கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கத்தமிழ் 2012.01

Page 1


Page 2
冷 P00BAA
O
DE K
WIDE SELECTION Ol
TAMIL BOOKS INTERNATIONA MEDICAL ENGINEERING
MANAGEMENT
LAW
PHILOSOPHY NOVELS CHILDREN Boo AND-MANY MOI
பூபாலசிங்கம்
202, செட்டியார் தெ
Tel: 011-2422321, 243 E-mail - pbd
 

POT
భః ଖୁଁ 鬚貓 Ν ALL SUB) ECTS
LSCHOOL BOOKS
புத்தகசாலை (5. கொழும்பு - 11.
5713 Fax 011-2337313
oGstnet.k

Page 3
கொழும்புத் தமிழ்ச்சங்கம் திருவள்ளுவர் ஆண்டு : 2042 தை ~ 2012 'சங்கத்தமிழ்' இதழ் 05
தலைவர் திரு.மு.கதிர்காமநாதன்
பொதுச் செயலாளர்
திரு.ஆ.இரகுபதி பாலழறீதரன்
நிதிச் செயலாளர் திரு.செ.திருச்செல்வன்
ஆசிரியர் திரு.க.இரகுபரன்
ஆசிரியர் குழு திரு.மு.கதிர்காமநாதன் திரு.ப.க.மகாதேவா
திருமதி வசந்தி தயாபரன்
கணனி வடிவமைப்பு
திருமதி கு.சத்தியஜோதி
தொலை பேசி : 011 2363759 தொலை நகல் : 011 2361381
இணையத்தளம் www.colombotamilsangam.com மின்னஞ்சல் tamilsangamcolombo Gyahoo.com
ISSN: 20129.491
படைப்பாளிகளிடமிருந்து தரமான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர் குழுவின் செம்மைப்படுத்திலின் பின் ‘சங்கத்தமிழ்'இல் அவை பிரசுரமாகும். படைப்புகள் குறித்த அபிப்பிராயங் களைத் தெரியப்படுத்துங்கள். அனுப்பவேண்டிய முகவரி :
ஆசிரியர் 'சங்கத்தமிழ்' கொழும்புத் தமிழ்ச் சங்கம்,
7, 57வது ஒழுங்கை, கொழும்பு 06. இலங்கை.)
சங்கத்தமிழில் வெளிவரும் ஆக்கங்களின் கருத்துக் அவை சங்கத்தின் கருத்துக்கள் அல்ல.
தை 2012 } w
 

D_GTGunT...
ҳ»
ஆசிரியர் பக்கம் O2 நாவலர் காட்டிய வழியும் நாமும் O3 நாவலர் பெருமான் வாழ்ந்த காலமும்
அவரது தீரமிக்க பணிகளும் (1822-1879) 07
t
0.
* நூலிந்த செம்மலே 21 * ஈழத்துச் சிந்தனைக் கதிர்கள் 22 * AbsT6ői (3a5', LJọ 30 * பனிக்காலம் 32 * நமது முதற் கடமை 33 * தமிழர் பெருந்தகை 34 * நாவலரவர்களின் சால்புப் பாராட்டு 38 * 5'T6)1606)Juurt 40
0.
X
பூரீலழரீ நாவலரவர்கள் சம்பந்தமான
சில வரலாறுகள் 42 * அவர்களைப் பற்றி ஒன்றுஞ்சொல்ல
(plquJTgbl 49 * தமிழ்மக்களின் வெருங்கடமை 55 * நாவலர் இறந்தபின் நடந்தவை 56 . * பூரீலசிறி ஆறுமுகநாவலர் விழா
வாழ்த்துப் பா 62 * நற்றமிழ் நாவலர் 63 * நாவலரை முன்னிறுத்தி
இனக்குழுமக் கோட்பாடு 64 * ஆறுமுகநாவலரது பால பாடக் கதைகள்:
புதிய பார்வை 68 * ஆறுமுக நாவலர் அவர்களின்
பன்முகப் பணிகள் 71 * பதிப்பாள மன்னன் -
விமரிசனங்களுடான ஒரு பார்வை 78 * கல்வியிற் பெரியன் கம்பன் -
நாவலரின் உதாரண ஆளுகை 85 * பூரிலழரீ ஆறுமுகநாவலரின் பணியில்
காசிவாசி செந்திநாதையர் 88 * நாவலர் புலமை 91
5ள் அவ்வவற்றின் ஆசிரியர்களது கருத்துக்களாகும்;
-G1)

Page 4
வணக்கம்!
முநீலழுநீ ஆறுமுகநாவலர் சமயத்துக்கும் அதன்வழி சமுதாயத்துக்கும் பணியாற்ற மதிக்கப்படுபவர். செம்மையான வசன நடையின் இயல்பு சாத்தியப்படுத்தியவர், வீறார்ந் ஒன்றை உருவாக்கியவர் காரணங்களால் தமிழ்மொழி, ! நோக்கமுடியாத ஒரு ஆளுமைய வெறும் கல்வியாளனாக மா சமூகத்துக்குள் இறங்கிப் போரா தன்னால் ஆனவற்றையெல்லாட பரித்தியாக வாழ்வால் உணர்த் பிரபுத்துவத்துக்கோ பயந்து பிை சரியென்று பட்டதைப் பாராட கண்டித்தும் வாழ்ந்த நாவலர் பின்பற்ற வேண்டியது. இவற் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நாவ அன்பர்கள் பலரின் ஒத்துழை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "சங்கத்தமிழ் நாவலர் சிறப் கட்டுரைகள் புதிய நோக்கிலே இன்று கிடைத்தற்கரிதாய் விட் (1938இல் ஈழகேசரி ந.பொன்ன பழைய விடயங்கள் சிலவும் :ே
தமிழார்வலர்கள் படித்துப் பl
நன்றி!

*தேசியச் சிந்தனையோடு தனது தமிழ் மொழிக்கும் தமிழ்ச் ரிய வகையால் தேசிய வீரராக முன்னோடிப் பதிப்பாசிரியர், தமிழ் ான ஓட்டத்தை துரிதமாகச் த தமிழ்ப் புலமைப் பாரம்பரியம் என்பன முதலாகப் பல்வேறு இலக்கிய வரலாறுகளிலே தவிர்த்து பாகத் திகழ்பவர். ஒரு கல்வியாளன் த்திரம் இருந்து மாணிடுவிடாது டி அச்சமூகத்தை உயர்த்துவதற்குத் ம் செய்ய வேண்டும் என்பதைத் தன் தி மாண்புற்றவர். பிரபல்யத்துக்கோ ழகளுக்கு ஒத்துப்போகாது தனக்குச் ட்டியும் பிழையென்று பட்டதைக் வாழ்க்கை இன்றைய அறிவுலகம் றுக்கெல்லாம் வழி சமைப்பதாக லர் விழாவினை நடத்த விரும்பியது. pப்பால் விழா சிறப்புற நடைபெற அவ்விழாவின் பொருட்டு இம்முறை பிதழாக மலர்கின்றது. புதிய பல எழுதப்பட்டுள்ளன. அதேவேளை ட நாவலர் நினைவுமலரிலிருந்து னயா அவர்களால் வெளியிடப்பட்டது) ர்க்கப்பட்டுள்ளன. பன் கொள்வார்களாக
,────────── (தை 2012)

Page 5
நாவ
கலாபூஷணி
யாழ்ப்பாணத்து நல்லூர் முநீலழுநீ ஆறுமுக நாவலர் பெருமான் கி.பி.1822இல் பிறந்து 1879 வரை 27 ஆண்டுகள் வாழ் வாங்கு வாழ்ந்து காட்டி இறைவன் திருவடி சேர்ந்தார்.
இவர் வாழ்ந்த காலப் பின்னணியையும் அக்காலத்தில் இவர் செய்து காட்டிய செயற்கரும் பணிகளையும் அறிந்திருந்தல் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் கடமையாகும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்ந்த நாவலர் பெருமான் தனது இனத்துக்கு, மொழிக்கு சமயத்துக்கு விடுதலையுணர்வு ஊட்டிய அரும்பெரும் செயலை நம்மவர்களும் முழுமையாக அறியாமல் இருப்பது கவலைக்குரியது. அவர் செய்த பணிகளை (tpմք60pւDաT& நோக்கினால்தான் அவர் காட்டிய வழிகளில் நாம் இன்று செய்ய வேண்டிய பணி எது என்பதை உணர முடியும்.
நாவலர் காலப்பின்னணி
எமது நாட்டை முதலில் கைப்பற்றிய போர்த்துக்கேயர் சைவாலயங்களை அழித்தொழித்துத் தமிழ்ப் பண்பாட்டைச் சிதைத்து நம்மவர்களை அடிமைத்தளை யில் சிக்கவைத்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தரும் அதனையே செய்தனர். நாவலர் வாழ்ந்தது ஆங்கிலேயர் காலம். ஆங்கிலம்தான் அரசமொழி. கிறீஸ்தவம் தான் அரச மதம் ஆங்கிலத்தைப் படித்தவர்கள் அதிலும் கிறீத்தவத்துக்கு மதம் மாறியவர்களுக்குத்தான் உத்தியோகங் களும் சுகபோக வாழ்வும் கிட்டும் நிலை.
தை 2012

லர் காட்டிய வழியும் நாமும்
ாம் சைவப்புலவர் சு.செல்லத்துரை
ஆங்கிலக் கல்லூரிகளில் படிக்க வேண்டு மென்றால் மதம் மாற வேண்டும் அல்லது பெருநிதி கொடுக்க வேண்டும் என்னும் நிலை. அதனால் நம்மவர்களுக்குக் கல்வி வாய்ப்பு இல்லை. சைவப்பண்பாட்டுக்குமதிப்பு இல்லை. இன உணர்வும் நலிவுற்று அடிமைத்தனம் குடிகொண்டிருந்தது. இந்நிலையை நாவலர் பெருமான் கண்ணுற்றார்.
அவர் அக்கால வெஸ்லியன் மிசன் கல்லூரியில் (இப்போதைய யாழ்.மத்திய கல்லூரியில்) உயர் கல்வி கற்றவர். அக் கல்லூரி, அதிபராயிருந்த பேர்சிவல்பாதிரி யாருக்குத் தமிழ் கற்பித்தவர். அவரால் குரு என மதிக்கப்பெற்றவர். ஆதலால் கிறீத்தவர் களின், ஆங்கில அரசாட்சியின் சூழ்ச்சிகளை யெல்லாம் நன்குனர்ந்தார். மரபு வழிவந்த தமிழ் அறிஞர்களிடம் கற்ற கல்வியால் பண்பாட்டுறுதியும், ஆங்கிலக் கல்லூரியில் பெற்ற ஆங்கில நவீன கல்வியால் மன எழுச்சியும் கொண்டார். அவர் பெற்ற மரபு வழிப் பண்பாட்டுக் கல்வியும், நவீன கல்வியும், இயல்பாகவே அவரிடம் இருந்த நுண்மாண் நுழைபுலத் திறனும் சேர்ந்து அவரைக் காலத்தின் நாயகனாக மலர வைத்தன. தமிழ் இனம் தலை நிமிர வேண்டுமானால் தமிழ்மொழி செழிக்க வேண்டும். சைவப் பண்பாடு மீண்டும் மறுமலர்ச்சி பெற வேண்டும். தமிழ் மக்கள் அடிமையுணர்விலிருந்தும் அறி யாமை யிலிருந்தும் விடுதலை பெற வழி செய்ய வேண்டும் என எழுந்தார்.
(3)

Page 6
盘
ar ôl am unrank mwandlovada«
фшЛуфйш600fl
பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சேற்றினார். செய்யுள் நடையில் இருந்த நூல்களை வசன நடையில் எழுதி வெளி யிட்டார். பழந்தமிழ் இலக்கண நூல்களைக் கற்பதற்கு முன்னோடியாக இலக்கணச் சுருக்கம் முதலான இலகுவான இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார். முதலாம் uT6AD LITLLb 36ebLid, 4ćebb LuT6ADLJITL856ĪT எனப் படிமுறையாகத் தமிழைப் பயில்வதற் கேற்ற நூல்களை எழுதி வெளியிட்டார். அத்துடன் நன்னெறி, நல்வழி முதலான அறநெறி கூறும் நூல்களுக்கு உரையெழுதி வெளியிட்டார். சைவ வினாவிடை முதலாம் சமய நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
இந்த நூல்களை வெளியிடுவதற்கென்றே சொந்தமாக வித்தியானு பாலன அச்சியந்திர சாலையை நிறுவி எந்த வித எழுத்துப் பிழைகளோ சொற். பொருட் பிழைகளோ இல்லாமல் தூய்மையாக வெளியிட்டார். நாவலர் பதிப்பு என்றால் ஒரு பிழையும் இல்லாப் பதிப்பு எனும் அளவுக்கு இன்று வேலை நவீன வசதிகளற்ற அக்காலத்தில் பதிப்பித்தார்.
கல்விப்பணி
தமிழ்ப்பிள்ளைகள் தமிழ்மொழி மூலம் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கல்வியைப் பெறவழி செய்ய வேண்டுமென 1848இல் வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாலயத்தை உருவாக்கினார். அங்கு பயிலும் மாணவர்க்கு இலவச உணவும் இலவச உடையும், இலவசக் கல்வியும் வழங்க ஏற்பாடு செய்தார். அதற்கென வர்த்தக நிலையங்களை வாங்கி வருவாய் பெற வழியும் செய்தார்.
O4)

சங்கத்தமிழ்
தென்னிந்தியாவில் சிதம்பிரத்திலும் ஒரு சைவப்பிரகாச வித்தியாலயத்தைத் தொடங்கி இதேபோல இயங்கச் செய்தார். அவை இன்றும் இயங்குகின்றன. நாவலர் பெருமான் வழிவந்த பெரியார்களிடம் நாவலர் ஊட்டிய இந்த உணர்வால் யாழ். சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றி ஏறக்குறைய 200 பாடசாலை களை நாடெங்கும் உருவாக்கினார். அதே போலச் சைவ ஆங்கில பாடசாலை யொன்றையும் நிறுவினார். அவர் ஊட்டிய இந்த உணர்வே பின்னாளில் இந்துக் கல்லூரிச் சங்கமாக மலர்ந்து நாடெங்கும் இந்துக் கல்லூரிகள் மலர வழிவகுத்தது.
சமூகப்பணி மக்களில் குடிகொள்ளும வறுமையும் நோயும் அகன்றால்தான் கல்வியில் பண் பாட்டில் நாட்டம் கொள்வர் என்பதை நன்கு ணர்ந்த நாவலர் பெருமான் யாழ்ப் பாணத்தில் மழையின்மையால் பஞ்சம் வந்த போது சாதி சமய பேதமற்ற முறையில் "கஞ்சித் தொட்டித் தர்மம்” செய்து பஞ்சம் விலகும் வரை மக்களைக் காப்பாற்றினார்.
அரசினரிடம் வாதிட்டு விதை நெல் பெற்றுக்கொடுத்து மீண்டும் கமக்காரர் வேளாண்மை செய்ய வழிவகுத்தார். யாழ்ப்பான வேளாண்மைச் சங்கத்தை உருவாக்கி வழிநடத்தினார்.
யாழ் நகரில் குருநகர் பகுதியில் கொள்ளை நோய் வந்த போது பாராமுக மாயிருந்த அரசைக் கண்டித்து விழிப்பூட்டி மக்களைக் காப்பாற்றினார்.
அரச அதிகாரிகளுடைய ஊழல்களை அம்பலப்படுத்தி அவ்வப்பொழுது கண்டனக் கடிதங்கள், கட்டுரைகள் எழுதியும் துண்டுப்
தை 2012)

Page 7
பிரசுரங்கள் வெளியிட்டும் மக்களை விழிப்படையச் செய்தார்.
атыршй шарfl சைவசமயிகள் ஒவ்வொருவரும் தூய வாழ்வு வாழவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினார். 1849இல் தென் னிந்திய திருவாவடுதுறை ஆதீனம்
* தங்கள்தங்கள் சமயம் இது எனவும் * ஆதற்குரிய கடவுள்.இவரெனவும் * அக்கடவுள் ஆன்மாக்களின் வழி
இதுவெனவும்
முறை இதுவெனவும் அறிதலும் அறிந்தபடி அனுட்டித்தலும் எல்லாச் சமயத்தார்க்கும் கடன் எனத் தொடங்கி ஆற்றிய பிரசங்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிலையில் சைவ மக்களின் சமய வாழ்வு மரல வேண்டுமென அயராது 2-6oupã5ü.
சைவ வினாவிடைகள், நித்திய கரும
முதலான எண்ணில்லாத சைவ சமய நூல்களை எழுதி வெளியிட்டார். சைவப் பிரசங்க முறையைத் தொடக்கி வைத்தார். கோயில்களில் ஒதுவார்கள் மூலம் திருமுறைகளை ஒதவழி சமைத்தார். சைவ மக்கள் சைவசமய தீட்சை பெறவேண்டும் என்பதை வலியுறுத்திச்
சைவ சபைகள் மூலம் அதனைச்

சங்கத்தமிழ்
செயற்படுத்தினார். அவர் மூச்சும் பேச்சும் தொண்டாகவே மலர்ந்தன.
தேசிய எழுச்சி அறியாமையை நீக்கக் கல்வியறிவும் விடுதலையுணர்வையூட்ட தமிழ் மொழி, 6056lefLDulib. 5Lólup 86örlós L160ötur(6 என்பவற்றின்மீது பற்றுறுதியும் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்து
அக்காலத்தில் சட்டசபைக்கும்:tயிரதி நிதியைத் தெரிவு செய்வதில் முன்னின்று தமிழ் மொழிப் பற்றும், சைவப் பண்பாடும் ஆங்கிலக் கல்விப் புலமையும் மிக்க சேர்.பொன்.இராமநாதன் அவர்களை வெல்லச்செய்ததன்மூலம் தேசிய எழுச்சிக்கு வழிகாட்டினார். இதனால்:இலங்கையரசு தேசியவீரர்எனும் கெளரவத்தை அவருக்குப் பின்னாளில் வழங்கியமை நினைவு கொள்ளத்தக்கது.
வரிகள்
நாவலர் வழியில் எழுச்சிபெற்ற நாவலர் பரம்பரையொன்று உருவாகி இன்றுவரை
செயலில் மலர்வதைக் காண்கின்றோம்.
புலம்பெயர் நாடுகளில் கூடச் 60Defen
சங்கங்களும், கலை மன்றங்களும் தோன்றிச் சைவத் தமிழ்ப் பண்பாட்டு நெறியை அடுத்த சந்ததிக்கும் ஊட்ட முயல் வதைக் காணமுடிகிறது. அங்குள்ள
தொலைக்காட்சிகள் முதலான ஊடகங்கள் கூட முனைப்புடன் செயற்படுவதைக் காண்
-(5 O

Page 8
கின்றோம். இவற்றில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவை நாளடைவில் குறை நீங்கிநிறைவுகாண உழைப்பது ஒவ்வொரு 6) Jg|LiD 85L60)LDustgub.
அங்குள்ளவர்களின் மனத்தவிப்பு ஒன்றுள்ளது. அது "நமது பிள்ளைகள் தமிழர் களாகச் சைவர்களாக எங்கள் பண்பாட்டைப் பேணுபவர்களாக மலர்வார்களோ?" எனும்
Seu Jid ebölb.
பல்லினப் பண்பாடுகள் மலிந்த அந்நில மண்ணில் இதனைப் பேணமுயல்வது கடினமானதாகத் தெரிந்தாலும் நாவலர் காட்டியவழியில் நவீன காலத்துக்குரிய கல்வியின் ஊடாக இதனைச் செய்யமுடியும். நாவலர் பெருமான் பாடசாலைகளை நிறுவி எங்கள் இனப்பண்பாட்டைக் காத்தது போல புலம்பெயர்நாடுகளில் ஆங்கில மொழி மூலக் கல்லூரிகளை நிறுவி அங்குள்ள
வெ ஆரிருந்தென்னார்சிறந்தென் லாரிருந்து போதிப்பா ரையை தேக்குமதிச் செஞ்சடிலத் தேவு வாக்கவனைப்போல வரா.
எவ்விடமும் நின்புகழே யெவ் யெவ்விடமு நின்சொல்லே uெ மெக்காலமுமில்லை யின்னி தக்கார்சொன்னாவலநீ தான்
கந்தவேள் செய்தவம்போற்க மைந்தனா நாவலன்போன் 6 வல்லவர்களன்னவன்போல் லில்லையில்லை யில்லை யி
-UT

சங்கத்தமிழ்
கல்லூரிகளில் உள்ளது போன்ற நவீனக் கல்வியுடன் தமிழ்மொழி, பண் பாட்டுக் கல்வியையும் சேர்த்துக் கற்பிப் பதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அங்குள்ள செல்வவளமும், மன வளமும் படைத்த கனவான்கள் இதற்கு முன்வர வேண்டும். அங்கு குஜராத்தியர் இதுபோன்ற கல்லூரிகளை நடத்துவதை முன் மாதிரியாகக் கொள்ளலாம்.
ஆகவே நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டு மொழியுடன் நம்தமிழ் மொழி யையும், சைவத்தையும் கற்று எங்கள் பண் பாட்டைப் பேண வேண்டும். எங்கள் கலைகளை வளர்க்கவேண்டும். எங்கள் இனத்தின் அடையாளங்கள் அழிந்து போ காமல் காக்க வேண்டும். இதுவே நாவலர் காட்டியவழி என்பதை மறவாதிருப்போம்.*
ண்பா
னாறுமுக நாவலன்போ யோ - வாரணிந்து ருவு கொண்டாலும்
விடமும் நின்பேரே பய்தியபோ - லெவ்விடமு னியார் நின்புகழ்க்குத்
ானுந் தவமுமவன் மைந்தர்களுஞ் - செந்தமிழில் வந்திடுவதும்முலகி
னி.
நீ.பூமுருகேசபிள்ளை அவர்கள்.
(தை 2012)

Page 9
'நாவலர் வ
டாக்ட
மொழ
1.1. நாவலர் வாழ்ந்த காலச்
சூழ்நிலை: “முதலில் போர்த்துக்கீசரும், பின்னர் டச்சுக்காரரும் அதன் பின்னர் ஆங்கிலே யருமாக சுமார் இருநூற்றாண்டுகள் இலங்கை அந்நியர் வசமிருந்தது. அரசியற் பொருளாதார ஆதிக்கத்தின் உள்விளைவாகக் கலாசார வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அந்நிய ஏகாதிபத்தி யத்தின் தவிர்க்க முடியாத விளைவான சகல தீமைகளும் தலை விரித்தாடின. நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு நிலவியது. அதனைக் குலைக்க விரும்ப வில்லை ஆங்கிலேயர். ஆயினும் சமூகத் தில் நிலவிய அந்தகார இருட்டு சமயத் துறையில் மிகத் தெளிவாகத் தன்னைக் காட்டிக் கொண்டது. தொன்று தொட்டுச் சமயம் மக்கள் வாழ்க்கையில் முக்கிய மான ஒரு ஸ்தானத்தை வகித்துவந்த சமுதாயத்திலே சமயத்துறையில் ஏற்பட்ட சலனங்களே பிற இயக்கங்களுக்கு முன் னோடிகளாக இருந்ததில் வியப்பெதுவு மில்லை. நாவலர் கருவியாக அமைந்த அக்காலச் சமய சீர்திருத்த இயக்கமானது தமிழ் மக்களிடையே ஏற்படத் தொடங்கிய முதல் விழிப்பின் தோற்றமாகும்." துயவாழ்க்கை வாழ்ந்த நாவலர்
பெருமான் சாதாரண மனிதருக்கு ஏற்படும்
தை 2012

பருமான் வாழ்ந்த காலமும் வரது தீரமிக்க பணிகளும்" 1822-1879)
ர் கனகசபாபதி நாகேஸ்வரன் M.A.phd) முனனாள தலைவர, முதுநிலை விரிவுரையாளர்,
ழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், பெலிகுல்லோயா,
இன்பதுன்பங்களினாலே பாதிக்கப்பட்டிருக் கிறார். அன்றைய மனிதனைக் குழப்பிய பிரச்சினைகள் அவரையும் உலுப்பினர். தமமைச்சுற்றி நடந்தபோலிவாழ்க்கையைக் கண்டு நொந்தார்; வெறுத்தார்; நடிப்புச் சைவசமயிகளைக் கண்டார்; அதைப் போலவே ஏமாற்றிப் பிழைக்கும் போலிக் கிறிஸ்தவர்களையும் கண்டார்; இந்த நிலை கெட்ட மனிதரின் அவலத்தைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் நாவலர் எழுதினார்; பேசினார்; இந்நிலை மாற்றவும் முயன்றார். "பாதிரிமார் யாழ்ப்பாணத்துக்கு வரா விடின் நாவலராற்றிய அரும்பெரும் பணிகள் நிகழ்தற்குத் தருணமெழுந் திராது? "உண்மையை நோக்குமிடத்துபதினான்கு வருடக் கிறிஸ்தவ சூழலே நாவலரை நமக்குத் தந்தது. ஆபிரக்க தேசமே காந்தியை மகாத்மா ஆக்கியது. பதினான்கு வருடக் கிறிஸ்தவ சூழல் அமையாதி ருந்தால் ஆறுமுகநாவலர் என்றொருவர் யாழ்ப்பாணத்தில் இல்லை”? எனத் தனக்கேயுரிய நடையில் பண்டிதமணி எழுதியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதி யிலும் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும் செல்வாக்குடன் இயங்கிய சமய மறுமலர்ச்சி யின் பின்னணியிலேயே நாவலரை நாம்
(7)

Page 10
நோக்குதல் வேண்டும். குறிப்பாக, நாவலரைப் பொறுத்தவரை இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவிய சமய எழுச்சியின் பிரிக்க இயலாத ஓர் உறுப்பாகவே அவரைக் கொள்ளவேண்டும். கீழைத்தேச நாடுகள் பல வற்றிலும் அந்நியராட்சிக்கு எதிராகக் கிளம்பிய முதற்குரல் சமயத்துறையிலேயே கேட்டது. அதாவது இந்தியா, இலங்கை முதலிய நாடுகளிலே தேசியத்தின் முதல் தோற்றத்தைச் சமய, கலாசாரத்துறைகளிலே காணக் கூடியதாயுள்ளது.
நாவலரவர்கள் பேசியவையும். எழுதி யவையும், தண்டித்தவையும், விமர்சித்த வையும் நூற்றாண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் தமிழினத்தின் கூர்ந்த கவனிப்புக் குள்ளனவாகவே உள்ளன. சாதி பற்றியும், சமயம் பற்றியும், நீதி பற்றியும், ஆலயங்கள் ஆலய அறங்காவர்கள், சமூகம் பற்றியன வெல்லாம் அப்பழுக்கற்ற பேருண்மைகள் என்பதனையும் நாம் நன்குணர்தல் வேண்டும். நாவலரவர்களது சீர்திருத்தக் கருத்துக்கள் என்றும் நமது சைவ உலகிற்குப் பெரிதும் பொருந்துவன. அவரது முன்மாதிரிகள் கூர்த்த நுண்ணறிவினராலே கடைப்பிடிக்க வேண்டியவை.
சமயத்துறையில் எம்மவர்க்கு விழிப் பேற்படுவதற்கு ஆங்கிலக் கல்வி முக்கிய மான காரணமாயிருந்து. சமஸ்கிருதம், தமிழ், பாளி முதலிய மொழிகளில் புதைந்து கிடந்த பழைய செல்வங்களை முதலிலே கண்டுபிடித்து அவற்றுக்குப்புத்துயிரளித்தவர் களிற் பெரும்பாலானோர் ஆங்கிலக் கல்வி யின் பயனைப் பெற்றவர்களும், அதனால் ஒரளவு சமுதாயத்திற் செல்வாக்குடன் விளங்கியவர்களுமேயாவர். இவர்கள் ஆங்கிலக் கல்வியின் மூலமாகவே தமது பாரம்பரியச் சிறப்பை அறிந்தனர். சமய/சைவ
C8)
 

சங்கத்தமிழ்
அடிப்படையிலேலே பழைமைக்கும். தமக்கும் தொடர்பை நிறுவிக் கொண்டனர். அதைப் போலவே சமயத்தின் அடிப்படை யிலே சமூக ஒருமைப்பாட்டை உண்டாக்க முற்பட்டனர். இப்போக்கினை இலங்கையின் பிரதான சமூகங்கள் மூன்றிலும் காணலாம். ஆறுமுகநாவலர், சித்திலெவ்வை, அநகாரிக தர்மபாலர் ஆகிய மூவரையும் எடுத்துக் கொண்டால் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களையே முறையே சைவம், இஸ்லாம். பெளத்தம் ஆகிய சமயங்களின் அடிப்படையில் ஒற்றுமைப்படுத்திமேம்படுத்த இவர்கள் விழைந்தனர் என்பது தெளிவாகும். "Nationalism was thus founded on the bedrock of common religion, Culture and histoical tradition," 6T60T 6Tupg5d5pm மஜூம்தார். "&LDub, 56DITEFITULb 6.jpegel Blb LDUL ஆகிய மூன்றினை இங்குக் குறிப்பிடு கிறார் ஆசிரியர். கிறிஸ்தவம் முதலிலே ஏதிர்ப்பட்டு நின்ற பொழுது இறையியல், ஒழுக்கவியல் என்பனவற்றிலேயே முரண்பாடுகள் தோன்றின. ஆயினும் நாளடைவிலே வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் முரண்பாடுகள் முனைப் பாய்த் தோன்றின. ஊண், குடி வகைகள், ஆடை, மொழி, இசை போன்றவற்றி லெல்லாம் கிறித்தவம் பிரத்தியேகமான வழக்காறுகளையும், பழக்க வழக்கங் களையும் கொண்டதாயி ருந்தது. இதனாலேயே கிறித்தவத்துக்கும் சைவத்துக்கும் நிகழ்ந்த பலப் பரீட்சையில் மதக்கோட்பாடுகள் மாத்திரம், பிரச் சினைக்குரியனவாய் இருக்க வில்லை. மக்களின் முழு வாழ்க்கை முறையும் மத அடிப்படை யிலே நோக்கப்பட்டது.”*
(தை 2012)

Page 11
மதமாறிக் கிறிஸ்தவத்தைத் தழுவியவர் கள் அந்நியப்பட்டு விடுகிறார்கள் என்பதற் காகவே, மீட்டும் அவர்களை வைதிக சமயத் தில் சேர்த்துக்கொள்ளும் முயற்சியும் இந்துக் களால் கைக்கொள்ளப்பட்டது. நாவலரும் இத்தகைய கைங்கரியத்தைச் சில சைவத் தமிழ் மக்களது சிந்தனையிலே உறைப் பாகவே இருக்கவேண்டிய கருத்துகளாகும். இன்று லண்டன், கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, நியுஸிலன்ட் என்னும் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து ஈழத்திலிருந்து சென்றுவாருவோர் அனை வரது சிந்தனைகளிலும் நாவலர்களது போதனைகள் முன்னிற்கவேண்டும் என்பது எமது வேணவா, எக்காலத்துக்கும் பொருத் தமான விழுமிய இலட்சியங்களாகவே விட்டுச் சென்றுள்ளார். இக்கருத்தை எவருமே மறுத்தலரிது; நிராகிரிக்க முடியாது. "கறல் விசுவநாதபிள்ளை என்னும் பிரசித்திபெற்ற கிறிஸ்தவத் தமிழறிஞர் நாவலரது செல்வாக்கினால், “சைவ சமயமே உண்மையான சமயமென்று உணர்ந்து பச்சாத்தாபமுற்றுச் சிதம்பரத் துக்குப் போய்த்தாம்செய்த சிவதுஷணங் களுக்குப் பரிகாரமாகப் பொன்னுாசி காய்ச்சித் தமது நாவைச் சுடுவித்துக் கொண்டு சைவரானார்" இன்றும் சில பிறவிச் சைவர்கள் தங்கச் சிலுவைதரித்தும், ஞானஸ்நானம் பெற்றும், ஆண் குறியை அறுத்தும் கிறிஸ்தவத்திலும், இஸ்லாத்திலும் மதம்மாறித்திணறிவாழ்வது நீங்கள் அனைவரும் அறிந்த சங்கதியே.
"எதிரிமீது தாக்கும் பொழுதும் தம்மிடை யேயுள்ள துரோகிகளை அம்பலப்படுத்தும் பொழுதும் நாவலரின் வலிமைமிக்க கண்டனப்பிரசங்கங்களும், பிரசுரங்
தை 2012
 

சங்கத்தமிழ்
களும் அசுர வேகத்தில் வெளிவந்தன. 18ஆம் நூற் றாண்டின் தலையாய கண்டனவாதி சிவ ஞானமுனிவர் எனக் கொண்டால் பத்தொன்பதாம் நூற் றாண்டின் தலை சிறந்த கண்டனவாதி நாவலர் என்பதிற் சந்தேகமிருக்க முடியாது. யாழ்ப்பாணச் சமயநிலை", "சைவ தூஷணபரிகாரம்', 'சுப்பிரபோதம்', மித்தியா வாத நிரசனம், போலி அருட்யா மறுப்பு'. 'வவிலிய குற்சிதம்' ஆகியன நாவலர் வெளியிட்ட கண்டனப் பிரசுரங்கள் சில. நாவலரைப் பின்பற்றிச் சண்டமாருதம் போல எண்ணற்ற கண்டன நூல்களை அவர் மாணாக்கரும் பிறரும் எழுதினர். சி.வை.தாமோதரம் பிள்ளை, சங்கர பண்டிதர், நா.கதிரை வேற்பிள்ளை. சபாபதிநாவலர் ஆகியோர் நாவலர் மரபிற் குறிப்பிடத்தக்கவர்கள். வேணாட்டினர் ஏற்படுத்திய விழிப்பின் காரணமாய் நாவலர் தொடக்கிய சமயச் சீர்திருத்தம் சபாபதி நாவலர் காலத்திலே கண்மூடித்தன மான பழமைப் பித்தாக மாறுவதையும் நாம் காணலாம்.”* என்றும் கைலாசபதி விமரசித்துள்ளமை கருதத்தக்கது; சிந்தனைக்குரியது. வைரம் பாய்ந்த வைதிகப்பற்றுடன் சமயத்துறையில் விடாப்பிடியாக உழைத்த நாவலர், சமூகத்துறையில் தமது கவனத் தைச் செலுத்தியபொழுது, மக்கள் வாழ்க்கை யுடன் நெருங்கிய தொடர்புடைய பிரச்சினை களில் முன்னின்றுழைத்தார். உணவு, சுகாதாரம், உழைப்பு. கல்வி, ஆட்சிமுறை முதலிய எல்லோரையும் பாதிப்பவை. இத்துறைகளிலே ஆங்கிலேயர் ஆட்சியிற் காணப்பட்ட அநீதிகளையும், அபத்தங்களை யும் ஆன்ம வீரர்களுக்குரிய இலட்சியப் பிடியுடனும், கண்டிப்புடனும் வெளிப்படுத்
(9)

Page 12
தினார். சுகாதாரம், ஆட்சிமுறை போன்றவை காரணமாகவே துவையினத் துரையுடன் மோதினார். ‘வெகுசனம்' என்னும் சொற் றொடரை நாவலர் அன்றைய வரலாற்றுச் கழலில் பரந்த பொருளிலே பிரக்ஞை பூர்வமாகவே பயன்படுத்தினார் என்பது மனம் கொளத்தக்கது.
‘வெகுசனத்துரோகம்’ என்ற சொற் றொடரையும் நாவலர் வழங்கியிருக்கிறார். நாவலர் தாய்மொழியில் அரசியல் பேசினார்; எழுதினார். இதனால் தமிழ்மொழியும் வளமடைந்தது. சமகாலத்தினர் ஆங்கிலத் திலேயே அரசியலையும் பேசினர். ‘வெகுசனத்துரோகம்", "திக்கற்ற ஏழைகள்” முதலியன பிற்காலத்தில் வேகமும் வலுவும் பெற்ற அரசியற் தொடர்களாகப் பரிணமித் ததையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். இது விஷயத்தில் பின்வந்த திரு.வி.க. போன்றோருக்கு நாவலர் வழிகாட்டியாக விளங்கினார் என்றும் கூறலாம்.
சமய வாதியாகிய நாவலரை அரசியல், பொருளாதார, சமூகத்துறைகளில் ஆழ்ந்த அக்கறை கொள்ள வைத்த வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று ஈசுரவருஷத்தில் (1877) யாழ்ப்பாணத்திலே உண்டான கொடிய பஞ்சமாகும். பஞ்சத்துடன் கொள்ளை நோயும் சேர்ந்து சொல்லொணாத் துன்பம் விளைத்தன. இப்பஞ்சம் பற்றி அக்காலத்தை யொட்டி வெளிவந்த வரலாற்று நூல் ஒன்றில் உருக்கமான விவரணம் காணப்படுகிறது. ஜோன் (John) என்பவர் 1882இல் வெளியிட்ட யாழ்ப்பாணச் சரித்திரம் சேல் வருமாறு கூறும்.
"பஞ்சமும் இதுவே சமயம் என்று அஞ்சல் இன்றி அகோரமாய்ப் பரந்தது. அகவிலை மிக விலையாயிற்று. மனுஷர் பெரும் பாலும் என்புரூபிகளாயினர். அனேகரிற்
C10)
 

சங்கத்தமிழ்
கல்காளம் எண்ணிக் கணக்கிடத்தக்கதாக இருந்தது. தீவார்தங்கள் உதரக்கனி களை விற்று உணவுகொள்ள முயன் றனர். இறந்து, காட்டோரமாகக் கிடந்த நாட்டான் ஒருவனுடலை அங்கசேதனஞ் செய்து பரீட்சை பண்ணியபோது இரைப் பைக்குட் புற்கற்றை காணப்பட்டதாமே! பஞ்சத்தின் விஞ்சிய கொடுமை இதாற் தெளிவாகின்றது. சனோபகாரிகள் இதைக் கண்டு வண்ணார்பண்ணையிற் கஞ்சித் தொட்டியொன்றுண்டாக்கிப் பஞ்சப்பட்டவர்களுக்குக் கஞ்சி காய்ச்சி யூற்றினார்கள். அக்காலத்திலே பஞ்சப் பட்ட மக்களுக்கு வணினார்பணி ணையிற்கஞ்சித் தொட்டி உண்டாக்கியது நாவலரின் நற்பணிகளில் ஒன்றாக அமைந்தது.” "வட இலங்கையிலே வைதிக சமயப் பாதுகாவலராக வாழ்க்கையை ஆரம் பித்த நாவலர், படிப்படியாகப் பரிணமித்து, 'மது விலக்குப்பற்றிய இக்கூற்றிலே, இலங்கைச் சனங்கள் என்று தேசமுழு வதையும் மனங்கொண்டு பேசுவதைக் கேட்கிறோம். இதுவே தேசியத்தின் பரிணாம வளர்ச்சியுமாகும். இதன் வெளிப்பாட்டை ‘விவசாயம் பற்றிய பிறிதொரு குறிப்பிலும் காணலாம்.? நாவலர்பெருமான சைவத்தின் காவலர் மட்டுமன்று சமய வாதியாய்த் தொடங்கித் தேசியவாதியாய் முகிழ்த்த நாவலர் செயல் வீரராவார்.
1877இல், பஞ்சம் ஏற்பட்ட பொழுதுதர்ம
தோடு அமையாது, "யாழ்ப்பாணம்மட்டக்களப்பு வர்த்தக வேளாண் சங்கம்” என ஒரு நிறுவனத்தையும் தொடங்கு வதற்கு முன்னின்றுழைத்தார். சங்கத்தின்
தை 2012)

Page 13
கொள்கைகளை ஊக்குவிப்பதற்காகவே தாம் இரண்டாயிரம் ரூபாவுக்கு, இருநூறு பங்குகள் வாங்கிக் கூட்டுமுயற்சியை வளர்க்க முனைந்தார். இவ்வாறே கந்தளாய் நிலத்திருத்தச் சட்டத்திலும் அதிக அக்கறை கொணர்டிருந்தார் நாவலர். இவையாவும் நாவலரது கண் னோட்டமும், காட்சியும் அக்கறைகளும் அகனர்று-விசாலித்து-விரிவடைந்து கொனர்டே சென்றமையை எமக்குக் காட்டுகின்றன. இது தேசியத்தின் விரிவு என்றும் கூறலாம்.* "நாவலர் வழிவரும் தேசியம் இச்சமயத்தில் நமக்கு வழிகாட்டக்கூடியதாகும்" நாவலர் பெருமான் புதிதாகச் செய்த முயற்சிகள் அவரது பெருநோக்கத்துக்கு ஏதுக்களாகவே கருதப்பட்டன என்பன நினைவில் நிறுத்த வேண்டியது. இவற்றின் eup6DLib,
"சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்கும் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையே” தன்னை இருபது வருடகாலம் இரவும் பகலும் தொண்டாற்றச் செய்தது என்று சைவசமயிகளுகுகு விக்கியாபனம் (1868) என்னும் கட்டுரையில் எழுதியுள்ளார்."
12.நாவரிைன் விவேகமும், நுண்மாண் Այl6օԱք ւթxtpւb:
தமிழ்மக்கள் செய்த தவத்தின் பயனாக அவதரித்த மகாபுருஷர் நாவலர் பெருமான். சைவமும் தமிழும் தன் இரு கண்கள் எனப்போற்றியவர். மக்களுக்கு மத்தியில் ஒழுக்க வாழ்வை நெறிப்படுத்துவதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தவர். எமது மக்களை மேன்மைப்படுத்துவதற்காக
தை 2012 }
 

சங்கத்தமிழ்
அல்லும் பகலும் உழைத்தவர். ஒரு பெரிய நிறுவனம் செய்ய முடியாதவற்றை தனி யொரு மனிதனாக நின்று சாதித்தவர். தனி மனித இயக்கமாக நின்று தமிழுக்கும், சைவத்திற்கும் பணி செய்த பெருமகன் முரீலழுநீ ஆறுமுகநாவலர் அவர்கள். அவரில்லையேல் சைவம் ஈழத்தில் அழிந் திருக்கும். தமிழகத்தில் சிதைந்திருக்கும்; தமிழ்வளம் குன்றியிருக்கும். இலங்கையில் தமிழுக்கும் சைவத்திற்கும் ஏற்படவிருந்த பேராபத்தைத் தடுத்து அவை மீண்டும் புத்துயிர் பெறச் செய்த கர்மயோகிநாவலர்கள். ஆன்மிகம், பண்பாடு, இலக்கியம், சமூகம், கல்வி, மொழி எனப்பல துறைகளிலும் அவர் புரிந்த தொண்டுகள் பன்முகப்பட்டவை: நாவலர் வரலாற்று நாயகர்; தேசியப் பெரியார் சைவத்தின் காவலர். இலக்கண இலக்கியங்களிலும் சைவசித்தாந்த சாத்திரங் களிலும் பரந்த அறிவினையும், சைவப்பிர சங்க வல்லமையையும் கொண்டிருந்தார். சிவதீட்ஷையை மேற்கொண்டு அவைகளில் சிறிதும் தவறாது ஒழுகியவர்; சாதனை யாளர்; நைட்டிகப் பிரமச்சாரி, சைவசமய உண்மைகளை எளிய நடையில் எடுத் துரைக்கும் எழுதும் சொல்லாற்றலில் 66ö6o6) j. 6Oö6)LDTLiö öLDu Lö 8mbLö புண்ணியமுடையவர். வாழும் வாழ்க்கை முறைக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர். ஈழத்திலும், தமிழகத் திலும் சைவத்துறை விளங்கப் பணியாற்றிய தனிச் சிறப்பு இவருக்குரியது. நாவலரவர்கள் எழுதிய பாலபாடங்கள் இளைஞர் உள்ளங் களில் நல்லொழுக்கத்தையும் ஈசுரபக்தியை யும் உறுதியாகப் பதியச் செய்வன. அஞ்சாநெஞ் சுடன் இலட்சியப் பணி புரிந்த உத்தமர் நாவலர் பெருமான். ஏட்டுப்பிரதிகளாயிருந்த பழந்தமிழ்ப் படைப்புகளை அச்சுவாகன
(11)

Page 14
மேற்றி, விளக்கவுரைகள் எழுதி வெளியிட்டு, பாடசாலைகளை ஸ்தாபித்து, பிரசுரங்களை வெளியிட்டுத் தமிழுக்கு எழுச்சியுட்டியவர் நாவலர். அவர் ஒருபெரும் சிவபக்தர். சிவநெறி குன்றிப் போவதைச் சகிக்காமல் அதன் உண்மைகளை 6sles Tä 86 நிலைநாட்டினார்.
கிறிஸ்தவ சமயத்தை அவர் நிந்திக்க வில்லை; ஆனால் அச்சமயத்தின் உண்மை களை விளங்கிக் கொள்ளாதவர்கள் விலை கொடுத்து, மதமாற்றஞ் செய்ய முற்பட்ட தையே அவர் கண்டித்தார். பேர்சிவல் பாதிரி யாரோடு கிறிஸ்தவ வேதநூலாகிய விவிலிய மெனப்படும் “பைபிளைச் செந்தமிழ் மொழியில் மொழிபெயர்த்துதவியவர்நாவலர் பெருமான். தமிழ் உரைநடையின் தந்தை நாவலர் பெருமான்; நாவலர் ஒரு மகான்; அவர் ஒரு மேதாவி தீர்க்கதரிசி,
“யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலரவர்கள் ஒரு அவதாரபுருஷர். இடையிருட்கடைக் காலத்தில் விடியுமுன் விசும்பில் விளங்கும் வெள்ளி போலத் தமிழகத்தில் தளரும் சைவமும், தமிழும் தழைய, அவ்விரண்டிற்கும் புத்துயிர் வழங்கப் பிறந்த வள்ளலாவார்? என எழுதுகிறார் சோமசுந்தரபாரதியார்.
13. நாவலரின் சைவப்பணி
1848ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்குத் தமிழ்க்கல்வியும், சமயக்கல்வியும் கற்பிக்கும் நோக்கத்தோடு அவரது வீட்டின் திண்ணை யிலே தொடக்கப்பட்ட பாடசாலையே சைவப் பிரகாச வித்தியசாலை தோன்றுவதற்கு ஆரம்பமாக அமைந்தது. இப்பாடசாலையின் பெயரே நாவலரது நோக்கத்தினை வெளிப்படுத்துகின்றது. சைவப்பிள்ளைகள் படிப்பதற்கென இப்பாடசாலையை நாவலர்
C12)
 

சங்கத்தமிழ்
தொடக்கவேண்டிய சமுதாயத்தேவை அக்காலத்தில் இருந்தது. தமது கல்வித் தொண்டினை விஸ்தரிக்கும் நோக்கத்தோடு 1864ஆம் வருடம் யாழ்ப்பாண மக்கள் உபகரித்த பொருளுடன் சிதம்பரத்தில் ஒரு சைவப்பிரகாச வித்தியசாலையை நிறு வினார். அத்தோடு சைவப்பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 1872ஆம் ஆண்டு ஓர் ஆங்கிலப் பாடசாலையை வண்ணார்பண்ணையில் நிறுவியபோதும் பொருளாதார வசதியின்மையில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் அப்பாடசாலையை மூடவேண்டிய நிலைமை உண்டாகியது. நாவலர் நிறுவிய இவ்வாங்கில வித்தியா சாலையே இன்றைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வழிவகுத்தது. கிறித்தவருக்கு எதிராக நாவலர் ஆரம்பித்த இயக்கத்திலேயே அவரது கல்வித் தொண்டு முக்கிய இடத்தை வகித்துள்ளமை அவரது வரலாற்றைப் படிப்போருக்கும் புலனாகாமற் போகாது.
"நாவலரை அவரது களத்தில், காலத்தில் வைத்தே மதிப்பிடல் வேண்டும். அவரது 856IT b &LDuu-L60LITIG-LDULéis 856ITLDITg5lb. சமய பண்பாட்டு மரபுகளைப் பரப்பு வதையும் பேணுவதையும் புதுக்கு வதையுமே தமது கல்விப்பணிகளின் முழுமுதல் நோக்கமாக வளர்த்துக் கொண்டவர் நாவலர்.? "சமயச் சூழலிலே இளம்பிள்ளைகளுக்குக் கல்வி பயிற்ற வேண்டும் என்னும் வேட்கை நாவலருக்கு இருந்தது. அவ் வேட்கையின் வெளிப்பாடே அவர் நிறுவிய சைவப்பிரகாச வித்தியா
SFT606D66ft." சமய ஆசாரங்களையும் சமய தத்துவங் களையும் உணர்த்தி, சமயாபிமானத்தை யும், பற்றையும் ஊட்டுவ்தே நாவலரது
(தை 2012)

Page 15
கல்விக் கொள்கைக்கு அடிப்படை. “கல்வியிலும் சமயமே அதிகம்” என்பது அவர்தம் கோட்பாடு. நாவலரது தலையாய பணியாகக் கல்விப்பணி அமைந்தது. தமிழறிந்தவர்கள் தமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்குக் கற்பிப்பதில் விருப்பமற்றவர்களாக இருந்தனர். நாவலர் காலத்துத் தமிழ்க்கல்வி யின் நிலையைத் த. கைலாசபிள்ளை மேல்வருமாறு கூறுகிறார்.
"நமது சமயம் தப்பியிருந்ததுபோல தமிழ்ப்பாஷையுந் தப்பியிருந்தது. இங்கிலீசு அரசு வந்தபின்னரும் அனேக தமிழ்ப் பண்டிதர்கள் இங்கே இருந்திருக் கிறார்கள். அவர்கள் நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சிவஞான முனிவர் போன்ற திறமையுடையவரல்லராயினும் தமிழ்ப் பாஷையிலே மகிவம் பாண்டித்தியம் உடையவர்கள். ஆயினும் இவருட் சிலர் தாம் கற்றதைத் தம்பிள்ளைகளுக்குத் தானும் சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். சிலர் பிறரிடத்தே ஏடுகளை வாங்கித்தாம் பிரதி செய்துகொண்டு பாட ஏட்டை இயன்றளவு பிழைபடுத்திவிட்டுக் கொடுப் பார்கள். ஒருவித்துவான் தான் கற்குங் காலத்தில் எழுதிய சில நூற்குறிப்புகளை மரணிக்குங் காலத்தில் தமக்கு முன்னே கொண்டு வந்துகட்டுப் போடவேண்டும் என்று சொல்லிச் சுடுவித்து அதன் பின்னரே தம் உயிர் போகப் பெற்றார். இப்படிப்பட்ட காலமே ஆறுமுகநாவலர்
Dig BITGO b." சைவசாத்திர சாரங்களான பாடநூல் களை எழுதுவதையும் அவற்றை அச்சிட்டு வெளியிடுவதையும் தமது கல்விப் பணியின் கூறுகளாகக் கொண்டவர் நாவலர். பாட சாலைகளைத் தரம்பிரித்து அமைப்பதும்
தை 2012)-
 

சங்கத்தமிழ்
அவர் நோக்கமாயிற்று. எண்ணக்கரு வளர்ச்சிபற்றிய பூரண உணர்வுடன் நாவலர் தாம் எழுதிய நூல்களையும் பதிப்பித்த நூல்களையும் வெளியிட்டார் என்பது மெய். மக்கள் மொழியாகிய பழகுதமிழ் உருவா வதற்கு ஒரு முன்னோடியாக விளங்கியவர் நாவலர். இலக்கண நெறி சார்ந்த ஒரு புதுவகை வசன நடையை நாவலர் தாமாகவே உருவாக்கிக் கொண்டார். திரிசொற்களை அதிகம் கையாளாமல் இயற் சொற்களையே பெரிதும் கையாண்டார். குறிய வசனங்களையும் நெடிய வசனங் களையும் தேவை நோக்கிப் பிரயோகித்தார். "நாவலர் ஒளித்து மறைத்துச் சொல்லத் தெரியாதவர்."நாவலரது சொற்கள் உணர்ச்சி மயமாகத் தொழிற்படும் பொழுது அவற்றில் வேகம் மிகுந்திருக்கும்; கடுபிறந்துவிடும். நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாட்டை வரையறுத்து அக்குறிகளைத் தமிழ் வழக்குடன் இணைத்து வைத்தமையும் நாவலரின் மொழிப்பணிகளுள் ஒன்று.
"யாழ்ப்பாணத்திலே ஏற்பட்ட சைவசமய விழிப்புணர்ச்சிக்கும் அச்சமய வளர்ச்சிக் குக் கருவியாகிய வித்தியாசாலைகளது தாபிதத்திற்கும் காரணகர்த்தா ஆறுமுக நாவலரே. கோப்பாய் போதனா பாடசாலையிலும், அதன் தொடர்பான திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலையிலும் கற்றுத் தேறியபலர் நாவலர் வழியில் கல்வித் தொணர் டாற்றினர். பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளையை இக்காலத்தவருள் முதல் வராகக் கொள்ளலாம். சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றும் எண்ணம் நாவலராலேயே சைவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வெணர்னம்
-G13)

Page 16
蠱
நாவலர் காலத்திலே அரும்பி வளர்ந்த போதும் அவர் பரம்பரையினரால் நன்கு வளர்க்கப்பட்டது. 60pғ6)uшjш6ії6iflaѣ கூடங்களாக பரமேஸ்வராக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றின் தாபகராகிய சேர்.பொன்.இராமநாதன், மகாஜனக் கல்லூரி நிறுவுனர் பாவலர் துரையப்பாபிள்ளை ஆகியோர் இவ்வரி சையில் அடங்குவர்."
14 நாவரிைன் இலக்கியப்பணி நாவலரின் இலக்கியக் கொள்கை, கோட்பாடுகள் பற்றித் துல்லியமாக அறிய வேண்டுமாயின் அவரெழுதிய நான் கம்பாலபாடத்திலுள்ள தமிழ்புலமை என்னும் வியாசத்தில் இடம்பெறும் கருத்துக்கள் ஊன்றிக் கவனிக்கப்படத் தக்கவை. நாவலர் எழுதுகிறார்.
"திருவள்ளுவர் குறள்; நாலடியார் முதலாகிய நீதி நூல்களைப் பதப்பொரு ளுடனே கற்றறிந்து கொள்க. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல் லாண்டு என்னும் அருட்பாக்களைப் பண்ணுடன் ஒதவும் சுத்தாங்கமாக ஒதவும் பழகிக் கொள்க...! பெரிய புராணம், திருவிளையாட்ற் புராணம், திருவாதவுரடிகள் புராணம், கந்த புராணம் உபதேச காண்டம், கோயிற் புராணம், சேது புராணம், பதினொராந் திருமுறையிற் பிரபந்தங்கள், குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த பிரபந்தங்கள் முதலாகிய இலக்கியங்களை ஆராய்ந் தறிக. திருவள்ளுவர் குறள் பரிமேலழ கருரை, திருச்சிற்றம்பலக் கோவையார் நச்சினார்க்கினியருரை. கல்லாடம் நச்சினார்க்கினியருரை என்பவற்றைக் கற்று, இடைவிடாது பலகாலும்
C14)
 
 

சங்கத்தமிழ்
உளங்கொளப் பயிலுக... இலக் கணங்களைக் கற்றறிந்து தாம் கற்ற இலக்கியங்களில் இவ்விலக் கண விதிகளை அமைத்துப்பழகுக."
நாவலரவர்களது இலக்கிய நோக்கை மட்டுமன்றி அவரது கல்விக் கொள்கையை யும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்த இம்மேற்கோட் பந்தியில் புராணங்களைப் பற்றிக் கூறுகின்ற பகுதியில் அவற்றை "இலக்கியங்கள்” எனச் சிறப்பித்திருப்பதும் கவனிக்கத்தக்கதே. "கல்வி கேள்விகள் இல்லாதவர்கள் கடவுளை அறிந்து வழிபட்டு உய்யமாட்டார்கள்” என்று கல்விக்கே குறிக்கோள் கூறியவர் நாவலர். நாவலர் சீவகசிந்தமணி போன்ற சமணச் சார்புடைய காவியத்தைப் போற்றத் தவறவில்லை. அந்நூலை அவரே பதிப்பிக்கவும் எண்ணி யிருந்தார்.” தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுத முனைந்தவர் நாவலரவர்கள்.
நாவலரவர்களைச் சாதிமான்' என்று எள்ளிநகையாடி ஏளனமாகவும் சுட்டுவோர் இன்றும் வாழ்கின்றனர். இப்பண்பின் காரணமாகவேநாவலரைத்"தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கிய அறிஞர்களும் தமிழரி லுள்ளனர். இவ்வாறு கொண்டமை யால் பிறப்பினாலல்லாது தம்மையும் உயர்சாதி யினர் என்று எண்ணிமகிழ்வோரும் உளர். எதுஎவ்வாறாயினும், நாவலரவர்கள் உயர்சாதியினரது ஏகப் பிரதிநிதியாக விளங்கினார். அவர் சாதிபற்றிய தமது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. முதலாம் சைவ வினாவிடையில், "அவர் களிடத்திலே போசனம் பண்ணலாகாது?” என்ற வினாவுக்குப் பதிலாக, *. தாழ்ந்த சாதியாரிடத்திலும் போசனம் பணி ன லாகாது.” எனவும், நான்காம் பால பாடத்தில்
(தை 2012)

Page 17
நல்லொழுக்கம்" என்னும் கட்டுரையிலே, "தீண்டத்தகாத சாதியரையும். தீண் டினாலும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும் எனவும், தேவாலயதரிசனம்' என்றும் கட்டுரையிலே, திருககேளயிலுள்ளே போவதற்க யோக்கியர் களல்லாத சாதியார்கள். போன்றவை இளஞ்சந்ததியினருக்குச் சாதி பற்றிய அறிவினைப் புகட்டும் தன்மை வாய்ந்தன.
நாவலரது இலக்கியப் பணிக்குள் அவர் எழுதி வெளியிட்ட நூல்களையும், அச்சிற் பதிப்பித்த நூல்களையும் குறிப்பிடுதல் பொருந்து வதாகும். ஆண்டு வாரியாகவே
அவை இங்கு நோக்கப்படுகின்றன.
1849 சூடாமணிநிகண்டு உரை செளந்
தர்யலஹரி உரை. 1850/51 முதலாம், இரண்டாம், நான்காம்
பால பாடங்களும் நீதிநூல்களும் அச்சிடல் 1851 திருச்செந்தினிரோட்டக யமக அந்
தாதி உரை. 1851 (அக்) நன்னூல் விருத்தியுரை,
சிவாலயதரிசனவிதி.
1852 Gugful JT600T 6360TLb. 1853 திருமுருகாற்றுப்படை உரை. 1854 சைவதுஷண பரிகாரம்; சுப்பிர
போதம்; வச்சிரதண்டம். 1859 திருவாசக மூலம்; திருக்கோவை
யார் மூலம் 186O திருக்கோவையார் உரை 1861 திருக்குறள் பரிமேலழகர் உரை: தடுக்கசங்கிரகம் அன்னம்பட்டீயம் உரை, கந்தபுராண வசனம் 1864 திருவிளையாடற் புராண வசனம்; சேதுபுராணம், இலக்கண விளக்கச் கறவாளி.
தை 2012
 

சங்கத்தமிழ்
1866 தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கணச்சொத்து அச்சிடல், அருட் பதிப்பு, (அகத்தியர் தேவராத்திரட்டு, திருவாசகம், திருவிசைப்பா, திருப் பாலாண்டு, பெரியபுராணம் செய் யுட் திரட்டு தொகுப்பு 867 சிதம்பரமூழ்மணிக்கோவை:
அருணாகிரிநாதர் திருவகுப்புபதிப் பித்தல். 1868 கோயிற் புராண உரை, சைவ
சமய நெறியுரை. 18691ஆம் திருமுறை பதிப்பித்தல் - கந்த
புராணம் அச்சிடல். 1872 யாழ்ப்பாணச் சமயநிலை திருக்கே தீச்சர ஆலய விண்ணப்பம். 1873 சைவவினாவிடை முதற்புத்தகம். 1875 திருவிளையாடற்புராணம்.நன்னூற் காண்டிகையுரை; நன்னூல் விருத்தியுரைதிருத்தி வெளியிடல். "நாவலர் பிழை எனக் கண்டவற்றை
அஞ்சாது எடுத்துரைக்க வல்லவர்” நூல்கள் மூலம் சைவ உண்மைகளையும், சீர் திருத்தக் கருத்துக்களையும், கண்டனங் களையும் எழுதி வெளியிட்டார். இத்தொடர் பில் இன்னுங் காணப்படும் குறைபாடுகள் பலவற்றையும் குறிப்பிட்டுப் பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் எழுதும் கருத்துகள் நமது சிந்தனைக்குரியன வாகின்றன.
"சைவமக்கள் ஒழுங்கும், கட்டுப்பாடும் குறைந்தவர்கள் என்று கூறப்படுவ துண்டு. தமிழ் நாட்டிலும் சரி, இலங்கை யிலும் சரி பல கோவில்களின் வீதிகளி லேயே எச்சில் உமிழ்தல், மூக்குச் சிந்துதல், மலசலம் கழித்தல் போன்றவை நிகழும். அத்தகைய சீர்கேடுகளைத்
(15)

Page 18
திருத்தவும் நாவலர் முயன்றார். திரு வள்ளுவர் வாழ்ந்து சுமார் இரண்டாயிரம் வருடங்களின் பின் எங்கே எச்சில் உமிழ்வது. எங்கே மலசலம் கழிப்பது, எப்படி உடம்பைச் சுத்தமாக வைத்தி ருப்பது, எப்படி உண்பது, எப்படி உடுப்பது. எப்படிச் சிரிப்பது, ஏன் பல்துலக்க வேண்டும், களவும் பொய்யும் கொலை யும் கருதும் ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்பனபோன்ற விடயங்களை விளக்க வேண்டியிருக்கிறதென்றால் சீர்திருத்த முயற்சிகள் எவ்வளவு தூரம் பயனளிக்க வல்லவை என்பதனையும் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படியாயினும், நாவலர் சளைக்காமல் அத்தகைய விட யங்களை வற்புறுத்தியும் வாழ்க் கையைச் சீர்திருத்தப் பணியாற்றனர்.8 அறிஞர்கள் மனங்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்த அரிய தமிழ்நூல்களை அச்சு வாகனம் ஏற்றி அவை செல்லுக் கிரையாகி அழிந்து போகாதுகாத்த பெருமை ஆறுமுகநாவலரையே சாரும். நாவலர் பதிப்பு என்றால் சுத்தப்பதிப்பு என்ற புகழும் பெருமையும் இன்று வரை ஈழத்திலும் இந்தியாவிலும் நிலவுகின்றன.
ஆறுமுகநாவலருக்கு ஏட்டு முறை யினை மாற்றிப் புத்தக முறையினைக் கையாளுவதில் விருப்பம் இருந்தது. அதே நேரத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்களையும், நூல்களையும் வெளியிடவும் அவர் விரும்பினார். ஆயினும் இதற்கு சைவர்களிடம் அச்சியந்திரம் இல்லாதது ஒரு பெருந்தடையாக இருந்தது. கிறிஸ்தவ அச்சுக் கூடத்தில் சைவ சம்பந்தமான புத்தகங்களை அச்சிட முடியா திருந்தது. அதிலும் நாவலர் புத்தகமானால்
C16)
 

சங்கத்தமிழ்
அச்சுக் கூடத்தில் கடமை யாற்றுவோர் தொடவும் மாட்டார்கள். எனவே சொந்தமாக ஓர் அச்சகம் இக்காலத் திலே தேவையா யிருந்தது. இதனை உணர்ந்த நாவலர் 1849é,LD é6OOTG 9čförd5 6o Lib 6ITElfi வித்தியாநுபாலன யந்திரசாலை என்று எபயர் சூட்டி வண்ணர் பண்ணையிலே தாபித்தார். இவ்வச்சியந்திரசாலையிலே தன்னால் இயற்றப்பட்ட நூல்களையும், ஏட்டிலிருந்த பரிசோதித்த நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தினார். நாவலர் காலத்திலே இந்தியாவிற் சில நூல்கள் அச்சுவாகனம் ஏறின. ஆனால் அவை இலக்கண இலக்கிய பிழைகளும், அச்சுப் பிழைகளும் நிரம்பியவையாய் விளங்கின. அவை மட்டுமன்றி இலக்கண, இலக்கியப் பிழைகளும் காணப்பட்டன. பல பிழை களோடு பதிக்கப்பட்ட நூல்களே அக்காலத்தில் வழக்கிலிருந்தன. நாவலர் ஏட்டிலிருந்த நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கியதும் அச்சுப்பிழைகளும், இலக்கண இலக்கியப் பிழைகளும் அகற்றப் பட்டுச் சுத்தப்பதிப்பு வெளிவரளாயிற்று.
நாவலரவர்கள் வாழ்ந்த காலப்பகுதியிலே பத்திரிகைகள் வெகுஜனத் தொடர்பூடகங் களாக இயங்கின. மக்களுக்கு வேண்டிய பல விடய தளங்கள் இச்சஞ்சிகைகளிலும் எழுதப்பட்டன.
உதயதாரகை (1841) இலங்காபிமானி (1864) இலங்கை காவலன் (1868) புதினாதிபதி (1870) புதினாலங்காரி (1873) கத்தோலிக்கபாதுகாவலன் (1876) இலங்கைநேசன் (1877) சைவ உதயபானு (1880)
தை 2012)

Page 19
சன்மார்க்க போதினி (1885) இலங்கை தினவர்த்தமானி (1886) இந்து சாதனம் (1889) எனும் பத்திரிகைகள் இருந்தன.
15. நாவலரின் சமயப்பணி: பேராசிரியர், கலாநிதி கா.கைலாசநாதக் குருக்கள் அவர்கள் நாவலரது சமயப்பணி குறித்து எழுதியுள்ளமை கவனிக்கத்தக்கது. மேற்கோள் வருமாறு:
"நாவலராற்றிய பணி சைவத்துடன் மட்டுமே தொடர்பு பெற்றது. வைதிகப் பின் னணியில் விளங்குவது. அவர் பேணிக் காத்த சைவம் வைதிகசைவம்" என அவர் பரம்பரையினர் ஒப்புவர். அப்பணி யினை அவர் தீவிரமாக ஆற்றிய வேளை அது பன் முகப்பட்டுப் பல அம்சங்களாக விரிந்தது. சமயிகளிடையே சமய அறிவைப் பெருக்கினார். புறச்சமயத்தவர் பரப்பிய விஷக் கருத்துக்களைக் கண்டித் தார். இவ்விரண்டையும் திறம்படச் செல்வதற்காகவே நல்ல நூல்களை எழுதித் தாமே அச்சிட்டு வெளியிட்டார். தமக்கென ஒரு வசன நடையினைத் தோற்றுவித்தார். பிறசமயத்தவரின் பொய்ப்பிரசாரத்தைக் கண்டித்தார். சமய உபந்நியாசனங்களை நிகழ்த்தினார். புராணபடன மரபினை ஊக்கமாக வளர்த்தார். சமய அடிப்படையில் கல்வி வழங்க வித்தியாசாலைகளை நிறு வினார். மாணவர்களுக்குரிய நூல் களை எழுதி வெளியிட்டார். நாவலர் தனியனாகநின்று உழைத்த அளவிற்குப் பலர் இணைந்து ஒருமித்துக் கடமை யாற்றும் நிறுவனங்கள் கூட இதுவரை செயலாற்றியதில்லை".9
தை 2012)
 

சங்கத்தமிழ்
நாவலரின் சமயப்பணி குறித்து எழுதிய இக்கட்டுரையாசிரியரின் நல்லாசிரியரும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன் னாள் உபஅதிபரும், சிந்தனையாளருமான 'அறிவொளி மாவை.த.சண்முசுந்தரம் அவர்கள் வேல் வருமாறு கூறுவார்.
"நாவலர், கண்ணகி வழிபாட்டையும். நல்லூரில் இடம்பெற்றுவந்த வேல் வழி பாட்டையும் கணிடித்தார். வேதாகம முறைக்கு முரண்பாடானவற்றைக் கண்டித் தல் நாவலர் போக்கு." என்றும்,
"தமிழ் நாட்டிலுள்ள ஆதீனங்களுக்கும் நாவலருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பினால் ஆதீனங்களே நன்மை பெற்றனஎனக்கொள்ளலாம் திருவண்ணா மலை, திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் நிறுவன அடிப்படையில் கட்டுக் கோப்புடன் இயங்கின. அவை தீருவருளையும், தமிழறிவையும் பெற முயன்றன. நாவலரோ திருவருளையும் தமிழ் அறிவையும் ஒருங்கே பெற்ற நடமாடும் பெரும் ஆதீனம். நாவலரின் அறிவு தமக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகத்திருவாவடுதுறையாதீனம் அவரைத் தனதாக்க முயன்றது. ஆதீனத்திலும் பார்க்கப்பரந்த ஒரு சமூகம் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் இருப்பதை நாவலர் அறிவார். இந்தச் சமூகத்தின் விழிப்புணர்ச்சியே நாவலரின் குறிக் கோள். மேலும் நாவலரின் தனித்தன்மை புகழ்பெற்றது. அவரை எவரும் 'ஒரு எல்லைக்குள் நில்" எனப் பணிக்க
20". لقITلUpgu சைவசமயத்திலிருப்பதற்கான தகைமைகள் பற்றி நாவலர் கூறுவதாவது:
-G17)

Page 20
"சிவபெருமானைச் சிவாகம விதிப்படி வழிபடத் தகுதியுடையவர்களாக ஆக்குவது சிவதீட்சை ஆகும்.? “சிவதீட்சை பெற்றவனே சைவனா 6T60."22
"சைவர்களால் நியமமாக ஒதப்படுவதற் குரிய மூலமந்திரம் முரீபஞ்சாட்கூடிரம் ஆகும்.”?? "மதுபானம், மாமிச போசனம், ஆகாரம், சிவதீகூைடி ஆகிய ஒழுக்கம் உடைய போக்கியர்களே முரீ பஞ்சாட்கூடிரம் ஒத யோக்கியர்களாவார்கள்.”* "சிவதீகூைடி பெற்றுக் குருவை அடைந்து ருநீபஞ்சாட்ஷரத்தை ஒதல் வேண்டும்.? “சைவர்களால் அவசியமாகத் தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் விபூதியும் உருத்திராகூடிமுமேயாகும். விபூதி தரியா நெற்றி சுடுகாடு போல்வது? "உருத்திராகூடிம் தேவர்கள் திரிபுரத்த சுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பஞ் செய்து கொண்ட பொழுது திருக்கைலாசபதி யினுடைய மூன்று திருக்கண்களி னின்றும் பொழிந்த நீரிற்றோன்றிய LD600fungil D. "?7 "(உருத்திராக்கத்தை) இதனை அணி தற்கு மதுபானம் மாமிச போசனம் போன்றன அற்றவராய் ஆசாரமுடைய வர்களே போக்கியதை உடையவர்
66.28
"இவ்வுருத்திராட்கூடிம் சிவபெரு மானுடைய திருக்கண்களிற் தோன்றுந் திருவருட்பேற்றிற்கு அறிகுறிகளாகும்.”* "தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பலாணர்டு, 6hupflulp T600TLD, என்னும் இவைகளனைத்தும் அருட்யாக் களாகும். இவை பசுகரணம் நீங்கிக்
C18)

சங்கத்தமிழ்
சிவகரணம் பெற்ற நாயன் மார்களால் அருளிச் செய்தவையாதலால் பசுவாக் கென்றே தெள்ளிதிற்றுணியப்படும். இவர்கள் திருவாக்கு அருட்பாவென் பதால் வேதத்திலும் பார்க்க இவை களிற்றானே சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் பிரீதி அதிகம்.° "தெய்வத் தமிழைப் பிழை இல்லாமல் பேசுவது எழுதுவது என்பது ஒரு தவம். இந்தத்தவத்திலே சிறந்து விளங்கிய ஒரு சிரேஷ்டர் நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர். இலக்கண சுத்தமாக அவர் பேசினார். எழுத்துப்பிழைகள் இல்லாமல் அவர் நூல்களை எழுதி வெளியிட்டார்.* "கல்வியுடையவர் தான் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும் நன்மாணாக் கர்களுக்குக் கல்வி கற்பித்தலும், எல்லாருக்கும் உறுதியைப் போதித் தலுமாகிய இம்மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனாகக் கொள்ளல் வேண்டும். இவ்வியல்புடையவரே கல்வியாகிய பயனை அடைந்தவராவார். இம்மூன்று மில்லாத விடத்துக் கல்வியினாற் பயனில்லை.* என்பது நாவலர் கூற்று. "சமஸ்கிருதமும் தமிழும் சிவபெரு மானாலும் இருடிகளாலும் அருளிச் செய்யப்பட்ட இலக்கண நூல்களை உடைமையாலும், ஆன்றோர்களாலே தழுவப்பட்டமையாலும் தம்முள் சமத்துவ முடையனவேயாம்.”* என நாவலர் எழுதியுள்ளார்.
16 நாவர்ை பரம்பரை
நாவலரை பரம்பரை என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தை பேராசிரியர்
தை 2012)

Page 21
பொ. பூலோகசிங்கம் மேல் வருமாறு விளக்கியெழுதியுள்ளார்.
"நாவலர் பரம்பரையினை நோக்கும் போது இலக்கிய, இலக்கண, சாத்திரநூற் புலமை, கல்விப்பணி, நூல் வெளியீடு, சைவசமய பிரசாரம், பிறமத கண்டனம், பிரசங்கமுறை, புராணபடனம், அருட்யாக் கோட்பாடு என்பனவற்றை முக்கிய மானவையாக இனங்காட்ட முடியும்.”* 'வாழையடிவாழையென நாவலர்வழி - மரபில் வந்தோரது வரிசையையும் நிரற்படுத்தினால், அது வருமாறு அமையும்: சி.சிவசங்கரபண்டிதர் (1829-1870) சி.வை.தாமோதரம்பிள்ளை (1832-190) ந.ச.பொன்னம்பலபிள்ளை (1836-1902) சி.செந்திநாதையர் (1848-1924) சு.சாபதிநாவலர் (1848-1903) அ.குமாரசுவாமிப்புலவர் (1854-1922) த.கைலாசபிள்ளை (1855-1939) ச.சபாரத்தின முதலியார் (1858-1922) ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) நா.கதிரைவேற்பிள்ளை (1817-1907) க.சோமகந்தரப்புலவர் (1878-1953) சு.சிவபாதசுந்தரம் (1878-1953) ச.குமாரசுவாமிக்குருக்கள் (1886-1971) சுவாமி விபுலானந்தர் (1893-1947) சி.கணபதிப்பிள்ளை (1899-1986) என்போராவர்.
நாவலரவர்கள் நாடகமெழுதும் புலமை யும் வாய்க்கப் பெற்றிருந்தார் என்ற செய்தி பலருக்குத் தெரியாது. அது குறித்துப் பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் சதாசிவம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
"ஆறுமுகநாவலர் இருபது வயதிலே, 1842ஆம் ஆண்டு, தந்தையின் குறை
தை 2012 トー
 

சங்கத்தமிழ்
நாடகமாகிய "இரத்தினவல்லி
விலாசத்தை" முற்றுவித்தார்.”*
"சைவமும் தமிழும் வாழவெனத் தம்மையே அர்ப்பணித்துப் பணிகள் பலபுரிந்தநல்லைநகர்நாவலர் புகழ் வாழ்க!”
(முற்றும்)
அடிக்குறிப்புகள் 1) கைலாசபதி.க. (2005), நாவலர் பற்றி கைலாசபதி, குமரன் புத்தக இல்லம், சென்னை, பக். 13-14. 2) கணபதிப்பிள்ளை.க., (1938),
நாவலர் நினைவுமலர், ப.15 3) கணபதிப்பிள்ளை.சி. (1968),
நாவலர், ப.6. 4) கைலாசபதி.க. (2005), மு.கு.நூ,
U.42 5) கைலாசபிள்ளை.த. (1919). ஆறுமுகநாவலர் சரித்திரம், வித்தியாதுபாலன யந்திரசாலை, சென்னை. ப.18. 6) கைலாசபதி.க. (2005), மு.கு.நூ.
பக்.15-16. 7) மேலது. ப.49. 8) மேலது. ப.5O. 9) மேலது. ப.52. 1O) புதுமை இலக்கியம், ஜனவரி,
1974. 1) கைலாசபதி.க. (2005). மு.கு.நூ.
LJ.25. 12) சோமசுந்தரபாரதி.எஸ். (1938), "தமிழகத்தை ஈழநாட்டுக்குக் கட மைப்படுத்திய பேருபகாரி", நாவலர் விழாமலர், ப.27 13) முருகையன்.இ. (1979),
"கல்விநோக்கில் நாவலர், நாவலர்
(19)

Page 22
நூற்றாண்டு மலர், திருமகள் அமுத்தகம், சுன்னாகம், பக்.17-18 14) மேலது. ப.18. 15) 60.56OTFlileiró06T.5., (1919),
ஆறுமுகநாவலர் சரித்திரம், வித்தி யாதுபாலன யந்திரசாலை,
ിങ്ങങ്ങിങ്ങ്, L.3. 16) யோகேஸ்வரி கணேகலிங்கம்,
(2OO7), நாவலர் வழியில் தமிழ் அறிஞர், விவேகா அச்சகம், சென்னை, ப.95. 17) (எ+டு), கைலாசபதி.க. (1979),
"நாவலர் இலக்கிய நோக்கும் பணி யும்” நாவலர் நூற்றாண்டுமலர், திருமகள் அமுத்தகம், சுன்னாகம், பக்.52-53 18) தில்லைநாதன்.சி. (1979),
"சீர்திருத்தவாதிநாவலர்" நாவலர் நூற்றாண்டு மலர், திருமகள் அமுத்தகம் சுன்னாகம். 19) கைலாசநாதக்குருக்கள்.கா. (1979), "நாவலர் பணியின் வைதிக அடிப் படை”, நாவலர் நூற்றாண்டுமலர், திருமகள் அமுத்தகம், சுன்னாகம், பக்.96. 20) சண்முகசுந்தரம்,த, (1979),
"நாவலர் சமயப்பணி, நாவலர் நூற்றாண்டு மலர், திருமகள் அமுத்தகம், சுன்னாகம், 2.
நாவலி பொறுத்த நற்குண மலையே நா தேவனே சிவனுற் பொருள்களைத் தே காவலனேஉன் கருணையைப் பிரிந்து சாவதில் லாமலிருக்கலேங் கண்டாய் சா
 

சங்கத்தமிழ்
2) ஆறுமுகநாவலர், (1953), சைவ
வினாவிடை இரண்டாம் புத்தகம். U.4O. 22) ஆறுமுகநாவலர். (1968), நித்திய கருவிதி. 4ஆம், பதிப்பு, ப.1. 23) ஆறுமுகநாவலர், (1953),
மு.கு.நூ. ப.67 24) (SLD60g), u.67. 25) மேலது. ப.68. 26) மேலது. ப.53. 27) மேலது. ப.57. 28) மேலது. ப.62. 29) G&LD6og, Lu. 66. 3O) கைலாசபிள்ளை.த. (1953), ஆறு முகநாவலர் பிரபஞ்சத்திரட்டு. ப.2. 3) சிவநாயகம்.எஸ்.டி., (1989),
பாராட்டுரை, பண்டிதமணிநினைவு மலர், திருமகள் அமுத்தகம், JigorgoTIT85Lib, Lu.vi 32) (எ+டு பண்டிதமணி நினைவு
LD6oj, (1989), Lu.43. 33) மேலது. ப.53. 34) மேலது. ப.97. 35) சதாசிவம்பிள்ளை. (1886), பாவலர்
சரித்திர தீபகம், பக்.75-76.(வூடு) பூலோகசிங்கம்.பொ. (?), ஈழம் தந்த நாவலர், ப.46.
டெலாம் புகழ்ந்துநின்றேத்துந் ]றித் தெட்சணாமூர்த்தியாயமைந்த கடையரே மிவ்வுடம் புடனே ற்றுவாய் நமதுசற் குருவே.
-ஆவரங்கால் திரு.ச.நமச்சிவாயயிள்ளை.
(தை 2012)

Page 23
நூலிந்த G
கவிஞர் து
உரைநடை தமிழ் உறுதியாய் நி திரையாய்ப் பாவ உரையாய் கe விரைவினில் உ
விளங்கிட உ6 புரையோடிப் போ நிரையாய் வட
ஊர்தொறும் ஓடிட் துணர்வினை காரிடி கண்டமே
காத்தநல் காவ UITs6T b UIT6b5
பைந்தமிழ் பா தேரிடும் மாந்தரு தீம்தமிழ் நூல்
பண்டைச் சங்கநூ பதவுரை பதிப் கண்டமாம் குமரி கண்டுமே எள u600TLLDITLD 86Di பதிப்பினை த கண்ணதாய் கல் தந்தவா காத்த
தை 2012

ழதில் தந்திட 60fpbb BT616OT தில் நின்றதை தைசொலும் வித்தகா ளங்கொள் புராணமும் ரைசெய் நாவலா னஎம் சிவநெறி
றிபட வைத்தனை
பேருரைசெய்
96Tigu 85T6).j6DFT கண்டிடக்
பலா நாவலா படித்திடப் robust LLDTi55ub 5ம் மாந்திட 8 செம்மலே
நூல் பலவும் புரை கண்டதே ரிகாண் தமிழரும் ரிதினில் கற்றிட கண நூலாய்ப் 55 b6f unohert விக் கொளியாய்
நவா நாவலா

Page 24
Fr.
(அ) நாவலர் பெருமான்
"புண்ணிய நாள் நாளெல்லாம் போற்றுநாள் செந்தமிழ்த்தாய் எண்ணியெதிர் பார்க்கும் இனியநாள்-மண்ணுலகில் மேவுவுயர் சைவம் விளங்கிடுநாள் ஆறுமுக
நாவலர் கோன் தோன்றியநல் நாள்".
(கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை)
இலங்கை அன்னையையும் ஓரளவிற்ற மிழகத்தையும் உய்விக்க உதித்தவர்களுள் முன்னோடியாக விளங்கியவர்களுள் முதல் இடம் பெற்றவர் சிரேஷ்ட ஈழத்துச் சுடர்மணி ஆறுமுகநாவலர் பெருமானே.
தமிழ் மரபு கல்வி நெறியினைச் சமய உணர்வோடு இணைத்து வளர்த்து வந்திருக்கின்றது. இப்பண்பு பொதுவிற் சங்ககாலம் தொட்டு, இன்றுவரையும் வளர்ந்து, விரிவடைந்து கொண்டிருப்பதற்குச் சான்றுகள் பல உள.
மாந்தர்க்கு அறிவு கற்றனைத்து ஊறும்; கண்ணுடையர் என்பர் கற்றோர்; கல்வி என்பது மனப்பணிபு என “மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம்” காட்டிய வள்ளுவப் பெருந்தகை கூறுவர்.
"அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்" பயிற்றப் பல கல்வி தந்து, இந்த பாரை உயர்த்திட வேண்டும். வீடு தோறும் கல்வியின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி, நகர்களெங்கும் பலபல பள்ளி” என ஊரறிய, நாடறிய உண்மையெல்லாம் ஒருவரையும் அஞ்சாமல் எடுத்துரைத்த, அமரகவி பாரதி சொல்லிப் போந்தார்.
செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும் புலவனும், வீடு சைவம் இவ்வுலகில் நிலவச்செய்த, குருநாதனுமாகிய நாவலர் பெருமானும் கல்விக்கு வரையறை கண்டு கல்வி விசேடமாகத் தாய்மொழி, சமயப்
C22)

ஒத்துச் சிந்தனைக் கதிர்கள் பத்தக்குட்டி சந்திரசேகரம்
பண்பு ஆகியவற்றில் உதித்து முழுமை பொருந்திய கல்விச் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்று கொண்டவர்.
வித்தியாதானத்திற்குச் சமமாகிய தொன்றுமில்லை; வித்தியாதானமே எல்லாத் தானங்களிலும் சிறந்தது என்பர் நாவலர். பார்புகழும் வேதாந்தப் பயிரினை வளர்த்த, கூரிய மாமதி விவேகாநந்த வள்ளலும் இக்கருத்தினை, வாழ்க்கையின் அடிப்படைக் கருத்தாக வலியுறுத்தினார்.
நாவலர் கருத்துப்படி கல்விக்குப் பயன் அறிவு: அறிவுக்குப் பயன் ஒழுக்கம்: கல்வியென்பது அறமும், முத்தியுமாகும்; கல்வி என்றென்றும் இளமை பொருந்தியது: d 600T 6OLDulleOdéOT அணிகலனாகக் கொண்டது.
எந்த நாட்டையும், எந்த ஊரையும், தந்நாடும், தன்னுாரும் ஆக்குவது கல்வி.
கல்வியை, இளமைதொட்டு மரண பரியந்தம் வரையும் விடாமற் கற்க வேண்டும். "கற்றுத் தேர்ந்த பண்டிதரும் காணற்கரிய பரம்பொருளை முழுதுங் கொண்ட மா முனிவனான” குருதேவர் இராமகிருஷ்ணர் மனிதன், ஆயுள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்; கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன், என்று கூறிய அமுதவாக்கை யும், நாம் நாவலர் கொண்டிருந்த கருத்தோடு ஒப்பு நோக்கலாம்.
நாவலர், மனிதன் கல்வியிற் பிறந்து, கல்வியில் வாழ்ந்து, கல்வியினை ஒரு வாழ்க்கைப் பழக்கமாகக் கொள்ள வேண்டுமென்று கூறுவர்.
கல்வி என்பது விளக்கேற்றல் என்றும் நாவலர் பெருமான் கூறுவார். கல்வியாகிய விளக்கில் இருந்து பல கல்வி விளக்குகள்
(தை 2012)

Page 25
Er
எற்படல் வேண்டுமென்பார். இக்கருத்துக் கல்விப் பொருளை நாம் பிறருக்குக் கொடுக்குந்தோறும், கல்வி பெருகிக் கொண்டுவரும் எனும் கருத்தில் எழுந்தது.
கல்விக்கு வரைவிலக்கணம் கணிட நாவலர், கல்வியை புகட்டும் ஆசிரியர் களுக்கும் வரையறை காண்பார். ஆசிரியர் கள் தாம் கற்றிருந்தபடி நல்வழியில் ஒழுகி, மாண்புள்ள மாணவர்களுக்குக் கல்வியைச் சிந்தனையோடு கற்பித்து, அவர்களுக்கு, உறுதியையும் போதிக்க வேண்டுமென்று கூறி நிற்பர். உறுதி என்பது மனத்திலும், செயலிலும் உறுதி கொளல், இதுவே இன்று நமது நாடு வேண்டிநிற்பது எழுத்தறிவிக்கும் இறைவர்கள் கருணாமூர்த்திகளாகவும் திகழ வேண்டும்.
கல்வி எனும் அனுபவம், முதிர்ச்சி யடைந்த ஆசிரியர் மனதுக்கும் முதிர்ச்சி யடைந்து கொண்டிருக்கும் மாணவர் மனதுக்குமிடையே அமைகின்ற தொடர்பாகும்.
மாணவர்கள் ஆசிரியருடைய உள்ளத் தில் அருள் உண்டாகும்படி ஒழுகி, ஆசிரியர் களுக்கு வணக்கம் செலுத்திக் கற்றல் வேண்டும். ஆசிரியருக்கு வணக்கம் செலுத் துவது கல்வித்தெய்வத்துக்கு வணக்கம் செலுத்துவதாகும். மாணவர்கள்தாம் கேட்ட பாடங்களை நாள்தோறும் போற்ற வேண்டும். கேட்ட பொருள்களை ஆராய்ந்து சிந்தித்தல் வேண்டும், கேட்ட பொருள்களில் ஐயம் இருக்குமாயின் ஆசிரியரை அணுகி ஐயத்தினைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாணவர்கள் தாம் கற்றவற்றைத் தங்கள் உடன் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றும் நாவலர் நீதி புகட்டுவார்.
கல்வி மக்கள் வாழ் வழிவகுப்பது: அத்தோடு, ஆன்மா ஈடேற்றத்துக்கும்
தை 2012
 
 

சங்கத்தமிழ்
கருவியாவது. நாவலர் பெருமான் இங்குக் கல்வி ஆத்மீக வளர்ச்சிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கும் இணைந்த கருவியாக விளங்க வேண்டுமெனும் கருத்தினைத் தெளிவாகக் கூறுகிறார். இக்கருத்தினை வலியுறுத்தும் கல்விநெறியாளர், விசேடமாக வறியமக்களுக்கு வாழ்க்கையில் விமோசனம் அளிப்பது கல்வி, என்றுகூறி வறுமை இன்மையும் பிணி இன்மையும் கல்விக்கு அடிகோலுதல் எனும் சீரிய கருத்தினையும் வலியுறுத்து கின்றார்.
இவ்வகையிற் கல்விக்கு வரையறை தந்த நாவலர் பெருமான், ஒரு தத்துவச் செயல் முறைக் கல்வித்திட்டத்தையும் உருவாக் கினார். பெருமான் உருவாக்கிய கல்வித் திட்டத்தை நோக்கும்போது இன்று நமது சமுதாயம் ஏங்கிக்கொண்டு நிற்கும் கல்வி இதுவோ என்று எண்ணத் தோன்று கின்றது.
மனிதனது முருகியல் உணர்வை வளர்க்கச்சிற்பக்கலை, ஓவியக்கலை,இசை, நடனம் போன்ற கவின் கலைகளும், நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையக் கூடிய பொருளாதார அபிவிருத் திக்கு உகந்த, அறிவியற் கல்வியும், விவசாயக் கல்வியும், வணிகம், நிலநூல், வானசாத்திரம் போன்ற ஒழுக்கங்களும் கலைத்திட்டத்தில் இடம்பெறவேண்டுமெனக் கொண்ட தோடல்லாது ஆசிரியர் நாவலர் ஒரு கலைத்திட்டத்தினையும் வகுத்தார்.
நமது மேதை வாழ்ந்த காலம் 18-121822 தொடக்கம் 19-11-1879 வரையுமாம். ஆசிய நாடுகள் அடிமைப்பட்டுத் தம் வலி யிழந்து மதியிழந்து இரந்து உயிர் வாழும் நிலையில் இருந்த காலம் அது. ஆங்கில ஏகாதிபத்தியம் வீறிட்டு எழுந்த காலம்.
இலங்கையில், ஆங்கிலம் உத்தியோக மொழியாக்கப்பட்டது. சிங்களமும், தமிழும்
(23)

Page 26
பள்ளிக்கூடங்களிற் போதனா மொழியாகா மலிருந்த போதிலும் ஆங்கிலேய ஆட்சிக் காலம் தொடக்கமே கிறித்தவ ஆங்கிலக் கல்லூரிகளும் உதயமாகின.
மதத்தைப் பொறுத்தவரையிற் கிறித்தவம் அரசாங்க மதமெனச் சட்டரூபம் பெறா விட்டாலும், கிறித்தவ மதம் "அரசாங்க மதத்தின்” இடத்தைப் பெற்றது. ஆட்சியாளர் கள் மதம் கிறித்தவமானதாற். கிறித்தவ கல்லூரிகள் ஆட்சியாளரின் அனுசரணை யில் வளர்ந்தன.
கிறித்தவ மதம் மனுக்குல நீதிக்காக உதித்த மதம்: ஆசியாவின் நவீன இனம் நாகரிகத்துக்கு அடிகோலிய மதம், எனினும், இது ஆட்சியாளராலும் தழுவப்பட்ட மதமா கையால், கிறித்தவமும் ஏகாதியத்தியமும் ஒன்றோடொன்றிணைந்தவை என்று நினைத்த காலம் இது.
இலங்கையிற் படிப்படியாகக் கல்வி, விசேடமாக ஆங்கிலக் கல்வி, உழைக்கும் கருவியாக உருவாகியது. எனவே, பெளத்த சைவ இளம்பராயத்தினர்தம் சமயநெறியை இழந்து கல்வி கற்க வேண்டிய நியதி ஏற்பட்டுக்கொண்டிருந்தது.
எனவே, சைவ நெறியையும் பெளத்த நெறியையும் கல்விக்கூடங்கள் மூலமே பாதுகாக்க முடியும் எனும் எண்ணம் நாட்டில் உருவாகிற்று.
இலங்கையிற் றொன்மையும் தொடர்பும் இளமையுங் கொண்ட மதப்பண்புக் கலாசாரம் அழியும் நிலையும் இக்காலத்தில் உதித்தது எனக்கொளல் தகும்.
இவ்வித சூழ்நிலையிற்றான் பெளத்தமத, சைவசமய மறுமலர்ச்சி இயக்கங்கள் நமது நாட்டில் உதித்தன; இரு இயக்கங்களும், ஒரே காலத்தில் வளர்ந்தவையானாலும், பெளத்த மத மறுமலர்ச்சி பரந்ததாயிருந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உதயமான
C24)
 

சங்கத்தமிழ்
இம்மறுமலர்ச்சியிற். காலத்தாற் சைவசமய மறுமலர்ச்சி முந்தியது.
சைவசமய மறுமலர்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டு முற்பகுதியில் அரும்பத் தொடங்கிற்று. இது இயக்கமாக வளராது ஆரம்பத்தில் ஆறுமுகனாரின் தனிப் பகீரதப் பிரயத்தனத்தாலேயே தொடங்கிற்று.
சைவசமய மறுமலர்ச்சியின் சின்னமாக எழுந்ததே 1848ஆம் ஆண்டிலே நாவலர் பெருமானின் கண்ணிரிலும், வியர்வை யிலும் வண்ணார் பண்ணையில் நிறுவப் பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலை இன்று இவ்வித்தியாசாலை நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயருடன் இயங்கி வருகின்றது. சைவ நெறியையும், தமிழ் நெறியையும் ஒருங்கிணைத்து வளர்க்க 350 வருட அந்நிய ஆட்சியின் பின் எழுந்த முதற் பாடசாலை இதுவேயாகும். "தற்காலக் கல்விமுறைக்கேற்ப எழுந்த இப்பாடசாலை பல கல்லூரிகளுக்கு முன்னோடியாக விருந்தது.
இது தமிழ்மொழியும், ஆங்கிலமொழி யும் இருவித முரண்படா நாகரிகப் பண்பினை இணைத்து வளர்க்க முடியும் எனும் தத்துவத்தை எடுத்துக் காட்டியது.
இச்சைவப் பிரகாச வித்தியாசாலை நாவலர் பெருமானுடைய தனி முயற்சி யினாலே நடைபெற்று வந்தமையால், இடையிடையே பொருள் முட்டுப்பாடு தோன்றிய போதும், பெருமான் தென்னிந்தி யாவுக்குச் சென்று அங்கு தம் பணிகளைச் செய்து வந்த காலத்தும் குறுகிய காலங் களுக்கு நடைபெறாமல் விட்டதுமுண்டு.
இக்காரணத்தினாலும், இவ்வித்தியா சாலை அக்காலத்துக்குப் பெரிதும் வேண்டிய மேனாட்டு முறைக் கல்வியை ஏனைய கிறீத்தமிஷனரிக் கல்லூரிகளைப் போலத் திறமையுடன் வழங்காமையினாலும்,
(தை 2012)

Page 27
நாவலர் பெருமானின் மாணாக்கர்களும் உறவினர்களும் ஒன்றுகூடி 1888ஆம் ஆண்டு சைவபரிபாலன சபையை நிறுவி 1890ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியை நிறுவினார்கள். இம்மிகப்பெரிய சமய கல்விப் பணிக்கு மிகுந்த தொண்டாற்றியவர் நாவலர் பெருமானின் மருகரும் பிரபுவுமாகிய திரு.சி.த.மு.பசுபதிச் செட்டியார். இவரே சில ஆண்டுகள் கழித்து, நாவலரின் இன்னொரு இலட்சியமாகிய திருக்கேதீச்சரத்திலிருந்து அழிந்து மறைந்துபோன கோவிலிருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே ஒரு கோயிலையும் கட்டி நாவலர் பெருமானின் மற்றொரு விருப்பத்தையும் நிறைவேற்றி வைத்தவர்.
பெளத்தமத மறுமலர்ச்சியாளர்களில் ஒருவரான கல்விமான் பியரத்தின தேரோ. 1870ஆம் ஆண்டில் தற்காலக் கல்வி முறைக்கேற்பப் பெளத்தக் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
நாவலர்பெருமான் அமைத்த வித்தியா சாலைக்கு ஆட்சியாளர்களின் ஆதரவோ ஆசீர்வாதமோ கிடைக்கவில்லை. அடிமை மோகத்தில் தங்கள் சுயஉணர்வை இழந்து வாழ்ந்த சைவமக்கள், இவரது தீர்க்க தரிசனத்தை உணரவில்லை. இப்படி யிருந்தும் தமிழுக்காகவும், சைவத்துக் காகவும் "பிடியரிசி தண்டி சைவசமய தமிழ் மறுமலர்ச்சிச் சின்னமாக, இப்பள்ளிக் கூடத்தைக் கட்டியெழுப்பிய ஆறுமுகனா ருக்கு, நாம் எவ்வாறு அஞ்சலி செலுத் தினாலும் அவர் ஆற்றிய தொண்டுக்கு அது Fi-LT85 Tg5).
1848ஆம் ஆண்டில், வணினார் பண்ணையில் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலையைத் தொடர்ந்து இணுவில் அம்பிகைபாகர் வித்தியாசாலை, கந்தர்மடம்
தை 2012
 

சங்கத்தமிழ்
சைவப்பிரகாச வித்தியாசாலை ஆகிய இரு கலைக் கூடங்களும், கோப்பாய், கோண்டாவில், புலோலி, மூளாய், வேலணை, கொழும்புத்துறை, முல்லைத் தீவு ஆகிய இடங்களிலும், சைவத் தமிழ்க் கல்விக் கூடங்கள் எழுந்தன.
தமது தாய்நாட்டிற் தேசிய இயக்கம் பல துறையில் வெளிக்கிளர்ந்து தோன்றியதைக் கண்ட நாவலர், சைவசமயத் தமிழ் மறுமலர்ச்சி, இவ்வியக்கத்தின் ஒரு தன்மை என்பதை உணர்ந்தார்.
இலங்கை அன்னையின் சமய, மொழி, விடுதலை காணவிருப்பிய இவர், சைவ நெறியும், தமிழ்நெறியும் கொழிக்கும், நடராஜப் பெருமான் எழுந்தருளியிருக்கும் சிதம்பரத்திலும் 1865ஆம் ஆண்டில் சைவப் பிரகாச வித்தியாசாலையை அமைத்தார். அதைத் தொடர்ந்து மாயூரத்திலும், வேதா ரணியத்திலும் பாடசாலைகள் நிறுவப் பட்டன. இலங்கையிற் பிறந்து சைவமும் தமிழும் வளர்க்கத்தம்மையே அர்ப்பணித்த தர்ம சீலர் தமிழ்நாட்டிலும் அவர்தம் தொண் டினை ஆற்றினார் என்று நாம் நினைக்கும் போது ஆனந்தக் கண்ணிர் சொரிய வேண்டி யவர்களாகின்றோம்.
நாவலர் தொண்டைப் பின்பற்றி விபுலாநந்த அடிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழம் நிறுவ வேண்டுமென்று 1928ஆம் ஆண்டில் பாரதத் தமிழ் மக்களுக்கு, வேண்டுகோள் விடுத்து. பின்னர் அப்பல்கலைக்கழகக் கழகத்தினர் வேண்டு கோளுக்கிணங்கி அங்கே முதற்றமிழ்த் துறைப் பேராசிரியராகவும், கீழைத் தேயக் கல்விப்பீடத் தலைவராகவும் ஆகினார் என்று நினைக்கும்போது இவ்விரு ஈழச் சுடர்மணிகளும் தமிழ் கூறும் நல்லுலகத் துக்குச் செய்த தொண்டினையிட்டு
(25)

Page 28
இதயபூர்வமாக நாம் மகிழ வேண்டியவர் களாகின்றோம்.
நாவலர் பெருமான், சைவசமய வளர்ச்சிக்கும் தமிழ்மொழிவிருத்திக்கும் ஆற்றிய அளப்பரிய சேவையை மதித்த தமிழகமே அன்னாருக்கு, "நாவலர்” என்னும் பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாவல ருக்குத் திருவாவடுதுறை ஆதீனம் அளித்த "நாவலர்” எனும் விருது பெரு மானாரை, அவர் இறந்தும் இறவாது வாழ வழி வகுத்துவிட்டது.
இலங்கையில் இடைநிலைக் கல்லூரிகள் பல அமைத்த நெறியாளர்கள், செழுங்கலை நியமங்கள் என்று பண்டைய தமிழ் இலக்கியத்தில் விபரிக்கப்படும். பல்கலைக் கழகங்களும் நமது நாட்டில் அமைக்க வேண்டுமென்று சிந்தித்தார் என்பதற்கும் சான்றுண்டு.
ஒருநாடு அரசியல் விடுதலை பெறுவதற்கு முன் சமய, மொழி, கலாசார உணர்வு விடுதலை பெற்றால் முழுமை பெறும், சமய, மொழி, கலாசார உணர்வு வளர, பல்கலைக்கழகங்களில் தாய்மொழி போதனா மொழியாகவிருந்தல் மிகவும் uu60)6OTuolfligib.
எனவே தமிழ்மொழியைப் போதனா மொழியாகக் கொண்ட பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் உயர்வுக்கு அத்தியாவசியம் எனும் கருத்துநாவலர் மனத்தில் உதித்தது. இக்காலம் நாடு முழுவதிலேயும், உயர் நிலைக் கல்வியையிட்டுச் சிந்தித்த காலம். 187OeLb e6Odr L6T66b 6Èesorti 60D5 f'L- சபையில் உத்தியோகப் பற்றற்ற இலங்கைப் பிரதிநிதியாவிருந்தவர், கலாயோகி ஆனந்தக் குமாரசாமி அவர்களின் தந்தை முத்துக் குமாரசாமியவர்கள். நாவலர் பெருமானைச்
G26)-
 

- சங்கத்தமிழ்
சட்டசபையில் "சைவநன்மக்களின் உயர் சைவநன்மகன்” என்று வர்ணித்தவர் அவர். இலங்கையில் உயர்தரக்கல்வி நிலையை மறு சீராய்வு செய்வதற்கு அரசாங்கம் ஒரு குழுவை நியமிக்க வேண்டு மெனச் சட்டசபையிற் கோரி, அதற்கான குழுவும் அமைக்கப்படலாயிற்று.
நாவலரும் இலங்கையின் உயர்நிலைக் கல்வியையிட்டுச் சிந்தித்த காலமுமிதுதான். குழந்தைக்கு இயல்பான மொழி தாய் மொழி; தாய்மொழி மூலம்தான் ஒருவர் தனது உணர்ச்சிகளையும் உயர் கருத்துக் களையும் தெளிவாக வெளியிட முடியும். அவரது படைப்பாற்றல் வளரும், ஆளுமை வளரும்.
மொழி என்பது, உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் கருவி, அத்தோடு நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், மக்களின் எழுச்சி ஆகியவற்றை எடுத்து இயம்புவது.
ஒரு சமூகம் தனது தாய்மொழி மூலமே தனது முழுமையை வெளிப்படுத்தலாம்.
உளவியலார் கருத்துப்படி, உயர் விளக்கம், நினைவாற்றல் அகக்காட்சி, மனஎழுச்சி. ஆராய்வுத்திறன், கற்பனைத் திறன், சிந்தனை ஆற்றல், ஆக்கும் திறன் ஆகியயாவும் தாய்மொழி மூலமே உயர் நிலை அடையும்.
ஒவ்வொரு மகனின் தாய்மொழியும், அவனது வாழ்வை மட்டுமல்ல, அவனது இனத்தின் வாழ்க்கைத் தத்துவத்தையுமே, நிர்ணயிக்கும். மொழிப்பற்றும், நாட்டுப் பற்றும் தாய்மொழி மூலமே வளரும்.
ஒரு இனத்தின் போதனா மொழியை மாற்றி வேறு மொழியைப் போதனா மொழியாகப் புகுத்தி ஒரு இனத்தினது தனித்துவத்தையே மாற்ற எத்தனித்த
தை 2012)

Page 29
ஏகாதிபத்தியங்கள் தங்களைத் தாமே அழித்துக் கொண்டதற்குச் சரித்திரம் சான்று பகரும்.
தாய்மொழி போதனாமொழியாய் இருப்ப தின் பலாபலன்களையும், பல்கலைக்கழகப் பருவத்தில், தாய்மொழி போதனா மொழி யாய் இருப்பதால் நமது நாட்டின் மறு மலர்ச்சியைக் காண முடியும் எனவும் உணர்ந்த நாவலர், தமிழ்மொழி போதனா மொழியாகவுள்ள பல்கலைக் கழகம், பொதுவில் நாட்டுக்கும் விசேட மாக, தமிழ் பேசும் மக்களுக்கும் அத்தியா வசியம் என்பதை மக்களுக்கு எடுத்தியிம் பினார்.
அவரது குறிக்கோளை அவர் எய்து முன், நாவலர் பெருமான் இறைவனடி யெய்தி விட்டார்.
நாவலர் எண்ணக்கரு 1898ஆம் ஆண்டில், அவர் நோக்கின் அடிப்படையில் உதித்த யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்சங்கம் மூலம் ஓரளவிற் சுடர்விட்டது. நாவலர் பரம்பரையில் வந்த பெருமக்களாலேயே இச்சங்கம் உருவாக்கப்பட்டது.
இச்சங்கம் ஐந்து படிவத் தேர்வுகளை நடாத்த ஒழுங்குச்ெயதது. பால பண்டிதர், புலவர், ஆசிரியர், வித்துவான். கவிராசன், பெளராணிகர், நாவலர் போன்ற பட்டங் களும் இச்சங்கத்தால் வழங்கப்பட்டன. 1906ஆம் ஆண்டில் அகில இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கத்தை உருவாக்கி யவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்த சேர்.பொன்னம்பலம் &B600TT feof துரையவர்களும், இச்சங்கத்தின் பணியைப் போற்றினார் என்பது இங்கு நாம் நோக்கற் UT60g.
இச்சங்கம் சில வருடங்களே இயங் கினாலும் இது தமிழ்க் கல்வித் துறையிற் சிறந்த மறுமலர்ச்சியை உண்டாக்கிற்று என நாம் கொளல்தகும்.
தை 2012
 

சங்கத்தமிழ்
இலங்கையில் 1810ஆம் ஆணர்டு தொடக்கம் உயர்நிலைக் கல்லூரிகள் பல எழுந்தன. அவற்றினுள் திறம்படச் சேவை செய்த ஸ்தாபனம், தற்பொழுது யாழ்ப் பாணக் கல்லூரியாக விளங்கும் கலைக் கோயிலாகும். இலங்கையில் உள்ள பல கல்லூரிகள், விசேடமாக கிறித்தவக் கல்லூரிகளும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற சில சைவக்கல்லூரிகளும் கல்கத்தா, இன்றைய தமிழ்நாட்டு (மதராஸ்) பல்கலைக்கழகங் களோடு சில பொதுக் கலைத்தேர்வு, கலைமாணிப்பட்ட இணைப்புக் கல்லூரி யாகவும், சில பொதுக் கலைத்தேர்வு இணைப்புக் கல்லூரி களாகவும் இயங்கின.
பொதுவில் இலங்கையிற் பல்கலைக் கழகக் கல்வி உணர்வை, செழுமை பெறவைத்தவர்களுள் நாவலர் பெருமானு மொருவர் எனறு கொளல் சாலவும் பொருந்தும்.
ஆசிரியர் நாவலர் மொழிபெயர்த்த நூல் ஒன்றினையும் நமக்கு வசனநடையில் அவர் தந்துதவிய நூல் ஒன்றினையுமிட்டு. குறிப்பிடுவது இலங்கையின் இன்றையச் சூழ்நிலையில் பொருத்தமாகும்.
முதலாவது நூல் விவிலியம், புனிதபை பிள். பைபிள் எனும் கிரேக்கச் சொல்லுக்குப் புத்தகம் என்பதே கருத்து. உலகத்திலேயே கூடிய தொகையான மக்கள் வாசிக்கும் நூல்களுள் ஒன்று பைபிள். இன்று கிறித்தவ ஆலயங்களிலும், கிறித்தவ மக்களாலும் போற்றி வாசிக்கப்படும் புனித நூல் பைபிள், புனித பைபிள், 1850ஆம் ஆண்டில், இன்று யாழ்ப்பாணத்திற் பொலிந்து விளங்கும் மத்திய கல்லூரியின் அன்றைய அதிபரான, யாழ்ப்பாணக் கல்வியுலகே மறக்க முடியாத பீற்றர் பேர்சிவல் அடிகளின் வேண்டுகோளுக்
-(27)

Page 30
盘。
স্থািপ্ত
கிணங்கி, நாவலர் பெருமானால் ஆங்கிலத் திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. நாவலர் மொழிபெயர்த்த விவிலியம் சென்னை மாநகரிற் கூடிய குழு ஒன்றினாற் "பல மொழி பெயர்ப்புக்களில் இதுவே சிறந்தது” என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கிறித்தவ திருச்சபையின் அங்கீகாரம் பெற்றதென்றால், இது ஈழத்துக்கு நாவலர் ஈட்டிக்கொடுத்த பெருமை என்றே கொள்ள வேண்டும்.
இலங்கையின் முன்னைநாள் அத்தி யட்சகர், அறிஞர் ஒருவர் நாவலர் விவிலியத் தினை மொழிபெயர்த்ததையிட்டு விவரிக்கும் போது, "நாவலர் இப்பணியினால், தமிழ் வசனநடை வளரச்சிக்கு மட்டுமல்ல, கிறித்தவ வேத வளர்ச்சிக்கும் அருந்தொண்டு புரிந்துள்ளார்” என்று கூறா நிற்பர்.
எனவே, தமிழ் கூறும் கிறித்தவ நல்லு லகம் நாவலருக்குக் கடமைப் பாடுடையது.
நாவலர் வசனநடையிலே தந்துதவிய பலநூல்களுள் ஒன்று. சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம். 63 சைவ சமயப் பெருமான் களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பான இந்நூல் தமிழ்நாட்டின் கலாசாரப் பண்பாட்டு வளத்தினை, விசேடமாகச் சைவசமய நெறியின் வளத்தினைச், செவ்விதின் விளக்கிக்காட்டுவது. பல்வகை மரபுகளிலே தோன்றியது. சைவநெறி யென்பது, சமரச நெறியே எனும் கருத்தினை எடுத்துக் காட்டுவது. இந்நெறி யாவருக்கும், பொது வாய்ச் சமய அறநெறி என்று எடுத்துக் காட்டும் நூலை வசனநடையிலே நமக்குத் தந்தருளிய செம்மலுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யலாம்?
நாவலர் பெருமான் சிறந்த நாட்டன்பும், உலக நோக்கும் கொண்டவர். தமிழும், சங்கதமும், ஆங்கிலப் புலமையும் கொண்ட வர். 1871ஆம் ஆண்டளவிலேயே, இலங்கை
C28)

சங்கத்தமிழ்
அன்னையின் முழுமையையும் நிறை வையும் காணவிரும்பிய சீலர் ஆறுமுகனார் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் இலங்கையின் தேசிய மொழிகள் என்று கொண்டார். ஆங்கிலம் அவர் வாழ்ந்த காலத்திற் றொழிற்றுறை மொழி.
தாய்மொழி மூலம் ஆளுமை, மொழிப் பற்று, அம்மொழியின் அடிப்படையில் எழுகின்ற கலாசாரம், பண்பாடு வளரும். ஆங்கில மொழிமூலம் உலக அறிவு, உலக நெறி வளரும். நமது சகோதர மொழியாகிய சிங்கள மொழிமூலம் நாட்டிற் சகோதர பான்மையும், கலாசார ஒற்றுமை யும் வளரும். நாவலர் கண்டது இந்த மும்மொழித் திட்டமே.
தமிழ்மொழி இந்நாட்டிற் சட்டபூர்வமான தமிழ் மக்களின் தனிமையை பாதுக்காக்கும் மொழியாக உருவாக ஏதுக்கள் இருந்தால், நாவலர் கண்டமும்மொழித்திட்டத்தை நாம் வரவேற்க வேண்டும்.
நாவலர் பெருமான் கவிதை இயற்று வதிலும் ஆற்றல் பெற்றிருந்தார். ஆனால் இறைவனைப்பாடுவதிலேயே அவர் முக்கிய கவனமெடுத்தார்.
ஞானத்துக்கும் நல்லறிவுக்கும் அறி குறியாக கணேசப் பெருமான் இருக்கின்றார். ஞானமிருக்குமளவு வாழ்வும் நல்வாழ்வு ஆகும். ஞானத்துக்கும் நல்லறிவுக்கும் சின்னமாக சிவனுக்கும் சக்திக்கும் பிறந்த கணேசபிள்ளையை
சீர்பூத்த கருவிநூலுணர்ச்சிதேங்கச்
சிவம் பூத்தநிகமாகமங்களோங்கப் பார்புத்த புறச்சமய விருள்கணிங்கப்
பரம் பூத்த சைவதிலை பாரோர்தாங்கப் பேர்பூத்த சிவாநந்தத்தினிதுதுங்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிரானார் தந்த வார்டத்த அறிவிச்சை தொழிலென்றோதும்
மதம்பூத்த விநாயகன்றாள்வணங்கிவாழ்வாம். என்று நாவலர் வழுத்துவ்ார்.
(தை 2012)

Page 31
reg
ஞானமும், நல்லறிவும் தத்துவரூபத்திற் கணேசரிட்ம் இடம்பெறுகின்றன. ஞானமும், நல்லறிவும் பிரயோக ஞானமாகவும், அறிவாகவும் வளர வேண்டும். செயலிற் காட்டப்படாத அறிவு ஓங்கியிருப்பதும், மறைந்திருப்பதும் ஒன்றாய் விடுகிறது. வாழ்வில் அதைப் பயன்படுத்தும் பொழுதே உண்மையில் அது ஓங்கியிருப்பதன் மகிமை முழுவதும் வெளியாகிறது. அறி வைச் செயலாக மாற்றுபவர் முருகக் கடவுள் என்பது சைவநன்மக்கள் கொள்ளும் துணிபு. வாழ்வில் ஆற்றல் நிறைந்த செயலைப் புரியும் முருகப் பெருமானையும் நாவலர் இறைஞ்சிநின்றார்.
ஞானத்தை ஓங்குவிக்கின்ற கணேசனை யும், வாழ்வை ஆற்றல் படைத்ததாக்குகின்ற முருகவேளையும் கல்விநெறியாளர் நாவலனார் பாடிப்பாடிப் போற்றியதில் வியப்பில்லை அன்றோ?
நாவலர் குலதெய்வம் நல்லூர் முருக மூர்த்தி என்பதும் நாம் நினைவிற் கொள்ள வேண்டியது.
இறைவனக் கவிதைமூலம் வழுத்திய நாவலர் இதற்குப் புறநடையாக அவரது ஞானகுரு சரவணமுத்துப்புலவர் மறைந்த விடத்தும், அவரது உத்தம மாணாக்கராகிய சுப்பிரமணியபிள்ளை மறைந்த விடத்தும், ஆற்றொனாத் துயரத்தினாற் கவிதை பொழிந்தார். இவரது குருபக்தியும், மாணவர் தோழமையும் இதிலிருந்து புலனாகின்றது.
". . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அகில டெ தூயநய கவிப்புலவர் தமை நிறக் துலையென்னத் தோன்றா நின் ஞானபIகு யாழ்ப்பான நல்லூர்6
-LD86T6
தை 2012
 
 

சங்கத்தமிழ்
நாவலர் பெருமான் ஞானவிளக்கு, பல்கலைப்புலவன்; சொல்லுதல் வல்லான்; துணிவு கொள் சிந்தையான். தம்மை ஈன்றெடுத்த நாட்டிலும், தமது சகோதரர் வாழும் நாட்டிலும் சைவமாம் சமயமும், பொலிந்த தமிழும் சீருறப் பணிபுரிந்தவர்.
சைவநன்மக்களாய்ப் பிறந்த அனை வரும், நாவலர் வழியே சென்று, எல்லோரி டத்தும் கேண்மையுடை யோராய், உயர்ந் தோர், தாழ்ந்தோர், அறிஞர், பாமரர் என்ற பாகுபாடுகளை அகற்றி, நமக்குள்ளே ஒரு தன்மையராக வாழுவது மட்டுமல்லாது. இலங்கை அன்னையின் மக்கள் எல்லா ரோடும் ஒரு தன்மையராக வாழ வேண்டும்.
தம்மையீன்றெடுத்த யாழியல் நாட்டிற்
சைவமாம் சமயமும் புலவர் செம்மைசேருளத்திற் பொலிந்தமுத்தமிழும்
சீருறப் பணிபல புரிதல் இம்மையிற் பிறவிக் கியைந்தமாதவமென்
றெண்ணியே விடைபெற்று மீண்டார் எம்மையும் பயந்த வீழமாநாட்டி
னிணையிலாப் பெருநிதியனையார். என்று அருட்டிரு விபுலாநந்த அடிகள் நாவலர் பெருமானுக்கு அஞ்சலி செலுத்துவார்.
நாவலர் அகத்திலே தோன்றிய "கற்பனைச் சமுதாயம்” இலங்கையில் உயிர்பெற வேண்டும். நம்மை இன்று வாழவழி வைத்த நாவலர் போன்ற பெருமக்களுக்கு உள்ளக்கமலத்தால் யாம் மலர் சொரிய வேண்டும். *
Dல்லாந் குந்
D
வாழ் ஆறுமுகநாவலன்"
வித்துவான் நெல்லையப்பன் கவிராஜர்.
{290

Page 32
தமிழ்ப் புலவர்களில் கவி, கமகன், வாதி, வாக்கியென நான்கு வகையினர் உண்டு. எந்தச் சமயத்திலும், கொடுத்த விஷயத்தைக் குறித்துத் தெளிவாகப் பேசும் ஆற்றலுடைய வரை வாக்கியென்று சொல்வார்கள் வரகவி என்ற வடசொல்லின் திரியே அது. அதனையே நாவலர்’ என்று தமிழிற் கூறலாம். பண்டைக் காலத்தில் கவிபாடும் ஆற்றலுடையாரையும் நாவலரென்று வழங்கினர். இக்காலத்தில் நல்ல பிரசங்க சக்தி வாய்ந்தவர்களை நாவலரென்று சொல்வதிற் பிழையொன்றும் இல்லை.
தமிழ்நாட்டில் எவ்வளவோ நாவலர்கள் இருப்பினும் நாவலரென்று கூறிய மாத்திரத்தில் அச்சொல் யாழ்ப்பாணத்து நாவலர் முரீலழுநீ ஆறுமுகநாவலரையே குறிக்கும். இதற்குக் காரணம் அவர் நாவலர் களுக்குள் சிறந்தவராக விளங்கியமையே UJIT35LD.
நாவலரை நான் பார்த்துப் பழகுவதற் குரிய சமயம் நேர்ந்ததில்லை. ஆயினும், அவரோடு பழகியவர்களிடமிருந்தும் அவரிடம் பாடங் கேட்டவர்களிடமிருந்தும் அவரைப் பற்றிப் பல செய்திகளைக் கேட்டிருக் கிறேன். அவற்றைக்கொண்டு என் அகக்
கண்ணில் ஓர் உருவத்தை அமைத்துப்
பார்ப்பது என்வழக்கம்.
அவரை நினைக்கும் போதெல்லாம் அவரது வாழ்க்கைநெறி என் உள்ளத்தைக் கவரும். கல்வியறிவு மிகச் சிறந்ததே; ஆயினும் அவ்வறிவு ஒழுக்கத்தோடு இயையும் போது அதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டாகின்றது.
BIT6)6O(B60)Luj தூய்மையான வாழ்க்கை யாவராலும் பாராட்டுதற்குரியது. பொருள் வருவாயையே தலைமையாகக் கருதி அவர் வாழ்வு நடத்தவில்லை. சைவமும் தமிழும் தழைத்து ஓங்கும் பொருட்டு அவர் மன மொழிமெய்களால் தொண்டு புரிந்து வந்தார்.

O O நான் கேட்டபடி மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
“என்கடன் பணிசெய்து கிடப்பதே" என்னும் அப்பர் திருவாக்குக்கு இலக்கியமாக அவரைக் கூறலாம். அவர் நிறுவியுள்ள சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையும் யாழ்ப்பாணத்திலமைத்துள்ள நிலையங் களும் இதற்குப் போதிய சாகூழிகளாகும்.
அவருடைய பிரசங்கசக்தி அவருக்குப் பெரும் புகழை உண்டாக்கிற்று. நாவல ரென்னும் பெயரும் அதனாலே வந்தது போலும். "வார்த்தை பதினாயிரத்தொருவர்” என்பது ஒரு தமிழ்ச் செய்யுட் பகுதி. "படைகளோடு சென்று போர் புரிந்து சாவார் எளியர்; சபையிலே போய்த் தைரியமாகப் பேசுவோர் மிகச் சிலர்” என்று திருவள்ளு வரும் கூறினார். அத்தகைய அரிய பிரசங்க வன்மை நாவலரிடத்திலே நன்கு &loodLD55 Bf55g).
அக்காலத்துக்கு முன்பு பெரும்பாலும் புராணப் பிரசங்கங்களும் வாதங்களுமே சபைகளில் நடைபெற்று வந்தன. பொதுவாக ஒரு விஷயத்தை மேற்கொண்டு முறைப் படுத்திக் காரண காரியங்களைக் காட்டி ஆகூேடிய சமாதானங்களோடு பேசும் வழக்கம் தமிழ் நாட்டில் மிகக் குறைவாக இருந்தது. கிறிஸ்தவசமயப் பாதிரிமார் செய்த உபந்யாஸாங்களின்முறை தெளிவாகவும் எளிதிலே யாவரும் அறிந்து சுவைப்பதற் குரியதாகவும் இருந்தது. அந்த முறையை நாவலர் பயினறு அதிற் பேராற்றல் அடைந்தார்.
தமிழ் வளர்ச்சியின் பொருட்டு அவர் செய்த அருஞ் செயல்களுக்கு அடையாளங் களாக அவர் பதிப்பித்த நூல்கள் விளங்கு கின்றன. அவருடைய பதிப்புமுறை தமிழ் நாட்டாராற் பெரிதும் மதிக்கப்படுவது.
(தை 2012)

Page 33
நூலாசிரிய முறையில், நாவலர் எழுதிய நூல்கள் இந்நாட்டில் உலவுகின்றன. பாலபாடங்கள் ஒழுக்கத்தையும் சைவசமய உணர்ச்சியையும் உண்டாக்குவன. நன்னூ லுக்கு அவர் ஒரு காணி டிகையுரை எழுதியிருக்கின்றார். இலக்கணச்சுருக்கம் முதலிய சிற்றிலக்கண நூல்கள் சிலவற்றை யும் இயற்றி வெளியிட்டிருக்கின்றார். இவை தமிழிலக்கணம் பயிலும் மாணாக்கர்களுக்கு மிகப் பயன்படுவனவாகும்.
சில இலக்கிய நூல்களுக்கும் அவர் உரை எழுதியிருக்கின்றனர். அவருடைய வசன நடை எளியது; வடசொற்களோடு கலந்து அழகு பெறுவது; பாலர் முதல் பண்டிதர் ஈறாகவுள்ள யாவருக்கும் பயன்தரத்தக்கது. அவர் காலத்தில் தமிழில் அழகிய வசனநடை எழுதுவோர் மிக அரியராக இருந்தனர்.
பிறரிடம் குறைகாணின் கண்டிப்பது நாவலர் இயல்பு. பொது நிலையங்களிலும், தர்ம ஸ்தாபனங்களிலும் நிகழும் தவறு களை யாருக்கும் அஞ்சாது வெளியிட்டார். அவர் எழுதிய கண்டனப் பத்திரங்கள் பல. அவற்றை ஆராய்ந்தால் ஒவ்வொரு ஸ்தாபனமும் நெறிவழாமல் நடைபெற்று
THE CHAMPION RE
(Sir. Pon. Rama
Intolerance on their (the Missionaries) p. times and circumstances but it is speciall the Champion Reformer of Hindus in the His Excellency the Governor (Hon. Si “Who did you say?”
The Hon”ble Mr.P.Ramanathan:- “The Champion Reformer of Hindus,
தை 2012
 

சங்கத்தமிழ்
வரவேண்டுமென்பதில் அவருக்கு இருந்த ஊக்கம் புலப்படும்.
நாவலர் வாழ்க்கையில் ஒழுக்கத்தின் 9. Lulu Ü6nylib, 856ö6)Îli'r 6ud. 560DL Du yLib, 600&F6). சீலத்தின் சிறப்பும் கமழ்ந்தன. அவர் சமயத் தொண்டராகவும், நாவன்மை மிக்கவ ராகவும் நூலாசிரியராகவும், உரையாசிரிய ராகவும் விளங்கினார்.
என்னுடைய தமிழாசிரியரான திரிசிர புரம் மகாவித்துவான் முரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களும் நாவலரும் ஒரு காலத்தினரே. இருவரும் நெருங்கிப் பழகிய துண்டு. நாவலருடைய குணாதிசயங் களைப்பிள்ளையவர்கள் அடிக்கடி பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்பொழுது தமிழ் நாட்டினருக்குத் தமிழினிடத்தில் அன்பு வளர்ச்சி பெற்று வருகின்றது. அதற்கு முநீலழுநீ ஆறுமுக நாவலரும் ஒரு காரணமாவர். அவர் என்றும் தமிழ் நாட்டினரது நினைவில் இருப்பவராதலின் அவருடைய புகழுடம்பு என்றும் மறைதலின்றி நிலவி ஒளிரு மென்பதில் ஐயம் இல்லை.*
FORMER OF HINDUS
nathan Avl. K.T)
art, it appears, have varied with varying y observed at the present day, ever since
Northern Province died in 1879.' ir. Arhtur Hamilton Gorden. G. C. M. G)
Arumuga Navalarʼ
(31)

Page 34
நாவலரும், திரிசிரபுரம் மகாவித்வான் மீனாகூழிசுந்தரம்பிள்ளையவர்களும் ஒரு காலத்தினர். நட்புரிமையும் பூண்டவர்கள். ஒரு சமயம், நாவலர் தம் ஆழ்வலரோடு மாணவர் கழக் காவேரிக்குச் சென்று அங்கு ஸ்நானஞ் செய்துகொண்டிருந்தனர். அப் பொழுது பொழுதோ அதிகாலை; காலமோ பனிக்காலம். பலருடைய தேகமும் குளிரி னாலே விட விட என்று நடுங்கிற்று. நடுக்குறுதலைக் கண்ட பிள்ளையவர்கள் பனிக்காலம் கொடிது என்று நாவலரைப் பார்த்து நவின்றனர். உடனே கலா விநோதராகிய நாவலர் பனிக்காலம் நன்று என்று விடையிறுத்தனர். இவருடைய வாக்கு நயத்தையும் விசேஷத்தையு முணராத மாணவர்கள் இரு பிரிவினராகி, பனிக்காலம் கொடிது, ஜலதோஷத்தை உண்டாக்கும்" என்றனர் ஒருசாரார். பனிக்காலம் நன்று தேகத்தைக் குளிரச்
வறக்க லிலாச்செந் தமிழ்வாழச் ை துறக்க லிலாக்கண் டிகைதேங்க ( மறக்கலி லாறு முகநாவலனென பிறக்கத் தவஞ்செய் பெரும்பேற தீபு
தண்டமிழாறு முகநாவலனெங்க கொண்டல் பொழிந்த பிரசங்க மா அண்டமுன் புக்கது பாதாளம் புக்க
மண்டலம் புக்க திசைபுக்க தீழநன்
மூீமத்.வே.க:

பனிக்காலம் நன்று
திரு.C.S.ஜகதீச சுந்தரம்பிள்ளை
செய்யும், உஷ்ணத் தைத் தணிக்கும்’ என்றனர் மற்றொருசாரார். இங்ங்னம் தத்தமக்குத் தோன்றிய அபிப்பிராயங்களைக் கூறி வாதிப்பதைக் கணிட நாவலர், என்னென்று வினவ, மாணவர்கள் தம் ஏதுக்களைக் கூறினார்கள். நாவலர், "நானும் பிள்ளையவர்கள் கூற்றையே வலியுறுத்திக் கூறினேனன்றி, பிறிதொன்று மில்லையே” யென்று. தாம் கூறிய பதத்தை, பனிக்கு ஆலம் என்று என்று பிரித்துக் கூறினர்.
பனிக்கு ஆலம் நன்று=பனியை விட
6,6glf நல்லது. நாவலர்-பெருமான ஹாதியமாகவும் கருத்தொத்தும் உடனுக்
குடனே பதிலுரைப்பதில் வல்லுநர் என்பது இதனால் வியக்தமாகிறது.*
சவம் வழங்கவெமர் நானச் சுடரையென்றும் வாழ்குரவன்
pநன் மண்டலமே
ள் சற்குருவாங் ரி குறுகியப்பால் தஃதன்றிக்கன்
மண்டலமே.
ஆரியதிராவிட பணடிதர்,
0ணபதிப்பிள்ளை அவர்கள், அல்வை.
(தை 2012)

Page 35
(சென்னை
முநீநாவலர் பெருமான் தமிழ் மக்களால் எக்காலத்தும் போற்றற்குரிய பெரியோர் களிலொருவர். பெருங் கல்வியாளர். சைவசமயத்தின் பொருட்டும் தமிழன்னை யின் பொருட்டும் தம்மை அர்ப்பணஞ் செய்த பெருந்தகையாளர். தமக்கென வாழாதவர் என இவரைக் கூறுதல் பெரிதும் ஏற்புடைத் தாகும். தமக்கென்று பொருள் முதலிய வற்றை விரும்பியவரல்லர். தாம் தேடியன முழுவதையும் தமது பெருநோக்கங்கள் ஈடேறுவதற்கே பயன்படுத்தியவர்.
சைவசமயமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென்பதே இவரது பெருநோக்கம். இதன் பொருட்டுத்தம் வாழ்நாள் முழுவதும் இடைவிடாது உழைத்துவந்தார்கள். பிற சமயத்தார்களோடு சொற்போர் ஒருபால் நிகழ்த்திவந்தார்கள். ஒரு பால் சமய சாஸ்திர
வில்லூர் மாடநல்லூர் வ னெழுத்து முதலாக வழு கடைபோக வுணர்நத த தராதலம் புகழ்சிவபுரான சமயங்களினுயர்ந்தை தெய்வத் திறம்பொலி ை பலபல கலையெலா நில புலவரிலுயர்ந்தொளிர்ந புகலருஞ் சீர்த்தி பொத்து சகமகி ழாறு முகநா
一成
தை 2012

நமது முதற் கடமை
பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித்துறைத் தலைவர் திரு.S.வையாபுரிப்பிள்ளை B.A.B.L)
பரிசீலனை செய்து வந்தார்கள். ஒருபால் தமிழிலக்கிய விலக்கணங்களைப் பரி சோதித்து வெளியிட்டு வந்தார்கள். ஒரு பால் போதகாசிரியராயிருந்து சமய நூல்களையும் தமிழ் நூல்களையும் மாணவர் களுக்கு ஆர்வம் பிறக்கக் கற்பித்து வந்தார்கள். தமது நோக்கம் இனிதுநிறைவேறுதற் பொருட்டுக் கலாசாலைகளை நிறுவினார்கள். தமது இறுதிக் காலத்திலே தமிழ்ப் பல்கலைக் கழகமொன்று நிறுவுதற்குப் பெரிதும் முயன்று வந்தார்கள்.
இங்ங்ணமாகத் தமிழ்மக்களின் நன்மை யின் பொருட்டுத் தம் உடல் பொருளாவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்த பெரியாரை நாம் அடிக்கடி ஞாபகத்தில் வைத்துப் போற்றுதல் நமது முதற்கடமையாகும்.*
T600T
த்திலக் கணமெலாங் டையறு மறிஞன் னச் செல்வஞ் மவுபெற்றோங்கித் சவ மென்னப் வுறவுணர்ந்த 6DLD656LJBLDIT6or
ஷ்
வேைன.
ரு.ச.தெய்வநாயகம்பிள்ளை அவர்கள்.
(330

Page 36
(ର, டாக்டர்
சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதநாடு பல்வேறு கிளர்ச்சிகளுக்கும் பெரிய மாற்றங்களுக்கு மோரிலக்காக விருந்தது. மேல்நாட்டவராட்சிக்குள் அது ஒருங்குபட்ட மையத் தொடங்கிய காலபமிதுவே. அக்காலத் தில் மேல்நாட்டார் தமது எண்ணக்கருத்துக் களையுஞ் சமயக் கொள்கைகளையும் பாரத நாட்டிற் பரப்பத் தொடங்கினர். பழையன வற்றைக் கைவிடாது இறுகப்பிடித் தொழுகு தலே யியல்பாகவுடைய பாரதமக்களுக்கு இது மிக வெறுப்பாக விருந்தது. இதன் காரணமாகப் பற்பல பாகங்களிலும் தலைவர்கள் தோன்றி, மேலைநாட்டுப் பழக்கவழக்கங்களையுஞ் சமயக் கொள்கை களையுந் தம் நாட்டிற் புகவிடாது தடுக்கத் தொடங்கினார். இக்காலத்திற்றான் வட நாட்டில் பகவான் இராமகிருட்டினப் பரம கம்சரும், அவரது தலைசிறந்த மாணவ ராகிய விவேகானந்தவடிகளும் மேலை நாட்டோரால் நிலைகுலைக்கப்பட்டு நின்ற இந்து மதத்தை வழுக்களைந்து சீர்ப்படுத்த முயன்றுவந்தார்கள். அதுபோலவே தென் னாட்டிலும் பல சமயத்தலைவர்கள் தோன்றித் தமது சமயத்தைச் சீர்செய்யத் தொடங்கினர். அவர்களுள் முதன்மை பெற்றவர் ஆறுமுகநாவலர். பண்டை நாட்களிற் புத்தம் முதலாய புல்லறிவிற் பல் சமயம், தத்தம் மதங்களிற் தட்டுளுப்புப்பட்டு நின்றபோதும், அறியாமையாலேவப்பட்ட வையாய்ச், சைவத்தையடியோடொழித்து விட வெண்ணித் தமிழருக்கு இடரிழைத்த காலை, அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் முதலிய சமயகுரவர்கள் தோன்றிச் சைவத் துக்காக யாங்ாங்னம் நனிவருந்தியுழைத் தனரோ, அங்ங்ணமே மேலை நாட்டி
G34)

தமிழர் வருந்தகை
காழும்பு, பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் 35.356TOTLg6'ILîl6mit6N6mT, B.A. (Hons.), Ph.D.)
னின்றும், மிண்டிய கிறீத்துவவாத மென்னுஞ் சண்டமாருதஞ் சுழித்தடித் தார்த்தகாலை, நாவலராகிய சைவப்பெருந் தகை தமிழ் நாட்டிற்றோன்றிச் சைவசமயத் துக்காகவுழைக்கத் தொடங்கினர்.
ஆறுமுகநாவலர்கள் அக்காலத்திருந்த சைவசமயத் தலைவர்களுள் மேம்பட்டு விளங்கியதற்குக் காரணம் யாதென வாராய்வாம். இலங்கையானது ஆங்கிலே யராட்சிக்குட்பட்ட பின்னர், அக்காலத்து ஐரோப்பியர் உலகத்து ஏனைய பாகங்களிற் கிறீத்தவத்தை நிலைநிறுத்த முயன்றது போலவே, யாழ்ப்பாணத்திலும் (அதை நிலைநிறுத்தும் நோக்கமாக) அமரிக்கா தேசத்தினின்று பாதிரிமார் வந்துசேர்ந்தனர். அந்நாட்களில் இவர்கள் எல்லாச் சமயங் களும் ஒரே பொருளையே தேடுகின்றன வென்னுங் கொள்கையிலராய்க், கிறீத் துவை நம்பினோருக்கே இகலோக இராச்சி யமும் பரலோக சாம்பிராச்சியமுமேற்படு மென்னுங் கடைப்பிடியால் மிகவுந்தப்பட்ட வராய், யாழ்ப்பாணத்திலுள்ள யாவரையும் "அஞ்ஞானிகள்” எனக் குறியீடிட்டு, அவர் மேல் இரக்க மீதூரப்பெற்றவராய், அவரை எவ்வகையானும் “மெஞ்ஞானிகள்” ஆக்க வேண்டுமென்னுமவாவாய்ப்பட்டு அல்லும் பகலும் முயலத் தொடங்கினர். இதற்காக அவர்கள் தெருக்கள்தோறும் விரிவுரை யாற்றியும், ஆங்காங்கு கிறீத்தவாலயங் களைக் கட்டியும், தமிழ்ப்பள்ளிக்கூடங்களை யும் மருந்துச்சாலைகளையும் ஏற்படுத்தியும், இவை மூலமாகத் தங்கள் சமயக் கொள்கை களைப் பரப்பலுற்றனர். இதுவுமன்றி, ஆங்கிலக்கல்வி பரப்புவதற்காகப் பெரிய கல்லூரியொன்றையும் அமைத்துத் தங்கள்
தை 2012)

Page 37
சமயத்தைத் தழுவின மாணவர்க்குக் கூலிபெறாது கல்வி பயிற்றியும், அதன்பின் அவர்க்கு அரசினரின் கீழ் வேலைபெறவுதவி புரிந்தும் வந்தனர். எனினும், இவர்கள் கிறீத்தவ குழுவினர்க் கென்று சிறப்பாகச் செய்த நன்மை, பின்னர் யாழ்ப்பாணத்தவர் எல்லோருக்கும் பொதுவாய் நலனாய் முடிந்தது.
செய்யாமற் செய்தவுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது.
கிறீத்தவராயினோர்க்கு இவ்வாறெப்திய நன்மைகளைக் கண்ணுற்ற சைவர் பலர் கிறித்து சமயத்தைத் தழுவத் தொடங்கினர். இதைக்கண்ட சைவப் பெரியோர் செய்வ தொன்றறியாது திகைப்புற்று வலிமை யிலராய்வாளவிருந்தனர். அவ்வமையமே ஆறுமுகநாவலர் ஆங்கிலக் கல்வியே யுணவைத் தரவல்லது என்னுங் கடைப் பிடியோடு அதைக் கற்றலில் யாவருங் காலத்தைக் கழித்து வருவதை நாவலரவர் கள் கண்டபோதும், நிலவுலகின்பம் பேரின்ப மல்லவென்னு முட்கோளை இளமை யிலேயே தன்னுளடக்கியராய்ப், பொருள் சேர்ப்பதிற் சற்றேனும் விருப்பின்றித் தமிழ்க் கல்வியையே மிகப் போற்றிக் கற்றுவந்தனர். அதன் பயனாகத் தமிழில் மிகுந்த கல்வி யாளராய், இலக்கண விலக்கியங்களையுஞ் சித்தாந்த நூல்களையும் நன்காராய்ந்து மிகுந்த புலமையுடையவரானார். அத்துடன் நில்லாது வடமொழியும் பயின்று, பின்னர் ஆங்கிலமும் கற்றுத் தேறினர். இதன் பயனாக அக்காலத்தில் யாழ்ப்பாணத்திருந்த பீற்றர் பெசிவல் என்னும் பாதிரியாருக்குக் கீழ், பள்ளிக்கூடத்திற் கூலிபெறாது கல்வி கற்பித்துப், பின்னர் அவருக்குத் தமிழ்ப் பண்டிதராயிருந்து, பைபிளின் தமிழ்மொழி பெயர்ப்பைத் திருத்துபவரானார். இவர் எந்நூலைக் கற்கினும் ஆழ்ந்து பார்க்கின்ற
தை 2012
 

சங்கத்தமிழ்
தன்மையையியற்கையா யமைந்தவரா கையின், பைபிளையுந் நுணுகியாராய்ந்து நன்கு கற்றுத் தேறினர். அவ்வமயமே இவர் கிறித்தவந் தழைத்தோங்குதலையும், தம்நாட்டவரின் பண்டைச் சமயமாகிய சைவமும், தம் முன்னோரின் அளப்பரிய மேலான வெண்ணக் கருத்துகளும், அன்னோர் போற்றிப் புனைந்து தமக்கன் புடனளித்த அருந்தமிழ்க் கல்வியுஞ் சீர் குலைந்துநிலைகுன்று வதைக் கண்டனர். கண்டதும், தமிழ்த்தாயே யுருவெடுத்துத்தம் மக்கள் தமக்குத் தாமே தேடிக் கொள்ளுஞ் சீர்கேட்டினைக் கண்ணுற்று, வெகுளி யினாற் பித்துப் பிடித்துப் பேராவேசங் கொண்டாள் போன்று, அவர் நாட்டவர் யாவரையும் “விழிமின், எழுமின், அறியா மையாய விருளி லாழ்ந்து துயிலாதீர், உங்கள் முன்னோ ரளித்த அருஞ் செல்வ மாகிய பழமையைக் கைவிடாதீர்,” எனத் தட்டியெழுப்பினர். தங்கள் நாட்டுக் கல்லாது பிறநாடுகளுக்கு மேற்றவையோ வென்று நினையாது, தங்கள் ஒழுக்கங்களே சிறந்த ஒழுக்கங்கள், தங்கள் வாழ்தலாறே சிறந்த முறையெனக் கடைப்பிடியுடை யோராய்த், தங்கள் பழக்க வழக்கங்களை யும், சமயக் கோட்பாடுகளை யும் தமிழ் நாட்டில் நிலைநாட்டிச்சில்லாண்டுகளிற்றமிழரென்ற மக்கட் கூட்டத்தினர் உலகத்தில் இல்லை யெனும்படி ஒழித்துவிட வந்த பாதிரிமார் களையும் போருக்கு அறைகூவினர்.
இதன் பொருட்டு நாவலர் துணர்டுக் கட்டுரைகளாலும், சிறு நூல்களாலும், சொற் பொழிவுகளாலும் பாதிரிமாரைக் கண்டித் தும், சைவர்களைத் தண்டித்தும், சைவ சமயப் பற்றையும், தமிழ்க் கல்வி வளர்ச்சி யையும் மிக வோங்கச் செய்தனர். எனினும், பாதிரிமார் யாழ்ப்பாணத்துக்கு வந்ததால், சைவசமயத்துக்குந் தமிழ்க்கல்விக்கும்
(35)

Page 38
பெரிய முன்னேற்ற மேற்பட்டதென்று ஓராற்றாற் கூறலாம். ஏனெனின், அவர்கள் வராவிடின் நாவலராற்றிய அரும்பெரும்பணி கள் நிகழ்தற்குத் தருனமெழுந்திராது. அது யாங்ாங்னமெனின், பள்ளிக் கூடங்கள மைத்து மாணவர்களுக்குக் கல்வி கற்பிக் குங் கடமையை, பாதிரிமார்களில்லாவிடின் ஒருவேளை அவர் செய்திருக்கமாட்டார். சமய காரணமாகத் தொடங்கிப் பின்னர் அவரது பள்ளிக் கூடங்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஓராணித்திறனாக விருந்தன. மேலும், அப்பள்ளிக்கூடங்களிற் பயிலுஞ் சிறாருக்காகவே முதன்முதல் அவர் அச்சு நிலையங்களேற்படுத்தி நூல்களைப் பிழையறத் திருத்தியச்சிடத்தொடங்கியது. இத்தொண்டு பின்னர் தமிழ் நாட்டுக்குந் தமிழ்மொழிக்கும் எத்தகைய பயனைக் கொடுத்ததென்பதை யாவருமறிவர். இங்ாங் னம் அவர் திருத்தியச்சிட்ட நூல்களே, பிற் காலத்தில் தமிழ் நூல்களையச்சிட முன்வந் தோருக்கு ஓர் வழிகாட்டியாக விருந்தன. இவ்வரிய தொண் டாற்றியதற்குத் தமிழுலகம் அப்பெரியாருக்கு எவ்வளவு கடப்பாடுடைத்தோ!
சமயச்சண்டை நாவலருக்கும் 66) மூலமாகத் தமிழ் மொழிக்குஞ் செய்த பெருதவியிம்மட்டன்று. அவருக்குமுன் கோயில்களிற் படிக்கும் புராணவிதிகாசங் களுக்குத் தமிழில் விரிவுரை கூறுதலே யன்றிப்புறம்பானவொரு பொருளைப்பற்றித் தமிழில் விரிவுரை நிகழ்த்தும் வழக்கந் தமிழ்நாட்டி லிருந்ததில்லை. சைவர்கள் கிறித்தவத்தைத் தழுவாதவண்ணந் தடுப்பதற்கும், கற்றோருங்கல்லாதோருஞ் சைவத்தின் உண்மைகளையறிந்துகொளற் பொருட்டும். கிறீத்தவப் பாதிரிமார்கள் செய்து வந்த ஆங்கில விரிவுரைகளை முன் மாதிரியாகக் கொண்டு, சைவாகமங்களைப்
G36)
 

சங்கத்தமிழ்
பற்றியுஞ் சமயகுரவர்களைப் பற்றியும் முதன்முதல் யாழ்ப்பாணம் வைத்தீசுரன் கோயிலிலேயே விரிவுரையாற்றத் தொடங் கினார். இதுவே தமிழில் விரிவுரை யாற்றலின் முதற்றொடக்கம். இதுமுதல் அவர் மடாலயங்களிலுஞ் சிவாலயங்களிலுஞ் சைவசமயத்தைப் பற்றிப் பொழிந்துவிட்ட விரிவுரைகளுக்கு அளவில்லை. இதன் பயனாக அவர் தமிழில் விரிவுரையாற்றலில் மிகுந்தவாற்றலுடையராய்த் திகழ்ந்து விளங்கினார். இக்காரணத்தால் பின்னர் அவருக்குத் திருவாவடுதுறை யாதீனத்தில் "நாவலர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அவரைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் பலர் விரிவுரையாற்றலைக்கைக்கொண்டு, அதில் திறமை வாய்ந்து விளங்கினர். சிலர் அவரைப்போல் "நாவலர்” என்ற பட்டமும் பெற்றனர். ஆயினும் நாவலர் எனுஞ் சிறப்புப் பெயர் ஆறுமுகநாவ லரவர் களையே குறிக்கும். இதைக் குறித்தே சேற்றுார் அருணாசலக் கவிராயரும்,
"நிலவுலகி லொருமதிய் நிலவிய தென்றே நிகழ்த்தப், பலகலையு நிரம்பி யாழ்ப்பான மெனும் பாற்கடலி, விலகி யெழீஇ நாவல ரென்றியம்புபெயரெவர் பெறினுங், குலவு தமை யேகுறிக்கக் கொண்டபெருங் குலப்புகழார்." எனக் கூறினர். ஆகையின், அவரா லேயே மேலைநாட்டுமொழிகளைப் போலத் தமிழ்மொழியும் விரிவுரையாற்றுதற்கோர் சிறந்த மொழியாகி விளங்குகின்றது. இப்போதமிழில் விரிவுரையாளராய்ச்சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு அவரே முதற் குரவர் எனல் மிகையாகாது.
இனிமேல் தமிழ்மொழியில் நூல் யாத்தலில் அவருக்கிருந்த திறனைப் பற்றிச் சிறிதாராய்வாம். அவர் அக்காலத்திருந்த ஏனைய புலவர்களைப் போலப், பாக்கள் பாடு
தை 2012)

Page 39
釜
வதில்நாட்களைக் கழிக்கவில்லை. எனினும் பாக்கள் யாத்தலில் வன்மை யில்லாது விடவில்லை. சிலவேளைகளில் அவர் ஆசுக விகளைப் பாடியதாகவுஞ் சொல்லுவார்கள். அதற்குப் போதிய சான்றுகளும் உள. ஆயினும், அவரின் வன்மையும் பெருமை யுங் கட்டுரை வரைவதிலே யாம். இதுவுஞ் சமயச் சார்பாக வேயெழுந்தது. சமயத்தைப் பற்றிய போட்டிகளில் துண்டுக் கட்டுரைகள் விடுத்தனரென மேலே குறிக்கப்பட்டது. அவைதான் அவர் கட்டுரைகளுக்கு முதற் றொடக்கம். இதனை யாராயுமிடத்து ஒன்று நோக்கற்பாலது. நாவலருக்கு முன் தமிழிற் கட்டுரை நடை எழுதுவது பெரும் பாலும் வழக்கமில்லை. பாவினால் எழுது வதே வழக்கம். கடிதங்கள் கூடப் பாவினாலேயே எழுதப்பட்டு வந்தன. இதுகாறுந் தமிழ் மொழியில் உரைநடையில் நூல்கள் மிகுதி யாய் ஆக்கப்படவில்லை. பழைய நூல்களுக் கெழுதிய உரைகளி லன்றி வேறிடங்களில் உரைநடை மிகுதியாய்ப் பாவிக்கப்பட வில்லை. சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட அடியார்க்கு நல்லாருரை, இறையனாரகப் பொருளுரை, நச்சினார்க்கினியருரை முதலிய இவைகளே தமிழ் மொழியிற் காணப்படும் பழையவுரைநடைக் கெடுத்துக் காட்டுகள். இவைகளேயன்றி இதுகாறும் யாவரும் ஒரு நூலைத்தனியே உரைநடை யிற் செய்ததாகத் தெரியவில்லை. நாவலர் காலத்து யாராயினும் உரைநடையில் எழுதநேருறின், பொருண்மயக்கை விளைக் குங் கடுஞ்சொற்கள் மலிந்தும், வடசொல் மிகுந்துஞ் செந்தமிழ்ச் சொல் லருகியும், இலக்கணப்புணர்ச்சி செறிந்தும், எழுதி னோர்க்கேயன்றி மற்று யாவர்க்கும் பொருள் புலப்படா வண்ணம் எழுதுதல் வழக்கா யிருந்தது. இதனால் அக்கட்டுரைகள் கற்ற றிந்த புலவர்க்கேயன்றி மற்றையோருக்கு
தை 2012
 

சங்கத்தமிழ்
யாது பயனும் பயக்க முடியாத தாயிருந்தன. எனினும், நாவலரவர்களின்விடப்பட்டுள்ளது. கட்டுரையெழுதியது சைவ சமயத்தைப் பாதுகாத்தற்பொருட்டு. கற்றறிந் தோரினும் பார்க்கப் பொதுமக்களுக்கே சமய அறிவு 961. LuuL6b086600 GLib. Sir fibleOT p 6086) சமயத்தின் உண்மைகளை அவரறிந் தாற்றான் பிறசமயத்திற் சேரார். இந்நோக் கத்துடன் நாவலரெழுதவேண்டியிருந்தமை யால், யாவர்க்கு மெளிதில் விளங்கக் கூடிய தெள்ளியமுறையில் பெரும் பாலுஞ் செந் தமிழ்ச்சொல் நிறைந்த உரைநடையை யெழுதினார். கட்டுரை வரைவதில் அவரின் முக்கிய நோக்கம் பொருட்டெளிவு. இக்கருத் தையெண்ணியே மேல்நாட்டார் பாவித்து வரும் முழுத்தரிப்பு முதலிய குறியீடுகளை யும் எடுத்தாளத் தொடங்கினார். முதன் முதற்றமிழில் குறியீடுகளைக் கையாண்டவர் நாவலர வர்களே. பிற்காலத்தில் அவர் எழுதிய பெரியபுராண வசனம், திருவிளை யாடற் புராண வசனம் முதலிய நூல்களிற் காணப்படுஞ் செவ்விய நடையும், பொருட் டெளிவும். உயரிய போக்கும் ஈண்டு குறிக்கப் பட்ட காரணங்களினாலெழுந்தன. வடசொற் பாவியாது அவர் விடவில்லை. அவைகளில் யாவராலும் விளங்கக்கூடிய சொற்களையும், தமிழுருவத்தோடு பாகதவழி வந்த ஆரியச் சொற்களையுமே அவர் பாவித்திருக் கின்றனர். இன்னோரன்ன காரணங் களினாலேயே அவரைப் பரிதிமாற் கலை ஞனும் "வசன நடை கைவந்த வல்லாளர்,” எனக் கூறிப்போந்தனன். உண்மையில் நாவலர வர்களைக் கட்டுரை நடைக்குத் தந்தையெனலாம். இப்பெருந்தகையின் ஒயா உழைப்பினாலன்றே தமிழ்த்தாயும், இப்போ உலகத்தில் முன்னேற்றமடைந்த மொழி களுள் முதன்மை பெற்றுலவுகின்றனள்.*
-(37)

Page 40
நாவலர
(அண்ண
யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுகநாவலர வர்கள் ஒரு அவதாரபுருஷர். இடையிருட் கடைக்காலத்தில் விடியுமுன் விசும்பில் விளங்கும் வெள்ளிபோல் தமிழகத்தில் தளரும் சைவமும் தமிழும் தழைய, அவ் விரண்டிற்கும் புத்துயிர் வழங்கப் பிறந்த வள்ளலாவார். முன்னே பலகாலங்களிலும் தமிழகத்திலிருந்து தான்பெற்ற சில சிறு நன்மைகளை வட்டியுடன் பெருக்கி, ஒரு காலத்து ஒருமுகமாகப் பழங்கடனைத் தீர்த்து என்றுந் தீர்க்கொணாவாறு தமிழ கத்தை ஈழநாட்டுக்குக் கடமைப் படுத்திய பேருபகாரிநாவலரென்றால், அது மிகையாது.
முழுதும் தன் முயற்சியால் தமிழ், ஆங்கிலம், ஆரியம் ஆகிய மூன்று மொழி களையுங் கற்று அகன்றாழ்ந்த நூற்கல்வித் திட்பத்துடன், நுண்ணிய அறிவின் ஒட்பத் தையும் பெற்றுப் புலவர் திலகராய் விளங் கினார். தான் பிறந்த நாட்டில் தமிழ்ப் பயிற்சி யையும், சிவநெறியையும் புதுக்கிப் பெருக்கிப் பரவச் செய்ததோடமை யாமல், தமிழகத்தை யும் துயிலுணர்த்தி உயர்வுள்ள ஊக்கிய பெரியாரும் இவரோ யாவர். உலகத்தோ டொவ்வாது கல்வியைக் கையாண்டு வந்த புலவர் போலாது, வாழ்க்கையை வளம்படுத் துமாறு கல்வித் துறைகளைப் புதுமுறையில் திருத்தியமைத்து வழிகாட்டிய தமிழ்ப் பேராசிரியரும்நாவலரவர்கள்தான். கற்றோர் மற்றவர்க்கு எளிதில் அரிய பல செய்திகளை அறிவுறுத்தும் மேல் நாட்டுப் பேச்சு முறை யைத் தமிழிலுங்கையாளலாமென்று
C38)

வர்களின் சால்புப் பாராட்டு
ாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் திரு.S.சோமசுந்தரபாரதியார், M.A., B.L.)
முதலிற் காட்டிய பெருமை இவர்களுக்கே உரிமையாகும். இனிய உரைநடையில் தமிழ்க் கட்டுரைகளெழுதும் புலமை நலன் தொல்காப்பியரால் பண்டைத்தமிழுலகில் நிலவியதெனக்குறிக்கப்படுவதல்லால், அறவே ஆட்சியற்றிருந்த தமிழகத்தில் அத்துறையை, உவப்பும், வியப்பும், ஒருங்குதவ. தமிழுக்கும் தமிழருக்கும் பரந்த பயன்விளைய, நாவலர வர்கள் தானே வழிகாட்டியாயும் தீர்க்கதரிசி யாயும் துவக்கி, தமிழுரை நடைக்கு இறவாப் பெருவாழ்வு நல்கினார்கள். உள்ளத் தூய்மையிலும், சொல்வன்மையிலும், தன் காலத்தவருள் ஒப்புயர்வற்று விளங்கிய நாவலரவர்களின் தலைசிறந்த ஒழுக்கச் செல்வி அவர்கள் பகைவரின் பொறாமை யையும் அவித்து, அவர் வணக்கத்தையும் புகழையும் கொள்ளை கொண்டது. அவர்கள் காலத்தில் தமிழகத்தில் கல்வி நலன் துய்த்த பொன்னுச்சாமித் தேவரவர்கள் போன்ற குறுநிலமன்னரும், சீலமும், தமிழும் சிறக்கப் பிறந்த திருவாவடுதுறைப் பண்டாரச்சந்நிதி சுப்பிரமண்ய தேசிகரவர்களும் இவர்கள் பெருமையை உணர்ந்து பாராட்டி, இவர் களின் தமிழ்ச் சைவத்தொண்டுகளை வாழ்த்தி வளம்பட ஊக்கியுதவினார்கள். திரு வாவடுதுறை ஆதீனம் இவர்களுக்கு நாவல 6J6örsD JÜLGö 352 6LDUÜÜL6060DLD 60Du Juquid, தன்புகழையும் பெருக்கிய பெற்றி பாராட்டத் தகுந்தது.
தொன்று தொட்டு என்றும் கணக்காயர் எண்ணிறந்தோர் பிறந்து சிறந்த தமிழ்
(தை 2012)

Page 41
நாட்டில் “கணக்காய”ரென்பது சிறப்பாக நக்கீரர் தந்தையையே சுட்டுமாப் போல 'நாவலர்” என்ற பேர்க்குத்தனியுரிமை பெற்ற பெருந்தகையார் இப்புலவர் பெருமான் ஒருவரே என்பது யாவருமறிந்த செய்தி. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய், உளத்துறவும், மாசற்ற ஒழுக்கமும், நிறைந்த கல்வியும், மதிநுட்பமும், ஊறஞ்சா உரனும், "ஒல்லும் வாயெல்லாம் ஒவாதறஞ் செய்யும்” தாளாண்மையும், அறிவும்,
ஆறுமுக
திரு.பிரான்சிஸ் கிங்
நாவலர் பிரமாதிஹ அடைந்த காலத்த குணத்தையும் அவர் சைவசமயத்துக்கும் பல செய்யுளில் எடுத்துக்காட்டினர் காணற்கரியனவாயின. அவற்றைத் தேடி அறியும்படி செய்வதாகும்.
ஆறுமுகநாவலர் பிறந்து வளர்ந்து த்ெ நல்லகாலம்.நாவலர் பிறந்திலரேல் இன் குமோ? யாழ்ப்பாணத்துத் தமிழ் எப்படிப்
நாவலர் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உ எனக் கம்பர் புகழ்ந்த தமிழ் பெரும்பாலு சிலவே. நாவலர் காலத்துக்குமுன் வசன மொழியில் ஒருவகை வசன நடைக்கு மிகையாகாது. நாவலர் எழுதிய பெரி வருஷத்துக்குப் பின்னும் நிலவுமெனச் ெ அறிவுவளர உழைத்தார். இன்று யாழ்ப் களை ஆசையோடும் கற்பார் பலரோ? சி
தை 2012
 

சங்கத்தமிழ்
திருவுமாகிய தன் இருபெருநிதியும் இவறாமல் விரும்புவோர்க்களிக்கும் வன்ளன்மையும், தன்னொடு நாளும் வளரப் பிறர்நலம் பேணுதலே துறவின் பயன் எனும் மெய்யறத்தைத் தன் வாழ்க்கையால் வற்புறுத்தி, ஊராண்மைசெய்த உபகாரி நல்லோர் நாவலரவர்களைத் தமிழகம் போற்றுவதில் வியப்பொன்றில்லை. அவர்கள் புகழ்நாடொறும் அவர்கள் விரும்பிவளர்த்த தமிழ்ச்சைவ நிலைபோல வளருவதாக.*
நாவலர்
ஸ்பரி அவர்கள் B.A.,
நில் அவரை நன்கு அறிந்தவர் பலர் அவர் தமிழ்மொழிக்குஞ்செய்த தொண்டையும்
அச்செய்யுளுட் பல இப்பொழுது த்திரட்டி அச்சிடுவது நாவலரை அறியாதார்
நாண்டு செய்த காலம் யாழ்ப்பாணத்திற்கு று யாழ்ப்பாணத்திலே சைவசமயம் இருக் பட்ட தமிழாய் இருக்கும்? பகாரஞ் செய்தவரல்லர். "அளப்பருஞ்சலதி ம் பத்தியரூபத்தமிழ், தமிழில் வசனநூல் நடையும் தமிழிற் குறைவுள்ளதே. தமிழ் ஆறுமுகநாவலரே தந்தைஎனின் அது ப புராண வசனம் இன்னும் ஐஞ்நூறு சால்லலாம். நாவலர் சித்தாந்த சைவசமய பாணத்தாருட் சித்தாந்த சைவசமய நூல் லரோ? சிலராயினும் உளரோ?
(39)

Page 42
நாவலரையாவை யான் நேரிற் கண்ட வனல்லன்; அவர்கள் காலம் யான் பிறப் பதற்குப் பலவாணர்டுகளால் முந்தினமை யின். ஆனால் அவர்களைப் பற்றிச் சில முதியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அல்லாமலும் அவர்கள் நூல்களிற் சில வற்றைப் படித்துமிருக்கிறேன். அவர்களது இரண்டாம் பாலபாடமும் சைவவினா விடைகளுமே எனக்கு இளமையிலேயே தமிழ்ச் சுவையையும் சைவப்பற்றையும் உண்டாக்கின. அதனால், பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், சிதம்பர மான்மியம், நான்காம் பாலபாடம், பெரியபுராண கசனம், முதலியவற்றைப் பின்னர் படிக்கலானேன். அவற்றால் தமிழ்ச் சுவையும் சைவாபிமானமும் ஓங்கி வளர லாயின. பிறகு, அவற்றின் ஆசிரிய ராகிய நாவலரிடத்துக் குருத்துவத்தையும் பூணச் செய்தன. இதனால் அவர்கள் உருவப் படத்தையான் பூசை செய்வதோடு அவர்கள் குருபூசைத்தினத்தையும் யான் இத்தேசத்த வனாயிருந்தும் கொண்டாடுவது வழக்க LDTusbg).
சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் நாவலருக்கு இணையான புலவரில்லை யென்று தொல்காப்பியச் சொல்லதிகாரம் (சேனாவரையம்) அச்சிடும்போது தின வர்த்த மானிப்பத்திரிகையிற் குறிப்பிட்டதைக் கண்ட இத்தேசப் புலவர்களிற் சிலர் பொறாமையால் மனம் புழுங்கினர். எந்தப் புலவர் இவரைப் போல் தமிழிற்கும் சைவத் திற்கும் வசதிக் குறைவான அக்காலத்தில் சுயநலங் கருதாது உழைத்தவர்? சில புலவர்களுக்கு உரை யெழுதத்தான் முடியும். சிலருக்குப் பாடல் இயற்றத்தான் இயலும், வசன நடைவராது. சிலருக்குப் பிரசங்கவன்மை யிராது; ஆனால் பாடஞ் சொல்லும் ஆற்றல் இருக்கும். இலக்கண அறிவுசிலருக்கு இராது. தமிழ்ப் பயிற்சியோடு வடமொழிப் பயிற்சியுமுள்ள புலவர்கள்
G40

நாவலரையா. திரு.சே.வெ.ஜம்புலிங்கம்பிள்ளை, திருமயிலை
மிகச்சிலர். ஏட்டுப் பிரதிகளையா ராய்ந்து பாடபேதங்களைச் சீர்தூக்கிச் சிறந்த பாடங்களை நிர்ணயஞ் செய்வது பல புலவர்களால் முடியாத காரியம். இவ்வாற்றல் களெல்லாம் நமது நாவலரிடத்து ஒருங்கேய மைந்திருந்ததல்லாமல் அவர் ஆங்கிலமும் அறிந்திருந்தார். இக்காரணங் களால் அவரை “இணையற்றவர்” என்று பாராட்டி யதில் யாது தவறுளதோ யான் அறிகிலேன். தாமோதரம்பிள்ளையவர்கள் தமது தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை யில் ஏட்டுச் சுவடிகளில் தாம் கண்ட சில தொடர் களின் இயற்கைச் சொரூபத்தை யறிவதற்கு எத்தனை புலவர்களை நாடினா ரென்பதையும் ஒருவரும் தமக்குத் துணைபுரியக் கூடவில்லை யென்றும் நாவலரே தமக்குற்ற ஐயப்பாட்டை நீக்கினா ரென்றுங் கூறியிருப்பது நாவலரின் இணை யற்ற ஆற்றலைப் புலப்படுத்த வில்லையா? ஒருவருக்கு ஈசனளித்த, ஆற்றலைக் கண்டு மனம் புழுங்குவது நியாயமன்று, எத்தேசத் தவராயின் என்ன? தமிழ்த் தொண்டரும் சைவப் பிரசாரகருமாகியநாவலரைப் போற்ற வேண்டியது தமது கடனென்பதை அக் காலத்து வித்து வான்கள் மறந்தார்கள். வித்துவக் காய்ச்சலால் உந்தப்பட்டு ஈழத் தேசம் தமிழ்நாட்டிற் சேர்ந்ததென்பதையும் மறந்து மனம் போனவாறு பிதற்றித்திரிந்து மாண்டனர். அவ்வித்துவான்கள் பேர்நிலை நிற்கின்றதா? நாவலர் பேர் நிலவுகின்றதா? என்பதை அறிஞரே சிந்திப்பார்களாக. "நாவலர்” என்றால் யாரைக்குறிக்கின்றதென் பதையும் கவனிக்கற்பாலது.
"நாவலரென்றியம்புபெயரெலர்பெறினுங், குலவுதமை யேகுறிக்கக் கொண்ட பெருங்குலப்புகழார்”
தை 2012)

Page 43
முநீலழுநீ. ஆறுd
பரிசோதித்தும், புதிதாய் இt வெளியிட்ட
சூடாமணி நிகண்டுரை. செளந்தரியலகரியுரை.
முதற்பாலபாடம்.
SJ6OOTLITLb LuT6Nous LLò. நான்காம் பாலபாடம். பெரிய புராண வசனம். நன்னூல் விருத்தியுரை திருமுருகாற்றுப்படை திருச்செந்தினிரோட்டகயமகவந்தாதியுரை சிவலாய தரிசனவிதி. சைவ தூஷண பரிகாரம்; சுப்பிரபோதம்.
. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ். . கந்தரலங்காரம்.
. கந்தரனுபூதி
. ஏரெழுபதி.
. திருக்கைவழக்கம்.
புட்பவிதி.
. மறைசை யந்தாதி.
கோயிற்புரானமூலம். திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி சிதம்பரமும்மணிக்கோவை. . உபநிடதவுரை.
பட்டனத்துப் பிள்ளையார் பாடல். . அருணகிரிநாதர் வகுப்பு.
சைவவினாவிடை, முதற்புத்தகம். . மருதூரந்தாதியுரை. . திருச்செந்தூ ரகவல்.
விநாயக கவசம்.
... f6) 8560 b. } . சத்தி கவசம். . திருவள்ளுவர் பரிமேலழகர் உரை. . திருச்சிற்றம்பலக் கோவை யுரை.
சேதுபுராணம்.
34.
தருக்க சங்கிருகம். . ged ULDT6LOT öFrä86J85Lİb. . இரத்தினச் சுருக்கம். இலக்கணக் கொத்து. தொல்காப்பியச் சூத்திரவிருத்தி இலக்கண விளக்கச் சூறாவளி . கந்தபுராணம்.
பதினொராந்திருமுறை. நால்வர் நான்மணிமாலை. . கோயிற் புராணவுரை.
தை 2012
பிரயோக விவேக உரை.

கநாவலரவர்கள் பற்றியும் புத்துரை எழுதியும்
நூல்கள்.
45. 46.
47. 48. 49. 50.
சைவசமய நெறியுரை. தொல்காப்பியச் சொல்லதிகாரம்
சேனாவரையருரை. இலக்கணச் சுருக்கம். சைவவினாவிடை, இரண்டாம்புத்தகம். fgbLöUJ LDIT6öïLölujLö. கந்தபுராணவசனம். (அசுரகாண்டம்
வரையில்)
. அநுட்டானவிதி, முதற்புத்தகம். . இரண்டாம் புத்தகம், குருவாக்கியம். . சிவஞான போதச் சிற்றுரை. . யாழ்ப்பாணச் சமயநிலை. . இலக்கண வினாவிடை, இரண்டாம் புத்தகம். . இலங்கைப் பூமிசாஸ்திரம். . நன்னூற் காண்டிகையுரை. . பெரிய புராண சூசனம்.
திருவிளையாடற் புராண வசனம்.
அச்சிற் பதிப்பிக்கும் பொருட்டு எழுதிய முடித்தவைகள்.
சிவராத்திரி புராணம். அநுட்டானவிதிமூன்றாம் புத்தகம். சிவபூசாவிதி.
சிராத்தவிதி.
போசனவிதி. நன்னூல் விருத்தியுரை, இரண்டாம்பாகம். நைடதவுரை.
(ö5álogujá5 éJLDLb. பூசைக்கிடம்பண்ணும் விதி தருப்பன விதி.
எழுதத் தொடங்கியவைகள்.
தேவாரம்.
அகராதி (தமிழ்) அகராதி (இங்கிலீஷ் - தமிழ்) அகராதி (சமஸ்கிருதம் - தமிழ்) தருக்க பரிபாஷை,
SJg56JL bēFL b.
உபதேச காண்டம். இலக்கண வினாவிடை முதற்புத்தகம். சமஸ்கிருத வியாகரணசாரம்,
G11)

Page 44
முரீலழுநீநாவல
வெள்ளவத்தை, திரு.மு.இராம
"1863ஆம் ஆண்டு பிப்ரவரி மீ8ந்திகதி ஞாயிற்றுக்கிழமை முீலழுநி.நாவலரவர்கள், திருவிளையாடற் புராணத்திலுள்ள ஒரு திருவிளையாடலைப்பீடிகையாகக் கொண்டு நல்லூர்க் கைலாசபிள்ளையார் கோவில் மண்டபத்தில் பல சனசமூகத்தில் ஒரு சிறந்த பிரசங்கஞ் செய்தார்கள். அச்சமயத்தில் குறித்த கைலாசநாதர் கோவில், நல்லூரை இராச தானியாகக் கொண்டு அரசாண்டதமிழ்வேந் தரால் கட்டுவித்து நடத்தப்பெற்ற தென்றும், பின் பறங்கியரால் இடிக்கப்பட்ட தென்றும் இப்பொழுதுள்ள கைலாசபிள்ளை யார் கோவில் தமது தமையனாராகிய ஆராய்ச்சி தம்பு என்பவராற் புதிதாய்க் கட்டுவிக்கப்பட்ட தென்றும் தக்க ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினார்.
விசேஷமான காலங்களில் ஆறுமுக நாவலரவர்கள் பொன்னினாற் செய்யப்பட்ட பூனூலொன்றைத் தம் மார்பிலே தரித்துக் கொள்ளுகிறார். இப்பூனுTல் இப்பெரிய ருடைய கல்வியறிவு வாக்கு வன்மைச் சிவதொண்டு என்னுமிவைகட்கு அறிகுறி யாக இந்தியாவிலுள்ள மடாதிபதிகளாற் சந்மானிக்கப்பட்டது."
நாவலரவர்கள் சைவதுஷண பரிகாரம் என்னும் பெயருடைய கண்டன நூலொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலைப் படிப்போர்க்கு இப்பெரியாரிடத்துள்ள சுயமத உணர்ச்சி, சமயாபிமானம், பரசமயங்களைக் கண்டித்துச் சுயமதத்தை நாட்டும் ஆற்றல் எல்லாம் இனிது புலனாகும்.
-யாழ்ப்பாணம் “விறிமன்” பத்திரிகை 1Ο.2O1863.
C42)

ரவர்கள் சம்பந்தமான சில
உரலாறுகள்
(இவை, பழைய சாதனங்களில் ஆராய்ந்தெடுத்து லிங்கம் அவர்களால் உதவப்பட்டவை.)
(இவ்வரலாறுகள் காணப்படும் “விறிமன்”, "யாழ்ப்பான நியூஸ்” என்னும் பத்திரிகைகள் அக்காலத்திற் பேர்பெற்ற நியாயதுரந்தரராய் விளங்கிய அட்வக்கேற் கூல்ட் என்பவரால் நடத்தப் பெற்றன.)
11. ஆறுமுகநாவலர்.
“யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த இவர் இப்போது வட தேசவாசம் பண்ணுகிறா ரென்பது அநேகரறியாக் காரியமல்ல. இவர் சிதம்பரத்தில் உள்ள தீட்சதர்களைச் சற்றே கண்டிப்பாய்ப் பேசினதையிட்டு அவர்களிற் சிலர் இவர்க்கு விரோதமாய்க் கூட்டங்கூடித் துராலோசனை பண்ணியதாலும், கடலூர் இராமலிங்கபிள்ளையென்றொருவர் அவரது நாமத்திற்குப் பழுதான அர்த்தம் பண்ணி நிந்தாட்சணை பண்ணியதாலும், இவர் அவர்களுக்கு விரோதமாய்ச் சங்கை நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். இரு பகுதியிலும் நியாயதுரந்தரர் மார் நின்று வழக்கை நடாத்தினர். இவருக்காய் திரு.சவுந்தர நாயகம் பிள்ளை ஏற்பட்டார். கடலூரிலே சிலநாட்களாய் விளக்கம் நடந்தது. தீட்சதருள் தலைவராகிய சபாநடேச தீட்சதருக்கு நீதிபதி 50 ரூபா அபராதம் விதித்தாரென “விறிமன்” பத்திரிகையில் வாசித்தோம்.”
-“D-SuSITu60æ" LDIT& 3, 187O.
1836ம் ஆண்டு மார்ச்சு மீ 6ந் திகதி வெள்ளிக்கிழமை வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாசவித்தியாசாலை மண்டபத்தில் ருநீலழுநீ ஆறுமுகநாவலரவர்கள், பலர் சமூகத்தில் ஒரு சிறந்த பிரசங்கஞ் செய்தார் கள். அந்தச் சமயத்தில் அவர்களுடனிருந்த, ருநீமத் சங்கர நமச்சிவாயப் புலவர் சமஸ்
(6og 2012)

Page 45
கிருதத்திலுள்ள சில பிரமாணங்களை எடுத்துப் படித்துக் காட்டினார். நாவலரவர்கள் பேசும் படி எடுத்துக் கொண்ட விஷயம் வைதிகப் பிராமணர்களோ தேசிகரெனப்படுஞ் சைவக் குருமாரோசிறந்தவர்கள் என்பது. அச்சபையிற் சமூகமாயிருந்தோர் அனை வரும் ஏற்றுக்கொள்ளும்படி சைவக்குருமாரே சிறந்தவர்கள் என்று நாவலரவர்கள் பல நியாயங்களைக் காட்டிச் சாதித்துள்ளார்கள்.
-யாழ்ப்பாணம், “விறிமன்” 10.3.1863. (நீர்வேலிருநீமத் சங்கர பண்டிதரவர்கள் அக்காலத்தில் சங்கர நமச்சிவாயப் புலவர் என்றும் அழைக்கப்பட்டனரென்ப. இ.சா.பத்திராசிரியர்)
சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாசவித்தியா சாலை 1864ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமானதாகும். நாவலரவர் கள் 1870ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் 24ந் திகதி இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டார்கள். இங்கு அவர்கள் வந்து சேர்ந்தமாத்திரத்தே இங்குள்ளாரெல்லாரும் அவர்களைத் தக்கவாறு உபசரித்து நன்கு அலங்காரஞ் செய்யப்பட்ட ஒரு தணடிகை யின் மீது ஏற்றி வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அவ்வித்தியாசாலை மண்டபத் தில் நாவலரவர்கள் ஒரு சுருக்கமான பிரசங்கஞ் செய்தார்கள். மாணிக்கவாசக முதலியார் நாவலரவர்கட்கு ஒரு வாழ்த்துப் பாவைப் படித்தனர். வேறும் ஒருவரால் வாழ்த்துப்பா படிக்கப்பட்டது.
“கீர்த்திவாய்ந்த சமயாபிமானியும் தமிழறிஞருமாகிய இப்பெரியார் இப்பொழு தும் யாழ்ப்பாணத்திற்றானே யிருந்து, வண்ணார்பண்ணையில் தாம் தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலையை நன்னி லையில் வைப்பதற்கான முயற்சிகளைச் செய்துவருகின்றார். இந்நாட்டிலே நாவலர வர்களைப்போல திறமை வாய்ந்தவர்களும்
தை 2012
 

சங்கத்தமிழ்
அபிமானமுடையவர்களும் சிலரினுஞ் சில ரேயெனலாம். தமிழ்மொழி மீது இம்மகான் கொண்டுள்ள அபிமானமும் அம்மொழியை விருத்தி பண்ணுவதற்கு இவர் செய்யும் விடாமுயற்சியும் பெரிதும் பாராட்டத்தக்கன. முந்தி இவ்வடமாகாணத் தலைவராகக் கடமை பார்த்து இப்பொழுது மத்திய மாகாணத் தலைவராகவிருக்கும் மிஸ்ரர். H.S.0. றசல் அவர்கள், குறித்த வண்ணார் பண்ணைச் சைவப் பிரகாச வித்தியா சாலையைப் பற்றி யெழுதிய அபிப்பிராய பத்திரத்தை இப்பத்திரிகையின் இற்றைப் பிரசுரத்திற் பிறிதோரிடத்து அநுவதித்து வெளியிட்டுள்ளேம்."
மிஸ்ரர், றசல் அவர்களின் அபிப்பிராயப் பத்திரம் வருமாறு:- "ஆறுமுகநாவலர், தமது வித்தியாசாலையைப் பற்றிய ஒரு அபிப்பிராய பத்திரம் எழுதி அனுப்புதல் வேண்டுமென்று, யாழ்ப்பாணம் "விஸ்கால்” உத்யோக நிலையத்தில் மொழிபெயர்ப்பு உத்தியோகத் தராகவிருக்கும் மிஸ்ரர், W.இராமலிங்க மென்பவர் மூலமாக எம்மைக் கேட்டி ருந்தார். அவருடைய பள்ளிக்கூடத்தை ஒரு முறை நேரிற்போய்ப் பார்த்துள்ள எனக்கு அப்படியான அபிப்பிராய பத்திரம் எழுதுதல் பெருஞ் சந்தோஷமாகும். நான் அந்தப் பள்ளிக்கூடத்திற்குச் சென்ற சமயத்தில் வித்தியாதிகாரியும் வித்தியாதரிசியும் என்னுடன் கூடிக் கொண்டு வந்தார்கள். குறித்த வித்தியாசாலை சைவசமய சம்பந்த மான நூல்களையும் கொள்கைகளையும் ஊட்டும் நோக்கத்துடன் பிரதானமாக ஆரம் பிக்கப்பட்டதெனினும்; ஏனைய சமயாதிகட்கு இடையுறு செய்யாத முறையில், பெருந் தன்மையான கொள்கையுடன் நடத்தப்படு கின்றது. இங்கிலீசிலே உள்ள புதிய விவிலிய நூல் அவ்வித்தியாசாலையிலுள்ள ஒரு வகுப்பிற்குப் பாடமாக உபயோகிக்கப்படக்
கண்டேன்.
-G3)

Page 46
அங்கே கல்விபயிலும் மாணாக்கர்களை நான் பரீட்சித்துப் பார்த்தபோது அவர்கள் துணிவில்லாதவர்களாயினும், நுண்ணிய விவேகிகளாகக் காணப்பட்டனர். அவ்வித்தி யாசாலையிலே அவர்கள் பெறுங் கல்வி தமிழகத்தாருள் பிற்காலத்தில் அவர்களைப் பெரிதும் பயனுடையவர்களாக்கும் இயல் புடையது. ரசாயன சாஸ்திரம் முதலிய சாஸ் திரங்களை புகட்டும் நோக்கமான கல்வி அங்கே ஊட்டப்படுவதில்லை. சமயக்கொள்கை ஒழுக்கம் என்னுமிவைகளைக் காலகதியில் அப்பிள்ளைகள் கைக்கொண் டொழுகு வதற்கு அக்கல்வி பெருந்துணை ஆகும்.
தமது வித்தியாசாலையின் சென்ற 2O வருட விருத்தியைப்பற்றிநாவலரவர்கள் ஒரு அறிக்கைப் புத்தகம் வரைந்து வெளியிட் டுள்ளார். அதில் மிகவும் ஆர்வத்துடன் படிக்கக்கூடிய பல அரிய விஷயங்கள் உண்டு. அதுமாத்திரமல்லாமல் நாவலரிடத் துள்ள அபிமானம், விடாமுயற்சி என்னு மிவைகளும் அவ்வறிக்கைப் புத்தகத்தைப் படிப்பார்க்கு நன்கு புலப்படும்.”
கனம் P.பர்ஸிவல் பாதிரியாரின் அபிப்பி ராயம்- (6-07-1870) “ஆறுமுகநாவலரவர் களை நான் 30 வருட காலமாக அறிவேன்; அக்காலம் தொடக்கம் இற்றை வரையில் அவருடைய போக்கையும் முயற்சிகளையும் அவதானித்து வருகிறேன். அவருடைய கல்வித் திறமையைப் பற்றியும், பழைய தமிழ் நூல்களைத்திருத்தி அச்சிடும் விஷயத் தில் அவர் கைக்கொண்டுள்ள நுண்மை நேர்மையென்னுமிவைகளைப் பற்றியும் பாராட்டிச் சொல்வதில் எனக்கும் பெரும் மகிழ்ச்சி உணர்டு. இவை காரணமாக அவருக்குள்ள மதிப்பு அதிகமாகும்."
சிதம்ப்ரம் , P.M.B.வித்தியாசாலைத் தலைமை ஆசிரியராகிய முரீ வெங்கட
G44)
 

சங்கத்தமிழ்
சுப்பையா அவர்கள், (17ஆக்கஸ்ற் 1870) வெளியிட்ட அபிப்பிராயம்:-
"சிதம்பரத்திலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மிகவும் உன்னதமான நிலையில் இருக்கின்றதென்பதை நான் மகிழ்ச்சியுடன் வெளியிடுகின்றேன்; தமிழ் உயர் தரக்கல்வி இவ்வித்தியாசாலையில் அதிக திறமையுடன் பயிற்றப்படுகின்றது. இக்கலாசாலை மாணவர்களுடைய ஒழுக் கமும் சந்மார்க்கமும் மிகவும் விசேஷ மானவை. இங்குள்ள மாணவர்கள்ஞாயிற்றுக் கிழமை தோறும் கிரமமாகச் செய்துவரும் மனனப் பிரசங்கங்கள் ஏனைய வித்தியா சாலைகளிற் பயிற்றும் உபாத்தி யாயர்கள் தாமும் பின்பற்றிச் செய்யத்தக்கன; சம்ஸ் கிருதக் கல்வி, தொடங்கிச் சிலகால மாயினும், அதிக விருத்தி அடைந்து வரு கின்றது. இந்த மேலான முறையில் நடத்தம் வித்தியாசாலையினால் எங்கள் நாட் டினர்க்குக் கல்வித் தேர்ச்சியும் புத்தி நுண் மையும் ஒழுக்க சீவியமும் அதிகப்படு மென்பது எனது மனப்பூர்வமான எண்ணம்.”
- "66O is ILSDmeof 13-1O-187O "கீர்த்திபெற்ற இப்பண்டிதர் உண்மை யான பெரியார். ஆறுவருடகாலமாக இந்தியாவிலே தங்கியிருந்து இன்று பின் னேரம் யாழ்ப்பாணம் வந்துசேர்வாராயினர்; சென்ற ஞாயிற்றுக்கிழமை இப்பெரியார் இங்கு வந்த சேர்வரென இங்குள்ளார் காத்திருந்தனர்; ஆனால், தவிர்த்துக்கொள்ள முடியாத சில அசந்தர்ப்பங் காரணமாக ஊர்காவற்றுறைக்கு அவர் போன புதன் கிழமைக்கு முன் வருதல் முடியாதாயிற்று: இத்தமிழறிஞரை வரவேற்பதற்காக யாழ்ப் பாணத்துள்ள பெருமக்கள் பல ஆயத்தங்கள் செய்தனர்; துறைமுகத்தில் ஒரு அலங்கார மான பந்தர் இதற்கென்றே இடப்பட்டது. இது
(தை 2012)

Page 47
மாத்திரமல்லாமல் துறைமுகத்திலிருந்து வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலைக் கணித்தாகவுள்ள அவ ருடைய வாசஸ்தானம் வரையிலுள்ள தெருவில் இடையிடையே நடைப்பந்தல்கள் பல இடப்பட்டன.
இங்குள்ள பிரபல வர்த்தகராகிய முறி முத்துக்குமாரச் செட்டியார், துறைமுக உத்தியோகத்தராகிய ருரீ சுப்பிரமணியர், நாவலரவர்களுடைய மாணக்கார்களுட் பலர், ஏனைய பல அபிமானிகள் எல்லாரும் ஒருங்கு கூடி நேற்றுப் பின்னேரம் ஊர் காவற்றுறைக்குப் போய்க் கப்பலில் அவரை எதிர்கொண்டு அழைத்து அவருடன் இன்று பின்னேரம் இங்கு வந்தனர். "உவில்லியம்” என்னும் பிரசித்திபெற்ற வள்ளமே அப்பெரி யாரையும் அவருடன் வந்தவர்களையும் இத்துறைமுகத்திற்கொண்டுவந்து சேர்த்தது; இக்கரையில் நின்று பார்த்தவர்களுக்கு, கடலில் அவ்வள்ளம் வரும்போது அழகாகத் தோன்றியது எவர்க்கும் மகிழ்ச்சியைத் தந்தது.
மலை5 1/2 மணிவரையிலாதலும் அங்கு குழுமி நின்றோர் ஆநந்த மேலீட்டினால் ஆரவாரஞ் செய்ய நாவலரவர்கள் இறங்கி, யாழ்ப்பாணத்துள்ள பெருமக்கள் சூழ்தரப்பந் தருள் கீழ்வந்து, விசேஷமாக அலங்காரஞ் செய்யப்பட்ட பல்லக்கில் ஏறி வாத்திய கோஷத்துடன், தம்மை எதிர்கொள்ளும்படி வந்தோரெல்லாம் இருமருங்கும் மெல்ல நடந்துவர அப்பல்லக்கின்மீது வருவராா யினர். கடற்கரைத் தெருவீதி வழியே வந்து நீதிஸ்தலத்தின் பக்கத்திலுள்ள தெருவழியே வடக்கு நோக்கிச் சென்று பெருந்தெருவால் வந்து அக்கூட்டத்தினர் பெரியகடைத்தெரு விற்கு வந்தனர். நாவலரவர்களுடைய மாணாக்கர்களும் அபிமானிகளும் தெருவீதி யில் இடங்கள் தோறுங் கண்டு கண்டு
தை 2012
 

சங்கத்தமிழ்
அவருக்கு மரியாதை செய்தனர். செட்டிகடை களுள்ளவீதியினால்வரும்போதுஇருமருங்கு முள்ள செட்டிப்பிள்ளைகளும் வியாபாரி மாரும் சிவிகை தாங்கிவந்த வர்களுக்கு கோடிவஸ்திரங்களை வழங்கி நாவலரவர் களைக் சிறப்புச் செய்தனர். அதன்பின், அப்பெரியாரால் ஸ்தாபிக்கப்பெற்றவண்ணார் பண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலைக்கு வருதலும் நாவலரவர்களைச் சிவிகையிலிருந்து இறங்கச் செய்து அவர் வரவை உத்தேசித்து முந்தியே அலங் காரமும் ஆயத்தங்களுஞ் செய்யப்பெற்றுள்ள மண்டபத்தில் அழைத்துச் சென்று ஒரு உந்நதமான ஆசனத்தில் அமரச் செய்தார் கள். சந்தனம் தாம்பூலம் முதலியன அந்தச் சமையத்தில் வழங்கப்பட்டன. அங்ங்ன மாக, நாவலரவர்கள் தமக்குச் செய்த உபசரணையின் பொருட்டு அங்குள்ளார்க்கு நன்றி கூறி, அதன்பின் சைவசித்தாந்த நூலில் ஒரு செய் யுளைப் பீடிகையாகக் கொண்டு சித்தாந்த உண்மைகள் சிலவற்றைக் கேட்பார்க்குக் கர்னாமிர்தமாம் வண்ணம் சிறிது நேரம் உபந்நியாசஞ் செய்து முடித்தனர்.
நாவலரவர்கள் தாம் செய்த பிரசங்க முடிவிலும் இங்குள்ளார் தமக்கு அச்சமை யத்திற் செய்த உபசரணையைப் பற்றியும் தம்மிடத்திற்பாராட்டிய அபிமானத்தையிட்டும் சில பேசினார்; தம்மைப் பற்றிக் குறிப்புரை கூறியவர்கள் தம்மிடமில்லாச்சுகுணங்களை யும் நற்செயல்களையும் தம்மீது சுமத்திப் பேசினார்களென்றும், தம்மைச் சமயக்குர வர் கட்கு ஒப்பிட்டமை சிறிதும் பொருந்தா தென்றும், அய்பெரியாருடைய அடிப்பொடிக்குள் மகத்துவத்தில் ஆயிரத்திலொன்றுதானம் தமக்கில்லையென்றும், செந்தமிழ் விஷய மாகவும் சைவசமய விஷயமாகவும் தாம் எதும் அற்பதொண்டு புரிந்திருந்தால்,
(45)

Page 48
அத்தொண்டு எல்லாம் வல்ல இறை வனுடைய திருவருட்களுக்குரியதாகு மென்றும் எவருள்ளமும் உருகும் வண்ணம் கனிவுடன் பேசி முடித்தார்.
பிரசங்கம் முடிந்த பின்னர், யாழ்ப்பாணம் மணியகாரனாகவுள்ளவர் குறிப்புரை கூறத்தொடங்கி, நாவலரவர்களின் செயற் கருந் தொண்டுகளைப் பாராட்டி, தாங்கள் அப்பெரியாருக்குச் செய்த உபசாரம் போதிய தன்றென்றும், அவருடைய வருகையை இன்னுஞ் சிலநாள் முந்தி அறிந்திருந்தால் தாங்கள் அதிக உபசரணைக்குச் சித்தப்படுத் தியிருக்கலா மென்றுங் கூறினார். மேலும் இந்தியாவில் நாவலரவர்கள் தங்கியிருந்த காலத்திலே இங்குள்ள சில முழுமக்கள் பொறாமை காரணமாக அவரை இடர்ப் படுத்த முயன்றன ரென்றும், சமயத்தைப் போதிப்பதற்கு இப்படியான பெரியார் தங்களுக்கு இலகுவிற் கிடைப்பவரல்ல ரென்றும், இத்திருத்தொண்டு களைச் செய்யும்வண்ணம் இறைவன் நாவலரவர் களுக்கு அரோக திடகாத்திரத்தையும் நீடித்த ஆயுளையும் பாலிப்பாராக என்றும் கூறி முடித்தார். அதன்பின், முரீ விநாயக மூர்த்தி யென்பவர் சில வாழ்த்துப் பார்க்களைப் படித்தனர். ஈற்றில் நாவலரவர் கள் அங்கி ருந்து தம்முடைய வாசஸ்தானத் திற்குச் சகல வரிசைகளுடனும் அழைத்துச் செல்லப் பட்டார். யாழ்ப்பாணத்து மக்கள் ஒரு யாழ்ப் பாணப் பெரியாரை இதற்கு முந்தி இப்படியாக உபசரித்துப் பாராட்டியதில்லை யெனலாம்.” - "S6OrisTLLDIT60f 24-O2-187O. “யாழ்ப்பாணத்துச் சைவப்பிரசாரகராகிய ருநீலழுநீ ஆறுமுகநாவலரவர்கள் அணியுஞ் சில விசேஷ நகைகள் களவு போய்விட்டன. கழுத்திலே அணியும் இரு கெளரி சங்கர மணி பொருந்திய கண்டிகையும், ஒரு பஞ்சரத்தின மோதிரம், ஒரு சிவப்புக்கற்
G46)
 

சங்கத்தமிழ்
பதித்த பவுத்திர மோதிரம், ஒரு சாதாப் பவத்திர மோதிரம், ஒரு சோடு குவளைக் கடுக்கன், ருத்திராட்ச மணிகளொவ்வொன் றுக்குமிடையே தங்க இடைகரிகளுமுள. இவ்வாபரணங்கள் ஏறக்குறைய 750 ரூபாய் பெறும். இதைக் களவாண்டவன் அவருடைய தவசிப் பிள்ளை சுவாமிநாதன், இன்னுமிருவர். அவர்கள் வீட்டேவல் வேலைக்காரர். சுவாமிநாதன் தாசி மயக்கா லேயே தோசிகை வைத்தவன். ஒரு காசுக் கடைக்காரனிடமும், ஒரு தாசியிடமும் அகப் பட்டிருந்தவைகள் வெளிப்பட்டன. நகை களையும் ஆட்களையும் பொலிசிற்கொடுத்து விளக்கம் நடந்தது. எதிரிகள் பிணையில் விடப்பட்டனர். விளக்கப் புத்தகம் அத்துவக் காத்துக்குப்போய்விட்டது. அறிந்தும் பொருளை வாங்கியவர்க்கு, இருந்துந் தண்டனை வேண்டுந்தான்.
- "இலங்கைநேசன்" 24-10-1877
புலோலிச் சைவ வித்தியாசாலை,
1877ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19ந் திகதியாகிய புதன்கிழமை மேற்படி வித்தியா சாலையிலே கல்வி கற்கும் மாணாக்கர்கள் பரீட்சிக்கப்பட்டார்கள். பிள்ளைகள் மிகச் சிறு பிராயத்தினையுடைய வராயிருந்தும், கல்வியிலே மிகத் தேர்ச்சியுடையவர்களாய்க் காணப்பட்டனர். அப்பொழுது திருவள்ளுவர் குறள் பரிமேலழ கருரை முதலிய நீதி நூல்களும், கந்தப் புராணம் முதலிய புராணங்களும், சைவ சமய நெறி முதலிய சமய நூல்களும், நன்னூல் முதலிய கருவி நூல்களும் பிறவுமே அங்கே பரீட்சிக்கப்பட்ட பாடல்கள். பரீட்சை முடிவிலே மேற்படி வித்தியாசாலையைத் தாபித்தருளியருநீலழுநீ ஆறுமுகநாவலர் அவர்களையும், மாணவர் களது கல்வித் தேர்ச்சியையும் விதந்துரைத்த சில செய்யுட்களுள் ஒன்று வருமாறு:-
தை 2012)

Page 49
盘。
நேரிசை வெண்பா. "சைவமத மாதுந் தமிழ்மாது மாட்டுதந்த தெய்வசபை யைப்புலமைச் சீர்வாய்ந்த -
மெய்வளரு மாறுமுக நாவலனா மான்றபெரும்
புண்ணியனா லேறியகல்லூரியென்ப தென்."
- "இலங்கைநேசன்" 24-10-1877
ஏழாலைச் சைவ வித்தியாசாலை. சென்னபட்டணத்தில் பீ.ஏ. பீ.எல். பட்டம் பெற்று ஜெனறல் ஐக்கவுண்டன் என்னும் உத்தியோகத்தராய் இருக்கின்ற முரீ.சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற இந்த வித்தியாசாலையிலே இந்த மாசம் 5ந் திகதியாகிய ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ழுநீலழுநீ, நாவலரவர்களாலே ஒரு பரீட்சை செய்விக்கப்பட்டது.
இந்த வித்தியாசாலையிலே சென்ற மாசத்து 16ந் திகதியாகிய வியாழக்கிழமை இராத்திரி ருரீ சங்கரபண்டிதர் குமாரராகிய சிவப்பிரகாசபிள்ளையாலே ஒரு பிரசங்கஞ் செய்யப்பட்டது. முநீலழுநீ நாவலரவர்கள் எழுதிய “சைவசமயம், சைவசமயி“ என்ற பத்திரிகையை வாசித்து விளக்கி அதனின்று பிரசங்கந் தொடங்கினார். விசேஷமாக, கண்ணகி வணங்கப்படத்தக்கவளல்லள் என்பதற்கு அநேகப் பிரபல நியாயங்கள் காட்டிக் கண்ணகியை வணங்குகிறவர் களைக் கண்டித்துப் பேசினார். அங்கு பாடப்பெற்ற செய்யுட்களுள் ஒன்று வருமாறு:-
கட்டளைக் கலித்துறை. "கன்னர்க்கு மன்னன் வயிரவநாத
மகிபன்பெற்ற தன்னொப் பரியவன் தாமோ தரேந்திரன்
றாரணியின் மன்னன் கவிச்சக் கரவர்த்தி செய்திடுங்
கல்விக்கொடை
தை 2012

சங்கத்தமிழ்
என்னச் சொலப்படுந் தானமுண் டோமற் றெழிற்புவிக்கே." (இஃது 1878ஆம் ஆண்டு கார்த்திகை மாசம் 13ந் திகதி வெளிவந்த "இலங்கை நேசனுக்கு", தெல்லிப்பளை, ஞா.சுப்பிர மணிய விப்பிரர் எழுதிய கடிதமாகும்.)
சட்டசபைத் தமிழ்ப் பிரதிநிதி “ழுநீலழுநீஆறுமுகநாவலரும் பிறருங்கூடி வண்ணார்பண்ணையிலுள்ள சைவப் பிரகாச வித்தியாசாலையில் 1879ம் ஆண்டு வைகாசி மாதம் 22ந் திகதி வியாழக் கிழமை உருமத்தின் பின் ஒரு கூட்டம் வைத் தார்கள். மூன்று மணியளவில் தஞ்சாவூரால் வந்திருக்கும் கறல் (எஃல்வ நாதபிள்ளை) பண்டிதரே சபாநாயகராகத் தெரிவு செய்யப் பட்டார். அவர் பிரசங்கித்து முடிந்தபின் முரீலழுநீ. ஆறுமுகநாவலர் எழுந்து குமார சுவாமி நயிற் பட்டவர்த்தனரின் கீர்த்திப் பிரபாவத்தை, விஸ்தரித்தபின்னர் அவர் மருமகன் அப்புக்காத்து இராமநாதத் துரையே எங்கள் தமிழ்ப் பிரதிநிதியாகச் சட்ட நிரூபண சபையிலிருக்கத் தகுந்தவரென இலக்கணவழுக்களே துமின்றித் தருக்க சாஸ்திரமுறை பிறழாது பிரசங்கித்தார். &5605, 5kb6).IIIbón floor 55ug5 (Magistrate) பொன்னம்பலம்பிள்ளை அநுசரித்தும் மெச்சியும் பேசினார்.
- "இலங்கைநேசன்" 28-05-1879. தமிழ் முதலாஞ் சுதேச பாஷைகள் குன்றத் தலைப்பட்டுள்ள இக்காலத்திலே, பாண்டிய மன்னர் காலத்திருந்த பழைய புலவர்கள் வித்துவான்களை யொத்த சிலர் இக்காலத்திலும் விளங்குதல் ஒரு பெரும் ஆறுதலாகும். சிலர் என இங்கு யாம் குறித்த வருட் பிரதானமானவர்கள் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. முநீலழுநீ.ஆறுமுக நாவலர் என்னும் இருவருமாவர். இவ்விரு
(47)

Page 50
வருள் பிள்ளைய வர்கள் சிறந்த புலவரவர் கள்; இவர் பாடிய நூல்கள் பல நாவலரவர் கள் இக்காலத்திற் கிசைந்த சிறந்த தமிழ் வசனநடை இயற்றுவதில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராவர்; இவருக்கு முன் னிருந்த அறிஞர்களும் இப்படியான தமிழ் வசனம் எழுதமாட்டார்கள்.
இனி, வாக்கு வன்மையோடு பிரசங்கஞ் செய்வதிலும் இந்நாவலருக்கு நிகரானவர் எருவமில்லை; இவரைப்போல் இதற்கு முன்னர் உபந்நியாசஞ் செய்தாரை யாம் கேட்டதில்லை; மேலும் இப்பெரியார் ஏட்டுப் பிரதிகளாயிருந்த எத்தனையோ அரிய தமிழ் நூல்களைப் பிழையறப் பரிசீலனை செய்து அச்சிட்டு வெளியிட்டு வருகின்றார்; கேவல நிலைமையடைந்துள்ள தமிழ்மொழி இப்பெரியார் செய்துவரும் இப்படியான அரும்பெருமுயற்சிகளினால் விருத்தியாதல் (Uppulb.
நாவலரவர்கள் தாம் எழுதிய முதன் மூன்று வகுப்புகட்குரிய பாலபாடங்களை அபிப்பிராயம் பெறும்படி எமக்கு அனுப்பி யிருக்கின்றார். அவருடைய தமிழ் வசன நடையைப் பற்றி நாம் ஏதும் கூறப்புகுதல் மிகையாகும். பாலபாடங்களை எழுத வேண்டிய முறையிலேயே எழுதியுள்ளார். இந்த அறிஞர் எழுதிய பாலபாடங்களைத் தவறாது இங்குள்ள வித்தியாசாலைகளில் உபயோகித்தல் வேண்டுமென்று நாம் திடமாகச் சொல்வோம்; இச்சென்னை யிலுள்ள வித்தியா சங்கத்தார் வெளியிடும் வசன பாட புத்தகங்களைக் காட்டிலும் நாவலர் பாலபாடங்கள் எவ்வாற்றானும் சிறந்தவையாகும். வித்தியாசங்கத்தார் வெளியிட்ட புத்தகங்களை நாவலரவர்கள் எழுதிய பாலபாடங்களோடு ஒப்பிடநினைத்த மைதானும் தவறெனலாம். இனி, நாவலர் பாலபாடங்களில் எடுத்தாளப்பட்டி ருக்கும்
G48)
 
 

சங்கத்தமிழ்
அரிய விஷயங்கள் சாலச் சிறந்தவையாகும். அவர் எழுதிய முதலாம் இரண்டாம் பால பாடங்கள் இங்குள்ள தமிழ் வித்தியா சாலைகள் எல்லாவற்றிலும் அந்த அந்த வகுப்புக்களில் தவறாது உபயோகிக்கப்படல் வேண்டும்; அவர் எழுதிய மூன்றாம் பாலபாடம் (இது இக்காலத்தில் நான்காம் பாலபாடமாக வழங்குகின்றது - பத்திரா சிரியர்) எங்கள் தாலுகாக்களிலுள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலும் ஆங்கில வித்தியா சாலைகளிலும் மேல் வகுப்புக்களில் உபயோகிக்கற்பாலது.
BIT616of 6Tup5u LITGOUTLIril&6ir ep6OLDITES அந்நிய நாட்டிலிருந்து இங்கு வருவோர் இந்நாட்டு மக்களின் பழக்க வழக்க ஒழுக்கங் களையும் கொள்கைகளையும் அறிதலாகும். ஆனால், இங்குள்ள பாதிரி மாருக்கு இப்புத்த கங்கள் மாறானவை போலத் தோன்றுமென் பதை நாம் அறிவோம். பிறமதத்தையேனும் மதத்தினரை யேனும் இப்புத்தகங்களில் நாவலர் கண்டித்து எழுதினாரல்லர்; சில உண்மை களையே உள்ளபடி அப்பெரியார் எழுதியுள்ளார்; இப்படியான பாடங்களினால் நன்மையன்றி வரக்கூடிய தீமை யாது மில்லை யெனலாம்; இந்த நியாயம் பற்றி இந்திய அரசினரும் இலங்கையரசினரும் நாவலரவர்களுடைய புத்தகங்களையே வித்தியாசாலைகளில் உபயோகிக்கச் செய்து, இன்னமும் இப்படியான அரிய நூல்களை எழுதும் வண்ணம் அப்பெரியார்க்கு ஊக்கமளிப்பரெனக் காத்திருக்கிறோம்.”
(63.6016O)6OTulsio BeOL6uip "Native Public Opinion" என்னும் ஆங்கிலப் பத்திரிகை யிலிருந்தெடுத்து 1872ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ந் திகதி வெளிவந்த "இலங்காபி மானி” என்னும் பத்திரிகையில் வெளி யிடப்பட்டது)
- "இந்துசாதனம்."
(தை 2012)

Page 51
அவர்களைப் பற்றி
(திருநெல்வேலி
பெரிய புராணக் கதைகளைப் படித்து, நாயன்மார்களின் மனநிலையையும் குணவிசேஷங்களையும் கண்டுபிடித்து, அவைகளைப் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்தக் காலத்துக்கேற்றவாறு எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம், இரண்டொரு வருடங்களுக்கு முன் ஒருமுறை எனக்குத் திடீரென்று உற்பத்தியானது. ஆனால், அந்த வண்ணம் வளரவில்லை; அது மெல்ல மெல்லத் தேய்ந்து, இருந்த இடமே தெரியாமல் மாய்ந்து கடைசியில், பெரிய புராணக் கதைகளிலேதானும் கதை வேறுபடாமல், ஒரு அகூடிரத்தைக் கூட மாற்றி அமைக் கிறதற்கு எனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தேன்.
இதற்குப் பிறகும் என்னுடைய மனம் சும்மா கிடக்கவில்லை. அதற்கு மற்றொரு பைத்தியம் உற்பத்தியாய் அது வளர்ந்து கொண்டும் வந்தது. அந்தப் பைத்தியம் என்னவென்றால் அது ஆறுமுகநாவலர்ப் பைத்தியம். மகா வித்துவான் ருநீ மீனா கூழிசுந்தரம்பிள்ளை அவர்களைப் பற்றி, மஹாமஹோபாத்தியாயர் டாக்டர் சாமி நாதையர் அவர்கள் எழுதிய விரிவான பெரிய் சரித்திரத்தைக் கண்டபோது, எனக்குண்டான குறித்த பைத்தியத்திலே, போதாக்குறைக்குக் கொஞ்சம் பொறாமையும் வந்து கலந்து விட்டது. பைத்தியமும் நானும் இரண்டறக் கலந்துவிட்டோம். நாவலர் அவர்களுக்குச் சரித்திரம் எழுதியவர்களிலே, எந்தக் காலத்திலும் வாராத ஒரு பெரிய கோபமும் எனக்கு வந்து விட்டது.
நாவலர் அவர்களின் சரித்திரம் நூற்றுக்கணக்கான பல வேறுதுறைகளில்

ஒன்றுஞ்சொல்ல முடியாது
ரிச் சைவாசிரிய கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்
பூனிமத் சி.கணபதிப்பிள்ளை அவர்கள்.)
விரிந்திருக்கவேண்டுமே. நாவலர் அவர்கள் எந்த-நல்ல-துறையிலேதான் கைவைக்க வில்லை. எந்த கூடினத்திலேதான், லகூழியத் திற்காக உயிரைவிட ஆயத்தமின்றி இருந்த வர்கள். இப்படிப்பட்ட நாவலர் அவர்களின் உரு, திரு. வீரம், மானம், அச்சம், &léfefLS6oreOLD, G885TuLib, (885TulsacreoLD, பொறுமை, அயாசகம், பிரபுத்துவம், இரக்கம், ஈகை, தியாகம், ஒழுக்கம், எண்ணம், விவேகம், ஞானம், பத்தி, துணிவு, தெளிவு முதலிய எண்ணிறந்த குண விசேஷங்கள், எழுதிய சரித்திரங்களில் எடுத்து விரித்துக் காட்டப்படவில்லை. ஒவ்வோர் குணத்துக்கும் பல வேறுபட்ட நூற்றுக்கணக்கான கதைகள் கர்ண பரம்பரையில் வழங்கிவருகின்றன. அந்தக் கதைகளைத் தொகுத்து வகுத்தாலுங் கூட, பதினாயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட ஒரு பாரிய சரித்திரம் பத்துப் பதினைந்து பாகங்களாக வெளியிட்டிருக்க லாம். இப்பொழுது எழுதிய சரித்திரங்கள் மிகச் சுருக்கமானவை. சுருக்கமென்றால் இவற்றுக்குத்தான் பொருந்தும். சுருக்கு சுருக்கென்று சுருக்கியிருக்கிறார்கள். நாவலர் அவர்களின் உள்ளநிலை இச்சுருக்கங்களிற் புலப்படவில்லை. உண்மையான நாவலர் அவர்களை உள்ளத்திற் சித்திரிக்க முடியவில்லை. இதனாலே தான் சரித்திரம் எழுதியவர்களில் எனக்குக் கோபம் வந்தது. என்ன கோபம் வராதா!
ஆனால், ஒருநாள் என்னுடைய கோபம் போய்விட்டது. போய்விட்டது என்றால்- “ஏன் நான் சரித்திரம் எழுதியவர்களிற் கோபிக்க வேண்டும். நானே அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கக் கூடாதா?” என்று இங்ங்ணம் மாறிவிட்டது. அன்று தொடக்கம் பாரிய
-(49)

Page 52
“සාංඝ
சரித்திரமொன்று என்னுடைய மனசிலே பலதுறைப்பட்டு வளர்ந்தது. பதினாயிரக் கணக்கான பக்கங்கள்-கலிக்கோ பைண்டு செய்த எத்தனையோ பாகங்கள் - நண்பர் களோடெல்லாம் இது தான் கனவு-நாவலர் அவர்களைப் பற்றிப் பல பிரசங்கங்களும் பண்ணிப்போட்டேன்.
இந்த ஆரவாரத்தைக் கண்ட நாவலர் நினைவுமலர்' ஆசிரியர், பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்கள், தமது நினைவுமலருக்கு ஒரு கட்டுரை எழுதித் தரும்படி என்னைக் கேட்டதில் ஒருபிழையு மில்லை. பண்டிதர் அவர்கள் என்னை ஒன்று கேட்டது கேட்கமுன், "நாவலர் நினைவுமலர்நாவலர் அவர்களை நினைக் கத்தக்கதாயிருக்க வேண்டும்; அவர்களை ஒவ்வொருவர் மனசிலும் சித்திரிக்கத் தக்கதாயிருக்கவேண்டும். நாவலர் அவர்கள் ஒரு கற்பகதரு. அவர்களுடைய குண விசேஷங்கள் ஆயிரக்கணக்கான சாகைகள். ஒவ்வொரு சாகைக்கும் நூற்றுகணக்கான கதைகள் உண்டு" என்று தொடங்கினேன். உடனே ஒரு கட்டுரை உதவும்படி கேட்க வந்த பண்டிதர் அவர்கள், பல கட்டுரைகளை என்னிடம் எதிர் பார்த்தார்கள் போலத் தோன்றியது. உண்மையில் எதிர் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.
கடைசியாக ஏதாவது ஒரு கட்டுரை யேனும் எழுதித்தான் தீரவேண்டுமென்று. பெரிய முயற்சிகள் எடுத்தேன். நாவலர் அவர்களின் சரித்திரங்கள், நாவலர்களே எழுதியவைகள் இவற்றில் அங்குமிங்கு மாகப் பல விஷயங்களைப் படித்துப் பார்த்தேன். ஆழ்ந்த யோசனைகளும் பண்ணினேன். என்ன பண்ணியுமென்ன! எனக்கு ஒரு வசனமும் எழுத வரவில்லை. பெரிய பயம் வந்துவிட்டது. சரித்திரச் சுருக்கம் எழுதியவர்களில் எனக்கிருந்த கோபமும்
G50)
 

சங்கத்தமிழ்
பறந்தது. மனசுக்குள் அவர்களைப் பலமுறை மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். பெரிய புராண விஷயத்தில் என்ன முடிபுக்கு வந்தேனோ, அதே முடிபுக்குத் தான் - "நாவலர் அவர்களைப் பற்றி ஒன்றுஞ் சொல்ல முடியாது” என்ற முடிபுக்குத்தான் - இறுதியில் வந்துசேர்ந்தேன். வேறு என்னதான் செய்யமுடியும், கீழே வாசித்துப் பாருங்கள்.
இவைகள் நாவரைவர்கள்
எழுதியவைகள் 1. நம்மை ஆளும் இங்கிலிஷார் கிறிஸ்து சமயானுசாரிகள் ஆகையால், நாம் தங்கள் சமயத்தைக் கண்டிக்கவும் நமது சமயத்தை ஸ்தாபிக்கவும் புகுங்கால், எம்மேற்குரோதங் கொள்வார்களன்றோ? அதற்கு நாம் யாது செய்வோம்? என்பீர்களாகில்; சுவதந்திர ராகிய சிவன் நாம் செய்த வினைகள் எல்லா வற்றையும் ஒருங்குணர்ந்து, அவ்வினை களுள் இன்ன காலத்திலே இன்ன வினையை அனுபவிக்கப் பண்ணுவோம் என்று நியமித்து, ஊட்டுமாறன்றி, இவ் விடத்துப் பரதந்திரராகிய பிறர் ஒருவரால் நமக்கு ஓர் தீது வந்தடையாது.”
- சைவதுஷண பரிகாரம் 1Oம் பக்கம். i. "இனி இவ்வரசர்களால் நீர்க்குமிழி போல நிலையில்லாததாகிய இந்தச் சரீரத்துக்கு ஓர் தீது வருமெனினும், வருக. நிலையுள்ளதாகிய ஆன்மலாபத்தின் பொருட்டு, பிராணத்தியாகம் பண்ணியும், சைவ ஸ்தாபனம் பண்ணுதலே அத்தியா வசியகம். நாம் காத்தல் வேண்டுமென அவாவும் இச்சரீரத்தை நாம் பெற்றது முத்திபெறும் பொருட்டன்றோ? சிவதூஷணம் முதலிய அதிபாதகங்களைப் பரிகரித்தற் பொருட்டுச் சரீரத்தை விடுத்தவர் முத்தி பெறுதல் சத்தியமென்பது சிவசாத்திரங்
(தை 2012)

Page 53
: களாலே சாதிக்கப்பட்டதன்றோ? அங்ங்ன மாதலின், நாம் சிவதுஷணம் முதலிய வற்றைப் பரிகரிக்குங்கால் ஒரோவழி வரற் பாலதாகிய சரீரநாசத்தை ஏற்றுக் கோட வினாலே முத்தி பெறுவேமென்பது சத்திய மாமே. ஆமெனில், முத்தியாகிய சத்தியம் சித்தித்தவழி இச்சரீரமாகிய சாதனம் இருந்தென் ஒழிந்தென்!”
-605.g.T.L. 11ub Udisasl b. ii, "கடவுள் ஒருவரே நம்மோடு என்றுந் தொடர்புடையவராய், நமக்கு நம்மினும் இனியவராயுள்ளவர்; அவருக்கே நாமெல் லாம் உடைமைப் பொருள்."
-இரண்டாம் சைவவினாவிடை 145ம் பக்கம். iv. "உங்கள் குருமாருள்ளே யோக்கி யருக்குங் கும்பிடு அயோக்கியருக்குங் கும்பிடு, யோக்கியருக்கும் பாதகாணிக்கை யானால், திருத்தம் எப்படி உணடாகும்! யோக்கியரை உயர்த்தி அயோக்கியரைத் தாழ்த்தினாலன்றோ! அயோக்கியர் தொகை குறையக் குறைய, யோக்கியர் தொகை அதிகப்படும்.”
-நாவலர் பிரபந்தத்திரட்டு 61ம் பக்கம். V. "நாங்கள் எப்படி நடக்கினும் நடப்போம் நீர் ஒன்றும் பேசாதிருக்கலாமே என்பார்க்கு, நாம் எப்படிக் கண்டிப்பினுங் கண்டிப்போம் நீர் ஒன்றும் பேசாதிருக்கலாமே என்போம். பிறர் செய்யும் அநீதிகளைக் கண்டித்தற்கு நீர் யார்! கடவுளோ அரசரோ என்பார்க்கு, கடவுள் கட்டளைக்கும் மாறாகவே பிறர்செய்யும் அநீதிகளை, அக்கட்டளைகட்கு அமைந்து கண்டித்தலாகிய நமது நீதியைக் கண்டித் தற்கு நீர் யாரோ சற்றே பேசும் என்போம். ஆகா! பல மனிதராலும் பகைக்கப்பட்டீர் இனிக் கெட்டீர் என்பார்க்கு, ஒகோ கடவுளுக் கஞ்சும் அச்சம் பெருகப் பெருக மனித ருக்கஞ்சும் அச்சம் குன்றிக் குன்றிவிடும் என்பதறியீர் போலும் என்போம்.
தை 2012)

சங்கத்தமிழ்
எவ்விதத்தானும் வாயெடுக்க ஒட்டேம் ஒட்டேம்!
- 57.55). 65 b, 66Lib usilid wi. "நம்மை நீங்கள் எப்படித் தூஷிக்கினும் உங்களுக்கு நன்மையாக முடிப்பவைகளை உங்களுக்கு வெளிப் படுத்துதற்கு நாஞ் சிறிதுந்தடைப்படா வண்ணம் சிவபெருமான் திருவருள் செய்க."
-நா.பி.தி. 65ம் பக்கம். wi. “அதி பாதகமாகிய தேவத்திர வியாபகார முதலிய பல பாதகமுஞ் செய்கிற போலிச் சைவர்கள். அதிபாதகத்திற்றாழ்ந்த அதிபாதக துல்லியத்திற்றாழ்ந்த மகா பாதகத்திற்றாழ்ந்த மகாபாதக துல்லியத்திற் றாழ்ந்த உபபாதகத்திற்றாழ்ந்த உபபாதக துல்லியத்துள் ஒன்றாகிய புலாலுணடல் செய்யுஞ் சூத்திரரில் உயர்ந்த வர்களாமோ! கெட்டி கெட்டி!"
"புலாலுணர்டல் மாத்திரம் பாவம், சிவநிந்தை முதலியவை புண்ணியமா”
-BIT. 5.5.13OLD, 131 b usassis6it. wi. "உலகறிய முற்றேFபோட்டுப் பொய்ப் பற்றுச்சீட்டுகள் தலைமைக்காரர்கள் வாங்கிச் சேர்ப்பார்களானால், யாழ்ப்பாணத்திலே சன் மார்க்கம் எப்படித் தலைப்படும்! யாழ்ப் பாணத்துக் கச்சேரி அநீதி பொய் கோள் முதலிய புத்தகங்கள் படிப்பிக்கிற கலீசு (College). Óeg5sÒG5ġ5 560D6AD6JÜ (Principal) துவையினந்துரை, உபாத்தியாயர்கள் "பாவந் தோன்றிய நாளையிற்றோன்றிய பதகன்” ஆகிய முதலியார் முதலிய சில உத்தியோகத்தர்கள்; அவைகள் படிப்பிக்கிற 5|Tg5IT usirosés Bin Lil356it (Taluk Schools) சில தலைமைக்காரர்களுடைய தானங்கள். இப்படியானால் யாழ்ப்பாணம் விரைவிலே தேவனுடைய சாபத்துக்குப் பாத்திரமாவதிற் dis(855LDIT!!!
-நா.பி.தி.146ம், 147ம் பக்கங்கள்.
(51)

Page 54
ix. "நான் இங்கிலிஷிலே அற்பவிற்பத்தி யாயினும் பெற்றிருந்தும், என்னோடு இங்கிலிஷ் கற்றவர்களுள்ளும் அநேகர் தங்கள் தங்கள் சத்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண்டும். நானும் என் சத்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்சி செய்யின் அது தப்பாது சித்திக்கும் என்றறிந்தும், அஃதில்லாமையால் விளை யும் அவமதிப்பைப் பார்த்தும் உத்தியோ கத்தை விரும்பவில்லை. தமிழ்க் கல்வித் துணை மாத்திரங் கொண்டு செயப்படும் உத்தியோகம் வலிய வாய்த்த பொழுதும் அதையும் நான் விரும்பவில்லை. கன்னியை நாயகனிடத்து ஒரு துட்டாயினும் வாங்காது வீடு விளைநிலம் தோட்டம் ஆபரணம் முதலியவற்றோடு விவாகஞ் செய்து கொடுக்கும் வழக்கமேயுடையது என் சென்ம தேசமாகவும், நான் இவ்வாழ்க்கை யிலே புகவில்லை. இவைகளெல்லா வற்றிற்குங் காரணம் சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வி யையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்."
- ஒரு விக்கியாபனம். X. "சைவசமயத்தை வளர்த்தற்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வாரில் லையே! இதற்கு யாது செய்யலாம்? சைவ சமயவிருத்தியின் கண்ணதாகிய பேரா சையை அதனை முடித்தற்குச் சிறிதும் சத்தியில்லாத எனக்குத் தந்தருளிய சிவபெருமான் சத்தியுடைய மற்றையோர் களுக்குக் கொடுத்தருளினாரில்லையே! என்று இரவும் பகலும் பெருங் கவலை கொண்டு பெருமூச்செறிதவினும் பலருக்குப் பிதற்றுதலினுமே பெரும் பான்மையும்
என்காலத்தைப் போக்குவேனாயினேன்.”
- ஒரு விக்கியாபனம்.
G52)
 

சங்கத்தமிழ்
xi. "பூர்வகாலத்திலே சைவசமய விருத்திப் பொட்டு முயன்ற பெரியோர்களுக்குச் சுவசமயிகளாலே நன்கு மதிப்பும் பரசமயி களாலே இடையூறும் செயப்பட்டன. தற்காலத் திலே சைவசமய விருத்திப்பொருட்டு முயலும் சிறியேனுக்குச் சுவசமயிகளாலேயே அவ மதிப்பும் இடையூறும் செயப்படுகின்றன. பரசமயிகளோ எனக்கு இடையூறு செய்யவு மில்லை, என்னை அவமதிக்கவு மில்லை. இஃதென்னை யாச்சரியம்!! சைவசமய விருத்திப் பொருட்டு முயலும் எனக்கு நம்மவர்களாலே அவமதிப்பும் இடையூறும் செயப்பட்டபோது, நான் தமிழ்க் கல்வியிலும் தமிழ்க் கல்வியையும் சைவசமயத்தையும் வளர்த்தற்கு வேண்டும் முயற்சிகளிலும் போக்குங் காலத்தை முன்பயின்ற இங்கிலிசிலேயே போக்கி உத்தியோகமும் செல்வமும் பெற்று நம்மவர்களாலே நன்கு மதிக்கப்படல் வேண்டும் என்று விரும்பா வண்ணம் திருவருள்சுரந்த சிவபெருமானது பெருங் கருணைத் திறத்தை மறவாதி ருத்தலே எனக்கு வாய்ப்புடைத்தாயதோர் பெருஞ் செல்வம்.”
-ஒரு விக்கியாபனம். xi. "என்னுண்மையை அறியாத மற்றவர்களுக்கு இந்தச் சிவபுண்ணிய முயற்சிகளைத் தெரிவித்தல் மாத்திரஞ் செய்கின்றேன். இதற்கு உதவி செய்யும் படி அவர்களை நான் இப்போது கேட்பதில்லை. அவர்கள் தாமே உதவி செய்வார்களாகில் அவர்களைத் தடுப்பதுமில்லை.”
-ஒரு விக்கியாபனம். xi. "பாவம் செய்பவர்களை நன்கு மதிப்பவர்கள் இல்லையாயில் பாவம் செய்ய வர்களுமிலர்; ஆதலால் பாவம் செய்பவர் களினும், அவர்களை நன்கு மதிப்பவர்களே பெரும் பாவிகள்."
-660drLIT b Urteoul.TL b5b usabb.
தை 2012)

Page 55
xiv. "அவர்களுக்கு (திருவாவடுதுறை யாதீனத்து ருரீமத் அம்பலவாண தேசிகர், சுப்பிரமணிய தேசிகர் என்னும் உபயகுரு மூர்த்திகட்கு) வித்தியாசாலையைக் காட்டி அவர்களாலே செயற்பாலனவற்றை வெகு ஐனசமூகத்திலே பிரசங்கிக்கின் அவர்கள் இனியாயினும் தங்கள் தலங்களில் இப்படி வித்தியாசாலைகளைத் தாபித்து கல்வியறி வொழுக்கங்களையும் சமயத்தையும் வளர்த்தல் கூடுமே என்றெழுந்த பேராசை யால், நான் சென்னபட்டணத்தை விடுத்த லால் எனக்கு விளையும் நட்டத்தை எட்டு ணையேனும் நோக்காது, புறப்பட்டுச் சிதம்பரத்தையடைந்தேன்."
-ஒரு விக்கியாபனம். XV. "சென்னபட்டணத்திலிருந்த பிரபு ஒருவர் தமக்குத் தாசிவயிற்றிலே பிறந்த பிள்ளை ஒன்றற்குத் தமது வீட்டிலே இவர் வந்து அகூடிராரம்பம் செய்து வைத்தால் ஆயிரம் ரூபா தருவேம் என்று இவரைக் கேட்டார். இவர் அதற்கு உடன்படவில்லை. பின்னும் அவர் வருந்தி இவருடைய சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசலைக்குப் பதினாயிரம் ரூபா தருவேம் என்றும் கேட்டார். அதற்கும் இவர் உடன்படவில்லை.” -இது சரித்திரத்தில் உள்ளது. 105ம் பக்கம்.
இவைகள் இவ்வளவின் இருக்கட்டும்.
இனி, என்னைப் பற்றியும் சிலவார்த்தை கள், நான் பாருங்கள் உபாத்தியாயர் உத்தி யோகம் பார்க்கிற ஒரு ஆள். எனக்கு என்னுடைய உத்தியோகம் உயிர். எனது உத்தியோகப் பத்திரத்தைக் கண்னை இமை காப்பதுபோலக் காத்து வருகிறேன். அதற்குத்தான் அல்லும் பகலும் பூசை. அதற்கு ஒரு இடையூறு, ஒரு "இன்கிறமென்ற் தவறுவந்தால் அதைத் தடுக்கிறதற்கு எவர்களையும் எந்த நேரத்திலும் எவ்வளவு
தை 2012
 

சங்கத்தமிழ்
கும்பிடும் போடுவேன். இன்னும் ஒரு இரகசியம். எனது சமயத்தில் எனக்கு உத்தி யோகம் போய்விட்டால், எந்தச் சமயத்திலும் நான் இறங்க ஆயத்தம். என் பகைவர் களைக் கூட அடி பணிந்து விடுவேன். எனக்கு எனது சீவனந்தான் பெரிது. அது எப்படியும் வரலாம். நல்லது. நாளைக்கு என்மேலதிகாரிகள் கள்ளுத்தான் உடம்புக்கு நல்லது தண்ணிர் கூடாது என்று படிப்பிக்கச் சொல்லட்டும். பிள்ளைகளுக்கு மாத்திரம் அல்ல, ஊர்முழுவதுக்கும் படிப்பித்து விடு வேன். இன்னுமொன்று எனக்கு ஒருவர் பதினாயிரம் நன்மை செய்தவர் ஆகட்டும். வேறொரு நன்மை வேறுவழியில் இனிவரு வதானால், அதற்காக முன் நன்மை செய்தவரை மல்லாக்கப்பண்ணி அவர்மார் பிலே, அவர் பகைவர்களோடுகூட மலசல மோசனத்துக்கும் நான் ஆயத்தம். இதில் என்ன ஐயா! பிழை. இதுதானே உலகம். முசோலினிமாமாவைப் பாருங்கள். ஹிட்லர் என்ன செய்கிறார். ஏன்? பழைய காலத்தில் பாரதத்தில் சகுனிமாமா இருந்தார். அவர் ஒரு கட்டையர்; யப்பானியர். அவருக்குச் சாவில்லை. அவர் இப்பொழுதும் எங்கே யாவது இருப்பார். பாலைப் பாராமலிருக் கின்ற பூனைபோல, உலகத்தைப் பாராத மாதிரி அவர் கண்ணைமூடிக் கொண்டி ருப்பார். அந்தக்காலமென்ன! இந்தக்கால மென்ன! எல்லாம் ஒன்றுதான் ஐயா! இப்படி யெல்லாம் இருக்க என்னிடம் மாத்திரம் என்ன குற்றம்! எனக்கு இனி அடுத்த நேரச் சோறுதான் பெரியது.
இத்துணைப் பெருமையிற் சிறந்த நான், என்னுடைய ஹிருதய பங்கஜத்திலே, ஒரு நாவலர் பெருமானைச் சங்கற்பித்தால், அந்தப் பெருமானுக்கும் மேலே காட்டிய நாவலர் அவர்களுக்கும் சந்தித்துவருமா? ஒத்துப்பாருங்கள்.
(53)

Page 56
::
i. யாரோ சில பாதிரிமார்கள் சிவ துTஷணஞ் செய்து போட்டார்களாம். அதற்காக இச்சரீரம் இருந்தென் ஒழிந்தென்! என்கிறார்கள் நாவலர் அவர்கள். இது என்ன பைத்தியம்! யாராவது தூவுதித்தால் நமக் கென்ன, நான் சங்கற்பிக்கும் நாவலர் பெருமானை, இப்படிப்பைத்திய விஷயத்தில் இறங்க விடுவேனா! சிந்தித்துப் பாருங்கள்.
i. நாவலர் அவர்களுக்கு நல்ல இங்கிலிஷ் வரும். அந்த நாட்களில் எந்த உத்தியோகமும் பெற்றிருக்கலாம். சட்ட சபைக்குக் கூடப் போயிருக்கலாம். கொஞ்சம் அரசாங்கத்தை அணைத்துவைத்திருந்தால், இப்பொழுது சாமிநாதையர் பெற்ற பட்டங் களுக்கு மேலே பெற்றிருக்கலாம். என்ன வீண்வேலை செய்துவிட்டார்கள் போங்கள்.
i. திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிக சுவாமிகளைப் பாராட்டாத தமிழ் வித்துவான் கள் தமிழ் நாட்டில் இல்லை. இப்பொழுதுங் கூட டாக்டர் சாமிநாதை யரவர்கள் தேசி கரைப் பாராட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தேசிகரை வெகு ஐனசமூகத் திலே திருத்த முற்பட்டதாக நாவலர் அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களுடைய வாய்க் கொழுப்பைப் பாருங்கள். இதனாலேதான் போலும் மகாவித்துவான் மீனாகூழிசுந்தரம் பிள்ளையவர்கள், நாவலர் அவர்களுக்குச் சிறப்புப்பாயிரம் கொடுப்பதைத் தமக்குப் பெருமையாகக் கொண்டபோதும், டாக்டர் ஐயரவர்கள் அப்படி விடாமல், நாவலரவர்கள் பிள்ளைய வர்களிடம் சிறப்புப்பாயிரம்
விரு சிவசமய கமலமதைத் தமிழ்நா Lj6)ILDupb Smálögoglöp LP&LD! தவநெறியாந் தேரினிடைத் தனி னவமகல வுலகுபெறு மாறுமுக
- கொக்குவி
 

சங்கத்தமிழ்
வாங்கத் தவண்டையடித்தார்கள் என்று எழுதியிருக்கிறார்கள். ஏன் உந்த இந்துக் கல்லூரியிற் படிப்பிக்கும் சாத்திரியார் ஒரு வரும் அப்படித்தான் சொல்லுகிறார். நாலுமணிசர் நடக்கிறதுபோல நடக்கத்தெரி யாத நாவலர் அவர்களுக்கு இப்படித்தான் வரணும் வரணும்!
ஏன்! ஏசெண்டரைப் பற்றிச் சும்மா விட்டார்களா! கச்சேரியைப் பற்றித்தான் எவ்வளவு ஏச்சு இப்படிப்பட்ட நாவலரவர்கள் eeu uJa56fLLİd வாங்கித்தான் (Uppug09)JLD.
iv. அப்பாடா! அந்த நாட்களில் பதினாயிர மென்றால் எவ்வளவு தொகை. ஒரு தாசி பிள்ளைக்கு அகூடிராரம்பம் செய்து வைத்து விட்டுப் பதினாயிரத்தை இரண்டு கைகளை யும் நீட்டி வாங்குகிறதற்கு எந்தப் பைத்தியக் காரன்தான் பின்வாங்குவான். இப்படிப் பெருந் தொகைகளை உதறித்தள்ளிவிட்டுத் தானே, சைவஸ்தாபனம், தமிழ்ப்பரிபாலனம் என்று நவாலரவர்கள் மார்பிலடித்தவர்கள். ஐயையோ! வலியவந்த சீதேவையைக் காலால் தள்ளிவிட்டார்களே! இன்னும் இப்படி எத்தனை தொகைகளை உதறித் தள்ளி விட்டார்களோ! ஆர்கண்டது.
இனி, எந்தச் செயலை எடுத்தாலும் இப்படித்தான் போகும். நான் சங்கற்பிக்கும் நாவலர் பெருமானுக்கும், அந்த உண்மை யான நாவலர் அவர்களுக்கும் ஒரு மயிரிடையும் ஒத்து வராது. இதனாலேதான் நான் அந்த முடிபுக்கு வந்தேன். அவர்களைப் பற்றி ஒன்றுஞ் சொல்லமுடியாது. *
நத்தம் டாந்திருமடுவிற் செறித்தலர்த்திப் ப விருள்கடமைப்பதறவோட்டித் ரியூர்ந்து தற்பரனா மாழிசார்ந்தா
நாவலனா மவுலியோனே. ல், திரு.ச.சபாரத்தினப்பிள்ளை அவர்கள்.
(தை 2012)

Page 57
தமி
(பல்லாவரம் பொதுநிலை
இலக்கண இலக்கியப் பிழைகளும் அச்சுப் பிழைகளும் இல்லாமல் உயர்ந்த தமிழி லக்கண இலக்கிய நூல்களையுஞ் சைவ சமய நூல்களையும் பதிப்பிட்டுதவுவார் அரிய ரான எமது இளமைக் காலத்தில் ஆறுமுக நாவலரவர்களே அந்நூல்களைப் பிழையறப் பதிப்பித்து உதவினவர்கள். எழுத்துச் சொல் லாராய்ச்சிக்கு நாவலரவர் கள் தாம் நன்னூலுக்கு வரைந்த அரிய காண்டிகையுரையும், தொல்காப்பியச் சொல்லுக்குச் சேனாவரையர் வரைந்த சொற் பொருட்டிட்யம் வாய்ந்தவுரையும் அவர்களாற் பதிப்பித்து வெளியிடப்படாவிடில் எம்போல் வார் அஞ்ஞான்று தமிழிலக்கணவறிவு பெறுதல் இயலாமலே போயிருக்கும். இலக்கி யத்திலும் திருச்சிற்றம்பலக் கோவையா ருரையுந்," "திருக்குறள் பரிமேலழகியா ருரையும்” அவர்கள் திருத்தமாக அச்சிடு வித்து வெளியிட்டமையினாலே தான், யாம் நம் பண்டைத் தமிழின் மாட்சியுந் தமிழாசிரி யரின் தன்னிகரில்லாத தெய்வப்புலமையும் ஒருங்குனர்ந்து மேலுமேலுந் தமிழ்நூல் கற்பதில் அடங்கா வேட்கையுற்றேம்.
சபாப் பிரசா "சைவதுஷண பரிகார நிராகரண
நாயன்மார்ரென்னும் சொல்வழக்கின் ம என்னும் பொய்ப் பெயர் புனைந்த பத்த அவற்றினை எழுதினவர்களையும் எப விஷயங்கள் உண்மைதானென்று அறிஞ சபாப் பிரசங்க சிங்கமாகிய முறி ஆறுமுக எதிரிலிருந்து வார்த்தையாடமாட்டாய மையையும் யாமறிவோம்"
தை 2012 H

ழ்மக்களின் வருங்கடமை.
க்கழக குரு, சுவாமி வேதாசலம் எனும் மறைமலையடிகள் அவர்கள்.)
இனி, இவையெல்லாம் கற்றும் வீட்டுநூல் தனிப்படக் கல்லாக்காற் பயன் என்! அதற்கும் பேருதவியாகச் சிவஞானபோதச் சிவஞான முனிவரின் சிற்றுரையினையும் ஆறுமுக நாவலரவர்களே அச்சிட்டுதவியிருந்தார்கள். இவ்வாறெல்லாம் நாவலரவர்கள் அக்காலத் தில் ஆற்றிய தமிழ்த் தொண்டு சிவத்தொண்டு களின் மாட்சி அளவிடற்பால தன்று.
உரையெழுதுந் திறத்தில் நாவலரவர்கள் மிகச் சிறந்தவர்களென்பது அவர்கள் திருத்தொண்டர் புராணம் "என்னும் பெரிய புராணத்திற்கு” எழுதிய கசனத்தால் நன்கு விளங்கும்.
சொல்வன்மையிலும் நாவலரவர்கள் அக்காலத்தில் தமக்கு நிகராவார் எவரு மின்றித் திகழ்ந்த வரலாறு எம்மாசிரியர் முறிலழுநீ சோமசுந்தரநாயகரவர்கள் எமக்கு நேரே சொல்லக் கேட்டோம். இன்னும் எத்தனையோ வகையால் தமிழுக்குஞ் சைவசமயத்திற்கும் விழுமிய தொண்டாற்றிய ஆறுமுகநாவலரவர்களைத் தமிழ் மக்கள் அனைவரும் எஞ்ஞான்றும் நினைந்து வாழ்த்துதல் அவர்கட்கு இன்றியமையாப் பெருங் கடமையாகும்.*
ங்க சிங்கம்
சுப்பிரதீபம்” என்னும் புத்தகத்தையும், றுதலையாகிய "வழக்கின்மேல் வழக்கு” ரிகையையும் நாமும் பார்த்துள்ளோம். க்குத் தெரியும். இவர்கள் தாமெழுதிய நர் சபையில் நிலைநாட்டிக் கொள்ளும்படி நாவலர் அவர்கள் வலிந்தழைத்தபோது ல் இக்கவியானைகள் இரிந்தோடின
-தத்துவவிசாரணிப் பத்திராதிபர்.
(55)

Page 58
நாஉ
(வெள்ளவ
சர்த்தசாட்குண்ணிய கருணாநிதியாகிய சிவபெருமான், ஆன்மாக்கள் தம்மை வழிபட்டு உய்யவேண்டுமென்று தம்முடைய திருவுள்ளத்தே முகிழ்ந்த பெருங்கருணைத் திறத்தாற் கொண்டருளிய அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்திருமேனிக்குச் செயப்படுஞ் சிவார்ச்சனையைப் பெரும் பொருளெனக் கொண்டு, அதனையே பெரு விநோதமாகவுடைய சிவஞான பூசாயோகச் செல்வரும் புறச் சமயமாகிய யானைக ளெல்லாவற்றையும் பாழ்படச் செய்த பரசமய கோளரியும், பிரசங்கங்கள் வாயிலாக அஞ்ஞானப் பேரிருளை ஓட்டெடுப்பித்துச் சைவசமயத் தாபனஞ் செய்த சிவஞான சூரியோதயமும் செந்தமிழ்ப் பரமாசாரியரு மாகிய முறிலழுநீ. ஆறுமுகநாவலரவர்கள் 1879ம் ஆண்டுக்குச் சரியான பிரமாதி வருஷம் கார்த்திகை மாதம் 21ந் திகதி சுக்கிரவாரத்திரவு பத்து நாழிகையாகிய புண்ணிய காலத்தில் முறி சிதம்பர சபாநாய கருடைய குஞ்சித பாதத்தின் கீழ்ப் பிறந்திற வாப் பேரானந்தப் பெருவாழ்வாகிய பரிபூரண திசையையடைந்தனர்.
அவரது பிரிவால் "தமிழ்நாடு தன்சிர மிழந்தது; நாமகளும் தன் மங்கிலிய மிழந்தாள் யாழ்ப்பாணம் தன் அங்கமனைத் தினும் பங்கம் பெற்றது; பொதிய மலை சாய்ந்தது; திராவிட சாகரம் வற்றியது; வேதமாகிய போதனாசமுத்திரம் வறண்டது: கொடை மேகங்கள் யாவும் ஒட்டெடுத்தன. முறி.குமாரசுவாமி இறந்ததால் தமிழ்நாடு தன் கரமிழந்தது; முறிலழுநீ நாவலரவர்களிறக்கத் தமிழ்நாடு தன் சிரமிழந்தது; ஓதுவார் தேவாரமோத, இன்னும் ஒதுக ஒதுகவெனச் சொல்லச் சொல்லி அம்மதுரமொழி
G56)

லர் இறந்தபின் நடந்தவை
த்தை. திரு.மு.இராமலிங்கம் அவர்கள்.)
தஞ்செவியுட் தெவிட்டத் தமது ஆன்மாவை விடுத்தார். இருதினங்கட்கேனும் வருத்தமா யிருந்திலர். அவரது பினச்சடங்கு அடுத்த நாளிரவு 12 மணிவரையில் நடந்தது: அவரைத் தகனஞ் செய்தது சந்தனக்கட்டை களினாலே" என்பன போன்ற வசனங்களை 1879ம் ஆண்டு மார்கழிமாதம் 10ந் திகதி வெளிவந்த "இலங்கைநேசன்" என்னும் பத்திரிகை கூறிப் பிரலாபித்தது.
அன்று தொடக்கம் அடுத்த வருடம் கார்த்திகைமாதம் 24ந் திகதி வரையும் வெளிவந்த ஒவ்வொரு இலங்கை நேசன் இதழிலும் பின்வரும் விளம்பரம் வெளி வந்தது. “உத்தம சத்தம குணாதிசயங்கட்கு ஆதாரபீடமாய், ஆரிய செந்தமிழை உண்டு கர்ச்சனை செய்யும் கலைஞான மேகமாய், விநயபூசனை நியம விரத செப தியானாதி களில் வழுவாதொழுகும் சிவாசாரியரும் மகானுபாவருமாகிய விதாம்பர முரீலழுநீ ஆறுமுகநாவலர் அவர்கள், பிரமாதிவருஷம் கார்த்திகைமாதம் 21ந் திகதி சுக்கிரவாரத் திரவு பத்துநாளிகையாகிய புண்ணியகாலத் திலே, தேகவியோகமடைந்துவிட்டார்கள்.”
நாவலரவர்கள் தேகவியோக மடைந்த போது உடுப்பிட்டி, திரு.அ.சிவசம்புப்புலவர வர்கள் பாடிய சரமகவியில் ஒரு கவியை மாத்திரம் எடுத்துக் காட்டுதும்.
என்பிரபந்தங்கள்கேட்டுப்
புலவரெனப் பெயரீந் தன்பிரியன் மற்பரிசு
செயுமென்றவற்றைந்தெவர்க்கு நன்பிரியத்திற்றலைமை
யெலாந்தநதநாவலனா ரின்பிறவாநிலத்துற்றா
ரினித்துணையாரெமக்கே.
(தை 2012)

Page 59
வட்டுக்கோட்டை, திரு.மு.ஆறுமுகம் பிள்ளை உபாத்தியாயரவர்கள் பாடிய சரமகவியினொரு பகுதியை மாத்திரம் ஈண்டெடுத்துக் காட்டுதும்.
பாரேறு பரசமய கோளரி யெனத்திசைகள்
பரவியே நிறுவு புகழான் பங்கயத் தவனைநிகர் மீனாட்சி சுந்தரன்
பன்னுகலை துண்னு புலைமைப் பண்டுநற் பாவாணர் விண்டசொற் பாமாலை
கொண்டபாண் டித்திய சீலன் பரசுறு மிலக்கண விலக்கியக் கடலுண்டு பாரின்மிசை பொழியு மேகம் பசுபதி யிலக்கணம் பாண்டித்திய நீதிநூல்
பாரித்திய பொக்கிஷ கூடம் பன்னரிய சுந்தரப் பிரசங்க வாசால
பரமயோக் கியசு மேரு.
வண்னாப்பண்ணை, திரு.உ.வைத்திய லிங்கச் செட்டியார் கேள்விப்படி சுன்னாகம், திரு. அ.குமாரசுவாமிப்பிள்ளையவர்கள் பாடிய சரமகவியில் ஒரு கவியை மாத்திரம் எடுத்துக் காட்டுதும்.
கல்விக் களஞ்சியங் கற்றவர்க் கேது கருணைவள்ளல் சொல்லித் துவப்பிர சாரகன்
பூதி துலங்குமெய்யன் நல்லைப் பதியின னாறு
முகப்பெரு நாவலனுந் தில்லைப் பதியின் நடராசன்
சேவடி சேர்ந்தனனே.
நாவலரவர்கள் தேகவியோகமானது கேள்வியுற்றதும் திரு.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் சென்னபட்டணத்திலிருந்து "இலங்கைநேசன்" பத்திரிகைக்கு 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் எழுதியனுப்பிய செய்யுட்களில் நான்கை ஈண்டெடுத்துக் காட்டுவாம்.
விருத்தம் வேதம்வலி குன்றியது மேதகு சிவகாம
விதங்கள்வலி குன்றினவடற்
தை 2012)
 

சங்கத்தமிழ்
சூதன்மொழி மூவறு புராணம்வலி குன்றியது
சொல்லரிய சைவசமயப்
போதம்வலி குன்றியது பொற்பொதிய மாமுனி
புகன்றமொழி குன்றியதுநம்
நாதனினை ஞாலமிசை நாடரிய ஆறுமுக
நாவலர் இறந்தபொழுதே.
சிலேடைக் கலித்துறை. தகைசேர் தமிழ்க்குத் தனிமுதல் வன்கந்த வேற்குமர னகுவே றலமிசை யான்றல
வோன்குரு நல்லையறு முகநா வலணர னார்க்கினி
யான்புகழ் மொய்ம்பனிப்பார் இகல்சூர் மதப்பகை செற்றிச
னாருல கெய்தினனே.
நகடித்திர வெண்பா. கார்த்திகை மாதத்து மகங் காசினிக்குச்சைவ நிலை சேர்த்திப் பரசமயஞ் சேதித்துச் - சீர்த்திமிக மேவுதமிழ் தந்தகந்த வேனல்லுர் ராறுமுக நாவலர்வீ டுற்றதிரு நாள்.
குறள். நாயனார் நாற்குரவர் நாவலர் தென் ஞாலமுய்ய மேயினா ரீசனருண் மேல்.
வண்ணார்பண்ணை, திரு.வை.ஆறு முகம்பிள்ளை அவர்கள் கேள்விப்படி, சிவசம்புப் புலவர் அவர்கள் மாணாக்கர் ஆவரங்கால் திரு.சு.நமச்சிவாயபிள்ளை அவர்கள் பாடிய சரமகவியில் ஒன்றெடுத்துக் காட்டுதும்.
பண்டிதர்கள் மாண்பகலப் பட்டாரே
பாரிடத்தில் மண்டுகலை வாணியும்பின் வாங்கினளே
தொண்டரெல்லாம் தம்மாவி யற்றார்போற் சார்ந்தாரே ஆறுமுகப் பெம்மானே நீபிரிந்த பின்.
188Oம் ஆண்டு தைமாதம் எழாலைச் சைவ வித்தியாசாலை உபாத்தியாயரா
(57)

Page 60
யிருந்த சுன்னாகம், திரு.அ.குமாரசுவாமிப் பிள்ளை அவர்கள் இலங்கைநேசன்" பத்திரிகைக்குப் பாடியனுப்பிய செய்யுட் களுள் மூன்றை ஈண்டெடுத்துக் காட்டுதும்.
பத்திரிகைத் தலைவர்க்கு வெண்பா ஆசில் நடுநிலமை ஐக்கியம் முக்கியம் பேசும் விடாமுயற்சி பெற்றலங்கை - நேசனெனும் பத்திரிகை மன்னா பரிவாய் இடந்தருவாய் இத்தனிப்பா மூன்றுக்கும் எற்கு.
முன் மடக்குப் பின்முடுகு வெண்பா. சைவப்பிர காசனர்கள் தம்வா யினிதடக்குஞ் சைவப்ர காசவித்யா சாலைமன்னன் -
உய்வடைந்தான் அர்க்கணக்கி னிக்கனத்தன் அத்தமுத்தமிக்கருளும் பர்க்கணக்க னக்கன் பதத்து.
பின்முடுகு வெண்பா. என்கடிதம் என்கவிதை யார்க்கும் இனிதென்று நன்குறவு பாராட்டு நாவலனார் - எங்கேயோ கங்கைமுடிச் சங்கரன்பொற் கஞ்சமலர்ச் செஞ்
சரண்விட் டிங்குவரு வுங்கருத்தோ என்.
1880ம் ஆண்டு தைமாதம் 3ந் திகதி வெளிவந்த இரங்கூன் ‘சிந்தாமணி, “இவ்விலக்கணத்திற் கிலக்கியம் எவ்வுபூழி யிருக்கின்றதென்பதும், இவ்விலக்கியத்திற் கிலக்கணம் எவ்வயின் பெறலாமென்பதும், இச்சமயநெறி எவ்வாகமத்திற் கண்டிருக் கின்றதென்பதும், யாழ்ப்பாண நாவலரைக் கேட்கிற றெரியுமெனச் சொல்லும் புலவோர் கள் இனி யாரைக் குறித்துக் காட்டுவாரோ! அந்தோ! அவரைப்போன்ற தமிழிலக்கண விலக்கியச் சைவாகம இலக்கி வேறோருவர் இந்நாளிலில்லையே!” எனக் கூறிப் பிரலாபித்தது.
நாவலரவர்கள் தேகவியோகமானது கேள்வியுற்றதும் அக்காலத்தில் கும்ப கோணத்துப் பொற்றாமரைவாவிப் பிறை
G58)
 

சங்கத்தமிழ்
G3LDgöl6ö8.6öl6ö (Primary School) göLğlup உபாத்தியாயராயிருந்த சுன்னாகம், திரு.பூமுருகேச பண்டிதரவர்களாற் பாடி இலங்கைநேசன்" பத்திரிகைக்கு 1880ம் ஆண்டு மாசிமாதம் அனுப்பப்பட்ட செய்யுட் கள் ஒன்பதில் இரண்டை ஈண்டெடுத்துக் காட்டுதும். ஏனையவற்றை விரிவஞ்சி 6G6556OTLb.
6660cr Lut ஆறுமுக நாவலனை ஆருமுன ராப்பொருளைத் தேறுமுகங் கொண்டு தெளிந்தானை - ஆறுமுகம் என்றிருக்க ஓர் முகமும் எங்களுக்குத் தோற்றாமற் சென்றொளித்தான் அன்றே சிவா.
திங்களனி செஞ்சடையான் தேவனென வந்ததுவும் அங்கவணுல் நூலா யமர்ந்ததுவும் - எங்குமிசை கொண்டியாழ்ப் பானங் குலாவியதும் ஆறுமுக அண்டர்பிரான் வந்தபின்பே யாம்.
யாழ்ப்பாணத்துச் சைவப்பிரகாச வித்தியா சாலை மனேசரும் ஆதீனருமாகவிருந்த நாவலரவர்கள் தேகவியோக மடைந்துவிட அவ்வித்தியாசாலைக்கு மனேசராக திரு.சதாசிவம்பிள்ளை என்பவரைப் பகிரங்க வித்தியா தரிசனகர்த்தர் ஏற்றுக் கொணர் டாரென "இலங்கைநேசன்' பத்திரிகையாலறிகின்றோம்.
நாவலரவர்கள் தேகவியோகமானது கேள்வியுற்றதும் அவர்கள் மாணாக்கராய்ச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் அத்தியா பகராய் இருந்தவரும் அக்காலத்தில் திருவனந்தபுரத்தில் கீர்வாண பாஷாப்பி யாசஞ் செய்தவருமாகிய திரு.சி.செந்திநாத ஐயரவர்கள் "சந்தேச பத்திரிகை வழியாக 1880ம் ஆண்டு மாசி மாதம் அனுப்பப்பட்ட செய்யுட்கள் நான்கையும் ஈண்டெடுத்துக் காட்டுதும்.
(605 2012)

Page 61
ിഖങ്ങtur வன்றொண்டன் நாவலர்கோன் வாழ்வா வதுமாயம் என்றுரைத்த தேவாரத்தின்பொருளை - நன்றியுடன் சிந்தைசெய்தேன் நாவலனே செத்தாய்நீ
என்பதனாற் புந்திநொந்து துக்கமிக்க போது.
நன்னடக்கைப் பத்திரிகை நாவலனே நீயனுப்ப எண்ணதவஞ் செய்தேனோ நானறியேன் -
அன்னதனுள் உள்ளசில வாசகங்கள் உற்றுனரும் போதெல்லாம் வெள்ளம் பொழியும் விழி.
சுன்னைக் குமார சுவாமியிடத் தோர்கடிதம் உன்னைக் குறித்தனுப்பி யுள்ளுவந்தேன் - அன்னதுன்பாற் சேருமுன்னம் நாவலனே சென்றாய் சிவலோகம் யாரும் பதைபதைக்க இங்கு.
கட்டளைக்கலித்துறை. தேவாரம் யான்சொலக் கேட்டு மகிழ்ந்து சிரத்தையுடன் பூவாதி கொண்டு புரிசிவ
பூசைப் பொலிவழகும் பாவாணர் மெச்சச் செயும்பிர
சங்கமும் பார்த்தினிநான் நாவார வாழ்த்திடு நாளுமுண்
டோநல்லை நாவலனே.
1880ம் ஆண்டு மாசி மாதம் 9ந் திகதி கண்டியில் வசித்த திரு.இ.சரவணமுத்து ஒவசியர் பாடியனுப்பிய இரு செய்யுட்களில் ஒன்றைக் கீழே காண்க.
கம்பன் கலங்குங் கவிக்காள மேகங் கரங்குவிக்கும் வம்புரை கூறும் ஒட்டக்கூடத்
தனும்மத வாயொடுங்கும் அம்புவி போற்றும் ஆறுமுக
நாவல னாங்குரவன் இம்பர்அன் றுற்றிடின் எண்செய்யு மோபுக ழேந்தியுமே.
தை 2012

சங்கத்தமிழ்
கொக்குவில், திரு.குகதாசன் அவர்கள் பாடிய தனிச்செய்யுட்களிலே இரண்டை ஈண்டெடுத்துக் காட்டுதும்.
வெண்பா. தொல்லைமறை நாலோ தோமில் சிவாகமமோ நல்லைநகர் ஆறுமுக நாவலர்வாய்ச் -
சொல்லமிர்தோ சித்தியுடைத் தென்னாச் சிந்தைசெயிற் பின்னையதே எத்திதியுஞ் சித்திபடைத் தென்.
கலித்துறை. நாமக ணாவிற் பயிலுகை
பாவலர் நாண்முகனாய்த் தேமரை மாதிடஞ் சேர்தலி
னாற்றிரு மாலவனாய் மாமறை ஆகம போதனை
ஊட்டலின் மாணரனாய் பூமிசை மேவிய நாவல பூபதி போயினரே.
திரிகோணமலை உற்றதுரைப்போன் கூறிய தனிக்கவிகளுள் ஒன்று வருமாறு.
சீர்கொண்ட சிறீசிறீ ஆறுமுக
நாவலனைத் தென்பால் வைகும் பேர்கொண்ட மலயமுனி காணுமா
றழைத்தனனோ பெருமை கேட்டுக் கார்கொண்ட முகில்வாகன் பொன்னுலகுக்
கழைத்தனனோ கவின்கொள் கங்கை நீர்கொண்ட சிவன்றன்பா லழைத்தனனோ
யாதென்று நிகழ்த்து வோமே.
ஆ.ஆ. அவர்கள் பாடிய தனிக் கவிகளுள் ஒன்றை ஈண்டெடுத்துக் காட்டுதும்.
சீராருந் தில்லைக் கனக சபாபதி செய்தவிந்தப் பேரார் கருணையை யென்னவென் பேந்திருப்
பேருலகில் ஏராருங் சைவம் வளர்த்திட்ட நாவல
னெண்குருவைப் பாரார் புகழ்ந்திடத் தம்மொளி யோடுறப்
uങ്ങിങ്ങിങ്ങ്(8ങ്ങ.
(59)

Page 62
புலவரிருவர், வித்துவ சிரோன்மணி யாகிய திரு.சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும், திரு.அ.சிவசம்புப் புலவரவர் களும் ஒருவருக்கொருவர் பாடியனுப்பிய பாடல்கள் மூன்றை1880ம் ஆண்டு பங்குனி மாதம் 10ந் திகதி வெளிவந்த "இலங்கை நேசன்" பத்திரிகையிற் கண்டபடி எடுத்துக் காட்டுகின்றாம்.
கலித்துறை. ஆரூர னில்லையெண் காரிகை
யாலிவ் வவனிதொழப் பேரூறு மாறு முகநா
வலர்பெரு மான்பெருமை சீரூறு மாறு தெரித்தாய்
சிவசம்பு தேசிகநிற் காரூரி நேரின் றன்றோநின்
சொல்வன்மை யறிந்தனனே.
கற்றாரைக் கற்றவர் காமுறு
வாரெனக் கண்டமொழிக் குற்றா யிலக்கிய மாகவெண்
பாவை யுவந்துகவி சொற்றாய தென்றலைக் கண்ணதென்
னுன்னன்பு தொடர்ந்துகொண்டேன் மற்றா ரெனக்கிணை தாமோ
தரம்பிள்ளை மாணிக்கமே.
மன்னருத் தியோகமும் வான்கலை யாவும்பொன் மன்றுடையான் பொன்னடிப் பூசையு நீதியு
மெய்யும் புகழுமுத லின்னவெல் லாங்கொண்ட தாமோ
தரம்பிள்ளை யென்னும்வள்ளால் நென்னலி லெய்திக்கண் டேனின் றிருமுக நேசத்தினே.
தேடக் கிடையாத சஞ்சீவியாகிய ருநீ நாவலர் தேகவியோகமெய்தினரென்னுந் தீயசொல்நாம் கேட்டபோதுமதிமயங்கிநாம் புலம்பிய புன்கவியொன்று கீழ்க்காண்க.
G60)
 

சங்கத்தமிழ்
ஆறுமுக நாவலரே ஆறுமுகா நா வேலவரே ஆறுமுக மேலவரே அற்றலரே - ஆறுமுகந் தேடி யொழிந்தீரே தேடில் கிடையாநீர் தேடி யழகற்றோர் தினம்.
இக்கவியில் தவறிருந்தாலும் கல்விமான் கள் “மதிமயங்கிப் புலம்பிய" தெனக் குறிப்பிட்ட படியால் கவனியார்களென் றெண்ணுகிறோமெனச் சிங்கப்பூர் தங்கைநேசன் என்னும் பத்திரிகை கூறிற்று இஃது. 17-03-1880 இலங்கைநேசனிற் கண்டது.
புலோவிப் பசுபதீசுவரசுவாமி கோயி லருச்சகருள் ஒருவராகிய பிரமழுநீம.முத்துக் குமாரசுவாமிக் குருக்கள் பாடல்களுள் குறள் வெண்பாவை மாத்திரம் காட்டுவாம்.
நனியார்கீ ராறுமுக நாவலனார் போலிங் கினியா ரினியா ரெமக்கு.
உடுப்பிட்டி, பிரமழுநீ ச.இராமனாதக் குருக்களின் பாடல்களுள் இரண்டை ஈண்டெடுத்துக் காட்டுதும்.
பாணியும் பொற்பொதியப் பண்ணவனும்
பாண்மதியார் வேணியர னாரருளான் மேவியொன்றாய் -
நீணிலமே லாறுமுக நாவலனா மான்றகுரு வாயமர்ந்திட் டேறினர்பே ரின்பமுத்திக்கே.
சொல்லிறைக்கும் வாதவூர்த் தோன்றலுக்குஞ்
சுந்தரற்கு மொல்லுமெண்பத் தென்றெண்ணான் கோரறுமூன்
- றெல்லையரு ளார்சண்பை யற்கீரெட் டாறுமுக நாவலர்க்குத் தீர்வைம்பத் தேழென்றே தேர்.
முரீலழுநீ நாவலரவர்கள் சிவபதமடைந்த பின்பு சைவப்பிரகாச வித்தியாசாலையிலே சைவப் பிரசங்கம் முதலிய சமயவிருத்திக் குரிய கருமங்கள் காலந்தோறும் செய்யப்படா
(Googs 2012)

Page 63
re தொழிந்தமைபற்றிச் சிந்திக்கும் பொருட்டு 188Oம் ஆண்டுக்குச் சரியான விக்கிரம வருஷம் சித்திரை மாதம் 6ந் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் இலங்கைநேசன்" அச்சுக் கூடத்தில் ஓர் விசேஷ மகாசபை "இலங்கைநேசன்" பத்திராதிபர், திரு.H.M.சின்னத்தம்பி அவர் களாற் கூட்டப்பட்டது. வட்டுக்கோட்டை ருநீ.நா.சிவசுப்பிரமணிய ஐயரவர்கள் அக்கிராசனாதிபதியாயிருந்து சிவஸ்துதியும் சபையோர்க்கு வந்தனமும் கொடுத்தார். உடனே பத்திராதிபர், திரு.H.M.சின்னத்தம்பி எழுந்து நாவலரவர்களுடைய தேகவியோ கத்தைக் குறித்துக் கல்லுங்கரையும்படி சிறிதுநேரம் பிரலாபித்துப் பலதேசத்தின் கண்ணிருந்து பாடி அனுப்பப்பட்ட சரமகவி களை அக்கிராசனாதிபதியால் வாசிக்கப்பட்ட பின் நாவலரவர்களைப் பின்பற்றிச் சைவசமயாபி விருத்திக்கேற்ற சைவப்பிர சங்க முதலியவற்றைச் செய்யக்கடவோ மென்று பேசி முடித்தார். பின் நாவலரவர் களின் மாணாக்கன் வட்டுநகர், திரு.அம்பல வானபிள்ளையும், வண்ணார்பண்ணை, திரு.மாணிக்கம் என்பவரும் பத்திராதிபதி பேசியவற்றைத் தழுவிப் பேசினர். கூட்டம் முடியும் சமயம் வல்வை, இயற்றமிழ்ப் போதகாசிரியர் திரு.ச.வைத்திலிங்கபிள்ளை தம் மாணாக்கரோடுவரச் சபாநாயகர் போதகாசிரியரைச் சில விஷயம் பேசும்
நாவலர்
நற்ற வத்தர் நவின்ற கற்றுணர் கந்த வேட
துற்ற தென்றமிழுஞ் பெற்றிடப் பெரும் பேறு
தை 2012)
 
 

சங்கத்தமிழ்
வண்ணம் கேட்க அவர் நாவலப் பெரு மானது புகழைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்றபடி பேசிமுடித்தார். அன்று தொடக்கம் தமிழ்ப் பிரபல்ய வித்யாசங்கம் என ஓர் சங்கம் இலங்கை நேச முத்திரா கூடிரசாலையிலே தொடக்கம் பெற்று ஒவ்வொரு சுக்கிரவாரந்தோறும் நடைபெற்று வந்தது.
மேலே காட்டிய புலவர்களைவிட, நீர்வேலி, திரு.சிவப்பிரகாசபிள்ளை; பிரமழுநீ மு.கணேசையர்; கொழும்பு, பிரமழுநீ கு.முத்துச்சாமிக் குருக்கள்; கோப்பாய், பிரமழுநீ இ.செகநாத ஐயர்: கோ.க.முதலி யோரும் நாவலப் பெருமான்மீது பாடியிருக் கின்றார்கள். விரிவஞ்சி அவைகளை விடுத்தனம்.
1880ம் ஆண்டு கார்த்திகை மாதம் 21ந் திகதி கரல் விசுவநாதபிள்ளையும் பரலோக யாத்திரை பண்ணினார். அவர்மீது திரு.சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் பாடிய கவிகள் நான்கினுள் மூன்றாவது நாவலரையும் குறிப்பதாலும் அக்கவியின் சொல்நயம் பொருணயம் பற்றியும் அதனையும் ஈண்டெடுத்துக் காட்டி இச்சிறு கட்டுரையை முடிப்பாம்.
ஆறுமுகநாவலரையன்றழைத்தார்போதாதோ வீறுவிஸ்வநாதனையும் வேண்டினார் -நீறுதிகழ் சைவந்தனையங்குந்தாபிக்கவோவிவர்கள் கைவந்தவர்களெனக் கண்டு.
பேறு
நன் நூன்முறை வத் தாற்பிறந் சைவ முந்திறன் லுயர் நாவலன்.
- நா.பொன்னையா.

Page 64
முநீலசிறி ஆறுமுகநாவ
கலாபூஷணம்-பன்மொழிப்புலவர்த
6660
நல்லைநகராறுமுகநாவ6 தொல்லை யுலகில் தமிழ்6 ராசன் திருவருளால் சங்க ஆசான் அவரே அறை.
தமிழுடன் சைவம் தழைச் அமிழ்தான தொண்டு மார் யாழில் இனிதுற யார்த்த & ஊழிதொறும் ஊற்றாய் உ
ஆண்டு பலவாக ஆற்றிய மீண்டும் நினைவில் மிளி சங்கம் எடுக்கும் தனிப்பே பொங்கும் புகழும் பொலிந்
சங்கத் தமிழ்மணம் சேர்ந் துங்க மலரும் துலங்கிடே மக்களும் கூடி மனமகிழு மிக்கொலிக்க வாழி மகிழ்
சங்கமணி மண்டபத்திற் 8 துங்கமணிமாலை திருநீ தாங்கிநிற்கும் நாவலர் தட шпTHEпшLDврG6пLb шL

லர் விழா வாழ்த்துப் பா
கனகரத்தினம் (துணைக்காப்பாளர்)
ÎLII லர் தொண்டுவாழி வளர்த்த - தில்லைநட
விழவெடுக்கும்
5கத் தளர்வில் ாப்ப - இமிழ்கடல்கழி அறநூல்கள்
வந்து.
சேவையெல்லாம்
ர்நாளில் - காண்டரிய j 6.jp66.6OrTib
5.
3த விழவுடன் 6 - DiabóITLDITu b (Suj6.ip6q b. ந்து.
சாந்த சிலையுருவில் றும் - மங்களமாய்த் bவிழா நன்னாளிற் ர்ந்து.
தை 2012)

Page 65
தை 2012 }
நற்றமிழ்
86. DS
நற்றமிழ் நாவலர் நம்மி சொற்றமிழ் சிறந்தது சுரு உற்றதை நோக்கினர் உ பெற்றநற்பேறதும் பேசிட
உரைநடை பின்செல நா நிரைநிரை நீண்டது நே திரைகடல் தாண்டியும் ெ கரையது ஒன்றிலாக் கை
எங்களை யாண்டிட வந் தங்களின் மொழியதேத எங்கணும் பள்ளிகள் எழு அங்கெலாம் மாணவர் L
பொங்கிடும் புனலென பு 6Tilg(3LD 6&efeBlb (6160L தங்கநற்றமிழ்தனில் நூ சிங்கமென்றாகவே செய
பிடியரி சேற்றிட பெருமக படியேறி வேண்டினார் ப குடியரசன்தகை தோன் கடிதினில் வென்றனன்
எங்கெங்குந் தமிழென ( அங்கெலாம் கேட்டிட அu திங்களாய் வளர்ந்திடு சீ நாங்களும் நாவலர் தை

நாவலர்
ாதேவா
டை உதித்ததால் தியும் பிறந்ததே
லகத்து மாந்தரும் ல் சாலுமோ.
ாவலர் முன்செல ரிய நந்தமிழ் சன்றது செந்தமிழ் ானிநற்றமிழதே.
திட்ட அந்நியர் குமென எண்ணியே ழப்பினர் விரைவினில் மதங்களை மாற்றினார்.
றப்பட்ட நாவலர் DS5í LupGsp ல்களை வடித்தவர் பற்பட்டார் சிறந்துமே,
ன் நாவலர் லரையும் காத்திட றிய கோமகன் கயவர்தம் சூழ்ச்சியை
எதிலுமே தமிழென பலிலும் கேட்டிட ாமையைப் போற்றியே
மப்புகழ்ந்தேற்றுவோம்.

Page 66
காலனித்துவ காலத்தில் நிகழ்ந்த பன்முகமான பரந்துபட்ட எதிர் விசைகளும் சில நிலைகளில் நேர் விசைகளும், தேசிய இனக்குழுமங்கள் தமது மொழி, மத, மற்றும் பண்பாட்டு அடையாளங்களைத் தேடவும், வலுப்படுத்தவும், மீட்டுருவாக்கம் செய்யவும் வல்ல செயற்பாடுகளைத் துண்டின. அவ்வாறன முயற்சிகளை அடியொற்றி எழுந்ததே இனக்குழுமக் (3a5mun (b (ETHNIC THEORY) e.g5Lib. காலனித்துவம் என்ற பெருங் கவிப்புக்கு எதிரான அடையாளப்படுத்தலின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டறியும் கேட்பாடாக அது அமைகின்றது.
காலனித்துவத்திலிருந்து விடுதலைபெற்ற பின் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள மேலா திக்க இனக்குழு மதத்தினர்; ஏனைய சிறு பான்மை இனக் குழுமத்திரை மீது ஆதிக்கத் திணிப்புக்களை ஏற்படுத்திய வேளை உருவாக்கம் பெற்ற கலை இலக்கியக் கோலங்களை விளக்கவும் விளங்கவும் வல்ல கோட்பாடாகப் "பின்இனக்குழுமக் கோட்பாடு தோற்றம் பெற்றது.
இனக் குழுமக் கோட்பாடு என்பது குறிப்பிட்ட மக்களின் மொழி, பண்பாடு, சமயம், அறிவாற்றல், வாழ்க்கைமுறை, சடங்குகள் தொன்மக்கள், பழக்க வழக்கங் கள் முதலியவற்றின் அடிப்படையில் அவர் களின் தனித்துவமான நடவடிக்கைகளை யும் ஆக்கச் செயற்பாடுகளையும் கண்டறியும் ஓர் அறிகை முறைமையாகும்.
இனக்குழுமம் மற்றும் தேசியம் பற்றிய ஆய்வை ஆசிய மக்கள் முன்னெடுப்பதற்கு முன்னரே ஆங்கிலேயரும் ஏனைய ஐரோப்பிய ஆய்வறிவாளரும் முன்னெடுத் தனர். காலனித்துவப் பெருநிலை ஆதிக்கத் துக்கும் மாற்றுப் பண்பாட்டுக்கும் எதிரான கிளர்ச்சி 1857ஆம் ஆண்டில் இந்தியாவிலே தோற்றம் பெற்றது. கிளர்ச்சியை அடக்கு
C64)

நாவலரை முன்னிறுத்தி இனக்குழுமக் கோட்பாடு
பேராசிரியர் சபா ஜெயராசா
வதற்கு இந்தியச் சமூக இயல்பை விளங்கிக் கொள்ளவேண்டிய தேவை ஆங்கிலே யருக்கு ஏற்பட்டது. ஆட்சியை வலுவாகவும் சுமுகமாகவும் முன்னெடுப்பதற்குச் சமூகம் பற்றிய புலக்காட்சியும் விளக்கங்களும் அடிப்படையானவை என அவர்கள் கருதினர்.
சமூகப் பிரிவுகளைக் கண்டறிதல் வாயிலாகப் "பிரித்தாளும்” உபாயங்களைப் பயன்படுத்தலும் இலகுவாக இருந்தது. அந் நிலையில் தமது ஆள்புலத்துக்கு உட்பட்ட மக்களின் மொழி, சமயம், சாதி முறைமை, சடங்குகள் முதலியவற்றை அடியொற்றிய தகவல்களைத் திரட்டலாயினர்.
அவற்றின் பிறிதொரு விளைவாக ஆள்புல மக்களும் அந்த அடையாளங்களை அடி யொற்றிய சிந்தனைகளையும் செயற்பாடு களையும் வளர்க்கலாயினர். மேலும் இந்தியா மற்றும் இலங்கை ஆகியவற்றின் அரசியலிலும் வாக்குச் சேகரிப்பிலும் இனக்குழும அடையாளங்கள் பலம் மிக்க விசைகளாகத் தொழிற்பட்ட வண்ண முள்ளன.
பிரித்தானியக் காலனித்துவச் செயற்பாடு கள் ஆழ்ந்து வேர் பரப்பியிருந்த காலத்திலே நாவலரின் செயற்பாடுகள் மேலெழுந்தன. இனக்குழும நிலையிலே நோக்கினால் "சைவமும் தமிழும்" நாவலரின் செயற்பாடு களுக்குருதிய கருத்தியல் தளமாக இருந்தன. பிரித்தானிய அரசியல் முறை, கல்விமுறை, பண்பாட்டுக் கோலங்கள் முதலியவற்றின் அழுத்தங்களால் சைவசமய மரபுகளை அடியொற்றி வாழ்க்கை முறையும் தமிழ்
(தை 2012)

Page 67
மொழித் தேட்டங்களும் சிதைந்து விடாது பாதுகாத்தில் அவரது நோக்கமாக இருந்தது. வாழ்நிலையும் மரபுகளும் பேணப்படு வதற்குரிய கருவியாக அவர் சமயத்தை முன்னெடுத்தார். பிரித்தானியர் ஆட்சியில் நிகழ்ந்த சமயம் மற்றும் கல்வி முன்னெடுப் புக்கள் நாவலரின் செயற்பாடுகளுக்குரிய மாதிரிகைகளாக (MODELS) அமைந்தன. சமயம் பரப்புவதற்கு கிறீஸ்வத திருச்சபை யினர் பயன்படுத்திய பிரசங்க முறை, வினாவிடை வழியான பாடப் புத்தக முறை, நலிந்தவர்களுக்கு உதவும் இலசவக் கல்வி முறை, துண்டுப் பிரசுரமுறை, பாடசாலை (up60DD DIT600T6)ij loorubp (36600rpu &LDu விதிமுறை மற்றும் ஒழுக்காற்று முறை (DISCIPLINE) முதலியவற்றைச் சைவ நிலையைப் பேணிக் கொள்வதற்கு அவர் uuj60rUG5560TTJ.
காலத்துக்குரிய நவீனத்துவத்தை மேற்கொண்டு சைவத்தையும் தமிழையும் நிலைபேறு கொள்ளச் செய்யும் செயற் பாட்டை வலிமைப்படுத்தினார். தமிழ் மரபில் நிலைபேறு கொண்டிருந்த தினனைப் பள்ளிக் கூடமுறைமை, குருகுலக் கல்வி முறைமை முதலியவற்றைக் கைவிட்டு நவீன பாடசாலை முறைமையை முன்னெடுத்தார்.
இனக்குழுமங்கள் தமது அடையாளங் களைப் பேணமுற்படும் பொழுது சமூக நிரலமைப்பு அல்லது உள்ளமைந்த அதிகார அடுக்கமைவைச் சிதறவிடாது பாதுகாத் தலையே செயற்படுத்தின. பின் இனக்குழும காலகட்டத்திலேதான். (இலங்கையைப் பொறுத்தவரை பருமட்டாக 1956ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலகட்டங்களிலே தான்) அகநிலை அதிகாரக் கட்டமைப்பைச் சிதறடிக்கும் கருத்தாக்கங்கள் மேலெழுந் தன. ஆனால் நாவலர் வாழ்ந்த இனக்குழும
தை 2012
 

சங்கத்தமிழ்
நிலைக் கால கட்டத்தில் சமூக அடுக்க மைவைச் சிதறடிப்பதற்கான முனைப்பு களோ எழுச்சிகளோ விசை கொண்டு எழவில்லை மாறாக அவற்றைப் பராமரிப்ப தற்கான செயற்பாடுகளே வலுப் பெற்றி ருந்தன.
சமூக அடுக்கமைவில் உயர்மட்டங்களில் இருந்தவர்களால் மட்டுமே ஆங்கிலக் கல்வியை அக்காலத்திற் பெறமுடிந்தது. ஆங்கிலக் கல்வி சமூக நிரலமைப்பைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்குரிய கருவியாக இருந்தது. நாவலர் மேற்கொண்ட சைவ ஆங்கில கலாசாலையைத் தோற்று வித்த முயற்சி இவ்வகையிலே சுட்டிக் காட்டப்படத்தக்கது. ஆயினும் கிறீஸ்தவ திருச்சபைகளால் நடத்தப்பட்ட ஆங்கிலக் கல்வித் தரத்தைச் சைவ ஆங்கில கலா சாலைககளினால் எட்ட முடியாதிருந்தது அதே வேளை யாழ்ப்பாணத்துச் சமூக நிலையிலே மேலுயர்ந்திருந்தோர். கிறீஸ்தவ திருச்சபைகளால் நடத்தப்பட்ட பாடசாலை களுக்கே தமது பிள்ளைகளைக் கற்பதற்கு அனுப்பியமை அதிகார நிரற்படுத்தல் நோக்கில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். இனக்குழுமத் தனித்துவம் பேணும் செயற்பாடுகளிலே தற்காலத்திலே குறிப்பிடப்படும் ஆசிரியர் உறுவளம் செய்பவராக (FACILITATOR) இருக்கும்நிலை அல்லது ஆசிரியர் மாணவருடன் இணைந்து 85íDGELITUTT85 (CO-LEARNER) 8 5556bbT6)J6oj காலத்திலே காணப்படவில்லை. ஆசிரியர் பணிப்பு நிலையில் இயங்குதலே அக்காலத் தைய கிறீஸ்தவக் கல்விச் சூழலிலே காணப்பட்டது. நாவலரும் அதனையே பின்பற்றினார்.
பாலபாடம் நான்காம் புத்தகத்தில் உள்ள தமிழ்ப் புலமை என்ற வியாசத்திலே
(65)

Page 68
குறிப்பிடப்பட்டுள்ளவை இவ்வகையிலே அவதானிப்புக்குரியவை
"திருவள்ளுவர் குறள், நாலடியார் முதலிய நீதி நூல்களைப் பதப் பொருளுடனே கற்றறிந்து கொள்க.
தேவாரம் திருவாசம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் அருட்பாக்களைப் பண்ணுடன் ஒதவும் சுத்தாங்கமாக ஒதவும் பழகிக் கொள்க.
பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், திருவதவுரடிகள் புராணம் கந்தபுராணம் உபதேச காண்டம், கோயிற் புராணம், சேது புராணம், பதினோராந் திருமுறையிற் பிரபந்தங்கள், குமரகுருபரசு வாமிகள் அருளிச் செய்த பிரபந்தங்கள் முதலாகிய இலக்கியங்களை ஆராய்ந்தறிக” நாவலர் மேற்கொண்ட அவ்வாறான பயிலும் "பணிப்பு முறை” பிற்காலத்திலே கனக செந்திநாதன் அவர்களிடத்தும் காணப் பெற்றமைக்குச் சான்றுகள் உள்ளன. ஆர்வம் மிக்க ஒருவர் தாம் எழுத்தாளராக வருவதற்கு யாது செய்ய வேண்டும் என்று கனக செந்திநாதன் அவர்களை அணுகிக் கேட்ட வேளை அவர் ஒரு நூற்பட்டியலை வந்தவரிடம் கொடுத்து அவற்றைப் படித்தபின்னர் எழுதுக என்று குறிப்பிட்டார். அந்தப் பட்டியலை அவர் அச்சு வடிவிலும் வெளியிட்டார்.
நாவலர் மேற்கொண்ட வசன நடை முன்னெடுப்பு இனத்துவ அடையாளம் பேணுகைக்குரிய பிறிதொரு நடவடிக்கை யாகும். கருத்துக் கையளிப்பிற் செய்யுளைக் காட்டிலும் வசனம் மேலோங்கிச் செல்லும் நிலையை கண்டறிந்தார். அவர் வசனத் துக்கு அதீத முக்கியத்துவமளித்தமை அக் காலத்திலே வாழ்ந்த மரபு வழிப் பண்டிதர் களுக்குப் பிரியமில்லாத நடவடிக்கையாக இருந்ததென்றும் சொல்லப்படுகின்றது.
G66)
 

சங்கத்தமிழ்
அதாவது செய்யுளை மேம்படுத்திய அறிவுப் பாரம் பரியத்தில் வசனம் இரண்டாம் பட்சமாகவே இருந்த காலகட்டத்தில் நாவலரது உரை நடைச் செயற்பாடுகள் மேலெழுந்தன.
பண்பாட்டுக் காப்பு நடவடிக்கைகளின் ஒரு பரிமாணமாக பதிப்பு முயற்சிகள் நடந்தவேளை அறிவுக்கையளிப்பிலே “மீள்வரைப்பு” (RETOLD) என்பதன் முக்கியத்துவம் நாவலரால் உணரப்பட்டது. புராணங்களை உரை நடை வாயிலாக மீளச் சொல்லியமையும், பிரசங்கித்தலை பண்படைய பனுவல்களை “மீளச் சொல்லும்" செயற்பாடாக முன்னெடுத்தமையும் அறிவுப் பரவலுக்குரிய நடவடிக்கையாக மட்டுமன்றி மொழி, மத அடையாளங்களைப் பராமரிக் கும் நடவடிக்கையாகவும் அமைந்தது.
இனக்குழும நிலையை வலிமை பெறச் செய்யும் ஒரு நடவடிக்கையாக சமயச் சீர்திருத்தச் செயற்பாடுகள் இலங்கையிலும் இந்தியாவிலும் முன்னெடுக்கப்பட்டன. கிறீஸ்தவ சமயத்திலே நிகழ்ந்த சீர்திருத்த முன்னெடுப்புக்களைப் பார்சிவல் பாதிரியார் வழியாக ஆறுமுகநாவலர் அறிந்து கொண்டார். ஆனால் அந்தச் சீர்திருத்த முன்னெடுப்புக்களைச் சமூகக் கட்டுக் கோப்பினுள் மட்டும் அவர் வரையறைப் படுத்திக் கொண்டார். பின் இனக்குழுமப் பிரக்ஞை பிற்காலத்திலே மேலோங்கிய வேளை அந்த நடவடிக்கையை அடி யொற்றிச் சமூக சீர்திருத்தம், அரசியற் சீர்திருத்தம் முதலியவை வளரலாயின.
ஆறுமுகநாவலர் சீர்திருத்தங்களை ஆலயங்களோடு மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டார். ஆலயங்களிலே கேளிக்கைகள் நிகழ்வதை அவர் எதிர்த்தார். அந்நிலையிலே தமது இனக்குழுமத்தின் அடையாளமாக வைதிக வழிபாட்டு முறையை முன்
(தை 2012)

Page 69
s
னெடுத்தல் யாழ்ப்பாணத்து எழுகுழாத்தின ரிடத்து (ELITE) தொடர்ந்து வளர்ச்சியுற்றது. ஆடல் பாடல், கடத்துக்களை உள்ளடக்கிய கிராமிய வழிபாட்டுமுறை சமூக அடுக்க மைவின் அடித்தளங்களில் உள்ளோருக் குரிய இனக்குழும அடையாளங்களாக விசாலித்தன.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இனக் குழும அடையாளத்தைப் பேணுதல் சாதிய முறைமையைப் பேணுதலாகவும் அமைந் தது. யாழ்ப்பாணத்தச் சமூக அடுக்கமைவு சாதியத்தளத்திலே கட்டமைப்புச் செய்யப் பட்டிருந்தது. சாதிய அடுக்கமைவைப் பேணுதல் உயர்நிலையிலிருந்தோருக்குரிய அடிப்படைத் தேவையாக இருந்தது. அதாவது அதிகாரத்தைத்தக்க வைத்துக் கொள்வதற்கும் அதனை அடியொற்றிய விழுமியங்களை நிலைபேறு கொள்ளச் செய்தவற்குரிய தேவை எழுகுழாத் தினருக்கு ஏற்பட்டது.
பிரித்தானியப் Lu 6OOT LI ITG6 சாதி முறைமையைப் புறந்தள்ளிய வேளை எதிர் கொண்ட நெருக்கடிகளுக்கு முகம் கொடுத் தவர்கள் சாதி முறைமையைப் பேணு வதற்குத் தீவிர அழுத்தம் கொடுத்தனர். பின் இனக்குழும” நிலைவரத்திலேதான் சாதியம், பெண்ணடிமைத்தனம் முதலி யவை தகர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டன.
"ஏட்டுப்பிரதிகளில் திரிந்து, விளங்கமுடியாது கிடந்த பாடங் உண்மைகண்டு திருத்தி அச்சி ஆறுமுகநாவலர் . முதலிய ெ அருஞ்செயலும் எத்துணைப் பெரிதென்
-வித்துவான்
தை 2012)-

சங்கத்தமிழ்
மேற்கூறியவற்றின் பின்புலத்தில் "இனக்குழுமநிலை" மற்றும் "பின் இனக்குழும நிலை" ஆகியவற்றின் வேறு பாடுகளைப் பின்வருமாறு விளக்கலாம்.
காலனித்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சமூக அடுக்கமைவைச் சிதைவுறாது பாதுகாகத்தல், தொன்மை யான நூல்களையும் கலைகளையும் மீட்டெடுத்தல், பண்பாட்டை நிலைத்த பொருளாகக் கருதியமை முதலியவை இனக்குழும நிலவரத்துடன் தொடர்புபட்டி ருந்தன. பின் இனக்குழும நிலையில், பின் காலனியத்துக்கு எதிரான நடவடிக்கைகள், இன மேலாதிக்கத்துக்கு எதிரான செயற்பாடு கள், சமூகத்தினதும் பண்பாட்டினதும் மாற்ற நிலைகளைப் பிரக்ஞை கொள்ளல், உள்ள மைந்த பன்மைநிலைகளைக் குவியப்படுத் துதல் தொண்மையான நூல்களை மீள் வாசிப்புக்குட்படுத்துதல், நுண்பாக (MICRO) அணுகுமுறைகளை முன்னெடுத்தல், அனைத்தினதும் பின்புலமான அரசியலைப் புரிந்து கொள்ளல் முதலியவை வலுப் பெறத் தொடங்கியுள்ளன.
ஆறுமுகநாவலரது செயற்பாடுகளை அறிந்து கொள்ளல் இனக்குழும இயல்பை யும் அக்கருத்தியலின் வளர்ச்சியையும் தரிசிப்பதற்குரிய அறிகைத் தளமிடலா கின்றது.*
இதுதான் உண்மைப்பாடம் என களையெல்லாம் நன்கு நோக்கி |ட்டு நூல்களையுதவிய முரீலழுநீ ரியோருடைய அறிவின் வன்மையும் பதை நாம் சொல்லவேண்டியதில்லை.”
, பிரம்மருநீ.சி.கணேசையர் அவர்கள்.
-(67)

Page 70
ஆறுமுகநாவல
ஆறுமுகநாவலரால் வெளியிடப்பட்ட LT6DUITLLD (p56) Tib L5585Lib, &J600TLITLD புத்தகம் மூன்றாம் புத்தகம், நான்காம் புத்தகம் ஆகியன நவீன கல்வியோடு தொடர்புபட்ட பாடநூல்களாகவே அறியப்பட்டு வந்துள்ளன. அதேவேளையில் அவை, குறிப்பாக இரண்டாம், மூன்றாம் பாலபடத்தில் இடம் பெற்றுள்ள கதைகள் புதிய பார்வையை அவாவி நிற்பதும் அவ்வழி அறுமுகநாவலரது எழுத்தாற்றல் புதிய துறைகளைச் சார்ந்து வெளிப்படுவதும் மனங்கொள்ளத்தக்கனவாகின்றன.
- 1 -
மேற்கூறியவாறு நோக்கும்போது முதலிற் கவனத்திற்குரியதாகவிருப்பது, பால பாடத்தில் இடம்பெற்றுள்ள கதைகள் ஊடாக ஆறுமுகநாவலர் ஈழத்துச் சிறுவர் கதை முன்னோடியாகத் திகழ்கின்றமையாகும்.
நாவல், சிறுகதை முதலியன போன்று சிறுவர் இலக்கியமும், நவீன இலக்கிய வகைகளுள் ஒன்றென்பதில் ஐயமில்லை. இத்தகைய சிறுவர் இலக்கியத்தில் முக்கியமானதான சிறுவர் பாடல் தொடர் பான ஈழத்தின் முதன் முயற்சி 1918ல் இடம் பெற்றுள்ளது. ச. வைத்தியநாதரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பால போதினி என்ற குழந்தைப்பாடல்களின் அபிநயப்பாடல் தொகுதியே அதுவாகும்.
இந்நிலையில் சிறுவர்கதை தொடர்பான ஈழத்தின் முதன் முயற்சி பற்றி அவதானிக் கின்றபோதுதான் ஆறுமுகநாவலரது பாலபாடக் கதைகள் கவனத்தைக்கோரி நிற்கின்றன. பாலபாடம் இரண்டாம் புத்தகத்
C68)

ரது பால பாடக் கதைகள் : புதிய பார்வை
பேராசிரியர் செ.யோகராசா
திலே ‘கதைகள் என்ற பொதுத் தலைப்பில் 21 கதைகளும், மூன்றாம் புத்தகத்திலே தனித்தனியான O7 கதைகளும் இடம்பெற் றுள்ளன. இத்தகைய கதைகள் வெளிப்படும் முக்கிய விடயங்களாகப் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம்:
(1) வகுப்புக்கேற்ற விதத்தில் கதையின்
நீட்சி அமைந்துள்ளமை பின்வருவது இரண்டாம் புத்தகத்தில் இடம்பெறுவது:-
மாறாக மூன்றாம் புத்தகத்திலுள்ள கதைகள் நீண்டவை (ஆதலின் எடுத்துக் காட்டுகள் தரப்படவில்லை. பார்க்க சற்புத் திரர்களே ஆபரணம்)
(i) உள்ளடக்கம் பன்முகப்பட்டனவாய்
அமைதல். - சிந்தனையைத் தூண்டுபவை (உ-ம்) மேலுள்ள கதை) "எந்த உயிரையும் கொல்லாத ஒரு சந்நியாசி ஒரு ஏரிக் கரைமேலே போனார். போகும்போது ஒரு செம்படவன் அந்த ஏரியிலே மீன் பிடித்தான். சந்நியாசி செம்படவனைப் பார்த்து "ஐயோ! நீஎப்போது கரை ஏறுவாய்!” என்றார். "ஐயா என் பறி (மீன் பிடி கருவி) நிரம்பினால் கரை ஏறுவேன்” என்றான்.
-மகிழ்ச்சியை ஏற்படுத்துபவை
"இரண்டுமல்லகச் செட்டிகள் ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் பண்ணினார்கள். ஒருவன் மற்றவனைக் குப்புறத் தள்ளி, புரட்டிப் புரட்டி உதைத்தான் உதை யுண்டவீரன்எழுந்துநின்றசனங்களைப் பார்த்து. “ஆனால் என்ன என் மீசை
(தை 2012)

Page 71
யிலேமண்படவில்லை" என்றுமீசையை முறுக்கினான்.” -போதனை செய்பவை: ஒரு குரு தம்முடைய சிஷயனுக்கு ஞானங்கள் உபதேசித்தார். உபதேசிக்கும் போது, சிஷ்யன், தன் வளையிலே நுழையப் போகும் எலியைப் பார்த்து, அதன் மேலே நினைப்பாக இருந்தான். குரு உபதேசித்த வுடனே, "சிஷயா எல்லாம் நுழைந்ததா? என்றார். சிஷ்யன், “எல்லாம் நுழைந்தது. வால் மாத்திரந்தான் நுழைய வில்லை.” என்றான்.
மூடர்களுக்குச் சொல்லுகிற புத்தி இப்படியே இருக்கும்.
(ii) போதனைப் பண்பு பெரும்பாலான கதைகளிலே மறைமுகமாக இடம் பெறுதல். (iv) சிறுவர்களுக்கேற்ற வித்த்திலே இலகுவான வசனநடை கொண் டவை. உ-ம். மேலுள்ளவை (V) சிறுவர் மட்டுமன்றி பெரியோரும்
வாசிக்கக் கூடியவை. மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் போது ஆறுமுகநாவலரது பால பாடக்கதை கள் அன்னாரை ஈழத்துச் சிறுவர் கதை முன்னோடியாகச் செய்கின்றன என்பதிலே தவறில்லை.
மேற்கூறிய கதைகள் இடம்பெற்றுள்ள unsourTL b, 66OdrLIT b lig55lb 18515,52 லும் மூன்றாம் புத்தகம் 1864லும் வெளிவந்ததாக அறியப்படுகின்றது
- 2 - தமிழ்ச் சூழலில் வாய்மொழி இலக்கியம் அல்லது நாட்டார் இலக்கியம் பாராம்பரியமாக இருந்து வந்துள்ளது என்பதில் ஐயமில்லை. எனினும் அது பற்றிய தேடல் அல்லது தொகுப்பு முயற்சிநவீனமயவாக்கச் சூழலில் 19ம் நூற்றாண்டிலிருந்தே உருவாகின்றது.
தை 2012
 

சங்கத்தமிழ்
மேலைத்தேயவரான ஆங்கிலேயர் பலர் இத்துறையில் ஆர்வங்காட்டினர். அவர் களைப் பின்பற்றி ஈழத்தவர்களும் இம் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
ஈழத்து வாய்மொழிக் கதைகள் அல்லது நாட்டார் கதைகள் என்று நோக்கும்போது கொழும்பு சந்தியாகோப்பிள்ளை சந்திர வண்ண முதலியார் 1875ல் வெளியிட்ட கதாசிந்தாமணி இத்துறை சார்ந்த முதன் முயற்சியாகக் கருதப்பட்டு வருகின்றது.
ஆயினும், பாலபாடக் கதைகளுள் பலவும் வாய் மொழிக் கதைகளாகவே 85mGOOTUGa560p60LD 8560órain (6. () --Lb)
"ஒரு குரு தம்முடைய சிஷயனுக்கு ஞானங்கள் நாவல்கள் உபதேசித்தார். உபதேசிக்கும்போது, சிஷ்யன் தன் வளையிலே நுழையப்போகும் எலியைப் பார்த்து, அதன் மேலே நினைப்பாக இருந் தான். குரு உபதேசித்தவுடனே, "சிஷ்யா எல்லாம் நுழைந்தனவா” என்றார். சிஷ்யா "எல்லாம் நுழைந்தது வால் மாத்திரந்தான் நுழையவில்லை என்றான்...” ஆகவே, ஆறுமுகநாவலர் வாய்மொழிக் கதைகளைத் தொகுக்கின்ற முயற்சியில் பிரக்ஞை பூர்வமாக ஈடுபடாதிருப்பினும், ஈழத்து வாய்மொழிக் கதை முயற்சி முன்னோடியாக அன்னாரைக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது என்பதனை மறுப்பதற் கில்லை.
- 3 - தமிழிற் சிறுகதை முயற்சி ஆய்வாளர் பலரும் ஏற்றுக் கொண்டவாறு 20ம் நூற்றாண்டில் ஆரம்பத்திலேயே இடம்பெறு கின்றது. வ.வே.சு ஐயர், பாரதியார், அ.மாத வையா ஆகிய மூவரும் வெவ்வேறு நிலை களில் அதன் முன்னோடிகளாகின்றனைர்.
(69)

Page 72
ஆயினும், ஆய்வாளர் சிலர் ஈழத்து அறிஞரான ஆணல்ட் சதாசிவம்பிள்ளை எழுதி 1869ல் வெளியிடப்பட்ட நன்னெறிக் கதாசங்கிரகத்தினை தமிழின் முதற் சிறுகதைத் தொகுப்பாகக் கருதுகின்றனர். (பார்க்க: தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் இணை ஆசிரியர்கள்: சிட்டி - பெ.கோவிந்தராஜன், சோ.சிவபாதசுந்தரம்)
அவ்வாறெனில், ஆறுமுகநாலரது பாலபாடம் நான்காம் புத்தகத்திலுள்ள கதை களும் நன்னெறிக் கதாசங்கிரகத் தொகுப்பி லுள்ள கதைகள் போன்றே காணப்படுவதால் இவற்றையும் முன்னோடிச் சிறுகதைகள் என்பதில் தவறிருக்க முடியாது. (ஆறுமுக நாவலர் அத்தகைய நோக்குடன் இம்முயற்சி யில் இறங்கவில்லை என்பது வேறு விடயம்).
எனினும், நுணித்து நோக்கும்போது இவர்கள் இருவரது நூல்களிலுள்ள கதை களையும் சிறுகதைகளாகக் கொள்ள முடியாதென்பதே உண்மையாகிறது.
அவதார
வீறு புகழ் படைத்த வித்துவ சிரோ அவர்கள் சிவபத்தியும் அடியார்பத்தி தூய்மையும் நீதியும் ஒதியும் நி உருவெடுத்தாற்போன்று விளங்கிய அ மேலோராகிய நாவலர் அவர்கள் ப மிர்த்தாரைகளால் சைவப்பயிர் வளர்த்த நன்மைகள் அளப்பில், ருநீஅம்பலவான உபாசனைசெய்து கற்றதனாலன்றோ சிறந்த வித்துவானாகவும் பிரசங்கசரப இறைவர் நல்லருளால் நாவலர் அவர்க
(மூளாய் தீர்க்கதரிசியாகிய பண்டிதர்
 

சங்கத்தமிழ்
ஆயினும், தமிழ்ச் சிறுகதை உருவாக் கத்தில் இவர்களுக்கும் இவர்களுக்கு முற்பட்ட வீரமாமுனிவர் (உ-ம்: பரமார்த்த குருகதை) முதலானோருக்கும் முக்கியமான தொரு இடமுள்ளது. 19ம் நூற்றாண்டில் நவீனமயமாக்கச் சூழல் உருவானபோது - நவீன இலக்கிய முயற்சிகள், பாடநூல் முயற்சிகள் முதலானவை இடம் பெற்றபோது - அவற்றை வெளிப்படுத்துவதற்கேற்ற விதத் திலே தமிழ் உரைநடை வளர்ச்சி கண்டி ருக்கவில்லை. சிறுகதையைப் பொறுத்த வரையிலேகூட, அதற்கேற்ற உரைநடை உருவாக்கம் படிப்படியாகத்தான் கைகூடிற்று. வீரமாமுனிவரது பரமார்த்தகுருகதை, தமிழில் கதை கூறுவதற்கேற்ற உரை நடையை உருவாக்கிய முதன் முயற்சி என்பர். தொடர்ந்து வந்த ஆணல்ட் சதாசிவம் பிள்ளை, ஆறுமுகநாவலர் முதலானோ ருக்கும் இவ்விதத்தில் தமிழ்ச் சிறுகதை உருவாக்கத்தில் முக்கியமானதொரு இடமிருப்பது குறிப்பிடத்தக்கது:
புருஷர்
மணியாகிய ருநீலழுநீ ஆறுமுகநாவலர் |யும் சீவகாருண்யமும் வாய்மையும் றைவும் பொறையும் திரண்டு ஒர் வதாரபுருஷர். தோலா நாவினையுடைய ரசமயக் கோடைக் கடிந்து பிரசங்கா 5வர். இன்னும் நாவலர் அவர்கள் செய்த ரநாவல சுவாமிகள் நாவலர் அவர்களை தென்மொழியோடு வடமொழியிலுஞ் Dாகவும் விளங்கினார். எல்லாம் வல்ல sள் புகழ் என்றும் நின்று நிலவுக.
முரீமத்.சு.பொன்னம்பலபிள்ளை அவர்கள்)
தை 2012)

Page 73
ஆறுமுகநாவலர் அa கலாநி
முதுநிலை விரிவுை
O1. முகவுரை
இலங்கையில் ஆங்கிலேயரது ஆட்சியின் கீழ் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல், சமூகம், சமயம், பொருளாதாரம் என்பவற்றி லும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புரட்டஸ் தாந்து கிறிஸ்தவசபைகளும் நன்கு வளர்ச்சி யடைந்தன. கிறிஸ்தவ மிஷனரிமார் தமது சமயத்தைப் போதிப்பதற்காக பல முயற்சி களை முன்னெடுத்தனர். ஆங்கிலப் பாட சாலைகளில் கல்விகற்கும் வாய்ப்பினையும் அரசாங்கத்தில் தொழில் பார்க்கும் வாய்ப் பினையும் பெற்றனர். இந்தப் பின்னணியில் வாழ்ந்தவர் ஆறுமுகநாவலர் கலாசாரம் பாரம்பரியம் சோதனைக்கு உட்பட்ட கால கட்டத்தில் நாவலர் தோற்றம் பெறுகிறார்.
இதன் காரணமாக சைவசமயத்தையும் தமிழ்மொழியையும் வளர்க்க வேண்டும் என்னும் எண்ணம் உடையவராக ஆறு முகநாவலர் செயற்பட்டார். நாவலரது நோக்கம் சமய பண்பாட்டுப் பாரம்பரியங் களைப் பேணுதல் இலக்கியம் பாரம் பரியத்தைப் தோற்றுவிப்பதும் பேணுவதும் என்ற அடிப்படையில் இருந்தது.
நாவலர் வாழ்ந்த காலம் சூழ்நிலை அக்காலத்தில் இலக்கியம் இருந்தநிலையை ஆராய்ந்த பின்பே அவரைப் பற்றிய மதிப்பீடு தொடங்க வேண்டும். சமயம், தமிழ் ஆகிய துறைகளில் அரிய பெரிய பணியாற்றி யுள்ளார். இவ்வாய்வு நாவலர் அவர்களின் பன்முகப்பணிகள் பற்றியதாக அமைகின்றது.
O2. பின்னணி
நாவலர் காலத்தில் சைவசமயம் நிலை தளர்ந்திருந்தது. கிறிஸ்தவ மதப் பிரசாரம்
தை 2012

O O O O வர்களின் பன்முகப் பணிகள் தி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்,
ரயாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
செய்தமையாலும் மக்கள் தளம்பினர். மக்களிடத்தே சைவ சமய நூல் அறிவும் சமய அனுட்டானஅறிவும் ஆசாரங்களும் குறைந்த நிலையிலே இருந்தமை நோக்கத் தக்கது. மக்களிடையே சைவசித்தாந்தக் கருத்துக்களையும் வேதாந்தக் கருத்துக் களையும் பரப்பவேண்டிய கழலில் இருந்தார். இல்லாவிட்டால் சைவ தழைக்க முடியாது. அதனால் சமயப் பணியில் முன்னின்று உழைக்க வேண்டியவரா யிற்று. அதனால் புராண படனம், சொற் பொழிவுகள் கண்டன நூல்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்த வ்ேனடிய கட்டாய சூழலில் நாவலர் இருந்தார்! நாவலரது காலத்தில் ஆரம்பத்தில் நிகண்டு இலக்கணம் திருக்குறள் நாலடியார் வாக்குண்டாம் நல்வழி போன்றனவே கற்பிக்கப்பட்டன. சமயநூல்களோ கற்பிக்கப்படவில்லை. தமிழ்க் கல்வியில் நாட்டமுற்றோர் மிகக் குறைவு. நூல்கள் யாவும் ஏட்டுவடிவில் இருந்தன. அவற்றினை எளிதில் பெற முடியாது. இந்தநிலையிலேதான் நாவலரது பணி ஆரம்பமானது.
சமயக் கல்வியையும் தமிழ் கல்வியை யும் சிறுபிராயத்திலிருந்து கற்பிக்கவேண்டும் என்பது நாவலரது பெரு விருப்பமாகும். சிலர் எழுதும் பொழுதும் பேசும் பொழுதும் நாவரரைச் சமயப் பணிக்குள் மட்டும் அடக்கமுற்படுகின்றனர். சமயக் கல்வி யையே பெரிதும் கொண்டிருந்தார் எனக் கூற முற்படுகின்றனர். ஆனால் நாவலரது காலப்பின்னணி முக்கியமானது. நாவலர் வாழ்ந்த காலத்தில் சமயத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது. சமயத்தைப் பேணவும்
(71)

Page 74
பரப்பவும் வேண்டிய தேவை நாவலருக்கு இருந்தது. சமயத்தைப் பரப்புவதன் ஊடாக தமிழ்மொழியை வளர்த்தார். தேசியம் பற்றிச் சிந்தித்தார். சமுதாயத்தைச் சீர்திருத்தமுற் பட்டார். கல்வி மூலம்தான் ஞானத்தை ஊட்ட முடியும் என நினைத்தார். சமயப்பணி. இலக்கியப் பணி என அவரது ஆளுமை களை விரிவுபடுத்திப் பார்க்கலாம்.
O3. &LDuJú Lu600f
நாவலர் வண்ணார்பணிணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை அமைத் தார். சைவவினாவிடைகள் மூலம் சிறுவயதி லிருந்தே சமயப்பற்றை உண்டாக்க விளைந் தார். பால பாடங்க்ளில் கடவுள், ஆன்மா. குரு லிங்க சங்கமம் தத்துவராய்ச்சி பற்றிய சமயக் கல்வியை ஊட்டி வந்தார் கோயில்களை மையமாக வைத்து பிரசங்கங்கள் செய்தும். புராணபடனங்கள் செய்தும். முறைசாராக் கல்வியை வளர்த்தார். இதனால் சமயமும் வளர்க்கப்பட்டது. தமிழும் வளர்ந்தது. சமய நூல்களுக்குப் பல உரை எழுதியும் பதிப்பித்தும் வந்தார். சமயத்தை வளர்க்க வேண்டிய கட்டாய சூழலில் நாவலர் வாழ்ந்தார்.
சைவசமய சாரம், சிவாலய தரிசன விதி நித்திய கரும விதி, சிரார்த்தவிதி, தர்ப்பன விதி என்ற சமய நூல்களை இயற்றி பதிப்பித்திருக்கின்றார்.
O4, இலக்கியக் கல்வி
தமிழ்ப்புலமை என்ற பகுதியில் நாவலர் குறிப்பிடும் கருத்துக்கள் மூலம் இலக்கியம் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துப் புலனாகும்.
திருவள்ளுவர் குறள்நாலடியார் முதலாகிய நீதி
நூல்களைப் பதப்
பொருளுடனே கற்றறிந்து கொள்க"
C72)

சங்கத்தமிழ்
என நாவலர் குறிப்பிடுவதன் வாயிலாகத் திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களைக் கற்பதன் அவசியத்தை முன்வைப்பதைக் காணலாம்.
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் அருட்பாக்களைப் பண்ணுடன் ஒதவும் சுத்தாங்கமாக ஒதவும் பழகிக் கொள்க என நாவலர் குறிப்பிடுவதன் வாயிலாகப் பக்தி இலக்கியங்களைப் பண்ணுடன் கற்பதன் அவசியத்தை உணர்த்துகின்றார்.
பெரிய புராணம் திருவிளையாடற் புராணம், திருவாதவரடிகள் புராணம், கந்தபுராணம், உபதேசகாண்டம், கோயிற் புராணம், காசிகாண்டம், கூர்மபுராணம். சேதுபுராணம், பதினொராந்திருமுறையின் பிரபந்தங்கள், குமரகுருபரர் அருளிச் செய்த பிரபந்தங்கள் முதலாகிய இலக்கியங்களை ஆராய்ந்து அறிக எனக் குறிப்பிட்டுள்ளார். சமய நூல்களை நாவலர் இலக்கியங்கள் என்றே குறிப்பிடுகின்றார். புராண இலக்கியங்கள் பற்றிக் கூறும் பொழுது சமய நூலாக மட்டும் பார்க்காமல் உயர்ந்த இலக்கியங்களாகக் கொள்வதைக் காணலாம். இலக்கிய இரசனை உடைய இலக்கியங்களாக நாவலர் இவற்றைக் கருதினார்.
திருவள்ளுவர் குறள் பரிமேலழகர் உரை திருச்சிற்றபம்பலக் கோவையார் நச்சினார்க் கினியருரை, கல்லாடம் நச்சினார்க்கினி யருரை என்பவற்றைக் கற்று இடைவிடாது பலகாலும் உளங்கொள்ளப் பயிலுக.
இலக்கணங்களைக் கற்றறிந்துதாம் கற்ற இலக்கியங்களில் இவ்விலக்கண விதிகளை அமைத்துப் பழகுக என நாவலர் குறிப்பிடுவதி லிருந்து இலக்கிய இலக்கண கல்வியை மாணவர்கள் கற்கும் முறையைப் பயிற்றுவிக்கிறார். உரையினைக் கற்கும்
தை 2012)

Page 75
பொழுதுதான் அவற்றின் வேறுபாடுகள் நுட்பமாக விளங்கும் என்பதை நாவலர் கற்பிக்கின்றார்.
கல்வி கேள்விகள் இல்லாதவர்கள் கடவுளை அறிந்து வழிபட்டு உய்யமாட்டார் கள் என நாவலர் குறிப்பிடுவதிலிருந்து ஒரு உண்மை புலனாகின்றது. கல்வி மூலமே இறைவனை உணர முடியும். சமயத்தை யும் கல்வியையும் பிரிக்க முடியாது. சமயத்தினூடாக மொழி இலக்கியம் வளரும். மொழி இலக்கியம் ஊடாகச் சமயம் வளர்க் கப்படும் என்பது விளக்கம் பெறுகின்றது. கல்வி கற்பதன் இலட்சியம் கடவுளைச் சேர்வதே என்பது பெறப்படுகின்றது.
O5.பாடவிதானமும் அறிவியல் நோக்கும் தமிழகத்திலும் இலங்கையிலும் கல்வி யிலும் சமய ஒழுங்கு முறைகளிலும் ஏற்பட்ட மாற்றத்தைச் சமயக் கல்வி மூலம் மாற்ற முற்பட்டார். தில்லையிலும் வண்ணார் பண்ணையிலும் சைவப்பிரகாச வித்தியா சாலைகளை அமைத்தார். போதனைக்கு உரிய பாடப்புத்தகம் இல்லாத போது அக்குறையை நீக்கி முதற்பாலபாடம், Su60öLITLb LIT6OLITL b b|T6öræIILíb LIm6OLIIILLb என்ற பாடநூல்களை நாவலர் எழுதினார். எளிய தமிழ் நடையில் இவை எழுதப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
“பிள்ளைகளுக்குப் பாலபாடங்கள் நிகண்டு, திருவள்ளுவர் முதலியநீதிநூல்கள் சிவபுராணம், இலக்கணம், கணிதம், தருக்கம் வெளிப்படையாகிய வசன நடையிற் செய்யப்பட்ட சைவசமய நூல்கள், பூகோள நூல், வைத்திய சோதிடம், வேளாண்மை நூல், வணிகநூல், அரசநீதி சிற்பநூல் முதலானவைகளைப் படிப்பிக்க வேண்டும்” (ஆறுமுகநாவலர் சரித்திரம், ப.47) என பாடவிதானம் பற்றி ஆலோசனை
தை 2012 H
 

சங்கத்தமிழ்
கூறியிருக்கிறார். பல துறைகளிலும் மாணவர் கல்வி பயில வேண்டும் என்பதை வற்புறுத்தினார். அறிவியற் கல்வியையும் மாணவர்கள் பெற வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார். வைத்தியம்,
வணிகம் அரச நீதி, சிற்பம் பற்றிய அறிவு என்பது அறிவியல் சார்ந்த கற்கை நெறிகளே. காலணித்துவ ஆட்சியில் பிரித்தானியர்களது நல்ல கொள்கைகளை நாவலர் ஏற்றுக் 685.Te06, LTT.
காலனித்துவ ஆட்சியால் சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகளை வரவேற்றார். சமூகத்திற்கு எதிரானவையைப் புறக்கணித் தார். நாவலர் பெருமான் அறிவியற் கல்வியை மாணவர்கள் பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் பாடவிதானம் அமைத்தமை வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
நாவலர் இலங்கைப் பூமி சாஸ்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். கணித வாய்ப் பாடுகளை இயற்றியுள்ளார். அறிவியல் நூல்களை எழுதுவதிலும் நாவலர் ஆர்வம் கொண்டுள்ளமை புலனாகின்றது.
O6. உரைநடை
சாதாரண மக்கள் அறிவு விருத்திக்கு ஏற்ற ஒரு கருவியாக தமிழில் உரைநடை அமைதல் வேண்டும் என்ற கொள்கை யுடையவராக நாவலர் செயற்பட்டார். தமிழ் உரைநடையின் தந்தையாக நாவலர் செயற்பட்டார். பெரிய புராண வசனத்திற்கு நாவலர் எழுதிய முகவுரையில் இதனைத் தெளிந்து கொள்ளலாம்.
“நிறைந்த கல்வியுடைய வித்துவான் களும் குறைந்த கல்வியறிவுடைய பிறரும் ஆகிய யாவரும் எக்காலத்தும் எளிதில் வாசித்து உணரும் பொருட்டும் கல்வி
(73)

Page 76
யில்லாத ஆடவர்களும் பெண்களும் பிறரைக் கொண்டு வாசிப்பித்து உணரும் பொருட்டும் பெரும்பான்மையும் இயற் சொற்களும் வடசொற்களும் பிரயோகிக்கப் படும் சத்தியரூபமாகச் செய்து வாசிப்பவர் களுக்கு எளிதலே பொருள் விளங்கும்படி பெரும்பான்மையும் சந்தி விகாரங்களின்றி அச்சிற்பதித்தேன்” (பெரிய புராண வசனம், முகவுரை) என அவர் எழுதியிருப்பதை நோக்கும் பொழுது தமிழ் உரை எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற அவரது உரைநடைக் கொள்கை தெளிவாகின்றது. மக்களின் அறிவு வளர்ச்சிக்கு தமிழ் உரைநடை ஒரு கருவியாக அமைய வேண்டும் என நாவலர் கருதினார்.
கோயிற் புராணவுரை, சைவசமய நெறிமுறை, திருச்செந்திலந்தாதியுரை திருமுருகாற்றுப்படையுரை, மருதூரந்தாதி யுரை, சிவதருமோத்தரவுரை முதலிய சைவசமயம் சார்ந்தன. இவை பழைய உரையாசிரியர்களின் உரை மரபில் எழுதப்பட்டன. பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், பெரியபுராண கசனம் என்பவற்றை வசனமாக உரைநடையில் எழுதிப் பதிப்பித்தமை குறிப்பிடத்தக்கது. சைவசமய வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கு மாக வித்தியாதுபாலன யந்திரசாலை என்னும் அச்சகத்தை சிதம்பரத்திலும் சென்னையிலும் நிறுவி அச்சிட்ட நூல்கள் உரைநடை வளர்ச்சியைக் காட்டுகின்றன.
O7. பதிப்புப்பணி
நாவலரது பணிகளுள் பதிப்புப்பணி குறிப்பிடத்தக்கது. தமிழ் நூல்கள் எல்லாம் ஏட்டு வடிவிலேதான் இருந்தன. அவற்றை பதிப்பிக்காவிட்டால் பலநூல்கள் அழிந் திருக்கும். கறையான் பூச்சிகளால் அழிவு
C74)
 

சங்கத்தமிழ்
றாது பாதுகாத்து அச்சு வாகனம் ஏற்றிய பெருமை ஆறுமுகநாவலர் சி.வை.தாமோ தரம்பிள்ளை உ.வே.சாமிநாதையர் போன்றோரைச் சாரும். ஒரு நூல் எவ்வாறு பதிப்பிக்கப்பட்டது. பதிப்பு உத்திகள் எவை என்பதை பதிப்பாசிரியர்களின் பதிப்புக்களால் மதிப்பிடப்படுகின்றது. பதிப்பு முறையில் சில பதிப்பாளர்கள் மூலபாடத்தை மாற்றிப் பதிப்பித்துள்ளனர். ஆறுமுகநாவலரிடம் மூலபாடத்தை மாற்றுகிற போக்கு இல்லை. மூலபாடத்தை மூலத்திலிருப்பது போன்று அப்படியே பதிப்பிப்பார். நாவலரது பதிப்பில் பிழை இருக்காது. நாவலரது பதிப்பிற்கு தனிச்சிறப்பு இருக்கிறது.
நன்னூல் விருத்தியுரை, (திருவாசகம், திருக்கோவையார் மூலம் என்பவற்றைப் பரிசோதித்து, அச்சிடுதல்) திருக்குறள் பரிமேலழகர் உரை (அச்சிடுதல்) திருவிளை யாடற் புராண வசனம், சேது புராணம், இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பிய சூத்திர விருத்தி, இலக்கணக்கொத்து, அருட்யாபதிப்பு (அகத்தியர் தேவாரத் திரட்டு) (திருவாசகம், திருவிசைப்பா, திருப் பல்லாண்டு, பெரியபுராணம், செய்யுள்திரட்டு ஆகியன சேர்ந்த தொகுப்பு) சிதம்பர மும்மணிக்கோவை, அருணகிரிநாதர் திருவகுப்பு, பதினோராந் திருமுறை பதிப்பித்தல், கந்தபுராணம் அச்சிடுதல், சைவவினாவிடை பதிப்பித்தல் (நன்னூல் காணர்டிகையுரை, திருவிளையாடற் புராணம், நன்னூல் விருத்தியுரை என்பவற்றை திருத்தி பதிப்பித்தார்) முதலாம் இரண்டாம் மூன்றாம் பாலபாடங்களையும் நீதி நூல்களையும் எழுதி அச்சிட்டார். சிவஞானபோதம், ஆத்திகடி, தேவாரத் திரட்டு, செளந்தர்யலகரி, சூடாமணி நிகண்டு, தருக்க சங்கிரகம், திருப்புகழ், திருவாசகம், உபநிடதம் நன்னறி, பிரயோக
தை 2012)

Page 77
விவேகம், திருவகுப்பு நான்மணிமாலை, மூதுரை, பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களையும் பதிப்பித்தார்.
நாவலர் பதிப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க பதிப்பு உத்திகள் காணப்படுகின்றன.
01. பிரதிகளின்ஆதாரமில்லாமல்ஒன்றை யும் தாமாகத் திருத்தக் கூடாது. O2. பாடபேதங்கள் சுட்டுவதில்லை. O3. தனக்கு முன்னிருந்த ஆசிரியர்களது துணையின்றி இலக்கண நூல் களிலோ சித்தாந்த நூல்களிலோ மாற்றங்கள் எதுவும் செய்யாமை. O4. பாடல்களை சந்தி பிரிக்காமல்
சேர்த்தே அச்சிடுதல். தாம் பதிப்பிக்க கருதிய பல நூல்களையும் பல பிரதி
களோடு ஒப்பு நோக்கிய பிறகே பதிப்
பித்து வெளியிடுவார். 05. அச்சிடுகின்ற பொழுது பிழை
களைத் நீக்குவார்.
காலத்தின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப நூல்களைப் அச்சிடும் தன்மை கொண்டவர். நாவலர் 40 நூல்களைச் சுவடி களிலிருந்து பதிப்பித்துள்ளார். நீதிநூல்கள், பக்தி நூல்கள், தத்துவ நூல்கள், இலக்கண நூல்கள், புராண இலக்கியங்கள், காவியங் கள், அறிவியல் நூல்கள், நிகண்டு போன்ற நூல்களை பதிப்பித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
08. மொழிபெயர்ப்பு முயற்சி
நாவலர் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், கிரேக்கம், எபிரேயு முதலிய மொழிகளை நன்கு கற்றுள்ளார். தமிழை ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்தை தமிழிற்கும் மொழி பெயர்க்கும் திறமை பெற்றவர் நாவலர் பார்சிவல் பாதிரியாரின் பள்ளியில்
இத 2012
 

சங்கத்தமிழ்
படிக்கும் காலத்திலிருந்தே ஆங்கிலத் திறமையைப் பலரும் பாராட்டினர். பார்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக் கிணங்க யாழ் வெல்லியன் மிசன் கல்லூருயில் தமிழ் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார். நாவலரின் ஆங்கிலத் திறமையை உணர்ந்த பார்சிவல் பாதிரியார் பைபிளைத் தமிழில் மொழி பெயர்க்கும்படி பணித்தார். நாவலர் பாதிரியாரின் வேண்டுகோளுக் கிணங்க பைபிளைத் தமிழில் மொழி பெயர்ப்பு எப்படி அமைய வேண்டும் என்பதை நாவலரின் பைபிள் மொழி பெயர்ப்பின் ஊடாகக் கண்டு கொள்ளலாம். மொழி என்பது பல தரப்பட்ட மக்களையும் இணைக்கும் கருவியாகும். ஆறுமுகநாவலர் பாதிரியாருடன் இணைந்து கிறிஸ்தவ மதத்திற்கு மொழி பெயர்ப்பின் ஊடாக பங்காற்றியிருக்கின்றார். மற்ற மதத்தவர் களின் கொள்கைகளை நாவலர் எதிர்க்க வில்லை. ஆனால் சைவ சமயத்தை யாரும் கண்டித்தால் உடனே ஆவேசமாக உணர்ச்சி வசப்பட்டு கண்டிப்பார். மதகாழ்ப்பில்லாமல் இலக்கிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நாவலரது கொள்கையாகும். இதனை ஓரிடத்தில் நாவலரே குறிப்பிடுவார். மேலைநாட்டவரின் மொழி பெயர்ப்பு முறையை நாவலர் மனம் கொண்டார். இன்றைய அறிவியல் யுகம் மொழி பெயர்ப்பில் தங்கியுள்ளது. மொழி பெயர்ப்பின் ஊடாக நாவலரது அறிவியற் சிந்தனை புலனாகின்றது.
கரியநாராயணசாஸ்திரி நாவலர் பற்றிக் கூறும் பொழுது வசனநடை கைவந்த வல்லாளர் என்று சிறப்பித்துள்ளார்.
தமிழிலே முதல் முதல் பிரசங்கம் செய்தவர் நாவலரே. 32 ஆண்டுகளாக சொற்பொழிவுகள் நடாத்தினார். கல்லாதவர் களின் கல்நெஞ்சம் கனியப் பேசும்
(75)

Page 78
கனிவுடையோன் என கவிமணி வாழ்த் தினார். வண்ணார்பண்ணையில் வாரச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். திருவாவடு துறை ஆதீனம் இவரது புலமையையும் சொல்லாற்றலையும் அறிந்துநாவலர் பட்டம் வழங்கியது.
இலக்கணப் பிழை இல்லாமல் நிறுத்தக் குறியீடுகளை முதன் முதலில் தமிழில் அமைத்தவர் நாவலரே. நிறுத்தக் குறியீடுகள் முதலில் ஆங்கில மொழியிலேதான் பயன் பட்டன. அம்முறையைப் பின்பற்றித் தமிழில் தந்தவர் என்ற பெருமையை நாவலர் பெறுகிறார்.
தமிழ்மொழியில் எழுந்த பாட நூல் களுக்கு நாவலரே வழிகாட்டியாகிறார். தமிழில் கட்டுரை எழுதும் முறையை வழி காட்டினார். சைவ - ஆங்கிலப் பாடசா லையை முதன்முதலில் ஆரம்பித்தார். தமிழ் ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற் றினார். சூடாமணி நிகண்டினை உரை யுடன் பதிப்பித்தார். அகராதி முயற்சியிலும் நாவலர் ஈடுபட்டார்.
O9, இலக்கணப் புலமை
ஆறுமுகநாவலர் இலக்கணப் புலமை பெற்றவராகத்திகழ்ந்தார். நாவலர் இலக்கண வினாவிடை இலக்கணச் சுருக்கம், நன்நூற் காண்டிகை உரை என்பவற்றை உரை நடையில் எழுதினார். மாணவர்கள் உயர்ந்த இலக்கணங்களை கற்பதற்கு வழிகாட்டியாக இவற்றை எழதியிருக்கிறார். இலக்கணங்களைக் கற்க விரும்புபவர் களுக்கு இவை எளிமையாகவுள்ளன. சிவஞான முனிவரது தொல்காப்பிய முதற் கத்திர விருத்தியையும், இலக்கண விளக்கச் கறாவளியினையும் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து வெளியிட்டார். இலக்கணக்கொத்துரை, பிரயோக விவேகம்,
C76)
 
 
 

சங்கத்தமிழ்
ஆகிய இலக்கணங்களையும் நாவலர் பரிசோதித்து வெளியிட்டார். இலக்கண நூல்களில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் உடையவராகவும் திகழ்ந்தார்.
பழந்தமிழ் நால்களைப் பதித்தவரான சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப் பியம் சேனாவரையத்தை பதிப்பிக்க முயன்ற வேளை அதனை பரிசோதிப்பதற்கு நாவலரையே நாடினாராம். என்பதிலிருந்து நாவலரின் இலக்கணப் புலமை
தெரிகின்றது.
10. வெகுசனத் தொடர்பு
மனிதனின் பல் துறை வளர்ச்சியையும் வளம்படுத்துவனவாக வெகுசனத் தொடர்பு சாதனங்கள் அமைகின்றன. வெகுசனத் தொடர்பினை நாவலர் தொடக்கியவர். வெகுசன சமூக சம்மதம் என்ற சொல் லாட்சியை நாவலரே முதலில் கையாளு கின்றார். இன்று எல்லோரும் பரவலாக வெகுசனத் தொடர்பு என்ற சொல்லாட் சியைப் பயன்படுத்துவதைக் காணலாம். நாவலர் இலங்கை நேசன், இலங்காபிமானி உதயதாரகை போன்ற பத்திரிகைகளில் பல விடயங்களை எழுதி வந்தார். பொது மக்களுக்குச் சில செய்திகளை கூறியும், கற்பவர்களுக்குரிய விடயங்கள், சைவ சமயம் தொடர்பான விடயங்கள், பரமசய விடயங்கள் தன்னுடைய கருத்துக்களுக்கு மாறாக எழுந்த விடயங்களைக் கணடித்துக் கூறுதல் எனப்பல விடயங்களை பத்திரிகை வாயிலாக நாவலர் தெரிவித்தார். நாவலர் பத்திரிகையில் எளிய செந்தமிழைப் பயன்படுத்தினார். எழுத்துப்பிழை, சொற் பிழை, வசனப்பிழை, என்ற இலக்கணப் பிழைகள், இல்லாமல் சாதாரன மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பத்திரிகைத் தமிழை வளர்த்தார். நாவலர் வெகுசனத்
தை 2012)

Page 79
தொடர்பாளராக இருந்தார். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
11. Վpւք6յ6Փք
சமயக் காவலனாக, நல்ல நூலாசிரியராக
தமிழ் ஆங்கில நல்லாசானாக சிறந்த பதிப்பாசிரியராக சிறந்த உரையாசிரியராக சிறந்த சொற்பொழிவாளராக தன்னலம் துறந்து பொதுநலம் பேணுபவராக வெகு சனத் தொடர்பாளராக மொழி பெயர்ப் பாளராக எனப் பல்துறைகளிலும் அவரது பணிபரிவியிருப்பதைக் காணலாம். "நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லு
ஆறுமுகநாவலர்
ஈழ நாட்டில் தமிழர்கள் பல நூறு ஆ தமிழகத்தோடு எப்போதும் தொடர்பு ெ நாகரிகத்தையும் சமயத்தையும் வளர்த்த
சில காலமாகத் தமிழ் மறுமலர்ச் வருகிறோம். தமிழ் மறுமலர்ச்சிக்குக் பெயர்களும் சொல்லப்படுகின்றன. ஆன ஆதிகாரண புருஷர் யார் என்று ஆராய் சேர்ந்த ஸ்ரீ ஆறுமுக நாவலர் என்பது ெ
பழைய காலத்தில் தமிழ் வசனம் வசனமும் சங்கச் செய்யுள் நடைை இல்லையென்றால், இலக்கண வழுக்க: முழுவதையும் ஒரே வாக்கியத்தின் நடையாயிருந்தது. பிழையில்லாத எளி கையாண்டு காட்டி வெற்றி பெரியார் ஸ்ரீ
ஆதாரம் அமரர் கல்கி, யார் இந்த மணி அக்டோபர் 1998
தை 2012)
 

சங்கத்தமிழ்
தமிழ் எங்கே சுருதி எங்கே" என சி.வை.தாமோதரம்பிள்ளை கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.*
உசாத்துணை நூல்கள்
O1. ஆறுமுகநாவலர், பெரிய புராண வசனம், சென்னை, 1958. O2. ஆறுமுகநவாலர் சதாசிவம் பிள்ளை.
அகத்தியர் தேவாராத் திரட்டு வித்தியானுபாலன யந்திரசாலை,
ിഖങ്ങങ്ങങ്ങI, 1883. 03. கைலாசபிள்ளை.த., ஆறுமுகநா
வலர் சரித்திரம், சென்னை, 1958.
பற்றி அமரர் கல்கி
ண்ைடுகளுக்கு முன்னரே குடியேறினார்கள். காண்டிருந்தார்கள். தமிழையும் தமிழர் நார்கள்.
சி என்பது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டு காரணமானவர்கள் என்று பலருடைய ால் உண்மையில் தமிழ் மறுமலர்ச்சிக்கு ந்து பார்த்தோமானால் அவர் ஈழ நாட்டைச் தரியவரும்.
அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த யவிட கடினமான நடையில் இருந்தது. ள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் னால் நிறைக்கும் அசம்பாவித வசன ய தமிழ் வசன நடையை முதன் முதலில்
ஆறுமுகநாவலரே ஆவர்.
தர்கள்? (கட்டுரைத் தொகுதி), வானதி பதிப்பகம்,
(77)

Page 80
தமிழ் நூற்பதிப்பானது. பதினாறாம் நூற்றாண்டில் தம்பிரான் வணக்கம் எனும் நூலோடு தொடங்கிவிட்டது. எனினும், பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தமிழ்ப் பதிப்புலகம் செழுமையான நிலையினை அடைந்தது எனல் வேண்டும். முதற் பதிப்பிலிருந்து ஆரோக்கியமான பதிப்பு நிலையை அடைவதற்குத் தமிழுக்கு கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டு காலம் தேவைப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் பல. அவற்றுள் அச்சுக்கூடம் நிறுவும் அனுமதியை சுதேசியத் தமிழறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி வரை பெற்றுக் 685IT6irolT (uppu IITLD65 Bb56OLD cup855uuLDIT60T தாகும். 1835ம் ஆண்டு வரை அச்சகங் களை அமைக்கும் உரிமை விதேசியர் களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாண்டு அறிவிக்கப்பட்ட அச்சுஇயந்திரச் சட்டம்தான். சுதேசிய அறிஞர்கள் புத்தக வெளியீட்டில் பரந்த அளவில் ஈடுபடுவதற்கான வாயிலைத் திறந்து விட்டது. இவ்வாறு அச்சு முயற்சி களில் சுதேசியர்களின் வரவு நிகழ்ந்த வேளையில், அச்சியந்திர சாலைகளை ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் நிறுவி, நூல்கள் பலவற்றை வெளியிடுவதைத் தமது தலையாய பணிகளுள் ஒன்றாகக் கொண்டவராக யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் சமுதாய வாழ்விற்கு வந்தார். தமிழ்ப் பதிப்புலகில் நாவலர் பதிப்பு நல்ல பதிப்பு எனப் பெயர் நிறுவிய அவரின் பதிப்புச் சாதனைகள் மிகவும் குறிப்பிடத் தக்கவை.
"அவர் (நாவலர்) பரிசோதித்தும் புதிய உரை எழுதியும் புதிதாய் இயற்றியும் வெளியிட்ட நூல்கள் 59 அச்சிற்பதிப்பிக்கும் நோக்குடன் எழுதி முடித்தவை 10: எழுதத் தொடங்கி யவை 9: அவர் இறக்கும் வரையுள்ள காலப்பகுதியாகிய 35 ஆண்டு
C78)

பதிப்பாள மன்னன் -
விமரிசனங்களுடான ஒரு பார்வை கலாநிதி பூணீ. பிரசாந்தன்
விரிவுரையாளர், யூரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகம்,
களுக்கிடையில் பிரசங்கஞ் செய்தல், மதப் பிரசாரம் செய்தல், மாணவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல் முதலிய பாரிய வேலைகளுடன் 59 நூல்களை எழுதி அச்சிட்டமை வியக்கத்தக்கது. அச்சுக் கூட வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத் திலே இதனைச் செய்து முடித்தமை அரிய பெரிய சாதனையாகும். மேலும், அவர் வெளியிட்ட 59 நூல்களும் ஓர் எழுத்துப் பிழையோ அச்சுப் பிழையோ இலக்கணப் பிழையோ இல்லாதிருந்தமை வேறெவரும் இதுவரை சாதியாததொன்றாகும். அவரை அக்கால பதிப்பாள மன்னன் எனலாம்.”
என்று, ஆறுமுக நாவலர் எனும் ஆளுமை, தமிழ்ப் பதிப்புலகில் பெறும் இடத்தைச் சுருக்கமாகச் சுட்டுகிறார் சு.வித்தியானந்தன். இவரின் இம் மேற் கோளில், அச்சியந்திரசாலைகள் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் தாமே அச்சியந்திரசாலைகளை நிறுவி, தமது பல்வேறுபட்ட பணிகளுக்கிடையேயும் நூல்கள் பலவற்றை, பிழையில்லாது அச்சுவாகனம் ஏற்றியமை வியக்கப்பட்டு, இங்கு பதிப்பாள மன்னன் எனும் பட்டம் நாவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு. நாவலரின் பதிப்புப் பணி யானது அறிஞர்கள் பலராலும் போற்றப் பட்டுள்ளது.
"தமிழ் வளர்ச்சியின் பொருட்டு அவர் (நாவலர்) செய்த அருஞ் 6&Fuj6b556.55g &60DLumeTrf 856ITT5 அவர் பதிப்பித்த நூல்கள் விளங்கு
தை 2012)

Page 81
පසුස්
கின்றன. அவருடைய பதிப்பு முறை
தமிழ்நாட்டாராற் பெரிதும்
மதிக்கப்படுவது.”*
-உ.வே. சாமிநாதையர்
"இலக்கண இலக்கியப் பிழை களும் அச்சுப் பிழைகளும் இல்லாமல் உயர்ந்த தமிழிலக்கண இலக்கிய நூல்களையும் சைவசமய நூல் களையும் பதிப்பிட்டுதவுவார் அரிய ரான எமது இளமைக் காலத்தில் ஆறுமுக நாவலரவர்களே அந்நூல் களைப் பிழையறப் பதிப்பித்து உதவினவர்கள். திருச்சிற்றம்பலக் கோவையாருரையுந் திருக்குறள் பரிமேலழகியாருரையும் அவர்கள் திருத்தமாக அச்சிடுவித்து வெளியிட்ட மையினாலேதான் யாம் நம் பண்டைத் தமிழின் மாட்சியுந் தமிழாசிரியரின் தன்னிகரில்லாத் தெய்வப் புலமையும் ஒருங்குனர்ந்து மேலுந் தமிழ் நூல் கற்பதில் அடங்கா வேட்கையுற்றேம்.”*
-மறைமலையடிகள் இவை தமிழ் உலகில் இரு பெரும் சிறப்பு ஆளுமைகளின் கூற்றுகள். ஒருவர், தமிழ்ப் பதிப்புலகின் முக்கிய அடையாளமாக விளங்குபவர். மற்றவர், தனித்தமிழ் இயக்க மூலவராகக் கொள்ளப்படுபவர். இவர்களின் கூற்றுகள் அக் காலத் தமிழ்க் கல்வி உலகில் நாவலர் பதிப்புகள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை எடுத்துரைக்கின்றன.
இவ்வாறு பண்டைத் தமிழின் மாட்சி தெரியவைத்தவை எனத் தக்க அறிஞர் களல் போற்றப்படும் பதிப்புகளைத் தந்த, நாவலரின் பதிப்புப் பணியைக் குறித்து விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள மையையும் கவனத்திற் கொள்ள
62 2012

சங்கத்தமிழ்
வேண்டும். இப் பதிப்பாள மன்னன். தமிழ்ப் பதிப்புலகில் வரலாற்றுப் பிழை இழைத்த வராகச் சிலரால் இனங்காணப்பட்டுள்ளார் என்பது இவ்விடத்தில் சுட்டப்பெறத்தக்கது.
அவரால் இழைக்கப் பெற்ற வரலாற்றுப் பிழையாகக் கூறப்படுவது எது என்பதையும், அவ்வாறு கூறப்படுவது சரியானதுதானா என்பதையும், நாவலரின் பதிப்புக் குறித்த இக் கட்டுரையில், உண்மைத் தரவுகளின் அடிப்படையில் பார்ப்பது அவசியமான தாகும்.
"பெரியபுராணம் , திருமுரு காற்றுப்படை முதலான சைவ சமயநூல்களுக்கு உரை எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் ஆகியவற்றைச் செய்த நாவலர் சங்க நூல்கள் மீது கவனம் செலுத்தாமல் போனது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். இதனை நாவலர் செய்த வரலாற்றுப் பிழை என்றே மதிப்பிடலாம். 1850களில் தம்மிட மிருந்த சங்க இலக்கியச் சுவடி களைத் தமிழ் சைவப் பாரம் பரியத்தில் உருவாகி வந்த நாவலர் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்தி ருப்பாரேயானால், பின்னர் தமிழ்த் தாத்தா” உருவாக வேண்டிய &{6)uöflu JLô நேர்ந்திருக்காது. துமிழ்த்தாத்தாவிற்கு வாய்ப்பளித்து, ஆறுமுக நாவலர் கண்ணை மறைத்தது மதம். மதம் எல்லாக் கால்ங்களிலும் மதம் பிடித்தே செயல்படுவது என்பது வரலாற்று (Uppel."' என்பது ஆய்வாளர் வீ. அரசுவின் கூற்று. நாவலர் செய்த வரலாற்றுப் பிழையாக, பதிப்புப் பணியின் பொழுது அவர் சங்க நூல்கள் மீது கவனம் செலுத்தாமை
(79)

Page 82
இங்கு கூறப்பட்டுள்ளது. இக் குறிப்பை வசதியும் தெளிவும் கருதிப் பின்வருமாறு மூன்று பிரிவுகளாகப் பகுத்துக் காணலாம்.
அ) நாவலர் சங்க நூல்கள் மீது
கவனம் செலுத்தாமல் போனது வரலாற்றுப்பிழை. ஆ) சங்க இலக்கியச் சுவடிகளைத்
தமிழ் சைவப் பாரம்பரியத்தில் உருவாகி வந்த நாவலர் பதிப் பித்து வெளிக்கொண்டு வந்தி ருப்பாரேயானால் , பின்னர் தமிழ்த் தாத்தா' உருவாக வேண்டிய அவசியம் நேர்ந்தி ருக்காது. இ.) சங்க நூல்கள் மீது கவனம்
செல்லவிடாது. ஆறுமுக நாவலர் கண்ணை மறைத்தது மதம். நாவலர் சங்க நூல்கள் மீது கவனம் செலுத்தவில்லை எனும் ஆய்வாளர், திருமுருகாற்றுப் படைப் பதிப்பை, சங்க நூலாகக் காணாமல், சைவ சமய நூலாக மட்டுமே அடையாளம் காண்கிறார். பாராயணத்துக்குரிய திருமுறை நூலாக விளங்கியமையால்தான் நாவலர் அதைப் பதிப்பித்தார் என்பதால், அந் நூலை, சங்க இலக்கியப் பதிப்பாக தமிழ்நாட்டு ஆய்வாரள் பலரும் பாராட்டவில்லை.
ஆனால், செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டு பழந் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் குறித்துப் பல ஆய்வுகளும் வெளிவந்துகொண்டுள்ள இவ்வேளையில், திருமுருகாற்றுப்படை குறித்த கட்டுரைகள் சில, அதன் பதிப்பு வரலாற்றைப் பேசு கின்றன. இக்கட்டுரைகள் பெரும்பாலும் 1834இல் வெளிவந்த திருத்தணிகை சரவணப்பெருமாளையரின் பதிப்பைத்தான்
G80)
 

சங்கத்தமிழ்
திருமுருகாற்றுப் படைப் பதிப்பு வரலாற்றின் முதற் பதிப்பாகக் கூறுகின்றன."
நாவலர் என்ன நோக்கத்துக்காகப் பதிப்பித்தாரோ அதே பாராயண நோக் கத்துக்காகத்தான் சரவணப்பெருமாளை யரும் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித் துள்ளார். இங்கு எழுப்பப்படும் வினா என்ன வென்றால், பாராயண நோக்கத்துக்காகப் பதிப்பித்த சரவணப் பெருமாளையரின் பதிப்பை சங்க, செவ்வியல் இலக்கியப் பதிப்பாகவும் கொள்ளலாம் என்றால், நாவலர் பதிப்பை ஏன் சங்க இலக்கியப் பதிப்பாகக் கொள்ள முடியாது? ஏன்பதாகும்.
இனி, நாவலர், திருமுருகாற்றுப்படை தவிர்ந்த சங்க நூல்களுள் ஒன்றையேனும் பதிப்பிக்க முயலவில்லையா? என்பன்)த இவ்விடத்தில் பார்ப்பது அவசியமானதாகும். திருமுருகாற்றுப்படை தவிர்ந்த எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூற் பதிப்பு ஒன்றேனும் நாவலர் பதிப்பாக வரவில்லை என்பது உண்மைதான். எனினும், அவர் பதிப்பித்தற் பொருட்டு சங்க நூல்கள் மீது கவனமே கொள்ளவில்லை என்பது பொய்யான செய்தியாகும். இப் பொய் மையை எடுத்துக் காட்ட 1860இல் வெளி வந்த திருக்கோவையார் பதிப்பில் காணப் படும் பிரகடனப் பத்திரிகையே போது மானதாகும்.
தாம் பதிப்பித்தளித்த நூல்களை மட்டு மல்லாமல், பதிப்பிக்கத் தயார்ப்படுத்தியுள்ள நூல்களையும் அவ்வப் பொழுது பிரகடனப் பத்திரிகை வாயிலாகக் குறிப்பிட்டுச் செல்லுதல் நாவலர் இயல்பு. இத்தகைய பிரகடனப் பத்திரிகை ஒன்று நாவலரின் மேற்கூறப்பெற்ற திருக்கோவையார் பதிப்பிலும் காணப்படுகின்றது. பதிப்பிக்கத் தயாராக உள்ள நூல்களாக இப் பத்திரிகை
தை 2012)

Page 83
யில் கூறப்பட்டுள்ள பட்டியலில், பின்வரும் சங்க இலக்கிய நூல்களின் பெயர்களும் காணப்படுகின்றன.
கலித்தொகை உரை புறநானூறு இப் பிரகடனப் பத்திரிகை கூறும் செய்தி மூலமாக, நாவலர், சங்க இலக்கியங்கள் மீது கவனம் கொண்டு அவற்றில் சிலவற்றைப் பதிப்பிக்கத் தயாராக்கி வைத்திருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், துரதிருஸ்ட வசமாக, அவற்றின் பதிப்புப் பணி நிறைவேறுதற்கு முன்பாக நாவலரது வாழ்க்கை நிறைந்து விட்டது என்பதே உண்மையாகும்.
அவர் தாம் பிரகடனப் பத்திரிகையில் தெரிவித்த சங்க நூல்களின் சுவடிகளை, பதிப்பிக்கும் பொருட்டு தேடிவைத்திருந்தமை யையும், அச்சுவடிகள் பதிப்புக்கு உகந்த நிலையில் திருத்தமுற்று இருந்தமையையும் சி.வை.தாமோதரம்பிள்ளையின் பதிப்புரைக் குறிப்பொன்று உறுதி செய்வதையும் இவ்விடத்தில் எடுத்துரைப்பது பொருத்த மானதாகும்.
"முதன் முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப் பிரதி. ஒரு பாட்டின் ஒருறுப் பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப் புண்டாய் நீக்கி விட்டேன்.
பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காகத் தேடியபோது ருநீலழுநீஆறுமுகநாவலரவர்கள் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித் தொகை அருமையுணர்ந்து அதனை எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டுமென்னும் அவாவுற்று. * என்கிறார் சி.வை.தா. நயனப்ப முதலி யாரது பிரதி மூலம் நல்ல கலித்தொகைப்
தை 2012)-
 

சங்கத்தமிழ்
பதிப்பைத் தரமுடியாது என நினைந்து அப் பதிப்பு முயற்சியில் கைசோர்ந்திருந்த சி. வை. தா., பின் ஆறுமுக நாவலரின் பிரதியைக் கண்டே, கலித்தொகையின் சிறப்பை அறிந்து, அதைப் பதிப்பிக்கும் எண்ணத்தை மீளப் பெற்றுக்கொண்டார் என்பது கவனத்துக்குரியது. சி. வை. தா. வின் கூற்றை நோக்கும் பொழுது, நாவலரின் கலித்தொகைப் பிரதி நன்கு திருத்தமுற்ற நிலையில் இருந்தது என்பது தெளிவு.
இதன் மூலம், நாவலர் தமது திருக் கோவையார்ப் பதிப்பின் பிரகடனத்தில் தெரிவித்திருந்தபடி கலித்தொகையைப் பதிப்புக்குத் தயாராக்கி வைத்திருந்துள்ளார் என்பதையும், பல்வேறுபட்ட பணிகளில் ஈடுபட்டுழைத்த அவர், இப்பதிப்பை வெளிக்கொணர்வதற்கு முன்பாகவே, அவர் வாழ்க்கை நிறைந்து விட்டது என்பதையும், அவர் பதிப்புக்குத் தயாராக்கிய சுவடிப் பிரதி, பின் சி.வை.தா. வின் கலித்தொகைப் பதிப்புக்குப் பயன்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
இதேவேளை, சங்க நூல்களுள் முதன்மையுடையதாகப் பல தமிழறிஞர் களாலும் கொள்ளப்படும் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தை, புகழ் பெற்ற சேனா வரையர் உரையோடு சி.வை.தா. பதிப்பிப் பதற்காக, சுவடிகளை ஒப்பு நோக்கி பரிசோதித்து வழங்கியவர் நாவலர் என்பதையும் இவ்விடத்தில் நினைவிற் கொள்ள வேண்டும். தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றில் சேனாவரையத்துக்கு வந்த முதற் பதிப்பு இதுதான் என்பது சுட்டப்படத் தக்கது.
எனவே, பதிப்பிக்கும் பொருட்டுநாவலர் சங்க நூல்கள் மீது கவனம் செலுத்த வில்லை. அது வரலாற்றுப்பிழை எனக் கூறும் அர சுவின் கூற்றுத் தவறானதாகும்.
-81)

Page 84
அடுத்து, சங்க நூல்களை நாவலர், பதிப்பித்து வெளிக்கொண்டு வந்திருப் பாரேயானால், பின்னர் தமிழ்த் தாத்தா உருவாக வேண்டிய அவசியம் நேர்ந்தி ருக்காது. கூறியிருப்பது பற்றி நோக்கலாம். இவ்வாறு கூறுவது மிகவும் வேடிக்கை யானதாகும். பாரதி ஏன் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பாடவில்லை. அப்படிப் பாடி இருந்தால் பாரதிதாசன் எனும் கவிஞர் ஒருவர் உருவாக வேண்டி இருந்திராது என்று எவரேனும் கூறினால் எப்படி யிருக்கும். அப்படியிருக்கிறது இது.
வரலாற்றில் போற்றப்படும் ஒவ்வொரு முக்கிய ஆளுமையும் தான் வரித்துக் கொண்ட கொள்கைக்கும் தனது சமகாலத் தேவைக்கும் தனது கசூழலுக்கும் அமை வாக, தான் அவசியமானவை எனக் கருதும் பணிகளை நிறைவேற்றியுள்ள 6OLD60)usis 85T600T6DTLD.
இதைப் புரிந்து கொள்ளாமல், ஒரு ஆளுமையை நோக்கி, மற்றப் பணி களையும் ஏன் செய்யவில்லை, அப்படிச் செய்திருப்பின், அடுத்த ஆளுமை தோன்றி யிருக்க வேண்டிய அவசியம் வந்திருக் காதே எனக் கூறுவது வரலாற்றுப்புரிதல் இன்மையால் வந்தது.
இந்த வரலாற்றுப் போக்கைப் புரிந்து கொள்ளாமையாலோ, நாவலர் மீது எப்படியாயினும் குறை சொல்ல வேண்டும் என்பதாலோ, ஒரு ஐயர் (உ.வே. சாமிநாதையர்) இப்படி உருவாகி விட்டாரே என்ற எண்ணத்தாலோதான், நாவலர் சங்க நூல்களைப் பதிப்பித்திருந்தால் பின்னர் தமிழ்த் தாத்தா” உருவாக வேண்டி வந்திராது என ஆய்வாளர் கூறியிருப்பதாகக் கருதலாம். இவ்விடத்தில் நாவலர் குறித்து க.கைலாசபதியின்
G82–
 

சங்கத்தமிழ்
கருத்தொன்றைக் காட்டிச் செல்வது போதுமானதாகும்.
"தனது காலத்துக்கேற்றவை எவை என்பதனையும் இன்றியமையாதன எவை என்பதனையும் சிந்தித்துத் தெளிந்து அவற்றைச் செயற்படுத் தியமையே நாவலரது சிறப்புக்கும் தனித்துவத்துக்கும் அடிப்படையாகும். அதாவது நாவலரின் தற்கால உணர்வே அவரை சமகாலத்தவர் பலரினின்று வேறுபடுத்தித் தனிச் சிறப்புடையராய்க் காட்டுகின்றது.” 7 இனி, மூன்றாவதாக, சங்கநூல்கள் மீது கவனம் செல்லவிடாது, ஆறுமுக நாவலர் கண்ணை மறைத்தது மதம், என்று கூறப்பட்டுள்ளதன் வன்மை மென்மைகளை ஆராய்தல் வேண்டும். நாவலர் சைவத்தில் கடும் பற்றுக் கொண்டவர். கிறித்துவத்தைச் சார்ந்த அன்றைய அரசினதும் மத மாற்றத்தை நோக்கமாகக் கொண்டியங்கிய கிறித்துவமிசனறிகளதும் நடவடிக்கைகளால் நலிந்துபோயிருந்த சைவத்தை மீள எழுச்சி அடையச்செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் தமது பலதரப்பட்ட பணிகளுள் சைவப் பணிகளுக்கே அவர் முதன்மை கொடுத்தார். கிறித்துவ மதப் பரப்புகைக்கு எதிரான கடுங் கண்டனங்களை வெளிப் படுத்தினார். தாம் தமக்கு ஏற்புடையதாக வரித்துக் கொண்ட சைவ சமய நூல்களைப் பெரிதும் வெளியிடும் பணியில் தலை நின்றார். அது, காலத்தின் தேவையை உணர்ந்து அவர் தெரிவு செய்த வழி. தனக்கான பணிப் புலத்தைத் தெரிவு செய்யும் சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இவ்வாறு, சைவப் பணிகளுக்கு அவர் முதன்மை கொடுத்தது உண்மை. சைவ
தை 2012)

Page 85
மாணவர்க்கான பாடத்திட்டத்தில் சைவ நூல்களையே Gudbubu IT60f 60). Dub உள்ளடக்கியதும் உண்மை. ஆனால் அவர் பதிப்புலகில், சைவம் சார்ந்த நூல்கள் மட்டும்தாம் என்ற எண்ணத்தோடு இயங்க வில்லை. உண்மை அவ்வாறு இருக்கிற போது, சங்க நூல்கள் மீது கவனம் செல்ல விடாது, ஆறுமுக நாவலர் கண்ணை மறைத்தது மதம் எனக் கூறுவது தவறானதாகும். மதக் காரணங்களுக்காகத் தான் சங்க இலக்கியப் பதிப்புகளை நாவலர் தரவில்லை என்பது உண்மையை உணராமற் கூறப்பட்ட கூற்றாகும்.
சங்க இலக்கிய நூல்களை மதம் காரணமாகப் பதிப்பிக்கவில்லை எனக் கூறுவோர், நாவலர் நன்னூற்பதிப்புக்களை வெளிக்கொணர்தமையைச் சிந்திப்ப தில்லை. மேலும் தாம் வெளியிடத் தயாராக்கியுள்ள நூல்கள் பற்றிய பட்டியலில் நாவலர் பிற சமய நூல்களான, கல்லாட வுரை, சீவக சிந்தாமணியுரை, சிலப்பதி காரவுரை, மணிமேகலை, வளையாபதி ஆகிய நூல்களையும் குறிப்பிட்டுள்ளதை யேனும் சிந்திக்க வேண்டும். இப் பட்டியல் மூலம் மதக் காழ்ப்பற்ற மனோநிலை யில்தான் அவர் பதிப்புலகில் ஈடுபட்டமை தெளிவாகிறது. இதனை, ه
"நாவலரவர்கள் தமது அடிப்படை நம்பிக்கைகளுக்கியைய புராணக் கருத்து களை - சமயப் பொருளை - சிரமேற் கொண்டவர். எனினும் சீவக சிந்தாமணி போன்ற சமணச் சார்புடைய காவியத்தைப் போற்றத் தவறவில்லை. அந்நூலை அவரே பதிப்பிக்க எண்ணியிருந்தார் என்பதும் தெரிந்ததே.”*
என, க.கைலாசபதியும், “வித்தியாசாலைத் திட்டத்திற்கு வேண்டிய நூல்களை எழுதியும்
தை 2012)
 

சங்கத்தமிழ்
பதிப்பித்தும் விளக்கியும் நின்ற நாவலரவர்கள் சமயப்பிரசாரணத் தைக் கருத்தினில் கொண்டு துண்டுப் பிரசுரங்களையும் கண்டனங்களை யும் சிறு நூல்களையும் எழுதிப் பிரசுரித்தனர். ஆயினும் சமய நூல்களை மட்டுமே பதிப்பிக்க வேண்டும் என்ற வரையறைக்குள் அவர் நிற்கவில்லை. இதனால் உலகியல் நூல்களையும் புறச் சமயநூல்களையும் கூட é}|6).j பதிப்பிக்கத் திட்டமிட்டனர். திருக் கோவையாருரை (186O) பதிப்பில் இடம்பெறும் அநுபந்தமும் பிரகடனப் பத்திரிகையும் இக் கருத்தினை ஆதரிப்பன. சமய நூல்களையும் கருவி நூல்களையும் சமயப் பிரசாரணத்திற்கு வேண்டிய பிரசுரங் களையும் வெளிக் கொணரப்புறப்பட்ட நாவலரவர்கள் விதானம், அழிந்து போகும் நிலையில் இருந்த தமிழ் நூல்களையும் உள்ளடக்கியதாக இருந்ததை மனங் கொளல் வேண்டும்.”* என, பொன்.பூலோகசிங்கமும் முன்னரே எடுத்துக் கூறியுள்ளனர். இவற்றை வைத்து நோக்கும் பொழுது, சங்க நூல்கள் மீது கவனம் செல்லவிடாது, ஆறுமுக நாவலர் கண்ணை மறைத்தது மதம் என வீ.அரசு கூறுவதும் தவறான கூற்றுத்தான் என்பது இலகுவில் புலனாகும். எனவே, பதிப்பாள மன்னன் மீது சங்க இலக்கியப் பதிப்புத் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமரிசனங் கள் உண்மை ஆதாரங்களைத் துணைக் கொள்ளாதனவாகக் காணப்படுகின்றன. தன்னலமற்ற சேவையாற்றி, வரலாற்றில் பெயர் பொறித்துள்ள ஆளுமை மீது
(83)

Page 86
ஆதாரமின்றி பழி சுமத்துவதுதான் வரலாற்றுப் பழியாய் முடிந்து விடுகிறது.
அடிக்குறிப்புகள்: 1. வித்தியானந்தன், சு. நாவலர் நிலை நாட்டிய சாதனைகள், நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நினைவு LD6oj (1974), ud.63,64. 2. சாமிநாதையர், உ.வே. நாவலர்
நினைவு மலர் (1938), ப.7. 3. மறைமலையடிகள், நாவலர்
560)6OT6 LD6Dij (1938), U.1O3. 4. அரசு, வீ. பத்தொன்பதாம் நூற்
றாண்டில் தமிழ் அச்சுப் பண்புாடும் புத்தக உருவாக்கமும், தமிழின் நவ யுகம்(201), ப.92.
 
 

சங்கத்தமிழ்
அய்யப்பன், கா. (ப.ஆ.), செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு (2OO9) Lu. 254. தாமோதரம்பிள்ளை, சி. வை. கலித் தொகை பதிப்புரை, செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு (2OO9) U.198. கைலாசபதி, க. நாவலர் வகுத்த புதுப் பாதை, நாவலர் மாநாடு விழா மலர் (1969), Lu. 19. . கைலாசபதி, க. நாவலர் பற்றி
கைலாசபதி, ப. 71. பூலோகசிங்கம், பொன்.நாவலர் பண்பாடு (2OOO), ப.14.
தை 2012)

Page 87
ஈழத்தில் தமிழ்ப் புலமையாளர்களுள் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியவர் என்று கணிப்பிடப்பெறுபவர் நாவலரே. அவர் சைவத்திற்கு ஆற்றிய தொண்டு அதனிலும் ஒரு படி மேலாகக் கணிப்பிடப் பெறுவதாம். சுருக்கமாகக் கூறினால் நாவலர் சைவத்தை யும் தமிழையும் தன்னிரு கண்ணிலும் மேலாகக் கருதியவர் எனலாம்.
நாவலர் தமிழ்க்கல்வி மேம்பாடு குறித்து அதிகம் சிந்தித்தவர். தமிழ்ப்புலமை என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றையும் நாவலர் எழுதியுள்ளார். அக்கட்டுரை ஏறக்குறைய ஒரு பாடத்திட்டத்தை ஒத்ததெனலாம். அக்கட்டுரையில் நாவலர் தமிழ்ப்புலமை கருதிப் படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிட்டுப் பின்வருமாறு எழுதுவார்.
“பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், திருவாதவுரடிகள் புராணம், கந்தபுராணம், உபதேசகாண்டம், கோயிற்புராணம், காசிகாண்டம், கூர்ம புராணம், சேதுபுராணம், காஞ்சிப் புராணம், திருத்தணிகைப்புராணம், பதினொராந் திருமுறையில் பிரபந்தங் கள், குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த பிரபந்தங்கள் முதலாகிய இலக்கியங்களை ஆய்ந்தறிக.” 8üUL12u6űleÖ 6Lbug TLDTu600TLb, சிலப்பதிகாரம் முதலான உயர்தர காவியங் களைக் குறியாது விட்டார். அவற்றை நாவலர் குறிப்பிடாது விட்டமைக்கான காரணம் வெளிப்படையானது. நாவலர் கருதிய மாணவர்கள், சைவ மாணவர்கள்.
தை 2012)

வியிற் வரியன் கம்பன் -
நாவலரின் உதாரண ஆளுகை
க. இரகுபரன், சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
சைவ மாணவர்களுக்கான நூற்பட்டியலைத் தந்த நாவலர் கையோடே வைணவத் தமிழ் மாணவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறுவார்.
வைணவ சமயிகள் மேற்கூறப்பட்ட வற்றுள் சமய நூல்கள் ஒழித்து ஒழிந்த வற்றையும் தங்கள் சமய சித்தாந்தங் களையும் கற்றறிந்து அவைகூறும் விதிப்படி ஒழுகுக. எனவே கம்பராமாயணத்தை நாவலர் வைணவ நூலாகக் கருதினார் என்பது ஊகிக்கத்தக்கது.
மொழிக்கல்வியும் சமயக் கல்வியும் பிரித்துணரப்படாத அக்காலத்தில், தமிழை விடச் சைவத்துக்கே முதன்மை கொடுக்க வேண்டிய சூழலில், சைவத்துக்கே முதன்மை கொடுத்து வாழ்ந்த நாவலரிடம், கம்பராமாயண ஈடுபாட்டை எதிர்பார்ப்பது பொருத்தமான ஒன்றல்ல.
நாவலர் கம்பராமாயணத்தில் ஈடுபட வில்லை என்பது கொணர்டு அவரைக் கம்பராமாயணத்துக்கோ கம்பனுக்கோ எதிரானவர் என்று கொள்வதற்கில்லை. மாறாகக் கம்பனிடம் அவர் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு இரண்டு நியாயங் களை முன்வைக்கக் கூடியவர்களாயுள் ளோம். ஒன்று அவரால் பதிப்பித்து வெளி யிடப்பட்ட நூல்களுள் ஒன்றாக கம்பன் பேரில் வழங்கும் ஏரெழுபது விளங்கு கின்றமை. மற்றயது தமது நன்னூற் காண்டிகை, இலக்கணச் சுருக்கம் என்னும்
(85)

Page 88
இரு நூல்களிலும் அவர் கையாண்ட உதாரணம் ஒன்று.
முன்னையதை, நாவலரது வேளாளர் குல மேலாதிக்க எண்ணத்தின் விளைவு என்று கருதுவோரும் உளர். அது எவ்வாறா யினும் ஆகுக. ஆயின் பின்னைய சான்று நாவலர் கம்பன் பேரிற் கொண்டிருந்த உயர் மதிப்பின் வெளிப்பாடு என்பதை மறுதலிக் கவியலாது. அத்தகையதாக நாவலர் கையாண்ட உதாரணத்தொடர் "கல்வியிற் பெரியன் கம்பன்' என்பதாம். ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொருளுக்கே மேற்படி தொடரினை நாவலர் உதாரணமாகத் தந்தார். தற்காலத்தில் தமிழகத்திலாயினும், ஈழத்திலாயினும் கல்வி பயிலும் சிறுவர் கள்கூட ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொரு ளுக்கு உதாரணம் கேட்கின் கல்வியிற் பெரியன் கம்பன்' என்று சட்டென்று பதில் கூறுவார்கள். அத்தகையதாகச் செல்வாக்குப் பெற்ற உதாரணத் தொடரை முதன்முதலில் நாவலரே கையாண்டார் என்ற உண்மை இங்கு மனங்கொள்ள வேண்டியது.
நன்னூலாரே ஐந்தாம் வேற்றுமையை ஏதுப் பொருளுக்கும் உரியதாக முதன் முதலிற் சூத்திர வகையாற் கூறினார். அவர் சூத்திரித்தது வருமாறு:
ஐந்தா வதனுரு பில்லு மின்னும் நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே. ஐந்தாம் வேற்றுமை குறித்து தொல்காப்பியர் ஏலவே கருத்திரித்தது வருமாறு:
ஐந்தா குவதே இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது என்னு மதுவே வண்ணம் வழவே அளவே சுவையே தண்மை வெண்மை அச்சம் என்றா
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.
G86)-
 

சங்கத்தமிழ்
ஏதுப்பொருளை ஐந்தாம் வேற்றுமைக் குரியதாகத் தொல்காப்பியர் கூறவில்லை. உரையாசிரியர்களே உரையிற் கோட லென்னும் உத்தியால் ஏதுப் பொருளையும் ஐந்தாம் வேற்றுமைக்குரியதாகக் கொண் டார்கள். அதுபற்றிக் கூறும் இளம்பூரணர் உரைப்பகுதி வருமாறு.
அன்ன பிறவும் என்றதனால் எல்லை பொருளும் ஏதுவுங் கொள்க.
இவ்வாறு கூறிய இளம்பூரணர் தந்த உதாரணம் இது.
முயற்சியாற் பிறத்தலின் இசைநிலை யாது உணர்மையில் இவ்வுதாரணம் முயற்சியிற் பிறத்தலின் இசை நிலையாது என்று இருக்க வேண்டும் அது வேறு விடயம். இளம்பூரணர் முதலான உரை யாசிரியர்கள் ஏதுப் பொருளை தத்தம் உரைகளில் அமைத்துக் கூறியமையை வைத்தே நன்னூலார் ஐந்தாம் வேற்று மைக்கான தமது கத்திரத்தை அமைத்துக் கொண்டார்.
நன்னுலுக்கு உரை எழுதிய சங்கர நமச்சிவாயர் ஏதுப் பொருளுக்குத் தந்த உதாரணம் பொருநராற்றுப்படையில் வரும் ஒரு தொடராகும்.
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
(பொரு. 163) ஐந்தாம் வேற்றுமைக்குரிய இன், இல் என்னும் இரு உருபுகளில் 'இன்' உருபுக்கான மேற்படி உதாரணத்தைத் தந்த சங்கரநமச்சிவாயர் "இல்லுருபினையும் இவ்வாறே ஒட்டிக் காணிக" என்றார். நன்னூலுக்கான சங்கர நமச்சிவாயரின் உரையைத் திருத்தியும் புதுக்கியும் அமைத்த சிவஞானமுனிவரின் புத்தம் புத்துரையிலும் மேற்படி உதாரணங்கள் மேற்கண்டவாறே அமைந்தன. நாவலரே
தை 2012)

Page 89
"கல்வியிற் பெரியன் கம்பன்" என்ற உதாரணத்தை முதன்முதலாகத் தந்தார்; தந்து விளக்கமும் தந்தார்.
"ஏதுப் பொருளாவது ஒரு பொருளின் பெருமை முதலியவற்றுக்கு ஏதுவாகும் பொருளாம்.
உதாரணம்: கல்வியிற் பெரியன் கம்பன் என் புழிக், கம்பனுடைய பெருமைக்கு ஏதுக் கல்வியாதலாற் கல்வி ஏதுப்பொருள்." நன்னூலுக்குக் காண்டிகை உரை செய்த நாவலர், பின்பு இலக்கணச் சுருக்கம்' என்ற பெயரில் புதியதொரு இலக்கண நூலையும் அமைத்தார். அது இன்று நாவலர் இலக்கணம்' என்றே பதிப்பிக்கப்படுகின்றது. அந்நூலிலும் ஏதுப்பொருளுக்கு நாவலர் மேற்படி தொடரையே சிறிய மாற்றத்தோடு (ஐந்தாம் வேற்றுமையின் இரு உருபுகளுக் கும்) உதாரணமாகத் தந்தார்.
கல்வியினுயர்ந்தவன் கம்பன் கல்வியிலுயர்ந்தவன் கம்பன். இலக்கண விதிகளுக்கு உரையாசிரியர் கள் தரும் உதாரணங்கள் ஒருபோதும் சுய ஆக்கங்களாக இருப்பதில்லை. வழக்கில்
மங்கள விரு
சீர்கொண்ட பரமவா னந்தசிற் சுகசொரூப
தெய்வசர வணபவசண் முகவற்கு முன் பேர்கொண்ட சதுர்மறையின் முதலிலகு பிர் பிறைநுதலொ டயில்விழிகொள் வலவை ஊர்கொண்ட பரிதிமணி யெனவிலகு முதர ஒருவெண்ணெய்நல்லையமர் மெய்கள் கார்கொண்ட கரடதட கயமுகவ வாங்குசக் க கருணேசநல்லையங் கைலாச புரிவாக
தை 2012
 

சங்கத்தமிழ்
இருப்பவையாகவே அமையும். அது உலக வழக்காயும் இருக்கலாம் செய்யுள் வழக்கா யும் இருக்கலாம். ஐந்தாம் வேற்றுமைக்குப் பிற உரையாசிரியர்கள் தந்த உதாரணங்கள் செய்யுள் வழக்குச் சார்ந்தவை. நாவலர் தந்த உதாரணமோவெனின் உலக வழக்குச் சார்ந்தது. கற்றறிந்தார் முதல் சாதாரணர் வரையில் கம்பனை அறிந்து மொழிந்த ஒரு மரபுத் தொடரே கல்வியிற் பெரியன் கம்பன் என்பது. அது கம்பனை மக்கள் கவிஞனாக உணர்த்தி நிற்பது. நாவலர் தந்த கல்வியிற் பெரியன் கம்பன் என்ற உதாரணம் மக்கள் மத்தியில் வழங்கிய ஒரு மரபுத் தொடர் என்ற காரணத்தாலேதான் மிகச் சாதாரணர் வரையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கின்றது. "கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்கள் கற்றறிந்தார் மனத்திலும் நில்லாவாயின. முடிவாகச் சொல்வதானால் நாவலர் கையாண்ட 'கல்வியிற்பெரியன் கம்பன்' என்ற தொடர் கம்பன் மேல் நாவலருக்கிருந்த உயர் மதிப்பையும் உதாரண ஆளுகையில் நாவலரின் தனித்துவ ஆளுமையையும் ஒருசேர உணர்த்திநிற்பதோர் தொடராம்.*
த்தம்
செகதீச திருமங்களம் வந்த திகழிச் திருமங்களம் ாணவப் பிரகாச திருமங்களம் பயெனு மரிவையிற் பெருநேச திருமங்களம் மதில் ஒளிர்தேச திருமங்களம் ண்ட தேசிகற் குபதேச திருமங்களம் ரராச திருமங்களம் கவினேறு கணராசனே.
-நாவலர்.
(87)

Page 90
முநீலரு
திரும
முநீலழுநீ ஆறுமுகநாவலரின் சமகாலத் தவர் காசிவாசி செந்திநாத ஐயர் அவர்கள். ஆறுமுகநாவலர் 1822ஆம் ஆண்டு பிறந்தவர். காசிவாசி செந்திநாத ஐயர் குப்பிழான் என்னும் கிராமத்தில் வாழ்ந்த இரத்தினேஸ்வர ஐயர் அவர்களுக் கும் கெளரிஅம்மைக்கும் 1948ல் மகனாக பிறந்தவர். சிறுவயதில் வடமொழி, தென் மொழி வல்லுனரான நீர்வேலி சங்கர பண்டிதர் என்பவரிடம் பயின்று விற்பத்தி மானாக இருந்தார்.
இவருக்குப் பத்து வயதானபோது பெற்றோர் இவரை ஆங்கிலக்கல்வி பெறும் பொருட்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அனுப்பினர். இவர் அங்குள்ள ஆங்கிலேய ஆசிரியர்களிடம் பத்தாண்டுகள் ஆங்கிலக் கல்வியைக் கற்றார். ஐயரவர்கள் மேலும் தமிழ் படிக்க விரும்பி இருபாலைச் சோதிராய முதலியாரிடம் முறையாகக் கற்றுப் பெரும் புலவரானார்.
ஆறுமுக நாவலர் அவர்களும் இரு பாலைச் சேனாதிராய முதலியாரிடமே கல்விகற்றவராவர். ஆறுமுகநாவலர் அவர்களும் தமது பன்னிரண்டாவது வயதுவரை தமிழும் சைவமும் நன்றாகக் கற்றபின் மத்திய கல்லூரியில் ஏழாண்டுகள் ஆங்கிலக்கல்வி கற்றவர். அவர் ஆங்கிலம் கற்றபின் ஏழாண்டுகள் ஆசிரிய வேலை பார்த்தவர்.
செந்திநாத ஐயர் அவர்களின் அறிவு ஆற்றலை அறிந்த ஆறுமுகநாவலர் அவருக்குத் தமது சைவப்பிரகாச வித்தியா சாலையில் ஆசிரியர் வேலை கொடுத்தார் ஐயரவர்கள் அங்கு ஆறாண்டு காலமும் பின்னர் நாவலரால் ஆரம்பிக்கப் பட்ட
G88)

நீ ஆறுமுகநாவலரின் பணியில் காசிவாசி செந்திநாதையர்
g5 (65T6TLD (65T6TGF35Uso B.A, Dip in Ed.
ஆங்கில வித்தியாசாலையில் ஒரு வருடகால முமாக மொத்தம் ஏழு வருடங்கள் ஆசிரியர் பணியாற்றி நாவலரின் நன் மதிப்பயுைம் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்த ஏழாண்டுக் காலத்தில் ஐயரவர்கள், நாவலரவர்கள் சைவப்பிரசங்கங்கள் செய்யும் இடமெல்லாம் பின்தொடர்ந்து, அப்பிரசங்கங்களை மனங்கொண்டு இரவில் குறிப்பெழுதி வைத்தபின்னரே நித்திரைக்குச் செல்லும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார். நாவலர் அவர்கள் ஐயரவர்களிடம் மிகுந்து அன்பு கொண்டிருந்தார். இக்கால கட்டத்தில் பிறமதப் பிரசாரகர் ஒருவர் சைவ சமயத்தைத் தாக்கி இல்லாததும் பொல்லாது மாகப் பேசியும் எழுதியும் வந்தார். அதைக் கவனித்த நாவலர் அவர்கள் தமக்குக் கைவந்த கண்டனம் ஒன்றை எழுதி ஐயர் அவர்களின் பெயரில் அச்சிட்டுப் பரப்பில் புகழ்பெற்ற பிறமதப்பெரியாரின் பிரசாரத் தைத் தடுத்தார். நாவலரின் செல்வாக்குக் காரணமாக ஐயரவர்கள் கண்டனம் எழுதும் கலையை நன்றாகக் கற்றார். நாவலர் எழுதிய "விவிலிய குற்சிதம்” என்னும் நூலையும் அச்சிட்டு வெளியிட்டார்.
அக்காலத்தில் "இலங்கை நேசன்" என்னும் பத்திரிகை வெளியாகிக் கொண்டி ருந்தது. ஐயரவர்கள் நாவலர் வழியில் கட்டுரைகளும் கண்டனங்களும் அப்பத்திரி கையில் எழுதிவந்தார். நாவலரும் அவரது மாணக்கர்களும் இலங்கை நேசனில் நிறைந்த புலமையுடன் எழுதி வருவதை அறிந்த கத்தோலிக்கச் சமய வாதிகள், இந்தியாவிலிருந்து அருளப்ப முதலியார் என்னும் வித்துவானை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து அவ்வித்துவான் துணையுடன்
(தை 2012)

Page 91
சைவத்தையும் நாவலரையும் அவரைச் சார்ந்தோரையும் வன்மையாகக் கண்டிக்கத் தொடங்கினர். இவர்களின் கண்டனங் களைப் பொறுக்க முடியாமல் நாவலர், செந்தி நாத ஐயரைக் கத்தோலிக்க விசுப்பாண்ட வரை வாதத்துக்கு அழைக்கும் விளம்பரம் ஒன்றினை இலங்கை நேசனில் வெளியிடச் செய்தார். ஆனால் ஐயரவர்களின் அழைப்பை ஏற்று எவரும் சமயவாதஞ் செய் வதற்கு முன்வரவில்லை.
ஆறுமுகநாவலர் 29.06.1878ல் வெளி வந்த இலங்கை நேசனில் செந்திநாதஐயரின் படிப்பாழத் தையும் தர்க்க ரீதியா வாதம் செய்யும் சிறப்பு ஆற்றலையும் குறிப்பிட்டு கட்டுரை ஒன்றினை எழுதினார்.
செந்திநாத ஐயர் கண்டனப் பிரசுரங் களைத் தனது பெயரிலும், கி.கா.குடுகிறிஸ்து மத கானன குடாரி) போன்ற புனைபெயரி களிலும் எழுதிவந்தார்.
ஐயரவர்கள் பண்ணிசையோடு சாரங்கி வாத்தியமும் பழகியிருந்தார். ஆறுமுக நாவலர் அவர்கள் சிவபூசை செய்யும் வேளைகளில் உடனிருந்து இசையுடன் திருமுறை யோதும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
செந்திநாத ஐயர் சைவசித்தாந்த வல்லுநரான விசுவநாத ஐயர் அவர்களின் புதல்வி சிவகாமி அமையை மணந்தார். ஆனால் மனைவி ஒருசில வருடங் களிலேயே 1878ல் காலமாகிவிட்டார். மனைவியின் மறைவால் மனமுடைந்த ஐயரவர்கள் நாட்டிற்கு பணிபுரிதலையே தம் தவமாகக் கருதி, முழுநேரத்தொண்டு செய்வதற்குத் தம்மைத் தயாராக்கி வந்தார். ஐயரவர்கள் தமது முப்பதாவது வயதில், மனைவியை இழந்த பின்னர் இந்தியாவுக்கு சென்று மேலும் படிப்பதற்கு விரும்பினார். நாவலர் அவர்களிடம் பயபக்தியோடு தம் விருப்பத்தை விண்ணப்பித்து அவரின்
 

சங்கத்தமிழ்
நல்லாசியோடு விடைபெற்றது ஆசிரியர் வேலையில் இருந்து நீங்கி 1878ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணமானார்.
இந்தியாவுக்குச் சென்ற ஐயரவர்கள் தமிழ்நாட்டுத் தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே சைவசித்தாந்தப் பிரசங்கம் செய்து வந்தார். நாவலரவர்களின் பிரசங்கங் களைக் கேட்டு எழுதிக் கொண்ட குறிப்பு களை ஆதாரமாகக் கொண்டு நாவலர் அவர்களின் வழியிற் பிரசங்கம் செய்த ஐயருக்கு நல்ல குரலும் சாரங்கி வாத்தியம் வாசிக்கும் திறமையும் வாய்ப்பாக அமைந்தன.
ஐயரவர்கள் திருவனந்த புரத்தில் சுப்பா சாஸ்திரிகள், அனந்த கிருஷ்ண சாஸ்திரிகள் என்போரிடம் வடமொழியில் காவியம், வியாகரணம் முதலான நூல்களைக் கற்றுத் தேர்ந்து பேரறிஞரானார். திருவனந்தபுரத்தில் அறிஞராக விளங்கிய ஐயர் அவர்கள், தாம் மேற்கொண்ட பணிகளுக்கு ஆறுமுக நாவலரின் நற்சாட்சிப் பத்திரம் உதவியாக இருக்கும் எனக்கருதி, அங்கிருந்தவாறே நாவலருக்கு அது தொடர்பாய் விண்ணப் பித்தார். நாவலரவர்கள் 16-08-1879ல் கீழ்க்கண்டவாறு தனது நற்சாட்சிப் பத்திரத்தை எழுதியனுப்பினார்.
மகாழுநீசிசெந்திநாதையரை நான் ஏழு வருஷகாலம் அறிவேன். இவர் ஆறு வருடம் என்னுடைய தமிழ் வித்தியாசாலையிலும், ஒரு வருடம் என்னுடைய இங்கிலீஷ் வித்தியாசாலையிலும் உதவி உபாத்தி யாராக இருந்து தனது கடமையை ஜாக்கிரதையோடு பிறழாமல் நடத்திக் கொண்டு வந்தவர். ஒழிவுள்ள பிறநேரங் களில் நான் பொது நன்மையின் பொருட்டு எடுத்துக்கொண்ட பிற கருமங்களையும் நிறவேற்றினார்.
இங்ங்ணம்
1879 புராட்டாதி க.ஆறுமுகநாவலர்
(89)

Page 92
அந்நாளில் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்கள் தென்னிந்தியாவில் தலயாத்திரை செய்தபோது அவரைக் கண்டு மகிழ்ந்த ஐயரவர்கள், நாவலரவர்களுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதி புலவரவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதம் நாவலரவர்கள் கையில் கிடைப்பதற்கு முன் நாவலர் அவர்கள் 1879ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஐந்தாம் தகுதி அமரராகி விட்டார்.
ஐயரவர்கள் ஏறத்தாழப் பத்தாண்டுகள் வரை தமிழ் நாட்டில் சைவப் பணி புரிந்து விட்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
ஐயரவர்கள் 1888ஆண்டில் “விவிலிய குற்சித கண்டனதிக்காரம்” என்னும் நூலை எழுதி அச்சிட்டு வெளியிட்டார். இது நாவலர் எழுதிய விவிலிய குற்சிதத்துக்குக் கிறிஸ்த வரால் எழுதப் பெற்ற மறுப்புக்கு மறுப்பாக அமைந்தது.
1920ல் ஐயரவர்கள் திருப்பரங்குன்றத் தில் வைத்திக சுத்தாத்துவித சைவசித்தாந்த
6am LS 6L6
கவிதா
"பாவலர் போற்று பணிந்தவராை பூவலர் கொன்றை புலமிகு மறிவு காவலர் வியப்ப2
கருணைகூர்
நாவலரெனும் பே
ஞாலத்தார்த
C90)-
 

சங்கத்தமிழ்
வித்தியாசாலை' என்னும் பாடசாலையை நிறுவி அங்கு போதித்துவந்தார். இப்பணியும் நாவலரிடமிருந்து இவர் பெற்றுக்கொண்ட சிந்தனையின் பாற்பட்டதே.
தனது முதுமைக் காலத்தில் 1888 முதல் 1898 வரை காசியில் வாழ்ந்தார். இதனால் இவருக்குக் காசிவாசி செந்திநாத ஐயர் பெயர் ஏற்படலாயிற்று.
ஐயரவர்கள் நாவலர் வழியில் 1906ல் "செந்திநாதசுவாமியந்திரசாலை” என்னும் அச்சகத்தை நிறுவி நூல்களை வெளி யிட்டார். இவர் 20 நூல்கள் எழுதியுள்ளார் என ஆறிய முடிகிறது. இவற்றுள் பெரும் பாலனவை, சமய நூல்களாகும்.
1924ஆம் ஆண்டு 5ஆம் திகதி சிவமடைந்த ஐயரவர்கள் நாவலர் வழியில் நின்று சைவ சமயத்திற்குப் பெருந்தொண் டாற்றியவர்களில் முன்னணியில் இருப்ப வராவார்.*
மாநந்தர் சூட்டிய
ம் ஞான தேசிகரை
னயின் வண்ணம்
புனைந்தவர் புகழைப்
பர் கூட்டுணனக்
உரைத்திடல் கேட்டுக் தேசிகர் இவர்க்கு ர் தகுமென அளித்தார் தந்தகும் என்ன?”
(தை 2012)

Page 93
(வெள்ள
"நல்லைநக ராறுமுக நாவ சொல்லுதமி ழெங்கே சுரு மேத்துபுரா னாகமங்க ெ யாத்தனறி வெங்கே யறை
நாவலர் எனுஞ் சொல் வன்மையுடை யார் பலர்பாலும் செல்லும் காரணப் பொதுப் பெயராயினும், காரணவிடுகுறிச் சிறப்புப் பெயராகப் பெற்ற ஆண்தகையார் ஒருவரைப் பலரும் அறிவர். அவர் தாம் நம் புலவர் பெருமானார் முரீலழுநீ ஆறுமுக நாவலர் அவர்கள்.
"நிலவுலகிலொருமதிய
நிலவியதென்றேநிகழ்த்தப் பலகலையு நிரம்பியயாழ்ப்
பாணமெனும் பாற்கடலி விலகியெழீஇ நாவலரென்
றியம்புபெயரெவர்பெறினும் குலவுதமை யேகுறிக்கக்
கொண்டபெருங் குலப்புகழார்.” எனச் சேற்றுார் சமஸ்தான வித்துவான் அருணாசலக் கவிராயர் அவர்கள் கூறியதும் ஈண்டு நினைவுகூர்தற்பாற்று. இனி, புலமையாவது:- இச்சொல் புலமுடைமை எனப் பொருள்படும். புலத்தின் தன்மை யெனக் கொள்ளவும் படும். புலம் என்பது இயற்பெயராகவேனும், ஆகுபெயராக வேனும் நின்று ஐம்பொறி, ஐம்புலன், கல்வி யறிவு, நூற்பொருள், வேதம், மெய்யுணர்வு முதலிய பல பொருளுணர்த்து மொருபெயர்ச் சொல். “புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்” எனும் பழ மொழிச் செய்யுளில் புலம் என்பது கல்வி யறிவு எனும் பொருளிற் காணப்படும்.
தை 2O2

நாவலர் புலமை வத்தை திரு.குல.சபாநாதன் அவர்கள்)
பலர் பிறந்திலரேற் தியெங்கே - யெல்லவரு ளங்கேப்ர சங்கமெங்கே
3."
(சி.வை.தா)
அறிவு இருவகை. அவை பொது அறிவு, சிறப்பறிவு என்பன. ஐம்பொருளுணர்வு பொது அறிவு. அதாவது பொருள்கள் தோன்றி யவாற்றைக் கண்டொழிதல். அவ்வளவில் நில்லாது அப்பொருளின்கண் நின்று அதன் காரண காரியங்களை உய்த்துணர்தல் சிறப்பறிவு. இதுவே கல்வியறிவென வழங்கப் படுவது. கல்வியுணர்வு, மெய்யுணர்வு, ஆராய்ச்சியுணர்வு, உய்த்துணர்வு என்பன ஒரு பொருளன. பொது அறிவு, இயற்கை அறிவு. சிறப்பறிவு செயற்கையறிவு செயற் கையறிவு இயற்கையறிவின்றியமையாதது.
கல்வி, அறிவுக்கல்வி, தொழிற்கல்வியென இருதிறப்படும். இவை முறையே வித்யா வெனவும் கலாவெனவும் வடநூலாரான் வழங்கப்படும். இவை தனித்தனியே அளவில்லாத துறைப்படும். வித்தைகளுட் சிறந்தன முப்பத்திரண்டு எனவும், கலை களுட் சிறந்தன அறுபத்து நான்கு எனவும் வடநூல்களிற் சொல்லப்படும். தமிழ் நூலோர் இவ்வெல்லாக் கலைகளையும் தொகுத்து மூன்றென வழங்குவர். அவை இயல், இசை, நாடகம் என்பன. இக்கல்விகளுள் யாதானு மொன்றண் கண்ணாயினும் ஐயந்திரிபறியாமையினிங்கி வல்லனாதலே புலமையெனுஞ் சொற்குப் பொருந்திய பொருள்.
அறிவுக்கல்வி செய்து காட்டற்பாலநன்றிச் சொல்லியுணர்த்த வுணருமளவில் நிற்பது.
(91)

Page 94
தொழிற் கல்வி சொல்லவும் செய்யவும் படுவது. அறிவுக் கல்வி யுணர்ச்சியுடையர் அறிஞர். இவ்வறிஞர் கவி, கமகன், வாதி, வாக்கி என நால்வகைப்படுவர். தொழிற் கல்வி யுணர்ச்சியுடையார் கலைஞர். இருவரும் புலவர்.
புலமை மீண்டும் இருவகைப்படும். இயற்கைப் புலமை, செயற்கைப் புலமை யென, இயற்கைப் புலமை ஒதாதுணர்தல். அதாவது தானே முழுதுமுணர்தல். செயற் கைப் புலமை ஒதியுணர்தல். இயற்கைப் புலமை தெய்வப் புலமை யெனப்படும். இயற்கைப் புணர்ச்சி தெய்வப் புணர்ச்சி யெனப்படுவதுபோல, இயற்கைப் புலமை வள்ளுவரைத் தெய்வப் புலமை வள்ளு வரென வழங்குவராதலாலும் இது பெறப் படும். இயற்கைப் புலமை தொன்று தொட்டு வரும் மரபாகிய காரணம்பற்றி வருவதும், அக்காரணமின்றிவருவதுமென இருவகைப் படும். இறையனார், வள்ளுவனார், நியூட்டன், காளிதாசர், காளமேகம் முதலியோர் இயற் கைப் புலவர். இளங்கோவடிகள், சாத்தனார், சேர்.சி.வி.இராமன், தாகூர் முதலியோர் செயற்கைப்புலவர். இயற்கைப் புலமையும் செயற்கைப்புலமையும் ஒருங்கு வாய்ந்தோர் சிலர். கம்பர், பாரதியார் இவ்வினத்தைச் சேர்ந்தவராவர். இயற்கைப் புலமையும், செயற்கைப்புலமையும், ஒரு துறைக் கண்ணே வாய்த்தலும், பல துறைக் கண்ணே வாய்த்தலும் எல்லாத் துறைக் கண்ணும் வாய்த்தலும் வழக்காறு. திரு வள்ளுவர் புலமை எல்லாத் துறைக் கண்ணும் வாய்ந்தது. இதுவே சிறப்புடைக் கடவுட்புலமை யெனப்படும். ஒழிந்த புலவர் களுடைய புலமை ஒரு சில பல துறை களிலே வாய்ந்தது.
C92)
 

சங்கத்தமிழ்
இவ்வெல்லாரும் புலவரென வழங்கப்படு பவராயிருக்க, இவருள் இயற்கையிற் செய்யுள் பாடும் ஒருதுறையில் மட்டும் புலமைவாய்ந்தோரே புலவரெனப்படுவார் எனக் கூறுதல் ஆன்றோர் வழக்கொடு முரண்பாடாகும். தருக்கத்துள் அவ்வியாத்திக் குற்றமும் தங்கும். முற்கூறிய முறையால் பாவலரும், இயற்கைப்பாவலர், செயற்கைப் பாவலர் என இருகூறுப்படுவர் என்பது பெறப் படும். அப்பாவலரும் நால்வகையர், கடும் பாவலர், இன்பாவலர், அரும்பாவலர், பெரும் பாவலர் என. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களும் புலவர் எனும் சொல்லின் பொருளை நன்கு விளக்கிக் காட்டியிருக் கின்றார்கள். ஒப்பு நோக்கற் பொருட்டு அதனை ஈண்டுக் குறிப்பிடுகின்றாம்.
"புலவர் என்பது அறிஞர் எனப் பொருள்படும். புலம்-அறிவு, அர் ஒரு விகுதி. வடநூலிற் கூறும் வித்வான் என்பதும் இப்பொருட்டு. வித்-அறிதல், வான் ஒருவிகுதி. வித்வானாவான் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்னும் வேதம் நான்கும், சிக்கை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதி, சோதிடம் என்னும் வேதாங் கம் ஆறும், ஆயுர்வேதம், தனுர் வேதம், காந்தருவவேதம், அருத்தவேதம், என்னும் உபவேதம் நான்கும், புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் உபாங்கம் நான்குமாகிய வித்தைகள் பதினெட்டுங் கற்றவன் என ஆறுமுக நாவலர் கூறுவர். வடநூலார் கூறும் மற்றை நாமங்களாகிய, தோடஞ்ஞன், கோவித, புதன், பிராஞ்ஞன், முதலிய நாமங்களும் அறிவுடைமை பற்றி வந்த நாமங்களாம். தோடஞ்ஞன் என்னும் நாமத்தாலே நூலுரை முதலியவற்றிற் காணப்படும் வழுக்களை எடுத்துரைத்தலும் புலவர்க்கு முறை என்பது புலப்படும்.
தை 2012)

Page 95
தோடஞ்ஞன் - வழுக்களை அறிவோன். தோடம்-வழு, ஞன்-அறிவோன்." - (தமிழ்ப்புலவர் சரித்திரம்-உபக்கிரமணிகை) இறையனா ரொழிந்தாருடைய புலமை யும் உற்றுநோக்கின் செயற்கைப்புலமை யெனவேபடும். அவ்வியற்கைப் புலமை முற்பிறவிகளிற்கற்ற கல்வியின் பயனாதலின் முற்பிறவிகளிற் கற்ற கல்வியறிவு பிற்பிறவி களிற் தொடர்ந்து வருமென்பது,
“ஒருமைக்கட்டான்கற்ற கல்வியொருவற் கெழுமையு மேமாப் புடைத்து.” எனும் பொய்யா மொழியாற் பெறப் பட்டுளது. ஆயின் இக்கொள்கை மறுபிறப் பினையுடன்படாத மேனாட்டாருக் குடன் பாடின்று. இயற்கைப்புலமை வாய்ந்தோரை genius என அழைப்பர் போலும். அங்ாங்னம் புலமையெய்தியதன் காரணம் புலப்படக் கூறாதொழிவர். ‘Poet எனும் ஆங்கில மொழிக்கு நேர்மொழி பெயர்ப்பு "பாவலர்” என்பது. “புலவர்” எனக் கூறின் அதிவி யாத்திக் குற்றம் தங்கும். உடம்பின்கணுள்ள சில ஊற்றினை (gland) மாற்றியமைத்தலால் புலமைக்குணம் வேறுபடுமெனக் கண்ட அக நூலாராய்ச்சியாளர்க்கு முற்பிறப்பின் தொடர்பெனக் காரணங்கூற மனமின்றி, புலமை இயற்கையாய் அமைந்துளது எனக் கூறுவதோடு நிறுத்துகின்றனர். அதற்குமேல் ஆராயவில்லை.
முற்கூறிய முறையைக் கொண்டு நம் நாவலர் புலமையினியல்பை யாராய்வாம். அறிவுக் கல்விப் புலவர், தொழிற்கல்விப் புலவர் என்னுமிருசாராருள் நம் நாவலர் சிறப்புடைய அறிவுக் கல்விப் புலவராவர். "செய்யுணடைவாய்ந்த நக்கீரருடை நடை யும், விளக்கம் குறைந்த இளம் பூரணமும், கட்டுரைச் சுவை செறிந்த சேனா வரையது நடையும், பொருட்செறிவுடைய போரசிரியர்
 

சங்கத்தமிழ்
உரை நடையும், தங்கோணி றுத்தும் நச்சினார்க்கினியர் சொன்னடை யும், நாவலர் அவர்களின் வசனநடையிலேயே வந்து முடிகின்றன” என சைவசிகாமணி யாய் விளங்கிய சபாபதி நாவலர் அவர்கள் கூறியாங்கு நாவலரவர்கள் வசன நடை கைதேர்ந்த வள்ளலாய் மட்டும் திகழ்ந் தாரன்று. "ஆறுமுகனாருக்கு ஒன்பதாம் வயசாயிருக்கும் பொழுது, ஆணித் திரு மஞ்சன உற்சவகாலத்தில் இவருடைய தந்தையார் கந்தப்பர் ஒரு நாடகம் பாடிக் கொண்டிருந்த சமயத்தில், கையில் எழுத்தாணியும் சட்டமும் பிடித்தபடியே சடிதியிற் சிவபதமடைந்து விட்டார். அந்த நாடகத்தின் குறையை அப்போதேயிவர் பாடி முடித்தார்” எனுஞ் சரித்திரக் குறிப்பால் இளமையிலேயே அவ்வுற்றிருந்தன்ெபது பெறப்படும். எனவே புத்தகப் பையுடன் நத்தைபோலூர்ந்து செல்லும் பருவத்தில் கற்றுத் துறைபோன தந்தையார் தொடங்கிய நாடகத்தின் குறையை முற்றுப்பெறச் செய்தார் நம்நாவலர் அவர்கள். நூல்களைப் பிழையின்றி அச்சிடுவதிலும் பெயர்பெற்றவர். வசனநூல்கள் பல இயற்றினாரன்றிச் செய்யுளியற்றும் ஆற்றலுடையாரோவென ஐயுறுவாருமுளர். அவர்கள் தம் ஐயம் அகலு மாறு ஒரு செய்யுளை மட்டும் காட்டுகின் றாம். ஒரு பெருஞ்சபையில் கல்விவிஷய மான காரியமொன்று செய்யும்போது எழுந்து நின்று தலையிலே கைகுவித்துக் கொண்டு அங்குநின்ற தம் மாணாக்கருள் ஒருவரை நோக்கிவிநாயக வணக்கம் ஒன்று சொல் என்றார். அம்மாணாக்கர் தாங்களே சொன்னால் நல்லது” என்றார். அங்ங்ணம் நின்றபடியே,
“சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச்
சிவம்பூத்த நிகமாக மங்களோங்க
(93)

Page 96
丝
re
பார்பூத்த புறச்சமய விருள்க ணrங்க
பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்க பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்க
பிறைபூத்த சடைமெளலிப் பிரானார் தந்த வார்பூத்த ஹிவிச்சை தொழிலென் றோதும் மதம்பூத்த விநாயகன்றாள் வணங்கி
வாழ்வாம்” என்னுஞ் செய்யுளை ஆசுவியாக ஒரு தடையுமின்றிச் சொல்லிமுடித்தார். இச்செய் யுளைக் குறிக்கொண்டே ஒரு பெருங் கட்டுரை எழுதிவிடலாம். விரிவஞ்சி விடுகின்றேம்.
நாவலர் அவர்கள் சிறுவயதில் நாடக மொன்றைப் பாடினார். சிறந்த வசனநூல்கள் பல எழுதினார். பாக்கள் சில யாத்தார். கீர்த்தனங்களும் பாடியுள்ளார். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனு மும்மையானுஞ் சிறந்துவிளங்கும் கதிர்காமத்துதித்த ஆறுமுகவேலர் மீது ஆறுமுகநாவலர் ஆறு கீர்த்தனங்கள் பாடியுள்ளார். இக்கீர்த்தனங் களைக் கொண்டுசென்று அத்தலத்தில் இசையுடன் மலைமரங்களுமிரங்கி யுருகப் பாடி அவைக்களனேற்றியவர் விநாயக மூர்த்திச் செட்டியார் அவர்கள். இவ்வர லாற்றின் விரிவினை இவர் பாடிய கதிரையாத்திரை விளக்கத்திற் கண்டின் புறுக. நாவலர் அவர்கள் பாடிய கீர்த்தனங் களுள் ஒன்றைக் குறிப்பிடுகின்றாம். இராகம்-ஆகிரி. தாளம்-சாபு, பல்லவி இத்தனை கொடு வேதனைப்படல் கண்டுமுமக் கின்னு மிரக்க மில்லையா.
அனுபல்லவி சித்திமுத்திகடரும் தெய்வமாணிக்கநதி சேருங்கதிரைநகர்-திகழ்சுப்பிரமணியரேநான்.
(இத்தனை)
G94)

சங்கத்தமிழ்
சரனங்கள். அண்டரிடரகற்றும் போதரே-அன்பர் அனவரதம்பணி பொற் பாதரே
கண்டங்கரிய சோதி காதலரே யெனது கண்னேயென் கண்மணியே காருண்ய
சாகரமே. (இத்தனை) எள்ளினெய் போலெங்கும் நிறைவீரே-உமக் கென்றுயர் தெரியாதோ அறைவீரே
தெள்றுதமிழால் வைதார்தமக்கு மருள்வீரென்று தீதி லருணகிரி தேவர்சொல் நம்பிவந்தேன்.
(இத்தனை) உம்மையல்லாது துணையறியேனே-துய ரோட்டிலீ ரேனு மும்மைப் பிரியேனே
இம்மை மறுமை வீடுமூன்று மும்மாலாகும் இதுவே சத்தியஞ் சத்தியமென்று துணிந்து
வந்தேன். (இத்தனை) "நாவலர் அவர்கள் திருவாவடுதுறை யாதீனத்திலிருந்து பண்ணில் வல்ல ஒதுவார்களைப் பலமுறை வருவித்து, பண்ணோடு ஒதும்படி பிள்ளைகளைப் பியிற்றுவித்தாரெனவும், இனிமையாகத் தேவாரம் ஒதவல்ல காசிவாசிசெந்திநாதய்யர் அவர்கள் பாடும்பொழுது கேட்டுப் பரவசப்படு வாரெனவும் கூறப்படலால் இவருக்குச் சங்கீதத்தில் மிக விருப்பமுண்டெண்பது தேற்றம். அதனையும் இறைவன் திருப்பணி யாக்கவே விரும்பினர். நாவலர் கதிர் காமத்திற்கு மட்டும் கீர்த்தனம் பாடியிருத்தல் குறிப்பிடற்பாலது. இவற்றால் நாவலர் அவர்கள் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழினும் வல்லுநராயிருந்த ரென்பது தேற்றம்.
புராணங்கள் முதலிய நூல்களுக்கு உரை சொல்வதில் நாவலர் அவர்கள் சிறந்து விளங்கினார்கள். கந்தப்புராணத்திலுள்ள ஒரு செய்யுளுக்கே ஒரு நாள் முழுவதும் பலவகைக் கருத்துக்களையும் பொதிந்து
தை 2012)

Page 97
பொருள் கூறுமாற்றலுடையராய்த் திகழ்ந் தார். இவர்கள் உரை சொல்லவருகின்றார் கள் என்னுங் செய்தியைக் கேள்விப்படின் மக்கள்திரள்திரளாக இருக்க இடமின்றிவந்து கூடுவார்கள். இவருடைய மாணவர்களாய வித்வசிரோன்மணி பொன்னம்பலபிள்ளை, பிள்ளைப்புலவர் முதலியோரும் இத்துறை யில் சிறந்து விளங்கினார்கள். ஆயத்த மில்லை எனுஞ் சொல்லைக் குறிக்கொண்டு அதற்குக் கூறிய பல்வேறு கருத்தே இவருடைய உரை சொலுந் திறனை விளக்கும்.
யாழ்ப்பாணத்திலுள்ள சைவர்களுட் பலர் பிறமதத்தவர்களின் போதனையிலெடுபட்டு தம்மதத்தைக் கைவிட்டுச் செல்லும் காலத்தில் நம் நாவலர் அவர்கள் தோன் றினார்கள். பல சைவர்கள் பிறமதம்தழுவாது தம் மதத்தில் பற்றுக்கொண்டு நின்ற மைக்குக் காரணம் நாவலரவர்களின் ஆற்ற லேயாகும். வேண்டுமிடங்களில் காரணமும் மேற்கோளும் எடுத்துக்காட்டிப் பிறர் மதத்தைக் குறைகூறியும் தம்மதத்தை நிறுவினர்.
கிறீஸ்தவ பாதிரியாரின்கீழ் வேலையா யிருக்கும் பொழுதே சைவப்பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டார் ஆறுமுகனார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்யும் வழக்கத்தை, யாழ்ப்பாணத்திலுண்டாக்கி, சைவசமயத்திற்குப் புத்துயிரளித்தவர் நம் நாவலர் அவர்களாகும்.
திருக்கைலாய பரம்பரைத் திருவாவடு துறை யாதீன உபய சந்நிதானங்களும், வித்வான்களும் இவருடைய சொற்பொழிவு ஆற்றலில் ஈடுபட்டு மகிழ்ந்து நாவலர் எனும் பட்டத்தைச் சூட்டினார்களெனின் இவருடைய ஆற்றலைக் குறித்து யாம் கூறல் மிகை யாகும். மேற்கூறியவாற்றல் நாவலர் அவர்
தை 2012

சங்கத்தமிழ்
கள், கவி, கமகன், வாதி, வாக்கி, என்னும் நால்வகைப் புலவருமாய் வீற்றிருந்தா ரென்பது தேற்றம்.
புலமையுடையாருட் சிலர் ஒழுக்கந் தவறியவராகக் காணப்படுகின்றனர். அன்றி uqLİb Lq6060DLDuq60DLuUTjÜ 56ö66qorTUpä585(Up60DL யாரெனும் நியதியுமின்று. நம்நாவலர் அவர்களிடம் புலமைக்கேற்ற தூய ஒழுக்கம் நிறைந்திருந்தது. இவர்களுடைய வரலாறு முற்றிலும் ஒழுக்கத்தை விளக்கப் போதிய குறிப்புகளுள்.
நாவலர் அவர்களிடம் புலமைக்கேற்ற ஒழுக்கமிருந்தது. ஒழுக்கத்திற்கேற்ற ஒளியு பழமைந்திருந்தது. ஒளியென்பது தாமுள காலத்து, எல்லாராலும் நன்குமதிக்கப்படுதல் என்பர் பரிமேலழகர். இதனை ஆங்கிலத்தில் Personality என்பர் போலும். இவ்வொளி யைக் காட்டற்கும் வரலாற்றிற் பல பகுதிகள் உண்டு,
உண்மைக் கல்வியறிவுடையாருக்குப் பெருமிதம் உண்டாகும். இது வீரத்தின் பாற்படும். இது அழுக்காறுமன்று. செருக்கு மன்று. கிறீஸ்தவ பாதிரியாரின் கீழ் வேலை கொண்டமர்ந்தபொழுது பயமின்றிச் சைவப் பிரசாரம் செய்தமை, இராமநாத புரத்து பொன்னுச்சாமித் தேவருடைய செல்வத்தை யும் அதிகாரத்தையும் மதித்து தாழ்ந்து தோல்வியெய்தாமை முதலியன இப்பெரு மிதத்துக்கு எடுத்துக்காட்டாகும். எனவே, அவை குற்றமாகா.
புலவர்கள் இரத்தலும் பெருமிதத்திழுக் கன்று. இது மானந்தீராத இரவாகும். இதனாற்றான் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரனாறுமுடைய அரசருளேறுகளா யினும் பொருள் கொடாதவழியஞ்சாது எதிர்த்து நின்று இழித்துரைக்கும் ஆற்ற லுடை யராயிருக்கின்றனர் புலவன்மார்.
(95)

Page 98
"மன்னவனு நீயோ மண்ணுலகு
மிவ்வளவோ உன்னையோ யான்புகழ்ந்திங் கோதுவது-என்னை விருந்தேற்றுக் கொள்ளாத
வேந்துண்டோ சோழா குரங்கேற்றுக் கொள்ளதோ கொம்பு" எனவும், "காத மிருபத்து நான்கொழியக்
BTafloofeOu ஒதக் கடல்கொண் டொழித்ததோ
LDTg56)IT கொல்லி மலையுடைய கொற்றவா
நீமுனிந்தால் இல்லையோ எங்கட் கிடம்.” எனவும் கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர், புவிச்சக்கரவர்த்தியாகிய சோழன் முன் அஞ்சாது நின்று கூறியவை இப்பெருமித மேயாம். இரத்தலுக்கும் கல்விப் பெருமிதத் துக்கும் காரண காரிய இயைபின்று. புலவரின் இரவு அரசனிடம் திறை வாங்கு தலையொக்கும். செயங்கொண்டார் இக் கொள்கையிலும் சிறிது ஆழ்ந்து செல் கின்றார். அவர் கூறுவது:-
“காவலரீகை கருதுங்காற் காவலர்க்குப் பாவலர் நல்கும் பரிசொவ்வா-பூவினிலை யாகாப் பொருளை யபயனளித்தான்புகழா மேகாப் பொரளளித்தேன் யான்." இச்செய்யுளில் பெருமிதம் எவ்வளவு வீறிட்டு முழங்கி யெழுகின்ற தென்பதைக் கண்டின்புறுக. அதனோடு புலவர் புகழ் கொடுத்துப் பொருள் வாங்குதலன்றி, இரந்த புகழ் வாங்குதலின்மையும் உணர்க. இன்னும் பிற்காலத்து ஓலைத்தூக்கினும் (சீட்டுக்கவி) இதனைக் கண்டுதெளிக. மானந்தீராத இரவு பெரும்பாலும் புலவர் கட்கேயுரியதாம். ஞானிகட்கும் இஃ
O96)
 

சங்கத்தமிழ்
தொக்கும். இரவு ஒருவன் தாழ்தற்கு வாயிலாயுள்ளது. அதனையே யுயர்தற்கு வாயிலாகக் கொண்ட புலவர் பெருமை பாராட்டத்தக்கதன்றிப் பழித்துரைக்கப்படுதல் எங்ங்ணம் பொருந்தும்.
நாவலர் பெருமை சுருங்கக்கூறின், புலமையாற் சீரும் சிறப்பும் பெற்ற நாவலர் அவர்கள் அந்நன்றி பாராட்டி புலமைக்குச் சீருஞ் சிறப்பும் கொடுத்தனர் என்றலே தகும். மேனாட்டார் தங்கள் ஊருக்குப் பெருமை யளிக்கும் பழைய பொருட்களைப் பாதுகாத் தலில் மிக்க விருப்புடையர். நாவலர் அவர்கள் மேனாட்டிற் பிறந்திருப்பின் அவர் இருந்த வீட்டையும், கையாண்ட பொருட்களையும், எழுதிய கடிதங்களையும், இயற்றி அச்சிட்ட நூல்கள். கட்டுரைகள் முதலியவற்றையும் பாதுகாத்து, அவ்விடத்தை அவ்வுருக்குப் பெருமை யளிக்கும் ஒரு புத்திடமாகவும் பாதுகாத்து வந்திருப்பர். இங்கிலாந்தில் பல புலவர்கள் வாழ்ந்த இல்லம், கையாண்ட பொருள் முதலியன இன்றும் அழியாது பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் காண்டலால் அப்புலவர்மீது அன்பும் வியப்பும் மகிழ்ச்சியும் தோன்றாநிற்கும். நம் யாழ்ப்பாணத்தார் அங்ங்ணம் பாதுகாவாது விட்டொழியினும், நாவலர் அவர்கள் தம் பெருமையைக் காட்டுவான் வேண்டி நாவலர் நினைவுமலரினைப் பூத்த தொல்புரம் கலாவிருத்திச் சங்கத்தாரை அடியேன் மனமார வாழ்த்துகின்றேன். அறிவான் மிக்க பண்டிதர் இரத்தினம் அவர்களை இம்மலராசிரியராகத் தெரிந் தெடுத்த சங்கத்தை மீட்டும் பாராட்டு கின்றேன். இந்நினைவுமலர் நாவலர் அவர்களின் பல்வகையாற்றலைக் காட்டும் நந்தா விளக்காய் அமையுமாறு இறைவன்
இன்னருள் முகிழ்ப்பானாக.*
(தை 2012)

Page 99
sCINC
தரம் 8,
வகுப்புக்கள் ந6
(StPetero
கொட்டாஞ்சேனையி
Brilliant
136, Sangan
8; र्क्षे 舞° pois ܝܬܵܐ
s 魏 ইিঞ্জ ుళ్ళ تمی خه
క్ష జ్ఞ శిరో
翁 muin
வெள்ளவத்தையில்
C.T.S.A
NO. 61 Penr
Wela
PhOne : O வெள்ளவத்தை AR
தனிக்குழு வகுப்புக்க

E(OIL)
9, 10, 11
டைபெறுகின்றது.
ॐ 'ट्रैर्क्षे ॐ ॐ ॐ* २° **ॊ ॐ ॐ ॐ * 惠 變 జ్ఞ శ غز 8یی عجی
ເກມນີ້ yakumar s College)
5O
Insititue, nitha Mawatha
क्षैः ॐ S ধ্ৰুঃ স্থা খুঁ**ঃ
జళ
s श्क्षं జణి ޘު.ތޯ؟
Cademy, hyduick Road,
Watha.
113159302 PICOsiies (gsrsrrsb) 5ளுக்கு:- 0777-703118

Page 100
StOTy Commerce
 

Sayanthan / A.Saravanan
Ramanan Robin.
Raja Manokaran
Arthigan
Wallar math y
Mawatha Colombo - 06.