதொரு பட்டம் பெற்றபாளையங்கோட்டை பன்னூலாசிரியர் செதிவான் எம்.ஏ. எம். ஃபில் தமது ஆய்வில் கண்டதை வெளிச்சமிட்டிருக்கிறார்.
"திருக்குறளை தமிழின் கதி தமிழின் காவல் என்றல்லவா காலங்காலமாகக் கருதி கண்ணியப்படுத்தி வருகிறோம். எப்படி "தமிழ்” என்றது இல்லாமல் போனது?" - என்று வியப்பு தெரிவிக்கிறார்.
(உங்களுக்கு எப்படியோ, எனக்கும் வியப்பு வியப்பாக இருக்கிறது புதிராகவும் உள்ளது)
ஆனால் ஒன்று மட்டும் உண்மை, பெரும் வாதப் பிரதிவாதத்திற்குரிய (விவாதம்) விடயமிது
இதையும் என் தனிப்பட்ட ஓசை எதுவுமின்றி சமர்ப்பிக்கிறேன். தெளிவுபடுத்துவோருக்கு ஞானத்தில் இடம் இருக்கவே இருக்கிறது
தொல்காப்பிய வகுப்பு நடத்தும் சீனி நைனா
பெயரில் இனிப்பை வைத்திருக்கும் இவருக்கு 63 அகவை தமிழகம், இராமநாதபுர மாவட்டம் இளையான்குடிக்கு அண்மிய கிழாரியூர் கிராமத்தவராக இருந்தாலும் இவர் தொல்காப்பிய வகுப்புக்கள் நடத்துவது தமிழ் நாட்டிலல்ல - மலேசியாவில் (பினாங்கு தீபகற்பம்?)
அங்கே குடும்பத்தோடு குடியேறி விட்டவராக, தொடர்ந்து தமிழே வாழ்க்கை அதற்கு அவர் 13 ஆண்டுகளாக வெளியிட்டு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 39
வரும் தமிழ் இலக்கிய இலக்கணத் திங்களிதழ் “உங்கள் குரல்" மிக உறுதுணை அதில் தொல்காப்பியமரபு:தமிழ்யாப்பியல் தொடர்பான பற்பல ஆய்வுகள், கட்டுரைகள், அத்தனையும் அங்கு இயங்கும் தமிழ்ப்பாடசாலை இளைய தலைமுறையினரைச் சென்றடைகிறது.
மலேசிய அரசு இந்தத் தமிழ் முஸ்லிமை மிகவு கண்ணியப்படுத்துகிறது. ஆனால் கண்டுகொள்ளாதோர்தமிழ் பேசுவோரே!
மலேசிய அரசின் கல்வித் துறையின் சார்பில் மலேசி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மலேசியாவின் ப பகுதிகளில் இலக்கண அறிவைப் புகட்டி வருகிறார். மேலும்ப பொது அமைப்புகளின் ஏற்பாட்டிலும் கவிதைப் பட்டறைகள் இலக்கணப் பயிலரங்குகள், இலக்கியச் சொற்பொழிவுக ஆகியவற்றையும் நிகழ்த்திவருகிறார்.
இப்பொழுது அங்கே ஒரு தேசிய சமுதாய இயக்கமாக பிரபலமடைந்துள்ள "பெர்மிம்" அமைப்பினரின் ஒரு மாத இத ஆசிரியராக7ஆண்டுகளும், மலேசியநண்பன்'பிரபலபினாங் நாளேட்டின் ஆசிரியராக சில காலமும் பணியாற்றியுள்ள சீனி தற்சமயம் ஒரு சுதந்திர இதழாளர், சிறந்த கல்வி இயலாளர்.
இந்திய மத்திய அரசு தமிழைச் செம்மொழியா அறிவித்தவுடன் மலேசியாவில் தமிழ்ச்செம்மொழிச்சிறப்புமல கொண்டு வந்து அசத்தினார். அதிலே பல அரிய தமிழ் தகவல்கள் உண்டாம். (அந்தச் சேவையை மறக்காமலே என்னவோ சமீபத்திய மாநாட்டுமலரில் அவருக்கோர் ஓரிடம்) அங்குள்ள தமிழ்ச் சுரங்கம் அமைப்பு சீனி க்கு தொல்காப்பியர் விருது வழங்கிவாழ்த்தியிருக்கிறது.
தமிழர்களே செய்ய விழையாத சேவையை ஒரு முஸ்லி செய்து வருவது இவ்விரு சமூகங்களையும் பிரிக்க நினைக்கு சில தமிழ் வித்துவான்களுக்கு நல்ல சாட்டையடி
முற்போக்காளர்கள் நினைக்க மறந்த ஒரு பெயர்
சரஸ்வதி விஜய பாஸ்கரன்' என்றால், "அடடா, அவரா, எம்மவர்" என்பார்கள் முற்போக்காளர்கள்
அவரை இங்கு நிறைய நிறைய நினைக்க வேண்டும், பே வேண்டும் அந்தளவுக்கு தமது சரஸ்வதி மூலம் நம்மவருக்கு இலக்கியத்தொண்டுசெய்திருக்கிறார்.
அந்த 60-70 களில் அதன் தாக்கம் இங்கு எங்கு நிறைந்திருந்தது. என் புலனுக் கெட்டிய வரையில் எழுத்தாளர்களை அட்டையில் அலங்கரிக்க வைத்தவர்களி அவரே முதலாமவர்.
சிற்றிதழ்களின் முன்னோடி சரஸ்வதி தான் என்பதி இப்போதைய சிற்றிதழ்வாலாக்கள் வாலாட்டமாட்டார்கள்
மறப்பதில்மன்னர்களான தமிழகத்தார் இவை நினைத்ததும் பாராட்டியதும் பெரியகாரியம்
அது 22-06-2010ல், தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க சார்பி செம்மொழிமாநாடு நடந்த கோவையிலேயே நிகழ்ந்தது. பிரப8 சிற்றிதழாளர் யுகமாயினி சித்தன் தலைமையில், கோ6ை என்லைட்டர் இதழாசிரியர்இரவி, விஜயபாஸ்கரன் அவர்களுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 
 

பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். கவிஞர், சிற்பி நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.
சிற்பி தமது உரையில், "தமிழ்ச் சிற்றிதழ்களின் தோற்றம் வளர்ச்சி சரசுவதியின் எழுத்துக்கள்" ஏற்படுத்திய அதிர்வுகள் ஆகியவற்றைத் தொகுத்துமதிப்புமிக்க உரையினை வழங்கினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது உரையில், தமக்கும் சரசுவதி இதழாசிரியர் மற்றும் சிற்றிதழ்களுடன் தொடர்பு ஆகியவற்றைச் சிறப்புற வழங்கினார். மீண்டும் கவிக்கொண்டல் இதழாசிரியர் கவிஞர்.மா.செங்குட்டுவன்,நாகர்கோவில் ஆய்வுக்களஞ்சியம் இதழாசிரியர் முனைவர் பத்மநாபன், திருக்குவளை கவிஞர் வெற்றிப்பேரொளி. கனிமொழி இதழாசிரியர் முருகு அருணன், உலகத்திருக்குறள் பேரவைகோவைமாவட்டச்செயலாளர் புலவர் இளங்கீரன்,ஐந்தாம் உலகத்தமிழ்ச்சங்கத்தின் கோவைமாவட்டத் தலைவர் புலவர் ஆ.செகநாதன், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் போ. மணிவண்ணன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.
தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் குன்றம் இராமசந்திரன்,செயலாளர் பூ அ.இரவீந்திரன், பொருளாளர் அ. இராஜா சொர்ண சேகர் ஆகியோர், 50 ஆண்டுகளுக்கு முன் இலக்கியம் வளர்த்த மனிதரொருவருக்குப் பாராட்டு விழா நடத்தியது நல்ல முன்மாதிரி
அதே சமயத்தில், இங்கே எம்மத்தியில் பலரையும், பல நூல்களையும் அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறதமிழ்மணி கே. எஸ். சிவகுமாரன், தம்பு சிவா போன்றோரிடம் ஒரு வேண்டுகோளிடவிருப்பம்
(பழையசரஸ்வதியும், அதன் பிதாமகன் விஜயபாஸ்கரனும் எம்மவரை உயர்த்திய பெருமையை இளைய தலைமுறையினருக்குத் தெரியவைக்கலாமே)
உன்னால் அரசியல் ஓசை இட இயலுமா!
இப்படிக் கேட்டார் ஒர் அன்பர் தமிழ்ச் சங்க மண்டபத்தில் சந்தித்த பொழுது,
அரசியல்மட்டுமென்னவிதவிதமான அரிசியியலும்பண்ண முடியும் நிழல் சொல்லிக்கொடுத்திருக்கின்றார்.(பிடித்தமானது பொன்னி அரிசி தான்! ஆனால் இந்தியாவில் ஏற்றுமதிக்குத் தடை)
அந்தநாட்டை வைத்தே ஓர் ஓசையை எழுப்புகிறேன். இந்தப் பத்தி எழுத்துருக்களை கணினிக்குப் கொடுக்கிற கடைசிநேரத்தில் கிடைத்த செய்தி
இந்திய எல்லையையொட்டி நவீன ஏவுகணைகளை (சிசிஎஸ்-5) சீனா தயார் நிலையில் வைத்துள்ளது.
முன்னர் குறைந்த தூரம் பாய்ந்து சென்று தாக்கவல்ல சிசிஎஸ்-3 ரக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்திருந்தது. இப்போது இதற்குப் பதிலாக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த நவீன ஏவுகணைகளை சீனா தயார் நிலையில் வைத்துள்ளது என்று அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கிடையே போர் மூளும் நிலை உருவானால் குறுகியநேரத்தில் விமானப்படையை எல்லைப்பகுதிக்கு அனுப்பி வைக்கும் அவசரகாலத்திட்டத்தையும் சீனா வகுத்துள்ளது.
எதிர்காலத்தில் ஏதாவது நடக்கலாம் என்று நாமெல்லாம் அச்சப்பட வேண்டும்.
அத்தோடு இந்தியத்துணைகண்டம் எனப்பாகிஸ்தானியர் அழைப்பதை மறந்து விட்டு சீனத் துணை கண்டம் எனச் சொல்லக் கூடிய காலமும் வரப் போகிறது. இந்திய ஆய்வாளர்களே இப்படி சிந்திக்கத்தொடங்கிவிட்டார்கள்!
37

Page 40
சந்திN திே. ஞானசேகரன்
1602009ல் அகவை எழுபத்தைந்தை நிறைவு செய்து 16052 கொண்டாடிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலக் கெளரவிக்கும் முகமாக இந்த நேர்காணல் தொடரை ஞானம்
தி. ஞா - உங்களுடைய சிறுகதைத் தொகுதியான நாமிருக்கும் நாடு நூலை வெளியிட்டவரும் நீங்கள் குறிப்பிடும் அதே மு. நித்தியானந்தன் தானே? தெ. ஜோ-ஆமாம் அவரேதான்!1978இன் இறுதியில் அல்லது 79ன் ஆரம்பத்தில் என்னைக் காண வந்திருந்தார்.
யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து நித்தியானந்தன் என்னும் ‘சர்’ உங்களைக் காண வந்திருக்கின்றார் என்று செக்யூரிட்டி ஆபீசர் வந்து எனது அலுவலக மேசை முன் நின்றார்.
திக்கென்றிருந்தது எனக்கு. இவர் ஏன் என்னைத் தேடிக்கொண்டு என்னும் வியப்பு ஒரு பக்கம். அகத்தின் திகில்களை முகத்தில் காட்டாமல் எங்கே அவர் கேட்டிலேயே நிப்பாட்டி விட்டாயா அல்லது வரவேற்பறையில் அமரச் செய்திருக்கிறாயா. உன்னைப்போல் என்னைப்போல் அல்ல பெரிய மனிதர் ஒடு ஒடு ஓடிப்போய் கூட்டி வா. என்று பரபரத்தேன்.
செக்யூரிட்டி ஆபிசர் லேசாகச் சிரித்துக் கொண்டான். அவனைப் பொறுத்தவரை நானும் பெரிய மனிதன்தான். கெம்பஸ் ஜாப்னா என்றதுமே உள்ளே கூட்டி வந்து விட்டேன், சர். இதோ அழைத்து வருகின்றேன் என்று விரைந்தான். விரைந்தோடிய வேகத்தில் அழைத்து வந்தான்.
அதே நித்திதான். கொஞ்சம் கூடுதலாகக் கறுத்திருப்பதாகக் தெரிந்தது. யாழ்ப்பாணச் சூடாக இருக்கலாம். மலையகம் போல் குளிர் பிரதேசம் இல்லைதான்! கரம் கோர்த்துக் குலக்கி, வணக்கங்கள் கூறி க்ஷேமம் விசாரித்து அமர்ந்த பின் அவரே பேசத் தொடங்கினார்.
330 நாவலர் வீதி, நல்லூர் யாழ்ப்பாணம் என்னும் முகவரியில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் சிலர் இணைந்துவைகறை என்னும் வெளியீட்டகம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும் அதன் முதல் வெளியீடாக என்னுடைய சிறுகதைத் தொகுதி ஒன்றினை வெளியிடவேண்டும் என்று தீர்மானித்திருப்பதாகவும், என்னுடைய சம்மதம் வேண்டும் என்றும் கூறினார்.
கரும்பு தின்னக் கூலியா. போட்டுக் கொள்ளுங்கள் தாராளமாக. ஆனால் என்று இழுத்தேன்.
என்ன ஆனால்? என்றார். பணம் ஏதும் கேட்காது வைகறை எங்களுக்கு வேண்டியது உங்களது சம்மதம்
38
 
 
 
 
 
 
 

(17)
0ல் பவள விழா lui Latig65;
வழங்குகின்றது.
தெளிவத்தை ஜோசப்
மட்டுமே. அது கிடைத்துவிட்டது. மகிழ்ச்சியே என்றார்.
காசு கேட்டாலாவது கொஞ்சம் டைம் தாருங்கள் கம்பெனியில் லோன் போட்டுத் தருகின்றேன் என்பேன். என்னுடைய கதைகளை கேட்டீர்கள் என்றால் எங்கே போவேன் கடன் கேட்க.என்றேன்.
அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் உங்களுடைய அத்தனை கதைகளும். கடைசியாக வந்த மண்ணைத்தின்று உட்பட என்னிடம் இருக்கிறது. பன்னிரண்டு கதைகள் போடத்தான் பொருளாதாரம் இடம் தந்திருக்கிறது என்றார்.
எல்லாக் கதைகளுமே இருப்பதனால் தானே அப்படி என்னைப் பிய்க்க முடிந்திருக்கிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகவே முடிந்திருக்கிறது.
குறை தேடி குறை தேடிமீண்டும் மீண்டும் வாசிக்கப்போய் என்னுடைய எழுத்தின் குறைகளை விடவும் அவை குறிக்கும் சமுதாயக் குறைகள் மனிதவியற்குறைகள், வாழ்வியல், குறைகள் போன்றவைகளே மிஞ்சி நின்று, மனதை அழுத்தி அழுத்தி,
என்ன யோசிக்கின்றீர்கள் என்றார். ஒன்றுமில்லை என்றேன். என்ன பெயர் வைக்கலாம் என்றார். ‘எல்லாமே நான் வைத்த பெயர்கள்தான். ஏதாவதொன்றை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். பாட்டி சொன்ன கதை உங்களை வெளி உலகுக்குக் காட்டிய கதை, கூனல் எனக்குப்பிடித்த கதை. ஆனாலும் ஒரு இருபது வருட எழுத்துழைப்பின் அடையாளமாக முதன்முதல் வருகின்ற தொகுதி கூனல் என்ற பெயர் வேண்டாம் என்று நானே தீர்மானித்துக்கொண்டேன். எதற்கும் வைகறை நண்பர்களுடன் பேசி முடிவெடுத்து உங்களுக்கு அறிவிப்பேன் மாற்றம் இருந்தால் தயங்காமல் கூறுங்கள் என்று விடை பெற்றார்.
இந்தச் சந்திப்பு 1979 ஜனவரி அல்லது பெப்ரவரியில் நடந்திருக்கலாம்.
ஒரிரு வாரங்களின் பின் நித்தி தொலைபேசியில் அழைத்தார். நாமிருக்கும் நாடே. என்னும் பெயரே கூடுதல் விருப்புத் தலைப்பாக நிற்கிறது உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டார்.
ஆட்சேபனை என்ன ஆட்சேபனை, ஒரு விதத்தில் ஆன்ந்தமே என்றேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 41
அறுபதுகளில் மலையகத்துக்கென முதன் முதலாக ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்த மலைமுரசுவில் முதல் பரிசு பெற்ற எனது சிறுகதை நாமிருக்கும் நாடே.
வீரகேசரியில் பாட்டி சொன்ன கதை வந்த மறு மாதமே மலைமுரசு ஆண்டு மலர் ஏப்பிரல் 1963 என்னுடைய நாமிருக்கும் நாடே சிறுகதையை வெளியிட்டது.
வீரகேசரிபோல் ஒரு பரந்த தளம் இல்லையாயினும் மலையகமெங்கும் எழுத்துடனும், வாசிப்புடனும் மலையகம் என்கின்ற உணர்வுடனும் இயங்கிய சகலர் மத்தியிலும் எனக்கொரு அறிமுகத்தையும் அந்தஸ்தையும் பெற்றுக்கொடுத்த ஏடுமலைமுரசு.
அதற்கான ஒரு கெளரவமாகவும் இந்தத் தொகுதிக்கான தலைப்பு அமைகிறது என்பது மகிழ்ச்சிகரமானதுதான்.
அதன் பிறகு பேச்சே இல்லை கப்சிப்பென்று காலம் கடந்தது. மாதங்கள் நகர்ந்தன. 1979 நவம்பர் வந்தது. முன்பு ஒருநாள் வந்ததுபோலவே நித்திவந்தார்.
அவருடைய கையில் 'நாமிருக்கும் நாடே தொகுதி இருந்தது.
கே.கே.ராஜாவின் அழகான, அடக்கம்மிகுந்த, அர்த்தம் பொதிந்த அட்டைப்படம், நித்தியின் அருமையான, ஆழமானதொரு முன்னுரை. உள்ளே பதினொரு கதைகள் 125 பக்கங்கள். விலை 7ரூ 50 சதம். வெளியீடு வைகறை - 330 நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். டிசம்பர் 1979, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டுபிரதிகளுடன் ஒரு அச்சடித்த தபாலட்டையையும்
நாமிருக்கும் நாடே
நூல் வெளியீடு
தெளிவத்தை ஜோசப்பின் பதினொரு சிறுகதைகள் கொண்டதொகுதி
யாழ்றிம்மர்மண்டபம்,
28-12-1979 வெள்ளி மாலை 4.30 மணி தலைமை :- கவிஞர் இ.முருகையன்.
வெளியீட்டுரை - மு. நித்தியானந்தன், விமர்சனம் பேராசிரியர்ககைலாசபதி
திரு. டொமினிக் ஜீவா.
இதுதான் தபாலட்டை
நீங்கள் கட்டாயம் வருகின்றீர்கள் என்றதொரு கட்டளையுடனான அழைப்பு
நான் போவதாக இல்லை. என்னுடைய உத்தியோக லட்சணம் அது. பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் நான் எல்லா நேரமும் இருந்தாக வேண்டும். ஆகவே நித்தி தொலைபேசியில்பேசியபோதும்கூடவர வசதிப்படாது என்றே நினைக்கிறேன்நீங்கள் சமாளிக்கமாட்டீர்களாஎன்றுகேட்டேன்.
கூட்டத்தை சமாளிப்பேன் ஆனால் டொமினிக் ஜீவாவை சமாளிக்கமுடியாது. எங்கே மாப்பிள்ளைமாப்பிள்ளை இல்லாத ஒரு திருமணமா. என்றுகத்துவார்.
ஆகவே கட்டாயமாக வருகின்றீர்கள் உடனே திரும்பிப் போய்விடலாம் யாழ்ப்பாணம் என்ன ஆயிரம் மைலுக்கப்பாலா இருக்கிறது. என்றார் சிரித்தப்படி
போய் சேர்ந்தேன்.
தி. ஞா :- அதற்கு முன் யாழ்ப்பாணம் சென்றிருக்கின்றீர்களா அல்லது இதுதான் முதல் முறையா?
தெ. ஜோ :- அதுதான் முதல் தடவை நன்றாகக் கேட்டிர்கள். பேராசிரியர் கைலாசபதியும் நான் றிம்மர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

ஹாலுக்குள் நுழைந்து அமர்ந்ததும், இதே கேள்வியைத்தான் கேட்டார்.
இல்லை அய்யா,இதுதான் முதல் தடவை என்றேன். மு. நித்தியானந்தன் அவர்களுக்கு நான் நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.
வலுக்கட்டாயமாக அவர் என்னை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்தார்.
கொழும்பில் ஏறி இங்கே இறங்குங்கள், நண்பர்கள் ரயிலடியிலிருந்து உங்களை வீட்டுக்குக் கூட்டிவருவார்கள் என்று கூறி வைத்திருந்தார். அப்படியே நடந்தது.
நிர்மலா, பாலேந்திரா, ஆனந்தராணி என்று வீட்டில் சந்தித்தேன்.
எழுதிய நானே மறந்துவிட்ட எனது கதைகளின் சிற்சில வரிகளைக் கூறிக் கூறி 'மறக்க முடியாத வரிகள்' என்று என்னை மலைக்க வைத்தார் நிர்மலா நித்தியானந்தன்.
கண்ணாடி வார்ப்புக்கள் நாடகத்தில் மனவளம் குன்றிய மகளாகத் தோன்றும் ஆனந்தராணியின் அம்மாவாக நடித்த நிர்மலாவையும், அந்தப்பாத்திரத்திற்கு உயிரூட்டிய அவருடைய குரல்வளத்தையும் மறக்கவா முடியும்.
ஒரு அரை மணிநேரம் போல் வீட்டில், பிறகு வெளியீட்டு விழா மண்டபத்துக்குள்.
பேராசிரியர் கைலாசபதி அவர்களை முதன்முதலாக சந்தித்து உரையாடிய தினமும் அதுதான். 28-12-1979.
கவிஞர் முருகையன், டொமினிக் ஜீவா போன்றவர்களை ஏலவே சந்தித்து உரையாடியுள்ளேன்.
பேராசிரியர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே இதற்கு முன் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றீர்களா என்பது தான். நீங்களும் அதைத்தான் கேட்டீர்கள். 'இல்லை என்ற என்னுடைய பதில் பேராசிரியின் உரையின் போது பெரிதுபடுத்தப்பட்டது, எனக்குப் பிடிக்கவில்லை.
சோதனை என்கின்றன்ன்னுடைய கதையில் யாழ்ப்பாணம் என்ன ஆயிரம் மைல்களுக்கப்பாலா இருக்கிறது, ராத்திரிக்கோச்சில எறினா அடுத்த நாள் விடியஊரில் என்று ஒரு வரி வருகிறது.
பாவசங்கீர்த்தனம் என்னும் கதையில் யாழ்ப்பாணம் என்ன கிட்டவா இருக்கிறது. கோச்சிக்காரனே கடன்காரனாக்கி விடுவானே என்று ஒருவரி வருகின்றது.
முதல் கதையில் தோட்டத்துப் பாடசாலை சோதனை பரபரப்பில் மனுசியின் கடிதத்துக்குப் பதில் போடவில்லை என்னும் ஆதங்கத்தை மாஸ்டர் அந்த வரியின் மூலம் சரிக்கட்டிக் கொள்ளுகின்றார்.
இரண்டாவது கதையில் யாழ்ப்பாணத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கும் சின்னக் கிளாக்கரய்யா பெரியவரின் வீடுதேடிப் போய் மனைவியும் தானும் ஊருக்குப் போய்வர தனக்குலீவுகேட்கின்றார். இருவருமாக ஏன்போக வேண்டும் நீ மட்டும் போ, அம்மா இங்கிருக்கட்டும் என்னும் தனது விருப்பத்தை அந்த வரிமூலம் சரிக்கட்டிக் கொள்ளுகின்றார் பெரியவர்.
இதொன்றையும் கவனம் கொள்ளாமல் அந்த இரண்டு வரிகள் மட்டுமே கூறி முன்னெப்போதும் யாழ்ப்பாணம் வந்திராத தெளிவத்தை, இன்று தான் முதன்முறையாக யாழ் வந்துள்ள தெளிவத்தை, யாழ்ப்பாணம் கிட்ட இருக்கிறதா தூர இருக்கிறதா என்று முரண்பாட்டுக் கருத்துக் கூறும் தெளிவத்தை, யாழ்ப்பாணத்து வாத்தியை வில்லனாகவும் யாழ்ப்பாணத்துக் கிளாக்கரை - அவரது மனைவியை -
39

Page 42
பொல்லாதவர்களாகவும் காட்ட முனைகின்றார் என்று ஒரு தினுசாகத் காட்ட முயன்றது எனக்கும் பிடிக்கவில்லை.
திரு டொமினிக் ஜீவா அவர்கள் பேசத்தொடங்கியதுமே ஒரு மலை நாட்டுச் சிறுகதைத் தொகுதி யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக வெளியிடப்படுவது ஒரு இலக்கிய வரலாற்று நிகழ்வு. இந்த நிகழ்வை பெருமைப் படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். தெளிவத்தைக்காக வரவில்லை என்றார்.
கொழும்பில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு நான் போவதில்லை என்னும் குறை அந்த நாட்களில் ஜீவா அவர்களுக்கு இருந்தது. அதுதான் எனக்காக வரவில்லை என்னும் சினம்.
‘என்னை எப்படியும் இரவு ரயிலின் ஏற்றிவிட்டு விட வேண்டும் என்னும் நிபந்தனையுடன் தான் கூட்டத்திக்குச் சென்றிருந்தேன்.
நித்தியும் அதற்கு உடன்பட்டு ஏற்பாடுகளுடன் இருந்தார். என்னுடைய பதிலுரை முடிந்ததும் என்னைக் கூட்டிப்போய் ரயிலேற்றிவிட நண்பர்களை தயார் செய்து வைத்திருந்தார்.
ஜிவா பேசி முடிந்ததும் என்னுடைய பதிலுரை. இந்த நூலைக் கொண்டு வந்தமைக்காகவும், யாழ்ப்பாணத்தில் இப்படியானதொரு வெளியீட்டு நிகழ்வை இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் பங்களிப்புடன் நடத்தியமைக்காகவும் நன்றி கூறுவதாகவே எனதுரை அமைந்தது.
எனது படைப்புக்கள் பற்றிய விமர்சனங்களுக்குப்பதில் கூறும் பக்குவம் அப்போது எனக்கு வந்திருக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க, அதைவிடவும் நித்தி என்று நான் உரிமையுடன் விளிக்கும் மு. நித்தியானந்தன் அவர்களுக்கு நன்றிகூர்வதை முக்கியமானதாகக் கருதினேன்.
> எண்பதுகளுக்குப் பிந்தியதான எனது எழுத்துலக இரண்டாம் வருகையை மேலும் ஆழமானதாகவும் அர்த்தமானதாகவும் ஆக்கிய பெருமை இந்த நூல் வெளியீட்டுக்கும் தொடர்ச்சியாக அவர் நடத்திய வெளியீட்டு விழாக்களுக்கும் உரித்தானது.
இனி எழுதுவதில்லை என்று பேனையை மூடி வைத்துவிட்ட ஒரு கால கட்டத்தில், தங்களுடன் இணைந்தோடாத, தங்களுக்குக் கட்டுப்படாத, தங்களுக்கு வேண்டாத ஒருவனை தொலைத்தாகிவிட்டது என்று சிலர் திருப்தி கொண்டிருந்த சூழலில் இந்த நாமிருக்கும் நாடே. தொகுதியை வெளியிட்டதன் மூலம் என்னை எழுப்பிவிட்டது மாத்திரமன்றி, அலங்காரங்களுடன் முன் ஆசனமிட்டு அமரச் செய்தவர் நித்தி
'ஈழத்துச் சிறுகதை இலக்கியப்பரப்பில் ஜோசப்பிற்கு இணையாக எழுதக்கூடியவர்கள் என்று ஓரிருவரை.மட்டுமே கூறமுடியும்' என்று இந்த நூலுக்கான முன்னுரையில் ஓரிடத்தில் குறிக்கின்றார், அவர்.
്ബG് ഭ്രൂ 2011 ஜனவரி “ஞானம் இதழ் சர்வதேச எழுத்த மலரவிருக்கிறது. இந்த இதழுக்கு ஆக்கங்கள் வேண்டுகிறோம்.
40

நித்தியாரோ எவரோ அல்ல யாழ்பல்கலைக்கழகத்தின் அப்போதைய விரிவுரையாளர். புத்திஜீவி, அறிவியல் வாதி, முற்போக்குப் பாசறைக்குள் வளர்ந்தவர். பாசத்துடன் அவர்களால் வளர்க்கப்பட்டவர் ஆய்வாளர் விமர்சகர்.
தங்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவனை நித்தி இப்படி அலங்காரங்களுடன் தூக்கிப்பிடித்தால் சும்மா இருப்பார்களா?
நித்தியும் விட்டபாடில்லை. இந்த வெளியீட்டு விழாவிற்குப் பிறகு விமர்சனக் கூட்டம், அறிமுக விழா என்று நான்கு கூட்டங்களை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உட்பட நான்கு இடங்களில் நடத்தினார். முற்போக்கு அணியின் முக்கியத்துவங்களையே உரையாற்றவும் அழைத்தார்.
கவிஞர்சோலைக்கிளியின் ஒருமல்லிகைக் கவிதைக்காக கடுங்கோபத்துடன் ஒரு கடிதம் என்று அமரர் முருகையன் மல்லிகைக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
அதே கடுங்கோபங்களுடன் மேற்கிளம்பிய விமர்சனங்களுக்கும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும், காரசாரமாகவும், மூர்க்கமாகவும், கிண்டலாகவும் பதிலளிக்க வேண்டிய பொறுப்புநித்தியுடையதாகிவிட்டது.
யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருக்கோணமலை என்றும், கொழும்பு, கண்டி, ஹட்டன், நாவல்நகர், கம்பளை பண்டாரவளை என்றும் தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்திக் களைப்படைந்தவர் நித்தி
கம்பளைக் கூட்டத்தில் நீங்களும் உரையாற்றியிருந்தீர்கள்.
நன்றி கூறுவதன் மூலம் என் பொருட்டு நித்தி பட்ட பாடுகளை நிறைசெய்துவிடமுடியாது.
ஆகவே தான் நித்திக்கு நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறினேன்.
1979ல் என்னுடைய நூலை வெளியிட்டபின் 80ல் என். எஸ்.ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்தையும், 1981ல் சி.வி. யின் வீடற்றவன் நாவலையும்'வைகறை மூலம் வெளியிட்டார்
பிந்திய இரண்டு நூல்களுக்கும், என்னுடையதை வெளியிட்டுப்பட்ட சிரமங்களையும் அவர் படவில்லை
தி. ஞா - தரமான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளில் நாமிருக்கும் நாடேயும் ஒன்று என்பதில் அபிப்பிராய பேதங்கள் இல்லை. இன்றைய இளம் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அது வாசிக்கத் கிடைக்கிறதா? இல்லையே
தெ. ஜோ :- உண்மைதான்! என்னிடம் கூட ஒரு பிரதி இல்லை. உங்களிடம் இருந்ததைத்தான் இப்போது வைத்திருக்கின்றேன். குமரனுக்காக
புனைவகம் மூலம் அதனை மீள்பதிப்புச் செய்யும் முயற்சியில் குமரன் புத்தக இல்லம் ஈடுபட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் கூறுகின்றேன்.
(தொடரும்)
ர் விழாச் சிறப்பிதழ்
நாளர் விழாச் சிறப்பிதழாக
Dள அனுப்பி உதவுமாறு எழுத்தாளர்களை
- ஆசிரியர்
ஞானம்- கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 43
ந்ேதுதான் நின்றிருந்தாள்
ந்தில் தமிழரசி,
ုံစံ မြီb@ဇံ
அலைக்கழித்த அவள்வாழ்வில் 0ேroபடும் தண் பிறத்தவளை கெரெலிற்று,
தத்தின் கூர்நகல்கள் அவனை பிறரன்றற்று
தத்தின் வேட்டைக்oல் அவள்கழுத்தில் பதிந்திற்று பூதத்தின் சவுக்குவரல் உடலைஇரணம் ஆக்
၉2၉၅၅)၊ ဇုကျီးအံ့ချီး அற்றுச்
"அமைதிoட்டும் தோன்றிற் அசரீரி கிரஸ்ற்று. அவளின் இரணங்கள் அவளினது காயங்கள்
எதுவுமே சரியாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Է

Page 44
காட்டு வாசிக்குப் பாட ஆடத் தெரிய வேண்டும்
முன்னீடு :
பல துறவிகள் மண்டலாயிலுள்ள குருமடங்களை விட்டு ஐராவதி ஆற்றின் மறுகரையிலுள்ள குன்றுகளுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். முன்னோடிகள் நகர வாழ்க்கையின் சந்தடியிலிருந்து விலகி, குகைகளிலும் ஒதுக்கிடங்களிலும் வாழ விரும்பியது உண்மையாயினும், பின்னாளில், உற்சாகமிக்க கொடையாளிகள் குன்றுகளில் கட்டிக்கொடுத்த புதுக்குருமடங்களில் வாழும் ஆசையால் துறவிகள் அங்கு போகத் தொடங்கினர். சகாயிங் நகரம் விரிவடைந்து, மறுகரையிலுள்ள பொன்னகரத்தைப் போல விளங்கியது. ஒரு நாள், தம் அபிமானிகள், நகரங்களையும் கிராமங்களையும் துறந்துவனவாசிகளான துறவிகளைச் சிலாகித்துப்பேசுவதை திங்கஸார் சாயதெள கேட்டார். சகாயிங் இல் உள்ள குகைகள் எனப்படுபவை உண்மையில் குன்றுகளில் கட்டப்பட்ட குருமடங்களே; அங்கு வாழ்வோர் வனவாசிகள் அல்லர் என்று சாயதெள சுட்டிக் காட்டினார். “காட்டிலோ குகைகளிலோ வாழ்வது மட்டும் பக்தியின் அடையாளம் ஆகாது. காட்டிலுள்ள வளைகளில் முயல்கள் வாழ்கின்ற படியால் அவை பக்தர்களாவிடா” என்று கூறிய சாயதெள அவர்களுக்கு வனவாசியான துறவியின் கதையைக் கூறினார்.
கதை :
தமது கிராமத்துக்குப் பக்கத்திலுள்ள காட்டுக்கு விறகு பொறுக்கப்போன கிராமவாசிகள், மூங்கிலால் கட்டப்பட்டு, ஒலையால் வேயப்பட்ட ஒர் குடிசையைக் கண்டு வியப்புற்றனர். உள்ளே ஒரு முதிய துறவி ஜெப மாலையை உருட்டிக்கொண்டிருப்பதைக் கண்டதும், அவர்கள் வியப்பு மகிழ்ச்சியாக மாறியது. "இவர் வனவாசம் செய்யும் துறவி, கிராமங்களையும் நகரங்களையும் விட்டு விலகியிருப்பதாக, இங்கு வந்து தம்கையாலே இக்குடிலைக் கட்டியிருக்கிறார்." என்று தமக்குள் பேசிக்கொண்ட அவர்கள், தமது கிராமத்துக்குப் போய், நண்பர்களையும் உறவினர்களையும், ஒதுங்கிவாழும், பக்திமிக்க இத்துறவியைத் தரிசித்து அவருக்குத் தானம் வழங்க அழைத்து வந்தனர். சுவாமிகளுடைய தியானத்துக்கு இடையூறு செய்யக்கூடாது. ஒவ்வொரு நாட்காலையும் உணவுகொண்டு வருவோம். ஆனால் அதிக நேரம் தங்கக்கூடாது. நோன்புநாள்களில் கூட
42
 

நண்பகலுக்கு மேல் தங்கக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டனர்.
கள்ளங்கபடமற்ற கிராமவாசிகளுக்கு இத்துறவி காட்டுக்கு வந்த உண்மையான காரணம் தெரியாது. வணிகராயிருந்து ஓய்வுபெற்றபின்னரே அவர் துறவுபூண்டார். வயதில் மூத்தவராயும் சோம்பேறியாயும் இருந்ததால், ஆகமங்களைக் கற்க முடியவில்லை. தம்மைவிட வயதில் இளைய, ஆனால் அறிவில் மேம்பட்ட துறவிகளோடு வசிப்பது சங்கடமாயிருந்தது. அதைவிட, குருமடத்துக்கு வரும் இல்வாழ்வோர், இவருடைய முதிய தோற்றத்தைப் பார்த்து, அருளுரை ஆற்றுமாறு வேண்டும் போது இவர் மறுக்க, வெட்கப்பட்டார். தீவிர ஆலோசனையின் பின், படித்த துறவிகளும் சமயப் பேருரைகளை விரும்பும் இல்லறத்தாரும் இல்லாத காட்டில், ஒரு குடில் அமைத்து வாழ முடிவு செய்தார். வனவாசத்தில் சில மாதங்கள் நல்லபடியாகக் கழிந்தன. காலையில் ஒழுங்காக தானம்(உணவு) வந்தது. கிராமவாசிகள் அவரை நேசித்தார்கள்;மதித்தார்கள்; நோன்புநாள்களில் தச சீலங்களை அனுஷ்டிக்க வேண்டிய நடைமுறைகளைப் பற்றிக் கேட்பார்கள். நண்பகலே, போய்விடுவார்கள். பிரசங்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. சில மாதங்கள் செல்ல, துறவிக்குக் காட்டு வாழ்க்கை அலுத்து விட்டது. வாசிக்கச் சமய நூல்கள் இல்லை. சிந்திக்கத் தத்துவம் இல்லை. தியானப் பயிற்சி இல்லை. ஜெபமாலையை உருட்ட முயன்றார். மனம் ஒரு முகப்படவில்லை. இளமைப் பருவத்தில் அவர் நன்றாகப் பாடுவார்;ஆடவும் செய்வார். வர்த்தகராய் இருந்த காலத்திலும் நண்பர்கள் முன்னிலையில், அவர் பாடுவதும் ஆடுவதும் உண்டு. இப்பொழுதோ வேலையில்லாமல், தனியே இருக்கும் போது, பொழுது போக்குக்காக ஆடிப்பாடுவதால் ஒரு பொல்லாங்கும் நேரப் போவதில்லை. ஆக, தினமும் பிற்பகல் வேளைகளில் நமது துறவி தமது ஆச்சிரமத்தில் ஆடிப்பாடலானார்.
வனவாசிக்கு வாழ்நாள் முழுதுமே மகிழ்ச்சிகரமாய்க் கழிந்திருக்கும், அந்த எருது மட்டும் வழிதவறி வராதிருந்தால் அன்று நோன்புநாள். தசசீலங்கள் அனுஷ்டிக்க வந்த கிராம வாசிகள் எல்லோரும்போய்விட்டனர். கிராமத்தில் பிள்ளைகள் உறக்கத்தில் இருந்தனர். முதியோர் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். பண்ணை விலங்குகள் கட்டப்பட்டிருந்தன. தமது குடிலில் தனிமையில் நமது துறவி ஆடிப்பாடிக் கொண்டிருந்தார். மாலை நெருங்கும் வேளை, ஒரு மாடு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 45
கயிறுகளை அறுத்துக் கொண்டு வேலியைக் கடந்து காட்டுக்குள் நுழைந்தது. துரத்தி வந்த சொந்தக்காரன் குடிலுக்கருகில் வைத்து அதைப்பிடித்துவிட்டான். வெய்யிலில் ஓடிவந்ததால் அவனுக்குத் தாகமெடுத்தது. மாட்டை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, குடிலை நோக்கி நடந்தான். "சுவாமி தியானத்தில் இருப்பார். ஆதலால் நான் சந்தடி செய்யாதுபோக வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். குடிலுக்கு மிக அருகில் சென்றபோது இந்தப்பாட்டைக் கேட்டு ஆச்சரியமடைந்தான்.
"இடது காலை முன்னேவை
வலது காலைப் பின்னேவை
மினுமினுக்கும் மஞ்சள் அங்கி
முகிலில் நெருப்பு மூட்டுது
தேவதேவபதற்றம் ஏனோ?
இடதுகாலை முன்னேவை வலது காலைப் பின்னேவை
மினுமினுப்பை என்னை நோக்கி
மீள வீசு,மீள வீசு” திகைப்புற்ற கிராமவாசி குடிலுக்குள் புகுந்தான். அங்கே வனவாசி ஒற்றைக்காலில் நிற்பதைக் கண்டான். கள்ளங்கபடமற்ற கிராமவாசிக்கு விஷயம் புரிந்திராது என்று கருதிய வனவாசி அவனைக் கேட்டார்: "இல்லறத்தோய், இந்நோன்புநாளில், என்னைப்போல் வனவாசி ஆகவேண்டும் என்ற ஆசையால் வந்தாயா?” கிராமவாசி சொன்னான் “சுவாமி, என்க்கு வனவாசியாகும் தகுதியில்லை. ஏனெனில் என்னால் ஆடவோ பாடவோ முடியாதே"
கூம்புவடிவத் தொப்பிகளின் வரலாறு
முன்னிடு:
கீழை பர்மாவில் திடீரெனத் தோன்றிய புதிய சமயப் பிரிவுகள் பற்றி திங்கஸார் சாயதெளவும் இல்லறத்தார் குழுவொன்றும் உரையாடிக் கொண்டிருந்தனர். 'ஒருவர் கேட்டார்; "சுவாமி, அநவரத மன்னர் காலத்துக்கு முன்னர் துறவிகள் கூம்பு வடிவத் தொப்பி அணிந்ததாகக் தெரிகிறது. கூம்பு வடிவத் தொப்பிகள் வந்தவாறு என்ன?" சாயதெள சொன்னார்:"இல்லறத்தீர், சமயநூல்கள் கூம்புத் தொப்பிகள் பற்றி ஏதும் சொல்லவில்லை. இவ்வகைத் தொப்பிகள் எப்போது முதலில் புழக்கத்துக்கு வந்தன என்று வரலாற்று நூல்களிலும் எந்தப் பதிவுமில்லை. ஆனால் நான் சொல்லப் போகும் கதை முழுக்க முழுக்க உண்மையென்று நீங்கள் நினைக்கக்கூடாது. கதைசொல்லிதன் கற்பனையையும் சிறிது கலந்து சொல்வது வழக்கம் தானே? ஒர் உதாரணம் சொல்கிறேனே. ஒருவர் தன் வீட்டுக்கருகே, நள்ளிரவில், இரு ஒநாய்களுக்கிடையில் நடந்த சண்டையை விபரித்துக் கொண்டிருந்தார். கதையை முடிக்கும்போதுசொன்னார்: “ஒரு மிருகம் முறிந்த காலோடு ஓடியது.” “கால் முறிந்தது உமக்கெப்படித்தெரியும்?"என ஒருவர்கேட்க,"ஓர் இராக்குருவி எனக்குச் சொன்னது" என்று விளக்கமளித்தார். கதை சொல்லி, நானும் இப்பொழுது கூம்புத் தொப்பியின் மூலம் பற்றிச் சொல்லுவேன். “எப்படி உமக்கு இது தெரியும் என்று நீங்கள் கேட்டால், ஒரு சின்ன இராக்குருவி சொன்னதாகப் பதிலளிக்க வேண்டிவரும்"
ஞானம் - கல்ை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

கதை :
முன்னொரு காலத்தில், அநவரதர் அரசுக்கட்டில் ஏறுவதற்கும் முன்பு, ஒரு தலைமைக்குரு வாழ்ந்து வந்தார். அவரே மன்னருக்கும் ஆசிரியர். ஒருநாள் காலை அவர் திடீரெனக் கண்விழித்தபோது, தம் தலையில் ஒரு சோடிக் கொம்புகள் முளைத்திருப்பதைக் கண்டார். வெட்கம் மேலிட, அடுப்படிக்குள் நழுவிச் சென்ற அவர், அங்கிருந்த தட்டுகள் கூடைகள் கொண்டு, ஒரு கூம்புவடிவத் தொப்பி செய்து, தம் கொம்புகளை மறைத்து, தலையில் அணிந்துகொண்டார். யாரும் அவருடைய கூம்புத் தொப்பி பற்றி ஏதும் சொல்லவில்லை. அதை ஏன் அவர் அணிந்திருக்கிறார் என்று கேட்கவுமில்லை. ஆனால் எங்கே தன் ரகசியம் அம்பலமாகிவிடுமோ என்று அவர் பயந்து கெர்ண்டிருந்தார். சிறுது காலம் சென்றது. தலைமைக் குருவினால் இந்த அவஸ்தையைத் தாங்க முடியவில்லை. தாம் வனவாசம் மேற்கொள்ள விரும்புவதாக மன்னருக்குத் தெரிவித்துவிட்டு, அண்மையிலுள்ள காட்டின் அடர்த்தியான பகுதிக்குள் புகுந்தார். அங்கே மூங்கிலும் ஒலையும் கொண்டு குடிலமைத்துத் தங்கினார். தினமும் காலையில் வரும் சீடப்பிள்ளை தரும் உணவை அருந்தினார்.
ஒருநாள் காலை சீடப்பிள்ளை வழமையைவிட சற்று முன்னதாக வந்துவிட்டார். குருநாதர் தலையில் தொப்பி இல்லை. துருத்திக் கொண்டிருந்த கொம்புகளைக் கண்டு அலறினார் சீடர். “பதறாதே பிள்ளாய், என் துரதிர்ஷ்டம் தலையில் கொம்புகள் முளைத்துவிட்டன. எனக்கும் உனக்கும் இது தெரிந்திருப்பதால் மோசம் வந்துவிடாது. இதை யாருக்கும் சொல்லக் கூடாது என உனக்கு ஆணை இடுகிறேன்"என்றார். காட்டுவழியே திரும்பிக்கொண்டிருந்த சீடரால் தம்மைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காற்றை விளித்து ஒலமிட்டார். என்ன பயங்கரம் இது என் குருநாதர் தலையில் இரண்டுகொம்புகள்! மன்னரின் ஆசான் தலையில் இரண்டு கொம்புகள்" அதே நேரம், அவர் அறியாமல், ஒரு வேடன் வில்லை வளைத்து, ஒரு மானுக்கு இலக்கு வைத்துக் கொண்டிருந்தான். சீடனுடைய ஒலத்தைக் கேட்ட மான் ஓடி மறைந்துவிட்டது.
ஏமாந்த வேடன், நகரத்துக்குத் திரும்பி, தன்னால் அன்று இறைச்சி தர முடியவில்லை என்று கடைக்காரருக்குச் சொன்னான். கோபம் கொண்ட கடைக்காரர், உடன்படிக்கையின்படிபொருள் வழங்காத அவன்மீதுவழக்குத் தொடரப் போவதாக அச்சுறுத்தினர். "கோபிக்காதீர்கள் நண்பர்களே! தவறு என்னுடையதல்ல. காட்டில் ஒரு விசித்திரமான குரல் மன்னருடைய குருவின் தலையில் கொம்பு முளைத்திருப்பதாகச் சொல்லவே, நான் குறிவைத்த மான் ஓடிவிட்டது"வேடன் சொன்ன கதை-அதாவது, தலைமைக் குருவின் தலையில் கொம்பு வளர்ந்த கதை - நகரமெங்கும் பரவி, ஈற்றில் மன்னர் செவிக்கும் எட்டியது.
மன்னர் கலவரமடைந்தார். முரசறைவோரைக் கூப்பிட்டு, தலைமைக்குருவுக்குக் கொம்புமுளைத்த கதை பொய் என்று நகரவாசிகளுக்கு அறிவிக்கும்படி சொன்னான். இந்த அறிவிப்பினால் நகரம் இரண்டுபட்டது. ஒரு சாரார் சீலம்மிக்க குருநாதருக்குக் கொம்பு முளைக்காது என்றனர். மற்றொரு சாரார் நெருப்பில்லாமல் புகையாது என்றனர். ஈற்றில் அரசரே நேரில்போய் குருநாதர் தலையைச் சோதிக்கவேண்டும் என
43

Page 46
முடிவாயிற்று. மன்னர் தமது யானையில் ஏறிக் காட்டிலுள்ள குருநாதர் குடிலுக்குச் சென்றார். மன்னரைக் கண்ட தலைமைக் குரு, கூம்புத்தொப்பியைக் கழற்றிவீசிவிட்டு, கீழே பார்த்தப்படிதரையில் அமர்ந்தார். தமது ஆசிரியரின் தலையில் இரு கொம்புகளைக்கண்டு அதிர்ச்சியடைந்தார் மன்னர். சோகமும், வெட்கமும், கோபமும் மேலிட கண்ணியத்தையும் மரியாதையும் மறந்தார் அவர். வணக்கத்துக்குரிய என் குருநாதருக்கு எப்படி இது நடக்க முடியும்?" என்று உணர்ச்சி வசப்பட்டு கொம்புகளைப் பிடித்து இழுத்தார். என்ன ஆச்சரியம் கொம்புகள் கையோடு வந்தன. குருநாதரும் மன்னர் பெருமானும் மகிழ்ச்சியில் துள்ளினர். வெற்றிக் களிப்போடு நகரம் திரும்பினர்
றங்கூனுக்குப் புகையிலை விற்கப் போன மந்தபுத்தி முன்னீடு :
ஐராவதி ஆற்றின் கழிமுகத்திலுள்ள ஒரு பட்டின்த்துக்கு திங்கஸார் சாயதெள போயிருந்தார். நகரத்து மக்கள் இரண்டு பட்டுப் போயிருந்தனர். ஒரு பிரிவினர் பழைமைவாதிகள். மறுபிரிவினர் ஒக்போ மதத்தினர். மூத்த நகரத்தார் சாயதெளவிடம் வந்து, இந்த இரு பிரிவினரையும் சமாதானமாக வாழும்படி அறிவுரை கூறி நெறிப்படுத்துமாறு வேண்டினர். இரு சாராரையும் அழைத்த சாயதெள அவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேற்றுமை ஓர் அற்ப விஷயமே என்றும் நம்பிக்கை அனுஷ்டானம் இரண்டிலும் இரு பிரிவுகளும் ஒத்த கொள்கை உடையவை எனவும் விளக்கினார். “எது போல என்றால் புகையிலை விற்கறங்கூனுக்குப் போன திருவாளர் மந்தபுத்திக்கு றங்கூனும் ப்றோமும் ஒன்றாகத் தென்பட்டதுபோல”
கதை : v
ப்றோம் நகரத்தில் மந்தபுத்தி என்றொருவன் வாழ்ந்து வந்தான். பெயர் அவனுக்குக் கச்சிதமாகப்பொருந்தியிருந்தது. ஏனெனில் அவன் நற்குணமும் அமைதியான சுபாவமும் மத்திம புத்தியும் உடையவன். மாறாக அவன் மனைவி திருமதி தாட்டி விவேகமும் திடசித்தமும் திறமையும் வாய்ந்தவளாய் இருந்தாள். அவர்களுக்கு சிறியதொருபுகையிலைத்தோட்டம், றங்கூனில் புகையிலை நல்லாய் போவதாகக் கேள்விப்பட்ட திருமதிதாட்டி இரண்டுகூடைபுகையிலையோடுறங்கூனுக்குப் போகும்படி தன் கணவனிடம் சொன்னாள். "எனக்கு வழி தெரியாதே மேலும் வள்ளத்திலோ வண்டியிலோ புகையிலையைக் கொண்டுபோவதற்கான கூலிபோக இலாபம் கிடைக்கும் வாய்ப்பும் குறைவு”என்றான் மந்தபுத்தி றங்கூன் நூற்றிருபது மைல்தான். நீர் ஆண்மகன். நடந்தே போய்விடலாம் என்றாள் மனைவி. "எனக்குத் திக்குத் திசை தெரியாது. வழிதவறிப் போய் விடுவேன்”- ஆட்சேபித்தான் மந்தபுத்தி,"அந்தக் கவலையைவிட்டுவிடும். இரண்டு கூடை - ஒன்று மிகப் பெரியது, மற்றது மிகச்சிறிது தயார் செய்து புகையிலையை நிரப்புங்கள்” என்றாள் மனைவி முடிவாக,
இரண்டு மூன்று நாளில் இரண்டு கூடைகளும் இழைக்கப்பட்டு அவற்றில் புகையிலை நிரப்பப்பட்டது. திருமதி தாட்டி ஒரு காவுதடியைக் கணவன் தோளில் ஏற்றி, பெரிய கூடையை முன்னாலும் சிறிய கூடையைப் பின்னாலும்
44

தொங்கவிட்டாள். பெருந்தெருவுக்கு அவனை அழைத்துப் போய், றங்கூன் இருக்கும் திக்கை நோக்கி அவனை நிற்க வைத்தாள். "பெரிய கூடையைத் தொடர்ந்து நட வழியில் உண்ணும் போதும் உறங்கும் போதும் கூட, பெரிய கூடையை றங்கூனை நோக்கியபடி வைத்துக்கொள்” என்று சொல்லி வழியனுப்பினாள்.
மந்தபுத்தி றங்கூனை நோக்கி மெல்ல நடந்தான். பொழுதுபட்டது. இருள் சூழ்ந்தது. மனைவி சொன்னபடி கூடைகளைக் கீழே வைத்துவிட்டு, திருமதிதாட்டி ஆசையோடு கட்டிக்கொடுத்த பொதி சோற்றை உண்டான். தெருவோரம் உறங்கப் போனான். இரண்டொரு மணிநேரம் கழிந்தது. ஒரு வண்டிக்காரன் அவ்வழியேவந்தான். இரண்டு கூடைகள் தன் வழிக்குக் குறுக்கே இருப்பதைக் கண்டு எரிச்சலுற்றான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மந்தபுத்தியை எழுப்பமுயன்றான். அவன் அசையவில்லை. "பாவம், களைத்துப்போய் உறங்குகிறான். அவனைத் தொந்திரவு செய்யக் கூடாது" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, இரு கூடைகளையும் பாதை ஒரம் வைத்துவிட்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஆனால் மந்த புத்தியின் கெட்ட காலம், வண்டிக் காரன் கூடைகளை மாற்றி வைத்து விட்டான். இப்பொழுது பெரிய கூடைப்றோம் நகரத்தை நோக்கி இருந்தது.
அதிகாலை மந்தபுத்தி எழுந்து காலைக் கடன்களை முடித்தான். காவுதடியைக் கவனமாகத் தோளில் ஏற்றினான். மனைவியின் கட்டளைப்படி பெரிய கூடை காட்டிய திசையில் நடக்கலானான். அன்றிரவு மீண்டும் ப்றோம் நகரம் வந்து சேர்ந்தான். ஆனால்தான் கேள்விப்பட்டதற்கெல்லாம் மாறாக, றங்கூனும் ப்றோம் போலவே கலகலப்பின்றி இருந்தது கண்டு ஏமாற்றமடைந்தான். “கப்பல்கள் எங்கே? செங்கல்லாலான வீடுகள் எங்கே? ஸ்வேதகன்பகோடா கூட, எங்களுடைய ஸ்வேஸந்தெளபகோடாவிலும் பெரிதாக இல்லையே"என்றான் தனக்குள். மேலும் நடக்கும் போது, தெருக்களும் வீடுகளும் ப்றோம் நகரத்தெருக்களையும் வீடுகளையும் ஒத்திருக்கக் கண்டான். தன் தெருவைப்போல ஒரு தெருவும்,தன் வீட்டைப் போல ஒரு விடும் இருப்பதைக் கண்டதும் அவன் வியப்புமேலும் அதிகமாயிற்று அவ்வீட்டின் முன்நின்று,"வீட்டுக்காரரே,ஒரு கால்வெளியேவந்து ஒருவழிப்போக்கனுக்கு உதவமுடியுமா? என்றான்.
யன்னல் ஊடாகப் பார்த்த திருமதி தாட்டி தன் கணவன் படலையில் நிற்பதைக்கண்டாள். இவர் ஏன் திரும்பிவந்தார்?" என்று எண்ணியபடி படலையடிக்குப் போனாள். மந்தபுத்திக்கு ஆச்சரியம் எல்லை கடந்தது “றங்கூனின் சீமாட்டியே, தோற்றத்தில் என் மனைவியைப் போலவே இருக்கிறாய், ப்றோம் நகளில்,மந்தபுத்திஎன்பவரைக்கல்யாணம்செய்துவாழும்திருமதி தாட்டி உனக்கு உறவினளா?" என்று கேட்டான். பதில் ஏதும் சொல்லாததாட்டி,அவன் உச்சிக்குடுமியைப்பிடித்து, அவனைக் குணிய வைத்து, தன் கையில் இருந்த அகப்பையால் அவன் முதுகில் மொத்தினாள். “கிழட்டுப் பிணமே, உனக்கு வாய் இல்லையா? கண்இல்லையா? இதுப்றோம்,இதுஎன்வீடு,நான் உன் மனைவிஎன்பதுகூடத்தெரியவில்லையா?"எனஏசினாள். மந்த புத்தி மறுவார்த்தை பேசாது வீட்டுக்குள் போனான். ஒரு நீண்டகத்தியோடு வந்தான். மனைவிபயத்தால் நடுங்கினாள். பெரிய கூடையைத் துண்டுதுண்டாக வெட்டியமந்த புத்தி"இது தான் எனக்குத்தவறாக வழிகாட்டியது”என்றான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 47
லோக்கல் டால்ஸ்டாயும் மணி விழாநாயகரும் :-
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை எதிர்த்து ஒர் இலக்கியக்காரர் மல்லுக்கு வந்து விட்டார். கேசத்தை பிச்சுக் கொள்ளாதேயும், கதையைச் சொல்லுவேன். நல்ல வெய்யில், குடையும் இல்லாமல் வியர்வை ஒழுகலோடு பஸ்தரிப்பில் கால்கள் கடுக்க நின்று கொண்டிருந்த போது என்னமோ தெரியல்ல இந்த பாட்டு நெஞ்சிற்குள் புகுந்து உதடுகளின் வழியாக முணுமுணப்பாக உதிர்ந்து கொண்டிருந்தது.
“என்ன கேவி, இந்த வெய்யிலில் உமக்கு இந்தப் பாடல் வேண்டிக் கிடக்கு கர்மம் கர்மம் கர்மம் அய்யா கர்மம்' இலக்கியக்காரர் தலையிலடித்துக் கொண்டார். திடும்மென உண்டான அதிர்வில் கலங்கித்தான் போனேன்.
அன்று சனிக்கிழமை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது கைப்பேசியின் கிளிக்குரல் கத்தியது. சகதர்மினி பேசினார்.
"என்னங்க எங்கே இருக்கீங்க. மத்தியானம் சமைக்கல்ல, டெலி சீரியல்ல நேரம் ஒடுனதே தெரியல்ல போதாததிற்கு உங்க பேத்தி தொல்லை பெரிய தொல்ல மத்தியானத்திற்கு ரெண்டு சாப்பாட்டு பார்சல் கொண்டு வந்திருங்க. கொஞ்சம் நல்ல சாப்பாடா வாங்குங்க, என்ன?
கிழிஞ்சது போ, சனிக்கிழமை, அதிலும் அரைநாள் வீட்டுக்குப் போய் ஒரு சப்புக்கட்டலாம் என்ற எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட்டாள். இந்த மாதிரியான ஒரு சங்கட நேரத்தில் தான் அந்த பாடலும் நெஞ்சுள் புகுந்து உதடுகளின் வழியாக முணுமுணுப்பாக வழிந்தோட நண்பரும் வந்தார், சாடி விழுந்தார்.
அவர் எரிச்சலுக்கு காரணம் இருந்தது. மனுஷன் ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேசினார். கொஞ்சம் அரசியலையும் காரசாரமாகக் கொட்டினார். பத்திரிகையிலும் ஆக்ரோஷமான தோற்றத்துடன் சிறுகுறிப்புடன் படமும் வந்துவிட்டது. இலக்கியக்காரர் பத்திரிகைகள் வாங்குவதில்லை ஒசி கண்ணோட்டம்தான். அன்றுவாங்கிவிட்டார். சகதர்மினியிடம் காண்பிப்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு ஓடினார். மனைவியோஈகோவால் வீங்கிப்போனவர். கணவர் இரண்டடி முன்னேறினால் நாலடிக்கு குதிக்க நினைப்பவர் கேட்கவா வேணும் மனுஷன் சூம்பிப்போகும் அளவிற்கு வார்த்தைகள் எகிறிக்குதித்தன. "என்ன புத்தி கெட்ட மனுஷன் அய்யா நீர் அவன் அவன் தலைத்தப்பினால் போதும் என்று இருக்கான். உமக்கு என்ன கேடு கண்டதையும் பேசி கழுத்தை கொடுக்காதீரும்"
அம்மணியின் உறுமல், பாவம் லோக்கல் டால்ஸ்ட்டாய் ஆடித்தான் போனார். அது கெடக்கட்டும் இலக்கியப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 

பத்திரிகையில் பெண்டாட்டி மார் சமாச்சாரம் எதுக்கையா?” என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.
ச. முருகானந்தன் மணி விழா நாயகனாகி விட்டார். இன்று நம்மிடையே தம்பதிகள் சிலர் ஆர்வமுடன் இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்து வருகிறார்கள். இளைய தலைமுறையினர் வரிசையில் நானறிந்த மட்டில் வசந்தி தயாபரன் மட்டுமே. பல வருட சாதனையாளர்கள் வரிசையில் பத்மா சோமகாந்தன், ஞானம் ஞானசேகரன் இப்பொழுது முருகானந்தன் தம்பதிகள். இலக்கிய உலகில் தம்பதிகள் சமேதரராய் சளைக்காமல் எழுத்தித் தள்ளி சக்கைப் போடும் தம்பதிகள் இவர்கள்.
மணிவிழாக்காணும் ச. முருகானந்தனால் எப்படி இப்படி எழுதித் தள்ள முடிகிறது என்று நினைத்ததுண்டு. துணைவியாரின் பக்கபலமே அதுவென்பது தெளிவானது. இல்லறவாழ்வில் சொல்லொண்ணா துயரம் பட்டவர் டால்ஸ்ட்டாய் என்றாலும் எப்படி அவரால் எழுத முடிந்தது.
போர்ச் சுழலில் வன்னி மக்களின் அவல வாழ்வு முதல் மலையக மக்களின் துன்பதுயரங்கள் வரை நல்ல ஆக்கங்கள் பலவற்றை ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறார் டாக்டர் ச. முருகானந்தன். தரைமீன்கள் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. தாம் வாழ்ந்து பணிபுரிந்த பிரதேசங்களையும், மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் கதைகளாகவும், கதா மாந்தர்களாகவும் பதிவு செய்து பவனி வரச் செய்வது ஆற்றல் மிகு ஒரு படைப்பாளியின் ஆரோக்கியமான செயல்பாடாகும். அலியன் யானை' என்னை ஈர்த்த இவரின் படைப்புகளில் ஒன்று. ஒரு போராட்டத்தை உருவகப்படுத்தும் படைப்பாக அது தோன்றியது.
மூன்று தசாப்தத்திற்கும் அதிகமான காலம் எழுதிவருகிறார். ஏராளமான கதைகள், கவிதைகளை இவருடைய எழுதுகோல் பிரசவித்துவிட்டது. இனி எத்தனை கருக்கல் சூல்கொண்டதாக அவர் படைப்பாற்றல் பனிக்குடம் எனும் சிந்தனையில் இலயித்துக் கிடக்கிறதோ தெரியவில்லை. பத்திரிகையாளனின் தேவை அவனுடைய ஒய்வுடன் அஸ்தமிக்கிறது. எழுத்தாளன் வாழ்வும் அப்படித்தான் என்கிறது எங்கள் சமூகம் தொழில்ரீதியாக ஒய்வு கொண்டு விட்டாலும் இன்றைய வாழ்வியல் ஒய்விற்கு அனுமதி வழங்குவதில்லை. அதிலும் இலக்கியக்காரன் பாடு திண்டாட்டம்தான். அதிலும் இலங்கை தமிழ் எழுத்தாளன்பாடு ஐயோ சாமி சொல்லி மாளாது. அவனுடைய சகதர்மினி கூட தெண்டச்சோற்றுக்காரரை பார்ப்பதுபோல்தான் பார்ப்பாள்.
இன்றைய மணிவிழாநாயகரான முருகானந்தன் அதனை தவிலடி, நாதஸ்வர ஊதல் என்பது போன்ற பெரிய அமரிக்கையுடன் கொண்டாடாமல் அவர்கள் துணிந்து விட்டார்கள் என்ற நூலினை வெளியிட்டு ஒருமுன்மாதிரியாக
45

Page 48
திகழ்ந்துவிட்டார். அதனால் ஐயோசாமி என்ற பரிதாபகரமான நிலைக்குள் தள்ளப்பட்டு அவருடைய எழுதுகோல் முடங்கிவிடாது என்று முழுமையாக நம்பலாம். துணைவியாரும் நல்ல எழுத்தாளர் சமூகப் பார்வை கொண்டவர். அதனால் லோக்கல், டால்ஸ்ட்டாய்களின் வரிசையில் இடம்பெற மாட்டார் என நம்புவோம், வாழ்த்துவோம். எழுத்துத் தொழில் தொடரட்டும்.
பத்தி எடுத்துக்களும் பதில் கிறுக்கல்களும் :-
“ஏலே கே.வி. எப்பிடி உம்ம பிசுனசு?” "பிசுனஸ்ஸா? எதைக் கேக்குதியே?" “என்னவோ நல்ல ஆளா இருக்குறீர்! அதான் ஒரு கலாபூஷணம் சகோதரர் விஜயன் எப்போ குலாப்ஜான் பிசுனஸ் காரராக மாறினார்ன்னுசிநேகயூர்வமாக ஆரம்பித்து அப்புறம் பின்னுபின்னுன்னு பின்னித்தள்ளியிருந்தாரே அதைத்தான் கேட்குதேன்?"
"கிழிஞ்சுதுபோகாக்கா நிக்க பனம்பழம்'தொப்புன்னு விழுந்துதாம். அதுமாதிரி இல்லே உம்ம கதை, இருக்கு"
அது இல்ல்ேங்கானும் ஒருத்தர் உம்மபெயரைச்சொல்லி கன்னாபின்னான்னு எழுதி, அதையும் சஞ்சிகை ஆசிரியர் ப்ளாஸ் பண்ணுகிற மாதுரி போல்ட்டைப்புலே பிரசுரிச்சிருக்காருன்னா நீர்பதில் சொல்லித்தானே ஆகணும்"
நியாயம்தான்" "அதுதாம்லே கேட்கிறேன். அது என்ன காகம் இருக்க பனம்பழம் விழுந்துதுன்னு கதாகாலேட்சேபம் பண்ணுரீர்?"
“சொல்லுறேன் கேளும். தமிழ் நாடக விழா நடந்துது இல்லே, அப்பதான் இந்த சமாச்சாரப் பத்தி எழுதுனேன். அய்யா! நம்ம கலையுலகம் கொஞ்சம் ஊழல் பேர்வழிகளாலும், வத்தி வைக்கிறவங்களாலும், ஒரு பொன்னாடைக்காக விடியற்காலை ஒடிப்போய் எம். பி. மார், அமைச்சர்மார் வீட்டு வாசலிலே தவம் கெடக்கிறதும், ஆருக்காவது பரிசு இல்லே பட்டம் கெடைக்கப் போவதுன்னு தெரிஞ்சா பைபாஸ் சேர்ஜரி செய்ய வேண்டிய உடல் பாதிப்பு நிலை இருந்தாலும் இதையெல்லாம் மூட்டை கட்டிவைச்சுட்டுமொட்டைக்கடுதாசி எழுதவும், டெலிபோன் அடிக்கவும், பத்திரிகை கட்டிங்களை அனுப்பி வைப்பதுமாக ஆப்பு வைக்கும் சைக்கோக்களாக நம் படைப்பாளிகளில் பலர் நெறிகெட்டு அலைகிற ஒரு சூழலில் சில விசயங்கள் குறித்து சுமூகமான இலக்கிய உரையாடல்களை உசுப்பிவிடுவதற்காக எழுதிவருகிறேன். ஏலே ஒரு சிறு கல்வீச்சு கூட பெரும் நீர்பரப்பில் சலனத்தை உண்டுபண்ணிவிடும் என்ற நம்பிக்கைதான்
நல்லா இருக்கே அந்த கலாபூஷணம் சொன்னமாதுரி அவர் இமேஜ் பாதிக்கிறாப்போல நீர் எழுதுவீர். அது இலக்கியப் பணியின்னு வேற பீத்துவீர். நல்ல ஆளு அய்யா f."
"அப்படி போடுங்கோ! அப்புடின்னு நான் சொல்ல மாட்டேன். 'அட நமக்கு சப்போட் பண்ணவும் ஆளுக இருக்காங்களேன்னு தன்னை ஒரு இன்வென்ஸ்ட்டி ஜெர்னலிஸ்டுன்னு சொல்லித்திரிகிற அந்த பூஷணம் தான்பாராட்டனும். இதையெல்லாம் ஏன் சொல்லுறேன்னா, ஒரு சாதாரண இலக்கியப்பத்தியத்தானும் அமைதியாக, ஒழுங்காக வாசிச்சு அதுலே என்ன சொல்லப்பட்டிருக்கிறதுன்னு புரிஞ்சுக்காம நம்மளத்தான் அள்ளி வைக்கிறான்னு அவசரப்பட்டு ஆருக்கோ செய்ததை தன் தலையிலே தூக்கிப்
46

போட்டுக்கிட்டு'அய்யோ என்னைச் சொல்லிப்பிட்டானே! என் இமேஜை கெடுத்துப் பிட்டானே! என்று மாரடிச்சு ஆடுகிற ஒப்பாறிகாவடி இருக்கே.
"அப்படின்னா?நீர் அவரைப்பத்தி எழுதல்லியா?” "இழவுதான். நீர் ஒன்னு, ஒரு சமாச்சாரம் சொல்லுதேன் கேளும். விழுந்து விழுந்து சிரிக்கப் போரீர். இந்த பத்தி பிரசுரமானவுடன் நாடக உலக அபிமானிகள் கொஞ்சம் பேர் விழந்தடிச்சிக்கிட்டு ஓடிவந்து கேட்டா ஆரைச்சொல்லுறியே? ஆரைச் சொல்லுறியேன்னு ஏன்னா எங்கேயும் ஆர் பேரையும் நாம சொல்லல்ல. கேட்டவுக எல்லாம் நெனச்சமாதுரி நம்ம பேனா தனி நபர் எவரையும் அவமானப்படுத்தல்ல. வழக்கம் போலவே நம்ம இலக்கிய உலகில் இடம்பெறும் சில மோசமான சமாச்சாரங்களை சந்திக்கு இழுத்து அதனை ஒரு சுமூகமான உரையாடலுக்கு இழுத்துபோகனுங்கிறமுயற்சித்தான்."
"அடடா! நல்ல முயற்சிதான். அப்படி என்னதான் சொல்லிப்போட்டீர்?"
"பத்தியை அமைதியாக வாசியும். ஒன்றல்ல பலபேர் தலையைபிய்த்துக்கொள்ளும் சமாச்சாரங்கள் இருக்கின்றன. நண்பர் கனி அவசரப்பட்டுவிட்டார். ஆர் ஆருக்கோ செய்த தொப்பிகளை தன் தலைகை கால்களிலெல்லாம்போட்டு கடிதம் என்ற பெயரில் கதகளி ஆடி அது நான் தாம்லே அது நான் தாம்லே என்று கோமாளியாகிவிட்டார். என்ன ஆரை எழுதினியே எழுதினியே!ன்னுபல பேர் கேட்டும் ஒரு நமூட்டுச் சிரிப்போடு நிறுத்திக்கிட்டேன். அது நான்தான்னு இவர் பதில் சொல்லிவிட்டார்.
இன்னொருசமாச்சாரம் தெரியுமா? தமிழ்நாடக உலகில் தன்னை ஒரு பெரிய புள்ளியாக தம்பட்டம் அடிக்கும் ஒருவர் தொலைபேசியில் வீரப்பா பாணியில்
“ஏண்டா எப்படி இருக்குஒடம்புன்னு?"கெர்ஜித்தார். 'அய்யா சாமி? சுகரும் கொலஸ்ட்டரோலுமாக கெடக்குன்னேன். மனுஷனுக்கு பெரிய சந்தோஷம். ஹக்ஹக்ஹான்னு அலிபபாவும் நாற்பது திருடனும் படத்தில வருகிற அபுஹூசைனைப்போல சிரிச்சார். "கெடக்கான் பய சாகப்போகிற பய” என்று பக்கத்தில் அவர் சகபாடிகிட்ட சொல்வது கேட்டது. உம்கும் இவருக்கு மட்டும் பரலோக யாத்திரை இல்லையோ என்ன. அட அது எல்லோருக்கும் சொந்தம்தானுங்களே. நண்பர்கனியிடம் ஒரு கேள்வி
உமது கதையை தமிழ் ஒழுக்க மரபிற்கு பாதகமானது என்று சொன்னது கே.வி.யா. இல்லை நடுவர் குழுவா?
ஒரு போட்டியில் இறுதிவரைக்கும் வரும் இருபடைப்புக்கள் பல கட்டங்களைத்தாண்டி வரும் அவ்வாறு தான் உமது படைப்பும் வந்திருக்கிறது. அந்த குலாப்ஜான் கதை பையனைப்போல இரண்டுபேர் ஓடினால் இருவருக்கும் பரிசு உண்டு. அது சம்பிரதாயம். இவ்வளவு தூரம் வந்த ஒரு படைப்பை இறுதி பரிசளிப்பில் மரபு பிறழ்வானது என ஒதுக்கிவிடுவது தவறானது என்பது தான் என்னுடைய வாதம். அதாவது உமக்கு ஏன் பரிசு கொடுக்கலேன்னு நடுவர் குழுவை கேட்டு அடப்பாவிகளா! என்று சபித்தேன். இன்வெஸ்டிகேசன் ஜெர்னலிஸ்ட் உமக்கு புரியல்ல. நடுவர் குழு புரிந்து கொண்டது. அம்பை என்மீது எய்தது. நீர் புரிந்து கொள்ளாமலே எய்துவிட்டீர். அந்த அபுஹூசேன் என்னவோ அவரைப் பத்தி எழுதினதாக டெலிபோனில் கொக்கரித்தார்.
ஏலே என்னவேவாசிக்கிறீங்க!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 49
நரல் அலைவும் உலைவும் ஆசிரியர் : சு. குணேஸ்வரன் வெளியீடு : தினைப்புனம் விலை : ரூபா 200/=
ថា ] [ យf L குணேஸ்வரன் அவர்கள் தொண்டமானாறு கெருடாவிலைட் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ் பல்கலைக்கழகத்தில் புலம்பெயர் இலக்கியம் தொடர்பில் ஆராய்ச்சி செய்து முதுதத்துவமாணி பட்டம் பெற்றவர். இலக்கிய ஆய்வில் பெரும் விருப்புடையவர் தேடலை முழுமூச்சாகக் கொண்டு உழைப்பவர்.
துவாரகன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் என்ற நூலை வெளியிட்டு வடமாகாண இலக்கிய விருதினைப் பெற்றவர்.
புலம் பெயர்ந்து இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் பொருளில் நாட்டம் கொண்டோ, சொகுசான வாழ்வைத் தேடியோ செல்லவில்லை. ஈழத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தத்தமது உயிரைக் காத்துக் கொள்ள புறப்பட்டவரே. இவ்வாறு இந்தியா, இங்கிலாந்து கனடா அமெரிக்கா, இத்தாலி, சேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா முதலிய நாடுகளில் புலம் பெயர்ந்து தங்களுடைய புதிய அனுபவங்களையும், இன்ப துன்பங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டவர்கள். - இவர்களது இலக்கியம் புலம்பெயர் தமிழ் இலக்கியம் புலம் பெயர்ந்தோர் இலக்கியம். புகலிட இலக்கியம் என பலவாறு அழைக்கப்படுகிறது.
இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் இடப் பெற்றுள்ளன. இவை கலை முகம், செங்கதிர், தினகரன் ஞானம், வீரகேசரி, புதிய தரிசனம் முதலிய சஞ்சிகைகளில் வெளிவந்தவை. புலம் பெயர்ந்தோர் சென்ற இடங்களில் தாம்பட்ட கஷ்டங்கள், ஏற்றுக் கொண்ட வசைமொழிகள் பெண்கள் அனுபவித்து துயரங்கள் என்பன் பற்றி பேசுகிறது என்கிறார் ஆசிரியர். புலம்பெயர் இலக்கியம் புலம் பெயர் சஞ்சிகைகள் - மொழி பெயர்ப்புகள் - தமிழ் மொழி பிரதேசச் செல்வாக்கு என்பன பற்றியும் விபரிக்கப்படுகிறது என்கிறார் சுமதி ரூபனின் 'யாதுமாகிநின்றாய், ஷோபா சக்தியின் தேசத்துரோகி, இரவியின் காலம் ஆகிவந்த கதை - ஆழியாளின் துவிதம் இன்னும் சுந்தரராசா, கலாமோகன் கருணா கரமூர்த்தி போன்றோரின் ஆக்கங்களை விமர்சன பார்வையில் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார் பிரயோசனமான நூலை நமக்குத்தந்துள்ள குணேஸ்வரனை பாராட்டலாம். இந்நூல் பல்கலைக் கழக மாணவர்க்குட் ஆய்வை மேற்கொள்வோருக்கும் உகந்த நூலாக இருக்குட்
என்பதில் ஐயமில்லை.
நூல் : செந்தமிழ் வளம் பெற வழிகள் ஆசிரியர் : பன்மொழிப்புலவர் த
கனகரத்தினம் வெளியீடு : மணிமேகலை பிரசுரம் விலை : ரூபா 130/= இந்திய ரூபாய்
কৃষ্টঃ இஜ்ஜ்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 

பன்மொழிப் புலவர்
函。 கனகரத்தினம் அவர்கள் கீரிமலை ៣uលភ្នំ கூடலைப்
பி ற ப் பி ட மா க க் கொண்டவர். இலண்டன் பி. ஏ. கல்வி டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றவர். இலங்கை பாடநூற்பகுதித்தலைவர், வி ரி வு  ைர யா ள ர் , எழுத்தாளர், பதிப்பாசிரியர்,பேச்சாளர் என்று அறியப்பட்டவர். வாழும் மொழியறிஞர்களில் இவர் முதன்மையாக எண்ணத்தக்கவர்.
செந்தமிழ் வளம் பெற என்னும் இந்நூல் பல சிறப்பு
அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒரு நூலை எழுதுவதற்கு
பல தகைமைகள் உண்டு. அவற்றை எல்லாம் ஒருங்கே தன்னகத்துக் கொண்டவர். பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம் அவர்கள் பலமொழி வித்தகர். தமிழ், சிங்களம், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, ஹிந்தி, மலையாளம் முதலிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஆகவே மொழி வழக்குகளை வேண்டியவிடத்து ஒப்பீட்டு ரீதியாக விளக்கியுள்ளார்.
சொல்வளம் பெருக்குவோம்’ என்னும் தலைப்பில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில், ஆற்றிய நூற்றுக்கணக்கான உரைகளே இந்நூலாக வெளிவந்துள்ளது. மொழி வளர்ச்சிக்காக இவர் கூட்டுத்தாபனத்தில் பல்வேறு முயற்சிகளையும், செயற்பாடுகளையும் செய்து வெற்றி கண்டவர். நன்னெறி, நல்வழிப்பாடல்களுக்கு விளக்கமளித்துள்ளார். வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியைதயாரித்தளித்தார். சங்கத் தமிழின் தங்கத்தொனி என்ற நிகழ்வையும் சங்கமம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி நேயர்களின் பாராட்டைப் பெற்றவர். தமிழ் சிங்கள இலக்கிய உறவு என்ற நூலுக்கு கலைக்கழகம் பரிசும் பெற்றுள்ளார்.
இவரது நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார். தமிழில் நேர்வழக்கு, சொல்லாராய்ச்சி, இலக்கண வழியே கட்டமைப்பு செய்யப்பட்ட இலக்கிய வடிவங்கள் என்பனவற்றை சான்றுகளாகக் கொள்வதுடன், ஒலியியல், சொற்பிறப்பியல், சொல்லமைப்பியல் முதலாம் பரிமாணங்களையும் விளக்கி, எழுத்து, சொல், சொல் மரபுவழி அணுகுமுறைகளையும் கையாண்டுமொழியை விளக்கியுள்ளார் என்று நவின்றுள்ளார்.
இந்நூல் ஊடகவியலாளர், ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், நூல்கள் வெளியிடும் அச்சகங்கள், சஞ்சிகையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பயன் பெறக்கூடிய நூலாக இருக்கிறது. எல்லாத் தகுதியும் கொண்ட ஒருவரின் படைப்பு: தமிழ்கூறும் நல்லுலகம் வாழ்த்தி வரவேற்கும். இந்நூலுக்கு திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் சிறந்த நூலுக்கான விருதும் பொற்கிழியும் வழங்கிக் கெளரவித்துள்ளது.
47

Page 50
நூல் : இளைஞர் தளபதி இர. சிவலிங்கம் ஆசிரியர் : சாரல் நாடன் வெளியீடு கொழும்புத் தமிழ்ச் சங்கம்
விலை : ரூபா 300/-
நூலாசிரியர் சாரல் நாடன்' மலையகத்தைப் பிறப்பிடமாகப் கொண்டவர். தேயிலைத் தொழிற்சாலையின் முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோ. நடேசையர், சி.வி. சில சிந்தனைகள் மலையகம் வளர்த்த தமிழ் போன்ற பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதி எழுத்துலகில் ஜாம்பவானாகத் திகழ்பவர் எழுத்தே மூச்சாகக் கொண்டு எழுதிவரும் படைப்பாளி எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வாளர், பேச்சாளர் என்று பல பரிமாணங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். சாகித்திய மண்டலப் பரிசுகள் பலவற்றை பெற்றுக் கொண்டவர்.
மலையகத்தின் உதய சூரியனாகவும், இளைஞர் தளபதியாகவும், வீறுகொண்ட சிங்கமாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த கல்வியாளரும், சமூக சிந்தனைவாதியும், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒப்பற்ற சொற்போர் வீரராகவும் திகழ்ந்த இளைஞர்களின் இதயத்தை வென்ற எழுச்சி மிக்க தலைவராய்த் திகழ்ந்த இர. சிவலிங்கம் அவர்களைப் பற்றிய அருமையான நூல் இளைஞர் தளபதி இர. சிவலிங்கம். இவ்வருமையான நூலை எமக்களித்த சாரல் நாடன் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்குமுரியவர்.
தமிழ் கலாசாரம், மொழி மற்றும் இலக்கியம் என்பவற்றுக்கு தொண்டாற்றிய பெரியார்களுக்கு நூல் வெளியிடுவது என்ற கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் முகமாக தமிழ்ச்சங்கம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரன், இர. சிவலிங்கம் பற்றி மொழிவதைப் பார்ப்போம். ஆண்டாண்டு காலம்ாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனச்சாட்சியின் குரல் சிவலிங்கத்தின் குரலாகும். அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுதலிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கைவிலங்குகளை ஒடுக்க முனைந்த ஆவேசக்குரல் அவரது குரல் என்று கூறுகிறார்.
"இளைஞர் தளபதி என்று பரவலாக அறியப்பட்ட இர. சிவலிங்கம் ஒரு தனிமனிதரல்ல. நம்முடைய பொதுச் சொத்து அவரை நம்முடைய சமூகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.” என்று நெஞ்சம் குமுறும் சாரல் நாடன், தனது ஆசானுக்கு குரு தட்சணையாக இந்த நூலைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நூலை ஆறு தலைப்புகளில் நூலாசிரியர் எழுதியுள்ளார். இர. சிவலிங்கம் ஆசிரியப் பணியில், கலை இலக்கியம் பணியில், இலங்கை தோட்டச் சேவையாளர் சங்கத்தில், தாயகம் திரும்பிய தமிழர்களின் மத்தியில், கனவுகாணும் சமூகம், மீண்டும் மலையகத்தில்,
இர. சிவலிங்கம் அவர்கள் சாமிமலை ஸ்டொக்ஹாம் தோட்டக் கணக்கப்பிள்ளை இரத்தின சபாபதிக்கும் பச்சையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர், அட்டஹைலன்ட்ஸ் கல்லூரியிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும்
48
 
 
 
 
 

பயின்றவர். பேரறிஞர் அண்ணாத்துரையிடம் நாவன்மைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர். ஆசிரியர் சேவையில் பல நன்மாணாக்கர்களை உருவாக்கியவர். மலையக இளைஞர் முன்னணியை உருவாக்கியவர். பல எழுத்தாளர் உருவாகவும், இளைஞர்கள் ஆசிரிய பணியில் ஈடுபடவும் காரணகர்த்தா. 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டு இந்தியா சென்று புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் மறுவாழ்வு மன்றம் அமைத்து செயற்பட்டு கலெக்டர் லீனா நாயராவ் அவர்களால் கைது செய்யப்பட்டு சிறை சென்று துயர்பட்டு மீண்டவர்.
09.07.1999 எம்மை விட்டு இறைவனடி சேர்ந்த இப்பெரியாரின் வாழ்க்கை அனுபவம் நமக்கு என்றும் வழிகாட்டும். மலையகத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்நூல் பவனி வர வேண்டும்.
நூல் : வெளிச்சோடும் மனங்கள் ஆசிரியர்: வெ. துஷ்யந்தன் வெளியீடு : ஜீவநதி விலை : ரூபா 200/=
(ിഖ്. துஷ்யந்தன் வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது முதல் நூல் வெறிச்சோடும் மனங்களாகும். இவர் சிறந்த கலைக் குடும்பத்தின் வாரிசு ஆவார். இவரது பேரர்கள் வே. பாலசிங்கம் நா. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் சிறந்த இசை நாடகக் கலைஞர்கள் ஆவர். துஷ்யந்தன் அவர்களும் இசை நாடகக் கலையுடன் ஈடுபட்டவர்.
இவரது இந்த நூலில் கடந்த ஐந்து வருடங்களாக எழுதிய படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சமகால நிகழ்வுகள் காதல், சமூக முரண்பாடுகள், போர் விட்டுச் சென்ற எச்சங்கள் என்பன கவிதைகளின் கருப்பொருளாய் அமைகின்றன.
தனக்கே உரித்தான பாணியுடன் கவிதைகளைப் படைத்துள்ளார். வாழ்த்துரை வழங்கிய இரா. அகிலன் அவர்கள் வெறிச்சோடும் மனங்கள் துஷி என்னும் கவிஞனின் பல்வேறு பரிமாணங்களை காட்டி நிற்கின்றது என்கிறார். சில அபிப்பிராயங்கள் ஆலோசனைகள் என்ற தலைப்பில் ந. சத்திய பாலன் அவர்கள் கவிஞரை ஊக்குவித்து சிறப்பான சில ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்.
மேற்படி கவிஞர் கவிதைகளில் நேயமற்ற மனிதர்களைச் சாடுகிறார். முன்னேற்றத்துக்கு தடைக் கற்களாக விருக்கும் மூட நம்பிக்கைகள் பற்றியும் சாடியுள்ளார். போர்ச் சூழல் ஏற்படுத்திய வடுக்களையும் வலிகளையும் நெஞ்சு பொறுக்காமல் பாடியுள்ளார். அதிகாரம் அத்துமீறல் இவைகளில் இருந்து எப்போ விமோசனம் கிடைக்கும் என்று ஏங்குகிறது கவிஞரின் நெஞ்சு.
புரியாத வேதாந்தம் என்ற கவிதையில் "சில நிகழ்கால மகிழ்தலுக்காய் இறந்த காலத்தையே இருட்டடிப்புச் செய்ய முனைகிறது மனித மனம்" மாறும் மனம் கொண்டவர்களை சாடும் முறை இது. அரிதார முகங்கள் என்னும் கவிதையும் மனதில் இடம் பிடிக்கிறது.
முகங்களுக்கு வேண்டுமானால் அரிதாரம்பூசிக் கொள்ளலாம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 51
வேதனைக் கறைபடிக்கும்
எங்கள மனங்களுககு
எப்படி பூசிக் கொள்வது? என்று கேள்வி எழுப்பும் கவிஞனின் மென்மையான இதயத்தை உணர முடிகிறது.
நூல் : முறுகல் சொற்பதம் ஆசிரியர்:கல்வயல்.வே.குமாரசாமி வெளியீடு:திருக்கணிதப் பதிப்பகம், 14 டச்வீதி, சாகவச்சேரி.
முறுகல் சொற்பதம் என்ற இந்நூலின் ஆசிரியர் கல்வயல் வே. குமாரசாமி ஆவார். இது இவரது ஒன்பதாவது நூலாகும். நூலாசிரியர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர். சமூக அநீதிகளையும் ஏமாற்றுகளையும் பொறுக்காத கவிஞர். அவரது கவிதைகள் தீயவைகளைத் தீயிலிட்டுப் பொசுக்கும் கவிதைகளாகப் பரிணமிக்கும்.
கவிதை காலத்திற்கு ஏற்றவாறு மாறுதல் அடைந்து வருகிறது. அதன் உருவம் படிமம் என்பன காலப் போக்கில் மாறி புதுக்கவிதை பரிமாணமாகியுள்ளது. அணிந்துரை எழுதியதென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க. இரகுபரன் அவர்கள் கவ்வயல் வே. குமாரசாமி பேச்சோசைப் பாங்கான தமது கவிதைகளிலே பேச்சு வழக்குச் சொற்களையும் இயல்பான முறையிலே கையாண்டு புதிய வனப்பினை மண்ணின் மணத்தினை கொடுத்துள்ளார் என்று கூறுகிறார். நூலின் பெயரை நோக்கும் போது பலருக்கு என்ன இது என்று கேட்கத் தோன்றும். நூலாசிரியரே இதற்குப் பொருத்தமான விளக்கத்தை உதாரணத்துடன் விளக்கியுள்ளார். பக்குவப்பட்ட பதமான சொற் சேர்க்கையே முறுகற்சொற்பதம்’ என விளக்கி ஒரு சொல் பல பொருள்களைத் தரும். அவ்வாறான கவிதைகள் அடங்கிய நூலே இதுவாகும். ஒளவையின் ஆத்திச்சூடி சாயல் தென்படலாம் எனக் கருதுவோர்க்கு அவ்வாறு இல்லை. யாப்பை மட்டுமே கையாண்டுள்ளதாக ஆசிரியர் சந்தேகத்தைப் போக்குகிறார். ஒழுக்க அறநெறிப் பண்புகளை எதிர்கால சந்ததியினர் பின்பற்ற உதவுமென நம்பலாம்.
அதிகமான சிலேடைச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. தமிழில் ஒரளவு ஞானம் உள்ளவர்களுக்கு உடன் விளங்கும். மற்றோர் சிந்தித்தறிய வேண்டியதாகும்.
படியாப் பாவை, விடியா விளக்கு என்பதில் படிக்காத பெண் என்றும் பணிவில்லாத பெண் என்றும் கூறலாம். கேளாக்காது பாதிக்காது கேட்காத காது - கல்வி கேட்காத காது எனவும் எடுக்கலாம். நம்பிக்கை வை, நம்பி கை வை. இப்படிப் பலவுண்டு. அறிவூட்டுவன ழுக்கம் சேர்ப்பன. ஞானம் தருவன. மோகம் தீர்ப்பன எனப்பலவகை ருத்துக்கள் நிறைந்துள்ளன. கற்க மனனம் செய்ய இலகுவானது.
நரல் போலி முகங்கள் ஆசிரியர் : வி. எஸ். சிவகரன் , வெளியீடு : விசித்திரன் வெளியீட்டகம் விலை : ரூபாய் 100/=
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 
 
 
 

நூலாசிரியர் வி. எஸ். சிவகரன் மன்னார் இலுப்பைக் கடவையை பிறப்பிடமாகக் கொண்டவர். அனுபவமும் அறிமுகமும் என்ற தலைப்பில் இவரது முதல் நூல் 2005ல் வெளியாகி பலரது சிந்தனைக்கு விருந்தாய் அமைந்தது. இவரோர் தன்னார்வ மையத்தின் சேவையாளர்.
தனிமனித ஒழுக்கம் சமுதாய சீர்திருத்தம் என்பவற்றில் கரிசனை காட்டுபவர். அநீதியை ஒழிக்க அஞ்சாமல் எழுதுபவர். நிறைவான - வளமான சிந்தனைவாதி. முற்போக்குவாதி. போலி முகங்கள் இவரது இரண்டாவது படைப்பு சமூகத்தில் போலிமுகத்தோடு வேஷமிட்டுத்திரியும் பல ஆசாடபூதிகளை அம்பலத்திற்குக் கொண்டுவந்து அவர்களது முகத்திரையைக் கிழிக்கிறார். யதார்த்தவாதி வெகுசன விரோதியாக தூற்றப்படுவது சமூகத்தின் நிலையாகும். இவரது அனுபவத்தில் கண்டமுறைகேடுகளை-சமூகத்தை சீரழிக்கும் மாந்தர்களை நம்முன்னே நிறுத்தி இவர்கள் செய்வது சரியா? இவர்களை இப்படியே விட்டுவிடுவதா? நல்ல பெயர் வாங்கு வதற்காக வாய்மூடி மெளனிகளாய் இருப்பது சரியா? நீங்களும் சமூகத்தின் ஒர் அங்கம் தானே தட்டிக் கேட்க ஏன் துணிவில்லை என்று கேள்விக் கணையால் துளைக்கிறார்.
யார் இந்தச் சமூக விரோதிகள்? போலி முகம் காட்டி கொடுமையாளர்களாக இருப்பவர்கள் யார் என்று அறிய இந்த நூல் துணையாகிறது.
பள்ளியில் பாடம் போதிக்காது டியூசனுக்கு வா என்று கூறும் ஆசிரியர்கள், பள்ளி அனுமதிக்காத லஞ்சம் பெறும் அதிபர்கள், மொட்டைக்கடிதம் எழுதி பெண்களை அவமானப்படுத்து பிரகிருதிகள். ஏதிலிகளுக்காக வரும் உணவு வகைகளை கள்ளச் சந்தையில் விற்போர், சகாய விலையில் கொடுத்த உரமூட்டைகளைக்கடத்தி காசு சேர்க்கும் கிராம அதிகாரிகள்,திருநீறும் பொட்டுமாய் கோயில் பணத்தைச் சுரண்டும் போக்கிரிகள், ஏழைகளுக்கு அன்னமிடாது போர் வாங்கிக் கொண்டு திரியும் வள்ளல்கள். இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ பேர் இந்நூலில் நடமாடுகிறார்கள்.
இவர்களிடமிருந்து சமூகத்தை காப்பாற்ற வேண்டிய பெறுப்பு ஒவ்வொரு குடிமகனிடமும் உண்டு என்று ஆசிரியர் ஆசைப்படுகிறார். இந்நூல் சமூகத்தின் பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் பொருத்தமான நூலாகும். பொய்முகம் கொண்ட பலரை அட்டைப்படம் காட்டுகிறது. சிறிய நூல்தான். ஆனால் காட்டமானது.
நூல் : சாதனையாளர் ஆசிரியர்:ச. அருளானந்தம் வெளியீடு : அருன் வெளியீட்டகம் உவர்மலை திருகோணமலை விலை : ரூபாய் 100/=
சாதனையாளர் என்ற இந்நூலின் ஆசிரியர்ச.அருளானந்தம் ஆவார். கேணிப்பித்தன் என்ற புனை பெயரில் எழுதி வருபவர். புவியியலில் கலாநிதிப்பட்டமும் எம்.லிட்பட்டமும்பெற்றவர். விசேடமாக சிறுவர் உளவியலில் சிறந்த புலமையுள்ளவர்.
சிறுவர் உளவியல் நன்கறிந்தபடியால் சிறுவர்க்கான கதைகளையும் பாடல்ளையும் எழுதி வெளியிட்டவர். இதுவரை 34 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிறந்த கவிஞரும் சொற்பொழிவாளருமாவார்.
49

Page 52
மாணவர் உள ஆற்றலை விருத்தி செய்யவும், ஒழுக்கப் பண்பாடு, ஒற்றுமை, நாட்டுப்பற்று சமூகப்பற்று என்பவைகளை மாணவர் மனதிலே பதிக்கவும் இவரது நூல்கள் சிறுவர்க்குத் துணை செய்கின்றன. வீட்டுச் சூழல் பாடசாலைச் சூழல் என்பன மாணவரில் தாக்கத்தை ஏற்படுத்துவன. எனவே பெற்றோரும் ஆசிரியர்களும் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவதில் அக்கறை காட்ட வேண்டும் என்று உணர்த்துபவர்.
அழகான அட்டைப்படத்துடன் இருக்கும் இந்நூலில் ஐந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. சாதனை படைத்தவர்கள் கதை சீர்கெட்ட நிலையில் இருந்த பாடசாலையை சிரமதானப் பணிமூலம் புனர் நிர்மாணம் செய்யும் முறையை விளக்குகிறது. சாதனையாளர்கள் சுனாமி அனர்த்தத்தில் மாணவர் உதவிய மனப்பாங்கை காட்டுகிறது. கிளிக்குஞ்சுமலை மாணவரிடம் காணப்படும் இரக்க மனப்பான்மையை விளக்குகிறது. தூக்கணாங் குருவிக்கூடு கதை பறவைகள் மிருகங்கள் போன்ற பிற உயிர்களிடம் இரக்கம் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. மொத்தத்தில் கூட்டுறவு ஒத்துழைப்பு சமூகத்தொடர்பு இரக்கம், அன்பு, சமூக நலன் என்பவற்றை போதிக்கும் கதைகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- குறிஞ்சிநாடன்
நூல் : கூதிர்காலக் குலாவல்கள் ஆசிரியர் : குறமகள் வெளியீடு : விளம்பரம் - கனடா விலை : குறிப்பிடப்படவில்லை
கூதிர்காலக் குலாவல்கள் குறுநாவலின் ஆசிரியர்
துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வளர்ப்பிடமும் அதுவே. ஈழத்து பெண் எழுத்தாளர்களில் மூத்தவரும் முன்னோடியாகவும் திகழ்பவர். தற்போது கனடாவில் வாசம் செய்கிறார். பெண்மைசார் எழுத்துகளில் புரட்சிகரமான கருத்துக்களை முன்வைப்பவர். வாழ்க்கையில் வளமாக வாழ்வோருக்கும், வழுக்கி விழுந்து சமூகத்தால் பாதிக்கப்பட்டு அல்லல் பட்டோருக்கும் இவரது எழுத்துக்கள் மருந்தாகவும் உற்சாகமூட்டும் டானிக்காகவும் அமைவதைப் பார்க்கலாம்.
பெண் எழுத்தாளர்களில் இவர் ஒரு ஜாம்பவான். பெண்களின் துயரக் கண்ணிரைத் துடைக்கும் எழுத்துக்குச் சொந்தமானவர். பல நூல்களைக் கொணர்ந்தவர். குறமகள் சிறுகதைத் தொகுதி (1990) உள்ளக்கமலமடி (2000) இராமாயணக் கட்டுரைகள் (2001) மாலை சூட்டும் நாள் கவிதைத் தொகுதி (2005) யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கல்வி (2007) கூதிர்காலக் குலாவல்கள் (2010) என்பன சிலவாகும். இவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சமூக சேவையாளர், ஆய்வாளர்.
இந்நூலில் இரண்டு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. கூதிர்காலக் குலாவல்கள் முதற்காதலை இழந்துவிட்டு அந்திமத்தில் மனதில் போட்டு, சுமந்து நினைத்து அல்லலுறும் திலகராசாவின் கதை. தேவாவின் போதனையால் மனைவிசுந்தரி நோயிலிருந்து விடுபட உண்மையான அன்பை செலுத்துகிறாள். சிறாமணி கணவனுக்கு உடலையும்
50
 
 
 
 

காதலனுக்கு உள்ளத்தையும் கொடுத்துவிட்டு அமைதியற்ற வாழ்க்கையை வாழ்கிறாள். இதுவே கூதிர்காலக் குலாவல்.
அகணிதன் அல்லது நதியின் பிழையன்று. ஆமிக்காரர்களில் தப்பியோடி ஒருநாள் இரவு முழுதும் மாட்டுக் கொட்டகையில் உயிரைப் பிடித்துக் கொண்டு கிடந்தவனின் கதை. இக்கதை யாழ்ப்பாண இளைஞர் வெளிநாட்டு பணவரவால் வாழும் இடாம்பீக வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. அவர்களைத் திருத்தும் வண்ணம் குறமகள் பல அறிவுரைகளைத் தாராளமாக வழங்கியுள்ளார். -
வன்முறைப் புணர்ச்சியால் பிறக்கும் குழந்தைகளையும் நடத்தைப் பிறழ்வினால் கருத்தரிக்கும் குழந்தைகளையும் சமூகம் எவ்வளவு ஏளமாகப் பார்க்கிறது; பேசுகிறது என்பதை நாமறிவோம். 'பெண்ணே உன்னில் வளர்வது உனது முட்டையின் சரிபாதி. உனது போசாக்கால் வளர்வது பெற்றெடு. வீரமாக வளர்த்து ஆளாக்கு என்று உற்சாக மூட்டுகிறது. கதையில் வரும் கதாபாத்திரங்களும் உரைநடையும் வாசகனை வேகமாக இழுத்துச் செல்கிறது. வாசிக்கத்தூண்டுகிறது. உளவியல் சார்ந்த கருத்துக்கள் நிறையவே உள்ளன.
- குறிஞ்சிநாடன்
६३ புனிதா. நீர் எழுதிற கவிதைகளின் வரிகள்
பிரபல கவிஞர்களை ஞாபகப் படுத்துதே?
ஐயோ! நீங்கள் சரியான மக்கு. ஞாபகம் என்ன? அதேதான். இப்ப ‘றி மிக்ஸ்’ கவிதைகள் தானே ட்ரெண்ட்.
அட. ஒழுகிற கூரையில் ஒடுகளை அங்க, இங்க மாத்திறமாதிரி எண்டு சொல்லுறீர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 53
*செந்தமிழ் வி நூலுக்கு ரூ. 500 ஐயா கல்வி
திருவையாறு தமிழ் ஐயா கல் ஆண்டுதோறும் சிறந்த நூலுக்கு வருகிறது.
2009 ஆம் ஆண்டில் வெளி செந்தமிழ் வளம் பெற வழிகள் என்ற நூலினை தமிழ் ஐயாக முனைவர் இரா. குருநாதன் தலைமையிலுள்ள குழு, சிறந் மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் 23.08:2010, 2408:2010 திங்கள், செவ்வு ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெறு நூலாசிரியருக்கு 'செந்தமிழ்ச் செம்மல் விருதும் ரூ. 5000/- ( இலங்கை ஒளிபரப்புக் கூட்டு நிறுவனத்தால் தமிழ்ச்ே தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. எழுத்து,சொல், பொரு எழுத்து வழக்கு ஆகியவற்றிற்குத் தமிழர்களுக்கு வழிகாட்டும் ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை திருவையாறு தமிழ்ஜயா கல்விச் கலைவேந்தன் தெரிவித்துள்ளார்.
உங்கை
ஏதென்ஸ் நகரமே
பள்ளத்தாக்குகளே.
பனிமலைகளே.
நதிக்கரையே. நயாக்கரா நீர்வீழ்ச்சியே. அலை கடலே.
புற்களே.
பூக்களே. உங்களோடு கவிதை பாட முடியவில்லை எங்களுக்கு.
வெலிக்கடை சிறையில் சிதைந்துபோன உடல்கள். செம்மணியில் புதைந்து போன சிறுமிகள். குமுதினியில் - கொப்பளித்த குருதிகள் பதுங்கு குழிக்குள் மாண்டுபோன குடும்பங்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 
 

ாளம் பெற வழிகள்” என்ற 0/= பரிசு திருவையாறு தமிழ் விக்கழகம் வழங்குகிறது
விக்கழகத்தின் சார்பில் குடந்தை கதிர் தமிழ்வாணன் நினைவாக
ந. 5000: பொற்கிழியும் நூலாசிரியருக்கு விருதும் வழங்கி,
வந்த பன்மொழிப் புலவர் த. கனகரத்தினம் படைத்தளித்துள்ள ல்விக்கழகச் செயலாளரும், நூல் தேர்வுக்குழுத் தலைவருமான த நூலாகத் தேர்வு செய்துள்ளது. இந்நூலினை சென்னை
ாய் ஆகிய இருநாட்களிலும் சென்னை டாக்டர் எம். ஜி. ஆர். பம் பெண்ணியம் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் பொற்கிழி பரிசும் வழங்கப்படவுள்ளது.
சவையில் ஆற்றிவந்த 100க்கு மேற்பட்ட சொற்பொழிவுகளின் ள் என்ற மரபுவழி அணுகுமுறைகளை அடியொற்றி பேச்சுவழக்கு, முறையில் நூலாசிரியரால் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல் 2009
கழகத் தலைவரும் மாநாட்டு இயக்குநருமான முனைவர் மு.
εντύ ντύύ
- ஈழபாரதி, புதுக்கோட்டை
கையிழந்த குழந்தைகள் கற்பிழந்த யுவதிகள் புலம்பெயர்தலில் புலம்பி தவிக்கும் அகதிகள் கரை தட்டுமுன் கடல் அலை தட்டிய பிணங்கள்.
இவர்களுக்கு மத்தியில் எதைப் பற்றியும் எழுத முடியவில்லை!
இன்னொரு பிறவியில்
தமிழினம்
குருதியில் நனையாமல் பிறக்கட்டும்,
பிறகு
எழுதுகிறேன்
உங்களைப்பற்றி.
51

Page 54
கடந்த 07.03.2010,08.03.2010 ஆகிய திகதிகளில் கர்நாட! ஏற்பாட்டின் கீழ்கண்டி இந்து இளைஞர் மன்றக் கட்டிடத்தில் நடை பொறுப்பாளரான திருமதி வரலசுஷ்மிரகுநாதனும், அவருக்கு உதவி செயற்குழு உறுப்பினர்களான கவிஞர் பொன் பூபாலன், திருசேக ஆகியோரும் செயற்பட்டனர்.
உதவிக் கல்விப் பணிப்பாளர் (இசை)களான திருமதி க6ை வழிகாட்டலின் கீழ் பயிற்சிப்பட்டறை இரண்டு நாள் நிகழ்வாக ந
08. 08, 2010 மாலை வேளையில் மாணவ மாணவிகளுக் விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றலையும், மாணவிகளி ஆரம்பமானது. தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.இரா.நித்தியானந்த மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கிய உதவிச் செயலாள செயற்குழு உறுப்பினர்களான எழுத்தாளர் திருகா தவபாலன்,சமூ ஆகியோரும் உரையாற்றினார்கள். சங்கத்தின் நிர்வாகச் செய தொடர்ந்து கர்நாடக சங்கீத பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவு ெ
பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரத்தின் தமிழ் 6តា6fiff", இந்நிகழ்வு இணுவில் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு ம இடம்பெற்றது. யா - ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் செ இந்நிகழ்வில் நூலாசிரியரின் மகளான திருமதி கலைவாணி மகாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி செ. திருர ஆகியோர் வழங்கினர்.
தலைமையுரையாற்றிய ஆறுதிருமுருகன் பண்டிதர்ச.பே.பஞ் செழிப்புற்ற காலத்திலே இளம் பண்டிதராக விளங்கியவர் என்ற தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா,இன்றுபல் என்ற நோக்கத்தோடு பலர் எழுதி வருகின்றனர். இம்மரபிலிருந் கொள்ளக்கூடிய வகையிலே எளிமையாகத் தமிழ் இலக்கணப்பூங் ஆய்வுரைகளைச் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் நிகழ்த்தினர். முதற் பிரதியைப் பேராசிரியர்கள் பெற்றுக்கொண்டார்.
அக்கரப்பத்தனையில் ‘செவ் பாடசாலைகளில் புதிய கல்வி சீர்திருத்தத்தின் விளைவாக யாவரும் அறிந்ததே. இதன் விள்ைவாக சில பாடசாலைகளில் ந: ம மாநு/அக்கரைப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத் செயற்திட்டமான "செவ்வியல்" சஞ்சிகை வெளியீடு 06/08/2010 ( மண்டபத்தில் அதிபர் திரு. அ. ஹரிச்சந்திரன் தலைமையில் இட பிரதம அதிதியாக நுஎலியா வலய மேலதிக கல்விப்பணிப்பா
கெளரவ அதிதிகளாக 1. திரு. S. இராஜரட்ணம் (கோட்டம் Iப
மேலதிக கல்விப்பணிப்பாளர் 3.கலாபூஷணம் திரு.மு. சிவலிங்கம் முன்னாள் கோட்டம் II கல்விப்பணிப்பாளர்) ஆகியோர் கலந்து
52
 

கசங்கீதப்பயிற்சிப்பட்டறையொன்று கண்டித் தமிழ்ச்சங்கத்தின் பெற்றது. பிரதான ஏற்பாட்டாளராக சங்கத்தின் இசைத்துறைப் பியாக சங்கத்தின் துணைப்பொருளாளர் திரு R சற்குணானந்த், ரன் சோமபாலன், திருமதி சந்திரவதனா ரட்ணராஜகுருக்கள் JP
பவாணி ஜெகதீஸ்வரன், திருமதி இராமச்சந்திரன் ஆகியோரின் டைபெற்றது. 5கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது. விசேட ன் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், தொடர்ந்து நிகழ்ச்சி 5ன் தலைமை உரை ஆற்றினார். விசேட விருந்தினர்கள் மாணவ ர் செல்வி, R. ஷர்மிளா தேவி அறிவிப்பாளராகக் கடமை ஏற்றார். கசேவகர்திருபாலறட்ணம்.JP எழுத்தாளர் திருRபரமேஸ்வரன் லாளர் திரு. S. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நன்றியுரையைத் பெற்றது.
கே. தவபாலன்
இலக்கணப் பூங்கா (5ஆம் பதிப்பு) நூல்
டு விழா ண்டபத்தில் 25 06, 2010 வெள்ளிக்கிழமை பி. ப. 3 மணிக்கு ஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்ற ங்ெகசிவம் வரவேற்புரை வழங்கினார். ஆசியுரைகளைக் கோப்பாய் நாவுக்கரசு, இணுவில் மத்திய கல்லூரி அதிபர் அ. சதானந்தன்
சாட்சரம் ஒரு புகழ்பூத்த கவிஞர். இணுவிலிலே பண்டித பாரம்பரியம் ார். நூல் வெளியீட்டுரையை நிகழ்த்திய யாழ் பல்கலைக்கழகத் வேறு இஸங்களை முன்வைத்துமற்றவர்களுக்கு விளங்கக்கூடாது து விடுபட்டு மாணவர்கள் இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து கா எழுதப்பட்டுள்ளது என்றார்.
ச. மார்க்கண்டு, கிளி/முருகானந்தா வித்தியாலய ஆசிரியர் சி. எஸ். சிவலிங்கராஜாவிடமிருந்து ஒய்வுபெற்ற அதிபர் க. சிவாஜி
- - ம.பா. மகாலிங்கசிவம். flub" គ្រញេនិកាយ 6តាoffiffB மாணவர் செயற்றிட்டங்கள் செயல் ஊக்கம் பெற்று வருகின்றமை ல்ல ஆரோக்கியமான முயற்சிகளும் வெளிப்பட்டுள்ளன. தில் க. பொ. த உதர கலைப்பிரிவு மாணவர்களின் (2010) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலையின் கணபதி ம்பெற்றது. ளர் திரு.எஸ்.பி.இராஜசேகரம் அவர்கள் கலந்துகொண்டார்கள் னிப்பாளர்) 2. திரு M. நாகலிங்கம் (முன்னாள் நு எலியா வலய (எழுத்தாளர்) 4 திரு C மகாலிங்கம் (மொழிவரதன்) (எழுத்தாளர், கொண்டனர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 55
சிறப்புரையை திரு. A.செல்வேந்திரன் (விரிவுரையாளர் ே பிரபல பத்திரிகைகளின் இணைப்பிதழ்கள் வடிவத்திலும், உ பின்புலமாக்கிகொண்டு முகப்பட்டையை (பகுதியை) தயார் ெ உயர்தர வகுப்புகலைப்பிரிவின் பொறுப்பு ஆசிரியரான போன்றோரும் அதிபர், ஏனைய ஆசிரியர்கள், படைப்புகளைத சிறப்புரை நிகழ்த்திய அ. செல்வேந்திரன் (விரிவுரையாள மனிதன் மற்றவர்களை நன் நோக்கங்களுக்காக ஆதிக்கப் சமூகத்தின் ஒரு தேவை எனக் கூறி இம்மாணவர்களினது ஊக்குவிக்கப்பட வேண்டியதே என்றார். உள்ளடக்கம் தொட அவர்களின் இவ்வகையான ஆரம்ப முயற்சி பாராட்டப்பட வே6 பிரதம அதிதி எல்.பி.இராஜசேகரம் (வலய மேலதிக கல் செவ்வியலின் அழகான வடிவமைப்பையும், நேர்த்தியையும் சுட்
கல்விப்பணிப்பாளரும், எழுத்தாளருமான மொழி பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதையும், கல்வி முரளிதரன் மாநாட்டின் தலைமைக்குழு உறுப்பின தலைமை வகித்த லெனின் மதிவானம் ஆகியோரை
சிறந்த ஊடக 2009இல் விருதுபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களின் வி கட்டுரை பா. கிருபாகரன் (தினக்குரல்), பத்தி எழுத்தாளர் அடி (தினக்குரல்), சமூக அபிவிருத்திச் செய்தியாளர் முஹமட் பெற்றவர்கள் விளையாட்டுத்துறை சூரன். ஏ. ரவிவர்மா (மெட்( வாரவெளியீடு, விவரணச்சித்திரம் திருமதி ஹஸ்தனி ராதாகி (தினக்குரல்), பத்திரிகைச் சுதந்திரத்தை நிலைநாட்டியதற்கான திருமதி ஆனந்திபாலசிங்கம், ம, வ, கானமயில் நாதன், எம்.எ நியுஸ்.
நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கத்தில் ம அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நாவலப்பிட்டி தமிழ்ச் சங் நடத்தி வருகிறது. கடந்த (24.07.2010)ல் மலையக எழுத்த பாடல்கள் நூலின் அறிமுகமும், மூத்தபடைப்பாளி மல்லிகை
eigl (36.III it கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் அறிவோர் ஒன்று 'எல்லைகள் கடக்கும் மரபுக் கலைகள்' என்ற தன ஒஸ்லோ நகர ஒபேரா அரங்கில் மேடையேறிய தமிழ் கூத்தின் கிராம மட்டத்தில் நடைபெற்ற கூத்துக்கலைகள் இன்று உலகம
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 

காட்டக்கலை ஆசிரிய பயிற்சிகாலாசாலை) அவர்கள் நிகழ்த்தினார். ாளடக்கத்திலும் காட்சிதரும் செவ்வியல் பாடசாலை கட்டிடத்தை ய்துள்ளது. கோபால்ராஜ், ஆசிரியர் தி.தவராஜ் இதழாசிரியர் செ. ஜெ.பபியன் தோர் அனைவரும்பாராட்டுக்குரியவர்களே. ) அவர்கள் இம்முயற்சியை பொதுவாக பாராட்டினார். அறிவால் ஒரு செலுத்தலாம் என்பதனை எடுத்துக்காட்டி அறிவு, கல்வி, எமது ஆசியர்களினதும் இவ்வகையான வேலைத்திட்டம்/செயற்திட்டம் iபாக "காரமான விமர்சனங்களை நாம் வெளிக்காட்டாவிட்டாலும் ாடியதே என்றார். பிப்பணிப்பாளர்) வலயத்தின் சார்பாக தனது வாழ்த்துக்களை கூறி டிக்காட்டி பாராட்டினார். - மொழிவரதன்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 மலையகப் பிரதிநிதித்துவம் பற்றிய கருத்தாடல் நிகழ்வு அண்மையில் அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் நிலையத்தில் முச்சந்தி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் விஷேட அழைப்பாளராக கலந்து எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணனை ஓய்வுநிலை வரதனும் மூத்த படைப்பாளி தி. இரா. கோபாலனும் அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாக பணிப்பாளர் சு. ார் எஸ். அந்தனி ஜீவா, வவுனியூர் இரா. உதயணன் யும் படத்தில் காணலாம்.
வியலாளர் விருது
விபரம் - கேலிச்சித்திரம் கே. ஜெயபாலன் (வீரகேசரி), விவரணக் ட்டோ குகன் (தினக்குரல்), வணிகச் செய்தியாளர் யோ. நிமல்ராஜ் ஹூசைன் பாத்திமா ஹூஸ்னா (தினக்குரல்), சிறப்பு விருது ரா நியூஸ்), பத்தி எழுத்தாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் (வீரகேசரி ருஷ்ணன் (வீரகேசரி), சூழலியல் செய்தியாளர் கு. ஜெயேந்திரன் சிறப்புவிருதுந.வித்தியாதரன், வாழ்நாள் சாதனையாளர் விருது ஸ்.எம். மன்சூர் பக்க வடிவமைப்புக்கான சிறப்பு விருதுமெட்ரோ
- சூரன். ஏ. ரவிவர்மா
லையகத் தமிழர் நாட்டார் பாடல்கள் கம் மாதாந்தம் பெளர்ணமி தினங்களில் இலக்கிய நிகழ்வுகளை ாளர் மு. சிவலிங்கம் தொகுத்த மலையக தமிழர் நாட்டுப்புறப் சி. குமாரின் சிறப்புரையும் இடம்பெற்றது.
ஒன்று கூடல்
கூடல் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடந்த போது லப்பில் பேராசிரியர் சி. மெளனகுரு நோர்வே நாட்டின் ச நாடக அரங்கேற்றத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். டத்தில் மேடையேறுவதைகேட்பது மனதிற்கு இதமாக இருக்கிறது.
53

Page 56
அஷ்ரப் சிஹாப், கவிஞரும், எழுத்தாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் தி தொகுப்பு) பூரீ லங்காவிலிருந்து பூரீரங்கப்பட்டினம் வ6 வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை 1 தலைமையில் பெருந்திரளான கலை இலக்கியவாதிகள்,பத்திரிை நடைபெற்றது. தமிழ் தொண்டாளர் புரவலர் ஹாசிம் உமர் மு அவர்களிடம் பெற்றுச் சிறப்பித்தார்.
இலங்கைத் தமிழ்ச் சிற்றி உலகத் தமிழ்ச்சிற்றிதழாளர்கள் சங்க இலங்கைக் கிளையி திருமதிபத்மா சோமகாந்தன் தலைமையில் வெள்ளவத்தை கை செயலாளர் எஸ். அந்தனிஜீவா எதிர்வரும் 2011ஆண்டு ஜனவரி நடத்துவதை விபரித்தார். தாய்ச் சங்க பொருளாளரும் இ சந்திரசேகரன் கலந்துக் கொண்டு தாய்ச் சங்கபணிகளைப்பற் சிறுசஞ்சிகையாளர்கள் தங்களது சஞ்சிகைகளை நூலக விளக்கம் அளித்தார். சிறப்பு நிகழ்வாக "திசிராங்கூன் டைமஸ்
ás găseg LorrassmrGOT SOLI கொழும்புத் தமிழ்ச் சங்கம் வாரம் தோறும் நடத்தும் இ: அமைச்சின் மேலதிக செயலாளர் - எஸ். எச். எம். ஜெமில் தன் பாடல்கள், எள்ளல்கள்,நகைச்சுவை என மிகவும் சுவைப்பட எடு மா. கணபதிப்பிள்ளை தலைமையில் இது நடைபெற்றது.
54
 
 

31-7-2010 அன்று கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மல்லிகைப்பந்தல் வெளியீடான பிரமிளா பிரதீபன் எழுதிய பாக்குப்பட்டை சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. படத்தில் நூல் ஆசிரியை பிரமிளா உரையாற்றுவதையும் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், கலாநிதி துரை மனோகரன், மேமன்கவி ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதையும் காணலாம்.
தீன் இருநூல்கள்
னகரனில் எழுதிய தீர்க்க வர்ணம், (பல்சுவை பத்திகளின் ரை என்ற பயண அனுபவங்களை கொண்ட நூல்களின் மண்டபத்தில் (29.07.2010) வைத்திய கலாநிதி தாஸிம் அகமது கயாளர், சட்டத்தரணி, சமூக ஆர்வலர்கள் ஆகியோர்கள் மத்தியில் தற்பிரதியை முன்னால் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி
தழாளர்களின் ஒன்றுகூடல் lன் ஒன்றுகூடல் (0108:2010)சங்க இலங்கை கிளையின் தலைவி லாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை கிளையின் மாதம் உலகத்தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்க மாநாட்டை இலங்கையில் னிய நந்தவனம், தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியருமான த. றி விளக்கம் கொடுத்தார். த்தில் இணைப்பது சம்பந்தமாக நூலகத்தைச் சேர்ந்த சஞ்சேயன் 'வெளியீட்டு நிகழ்வும் நடைப்பெற்றது.
மைக்கால நினைவுகள்
0க்கிய களம் நிகழ்வில் முன்னாள் கலாசார சமய அலுவல்கள் ாது கிழக்கு மாகாண இளைமைக் கால நினைவுகளை கிராமிய ந்துக் கூறினார். கொழும்புத் தமிழ்சங்க கல்விக்குழுச் செயலாளர்
மலையக வெளியீட்டகம் அந்தனிஜீவா வெளியிட்ட மலேசிய எழுத்தாளர் ஆ. குணநாதனின் கவிதைச் சிறகுகள் நூல் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் 29.08.2010 மாலை நடைப்பெற்றபோது நூல் ஆசிரியர் ஆ. குணநாதன் உரையாற்றுவதையும் மேடையில் கலைச்செல்வன், ஜனாதிபதியின் ஆலோசகர் திரு. புத்திரசிகாமணி, பேராசிரியர் சோ. சந்திரசேகாம் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் காணலாம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010

Page 57
தகவம் பரிசளிப்பு 2009 விழா 28-08-2010 அன்று போது மூத்த எழுத்தாளர் கே. ஆர்.டேவிட் அவர்களுட தகவம் உறுப்பினர்கள் நிற்பதையும் முதலாவது படத் மெளனகுருவும் தகவம் உறுப்பினர்களும் அமர்ந்திரு
புரவலர் புத்தக பூங்க புரவலர் புத்தகப் பூங்கா தனது இரண்டு நூல்களின் தி தொகுப்பு, கவிமணி நீலாபாலன் எழுதிய இலந்தைப் பழத் பூங்கா நிறுவனர் தமிழ்தொண்டாளர் புரவலர்ஹாசிம் உமர் முன் (08:08:2010) நடைபெற்றது. இந்நிகழ்வு கொழுந்து ஆசிரியர் எ அறிமுக உரையை கலைஞர் கலைச்செல்வனும்,நயவுரையை கெ யசோதரா கதிர்காமதம்பியும் ஏற்புரைகளை திருமதி ஆர்.பிலோப எம். ஏ. ரபிக்கும் ஆற்றினர்.
விருது வழ பல வருடங்களாக இயங்கி வரும் சிரமஹமானி தேசிய அ தேசிய நாளிதழ்களின் ஆசிரியர்கள் ஒலி, ஒளி ஊடக அமைப்பி கலைஞர்கள், வணிகசமுகத்தினர், வெற்றிபெற்ற பெண்கள், ச மொழி பேதமற்ற முறையில் பாராட்டி விருது வழங்கி கெளரவித்த கொழுந்து ஆசிரியர் எஸ். அந்தனிஜீவா, மொழிப்பெயர்ப்பாளர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
 
 

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற அவரது பாரியாரும் கெளரவம் பெறுவதையும் அருகே நதிலும், பரிசுபெற்ற எழுத்தாளர்களுடன் பேராசிரியர் ப்பதை இரண்டாவது படத்திலும் காணலாம்.
sாவின் இரு நூல்கள்
ருமதி ஆர். பிலோமினாவின் இமிடேசன் தோடு சிறுகதைத் துப் பூக்கள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா புத்தகப் னிலையில் கொழும்புத்தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஸ். அந்தனி ஜீவாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. நூல் ாழும்புதிறந்த பல்கலைக்கழக சட்டப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் மினா,கவிமணிகவிஞர் நீலாபாலனும்,நன்றியுரையை சமூகஜோதி
- கே.பொன்னுத்துரை
ங்கும் விழா
மைப்பினர் உழைக்கும் வர்கத்தினரை கெளரவிக்கும் வகையில் னர், கட்டிடநிர்மான வடிவமைப்பாளர்கள், மீனவர்கள், பாரம்பரிய முகத்தின்பால் அக்கறையுள்ள எல்லாத் தரப்பினரையும் இன, மத ார்கள். தமிழக புதுவிசை ஆசிரியர் ஆதவன் தீட்சன்யாவிற்கும், உபாலி லீலாரட்ன போன்றோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
சர்வதேச எழுத்தாளர் விழா, 2011 முன்னோடிக் கலந்துரையாடல் ஞானம் பணிமனையில் 29-082010 அன்று இடம்பெற்றபோது மலேசிய எழுத்தாளர் சங்கச் செயலாளர் ஆ. குணநாதன், விழாவில் பங்குபற்றும் மலேசிய எழுத்தாளர்களது விண்ணப்பப் படிவங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் இணைப்பாளர் தி. ஞானசேகரனிடம் கையளிப்பதைப் படத்தில் காணலாம். அருகே அந்தனி ஜிவா, திரு. இராஜகுலேந்திரா, ஜின்னாஹ் ஷரிபுத்தீன், சுதர்மமகாராஜன் ஆகியோர் காணப்படுகின்றனர்.
55

Page 58
ஞானம் ஆடி இதழில் 19ம் பக்கத்தில் கலாபூஷணம் நாகூர் கt தமிழர்களுக்குமுரிய ஒரு பிரச்சனை தான். ஆங்கிலேயர் காலத் தமிழையும் சிங்களத்தையும் கல்விமொழிகளாக்கிய பின் தாய்ெ தற்காலத்தில் சர்வதேசப்பாடசாலைகள் உருவாக்கப்பட்ட பின்பு அ என்றெண்ணிப் பலரும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் த மீண்டும் மேற்கத்தைய மோகம் டெங்கு நோயைப் போல எங்கும் அங்குகூட தமிழ்மொழி மூலக் கல்விக்கு முக்கியத்துவம் கிை இருக்கின்றது. 80% ஆங்கிலமும் 20% தமிழும் சேர்த்து ஒரு புதிய ஆகவே தாய்மொழிக் கல்வி போல வராது என்பதே எனது அபிப்
அடுத்த ஆவணி இதழின் 16ம் பக்கத்தில் பிரசுரமாகியுள்ள திருமண அன்பளிப்புக்களைப் பெற மறுக்கிறார். ஆனால் மற்றவ ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அன்பளிப்பு என்பது ஒரு 6 எல்லோருடனும் பேசி மகிழ்ந்து, சாப்பிட்டு, மணமக்களுக்கு அ செல்வது தான் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.
29ம் பக்கத்தில் அமைந்துள்ள'கடி ஜோக்'நன்றாக இருக்கிற
சிரித்து Relax ஆவதற்கு இவ்வாறான ஜோக்குகளைத் தொடர் 米米米
உமா வரதராஜன் ஞானம் ஆகஸ்ட் இதழில் தன் நாவலா தொடர்பாய், முன் வைத்த கருத்துக்களைப்படித்தேன்.
பத்தாண்டு கால எல்லைக்குள் ஒருவரது இலக்கியம் பற்றி அவர் கேட்பது சரியான வாதமே.
ஆனால் இதனை விட அவர் கட்டுரையில் உள்ளவை எல்ல ஒரு இடத்தில் தன் நாவலில் வரும் இரு பாத்திரங்களுபே என்கிறார். ஆனால் அப்படியில்லையே. ஆண் பாத்திரம் அந்த பாத்திரம் வெளியேறியதும் அந்த கவலையே, அந்த ஆண் பாத்தி கதாநாயகன், தன் வாழ்வினுள் வந்த மூன்று பெண்களையு கருதியதால்தான் அந்நாவலுக்கு மூன்றாம் சிலுவை என ( இப்பொழுதுகள்வர்களும் களவாணிகளும் சுமந்த சிலுவை என்க தி.ஜானகிராமனின் இசை ஈடுபாட்டை, ஆசிரியர் தன் மூ கஷ்டமாயிருக்கிறது. ر--
ஒரு படைப்பு, கலைப்படைப்பா இல்லையா என்பதை தீர்மா தாழ்மையான கருத்து
米米> ஆவணி 2010 இதழில் வெளியான "தண்டனை வித்தியாச கதை-கருப்பொருளைச் சுற்றியுள்ள தகவல்களும் பிரயோசனப அதே இதழின் 49ம் பக்கத்தில் இலக்கியத்திருட்டுப்பற் என்பவற்றினூடாக இத்தகைய திருடர்கள் இலக்கிய உல இத்தகையவர்களை இனங்கண்டு ஒதுக்காமல் இலக்கிய வளர்ச்
முதற் கதையையே பரிசுக்குரியதாக எழுதிய அ. விஜய்க்கு பாத்திரமாக்கிப்படைக்கப்பட்ட ஒரு சிறந்த சிறுகதை எனக்குள்
அவ்வப்போது சில கவிதைகள் மனதைத் தொடுகின்றன. ஆடி2010 இதழில் திருமலை நவம் தந்துள்ள "விதியைச் ே சிறப்புக்களை சிறந்த முறையில் தந்துள்ளார். ஆயினும் "இருபத்து ஒப்புக்கொள்கிறேன். எனிந்தக் கொடுமை ஆச்சு” என்றால் “ே தான் பதில் கூற வேண்டும்.
இச்சஞ்சிகை தி. ஞானசேகரன் அவர்களால் இல. 488, புளுமெண்டால் வீதி, கொழும்பு
56
 

னி அவர்கள் குறிப்பிடும்பிரச்சனை முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல தில் கல்வி மொழியாக இருந்த ஆங்கிலத்தைஅகற்றி விட்டுத் மாழி இலக்கியம், சமயம் என்பன வளர்ச்சி பெற்றன. ஆனால் புவற்றில் சேர்ந்து ஆங்கில மொழி மூலம்படிப்பதுதான் நாகரீகம் மிழ்ப் பற்று, சமயப் பற்று, கலாசாரப் பற்று எல்லாம் குறைந்து பரவி வருகின்றது. தமிழ்நாட்டை எடுத்துப்பார்த்தோமாயினும் டயாது. அங்கும் ஆங்கில மோகம் தான் உச்சக்கட்டத்தில் மொழியைத்தான் அங்குள்ளவர்கள் உருவாக்கி வருகின்றனர். பிராயமாகும்.
வேலமுதன் அவர்களின் குறுங்கதையின் படி வைத்தியலிங்கம், ர்களுக்கு அன்பளிப்புக் கொடுக்க மட்டும் விரும்புகிறார். இது வழிப்பாதையாக இருக்கக் கூடாது. திருமணத்துக்கு வருவோர் ன்பளிப்புக் கொடுத்து, வாழ்த்துக் கூறி, போட்டோ எடுத்துச்
து. சோகத்தில் ஆழ்ந்துபோய் இருக்கும் மக்கள் இடையிடையே ந்தும் பிரசுரிப்பது நன்று. - கா. தவபாலன், கண்டி
கிய மூன்றாம் சிலுவைக்கு, சி. விமலன் செய்த விமர்சனம்
பரசனை, பார்வை, மதிப்பீடுகளில் மாற்றம் வரக் கூடாதா என
ாம் விதாண்டா வாதங்களே என்று எனக்குப்படுகிறது.
), “வெளியேறும் வழி அறியா குழிக்குள் விழுந்து கிடப்பவை' தக் குழிக்குள் விழுந்து கிடக்கத்தானே விரும்புகிறது. பெண் ரத்தை மரணத்தின் வாயில் வரை இட்டுச் செல்கிறதே.
மே தன்னை அழுத்தியதன்னால் சுமக்கப்பட்ட சிலுவைகளாகக் பெயரிடப்பட்டதென நினைத்திருந்தேன். ஆனால் ஆசிரியர் கிறார். இதில் யார்கள்வர்? யார் சிலுவை? குழப்பமாயிருக்கிறது. நன்றாம் தர சினிமா ரசனையோடு சமப்படுத்துவது மனதுக்கு
னிப்பது அதனைப் படைத்தவரல்ல; வாசகர்களே என்பது என் - சடாட்சர தேவி, தொண்டமானாலு. * மான, அற்புதமான கதை. புதியதொரு பின்னணியில் எழுதப்பட்ட ானவை. ஆனந்த்ராகவ் பாராட்டுக்குரியவர். - றிய செய்தி அருவருப்புக்குரியது. அறிமுகம், செல்வாக்கு கில் பெயரைப் பொறித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். Fசி ஏற்படுவது கடினம். . எனது பாராட்டுதல்கள். (ஆடி2010 இதழ்) மனச்சாட்சியை ஒரு ஒருவன்" அவ்வாறு சமீபத்தில் என் மனதைத் தொட்டது. செய்வோம்” என்ற கவிதையாகும். தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள மூன்றுபேய்கள்" என்ற வரி எனக்குப்புரியவில்லை என்பதனை சர்ந்து இயங்க மறுத்து தொலைந்து போன கதையாச்சு” என்று - க. பீற்றர்
13, யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டம்பர் 2010
e

Page 59
15 កា_ D០០០ម៉ែថាចយាចារ្យ អ៊០០៣ចា வேல் முேதன் பாரிய சேவைக்க
of 6 Jub
விவரங்களுக்குத் தனிம6 புகழ்பூத்த, சர்வதேச, சக குரும்பசிட்டியூர், மாயெழு
சனி, ஞாயிறு நண்பகலிே
0 தொலைபேசி 236O488 / 2.360694 || 487
சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்குழு
0 முகவரி 8-3-3 மெற்றோ மாடிமை 33ஆம் ஒழுங்கை ஊடாக கொழும்பு - 06
துரித - சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுய குரும்பசிடியூர் மாயெழுவேல் அமுதனே துரித சு
"ஞான?ே சஞ்சிகை கி
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, !
* கா. தவபாலச்சந்திரன் - பேராதனை
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A * பூபாலசிங்கம் புத்தகசாலை - 4, ஆ * புக் லாப் - யாழ். பல்கலைக்கழக வ
துர்க்கா - சுன்னாகம்.
* ப. நோ. கூ. சங்கம் - கரவெட்டி ெ
* லங்கா சென்றல் புத்தகசாலை - 84
மாரிமுத்து சிவகுமார் - பூரீகிருஷ்ண * ܢܠ
 
 
 
 
 
 
 
 

១៣០ ហ្វ្រចបំ២០fit ட்டணக் குறைப்பு
லருக்குமான திருமண ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர்
ரித நிறுவநர், “சுய தெரிவுமுறை முன்னோடி’ மூத்த,
வேல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ,
லா தயங்காது தொடர்பு கொள்ளலாம்
1929
8
1றை
ன (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள
55ஆம் ஒழுங்கை,
தளிவு முறையே மகோன்ன மணவாழ்வுக்குக்
லய மணமக்கள் தெரிவுக்குச் சுயதெளிவு முறையே
டைக்கும் இடங்கள்
40, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொலைபேசி: 077 9268808
2/3 காலி வீதி, வெள்ளவத்தை
ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
ளாக அருகாமை, யாழ்ப்பாணம்.
ல்லியடி
கொழும்பு வீதி, கண்டி
ாஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.
گبر سے

Page 60
GNANAM - Registered in the Department of Pos
NATTARAN POTHA KUN
EL 2 0094-08-242.0574, 2420
Email: huc
 
 
 

is of Sri Lanka under No. QD/45. News/2010
D BISCUIT
DASALE, SRI LANKA.