கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2012.03

Page 1

ISSN 2012 (6700 68) o 08.
ఊ
NOOrll Ain
rination Officer)

Page 2
With Best Compliments From:-
EVE STARTEXTOLES (CENTRE,
WHOLESALE & RETAIL TEXTILE DEALERS
No. 95, 2nd Cross Street, Colombo - 11, Sri Lanka. Tel:- 011 2441810, 2345280, 2441809
Fax :- 94 - 1 - 2345184 / 25824.53
 
 
 

O1
Best Queen Foundation வெளியீடு
பூங்காவணம்
இதழ் 08 - 2012 மார்ச் ISSN 2012 - 6700
ஆசிரியர் குழு
ரிம்ஸா முஹம்மத் எச்.எப். ரிஸ்னா டப்ளியு.எம். வஸிர்
ஆலோசகர்
திருமதி. ஐரீனா முஸ்தபா
வங்கித் தொடர்புகளுக்கு
Commercial Bank, Mount Lavinia Branch, Best Queen Foundation, A/C No - 89300 16177.
என்ற இலக் கத்திற்கு காசை வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டை அனுப்ப வேணர் டும் . காசுக் கட்டளைகளாயின் (M.F Rimza - Dehiwala Post Office) 6 6i pi குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் அனுப்ப வேண்டும். காசோலையாயின் குறுக்குக் கோடு இடப்படாத காசோலையை M.F.Rimza எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
தனிப்பிரதி - 80/= தபால் மூலம் - 100/- வெளிநாடு - 2.5S
தொடர்புகளுக்கு
"Poongavanam".
21 E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
Email:- bestcqueen 12G)yahOO.COm
Website:- WWW, bestQueen 12, blogspot. COm
Phone:- O094 (0)77 5009 222 O094 (0)714403251
புதிய ஆக்கங்களும், இச்சஞ்சிகை பற்றிய விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
- - - - - - - - - - - Lj60LUL485(6535(5 படைப்பாளிகளே பொறுப்பு. செவ்வைப்படுத்த ஆசிரியர் குழுவுக்கு l- உரிமையுண்டு. -
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 3
பூங்காவின் O2 இதழ் 8
ପଞgଣୀ இருநிமி ်ထ
மலர்ந்திருக்கும் 2012ம் ஆண்டில் அன்புள்ளம் கொண்ட உங்கள் யாவருக்கும் எமது சந்தோஷத்தையும், வாழ்த்துக் களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பிறந்துள்ள இந்த இனிய ஆண்டில் உங்களதும், எங்களதும் எண்ணங்கள் யாவும் ஈடேற வல்ல இறைவன் துணை புரிவானாக!
பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தாலும் கூட, இறைவனின் கருணையாலும், வாசக உள்ளங்கள், விளம்பரதாரர்களின் மேலான பங்களிப்புக்களாலும் பூங்காவனம் எட்டாவது இதழ் வெளியிடப்படுகிறது.
ஆண்களின் அந்தஸ்துக்கு சமமாக இன்று பெண்கள் தனது திறமைகளைக் காட்டி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பெண்ணியம் பற்றி எல்லா மட்டத்திலும் பேசப்பட்டு வருகிறது. பெண்களுக்கான சுதந்திரம் பூரணமாக அளிக்கப்படவில்லை என்பதே அதன் தலைப்புச்செய்தி. எனினும் முன்னைய தலைமுறைப் பெண்களுக்கும், இன்றைய தலைமுறைப் பெண்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் சுதந்திரம் பற்றி சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது.
அன்றைய பெண்களை சமையல்காரிகளாகவும், போகப் பொருளாகவும்தான் ஆண் சமூகம் பார்த்தது. திருவிழாக்கள், திருமணங்கள் போன்ற பொது விடயங்களில் கூட பெண்களின் ஈடுபாடு இருக்கவில்லை. அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படவில்லை. சொத்துக்களின் வாரிசாகவும் ஆண்கள் மாத்திரமே இருந்தார்கள். பெண் பிள்ளைகள் பிறந்தால் அதை அபசகுனமாக நினைத்தார்கள்.
ஆனால் தற்போதைய சூழ்நிலை அவ்வாறு இல்லை. இவற்றில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கல்வியாகட்டும், தொழிலாகட்டும், அரசியலாகட்டும், விஞ்ஞானமாகட்டும் அனைத்திலும் பெண்களின் உள்ளிடு அதிகரித்த மட்டத்தில் இருக்கின்றமை வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். இந்த முன்னேற்றத்திற்கு, பெரும்பலான ஆண்கள் பக்க பலமாக இருக்கிறார்கள் என்பதே இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மகிழ்ச்சியான விடயமாகும்.
எனினும் இதில் வருந்தக்கூடிய விடயம் என்னவென்றால் பெண்ணியம் என்ற வசனம் பலராலும் தவறாக உணரப்பட்டிருப்பதுதான். அதாவது ஆபாசமாக இருந்தாலும், கட்டுமீறி நடந்தாலும் ஆண்களால் பிரச்சனைகள் ஏற்படக் கூடாதென்பதையே பலர் பெண் ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது. அதிக சுதந்திரம் ஆபத்தையே விளைவிக்கும். அது பெண்ணினத்தை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும், வரம்புமீறி நடப்பதை பெண்ணியம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பெண்ணியவாதிகள் சற்று சிந்திக்கட்டும். பெண்ணினத்தின் புனிதம் காக்கட்டும். மகளிர் தினத்தை அனைவரும் கொண்டாடி பெண்களை மதிப்போம்!!!
- ஆசிரியர் குழு
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

நேர்காணல்
திருமதி. நூருல் அயின்
கவிதைகள்
பதுளை பாஹிரா கவிமலர் குறிஞ்சி நிலா பி.ரி. அஸிஸ் கலைமகன் பைரூஸ்
சிறுகதைகள்
இக்ராம் எம். தாஹா சூசை எட்வேட் எஸ்.ஆர். பாலசந்திரன் ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
கட்டுரைகள்
கவிஞர் ஏ. இக்பால் நாச்சியாதீவு பர்வீன்
கா. விசயரத்தினம்
நூல் மதிப்புரை
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வாசகர் கடிதம்
நூலகப்பூங்கா
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 4
04
சந்திப்பு : வெலிகம ரிம்ஸா முஹம்மத் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
மலையகத்தின் உடுதெனிய எனும் கிராமத்தைச் சேர்ந்த மர்ஹ"ம் அல்ஹாஜ் எம்.எம். ரஷித், திருமதி உம்மு ஸல்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியாவார். இவர் உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயம், மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றதோடு, கொழும்பு திறந்த பல்கலைக் கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளதோடு கணணித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
இவர் இலங்கையிலேயே ஊடகத்துறையில் முஸ்லிம் பெண் ஊடக அதிகாரியாக மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக பணியாற்றி வரும் ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரியவர். தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தின்_கொழும்பு மாவட்ட தகவல் ega Tfuus (District Information Officer) J60ffögi 6(bašp3TÜ. பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட இந்தப் பெண் படைப்பாளியை இம்முறை எமது வாசகர்களுக்காக மகளிர் தினத்தில் பூங்காவனத்துக்கு அழைத்து வந்துள்ளோம்.
இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?
உடுதெனிச்செல்வி, பின்த் ரஷித், பின்த் ஸல்மா, கண்ணொளி ஆகிய புனைப்பெயர்களில் எழுதி வந்த நான், இலக்கிய உலகில் மட்டுமல்ல ஊடகத்துறையிலும் கரடுமுரடான பாதையைத்தான் கடந்து வந்திருக்கிறேன். இத்துறையில் கடந்து வந்த பாதை காபட் பாதையல்ல. கற்களும், முட்களும் நிறைந்த பாதை. இன்றைய எழுத்தாளர்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் எதுவுமே அன்று இருக்கவில்லை. இன்று ஒரு பத்திரிகை இல்லையென்றால் இன்னும் எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. ஒரு வானொலி அலை வரிசையில் ஒலிபரப்பாகாவிட்டால் இன்னும் எத்தனையோ வானொலி அலைவரிசைகள். ஆனால் அன்று அப்படியல்ல. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே பத்திரிகைகள், வானொலி அலைவரிசைகள் இருந்தன.
வானொலியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே. எனவே ஓர் ஆக்கத்தை எழுதி அனுப்பிவிட்டு அது பிரசுரமாக, ஒலிபரப்பாக பல வாரங்கள் ஏன் மாதங்கள்கூட பொறுமை காக்க வேண்டும். அனுப்பிய ஆக்கம்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

05
பிரசுரமாகவில்லை, ஒலிபரப்பாகவில்லை என நாம் சோர்ந்து போயிருந்தால் இன்று நாமெல்லாம் முகவரி இல்லாத எழுத்தாளர்களாய் எங்கோ ஒதுங்கிப் போயிருப்போம்.
எழுத்தாளர்களை பொறுத்தவரை விடாமுயற்சி மிகவும் முக்கியம். பத்திரிகை அலுவலகத்திற்கு காலடி எடுத்துவைத்த முதல் மாதத்திலேயே ஒரு சகோதரர், 'சிஸ்டர், கழுத்தறுப்புக்கள், குத்துவெட்டுக்கள் நிறைந்த பொல்லாத இடத்துக்கே வந்துள்ளிகள். ஓரிரு மாதங்களாவது இங்கு நீடிப்பீர்களோ தெரியாது’ என்றார்.
ஆனால், அல்லாஹற்வுக்கே எல்லாப் புகழும். எழுத்துத் துறையிலும், ஊடகத் துறையிலும் பல சவால்களை முறியடித்து வெள்ளி விழாவையும் தாண்டி இன்று பொன்விழா நோக்கி நகர்கின்றேன் என்ற நற்செய்தியைக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கிராமப்புரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நகர வாழ்க்கை புதிய அனுபவம்தான். கொழும்புக் கோட்டைக்கும், புறக்கோட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் நான் பட்ட பாடு பெரும்பாடுதான். அந்த ஆரம்ப கால அனுபவங்களை மீட்டிப் பார்த்தால் ஒரு புத்தகமே எழுதிவிடலாம்.
ஊடகத் துறையிலும், இலக்கியத் துறையிலும் இன்னோரன்ன சிரமங்கள் பட்டே படிப்படியாக முன்னேறினேன். இது இத்துறையில் க்ாலடி வைக்கும் இளசுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்.
திருமணம் எழுத்தாளர் பலருக்கு (கை) விலங்கு போட்டது என்கிறார்கள். உங்களுக்கு எப்படி?
திருமணம் பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு தாழ்ப்பாள் போட்டது என்னவோ உண்மையாக இருக்கலாம். ஆனால் 6T660)60T பொறுத்த வரை பூவிலங்கு போட்டது என்பேன். எனது திருமணம் எனது எழுத்துகளுக்கு நீர் வார்த்தது. உரமிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வெற்றியின் பெருமை முதலில் எனது பத்திரிகையுலகத் தந்தை எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்களையே சாரும்.
நான் இல்லறத்தில் நுழைந்த போது எனது கணவரை அலுவலகத்துக்கு அழைத்த ஐயா அவர்கள், நண்பரே உங்கள் மனைவி ஊடகத் துறையில், எழுத்துத்துறையில் நன்கு ஜொலிப்பவர். இத்துறையில் அவருக்கு சிறந்ததோர் எதிர்காலமுண்டு. எனவே அவரை தொடர்ந்தும் அலுவலகம் அனுப்பி வையுங்கள் என்று கூறி ஆசியுரை பகர்ந்தார். அவரது எதிர்வு கூறலை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கிய போக்கு பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி என்று நோக்கும்போது பெரிதாக திருப்தியடைய முடியாதுள்ளது. நல்ல ஆளுமைமிக்க பெண் எழுத்தாளர்கள் பலர் இன்று தலைமறைவாகி விட்டார்கள் என்ற செய்தி
566) @೧ುಹಿಸಲು சமூக சஞ்சிகை

Page 5
06
ஜீரணிக்க முடியாததொன்று. வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்தகால சூழ்நிலையினால் பெண் படைப்பாளிகள் பலர் இடம்பெயர்ந்து சென்றனர். எனினும் 1985, 1990 களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகளில் பெண் எழுத்தாளர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தது. இக்காலப் பகுதியில் இடையிடையே பெண்கள் தொடர்பான காத்திரமான கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற்றன.
யோகா பாலச்சந்திரனின் கொழும்பு கலைக் கழகம், கலைமகள் ஹிதாயாவின் தடாகம், புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்டம், செல்வி திருச்சந்திரனின் பெண்கள் கல்வி ஆய்வு மையம், ஜெசீமா இஸ்மாயிலின் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, ஜயந்தி வினோதனின் வினோதன் மன்றம், சூர்யா ஆய்வு மையம் போன்றவற்றின் அனுசரணையுடன் இந்தக் கருத்தரங்குகள் நடைபெற்றன.
மலையக பெண்களின் அவலங்கள் குறித்து கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் அடிக்கடி கருத்தரங்குகள் நடைபெற்றன. ஆனால் ஏனோ அவை யாவும் அருகிவிட்டமை கவலைக்குரிய விடயமே.
இன்று உங்களைப்போன்ற இளம் எழுத்தாளர்கள் பலர் சஞ்சிகைகளின் மூலமும், வலைப்பின்னலுாடாகவும் வலம் வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த இலத்திரன் தொழில் நுட்பத்தைக் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்துவது இன்று காலத்தின் தேவையாகிவிட்டது.
எனவே தமிழ் - முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர்கள் அனைவரும் இந்த நவீன தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்தி தமது படைப்புக்களை உலகறியச் செய்ய வேண்டும். அத்தோடு பெண்கள் எழுத்தாளர்கள் வலைப்பின்னலினுடாக ஓர் அமைப்பை ஏற்படுத்தி ஓரணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பலமான ஒரு பெண் படைப்பாளர் அமைப்பு' ஒன்று உருவாக வேண்டும், பெண் எழுத்தாளர்களின் சுயவிபரங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பன எமது நீண்ட நாள் கனவாகும். இத்துறையில் தேர்ச்சி பெற்ற உங்களைப்போன்ற பெண் படைப்பாளிகள் முன்வருவார்களா?
ஊடகம் இலக்கியத்தில் வகிக்கும் பங்கு பற்றி யாது கூறுவீர்கள்?
ஊடகமும், இலக்கியமும் இரண்டறக் கலந்த ஓர் கலவை என்பேன். ஊடகம் இல்லாத இலக்கியம் இல்லை, இலக்கியத்தை, இலக்கியவாதிகளை வாழ வைப்பதே ஊடகங்கள்தானே.
ஊடகங்கள் இல்லாவிட்டால் எழுத்தாளர்களின் ஆளுமைகள் அவர்களது உள்ளத்திலேயே உறங்கிக்கிடக்கும். எழுத்தாளர்களது உள்ளக் கிடக்கைக்கு உயிர் கொடுப்பதே ஊடகங்கள்தானே. எனவே இலக்கிய வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம் 07
தாங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?
ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் பல சவால்களைச் சமாளித்து ஆரம்பம் முதல் இன்று வரை ஊடகத் துறையை தொழிலாகக் கொண்டியங்குவதே ஒரு பெரிய சாதனை என்பேன். நான் தினபதி - சிந்தாமணி பத்திரிகையில் ஆசிரியபிடத்தில் கடமை புரிந்த காலப்பகுதி அது. அப்பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், எனது குருவுமான பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்கள் பத்திரிகைகளில் புதுமைகளைப் புகுத்துபவள். சிந்தாமணிப் பத்திரிகையிலும் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தவர்.
மாதர் பகுதியினை விவாத மேடையாக ஆக்குவோம் எனத் தீர்மானித்தார். பெண்கள் திருமணம் புரிவதால் குடும்ப நிர்வாகம் பாதிக்கப்படைகிறதா? இல்லையா?. பிள்ளைகளின் வளர்ச்சியில் பிதாவுக்கும் பங்குண்டா? இல்லையா? போன்ற தலைப்புகளில் சுவையான விவாதப் பேட்டிகளை நடத்தியுள்ளேன். அவை வாசகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவ்வாறே பெண்கள் மத்தியில் அன்றாடம் ஏற்படும் தவறுகளை, நிகழ்வுகளை உரையாடல்களாகச் சித்திரித்து படிப்பினையூட்டும் வகையில் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு வழங்குவேன். பத்திரிகைகளுக்கும் எழுதுவேன். இதனால் நான் பழகிய பெண்களில் பெரும்பாலானோர் என்னிடம் பிறரைப் பற்றிய குறைகளை கதைக்கவே அஞ்சினார்கள். "ஐயோ உங்களிடம் கதைக்க பயமாக இருக்கிறது. அப்புறம் நீங்க இதையெல்லாம் பேப்பர்ல. ரேடியோவில போட்டிடுவீங்க' என்று வெளிப்படையாகச் சொல்லியதுமுண்டு.
சமகால பிரச்சினைகளையே கவிதையாக, கட்டுரையாக, கதையாக, உரைச்சித்திரமாக நான் வடிப்பதுண்டு. இவை வாசகள், நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இதனை ஒரு சாதனையாக நான் கருதாவிட்டாலும் எனது எழுத்துகளுக்கு கிடைத்த பெருவெற்றியாகக் கருதுகிறேன். எமது எழுத்துக்களை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தினால் அவை கூட வல்ல அல்லாஹற்விடம் நற்கிரியைகளாகவே அங்கீகரிக்கப்படுகின்றன.
எனவே எமது பேனாக்களை நாம் நல்லவற்றுக்கே பயன் படுத்த வேண்டும் என்ற நற்செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வரம்பு மீறாமல் ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்தால் எல்லா கெளரவமும் தன்னாலே கிட்டும்.
பண்பாடும் பெண் என்ற நூலுக்கு பிறகு வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளிர்களா?
பண்பாடும் பெண் என்ற நூலுக்கு பிறகு இன்னும் இன்னொரு நூலை வெளியிட முடியவில்லையே என்ற ஏக் கம் எனது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் நான் ஏற்கனவே கூறிய வேலைப்பளுதான் காரணம். வானொலியில் நான்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 6
08
பாடிய கவிதைகள், நூல் வெளியீட்டு விழாக்களில் நான் பாடிய கவிதைகள் அனைத்தையும் தொகுத்து 'பூஞ்செண்டு என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை வெளியிடவுள்ளேன். அவ்வாறே நான் பல்கலைக் கழக பத்திரிகைத் துறை டிப்ளோமா பாடநெறிக்காக சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான 'எய்ட்ஸ் நோயும் பெண்களும்', உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக எழுதப்பட்ட 'முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு என்ற ஆய்வுக் கட்டுரை மற்றும் "ஏட்டிலிருந்து ஏற்றதோர் படிப்பினை', 'சஹாபாப் பெண்களின் சரித்திரப் பின்னணி போன்ற பல நூல்கள் பிரசுரத்திற்காக தயாராக உள்ளன.
எனது கணவருக்கோர் நப்பாசை. எம்மிருவரினதும் நூல் வெளியீட்டு விழாவும் ஒரே மேடையில் நடைபெற வேண்டும் என்று. ஆனால் இருவருமே காலையில் வேலைக்குப் போனால் மாலையிலேயே வீடு திரும்புபவர்கள். எங்களுக்குத் தெரியாமலேயே காலம் ஓடிவிடுகிறது. அதை எண்ணி தினம் தினம் மனம் கடிந்துகொள்கிறோம். 'கடிகாரம் ஒடுமுன் ஒடு' என்பார்கள். ஆனால் நாமோ கடிகாரத்தின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டிலாவது நம் இருவரினதும் நூல்களின் பிரசவம் நிகழ வல்ல அல்லாஹற் அருள் புரிய வேண்டும். நாமிருவர் மட்டுமல்ல நமது ஒரே மகள் நூருஸ் ஷப்னா கூட கவிதைத் துறையில் ஆர்வம் காட்டி வருபவர்தான். சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவியாகத் திகழும் எனது மகள் சட்டக் கல்லூரி இந்து மகா சபை நடாத்திய கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார்.
சிறுகதைகள், நாவல்கள் போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்களா?
சிறுகதைகள், குறுங்கதைகள் போன்றவற்றை அவ்வப்போது எழுதியுள்ளேன். எனது பல சிறுகதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. ஆனால் நாவல் துறையில் நாட்டம் செலுத்தவில்லை.
எனினும் எனது அபிமான அன்புச் சோதரிகளான நயிமா சித்தீக், மாத்தளை பர்வீன், சுலைமா சமி இக்பால், ஐரீனா முஸ்தபா ஆகிய நம் நாட்டு நாவலாசிரியைகளின் நாவல்களை விரும்பிப் படிப்பதுண்டு. அத்தகையோரின் இத்தகைய பணி நீடிக்க வேண்டும் என நித்தமும் ஆசிப்பதுண்டு. முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் நாவல்துறை பட்டியலில் மேலும் பலர் இணைய வேண்டும் என விரும்புகிறேன்.
தங்களுடைய தொழில் துறை, இலக்கிய வளர்ச் சிக் கு கை கொடுப்பதாய் அமைந்திருக்கிறதா?
எனது தொழில்துறை இலக்கிய வளர்ச்சிக்கு கை கொடுப்பதாய் அமைந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கு மிகவும் சங்கடமான பதிலைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. தொழில்துறை வேலைப்பளு காரணமாகவே எனது இலக்கிய முயற்சிகள் எல்லாம் முடங்கிப்போய்விட்டன என்றே சொல்ல வேண்டும்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

09
ஊடகத் துறை அமைச் சின் கீழ் இயங்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியில் இருப்பதால் காலத்தோடு போராடும் காரிகையாகி விட்டேன் என்றே சொல்லத் தோன்றுகிறது.
கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட 13 பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த 13 செயலகப் பிரிவுகளிலும் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்ந்து அச்சக மற்றும் இலத்திரன் ஊடகங்களுக்கு மட்டுமன் றரி எமது திணைக்களத்தின் தகவல் வெப் தளத்திற்கும் செய்திகளைத் தொகுத்தளிப்பது, மாவட்ட வளங்கள் குறித்த தரவுகளை கணணி மயப்படுத்துவது, தேசிய, மாவட்ட, பிரதேச ரீதியான நிகழ் வுகளுக்கு ğD6TI L 55 இணைப்பாளராகச் செயல்படுவது எல்லாம் எனது அன்றாட கடமைகளாகும். தினசரி இவற்றை நிறைவேற்றவே நேரமும் காலமும் சரியாகிவிடுகிறது. மாலையில் வீட்டுக்குப் போனால் வீட்டு நிர்வாகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் எனது தொழில்துறை எனது இலக் கரிய பணிகளுக்கு இடையூறு இழைக்காவிட்டாலும், வளர்ச்சியில் படிக்கட்டாகவல்ல, தடைக்கல்லாகவே உள்ளது. சுருங்கக் கூறின் இலக்கிய பணிகளை மேற்கொள்ள நேரம் கிடைப்பதில்லையே என்ற ஆதங்கம் தான். உள்ளத்தில் நிறைந்துக் கிடக்கும் கற்பனை கருக்களுக்கு எழுத்து மூலம் எப்போதுதான் உருகொடுக்க கிடைக்குமோ? என்ற இலக்கியத் தாகம், தணியாத தாகமாக உள்ளது. உத்வேகம் உண்டு. அவற்றை வெளிப்படுத்த நேரம்தான் இல்லை.
உங்கள் கணவர் கவிஞர் நஜ்முல் ஹ"சைன் அவர்கள் உங்களது இலக்கிய வாழ்வில் உந்து சக்தியாக இருக்கிறார். இதைப் பற்றி என்ன சொல்வீர்கள்?
இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இல்லறத்திலும்கூட என் உந்து சக்தியும், என் உயிரும் உரமும் எனது கணவர்தான். எனது எழுத்துலக பிரவேசத்திற்கு திருமணத்துக்கு முன்னர் எனது சகோதரர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்தான் எனக்கு பக்கபலமாக திகழ்ந்தார். தினபதி - சிந்தாமணி ஆசிரியப் பீடத்துக்கு முதன் முதலாக என்னை அழைத்துச் சென்றது முதல் என் வளர்ச்சிப் படிக்கட்டுகள் அனைத்துக்கும் காரணமானவர் என் சகோதரர் தான். திருமணத்துக்கு முன்னர் எனது முன்னேற்றங்களின் முதுகெலும்பு என்னுயிர் பெற்றோரும், எனது உடன்பிறப்புகளும் தான்.
ஆனால் திருமணத்திற்குப் பின்னர் எனது முன்னேற்றத்தின் முதுகெலும்பு எனது கணவர்தான். எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் எனக்கு ஏணியாக, தோணியாக, அச்சாணியாக, கொழுகொம்பாகத் திகழ்கிறார். அதனால்தான்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 7
10
எம். நஜ்முல் ஹ"சைன் என்று பன்மையில் அழைக்கப்பட்ட அவரை நான் என். நஜ்முல் ஹ"சைன் என்று உரிமையுடன் அழைத்தேன். இன்று அதுவே அவரது இனிஷியலாகிவிட்டது என்றால் பாருங்களேன் எங்களது இணக்கப்பாட்டினை. ஒரு ஆணின் வெற்றியின் பின்னணியில் பெண் இருக்கிறாள் என்பார்கள். அதுபோலவே எனது வெற்றியின் பின்னணியில் எனது கணவரும் இருக்கிறார் என்பதில் நான் பேருவகையடைகிறேன். அவரில்லாமல் நானில்லை.
சிங்கள மொழியிலும் நீங்கள் இலக்கியம் படைக்கிறீர்கள். அது பற்றி சற்று விளக்குவீர்களா?
சிங்கள மொழியில் நான் முத்திங்கள் வெளியீடு ஒன்றை பிரசுரிக்கிறேன் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 2007ம் ஆண்டு முதல் இன்றுவரை "கொழம்ப புவத் (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரில் சிங்கள மொழி மூல காலாண்டு பத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றேன். கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கலை, கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வெளிவரும் இப் பத்திரிகையின் பிரதம ஆசிரியையாக நானே இருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தப் பத்திரிகையில் நான் எழுதும் ஆசிரியத் தலையங்கள் கூட பலரது பாராட்டைப் பெற்றன. அதிலும் குறிப்பாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூட இந்த ஆசிரியத் தலையங்கத்தைப் பாராட்டியுள்ளார். அதற்காக எனது முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் எனக்கு பாராட்டுப் பத்திரங்களைத் தந்து கெளரவித்தமை சிங்கள மொழியுடனான எனது இலக்கியப் பணிக்குக் கிடைத்த பெரும் கெளரவமாகக் கருதுகிறேன்.
அது மாத்திரமின்றி எமது திணைக்களத்தின் 'தெசதிய’ என்ற சிங்கள சஞ்சிகைக்கு நான் வழங்கிய அரசியல் பேட்டித் தொடர் ஒன்றுக்கு அரச கரும மொழிகள் திணைக்களம் 'இன ஐக்கியத்துக்கான ஊடக பங்களிப்பு என்ற பெயரில் எனக்கு விருதும், பொற்கிழியும் வழங்கிக் கெளரவித்தது. சிங்கள மொழியிலும் எனது நுாலொன்று வெளிவர வேண்டும் என்ற வேட்கையும் எனக்குண்டு. அத்தோடு எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் நான் சிங்களத்தில் மொழிபெயரப்புச் செய்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹற் நாடினால் அந்த சிங்கள மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப்பும் நுாலாக வெளிவரும்.
இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?
இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள் காய்தல், உவத்தல் இன்றி இருக்க வேண்டும். எழுத்தாளர்களின் உணர்வுகளை மதித்து அவரை அத்துறையில் மேம்படுத்துவதாக விமர்சனங்கள் அமையவேண்டுமே தவிர, அந்த எழுத்தாளர்களை மட்டந்தட்டும் ஆயுதங்களாக அமையக்கூடாது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். குறித்த எழுத்தாளர்களிடம் குறைபாடுகள் இருந்தால் அவற்றை மிகவும் பக்குவமாக, பவ்வியமாக
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம்
11
எடுத்துச் சொல்லும் வகையில் விமர்சனங்கள் அமைந்தால்தான் அந்த எழுத்தாளர் மேலும் வளர, வாழ வழி பிறக்கும்.
அவ்வாறே எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் சிறந்த 'டொனிக்காகத் திகழ்வதும் நல்ல விமர்சனங்களும், விருதுகளும்தான். ஒரு சிறந்த படைப்பாளியைப் பாராட்டி, விருது வழங்கிக் கெளரவித்தால் அவர் மென்மேலும் நல்ல படைப்புகளைத் தருவதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். எனவே வரப்புயர நீருயர்வது போல் விருதுகள், நல்ல விமர்சனங்களால் எழுத்தாளரும் வாழ்வர், வளருவர் என்பதே என் கருத்து. ஆனால் இன்று தடியெடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரர்களாகி விட்டனர். அவ்வாறே எடுத்ததற்கெல்லாம் இன்று பொன்னாடையும் பட்டங்களும் என்றாகிவிட்டமை தான் கவலைக்குரிய விடயம். பொருத்தமானவர்களுக்கு மட்டும் உரிய கெளரவத்தை கொடுத்தால் மட்டுமே அந்த கெளரவம் சிறப்புப் பெறும்,
இதுவரை தாங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி?
கலாசார அமைச்சினால் 2006ஆம் கலாபூஷணம் விருது பெற்றமையும், 2009ம் ஆண்டு மகளிர் விவகார அமைச்சின் சர்வதேச மகளிர் தின விழாவின் போது இலங்கையின் முதற் பெண்மணி வழிரந்தி ராஜபக்ஷவினால் கெளரவம் பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அவ்வாறே அகில இன நல்லுறவு ஒன்றியம், இலக்கியத் தாரகை என்றும் தகவல் ஜோதி என்றும் இசைக்கோ நுார்தீன் ஹாஜியின் முஸ்லிம் கலைஞர் முன்னணி ஊடகத் தாரகை என்றும், பட்டமளித்து என்னை கெளரவித்தன. மலையக கலை கலாசாரப் பேரவை, ரத்னதீபம் விருதும், அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவினர், இளம் படைப்பாளர் விருதும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் மாக்கான் மாக்கார் விருதும், மத்திய மாகாண கல்வி அமைச்சு எழுத்தாளர் விருதும், கொழும்பு கலை வட்டம், சாய்ந்தமருது தடாகம், சிந்தனை வட்டம், இலங்கை சமுர்த்தி அதிகார சபை ஆகியனவும் எனக்கு விருதுகளையும் பட்டங்களையும் வழங்கி என்னை கெளரவித்தன. இந்த அமைப்புக்களுக்கு என் நன்றிக் கடன் என்றுமுண்டு.
பூங்காவனம் சஞ்சிகை பற்றிய உங்கள் கருத்து யாது?
பல மலர்கள் மலர்ந்து மணம் பரப்பும் இடம்தான் பூங்காவனம். இங்கே பெரும்பான்மையான பெண் எழுத்தாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சிறந்த அரசி பவுண்டேஷன் (Best Queen Foundation) மூலம் மகுடம் சூட்டுவது போலவே நான் உங்களின் இந்த முயற்சியை இனம் காண்கிறேன். அதிலும் குறிப்பாக இரண்டு பெண் படைப்பாளிகளே இச் சஞ்சிகையின் இணை ஆசிரியைகளாக இருப்பதுவும் தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போல மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
ஒரு நூல் பிரசவம் ஒரு குழந்தை பிரசவத்தை ஒத்தது. இங்கே நீங்கள்
சஞ்சிகை வெளியிடுகிறீர்கள். குழந்தை பத்து மாதச் சுமை. நீங்களோ மூன்று மாதங்களில் சஞ்சிகையை பிரசவிக்கிறீர்கள். அதனை தொடர்ச்சியாக
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 8
12
பிரசுரிப்பது என்பது இலங்கையைப் பொறுத்தவரை இமாலயச் சாதனைதான். உங்கள் இருவரின் இந்தப் பெரு முயற்சிக்கு முதலில் ஒரு சபாஷ் போட (36.606 (Bib.
பூங்காவனம் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பூங்காவனத்தின் நறுமணத்தைச் சுவைத்திடத் தவறாதீர்கள். மூத்த படைப்பாளிகளை மதித்து நடங்கள். அவர்களது படைப்புகளைத் தேடிப் படியுங்கள். தலை குனிந்து படிப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே என்ற தாரக மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். பணிவு, கனிவு நிறைந்த ஒருவரிடம் சமுதாயம் விரும்பும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கலாம். எனவே வாசகர்களாகிய நீங்களும் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக
fgsfj6)(Tib!!!
இவற்றேறக்கு) (விற்பு
விருட்சங்களின் சிரிப்புக்களையெல்லாம் உறிஞ்சிக்கொண்ட பரிதி, அழல் பார்வையுடன் கழனிக்குள் புகுந்து அங்கங்கள் கிழித்து கூறுபோட்டு கூற்றுவனாகிவிட்டான்!
சாலைத் திருப்பங்களில் சந்திக்கும் வியர்வை துளிர்க்கும் உழைப்பு முகங்கள் அயர்வை பெருக்கும் வெக்கையிலே பாத அடிகளோ தீ மிதிப்பினிலே!
கானகத்தின் தரு குடைகளெல்லாம் சிணுங்கிடும் சருகுகளாகி திசையெங்கும் தவழ்ந்து திரிகிறது
தோரணங்கட்டிய பூப்பந்தல்களை
- பதுளை பாஹிரா
அள்ளிச் சென்ற அக்கினி தேவன் அகிலத்தின் ஈரவேரைக் கருக்கி சாம்பல் மேட்டை காட்சிப்படுத்துகிறான்!
கூவம் வற்றியதால் தாவித்திரிந்த நுணல்கள் நீர்ச்சுணைகளைத் தேடி காததுாரம் பயணிக்கும்!
வரண்ட காற்றால் வதங்கிப் போன வானம்பாடிகள் நதியோர நாணல்களிடம் நட்பு பிச்சை கேட்டு நிற்கும்!
சுருதி தவறிய இசையாக மூங்கில் தோப்பின் முகாரிகள் நேசிப்பு மனங்களை வலி சுமக்கச் செய்திடும்!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

13
இலீற2ணுறவCலx = 03
(கவிஞர். 6. இக்பால்)
1995 களில் கெளரவ லக்ஷ்மன் ஜெயக்கொடி அவர்கள் கலாசார அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் சமய கலாசார அமைச்சின் ஆலோசகராகவும், பதிவாளராகவும் கடமை புரிந்தார். அக்காலம், தேசியக்கல்வி நிறுவனத்தில் தமிழ் பாடநூல் எழுதும் குழுவில் அமர்ந்து நூல் எழுதிக் கொண்டிருந்தேன். எங்களது செயற்பாட்டை மேல்பார்வை செய்வதற்கு பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள்தான் கடமை புரிந்தார். அப்போது நுஃமான் என்னை அழைத்து 1996ல் கலாபூசண விருது கொடுப்பதற்கு ஆட்தெரிவு செய்கிறார்கள். மூத்த இலக்கியவாதிகளுள் நீங்களிருப்பதால் உங்கள் விருப்பத்தைக் கேட்டறியுமாறு என்னிடம் கூறினார்கள். நான் விருப்பத்தைப் பெற்றுத்தருவேன்’ எனக் கூறிவிட்டேன். ‘விருப்பந்தானே!’ எனக்கேட்டார். நான் 'விருப்பமில்லை' எனக் கூறிவிட்டேன். பின்னேரம் வருவேன் யோசியுங்கள்’ என்றார்.
பின்னேரம் வந்தார். விருப்பமில்லை என்றதும் நாளை காலை வருவேன். இன்றும் யோசியுங்கள்’ என்றார். மறுநாள் இதுபற்றி மல்லாடும்போது குழுவிலுள்ள ஏனையோர் ‘என்ன நீங்கள் இருவரும் மல்லுக்கட்டுவது? எனக்கேட்டார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். "ஐயோ கலாபூஷணம் எப்படிப் போனாலும் பணம் பத்தாயிரம் உண்டு. எடுத்துச் செலவழிப்பதுதானே' என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டார்கள. எனக்கும் அப்போதுதான் அது சரியாகப்பட்டது. விருப்பத்தைத் தெரிவித்துவிட்டேன்.
22.05.1996 இல் கலாபூஷணப் பட்டமளிப்புக்கு அழைப்பு வந்தது. அதற்கிடையில் எழுத்தில் ஏதும் இல்லாமல் ஜெமீல் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து, ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியின் விருப்பக் கடிதமொன்று வாங்கி அனுப்புமாறு கேட்டார். ‘அப்படித்தான் அது விதியானால் எழுத்தில் அறிவியுங்கள்’ எனக் கூறிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டேன்.
எதற்கும் மத்துகமப் பிரதிநிதி அணில் முனசிங்காவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'இன்னும் உனக்கு கலாபூஷணம் கிடைக்கவில்லையா? என எழுத்திலேயே கேட்டார். இச்சங்கதியினால் ஜெமீல் மீதிருந்த அபிமானம் எனக்கு தூளாகிவிட்டது.
1996 மே 22 ஆந் திகதி கலாபூஷண விருதைப்பெற அழைப்பு வந்தது. உரிய தினத்தில் உரிய நேரத்தில் அங்கு சென்ற போதும் ஜெமீலுடன் நான் கதைக்கவேயில்லை.
மேடையில் கலாசார அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடி, அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹற், கலாசார திணைக்களப் பொறுப்பாளர்கள்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 9
14
யாவரும் வரிசையாய் வந்து நின்றார்கள். பெயர்கள் அழைக்கப்பட்டு வரவேற்று விருதைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எனது முறை வந்ததும் நான் சென்று கொண்டிருந்தேன். கலாசார அமைச்சர் கையில் விருதுக்குரிய ஆவணம், பணத்துக்குரிய காசோலை இருந்தன. அமைச்சர் ஹிஸ்புல்லாஹற் என்னைக் காட்டி இவர் எனது ஆசிரியர்’ என கலாசார அமைச்சரிடம் கூறினார்.
கையிலிருந்த காசோலை, விருது யாவற்றையும் ஹிஸ்புல்லாஹற் அவர்களின் கையில் கொடுத்து, எனக்கு அவரையே கொடுக்குமாறு பணித்தது மட்டுமல்ல, அவற்றை எனக்கு கொடுக்கும்போது கைதட்டி மகிழ்ச்சியையும் தெரிவித்தார். ஆசிரியம், இலக்கியம் இணைந்த செயல்பாட்டால் நான் மிக மகிழ்ந்தேன்.
அக்காலம் கலை இலக்கியவாதிகளை கலாசார திணைக்களம் தெரிவு செய்தே கலாபூஷண விருதளித்தனர். தற்காலம் விண்ணப்பம் கோரியே இவ்விருதை அளிக்கிறார்கள்.
அழகிய கலையம்ச வேலைப்பாடுடன் வீடு கட்டும் மேசன், கலையம்ச உத்தியுடன் அழகுபடுத்தும் தச்சன், குயவன் போன்றோருக்கும் கலாபூஷண விருதளித்து கெளரவிப்பது முக்கியமானது. அவற்றை எப்போது செய்வார்களோ?
(இன்னும் வரும்)
நான் இவ்வுலகில் s உயர்வாய் உதித்திட மடியில் கொஞ்சும் தென்றலின் உன் உதிரத்தையே மொழி கேட்டு உதிர்த்தவளே! இயற்கை அன்னை
மகிழ்வது போல் என் மழலை விளக்கிற்கு மொழிகேட்டு மகிழ்ந்தவளே! ஒளி தருவது எண்ணெய். a r ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ என் வாழ்க்கை எனும் விளக்கை என் வாழ்வில் ஒளிகாட்டும் தீபமாய் ஒளிரவைப்பது கலங்கரை விளக்காய் என் அன்னை! 66Õ60)60 356 Oslo TLD6)
வாழவைக்கும் தாயே. தமிழில் ஆயிரம்
சொல் இருந்தாலும் உன்னைத் தந்த அம்மாவின் இறைவனுக்கு என் அன்பென்ற சொல் இதயம் நிறைந்த நன்றிகள்!
இல்லையெனில் இன்பமேது?
- கவிமலர்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

'உம்மா! வார கெழம ஸ்கொலசிப் செமினார். அதுக்கு போக நூறு ரூவா வேணும் சதிக் தன் தாயிடம் கேட்டான்.
‘சரி. அந்திக்கு வாப்பா வந்ததும் வாங்கித்தாறேன்' என சலீமா மகனின் தலையைத் தடவியவளாய் சொல்லி வைத்தாள். அதே நேரம்,
'உம்மா எனக்கும் ஓ.எல் பாஸ்ட் பேப்பர். புக்ஸ் கொஞ்சம் வாங்கணும்' மகள் சாகிராவும் தன் கோரிக்கையை முன் வைத்தாள்.
‘எங்கிட்ட ஒருசதமும் இல்ல புள்ள. வாப்பா வந்ததும் ரெண்டு பேருக்கும் வாங்கித்தாறேன்' என்ற தாயின் பேச்சில் நம்பிக்கை வைத்த இருவரும் அன்றைய "ஹோம்வேர்க்’கில் ஈடுபட்டனர்.
பள்ளிவாசலில் இஷாவுக்கு அதான் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்போது, "ஹேய். ராஜா. நா. நான் ராஜா. ம். ம். கிக்கு ஏறுது என வாய்க்கு வந்தபடி முணு முணுத்தவனாய் முழங்காலுக்கு மேல் சாரத்தை உயர்த்திக்கட்டி, சேர்ட் பட்டன் எல்லாம் திறந்து, ஒருகையில் சைக்கிளை பிடித்துத் தள்ளாடியவாறு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ஜெஸிம்.
வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய், ‘அடியே. சலீமா! பசிக்குதுடீ. சாப்பாட்ட போடு. மை டார்லிங். சுவீட் ஹார்ட்!” எனக் கத்தி மனைவிக்கு கட்டளையிட்டான். இங்கிலிஸ் தெரியாத அவனுக்கு எல்லா பாஷையும் அந்த நேரத்தில் வந்துவிடும். அந்தளவு போதை தலைக்கு மேல் ஏறியிருந்தது. மறு பேச்சின்றி கணவனின் பேச்சுக்கு கட்டுப்பட்டவளாய் சாப்பாட்டை அவசரமாக தயார் செய்து அவன் முன் வைத்தாள். அதற்குள் பிள்ளைகள் இருவரும் ஓடிவந்து தாயிடம் தம் கோரிக்கையை ஞாபகப்படுத்தினர்.
"ஐயோ! இப்போ பேசமா இருங்க. விடிஞ்சா வாங்கித்தாறேன். இப்போ பேசி ஒன்னும் நடக்காது. வாப்பா இன்னெக்கும் அரக்கு குடிச்சி. நீங்க ரெண்டு பேரும் படிச்சிட்டு படுங்க வழமையான பல்லவியை தாய் பாட, பிள்ளைகள் ஏமாற்றத்துடன் நின்றனர்.
இரண்டு வாய் தின்ற ஜெஸிம், "ஹாக் தூ.’ என வாயிலிருந்த சாப்பாட்டை
துப்பியவாறு 'என்னடி இது சாப்பாடு? உப்பும் இல்ல புளியும் இல்ல. ஒனக்கு என்னடி பிடிச்சிருக்கு. கழுத' கெட்ட வார்த்தைகளால் சலீமாவை திட்டினான்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 10
16
நா. நல்லா தான் ஆக்கின. நீங்க குடிச்சி. முழுதும் சொல்ல முடியாமல் பயத்தால் தடுமாறினாள் சலீமா,
‘என்னடி சொன்ன மூதேவி!” சாப்பாட்டை எட்டி உதைத்தவன் சலீமாவின் கன்னத்தில் பளாரென பாய்ந்து அறைந்தான்.
'உம்மோ! அடியின் வேதனை தாங்க முடியாது கன்னத்தை பிடித்தவளின் வயிற்றில் உதை விழுந்தது. மறு அடி விழுவதற்குள் பயத்துடன் கத்தியவாறு ஓடி வந்த பிள்ளைகள் சலிமாவுடன் உள் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டனர். கோபத்தை சட்டி முட்டிகளுடன் காட்டிய ஜெஸிம் கொஞ்ச நேரம் கத்திவிட்டு அப்படியே குப்புற விழுந்து படுத்துவிட்டான்.
அழுகையுடன் கழிந்த இரவு மறைந்து விடிந்தது. ஜெஸிம் அவசரமாக குளித்துக் கடைக்கு போக ரெடியாகிக் கொண்டே, சலீமா குட்டி! அவசரமா டீய கொண்டு வாங்கடா!' என குரல் கொடுத்தான். அதற்குள் அவளும் டீ கோப்பையை கொண்டுவந்து வைத்தாள்.
டீயை உறிஞ்சியவனாய், 'ம். நல்ல டீ. எங்கட சீதேவிட கை பட்டா பாக்கவா வேணும்' என சலிமாவின் கன்னத்தை அன்பாய் கிள்ளிவிட்டான். இரவு மூதேவி என்ற வார்த்தை காலையில் சீதேவியாய் திரிபடைந்துவிட்டது. அந்த அன்பான வார்த்தையில் இரவுபட்ட வேதனையெல்லாம் மறந்து உச்சி குளிர்ந்தாள். இதுதான் சந்தர்ப்பம் என மனசுக்குள் எண்ணியவள்,
புள்ளயலுக்கு ஸ்கூலுக்கு கட்ட காசு கொடுக்கணும். காசு இருந்தா தாங்களே. என்றவாறு மெல்ல கணவனை நோக்கினாள். டீ கோப்பையை சலிமாவின் கையில் வைத்த ஜெஸிம்,
இதுகள் ஸ்கூலுக்கு போவுதுகளா. இல்ல கடைக்கு போவுதுகளா? ஒரே காசு காசு. என்கிட்ட இப்ப காசில்ல. கடேலயும் யாவாரம் இல்ல. வார கிழம பாப்போம்' என கோபத்துடன் கத்திவிட்டு பக்கத்து ஊரில் இருக்கும் தன்னுடைய பெட்டிக் கடையை நோக்கிச் சென்றான்.
சலீமா எதுவும் பேசாமல் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனாள். ஜெஸிமின் கடை பெட்டிக்கடை என்றாலும் நல்ல வியாபாரம் இருந்தது. ஆனால் வீட்டுக்கோ பிள்ளைகளுக்கோ செலவழிக்கவில்லை. தினமும் குடிப்பதற்காகவே செலவழித்துக் கொண்டிருந்தான். காலையில் வைக்கும் கோரிக்கைகளுக்கு 'சரி பிறகு பார்க்கலாம்' என்பான். ஆனால் கேட்டவை ஒன்றும் கிடைக்காது. மாலையானால் நாலு கால் கொண்ட மிருகம் அவன். விடியும் வரை வெறியாட்டம். ஏதாவது குறை சொல்லிச் சண்டை பிடிப்பான். இது இன்று நேற்று மாத்திரம் நடக்கும் விடயமல்ல. இந்த வீட்டில் பல வருடங்களாய் தொடரும் தொடர்கதை.
வாப்பா எங்களுக்கு சல்லி தரக்கொல எக்ஸாம் முடிஞ்சிடும் சதீக் தாயை முறைத்தான்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

17
'உம்மா கொஞ்சம் வாப்பாக்கு செல்லி வைங்க. ஸ்கூல் போக ஏலா. வாப்பா குடிச்சிட்டு அங்க ஆடின, இங்க ஆடினன்னு எல்லாரும் நக்கல் அடிக்கிய குடிகாரன் மகள்னு செல்றாங்க மகள் சாகிரா அழுதாள்.
நான் எப்படி செல்லிய? ஒரு வார்த்த பேசினாலே அடிச்சு போடுவாரு. ஏன்ட தலைவிதி. ம். நான் ஒல கொஞ்சம் இழச்சி வெச்சிருக்கேன். செரட்டயும் சேத்திருக்கேன். இன்னும் கொஞ்சம் ஈக்கிலும் சீவி எல்லாத்தையும் வித்து உங்க ரெண்டு பேருக்கும் காசு தாறேன். இப்படி சலீமா கணவனிடம் நியாயம் பேசவும் முடியாமல் பிள்ளைகளுக்கும் குறையும் வைக்காமல் திண்டாடி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தாள்.
来来米米米来米米米冰冰米米米米米
அன்று சனிக்கிழமை. ஸ்கூல் விடுமுறை தினம் என்பதால் சதீக்கை எடுபிடி வேலைகளுக்காக தன் பெட்டிக் கடைக்கு அழைத்துச் சென்றான் தந்தை ஜெஸம்.
'சதிக்! தாரும் வந்தா இருக்கச் செல்லு. நான் அவசரமா டொய்லட் போயி வாறேன்’ என்ற தந்தையிடம், 'சரி வாப்பா’ என்றவாறு தலையாட்டினான்.
தந்தை வெளியே போனதும் ஆசையுடன் 'கெசியர்'கதிரையில் போய் உட்கார்ந்தான் சதிக். காசுப் பெட்டியின் சாவி மேசைக்கு மேல் இருந்தது. அதை மெதுவாய் எடுத்து காசுப் பெட்டியை திறந்து பார்த்தான். 'அல்லாஹற்வே! லாச்சு நெறைய காசு உள்ளே இருந்த காசுக் கட்டைப் பார்த்து வாயடைத்து நின்றான்.
இத வெச்சு கொண்டா எங்களுக்கு காசு இல்லன்னு சொல்ற. இவருக்கு குடிச்சு நாசமாக்க ஏலும் எங்களுக்கு தர ஏலா அங்கும் இங்கும் பார்த்தான். இன்னும் வாப்பாவைக் காணோம். மெதுவாக காசுப் பெட்டிக்குள் கையை விட்டான். நெஞ்சம் 'திக் திக் கென்றது. களவு செய்வது பெரிய பாவம் என்று பள்ளியில் சொல்லித் தந்தது ஞாபகம் வந்தது. இருந்தும் 'வாப்பா குடிக்கிறதும் பாவம் தானே. அந்த காச எடுத்தா பாவம் இல்ல' என மனசு சொல்ல, ஒரு முடிவுக்கு வந்தவனாய் 100 ரூபாயை மெதுவாய் எடுத்து கால்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு நல்ல பிள்ளை போல் இருந்தான். கொஞ்ச நேரம் கடையில் இருந்துவிட்டு, பகலைக்கு கிளாஸ் இருக்குன்னு தந்தையிடம் பொய் சொல்லி மெதுவாக வீட்டிற்கு வந்துவிட்டான்.
வீட்டிற்கு வந்தவனுக்கு அந்த காசைப் பயன்படுத்த பயமாய் இருந்தது. சின்னவன் என்றாலும் அல்லாஹற்வின் தண்டனை அவன் மனசை உறுத்தியது. அப்போது, நாளை கிளாசுக்கு கட்ட காசு இல்லையென்று சாகிரா தாத்தா அழுவது அவன் காதில் விழவே அந்த நூறு ரூபாவை கொடுத்தான்.
'இது உனக்கு எங்கால? என்று தாய் சலீமா கேட்டபோது,
கலை இலக்கிய சமூக சஞ்சிகை f

Page 11
"ரோட்டில பொறக்கினன்' என்று சொல்லி மழுப்பிவிட்டான்.
மாலையானது. ஜெஸிம் வழமை போல் நாலு காலில் வந்தான். சைக்கிளை கீழே போட்டவன், ‘எங்கடி ஒன்ட புள்ள. அழகா வளத்து வெச்சிருக்காய் கள்ள நாயி’ வீட்டிற்குள் சதீக்கை தேடி நோட்டம் விட்டவனாய் சலீமாவை பார்த்துக் கத்தினான். 'என்னங்க இது? ஒன்னும் புரியாதவளாய் ஜெஸிமிடம் கேட்டாள்.
நான் கடைக்கு சாமான் எடுக்க காச எண்ணி வெச்சிட்டு டொய்லட் போனன். இப்போ பாத்தா அதுல நூறு ரூவா இல்ல. இந்த கள்ள நாயி எடுக்காம வேற யாருடி எடுக்க, சின்ன வயசிலே கள்ள புத்தி
அப்போதுதான் சலீமாவுக்கு விளங்கியது. சாகிராவுக்கு கொடுத்தது, இன்னைக்கு மகன் கடையில் எடுத்த காசுதான் என்று.
'சதிக்! ஏன்டா இந்த வேல செஞ்ச? மகனை பிடித்து அதட்டினாள் சலீமா.
'வாப்பாக்கு எங்களுக்கு தர சல்லி இல்ல. குடிச்சு நாசமாக்கேலும். அந்த சல்லியத்தான் எடுத்த. இப்ப மட்டும் ஏச வாற’ சதீக் சின்னவன் என்றாலும் தன் மனதில் உள்ள ஆத்திரத்தை தாயின் மேல் கொட்டினான்.
‘ஹஹற் செய்றதயும் செஞ்சிட்டு பேசுற பேச்சப்பாரு, படுவா உன்ன இன்னெக்கு. ஜெஸிமுக்கு கோப ஆவேசம் ஒரு பக்கம், குடிவெறி மறுபக்கம். பலமுள்ள வரை சதீக்கை அடித்தான். மகள் சாகிராவும் மனைவி சலீமாவும் எவ்வளவு கெஞ்சியும் விடவில்லை. கடைசியில் சதிக்கை அடித்து தள்ளிவிட, சதீக்கின் தலை பலமாய் சுவரில் பட்டு இரத்த வெள்ளமாய் மயக்கமுற்று கீழே விழுந்தான். இரத்ததைக் கண்ட ஜெஸிம் திகைத்து நின்றான்.
米米米米米冰米米米米米米米米米米
‘என்ன ஜெஸிம் இப்பிடி செஞ்சிட்டீங்க? நீங்களே தினம் குடிச்சு குடும்பத்தையே நாசமாக்கினா சரிவருமா? ம். இப்போ அவன் கள்ளன்னு அடிச்சீங்க. களவாண்ட யார் காரணம்? நீங்க குடும்பத்த ஒழுங்க பார்த்தா அவனுக்கு இந்தப் பழக்கம் வருமா?
போன கிழம இவன் ஸ்கூல் கிரவுன்ட் ஒரமா சிகரட் குடிச்சுகிட்டு இருந்தான். நான் பிடிச்சு அதட்டி வெச்சன். அதுக்கும் காரணம் நீங்க தானே. அவன் கிட்ட காசு கொடுத்து சிகரட் எடுத்து வரச்சொல்லுவீங்க. எடுத்து வரும் போது ஆசையில அவனும் குடிச்சிருக்கான். இப்பிடியே போனா நீங்க குடிச்சுட்டு வெக்கிற போத்தலயும் ஒரு நாளெக்கு குடிச்சு பாப்பான்.
ஊட்டுக்குள்ள ஒரு கொமரு புள்ள இருக்குது. அதையும் வெச்சுக்கொண்டு உங்க கூட்டாளிமாற ஊட்டுக்கு கூட்டி வந்து பார்ட்டி போட்டா, நாளைக்கு அவனுகள் மகளுக்கு வெறியில எதும் செஞ்சிட்டு போவானுகள். இதெல்லாத்துக்கும் நீங்க காரணமா இருக்கணுமா? நாங்கதான் புள்ளகளுக்கு
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம் ベ 19
வழிகாட்டியா வாழனும், நாங்களும் தவறு செஞ்சுகொண்டு அவங்கள திருத்த ஏலாது. நாங்க அல்லாஹற் காட்டின வழியில வாழ்ந்து மத்தவங்களுக்கும் வழிகாட்டியா வாழனும்.
நான் எத்தினமுற உங்களுக்கு புத்திசொல்லி இருக்கேன். இப்போ பாருங்க இந்த சின்னப் புள்ளைட தலையில எவ்வளவு பெரிய காயம். வார மாசம் எக்ஸாம். நல்லா படிக்கிறவன் தானே சதீக்கின் ஸ்கொலசிப் கிளாஸ் ரவூப் மாஸ்டர் ஜெஸிமைப் பார்த்து விபரமாய் சொல்லி புரிய வைத்தார்.
“மன்னிச்சு கொள்ளுங்க மாஸ்டர். இவ்வளவு காலமும் முஸிபத்தில (தரித்திரியமாய்) இருந்திட்டன்’ என்ற ஜெஸிமின் கண்களிலிருந்து கண்ணிர் ഖlbഴ്ച.
"ஜெஸிம் நீங்க பாருங்க. அல்லாஹற் அருள்மறை குர்ஆனில அஞ்சாவது அத்தியாயம் ஸ"ரத்துல் மாயிதா 90 - 91 வது வசனத்தில,
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொணர் டும் , சூதாட்டத்தைக் கொணர் டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹவின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? என்று சொல்லியிருக்கான்.
அதனால என்கிட்ட மன்னிப்பு கேட்டு சரிவராது. அல்லாஹற்கிட்ட மன்றாடி மன்னிப்பு கேளுங்க. அவன் காட்டிய வழியில வாழுங்க. உங்க வாழ்க்கையில அல்லாஹற் ரஹற்மத் செய்வான்’ என்ற மாஸ்டர், ‘ஏம்மா நீயும் இத்தின வருசமா அடிபட்டுக்கொண்டு சத்தமில்லாமா இருக்கியே. இப்பிடி இருக்கிற பொம்புளயால இவன மாதிரி ஆக்கள் திருந்த மாட்டானுகள். நீங்களுவளும் கொஞ்சம் இதுக்கு எதிரா தைரியமா போராடணும். அடங்கி ஒடுங்கி இருந்தா குடும்பமே நாசமாகும்' என பக்கத்தில் அழுது கொண்டிருந்த சலீமாவைக் கண்டித்தார்.
'சத்தியமா இனி குடிக்கமாட்டேன்’ என ஜெஸிம் கண்களால் வடிந்த கண்ணிரைத் துடைத்தவாறு ஆஸ்பத்திரி கட்டிலில் தலையில் ஆறு தையல்களுடன் படுத்திருந்த மகன் சதீக்கின் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். சதீக்கின் முகம் வேதனையிலும் பிரகாசமடைந்தது. அவன் வாயிலிருந்து 'அல்ஹம்துலில்லாஹற்’ என்ற வார்த்தை மெல்ல வந்தது!!!
(முற்றும்)
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 12
- குறிஞ்சி நிலா
வாழ்வில் உனை கொட்டிய கொடுக்குகளை வெறும் சொடுக்குகளாய் எண்ணாமல் வடுக்களாய் பார்த்து துக்கித்தது ஏனோ?
உன்
சறுக்களைக் கண்டு சிரிக்கவும் ஒரு கூட்டம்
இருந்தனையோ? அதையெல்லாம் உன் நிலாப் பெண்ணே உறவுகள் கூறி என்று கூறி அறிந்தேன் ஐயோ? என் உள்ளத்தில் இனிய கவிஞனாய் பல்கலைத் தென்றலே! 2 6oIT 6.Bg5 புயலாய் நீ முரீதர் அண்ணாவே! சோகம் தந்தது போதும் - - - - எழுந்து வா அண்ணா தரம் எட்டில் கற்ற போது இலக்கிய உலகுக்கு கலாவானம பாரதது கட்டாயம் நீ வேண்டும்!!! சந்தோஷமுற்றேன்.
வரம் தந்தாட் போல் ஓர் நாள் நீயே தொலைபேசினாய்!
கரம் தானும் தொட்டுப் பேசாத உன் ஒழுக்கம் கண்டு சிரம் மேற்கொண்டு உன்னை போற்றுகிறேன் அண்ணா!
குறிப்பு -
ர்ேதர் பிச்சையப்பாவின் நினைவையொட்டி எழுதப்பட்ட
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

GGG) உஇரு
ஒரு நல்ல கவிதை மனதிற்கு மருதாணி போட்டு அழகாக்குகின்றது. நம்மை நாமே மறுவாசிப்பு செய்வதற்கும், நமதான கவிதைப் புலமையை உரசிப் பார்ப்பதற்கும் கவிதை வாசிப்பானது மிக அவசியமான ஒன்றாக ஆகிப் போய்விட்டது. சில கவிதைகளை எத்தனை தடவை வாசித்தாலும் எனக்கு விளங்குவதே இல்லை. அந்தக் கவிதையை எழுதிய கவிஞர்களிடமும் அதற்கான விளக்கம் இல்லை. ஆனால் அந்தக் கவிதைகளை விளங்கிக்கொள்ள ஆழமான கவிதை வாசிப்பும், கவிதை பற்றிய அறிவும் அவசியமாம்.
றுவாசிப்பு
நாச்சியாதிவு பர்வீன்
பாரதி அவனுக்கே இந்தக் கவிதைகள் புரிந்திருக்குமா என்று யோசித்துப் பார்த்தால் அதுவும் சிக்கலாகத்தான் இருக்கிறது. இன்று கவிதையின் வடிவம் வெறும் சொல் அடுக்குகளால் பின்னப்பட்ட கோர்வைகளாகிப் போய் விட்டதாக ஆதங்கப்படுகிறார் நா.காமராசன். அதுவும் உண்மையில்லாமல் இல்லை. வெறும் சொல்லடுக்குகளை கவியாக பிரவாகித்துக் கொண்ட காலமாக வானம்பாடிகளின் காலத்தையும் சிலர் அடையாளப்படுத்துவது உண்டு. ஆனால் வானம்பாடிகளின் காலத்தில் புதுக்கவிதை புதுப் பாய்ச்சலுடன் தனக்கான ஒரு பாதையில் அடையாளப்படுத்தப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கவிதையின் வடிவம் கால மாற்றத்தோடு பாரிய மாற்றங்களை கொண்டுள்ளது. அந்தவகையில் செய்யுள் ஆக இருந்து - இன்று புதுக்கவிதைப் பாணியில் விளங்காக் கவிதை வரை அதன் வடிவம் மாற்றம் பெற்றுள்ளது எனலாம். செய்யுளை மக்கள் புரிந்துகொள்வதில் இருந்த சங்கடம்தான் மரபில் எளிமையும், புதுக்கவிதையும் தோன்றுவதற்கு காரணமாகும். அந்த வகையில் இடையில் குறுங்கவிதை, நெடுங்கவிதை, வசனக் கவிதை போன்ற பெயரிலேயே கவிதைகள் வலம் வந்தன. இன்னும் ஜப்பானிய கவிதை வடிவான ஹைக்கூ கவிதைகளும் விடுகதைப் பாணியிலான கவிதைகளும் வெளிவந்தன. இவைகள் அந்தந்தக் காலங்களில் பிரபல்யமாக பேசப்பட்டதும் உண்டு.
மந்திரச் சொற்களால் வாசகனை வளைத்துப்போடும் வரிகளுக்கு ஒரு தனியான இடம் இருக்கிறது. சில மூத்த கவிஞர்கள் இதனை வெறும் சொல்லடுக்கு என்கிறார்கள். இன்னும் சிலர் ஆஹா இது அற்புதமான கவிதை என்கிறார்கள். ஆக வாசகனை தெளிவாக குழப்புவதில் இந்த இருசாராரும் வெற்றி பெறுகிறார்கள்.
கவிதை பற்றிய இவ்வளவு ஆராய்ச்சி எதற்கென்றால் சில கவிதைகள்
அல்லது வரிகள் வாசித்த மாத்திரத்திலேயே நம்மை வளைத்துப் போட்டு விடுகின்றன. அந்த வகையில் சில வரிகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 13
22
இது கவிதையா அல்லது வெறும் சொற்கள் கொண்ட சித்திரங்களா என்பதெல்லாம் யான் அறியேன். ஆனால் எனது கவிதை பற்றிய சின்ன அறிவுக்கு இவைகள் நல்ல கவிதைகளாவேபடுகிறது. நீங்களும் கொஞ்சம் வாசித்து பாருங்கள்.
நள்ளிரவிலே வாங்கினோம் இன்னும் விடியவில்லை.
என்று இந்திய சுதந்திரத்தைப் பற்றி கவிக்கோ அப்துர் ரஹ்மானின் சிஷ்யர் ஒருவர் பாடியுள்ளார். இது திறனாய்வாளர்களால் அற்புதமான கவிதை என்று அடையாளப்படுத்தப்பட்ட போதும் சிலர் இது கவிதையே இல்லை என்கிறார்கள். புதுக் கவிதைக்கான மிகக் காத்திரமான கட்டமைப்பை உருவாக்கியவர் கவிக்கோ அப்துல் ரஹற்மான். அவரது சிஷ்யர் எழுதியதால் தான் இது கவிதையாக கொள்ளப்படுகிறது என்கிறது இன்னொரு வாதம். ஆனால் ஒரு நாட்டின் சுதந்திரம் பற்றி நொந்து போய் இத்தனை இலகுவான மொழிநடையில் யாரும் கவிதை யாத்துள்ளார்களா என்பது தெரியாத விடயம்.
கவிதை என்றால் என்ன என்று யாரும் கேட்டால் என்ன பதில் சொல்லுவது? கேட்பவருக்கு பதில் சொல்வதை விடவும் நல்ல கவிதை ஒன்றை அடையாளப்படுத்தி, இதுதான் கவிதை என்று சொல்ல முடியும். அந்த வகையில் மேற்சொன்ன கவிதையானது பலராலும் விதந்துரைக்கப்பட்டது.
இதே பாணியில் இன்னொரு கவிதை
வெள்ளையனிடம் வாங்கினோம் கொள்ளையனிடம் கையளித்தோம்
இதுவும் ஒரு இந்திய கவிஞரால் எழுதப்பட்டதுதான். இது கவிதையா அல்லது வெறும் சொல்லடுக்கா என்ற ஆராய்ச்சிகளையும் தாண்டி இது வெறும் இந்தியாவை மட்டும் சுட்டுவதாக இல்லை. மாறாக வெள்ளையர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்து சுதந்திரம் பெற்று இன்று வரையும் ஊழல் நிறைந்த அரசுகளினால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்ற நாடுகளுக்கான பொதுவான வாசகம். இந்த வரிகள் அநேகமானவர்களுக்கு பிடித்துள்ளது. எனக்கும் தான். இப்படிப் பல, குறுங்கவிதை என்ற பெயரிலேயே வானம்பாடிகளின் காலத்தில் கோஷங்களாகவும், எதுகை மோனைகளுடனான வார்த்தை வருடல்களாகவும் வெளிக்கிளம்பின.
இவ்வாறே
எமக்கென்று எஞ்சுவதெல்லாம் இரக்கமில்லாத உறவுகளும் உறக்கமில்லாத இரவுகளும்
இந்த வரிகளின் ஆழம் அல்லது கவர்ச்சி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இதை யார் எழுதினார் என்ற தகவல் தெரியாவிட்டாலும் இது கவிதையா அல்லது வெறும் சொற்கள் கொண்ட சிலம்பமா என்ற வாதங்களையும் தாண்டிய கவித்துவமான வரிகளாகவே இதனை ஏற்றுக்கொள்ள முடிகின்றது.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

BlaЕТоlab
23
இதனை வாசித்த மாத்திரத்திலேயே ஆஹா என்று சொல்லுகின்ற வாசகனை நம்மால் காண முடியும்.
இதற்கு கவிதை பற்றிய வெறும் மேலெழுந்தவாரியான ரசனை போதுமானதாகும். பாமரர்களையும் கவர்கின்ற வகையில் அவர்களுக்கு விளங்கும் இலகு நடையில் கவிதை எழுதுவது அவர்களை அந்தக் கவிதை சென்றடைய மிக இலகுவான வழியாகும். இந்த உயரிய பணியை சினிமாப் பாடல்கள் மூலமாக கவிஞர்களான கண்ணதாசன், வாலி, மு.மேத்தா, ந.காமராசன், வைரமுத்து ஆகியோர் செவ்வனே செய்துள்ளனர்.
இன்றைய கவிதைச் சூழல் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஒரே சொல்லையும் ஒரே வார்த்தையையும் வைத்து கவிதை எழுதிய பலர் இப்போது இல்லாமல் போய்விட்டனர். புதிய இளம் தலைமுறைப் படைப்பாளிகளின் தேடல், உத்வேகம், புலமை என்பன புதிய கோணத்தில் கவிதை உலகத்தை தரிசிக்க வைக்கிறது.
அந்தவகையில்,
வானம் அது வெள்ளை! நிலா அது இரவில் வரும்! மேகம் அது உன் கூந்தல்! பூ உன்னிடம் வாசத்தை கடன் வாங்கியதா?
என்ற பாணியிலான முதலாம் ஆண்டுப் பாடப் புத்தகத்தைப் மனப்பாடம் செய்த மாதிரியான சொற்களை இன்னும் சிலர் எழுதிக் குவித்து வெறுப்பேற்றுகின்றனர். இவர்களது பெயருக்குப் பின்னாலும் முன்னாலும் பெரிய பட்டங்கள் வேறு. இவர்களிடம் நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால் கவிதை என்ற பெயரில் பாடப் புத்தகங்களில் உள்ளதை பார்த்து எழுதாதீர்கள் என்பதுதான்!!!
வாசகர் கவனத்திற்கு
சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள். அது பூங்காவனம் சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதையும், கிடைப்பதையும் உறுதி செய்யும். சந்தாதாரராக இணைந்து கொள்பவர்கள் ஆகக் குறைந்தது 500/= வை சந்தாவாக செலுத்தவும். பக்கச்சார்பற்ற முறையில் எழுதப்பட்ட, தெளிவான கையெழுத்தில் அமைந்த, இதுவரை பிரசுரமாகாத (சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள் A4 தாளில் 03 பக்கங்களுக்குள்) ஆக்கங்களையே பூங்காவனம் எதிர்பார்க்கிறது. பூங்காவனம் இதழில் விளம்பரங்களைப் பிரசுரிக்க மற்றும் கொடுப்பனவுகள், சந்தா, விற்பனை முகவர்களின் தொடர்புகள் ஆகியவற்றுக்கு 077 5009 222 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்!
- ஆசிரியர் குழு -
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 14
சூசை எட்வேட்
வீட்டின் முன்னால் உள்ள சின்ன முற்றத்தில் சிறுவர்கள் இருவர் பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். எதிரும் புதிருமாக நின்று அவர்கள் அடிக்கும் பந்து, முற்றத்திலேயே போய் வந்து உருண்டு கொண்டிருந்தது. சிறுவர்கள் இருவரும் மிக உற்சாகமாக சிரித்து சிரித்து பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வெற்றிப் பெருமித ஒசையும் பேச்சும் கேட்டுக் கொண்டே இருந்தது.
திடீரென்று குழந்தையொன்று ‘வீர். வீர்.” என்று அலறும் ஓசை கேட்டவாறாயிருந்தது. கோபு, எதிர்ப்புறமிருந்து வந்த பந்தை தடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு பதறிக்கொண்டு வீட்டினுள்ளே ஓடினான். 'என்ர தங்கச் சிப் பாப்பா அழுவுது' என்று கத்திக் கொண்டு போனான். விளையாடிக் கொண்டிருந்த பாலுவுக்கு அருமையான விளையாட்டை இடைமுறித்தது சுத்தமாக பிடிக்கவில்லை. தனித்துப்போன அவன், நண்பன் போன திசையை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அறைக்குள் வேகமாக போன கோபு ஏணைக்குள் குளறிக்கொட்டும் தங்கையை பதகளிப்போடு பார்த்தான். அவள் மூச்சுப் பிடித்துக்கொண்டு கத்துவதிலேயே தன் பலம் முழுவதையும் காட்டி நின்றாள்.
அவன் ஏணையை தள்ளி விட்டான். தொடர்ந்து தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தான். சீலைத்தொட்டில் வேகமாக போய்வந்து ஆடிக்கொண்டிருந்தது. ஆனால் குழந்தையின் அலறல் குறையவே இல்லை. தாயார் செய்வது போல இருகரங்களாலும் கூட்டிப் பிடித்து கைகளால் உன்னி உன்னி ஆட்டிப் பார்த்தான். 'அழாதடி செல்லம். ஆரடிச்சு நீயழுதாய் அடிச்சாரச் சொல்லியழு என்று தாலாட்டு வேறு பாடினான். பிள்ளை அழுகையை நிறுத்தவே இல்லை. அவன் களைத்துப் போனான். ஆனாலும் தங்கை மீது பரிவு அக்கறை குறையவே இல்லை.
இவள் பாலுக்குத்தான் அழுகிறாள் என்று தீர்மானித்துக் கொண்ட அவன், சீலையைப் பிரித்து வாஞ்சையோடு சகோதரியைத் தூக்கினான். 'வாடி செல்லம். அழாதடி செல்லம்' என்ற வாஞ்சையான சொற்களும் வசீகரமாய் வந்து கொண்டிருந்தன. முத்தங்களையும் முத்துமுத்தாய் பொழிந்து தள்ளினான். எல்லாம் தாயாரிடமிருந்து கற்றவை தான். பின்வாசலைத் திறந்து கிணற்றடிப் பக்கம் போனான். அங்கே தாயார் உடுப்புத் தோய்த்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்டதும் பதறியடித்துக்கொண்டு வந்தாள். அவளுக்கு விளங்கிவிட்டது. பாலுக்குத்தான் அழுகிறது பிள்ளை. மார்பினுள் பிள்ளை முகத்தை புதைத்தாள். பிள்ளையின் அழுகையும் அடங்கியது.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 

25
பொச்சடிக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. தாயின் கழுத்துச் சங்கிலியை பிள்ளையின் சின்ன விரல்கள் நன்கு கொழுவி மடித்து பிடித்துக்கொண்டன.
பால்குடித்து முடித்ததும் பாலகி பரவசத்தில் சிரித்தது. பூரண திருப்தி. தன் அரைகுறை வேலையைத் தொடர, குழந்தையை ஏணையில் கிடத்த முயன்றாள் தாய். ஆனால் சிசு தன் சங்கிலிப் பிடியை விடுவதாயில்லை. இது வளர்த்துவதற்கு பெரும் தடையாயிற்று. மெல்ல ஒவ்வொரு விரலாக நிமிர்த்த முயன்றும், தோல்விதான். விடுவதாயில்லை. கொஞ்சம் பலாத்காரத்தை பிரயோகித்தால் வீரிட்டு கத்துகிறாள். தாய்க்கு சிரிப்புத்தான் வந்தது. பிள்ளையின் சுட்டித்தனத்தைக் கண்டு பரவசமானாள்.
'ஏனம்மா சங்கிலிய விடுகிறாளில்லை? கோபு கேட்டான்.
"பெண்களுக்கு நகையிலதான் ஆசை. அத தங்கச்சி தன் செய்கையிலே காட்டுது. நீ பிறந்த போது அப்பா ஆம்பிள பிள்ளை எண்டும் பாராம சங்கிலி செய்து போட்டவர். மாமா மோதிரமொண்டு போட்டவர். சித்தப்பா சட்டை போட்டு விட்டவர். ஆனா இது பொட்டச்சி எண்டு ஒருவரும் திரும்பியும் பார்க்க இல்லை’
'பாவம் தங்கச்சி என்னம்மா." என்றவனுக்கு கழிவிரக்கம் பிறந்தது.
அவனுக்கு இப்போது தான் பாலுவின் ஞாபகம் வந்தது. விரைந்து போனான் முற்றத்துக்கு. அங்கே அவனைக் காணவில்லை. பந்தை பூனை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை வெய்யில் ஏறிக் கொண்டிருக்கும் நேரம் கோபுவை தேடி மூன்று நண்பர்கள் வந்தனர். அவர்கள் பாலு, ராமு, சீனு, இவனோடு ஒத்த வயதினர்தான் அவர்களும். 'கோபு வெளிக்கிட்டிற்றியா? நாங்கள் கோவில் திருவிழாவுக்குப் போக ஆயத்தம்' குரல் கேட்டு கோபு துள்ளிக் குதித்துக் கொண்டு முன்னே தோன்றினான். அவனும் நல்லாடை அணிந்து ஆயத்தமாகத்தான் நின்றிருந்தான்.
திருவிழா காண பையன்கள் நால்வரும் வீட்டு அனுமதி பெற்று முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டனர். கவனமாகப் போய்வர வேணும். கனநேரம் மெனக்கெடக்கூடாது. காசுகளைக் கண்டபடி செலவழிக்கக் கூடாது தாயாரின் கண்டிப்பான பேச்சொலி கேட்டுக் கொண்டே இருக்க இவர்கள் நடையை விரைவுபடுத்தினர். கோபு, நில்லுங்கோடா வாறன்’ என்று வீட்டுக்குள் திரும்பி ஓடினான். தாயின் மடி மீதிருந்த தங்கச்சிப் பாப்பாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு துள்ளி ஓடி வந்தான்.
நால்வரும் நடையைக் கட்டினர். கோவிலை நோக்கி அவர்கள் நடப்பதாகத் தெரியவில்லை. துள்ளித் துள்ளிப் பாய்ந்தனர். கெந்து காலில் ஓடினர். ஓடி வருபவனை மற்றவன் தடுக்கி விழுத்தினான். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். விழுந்தவனும் சிரித்தான். அவர்களுக்கு எல்லாமே மகிழ்ச்சிதான். செல்லும் வழியில் சிறிதாக ஒரு குளம். இவர்கள் மேட்டு நிலத்தில் கூடி
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 15
26
குனிந்து நின்று நீந்தி விளையாடும் சின்னச் சின்ன மீன்களை பார்த்து இரசித்தனர். இவர்களுக்கும் அந்த மீன் குஞ்சுகளாகி நீந்தி விளையாட ஆசை. ஆனால் உடுப்புப் பழுதாப் போய்விடுமே. மீண்டும் கோயில் பாதையில் நடக்கலாயினர்.
எப்படியோ கோவிலடி வந்துவிட்டது. கோயில் கோபுரத்தை யாரும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கடைகள் தான் இவர்களை முதலில் வரவேற்றன. இவர்கள் ஆசைப்பட்டுக் கேட்டவை, கிடைக்காமல் போனவை எல்லாம் பரவிக் கிடந்து கண்ணுக்கு விருந்து படைத்தன. இவர்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து இரசித்து தங்கள் கண் பசியைத் தீர்த்துக்கொண்டனர்.
எத்தனை வண்ணங்கள், எத்தனை மினுக்கங்கள், எத்தனை விளையாட்டுச் சாமான்கள். முறுக்கித் திருகிவிட்டால் காணும். கரடி மேளம் தட்டுகிறது. ஆடு, மாடு, நாய், பூனை, கழுதை எல்லாம் நின்று நடனமாடுகின்றன. குரங்கு குத்துக்கரணம் அடிக்கிறது. கிளி கீச்சிட்டுப் பறக்கிறது. இராணுவ வீரன் துப்பாக்கியால் சடசடத்துச் சுடுகிறான். காற்றாடிகள் சுழல்கின்றன. பட்டங்கள் பறக்கின்றன. இவற்றைவிட தீன் பண்டங்கள் தான் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்கின்றன. நாவில் யலம் ஊறப் பண்ணுகின்றன.
இப்போதுதான் அவர்கள் தாங்கள் எவ்வளவு கைக்கெட்டாத கீழ்நிலையில் இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்தனர். தங்கள் கால்ச்சட்டைப் பைக்குள் கையைவிட்டு கிடக்கும் காசைத் தடவிப் பார்த்தனர். தங்கள் ஆசையில் ஒன்றிரெண்டு வீதத்தையே நிறைவேற்றலாம் என்றும் கை கணக்குப் போட்டுக் கொண்டு முதலில் பட்சணங்கள் விற்கும் கடைப்பக்கம் போயினர். அந்தவிடத்தில் குளிர்களி (ஐஸ்கிறீம்) விற்கும் வண்டில்காரனிடம் தான் சிறுவர் முதல் பெரியோர் வரை முண்டியடித்தனர். இவர்களும் அவனைச் சூழ்ந்தனர். குளிர்களியை ஆளுக்கொன்றாய் வாங்கி வாயில் வைத்தனர். சுவைப் பண்டங்களில் இப்போது முதலிடம் வகிப்பது இதுதான் என்று அவர்கள் முகபாவனை காட்டியது.
'டேய். கோபு நீ வாங்க இல்லையாடா? அவன் தலையைக் கவிழ்ந்து கொண்டு இவர்கள் பின்னால் போனான். அவர்கள் சுவையின்பத்தை இவன் மானசீகமாக உணரத் தவறவில்லை. இவன் சுவைக்காததை அவர்களும் கவனமெடுக்கவில்லை. சும்மா கேட்டதோடு சரி. அடுத்து பூந்தி வண்டில்காரனை மொய்த்தனர். பூந்தி, மிக்ஷர், அல்வா என்று அவைகளிலும் பதம் பார்த்தனர்.
'கோபு நீ காசு கொண்டு வர இல்லையாடா? அவர்கள் கேள்விக்கு அவன் மேலும் கீழுமாக தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு தரையைப் பார்த்துக் கொண்டு நடந்து வந்தான். அவனுள் ஒரு வைராக்கியம் குடியிருப்பது தெரிந்தது. ஆனால் சுவையுணவுகளைச் சுவைக்கும் அவர்களை இவன் கடைக்கண்ணால் காணத்தவறவில்லை. மனம் சலனப்படாமலும் இல்லை.
இல்லாதவனுக்கு கொடுத்து பகிர்ந்துண்டு வாழும் பழக்கம் இந்தச் சின்ன மனிதர்களுக்கும் இல்லாமல் போய்விட்டது.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம் 27
அடுத்து பலூன் விற்பவனைச் சூழ்ந்தனர். வாத்துப்போல, நாய் போல, புடலங்காய் போல, பூசணி போலவெல்லாம் பலூன்கள் இருந்தன. விற்பனையாளன் ஊதி ஊதி உப்ப வைத்து மினுங்க வைத்து அழகு காட்டினான். இதனால் ஈர்க்கப்பட்ட அவர்கள் ஆளுக்கொன்றாய் வாங்கிக் கொண்டனர். சுழலும் காற்றாடி இவர்கள் வசமாயிற்று. அப்போதும் கோபு இவர்கள் அதனை வைத்து விளையாடுவதை அலட்சியமாகவே பார்த்தான். அவன் மனதில் ஏதோவொரு வைராக்கியம்.
நண்பர்கள் வேண்டியதெல்லாம் வேண்டி காசை எல்லாம் முடித்துவிட்டனர். கோயிலைச் சுற்றி வீதி வலம்வர எத்தனித்தனர். இப்போதுதான் பல வர்ணங்களில் மின்மினிகளாய் மினுங்கும் கடைகளைக் கண்டு கவரப்பட்டனர். கோபு அந்தத்திசை நோக்கி முன்னேறினான். மற்றவர்கள் அவன் பின்னால் போயினர்.
கூடுதலாக மினுங்கியொலிக்கும் கடை முன்னால் கோபு போய் நின்றான். முத்துமாலை, பவளமாலை, மாணிக்கமாலை, தங்கமாலை என்று எல்லாமே தீப ஒளியாக மினுங்கி பளபளத்து அழகுகாட்டியது. இவன் தங்கச் சங்கிலிகளைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான். சின்னதாக ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கும் சங்கிலிக் கோர்வைகளில் அவன் பார்வை நிலைத்துவிட்டது.
"ஐயா, அந்தச் சின்னச் சங்கிலி ஒன்று என்ன விலை? நண்பர்கள் பின்னால் நின்று ஆச்சரியமாக ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றனர்.
"எழுபது ரூபாய் தம்பி!
"கொஞ்சம் குறைச்சுச் சொல்லுங்கையா.1
'சரி உனக்காக அறுபது ரூபாயெண்டாத் தருவன்’
கோபு பைக்குள் இருக்கும் தாளை தடவிப் பார்த்துக் கொண்டான்.
‘என்னட்ட ஐம்பது ரூபா தான் இருக்கையா
கடைக்காரன் மெளனித்தான, இவன் எதையோ பறி கொடுத்தவன் போல அங்கிருந்து அகல முற்பட்டான். கடைக்காரன் கூப்பிட்டான். இவன் காசைக் கொடுத்து சங்கிலியைப் பெற்றுக்கொண்டான். சங்கிலியை முன்னால் பிடித்து மெய்மறந்து இரசித்தான். ஏதோ, தன் இலட்சியத்தை அடைந்துவிட்ட பூரிப்பு. நண்பர்கள் விபரம் புரியாமல் வினோதமாக அவனைப் பார்த்து பின்னால் சென்றனர்.
கோவில் வீதியை வலம் வந்து வீட்டுக்கு வரும் வீதியால் நடக்கலாயினர். விளையாடி விளையாடி நடந்தனர். பலூனை ஊதி ஊதி அடித்து விளையாடி
உடைத்தனர். அவை படார் என்று உடைவதும் ஒரு விளையாட்டுத்தான். காற்றாடியைச் சுழலவிட்டு இரசித்த வண்ணம் நடந்தனர்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 16
28
பெரும்காற்று அடித்தது. அதுவும் கிழிந்து போயிற்று. இப்போது அவள்களிடம் ஒரு காசும் இல்லை. வேண்டிய பொருட்கள் ஒன்றும் கையிலும் இல்லை. எல்லோர் கண்களும் கோபுவையே விளித்தன. அவன் சங்கிலியை விரலில் வைத்துச் சுழற்றிக் கொண்டிருந்தான். சூரிய ஒளிபட்டு சங்கிலி ஒளிவீசி இவர்களைப் பார்த்துச் சிரித்தது. தாங்கள் முட்டாள்களாகி, ஒரு கெட்டிக்காரனைப் பார்ப்பது போல அவனைப் பார்த்தனர். அந்தச் சங்கிலியால் கவரப்பட்டு அவன் வீட்டுக்கும் வந்து விட்டனர். கோபு உள்ளே ஓடினான்.
‘என்ர பாப்பாக்குட்டி. இந்தாடி சங்கிலி.!’ தங்கச்சிப் பாப்பா சங்கிலியை விரல்களால் கொளுவிக் கொண்டு சிரித்தது.
நீ ஒன்றும் வாங்கித்தின்ன இல்லையா? தங்கச்சிக்காக இதை வாங்கி வந்தியா’ என்ற தாய் கண்ணிரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தவாறு பெருமிதத்தால் கோபுவை உச்சி மோர்ந்தாள். நண்பர்கள் பேயரைப்போல் ன்று பேந்தப் பேந்த விழித்தனர்!!! X k. நி நதப பேநத வழதத (முற்றும்)
நீவன்னைத்தேருநிற
பாடுபட்டு நான் உழைத்து பக்குவமாய் சேர்த்து வைத்த
வீடு கட்டும் பணமெல்லாம் செல்வங்களும் குறைவதினால்
விரயமாகிப் போகுதப்பா!
படுக்கையிலே என் மனையாள் படுத்திருக்காள் நோய் பிடித்து கொடுத்து வாறன் பல மருந்தும் கொணமாக நான் காணேன்!
செலவுகளும் கூடிப்போய் செல்வங்களும் குறைகிறது வளவுகளும் வளங்களும் விற்கப் படப் போகிறதே!
இருபத்தாறு வயதினிலே இருக்காள் எனக்கு மகளொன்று பருவத்துப் பாவை அவள் பார்த்திருக்காள் மணநாளை!
செய்யும் வழி தெரியவில்லை பல்வேறு குழப்பங்களும் பரவி மனதில் கலக்கிறது!
கரும்பு தின்னக் கூலியாம்? கணக்கத்தான் கேட்கின்றார் விரும்பும் ஒரு மகன் தேட விலைகொடுக்க எனக்கு ஏலா!
மஹர் கொடுத்து பெண்ணெடுக்கும் மானமுள்ள ஆண் மகனை நிகரில்லா தலைவனாக நினைத்தே நித்தம் நானும் தேடுகிறேன்!!!
பி.ரி. அஸிஸ் கிண்ணியா - 7
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

29
கேஏவி, சிவகுமாரனிலுருகளிலி திறனறிவு/மதிப்பிருவிகில
云ー (1.தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா)
தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார்.
கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஒமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும் பெற்றிருக்கிறார்.
சொல்லப்போனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இவரது இந்த இலக்கிய ஊழியம், கலை இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம் ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள் தமது எழுத்துருக்களை முதற் கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரை சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே. சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர் பார்வைக்கு வருவதுமுண்டு. கே.எஸ். சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலம் அல்லது தன் சொந்த தேடலாகவோ இந்நூல்களைப் படித்து தன் கண்ணோட்டத்தைப் பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும், படைப்புக்கும் மூன்றாவது வாசகர் பார்வை அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ். சிவகுமாரன் தன் கண்ணோட்டத்தை
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 17
30
அடக்கிய தனது நூலுருக்களை தொகுப்பு நூலாக்கல். என திரு. கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிய அவதானத்தை கிழக்கு மண் இணையத்தளம் தந்திருக்கின்றது.
சோமகாந்தனின் பத்தி எழுத்து என்ற மகுடத்தில் சோமகாந்தனைப் பற்றி இந்நூல் எமக்கு அறியத்தருகின்றது. தினகரன் வார மஞ்சரியில் காந்தனின் கண்ணோட்டம் என்ற தலைப்பில் வாராவாரம் சோமகாந்தனின் பத்தி எழுத்துக்கள் வெளி வந்திருக்கின்றன. சோமகாந்தனின் எழுத்துக்களை ரசித்ததாகக் கூறும் நூலாசிரியர் அதற்கான சில காரணங்களாக பின்வருவனவற்றை கூறியிருக்கின்றார்.
1. தமிழ் மொழியின் சொல் வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தில் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளங்காகிதம் அடைந்தமை, 2 தெரியாத சில விபரங்களைக் கோர்த்து அவர் தரும் பாங்கு என் அறிவை விருத்தி செய்ய உதவியமை, 3. சோமகாந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத்தன்மை கொண்டவையாதலால் அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெற்றமை,
எழுத்து, சமயம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர்தர அரசாங்க உத்தியோகத்தரான சோமகாந்தனைப் பற்றி இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்களோ என்னவோ? திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் புத்தகங்களில் படித்து அறியக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது 6606) D.
பத்தி எழுத்தும் சண் அங்கிளும் என்ற பார்வையில் பொ. சண்முகநாதனைப் பற்றி அறியத் தந்திருக்கிறார். உதயன் நாளிதழில் நினைக்க. சிரிக்க. சிந்திக்க. என்ற தலைப்பில் எழுதி வந்த பொ. சண்முகநாதன் தனது சொந்தப் பெயரிலும் நீண்ட நாட்களாக ஜனரஞ்சகமாகவும், நகைச் சுவையாகவும் எழுதி வந்த ஒரு படைப்பாளி. தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாகவும், தெளிவாகவும் சொல்லி முடிக்கும் பாங்கு பலரிடம் இல்லை. எனினும் பத்தி எழுத்துக்கள் மூலமாக பொ. சண்முகநாதன் அவர்கள் கூறும் பாங்கு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.
பல முக்கிய செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய கிளைச் செய்திகளையும் சுருக்கமாகத் தந்த பின்னர் சிந்திக் கத்தக்க கருத்துக்களையும் பலவந்தமாகத் திணிக்காமல் தான் எடுத்துக்கொண்ட பொருளுடன் ஒட்டியதாக அவர் எழுதும் முறை ஆசிரியரின் முதிர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் காட்டி நிற்கிறது என தனது பாராட்டை தெளித்திருக்கிறார் திரு. சிவகுமாரன் அவர்கள்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை -
 
 

31
1958 - 1966 காலப் பகுதியில் சிற்பி சிவசரவணபவன் வெளியிட்ட “கலைச்செல்வி’ நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்பது பலரின் கணிப்பு சிற்பி அவர்கள் தீபம் என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் இவர் எழுதிய இலங்கைக் கடிதத்தொடரால் எமது நாட்டு இலக்கிய முயற்சிகளை இந்தியர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பை அளித்தது. இவர் சத்திய தரிசனம், உனக்காக கண்ணே ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
பூரிஸ் கந்தராஜா ஞானமேரி என்ற பெண்பாற் புலவரைப் பற்றியும் இத்தொகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. திருகோணமலையைச் சேர்ந்த இவர் மரபு சார்ந்த கவிதைகளையும், பாடல்களையும் எழுதி வருகிறார். இவரது பாடல்களில் லயம், ஓசை என்பன காணப்படுவதையும், சொல்லாட்சி இருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் ஞானமேரி அவர்களின் இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் விதைந்துரைக்கப்பட்ட பாடநூலாக இருப்பது அவசியம் எனக்கூறுகின்றார்.
திரு. கெளசிகன் நடாத்திய ஓவியப் பயிற்சி கண்காட்சியின் நிகழ்வொன்றையும் இந்த புத்தகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கொழும்பு வாழ் பல பெண்கள் இந்த பயிற்சிக் கல்லூரியின் மாணவிகளாவர். இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திரு. திருமதி. கெளசிகன் இருவரும் நவீனத்தவமும், இயற் பண்பும் கொண்ட ஒவியங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இளைஞர், யுவதிகளின் இந்த திறமையை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சி கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்பத்தில் இடம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இஸ்லாமியப் பெண்ணின் எழுத்தாற்றல் என்ற வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் அது பற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.
'கிழக்கிலங்கை இஸ்லாமியரும், யாழ்ப்பாண நகரின் இஸ்லாமியரும் தமிழைத் தம் வசமாக்கி தனித்துவமான படைப்புக்களை இப்பொழுது தந்துகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆயினும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் வெலிகம என்ற ஊரைச் சேர்ந்த ரிம்ஸா முஹம்மத் தமிழை ஆள்வது எனக்கு வியப்பைத் தந்தது. புதுக்கவிதை என்ற பெயரில் வழமையாக பலர் எழுதும் செயற்கைத் தன்மையான கேள்விகளும், சூளுரைத்தல்களும் போன்று நமது கவிஞரும் எழுதி விடுவாரோ என்ற எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் அமைதி கண்டு யதார்த்த அனுபவத்தை அவர் பதிவு செய்வது எனக்கு திருப்தியளித்தது. என்றவாறு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தன் மனவோட்டத்தைக் கூறியிருக்கின்றார்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 18
32
எல்லாக் கலைகளுமே களிப்பூட்டுவன என்றாலும் பெரும்பாலானவை பெருவாரியான பொதுமக்களின் ரசனை மட்டத்தை திருப்திப்படுத்துவன். அந்த வகையில் சினிமாவும் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இத்தகைய திரைப்படங்கள் ஜனரஞ்சகமானவை என்கிறார்கள். சில நேரங்களில் ஜனரஞ்சகமானவை கலைத் தரமுடையவையாக அமையும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.
வியாபார நோக்கத்திற்காக திரைப்படம் தயாரிப்பவர்கள் ரசிகர்களின் ரசனையை மதிப்பவர்களாக பெரும்பாலும் இல்லை. முதலீட்டை கைப்பற்றவே அவர்களது மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். அதாவது தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும், சம்பவங்களைக் கூட வசனத்தில் மீண்டும் எடுத்துரைக்கும் விதத்திலும் பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே வணிகப் படங்கள் கைத்தொழில் முயற்சிகளின் விளைவுகள் எனலாம். கலைநயமான படங்கள் உயர் மட்ட ரசனை உடையவர்களின் ஆய்வறிவுக்கு விருந்தளிப்பன. மக்கள் ரசனை உயரும்போது ஆக்கபூர்வமான கலைப்படங்கள் தாராளமாக நமது பார்வைக்கு வரும் என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
விடிவு கால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள், அன்னையின் நிழல் ஆகிய நூல்களுடன் அண்மையில் பலே பலே வைத்தியர் என்ற சிறுவர் நூலையும் எழுதி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கே.விஜயன் அவர்களைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் விஜயன் அவர்கள், இதழியலாளராக இருந்தவராவார். மார்க்சிய சிந்தனை உடைய இவர் மலையாளக் கதைகள் சிலவற்றையும் தமிழில் தந்திருக்கின்றார். சிறுவர்களைக் கவரக் கூடியதும், பெரியவர்களை திருப்திப் படுத்தக்கூடியதுமான கே. விஜயன் அவர்களின் பலே பலே வைத்தியர் என்ற நூல் 98 பக்கங்களில் 20 கதைகளுடன் வெளிவந்திருக்கிறது.
தனது எழுத்துக்களாலும், தன் நிகரற்ற பண்பினாலும் பல இலக்கிய நெஞ்சங்களின் அன்பை வென்றெடுத்த மாமேதை திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் நூலுக்கு எனது இரசனைக்குறிப்பை எழுதியதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவரைப் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இன்னுமின்னும் சாதனைப் படைக்கவும் வாழ்த்துகிறேன்!!! mn.
நூல் - கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில்
திறனாய்வு / மதிப்பீடுகள் சில ஆசிரியர் - கே.எஸ். சிவகுமாரன் முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06 விலை - 200 ரூபாய்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

- கலைமகன் பைரூஸ்
பேரும் புகழும் கிடைப்பதற் காய் பேராம் மரபை யழிக் கின்றார் சீரிளமை யறியாது மமதைக் காய் தளைதட்ட திரிசொலை யாள் கின்றார் நேரிலாத கானல் நீரன்ன தாய் நயமேயிலாத ஆக்கங்கள் புனை கின்றார் கார்மேகக் கவிபுனையும் வல்லாள ருண்டு கயமையினால் வீசுகின்றார் மடமை யன்றோ!
இதனை யிதனால் இவன்செய்வா னென்று அறியா தின்று பேருக்குப் பணியீவார் முதன்மை யாவர் அந்தமாய் சென்றிடவே மமதை யாளரைத் தேர்கின் றார் இதமான இயற்றமிழொடு சமர் செய்தே இங்கவர் படைத்திடும் பா நயப்பே பேதமையால் கருவிலா கவி புனைந்தே பைந்தமிழ்க் கிவர் செய்வதுதான் பணியோ?
எழுத்தசை சீர் அடிதொடை எலாம் எழுத்தெண்ணிக் கற்றிடின் நலமே - இவர் முழுமையும் பேருக்காய் செய்வ ரிங்கே மூழ்குவரே இலக்கியத்துள் மறைந் தழிவர் பழுதிலாக் காவியங்கள் படைத் திடுக பைந்தமிழ்க்கு பணிசெய்க என்றிடுவீர் நீரும் வீழாத நற்றமிழின் மேன்மை யுன்னி விடாக்கொண்டர்க் கீயாதீர் நற்றமிழ் பணியே!!!
இளம் படைப்பாளிகளின் இலக்கிய முயற்சிக்கு வித்திட்டு, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர தன்னாலான முயற்சிகளை பூங்காவனம் இதழ் மேற்கொண்டு வருவது நீங்கள் அறிந்ததே. அந்த வகையில் இனிவரும் இதழில் பிரசுரமாகும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதை ஒன்று தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அதை எழுதியவருக்கு பூங்காவனம் இதழ் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஆசிரியர் குழு
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 19
பூங்காவனம் 34
@@@顶拉?
சிறுகதை - எஸ்.ஆர். பாலசந்திரன்
சரசு அழுதுகொண்டிருந்தாள். கண்ணிர் மாலை மாலையாக கன்னங்களில் வடிந்துகொண்டிருந்தது. இறந்து போன அப்பாவை நினைத்து 'அப்பா என்னை மன்னித்து விடுங்கோ’ என கதறினாள். ஏன் அவள் மனம் புண்பட்டது? அவளது கணவன் சிவகுமார் நல்லவன் தானே? அவளில் மாறாத அன்பு கொண்டவன் ஆயிற்றே? ஏன் அவள் அழுகிறாள்?
来米米来米米米米米米米
சரசு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை தொழிலதிபர். தாயார் சமூக சேவகி. இருவரும் தொழில் நிமித்தம் வெளியே சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவார்கள். சரசு வீட்டில் தனிமையாக விடப்பட்டாள். அவள் அன்புக்காக ஏங்கிக்கொண்ருந்தாள். வேலைக்காரர்கள் கூட தன்மேல் உண்மையான அன்பு செலுத்துவதில்லை என்பதை சரசு மெல்ல மெல்ல உணர்ந்தாள்.
சரசு உயர் பள்ளியில் நிர்வாகப் படிப்பு படித்து வந்தாள். அப்போது வீட்டு சாரதியாக வந்து சேர்ந்தான் சிவகுமார் என்ற இளைஞன். சிவகுமார் சாதாரண தரம் வரை படித்தவன். ஆனால் மும்மொழியும் சரளமாகப் பேசுவான். கம்பீரமான தோற்றம். எப்போதும் புன்முறுவல் பூக்கும் முகம். சரசுவை பேபி என அழைப்பான். காரில் போகும்போது சுகம் விசாரிப்பான். ஒரு நாள் சரசு சுகவீனப்பட்டாள். அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றுவிட்டு வரும்போது அவள் இடறி விழப்போனாள், அவன் அவளைத் தாங்கிப் பிடித்தான். பிறகென்ன பஞ்சும் நெருப்பும் பற்றிக்கொண்டன.
அன்புக்காக ஏங்கிய சரசுவும், அன்பைப் பொழிந்த சிவகுமாரும் சேர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. இவர்களின் காதல் இரகசியமாக வளர்ந்தாலும் சரசுவின் தாய்க்கு சந்தேகம் பிறந்தது. கணவனிடம் கூறினார். அவர் சிரித்தார்.
'என் மகள் சிங்கமடி. சிறு நரியை நாடுமா? என வீர வசனம் பேசினார். திடீரென்று ஒருநாள் மாலையும் கழுத்துமாக சிவகுமார் - சரசு வந்து நின்றபொழுது அவருக்கு மாரடைப்பு வந்துவிட்டது. சிங்கம் சிறு நரியோடு சேர்ந்துவிட்டது.
அதனால் வீட்டைவிட்டு வெளியேற்றப்ட்ட சரசு கணவனோடு சிறியதொரு
வீட்டில் குடிபுகுந்தாள். வீட்டைவிட்டு தகப்பன் துரத்தினாலும் நகையெல்லாம் சரசுவிடம்தான் இருந்தன. அவற்றை அடகு வைத்து சிறிய கராஜ் ஒன்றை
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

பூங்காவனம் 35
அமைத்தனர். சரசுவின் நிர்வாகப் படிப்பு, சிவகுமாரின் சரியான உழைப்பு கராஜை ஓரளவிற்கு பெரிதாக்கியது.
எதிர்பாராத தருணமொன்றில் சரசுவின் தந்தை இறந்தார். தன்னால்தான் தந்தையின் மனது நோகடிக்கப்பட்டிருப்பதை சரசு அறிந்திருந்தாள். தாய் சரசுவை வீட்டிற்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தாள். சரசுவும் சிவகுமாரும் பெரிய வீட்டில் குடிபுகுந்தனர். சரசு தனது திறமையால் தகப்பனின் தொழிலை நடத்தினாள். கணவனையும் தீவிர பயிற்சி கொடுத்து திறமைசாலி ஆக்கிவிட்டாள். இப்போது தொழில் நன்றாக வளர்ந்தது. கணவனின் கராஜூம் மேலதிக பணத்தைக்கொண்டு பெரிதாக வளர்ந்தது. வருடங்கள் கழிய சரசு கருவுற்றாள். சரசுவின் தாய் மகளை அன்போடு கவனித்தாள். இப்படியிருந்தும் சரசு ஏன் அழுகிறாள்?
米米米米米米米米米米米
நிறை மாதக் கர்ப்பிணியான சரசு சிவகுமாரனோடு பேசிக்கொண்டிருந்தாள். அவள் தனக்கு ஆண்பிள்ளை வேண்டும் என்றாள். அவனோ தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்றான். குறும்புப் பேச்சு வளர்ந்தது. சரசுவின் வாயில் சனி புகுந்துவிட்டது போலும்.
பெண் பிள்ளை வேண்டாமப்பா. பிறகு அது உங்களை மீறி வீட்டு டிறைவரைக் காதலிக்கும். தனது இஷடப்படி கல்யாணம் கட்டும். உங்கட மானத்தை வாங்கும்' என்றாள்.
'ச்சி! அப்படிச் சொல்லாதே. எனது மகளை நான் முறையாக வளர்ப்பேன். அவள் நான் சொல்லுகிறபடிதான் கேட்பாள். ஒருநாளும் காதல் கீதல் என்று என் மானத்தை வாங்க மாட்டாள்’ என்றான். (தாங்களும் காதலித்தவர்கள் தானே என்பதை மறந்துவிட்டான்).
அவன் அப்படிச் சொல்லவும் சரசு தீ மிதித்தவள் போலானாள். அப்படியானால் தான் முறையாக வளர்க்கப்படவில்லை. தான் டிறைவரைக் காதலித்தது தவறு. ஒடிப்போய் திருமணம் செய்து, குடும்ப மானத்தை வாங்கியது உண்மை. இதைக் கணவன் மூலமாகவே உணர நேரிட்டது.
"இப்ப எங்களுடைய மனதைப் புண்படுத்திவிட்டாய். என்றைக்கோ ஒருநாள் நீ செய்தது தவறு " என உணருவாய். அப்போது நாங்கள் இருப்பமோ இல்லையோ தெரியாது’ என தனது தாய் கூறியவை அவளுக்கு ஞாபகம் வந்தது.
இப்போது தந்தை இறந்துவிட்டார். தாயும் மனவேதனையோடு தான் இருக்கின்றார். இவற்றை எண்ணித்தான் சரசு தன் தந்தையிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு அழுதுகொண்டிருக்கிறாள். அவளுடைய அழுகை இனி நிற்கப்போவதில்லை. பாவத்தின் தண்டனை அது!!! ((ppb Olb)
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 20
6)
பிறரின் காலம் 711
- நுணாவிலுர் கா. விசயரத்தினம்- (இலண்டன்)
தொல்காப்பியர்
தொல்காப்பியம் என்னும் நூலைத் தொல்காப்பியனார் என்ற பெரும் புகழ் பெற்ற புலவன் பாடியருளினார். தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஒரு பெரிய இலக்கண, இலக்கிய உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும், இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவராவார்.
"இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்” என்று நக்கீரனார் கூறியுள்ளார். மேலும் "தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொண்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்.” என்பது டாக்டர் மு.வரதராசனாரின் கூற்றாகும்.
இன்னும் 'ஒலி காப் பெரும் புகழித தொலகாப்பரியணி ' எனப் போற்றப்படுகின்றார் தொல்காப்பியர். இவர் ஒரு காப்பியக் குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற்பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் “திரணதுரமாக்கினி" எனவும் "சமதக்கினியாரின் புதல்வர்” எனவும் கூறுவர். அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் ஆவார். இன்னும், இவள் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஒருமித்து 27 இயல்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தில் 483 சூத்திரங்களும், சொல்லதிகாரத்தில் 463 சூத்திரங்களும், பொருளதிகாரத்தில் 656 சூத்திரங்களுமாக ஒருமித்து 1,602 சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளன. ஆனால் இந்நூற் குத்திரங்கள் 1,595 என இளம்பூரணரும், 1,611 என நச்சினார்கினியரும் வகுத்து உரையெழுதியுள்ளனர்.
செந்நாப்புலவரான பனம்பாரனார் தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவர். இவர் தொல்காப்பிய நூலுக்குச் சிறப்புப் பாயிரம் ஒன்றினைச் செய்துள்ளார். இ.து இந்நூலின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது. நிலந்தரு திருவிற் பாண்டியன்' என்பானின் அரச அவையிலே அதங்கோட்டாசிரியரின் முன்பாக அந்நாளில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியும் அப்பாயிரத்தின் மூலம் பின்வருமாறு அறியக்கிடக்கின்றது.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம் 37
"வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரிதபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
இப் பாயிரத்தின் பொருள்:- ‘வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரியாறும் எல்லையாகி அதனிடைப்பட நிலவியது தமிழ் கூறும் நல்லுலகமாகும். அதன்கண் நிலவிய வழக்குகளையும், செய்யுட்களையும், அவற்றிற்குரிய எழுத்து, சொல், பொருள் இலக்கணங்களையும் ஆராய்ந்தனர். செந்தமிழின் இயற்கையோடு பொருந்திய வழக்குகளையும் நோக்கி, முன் எழுந்த நூல்களையும் கற்றுத் தெரிந்தனர்.
வெற்றிச் செல்வனான பாண்டியன் மாகீர்த்தியின் அவையத்தே, அறத்தினைக் கூறும் நாநலத்தை உடையவனும், நான்மறைகளைக் கற்றறிந்தவனும், அதங்கோடு என்னும் ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமில்லாத இப் பனுவலையும் தம் அறிவுத் திறனால் தொகுத்துத் தந்தனர். மயக்கம் இல்லா நெறியோடு எழுத்து இலக்கணத்தைக் காட்டி, அதன் பிரகாரம் அமைந்து விளங்கும் சொல்லும் பொருளுமாகிய இலக்கணங்களை முறைமையாகக் காட்டினர்.
நீர் நிறைந்த கடலாகிய எல்லையைக் கொண்ட உலகில், இந்திரனால் இயற்றப்பட்ட ஐந்திரத்தைக் கற்று, நிறைந்த அறிவு பெற்றவரும், “பழைய காப்பியக் குடியினர்’ எனத் தம் பெயரை உலகில் நிலைநாட்டியவரும், மற்றும் பல்வேறு புகழையும் தாங்குபவரான சிறப்பினையுடைய தொல்காப்பியனார் ஆவார்.’ என்பதாகும்.
வடக்கே திருவேங்கட மலையும், தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்குத் திசைகளில் கடலாகவும் அமைந்த எல்லைப் பரப்பே ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாடு என்றழைப்பர். ஆனால், தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் கடல் எல்லைகளைக் குறிக்கவில்லை. அவர் பாயிரம் இவ்வாறு தொடங்குகின்றது.
"வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து’
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 21
38
பனம்பாரனாரின் பாயிரத்தில் ஒரு சிறப்பு அம்சம் அமைந்திருப்பதை நாம் காணலாம். இங்கே ஆசிரியர் ஒரு விடயத்தை - அதாவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லையாக அமைந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்லிப் போகின்றார். வடக்கே நீண்ட தொடர் வேங்கட மலை. தெற்கே பாய்ந்தோடும் குமரியாறு. இது கடல் வரை சென்று சங்கமிக்கும். எனவே கடல் எல்லையைக் கூறாமற் கூறியுள்ளார். இன்னும், வேங்கட மலைக்கும், குமரியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு என்று குறிப்பிடுவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லைவரைஉள்ள நிலப்பரப்பே தமிழ் கூறும் நல்லுலகமாகும் என்பது தோன்றா நிற்கும்.
தொல்காப்பியரின் காலம்
தொல்காப்பியர் காலத்தால் மூத்தவர். எனவே அவரின் கால எல்லையைக் கணிப்பதில் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. தொல்காப்பியரது காலம் பற்றி பல ஆண்டுகளாக தமிழறிஞர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் இருந்து வந்துள்ளன. அவரது காலம் பற்றிப் பல ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடாத்தப்பட்டும் எதுவிதமான பலன்கள் ஏதும் எட்டப்படவில்லை. இந்நிலையில் ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும், மற்றையோரும் தங்களுக்கேற்றவாறு தொல்காப்பியரின் காலத்தைப் பல்வேறு பட்ட ஆண்டுகளைப் பாவனைப்படுத்தி வந்ததால் சீர்நிலை குலைந்து காணப்பட்டது.
இனி, தொல்காப்பியரின் கால எல்லையைக் கணித்த முறை பற்றியும், அது தொடர்பில் எழுந்த பல பிரச்சினைகள் பற்றியும் ஈண்டுக் காண்போம்.
கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கை 2010ஆம்
ஆண்டில் நடாத்தினர்.
கடந்த மூன்று ஆண்டுகளாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய முப்பதுக்கும் மேற்பட்ட தொல்காப்பியக் கருத்தரங்கங்களில் தொல்காப்பியரின் காலத்தையும், நாளையும் வரையறை செய்துள்ளனர்.
கோவிலூர் திருமடத்தில் மூன்று நாட்கள் நிகழ்ந்த திருவள்ளுவர் ஆண்டு கருத்தரங்கில் அறிஞர் பலரால் ஆய்வு செய்யப்பட்டு தொல்காப்பியர் நாளும், கால எல்லையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சித்திரைத் திங்கள் முழுமதி அவரது நாள் (சித்திராப் பெளர்ணமி) என்றும், அவரது கால எல்லை கி.மு. 711 (ஆண்டு 2727-2010+71) என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் கோட்பாடுகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றைச் சித்திரை
மாதம் 2010ஆம் ஆண்டில் முனைவர் கு.சிவமணி தலைமையில் நடைபெற்றது. இதில் தொல்காப்பியரின் திருவுருவப் படத்தை புலவர்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம் 39
த.சுந்தரராசன் திறந்து வைக்க, முனைவர்கள் பெ. சுயம்பு, இரா. காசிராஜன் போன்றோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.
தொல்காப்பியர் காலம் குறித்த இத்தீர்மானத்தை தமிழக அரசு ஏற்று. உலகச் செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியர் காலம் கி.மு. 711 என்றும், அவரது நாள் அந்த ஆண்டின் சித்திரைத் திங்கள் முழுமதி நாள் (சித்திராப் பெளர்ணமி) என்றும் அறிவித்து, தொல்காப்பியர் புகழை நிலைபெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்ச் சான்றோர் சார்பாக, பேராசிரியர் கு. சிவமணி, பேராசிரியர் தமிழண்ணல் மற்றும் ஆறு அழகப்பன் போன்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று தமிழ் மக்கள் 'தொல்காப்பியர் காலம் கி.மு. 711' என்று பாவனைப் படுத்தத் தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
மேலும், பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்த முச்சங்கங்களில் ஒன்றான இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதினர். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரையில் காணப்படும் முச்சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளின் படியும், தொல்காப்பியம் கி.மு. 5000 ஆண்டளவில் எழுந்தது என்றும் இவர்கள் கணித்தனர். எனினும் தற்கால ஆய்வாளர்கள் சிலர் இதை ஏற்க மறுத்தனர். திருவாளர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், இலக்குவன்ார் போன்றோர் தொல்காப்பியம் கி.மு. 700ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதினர். வேறு சிலர் இந்நூல் கி.மு. 500க்கு முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் இந்நூலின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி. 3ஆம் நூற்றாண்டு என்றனர். இன்னும் சிலர் தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்றும், அதன் கால எல்லையை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கூறினர். எனினும் தொல்காப்பியம் கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாய் அமைந்திருந்தது.
திருவள்ளுவர் தொடர் ஆண்டு
தமிழினம் உலகிலேயே மிகத் தொன்மை வாய்ந்த நாகரிகச் சிறப்பும், இலக்கிய வளமும், விழுமிய பண்புகளும், காலத்தை விஞ்சும் தொன்மையும் நிறைந்த ஓர் இனம். ஆனால் தமிழினத்திற்கு ஒரு தொடர் ஆண்டு இன்றி நீண்ட காலமாக இருந்துள்ளமை கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
இக்குறை தீர்க்கப் பல தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேரறிஞர் மறைமலையடிகள் தலைமையில் ஒரு மாநாட்டைக்கூட்டி தமிழர்களுக்கு உலகப் புகழை ஈட்டித் தந்த திருக்குறள் நூலை யாத்த திருவள்ளுவர் காலத்திலிருந்து தொடர் ஆண்டாக ஏற்பதென ஏகமனதாகத் தீர்மானித்தனர். இதனைத் தமிழ் இனம் ஏற்றுக்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 22
40
கொண்டது. இதனைத் தமிழக அரசும் 1971ஆம் ஆண்டில் ஏற்று அனுமதியும் வழங்கியது.
திருவள்ளுவர்
திருவள்ளுவர் திருக்குறளை முப்பெரும் பகுதிகளாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என ஒவ்வொன்றும் பத்துக் குறள்கள் கொண்ட நூற்றி முப்பத்து மூன்று (133) அதிகாரங்களில் ஒருமித்து ஆயிரத்து முன்னுாற்றி முப்பது (1330) குறள்களைப் பாடியருளிய தெய்வப் புலவராவார். கடந்த இரண்டாயிரம் (2000) ஆண்டுகளாக மக்கள் மத்தியில் திருக்குறளின் கருத்தொளி மங்காது பிரகாசித்துக்கொண்டிருப்பது அந்நூலின் சிறப்பாற்றலை எடுத்துக் காட்டுகின்றது.
திருவள்ளுவர் கி.மு.31ஆம் ஆண்டில் பிறந்தவர். இன்று நாம் அவர் தொடர் ஆண்டினை 'திருவள்ளுவர் ஆண்டு 2042” (31+2011) என்று கூறுகின்றோம். இன்று சில தமிழ் ஊடகங்கள் இத்தமிழ் ஆண்டினையும் பாவனையில் சேர்க்கின்றன. இன்னும் முழு அளவில் திருவள்ளுவர் ஆண்டினைத் தமிழுலகம் கையாள முன்வரவேண்டும். இதை ஓர் உயிரூட்டும் பணியென நினைந்து எல்லாத் தமிழ் ஊடகங்களும் ஒருமித்துச் செயலாற்றின் முயற்சி தானே திருவினையாகும்.
தமிழினத்துக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையைத் ‘திருவள்ளுவர் தொடர் ஆண்டு’ என நிர்ணயித்து, அதை நடைமுறைப்படுத்தியதற்கும், அண்மையில் “தொல்காப்பியர் காலம் கி.மு. 711’ என்று தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து அறிஞர் குழாம் முன்னிலையில் ஆய்வு நடாத்தி நிறைவேற்றப்பட்டதற்கும் தமிழ்நாட்டு அறிஞர்களையும், தமிழ்நாட்டு அரசையும் பாராட்டிப் போற்றுவது நம்மனைவரின் கடமையாகும்.
தமிழ் நாட்டு அறிஞர்களுக்கு இன்னும் ஒரு பணி எதிர்பார்த்திருக்கின்றது. திருமந்திரம் நூலை எழுதிய திருமூலர், இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களை எழுதிய வால்மீகி, வியாச மகரிசி ஆகியோரின் கால எல்லைகளை இதுவரை கணிக்காதிருப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். எனவே திருமூலர், வால்மீகி, வியாச மகரிசி ஆகிய தத்துவ மேதைகளின் கால எல்லைகளைக் கணக்கிலெடுத்து, அவற்றைத் தீர ஆய்வு செய்து, சிறந்த முடிவுகளை மக்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு அரசிடமும் வைக்க வேண்டிய சீரிய பொறுப்பு தமிழ்நாட்டு அறிஞர் குழாமின் முக்கிய கடமையாகும் என்று தமிழுலகம் வேண்டி நிற்கின்றது!!!
“பூங்காவனம்” கிடைக்குமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு - (1) டெஸ்ட் குயின் பவுண்டேஷன் - கல்கிரை
ப்ரியமான வாசகர்களே! உங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்குவதன் மூலம் 'பூங்காவனம்' சஞ்சிகையின் தொடர் வளர்ச்சிக்கு உதவுங்கள்!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

tiss6)6Oftb
பசி வயிற்றைக் கிள்ளியது. மிக வேகமாக பைக்கை செலுத்திக் கொண்டு வந்தான் ரஸ்லான். வீட்டை நெருங்கியதும் அவனுக்கு வியப்பாக இருந்தது. அவனது நண்பன் ஸபாரின் பைக் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைக் கவனித்துக்கொண்டே வந்தவனின் பைக் திடீரென நின்றுவிட்டது. பல முறைகள் உதைத்துப் பார்த்தான். இயங்கவில்லை. பெற்றோல் முடிந்திருந்ததை அப்போது தான் உணர்ந்தான். பசி மயக்கத்தில் அதைக் கவனிக்கவில்லை என தன்னையே கடிந்துகொண்டான். w
பைக்கைத் தள்ளிக்கொண்டே வீட்டை அடைந்தான் ரஸ்லான், ஏதாவது முக்கியவிடயமாக ஸ்பார் தன்னை சந்திக்க வந்து வீட்டில் காத்திருப்பதாக எண்ணிக்கொண்டு வந்து சுற்றுமுற்றும் பார்த்தான். ஸபாரைக் காணவில்லை. வீட்டின் வாசற் கதவு மூடிக்கிடந்தது. அப்படியானால் பைக்கை நிறுத்திவிட்டு, தான் இல்லாததால் அருகில் எங்கேயாவது ஸபார் போயிருப்பான் என எண்ணினான். வீட்டின் பின் புறத்தில் அமைந்திருந்த பைக் நிறுத்தும் இடத்தை நெருங்கிய ரஸ்லானுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர வைத்தது. அப்படியே கற்சிலை போல் நின்றுவிட்டான் ரஸ்லான். ஆம்! அவனது ஆருயிர் நண்பனான ஸபார் சமையலறையின் வெளியே நின்று ஜன்னலூடாக ஒரு திருடனைப் போல எட்டிப் பார்த்துக்கொண்டு நின்றான். யாரோ நடந்து வரும் ஓசை கேட்டு திடுக்குற்று திரும்பிய ஸபார் ரஸ்லானைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தான்.
ரஸ்.லா.ன் நா. உன்னைத் தேடித்தான் வந்தேன்’ என நாவு குழறியபடி பேச்சின்றித் தோற்றுப் போனான். ரஸ்லானின் கண்கள் கோபத்தில் சிவந்துவிட்டன. எதுவும் பேசாமல் முன் வாசலுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினான். வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த ஆபிதா, வாசற் கதவைத் திறந்தான். தனது கணவனைக் கண்டதும் சந்தோஷத்தில் பூரித்துப் போனாள்.
'என்ன புதினமாயிருக்கு இன்றைக்கு நேரத்தோட வந்திருக்கீங்க?" என மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள். அவளைப் பொருட்படுத்தாமல் விருவிரு என அறைக்குள் சென்றுவிட்டான் ரஸ்லான். அப்போது தான் வீட்டின் முன்னால் ஸபார் நிற்பதைக் கண்டாள் ஆபிதா,
'ஆ. ஸ்பார் காக்கா. நீங்களுமா வந்திருக்கீங்க? ஏன் வெளியில நிற்கிறீங்க? உள்ள வந்து உட்காருங்க” என வரவேற்றுவிட்டு உள்ளே சென்றாள்.
சமைத்த உணவுகளை மேசை மீது பரத்தினாள். அனைத்தையும் ஒழுங்கு படுத்தி முடித்துவிட்டு ஹோலுக்கு வந்தவள் வியப்படைந்தாள். தனது கணவன்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 23
42
ஸபாரை அழைத்து வந்து இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள் என எண்ணி வந்தவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அங்கே இருவரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்கள் என எண்ணியபடி மீண்டும் உள்ளே வந்தவள் தற்செயலாக அறையை எட்டிப் பார்த்தாள். உடைகளைக் கூட மாற்றிக்கொள்ளாமல் ரஸ்லான் கட்டிலில் வீழ்ந்துகிடந்தான்.
‘என்ன நீங்க உடுப்பைக் கூட மாற்றாமல் படுத்துட்டீங்க. உங்க கூட்டாளி எங்க? சாப்பிடாமல் போயிட்டாரா' என கேட்டாள். பதில் எதுவும் கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் ரஸ்லான்,
‘என்ன ஏதும் பிரச்சினையா?
'இல்லை’
'ஏன் உங்க கூட்டாளி சாப்பிடாமல் போயிட்டார்?
'பசிக்கலயாம்'
நீங்க வந்து சாப்பிடுங்களேன்.
வேணாம் ஆபிதா பசிக்கல்ல' என பதில் கூறினான். அவனது பசி காணாமல் போயிருந்தது.
சற்று முன் நடந்த விடயத்தை தனது மனைவியிடம் சொல்லுவோமா என ரஸ்லான் நினைத்தான். ஆனால் அது அவனுக்கு அவமானமாகத் தோன்றியது. அதைவிட ஸபார் வீட்டுக்கு வருவது ஆபிதாவுக்கு பிடிப்பதில்லை. இதையும் சொன்னால் ஏச்சுத்தான் விழும் என்று எண்ணி பேசாமல் இருந்தான்.
முன்பு ஒருமுறை ஸ்பாரின் வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடாகியிருந்தது. சிறப்பு விருந்தினர் என இவர்களை கட்டாயப்படுத்தி அழைப்பு விடுத்திருந்தான் ஸபார். ஆனால் எவ்வளவு அழைத்தும் ஆபிதா விருந்துக்கு வர முடியாது என மறுத்துவிட்டாள். இதனால் மனமுடைந்து போன ரஸ்லான் அவளோடு சண்டை பிடித்துவிட்டு தானும் போகாமல் இருந்துவிட எண்ணினான். அதற்குள் பலமுறைகள் தொலைபேசினான் ஸபார். வேறு வழியின்றி அவன் தனியாக சென்றதோடு சமாளிப்பதற்காக ஆபிதாவுக்கு சுகமில்லை என ஒரு சின்ன பொய்யை உதிர்த்தது இன்னொரு வம்பை ஏற்படுத்தியது.
மறுதினமே ஸ்பார் தனது மனைவியோடு ஆபிதாவை நோய் விசாரிக்க வந்துவிட்டான். இதை எதிர்பார்க்காத ரஸ் லான் தர்மசங்கடத்தில் சிக்கிக்கொண்டு நிலைமையை சமாளிப்பதற்குத் திணறிப் போனான். அதைவிட அன்று ஆபிதாவை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. எது எப்படியானாலும் ஸபார். தனது வீட்டுக்கு வருவது ஆபிதாவுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் ரஸ்லானுக்குப் புரிந்தது. அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை ரஸ்லான். இத்தனைக் கால அலட்சியம் இன்று பெருங் கவலையை ஏற்படுத்தியது. திடீரென ஏதோ எண்ணியவனாக சட்டென எழுந்து அமர்ந்துகொண்டான்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

43
பூங்காவணம்
'ஆபிதா. இன்றைக்கு ஒரு டினருக்குப் போகனும்
‘எங்க?
'ஸபார் வீட்டுக்குத்தான். அதை சொல்லத்தான் வந்தானாம் என்றதோடு உடனே அவள் முகம் மாறுவதைக் கவனித்தான்.
என்னால முடியாது. வேணும்னா நீங்க போங்க' என கோபத்தோடு வெடுக்கென பதிலளித்துவிட்டு எழுந்து போய்விட்டாள். இது எப்போதும் நடப்பது தான். அவளது அந்த வெறுப்பிற்கான காரணத்தை இன்று அறிந்தே ஆகவேண்டும் என தீர்மானித்தான். ஆகவே இன்று அவளிடம் கோபம் காட்டவில்லை.
'ஏன் வரமுடியாது ஆபிதா?
அவள் பதில் சொல்லவில்லை. மீண்டும் வினவினான்.
"சொல் ஆபிதா அவன் ஏழை என்பதால் தானா இந்த அலட்சியம்?
'சத்தியமா இல்ல. நான் நேத்து வந்தவ. அவர் சின்ன வயதிலிருந்து உங்க நண்பன். அவரோட ஏழ்மைக்காக இரக்கப்பட்டு நிறைய உதவிகள் செய்றீங்க. உங்க நட்புக்கும், நீங்கள் செய்ற உதவிகளுக்கும் நிச்சயமாக நான் முட்டுக்கட்டையாக இருக்கப் போறதில்ல. ஆனால் அதையெல்லாம் வெளியில வெச்சிக்கொள்ளுங்க. அவர் இங்க வருவது எனக்கு சுத்தமாக பிடிக்கல்ல'
'அது தான் ஏன்?
'சொன்னாலும் நீங்க நம்பப் போறது இல்ல. சண்டை தான் பிடிப்பீங்க
'ஒகே. சண்டை போடல்ல. இப்ப சொல்லேன்'
'அவர் பேச்சு, பார்வை எதுவுமே சரியில்ல. எல்லாத்துலயும் சபலம்தான். ப்ளிஸ் புரிஞ்சுக்குங்க. இவ்வாறானவங்கள்ட சகவாசமே வேணாம். நாங்க நிம்மதியா சந்தோஷமா வாழனும்னா இதுபோல வெளியில் இருந்து யாரையும் வீட்டுக்கு அழைத்து வராதீங்க. இவ்வாறான விஷயங்களால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டு சீரழிஞ்சு போயிருக்கு' என கூறும் போதே அவளுக்கு கண்ணிர் துளிர்த்தது. அவனும் உடைந்து போனான்.
இத்தனைக் காலம் அவள் சொன்னவற்றை அவன் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இன்று இதை அலட்சியப்படுத்த அவனால் முடியவில்லை. எந்தவொரு பிரச்சினைக்கும் 'ஆரம்பம்' என ஒன்று உள்ளது. அந்த ஆரம்பத்தை உணரும் பட்சத்திலேயே அதைத் தவிர்த்துவிட வேண்டும். இல்லையாயின் அதன் விளைவுகள் விபரீதத்திலேயே முடியும்.
இதை இன்று ரஸ்லான் உணர்ந்துவிட்டான். ஆனால் இந்த சமூகம் உணர்வது
எப்போது?
(முற்றும்)
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 24
பூங்காவனம் இதழ் 7 கிடைக்கப்பெற்றேன். அதில் திருந்திய உள்ளங்கள், நலவுக்கு காலமில்லை என்ற இரு கதைகளும் மனதை நெருடிவிட்டன. நன்றி கெட்டு சிலர் நடப்பதால்தான் யாரும் உதவி செய்யத் தயங்குகிறார்கள் என்பது உண்மையே. நலவுக்கு காலமில்லை என்ற கதையில் வரும் வேலைக்காரி வேலம்மாவை மன்னிக்கலாம். ஆனால் திருந்திய உள்ளங்கள் கதையிலுள்ள சாதிக்கின் உறவினர்களை மன்னிக்க முடியாது. முக்கியமாக பெற்றோர் கூட பணத்திற்கும், வசதிக்கும் ஆசைபட்டு உழைத்துக் காப்பாற்றிய மகனை வெறுத்தது மிகவும் வேதனையான நிகழ்ச்சி. ஆனால் சாதிக்கை சாகடிக்காமல் திருந்தச் சந்தர்ப்பம் அளித்தது ஆறுதலான விடயம்.
தற்கொலை செய்யக்கூடாதது பற்றி புனித இஸ்லாத்தில் கூறப்பட்ட கோட்பாடுகள் மிகத்தெளிவாகவும், மனதைக் கவரும் விதத்திலும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. கதாசிரியர் இக்ராம் எம். தாஹா பாராட்டுக்கு உரியவர். சகல வயதினரும் பார்த்து ரசிக்கும் இதுபோன்ற கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள். அத்துடன் சிறந்த சிறுகதைக்கு பரிசாக பூங்காவனம் இதழ் இலவசமாக கொடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. தொடர்ந்து சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள். எமது ஆதரவு உங்களுக்கு உண்டு.
எஸ்.ஆர். பாலசந்திரன்
பூங்காவனம் பற்றி பேசும் பூவையர் பாங்கான படைப்பாற்றல்களால் தீங்கான பார்வைகளை சிதைத்திடும் நங்கூரமெனவே நவிலுதல் வியப்பில்லை!
கணமதை களைப்பிலாழ்த்தாமல் மனச் சோலைக்குள் சுகந்தம் பரப்பும் கனதியான இலக்கியப் பூக்களால் பூங்காவனத்தின் பக்கங்கள் அங்கங்கே ஆழ்ந்திருக்கும் நித்திலமெனவே!
வாழ்வியலை வரிசையாக்கிக்கொண்டு களிப்பையும், கண்ணிரையும் காட்டிடும் வளமும், பலமும் சேர்ந்த கதைகள், கவிதைகள், நேர்காணல்கள் உள்ளங்களில் நிறைவைத் தரும்!
இலக்கிய அனுபவ அலசல் இயம்பிடும் அனுபவ முத்திரைகள் இளையவர்க்கு பூங்காவனமளிக்கும்
பூங்கொத்துக்கள்!!! எம்.எஸ். பாஹிரா - பதுளை
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

45
பூங்காவனம்
இலக்கிய உலகில் தடம்பதித்து ஏழு இதழ்களைதந்து நிற்கும் பூங்காவனம் ஆசிரியர் குழுவுக்கு முதற்கண் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதழ் ஆறில் 'மலையகம் வாழ் மக்கள் குறித்த பல அபிப்பிராயங்கள் பரவலாக எல்லோராலும் பேசப்படுகின்ற இத்தருணத்தில், அவர்களது கல்வித்துறை சார்ந்த விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியமாகிறது என்ற ஆசிரிய கூற்று ஆரோக்கியமானது. மலையகப் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கு ஒரு பல்கலைக்கழகம் முக்கியம் என்ற விபரத்தை முன்னிறுத்தி பேராசிரியர்களான சபா ஜெயராசா, சோ. சந்திரசேகரம் ஆகியோர் தமது வேண்டுதல்களை முன்வைத்து வருகின்றனர்.
கல்வி கற்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. மலையகப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் கரிசனை காட்ட வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் முக்கிய பொறுப்பாகும். ஆறாவது இதழில் இருந்து முதுபெரும் மூத்த முற்போக்கு எழுத்தாளர் கவிஞர் ஏ. இக்பால் இலக்கிய அனுபவ அலசல் என்ற தொடரை ஆரம்பித்திருந்தார். ஏழாவது இதழில் தொடரின் இரண்டாம் பகுதி வெளியாகியிருக்கிறது. உண்மையிலேயே பலருக்கு பயன்தரும் விடயங்கள் அவரது அலசலில் இடம்பெறும் என்பதை கட்டியம் கூறிக்கொள்வதில் என் மதிப்புக்குரிய எழுத்தாளர் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் பல அம்சங்களை பூங்காவனம் தாங்கி மணம் வீசி நிற்கிறது. வாசக பெருமக்கள் அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டிய கடப்பாடுடையவர்கள்.
தமிழ்த்தென்றல் தம்பு சிவா - வெள்ளவத்தை
பெஸ்ட் குயின் பவுண்டேஷன் (BOF) வெளியீடான பூங்காவனம் தனது ஏழாவது இதழை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ராணி சீதரனின் முன் அட்டைப் படத்துடன் வெளியாகி இருக்கும் பூங்காவனத்தினுள்ளே இளம் பெண் எழுத்தாளர்களான ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் ராணி சீதரனை நேர்கண்டு அவரது இலக்கிய பங்களிப்புக்கள் பற்றி வாசகர்களுக்கு அறியத் தந்திருக்கிறார்கள்.
இளம் எழுத்தாளர்கள் மாத்திரமல்லாமல் பழைய எழுத்தாளர்களும் தமது ஆக்கங்களைத் தந்து பூங்காவனத்தைப் பூக்கச் செய்திருக்கிறார்கள். தமது இலக்கிய அலசல்கள் மூலம் கவிஞர். ஏ. இக்பால் அவர்கள் இலக்கிய அனுபவங்களை விபரித்துக்கொண்டு வருகிறார். அத்தோடு இளம் கவிஞர்களின் கவித்ைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் இடம்பிடித்து பூங்காவனத்தை மணம் கமழச் செய்கிறது. மொத்தத்தில் கலை இலக்கிய சமூகம் ஒன்றினைக் கட்டி எழுப்ப பூங்காவன வெளியீட்டாளர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. மல்லிகை, ஞானம், ஜீவநதி, படிகள் போன்ற தரமான இலக்கிய சஞ்சிகைகள் பயணிக்கும் அதே திசையில் பூங்காவனமும் பயணிக்கிறது என்று சொல்வதில் தவறில்லை. அதன் வாசகன் என்ற வகையில் பூங்காவனத்தின் வளர்ச்சிக்கு ஆசிக்கிறேன்.
எம்.எம். மன்ஸர் - மாவனல்லை
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 25
46
ጕሪ དག་ཤི་ཚེ་ཆང་དང་། ག་བླང་།། $|No6)Wზ{ ST
நூலின் பெயர் - நிஜங்களின் தரிசனம் நூலாசிரியை - பவானி சிவகுமாரன் வெளியீடு - மீரா பதிப்பகம் விலை - 300 ரூபாய்
நூலின் பெயர் - வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் நூலாசிரியை - சுமைரா அன்வர் வெளியீடு - சிந்தனை வட்டம் தொலைபேசி - 0723 670 515 விலை - 200 ரூபாய்
நூலின் பெயர் - மகுட வைரங்கள் நூலாசிரியர் - என். நித்தியஜோதி தொலைபேசி - 072 9068 724 வெளியீடு - இணைய தமிழ் இலக்கிய மன்றம் விலை - 200/-
நூலின் பெயர் - கரை தேடும் அலை நூலாசிரியர் - ம. புவிலக்ஷி வெளியீடு - டிசைன் லப் விலை - 200/-
கலை இலக்கிய சமூக சஞ்சிை
 
 
 
 
 
 
 

47
நூலின் பெயர் - நல்வழி நூலாசிரியர் - க. சபாரெத்தினம் வெளியீடு - வனசிங்க பிரிண்டர்ஸ் தொலைபேசி - 065 2246781 விலை - 70 ரூபாய்
நூலின் பெயர் - இந்திரர்கள் நாடும் அகலிகைகள் நூலாசிரியர் - வீ. என். சந்திரகாந்தி வெளியீடு - தி/ஜெயந்தி கலை கலாச்சார
விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் தொலைபேசி - 026 2224706 விலை - 150 ரூபாய்
நூலின் பெயர் - முல்லைத்தீவு தாத்தா மொழிபெயர்ப்பாளர் - திக்குவல்லை கமால் வெளியீடு - தோதன்ன பதிப்பகம் தொலைபேசி - 032 2263446 விலை - 200 ரூபாய்
நூலின் பெயர் - பார்வையின் பதிவுகள் நூலாசிரியர் - அந்தனி ஜீவா வெளியீடு - எஸ். கொடகே சகோதரர்கள் தொலைபேசி - 077 6612315 / 011 2685369 விலை - 250 ரூபாய்
assoon இலக்கிய சமூக சஞ்சிகை

Page 26
48
நூல் - இளைஞர் ஆகும் சிறுவர் பாடல்கள் நூலாசிரியர் - தாமரைத்தீவான் தொலைபேசி - 026 5670707 வெளியீடு - தண்ணிலா வெளியீடு விலை - 60 ரூபாய்
நூல் பெயர் - ஒரு தென்னை மரம் (சிறுகதை) நூலாசிரியர் - கிண்ணியா ஏ.எம்.எம். அலி தொலைபேசி - 077 2765174 வெளியீடு - ஹாஜரா வெளியீட்டகம் விலை - 350 ரூபாய்
நூல் - உடையக் காத்திருத்தல் (கவிதை) நூலாசிரியர் - றகுமான் ஏ. ஜமீல் தொலைபேசி - 077 9689392 வெளியீடு - புதுப்புனைவு இலக்கிய வட்டம் விலை - 200 ரூபாய்
நூல் - இடி விழுந்த வம்மி (கவிதை) நூலாசிரியர் - அபார் தொலைபேசி - 077 6912029 வெளியீடு - ஒரு உயிரின் வெளியீடு விலை - 200 ரூபாய் ā?
' ့ဖြိုး၊ မြို့မ္ဘကြီါ(ဖွတ္တီကြီးဖြဒါး
 
 
 
 
 
 

நூல் - நிலவுப்பொழுதின் நிைைனவலைகள் நூலாசிரியர் - வவுனியா சுகந்தினி தொலைபேசி - 077 6753874 வெளியீடு - வவுனியா தமிழ்ச்சங்கம் விலை - 250 ரூபாய்
நூல் - கடற்கோள் சுனாமி அனர்த்த
கண்ணிர் காவியம் நூலாசிரியர் - கே. எம். ஏ. அஸிஸ் தொலைபேசி - 067 7913248, 075 2529532 வெளியீடு - சாய்ந்தமருது சமூக நலன்புரி ஒன்றியம் விலை - 150/=
நூல் - உணர்வூட்டும் முத்துக்கள் நூலாசிரியர் - பி.ரி. அஸிஸ் தொலைபேசி - 075 2101556 விலை - 175 ரூபாய்
நூல் - அறுவடைக் காலமும் கனவும் நூலாசிரியர் - திருமலை ஏ.எப்.எம். அவடிரப் தொலைபேசி - 0773081120 வெளியீடு - பெருவெளி பதிப்பகம் விலை - 150/=

Page 27
LUCKYLAND) BISO
NATUUŽANRANNPOUTHA IKI UEL 2 00943, 2 (081 e 2420574, 24 Emailouck