கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2012.02

Page 1
iš 350
 

繼
ல் இலக்கியம் இல்லை

Page 2
கணக்கியலாளரா? பொறியியலாளரா? வைத்தியரா? வேறு தொழிலாளரா? எங்ாநாடாக இருந்தாலும், எத்தொழிலாக இருந்தாலும் சுலபமான சுயதெரிவு முறையில் தெரிவு செய்திட குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனே!
விவரங்களுக்கு
திங்கள், புதன், வெள்ளி, மாலை 4:30 - 7:30 மணிக்கு உள்ளேயோ, சனி, ஞாயிறு நண்பகல் 11:00 - 2:00 மணிக்கு உள்ளேயோ சர்வதேச - சகலருக்குமான, மூத்த - புகழ் பூத்த, "தனிமனித நிறுவனம்", திருமண ஆற்றுப்படுத்துநர் வேல் அமுதனைத் தொடர்புகொண்டு விசாரித்தறிக!
4873929 / 236O488 / 2.360694
முன்னேற்பாட்டு ஒழுங்குமுறை
8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு - 06
வாடிக்கையாளர் புதிய வரவுகளின் முக்கிய விவரங்களை வேல் அமுதனின் அலுவலக நேரம் தொலைபேசி ஊடாக அறிந்துகொள்ளலாம்.
 

இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை
%*ܣܛ
ജ് ()
ஆசிரியர்: செங்கதிரோன் Ggist.(Sug/TP -065-2227876
O77-260263.4 Lô66607(6586) , E.mailsenkathirgopal(a)gmail.com
துணை ஆசிரியர்: அன்பாலுகன் குரூஸம் தொலைபேசி/TP - 0777492861 L666,607(6586)/E.mail - croos a(a)yahoo.com
தொடர்பு முகவரி செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு,
இலங்கை.
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road,
Batticaloa,
Sri lanka.
1 DIst 202
> ஆசிரியர் பக்கம்
> அதிதிப்பக்கம் 0 இறைவனின் சித்தம் -ஏ.பீர்முகம்மது 06
கொண்டல்ப் பிசின் (சிறுகதை)
-அகளங்கன் 08 0 கதிர்முகம்
காலைப்பொழுது (கவிதை)
நீலாபாலன் (16 0 மலையக ஆளுமை இர.சிவலிங்கம்
- மொழிவரதன்
> நினைவிடைதோய்தல் - மாஸ்டர் சிவலிங்கம் 0 கிழக்கின் சூறாவளிகள்
- எஸ்.எச்.எம்.ஜெமீல் 26 > நறுக்குகள் - கவிஞர் ‘கலைநதி’ 0 சொல்வளம் பெருக்குவோம் - 31
- பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் > கும்மாளம்(குறுங்கதை) -வேல்அமுதன் > மட்டக்களப்பு மாநில மண்வாசனைச்
சொற்கள், பட்டியல் II 37 0 uéj6
0 மீண்டும் ஒரு காதல் கதை - 12 (தொடர் நாவல்) -யோகா யோகேந்திரன்
- சண். தங்கராஜா
0 சின்னது சிரிப்பானது உண்மையானது
-06 -பாலமீன்மடு கருணா
0 விசுவாமித்திர பக்கம்
பொங்கிடுவோம் தைப்பொங்கல் புதுயுகம் பிறந்திடவே (கவிதை)
- இரா.நல்லையா 50 மட்டக்களப்பின் கிராமியக்கலை ஆசான் திருமதி தங்கம்மா சந்திரசேகரம்
- அன்புமணி > இரவல் - காசிஆனந்தன் கதை
நீதியே. நீ.தியானாய்? (கவிதை)
- கே.எம்.ஏ.அஸிஸ் கதைகூறும் குறள் - 28 -கோத்திரன் O இலக்கியப் பரப்பிற்கு வலிமைசேர்த்த
‘வலிசுமந்த மானுடம் - ரவிப்ரியா 0 விளாசல் வீரக்குட்டி - மிதுனன் 64)
ஆக்கங்களுக்டு ஆக்கியோரே பொறுப்பு

Page 3
ஆசிரியர் பக்கம் “செங்கதிர் தன் கன்னி இதழை விரித்தது நேற்றுப்போலிருக்கிறது. நான்கு ஆண்டுகளைக்கடந்து இன்று உங்கள் கரங்களில் தவழ்வது அதன் 50வது வீச்சாகும்.
இலக்கியத்தாகத்துடனும் இதயசுத்தியுடனும் நாம் இதுவரை இயங்கிவந்துள்ளோம் என்பதைத் தவிர எதையும் எமது சாதனைகளாகப் பீத்திப் பெருமைப்பட்டுக் கொள்ள நாம் விரும்பவில்லை. காரணம் எமது இலக்கியப் பயணம் மிகவும் நீண்டது. இந்நீண்ட பயணத்தில் எங்களுடன் தொடர்ந்து கைகோர்த்துக் கொள்ளுங்கள் என்றே எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் ஏனைய “செங்கதிர் வாசகர்கள் அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் விநயமாக வேண்டி நிற்கின்றோம்.
அன்பானவாசகர்களே! எமது நிறைகள் ஒரு புறமிருக்கட்டும். எமது குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். “செங்கதிர்’ ஐக் காய்தல் உவத்திலின்றி விமர்சியுங்கள். அத்தகைய விமர்சனங்கள் எம்மைச் சுய விமர்சனம் நோக்கித் தூண்டவும், எமது குறைகளைத் திருத்திக் கொள்ளவும், எம்மைப் புடம் போடவும் உதவும். அதன் விளைவு சிறந்த இலக்கிய வெளிப்பாடுகளாக அமையும். அதுவே “செங்கதிர் இன் நோக்கமும் செல்நெறியும் ஆகும். எம்மைப் பொறுத்தவரை எழுத்து என்பது பொழுதுபோக்கானதல்ல. எழுத்து ஒரு ஊழியம். எழுத்து ஒரு தவம். இலக்கியம் மனிதமனங்களைச் செழுமைப்படுத்தவல்லது என்பதில் எமக்கு நிறைந்த நம்பிக்கையுண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் ஊக்கியாயிருந்து எம்மை உற்சாகப்படுத்துங்கள்! நன்றிகள் பல.
- செங்கதிரோன் -
socialogies
உங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்கி விசங்கதிர்
இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
2. soos Dró 202
 
 

அதிதிப்பக்கம்
“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி, எழுத்தாளர், கவிஞர், கலை/இலக்கிய விமர்சகர், ஒய்வுநிலைக் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜனாப்.ஏ.பீர்முகம்மது அவர்களாவார்.
குடும்பப்பின்னணி 9 அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருதில் இபுறாகிம்கண்டு அலியார்அசனார் உதுமானாச்சி ஆகியோரின் புதல்வனாக 28.12.1949 இல் பிறந்தவர். * இவரின் உடன் பிறந்த சகோதரர்களான மணிப்புலவர் மருதூர் ஏ.மஜித், முகம்மட்கான், மருதூர் அலிகான், மருதூர் அக்பர் அலி, மருதூர் ஹசன் ஆகியோர் இலக்கியத்தோடு மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.
9 இவரின் தந்தையார் கிராமிய இலக்கிய வகைகளில் ஒன்றான வசைப்பாடல்களை இயற்றிப்பாடுவதில் வல்லவர். இதுபற்றி “சாய்ந்தமருது வரலாறு” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமூக சேவையாளரும்கூட உள்ளுராட்சி மன்றத்தில் (முன்னர் கரைவாகு தெற்கு கிராம சபையென அழைக்கப்பட்டது) உறுப்பினராக இருந்தவர். இப்பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை சாஹிராக்கல்லூரி, அல்-ஜலால் வித்தியாலயம், அல்.கமரூன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை அமைப்பதில் முன்னின்று உழைததவர.
கல்விப்புலம் 9 உ.லெ.இபுறாகிம் அவர்களிடம் குர்ஆன் மத்ரசாக் கல்வி ஆரம்பம். 9 ஆரம்பக்கல்வி - சாய்ந்தமருது வடக்கு தமிழ் கலவன் பாடசாலை (தற்போது சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம்) 9 இடைநிலைக்கல்வி - சாய்ந்தமருது முஸ்லிம் மகா வித்தியாலயம் (தற்போது கல்முனை சாஹிராக்கல்லூரி) 9 உயர்தரக்கல்வி - மட்/வந்தாறுமூலை மத்திய கல்லூரி 9 பட்டக்கற்கை - கலைப்பட்டதாரி, பேராதனைப்பல்கலைகழகம் 9 கல வி முகாமைத் துவ டிப் ளோமா - அகல இந் திய முகாமைத்துவக்கற்கைகள் நிறுவகம் - சென்னை 9 உளவியல் டிப்ளோமா - அகில இந்திய முகாமைத்துவக் கற்கைகள் நிறுவகம் - சென்னை.
தொழில் 9 15.11.1971 - கணித விஞ்ஞான ஆசிரியராக கல்முனை சாஹிராக் கல்லூரியில் நியமனம். 9 1972/1973 பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கணித ஆசிரியராக விசேட பயிற்சி.
0 01.06.1989இல் முதலாம் தர அதிபர். 9 01.03.1991இல் ஆரம்பக் கல்விமற்றும் கணித பாடங்களுக்கான é、 போதனாசிரியராக நியமனம்.
fldislöélpafl 202

Page 4
9 04.01.1999இல் உதவிக் கல்விப் பணிப்பாளர். 9 25.08.1999இல் கல்முனை சாஹிராக் கல்லூரியின் அதிபராக நியமனம். 9 2005இல் கல்முனைப் பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர். 9 30.08.2008இல் அரச சேவையிலிருந்து ஓய்வு. 9 09.02.2010இல் இருந்து ஒரு வருட காலத்திற்கு அரசசேவையில் மீள்நியமனம். 9 19.10.2011இல் கல்முனை மாநகரசபை முதல்வரின் ஆலோசகர்.
இலக்கியப்பணி 9 மாணவனாக இருந்தபோது தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், விரிவுரையாளர் எம்.ஐ.எம் முஸ்தபா ஆகியோருடன் ஒன்றிணைந்து “முளரி” என்ற சஞ்சிகையில் எழுத்துப்பணி ஆரம்பம். 9 தினகரன், நவமணி, தினபதி, சிந்தாமணி, மாணவர் மஞ்சரி, ஸாஹிறா, ಗ್ಧವಾಗ; கலாவதி, கல்பனா, ஒலை, செங்கதிர் ஆகியவற்றில் ஆக்கங்கள்
JeijLD. 9 ஆரம்பக்காலங்களில் “மருதூரன்’, ‘கல்முனை மொஹமட் ஆகியன புனைபெயர்கள். 9 தற்போது சொந்தப்பெயரில் எழுத்துழியம்.
86,060) 9 முதலாவது கட்டுரை : “அறிவு வளர்ச்சிக்கு இஸ்லாமியர் ஆற்றிய தொண்டு? - மாணவர் மஞ்சரி-1965 9 பரிசு பெற்ற கட்டுரை : “பார்கர் குயிங்’ என்ற பேனைகளுக்கான மை தயாரிக்கும் நிறுவனம் தேசிய ரீதியாக பாடசாலை மாணவரிடையே நடத்திய கட்டுரைப்போட்டியில் பரிசு. (தமிழ்மொழியில் தெரிவு செய்யப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்)
கவிதை 9 முதலாவது கவிதை ‘நினைவில் தோன்றுகிறாள்' - தினபதி 17.02.1968 9 பரிசு பெற்ற கவிதை : பலாலி ஆசிரிய கலாசாலை நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்றமைக்காக வெள்ளிப்பதக்கம்.1972
சிறுகதை 9 முதலாவது சிறுகதை: “இலட்சியங்கள் நிறைவேறுகின்றன’ தினகரன்16.03.1980 0 பரிசு பெற்ற சிறுகதை : சர்வதேச ஆசிரிய தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு நடத்திய சிறுகதைப்போட்டியில் பாராட்டுப் பரிசு.
(Budjah 9 கல்முனையில் கேட்டுமதலியார் எம்.எஸ். காரியப்பர் (பா.உ) அவர்கள் தலைமையில் நடைபெற்ற மீலாத் விழா பேச்சுப் போட்டியில் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த அன்பர் பூபதிதாசன் அவர்களால் முதலிடம் பெற்றமைக்காகத் தங்கப்பதக்கம்
நாடகம்
0 முதலாவது நாடகம்: 3ம் வகுப்பு மாணவனாக இருந்தபோதே அல்-ஜலால் வித்தியாலய ஆசிரியரும் காரைதீவைப்பிறப்பிடமாகக் கொண்டவருமான
GOficia 2幌

அழகையா மாஸ்டர் என்பவரின் நெறியாள்கையில் மட்டக்களப்பைச் சேர்ந்தவரும் கல்முனை ஸாஹிராக்கல்லூரியின் சங்கீத ஆசிரியருமான பாலு அவர்களின் முன்னிலையில் ‘சிங்கமும் முயலும்’ என்ற நாடகத்தில் சிங்கமாகப் பாத்திரமேற்று நடித்தல். 9 பாராட்டுப் பெற்ற நாடகம்: ‘பேயும் பிசாசும்’ என்ற நாடகம். இதுபற்றி *சாய்ந்தமருது வரலாறு’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஞ்சிகைகள் 0 ‘ஸாஹிறா’, ‘நிழல்’(ஸாஹிறாக் கல்லூரி),’யாழ்பிறை’, ‘கலாவதி”(பலாலி ஆசிரிய கலாசாலை) ஆகிய சஞ்சிகைகளின் பொறுப்பாசிரியர். 9 'வசந்தம்' சஞ்சிகை நிர்வாகப் பொறுப்பதிகாரி (சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம்)
நூலாக்கம் 9 அனுபவம் பெறுவோம்” - ஆண்டு - 1 மாணவருக்கான பாடநூல் 9 “கருதுகோள்” - க.பொ.த.(உத) வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல் 9 ‘குழந்தை உளவியல் - நூலாக்க ஆலோசனைக்குழு உறுப்பினர். 9 ‘அரசியல் வானில் அழகிய முழு நிலா? - இணைப்பதிப்பாசிரியர். 9 “கடல் ஒருநாள் எங்கள் ஊருக்குள் வந்தது - சிறுவர் கவிதை நூல்
பேட்டிகள் 9 நவமணி பத்திரிகையுடன் 27.02.2000 9 ‘புதுச்சுவர்' சஞ்சிகையுடன் (ஆண்டு குறித்து வைத்திருக்கப்படவில்லை)
விருதுகள் - பட்டங்கள் 9 அகில இலங்கை இன நட்புறவு ஒன்றியத்தினால் சாமழரீ தேசகிரத்திப்பட்டம் - 2008
9 சர்வோதய இயக்கத்தின் நிறுவனர் டாக்டர். ஏ.ரி.ஆரியரத்னா அவர்களால் சுனாமிக்குப்பின்னரான கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்காகச் சர்வோதய விருது - 2006 0 “LACSDO MEDIA NETWORK SRILANKA” 616rg ig6)60 gigi.60T6) ‘தமிழ் மருத மாமணி’ என்ற பட்டம் - 26.06.2011 9 கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது (கவிதை) - 2011 கலாபூஷணம் விருது (இலக்கியம்) - அரச விருது விழா - 2011 (17.12.2011)
சர்வதேச மாநாடு 0 3வது உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மகாநாடு சென்னை காயல்பட்டணத்தில் நடைபெற்றபோது பேராளராகக் கலந்து கொண்டமை.
விளையாட்டு 9 வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் கல்வி பயின்றபோது பத்தொன்பது வயதுப்பிரிவில் சிறந்த விளையாட்டு வீரன்.
பொதுப்பணி
9 கல்முனை கலை இலக்கியப்பேரவை - உபதலைவர் 0 சாய்ந்தமருது பிரதேசசெயலக கலாசார சபை (2008) - செயலாளர் 9 ‘மருதமலர்' (சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார விழா) வெளியீட்டுக்குழு உறுப்பினர். 9 சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் ஒன்றியம் - பொருளாளர்.
Gillips 20

Page 5
இறைவனின் சித்தம்
ஏ.பீர்முகம்மது முன் கதை தமிழிலக்கிய உலகம் சிறிய மீன் பெரிய மீன் பற்றிய கதையை நன்கறியும். சோவியத் நாட்டு எழுத்தாளரான ‘சொலக்காவ்’ என்பவரே இக்கதையை எழுதியவர். சிறிய மீனைப் பெரிய மீன் விழுங்கக்கூடியதுதான் என்ற சாதாரணமாக உலகம் தெரிந்த உண்மையை பொதுவுடமைக் கருத்தேற்றம் செய்து சிகப்புக் கதையாக்கி உலகமெங்கும் உலவ விட்டவர்தான் இந்த ‘சொலாக்காவ்’ என்பவர். தமிழ்ச் சிறுகதை முன்னோடி எனக் கருதப்படும் புதுமைப்பித்தன் இதே மீன் கதையைச் சிறுகதையாகவும் தமிழில் முதலாவது உருவகக் கதைத்தொகுதியை வெளியிட்ட முன்னோடியான எம்.ஏ.ரஹற்மான் என்பவர் உருவகக் கதையாகவும் தம் சொந்த மொழிநடையில் எழுதி வெளியிட்டனர். இதன்மூலம் சோவியத் நாட்டு எழுத்தாளரின் மீன் கதையை மொழி பெயர்த்தவர்களாக அல்லாமல் புதுமைப்பித்தனும் எம்.ஏ.ரஹற்மானும் தமிழ்க்கதையுலகின் மீள்வாசிப்புக்கு வழிகாட்டியவர்களாகக் கருதப்பட்டனர். இந்த நிலையில்தான் தமிழிலக்கிய உலகின் உச்சத்தைத் தொட்டுநின்ற பொன்னுத்துரை அவர்கள் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் சிறுகதையின் பெரியமீன் கதையை "ஞான ரதம்” என்ற தலைப்பில் கலைத்துவப்பாங்குடன் மெருகூட்டி கதையின் முடிபு சற்று மாறுதலாக இருக்கத்தக்கதாக கொக்கு ஒன்றினை அறிமுகம் செய்து அக்கொக்கு பெரிய மீனைக் கெளவிக் கொண்டு போவதாக அக்கதையை இலக்கிய உலகிற்கு ஈந்தார். மீன்கதை மீண்டும் இன்னுமொரு பிறப்பெடுத்தது. மீன்கதைக்கு முடிவேயில்லையா? என்று எண்ணும் நிலையில் என்மனம். பாடசாலையில் விஞ்ஞான பாடத்தில் உணவுச்சங்கிலிபற்றிய குருவுபதேசம். உணவுச்சங்கிலி ஊடாக உலகம் இயங்கும் பொறிமுறையை உள்வாங்கி மீன்கதையை மீள்கதையாக்கம் செய்யத்துணிந்தேன். இதுதான் முன்கதை. இனி.
மீன் கதை தன் கூட்டத்திலிருந்து சிறிய மீன் தனியாகப் பிரிந்து செல்லத் சித்தம் கொண்டது. வெளியுலகம் நோக்கிப் புறப்பட்டது. பயணத்தின் பாதித்துாரம் கடக்காத நிலையில் சிறிய மீனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எதிரில் வாயைப் பிளந்தவாறே ஒரு பெரிய மீன். ‘உன் போன்றதொரு இரைக்காகவே இத்தனை நாழிகை காத்திருந்தேன்.” என்று பெரிய மீன் தன்னை அறிமுகம் செய்தது. “இரை தேடி உண்ணும் உன் வாழ்வு முறையினை ஏற்கிறேன். ஆனால் இத்தனை சிறியவனான என்னை விட்டுவிடு. வாழ்வில் எதையுமே அனுபவித்திராத எனக்கா இந்தநிலை? இறைவனுக்கே அடுக்காத இச்செயலை.? என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரிய மீன்
(6) வழி 2脱

குறுக்கீடு செய்தது. “இறைவன் பற்றி இங்கே எதுவும் பேசாதே. எனக்கு நீ இரையாவதுதான் இறைவனின் ஏற்பாடு.” என்றது பெரிய மீன். ‘என்ன உனக்கு நான் இரையாக வேண்டுமா? உனக்கு வாழ்வு. எனக்குச்சாவு இறைவனின் ஏற்பாடு? இறைவனின் இந்தத் தத்துவத்தை விளங்க முடியவில்லையே’ என்றது சிறிய மீன். ‘உன்னை விழுங்கும் சக்தி எனக்கு இறைவன் தந்தது. உனக்கு அந்தச் சக்தியை இறைவன் தரவில்லை. முடியுமானால் என்னை விழுங்கு பார்க்கலாம். என்றது பெரிய மீன். “சிறிய மீனை பெரிய மீன் விழுங்குதல்தான் இறைவனின் சித்தம். ஆனாலும்.” சிறிய மீன் தயக்கத்துடன் சற்றுத் தாமதித்தது. “என்ன ஆனாலும்.” பெரிய மீன் கேட்டது. “இறைவன் சித்தப்படியே எதுவும் நடக்கும்” என்று சொல்லி முடிப்பதற்குள் அது நடந்து முடிந்தது. குளத்தருகே நெடுங்காலுான்றி உணவுக்காய்த் தவமிருந்த கொக்கு தன் நீண்ட அலகினால் பெரிய மீனைக்கெளவிக் கொண்டு சற்றுத்துரம் பறந்து சென்றது. குளத்தருகே மீண்டும் தரையிறங்கியது. நீண்டதும் கூரானதுமான கொக்கின் அலகு தன் உடலைப் பதம் பார் கி கும் கணங்களை எதிர்பார்த்தவாறாகப் பெரிய மீன். வயல் வேலைகளை முடித்துவிட்டு கட்டுத்துவக்குடன் காத்திருக்கும் ஒரு விவசாயி. வீடு செல்லும் போது பகலுணவுக்கு ஒரு பறவையின் இறைச்சி என்பது அவனின் எண்ணம். கண்ணெதிரில் அந்தக் கொக்கு. குறி பார்த்து ஒரு தாக்குதல். குண்டடி பட்டதா? இல்லையா? கொக்கு தன்னை சுதாகரித்தவாறே மீண்டும் பறந்து சென்றது. பெரிய மீன் தப்பிப் பிழைத்து குளத்தில் விழுந்து நீந்திச் சென்றது. சிறிய மீன் - பெரிய மீன் - கொக்கு. வாழ்வும் சாவும் இறைவனின் சித்தம்
பின் கதை புதுமைப்பித்தன், எம்.ஏ. ரஹற்மான் ஆகியோர் சிறிய மீன் கதையை எழுதியதான தகவலோடு எஸ். பொன்னுத்துரையின் “ஞானரதம்’ என்ற கதையினை நாற்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்து இன்புற்ற அந்தக்கணங்கள் இன்னமும் என் மனத்துள் செப்பமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதால் ‘இறைவனின் சித்தம்’ என்ற இக்கதையை எழுதும் துணிவு எனக்கேற்பட்டது. எஸ். பொன்னுத் துரை அவர்களால் கதையில் கொக்கு அறிமுகம் . கட்டுத்துவக்குடன் ஒரு விவசாயி என்னால் அறிமுகம். இது ஒரு சோதனை முயற்சிதான். சொல்லாட்சியும் வசனச்செறிவும் கதைசொன்னபாங்கும் சிலாகிக்கத்தக்கதா? என்பது வாசகன்பாற்பட்டது. இன்னுஞ் சிலரும் இதுபோலும் சோதனை முயற்சிகளில் ஈடுபடமுன்வருதலே இக்கதை சொல்ல வந்த என் கொள்கையின் வெற்றியாகும்.
()க்தி 2贮

Page 6
இல3 கொண்டல்ப் பிசின்
- அகளங்கன்
“எல்லாம் பிழைச்சுப் போட்டுது, எல்லாம்
|| பிழைச்சுப் போட்டுது.”
') மூச்சிரைக்க ஓடிவந்த கந்தசாமி, அண்ணாவியாரின் காலடியில் வீழ்ந்து
கதறினான்.
அவனைத் தொட்டு நிமிர்த்தினார் ”.அண்ணாவியார். “என்னடா நடந்தது ملختجسسسسسسسســـسـابه
“எல்லாம்பிழைச்சுப் போட்டுது அப்பு.’
“இட நாசம் விழுவானே. என்ன நடந்ததெண்டு சொல்லன்ரா.”
“அவள் சாகக் கிடக்கிறாள். எல்லாம் பிழைச்சுப் போட்டுது” நிறுத்தாமல் அழுதபடி அரற்றினான் கந்தசாமி. அண்ணாவியாருக்கு ஒரு கணம் திக் என்றது.
“உங்கட மருந்தால வந்த வினை.” அவரிடம் மருந்து வாங்கிக் குடித்து அதுவரை யாரும் சாகவில்லை. அவர் வவுனியாவில் மிகவும் பிரபலமான விஷக்கடி வைத்தியர்.
வவுனியா நகருக்கு மேற்கே ஏழுமைல் தொலைவில் உள்ள பம்பைமடு அவரது ஊர். விஷக்கடி வைத்தியத்தில் அவருக்கு நிகர் யாரும் இல்லை. அவருக்கு ஏதோ ஒரு தேவதையின் வாலாயம் இருப்பதாகப் பலரும் பேசிக் கொண்டார்கள்.
பாம்பு கடித்து வருபவரின் நோயின் தன்மை பற்றியும், நோயாளிக்குக் கடித்த பாம்பின் தன்மை பற்றியும், நோயாளி தப்புவாரா செத்துப்போவாரா என்பது பற்றியும், நோயாளி வருவதற்கு முந்தைய இரவே அவருக்குக் கனவு மூலம் தெரிந்துவிடும். தனது பக்கத்து வீட்டிலிருந்த தனது பெறாமகனாகிய நாகலிங்கத்தாரிடம் இது பற்றி அவர் பல தடவைகள் சொல்லியிருக்கிறார்.
வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து அங்குமிங்கும் நடந்துகொண்டு நின்ற அண்ணாவியாரைப் பார்த்து நாகலிங்கத்தார் ஒரு நாள் கேட்டார்.
(8) aerófinusA 22

“என்ன சித்தப்பு. அங்கயும் இஞ்சயுமா நடக்கிறியள்.” “இண்டைக்கு மேற்குப் பக்கத்தில இருந்து ஒரு பொம்பிளையக் கொண்டுவருவாங்கள். அவளுக்கு விஷப்பாம்பு கடிச்சிற்றுது. தப்பமாட்டாள்’
“அப்ப உதில நிண்டு என்ன செய்யப் போறியள்.”
“வீட்டுக்குள்ள செத்துத் துலைச்சிருவாள். அதுதான் வாசல்ல வைச்சே திருப்பி அனுப்பப்போறன்.”
வாசலுக்கு வரும் நோயாளியைப் பார்க்காமலேயே திரும்ப அனுப்பியுமிருக்கிறார்.
“செத்துப்போகும் கொண்டுபோங்கோ.” “செத்தாப்போல ஏன் இஞ்ச கொண்டு வந்தநீங்கள்.” என்றெல்லாம் நோயாளியைப் பார்க்காமலேயே வாசலில் வைத்துத் திருப்பி அனுப்பி விடுவார்.
وو
வீட்டுக்குள் அனுமதித்து விட்டாரென்றால் நிச்சயமாக நம்பலாம். நோயாளி பிழைத்துவிடுவார். அவரது வீட்டுக்குள் எந்த நோயாளியும் இறந்ததில்லை. அவரிடம் மருந்து வாங்கிக் குடித்து யாரும் இறக்கவில்லை.
நரசிங்கர் அவரது குலதெய்வம். பூசை வைப்பார். மடை, பொங்கல் தவறாது நடக்கும். பூசையின்போது பிரம்பேந்தி ஆடிக் கூ என்று கத்துவார். ஊரில் பெரிய மனிதர். அவரது பெயர் அருணாசலம். ஆனால் அவரை யாவரும் அணி ணாவியார் என்றுதான் அழைப்பார்கள்.
நாங்கள் அவரை அறுனாலயப்பா (அருணாசல அப்பா) என்று கூப்பிடுவோம்.
அண்ணாவியார் என்றால் ஏதோ நாட்டுக்கூத்து, நாடகம் பழக்குகின்றவர் என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் அவருக்குத் தெரியாது.
கழிப்புக் கழித்து காயப் வெட்டி ஏதேதோவெல்லாம் செய்து பேயோட்டுவார்.
பேய் பிடித்ததாகப் பலரை அவரிடம் கொண்டுவந்து சுகப்படுத்திச் சென்றிருக்கிறார்கள்.
போட்டி பொறாமை காரணமாக சிலர், சில வைத்தியர்கள் மூலமாக தமது எதிரிகளுக்கு மருந்து வைத்து விடுவார்கள்.
isina 202

Page 7
என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமல், அந்த மருந்து அதைச் சாப்பிட்டவரை கொஞ்சம் கொஞ்சமாக வருத்திக் கொன்றுவிடும்.
அத்தகைய நோயாளிகளைக் கைநாடி பிடித்துப்பார்த்து அறிந்து
மாற்று மருந்து கொடுத்து மருந்து கக்கப் பண்ணிவிடுவார்.
முற்காலத்தில் வன்னிக் கிராமங்களிலும் பேய் ஏவி விடுதல், வசிய
மருந்து, முறிவுமருந்து(பிரிவு) என பல கொடுமைகள் நிகழ்ந்திருக்
னறன.
ஒரு தடவை ஒரு வைத்தியர் கொடுத்தவசிய மருந்தை பெண்ணின் சகோதரன் சாப்பிட்டுவிட்டதால் அவன் வசியமாகி மருந்து வைத்தவனோடு ஒட்டித் திரிந்ததாக ஒரு கதை கிராமங்களில் உண்டு.
அண்ணாவியாருக்கும் இந்தக்கலை கைவந்த கலைதான். இருப்பினும் அவர் யாரையும் கெடுப்பதற்குத் தன் ஆற்றலைப் பயன்படுத்திய தில்லை. “இட நாசம் விழுவானே என்னநடந்ததெண்டு சொல்லடா.” சற்றுக் கோபத்தோடும் ஆச்சரியத்தோடும் கேட்டார் அண்ணாவியார். “அவளுக்கு வயித்தால அடிக்குது. ரெண்டு மூண்டு நாளாகப் போச்சு. நிக்குதில்ல. எனக்குப் பயமாக்கிடக்கு.” அவர் சிரித்துக் கொண்டே “இதுக்குப் போய் இந்தப் பாடுபடுறியே.” “என்னப்பு இப்பிடிச் சொல்லிறியள். அவள் படுற பாட்ட ஒருக்கா வந்து பாத்தியளிண்டாத்தான் தெரியும்.”
“இஞ்சே .நீ ஒண்டுக்கும் பயப்படாத, நான் ஒரு தூள் தாறன். கொண்டுபோய் தேனில குழைச்சு குடிக்கக் குடு. வயித்தால போறது நிண்டிடும்.” அவர் சர்வசாதாரணமாகச் சொல்லிக் கொண்டு ஒரு கொஞ்சத் தூளை ஒரு சரையில் சுற்றிக் கொடுத்தார். “எதுக்கும் ஒருக்கா நீங்கள் வந்து பாத்தியளிண்டா.” “இஞ்ச வேல கணக்கக் கிடக்கு. ரெண்டு நாள் கழிஞ்சு அவள இஞ்ச கூட்டிவா.” அவன் மடியிலிருந்து பணத்தை எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து நீட்டினான்.
“வேண்டாம். கொண்டுபோ.” சிரித்தபடி அவனை அனுப்பிவைத்தார். அவர் நோயாளிகளிடம் கெடுபிடியாகப் பணம் வாங்குவதில்லை. வீட்டுக்குச் சாமான்கள் கொண்டு வந்து கொடுத்தால் வாங்குவார். ஏழைகளிடம் எதுவும் வாங்கமாட்டார். வசதி படைத்தவர்களிடம் வாங்குவார். அதுவும் கேட்டு வாங்கமாட்டார். பணத்தாசை இல்லாதவர். வசதியான வாழ்வு வாழ்பவரும் அல்ல.
(0ர் of 202

கந்தசாமி ஒட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான். அவனை வழியில் பார்த்தார் வேலுப்பிள்ளை. அவருக்குப் பயம் வந்துவிட்டது.
“கந்தசாமியின்ர மணிசிக்கு ஏதோ நடந்திருக்கோணும். அவன் வந்து போற போக்கப்பாத்தா அப்பிடித்தான் இருக்கு”
தனக்குள் சொல்லிக் கொண்டவராக அணி ணாவியாரின் வீட்டுக்குவந்தார். “வா வேலாத்த. வேலுப்பிள்ளையரை அண்ணாவியார் அப்படித்தான் கூப்பிடுவார்.
و
“கந்தசாமியெல்லே வந்து போறான்.” “ஓங் காணும். அவனக் கண்டிட்டுத்தான் இஞ்ச வந்தனான். என்னவாம்” “ஒண்டுமில்ல. அவள் நாசங்கட்டுவாளுக்கு வயித்தால அடிக்குதாம். இவன் கோதாரி விழுவான் பயந்துபோனான்’ “பின்ன. வசியம் பண்ண மருந்து குடுக்கிறணெண்டு நீ செய்த வேல சரியே. ஏதும் ஒண்டு ஆச்சுதெண்டா.” “ஒண்டுக்கும் யோசிக்காத, இப்ப குடுத்த தூளுக்கு வயித்தால போறது 當古常 நின்ைடிடும். இதோட ரெண்டுபேரும் ஒற்றுமையாப் போடுங்கள்.
ungeir' “இப்ப குடுத்து விட்டதாவது உண்மையா மருந்துதானே. அல்லாட்டி அண்டைக்குப்போல.” “சீ.சீ.இது மருந்து தான்’ சிரித்தார் அண்ணாவியார். வேலுப்பிள்ளையாருக்கும் சிரிப்பு வந்தது. “ஆபத்தொண்டுமில்லையே.” “அவள் வேச நாலஞ்சு நாளைக்குக் கிடந்து துடிப்பாளெண்டு பாத்தா இவன் நாய்மோன் ஓடிவந்திற்றான்.”
() () ()
மூன்று நாட்களுக்கு முன் காலை நேரம் “வேலாத்த. வேலாத்த.”
கூப்பிட்டபடி வந்தார் அண்ணாவியார்.
“மச்சானே வா காணும்.” வீட்டுக்குள் அழைத்தார் வேலுப்பிள்ளை. “ஒருக்கா விளாங்குளம் போகோணும். வண்டிலப் பூட்டன்.” வவுனியாவுக்கு விளாங்குளம் என்பதுதான் பழைய பெயர். வேலுப்பிள்ளையருக்கும் விளாங்குளத்தில் அலுவல் இருந்தது. சரி என்று ஒப்புக் கொண்டு வணி டிலில் மாடுகளைப் பூட்டிக் கொண்டுவெளியே வந்தார். இரண்டுபேரும் வண்டியில் போய்க்கொண்டிருந்தனர்.
0வழி 20

Page 8
“காசில்ல வேலாத்த சாமான் சட்டு வாங்கோணும். என்ன வழியெண்டு தெரியேல்ல.” “சும்மா சொல்லாத காணும். காசில்லாமல் வெளிக்கிட்ட நீயே.” *கதிரமலையான் அறிய கையில காசில்ல. செப்புக்காசு கூட இல்ல. “அப்ப என்ன சீலைக்கு வண்டிலப் பூட்டச் சொன்ன நீ”
9
யோசித்துக் கொண்டு வந்தார் அண்ணாவியார். திடீரென “வேலாத்த . வண்டில நிப்பாட்டு. கிட்டியத் தட்டு” “ஏன் மச்சான்” “அங்க பார்! அந்தக் கொண்டல் மரத்தில பிசின் வடிஞ்சு கொண்டிருக்கு. அந்தப் பிசினில கொஞ்சம் எடுத்துக் கொண்டு வா’
“ஏன் மச்சான் கொண்டல்ப் பிசின் உனக்கு” “நீ எடுத்துக் கொண்டுவாவன். சொல்லுறன்” வேலுப்பிள்ளையர் இறங்கிச் சென்று, கொண்டல் மரத்துப் பிசினை ஒரு இலையில் வழித்து எடுத்து வந்து கொடுத்தார். “சரி வண்டில விடு.” வண்டியில் ஆசனத்தில் வேலுப்பிள்ளை. பின்னால் இருந்த அண்ணாவியார் பிசினைக் குழிசை அளவாக நாலு ஐந்து என உருட்டினார். வண்டில் போய்க் கொண்டிருந்தது. “வேலாத்த உந்தக் கடப்படீல வண்டில நிப்பாட்டு” வண்டில் நிற்பாட்டப்பட்டது. “கந்தசாமி. டேய் கந்தசாமி. கந்தன் டேய்.” வெளியே ஓடிவந்தான் கந்தசாமி.
“வாங்கோ அப்பு” “இஞ்ச எனக்கு நேரமில்ல, வந்துபோக. இந்தா இந்தக் குழிசையள அவளுக்கு வெத்திலயில வைச்சுத் தின்னக்குடு. எல்லாம் சரியாப் போடும்.”
அவன் நன்றியோடு வாங்கிக் கொண்டு “கொஞ்சம் இருங்கோ அப்பு வாறன்’ எனக் கூறியபடி வீட்டுக்குள் ஓடிப்போய் கையில ஏதோ எடுத்துவந்து அண்ணாவியாரின் கையில் திணித்தான் “டேய் டேய் வேண்டாமிடா.” என்று சொல்லியவாறு வாங்கிக் கொண்டு “சரி வண்டில விடு” என்றார் அண்ணாவியார். என்ன என்று கேட்பவர்போலத் திரும்பிப் பார்த்தார் வேலுப்பிள்ளை. “வேச பெத்தது கையில காசத் திணிச்சிற்றுப் போகுது” என்று செல்லமாகச் சொல்லிக் கொண்டு கையைப் பிரித்துப் பார்த்தார்.
(12 D2O2

வெற்றிலைக்குள் சிலதாள்கள் “சாமான் வாங்கக் காசு கிடைச்சிற்று” வேலுப்பிள்ளையாருக்குஆச்சரியம் “சீ. இதென்ன மச்சான்” சலித்துக் கொண்டார் வேலுப்பிள்ளையர். “இவன்ர மனிசி இவனோட கோவிச்சுக் கொண்டுபோய் தன்ர தாய்வீட்டில இருக்கிறாள். இவனுக்கு அவளோட சேர்ந்து வாழ விருப்பம். என்னட்ட வசிய மருந்துக்கு வந்தவன். இதுதான் அவளுக்கு வசிய மருந்து’
“கொண்டல்ப் பிசின் வசிய மருந்தே” கோபமாகக் கேட்டார் வேலுப்பிள்ளையர். “இதை அவள் திண்டாளெண்டா நாலைஞ்சு நாளைக்கு வயித்தால அடிக்கும். அதக் கேள்விப்பட்டு இவன் அங்கபோய் எல்லா உதவியும் செய்வான். வருத்தம் முத்த பயந்துபோய் என்னட்ட வருவான்’ “அதுக்கும் ஏதும் பிசின் வைச்சிருக்கிறியோ’ “சீ.சீ.அதுக்கெல்லாம் மருந்திருக்கு”
() () ()
வேலுப்பிள்ளையருக்கு இப்போதுதான் கொண்டல்ப் பிசினின் மகிமை தெரிந்தது. இரண்டு நாட்களின் பின் கந்தசாமி வண்டில் கட்டி மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணாவியார் வீட்டுக்கு வந்தான்.
ஆளுரசு கி
அவர் அவளது கையைப்பிடித்து நாடி பார்த்தார். அவளுக்கு இப்போது பூரண சுகம். தனது கணவன்மேல் அவளுக்கு இப்போது அளவு கடந்த அன்பு பிறந்திருந்தது. தான் சாகக் கிடந்த நேரத்தில் தன் கணவன் துடித்த துடிப்பும், தனக்குச் செய்த பணிவிடைகளும், மருந்துவாங்கி வந்து கொடுத்துச் சுகப்படுத்தியதும், தன்னருகில் இருந்து கவனித்ததும் எல்லாம் அவளது மனத்தில் அவன் மேல் அன்பை வளர்த்துவிட்டன. அண்ணாவியாருக்கு தட்சணை கொடுத்துவிட்டு மனைவியைப் பக்குவமாக அணைத்தபடி வண்டியில் ஏற்றினான் கந்தசாமி. வண்டில் சென்று கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்த வேலுப்பிள்ளையர் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டார். “என்ன வேலாத்த. கொண்டல்ப் பிசின் செய்த வேலயப் பாத்தியே.” “ஓம் மச்சான் பிசின் நல்லாத்தான் ஒட்டுது.”
(31ಣಾ of 202

Page 9
கதிர்முகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வடமோடி தென்மோடிக் கூத்துக்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அண்ணாவிமார்களில் ஒருவராகவும் தான் வாழ்ந்த சமூகத்தின் மீது அக்கறைகொண்டவராகவும் விளங்கிய அமரர் சி.பாலகப்போடி அண்ணாவியாரின் ஓராண்டு நினைவஞ்சலி 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்/ கன்னன்குடா மகாவித்தியாலய கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வினை கன்னன் குடா கண்ணகி முத்தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
கண்ணகி முத்தமிழ் மன்றத் தலைவர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களும்; சிறப்பு அதிதிகளாக திரு.சி.ஜெய்சங்கர் (தலைவர், நுண்கலைத் துறை கிழக்குப் பல்கலைக்கழகம்), செல்வி க.தங்கேஸ்வரி(மட்டக்களப்பு முன்னாள் பா.உ, இணைப்பாளர் - சிறு கைத்தொழில் மற்றும்
பாரம்பரிய கைத் தொழில் அமைச் சு), திரு.செ.எதிர்மன்னசிங்கம் (வடகிழக்கு மாகாண முன்னாள் கலாசாரப்பணிப்பாளர்)ஆகியோரும்; கெளரவ அதிதிகளாக திரு.க. அறுமுகம் (தலைவர், விபுலம் - மட்டக் களப்பு), திரு.கு.ரவிச்சந்திரன்(விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்), திரு.இ.சாந்தலிங்கம் (செயலாளர், கொக் கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மண்டபத்தினுள்ளே வட்டக்களரி அமைத்து ‘வாளவீமன் நாடகம்’ தென்மோடிக் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டமை நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
15.11, 1944 - 22.01.2011
(14) na Daf 202
 
 

'* **
தம்பு சிவாவின் 'முதுசம் (சிறுகதைத் தொகுதி)
தம்பு சிவாவின் முதுசம் சிறுகதைத் தொகுதி அரங்கேற்றம் + சிகரம் தொட்ட செம்மல்களுக்குப் பாராட்டு 14.01.2012 சனிக்கிழமை பி.ப 4 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்திய இரத்தினம் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக பிரபல நாவலாசிரியர் வவுனியுர் இரா.உதயணன்(லண்டன்) அவர்களும்; சிறப்பு விருந்தினர்களாக உடுவை எஸ்.தில்லைநடராசா(முன்னாள் மேலதிகச் செயலாளர், கல்வி அமைச்சு), சொ. அமிர்தலிங்கம் (தலைவர்,மாகாண பொதுச்சேவை ஆணைக் - வட மாகாணம்), கலாநிதி சி.சிவநிர்த்தாநந்தா (பிரதிப்பணிப்பாளர், வலயக் கல்வி அலுவலகம் - திருகோணமலை) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நூல் அரங்கேற்ற உரையை கலாநிதி கந்தையா ரீகணேசன்(சிரேஸ்ட விரிவுரையா ளர், ஆங்கில மொழி கற்பித்தல் மையம்,யாழ் பல கலைக் கழகம்) அவர்களும் , நூல் ஆய்வுரையை திரு சிவா.சுப்பிரமணி யம்(எழுத்தாளர், ஊடகவியலாளர்) அவர்களும் நிகழ்த்தினர். விழாவில் "சமகால இலக்கியத்தில் பலமும் பலவீனங்களும்' என்ற தலைப் பில கலாபூஷணம் கே. ஆர் . டேவிட் (எழுத்தாளர் , விமர்சகர்)அவர்களின் இலக்கிய உரையும் , 'ஈழத்து தமிழி' கவி M சிறுகதைககளின் முற்போக்குக் கருத்தியல்' எனும் தலைப்பில் கலாநிதி வலி லிபுரம் மகேஸ் வரணி (தமிழ் தி துறைத் தலைவர்,பேராதனைப் பல்கலைக்கழகம்.) அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றன.
சிகரம் தொட்ட செம்மல்கள் பேராசிரியர் சபா.ஜெயராசா,செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், வவுனியூர் இரா.உதயணன் (லண்டன்), கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
5ன.

Page 10
s
(
嵌
கிழக்குக் கடலின் மடியில் இருந்து நீலாபாலன் சூரியக் குழந்தை பிறந்துவரும் கிழித்த கோட்டைத் தாண்ட தவர்போல் பஞ்சு மேகங்கள் ஒதுங்கிவிடும் வழக்கமாக மயிற்தோகை ஏந்தி வாடைக் காற்று தடவிவிடும் வரவேற்புப் பாவொரு காக்கைகள் திரிய காலைப் பொழுது மலர்ந்து வரும்.
கடலின் இருப்பை விலாசிக்கும் அலைகள் கரையைத் தேடி நடந்து வரும் கைகளில் ஏந்திய நுரைப்பூக்கள் அனைத்தையும் கையளித் துடனே திரும்பிவிரும். அடிக்கடி நிகழும் நடைமுறை இதனை தாழை மரங்கள் படமெடுக்கும். அவ்வப் போது நண்டுகளும் இதைக் கவிதைகளாக வடித்து விரும்.
நேற்று முழுவதும் இருள் குளித் திருந்த இயற்கை சிரித்துக் கண்விழிக்கும் நிம்மதி தேடி ஒடி ஒளிந்த மேகம் மெல்லக் கால்பதிக்கும் ஊக்கத் தோடு அலைகளில் வந்த ஊரி மண்றுைள் தலை புதைக்கும். ஒளிகண்ட உலகம் திரும்பவும் இயங்க காலைச் சக்கரத் துள்நுழைக்கும்.
(6)anos Dué 202
 

மலையக ஆளுமை இர.சிவலிங்கம்
- மொழிவரதன்
*இளைஞர் தளபதி இர. சிவலிங்கம்’ எனும் தலைப்பில் சாரல்நாடன் எழுதி கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் மலையக ஆளுமைகளில் ஒருவரான இர.சிவலிங்கத்தைப் பற்றிப் பேசுகின்றது. 1960, 70 களில் மிகத் துடிப்போடு மலையக முகடுகளில் எழுச்சியுடன் செயற்பட்ட ஒர் ஆளுமையைக் கொழும் புத் தமிழ் ச் சங்கம் கெளரவித்துள்ளது என்றே கூறல் வேண்டும். ஏலவே ஈழத்து ஆளுமை, வாழ்வும் வகிபாகமும் என்ற தொனிப் பொருளில் தவில் மேதை தட்சணாமூர்த்தி, பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை, பணி டிதமணி சி.கணபதிப்பிள்ளை, நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், தசாவதானி கதிரைவேற்பிள்ளை போன்றோர்களின் நூல்கள் வெளி வந்துள்ளன. இந் நோக்கில் இந்நூல் வெளிவரக் காரணமானவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர்.
ஈழத்து ஆளுமைகள்: வாழ்வும் வகிபாகமும் இளைஞர் தளபதி இர.சிவலிங்கம் என்ற தலைப்போடு மிக நேர்த்தியாக முகப்பு அட்டைப்படம் மலர்கின்ற சிவந்த பூக்கூட்டத்துடன் காட்சியளிப்பது கண்களுக்கு மலர்ச்சியாக இருக்கின்றது. போராட்ட உணர்வும், துடிப்பான செயற்பாடும் கொண்ட இர.சிவலிங்கத்திற்கு இச் சிவப்பு தலைப்பும் சிவப்பு பூக்களும் ஒரு குறியீடாக உள்ளன. பசுமையான அவரது சிந்தனை ஓட்டத்தை புலப்படுத்துவதாக இவ்வட்டைப் படத்தின் பின்னணி கண்ணைக் குளிர வைக்கும் பச்சை நிறத்திலுள்ளது. இதே போன்றே பின்புற அட்டை என்றும் மலர்ந்த முகத்துடன் வாழ்ந்த இளையதளபதியின் படமும் மலையக இலக்கிய செயற்பாட்டாளரும் திறனாய்வாளருமான மு.நித்தியானந்தத்தின் கூற்றோடும் நூலாசிரியரின் இளமையான முகப் படத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதமாக உள்ளது.
நூலமைப்பு நன்றாகவே உள்ளது. உள்ளே இளைஞர் தளபதி இர.சிவலிங்கத்தின் புன்முறுவல் பூத்த படம் எம்மை வரவேற்கின்றது. அவரது இணைபிரியா நண்பன் அமரர் எஸ்.திருச்செந்தூரனுக்கு இந்நூல் அர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது மிகப் பொருத்தமானதொன்றாகத் திகழ்கிறது.
பேராசிரியர். சோ.சந்திரசேகரனின் அணிந்துரையில் “. மலையகத்தில் வரலாறு படைத்த சொல்லின் செல்வர், இளைஞர் தளபதி எனப் பலவாறு பாராட்டப்பட்டு மலையக மக்களின் வாழ்வு மேம்படப் பணி புரிந்த அமரர். இர.சிவலிங்கம் அவர்கள் பற்றிய இந்நூலை வெளியிடுவதில் தமிழ்ச் சங்கம் பெருமிதம் உறுகின்றது” என்கிறார்.
GG
சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு ஒன்று இயங்கி வருவதையும் அது
(7)angi Di 202

Page 11
வருடாவருடம் பல போட்டிகளையும் பரிசில்களையும் வழங்கி வருவதுடன் ஒரு ஞாபகார்த்த சொற்பொழிவு ஒன்றினையும் நடத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. திரு.எம்.வாமதேவன், திரு.சி.நவரெட்ண, திரு.டி.தனராஜ், போன்றோர் தமது குழுவினருடன் இணைந்து இதனைச் செய்து வருகின்றனர். இவ் வேளையில் இர.சிவலிங்கம் தொடர்பான ஞாபகார்த்த மலர்களை வெளியிட்டிருப்பினும் சாரல்நாடனின் இந்நூல் பல புதிய அவரது வாழ்வு தொடர்பான நினைவலைகளையும் இலங்கை தோட்டச் சேவையாளர்சங்கம், கலை இலக்கியப் பணி, தாயகம் திரும்பிய தமிழர்களின் மத்தியில் இவரது செயற்பாடுகள், மீண்டும் இர.சிவலிங்கம் இலங்கையில் என்பனவற்றையும், இர.சிவலிங்கத்தின் செயற்பாட்டின் ஆதார சுருதியாக சில பின் இணைப்புக்களையும் தந்துள்ளது.
இளைஞர் தளபதியின் ஆசிரியர், அதிபர் சேவை தொடர்பாக அவ்வப்போது பலர் பல விடயங்களை வெளியிட்டு வந்துள்ளனர். இர.சிவலிங்கம் அவர்கள் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் புரிந்த சேவைகள் விதந்து பேசப்பட்டவை ஆகும். ஆசிரியராக - அதிபராக அவரது ஆளுமையில் அவர் தனிமனிதராக மாத்திரம் இயங்க வில்லை. அவர் ஒரு நிறுவனமாகவே இயங்கினார். வெறும் கருத்துக்களை திணிப்பவராக அல்லாது புதிய கருத்துக்களை உருவாக்குபவராகவும் திகழ்ந்தார். அவரது நடி பங்கு வெறும் ஆசிரியனாக - அதிபராக மாத்திரமல்லாது ஒரு சமூக செயற்பாட்டாளனாக நல்லதொரு பெற்றோனாக இர.சிவலிங்கம் என்ற பகுதி புலப்படுத்துகின்றது.
இதே வேளை இவரது அரசியல் சிந்தனை - போக்கு, செயற்பாடுகளுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர் தேசிய சங்கம் போன்றவற்றின் போக்கிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனால் பல போராட்டங்களை அவர் சந்திக்க வேண்டி ஏற்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் வரலாற்றின் நீண்ட காலம் வெறும் தோட்டத் தொழிலாளர்களை மாத்திரமே கொண்ட முக்கியத்துவமளிக்கின்ற சங்கமாக இருந்து வந்தது உண்மையாகும். இந் நிலைமையையே இர.சிவலிங்கம் அவர்களும் அன்று எதிர்கொண்டார். எனினும் 1977 க்குப் பின்னரும் கடந்த முப்பது வருடங்களிலும் மலையகக் கல்வி தொடர்பாக முனைப்பான வேலைத்திட்டங்களில் கவனம் செலுத்தி உள்ளதை காணலாம். இர.சிவலிங்கம் அவர்கள் அன்றைய மலையக நியமன எம்.பி ஏ.அஸிஸ் ஊடாக சிலபல கல்வி தொடர்பான வேலைகளை செய்தார் என்பதனை சாரல் நாடன் கோடிட்டுக் காட்டியுள்ளார். இவரது கலை இலக்கியப் பணி பற்றி சாரல்நாடன் பல விடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளார். வீரகேசரி தோட்ட மஞ்சரியில் வெளியான அவரது கட்டுரைகள், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப்போட்டி, பரிசளிப்பு விழா, குடியுரிமை தொடர்பான கட்டுரைகள் போன்றன இவரது கலை இலக்கிய பணிக்கு சான்று பகர்கின்றன. சாரல்நாடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
1967 காலப்பகுதியில் ‘தினபதி மதிப்பு வைத்திருக்கும் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்திருந்தது. சிவாவின் பெயரும் அதில் இடம்பிடித்திருந்தது’ என்கிறார். கலை, கலாசாரத் துறைகளிலும்
9ேங்கி 202

வானொலி, ஆய்வு துறைகளிலும் இடம் சிவலிங்கத்தின் வரவின் பின்னர் ஏற்பட்டது என்பதுடன் சிறுகதை எழுத்தாளர்களாக சிவலிங்கம், திருச்செந்தூரன், தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், ஏ.பி.வி.கோமஸ், என்.எஸ்.எம்.ராமையா போன்றோர் அங்கீகரிக்கபட்டதும் இர.சிவலிங்கத்தின் செயற்பாட்டின் விளைவே என்கிறார்.
மலை முரசு, மலைப்பொறி மற்றும் சிறு சஞ்சிகைகள் போன்றனவற்றிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தில் அவர் ஆற்றிய பணிகள் பற்றிய விடயம் சிறப்பாக நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
1965 ஆண்டின் தேர்தல் பல சறுக்கல்களை ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்தவர்களுக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக இர.சிவலிங்கம் தனது அதிபர் பதவியை இழந்தார். இச்சூழ் நிலையில் இர.சிவலிங்கம் இலங்கை தோட்டச்சேவையாளர் சங்கத்தின் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முற்போக்கு சக்திகளின் கோட்டையாக இலங்கை தோட்டச்சேவையாளர் சங்கம் அன்றிருந்தது.
இர.சிவலிங்கம் அவர்கள் தொடர்ந்து தோட்டச்சேவையாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டார். பஞ்சப்படி 17.50 போராட்டத்தின் போது ஏ.அஸிஸ் உடன் சேர்ந்து செயற்பட்டாலும் இறுதியில் பத்துச் சத சம்பள உயர்வுடன் அப்போராட்டம் முடிவடைந்தது.
கீணாக்கலை தோட்ட போராட்டம் மூலம் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார். 1970 க்குப் பின்னர் இர.சிவலிங்கமும் நியமன எம்.பி அப்துல்அஸஸ் ஆகிய இருவரும் இணைந்து மலையக கல்விக்கும், அபிவிருத்திக்கும் ஆலோசனைகளை வழங்கினார். இருபத்தைந்து மலையக பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொடுக்க உதவினார்.
ஹைய்லேண்ட்ஸ் கல்லூரியின் அதிபர் பதவியேற்ற அவர் 1971 இல் கல்வி இலாகாவுக்குப் பதவி உயர்வு பெற்றுச் சென்றார். தமிழ்ப் பிரிவின் பிரதம கல்வி அதிகாரியாக அங்கு கடமை ஆற்றிய வேளையில் மலையக கல்விக்காக பல முனைப்புக்களை முனனெடுத்தார். என்றாலும் அவரது அரசியல் சார்பு பின்னணியில் சில விடயங்கள் அவரது விருப்புக்கு மாறாக நடந்ததை ஆசிரியர் சாரல்நாடன் குறிப்பிடத் தவறவில்லை.
1972 இலங்கை குடியரசு, 1972 காணிச் சீர்திருத்தமசோதா, பெருந்தோட்டத் தொழிலாளர் வெளியேற்றப்பட்டமை, டெல்டா மற்றும் சங்குவாரி தோட்ட இனக் குரோத காடைத்தனம், தீவைப்பு போன்றன அவையாகும்.
மேலும் இர.சிவலிங்கம் அவர்கள் பெறும் கல்வி பதவி பட்டம் செயற்பாடு என்பன மூலம் மாத்திரம் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற இயலாதென்பதை 1977 தேர்தலில் தெளிவு பெற்றார் என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் வரலாற்றில் இனப்படுகொலைகளும், இனச்சுத்திகரிப்பும், இனத் தீ சுவாலைச் சாம்பல்களும் வரலாற்று ஏடுகளை இரத்தத்தால்
(9ங்ழி of 202

Page 12
தோயவிட்டுள்ளமை ஒன்றும் புதினம் அல்ல. 1983 இதன் உச்சக் கட்டம் எனில் நேர்மையும் சத்தியமுமிக்க வரலாற்று ஆசிரியன் ஏற்றுக் கொள்வான். இதில் இந்திய வம்சாவளியினரான மலையக மக்களும் 1958, 1977, 1983 எனப் பல காலகட்டங்களில் நாட்டினுள்ளேயும் நாட்டுக்கு அப்பாலும் புலம்பெயர்ந்து சென்றார்கள். இர.சிவலிங்கமும் இதற்கு விதிவிலக்கல்லவே. ஆம்! அவர் 1983 இல் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தார். இந்தியா சென்ற அவருக்கும் கூட இந்தியா சென்றதன் பின்னர்தான் இந்தியா பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் எனும் ஒரு அடிமை ஒப்பந்தத்தால் இந்தியா சென்றோர் படும் துயரங்களைக் கண்டார். இதே வேளை 1983 இல் புலம்பெயர்ந்தோருக்கும் முன்னர் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான வித்தியாசத்தை அறியாத இந்தியர்களின் நிலையைக் கண்டார்.
இவர் இலங்கைத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையைப் பின்வருமாறு கூறுகிறார்.
நாடு திரும்பிய தமிழர்கள் ஒலைக்குடிசைகளில் வாழ்ந்தனர். பாதையோரங்களில் நோய் வாய்ப்பட்டுக் கிடந்தனர். நொந்து போயிருந்தனர்.” என்று எழுதிச் செல்கிறார்.
இவர்களின் நிலையையும் இந்தியர்களின் மனப்பாங்கையும் நேரில் சிவலிங்கம் தரிசித்ததை சாரல்நாடன் ஆதாரபூர்வமாக நிறுவுகிறார்.
இவ்வேளையில் இர.சிவலிங்கத்தின் மனக் கொதிப்பும், வீராவேசமும் தர்ம எழுச்சியும் எமக்குப் பாரதியாரின் பின்வரும் கவி வரிகளை ஞாபகமூட்டுகிறது.
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித்துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை மூடிக் கிழப்பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப்போல - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
doj6Srtisib 96 jes6i. The Betrayal Of Indian Tamils in Sri Lanka - 6tgolf நூலில் மலையகத்தைப் பொன்னாக்கிய அம்மக்கள் கூட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும் , நீதிக்கான கதவுகளையும் குறித்துக் காட்டிச் செல்வதை நூலாசிரியர் எடுத்தாண்டுள்ளார். பிரித்தானியா, இந்தியா, இலங்கை என்ற மூன்று நாடுகளுமே இம் மக்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் என்பதை நியாயப்படுத்திச் செல்கின்றார்.இதே போல் மறு வாழ்வு தேடி வந்த இந்தியாவில் அது மறுக்கப்பட்டதைக் கண்டு மனம் கொந்தளித்துள்ளார் இர.சிவலிங்கம்.
0ேர். 20

தான் பிறந்த இலங்கை நாட்டின் பொலிஸ் செயற்பாடுகளை விடக் கொடுரமான முறையில் அல்லது இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்ட செயற்பாடுகள் போன்றே இந்தியாவில் குற்றம் ஏதும் செய்யாத அவர் 1991ம் ஆண்டும் பின்னர் 05.08.1993லும் சிறை பிடிக்கப்பட்டார். இரண்டாவது முறை அவர் விசேட சிறை எனும் கொடுங்கோன்மைச் சிறையில் இட்டு பயங்கர வாதியைப்போல் நடாத்தப்பட்டுள்ளதையும் லீலா நாயர் என்ற கலெக்டர் புலிவேட்டை ஆடுவதாகக் காட்டி அப்பாவிகளை துன்புறுத்தியதையும் காட்டி உள்ளார். இதே வேளை இந்தியாவுக்கு சாதகமான பிரிவினரான இயக்கத்தினரை அணைத்துச் சென்றதையும் கூறிச் செல்லுகிறார்.
என்றோ பாரதி சொன்னான் ‘பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.
’ என்று.
இலங்கைத் தமிழன் இந்தியாவில் இருக்கக்கூடாதென்றால் நாடு கடத்துவதுதானே, காலங்கடந்து தமிழக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயிலாதென்பதை உணர்ந்ததை கூறுகிறார்.
இன்று மட்டும் என்ன? எமது இலங்கை மக்களின் வட கிழக்கு மலையக (இந்திய வம்சாவளி மக்களின்) மக்களின் பிரச்சினைகளை அவர்கள் விளங்கிக் கொண்டார்களா என்ன..? இதே போல் எமது இலங்கைத் தமிழ்த் தலைவர்களும் என்ன தமிழகத் தலைவர்களின் கோமாளி அரசியலை விளங்கிக் கொண்டார்களா? என்ன .?
உண்மையில் கோத்தகிரியில் இர.சிவலிங்கமும் அவரது குழுவினரும் செய்த செயற்பாடுகள் விதந்துரைக்க வேண்டியவை ஆகும். வெறும் கோஷங்களுக்கும் வீரப் பேச்சுக்களுக்கும் சோடை போகாத இர.சிவலிங்கத்தின் செயற்பாடு, பார்வை சரியானதே என்பதை நூல் கோடிட்டுக் காட்டி உள்ளது.
பின்வரும் பகுதி(பக்கம் 65) எம் கவனத்தை ஈர்த்துள்ளது. “சிவலிங்கத்தின் தமிழக வாழ்வு இத்தகு மனித உரிமைகளுக்கு நடாத்தப்பட்ட ஒரு போராட்டமேயாகும். இலங்கை மலையகத்தில் மண் தோய வாழ்ந்த 51 ஆண்டுகளும் (1932 - 1983) தென்னிந்தியாவில் வாழ்ந்த 14 ஆண்டுகளும் (1983 - 1997) மீண்டும் (1997- 1999) தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் இளைஞர் அணி ஆலோசகராக வாழ்ந்த ஏறக் குறைய ஒன்றரை ஆண்டுகளும் அப்போராட்ட வீரரின் சுவடுகளைக் காண வைத்திருக்கின்றன.”
இவ் வாக்கியங்கள் மிகச் சுருக்கமாகவும் அதேவேளை ஆணித்தரமாகவும் இர.சிவலிங்கம் என்ற ஆளுமையின் பல் பரிமாணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது எனில் மறுபதற்கில்லை.
இர.சிவலிங்கம் அவர்களின் இந்திய அனுபவங்கள் பற்றி இன்று பார்க்கும் பொழுது பல சிந்தனைகள் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழியாளருக்கு ஏற்படல் வேண்டும். தூரத்து நட்சத்திரமாக சிலர் கருதும் நம்பிக்கை நட்சத்திரங்கள் யதார்த்தத்தில் அப்படி அல்ல என்பதை உணர்த்தும் பாடங்களாகத் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
60ர். 20

Page 13
இர.சிவலிங்கம் தலைவர் தொண்டமான் அவர்களை கோத்தகிரியில் 20.04.1997 இல் சந்தித்தார். அது மறுவாழ்வு மன்றத்தினர் நடாத்திய பன்னிரண்டாவது வருடாந்த மாநாட்டின் போதாகும். இச் சந்திப்பின் பின்னர் செளமிய மூர்த்தி தொண்டமான் அவர்களுக்கும் அவருக்கும் தொடர்புகள் ஏற்பட்டன. அமைச்சில் இளைஞர் ஆலோசகராகப் பதவி பெற்றுச் செயலாற்றத் தொடங்கினார்.
மலையகத்தில் சிதறுண்டு கிடக்கும் நிலையை மாற்றிடவும், மலையக அபிவிருத்திற்குப் பாடுபடவும் செளமிய மூர்த்தி தொண்டமானின் அரசியல் பலத்தை உபயோகமாக்கிக் கொள்ளவும் அவர் விரும்பினார் எனலாம். இதற்காகப் பல வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்தார். ஆனால் சுகயினமுற்ற இர.சிவலிங்கம் அவர் 09.07.1999 இல் கோயம்புத்துரில் காலமானார்.
இர.சிவலிங்கத்தின் காங்கிரஸ் அரசியல் பிரவேசம் பற்றிப்பல விமர்சனங்கள் இருந்தன. சாரல் நாடனின் இந்நூலில் அது தொடர்பாகப் பெரிய அளவில் குறிப்பிடப்படாமையைக் காணலாம்.
எவ்வாறெனினும் இந்நூலின் ஆரம்பத்தில் சாரல்நாடனின் சுய அனுபவங்கள் கூறிச் செல்லப்படுவதைக் காணலாம். குறிப்பாக ஆசிரிய பணி , அதிபர் பணி, கலை இலக்கியப் பணி, இலங்கை தோட்டச் சேலையாளர் சங்கம் என்பனவற்றில் சாரல்நாடனினதும் இர.சிவலிங்கத்தினதும் தொடர்பாடல்கள் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தனது குருவாகக் கருதிக் குறிப்பிடும் பல விடயங்கள் அவரது உயர்ந்த உள்ளத்தைக் காட்டி நிற்கின்றது. எனினும் இர.சிவலிங்கத்தின் ஆளுமையைப் பற்றிய பார்வை மிகையானதல்ல என்பதனை நடு நிலையாகப் பார்க்கும் வேளையில் புரிந்து கொள்ள முடிகின்றது.
மொத்தத்தில் “இளைஞர் தளபதி இர.சிவலிங்கம்” எனும் இந்நூல் சாரல்நாடனின் ஆய்வுப் புலமையைப் பறை சாற்றி நிற்கின்றது. மலையகத்தின் ஆளுமைகள் தொடர்பாக இலங்கை எனும் தேசியத்துவ நோக்கில் அறிஞர்கள் விளங்கிக் கொள்ள எடுக்கப்பட்ட இம் முயற்சி இது வரை வெளிவராத சில விடயங்களையும் வெளிக் கொணர்ந்துள்ளது. இர.சிவலிங்கம் தொடர்பாக மலையகத்தவர்களே அறியாததை அறிந்து கொள்ள பாதை வெட்டி உள்ளது.
ஆசிரியனாக, அதிபராக, கல்விப் பணிப்பாளராக, எழுத்தாளராக ஊடகவியலாளராக, பேச்சாளராக , சட்டத்தரணியாக, சமூக செயற்பாட்டாளனாக, மனிதாபிமானியாக பல் பரிமாணங்களைக் கொண்டியங்கிய இளைஞர் தளபதி இர.சிவலிங்கம் பற்றிய நூலை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ‘ஈழத்து ஆளுமைகள் - வாழ்வும் வகிபாகமும்” எனும் தலைப்பின் கீழ் வெளியிட்டதன் மூலம் தனது வரலாற்றுக் கடமையை வெளிப்படுத்தி உள்ளது. நூலை எழுதிய சாரல்நாடன் பாட்டுக்குரியவரே. இதன் அடுத்த நகர்வைப் பிறிதொருவர் செய்வார் என எதிர்பார்க்கலாம்.
20ாழி Dél 202

கவிஞர் பொன் - தவநாயகம்
கலாபூஷண விருது பெற்றார்.
தத்துவக் கவிஞர் பொன் -
தவநாயகம் அவர் களர் சித் தாணி டியைப் பிறந்த இடமாகவும் காரைதீவைப் புகுந்த இடமாகவும், தற்போது மட்டக்களப்பை வாழ்விடமா கவும் கொண்டவர்.
இவர் நாடறிந்த கவிஞர்; நாட்டுக் கப்பாலும் பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்ற நல்லதோர் கலைஞர். கடந்த அரை நூற்றாண்டு காலமாக - கவிதை, கட்டுரை, இசை, நாடகம், நூலாய்வு முதலிய துறைகளில் தடம் பதித்தவர். நாட்டார் இலக்கியங்களிலும், நாட்டுக் கூத்துக்கலையிலும் ஈடுபாடு கொண்டவர். கடந்த 2010.06.25 இல் “இன்பத்தமிழும் இனிய நிலமும்” என்னும் கவிதை நூலை வெளியிட்டுப் பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர். ஆடி 2010 இல் வெளிவந்த செங்கதிரின் கதிர்முகத்தில் இக் கவிதை நூல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருது பெற்ற 50 கலைஞர்களுள் இவர் ஒருவர். மட்டக்களப்புமாவட்டத்திலிருந்து கவிதை, கட்டுரை, நாடகத் துறைக் குரியதாகவே கொழும்பில் 17.12.2011 அன்று நடந்தவைபவத்தில் இவருக்குக் கலாபூஷண விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச்சங்கம் 24.12.2011 அன்று நடத்திய நாவலர் விழாவில் மரபுக்கவிதைக்கான போட்டியில் முதலாம் இடத்திற்குரிய பணப்பரிசும், சான்றிதழும் பெற்றுப் பாராட்டப்பட்டவர்.
69வழி 2O2

Page 14
Baba sa Legitiga
திணறடித்த கேள்விகள்
மாஸ்டர் சிவலிங்கம் நான் மட்டக்களப்பு மாநகரசபை பொதுநூலகத்தில் கதை சொல்லும் கலைஞனாகப் (Story Narrator) பணிபுரிந்த காலத்திலே தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் சிறுவர் நிகழ்ச்சிகளில் கதை கூறிவந்தேன்.
அந்தக்காலப்பகுதியிலே ஒருநாள் மாநகரசபைப் பகுதியிலுள்ள ஒரு
பாலர் பாடசாலைக்குக் கதை கூறச் சென்றிருந்தேன். என்னைக்
கண்டதும் “மாஸ்டர் மாமா. மாஸ்டர் மாமா..!’ என்று மகிழ்ச்சியாகச்
தத்தழிட்டபடி ஓடி வந்து எனது கையைப் பிடித்துக் கொண்டாள் ஒரு
DILDI.
நான் சிரித்தபடி அச்சிறுமியின் முதுகிலே அன்பாகத் தட்டினேன். உடனே அந்தச் சிறுமி எனது விரல்கள் தொடக்கம் முழங்கைவரை அழுத்தி, அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாள். ஏன் அவள் அப்படிப் பிடித்துப்பார்க்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை.
“மருமகளே! ஏன் எனது கையை இப்படிப் பிடித்துப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். “மாமா..! உங்களுடைய கையிலும் காலிலும் ಙ್ಗಲ್ಲ இருக்கிறதுதானே..?” என்று ஆச்சரியத்துடன் அச்சிறுமி
5LLT6.
“உங்களுக்கு உடம்பிலே எலும்புகள் இருப்பதுபோல எனது உடம்பிலும் எலும்புகள் இருக்கின்றன.’ என்று கூறினேன்.
“மாமா..! நீங்கள் போன கிழம எங்கட வீட்டு ரீவி பெட்டிக்குள்ள இருந்து கதை சொன்னதை நாங்கள் பார்த்தோம். உங்கட எலும்புகள்
யாம எப்படி ரீ.வி. பெட்டிக்குள்ள பூந்து இருந்து கதை சொல்லிப்போட்டு வெளியில போனிங்க?’ என்று கேட்டாள் அந்தச் சிறுமி. அவளுடைய கேள்விக்கு விடை கூறத் தெரியாமல் அதிர்ந்துபோய் நின்றேன்.
() () (d
இன்னொரு நாள் மட்டக்களப்பு எல்லை வீதியிலுள்ள பாலர் பாடசாலைக்குக் கதை கூறச் சென்றிருந்தேன். அப்பாடசாலை ஆசிரியையின் மகன் வாசலில் நிற்பதைக் கண்டேன்.
இ9வழி 2O2
 

“குட்மோர்னிங் மருமகனே.!’ என்று கூறியபடி அவனுடைய கையைப் பிடித்தேன். கோபத்தோடு என்னுடைய கையைத் தட்டிவிட்டு “உங்களோடு நான் கோபம். என்னோடு பேச வேணாம்” என்று அழுதபடி கூறினான் அச்சிறுவன்.
“மருமகனே! ஏன் உங்களுக்கு என்னோடு கோபம்?’ என்று கேட்டேன்.
“மாமா..? நீங்க அண்டைக்கு ஒரு நாள் எங்கட வீட்டு ரீ.வி. பெட்டிக்குள்ள இருந்து கதை சொன்னிங்க. கதை சொல்லி முடிஞ்சதும் எங்கட வீட்ட தேத்தண்ணி குடிக்காம எங்களோட கதைக்காம, ‘ரீவி’ பெட்டிக்குள்ள இருந்து ஏன் ஓடிப்போன நீங்க..?’ என்று கேட்டான் அச்சிறுவன்.
அச்சிறுவனின் கேள்விக்குப் பதில் கூற மடியாமல் அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி பாடசாலைக்குள் சென்றேன்.
() () () சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். அக்கரைப்பற்றிலே நடைபெற்ற கலைவிழா ஒன்றிலே கதை கூறச் சென்றிருந்தேன். மண்டபம் நிறைந்த கூட்டம். விழாவிலே நகைச்சுவைக் கதைகள் கூறி மகிழ்வித்தேன். பலத்த சிரிப்புடன் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
விழா முடிந்ததும் ரசிகர்கள் பலர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அந்த ரசிகர் கூட்டத்திலே சுமார் எண்பது வயதுடைய முஸ்லிம் அன்பர் ஒருவரும் காணப்பட்டார். பஞ்சு போன்ற வெண்ணிற தாடியுடன் காணப்பட்ட அந்த முதியவர் எனது இருகைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார். “சிவலிங்க மாஸ்டர்! நான் உங்கட ரசிகன் ‘ரீ.வி’, ‘றேடியோ’ ஆகியவற்றில் நீங்க சொன்ன பல கதைகளைக் கேட்டுச் சிரித்து ரசித்து இருக்கிறன். உங்களைச்சந்தித்துப் பேச வேணும் எண்ட ஆசை இண்டைக்குத்தான் நிறைவேறியிருக்குது.’ என்று கூறி பலத்த சத்தத்திலே சிரித்த அந்த முதியவர் “மாஸ்டர். நான் உங்களிடத்தில ஒரு கேள்வி கேக்கப்போறன். கோவிக்கப்படாது. நீங்க ரீ.வி யில கதை சொல்லும்போது பெரிய உடலமைப்புடைய ஆளாகத் தெரியிறீங்க. ஆனா இப்ப நேரில பார்க்கக்குள்ள சின்ன ஆளாகத் தெரியிறீங்களே. காரணம் என்ன..?’ என்று அடக்கத்தோடு கைகளைக் கட்டியபடி கேட்டார் அந்த முதியவர்.
அந்த முதியவரின் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் திணறிய நான், அசட்டுச் சிரிப்புச் சிரித்துச் சமாளித்தபடி மெதுவாக மண்டபத்திலிருந்து வெளியே சென்றேன்.

Page 15
கிழக்கின் சூறாவளிகள்
- எஸ்.எச்.எம்.ஜெமீல்
1978 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளியின் அனர்த்தங்களை இன்றையத் தலைமுறையினர் நன்கறிவர்.
23.11.1978 வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் வேகமாக வீசத்தொடங்கிய காற்று அன்றிரவு சூறாவளியாக மாறிப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. அதிகாலை மூன்று மணியளவில் ஓய்ந்தது.
அதற்குள் மட்டக் களப்பை மையமாகக் கொண்டு பேரழிவை ஏற்படுத்தியதோடு, கல்முனை, பொலனறுவைப் பிரதேசங்களிலும் சூறாவளி பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தி விட்டது.
கல்முனை சாஹிராக் கல்லூரியின் 1979 ஆம் ஆண்டின் சாஹிரா எம்.ஐ.ஏ.அஸிஸ் நினைவு மலரில் காரைதீவைச் சேர்ந்த எம். சற்குணம் அவர்கள் ‘சூறாவளியும் காவியங்களும்’ என்னும் தலைப்பில் இவைபற்றி விரிவாக எழுதியுள்ளார்.
ஏற்கனவே மூன்று தடவைகள் கிழக்கு மாகாணம் புயலினால் தாக்குண்டுள்ளது.
1845ஆம் ஆண்டில் அடித்த சூறாவளி பற்றிய தகவல்களைப் பெற முடியாதுள்ளது.
பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தியது 1907 ஆம் ஆண்டுச் சூறாவளியாகும்.
1911 இல் கல்முனைப்பிரதேசத்தில் வீசிய பெருங்காற்று பாரதூரமான அழிவுகளை ஏறபடுத்தவில்லை.
1907 ஆம் ஆண்டு வீசிய சூறாவளி ‘பெரிய புயல்” என்றும் 1911 ஆம் ஆண்டு வீசிய சூறாவளி “சிறிய புயல்” என்றும் அழைக்கப்படுகின்றன.
1907 ஆம் ஆண்டைய சூறாவளி பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. இதனைப்பற்றி அறிவதற்கு அக்கரைப்பற்று வரகவி ஷெய்கு மதார் புலவரின் “கோரப்புயல்” எனும் புயற்காவியம் பெருந்துணையாக இருக்கிறது.
அத்துடன் அரசாங்க அதிபரின் அறிக்கைகள், மட்டக்களப்புக் கச்சேரியின் பிரதம முதலியாராகக் கடமையாற்றிய எஸ்.ஒ.கனகரத்தினம் 1921 ஆம்
9ேங்கி

ஆண்டு வெளியிட்ட ‘கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்தின் 66DyL T65’ (Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon - Government Printer, Colombo 1921) edélu60T6|Lb (3U(bg56íl புரிகின்றன.
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவில் வாழ்ந்த ஷெய்கு மதார் புலவர் இளவயதிலேயே கண்பார்வையை இழந்தவர். ஆனால் மனக்கண் திறந்து அதி சிறந்த பாடல்களைப் பாடி வரகவியாகத் திகழ்ந்தார்.
அவரது புயற்காவியம், முன்னுரை தவிர்ந்த 25 செய்யுள்களைக் கொண்டுள்ளது. அச்செய்யுள்களிற் சில பின்வருமாறு.
ನಿಲ್ದಿ பெரும் புயலோ தொள்ளாயிரத் தேழில் வளர்கின்ற பங்குனி யிலொன்பதாம் நாளில் நின்று வருமிரவு பன்னிரண்டுமணி நேரமதில் எவருமறியுங் கிழமை ஞாயிறதுதானே.
சோலைதரு பனை தென்னை கதலிகமு கன்னாசி சொல்லரிய மா பலா முந்திரி முருங்கை ஆலரசு பூவரசு புளியமரமும் வம் அனல் வாகை சமுளை விளா பாலையின மரங்கள்
இன்னமுமநேக மரமானவைகள் வேரோடு இடையிடை தெறித்தவைகள் எண்ணவரி ததனால் மண்ணுலுதிர் தேங்காய் பலாக்காய்கள் மாங்கனிகள் மணமான வாழை மறுகாலெண்ண வரிதே.
சொன்ன ஐமறிய LDITLITG GessTab6f சொல்லுகி வாத்துத்தாரா கொக்குவக்கா அன்னங்கள் கானான் வயற்கோழி ஊர்க்கோழி ஆலா குளுப்பையிவை யோடு வெகு பறவை
göಲಗ್ಗ ஊர்வன நடப்பன வினங்களிலே பலவகை பிராணி யுயர் பகரவரி தாகும் இறைகருணையினால் புயல் நின்றதுவே யன்று பகல் 6J(ԼքLD நேர மதன் பின்னாலேதானே.
1907 ஆம் ஆண்டு மார்ச் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் ஆரம்பித்த சூறாவளி அன்றிரவு முழுவதும் வீசியபின் அடுத்த நாட்காலை ஏழுமனியளவில் ஓய்ந்தது என்று ஷெய்கு மதார் புலவரின் புயற்காவியம் விபரிக்கிறது.
60வழி 2O2

Page 16
1907 சூறாவளியினாற் பாதிக்கப்பட்ட இடங்களைப் பற்றி “புயற்பாட்டு’ எனும் வாய்மொழி இலக்கியம் ஒன்று,
அரிதான கல்லடி காத்தமா நகரும் அருகாயிருக்கின்ற நாவற்குடாவும் மண்முனைப் பற்று முதல் மற்றுமுளவுரும் மகிழுரும் மாஞ்சோலை வாரிக்கடல் நீரும் களுதாவளை கல்லாறு கண்டியக்கட்டும் கல்முனை கரைவாகு சாய்ந்தமருதூரும் காரைதிவு முதல் நிந்தவூர் தானும் ஒலுவில்லு உப்போடை கோளாவில்லு
எனக் கூறிச் செல்லும்.
இச்சூறாவளி பற்றிய செய்தி கொழும்பில் ஒர் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியானது. அதன் பின்னரே கொழும்புவாசிகள் விபரத்தை அறிந்தனர். அன்றைய ஆளுநருக்கும் இந்தப் பத்திரிகைச் செய்தியே முதலில் கிடைத்த தகவல் ஆகும். அவர் மட்டக்களப்பு அரசாங்க அதிபராயிருந்த ஈ.எப்.ஹொப்கின்ஸ் என்பாருக்கு ஒர் அவசரத் தந்தி அடித்தார்.
கல்முனை ஆஸ்பத்திரி இடிந்து வீழ்ந்து நோயாளிகள் இறந்து விட்டதாகவும் வாடிவீடு சேதமடைந்ததாகவும் அக்கரைப்பற்றில் 1700 பேர் வீடிழந்துள்ளதாகவும் பத்திரிகைச் செய்தி கூறுகின்றது. இச் செய்தி உண்மையானால் அது பற்றி ஏன் தனக்குத் தந்தி மூலம் அறிவிக்கவில்லை என்று ஆளுநர் அறிய விரும்புகிறார்’ இவ்வாறு அந்தத் தந்தியின் வாசகம் இருந்தது.
தந்தி கிடைத்ததும் அரசாங்க அதிபர் ஹொப்கின்ஸ் பத்திரிகைச் செய்தி உண்மையே எனவும், தந்திக் கம்பிகளில் மரங்கள் வீழ்ந்து அச்சேவை தடைப்பட்டிருந்ததினால் தன்னால் அறிவிக்க முடியவில்லையெனவும் பதில் அனுப்பினார்.
சூறாவளி பற்றிய அரச அதிபர் வெளியிட்ட குறிப்பில் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது: “மட்டக்களப்புக்குத் தெற்கே 4ம் கட்டையிலும் 6ம் கட்டையிலும் புயலினால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்ட இரு தோட்டங்களை அவதானித்தேன். ஆயினும் பாதிப்புப் பாரதூரமில்லை.
அவ்விடத்திலிருந்து சூறாவளியின் வேகம் அதிகரித்திருக்கிறது. அரைக்கட்டை தொலைவில் ஓர் இடத்தில் ஒரு தோட்டத்தில் சுமார் மூன்றிலொரு பகுதித் தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளன. 10ஆம் கட்டைக்கருகில் சுமார் 50 சதவீத மரங்கள் வீழ்ந்திருந்த தோட்டமொன்றை அவதானித்தேன்.
esting 2O2

அவ்விடத்திலிருந்து தெற்காய் பேரழிவையே காண முடிந்தது. 20 ஆம் கட்டையை அண்மித்ததும் நிலைமை பரிதாபமாக இருந்தது. எல்லா வகையான மரங்களும் முற்றாக வீழ்ந்துள்ளன. சில இடங்களில் ஒருமரங்கூடக் காணப்படவில்லை.
தென்னை மரங்களும் கமுகு மரங்களும் நடுவால் முறிந்தும், வேரோடு வீழ்ந்தும் இருந்தன. எஞ்சியிருந்த மரங்களின் ஒலைகளும் குருத்துக்களும் மிக மோசமாகப் பாதிக்கபட்டு இருந்தன. அவை தழைக்க முடியாது.
அப்பிரதேசத்தின் பேரழிவுகளை என்னால் வர்ணிக்க முடியாது. அதற்கான வார்த்தைகள் இல்லை. மரங்கள் வீழ்ந்து வீடுகளின் கூரைகள் சிதைந்து கிடக்கின்றன. சில வீடுகளின் கூரைகள் முற்றாகப் பறந்துள்ளன.
அக்கரைப்பற்றிலுள்ள கருங்கொடித்தீவு கிராமம் முற்றாக அழிந்து விட்டது. பெரும்பாலான மரங்கள் சாய்ந்து விட்டன. அநேக வீடுகளும் சேதமடைந்துவிட்டன. 38ம் கட்டைக்கு அப்பாலுள்ள இரண்டு செழிப்பான இளம் தென்னந்தோட்டங்கள் அழிந்தே விட்டன.
இளம் தென்னைகளாகையால் அவை வேரோடு சாயவில்லை. ஆனால் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளதால் சில மரங்களே தப்பிப் பிழைத்திருந்தன. இதற்கப்பால் சேதங்கள் அவ்வளவாயில்லை.
இக் கிராமத்தில் மனித உயிரிழப்புக்கள் அதிகமில்லாதிருப்பது பேரதிசயமாகும். ஏனெனில் அவ்வளவு மரங்களும் வலைபின்னியதுபோல் எங்கும் வீழ்ந்துள்ளன.
மொத்தமாகக் கூறுமிடத்து மட்டக்களப்பின் தென்திசையில் 10ம் கட்டையிலிருந்து 40ம் கட்டை கரை தென்னைச் செய்கை முற்றாக நாசமாகிவிட்டது.’ இவ்வாறு அரச அதிபர் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசாங்க அதிபரின் குறிப்புக்களில் விபரிக்கப்படும் தென்னந் தோட்டங்களுள் அதிக சேதமடைந்தவற்றில் ஒன்று காரைதீவில் இருந்த ‘கரடித் தோட்டம்’ ஆகும்.
ஓ.எஸ்.டீ.ஓகிரேடி எனும் ஐரிஷ்காரர் காரைதீவு, ஒலுவில் ஆகிய இடங்களில் நிக்கோல் என்பவருக்காக இரு தோட்டங்களை ஆரம்பித்தார். காலக்கிரமத்தில் நிக்கோல் அவற்றை விற்றுவிட ஒகிரேடியே அவற்றின் சொந்தக்காரரானார்.
ஒகிரேடியின் காரைதீவுத் தோட்டம் சுமார் 1000 ஏக்கர்களைக் கொண்டது. இப்பிரதேச மக்களால் அது "கரடித்தோட்டம்’ என அழைக்கப்பட்டது.
இதற்குக் காரணம் ஒகிரேடி மிக ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். மிகக் கருமையான அடர்ந்த தாடியையும் கொண்டிருந்தார்.

Page 17
கரடியின் உரோம அடர்த்தியையும் கருமையையும் அவரது தாடி கொண்டிருந்ததால் மக்கள் அவரை கரடித்துரை எனவும் அவரது மனைவியைக் கரடியம்மா எனவும் அழைத்தனர். ஒகிரேடி துரை என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டவரின் பெயர் பின்னர் திரிந்து கரடித்துரை என ஆகியிருக்கவும் கூடும்.
ஒகிரேடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியர் வேலன். தோட்டத்தில் வளர்க்கப்பட்ட பன்றிக் கூட்டத்தைப் பராமரிப்பதுதான் வேலனின் வேலை அதனால் அவர் ‘பன்றி வேலன்’ என அழைக்கப்பட்டார்.
அவருக்கு நெல் வேளாண்மை செய்யக்கூடிய ஒரு நிலத்துண்டை ஒகிரேடி அன்பளிப்புச் செய்தார். அதுவே இன்று அல்லிமூலைச் சந்தி எனும் இடத்துக்கு அருகே உள்ள பனி றி வேலன் வெளி’ என அழைக்கப்படுகிறது.
இப்பிரதேச வரலாற்றோடு ஒகிரேடி பிறிதொரு வகையிலும் தொடர்பு பெறுகிறார். இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மட்டக்களப்பின் தென்பகுதிக்கான வீதிப்போக்குவரத்து மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது.
கால் நடையாகவும் மாட்டுவண்டி மூலமாகவும் விசேட சந்தர்ப்பங்களில் குதிரைக்கோச்சி மூலமாகவும் சென்று வரக்கூடியதாக இருந்தது.
வீதியும் மிகவும் கரடு முரடானது. இதில் புரட்சிகர மாற்றம் ஒன்றை ஒகிரேடி ஏற்படுத்தினார். கல்முனையில் கிட்டங்கி என்னுமிடத்தில் இருந்து வாவியினுடாக மட்டக்களப்பு வரை நீராவிப் படகுச் சேவை ஒன்றை ஆரம்பித்தார்.
1891 இல் அவரது நீராவிப்படகான “ஷாம்றொக்” தனது சேவையை ஆரம்பித்தது. தினசரி காலை கிட்டங்கித் துறையிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை அடைந்து பிற்பகல் அங்கிருந்து திரும்பியது. ஏழு மைல் வேகத்தில் சென்ற இப்படகு மூன்றரை மணித்தியாலங்களில் ஒரு வழிப்பயணத்தை முடித்தது.
1907 ஆம் ஆண்டு கூறாவளியால் ஏற்பட்ட சேதங்களைப் பற்றிய மதிப்பீடுகளை அவ்வப்பிரதேச தலைமைக்காரர்கள் (தற்போதைய பிரதேச செயலாளருக்குச் சமம்) அரசாங்க அதிபருக்குச் சமர்ப்பித்துள்ளனர்.
அவ்வாண்டின் 41 ஆம் இலக்க அறிக்கையில் ஏறாவூர், கோறளை, மண்முனை வடக்கு, மண்முறை தெற்கு, எருவில், போரதீவு, கரைவாகு, சம்மாந்துறை, அக்கரை, பாணமை, விந்தனைப் பற்றுக்களின் இழப்புகள் தனித்தனியாகவும் மொத்தமாகவும் தரப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
0ேவழி 20

இறந்தோரின் எண்ணிக்கை AA 64
உயிரிழந்த மாடுகள் 1,436
உயிரிழந்த ஆடுகள் ы. 175 (சில பற்றுக்களின் தகவல் இல்லை) அழிந்த தென்னை மரங்கள் - 371,053 அழிந்த ஏனைய முக்கிய மரங்கள் - 40,114 சேதமடைந்த கட்டிடங்கள் 1,842 (சிலபற்றுக்களின் தகவல்கள் இல்லை) சேதமடைந்த கட்டிடங்களின் பெறுமதி - ரூபா 105,733 நெல் தானியங்களுக்கு ஏற்பட்ட சேதம் (bшт 1,54,861 மொத்த நஷ்டம் - Фшт 3,872,017
அன்றைய நாணயப் பெறுமதியில் 38 இலட்சம் ரூபா மிகப் பெரிய தொகை ஆகும். ஏனெனில் அக்கால கட்டத்தில் ஒரு கூலியாளின் நாளாந்தச் சம்பளம் இருபத்தைந்து சதமே.
அந்த இருபத்தைந்து சதத்தோடு சகல நாளாந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததாக வயோதிபரொருவர் குறிப்பிட்டார்.
சேதமடைந்த அரசாங்கக் கட்டிடங்களை எஸ்.ஒ. கனகரத்தினம் தமது நூலில் பட்டியலிட்டுள்ளார்.
செட்டிபாளையம் வாடி வீட்டின் கூரையும் சுவர்களும் கணிசமாகச் சேதமடைந்ததோடு தளபாடங்களும் நாசமாகின.
கல்முனை வாடி வீட்டின் கூரை பறந்ததோடு தளபாடங்களும் ஏனைய பொருட்களும் முற்றாகச் சேதமடைந்தன.
கல்முனையில் உள்ள பழைய, புதிய உப்புக் குதங்கள் இரண்டும் பாதிக்கப்பட்டன. கல்முனை மருத்துவமனையின் கூரை இடிந்து வீழ்ந்ததால் நோயாளிகள் அவ் இடிபாடுகளுள் சிக்குண்டனர்.
ஐந்து நோயாளிகள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். சிலர் ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிட்டனர்.
இதேபோன்று பல நீராவிக் கப்பல்களும் படகுகளும் சேதமடைந்தன.
"லேடி ஹவ்லொக்' என்னும் கப்பல் கல்குடாவில் தரை தட்டிச் சேதமடைந்தது. எவரும் இறக்கவில்லை.
'அப்துல் ஹமீத்’ எனும் பாய்மரக்கப்பல் முற்றாக உடைந்தது. பதினாலு
மாலுமிகள் அதிலிருந்தனர். அறுவர் காப்பாற்றப்பட்டனர். ஏனையோர் காணாமல் போயினர். மூன்று வள்ளங்களும் கல்குடாவில் உடைந்தன.
6) 655 prá zoz

Page 18
அக்கால கட்டத்தில் கல்குடாவே மட்டக்களப்புப் பிரதேசத்தில் முக்கிய துறைமுகமாயிருந்தது.
‘சவுந்தர லெட்சுமி’ என்னும் பாய்மரக்கப்பல் பூநொச்சிமுனையில் அமிழ்ந்தது; ஐவர் தப்பினர். அறுவர் இறந்தனர். நெல் ஏற்றி வந்த முஹம்மது சவுந்தரி’ எனும் பாய்மரக்கப்பலும் கிரான்குளத்தில் உடைந்தது.
அந்தச் சூறாவளியின்போது ஏற்பட்ட அனர்த்தங்களோடு ஒப்பிடுகையில் மனித உயிரிழப்புக்கள் குறைவாயிருந்தது பேரதிஷ்டமே. இதற்கான காரணங்கள் உண்டு.
நள்ளிரவில் சூறாவளி அடிக்கத் தொடங்கிய காரணத்தினால் எல்லோரும் தத்தமது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். அக் காலத்தில் கல்வீடு, ஒட்டு வீடு என்பன மிக அரிது. யாவும் வரிச்சி” வீடுகளே.
வரிச்சி வீடென்பது முதலில் சுவர்கள் கட்டவேண்டிய இடங்களில் பலமாக கம்புகள் நடப்பட்டு குறுக்குக் கம்புகளும் கட்டப்பட்டு இடைவெளிகள் களிமண்ணால் அடைக்கப்பட்டிருக்கும்.
கூரையும் பலமான கம்புகளால் கட்டப்பட்டு வைக்கோல், கோரைப்புல் என்பவற்றால் வேயப்பட்டிருக்கும். இதனால் கூரை மேல் மரம் விழுந்தாலும் அதனைத் தாங்கக் கூடிய பலம் இக்கட்டிட அமைப்புக்கிருந்தது.
முதலில் வீழ்ந்த மரங்களைக் கூரையும் சுவரும் தாங்கிக் கொள்ள பின்னர் வீழ்ந்த மரங்களின் தாக்கத்தை ஏனைய மரங்கள் வலைபோல் பின்னித் தாங்கிக் கொண்டன. அதனால் வீடுகள் தரைமட்டமாகவில்லை.
காற்றின் பயங்கர ஓசையினாலும் கூடவே பெய்த பெருமழையினாலும் கூரைமேல் மரங்கள் வீழ்ந்த சத்தமே கேட்கவில்லை என ஒரு வயோதிபர் குறிப்பிட்டார்.
கும்மிருட்டானபடியால் எவரும் வெளியெ வர முடியவில்லை. காலையில் பார்த்தபோது சகல மரங்களும் வேலிகளும் வீழ்ந்திருந்ததைத் தாம் கண்டதாகவும் ஊரின் மேற்கெல்லையில் இருந்து பார்த்தபோது கிழக்கெல்லையில் இருந்த கடல் தெரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பல்லாயிரக்கணக்கான பறவைகளும் செத்துக்கிடந்தன.
சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக அரசாங்க அதிபர் நிவாரண நிதி ஒன்றை உடனடியாக ஆரம்பித்தார். தாமே 500 ரூபா நன்கொடையை வழங்கி அதனைத் தொடக்கி வைத்தார். நாடளாவிய ரீதியில் மக்கள் இந்நிதிக்கு வாரி வழங்கினர். இதனால் மொத்தம் 35 இலட்சம் ரூபா நிதியை மட்டக்களப்பு மாவட்டம் பெற்றது.
32க்தி of 202

ܢܠ 89
فہرضضGختم?
மறுபிறவி நவீனத்துவம் ஷெல் விழுந்து பிள்ளைகளின் மொழி செத்துப் போன IDIfluib LIgIIIII) சின்ன மகனின் குருதி தொலைந்தவர்கள் வலியின் நினைவுகளாய் தாயும் தந்தையும்! முற்றத்துச் செடியில் O
சிவப்பு பூக்கள்! கணிப்பு
வீட்டு நாய்க்கு வறுமை! விருந்து போட்ட எஜமான்
ஆளாகிப் போன அண்ணன் தங்கை இல்லாளுடன் என்னையும் சேர்த்து ஒரே அறையில் துங்க வைக்கிறது வறுமை இருட்டு!
பக்தி புத்தனுக்கு முன் சரணடைந்தன பேசத் தெரியாத பூக்கள்!
இரகசியம்! ஒப்பனையைக் கண்டு சிரித்தது நடிகை வீட்டு
நாய்!
யுக்தி மந்திரம் ஒதாத மாய வித்தை தொலைக்காட்சியில் விற்பனை விளம்பரம்
trasfia 202
இல்லை என்றான் வாசலில் நின்று இரந்தவன்
Dafgar
விதி அறிக்கைத் தொட்டிலின் அழகான தாலாட்டு விழிக்க முடியாத வாழ்க்கை
பிள்ளைவமாழி உன்னை
6bDIT
என்றழைக்க வெட்கப்படுகிறேன் இளமைக்காக பால்மா கரைத்து எனக்கு நீ. பருக்கியதை நினைத்து!
கவிஞர் ‘கலைநதி’

Page 19
பன்மொழிப்புலவர். த. கனகரத்தினம்
சொல் - பருப்பொருள் நுண்பொருள் வேறுபாடு எம்மொழியிலும் ஒரு பொருளுடைய பல சொற்கள் இடம்பெறலாம். அவ்வாறு ஒரு பொருட்குப் பல சொற்களிருப்பினும், அவைகள் பருப்பொருளில் ஒத்திருப்பினும் நுண்பொருளில் ஒத்திரா. அவை நுண் பொருளில் வேறுபாடுடையன. பெயர்ச் சொற்களில் மட்டுமன்றி வினைச் சொற்களிலும் இவ்வேறுபாட்டை நாம் காண்டல் கூடும்.
இரக்கும் வகைகளும் , ஈயும் வகைகளும் பற்றி எடுத்துக் கொண்டாலும் இவ்வேறுபாட்டைக் குறிப்பதற்குரிய சொற்கள் உண்டு. 'தா' என்று கூறும் சொல்லுக்கும் “ஈ” என்று இரக்கும் சொல்லுக்கும் வேறுபாடு உண்டு. அவ்வாறே இவற்றிக்கும் “கொடு’ என்ற சொல்லுக்கும் வேறுபாடு உண்டு. ஈந்தான், தந்தான், கொடுத்தான் என்ற சொற்களைச் சாதாரண வழக்கில் கலந்து வழங்கினாலும் அவற்றிடை வேறுபாடுண்டு. அவ்வாறு தமிழின் சொல்வளம் நுட்பமானது. இலக்கண மரபுகளும் Ф—60ії(Б.
தொல்காப்பியர் கூற்றை எடுத்துக் கொண்டால், ‘ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே" தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே கொடு என்கிளவி உயர்ந்தோன் கூற்றே"
(எச்சவியல்49, 50, 51) என்று தொல்காப்பியம் கூறும் ஈ என்று இரத்தல் இழிந்தோன் செயல் - ஈதல் என்பது இழிந்தோர்க்களித்தல்
தா என்று கேட்டல் ஒத்தோன் செயல். தருதல் என்பது ஒத்தோர்க்களித்தல். கொடு என்று கட்டளையிடுதல் உயர்ந்தோன் செயல். கொடுத்தல் என்பது உயர்ந்தோர்க்களித்தல். அளித்தல், இடுதல், வழங்கல், அருள்தல் என்பன ஒரு பொருட் பல சொற்கள். அவற்றுள்ளும் அளித்தல் என்பது அன்பினாற் கொடுத்தலையே குறிக்கும். வள்ளல் புலவர்களுக்குப் பரிசு அளித்தான், அமுது அளித்தான் என்ற வாக்கியங்களை அவதானித்தால் அச் சொல்லின் நுட்பம் விளங்கும்.
9ேவழி 202
 

இடுதல் என்பது கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க் கீதலைக் குறிக்கும். ஏழைக்குப் பிச்சை இட்டான். ‘இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’
வழங்கல் என்பது எடுத்துக் கொடுத்தலைக் குறிக்கும். தலைவர் பரிசுகளை வழங்கினார். வடிகால் நீர்வழங்கல் திணைக்களம் என்றவாறு வழங்கப்படும்.
அருள்தல் என்பது அருளிக் கொடுத்தலைக் குறிக்கும். தெய்வம் அருளியது. இறைவன் அடியார்க்கு அருள்சுரந்து நின்றான். *அருளிலார்க்கவ்வுலகம் இல்லை’ என வழங்கும்.
உட்கொள்ளும் வகைகளை எடுத்துக் கொள்வோம். அவற்றைக் குறிக்க உண்ணுதல், அருந்துதல், சாப்பிடுதல், தின்னுதல், மேய்தல், குடித்தல் முதலிய சொற்களைப் பயன்படுத்துகிறோம். இவை ஒரு பொருட்சொற்கள் எனினும், இவற்றிடையே நுட்பமான வேற்றுமைகள் SD 6.
உண்ணுதல் என்பது எதையும் உட்கொள்ளுதலைக் குறிக்கும். உணவை உண்டான். உண்ணிர் உண்ணிர் என்று உவந்தளித்தான். ‘உண்ணற்க கள்ளை உணில் உண்க..” என்ற வழக்கினைக் காணுகின்றோம்.
அருந்துதல் என்பது சிறிது சிறிதாய் தின்னுதல் அல்லது குடித்தலைக் குறிக்கும். குளிர்பானம் அருந்தினான். குழந்தை பாயாசம் அருந்தியது. மருந்தேயாயினும் விருந்தோடு அருந்து என வழக்குப் பெறும்.
சாப்பிடுதல் சோறு உண்ணுதலைக் குறிக்கும். சோறு சாப்பிட்டான். தின்னுதல் மென்று உட்கொள்ளுதலைக் குறிக்கும். பசுபுல் தின்னும். குதிரை கொள்ளுத் தின்னும்.
மேய்தல் என்பது மேலாகப் புல்லைத் தின்னுதலையே குறிக்கும். மாடுகள் புல் மேய்ந்தன. நுனிப்புல் மேய்தல் போல கல்வியைக் கற்கக் கூடாது.
குடித்தல் என்பது கலத்திலுள்ள நீரைப் பொது வகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதலையே குறிக்கும். சுருட்டுப் புகைத்தல், சிகரட் புகைத்தலையும் சுருட்டுக் குடித்தல், சிகரட்டுக் குடித்தல் என்றவாறும் வழக்குப் பெற்றிருக்கிறதல்லவா.
9ேது f2O2

Page 20
ஆறும் கும்மாளம்
* /-、エ வேல்அமுதன் । விஜய் இன்று பெண் பார்க்கப் போகின்றார். \ ਟ) அவர் விஜய் எனப் பொதுவாக 蠶 அவரின் சரியான பெயர் விஜயரத்தினம். எப்படித் தமிழ்ச் గ్ర ஆ சினிமாவில் இளைய தளப ಙ್ಗಣ್ಣು பிரபல்யமோ, அப்படி དྲི།༦ > UK இல் IT துறையில் 醫 JLu6ðu uLib. SÐ6uj Infor
· · mation Technology 96) PhD LILL5Тf. விஜயைப் படாதபாடுபட்டுப் படிக்க வைத்தவர் அவரின் அப்பா நடராசா 醬 பென்சனியராகிவிட்ட சீரிே அவரது மனைவி செல்லம்மாவும் யாழ்ப்பாணத்தில். அவர்கள் முதுமையை அனுபவித்தபடி உதவியின்றி இருப்பதை கிஞ்சித்தும் விரும்பாத விஜய், எப்படியும் UK க்கு எடுத்து - வசதி செய்து கொடுத்து- வாழ வைக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட கால ஆசை.
எனவே அவரின் இன்றைய தேடல் குடும்பப் பாங்கான நல்ல பெண் ஒருத்தி.
பெண்ணை நேரில் பார்த்து, நல்லதொ சொல்லம்படி வேண்டிய န္တိရှိနိစ္ကိုးနှီ’’ :*:* ရိုဂြိုလ† ನಿನ್ಗಿ “ဓ”န္တိန္တိဂြိုမ္ဗိနီ பார்க்கலாம் எனத் தெரிவித்தபோது, தான் எவ்விதத்திலும் பெண்ணுக்குத் தெரியாமல் இரகசியமாய் அவளைப் பார்க்க விரும்புவதாகத் :ಸ್ಥ್ಯ ရှို့ဝှို பார்க்க விரும்பும் பெண் சந்தனக் கலர் - வடிவழகி - பெயர் ஷமிலா. அவளின் முப்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று. இடம் Wembly Hal. தரகர் கொண்டாட்டம் தொடர்பான தகவல்களை விஜயிடம் கொடுத்து அடையாளம் காட்டாது ஆளோடு ஆளாகப் போய் - பெண்ணை நன்றாகப் பார்த்து முடிவு சொல்லும்படி வேண்டியிருந்தார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டி - களை கட்டி - இனிய இரவுப் போசனமும் வழங்கப்பட்ட தறுவாயில் ஆரும் கவனியாத விதத்தில் மண்டபத்துள் நுழைந்தார் விஜய். பெண்ணை வசதியாகப் பார்க்கக் கூடிய இடத்தில் ನ್ಡಿಲ್ಲ: நடைமுறைகளை அவதானமாக அவதானித்து, போன அதே மாதிரி அசுமாத்தம் எதுவுமின்றி, வீடு திரும்பினார்.
“தம்பி! பிள்ளையைப் பிடிச்சுதா?’ - நடராசா ஆசிரியர் தனது வீட்டுத் தொலைபேசியில் மகனை அக்கறையாகக் கேட்டார்.
“அப்பா! பெண்ணைப் பார்த்தன். அவள் ‘பார்ட்டிக்கு வந்த ஆட்களோடு கூச்சமில்லாது ஆடுகிறாள்; குவழியாகக் கும்மாளம் கொட்டுறாள்’.
“அப்பிடியெண்டால் இது எங்களுக்கு ஒத்துவராது.” நடராசா ஆசிரியரின் ஆணித்தரமான பதிலிது.

Slassenlu on
மண்வாசனைச் சொற்கள் பட்டியல்- T
மட்டக்களப்பு மாநிலம் எனப்படுவது வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கே 等 ஊவா மலைக் குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்ட நிலப்பரப்பாகும். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாரை மாவட்டத்தையும் உள்ளடக்கிய பிரதேசம் எனக் கொள்ளலாம். இப்பிரதேசத்திற்கென இப்பிரதேசத்தில் மட்டுமே வழங்கி வரக்கூடிய வட்டார வழக்குத் தமிழ்ச்சொற்கள் ஏராளம் உள்ளன. அவை படைப்பிலக்கியங்களிலும் இப் பிரதேச எழுத்தாளர்களால் எடுத்தாளப்படுகின்றன. அத்தகைய மண்வாசனைச் சொற்களை செங்கதிர் வாசகர்களுக்காக இப்பகுதியில் மாதாமாதம் தொடர்ந்து தொகுத்துத் தருகிறார் எழுத்தாளரும் முன்னாள் வடகிழக்கு மாகாண பணி பாட்டலுவல் கள் திணைக் களப் பணிப்பாளருமான திரு.செ.எதிர்மன்னசிங்கம் அவர்கள்.
11. வெட்டாப்பு : வானம் வெளுத்திருப்பது
12. மறுகா : திரும்பவும், பிறகு 13. ஒசில் : வடிவின்மை 14. உசத்தி ; மேலானது
15. கனத்தை : பற்றைக்காடு 16. கொட்டான் : கட்டையான,சிறிய, உயரம் குறைந்த 17. பம்பல் ; அதிகம், கனக்க 18. பம்மாத்து : புதினம், போலித்தனம், ஏமாற்று 19. பறவாதி : அதிகஆசை, ஆலாய்ப்பறத்தல் தடிமாடு ; உதவாக்கரை, லாயக்கற்றவன்.
20.
30வது Duf2O2

Page 21
எழுதீதாளரீகளே /கலைஞரீகளே /ஊடகவியலாளரீகளே /இலகீகிய ஆரீவலfகளே நீங்களி பgதீததை-பாரீதீததை-கேட்டதை-அறிநீததை இங்கே பகிரீநீது கொளிளுங்களி
“அம்ரீதா ப்ரீதம் பஞ்சாபி தந்த பெண் கவி. இவர் எழுதிய ‘மனிதன்’ என்ற கவிதை மனிதனை பூரிதக் கரைசலாக கரைத்து, சோதனைக்குழாயில் ஊற்றி அவனுக்குள்ளிருக்கும் மூலக்கூறுகள் என்ன என்பதை பகுத்துப்பார்க்கிறது என்கிறார் ‘எல்லா நதியிலும் ஒடம்’ நூலாசிரியர்.
‘நான் வாழ்க்கையை நிறையச் சம்பாதித்தேன்
அதைவிட அதிகமாகச் செலவழித்தேன்
இப்போது என்னிடம்
எஞ்சியிருக்கும் முதல்
இது மட்டும்தான்
ஒரு கால்வாசி ஹிட்லர் ஒரு கால்வாசி கிறிஸ்து ஒரு கால்வாசி மனு ஒரு கால்வாசி மஜ்னு’
இந்தக்கவிதையை வாசித்ததும் என்னால் எதுவுமே செய்ய
முடியவில்லை என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. நான் எத்தனை
மடங்கு ஹிட்லர், எத்தனை மடங்கு கிறிஸ்து, எத்தனை மடங்கு
மனு, எத்தனை மடங்கு மஜ்னு. இப்படி ஒரு கேள்வி இப்பொழுது எல்லோருக்குள்ளேயும் எழுகிறது அல்லவா.
- சண். தங்கராஜா
கல்லடி
நன்றி. தினகரன் வார மஞ்சரி 16.03.1997 (கவியரசு வைரமுத்து - கட்டுரை)
38 Dif 202
 
 

மீண்டும் ஒரு காதல் கதை
2-ܓܠ གི་སྤྲོའི་རིགས་ཀྱི།། யோகாே 『エ
بھی ہمہ گیم ,
一。
அன்று இரவு படுக் கைக் குச் சென்ற கண்ணனுக்குத் தூக்கம் தொலைந்து போனது. நண்பர்கள் அனைவருமே தூங்கிவிட்டனர். ஆங்காங்கே குறட்டை ஒலிகள் கூட கேட்டுக் கொண்டிருந்தன. படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்த கண்ணன் விடுதியின் வெளிப்புறமாகச் சென்று அங்கிருந்த படிக்கட்டில் உட்கார்ந்தான். அவனுக்கு என்ன செய்வது யாரிடம் தன் துயரத்தை இறக்கி வைப்பது என எதுவுமே தோன்றவில்லை. அவன் கண்களிலிருந்து அவனை அறியாமலே கண்ணிர் வடிந்தது. தன் பாட்டில் அழுதழுது உட்கார்ந்திருந்து விட்டு நள்ளிரவில்தான் படுக்கைக்குச் சென்றான்.
மறுநாள் வைத்தியசாலையில் அவனால் இயல்பாக இயங்க முடியவில்லை. அவனே ஒரு நோயாளியைப் போல சோர்ந்து போய்க் காணப்பட்டான். அவனது முகவாட்டம் பற்றி பலர் விசாரித்தனர். ஒரு மாதிரிச் சிரித்துச் சமாளித்தான். அவனது சிந்தனை முழுவதிலும் ராதாவே ஆக்கிரமித்திருந்தாள்.
மாலையானதும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கல்லடிக் கடற்கரைக்குச் சென்று நீண்ட நேரமாக பிரமை பிடித்தவனாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். யோசித்து யோசித்து தலைவலிதான் ஏற்பட்டதே தவிர அவனால் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.
தான் ராதாவிடம் காட்டிய அன்பும் அக்கறையும் போதாதோ எனச் சந்தேகித்தான். தான் யாருமற்ற அநாதை என்பதால் தன்னைப் புறக் கணித்தாளோ எனத் தோன்றிய எண்ணத்தை சடுதியாக நிராகரித்தான். சே. ராதா அப்படிப்பட்ட பெண்ணா? அவள் அநாதைகளிடமும் ஏழைகளிடமும் மிகவும் பிரியமுடன் நடந்து கொள்ளும்

Page 22
ஏழை என்பதால் விரும்பியிருப்பாளோ எனவும் யோசித்தான்.
விதி. விதி. என்கிறார்களே அது இது தானா? அந்த விதியின் விளையாடல்தானா எனக்கும் ராதாவுக்கும் இடையில் ஏற்பட்டு அலைக்கழிக்கிறது?
சரி எல்லாம்தான் இருக்கட்டும். இவளது மன மாற்றத்தை மாமா, மாமி அறிந்தால் எத்தனை பிரச்சினைகள் ஏற்படும்? மாமா யதார்த்தவாதி. பக்குவமாக எடுத்துச் சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி விடலாம்.ஆனால் மாமி.? அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி வீட்டையே களேபரப்படுத்தி விடுவா.
சில சமயம் ராதாவே தெளிவடைந்து தனது இந்தச் சிக்கலிருந்து விலகிக் கொள்ளவும் கூடுமல்லவா எனவும் மனசைத் தேற்ற முயன்றான். அதே சமயம் அவள் திடீரென முடிவெடுக்கும் அவசரக்காரப் பெண்ணல்ல என்ற அவளது மனநிலை புரியாதவனா நான்? எனத் தன்னையே கேட்டுக் கொண்டான்.
கண்ணன் இவ்வாறெல்லாம் பல கோணத்திலும் மாற்றி மாற்றி யோசித்து தலையைப் பிய்த்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாக அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டான்.
கண்ணனின் தாய் மீனாம்பிகை ராதாவின் தந்தை ரங்கநாதனின் ஒரே பாசத் தங்கை. மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் புறமாய் அமைந்த வேளாண்மைக் கிராமமான கன்னன்குடாவில் பிறந்து வளர்ந்தவர்கள். ரங்கநாதனுக்கு சகோதரி ஒருத்தியானபோதும் சகோதரர்கள் நான்கு பேர். ஐந்து அண்ணன்மார்களுக்கு மீனாம்பிகை தங்கையானதால் மிகவும் செல்லமாகவும் சொகுசாகவும் அவள் வளர்ந்தாள்.
ரங்கநாதனின் பெரியப்பா ஒருவர் மட்டக்களப்பு நகரில் திருமணம் செய்திருந்தார்.அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். எனவே தனது தம்பியின் மகன்கள் ஐந்து பேரில் ஒருமகனான ரங்கநாதனை நகரத்தில் வைத்துப் படிப்பிப்பதாகச் சொல்லித் தன்னுடன் அழைத்து வந்து விட்டார். பெரியப்பாவும் பெரியம்மாவும் ரங்கநாதனை கரிசனையுடனும் அன்புடனும் கவனித்துக் கொண்டனர். பெரியப்பாவின் மூன்று மகள்மாரும் தம்பி தம்பி என்று பாசத்தைப் பொழிந்தனர்.
ரங்கநாதன் மட்டக்களப்பு நகரிலுள்ள இந்துக் கல்லூரியில் கற்று அரச எழுதுனர் பரீட்சை எழுதி சித்தி பெற்று மாவட்டச் செயலகம் என தற்போது
Geisis 20

அழைக்கப்படும் மட்டக்களப்புக் கச்சேரியில் எழுதுனராகப் பணிபுரிந்தார்.
கிராமத்தில் தனது அயல் வீட்டுக்காரியும் சிறு வயது விளையாட்டுத் தோழியும் ரங்கநாதனின் தங்கை மீனாம்பிகையின் உற்ற நண்பியுமான சரஸ்வதிக்காக ரங்கநாதனை கிராமத்திலிருந்து மாப்பிள்ளை கேட்டு பெண்ணின் உறவினர்கள் ரங்கநாதனின் தந்தையையும் அழைத்துக் கொண்டு வந்தபோது தன் பெற்றோரும் பெரியப்பா குடும்பமும் எதைச் செய்தாலும் தனக்குச் சம்மதம்தான் என்று கூறினார் ரங்கநாதன்.
எல்லோரது விருப்பத்துடனும் சரஸ்வதியைத் திருமணம் செய்தார் ரங்கநாதன். பெரியப்பா ரங்கநாதனுக்கு திருமணப் பரிசாக மட்டக்களப்பு சூரியாலேனில் உள்ள காணித்துண்டொன்றை ரங்கநாதனுக்கு எழுதிக் கொடுத்தார். அந்தக்காணித்துண்டில் அழகிய வீடொன்றைக் கட்டிக் கொடுத்தார் சரஸ்வதியின் தந்தை.
வீடு கட்டி முடிந்ததும் மட்டக்களப்பில் குடியேறிய ரங்கநாதனும் சரஸ்வதியும் அடிக்கடி கிராமத்திற்குச் சென்று வருவர். சரஸ்வதிக்கு தன் குடும்ப உறப்பினர்களை மட்டுமல்ல தோழி மீனாம்பிகையையும் போய்ப்பார்க்காவிட்டால் இருப்புக் கொள்ளாது.
ரங்கநாதனின் திருமணம் நடந்து மறுவருடம் மீனாம்பிகைக்கு அவளது உறவினனான சுந்தரராஜனை திருமணம் செய்து கொடுத்தனர். அவளது கணவன் உயர்தரம் வரை கல்வி கற்றவன். அக்கால கட்டத்தில் அவனது கல்வித்தரம் ஒரு அரச உத்தியோகத்தைப் பெறப் போதுமானதாக இருந்தபோதும் அரச உத்தியோகம் பெறுவதில் நாட்டம் இன்றி விவசாயம் செய்வதிலே ஈடுபாடு கொண்டிருந்தான் சுந்தரராஜன்.
திருமணமாகி ஒரு வருடத்தில் கண்ணன் பிறந்தான். கண்ணன் ஒருவயதுக் குழந்தையாக இருக்கும்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த சுந்தரராஜன் நெஞ்சுவலிப்பதாக அவதிப்பட்டதைக் கண்ட சிலர் அவனை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். ஆயினும் சிகிச்சை அளிக்கச் சந்தர்ப்பம் தராமல் பாதிவழியிலேயே மரணமாகிப் போனான். வயலுக்குப் போவதாகக் கூறி அவளிடம் காலை உணவைச் சாப்பிட்டு விட்டு உற்சாகமாகப் போன கணவனைப் பிணமாகக் கண்ட மீனாம்பிகை பேய் அறைந்தவளைப்போல உட்கார்ந்து இருப்பதும் பெருங்குரலெடுத்து அழுவதும் அடிக்கடி மயங்கிச் சரிவதுமாக இருந்தது கண்டு அனைவரும் துயருற்றனர்.
விடயமறிந்து பதறிப்போன ரங்கநாதன் செய்வதறியாது தவித்தார். இருபத்துநான்கு வயதில் விதவையாகிப் போன தங்கையின் விதியை
Gši pr) 20

Page 23
எண்ணி மனம் நொந்தார். சுந்தரராஜன் இறந்து ஒருவருடம் முடிந்ததும் தங்கையையும் மருமகன் கண்ணனையும் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.
மீனாம்பிகையும் சரஸ்வதியும் நெருங்கிய தோழிகளானதால் எதுவித பிரச்சினையுமின்றி அன்பாக வாழ்ந்தனர். ரங்கநாதனும் சரஸ்வதியும் காட்டிய அன்பில் மீனாம்பிகை தன் இழப்பின் வலியை மெல்ல ஆற்றிக் கொண்டாள்.
கண்ணன் ரங்கநாதன் வீட்டுக்கு வந்து மறுவருடம் ராதா பிறந்தாள். அவளுக்குப் பெயர் வைக்கும்போது கண்ணனுக்கே ராதா உரியவள் எனக் கருதியே 'அனுராதா’ எனப் பெயரிட்டு “ராதா’ என அழைத்தனர்.
பிள்ளைகள் இருவரும் வளர்ந்தனர். படித்தனர். ஒருவருக்கொருவர் அன்பாக அனுசரணையாக இருந்தனர். பரீட்சைகளில் சிறப்பாகத் தேறினர். ஒரே துறையைத்தேர்ந்தெடுத்துக் கற்றனர். முதலில் கண்ணன் வைத்திய பீட மாணவனாகத் தெரிவானபோது தமது குடும்பத்தில் ஒரு டாக்டர் உருவாகப்போகிறார் என மகிழ்ந்தனர். கண்ணனைத் தொடர்ந்து ராதாவும் மருத்துவத் துறைக்குத் தெரிவானபோது தங்கள் வீட்டிலேயே ஒரு வைத்தியக் குடும்பம் தயாராகிறது எனச் சந்தோஷித்தனர்.
கண்ணன் வைத்திய பீட இறுதியாண்டு மாணவனாகக் கற்கையில் தாய் மீனாம்பிகை காலமாகிவிட்டாள். தாயின் இழப்பு கண்ணனை வெகுவாக பாதித்தது. தாயின் இறுதிக்காலத்தில் சிகிச்சை அளித்துப் பராமரிக்கத் தனக்குக் கொடுத்துவைக்கவில்லையே என மனம் நொந்தான். மாமா மாமியின் பரிவும் ராதாவின் அன்பும் நாளடைவில் அவனது துயரத்தை மெல்ல மெல்லக் குறைத்தது.
ஒருவாறு வைத்தியப்படிப்பை நிறைவு செய்த கண்ணன் நியமனம் கிடைக்கும் வரை மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்திய சாலையொன்றில் பணிபுரிந்தான்.
நியமனம் பெற்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணிபுரிய ஆரம்பித்த கண்ணன் வைத்திய விடுதியிலே தங்கிக் கொள்ள விரும்பினான்.
“ஏன் மகன் இந்தப் பெரிய வீட்டில் நானும் மாமியும்தானே இருக்கம் - ராதாவுக்குப் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருசம் கிடக்கு. அவளும் வீட்டில இல்லாதபோது நீயாவது இருக்கக் கூடாதா” என்று கேட்ட
ரங்கநாதன் அவனது பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தார்.
கதை தொடரும். (42) kä Di2O2

፳ልሰMwmጫ9 gtar)09
என்னிடம் ஓர் ‘ஒஸ்டின் கார் இருந்தது. இது பார்ப்பதற்கு தீப்பெட்டி மாதிரி இருக்கும். Z நம்பரை உடையது. இப்போது அது இருந்தால் எழுபத்தைந்து வயதைத் தாண்டியிருக்கும். 50 சதத்திற்குப் பெட்ரோல் போட்டால் நண்பர்களை டவுனிலே’ ஓர் 'ரவுண்ட்’ கொண்டு செல்வேன்.
அன்ரனி, சாந்தி என இரு நண்பர்கள். அவர்களுடன் நானும் தான் அடிக்கடி “ரவுண்ட்’ போவது வழக்கம்.
ஒரு நாள் அன்ரனியும் சாந்தியும் காரை ஒட்டிப் பார்க்கக் கேட்டார்கள். அப்போதெல்லாம் திருமலை வீதி (தாண்டவன்வெளி) யில் எல்லாம் அரைமணி நேரத்திற்குப் பிறகு தான் ஒரு வாகனம் போகும்.
இருந்தாலும் காரை ஓடக் கேட்ட சாந்திக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாதால் அருகிலே உள்ள கண்ணகை அம்மன் கோயிலுக்குப் போகும் ‘ஏரன்ஸ் லேனாலே’ மெதுவாக ஓட வேண்டுமென்று கூறி காரைக் கொடுத்தேன். இரு நண்பர்களும் மிகவும் குசியாக காரிலே சென்றார்கள். அந்த “றோட்டி’லே போய் திரும்பி வர 10 நிமிடம் தான் போகும். அரை மணி நேரமாகியும் அன்ரனியும் சாந்தியும் திரும்பி வராததால் கார் ஏதோ "மக்கர்’ பண்ணி விட்டது என எண்ணி இன்னுமொரு நண்பனான எல்ஸ்டனையும் கூட்டிக் கொண்டு அந்த ‘ஏரன்ஸ் லேனாலே’ நடந்து சென்றோம்.
தூரத்திலே தீப்பெட்டி போன்ற கார் தெரிந்தது. ஆனால் சிறிது கூட்டமும் நின்றது. சிறிது வேகமாகச் சென்றோம். அன்ரனியும், சாந்தியும் வேலி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காரிலே வரும் போது ஸ்ரியரிங்பிளே அதிகமானதால் கார் தாந்தி என்பவருடைய வேலியிலே மோதி வேலியை உடைத்துவிட்டது. தாந்தி உயரமான மனிதர். கையிலே கத்தியுடன் காருக்கருகில் நின்று கொண்டிருந்தார்.
வேலியைச் சரிசெய்து தராமல் காரை எடுக்கவிடமாட்டேன் என்று ‘கண்டிசன்’ போட்டதால் அன்ரனியும் சாந்தியும் வேலி கட்டிக் கொண்டிருந்தார்கள். வயிறு புடைக்கச் சிரித்த நாங்களும் சேர்ந்து வேலியை ‘ரிப்பெயார்’ செய்துவிட்டு காரை மீட்டுக் கொண்டு வந்து சேர்ந்தோம்.
நாங்கள் எல்லோரும் ஒன்று சேரும் வேளைகளில் எல்லாம் இந்தக் கதையைச் சொல்லிச் சிரிப்பது வழக்கம்.
மிழ்ச் சால்மீன்மடு கருணா
(49ersi Défi 202

Page 24
அமிதனின சர்வதேசத் தரம்?
2008ல் தோற்றம் பெற்ற செங்கதிர் அதன் தொடர்ச்சியான பயணத்தில் 2012ம் ஆண்டில் தனது 50 வது (வீச்சு 50 மைல்கல்லைத் தாண்டும் இச்சந்தர்ப்பத்தில், ஆசிரியர் செங்கதிரோனின் இந்த அரிய சாதனை மட்டக்களப்பு மண்ணில் நிகழ்வது எண்ணி வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
புதிய எழுத்தாளரை வளர்த்துவிட்டுக் கொண்டும், பழைய எழுத்தாளரை தூண்டி எழுதுவித்துக் கொண்டும் அனைவருக்கும் களம் தரும் “செங்கதிர்’ பல புதுமைமிக்க பத்தி எழுத்துக்களைத் தருவதில் முன்னிற்கிறது.
கோத்திரனின் “கதைகூறும் குறள் உண்மையில் படிக்கவும், அறியவும் புதிய பல கதைகளைக் கூறி, குறள் அடிகளையும் பொருத்தமாகத் தருகின்ற பாணி புதிது.
விசுவாமித்திர பக்கம், தட்டிக் கொடுத்தலும், தலையில் குட்டிச் சொல்வதுமாக, தார்மீக கோபம் காட்டி நறுக்கென்ற சொல்லாடல்களுடன் முறுக்கேறிய வசனங்களுடனும் மிளிர்கின்றது. இதழுக்கு இதழ் சூடு, சுவை, சுவாரஸ்யமாக சுடச்சுட இறக்கிப் பரிமாறுகிறார் விசுவாமித்திரன் (யார் இவர்?)
மற்றது, 46ம் இதழில் விசுவாமித்திரன் கூறிய ஒரு கருத்து நமக்குப் புரியவில்லை. ‘என்னதான் எழுத்தாளர்கள் நாவல் எழுதினாலும் அவை எதுவுமே நாவலுக்கான சர்வதேச தரத்தை எட்டவில்லை” என்று பேராசிரியர் சிவதி தமி பி ஐயாவின் கூற்றை கோடிட்டுக்காட்டியிருக்கும் விசுவாமித்திரனிடமும் “செங்கதிர்’ வாசகர்களிடமும் நான் கேட்க விரும்புகிற தலையாய கேள்வி இதுதான். *அதென்ன சர்வதேசத் தரம்? சர்வதேசத் தரம் வாய்ந்த நாவல் என்றால் என்ன? இதன் வரையறை என்ன. இதற்கொரு உதாரணமான நாவல் எது? சர்வதேசத் தரம் என்பதை உரைத்துப் பார்ப்பது யார்?
இதுதான் என் மூளைக்குள் கிடந்து உசுப்பிக் கொண்டிருக்கும் கேள்வி
செங்கதிரோனின் இடைவிடா இலக்கிய முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
- திரன் ஆர்.எம்.நெளஸாத்
சாய்ந்தமருது
தொ.இல-0714457593
(4) Frisi M 202
 

முன்னிடு
இப்பக்கத்தில் முன்வைக்கப்படும் சில கருத்துக்கள் பற்றி இப்போதெல்லாம் எமக்கு விசாரணைகள் வருவது பற்றி மித்திரன் சந்தோசமாகவே உள்ளான். கடந்த 2011 ஒக்டோபர் இதழில் (46வது இதழ்) நாம் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தோம். ‘என்னதான் நமது எழுத்தாளர்கள் நாவல் எழுதினாலும் அவை எதுவுமே நாவலுக்கான, சர்வதேசத் தரத்தை எட்டவில்லை’ என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றைச் சுட்டியிருந்தோம். அதுபற்றி விசுவாமித்திரனிடமும் வாசகர்களிடமும் சில கேள்விகளைக் கேட்டு தீரன் ஆர்.எம். நெளசாத் அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார். தீரன் ஆர். எம். நெளசாத் அவர்களின் “நட்டுமை’ என்ற பரிசு பெற்ற நாவலை வாசித்து அதுபற்றிப் பலரும் சிலாகித்துப் பேசியிருந்தனர். அது உண்மையும் கூட. ஒரு நாவல் வாசகனை தன் பின்னால் எவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு நட்டுமை என்ற நாவல் நல்ல உதாரணமாகும். நாவல் என்ற பெயரில் சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து வாசகனைத் திக்குமுக்காட வைக்கும் கைங்கரியத்தைச் செய்யாத நாவலாசிரியர் தான் தீரன் ஆர்.எம்.நெளசாத். அவர்பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார். *அதென்ன சர்வதேசத் தரம்?, சர்வதேசத் தரம் வாய்ந்த நாவல் என்றால் என்ன? இதன் வரையறை என்ன? இதற்கொரு உதாரணமான நாவலி எது? சர்வதேசத் தரம் என்பதை உரைத்துப் பார்ப்பது யார்?
இந்தக் கேள்விகளின் உட்கிடையையும் நியாயத்தையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் இரண்டாம் விசுவாமித்திரன் சந்தோசமாக ஏற்று அடுத்த கதிரில் தக்கார் ஒருவரைக் கொண்டு பதில் பெற்றுத் தரவுள்ளான்.
தீரனைப் போல இன்னும் பலரும் விசுவாமித்திரனின் கருத்து வெளிப்பாடுகள் தொடர்பில் இதுபோன்ற கருத்துள்ள கேள்விகளைக்கேட்டு விசுவாமித்திரனைத் துளைத்தெடுக்க வேண்டும் என்பதே விசுவாமித்திர முன்னிட்டின் நோக்கம். இந்த இதழில் சிறுகதைத் தொகுதியொன்று பற்றிய பார்வை இடம்பெறுகின்றது.
9ேவழி 2O2

Page 25
நோக்கல்
நூல் :- "ஓ! அவனால் முழயும்" வகுதி :- சிறுகதைத் தொகுப்பு උම%diffituj:- நீ.பி.அருளானந்தம்
இலங்கையில் முதலாவது சிறுகதை அளவெட்டியைச் சேர்ந்த த.சிவலிங்கம் என்பவரால் 1933இல் எழுதப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் ஈழத்தின் சிறுகதைப் புனைவுக்கு எண்பது ஆண்டுகளுக்குக் குறைவான வரலாறே உண்டு எனக் கூறப்படுவதுடன் ஈழத்துச் சிறுகதைகளின் எழுச்சிக் காலமென ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளைக் குறிப்பிடுகின்றனர். இலங்கையர் கோனி , எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் உள்ளிட்ட பலர் சிறுகதைக்குப் புது மெருகூட்டிப் பெருமை சேர்த்தனர். இந்த வரிசையில் அண்மைக்கால ஐந்துவருடத்துள் சிறுகதைப் புனைவின் மூலம் மேற்கிளம்பி வந்தவர்களில் நீ.பி.அருளானந்தமும் ஒருவராவார். ‘ஓ! அவனால் முடியும்’ என்பது அவர் எழுதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு நூலாகும்.
(O2) நீ.பி.அருளானந்தம் அவர்கள் எழுத்தை வாழ்க்கையின் இலட்சியமென வரித்து அதற்காகவே முழு மூச்சுடன் ஊழியம் செய்பவர். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் எனப்பல தளங்களிலும் காலூன்றி நிற்பவர். “செங்கதிர்’ சஞ்சிகையின் முதலாவது இதழில இவரது ‘உணிமை உறங்குவதில்லை” என்ற சிறுகதை பிரசுரமானது. கணையாளி, தாமரை போன்ற தென்னிந்திய சஞ்சிகைகளிலும் இவரின் சிறுகதைகள் பிரசுரம் பெற்றுள்ளன. "மாற்றங்கள் மறுப்பதற்கிலி லை”, “கபளிகரம்”, 'ஆமைக்குணம்’, ‘கறுப்பு ஞாயிறு’, ‘அகதி’, ‘ஒரு பெண்ணென்று எழுது”, “வெளிச்சம்’, ‘ஓ! அவனால் முடியும்’ என்பன அவர் வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளாகும். ‘வாழ்க்கையின் நிறங்கள்", ‘துயரம் சுமப்பவர்கள்’ என்பன இரண்டும் நாவல்களாகும். இரண்டு கவிதைத் தொகுதிகளையும் “வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து", ‘கடந்து போகுதல்’ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளார். ‘பாலம்” என்ற தென்னிந்திய சஞ்சிகை உலகளாவிய ரீதியில் நடாத்திய வல்லிக்கண்ணன் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்று அப்பரிசினை ஜெயகாந்தனின் கைகளுடாகப் பெற்றுக் கொண்டவர். ‘வாழ்க்கையின் நிறங்கள்” என்ற நாவலுக்காக இலங்கை சாஹித்திய மண்டலம், வடக்கு மாகாண சபை என்பவற்றிடமிருந்து விருது பெற்றவர். “வெளிச்சம்’ சிறுகதைத் தொகுதியும், "வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து’ கவிதைத்
69வது DIf 200
 

தொகுதியும் அரச சாகித்தியமண்டல தேர்வுக்குத் தெரிவான சான்றிதழ்களைப் பெற்றவை. ‘துயரம் சுமப்பவர்கள்’ நாவல் அரச சாகித்திய விருது, தமிழ்நாடு கு.சின்னப்பாரதி அறக்கட்டளை இலக்கியவிருது, இலங்கை இலக்கியப் பேரவை/யாழ் இலக்கியவட்ட விருது மற்றும் வடமாகாணசபை விருது என்பவற்றைப் பெற்றுள்ளது. இலங்கைக் கல்வித்திணைக்கள வெளியீடான 8ம் ஆண்டு ‘தமிழ் மொழியும் இலக்கியமும்’ பாடநூலில் இவரது ‘நாணயம்” எனும் கதை இடம்பெற்றுள்ளது. இவரது கதைகள் பல சிங்களப் பத்திரிகைகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
(3)
ஆதிகாலம் தொட்டே மானிட வாழ்வின் ஒவ்வொரு கூறும் மாற்றம் பெற்றே வந்துள்ளன. மாற்றமே வளர்ச்சியின் அடிப்படை ஆகும். இதன் அடிப்படையில் இலக்கியமும் தானாகவே தன்னுள் மாற்றமடைந்து நாகரிக உலகை வழிநடத்திச் செல்கின்றது. இலக்கியம் அடைந்த இந்த மாற்றங்களின் பிரசவம் தான் சிறுகதையாகும். சிறுகதையானது வேற்றுமொழி தெரிந்த நம்மவர்களின் இலக்கிய ஈடுபாட்டினால் மேலைத் தேசத்தவரிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதென்றும் அதன் பின்னரே நாம் சிறுகதை எழுதக் கற்றுக் கொண்டோம் என்றும் பரவலாகக் கூறப்படுகின்றது. சிறுகதையின் அமைப்பு நமக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் சிறுகதை நமக்குப் புதிதல்ல என வாதிடுவோரும் உள்ளனர். எனினும் சிறுகதை இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதுவோர் வரிசையில் நீ.பி.அருளானந்தம் முக்கியமானவர்.
அவர் எழுதிய இத் தொகுதியில் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் பன்னிரண்டு கதைகள் உள்ளடக்கம். நான்கு கதைகள் 2010 இலும் ஏனைய எட்டுக் கதைகளும் 2011 இலும் எழுதப்பட்ட கதைகளாகும். சாதியம், வர்க்க வேறுபாடு, பெண்ணியம், காதல், பாலியல் வக்கிரம், ஜீவகாருண்யம், சமூக வேறுபாடு போன்ற பல்வேறு அம்சங்களுடன் கதைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியரின் அனுபவம் சார்ந்த கதை சொல்லும் பாங்கினாலும் இத் தொகுப்பிலுள்ள கதைகள் ஒருசேர வாசிக்க முடியுமாயுள்ளது. வாசகர்களின் சுவை அறிந்து கதைகள் சொல்லும் அருளானந்தத்தின் அணுகுமுறை இத் தொகுப்பின் வெற்றியெனலாம்.
‘கச” என்ற முதலாவது கதை வித்தியாசமான தலைப்புடனும் “மின்னுகிற பொன்கள்’ என்ற கடைசிக்கதை வெளிநாட்டுப் பாணியிலான கதையாகவும் - இப்படி ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளாக இருப்பதும் கதைத் தொகுதிக்குத் தனிச் சிறப்புத்தான். பெரும்பாலான கதைகள் பாலியல் சார்ந்தும் பெண்ணியம் நோக்கியும் சமூகப் பெறுமதி பற்றியதாகவும் இருப்பதுடன் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலைபற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருப்பது அருளானந்தம் அவர்கள் பற்றிய புனைகதையுலகின் இருப்புக்கு ஒரு அறிமுகம்தான்.
(47) kiä Défl 202

Page 26
‘ஓ! அவனாலி முடியும்’ என்பது மகுடக் கதை. ஒரு சீவல் தொழிலாளியூடாக பல்வேறு விடயங்களை இங்கு முன்வைக்கின்றார். நம்பிக்கையூட்டும் தலைப்பு மட்டுமல்ல அவனால் முடியும் என நிறுவிக்காட்டும் கதையுமாகும். வெள்ளையன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் சாதிக் கொடுமைக்கு எதிராகப் பேச வைக்கின்றார். இங்கு வெள்ளையன் என்ற பாத்திரத்தின் ஊடாக ஒரு சீவல் தொழிலாளியின் நாளாந்த வாழ்க்கை முறையோடு மதுபாவனை தொழிற்சூட்சுமம் வாழ்வின் இறுதிக்கால நிலைப்பாடுகள் பற்றியெல்லாம் கூறி எப்படியும் என்னால் வாழ முடியும் என தெளிவாகக் கதை சொல்லப்பட்டிருக்கின்றது.
பாலியல் தொடர்பான விடயம் உட்பட எதையும் நாசுக்காகச் சொல்லும் திறன் வாய்க்கப் பெற்றவர் கதாசிரியர் என்பதற்கு ‘திருவுளச் சீட்டு’, “சுமையோடு நிற்றல்’ ஆகிய கதைகள் நல்ல உதாரணங்களாகும்.
*சுமையோடு நிற்றல்” என்ற கதையில் கதைமாது தன் கணவரிடம் பூனைகள் பற்றி என்ன சொல்லுகிறாள்? “உங்களுக்கு ஒண்டும் ஒரு இழவும் கூடத் தெரியாது. இது பெட்டைப் பூனை. இதத் தேடி கடுவன் பூனைகளெல்லாம் வீட்டு வளவுக்கயா வந்து நிற்கும். பிறகு ஒண்டோடயா ஒண்டு கிடந்த கொண்டு இங்க சண்டை பிடிக்கும். மேலேயும் ஒடுவழிய கிடந்து புரளுங்கள். ஒட்டையும்கூட உடைச்சுப் போடுங்கள்” பெண் பாத்திரமொன்றைப் படைத்து ஒளிப்பு மறைப்போடு கதை சொல்லும் இயலுமை இவரின் கையெழுத்துக் கலை எனலாம். பெண்ணியம் அல்லது பெண்கள் தொடர்பான பரிதாபங்கள் பற்றிய ஊடாட்டம் பல கதைகளில் காணக் கூடியதாகவுள்ளது.
எழுத்தாளன் தான் வாழும் சமூகத்தைப் பற்றியும் மக்கள் பற்றியும் அந்த மக்களின் பாடுகள் பற்றியும் எழுத மறந்து விடுவானாயின் அவனின் எழுத்துக்களுக்கு உயிர் இருக்க முடியாது. மக்கள் அவனை மறந்து விடுவார்கள். யுத்தத்தின் பின்னரான சூழ்நிலைகளில் தமிழர் வாழ்வும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் இடப்பெயர்வும் இன்னும் பலவும் பல கதைகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இடம்பிடித்திருப்பது புனைகதையுலகினராலும் மக்களாலும் எப்போதும் கதாசிரியரை நினைவுகூர வழியேற்படுத்தியுள்ளது எனலாம். அடுத்த பத்து சிறுகதையூடே உலா வரும் கதா பாத்திரங்களின் சிறப்புப் பற்றியும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
‘கச” என்ற கதையில் (இச்சிறுகதை “செங்கதிர்’ வைகாசி 2011 இதழில் - வீச்சு 41 இல் பிரசுரமான கதை) வரும் ராசுக்குட்டி என்ற பாத்திரம் ஒரு சிறிய கடையின் சொந்தக்காரன். கொள்ளைலாபம் எதிர்பாராததால் நல்ல விற்பனை அவனுக்கு. மற்றவர்களின் மீது அனுதாபம் காட்டுவதில் முன்னிற்பவன். திருமணம் முடிக்காது பிள்ளை வயிற்றோடு இருக்கும் பேத்தியுடன் வந்திருக்கும் கிழவிக்கும் சேர்த்து தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுக்கும் மனோபாவம் கொண்டவன். இறுதியில் அவனது
9ேங்கி

கடை கொள்ளை போவதாகக் கதையை முடித்து இராசுக்குட்டி மீது வாசகர்களின் அனுதாபத்தைத் தேடிக்கொடுக்கிறார். ‘ஓ! அவனால் முடியும்” என்ற மகுடக் கதையில் வெள்ளையன் என்ற உயிரோட்டமுள்ள சீவல் தொழிலாளியின் பாத்திரம். ‘திருவுளச்சீட்டு’ என்ற கதையில் வரும் இந்தலூசியா என்ற பாத்திரமானது பெண்களின் கையறுநிலையைக் கவனமாகப் படம் பிடித்துக்காட்டும் கதை. நத்தாருக்குப் பலகாரம் சுட்டுக் கொண்டே தனது கதையை விவரிக்கும் இந்தலூசியாவுக்கு வாய்த்த குடிகாரக் கணவனால் ஏற்பட்ட கஸ்ட நஸ்டங்களைப் பொறுத்துக் கொண்டாலும் தன்பிள்ளைகளால் வெறுக்கப்படும் ஒரு தந்தையைக் கணவனாக பெற்றதுதான் அவளுக்குக் கவலைபோலும். இந்நூலிற் காணப்படும் கதைமாந்தர்களில் இந்தலூசியா மனதை வென்ற பாத்திரம். சிறுகதையின் பிரச்சினையின் மையங்களாக மனதை வெல்லும் பாத்திரங்களைப் படைத்ததன் மூலம் தனதுஎழுத்தாளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறுகதை முன்னோடி என்று கருதப்பட்ட புதுமைப்பித்தன் “கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் ஆகும். கதை முடிவடையும்போது அதைப்பற்றி சிந்தனை முடிவடைந்துவிடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை’ என்று கூறியுள்ளார்.
புதுமைப்பித்தனின் இந்தக்கூற்று நீ.பி.அருளானந்தத்தின் சிறுதைகளில் நிரூபணமாகின்றது. “நூல் பாவிச் சென்ற பூச்சி மாதிரி’, ‘காய்ந்த சருகுகளில் தீ வைத்த மாதிரி’, ‘வானத்தைக் குறுக்காகப் பிரித்துப் பரவிய மின்னல் கொடிபோல’ போன்ற உவமானங்களும் கதையைச் சிறப்பிக்கின்றன.
(4)
‘சாவின் வலை’ என்ற கதைவெறும் கற்பனைதான். தன்னைச்சூழ வலை விரித்திருக்கும் யதார்த்தங்களை எழுத்தோவியமாக்கும் ஆசிரியரின் தகைமைக்கு இதுபோன்ற கதைகள் சவாலாகி விடுமோ என்ற பயமும் நியாயமானதே. மறுபுறத்தில் ஆசிரியர் தனது சிறுகதை எடுத்துரைப்புக்குப் பயன்படுத்தும் மொழிநடை என்பது ஏனையோரிலிருந்து அவரை வேறுபடுத்துகின்றது. அதுதான் அவரின் பலம் அல்லது பலவீனம் என்றாகிவிடுகிறது.
புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி, பொன்னகரம், மனித யந்திரம், மகாமசானம், மனக்குகை ஓவியங்கள் போன்ற கதைகள் படிக்கும்தோறும் கருத்தைக் கவரும் தன்மையது. எனின் "ஓ! அவனால் முடியும்’ என்ற சிறுகதைத் தொகுதியின் மூலம் ஈழத்துச் சிறுகதையாளர்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்துள்ளார் நீ.பி.அருளானந்தம்.
9ேங்கி
- இரண்டாம் விசுவாமித்திரன்.

Page 27
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபையும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு களுதாவளை சுயம்புலிங்கம் பிள்ளையார் ஆலயத்தில் நடாத்திய 'பொங்கலி விழா - 2012 இல் கவிஞர் தேனூரான் தலைமையில் இடம்பெற்ற பொங்கலிட்டு துதி செய்வோமி என்ற தலைப்பிலான கவியரங்கில் பாடப்பெற்ற கவிதை
άρδιατώδίObόά)ιατί όΟύδιάουιτζιώδου புதுயுகம் பிறந்திடவே
இரா.நல்லையா
சுழலும் இவ்வுலகிற்கு சுடரொளி தரும் சூரிய பகவானே உழவருக்கு உதிரம்போல் உயிரூட்டும் ஒளிப் பிழம்பே வளம் பெற்று வாழ்வதற்கு வழிகாட்டும் கதிரோனே உளம் கனிந்து பொங்கலிட்டோம் ஏநாயிறே நீ ஏற்றிருவாய்
சூறாவளி வந்து எங்கள் சொத்தையெல்லாம் அழிக்காமல் சுனாமிதான் வந்து எங்கள் சுகத்தையெல்லாம் சுரண்டாமல் போரொன்று மீண்டும் வந்து எம்மை புதைகுழியில் போடாமல் பொங்கலிட்டு தாள் பணிந்தோம் கதிரவனே காத்தருள்வாய்
பசளை மருந்து விலை உயரப் பறக்குதைய்யா வான் வெளியில் விலையில் எம்பொருட்கள் வீழுதைய்யா படுகுழியில் - கரும் மழையில் எம்பயிர்கள் அழியுதையா தினம் தோறும் இவையாவும் மாறவென்று இனிய பொங்கல் பொங்கிருவோம்.
ஏழைச் சிறுவர்களும் எங்கள் சொந்தப் பிள்ளைகளே நாளை இம்மண்ணை ஆளப்போகும் மன்னர்களே கோழைபோல் வாழாது குவலயத்தில் அவருயர பொங்கிருவோம் தைப்பொங்கல் புதுப் பொலிவு பெற்றிடவே
இ0ழி B2O2

கலைகளை எம் கண்களைப்போல் காத்திருவோம் கவிதைகளை நெஷ்சம் களிப்படைய யாத்திருவோம் பழமையினைப் போற்றிடவும் புதுமையினை ஏற்றிடவும் பொங்கலோ பொங்கல் என்று புதுப் பொங்கல் பொங்கிருவோம்.
புரிந்தணர்வு இல்லையென்றால் புதிரெடுத்து என்னபயன் பொறுமை நமக்கில்லையென்றால் பொங்கித்தான் என்ன பயன் பொய் களவு கதுவாது போய் மறைய வேண்டுமென்று மங்களமாய் பொங்கலிட்டோம் மனிதநேயம் மலர்ந்திடவே
இனங்கள் இந்நாட்டில் இணைந்து தினம் வாழ்வதற்கு இசைத்திருவோம் கீதத்தை அந்த இமயமலை எட்டும்வரை மதங்கள் எல்லாம் ஒன்றே என்ற மகான்களின் வார்த்தைகளை நிதம் பேணி வாழ்ந்திரும் தைபிறந்த வேளையிலே
இடம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் சொந்த மண்ணில் தடம் பதிக்க வேண்டுமென்று தைப்பொங்கல் பொங்கிருவோம் அகதி முகாமில் அவலமுறும் தமிழ்மக்கள் மீண்டும் அவரவவர் மனையில் அமர்ந்திடச் செய் தைமகளே
தீர்வொன்று வேண்டுமென்று தேம்பியழும் தமிழ் மக்கள் தைபிறந்தால் வழிபிறக்கும் என்றெண்ணி வாழ்கிறார்கள் வழிமறைக்கும் தோழர்களே வழிவிட்டு நம்மவரை வாழ்வளிக்க வேண்டுமென்று பொங்கிருவோம் தை நாளில்
சமாதானம் வளரட்டும் நாட்டில் சச்சரவுகுறையட்டும் சமத்துவம் ஓங்கட்டும் உலகில் சமரசம் நிலைக்கட்டும் சகவாழ்வு வளரவென்று சாந்திபெற்று வாழவென்று பொங்கிருவோம் தைப் பொங்கல் புதுயுகம் பிறந்திடவே.
இ0வழி 2O2

Page 28
மட்டக்களப்பின் கிராமியக்கலை ஆசான்
திருமதி தங்கம்மா சந்திரசேகரம்
- அன்புமணி மட்டக்களப்பின் கிராமியக் கலை ஆசான் எனப் போற்றத் தக்க ஆரையம் பதி திருமதி. தங் கம்மா சநீ திரசேகரம் அணி மையில் தனது 80வது வயதில் காலமானார்.
இவர் :: தமிழ் ஆசிரியை. 2 கிராமியக் கலைப்பணியில் மிகுந்த ஈடுபாடு s's z கொண்டவர். கரகம் இவரது விசேட துறை 01.06.1931 - 23.12.2011 ஆகும். கும்மி, கரகம், கோலாட்டம், வசந்தன், காவடியாட்டம், கொம்பு முறி முதலிய கலைகளில் இளைஞர்களைப் பயிற்றுவிப்பதுடன் இந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்து விசேட வைபவங்களின்போது மேடை ஏற்றி உளளார.
மட்டக்களப்பு விபுலானந்த இசை நடனக் கல்லூரி மாணவிகளைக் கொண்டு இவர் தயாரித்த கொம்புமுறி நிகழ்ச்சி மக்களது ஏகோபித்த பாராட்டைப் "需 ஆற்றோரம் ப்ோற மயில் அது ஆண் ம்யிலோ பெண் மயிலோ O பர்ர்த்து வாடா வட சேரியான் - உனக்கு பாவைப்பழம் போல மாலை தாறேன்.
இவ்வாறான அவரது கொம்பு முறிப் பாடல்கள், இன்னமும் எமது நெஞ்சில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது.
இவர் இலங்கை வானொலி கிராம சஞ்சிகை நிகழ்ச்சிக்குப்பல கிராமியப் பாடல்களை வழங்கியுள்ளார். இலங்கை வானொலி உத்தியோகத்தர்கள் மட்டக்களப்புக்கு வந்தபோது ஆரையம்பதிக்கு வந்து பல கிராமியப் பாடல்களைப் பதிவு செய்துள்ளனர்.
பல கூத்துக்களிலும் இவர் பெண் பாத்திரம் ஏற்று ஆடி உள்ளார். ஆரையம்பதி ஆரையூர்இளவல் தயாரித்த மட்டக்களப்பின் முதல் வீடியோ திரைப்படமான ‘மண்சுமந்த மகேசன்’ குறுந்திரைப்படத்தில் இவர் செம்மனச் செல்வி பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் இவரது கணவர் சந்திரசேகரமும் நடித்துள்ளார். இவரது மக்களும் இக் கிராமியக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.
இவர் தனது கலைப் பணிகளுக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய கலாபூஷணம் விருது பெற்றுள்ளார். மண்முனைப் பற்று பிரதேச செயலகம் நடாத்திய கலாசார விழாவில் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டுள்ளார். ஆரையம்பதி இந்து சமய இலக்கிய அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகப் பணி புரிந்துள்ளார்.
fifiñji UIfì 202
 

இவர் 1946ம் ஆண்டு முதல் கிராமியக் கலைகளில் இடைவிடாது ஈடுபட்டுள்ளார். அதன்படி 65 வருடங்கள் அவர் இலக்கியப் பணிகளை
ஆற்றியுள்ளார்.
வயது முதிர்ந்த காலத்திலும் சற்றும் தளப்பமின்றி நடந்து சென்று கிராமியக் கலை நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் மேடை ஏற்றுவதிலும் இவர்
உற்சாகமாக ஈடுபட்டமை இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
கிழட்டு அணில் மற்ற அணிலைப்பார்த்து, “அடுத்தவர்களின் உழைப்பில் வாழ்வதே சிலருக்கு வாழ்க்கையாகிவிட்டது பார்.” என்றது.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டது இரண்டாம் அணில்.
கிழட்டு அணில் சொன்னது:
“ஒணானைப் பார்த்தேன். யாரோ ஒரு மனிதன் புதுவீடு கட்டிக் கொண்டிருக்கிறானாம். பக்கத்தில் குப்பை மேட்டில் ஒரு பல்லி இருந்ததாம். அது ஒணானிடம் ஏதோ
சொன்னதாம்” “என்னவாம்?’ என்றது இரண்டாம் அணில்.
கிழட்டு அணில் சொன்னது:-
“எனக்குத்தான் வீடு கட்டுகிறான் என்றதாம் பல்லி”
நன்றி- “காசி ஆனந்தன் கதைகள்’

Page 29
நீதியே. நீ. தீயானாயா..?
நீதியா..? எங்கே? மணர்ணில் நிலைத்ததா?. ஆய்ந்து பார்த்தால் வேதனை, அதுவே மிஞ்சும் விளைந்திடும். ஊழல் தீயில் மோதியே. உயிரை மாய்த்து முக மூடிக்குள்ளால் விணே சாதனை படைத்து மாளும் சரிதத்தை என்ன சொல்ல கலாபூஷணம்
பணமது மட்டும். கையில் பதுங்கினால். போதும் மாற்றார் பிணத்திலும் சவாரி செய்து பிழைக்கலாம். வசதிக்கேற்ப குணத்தினை மாற்றுகின்ற வகாள்கையில். ஓணான்போல நிறத்தினை மாற்றும் உன்னால். நீணிலம் வாழ்வதெப்போ?
செங்கோலில் சோழன் அண்று சேயினை தேர்க்காலின் கீழ் மங்காத நீதி காக்க மரணிக்கச் செய்த அந்த சங்கை சேர் சரிதம் தன்னை சாற்றியே கவிதை பாடி திங்களாய். ஒளிர்ந்த நேர்மை திசை மாறிப் போனதேனோ..?
பாலஸ்தீன் மண்ணை விணே பறித்துமே. இஸ்ரவேலை வாழவே. விட்டுஅங்கே. வாழ்ந்தோரை அநாதையாக்கி கோழைகள் செய்தஅந்தக் கொடுமைகள் தீர்வே இன்றி நாளையே நகர்த்தும் கெட்ட நாசத்தை என்ன சொல்ல?
HEE
ытші
്
ஸ்
 
 

பூதமாம் ஈராக் மண்ணில்.
புதையலாம் பார்ப்போ மென்று
சாதனை புரியச் சென்றோர். கொழும்பு தமிழ்ச் 4rısasas சல்லடை போட்டுத் தேடி
பாதகம் செய்து நாட்டைப்
பாழ் படுத் திட்டோ ருக்கு ༈ རྒྱལ་
ஏதுமே இல்லை. நீதி Ամ/:ونگ (قیED
இருட்டிலே புதைந்து போச்சே!
சூடானில். ஆப்கானிஸ்தான். சுதந்திர பாகிஸ் தானில். கூடார மடித்துப் போடும் குண்டுகளாலே மக்கள் நாடோறும் அழிகின்றார்கள். நாசமாய்ப் போன நீதி காடேறும் நாளை எண்ணிக் கலங்குதே. இதயம் ஐயா!
வல்லர சென்ற கூட்டில் வழங்கிய 'வீட்டோ. இன்று புல்லரை நல்லோ ரென்றே புகழ்ந்துமே. இசைவற்றோரைக் கல்லறை ஆக்கும் 'வீட்டோக் களத்திலே குதித்தோ ரெல்லாம் சொல்கிற நிலையைப் பார்த்தால். சிரிப்புத்தான் வருகுதையா.
உலகமே. அநீதிக்குள்ளால் உறைந்துமே கச்சை கட்டி கலகமே நிறைந்து கண்ணிர் கசிகையில், சிரசில். நாற்ற மலத்தினைக் கொண்ட இறால்கள் மாற்றாரில் மோப்பம் காணும் நிலையதுவிட்டு நீதி. நிலைத்திடும் நாளெந் நாளே..?
Tras
fldislöálmfl 200

Page 30
என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய கோணேசபிள்ளை அவர்கள் நலமுடன் பயனுற வாழ்ந்து வருகிற செய்தியை “செங்கதிர்’ நவம்பர் 2011 இதழில் கண்டறிந்து மகிழ்ச்சியடைகிறேன். திருகோணமலை இந்துக் கல்லூரியை உய்விக்க அம்பலவாணர் அவர்கள் 1954 முதல் ஆற்றிவந்த பணி அளப்பரியது. அப்பணிக்கு உறுதுணையாயிருந்த ஆசிரியர்களில் கோணேசபிள்ளை அவர்கட்குச் சிறப்பான இடமுண்டு. அவர் திருகோணமலை ராமக்கிருஸ்ண மிஷன் இந்துக் கல்லூரிக்கு வந்தபோது நான் எஸ் .எஸ் .சி. இறுதியாணி டில் இருந்தேன். எனவே திரு கோணேசபிள்ளையிடம் ஆங்கிலப்பாடங்கள் சிலவற்றுக்கு மேலாக நான் கற்கவில்லை. எனினும் அவர் என்மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அக்கறையுடையவராக இருந்தார். நான் எஸ்.எஸ்.சி யில் நல்ல பெறுபேறுகள் பெற்றதை அறிந்தவுடன் எனக்கு இரண்டு நூல்களைப் பரிசாக வழங்கினார். நான் 1958ஆம் ஆண்டு படிப்பிற்காக கொழும்பிற்குப் போய்விட்டேன். எனினும் விடுமுறை நாட்களில் என்னைக் காணும்போதெல்லாம் என் கல்வி முன்னேற்றம் பற்றி அக்கறையுடன் விசாரிப்பார். பல்கலைக்கழகப் படிப்பு முடிந்த பின்பு ஓரிரு முறைகள் மட்டுமே அவரைச் சந்தித்த நினைவு
மாணவர்கள் எல்லோரையும் சமமானவர்களாக அன்புடன் நடத்தும் அவரது பண்பும் மாணவர்களின் ஆங்கில பேச்சு விவாதத் திறமைகளை வளர்க்க அவர் இந்துக்கல்லூரியில் பாடவிதானத்திற்கு வெளியே எடுத்த முயற்சிகளும் இன்னமும் மனதில் நிற்கின்றன.
கோணேசபிள்ளை அவர்களை மேலும் பலர் அறியச் செய்த செங்கதிருக்கு என்நன்றிகள். அவர் மேலும் பலகாலம் மானுடம் பயனுற நலமுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சி.சிவசேகரம் 2, Rheinland Avenue colombo - 4
56) ssi Dé) 202
 

“நான் ஒரு படகோட்டி
நானே எனக்கு வழிகாட்டி”
இந்திய மண் தத்துவங்களின் பிறப்பிடம் என்கிறார்கள். தனித்துவமான சமூக, சமய அடிப்படைகளை அடக்கி இருக்கிறது என்கிறார்கள். அப்படி விதந்துரைக்கப்படும் இந்திய சமூக கலாசாரம் எப்படி அந்த மண்ணில் மலர்ந்த சிந்தனையாளர்களையும் செயல்வீரர்களையும் அவர்கள் திறமைகளை வெளிக்கொணரமுடியாதவாறு தடுத்து நின்றது என்பதற்கான சான்றுகளும் இல்லாமல் இல்லை. அருட்சோதி வள்ளல் பெருமானை, அற்புதமனிதர் ஜி.டி.நாயுடுவை, ஆபிரகாம் பண்டிதரை அப்புறம் கணிதமேதையான சீனிவாச இராமானுஜனை என்று பட்டியல் நீளுகின்றது. இந்தியர்களுக்கான சுதந்திர தேசிய இயக்கம் - அது இந்திய தேசிய காங்கிரஸ், உருவாக்கியவர் ‘டங்கன்’ என்ற வெள்ளைக்காரர்தான் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்.? பாரதியைப் பார்த்துப் “பெண் விடுதலை பாடாத கவிஞரா நீங்கள்’ எனக் கேள்வி எழுப்பிய ‘அன்னிபெஸண்ட்’ அம்மையார் ஒரு வெள்ளைக்காரி என்பதையும் அதன்பின்னர்தான் பாரதி பெண்விடுதலை பற்றிப் பாடத்தொடங்கினார் என்பதையும் எத்தனைபேர் அறிந்திருக்கிறார்கள்.? தமிழுக்கு தொன்னூல் விளக்கம் எனும் இலக்கண நூலைத் தந்தவனே ஒரு வெள்ளைக்காரன் - வீரமாமுனிவன் என்ற பெஸ்கி சுவாமிகள். நீரில்லாத நிலத்திற்கும் தண்ணிர்க்குடத்துடன் தவித்த தாய்மார்க்கும் முல்லைப் பெரியாறென்ற அணையை அமைத்து அதற்காகத் தன் சொத்துக்களை இழந்தானே ‘பென்னிகுக்’ என்ற வெள்ளைக்காரன். இன்று பிரச்சினையான போதுதான் அவன் பெயரைச் சொல்லுகிறார்கள். ஒரு இந்து கடல்கடந்து போக முடியாது என்ற வர்ணாச்சிரமத்தைத் தகர்க்க சிக்காகோ மாநாட்டுக்குப் போக தன் மண்ணிலிருந்து தமிழ்நாட்டு மண்ணுக்கு வந்த சுவாமி விவேகானந்தர் தமிழர்களால் தான் வழியனுப்பப்பட்டார் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? அங்கு போனவரை ஆதரித்து அலங்கரித்து சர்வமத மகாநாட்டில் தலைநிமிர்ந்து நிற்க வழிசமைத்தவளே ஒரு வெள்ளைக்காரிதான். அவர் கொள்கைகளை மக்கள் முன்எடுத்துச் சென்ற சகோதரி நிவேதிதாவும் ஒரு வெள்ளைப் பெண்தான். இப்படிப்பல இந்திய முன்னோடிகளின் முன்நகர்வுக்கு முனைப்பாக நின்றவர்களில் பலர் வெள்ளைக் காரர்கள் தான் . இநீ தியர்களால அடையாளம்
Giழி 2O2

Page 31
காணமுடியாதவர்களை - அறிவாளிகளை அந்த வெள்ளையர்கள்தான் இனங்கண்டு கொண்டார்கள் - ஏற்றமும் கொடுத்தார்கள். அத்தகைய ஒரு மேதை தமிழ்நாட்டின் அக்கிரகாரத்துள் முகிழ்ந்தது. அற்புதமான அந்த வாடாமலரை அங்கீகரிக்க மறுத்த சமூகம் வெட்கப்படவில்லை. எந்தக்கல்லூரியும் இவனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் படிக்காதவன் பட்டம் பெறாதவன் எனப் பரிகசிக்கப்பட்டான். அவனை எப்படி இனங்கண்டுகொண்டான் வெள்ளைக்காரன் என்பதே வேடிக்கை நிறைந்த கதையாகின்றது. கல்லூரிக்கே போகாதவனுக்கு கணிதத்தில் பி.எச்.டி.பட்டம் கொடுத்தது கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம். முப்பத்திரண்டு ஆண்டுகள் மாத்திரமே வாழ்ந்த அந்தத் தமிழன் சீனிவாச இராமானுஜன் - தனக்குத்தானே வழிகாட்டியவனின் சரிதம் இது.
இராமானுஜன் பிறந்த இடம் ஈரோடு. 1887ம் ஆண்டு டிசம்பர் 22 அவரது ஜனனதினம். அப்பா சீனிவாசஐயங்கார் ஒரு புடவைக்கடை குமாஸ்தா. அம்மா கோமளத்தம்மாள் - கோவில்களில் பிரார்த்தனைக் கீதம் இசைப்பவள். கும்பகோணத்தில் சாரங்கபாணித் தெருவில் ஒரு சிறிய வீடு. அதுதான் இராமானுஜன் வாழ்ந்த இல்லம். இப்போது அது மியூசியமாக இருக்கிறது. குழந்தையான இராமானுஜனை சின்னம்மை தாக்கியது. அதனால் ஒரு வலுவற்ற குழந்தையாக இருந்திருக்கிறார். அப்பால் சில காலங்கள் காஞ்சிபுரத்தில் உறவினர்களுடன் தங்குகிறார். 1892ல் அங்குதான் ஆரம்பக்கல்வி நடந்தது. குடும்ப சூழ்நிலைகளால் திரும்பவும் கும்பகோணம் வருகிறார். அப்புறம் சிலநாட்களின் பின் சென்னையில் குடியமர்கின்றார். சென்னைப் பாடசாலையை இராமானுஜன் வெறுக்கிறான். போக மறுக்கிறார். உறவினரான பொலீஸ்காரரை வைத்து அவரை மிரட்டிப் பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். ஆறுமாத வாழ்வின்பின் திரும்பவும் கும்பகோண வாழ்க்கை தொடருகின்றது. கும்பகோணமே இவருக்குப் பிடித்திருந்தது. அம்மாவுடன் ஆராதனை பாடுவதில் ஆர்வம் உண்டானது. முழுக்க முழுக்க அக்கிரகாரச் சூழ்நிலைகளே அவரைத் சுற்றியிருந்தன. 1897ல் பத்தாவது வயதில் கும்பகோணம் காங்கேயன் சிறுவர் பாடசாலை ஆரம்பக் கல்வித்திட்டப் பரீட்சையில் ஆங்கிலம், தமிழ், புவியியல், கணக்கு என்பவற்றில் அதிகமான புள்ளிகளைப் பெறுகிறார். அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாகத் தேறுகிறார். அதனால் “ஸ்கொலவழிப் கிடைத்தது. நகரப் பாடசாலையில் இடம் கிடைக்கின்றது. அப்போது வயது 11. இந்த வயதில்தான் இராமானுஜன் கணிதம் எனும் ‘மதமற்றிக்ஸில் தீவிர பற்றுடையவனாகி புதிய தியரங்களை உருவாக்க முனைகிறார். S.L.லோனி என்ற ஆங்கிலப் பேராசிரியர் இவரைப்பற்றி எழுதிய நூலில் “இராமானுஜன் தனது 13வயதிலே எவரும் இதுவரை அறியாத புதிய கணித தியரங்களை கணி டுபிடிக்கிறார் - எவருடைய உதவியும் இன்றியே அவர் செயற்படுகின்றார்’ எனக் குறிப்பிடுகின்றார். 14வது வயதில் தனது கண்டுபிடிப்புக்களை அப்பாடசாலையின் 35 ஆசிரியர்கள் 1200 மாணவர்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தினார். 1903ல் இவரது 16வது வயதில் GS.Car என்ற அறிஞரின் கணிதம் பற்றிய நூலைப்படிக்கிறார். அந்நூல் ஏறத்தாழ 5000 தியரங்களைக் கொண்டது. அந்நூலின் ஒவ்வொரு வரிகளுடனும் இராமானுஜன் ஒன்றிப்போகிறார். அவரைக்கணிதம் முற்று முழுதாக ஆட்கொண்டுவிட மற்றைய பாடங்களில் அக்கறை கொள்ளாதவராகிறார். அதனால் பாடசாலையிலும் வீட்டிலும் நெருக்கடி

நீடிக்க இவரது “ஸ்கொலஸிப்ட் சலுகையும் நின்றுபோக இராமானுஜன் 1905 ஆரம்பத்தில் வீட்டைவிட்டு ஓடி விடுகிறார். விசாகப்பட்டினத்திலிருந்து பெற்றோர் இவரை மீண்டும் அழைத்துவந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்க்கின்றனர். அங்கு 1906ல் நடந்த நுண்கலைத் தேர்வில் தேர்ச்சிபெறவில் லை யிவர். அதே ஆணிடில் எந்தப் படிப்பும் பூர்த்தியாகாமையினால் பச்சையப்பனிலிருந்து வெளியேற நேரிடுகிறது. இவ்வளவுதான் உலக கணித மேதையான இராமானுஜனின் கல்விநிலை.
அப்புறம் வேலை இல்லாத வாழ்க்கை. எனினும் கணிதத்தின் ஆய்வுகள் குன்றிவிடவில்லை. ‘இந்தியன் மதமெற்றிக்ஸ் சொசைட்டி நிறுவனராக இருந்த வி.இராமசாமிஜயரை அணுகி தன் நிலையை விளக்குகிறார். தன்னுடைய நிறுவனத்தில் வேலை கொடுக்க முடியாத ஐயர் தன்னுடைய அறிமுகக் கடிதத்துடன் இராமசந்திரராவ் என்பவரைக்காண அனுப்புகிறார். குறைந்த சம்பளத்தில் றெவனியூ டிபார்ட்மென்டில் வேலை கிடைக்கிறது. அங்கும் அவர் நிலைக்க முடியவில்லை ராமானுஜனின் நண்பரான இராஜாஜி மீண்டும் இவரை ராமச்சந்திராவுடன் இணையவைக்கிறார். கணித ஆய்வுகள் தொடருகின்றன. ராவ் அதற்கான நிதி உதவிகளைச் செய்கிறார். அதன்பின்பே இராமானுஜனின் ஆய்வுகள் ‘இந்தியாவின் மதமெற்றிக் சொசைட்டி ஜேணலில்’ இடம்பெறலாயிற்று. இராமானுஜன் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் 20 ரூபா சம்பளத்தில் எழுதுவினைஞராக அமர்கிறார். அங்கிருந்து கொண்டு சென்னை துறைமுக அதிகாரசபைக்கு தலைமைக் கணக்காளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. காரணம் இவர் பட்டதாரி அல்ல என்பதினால். அந்தப் பதவிக்காக இராமானுஜனால் எழுதப்பட்ட கடிதம் மிகவும் விநயமானதும் வேண்டுதலுடையதுமாகும். எனினும் அப்பதவி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் அவரது சம்பளம் 30 ரூபாவாக உயர்த்தப்படுகிறது.
இந்தநாட்களில் மிகவும் சோகமானவை அவர் நிதிப்பற்றாக்குறையால் அவதிப்பட்டார். அவரது மேதைத்தனத்தைவிலைபேச முயன்றனர். அவர் அவற்றை நிராகரித்தார். உலகம் உருண்டைஎன்று சொன்ன கலிலியோவை மண்டியிடவைத்ததுபோன்ற ஒரு நிகழ்வுக்கு இராமானுஜன் இடம் தரவில்லை. அதனால் அவரை பைத்தியகாரனைப்போலப் பார்த்தார்கள். வேண்டுமென்றே தங்கட்கு வெளியே வைத்தனர். அவர் வேலை கேட்ட இடமெல்லாம் “சேர்டிபிகேட்’ கேட்கப்பட்டது. சேர்டிபிகேட் கேட்டவர்கள் அவர் செயற்திறனை மதிக்கவே இல்லை.
1913ல் நாராயண ஐயரும் இராமச்சந்திரராவும் E.Wமிஷன்மாஸ் என்ற வெளர்ளைக் காரரின் அனுசரணையுடன் பிரிட்டனிலுள்ள கணிதவியலாளர்களைத் தொடர்பு கொள்ள முயல்கின்றனர். அவரது தியரங்கள் அனுப்பப்படுகின்றன. ஆரம்பத்தில் அங்கும் அவரது பட்டப்படிப்புப்பற்றிய பிரச்சினை வந்தது. இராமானுஜன் சளைக்காமல் போராடுகிறார். அவரை மாணவனாக ஏற்க மறுப்பு வருகிறது. இந்த நேரம் இவர் மிகவும் தயவான கடிதமொன்றைத் தயாரித்து தன் கண்டுபிடிப்புக்களையும் வைத்து கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்திற்கு அனுப்புகிறார். அங்கிருந்த இரண்டு கணிதவியலாளர்களாலும் அவை எவ்வித குறிப்புமின்றித் திருப்பி அனுப்பப்படுகின்றன. மீண்டுமொரு
Músíuflag

Page 32
விண்ணப்பத்தைத் தயார் செய்து GH. Hardy என்ற பேராசிரியருக்கு (அவரை முன்பின் தெரியாத போதும்) 9 பக்கங்கள் கொண்ட தன் தியரங்களை அனுப்பி தன்னை அங்கீகரிக்குமாறு கேட்கிறார். GH.Hardy g560igs b60óruj J.E.Littlewood 6T6L6 (BL6 a(36)|Táisdairportij. E.H.Niville என்ற பேராசிரியரை ராமானுஜனின் தியரங்கள் அப்படியே ஆட்கொள்ளுகின்றன. Niville இது பற்றிய அறிக்கையில் “ராமானுஜன் தியரங்கள் இதுவரை எவராலும் கையாளப்படாதவை. அவர் பிறப்பில் தோன்றிய மேதை” என வர்ணித்துள்ளார். ராமானுஜன் மேல் அளவற்ற ஈர்ப்புடையவராகிறார். இவரே இவரை லண்டனுக்கு அழைத்தவர். தனது விருந்தினராகவும் சிலகாலம் வைத்திருந்தவர்.
இங்கிலாந்துசெல்ல இராமானுஜன் முனையும்போது அக்கிரகாரத்துக் கோட்பாடுகள் அவரைத்தடுக்க முயல்கின்றன. தன் அம்மாவிடமும் துணைவியிடமும் எப்படியோ முயற்சித்து அனுமதி பெற்றுவிட்டவர் S.S.Nivasa என்ற கப்பல் மூலம் 1914 மார்ச் 17ல் காலையில் சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஏப்ரல் 14ல் இலண்டனில் காலடி வைக்கிறார். அவருக்காகத் தன் மோட்டார் வண்டியுடன் காத்திருந்தவர் (3UJTAfluuj E.H.Niville. Littlewood, Hardy 616ö(3UTCbL6ot 36006OOTélpTij இராமானுஜன். தாமதமின்றித் தன் வேலையைத் தொடங்கிய இராமானுஜன் செயற்றிறன் அவர்களை ஆச்சரியப்படவைக்கிறது. 120 தியரங்கள் ஏற்கனவே ஏற்புடையத்தாகின. எனினும் அன்ஒகனைஸ்ட் நோட் புத்தகத்தில் இன்னும் பல இருந்தன. ராமானுஜன் தனது ஆய்வில் ஐந்து வருடங்கள் கேம்பிரிட்ஸில் கழித்தார். பிறந்த நாட்டால் ஏற்றுக் கொள்ளப்படாத மேதையை வெள்ளையர் மண் ஏற்றுக்கொண்டு ஏற்றம் கொடுத்தது. இலண்டன் மதமட்ரிகல் சொசைட்டி அவரைக் கெளரவித்தது. B.A பட்டம் கொடுத்தது. 1916 மார்ச் மாதம் புகழ்பெற்ற கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகம் கணிதத்தில் பி.எச்.டி பட்டம் அளித்தது. எந்தக்கல்லூரிச் சேர்ட்டிபிகட்டுக்களும் இல்லாமல் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற உலகின் முதன் மனிதனாக இராமானுஜன் ஆகிறார். "Fellow of the Royal Society’ என்ற இங்கிலாந்தின் உயர் அங்கீகாரம் 1918ல் digolds&pg). 9(35 g605(6 Qis(SLITuj 136) Fellow of Trinity College, Combridge என கெளரவிக்கப்பட்ட முதல் இந்தியன் இராமானுஜன்தான், என்பதை குறிப்புகள் சொல்லுகின்றன.
இத்தனை சாதனைகட்கும் போராட்டங்களுக்குமான அந்த வாழ்வு 32 ஆண்டுகள் மாத்திரமே என்பதுதான் சோகமான வரலாறு. இத்துணை பெருமை பெற்றவர் திடீரென சோர்வு நோய்க்கு ஆளாகிறார். இவரது ஆங்கில நண்பர்கள் அயராது உதவினர். எனினும் தாயகம் திரும்பவேண்டியதாயிற்று. தமிழகத்தின் இந்த விடிவெள்ளி 1919ல் தனது ஒளியை நிறுத்திக் கொண்டுவிட்டது. துணைவியார் ஜானகி அம்மாள் 1994ல் மறைந்தார்.
ராமானுஜன் ஆசாரம் மிக்கவர். அவர் லண்டன் வாழ்க்கையை அந்த ஆசாரங்களே மிகவும் துன்பப்படுத்தின. எனினும் அதிலிருந்து அவரால் விலகமுடியவில்லை. பலவீனமான உடல்வாதைக்கு அவரது கட்டுப்பாடான உணவு முறையே காரணமாயிற்று என்கிறார் பேராசிரியர் Hardy.
9ேவதி

இறந்ததன்பின்பே இந்தியமக்கள் அவரைப் பெருமைப்படுத்தினர்கொண்டாடினர். 1973, 1978 களில் “பீல்ட்மெடல்’கள் அவர் பெயருக்கு வழங்கப்பட்டன. இத்தகைய பெருமை பெற்ற மனிதர் தன் இளமையில் கலங்கியிருக்கிறார். சிலவேளைகளில் சிலேட்டில் எழுதி ஆசிரியர்களிடம் அவமரியாதைப்பட்டிருக்கிறார். அவரது முதலாவது நோட்புக் 351 பக்கங்களையும் 16 சமறிகளையும் கொண்டதாக இருந்தது. இரண்டாவது நோட்புக் 256 பக்கங்களையும் 21 சமறிகளையும் கொண்டிருந்தது. மூன்றாவது நோட்புக் 33 அன்ஓகனைஸ்ட் பக்கங்களுடன் இருந்திருக்கிறது. அவரது வெள்ளைக்காரப் பேராசிரியநண்பர்களின் கூற்றுப்படி இராமானுஜன் 1729 புதிய கண்டுபிடிப்புக்களை கணித்திருக்கிறார். இதுவரை எவராலும் இது மீறப்படவில்லை.
இன்று தமிழ்நாட்டில் அவரது பிறந்தநாள் டிசம்பர் 22ல் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 1962ல் அவரது உருவம் பொறித்த முத்திரை வெளியானது. இராமானுஜனின் ஆரம்பப்பாடசாலையான கும்பகோணம் அரச ஆர்ட்காலேஸில் அவர் பிறந்தநாள் கணிதத்தினமாக மூன்று தினங்கள் வெளியார் வருகையுடன் கொண்டாடப்படுகின்றது. 125வது பிறந்ததினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கிறது. National Symposium on mathematical methods and applications (NSMMA) 6T60T இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒருநாள் கொண்டாட்டம் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் ‘மதமற்றிசன்களுக்கு (32 வயதுக்குமேல் அல்ல) இரமானுஜன் பெயரில் 10,000,00 ஸ்ரேலிங் பவுண்கள் வழங்கப்படுகிறது. இந்திய அரசு டிசம்பர் 22ஐ ‘நெஷனல் மதமெற்றிகல்டே’ என பிரகடனப்படுத்தியிருக்கிறது. இவரது வரலாறு செய்திப் படங்களாக பலமொழிகளில் வெளிவந்துள்ளன. டேவிட்லீவிட் என்பவரால் "The man who loved numbers' 6tgojLib jugloLDIT60T PBS G66sufG 1988 LDIT & 226) வெளிவந்தது. 2012ல் இவர் பற்றிய முழுநீளத்திரைப்படமொன்றை வெளியிட ஜேம்ஸ் படங்களின் நிறுவனமான “றோஸர் ஸ்பெடிஸ் யூட் தயாராகி வருகிறதென்பது புதிய செய்தியாகும்.
எவரது வழிகாட்டலுமின்றி கல்லூரிப் படிப்பும் பட்டமுமின்றி தன் சொந்த முனைப்பின் நிமிர்ந்தசினிவாச ராமானுஜன் உலகத்தின் எடுத்துக்காட்டான மேதை. சொந்த நாட்டினர் சோர்வு தந்தபோதும் துவண்டு போகாது தன் அயராத உழைப்பால் வேற்று நாட்டில் வெற்றிக்கொடி நாட்டியவர். இந்தக் கணிதத்தின் காதலனைப் பெற்றதில் தமிழினம் பெருமைப்பட உரிமை இருக்கிறது. ஏனெனில் கேம்பிரிட்ஸில் அவர் தன்னை சென்னைத் தமிழன் என்றே பதிவு செய்திருக்கிறார்.
“முதற்கண் முயற்சி துன்பம் மிகுதியாக வருமாயினும் அதற்காக மனம் தளராமல் முடிவில் இன்பத்தை தரும் அரிய காரியத்தை துணிவுடன் உழைத்துச் செய்க!’ என ஆணையிடும் வள்ளுவ வார்த்தைக்கு கணித மேதையான சீனிவாச இராமானுஜன் சிறப்புத் தருகிறார்.
“துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை”
0ேழி 2O2
(வினைத்திட்பம் - குறள்:669)

Page 33
இலக்கியப் பரப்பிற்கு வலிமைசேர்த்த
வலி சுமந்த மானுடர் ஈழத்து இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர்கள்
குறைவு. மட்டக்களப்பில் மிகு குறைவு. இது மூத்த எழுத்தாளர் அன்புமணியின் கூற்று.
இந்தக்குறையைப் போக்கும் வகையில் நிறைவான က္ကံပြု၍ “4(2င့2 சிறுகதைத் தொகுதி ஒன்றை "வலி சுமந்த மானுடம்’ ந்ேது ஜரீ என்ற தலைப்பிட்டு 2012 ஜனவரி - 29 அன்று வையே பெரியகல்லாற்றில் வெளியிட்டு வைத்துள்ளார் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த ஆத்மராஜா றுத் சந்திரிக்கா.
சுயமுயற்சியில் புத்தகத்தை வெளியிட்டுள்ளதுடன் வெளியீட்டு விழாவையும் தனி ஏற்பாட்டில் சுதந்திரமாக செய்துள்ளது விசேட்
9 D8FD.
தனது இலக்கிய முயற்சிக்கு ஆதரவளித்தவர்களை அடிமனதில் நிறுத்தி அதிதிகளாக அவர்களையே அழைத்து அவர்களை மட்டுமல்ல இலக்கிய நண்பர்களையும் சங்கமிக்கச்செய்தது அவரது ஆளுமைகசூம ஆறறலுககும சானறு பகரநதது.
நூலாசிரியையின் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து வைத்த வண.பொன். J.ஆனந்தராஜாவை பிரதம விருந்தினராகவும், தனது ஆசிரியர்களில் ஒருவரான மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி எஸ்.பாக்கியராஜா, இலங்கை வை.எம்.சி.ஏயின் தலைவர் பெலிசியன் பிரான்சிஸ் ஆகியோரை சிறப்பு அதிதிகளாகவும், தனது கல்லாரியின் முன்னாள் முதல்வரும் தனது ஆசிரியருமான அருட்சகோதரர் கலாநிதி S.A. மத்தியு F.C ஆகியோருக்கே முக்கியமளித்து முன்னுரிமை கொடுத்து அதிதிகள் வரிசையில் அழைத்த அனைவரையும் அமரவைத்தது நூலாசிரியையின் நன்றியுணர்வையும், தன்னடக்கத்தையும் வெளிப்படுத்தியது. நூலாசிரியையின் வெற்றியில் இதுவும் ஒன்று.
மூத்த எழுத்தாளரும் சிறுகதைத் தொகுதி வெளிவரத் தூண்டியவர்களில் ஒருவருமான அன்புமணி அவர்களுக்கு நிகழ்வின் தலைமையை அலங்கரிக்கச் செய்து முதல்மரியாதை செலுத்தியதும் முன்மாதிரியானது.
“செங்கதிர்” ஆசிரியர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணனுக்கு நூல் ஆய்வுரையையும் சிரேஸ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் (வருகைதராவிட்டாலும் கூட), எழுத்தாளர்கள் எஸ்.அரசரெத்தினம், நவாஸ் செளமி ஆகியோருக்குச் சிறப்புரையும் எழுத்தாளர் ரவிப்ரியாவுக்கு வரவேற்புரையும் ஆற்றுவதற்குத் தேர்ந்தெடுத்ததன்
620கள் Dirá 202
 

மூலம் உள்ளுர் இலக்கியக் கர்த்தாக்களுக்குக் கெளரவம் அளித்துள்ளார். இதுவும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
மற்றும் அதிதிகள் அனைவரும் உரையாற்றியோரும் ‘வலி சுமந்த மானுடம் தொகுதியை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்த போதும் அவர் களின் முடிவாக ஒட்டுமொத்தமாக பின் வருமாறே முன்வைக்கப்பட்டது. யுத்தகாலத்தில் மானுடம் பெற்ற வலிகள் நேர்கோட்டில் நின்று வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மனித நேயமும் மனித தர்மமும் எல்லா கதைகளிலுமே இழையோடுகின்றன. அரசியலுக்கு அப்பால் யதார்த்தமாகவும் நேர்மையாகவும் இன, மத, பால், வயது வேறுபாடின்றி மானுடத்தின் வலிகளை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார். யுத்தகால இலக்கியங்களில் இது வித்தியாசமானது. உணர்வுகளைத் தூண்டாமல் மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் மானுட வலிகளை மட்டும் உணர்வு பூர்வமாக அனுபவித்து எழுதப்பட்டவை.
அத்துடன் பிரதம விருந்தினர் கெளரவ விருந்தினர் மற்றும் வீரகேசரி
முகவர் பி.வேலாயுதபிள்ளை நூலாசிரியையாலும் அவரது
குடும்பத்தவராலும் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டதும்
சேட அம்சமாகும்.
- Jollifluurt
69வது olf) 200

Page 34
/ என்ன சின்னவா, அபினக் கரச்சிக்)
குடிச்சவனப்போல தூங்கித்துங்கி gload-x. வீரக்கு வாறா! என்ன நடந்தது? அடடே நானும் மறந்துபொயித்தன்! ராவு சிவராத்திரியெலுவா! கோயிலில \{ போயிருந்து சாமம் சாமமா நடந்த Y பூசையெல்லாத்தையும் நித்திர శీషి முழிச்சிருந்து பாத்து, கடவுளையும்
கும்பிட்டிருக்காபோலக் கிடக்கு. Johnsorsair
என்ன விடியவிடியக் காசிவச்சிக் கடதாசி விளையாடினணியா? அப்ப கோவில் பக்கமே போகல்லப்போல! நல்ல புதினம் இது வருசத்தில வாற சிவராத்திரியெலுவா! இப்படிக் கடதாசிக்கூட்டம் வஜளையாடினா எப் பிடிடா சினி னவா கடவுளர் உங்களுக்கெல்லாம் படியளக்கப்போறார்? விடிய விடியக் கோவிலுக்கு முன்னால ஒரு கூத்துக் களரியக்கட்டி நல்லதொரு கூத்தப்பழக்கி ஆடி அரங்கேற்றியிருக்கலாமே! கூத்தும் பாத்தாச்சி சாமியையும் கும்பிட்டதாச்சி சேச்சே நீங்கலெல்லாம் உருப்பட மாட்டயள்டா. ராவெல்லாம் எல்லாக் கோவில்களையும் ஒரே ரெலிவிசன் சத்தமாத்தான் கேட்டுது. மூணுநாலு உதவாத சினிமாப்படத்தை யெல்லாம் போட்டு இந்தச் சனங்களெல்லாம் என்னபாடத்தான் பட்டுதுகள்!
அந்த நாளையில ஊடுடா ஆம்புள பொம்புளயளெல்லாம் சேர்ந்து தாயக்கட்ட எறிஞ்சி விளையாடுவாங்க. கூத்துப்பழக்கி ஆடுவாங்க. இப்ப ஒண்டுமில்ல. கடதாசிக் கூட்டமும், ரெலிவிசனும் தூள்பறக்குது.
நம்மட பழைய ஆக்கள் இப்பிடியான நல்லநாள் பெருநாளில கிராமம் கிராமமாக சனங்களைச் சேத்துவெச்சி கலையள வளத்ததோட மட்டுமில்ல சனங்களுக்குள்ள ஒத்துமையையும் வளத்தாங்க. இப்ப எல்லாத்தையும் தலகீழாமாத்திப்போட்டு கேளிக்கையிலேயே காலத்த ஒட்டுறாங்க; இதனாடித்தானே சின்னவா சனங்கள்ட வாழ்க்கையெல்லாம் திசமாறி அநியாயமாக அழிஞ்சிபொயித்து. ஒத்துமையாக ஒரு குலத்தேங்காய்போல சீவிக்கவேணுமெண்டு பிரசங்கம் செய்யிற அளவுக்கு நிலம வந்து பொயித்து. என்ன சின்னவா, எண்ட கதையக் கேக்காம தூங்கி உழுறா? என்ன ஓடிப்போய் ஆலமரத்துக்குக்கீழ படுக்கப் போறயா? சிவராத்திரியெண் டா ராவு, பகலெல்லாம் கண்முழிச்சித்து கடவுளத் தியானிச்சிக் கொண்டு இருக்க வேணும். அப்பதான் ஒள்ளுப்பமெண்டாலும் பலன்கிடைக்கும். சரி நீ போய் என்ன இழவையெண்டாலும் செய். நான் வரப்போறன். പ്ര
தி ”ܓܠ
憩 ܢ-  ܼ 艇 69 na Défi 202 (gt. தமிழ்ச சிங்கன்
 
 

“செங்கதிர் ஆண்டுச் சந்தா : ரூ.1000/-க்குக் குறையாத இயன்ற அன்பளிப்பு
* "செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் நேரில் வழங்கலாம்.
அலிலது
* மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
இல . 13100158588996 க்கு வைப்பிலிடலாம். People's Bank (Town Branch) Batticaloa. Current account No.: 113100 138588996 - For bank deposit
அலிலத * அன்சல் அலுவலகம், மட்டக்களப்பில் மாற்றக் கூடியவாறு
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For money orders
* காசோலைகள்/காசுக்கட்டளைகளை தகோபாலகிருஸ்ணன் எனப் Gujba, Cheques/Money orders in Favour of T.Gopalakrishnan

Page 35