கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாதம் 2011.10

Page 1
பிரவாத
ஒக்டோபர் - 2011
கொழும்புத் தமிழ் முதல
- குமாரி ஜயவர்த்தன
சார்பு மண்டல முதலாளி
உற்பத்தி உறவுகளை மீ - நியுடன் குணசிங்க
இலங்கையின் கிராமப்பு
மாற்றமும் பற்றிய ஒர் ஆ - க. சண்முகலிங்கம்
ஆர்.எஸ். சர்மா (1920-20 ரொமிலா தாப்பர், சுவி
 

ISSN 1391-7269
வித்துவத்தின் உருவாக்கம்
த்துவமும் பழைய உயிர்ப்பித்தலும்
ங்களில் அரசியலும்
மும் சமூக மாற்றமும்
11)
ஜயஸ்வால், டி.என். ஜா

Page 2

ISSN 1391-7269
பிரவாதம்
ஒக்டோபர் - 2011 இதழ் எண். 7
* ஆசிரியர் உரை 3
* கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 6
- குமாரி ஜயவர்த்தன
* சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய
உற்பத்தி உறவுகளை மீள உயிர்ப்பித்தலும் 38 - நியுடன் குணசிங்க
* இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும்
மாற்றமும் பற்றிய ஓர் ஆய்வு: யொனதன் ஸ்பென்சரின் நூலின் அறிமுகம் 78
- க. சண்முகலிங்கம்
* நூல் அறிமுகம்:
இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்’ 96
-‘ஹரன்
* அஞ்சலி:
ஆர்.எஸ். சர்மா (1920 - 2011) 115
- ரொமிலா தாப்பர், சுவீரா ஜயஸ்வால், டி.என். ஜா

Page 3
பிரவாதம்
இதழ் எண் 7, ஒக்டோபர் - 2011
ஆசிரியர்
ஆசிரியர்குழு
வெளியீடு
Pravatham
க. சண்முகலிங்கம்
எம்.ஏ. நுஃமான் செல்வி திருச்சந்திரன் என். சண்முகரத்தினம் சித்திரலேகா மெளனகுரு
சமூக விஞ்ஞானிகள் சங்கம் 12, சுலைமான் ரெறஸ் கொழும்பு - 5
(A Social Science Journal in Tamil)
Issue No 7, Ocotober 2011
Editor
Editorial Board
Published By
ISSN 1391-7269
K. Shanmugalingam
M.A. Nuhman Selvi Thiruchandran N. Shanmugaratnam Chitraleha Mounaguru
Social Scientist Association 12, Sulaiman Terrace Colombo - 5

ஆசிரியர் உரை
இலங்கையில் அரசு, சமூக வர்க்கங்கள், கருத்தியல் ஆகியவற்றிற் கிடையிலான உறவுகள்: 1800-1980 என்ற விடயப்பொருள்பிரவாதம் 7 ஆவது இதழின் மூன்று பிரதான கட்டுரைகளுக்குரிய பொதுத் தலைப்பாக உள்ளது.
இவ்விதழின் முதலாவது கட்டுரை கொழும்புத் தமிழ் முதலாளித்துவம் என்ற குறிப்பிட்டதொரு சமூக வர்க்கம் காலனித் துவ அரசுப் பின்புலத்தில் உருவாக்கம் பெற்றதை எடுத்துக் கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டின் சமூக பொருளாதார மாற்றங்களின் விளைவாக இலங்கையில் தோற்றம் பெற்ற முதலாளித்துவத்தின் உபபிரிவு ஒன்றன் கதை இக்கட்டுரையில் விபரிக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (ஏறக்குறைய 1930 வரை) உள்ள வரலாறு இக்கட்டுரையில் எடுத்துக் கூறப்படுகின்றது. இலங்கைத் தமிழ் முதலாளித்துவம் என்ற சமூக வர்க்கத்தின் வரலாறு, தமிழ் முதலாளித்துவ உயர் குடும்பங்களின் வரலாறு, ஆளுமைமிக்க தனி
நபர்களான தமிழ்த் தலைவர்களின் வரலாறு என ஒன்றோடொன்று
தொடர்புபட்ட மூன்று வரலாறுகள் கட்டுரையில் கூறப் பட்டுள்ளன.
மேற்குறித்த மூன்றனுள்மூன்றாவதானதனிநபர்களின்வரலாற்றில்
மட்டும் கவனம் செலுத்தும் மரபு தமிழ்ச் சூழலில் நிலைத்துள்ளது.
இப்பின்னணியில் குமாரிஜயவர்த்தனசமூக, பொருளாதார, பண்பாட்டு
மாற்றங்களை, தனிநபர்கள், குடும்பங்கள். வர்க்கம் என்ற மூன்று
நிலைகளோடு இணைத்து விளக்கியிருப்பது உள்ளொளி மிகுந்த
பார்வை வீச்சுக்களைத் தருவதாய் உள்ளது.
இரண்டாவதாக இடம் பெறும் சார்பு மண்டல முதலாளித்து
வமும் பழைய உற்பத்தி உறவுகளை மீளமைத்தலும் என்ற கட்டுரை

Page 4
4 பிரவாதம்
filuyLair (g5600TSrisa'air Changing Socio-Economic Relation in the Kandyan Countryside என்ற நூலில் இருந்து பெறப்பட்டது. இக்கட்டுரையில் நியுடன் குணசிங்க, 1) சார்பு மண்டல முதலாளித்துவம், i) மீள உயிர்ப்பித்தல் ஆகிய எண்ணக்கருக்களை முன்வைத்து கண்டிய சமூகத்தின் உற்பத்தி உறவுகளின் மாற்றத்தை ஆராய்கிறார். அவரது ஆய்வு, கட்டமைப்பு மாற்றம் (Structural Change) ஊடாக சமூக மாற்றங்களையும் வர்க்க உறவுகளையும் விளக்குகிறது.
மூன்றாவதாக இடம்பெறும் யொனதன் ஸ்பென்சரின் கட்டுரை பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்னர் சிறிகமகே (Sri Gamage) என்ற ஆய்வாளர் கூறியிருக்கும் ஒரு கருத்தை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம். இலங்கையின் கிராமிய சமூக வர்க்கங்கள் பற்றி ஆராய்ந்த முக்கிய ஆய்வாளர்களின் எழுத்துக்களைப் பகுப்பாய்வு செய்த சிறிகமகே இவ்வாய்வுகளில் பின்வரும் இருவகை மாதிரிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன என்றார்:
i. GLITC056it (upg56i filjao TL LDigif (Materialist Determination Model): இவ்வகை ஆய்வுகள் உற்பத்திமுறை, உற்பத்தி உறவுகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் வழி சமூக வர்க்கங்களின் உருவாக்கத்தை விளக்குவன.
i, அரசியல் - கருத்தியல் மாதிரி (Politico-Ideological Model):சமூக வர்க்கங்களின் உருவாக்கத்தில் அரசின் வகிபாகம், அரசியல், கருத்தியல் ஆகியவற்றிற்கு முதன்மை அளிக்கும் ஆய்வுகள்.
பொருள் முதல் நிர்ணய மாதிரிக்கு சிறந்த உதாரணங்களாக நியுடன் குணசிங்க, ரியுடர் சில்வா ஆகியோரின் எழுத்துக்களை சிறிகமகே குறிப்பிடுகிறார்.
1. சிறிகமகே எழுதிய "இலங்கையின் கிராமிய வர்க்கங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் போது பின்பற்றப்படும் பொருள்முதல் நிர்ணய மாதிரியும் அரசியல் கருத்தியல் மாதிரியும் என்ற கட்டுரைதமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பார்க்க: இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள், இரண்டாம் தொகுதி (1980 - 1999), மொழி பெயர்ப்பு:சாமிநாதன் விமல், திரட்டு: சசங்க பெரா, தொகுப்பு: தா. சனாதனன், பா. அகிலன்.
 

ஆசிரியர் உரை 5
அரசியல் கருத்தியல் மாதிரியின் மிகச் சிறந்த உதாரணங்களாக யொனதன் ஸ்பென்சரின் நூலையும், மிக் மூர் (MickMoore) எழுதிய நூலையும் சிறிகமகே குறிப்பிடுகின்றார்.
பிரவாதம் இவ்விரு மாதிரிகள் பற்றிய சிறந்த உதாரணங்களை இவ்விதழில் அறிமுகம் செய்து சமூக வர்க்கங்கள் பற்றிய விவாதத் திற்கான விரிந்த களத்தினை அமைத்துள்ளது.
இலங்கையின் இனத்துவமும் சமூகமாற்றங்களும் நூலின் அறிமுகமும் ஆர்.எஸ். சர்மா பற்றிய குறிப்பும் இவ்விதழிற்கு அணி சேர்க்கும் பிற அம்சங்களாகும்.
க. சண்முகலிங்கம்
2. The State and Peasant Politics in Sri Lanka (g)aigosus)aigluailb (5ugustair
அரசியலும்.)

Page 5
கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம்
- குமாரி ஜயவர்த்தன -
சேர். முத்துக்குமாரசுவாமியின் தந்தையும், அவர்களது (சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம்) பாட்டனாரும் ஆகிய பொன்னம்பலம் தன் பேரப்பிள்ளைகள் இருவரும் தேசிய மட்டத்தில் பெரும் வீரர்களாவதற்குரிய அடித் தளத்தை இட்டார். அவர்தான் அக்குடும்பத்தை உயர் நிலைக்கு உயர்த்திவிட்டவர்; அக்குடும்பத்தினர் தாம் தமிழர்களில் உயர் குடிப்பிறப்பாளர் என்ற உணர்வைப் பெற வைத்தவர். ஆனால், உண்மையில் அவர்களிற்கும் இந்தப் பூர்வீகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் யாழ்ப்பாணத்தின் இராச பரம்பரை யோடு தொடர்பு அற்றவர்கள். சேர்.முத்துக்குமாரசுவாமி தன்னை இலங்கையின் இளவரசன் என்று கூறிக்கொள்ளவதில் மகிழ்ச்சி கொண்டார் ஆயினும், அவர் உண்மையில் புதிதாகத் தோன்றிய தொழிலர் வகுப்பின் (புரொபெசனல் கிளாஸ்) உறுப்பினர்களில் ஒருவரே. பிரித்தானிய ஆட்சியில் இந்த வகுப்பு வளர்ந்து செழிப் புற்றது.
ரதிகா குமாரசுவாமி (1991:4-5).
19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மூலதனத் தேட்டத்திற்கு இருந்த வாய்ப்புக்களும், வழிகளும் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. சாராயக் கைத்தொழில், பெருந்
தோட்டங்கள், காரியச் சுரங்க அகழ்வுத் தொழில், ஏற்றுமதி இறக்கு
* இக்கட்டுரை குமாரி ஜயவர்த்தன அவர்களின் Nobodies to Somebodes (சமூக
விஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு, 2000) நூலின் 11வது அத்தியாயத்தின்
மொழிபெயர்ப்பு.

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 7
மதி வர்த்தகம் என்பனவே அக்காலத்தில் மூலதனத் தேட்டத்திற்குரிய வழிகளாக இருந்தன. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சனத்தொகை அடர்த்தி குறைவாக இருந்தது. இதனால் சாராய விற்பனைக்கும் பிற வர்த்தக முயற்சிகளுக்குமான வாய்ப்புக்கள் குறைவாக இருந்தன. காரியம் என்னும் இயற்கை வளம் அப்பகுதிகளில் இருக்கவில்லை. கோப்பி, தேயிலைத் தோட்டங்கள் மத்திய மலைநாட்டிலேயே அமைக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தின் சிலபகுதிகளில் மட்டும் தெங்குத் தோட்டங்களை அமைக்கவும் அவற்றில் முதலிடவும், ஓரளவு முன்னேறவும் வாய்ப்பு இருந்தது. இந்த இரு மாகாணங் களிலும் சாராயக் குத்தகை வருவாய் பற்றிய புள்ளி விபரங்களை ஆராய்ந்து பார்த்தால் மூலதனத் தேட்டத்திற்கான வாய்ப்புக்களிற்கு பெரிய தடைகள் இருந்தன என்பதை அறிய முடியும்.
எனது நூலின் அத்தியாயம் 3 இலும் 5 இலும் குறிப்பிட்டபடி மேற்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் சாராய வர்த்தகத்தின் மூலம் பெருஞ் செல்வத்தை ஈட்ட முடிந்தது. அப்பகுதிகளோடு வடக்குக் கிழக்குப் பகுதிகளை ஒப்பிடும் போது சாராயக் குத்தகை ஏலத்தின் போது கிடைத்த வருமானம் மிகவும் குறைவாகும். ஏலத்தை எடுத்த பின் குத்தகையைச் செலுத்தாது விடுவோரும் அதிக எண்ணிக் கையினராக இருந்தனர். வியாபாரம் செய்வதற்கு வக்கில்லாதவர்களான குத்தகைக்காரர் தாம் எடுத்த குத்தகைகளைச் சரிவர நடத்தாமல் விடுவதால் ஏற்படும்'பெருந்தொல்லை பற்றி அரசாங்க அதிகாரிகள் முறைபட்டனர். வடக்குக் கிழக்கில் தொழிலாளர் வர்க்கம் என்று சொல்லக்கூடிய ஒரு வர்க்கம் பெரும் எண்ணிக்கையில் இருக்க வில்லை. இதனால் சாராயத்திற்கான சந்தை மிகச்சிறியதாக இருந்தது. அப்பகுதிகளின் விவசாயக் குடியான்களிற்கு கொல்லைப் புறத்தில் இறக்கும் பனங்கள்ளில் இருந்து வடிக்கப்படும் கள்ளச் சாராயம் கிடைத்தது. வடக்கு மாகாணத்தில் குத்தகை வருமானம் குறைந்ததாய் இருந்ததன் காரணம் இதுவே. வடமாகணத்தில் சாராயக் குத்தகை வியாபாரம் தென்னிலங்கை போன்று ஒரு முக்கிய வியாபாரமாக இருக்கவில்லை. வர்த்தக முதலாளிகளின் தோற்றத்திற்கும் எழுச் சிக்கும் ஆதாரமான ஒரு துறையாக அது இருக்கவில்லை. சாராய ஆதாயத்தை வைத்து மறு முதலீடு செய்யும் போக்கு அங்கு இருக்க வில்லை. கிழக்கு மாகாணத்திலும் ஊக வாணிப முதலாளிகள்

Page 6
8 பிரவாதம்
செழிப்பதற்குரிய வாய்ப்புக்கள் இருக்கவில்லை. அப்பகுதியின் வர்த்தக பொருளாதார முயற்சிகள் மந்தகதியில் இயங்கியதை சாராயக் குத்தகைக்காரர்களின் கேள்வித் தொகை பற்றிய விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழர்களிற்கு வர்த்தகம் மூலம் பெருஞ் செல்வம் திரட்டும் வாய்ப்பு இல்லாததால் பெருந்தோட்டத்துறையில் ஒரு சில தமிழர்கள் மட்டுமே முதலீடு செய்தனர். காரியச் சுரங்கங்களில் தமிழர் எவரும் முதலீடு செய்யவில்லை. 1870 ஆம் ஆண்டில் கோப்பித் தோட்டங் களின் உடைமையாளர்களானஐரோப்பியர்அல்லாதவர்களை பட்டிய லிட்டால் அதில் இரண்டு தமிழர்களின் பெயர்களே காணப்படு கின்றன. தும்பற என்ற இடத்தில் இநன்னித்தம்பி 419 ஏக்கர் கோப்பித் தோட்டத்தை வைத்திருந்தார். எம்.முத்துச்சாமி ரங்கலவில் 350 ஏக்கர் தோட்டத்தை வைத்திருந்தார். பெருந்தோட்டங்களில் தமிழர் முதலீடுகள் குறைவு, தமிழர் முதலீட்டுப்பலம் இல்லை என்பது பொருளாதாரத்தின் ஒரு அம்சமாக தொடர்ந்திருந்தது. றொபர்ட்ஸ் (1979: அத் iv, அட்டவணை 2) 1927 ஆம் ஆண்டில் ஐரோப்பியர் அல்லாதோரின் பெருந்தோட்ட முதலீடுகள் பற்றிய தவகல்களைத் தருகிறார். மொத்தம் 224 பெருந்தோட்ட உடைமையாளர்களில் 24 பேர்தமிழர்களாய் இருந்தனர். இவர்களுள் 1000 ஏக்கர்களுக்கு மேற் பட்ட விஸ்தீரணம் உடைய தெங்குத் தோட்டங்களை உடைய தமிழர்களாக பிரிட்டோ, எஸ்.டபிள்யு.சேனாதிராஜா (பங்குடமை), எம்.கதிரவேற்பிள்ளை, டாக்டர் எஸ்.சி.போல், என்.ரத்தினசபாபதி, டாக்டர் யோன் றொக்வூட் ஆகியோர் இருந்தனர். அவ்வாண்டில் 146 ஏக்கர் தேயிலைநிலமும், 288 ஏக்கர் ரப்பர் தோட்டநிலமும் மட்டுமே தமிழர் உடமைகளாக இருந்தன. (மேலது)
அநாமதேயங்களாக இருந்தோர் ஆங்கிலக் கல்வி மூலம் அறியப்பட்டோர் ஆனமை
மேலே குறிப்பிட்டவாறு முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் குறுக்கப் பட்டிருந்த போதும் இலங்கைத் தமிழர்களில் சிலர் சில குறிப்பிட்ட துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் காலனித்துவ ஆட்சி யின் போது ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக யாழ்ப்பாணத் தீபகற் பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாய்ப்புக்கள் கிடைத்தன. கல்வி

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 9
விருத்தியின் பயனாக அவர்கள்நகரம் சார்ந்த வர்த்தக முயற்சிகளிலும், உயர் தொழில்களிலும், அரசாங்க சேவையிலும் சிறந்து விளங்கினர். இலங்கையில் மட்டுமன்றி மலேசியா, பர்மா, இந்தியா ஆகிய இடங் களில் அரசாங்க சேவைத் தொழில்களில் தமிழர்கள் சேர்ந்து கொண்டனர். இதனை விட இலங்கையில் மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற உயர்தொழில்களிலும், வங்கித்துறை இடைத் தரகர்களாகவும் தமிழர்கள் உயர்ச்சி பெற்றனர். 1884 ஆம் ஆண்டில் பொ.இராமநாதன் பின்வருமாறு கூறினார்:"மதம் மாறியவர்கள் மீது மிசனரிகளுக்கு அளவற்ற அன்பு இருந்தது”. அதுபோன்றே என்ன விலைகொடுத்தும் ஆங்கிலக் கல்வியை பெறவேண்டும் என்ற ஆவல் யாழ்ப்பாணத்தவர்களுக்கு இருந்தது (ரஸ்ஸல் 1982:22). 30 ஆண்டு களின் பின்னர் கே.பாலசிங்கம் யாழ்ப்பாண மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது “எமது மண் வளமற்ற பாலைநிலம். இங்கு எதைப் பயிரிடுவது?நாம் கல்விப் பயிர் வளர்த்தோம். மனிதர்களை உருவாக்கினோம்” (மேலது:23).
சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய ஆங்கிலக்
கல்வி என்ற பண்டத்தைக் கைமாறாகக் கொடுத்து பலரைக் கிறிஷ்
தவத்திற்கு மாற்றுவதில் மிஷனரிகள் வெற்றி கண்டனர். அரசாங்கத் திலும், வர்த்தகத் துறையிலும் உத்தியோகம் பெறுவதற்கு ஏற்ற கல் வியை ஆண்கள் பாடசாலைகள் வழங்கின. இக்கல்வி நிலையங் களில் கற்றவர்களில் சிலர் இந்தியாவிற்கும் பிரித்தானியாவிற்கும் சென்று உயர்கல்வி பெற்றனர். பெண்கள் பாடசாலைகள் கிறிஷ்தவத் திற்கு மாறிய ஆண்களிற்குப் படித்த மனைவியரை உருவாக்குவதற் காக முதலில் ஆரம்பிக்கப்பட்டன. அப்பாடசாலைகளில் படித்த பெண்கள் சிலரும் பின்னர் உயர்கல்வியைக் கற்று ஆசிரியர் தொழி லிலும் பிற உயர் தொழில்களிலும் ஈடுபட்டனர். ஆங்கிலத்தைப் படித்து யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்புக்கு அல்லது வெளி நாட்டுக்குப் போய் நல்ல வருவாய் தரும் உத்தியோகங்களை பெற வேண்டும் என்ற உந்துதல் பலமாக இருந்தது. மிசனரிகள், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்தவரிடையேத் தோன்றிய கல்விக்கான தேவையைப் பூர்த்தி செய்வதில் உழைத்தனர். இவ்விடயத்தில் அமெரிக்க மிசனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மிசன் அடிப்படைக் கல்வியை வழங்கியதோடு பண

Page 7
lO பிரவாதம்
உதவியையும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுத்தது. அமெரிக்காவில் உள்ளவர்கள் மதம்மாறியவர்களுக்கு பண உதவி செய்து வாழ் வளித்தனர். மதம்மாறிய பிள்ளைகளிற்கு இவ்வாறு பணம் உதவிய வர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.
அமெரிக்க மிசனரிகள் 1817ஆம் ஆண்டில் தெல்லிப்பளையில் ஒரு வைத்தியசாலையை நிறுவினர். 1823 இல் வட்டுக்கோட்டையில் 'வட்டுக்கோட்டை செமினரி என்னும் கல்வி நிறுவனத்தை அமைத் தனர். இங்கு கற்பித்தல் வசதிகளோடு மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பதற்கும் வசதிகள் செய்து தரப்பட்டன. வண.டானியல் புவர் (1823 முதல் 1836 வரை) இதன் முதலாவது அதிபராக இருந்தார். இவர் கல்வியாளராகவும், இறையியலில் டாக்டர் பட்டம் பெற்ற வராகவும் இருந்தார். இவரையடுத்து வண.ரிச்சார்ட் கொய்சிங்டன் அதிபரானார். இவர் ஒரு மொழியியல் வல்லுநர். அத்தோடு இறை யியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இப்பாடசாலையில் கிறிஷ்தவ மதம் கற்பிக்கப்பட்டதோடு ஆங்கிலம், தமிழ், இலத்தீன், கிரேக்கம், வரலாறு, புவியியல், கணிதம், தத்துவம் ஆகிய பாடங்களும் கற்பிக்கப் பட்டன. பாடங்கள் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்பட்டன. 1833 இல் இப்பாடசாலையில் மருத்துவப் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப் பட்டார். இதன் பின்னர் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை மேற்கொள்வதற்கான தயாரிப்புக் கல்வி வகுப்பு பாடசாலையில் நடத்தப்பட்டது. 1835இல் இப்பாடசாலையில் 147 மாணவர்கள் கல்வியை முடித்திருந்தனர். இவர்களுள் 67 பேர் ஆசிரியர்களாகவும், 22 பேர் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும், 7 பேர் யாழ்ப்பாணத்தில் அப்போது வாழ்ந்த பிரித்தானிய குடும்பங்களின் ஆசிரியர்களாகவும் இருந்தனர் (ரஸ்ஸல் 1982:21). அமெரிக்க மிசனின் உடுவில் மகளிர் பாடசாலை (1824), வெஸ்லியன் மிசன் நடத்திய யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை (1834), சேர்ச் மிசனரி சபையால் தொடக்கப்பட்ட சென்ற். யோன்ஸ் பாடசாலை, கத்தோலிக்கப் பாடசாலையான சென்ற். பற்றிக்ஸ் கல்லூரி (1850) என்பன ஏனைய மிசனரிப் பாட சாலைகளாகும்.
அமெரிக்க மிசனின் யாழ்ப்பாணக் கல்லூரி (1872) எல்லா வற்றிலும் மிகவும் புகழ் பெற்றதாகும். பழைய வட்டுக்கோட்டைச் செமினரி பின்னர் கல்லூரியாக மாற்றப்பட்டது. இக்கல்லூரி மாணவர்

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் ll
களை லண்டன் பரீட்சைகளுக்கும், இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புக்கும் தயார் செய்தது. மாணவர்களுக்கு பலவகைப் பாடங்களையும் படிப்பித்தனர். யாவற்றையும் திறந்த முறையில் விவாதிக்கும் கல்விச் சுதந்திரமும் இங்கு இருந்தது (சிவத்தம்பி 1986:3). மிசனரிகள் தமிழைப் படித்தனர். பல நூல்களை மொழி பெயர்த்தனர். தமிழ் - ஆங்கில அகராதியொன்றையும் யாத்தனர். ஆங்கிலக் கல்விக்கு மிசனரிகள் முதன்மையளித்தனர். இதனால் ஆங்கில அறிவு நாட்டின் பிற இடங்களை விட யாழ்ப்பாணத்தில் உயர்வாக இருந்தது. 1848இல் எமர்சன் ரெனற் வட்டுக்கோட்டைச் செமினரியின் கல்வியின்தரத்தை பல்கலைக்கழகம் ஒன்றன் கல்வித் தரத்திற்கு ஒப்பிட்டார் (மேலது: 21- 22). அமெரிக்க மிசனரிகள் அமெரிக்காவின் நியுஇங்கிலாந்து பகுதியின் கல்வினியத் தூய்மை வாத மரபில் வந்தவர்கள். இவர்கள் உயர்தரத்தை பேணியதோடு குறிப்பிட்டதொரு உலக நோக்கையும் மாணவர் உள்ளத்தில் பதித்தனர்.
பாடசாலைகளின் அமைப்பில் புரட்டத்தாந்தியத்தின் மனிதரின் சுயத்திற்கும், உலகுக்கும் இடையிலான தத்துவ நோக்கு வெளிப் பட்டது. சிக்கன மனப்பான்மை, வேலையில் ஊக்கம், சுயகாலில் நிற்றல் என்ற பண்புகளும், உலகியல் வாழ்க்கையை வாழ்ந்தபடியே துறவறத்தை மேற்கொள்ளல் என்னும் வாழ்க்கை நோக்கும் கல்வி யில் வெளிப்பட்டது. போதனையினாலும் வாழ்ந்து காட்டுதலாலும் இப்பண்புகள் ஊட்டப்பட்டன. (பேரின்ப நாயகம் 1988:98)
அமெரிக்க மிசனரிகள் முதலாவது மருத்துவக் கல்லூரியை இலங் கையில் தாபித்தனர். டாக்டர் எஸ்.எவ். கிரீன் என்ற பெயருடைய வரும் மசாசூசெட்ஸ், நியூயோர்க் என்ற இடத்தைச் சேர்ந்தவருமான இவர் 1848 இல் மானிப்பாயில் மருத்துவக் கல்லூரியைத் தொடக் கினார். வட்டுக்கோட்டை செமினரியில் கல்வி கற்ற மாணவர்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்டோருக்கு மூன்று வருட மருத்துவப் பயிற்சியை முன்னோடியான டாக்டர் கிறீன் வழங்கினார். 1870 இல் இலங்கை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பொழுது பல மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக் கல்லூரிக்கு மாற்றம் பெற்றனர் (உறகொட, 1987), டாக்டர் கிறீனின் முயற்சியால்

Page 8
12 பிரவாதம்
மருத்துவக்கல்வி பரவியது. அது மிக பெறுமதிவாய்ந்த புகழ் பெற்ற தொழில்சார் கல்வித்துறையாக மாறியது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத் தமிழர் பலர் அரசாங்க சேவையிலும், தனியார் துறையிலும் டாக்டர்களாக சிறப்புறப் பணியாற்றினர்.
மேன்நிலை பெற்ற தமிழ் டாக்டர்கள் பெயர்களை இங்கு குறிப்பிடலாம். டாக்டர்டபிள்யுஜி.றொக்வலுட் (1843இல் பிறந்தவர்) சென்னை மருந்துவக் கல்லூரியில் கற்றார். 40 வருடங்கள் அரசாங்க மருத்துவமனைகளில் வேலை செய்தார். டாக்டர் எஸ்.ஜி.போல் (1872 இல் பிறந்தவர்.) பிரித்தானியா சென்று FRCS, FRCP ஆகிய பட்டங்களைப் பெற்று, இலங்கை அரசாங்க சேவையில் சிறப்புறப் பணியாற்றினார். கொழும்பு மருத்துவக் கல்லூரியிலும் கற்பித்தார் (றைட் 1907; 131). டாக்டர் எம்.சின்னத்தம்பி (1859 இல் பிறந்தவர்) FRCS (எடின்பேர்க்), MD (பிறஸ்ஸல்ஸ்) பட்டங்கள் பெற்று அரச சேவையில் பணியாற்றினார். டி.சொய்சா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணிபுரிந்தார். டாக்டர், ஈ.வி.ரத்தினம் 1900 ஆம் ஆண்டில் டாக்டராகத் தகுதி பெற்று அரசாங்கப் பொது வைத்திய சாலையில் பணியாற்றிய பின் 1906 இல் தனிப்பட்ட முறையில் பணிபுரிய ஆரம்பித்தார். பின்னர் தனது சொந்த மருத்துவமனை யொன்றை ஆரம்பித்து நடத்தினார். டாக்டர் யொனதன் ஹோமர் (1878 ல் பிறந்தவர்) அரசாங்கத்தில் சேவை செய்த பின் தனியார் மருத்துவமனை நடத்தினார். டாக்டர் பி.முத்துக்குமாரு (பிறப்பு 1865) அபர்டீனில் கல்வி கற்றவர். தனியார்துறை மருத்துவராக சிறப்புறத் தொழில் நடத்தினார் (றைட்:557-60). 19 ஆம் நூற்றாண்டில் வேறு பல தமிழர்களும் உயர் தொழில்களில் சிறந்து விளங்கினர். சட்டம், பொறியியல் ஆகிய பிறதுறைகளிலும் மேலோங்கினர். யாழ்ப்பாணத் தின் இரண்டாம்நிலைக் கல்விநிலையங்களின் தரமான கல்வியினால் நன்மை பெற்ற இவர்களில் பலர் இந்தியா, பிரித்தானியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வியைப் பெற்று வாழ்க்கையில் உயர்ந்தனர்.
றொக்வூட், போல், ஹோமர், கப்பிரியல் போன்ற டாக்டர்களும், பிற உயர் தொழில் வல்லுநர்களும், வர்த்தகர்களும் கிறிஷ்தவர்களாக இருந்தனர். இலங்கைத் தமிழர்களில் 12 வீதத்தினரான கிறிஷ்தவர் களிடையே இவ்வாறான கல்வி கற்ற உயர்வகுப்பு செல்வாக்குடைய
 

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 13
குழுவாக இருந்தது. உதாரணமாக வில்லியம் மேதர் (பிறப்பு 1851) கிறிஷ்த்தவ பாடசாலையில் கல்வி கற்றார். எழுதுவினைஞராகவும், கணக்காளராகவும் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் பின்னர் வில்லியம் மேதர் அன்ட் சன் என்ற பெயரில் சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம் பித்து பல கம்பனிகளின் ஏஜன்சி வேலையையும் பொறுப்பேற்றார். இவர் பிரபல தமிழ்க் கிறிஷ்தவரும்'ஜஃவ்னா ஸ்டார் என்ற பத்திரி கையின் ஆசிரியருமான யே.ஆர்.ஆர்னல்ட் என்பவரின் மகள் எலி சாவை விவாகம் செய்தார். மேதர் குடும்பத்துடன் விவாக உறவு டையனவாக சாமுவல், ஹேஸ்டிங்ஸ், எட்வார்ட்ஸ், கதிர்காமர், லோட்டன், பார் குமாரகுலசிங்கி ஆகிய கிறிஷ்தவக் குடும்பங்கள் இருந்தன. தம்பையா ஸ்ட்ரோங் குக் (பிறப்பு 1863) இன்னொரு முன்னிலை பெற்ற கிறிஷ்தவக் குடும்பமாகும். குக் புறக்டராக தொழில் செய்தார். அவரது மனைவி ஹரியட் தம்பு என்.ஸ்ட்ரோங் என்பவரின் பேர்த்தியாவர். என்.ஸ்ட்ரோங் மானிப்பாயில் அச்சகம் ஒன்றை நடத்தினார் (மேலது 7907). 19 ஆம் நூற்றாண்டின் பிரபல கிறிஷ்தவக் குடும்பங்களுள் கிங்ஸ்பரி, டேய்ற்றன், கூல், நேசையா, தேவராஜன், சரவணமுத்து, ஹென்ஸ்மன், நைல்ஸ் (கூல் 1997) ஆகியன அடங்கும். 20ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியல் சமூக வாழ்வில் மிடுக்குடன் விளங்கிய சிங்கள பூர்சுவாக்களில்
கிறிஷ்தவர் குடும்பங்களே அநேகம். ஆனால் தமிழர் அரசியல் சமூக வாழ்க்கையில் இந்துக்களே முதன்மை பெற்றுத் தேசிய மட்டத்திலும்
முன்னணியில் திகழ்ந்தார்கள்.
வர்த்தகம், வங்கித்துறைகளின் தரகர்களும், நடுவர்களும்
அந்நிய உடைமையாளர்களின் வர்த்தக நிதித்துறை நிறுவனங் களிலும், முகவர் இல்லங்களிலும் (ஏஜன்சி ஹவுசஸ்) தரகர்கள், காசாளர்கள், சிறாப்பர்கள் ஆகிய இடைநடுவர்களாகப் பணிபுரிந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இன்னொரு குழுவாகும். சிங்களவர்களால் உள்நுழைந்து வெற்றி காண முடியாததுறையாக இது விளங்கியது (பார்க்க முதலாம் பாகம்). கோப்பிப் பயிர்ச்செய்கைத் தொழிலின் ஆரம்ப கட்டத்தில் வங்கித் தொழிலும் வங்கி முறைமையும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

Page 9
14 பிரவாதம்
இக்காலத்தில் தரகர்கள் முக்கியமான சேவையொன்றை வழங்கினர். உண்டியல்களைக் கழிவு செய்யும் இச்சேவையினால் கொமிசன், வட்டி என்பன லாபமாகக் கிடைத்தன. யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றோருக்கு இத்துறையில் சாதகமான வாய்ப்புக்கள் இருந்தன. அவர்களின் ஆசிரியர்களான அமெரிக்கர்கள் வியாபாரத்துறைத் திறன்களை மதித்துப் போற்றும் நாட்டில் இருந்து வந்தவர்கள். அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்து இளைஞர்களிற்கு கல்வியை ஊட்டிய தோடு வர்த்தகம் தொடர்பானதிறன்களையும் அவர்களிடம் வளர்த் தனர். இதனைவிடக் கொழும்பு நகரின் வர்த்தக மொழியாக அக் காலத்தில் தமிழ்மொழி விளங்கியது. ஐரோப்பியரல்லாத வர்த்தகர் களான செட்டிகள், முஸ்லிம்கள் ஆகியோர் தமிழ்பேசும் வர்த்தகர் களாகையால் யாழ்ப்பாணத் தமிழர்கள் இத்துறையில் பிறரை விட இலகுவாக நுழைந்து முன்னேற முடிந்தது.
ஆங்கிலத்தில் நல்ல அறிவு உள்ளவர்களாக இருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் ஐரோப்பிய வங்கிகளுக்கும் கம்பனிகளுக்கும் புறக்கோட் டையின் சுதேசி வர்த்தகர்களுக்கும் இடையில் இடைத் தரகர்களாக ஈடுபட்டு முக்கிய பங்காற்ற முடிந்தது. சுதேசிய வர்த்தகர்களின் கடன் விண்ணங்பங்களைச் சிபார்சு செய்தல், விண்ணப்பதாரிகளின் நாணயம் குறித்து உறுதிப்படுத்தல், ஆலோசனை கூறல் ஆகிய பணி களைச் செய்தனர். காலனிய பொருளாதாரத்தில் இவர்களைப் போன்ற இடைத்தரகர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. இடைத்தரகர்களின் சேவையும் ஐரோப்பியர்களுக்குத் தேவைப்பட்டது. சுதேசிகளுக்கும் அவர்களின் உதவி தேவைப்பட்டது. 1830 களிலேயே யாழ்ப்பாணத் துத் தமிழ் 'புரோக்கர்கள் கொழும்பில் செயற்படத் தொடங்கி விட்டனர். யாழ்பாணத்து முத்துச்சாமிகாலனித்துவநிதித்துறையின் நெப்போலியன் என்று யோன் கப்பர் குறிப்பிட்டார். வட்டிக்குக் கடன் கொடுப்பவராகவும் வர்த்தகராகவும் சிற்றளவில் தனது வியா பாரத்தை ஆரம்பித்த முத்துச்சாமி கவர்னர் ஹோர்ட்டனின் நண்பன் ஆகும் அளவிற்கு உயர்ச்சி பெற்றார். செட்டி நாட்டு வர்த்தகர்கள் அன்று கொழும்புநகரின் வர்த்தகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள் என்றும், அவர்களுக்கும் பிரித்தானிய வர்த்தகர்களுக்கும் நடுவர் களாகச் செயற்பட்ட புரோக்கர்கள் பேரம்பேசலில் முக்கிய பங்கு வகித்தனர் என்றும் கப்பர் குறிப்பிடுகிறார் (1887; 99). கோப்பியின்

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 15
ஏற்றுமதி, உடுதுணி, அரிசி, கைத்தொழில் உற்பத்திகள் என்பன வற்றின் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களிலிருந்து புரோக்கர்களுக்கு கொமிசன் கிடைத்தது. பிலிப் சவரிமுத்து என்ற பெயருடைய இன்னொரு தரகர் பற்றியும் கப்பர் குறிப்பிடுகின்றார். சவரிமுத்துவும் 1830க்களில் புறக்கோட்டையில் வேலை செய்தார். காசாளர், இருப்புப் பண்டசாலைகளின் பொறுப்பாளர், கோப்பித் தொழிலாளர்களின் மேற்பார்வையாளர் போன்ற பணிகளை இவர் செய்தார். பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தமிழர்களில் பலர் கொழும்புநகரின் அந்நிய வங்கிகளில் காசாளர்களாகவும், சிறாப்பர்களாகவும் பணி செய்து மேன்நிலை பெற்றனர். விக்னராஜா, சொக்கநாதன், வில்லவராயன்,துரைச்சாமி, மருதப்பா, கார்த்திகேசு, கதிரவேலு என்போர் புகழ்பெற்ற சிறாப் பர்கள்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புரோக்கர்களில் கதிரவேலு குடும் பத்தினர் பிரபலம் மிக்கவர்கள். சுப்பிரமணியம் கதிரவேலு 50 வருடங் கள் வங்கித்துறையில் பணியாற்றினார். ஒரியண்டல் வங்கியின் பிரதம சிறாப்பராக இருந்த கதிரவேலு தனது இரு மகன்மாரையும் அத்துறையில் ஈடுபட வைத்தார். கதிரவேலு ஞானசேகரம் (பிறப்பு 1861) சென்தோமஸ் கல்லூரியில் படித்தார். 1879 ஆம் ஆண்டு கண்டியில் ஒரியண்டல் வங்கியில் உதவிக் காசாளராகச் சேர்ந்தார். பின்னர் கொழும்புக் கிளையில் தனது தந்தையின் உதவியாளராக ஒரியண்டல் வங்கியில் பணியாற்றினார். பின்னர் ஹொங்கொங் அண்ட் ஷங்காய் வங்கியில் பணியாற்றினார். இறுதியில் இந்தியன் நாஷனல் வங்கியில் சேர்ந்து பணியாற்றினார் (றைட் 1907:512 - 516). கின்சி வீதியில் 'மங்களகிரி என்ற மனையில் வசித்த ஞானசேகரம் ‘ரேவ்கிளப் உறுப்பினராகவும் இருந்தார். இவருடைய சகோதரர் கதிரவேலு நமசிவாயம் இலங்கைப் புகையிரதப் பகுதியில் தலைமைச் சிறாப்பர் ஆகப் பணியாற்றினார். பிற்காலத்தில் ஹொங்கொங் அண்ட் ஷங்காய் வங்கியின் பிரதம காசாளரானார். அவர் நிலங்களைக் கொள்வனவு செய்வதில் முதலிட்டார். அவருக்குச் சொந்தமான பெருந் தோட்டங்களும் இருந்தன (மேலது. 516). 1927 இல் நமசிவாயம் 617 ஏக்கர் தென்னை, 273 ஏக்கர் ரப்பர், தோட்டங்களை உடைமை கொண்டிருந்தார் (றொபேர்ட்ஸ் 1979 அத் iv அட்டவணை 2).

Page 10
I6 பிரவாதம்
முருகேசு மருதப்பாவின் வாழ்க்கை அக்காலத்தில் ஒருவர் அடையக்கூடிய சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு எடுத்துக் காட் டாக விளங்குகிறது. யாழ்ப்பாணத்தில் அராலி என்னும் ஊரில் 1890 இல் பிறந்த மருதப்பாரி.ஏ.ஜே. நூறா பாய் என்ற போறா வர்த்தகரின் பண்டகசாலையில் எழுதுவினைஞராக 1890இல் சேர்ந்து கொண்டார். 1910இல் அக்கம்பனியின் பங்குதாரர் ஆனார். 1910-1930 காலத்தில் வங்கி ஒன்றின் (P&OBank) பிரதம சிறாப்பர் ஆகப் பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டில் இவர் காலமானார். கொழும்பில் பேரளவு நிலம், சொத்து என்பனவற்றின் உடைமையாளரானார். இவரின் சகோதரி மேர்க் கன்டைல் வங்கியின் சிறாப்பரான கார்த்திகேசுவை மணம் முடித்தார். கார்த்திகேசுவின் மூன்று மகன்களில் ஒருவரான சி. நடேசன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சிறாப்பராகவும் சி. சதானந்தன், சி. குமாரசுவாமி என்ற இருவரும் மேர்க்கன்டைல் வங்கியின் சிறாப்பர்களாகவும் பணியாற்றினர்.
தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்களின் பிற் சந்ததியினரானதமிழர்களில் பலர் முதலாளிகளாக உயர்ச்சி பெற்றனர். தொழிலாளர்களாகவும், கங்காணிகளாகவும், வர்த்தகர்களாகவும் 19 ஆம் நூற்றாண்டு முதல் இலங்கைக்கு வந்தோரின் சந்ததியினர் இவர்கள். இவர்களுள் தமிழ்பேசும் பரதவர்களும், செட்டிகளும் முக்கியமானோர். இந்தியத் தமிழரில் சிலர் மட்டும் உயர்கல்வி யிலும், உயர்தொழில்களிலும் சிறப்பெய்தினர். இவர்களுள் பெரி சுந்தரம் (1890 - 1957) மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறார். மடுல்கல்ல தேயிலைத் தோட்டத்தின் பிரதம கங்காணியின் மகனான பெரிசுந்தரம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்று 1916 இல் படிப்பை முடித்து லண்டனில் பரிஸ்டராகவும் படித்து தேர்ச்சி பெற்றார். பெரிசுந்தரம் இளமையில் கண்டி திரித்துவக் கல்லூரியில் படித்து சமூகப்படிநிலையில் உயர்ச்சி பெற்றார். நாடு திரும்பியதும் அரசியலில் புகுந்த பெரிசுந்தரம், 1919 இல் இந்திய தேசிய காங்கி ரஸின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவரானார். 1920இல் இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளரானார். 1931இல் ஹட்டன் தொகுதியில் இருந்து சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இலங் கையின் முதலாவது தொழில், கைத்தொழில், வர்த்தக அமைச் சராகவும் பெரிசுந்தரம் பதவி வகித்தார். 1939இல் இலங்கை இந்தியத்

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 17
தொழிலாளர்யூனியனின் முதலாவது தலைவராகவும் தெரிவு செய்யப் பட்டார். சுதந்திர இலங்கையில் செனற்சபையில் உறுப்பினராக பதவி வகித்தார். பெரிசுந்தரத்தின் உயர்ச்சி அசாதாரணமானது. வேறு சில இந்தியத் தமிழர்களும் உள்ளனர். நடேசஐயர் அவர்களுள் குறிப் பிடப்பட வேண்டியவர். இவர் 1920களில் முக்கிய அரசியல் வாதியாகவும், 1930 க்களில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலை வராகவும், விளங்கினார். இலங்கையில் வர்த்தகக் கல்வியிலும் பயிற் சியிலும் முன்னோடியாக விளங்கிய லோரி முத்துகிருஷ்ணாவும் குறிப்பிடத்தக்கவர்.
பொன்னம்பலம் குமாரசுவாமி குடும்பம்
யாழ்ப்பாணத் தமிழர்களில் பலர் 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சிறாப்பர்கள், புரோக்கர்கள் வேறு உயர்தொழில்துறை வல்லுநர்கள் எனச் சிறந்தோங்கினர். அவர்களுள் பொன்னம்பலம் - குமாரசுவாமி குடும்பம் அரசியல் சமூக வாழ்விலும், கல்வியிலும் முன்னணியில் திகழ்ந்த குடும்பமாக விளங்கியது. இக் குடும்பம் பெரும் செல்வம் படைத்த வர்த்தகர்கள் குடும்பங்களுடன் உறவுமுறைப் பிணைப்பை வளர்த்துக் கொண்டது. தேசிய மட்டத் திலும் சர்வதேச நிலையிலும் சிறந்தோங்கிய முத்துக்குமாரசுவாமி, அவரது மகன் ஆனந்த குமாரசுவாமி, பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம் ஆகிய புகழ்மிக்க தனிநபர்கள் இக் குடும்பத்தில் தோன்றினர். தமிழர்களுக்கு சட்ட சபையில் ஒதுக்கப் பட்ட இடத்தின் ஏகபோக உரிமையை இக்குடும்பத்தின் உறுப் பினர்கள் அனுபவித்தார்கள். இவர்களுக்கு பல பட்டங்களும் வழங்கப் பட்டன. இவ்வாறு சில குடும்பங்கள் ஏன் உயர்ச்சி பெற்றன, வெற்றிப் பாதையில் சென்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவற்றின் அரசியல் சமூக முன்னேற்றத்தின் மூலத்தை அறிதல் வேண்டும். இரண்டு மூன்று தலைமுறையினரின் வரலாறுக்கு அப்பால் புனை வுகளும், மிகைப்படுத்தல்களும் நிறைந்த தெளிவற்ற வரலாறாக இக்குடும்பத்தின் பூர்வீகம் அமைகின்றது. முக்கியமான நபர்களின் பெற்றோர், பாட்டன் ஆகியவர்களின் சரிதங்களில் இருந்து இக் குடும்பத்தின் வரலாறு பற்றிய சில தடயங்களைக் கண்டு கொள்ள முடியும்.

Page 11
18 பிரவாதம்
பருத்தித்துறையைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் மகன் வாரித்தம்பி டச்சு ஆட்சியின் பிற்பகுதியில் கொழும்புக்கு வந்து குடியேறினார். இது அவரின் புத்திசாலித்தனமான முடிவு. கொழும்பு செட்டித் தெருவில் தங்கியிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட வாரித்தம்பிதனது இளைய சகோதரர் குமாரசுவாமியை (1783-1836) கொழும்புக்கு வரும்படி சொல்லியனுப்பினார். கொழும்பு வந்த குமாரசுவாமிக்கு கவர்ணர் நோர்த் 1799 இல் தொடக்கி வைத்த கொழும்பு அக்கடமியில் ஆங்கிலக் கல்வி போதிக்கப்பட்டது. இங்கு படித்தவர்கள் அரசாங்கத்தில் மொழிபெயர்ப்பாளர்களாக வேலை செய்தனர். 1805 - 1808 காலத்தில் கொழும்புத் துறைமுக நீதிவான் மன்றின் மொழிபெயர்ப்பாளராகக் குமாரசுவாமி கடமையாற்றினார். 1810 இல் அவர் ஆளுநரின் பிரதம மொழிபெயர்ப்பாளரானார். அவருக்கு முதலியார் பட்டத்தை வழங்கி அரசாங்கம் கெளரவித்தது. 26 வயதுடைய இந்த யாழ்ப்பாணத்துத் தமிழர் அரசின் மிக உயர்ந்த பதவியொன்றைப் பெற்றார். 1815 இல் பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றியபோது, பிரிட்டிஷ் படைகளுடன் சென்ற குமாரசுவாமி கண்டியின் அரசன் அரச பதவியில் இருந்து நீக்கப்பட்டு புகலிடம் பெறுதல் வரையான மாறுதல் காலத்தில் இடைநின்று உதவினார். கண்டி அரசனின் பூர்வீகம் தென்னிந்தியா ஆதலால், குமாரசுவாமியின் தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்புச் சேவை மிகவும் அவசியமானதாக இருந்தது. குமாரசுவாமி பிரித்தானிய அரசருக்கு செய்த சேவைக்காக 1819 இல் ஆளுநர் பிரவுண்றிக்கினால் தங்கப் பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார் (வைத்திலிங்கம் 1971; 36-43). குமாரசுவாமி குடும்பத்தின் உயர்ச்சி அவர்கள் எடுத்த இரு முடிவுகளினால் சாத்தியமாயிற்று. முதலாவது காலனித்துவ இலங்கையில் மையமான கொழும்புக்கு இடம் பெயர்வது என்ற முடிவு. இரண்டாவது ஆங்கிலத்தில் அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவு. இவற்றின் பயனாய் குமாரசுவாமி குடும்பம் சமூக ஏணிப்படியில் உயரவும், பொருளாதாரமுன்னேற்றம் அடையவும் முடிந்தது. அரசியல் நன்மைகளையும் இக்குடும்பம் பெற்றுக் கொண்டது.
கொழும்புக்கு வந்து சேர்ந்த குமாரசுவாமியும், பிற யாழ்ப்பாணத்துத் தமிழர்களும் செட்டித் தெருவுக்கு அண்மையில் செட்டிகள் குடி யிருப்பில் தங்கினர். தென்னிந்தியாவின்திருநெல்வேலியைச் சேர்ந்த
 

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 19
செட்டிகள்தனவைசியர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் போத்துக் கீசர் ஆட்சியின்போது இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். உள்ளூரில் விவாகம் செய்து கொண்ட செட்டிகள் சிலர் கிறிஷ்தவர்களாயினர். டச்சு ஆட்சியின் போது செட்டிகளில் இருபிரிவினர் இருந்தனர். கிறிஷ்தவர் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினர் இந்துக்கள். செட்டி களிற்கு குழுத்தலைவர்கள் இருந்தனர். 1833அளவில் கூட கொழும்புத் தமிழர்களில் செட்டிகளே அநேகராயிருந்தனர் (அசரப்பா 1933). பலர் இந்தியா சென்று உயர்கல்வி கற்றனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் உயர்தொழில்களில் சிறந்து விளங்கிய செட்டிகள் பலர் கொழும்பில் இருந்தனர்.
கொழும்புக்குப் புதிதாக வந்து சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் செட்டிகளோடு கொண்ட தொடர்பால் நன்மை பெற்றனர். செட்டிகள் வியாபாரத்தில் அறிவும், மதிநுட்பமும் மிக்கவர்கள். அவர்கள் கல் வியில் முன்னேறியவர்களாயும் நாகரிக மேம்பாடுடைய வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாயும் இருந்தனர். செட்டிகளிற்கும் கொழும்புக்கு வந்து சேர்ந்த யாழ்ப்பாணத்தவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. கலப்புத்திருமணங்களும் இடம்பெற்றன. அத்தோடு போட்டியும், பூசலும் கூட வளரலாயிற்று. யாழ்ப்பாணத் தமிழர் கொழும்பில் தம்நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்னர் 1830 இல் முதன் முதலாக ஒரு போட்டி ஏற்பட்டது. கொழும்புச் செட்டிகளின் தலைவர் ஒருவரைத் தேர்ந்துகொள்ள வேண்டும். இதற்கான போட்டியில் கொழும்பு நகரின் செல்வந்தரான சாராயக் குத்தகைக்காரர்தியாகப்பா என்ற செட்டியை எதிர்த்து குமாரசுவாமி போட்டியிட்டார். அப்போட்டியில் குமாரசுவாமி வெற்றி பெற்றார். ஆளுநர், வெற்றிபெற்ற குமாரசுவாமியை தலைமைப் பதவியில் அமர்த்தியதோடு தங்கத்தால் செய்யப்பட்ட பூண் போட்ட மலாக்கா பிரம்புக் கைத்தடியை அப்பதவியின் அடையாளச் சின்னமாக பரி சளித்துக் கெளரவித்தார். கைத்தடியின் பூணில் ஆங்கில நாட்டு ஆயுதங்கள் சித்திர வேலைப்பாடாக பதிக்கப்பட்டிருந்தன (வைத்தி லிங்கம் 1971:45). கெளரவம் மிக்க பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கு முன்னர் நியமனம் பெறுவோரின் சமூகப் பின்னணியை - வேர்களைக் கண்டறியும் தேவையும் இருந்தது. கொழும்புச் செட்டிகள் குமார சுவாமியின் நியமனத்தை எதிர்த்தனர். அவர் வேளாளர் சாதியைச்

Page 12
20 பிரவாதம்
சேர்ந்தவர் அல்லவென்றும், அநாமதேயமான ஒருவர் தம்மைக் கணிப்புக்குரிய ஒருவர் என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். குமாரசுவாமி வேளாளரே என்பது நிரூபிக்கப்பட்டு அவருடைய நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது. குமாரசுவாமி 1835ஆம் ஆண்டில் சட்டசபையின் முதலாவது உத்தி யோகப் பற்றற்ற தமிழ் உறுப்பினராக நியமனம் பெற்றார். அவர் சிறிது காலத்தின் பின் மரணம் எய்தினார்.
குமாரசுவாமி குடும்பத்தின் முற்போக்கு மனப்பாங்கு, ஆரம்பம் முதலே வெளிப்படலாயிற்று. 1816 ஆம் ஆண்டில் ஆங்கில இளவர சருக்கு செய்த மனுவில் குமாரசுவாமி இலங்கையில் அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இலங்கை முழுவதிலுமாக அக்காலத்தில் 28,000 அடிமைகள் இருந்தனர். இவர் களுள் யாழ்ப்பாணம்,திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்தோர் 22,000 ஆகும். குமாரசுவாமி அக்காலத்தில் பிரதம நீதியரசராகவிருந்த அலெக்சாண்டர் யோன்ஸ்ரனின் செல்வாக்குக்கு உட்பட்டவராய் இருந்தார். அலெக்சான்டர் யோன்ஸ்ரன் சுதந்திரம், சமத்துவம் என்பவற்றைப் போற்றிய ஒருவராக இருந்தார். குமாரசுவாமி மிக விரைவிலேயே கொழும்புச் சமூகத்தில் மதிப்புக்குரிய தமிழர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். பொது வைபவங்களிலும், திருமணங்களிலும் அவர் பங்கு பற்றிச் சிறப்புச் செய்வார். குமாரசுவாமி முதலியார் அலங்காரமாக உடையணிந்து வருவார், அவரைநிலபாவாடை விரித்து, குடை பிடித்து வரவேற்பர். அவரை இரட்டைக் கம்பளம் விரித்த இருக்கையில் உட்கார வைப்பர் என்று திருமண வைபவங்களில் அவருக்கு நிகழும் வரவேற்பு உபசாரம் பற்றிக் கூறப்படுகிறது (மேலது :46). பிரபல வர்த்தகராக இருந்த இ.நன்னித்தம்பியின் சகோதரியும், வைரவநாத முதலியாரின் புத்திரியுமான விசாலாட்சி என்பவரை குமாரசுவாமி விவாகம் செய்தார். இவ்விவாக பந்தம் அவரது அந்தஸ்தைப் பலப்படுத்த உதவியது.
அருணாசலம் பொன்னம்பலம் (1814 - 87) அடுத்தநிலையில் முக்கியம் பெற்ற ஒருவராவர். பொன்னம்பலம் சிறுவனாக இருந்த போது தந்தையை இழந்தார். அவரது தாயார் அரியபுத்திரன் என்ப வரைத் திருமணம் செய்து கொண்டார். மானிப்பாயில் இருந்து கொழும்பு வந்த பொன்னம்பலம், குமாரசுவாமியின் கொழும்பு
 

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 21
வீட்டில் தங்கிப் படித்தார். 1844ஆம் ஆண்டு பொன்னம்பலம், குமார சுவாமியின் மகள் செல்லாச்சியைத் திருமணம் செய்தார். பொன்னம் பலம் முதலில் வியாபாரத்தில் ஈடுபட்டார். அது வெற்றியளிக்காமல் போகவே, வியாபாரத்தைக் கைவிட்டுவிட்டுச் சுங்கப்பகுதியில் ஆண்டுக்கு 45 பவுண்சம்பளத்தில் வேலை பெற்றார். அரச சேவையில் அவர் முன்னேற்றம் பெறமுடிந்தது. 1845இல் கொழும்புக் கச்சேரியில் எழுதுவினைஞராகப் பணியேற்றார். பின்னர் 1847இல் கொழும்பின் பிரதி மரண விசாரணையாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். பிரித் தானிய உத்தியோகத்தர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடன் கொடுக்கும் வங்கியாளராகவும் பொன்னம்பலம் செயற்பட்டார். மேற்கு மாகாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த பிலிப்வூட்கவுஸ் போன்ற அக்காலத்தின் முக்கியமான ஆங்கிலேயர்களின் நண்பராக இருந்தார் (மேலது 51-2). பொன்னம்பலத்தின் பிரித்தானிய போஷ கர்களில் சிலர் 1848இல் நடைபெற்ற கலகத்தின்போது செய்யப்பட்ட எல்லை மீறிய செயல்களால் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டனர். ரொறிங்டன், சேர் எமர்சன் ரெனன்ற், வூட்கவுஸ் ஆகியோரும் இவர் களில் அடங்குவர். பாராளுமன்ற ஆணைக் குழுவின் முன்பாக நடந்த விசாரணையில் சமூகமளிப்பதற்காக ரெனன்ற் இலங்கையை விட்டு நீங்கு முன்பொன்னம்பலம் ரெனன்ற்க்கும் அவரது குடும்பத்துக்கும் தனது வீட்டில் விருந்து வைத்தார். பழமை மரபுகளில் பிடிப்புள்ள பொன்னம்பலம் விருந்தில் ஒன்று சேரஇருந்து உணவு உட்கொள்வதை தவிர்த்தார் (மேலது:55).
பொன்னம்பலம் இருவேறு பண்பாட்டு உலகத்தில் வாழும் ஒரு மனிதராக இருந்தார். மரபுவழிப்பட்ட இந்து பக்தர், சமய ஆசாரசீலர் என்பது ஒன்று. கிடைக்கும் வியாபார வாய்ப்புக்களையும், அரசாங்கப் பதவிகளையும் பெற்றுவிடவேண்டும் என்ற ஆவல் உடைய மனிதர் என்பது இன்னொன்று.
தமிழர்களைக் கொழும்பில் ஆதரித்து உதவும் புரவலர்கள் என்ற தகுதியைப் பொன்னம்பலம் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கு ஆங்கில வங்கிகளிலும், பிற வர்த்தக நிலையங்களிலும் பொறுப்புமிக்க பதவிகளை பெற்றுக் கொடுக்க பொன்னம்பலம் குடும்பம் உதவியது. பொன்னம்பலம் - செல்லாச்சிதம்பதியினருக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள்

Page 13
22 பிரவாதம்
தேசிய அளவில் புகழ் பெற்றவர்களாயினர். மூத்தவர் பொ.குமார சுவாமி (1849 - 1905). இவர் சட்டசபை அங்கத்தவராக இருந்தார். அடுத்தவர் பொ.இராமநாதன் (1851-1930). இவர் நியாயவாதியாகவும், அரசியல்வாதியாகவும் விளங்கினார். அடுத்தவர் பொ.அருணாசலம் (1853-1924). தலைசிறந்த சிவில் சேவை அதிகாரியாகவும், அரசியல் சமூக இயக்கங்களில் முன்னணி வகித்த தலைவருமாக இவர் விளங்கினார்.
முதலியார் குமாரசுவாமியும், அவரது மருமக்களான பொன்னம் பலம் சகோதரர்களும் காலனித்துவ சமூகத்தில் அரச பதவிகளில் உயர்ந்ததோடு, உயர்பதவிகளில் உள்ளோருடன் நெருங்கிய தொடர்பு களையும் வளர்த்துக் கொண்டனர். இதனை விட பணக்கார வர்த்த கர்களுடன் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட உறவுகளும் அவர்களுக்கு சமூகத்தில் உயர்ச்சியைப் பெற உதவின. 19 ஆம் நூற்றாண்டின் செல்வந்தர்களானதமிழ் வர்த்தகர்களுள் நன்னித்தம்பி, நமசிவாயம், தம்பையா என்போர் மிக முக்கிய புள்ளிகள். இவர்கள் மூவரும் திருமண உறவுகள் மூலம் ஒருவரோடு ஒருவர் பிணைப்புடைய வர்கள். முதலியார் நமசிவாயம் நன்னித்தம்பியின் சகோதரியை விவாகம் செய்தார். நமசிவாயம் கொழும்புத் தமிழர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தமிழ் இயக்கங்களில் முக்கிய பங்கேற்றவர் (றைட் 1907:504). 'வில்சன் றிச் அண்ட் கோ என்னும் கம்பனியில் புரோக்கராக நமசிவாயம் கடமையாற்றினார். சிந்திரியாமுல்ல என்ற தோட்டத்தை (400 ஏக்) நாத்தாண்டியவிலும், கட்டுக்கந்த தோட் டத்தை (750 ஏக்) நீர்கொழும்பிலும், புலுஹாக தோட்டத்தை (350 ஏக்) ஹப்பிட்டிக் கோறளவிலும் வைத்திருந்த நமசிவாயம் 1500 ஏக்கர் விஸ்தீரணமுடைய தெங்கு தோட்டங்களின் உடைமையாளராவார் (பெர்குசன் டிரைக்டரி 1880:707-9). இவ்வாறு செல்வந்தராக நமசி வாயம் விளங்கியபடியால் தனது புத்திரிகளுக்கு பெரும் தகுதிகளை அடையப்போகிற கணவர்மாரை தேர்ந்து கொள்ள முடிந்தது. பொன் னம்பல முதலியாரின் மக்களான குமாரசுவாமியும் அருணாசலமும் அவரது இரு புத்திரிகளை மணம் முடித்தனர்.
முதலியார் சண்முகம் தம்பையா நன்னித்தம்பியின் மைத்துன ராவர். அவர் கொழும்பு செட்டித் தெருவில் வசித்து வந்தார். அக் காலத்தில் கொழும்பில் வர்த்தகம் செய்தவர்களில் தம்பையா பிரபல

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 23
மானவர். அவர் லேடி லோங்டன் (அக்காலத்தில் கவர்ணராக இருந்த லோங்கடனின் மனைவியின் பெயர்) என்ற பெயரில் சரக்குக் கப்பல் ஒன்றை வைத்திருந்தார். இக்கப்பல் தென்னிந்தியாவுடனான வர்த்தகத்திற்கு உபயோகிக்கப்பட்டது. உள்ளூர் விவகாரங்களிலும் முனைப்பாக ஈடுபட்டதம்பையா கொழும்பு முனிசிபல் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்தார். தம்பையா தோட்டங்களில் முதலீடு செய்திருந்தார். நீர்கொழும்புடிக்கந்த தோட்டம் (700 ஏக்) அவருக்குச் சொந்தமானது (பெர்குசன் டிரைக் டரி 1880). த. சண்முகம் (1867-1932) இவரது மகன்களில் ஒருவர். நமசிவாயத்தின் மகள் கமலாட்சியை சண்முகம் விவாகம் செய்தார். இன்னொரு மகனானத.முத்துக்குமார சுவாமி (1873-1927) பொ.இராமநாதனின் மூத்தமகளை விவாகம் செய்தார். இன்னொரு மகன் த.முருகேசர் (1868-1904) பொ.அருணா சலத்தின் மகளை விவாகம் செய்தார். இவ்வகையில் எல்லோரும் நெருங்கிய உறவினர்களாயினர்.
தமிழ் வர்த்தகர்கள் யாவருள்ளும் மிகவும் முக்கியமான ஒருவர் இநன்னித்தம்பி, "அக்காலத்தில் மிகப் பெரிய பணக்காரர். செல்வாக் குள்ளவர், கப்பல் சொந்தக்காரர், ஏற்றுமதி வர்த்தகத்தில் குறிப்பாக கோப்பி ஏற்றுமதியில் முன்னணியில் திகழ்ந்தவர்” என்று வைத்தி லிங்கம், நன்னித்தம்பி பற்றிப் புகழ்ந்துரைக்கிறார். நன்னித்தம்பி சண்ட் அண்ட் கோ என்ற கம்பனியின் புரோக்கராக இருந்தவர் என்றும், பெரும் செல்வத்தை உடைமை கொண்டிருந்த செல்வாக் குடைய மனிதர் என்றும் வைத்திலிங்கம் கூறுகிறார் (மேலது:105). கோப்பித்தோட்டங்களையும் தெங்குத் தோட்டங்களையும் உடைமை யாக வைத்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலரில் நன்னித்தம்பியும் ஒருவர். இவருக்குப் பெரிய தோட்டங்கள் சொந்தமாக இருந்தன. நன்னித்தம்பியுடன் ஒப்பிடும்பொழுது குமாரசுவாமி பொன்னம்பலம் பணக்காரர் அல்லர். அவரது குடும்பத்தினர் பணவலிமையை விட உத்தியோகச் சிறப்பால் சமூகத்தில் மேல்நிலைக்குச் சென்றவர்கள். நன்னித்தம்பி பணத்தால் வலிமை பெற்றவர். இவர் குமாரசுவாமி பொன்னம்பலம் குடும்பத்தோடு விவாக உறவால் ஐக்கியமானதன்
மூலம் பணம், உத்தியோகம் இரண்டும் இணைந்தன. நாம் முன்னர்
குறிப்பிட்டதுபோல் நன்னித்தம்பியின் சகோதரி விசாலாட்சி முதலி

Page 14
24 பிரவாதம்
யார் குமாரசுவாமியை விவாகம் செய்தார். விசாலாட்சியின் மகள் செல்லாச்சி, முதலியார் பொன்னம்பலத்தை விவாகம் செய்தார். செல்லாச்சியின் மகன் இராமநாதன் நன்னித்தம்பியின் மகளை விவாகம் புரிந்தார்.
- ஒன்றுக்குள் இன்னொன்று விவாகத்தால் பிணைப்புறுவதான இந்த அகமணக்குழு, யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான குடும் பங்களில் ஒன்றாக முன்னணிக்கு வந்தது. பணம், இராசமரியாதை களும் பட்டங்களும், மிகக் கவனமாகத் தேர்ந்து கொண்ட விவாக பந்தங்கள், விவாகத்தின்போது பெற்றுக் கொண்ட பெருந்தொகைச் சீதனம் என்பன இக்குடும்பத்தை உயர்நிலைக்கு இட்டுச்சென்றன. பொன்னம்பலம் - குமாரசுவாமி குடும்பம் காலனித்துவ சமூகத்தின் போது எழுச்சி பெறுவதற்கு மரபையும், நவீனத்துவத்தையும் நல்ல முறையில் கலவை செய்தனர். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாவரிலும் முத்துக்குமாரசுவாமி (1833-79) குடும்பத்தின் உயர்ச்சிக் குச் செய்த பங்களிப்பு விதந்து குறிப்பிடப்பட வேண்டியது. முத்துக் குமாரசுவாமிகுமாரசுவாமி முதலியாரின் முதல் மனைவியின் பிள்ளை. முத்துக்குமாரசுவாமியின் சகோதரி பொன்னம்பல முதலியாரை விவாகம் செய்தார்.
முத்துக்குமாரசுவாமி கொழும்பு அக்கடமியில் (றோயல் கல்லூரி) 1842-1851 காலத்தில் கல்வி கற்றார். பின்னர் டாக்டர் மக் ஐவர் என்ற பெயருடைய கிரேக்க, லத்தின் (செவ்வியல்) இலக்கிய புலமை யாளரிடம் மாணவராகப் பாடம் கேட்டார். 1851 இல் ஆளுநருக்கு இவரது மைத்துனர் (பொன்னம்பல முதலியார்) விருந்தளித்து கெளர வித்தபோது முத்துக்குமாரசுவாமி ஆளுநர் முன் ஆங்கிலத்தில் உரை யாற்றினார். இவரின் பேச்சை கேட்டதால் கவரப்பட்ட ஆளுநர் இவரை கொழும்புக் கச்சேரியில் எழுதுவினைஞராக நியமனம் செய்தார். பின்னர் முத்துக்குமாரசுவாமி பொலிஸ் நீதவான் பதவிக்கு நியமனம் பெற்றார் (மேலது:109-10). 1862-1865 காலத்தில் முத்துக் குமாரசுவாமி இங்கிலாந்தில் சட்டம் பயின்றார். அத்தோடு அக் காலத்தில் சுற்றுப் பிரயாணம் செய்து பல இடங்களையும் பார்த்தார். அக்காலத்தில் பிரித்தானியாவில் கிறிஷ்தவர் அல்லது யூதர் அல்லாத வர்களை சட்டத்தொழில் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. அங்கு சட்டத்தொழில் செய்வதற்குப் பெரும் கஷ்டப்பட்டு வாதாடி அவர்

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 25
இறுதியில் வெற்றி பெற்றார். அவ்வகையில் சட்டத்தொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட முதலாவது இந்து முத்துக்குமாரசுவாமி ஆவார். விரைவில் முத்துக்குமாரசுவாமி லண்டனின் உயர் வகுப்பினர் மத்தியில் பிரபலமானார். வெயின்மன் (1947:16) குறிப்பிட்டதுபோல் அவர் "கீழைத்தேசத்து இளவரசன் (Oriental Prince) என அழைக்கப் பட்டார்.
‘அவர் (முத்துக்குமாரசுவாமி) முதலாவது இந்து பரிஸ்டர் ஆவார். இத்தொழிலில் புகுந்த பின் அவர் லண்டனின் கீழைத்தேய இளவர சனாகப் பிரகாசித்தார். லண்டனில் இளவரசர்கள் அதிகம் பேர் இருக்க வில்லை. அந்தக் குழுவைப் பிரநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு நபர் இவர் தான். கிழக்குக்கே உரிய ஆடம்பரத்துடனும், பகட்டுடனும் அவர்நடந்துகொண்டார். மொங்டொன் மில்னஸ் என்பவர்அவருடன் கைகோர்த்துக் கொண்டு அவரை லண்டனின் ஆடம்பர இல்லங் களிற்கும் அரங்குகளுக்கும் கூட்டிச் செல்வார். ‘முத்துக்குமார சுவா மியின் மேம்பட்ட நாகரிகப் பழக்கவழக்கங்கள், எடுப்பான அழகிய தோற்றம், அற்புதமான ஆங்கிலம் என்பன அவருக்கு சென்ற விட மெல்லாம் சிறப்பைத் தந்தன. இவ்வாறு வெயின்மன் (1947:16) குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில மொழிப்புலமையும், அம்மொழியில் கணிரென்ற குரலில் பேசக்கூடிய நாவன்மையும் அக்காலத்தில் போற்றி மதிக்கப்பட்ட குணப்பண்புகள். இப்பண்புகளில் சிறந்து விளங்கிய முத்துக்குமார சுவாமி வெற்றிப் பாதையில் வீறுநடை போட்டார். முத்துக்குமார சுவாமியை வரவேற்று விருந்தளித்து மதிப்பளித்தோர்களில் மூன்றாம் நெப்போலியன், கிளாட்ஸ்ரன், பார்மஸ்டன், டிஸ்ரேலி, யோவற் ஆகியோரும் றிச்சார்ட் மொங்டன் மின்னஸ் என்ற பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குவர். றிச்சார்ட் மொங்டன் மின்னஸ் நகைச் சுவையாகப் பேசும் ஆற்றல் மிக்கவர். லண்டனின் இலக்கியக் கழகங் களிலும், உயர்நிலை சமூக வட்டங்களிலும் ஊடாடும் பிரபலஸ்தராக அவர் விளங்கினார். சேர். சாள்ஸ் மக்கார்த்த அப்போது இலங்கையில் ஆளுநராக இருந்தார். மொங்டன் மின்னஸ்லிற்கு 'முத்துக்குமார சுவாமியைச்சந்தியுங்கள் என்று மக்கார்த்திக்கடிதம் அனுப்பிவைத்தார்
(துரைராஜசிங்கம் 1973:11). மெக்லாலே ஆங்கிலம் கற்ற நவமனிதர்
களான'இங்கிலிஷ்கார இந்தியர்கள் பற்றி ஆரூடம் கூறினார். முத்துக்

Page 15
26 பிரவாதம்
குமாரசுவாமி அத்தகைய ஒருவராக மிளிர்ந்தார். அவர் அடைந்த பிரபலத்திற்கு ஆங்கிலக் கலாசாரத்தில் ஊறித் திளைத்த அவரது உயர்சிறப்பு காரணமாயிற்று. த இலஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ் சஞ்சிகை 25 ஏப்பிரல் 1863 இதழில் முத்துக்குமாரசுவாமியின் படத் தைப் பிரசுரித்தது. தலைப்பாகையும், நீண்ட மேலங்கியும் அணிந்து எடுப்பான தோற்றத்துடன் காட்சி தரும் படம் இது. த டைம்ஸ்' பத்திரிகை முத்துக்குமாரசுவாமியின் சட்டத்துறை நியாயவாதி தொழிலின் பிரவேசம் பற்றி எழுதும் போது,
"இந்துப் பிரபுத்துவ உயர்குலம் அண்மைக் காலத்தில் அடைந்து வரும் முன்னேற்றத்தின் அடையாளம் இது” என்றும் "இந்தியர்கள் இன்னும் சோம்பிக் கிடப்பதற்கு தயாரில்லை. மதிப்புக்குரிய உயர் பதவிகளுக்கும், கெளரவங்களுக்கும் தகுதியுடையவர்களாகத்தம்மை ஆக்கிக்கொள்ள முன்வந்துள்ளார்கள். எமது அரசாங்கமும் நாம் உருவாக்கியநிறுவனங்களும் கொண்டு வந்த நன்மைகளைப் போற்று கிறார்கள்” என்றும் குறிப்பிட்டது.
சுதேசிகளால் பரீட்சைகளில் சித்தியடையவும், கல்வியில் சமதை யாகப் போட்டியிடவும், வெற்றிபெறவும் முடியும் என்பது மட்டுமன்றி ஆங்கில சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும் சமூக அந்தஸ்தையும் பெறமுடியும் என்பதை முத்துக்குமாரசுவாமிநிரூபிக்க முனைந்தார். அத்தீனியன் கிளப்' என்பது லண்டன் நகரில் மேட்டிமையோர் கூடும் இடம். இதன் உறுப்புரிமையைப் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் என்ற பெருமை முத்துக்குமாரசுவாமிக்குரியது. "அழகாக உடையணிந்து, நாகரிகமான பாணியும் நடையும் உடையவராய் சுத்தமான உச்சரிப்போடு கூடிய அருமையான ஆங்கிலம் பேசும் முத்துக்குமாரசுவாமி மீது லண்டன் நகரின் நவ நாகரிகர்களான சிங்க வேட்டைகாரர்களுக்கு அலாதியான பிரியம் என்று 1860இல் எழுதப்பட்ட குறிப்பொன்றில் பதிவுசெயய்யப்பட்டுள்ளது. மொங் கடன் மில்னஸ்ஸற்கு Serby என்றொரு கிராமப்புற வீடு இருந்தது. முத்துக்குமாரசுவாமிஅங்கு போயிருக்கிறார். அந்தப்பயணம் அவருக்கு நன்றாகப் பிடித்தமானதாயிருந்தது. அவர் வேட்டை நாய்களோடு வேட்டையாடக் கிளம்பினார். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சோடிகளாக ஆண்களும், பெண்களும் ஆடும் குவார்ட்ரில் (Quadrile) எனப்படும் நடனத்தினை ஆடி மகிழ்ந்தார்.

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 27
1877 ஆம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி எலிசபெத் பீபி என்ற ஆங்கிலப் பெண்மணியை விவாகம் செய்தார். அவர் எந்தளவுக்கு ஆங்கிலேயர்வாழ்க்கையில் மூழ்கிப் போனார் என்பதை இது எடுத்துக் காட்டும். முத்துக்குமாரசுவாமி - எலிசபெத் பீபி தம்பதியினரின் மகன் ஆனந்த குமாரசுவாமி பின்னாளில் பிரபல கலை வரலாற்றா சிரியராகவும், அறிஞராகவும் புகழ் பெற்றார்.
ஆனந்த குமாரசுவாமி 1906 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் தன் தந்தையின் மேற்கத்தைய நாகரிக நாட்டத்திற்கான காரணம் யாது எனக் குறிப்பிட்டார்.
'முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முன்னணியில் நிகழ்ந்த தமிழராக என் தந்தை இருந்தார். அவர் அளவுக்கு மீறிய முறையில் மேற்கத்தைய மயமாதலுக்கு உட்பட்டிருந்தார். அக்காலத் தில் மாற்றமுற்ற சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அத்தோடு மேற்கு நாட்டவர்கள் ஈட்டிய சாதனைகளை எம்மாலும் அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் தேவையும் இருந்தது (துரைராஜசிங்கம் 1973:முகப்பு பக்கம்).‘மேற்கு நாட்டவர்கள் ஈட்டிய சாதனைகளை ஈட்டி அவர்களுக்குச் சமதை யானவர்கள் ஆகவோ அல்லது அவர்களையும் விட மேம்பட்ட வர்களாகவோ ஆகவேண்டும் என்று எண்ணிய முத்துக்குமாரசுவாமி ஒருவகை முரட்டுத் துணிச்சலையும், படாடோபத்தையும் வெளிப் படுத்தி நின்றார். ஈ.எவ்.சி.லுடோவைக் அவரைப் பற்றி எழுதும் போது ‘சுவாரஸ்யமான ஒருவர், படாடோபம் மிக்க ஆளுமை கொண்டவர் என்று குறிப்பிட்டார் (மேலது:அறிமுகஉரை). பிரித் தானியாவின் பிரதமராக இருந்த பெஞ்சமின் டிஸ்ரேஸ்லியும் படா டோபம் மிக்க ஒரு மனிதர். அவர் முத்துக்குமாரசுவாமியின் நாகரிக நடையை நயந்து பாராட்டினார். அவருக்கு பிரபுப்பட்டம் வழங்கு வதற்குச் சிபார்சு செய்தார். 1874ஆண்டு இச்சிபார்சை வழங்கியபோது டிஸ்ரேய்லி இலங்கையில் உள்ள நிர்வாகத்தினரை இது பற்றிக் கலந்தாலோசிக்கவில்லை. டிஸ்ரேய்லி முடிவுறாத நிலையில் ஒரு நாவலை விட்டுச் சென்றார். இது அவர் இறந்த பின் பிரசுரிக்கப் பட்டது. இந்நாவலில் வரும் குசிநார் என்ற பாத்திரம் முத்துக்குமார சுவாமிதான் என்று ராதிகா குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார். கிழக் கத்தைய தத்துவம் பற்றிப் போதிக்கும் குசிநார எப்போதும் பெளதீக

Page 16
28 பிரவாதம்
வதிதமான அர்த்தமில்லாத விடயங்களை அலட்டிக்கொண்டிருப் பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. டிஸ்ரேலியின் மனதில் முத்துக் குமாரசுவாமி பற்றி ஆழப் பதிந்திருந்த எதிர்மறை அபிப்பிராயம் இந்நாவலில் குசிநார பாத்திர வர்ணிப்பில் வெளிப்படுவதாகவும் ராதிகா குறிப்பிடுகிறார் (1991:28). இதனைவிட'கோமாளி இந்தியன் பாத்திரம் நகைப்புக்குரிய ஒரு விடயமாக ஆங்கில இலக்கியத்திலும், ஜனரஞ்சக எழுத்துக்களிலும் குறிப்பிடப்படுவதுண்டு என்பதை இவ்விடத்தில் குறிப்பிடலாம்.
முத்துக்குமாரசுவாமி இலங்கைச் சட்டசபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தனது 44 ஆவது வயதில் 1879 ஆம் ஆண்டு காலமானார். தனது சகோதரியின் (சிற்றன்னையின் மகள்) பிள்ளைகளான இராமநாதன், அருணாசலம் ஆகிய இருவரையும் முழுமையாக தன் செல்வாக்கின் கீழ் உருவாக்கும் பேற்றை பெறா மலேயே அவர் காலமானார். இராமநாதன் கொழும்பு அக்கடமியில் முதலில் கல்வி கற்றார். பின்னர் இராமநாதனும் (1857-1930) அவரது தமையனும் சென்னை பிரசிடன்சிக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். அப்போது அவருக்கு 13 வயது ஆகியிருந்தது. அக்கல்லூரியில் மேற்கத்தைய செவ்வியல் கல்வி போதிக்கப்பட்டது. இந்தியப் பண்பாடு, விளையாட்டு என்பனவும் பிரசிடன்சிக் கல்லூரியின் படிப்பில் முக்கியம் பெற்றன. இந்தியாவினதும், மேற்கினதும் உயர்வான பண்பாட்டு மரபுகள் எவையோ அவை யாவற்றினதும் ஒன்றிணைந்த வகையில் அக்கல்வி அமைந்தது (வைத்திலிங்கம் 1971:84-85), இராமநாதனுக்கும் அவரது காலத்துச் சிங்களப் பிரமுகர் களிற்கும் உள்ள வித்தியாசத்தையும், இராமநாதனின் குண இயல்பின் சாதகமான அம்சத்தையும் இங்கு சுட்டிக் காட்டல் முடியும். அக் காலத்தின் சிங்களப் பிரமுகர்கள் முழுமையான மேற்கத்தைய கலாசாரத்தில் ஊறியவர்களாய், மரபுவழிக் கலாசாரத்தை முற்றாக இழந்தவர்களாயினர். இராமநாதன் மரபுவழிக் கலாசாரத்திலும் ஊறியவராய் இருந்தார். சென்னையில் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே இராமநாதனின் தந்தை அவரைக் கொழும்புக்குத் திருப்பி அழைத்தார். கொழும்பில் தொழில் புரிந்த ரிச்சார்ட் மோர்கன் என்னும் நியாயவாதியின் கீழ் பயிலுநராக இராமநாதன் வேலை செய்யத் தொடங்கினார். இதற்கு அவரின் மாமனின்(முத்துக்குமாரசு
SqSqSLSLS

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 29
வாமி) செல்வாக்கு காரணமாயிருந்தது. ரிச்சார்ட் மோர்கன் பின்னர் சட்ட அதிபதிநாயகம் (அட்டர்ணி ஜெனரல்) ஆகப் பதவி வகித்தார். அக்காலத்தின் மோர்கன்தலைசிறந்த முற்போக்குவாதி (லிபரல்)ஆக கணிப்பைப் பெற்றவர். 1873 ஆம் ஆண்டு இராமநாதன் நியாயவாதி யாக (சட்டத்தரணி) பதிவு செய்து தொழில் புரிய ஆரம்பித்தார். அவர் இத்தொழிலில் மிகுந்த திறமை பெற்ற ஒருவராக விளங்கியதோடு 1886 வரை நியாயவாதியாகத் தொழில் புரிந்தார் (மேலது. 90-104).
23 வயதாக இருக்கும்போது இராமநாதன்'பண்பட்ட கனவான் ஆகவும் முற்போக்கு மனப்பான்மை கொண்டவராகவும் விளங் கினார். அரசாங்க உத்தியோகத்தர்களுடன் உறவை வளர்த்துக் கொண்ட தால் ஆரம்ப முதலே உயர்நிலை எய்திய ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தார். மரபுச் சமூகத்தினதும், ஆங்கில அரசினதும் பட்டங்கள் பதவிகள் இக்குடும்பத்திற்குக் கிடைத்தன. வெளிநாட்டுக் கல்வி யாலும் இக்குடும்பம் தன் சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொண்டது. இராமநாதனிற்கு ஒரே ஒரு குறைதான் இருந்தது. அவரது குடும்பம் பொருளாதார ரீதியில் ஸ்திரமானதாக இருக்கவில்லை. தந்தையார் பொன்னம்பலம் வியாபாரத்தில் நட்டமடைந்து பணமுடையால் கஷ்டப்பட்டார். இராமநாதனின் விவாகம் மூலம் இந்தக் கஷ்டத்தில் இருந்து குடும்பம் மீள முடிந்தது. நன்னித்தம்பியின் இரண்டாவது மகள் செல்லாச்சியம்மாளை 1874ஆம் ஆண்டு இராமநாதன் விவாகம் செய்தார். இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. இராமநாதனின் மாமனார்முத்துக்குமாரசுவாமி வகித்த சட்டசபை உறுப்பினர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். 1879-1892 வரை அவர் சட்டசபை உறுப்பி னராக இருந்தார். காலனித்துவ ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். பெளத்தர் களின் சார்பாகப் பேசினார். 1893 இல் அவர் சொலிசிற்றர் ஜெனரல் ஆக நியமிக்கப்பட்டார். 1905 இல் இப்பதவியில் இருந்து இளைப் பாறினார். 1911 இல் மீண்டும் அரசியலில் (சட்டசபை உறுப்பினர்) புகுந்த இவர் 1930 ஆண்டு இறக்கும் வரை அரசியலில் ஈடு பட்டார்.
இளைஞரான இராமநாதன் முற் போக்காளராக இருந்தார். ஆனால் அவரின் வயது ஏற ஏற அவர் பழமைவாதியாக மாறினார். 20 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகப் போக்குகளுடன் இவர் இணங்கிப்

Page 17
30 பிரவாதம்
போகாமல் விலகி நின்றார். இவரது இளைய சகோதரர் பொ.அருணா சலமும் இளமையில் முற்போக்காளராகவே இருந்தார். ஆனால் வயதில் முதியவர் ஆகும்போது தீவிரவாதியாக மாறினார். அருணாசலம் 1853 இல் பிறந்தார். கொழும்பு அக்கடமியில் கல்வி கற்றார். 1886 இல் மிகச் சிறந்த மாணவனிற்கான ரேணர் பரிசு இவருக்குக் கிடைத்தது. 1870இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரிக்கு புலமைபரிசில் பெற்றுக் கல்வி கற்கச் சென்றார். அங்கு செவ்வியலையும், கணிதத்தையும் பாடங்களாகக் கற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இவருக்குப்படிப்பித்த ஆசிரியர்கள், இவருடன் கற்ற மாணவர்கள் ஆகியோரைக் கொண்ட நண்பர்கள் பெருவட்டம் ஒன்றில் உலவும் பேறு இவருக்கு கிடைத்தது.
எனது கணித ஆசிரியர் சேர் யோன் சீலி, மெளல்டன் பிரபு, பேராசிரியர் Fawcett, ஹர்கோட் போன்ற பெரியோர்களின் செல் வாக்கும் ஆளுகையும் என் மீது ஏற்படும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். கேம்பிரிட்ஜை அலங்கரித்த இளைஞர் குழாம் ஒன்று இருந்தது. பல்போர், லைட்டிரொன், டெனிசன் என்ற குடும்பங்களைச் சேர்ந்தோர், சட்ட அறிஞர் மெயிற்ன்ட், இசையமைப்பாளர் ஸ்ரான் போர்ட், கவிஞர் எட்டவார்ட் காப்பென்டர், இலங்கையின் பிரதம நீதியரசர்களாய் இருந்த இருவர். இன்னும் பலர் என்நண்பர்களாக இருந்தனர். அவர்கள் எனக்கு ஆதர்சமாக விளங்கினர். (வைத்தி லிங்கம் 1977:485)
அருணாசலம் தனது கேம்பிரிட்ஜ் வாழ்க்கை பற்றிய நினைவுகளைப் பற்றி மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார். அருணாசலம் சுதந்திர வேட்கை மிகுந்த உள்ளம் படைத்தவர். ஒரு தடவை கேம்பிரிஜ்ஜில் யோக் ஆண்டகை (Archbishop of York) சமய உரையாற்றும் போது இந்தியச் சமயங்கள் பற்றி அவமதிக்கும் வார்த்தைகளைக் கூறி விட்டார். மாணவராக இருந்த அருணாசலம்'ஸ்பெக் டேட்டர் 1874 சஞ்சிகையில் இவ்வுரைக்கு ஆட்சேபம் தெரிவித்துக் கடிதம் எழுதினார். 1875இல் சட்டப் பரீட்சையில் தேறியதோடு, அவ்வாண்டு நடந்த சிவில் சேவைப் பரீட்சையிலும் சித்தியெய்தித் தெரிவானார். சிவில் சேவை நுழைவுப் பரீட்சையில் சித்தியெய்திய முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றார். 1875 இல் இலங்

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 31
கைக்குத் திரும்பிய அவர் சிவில் சேவை உத்தியோகத்தராக 1913 வரை பணியாற்றி இளைப்பாறினார். இலங்கையின் பல பாகங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றினார். பொலின் நீதிவான், மாவட்டநீதிபதி ஆகிய பதவிகளை வகித்தார். அப்பதவிகளை வகித்த வேளை பிரசித்தி பெற்ற தீர்ப்புக்களை வழங்கினார். பதிவாளர் நாயகம் பதவியில் பின்னர் பணியாற்றிய போது பல சீர்திருத்தங் களைக் கொண்டு வந்தார். பல சட்டங்கள் இயற்றப்படுவதற்கு காரணர் ஆக இருந்தார். அவரிடம் திறமை இருந்தது எனினும் இதனை மதித்து அவருக்கு சிவில் சேவையில் உயர் பதவிகளை வழங்க அரசாங்கம் முன்வரவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட ‘சேர் பட்டமும் காலந்தாழ்த்தி, அவர் ஓய்வு பெற்றிருந்த காலத்தில் வழங்கப்பட்டது. 1901ஆம் ஆண்டு - சனத்தொகைக் கணக்கெடுப்பு வேலை இவரது மேற்பார்வையில் நடத்தப்பட்டது. அந்த அறிக் கையையும் இவரே எழுதினார். இலங்கையின் சிவில் சட்டத் தொகுப்பு என்ற நூலை தொகுக்கும் பெரும்பணியை ஆரம்பித்தார். இத்தொகுப்பு இலங்கையில் செல்லுபடியாகும் ரோமன் டச்சுச் சட்டம் என்ற பெரும் பரப்புடைய விடயம் பற்றிய தேடல் முயற்சி யாகும். இது முன்னோடியான பெரும்பணி (ரட்ணம் 1953:7). அருணாசலம் சட்ட நிர்வாக சபைக்கு உறுப்பினராக நியமிக்கப் பட்டார். இதனால் அவர்சட்டசபையில் உறுப்பினராக பங்குபற்றினார். 1912இல் சம்பளத்திட்டம் பற்றிய அரசாங்கக் கொள்கைக்கு எதிராக வாக்களித்தார். பதவி வழி உறுப்பினர்கள் செய்யத் துணியாத கருமம் ஒன்றைச் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அரசாங்க சேவையில் இருந்த காலத்தில் அரசியல் நடவடிக் கைகள் எதிலும் பங்குபற்ற முடியாத கட்டுப்பாடு இருந்தது. எனினும் அருணாசலம் பிரித்தானியாவின் லிபரல்களான வில்லியம் டிக்பி போன்றோரைச் சந்தித்துப் பேசினார். இலங்கைக்குக்குச் சுயாட்சி வழங்குதல் உட்பட்ட பல விடயங்கள் குறித்து கடிதத் தொடர்பு களையும், மேற்கொண்டார். சோஷலிஸ்டுகளோடும் தொடர்பு கொண்டார். (அவரது நண்பர் எட்வார்ட் காப் பெண்டர் ஒரு
சோஷலிஸ்ட்)
இலங்கையில் வழிகாட்டக்கூடிய நல்ல அரசியல் தலைவர்கள் இல்லையே என்று அருணாசலம் கவலை கொண்டார். அரசியல்

Page 18
32 பிரவாதம்
சீர்திருத்தத்தின் தேவை குறித்து பெயர் குறிப்பிடாமல் பத்திரிகை களில் எழுதினார் (மேலது:9-10). தமது 60 ஆவது வயதில் அரசாங்க சேவையில் இருந்து ஒய்வு பெற்ற பின் பல சீர்திருத்த இயங்கங்களை முன்னின்று நடத்தினார். 1913 முதல் அவர் மரணம் எய்திய 1924ஆம் ஆண்டுவரையுள்ள காலம் வரை கிளர்ச்சி நடவடிக்கையாளராகவும் தீவிரவாதியாகவும் அவர் காணப்பட்டார். அவர் மூன்று விடயங்களில் ஆர்வத்துடன் செயற்பட்டார். முதலாவது சமூக சீர்திருத்தம். பேபியன் சீர்திருத்தங்களிலும் (Fabian Reforms) சமூக சேவைத்திட்டங்களிலும் அவருக்கு அனுபவமும் அறிவும் இருந்தது. தரும நிறுவனங்கள், முனிசிபல் சபைகள் என்பன பிரித்தானியாவில் செய்து வரும் பணிகள் பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தார். 1915ஆம் ஆண்டில்"இலங்கைச் சமூக சேவை முன்னணி’ என்ற அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலை, நகரங்களின் சேரிகளின்நிலை, பொதுக்கல்வி ஆகிய விடயங்கள் குறித்து அக்கறை கொண்டு உழைத்தது. ‘இலங்கைத் தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பை 1915 இலும் 'இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பை 1920இலும் அவர்நிறுவினார். கொழும்புநகரத்தின் தொழிலாளர் வாழ்க்கை நிலை பற்றியும், அவர்களின் கூலி பற்றியும் இந்த அமைப்புக்கள் அக்கறை கொண்டிருந்தன (ஜயவர்த்தன 1972). அரசியல் துறையில் அவர் செய்த பங்களிப்புக்கள் வரலாற்றில் அழியாத இடம் பெறுவன. இலங்கைக்குச் சுயாட்சி வேண்டும் என்று அவர் கோரினார். முக்கிய சட்டச் சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் எனப் பாடுபட்டார். “எமது அரசியல் தேவைகள் என்ற தலைப்பில் 1917ஆம் ஆண்டு இலங்கைத் தேசியக் கழகத்தில் பிரதான உரையொன்றை நிகழ்த்தினார். 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
காலனிய ஆட்சியாளர்களின் கொள்கைகளை விமர்சிப்பதிலும் கண்டிப்பதிலும் தமிழ் பூஷ்வா வர்க்கத் தலைவர்கள் பின்னிற்க வில்லை. அவர்கள் பெரும்பாலும் லிபரல், முற்போக்கு நிலைப் பாட்டை எடுத்தனர். தமிழர்களின் சட்டசபைப் பிரதிநிதிகள் தமது கண்டனங்களை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படுத்தினர். நில உடைமையாளர்களான முதலியார்கள், வர்த்தகர்கள், குத்தகை முத

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 33
லாளிகள் ஆகியோரின் பிரதிநிதிகளாகவிருந்த சிங்களபூஷ்வாக்களின் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுக்கு மாறாக பழைமைவாதக் கொள்கைகளை ஆதரித்தனர். தமிழ் பூஷ்வாக்களில் பெரிய நில உடைமையாளர்கள் குறைவு. அவர்கள் சிங்களபூஷ்வாக்களை விட செல்வத்திலும் பணபலத்திலும் குறைந்ததரத்தில் இருந்தனர். இருந்த போதும் உள்நாட்டிலும் வெளியிலும் அவர்களின் சமூக அந்தஸ்தும் செல்வாக்கும் உயர்வாக இருந்தது. சட்டசபையில் உறுப்பினர்களாய் இருந்தமையால் உள்ளூரில் அவர்கள் செல்வாக்கு உயர்ந்தது. அவர்கள் பிரித்தானியாவின் உயர் சமூகத்துடனும், அந்நாட்டின் லிபரல் அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். பிரபுப் பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் சேர். முத்துக்குமாரசுவாமி ஆவர். இலங்கைச் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட (1862 இல்) முதலாவது லிபரல் முற்போக்காளரும் அவரேயாவர். சிங்களவரும் புதுப் பணக் காரருமான ஒருவர் 1912 ஆம் ஆண்டில் பிரபுப்பட்டம் பெற்றார். இலங்கையின் இரண்டாவது பிரபு50ஆண்டுகளின் பின்னரே தோன்ற முடிந்தது.
தமிழ் பூஷ்வாத்தலைவர்கள் அரசியலில் லிபரல் முற்போக்காளர் களாய் இருந்தனர். சிங்கள பூஷ்வாக்கள் அரசியலில் பழமைவாதி களாக இருந்தனர். இது மிக முக்கியமான வேறுபாடு. இதற்குக் காரணம் இருந்தது. சிங்கள முதலாளிகள் நிலஉடைமையைக் குறியாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருந்தோட்டங்களிலும் முதலீடு செய்தனர். ஆகவே, காலனித்துவ ஆட்சியாளர்கள் வழங்கக் கூடிய பாதுகாப்பில்தான் அவர்களது பொருளாதார நலன்கள் தங்கி யிருந்தன. இவர்கள் இருசாராரையும் வேறுபடுத்திய முக்கிய அம்சம் பொருளாதார நலன்களாகும். தமிழ் பூஷ்வாக்களில் நகரம் சார் உயர் தொழில்களில் ஈடுபட்டவர்களும், புரோக்கர்களும் லிபரல் களாகவும் முற்போக்காளர்களாகவும் இருந்தனர். 1862 முதல் 1897 வரையான காலத்தில் தமிழர்களின் சட்டசபைப் பிரதிநிதிகளாக இருந்தோர் நியாயவாதிகளாக இருந்தனர். நியாயவாதித் தொழில் சுதந்திரமான மனப்போக்கை உருவாக்கக் கூடியது. அவர்களின் செல் வமும் சொத்துக்களும் பணக்கார வர்த்தக குடும்பங்களில் விவாகம் செய்ததனால் தேடியனவாக இருந்தனஎன்பது உண்மையே. ஆனாலும் -

Page 19
34 பிரவாதம்
பொருளாதார நலன்களுக்காக அடிபணிந்து போகும் ஒரு கட்டாயம் தமிழ்த் தலைவர்களுக்கு இருக்கவில்லை.
குமாரசுவாமி - பொன்னம்பலம் குடும்பத்தினர் கிறிஷ்தவ எதிர்ப் பாளர்களாய் இருந்தனர் என்பதைக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்த முடையது. கிறிஷ்தவ எதிர்ப்பில் அவர்கள் தீவிரம் காட்டினர். இக் குடும்பத்தின் உறுப்பினர்கள் இந்து மதத்தின் நன்மைக்கான விடயங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்துப் பண்பாட்டையும், அறிவு, கல்வி விருத்தி என்பனவற்றையும் ஊக்குவித்தனர். அரசாங் கத்தின் சமயக்கொள்கைகளைக் கண்டித்தனர். கிறிஷ்தவர் அல்லாத வர்களின் நலன்களிற்காக வாதாடினர். கல்வித்துறையில் மிஷனரி களின் ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். சட்டசபையில் கரை நாட்டுச் சிங்களவர்களின் பிரதிநிதிகளாக இருந்தோர் கிறிஷ்தவர் களாய் இருந்தமையினால் பெளத்தர்களின் பிரச்சினைகள் சட்ட சபையில் கிளப்பப்பட்டபோது அவை பற்றி தமிழ் இந்துக்களான பிரதிநிதிகளே பெளத்தர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேச வேண்டி ஏற்பட்டது. இக்குடும்பத்தினர் வர்த்தக மூலதனத்துடன் பிணைப்பை கொண்டிருந்தனர். அதன் மூலம் கல்வியில் அவர்களால் உயர முடிந்தது. கல்வி உயர்ச்சி சமூக அந்தஸ்தையும், அரசியல் செல் வாக்கையும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது. இவர்களின் சமூக பொருளாதார பின்புலத்தை நோக்கும் பொழுது‘தேசிய முதலாளித் துவம் என்ற வகைப்பாடு இவர்களுக்குப் பொருந்தாது. வர்த்தகமும் நிலச் சொத்துக்களின் உடைமையுமே இவர்களின் பொருளாதாரப் பின்புலம். இவர்களால் கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பித்து அத்துறையில் முன்னேற முடியவில்லை. படித்த ஆய்வறிவாளர் களாய் விளங்கினரேனினும், இந்தத்தமிழ் லிபரல் முற்போக்குவாதிகள் தீவிர தேசியவாதிகளாகப் பரிணமிக்கவில்லை. அந்நிய ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கவோ, அடிப்படையான சமூக மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக பாடுபடவோ இவர்கள் முன் வரவில்லை. மதச்சார்பின்மை என்பதையும் இவர்கள் ஒரு கொள் கையாகக் கொண்டிருக்கவில்லை. சாதி பேதம் நீங்கிய சமத்துவம், பெண்களுக்குச் சமத்துவம் என்பன அவர்களின் கொள்கைகளாக இருக்கவில்லை. அரசியலில் ஏற்பட்ட தேக்கநிலையை விமர்சித்தல்,
 

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 35
கண்டித்தல், பிரித்தானியரின் ஆளுகைக்கு உட்பட்டதானநிலையில் அரசியல் சீர்திருத்தங்களைக் கோருதல், சமூக மட்டத்தில் மரபு வழிப்பட்ட வழமைகள், மரபுகளைப் பேணுதல் என்பன இவர்களது கொள்கைகளாக இருந்தன.
குறிப்புக்கள்
1. SLNA/1237, 16 December, 1835.
2. கிழக்கு மாகாணத்தில் சாராயக் குத்தகை மூலம் கிடைத்த சொற்ப வருமானம்
மூலதனத் திரட்சிக்கு உதவவில்லை.
3. பெர்குசன் டிரைக்டரி, பக். 83 - 84.
4 1870-71 பெர்குசன்டிரைக்டரியில் எம்.முத்துச்சாமி என்பவருக்குரங்கலவில் 350 ஏக்கரும் ஹேவாஹெட்ட கீழ்ப்பகுதியில் 120 ஏக்கரும் கோப்பித் தோட் டங்கள் உள்ளதாகக் குறிப்பு உள்ளது. கப்பர்குறிப்பிடும் முத்துச்சாமி இவராக இருக்கலாம்.
தனது பாட்டனார் மருதப்பா குறித்து தகவல்களைத் தந்து உதவியமைக்காக டாக்டர் பிரதீப்ஜகந்நாதனிற்கு நன்றி. சிறாப்பராக வேலை செய்த இன்னொரு முக்கிய நபர் சொக்கநாதன். இவர் 1860ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அராலியில் பிறந்தவர். இந்தியாவின் இம்பீரியல் வங்கியில் இவர் வேலை செய்தார். சொக்கநாதனின் மகன் தம்பையாவும் சிறாப்பராக இருந்தார். இவர் பொ. இராமநாதனின் பேர்த்தி மீனக்காமுத்துக்குமாரசுவாமியை விவாகம் செய்தார். சொக்கநாதனின் கிட்டிய உறவினர் பத்மநாதனும் இம்பீரியல் வங்கியில் வேலை செய்தார்.
குநடேசஐயர் தஞ்சாவூரைச் சேர்ந்த பிராமணர். இவர் “தேச நேசன் பத்திரி கையின் ஆசிரியராக இருந்தார். த சிற்றிசன் என்ற ஆங்கில பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். இது இந்திய தேசிய இயக்கத்தால் கவரப்பட்ட தீவிரவாத ஆதரவுப் பத்திரிகை. நடேசஐயர் தோட்டத் தொழிலாளர் பிரச் சினைகள் பற்றி அடிக்கடி பத்திரிகைகளில் எழுதினார். சட்டசபையின் இந்திய அங்கத்தவராகவும் (1926 - 1931) இவர் இருந்தார். இலங்கைத் தொழிலாளர் யூனியனில் சேர்ந்திருந்த நடேசஐயர் 1931 இல் 'அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்" என்ற அமைப்பை உருவாக்கினார். 1930 க்களில் பெருந்தோட்டத்துறையின் முக்கிய தொழிற்சங்கவாதியாக நடேசஐயர் விளங் கினார்.
1849 ஆண்டு பாராளுமன்ற ஆணைக்குழு விசாரணையின்போது பொன்னம்
பலத்திற்கும் உத்தியோகத்தர்களுக்கும் இடையே இருந்த தொடர்பின் இயல்பு தெரிய வந்தது. பொன்னம்பலம் அரசாங்க உத்தியோகத்தர்களுக்குக் கடன்

Page 20
36
பிரவாதம்
கொடுத்து வந்தார். அச்சமயம் வூட்ஹவுஸிற்கு அவர் கொடுத்திருந்த கடன் 500 பவுண்கள். இதுபற்றி ஆளுநர் ரொறிங்டனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ரொறிங்டன் வூட்ஹவுஸிற்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் வேறு நட வடிக்கை எதனையும் எடுக்கவில்லை. அக்காலத்தில் அரசாங்க உத்தியோகத் தர்கள் தனிநபர்களிடம் கடன்பெறுவது பொதுவழக்காக இருந்தது. வங்கிகள் கடன் தர முன்வராத காலத்தில் தனிநபர்கள்தான் கடன் பெறக்கூடிய ஒரே ஒரு ஆதாரம்' என்று வூட்ஹவுஸ் குறிப்பிட்டார் (வைத்திலிங்கம் 1971:58). ரொறிங்டனிற்கும் பிறருக்கும் தம் விசுவாசத்தைத் தெரிவிக்கும் சந்தர்ப்பம் பொன்னம்பலத்திற்குக் கிடைத்தது. ஆளுநர் ரொறிங்டன் மக்களின் மதிப்பை இழந்து விட்டார்; அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கருத்தை மறுத்து எழுதப்பட்ட மனுவில் பொன்னம்பலம் கையொப்பமிட்டு தன் ஆதரவை வெளிப்படுத்தினார். எனினும், விசாரணை முடிவில் ரொறிங்டன், ரெனைற், வூட்ஹவுஸ் என்ற மூன்று பிரதான போஷகர்கள் நாட்டை விட்டுச் சென்றனர். இருப்பினும் புதிதாக வந்த ஆளுநர் ஜோர்ஜ் அண்டர்சன் பொன்னம்பலத்தின் விருப்புக்கு உரியவரானார். உதாரணமாக 1851 இல் ஆளுநருக்கும், ஸ்டான் பிரபுவுக்கும் (முன்னாள் அரசுச் செயலாளர்) பொன்னம்பலம் தனது வீட்டு வளவின் பூங்காவில் விருந்து உபசாரம் ஒன்றை நடத்தினார். இவ்விருந்தில் பலவகைக் களியாட்ட நிகழ்வுகளும், வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. விருந்தளித்த வைதீக இந்துக்கள் தமது விருந்தாளிகளுடன் ஒரு சேர இருந்து உணவருந்தவில்லை. இருப்பினும் பொன்னம்பலத்தின் மைத்துனர் 18 வயதுடைய இளைஞர் முத்துக்குமார சுவாமி ஆளுநரின் உரையை அடுத்து சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றி விருந்தினர்களுக்குக் கெளரவம் செய்தார். (மேலது 62-63)
1850 களில் பொன்னம்பலம் அரசாங்க சேவையில் இருந்து விலகி கோப்பி, கறுவா வர்த்தகத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொரல்ல, ராஜகிரிய ஆகிய இடங்களில் கறுவாத் தோட்டங்கள் இருந்தன (சிலோன் அல்மனாக் 1853:391). வியாபாரத்தில் அவருக்குப் பெருநட்டம் ஏற்பட்டது. 1887 இல் இறப்பதற்கு முந்திய ஒரு வருடம் வியாபாரத்தைக் கைவிட்டுவிட்டுச் சமயத் தொண்டு களில் ஈடுபட்டார். செட்டித்தெருவில் சிவன் கோவில் ஒன்றை அமைக்கும் முயற்சியில் உதவிசெய்தார் (வைத்திலிங்கம் 1971:72-73). தனது தந்தை அடைந்த பெருநட்டம் குறித்தும், கோப்பியைக் கடனுக்கு பெற்றவர்களின் வரவை அழித்து எழுதியதையும் பற்றி இராமநாதன் எழுதியுள்ளார். தனக்கு கடன் கொடுத்தவர்களின் செல்மதி யாவற்றையும் கொடுத்துத் தீர்த்து விட்டு கொழும்பில் இருந்து 40 மைல் தூரத்தே உள்ள தோட்டத்திற்குப் போய் அமைதியாக வாழத் தொடங்கினார். செல்வத்தில் திளைத்த காலத்தில் இந்தத் தோட்டத்தை கோயிலுக்கு நன்கொடையாக எழுதி வைத்திருந்தார் என்று இராமநாதன் குறிப்பிட்டார். (மேலது 73)

கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் உருவாக்கம் 37
மில்னஸ் அவர்களின் மகன் குறு பிரபு ஆவர். 1912 குறுநூ-மக்கெலம் சீர் திருத்தங்களின் கர்த்தாக்களில் ஒருவரே இவர். குமாரசுவாமியின் மருமக் களான அருணாசலமும் இராமநாதனும் குறுநூவுடன் தொடர்புகளை வைத் திருந்தனர்.
எட்வார்ட் காப்பென்டர் (1844-1929) அருணாசலத்தின் நெருங்கிய நண்பர். இவர் சோஷலிசவாதி, எழுத்தாளர், கவிஞர் என அறியப்பட்டவர். தொரோ, ரஷ்கின், வில்லியம் மொரிஸ், வால்ட் விட்மன் போன்றோரால் ஆகர்ஷிக்கப்பட்டவர். பாலியல் சீர்திருத்தம், ஒரினச் சேர்க்கை, பெண்கள் உரிமைகள், புலால் மறுக்கும் தாவர உணவுக்கு ஆதரவு ஆகிய விடயங்கள் குறித்து காப்பென்டர் எழுதினார். அருணாசலத்தினால் கவரப்பட்ட காப்பென்டர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வந்தார். இந்திய ஞானிகளை சந்தித்தமை பற்றியும் தனது பிரயாணத்தைப் பற்றியும் காப்பென்டர் எழுதினார். செவீல்ட் என்ற இடத் தில் இருந்த காப்பென்டரின் இல்லத்தில் அருணாசலம் விருந்தினராகச் சென்று தங்கினார். (இந்த தகவல்களைத் தந்து உதவிய பேராசிரியர்த, நடராச அவர்களுக்கு நன்றி.)

Page 21
சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி உறவுகளை மீள உயிர்ப்பித்தலும்*
- நியுடன் குணசிங்க -
கண்டியின் கிராமங்களில் மாற்றமுறும் சமூக பொருளாதார உறவுகள் பற்றிய எனது இந்த ஆய்வு நிலமானியத்தில் இருந்து முதலாளித்து வத்திற்கான மாற்றம் பற்றியது. அம்மாற்றம் சர்வதேச முதலாளித்துவ முறையின் பின்னணியில் சார்புமண்டல பகுதியொன்றில் நிகழ்ந்தது. மேலும், சமூக மாற்றம் என்பதை மரபுவழிச் சமூகம் நவீனத்துவத்தை நோக்கி மாறுதல் என்ற அர்த்தத்தில் இந்த ஆய்வு கருதவில்லை. நவீனமயமாதல் கோட்பாட்டாளர்கள் சமூக மாற்றம் என்பதை இவ்விதமே அர்த்தப்படுத்துவர். பண்பாட்டு மாற்றம் பற்றிய கோட் பாடுகளும் தொழில் நுட்பத் தீர்மானவாதம் என்ற நோக்கில் சமூக மாற்றத்தை விளக்குவன. நான் சமூக மாற்றத்தை வரலாற்று நோக் கிலும், கட்டமைப்பு மாற்றம் (Structural Change) என்ற முறையிலும் பார்க்கின்றேன். ஒரு குறிப்பிட்டவகைச்சமூக உருவாக்கத்தில் மேலா
Changing Socio-Economic Relation in the Kandyan Countryside 6 raig/Lib gaoalil Salomat ஆய்வுநூல்நியுடன் குணசிங்கவினால் எழுதப்பட்டு சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் (SSA) 1990இல் பிரசுரிக்கப்பட்டது. இதன் மறுபதிப்பு 2007இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் எட்டு அத்தியாயங்கள் உள்ளன. 'சார்புமண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி உறவுகளை மீள உயிர்ப்பித்தலும் என்ற தலைப்பில் அமையும் இந்நீண்ட கட்டுரை மேற்படி நூலின் இறுதி அத்தியாயமாகும். இலங்கையின் கிராமப்புறங்களின் சமூகவர்க்கங்கள் குறித்த மார்க்சிய நோக்கிலான ஆய்வுகளை நியுடன் குணசிங்க எழுதியுள்ளார். மேற்குறித்த அவரது நூல் சார்பு மண்டல முதலாளித்துவம் (Peripheral Capitalism) என்ற பின்புலத்தில் கண்டியின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், சமூகவர்க்கங்கள், காலனித்துவ அரசும் பின்காலனித்துவ அரசும் பெறும் வகிபாகம், கருத்தியல் ஆகியன பற்றிய சிறந்ததோர் ஆய்வாகும். நூலின் ஆய்வு முடிவுகளை விளக்கிக் கூறும் இறுதி அத்தியாயத்தின் தமிழாக்கமான இக்கட்டுரை இவ்விடயங்கள் குறித்த நியுடனின் நோக்குமுறையை தமிழில் அறிமுகம் செய்கிறது.

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 39
திக்கம் பெற்று விளங்கும் உற்பத்தி முறையில் இருந்து இன்னொரு உற்பத்தி முறைக்கு மாற்றம் பெறுவதை சமூக மாற்றம் என்று நான் வரையறை செய்கிறேன்.
அ. காலனித்துவ காலகட்டத்தில் பழைய உறவுகளை மீள் உயிர்ப்பித்தல்
கண்டிப்பிராந்தியத்தை ஒரு சமூக உருவாக்கமாகப் பார்க்கும் பொழுது, 19ஆம் நூற்றாண்டில் அது காலனித்துவ ஆட்சிக்கும், முதலாளித்துவ ஊடுருவலுக்கும் உட்பட்டதென்பதைக் காணலாம். ஆகவே, இது போன்ற ஓர் ஆய்வினை காலனித்துவத்தின் ஆதிக்கத்திற்கு முற்பட்ட கண்டிய சமூக உருவாக்கத்தில் இருந்து தொடங்குதல் வேண்டும். ஆனால், கண்டிச் சமூகம் காலனித்துவ ஆட்சியின் கீழ் வருவதற்கு முன்னரே, கரையோரமாகாணங்களில்நிலைகொண்டிருந்த காலனித்து வத்தின் மேல்நிர்ணயத்திற்கு (OverDetermination) உட்பட்டிருந்தது. ஆகையால்தான்நாம் பின்னோக்கிச் சென்று முன்பிருந்த நிலமானிய சமூக உருவாக்கத்தை ஆராய்தல் வேண்டும். கண்டியின் மையப் பகுதியில் இந்த நிலமானியம் இருந்தது. அது நாம் பொதுப்பட நிலமானியம் என்று அடையாளம் காணும் உற்பத்தி முறையின் விசேடமான ஒருவகையெனக் கொள்ளலாம். எல்லா நிலமானிய சமூகங்களையும் போன்றே கண்டியநிலமானியமும் இரண்டு பிரதான வர்க்கங்களைக் கொண்டகூறுபட்டவர்க்க அமைப்பைக் கொண்டதாய் இருந்தது. நிலத்தில் பயிரிடும் உரிமையைக் கொண்டிருந்தவர்களும், தமது உற்பத்தியின் மேன்மிகையை நிலமானிய பிரபுக்களுக்கு கொடுத்து வந்தவர்களுமான குத்தகைக் குடிகள் ஒரு வர்க்கமாக இருந்தனர். மறுபுறத்தில் நிலமானியப் பிரபுக்கள் என்ற வர்க்கம் இருந்தது. இவர்கள் மூவகையினராக இருந்தனர். மடாலயப் பிரபுக்கள், அரச அதிகாரிகளான பிரபுக்கள், உயர்குடியினரான நிலஉடைமை யாளர்கள் என்போரே இம்மூன்று பிரிவினர். குத்தகைக் குடிகளிட மிருந்து மேன்மிகையை அறவிடுவதற்கு இப்பிரபுக்குலம் வல்லாதிக்க முறைகளை முதன்மையான வழியாகக் கொண்டிருந்தது. எனினும் இதுதான் மேன்மிகையை அறவிடும் ஒரே ஒரு வழி என்றும் கூற முடியாது. மேன்மிகையின் சுரண்டல் வரிகள், வாடகை என்ற இரு வகையில் பெறப்பட்டது. மத்திய காலத்தில் கண்டியில் நிலவிய

Page 22
40
பிரவாதம்
நிலமானிய முறையின் சிறப்பு இயல்புகளாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:
i.
ii.
iii.
வல்லாட்சித் தன்மையுடைய முடியாட்சி நிலவியது. உழைப்பை குத்தகைக் குடிகளிடமிருந்து சுரண்டுவது தொடர் பாக மிகவும் விரிவான ஒழுங்கமைப்புகண்டியில் வளர்ச்சியுற் றிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தவே இந்த வல்லாட்சி தேவையாயிற்று. மேலும் காலனித்துவ மேல்நிர்ணயம் (Colonial OverDetermination) என்ற காரணி அரசியல் தளத்தை மேலாதிக்கம் உடையதாக மாற்றியது.
பரம்பரை பரம்பரையாக செய்து வந்த தொழில்களின் அடிப் படையிலான தொழிற்பிரிவு கண்டியில் அதிகார வரன் முறையில் அமைந்த சாதிப்பிரிவுகளை உருவாக்கியது. இச் சாதிகள் யாவும் உழைப்பு வாடகை என்பனவற்றை அறவிடும் முறைமையின் பகுதிகளாக ஒன்றிணைக்கப்பட்டன. சாதி கள் அரச திணைக்களங்களின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டும் இருந்தன.
கண்டியில் நிலமானியத்தின் கீழ் அடிமை முறை (Serfdom) செயற்படுவதற்கான சட்டநியதி இருக்கவில்லை. இதனால் குத்தகைக் குடிகள் தமது நிலத்தை விட்டு நீங்கும் சுதந்திர உரிமையைக் கொண்டிருந்தனர்.
கண்டியின் சமூக உறவுகள் முரண்பாடுகள் நிறைந்தனவாக இருந்தன. குத்தகைக் குடிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையிலான முரண் பாடுகள், அரசனிற்கும் பிரபுக்களுக்கும் இடையிலான போட்டியும் முறுகலும், பிரபுக் குலத்தின் மத்தியில் இருந்த மோதல்கள் என்ற வாறு முரண்பாடுகள் மலிந்திருந்தன. இந்த முரண்பாடுகள் சமூகக் கட்டமைப்பில் உடைவுகளை (Ruptures) உண்டாக்கின. முரண் பாடுகளையும் உடைவுகளையும் சரிசெய்வதற்குரிய ஒரே வழி பழைய அமைப்பை மீளுருவாக்கல் (Regeneration) ஆகும். பழைய அமைப்பின்
மீளுருவாக்கல் காரணமாக கண்டிய நிலமானியம் தேக்கநிலையை அடைந்தது. உற்பத்தி சக்திகள் தேக்கமடைந்ததன் விளைவாக முழுச் சமூக உருவாக்கமும் அடிப்படையில் தேக்கமடைந்தது.

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 41
கண்டியில் முதலாளித்துவம் தோன்றியபோது அது கண்டிய நிலமானியத்தின் உள்ளக முரண்பாடுகளின் விளைவான வளர்ச்சி யாக இருக்கவில்லை. மாறாக வெளியில் இருந்து காலனித்துவத்தால் திணிக்கப்பட்ட ஒன்றாக முதலாளித்துவம் அங்கே தோன்றியது. ஆகையால் கண்டியின் முதலாளித்துவம் புறத்தே இருந்து வந்த சுமத்தீடு (ExternalSuperimposition) என்பதைக் கவனித்தல் வேண்டும். காலனித்துவ அரசு கண்டிய சமூகத்தில் அழிவு, நிலை குலைப்பு ஆகியவற்றைச் செய்தது.
i. வல்லாட்சியாக இருந்தநிலமானிய முடியாட்சிமுறை அகற்றப்
பட்டது.
i. கண்டியின் உயர்குடிப் பிரபுக்களான பழைய ஆளும் குழு
துடைத்தழிக்கப்பட்டது.
i. சந்தை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதால் கண்டியின் சுய தேவைப் பூர்த்திப் பொருளாதாரம் தகர்ந்தது. அங்கு வளர்ச்சி யுற்றிருந்த கைப்பணித் தொழில்கள் சந்தைச் சக்திகளின் தாக்கத்தால் சிதைவுற்றன. iv. கிராமப் புறங்களின் தரிசு நிலங்கள் (waste lands) பெருந் தோட்டங்களை அமைப்பதற்காக காலனிய அரசால் அப கரிக்கப்பட்டன.
நிலமானிய உற்பத்தி முறையின் உடைவு கண்டியில் முதலாளித்து வத்தைத் தோற்றுவித்தது என்று கூறும் தவறான விளக்கம் ஒன்று உள்ளது. ஆனால், கண்டியில் மேற்கத்தைய முதலாளித்துவ மாதிரி யிலான முதலாளித்துவமுறை உருவாக்கப்படவில்லை. ஏனெனில், மேலே குறிப்பிட்ட அழிவுநடவடிக்கைகள் எதுவும் சுயத்துவமுடைய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடும் நோக்கில் மேற் கொள்ளப்படவில்லை. இயன்றளவுக்கு உச்சஅளவிலான லாபத்தைச் சுரண்டுவதே இந்த அழிவு வேலைகளின் பிரதான நோக்கமாக இருந்தது. சுரண்டப்பட்ட இந்த மேன்மிகை அல்லது லாபம் வெளியே ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் இப்பிராந்தியத்தில் சிறிதேனும் மேன்மிகை மிஞ்சி இருப்பதும், மூலதனத்திரட்சி ஏற்படுவதும் சாத்தியமற்றதாயிற்று. இதன் விளைவாக 19ஆம் நூற்றாண்டு முதல்

Page 23
42 பிரவாதம்
கண்டியில் உருவாகி வந்த சமூக உருவாக்கம், உருத்திரிபு (Deformation) என்ற செயல்முறையின்தாக்கத்தை வெளிப்படுத்தியது. இவை அடிப் படையில் தேக்கநிலை இயல்பைக் கொண்ட கண்டியின் சமூக உரு வாக்கத்தை மேலும் தேக்கமடையச் செய்தது.
காலனித்துவ முதலாளித்துவம் இலங்கையின் பெருந்தோட்டங் களில் உழைப்பின் விளைநிறனை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. உழைப்பின் விளைநிறனை அதிகரிப்பது நோக்கமாயின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும். காலனித்துவ முதலாளித்துவம் பெருந்தோட்டங்களில் கிடைத்த லாபத்தை ஏற்றுமதி செய்தது. அதனைப் பெருந்தோட்டங்களில் மறுமுதலீடு செய்தது. மூலதன உழைப்பு விகிதத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆரம்ப கட்டத்தில் தோட்டங்களை அமைக்கும்போது காலனிய வாதிகள் உற்பத்தியைப் பதனிடும் தொழிற்சாலைகளை அமைத்தல், பயிர்ச்செய்கைக்காக காடுகளை வெட்டிதுப்பரவு செய்து நிலத்தைத் தயாரித்தல் போன்ற முதலீடுகளை செய்தனர் என்பது உண்மையே. இருப்பினும் கண்டியில் உற்பத்தி சக்திகள் தேக்கமடைந்தன. ஆரம்ப கட்டத்தின் நிலைமாற்றம் (Transformation) பெரிய மாற்றங்கள் எதனையும் நிகழ்த்தவில்லை. (அதனை நிலை மாற்றம் என்று கூறவும் முடியாது.)
கிராமிய பொருளாதாரக் கட்டமைப்பை பெருந்தோட்ட முறை மாற்றியதா என்றால் அதுவும் நிகழவில்லை என்றே கூறவேண்டும். கிராமங்களைக் காலனிய முதலாளித்துவம் தன்கையகப்படுத்தி அவற்றினை உருச்சிதைவு (Deformation) செய்தது. பழமையான பொருளாதார உறவுகளை மீள் அமைப்பதற்கு அரசு இயந்திரம் உபயோகிக்கப்பட்டது. அரசு யந்திரத்தின் வல்லாண்மை முறைகளை உபயோகித்து, முதலாளித்துவத்தின் லாபத்தை உச்சப்படுத்தும் நோக் கத்துக்கு ஏற்றதாகப் பழைய உற்பத்தி உறவுகள் உயிர்ப்பிக்கப்பட்டன. இவ்வுறவுகளில் சில லாபத்தை உச்சப்படுத்த உதவின, வேறு சில புதியவர்க்கக் கூட்டுகளை ஏற்படுத்த உதவின. வர்க்கக் கூட்டுகளைப் புதிதாக உருவாக்கிக் கொள்ளுதல் கண்டியில் உருவாகிக் கொண் டிருந்த சார்பு மண்டல முதலாளித்துவக் கட்டமைப்பின் மையமான அம்சமாக இருந்தது என்பதை நாம் கவனித்தல் வேண்டும். இவ் வாறான மீளுயிர்ப்பித்தல்கள் சிலவற்றை நாம் கீழே குறிப்பிட்

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 43
டுள்ளோம். (இவை பற்றி நூலின் முற்பகுதியிலும் குறிப் பிட்டோம்.)
ii.
இராஜகாரிய முறையை மீளுயிர்ப்பித்தல்: கண்டிய சமூக உருவாக்கத்தில் காணப்பட்ட இராஜகாரிய முறை என்பது கூலி வழங்காமல் உழைப்பை அரசு அபகரிப்பதான நில மானிய உறவு ஆகும். இம்முறை கரையோரமாகாணங்களில் 1801 ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது. இருப்பினும் இது 1818 இல் மீளக் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1833 இல் மீண்டும் ஒழிக்கப்பட்டது. மீண்டும் 1848 இல் புதியதொரு வடிவத்தில் இராஜகாரிய முறை தொடரப்பட்டது. வயது வந்த ஆண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் ஆறுநாட்கள் கூலி இல்லாத உழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும். அவர்கள் வீதிகளை அமைப்பதற்கு தமது உழைப்பை இலவசமாக வழங்கினர். அல்லது பெருந்தோட்டங்களில் வேலை செய்து முதலாளித்துவத்திற்கு இலவச உழைப்பை வழங்கினர். இவ்விதம் பழமைமிக்க உறவுமுறை ஒன்றின் அடிப்படையில் பெறப்பட்ட இலவச உழைப்பு முதலாளித் துவத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இராஜ காரிய முறையை கண்டிய சமூக அமைப்பின் எச்சம் என்று கூறமுடியாது. ஏனெனில், இது 1815-1818 காலத்தில் ஒழிக்கப் பட்டிருந்தது. காலனித்துவ அரசு இதனை மீளுயிர்ப்பித்தது. மீளுயிர்ப்பித்தல் காலனித்துவ அரசின் கொள்கையாக மாறிற்று.
கோவில்களுக்கான சேவைக் கடமைகளைப் மீளுயிர்ப்பித்தல்: கண்டியில் முடியாட்சியின் கீழ் கோவில் நிலங்களைப் பயிரிடும் குத்தகைக் குடியான்கள் கோவிலுக்கு தமது இலவச உழைப்பை வழங்கும் கடப்பாட்டைக் கொண்டிருந்தனர். இவ்வாறு உழைப்பை வழங்குதல் சாதிக் கடமையாக வகுக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு சாதிக் குத்தகைக் குடிகளும் குறிப் பிட்ட வகைக் கடமைகளைச் செய்தனர். அத்தோடு கோவில் பிரபுவின் நிலத்தில் கூலி இன்றி உழைக்கும் கடமையும் இருந்தது. இவ்வாறாக கோவிலுக்கும், பிரபுவிற்கும் வழங்கிய

Page 24
பிரவாதம்
உழைப்பை விடதன்சீவியத்திற்காக குத்தகைக்காரன் தனக்கு ஒதுக்கப்பட்ட குத்தகைக் காணியில் உழைத்தான். 'நவண்டன (இரும்பு வேலை செய்வோர்) சாதிக் குத்தகைக்காரன் இரும் பினால் ஆன ஆயுதங்களையும் கருவிகளையும் இலவசமாக வழங்க வேண்டும். குயவர்கள் மட்பாண்டங்களை இலவச மாகக் கொடுத்தனர். இதே போன்று மேளம் அடிக்கும் பெறவச் சாதிக்குத்தகைக்காரன்கோவில் சடங்குகளில்நடனம் ஆடுதல், மேளமடித்தல் போன்ற சேவைகளை வழங்க வேண்டும். இச்சேவைகளிற்குக் கூலி கொடுக்கப்படுவதில்லை. 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியளவில் கண்டியின் குத்தகைக் குடிகளில் வேறு பலவகைச்சாதிகள், சாதி அடிப்படையிலான சேவைகளை வழங்குவதை நிறுத்தி விட்டனர்.
இலவசமாக உழைப்பை வழங்குவதை உழைப்பு வாடகை (Labour Rent) என்று கூறுவர். இவ்வித உழைப்பு வாடகை அறவிடும் முறை கண்டியில் அழிவுற்றுக் கொண்டிருந்தது. காலனித்துவ அரசாங்கம் கோவில் நிலங்களின் எல்லைகளை வரையறை செய்யவும், நிலங்களைப் பதிவு செய்யவும் விரும்பியது. இதற்காக அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. கண்டியில் மேட்டுநிலம் கோவில் காணியெனக் கருதப்படவில்லை. தாழ்நிலத்தின் நெற்காணிகளில் கோவில் காணிகள் என அடையாளம் காணப்பட்டவற்றைப் பயிரிடும் குத்தகைக்காரர்கள் தமது மரபுக் கடமைகளை கோவிலுக்குச் செய்ய வேண்டும் என விதிக்கப்பட்டது. அவ்வாறு சேவை களை இலவசமாக வழங்காது பணவடிவில் குத்தகையைக் கொடுப்பதற்கும் வழி செய்யப்பட்டது. ஆணைக் குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்கள் சில உண்மை களைத் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன. கண்டியைப் பிரித்தானியர் கைப்பற்றிய பின் அரசு அதிகாரம் கிராம மட்டத் தில் செயற்படாமல் போயிற்று. கோவில் பிரபுக்களால் குத்தகைக் குடிகளின் சேவைகளை வலுக்கட்டாயம் மூலம் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. குத்தகைக்காரர்கள் பழைய வழக்கங்களைக் கைவிட்டனர். காலனித்துவ அரசின் தலை யீட்டினால் இவ்வழக்கங்கள் மீளுயிர்ப்பு செய்யப்பட்டன.

iii.
சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 45
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த நிலையினை ஆணைக்குழுவின் முன்னால் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் தெளிவுபடுத்தின. அரசின் தலையீடு இல்லாவிடில் இப் பழைய உறவுகள் தாமாகவே அழிந்திருக்கும். கோவிலுக்கு ஒவ்வொரு சாதிக்காரர்களும் சேவைகளை வழங்க வேண்டும் என்ற பழைய உறவு முறை அரசின் தலையீட்டால் உயிர்ப் பிக்கப்பட்டதால் சாதி உயிர்ப்பிக்கப்பட்டது. கண்டியின் உழைப்புப் பிரிவினையில் இருந்த அதிகார வரன்முறை தொடர்ந்தது. கண்டியின் மேலாதிக்கக் கருத்தியலின்படி சில தொழில்கள் இழிவானவை. இந்த இழிவான தொழில்களைத் தம் சேவைக் கடமைகளாக ஆற்றும்படி சில சாதியினர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
உயர்குடியினரின் அதிகாரத்தை மீளுயிர்ப்பித்தல்: 1818இல் நிகழ்ந்த கிளர்ச்சியின் பின்னர் கண்டியின் பிரபுக் குலத்தின் மேற்தட்டில் இருந்தோர்தண்டிக்கப்பட்டனர். கிளர்ச்சி அடக் கப்பட்ட பின்னர் மேற்தட்டில் இருந்த பிரபுக்கள் கண்டியை விட்டு துரத்தப்பட்டதால் அவர்களது பரம்பரை சிதைந்து அழிவுற்றது. எஞ்சியிருந்த சில பிரபுக்களின் குடும்பங்கள் சந்ததி இல்லாமையால் அழிந்தன. சில குடும்பங்களின் நிலங்களை அரசு பறிமுதல் செய்ததால் அவை அழிவுற்றன. 1818 - 1848 காலம் கண்டியின் பிரபுக் குலத்தின் அழிவுக் காலமாகும். பிரபுக் குடும்பங்களின் அழிவு கண்டியின் நிலமானிய அதிகாரக் கட்டமைப்பையும் சிதைவுறச் செய்தது. சிதைவுற்ற இக்கட்டமைப்புக்குப் பதிலாகப் புதிய கட்ட மைப்பு ஒன்று அங்கே இருக்கவில்லை. இந்த வெற்றிடம் காரணமாக நிலமானிய அதிகாரம் வலுவிழந்து கொண் டிருந்தது. 1848இல் கீழ்த்தட்டு மக்களின் கிளர்ச்சி உயர்குலப் பிரபுக்களின் அதிகாரத்தின் குலைவுடன் தொடர்புடையது. கிராமங்களில் ஒருவகை அராஜக நிலை இருந்தது. கால னித்துவ அரசு பிரபுக் குலத்தின் அதிகாரம் வலுவழந்து கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்பதைச் சரி யாகவே புரிந்து கொண்டு, எதிர் கொண்டிருக்கும் ஆபத்தை

Page 25
46
பிரவாதம்
உணர்ந்து நடவடிக்கையில் இறங்கியது. பிரபுக்குல அதி காரத்தை மீண்டும் நிலைநிறுத்த முயன்றது. கோவில் நிலங் களைப் பதிவுசெய்து அவற்றுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கியது. இவ்விதம் சட்டரீதியான அங்கீகாரம் கொடுத்த தால் கோவில் சேவைகளை செய்யும் கடப்பாட்டை குத்தகைக் குடிகள் மீது சுமத்த முடிந்தது. இவையிரண்டும் ஒரு நாண யத்தின் இரு பக்கங்கள் போன்றவை என்பதை நாம் கவ னித்தல் வேண்டும். இவ்விரு நடவடிக்கைகளும் உயர் குடி யினரின் அதிகாரத்தை மீளுயிர்ப்பிப்பதற்கு உதவின. உயர் குடி நிலப்பிரபுக்களின் அதிஉயர் மேல்தட்டு ஏற்கனவே அழிந்து போயிற்று. அதனிடத்தில் புதிய பிரபுக்களை காலனித்துவ அரசு உருவாக்கியது. முன்னர் இடை நிலை அந்தஸ்து உடையவராக இருந்த பிரதானிகளை உயர்தரத்து நிலப்பிரபுத்துவ பிரதானிகளாக அரசு உயர்த்தியது. 'ரட்டே மகாத்மயா என்ற பதவிகளுக்கு இந்த இடைநிலைப் பிர புக்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களிற்கு நிர்வாக அதி காரங்கள் வழங்கப்பட்டன. ஆதலால் கண்டியில் நிகழ்ந்தது பழைய உயர்குலத்தின் அழிவும் முதலாளித்துவத்தின் தோற்றமும் அன்று. அங்கு பழைய உயர்குலத்தை நீக்கி அதன் இடத்தில் புதிய பிரபுக்குலத்தை அதிகாரத்தில் அமர்த்தினர். இந்நடவடிக்கைக்கு காலனித்துவ அரசின் ஆசியும் கிடைத்தது. உண்மையான அதிகாரம் உடைய உயர்குலப் பிரபுவம் சத்திற்குப் பதில் முன்னர் அதற்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருந்த சமூகக் குழுவில் இருந்து பிரபுக்குலம் ஒன்று உருவாக் கப்பட்டது. இப்புதிய பிரபுக்கள் காலனித்துவ அரசின் ஆதிக் கத்தை நிலைநிறுத்த உதவினர். புதிய பிரபுக்குலத்தின் அதி காரம் பழைய முறையின் ஆதாரத்திலேயே அமைந்தது. பழையமுறையில் நிலத்தின் மீதான கட்டுப்பாடு பிரபுக்கள் கையில் இருந்தது. குடியான்கள் பயிரிட்ட நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை பிரபுக்கள் வைத்திருந்தனர். கோவில் நிலத்தின் கட்டுப்பாடும் நேரடியாகவும் அல்லது மறைமுக மாகவும் பிரபுக்களிடம் இருந்தது. அவர்கள் கண்டியின்நில மானிய நிர்வாக முறையின் அதிகாரப் பதவிகளிலும் பணி

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 47
யாற்றினர். இதேநிலை மாற்றமின்றிப் புதிய பிரபுக்குலத்தின் தோற்றத்துடனும் வெளிப்பட்டது. நிலவாடகையை அப கரிக்கும் இப்பிரபுக் குலம் குடியான் உற்பத்தியை அதிகரிப் பதில் அக்கறை கொள்ளவில்லை. குடியான் உற்பத்தியை புரட்சிகர மாற்றத்திற்கு உட்படுத்தும் தேவை இதற்கு இருக்க வில்லை. இதனால் பழமையான உற்பத்தி உறவுகள் கிராம மட்டத்தில் நீடித்தன.
ஆ. மீளுயிர்ப்பித்தல் என்னும் எண்ணக்கருவின் புரிதலை நோக்கி
(Towards a Concept of Reactivation)
பழைய உறவுகளை மீளுயிர்ப்பித்தல் செயன்முறை காலனித்துவ கட்டத்திற்குரியதென்று மட்டும் கருதுதல் தவறு. அது இன்றும் கூட பல வடிவங்களில் தொடர்கிறது. இன்று அரசுக்கு இலவசமாக உழைப்பை வழங்கும் முறை (இராஜகாரியம்) இல்லை என்பது உண்மையே. இருப்பினும் உயர்குலத்தின் அரசியல் - அலுவலர் egy 16) egy95ITULb (Politico - Bureaucratic Power) g)6ölg)|Lb G25TLj6)pgj. மேலே நாம் குறிப்பிட்ட உதாரணங்களைக் கொண்டு மீளுயிர்ப்பித்தல் என்னும் எண்ணக்கருவை விளக்குதல் முடியும். இதற்கு முன்னர் பழமையான உறவுகள் என்றால் என்னளன்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
மேற்கு நாடுகளில் வளர்ச்சியுற்ற முதலாளித்துவம் மூலதனம் - கூலி உழைப்பாளர் என்ற உறவுமுறையிலான சமூக அமைப்பைக் கொண்டது. முதலாளித்துவம் இந்த உறவினை உலகின் பிறநாடு களுக்கும் பரவச் செய்யும் இயல்பைத் தன்னியல்பாகக் கொண்டது. அது முதலாளித்துவமல்லாத பிற உற்பத்தி உறவுமுறைகளைத் தகர்க் கின்றது. அவற்றை அழிக்கின்றது. அவ்வாறு அழியும் உற்பத்தி முறை களுள் சிற்றளவு உற்பத்திமுறை (Pety - Commodity Production) என்பதும் அடங்கும். முதலாளித்துவ முறையின் கீழ் உழைப்பாளி சுதந்திரமானவன். அவனிற்கு இருவகையில் சுதந்திரம் உண்டு. தன் உழைப்பைச் சந்தையில் விற்பவனாக, விரும்பியபடி தொழில் செய்பவனாக அவன் இருக்கிறான். அத்தோடு அவன் உற்பத்தி சாதனங்களுடனும், தொழில் கொள்வோனான முதலாளியுடனும்

Page 26
48 பிரவாதம்
பிணைக்கப்பட்ட நிலையிலும் இருப்பதில்லை. சார்பு மண்டல முதலாளித்துவத்தின் கீழ், கிராமப்புறங்களில் முதலாளித்துவ உறவுகள் முழுமையாக விருத்தியடையவில்லை. இந்தச் சுதந்திரம் இங்கு முழுமையாக அடையப்படவில்லை. மூலதனம் - உழைப்பு உறவு தொடச்சியாகவும், துரிதமாகவும் வளர்ச்சியடையும் போக்கு இங்கு இல்லை. பழமை உறவுகள் தொடருகின்றன. பழைமை உறவுகள் கூலி உழைப்பிலும் காணப்படலாம். குடியான் பிரபுவின் குத்தகை நிலத்தில் பயிர்ச்செய்பவனாக இருப்பான். பயிர்நிலத்தில் கிடைக்கும் அறுவடையின் ஒருபகுதியை நிலஉடைமையாளனான பிரபுவிற்குக் கொடுப்பான். இதனை பங்குக் குத்தகை (Share cropping) என்று கூறுவர். பங்குக் குத்தகைக் குடியான் பிரபுவின் உடைமையான தென்னந்தோட்டத்திலும் கூலிக்கு வேலை செய்பவனாக இருக்கிறான். இக்கூலி பணவடிவில் கிட்ைக்கிறது. மேற்குறித்த உதாரணத்தில் பங்குக் குத்தகை விவசாயம் செய்பவன் சுதந்திரமான உழைப்பாளி என்று அழைக்கக் கூடியவனாக இல்லை. அவன் பழைய உறவுகள் சிலவற்றுக்குக் கட்டுப்பட்டவனாகவே உள்ளான். இவ்வாறான அரை குறை வளர்ச்சியை GvšGaIVIT (Laclau) முதலாளித்துவத்திற்கு முந்திய (Pre-Capitalist) என்று வரையறை செய்கிறார். அமித் பதூரி (Bhaduri) அரைகுறை நிலமானியம் (Semi-Feudal) என்கிறார். முதலாளித்துவத் திற்கு முந்திய என்ற கருத்து மேற்குறித்தவாறான உறவுகள் கால அடிப்படையில் முற்பட்டவை என்ற கருத்தை தரும். இருப்பினும் கால அடிப்படையில் முந்திய இவ்வுறவுகள் நவீன முதலாளித்துவ முறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பு உறுப்பமைதி வாய்ந்த இணைப்பு (Organic Integration) என்ற தன்மையைப் பெற்றுள்ளது.
அரைகுறை நிலமானியம் (Semi-Feudal) 6 TGðID 35(L5ëg/ FrTijų மண்டல முதலாளித்துவத்திற்குள் வித்தியாசமான ஒரு உற்பத்தி முறை இன்னும் இருக்கிறது என்ற பொருளை உட்கிடையாகக் கொண்டது. சார்பு மண்டல முதலாளித்துவம், இவ்வாறான இரட்டை இயல்புடையது. அதனுள் (up56ont6556). Il D6)6v5 (Non capitalist) முறையும் உள்ளது என்று கூறுவது இரட்டைப் பொருளியல் (Dual economy) என்ற கருத்தை ஒத்ததாக உள்ளதைக் காணலாம். இன்னும் தொடர்ந்து இருப்பதாகக் கூறப்படும் நிலமானிய உற்பத்தி முறை

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 49
உண்மையில் காலனித்துவத்தலையீடு காரணமாக நீண்டகாலத்திற்கு முன்பே சார்பு மண்டல முதலாளித்துவ நாடுகளில் சீர்குலைக்கப் பட்டுவிட்டது. ஆகவே தான் நாம் பழமையான உறவுகள் என்ற தொடரைக் குறிப்பிடுகிறோம். இத்தொடர் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்திமுறை இன்றும் நிலைத்திருக்கிறது என்று கூற வில்லை. உழைப்பாளர்களின் சுதந்திரம் இன்மை என்ற அம்சத்தை மட்டும் உணர்த்துவதாக உள்ளது. சார்பு மண்டல முதலாளித்து வத்தின் கீழ் பழைய உறவுகள் உயிர்ப்பிக்கப்படும் போது அவை கீழ்க்குறிப்பிடப்படும் அம்சங்களைக் கொண்டனவாக இருக்கும்:
i உயிர்ப்பித்தல் என்னும் கருத்து எச்சங்கள் (Survivals) என்ற கருத்தை நிராகரிப்பதாகும். சமகால உற்பத்தி முறையின் கீழ் பழைய உறவுகள் எவ்வாறு மீள் உருவாக்கம் செய்யப் படுகின்றன என்பதை உயிர்ப்பித்தல் விளக்கும். i. முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்திமுறையின் குலைப்பு (Dismanting) வேறு, அதன் சுரண்டல் உறவுகளை அழித்தல் வேறு. கண்டியில் குலைப்பு நடந்தது. ஆனால், சுரண்டல் உறவுகள் முற்றாக அழிக்கப்படவில்லை. இவ்வேறுபாட்டை விளக்குவதாக பழைய உறவுகள் கருத்து உள்ளது.
iii பொருளாதாரம் சாராத கருத்தியல் சட்டம் - அரசியல் ஆகிய வற்றின் தலையீட்டினால் எப்படி பழைய உறவுகள் தெரிந்து எடுக்கப்படுகின்றன, உயிர்ப்பிக்கப்படுகின்றன என்பதும் வேறு சில பழைய உறவுகள் அழிக்கப்படுகின்றன என்பதும் அழுத்தப்படுதல். குறிப்பாக அரச யந்திரத்தின் வகிபாகம் இதற்கு துணை செய்தல் அழுத்தப்படும். iv. பழைய உறவுகள் புதுப்பிக்கப்படுதல் சில அழிக்கப்படுதல் என்பனவற்றிற்குப் பின்னால் இருக்கும் மறை தர்க்கத்தை (Hidden Logic) g)gil வெளிப்படுத்தும். எச்சங்கள் என்ற எண்ணக்கரு உயிரியலில் இருந்து பெறப்பட்டது. குறிப்பாக அது உயிரியலின் பாகமாக அமையும் பரிணாமக் கோட் பாட்டில் இருந்து பெறப்பட்டது. பரிணாமக் கொள்கையில் எச்சங்கள் என்ற கருத்துக்கு உதாரணமாக சிலவகை உயிரினங்களில் இன்று

Page 27
50 பிரவாதம்
உபயோகமற்றனவான எலும்புக் கட்டமைப்பை சுட்டிக்காட்டுவர். திமிங்கிலங்களின் வன்கூட்டுத் தொகுதியின் எலும்பமைப்பு இன்று பிரயோசனமற்றனவாய் உள்ள எச்சங்களுக்கு உதாரணமாகும். திமிங் கிலத்தின் பரிணாமப் பாதையில் அதன் எலும்புகள் மிகவும் அவசிய மான உறுப்புக்களாக இருந்தன. திமிங்கிலத்தின் மூதாதையான விலங்குப்பிரிவு வித்தியாசமான இயற்கைச் சூழலில் வாழ்ந்தபோது இந்த எலும்பு அமைப்பு பிரயோசனமாக இருந்தது. இன்றைய நிலையில் அவை பிரயோசனமற்றவை. காலப்போக்கில் இவை மறைந்து போகலாம். இருந்தபோதும் மரபுரிமையின் நிர்ணயப்படி அவை எச்சங்களாக இன்னும் தொடர்கின்றன. சமூக உருவாக்கங்கள் பற்றிப் பேசும்போது எச்சங்கள் என்ற கருத்து பின்வரும் மூன்று அர்த்தங்களைப் பெறும்:
1. முன்னைய வடிவத்தின் மிச்சசொச்சங்களாக (Left Over) இது
உள்ளது.
i நிகழ்காலத்தின் உற்பத்தி முறைக்கு பொருந்தாத ஒன்றாக
இந்த எச்சங்கள் உள்ளன.
i நிகழ்கால உற்பத்தி முறை எச்சங்களை ஒழித்துக் கட்டும் இலக்கினைக் கொண்டது. முரண்படும் இந்த எச்சங்களை அது காலப்போக்கில் அழித்துவிடும்.
கண்டியில் இன்று நிலைத்து நிற்கும் பழைய உறவுகளை மேலே கூறிய அர்த்தங்களில் எச்சங்கள் என்று கூறுதல் முடியாது. இதற்கான காரணங்கள் பின்வருவன: 1. திமிங்கிலம் ஒன்றின் எச்ச உறுப்புப் போன்றனவல்ல கண்டியின் பழைய உறவுகள். இவை முன்னையநிலமானிய உற்பத்திமுறை யின் உறவுகள். அவற்றை பிய்த்து எடுத்து இன்றைய உற்பத்தி முறையின் பாகமாக இணைத்து பொருத்தியுள்ளபடியால் அவை எச்சங்கள் அல்ல. ii இன்றைய சார்பு மண்டல முதலாளித்துவக் கட்டமைப்பினோடு பொருந்தாத ஒன்றாக பழைய உறவுகள் உள்ளனவென்றும் கூறுதல் இயலாது. சார்பு மண்டல முதலாளித்துவத்திற்கு

iii.
சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 5I
அவசியமான உறவுகளாக இவை உள்ளன; அதன் இயல்பான பண்பாக உள்ளன. உற்பத்தியில் அவை செயல்திறன்மிக்க ۔ இடையீட்டைச் செய்கின்றன. மூலதனத்தின் மேன்மிகை உரு வாக்கத்திற்கு உதவுகின்றன.
கண்டியின் இன்றைய உற்பத்தி முறையுடன் பழைய உறவுகள் முரண்பாடு உடையனவாக இருப்பது உண்மையே. ஆனால், இம்முரண்பாடுகள் பகைமுரண்பாடுகள் (Antagonistic Contra dictions) அல்ல. பழைய உறவுகளை அழித்தொழிப்பது அவசியமானதாகவும் இல்லை. மாறாக இப்பழைய உறவுகள் இன்று இருக்கும் உற்பத்தி முறைக்குப் பலம் சேர்ப்பதாகவே
உள்ளன.
பழமையான உறவுகளை மீளுயிர்ப்பித்தல் என்னும் எண்ணக்கருவை
விளங்கிக் கொள்வதற்கு உற்பத்தி முறை (ModeofProduction) என்னும் எண்ணக்கருவை நாம் வரையறை செய்து கொள்ள வேண்டும்.
உற்பத்திமுறை என்பதை நாம் பின்வருமாறு வரையறை
செய்யலாம்:
I۰ک
உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற இரண்டு விடயங்களின் சேர்க்கையாக அமைவதே உற்பத்தி முறை ஆகும்.
ஆ. இச்சேர்க்கையில் ஐக்கியம் (Unity) என்ற அம்சம் மட்டுமன்றி
முரண்பாடும் (Contradiction) உள்ளடங்கி உள்ளது.
உற்பத்தி முறை என்ற அடித்தளத்தின் மீது அமையும் மேற் கட்டுமானம் சட்டமும் அரசியலும் (Juridic Political) என்ற நிலை, கருத்தியல் (Ideology) என்ற நிலை என்ற இரு நிலைகளை (lnstances) கொண்டது.
சட்டமும் அரசியலும் என்ற நிலையும், கருத்தியல் என்ற நிலையும் அடித்தளத்தின் உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் என்ற இரண்டினுடனும் இயைபாக்கம் பெறுகின்றன. இந்த இயைபாக்கத்தில் (Articulation) உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் என்ற அடித்தளம் தீர்மானமான செல்வாக்கை (Ultimately Determinate Influence) 6l35ITaoisTG)aitang.

Page 28
52
பிரவாதம்
உ. மேலே ஈ இல் குறித்த இயைபாக்கத்தை விட சட்டமும்
அரசியலும் என்ற நிலையும், கருத்தியல் என்ற நிலையும் தமக்கிடையே (மேற்கட்டுமானம் என்ற தளத்தில்) பரஸ்பர உறவும், இடைவினையும் கொண்டனவாயும் உள்ளன.
உற்பத்தி முறை பற்றிய மேற்கூறிய வரைவிலக்கணம் பழைய உறவு கள் என்னும் கருத்தை பின்வரும் விதங்களில் புரிந்து கொள்ள உதவுகின்றது:
i.
ii.
முதலாவதாக உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டிற்கும் இடையிலான ஐக்கியமும், முரண்பாடும் என்ற கருத்தின் உதவியுடன் உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இரண்டாவதாக இயைபாக்கம் (Articulation) என்ற கருத்து சட்டமும் அரசியலும், கருத்தியல் என்னும் இருநிலைகளில் நிகழும் இடைவினையையும் அதன் மூலம் நிகழும் மறு உற்பத்தி (Reproduction) என்பதையும் புரிந்து கொள்ள உதவுகிறது.
அடுத்ததாக மறு உற்பத்தி (Reproduction) என்ற கருத்தை விளக் குவோம். எந்தவொரு உற்பத்தி முறையினை எடுத்துக் கொண்டாலும் அதனுள் பின்வருவனவற்றின் உற்பத்தி, மறு உற்பத்தி என்ற இரு விடயங்கள் இடம்பெறுகின்றன. அவையாவன:
i.
ii
மனிதரின் நுகர்வுக்குரிய பொருட்களின் உற்பத்தி.
மறு உற்பத்தி செய்யப்பட வேண்டியவை.
அ. நுகர்வுக்குரிய பொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக
இருக்கும் பொருண்மிய அடிப்படைகளை (Material Base) மறு உற்பத்தி செய்தல்.
உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்தல் (Reproduce Labour Power). உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்தல் என்பதில் இரு விடயங்கள் உள்ளன. உழைக்கும் சக்தியுள்ள உழைப்பாளர் படையை உருவாக்கல் (மக்கள் தொகை அதில்

இ.
சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 53
உழைப்பாளர்படை), உழைப்பாளர் படையில் சேரும் புதிய தலைமுறைக்கு பயிற்சியை அளித்து அவர்களை உழைப் புக்கு தயார் செய்தல். இவை யாவற்றிலும் முக்கியமானது குறித்த உற்பத்தி முறைக்குத் தேவையான உற்பத்தி உறவுகளை மறு உற்பத்தி செய்வது ஆகும்.
மேலே இறுதியாகக் குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி என்ற விடயத்தை எடுத்துக் கொள்வோம். முதலாளித்துவ உற்பத்தி முறையின் உற்பத்தி உறவுகளின் பிரதான இயல்பாக விளங்குவது சுதந்திரமான உழைப்பு (கூலி உழைப்பாளர்) ஆகும். முதலாளித் துவம் கூலி உழைப்பாளர்களின் மறு உற்பத்தியை எவ்வாறு செய் கிறது? உழைப்பின் மறுஉற்பத்தி மூன்றுவகை இடையீடுகளால் (interventions) சாத்தியமாகின்றன. அவை: 1.பொருளாதார இடையீடு, i, அரசியல் இடையீடு, i. கருத்தியல் இடையீடு.
i.
பொருளாதார இடையீடு: மூலதனம் உழைப்பு சக்தியை கூலி என்னும் விலை கொடுத்து கொள்வனவு செய்கிறது. குறிப் பிட்டளவு மணித்தியாலங்கள் உழைப்பாளி உழைக்க வேண்டும். உழைப்பாளிக்குக் கூலியை மட்டும் வழங்கினால் போதாது. நுகர்வுச் சந்தையில் பொருட்கள் கிடைத்தல் வேண்டும். ஆகையால் நுகர்வு உற்பத்தியை முதலாளித்துவம் செய்கிறது. இதனால் உழைப்பாளர்களின் உழைப்புசக்தி மறு உற்பத்தி செய்யப்படுகிறது. உழைப்பாளர் குடும்பங்கள் சீவியத்தை நடத்துகிறார்கள். (பிள்ளைகளைப் பெற்று வளர்த்து) அடுத்த தலைமுறை உழைப்பாளர்களையும் மறு உற்பத்தி செய் கிறார்கள்.
அரசியல் இடையீடு: மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடை யிலான பிணைப்பு (Capital-Wage Nexus) அரசியல் இடையீடு மூலம் உறுதி செய்யப்படுகிறது.நாட்டின் சட்டமும் அரசியலும் என்ற கட்டமைப்பு உற்பத்திச் சாதனங்களின் உடைமை முதலாளிகள் கையில் இருப்பதை உறுதி செய்கிறது. தொழி லாளர்கள் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களாக

Page 29
54 பிரவாதம்
இல்லாமல் உழைப்புசக்தியை விற்பவர்களாக இருக்கும் நிலை பேணப்படுகிறது.
i. கருத்தியல் இடையீடு: மேலாதிக்கம் செலுத்தும் கருத்தியல் இயந்திரம் தொழிலாளர்கள் உடைமை அற்ற வகுப்பாக இருப் பதை நியாயப்படுத்துகின்றது. தொடர்புசாதனங்கள், திருச்சபை (மத நிறுவனங்கள்), பாடசாலை என்பன முதலாளித்துவக் கருத்தியலை ‘பொதுசன அபிப்பிராயம் ஆக பரப்புகின்றன. நுகர்வுக் கலாசாரம் பற்றிய கருத்தியல் தொழிலாளியை மூல தனத்துடன் பிணைத்து வைக்கிறது.
மேலே குறிப்பிட்ட இடையீடுகளில் ஏதேனும் ஒன்று தடைப் பட்டாலும் ‘சுதந்திரமான கூலி உழைப்பாளர்களின் மறு உற்பத்தி தடைப்படும். பொருளாதார இடையீடு இல்லாவிடின் உழைப்பு சக்தியை மறுஉற்பத்தி செய்யமுடியாது. அரசியல் இடையீடு இல்லா விடில் முதலாளிகளின் சொத்துடைமையும் உற்பத்தி சாதனங்களை அவர் வைத்திருந்து உற்பத்தியைச் செய்வதும் சாத்தியமாகாது. கருத்தியல் இடையீடு இல்லாவிடின் இருந்து வரும் நிலைமைகள் தொடர்ந்தும் நிலைபெறுதல் சாத்தியமற்றதாகிவிடும்.
கண்டியில் பழைய உறவுகள் நீடிக்கின்றன என்று கூறும்போது பழைய உற்பத்தி உறவுகள் மறுஉற்பத்தி செய்யப்படுகின்றன என்பதே பொருள். பழைய உறவுகளின் மறுஉற்பத்தி என்பது சிக்கலான ஒரு விடயம். ஏனெனில், இப்பழைய உறவுகள் முதலாளித்துவத்திற்கு வெளியே உள்ளவை. அவை முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த உறவுகள் அல்ல. முதலாளித்துவ உற்பத்தி முறை ஒன்று தன் எல்லைக்கு வெளியே உள்ள பழைய உறவுகளை மறு உற்பத்தி செய்கிறது என்று கூறுவது ஒரு முரண்பட்ட புதிராக உள்ளதல்லவா? இதை நாம் எவ்வாறு விளக்கலாம்?
elpagatig5687 gull 6 (Accumulation of Capital) (upg5Gorraiggsj6). உற்பத்தி முறையின் இயக்குவிதியாக உள்ளது. மூலதனத் திரட்சி லாபவிதத்தை உயர்த்துவதன் மூலம் சாத்தியமாகும். லாபவிதம் ஒரு தொழில்துறையில் இருந்து இன்னொரு தொழில்துறையில் வேறு படலாம். ஒரு பிரதேசத்தின் லாபவிதம் குறைவாகவும் இன்னொரு பிரதேசத்தின் லாபவிதம் உயர்வாகவும் இருக்கலாம். இருந்தபோதும்,
 

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 55
முழு அமைப்பினதும் சராசரி லாபவிதம் ஒன்றை வகுத்துக் கொள்ள லாம். ஒரு குறிப்பிட்ட நிறுவன மட்டத்தில் என்ன நடைபெறு கின்றது? அங்கே செயற்படும் மூலதனத்தை தனி அலகாக எடுத்துப் பார்ப்போம்.நிறுவனமட்டத்தில் லாபத்தை உச்சப்படுத்தும் நோக்கில்
மூலதனம் செயற்படும். தனக்குப் பொருத்தமான உழைப்புச் செயல் முறையை அது தெரிவு செய்து கொள்ளும்.
i.
iii.
துண்டுக்கூலி முறை
ஒரு மணித்தியால வேலைக்கு இவ்வளவு கூலி என்ற நேரக்கூலி (Time Wage)
மூலப் பொருட்களை தன்வீட்டுக்கு எடுத்துச் சென்று முடிவுப் பொருளாக மாற்றித் தரும் "Putting out முறை
ஆகிய உழைப்புச் செயல் முறைகளில் ஒன்றைத் தெரிவு செய்து
கொள்ளலாம். குறித்த சூழலில் எது உச்சலாபம் தரும் முறையோ
அதனை மூலதனம் தெரிவு செய்கின்றது. சில குறிப்பிட்ட சூழலில்
பழைய உறவு முறைகளையே மூலதனம் பயன்படுத்தவும் முனை
கிறது. கண்டியின் பழைய உறவுகளை முதலாளித்துவம் பயன் படுத்துவதும் இவ்வகையானதொன்றே. அது மூலதனத் திரட்சிக்கு வாய்ப்பானதாக, லாபகரமாக அமைவதால்தான் பழைய உறவுகளைப் பயன்படுத்துகிறது.
கண்டியில் பழைய உறவுகள் பேணப்படுகின்றன, நிலைத்திருக்
கின்றன என்று நாம் கூறும்போது அங்கே பின்வரும் நிபந்தனைகள்
பேணப்படுகின்றன என்று கருதுகின்றோம்:
i.
ii.
உற்பத்திச்சாதனங்களை குத்தகைக்காரன் உடைமையாக வைத் திருக்கிறான். அவனிடம் உற்பத்தி சாதனங்களினை தன்வசம் 606 g5(pd(g5lb 9 faold (Rights of Possession) plairangi).
உழைப்புச்சக்தியின் மறு உற்பத்திக்கான பொறுப்பை மூலதனம் ஏற்றுக் கொள்ளும் தேவை இல்லை. குத்தகைக்காரன்நிலத்தில் கிடைக்கும் அறுவடையில் இருந்துதன் நுகர்வுத் தேவைகளைப் பெற்றுக் கொள்கிறான். உற்பத்தி சாதனங்களுக்கும் குத்தகைக் காரனிற்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக இது சாத்

Page 30
iii.
பிரவாதம்
தியமாகிறது. மூலதனம் - உழைப்பு என்ற பிணைப்பு இங்கு செயற்படவில்லை.
குத்தகைக்காரன் பயிர்ச்செய்கையில் ஈடுபடும்போது கிருமி நாசினி, பசளை போன்றவற்றில் முதலீடு செய்யாமல் தன் உழைப்பை மட்டும் உற்பத்தியில் செலவிடக் கூடும். அல்லது அற்பமான அளவு மூலதனத்தை உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடும். எவ்விதமிருப்பினும் மூலதனம் - உழைப்பு என்ன விகிதத்தில் கலக்கப்படுகிறது என்று பார்க்கும்போது மூலதனம் அற்பமாயும் உழைப்பு மிக அதிகமாயும் உள்ளது. இதனை மூலதனத்தின் ஆக்க இசைவுப் பொருத்தம் (Organic Composition of Capital) மிகக் குறைவாக உள்ளது அல்லது முற்றாகவே இல்லை என்று மார்க்சீயப் பொருளியல் கலைச்சொல் கொண்டு
விளக்கலாம்.
நிலஉடைமை என்பதுமூலதனத்தின்ஒருவடிவமாகவேமுதலாளித்துவ
முறையொன்றில் அமையும். கண்டியில் மூலதனம் “சுதந்திரமான உழைப்பை விவசாய உற்பத்தியில் பயன்படுத்துவதை விடுத்து, குத்தகை முறை என்னும் பழைய உறவினை நடைமுறையில் வைத்
திருக்கிறது. மூலதனத்தின் நோக்கில் இது கூடிய லாபம் தருவதாக
இருப்பதுதான் காரணம். இவ்விடயம் குறித்து லெனின் கூறியிருப் பதை இங்கு மேற்கோளாகத் தருகின்றோம்.
‘எல்லாமுதலாளித்துவ சமூகங்களிலும் சிறு விவசாயிகள் அல்லது குடியான்கள் நிலைத்துள்ளனர். இதற்கான காரணம் குடியான் உற் பத்தி முறை தொழில் நுட்பத்தில் உயர்ந்த தரத்தை உடையதாக இருப்பதல்ல. குடியான்கள் கூலிஉழைப்பாளர் கேட்கும் கூலியை விடக் குறைந்த செலவில் தம் உழைப்பை வழங்குவதற்கு தயாராய் இருப்பது தான் குடியான்களின் நிலைபேற்றுக் காரணமாகும். அவர்கள் தமது தேவைகளை சுருக்கிக் கொள்கிறார்கள்; கடுமையாகப் பாடுபட்டு உழைக்கிறார்கள் (1960; 111:27).
நரோட்நிக்ஸ் எனப்படும் பொருளியல் சிந்தனையாளர்களுடன் விவாதித்த லெனின் குடியான்களை தீவிரதமாகச் சுரண்டுவதால் கிடைக்கின்ற லாபம்தான்குடியான்முறையின் நீடிப்புக்குக் காரணம்
என்ற வாதத்தை முன்வைத்தார். ஐக்கிய அமெரிக்காவின் தென்
 
 
 
 
 
 
 

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி. 57
பகுதியின் விவசாய அடிமை முறையை முதலாளித்துவம் இணைத்துக் கொண்டதை அவர் உதாரணம் காட்டினார். மூலதனத்தின் மேலாதிக் கத்தின் கீழ் பழைமை வாய்ந்த உற்பத்தி உறவுகளையும் வைத்திருக்க முடியும் என்பதற்கு உதாரணங்கள் பல உள்ளன.
கண்டியின் நிலவுடைமையாளர்கள் கூலி உழைப்பாளர்கள் மூலம் விவசாய உற்பத்தியைச் செய்கிறார்கள் எனக் கொள்வோம். கூலியைப் அவர்கள் பணமாகக் கொடுக்கவேண்டும். உழவுவேலைக் காக எருமைகளை அல்லது உழவுயந்திரத்தைப் பெறுவதற்கு பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு மாறும் செலவுகளிற்கு செலவிடுவதை விட குடியானிடம் குத்தகையை பெறுவது லாபம் என்பதை அனுபவம் உணர்த்துகிறது. குத்தகை முறை என்ற பழைய உறவுமுறை அதிதீவிர சுரண்டலாக இருப்பதும் அது லாபகரமாக இருப்பதும் அதன் நீடிப்புக்குக் காரணமாக உள்ளது. கிராமிய மட்டத்தில் கூலியைக் குறைப்பதற்கு பழைய உறவுகள் காரணமாக உள்ளன.
கண்டியின் ‘யக்கடகம' கிராமத்தில் இரும்பு,பித்தளை, செம்பு போன்ற உலோக வேலைகளைச் செய்யும் கொல்லர்கள் இருக் கிறார்கள். இவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை தமக்குச் சொந்தமான வீட்டில் உள்ள பட்டறையில் வைத்துச் செய்கிறார்கள். தமது உற்பத்திகளை நகரத்தில் உள்ள கம்பனிகளுக்கு விற்கிறார்கள். இக்கம்பனிகள் தமது உற்பத்தி ஆலைகளில் இப்பொருட்களின் உற்பத்திக்கான ஒரு பிரிவைத் தொடக்கி, அவற்றுக்குத் தேவையான யந்திரங்கள் ஏனைய உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்து, கூலி உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்தி உற்பத்தியில் ஈடுபடலாம் அல்லவா? ஆனால், அப்படி அக்கம்பனிகள் செய்வதில்லை. காரணம் யாதெனில் அவ்வாறு முதலிடுவது லாபம் அற்றது. யக்கடகம கிரா மத்தின் உலோக உற்பத்தி மரபுவழிபட்ட முறையில் இன்றும் நடை பெறுகிறது.
மேலே நாம் குறிப்பிட்ட உதாரணங்கள் பொருளாதாரம் என்ற நிலையில் நோக்கப்பட வேண்டியன. பொருளாதார நோக்கில் லாபம் தராத பழைய உற்பத்தி உறவுகள் கூட நீடிக்கலாம். குறிப்பிட்டதொரு சூழலில் பழைய குத்தகை முறையினால் மூலதனம் நேரடியாக லாபத்தை உழைப்பதில்லை என்ற நிலை இருக்கலாம். அல்லது உழைக்கும் லாபம் மிக அற்பமானது அல்லது குத்தகையாக பெறக்

Page 31
58 பிரவாதம்
கூடிய அளவை விடக் குறைந்தது, நட்டம் தருவது என்றும் இருக் கலாம். அவ்வாறாயின் ஏன் பழைய உறவுமுறை தொடர வேண்டும்? இதற்குரிய விடையை பொருளாதாரம் என்ற நிலையில் காண முடியாது. ஒரு உற்பத்தி முறை என்பதில் அடித்தளம் (Infrastructure), மேற்தளம் (Superstructure) என்ற இரண்டுதளங்கள் உள்ளன. ஆதலால் பழைய உறவுகள் அடித்தளம், மேற்தளம் என்ற இரு தளங்களிற் கிடையிலான இயைபாக்கத்தின் (Articulation) மூலம் குறித்த உற்பத்தி முறையில் நிலைத்து நிற்பதற்குரிய தகுதியைப் பெறுகின்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் மேற்கட்டுமானத்தின் சட்டமும் அரசியலும், கருத்தியல் என்ற அதன் உள்ளார்ந்த நிலைகளுடன் பழைய உறவுகள் இணைவு பெறுதல் வேண்டும்.
கண்டியப் பிராந்தியத்தில் சட்டமும் அரசியலும் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை தெளிவான சில கட்டங்களாக பிரித்து நோக்குதல் முடியும்.
1. நிலமானிய - அலுவலர்ஆட்சி ஆதிக்க காலம்: இக் காலத்தில் பழைய பிரபுக்குலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது கண்டியில் முடியாட்சி இருந்தது
ii, பிரித்தானியர் ஆட்சியின் தொடக்ககாலம்: கண்டியை பிரித் தானியர் கைப்பற்றிய பின்னர் பிரபுக்குலம் சிதைவடைந்து அராஜகநிலை தொடர்ந்தது. இக்காலத்தில் பழைய பிரபுக் குலம் சாதாரண மக்களின் நிலைக்குக் தாழ்வுற்றது.
iii புதிய பிரபுக்குலத்தின் தோற்றம்: இக்கட்டத்தில் பிரித்தானிய காலனித்துவம் புதிய பிரபுக் குலத்தை உருவாக்கியது.
iv முதலாளித்துவ - அலுவலர் ஆதிக்கக் காலம்: இக்காலத்தில் நிலவுடைமையாளர்கண்டியின் கிராமப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவோராக இருந்தனர். நில உடைமையாளர்கள் முதலாளி வர்க்கத்துடன் இணைந்து ஆளும் வர்க்கம் (Ruling Class) என்ற நிலையைப் பெற்றனர் (இக்காலகட்டத்தின் முதலாளிகள் தங்கியிருக்கும் முதலாளி வகுப்பு (Dependent Bourgeoise) என்பதைக் கவனித்தல் வேண்டும்.)

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 59
மேலே குறிப்பிட்டவற்றுள் முதலாவது கட்டத்தின் சட்டமும் அர சியலும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறையுடன் மிகுந்த பொருத்தமுடையதாக இருந்தது. இரண்டாவது கட்டத்தின் வெற்றிடம் மூன்றாவது கட்டத்தில் நிரப்பப்படுகிறது. இப்பணியை காலனித்துவ அரசு நிறைவேற்றுகிறது. இவ்வாறான நிரப்புதல் பழைய உறவுகளின் உள்ளக இயக்கம் காரணமாக ஏற்படவில்லை. காலனித்துவ அரசின் திணிப்பாக அமைந்தது. நான்காவது கட்டத்தில் காலனித்துவ அரசு தான் உருவாக்கிய பிரபுக் குலத்தின் அதிகாரக் கட்டமைப்பைச் சிதைத்தும் மாற்றியும், முதலாளித்துவ அரசு யந்திரத்தின் பகுதியாக ஆக்கியது. இம்மாற்றம் மூன்று முறைகளில் செயற்பட்டது. முத லாவதாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் (சட்டசபை உறுப் பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்) அரசியல் அதிகாரம் பெற்றனர். இரண்டாவதாக DR.O. என்று ஆங்கில சுருக்கப் பெயரால் அழைக் கப்படும் பகுதிக் காரியாதிகாரிகள் என்ற அதிகாரிகள் ‘ரட்டே மஹாத்தயா விற்கு பதிலாக நியமிக்கப்பட்டார்கள். மூன்றாவதாக கிராம மட்டத்தில் ‘கிராமசேவகர் என்ற உத்தியோகத்தர் நியமிக்கப் பட்டார்.
இந்த மாற்றங்கள் கண்டியின் கிராமப் பகுதிகளில் குறிப்பிட்ட வகையான சட்டமும் அரசியலும் என்ற மேற்கட்டுமானத்தை ஏற் படுத்தியிருக்கிறதல்லவா? இதன் சாராம்சம் யாது? இது முதலாளித்து வதற்குப் புறம்பானதா? இலங்கை முழுவதையும் தழுவியதாக வளர்ச்சியுற்றிருக்கும் சார்பு மண்டல முதலாளித்துவத்தின் (Peripheral Capitalism) உள்ளார்ந்த ஒரு அம்சமாகவே சட்டமும் அரசியலும் (பாராளுமன்ற உறுப்பினர் - பகுதிக்காரியாதிகாரிகள் - கிராம சேவ கர்கள்) என்ற கட்டமைப்புநாலாவது கட்டத்தில் உருவாக்கம் பெற்றது. இவ்வாறு உருவாகிய முதலாளித்துவ - அலுவலர் ஆட்சி அதிகாரம் (Bourgeoise - Bureaucratic Control) g5667 g)60Lu5GB) epaulb Lugopu உறவுகளை மீள் உயிர்ப்புச் செய்வதற்கு தடையாக இருக்கவில்லை. மாறாக அதன் இடையீடு பழைய உறவுகளைப் புதுப்பிக்க உதவியது.
மேற்தளத்தின் கருத்தியல்நிலையின்இயக்கம் கண்டியில் மிகவும் சிக்கலானதாக இருந்தது. கிராம மட்டத்தில் அங்கு காணப்படும் சமூக வர்க்கங்களிடையே கருத்தியல் ஒருமைப்பாடு இருப்பதாகக்

Page 32
60 பிரவாதம்
கூறுதல் இயலாது. நிலவுடைமையாளர் வர்க்கம் தற்போது நிலவும் உற்பத்தி உறவுகளைப் பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண் டுள்ளனர். குட்டி முதலாளி வர்க்கம் "பொப்பியுலிசம்' (Populism) என்னும் மக்கள்வாதத்தை தமது கருத்தியலாகக் கொண்டுள்ளனர். ஆனால், இவர்களின் மக்கள்வாதம் தனியுடைமை முறையை எதிர்ப்பதில்லை. குடியான் வகுப்பினர் தமது நலன்களைப் பாது காக்கும் தாபன அமைப்புக்களில் ஒன்று சேரவில்லை. அவர்களின் கருத்தியலும் தெளிவற்றதாக உள்ளது. அவர்களிடம் (எல்லாம் விதிப் படி நடக்கும் என்ற) விதிவாதம் மேலோங்கி உள்ளது. கண்டிய சமூகத்தின் கருத்தியல் (அதன் சட்டமும் அரசியலும் போன்றே) முதலாளித்துவத்திற்கு புறத்தே இருந்து வந்ததன்று. நில உடைமை யாளர்களின் கருத்தியல் பழைமைவாதம் ஆகும். இருந்தபோதும் அவர்கள் முதலாளித்துவத்தின் கூட்டாளிகளாக, அவர்களோடு கருத்தியல் இணைப்பு கொண்டவர்களாக உள்ளனர். நிலவுடைமை யாளர்களின் கருத்தியல் சார்புமண்டல முதலாளித்துவத்துடன் தொடர் புடையது. குட்டி முதலாளிகளின் மக்கள்வாதமும் அவர்களது கருத் தியலும், நகரப்புறத்தில் உள்ள அவர்களின் சகோதரர்களிடம் இருந்தும், நகரத்தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்தும் பெறப்பட்டவையே.
கண்டியில் காணப்பட்ட உற்பத்தி முறை முதலாளித்துவத்திற்கு உள்ளேயான இயக்க விதிகளுக்கு அமைய பழைய உற்பத்தி உறவு களை மீள் உயிர்ப்புச் செய்வதாகவும் மறு உற்பத்தி செய்வதாகவும் இருந்தது. இம்மறு உற்பத்தி மேற்கட்டமைப்பின் வெவ்வேறு நிலைகளின் இயைபாக்கம் மூலம் நடைபெற்றது. கண்டியில் முத லாளித்துவமுறைக்குள்ளே அதனில் இருந்து வேறுபட்ட இன்னொரு உற்பத்தி முறையும் உள்ளமைந்து இருந்தது என்று கூறுதல் தவறு. சார்பு மண்டல முதலாளித்துவத்தின் கட்டமைப்பின் இயக்கவிதி களுக்கு ஏற்ப பழைய உற்பத்தி உறவுகள் மீள் உயிர்ப்பித்து மறு உற்பத்தி செய்யப்பட்டன.‘சுதந்திரமான உழைப்பாளரின் மறுஉற்பத்தி முதலாளித்துவத்திற்கேயுரிய உற்பத்தி உறவு முறை. இதனை மறு உற்பத்தி செய்வதில் எவ்விதம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடித்தளம் பங்கு பெறுகின்றது என்பதை இக்கட்டுரையின் முற் பகுதியில் குறிப்பிட்டோம். பழைய உறவுகளின் மறு உற்பத்தி சார்பு மண்டல முதலாளித்துவத்தின் கீழ் நிகழும் போதும் முதலாளித்து

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 61
உற்பத்தி முறையின் உள்ளார்ந்த செயல்முறையாகவே அமைகிறது. இதனை குத்தகை முறையினை உதாரணம் காட்டி விளக்குவோம்.
i.
ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி மூல தனத்தை அதன் ஒன்றித்த வடிவில் எதிர்கொள்கிறான். தொழிற் சாலை மூலதனத்தின் ஒன்றித்த வடிவம் ஆகும். கண்டியில் நிலத்தைப் பயிரிடும் குத்தகைக் குடியான் மூலதனத்தை அதன் LaTaolo 6ul 6) Ifilosofiao (Capital in its Plurality) g|E959)aiprtat. நிலவுடைமையாளர், வட்டிக்குப் பணம் கொடுக்கும் முத லாளிகள், கிருமிநாசினி பசளை போன்ற உள்ளீடுகளை வழங்கு வோர், நெல்லை வாங்கி விற்கும் வியாபாரிகள் என்றவாறு மூலதனம் கூறுபோடப்பட்டுப் பன்மை வடிவில் விளங்குகிறது. இவ்வாறான பன்மைத்துவ மூலதனத்திற்குள் (முதலாளித்து வத்துள்) முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாட்டுப் பின் னணியில் நிலத்தை பயிரிடும் குடியான் தனக்கென ஒரு சிறிய வெளியை, பாதுகாப்பான இடத்தை பெற்றுக் கொள்கிறான். அவன்தான் பயிரிடும் நிலத்தினைதன்வசம் வைத்திருக்கிறான். இது அவனது உரிமை. ஆகவே, முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழ் குடியான் சந்தையில் தன் உழைப்புசக்தியை விற்பவன் என்ற உறவு முறையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக அவன் உழைப்பின் பயனான விளைபொருள்களைச் சந்தையில் விற்கின்றான். முதலாளித்துவ கட்டமைப்பு குடி யானுக்கு ஒரு சிறிய வெளியை விட்டுக் கொடுக்கிறது. அதன் மூலம் உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்யும் பொறுப்பில் இருந்துதப்பிக் கொள்கிறது.நிலத்தில்தான் உற்பத்தி செய்வதில் ஒரு பகுதியைக் தன்நுகர்வுத் தேவைக்கு வைத்துக் கொள்வதால் குடியான் உழைப்புச்சக்தி மறு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு குடியான் தனது நுகர்வுத் தேவைக்காக வைத்துக் கொள்ளும் உற்பத்தியின் சந்தை மதிப்பைக் கணக்கிட்டால் அது கூலி உழைப்பாளர்களின் கூலியைவிடக் குறைந்ததாகவே இருக்கும். குத்தகைப் பயிரிடும் முறை முதலாளித்துவத்திற்குப் பலம் சேர்ப்பது இலாபகரமானது என்பது இப்போது புரிகிறது. ஒப்பீட்டளவில் மலிவான இந்த முறையை முதலாளித்துவம்

Page 33
62
ii.
iii.
பிரவாதம்
தொடரச் செய்கிறது. இதனையே உற்பத்தி முறையொன்றின் பொருளாதார இடையீடு (Economic intervention) என்கிறோம்.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கண்டியின் குத்தகைப் பயிர்ச் செய்கை முறைக்கு சட்டரீதியான அங்கீகாரம் பொதுச் சட்டத் தின் கீழ் இருந்துவந்தது. இருப்பினும் உழுவோன் நிலத்தில் உரிமை கொண்டாடும் நிலை இருக்கவில்லை. நிலப்பிரபுக்கள் குத்தகைக்காரனை நிலத்தில் இருந்து வெளியேற்றும் சட்ட உரிமையைக் கொண்டிருந்தனர். ஆயினும் தொல்லைதரும் குத்தகைக்காரரை வெளியேற்றுவதற்குநிலப்பிரபுக்கள் இவ்வுரி மையைப் பயன்படுத்தினரேயன்றி, குத்தகைக்காரர்களை வெளி யேற்றி பெரிய பண்ணைகளை உருவாக்கி, கூலி உழைப் பாளர்களைக் கொண்டுநிலத்தைப் பயிரிடும் முயற்சியில் இறங்க வில்லை. இதற்குக் காரணம் உற்பத்தி முறையின் பொருளா தார இடையீடு என்பது தெளிவு. அண்மைக் காலத்தில் நிலச் சீர்திருத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இச்சட்டங்கள் குத்தகைக்காரனிற்கு நிலத்தில் உள்ள உரிமைக்கு சட்ட அங்கீ காரம் வழங்கின. இதனால் நிலவுடைமையாளர்கள் எழுந்த மானமாக குத்தகைக்கு பயிரிடுவோரைநிலத்தில் இருந்து வெளி யேற்ற முடியாது. தோற்றமளவில் இச்சட்ட அங்கீகாரம் புரட்சிகர மானதாகத் தெரிந்தாலும் உண்மையில் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கிராமப் புறத்தின் விவசாய உறவுகள் உறைநிலை பெற்று விடும். சட்டத்தை முழுமையாகப் பிர யோகித்தால் குத்தகை முறையின் சாரம்சமான அம்சம் நிலை பேறுடையதாக மாறிவிடும்.நில உடைமையாளனின்நிலத்தின் மீதான சட்டபூர்வ உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது. பயிரிடு வோனான குத்தகைக்காரனின் பயிரிடும் உரிமையும் அங்கீகாரம் பெறுகிறது. அவன் எவ்வளவு குத்தகையை (வாடகை) செலுத்த வேண்டும் என்பதும்நிர்ணயிக்கப்படுகிறது.இதனையே அரசியல் இடையீடு என்று குறிப்பிட்டோம்.
ஒரு துண்டுக் காணியையானும் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும், அது விரும்பத்தக்க விடயம் என்பது கண்டியின் கிராமப்புற வர்க்கங்களின் நம்பிக்கைகளில் ஒன்று. இது அச்

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 63
சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றிருந்த கருத்தியலின் ஓர்அம்சமும் ஆகும். ஒரு துண்டு நிலம் உடைமையாக இல்லாவிட்டால் குத்தகை உரிமை இருந்தாலும் போதும், திருப்தி என்ற கருத்தும் இருந்தது. குத்தகைக் குடியான் ஒருவனை அவன் பயிரிடும் நிலத்தில் இருந்து வெளியேற்றுவது அவன் வாழ்வில் பெருநா சத்தைக் கொண்டுவரும் என்றே கருதப்பட்டது. குடியான்கள் சிறியதுண்டு நிலம் என்றாலும் அதனைப் பற்றிப் பிடித்துக் கொள்வார்கள்; தம்பிடியை விடமாட்டார்கள். கண்டியின் விவ சாயக் கட்டமைப்பில் கூலி மிகக் குறைவாக இருந்தது. வேலை வாய்ப்புக்களும் குறைவு. இப்படியான ஒருநிலைக்குக் காரணம் பெரும்பான்மையான குடியான்கள் குத்தகைப் பயிரிடுவோராக இருந்ததுதான். கருத்தியல் நிலையில் குடியான்களால் இது உணரப்படவில்லை. அவர்கள் நிலத்தின் மீதான தங்கள் உரிமையை ஒரு பாதுகாப்பு என்றே கருதினர். அதை நழுவ விடாது பற்றிப்பிடித்தனர். குத்தகைப்பயிரிடுதல் அல்லது தனது சொந்தத் துண்டில் பயிரிடுதல் என்பனவே உய்வுக்கான வழி என்று நினைத்தனர். கருத்தியல் இடையீட்டின் தன்மையை இது காட்டுகிறது. தூய முதலாளித்துவ உறவுகளான “சுதந்திரமான உழைப்பாளர் போன்ற விடயங்கள் எவ்வாறு முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு உரிய மறு உற்பத்திகளாக உள்ளனவோ அது போன்றே பழைய உறவுகளின் மீள் உயிர்ப்பித்தலும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அமைப்பியல் நிலைகளினால் தீர்மானமாகின்றன. உழைப்புக்கான கூலியை விட குத்தகை விவாசாயி தன் பிழைப்புக்காகப் பெற்றுக் கொள்ளும் நுகர்வுப் பெறுமதி குறைவாக இருப்பதால்தான்குத்தகை விவசாயமுறை இன்னும் கண்டியில் பரவலாக நிலை பெற்றுள்ளது. அத்தோடு சட்டமும் அரசியலும் குத்தகை முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. சொத்தில் தனியுடைமையையும், குத்தகையாளர் உரிமைகளையும், வாடகையின் அளவையும் சட்டம் வரையறுத்து அங்கீகரிக்கிறது. இத்தகைய சட்ட - அரசியல் அங்கீகாரம் இல்லா விடில் குத்தகைமுறை அழிந்திருக்கும். குடியான் உடைமை, துண்டு நிலங்களை வைத்திருப்பதால் பெறும் பாதுகாப்பு, குத்தகை உரிமை

Page 34
64 பிரவாதம்
பற்றிய பெருமித உணர்வு ஆகிய கருத்தியல் இல்லாவிடினும் நிலத் திற்கும் குடியானுக்கும் இடையிலான பிணைப்பு தளர்ந்துவிடும்.
முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறையின் குலைப்பு (Dismantling) என்ற எண்ணக்கருவை அவ்வுறவுகளின் ஒழிப்பு (Elimination) என்பதில் இருந்து நாம் வேறுபடுத்தி நோக்குதல் வேண்டும். இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று குழப்பக்கூடாது. உற்பத்தி முறையினைச் குலைக்கும் போது அதன் அமைப்பியல் இயைபாக்கம் செயலிழக்கும். உற்பத்திமுறையின் ஒருமைத்தன்மை அழிந்து போகும். அதன் மறுஉற்பத்திக்கான ஆதாரமும் இல்லாமல் போகும். கண்டியில் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்திமுறை யின் குலைப்பு காலனித்துவத்தின் வருகையால் நிகழ்ந்தது. முதலா வதாக கண்டியின் சட்ட அரசியல்நிலை (முடியாட்சி) தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்தது. பழைய நிலமானிய அரசின் இடத்தைக் கால னித்துவ அரசு பிடித்துக்கொண்டது. முன்னைய ஆளும் பிரபுக்குலம் வீழ்ச்சியுற்றது. அதனிடத்தில் புதிய உயர்குலம் (பிரித்தானியருக்குக் கீழ்ப்பட்டதாக) உருவாகியது. கருத்தியல் மட்டத்தில் முதலில் கிறிஷ்தவ மதமாற்றம் நிகழ்ந்ததேனும், காலப்போக்கில் பெளத்தமும் அதன் மதபீடமும்தன்னை உறுதிப்படுத்திக் கொண்டன. காலனித்து வமும் பெளத்தத்தை சகித்துக் கொண்டதோடு, அதற்கு உதவி செய்யவும் முன்வந்தது. ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக பெளத்தம் செயல்படாதிருந்தால் அதுவே திருப்திதரும் விடயமாகக் கருதப் பட்டது. கோவில் நிலம் பற்றிய விசாரணை ஆணைக்குழு இக்கொள் கையைப் பிரதிபலித்தது.
முதலாளித்துவத்திற்கு முந்திய உறவுகளை முற்றாக ஒழித்தல் என்னும் வேலை முதலாளித்துவத்தால் நிறைவேற்றப்படுவதில்லை. அது ஒரு சாத்தியமான கருதுகோள் என்றே கொள்ளலாம். இருப் பினும் நடைமுறை உதாரணங்கள் மிகக்குறைவு. கண்டியில் நிகழ்ந்தது முழுமையான ஒழிப்பு (Elimination) அல்ல. பழைய முறையின் குலைப்பு அங்கு நிகழ்ந்தது. கண்டியின் முடியாட்சி முதலாளித்து வத்திற்கு முந்திய முறையின் அச்சாணியாக இருந்தது. முடியாட்சியின் அழிப்பு உற்பத்தி முறையின் சிதைவுக்குப் பிரதான காரணியாக அமைந்தது. இதனால் பல நிலைகளிலும் இருந்த ஒருங்கிணை

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 65
பிணைப்புக்கள் அறுந்தன. முதலாளித்துவ முறையின் ஊடுருவலும், அதன் மேலாதிக்கமும் சிதைவைத் துரிதமாக்கியது. சில பழைய உறவுகளும் சுரண்டல்முறைகளும் முதலாளித்துவத்தால் உள்வாங்கப் பட்டன.
சிதைவும், மீள் உயிர்ப்பித்தலும் சமாந்தரமாக ஒரே சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த செயல்முறைகளாகும். மூலதனம் எல்லா வகையான பழைய உறவுகளையும் மீள் உயிர்ப்பிப்பது இல்லை. சில மீள் உயிர்ப்பிக்கப்பட்டன; வேறு சில ஒழிக்கப்பட்டன. குத்தகை முறையும், சிற்றுடமை விவசாயமும் மீளச் செயற்படுத்தப்பட்டன. கைவினைப் பண்டங்களின் உற்பத்தி கண்டியில் அழிந்தது. அதன் சில வடிவங்கள் புதுப்பிக்கப்பட்டுச் செயற்பட்டன. தெலும் கொட, அதிரகப்பிட்டிய கிராமங்களில் (களவாய்வு செய்த கிராமங்கள்) குத்தகைமுறை மீளச் செயற்பட்டது. உலோகவேலை செய்யும் நவண்டன சாதிக் கிராமமான யக்கடகமவில் சிற்றுடமை விவசாயம் நடைபெற்றது. இவையிரண்டும் பழைய உற்பத்தி உறவுகளாகும். அதிரகபிட்டியவில் இரும்பு உருக்கு வேலையும், பண்ட உற்பத்தியும் முற்றாக அழிந்தது. இரும்புவேலை செய்யும் நவண்ட னவின் மரபுவழிச் சேவைக் கடமைகளும் மறைந்தன. இரும்பு வேலையில் நவண்டன் ஈடுபடுதல் இடைக்கிடை தொடர்ச்சியற்று நடைபெறும் விடயமாக உள்ளது. சுருங்கக்கூறின் பழைய உற்பத்தி உறவுகள்,
அ. சில தொடர்ந்து நிலைத்து நிற்கின்றன.
ஆ. வேறு சில முற்றாக அழிந்து விட்டன.
இ. இன்னும் சில இடைக்கிடை தலைகாட்டிய வண்ணம்
உள்ளன.
மேற்குறித்த செயல்முறைகளிற்குப் பின்னால் உள்ள மறை தர்க்கம் (Hidden Logic) யாது? இம்மறை தர்க்கத்தின் பொது விதியாகக் கொள் ளத்தக்கது யாதெனில் மூலதனம் லாபம் தருவது எனக் கருதியவற்றை மீளப் புதுப்பித்தது. ராஜகாரிய முறையைப் புதுப்பித்தது இதற்கு உதாரணமாகும். ஆனால் சார்புமண்டல முதலாளித்துவத்தின் கீழ் மேன்மிகை உற்பத்தியைச் சுரண்டுவதற்கு வர்க்கங்களிற்கு இடை யிலே ஒரு கூட்டு அவசியமாகவிருந்தது. இந்தக் கூட்டுமூலம் தான்

Page 35
66 பிரவாதம்
இருக்கும் நிலைமைகளை மாற்றமின்றிப் பேணமுடியும். 19 ஆம் நூற்றாண்டில் நெல்உற்பத்தி மூலதனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு உட்படவில்லை. மூலதனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உற்பத்தித் துறையின் மேன்மிகை நேரடியாக முதலாளி வர்க்கத்திற்கு போய்ச் சேரவேண்டும். நெல் உற்பத்தியின் மேன்மிகைதானியவரி போன்ற வழிகளில் பெறப்பட்டதேனும் காலனித்துவ முதலாளிகளுக்கோ அல்லது இலங்கையின் தாழ்நிலப்பிரதேச முதலாளிகளுக்கோ நேரடி யாகப் போய்ச் சேரவில்லை. கண்டியில் புதிய நிலப்பிரவுக் குலம் நிலைத்திருப்பதற்கு அதற்கு வழங்கப்பட்ட அலங்காரப் பதவிகள் மட்டும் போதியதாக இருக்கவில்லை. குடியான் வர்க்கத்தின் மீதான கட்டுப்பாடும் அதற்குத் தேவைப்பட்டது. குத்தகை முறையின்நீடிப்பு குடியான்கள் மீதான கட்டுப்பாட்டை வைத்திருக்க வழி செய்தது. இரும்புவேலை செய்யும் கிராமத் தொழிலாளர்களின் உற்பத்தியை இவ்விதமான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. ஆதலால் இத்தொழிலை உயிர்ப்பித்தல் பிரபுக்குலத்தின்அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்கு அவசியமானதாக இருக்கவில்லை. கிராமத்தின் இரும்பு உற்பத்தி உள்ளூர் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்தாலும் கூட அந்தக் கைவினைத் தொழில் தொடர்ந்து நிலைத்திருக்கும். ஆனால், முதலாளித்துவத்தின் பிரசன்னம் கிராமப்புறத்தில் இருக்கவில்லை. அத்தோடு அங்கிருந்த முதலாளிகள் கூட வணிக முதலாளிகளாக இருந்தார்களே அன்றிப் பொருளுற்பத் தியில் நாட்டம் உடையோராக இருக்கவில்லை. காலனித்துவ ஆட்சியின் கீழ் இரும்பு இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட இரும்பை கிராமத்துத் தொழிலாளர்கள் கொள்வனவு செய்து கருவிகளையும், பிறபொருட்களையும் உற்பத்தி செய்தனர். இதனால் இரும்பு உருக்குத் தொழில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் கண்டியில் மறையத் தொடங்கியது. மூலதனம் இரும்பு உருக்குத் தொழிலால் லாபம் பெறமுடியவில்லை. அத்தொழிலினால் பிரபுக்குலத்தின் அதிகாரமும் கட்டுப்பாடும் ஓங்கும் சாத்தியமும் இருக்கவில்லை. இத்தொழிலின் அழிவுக்கு இவ்விரண்டும் காரணங் களாயின. இரும்புத் தொழிலுக்கு எதிராக ஒழிப்பு என்ற விதி செயற் பட்டது. அதன் மத்தியில் முன்னைய வடிவத்தின் திரிபடைந்த
 

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 67
உருவில் அது தப்பிப் பிழைத்திருப்பது ஒரு தற்செயல் விடயமே. கிராமிய இரும்புக் கைத்தொழில் அரை குறையான மீள் உயிர்ப் பித்தலைப் பெற்றது.
கிராமப்புறங்களில் குடியான் விவசாய உற்பத்தி தொடர வேண்டிய தேவை இருந்தது. குடியான் உற்பத்தியின் மேன்மிகை பிரபுக்குலத் திற்கு கிடைத்தது. அதனால் குடியான்களுக்கு சில வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியும் இருந்தது. மண்வெட்டி, கலப்பை, அரிவாள் போன்ற சிறிய ஆயுதங்களின் உற்பத்தி கிராம மட்டத்தில் நடைபெறுவதும், அக்கருவிகள் குடியான்களுக்கு கிடைக்கக்கூடிய தாய் இருப்பதும் ஒரு முக்கிய தேவையாக இருந்தது. இக்கருவிகளைக் குடியான்களுக்கு வழங்கும் வேலையை நகரங்களின் தொழிற்சாலை களால் நிறைவேற்ற முடியாது. இக்கருவிகளுக்கான கேள்வி ஒரு குறிப்பிட்ட வகைப்பட்டது. இக்குறிப்பிட்டவகைத் தேவையின் காரணமாகவே இரும்புத் தொழில் உயிர்ப்பிக்கப்பட்டது. இது உயிர்ப் பிக்கப்பட்ட போதும், இறக்குமதி செய்யப்பட்ட இரும்பின் வருகை, கண்டியரசு காலத்தில் ஆயுதங்களின் உற்பத்திக்கு இருந்த தேவை பின்னர் இல்லாமற்போனமை ஆகிய காரணங்களால் இவ்வுற்பத்தி நலிந்த நிலையிலேயே தொடர்ந்திருந்தது.
மேலே நாம் குறிப்பிட்டவற்றில் இருந்து ஒருவிடயம் தெளி வாகின்றது. பழைய உறவுகளை மீள் உயிர்ப்பித்தல் கண்டியில் முத லாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறையில் இருந்து தோன்ற வில்லை. அந்த முறை ஏற்கனவே அழிந்து விட்டது. உண்மையில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இடையீடுதான் இப்பழைய உறவுகளை மீள் உயிர்ப்புச் செய்தது. முதலாளித்துவம் பொருளாதார அரசியல் தேவைகளின் காரணமாக இவற்றை மீள் உற்பத்தி செய்தது. மறுஉற்பத்தி (Re Production), மீள் உயிர்ப்பித்தல் (Reactivation) என்ற இரண்டு எண்ணக் கருக்களையும் தெளிவான வரையறை செய்வதன் மூலமே இவ்விடயம் குறித்த தெளிவாக புரிதலை நாம் பெற முடியும்.

Page 36
68 பிரவாதம்
இன்றைய சமூக உருவாக்கத்தின் இயைபாக்கம்
கண்டியின் நிலமானிய அமைப்பின் முதலாளித்துவத்தை நோக்கிய மாற்றம் நேர்கோட்டில் ஒரே திசையில் அமையவில்லை என்பது மேற்கூறியவற்றில் இருந்து தெளிவாகிறது. இந்த மாற்றம் பழைய சமூக உறவுகள் யாவற்றையும் துடைத்தழிப்பதாகவும் அமையவில்லை என்பதும் தெளிவாகிறது.நிலமானிய உற்பத்திமுறையின் சில அம்சங் கள் மீள் உயிர்ப்புச் செய்யப்பட்டன. இந்த மீள் உயிர்ப்பு முதலாளித்துவ உற்பத்தி முறையின் தலையீட்டினால், அதன் சுரண்டல் தேவை களுக்காக மீள் உயிர்ப்பிக்கப்பட்டது என்பதும் கவனிக்கப்படத்தக்கது. உற்பத்தி உறவுகள் மட்டத்தில் நிகழ்ந்த இவ்வுருத்திரிபு பிற நிலை களான அரசியல் கருத்தியல் மட்டங்களிலும் உருத்திரிபை ஏற் படுத்தின.
முதலாளித்துவத்திற்கான நிலைமாற்றம் குறித்த ஆய்வுகளில் ரெய் (Rey) அவர்களின் ஆய்வு உயர்தரத்திலானது; நுட்பம் மிக்கது. அவர் இயைபாக்கம் (Articulation) என்பதை ஒன்றுக்கு மேற்பட்டவை யான பல உற்பத்தி முறைகள் படித்தர ஒழுங்கில் இணைந்திருத்தல் என்று வரைவிலக்கணப்படுத்துகிறார். அவர் முதலாளித்துவத்திற்கான நிலைமாற்றம் மூன்று படிநிலைகளாக ஏற்படுகின்றது என்றும் கூறுகிறார்.
1. பரிவர்த்தனையில் ஆரம்ப மாற்றம் ஒன்று ஏற்படுகிறது. இதனால் ஏற்பட்ட இணைப்பு முதலாளித்துவத்துடன் தொடர்புகளை வலுவடையச் செய்கிறது. இதனால் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்திமுறை மாற்றம் அடைகிறது. i. இரண்டாம் கட்டத்தில் முதலாளித்துவம் வேரூன்றுகிறது. இருப்பினும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறையை அது பயன்படுத்துகிறது. i. மூன்றாவது கட்டத்தில் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறை முற்றாகவே அழிந்தொழிகிறது. விவசாயத்திலும் அம் முறை அழிந்துவிடுகிறது. ரெய் இந்த மூன்று கட்ட வளர்ச்சியில் வர்க்கங்களின் கூட்டுறவின் பங்கினையும் குறிப்பிடுகின்றார். இருப்பினும் அவரது விளக்கம்

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 69
நேர்கோட்டு முறையில் ஒரேதிசையில் செல்வது என்பது கவனிக்கத் தக்கது. இந்த மாதிரியின் அடிப்படை அனுமானம் யாதெனில் சார்பு மண்டலத்தின் சமூக உருவாக்கம் நாளடைவில் தூய முதலாளித் துவம் ஆகப் பரிணமிக்கும் என்பதாகும்.
கண்டியில் முதலாளித்துவம் வேரூன்றுவதானது அங்கு முதலாளித் துவம் அதன் தூய வடிவில் தோற்றம் பெறுவதற்கான முன் தேவை யென்று கொள்ள முடியாது. ரெய் குறிப்பிடும் மூன்று படிநிலைகள் அத்தகையதொரு விளக்கத்தை தருகின்றது. ஆனால் கண்டியில் ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே முதலாளித்துவம் வேரூன்றியது. அப்படி வேரூன்றியநிலையிலேயே ஒரு நூற்றாண்டாக இருந்துள்ளது. இவ் வேரூன்றல்நிலை உள்ளூர் மூலதனத்திரட்சியால் ஏற்பட்டது போல் பறன், குண்டர் பிராங், சமீர் அமின் ஆகியோர் உள்ளூரில் மூலதனத் திரட்சி போதியளவு ஏற்படுவதில்லை; சுதந்திரமான, சயேச்சையான, முதலாளித்துவ வளர்ச்சி இல்லாமல் மூலதனத்திரட்சியை போதி யளவுக்கு உயர்த்த முடியாது என்று கூறியுள்ளனர். கண்டியின் முதலாளித்துவ உற்பத்தி முறை தேசிய முதலாளித்துவத்திற்கும் பெரு நகரங்களின் பூஷ்வா வர்க்கத்திற்கும் மேன்மிகையை உறிஞ்சி அனுப்பும் வழியாக, வாய்க்காலாக உள்ளது. இதனால் சுயகாலில் நிற்கும் முதலாளி வர்க்கம் ஒன்றை உருவாக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. ஆகையால் கண்டிப் பிராந்தியத்தில் இன்று இருக்கும் முதலாளித்துவத்தை அடுத்த கட்டம் ஒன்றை நோக்கி மாறும் முத லாளித்துவம் என்று கூறமுடியாது. காரணம் அங்கு ஏற்படும் மூலதனத் திரட்சி முதலாளித்துவ வளர்ச்சிக்கும் போதியதல்ல. அது தூய முத லாளித்துவத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கவில்லை. கண்டியின் முதலாளித்துவம் உருத்திரிபு அடைந்த, தேக்கமுற்ற முதலாளித்துவம். அதன் தனித்துவமான அடையாளம் உருத்திரிபும் தேக்கமும் முதிர்ச்சி நிலை பெற்றிருப்பதுமே.
கண்டியின் தனித்துவமான அடையாளங்களை இனங்காண்பது அவசியம். உற்பத்தி சக்திகள் என்ற வகையில் கண்டியில் மூன்று
வடிவங்களில் அவை உள்ளன.
1. குடியான் உற்பத்தியும், கைவினை உற்பத்தியும் ஒரு வடிவம். இங்கு எளிமையான கருவிகள் உற்பத்தியில் உபயோகிக்கப்

Page 37
70 பிரவாதம்
படுகின்றன. உழைப்புச் செறிவுடைய தொழில் நுட்பம் உபயோகிக்கப்படுகிறது.
1. அரச முதலாளித்துவ வடிவம் இன்னொன்று. இங்கு யந்தி ரங்கள் உபயோகத்தில் உள்ளன. மூலதனச் செறிவுமிக்க உற்பத்திமுறை இது. தெலுமகொடவில் உள்ள மின்தறி ஆடை உற்பத்திச்சாலையும், யக்கடகமவில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையமும் அரச முதலாளித்துவ வடிவத்திற்கு உதாரணங்கள்.
i. அடுத்தவை தனியார்துறை நிறுவனங்கள். இவை அருகே உள்ள நகரப் பகுதிகளில் உள்ளன. இவற்றில் சிறியவகை யந்திரங்கள் உள்ளன. மூலதனச்செறிவு ஒப்பீட்டளவில் குறைவு. செங்கல் உற்பத்திச் தொழிற்சாலைகள், போக்கு வரத்து, வர்த்தகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள நிறு வனங்கள் என்பன இதற்கு உதாரணங்களாகும். மேற்குறித்த உற்பத்தி சக்திகளின் மூன்று வடிவங்களும் அவற்றுக்கே யுரிய உற்பத்தி உறவுகளைக் கொண்டிருக்கின்றன. முதலாவது வடிவ மான குடியான் உற்பத்தியில் பழைய உறவுகள் நிலைத்துள்ளன. குத்தகைப் பயிர்ச்செய்கை, கட்டுப்பட்ட சுதந்திரம், தடைப்பட்ட உழைப்பு, சிற்றுடமை விவசாய உற்பத்தி, கிராமத்தில் கூலிக்கு வேலை செய்தல், நகரத் தொழில்களுடன் இணைக்கப்பெற்ற கைவினை உற்பத்தி என்பன பழைய உற்பத்தி உறவுகளின் நீடிப்புக்கு உதாரணங்களாகும். அரச முதலாளித்துவ வடிவத்தில் சுதந்திர உழைப் பாளர் உறவுமுறை உள்ளது. அங்கு பயிற்றப்பட்ட உழைப்பாளர்கள் தொழில் புரிகின்றனர். ஆனால், தனியார்துறைத் தொழிலாளர்கள் சுதந்திரமான உழைப்பு (Free Labour) என்ற இயல்பை உடையவர்கள் அல்லர். அவர்கள் தமது முதலாளிகளின் நல்லெண்ணத்தின்படி தொழில் செய்பவர்கள். அவர்களின் தொழிலின் உத்தரவாதம் முத லாளியின் விருப்பின்படி அமைவது. ஆதலால், கண்டிப் பிராந்தி யத்தில் முதலாளித்தவ முறையான‘சுதந்திர உழைப்பு மிக அருமை யாகக் கிடைக்கக்கூடிய ஒரு பண்டம். அது அரச முதலாளித்துவத்தில் மட்டுமே காணப்படுகிறது. இங்கும் கூட அது உருத்திரிபு பெற்ற

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 71
ஒன்றாகவே உள்ளது. அரசுத்துறை முயற்சிகளில் தொழிலாளர்களாக உள்ளவர்கள் இரு அர்த்தத்தில் சுதந்திரமான தொழிலாளர்களாவர்.
i. மூலதனம், கருவிகள் என்பனவற்றை உடைமை கொண்டவர் களாகவோ, கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாகவோ அவர்கள் இல்லை. சுதந்திரமாக உழைப்பை விற்பவர்கள்.
i. முதலாளியோடு தனிப்பட்ட முறையில் உறவுகள், விசுவாசம் - என்பன அவர்களுக்கு இல்லை. இருந்தபோதும் அவர்கள் கிராமங்களில் வாழ்பவர்கள். அங்கே அவர்களுக்கு சொந்த மாக நிலம் இருக்கும். உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடிய சொத்துக்கள் இருக்கும். இதனால் அவர்கள் சிற்றுடமை LJGöTL - 2 sijLg56) (Petty Commodity Production) GTGöTp 6160)Gou மைப்பில் சிக்கியுள்ளனர்.
உபரி உழைப்பை அபகரிக்கும் வழிமுறைகள் கண்டிய சமூகத்தில் பலவாகவும் பரவலாகவும் உள்ளன. குடியான் விவசாய உற்பத்தியின் உபரி உழைப்பு பரம்பரைப் பிரபுக் குலத்திற்குப் போய்ச் சேர்கிறது. தெலும்கொடவில் காணிகளை உடையவர்களான நிலப்பிரபுக் குடும்பம் வாடகையை பெறுகின்றது. இக்குடும்பத்தின் தலைவர் நகரத்தில் உள்ள பகிரங்க ஏலவிற்பனைத் தரகர் நிறுவனம் ஒன்றின் பங்காளராவர். தெலும்கொடவின் நெற்காணிகளின் வாடகையாக ஏறக்குறைய ரூ 26000 - ரூ.27000/= வரை இக்குடும்பம் ஆண்டுதோறும் பெற்றுக் கொள்கிறது.
இவ்வாறு பெற்றுக் கொள்ளும் தொகையில் ஒரு பகுதியை பசளை, கிருமிநாசினிக் கொள்வனவு என்ற வகையில் மீள் முதலீடு செய்வதைத் தவிர கிராமத்தின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மறுமுதலீடு செய்யப்படுவதில்லை. (பசளை, கிருமிநாசினிச் செல வையும் அறுவடையின் போது திருப்பிப் பெறுகின்றனர்.) இக் காரணத்தால் நெல் உற்பத்தித் தொழில் நுட்பம் நீண்ட காலமாக முன்னேற்றம் எதுவும் இல்லாமல் பழைய நிலையிலேயே உள்ளது. கிராமத்தின் உழைப்பு மேன்மிகை அல்லது உபரி உழைப்பு நகர மூலதனத்தின் சேர்க்கையாகவும், ஒரு பகுதி ஆடம்பரச் செலவுமாக விரயம் ஆகியது. அதிரகபிட்டிய கிராமத்தின் உபரி உழைப்பு கண்

Page 38
72 பிரவாதம்
டியில் உள்ள பிரதான குருவான பெளத்தத் துறவிக்குப் போய்ச் சேர்கிறது. அதன் மூலம் அவரால் ஆடம்பர வாழ்க்கை நடத்த முடிகிறது. யக்கடகமவின் கைவினைத் தொழிலின் உபரி உழைப்பு நகரங்களில் உள்ள முயற்சியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் போய்ச் சேருகிறது. யக்கடகம கைவினைஞர்களுக்கு மூலப் பொருட்களை விற்று முடிவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நரகத்து முயற்சியாளர்களும் வியாபாரிகளும் லாபம் ஈட்டுகிறார்கள். இதனை விட வேறு சில வழிகளில் சர்வதேச சந்தையுடன் கண்டிய விவ சாயிகள் பிணைக்கப்பட்டுள்ளார்கள். பசளை, கிருமிநாசிகள் ஆகிய உள்ளீடுகள் வெளியில் இருந்து வருகின்றன. அரசாங்க மானியம் பசளைக்கு வழங்கப்பட்ட போதும் பசளை வகைகளின் இறக்குமதி விலைகள் 1970 க்களில் உயர்ந்து சென்றன.
அரசாங்கம் நடத்தும் தொழில்களில் பெறப்படும் உபரி உழைப்பு நிர்வாக அதிகாரிகளின் உயர்மட்டங்களில் உள்ள பதவி நியமனங் களால் வீண்விரயமாகின்றது. அரச நிர்வாகத்தின் கீழ் உள்ள பெரும் பாலான கூட்டுத்தாபனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. தேவை யற்ற அளவில் இலிகிதர்களை வேலைக்கு அமர்த்தி வீண்செலவை அதிகரிப்பது இதற்கு ஒரு காரணம். அரச முதலாளித்துவத்துறையில் சுதந்திர உழைப்பு உள்ளது என்பதை முதலில் குறிப்பிட்டோம்.
இங்கு உழைப்பாளர்கள் பலம்மிக்க தொழிற்சங்கங்களை வைத் திருக்கிறார்கள். தொழிற்சங்கங்களின் அழுத்தத்திற்கு நிர்வாகம் பணிந்து போகும் தேவை உள்ளது. அரசுத்துறையில் கூலிமட்டம் உயர்வாக உள்ளது. இத்துறையின் கூலியை கிராமியக் குடியான் துறையிலும் கைவினைத் துறையிலும் நிலவும் கூலியுடன் ஒப்பிட
(Lplgll Islg5l.
தனியார்துறை மூலதனத்தால் உருவாக்கப்படும் உபரி உழைப்பு மூன்று வழிகளில் பங்கிடப்படுகிறது.
1. யந்திரங்களையும், கருவிகளையும் உற்பத்தி செய்து இங்கு அனுப்பி வைக்கும் இடங்களான சர்வதேசப் பெருநகரங்களிற்கு உபரி உழைப்பின் ஒரு பகுதி போய்ச் சேர்கிறது. எரிசக்திப் பொருட்களான பெற்றோலியப் பொருட்களிற்கான செலவும் இவ்வகையில் அடங்கும்.

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 73
i. உபரி உழைப்பின் ஒரு பகுதி தனியார்துறை மூலதன ஆக்கமாக,
மீள் முதலீடாக செல்கிறது.
ii இன்னொரு பகுதி முதலாளி வர்க்கத்தின் ஆடம்பர வாழ்க்
கைக்கான நுகர்செலவாகப் போகின்றது.
கண்டிப் பிராந்தியத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள் அளவில் சிறியன. இதனால் இவற்றில் வேலை செய்யும் தொழி லாளர்கள் தொகை குறைவு. வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பயிற்றப்படாதவர்களும் அரைகுறையாகப் பயிற்றப்பட்டவர்களுமான தொழிலாளர்களேயாவர். கண்டியில் இவ்வகைத் தொழிலாளர் நிரம்பல் மிக அதிகம். முதலாளிகளில் தங்கியிருப்பவர்களாய், விசுவாசத்தோடு உழைப்பவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும். வேலையில் பாதுகாப்பும் கிடைக்கும். இத் தொழில்களில் உள்ளோர் பெரும்பங்கினர் தொழிற்சங்கங்களில் அணிதிரட்டப்பட்டவர்களாக இல்லை. கிராமப்புற விவசாயக் கூலியை விட இவர்களின் கூலிமிக உயர்வானது. அதனுடன் தனியார் துறைக் கூலியை ஒப்பிடுதல் முடியாது.
மேற்குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளின்படி உருவாக்கம் பெறும் வர்க்க உறவுகளும், உபரி உழைப்பின் அளவும் சமத்துவமற்ற தன் மையைக் கொண்டவை. பொதுவாக மூலதனத்திரட்சி மிகக் குறை வாக உள்ளதால் உள்ளூர் மட்டத்தில் சுயகாலில் நிற்கும் முதலாளித் துவம் தோன்ற முடியவில்லை. மூலதனத்தின் ஊடுருவலின் பயனாக கண்டியின் சமூக அமைப்பு குட்டி முதலாளிகளையும் நடுத்தர முதலாளிகளையும் தோற்றுவித்துள்ளது. இவ்வர்க்கத்தினர் மாதம் மாதம் சம்பளம் பெறும் தொழில்களிலும் வியாபார முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். குடியான் வகுப்புக்குள் இருந்து தோன்றும் குலாக்குகள் வர்க்கம் (KulakClass) இங்கு தோன்றவில்லை. இருந்த போதும் குடியான் வர்க்கத்திற்குள் வேறாக்கம் (Differentiation) நடை பெற்றுள்ளது. இங்கு நடுத்தரக் குடியான்கள், வறிய குடியான்கள், கூலி உழைப்பாளர்கள் என்ற மூன்று பிரிவினர் உள்ளனர். முத லாளித்துவம் ஆரம்பநிலை வளர்ச்சியை மீறி முன்னேறவில்லை. இதே போல் சுதந்திரமான உழைப்பாளர் வர்க்கமும் நிலத்தில் இருந்தும் பிற உறவுகளில் இருந்தும் தளை நீக்கம் பெற்றதாக உருவாக

Page 39
74 பிரவாதம்
வில்லை. உழைப்பாளர் வகுப்பான குடியான்கள் கிராமத்தின் உற் பத்திச் சாதனங்களின் மீது உடைமை கொண்டவர்களாய் உள்ளனர். இதுவோர் வளர்ச்சியடையாத வர்க்க உறவுமுறையாகும். வளர்ச்சி யடையாத இந்த வர்க்க உறவுமுறை சாதி போன்ற முதலாளித்து வத்திற்கு முந்திய சமூக உறவுகளின் மீள் உயிர்ப்பித்தலால் உருத் திரிபும் பெற்றுள்ளது. சாதி அடிப்படையிலான அடுக்கமைவு கண் டியின் தொழிற்பிரிவினையை இன்றும் தீர்மானிப்பதாய் இருந்து வருகிறது. யக்கடகமவின் கைவினைஞர்கள் மரபுவழித் தொழிலைச் செய்கின்றனர். அவர்கள் நகரம் சார்ந்த மூலதனத்துடன் இணைந்து தமது உற்பத்தி பண்டங்களை முதலாளிகளுக்கு ஒப்படைப்பதான உறவுமுறையொன்றில் பிணைப்புண்டு உள்ளனர். (இங்கிலாந்தில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் நிலவியPuttingout முறைக்கு இது ஒப்பானது.) யக்கடகமவின் சாதி அடிப்படையிலான பண்ட உற்பத்தி முறை உற்பத்தி உறவுகளின்நிலையில் மீள் உயிர்ப்புச் செய்யப்படுவதன்று. அம்மீள் உயிர்ப்பு:அரசியல், கருத்தியல்நிலையில் செய்யப்படுவது. கண்டியின் சமூக உருவாக்கத்தில் சாதியின் மீள் உயிர்ப்பிப்பு, முதன்மை பெற்றுள்ள வர்க்க அமைப்பைத் திரிபு படுத்துகிறது. அத்தோடு சாதி முறையையும் திரிபுபடுத்துகிறது.
கிராம மட்டத்தில் சட்ட அரசியல் நிலையில் பல தனிநபர் ஆளுமைகள் சம்மந்தப்படுகின்றனர். சில நிறுவன அமைப்புக்களும் சம்மந்தப்படுகின்றன. கிராமசேவகர் நிர்வாக வேலைகளுக்குப் பொறுப்பானவர். இவர் சம்பளம் பெறும் அதிகாரியாவார். பல கிரா மங்களை உள்ளடக்கிய கமநல சேவைக்குழு உள்ளது. இக்குழுவில் ஒவ்வொரு கிராமத்திற்கும் பிரதிநிதித்துவம் உண்டு. இதே போல் கிராமச்சபை உள்ளது. பல கிராமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட உள்ளூராட்சிச்சபை உள்ளது. இவை யாவற்றுக்கும் மேலாக கிராமப் பிரமுகர்கள் சிலர் உள்ளனர். இவர்கள் குறித்த பகுதியின் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களாவர். நிலப்பிரபுக்கள் யாவரும் நகரங்களில் வதிபவர் களாதலினால் இப்பதவிகள் யாவற்றையும் கிராமத்தின் குட்டி முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளே பிடித்து வைத்திருக்கின்றனர். தமது சொத்து, செல்வம், அதிகாரம், மதிப்பு ஆகியவற்றைப் பெருக்கிக் கொள்வதையே நோக்கமாகக் கொண்ட இக்குட்டி முதலாளி வர்க்

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 75
கத்தினர் அரசியல் போட்டியிலும் சர்ச்சைகளிலும் ஈடுபடுகின்றனர். கிராமத்தின் சனத்தொகையில் பெரும் பங்கினரான குடியான்கள் தமக்கென ஒரு ஸ்தாபன அமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாத வர்களாக உள்ளனர். குடியான்களுக்கு ஒரு ஸ்தாபன அமைப்பு இருக்குமாயின் அது வர்க்க அடிப்படையிலான அமைப்பு ஆக இருந் திருக்கும். இன்று குடியான்கள் தமக்குள் பிளவுபட்டு, இருந்து வரும் அரசியல் பிரிவினை அமைப்புக்களுள் சேர்ந்துகொள்கிறார்கள். இவ்வாறு சேர்ந்துகொள்ளுதல் சாதி உறவு, குடும்ப உறவு என்ற பிணைப்புக்களால் தீர்மானிக்கப்படுகிறது. கிராமத்தின் பிரமுகர் ஒருவருடன் அரசியல் - பொருளாதார முறையிலான தங்கியிருத்தல் உறவில் குடியான்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். அரச இயந்திரம், அதன் துணை அமைப்புக்கள் என்பனவற்றில் இருந்து வேலை வாய்ப்புக்கள், பதவிகள், குடியேற்றப் பகுதியில் காணி, வங்கிக் கடன்கள் ஆகிய வளங்கள் கிராமத்திற்கு வருகின்றன. இந்த வளங் களைப் பெற்றுக் கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினரின் உதவி மிக மிக இன்றியமையாதது. குடியான்கள் பாராளுமன்ற உறுப்பினரை அணுகுவதாயின் அது உள்ளூர் குட்டி முதலாளிகள் ஊடாகவே சாத்தியமாகும். இதனால் குடியான்கள் குட்டி முதலாளிகள் மீது தங்கியிருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தங்கியிருத்தல் கிராமிய மட்டத்தில் உள்ளவர்க்க முரண்பாடுகளை மழுங்கடிக்க உதவுகிறது. குட்டிமுதலாளிகள்தமக்குக்கிடைக்கும் இந்தப்பலத்தை உபயோகித்து கிராமத்துக்கு வரும் அரச வளங்களில் ஒரு பகுதியை தாமே பெற்றுக் கொண்டு தம்மை வளர்த்துக் கொள்கின்றனர்.
கருத்தியலிலும், உணர்வுநிலையிலும் நாம் பல்வேறு போக்கு களை ஒன்றில் இருந்து மற்றதை வேறுபடுத்துவதன் மூலம் அடை யாளம் காணலாம். பழைய நிலப்பிரபுத்துவக் குலத்துடன் தொடர்பு பட்ட பழைமைவாதப் போக்கு ஒன்று உள்ளது. இப்பழைமை வாதக் கருத்தியல் பிரபுக்குலத்தின் மேன்மையையும், படித்தரம் கொண்ட சமூக அடுக்கமைவின் இயல்பான தன்மையையும், சாதி முறையின் நியாயப்பாட்டையும் அழுத்துவதாக உள்ளது. இக் கருத்தியல் கர்ம வினைக் கோட்பாடு என்னும் விதிவாதத்தை ஏற்றுப் போற்றுகிறது. அதிரகப்பிட்டிய கிராமம் தெஹல்தொறுவ கோவிலின்கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் பிரதமகுருவின் போதனைகளில் இந்தக்

Page 40
76 பிரவாதம்
கர்மக் கோட்பாடு என்னும் கருத்தியல் நன்கு வெளிப்படுகிறது. அடுத்த முக்கியமான கருத்தியல் போக்கு குட்டி முதலாளித்துவச் சிந்தனையாகும். இச்சிந்தனைப் போக்கு நிலப் பிரபுத்துவத்திற்கு எதிரானது. குட்டி முதலாளித்துவம் பழைய நிலப் பிரபுத்துவத்தை புதிதாக முளைவிட்ட பணக்காரர் என்று கூறி அதன் இருப்புக்கான நியாயப்பாட்டை நிராகரிக்கின்றது. குட்டி முதலாளிகள் ஜனநாயகம் என்ற திரைக்குள் தம் சுய உருவத்தை மறைக்கின்றனர். அவர்கள் சமுதாயத்தில் நிலவும் படித்தர ஒழுங்கைநிராகரிக்கின்றனர். ஆனால் பெரிய சீர்திருத்தங்கள் எதனையும் அவர்கள் முன்வைப்பதும் கிடையாது. சாதி முறையை அவர்கள் எதிர்த்துப் பேசுவது குறைவு. இவர்கள் தத்தம் சாதிகள் முற்காலத்தில் உயர்நிலையில் இருந்ததாகப் பெருமை பேசுவதும் உண்டு. குட்டி முதலாளித்துவம் கர்மவினைக் கோட்பாட்டை ஏற்கிறது. ஆனால் அதற்கு வித்தியாசமான ஒரு விளக் கத்தைக் கொடுக்கிறது. மனிதர் இப்பிறப்பில் செய்யும் செயல்களால் கர்மவினையில் இருந்து தம்மை விடுவிக்கலாம் என்று இவர்கள் கூறுவர். கிராமத்தின் பாடசாலை ஆசிரியர்கள், ஆயுள்வேத வைத்தி யர்கள், நிலப்பிரபுத்துவ சார்பற்ற நிகாய பிரிவுகளின் மதகுருக்களான பிக்குகள் ஆகியோர் இக்கருத்தியலின் தீவிர பற்றாளர்களாவர். மேற் குறித்த இரண்டு கருத்தியல் போக்குகள் போன்று குடியான் கருத் தியலை தெளிவாகப் பிரித்தறியக் கூடியதாக இல்லை. 1956 இல் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் பயனாக குடியான் வர்க்கம் குட்டி முதலாளித்துவத்தின் கருத்தியல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இருந்த போதும் குடியான் கருத்தியலில் விதிவாதத்தின் பலமான தாக்கம் வெளிப்படுகிறது. அத்தோடு தமது அனுபவத்தில் கிடைத்த படிப்பினைகளால் அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம் பற்றி இவர்கள் நன்கு அறிவார்கள். இதனால் நன்மை விளையும் என்பதில் நம்பிக்கை அற்றவர்களாய் இவர்கள் உள்ளனர்.
மேற்கூறியவை கண்டிய சமூக உருவாக்கத்தில் இயைபாக்கம் மிகவும் சிக்கலான ஒரு செயல்முறை என்பதை விளக்குகின்றன. இச்சமூக உருவாக்கம் பழைய சமூக உறவுகளை மறுஉற்பத்தி செய்கிறது. அந்த உறவுகளுக்குள்ளே சுதந்திரமான உழைப்பு என்ற உற்பத்தி உறவையும் சிறிய அளவில் உள்நுழைத்துள்ளது. இதனால் இந்த உற்பத்தி உறவுகள் ஒருங்கிணைவு பெறாததும், உருத்திரிபு

சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி . 77
பெற்றதுமான உறவுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. காலனித்து வத்தின் ஆரம்பத்தில் உருத்திரிபு பெற்ற பழைய சமூக உறவுகள் தோற்றம் பெற்றன. இவை பின்னர் சார்பு மண்டல முதலாளித்துவத் துடன் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இணைக்கப்பெற்றன. 1940க்கு பிற்பட்ட 30ஆண்டு காலத்தில் கீழ் குறிப்பிடப்பட்ட முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது உண்மையே. அவையாவன:
- அரசியல் சுதந்திரம் - ஆயுள் காலம் உயர்வடைந்தமை - கருவளவீதம் குறைவடைந்தமை - சமூகநலச்சேவைகளின் விருத்தி - வீதிப்போக்குவரத்திலும் பஸ்சேவையிலும் முன்னேற்றம் - தேர்தல் முறையியல் மாற்றம் - உயர்விளைவு தரும் நெல் வர்க்கங்கள் புகுத்தப்பட்டமை - கிராம சேவகர் முறையின் வருகை இந்த மாற்றங்கள் ஏற்பட்ட போதும் சார்பு மண்டல முதலாளித்துவ முறையில் அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இம் முறையில் மேன்மிகையின் வெளியேற்றம் பெருநகரமுதலாளித்துவ மையங்களை நோக்கிச் செல்கிறது. சார்பு மண்டல முதலாளித்துவம் பழைய உறவுகளை மீள் உயிர்ப்புச் செய்கிறது. கண்டியின் முத லாளித்துவ உறவுகள் மாற்றப்படாதவரை சார்பு, மண்டல முதலாளித் துவம் நீடித்து நிற்கும் என்றே கூறலாம்.
தமிழாக்கம்
க. சண்முகலிங்கம்

Page 41
இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் பற்றிய ஓர் ஆய்வு யொனதன் ஸ்பென்சரின் நூலின் அறிமுகம்
- க. சண்முகலிங்கம் -
A Sinhala Village in a Time of Trouble - Politics and Change in Rural Sri Lanka, by Jonathan Spencer
(நெருக்கடி மிக்க ஒரு காலத்தில் ஒரு சிங்களக் கிராமத்தின்நிலை இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் பற்றிய ஓர் ஆய்வு) என்ற தலைப்பிலான நூலை மானிடவியலாளரான யொனதன் ஸ்பென்சர் எழுதினார். இந்நூல் 1990
ஆம் ஆண்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சக வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. இலங் கையின் சப்பிரஹமுவ மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில், ஊவாமாகாணத்தின் எல்லையில் இருந்து சில மைல்கள் உள்ளே அமைந்துள்ள ‘தென்ன என்ற கிராமத்தில் யொனதன் ஸ்பென்சர் களஆய்வினைச் செய்தார். 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவர் கள ஆய்வைத் தொடங்கினார். 1983 ஆம் ஆண்டும் இவர் ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்தது. யூலை 1983 கலவரத்தின் போது முழுநாடுமே கொந்தளிப்பில் மூழ்கியது. ஓர் ஆண்டுக்காலம் தென்னவில் வாழ்ந்து தமது கள வேலையை முடித்துக் கொண்ட ஸ்பென்சர் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார். மீண்டும் 1984இல் ஒருதடவை'தென்ன விற்கு வந்து தகவல்களைப் பெற்றார். அவரது நூல் சில ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டது.
மானிடவியலாளர்கள் கிராமப்பகுதிகளுக்குச் சென்று மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களிடம் இருந்தே அறிவைப் பெறுகின்ற
 

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 79
வர்கள். மக்களின் சிந்தனையில் நிகழ்வுகள் எவ்விதம் பொருள் கொள்ளப்படுகின்றன. அவர்கள் என்ன நோக்கில் விடயங்களைப் பார்க்கிறார்கள் என்பதே மானிடவியலாளர்களின் ஆய்வு முறை யியலில் பிரதான அம்சம். யொனதன் ஸ்பென்சர் இலங்கையின் அரசியல், சமூக மாற்றம் பற்றிய பகுப்பாய்வு ஒன்றை'தென்ன என்ற சிறுகிராமத்தின் அரசியல் ஊடாகவும், அங்கு ஏற்பட்டுக் கொண்டி ருக்கும் மாற்றங்கள் ஊடாகவும் விளக்குகிறார்.
சிங்கள பெளத்த தேசியவாதம் நாடு முழுவதிலுமாக வளர்ச்சி யுற்றதையும், ‘தென்னவையும் அக்கருத்தியல் முழுமையாக ஆட்கொண்டிருப்பதையும் யொனதன் ஸ்பென்சர் தனது நூலில் விளக்கிச் செல்கிறார். தேசியவாதக் கருத்தியலின் தோற்றம் புராதன காலம் முதலே இருந்து வருகின்ற சக்திகளின் விளைவு என்றொரு வாதம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் 'பிறைமோடியலிசம்' (Primordialism) என்று கூறுவர். ஸ்பென்சரின் ஆய்வு இக்கருத்துக்கு மாறாக‘தென்ன வின் சிங்கள பெளத்த தேசியவாதம் மிக அண்மைக் கால வரவு; அது மிக அண்மைக் கால மாற்றங்களின் விளைபொருள் என்று விளக்கம் தருகிறது. எட்டு அத்தியாயங்கள் கொண்டதும் 285 பக்கங்களில் விரிவதுமான இந்நூலின் கருத்துக்களை வாசகர்களுக்கு புரியக்கூடிய வகையில் சுருக்கமாக எடுத்துக்கூறுவது எளிமையான காரியமல்ல. இதற்கான உபாயமாக நூலின் 5 ஆம் அத்தியாயத்தை எடுத்துக் கொண்டு அதன் அறிமுகத்தைச் செய்யவுள்ளேன். நூலின் மையமான கருத்தொன்றை விபரிக்கும் 5 ஆம் அத்தியாயத்திற்குக் துணையான தகவல்களையும், குறிப்புக்களையும் நூலின் பிற அத்தியாயங்களில் இருந்து எடுத்து ஆங்காங்கே குறிப்பிடுவேன்.
5 ஆம் அத்தியாயத்தின் தலைப்பு Pastoral and Counter Pastoral என்பதாகும். "பஸ்ரோறல்' என்ற சொல் நாட்டுப் புற வாழ்க்கை என்ற கருத்துடையது. இழந்துபோன ஒரு உலகம் பற்றிய நினைவுத் துயரையும், அந்த நாள் என்று வரும் என்ற ஏக்கத்தையும் கலந்து செய்யப்பட்ட புனைவாக நாட்டுப்புற வாழ்க்கை கற்பிதம் செய்யப் பட்டது. காலனித்துவ காலத்திலும், பின் காலனித்துவ கட்டத்திலும் உருவாக்கப்பட்ட நாட்டுப்புறம் பற்றிய புனைவுகளையும், அப் புனைவுகளுக்கு எதிரான உண்மையான யதார்த்தமான நாட்டுப்புறம் (Counter - Pastoral) எப்படிப்பட்டது என்பதையும் இவ்வத்தியாயம்

Page 42
80 பிரவாதம்
விபரிக்கிறது. தமிழில் ‘கிராமப்புறம் - கற்பனையும் உண்மையும் என்று இத்தலைப்பை மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் கிராமம்
கண்டியின் கிராமிய சமுதாயத்திலும், பிறபகுதிகளின் கிராமிய சமுதாயங்களிலும் இருவகையான நெருக்குதல்கள் உள்ளன. ஒன்று அதிகரித்து வரும் சனத்தொகையின் நெருக்குதல், மற்றது தேக்கமடைந்ததும், சுரண்டல் தன்மையதுமான பொருளாதார முறை ஒன்றின் நெருக்குதல். இவற்றிடையே சிக்கிய கிராமிய சமுதாயங்கள் விரைவாகச் சிதைந்து அழிகின்றன. அவை ஒரு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்கின்றன. இதனை நாம் அழுத்திக் கூற விரும்புகிறோம்.
சர்க்கார் மற்றும் தம்பையா 1957 ஆம் ஆண்டில் ; The Disintegrating Village (சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் கிராமம்) என்றொரு நூலை எழுதினர். அந்நூலில் இருந்து பெறப்பட்ட மேற்கோள் ஒன்றினையே மேலே குறித்துள்ளோம். கிராமத்தின் அழிவும், சிதைவும் என்ற கருத்து புலமையாளர்களாலும், அரசியல்வாதிகளாலும், நிர்வாகிகளாலும் உரத்துப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசியராக இருந்த என்.கே.சர்க்காரும், அங்கு சமூகவியல்துறை விரிவுரையாளராக இருந்த எஸ்.ஜே.தம்பையாவும் மேற்படி ஆய்வை வெளியிட்டனர். இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் 1951ஆம் ஆண்டில் Kandyan Peasantry Commission (கண்டிய குடியானவர் ஆணைக்குழு) அறிக்கை வெளிவந்தது. கண்டியின் விவசாய சமுதாயத்தின் குறைகளை அறிந்து கூறுவதற்காக நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவும் ‘கிராமிய சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கை, அதன் பரஸ்பர கடப்பாடுகளும் ஒற்றுமையும் மறைந்தே போய்விட்டது என்ற கருத்தை வெளிப் படுத்தியது. சர்க்காரும் தம்பையாவும் நூலின் தலைப்பையே எடுத்துக் கொண்டு மொறிசன் (Morrison), மூர்(Moore), இசாக் லெப்பை என்ற மூவர் இணைந்து ஒரு கட்டுரைத் தொகுதியைப் பதிப்பித்து 1979 இல் வெளியிட்டனர். அவர்கள் நூலின் தலைப்பில் கேள்விக் குறியையும் இணைத்து"சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் கிராமம்

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 81
என்று வைத்துக் கொண்டனர். முன்னைய ஆய்வுகளின் சில அனு மானங்களை விமர்சித்தபோதும் கிராம சமுதாயத்தின் ஒற்றுமை, ஐக்கியம், பரஸ்பர உதவி, கடப்பாடுகள் என்பன மறைந்து கிராமம் சிதைவுறுவதையே இவ்வெழுத்தாளர்களும் அழுத்திக் கூறினர்.
சிதைந்து அழியும் கிராமம் என்னும் கருத்தை தேசியவாத அரசியல்வாதிகள் 1920 களிலும் 1930 களிலும் கண்டுபிடித்துப் பிரபல்யப்படுத்தினார்கள். இருந்தபோதும் அரசியல்வாதிகளின் கண்டுபிடிப்புக்களுக்கு காலனித்துவ அதிகாரிகளின் எழுத்துக்கள் ஆதாரமாக இருந்தன. லியனாட் வூல்வ் எழுதிய 'விலேஜ் இன் த யங்கில் (Village in the Juncle) என்ற நாவல் கிராமத்தின் அழிவைச் சித்திரிப்பது. 1891 ஆண்டின் அரசாங்க அறிக்கை ஒன்றில் “பழைய கண்டிய கிராம சமுதாயம் சிதைவுற்று, விரைவாக அழிந்துகொண் டிருக்கிறது” எனக் கூறப்பட்டது. 1850களிலேயே காலனிய அதிகாரி கள் கிராமத்தின் அழிவு பற்றிக் குறிப்பிட்டிருந்தனர். தேசியவாத அரசியல்வாதிகள் கிராமப்புறம் பற்றியும், குடியான்கள் பற்றியும் கொண்ட அக்கறையும் கரிசனையும் அவர்களுடைய இன்னொரு கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது. இதுவே கிராமபுறத்தின் பிரச்சினை என்ற கண்டுபிடிப்பு ஆகும். அரசியல்வாதிகள் கண்டுபிடித்த கிராமப் புறத்தின் பிரச்சினை (Rural Crisis) கண்டிய குடியானவர் ஆணைக்குழு வின் நியமனத்திற்கும், விசாரணைக்கும் பின்னணியாக இருந்தது.
கடந்த காலம் குறித்த வேறுபட்ட சித்திரம் கிராமத்தின் முதியவர்கள் சிலரிடம் ‘தென்ன கிராமம் முந்திய காலத்தில் எப்படி இருந்தது என்பது பற்றி ஸ்பென்சர் விசாரித்தார். அவர்கள் கூறிய தகவல்களைப் பதிவு செய்தபோது கிராமங்கள் எப்படி இருந்தன என்பது பற்றிய வித்தியாசமான சித்திரம் கிடைத்தது. யொனதன் ஸ்பென்சர் கூறுவதை அவரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:
“நான் களவேலை செய்து கொண்டிருந்த சப்பிரகமுவ மாகாணத் தின் கிராமவாசி ஒருவரை நேர்முகம் கண்டேன். இவர் ஒரு முதியவர். அவர் சென்னார் அந்தக் காலத்தில் இங்கே எல்லா இடமும் காய்ச்சல் நோய் பரவி இருந்தது. அதற்குப் பிறகுதான்

Page 43
82 பிரவாதம்
இந்த ஊருக்குள் கோவில் கட்டப்பட்டது. ஒரு ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. அதற்கு முன்னர் இங்கு எதுவும் இருக்கவில்லை. கோவில் இல்லை, பள்ளிக் கூடம் இல்லை. சனங்கள் பாடுபட்டு உழைத்தார்கள். ஏதோ சீவித்தார்கள். அவர்கள் சந்தோஷமாக வாழவில்லை” இன்னொருவர் சொன்னார். “இந்தக் கிராமத்தின் மக்கள் அன்று வேடர் மாதிரித்தான் இருந்தார்கள். ஒன்றாகச் சேர்ந்து காட்டுக்குப் போவார்கள். மிருகங்களை வேட்டையாடு வார்கள். அதுதான் அவர்கள் தொழில். இப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்”நான் நேர்முகம் கண்ட முதியவர்களின் கதைகளை கேட்டபொழுது அவர்களிடம் கடந்து போன இளமைக்காலம் பற்றிய நினைவுத்துயர் பற்றிய எந்த அடையாளமும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை கடந்த காலம் என்றால் அது நோய் நொடிகள், அறியாமை, வறுமை என்பன மலிந்த உலகாகவே இருந்தது.
நகரத்தை சேர்ந்த மத்திய வர்க்கத்தினரின் புனைவுகளில் இருந்து வேறுபட்ட யதார்த்தம் ஒன்று இருப்பதை யொனதன் ஸ்பென்சர் கண்டார். கிராமத்து முதியவர்கள் பார்வையில் கடந்தகாலம் ஒரு ‘பொற்காலம்' என்ற நினைப்பு அறவே இருக்கவில்லை. வெளியார் கூறிய கருத்துக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட உலகமாக கிராமம் அவர்கள் பார்வையில் காட்சி தந்தது.
“இந்தக் கிராமத்தின் மக்கள் அன்று வேடர் மாதிரித்தான் இருந் தார்கள்” என்ற கூற்றை கூறியவர் 1930 க்களில் தென்னவுக்கு வந்து சேர்ந்தவர். இவர் ஒப்பீட்டளவில் பணக்காரரான ஒருவர் ஆவர். அத்தோடு இவர் 'வகும்புர என்ற சாதியைச் சேர்ந்தவர். 19 ஆம் நூற்றாண்டின் இனவரைவியலாளர்களின் விருப்புக்குரிய விடயமான வேடர் (Vedda) சிங்கள மக்களின் பார்வையில் அநாகரிகத்தின் குறியீடு,"அவர்கள்காட்டுவாசிகள், வேட்டைத் தொழில் செய்பவர்கள், தனிமைப்பட்டு வாழும், கல்வியறிவற்ற ஏழைகள்” என்ற நோக்கி லேயே வேடர்கள் பார்க்கப்பட்டார்கள். தென்னவின் மக்களை வேடர் போன்று வாழ்ந்தார்கள் என்று இத்தகவலாளியான முதியவர் கூறுவது அர்த்தச் செறிவுடையது. அக்காலத்தில் தென்னவின் கொய்கம சாதிக் காரர்களின் சாதி அடிப்படையிலான ஓரங்கட்டுதலால் பெற்ற அனுபவ வடுக்கள் பற்றிய நினைவுகள் இந்த வகும்புரவின் மனதில் எழுந்

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 83
திருக்கும். அவரின் பேச்சில் ஒரு எள்ளல் இருந்ததையும் அவதானிக் கலாம். தென்னவின் சாதி அடுக்கமைவின் கீழ்நிலையில் இருந்த ‘பெறவ சாதி (மேளமடிப்போர்) முதியவர் ஒருவரிடம் ஸ்பென்சர் நேர்முகம் கண்டார். 1920 களில் சேனைப்பயிர் செய்கையில் ஈடு பட்டவர் இந்த முதியவர்.
கேள்வி: முந்திய காலத்தோடு ஒப்பிடும் போது சாதி வழமைகள் இப்போ எப்படி உள்ளன?
பதில்: இப்போ எல்லாம் நன்றாகவே உள்ளன. முன்பு மிக மோசம். கொடுமை. வீட்டுக்குள்நுழையவிடமாட்டார்கள். நான் போட்டிருக்கிற இந்த சேர்ட் மாதிரி உடைதரித்துக் கொண்டு வெளியே போக முடியாது. இப்போது அப்படி இல்லை. இப்போ ஒரு வீட்டுக்கு போனால் எல்லாரும் சமமாகவே நடத்தப்படு வார்கள்.
கேள்வி: எப்பொழுது இந்த மாற்றம் தொடங்கியது? மாற்றம் படிப் படியாக வந்தததா?
பதில்: மாற்றம் சிறிது சிறிதாகவே வந்தது. முதன் முதலாக ஒரு பெளத்த குரு இந்தக் கிராமத்திற்கு (கோவிலுக்கு) வந்து தங்கியது முதல் எல்லாம் மாறத் தொடங்கியது. அவர் தன் போதனைகள் மூலம் ஆட்களை மாற்றினார். இப்போதுமக்களிடம் வேறுபாடுகள் இல்லை. எல்லாச் சாதிகளும் எந்தவித பேதமும் இன்றி வாழ்கிறார்கள். ஒரு வயிற்றுப்பிள்ளைகள் போல் எல்லாரும் வாழ்கிறார்கள். சாதி பற்றி யாருமே கவனிப்பதில்லை.
பெறவ முதியவரின் இந்தக் கூற்றில் தெரிவிக்கப்பட்டதுபோல் சாதி மறைந்து விட்டது என்று கருதக்கூடாது. அதன் பிரசன்னம் இன்னும் இருக்கிறது என்றும் அது பற்றி பின்னர் கவனிப்போம் என்ற எச் சரிக்கைக் குறிப்பை ஸ்பென்சார் இவ்விடத்தில் குறிப்பிடுகிறார்.
‘தென்ன கிராமம் பற்றிய சில விபரங்கள்
தென்னக் கிராமத்தின் சனத்தொகை, பொருளாதாரம், சாதிக் கட்ட மைப்பு, சமூகமாற்றம், வரலாறு ஆகிய சில அடிப்படை விபரங்களை இவ்விடத்தில் கூறுவது அவசியம். இதற்காக நாம் ஸ்பென்சரின் நூலின் முதலாம் அத்தியாயத்திற்கு திரும்பவேண்டும். இதனைவிட நூலின் பிற அத்தியாயங்களில் உள்ள தகவல்களையும் பார்க்க

Page 44
84 பிரவாதம்
வேண்டும். இந்நூலை விட ஸ்பென்சர் ‘தென்ன பற்றி எழுதிய கட்டுரைகள் சில உள்ளன. அவற்றில் ஒன்று ‘Representations of the Rural' என்ற தலைப்பில் அமைந்தது. இக்கட்டுரையின் தகவல் களையும் பார்க்கலாம்.
‘தென்ன கிராமம் நான்கு தெளிவான குடியிருப்புப் பகுதிகளின் சேர்க்கையாக உள்ளது. இவற்றுள் 'உடவெல, மெதவெல' என்ற இரண்டு பழைய குடியிருப்புக்கள் (கிராமங்கள்) உள்ளன. இவ்விரு பகுதியாரும் கொய்கம சாதிக்காரர்கள் ஆயினும் இவர்களிடையே சமூக அந்தஸ்தில் வேறுபாடு உள்ளது. 'உடவெல கிராமத்தின் காணிகள் முன்னாளில்திசாவ என்ற பிரபுத்துவ அதிகாரப் பதவியில் இருந்தவரின் உடைமையாக இருந்தன. கண்டி அரசனால் வழங்கப் பட்ட இந்தக் காணி உரிமை பண்டர இடம் (பிரபுவின் நிலம்) என்று அழைக்கப்பட்டது. இதனையே பிற இடங்களில் நிந்தகம என அழைப்பர். உடவெலவின் காணிகள்'திசாவ வின் பரம்பரைக் குடும் பங்களின் சொத்தாக இருந்து வந்தன. இக்காணிகளைப் பயிரிட்ட குத்தகைக் குடிகளான 'உடவெல கொய்கம சாதியினர், அருகேயிருந்த மெதவெல கொய்கமவை விட சாதி அந்தஸ்தில் தாழ்ந்தவர்களாக இருந்தனர். இதற்குக் காரணம் ‘மெதவல’ குடும்பங்கள் சொந்தக் காணியில் (Free Hold Lands) பயிரிட்டவர்கள். இதனால் இவர்கள் சாதியில் உயர்ந்தோராய் கணிக்கப்பட்டனர். மேளமடிக்கும் பரம்பரைத் தொழிலைத் செய்யும்பெறவசதியினரின் குடியிருப்பு தென்னவின் இன்னொரு பகுதியில் உள்ளது. இதனை விட தவிர்க் கப்பட்டோர் என்று குறிப்பிட்ட ஒரு பகுதியினரும் தென்னவில் இருந்தனர். இவர்கள் பிறபகுதிகளில் இருந்து தென்னக் கிராமத்திற்கு வந்து குடியேறியவர்கள். இவர்களை உடவெல, மெதவெல என்ற இரு பகுதியினரும் ஒதுக்கியே வந்தனர். தவிர்க் கப்பட்டோர் கொய்கம சாதியினரே ஆயினும் இவர்களுக்கு மற்றப் பகுதிகளுடன் திருமண உறவுகள் இருக்கவில்லை.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தென்னவில் கொய்கம சாதியினரிடையே இருந்த சாதி வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. உடவெலவில் நீர்ப்பாசன மேற்பார்வைக்கு பொறுப்பான’விதான ஒருவர் இருந்தார். இவர் உத்தியோகப் பதவி

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 85
காரணமாக மதிப்பும் செல்வாக்கும் உடையவராய் இருந்தார். இவரின் மகளிற்கு'மெதவெல குடும்பம் ஒன்றில் திருமணம் செய்து வைத்தனர். இதேபோல தவிர்க்கப்பட்டோர்பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று “மெதவெலவில் உள்ள குடும்பத்துடன் திருமண உறவை ஏற்படுத் தியது. இவ்வாறாக உறவு வலைப்பின்னல் சிறிது விரிவடைந்தது. எனினும் தென்ன கிராமத்தின் நினைவில் பழைய வேறுபாடுகள் நிலைத்துள்ளன. மெதவலவின் பெண்கள் காதல் தொடர்புகளால் தம் விருப்பப்படிதிருமணம் செய்த நிகழ்வுகளும் உள்ளன. அவ்வாறு நிகழ்ந்தபோது அவர்களின் குடும்பத்தினர் ஓடிப்போனவர்களின் காணி உரிமைகளை பறித்தனர். இப்பழைய கதைகள் முதியவர்கள் நினைவில் உள்ளன. தென்னவில் சாதித் தடைச்சுவர்கள் தகர்தல் நிகழ்ந்த போதும், பெறவ சாதிக்கும் கொய்கமவிற்கும் இடையிலான வேறுபாடுகள் நீங்கவில்லை.
சாதி வேறுபாடுகள் மறைவதற்கு கிராமத்தில்’பன்சல (கோவில்) கட்டப்பட்டதும், அங்கு ஒரு பெளத்த பிக்கு குருவாக வந்து சேர்ந்ததும் முக்கிய காரணம். தென்னவில் குடியேறிய'வகும்புரீசாதிப் பணக்காரர் ஒருவர் இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு முன்னின்று உழைத்தார். வர்த்தகம், விவசாயம் என்ற இரண்டு தொழில்களிலும் ஈடுபட்டு பணம் சேர்த்த இவரின் குடும்பம் 1920க்களில் தென்னவில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டது. தென்னவில் தொடக்கப்பட்ட கோவில் ‘அமரபுர நிகாய' என்ற பிரிவைச் சேர்த்தது. 19ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட அமரபுர நிகாய ஒரு சீர்திருத்த இயக்கத்தோடு தொடர்புடையது. அது கண்டியின்'சியாம் நிகாய பிரிவில் இருந்து விலகிச்சென்ற சீர்திருத்த இயக்கமாக இருந்தது. சப்பிரஹ முவவின் உயர்குடிகள் ஏன் இதற்கு ஆதரவு வழங்கினர் என்பது முக்கிய கேள்வி. சப்பிரஹமுவவின்ரதலநிலப்பிரபுக் குடும்பங்கள் தமது அரசியல் ஆதாயத்திற்காக கண்டியின்'சியாம் நிக்காய பிரிவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடமுயன்றனர் என்பது சில வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ள விளக்கம் ஆகும். தென்னவில் 1936இல் 'பன்சல தொடக் கப்பட்டதை இச்சீர்திருத்த இயக்கத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்தல் வேண்டும். முன்பு தென்னவில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள கோவிலுக்குத் தான் வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும்.

Page 45
86 பிரவாதம்
அதற்கான பாதை கரடுமுரடானது. தென்ன மக்களுக்கும் நிறுவன மயப்பட பெளத்தத்திற்கும் அக்காலத்தில் சிறிதளவு தொடர்புதான் இருந்தது. மரணச் சடங்குகளில் பெளத்தத்துறவி கலந்து கொள் வதில்லை. பெரிய அளவில் சடங்குகள் எதுவும் இல்லாமல் இறந்த வரின் உடலைப் புதைத்துவிடுவார்கள். வெசாக் போயா போன்ற மிக முக்கியமானதினங்களில் மட்டும் தூர உள்ள கோவில்களுக்கு மக்கள் அக்காலத்தில் போவதுண்டு. இன்று சமயப் பண்பாட்டில் பெருமாற்றம் நிகழ்ந்துள்ளது. தென்னவில் உள்ள ஒருவர்நாம் முன்பு (பெளத்த) தர்மம்' பற்றி எதுவுமே தெரிந்து வைத்திருக்கவில்லை என்று கூறினார். இக்கூற்று முன்னைய நிலையை இன்றுள்ள நிலை யுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள உதவும்.
பண்பாட்டுத்துறை மாற்றங்களில் பிரதானமான இன்னொன்று தென்னவில் பாடசாலை ஒன்று 1940க்களில் அமைக்கப்பட்டதாகும். பன்சலவின் ஒரு பகுதியில் ஆரம்பித்த இப்பாடசாலை பல தடங்கல் களுக்கு மத்தியில் வளர்ச்சி பெற்றது. 1977 இல் பதவிக்கு வந்த அரசாங்கம் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்தது. 1984இல் 194மாண வர்களும் எட்டு ஆசிரியர்களும் அங்கு இருந்தனர். கிராமத்து மாண வர்கள் மூன்று பேர்அக்காலத்தில் பல்கலைக்கழகம் சென்று படித்தனர். பன்சல, பாடசாலை இரண்டினதும் வளர்ச்சி வெளியில் இருந்து தென்னவில் ஆட்கள் குடியேறியதுடன் சம்மந்தப்பட்டது.
தென்னவின் பண்பாட்டு மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள சமூக பொருளாதாரக் கட்டடைப்புக்களையும் மாற்றங்களையும் சுருக்க மாகக் குறிப்பிடுவோம். 1982இல் தென்னவில் 197 குடும்பங்கள் வாழ்ந்தன. இவற்றுள் 30 குடும்பங்கள் தென்னவின் உடவெல, மெதவெல பகுதிகளின் பழைய'கொய்கம சாதிக்குடும்பங்கள். மீதி 167 வந்தேறு குடிகள். அட்டவணை1இல் உள்ள புள்ளி விபரங்கள் சனத்தொகையையும், சாதிக் கட்டமைப்பையும் எடுத்துக் காட் டுவன.

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 87
அட்டவணை 1
தென்னவின் சனத்தொகை
குடும்பங்கள் நபர்கள்
பழைய கொய்கம குடும்பங்கள் 30 176 குடியேறிகள்
பெறவ I2 56
வகும்புற 14 6.
பிற குடியேறிகள் 141 633
குடியேறிகள் மொத்தம் 167 750
மொத்தம் 197 923
(நூலின் பக் 42 இல் உள்ள அட்டவணையில் இருந்து தொகுக்கப்பட்டது.)
இப்புள்ளி விபரங்களை விளங்கிக் கொள்வதற்கு பின்வரும்
குறிப்புக்கள் அவசியம்:
கொய்கம:
பெறவ:
வகும்புற:
பிறகுடியேறிகள்:
30 குடும்பங்கள். இக்குடும்பங்களின் கணவன் அல்லது மனைவி உடவெல, மெதவல இரண்டில் ஒன்றின் பிற்சந்ததி என்று கூறக் கூடியவர்கள். அவ்வகையில் தென்னவின் “பழைய ஆட்கள்.
இவர்கள் ஒன்றோடொன்று உறவுடைய குடும் பங்களாக உள்ளனர். 1922இல் பெறவகுடியேற்றம் தென்னவில் தொடங்கியது. இன்று (1982இல்) 12 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு உறவினர்கள் அயல்பகுதிக் கிராமங்களிலும் உள்ளனர்.
1920க்கள் முதல் இவர்கள் குடியேறினர். 14 குடும் பங்கள் உள்ளன. இவர்கள் பல்வேறு சாதிகளின் கலவையாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தோர். 1940களில் இவர்கள் தென்னவில் குடியேறத் தொடங்கினர். இவர்களில் சிலருக்கு உடவெல, மெதவெல குடும்பங்களுடன் திருமணஉறவு இப்போது உள்ளது. இக்குடும்பங் களை சாதி அடிப்படையில் பிரித்துப் பட்டியல் போடுவது மிகச் சிக்கலான வேலை.

Page 46
88 பிரவாதம்
இப்புள்ளிவிபரங்களில் இருந்து வெளிப்படுவது யாதெனில் பழைய தென்னவை குடியேறிகள் வரவு மாற்றிவிட்டது என்பதே ஆகும். தென்னவின் 81 வீத மக்கள் குடியேறிகள் ஆவர். குடும்பங்களில் 85 வீதமானவை குடியேறிகள் குடும்பங்கள். இவற்றுள்ளும் அரைப் பங்கினர் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குள் (1972 இன் பின்) தென்னவில் குடியேறியவர்கள். குடியேறிகள் குடும்பங்களில் 3 வீதம் மட்டும் 1947 க்கு முற்பட்ட காலத்தில் குடியேறியவர்களின் சந்ததி யினராய் உள்ளனர். சனத்தொகையின் வரலாற்றைப் பற்றிய இன்னொரு செய்தியும் முக்கியமானது. அட்டவணை 2 இல் மொத்த சனத் தொகையின் போக்கு காட்டப்பட்டுள்ளது. 1946 இல் சனத்தொகை 30 ஆக வீழ்ச்சியுற்றது. இப்பகுதியில் மலேரியா பரவியதே காரணம். 1961 இல் 100 ஆக இது உயர்கிறது. 1982 இல் 926 ஆக உயர்கிறது.
அட்டவணை 2
தென்னவின் சனத்தொகை 1921 - 1982
ஆண்டு சனத்தொகை
1921 65
1931 69
1946 30
1967 100
1982 926
(நூலின் பக் 41 இல் உள்ள அட்டவணையில் இருந்து தொகுக்கப்பட்டது.)
காலனித்துவ காலத்தில் அரசாங்க அதிபர்களாக இருந்தோரும் பிற அதிகாரிகளும் தென்னவின் பொருளாதார கட்டமைப்புக்களை முன்னேற்றுவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவற்றுள் தென்னவில் இருந்து இரண்டு மைல் தெலைவில் உள்ள வளவ கங்கை ஒரமாக நெல்வயல்களை விருத்தி செய்தமை முக்கிய மானது. ஹன்தோட்ட எனப்படும் இப்பகுதியில் நீர்ப்பாச்சல் வசதி செய்யப்பட்டது. தென்னவில் பாதை அமைக்கப்பட்டது. டிஸ்பென்சரி நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் ஹன்தோட்ட திட்டத்தைப் பார்வையிடுவதற்கு வந்த அரசாங்க அதிபர் எழுதிய குறிப்பு வருமாறு: இக்குறிப்பில் தென்னவின் பல்வகையான தடைகளை அவர் விபரித்திருக்கிறார்.

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 89
இங்கு சனத்தொகை மிகக்குறைவு.
மக்களின் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. பெண்களின் முலைகள் வற்றி மார்பகம் தட்டையாகி விடுகிறது. தாய்ப்
பால் சுரப்பிகளும் அவர்களுக்கு வற்றிச் சுருங்கிவிடுகிறதாக
அறிந்தேன்.
கரைநாட்டவர்கள் இங்கு வருகின்றனர். இதனால் பாலியல் நோய்கள் பரவியுள்ளன. ஒழுங்கங் கெட்டவர்களின்
பழக்கங்கள் பெருகுகின்றன.
'டிஸ்பென்சரி இல்லை.
வண்டில் பிரயாணத்திற்கான பாதை இல்லை.
இங்கு வந்த முன்னோடிகள் பலர் நோய்வாய்ப்பட்டு இங்
கேயே மடிந்தனர். இந்த இடத்திற்கு வெளியில் நல்ல பெயர் இல்லை.
1911 இல் மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இக்குறிப்பு வெளிப்படுத்துகிறது.
1948 இன் பின்னரும் குறிப்பாக 1960களிலும் அதன் பின்னரும் தென்ன முன்னேறியது. அங்கு ஏற்பட்ட முன்னேற்றத்தின் பொரு ளாதாரப் பின்னணியின் முக்கிய அம்சங்களாவன:
அ.
<曼出·
பணப்பயிர்ச்செய்கை: குறிப்பாக"பீன்ஸ் எனப்படும் மரக்கறி பணப்பயிராக விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.
பலவிதமான கூலித்தொழில்கள்: கூலிவேலை செய்து உழைப் போர் தொகை அதிகம்.
இரத்தினக்கல் அகழ்வு; ஏழை முதல் பணக்காரர் வரை பலர் இத்தொழிலுடன் சம்மந்தப்பட்டுள்ளனர்.
அரசாங்க உத்தியோகம்: 1964இல் இக்கிராமத்துக்கு இட மாற்றம் பெற்று வந்த ஆசிரியர் தென்னவில் விவாகம் செய்து அங்கேயே வதியத் தொடங்கினார். இவர்தான் தென்னவின் முதலாவது அரசாங்க உத்தியோகத்தர். இன்று பலர் அரசாங்க உத்தியேதகத்தர்களாய் உள்ளனர்.

Page 47
90 பிரவாதம்
தேசத்தைக் கற்பனை செய்தல் அல்லது தேசியவாதம்
தென்னவில் 1930 க்கள் தொடக்கம் முக்கியமான மாற்றங்கள் ஏற் பட்டன. யொனதன் ஸ்பென்சரின் நூலின் இறுதிப் பகுதியில் (பக் 239-240) இம்மாற்றங்கள் பற்றியும் பொருளாதார மாற்றங்கள் தொடர்பாகவும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. அவரின் கூற்றாக வரும் ஒரு பகுதி வருமாறு:
50 வருட காலத்திற்குள் தென்னவின்சனத்தொகை பத்து மடங்காக உயர்ந்தது. சனத்தொகை அடர்த்தி மிக்க நாட்டின் பிறபகுதிகளில் இருந்து இங்கு வந்து மக்கள் குடியேறியதால் இச்சனத்தொகை அதிகரிப்பு ஏற்பட்டது. மலேரியாவை ஏறக்குறைய முற்றாகவே ஒழித்தமையினால் தென்னவின் சுகாதாரநிலை மேம்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குழந்தைகள் மரணம் என்பது சாதாரண விடயம். இப்போது இது எப்போதாவது ஒரு தடவை நிகழும் விடயம். தென்னவின் பிள்ளைகள் இன்று நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பாடசாலை இருக்கவில்லை. பெளத்த சங்க வுடனும், பிற பெளத்த சமயநிறுவனங்களுடனும் தொடர்பு மிகக் குறைவு. காரணம் அவை தென்னவில் இருந்து தொலைவில் இருந்தன.
இன்று மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்கிறார்கள். பணப் பயிர்களைப் பயிரிடுதல், இரத்தினக்கல்அகழ்தல் முதலிய வியாபார முறையிலான முக்கிய தொழில்கள் சில இன்று உள்ளன. முற்காலத்தில் இங்கு வர்த்தகம் செய்தோர் வெளியில் இருந்து வந்து போயினர். குறிப்பாக முஸ்லிம்கள் உப்பு, துணிமணி என்பன வற்றை கொண்டுவந்து விற்றுப் பண்டமாற்றாக தென்னவின் உற்பத்திப்பண்டங்களைப் பெற்றுச்செல்வர்.தற்போது தென்னவின் இளைஞர்கள் மரக்கறி வகைகளை கொழும்புச் சந்தைக்கு ஏற்றி அனுப்பும் வியாபாரத்தை நடத்துகிறார்கள். வேறு பலர் இரத்தினக் கல் வியாபாரம் செய்கிறார்கள் (பக் 239-24).
1935ற்கும் 1945க்கும் இடைப்பட்ட காலத்தில் தென்னவில் முக்கிய மாற்றங்கள் தொடங்கின. மலேரியா ஒழிப்பு வேலைகள் இக்காலத்தில் பயனைத் தரத் தொடங்கின. குடியேறிகள் தொகை அதிகரித்ததால் தென்னவில் சனத்தொகை உயர்ந்தது. தென்னவின் பொருண்மிய

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 91
மாற்றங்களும் (சனத்தொகை, போக்குவரத்து) அங்கு நிகழ்ந்த பண்பாட்டுத்துறை மாற்றங்களும் (பாடசாலை, கோவில்) ஒரே சமயத்தில் நடந்தன. அரசு மாற்றத்தின் பிரதான முகவராகச் செயற் பட்டது. அரசு வீதியைத் திருத்தியது, சுகாதார வசதியை மேம்படுத் தியது. தென்னவின் பழைய ஒழுங்கமைப்பு, புதிதாக ஏற்பட்டு வரும் ஒழுங்கமைப்பு என்ற இரண்டிற்கும் இடையில், அவை சந்திக்கும் எல்லையில் உள்ளூர்வாசிகளான மக்கள் நின்று செயற்பட்டார்கள். தென்னவிற்குள் மாற்றம் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டது. அந்த மாற்றத்தை ஏற்றுச் செயற்படும் புதியவர்கள் கிராமத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கோவிலைக் கட்டுவதில் முன்னின்று செயற்பட்ட வகும்புர சாதியினரான கிரியன்சரட்டே மஹாத் தயாவுடன் முன்பு வேலை செய்தார். கிராமத்திற்கு வந்து வர்த்தகம் செய்தார். நெற் செய்கை, சேனைப்பயிர்செய்கை என்பவற்றிலும் ஈடுபட்டார். சிறில், ஆரியரட்ண என்ற இருவர் தென்னவின் முக்கியமான அரசியல் வாதிகள். இவர்கள் பண்பாட்டுத்துறைப் புத்தாக்க ஆர்வலர்கள். இவர்களும் வெளிஆட்களே. தென்னவில் திருமணம் செய்து இங்கு குடியேறியவர்கள்.நகரத்தின்பண்பாட்டுநுட்பங்களையும், கிராமத்தின் பண்பாட்டையும் நன்கு தெரிந்துவைத்திருப்பவர்கள். தென்னவின் மாற்றங்களை பாடசாலை, கோவில், அரசியல் என்ற மூன்று நிலை களில் ஏற்படும் கருத்தியல் உருவாக்கம் மூலம் யொனதன் ஸ்பென்சர் விளக்குகிறார்.
ULF6)6O
தேசிய மட்டத்தில் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் கருத் தியலை கிராம மட்டத்தில் உள்வாங்கிக் கொள்ளும் முக்கிய சாத னங்களில் ஒன்றாக தென்ன பாடசாலை விளங்குகிறது. யொனதன் ஸ்பென்சர் இப்பாடசாலையில் கீழ்வகுப்பு மாணவர்களிடையே ஒவிய போட்டியை நடத்துவித்தார். சின்னஞ்சிறுபிள்ளைகள்'எங்கள் கிராமம்' பற்றிய ஒவியங்களை வரைந்தார்கள். அச்சிறார்கள் குளம், நெல்வயல், தாதுகோபம் என்ற மூன்று குறியீடுகளைதங்கள் ஒவியங் களில் சேர்த்திருந்தனர். இக்குறியீடுகள் கிராமம் எப்படிப்பட்டதாய் இருந்தது என்பது பற்றிய தேசிய மட்டத்திலான குறியீடுகள். குளம்

Page 48
92 பிரவாதம்
தென்னவிற்குப் புதிதாக வந்த விடயம். இரண்டாவதான நெல் வயலும் தென்னவின் வாழ்க்கையில் மிக முக்கியமானது அன்று. இச்சிறார்களின் பெற்றோர்களில் சிலர் மட்டுமே நெல் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள். மூன்றாவதானதாதுகோபம் தென்னவுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இனிமேல் தான் அதனைக் கட்ட வேண்டும். இச்சிறார்கள்'எங்கள் கிராமம்' என்ற சொற்களுக்குள் இல்லாத அர்த் தத்தைக் காட்சியாக தம் மனதில் கற்பனை செய்கிறார்கள். இந்தக் கற்பனை தேசத்தின் கிராம சமுதாயம் பற்றிய கற்பனையின் பிரிக்க முடியாத அம்சம். அதன் வழியாக‘எங்கள் கிராமம் தேசத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இணைந்து விடுகிறது (ஸ்பென்சரின் நூல் பக். 241). தேசம் ஒரு கற்பனை செய்யப்பட்ட சமுதாயம் (Imagined Community) என்றார் பெனடிக்ற் அன்டர்சன். கிராமத்துப் பாடசாலை இந்தக் கற்பனை செய்தல் என்ற செயல் முறையில் முக்கிய சாதன மாகச் செயற்படுகிறது.
1977ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அரசு துரித மகாவலி அபி விருத்தித் திட்டத்தை அமுல் செய்தது. மகாவலித் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் அப்போது தமது தொலை நோக்கை இவ்விதம் குறிப்பிட்டார்.
பண்டை நாளில் எமது சமூகம் நீர்ப்பாய்ச்சல் குளம், கோவில், நெல்வயல் என்ற மூன்றை ஆதாரமாகக் கொண்டிருந்தது. அந்தப் பழமையில் இருந்து நாம் ஆதர்சம் பெறுகின்றோம். மகாவலியின் ஆன்மாவும் அதுவே. (ஸ்பென்சரின் நூல் பக் 161) அரசியல்வாதியான அமைச்சரின் வார்த்தைகளில் வெளிப்படும் குறியீடுகள் தென்னவில் பாடசாலைச் சிறார்களால் பண்பாட்டு உற்பத்தி (Cultural Production) என்ற செயல் முறை மூலம் உள்வாங் கப்படுகிறது.
கோவில்
அமரபுர நிகாய என்ற சீர்திருத்தவாத சமய இயக்கத்தின் தாக்கம் சப்பிரஹமுவப் பிராந்தியத்தில் பலமாற்றங்களைக் கொண்டுவந்தது. ‘வகும்புர சாதியைச் சேர்ந்த குடியேறியான கிரியன்ச என்பவரின் முயற்சியால் தென்னவில் கோவில் கட்டப்பட்டது. சப்பிரஹமுவப்

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 93
பிராந்தியத்தின் உயர்குலப் பிரபு ஒருவரான ரட்டே மஹாத்தயாவுடன் தொடர்புடையவர். கிரியன்ச சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் இணைக்கும் சீர்திருத்தவாத சமய இயக்கத்தின் வெளிப்பாடான இக்கோவிலிற்கு வந்து சேர்ந்த குரு சாதி எதிர்ப்புப் போதனைகளைச் செய்தார். சாதியின் இறுக்கம் மெல்ல மெல்லத்தளர்ந்தது. இருந்தாலும் சாதி மறையவில்லை. பெறவ சாதியினருக்கும் கொய்கமவிற்கும் இடையில் திருமண உறவுகள் ஏற்படும் அளவுக்கு சாதி ஒழிப்பை எடுத்துச் செல்லும் ஆற்றல் இச்சீர்திருத்தவாத சமய இயக்கத்திற்கு இருக்கவில்லை. இருந்தாலும் பெறவ முதியவர் சமயத்தால் ஐக்கியப் பட்ட சமுதாயத்தைக் கற்பனை செய்கிறார். சமூக யதார்த்தத்தை திரிபாகக் காண்பதில் அவர் ஒருவித மனநிறைவைக் காண்கிறார். தென்னவில் இன்று யாரும் தமது சாதி அந்தஸ்து பற்றிப் பேசுவது இல்லை என்பது உண்மையே. இருந்தாலும் பிறருடைய சாதி அந்தஸ்து பற்றிய பேச்சில் அவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவர். உடவெல, மெதவல என்ற இருபகுதிகளின் கொய்கம பிறசாதியினருடன் கலப் புத் திருமணம் செய்வதில்லை. இடைக்கிடை தூர இடங்களில் இருந்து வந்து தென்னவில் திருமணம் செய்து கொண்ட சில நபர்களின் மூலத்தைப் பற்றிய பேச்சு இடம்பெறுவதுண்டு. சிறில் என்பவர்மீன் பிடிக்கும் கராவ சாதியினர் தான் என்று சொல்லிக் கொள்வார்கள்.
தென்னவில் ஆண்டுதோறும் பெரஹரநடைபெறுகிறது. இந்தப் பெரஹரவிற்கும் கண்டியின் அசல பெரஹரவிற்கும் உள்ள வித்தியா சத்தை ஸ்பென்சர் சுட்டிக் காட்டுகிறார். கண்டி அசல பெரஹர நிலமானிய சமூகத்தின் சாதி, அதிகாரப் படிநிலை ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் சடங்குகள், கலைநிகழ்ச்சிகளைக் கொண்டது. தென்னவின் பெரஹராவில் சாதியும், சமூக வேறுபாடுகளும் வெளிப் படுத்தப்படுவதில்லை. பழைய குடியிருப்புக்களான உடவெல, மெதவெல பகுதியினர் நிதிசேகரித்தல், நிகழ்ச்சிகளை ஒழுங்க மைத்தல் முதலிய கருமங்களில் முன்னின்று செயற்பட்டபோதும் கிராமத்தவர் யாவரும் பங்கு கொள்ளும் விழாவாக பெரஹர அமைந் துள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கிறார்கள். தென்ன பெரஹரவின் வெற்றியின்இரகசியம் மக்களிடையே வெளிப்படும் ஐக்கியமும், சமரச மனோபாவமும் ஆகும். அங்கே சீர்திருத்தவாத பெளத்தத்தின் மொழியையும் நடத்தைக்

Page 49
94 பிரவாதம்
குறியீடுகளையும் காணலாம். நவீன கால இலங்கையில் முன்னணி பாத்திரத்தை வகிக்கும் இச்சீர்திருத்தவாத சமய இயக்கத்தைபுரட்டஸ் தாந்திய பெளத்தம் என்று கணநாத் ஒபயசேகர அழைத்தார். புரட்டஸ் தாந்திய பெளத்தம் காலனித்துவ காலத்தில் இலங்ண்கயில் புகுந்த கிறிஷ்தவத்தின் போதனைகளையும், நடைமுறைகளையும் உள் வாங்கியது. புரட்டஸ்தாந்திய பெளத்தம் இலங்கையின் தேசிய வாதத்தின் எழுச்சியோடும் தொடர்புடையது. இலங்கையை ஐக்கியப் பட்ட பெளத்தர்களின் நாடாக அரசியல் மேடைப் பேச்சுக்களில் கூறப்படுவதை அடிக்கடி கேட்கலாம். அரசியல் மேடைகளில் கூறப் படும் விடயங்கள் பற்றிய சர்ச்சைகள் எழுவதுண்டு. எனினும் ஐக்கியப்பட்ட பெளத்தர்களின் நாடு' என்ற இந்த விடயம் பற்றி யாரும் சந்தேகம் தெரிவிப்பதில்லை. சீர்திருத்தவாத பெளத்தம் இலங் கையை ஐக்கியப்பட்ட பெளத்தர்களின் நாடு என்ற எண்ணத்தைப் பதிய வைப்பதற்கு உதவியது.
தென்னவின் அரசியல்
பொதுவானநலன்களையுடையவர்கள் அப்பொதுவான நலன்களின் அடிப்படையில் ஒன்று சேருதல் வர்க்கம் எனப்படும். இவ்வாறு பொதுநலன்களின் அடிப்படையில் ஒன்று சேரும் குழு தமக்கு நேர் எதிரான நலன்களை உடைய குழு இருப்பதையும், அவர்களில் இருந்து தம் நலன்கள் வேறுபட்டவை என்பதையும் உணர்கிறார்கள். தென்னவின் அரசியல் பொதுவான நலன்களின் அடிப்படையிலான வர்க்க அரசியலாக உருவாகவில்லை. பொதுநலன்களை அடிப் படையாகக் கொண்ட ஒரு குழுவென்றும், அதற்கு எதிரான குழு வென்றும் இரண்டு தெளிவான குழுக்களை அங்கு அடையாளம்
காணமுடியாது.
பணக்காரர் ஏழைகள் புதியகுடியிருப்புக்கள் - பழைய குடியிருப்புக்கள் வெளியாட்கள் பழைய ஆட்கள் தலைவர்கள் தலைவர்கள் அல்லாதோர்
என்ற வேறுபாடுகள் மக்களிடையே இருக்கலாம் ஆனால் எந்த ஒரு குழுநலன்களினையும் சார்ந்த இரு வேறுபட்ட பிரிவினராக அரசியல்

இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் . 95
அடிப்படையில் ஒன்று சேர்தல் நிகழவில்லை. தென்னவின் அரசிய
லின் சாராம்சமான அம்சத்தை பின்வருமாறு சுருக்கமாக்கி கூறி
விடலாம்:
“சிங்கள பெளத்தர்கள் என்ற வகையில் நாம் ஐக்கியப்பட்டவர்கள். இங்கே நாம் அனைவரும் சமத்துவமான பங்காளிகள்” தென்ன வில் ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்று பிரி வினைகள் அரசியல் நிலையில் வெளிப்பட்டாலும், கோவில் (பன்சல) ஐக்கியத்தின் சின்னமாக உள்ளது. கோவிலும், பாடசா லையும் பண்பாட்டு உற்பத்தியின் பிரதான சாதனங்களாகவும் கருத்தியல்நிலையில் மக்களை ஒன்றிணைப்பனவாகவும் செயற்
படுகின்றன.

Page 50
நூல் அறிமுகம்
இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், இரண்டாம் பதிப்பு, சமூக விஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு, 2011, ரூபாய் 400/-, பக். xx+269.
1979 இல் சமூக விஞ்ஞானிகள் சங்கம், இலங் கையில் தேசிய இனப் பிரச்சினை பற்றி ஒரு
இனத்துவமும் felpöhö DÁñApps கருத்தரங்கை நடத்தியது. ‘இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை அறிவு ரீதியாக ஆராயப் படாமல் உணர்ச்சி வேகத்துடன் அணுகப்பட்ட நிலை அன்றும் இருந்தது; இன்றும் தொடர் கிறது. இப்பின்னணியில் 1979இல் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட இக் கருத்தரங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. “கருத்தமைவு (Ideology) அடிப்படைகளில் சில அம்சங்களை விவாதிக்கவும் பகுத்தாயவும் சிங்கள, தமிழ் அறிவு ஜீவிகள் ஒன்று கூடிய முதல் சந்தர்ப்பமாகவும், அதனால் இது ஒரு திசை திருப்பமாகவும் அமைந்தது’ (அறிமுகம் பக்கம் iv) என்று குறிப்பிடப்பட்டுள்ளது போல் வரலாற்றுத்திருப்பமாக அமைந்த இக்கருத்தரங்கில் படிக்கப் பட்ட கட்டுரைகள் 11ஐத் தாங்கியதாக இந்நூலின் இரண்டாவது பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. இப் பதினொரு கட்டுரைகளில் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பி. தேவராஜ் ஆகிய மூன்று தமிழ்
அறிஞர்களின் கட்டுரைகள் உள்ளன. ஏனைய எட்டுக் கட்டுரைகள் சேனக்க பண்டாரநாயக்க, ஆர். ஏ.எல்.எச். குணவர்த்தன, டபிள்யூ. ஐ. சிரிவிர, குமாரி ஜயவர்த்தன, நீல் குருப்பு, சுனில் பஸ்தியன், சாள்ஸ் அபயசேகர, சுசில் சிறிவர்த்தன ஆகியோர் எழுதியவையாக
உள்ளன.
 

நூல் அறிமுகம் 97
Soorjigoth (Ethnicity)
‘தேசிய இனங்கள், ‘தேசிய இனப்பிரச்சினை என்ற சொற்றொடர் களுக்குப் பதிலாக 'இனத்துவம்' என்ற கருத்தாக்கத்தை இந்நூல் முதன்மைப்படுத்தியது. இக்கருத்தரங்கின் பிரதான பயன்களில் ஒன்று இக்கருத்தாக்கத்தின் அறிமுகம் ஆகும். இந்நூலும் முதன் முதலாக (1985) தமிழில் இக்கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது.
“இந்நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இனத்துவம்’ என்ற சொல் பற்றி ஒரு சிறு விளக்கம். Ethnicity என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான சொல் தமிழில் காணப்படாமையால் 'இனத்துவம்' என்ற சொல்லை ஆக்க வேண்டியிருந்தது” என்று இந்நூலிற்குப் பதிப்புரை எழுதிய சித்திரலேகா மெளனகுரு குறிப்பிட்டுள்ளார் (பதிப்புரை பக் I), இந்நூலின் கட்டுரைகள் யாவும் வரலாற்று நோக்கில் இலங் கையின் இனத்துவத்தையும் சமூக மாற்றத்தையும் ஆராய்வன. ஆதலால், இனத்துவம் என்ற சொல்தேர்வு பொருத்தமுடையதே ஆயினும் தமிழ்ப் புத்திஜீவிகளில் ஒரு சாரார் இனத்துவம் என்ற சொல்லையே பின்னர் இறுகப் பற்றிக் கொண்டனர். இதற்கு அப்பால் சென்று தேசிய இனப்பிரச்சினை, தேசிய இனங்கள் ஆகிய தொடர் களை உபயோகிப்பதை தவிர்த்துக் கொண்டமை ஒரு பின்ன டைவே ஆகும்.
இந்நூலில் உள்ள கட்டுரைகளைப் பற்றிப் பார்க்கும் முன்னர் இனத்துவம் என்றால் என்ன என்பது பற்றிய வரைவிலக்கணம் ஒன்றைப் பார்ப்போம். இச்சொல்லின் சமூக விஞ்ஞான வரை விலக்கணம் பின்வருமாறு:
* ஒவ்வொரு இனக் குழுமமும் ஒரு பெயரால் தன்னை அடை யாளப்படுத்துகின்றது. பிறரும் குறித்த பெயரால் அடை யாளப்படுத்துவர். உ+ம் வங்காளியர், தெலுங்கர், சிங்களவர், தமிழர்.
* இனக் குழுமத்திற்கு அதன் தோற்றம் பற்றிய புராணம் அல்லது புனைவு ஒன்று இருக்கும். தோற்றமும் மூலமும் பற்றிய இப் புராணம் (Myth) மக்களிடம் பரவலாகப் பரவி இருக்கும்.

Page 51
98 பிரவாதம்
* யாவருக்கும் பொதுவான அனுபவப் பகிர்வாக சில வரலாற்று அம்சங்கள் இனக்குழும உறுப்பினர்களிடம் பரவி இருக்கும். இவை நினைவுகள், விழாக்கள், வீரர் கதைகள் என்ற வடிவங் களில் வரலாறுகளாக நம்பப்படும்.
* இனக்குழுமம் தனக்கென ஒரு புவியியல் பிரதேசத்தை
தாயகமாகக் கொண்டிருக்கும்.
* இனக்குழுமத்தின் உறுப்பினர்களில் சிலர் கூட்டாக இணைந்து சில பொது நோக்கங்களை இலக்குகளைக் கொண்டு செயற் படுவர். மேலே கூறிய 6160J65a disa00T b Nationalism And Political Identity 6Taip நூலில் ஆங்கிலத்தில் உள்ளவற்றைத் தழுவி தமிழில் தரப்பட்டது. மேற்குறித்த இனத்துவ அம்சங்களைக் கொண்ட தனித்துவமான சமூகக் குழுவை'இனக் குழுமம்' என்கிறோம். மேலே குறிப்பிட்ட அம்சங்களில் இறுதியாகக் குறிப்பிட்ட விடயம் அரசியல் ஆகும். அரசியல் நடவடிக்கைகள் மிக ஆரம்ப நிலையில் இருக்கும் போது "சில பொது நோக்கங்களை இலக்குகளாகக் கொண்டு'சிலர் கூட்டாக இணைந்து செயற்படும் நிலை இருக்கும். அரசியல் மிகுந்த அழுத்தம் பெறும்போது அதனை இனக்குழுமத் தேசியவாதம் (Ethnic Nationalism) என்பர். இனக்குழுமத் தேசியவாதம் பலவகையான சமூக பண்பாட்டு இயக்கங்களாகவும், அரசியல் உள்ளடக்கம் கொண்டனவாகவும் இருக்கும். இனக்குழுமம் ஒன்று புவியியல் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னாட்சி அல்லது தன் அலுவல்களைத் தானே கவனித்துக் கொள்ளும் உரிமையைக் கேட்கும் நிலையில், அது தேசிய இனம் எனவும் அது தேசியவாதம் எனவும் அழைக்கப்படும் என்றும் கூறுவர். இனத்துவம், தேசிய இனம், தேசியவாதம் ஆகிய வரைவிலக்கணங்களில் சில சிக்கல் களும், சர்ச்சைகளும் உள்ளன வேனும் மேற்கூறியவை பொதுவாக ஏற்புடைய வரைவிலக்கணங்களாகும்.

நூல் அறிமுகம் 99
இனத்துவம் ஆதிமுதலாக இருந்து வருவதா? இந்நூலில் உள்ள கட்டுரைகளில் இரண்டாவதாக இடம்பெறும் கட்டுரை 2010இல் காலமானவரான வரலாற்று அறிஞர் லெஸ்லி குணவர்த்தன எழுதியது. ‘சிங்கத்தின் வழிவந்தோர்: வரலாற்றிலும் வரலாற்று எழுதியலிலும் சிங்கள உணர்வு என்பது அவரது கட்டு ரையின் தலைப்பு (பக் 27 - 84). ‘சிங்கத்தின் வழிவந்தோர் (People of Lion) என்று அறியப்பட்ட இக்கட்டுரையை 1979 கருத்தரங்கில் குணவர்த்தன சமர்ப்பித்தபொழுது, அவரது உரை, சபையில் இருந் தோரை மின்சார அதிர்ச்சி போன்ற அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்று குமாரி ஜெயவர்த்தன அண்மையில் கூறினார் (பார்க்க: Leslie Gunawardana-965&GS) 576i, Llds. 28-29, Leslie Electrified the Audience with his Paper) சிங்கத்தின் வழிவந்தோர் கட்டுரை கோட்பாட்டு அடிப்படையிலானது. இலங்கை வரலாற்றில் சிங்கள உணர்வு வரலாற்று நோக்கில் பரிமாணம் பெற்றதை அது கூறுகிறது. இலங் கையின் தேசியவாத வரலாற்றா சிரியர்கள் சிங்களம் என்ற இனத்துவ உணர்வு (Ethnic Consciousness) ஆதி முதலாகவே இருந்துவந்தது என்ற கருத்துடையவர்களாய், இலங்கை வரலாற்றை அந்த நோக்கில் திரிபுபடுத்தி எழுதி வந்தனர். இனத்துவம் ஆதிமுதலே இருந்து வந்தது என்று கூறும் கோட்பாட்டை பிறைமோடியலிசம் (Primordialism) என்று கூறுவர். இலங்கையின் வரலாற்றாசிரியர்களின் 'பிறைமோடியலிசம்' என்னும் ஆதிமுதல் வாதத்தை இக்கட்டுரை ஆதாரபூர்வமாக மறுத்துரைத்தது. இக்கட்டுரையின் அறிவுசார் தாக்கத்தையே மின்சார அதிர்ச்சி’ என்று குமாரி ஜயவர்த்தன குறிப் பிட்டார். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே ஆதிமுதல் வாத வரலாறுகள் இலங்கையர்களால் எழுதப்படலாயின.
குணவர்த்தனநல்லதோர் உதாரணத்தைக் காட்டுகிறார். 1930ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூல் ஒன்றில் (செனிவிரத்தன என்பவர் எழுதியது) விஜயன் பற்றிய ஐதீகத்தை விபரிக்கையில் இலங்கைக்கு வந்து சேர்ந்த விஜயன்“சொந்த ஆரிய இனத்தைச் சேர்ந்த ஒரு அரசியை மணம் முடிக்க விரும்பியதாகவும்'தான் சிரமப்பட்டுக் கண்டுபிடித்த அரசை ஆரியர் தவிர்ந்த ஏனையவர் அடைந்தாலோ என்ற எண்ணத் தால் அவனது இனப்பெருமை கலக்கமடைந்தது” என்றும் கூறியிருப்

Page 52
100 பிரவாதம்
பதை குணவர்த்தன மேற்கோள் காட்டுகிறார் (பார்க்க பக். 28). இங்கே விஜயன் என்ற புராணக்கதை மனிதனை உண்மையான வரலாற்று மனிதனாக ஆசிரியர் நம்புவது மட்டுமல்லாமல் அவன் ‘ஆரியர் இனம் பற்றிய எண்ணத்தைத்தீவிரமாக உணர்ந்தான் என்றும் கூறியிருப்பது வேடிக்கையானது. ஐதீகத்தை வரலாற்று உண்மைகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் மனப்பாங்கு 1950க்கு பிற்பட்ட காலப்பகுதியில் எழுதியவர்களான புலமையாளர்களிடம் கூட இருக்க வில்லை என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியம். குண வர்த்தனவின்கட்டுரையின் மையமான கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்: 1) இலங்கை வரலாற்றின் ஆரம்பகட்டத்தில்’சிங்கள என்ற சொல் அரசனையும், அவனது நெருங்கிய உறவினர்களையும் குறிக்கப் பயன்பட்டது.
2) சிங்களளன்ற கருத்தின்தோற்றம், வளர்ச்சி என்பனஇலங்கையின் அரசு முறை ஒன்றின் தோற்றத்துடனும், வளர்ச்சியுடனும் தொடர்புடையது. காலப்போக்கில் மத்தியப்படுத்தப்பட்ட அரசு (Centralised State) படிப்படியாக உருவான பொழுது, சிங்கள என்ற சொல் அரசனையும், அவனது உறவினர்களையும் மட்டுமல்லாது, அவனது பரிவாரங்களையும் (அமைச்சர், அதி காரிகள் முதலியோர்) குறித்தது. இரண்டாவது கட்டத்தில் ஆளும் உயர் குழுவைச் சுட்டும் சொல்லாக இது மாறியது. 3) அடுத்த கட்ட வளர்ச்சியாக சிங்கள என்ற சொல் இலங்கை என்ற நாட்டைக் குறிப்பதாகவும், பின்னர் அங்கு வாழும் மக்களைக் குறிப்பதாகவும், அம்மக்கள் பேசும் மொழியைக் குறிப்பதாகவும் விரிவான அர்த்தம் பெற்றது.
4) சிங்கள உணர்வின் வளர்ச்சிப் படியில் அரசன் அரசனின் பரிவாரம், இராச்சியம், இராச்சியத்தின் மக்கள் என்ற ஒரு நிரல் ஒழுங்கு காணப்பட்டது. எனினும் இராச்சியத்தில் இருந்த சகல மக்களையும் இணைக்கக் கூடிய சிங்கள உணர்வின் வளர்ச் சியைத் தடைப்படுத்தும் சில காரணிகள் தொழிற்பட்டன (பக். 41).

நூல் அறிமுகம் lO
5) சேவைச் சாதியினரான சாதாரண மக்களை உயர் குடிப்பிறந் தோரான ஆளும் குழுக்களும் ஒதுக்கியே வைத்தனர். புலிந்தர் என அழைக்கப்பட்ட வேடர்கள் போன்ற இனக் குழுக்களும் விலக்கி வைக்கப்பட்டனர். மத்தியப்பட்ட அரசு வளர்ச்சி பெற்ற காலத்திலும் கூட‘சிங்களவர் என்ற உணர்வு எல்லா மக் களையும் உள்ளடக்கும் உணர்வாக வளர்ச்சியடையவில்லை.
6) சிங்கள உணர்வு, தற்போதைய அர்த்தத்தில் வளர்ச்சியடைவதற் கான தீவிர மாற்றம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டது. குறிப்பாக “சிங்கள பெளத்தர் என்ற உணர்வின் அடிப்படையிலான தேசியவாதம், 19ஆம் 20ஆம் நூற்றாண்டு களில் ஏற்பட்ட மாற்றமாகும். சுருங்கக் கூறின் இனத்துவம் ஆதி முதலாக இன்றைய உருவில் இருந்து வந்த ஒன்றல்ல. அதற்கு ஒரு வரலாறு உள்ளது. அது நவீனத்துக்கு முற்பட்ட கால வரலாற்றில் தீவிரம் பெற்ற உணர்வாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
நூலின் முதலாவது கட்டுரையை எழுதியிருக்கும் சேனக்க பண்டார நாயக்க இலங்கையில் மக்கள் குடியமருகையின் (Peopling) வரலாறு பற்றி ஆராய்கிறார். அவரது கட்டுரை ‘வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் மக்கள் குடியமருகை தேசிய இனப்பிரச் சினையின் வரலாறும், இனத்துவம் தொடர்பான சில கேள்விகளும் என்ற தலைப்பில் உள்ளது. சேனக்க பண்டாரநாயக்க அறிமுகம் செய்திருக்கும் ‘மக்கள் குடியமருகை அல்லது "Peopling என்னும் கருத்தாக்கம் புதுமையானது. இக்கருத்தாக்கம் இனத்துவம் பற்றிய பல சிக்கல்களை விடுவிக்கக்கூடியது. இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மக்கள் குழுக்கள் எவ்வாறு குடியேறின, இலங்கையின் குடியமருகையின் தன்மை யாது என்பன பற்றியதற் கால அறிவின் அடிப்படையிலான விளக்கங்கள், இக்கட்டுரையில் தரப் பட்டுள்ளது.
டபிள்யூ. ஐ. சிறிவீர அவர்கள் துட்டகைமுனு, எல்லாளன் பிணக்குப் பற்றி ஆராய்கிறார். நவீன காலத்தின் பிரச்சினைகளின் அடிப்படையிலான எண்ணங்களையும், கருத்துக்களையும் கடந்தகால வரலாற்றை விளக்குவதற்கு உபயோகிப்பதால் எழும் தவறுகளுக்கு, துட்டகைமுனு எல்லாளன் பிணக்கு தகுந்ததோர் உதாரணமாகும்.

Page 53
102 பிரவாதம்
ஆரியப் பாரம்பரியம் கொண்ட சிங்கள மக்களின் நாடு இலங்கை என்ற கருத்தின் ஊடாக வெளிப்படும் சிங்கள உணர்வு, 19ஆம் நூற்றாண்டின் பின்னர் தோன்றியதொரு விடயம். துட்டகைமுனு தன் படை நடவடிக்கையை, அத்தகையதோர் சிங்கள உணர்வுடன் நடத்தவில்லை என்ற கருத்துக்கு ஆதாரமான பல சான்றுகளை சிறிவீரவின் கட்டுரையிலும் கண்டுகொள்ளலாம்.
தேசியவாதமும், இனத்துவ முரண்பாடுகளும் மேலே நாம் குறிப்பிட்ட மூன்று கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய எட்டுக் கட்டுரைகளும் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வளர்ச்சிகளையும், சமகாலப் பிரச்சினைகளையும் பற்றியன. நவீன காலத்தில் தோன்றிய தேசியவாதம் அதற்குப் பின்னணியாக இருந்த இனத்துவ முரண்பாடுகள் என்பன பற்றி ஆராயும் இக்கட்டுரைகளை பின்வரும் மூன்று விடயத் தலைப்புக்களாகப் பிரித்து நோக்கலாம்:
1) தேசிய வாத அரசியல்: குமாரிஜயவர்த்தன, நீல்குறுப்பு, சுசில் சிறிவர்த்தன ஆகியோர் கட்டுரைகள் இவ்விடயம் பற்றியன.
2) இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும்: க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, பி.தேவராஜ் ஆகியோரின் கட்டுரைகள்.
3) பல்கலைக்கழகக் கல்வி, உயர் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள்: சுனில் பஸ்தியன், சாள்ஸ் அபய சேகர ஆகிய இருவரின் கட்டுரைகள்.
குமாரி ஜயவர்த்தனவின் கட்டுரை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இலங்கையில் நிலவிய வர்க்க, இன உணர்வின் சில அம்சங்கள்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் புதிய வர்க்கங்களின் தோற்றத்திற்குக் காரணமாகியது. சாராயக்குத்தகை, பல்வேறுவகை வரிகளின் குத்தகை, கொந்தறாத்து வேலை, கப்பல் வணிகம் போன்ற பல வழிகளில் மூலதனத்தைத் தேடிய முதலாளி வர்க்கம் கோப்பி, தேயிலை, தென்னை, றப்பர் ஆகிய பெருந்தோட்டங்களிலும், காரீய, சுரங்க

நூல் அறிமுகம் 103
அகழ்வுத் தொழிலிலும் முதலிட்டு செல்வம் சேர்த்தது. நகர்ப்புறச் சொத்துக்களில் முதலிட்டு, சமூக அந்தஸ்தையும் தேடியது. புதிதாகத் தோன்றிய இம்முதலாளி வர்க்கம் தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளித்து, சட்டம், மருத்துவம், அரசசேவை ஆகிய உயர் தொழில்கள் மூலமும் சமூகப்படி நிலையில் உயர்ச்சியை தேடிக் கொண்டது.
இலங்கையின் முதலாளி வர்க்கம் பலவீனம் மிக்கதாகவும், சுயமாகச் செயற்படும் சக்தியற்றதாகவும் இருந்தது. அது பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான முதலாளித்துவத்தின் தலைமையிலான தேசிய விடுதலை இயக்கத்தை வழி நடத்தும் சக்தியற்றதாய் இருந்தது. பிரித்தானிய நலன்களுக்கு துணை போவதாய், அந்நிய முதலாளித்து வத்துடன் இணங்கிப் போகும் தன்மை உடையதாய் இருந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் பிற இனக்குழுக்களை இணைத்து கொண்டு, பரந்துபட்டவர்க்க இனஐக்கியத்தை உருவாக்கி செயற்படும் ஆற்றல் அற்ற முதலாளி வர்க்கம், உள்முரண்பாடு களினால் பிளவுபட்டிருந்தது. இம்முதலாளித்துவ வர்க்கத்தின் சிங்கள சமூகப் பிரிவினர், பிற இனக் குழுமங்களின் வர்த்தகர்கள் தமது முன் னேற்றத்திற்குத்தடையாக இருப்பதை உணர்ந்தனர். சிங்களவர்த்தக முதலாளிகளும், குட்டி முதலாளித்துவ வகுப்பினரும் சமய பண்பாட்டு மறுமலர்ச்சிச் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு சிங்கள பெளத்ததனித்துவத்தை வெளிப்படுத்தினர். இவர்களுடைய பெளத்த மறுமலர்ச்சிச் சித்தாந்தத்தின் உள்ளார்ந்த அம்சமாக இனவாதம் அமைந்தது. சிங்கள பெளத்த தேசியவாதிகளின் இனவாதத்திற்குப் பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் பொருளாதாரக் காரணி களையும் விபரமாக இக்கட்டுரையாளர் எடுத்துக் கூறுகிறார் (பார்க்க பக் 117 - 120). சிங்கள பெளத்தக் கருத்தியலின் கூறுகளாக, சிங்கள இனம், பெளத்த சமயம் என்ற இரு விடயங்கள் சார்ந்த ஐதீகங்கள் ஒன்று சேருவதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.
1) ஆரிய இனம்: சிங்களவர் இன ரீதியாக ஆரியர்கள் என்ற
நோக்கு.

Page 54
104 பிரவாதம்
2) 'சிஹ தீப என்ற கருத்தாக்கம்: சிங்கள இனம் நிறுவப்பட்டது பற்றிய ஐதீகம், விஜயன் வருகையால் இடம் பெற்ற குடியேற்றம் காரணமாக இந்நாடு 'சிஹ தீப ஆயிற்று.
3) தம்ம தீப என்ற கருத்தாக்கம்: புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது பற்றிய ஐதீகம், இந்நாட்டைப் புத்த மதத்திற்குரிய நாடாக ஆக்கியது.
மேற்குறித்த ஐதீகங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை (பார்க்க பக் 128).
நீல்குருப்பு அவர்களின் கட்டுரை 'இலங்கையில் இனவாதமும் தொழிலாளர் இயக்கமும்’ (பக் 135 -152) என்ற விடயம் பற்றியது. இவரது ஆய்வும் குமாரி ஜயவர்த்தனவின் ஆய்வைப் போன்றே அரசியல் பொருளாதார நோக்கில், இலங்கையின் இன முரண்பாடு களின் வளர்ச்சியை விளக்குவதோடு தொழிலாளர் இயக்கத்தினுள் இனவாதம் 1930க்களில் புகுந்தமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
முதலாளிவர்க்கத்திற்கிடையிலான உள்முரண்பாடுகள் எவ்விதம் இனவாத அரசியலிற்கு வித்திட்டது என்பதை குமாரி ஜயவர்த்தன விளக்கியிருப்பது போல், இலங்கையின் தொழிலாளி வர்க்கம் உள் முரண்பாடுகளினால் 1930க்களில் எப்படிச் சீரழிவுப் பாதையில் சென்றது என்பதை நீல்குறுப்பு எடுத்துக் காட்டுகிறார். காலனித்து வத்தினால் ஏற்பட்ட குறை அபிவிருத்தியின் விளைவுகள் மூன்றை அவர் குறிப்பிடுகின்றார்.
1) கைத்தொழில்கள் வளர்ச்சியடையாமை. 2) இதனால் அமைப்பு ரீதியில் பிளவுண்டதும், இனப் பகைமை கொண்டதும், பலவீனதுமான தொழிலாளவர்க்கத்தின் உரு வாக்கம்.
3) மிகவும் பரந்துபட்டதும், ஒப்பீட்டளவில் பின்தங்கியதுமான
கிராமப் புறத்தின் இருப்பு. இந்நிலையில் மூலதனத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடை யிலான மோதல், தேசிய அரசியலின் மையப் புள்ளியாக மாறவில்லை (பார்க்க பக் 151).

நூல் அறிமுகம் 105
சுசில் சிறிவர்த்தன20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் இனங்களுக்கிடையிலான பிளவுகளை அதிகரிப்பதற்கு ஒரு கருவியாக, பிரித்தானிய காலனித்துவ அரசினால் உபயோகிக்கப்பட்டதென எடுத்துக் காட்டுகிறார்.
இலங்கைத் தமிழரிடையே மொழி பண்பாட்டு உணர்வு வளர்ச்சி பெற்றமை பற்றி க.கைலாசபதியும், இலங்கைத் தமிழரது சமூகக் கட்டமைவின் அம்சங்கள் என்னும் விடயம் பற்றி கா. சிவத்தம்பியும் எழுதியுள்ளனர். தமிழரிடையே மொழி, பண்பாடு பற்றிய உணர்வு என்னும் கட்டுரையில் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்கத்தை ஏற் படுத்தினளன்றுககைலாசபதிகூறுகிறார். குறிப்பாக தென்னிந்தியாவில் தோன்றிய மாற்றங்களின் முக்கியத்துவத்தை இவர் குறிப்பிடுகின்றார். இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் தோன்றிய இயக்கங்களின் தாக்கம் பற்றி நோக்கும்போது பின்வருவன முக்கியமானவை:
அ) ஆரிய சமாஜம், பிரம்மசமாஜம், ராமகிருஷ்ண மிசன் போன்ற
சமய இயக்கங்கள்.
ஆ) இந்திய தேசிய விடுதலை இயக்கம். இ) தென்னிந்தியாவின் மாநில வாரியான இயக்கங்கள், பின்னர்
தோன்றிய தி.மு.க. இயக்கம்.
ஈ) மொழி வழி மாநிலங்கள் அமைப்பு.
மேற்குறித்த முக்கியமான நிகழ்வுகளைக் குறிப்பிட்ட பின்னர் க.கைலாசபதி இவ்வாறு எழுதுகிறார்.
இலங்கையில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும், பெருந்தோட்டங்கள் அமைக்கப்பட்ட காலத்திற் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும், வெளிப்படை யான சில சமூக பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளபோதும், பண்பாட்டு ஆன்மீக ஊடாட்டத்திற்காக இந்தியாவையே நோக்கும் பண்பு இருசாராருக்கும் பொதுவான பண்பு ஒன்றாகும். சராசரித் தமிழரில் வேரூன்றியுள்ள இந்த அம்சத்தின் நீடிப்புக்கு மொழி, சமயம், ஐதீகம், வரலாறு ஆகிய யாவும் தமது பங்கைச் செலுத்தி உள்ளன (பக் 154).

Page 55
06 பிரவாதம்
சராசரித்தமிழரில் வேரூன்றியுள்ள இந்த அம்சம் ஆரோக்கிய மற்றது என்றோ விரும்பத்தகாதது என்றோ க.கைலாசபதி குறிப்பிடவில்லை. தமிழர்களிடையே தோன்றிய தமிழ் உணர்வு, பண்பாடு என்பன வற்றின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கை அழுத்துவதோடு, அவ் வளர்ச்சிகளை முன்னேற்றமான ஒரு போக்காகவே க.கைலாசபதி காண்கிறார். தமிழ் உணர்வின் வளர்ச்சியில் சேர்.பி. இராமநாதன், சேர்.பி. அருணாசலம், சேர். முத்துக்குமாரசுவாமி ஆகியோரின் பங்களிப்பையும் குறிப்பிடும் க.கைலாசபதி, இந்து மதத்திலும், இந்திய தத்துவ மெய்ஞ்ஞானத்திலும் இவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததையும் எடுத்துக் காட்டுகிறார். சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை ஆகியோரின் பங்களிப் புக்களையும், கோல்ட்வெல் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரின் மொழியியல் கண்டுபிடிப்பு:தமிழ் உணர்வின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்ததையும் க.கைலாசபதி குறிப்பிடுகிறார். பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ச் சங்கம், 1922 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழ் இலக்கிய மாநாடு, தென்னிந்திய சைவசித்தாந்த சமாஜம் அமைக்கப்பட்டமை (1905), தமிழியன் அன்டிகுவரி 'சித்தாந்த தீபிகை ஆகிய இரண்டு சஞ்சிகைகளின் தோற்றம் ஆகிய மிக முக்கியமானநிகழ்வுகளை, காலவரிசை ஒழுங்கில் குறிப்பிட்டுச் செல்கிறார். மொழி, பண்பாடு பற்றி வளர்ந்து வந்த விழிப்புணர்வின் குறியீடுகளாக அமையும் நிகழ்வுகளை இக்கட்டுரை சிறப்பாக அலசுகிறது.
பண்டிதர் சவரிராயர் என்னும் கிறிஸ்தவ தமிழ் அறிஞர் (தமிழ் அன்டிகுவரியின் ஆசிரியர்) பற்றி குறிப்பிட்ட பின்னர் க.கைலாசபதி பின்வருமாறு எழுதுகிறார்.
பண்டிதர் சவரிராயர் பற்றிய செய்தி எமக்கு இன்னோர் உண்மையை உணர்த்துகிறது. பண்பாட்டு விழிப்புணர்வு, இந்து இயக்கமாகவே தொடங்கி சைவ அறிஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டாலும் அதனுடைய குணாம்சம் பின்வந்த ஆண்டு களில் மாற்றமடைந்தது. கிறிஸ்தவ மிசனரி அறிஞர்களும் (கோல்ட்வெல், பேர்சிவல் பவர், போப், எல்லிஸ்) சவரிராயர் போன்றோரும், கிறிஸ்தவர்களும் இவ்வியக்கத்தில் இணைந்தனர். மேலும், சமயத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், சமயத்தி

நூல் அறிமுகம் 107
லிருந்து மொழிக்கு மாறியமையால் இதுவரைகாலமும் இருந்த முதன்மையும் குறைந்தது. உண்மையில் சவரிராயபிள்ளையின் காலத்தில் இருந்து இலங்கையிலும் இந்தியாவிலும் எஸ். டி. சுவாமிக்கண்ணுப்பிள்ளை (1865-1925), ஞானப்பிரகாச சுவாமிகள் (1875 -1947), டாக்டர் ஐசக். தம்பையா (1869 - 1941), சேவியர் தனிநாயக அடிகள் ஆகியோரின்தீவிரபங்களிப்பு:தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் கிறிஸ்தவர் ஊடுருவி விட்டனர் என்ற இந்து சமயத்த வரின் குற்றச்சாட்டு சிலசமயம் எழுவதற்கும் வழிவகுத்தது. (பக் l62 - 163).
இலங்கையில் தமிழ் இனத்துவ உணர்வின் உருவாக்கத்தில் இந்துக்கள் (சைவர்), கிறிஸ்தவர் என்ற இரு சமயத்தவர்களதும் பங்களிப்பும் ஏறக்குறைய சமமான பலத்துடன் இருந்துள்ளதை க. கைலாசபதி குறிப்பிடுகிறார். க.கைலாசபதியின் கட்டுரை 'சைவமும் தமிழும் என்னும் கருத்தியல், தமிழ் உணர்வின் வளர்ச்சியால் பலம் இழந்தது என்ற முடிவுக்கே எம்மை இட்டுச்செல்கிறது. கிறிஸ்தவரின் பங்களிப்பு சமயச்சார்பற்றதமிழ் உணர்வு ஒன்றின் தோற்றத்திற்கும், பரந்துபட்ட ஐக்கியத்திற்கும் வழிவகுத்தது என்று கூறுவதில் தவறில்லை. இதனையே க.கைலாசபதி சமயத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் சமயத்திலிருந்து மொழிக்கு மாறியதாக குறிப்பிடுகின்றார்.
இலங்கைத் தமிழரது சமூகக் கட்டமைப்பின் சில அம்சங்கள் (பக். 170 - 199) என்ற தலைப்பில் எழுதியுள்ள கா. சிவத்தம்பி கட்டமைவு (Structure) என்ற கருத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் சமூக உருவாக்கம் (Social Formation) என்னும் விடயம் கட்டுரையில் விரிவாகப் பரி சீலிக்கும் சாத்தியப்பாட்டை அவர் உருவாக்கியதோடு, தனது முயற் சியில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது (1979 இன்) இக்கட்டுரை இலங்கைத் தமிழர் சமூகம் பற்றிய பார்வையை முதல் முறையாக அகல்வித்தது.
இலங்கைத்தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பை நோக்கும்போது அவர்களிடையே இனரீதியான ஒருமைத்தன்மை இருப்பினும் புவி யியல், பொருளியல் ஒழுங்கமைப்பு, சமூகக் கட்டுமானம், அபிவிருத்தி மட்டம் என்ற அம்சங்களின் அடிப்படையில் அவர்களைப் பின்
வருமாறு இரு தெளிவான குழுக்களாக வகுக்கலாம்:

Page 56
108 பிரவாதம்
அ) கிழக்கு மாகாணத் தமிழர். (இவர்கள் பெரும்பாலும் மட்டக்
களப்புத் தமிழர் எனக் குறிக்கப்படுவர்.)
ஆ) வடக்கு மாகாணத் தமிழர்கள். இவர்கள் (அ) வன்னி, மன்னார் மாவட்டத் தமிழர்கள் என்றும் (ஆ) யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றும் மேலும் இரு பிரிவுகளாக உள்ளனர் (பக் 174).
இவ்வாறு வெவ்வேறான குழுக்களுக்கிடையே உள்ள உள் முரண் பாடுகளையும், பரஸ்பர இடையூடாட்டங்களையும் கா.சிவத்தம்பி மிகச் சிறப்பான முறையில் விளக்குகிறார். யாழ் அகற்றுச் சங்கம் ஒன்று வன்னியில் செயற்பட்டமை, மன்னாரில் கத்தோலிக்கர்களின் மேலதிகாரநிலை என்பன பற்றிக் கூறி இவர் உள்ளொளி பாய்ச்சும் சில கருத்துக்களை கூறுகிறார். மேற்கூறப்பட்ட பிரதேசங்களைச் சார்ந்த குழுவாதங்களை மேவிய ஒற்றுமையுணர்வு இலங்கைத் தமிழர்களிடம் ஏற்பட்டு வந்துள்ளதையும் அவர் குறிப்பிடுகிறார் (பார்க்க 184, 187).
கா.சிவத்தம்பி அவர்களின் கட்டுரை மலையகத்தமிழர் பற்றியும் பல முக்கியமான தகவல்களையும், குறிப்புக்களையும் தருகிறது.
பி. தேவராஜ்'இலங்கையின் இந்தியர்தமிழர் தனித்துவ உறுதிப் பாடும் இனங்களுக்கிடையிலான செயற்பாடும்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார் (பக். 200-25). கா. சிவத்தம்பி அவர்களின் கட்டுரை தமிழர் சமூகம் பற்றிய கட்டமைவை விளக்கியிருப்பதைக் குறிப் பிட்டோம். பி. தேவராஜ் அவர்களும் இந்தியத்தமிழர் சமூகம் பற்றிய கட்டமைவை மிகச் சிறப்பான முறையில் விளக்குகிறார். முதலில் தோட்டங்களில் வாழும் இந்தியத்தமிழர், தோட்டங்களுக்கு வெளியே வாழும் இந்தியத் தமிழர் என்ற இரு பிரிவுகளை அவர் குறிப்பிடு கிறார். பொதுப்பட்ட முறையில் இலங்கையில் இந்தியர் என்று பேசும்பொழுது இலங்கையில் குடியேறிய இந்திய சமூகக் குழுக்கள் பல உள்ளன.
இந்தியத் தமிழரைத் தவிர்த்து மலையாளிகள், வட இந்தியாவைச் சேர்ந்த சிந்திகள், மேமன்கள், போராக்கள் போன்ற ஏனைய குடியேற்றக் குழுவினரும் இலங்கையில் குடியேறியவர்களில் அடங்குவர். தமிழ்ப் பேசும் இந்திய முஸ்லிம்கள், அவர்கள் பிறிதொரு இன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தியத்

நூல் அறிமுகம் 109
தமிழர் என்ற வகைப்பாட்டினுள் உள்ளடக்கப்படவில்லை. நகரத்தைச்சார்ந்த தொழிலாளர்களில், நகரசபைகளின்சுத்திகரிப்பு சேவைகளில் ஈடுபடும் அருந்ததியர் என்ற சமூகக் குழுவினரும் உள்ளடங்குவர். இவர்களுடைய மரபு, மூலமும் வரலாறும் இந்தியத் தோட்டத் தமிழர்களிலிருந்து வேறுபட்டது. அருந்த தியர்களின் தாய் மொழியாக தெலுங்கு மொழியின் ஓர் வகைப் பேச்சு மொழி வடிவம் இருந்த பொழுதும் அவர்கள் தற்பொழுது தமிழையே பேசுகின்றனர் (பக் 202).
இவ்வாறு இந்தியத் தமிழர்களை பிற இந்தியர்களில் இருந்து பிரித்தறியும் தேவையை கட்டுரையாசிரியர் உணர்த்துகிறார். அடுத்து பரதவர், நாட்டுக் கோட்டைச் செட்டிகள் ஆகிய இந்தியத்தமிழர்கள் பற்றிய பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதனை விட
பெருந் தோட்டங்களைச் சார்ந்த தமிழ் மக்களுடன் சிறு தொடர்பு களையுடைய சிறு குழுக்களான தமிழ்க் குடிகளும் உள்ளனர். தஞ்சாவூர், திருச்சி, ஆர்க்காடு, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும், பெருந்தோட்டங்களைச் சாராதவர்களில் பெரும்பான்மையானவர்கள்தின்னவேலி மாவட்டத்திலிருந்தும் இங்கு குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது (பக் 203)
என்று கட்டுரையாளர் குறிப்பிட்டு இந்தியத்தமிழ்ச்சமூக கட்டமைவு பற்றிய பொதுவான சித்திரம் ஒன்றைத் தீட்டுகின்றார். கட்டுரையின் எஞ்சிய பகுதி தோட்டத் தொழிலாளர்களானதமிழர்களின் அரசியல் வரலாற்றின் சில அம்சங்களை எடுத்துக் கூறுகிறது. இலங்கையில் வாழும் இந்தியத்தமிழர்களில் 70 வீதமானவர்கள் தோட்டத் தொழிலா ளர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள், வெளியே உள்ளோர் என்ற இரு பிரிவினரிடமும் இந்தியத் தமிழ்ச் சமூகம் என்ற தனித்துவம் பற்றிய சுயப் பிரக்ஞை வளர்வதையும் கட்டுரை எடுத்துக் காட்டியுள்ளது.
பல்கலைக்கழக அனுமதியும் தேசிய இனப்பிரச்சினையும்’ என்னும் தலைப்பில் சுனில் பஸ்தியன் எழுதிய கட்டுரை 1970-1979 காலப் பகுதியில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக எழுந்த சர்ச்சை பற்றிய ஆய்வாகும். மொழி அடிப்படையிலானதரப்படுத்தல்,

Page 57
110 பிரவாதம்
மாவட்ட கோட்டா என்ற இரு அம்சங்கள் இதில் உள்ளன. இப் பிரச்சினை மொழி மூலமான தரப்படுத்தலுடன் ஆரம்பித்தது. 1973 மொழி மூலமான தரப்படுத்தல். 1974 மொழி மூலமானதரப்படுத்தலும், மாற்றியமைக்கக்கூடியதான
மாவட்ட ரீதியான கோட்டா முறையும். 1975 மொழி ரீதியான தரப்படுத்தலுடன் மாவட்ட ரீதியிலான
கோட்டா முறை. 1979 பின்வரும் விதிபிரயோகிக்கப்பட்டது:முழு இலங்கையிலுமான திறமை அடிப்படையில் 30 வீதம், மாவட்ட அடிப்படையில் 55வீதம், பின்தங்கிய மாவட்டங்களுக்கு பெற்ற புள்ளிகளின் அடிப் படையில் 15 வீதம். பக் 226-227தரப்பட்டுள்ள இத்தகவல்கள் 1979இல் உள்ளபடி இப் பிரச்சினையின் தன்மையை ஊகித்தறிய உதவுகிறது. 1979 முதல் இன்றுவரையான பிரச்சினைகள் எவ்வாறு அமைந்தன என்பதை வாசகர்கள் வேறு மூலங்களில் இருந்தே அறிய வேண்டும். இருப்பினும் இக்கட்டுரை இப்பிரச்சினையின் ஊடாக இலங்கையின் கல்விமுறை அதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் உள்ள தொடர்பு, அப் பிரச்சினை எந்த வர்க்கம் சார்ந்த பிரச்சினை ஆகிய விடயங்களைத் தெளிவுபடுத்துகிறது.
கட்டுரையாசிரியரின் முக்கியமான வாதம் பல்கலைக்கழக அனுமதி மிகச் சிறு குழுவினரான உயர் வகுப்பு சிங்கள மக்கள் குழுவின் நலன்களோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. இது ஊதிப் பெருப்பிக்கப்பட்டு இனப் பிரச்சினை ஆக்கப்பட்டது என்பதாகும். அவரின் வாதத்தின் முக்கிய அம்சங்களை சுருக்கித் தந்துள்ளோம்.
1) பாடசாலைச் சுவீகரிப்பு (பாடசாலைகளை 1960இல் தேசியமய மாக்கியது) அரசநிதியையும், அரச வளங்களையும் பயன்படுத்தி கல்வி மூலம் வர்க்க நலன்களை வளர்த்துக் கொள்ளும் சிங்கள பெளத்த பூர்ஷ்வா வர்க்கத்திற்கு மிகவும் உதவியது (பக். 230).
2) சிங்கள பெளத்த பாடசாலைகளை மனமுவந்தும் மிகக் குறைந்த எதிர்ப்போடும் 1960இல் கையளித்ததானது தமது பிரதிநிதி களாலேயே ஆதிக்கம் செலுத்தும் அரசு ஒன்றுக்குப் பாடசாலை

3)
4)
நூல் அறிமுகம் 1ll
களை கையளித்தல் தமக்கு எந்தவித வகையிலும் பாதிப்புக் களைக் கொண்டுவராது என்ற நம்பிக்கையில் வழங்கப்பட்டது (பக். 230).
சுயமொழிக்கல்வி, இலவசக் கல்வி ஆகியன ஒட்டு மொத்தமான கல்வி முன்னேற்றத்தை கொண்டு வந்த போதும், எழுபதுக்களில் இந்தக் கல்வி முறைக்குள்ளேயே நெருக்கடிகளைக் கொண்டு
வந்தது. அந்த நெருக்கடிகளில் ஒன்று பல்கலைக்கழக அனுமதி.
ஏனெனில், பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கோருவோர்தொகை பன்மடங்கு பெருக, அனுமதிக்கப்படுவோர் தொகை அதிகரிப்பு குறைந்த வேகத்திலேயே சென்றது. பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கோரியோரில் (பரீட்சை எழுதியோர்) பல்கலைக்கழக அனுமதி பெற்றோர் வீதாசாரம் பின்வருமாறு: (சுனில் பஸ்தியன் தரும் நீண்ட பட்டியலில் இருந்து சில ஆண்டுகள் மட்டும் தெரிந்து எடுக்கப்பட்டன.)
1956 – 35.1
1965 20.3
1966 - 11.6
1975 8.4
1977 5.9
1979 6.4
இவ்வாறு அனுமதி கோருவோர் அதிகரிப்பு நிகழ்ந்தபோதும் பல்கலைக்கழக அனுமதி என்பது மொத்த மாணவர் தொகை யின் ஒரு வீதத்தினரின் பிரச்சினையாகவே இருந்தது. ஏனெனில் முழுத்தீவிலும் 100 பேர் கொண்ட மாணவர் தொகுதி ஆண்டு ஒன்றில் நுழைந்தால் அத்தொகுதி 5ஆம் ஆண்டை அடையும் போது 60 பேரும், 8ஆம் ஆண்டை அடையும் போது 50 பேரும், 10 ஆம் தரத்தை அடையும் போது 35 பேரும், இறுதியில் பல் கலைக்கழக புகுமுகமான 12ஆம் ஆண்டை அடையும் போது 7 பேரும் எஞ்சுவர். மீதி 93 பேர் இடைவிலகிச் செல்வார்கள். இந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் பல்கலைக்கழகம் செல்கிறார். பாடசாலை மாணவர்களில் ஒரு வீதத்தினர் பல்கலைக்கழகம்

Page 58
112 பிரவாதம்
சென்றபோதும் கலைப் பட்டதாரி படிப்புக்கு அனுமதி ஒரு போதும் பிரச்சினையாக இருக்கவில்லை. மருத்துவம், பொறி யியல் ஆகிய துறை மாணவர் அனுமதிதான் சிங்கள உயர் வர்க்கத்தின் அக்கறைக்குரிய பிரச்சினையாகியது.
சுனில் பஸ்தியன் முன் வைக்கும் வாதங்கள் சுவாரசியமானவை.
இலங்கையின் கல்வி முறைமை உயர்தர, நடுத்தர வர்க்கத்திற்கே
நன்மை தருகின்றது என்ற கருத்தை ஆதாரப்படுத்தும் புள்ளிவிபரங்
கள் சிலவற்றைக் குறிப்பிட்ட பின்னர் அவர் பின்வருமாறு
கூறுகிறார்.
மேற்கூறிய காரணிகள் யாவும் எமது சமூகத்தின் உயர்தர, நடுத்தர வர்க்கத்தினரே எமது கல்வி முறைகளால் நன்மையடைந்தனர் என்பதைக் காட்டுகின்றன. இலவசக் கல்வி முறை என்பது உண் மையில் நாட்டின் வளங்கள் யாவும் எமது சமூகத்தின் மதிப்பு வாய்ந்த பிரிவுகளின்நலனுக்காகப் பயன்படுத்துவதற்குரிய உத்தியே யாகும். சகலருக்கும் இலவசக் கல்வி என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதன் மூலமும், மதிப்பு வாய்ந்த வகுப்பினருக்கு சகல நன்மைகளையும் அளிப்பதான ஒரு அமைப்பை வைத்திருப்பதன் மூலமும் எமதுநலன்புரி அமைப்பு என அழைக்கப்பட்ட அமைப் பானது, கல்விமுறையிலும் கூட வர்க்க முறைகளை ஏற்படுத்தியது. கல்வி முறையில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைகளும் கூட இக்கல்வி வசதிகளை அடையக்கூடிய சமூகத்தினராலேயே மிகக்
கூர்மையாக உணரப்படும் (பக். 234).
சாள்ஸ் அபயசேகர 'அரசாங்க சேவையின் உயர் பதவிகளில் இன வாரியான பிரதிநிதித்துவம்’ என்னும் கட்டுரையை எழுதியுள்ளார் (பக். 241 260). இக்கட்டுரை முதற் பகுதியில் எஸ்.ஜே. தம்பையா என்னும் ஆய்வாளர் 1870-1946 காலப்பகுதியில் மருத்துவம், பொறி யியல், நீதிச்சேவை, சிவில் சேவை ஆகிய உயர் நிர்வாக சேவைத் துறைகளில் இனக்குழும வாரியான பிரதிநிதித்துவம் எவ்வாறு இருந்தது என்பது பற்றி புள்ளிவிபர ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டிய தரவுகளைத் தருகின்றார். தம்பையாவின் கட்டுரை 1955 இல் எழுதப்பட்டது. அடுத்து பி.ரி.எம். பெர்னாண்டோ என்ற ஆய் வாளர் 1970ஆம் ஆண்டில் எழுதிய'இலங்கைச் சிவில் சேவையில் ஆட்சேர்ப்புக் கொள்கைகள் 1880-1920 என்ற ஆய்வுக் கட்டுரையில்

நூல் அறிமுகம் 13
தெரிவித்த தரவுகளையும் தொகுத்துத் தருகின்றார். இவ்விரு ஆய் வாளர்களின் தரவுகளைக் கொண்டு 1946க்கு முற்பட்ட காலத்தின் நிலை பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறுகிறார். அரசாங்க உயர் பதவிகளில் இனக்குழுமங்களின் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் இருக்கவில்லை. இதில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. மக்கள் தொகையில் 11 வீதத்தினரானதமிழர்கள் மருத்துவத்துறைப் பதவிகளில் 33 வீதத்தையும், பொது வேலைப் பகுதியில் 17 வீதத்தையும், 1930 ஆம் ஆண்டில் பெற்றிருந்தனர். பறங்கியர்கள் சனத்தொகையின் 0.7 வீதம் ஆக இருந்தனரேனும் 1930 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் 19 வீதத்தையும், பொது வேலைப் பகுதியில் 27 வீதத்தையும் பெற்றிருந்தனர். சிங்களவர் தமது சனத்தொகை வீதாசாரத்திலும் குறைந்தளவு வீதப்பதவிகளையே இத்துறைகளில் பெற்றிருந்தனர். 1946க்கு பிற்பட்ட 16 வருட காலத்தில் (1946 - 1962) ஏற்பட்ட மாற்றங்களை புள்ளிவிபரங்களைப் பகுப் பாய்வு செய்து தனது முடிவுகளை சாள்ஸ் அபயசேகர தொகுத்துத் தருகிறார்.
1) நிர்வாக சேவையைப் பொறுத்தவரை சிங்களவரின் அதிகரித்து வரும் ஆதிக்கம் வெளிப்படையானது. அவர்களின் பங்கு மக்கள் தொகை விகிதாசாரத்திலும் கூடியது. சிறுபான்மையினர் தமக் குரிய அளவிலும் குறைந்த பங்கையே பெற்றுள்ளனர்.
2) மருத்துவம், பொறியியல், கணக்கியல் ஆகிய உயர் தொழில்களில் இத்தகைய போக்கு இல்லை. ஆகப் பிந்திய புள்ளிவிபரங்களில் இருந்து இது தெளிவாகிறது. 3) பறங்கியர் சமூகம் தனது பங்கை முற்றாக இழந்து விட்டது.அரச உயர் சேவையில் அதன் பங்கு ஏறக்குறைய ஒழிந்து விட்டது என்றே கூறலாம்.
4) முஸ்லிம்கள் ஒப்பீட்டு ரீதியில் குறைந்த பங்கையே பெற்றுள்
ளார்கள்.
1962 வரையுள்ள காலத்தின் போக்குகளை விபரித்த பின் உயர் பதவிகள் தொடர்பான அரசியல் பற்றிய பல உண்மைகளை சாள்ஸ்

Page 59
114 பிரவாதம்
அபயசேகர தெளிவுபடுத்துகிறார். அவர் கூறியிருக்கும் ஒரு கருத்தை மட்டும் இங்கு மேற்கோளாகத் தருகின்றோம்.
சமூக முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த மார்க்கமாக அரசாங்க சேவையை (இச்) சிறு முதலாளி வர்க்கம் தனது விருப்புக்குரிய வழியாக கொண்டுள்ளது. இச்சிறு முதலாளி வர்க்கமே படித்த வகுப்பினரில் பெரும் பகுதியினராக இருப்பதால், தமது கருத்துக் களையும் கோரிக்கைகளையும் முன்வைப்பதிலும் இத்துறையில் நிகழும் போட்டியில் ஈடுபடுவதிலும் முன் நிற்கின்றனர். பாம்பாட்டிகள், நாடோடிகள், குறி சொல்லுவோர் யாவரும் தமிழர்களாக இருந்தபோதும், இவர்கள் சிங்கள சிறு முதலாளி வர்க்கத்தினரைக் கவரவில்லை. ஆனால் உயர் பதவிகளில் தமது பங்குதடைப்படுகிறது என்பதைக் காணும்போது இவர்கள் கிளர்ந்து எழுகின்றனர் (பக் 254).
சுனில் பஸ்தியன் ஆராய்ந்த பல்கலைக்கழக அனுமதி என்ற பிரச்சினை, சாள்ஸ் அபயசேகர ஆராய்ந்த அரசாங்க உயர் பதவிகளில் வெவ்வேறு இனக் குழுமங்களின் பிரதிநிதித்துவம் என்ற பிரச்சினை என்ற இரண்டும் பொதுவான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவ் விரு ஆய்வாளர்களின் முடிவுகளிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. இலங் கையின் முதலாளித்துவ வகுப்பும், குட்டி முதலாளித்துவ மத்தியதர வகுப்பும் தமது சுயநல நோக்கங்களை எய்துவதற்காக இப்பிரச் சினைகளைக் கருவிகளாக உபயோகிக்கின்றன என்பதே இவர்கள் இருவரதும் கருத்தாகும்.
1985 ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த இந்நூல் 26 ஆண்டுகள் கழிந்த பின்னர் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. சிங்களதமிழ் அறிஞர்கள் ஒன்று கூடித் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை குறித்து உணர்ச்சி ரீதியாக இல்லாமல் விஞ்ஞான முறையில் ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந் நூலின் மறுபதிப்பு, மிகுந்த பயனுடைய வெளியீடு.
-‘ஹரன்

அஞ்சலி
வரலாற்றுப் பேரறிஞர் ஆர்.எஸ். சர்மா C192O-2O11)
வரலாற்றுப் பேரறிஞரும் மார்க்சிஸ்ட் முறையியலை வரலாற்று ஆய்வில் சிறப்புற பயன்படுத்தியவருமான ஆர்.எஸ். சர்மாவின் மறைவை முன்னிட்டு அவர் பற்றிய கட்டுரைகள் அண்மையில் ஆங்கிலத்தில் வெளிவந்தன. ரொமிலாதாப்பர், டி. என். ஜா, சுவிரா ஜயஸ்வால், ஆகியோர் இக்கட்டுரைகளை எழுதினர். இக்கட்டுரை களில் இருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தொகுத்துக் கீழே தந்துள்ளோம்.
ரொமிலா தாப்பர்
இவர் தனது கட்டுரையில் ஆர்.எஸ். சர்மாவை முதலில் சந்தித்தது, அவரது புலமை ஆளுமை, அவருக்கு இருந்த மதிப்பு ஆகியன பற்றிய மனப்பதிவுகளை தெரிவித்துள்ளார். அவரது நீண்ட கட்டுரையின் தொடக்கப் பகுதி வருமாறு:
1. Economic and Political Weekly, Vol. xlvi, No.3, Sep. 17, 2011, pp. 22-25.

Page 60
116 பிரவாதம்
1950 க்களின் நடுப்பகுதியில் ஆர்.எஸ். சர்மாவை நான் முதன் முதலாக லண்டனில் சந்தித்தேன். அப்போது நான் லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்தைய மற்றும் ஆபிரிக்க கற்கைகள் filpi 6160135a) (School of Oriental and African Studies) 97.61&lg guig வேலையை தொடங்கியிருந்தேன். ஆர்.எஸ். சர்மா பி.எச்.டி.க்கு பிந்திய பட்ட ஆய்வு நிமித்தம் அங்கு வந்தார். நான் பீஏ. (சிறப்பு) பட்டதாரியாக பட்டம் பெற்றிருந்தேன். பண்டைய இந்தியா எனது சிறப்புப் பாடத்துறை. ஏ.எல். பாசாம் சிலரின்நூல்களைப் படிக்கும்படி சொல்லியிருந்தார். ஆர்.சி. மஜும்தார், எச்.சி. ராய் செளத்திரி, வின்சன்ட் சிமித் ஆகியோர் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் ஆர்.எஸ். சர்மாவின் அணுகுமுறை பற்றியும் எனக்குச் சொல்லி யிருந்தார். அது வித்தியாசமான ஒரு அணுகுமுறை என்றும் அதனை விட டி.டி. கோசாம்பியின் அணுகுமுறை வேறுபட்டது என்றும் பாசாம் எனக்குக் கூறினார். பின்னர் 'ஆசிய வரலாற்று எழுதியல் (Asian Historiography) என்ற விடயப் பொருளில் பண்டைய இந்திய சமூக வரலாற்று எழுதியல் பற்றி முதன் முதலாக ஒரு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் ஆர்.சி. மஜும்தார்பேசினார். அவரைத் தொடர்ந்து ஆர்.எஸ். சர்மா பேசினார். இந்த மாநாட்டில் நான் அமர்ந்திருந்து இந்த உரைகளையெல்லாம் கேட்ட பின்னர்தான் பாசாம் கூறியவை எனக்கு விளக்கமாயிற்று. அடுத்து இன்னொரு நிகழ்வும் இடம்பெற்றது. நான் ஆய்வு வேலை செய்துகொண்டிருந்த SOAS-ற்கு வருகை தந்து இந்துசமயம் பற்றி தொடர் விரிவுரைகளை ஆற்றும்படி டி.டி. கோசாம்பியை பாசாம் அழைத்திருந்தார். இது மறக்க முடியாதநிகழ்வு. பண்டைய வரலாற்றைப்படிப்பது, ஆராய்வது பற்றிய இன்னொரு பரிமாணத்தை இவ்விரிவுரைகள் காட்டின. அத்தோடு மரபு வழி வந்த வரலாற்று முறைக்கு கோசாம்பியின் விரிவுரைகள் ஒரு சவாலாகவும் அமைந்தன. லண்டன் SOAS. நிறுவனத்தில் இவ்விரு புலமையாளர்களும் குறுகிய காலமே தங்கியிருந்தனர் ஆயினும், அவர்களின் வருகையும், பிரசன்னமும் புதிய சிந்தனைகள் அங்கு முளைவிடுவதற்கு வித்திட்டன. இது சுவாரசியமான விடயம். ஏனெனில், 50 வருடங்களுக்கு முந்திய அந்தக் காலத்தில் பொதுவாக லண்டனின் கிழக்கத்தைய மற்றும்

அஞ்சலி 117
ஆபிரிக்கக் கற்கைகள் நிறுவனம் ஆசியா பற்றிய கல்வியில் பழமை பேண் போக்குக் கொண்டதாகவே இருந்தது.
ஆர்.எஸ். சர்மா அவர்கள் கோசாம்பியை விட, நீண்ட நாட்கள் S.O.A.S. இல் தங்கியிருந்தார். அவர் மாணவர்களோடு பண்டைய, நவீன வரலாற்று விடயங்கள் பற்றி அடிக்கடி உரையாடுவார். அவர் அணுகுவதற்கும் பேசுவதற்கும் மிகவும் எளிமை மிக்க ஒருவராக இருந்தார். மாணவர்களின் ஆய்வுப் பிரச்சினைகளை கலந்துரை யாடுவதிலும், எங்கெங்கே விடயங்களைத் தேடலாம் என்பதற்கான மூலங்களை அடையாளம் காண்பதிலும் அவர் உதவுவார். அத்தோடு இளம் ஆய்வாளர்களுக்கு உற்சாகத்தை வழங்குபவராகவும் அவர் களின் விருப்புக்குரிய விடயங்களில்தானும் அக்கறை காட்டி ஊக்கம் அளிப்பவராகவும் இருந்தார். ஆரம்ப காலம் தொட்டே அவர் மார்க் ஸியக் கல்வியில் காட்டிய ஈடுபாடு சமூக வரலாறு, பொருளாதார வரலாறு தொடர்பான எழுத்துக்களில் வெளிப்பட்டதோடு, சம காலத்தின் விவசாய இயக்கங்கள், இந்தியா பற்றிய மார்க்ஸிய ஆய் வுகள் ஆகியவற்றிலும் வெளிப்பட்டன. ராகுல சாங்கிருத்தியாயன் பற்றி முதன் முதலாக நான் ஆர்.எஸ். சர்மா ஊடாகத் தான் அறிந்து கொண்டேன்.
சுவீராஜயஸ்வால்? இந்திய நிலமானியம்: 1965இல் ஆர்.எஸ். சர்மாநிலமானியம் என்னும் மாதிரியை இந்திய நிலைமைக்குப் பிரயோகிக்கும் முறையிலான வரலாற்று ஆய்வுநூலை வெளியிட்டார். இந்நூல் பெரும் சர்ச்சையை உரு வாக்கியது. அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் எழுதினர். டி.டி. கோசாம்பி இந்திய நிலமானியம் பற்றிய தனது கருத்துக்களை ஆர்.எஸ். சர்மா எழுதுவதற்கு முன்னரே தெரிவித்திருந்தார். சர்மாவின் கருத்துக்கள் கோசாம்பியின் கருத்துக்களில் இருந்து சில அம்சங்களில் வேறுபட்டனவாய் இருந்தன. சர்மா ஆழமான ஆய்வு நோக்கையும், முனைப்பான வாதங்களையும் முன் வைத்தார். சர்மாவின் நூலினைப் பற்றிய கண்டனங்களிற்குப் பதில் அளிக்கும் முறையில் இன்னொரு நூல் பின்னர் அவரால் எழுதப்பட்டது. இந்திய நகரங்களின் அழிவு: கி.பி. 300 கி.பி. 1000 1. Frontine, vol. 28, No. 19, Sep. 10-23, 2011.

Page 61
118 பிரவாதம்
(UrbanDecayinIndia) என்பது இந்நூலின்தலைப்பு. இந்தியநகரங்களின் சிதைவும் அழிவும் என்ற விடயம் அவரது நிலமானியம் பற்றிய விளக்கத்தின் ஓர் அம்சமாகும். இவ்விடயம் பற்றிய இந்த நூலிற்கு இந்திய வரலாற்றியல் கழகத்தின்'பாபுஜரி பரிசில் வழங்கிப்பட்டது. இந்திய நகரங்களின் அழிவு பற்றிய தொல்லியல் ஆதாரங்களை இந்த நூலில் சர்மா பயன்படுத்தினார். பின்னர் 2001 ஆம் ஆண்டில் இன் னொரு நூலை வெளியிட்டார். ஓரியன்ட் லோங்மன்ஸ் பதிப்பக 66 Gius IIGOTg)ilbirgi Early Medieval Indian Society: A Study in Feudalisation (இடைக்காலத்தின் முற்பகுதியில் இந்திய சமூகம் நிலமானியமாதல் பற்றிய ஓர் ஆய்வு) என்ற தலைப்புடையது. நிலமானியம் பற்றிய தனது கருத்துக்களுக்கு எழுந்த மறுப்புரைகளிற்கு சர்மா இந்நூலில் தெளிவான பதில்களைத் தந்துள்ளார்.
‘பண்டைய இந்தியா’ பாடநூல்: வரலாற்று எழுத்தாளர் சிலர் இந்தியா வின் பண்டைய வரலாற்றை இனவாத நோக்கில் திரிபுபடுத்தி, தமது நிகழ்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் போக்கை சர்மா வெறுத்தார். அத்தகைய வரலாற்று எழுத்துக்களின் பக்கச் சார்பான நோக்கையும், விஞ்ஞான மறுப்புப் பார்வையையும் அம்பலப்படுத்த வேண்டும் என்பது சர்மாவின் வாழ்நாள் நோக்கங்களில் ஒன்றாக விருந்தது. இதனால் அவர் பாடநூல்களையும், சிறு நூல்களையும் எளிமையான நடையில் யாவருக்கும் புரியக்கூடிய முறையில் எழுதினார். இவை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பிரசுரிக்கப்பட்டன. நைந்து போனவையும், பகட்டானவையுமான சொற்பிரயோகங்களை தவிர்த்து, எளிமையான மொழிநடையில் புரியும் படியாக எழுதினார். வரலாற்றுத் துறையில் நிபுணர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் மத்தியில் ஒப்புதல் பெற்ற பொது முடிவுகளைப் பாடநூல்கள் வெளிப்படுத்த வேண்டும்; பாடநூல்கள் பகுத்தறிவு நோக்கையும், விடயங்களைப் புறவயமாக நோக்கும் இயல்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்பன சர்மாவின் உறுதியான நம்பிக்கைகளாகும். அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற விழுமியங்களையும் மாணவர் மனதில் பதிய வைப்பன வாக பாடநூல்கள் இருத்தல் வேண்டுமெனவும் சர்மா கருதினார். சர்மாவின் நோக்கு முறை தமது நிகழ்ச்சி நிரலைக் குழப்புவதாக

அஞ்சலி 119
இருந்ததைக் கண்ட இனவாதிகள், அவரைத் தாக்கத் தொடங்கினர். சர்மா 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக எழுதிய 'பண்டைய இந்தியா பாடநூல் NCERT என்னும் கல்வித்துறை அமைப்பினால் பிரசுரிக்கப்பட்டு பாடநூலாக அங்கீகாரம் பெற்றிருந்தது. மொரார்ஜி தேசாய்தலைமையிலான ஜனதா கட்சி அரசாங்கம் பதவியில் இருந்த போது, இந்நூல் வெளியிடப்பட்டது. இனவாதிகளின் நெருக்குதல் களால் அரசின் பணிப்புரையின்படி இரண்டாம்நிலைக் கல்விக்கான மத்திய வாரியம் (CBSE), சிபார்சு செய்யப்பட்ட பாடநூல்களின் பட்டியலில் இருந்து ‘பண்டைய இந்தியா நூலை நீக்கி விடும்படி உத்தரவிட்டது. இருந்த போதும் NCERT இப்பாடநூலை பிரசுரித்தது. இறுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் இந்நூல் பாடநூலாக உபயோகிப்பது தடைசெய்யப்பட்டது. இந்நூல் மட்டுமல்லாமல் ‘சர்ச்சைக்குரிய வேறு பல வரலாற்றுப் பாடநூல்களும் தடை செய்யப்பட்டன என்று பேராசிரியர்அர்ஜுன்தேவ் குறிப்பிட்டுள்ளார். 2004ஆம் ஆண்டின் தேர்தலுடன்ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், இந்த நூல்களை மீண்டும் பாடநூல்களாக உபயோகிக்க அனுமதி வழங்கப்படவில்லை. பாடத்திட்டத்தில் இனவாதக் கருத்துக்களைப் புகுத்துதல் என்ற பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது; அது இன்று ஒரு பிரச்சினையே அல்ல என்று NCERT கூறியது; இதற்கு முற்றுப் புள்ளி இட்டது. சர்மாவின் பாடநூல் "Indias Ancient Past என்ற தலைப்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பிரசுரநிலையத்தால் 2005 ஆம் ஆண்டில் பெயர் மாற்றத்துடன் பிரசுரிக்கப்பட்டது.
இனவாதிகளுக்கு உறுத்துதல் தரும் பல விடயங்கள் சர்மாவின் பண்டைய இந்தியா பாடநூலில் இருந்தன. சாதி முறையின் அநீதி களை இது எடுத்துக் காட்டியது. பண்டைய இந்தியாவில் மாட்டி றைச்சியை உண்ணும் வழக்கம் இருந்தது என்று கூறியிருத்தல், அயோத்தியின் இராமன் பற்றிய கதையிலும் மகாபாரதத்தின் கிருஷ்ணன் கதையிலும், உள்ள புனைவு அம்சங்களைத் தெளிவு படுத்தியது ஆகிய விடயங்கள் இனவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதனவாய் இருந்தன. பாட நூல்களில் இவை இருட்டடிப்புச் செய்வதையே அவர்கள் விரும்பினர். இராமர், கிருஷ்ணர் கதைகள் புனைவு என்பதை சர்மா தொல்லியல் சான்றுகளை ஆதாரம் காட்டி

Page 62
120 பிரவாதம்
நிறுவினார். பாடநூலில் சர்மா கூறியிருப்பவை அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட பொது முடிவுகளாகும். அவை ஆதாரபூர்வமான வரலாற்று உண்மைகள். இருப்பினும் இந்துத்துவ சக்திகள் இக்கருத்துக்கள் இளம் சந்ததியினர் மனதில் பதியவைக்கப்படுவதை விரும்பவில்லை. சமூகத்தில் எல்லாமட்டங்களிலும் உள்ள மக்கள் மத்தியில் இந்துத்துவ சக்திகள் பொய்மையான பழைய நம்பிக்கைகளையும், அறிவுக்கு மாறான எண்ணங்களையும் பரப்பி, அவர்களைத் தவறான வழியில் நடத்தித்தம் அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்துவதை நோக்க மாகக் கொண்டிருந்தன. ஆதலால் பகுத்தறிவு, விஞ்ஞான நோக்கு என்பனவற்றின் அடிப்படையில் எழுதப்படும் பாட நூல்களை இந்துத்துவ சக்திகள் ஆபத்தானவையாகக் கருதியதில் வியப்பில்லை. சர்மாவின் பாடநூலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டதாக்குதல்களுக்கு பதிலளிக்கும் முறையில் அவர் 1n Defence of Ancient India என்ற சிறு பிரசுரத்தையும் வெளியிட்டார்.
டி.என்.ஜா"
பண்டைய இந்தியாவில் அரசும் அரச நிறுவனங்களும் 1959 ஆம் 9,607(6) Aspects of Political Ideas and Institutions என்ற ஆய்வை ஆர். எஸ். சர்மா வெளியிட்டார். ஜயஸ்வால் போன்ற சில வரலாற்றாசிரி யர்கள் பண்டைய இந்தியாவைத் தேசியவாத இனவாத நோக்கில் ஆராய்ந்தனர். இம்மீட்புவாதக் கோட்பாட்டாளர்களின் கருத்துக்களை ஆர்.எஸ். சர்மா இந்நூலில் விமர்சனத்திற்கு உட்படுத்தினார். பொருண்மியக் கூறுகளிற்கும் சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்புக்கும் இடையிலான உறவை சர்மா தெளிவுபடுத்தினார். இவ்விடயம் இவர் பின்னர் எழுதிய இரண்டு நூல்களில் மேலும் துலக்கமாயிற்று. 'g)iSunT6ílai g|J6Fair G5Töplb (Origin of the State in India - 1989), *மத்திய கங்கைச் சமவெளியில் அரசும் வருண அமைப்பும் இன (6)5(TaiyaSugi) Gibsidi(g)' (The State and Varana Formations in the Mid-Ganga Plain: An Ethno-Archaeological View- 1996) 676öTL/607Gou9/6/65)(5 s5/Taij56h. பண்டைய இந்தியாவில் அரசு சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சி நிலைகளின் பல்வேறு அம்சங்களை இந்த நூல்கள் முதற்தடவையாக எடுத்துக் காட்டின. வேதகால ஆசிரியர்களிடம் ‘சனங்களின் சபை
1. Economic and Political Weekly, Vol. xlvi, No. 3, Sep. 17, 2011.

அஞ்சலி 121
என்ற அமைப்பு இருந்தது என்ற கருத்தை ஆர்.எஸ். சர்மா எடுத்துக் கூறினார். இக்கருத்தை இவருக்கு முன்னர் யாரும் கூறியதில்லை.
சூத்திரர்கள் பற்றிய ஆய்வு: ஆர்.எஸ். சர்மா இந்தியாவின் சமூகக் கட்டமைப்பையும் அதன் சுரண்டல் தன்மையினையும் நுணுக்கமாக ஆராய்ந்தார். பண்டைய இந்தியாவில் சாதி முறையின் பொருளாதார அம்சங்கள் குறித்து 1952ஆம் ஆண்டில் சர்மா ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை எழுதினார். சாதி பற்றி இவர் எழுதிய முதலாவது ஆய்வு இது. இதன் பின்னர் அவர் பட்னாவில் இருந்த காலத்தில், சாதி பற்றிய பல அம்சங்களையும் ஆராயும் கட்டுரைகளை ஹிந்தி மொழி யில் எழுதி, சஞ்சிகைகளிலும், பருவ இதழ்களிலும் வெளியிட்டார். இக்கட்டுரைகள் மூலம் சாதி அடுக்கின் கீழ் மட்டங்களில் இருந்தோரின் அடிமைநிலை பற்றி அவர் விரிவாக எடுத்துக் கூறினார். சாதி பற்றிய முழுமையான ஆய்வை தொடர்ந்த ஆர்.எஸ். சர்மா 1956ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ்த்திசையியல் மற்றும் ஆபிரிக்க கற்கைகள் நிலையத்தில் ஆய்வேடு ஒன்றைச் சமர்ப் பித்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவ்வாய்வு பின்னர் 1958இல் நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. இலக்கிய ஆதாரங் களை ஆதாரமாகக் கொண்டு, அவற்றைப் பரிசீலனை செய்யும் முறையில் சூத்திரர்நிலை பற்றி எழுதப்பட்ட இந்நூல், குப்தர்காலம் வரையான சமூகநிலைமைகளை ஆராய்வதாக இருந்தது. இது புதுப் பாதையை காட்டிய நூல். இவரது மாணவர்கள் பலர் இவ் வழியில் சென்று பல ஆய்வுகளை வெளியிட்டனர். சாதி என்ற நிறுவனம் இந்தியாவில் கெட்டி தட்டிப் போய் தேக்கமடைந்ததாய் இருக்க வில்லை; அது தொடர்ச்சியானமாற்றத்திற்கு உட்பட்டதோர்நிறுவனம் என்பதே சர்மாவின் ஆய்வில் வெளிப்பட்ட முக்கியமான கருத்தாகும். சூத்திரர்களதும், தீண்டப்படாதவர்களதும் வரலாறு அம்மக்களுக்கும் உற்பத்திச்சாதனங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பொறுத்ததாக இருந்தது என்று கூறினார். உற்பத்தி சாதனங்களுடன் இம்மக்கள் கொண்டிருந்த தொடர்பில் மாற்றம் ஏற்பட்ட போது அவர்களின் வாழ்க்கை நிலையிலும் மாற்றம் ஏற்பட்டதை சர்மா எடுத்துக்
காட்டினார்.

Page 63
போரின் படிப்பினைகள் 2 நெருக்கடியின் பாதை
- ஜோன்றிச்சாட்சன் -
ஜோன் றிச்சாட்சன் நஞ்சூட்டப்பட்ட சுவர்க்கம்’ என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூல் எட்டுப் பகுதிகளாக தமிழில் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்வரிசையில் 2ஆவது நூல் ‘நெருக்கடியின் பாதை' என்ற தலைப்புடையது. இலங்கையின் அரசியல் வேறுபாடுகள் தொடர்ச்சியான வன்முறை மோதல்களாக மாறியதன் பொருளாதாரப் பின்னணியினை இந்நூல் ஆராய்கிறது.
ຫຼິ
போரின் படிப்பினைகள் 8 நம்பிக்கையின் மலர்ச்சி
- ஜோன்றிச்சாட்சன் -
நஞ்சூட்டப்பட்ட சுவர்க்கம் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வரிசையின் 3ஆவது நூல் ஆங்கில மூலநூலின் 4ஆம், 5ஆம், 6ஆம் அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலில் 1948 முதல் 1965 வரையுள்ள காலத்தின் இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆசிரியர் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்.
யோன் றிச்சார்ட்சன் பொருளியல், அரசியல், சர்வதேச விவகாரம் ஆகிய துறைகளின் புலமையாளர். பல நூல்களின் gy,6tfuti. Paradise Poisoned brai) gasi கையின் இனப்பிரச்சினையின் அரசியற் பொருளாதாரத்தை ஆராயும் சிறப்புமிக்க நூல்.
 


Page 64

ISSN 1391-7269
|
먹' 77 II,王 FII, 17근 -, D] []