கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாதம் 2011.07

Page 1
சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA)
 

ISSN 1391-7269

Page 2

ISSN 1391 - 7269
பிரவாதம்
யூலை - 2011 இதழ் எண்: 6
* ஆசிரியர் உரை iii
* ஆராய்ச்சி முறையியல் l
- ஜயதேவ உயன்கொட
* சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல்: நேர்க்காட்சிவாதமும், மக்ஸ்வெபரின் விளக்கமுறைச் சமூகவியலும் 31
- க. சண்முகலிங்கம்
* விஞ்ஞானத்தின் மெய்யியல் : 49
கால் பொப்பரும் தோமஸ் கூனும் - சோ. கிருஷ்ணராஜா
* பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 69
- கா. சிவத்தம்பி
* உயிர்ப்பு நிலை: பேராசிரியர் சிவத்தம்பி
கண்டறிந்த தமிழ்க்கல்வி - 108
- வீ. அரசு w
* நூல் அறிமுகம் 112
- Writing Research Proposals
in the Social Sciences and Humanities
* அஞ்சலி 118
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

Page 3
பிரவாதம் இதழ் எண்: 6, யூலை - 2011
ஆசிரியர்
ஆசிரியர்குழு
வெளியீடு
Pravatham
(A Social Science Journal in Tamil)
Issue No 6, July 2011
Editor
Editorial Board
Published By
ISSN 1391. 7269
க. சண்முகலிங்கம்
எம். ஏ. நுஃமான் செல்வி திருச்சந்திரன் என். சண்முகரத்தினம் சித்திரலேகா மெளனகுரு
சமூக விஞ்ஞானிகள் சங்கம் 12, சுலைமான் ரெறஸ் கொழும்பு - 5
K. Shanmugalingam
M.A. Nuhman
Selvi Thiruchandran N. Shanmugaratnam Chitraleha Mounaguru
Social Scientist Association
12, Sulaiman Terrace Colombo - 5

ஆசிரியர் உரை
பிரவாதம் 6ஆவது இதழின் சிறப்புப் பகுதியின் விடயப் பொருளாக 'ஆராய்ச்சி முறையியலின் மெய்யியல் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
தமிழ்ச் சூழலில் அதிகம் கவனிப்பைப் பெறாத இவ்விடயம் குறித்து மூன்று கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெறுகின்றன.
முதலாவது கட்டுரை ஜயதேவ உயன்கொட அவர்கள் எழுதிய "WritingResearch Proposals என்ற நூலின் 9வது அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பாக அமைகிறது. இந்நூலினைப் பற்றிய விமர்சன அறி முகமும் இவ்விதழில் இடம் பெறுகிறது. முறைகள் (Methods) வேறு, முறையியல் (Methodology) வேறு என்று ஆரம்பிக்கும் இக்கட்டுரை முறையியல் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக வரையறை செய்கிறது. அடுத்து இருமுறையியல் மரபுகளை விளக்குகின்றது. பின்னர் இவ்விரு மரபுகளின் எதிரெதிர்நிலைப்பாடுகளுக்கு மாற்று வழியாக அமையும் விமர்சன யதார்த்தம் (Critical Realism) என்ற முறையியலை அறிமுகம் செய்கிறது. கட்டுரையின் எஞ்சிய பகுதி அறிவாராய்ச்சியியல் நோக்கில் வெவ்வேறு முறையியல்களின் மெய்யியல் பின்னணியை விளக்குவதாக அமைந்துள்ளது.
இரண்டாவது கட்டுரைக.சண்முகலிங்கம் எழுதியது. முதலாவது கட்டுரையில் கூறப்பட்ட நேர்க்காட்சி வாதம் (Positivism) என்ற முறையியல் பற்றி ஓரளவு விரிவான விளக்கத்தை இவர்தருகின்றார். இவரது கட்டுரையின் இரண்டாம் பகுதி மக்ஸ்வெபரின் விளக்க முறைச்சமூகவியல்பற்றிஎடுத்துக்கூறுகிறது. மக்ஸ்வெபர் நேர்க்காட்சி வாத முறையியலைச் செப்பமிட்டவர்களில் ஒருவர். இருந்தபோதும்
நேர்க்காட்சிவாதத்திற்கு மாற்றான வாதங்களையும் வெபர் முன் வைக்கின்றார். நேர்க்காட்சிவாதத்தின் புறவய நோக்கு, அதற்கு

Page 4
iV
மாற்றான சிந்தனை முறைகளின் ஊடே வரும் அகநோக்குடன் இணைவதை மக்ஸ்வெபரில் காணமுடியும் எனக் கட்டுரையாசிரியர் எடுத்துக் கூறுகிறார்.
சோ.கிருஷ்ணராஜாவின் கட்டுரை விஞ்ஞானத்தின் மெய்யியல் (Philosophy of Science) என்னும் விடயம் பற்றியது. கால் பொப்பர், தோமஸ் கூன் என்ற இரு சிந்தனையாளர்களின் கருத்துக்கள் இக் கட்டுரையில் ஆராயப்படுகின்றன. கால் பொப்பரின் பொய்ப்பித்தல் கோட்பாடு, நேர்க்கட்சிவாதத்தின் அடிப்படையான அனுமானங்கள் சிலவற்றைக் கேள்விக்கு உட்படுத்தியது. தோமஸ் கூன் மாதிரி அல்லது கட்டளைப்படிமம் (பரடைம்') என்ற கருத்தை முன் வைத்தார். இவை முக்கியதிருப்பங்கள். சோ. கிருஷ்ணராஜா அவர்கள் இவ்விரு சிந்தனையாளர்கள் பற்றியும் ஏறக்குறைய இருபது ஆண்டு களுக்கு முன் எழுதியவற்றை இங்கு தந்துள்ளோம். முறையியலின் மெய்யியல் என்ற விடயத்தை கால்பொப்பர், தோமஸ் கூன் சிந்தனைகளின் பின்னணியில் குவிமையப்படுத்திக் காட்டும் நோக்குடன் இவை இங்கு தரப்பட்டுள்ளன.
காலஞ்சென்ற பேராசிரியர்கா. சிவத்தம்பிஅவர்களின் நினைவஞ் சலியை முன்னிட்டு ‘பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம்' என்ற கட்டுரை இவ்விதழில் பிரசுரமாகிறது. ‘பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி’ என்ற நூலின் (என்.சி.பி.எச்) இரண்டாவது அத்தியாயமாக அமையும் இக்கட்டு ரையை பேராசிரியர் ஆங்கிலத்தில் எழுதினார். இதன் மொழிபெயர்ப்பு மேற்படி நூலில் சேர்க்கப்பட்டிருந்தது. இம்மொழிபெயர்ப்பை செய்தவர் செ.போத்திரெட்டி.
வீ. அரசு அவர்கள் பேராசிரியரின் கல்வித் துறைப் பங்களிப்பு பற்றிய மதிப்பீடு ஒன்றைத் தருகின்றார்.
புதிய கலைச் சொற்களை உபயோகிக்கும்போது அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்களையும் தொடர்களையும் தந்துள்ளோம். இவ்வாறு தருதல் தமிழ்வாசகரின் சிந்தனையோட்டத்தைத் தடைப் படுத்துவது, இது அவசியமற்ற குறுக்கீடு என்று கருதுவோர் உள்ளனர். மேலும் சில தொடர்களையும், பந்திகளையும் ஆங்கிலத்தில் தருவதும் தேவையற்ற குறுக்கீடு என்றே கருதுவர். மொழிபெயர்ப்பின் போது ஏற்படும் மொழிநடை இறுக்கம், கருத்து மயக்கம் என்பவற்றை

தணிப்பதற்கு இவை சிறந்த உத்திகள் என்ற நோக்கிலேயே ஆங்கிலச் சொற்கள், தொடர்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. சில விடங்களில் ஆங்கிலச் சொற்களின் எழுத்துப்பெயர்ப்பை (உ+ம் எத்னோ மெதடோலொஜி, பொசிட்டிவிசம்) தந்திருக்கின்றோம். உயர்நிலைத் தமிழ்வாசகர்களிற்கு முக்கிய கலைச் சொற்கள், கருத்தாக்கங்கள் என்பனவற்றின் ஆங்கிலப்பதிலீடுகளை அருகருகேதந்து அவற்றுடன் பரிச்சயம் செய்வித்தலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வாசிப்பையும் தேடலையும் ஊக்குவித்தலும் அவசியமானது என்றே கருதுகின்றோம். சில கட்டுரையாசிரியர்கள்(உ+ம்: சோ.கிருஷ்ணராஜா) ஆங்கிலப் பதிலீடுகளினைத் தருவதை கொள்கை நிலையில் ஏற் பதில்லை. மொழிபெயர்ப்பாளர் செ. போத்திரெட்டியும் இக்கொள் கையை உடையவர் என்றே கருதவேண்டியுள்ளது. பலவகை உத்தி களையும் பிரயோகிப்பதான நெகிழ்ச்சியான கொள்கையினை *பிரவாதம் கடைப்பிடிக்கின்றது.

Page 5

ஆராய்ச்சி முறையியல்
ஜயதேவ உயன்கொட
ஆராய்ச்சியாளர் ஒருவர் தான் ஆராயப்புகும் விடயம் பற்றிய தரவுகளையும், தகவல்களையும் என்ன முறைகளைக் கையாண்டு சேகரிக்கப் போகிறார் என்பதை தனது ஆய்வுத்திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும். இங்கே நாம் முறைகள் (methods) என்ற சொல்லை என்ன அர்த்தத்தில் உபயோகிக்கிறோம் என்பது முக்கிய மானது. ஆய்வாளர்கள் முறைகள் என்ற சொல்லிற்கும் முறையியல் (methodology) என்ற சொல்லிற்கும் இடையிலான வித்தியாசத்தை அறியாமல் அவற்றை ஒன்றோடு ஒன்று சேர்த்து மயங்குவதுண்டு. இக்கட்டுரையில் நாம் ஆய்வு முறைகள் என்பதற்கும் ஆய்வு முறையியல் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தி எமது அணுகுமுறையை வரையறை செய்வோம். தரவுகளை(Data) திரட்டுதல், தொகுத்தல் தொடர்பான நடைமுறை உபாயங்களையும், வழிகளையும் பற்றியதே ஆய்வு முறைகள் என்னும் விடயம். தரவுகளை எப்படி விளக்கலாம் என்ற விடயமும் இதில் சேர்க்கப்படவேண்டும். முறையியல் என்னும் விடயம் அறிவாராய்ச்சியில் (Epistemology) என்பதைப் பற்றியது. முறைகள் பற்றிய கோட்பாட்டு அனுமானங்களையும் மெய்யியல் அல்லது தத்துவார்த்த அடிப்படைகளையும் ஆராயும் தன்மையதே முறை யியல் என்று கூறப்படும்.
மேலே முதலாம் பந்தியில் கூறிய விடயத்தை சற்று விபரமாக நோக்குவோம். ஆய்வாளர்கள் கையாளக்கூடிய முறைகள் பலவாகும். அவர்கள் திரட்டும் தரவுகளும் பலவகைப்பட்டவை. தரவுகளில் அளவு ரீதியானதரவுகள் (Quantitative Data), பண்பு ரீதியான தரவுகள்

Page 6
2 பிரவாதம்
(Qualitative Data) என்று இரு வகைகள் உள்ளன. ஆராய்ச்சியாளர் எதிர்நோக்கும் முக்கியமான தெரிவு யாதெனில் எத்தகைய முறை களைத் தேர்ந்துகொள்வது என்பதே. இத்தெரிவை அவர் என்ன அடிப்படையில் செய்யப்போகிறார்? என்பது முக்கியமான கேள்வி. ஒருவர் குறித்த ஒரு முறையை விரும்பித் தெரிவு செய்தால் அது எழுந்தமானமாகச் செய்யப்பட்ட தெரிவாக இருக்கக் கூடாது. அத் தெரிவுக்கான காரணம்,நியாயப்பாடு பற்றிய தெளிவுடன் அத்தெரிவை அவர் செய்ய வேண்டும். இது உயர்ந்த மட்டத்திலான சிந்தனையின் பயனாக அமைவது. இதனை முறைகள் பற்றிய முறையியல் 15urtulil IITG) (Methodological Justification) 6T6öTLuj.
உயர்மட்டத்திலான சிந்தனை மூலம் முறைகள் பற்றிய தெரிவு நடைபெறுகின்றது என்று கூறும் போது நாம் எதனைக் கருதுகிறோம். இந்த உயர்மட்டச் சிந்தனை யாது? இதனை அறிவுக் கோட்பாடு (Theory of Knowledge) என்று கூறுவர். ஆய்வின் பயனாக அறிவின் உற்பத்தி நடைபெறுகிறது. அறிவின் உற்பத்தியில் நாம் கையாளும் முறையை அறிவுக் கோட்பாட்டின்துணையுடன் விளக்க வேண்டும், நியாயப்படுத்த வேண்டும். வேறுவார்த்தையில் கூறுவதானால் அறிவா ராய்ச்சியியல் (Epistemology) என்பதன்துணை கொண்டு விளக்குதல் வேண்டும்.
அறிவுக்கோட்பாடு, அறிவாராய்ச்சியல் என்ற சொற்களைக் கேட்டவுடன் வாசகர்கள் சிலர் மிரண்டு போகலாம். இவை அப்படி ஒன்றும் பயப்படக் கூடிய விடயங்கள் அல்ல. நாம் ஆய்வுடன் நேரடியாகச் சம்மந்தப்பட்ட மெய்யியல் பிரச்சினைகளை பரிசீலிக்க வேண்டியுள்ளது. அறிவின் உற்பத்தி பற்றி அக்கறையுடையவர் இந்த மெய்யியல் பிரச்சினைகளைத் தட்டிக் கழிக்க முடியாது. அறிவா ராய்ச்சியியல் என்னும் Epistemology பின்வரும் விடயங்களை ஆராயும் மெய்யியல் துறையாகும்; உலகைப் பற்றிய அறிவுக்கான வாயில்கள் எவை? ஒருவர் உலகைப் பற்றிய அறிவு என முன்வைக்கும் கருத்தின் வலிதுடமையை உறுதிசெய்வது எப்படி? ஆதாரபூர்வமான உண்மை/ அறிவு என்பதன் உரைகல் யாது? ஒரு கருத்து அதற்கு மாற்றான பிறகருத்துக்களை விட வலிதானது என்பதை எந்த அளவுகோல் கொண்டு தீர்மானிப்பது? எமது அறிவுக்கு புறநிலைத் தன்மை உள்ளதா? அது நிச்சயமானதா? அறிவுக்கு புறநிலை கிடையாது

ஆராய்ச்சி முறையியல் 3
என்றால் நாம் கொண்டுள்ள கருத்துக்கள் யாவும் அகவயப்பட்ட எண்ணங்கள் தாம் என்று கொள்ளலாமா? ஆராய்ச்சி என்பதை அறிவின் உற்பத்தி என்று கூறினோம். அவ்வாறாயின் அறிவு என்றால் என்ன என்பது பற்றிய மேற்குறித்த வினாக்கள் யாவும் ஆராய்ச்சி யாளருடைய ஆராய்ச்சியுடன் நெருங்கிய சம்மந்தமுடையவை
என்பது தெளிவு.
முறையியல்களின் வகைப்பாடு
சமூக விஞ்ஞானங்களில் இருமுறையியல் மரபுகள் உள்ளன. இவ்விரு மரபுகளுக்கிடையிலான வேறுபாடுகள் அறிவாராய்ச்சியியல் விவாதங் களின் அடிப்படையிலானவை. இவ்விரு மரபுகளாவன:
அ) புறநிலை வாதம் (Objectivism).
sg) egysylla0oGv Gungg5Lib (Subjectivism).
இந்த இருவேறு மரபுகளுக்கு மாற்றான இன்னொரு மரபாக மூன்றாவதொன்றையும் குறிப்பிடலாம்.
இ) விமர்சன யதார்த்தம் (CriticalRealism); மூன்றாவதான விமர்சன
யதார்த்தம் என்ற மரபு 1970 களில் பரிணமித்தது.
முதலாவதான புறநிலை வாதத்தை விளங்கிக் கொள்வதற்கு அதன் மூலமாக அமையும் இரு கல்வித்துறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
egy6oo6u (i) eggBOJLu6) ung5 6.NG5G5ITGÖTsil8řit (Empirical Sciences) (ii) நேர்க்காட்சிவாத சமூகவிஞ்ஞானங்கள் (Positivist Social Sciences) என்பன என்பதை மட்டும் இவ்விடத்தில் குறிப்பிடுவோம். இனி இவ்விஞ்ஞானங்களின் அடிப்படையில் உருவான புறநிலைவாத முறையியலின் (Objectivist Methodology) முக்கிய இயல்புகளைப் பார்ப்போம்.
* எமக்குப் புறத்தே புற உலகின் இருப்பு உள்ளது. ஆராய்ச்சி யாளன் இப்புற உலகை ஆய்ந்து அறிய முயற்சிக்கிறார். புறத்தே உள்ள இவ்வுலகு மனித மனத்திற்கு அப்பால் வெளியே உள்ளது. இது மனித மனத்தில் இருந்து சுதந்திரமானது. மனித இனத்தின் தோற்றத்திற்கு முன்னரே - சிந்தனைக்கு

Page 7
4. பிரவாதம்
முன்னரே புற உலகம் - பெளதீக உலகம் - தோன்றியது. ஆகவே மனித மனத்திற்கு வெளியே புற உலகு உள்ளது என்பது வெளிப்படை.
* புற உலகை மனிதச் சிந்தனையால் -மனத்தால் அறியமுடியும். இவ்வாறு அறிதல் புறநிலையான முறைகளின் உதவியுடன் நிகழும். இந்த அறிதல் முறைகள் புறநிலையானவை என் கிறோம். ஏனெனில் அவை மனித மனத்தில் (ஆய்வாளனின் மனத்தில்) உள்ள அகநிலை முற்சாய்வுகள், தப்பெண்ணங்கள் என்பனவற்றின் சார்பின்றிச் சுதந்திரமானவையாக உள்ளன.
* புறநிலை அறிவு, விழுமியங்கள், மதிப்புக்கள் சாராதது. இதனை மதிப்பின் சார்பற்ற (value free) அறிவு என்பர். அறிவு விஞ்ஞானபூர்வமானது. அதனைப் பரிசோதித்து உண்மையா பொய்யா என நிச்சயிக்கலாம்.
* புற நிலைவாத ஆய்வு முறைகள் உலகு பற்றிய புறநிலை உண்மைகளைத் தரவுகள் (Data) மூலம் கண்டுபிடிக்கின்றன. தரவுகள் அளவுசார்தன்மையுடையவை. அளவுசார்தரவுகள் புறநிலை யதார்த்தத்தை உண்மைத் தன்மையுடன் பிரதி பலிக்கக் கூடியவை.
egyspÉlgoGv6) II15 (Lp60pu9ugólcöt (Subjectivist Methodology) egy glü படையான எடுகோள்கள் புறநிலைவாத முறையியலின் மறுப்பாக எழுந்தவை. இவ்வெடுகோள்கள் பின்வருமாறு:
* சமூக வாழ்க்கையும், மனிதர் வாழ்நிலை பற்றிய விடயங் களும் அகநிலை சார்ந்தவை. ஏனெனில் அவை மனிதர்களால்
உருவாக்கப்பட்டவை.
* சமூகம் மனிதரின் உருவாக்கம் ஆதலால் மனிதருக்கும் சமூகத் திற்கும் இடையிலான இடைவினை தான் சமூக உலகமாக அமைகிறது. சமூக உலகம் புறநிலை இருப்புடையது என்றோ அது யதார்த்தமான உண்மையென்றோ கூறமுடியாது. இவ் வுலகத்தை புரிந்து கொள்வதென்பது மனிதர்களின் அகத்தின்

ஆராய்ச்சி முறையியல் 5
ஊடாக அதனை விளங்கிக் கொள்ளுதல் ஆகும். இந்த அகநிலைப்பட்ட புரிதல் பண்பாடு ஊடாக நடைபெறும் செயல் முறையாகும்.
* ஆராய்ச்சி என்பது மக்கள் தாம் உருவாக்கிய சமூக உலகம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி அவர்களின் அகநிலை வெளிப்பாடுகள் மூலம் புரிந்து கொள்வதாகும். அவர்கள்தம் வாழ்வியலை எப்படி அர்த்தப்படுத்துகிறார்கள் என்பதைக் காண்பதே ஆய்வாளரின் வேலை.
புறநிலைவாதம், அகநிலைவாதம் என்ற இரண்டு எதிர் எதிர் கருத்துக்களுக்கு மாறுபட்ட மாற்று வழியாக விமர்சன யதார்த்தம் (CriticalRealism) விளங்குகிறது. இதன்முறையியலும், அறிவாராய்ச்சி யியலும் மூன்று அம்சங்களைக் கொண்டது.
* மனித மனத்திற்கு வெளியே சமூக உலகம் உள்ளது. அதன் இருப்பு ஐயத்திற்கு இடமில்லாதது. சமூகக் கட்டமைப்புக்கள், சமூகச் செயல்முறைகள், வர்க்கங்கள், பொருளாதார உறவுகள் என்பன புறநிலை இருப்புக்கு உதாரணங்கள் ஆகும். மனித மனதிற்கு வெளியே இவை இருக்கின்றன என்பதில் சந்தேகத் திற்கு இடமில்லை. இந்தப் புறநிலை யதார்த்தம் தான் மனிதர்களின் சிந்தனையையும் செயல்களையும் வடிவமைக் கிறது. * மேற்குறித்த புறநிலை யதார்த்தம் அறியக்கூடியது. மனித உணர்வுநிலையில் இந்த யதார்த்தம் பிரதிபலிக்கப்படுகிறது. அதனை மனித மனம் பற்றிக்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும். * மனிதர்கள் புறநிலை யதார்த்தத்தின் அடிமைகள் அல்லர். அவர்கள் செயலாற்றல் மிக்க செயலிகள் ஆவர். மனிதர்கள் தம்செயல்கள் மூலம் புறநிலை யதார்த்தத்தின் மீது தாக்கம் புரிகிறார்கள். அதனை மாற்றுகிறார்கள்.
Roy Bhasker என்பவரும் அவரது கூட்டாளிகளும் விமர்சன யதார்த்தம் என்ற மாற்றுவழியை ஒரு கோட்பாடாக விருத்தி செய்துள்ளனர்.

Page 8
6 பிரவாதம்
முறைகளும் அறிவாராய்ச்சியலும் ஆய்வாளர்கள் தேர்ந்து கொள்ளும் முறைகளின் அறிவாராய்ச்சியியல் அம்சங்கள் பற்றி அடுத்து நோக்குவோம். களைகொல்லிகள், கிருமி நாசினிகள் முதலிய விவசாய இரசாயனப் பொருட்களை விவசாயிகள் உபயோகித்தல், அவர்களது விருப்புக்கள், தெரிவுகள் பற்றி ஒரு ஆய்வாளர் ஆய்வு செய்ய விரும்புகிறார் எனக் கொள்வோம். அவர் கள ஆய்வு ஒன்றைச் செய்ய விரும்புகிறார். வினாக்கொத்து ஒன்றைத் தயாரித்து விவசாயிகளை நேர்முகம் கண்டு புள்ளி விபரங்களைத் தொகுக்கிறார். அவரது நோக்கம் விவசாய இரசாயனங்களின் உபயோகம் பற்றி விவசாயிகளின் விருப்பத் தெரிவுகள் பற்றி புள்ளி விபரமாதிரி ஒன்றை வகுப்பதுதான் என்றும் கொள்வோம். அவரது இந்த ஆய்வு முறையை அறிவாராய்ச்சியியல் நோக்கில் பார்க்கும் பொழுது அதனை என்னவகைக்குள் அடக்கலாம் என்று பார்ப்போம். சமூக விஞ்ஞானங்களின் அனுபவவாத/நேர்காட்சிவாத முறையி யலைச் சார்ந்த ஆய்வு முறையையே அவர் தெரிந்து எடுத்துள்ளார் என்பது தெளிவு. இந்த முறை புள்ளியியல் தரவுகளைத் தொகுத்தும் பகுத்தும் அவற்றை விளக்குவதான முறையாகும். இம்முறை அனுபவம் சார்ந்தது. அதன் அறிவாராய்ச்சியியல் அனுமானங்கள் பின்வருவன:
* கணித முறையில் எண் அளவுகளால் புறநிலை யதார்த்தத்தின் தரவுகளை பெறமுடியும். மக்களின் அகநிலை சார்ந்த அபிப்பிராயங்களை விட இப்புள்ளி விபரங்கள் புறநிலை யதார்த்தத்தை உண்மையாக பிரதிபலிப்பவை. புறநிலை பற்றி கள ஆய்வு மதிப்பீடுகள், நேர்காணல்கள், வினாக்கொத்துக்கள் மூலம் நம்பகமான தகவல்களைப் பெறமுடியும்.
* ஆய்வாளர் என்ற முறையில் எமது கடப்பாடு, பக்கச்சார்பற்ற, மதிப்பீடுகள் சாராத, நம்பகமான தகவல்களைத் தருவதே. இத்தகவல்களின் அடிப்படையான முடிவுகள் பரிசோதனை மூலம் சரிபார்க்கக்கூடியவையாக இருத்தல் வேண்டும். வேறு வார்த்தையில் கூறுவதானால் அவை விஞ்ஞான அறிவாக இருத்தல் வேண்டும். ஆகவே, சமூக விஞ்ஞானங்களின் ஆய்வில் அனுபவவாத / நேர்காட்சி முறையானதரவுகளைத்

ஆராய்ச்சி முறையியல் 7
தொகுத்தலும், பகுப்பாய்வு விளக்கமும் நம்பகமானவை. மிகச் சிறந்த ஆய்வு முறை.
பெரும்பாலான சமூகவியலாளர்கள், பொருளியலாளர்கள், அரசியல் விஞ்ஞானிகள், மக்கள் தொகையியலாளர்கள் நேர்க்காட்சிவாத முறையியலையே சிறந்ததென்று தேர்வு செய்கிறார்கள். இவ்வாறு தேர்வு செய்யும் போது அவர்கள் அறிவாராய்ச்சியியல் சார்ந்த சில அனுமானங்களின்படி செயற்படுகின்றனர். ஆயினும் தாம் தேர்வு செய்யும் நேர்க்காட்சிவாத முறையியலின் அடிப்படைகளைப் பற்றிய சரியானபுரிதலின்படி செயற்படுகிறார்களா என்பது கேள்விக்குரியது. சமூக விஞ்ஞானங்களில் பயன்படுத்தக்கூடிய ஆய்வு முறையியல்கள் பல உள்ளன. அனுபவாத / நேர்காட்சி வாத ஆய்வு முறையியல் தான் ஒரே ஒரு முறையியல் என்று எண்ணுவது தவறு. ஒரு நூற்றாண் டுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் முறையியலாக இது உள்ளது என்பது உண்மையே. மெய்யியல் துறையில் அனுபவாதம்/ நேர்க்காட்சி வாதத்திற்குச் சவால்கள் எழுந்தன. சமூக விஞ்ஞானங் களிலும் இம்முறையியலிற்கு எதிர்ப்புத் தோன்றியது. இன்று நேர்க்காட்சிவாத மறுப்புமுறையியல்கள் தோன்றியுள்ளன. இவற்றை விட பின்னை நேர்க்காட்சிவாத (Post - Positivist) முறையியல்கள் என்று கூறக்கூடிய முறையியல்களும் உள்ளன. இவற்றுள் சில 6)/(Ա5ԼDITU)]:
i. தோற்றப்பாட்டியல் (Phenomenology)
ii. 96016.5ugi (Lp60puSugi) (Ethno Methodology)
i. மார்க்சீயம்
iv. 65) DijesFGOTë GESITL "LurTG6), (Critical Theory)
V. பொருள்கோடலியல் (Hermeneutics)
சமூகவியல், மானிடவியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு, பால் நிலை ஆய்வு (பெண்ணியம்) ஆகிய சமூக விஞ்ஞானங்களிலும், பண்பாடு, இலக்கியம், சமயம் போன்ற மனிதப் பண்பியல் கல்வித் துறைகளிலும் ஆய்வாளர்கள் மேற்குறித்த ஆய்வு முறையியல்களை இன்று பிரயோகிக்கின்றனர். இத்தகைய பின்னை நேர்க்காட்சிவாத முறையியல்கள் எவ்வாறு சமூக விஞ்ஞானங்களிலும், மனிதப்

Page 9
8 பிரவாதம்
பண்பியல் கல்வியிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடுத்து நோக்குவோம்.
மானிடவியலாளர்கள் நேர்காட்சிவாத முறையியலை நிராகரித் துள்ளனர். அதனைக் கைவிட்டு தோற்றப்பாட்டியல், இனவியல் முறையியல் ஆகியவற்றை அவர்கள் தமக்கு ஏற்ற முறையியலாக தேர்ந்து கொள்கின்றனர். மானிடவியலாளர்கள் இனவரைவியலில் (Ethnography) கவனம் செலுத்துபவர்கள். இனவரைவியல், பண்பியல் ஆய்வு (Qualitative research) முறையை கையாண்டு மக்களின் வாழ்வு பற்றிய பண்பியல் தகவல்களை தொகுக்கின்றது. அதில் மக்கள், நிகழ்வுகள், பண்பாடு, சமூக நடைமுறைகள் ஆகியன பற்றிய பண்பியல் அம்சங்களே முதன்மை பெறும். பங்கேற்பு அவதானிப்பு என்ற ஆய்வு உத்தியைக் கையாண்டு மக்களின் வாழ்க்கையை ஆய்வாளர் உற்று நோக்குவர். விடய ஆய்வுகள், நபர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்தல், மக்களின் நினைவுகளையும் வாய் மொழி வரலாற்றையும் தொகுத்தல் என்பனவும் மானிடவியலாளர்கள் கையாளும் சில உத்திகளாகும். இவை மக்கள் பற்றிய பண்பியல் தகவல்களைத்தருவன. பொருளியலாளர்கள், அரசியல் விஞ்ஞானிகள் போலல்லாது மானிடவியலாளர்கள் மக்கள் மத்தியில் நீண்டகாலம் வாழ்ந்து, தாம் ஆய்வு செய்யும் சமூகத்தினரின் மொழியைக் கற்று, அவர்களோடு உறவாடி, அன்றாட வாழ்க்கையை அவதானித்துக் குறிப்பு எடுப்பர், ஆய்வு செய்வர். இதற்கான காரணம் யாதெனில் மானிடவியலாளர்கள் பிறதுறையினர் போன்று அளவு ரீதியான தகவல்களில் அல்லாது பண்புரீதியானதகவல்களில் கவனம் செலுத்து வதேயாகும். இங்கே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் தோற்றப்பாட்டியல், இனவியல் முறையியல் போன்ற ஆய்வுமுறையியல்கள் சில அடிப்படையான அறிவாராச்சியல் அனுமானங்கள் அல்லது எடுகோள்களைக் கொண்டுள்ளன என்ப தாகும். அவ்வெடுகோள்கள் சில வருமாறு:
1. சமூகம் என்பது ஒரு வித்தியாசமான உலகம். இந்த உலகத் தினுள் ஆராய்ச்சியாளன் நுழைவதென்பது மக்களின் உலகில் பிரவேசிப்பதாகும். மக்களின் உலகில் பிரவேசிக்கும் போது மக்களின் நோக்கில், அவர்களது பண்பாடு, உரையாட்டுகள்,

ஆராய்ச்சி முறையியல் 9
அறிவு, சிந்தனை என்பனவற்றின் ஊடாக சமூகம் என்ற உலகத்தை ஆய்வாளன் பார்க்க வேண்டும்.
2. நேர்க்காட்சிவாத முறையியலின் துணையுடன் பெளதீக உலகத்தை ஆய்வு செய்யும் போதுள்ள சாத்தியப்பாடுகள் சமூகம் பற்றிய ஆய்வில் இருப்பதில்லை. இங்கே ஆய்வாளன் சமூக யதார்த்தத்தை மக்களின் பார்வை ஊடாக உருவாக்கம் செய்ய வேண்டும். யதார்த்தம் என்பதுதானாக புறத்தே இருப்ப தல்ல. அது மக்களால், அவர்களது இடைத் தொடர்புகள் ஊடாக, பண்பாட்டுக் கோலங்களாக படைக்கப்படுபவவை. ஆகவே சமூகம் பற்றிய ஆய்வில் புறநிலை யதார்த்தம் (ObjectiveReality) ஒன்று இருப்பதில்லை. ஆய்வாளன் இந்த யதார்த்தத்தை மக்களின் நோக்கின் ஊடாக காணவேண்டும். இதற்கு பிரத்தியேகமான அறிவு அல்லது அறிகைக் கருவிகள் வேண்டும். சமூக யதார்த்தம் அகநிலைசார்ந்தது. அதுமக்களால் உருவாக்கப்படுவது. இதனை பிரத்தியேகமான அறிகைக் கருவிகள் கொண்டே ஆய்வாளன் அணுக முடியும்.
மேலே ஆய்வு பற்றிய இரு உதாரணங்களைக் குறிப்பிட்டோம். ஒன்று விவசாய இரசாயன பொருட்களின் உபயோகம் பற்றியது; மற்றது மானிடவியல் ஆய்வு பற்றியது. முன்னது நேர்க்காட்சி வாத முறை யியலுக்கு உதாரணம். பின்னது பின்னை நேர்க்காட்சிவாத முறை யியலுக்கு உதாரணமாகும். சமூக விஞ்ஞானிகளும் மனிதப் பண்பியல் ஆய்வாளர்களும் இரண்டு முறையியல்களில் ஏதேனும் ஒன்றைத் தெரிந்து கொண்டு தாம் தெரிவு செய்த முறையியலுக்குள் நின்று செயற்படுகிறார்கள். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று போட்டி யிடும் முறையியல்கள். 19ஆம் நூற்றாண்டில் சமூக விஞ்ஞானங்கள் தோற்றம் பெற்ற காலம் முதல் சமூக விஞ்ஞான ஆய்வில் நேர்க்காட்சி வாத முறையியல் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்த முறையியல் தான் சமூக விஞ்ஞான அறிவு உற்பத்திக்கு உதவியாக இருந்துள்ளது. இயற்கை விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்பட்ட அனுபவாத முறை (EmpiricistMethod) சமூக விஞ்ஞான ஆய்வுக்கும் பயன்படுத்தப்படலாம் என்பது நேர்க்காட்சிவாத முறையியலின் அடிப்படை அனுமானம் ஆகும். இந்த அறிவாராய்ச்சியியல் அனுமானத்தின் பயனாக

Page 10
10 பிரவாதம்
இன்னொரு முக்கிய கருத்துப் பிறக்கிறது. சமூகம் பற்றிய கல்வியும் ஒரு விஞ்ஞானம் ஆதலால் இயற்கை விஞ்ஞானங்களின் விஞ்ஞான முறை (Scientific Method) இங்கும் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இக்கருத்தைக் காலப்போக்கில் பலர் மறுத்துரைத் தனர். மனித சமூகம் பற்றிய ஆய்வு அதற்கே உரிய தனித்துவமான விஞ்ஞான முறையை கொண்டிருக்க வேண்டும். இயற்கை விஞ் ஞானத்தின் அனுபவவாத முறையியலை சமூகத்திற்கு பொருத்த முடியாது என்று பலர் வாதிட்டனர். நேர்க்காட்சி வாதிகளின் ஒன்றி ணைந்த விஞ்ஞானம் (Unified Science) அல்லது எல்லா அறிவியல் களும் ஒருமித்த பண்புடையன என்ற கருத்து கேள்விக்குள்ளாக்கப் பட்டது. நேர்க்காட்சி வாத சமூக விஞ்ஞானம் முன்வைத்த அறிவின் புறநிலைத்தன்மை (Objectivity), விஞ்ஞானத் தன்மை (Scientificity) என்பன பின்னை நேர்க்காட்சி வாதிகளால் நிராகரிக்கப்பட்டன. நேர்க்காட்சிவாதம், அதற்கு மாறான பிற முறையியல்கள் குறித்த மெய்யியல், முறையியல், கோட்பாட்டு விவாதங்கள் என்று வகைப் படுத்தக் கூடிய நூல்கள், கட்டுரைகள் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டு களில் பெருமளவில் வெளிவந்துள்ளன. இக்கோட்பாட்டு விவாதங் களைக் கொண்டுதான் சமூக விஞ்ஞானங்களின் இயல்பு, அவற்றின் அறிவு உற்பத்தி, செயற்பாடுகள் தொடர்பானமுறையியல் தொடர்பான விடயங்களை நாம் விளங்கிக் கொள்ளுதல் முடியும்.
இன்று வளர்ச்சி பெற்றுள்ள ஆராய்ச்சி முறையியல்களை மேலே குறிப்பிட்ட நேர்க்காட்சிவாதம், பின்னை நேர்காட்சிவாதம் என்ற இரு மரபுகளுக்குள் உள்ளடக்கலாம். இந்த இருமரபுகளும் ஒன்றோடு ஒன்று போட்டியிடும், முரண்படும் மரபுகளும் ஆகும். இவை உருவாக்கியுள்ள கோட்பாட்டு மாதிரிகளை எதிர் எதிர்த் துருவங்களில் வைத்துப் பார்த்தல் முடியும். நேர்க்காட்சி வாதிகள் 6760607U முறையியல்களை விஞ்ஞானமுறைக்கு ஒவ்வாதவை என்று நிராகரிப்பர். அவற்றைப் பற்றி அக்கறையோடு கவனத்தில் எடுத்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். தமது முறையியல் ‘விஞ்ஞான பூர்வமானது' என்று எதிரணியினர் கூறுவதை எள்ளிநகையாடுவர். இவ்விதமாக இருசாராரும் முரண்பட்டுநிற்பது சமூக விஞ்ஞானத்தின் வளர்ச்சியைத் தடைசெய்வதாக உள்ளது எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சமூகம் என்ற உலகு பற்றிய அறிவியல் இன்று வரை

ஆராய்ச்சி முறையியல் 11
எட்டப்பட்ட சாதனைகள் யாவும் இந்த மோதல்களால் வீணடிக்கப் படுகின்றன என்று கூறுவர். ஆகவே புறநிலை வாதம், அகநிலை வாதம் என்று கட்சி கட்டி வாதாடுவதை விடுத்து இரண்டு நோக்கு முறைகளையும் இணைக்கும் முயற்சியிலும், இருநோக்கு முறை களின் நல்ல அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்ட புதிய முறை யியல்களை உருவாக்குவதிலும் சில அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒன்றை விஞ்ஞானம் என்றும் மற்றதை விஞ்ஞானபூர்வமானதல்ல என்றும் கூறும் பொறிக்குள் அகப்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையை இவர்கள் தெரிவிக்கின்றனர். நவீன சமூக விஞ்ஞானச் சிந்தனையாளர்களில், இத்தகைய சமரசப் போக்கை உடையவர்களாக, Loui uigu (Pierre Bourdieu), 9i56of 6LGöTGu (Anthony Giddens) என்ற இரு அறிஞர்களைக் குறிப்பிடலாம்.
முறையியல்களுக்கிடையிலான விரோத உணர்வையும், பிரிவினையையும் மேலே விபரித்தோம்.
இப்பின்னணியில் இளம் ஆராய்ச்சியாளர் ஒருவர் முறையியல் பற்றிய சவால்களை எதிர்கொள்வது எப்படி? ஒரு ஆய்வு முன் மொழிவை எழுதுவது எப்படி? என்ற கேள்விகளுக்கு விடையாக அமையக்கூடிய நடைமுறை வழிகாட்டி ஒன்றைக் கீழே சில குறிப்புக் களாகத் தந்துள்ளோம்.
1. இருபதாம்நூற்றாண்டின் சமூகவிஞ்ஞானங்களின்முறையியல் பற்றிய விவாதங்களில் தம்மைப் பரிச்சயமாக்கிக் கொள்ளுதல் இளம் ஆய்வாளர் ஒருவர் மேற்கொள்ளவேண்டிய முதலாவது பணி என்று கூறலாம். இலங்கையர்களான இளம் ஆராய்ச்சி யாளர்கள் இவ்விடயத்தில் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளனர். காரணம், எமது பல்கலைக்கழகங்களின் பின்பட்டப் படிப்பு பாட நெறிகளில் அறிவு உற்பத்தியின் முறையியல் பற்றியோ அவ்விடயம் தொடர்பான மெய்யியல் அறிவாராய்ச் சியியல் அம்சங்கள் பற்றியோகவனம் செலுத்தப்படுவதில்லை. ஆராய்ச்சி முறையியல் என்ற பெயரில் மாணவர்கள் புள்ளி விபரவியல் நுணுக்கங்களையும், தரவுகளை திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல் பற்றிய முறைகளையும் கற்றுக் கொள் கிறார்கள். ஆகவே மாணவர்களான இளம் ஆராய்ச்சியாளர்கள்

Page 11
I2
பிரவாதம்
முறையியல் பற்றிச் சுயமாகவே கற்றுக் கொள்ளவேண்டிய நிலை உள்ளது. சுயமாக கற்பதற்கான நல்ல பாட நூல்கள் உள்ளன. இவற்றின் உதவியுடன் முறையியல் பற்றிய முக்கிய சிந்தனையாளர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளுதல் அவசியம். இந்த அத்தியாயத்தில் முறையியல் விவாதங்கள் பற்றியும், முக்கியமானசிந்தனையாளர்கள் பற்றியும் சுருக்கமாக எடுத்துக் கூறுவோம்.
முறைகள் அல்லது முறையியல் பற்றிய கல்வியை நாம் எப்படி எங்கிருந்து தொடங்கலாம்? அறிவு உற்பத்தியின் அறிவாராய்ச்சியியல் அம்சங்களில் இருந்து தொடங்குவது பயனுடையது. முறையியலிலும் அறிவாராய்ச்சியியலிலும் பரிச்சயமில்லாதவர்கள் முதலில்தாம் எடுத்துக் கொண்டுள்ள ஆய்வு விடயத்திற்கு என்ன முறைகளை தேர்ந்து கொள்ளப் போகிறார் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். முறை களை அடையாளம் கண்ட பின்னர் அவற்றின் முறையியல் நியாயப்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டும். தான் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளார்? என்பதை அவர் தெரிந்து கொள்வது நல்லது. நேர்க்காட்சி வாதம், பின்னை நேர்க்காட்சி வாதம், அமைப்பியல், செயல் வாதம் (Functionalism), பின் நவீனத்துவம், தோற்றப்பாட்டியல், வெபரியம், மார்க்சியம், பின்னை மார்க்சியம் என்ற பல்வேறு சிந்தனைப் போக்கு களில் எந்த சிந்தனைக்குள் தான் வந்துள்ளேன் என்பதை அவர் கண்டு கொள்ள வேண்டும். குறிப்பாக பின்பட்டப் படிப்பு மாணவர்கள் தமது கோட்பாடு என்ன? தாம் தேர்ந்த முறையியல் யாது? அது எந்த வகைக் கட்டளைப் படிமத்துள் (paradigm) தன்னை கொண்டு வந்து சேர்த்துள்ளது? போன்ற அடையாளங்களை உணர்ந்து தமது ஆய்வுத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.
தமது ஆய்வுத்திட்டத்திற்கு பொருத்தமான ஆராய்ச்சி முறை கள் எவையென ஒருவர் அடையாளம் காண்பது எப்படி? இதற்குரிய நடைமுறைப் பயனுடைய வழியாதெனில் தனது ஆய்வு வினாக்களை ஆய்வாளர் முதலில் வகுத்துக் கொள்ள

ஆராய்ச்சி முறையியல் 13
வேண்டும். ஒவ்வொரு ஆய்வு வினாவிற்கும் என்னென்ன ஆய்வு முறைகள் தேவை என்பதைக் கண்டு கொள்ள வேண்டும். சில ஆய்வு வினாக்கள் புள்ளியியல் தரவுகளை அல்லது அளவுரீதியான தரவுகளை வேண்டி நிற்பன. வேறு சில ஆய்வு வினாக்கள் பண்புரீதியானதரவுகளைக் கோருவன. இன்னும் சில ஆய்வு வினாக்கள் அளவு ரீதியான தரவுகள், பண்புரீதியான தரவுகள் என்ற இருவகைத் தரவுகளையும் வேண்டிநிற்பவை. களஆய்வு, குடும்பங்கள் பற்றிய தரவுகள் போன்ற முறைகளில் தகவல்களைதிரட்டலாம். சில வினாக் களிற்கு பண்புரீதியானதகவல்கள் தேவைப்படும். இவற்றைப் பெறுவதற்கு பங்கேற்புஅவதானிப்பு, நேர்காணல், வாய்மொழி வரலாறு, தனிநபர்களின் நினைவுகள் போன்ற முறைகளைக் கையாள வேண்டும். இவ்வாறு ஆய்வு முறைகளை அடை யாளம் கண்ட பின்னர் அவற்றின் முறையியல், அறிவாராய்ச்சி யியல் அனுமானங்கள் எவை என்பதைப் பரிசீலனை செய்தல் வேண்டும்.
4. ஒரு ஆய்வாளர் தனது ஆய்வுக்கு அளவுரீதியான தரவுகள் தேவைப்படுகின்றன என்றும் அளவுரீதியான முறைகளையே தாம் கையாள வேண்டும் என்றும் முடிவு செய்கிறார் எனக் கொள்வோம். அவரது ஆய்வு நேர்க்காட்சி வாத முறையிய லுக்குள் அமைவது என்பது தெளிவு. பொருளியல், புவியியல், முகாமைத்துவம், மக்கள் தொகையியல் போன்ற கல்வித் துறைகளில் செய்யப்படும் ஆய்வுகள் பெரும்பான்மை நேர்க்காட்சிவாத முறையியல் சார்ந்தனவாகவே இருப்பதைக் காணலாம். இவ்வாறான ஆய்வு ஒன்றைச் செய்பவர் தாம் நேர்க்காட்சிவாத முறையியல்படி ஆய்வைச் செய்கிறோம் என்ற உணர்வு உடையவராக இருப்பதோடு தமது ஆய்வினை யும், முடிவுகளையும் நேர்க்காட்சி வாத முறையியல், அதன் அறிவாராய்ச்சியியல் நோக்கில் நியாயப்படுத்தவும், விளக்க மளிக்கவும் வேண்டும்.
வேறு சில ஆய்வுகள் பின்னை நேர்க்காட்சிவாத முறைகள் கொண்டு செய்யப்பட வேண்டியவை. அந்த முறைகளை நியாயப்படுத்தலும்

Page 12
14 பிரவாதம்
ஆய்வு முடிவுகளை விளக்குவதும் தோற்றப்பாட்டியல், பொருள் கோடலியல், விமர்சனக் கோட்பாடு ஆகியவற்றில் எது பொருத்த மானதோ அதன்வழிச் செய்யப்பட வேண்டும்.
நேர்க்காட்சிவாதம், பின்னை நேர்காட்சிவாதம் என்ற இருவகை முறையியல்களினையும் ஒரு ஆய்வில் பயன்படுத்த வேண்டிய தேவையும் எழலாம். ஒன்றோடு ஒன்று பகைமை பாராட்டி வந்தவை யான இந்த இருமுறையியல்களையும் ஒருசேர ஆய்வாளர்கள் பயன் படுத்தலாமா என்ற ஐயம் தோன்றலாம். பியர்பூர்தியு, அந்தனிகிடன்ஸ் போன்றோர் இவ்வாறான எதிர் எதிர்நிலைப்பாடுகளும், போட்டியும் முறைகளிலும், முறையியலிலும் இருக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறுவர். ஆதலால் ஒரு ஆய்வாளர் இருவகை முறையியல் களில் இருந்தும் தமது தேவைக்கு ஏற்றபடி முறைகளைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவு செய்த பின்னர் இந்த முரண்பட்ட முறைகளின் சேர்க்கை ஏன்.அவசியமானது என்பதை ஆய்வாளர் நியாயப்படுத்த வேண்டும். அவ்விதம் நியாயப்படுத்தும் போது அவருக்கு ஒவ்வொரு பிரிவினதும் முறையியல் விளக்கங்களினைப் படித்துத் தெரிந்து தம் நியாயப்படுத்தலை செய்யும் தேவை எழும்.
முறையியல் விவாதங்களினைப் படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஒரு சுருக்கமான வழிகாட்டி சமூக விஞ்ஞான ஆய்வு முறையியலைச் சுயமாக கற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள ஆய்வாளர்கள் பின்வரும் விடயங்கள் குறித்த நூல் களையும் கட்டுரைகளையும் தெரிவு செய்து தமது படிப்பை ஆரம் பித்தல் பயனுடையது.
விஞ்ஞானமுறை
இயற்கை விஞ்ஞானங்களில் ‘விஞ்ஞானமுறை’ எப்படி வளர்ச்சி யுற்றது என்ற விடயம் முக்கியமானது. 17ஆம் நூற்றாண்டில் பிரான்சிஸ் பேக்கன் வழங்கிய முக்கிய பங்களிப்பை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
 

ஆராய்ச்சி முறையியல் 15
சமூக விஞ்ஞானங்களின் தோற்றம்
இதற்குப் பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இயற்கை விஞ்ஞானம் கடைப்பிடித்த விஞ்ஞானமுறையைச் சமூகம் பற்றிய ஆய்வில் சிலர் புகுத்தினர். அகஸ்ட் கொம்ட், எமில் டர்க்கீம் என்போரும் இவர்கள் இருவருக்கும் பின்னர் மக்ஸ் வெபரும் சமூகம் பற்றிய ஆய்வில் விஞ்ஞான முறையைப் புகுத்திய முக்கிய சிந்தனையாளராவர்.
கம்ட் சமூகவிஞ்ஞானங்களில் நேர்க்காட்சி வாதத்தை புகுத்திய மூலவர் ஆவர். அவருக்குப் பின் எமில் டர்க்கீம் நேர்க்காட்சிவாத விஞ்ஞானமுறையை சமூகவியலில் திட்டவட்டமான நெறிமுறைப் படிபூரணமாகப் பிரயோகித்தார். அதுமட்டுமன்றி டர்க்கீம் நேர்காட்சி வாத சமூகவியலின் வழிகாட்டியாக அமையும்The RulesofSociological Method (சமூகவியல் முறை பற்றிய விதிகள்) என்ற நூலையும் எழுதினார். வெபர் பற்றிக் குறிப்பிடும் போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது யாதெனில் அவர் நேர்க்காட்சிவாத முறை யியலை மிகுந்த கவனத்தோடும் தயக்கத்தோடும் பயன்படுத்தினார் என்பதே. அந்த முறையியலில் திருத்தங்களையும் அவர் செய்தார். அக்காலத்தில் ஜேர்மனி தேசத்தில் நேர்க்காட்சி வாதத்திற்கு எதிர்ப்பான கருத்துக்கள் தோன்றின. இக்கருத்துக்களின் தாக்கம் வெபரின் சிந்தனையில் வெளிப்பட்டது. நவீன சமூக விஞ்ஞானங்களில் நேர்க்காட்சிவாத முறையியல் வளர்ச்சியுற்ற வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் ஆய்வாளர் ஒருவர் அகஸ்ட் கொம்ட், டர்க்கீம், வெபர்ஆகியோரின் எழுத்துக்கள், சிந்தனைகளில் தம்மைப் பரிச்சயப் படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
மார்க்சியமும் விஞ்ஞானமுறையும்
20ஆம்நூற்றாண்டின் சமூக விஞ்ஞானங்களின்இயல்பையும் அவற்றின் இலக்குகளையும் அவற்றின் முறையியலையும் நிர்ணயிப்பதில் மார்க்சியம் பெரும் பங்கினை வகித்தது. மார்க்சியம் ஐரோப்பாவின் நேர்க்காட்சிவாத மரபில் இருந்து விலகி நின்று வளர்ச்சி பெற்ற சிந்தனை முறை என்ற சுவாரசமான விடயத்தையும் இங்கு நாம் சுட்டிக் காட்ட வேண்டும். இருந்த போதும் மார்க்சும் அவரது கூட்டாளிகளும் சமூகம் பற்றிய ஆய்வில்தாம் ‘விஞ்ஞானமுறையைப்

Page 13
I6 பிரவாதம்
புகுத்துகிறோம்; தமது நோக்கு முறை விஞ்ஞானபூர்வமானது என்றே கருதினர். அறிவின் உற்பத்தியின் நோக்கம் சமூக விடுதலையே என்று மார்க்சியம் கூறியது. இது சமூக விஞ்ஞானங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க்சியத்தின் இந்தத் தனித்துவம் மிக்க நிலைப்பாடு பிற்காலத்தில் சமூக விஞ்ஞானங்களில் விமர்சன(Critical) அல்லது கிளர்ச்சி (Radical) மரபுகள் தோன்றுவதற்கு உந்துதலாக இருந்தது.
நேர்க்காட்சி வாத சமூகவியலுக்கு எதிரான விமர்சனம் - முதற் கட்டம்
ஜேர்மன் நாட்டுத் தத்துவ மரபில் இருந்து தான் நேர்க்காட்சி வாத சமூக விஞ்ஞானமுறையியலுக்கு எதிர்க்குரல் முதலில் தோன்றியது. இத்தத்துவ மரபை மனிதாயவாத மரபு (Humanist Tradition) என்று அழைப்பர். ஜேர்மன் தத்துவஞானிகளிடையே நடைபெற்ற விவாதங் களின் பயனாக பொருள்கோடலியல் (Hermeneutics), தோற்றப் பாட்டியல் (Phenomenology) ஆகிய தத்துவங்கள் தோன்றின. இத் தத்துவவாதிகள் நேர்க்காட்சி வாதத்திற்குப் பதிலாக Non positivist முறையியலை வளர்ப்பதில் பற்றும், உறுதியும் உடையவராய் இருந்தனர். இந்த நேர்க்காட்சி வாதம் அல்லாத முறையியலைப் புரிந்து கொள்வதற்கு ஹஸீஸ்சர்ல் (Husser), ஜோர்ஜ் ஹடமர்(Gadama), LDIjlg-678ju Gl5j(Heidegger), gairGuTaib 3igigi (Jean-Paul Sartre), யூர்ஜென் ஹெபர்மாஸ் (Habamas), Riccoeur ஆகியோரின் எழுத்துக் களிலும் சிந்தனைகளிலும் நம்மைப் பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக விஞ்ஞானங்களில் பிற்காலத்தில் வளர்ச்சியுற்ற விளக்கமுறை மரபை (InterpretativeTradition) புரிந்து கொள்வதற்கும் இந்தச் சிந்தனையாளர்கள் பற்றிய அறிவு உதவும். மேற்குறிப்பிட்ட தத்துவஞானிகளின் நூல்கள், கருத்துக்கள் என்பனவற்றை படித்து விளங்கிக் கொள்வதில் ஆரம்ப கட்டத்தில் வாசகர் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வர். தொடக்க நிலை வாசகர்களுக்கு இத்தத்துவங்களை எளிமையாக எடுத்துச் சொல்லும் அறிமுகப் பாடநூல்கள் பல உள்ளன. இவற்றின்துணையுடன் இவை பற்றிய அறிவை வளர்த்துக்
கொள்லாாைA

ஆராய்ச்சி முறையியல் 17
பின்னை நேர்க்காட்சிவாத சமூக விஞ்ஞானமும் மனிதப் பண்பியலும்
தோற்றப்பாட்டியல், பொருள்கோடலியல், இனவியல் முறையியல் என்ற மூன்று நோக்கு முறைகள் பின்னை நேர்க்காட்சிவாதம் என்ற பிரிவுக்குள் அடங்கும் சமூகவிஞ்ஞான நோக்குமுறைகளில் முதன்மை இடத்தைப் பெறுகின்றன. சமூகவியல், மானிடவியல், வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பண்பாட்டுக் கற்கை நெறி, பால்நிலைக் கற்கைநெறி ஆகிய துறைகளில் இம்மூன்று நோக்கு முறைகளும் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன. இந்நோக்கு முறை களோடு தொடர்புடைய முக்கிய அறிஞர்கள் விபரம் வருமாறு:
* தோற்றப்பாட்டியல் - அல்பிரட் சூட்ஸ் (Schutz), தோமஸ்
GPjöLo6öt (Luckman), L fl i Gl liggö (Peter Berger)
* இனவியல் முறையியல் - ஹர்லொட் ஹார்பின்கெல்
(Garfingel)
* பொருள்கோடலியல் - Pauliccouet, யுர்ஜென் ஹெபர்மாஸ்
அனுபவவாதம், நேர்க்காட்சிவாதம் என்பனவற்றில் 20 ஆம் நூற் றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அவற்றை முக்கியம் வாய்ந்த சிந்தனைகள் என்ற கணிப்பை பெறவைத்தன. 1920 க்கள் முதல் நாற்பது ஆண்டு காலம் விஞ்ஞானத்தின் தத்துவமாக அனுபவவாதம் விளங்கியது. அதே போன்று சமூகவிஞ்ஞானங்களின் தத்துவமாக நேர்க்காட்சி வாதம் இக்காலத்தில் மேலாண்மை பெற்றிருந்தது. வியன்னா பள்ளியும் (ViennaSchool) அதன் தத்துவமான நேர்க்காட்சி வாதமும் அறிவுலகில் தலைமைப் பாத்திரத்தை பெற்றன. இதனால் அனுபவ வாத அறிவாராய்ச்சியியல் மேலாதிக்கம் செலுத்தியது. தர்க்க நெறி நேர்க்காட்சி வாதத்தின் (Logical Positivism) வழிகாட்டலின்
கீழ் சமூக விஞ்ஞானங்களின் அனைத்துத் துறைகளும் தம்மை ‘விஞ்ஞானங்களாக ஆக்கிக் கொள்ள முனைந்தன. இது சமூக விஞ்ஞானங்களை உலுக்கிய நேர்க்காட்சிவாத - அனுபவவாத இரண்டாவது அலை என்று கூறலாம். முதலாவது அலை 19 ஆம் நூற்றாண்டின் முதல் இருபது, முப்பது வருடங்களின் போது (1800 - 1830) தோன்றியது. 20 ஆம் நூற்றாண்டின் ஆய்வறிவு வரலாற்றில் வியன்னா பள்ளியின் தத்துவார்த்தச் செல்வாக்கை அறிந்து

Page 14
18 பிரவாதம்
கொள்வதற்கும் இயற்கை விஞ்ஞானங்களிலும் சமூகவிஞ்ஞானங் களிலும் வியன்னா பள்ளி கொண்டிருந்த தாக்கத்தை அறிந்து கொள்வதற்கும் இது தொடர்பான நூல்களை வாசகர்கள் படித்தல் அவசியம்.
656565IIorg556, g55gjob (Philosophy of Science) தொடர்பான விவாதங்கள்
விஞ்ஞானத்தின் தத்துவம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. இவை குறிப்பாக சமூகவிஞ்ஞான முறையியலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. அனுபவவாதத்திற்கு அதன் உள்ளிருந்தும் வெளியே இருந்தும் எதிர்ப்புத் தோன்றியது. 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் மூன்று தத்துவஞானிகள் வழங்கிய பங்களிப்பு சமூகவிஞ் ஞான முறையியலையும் பாதித்தது. கார்ல் பொப்பர், தோமஸ்கூன், போல் பெயரபென்ட் (Paul Feyerabend) ஆகியோரே இந்த மூவர்.
அனுபவவாத முறையியலில் சரிபார்த்தல் விதி (Verification Principle) பின்பற்றப்பட்டு வந்தது. கார்ல் பொப்பர் சரிபார்த்தல் விதியை நிராகரித்தார். அதற்குப் பதிலாகப் பொய்ப்பித்தல் விதி (Falsification Principle) என்பதை அவர்அறிமுகம் செய்தார். அவருடைய வாதத்தின் மையமான கருத்தொன்றை நாம் உற்று நோக்க வேண்டும். அவதானிப்பின் மூலம் ஆதாரங்களைச் சரிபார்த்தல் மூலம் நாம் அறிவைப் பெறுதல் முடியாது. விஞ்ஞானக் கூற்றுக்களைப் பொய்ப் பித்தல் விதியின்படி நிச்சயித்துக் கொள்ள வேண்டும். பொய்ப்பிக்க முடியாத கூற்றுக்கள் அறிவு ஆகும். பொப்பருக்குப் பின்னர் விஞ் ஞான அறிவு என்றால் என்ன என்பது பற்றி மேலாதிக்கம் பெற்றிருந்த கருத்தைத் தகர்த்தவர்களுள் தோமஸ் கூன் முக்கியமானவர். இவர் "LJ60)LLb” (Paradigm) என்னும் கட்டளைப்படிமம் என்ற எண்ணக் கருவை முன்வைத்தார். இதனோடு இணைந்த இன்னோர் எண்ணக் கரு விஞ்ஞானப் புரட்சிகள் (Scientific Revolutions) என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் விஞ்ஞான உண்மைகள் (Scientific truths) எனக் கருதப்பட்டவை அக்காலத்தில் விஞ்ஞானிகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமைகள் (conventions) என்றே கூற வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்டளைப் படிமத்தின் (Paradigm) படி விஞ்ஞானிகள் இயங்கிக் கொண்டிருப்பர். அவர்கள் வெளியிடும்

ஆராய்ச்சி முறையியல் 19
உண்மைகள் அந்தக் கட்டளைப் படிமத்திற்கு பொருந்தியதாக இருக்கும். காலப்போக்கில் ‘விஞ்ஞானப் புரட்சி நிகழ்கிறது. அப்போது இருந்துவரும் கட்டளைப் படிமம் தூக்கி வீசப்படும், யாவும் தலைகீழாக்கப்படும் என்று கூன் விளக்கம் கொடுத்தார். 1960க்களின் முற்பகுதியில் கூனின் எழுத்துக்கள் வெளிவந்தன. இக் காலத்தில் பொப்பரும், கூனும் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தினர். இவ்வாறிருக்கும் போது 1970க்களில் பெயர்பென்ட் தனது விரிவு ரைகளிலும் நூல்களிலும் ‘விஞ்ஞான முறை’ என்று கூறுவதே விஞ்ஞானம் என்ற கருத்தியல் (ideology) பரப்பி வரும் ஒரு புனைவு (Fiction) என்று கூறினார். விஞ்ஞானிகள் விஞ்ஞான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தும் விஞ்ஞானமுறை விஞ்ஞானத்தின் கருத்தியலே (Ideology of Science) அன்றி வேறல்ல என அவர் அறிவித்தார்.
அறிவாராய்ச்சியியல்துறையில் நிகழ்ந்த மேற்குறித்த விவாதங்கள் சமூக விஞ்ஞானங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக சமூகவிஞ்ஞானங்களில் நேர்க்காட்சி வாதத்தின் மேலாதிக் கத்தின் சரிவு ஆரம்பித்தது.
அறிவாராய்ச்சியியலிலும், ஆய்வு முறையியலிலும் பின்நவீனத் துவத்தின் சவால்களை எதிர்கொள்ளும் தேவை ஏற்பட்டது. அறிவின் உற்பத்தி பற்றிய மரபுவழிப்பட்ட சிந்தனையில் ஒரு விடயத்தில் கருத்தொற்றுமை இருந்து வந்தது. அது யாதெனில் நம்பத்தகுந்த அறிவைப் பெறுவதற்கு சரியான முறையைக் கையாள வேண்டும் என்பதே. யாவரும் இந்த அனுமானத்தை ஏற்றுக் கொண்டனர். இது ஒரு அடிப்படை அனுமானம். நேர்க்காட்சிவாதிகளும், பின்னை நேர்க்காட்சிவாதிகளும் ஏற்றுக் கொண்ட அனுமானம். பின்நவீனத் துவம் இந்த அடிப்படை அனுமானத்தை (Foundational Assumption) நிராகரித்தது. மரபு வழிப்பட்ட அறிவாராய்ச்சியியல்களின் இந்த அனுமானத்தை நிராகரித்த பின்நவீனத்துவம் போல் பெயர்பென்ட் முன்வைத்த Against Method (முறைக்கு எதிராக) என்ற கருத்துக்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுத்தது. அதாவது உண்மையான அறிவை அடையும் சரியான முறை என்று எதுவும் இல்லை. உண்மை என்பது சார்புரீதியானது (Relative), றிச்சார்ட் றொர்றி (Richard Rorty) இவ்வாறு கூறினார்:

Page 15
2O பிரவாதம்
There is no god's eye view of the world, nor is there a privileged hook on which all our truth claims can hang.
அதாவது சரியான உண்மை ஒன்று இருக்கிறது; அது கடவுளின் பார்வை போன்றது அல்லது உண்மை அறிவு என்ற கொழுக்கியில் எமது அறிவு பற்றிய முடிவுகளை தொங்க விடலாம் என்றவாறாக நாம் நம்புவது அர்த்தமில்லாதது.
முறைகள் பற்றிய அறிவாராய்ச்சியல் அடிப்படைகள்
ஆய்வு முறைகள் யாவற்றிற்கும் ஆய்வு முறையியல் அடிப்படைகள் உள்ளன. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வெவ்வேறு முறையியல் கட்டளைப்படிமங்கள் (Methodological Paradigms) உள்ளன. அவற்றுக்கேற்றபடியே முறைகள் (Methods) உருவாகின்றன. நேர்க்காட்சிவாதம் என்ற சிந்தனையை உதாரணமாக எடுத்துப் பார்ப்போம். இதற்கு ஒரு முறையியல் உள்ளது. இந்த முறையியலின் படிதான் நேர்க்காட்சிவாத முறைகள் அமைந்துள்ளன. கூறியது கூறலாக இருந்தாலும் நாம் முறைகள் குறித்து முறையியல் நோக்கில் சில விடயங்களைக் கூறுதல் வேண்டும்.
சமூக ஆய்வில் நேர்க்காட்சிவாதம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சி பெற்றது. இந்த எழுச்சி இயற்கை விஞ்ஞான அறிவை சமூக ஆய்விற்கும் பிரயோகித்ததன் விளைவு. சமூகம் பற்றிய ஆய்வில் அனுபவாதம் இக்காலத்தில் முதன்மைபெற்று சமூக விஞ்ஞானமுறையியலின்கட்டளைப்படிமமாக ஒருநூற்றாண்டுக்கும் மேலாக நிலைத்திருந்தது.
நேர்க்காட்சிவாத அறிவாராய்ச்சியியலும் அதன் முறைகளும்
சமூகம் பற்றிய அறிவினை கட்டி எழுப்புவதற்கான செங்கற்கள் போன்றன ஆதாரங்கள் (Facts). ஆதலால் அறிவைப் பெறுவதாயின் சமூகத் தோற்றப்பாடுகள் பற்றிய ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். ஆதாரங்கள் மனித மனத்தின் முற்சாய்வுகள், மதிப்பீடுகளின் கலப் பற்றதாக இருத்தல் வேண்டும். இவ்வாறான கலப்பற்ற ஆதாரங்களை hardfacts என்று அனுபவாதிகள் குறிப்பிட்டனர். ‘சமூகவியல் முறை Lipofu 65556ir' (Rules of Sociological Method) 6T6ip braiSlai (ggs,

ஆராய்ச்சி முறையியல் 27
1895 இல் எழுதப்பட்டது) டர்க்கீம் ஆதாரத்தன்மை (facticity) என்ற கருத்தை அறிமுகம் செய்தார். இதன்படி ஆதாரத்தின் ஆதாரத்தன்மை (facticity of fact) பற்றி அவர் அழுத்தம் கொடுக்க முனைந்தார். புறநிலையானசமூகநிகழ்வுகளைகலப்பற்ற வடிவில் பிரதிநிதித்துவம் செய்யும் facts - ஆதாரங்கள் - வேண்டும் என்பதையே இது குறிப்பிடுகிறது. இவ்வாறானதுய ஆதாரங்கள் தொகுக்கப்பட்டால் இயற்கை விஞ்ஞானங்களின் முறைகளைக் கொண்டு அவற்றைப் பகுப்பாய்வு செய்யலாம் என்று டர்கீம் கூறினார். அளவீடு, பரிசோதனை, புள்ளிவிபரஆய்வு என்பனவிஞ்ஞான ஆய்வுமுறைகள். இவற்றை சமூக ஆய்விலும் பிரயோகிக்கலாம். அதன்மூலம் சமூக இயக்கம் பற்றிய பொதுவிதிகளை (Laws) வகுத்துக் கொள்ளலாம். நேர்க்காட்சிவாத ஆய்வு முறையியலைக் கறாராக கடைப்பிடிக்கும் ஆய்வாளர்கள் புள்ளிவிபர அட்டவணைகள், பட்டியல்கள் என்ப வற்றை வழங்குவர். இப்புள்ளிவிபரங்கள் குடும்பங்கள் பற்றிய புள்ளிவிபரத் தொகுப்பு, குடிசனமதிப்பீடு, வினாக்கொத்துகள் போன்ற புள்ளிவிபர ஆய்வு முறைகள் மூலம் பெறப்படும். இவற்றைக் கொண்டு சமூகம் பற்றிய விளக்கத்தை விதிகள் வடிவில் சமூக விஞ்ஞானிகள் கூறத் தொடங்கினர். அளவுமுறைத் தரவுகள் (Quantitativedata) கொண்டு கருதுகோள்களை (Hypotheses) பரிசோதித் தல் முடியும். நேர்க்காட்சி வாதிகளுக்கு வேண்டியவை தூய தரவுகள். அவை அபிப்பிராயம், உணர்ச்சி, முற்சாய்வான எண்ணங்கள் என்பன வற்றால் கறைப்படாதனவாக இருத்தல் வேண்டும். தரவுகளை வைத்துக் கொண்டு மிக நுட்பமான புள்ளிவிபர நுட்பமுறைகளை கொண்டு பகுப்பாய்வுகளைச் செய்தனர். மாதிரிகள் (Models) வகுக்கப்பட்டன. அளவு முறைத்தரவுகள் பற்றிக் கவனம் செலுத்திய நேர்க்காட்சிவாதிகள் பண்பு முறைத் தரவுகளை (Qualitative data) சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். பண்புமுறைத் தரவுகள் அக வயப்பட்ட அபிப்பிராயங்கள், தனிப்பட்ட கருத்துக்கள், உணர்வுகள் என்பனவற்றால் திரிக்கப்பட்டவைகறைப்பட்டவை என்று அவர்கள் கருதியதே இதற்கான காரணம். நேர்க்காட்சிவாதிகள் புறவயத்தன்மை அல்லது புறநிலைத்தன்மை (objectivity) பற்றிய கரிசனை உடைய வர்கள். விஞ்ஞான அறிவு என்பது புறநிலையான உலகைப் பற்றிய

Page 16
22 பிரவாதம்
பொதுவிதிகளை அல்லது பொதுக்கூற்றுக்களைக் கொண்டமைவது என அவர்கள் கருதினர்.
(5ngibpuniqugjib Qpodpub (Phenomenology and Method)
பின்னை நேர்க்காட்சிவாத அறிவாராய்ச்சியியல் என்ற கண்ணாடி ஊடாக ஆய்வு முறைகள் விடயத்தை இப்போது நாம் பரிசீலிக்க வுள்ளோம். முதலில் தோற்றப்பாட்டியல் என்னும் கோட்பாட்டுடன் எமது பரிசீலனையைத் தொடங்குவோம். தோற்றப்பாட்டியல் சமூகவியலில் கையாளப்படும் முறையாகவும், அதேவேளை ஒரு கோட்பாட்டுப் பிரிவாகவும் உள்ளது.
நேர்க்காட்சிவாதிகள் ஆதாரங்கள் குறித்து மிகுந்த அக்கறை உடையவர்கள் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். தோற்றப்பாட்டிய லாளர்கள் இதற்கு எதிர்மறையான கருத்தினை உடையவர்கள். தரவு களுக்குக்குப் பின்னால் உள்ள மனித அனுபவம்தான் முக்கியமானது; வெறும் தரவுகளால் என்ன பயன் என்றனர். இதனை ஒரு உதாரணம் கொண்டு விளக்கலாம். தேர்தலில் பங்கேற்பு (Electoral Participation) அல்லது தேர்தல்களின் போது மக்களின் வாக்களிப்பு நடத்தை எப்படி உள்ளது என்பதை ஒரு நேர்க்காட்சிவாதி ஆராயப்புகுகின்றார் எனக் கொள்வோம். வாக்காளரின் நடத்தை என்னும் இவ்விடயம் பற்றிய ஆய்வில் உயர் ஆய்வு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நுட்பங்களில் தேர்ந்தவராக உள்ள ஆய்வாளர் முதலில் மாதிரி மதிப்பீடு (SampleSurvey) ஒன்றை நடத்துவார். வாக்காளர்களிடம் பல கேள்விகள் கேட்கப்படும். யாருக்கு வாக்களித்தீர்கள்? ஏன் குறித்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள்? என்னநன்மைகளை எதிர்பார்த்து வாக்களித்தீர்கள்? போன்ற கேள்விகள் பல இருக்கும். வாக்களிக்காதவர்களாயின் ஏன் நீங்கள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை? என்பன போன்ற கேள்வி களைக் கேட்டு விடைகளைப் பெறுவார்கள். இவ்வாறான தரவுகள் வினாக்கொத்து முறை மூலம் திரட்டப்படும். நேரிலும் தரவுகளைத் திரட்டுவர். தொலைபேசி உரையாடல் மூலமும் தகவல்களைத் திரட்டலாம். தரவுகளைத் திரட்டியதும் அவற்றை வகைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல், பகுப்பாய்வு செய்தல் என்ற வழிகளில் நுணுக்க மாகப் பரிசீலிப்பர். இப்பரிசீலனையின் விளைவாகப் பொதுப் போக்கு

ஆராய்ச்சி முறையியல் 23
களும், ஒரே பாங்கில் அமையும் போக்குகளும் வாக்காளர் நடத்
தையில் வெளிப்படுவதை அவதானிக்க முடியும்.
இதற்கு மாறாக தோற்றப்பாட்டியல் ஆய்வாளர் வேறுவகையான முறைகளைக் கையாள்வார். அவருக்கு வாக்காளர் கூறும் கதைகள்
அதாவது மனிதரின் கதைகள் தான் முக்கியம். தோற்றப்பாட்டியல்
சிந்தனை வித்தியாசமானது. வாக்காளர் ஒருவர்தாம் வாக்குப் போடப் போகிறேன் என்ற முடிவுக்கு வருதல், இருத்தலியல் நியாயித்தல் (Existential Reasoning) என்ற செயல்முறையின் முடிவில் நிகழுவது. அவரது மனதில் பலகேள்விகள் எழுந்திருக்கும். தேர்தல் வன்முறை நிகழுகிறது. ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்குப் போடுகிறார்கள். இப்படியிருக்கும்போது என்னைப் போன்ற நேர்மையான வாக்காளர் வாக்குப் போட்டால் என்ன வாக்குப் போடாவிட்டால் என்ன? நடைமுறைப் பயன் ஏதாவது உண்டா? என்று சிந்திக்கலாம். நான் குறித்த ஒரு கட்சிக்கு அடுத்தடுத்து தேர்தல்களில் வாக்களித்தேன் என்ன பயன்? அந்தக் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியைத் தழுவியது. இந்த முறை நான் வேறொரு கட்சிக்கு வாக்களித்தால் என்ன? அடுத்தடுத்து தேர்தல்கள் பல வந்து போயின. என் வாழ்க்கை இதனால் எந்த வகையிலும் தாக்கம் பெறவோமாறவோ இல்லையே? தேர்தல் ஜனநாயகம் இருப்பதால் எங்கள் வாழ்க்கை மாறியதா? நாம் அன்றும் இன்றும் ஏழைகளாகத் தானே இருக்கிறோம். இந்தத் தேர்தலில் நான் வாக்களிக்க வேண்டுமா? எனது சாதியைச் சேர்ந்த எவரும் இந்தத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வில்லை. பிறசாதிக்காரர்கள், பிற இனக் குழுமத்தினரைச் சேர்ந்த வர்களின் வேட்பாளர்களுக்கு நான் ஏன் வாக்குப் போட வேண்டும்? அதனால் என்ன பயன்? ஆனால் இன்னொரு அபாயம் இருக்கிறது. நான் வாக்குப் போடாவிட்டால் என்பேரில் ஆள்மாறாட்டம் செய்து யாரேனும் ஓர் காடையன் என் வாக்கைக் களவெடுத்து விடலாம் அல்லவா? வாக்களிப்பால் எனக்கோ என் கிராமத்தவருக்கோநன்மை இல்லாவிட்டாலும் என் வாக்கைக் களவெடுக்க விடக்கூடாது. ஆதலால் நான் வாக்குப் போடப் போகிறேன். இவ்வாறாக ஒருவன் பலவித சிந்தனைகளுக்கு ஆட்படுவதையே இருத்தலியல் நிலை மைகள் (Existential Conditions) பற்றிய நியாயித்தல் என்று கூறுவர். வாக்களிக்கும் முடிவை எடுக்கும் போது இந்தச் செயல்முறை நடை

Page 17
24 பிரவாதம்
பெறும். தோற்றப்பாட்டியல் வாக்காளர் அகநிலையை அறிவதற்கு வேண்டிய முறைகளை உபயோகிக்க வேண்டும் என்று கருதுகிறது. தோற்றப்பாட்டியலின் அறிவாராய்ச்சியியல் அதன் முறையியல் என்பன அரசியல் உலகு (Political World) பற்றி நேர்க்காட்சிவாதத்தின் புள்ளி விபரங்களை விட வித்தியாசமான காட்சியையும் புரிதலையும் வழங்கு கிறது.
மேலே குறிப்பிட்ட உதாரணம் விளக்குவது போல் தோற்றப் பாட்டியல் மனித அனுபவம் பற்றிய செறிவான விபரிப்பு’ (Thick descriptions) பற்றியே அக்கறை கொண்டுள்ளது. நேர்க்காட்சிவாதம் மனித அனுபவத்தை மேலோட்டமாகவே தொட்டுச் செல்ல முடியும். இதனால் இவ்வகை விவரிப்புகளை Thin descriptions என்றே அழைக்கலாம். தோற்றப்பாட்டியலின் செறிவான விபரிப்புக்களை தோற்றப்பாட்டியல் விபரிப்புக்கள் (Phenomenological Descriptions) என்றும் கூறுவர். செறிவான விபரிப்புக்களைப் பெறுவதற்கு பண் பியல் முறைகள் (Qualitative Methods) தேவைப்படுகின்றன. தோற்றப் பாட்டியல் பண்பியல் முறைகளைநாடுவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. சமூக உலகின் காரணகாரிய விளக்கம் (explanation) பற்றி அல்லாது மனித உணர்வுநிலையில் விளக்கமுறைப் புரிதல் மூலம் உலகை விளங்கிக் கொள்வது (Interpretative Understanding) பற்றியே தோற்றப்பாட்டியல் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. குழுக் கலந் துரையாடல்கள், உரையாடல்கள், இனவரைவியல் ஆய்வுமுறைகள் என்பன மனித அனுபவங்கள், உணர்வுகள் பற்றிய செறிவான விபரிப்புக்கு உதவும் ஆய்வு முறைகளாகும். உளவியல், தாதிமார் பணிக் (Nursing) கல்வி, சமூகப்பணி ஆகிய துறைகளில் ஈடுபடும் தோற்றப்பாட்டியல் ஆய்வாளர்கள் ஒலி, ஒளி (விடியோ) கருவிகளை உபயோகித்து பண்பியல்முறை உரையாடல்களில் ஈடுபடுவர். கள ஆய்வு செய்து குறிப்புக்களை எழுதிக் கொள்வதை விட மக்களுடன் நடத்தும் உரையாடல்கள் பயனுடையன என்பது தோற்றப்பாட்டிய லாளர்களின் கருத்து.
தோற்றப்பாட்டியல் ஆய்வில் முதன்மையான அக்கறையாக இருப்பது மக்களின் அகநிலைப்பட்ட கருத்து என்ன? அவர்கள் சமூக உலகை எப்படி விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது தான். இங்கே புரிதல் (Understanding) என்ற சொல்

ஆராய்ச்சி முறையியல் 25
ஆய்வாளன் பெற்றுக் கொள்ளும் புரிதலை மட்டும் குறிப்பிடவில்லை. ஆய்வுக்கு உட்படும் மனிதர்களின் செயல்களின்படி சமூக உலகத்தை அவர்கள் எப்படிப்புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்வாளன் புரிந்துகொள்ளுதல்தான் பிரதானமானது. ஆகவே ஆய்வாளனுக்கும் ஆய்வு செய்யப்படும் மக்களுக்கும் இடையே தொடர்ந்த உரை யாடலும் தொடர்பும் மிகவும் முக்கியமானது. தோற்றப்பாட்டியல் ‘விடயி (Subject) என்றுகூறப்படும் செயலிக்குமுதன்மை கொடுக்கிறது. மனிதனின் செயல்களே ஆய்வுக்குரிய பொருள். ஆதலால் மனிதர் முக்கியம் பெறுவர். மனிதருக்கு வெளியே உள்ள புறநிலை அல்லது இயற்கை முக்கியமல்ல. மனிதர் தமது அனுபவத்தை தாமே எப்படி விளங்கிக் கொள்கின்றனர் என்பதே முக்கியம். மனிதர் செயல்களைச் செய்வதோடு நின்று விடுவதில்லை. தாம் செய்த செயல்களின் விளக் கத்தையும் அவர்கள் பெறுகின்றனர். ஆய்வாளனும் அச் செயல் களுக்கு விளக்கம் கொடுக்கிறார். இதனை interpretative Loop என தோற்றப்பாட்டியலில் கூறப்படும்.
Sotiroshudo cypocopushugth cypocopub (Ethno Methodology and Method)
இனவியல் முறையியல் 1970 களில் ஐக்கிய அமெரிக்கா நாட்டில் வளர்ச்சியுற்றது. இது தோற்றப்பாட்டியல் கருத்துக்களினால் கவரப் பட்ட அமெரிக்க சிந்தனையாளர்களால் வளர்க்கப்பட்டது. இனவியல் முறையியல் சிந்தனையாளர் கையாண்ட முறைகள் யாவும் தோற்றப் பாட்டியல் முறைகளுடன் ஒற்றுமை உடையவை. அத்தோடு இனவியல் முறைகள் ஐக்கிய அமெரிக்காவின் மையநீரோட்ட சமூக வியலின் எதிர்ப்பலையாக எழுந்த கிளர்ச்சிச் சமூகவியலின் பெறு பேறாகவும் இருந்தன. தோற்றப்பாட்டியல் முறைகளைப் புரிந்து கொள்வதற்கு சிறந்தவழி எவ்வாறு இனவியல் முறையியல் மைய நீரோட்ட சமூகவியலையும் அதன் முறைகளையும் விமர்சனம் செய்தது என்பதை அறிதலாகும்.
நாம் முன்னர் குறிப்பிட்டது போல சமூகச் செயலிகள் (Social Actors) தமது அன்றாட வாழ்வில் செயல்களுக்கு எவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதை அவர்களின் பார்வையூடாக அறிந்து சமூக உலகு (Social World) பற்றிய விளக்கத்தைத் தருவதே இனவியல்

Page 18
26 பிரவாதம்
முறையியலின் அக்கறையாகும். ஆதலால் அறிவு உற்பத்தி தொடர் பான அகநிலைப்பட்ட கோட்பாடாகவே இது விளங்குகிறது. அமெரிக்காவின் மையநீரோட்ட சமூகவியலில் டல்கொட் பார்சன்ஸ் முன்வைத்த சமூகவியல் அக்காலத்தில் ஆட்சி செலுத்தியது. டல்கொட் பார்சன்ஸ் ஒர் நேர்க்காட்சிவாதியாவர். அவர் சமூகச் செயல்களின் காரண - காரிய தர்க்கத்தினை விளக்குவதை நோக்கமாகக் கொண் டிருந்தார். மனிதர்களின் செயல்களில் காரணகாரியதர்க்கத்தை சமூக வியல் விளக்கமாகக் கூறும் பொழுது உண்மையில் அது பகுத்தறிவு சார் விளக்கமாக அமையும் என்பது பார்சன்ஸ் கருத்து. சமூகச் GsuaSait SLL60LDL'il ' (The Structure of Social Action - 1937) 6Taip அவரது நூலில் சமூகச் செயலிகள் தமது சூழ்நிலையின் பின்புலத்தில் பகுத்தறிவான செயலில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார். இதனை இனவியல் முறையியல் முற்றாக நிராகரித்தது. இனவியல் முறையியல் பார்சனின் கருத்துக்கு மறுப்பாகவும் பதிலீடாகவும் புதிய முறைகளை உருவாக்கியது. சமூகச் செயல்களின் செயலிகள், செயலிகளின் பின்னணி, சூழமைவு என்பவற்றை விளக்கும் புதிய முறைகளை அவர்கள் உருவாக்கினர்.
சமூகச் செயலிகள் தமது அன்றாட வாழ்வில் செயல்படும் போது எவ்வகையில் தங்கள் செயல்களைப் புரிந்து விளக்கம் செய்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கு ஏற்ற முறைகளைத் தேர்ந்து கொள்வதே இனவியல் முறையியலின் நோக்கமாக இருந்தது. அவ்வகையில் சமூகவியல் விளக்கத்தின் மையப்பொருளாக சமூகச் செயலிகளின் அகநிலைப் புரிதல் அமைந்தது. இது சமூகவியலுக்கு இனவியல் முறையியல் வழங்கிய புத்தாக்கமான பங்களிப்பு ஆகும். மரபுவழிப் பட்ட மையநீரோட்ட சமூகவியல் சமூகச் செயல்களின் அகநிலைப் பட்ட விளக்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றை நம்பகத் தன்மை அற்றவை எனவும், தெளிவற்றவையும் குழப்பமானவையும் என்றும் நிராகரித்தது. இவற்றைப் பயனற்றவை என்று மையநீரோட்ட சமூகவியல் கருதியது. இனவியல் சமூகவியல் இந்தக் கருத்தை ஏற்பதில்லை. சமூகச் செயலிகளின் நேரடி அனுபவம் சமூகவியல் விளக்கத்திற்கு மையமான கருப் பொருள் என்று இனவியல் முறை யிலாளர் கூறினார். அவர்கள் செயலிமைய(Actor Centric) முறைகளை உருவாக்கினர் அளவுமுறை ஆய்வுகளினையும் நுட்பமுறைகளையும்

ஆராய்ச்சி முறையியல் 27
(Quantitative Research Methods and Techniques) gaO765ugi (up60puSulai) நிராகரித்தது. அவற்றுக்குப்பதிலாக பண்பியல் முறைகளை (Qualitative Mothods) இனவியல் முறையியல் உகந்தவையாக ஏற்றுக் கொண்டது.
இனவியல் முறையியல், நேர்காணல் (Interview), பங்கேற்பு அவதானிப்பு (Participant Observation) ஆகிய இரு முறைகளையும் கையாள்கிறது. மைய நீரோட்ட சமூகவியலும் இம்முறைகளைக் கையாளக்கூடும். ஆனால் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று உள்ளது. இம்முறைகளைக் கையாளும் இனவியல் முறையியல் முற்றிலும் வித்தியாசமான அறிவாராய்ச்சியியல் அனுமானங்களுடன் செயற்படுகிறது. மரபுவழிப்பட்ட சமூகவியலின் நோக்குமுறைப்படி ஆராய்ச்சியாளனே முக்கிய நபர். அவரே விஞ்ஞான விளக்கத்தை புறத்தே இருந்து கொண்டு வருகிறார். சமூகவியலாளர் சமூகவியலில் விஞ்ஞான முறைப் பயிற்சி பெற்றவர். அவரே விஞ்ஞானமுறைக் கோட்பாடு விளக்கத்தையும் இறுதியில் தன் ஆய்வு மூலம் வழங் குபவர். இனவியல் முறையியலாளர் இதற்கு மாறான கருத்தைக் கொண்டவர்கள். அவர்கள் சமூகச் செயலிகளிற்கு (Social Actors) பிரதான இடத்தை வழங்குகின்றனர். சமூகச் செயலிகளை practical theorists' 6T60T இவர்கள் கருதுவர். சமூகச் செயலிகள் செயல்முறைக் கோட்பாட்டாளர்கள். ஆதலால் அவர்களிடம் இருந்தே கோட்பாடு பிறக்கிறது. சமூக உலகின் அர்த்தங்களை விளக்கம் செய்வதற்கான முறைகள் சமூகச்செயலிகளான மக்களிடமே உள்ளன. மனிதர்களின் உள்ளார்ந்த வெளிப்படப் பேசாத அறிவு (tacit knowledge) என்று இதனைக் கூறலாம். இந்த அறிவு அன்றாட வாழ் முறையில் வெளிப் படுவது. இதனைச் சமூகவியல் கண்டு கொள்ள மறுத்து வந்துள்ளது. வெளிப்படப் பேசப்படாத அறிவுசமூக இடைவினை(Socialnteraction) பற்றிய விதிகள், சட்டங்கள் கொண்டமைவது. இந்த விதிகளையும் சட்டங்களையும் சமூகத்தின் உறுப்பினர்கள் தெரிந்து வைத்திருக் கிறார்கள்.
சமூகச் செயலிகளின்°வெளிப்படப் பேசாத அறிவை அறிவதற்கு சமூகவிஞ்ஞானிகள் புத்தாக்க இயல்புடைய முறைகளைக் கண்டு பிடிக்க வேண்டும். அல்வின் கூல்ட்னர் இனமுறையியல் பற்றிக் கூறும் போது அது பெரும் நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதில்லை.

Page 19
28 பிரவாதம்
மாறாக முக்கியமில்லாதவையென்றும், அற்பமானவையென்றும் கருதப்படும் அன்றாட நிகழ்வுகளில் அது கவனம் குவிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இக் காரணத் தினால் தான் பங்கேற்பு அவதானிப்பு (Participant Observation) இனமுறையியலில் முக்கிய முறையாகக் கொள்ளப்படுகிறது.
முறைபற்றிய பின்நவீனத்துவ நோக்கு (PostModern Perspective on Method)
பின்நவீனத்துவமும் முறையும்’ என்று குறிப்பிடுவது முரண்பாடு டையது என்றே கூறவேண்டும். ஏனெனில் பின்நவீனத்துவம் முறை கள் (Methods) எவற்றையும் ஏற்றுக் கொள்வதில்லை. முறைக்கு எதிராக’ (Against Method) என்பதே அதன் கொள்கை எனலாம். ஆகையால் பெயர்பென்ட் கருத்துக்கு நெருக்கமானதாக பின்னை நவீனத்துவத்தின்முறைகள்பற்றிய கருத்துஉள்ளது. போல் பெயர்பன்ட கூறியது போன்று பின்நவீனத்துவவாதிகளும் முறைகளுக்கு எதிரான வர்கள். எனினும் இது ஒருவகையில் அறிவாராய்ச்சியியல்நிலைப்பாடு என்றே கூறலாம். அறிவொளியுகத்தின் தத்துவார்த்த, அறிவாராய்ச் சியல், முறையியல் நிலைப்பாடுகளை பின் நவீனத்துவவாதிகள் நிராகரித்தனர். அறிவொளியுகம் பற்றிய நீட்சேயின் விமர்சனத்தில் இருந்து பின் நவீனத்துவம் தன் நிலைப்பாட்டை உறுதி செய்து கொண்டது. சர்வவியாபகமான, உலகு தழுவிய பருநிலை (Macro) விளக்கங்களைப் பின்நவீனத்துவம் ஏற்பதில்லை. அதற்குப் பதிலாக சமூகம் பற்றியும் வரலாறு பற்றியும் நுண்நிலைச் செயல் முறைகள் (Micro Processes) முக்கியமானவை என்று கூறி நுண்நிலை அம்சங் களில் பின்நவீனத்துவம் கவனக் குவிவை ஏற்படுத்துகிறது.
aSGungnig (Lyotard)"The PostModern Condition 6Taipg5606 Lil Sai நூல் எழுதினார். இந்நூலில் அவர் நுண்நிலை சார்ந்த அல்லது தனி நபர்களின் வாழ்வு சார்ந்த (Local) அம்சங்களுக்கே முதன்மை அளித்து பருநிலை அல்லது கோளம்தழுவிய (Global) அம்சங்களைத் தவிர்த்துக் கொள்கிறார். செயல் ஊக்கம் மிக்க அகம் (Active Subject) என்ற கருத்தை பின்நவீனத்துவம் ஏற்பதில்லை. செயல் ஊக்கம் மிக்க அகம் அரசியல் நடவடிக்கையிலும் சமூகமாற்றத்திலும் பங்கு கொள்கிறது என்ற கருத்தையும் பின்நவீனத்துவம் ஏற்கவில்லை. 19 ஆம் நூற்
Y

ஆராய்ச்சி முறையியல் 29
றாண்டில் அகமும் புறநிலையும், அமைப்பும் செயலியும் (Structure and Agency) 656Taiscupub Lilfggylb (Explanation and Understanding) ஆகிய விடயங்கள் குறித்து நிகழ்ந்த தத்துவ அறிவாராய்ச்சியியல் விவாதங்களைபின்நவீனத்துவம்கவனத்தில்எடுத்துக்கொள்வதில்லை. பின்நவீனத்துவத்தின் முறையியல் பற்றிய நோக்குப்படி இந்த விவாதங்கள் பொருத்தப்பாடோ நடைமுறைப் பயனோ உடையன வல்ல. முழுமையான சர்வப் பொதுவான உண்மை என ஒன்று இல்லை. இந்த உண்மையை அறிவதுதான்தத்துவமும் விஞ்ஞானமும் ஆற்றும் பணி என்றோ, உண்மையை அறிவதற்கான விதிமுறைகளை கண்டுபிடிப்பது அவற்றின் நோக்கம் என்றோ கூறுவது அர்த்தம் அற்றது. றிச்சார்ட் றொர்றி (Rorty) என்னும் அமெரிக்க நாட்டுத் தத்துவவாதி இக்கருத்தையே அவர் எழுதியPhilosophy and the Mirror ofNature (1979) (தத்துவமும் இயற்கை என்னும் கண்ணாடியும்) என்ற நூலில் எடுத்துக் கூறினார். -
பின்நவீனத்துவம் எவ்வகையான அறிவைப் பற்றிப் பேசுகிறது? அது உற்பத்தி செய்யும் அறிவு யாது? என்ற கோள்விகள் எழுகின்றன. நேர்க்காட்சிவாதம் அல்லது மரபு வழிப்பட்ட பிற முறையியல்கள் கொண்டு பின்நவீனத்துவத்தின் அறிவு உற்பத்திச் செயல்முறை பற்றி மதிப்பீடு செய்யமுடியாது. உதாரணமாக நேர்க்காட்சிவாதம் காரண காரியத் தொடர்பை விளக்குகிறது. காரணகாரிய விளக்கத்தைப் பின் நவீனத்துவம் ஏற்பதில்லை. அதற்குப் பதிலாக InterTextuality என்ற கருத்தை பின்நவீனத்துவம் முன்வைக்கிறது. ஒரு நிகழ்விற்கு ஒரே ஒரு காரணம் உண்டு என்னும் ஒற்றை காரணி (mono Casual) வாதம் முன்னிலைப்படுத்தப்படும். இவ்வுலகநிகழ்வுகளிற்கு பலகாரணங்கள் உள்ளன. ஒரு காரணத்தை மட்டும் கூறும்போது நிகழ்வுக்கும் அதற் குக் காரணமான பிறிதொன்றுக்கும் இடையே வேறொரு தலையீடும் நிகழவில்லை என்ற கருத்து உள்ளது. பின்நவீனத்துவவாதிகள் ஒரு நிகழ்வுக்கு முன்நிகழ்வாக பல நிகழ்வுகள் இருக்கலாம். பல காரணி களின் தலையீடு சாத்தியம். விளைவுகளும் பலவகையினவாக இருக் கலாம் என்று கூறுவர்.
பின் நவீனத்துவவாதிகளின் ஆய்வுகள் எழுந்தமானமானவை. அவர்கள் முறைகள் எதனையும் பயன்படுத்தாமல் குழப்பநிலையை ஊக்குவிக்கின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பின்நவீனத்துவவாதிகள்

Page 20
30 பிரவாதம்
மீது சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பின் நவீனத்துவவாதிகள் பரிசோதனை முறையிலான ஆய்வுகளை ஆதரிக்கிறார்கள். அவர் களது எழுத்துக்கள் மரபுவழி அறிவை கேள்விக்கும் விமர்சனத் திற்கும் உள்ளாக்குகிறன. அவர்கள் தொடுக்கும் வினாக்கள் நிலை (560oGvůj 6ớNGOTITěš5GITATG5 (destabilising questions) egyGOLD66öpGOT.
ஆராய்ச்சிமுறையியல் பற்றிய தமிழ் நூல்கள்
கணேசன், எஸ். என், ஆய்வியல் கோட்பாடுகளும் செயல்முறைகளும்,
பயோனியர் புக் சர்வீஸ், சென்னை, 2002.
நாராயணன், க., ஆய்வு: ஏது? ஏன்? எப்படி?, தமிழ்புத்தகாலயம்,
சென்னை, 1987
பாலசுப்பிரமணியன், குவெ, ஆய்வியல் அறிமுகம், நூல் வெளியீட்டகம்,
தஞ்சாவூர், 2001.
பெரியகருப்பன், இராம. ஆய்வியல் அறிமுகம், 2001.
இலக்குமணன், எம். எஸ். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
ஆராய்ச்சி நெறிமுறைகள், தொலைதூரக் கல்வி இயக்கம், அழகப்பா
பல்கலைக்கழகம், காரைக்குடி.
சண்முகம், ஆ. சித்திரபுத்திரன், எச். (பதிப்பு), ஆய்வு முறையியல்,
அன்னம், 2005
 

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் நேர்க்காட்சிவாதமும், மக்ஸ்வெபரின் விளக்கமுறைச் சமூகவியலும்
க. சண்முகலிங்கம்
அகஸ்ட் கம்ட் (1798 - 1857) என்னும் பிரான்ஸ் தேசத்துச் சமூகவிய லாளரை சமூக ஆய்வுத்துறையில் நேர்க்காட்சிவாத முறையியலைத் தோற்றுவித்தவராகக் கொள்வதுண்டு. இயற்கை விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்படும் விஞ்ஞானமுறையினை(ScientificMethod) சமூக விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்தலாம் என்பதை அகஸ்ட் கம்ட் எடுத்துக் கூறினார். சமூகத் தோற்றப்பாடுகளை விஞ்ஞான முறை கொண்டு ஆராயலாம் என்பது"சமூக விஞ்ஞானங்கள் என்ற கருத்து பிற்காலத்தில் தோன்றுவதற்கு வழிவகுத்தது. அரசியல், பொருளியல், சமூகவியல், வரலாறு, புவியியல் ஆகிய துறைகளிலும் விஞ்ஞான முறையிலான ஆய்வு சாத்தியமானது என்ற கருத்து 1930 களில் வியன்னா வட்டம்” என்ற சிந்தனைக் கூடத்தினரால் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. வியன்னா வட்டம் நேர்க்காட்சிவாதத்தின் இரண்டாவது பெரிய அலை என்று கூறப்படும். வியன்னாவட்டத்தின் சிந்தனையை அதற்கு முந்திய சிந்தனையில் இருந்து வேறுபடுத்தும் முறையில் அதனை 'தருக்கவியல் நேர்க்காட்சிவாதம்" (Logical positivism) என்று கூறுவர். முதலில் அகஸ்ட் கம்ட் கூறிய கருத்துக் களைப் பார்ப்போம்.
நேர்க்காட்சிவாத தத்துவம் (Positive Philosophy) என்ற நூலை கம்ட் 1829ஆம் ஆண்டில்பிரசுரித்தார். இவரின்பின்னர்நேர்க்காட்சிவாத முறையியலை வளர்த்த முக்கிய சிந்தனையாளர் எமில் டர்க்கீம்

Page 21
32
பிரவாதம்
ஆவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நேர்க்காட்சிவாத முறையியல் முழுமை பெற்றது. நேர்க்காட்சிவாத முறையியலின் அடிப்படைக் கருத்துக்களாகப் பின்வருவனவற்றைக் குறிப் பிடலாம்:
l.
அனுபவாதம் (Empiricism) ; விஞ்ஞான அறிவின் அடிப்படை யாக அனுபவப் பதிவுகள் அமைகின்றன. இவை புறத்தே உள்ள உலகின் பிரதிபலிப்புகளாக மனித மனத்தில் பதி கின்றன. புறவுலகை நேரடியாக அவதானிப்பதன் வழியாக (observation) அனுபவ அறிவு பெறப்படும்.
விஞ்ஞான முறையின் ஒருமைத்தன்மை அறிவு பல கிளை களாகப் பிரிந்து செல்கிறது. அறிவுக்குரிய விடயப் பொருள் அறிவுத்துறைகளைப் பொறுத்து வேறுபடும். விடயப்பொருள் வேறுபட்ட போதும் விஞ்ஞானமுறை வேறுபடுவதில்லை. விஞ்ஞானங்கள் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபடுவது எதைப் பற்றிய ஆய்வு (விடயப்பொருள்) என்பதைப் பொறுத்த தாகும்.
அகம்சார் மதிப்பீடுகள்: நல்லது, தீயது, உயர்ந்தது போன்ற மதிப்பீடுகளை விஞ்ஞானமுறையில் பரிசோதனை கொண்டு நிறுவுதல் முடியாது. ஆதலால் அகம் சார்ந்த மதிப்பீடுகள் (Value - Judgements) விஞ்ஞான முறைக்கு அப்பாற்
பட்டவை.
பயனீட்டுவாதம்(Utilitarianism): விஞ்ஞானம் பயன்நோக்கியது. அறிவை நடைமுறையில் உபயோகித்துப் பயன்களைப் பெறலாம். சமூக விடயங்களை ஆராயும் சமூக விஞ்ஞானங் கள் சமூக மேம்பாட்டுக்கான கருவி ஆகும்.
விஞ்ஞான அறிவின் சார்புத் தன்மை: விஞ்ஞான அறிவு படிப்படியாக முன்னேறிச்செல்கிறது. முழுமையான அறிவை ஒரே தாவலில் மனிதர் எட்டிப் பிடிக்க முடியாது. இன்று உண்மை என்று கூறப்படுவதுநாளை ஏற்கப்படாது போகலாம். ஆதலால் அறிவு சார்புத் தன்மை உடையது. முன்னை விட

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் 33
இன்று நாம் பெற்றுள்ள அறிவு ஒப்பீட்டளவில் உயர்வானது என்று கூறுவதையே சார்புத்தன்மை (Relativism) என்பர்.
மேற்கூறிய ஐந்து அடிப்படைக் கருத்துக்களும் சமூக விஞ்ஞானத்தில் நேர்க்காட்சிவாத முறையியலின் வளர்ச்சிக்கு உதவின. அகஸ்ட் கம்ட் சமூகவியலை ஒரு விஞ்ஞானமாக வளர்ப்பதற்கு வேண்டிய அடித் தளத்தை இட்டார். சமூகம் பற்றிய அறிவு பின்வரும் மூன்று கட்டங்கள் அல்லது யுகங்களைத்தாண்டி வளர்ச்சி பெற்றுவந்துள்ளது என்றும் அது நேர்க்காட்சிவாத கட்டம் என்ற மூன்றாவது கட்டத்தை
அடைந்து விட்டது என்றும் கம்ட் கூறினார்:
l.
இறையியல் கட்டம்: இறையியல் கட்டத்தில் மனிதர்கள் இயற்கைச்சக்திகளைக் கண்டு அஞ்சினர். உலகையும் வாழ்க் கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இயக்குவதாக நம்பினர். பேய், பிசாசு என்பனவும் கடவுளும் இயற்கை நிகழ்வுகளையும், மனித வாழ்வையும் இயக்குவதாக மனிதர் நம்பினர்.
பெளதீகவதீதக் கட்டம் (Metaphysical Stage): இக்காலத்தில்
தத்துவம் வளர்ச்சியுற்றது. வானியல், ரசவாதம், மருத்துவம்
போன்ற விஞ்ஞானங்களும் அரைகுறையான வளர்ச்சியை எய்தின. உலகின் தோற்றம், அழிவு, உயிர்கள் படைக்கப் படுதல் ஆகிய விடயங்கள் குறித்து அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்ட ஊகங்களிலும் கற்பனைகளிலும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும் ஈடுபட்டனர். அறிவின் அடிப்படையாக அப்பாலைக் கருத்துக்கள் அல்லது பெளதீக உலகுக்கு அப்பாலான பெளதீகவதீத விடயங்கள் அமைந்தன. ஆன்மா, உயிர்ச்சக்தி, படைப்பு போன்ற அனுபவ உலகுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் முதன்மை பெற்ற கால கட்டமாக பெளதீகவதீத கட்டம் அமைந்தது.
நேர்காட்சிக் கட்டம் (PositivistStage): இக்கட்டத்தில் மனிதர் புற உலகை அவதானித்தல் மூலம் உண்மைத் தரவுகளை திரட்டி விஞ்ஞானக் கோட்பாடுகளின் படி உலகையும் மனித வாழ்க்கையையும் விளக்க ஆரம்பித்தனர். நேர்க்காட்சிக்

Page 22
34 பிரவாதம்
கட்டம் என்பது விஞ்ஞானம் எழுச்சி பெற்ற யுகத்தைக் குறிப்
பிடுகிறது.
அகஸ் கம்ட்ற்குப் பின்னர் எமில் தர்க்கீம் (1858 - 1917) சமூகவியலில் நேர்க்காட்சிவாத முறையியலை பிரயோகித்து ஆய்வுகளை செய்தார். அவரின் பங்களிப்பினால் இம்முறையியல் வளர்ச்சி பெற்றது. தர்க்கீம் சமூகத்தரவுகள் (Social Facts) புறநிலை இருப்புடையன என்றார்.
வியன்னா வட்டம்
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாநகரை மையமாகக் கொண் டியங்கிய தத்துவவாதிகள் சிலர் தருக்கவியல் நேர்க்காட்சிவாதம் (Logical Positivism) என்னும் தத்துவச் சிந்தனையை வளர்த்தனர். தருக்கவியல் நேர்க்காட்சிவாதம் விஞ்ஞான ஆராய்ச்சி முறையியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சிஸ் பேக்கன், ஜோன் லாக் ஆகியோர் தோற்றுவித்த அனுபவ வாத நோக்குமுறையை தருக்கவியல், கணித முறைகள், மொழிய மைப்பு ஆகிய விடயங்கள் பற்றிய ஆய்வுகளுடன் இணைத்து நேர்க்காட்சிவாதத்தை செம்மைப்படுத்தும் பணியை வியன்னா வட்டம் மேற்கொண்டது. வியன்னா வட்டத்தின் செயற்பாடுகள் பற்றி ந. முத்துமோகன் கூறியிருப்பவற்றை கீழே மேற்கோளாகத் தந்துள்ளோம்.
விஞ்ஞானங்களை ஒருமைப்படுத்தல், சரியான விஞ்ஞானமுறை களை உருவாக்குதல், விஞ்ஞானத்தின் மொழியைத் துல்லியப் படுத்தல் என்பன போன்றவை வியன்னா வட்டத்தின் நோக்கங் களாக இருந்தன. 1930 களில் இதே நோக்கங்களுடன் வியன்னா வட்டாரத்தினர் பல்வேறு கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தினர். நூல்களும் கட்டுரைகளும் எழுதிக் குவிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின்துவக்கத்தால் இம்முயற்சிகளெல்லாம் சிதறடிக்கப்பட்டன என்றாலும் கூட தருக்கவியல் நேர்க்காட்சி வாதம் என்ற தத்துவப் போக்கை நிறுவும் முயற்சியில் வியன்னா வட்டம் வெற்றி பெற்றது எனலாம். பிரான்சிஸ் பேக்கன், ஜான் லாக் ஆகியோர் 17 - 16 நூற்றாண்டுகளில் தோற்றுவித்த புலனு ணர்வுத்தத்துவத்தைத் தருக்கவியல், நவீன விஞ்ஞானமுறைகள் என்பனவற்றுட்ன் இணைத்து தருக்கவியல் நேர்க்காட்சிவாதம்

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் 35
உருவாக்கப்பட்டது. தருக்கவியல், கணித முறைமைகள் ஆகிய வற்றைப் பழைய புலனுணர்வுத் தத்துவவாதிகள் விசேஷமாக அங்கீகரிக்கவில்லை. பிரான்சிஸ் பேக்கன், ஜான் லாக் ஆகியோரின் தத்துவங்கள் ஒரு தலைப்பட்சமாக புலனுணர்வு சார்ந்தவையாக இருந்தன. இப்போது வியன்னா வட்டத்தினர் தருக்கவியலின் நுட்பங்களைஅதனுடன்இணைத்துவிட்டதால் பழையபுலணுர்வுத் தத்துவம் இப்போதுதன் குறைகளைக் களைந்து முழுமை பெற்று விட்டது போன்ற ஒரு தோற்றம் கிடைத்தது. புலனுணர்வுத் தக வல்களில் தொடங்கும் அறிவுதருக்கவியலின் வழியாக வளர்ந்து மிக அபூர்வமான கணித முறைகளையும் பயன்படுத்தி உலகை விளக்குகிறது. உலகு பற்றிய கறாரான, சரியானபுரிதலைத்தருகிறது. இதை விட வேறு என்னதத்துவம் இருக்க முடியும்? என்பதான ஒரு சுயநிறைவு இத்தத்துவத்திற்குக் கிடைத்தது. தத்துவவியலாளர் மட்டுமன்றி ஏராளமான விஞ்ஞானிகளும் இதனால் ஆகர்ஷிக் கப்பட்டனர். (ந.முத்துமோகன், ஐரோப்பியத் தத்துவங்கள், (பக். 88 - 89)
தத்துவத்துறையில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சி விஞ்ஞானத்தின் மீதும் ஏற்படுத்திய தாக்கத்தினால் ஏராளமான விஞ்ஞானிகளும் தருக்கவியல் நேர்க்காட்சிவாதத்தினால் கவரப்பட்டனர். தத்துவத் திற்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பை குறிப்பாக விஞ்ஞான முறையியலைத் தத்துவம் எந்த வகையில் பாதிக்கிறது என்பதை இவ்விடத்தில் பரிசீலித்தல் பொருத்தமானது. விஞ்ஞான முறை யியல், தத்துவம் தொடர்பான இரு பிரச்சினைகளுடன் சம்மந்தப் பட்டது. அவையாவன:
1) அறிவாராய்ச்சியியல் தொடர்பான பிரச்சினைகள்
(Epistemological Questions)
2) உள்பொருளியல் தொடர்பான பிரச்சினைகள் (Ontological
Questions)
நேர்க்காட்சிவாதம் அறிவாராய்ச்சியியல் தொடர்பான பிரச்சினை களுக்கு என்ன விடைகளைத் தருகிறது? அறிவின் வாயில்கள் எவை? உண்மையான அறிவை அடைவது எப்படி? என்பனவே அறிவாராய்ச்சியல் தொடர்பான பிரச்சினைகள். இது பற்றி இக்

Page 23
36 பிரவாதம்
கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கூறினோமாயினும் மீண்டும் அதனை விளக்கம் கருதி வேறு வார்த்தைகளில் கூறுவோம்.
* புலனறிவின் மூலம் உலகு பற்றிய உண்மை அறிவைப்
பெறலாம் - அனுபவவாதம்
* புலன்கள் மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்ந்து பொது முடிவுகளையும் விதிகளையும் வகுத்துக கொள்ளலாம்.
* கோட்பாடுகளின் உண்மைத்தன்மையை பரிசோதனை
(Experiment) மூலம் பரிசீலிக்கலாம்.
* மதிப்பீடுகள் சார்ந்த எண்ணங்களையும், கருத்துக்களையும் விஞ்ஞான முறையில் பரிசோதித்தல் முடியாது. உண்மை அல்லது பொய் என்று நிரூபிக்க முடியாது.
* விஞ்ஞானக் கூற்றுக்கள் வேறு நியமக் கூற்றுக்கள் (Normative statements) வேறு. நியமக் கூற்றுக்களின் உண்மை, பொய்யை புலன் தரவுகள் கொண்டு நிரூபிக்க முடியாது.
அடுத்து உள்பொருளியல் பிரச்சினை என்றால் என்ன என்பதை நோக்குவோம். நேர்க்காட்சிவாதம் மனித மனத்திற்கு (அகத்திற்கு) வெளியே சமூகம் என்ற ஒன்றின் இருப்பை ஏற்றுக் கொள்கிறது. சமூக நிறுவனங்கள் புறத்தே உள்ளன. நடைமுறைகள், செயல்கள் புறத்தே நிகழ்கின்றன. இவை பற்றிய உண்மைகளை (Facts) எமது மனத்தின் மூலம் அறிகிறோம். இங்கே அறிவோன், அறியப்படு பொருள் என்ற இரு விடயங்கள் உள்ளன. அறியப்படுபொருளின் புறவய இருப்பை ஏற்பது அனுபவவாத தத்துவம் - அனுபவ வாதத்தின் அடிப்படையில் அமைந்த நேர்க்காட்சிவாதமும் புற உலகின்இருப்பை ஏற்கின்றது. நேர்க்காட்சிவாதத்தின்உள்பொருளியல் அதன் அறிவாராய்ச்சியலோடு சம்பந்தப்பட்டதாக உள்ளதையும் நாம் கவனித்தல் வேண்டும்.
சமூகம் பற்றிய ஆய்வில் சமூக நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் ஆகியவற்றின் இருப்பைநிராகரிக்கும் தத்துவப் போக்குகள் உள்ளன. மனிதர்களில் செயல்கள், இடைவினைகள் நடைபெறுகின்றன. அவற்றை மனித மனம் எப்படி உருவமைத்துக் கொள்கின்றது

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் 37
என்பதை நாம் ஆராயலாம். அதற்கு அப்பால் குடும்பம், அரசு என்ற வாறு நிறுவனங்கள், சமூகக் கூட்டுகள் (Social Collectivities) இருப்ப தாகக் கூறுவது வெறும் கற்பனையே, அவற்றிற்கு உண்மையான இருப்பு (existence) கிடையாது என்று கூறும் தத்துவப் போக்குகள் உள்ளன. தோற்றப்பாட்டியல் (Phenomenology) என்னும் தத்துவம் புற உலகின் இருப்பைநிராகரித்து அதனைத் தோற்றப்பாடுகளாகப் பார்க்கின்றது.
தத்துவத்திற்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் உள்ள தொடர்பை அ) அறிவாராய்ச்சியியல் ஆ) உள்பொருளியல் என்ற இருவகை பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்று கூறி நேர்க்காட்சிவாத சமூக விஞ்ஞான ஆய்வுமுறையியலின் சில அம்சங் களை தொட்டுக்காட்டினோம். சமூக விஞ்ஞானங்களில் நேர்க்காட்சி 6ings (up60puShuai (Positivist Methodology in Social Sciences) 6Tairgilb விடயம் குறித்து இதுவரை கூறியவற்றைச் சுருக்கிக் கூறுவோம்.
1. இயற்கை விஞ்ஞானங்களில் பிரயோகிக்கப்பட்ட விஞ்ஞான முறையை (Scientific Method) சமூகம் பற்றிய ஆய்வுக்கும் பிரயோகிக்கலாம் என்று அகஸ்ட் கம்ட் கூறினார். நேர்க்காட்சி வாத முறையியல் இவரால் தோற்றுவிக்கப்பட்டது.
2. நேர்க்காட்சிவாத முறையியலின் அடிப்படை அம்சங்
ó56ዘTTO) 16õዝ;
* அனுபவவாதம் * விஞ்ஞான முறையின் ஒருமைத் தன்மை. * அகம்சார் மதிப்பீடுகளை விஞ்ஞான முறை கொண்டு
நிறுவுதல் இயலாது. * விஞ்ஞானம் பயன் நோக்கியது. * விஞ்ஞான அறிவு சார்பு நிலையானது.
3. சமூக அறிவின் வளர்ச்சி இறையியல் கட்டம், பெளதீகவதீத கட்டம் என்ற நிலைகளைத் தாண்டி நேர்க்காட்சிவாதக் கட்டத்தை நோக்கி முன்னேறுகிறது என்றும் அகஸ்ட் கம்ட் கூறினார்.

Page 24
38 பிரவாதம்
4. நேர்க்காட்சி வாதம் அகஸ்ட் கம்ட்ற்குநூறு ஆண்டுகள் கழித்து வியன்னா வட்டத்தின் செயற்பாடுகளின் பயனாக 1930க்களில் தருக்கவியல் நேர்க்காட்சிவாதம் என்ற தத்துவச் சிந்தனையாக வளர்ச்சி பெற்றது.
5. தருக்கவியல் நேர்க்காட்சிவாதமும், நேர்க்காட்சிவாத சமூக விஞ்ஞான முறையியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
6. நேர்க்காட்சிவாத முறையியலின் அறிவாராய்ச்சியல் (Epistemology) அதன் உள்பொருளியல் (Ontology) என்று பிரித்துப் பார்ப்பதன் வழியும் நேர்க்காட்சிவாத சமூக முறையியலின் அடிப்படை இயல்புகளை விளங்கிக் கொள்ளலாம்.
இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் மக்ஸ் வெபரின் விளக்கமுறைச் சமூகவியல் (Interpretative Sociology) என்னும் முறையியல் பற்றி ஆராய்வோம்.
III
ஜேர்மனியரான மக்ஸ் வெபர் (1864 - 1920) சமூகம் பற்றிய ஆய்வு முறையியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். இவருடைய சமூகவியல் கருத்துக்களை சமூகச் செயல் கோட்பாடு (Social Action Theory) என்று கூறுவர்.
சமூகச் செயல் கோட்பாடு தனிநபர் நடத்தை அல்லது செயல் பற்றிய ஆய்வாக அமைவது. சமூகத்தில் தனிநபர்களின் நடவடிக் கைகள் இடம்பெறுகின்றன. அவர்கள் அர்த்தம் உள்ள சமூகச் செயல்களில் (Meaningful Social Action) ஈடுபடுகின்றனர். மனிதரின் சமூகச் செயல்களின் அர்த்தத்தை கண்டுபிடிப்பதே சமூக ஆய்வின் பணியாகும். மக்ஸ் வெபர்தனிநபர்களின் செயல்களிற்க்கு காரணமான உந்தல்களை ஆராய வேண்டும் என்றும் அவ்வாறான ஆராய்வு மனிதரின் ‘அகம்' பற்றிய ஆய்வென்றும் கூறினார். மரத்தில் இருந்து விழும் அப்பிள் புவியீர்ப்பு சக்தியால் கவரப்பட்டு விழுவதாக சிந்திப்பதில்லை. தான் வீழ்வதற்கான காரணம் என்ன என்பதை அப்பிள் ஆராய்வதும் இல்லை. மனிதர்கள்தம் செயல்களைச் செய்யும் பொழுது தம் அகநிலை சார்ந்த எண்ணங்களால் தூண்டப்படு

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் 39
கிறார்கள். அரசியல் செயல்களில் ஈடுபடும் மனிதர் தேசியவாதம், வர்க்கப் போராட்டம் போன்ற சிந்தனைகளால்தூண்டப்படுகிறார்கள். அவ்வாறே "புண்ணியம்’, ‘மோட்சம்' போன்ற கருத்துக்களால் சமயப் பிடிப்பு உள்ளவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். இக் காரணத்தால் இயற்கைச் செயல்களிற்கும் சமூகச் செயல்களிற்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உள்ளது. சமூகச் செயல் கோட்பாடு தனிநபர்நடத்தையை விளக்குவதன் மூலம் சமூகம் பற்றிய புரிதலை அடையலாம் அறிவைப் பெறலாம் என்று கூறுகிறது. மக்ஸ் வெபரின் சமூகவியல் ஒருவகை உளவியல் நடத்தைவாதம் (Psychological Behaviorism) என்றே கூறத்தக்கது.தனிநபர்களின் செயல்களை முதன் மைப்படுத்தும் இந்த ஆய்வுமுறை நுண்சமூகவியல் (MicroSociology) நோக்காகவும் அமைந்தது.
தனிநபர் செயல்களிற்கு அழுத்தம் கொடுக்கும் மக்ஸ் வெபர், சமூகத்தில் தனிநபர்கள், அவர்களின் செயல்கள் என்பவற்றுக்கு அப்பால் வேறு எதுவும் இல்லை என்ற முடிவுக்கே வருகிறார். சமூகச் செயலில் ஈடுபடும் கூட்டு ஆளுமை (Collective Personality) என்ற ஒன்று கிடையாது. அரசு, தேசியம், குடும்பம், கூட்டிணைக்கப்பட்ட தாபனம், இராணுவம் போன்ற சமூகக் கூட்டுகளை (Collectivities) சமூகவியலில் நாம் செயற்பாடுள்ள செயலிகளாக கருதுகிறோம். உண்மையில் அது ஒரு கற்பனையே அன்றிநிஜம் அல்ல. அவற்றுக்கு புறநிலையான இருப்பு கிடையாது. அவ்வாறான இருப்பு இருப்ப தாகக்கூறுவது அபத்தம். சமூகக்கூட்டுக்கள் சிந்திக்கும் சக்தியற்றவை. குடும்பத்தின் உறுப்பினர்களான தனிநபர்கள் சிந்திக்கிறார்கள் செயலில் ஈடுபடுகிறார்கள். குடும்பம் சிந்திக்கிறது; குடும்பம் செயலில் ஈடுபடுகிறது என்று சொல்வது அர்த்தமற்றது. வேண்டுமானால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய கோட்பாட்டுப் புனைவு (Theoretical Fiction) என்று வைத்துக் கொள்ளலாம். தனிநபர்களின் செயல்களின் ஒரு வகைப்பட்ட தோற்றமே கூட்டுக்கள். அவற்றை சமூகச் செயல்களின் sculpril&60LDL'il (up60p (Modes of Organisation) 6Taitolb departlb. இதற்கு அப்பால் அவற்றிக்குப் புறநிலையான இருப்பு கிடையாது என்பதே வெபரின் சமூகச்செயல் கோட்பாட்டின்(Social ActionTheory) தருக்க ரீதியான முடிவு ஆகும்.

Page 25
40 பிரவாதம்
மக்ஸ் வெபரின் சமூகச் செயல் என்னும் கருத்து நேர்க்காட்சி வாதத்தின் அடிப்படையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. டர்கீம் போன்ற நேர்க்காட்சிவாத சமூகவியலாளர்கள் தமது ஆய்வின் அலகாக (UnitofAnalysis) சமூக நிறுவனங்களை எடுத்துக் கொண்டனர். மக்ஸ் வெபர் சமூகக் கூட்டிற்குப் பதிலாக தனிநபர்களின் செயல்கள் பற்றிய ஆய்வை முதன்மைப்படுத்தும் போது சமூகக்கூட்டின் நியாயப்பாடு மறைந்து விடுகிறது. தனிநபர்களின் உளத்தூண்டல்கள் (Motives), அவர்களின் புலக்காட்சி (Perception) என்பனவே முக்கியம் பெறு கின்றன. மக்ஸ் வெபரின் உள்பொருளியல் (Ontology) நேர்க்காட்சிவாத உள்பொருளியலில் இருந்து மாறுபட்டது. உள்பொருளியல் என்பது உள்ளது எது? என்ற கேள்வியை முன்வைக்கிறது. சமூகச் செயல்கள், அவற்றைச் செய்யும் தனிநபர்கள் உள்பொருள்களில் அடங்குவன. சமூகக் கூட்டுக்கள் புறநிலை இருப்பை உடையனவல்ல அவை வெறும் கற்பனையே. மனிதரின் செயல்களை இயக்கும் அகச் செயற் பாடுகளை, அகமன வோட்டங்களை அறிவதன் மூலம் மனிதச் செயல்களை விளக்கலாம் என்று மக்ஸ் வெபர் கூறினார். அவரது உள்பொருளியல் வேறுபட்டதால் அவர்புகுத்திய ஆய்வுமுறையியலும் நேர்க்காட்சி வாதத்தில் இருந்து வேறுபட்டதாக இருந்தது.
மக்ஸ் வெபரின் 'வெர்ஸ்ரன்' (Verstehen) என்னும் கருத்தாக்கம்
தனிநபர்களின் அகநிலைப்பட்ட அர்த்தங்களைப் புரிந்து கொள்ளு தலைமக்ஸ் வெபர்'வெர்ஸ்ரன்' என்ற கருத்தாக்கம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். 'வெர்ஸ்ரன்' என்ற ஜேர்மனிய மொழிச்சொல் விளக்க முறைப் புரிதல் (Interpretative Understanding) என்ற பொருளை உடையது. செயலியின் (Actor) செயல்களை அவரின் பார்வை ஊடாக 835/600Tij дšloopovufflov Ljћjћg GlasтоiтотGö (Empathetic Understanding) என்றும் இதனை விளக்கலாம். ஆய்வாளர் செயலியுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஆனால் தன் கருத்தை செயலியின் மீது திணிக்காமல் செயலியின் பார்வை ஊடாகவே அவரது செயல்களின் அர்த்தங்களைப் புரிந்து கொள்கிறார். செயலிகளின் கண்கள் ஊடாகப் (through the actors eye) பார்த்தல் என்று மக்ஸ்வெபர் வெர்ஸ்ரன்' என்பதற்கு விளக்கம் கொடுத்தார். மக்ஸ் வெபரின் விளக்கமுறை

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் 4l
புரிதல் என்னும் இக்கருத்தாக்கம் இயற்கை விஞ்ஞானமுறைகளில் இருந்து மாறுபட்ட முறையியலை சமூகவியல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தனிநபர்களை நேர்காணல் செய்வதன் மூலம் அவர்களின் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களையும், கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் நேர்காணல் கடந்த காலவரலாற்றுச் சம்பவங்களின் ஆய்வுக்குப் பொருந்தாது. இருந்த போதும் வரலாற்றுநிகழ்வுகளை விளக்க முறை புரிதல் மூலம் ஆராய முடியும். "சீசரைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் சீசராகவே பிறப்பெடுக்க வேண்டும்' என்று கூறமுடியாது. மனிதர்கள் முன்னால் தெரிவுகள்(Choices) உள்ளன. அவர்கள் சில கட்டுப்பாடான சூழலிலேயே தம்தெரிவுகளைச் செய்கிறார்கள். வரலாற்றில் சீசர் போன்ற நபர்கள் எதிர்கொண்ட தெரிவுகள் என்ன? அவர்கள்.குறித்த வகைத் தெரிவுகளை, குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஏன் தெரிந்தார்கள் என்பனவற்றை எம்மால் ஆராயமுடியும். இவ்வாறு இன்னொருவர் நிலையில் நின்று சிந்திப்பது தான் 'வெர்ஸ்ரன்' ஆய்வுமுறை.
ஆலமரநிழலில்பத்துப் பேர்கண்ணைமூடிக்கொண்டுவட்டமாக உட்கார்ந்து இருக்கின்றனர் எனக் கொள்வோம். கண்களின் வழியாக எம் மனதில் இக்காட்சி பற்றிய பதிவுகள் உண்டாகின்றன. என்ன நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் என்ன (What?) என்பதை விட ஏன் (Why?) என்ற கேள்வியை நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது மேலதிக விளக்கம் கிடைக்கிறது. கண்ணை மூடி உட்கார்ந்திருப்பவர்கள்தியானம் செய்யலாம் அல்லது நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது மெளனமாக ஏதேனும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் ஏன்' அப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி செயலின் சமூக நோக்கத்தை (Social Purpose) புரிந்து கொள்ள உதவுகிறது. ஆகவே *வெர்ஸ்ரன்' என்பது நேரடி அவதானம் மூலம் பெறப்படும் அறிவு என்பதுடன், விளக்கம் கூறுவதன் வழியான புரிதல் (Explanatory Understanding) என்பதையும் உள்ளடக்கியது. ஒருவன் துப்பாக்கியை மரத்தை நோக்கிக் குறிவைக்கிறான். இதனை அவதானிப்பதன் மூலம் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிய செய்தி கிடைக்கிறது. அவன் ஒரு வேட்டைக்காரன், பறவைகளைச் சுடுவதற்காகக் குறிவைக்கிறான்

Page 26
42 பிரவாதம்
என்ற விளக்கம் ஏன்’ என்ற கேள்வியால் பிறக்கிறது. நோக்கம், தூண்டல், அதன் விளைவு என்ற விரிந்த தளத்தில் ஒரு செயலை நிறுத்துவதால் அதன் அர்த்தம் பெறப்படுகிறது. மேலே காட்டிய இரண்டு உதாரணங்களிலிருந்து வெபரின் முறையியலின் அடிப்படை களை உணர்ந்து கொள்ளலாம். அளவை முறைகள் (Quantitative Techniques) சமூக நிகழ்வுகள், தோற்றப்பாடுகள் பற்றி சில தகவல் களைத்தரலாம். அத்தரவுகள் ‘என்ன என்ற வகையினவாக இருக்கும். ஏன் என்ற கேள்விக்கு புள்ளிவிபரங்கள் போன்ற அளவை முறை கள் பயன்படமாட்டா. சமூகவியல் ஆய்வாளன் மனிதச் செயல்களின் அர்த்தங்களை மனிதரின் அகமனவோட்டங்களின் விளக்க முறை புரிதல் மூலமும் விளங்கிக் கொள்ள வேண்டும். அளவை முறை களை வெபர் முற்றாக ஒதுக்கவில்லை. அவை ஆய்வின் துணைக் கருவிகளாக இருக்கலாம். கருத்தேற்றங்களை பரிசோதிப்பதற்கு அவை உதவலாம். இருந்தாலும் சமூகம் பற்றிய ஆய்வில் விளக்க முறைப்புரிதல் முக்கியமானது.
இலட்சிய மாதிரிகள் (IdealTypes)
வெபரின் முறையியல் பற்றிப் பேசும் பொழுது “இலட்சிய மாதிரிகள்’ என்னும் அவரது கருத்தாக்கம் முக்கியம் பெறுகிறது. சமூக உலகம் சிக்கல் வாய்ந்தது. சமூகச் செயல்களினதும் நடைமுறைகளினதும் முழுமையை நாம் கிரகித்துக் கொள்ளுதல் சாத்தியமற்றது. நடத்தை முறைகள், நிறுவனமுறைகள் என்பன பல்வேறு கூறுகளால் ஆனவை. இக்கூறுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டனவாய் உள்ளன. இவற்றைப் புரிந்து கொள்வதாயின் கருத்து வடிவில் மாதிரிகளைக் வடிவமைத்துக் கொள்ளவேண்டும். மாதிரிகளில் யதார்த்தத்தின் சிக்கல் இருக்காது. அது சிக்கலான யதார்த்தை சிக்கல் குறைந்த எளிமைப்படுத்திய சுருக்கிய வடிவில் தருகிறது. அலுவலர் ஆட்சி (Bureaucracy) என்பது மக்ஸ் வெபர் கூறிய இலட்சிய மாதிரிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அலுவலர் ஆட்சி என்ற இலட்சிய மாதிரி அலுவலர் ஆட்சியின் அடிப்படை அம்சங்களை சுருக்கித் தருகிறது. இவ்வாறு சுருக்கித் தரும் இந்த இலட்சிய மாதிரி யதார்த்தத்தில் இருப்பதனைக் கண்ணாடியில் காட்டுவது போன்றதொரு மாதிரி

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் 43
யன்று. அது காட்டுன் சித்திரம் போன்றது. மகாத்மா காந்தியின் உருவத்தை காட்டுன் சித்திரமாக வரைபவர்உண்மையானகாந்தியின் தோற்றத்தின் சில அம்சங்களை எடுத்துக் கொள்கிறார். அந்தச் சில அம்சங்களை மிகைப்படுத்திக் காட்டுகிறார். இலட்சிய மாதிரி உண்மைக் காந்தியின் சில அம்சங்களைத் தெரிந்து அ) மிகைப் படுத்தல் ஆ) சிலவற்றைநீக்குதல் என்ற வகையில் உருவாக்கப்பட்ட கருத்தமைப்பு ஆகும். காட்டுன் சித்திரம் மிகைப்படுத்திய திரிபு ஆயினும் உண்மை முகத்தை அதில் அடையாளம் காணலாம். உண்மை முகத்தின் பிரதான அம்சங்களை அது கொண்டுள்ளது. இதைப் போன்றே இலட்சியமாதிரிசமூக யதார்த்தத்தினை அப்படியே பிரதிபலிப்பதில்லை. அது யதார்த்தத்திற்குக் கிட்டியது. ஆனால் யதார்த்தத்தின் உண்மைப் பிரதிபிம்பம் அன்று. வெபரின் இலட்சிய மாதிரிகளின் கூறுகளின் தெரிவு எழுந்தமானமானதா? எதை அழுத்தம் கொடுத்துக் கூறவேண்டும்? எவற்றை அழுத்தம் குறைத்து அல்லது மறைத்து கூற வேண்டும்? என்பன கூறுகளின் தெரிவைத்தீர்மானிக் கின்றன. எத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன? என்ன விடயம் சொல்லப்படுகிறது? என்பதைப் பொறுத்தே என்ன கூறுகள் அழுத்தம் பெறுகின்றன என்பது தீர்மானமாகிறது.
யதார்த்தத்தின் உண்மையான சாரத்தை (Real Essence) நாம் அறியலாம் என்பது கானல்நீரைத் தேடி ஒடும் வீண்முயற்சி போன்றது என்பதையே மக்ஸ் வெபர் இலட்சிய மாதிரிகள் கருத்தாக்கம் மூலம் உணர்த்த விரும்புகிறார். சமூக யதார்த்தத்தை வெவ்வேறு கோணங் களில், வகைகளில் பார்க்கலாம். நமக்கு சமூக யதார்த்தம் என்று தெரிவது நாம் கையாளும் கருத்துச்சட்டகத்தை பொறுத்துஅமைகிறது. சமூக யதார்த்தம், கருத்துக்களின் கலப்பின்றி நேரடியாக எம் மனதில் பதிவாகிறது என்று கூறமுடியாது.
வெபரின் இலட்சியமாதிரி யதார்த்தத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கான ஒரு பகுப்பாய்வுக் கருவி (Analytical Tool) ஆகும். அலுவலர்ஆட்சி என்ற இலட்சிய மாதிரி உலகின் எந்தப் பகுதியிலும் கண்டு கொள்ளமுடியாத கற்பனை மாதிரி. இதனை நாம் யப்பானில் உள்ள அலுவலர் ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் அல்லது ஜேர்மனியின் அலுவலர் ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவ்விதம் ஒப்பிடும் பொழுது எமக்கு இலட்சியமாதிரியில் இருந்து

Page 27
44 பிரவாதம்
யப்பானின் அல்லது ஜேர்மனியின் உண்மை நிலை எவ்வகையில் விலகியுள்ளது, வேறுபடுகின்றது என்ற விளக்கம் கிடைக்கிறது. இவ்வாறான விலகல்கள் (Deviations) ஏன் ஏற்படுகின்றன? அதற்கான சமூகக் காரணிகள் எவை? போன்ற கேள்விகள் பயனுள்ள பல காரண காரிய விளக்கங்களைத் தருகின்றன. இலட்சிய மாதிரிகள் பகுப்பாய்வுக்கான கருவி என்பதன் அர்த்தம் இதுவே. மேலே நாம் விளக்கிய கருத்துக்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கும் மேற்கொள் வருமாறு:
An ideal type is formed by the one sided accentuation of one or more points of view and by the synthesis of a great many diffuse, discrete, more or less present and occasionally absent concrete individual phenomena, which are arranged according to those one sidedly emphasised view points into a unified analytical construct in its
conceptual purity, this mental construct cannot be found empirically any where in reality (Weber)
மேற்குறித்த மேற்கோளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:
i) அழுத்தம் கொடுத்தல் (Accentuation): இலட்சிய மாதிரியில்
சில பண்புக் கூறுகள் அழுத்தம் பெறுகின்றன. i) யதார்த்தத்தின்தனியன்களானதோற்றப்பாடுகளின் தொகுப்பாக இலட்சியமாதிரியில் பண்புக் கூறுகள் அமைகின்றன. i) இலட்சிய மாதிரி ஒரு பகுப்பாய்வுக் கருத்துரு (Analytical
Construct). -
iv) இலட்சிய மாதிரி உலகின் யதார்த்தத்தில் இல்லாதது.
மதிப்பீடுகள் சாராத சமூக விஞ்ஞானம் நேர்காட்சிவாதிகள் சமூக விஞ்ஞானங்களை மதிப்பீடுகள் சாராத விஞ்ஞானமாக வளர்க்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள். மக்ஸ் வெபர் மதிப்பீடுகள் சாராமை (ValueFreedom) என்னும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டவரா? இல்லையா? என்பது விவாதத்திற்குரிய விடயம். ஆராய்ச்சிமுறையியல் தொடர்பானஇந்த முக்கிய பிரச்சினை பற்றி வெபரின் கருத்துக்கள் பின்வருமாறு:
1. ஜோர்ஜ் ரிட்சர் எழுதிய SociologicalTheory (பக். 117-18)

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் 45
உண்மை அல்லது ஆதாரம் (Fact) என்பதை விழுமியம் அல்லது மதிப்பீடு (Value) என்பதில் இருந்து வெபர் வேறுபடுத்திப் பார்க்கிறார். ஆதாரம் அனுபவமுறையில் பரிசோதிக்கக்கூடியதரவுகளை அடிப்படையாகக் கொண்டது. சமூக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்உண்மையை வெளிப்படுத்த வேண்டும். பக்கச் சார்பாக எழுதக் கூடாது.
ஆராய்ச்சியை நிகழ்த்தும் போது தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை அதாவது மதிப்பீடு முறையிலான முடிவு களை (Value Judgements) ஆய்வாளன் ஒரு புறத்தே வைத்து விட்டு நடுவு நிலையுடன் (Value Neutrality) செயற்பட வேண்டும் என்றும் வெபர் கருதுகிறார்.
பக்கச் சார்பின்னை அல்லது நடுவுநிலை என்பதை மதிப் பீட்டின் பொருத்தப்பாடு Value Relevance என்பதில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். மக்ஸ் வெபர் சமூக விஞ் ஞான ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கான விடயங்களைத் தேர்ந்து கொள்ளும் பொழுது பொருத்தமான, பயனுடைய, நன்மை தரும் ஆய்வு விடயங்களைத் தேர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதினார். சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் கடமை ஆய்வாளனுக்கு உண்டு என்ற கருத்தில் வெபருக்கு உடன்பாடு உள்ளது என்பதை மதிப்பீடு களின் பொருத்தப்பாடு (Value Relevance) என்னும் கருத்து தெளிவுபடுத்துகிறது. ቆ
விஞ்ஞான ஆய்வு புறநிலைத் தன்மையுடையது பக்கச் சார் பற்றது. இதனை Scientific Objectivity என்ற தொடர்மூலம் புரிந்து கொள்ளலாம். பக்கச்சார்பின்மை என்பது வேறு, அறமதிப்பீடுகளைக் கொண்டிருத்தல் என்பது வேறு. அறமதிப்பீடுகள் பற்றி எமக்கு எந்த அக்கறையும் இல்லை என்று ஒரு ஆய்வாளர் கூறும் போது அவர் அறமதிப்பீடுகள் பற்றி தனக்கு விருப்பு வெறுப்புக்கள் கிடையாது என்ற கருத் திற்கு அழுத்தம் கொடுக்கிறார். இந்த இருவேறு கருத்துக் களை ஒன்றோடு ஒன்று குழப்பக்கூடாது. "An attitude of

Page 28
46
பிரவாதம்
moral indifference has no connection with scientific objectivity”
என்ற வெபரின் கூற்று இக்கருத்தைத் தெளிவுபடுத்துகிறது.
வெபரும் நேர்க்காட்சிவாதமும்
வெபரின் பின்வரும் கருத்துக்களை மேலே எடுத்துக் கூறினோம்:
i.
ii.
iii.
iv.
சமூகச்செயல்களின்அர்த்தங்களைவிளங்குவதேசமூகவியலின்
நோக்கம் என வெபர் கருதினார்.
சமூகக் கூட்டுக்கள் என்பது ஒரு கற்பனை. அவற்றுக்குப் புறநிலையான இருப்புக் கிடையாது. தனிநபர்கள் சிந்திக்கிறார்கள்; செயல்களைச் செய்கிறார்கள். தனிநபர்கள் செயல்களின் ஒருவகைத் தோற்றமே சமூகக் கூட்டு. செயலிகளின் கண்கள் ஊடாகப் பார்த்தல்'வெர்ஸ்ரன் ஆகும். இதனை ஒத்துணர் நிலையில் புரிந்து கொள்ளல் என்றும் விபரிக்கலாம்.
இலட்சிய மாதிரிகள் பகுப்பாய்வுக்கான கருவிகள். அவற்றின் துணையுடன் சமூக யதார்த்தம் மாதிரியில் இருந்து விலகு
வதைப் பரிசீலிக்கலாம்.
மதிப்பீடுகளை ஆதாரங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
வெபரின் கருத்துக்கள் நேர்க்காட்சிவாத முறையியலைத் தகர்க்கும் வாதங்களை முன்வைத்தன. இருந்தபோதும் அவரை ஆய்வாளர்கள் நேர்க்காட்சிவாதி என்றே கூறுகின்றனர். ஜயதேவ உயன்கொட பின்வருமாறு கூறுகிறார்:
வெபர் பற்றிக் குறிப்பிடும் போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது யாதெனில் அவர் நேர்க்காட்சிவாத முறையியலை மிகுந்த கவனத்தோடும் தயக்கத்தோடும் பயன்படுத்தினார் என்பதே. அந்த முறையியலில் திருத்தங்களையும் அவர் செய்தார். அக்காலத்தில் ஜேர்மனி தேசத்தில் நேர்க்காட்சிவாதத்திற்கு எதிர்ப்பான கருத்துக்கள் தோன்றின. இக்கருத்துக்களின் தாக்கம்

சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல் 47
வெபரின் சிந்தனையில் வெளிப்பட்டது. வெபர் தயக்கம் மிகுந்த
நேர்க்காட்சிவாதி என்று கூறுவதில் தவறு இல்லை.
"அவரின் புரட்டாஸ்தாந்திய அறமும் முதலாளித்துவத்தின்ஆன்மாவும் (Protestant Ethic and the SpiritofCapitalism) 6Taipegula06) is giluatog5d5(5 எடுத்துக் கொள்வோம். தொடக்கக் காலக் கல்வினியவாதிகளின் நம்பிக் கைகள், அவர்களை உந்தித் தள்ளிய தூண்டல்கள் பற்றி வெபர் ஆராய்கிறார். கல்வினியவாதிகளின் அகம் பற்றிய விசாரணையோடு அவர் நின்று விடவில்லை. அவர்களின் சமூகச் செயல்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதை விளக்குகிறார். சமூகமாற்றம் பற்றி வெபர் பேசுவதால் காரணகாரிய (Casuality) விளக்கம் மீது அவர் அக்கறை செலுத்துகிறார். கீழைத்தேய நாடு களுடன் மேற்கின் முதலாளித்துவத்தை ஒப்பிட்டு முதலாளித்து வத்தின் இயல்புகளை விளக்குகிறார். நுண்நிலைச் சமூகவியலில் ஆர்வம் காட்டும் ஒருவராக இருந்த வெபர் பருநிலைச் சமூகவியல் குறித்தே அதிகம் பேசுகிறார். சமூகமாற்றம் அவரது ஆய்வில் முதன்மை பெறுகிறது. புரட்டஸ் தாந்திய அறம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் முக்கியமான ஒரு மாறிலியாக காணப்பட்டது என்பதே அவர் சொல்ல வந்த கருத்து. பல காரணிகளில் அதுவும் ஒன்று என்ற முடிவு கிடைக்கிறது. கல்வினியவாதிகளின் அகநிலைப்பட்ட தூண்டுதல் களில் ஆரம்பிக்கும் வெபர் புறநிலைக் காரணிகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறார். -
Oplo-бо!боу
இக்கட்டுரையின் முதற்பகுதியில் நேர்க்காட்சிவாத முறையியல் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. கட்டுரையின் இரண்டாம் பகுதி மக்ஸ் வெபரின் முறையியல் பற்றி விளக்குகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டிலும் சமூக விஞ்ஞான ஆராய்ச்சி யில் விஞ்ஞான முறையினைப் பிரயோகித்து ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும் என்ற சிந்தனை வலுப்பெற்றது. நேர்க்காட்சிவாதத்தின் ஒரு பிரிவினரான தருக்கமுறை நேர்க்காட்சிவாதம் என்ற சிந்தனைக் கூடத்தினர் நேர்க்காட்சிவாதத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந் தனர். நேர்க்காட்சிவாதம் இவ்வாறு செல்வாக்கு மிக்க தத்துவமாக

Page 29
48 பிரவாதம்
வளர்ச்சியுற்ற காலத்தில் நேர்க்காட்சிவாதத்திற்கு மாறுபட்ட சிந்தனை களும் வளர்ச்சி பெற்றன. இச்சிந்தனைகளுள் மக்ஸ் வெபரின் முறையியல் சார்ந்த கருத்துக்கள் நேர்க்காட்சிவாதத்தின் சில அடிப் படைகளை கேள்விக்கு உள்ளாக்கின. மக்ஸ் வெபருக்குப் பின்னர் குறிப்பாக 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பின்னை நேர்க்காட்சி வாதம் என்ற பொதுப் பிரிவுக்குள் அடக்கக்கூடிய சில கோட்பாடுகள் உருவாகின. பின்னை நேர்க்காட்சிவாதக் கருத்துக்களின் வளர்ச்சிக்கு மக்ஸ் வெபரின் முறையியல் பற்றிய எழுத்துக்கள் ஆதர்சமாய் அமைந்தன. நேர்க்காட்சிவாதத்தையும், மக்ஸ் வெரின் விளக்க முறைச் சமூகவியலையும் எடுத்துக் கூறி அவற்றுக்கிடையிலான தொடர்பையும், தொடர்பின்மையும் விளக்குவதன் மூலம் ஆராய்ச்சி முறையியல் சிந்தனையின் வளர்ச்சியின் போக்கினை இக்கட்டு ரையில் எடுத்துக் கூறினோம். வெபர் ஒருதயக்கம் மிகுந்த நேர்க்காட்சி வாதி என்பதையும் எடுத்துக் கூறினோம். தோற்றப்பாட்டியல், இனவியல் முறையியல், பொருள்கோடலியல் ஆகிய முறையியல்கள் வெபர் காட்டியதயக்கம் எதனையும் வெளிப்படுத்தவில்லை. அவை நேர்காட்சிவாத முறையியலை நிராகரித்தன.
உசாத்துணை
Haralambos, M. and M. Holborn: Sociology: Themes and Perspectives, 5th Edition,
Colins, London (2000).
Ritzer, George: Sociological Theory, 4th Edition, Mcgraw-Hill, New York (1996). Turner. Jonathan, H. : The Structure of Sociological Theory, Rawat (2004).
Uyangoda. Jayadeva: WritingResearch Proposals in the SocialSciences and Humanities
A Theoretical and Practical Guide, SSA, Colombo, (2010).
Parkin, Frank: Max Weber, Routledge (2002). முத்துமோகன், ந, ஐரோப்பிய தத்துவங்கள், காவ்யா (2004).

விஞ்ஞானத்தின் மெய்யியல்*
கால் பொப்பரும் தோமஸ் கூனும்
சோ. கிருஷ்ணராஜா
விஞ்ஞானத்தின் மெய்யிலும் கால் பொப்பரும்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞான அறிவுக் கொள்கையாளரான கால் பொப்பரின் சிந்தனையின் ஆளுகைக் குட்படாத அறிவுத் துறையென எதுவுமே இல்லையெனலாம். கலை வரலாறு முதற்கொண்டு மருத்துவம் ஈறாகவுள்ள சமூக - இயற்கை விஞ்ஞானத் துறைகள் அனைத்திலும் பொப்பரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது. விஞ்ஞானக் கண்டு Sigil Sairgsopdislib (The Logic of Scientific Discovery), Spigs steps(uplb giggit 6tgifseillb (The Open Society and Its Enemies), 6 poundbol நியதிவாதத்தின் வறுமை (The Poverty of Historicism), ஊகங்களும் 15urisfigsgyub (Conjectures and Refutations), Filiil Islip-9.stjoy (Objective Knowledge) என்பன பொப்பரால் எழுதப்பட்ட பிரதானநூல்களாகும். பெருந்தொகையான கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டன. ‘முடிவிலாத் தேடல் (UnendedQuest) என்ற தலைப்பிலான சுயசரிதை ஒன்றும் பொப்பரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. இவை தவிர
* இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் மெய்யியலின்(Philosophy ofScience) வளர்ச்சிக்கு கால் பொப்பர், தோமஸ் கூன் என்ற இரு சிந்தனையாளர் முக்கிய பங்களிப்பைச் செய்தனர். அவர்களின் கருத்துக்கள் ஆராய்ச்சி முறையியலின் மீதும் பெரும் தாக்கத்தை விளைவித்தன. பேராசிரியர் சோ. கிருஸ்ணராஜாவின் கட்டுரை இவ்விரு சிந்தனையாளர்களின் கருத்துக்களை எடுத்துக்கூறுகிறது.
(ஆர்)

Page 30
50 பிரவாதம்
ஜே.சி.ஈ. செல்ஸ் என்பாருடன்இணைந்து ‘சுயமும் அதன் மூளையும் என்றதொரு நூலையும் இவர் எழுதியுள்ளார்.
கால் மார்க்ஸ், சிக்மன்ட் ஃபிராய்ட், ஐன்ஸ்ரைன் என்ற மூவரதும் கண்டுபிடிப்புகள் இளமைக்காலத்தில் தன்னை மிகவும் ஆர்கSத்தன வென்று தனது சுயசரிதையில் கூறுகிற பொப்பர், இவர்களில் முதலி ருவர்களதும் கொள்கைகளைக் காலப்போக்கில் தான் நிராகரித்து விட்டதாகவும், ஐயன்ஸ்ரைன் மட்டுமே உண்மையான விஞ்ஞான மனப்பான்மையுடைய சிந்தனையாளராகக் காணப்பட்டாரெனவும் குறிப்பிடுகிறார். சமூகத்தின் வரலாற்றுரீதியான வளர்ச்சி சிலவிதி களின்படி இயங்குகிறது எனக்கருதிய கால் மார்க்ஸ், வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற கொள்கையை முன்மொழிந்தார். அதே போல் சிக்மன்ட் ஃபிராய்ட் என்ற மருத்துவரும் தன்னிடம் நோயாளி களாக வந்தோரில் கணிசமானோர் உளநோயுடையவர்களாக இருப்பதைக்கண்டு அவர்களின் உளநோயைத் தீர்க்கும் வகையில் உளப்பகுப்பாய்வு என்ற செல்வாக்குப் பெற்ற உளவியற்கொள்கையை உருவாக்கினார். கால் மார்க்ஸ்சும், சிக்கன்ட் ஃபிராய்ட்டும் தமது கொள்கைகள் உண்மையான கண்டுபிடிப்புகளே என்பதை நிறுவு வதற்கான சாதகமானதரவுகளைத் திரட்டுவதில் பெருமுயற்சியுடன் ஈடுபட்டனர். தமது ஊகங்கள் பொய்யாவிருக்கலாமென அவர்கள் கிஞ்சித்தேனும் சிந்திக்கவில்லை. இதுவே இவர்களிருவரும் விடுத்த பெருந்தவறென பொப்பர் குற்றம்சாட்டுகிறார். பொப்பரின் அபிப் பிராயப்படி எந்தவொரு கொள்கையையும் அறுதியாக நிறுவலா மெனக் கருதுவது தவறானது. மேலும் அது விஞ்ஞான மனப் பான்மைக்கு முற்றிலும் எதிரானது எனக் குறிப்பிடுகிறார்.
தொலமியின் புவிமையக்கொள்கையை நிராகரித்தமையாலேயே கொப்பநிக்கஸின் சூரியமையக் கொள்கை சாத்தியமாயிற்று. காலம், வெளி பற்றிய நியூட்டனது கருத்தை நிராகரித்ததாலேயே சார்புக் கொள்கை கண்டுபிடிக்கப்படலாயிற்று. புவிமையக் கொள்கை யையோ அல்லதுநியூட்டனது காலம், வெளிபற்றிய கொள்கையையோ அறுதியாக நிறுவப்பட்ட உண்மைகள் என விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தால் விஞ்ஞானம் இன்றைய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியாது. பழைய கொள்கைகள் நிராகரிக்கப்பட்டதாலேயே புதிய

விஞ்ஞானத்தின் மெய்யியல் 51
கொள்கைகள் முன் மொழியப்பட்டு, அதனூடாக விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து வருகிறது.
ஐன்ஸ்ரைன் தனது கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்படலாமென ஏற்றுக் கொண்டிருந்தார். ஒளியில் சிவப்புவரி விலகல் காணப் படுவதேன் என்கிற பிரச்சனைக்கு, பாரிய வானத்துப் பொருட்களைக் கடந்துவர நேர்வதாலேயே ஒளியானது ஈர்ப்புவிசைக்குட்பட்டு வளைந்து வருகிறது. இதுவே திரிசியக்கோட்டில் சிவப்புவரி விலக லிற்குக் காரணமாகிறதென ஐன்ஸ்ரைன் ஊகித்தார். நீண்டகாலம் வெறும் விஞ்ஞான ஊகமாயிருந்த இவ்விளக்கம் 1919ல் நிகழ்ந்த பூரணகிரகணத்தின் பொழுது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. திரிசியக்கோட்டில் சிவப்புவரி விலகலிற்கு ஈர்ப்புவிதி காரணமாக இல்லாதுவிடின் சார்ப்புக் கொள்கையின் பொதுத்தத்துவம் தவறாக இருக்குமென ஐன்ஸ்ரைன் எழுதினார். அவதானிக்கப்பட்ட நேர்வின் அடிப்படையில் தன்னால் மொழியப்பட்ட விஞ்ஞானக்
கொள்கையையே நிராகரிக்கத்தயாராக இருந்தமையே விஞ்ஞான
மனப்பாங்கு என்று கூறுகின்ற பொப்பர். பழைய விஞ்ஞானக் கொள்கைகள் பொய்ப்பிக்கப்படுவதன் மூலம் புதியகொள்கைகளை நாடி விஞ்ஞான அறிவு வளர்ச்சி உறுகிறதென வாதிடுகிறார்.
விஞ்ஞான ஆராய்ச்சி எப்பொழுதும் பிரச்சினைகளிலிருந்தே ஆரம்பமாகிறது. பிரச்சனைகளிற்கானதீர்வைக் காணவேண்டுமெனில் முதலில் அதனை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். விளக்கம் தீர்விற்கான முன் நிபந்தனையாகும். விஞ்ஞானத்தின் நோக்கம் திருப்திகரமான விளக்கத்தைப் பெறுதலேயென பொப்பர் கூறுவார். உண்மையான விளக்கம் என்பதற்குப் பதிலாக திருப்திகரமான விளக்கமென்ற பதத்தைப் பொப்பர் பயன்படுத்துவதேன் என ஒருவர் கேட்கலாம்.
பொப்பருடைய அபிப்பிராயப்படி விஞ்ஞான விளக்கங்கள், கொள்கைகள் அனைத்தும் தற்காலிக ஊகங்களேயாகும். எனவே தற்காலிக ஊகங்களை உண்மையான விளக்கம் என்பதிலும் பார்க்க திருப்திகரமான விளக்கம் எனக் கூறுவதே பொருத்தமானதென்பது இவரது அபிப்பிராயம்.
ஒரு விஞ்ஞானப் பிரச்சனைக்கு தரப்பட்ட விளக்கம் திருப்தி கரமான விளக்கமென எவ்வாறு தீர்மானிக்கப்படலாம் என்பதற்கு

Page 31
52 பிரவாதம்
‘நம்பகத்தன்மை உடைய விளக்கம் திருப்திகரமான விளக்கமெனப் பொப்பர் பதிலளிக்கிறார். இதன்படி இன்று நம்பகத்தன்மை கொண்ட தாயிருக்கிற விளக்கம் நாளை தன் நம்பகத்தன்மையை இழந்து விடலாம். இதனிடத்தைப் புதியதொரு விஞ்ஞானவிளக்கம் பெறலாம். இவ்வாறு விஞ்ஞானக் கொள்கைகள் அவதானிக்கப்பட்ட புதிய நேர்வுகளால் தமது நம்பகத்தன்மையை இழப்பதுடன் புதிய விஞ் ஞானக் கொள்கைகளுக்கு வழி விட்டு அதன் மூலம் விஞ்ஞானம் முன்னேறுகிறதென்பது பொப்பர் குறிப்பிடுவதன்தார்ப்பரியமாகும். தவறுகளைக் களைவதன் மூலமே விஞ்ஞானம் முன்னேறுகிற தெனின், இவ்வளர்ச்சியில் விஞ்ஞானியின் பங்கென்ன என்பதற்கு அவன் எச்சந்தர்ப்பங்களிலும் எவ்விஞ்ஞானக் கொள்கைகளையும் நிறுவ வேண்டுமென முயற்சித்தல் ஆகாதெனவும், மாறாக முன் மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை பொய்ப்பிக்கவே முயல வேண்டுமெனவும் பொப்பர் வாதிடுகிறார். நிறுவலிற்குப் பதிலாக நிராகரித்தலை வற்புறுத்துவதன் மூலம் பிரான்சிஸ் பேக் கனால் முன்மொழியப்பட்டு பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த விஞ்ஞானமுறையியலுக்குப்பதிலாக பொய்ப்பித்தற் கோட்பாடு என்ற புதியதொரு விஞ்ஞானமுறையை பொப்பர் முன்மொழிகிறார். பாரம்பரியமாக விஞ்ஞானமுறையானது ஒன்றையொன்று தொடரும் ஆறு படிமுறைகளைக் கொண்டதாக எடுத்துக் காட்டப்பட்டது
960)6) JuJITG) 60T
நோக்கல்
தரவுகளைச் சேகரித்தல்
கருதுகோள் உருவாக்கம்
பரிசோதனை
தொகுத்தறிப் பொதுமையாக்கம்
வாய்ப்புப் பார்த்தல்
இதற்குப் பதிலாக முதலாவது படிநிலையில் விஞ்ஞான ஆராய்ச்சி ஒரு பிரச்சனையுடன் ஆரம்பமாகின்றது என்றும், அப்பிரச்சனை ஏலவே உள்ளதொரு கொள்கையை அல்லது எதிர்பார்க்கையை மறுதலிப்பதாக இருக்கும் என்றும், இரண்டாவது படிநிலையில்

விஞ்ஞானத்தின் மெய்யியல் 53
மறுதலிக்கப்பட்ட பழைய கொள்கைக்குப் பதிலாக புதிதாக முன் மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கை இடம்பெற வேண்டு மென்றும், மூன்றாவது படிநிலையில் புதிதாக முன்மொழியப்பட்ட கொள்கையில் இருந்து பரிசோதிக்கக்கூடிய தரவுகளைப் பெறுதல் வேண்டுமென்றும், நான்காவது படிநிலையில் பெறப்பட்ட புதிய தரவுகளின் அடிப்படையில் பழைய கொள்கையை நிராகரிக்க முயற்சிக்க வேண்டுமென்றும், ஐந்தாவது படிநிலையில் பழைய விஞ்ஞானக் கொள்கையையா? அல்லது போட்டியிடும் புதிய விஞ் ஞானக் கொள்கையையா? எது ஏற்புடையது எனத் தீர்மானிக்கும் தீர்ப்புச் சோதனை இடம் பெற வேண்டுமென்றும் பொப்பர் தனது விஞ்ஞான முறை பற்றி விளக்குகிறார். விஞ்ஞானமுறை பற்றி பொப்பரின் விளக்கம் அதாவது பொய்ப்பித்தற் கோட்பாடு தொகுத் தறிதலை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானமுறை எதிர்நோக்கு கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதுடன், விஞ்ஞானத்தை விஞ்ஞானம் அல்லாதனவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுமெனவும் வாதிடப் படுகிறது.
தொகுத்தறி முடிவுகள் நிச்சயமான முடிவுகள் அல்லவென்றும், அவை வெறும் எதிர்பார்ப்புகளே என்றும், டேவிட் கியூம் என்ற நவீனகால மெய்யியலாளர் எடுத்துக்காட்டினார். இவரது அபிப் பிராயப்படி தருக்க நிச்சயம் தொகுத்தறி முடிவுகளிற்கு இல்லை. அவை நம்பிக்கையால் விளைந்த எதிர்பார்க்கையே. கியூமினால் எடுத்துக் காட்டப்பட்ட விமரிசனத்தைக் கருத்திற் கொண்டதற்கால விஞ்ஞான முறையியலாளர்கள், நிகழ்தகவுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் தொகுத்தறி முடிவுகளின்நிகழ்திறத்தை அதிகரிக்க முயன்றனரேனினும், கியூமினால் முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டைநீக்க முடியவில்லை. சான்றுகளின் தொகை அதிகரிக்க அதிகரிக்க நிகழ்திறம் அதிகரித்துச் செல்லுமே யொழிய நிச்சயத் தன்மையை அது ஒருபொழுதும் எய்துவதில்லை. ஒரு விஞ்ஞானக் கொள்கையை உண்மை எனக்காட்ட ஆயிரக்கணக்கான சான்று களைத் தேட முடியுமாயினும், அதனை ஒருபொழுதும் அறுதியாக நிறுவமுடியாது என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பொப்பர் இப்பிரச்சனையிலிருந்து விடுபட பொய்யாக்கற் தத்துவம் பயனு டையதெனக் கருதினார்.

Page 32
54 பிரவாதம்
ஒரு விஞ்ஞானக்கொள்கை ஏற்புடையதேயென நிறுவுதற்கு எத்தனை சான்றுகள் தேவைப்படுமென எவராலும் தீர்மானிக்க முடியாதென்பது உண்மையே. ஆனால் ஒரு கொள்கை பொய்யான தென நிராகரிப்பதற்கு அக்கொள்கையை மறுதலிக்குமொரு சான்று உளதெனக் காட்டுவதே போதுமானதென்பதால், விஞ்ஞானக் கொள்கையை நிறுவுதற்குப் பதிலாக நிராகரிக்க முயல வேண்டும் என்று கூறுவதன் மூலம் தொகுத்தறிதலிற்கு எதிராக கியூமினால் எடுத்துக் காட்டப்பட்ட பிரச்சனையைப் பொப்பர் தீர்க்கிறார்.
பொப்பரின் அபிப்பிராயப்படி ஏலவேயுள்ள விஞ்ஞானக் கொள் கைகளை நிராகரிப்பதன் மூலமே விஞ்ஞான அறிவில் முன்னேற்றம் சாத்தியமாகும். பழைய கொள்கைகள் மறுதலிக்கப்படாதவரை புதிய கொள்கைகளிற்கு இடமில்லை என்பதால், விஞ்ஞானிகள் தமது ஆய்வை பொய்யாக்கற் தத்துவத்தின் அடிப்படையிலே நிகழ்த்த வேண்டியதாகிறதெனக் கூறியதன் பின்னர், பொய்ப்பிக்கப்படுதலே விஞ்ஞானக் கொள்கைகளின் இலட்சணம் என்ற முடிவிற்கு வருகிறார். பொய்ப்பிக்க முடியாதிருக்கும் விஞ்ஞானக் கொள்கையென இதுவரை காலமும் எந்தவொரு கொள்கையும் இருக்கவில்லை என்பதால்,
பொய்யாக்கப்படுதலே விஞ்ஞானக் கொள்கைகளின் இயல்பு என்றும்,
எந்தவொரு அறிவுத்துறையிலும் பொய்ப்பிக்க முடியாக் கொள்கை கள் உளதென ஒருவர் வாதிடுவாராயின் அவ்வறிவுத் துறை விஞ் ஞானமே அல்ல என்ற முடிவிற்கும் பொப்பர் வருகிறார். இவருடைய அபிப்பிராயப்படி மார்க்ஸிசம் பொய்ப்பிக்க முடியாக் கொள்கை எனக் கூறப்படுவதால் அது விஞ்ஞானமல்ல என்ற முடிவிற்கு வருகிறார். (மார்க்ஸிசத்திற்கெதிரான பொப்பரின் விமர்சனம் ஏற் புடையதல்ல. மார்க்ஸிசம் என்றால் என்னவெனத் தான் விளங்கிக் கொண்டதொரு கொள்கையையே பொப்பர் விமர்சிக்கிறார். மார்க்ஸிசம் நியூட்டனினதோ அல்லது ஐன்ஸ்ரைனினதோ கொள்கை களைப் போன்றதொரு கொள்கையல்ல என்பதையும், அதுவோர் உலக நோக்காகவும், முறையியலாகவும் இருப்பதையும் பொப்பர் உணரத் தவறி விட்டார்.)
விஞ்ஞானத்தை விஞ்ஞானம் அல்லாதனவற்றிலிருந்து வேறு
படுத்தும்தத்துவமாக பொய்ப்பித்தற்கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பொப்பர், அதனடிப்படையில் அறிவுக் கொள்கையொன்றையும்

விஞ்ஞானத்தின் மெய்யியல் ქ55
விருத்தி செய்துள்ளார். உண்மை எதுவென எவரும் அறியார், நாம் செய்யக் கூடிய தெல்லாம் அறியாமையிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்வதே. அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய இப்பயணம் பிரச்சனைதீர்க்கும் முறையிலமைகிறதென்பது பொப்பரின் வாதம். இதனைப் பின்வருமாறு அவர் விளக்குகிறார்: P-TS-EE-Pஅறிதல் முயற்சி எப்பொழுதும் ஒரு பிரச்சனையுடனேயே ஆரம்பிக்கிறது. இதனைP1 குறிக்கிறது. EE என்பது முன்மொழியப்பட்டதீர்வையும், EE முன்மொழியப்பட்ட தீர்வில் காணப்படும் தவறுகளைக் களைதலையும், P2 தவறுகள் களையப்பட்டதன் பின் உள்ள நிலமையையும் குறிக்கிறது. P1 உம் P2 உம் சாராம்சத்தில் பிரச்ச னைகளேயெனினும், P1 பிரச்சனையின் தொடக்கத்தையும், P2 முன்மொழியப்பட்டதீர்வினடிப்படையில் தவறுகள்களையப்பட்ட நிலையையும், அதேசமயம் புதிய பிரச்சனையின் தொடக்கத்தையும் சுட்டுகிறது. இவ்வாறு P1-TS-EE-P2-TS-EE-P3 என அறிவானது உண்மையை நோக்கி பிரச்சனை தீர்க்கும் முறையினூடாக வளர்ச்சி அடைந்து செல்கிறது. பொதுவாக அறிவுலகத்தையும், குறிப்பாக விஞ்ஞான அறிவையும் பொறுத்தவரையில் முடிவிலியாய்த்தொடரும் இத்தேடலில் பழைய கொள்கைகள் (ஊகங்கள்) நிராகரிக்கப்பட்டு, புதிய கொள்கைகள் (ஊகங்கள்) வந்த வண்ணமே இருக்கின்றன. எந்தவொரு அறிவுத்துறையில் எக்கணத்தில் இவ்வளர்ச்சி தடைப் படுத்தப்பட்டு இருப்பதுடன் திருப்தி அடைய நேரிடுகிறதோ அக் கணத்திலிருந்து அவ்வறிவுத்துறை விஞ்ஞானமென்ற அந்தஸ்தை இழந்து, விஞ்ஞானம் அல்லாததாய், சித்தாந்தமாய்ப் போய் விடுகிறது.
ஊகமும் நிராகரிப்புமாக வளர்ந்து செல்வதே விஞ்ஞானபூர்வ மானஅறிவு என்றநிலைப்பாட்டிலிருந்து கொண்டுநிர்ணயமில்வாதம் என்ற கோட்பாட்டைப்பொப்பர்முன்மொழிகிறார்.நிர்ணயமில்வாதம் என்பது நிர்ணயவாதத்திற்கு எதிரானது. இயற்கை விஞ்ஞானிகளிலும், சமூக விஞ்ஞானிகளிலும் நிர்ணயவாதமென்பது ஒரு அதிதக் கொள்கையாக (MetaTheory) அதாவது அறிவைப் பெறுவதற்கு ஆதார மாயிருக்கிற தத்துவமாக எண்ணப்பட்டது. காரணத்தைத் தேடுவதன் மூலம் காரியத்தை விளங்கிக் கொள்ளலாம் என்ற காரணக் கோட் பாடும் நிர்ணயவாதத்தையே ஆதாரமாகக் கொண்டது. அரிஸ்

Page 33
56 பிரவாதம்
ரோட்டலின் காலத்திலிருந்தே காரணக்கொள்கை அறிவைப் பெறு வதற்கானதொரு திறவுகோலாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நியூட்டனின் விஞ்ஞானமும், நிறைபோட்டிப் பொருளாதாரமும், திட்டமிடற் கொள்கைகளும் உள்பொருளியல் அடிப்படையில் நிர் ணயவாதமாகவும்,அறிவாராச்சியியலடிப்படையில் காரணக் கொள்கை யாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிர்ணயவாதமும் காரணக் கோட் பாடும் இயற்கை விஞ்ஞானிகளில் நியதிவாதத்தையும், சமூக விஞ்ஞானங்களில் விதிவாதத்தையும் ஆதரிக்கும் மூடுண்ட கொள்கை களாகும் என எச்சரித்து, நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறார். பெளதீ கத்தில் குவாண்டம்கொள்கை நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறது என்றும், அது சமூக விஞ்ஞானங்களில் குறிப்பாக அரசியலில் திறந்த சமூகத்திற்கு இட்டுச்செல்லுமெனவும் பொப்பர் குறிப்பிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி திறந்த சமூகமே நீதியான சமூகமாகும். திறந்த சமூகத்தின் பொருளாதாரம் பற்றிச் சிந்தித்தவர்களில் கயக் (Hayek) குறிப்பிடத்தக்கவர்.
திறந்த சமூகம் என்பது பொப்பரின் அபிப்பிராயப்படி விமரி சனத்தை சகிப்புத் தன்மையுடன் தாங்கிக்கொள்கிற சமூகமாகும். சமூகம் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. இம்மாற்றம் எவரினது தேவைகருதியோ அல்லது யாதேனுமொரு திட்டத்தின் அடிப்படையிலோநிகழ்வதில்லை. அனைவருக்கும் நன்மை பயக்கும் அரசியற்திட்டமென எதுவுமில்லையாதலால் சமூக நிறுவனங்களை உருவாக்கும் பொழுதும் அல்லது சமூகம் தழுவிய தீர்மானங்களை எடுக்கும்பொழுதும் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதவை இன்னவை என்ற திட்டத் துடன் அரசியலை அணுகுபவர்கள் சமூகத்தை ஆபத்தான பரி சோதனைக்கு உட்படுத்துபவர்கள் ஆவர்.
விளைவுகளின் பலாபலன்களை முன்கூட்டியே அறியும் வல்லமை மனிதற்கில்லை. எதிர்காலத்தின் தேவைகள் பற்றிய இன்றைய கணிப்பீடு ஒரு பொழுதும் சரியாக இருக்க முடியாது. மனிதனின் அறிவு வளர்ந்துகொண்டே போகிறது. சமூகத்தின் தேவைகளும் மாறிக் கொண்டே போகிறது. எனவே எதிர்காலத் தேவைகள் எவையெனத் தெரியாத இன்றைய நிலையில் எதிர்காலத்திற்காக எவ்வாறு நாம் திட்டமிடமுடியுமென பொப்பர் வாதிடுகிறார். இவரது

விஞ்ஞானத்தின் மெய்யியல் 57
அபிப்பிராயப்படி, ஒரேயடியாக சமூகத்தை முழுமையாக மாற்ற முயலாது, சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். விமரிசனத்தை அனுமதிப்பதன் மூலம் சீர்திருத்தங்களின் நன்மை தீமைகளை அறிந்துகொள்ள முடிகிறது; திருத்திக்கொள்ளவும் முடிகிறது. மேலும் நடைமுறைப் படுத்தப்பட்டதொரு சீர்திருத்தம் தீங்குபயக்குமெனக் கண்டால் குறைந்தளவு இழப்புடன் அதனைத்திருத்திக் கொள்ளவும் முடிகிறது. ஆனால் சமூகம் தழுவிய முழுமையான மாற்றத்தை நடைமுறைப் படுத்தும்பொழுது தீமைகளைத் தவிர்ப்பதற்குச் சந்தர்ப்பமில்லாது போய்விடுகிறது. அதிகளவு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.
முழுமையான சமூகம் தழுவிய மாற்றங்களிற்குப் பதிலாக படிப் படியான சீர்திருத்தங்களை முன்மொழிகிற பொப்பர் அதனை நடை முறைப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தின் தருக்கம் (Logic of Situation) என்ற கோட்பாட்டை முன்மொழிகிறார். எத்தகைய கற்பிதங்களு மில்லாது, புத்திபூர்வமாகப் பிரச்சினைகளைத்தனித்தனியாக அணுகு வதன் மூலம் பொருத்தமான சீர்திருத்தம் எதுவெனக் கண்டு அதை நடைமுறைப்படுத்தவதே சந்தர்ப்பத்தின் தருக்கமாகும். பிளேட்டோ முதல் மார்க்ஸ் ஈறாக சமூகம் பற்றிச் சிந்தித்தவர்கள் எல்லோரும் தத்தமது திட்டங்களிற்கு அமைய சமூகத்தில் மாற்றத்தையேற்படுத்த விரும்பினர். இது சர்வாதிகாரிகளையே தோற்றுவித்தது.தாம் விரும்பும் சமூக அமைப்பு எவ்வாறிருக்க வேண்டுமென்பதில் அறிஞர்களி டையே கருத்து வேறுபாடிருப்பது இயல்பே. மாற்றத்தை விரும்பாத பழமைவாதிகள், தாராண்மைவாதிகள், சோசலிஸ்டுக்கள் என மாறுபட்ட அரசியலார்வம் கொண்டவர்களை ஒரு சமூகத்திற் காணலாம். அரசியலதிகாரத்தைப் பெறும்பொழுது அவர்கள் தமது அரசியற் திட்டங்களையே நடைமுறைப்படுத்த விரும்புவர். ஒரு திறந்த சமூகத்தில் எதிர்கருத்துடையவர்களின் விமரிசனம் ஆட்சி யாளர்கள் விழிப்புடன் செயற்பட உதவும். முழுச்சமூகத்திற்கும் பொதுவான இலட்சியங்களென எதுவுமில்லை. கற்பனாவாத இலட்சி யங்களைக் கொண்ட அரசியல் முழுச்சமூகத்திற்குமான பொதுநோக்கு ஒன்றை அமுல்படுத்துவதாகக் கூறிக் கொண்டு சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது.

Page 34
58 பிரவாதம்
பாரிய அளவிலான தீவிர புனரமைப்புகள் மிகவும் நீண்ட காலத்தை எடுக்கும். இவ்விடைக் காலத்தில் நோக்கங்களும் இலட் சியங்களும் தொடக்கத்தில் இருந்தது போல மாறாமல் இருக்குமென எவரும் எதிர்பார்க்க முடியாது. நோக்கங்களும் இலட்சியங்களும் மாறமாற, மாற்றங்களும் எல்லையற்று நீண்டு கொண்டே போகும். முடிவில் துன்பமும் விரக்தியுமே மிஞ்சும். இலட்சிய சமூகம் எப்பொழுதும் இலட்சியமானதாகவே இருப்பதால் அடையமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. மாற்றம் ஒருபொழுதும் ஓய்ந்துவிடுவதில்லை. மாற்றமுறாது எதுவும் இருப்பதில்லை. எனவே இலட்சிய சமூகத் திற்கான மாற்றமுறாத்திட்டம் என்பது அர்த்தமற்ற ஒன்றென பொப்பர் வாதிடுகிறார். சுதந்திரம் என்றால் என்ன? சமத்துவம் என்றால் என்ன? சனநாயகம் என்றால் என்ன? என்பது போன்ற வினாக்களுக்கு ஒரு பொழுதும் முடிவான பதிலைத் தரமுடியாது. அவ்வாறில்லாது விடை தரமுயன்றாலும் அவ்விடை சாராம்சவாதத்திற்கும் கற்பனாவாதத் திற்குமே இட்டுச்செல்லும். எனவே சமூகப் பிரச்சினைகளை அணுகும் பொழுது பரஸ்பர விமர்சனத்துடன் கூடிய வழிவகைகளைக் கண் டறிந்து செயற்படுத்துதல் வேண்டும். விஞ்ஞானத்தைப் போலவே அரசியலிலும் ஆட்சியாளர்களின் ஊகங்கள் பொய்யாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் விமர்சனத்தை வரவேற்றுச் செயற்படுத்துதல் வேண்டும்.
இறுதியாக வரலாறு பற்றி ஒரு குறிப்புடன் கால்பொப்பரின் சிந்தனைகள் பற்றிய அறிமுகத்தை நிறைவு செய்யலாம். 'திறந்த சமூகமும் அதன் எதிரிகளும்’ என்ற நூலின் இறுதியில் வரலாற்றுக்கு யாதேனும் பொருள் உண்டா என்ற வினாவிற்கு பொப்பர் விடை தருகின்றார். நாகரிகத்தின் வரலாறு, சமூகத்தின் அல்லது நாட்டின் முழுமையான வரலாறு என கூறப்படுவதை சுத்தமான அபத்தம் என பொப்பர் குறிப்பிடுகின்றார். பண்பாட்டுக் கூறுகள் பலவற்றின் வரலாறாக அதாவது அரசியல் வரலாறாக, சாதியின் வரலாறாக, சமயத்தின் வரலாறாக, வர்க்கங்களின் வரலாறாக, வரலாற்றைப் பலவகையில் எழுதலாம். அவை அனைத்தும் மெய்யான வரலாற்றின் நிரப்புக் கூறுகளாக இருப்பதுடன் வரலாற்றாசிரியர்களின் ஊகங் களாகவே இருக்கின்றன. கடந்தகாலம் இவ்வாறுதான் இருந்ததெனக் கூறுபவன் அக்காலம் பற்றிய தனது விளக்கத்தைத் தருகின்றானே

விஞ்ஞானத்தின் மெய்யியல் 59
ஒழிய உண்மையைக் கூறுபவனாக இருக்கமாட்டான். அவ்வாறு இருக்கவும் முடியாது.
விஞ்ஞான அறிவின் வரலாற்றுரீதியான வளர்ச்சி Gg5 TLDGio BFGAGófesör (Thomas Kuhn) épiög5GODGOT
‘விஞ்ஞானபுரட்சிகளின் அமைப்பு’ (The Structure of Scientific Revolutions) என்ற நூல் மூலம் இந்த நூற்றாண்டின் பின்னரைக் கூறில் புகழ்பெற்ற சிந்தனையாளர்களில் ஒருவரென்ற கணிப்பை தோமஸ் கூன் பெறுகிறார். 1962இல் முதன்முதலாக வெளிவந்த இந்நூலானது 1970இல் விரிவாக்கப்பட்ட பதிப்பாக வெளியிடப்பட்டது. இவ் விரண்டாம் பதிப்பில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் தெரிவிக்கப் பட்ட விமரிசனங்களிற்கான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளதுடன் பல மீள் பதிப்புகளையும் இந்நூல் கண்டது. அறிவின் வளர்ச்சி பற்றிப் பொதுவாகவும், விஞ்ஞான அறிவின் வளர்ச்சி பற்றிக் குறிப்பாகவும் ஆராய்ந்த தோமஸ் கூன், தன்னாய்விற்கு உரிய பொருளாக இயற்கை விஞ்ஞானத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டு அவ்வாய்விலிருந்து அறிவின் வளர்ச்சிபற்றிய பொதுத் தத்துவம் ஒன்றை உருவாக்கினார். இத்தத்துவம் காலப்போக்கில் இயற்கை விஞ்ஞான அறிவின் வளர்ச்சி பற்றிய கோட்பாடாக மட்டுமல்லாது, சமூகவியல், பொருளியல் போன்ற சமூக விஞ்ஞானங்களினதும் பண்பாடு, கலை வரலாறு, அழகியல் போன்ற ஆய்வுத்துறைகளினதும் அறிவுவளர்ச்சி பற்றிய பொதுத்தத்துவமாகவும் விஸ்தரிக்கப் பட்டது.
பொருளாதார விஞ்ஞானத்தில் தோமஸ் கூனின் சிந்தனைகள் புலனறிவாதத்திற்கு (Positivism) பிற்பட்ட முறையிலாகவும், சமூக வியலில் அறிவின் சமூகவியல் பற்றிய ஆய்வாகவும், கலை வர லாற்றினதும் அழகியலினதும் ஆய்விற்குரிய அடிப்படைத் தத்துவ மாகவும் (Meta-theory) அவ்வத்துறைசார் அறிஞர்களினால் சிற்சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, தோமஸ் கூனின் சிந்தனைகள் செல்வாக்குப் பெற்றிருப்பதானது, இவரது கருத்துக்களின் முக்கியத்துவத்தை புலப்படுத்தப் போதிய நியாயம் எனலாம்.
விஞ்ஞானத்தின் வரலாற்றை எத்தகைய முற்கற்பிதங்களுமின்றி ஆராய்வோமாயின், விஞ்ஞானம் பற்றிய எமது பொதுமனப்பதிவில்

Page 35
60 பிரவாதம்
ஓர் அடிப்படையான மாற்றம் ஏற்படுவதை அவதானிப்பதுடன் விஞ்ஞானப் புரட்சிகளின் அமைப்பு என்ற நூல் ஆரம்பமாகிறது. விஞ்ஞானிகள் சமூகம் தமக்கேயுரிய சிறப்பானதொழில்நுட்பத்தையும், தமக்கேயுரிய முறையியலையும் விருத்தி செய்துள்ளதென்றும், விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் ஒருவர் இத்தொழில் நுட்பங்களையும் முறையியலையும் பயன்படுத்தி தமது ஆய்வுகளைச் செய்யலாமென்றும், ஒவ்வொர் ஆய்வும், கண்டுபிடிப்பும் உண் மையைத் தேடும் பாதையின் மைற்கற்களாக விளங்குகின்றன வென்றும் விஞ்ஞானம் பற்றிய பொதுவான கருத்தொன்றுண்டு. இது மிகவும் தவறான மனப்பதிவாகுமென்று கூறுகிற தோமஸ் கூன், இவ்வபிப்பிராயத்தை உருவாக்குவதில் பாடநூல்கள் (Textbooks) பெரும்பங்கு வகிக்கிறன் என்று வாதிடுகிறார்.
விஞ்ஞானப் பாடநூல்கள் தாமெழுந்த காலத்துக் கொள்கை களையும், தொழில் நுட்பங்களையும், முறையிலையுமே விஞ் ஞானத்தின் இயல்பாக எடுத்துக் காட்டுகின்றன. விஞ்ஞானம் பற்றிய இத்தகைய மனப்பதிவானது ஒருநாட்டின் பண்பாடு பற்றி உல்லாசப் பயணிகளுக்குத் தரப்படும் குறிப்புகளிற் காணப்படுவதை ஒத்த மேலோட்டமான கருத்தோட்டமேயாகுமென கூன் வாதிடுகிறார். பாடநூல்கள் தாமெடுத்துக் கொண்ட விடயத்திற்கான விதிகள், கோட்பாடுகள், அவற்றிற்குரிய பரிசோதனைகள் ஆகியவற்றை அவற்றிற்கேயுரிய சிறப்பான உதாரணங்களுடன் விளக்கிச் செல்லும். இவை பிரதானமாக விஞ்ஞானிகள் சமூகத்தில் இணையத்தயாராகும் இளைய தலைமுறையினர்க்கான கல்விசார் நோக்கத்தைக் கொண்டி ருந்தாலும், விஞ்ஞானத்தின் வரலாறு புகட்டிய பாடங்கள் எதனையும் இந்நூல்களிற் காணமுடியாதிருப்பது முக்கிய குறைபாடாகும். இப்பாட நூலாசிரியர்களின் அபிப்பிராயப்படி விஞ்ஞானத்தின் வரலாறு என்பது நிராகரிக்கப்பட்ட கொள்கைகளின் வரலாறு ஆகும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றி இந்நூல்கள் குறிப்பிட்டாலும், அக்கண்டு பிடிப்புகளிற்காக விஞ்ஞானிகள் நடாத்திய போராட்டங்கள், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என எதுவும் இந்நூல்களில் தகுந்த முக்கியத்தவம் பெறுவதில்லை. இப்பாட நூல்கள் தமதாய்வுத் துறையில் கடந்த காலத்தில் காணப்பட்ட குழப்பநிலைகள் பற்றி எவ்வாறு எதுவும் பேசுவது இல்லையோ, அவ்வாறே அவ்வாய்வுத்

விஞ்ஞானத்தின் மெய்யியல் 6.
துறையில் நிகழ்காலத்திற் காணப்படும் குழப்ப நிலைகள் பற்றியும் குறிப்பிடுவது இல்லை. இதனால் மாணவர்களும் மற்றவர்களும் விஞ்ஞானம் பற்றி மிகத்தவறான கற்பிதத்தைக் கொண்டிருக்கின்றனர். விஞ்ஞான ஆய்வில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்கள் அது படிப் படியாக திரண்டு பெற்ற வளர்ச்சியினால் ஏற்பட்ட தொன்றல்ல. விஞ்ஞான ஆய்விலேற்பட்ட புரட்சிகளே அத்தகைய மாற்றங்களிற்கு காலாயமைந்தன என்று கூன் வாதிடுகிறார்.
விஞ்ஞானத்தின் வரலாற்றினூடாக அறிவின் வளர்ச்சிபற்றி ஆராய்ந்த தோமஸ் கூன், அவ்வளர்ச்சியை இருவேறு காலகட்டங் களாகப் பிரித்துப் பார்க்கிறார். அவை முறையே, விஞ்ஞானிகளின் சமூக உருவாக்கத்திற்கு முற்பட்டகாலம், விஞ்ஞானிகளின் சமூக உருவாக்கத்திற்குப் பிற்பட்டகாலம் எனப்படும். விஞ்ஞானிகளின் சமூக உருவாக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் இயற்கை பற்றி ஒன்றிற் கொன்று முரண்பாடான கொள்கைகள் நிலவின. விஞ்ஞான நோக்கல் பற்றியும், அதற்கான முறைகள் பற்றியும் இக்காலத்தில் மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டவர்களாக விஞ்ஞானிகள் காணப் பட்டனர். ஒன்றிற்கொன்று ஒத்திசையாத உலக நோக்கினைக் கொண்டி ருந்ததால் அவர்களிடையே உடன்பாடு காணமுடியவில்லை. பிர பஞ்சம் எத்தகைய பொருட்களால் ஆனது? அவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தாக்கம் புரிகின்றன? இத்தகைய பொருட்கள் பற்றி எத்தகைய கேள்விகளை வினவலாம்? இவை பற்றிய ஆய்வில் எத்தகைய கேள்விகளை வினவாலம்? இவை பற்றிய ஆய்வில் எத்தகைய முறையியலை, தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்? என்பது போன்ற வினாக்களிற்கு எல்லோர்க்கும் ஏற்புடைய விடைகளைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்தே விஞ்ஞானிகள் சமூகம் உருவாகிறது. இது இரண்டாவது காலகட்டமாகும். வெவ்வேறு ஆய்வுத் துறை களிலும் இத்தகைய உடன்பாடு வெவ்வேறு கால கட்டத்தில் ஏற் படுகிறது. விஞ்ஞானிகள் சமூகம் ஏற்றுக்கொண்ட பொது உடன் பாட்டை கட்டளைப்படிமம் என தோமஸ் கூன் அழைக்கிறார். விஞ்ஞானத்தின் ஆய்வுப்பொருள் குறித்ததொரு அடிப்படையான கொள்கையென கட்டளைப்படிமத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம். விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவானநம்பிக்கைகள்,

Page 36
62 பிரவாதம்
விழுமியங்கள், உத்திமுறைகள் ஆகியவற்றின் முழுமையான மொத்த வடிவமே கட்டளைப்படிவமென அழைக்கப்படுகிறது.
விஞ்ஞானிகளிடையே காணப்படும் பொது உடன்பாடு அவர் களை ஒரு சமூகமாக இயங்கவைப்பதுடன், அச்சமூகத்தில் இணைய விரும்பும் இளைய தலைமுறையினர்களுக்கான பாடநூல்களின் தோற்றத்திற்கும் வழியமைக்கிறது.
விஞ்ஞானத்தின் வரலாற்றை இருவேறு காலகட்டங்களாக வகுத்ததுடன், விஞ்ஞானிகள் ஒரு சமூகமாக எப்பொழுது இயங்கத் தொடங்குகிறார்கள் என்பதையும் தோமஸ் கூன் விளக்குகிறார். விஞ்ஞானிகள் சமூகத்தின் உருவாக்கம் விஞ்ஞானத்தில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஞ்ஞானத்தின் வரலாற்றுரீதியான வளர்ச்சியை ஆராய்ந்தபொழுது அவ் வளர்சியிலும் சாதாரணகாலம், புரட்சிக்காலம் என இரு கூறுகள் உள்ளடங்கியிருப்பதாக தோமஸ் கூன் எடுத்தக்காட்டுகிறார். சாதாரண காலத்தில் விஞ்ஞானம் கிடை வெட்டாக வளர்ச்சியடைகிறது. இக் காலத்தில் அது தன் ஆளுகைப் பரப்பை விசாலித்துச் செல்கிறது. புரட்சிக்காலத்தில் விஞ்ஞானம் குத்துவெட்டாக வளர்கிறது. இக்கால கட்ட அறிவுவளர்ச்சியை மேனோக்கிய பாய்ச்சல் எனலாம். அறிவு வளர்ச்சியின் மேனோக்கிய பாய்ச்சலினால் கட்டளைப்படிமத்தில் மாற்றமேற்படுகிறது. விஞ் ஞானத்தின் வரலாற்றில் கட்டளைப் படிம மாற்றங்கள் பல நிகழ்ந் துள்ளன. உதாரணமாக பெளதீகம் தொடர்பான இன்றைய பாட நூல்களில் ஒளியானது போட்டோன்கள் (Photons) என விளக்கப் படுகிறது. அதாவது குவாண்டம் மெக்கானிக்ஸ் (சக்திச் சொட்டுக் கொள்கை) பொருளாக, அலைப் பண்புடைய துகள்களாக ஒளியை விளக்குகிறது. இந்த விளக்கம் கடந்த அரை நூற்றாண்டுகளாகவே முன்மொழியப்பட்டது. இது மக்ஸ் பிளாங், ஐன்ஸ்ரைன் ஆகியோரின் ஆய்வின் பேறாக ஏற்பட்ட கட்டளைப் படிம மாற்றமாகும். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒளிபற்றி பிறிதொரு விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. யுங், பிறிஸ்நெல் ஆகியோரின் ஆய்வு களினால் பெறப்பட்ட ஒளி பற்றிய அலைக் கொள்கை அக்கால விளக்கமாக இருந்தது. ஒளி பற்றிய அலைக் கொள்கை என்ற கட்டளைப் படிமத்தில் இருந்து அலைகளாக்ச் செல்லும் துகள்கள்

விஞ்ஞானத்தின் மெய்யியல் 63
என்ற கட்டளைப் படிமத்திற்கு பெளதீகம் குத்து வெட்டான வளர்ச்சியை இருபதாம் நூற்றாண்டிலேயே பெற்றது.
ஒரு கட்டளைப் படிமத்திலிருந்து பிறிதொரு கட்டளைப் படி மத்திற்கு மாறுவதென்பது சடுதியாக நிகழ்வதில்லை. ஒரு நீண்ட செயல்முறைக் கூடாகவே இம்மாற்றம் நிகழ்கிறது. இதனைப் பின் வருமாறு விளக்கலாம்.
கட்டளைப்படிமம் -> சாதாரணகாலம் -> அசாதரணதோற்றப் பாடுகள் -> நெருக்கடி -> புரட்சி -> கட்டளைப்படிமம்
கட்டளைப்படிமம் ஒன்றிலிருந்து பிறிதொன்றிற்கு மாறுவதை புரட்சிக்காலமென்றும், இரண்டு கட்டளைப்படிமங்களிற்கு இடைப் பட்ட காலத்தை சாதாரண காலமென்றும் தோமஸ் கூன் அழைக்கிறார். எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் தரவுகளைத் தெரிவுசெய்தல், மதிப்பிடல், விமர்சித்தல் ஆகிய செயற்பாடுகள் மிகவும் இன்றியமை யாதவையாகும். இதற்கு ஆதாரமாக யாதேனுமொரு கோட்பாடும், அதற்கானதொரு முறையியல் அணுகுமுறையும் தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் சமூகம் எப்பொழுது ஒரு விஞ்ஞானக் கொள்கை யையும், அதற்கான முறையியல் ஒன்றையும் ஏற்றுக்கொள்கிறதோ, அக்கணத்திலிருந்து, அக்கொள்கையும் முறையியலும் ஒரு கட்ட ளைப் படிமமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது எனலாம்.
இவ்வாறு தோற்றம் பெற்ற கட்டளைப்படிமம் காலப்போக்கில் விஞ்ஞான ஆராய்ச்சியையும், அதன் செல்நெறிகளையுமே கட்டுப் படுத்துமளவிற்குப் பலம் பெற்றுவிடுகிறது. ஒரு கட்டளைப் படிமம் எத்துறை சார்ந்ததோ அத்துறை சார்ந்த எண்ணக் கருக்களிற்கு இறுக்க மானதும், புதியதுமான வரைவிலக்கணங்கள் விஞ்ஞானிகளால் தரப்படுகின்றன. விஞ்ஞானிகள் கழகங்களும், சிறப்புத்துறைசார் சஞ் சிகைகளும் ஆரம்பிக்கப்பட்டு பரஸ்பரம் தம் ஆய்வனுபவங் களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புகளும் கிட்டுகிறது. இதனால் ஒரு கட்டளைப்படிமத்தை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிக்கு எல்லா வற்றையும் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லாது போய்விடுகிறது. சகபாடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டதும், பயன் படுத்தப்பட்டதுமானவற்றைப் பயன்படுத்திதன்னாய்வைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனைப் பின்வரும் உதாரணத்தால் விளக்கலாம். 16ஆம் நூற்றாண்டிலிருந்து மின்னியல்

Page 37
64 பிரவாதம்
பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருந்தாலும், 18ஆம் நூற்றண்டின் நடுப் பகுதிவரை, இத்துறையில் உழைத்துவந்த விஞ்ஞானிகள் மத்தியில் அனைவருக்கும் உடன்பாடானதொரு கட்டளைப்படிமம் இருக்க வில்லை. 1740-1780 இடைப்படதொரு காலப்பகுதியிலேயே மின்னியலின் பொதுவான அடிப்படைகள் பற்றிய கருத்துடன்பாடு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இதுவரை காலமும் எதிர்நோக்கிய பலபிரச்சினைகளை மின்னியலாளர்கள் வெற்றிகரமாகத் தீர்த்ததுடன், புதிய பல கண்டுபிடிப்புகளையும் செய்தனர். இத்துறைசார் விஞ்ஞானிகள்தாமறிந்த தகவல்களை சஞ் சிகைகளினூடாக தமது சகபாடிகளிற்கு அறியத்தந்ததுடன், சகபாடி களின் ஆய்வுகளையும் தாமறிந்து பயன்பெறக் கூடியதாயிருந்தது. அவர்கள் ஏற்றுக்கொண்ட கட்டளைப்படிமம் அவர்கள் அனைவரை யும் ஒரு சமூகமாக இயங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஒரு கட்டளைப்படிமத்தைத் தொடர்ந்து வருகிற காலம் விஞ் ஞான அறிவு வளர்ச்சியில் சாதாரணகாலம் என தோமஸ் கூனினால் அழைக்கப்பட்டது. இக்காலத்தில் விஞ்ஞானம் தன் ஆளுகைப் பரப்பை கிடைவெட்டாக விசாலித்துக் கொண்டுசெல்கிறது. விஞ் ஞானிகள் புதிய பதியதுறைகளில் தாமேற்றுக்கொண்ட கட்டளைப் படிமத்தைப் பிரயோகித்துப் பார்ப்பதையே பிரதான இலட்சியமாகக் கொண்டு செயற்படுகின்றனர். புதிர்களைவிடுவித்தல் என்ற முறையிலேயே இக்கால விஞ்ஞானிகள் செயற்படுகின்றனரென்று தோமஸ் கூன் குறிப்பிடுகிறார்.
ஒரு கட்டளைப்படிமத்தை ஏற்றுக்கொண்ட விஞ்ஞானிகள் சமூகம், சாதாரண காலத்தில் தமதாய்வுத் துறையில் நிலவும் பிரச் சினைகளை அக்கட்டளைப் படிமத்தை ஆதாரமாகக் கொண்டே வரையறுத்துக் கொள்வர்; பிரச்சினைகளிற்னகான தீர்வையும் கண்டு பிடிக்க முயலுவர். இதனையே தோமஸ் கூன் புதிர்களை விடுவிக்கும் செயல்முறை எனக் குறிப்பிடுகிறார். இக்கால விஞ்ஞானிகள் தமது கட்டளைப் படிமத்தின் எல்லைகளிற்கு உட்படாத பிரச்சினைகளைப் பொறுத்த வரையில், ஒன்றில் அதனை பெளதீகவதீதப் பிரச்சினை எனக்கூறி நிராகரிக்க முயலுவர் அல்லது தம்மாய்வுத் துறைகளிற்கு அப்பாற்பட்டவையெனக் கருதி அவற்றை தட்டிக் கழித்து விடுவர்.

விஞ்ஞானத்தின் மெய்யியல் 65
இதனால் சாதாரண காலத்து விஞ்ஞான ஆராய்ச்சிகளை கட்டளைப் படிமமே வழிநடாத்துகிறதென கூன் வாதிடுகிறார்.
சாதாரண காலத்தில் விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கும் முறையிற் செயற்படுவதனால், இக்காலத்தில் பெறப்படும் விஞ்ஞான அறிவு திட்பமும், நுட்பமும் வாய்ந்தவகையிற் காணப்படுகிறது. முற்றிலும் பதிய தகவல்களையும் (நேர்வுகளையும்), கோட்பாடு களையும் இலக்காகக் கொண்டு விஞ்ஞானிகள் இக்காலத்திற் செயற்படுவதில்லை. அவ்வாறில்லாது அசாதாரணமாக யாதேனும் இருப்பினும் கூட எவரும் அதனைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் கிடைவெட்டான வளர்ச்சி ஒரெல்லைக்கப்பால் தேக்கமடையவே செய்யும். தேக்கமடையத் தொடங்குதல் ஒரு கட்டளைப்படிமம் பலவீனமடைந்து வருகிறதென்பதையே சுட்டும். ஒரு கட்டளைப் படிமம் பலவீனமடைந்த நிலையில் இதுவரை அசாதாரண தோற்றப் பாடுகளாகக் கருதிப் புறக்கணிக்கப்பட்டவைகள்பால் விஞ்ஞானிகள் நாட்டம் கொள்வர். இதனாற் பெறப்படும் புதிய தகவல்களிற்கு ஏற்ப கட்டளைப்படிமத்தைத்திருத்தியமைக்க முற்படுவர். அல்லது பெறப் பட்டதகவல்களையும், அவதானிக்கப்பட்ட நேர்வுகளையும் முற்றிலும் புதிய பார்வையில் அணுக முற்படுவர். இந்நிலைமை ஏலவே ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டளைப்படிமத்தில் நெருக்கடிகளைத் தோற்று விக்கும். ஒரு கட்டளைப்படிமத்தில் எழுகின்ற நெருக்கடிநிலைமை அக்கட்டளைப்படிமத்தில் பாரியமாற்றங்கள் ஏற்பட வழியமைக்கும். பலவிதமான ஊகங்களும், புதிய கொள்கைகளும் விஞ்ஞானிகளால் முன்மொழியப்படும். அசாதாரண தோற்றப்பாடுகள் தீவிரநெருக்கடி நிலையைத் தோற்றுவித்து ஈற்றில் ஒரு புதிய கட்டளைப் படிமத்தின் எழுச்சிக்கு வழியமைக்கும். ஒட்சிசனின்கண்டுபிடிப்புபுளொயிஸ்தன் கொள்கையில் ஏற்படுத்திய நெருக்கடியை இங்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம். வெப்பவியக்கவியல் (Thermodynamics) என்ற கட்டளைப்படிமம், 19ஆம் நூற்றாண்டில் பெளதீக விஞ்ஞானத்தில் காணப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகள் இரண்டு தம்முள் முரண்பட்டுக் கொண்டதைத் தொடர்ந்தே உருவாக்கப்பட்டது. கதிர் வீச்சு, ஒளியின் விளைவு என்பன தொடர்பாக விஞ்ஞானிகள் எதிர் கொண்ட பிரச்சினைகளே சக்திச் சொட்டுக்கொள்கை என்ற புதிய
கட்டளைப் படிமத்தின் தோற்றத்திற்கு காலாயிருந்த தென்பதையும்

Page 38
66 பிரவாதம்
இங்கு மனங்கொள்ளுதல் தகும். இவ்வாறு அசாதாரண தோற்றப் பாடுகள் ஒரு கட்டளைப் படிமத்தில் பரிமாற்றங்களை வேண்டி நிற்பதுடன் ஏலவேயுள்ள நம்பிக்கைகளையும், செயற்பாடுகளையும் நிராகரித்து பிறிதொரு அறிவின் தளத்திற்கு ஆய்வுகளை நகர்த்தும். கொப்பநிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்ரைன் ஆகியோர் நிகழ்த்திய சாதனைகள் விஞ்ஞானத்தின் வரலாற்றில் ஏற்பட்ட புரட்சிகர நகர்வுகளிற்கு சிறந்த உதாரணங்களாகும்.
சாதாரண காலத்து விஞ்ஞான அணுகுமுறை புதிய கொள்கையின் எழுச்சியினால் மாற்றப்பட வேண்டியதாகிறது. புதிர்களை விடுவிக்க முடியாத நிலையில், ஏலவே பின்பற்றப்பட்டு வந்த விஞ்ஞான விதிகளிற்குப்பதிலாக புதிய விதிகளைத் தேடும் நோக்கில் ஆய்வுகள் நிகழும். புவிமையக்கொள்கை என்ற தொலமியின் கட்டளைப் படிமத்திலிருந்து சூரியமையக் கொள்கை என்ற கொப்பநிக்கஸின் கட்டளைப்படிமத்திற்கு வானியல் பெற்ற நகர்ச்சியை உதாரணத்திற்கு எடுத்துக்காட்டலாம். கட்டளைப்படிமத்தின் மாற்ற காலத்தில் தொலமியின் கட்டளைப்படிமம் எதிர்நோக்கிய நெருக்கடிநிலையை பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐந்தாம் அல்போன்ஸோ, பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொபனிக்கஸின் சகபாடியான டொமினிக்கோ நொவாரா ஆகியோரின் கூற்றுகள் நன்கு புலப் படுத்தும். பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு முன்பு இறைவன் என்னைக் கலந்தாலோசித்திருப்பாராயின் அவருக்கு நல்ல பல ஆலோசனைகள் கிடைத்திருக்கும் என அல்போன்ஸோ குறிப்பிட்டார். தொலமியின் வானியற் கருத்துக்கள் தவறானவையென டொமினிக்கோ நொவாரா எழுதவேண்டி ஏற்பட்டது. இவ்வாறு பதினாறாம் நூற்றாண்டுவரை வானியலில் நிலவிய நெருக்கடிநிலைமை புதியதொரு கட்டளைப் படிமத்தைத் தேடவேண்டியநிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதனைக் கண்டுபிடிப்பதில் கொப்பநிக்கஸ் வெற்றி பெற்றார். கட்டளைப் படிமம் எதுவுமற்ற நிலையில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இடமில்லை யென்பதால் புதியதொரு கட்டளைப்படிமத்தின் துணையின்றி ஏலவேயுள்ள கட்டளைப்படிமத்தை நிராகரிப்பதென்பது விஞ்ஞான ஆராய்ச்சியையே நிராகரிப்பதை ஒக்கும். புதியதொரு கட்டளைப் படிமத்தின் கண்டுபிடிப்பபைத் தொடர்ந்தே பழைய கட்டளைப் படிமம் நிராகரிக்கப்படும். இவரது அபிப்பிராயப்படி ஒருபொழுதும்

விஞ்ஞானத்தின் மெய்யியல் 67
நிராகரிக்கப்பட முடியாத கட்டளைப்படிமமென ஒன்றிருக்க
(ԼՔԼգ-ԱմՈ51.
விஞ்ஞான ஆராய்ச்சித் துறையில் எழுகிற எல்லாப் பிரச்சினை களையும் ஒரு கட்டளைப்படிமம் தீர்த்துவிட முடியாது. அவ் வாறில்லாது, ஒரு ஆய்வுத்துறை சார்ந்த எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு கட்டளைப் படிமம் தீர்க்கிறதெனக் கொண்டால், அத்தகைய கட்டளைப் படிமம் மிக விரைவிலேயே பிறவிஞ்ஞான ஆய்வுத் துறைகளிற்கான கருவியாக மாற்றப்பட்டு விடுமெனக் குறிப்பிடு கிறார். உதாரணமாக, ஒரு காலத்தில் ஒளியியல் சார்ந்த பிரச்சினை களிற்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கேத்திரகணித ஒளியியல் (Geometric Optics) இன்று பொறியியற் துறையின் கருவியாகப் பயன் படுத்துவதை எடுத்துக்காட்டலாம்.
ஒரு கட்டளைப்படிமத்தில் எழுகின்ற நெருக்கடிநிலை அக் கட்டளைப்படிமத்தின் சாதாரணகால வளர்ச்சியை தேக்கமடையச் செய்கிறதென்றும், இத்தேக்கநிலை புதிய கட்டளைப்படிமத்தின் எழுச்சியுடன் நீங்குகிறதென்றும் ஏலவே குறிப்பிட்டோம். புதிய கட்டளைப்படிமத்தின் எழுச்சி, பழைய மரபுகளை உடைத்தெறிவ துடன், புதிய விதிகளையும், புதிய மரபுகளையும் முன்மொழிகிறது. இவ்வாறு புதிய கட்டளைப்படிமத்தின் தோற்றமும் புரட்சியுடன் ஆரம்பமாகிறது என்கிறார். அறிவு வளர்ச்சியில் நிகழும் புரட்சி, தன்னியல்பில் அரசியலில் நிகழும் புரட்சிகர மாற்றங்களை ஒத்த தென்பது இவரின் நிலைப்பாடு. ஒரு அரசியல் நிறுவனம் சமூக அங்கத்தினரிடையே அதிருப்தியைத் தோற்றுவித்து காலப்போக்கில் எவ்வாறு சமுதாய மீளமைப்பிற்கும், அரசியல் மாற்றங்களிற்கும் இட்டுச்செல்கிறதோ, அவ்வாறேதான் விஞ்ஞான அறிவு வளர்ச்சி யிலும் நிகழ்கிறது என்கிறார். எவ்வாறு அரசியலில் மாற்றத்தை விரும்பாத பழமைவாதிகள் காணப்படுவரோ அவ்வாறே விஞ்ஞானத் திலும் பழமைவாதிகள் காணப்படுவர். அரசியலில் மாற்றத்தை புதியதலைமுறையினர் முன்னெடுத்துச் செல்வது போலவே விஞ் ஞானத்திலும் கட்டளைப்படிம மாற்றத்தை இளைய தலைமுறை யினரான விஞ்ஞானிகளே முன்னெடுத்துச் செல்வர்.
கட்டளைப்படிமத்தில் ஏற்படுகின்ற மாற்றம் விஞ்ஞானிகளின் உலக நோக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை காலமும்

Page 39
68 பிரவாதம்
ஏற்புடையதென அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞான அறிவு அனைத்தும் புதிய உலகநோக்கின் அடிப்படையில் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டு புதிய ஒழுங்கு ஸ்தாபிதமாகிறது. புதிய ஒழுங்கொன்றின் ஸ்தாபிதத்தைத் தொடர்ந்து பழைய பாடநூல்கள் காலாவதியாகி விட, அவற்றின் இடத்தைப் புதிய நூல்கள் நிரப்புகின்றன. விஞ் ஞானப் புரட்சியின் அறுவடையாகவே இவை மீண்டும் எழுதப்பட வேண்டியனவாயுள்ளனவென தோமஸ் கூன் வாதிடுகிறார். புதிய கட்டளைப்படிமத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் இப் பாட நூல்கள் தொடர்ந்து வருகிற காலத்து விஞ்ஞான வளர்ச்சிக்கு முற்றிலும் புதிய அடிப்படைகளைத் தருகின்றன.
இவ்வாறு கட்டளைப்படிமங்களின் மாற்றங்களினூடாக வளர்ச்சி பெற்று வருகிற அறிவின் வளர்ச்சியையே விஞ்ஞான அறிவின் பரிணாம வளர்ச்சியாக தோமஸ் கூன் விளக்குகிறார். அறிவின் இப் பரிணாமம் நோக்குக்கொள்கை (Teleological) யினடிப்படையில் பெறப்படும் வளர்ச்சி அல்ல. இது இயற்கையின் தெரிவு என்ற விதியின் அடிப்படையிலமைந்த டார்வினின் பரிணாமக் கொள் கையை ஒத்தது. டார்வினுக்கு முன்னரேயே லாமார்க், ஸ்பென்ஸர் மற்றும் ஜேர்மனியச் சிந்தனையாளர்கள் பரிணாமம் பற்றிச் சிந்தித் துள்ளன ரெனினும், இவர்களது கொள்கைகளனைத்தும், நோக்க இயற்திட்டம் ஒன்றினடிப்படையிலேயே விபரிக்கப்பட்டன. மனிதனும் ஏனைய உயிர்களும் ஏதோவொரு நோக்கத்தை நிறைவு செய்யும் வண்ணமே பரிணாம முறுகின்றனவென்று இவர்கள் கருதினார்கள்.
ஆனால் இறைவனோ அல்லது இயற்கையோ கற்பித்த நோக் கத்தை நிறைவு செய்யும் வகையில் உயிர்கள் பரிணாமமுறுவதில்லை. மாறாக, சூழலிற்கேற்பத் தம்மை இசைவாக்கும் இயற்கையின் தெரிவினாலேயே பரிணாமம் உறுவதாக டார்வின் குறிப்பிட்டார். இவ்வாறே அறிவின் வளர்ச்சியும் விஞ்ஞானப் புரட்சிகளினூடாக பரிணாமமுறுகிறது. டார்வின் கூறியதுபோல, உயிரியின் பரிணாமம் எத்தகைய நோக்கங்களுமின்றி எவ்வாறு நடைப்ெறுகிறதோ, அவ்வாறே எத்தகைய இலக்கையும் நோக்கி விஞ்ஞான அறிவுநகர்ந்து செல்வதில்லை. சென்றகாலத்திலும் பார்க்க மனிதனின்அறிவு இன்று உண்மைக்கு அண்மித்துள்ளதென்று மட்டும் கூறலாமென்பது தோமஸ் கூனின் நிலைப்பாடாகும்.

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம்*
ஆட்சி அதிகாரம் உடையோரைக் குறிக்கும் சங்க காலத்துச் சொற்களை ஆதாரமாகக் கொண்டு அக்காலத்து அரச உருவாக்கம் பற்றிய பூர்வாங்க உசாவல்
கா. சிவத்தம்பி
அரசு உருவாக்கம் குறித்த பிரச்சினைகள் பற்றிய நன்கறியப்பட்ட படைப்புகள் (மார்ட்டின் ஹெச் பிரைடு 1960, கிளாசன் மற்றும் ஸகால்னிக் 1978, ரொமீலாதபார் 1984, ஹிண்டஸ் மற்றும் ஹிர்ஸ்ட் 1979, கிரடர் 1968) கையளித்துள்ள கருத்தாக்கம் மற்றும் முறையியல் அடிப்படையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் மிக முக்கியமான சான்றாதாரங்களைத் தொகுத்து வகைப்படுத்தி, இயன்றளவு கவன மாகப் பரிசீலித்து, ஒப்பிட்டு, அவற்றிற்கிடையே வேறுபாடுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து, பின் காரணக்காரிய முறையில் சான்றுகளை இயைபுபடுத்திச் சிந்திக்க இக்கட்டுரையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், அரசு உருவாவதற்கு வழிவகை செய்த முனைப்பான பண்புகளை இனம் பிரித்துக் காட்டவும் முயல்கின்றது. பண்டைய தமிழகத்தின் சமூக உருவாக்க வரலாறு குறித்து ஒளிபாய்ச்சத்தக்க பெரும் படைப்பு எதுவும் வெளிவராத சூழ்நிலையில் இவ்வாய்வு அதுபற்றிய ஆழமான பரிசோதனைகள்
* ‘பண்டைத்தமிழர் சமூகம்: வரலாற்றுப்புரிதலை நோக்கி. (நியு செஞ்சுரிபுக் ஹவுஸ், சென்னை, 2010) என்ற நூலின் இரண்டாவது அத்தியாயமாக அமையும் கட்டுரை இங்கு நன்றியுடன் பிரசுரமாகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள மூலக்கட்டுரையைத் தமிழாக்கம் செய்தவர் செ. போத்திரெட்டி,

Page 40
70 பிரவாதம்
மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுகினறது. “அரசு’ எனும் பதம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் ஏற்கனவே நிலவும் உறவுநிலைகளைச் சுட்டுவதாகவும், அதிகாரம் (Power), அதிகார உரிமைப்பாடு (authority), வலு நீதி (Force), சொத்து மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாகவும் அமையும் (கிளாசன் மற்றும் ஸ்கால்னிக்). இம்முடிபுகள் தாம் சரி என்று அறுதியிட்டுக் கூறமுடியாத ஒரு புலமைநிலை இக்கட்டுரைக்குள் தொக்குநிற்கின்றது ஆயினும், இவ்விடயம் பற்றி மேலும் தீர்க்கமாகச் சிந்திப்பதற்கு இம்முயற்சி உதவ வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இது மேற்கொள்ளப்படுகின்றது.
ஆசிய உற்பத்தி முறை மற்றும் கூறுபாட்டு அரசமைப்பு முறை பற்றிக் குறிப்பிடத்தக்க விவாதங்கள் நிகழ்த்தக் கூடிய வகையில் பி.ஸ்டெயின் (1978), கேத்தலின் காஃப் (198), கரஷிமா (1984) ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு சோழர் காலம் மற்றும் சோழர் காலத்திற்குப் பிற்பட்ட அரசியல் குறித்துப் பயனுள்ள ஆய்வுகள் வெளிவந்துள்ளமை அனைவரும் அறிந்ததே, இருந்த போதிலும், பல்லவர் காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் அரசமைப்பின் பண்புகள் உருவாகிய முறைமை/முறைமைகள் பற்றி வரலாறெழு தியல் போக்கில் குறிக்கத்தக்க ஆய்வு எதுவும் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை (பி.ஸ்டெயின் 1984, 1971: சிவத்தம்பி 1971). வரலாறெழுதியற் போக்கு குறித்த அவர்தம் புரிந்துணர்வு காரணமாக இதுவரை நன்கறியப்பட்ட பழந்தமிழ்நாட்டு வரலாற்று நூல்களில் இத்தகைய ஆய்வு மேற்கொள்வதற்கான தேவை அவர்களுக்கு இருக்க வில்லை. அவர்களைப் பொறுத்த அளவில் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கக் கால நூற்றாண்டுகளிலும் மற்றும் அதற்கு முன்னருமுள்ள காலப்பகுதியில் கூடத் தென்னிந்தியாவில் சங்ககாலம் என்று அழைக் கப்படும் காலப்பகுதியிலேயே நிறுவனமயப்பட்ட அரசு ஆட்சிமுறை நிலைபெற்றுவிட்டது என்றே கருதினர்.
வரலாறு குறித்து மேலும் ஆய்வு செய்வதற்கு அசோகனுடைய கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்திருப்பதும், மெகஸ்தனீஸ் இந்நாடுகளைப் பற்றிக் குறிப் பிட்டிருப்பதுமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது (நீலகண்ட சாஸ்திரி 1955, 1963,1976). சங்க கால அரசியல் குறித்து வினாக்களை

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 71
எழுப்பிக் குறிப்பாக ஆராய்ந்த ஆய்வும், குறிப்பிட்ட இக்காலப் பகுதியில் அரசதிகாரத்தின் பரிணாம வளர்ச்சி முறையை ஆராய வில்லை. மாறாக, சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பெறும் அரசும் மற்றும் சமூக வாழ்வும் பக்திக் காலத்தின் தோற்றம் வரை (7 ஆம் நூற்றாண்டு வரை) எவ்வித மாறுதலும் இன்றித் தமிழகத்தில் தொடர்வதாகக் கொண்டது. (சுப்பிரமணியம் 1980, ப, 80 சங்ககாலம் கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே தொடங்கு வதாக அவர் எடுத்துக் கொண்டார்.) அத்தகைய ஊகம் வரலாற்றின் அசைவியக்கத்தை மறுதலிப்பதாகும்.
சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய தொகைநூல்களில் முன்னதில் திருமுருகாற்றுப்படைநீங்கலா கவும், பின்னதில் கலித்தொகை, பரிபாடல் நீங்கலாகவும் உள்ள இலக்கியங்களில் கூறப்படும் அரசதிகார வளர்ச்சி முறையை வரை யறுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். (சங்க காலம் ஏறத்தாழ கி.மு. 200 தொடக்கம் கி.பி. 250 முடிய).
இக்கட்டுரை அரசு உருவாக்கம் குறித்த வினாவினை எழுப்பி, அதற்கு விடை காணும் முதன் முயற்சியாதலின் இவ்விலக்கியங் களில் உள்ள செய்திகளைத் திரட்டித் தொகுப்பதோடு, இவ்விலக் கியத் தொகுப்புகளில் ஆட்சியமைப்பு முறை குறித்து வழங்கும் தொடர்களையும் ஒழுங்கிணைக்க வேண்டியது மிகவும் அவசிய மானதாகும். இத்தகைய பணியை மேற்கொள்ளுகையில், எக் கோட்பாட்டின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுகின்றது என்பதும் சுட்டிக்காட்டப் பெறுவது அவசியமாகின்றது.
2
ரொமீலாதாபர் கூறுவது போன்று, “அரசின் மேற்கிளம்புகை என்பது, சமூக வரலாற்றில் அரசு, அது தான் தோன்றுவதன் காரணமாக அச் சமூகத்தில் குணமாறுதலை ஏற்படுத்தி, ஒன்றோடொன்று தொடர் புடைய பல மாற்றங்களை வெவ்வேறு நிலைகளில் ஏற்படுத்துவது”. அரசு இல்லா நிலையிலிருந்து, அரசை ஒத்த நிறுவனங்கள் அதற்கு மேல் இறுதியாக அங்கபூரணமாக அரசு உண்டாக்கநிலைக்கு வருவ தென்பது மாறுகின்ற நிலைகளினூடாகவே வரும். இந்தப் படிப்

Page 41
72 பிரவாதம்
படியான மாற்றம், அந்தச் சாகியத்தின் (Community) தனித்துவமான தேவைகளுக்கான பதில் குறிகளாகவே கிளம்பும், இது அச்சாகியத் தினருடைய சமூக உறவுகளின், அசைவியக்கங்களின் ஊடாகவே மேற்கிளம்பும். இந்த நடைமுறை செயல்நிலைப்படும் பொழுது அந்தக் குழுமம் படிநிலைப்பட்ட வளர்ச்சியைப் பெற்று நிறுவன மயப்பட்ட அரசு அமைப்பினைத் தனக்கென ஈட்டிக் கொள்ளும். அத்தகைய ஒரு முயற்சி எந்த அளவுக்கு ஒரு அரசியல் வரலாற்று உசாவலாக அமைகிறதோ அதே அளவுக்குச் சமூகப் பொருளாதார அம்சங்கள் குறித்த தேடுதல்சார் கண்டறிகையாகவும் அமையும்.
தொழிற்பட்டு நின்ற உற்பத்திமுறைமை/முறைமைகள் யாவை என்பதையும் அவை அவற்றினால் தக்க வைக்கப் பெற்றவையும், அவற்றுக்குத்தளமாக அமைந்ததுமான சமூக உருவாக்கத்தை இனங் காணுவதே இம் முயற்சியின் பிரதான நோக்கமாகையால், கண்டிப்பு முறைப்பட்ட ஒரு சமூக அரசியல் பண்பு கொண்ட, ஒர் எண்ணக்கரு நிலைப்பட்ட கருவியைப் பயன்படுத்தலே சரியான முறையாகும். இத்தகைய முயற்சிக்கான கொள்கையாக்கக் கட்டமைவுகளைத் தருவதற்கு மானிடவியல், சமூகவியல், வரலாறு, அரசியல் ஆகிய வற்றின் நல்லிணைவு வழிவகுத்துள்ளது.
மார்ட்டின் பிரைடு கூறியது போன்று (1960,1967) அடுக்கமைவு களின் வளர்ச்சி காரணமாக சமூகம் அரச அமைப்பை வந்தடைகிறது. வயது,பால், படிநிலை ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பத்தக்க மதிப்பு மிகுந்த பதவிகள், அத்தகைய சமஉரிமையுடைய சமூக அமைப்புகளில் தோன்றுவதற்கானநிலை இருந்திருத்தல் வேண்டும் என்ற ஒரு ஊகநிலையை அவர் முன்வைக்கிறார். பெரும்பாலும், இச்சமூகங்கள் அனைத்தும் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் ஆகிய அடிப்படைநிலைகளைக் கொண்டவையாகவே இருக்கும். இச்சமூகங்கள் பெருமளவு உணவுச் சேமிப்புத் தருகின்ற குறிப்பிடத்தக்க அறுவடைக்காலங்கள் அற்றவையாகும். சமத்துவத் தன்மையுள்ள சமூகங்கள் ஒன்றுக்கொன்று உதவும் பொருளாதார அமைப்புகளாகவே செயல்பட்டன. சமவுரிமை கொண்டிருந்த இத்தகைய சமூகங்களில், வளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவேனும் மீள்வழங்குகை (redistribution) செய்யப்பட்டிருக்கும். அதன் எளிமை நிலையில் அம்மீள் வழங்குகை குடும்ப மட்டத்தினுள் நடந்திருத்தல்

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 73
வேண்டும். விரிந்த நிலையில் விஸ்தரிக்கப்பட்ட குடும்பம் முழு மைக்கும் அம்மீள் வழங்குகை செய்யப்பட்டிருக்கலாம். அத்தகைய கருவிதை நிலையில் நடைபெறும் மீள் வழங்குகையில் அக்குடும்பத் திலுள்ள வயதால் மிக மூத்த பெண்மணியே ஜீவாதாரமான பாகத்தை வகிப்பாள்.
சமூகங்கள் அளவால் பெருகத் தொடங்கி வரன்முறையான நிலைபேறுடமையைப் பெறத் தொடங்கியதும் இம்மீள்வழங்குகைக் கான சமூகம் ஐதீக நிலைப்பட்ட ஒரு முன்னோரைக் கொண்டதாய் உறவுமுறை நன்கு விஸ்தரிக்கப்பட்டு வரன்முறையான ஒருங்குபடு குழுமக் கூறுகளாய் (band) அமையும். வழிவழிப்பட்ட உரிமைப்பேறு உருவாகின்றபோது, குறிப்பிட்ட முன்னோருடனான குடிவழி நெருக்கம் முனைப்புப் பெறுகிறது. இத்தகைய ஒரு நிலையால் வரிசைப்பாடு (ranking) உண்டாகிறது. (எல்மர் எஸ்.மில்லர் மற்றும் சார்லஸ், ஏ.வெயிட்ஸ் 1979) -
அத்தகைய வகைமாதிரியான வரிசைசார் சமூகத்தில் சுரண்டலதி காரம் உள்ள பொருளியல் அதிகாரமும் இருக்காது, அது மாத்திர மல்லாது உண்மையான அரசியல் அதிகாரமும் இருக்காது. இத்தகைய அமைப்பில் நடுவண் நிலை பெறுபவர் முன்னர் குறிப்பிட்ட கரு விதை நிலையில் மீள்வழங்குகைக்குப் பொறுப்பாக உள்ளவரை ஒத்தவராகவே இருப்பர். இது ஆச்சரியப்படத்தக்க ஒன்றன்று. ஏனெனில், வகை மாதிரியான வரிசை நிலைச் சமூகத்தில் உறவுக் குழுமத்தின் விஸ்தரிப்பு என்பது அந்த உறவுக் குழுமத்தின் ஒரு இயல்பான விரிவேயாகும். அத்துடன், ஏற்கனவே தெரியப்பட்டிருந்த உறவுமுறை உரிமைகளினதும் கடப்பாடுகளினதும் விஸ்தரிப்பே யாகும். முன்னேறிய வேடுவச் சமூகத்திலோ, உணவைச் சேகரிக்கும் சமூகத்திலோ, அன்றேல் எளிமை நிலைப்பட்ட விவசாயச் சமூகத் திலோமீள்வழங்குகை முறைமையின் உயர்அச்சாணியாக இருப்பவர் எந்த அளவுக்கு அதனைக் கொண்டு நடத்துபவராக இருப்பாரோ அந்த அளவுக்கே அதனால் பாதிக்கப்படுபவராகவும் இருப்பார். அவருடைய பிரதான செயற்பாடு சேகரிப்பதே அல்லாமல் அடித்துப் பறிப்பதன்று. அவர் பணி, கிடைத்ததை மற்றையோருக்கு வழங் குவதே, தானே நுகர்வதன்று. ஆள்நிலைப்பட்ட திரட்டுதலுக்கும் விநியோகக் கடப்பாட்டுக்கும் இடையே உள்ள முரண்பாட்டில்

Page 42
74 பிரவாதம்
முன்னதே பாதிப்புறும். வேறுவிதமாய் இருக்குமாயின், அவர் பதுக்கல் மற்றும் சுயநலவாதியாகக் குற்றம் சுமத்தப்படுவார். சமூகத்தில் அவருடைய தலைமைத் தகுதி தாழ்ந்துவிடும். அதன் காரணமாக, அந்த ஒருங்கிணைப்பே இடையூறுக்குள்ளாகி, அத்தகைய நிலைமை பொறுத்துக்கொள்ள இயலாததாகிவிடும். -
அதன் பொருளாதார அரசியல் துறைகளில் சம உரிமை அம்சங் கள் வலுவுள்ளதாகக் காணப்படுவதுண்டு. எனினும், அச்சமூகத்தில் தோன்றி வளரும் சிறப்புப் பாவிப்புகளும் வைபவறிலைச் செயற் பாடுகளும் அதனுள்ளே வேறுபாடுகளை வளர்க்கத் தொடங்கும். கட்டளை பிறப்பிக்கும் அதிகாரங்கள் அற்ற பிரதானிகள் பற்றியும் அச்சமூகத்திலேயே ஏழைகளாக உள்ளவர்கள் சிலரைக் கொண்ட ஆளும் வர்க்கத்தினரைப் பற்றியும் இலக்கியங்களில் நிறையக் குறிப் புக்கள் காணப்படுகின்றன. எனினும் மீள் வழங்குகை கடமையைச் செய்யும் நடுவண் பதவியினர் அப்பதவிக்கான சில அலங்காரச் சின்னங்களை உடையவர்களாகவே இருப்பர். இவர்கள் இருக்கை யில் அமர்வர், பெரிய வீடுகளில் வசிப்பர். அயலவர்களால் கலந் தாலோசிக்கப்படுவர். அவர்களுடைய மீள் வழங்குகைப் பங்கேற்பு, தன்னிச்சையாகவே சமூகத்தின் சமய வாழ்விலும் அவர்களை முன்னி லைக்குக் கொண்டுவந்து விட்டுவிடுகிறது. மரபுவழிக் குலத்தலைவர் அல்லது இரத்த இனஉறவுத் தலைவர் என்ற காரணத்தாலும் அவர் களுக்கு அத்தலைமையிடம் கிட்டிவிடுகிறது.
உள்ளார்ந்தோஅல்லது வெளிப்படையாகவோ பொருளாதாரத்தைச் சார்ந்தமையும் தகுதி வேறுபாடு, இராணுவத் தலைமைத் தகுதியோடு சேர்ந்து கொள்ளும்போது, வரிசை வேறுபாடுகள் நிலைபெற்று நிறுவனமயப்படுகின்றன. தகுதிப்பாடுடைய சமூக அமைப்புகளில் சமூகத் தகுதி என்பது தொடக்கத்தில் வைபவ முறைமை முக்கியத் துவம் உடையதாய்த் தோன்றிப் பின்னர் அதனை உடையோருக்குச் சமூகப் பயன் தருவதாக மாறுகிறது. சமூகத் தளப்பிரிநிலையில் ஏற்படும் இம்மாற்றம் எளிதாகத் திருத்தி அமைக்கக் கூடியதன்று. இத்தகைய தளப்பிரிநிலை அமைப்பில் சிலர் மற்றவர்களை விட உயர்ந்த நிலை பெறுகின்றனர். சமூகத் தளப்பிரிநிலை அமைப்பில் நிலவும் உறவுமுறை காரணமாகச் சமூகத்தில் சிலர் அமைவுசார் முக்கியத்துவமுடைய வளங்களைத் தங்குதடையின்றிப் பெறுவதும்,

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 75
வேறு சிலர் அடிப்படையான அந்த மூல வளங்களை அடைவதற்குப் பல தடைகளைச் சந்திப்பதும் தவிர்க்க இயலாததாகிறது.
தளப்பிரிநிலை முறையின் இயக்கம் தலைகீழான பல மாறுதல் களை ஏற்படுத்திச் சமூகத்தை மேலும் மாறுதலுக்குட்படுத்தும். பண்பாட்டுக்குள் உட்படுகையாலும் (enculturation), அகநிலைப்பட்ட ஏற்பிணக்கத்தாலும் (sanctions), மற்றும் ஏளன இழிவுக்கு அஞ்சி முன்னர் இருந்த சமூகக் கட்டுப்பாட்டு ஒழுங்கு, இப்பொழுது
வெளிப்படையாக அறிவிக்கப்படும். கொள்கைகள், அதனை நடை முறைப்படுத்தி விதிமுறையாக உண்டாக்கப்பெற்ற காவல் அதிகாரத் தால் வழிநடத்தப்படும். இவ்வாறான அமைப்புக்களின் தோற்றத் தாலும் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்புக்களின் தோற்றங் காரண மாகவும் இரத்த உறவுக் குழுத் தலைமையிலிருந்து, குறிப்பிட்ட ஆள்நிலைத் தலைமை படிப்படியாகத் தோன்றுகிறது. அரசோடு இணைந்த பல உள் இணைவான வடிவங்களும் தோன்றுகின்றன.
தள அமைவுப் பகுப்பினைச் செய்வதற்கான அடிப்படைக் காரணம் செல்வ வேறுபாடு அல்ல. அது மூலவளங்களுக்கான, இரண்டு வகைப் பெறுவழிகளைப் பற்றியதாகும். இதில் ஒன்று சலுகை சார்ந்தது, தடுப்பு முறை அற்றது. மற்றது, தடுப்பு முறைகள் உள்ளது. அத்தடுப்பு முறைகள் வரி கொடுப்பன போன்ற பல்வேறு சிக்கற்பாடுடைய அம்சங்களைக் கொண்டன. இத்தகைய சூழல் நிலவுவது சுரண்டலுக்கு வழிவகுக்கும். இது மிக எளிய அடிமை வேலையாகவோ அல்லது உட்சிக்கல் கொண்ட தொழிற்பிரிவினையை வகுத்தளிக்கும்திருக்குமறுக்கானவர்க்கமுறைமையாகவோஇருக்கும். தன் அமைவு வளர்ச்சிப் போக்கு, இரத்த உறவுடைய இனக்குழு பகுதியும் இணைந்து உருவாகும் புதிய சமூக அமைப்பைத் தோற்று விக்கிறது. இச்சமூகம் முழுமையாக இரத்த உறவற்ற இயங்கு முறையில் செயல்படுகின்றது. (பிரைடு, முந்துநூல்)
சில சாகியங்களில் (Communities) தள அடுக்கை நோக்கிய நகர்
வானது, பொருளாதாரத் தளத்தில் நீர்ப்பாசனத்தோடும், தட்டட்டி யோடும் கூடிய நகர்வோடு ஒருபோக்குடையதாக அமைந்துநிற்பதைக் காணமுடிகின்றது. நிரந்தரமற்ற செய்கைநிலம் என்பதிலிருந்து பல்லாண்டுகட்கு, பல தலைமுறைகட்கு நிரந்தரமாக வேளாண்மை செய்வதற்குரிய வயல்நிலம் என்ற நிலையை வந்தடைகிறது.

Page 43
76 பிரவாதம்
மூலவளக் குறைவோ மக்கட் தொகைப் பெருக்கமோ இல்லா நிலையிலும் நீர்ப்பாய்ச்சல் வேளாண்மை காரணமாகச் சமூகத்தில் தளப்பிரிநிலைகள் தோன்றுதற்குரிய சாத்தியப்பாடு உள்ளது.
நீர்ப்பாய்ச்ல் வேளாண்மை முறைமை உள்ள இடங்களில் மானாவாரிப் பிரதேசங்களில் இருப்பதைவிட மக்கள் குடியிருப்பு நெருக்கமாய் இருக்கும். விரிவுபட்ட போர்நிலை இருப்பின் அது தற்காப்பு முறைமைகளுக்குக் குறிப்பிடத்தக்க மதிப்பளிக்கிறது. இத்தகைய ஒருநிலையில் தான் இராணுவம் முக்கியமாகிறது. ஏனெனில், அது அதிகாரத்தினை மேல்வலுப்படுத்தும் தன்மை உடையது. அத்தகைய ஒரு நிலை தோன்றும்பொழுது, நாம் இக் கட்டுரையிற் பேசப்படும் விடய வட்டத்துக்கு வந்து விடுகிறோம்.
சமூகத்தளப்பிரிநிலையில் முதிர்வு காரணமாக இருவேறுபட்ட தான வர்க்கப் பிரிநிலைகள் ஏற்படும். ஆளுவோர், ஆளப்படுவோர் என்பதே அப்பிரிவுகளாகும். இவ்வாறாகத்தானே அரசு பிறக் கின்றது.
இங்கே குறிப்பிடப்படுவதுபோல் அது சுலபமானதும் துரித மானதும் அன்று. தளப்பிரிநிலை சமூக அமைப்பிலிருந்து அரசு அதிகாரம் தோன்றும் போது அது அதிகாரத்தாற் செயற்கட்டாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில், உழைப்பில் ஈடுபடாதவர்களுக்கும் உழைப் பாளிகளுக்கும் இடையே உற்பத்தியைச் சுரண்டும் உறவை நிலை நிறுத்த வேண்டிய தேவை அதற்கு உள்ளது. (ஹிண்டஸ்ல் மற்றும் ஹிர்ட்ஸ் 1975, ப. 34) இம்மாறுதல் நீண்டகால இடைவெளியில் நிகழ்வது. அரசுடமைக்கும் அரசின்மைக்கும் இடையே உள்ள எல்லைக்கோடுதிடீரென்ற இயந்தரத்தனமாக ஏற்படுவதன்று. ஆகவே தான், பல அறிஞர்கள் இவ்வெல்லைக்கோட்டை வரையறுப்பதில் பெரும் சிரமத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.
சமுதாய வளர்ச்சியில் பூர்வகால அரசு என்பது முற்றிலும் வேறு பட்ட அமைப்பாக, மிகநீண்டகால வளர்ச்சிநிலையின் அடிப்படை யாகத் தோன்றுகிறது. (கிளாசன் மற்றும் ஸ்கேல்னிக் 1978, ப.25)
கிளாசன் மற்றும் ஸ்கேல்னிக்கும் 22 பூர்வ கால அரசு நிகழ்வு களைப் பரிசீலித்து அவற்றினடிப்படையில பூவர்கால அரசுகள் குறித்து பின்வரும் ஏழு உரைகற்களைத் தந்துள்ளனர்.

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 77
1. சமூக வகைப்பாடுகள், தளப்பிரிநிலைகள் மற்றும் சிறப்புத் தொழிற்பாடுகள் உருவாவதற்குப் போதிய அளவு மக்கட் தொகை இருத்தல்.
2. குறிப்பிட்ட இடத்தில் வாழுதல் அல்லது பிறத்தலை
அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கல்.
3. அரசு ஒருமுகமாக மையப்படுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அதிகார வலுவுடையதாய் இருத்தல். தேவைக்கேற்ப அச்சுறுத்தல் அல்லது அச்சுறுத்துவ தற்குரிய வலுவைப் பெற்றிருத்தல்.
4. சட்டபூர்வமாக இல்லாவிடினும், நிஜநிலையில் அரசு சுய அதிகாரத்தோடு செயல்படுகின்றது. அது பிரிவினையைத் தடுப்பதற்குரிய ஆற்றல் உடையதாகவும், வெளியார் அச்சு றுத்தல் வருங்கால் அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையதாகவும் திகழ்தல்.
5. உருவாகும் புதிய சமூக அமைப்பில் ஆள்வோர், ஆளப் படுவோர்பிரிவுபடுவதற்குத்தக்க போதுமான அளவு சமூகத் தளப்பிரிநிலைக்கு வேண்டிய அளவு மக்கள் தொகைப் பெருக்கம் இருத்தல். (பூர்வ கால அரசமைப்பில் வர்க்கப் போராட்டமோ அதற்கும் அடிப்படையானவர்க்க மோதுகை எதிர்வுக்குண இயல்போ காணப்படாது.)
6. உற்பத்தியாக்கம் மிக உயர்நிலையில் இருப்பதால், அரசு நிறுவனத்தைப் பராமரிப்பதற்கான உபரி ஒழுங்காகக் கிடைக்கிறது.
7. ஆட்சித் தளநிலையில் இருப்பவர்களை நியாயப்படுத்தும்
ஒரு பொதுக்கருத்துநிலை இருக்கும். எடுத்துக் கொள்ளப்பட்ட21தனிநிகழ்வுகளில், பூர்வகால அரசுகளின் தோற்றங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சி யாவற்றையும் ஒழுங்கு படுத்திப் பார்க்கும்போது பெரும்படியான மூன்று வகைப்பட்ட பின்வரும் நிலைகளைக் காணலாம்:

Page 44
78 பிரவாதம்
அ) தொடக்கநிலையில், அதாவது ஆட்சித் தொடக்கம் ஏற்பட்டு விட்டாலும் அரசுக்கான உறுப்பமைவுகள் துல்லியமாக இந்நிலையில் உள்ள அமைப்பு இரத்த உறவு இனக்குழு அமைப்புக்குத் தலைமையிடமளித்தல், அரசியற்றுறையில் குடும்பசமுதாயப் பிணைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கல். சிறப்புத் திறமை உடைய முழு நேரப் பணியாளர்களின் எண்ணிக்கை வரம்புக்குட்பட்டதாக இருத்தல். தற்காலிய வரிவிதிப்பு முறை, ஆளுவோர் ஆளப்படுவோர் நேரடித் தொடர்பினுடாகப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் பரிமாறிக் கொள்ளத்தக்க சமூக வேறுபாடுகள்.
ஆ) வகை மாதிரியான பூர்வகால அரசில் இருப்பிட முக்கியத் துவம் முன்னர் நிலவிய இரத்த உறவு இனக் குழுவிற்குச் சமனான வலுவுடையதாகிறது. போட்டியும் மற்றும் அதன் வழி நியமனங்களும் முன்னர் நிலவி பாரம்பரிய அதிகார வலுப்பெற்ற ஓர் இடத்திற்குச் சமனான இடத்தைப் பெறு கின்றன. இத்தகைய சமூக அமைப்புகளில், இரத்த உறவற்ற அரசு அதிகாரிகளும் மற்றும் பதவித் தகுதி உடையவர்களும் அரசு நிர்வாகத்தில் முக்கியப் பங்கேற்பவர்களாக ஆகின்றனர். சமூகத் தளப்பிரிநிலைகளுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தலும் மீள்வழங்குகையும் பெருவழக்காறாக நிலவுகின்றது. இ) மாறுதலுக்குட்படும் வகை மாதிரியான அரசு நிர்வாக அமைப்பில் இரத்த உறவுநிலை நோக்கு மிகக் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுத்த, அரசால் நியமனம் செய்யப்படும் அதிகாரிகள் பெருஞ்செல்வாக்குப் பெற்று விளங்குகின்றனர். சமூக அமைப்பில் தனிச் சொத்து உரிமைக்கான முன்னீடுகள் படிப்படியாகத் தோன்றுகின்றன. சந்தைப் பொருளாதார அமைப்புக் காரணமாக அதிகாரமுடைய வர்க்கச் செயற்பாடு வெளிப்படையாகத் தெரிகின்றது. (கிளாசன் மற்றும் ஸ்கேல்னிக், 1978 பக்.586 - 590)
பூர்வகால அரசு என்பது ஒரு மாறுதலற்ற நிகழ்வு அன்று. அது சமூக ஊடாட்டத்தின் காரணமாக உருவாகும் மிகச் சிக்கலான வளர்ச்சி

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 79
முறையை உடையதாகும். அக்கால அரசுகளில் இரு வகை இருந்தன. 1. தொன்னலம் மிக்கது 2. துணைமை அரசு. முன்னது, குறிப்பிட்ட அச்சமூகத்தினது அகநிலைப்பட்ட பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் காரணமாக மேற்கிளம்புவது. பின்னது, இன்னொன்றுடன் ஒத்ததானதாகவும், முன்னுதாரணத்தின் செல்வாக் கால் வளர்ச்சி பெற்று அமைவதாகவும் அல்லது அதே தன்மையில் அமைந்த கட்டமைப்பின்செல்வாக்கால்நிலைநிற்பதாகவும் அமையும். (இதுவும் பிரைடு, 1960, ப.729)
3
இத்தகைய கட்டுக்கோப்பு முறையொன்றை மனதிலிருத்திக் கொண்டு, தமிழ்ச்சான்றுகளை நோக்கி முதலாவதாக அவற்றை வகைப்படுத்த வேண்டும். பின் அவற்றினூடாகக் காணப்படும் அதிகாரத்தியல்பு களின் பண்புகளை விரித்துரைக்க வேண்டும். இம்முயற்சியானது, முதலில் தமிழ்நாட்டின் வரலாற்றில் தொழிற்பட்ட சிறப்பு அம்சங்கள் யாவை என்று கண்டு, அவற்றினூடே இவ்வளர்ச்சி எவ்வாறு நடந் தேறியது என்பதை அறிவதாகவும், அதற்கு மேல் இந்த வளர்ச்சி
யானது உலகப் பொதுவான அரசு உருவாக்க வளர்ச்சியோடு எவ்வாறு
ஒத்து நிற்கின்றது என்பதனை அறிவதற்கும் உதவும்.
பூர்வகாலத் தமிழ்நாடு என்பது சங்ககாலத்தைக் குறிப்பதாகும். (கி.மு. 200 முதல் கி.பி. 250 வரை உள்ள காலம்). இலக்கியங்களின் கால வரன்முறை பழந்தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (1981) என்னும் எனது ஏற்கனவே வெளிவந்த ஆய்வின் அடிப்படையில் இது தரப் பட்டுள்ளது. அவ்வாய்வில் மூன்றாம் அத்தியாயத்தில் மொழியியல் ஆய்வின் அடிப்படையிலும் மற்றும் பொதுவான சமூக, இலக்கிய வளர்ச்சியினடிப்படையிலும், பல்லவர் காலத்திற்கு முற்பட்ட இலக்கிய வளர்ச்சியை அவற்றிடையே காணப்படும் ஒத்த தன்மை களின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
1. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும். (இவற்றுள்கலித்தொகை,
பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படைநீங்கலாக (ஏறத்தாழ கி.மு.200 முதல் கி.பி. 250 - 300 வரை).

Page 45
80 பிரவாதம்
2. தொல்காப்பியம் (குறிப்பாக பொருளதிகாரம்), திருக்குறள், கலித்தொகை, பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படை (ஏறத்தாழ கி.பி 300 - 450 வரை).
3. சிலப்பதிகாரம் (ஏறத்தாழ கி.பி 436 - 560 /590 வரை).
4.
சங்கத் தொகுப்புக்களில் உள்ள அரசு உருவாக்க மூலங்கள் தொகுக் கப்பட்டுப் பட்டியலிடப்பட்டு ஆராயப்படவில்லையாதலால் நாம் திருக்குறளில் தொடங்கிப் பின்நோக்கிச் சென்று சங்க காலத்தைப் பார்க்கலாம் என்று கருதுகின்றேன். அரசின் இன்றியமையாத்தன்மை யாக வள்ளுவர் கூறுவனவற்றைச் சரடாகவும் வழிகாட்டியாகவும் எடுத்துக்கொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் உறவுகள் குறித்து ஆராய இயலும் என்று கருதுகின்றேன்.
திருக்குறள் அத்தகைய வழிகாட்டியாக கொள்வதற்கு நம்பகத் தன்மை மிக்கது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. நாம் மேற்கொள்ளும் ஆய்விற்கு ஏற்றவாறு இலக்கியச் சான்றுகளின் இயல்பு எடுத்துக்காட்டப்பெறும். சங்க இலக்கியத் தொகுதி என்பது ஏதோ குறிப்பிட்ட ஆணைக்கியையத் தொகுக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வீரம் மிக்க மன்னர்களின்படையெடுப்புகள் பற்றிய தேர்வு செய்யப்பெற்ற தொகுப்புதான் அது என்பதை நாம் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். அகப்பாடல்களில் கூட அகத் திற்குப் புறம்பான புறச் செய்திகள் மிகுதியாகக் கூறப்பட்டுள்ளன. (கைலாசபதி 1968). அச்சமூகம் குறித்து நாம் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் சமயம், தொன்மம் குறித்து விரிவாக எதுவும் கூறப்படவில்லை. இத்தொகுதி முழுவதும் ஊடுருவிநிற்கும் புரவலர் - புலவர் உறவுநிலையை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. இக்குறைபாடுகளையும் கடந்து இப்பாடல்கள் எவ்வாறு வரலாற்று ஆய்வுக்கான சிறந்த மூலங்களாகத் திகழ்ந்து வருகின்றன என்பதே இங்கு நாம் கருத்திற் கொள்ள வேண்டியதாகும்.
திருக்குறளைப் பொறுத்தளவில் அது அறங்களைக் கூறும் அறநெறிப்பட்ட ஒழுக்க நூல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது அர்த்த சாஸ்திரம் மற்றும் அதைப் போன்றதாகப் பேரரசு

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 8
களோடோ நிர்வாகிகளோடோ இருந்த உறவின் அடிப்படையில் வந்த ஒரு வார்ப்படம் அன்று. அன்றைய சூழ்நிலையில் எழுந்த சவால்களுக்கு அறநெறி நின்று அரசியல் நடத்த வழிவகை கூறிய ஒரு நூல் திருக்குறள் எனலாம்.
வட இந்திய எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டு நிற்பது வள்ளுவர் கூறும் அரசு நெறி என்பது அறிஞர்கள் பலரால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் தமது அறநெறி சார்ந்த ஒழுக்கப் பார்வை வழி மனிதனைக் குடும்பத்தின் ஒரு உறுப் பினனாகவும், அரசின் ஒரு அங்கமாகவும் காண்கிறார். வள்ளுவர் முடியாட்சி குறித்தும் அவ்வரசாட்சி தன்னதிகாரத்தை நிலை நிறுத் துவது குறித்தும் ஆராய்கிறார். (தெ.பொ.மீ 1981, திருக்குறள் குறித்த சொர்ணாம்பாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், சென்னைப் பல்கலைக்கழகம், பகுதி 1, 1971).
கெளடில்யரிடமிருந்து வள்ளுவரைக் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுத்துவது தமிழ் அரசியல் குறித்த மிக முக்கியமான விடய மாகும். அர்த்த சாஸ்திரம் சுவாமினை (அரசனை) அரசைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகக் குறிப்பிடுவதோடு, அரசை வலிமை மிக்க நிறுவனமாகக் கூறுகின்றது. குறள் அரசனை அரசமைப்பின் இயங்கு மையப்புள்ளியாகவும், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவற்றை அவனோடு தொடர்புடையனவாகவும் குறிப் பிடுகிறது. வள்ளுவர், இவ்வாறும் உடையவன் அரசருள் ஏறு என்று கூறுகின்றார். இவ்வாறும் முழுமையாக அமையாத அரசர்களும் இருந்திருப்பர் என்பதை நாம் காணத் தவறிவிடுதல் கூடாது.
அடிப்படையில் வள்ளுவருடைய அரசு என்பது அமைப்பாக உருவான ஒரு நிறுவனமன்று. மாறாக ஆட்சியாளன் என்னும் தனி மனிதனில்நிலைபெற்றிருக்கும் ஒன்றாகும். வள்ளுவருக்கு முற்பட்டும் பிற்பட்டும் ஏற்பட்ட தமிழ் அரசமைப்பு குறித்த புரிதலுக்கு இது மிகவும் வேண்டப்படுவதாகும்.
அர்த்த சாஸ்திரம் மற்றும் அதுபோன்ற சமஸ்கிருத நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளோடு வள்ளுவருடைய அரசு குறித்த ஆறு கூறுபாடுகளையும் இணைத்துப் பார்க்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Page 46
82 பிரவாதம்
l. L I@0)L l தண்ட (படை) (6) 2. குடி ஜனபத (நாடு) (3) 3. கூழ் கோஸ் (செல்வம்) (5) 4. அமைச்சு அமாத்ய (அமைச்சர்கள்) (2) 5. நட்பு மித்ர(நட்புறவு கொண்டவர்கள்) (7) 6. அரண் துர்க்கா (கோட்டை) (4)
(வரிசை முறை வேறுபடுகிறது. இடது ஓரத்தில் தந்துள்ள வரிசை முறையை வள்ளுவர் மேற்கொள்கிறார். வலது ஒரத்தில் தந்துள்ள வரிசை முறையை அர்த்த சாஸ்திரத்தில் காண்கிறோம். அடைப்புக் குறிக்குள் மாறிவரும் வரிசை முறை தரப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் உடையவரான ‘சுவாமின் வரிசையில் முதலிடம் பெறுகிறார். வடமொழியில் இந்த ஏழும் (சப்தாங்கங்களும்) ராஜ்யத்தின் அங்கங்களாகக் கொள்ளப்படும்.)
இச்சமமாக்கலில் ஜனபதமற்றும் கோஸ் ஆகிய இரு உறுப்புகள் குறித்து உயர்நிலையான வேறுபாடு உள்ளது.
"குடி’ என்னும் தமிழ்ச் சொல் நாட்டைக் குறிக்க நிற்கிறது என் கொள்ள இயலாது. சங்க காலத்திலேயே குடி என்னும் சொல் குறித்த மாறுபட்ட பொருள்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் கூட, இந்நிறுவனம் குறித்துக் குறள் கூறுவதிலிருந்தே (96 குடிமை - குடியுரிமையுடையவனாக இருத்தல், 103 குடி செயல்வகை - நல்ல குடிமையாக இருப்பது எப்படி?) குலக்குழு முறைமை அல்லது விரிவுற்ற குடும்ப முறைமையை இது குறித்து நிற்கிறது என்பதை அறியமுடிகிறது. குடி மற்றும் குடும்பம் (குடும்பத்துக்கான இன்றைய பெயர்) ஒரு பொருட் பன்மொழியாகவே கருதப்படுகின்றன. குடிமை அதிகாரத்தில் வள்ளுவர் நல்ல குடியில் பிறத்தல் குறித்துப் பேசு கின்றார். குறள் 956 இல் குடி, குலம் (பிற்காலத்தில் சாதியைக் குறிக்க நின்ற தொடர்) ஆகிய இரு சொற்களையும் சமமாகவே பயன்படுத்து கின்றார். குலக்குழு அல்லது பரந்துபட்ட குடும்ப அமைப்புக் களையே அரசமைப்பிற்கான சமூக அலகாக வள்ளுவர் காண்கிறார். இங்கு எழும் நெருக்கடியான வினா, அரசு என்பது ஒரு குடியை மட்டும் கொண்டதா என்பது தான். இல்லை, நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு குடியும் தன் அடையாளத்தைப் பேண வேண்டும் என்று வாதிடுவார்.

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 83
அதுபோன்றே கூழ்” என்ற செல்வம் (கோஸ்) குறித்தும் சீரிய நோக்குடையவராயிருக்கிறார். சங்க இலக்கியத்தில் பெரும்பாணாற்றுப் படை 175, 327, பட்டினப்பாலை 163, நற்றிணை 367, குறுந்தொகை 221, பதிற்றுப்பத்து 90, அகநானூறு 21,113,194, புறநானூறு 70, 122, 160, 185, 320, 396, 399 ஆகிய இடங்களில் கூழ் என்னும் சொல் உணவைக் குறிக்க வந்துள்ளது. தெளிவாகக் கூறுவதானால், ஒரு தனிப்பட்ட வகையான கஞ்சியை அது குறிக்கிறது. எல்லோருக்குமுரிய அடிப்படையான உணவை அது குறிக்கிறது. உணவைக் குறிக்கும் வகையிலும் இச்சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது (எடுத்துக் காட்டு 64, 754). ஒரே ஒரிடத்தில் மட்டும் பயிரிடப்பட்ட தாவரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது (550). சங்க இலக் கியத்தில் அச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள முறையை நோக்கும் பொழுது அது வாழ்வுக்கான குறைந்தபட்ச தேவையைக் குறிப்பதாகக் கொள்ளலாமேயன்றிச் செல்வத்தைக் குறிப்பதாகக் கொள்ள இயலாது. உணவுடன் கூடிய வீடுகள் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் வருகின்றன (நற்றிணை 367:பதிற்றுப்பத்து 90). குறைந்தபட்ச உணவுத் தேவையைக் குறிக்கும் கூழ் என்னும் சொல்லைச் செல்வத்துடன் பொருத்தி நோக்குவது ஏற்புடையதாகாது. இவ்விடத்தில் நாம் கருத்திற் கொள்ளத்தக்கது யாதெனில், அன்று நிலவிய வரலாற்று யதார்த் தத்தில் வள்ளுவரைப் பொறுத்த அளவில் அரசனுக்குக் கீழ் அமைந்த மக்களுக்குரிய குறைந்தபட்ச உணவுத் தேவையை நிறைவு செய்வது குறித்தே எண்ணிப் பார்க்க முடிந்தது. கூழ் என்னும் சொல்லை கோஸ (செல்வம்) என்னும் சொல்லுக்கு இணையாகக் கொள்வது வரலாற்றுச் சூழலுக்கு முற்றிலும் இயையாத ஒன்றாகும்.
குடி - நாடு என்ற சொல்லை அடையாளப்படுத்த வள்ளுவர் தனி அதிகாரம் ஒன்று அமைத்துள்ளார். நாடு என்பது 'தள்ளா விளை யுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது' என்று கூறுகின்றார். (731). வளர்ச்சியடைந்த நீர்ப்பாசன வசதியுள்ள நிலப் பகுதியை இவ்விளக்கம் சுட்டி நிற்பதால், இனக்குழுச் சமூகங்கள் அரசின் எல்லைக்குள் சேர்க்கப்படவில்லை என்றுதான் அறிகிறோம் (சிவத்தம்பி 1981). இதனை 735 ஆவது குறள் வெளிப்படையாக உணர்த்துகிறது.

Page 47
84 பிரவாதம்
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு.
ஒன்றுக்கொன்று மாற்றீடாகக் கொள்ளத்தக்க வகையில் ஒரு பொருள் குறித்த பல சொற்களாக வேந்தர் (382, 389, 190), அரசர் (381), அரசு (384, 385), மன்னன் (386), மன்னவன் (388), மற்றும் இறை (386) என்ற சொற்களை வள்ளுவர் பயன்படுத்துவதைக் காணத் தவறி விடக்கூடாது. இச்சொற்களுக்கிடையே அவர் வேறுபாடு காட்ட வில்லை. அரசியல் அதிகாரத்தைக் குறிக்கும் இச்சொற்களுக்கிடையே வள்ளுவர்காலத்தில் தனித்த வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை என்பதை நாம் மனதிலிருத்த வேண்டும்.
வள்ளுவர் கால அரசின் குறிப்பிடத்தக்க கூறுபாடு யாதெனில், முடியரசின் முழுப்பங்களிப்பும் அரசன் என்னும் தனி மனிதனைச் சார்ந்தே இருந்ததுதான். சமஸ்கிருத நூல்களில் கூறப்பட்டிருந்த கருத்துக்களை நன்கு தெரிந்திருந்த வள்ளுவர், தமிழ்நாட்டுச் சூழமைவில் அரசனுக்கு இருந்த ஆளுமைநிலைப்பட்ட முக்கியத்து வத்தை உணர்ந்திருந்த காரணமாகவே அவனை ஆள் நிலையாக மையப்படுத்தி இருத்தல் வேண்டும். இவ்விடத்தில் நாம் அவை யறிதல் (722) மற்றும் அவையஞ்சாமை (73) குறித்துக் கூறுவதைப் புறக்கணித்துவிடலாகாது. அரசவையிலிருந்த கல்வியறிவுடைய, வயது மூப்புடைய கூட்டத்தாரையே அவை (கூட்டம், கூடுதல்) என்று குறிப்பிடுகிறது. அது நாள்மகிழிருக்கை, நாளவை என்ற மரபின் வழிவந்த தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும்.
வள்ளுவர் முன்னிறுத்தும் அரசு தனிநபர் சார்ந்ததாய் விளங்கிய தேயன்றி நிறுவனமயப்பட்டதாய் இருக்கவில்லை என்பது மிகத் தெளிவானது. கெளடில்யர் கூறும் விரிவானநிர்வாக இயந்திரத்தைக் கொண்ட ராஜ்யத்துக்குரிய இயல்புகள் வள்ளுவர் கூறும் அமைச்சில் இல்லை என்பதை நாம் காணத் தவறுதல் கூடாது. எத்தகைய இயல் புடையவர் அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதற்குத் தரப்படுகிற அழுத்தம் (அதிகாரங்கள் 65, 66; 67; 68; 69, 70 மற்றும் 71) நிறுவன மயப்பட்ட ஆட்சியின் இயல்புகள் குறித்துத் தரப்படவில்லை.
வள்ளுவர் வாழ்ந்த காலத்தை நாம் மனிதிலிருத்திக் கொண்டு சிந்திப்போமானால் (ஏறத்தாழ கி.பி 300- 350 - 400 - 450) இவ்

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 85
வகைப்பட்ட அமைப்பே, அக்காலச் சவால்களுக்குச் சரியானதீர்வாக
இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருப்பார் என்பதை அறிய முடியும். (சங்கத்தையடுத்த காலம், களப்பிரர்கட்கு முற்பட்ட காலம்).
5
சங்க இலக்கியத் தொகுதியில் உள்ள சான்றுகளை ஆராயப் புகுந் தோமானால், அங்கு முக்கியமாக இரு வகைப்பட்ட சான்றுகளைக் காணஇயலும்.திணைமரபோடு பொருத்திப் பார்க்கப்படும் இராணுவ நடவடிக்கை ஒன்று. அரசியல் அதிகாரத்தில் இருப்போரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் தொடர் மற்றொன்று.
சங்க இலக்கியம் குறிப்பிடும் திணை மரபு என்பது தமிழகத்தின் புவியியற் பிரதேசங்களின் அல்லது பூப்பெளதிகப் பிரதேசங்களின் அடிப்படையில் ஆண் - பெண் பாலார் இடையே நிலவிய காதல் உறவின் வெவ்வேறு நிலைகளை முக்கியப்படுத்திக் கூறுகின்றது. இது அகம் எனப்பட்டது. இப்பெளதிக அடிப்படையில் புறம் என்னும் நடவடிக்கையும் பேசப்பட்டது. வீரனொருவன்தன் வீரத்தை வெளிக் காட்ட மேற்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட போர் நடவடிக்கையோடு அது தொடர்புபடுத்துகிறது. இலக்கியத்திற்கு அமைந்த திணை மரபிற்குக் குறிப்பிட்ட நிலப்பகுதி, அங்கு வாழும் தலைவர், தலை வியர் தேவைப்படுவர்.
கவிஞர்கள் தங்கள் பாடல்களுக்குரிய பாடுபொருளாக இந் நடவடிக்கைகளையே கொண்டனர்.
(அ) காதற் செயற்பாடு
நிலம் மலர் நடத்தை
மலை குறிஞ்சி புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
மேய்ச்சல் நிலம் மற்றும் முல்லை (வெளியே சென்றிருக்கும் கணவர் சமவெளி வருகையை எதிர்நோக்கி மனைவி
ஆற்றி) இருத்தலும், இருத்தல் நிமித்தமும்

Page 48
86 பிரவாதம்
ஆற்றுப்படுகை, மருதம் (பரதையிற் பிரிவு காரணமாக
வேளாண் பகுதி மனைவி) ஊடலும், ஊடல்
நிமித்தமும்
கடற்கரையை ஒட்டிய நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
மணல்வெளி (இரங்கல் என்னும் உணர்வு
நிலைக்கான காரணம் துல்லியதாக்கப் பட்டுள்ளதாகக் கூறமுடியாமல் உள்ளது.)
பயிரிடப்படாத பாலை உடன்போக்கும், அது காரணமாகக்
வறண்டநிலம் குடும்பத்தாரிடமிருந்து பிரிதலும்,
(களர்நிலம்) அவற்றுக்கான நிமித்தங்களும்
(ஆ) போர்ச் செயற்பாடு
நிலம் மலர் செயற்பாடு
|D6)6) வெட்சி ஆநிரை கவர்தலும் ஆநிரை
மீட்டலும். சிலவேளைகளில் ஆநிரை காத்தல் தனித்து எடுத்துக் கொள்ளப்பட்டு அது கரந்தைப் பூவால் சுட்டப் பெறும்.
மேய்ச்சல் நிலம் / வஞ்சி குடியிருப்புக்களைத் தாக்குதலும்,
புல்வெளி (காடு) அழிவுக்குள்ளாகாது அதனைப்
பாதுகாத்தலும்.
பயிர் செய்கை அல்லது உழிஞை அரணைக்காத்தலும்,
வேளாண்நிலப்பகுதி பகைவரைத் துரத்தி அரணைத் தாக்கித் தகர்த்தலும் அரணைக் காப்போரின் முயற்சி தனித்து எடுத்துக் கொள்ளப்பட்டு அது நொச்சிப் பூவால் சுட்டப்பெறும்.
கடற்கரையை தும்புை இறுதிவரைப் போரிடல்
ஒட்டியுள்ள
மணல்வெளி
வறண்ட நிலப்பகுதி வாகை வெற்றிபெறுதல்

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 87
ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உரியதாகக் கூறப்பட்டுள்ள போர் நட வடிக்கை வகைப்பாடு அவ்வப்பகுதியில் வாழும் மக்களுடைய சமூகப் பொருளாதாரச் சூழலோடு பொருந்திநிற்பதைக் காணலாம். மலை, சமவெளி, வேளாண் நிலப்பகுதி ஆகியவற்றின் குறைந்த பட்சத் தேவைகளை அது காட்டிவிடுகிறது எனலாம்.
சமகாலச் சமூகத்திலும், ஒவ்வொரு பூகோள நிலப் பகுதியும் தத்தமக்கே உரிய வகையில் சமூக மற்றும் பால் உறவுகளைக் கொண்டிருக்குமென்பது யதார்த்தம் என்பது முன்னரே காட்டப் பெற்றுவிட்டது. நிலப்பகுதிகட்கிடையே நிலவும் சமச்சீரற்ற வளர்ச்சி நிலையே அவற்றிடையே வெவ்வேறு வகைப்பட்ட வாழ்க்கைப் பாங்கு நிலவுவதற்கான காரணம் எனலாம்.
மனிதக் குடியிருப்புகளின் வளர்ச்சி முற்றிலுமாகச் சுற்றுச்சூழல் அம்சங்களைச் சார்ந்தமைகிறது என்பதைத் திணை மரபு நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொருநிலப்பகுதியும் தத்தமது வளர்ச்சிநிலைக்கு ஏற்ப, சமூக நிறுவனங்களையும் நிர்வாக வடிவங்களையும் தோற்று வித்து அவ்வவற்றின் தேவை மற்றும் இயல்புக்குரிய வகையில் அவற்றைத் தன் சமூக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது மிக இயல்பாகத் திகழக் கூடியதே. வேளாண்மை நடைபெறும் பகுதி களில்தான் உயர்ந்தபட்ச வளர்ச்சிக்கு வாய்ப்புஉண்டு. நீர்ப்பாசன வசதி காரணமாகப் பலதரப்பட்ட அறுவடைகள் சாத்தியமாகின்றன. மேய்ச்சல் புல்வெளி அல்லதுசமவெளிகளில் விளைச்சலை அதிகரிக்கச் செய்ய வாய்ப்பு உண்டு. இவ்விருநிலப்பகுதிகளிலும்தான் சிக்கலான சமூக அமைப்புகள் உருவாவதற்குரிய வாய்ப்புகள் உருவாகின்றன. அதன் காரணமாக அரசியல்ரீதியான மேலாண்மைத் தேவைகள் அதிகரிக்கின்றன. பொருளாதார ஆதாரங்களின் மிகுதியான வளத் தினால் அவற்றை வரையறை செய்ய வேண்டிய அவசியம் முல்லை யிலும் மருதத்திலுமே மிகச்சிறந்தநிலையில் காணப்படும். முல்லைப் பொருளாதாரம் குடியிருப்புக்களைச் சார்ந்ததாயும் அமையும். மரு தத்தில் அரசியல் அமைப்பு மேலும் வளர்ச்சியடைவதற்கு வாய்ப்புப் பெற்றிருத்தலை உணர்த்துகின்றது. குறிஞ்சியில் (மலைப்பகுதியில்) உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடையாது தேக்கமுற்றிருப்பதனால் அப்பகுதியில் தேக்கமுற்ற நிலையே காணப்படும்.

Page 49
88 பிரவாதம்
இவ்வாறாகத் திணைக் கோட்பாடு ஒவ்வொரு நிலப் பகுதி யினுரடாகவும் ஏற்பட்ட சமூக அரசியற் பொருளாதார வளர்ச்சி நிலையின் வகைப்பாட்டைக் காட்டி நிற்கிறது என்று கூறலாம். கிழான் / கிழார் என்ற ஈற்றுப் பெயர்களுடன் வரும் பிரதானிகள் பற்றிய குறிப்புக்களை நோக்கும்பொழுது அவர்கள் பெரும்பாலும் மன்னன் அரசன் போன்ற ஆட்சியாளருடன் தொடர்புடையவர்களாய் இருப்பதையும் இவர்கள் ஆள்புலம் பெரும்பாலும் குறிஞ்சி, முல்லை ஆகிய வளர்ச்சியடையாப்பிரதேசங்களாய் இருப்பதையும் அவதானிக் கலாம் (சிவத்தம்பி 1966). நாம் ஏற்கனவே அறிந்துள்ளது போல, சங்க இலக்கியங்கள் தோன்றுகின்ற காலப்பகுதியிலேயே அத்தகைய அரசியலமைப்புகள் ஒன்றிற்கொன்று அருகமைந்து இருந்தன.
6
சங்க இலக்கியத்தில் அரசியல் அதிகாரத்தைக் குறிக்க வழங்கிய தொடர்களை நாம் அடுத்தபடியாக எடுத்துக் கொள்வோம். மிக முக்கியமான தொடர்களாக இறை, கோ, கிழவன் (மாறுபட்ட வடிவம் கிழான்), மன்னன் (மாறுபட்ட வடிவம் மன்னவன்), வேந்த மற்றும் வேந்தன், அரசு மற்றும் அரசன், குருசில் (குரிசில் என்றும் குறிக்கப் பெறும்) மற்றும் கொற்றம் ஆகியன வருகின்றன. இத் தொடர்களைப் பயன்படுத்துவதில் சங்க இலக்கியங்களில் உறுதியற்றதன்மை காணப் படுகிறது என்பதை நாம் முதலில் மனதிலிருத்திக் கொள்ளவேண்டும். ஒரே அரசியல் அதிகாரத்தைக் குறித்திட ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்கள் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்படுவதை நாம் காண முடிகிறது. இருந்தபோதிலும், தொடர் பயன்படுத்தலில் காணப்படும் இந்நெகிழ்ச்சி அரசியல் அதிகாரத்தில் உயர் படிகளை நோக்கிச் செல்வோரிடத்து மட்டுமே காணப்படுகிறது. அரசியல் அதிகார ஏணியின்தாழ்படிகளில் இருப்பவரைக்குறிக்கப்பயன்படுத்துவதையும் நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக கோ, இறை எனவும் மன்னன் அழைக்கப்படுவான். ஆனால், அவன் ஒருபோதும் அரசன் அல்லது வேந்தன் என்று குறிப்பிடப்பட மாட்டான். மாறாக இறை, கோ, மன்னன் என்ற அரசியல் அதிகாரத்தைக் குறிக்கும் எச்சொல்லாலும் அரசன் சுட்டப்படுவான்.

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 89
இத்தொடர்கள் குறித்த விரிவான ஆய்வுகட்குச் செல்லும் முன்னர், தமிழச்சூழலில் அதிகார வெளிப்பாடு குறித்த தகுதிப்பாடு மற்றும் தளப்பிரிநிலை எவ்வாறு இருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தளப்பிரி நிலைகள் வளர்ச்சியடைந்த நிலையில்தான் தோன்ற முடியுமாதலின், அத்தகைய சமூக அலகுகளை அடையாளங் கண்டு கொள்வது சிரமமாக இருக்காது என்றே கருதுகின்றேன். தகுதி என்னும் கருத்தாக்கம் சங்க இலக்கியங்களில் எவ்வாறு வெளிப் படுத்தப்படுகின்றது?
சங்க இலக்கியத்தில் பயின்றுவரும் வரிசை என்னும் தொடர் வரிசையாக வருவதைக் குறிக்கிறது. இத்தொடர் இப்பொருளில் பின்வரும் மூலபாடங்களில் அமைந்தள்ளது. சிறுபாணாற்றுப்படை 217, கலித்தொகை 85, புறநானூறு 6, 47, 53, 121, 140, 184, 200, 206, 331, 398 ஆகிய இடங்களில் அது தகுதியை உணர்த்திநிற்கிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் பாணர் வழிவந்தவை. ஆளுவோரிடமிருந்து பரிசு பெற்ற பாணர்கள், பரிசு தொடர்பாக இத்தொடரைப் பயன் படுத்துகின்றனர். பாணர்தம் வரிசைக்கேற்பப் பரிசு வழங்கப்பட்டதை இக்குறிப்புகள் உணர்த்துகின்றன. பெரும்பான்மையான குறிப்புகள் பாணர்கள் வரிசைக்கேற்பப் பரிசு பெற்றதையே உணர்த்திநிற்கின்றன. இது பாணர்களின் சமூகத்தகுதியையே தெளிவாகக் குறித்துநிற்கிறது. இது, சங்கச் சமூகம், அரசின் பயன்பாட்டிற்குரிய வகையில் தம் மிடையே இருந்த சமூக உயர்நிலையை வரையறுத்துமுறைப்படுத்தி இருந்தது என்பதைக் காட்டுகிறது.
அரசியல் அதிகாரத்தைக் குறிக்கும் தொடர்களுள் கோ/கோன் என்ற தொடரை முதலாவதாக எடுத்துக் கொள்வோம். ஏனெனில், அத்தொடரேதமிழ்நாட்டில் அரசதிகாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் தொடர் என்று சீனிவாச அய்யங்கார்(1929) கூறுகின்றார். கோ, கோன் ஆகிய இரு தொடர்களையும் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் இத்
* வரிசை என்னும் தொடர் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது. மணமகளுக்கு அவள் பெற்றோர் அளிக்கும் நன்கொடை, சீர்வரிசை எனப்படுகிறது. யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் ஒருவரோ ஒரு குழுவினரோதங்கள்தகுதிக்கு ஒவ்வாத வகையில் நடந்துகொண்டால் அவர்களை வரிசை கெட்டவர்கள் என்று குறிப்பிடும் வழக்கம் இன்றும் உள்ளது (தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொண்டவர்கள்).

Page 50
90 பிரவாதம்
தொடர்கள் (அ) சேரர்களையும் சோழர்களையும் பாண்டியர்களையும் குறிக்கவும், (பதிற்றுப்பத்து 55, 56, 61, புறநானூறு 9, 17, 22, 34,212, 387), (ஆ) சில குறுநிலத்தலைவர்கள் பேகன் மற்றும் ஆய் அண்டிரன் (புறநானூறு 141, 147, 152, 374, 399) ஆகியோரைக் குறிக்கவும் மற்றும் (இ) குயவர் தலைவரைக் (புறநானூறு 228, 256) குறிக்கவும் பயன் படுத்தப்பட்டுள்ளன. பாண்டிய, சேர, சோழ அரசர்களுள் கோஎன்னும் சொல் சேரர்களைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. பேகன், ஆய் அண்டிரன் போன்ற அரசரல்லாத தலைவர்களையும் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய குறிப்பீடுகளுள் ஓரியைப் பற்றி அமைந்த புறநானூறு
156 ஆம் பாடலில் வன்பரணர் குறிப்பிடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வரி 13 - 21 வரையுள்ள பகுதியில் இவ்வாறு கூறப் பட்டுள்ளது:
பாடுவல் விறலி ஓர் வண்ணம், நீரும்
மண்முழா அமைமின்.
இறைவன் ஆதலின் சொல்லுபு குறுதி மூஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி கோ எனப் பெயரிய காலை, ஆங்கு அது தன் பெயர் ஆதலின் நாணி
விறலியை அழைத்து சந்த ஒழங்குடைய பாடலைப் பாடுமாறு கூறி மற்றும் தம் குழுவினரை நோக்கி அதற்கியைய ஆட்டத்திற்குத் தயாராகுமாறு கட்டளையிட்டான்; நான் அக்குழுவிற்குத் தலைவன் (இறைவன்) ஆதலின் நான் நெருங்கிச் செல்லவும், 21 சுரவரிசை களைப் பாடி இறுதியில் கோ என்ற சொல்லை அவர்கள் உச்சரிக்கவும் அவன் மிகவும் நாணினான்; ஏனெனில் அது அவன் பெயராகும்.
இவ்விடத்தில் நாம் அறிவது யாதெனில், இறை எனப்பட்டோர் சிலர் கோ என்றும் அழைக்கப்பட்டனர் என்பதே அது. ஒரு தனிச் சிறப்புமிக்க செயலைச் செய்து முடித்ததாலோ முயற்சி காரணமாக அடைந்த இடுபெயராகவோ இது இருத்தல் வேண்டும்.
எதற்காக இது வழங்கப்பட்டது என்பது இப்போது நமக்குத் தெளிவாகவில்லை. ஆனால், இறை என்பதைவிட உயரியநிலையைக்

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 91
குறிப்பது கோ என்பது ஐயத்திற்கிடமற்ற ஒன்று. இறை என்பவன் ஒரு குழு அல்லது குலத் தலைவனாக இருந்த போதிலும் அவனைக் குறித்து அச்சமிருந்ததை அறிய முடிகிறது. தொல்காப்பியம் மெய்ப் பாட்டியல் குறித்த7ஆம் அதிகாரத்தில் பேய், விலங்குகள், திருடர்கள் மற்றும் தங்களுடைய தலைவராகிய இறைக்கும் பெரிதும் அஞ்சு வார்கள் என்று தெரிவிக்கிறது. அதிகாரத்தில் இருப்போரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட தொடர் (இச்சொல்லுக்கு 17 பொருள்களைத் தமிழ் லெக்சிகன் தெரிவித்துள்ளது) புறநானூறு 72,794, 314 நற்றிணை 43, 161 ஆகியவற்றில் தலைவர், உயர்ந்த ஒருவர் அல்லது தலைமை வகித்து ஆட்சி செய்பவர் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.
ஆகவே தலைவர் அல்லது உயர்நிலைக்குரியவரைக் குறிக்கும் 'இறை என்பதிலிருந்து 'கோ' என்ற தொடர் உருவாகி இருக்க வேண்டும். எப்பொழுது, ஏன் அரசனைக் குறிக்க இச்சொல் பயன் படுத்தப்பட்டது என்பதை அறிவதுசுவாரசியம் வாய்ந்ததாக இருக்கும். இச்சொல் பெரும்பாலும் சேரரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பேரரசுக்குரிய அரசரைக் குறிக்க வழங்கிய கோப்பெருஞ் சோழன் என்ற பெயரில் அரசரைக் குறிக்க “பெரும் கோ' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோழ அரசன் ஒருவனும் பெருங் கோக்கிள்ளி என்று அழைக்கப்பட்டிருக்கிறான்.
ஒரு குழுவிற்கு இயல்பாக உருவான தலைவனே இறை எனப் படுவான். இத்தொடரே பின்னாளில் கடவுளைக் குறிப்பதற்கும், ஆளுவோருக்குக் குடிமக்கள் வழங்கிய திறையைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோ என்னும் தொடர்பற்றிக் கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து அச் சொல்லின் தனிச்சிறப்புப் பற்றித் தெளிவாக எதுவும் அறியமுடிய வில்லை. ஒருக்கால் அது அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையைக் குறிக்கலாம்.
அரசரல்லாத தலைவர்களைக் குறிக்கச் சங்க இலக்கியத்தில் வழங்கிய பெயர்கள் குறித்து இவ்விடத்தில் ஆராய்வது மிகப் பொருத் தமாக இருக்கும். புறநானூற்றில் புகழப்பட்டுள்ள47 தலைவர்களை மார் எண்ணிக்கையிட்டுள்ளார் (மார், 1985 அத்தியாயம் 3). இப்

Page 51
92 பிரவாதம்
பட்டியல் மிகவும் புகழ் வாய்ந்த வேளிர்களையும் குமணன் மற்றும் பாரியும் உள்ளடக்கியது (பாரியும் ஒரு வேளிரே).
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள இத்தலைவர்கள் குறித்தமைந்த கையறுநிலைகள் பற்றிய மாரின் குறிப்புரை இவ்விடத்தில் குறிக்கத் தக்கது.
“இவற்றில் உள்ள கவனிக்கத்தக்க வேறுபாடு யாதெனில், குறு நிலத் தலைவர்கள் பற்றிய பாடல்களில் அவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ள அளவு மூவேந்தர் பற்றிய பாடல்களில் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை. மூவேந்தர் பற்றி பெரும்பாலான பாடல்களில் அவர்கள் பெயர்களே இடம்பெறவில்லை. குறுநில மன்னர்கள் குறித்த பாடல்களில் சரிபாதிப் பாடல்களில் அவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக 141 பாடல்களில் 71 பாடல்களில் பெயர்கள் காணப்படுகின்றன. மூவேந்தர் குறித்த 138 பாடல்களில் 45 பாடல்களில் மட்டுமே பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். இது இவ்வாறான பாடல்களில் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவே.
ஆகவே, அரசர்களை அவர்கள் பெயர்களால் குறிப்பது தகுதிக் குறைவான செயலாகவும், அரசர்களுக்குக் கீழானநிலையில் இருந்த வர்களையும், தலைவர்களையும் இங்ங்னம் பெயரால் குறிப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்திருக்க வேண்டும்” (மேல் குறித்த நூல், 1985, பக். 246 - 47).
வேளிர்நீங்கலாக உள்ள ஏனைய தலைவர்கள் கிழவன்/கிழான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்(குறிக்கப்படுபவர் எவரேயாயினும், புறநானூறு 129, 131, 152, 153, 155, 163). இத்தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்டநிலப்பரப்பிற்குட்பட்ட சில குழுக்களின் தலைவர்களாக இருத்தல் வேண்டும்.
வேளிர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் குறுநிலத் தலைவர்களாக இருந்தபோதிலும் (பாண்டிய, சோழ, சேர) நான்கு இடங்களில் வேந்தரும் வேளிரும் என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. வேளிர்களின் அரசாட்சிக்குட்பட்ட நிலப்பகுதி பற்றிய விரிவான ஆராய்ச்சிக்குப் பின், பெருங்கற்காலக் குறியிடத்தோடு அவர்களுக்கு இருந்துள்ள தொடர்புகளையும் ஒப்பிட்டு செண்பகலட்சுமி பின் வருமாறு தெரிவிக்கிறார்.

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 93
"அடிக்கடி குறிப்பிடப்படும் வேளிருடைய வல்லாண்மைக்குட் பட்ட பகுதிகளில் நெல் மிதமிஞ்சி விளைந்தது. தம்மை நாடி வந்த கற்றறிந்த மனிதர்களுக்கு அவர்கள் வழங்கியுள்ள கொடையை நோக்க அவர்கள் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் குடியேறியவர்கள் என்று கருத வேண்டியுள்ளது (நீலகிரியில் குன்னூர், தென்றாற்காட்டில் திருக்கோவலூர், தர்மபுரியில் தகடுர்). மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பெருங்கற் காலக் குறியிடங்களில் வேளிர் குடி யிருப்புப் பகுதிகள் அமைந்திருப்பதைக் காணலாம். சில நேரங்களில் இவை புதைக்குமிடமாகவும், வாழிடமாகவும் இரண்டுமாகவும் விளங்கியிருப்பதைக் காணலாம். (செண்பகலட்சுமி 1976)
வேளிருக்கு இருந்த மேம்பாட்டை இது உணர்த்துகிறது. சேலம், நீலகிரிப்பகுதிகளில் தொடக்ககால வேளாண்மைக்குடியிருப்புகளை முதன்முதலாக உருவாக்கியவர்கள் அவர்கள்தாம்.
அரசியலில் வலிமை மிக்கவர்களாக விளங்கியமையால் துவரையை (துவாரசமுத்திரம்) ஆண்டவர்களோடு வேளிர்களை இணைக்கும் தொன்மம் உருவாயிற்று. புறநானூறு (201, 202) தரும் இறை, கோ மற்றும் வேளிர் குறிப்புகள், அவர்கள் இரத்த உறவுடைய சமூகக் குழக்களின்தலைவர்களாக விளங்கியவர்கள் என்றும் தங்களுக் கிடையே உருவாகி வளர்ந்த அதிகார முறைமையால் உயர்ந்தார்கள் என்றும் தெரிகிறது.
தான் இல்லாமல் சமூகம் இயங்க இயலாது என்னும் அளவிற்கு அரசியல் அதிகாரம் படைத்தவனாக நாம் மன்னனைக் காண் கிறோம்.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறநானூறு 86)
(மன்னன் என்பது மன்னர் என்பதன் ஒருமை வடிவம்)
இரத்தஉறவுடைய இனக்குழுதலைவனேமன்னன்என்பதைச்சுட்டும் குறிப்பு எதுவும் இதில் காணப்படவில்லை. குழுத்தலைவனை விட மேம்பட்டவர்கள் இவர்கள். மூல முதல் மன்னன் என்பவன் யார்? அவன்தன் அதிகாரத்தை எங்ங்ணம்நிறுவினான்? இவ்வினாக்களுக்கு இம்மூலங்களில் நேரான பதில் கிடைக்கவில்லை. மன்னன் என்னும் சொற்பிறப்பாய்வுநமக்கு ஓரளவு குறிப்புத் தருகிறது. மன்னன் என்ற

Page 52
94 பிரவாதம்
சொல் மன்னு என்னும் வினையடியாகப் பிறந்தது. மன்னு என்ற சொல்லுக்கு 1. நிரந்தரமாக இரு, 2. நீண்டகாலத்திற்கு இரு, 3. ஏற்றுக் கொள்ளுதல், 4. அழியாது பாதுகாத்தல், 5. உறுதியாயிருத்தல், 6. நிரம்பியிருத்தல் (தமிழ் லெக்சிகன்) என்றும் பொருள்கள் கூறப்படு கின்றன. இச்சொல்லுக்குரிய பொருள்களில் அழியாது பாதுகாக்கும் ஒருவன், உறுதியாய் இருக்கும் ஒருவன் என்பது மிகத் தெளிவாக உள்ளது. மன்னன் என்னும் பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. புறத்திணையில் 60ஆம் நூற்பா குறிப்பிடும் பிள்ளையாட்டுச் சடங்கு (அலைக்கழித்தல் / குழந்தையோடு ஆடுதல் / இளமை) மிகவும் முக்கியத்துவம் உடையதாகும். ஒரு உரையாசிரியர் இறந்தோர் புகழ் பாடுதல் என்று கூற மற்றொரு உரையாசிரியராகிய நச்சினார்க்கினியரோ ஆநிரை கவர வந்தோரைப் போரில் தோற்கடித்து விரட்டித் தங்கள் குழுவினருடைய மேன்மையை நிலைநாட்டிய இளைஞனுக்கு அவ்வினக் குழுவினர் அரசியல் அதிகாரம் வழங்கிக் கொண்டாடிய செய்தியைக் குறிக்கிறது என்று கூறுகின்றார். மொழியியல் நோக்கில் பின்னதே மிகவும் ஏற்புடைய விளக்கமாகத் தோன்றுகிறது. இது இவ்வாறாக, இவ் வழிபாட்டு மரபில் தமிழர்களிடையே அரசு தோற்றங் கொள்வதை நாம் காண்கிறோம் (சிவத்தம்பி 1971), கோ அல்லது மன்னன் ஒருவன் எவ்வாறு சடங்கு முறைமையோடு அரச னாகப் பதவிப் பிராமணம் செய்யப்பட்டான் என்பது குறித்த ஆய்விற்குப் பிள்ளையாட்டு பயன்படுவதாய் இருக்கும்.
மன்னன் என்னும் ஆட்சிப் பொறுப்பிடம், வேந்தன் என்பதை விடக் கீழானது என்பதை நாம் புறநானூறு 319இன் குறிப்புக் கொண்டு அறிகிறோம். வேந்தன் அனுப்ப, அவன் வகுத்தளித்த செயலை நிறைவேற்ற மன்னன் சென்றான் என அறிகிறோம்.
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர் வேந்துவிடு தொழிலொடு சென்றனன்
(சிற்றுார் சார்ந்த மன்னன் வேந்தன் வகுத்த செயலை நிறைவேற்ற நேற்றுச் சென்றான்)
மன்னன் சில இடங்களில் சீறூர் மன்னன் என்று குறிக்கப் பெறுவது இங்குக் கருத்திற்கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயமாகும். (சிறிய ஊருக்குரிய மன்னன் புறம் 319, 308 மேலும் 299, 197, 328). மன்னனுக்கும் வேந்தனுக்கும் இடையே உள்ள வேறுபாடு புறம் 333

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 95
மற்றும் 338 ஆகிய பாடல்களில் மிகத் தெளிவாக வெளிப் படுகிறது.
குடும்பம்/குழுவோடு மன்னன்தன்மையைச் சேர்க்க இயலாது. ஏனெனில், சில குறிப்புகளில் புது என்னும் பொருளைத் தரும் விருந்தின் என்ற சொல் பயின்று வருகின்றது. இப்பதவி புதிதாக உருவாகியது என்பதை உணர்த்த அச்சொல் சேர்க்கப்பட்டிருக்கலாம். (விருந்தின் மன்னர் - அநானூறு 54).
மன்னருடைய ஆட்சி மற்றும் நிறுவப்பட்ட அவருடைய அதிகாரத்தின் தன்மையைப் பத்துப்பாட்டில் அமைந்தள்ள நெடுநல் வாடையின் 78 ஆம் வரி இவ்வாறு கூறுகின்றது:
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
(மன்னருடைய தகுதிக் கொப்ப வடிவமைத்துக் கட்டப்பட்ட வீடு) இங்கு அதிகாரப் பொறுப்புடைய ஒருவர் ஏனையோரிடமிருந்து வேறுபட்டுப் பெருமனை ஒன்றைத் தமக்குரியதாகக் கொண்டிருந்தது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சுவர் அமைந்த குடியிருப்புகளில் மன்னர்கள் வாழ்ந்தனர் என்பதற்கும் குறிப்புகள் காணப்படுகின்றன (அகநானூறு 373, சிறுபாணாற்றுப்படை 247, பட்டினப் LIIT606). 277 -78). அவன் காவல் மன்னன் என்றும் குறிப்பிடப் பெறுகிறான் புறநானூறு 331). ஆகவே, எங்கு வேளாண்மை வளர்ச்சியுற்றதோ அங்கு மன்னன் என்னும் பெயர் வழக்குத் தோன்றியிருக்கலாம். வளர்ச்சியுறும் அப்புதிய பகுதியை அழிவினின்றும் அவன் பாதுகாக்க வேண்டும். ஆகவே, காப்பவனே மன்னனாகிறான். அவனுடைய அதிகாரத்திற்குட்பட்ட நிலவெல்லை, வரையறைக்குட்பட்டதாகவே இருந்திருத்தல் வேண்டும்.
எளியனாய் இருந்த போதிலும் மன்னன் கொடையளிப்பவனாயும் உபசரிக்கும்தன்மை உடையவனாயும் விளங்கியது பற்றிப் புறநானூறு 320, 327, 328 ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன. மீள் வழங்குகையில் மன்னன் ஆற்றும் பங்கினைப் புறநானூறு (320) தெளிவாகக் குறிப் பிடுகின்றது. மன்னன் தன் கடமையை எண்ணிச் செயல்பட்டான் என்று நற்றிணை (146) குறிப்பிடுகின்றது.
சில சமயங்களில் வேந்தர்கள், மன்னர்களிடமிருந்து மண் மகளைத் தேர்ந்தெடுத்தனர் என்று புறநானூறு 336, 337இல் குறிப்புக்

Page 53
96. பிரவாதம்
காணப்படுகிறது. இது மகட்கொடை எனப்பட்டது (மகளைக் கொடையாக வழங்குதல்). சில வேளைகளில் வேந்தர்கள்தங்களுக்குள் ஒன்று சேர்ந்து மன்னர்களுக்கு எதிராகப் போர் புரிந்ததும் உண்டு (புறநானூறு 374, அகநானூறு 174).
மன்னன் தோன்றியவுடன் அவனது ஆளுகைக்குட்படும் நிலப் பரப்பும் உருவாயிற்று. ஆளுவோர், ஆளப்படுவோர் உறவமைப்பிற் கேற்ப இருப்பிடங்களும் உரிமைகளும் கடமைகளும் வரையறை செய்யப்பட்டன. மக்களில் ஒரு பகுதியினர் ஆளப்படுவோர்ஆயினர். இரத்த உறவுடைய ஒருமுகப்பட்ட சமூகக் குழுவிற்குத் தலைமை தாங்கிய இறை, கோ போன்றவன் அல்லன் மன்னன் என்பது தெளிவாகின்றது. ஒரு நிலப்பகுதியைப் பாதுகாத்து அதற்கு தேவை யானவற்றை வழங்கி ஆட்சிபுரிந்தவன் ஆவன். இவ்வாறாக மன்னன் தமிழகத்தில் அரசன் மற்றும் அரசு உருவாவதற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒரு நிலப்பகுதியை ஆளுபவன் மன்னன். குழுவாக இணைந்த தனிநபர்களின் தலைவன் அல்லன். மன்னர், குறிப்பிடப்பட்ட பிள்ளையாட்டுச் சடங்கு ஆட்சியாளருடைய தோற்றத்தோடு பொருந்தி வருவதைக் காணலாம். மன்னனுடைய தோற்றத்தோடு ஆளுவோர் ஆளப்படுவோர் இடையே உள்ள வேறு பாடு யதார்த்தமாவதைக் காண்கிறோம்.
வேந்து அல்லது வேந்தனின் வருகையோடு ஆளுவோரிடையே ஆற்றல்மிக்க போர்த்தன்மையுள்ள ஆட்சியாளர் தோன்றுவதைக் காண்கிறோம்.
ஆட்சியின் பலம், அதிகாரத்தைப் பொறுத்தளவில், வேந்தன் மிக்க படைபலம் உடையவன். அவனுடைய படைகளோடு தொடர்பு படுத்தியே அவன் எப்பொழுதும் பேசப்படுகிறான் (புநானூறு 322, 38, 390, 278). புறத்திணை இயலில் தொல்காப்பியர் குறிப்பிடும் போர் நடவடிக்கைகள் அனைத்தும் கையறுநிலையோடு தொடர்புடைய வெற்றி குறித்தவையே. வேந்தன் என்னும் தொடர் வரையறையோடு தான் குறிக்கப்படுகிறது. (தொல் புறத்திணையில் 2, 5, 6, 10, 14). தொல்காப்பியத்தின் அப்பகுதியில் மன்னன் என்னும் சொல் வாரா மையைக் கருத்திற் கொள்ளவேண்டும். பாசறை வேந்தனோடு தான் தொடர்புபடுத்தப்படுகிறது. அவ்வாறு தொடர்புபடுத்தப்படுவதற்குக் காரணம் யாதெனில், வேந்தனின் கீழ் போர் செய்தல் சில வேளை

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 97
களில் நிறுவனமயப்பட்ட தொழிலாக மாறியமையேயாகும். மன்னன் நிலையிலிருந்து இது தொடங்கிவிடுகிறது எனலாம். ஏனெனில், மன்னர்கள் குதிரைகளை உபயோகப்படுத்தியுள்ளார் (புறநானூறு 299, நற்றிணை81), தொழில் புரிவோருக்கமைந்த பாசறை குறித்து நெடுநல்வாடை 18, புறநானூறு 22,31,33,62,69, 298, 294, 361, 304, பட்டினபாலை 16, 50, 61, 64, 84, 88 ஆகியவை குறிப்பிடுகின்றன.
வேந்தன்தன்படையுடைமை அதிகாரத்தின் வலிமை காரணமாக, பிற அதிகாரங்களையுடைய இத்தகையோரிடமிருந்து வேறுபடு கின்றான். போர்சார்நிறுவனத்தை வைத்துக் கொள்வது வேந்தனுக்கு இயலெளிமையான ஒன்றாகும். ஆனால், நிலையான படை(Standing army) அமைப்பு இருந்தது என்று சொல்வதற்குச் சான்று எதுவும் இல்லை. போர் வீரர்களுடைய போரற்ற கால வாழ்க்கை குறித்த குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
மன்னனுடைய நிர்வாக அமைப்பு குறித்த குறிப்பு எதுவும் இல்லை. மாறாக, வேந்துவினை காரணமாக மக்கள் வெளியே செல்வது போன்ற வேந்தனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. (வேந்தனால் இடப்பட்ட பணிகள் - ஐங்குறுநூறு 426 அகநானூறு 254 104). மக்கள் தாம் மேற்கொண்ட பணிகளால் பல மாதங்கள் வெளியிடங்களில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாகவே மிகவும் விரிவடைந்த நிர்வாக இயந்திரம் வேந்தன் கீழ் இருந்தது என்ற முடிவுக்கு வர இயலாது.
இன்னொரு முக்கியமானகூறு, முடிமன்னரைச் சுட்டும் கொற்றம் என்னும் எண்ணக்கரு, இவ்வகைப்பட்ட ஆளுவோருடன் முதன் முதலாகத் தொடர்புபடுத்தப்பட்டமையாகும் (பதிற்றுப்பத்து 64, 62, 69, புறநானூறு 37, 21, 367,338). உள்ளபடி இது மன்னரோடு தொடர்பு படுத்தப்படவே இல்லை. சில அடையாளங்களுடன் இக்கொற்றம் தொடர்புபடுத்தப்பட்டது. (எ.கா) முரசு, வாள், கொடி, குடை, தேர்.
பிற்பட்டு நாம் பார்க்கவுள்ள அரசோடும் இத்தொடர் தொடர்பு படுத்தப்பட்டது (புறநானூறு 35,55).
ஆற்றுப் பாசனம் சார்ந்த வளர்ச்சி நடவடிக்கை வேந்தரோடு தொடர்புடையது என்பது வரலாற்றில் குறிக்கத்தக்க மிகச் சிறப்பான நிகழ்ச்சியாகும்.

Page 54
98 பிரவாதம்
சேர, சோழ, பாண்டியர்களைக் குறிக்க மட்டுமே வேந்து என்னும் தொடரைப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பு நமக்குக் கிடைத் துள்ள ஆதாரங்களில் இடம் பெறவில்லையாயினும், இம்மூன்று இராஜ்யங்களை ஆண்டவர்களே வேந்தர்கள் எனக் குறிக்கப்படுவது மரபுவழி வந்ததாகும். மரபு அவர்களை மூவேந்தர் என்றே குறிக்கிறது. மூன்றாமவரைப் புகழும்போது மற்ற இருவரையும் குறிக்கும் மரபும் உள்ளது (அகநானூறு 96, புறநானூறு 42). ஏனைய வேந்தர்களுடைய ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்போடு ஒப்பிடுகின்றபொழுது இம் மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்டநிலப்பரப்பு ஆற்றுப்படுகைகளில் விரிந்து கிடப்பது. ஒவ்வொரு நிலப்பகுதியும் தம்முள்ளே பல சமூகப் பிரிவுகளைக் கொண்டு விளங்கியது. வேளாண்மையின் வருகை யொடு பெரும்படை அமைப்பது தவிர்க்கவொண்ணாத தாயிற்று. வேந்தருக்குக் கீழ்ப்பட்ட குறுநிலத்தலைவர்கள் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன (புறநானூறு 179).
அரசனுக்குரிய கூட்டத்தைக் குறிக்க வழங்கும் வேத்தவை (மலைபடுகடாம் 39. புறநானூறு 382) என்ற தொடர் வேந்தரோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இச்சொல்லின் சொற்பிறப்பே இதற்கான சுயசாட்சியமாகின்றது. வேந்தனின் கூட்டம் (அவை) என்பதே அது. இருந்த போதிலும், இக்கூட்டம் நிரந்தரமான நிர்வாக அமைப்புக் கூட்டமோ நிர்வாக இயந்திரமோ அல்ல என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இறை, கோ நிலையிற் காணப்பட்ட சுற்றமே வேந்துநிலையில் இந்த விஸ்தரிப்பைப் பெற்றிருக்கலாம். சில குறுநிலத் தலைவர்களும் மன்னர்களும் இத்தகைய சுற்றம் உடையவராய் இருந்தனர். இனக்குழு இயல்புடன் தொடர்புடைய இம்மரபுநாள் மகிழிருக்கையில் மிக நன்றாக விளக்கம் பெறுகிறது. நாள் மகிழிருக்கையில் ஆள்வோன், தன் குழுவைச் சேர்ந்த முதிய வர்களுடன் சேர்ந்தமர்ந்து கள் பருகுவான் (புறநானூறு 29, 54, 123 324, 330, பெரும் பாணாற்றுப்படை 41-7). இத்தருணம், பாணர்கள் புகழ்ந்து பாடுதற்குரியது. சடங்கு முறைமையான மீள் வழங்குகை இங்குதான் நடைமுறைக்கு வருகிறது. இருக்கை நாளடைவில் கூட்டமாக வளர்ச்சி பெற, அக்கூட்டத்தில்தான் அரசன் மக்களுடைய குறைகளைக் கேட்கிறான். பின் வந்த சபாவிற்கும் இதற்கும் எவ்வித்

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 99
தொடர்பும் இல்லை. முடிசூடுதல் வேந்தர்க்கு மட்டுமே உரியதாக இருந்தது.
மன்னனுடைய போர் நடவடிக்கைகளைக் குறிப்பிடும் போது புறநானூறு (345) வேந்தர்களை வம்பவேந்தர் (புதிதாக உருவாகிய வேந்தர்) என்று குறிப்பிடுகின்றது. இப்புலவர் குறிப்பிடும் நோக்கில் இக்குடியிருப்பும் இவ்வதிகாரப் பொறுப்பும் அழையா நுழைவு என்பது புலனாகிறது. வேந்தர் உருவாக்கத்தோடு தமிழ்நாடு முறைப் படுத்தப்படாத தொடக்க நிலை அரசை வந்தடைந்துவிட்டது எனலாம். அரசு குறித்த குறிப்புகள் தமிழ்நாட்டில் உயரதிகாரஅரசியல் நிறுவன அமைப்பின் தொடக்க நிலையை உணர்த்தி நிற்கின்றன எனலாம். அரசு என்னும் எண்ணக்கரு மூவேந்தரோடு மட்டுமே பொருந்துகின்றது. (புறநானூறு 34, 35), பொருநராற்றுப்படை 159). வேந்து என்பது அரசதிகாரம் குறித்து உள்நாட்டில் தோன்றி வளர்ந்த சொல்லாகும். அரசுதுணைமை வடிவம் போல் தோன்றுகிறது. மூன்று வேந்தர்களுக்குரிய ஒவ்வொரு அரசும் அரசு எனக் கொள்ளப்பட்டது. மதுரைக் காஞ்சி (191), பதிற்றுப் பத்து (89) ஆகியன அவற்றைக் குறிக்க அரசியல் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. (இந்நாளில் அரசின்தன்மை, அரசறிவியல் ஆகியவற்றைக் குறிக்க நாம் அரசியல் என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.) அரசு என்பது நிலையான படையுடன் தொடர்புடையது (புறநானூறு 55). அரசு என்பதுநால்வகைப் படையுடனேயே முழுமை பெறுகிறது என்றும் தெரிகிறது (புறநானூறு 197, பதிற்றுப்பத்து 43)
படை வல்லமை மிக்க ஆட்சி அமைக்கப்பட்ட பின் வேந்தனின் நடவடிக்கைக்கான அறநெறிப்பட்ட வழிகாட்டலின் தேவை மற்றும் அவசியம் குறித்த குரல்கள் எழுகின்றன. புறநானூறு 35, 55 ஆகிய இரண்டு பாடல்களும் இவ்வகை அறிவுரைகளை வழங்குகின்றன. தொல்காப்பியர் மரபியலில் அரசனுடைய அடையாளச் சின்னங்களைப் பின்வருமாறு தொகுப்பார்:
படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் தேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய

Page 55
100 பிரவாதம்
இக்கட்டத்தில் அரசு என்னும் சொல்லின் தோற்றம் பற்றி ஆய்வது பயனுள்ளதாக இருக்கும். இச்சொல் இராஜா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமாகப் பொதுவாகக் கொள்ளப்படுகிறது. மொழியியல் நோக்கில் பார்த்தோமெனில் சமஸ்கிருத இராஜா தமிழில் இராசன் என வருமேயன்றி அரசன், அரசு என்று அதுவர இயலாது. ஆகவே, சமஸ்கிருதப் பண்பாட்டோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாகப் பெற்ற கடனாக இத்தொடர்இருக்க இயலாது. அடுத்து, பிராகிருத ஆதாரங்கள் வழி இது வந்ததா என்று பார்க்க வேண்டும். அரசு என்னும் சொல் சங்க இலக்கியத்தில் அரசை என்றும் பயன்படுத்தப் பட்டிருப்பதை நாம் பார்க்க வேண்டும் (பட்டினப்பாலை 34 புறநானூறு 26, 42, 354, சிலம்பு). இது போன்ற வேறுபாடு முரசு (நற்றினை39, பதிற்றுப்பத்து 30, 31, 40, புறநானூறு 62 - 9) என்னும் சொல் குறித்தும் உள்ளது. இப்பயன்படுத்தல் பற்றி மிகுந்த கவனத்துடன் சிந்திக்க வேண்டி யுள்ளது. ஏனெனில், அரைய என்னும் சொல் அரிக்கமேட்டில் உள்ள மட்பாண்டத் துண்டிற் பொறிக்கப்பட்டுள்ளது. (டி.வி. மகாலிங்கம் 1966)
உருவாகிவரும் புதிய அரசின் தன்மைகள் குறித்து முடிவாகப் பார்க்குமுன்னே, சங்க இலக்கியத்தில் அரசியல் அதிகாரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வேறொரு தொடர் குறித்தும் மிக முக்கி யமான கவனம் செலுத்துவது அவசியமாகும். அத்தொடர் குருசில். குருசில் என்னும் தொடர் சில இடங்களில் குரிசில் என்றும் குறிக் கப்படுகிறது. (மதுரைக் காஞ்சி 151, மலைபடுகடாம் 186, ஐங்குறுநூறு 306, 471, 473, 480, பதிற்றுப்பத்து 24,31,82,53,5,72,88, புறநானூறு 16, 50,68,161,198,210,285,290,321,333,341,377 அகநானூறு 184). அரசர், மன்னர் மற்றும் குறுநிலத் தலைவர்களோடு தொடர்புபடுத்தும் வகையில் இத்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஈட்டியோடும், அதுவன்றிப் படையோடும் இத்தொடர் குறிப்பிடப் படுகிறது. குரிசில் என்னும் தொடர் ஆளுவதற்கான உரிமையைச் சுட்டுகிறது எனலாம். இச்சொல்லின் சொற்பிறப்பியல் தெளிவாக இல்லை.
இனிவேந்தர்கள் முடிசூட்டிக் கொண்டார்களா என்று ஆராய்வது பொருத்தமாக இருக்கும். மகுடத்தைக் குறிக்கும் தொடர் முடி. தலையின் உச்சியில் உள்ள மயிரைச் சேர்த்து முடிச்சுப் போடுவதும்

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 101
முடி என்றே குறிப்பிடப்படும். பழங்கால தமிழ்ப் பெண்கள் போட்டு வந்த ஐவகைக் கொண்டைகளுள் ஒன்றையும் இது குறிக்கும் (முல்லைப்பாட்டு 76). ஆண்கள் மயிரைச் சேர்த்துப் போடும் முடிச்சுக் குடுமி என்று குறிக்கப்படுவது. பாண்டிய மன்னர்களுள் ஒருவனான பெருவழுதி, பழமையான குடுமியை உடையவன், முதுகுடுமிப் பெருவழுதி என்று குறிக்கப்படுகின்றான். பல்யாகச்சாலை அரசன் அவனேயாவான்.தலைமயிரைச் சேர்த்து உச்சியில் கட்டுவது வீரத்தின் குறியீடாகக் கருதப்பட்டதாஎன்னும் ஐயம் இவ்விடத்தில் எழுகின்றது. தமிழ் ஆடவரிடையே உச்சிக்குடுமிவைத்துக்கொள்ளும் மரபு ஒன்று உண்டு. அரசியல் அதிகாரம் படைத்தவர்களைப் பிரித்தறிவதற்குத் தலையில் குடுமி வைக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்."
புதிதாக உருவாகும் அரசு நீர்ப்பாசனத்தோடு தொடர்புடையது என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது. நீர்ப்பாசன வசதி காரணமாக நெல் உற்பத்தி பெருகி, குறிப்பிடத்தக்க அளவு உபரி உற்பத்தி தோன்றியிருக்க வேண்டும். தொடக்கக் கால அரசுகள் நெல் உற்பத்தி செய்யப்பட்ட பகுதிகளிலே அமைந்திருப்பதை நாம் காணலாம். (சோழர்கள், காவேரி, பாண்டியர், வைகை மற்றும் தாமிரபரணி, சேரர்கள், பேரியாறு. மெலோனி பக். 9 - 12).
வேந்தர்களின் அரசாட்சிக்குட்பட்ட நிலப்பகுதியில் இருந்த பெருஞ்செல்வம் வெளிவாணிபத் தொடர்புக்குக் காரணமாயிற்று. கிரேக்கத் தொல்சீர்எழுத்துக்களிற் காணப்படும் முக்கியதுறைமுகங்கள் அனைத்தும் இம்மூன்று அரசியல் அலகுகட்கு உட்பட்டனவே. நெளரா மற்றும் முசிறி சேர நாட்டைச் சேர்ந்தவை. நெல்சியானா, பிக்கார் மற்றும் பொதுகா சோழ நாட்டிலுள்ளவை. சோபட்டாமா, காஞ்சிக்கருகில் உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வாணிப அமைப்பு குறித்துப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது (184-93). சிறுகச் சிறுகச் சோழர் கருவூலகத்தில் செல்வம் குவிந்ததை இது காட்டுகிறது. பாண்டிய நாட்டிற்கு வாணிபம் விளைவித்த செல்வச் செழிப்பை மதுரைக் காஞ்சி உணர்த்துகிறது (321-4, 536-44). சேரர்களின் வாணிபச் செழிப்பை அறிய பதிற்றுப்பத்து வகை செய்கிறது.
* காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி என் கவனத்தை ஈர்த்து
இது குறித்து எண்ணிப் பார்க்குமாறு தூண்டினார். அவருக்கு நான் கடப்பாடுடையேன்.

Page 56
102 பிரவாதம்
நெடுந்தூர வாணிபத்தால் புதிதாக உருவாகி வரும் அரசுகள் பயன்பெற்றனவாயினும், வாணிபமும் வர்த்தகமும் முடியாட்சியின் ஏகபோகமாக இருக்கவில்லை. இக்காலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் வாணிபத் தொழிற் கூட்டுச் சங்கங்கள் இருந்தமை பற்றிய தகவல்களைத் தருகின்றன. (சிவத்தம்பி 1981, பக். 171-4)
அரசுகளை முறைமையுடையதாக்குவதற்குக் குறியீடாக ஒவ்வொரு அரசும், தன்னுடைய தோற்றம் வம்சாவளி குறித்தும் தொன்மக் கதைகளை உருவாக்கின. எடுத்துக் காட்டாகச் சோழப் பேரரசு சிபியையும், பாண்டியப் பேரரசு நெடியோனையும் உருவாக் கியமையைக் கூறலாம். அவர்கள் மகாபாரதப் போரோடுகூடத் தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டனர். ஒவ்வொருவரும்தாங்கள் வடபுலத்தை வெற்றி கொண்டதாகவும் கூறிக் கொண்டார்கள்.
புதிதாக உருவாகிய அரசர்கள் தங்கள் தகுதியை அழுத்தமாக நிலைநாட்டி, அரசமைப்பு முறைமையுடையதாக சமஸ்கிருத மரபு வழிப்பட்ட யாகங்களைச் செய்தார்கள் (புநானூறு 26, 15, 224, பதிற்றுப்பத்து 21, 74; 70). நிலத்துக்கே உரியதான தொன்முதுகுடி மரபில் தங்கள் அரசமைப்பே முறைமையுடையதாக்கத்தமிழ் வேந்தர் களுக்குப் புரோகித வகுப்பார் இல்லை என்பது மிகவும் கவனிக்கத் தக்க விடயமாகும். தமிழ் மண்ணுக்குரிய சடங்குமுறையாகத் தமிழ் இலக்கியம் குறிப்பிடுவது களவேள்வியேயாகும். தோற்று ஓடியவர் களின் தலையை வெட்டி அமைக்கப்படும் அடுப்பின்மீது, அவர் களின் தசை கொண்டு சமைக்கப்படுவது இவ்வுயிர்ப் பலியாகும். தோள் பட்டையுடன் கூடிய வெட்டி எடுக்கப்பட்ட கைகள், கூழைக் கிளறி விடும் அகப்பையாகப் பயன்படுத்தப்படும். போர்க்களத்தில் இறந்துகிடக்கும் படைவீரர்களின் உடம்பைக் கண்டு பேய் மகளிர் தங்களுக்கு விருந்தளித்தமைக்காக ஆனந்தத்தில் நடனமாடுவார்கள். (புறநானூறு 356,359, 371, பதிற்றுப்பத்து 36, 37, சிறுபாணாற்றுப்படை 196 -207 ஆகியன). தன்னின மாமிசத்தை உண்ணும் தன்மையையே இவ்விருந்து முறை சுட்டிநிற்கிறது. ஆனால் நாளாவட்டத்தில் வேத முறைப்பட்டயாகங்களோடுகூட களவேள்வியும் இடம்பெற்றது. இவை இரண்டும் செய்தமைக்காக ஆட்சியாளர் புகழப்பட்டுள்ளனர். இவ்யாகங்களைச் செய்தமையும் சமஸ்கிருதச் சடங்கு முறைகளைத்

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 103
தழுவியமையும் ஆட்சியாளர் பற்றியுள்ளகருத்துநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திற்று.
வடபுலத்தோடு தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தொடர்பு, அதன் காரணமாக வடபுலம், அதனுடைய அரசர்கள் மற்றும் மரபுகள் குறித்து ஏற்பட்ட அறிவு வளர்ச்சி (புறநானூறு 31, 52, பதிற்றுப்பத்து 68), யவனர்களோடு ஏற்பட்ட நட்பு இவையனைத்தும் அரசினுடைய துணை அமைப்புகள் உருவாக்குவதற்குக் காரணமாக இருத்தல் வேண்டும். .
இவற்றுக்கு முன்னரே அமைத்த அரசமைப்புகளின் தாக்கமும் அல்லது அதே பரப்பில் ஏற்கனவே அமைந்திருந்த அரசுகளின் தாக்கமும், தமிழ்நாட்டில் அரசு அமைவதற்குக் குறிப்பிடத்தக்க அளவு பெரிதும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். ஏனெனில், நாமறிந்த அளவில் தமிழ்நாட்டில் சமூகத்தளபிரிநிலைகளுக்கிடையே அக்காலப்பகுதியில் வர்க்க அடிப்படையிலான ஒன்றுக்கொன்று விரோதமான மோதல்கள் நிகழவில்லை. வணிக வர்க்கம் நிக்காமங்கள் என்ற அமைப்பாகவும் நிலச் சொத்துக்களை உடையவர்கள் கிழான் களாகவும் நிறுவனமயமாகி இருந்தனர். சங்க இலக்கியம் வணிகர் களுடைய சமுதாயரீதியான செயற்பாடுகள் குறித்துத் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. வணிகர்களுடைய நகரமேம்பாட்டுத் தன்மை சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. பேரளவு நெல்லைக்களஞ்சியப் படுத்தல் பற்றிய குறிப்பில்தான் வர்க்க வேறுபாட்டு வளர்ச்சிக்கான தொடக்கத்தினைக் காண்கிறோம் (அகநானூறு 44 நற்றிணை 26, 60). அக்கால வேளாண்மை வினைவலர் என்னும் நிலமற்ற விவ சாயிகளை உருவாக்கிற்று. வேறொரு முக்கிய பொருளாதார நட வடிக்கையும் இருந்தது. ஆடவர், இளைஞர்களுடன் தமிழ்நாட்டிற்கு வெளியே சென்று செல்வம் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். செல்வம் சேர்ப்பதற்காகச் சென்ற இப்பயணத்தைக் கர்நாடகாவில் உள்ள தங்கச் சுரங்கங்களில் தங்கத் தாது தோண்டச் சென்றனர் எனலாம். (சிவத்தம்பி 1981, 174-5). நெல் உற்பத்தியோடுகூட இந் நடவடிக்கையும் சேர்ந்து உபரி உற்பத்திக்கு அடிகோலியது. இச் செல்வம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகளைச் சங்க இலக்கி யத்தில் நாம் தெளிவாக உய்த்துணர முடிகிறது.

Page 57
104 பிரவாதம்
புதிதாகத் தோன்றி வளர்ந்த அரசியல் அதிகார அமைப்பில் உள்ளழுத்தமின்மை காரணமாக உயர்வான நிர்வாக இயந்திரம் எதுவும் ஏற்படவில்லை. எந்த ஒரு அமைச்சர் பற்றியும் சங்க இலக் கியத்தில் குறிப்பு எதுவும் இல்லை. ஏற்கனவே காட்டப்பெற்றுள்ள வேத்தவை (நற்றிணை 90), அரசவை (பொருநராற்றுப்படை 850) ஆகியவை உயரதிகாரம் படைத்த நிர்வாக அமைப்போ அல்லது நீதி அமைப்போஅல்ல. உள்ளழுத்தமற்ற நிலைமை காரணமாக அரசுக்கு முற்பட்ட மரபுவழி அமைப்புகளான பலவர்களுக்குப் பரிசளித்தல், நாளவை ஆகியன புதிய அரசமைப்புகளினூடாகவும் தமிழ்நாட்டில் தொடர்ந்தன எனலாம். நெகிழ்ச்சியான குடி முறையிலிருந்து விடு பட்டு, வளர்ச்சியடைந்த ஆற்றுப்படுக்கைகளில் அமைந்த நில வுடைமை வேளாண்மையை வந்தடைந்ததே மிக முக்கியமான மாறுதலாகும்.
தமிழ்நாட்டில் புதிதாக வெளிப்பட்ட அரசுகளில், அரசன் என்னும் தனிநபரைப் புகழ்ந்து வழிபடும் போக்குத் தோன்றியது. பதிற்றுப் பத்துத் தொகைநூலில் நாம் இப்போக்கைத் தெளிவாகக் காணலாம். வெற்றி பெற்ற அரசனை அவனுடைய பேராற்றல், வீரத்திற்காகப் பாராட்டிய நிலையிலிருந்து, அரசனுடைய தோற்றச் சிறப்பை எடுத் துரைத்ததற்கும் அவனுக்கு வேண்டுகோள் விடுப்பதற்குமாகப் பாடு கின்ற புதியநிலைக்குப்புலவர்கள் வந்து சேருகின்றனர்(பதிற்றுப்பத்து 50, 51, 52, 68, 65). இவ்வியல்புகள் பாண்டியர், சோழர் காலங்களி லிருந்துநாயக்கர்காலப் பாளையப்பட்டுகள் காலம்வரை தொடர்ந்தது கவனத்திற்குரியது.
கோ, மன்னன் அல்லது வேந்தன் தன்னுடைய தனிப்பட்ட வீரத்தையும், பேராண்மையையும் வெளிப்படுத்தி ஏற்புடமை பெற்றி ருத்தலே ஒரு வீரன் / அரசனின் புகழ் பாடுவதற்குக் காரணமாய் அமைகிறது எனலாம். குறிப்பாகச் சங்கப் புறப்பாடல்களில் ஆளு வோரின் வீர இயல்புகளை மிக உயர்வாகப் புகழ்ந்து பாடுவதை நாம் காண்கிறோம் (கைலாசபதி 1968). இவ்வதிகாரத்துவத்தை நிறுவு வதற்கு இது தேவைப்படுகிறது. சங்கப் பாடல்களில் வீர வழிபாடு ஊடுருவி நிற்பதற்கான காரணம் இதுவேயாகும்.*
* பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் இக்கருத்து குறிக்கப்பட வேண்டும்
என்று எனக்குத் தெளிவுறுத்தினார். அவருக்கு என் கடப்பாடு உரியது.

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 105
உயர்மதிப்புடன் கூடிய தனிமனிதர் சார்ந்த முடியாட்சி மரபு தமிழ்நாட்டில் ஏற்பட்டமைக்கான காரணம் இப்பொழுது மிகத் தெளிவாகப் புலப்பட்டிருக்கும் என்று நான் கருதுகின்றேன். சோழர் குல மரபில் வந்த கரிகாலன், பாண்டியர்குலத்தில் அவதரித்த நெடுஞ் செழியன், சேரர்குலத்தைச்சார்ந்த பல்யாகசாலை செல்கெழுகுட்டுவன் ஆகிய நீர்ப்பாசனத்தோடு தொடர்புடைய பெருவேந்தர்களோடு தொடக்க காலத்தில் உருவாகிய தமிழ்நாட்டு அரசுடைய இயல்பு, அதனுடைய வளர்ச்சிப்போக்கு ஆகியவை கருத்திற் கொள்ளப்பட்டு ஆராயப்பட வேண்டும். சேர வேந்தர்களைப் பொறுத்த அளவில் கீர்த்தி வாய்ந்த செங்குட்டுவனும் பின்வந்த வேந்தர்களில் குறிக்கத் தக்கவன். ஆட்சிப் பொறுப்பேற்ற வலிமை பொருந்திய வேந்தர்கள் பின்வந்தோருள் மிகவும் குறைவே. மேற்கூறியதைக் களப்பிரர் இடையீட்டோடு தொடர்புபடுத்த இயலாது. ஏனெனில், அது கி.பி. 430இல்தான் ஏற்பட்டது. (கே.ஆர். வெங்கட்ராமன்1957). முடியாட்சி யின் மேன்மை தளர்ச்சி எய்தியமை பற்றி (நீலகண்ட சாஸ்திரி 1963 பக் 18, 155) சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது எனலாம். அக் காலத்தில் வலிமை பொருந்திய முடியாட்சி இல்லாமற் போனது தான் குறிக்கத்தக்க காரணம், இருப்பினும் அதற்கான முக்கியக் கூறுகள் ஆராயப்பட வேண்டும்.
முறைப்படுத்தப்படாத தொடக்கக் கால அரசு, தனக்கே உரிய முறையில் ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்க இயலவில்லை. ஆகவேதான், நிர்வாக உள்ளமைப்புகள் குறித்த குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. உண்மை யாதெனில் உள்ளமைப்பு எதுவும் இருக்கவில்லை. ஆட்சி என்பது முழுமையாக ஒரு தனிநபரை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது.
மேற்கோள் நூல்கள்
Champakalackshmy, R, 1976, Archaeology and Tamil Literary Traditions,
Delhi.
Classen H.J.M.P. and Skalnik, 1978, The Early State, The Hague.
Fried, M.H., 1960, 'On the Evolution of Social Stratification
Fried, M.H., 1960, "The State in Culture and History’ (Ed. S. Diamond),
New York.

Page 58
106 பிரவாதம்
Fried, M.H., 1967, The Evolution of Political Society, New York.
Gough, Kathleen, 1980, Modes of Production in Southern India, Economic
and Political Weekly, India.
Gough, Kathleen, 1981, Rural Society in South East India, Cambridge.
Gunawardhana, R.A.L.H., 1978, 'Social Function and Political Power; A Case Study of State Formation in Irrigation Society. The Indian Historical Review, Vol. IV, No.2, p.259-73.
Gunawardhana, R.A.L.H., 1981, "Total or Shared Power; A Study of the Hydraulic State and its Transformations in Sri Lanka from the Third to the Ninth Century AD, The Indian Historical Review, Vol VII, 1/2, No. 70-98.
Hindess, B. and Hirst, P.O., 1979, Pre-Capitalist Modes of Production,
London.
Kailasapathy, K., 1968, Tamil Heroic Poetry, OUP Karashima, N., 1984, South Indian History and Society, OUP. Krader, L., 1968, Formation of the State, Prentice Hall, New York.
Mahalingam, T.V., 1966, Inscribed Porsherds from Alagarai and Uraiyur,
Seminar on Inscriptions (Ed. R. Nagaswamy), Madras.
Mahalingam, T.V., 1967, South Indian Polity, Madras (2nded). Maloney, C, 1976, Archaeology, Essays on South India (Ed), New Delhi. Marr, J.R., 1985, The Eight Anthologies, Madras. Miller, E.S. and A. Weitz, 1979, Introduction to Anthropology, Prentice Hall. Nilakanta Sastri, K.A., 1955, The Colas, Madras. Nilakanta Sastri, K.A., 1963, Culture and History of the Tamils, Calcutta. Nilakanta Sastri, K.A., 1976, A History of South India (4th Ed.).
Seneviratne, Sudharshan, 1981, Kalinga and Andhra; The Process of Secondary
State Formation in Early India, Indian Historical Review, Vol. VII, No.2.
Sivathamby, K., 1966, Analysis of the Anthropological Significance of the Economic Activities and the Conduct Code Ascribed to Mullai Tinai', Kuala Lampur, Vol.1, pp.320-331.
Sivathamby, K., 1971(a), Development of Aristocracy in Ancient Tamilnadu, Vidyodaya Journal of Arts, Science and Letters, Vol. 4, No. 1/2, pp.25-46.

பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம் 107
Sivathamby, K., 1971 (b), Early South Indian Society and Economy: The
Tinai Concept, Social Scientist, No. 29, pp. 20-37.
Sivathamby, K., 1981, Drama in Ancient Tamil Society, Madras.
Sivathamby, K., 1986, Literaty History in Tamil, Tamil University,
Thanjavur.
Srinivas lyengar. P.T. 1927, History of the Tamils (Reprint 1982). Stein, B., 1980, Peasant State and Society in Medieval South India. Subrahmaniam, N., 1980, Sangam Polity, Madurai (2nd ed.) Thapar Romila, 1978, Ancient Indian Social History, New Delhi. Thapar Romila, 1984, From Lineage to State, OUP Index des Mots dale litterature tamoule ancienne, Vol.1, 1967.
Index des Mots dale litterature tamoule ancienne, Vol.11.1968.
Index des Mots dale litterature tamoule ancienne, Vol.11, 1970.
சங்க இலக்கியங்கள் (மர்ரே பதிப்புகள்), மறு அச்சு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை, 1981.
சங்க இலக்கியச் சொற்களஞ்சியம், திருவாவடுதுறை, 1965 தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், 1926 - 39. திருக்குறள் உரைக் கொத்து - பொருட்பால், திருப்பனந்தாள் மடம், 1960.
பாட்டும் தொகையும் (மர்ரோ பதிப்பு), மறு அச்சு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை, 1981.

Page 59
உயிர்ப்பு நிலை பேராசிரியர் சிவத்தம்பி கண்டறிந்த தமிழ்க்கல்வி
வீ. அரசு"
பேராசிரியர் கா. சிவத்தம்பி மறைவு நிகழ்ந்த இந்தத் தருணத்தில், தமிழ்ச்சமூகம் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது. எந்தெந்தப் பணிகளுக்காக நாம் அவருக்கு நன்றி பாராட்டிநினைவுகூரவேண்டும் என்பதை ஒரு வசதிக்காக பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்:
* இந்தியா என்று இன்று அறியப்படும்நிலப்பரப்பில் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இருமொழிகள் பழமையானவை. காலனிய வருகையால், இந்தியாவில் கலை, இலக்கியம், இலக்கணம், புவியியல் ஆகிய பிற புதிதாகக் கண்டறியப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொல்வரலாறு எழுதப்பட்டது. சமஸ்கிருத மொழி மற்றும் பண்பாடு தொடர்பான விவரணங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. 1847இல் கல்கத்தாவில் உருவான ஆசியவியல் கழகம் இந்தியா என்ற நிலப்பரப்பை சமஸ்கிருதப் பின்புலத்தில் தான் அடையாளப்படுத்தியது. இந்தியச் சட்டம், இந்தியாவின் வழமைகள், இந்தியரின் அடையாளம், இந்தியக் கலைகள் போன்ற பிற கட்டமைப்புக்களை சமஸ்கிருதப் பிரதி சார்ந்த மூலத்திலிருந்தே கண்டுபிடித்தார்கள். தென்னிந்தியா எனும் நிலப்பகுதி மேற்குறித்த அடையாளக் கட்டமைப்பிற்குள் கணக்கில் கொள்ளப்படவில்லை.
தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்,திருக்குறள் ஆகிய பிரதிகளின் கண்டுபிடிப்பு, பல்வேறு தென்னிந்தியத் தொல்
* பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

உயிர்ப்புநிலை 109
பொருள் கண்டுபிடிப்புக்கள், சிந்து சமவெளிக் கண்டுபிடிப்புக்கள் போன்றவை மேற்கூறிய சமஸ்கிருத மேலாண்மை சார்ந்த கருத்துருவை மறுதலித்தன. இந்தச் சூழலில் பேராசிரியர் கா. சிவத்தம்பிதமது கலாநிதிபட்ட ஆய்விலும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதிய சில கட்டுரைகளிலும் புதிய ஒளிப் பாய்ச்சலை “பண்டையத் தமிழ் சமூக வரலாறு எழுதியலில் ஏற்படுத்தினார். இதன்மூலம் இந்திய நிலப்பகுதி இரு மொழிகள், இருவேறு பண்பாடுகள், இருவேறு புவியியல் ஆகிய பிறவற்றைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார். இவ்விரு மொழிகளுக் கிடையில் ஏற்பட்ட உறவு என்பது சமதளத்தில் நிகழ்ந்தது என்பதையும் தெளிவுபடுத்தினார். இத்துறையில் ஆய்வுநிகழ்த்திய பலரின் கருதுகோள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டக் கருது கோளைசங்க இலக்கியப் பிரதிகள் வழிகட்டமைத்துக்காட்டினார். இவ்வகையான பங்களிப்பு:தமிழ்ச்சமூக வரவாறு எழுத்தியலுக்கு முற்றிலும் புதிதானது, தர்க்கபூர்வமானது, இயங்கியல் மரபு சார்ந்தது.
தமிழ் இலக்கணம், இலக்கியம், சாத்திரங்கள் மற்றும் கலை சார் புலமைத்தளங்கள் அனைத்தும் பாட்டு, கவிதை, செய்யுள் மரபில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் பெரும் மடைமாற்றம் இத்தன்மையில் நிகழ்கிறது. பேராசிரியர்தமது கடந்த முப்பது ஆண்டு ஆய்வுகளில் இத்தன்மை குறித்து பெரிதும் கவனம் செலுத்தினார். தொல்காப்பியம் மற்றும் சங்கப்பாடல்கள் தொடர்பான அவரது ஆய்வுகளை இப் பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விதமான கவிதை இயல் ஆய்வு வழி பேராசிரியர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதமிழ்ச் சமூகம் தொடர்பான பல்வேறு விவரணங்களை முன்வைத்துள்ளார். தமிழ்ச் சமூகத்தில் சமயத்தின் இடத்தைப் புரிந்து கொள்வதற்கு இவ்வாய்வுகளே நம்முன் உள்ளன. தமிழ் மரபின்தத்துவ வரலாறு, விமர்சன வரலாறு, அழகியல் வரலாறு ஆகிய பிற துறைகள் குறித்த உரையாடல்களைத் தமிழ்க் கவிதை மரபின்ஊடாகக்கண்டறியும்பார்வையைஅறிமுகப்படுத்தியுள்ளார். 'தொல்காப்பியமும் கவிதையும் (2008), தமிழின் கவிதையியல்

Page 60
IIO
பிரவாதம்
(2007), ‘சங்க இலக்கியம்: கவிதையும் கருத்தும் (2009), ‘தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்; இலக்கிய வரலாற்றாய்வு (1983) ஆகிய அவரது நூல்களில் மேற்குறித்த கூறுகளைக் கண்டறிய முடியும்.
இத்துறையில் பேராசிரியரின் ஆய்வு குறித்தப் புரிதலைத் தமிழ்சமூகம் இன்னும் உணரவில்லை. தமிழ்ச் சமூகம் பேராசிரியரின் இவ்வகையான ஆய்வுக்கு என்றென்றும் கடன் பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தில் பெரும் மறுமலர்ச்சி உருவானது. ஐரோப்பிய பின்புலத்தில் செயல்பட்ட தொழிற்புரட்சி மற்றும் பிரெஞ்சுபுரட்சி தொடர்பானகருத்துருவின் தாக்கம் தமிழ்ச்சூழலிலும் ஏற்பட்டது. இத்தன்மைகளைச்சார்ந்து அச்சுப் பண்பாடு என்பது நமக்கு உருவானது. மரபு சார் எழுத்து முறை, வாசிப்புமுறை, அறிதல்முறை ஆகியவற்றில் தலைகீழ் மாற்றங்கள் உருவாயின. தமிழ்ச் சூழலில் இம்மாற்றங்களின் தாக்கம் கடந்த இருநூறு ஆண்டுகளில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. மரபுசார் ஊடகம், அச்சு ஊடகம், கேட்பு ஊடகம், காட்சி ஊடகம் ஆகியவற்றில் நவீன மின்ஊடகத் தாக்கத்தால் பெரும் மாற்றங்கள் உருப்பெற்றுள்ளன. இதனை ஊடகப் பண்பாடு என்று கூற இயலும். இத்தன்மைகளை பேராசிரியர் புனைகதை ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள், சமூக இயக்கங்கள் (தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம்) குறித்த ஆய்வுகள் வழி நடைமுறைப்படுத்தியுள்ளார். - ஈழத்தமிழனாக வாழ்ந்த வரலாறு அவருக்கு ஒருபக்கம் வலிமையையும் இன்னொரு பக்கம் துன்பத்தையும் கொடுத்தது. கடந்த முப்பதாண்டுகளில் ஈழப்போராட்டம் 1980களில் வேறு தன்மைகளையும் உள்வாங்கியது. இவ்விரு தருணங்களிலும் வாழ்ந்த பேராசிரியர் சுயநிர்ணய உரிமைக்காக ஈழத்தமிழர்கள் நிகழ்த்திய போராட்டம் குறித்தும் விரிவாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். மிகுதியான எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இவரது இச்செயல்பாடுகள் குறித்தப்புரிதல் இன்னும்

உயிர்ப்பு நிலை 1ll
உருவாகவில்லை. பேராசிரியர் ஒதுங்கிவிடவில்லை. களத்தில் இருந்தார். * ஈழத்தின் கலை, இலக்கிய வரலாறு தொடர்பான பேராசிரியரின் பதிவுகள் விரிவானவை. ஈழத்தமிழ்ச்சமூகம் தொடர்பான ஆய்வுகளும் மிக விரிவானவை; ஈழத் தொடர்பான ஆய்வுகளும் மிகவிரிவானவை. ஈழத்தமிழனாக இருந்து உலகத்தமிழரான அவர் ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் அக்கறை காட்டியுள்ளார். ‘ஈழத்தில் தமிழ் இலக்கியம் (1978), ‘ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் (2010) ஆகிய நூல்கள் மற்றும் யாழ்ப்பாணச் சமூகம் குறித்த அவரது ஆய்வுகள் ஆகியவை முக்கியமானவை. பேராசிரி யரின் இச்செயல்களைத் தமிழ்ச்சமூகம் என்றும் நினைவில் கொள்ளும்.
பண்டைத் தமிழ்ச்சமூக வரலாறு, தமிழ் வரலாறு, தமிழ் ஊடக வரலாறு, ஈழத்தின் கலை மற்றும் இலக்கிய வரலாறு ஆகியவை தொடர்பான ஆய்வுகளில் பேராசிரியரின் வகிபாகம் தொடர்பான குறிப்புகளை மேலே தொகுத்துக் கொண்டோம். இவற்றைத் தமிழா சிரியனாக இருந்து நடைமுறைப்படுத்திய வரலாறு குறித்துப் பதிவு களை அவர் தொடர்பான மீள் நினைவாகப் பதிவு செய்யும் தேவை யுண்டு.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகநான் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பேராசிரியரது செயல்பாடுகளை உடன் இருந்து உள்வாங்கும் பேறு பெற்றவன் என்ற வகையில் இவற்றை பதிவு செய்கிறேன்.

Page 61
நூல்விமர்சனம்
Writing Research Proposals in the Social Sciences and Humanities: A Theoretical and Practical Guide, by Jayadeva Uyangoda, Social Scientist's Association, Colombo, 2010, pp. xii+140.
ஜயதேவ உயன்கொட கொழும்புப் பல்கலைக் கழகத்தில் அரசறிவியல்துறைப்பேராசிரியராகக் PROPOSALS கடமையாற்றுகிறார். 'ஆராய்ச்சி முறையியல்
என்னும் விடயம் குறித்த பாடநூலினை rவல்| ஆராய்ச்சி முன்மொழிவுகளைவரைதல்; சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மனிதப் பண்பியல்
துறை ஆய்வாளர்களுக்கான கோட்பாடும் நடை முறையும் பற்றிய வழிகாட்டி’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கம் இந்நூலைப் பிரசுரித்துள்ளது.
பத்து அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலின் 9 ஆவது அத்தியாயம் ஆராய்ச்சி முறையியல் பற்றிய அறிமுகத்தை விரிவாக தருகிறது. பின்பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 'ஆராய்ச்சி முறை யியல் கட்டாய பாடமாகும். ஆராய்ச்சியைச் செய்யப்புகும் ஒருவர் ஆராய்ச்சி முறைகளை அறிந்திருக்க வேண்டும். ஆராய்ச்சி முறைகள் (Methods) என்று கூறும் போது ஆய்வுக்கான கருவிகளையே குறிப்பிடு கின்றோம். முறையியல் (Methodology) என்ற சொல் முறைகள் என்ற சொல்லில் இருந்து வேறுபட்ட பொருள் உடையது. முறைகளையும் முறையியலையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் குழப்பக்கூடாது என்று கூறும் உயன்கொட, ஆய்வுக்கானகருவிகளானமுறைகளை ஆய்வாளர் எழுந்தமானமாகத் தெரிந்து கொள்ளக் கூடாது என்றும், அத்தெரிவை
 

நூல்விமர்சனம் 113
உயர்மட்டத்திலான சிந்தனையின் அடிப்படையில் செய்து கொள்ளல் வேண்டும் என்றும் கூறுகிறார்.
உயர்மட்டத்திலான சிந்தனை மூலம் முறைகள் பற்றிய தெரிவு நடைபெறுகிறது என்று கூறும் போது நாம் எதனைக் கருதுகிறோம்? இந்த உயர்மட்டச் சிந்தனை யாது? இதனை அறிவுக் கோட்பாடு (Theory of Knowledge) என்று கூறுவர். ஆய்வின் பயனாக அறிவின் உற்பத்தி நடைபெறுகிறது. அறிவின் உற்பத்தியில் நாம் கையாளும் முறையை அறிவுக் கோட்பாட்டின்துணையுடன் விளக்க வேண்டும், நியாயப் படுத்த வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அறி வாராய்ச்சியியல் (Epistemology) என்பதன் துணை கொண்டு விளங்க வேண்டும்.
இவ்வாறான விளக்கத்தையும் நியாயப்படுத்தலையும் முறை
யியல் நியாயப்பாடு (Methodological Justification) என்று நூலாசிரியர் கூறுகிறார்.
முறையியலின் மெய்யியல்: ஆராய்ச்சியுடன் மெய்யியல் நெருங்கிய சம்பந்தமுடையது. அறிவு உற்பத்தியில் அக்கறையுடையவர்கள் இந்த மெய்யியல் பிரச்சினைகளைத் தட்டிக் கழிக்க முடியாது என்றும் உயன்கொட கூறுகிறார். சமூக விஞ்ஞானங்களின் ஆராய்ச்சி முறையியலில் இருவகை மெய்யியல் மரபுகள் உள்ளன. இவ்விரு மரபுகளுக்கிடையிலான வேறுபாடுகள் அறிவாராய்ச்சியியல் விவாதங் களின் அடிப்படையிலானவை. இவ்விரு மரபுகளாவன:
1. நேர்க்காட்சிவாதம்
2. பின்னை நேர்க்காட்சிவாதம்
பின்னை நேர்க்காட்சிவாதம் என்ற இரண்டாம் வகைக்குள் பின்வரும் முறையியல்கள் அடங்குகின்றன:
அ. தோற்றப் பாட்டியில் (பினோமினோலொஜி)
ஆ. இனவியல் முறையியல் (எத்னோ மெதடோலொஜி)
இ. மார்க்சீயம்
ஈ. விமர்சனக் கோட்பாடு (கிறிட்டிக்கல் தியரி) உ. பொருள் கோடலியல் (ஹெர்மனூயிட்டிக்ஸ்)

Page 62
II4 பிரவாதம்
இம்முறையியல்களுக்கிடையிலான விவாதங்களுக்குப் பின்னால் மெய்யியல் பிரச்சினைகள் உள்ளன. இம்மெய்யியல் சார்ந்த விவா தங்களில் இளம் ஆராய்ச்சியாளர்கள் தம்மைப் பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.
19ஆம் நூற்றாண்டின்பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் முறையியல் பற்றிய விவாதங்கள் பல நடந்தனவென்றும் இவை பற்றிநாம் அறிந்திருத்தல் வேண்டும் என்றும் உயன்கொட கூறுகிறார். நூலின் 97-102 பக்கங்களில் முறையியல் விவாதங்கள்: சுருக்கமான 6) Issassil Lq. (A Brief Guide to Methodological Debates) 6Taipg5606 Lil Sai) தந்துள்ள தகவல்களை மேலும் சுருக்கிக் கீழே தந்துள்ளோம்.
* பிரான்சிஸ் பேக்கன் -‘விஞ்ஞான முறைகுறித்து கூறியவை
- 17ஆம் நூற்றாண்டு. -
* அகஸ்ட் கம்ட், எமில் டர்க்கீம் - ஆகியோர் செய்த பங் d56ill disair. (gift LIITs Ljds&lb 6TCup5u The Rules of Sociological Method 6T66p BITai).
* மக்ஸ் வெபர்
* மார்க்சியம் - மார்க்சியம் முன்வைத்த சமூகம் பற்றிய விஞ்
ஞான முறை ஆய்வு.
* நேர்க்காட்சிவாதம் (பொசிட்டிவிசம்) குறித்து எழுந்த ஆரம்ப கட்ட விமர்சனங்கள் (Husseri, Gadamar, Sartre முதலியோர்).
* பினோமிளோலொஜி, எத்னோமெதெடோலொஜி, ஹெர் மனுரட்டிக்ஸ் என்பனவற்றின் தோற்றம். (பீட்டர்பேர்ஜர், Garfinkel, ஹெபர்மாஸ் முதலியோர் கருத்துக்கள்).
* 1920க்களில் ‘வியன்னா வட்டம்' என்ற குழுவின் செயற் பாடுகள். தர்க்கமுறை நேர்க்காட்சி வாதம் (லொஜிக்கல் பொசிட்டிவிசம்) தோற்றம் பெறுதல்.
k 656565T60ig567 GLDuluthugi) (Philosophy of Science) 6Taipy சொல்லக் கூடிய எழுத்துக்கள். குறிப்பாக கால் பொப்பர், தோமஸ் கூன், Paul Feyerbend ஆகியோரின் பங்களிப்பு.

நூல்விமர்சனம் 115
‘ஆராய்ச்சி நெறிமுறைகள் என்பது விரிந்த விடயப் பரப்பை உள்ள டக்கியதொரு துறை. அத்துறை பற்றிய நூல்களை எழுதுவோர் வழமையாக ஒதுக்கிவிடுகின்ற விடயம்முறையியல் ஆகும். ஜயதேவ உயன்கொட பலரும் ஒதுக்கிவிடும் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்நூலை எழுதியுள்ளார். அதனால் இந்நூலின் சிறப்பு அம்சமான 9 வது அத்தியாயம் பற்றி இங்கு விரிவாகக் குறிப் பிட்டோம்.
முறைகள் பற்றி கூறும் பொழுது (அத் 8 பக்79-80) உயன்கொட பின்வரும் மூன்று நோக்குகள் உள்ளதாகக் கூறுகிறார்:
அ. சமூக விஞ்ஞானம் என்றால் என்ன, இயற்கை விஞ்ஞானம் என்றால் என்ன முறை ஒன்றுதான். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி முறை என்று கிடையாது என்று கூறுவோர் ஒரு பிரிவினர்.
ஆ. இன்னொரு பிரிவினர் சமூக விஞ்ஞானங்களிலும் மனிதப் பண்பியல் துறைகளிலும் தனித்துவமான முறைகளை உபயோகிக்க வேண்டும் என்று கூறுவர். இக் கொள்கையை உடையோர் முறையின் தனித்துவம் பற்றி அழுத்தம் கொடுப்பர்.
இ. இவ்விரு பிரிவினரையும் விட மூன்றாவது பிரிவினரும் உள்ளனர். இம் மூன்றாம் பிரிவினர் முறைகளின் பன்மைத் துவம் (Plurality of Methods) பற்றி ஆதரித்துப் பேசுவர். எல்லா வகை முறைகளையும் தேவைக்கேற்றபடி உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறுவர்.
முதலாம் வகையினர் புறநிலைவாதிகளாகவும், இரண்டாம் வகை யினர் அகநிலைவாதிகளாகவும் விளங்குகின்றனர். மூன்றாம் வகையினர் புறநிலைவாதம், அகநிலைவாதம் என்ற இரு நோக்கு களையும் ஆக்கபூர்வமான முறையில் கலக்க முடியும் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள்.

Page 63
116
பிரவாதம்
கோட்பாட்டு அணுகுமுறை (Theoretical Approach): G5ITL'll until "G) அணுகுமுறை என்ற அத்தியாயத்தில் (அத் 7 பக் 71-77) சமூக விஞ்ஞானங்களில் மூன்று வகைக் கோட்பாடுகள் உள்ளன எனக் குறிப்பிடும் நூலாசிரியர் அம்மூவகைக் கோட்பாடுகளும் குறித்த விடயப்பொருள் பற்றிய ஆய்வில் எவ்விதம் பிரயோகமாகின்றன என்பதை விளக்கியிருக்கும் பான்மை விதந்து குறிப்பிடப்பட வேண்டியது. நூலாசிரியர் குறிப்பிடும் மூவகைக் கோட்பாடு
550 TΠΘ) Ι6ύT:
l.
பருநிலைக் கோட்பாடுகள்: இவ்வகைக் கோட்பாடுகளுக்கு மார்க்சியம், பெண்நிலை வாதம் ஆகியவற்றை உதாரணம் காட்டலாம்.
ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த கோட்பாடுகள்: இவை
இரண்டாம் வகையின. உதாரணமாகப் புவியியல் என்ற கல்வித் துறையை எடுத்தால் அத்துறைக்கே உரியதான கோட்பாடுகள்
உள்ளன. பொருளியல் என்ற கல்வித்துறையில் அத்துறைக்கே
உரிய கோட்பாடுகள் உள்ளன. பழம் பொருளியல் கோட்பாடு, கெயின்சியப் பொருளியல் கோட்பாடு, நவலிபிரல் கோட்பாடு (Neo-LBeralism) என்றவாறு பல பொருளியல் கோட்பாடுகள் உள்ளன.
குறித்த விடயப் பொருள்சார்ந்த கோட்பாடுகள்: இவை முதல் இரண்டில் இருந்தும் பிரித்து அறிய வேண்டிய மூன்றாம் வகைக் கோட்பாடுகள். இதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுவோம். பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் அரசின் உருவாக்கம் அல்லது அரசின் தோற்றம் என்ற விடயத்தை எடுத்துக் கொள்வோம். உலகளாவிய ரீதியில் பண்டைய சமூகங்களில் அரசின் தோற்றம் பற்றிய ஆய்வுகள் ஊடாக சில கோட்பாடுகள் சமூக விஞ்ஞானிகளால் முன்வைக்கப் பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் அரசின் உருவாக்கத்தை ஆராயும் ஒருவர் முதலில் அரசு உருவாக்கம் பற்றிய பொதுக் கோட்பாடுகளை பரிசீலிக்க வேண்டும். அக்கோட்பாடுகளை தமக்கு முந்திய ஆய்வாளர்கள் பண்டைத் தமிழ்ச் சமூகம்

நூல்விமர்சனம் 117
பற்றிய ஆய்வுகளில் பிரயோகித்திருக்கிறார்களா? என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்:
மேலே குறித்த மூவகையான கோட்பாடுகளை ஒரு ஆய்வாளன் பொருத்தமான முறையில் பிரயோகிக்க வேண்டும் அல்லவா? உயன்கொட கூறும் இப்பகுப்பு முறை ஆய்வாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது.
மார்க்சியம் என்பது ஒரு பருநிலைக் கோட்பாடு. அது ஒரு உலகக் கண்ணோட்டம். இதே போன்று தான் பெண்நிலைவாதி ஒருவர் பெண்நிலைவாதம் என்ற உலகக் கண்ணோட்டத்தை உடையவராக இருப்பார். ஆய்வாளர்களிடம் பருநிலைக் கோட்பாடுகள் பற்றிய அறிவு இருப்பதால் மட்டும் அவர்கள் எதையும் சாதித்துவிடப் போவதில்லை. குறிப்பிட்ட துறைக்குள் நுழையும் போது அத்துறை சார்ந்த கோட்பாடுகள் பற்றிய தெளிவு வேண்டும். குறிப்பிட்ட துறைக்குள் ஒரு விடயம் சார்ந்த கோட்பாடுகள் பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் அந்த விடயம் பற்றி பேசும் தகுதி ஆய்வாளருக்கு இருக்க முடியாது. இன்று தமிழில் ஆய்வுலகில் காணப்படும் குழப்ப நிலைக்கு கோட்பாட்டுத் தெளிவின்மை முக்கிய காரணமாகும்.
விரிவானநூற்பட்டியல் ஒன்றும்நூலின்பிற்பகுதியில் (பக்125-128) தரப்பட்டுள்ளது. முக்கிய கலைச்சொற்கள் (Glossary of Key Terms) என்ற பகுதியில் (பக் 129-135) 20 கலைச்சொற்களிற்கு ஆசிரியர் வரைவிலக்கண விளக்கம் தந்துள்ளார். நூற்பட்டியலும், சொற் பொருள் விளக்கம் பகுதியும் சமூகவிஞ்ஞானங்கள், மனிதப்பண் பியல்துறைகளில் ஆர்வம் உடையோருக்கு பயன்மிக்க தகவல்களை வழங்குவதாய் உள்ளன. -
நூலின் தலைப்பில் குறிப்பிட்டது போல் இந்நூல் கோட்பாடு, நடைமுறை என்ற இரண்டிற்கும் வழிகாட்டியாக அமைவது. இளம் ஆராய்ச்சியாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

Page 64
அஞ்சலி
பேராசிரியர் கா. சிவத்தம்பி C1988 - 2011)
கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி (1940-49) கொழும்பு சாஹிராக் கல்லூரி (1949 - 1952) ஆகியவற்றில் தமது இளமைக் கல்வியை கற்றுப் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (பேராதனை) 1953 - 56 காலத்தில் கல்வி கற்றுப் பட்டம் பெற்ற பேராசிரியர் கா. சிவத் தம்பி 1965ஆம் ஆண்டில் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் விரி வுரையாளராக இணைந்து கொண்டார். அங்கு 13 ஆண்டுகளும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 9ஆண்டுகளும் பணி யாற்றினார். வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு முன்னரே பேராதனைப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ பரீட்சையில் சித்தியெய்திய அவர் பின்னர் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் சென்று அங்கு ஜோர்ஜ் தோம்சனின் மேற்பார்வையில் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்ற பொருளில் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
மார்க்சிய சமூகவியல் அடிப்படையில் அமைந்த ஆய்வுகள் தமிழ் இலக்கியத் துறையில் 1970களில் புதிய மாதிரித் திருப்பம் (Paradigm Shift) ஒன்றை ஏற்படுத்தின. இத் திருப்பத்திற்கு உதவியவர்களில் பேராசிரியர் கா. சிவத்தம்பி முக்கியமான ஒருவர்.
இவரின் ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம், ‘பண்டைத் தமிழ்ச் சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி என்ற இருநூல்களும் கி.மு. 200-கி.பி. 250 என்ற கால எல்லைக்குட்பட்ட 450 வருட காலத் தமிழ் இலக்கியங்கள் ஊடாக சமூக, அரசியல், பண்பாடு ஆகிய

அஞ்சலி 119
தளங்களில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிகளை மார்க்சிய சமூகவியல் நோக்கில் ஆராய்வன. தமிழில் இலக்கிய வரலாறு', 'தொல்காப்பியமும் கவிதையும்’, ‘தமிழின் கவிதையியல் ஆகிய நூல்கள் பண்டைய, இடைக்கால இலக்கியங்களின் புரிதலை ஆழப்படுத்தியவை.
தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்', 'நாவலும் வாழ்க்கையும், தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் (முன்னுரைகள்), விமர்சனச் சிந்தனைகள் ஆகியன நவீன தமிழ் இலக்கியம் குறித்த கூரிய பார்வை வீச்சுக்களைக் கொண்டநூல்கள். தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும், யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை', 'ஈழத்தின் தமிழ் இலக்கியச் சுடர்கள்’, ‘தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா என்பவை நவீன காலத்துக்கு முன்னைய (Pre modern) இலக்கிய மரபுகளை சமகாலத்துடன் இணைத்து வாசிப் பதிலும், விளக்குவதிலும் புதிய ஒளி பாய்ச்சுபவையாகவிருந்தன.
அரங்கு ஒர் அறிமுகம் (சி. மெளனகுருவுடன் இணைந்து
பதிப்பித்தது), ‘ஈழத்துத் தமிழ்நாடக அரங்கப் பாரம்பரியம்' என்பன பேராசிரியரின் அரங்கத் துறை பங்களிப்புக்களாகும். அரங்கியல், ஊடகவியல், சினிமா ஆகியவற்றிலும் பேராசிரியர் தடம் பதித்துச் சென்றார். ஈழத்தில் அரங்கியலின் வளர்ச்சிக்கு பேராசிரியர் அரிய பங்களிப்பை வழங்கினார். இன்று ஈழத்திலும், ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளிலும் இசை நடனம், நாடகம் ஆகிய அரங்கியல்கலைகளில் சிறப்பெய்தியவராய் உள்ள கலைவல்லோரில் கணிசமானவர்கள் பேராசிரியரின் மாணவர்களே என்பது குறிப் பிடத்தக்கது.
தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் சமூக, அரசியல் பண்பாட்டு பின்புலம், விளைவுகள் என்பன பற்றி ஆய்வு செய்து தமிழ்ச்சூழலில் இவ்விடயம் குறித்த கவனிப்பை ஏற்படுத்திய முன்னோடிகளில் பேராசிரியர் முக்கியமானவர். "Politics of a Literary Style”, “Understanding Dravidian Movement”, “Tamil Film as a Medium of Political Communication', 'Literary History in Tamil 9,5u g/iisa) எழுத்துக்கள் சமகாலத் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், கலை குறித்த தலைசிறந்த விமர்சகர்களில் பேராசிரியரும் ஒருவர் என்பதை வெளி உலகுக்கு தெரிய வைத்தன.

Page 65
20 பிரவாதம்
சமகாலத் தமிழ்ச் சமூகத்தில் பொதுக் களத்தில் (Public sphere) நடைபெறும் உரையாட்டு இருதளங்களில் இடம் பெற்று வருகிறது. ஒன்று தமிழ் வழிக் கல்வி கற்றோர் மத்தியிலான உரையாட்டு. மற்றது ஆங்கிலம் கற்ற தமிழர்கள் மத்தியில் இடம் பெறுவது. இந்த இரண்டிற்கும் இடையில் அதிகாரம் குறித்த வேறுபாடுகள் உள்ளன. இவ்விருதளங்களுக்கும் தொடர்பும் இணைப்பும் குறித்த சிக்கல்களும் உள்ளன. இருதளங்களிலும் இடைவினை புரியவும், இலாவகமாக ஊடாடவும் வல்லமை உடையவராக பேராசிரியர் கா. சிவத்தம்பி இருந்தார். கிராம்சியின் வார்த்தைகளில் சொல்வதாயின் உயிர்ப்பு நிலைப் புத்திஜீவி(OrganicIntelectual) என்று கூறத்தக்க வகிபாகத்தை கொண்டிருந்தார்.
o
- ‘ஹரன்


Page 66

당
ISSN 1391-7269
77 II, 크당 고
|
2DOE
--
C Ε Ο --
드
.
C
C
ല.