கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2007.07-08

Page 1

NS
S.
ܠ .
২

Page 2
x *சோளீஸ் *சேட்
சுடிதார் *டிரவுசர் “ஸ்கேட் & பிளவுஸ் *பேபி சூட்
*ேசிறுவர் சிறுமியருக்கு ஏற்ற ரெடிமேற் ஆடைகள்.
யாவற்றையும் ஒரே இடத்தில் தெரிவு செய்ய இன்றே விஜயம் செய்யுங்கள்.
E -சஜா ரெக்ளில்
- இல: 34 நவீன சந்தை உட்புறம் LLeLeLeeLeLeeLekeLeLeeLeAeAeA
* வீடியோ, ஓடியோ CD மூலம் றெக்கோடிங்
செய்து கொடுக்கப்படும்
* புதிய பழைய பாடல்கள் CDயில் இருந்து
நேரடியாக பதிவு செய்து தரப்படும்.
ද් பழைய, புதிய படங்கள் மற்றும் நட்சத்திரகலை நிகழ்வுகள் என்பன CD கொப்பிகள் மூலம் வாடகைக்கு விடப்படும்
சாவகச்சேரி வீதி,
 
 

ஜிவநதி
Sonnel - 0
பிரதம ஆசிரியர்கள் :
சின்னராஜா விமலன்
கலாமணி பரணிதரன்
நிருவாக ஆசிரியர்:
துரைராஜா இராஜவேல் ஆலோசகர் குழு:
திரு.தெனியான்
திரு.குப்பிளான் ஐ.சண்முகலிங்கம்
திரு.கி.நடராஜா தொடர்புகளுக்கு :
கலை அகம்
சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார்வீதி
அல்வாய்.
தொலைபேசி 0775991949
07769.91015
E.mail : jeevanathi (@yahoo.con. Web : WWW.Jeevanathi.Com பதிப்புரிமை: கலை அகம் வெளியீடு
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும் படைப் புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
ஆசிரியர்
கருத்துக்களுக்கும்.
R?
i தியினுைள்ளிே.
கவிதைகள்
அஜந்தகுமார் -06 மேமன் கவி -07
வேல்நந்தன் -12 GaFIT.LI -13 ஆர்.வேல் -18 சின்னராஜன் -26 : விமலன் -39 Mለ : : கட்டுரைகள் 8 மனோன்மணி சண்முகதாஸ் -08 ; செ. கிருஷ்ணராஜா -08 கி.நடராஜா -14 ; டொக்ரர் எம்.கே. முருகானந்தன்-15 செ. சேதுராஜா -27 $ க. திலகநாதன் - 40
நேர்காணல்
செங்கை ஆழியான் -21 $
சிறுகதைகள் $ குப்பிளான் ஐ. சண்முகனின் -18 தெணியானின் -31
நூல் மதிப்புரை 一44
அட்டைப்படம் : ரமணி

Page 3
ஜீவநதி 2
ஜீவநதி (கலை இலக்கிய இருதிங்கள் இதழ்) அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர்
தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எணர்னம் செழித்திட ஊற்றி ஊற்றி
புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன் -
பிர்வாகிக்கும் ஜீவநதி
கலை இலக்கிய ஆர்வலர்களின் ஆவலுக்கு விருந்தாகவும் படைப்பாளிகளின் ஆக்கச் சிந்தனைகளுக்கு வடிகாலாகவும் பல்வேறு கலைகளின் வெளிப்பாடாகவும் ஜீவநதி ஊற்றெடுக்கின்றது. இக்கட்டான ஒரு கால கட்டத்தில், பல சிரமங்களுக்கு மத்தியிலும் இருதிங்கள் இதழாக ஜீவநதி பிரவாகிக்க எம்மாலான சகல முயற்சிகளையும் முன்னெடுப்பதென இளைஞர்களாகிய நாம் இச்சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். சிறு சஞ்சிகைகளை வெளிக்கொணர்வதிலுள்ள சவால்களை உணர்ந்த நிலையிலேயே ஜீவநதி வெளிவருகின்றது. பல்வேறு உள நெருக்கீடுகளுக்கு மத்தியிலும் கூட வாசிப்பு ஆர்வம் குன்றாத காரணத்தினால் கொழும்பிலிருந்து கொண்டுவரப்படும் தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளை அதிகவிலை கொடுத்து வாங்கும் எமது வாசகர்களின் நிலைகண்டு யாழ்ப்பாணத்திலிருந்தே ஒரு சஞ்சிகையை வெளிக் கொணர்ந்தாலென்ன? என்று சிந்தித்தோம். அதன் வெளிப்பாடே 'ஜீவநதி'
இச்சஞ்சிகை குறுகிய சில வரம்புகளுக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாது இந்நாட்டின் அனைத்து இலக்கிய நெஞ்சங்களையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளும். சகலபாகங்களுக்கும் இச்சஞ்சிகையினை விநியோகம் செய்வதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.
இச்சஞ்சிகையில் இந்நாட்டின் பல பாகங்களிலும் வாழும் பல மூத்த எழுத்தாளர்களின் ஒத்துழைப்பைப்பெற்று ஆக்கங்களை இடம் பெறச்செய்துள்ளோம். அட்டைப்பட ஓவியத்தை ஒவியர் ரமணி வரைந்து தந்துள்ளாா.
ஜீவநதியைத் தொடர்ந்து ஊற்றெடுக்க வைப்பதிலுள்ள சிக்கல்களை நாம் உணர்கின்றோம். ஆயினும், படைப்பாளிகளின் நல்லாதரவும் விளம்பரதாரர்களின் அனுசரணையும் வாசகள்களின் ஆக்க பூர்வமான ஆதரவும், விமர்சனங்களும் தொடர்ந்து எமக்குக்கிடைக்கும் பட்சத்தில் எமக்குவரும் சவால்களை நாம்வெற்றி கொள்வோம். எமக்கு புத்துயிர்ப்பும் புதுத்தெம்பும் வழங்கும் ஆலோசகர்களாக எழுத்தாளர் தெணியான், எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகலிங்கம், தமிழ் வல்ல ஆசான் திரு.கி.நடராஜா ஆகியோர் இருந்து வருகின்றனர். கணினி வடிவமைப்பு செய்து அச்சுப்பதிப்புச் செய்த திரு. மு.சுந்தரலிங்கம் அவர்களின் பங்கும் இச்சஞ்சிகை வெளியீட்டில் காத்திரமானது. இச்சஞ்சிகை பற்றிய உங்கள் ஆலோசனைகளும் விமர்சனங்களும் தரமான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.
- ஆசிரியர்கள் -

ஜீவநதி 3
O p () O இலக்கியக் கல்வி எதற்காக?
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் இன்று உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ்மொழி தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது. செம்மொழிகளுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. நீண்டகால வரலாற்றையும் இலக்கிய வளத்தையும் கொண்டதாக விளங்குகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பாரம்பரியமுடைய மொழியாக இனங்காணப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புப் பெற்ற தமிழ் மொழியிலே எழுந்த செந்நெறி காட்டும் இலக்கியங்களை நாம் ஏன் கற்க வேண்டும்? என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது. இதற்கான தெளிவான மறுமொழியைக் கூறும் பணியே இச்சிறு கட்டுரையின் இலக்காகும்.
குறிப்பாக இளந்தலைமுறையினர் இலக்கியக்கல்வி பற்றிய போதிய விளக்கமின்மையால் அதனை வெறுத்து ஒதுக்கவும் முற்படுகின்றனர். பழந்தமிழ்க் கவிதைகளை சுவைக்கவும் நயக்கவும் அவர்களுக்கு ஓர் ஆற்றுப்படுத்துகை தேவை. இலக்கியம் எந்த மொழியில் எழுதப்பட்டாலும் ஓர் இலக்குடனே எழுதப்படுகிறது. மேலும், அது காலத்தைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகிறது. குறிப்பாகத் தமிழிலக்கியம் மக்கள் வாழ்வியலைத் தெளிவாக விளக்கிக் காட்டும் பண்புடையது. பழந்தமிழ் இலக்கியம் செய்யுள் வடிவில் எழுந்து வாய்மொழியாகப் பேணப்பட்டு வந்த எமது 'முதுசொம்' ஆகும். இம் முதுசொத்தைக் கையளிப்புச் செய்யும் தலைமுறைக் கடமையை நாம் மறந்து விடக்கூடாது.
விஞ்ஞானத்தின் விந்தையிலே மூழகிக் கிடக்கும் இளந்தலைமுறையினரை இலக்கியப் பயிற்சிக் களமொன்றில் ஈடுபாடு கொள்ளச்செய்ய வேண்டும். அதற்கெனச் சில சிறப்பு வெளியீடுகள் தேவை. வாசிப்புப் பழக்கத்தை முன்னிறுத்தி இலக்கிய நயங்கூறும் நூல்களையும் சிறப்புக்கட்டுரைகளையும் வெளியிடவேண்டும். அவற்றினுடாக அவர்களுக்கு இலக்கியக் கல்வியின் தேவையையும் உணர்த்த முடியும். இந்த முயற்சியின் உருவாக இக்கட்டுரை எழுத்துருப் பெற்றுள்ளது.
'சங்க இலக்கியம்' என்ற தொகுப்பு நூல்களில் 'குறுந்தொகையும் ஒன்று. குறுகிய அடியளவு கொண்ட ட'டல்களின் தொகுப்பு நூலாகையால் 'குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. அதில் ஒரு பாடல் மனித வாழ்வியலின் நயத்தக்க நாகரிகத்தை தெளிவாகக்காட்சிப்படுத்தியுள்ளது. பாடலைப் பாடியவர் பெரும் பதுமனார் என்னும் புலவராவார். ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை மிக நயமாகப் புலவர் பாடலாகப் பாடியுள்ளார். பாடலின் மொழிநடை கடினநடையாக இன்று தோன்றினாலும் தமிழ்மொழியின் தனித்துவத்தைக் காட்டும் செந்தமிழ் நடையாக அமைந்துள்ளது.
'வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்அடி மேலன சிலம்பே நல்லோர் யார் கொல்? அளியர்தாமே - ஆரியர் கயிறு ஆடுபறையின் கால்பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும் வேல் பயில் அழுவம் முன்னியோரே' (குறுந்தொகை:7)

Page 4
ஜீவநதி 4.
இப்பாடல் விளக்கும் காட்சி ஒரு நாட்டு மக்கள் வாழ்வியலை, பண்பாட்டு நடைமுறைகளைக் காட்டுகிறது. ஒரு வீட்டில் இளம் பெண் தாய்தந்தையள் அறியாமல் வீட்டை விட்டுச் சென்று விட்டாள். அவளைத் தேடி அவளுடைய வளர்ப்புத்தாய் செல்கிறாள். பாலை நிலத்து வழியே செல்லும் வளர்ப்புத்தாயைக் கண்டவர்கள் கூறியதாக இப்பாடல் பாடப்பட்டுள்ளது. வழிப்போக்கள்கள் தாம் கண்டகாட்சியை விளக்கமாகக் கூறுகிறார்கள்.
வில்லை ஏந்தி ஒருவன் போனான். அவனுடைய கால்களில் வீரக்கழல்கள் இருந்தன. தோளைத் தொடும் வளையை அணிந்த ஒருத்தி அவனுடன் கூடிச் சென்றாள். அவளுடைய மென்மையான அடிகளின்மேல் சிலம்புகள் இருந்தன. அந்த நல்லவர்கள் இருவரும் உனக்கு என்ன வகையில் உறவினரோ? அந்த இருவரும் இரக்கத்திற்கு உரியவர்களே. வழிப்போக்கிலே சென்றவர்களின் நிலையை நாகரிகமாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதற்கூடாக வீரக்கழலையும் சிலம்பையும் குறிப்பாகச் சொல்வது இங்கு கவனத்திற்குரியது. அக்காலத்தில் வீரன் காலில் வீரக்கழல் அணிவது மரபு. ஆனால் 'காலில் சிலம்பணிந்த பெண் ஆண்மகனோடு வழிநடையிற் போவது மரபன்று. திருமணச்சடங்கிற்கு முன்பு சிலம்பைக்கழற்றும் சடங்கு ஒன்றுமுதலில் நடைபெறும். எனவே இப்பெண் திருமணம் செய்யாமல் ஆணுடன் வீட்டார் அறியாமல் களவாகச் செல்கின்றாள். திருமணத்திற்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிப்பர் என எண்ணியே இந்த ஆணும் பெண்ணும் பாலைநிலத்து வழியே விரைவாகச் சென்றார்கள் என்பதை வழிப்போக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர்.
தாம் கண்ட காட்சியைச் சொல்லும் வழிப்போக்கள் அக்காலத்துப் பண்பாட்டையும் பாடலில் பதிவு செய்துள்ளனர். உள்ளுறையாகவே சமூகத்தின் ஒழுக்க மீறல்களைச் சுட்டிக்காட்டினர். திருமணம் முடிக்காத குமரிப்பெண்ணை அவளுடைய அணிகலன்களால் அடையாளம் கண்டு கொள்ளமுடியும். அதேபோல இளமகனுடைய தொழிலையும் அணிகலனால் அறியமுடியும். பெற்றோருக்குத் தெரியாமல் உடன்போக்கிலே செல்லும் இளையவர் இருவரும் இரக்கத்திற்கு உரியவர். எனவே அவர்களைக் கண்டும் காணாதது போல விட்டுவிடுவதே நல்லது. இளையவரின் பண்பாட்டு மீறல் நயமாகக்களையப்படவேண்டும். இதனையே வழிப்போக்கள் வளர்ப்புத்தாயிடம் எடுத்துக் கூறுகின்றனர்.
சமூக ஒழுகலாற்றை மீறும் இளம் தலைமுறையின் நிலையை முதியோர் நன்கு உணரவேண்டும். பெற்றோரிடம் தம்முடைய உள்ளக்கிடக்கையைச் சொல்லமுடியாமல் தவிக்கும் இளையோர் பலருளர். அவர்களை வழிப்படுத்தும் முறைமையைப் பாடல் விளக்குகிறது. அதனை ஓர் இயற்கை நிலையில் வைத்துப் புலவர் காட்டியுள்ளார்.
பாலைநிலத்திலே வெப்பத்தின் காரணமாக வாகை மரங்களிலேயுள்ள வெண்மையான நெற்றுகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. காற்றுப் பலமாக வீசும் போது ஒன்றோடு ஒன்று மோதுவதால் எழும் ஒலி, வடநாட்டிலிருந்து வந்த ஆரியர் ஆடுகின்ற கலநிகழ்வின் போது ஒலிக்கின்ற பறை ஒலியை ஒத்திருக்கின்றது. கயிற்றின் மீது நின்று ஆடுகின்ற போது அடிக்கப்படும் பறைஒலியின் ஒலிப்புப்போல காற்றில் ஆடும் வாகைநெற்றுகள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்கின்றன. அதைவிடப் பாலை

ஜீவநதி 5
நிலப்பரப்பிலே நடப்பதற்கு இடையூறாக முள்ளுடைய மூங்கிற் செடிகள் செறிநது கிடக்கின்றன. அத்தகைய பாதையிலே ஆரியர் கயிற்றில் நின்று ஆடுவது போல இருவரும் நிதானமாக நடந்து செல்கிறார்கள். அவர்களுடைய களவொழுக்கத்தை ஊரவர் அறிந்து கொண்டமையால் பழிதூற்றுகின்றனர். 'ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் காதல் மரபிலே அவர்கள் உறுதியாக நிற்பதால் இணைந்து சென்று இல்லறம் செய்ய எண்ணிச் செல்கின்றனர். சமூக ஒழுக்கத்தைப் பேண அந்த இளையவர்கள் எடுத்த உறுதியானமுடிவு இது. இந்த உறுதிநிலைப்பாட்டை வழிப்போக்கள்களான முதியவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். அதனால் வளர்ப்புத்தாயிடம் அவர்களை நல்லோர் எனப் பாராட்டிக் கூறுகின்றனர்.
பாடலில் 'காலன கழல்' என்பது இளைஞனுடைய வீரத்தையும் குடிச்சிறப்பையும் விளக்கிநிற்கின்றது. 'வில்லோன்' என்பதால் அவனுடைய ஆற்றலைச் சிறப்பித்துக் கூறினர். 'தொடியோள்' என்பதால் பெண்ணின் இளமைப்பருவம் சுட்டப்பட்டுள்ளது. "மெல்லடி மேலன சிலழ்பே' என்ற தொடர் அப்பெண் மணமாகாதவள் என்பதை விளக்குகிறது. 'நல்லோர்’ என்ற சொல் அவர்கள் இருவரும் மணம் செய்து இல்லறம் நடத்தும் உறுதியுடன் இருப்பதை நன்கு உணர்த்துகின்றது. ஊரவர் கேட்டுப் பெற்றோர் இவர்களைச் சினந்தமையால் இருவரும் உடன்போக்கை நாடினர். இதனை வழிப்போக்கள் எடுத்துக் கூறும் போது வளர்ப்புத்தாய் உணர்ந்து கொள்கிறாள்.
இப்பாடல் இளம் உள்ளங்களை எவ்வாறு விளங்கிக் கொள்ளவேண்டும் என்பதை வழிப்படுத்துகிறது. வாழவேண்டிய இளம்பருவத்து மக்களைப் பெற்றோர் எவ்வாறு பேணவேண்டும் என்பதை மிக நயமாக உரைத்துள்ளது. "சமூகமதிப்பு என்னும் நிலையில் உண்மையாக அன்புநெறி நிற்கும் இளமையைக் கடிந்துரைப்பது தகாது. இயற்கை நிலை நின்று அவர்களுடைய உணர்வுகளையும் செயற்பாடுகளையும் பெரியோர் கண்காணித்து நயமாக அவர்களை வழிநடத்தவேண்டும் என இப்பாடல் வழிகாட்டுகிறது.
சங்கப்பாடல்களில் பொதுவாக மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அவற்றை முதல், கரு, உரி எனப் பெயரிட்டுள்ளனர். முதல் என்பது பாடலில் வரும் நிலத்தையும் பொழுதையும் விளக்கிநிற்கும். கரு என்பது அந்த நிலத்திலேயுள்ள மரம், செடி, கொடி, புள், பறவை, விலங்கு என்பவற்றை எடுத்துக் காட்டும். உரி என்பது அந்நிலத்து மக்களின் வாழ்வியலை விளக்கி நிற்கும். எனவே ஒரு பாடலில் ஒரு முழுமையான வாழ்வியல் நெறியும் உணர்வும் ஒருங்கிணைந்திருக்கும். இப்பண்புதான் சங்கப்பாடலைக் காலம் கடந்தும் நிலை பெறச் செய்துள்ளது. அதனை எல்லோரும் கற்றறியவேண்டும் என்பதே புலவனின் இலக்காகும்.
இன்றைய வேகமான வாழ்வியலில் இத்தகைய சமூகவயப்பட்ட வழிகாட்டல் ஒன்று தேவைப்படுகிறது. வாழ்வின் செல்நெறியைச் செம்மைப்படுத்த இலக்கியக் கற்கை நெறி ஒன்று இன்றியமையாதது. இளமையும் முதுமையும் ஒன்றுபட இது வழிவகுக்கும். ஆனால் இக்கற்கை நெறியைக் கல்விக் கூடங்கள் மட்டும் நிறைவாகச் செய்ய முடியாது. பொது அமைப்புகளும் இப்பணியைத் தலைமேற் கொள்ளவேண்டும். ஊரகநிலையில் இலக்கியத்தின் சுவையை ஊட்டி மக்களை அதன் பால் ஈர்க்கும்

Page 5
ஜீவநதி 6
பணியை இளைஞரும் முன்னெடுக்க வேண்டிய காலம் இது. முதுமை, தளர்ச்சியாலும் தொடர்பாடல் முரண்பாட்டாலும் இப்பணியைக் கைநெகிழவிட்டுள்ளது. அதனால் சமூகநெறிப்படுத்தலில் ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பிறமொழிச் செல்வாக்கும் பிறபண்பாட்டுத் தாக்கமும் சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைத்துள்ளன. இந்நிலையில் ஆரியர் ஆடும் கயிற்றுநடனம் போலப் பணிசெய்ய இளந்தலைமுறை முன்வரவேண்டும்.
இலக்கியக் கல்வி எதற்காக எனக் கேட்பவருக்கு இளமையின் ஆற்றலால் மறுமொழி கூறமுடியும். மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மீளக் கொணர்ந்து இலக்கிய நயத்தை உணரச் செய்யும் கற்பித்தலை உடனடியாகச் செய்யவேண்டும். சிறியதொரு எழுத்துரு, அதன் தொகுப்பான சஞ்சிகை ஒன்று இதற்குப் பக்கபலமாய் அமையலாம். நூல் நிலையங்களிலும் கேட்போர் கூடங்களிலும் பொதுமன்றங்களிலும் வாழ்வியலைச் செம்மைப்படுத்திய இலக்கியங்களை ஏற்றமுறையில் எடுத்து அறிமுகம் செய்யும் 'புதிய கல்விநெறி' ஒன்று இளைஞர்களால் கட்டி எழுப்பப்படவேண்டும். அதன் மூலம் சமநிலை உருவாகி மக்களுடைய வாழ்வியலானது நீரோடை போல அமைதியாகச் செல்லமுடியும்.
O
பல்லி + வீடு + நான் + அவள்
(1) என் வீட்டுக் கண்ணாடியின் மீது U6b65 துள்ளி விழுந்து ஓடுகிறது என் விம்ப முகத்தில் பல்லி ஊர்கிறது நான் சிரிக்கிறேன் பல்லி வெருண்டு வாலறுந்து ஓடி சுவரில் ஒட்டியபடி ஏதோ "சொல்கிறது (என்ானத் திட்டுகிறதா?) மீண்டும் சிரிக்கிறேன் கண்ணாடி உடைந்து விழுகிறது கண்ணாடித் துலன்டமெங்கும் வாலறுந்த பல்லியின் விம்பங்கள்
(2)
பல்லி சொல்லுவதும் பல்லி என் மேல் விழுவதும் தோழமையாகி விட்ட வாழ்வில் என்னோடு கைகோர்த்து களைத்தபடி, கடைக்குச் சாப்பிட வந்தவள் கையில் எடுத்து பிய்த்த வடைக்குள்
கருகிய பல்லியைக்கண்டு கண்அதிர்ந்து அருக்குழித்தாள் அவளின் முகம் பல்லியின் முகமாய் மாறி ஏதேதோ சொல்லத் தொடங்க கடையையும் எங்களையும் பலர் மொய்த்தனர் வாலறுந்த பல்லிகளாய் நாமிருவரும் வெளியேறினோம் கடை இறுக்க மூடப்பட்டது
(3) மீண்டும் மீண்டுமாய் பல்லிகளின் வாழ்க்கைக்கும் என் வாழ்க்கைக்கும் முடிச்சுக்கள் இறுகுகின்றன பஞ்சாங்கமும் கையுமாய் என் நாள்ப்பொழுதுகளை நிறைக்கிறேன்
நாள்கள் . வாரங்கள் . மாதங்கள் நீள்கின்றன
ஒண்டிக் கிடக்கிறேன் ஒரு பல்லியாய் என் வீட்டோடு
-த. அஜந்தகுமார் -

ஜீவநதி
மேமவிகவியின் இரு கவிதைகள்
இருப்பின் தோல் தொடர்ந்து உரிக்கிறேன் தொடர்ந்தும். முடிவிலியாய் இருப்பின் தோலின் நிறம் பிடிபடவே இல்லை.
ஊனம்
தனிமை பயம் அச்சுறுத்தல்
தொடரும் பட்டியலில் தேடிப் பார்த்தாயிற்று பிடிபடவே இல்லை அது.
தொலைந்து போன தனிமையான இரவுகளாய் உரத்துப் பேசும்
இருளின் பிடியிலும் தோலோடு இறுகிப் போனது இருப்பு.
உடையக் காத்திருக்கும் பனித்துளிகளாய் தயாராயிருந்த ஆவேசங்கள்மீது கனத்த இருக்கையிட்டு அமர்ந்திருந்தது அதிகாரம் இருப்பின் தோல் மீதும்.
நிச்சயமாயிற்று - அனாதரவான மரணங்களும் உருக்குலைந்த நிலையிலான பிறப்புகளும்.
நிழலிலும். நதியின் ஓட்டமாய் பிணங்கள் நதிகளில்
இப்பொழுதெலாம் இல்லை
காட்டுக் கூச்சலாய் தொடர்தலில் விரியும் சப்தங்களின் இழைகளிலும் இல்லாததாய்
ஆகிப் போனது விடிவு
இம்சைகளில் களிப்பூறும் பிரியங்களுக்கு மனசில் குதூகலம்.
ஒன்று மட்டும் உறுதியாயிற்று மரணத்தின் முகம் கூடவே வந்தது நிழலிலும்.
6ன்னுடைய மிகச் சிறந்தகதை எதுவெனில் அதன் மீது எனது பெயர் இருக்கக்கூடாது. அதைப் படித் துவிட் டு மக்கள் இது அப்பாஸின் கதை என்று சொல்ல வேண்டும். என்னுடைய உருவம் என் எழுத்துக்களில் பிரதி பலிக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.
- கே.ஏ.அப்பாஸ் -

Page 6
ஜீவநதி 8
wlILLINAJVTLöflwliu சோழர்காலக் குடியிருப்புக்கள்,கிராமங்கள் மற்றும் பண்பாடு பற்றிய ஓர் உசாவல்
பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா வடமராட்சியின் அமைவிடம் அதன் பண்பாட்டுத் தனித்துவத்திற்கான ஒரு பிரதான காரணி எனலாம். குடாநாட்டிற்குள் ஒரு குட்டிக்குடாநாடாக அமைந்து விட்ட புவியியல் தோற்றம் காரணமாகவும் அதன் வட கிழக்குக்கரையோரமாக LANDING CRAFT போன்று அமைந்துள்ள கடலையும் குடியிருப்புக்களையும் இணைக்கும் நீண்டமணற்பரப்பும் அம்மணற்பரப்பு அடித்தளத்தில் கொண்டிருக்கும் நன்னீர் வளம் காரணமாகவும் வடமராட்சிப்பரப்பின் பண்பாட்டுப்பரிணாமத்தில் (CULTURALEVOLUTION) மிகவும் தனித்துவமான பண்புகள் மேலோங்கக்காரணமாக இருந்தன. வரலாற்றுக்கு (pi}UL85sT6)LD தொட்டு போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலம் வரைக்கும் வடமராட்சி கிழக்குப்பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் மணற் தொடுவாய்கள் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்குரிய இயற்கையான ஓர் ஊடகமாக தொழிற்பட்டு இருந்தமைக்கு ஏதுவாகக் காணப்பட்டது. நாகர் கோயில் மணற்பரப்பில் காணப்படும் கெளத்தன்துறைமுகமும், அத்துறைமுகத்துடன் இணைந்து காணப்படும் செங்கட்டியினாலும், சுடுமண் வளையங்களினாலும் அமைக்கப்பட்ட புராதன நன்னீர்க் கிணறுகள் என்பவை வடமராட்சி கிழக்கின் பண்பாட்டு உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியிருந்த முறையை அண்மைக்காலத்தில் அவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வுகளின் ஊடாக உணரமுடிந்தது அதேபோன்றவொரு தொழிற்பாட்டினை கந்தவனக்கடவையில் அமைந்திருந்த கோயிற்துறைமுகமும் ஆற்றியிருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. வடமராட்சியில் அமைந்துள்ள இந்த இரண்டு புராதன துறைமுகவாயிலுாடாகவே பண்பாட்டு அம்சங்கள் உள்வாங்கப்பட்டும் வெளியே செலுத்தப்பட்டும் இருக்கக்கூடிய நிலையை அப்பிரதேசம் பெற்றிருந்தமையை தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன சோழப் பெரும் பேரரசுகாலத்திலும் இவ்விருதுறைமுகநகள்களும் சமுத்திரவியற் பண்பாட்டினை
உள்வாங்கக் காரணமாக இருந்திருக்கின்றன.

ஜீவநதி 9
வடமராட்சி மீதான சோழமன்னர்களின் செல்வாக்கு
தொண்டை மண்டலத்தில் பல்லவ
அரசவம்சத்தினரிடமிருந்து சோழவம்சத்தினர் ஆட்சியதிகாரத்தினை கைமாற்றிக் கொண்டபோது கடல்கடந்த நாடுகளிலும் பல்லவருக்குக்கீழிருந்த ஆதிக்கப்பிரதேசங்களும் சோழருடைய அதிகாரத்திற்குள், அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரப்பட்டது என்பதே யதார்த்தமாகும். யாழ்ப்பாணக்குடாநாட்டினுள் வடமராட்சிப்பரப்பும் அவ்வாறு பல்லவருடைய ஆதிக்கவரம்பிலிருந்து சோழவம்ச ஆதிக்கவரம்பிற்குள் கையகப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றையே காண்கிறோம். (கி.பி.6ஆம் நூற்றாண்டிலிருந்து பூநகரி உள்ளிட்ட யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பிரதேசம் பல்லவவம்சத்தின் அரசியல்மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருந்த ஓர் உள்நாட்டு அரச வம்ச பிரதிநிதியின் முகாமைத்துவ வண்ணத்தின் அடிப்படையிலிருந்தே அது சோழவம்சத்தினருக்கு உரியதாக கைமாற்றப்பட்டது என்பது புதிய வரலாற்றுத்தகவலாகின்றது)
வடமராட்சியிலுள்ள ஆதிகோவிலடி (பாலாவி), அயட்டியப்புலம் (ஆதித்தியன்புலம்), கங்குண்டான் (கங்கைகொண்டான்),ஆரியவளவு, வீரணன்கல் (வீராணம்கல்), பெரியமாவில், சின்னமாவில், கோட்டுத்தெரு , ஈக்கோட்டை (சாக்கோட்டை), தும்பளை, அந்தணன்திடல் அத்தாய், சோழங்கன, தம்பசெட்டி, வியாபாரிமூலை ஆகியகிராமங்கள் சோழர்காலக்குடியிருப்புகளுக்குரிய தொல்லியல் சான்றுகளையும் பண்பாட்டுக்கருவூலங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதனை அவதானிக்கமுடிந்தது.
வடமராட்சியில் கண்டெடுக்கப்பட்ட சோழர் நாணயங்கள்
வடமராட்சிப்பிரதேசத்தில் கி.மு.6ம் நூற்றாண்டிற்குரிய வெள்ளி உலோகத்தாலான அச்சுக்குத்தப்பட்ட நாணயங்களிலிருந்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் காலம் வரைக்குமான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்குப் பிரதேசத்திலிருந்தே புராதன நாணயங்களையும் ஐரோப்பிய ஆட்சிக்காலத்துக்குரிய நாணயங்களையும் அதிகளவில் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. சோழர்காலத்துக்குரிய நாணயங்களை வடமராட்சியடங்கலுமாக பரவலாக பெற்றுக்கொள்ள முடிந்தது. சோழர்கால நாணயங்களை ஈந்த மையங்களாக கோட்டுத் தெரு, மாயக்கைதம்பசெட்டிப்பிரதேசம், பொலிகண்டி பாலாவிப்பிரதேசம், கங்குண்டான் (கங்கைகொண்டான்), வியாபாரிமூலை, வடமராட்சி கிழக்கில் அம்பன், குடத்தனை நாகர்கோயில் மற்றும் குடாரப்பு, வெற்றிலைக்கேணி, உடுத்துறைஆகிய மையங்கள் காணப்படுகின்றன. 'இராஜராஜ எனப்பொறிக்கப்பட்ட நாணயங்களே அதிகளவில் பெற்றுக்கொள்ளப்பட்டன. கோட்டைத்தெருவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நாணயமானது நானாதேசிகள் என்ற வணிக கணத்தாரது காளியுருவம் பொறிக்கப்பட்ட ஒரு நீள்சதுரநாணயமாகும். (இதனை யொத்த இன்னொரு நாணயமானது தென்னிலங்கையில் அம்பாந்தோட்டையிலுள்ள ஒரு வயற் பரப்பிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.)
யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஈழச்சோழர் மரபினை மிகவும் துல்லியமாகக்காட்டும் பண்பாட்டுக்கோலங்களை வடமராட்சியிலுள்ள குறிப்பிட்ட கிராமங்களில் இற்றைவரைக்கும் அடையாளம் காணமுடிகின்றது தம்பசெட்டி - வியாபாரிமூலை மற்றும் ஊறணி

Page 7
  

Page 8
ஜீவநதி 12
முடிவுரை
சோழர்காலக் குடியிருப்புக்கள், கிராமங்கள், மற்றும் பண்பாடுபற்றிய இச்சிறுஆய்வுக்கட்டுரையில் வடமராட்சிப்பரப்பு மீதான ஒரு பெரிய ஆய்வு நெறிமுறையை வகுத்து மிகவும் விரிவாக அப்பண்பாட்டுப் பகைப்புலத்தினுள் அடங்கிக் காணப்படும் விடயங்களை வெளிக் கொணரப்படவேண்டிய தேவையை உணர்த்தும் நோக்கு ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆலங்கட்டையிலிருந்து புறப்படும் சோழப்பெருந்தெரு வொன்று (கோட்டைத்தெரு) வீராணன் கல் போன்ற கிராமங்களை ஊடறுத்து கரவெட்டிக் கிராமத்தினைச் சென்றடைந்தமையைக் காண்கின்றோம். கோட்டைத் தெரு சோழர்காலத்து வாணிப மையமொன்றின் இருப்பிடமாக, நீதிவழங்கும் மன்று ஒன்றின் தரிப்பிடமாகத் திகழ்ந்திருந்தமையினை அங்கிருந்து பெற்றுக் கொண்ட தொல்லியற்சான்றுகள் உணர்த்துகின்றன. எதிர்காலத்தில் தொல்லியலும் வடமராட்சியின் பண்பாட்டுத் தொன்மையும் தொடர்பாக ஆராய வேண்டிய பொறுப்பும் எம்மிடம் காணப்படுகிறது. காலம் அனுமதி தந்தால் நாமும் எம்கடனை நிறைவேற்றுவோமாக!
O D D
tog)O6UAGT 661Gussoff......
காலம் மாறிப்போக கோலம் மாறிப்போன வாழ்வு உறவுகளின் திசைப்பரம்பல் எங்கெங்கோ தொலைந்துபோய் மனிதம் என்ன இங்கு நடக்குதென எண்ணிப் பார்ப்பதற்குள் எல்லாமே முடிந்து விடும் வாழ்வு
இலட்சியங்களுக்காய் வாழத்தொடங்கி இலட்சங்களுக்கு அடிமையாய் நேசங்கள் கூட நிறம் மாறிய போலியாய் பாசங்கள் கூட பணத்தின் கைக்கூலியாய் வேசம்போடும் மனிதர்களே இங்கு வெற்றி பெற்றவராய். கருவிகள் மனிதரை ஆள குருவிகள் போலிருந்த வாழ்வு குருவிச்சையாகி கோலம் மாறிப்போய். எங்கள் வீட்டு அரசிகளின் கோலங்களும் மாறிப்போய் ஆனந்தமான வீடு இன்று யாருக்காகவோ அழ
அஞ்சலியாய் ஆகிப்போய் கண்டதே காட்சியென
கொண்டவன்தனை மறந்து கோலம் மாறிப் போனதாய்.
காலம் மாறச் சிலகோலம் மாறுந்தான் மறுப்பதற்கில்லை - அதற்காய் சீலம் மாற்றிச் சிறப்பை இழப்பதா விடை பிழைத்துப்போன கேள்வியாய் வாழ்விங்கு நடை பிழைத்துப்போய் படையலைப் பிழை சொல்வதா இல்லை படைத்தவனைப் பிழை சொல்வதா புரியவில்லை
வேல்நந்தன்.
மதிப்பீட்டுக்கு உங்கள் இருபுத்தகங்களை அனுப்பிவையுங்கள்

13
abaflybge
தியாகுவுக்கு அச்சகத்தில் வேலை மாலை ஆறுமணியாகும் வீடு வர குளித்து உடைமாற்றி வாகையடியிலிருந்து கொண்டலடிக்கு உலாப்போவார் வாயில் சுருட்டு வீண் பேச்சுக்கிடையாது புன்சிரிப்பு சிலவேளை தலையசைப்பு!
கொண்டலடியில் ஒருமணித்தியாலம் போகும் எட்டுமணிக்கு மேலை தியாகு திரும்பும் வாகையடிக்கு இருட்டில் சுருட்டின் ஒளியில் ஆனால்
இப்போ பேசிக்கொண்டு பாடிக்கொண்டு ஒரேகலகலப்பு!
ஒருநாள்
அல்ல ஓர்இரவு என்படலையில் தியாகு! தம்பி,சுருட்டு நூர்ந்து போச்சு நெருப்புக் கொண்டுவா!' தீப்பெட்டியோடு போனன் தியாகு தனியேதான் நிற்குது
என்'சேவை முடிந்தபின் கேட்டன் 'அண்ணை உங்களோடு வந்ததார்? ஒருத்தருமில்லை! ‘காதரிலை தெளிவா விழுந்துதே இன்னொரு குரல்! 'இல்லை, அது நான்தான்! நம்ப முடியவில்லை தியாகு விளக்கினார்: "பொழுதுபட
நான்
அரையைக் காலைப் போடுவன் குடிச்சிட்டு மற்றவையோடை பேசப்போனா. அதனாலை எல்லா ஞாயத்தையும் எனக்குள்ளேயே பேசுவன் வாதாடுவன்!
(68|65.!
எனக்குள்
ஒரே பிரமிப்பு! வெவ்வேறு குரலில் வாதாடி வந்தது இந்த ஒரு மனிதனா?
, (وی திறமை எங்கெங்கெல்லாம் ஒளிந்து கிடக்கிறது! அதை வெளிக்கொணரும் ஒரு பொருளும் உளதே!
சோ.பத்மநாதன்.

Page 9
થ્રીજાI58
14
சிறுகதை Uற்றிய சிறுகுறியே
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்ற வாசகம் சிறுகதை இலக்கியத்திற்கு முற்றிலும் பொருந்தும். சிறுகதை உருவத்தில் சிறியது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஓர் உணர்ச்சிதான் சிறுகதையின் ஆட்சி எல்லை. நான் படித்து அனுபவித்த சில சிறுகதைகளைக் கொண்டு சிறுகதைக்கு அவசியமான குணாம்சங்களை சிறிய வடிவத்தில் இங்கு தர விரும்புகின்றேன்.
சமூக மக்களின் வாழ்க்கை யிலிருந்து இலக்கியம் பிறக்குமாயின் சமூக வலுவைப் பிரதிபலிக்கும் கதைகளே சிறந்த சிறுகதைகளாக அமையும். மாறும் சமுதாயத்திற்கேற்ப சிறுகதை தன்னையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மனித உருவத்திற்கு எலும்புக் கூடு இன்றியமையாதது போல சிறுகதைக்கு உள்ளிடு இன்றியமையாதது. உள்ளிடாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சி அல்லது கருத்து கதையை வளர்த்துச் செல்லும் ஆற்றலுடையதாக அமைதல் வேண்டும்.
கதையின் கருத்து உள்ளிடாக அமையும் போது கதைக் கருத்தின் சுவை குன்றாத குறுக்கமே தலைப்பாக அமைதல் வேண்டும். அப்பொழுதே சிறு அளவிலான எண்ணம் படிப்போர் மனதில் எழுந்து கதையை வாசிப்பதற்கு தூண்டுதலாக அமையும்.
கி.நடராஜா.
யாதாயினும் ஒரு கருத்து, ஓர் உணர்ச்சி இவற்றினூடாக சிறுகதை நிகழும் போது அக் கருத்துக்கோ, உணர்ச்சிக்கோ மாறுபட்ட எதுவும் கதையில் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும். கதையின் ஒருமைப்பாடுதான் ஊக்குவிக்கப்பட வேண்டும். கதை எழுதும் ஆசிரியன் தன்னை வாசகனாகவும் மாற்றிக் கொண்டுதான் கதையை எழுத வேண்டும். கதையின் அமைப்பு முறையில் தொடக்கநிலை, வளர்ச்சிநிலை, முடிவு நிலை இவற்றுக்கிடையே ஒரு சமநிலை இருப்பது விரும்பத்தக்கது.
சிறு கதையில் ஒரு சில பாததிரங்கள் இடம் பெற்றிருந்தாலும் பாத்திரப்படைப்பு அதன் குணப்பண்புகளை நிறைவு செய்வதாக இருத்தல் வேண்டும். ஆற்றல் வாய்ந்த சில சொற்களால் அது நிறைவு பெற வேண்டும். பாத்திரங்களின் பண்பிற்கும் கதைக்கருத்திற்கும் பிரிக்க முடியாத தொடர்பு இருத்தல் வேண்டும்.
கதையில் கையாளப்படும் மொழி நடை கதையின் உணர்வு நிலையை பிரதிபலிக்க வேண்டும். சிறுவாக்கியங்கள் கதைக்கு தனி வேகத்தைக் கொடுக்கும், பாத்திரங்களின் உரையாடல் மட்டுமே பேச்சு மொழியுடையதாக அமைதல் வேண்டும்.

ஜீவநதி 15
வலிகலில் வலியது துெவிோ
டொக்டர். எம்.கே.முருகானந்தன்
'வலிகளில் வலியது எதுவோ’ என திருவிளையாடல் திரைப்படத்தில் நாகேஸ் கேட்பது போல உங்களைக் கேட்டால் உங்கள் விடையெதுவோ எனக்குத் தெரியாது. ஆனால் சிவபெருமானாக இருந்தால் கூட சிறுநீரகக் கல் குத்து (Renal Colic) என்பதுதான் விடையாக இருக்கும் என்பது நிச்சயம். நின்றாலும் நடந்தாலும் படுத்தாலும் அழுத்தினாலும் எது செய்தாலும் அடங்காமல் துடிக்க வைப்பது அக் குத்து அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் கொடுரம் புரியும். பித்தப்பைக் கற்களால் ஏற்படும் வலி கூட அதேபோலக் கடுமையானவை என்பது உண்மைதான். ஆனால் இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற வெவ்வேறு நோய்களாகும்.
& :
:
சிறுநீரகக் கல் குத்து வயிற்றின் வலது அல்லது இடது பக்கத்தில் வரும். அதாவது வயிற்றின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் சிறுநீரகங்களில் அல்லது N சிறுநீரகக் குழாய்களில் ஏதாவது ஒன்றில் இாக்கும் கற்கள்
காரணமாக ஒரு பக்கத்தில் வலி வரும. நாரியிலிருந்து Yస్ట్రో வயிற்றுக்கு அல்லது வயிற்றிலிருந்து சலவாயிலுக்கு
செல்வது போன்றே பெரும்பாலும் இவ்வலி இருக்கும். சல எரிவும் கூட ஏற்படலாம். சிலவேளைகளில் இரத்தமும் கலந்து போகலாம். சிறுநீரில் கிருமித் தொற்று ஏற்படுவதும் உண்டு. வலியின் கொடுமை உங்களை உடனடியாகவே வைத்தியரிடம் இட்டுச் செல்லும், ஊசி போட்டு அல்லது மலவாயில் ஊடாக மாத்திரை வைத்து வலியை உடனடியாகவே தணிப்பர்.
ஆயினும் வலி நிற்பதுடன் சிகிச்சை நிறைவடைந்து விடுவதில்லை. கல் இருக்கிறதா? அது எங்கிருக்கிறது? அதன் பருமன் என்ன? என்பன போன்றவற்றை ஆராய்ந்து கண்டு பிடிப்பதிலிருந்தே முறையான சிகிச்சை தொடங்கும்.
எப்படித் தோன்றுகின்றன?
போதிய நீர் அருந்தாமையாலும் கடும் வெயில் அல்லது கடுமையான
வேலையால் உடல் நீர் வியர்வையாக வெளியேறுவதாலும் சிறுநீரின் செறிவு அதிகரிக்கும். இதனால் கல்சியம் படிந்து சிறுநீரகத்தில் சிறு கற்கள் உருவாகும். இவை பெரும்பாலும் கல்சியம் ஒக்ஸ்லேட் அல்லது கல்சியம் பொஸ்பேட் (Calcium Oxalate அல்லது phosphate) கற்களாகவே இருக்கும்.
மிகச் சிறிய கற்கள் சிறுநீருடன் வெளியேறிவிடும். சற்றுப் பெரிய கற்கள் சிறுநீரகத்தில் இருந்து வெளியே வந்து சிறுநீர்க் குழாயினுள் (Ureter) தங்கிவிடும். இக்கற்கள் கீழிறங்க முற்படும்போது முடியாமல் திணறும்போதே அத்தகைய கடும் வலி ஏற்படுகிறது. வலி உண்டாவது மட்டுமே பிரச்சினை அல்ல, கற்கள் அடைத்துக் கொண்டிருப்பதால் சிறுநீர்க் குழாய் வீக்கமடையும். இதனால் உண்டாகும் பின் அழுத்தத்தால் சிறுநீரகம் பாதிப்படையும், உயர் இரத்த அழுத்தமும் உண்டாகும். சிறுநீரில் கிருமித் தொற்றும் ஏற்படலாம்.
இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் அக்கற்களை வெளியேற்ற வேண்டும். எப்படி?

Page 10
ஜீவநதி 16
பரிசோதனைகள்
இக் கற்களைக் கண்டு பிடிக்க அல்ரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை. எக்ஸ்ரே, நிறம் ஊட்டி செலுத்தப்பட்டு எடுக்கப்படும் (IVP) விசேட எக்ஸ்ரே, சி .டி (CT Scan) போன்ற பல பரிசோதனைகள் உள்ளன. இப் பரிசோதனைகள் மூலம் கற்கள் எங்கே இருக்கின்றன? அவற்றின் பருமன் எவ்வளவு? அவற்றால் சிறுநீரகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? போன்ற பல முக்கிய விடயங்களை அறியலாம். சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் கல் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த இரசாயனப் பொருள் எதுவாக இருக்கிறது என்பதையும் அறியக் கூடியதாக இருக்கும். சிகிச்சை முறைகள்
சிறிய கற்களாக (5மி.மி க்கு குறைவான அளவுடையவை) இருந்தால் போதியளவு நீர் (தினமும் சுமார் மூன்று லீட்டர்) அருந்தினால் தானாகவே அவை சிறுநீருடன் வெளியேறக் கூடும். அவ்வாறு வெளியேறாவிட்டால் அவற்றை அகற்ற பாரிய சத்திரசிகிச்சைகளே சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்டன. ஆனால் இப்பொழுது மிக இலேசான சிகிச்சை முறைகள் உள்ளன. உடலுக்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் அதிர்ச்சி அலைகளை உடலூடாகச் செலுத்தி கற்கள் மீது கூர் முனைப்படுத்துவதன் மூலம் அவற்றை சிறு துணிக்கைகளாக உடைப்பது முதல் முறையாகும். பின் அத் துணிக்கைகள் சிறுநீருடன் தாமாகவே வெளியேறும். Extracorporeal shockwave lithotripsy (ESWL) 6160TJU(6b g3 da5&605 (p60Bg5T66 பெரும்பாலும் செய்யப்படுகிறது.
சிறுநீரகக் கல் பெரிதாக இருந்தால் அல்லது முற் கூறிய முறை மூலம் உடைப்பதற்கு கடினமான இடத்தில் இருந்தால் கல் இருக்கும் இடத்திற்கு நேராக முதுகுப் புறத்தில் ஒரு துவாரம் இட்டு சிறுநீரகத்திற்குள் (Nephrostomy tube) Qb6(3y storolls (gp160)u Gaglig5. அதனூடாக கல்லை அகற்றுவார்கள். இம்முறையை Percutaneous nephrolith^tomy 66örg GaFT6bgpJ6)ITTa56í. சிறுநீரகக் குழாயின் கீழ் அல்லது நடுப்பகுதியில் உள்ள கற்களை அகற்ற கமரா பொருத்தப்பட்ட (Ureteroscope) குழாய்களைப் பயன் படுத்துவார்கள் சிறுநீர் வாயிலூடாக கமரா பொருத்தப்பட்ட குழாயைச் செலுத்தி, சிறுநீர்ப்பையை அடைந்து அங்கிருந்து அதனை சிறுநீரகக் குழாய்க்குள் செலுத்தி கல்லை சிறுகூடு போன்ற உபகரணத்தின் உதவியோடு அகற்றுவார்கள். கற்கள் தோன்றாமல் தடுக்க முடியுமா?
கற்கள் தோன்றாமல் தடுப்பதற்கு நீங்கள் செய்யக் கூடிய முதல் முயற்சி போதிய நீராகாரம் அருந்துவதுதான். தினமும் மூன்று லீட்டருக்கு குறையாத நீர் அருந்துங்கள்.
 

ஜீவநதி 17
கல்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளான பசுப்பால், நெத்தலி, முருங்கை, கீரை போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் கல்சியம் கற்கள் உற்பத்தியாவதைத் தடுக்க முடியும் என முன்பு வைத்தியர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால் கல்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளால் கற்கள் தோன்றுவதில்லை என அண்மைய ஆய்வுகள் சொல்கின்றன. ஆயினும், கல்சியம் மாத்திரைகளை உட்கொள்வது கல்சியம் கற்கள் உற்பத்தியாவதை ஊக்குவிக்கும் எனப்படுகிறது.
கல்சியம் ஒக்ஸ்சலேட் கல்லுள்ளவர்கள் பீட்ருட், சொக்கிளேட், கொக்கோ, கோப்பி, தேநீர், விதைவகைகள், கீரை போன்றவற்றை குறைவாகச் சாப்பிட வேண்டும். ஆயினும், அவற்றை உட்கொள்வதை முற்றாக நிறுத்தக் கூடாது. ஏனெனில், அவ் உணவுவகைகளில் எமது உடலுக்கு அத்தியாவசியமான பல போசாக்குப் பொருட்கள் ഉ_ബങ്ങ്.
D D
பொய்யகல நீயேசு
பொய்யின் கனிகள் புசிபடும் உலகில் மெய்யாய் நீயுமோர் பொருளென ஆயினை கண்ணே
கால்களை நனைத்து மீளும் அலைகள் கால்களில் ஈரம் இன்னும் பிசுபிசுக்கிறது
உனக்கும் எனக்கும் இடையில் ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து கொண்டிருந்ததாய் உரக்க உரக்கச் சொல்கிறேன் மயிர்கொட்டி கூட நமக்கிடையில் வாழவில்லை என்கிறாய்
நீ அவனின் கைத்தலம் பற்றி அவன் முகம் பார்க்கிறாய் என் இதயநாளங்கள் வெடிக்கிறது கண்களில் உப்பு விளைகிறது எமக்கிடையில் பறந்த வண்ணத்துப் பூச்சி உங்கள் இருவரின் கைத்தலம் பற்றலில் நசிபடுகிறது
செட்டை பிய்கிறது
நீ கெட்டிக்காரி
அவனுக்குத் தெரியாமலே செட்டைகளை ஒளித்து விடுகிறாய்
எனினும் பொய்யின் கனிகள் என்றோ ஒரு நாளில் அறுபடும் கண்ணே
தொலைபேசியில் நடுச்சாமத்தில் நீ சொன்ன பிறந்த நாள் வாழ்த்தும் எது கதைக்கிறோம்
என்று தெரியாமலே கதைத்துக் கொண்டிருந்த பொழுதுகளும் 'உண்மை சொல்லடா நம் உறவின் பெயர்தான்
என்ன” என்று சிரிப்போடு நிறைந்த காதல்முகமும் பொய்யின் புழுதியில் மூடிப் போயினதோ? நீ எல்லோரிடமும் பொய் சொல்கிறாய் ஒரு பொய்யில் இருந்து பல பொய்கள்.
பொய்களை சிருஷ்டிக்கும் பொம்மை வாழ்வில் நீ என்ன செய்வாயடி கண்ணே! பொய்யின் பூமியிலும் பொம்மைகள் உடைபடும்! புனிதவேர்களில் காதல் என்றும் வாழும்!
நீ எனக்குள் சிரித்தபடி கதைபேசுகிறாய் பொய்யகல நீ பேசு!
ஆர்.வேல்

Page 11
ஜீவநதி
18
மழை தூறிய ஒரு மாலைப் பொழுது
விழாவிலிருந்து இடைநடுவிலே கிளம்ப வேண்டியதாயிற்று. அப்போதுதான் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி இருந்தன. உடனே கிளம்ப மனம் வரவில்லை. கடுங்கோடையில் எதிர்பாராது வந்த தூறல் மழையில் நனைந்து கொண்டே மேடையில் நிகழ்ந்து கொண்டிருந்த நடன நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
'ஆனந்த நடனம் ஆடினார் பெண் குரலின் இழைவோடு இசை மிதந்து கொண்டிருந்தது. மீசை அரும்பாத பதினைந்து பதினாறு 6) upg) வாலிபனொருவன் ஆடிக்கொண்டிருந்தான் குழைந்து வளைந்து துள்ளிக்குதித்து அபிநயம் பிடித்து.
துாரத் தில் முழங்கிக் கேட்டது.
மாஸ்டர் மழை பிலக்கப் போகுது இதையெல்லாம் பார்க்கச் சரிவராது போவோமா' அருகிலிருந்த பூபாலரத்தினம் சேர் கேட்டார். அவரும் லேஞ்சியை விரித்துத் தலையில் பிடித்துக் கொண்டே இருந்தார்.
"இண்டையிலிருந்து ஊரடங்குச் சட்ட தையும் ஒரு மணித்தியாலம் குறைச்சு ஏழு மணியாக்கிப் போட்டானாம் அப்போதே நேரம் ஐந்தரை மணியாகி இருந்தது. மனமில்லாமலே கிளம்பினோம்.
தலையில் லேஞ்சிகளுடனும் குடைகளுடனும் சேலை தி தலைப்புகளுடனும் அந்தரத்தில் இருப்பது போலிருக்கும் கூட்டத்தினரை ஊடறுத்து சைக்கிள்கள் விட்ட இடத்தை நோக்கி விரைந்தோம். அவர் விட்ட இடத்தில் அவரது சைக்கிளைக் காணவில்லை
இடி
குப்பிளான் . ஐ. சண்முகன் (எனது சைக்கிள் விட்ட இடத்திலேயே இருந்தது) சைக் கிளைக் காணாத தவிப்பில் அவர் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். 'சைக்கிள்களை ஒழுங்குபடுத்தேக்கை பொடியள் உங்கினைதான் விட்டிருப்பாங்கள் வடிவாய்ப் பாருங்கோ சேர்’ நான் தூரத்துக்கெல்லே போகவேணும் வாறேன். அவரின் பதலைக் கூட எதிர்பாராது சைக்கிளில் ஏறி மிதித்தான். நேரம் ஐந்தே முக்காலை அண்மித்துக் கொண்டிருந்தது. மழைத்தூறல் மேலும் வலுத்திருந்தது. தூரத்தில் இடி முழங்கிக் கேட்டது.
“இணர் டைக் கு குடை யும் கொணி டுவரேல் லை. நனைஞ சு கொண்டாதல் கேள்வியூவிற்கு முந்தி வீட்டை போய்சேர வேணும்'
சைக்கிளை ஓங்கி மிதித்தான். மழை த துTறலPல வீதியின் கோடைப்புழுதி அடங்கியிருந்தது. அங்கொருவர் இங்கொருவராக மனிதர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். அப்போதும் வீதிக்கரையில் ஒரு மாடு படுத்திருந்தது சாகவதமாக அசை போட்டுக் கொண்டிருந்தது. “இப்படி ஏதாவது விழாக்களிலைதானே பழைய முகங்களைப் பாக்கலாம்
விழாவின் விருந்துபசாரத்தின் போது அருகிலிருந்த பூபாலரத்தினம் சேர் சொன்னது ஏனோ அப்போது நினைவில் இடறிற்று. 'பாவம் மனிசன் அவரை அந்தரத்தில் விட்டிட்டு ஒடி வாறேனே.
நான் ஒரு திசையிலும் அவர் வேறு திசையிலும் தானே போக வேணும் மனசு சமாதானம் சொன்னது.

efalo
திடீரென ஜிறேக்கை அழுத்தி மீண்டும் மின்னஸ் பிளிட்டது. வேகத்தைக் குறைத்தான் குறுக்கே பாய்ந்த வெகுதூரத்தில் மெல்லிய இடிச்சத்தம்
நாய் வாலைப் பின்ன்ம் தால்களுக் கிடையில் செலுத்திக்.கொண்டு அவனைப் பார்த்து ஊழளையிட்டுக் குரைத்தது.
அவன் சுதாகரித்துக் கொண்டான். தன்னைப் பற்றிய நினைவுகளுக்கு மீண்டான் கையை உயர்த்தி நேரத்தைப் பார்த்தான் மழைநேர மாலையின் மைம்மல் இருட்டில் உரோமன் எழுத்துக்களில் நேரம் சரியாகத் தெரியவில்லை. உற்றுப் பார்த்ததில் ஆறு பத்து என உணர்ந்தான். 'கடவுளே என முணுமுணுத்துக் கொண்டே மேலும் வேகமாக உழக்கினான் மழைக் காற்றில் பனங் கூடல்கள் பேரோசை எழுப்பிக் கொண்டிருந்தன. பிரதான வீதியிலிருந்து இறங்கி பனங்கூடல்களை ஊடுருவிச் செல்லும் குறுக் குப் பாதையரில் வநீ து கொண்டிருந்தான். மழைத்துறலோடு கூடிய கடுங்காற்றில் பனங்கூடல்கள் பேரோசை எழுப்பிக் கொண்டேயிருந்தன.
மழை மேலும் வலுத்திருந்தது. சேர்ட் பொக்கற்றிலிருந்த அடையாள அட்டையும் சில பணத்தாள்களும் வேண்டியவர்களின் முகவரிகள் அடங்கிய குறிப்புக்களும் நனைந்து ஊறி விடுமே என்று பயமாக இருந்தது. தொட்டுப் பார்த்ததில் சிறிய பொலித்தீன் பாய்க்கில் அவை பத்திரமாக இருப்பதில் நிம்மதியாக இருந்தது.
முக்கியமாக அடையாள அட்டை, எங்கள் வாழ்வே அதில்தானே அடங்கியிருக்கிறது.
தூரத்து வானச்சரிவில் மின்னல் வெட்டிச் சிரித்தது. மழைக்காற்றில் மெல்லிய குளிர் ஏறியிருந்தது. சுருக்கம் விழுந்த வெணி தாடி அரும் பரிய பூபாலரத்தினம் சேரின் முகம் நினைவில் வந்தது என்ன மிடுக்கான மனிசன். பாவம் வயது போகப்போக.
கேட்டது. பனிக்கிடலால் மிதந்து மீண்டும் பிரதான வீதியரில் ஏறியிந்ந்தான். வீதியோரத்து வேலிகளின் பூவரச மரங்க்ள் காற்றில் அசைத்து கெராண்டிருந்தன. சுங்கும்
நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நேரம் ஆறரை மணியாக இருக் குமென நினைத்தான்.
திடீரென பிறேக் பிடிக்க வேண்டி வந்தது. வீதியின் குறுக்கே முள்ளுக்கம்பி கட்டப்பட்டு இருந்தது. அதன் ஒரு கரையில் பழைய சிவத்த துணியொன்று தொங்கிக் கொண்டிருந்தது.
'சை வாகனத் தொடரணி நேரம் போலும். இன்னும் எவ்வளவு நேரம் தான் இதில் நிற்க வேண்டி வருமோ?
எதிரே முக்கிய வீதியில் வாகன நடமாட்டமே இல்லை மனித முகங் களையே காணக்கிடைக்கவில்லை மழை தூறிக் கொண்டிருக்கின்ற இந்த ஏகாந்தப் பெருவெளியில் அவன் ஒருவனே தனியனாக.
ஒரு நம்பிக்கையில் பக்கத்து குறுக்கொழுங்கையில் சைக்கிளைத் திருப்பினான். தூரத்தில் தாயும் இரண்டு பெண் பிள்ளைகளுமாகக் குடைகளில். அவர்களை அண்மிக்கையில் பெரியவள் நிமிர்ந்து பார்த்தான்.
சேர் இந்தக் குடையைக் கொண்டு போங்கோவேன்' அவனது மாணவி. விரித்த படியே குடையை நீட்டினாள்.
‘எப்பிடித் திரும்பத் தாறது பிள்ளை'
'சந்தியிலை பாரதி வீட்டை குடுத்து விடுங்கோவன்
நன்றி சொல்லிக் கிளம்பினான். குறுக்கொழுங்கையில் முக்கிய வீதியை ஊடறுத்து கடப்பதற்கான பயணம்.

Page 12
§ඛJ5ණි.
நேரம் ஆறேமுககால் ஆகியிருக்குமா? குறுக் கொழுங்கையிலும் குறுக்கே கட்டியிருக்கும் முள்ளுக் கம் பரி. என்ன செய் வதென தயங்குகையில் முக்கிய வீதியில் மழைக்கோட்டில் எதிர்ப்பட்ட மனித முகம். இராணுவத் தொப்பி.
முக்கிய வீதியை குறுக்கே ஊடறுத்து செல்ல வேண்டுமே யெனச் சைகையில் கேட்டான்.
முடியாதென மறுத்து சைகை செய்தவன் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான்.
விரிந்த குடையில் என்ன செய்வதென்று தயங்கி நிற்கையில் அருகே வருமாறு கையைக் காட்டினான். முள்ளுக் கம்பியின் கீழால் குனிந்து சைக் கிளை உருட்டிச் செல்கையில் 'ஒரு நிமிடத்தில் விரைவாக ஊடறுத்துச் செல்' என சிங்களத்தில் சொன்னான்.
முக்கிய வீதியில் சிறிது தூரம் சென்றே மறுபுறம் திரும்ப வேண்டும். திரும்பும் இடத்தில் நீட்டிய துப்பாக்கிகளுடன் இரண்டு இராணுவ வீரர்கள். மனது திக்கென்றது. மின்னலுடன் இடி முழங்கிக் கேட்டது. "அவர்களுக்குச் சொன்னதா' இவனும் சிங்களத்திலேயே கேட்டான்.
'பிரச்சினையில்லை கெதியாகச் செல்'
சைக்கிளில் ஏறி உழக்கினான். அவனுக்கும் அவர்களுக்கும் நன்றி சொன்னான்.
ஒழுங்கையில் திரும்பியதும் மீண்டும் எதிர்ப்பட்ட குறுக்கே கட்டப்பட்ட முள்ளுக் கம்பியைக் குனிந்து கடந்தான்.
20
எதிரே ஏதோ விசாரித்த மனிதருக்கு சந்தோஷமாகவே பதில் சொன்னான். விரிந்த குடையின் மெல்லிய பச்சை நிறக் குடைத்துணியில் மஞ்சள் கலரில் பறக்கும் வண்ணத்திப்பூச்சிகள்.
கேளாத ஒலியாய் மனதினில் 'ஆனந்த நடனம் ஆடினார். எதிரே மழைத்தூறலில் நனைந்து குளிர்ந்து கொண்டிருக்கும் பிள்ளையார் கோவில் கோபுரம், தூரத்து வானச்சரிவில் சிரிக்கும் மின்னல், ஒழுங்கையோரத்து குடிசை வீட்டு வாசலில் கைகாட்டிச் சிரிக்கும் குழந்தை, பக்கத்து வெறும் வளவில் பால் குடிக்கும் கன்றுக்குட்டி, மல்லிகைப் பூவினதோ
தாய்ப்பசுவின் மடியில்
முல்லை மலரினதோ கிறங்க வைக்கும்
6TF6D6.
வீடு வந்து விட்டது.
வாசலில் மனைவியும் மகளும், பக்கத்தில் வாலாட்டும் நாய்க்குட்டி,
மின்சார வெளிச்சத்தில் வீட்டுச் சுவர் மணிக் கூட்டில் நேரம் ஏழுமலசியாகிக் கொண்டிருந்தது.
எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏனென்றால் நான் எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றியும் எழுது வதில்லை.
-மார்க்ஸிம் கார்க்கி

ஜீவநதி 2
9. நேர்காணல்
செங்கை ஆழியான்
சந்திப்பு - சி.விமலன்
ஈழத்து இலக்கிய செச்னிகரியில் புனைகதை சார்ந்த மற்றும் புனைகருைசாரா படைப்பாக்கத்தின் மூலமும் தொகுப்பாக்க முயற்சிகர் மூலமும் இலக்கியவட்டத்திலும் சரி, கல்விப்புலத்திலும் சரி தனக்கென்றொரு இடத்தை எவருமே எட்டமுடியாத இடத்தில் வகித்துவருபவர் மூத்த தலைமுறை படைப்பானி செங்கை ஆழியான். இதுவரை 35 இர்கும் மேற்பட்ட நாவல்கரையும் 5சிறுகதை தொகுதிகரையும் 15 குறுநாவல்கரையும் எழுதியுள்ள அன்னாரை நேர்காணல் செய்வதில் ஜீவநதி பெருமை அடைகிறது.
01. உங்களுக்குள் ஒரு படைப் பாளி உருவெடுத்ததை நீங்கள் எந்தக் காலப்பகுதியில் உணர்ந்தர்கள், அத்துடன் உ. களைச் சுய மதிப்பீட்டுககு உட்படுத்தி அதில் முன்னேற்றம் பெறுவதற்காக நீங்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டீர்கள் எனவும் கூறமுடியுமா?
இக்கேள்வியின் முதற்பகுதி சற்றுச்சிக்கலானது. நான் குழந்தையாக இருக்கும் போதே என் தாயார் பல்வேறு கதைகளை எனக்கு ஒவ்வொரு நாளும் கூறுவார். எட்டாம் ஒன்பதாம் வகுப்புக்கள் படிக்கும் போது எனது தாய் மாமன் அருளம்பலம் புராண இதிகாசக் கதைகளைச் சுவையோடு எடுத்துரைப்பார். இந்த அனுபவம் அனைவருக்கும் உரியது தான். ஆகவே சிறு வயதிலிருந்தே கதை கேட்கும் ஆவல் என்னுள் உருவானது. பாடசாலை நாட்களில் அதிர்ஸ்டவசமாக எங்களுக்குக்கிடைத்த ஆசிரியர்கள் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக அமைந்தனர். ஏரம்பமூர்த்தி மிக முக்கியமானவர் ஈழத்துறைவன் என்ற புனைபெயரில் அறியப்பட்டவர். மறுமலர்ச்சி எழுத்தாளர் சங்கத்தை வரதரோடு ஆரம்பிப்பதில் ஆரம்பத்தில் முக்கியம் வகித்தவள். அவர் வகுப்பிலேயே ஒரு நூலகத்தை ஆரம்பித்து நல்ல இலக்கிய நூல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கம்புனிஸ்ட கார்த்திகேசன் எங்களுக்கு ஆசிரியராகக் கிடைத்தார். அவரிடமிருந்து சமூக அமைப்பியலைப் புரிந்து கொண்டேன். இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட ஓர் இலக்கியக் கூட்டம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூயில் அன்றிருந்தது. கவிஞர் சோ.பத்மநாதன், துவைத்திலிங்கம், செம்பியன் செல்வன், அங்கையன் கயிலாசநாதன், முனியப்பதாசன் என அப்பட்டியல் நீளும். எனது அண்ணர் புதுமைலோலன் அக்காலத்தில் சிறுகதை எழுத்தாளராக விளங்கினார். அவர் வாங்கிப்படிக்காத சஞ்சிகைகளே இல்லை எனலாம். இவை அனைத்தும் என்னுள் ஆழப்பதிந்து ஒரு படைப்பாளியாக என்னை உருவாக்கியதாக நினைக்கின்றேன். நிறைய எழுதினேன். இராஜ அரியரெத்தினம், சிற்பி போன்ற படைப்பாளிகளும் சஞ்சிகை ஆசிரியர்களும் எனது எழுத்துக்களுக்குச் சரியான தடமமைத்துத் தந்தனர். எனது எழுத்துக்களை நானே சுயமதிப்பீடுசெய்ய முற்பட்ட காலம் வீரகேசரியின் பரிசு நாவலான காட்டாறு வெளிவந்த காலமாகும். நான் எழுதிய நாவல்களில் அற்புதமாகவும் தனித்துவமானதாகவும் அது அமைந்ததை உணர்ந்தேன். என் மனதில் ஆழப்பதிந்த,

Page 13
ஜீவநதி 22
காயங்களை அந்த நாவல் இறக்கி வைத்தது. நானும் எனது நாவல்களும் ஒரு சுய மதிப்பீடு தான். சிறுகதைகளில் நான் மல்லிகையில் எழுதிய 'செருப்பு' என்னைச் சிந்திக்க வைத்தது. சுயமதிப்பிடு செய்ய வைத்தது. எவருமே சிந்திக்காத எழுதாத கோணமும் பார்வையும் அதில் விழுந்திருந்தன. இவை இரண்டும் என் இன்றைய படைப்புக்களில் திருப்பங்களை ஏற்படுத்தின. இவை இரண்டும் என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய 'அக்சிடெண்ட்'டுகள் என்பேன். செங்கை ஆழியான் ஈழத்தின் தலை சிறந்த புனைகதைப் படைப்பாளி என்ற இலக்கிய ஆணவம் அல்லது தலைக்கணம் எனக்குண்டு.
02. இதுவரை சுமார் எத்தனை சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியிருப்பீர்கள் ? மேலும் அவை எத்தனை தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன?
எண்ணிக்கைகளைச் சரி வர நினைவிலெடுத்துக் கூறுவது தற்போது சிரமம். சுமார் 160 சிறுகதைகள் வரையில் எழுதியிருப்பேன். அவை "இதயமே அமைதி கொள் யாழ்ப்பாணத்து இராத்திரிகள் இரவு நேரப்பயணிகள் கூடில்லத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும் 'குந்தி இருக்க ஒரு குடிநிலம்' என்ற ஐந்து சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இன்னுமொரு தொகுதிக்குரியசிறுகதைகள் உள்ளன. 35 நாவல்கள் வரையில் எழுதியிருப்பேன். 15 குறுநாவல்கள் வரையில் எழுதியுள்ளேன். நான்கு நாவல்கள், ஒரு குறுநாவல் தொகுதி என்பன தமிழகத்தில் வெளிவந்துள்ளன. ஏனையவை ஈழத்தில் வெளிவந்துள்ளன. மூன்று நாவல்கள் வரை அச்சுருவில் வெளிவரவேண்டும். கட்டுரைகள் பல துறைகளிலும் எழுதியுள்ளேன். என்னைப்போல சமகால எரியும் பிரச்சினைகளைத் தம் படைப்புகளில் பதித்தவர்கள் மிகக் குறைவு என்பேன். ஒரு சமூகவியல் ஆவணங்களாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் என் புனைகதைகள் அமைந்துள்ளன. புனைகதை சார்ந்த தொகுப்புக்களாக 40 உம், அவை சாராத தொகுப்புக்களாக 8உம் வெளிவந்துள்ளன. இந்த எண்ணிக்கையைக் கொண்டு செங்கை ஆழியான் நிறைய எழுதுகிறார் எனக் கூறுகிறார்கள். தமிழக எழுத்தார்களுடன் ஒப்பிடும் போது நான் ஒன்றும் பெரிதாக எழுதிக் குவித்துவிடவில்லை. என்னால் எழுதாமலோ படிக்காமலோ இருக்க முடியாது. கிணறு இறைக்க இறைக்கத் தான் ஊறும். கற்பனை வறட்சியும் கால பயமும் பல எழுத்தாளர்களது பேனாக்களை மூடி வைத்துள்ளன. அதற்கு நான் என்ன செய்வது?
03. உங்களது கருத்துக்களை சமுகச் செய்திகளாக சொல்வதற்கு நகைச்சுவை, வரலாறு சமுகம், அரசியல் மற்றும் நியோ ஜேர்னலிசம் என்ற 5 வகையான நாவல்களைப் பயன்படுத்துவதாக “நானும் எனது நாவல்களும்” நூலிலே குறிப்பிட்டுள்ளிர்கள். ஜனரஞ்சக எழுத்தாளர் என்ற வகையில் மேற்போன்றவற்றில் எந்த நாவல் வகையை எழுத அதிகம் நீங்கள் விரும்புவீர்கள்?

ஜீவநதி 23
ஜனரஞ்சக எழுத்து என்று ஈழத்தில் ஒருவகைப் படைப்புகளும் அதிகமில்லை. வாசகள்களின் மலினமான உணர்வுகளுக்குத் தீனி போடுகின்ற கிளுகிளுப்புப் படைப்புகள் தாம் ஜனரஞ்சக எழுத்துக்கள். ஆரம்பத்தில் மார்க்சிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை உயர்த்த எண்ணிய ஒருசிலர் அவற்றை முற்போக்கு எழுத்துக்கள் எனச் 'சீல் குத்தினர். ஏனையவர்களின் எழுத்துக்களை அவற்றைப் படிக்காமலேயே (இது வலு முக்கியமானது) முற்போக்கு அல்லாதவை என்றும் ஜனரஞ்சகமானவை என்றும் முத்திரை பதித்தனர். இது இலக்கியத்தில் ஏற்பட்ட ஆரம்ப துரதிர்ஸ்டம். ஒருவருடைய எழுத்துக்களை விமர்சிக்க விழைபவர்கள் முதலில் அந்த எழுத்துக்களைப் பொறுமையோடு வாசிக்க வேண்டும். எனக்கு அந்தத் தகுதி இருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த 500 இற்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 400 இற்கு மேற்பட்ட நாவல்களையும் பொறுப்போடு வாசித்து உள்வாங்கியவன். ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொரு படைப்பாளியையும் குறித்து என்னால் கருத்துச் சொல்ல முடியும். ஜனரஞ்சக எழுத்து என்பதற்கு இன்னொரு கருத்தும் உள்ளது. அதிக வாசகர்களைச் சென்றடையும் படைப்புக்கள் என்பது. அவ்வகையில் எண்ணிக்கையில் அதிக வாசகப் பரப்பினை ஈழத்தில் செங்கை ஆழியான் கொண்டுள்ளான். இலக்கியம் வாசிக்கப்பட வேண்டும் என்று நம்புபவன் நான். ஒரு சிலருக்காக இலக்கியம் படைக்கப்படுவதில்லை. நாவல் வகை என்பது நாவலின் உள்ளடக்கத்தைப் பொறுத்து அமையும். எந்த வடிவத்தில் சொன்னால் சிறப்பு என்பதை முதலிலேயே நான் முடிவு செய்து விடுவேன். கடல் கோட்டை ஒரு புனைகதை சாரா நாவல் என்றால் ஏற்றுக் கொள்வார்களா?
04. பொதுவாக சரித்திர நாவல்கள் குறித்துப் பல விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ள நிலையில் உங்களது முதல் வரலாற்று நாவலான நந்திக்கடலுக்கும் பிற்படங்கள் எழுதிய கடற்கோட்டை, கந்தவேள் கோட்டம், குவேனி, ஈழராஜா எல்லாளன் போன்றவற்றிற்கும் இடையில் எவ்வாறான வேறுபாடுகளை நீங்கள் உணருகிறீர்கள்?
எந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்த இந்த மண்ணின் பழைய கதையை அறிகின்ற ஆவல் எப்பவும் நிறைவுள்ளது.வரலாற்று நாவல்களை விரும்பிப் படிக்கின்றவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். சமகால யதார்த்த நாவல்களிலும் பார்க்க நாங்கள் அனுபவிக்காத, சந்திக்காத சம்பவங்களையும் பாத்திரங்களையும் கதைகளில் சந்திக்க விரும்புகின்ற ஆவல் நிரம்பவுள்ளது. ஹரிபொட்டர் போன்ற மாயாஜாலக்கதைகள் உலகில் மீண்டும் வாசகள்களைப் பரபரக்க வைத்து வருகின்றன. 'கல்கி' சரித்திரக்கதைகளிள் முதன்மையைத் தமிழ் வாசகர்களிடையே பரப்பினார். கல்கியின் பொன்னியின் செல்வன் ஒரு 'கதாவியம்' ஆகும். கல்கியின் வாசகள் எண்ணிக்கையை ஜீரணிக்க முடியாதவர்கள் அவரின் எழுத்துக்களை ஜனரஞ்சகமானவை என்றனர். அவரைப்பின்பற்றி தமிழில் சரித்திர நாவல்கள் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இன்று அவர்களைப் போன்று சரித்திரக்கதைகள் எழுதுபவர் தமிழில் அருகியே விட்டனர். சரித்திரக் கதைகள் எழுதுவது இலக்கியத் தீட்டு என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது போலவிருக்கிறது. இந்நிலையை உருவாக்கியவர்களில் இலக்கிய

Page 14
ஜீவநதி 24
விமர்சகர்களின் பங்கு கணிசமானது. சரித்திர நாவல்கள் தலையணை நாவல்கள் என்று ஒரேயடியாக ஒதுக்கிவைத்தனர். இலக்கியம் என்பது அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பேசி அவர்களின் விடிவுக்கானது என்ற கருத்துநிலைக்காட்பட்டு இவ்வாறான கருத்தினை முன்வைத்துள்ளனர். வரலாற்று நாவல்களில் கூட அவ்வாறு கருத்துநிலைகளை முன்வைக்க முடியும் என அண்மையில் சில எழுத்தாளர்கள் காட்டியுள்ளனர். சரித்திர நாவல்கள் நவீன இலக்கிய வடிவங்களில் ஒன்று. வாசகர்களின் ரசனையை வளர்ப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றது. அரச குடும்பங்களின் மகோன்னதங்களைக் கூறுவது மட்டும் சரித்திர நாவல்களல்ல. பழைய கால சமூகத்தைக் கண் முன் நிறுத்துவதும் அதன் பணியாகும். நந்திக்கடல் என் ஆரம்ப கால முதிரா இளமைக் கனவுகளின் விளைவு. அதன் பின்னர் நான் எழுதிய கந்தவேள் கோட்டம், கடல் கோட்டை, குவேனி, ஈழராஜா எல்லாளன் என்பன நம்மைச் சீர் தூக்கி மதிப்பிடும் நாவல்கள். நாம் வந்த பாதையை திருப்பிப் பார்ப்பதோடு எதிர்காலத்துக்கு நம்பிக்கையான தடத்தைக் காட்டுவன. பாவம் விமர்சகர்கள் சரித்திர நாவல்கள் பற்றி என்ன தான் கூறினாலும் அதற்குரிய இலக்கியவிடத்தை அழித்துவிட முடியாது.
05. கலாநிதி. நா.சுப்பிரமணியன் அவர்கள் தான் எழுதிய “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ நூலில் தங்களது “பிரளயம்’ நாவலில் வரும் மகாலிங்கத்தை நெஞ்சைவிட்டகலாத பாத்திரம் எனச் சுட்டிக்காட்டியிருந்த அதே சமயம், தனிமனித தியாகங்கள் முலம் சமுதாய மாற்றத்தை எதிர் பார்க்க முடியுமா என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளார். இது சாத்தியமானதா, இது தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
நான் பிரளயம், அக்கினி, காட்டாறு போன்ற சாதிய நாவல்களை எழுதியுள்ளேன். காட்டாறு சாதிய நாவலா என நீங்கள் கேட்பீர்கள் நீர்வேலியில் ஆதிக்கச்சாதியினரின் இரவல் துண்டுக் காணியில் வாழ்ந்த தலித் சண்முகம் தனக்கென ஒரு காணியைச் செட்டிக்குளத்தில் தேடிக் கொள்கிறான். கல்வி உயர்வாலும் தொழில் மாற்றத்தாலும் சாதியத்தின் கொடுமை குறைவடையும் என்பதனை என் நாவல்களில் சுட்டியுள்ளேன். ஈழச்சமூகத்தில் அவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. யுகப்புரட்சி ஒன்று வெடித்து சமூக மாற்றம் ஈழத்தில் ஏற்படும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆதிக்கச்சாதியினரின் மனிதாபிமானமற்ற சிலர், தலித்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ள இரணகாயங்கள் அவ்வாறான ஒரு யுகப்புரட்சியை இற்றைக்கு இருதசாப்தங்களுக்கு முன்னர் எதிர்பாத்தனர். அவர்களின் படைப்புகளிலும் அவ்வாறான கருத்துக்கள் இடம் பிடித்துள்ளன. நிலமானிய சமூகத்தில் ருசியாவிலும் சீனாவிலும் இருந்த மாதிரி வர்க்க முரண்பாடுகள், இந்தியாவில் இருப்பதுபோன்ற சாதியக் கொடுமைகள் ஈழத்தில் இல்லை. ஆதலால் எனது சாதிய நாவல்கள் யதார்த்தமான தன்மைகளைப் பேசின. தனிமனித மன மாற்றங்களைப் பேசின. நடந்தவற்றையே கூறின. மகாலிங்கம் அவ்வாறான பாத்திரம். அது அவ்வாறுதான் நடந்து கொள்ளும், தலித் பெண்களை அல்லது சாதிய மட்டத்தில் குறைந்தவர்களாக எம் சமூகம் கணித்த பெண்களை வாழ்க்கைத்

ஜீவநதி 25
துணைகளாகக் கொண்ட பிராமணர் உட்பட ஆதிக்கச்சாதியினர், மறுதலையாக ஆதிக்கச்சாதியினரின் பெண்களை மணம் முடித்த தலித் ஆண்கள் இன்று ஈழம் உட்பட பூமிப்பந்தெங்கும் உள்ளனர். அங்கெல்லாம் தனிமனித உணர்வுகள் தாம் செயற்பட்டுள்ளன. இவர்கள் தம்மை இனங்காட்டாது வாழ்வது தான் சோகம். ஒரு வகையில் அவ்வாறு இனம் காட்டவேண்டியதென்பது அவசியமுமல்ல.
06. அண்மையில் “ஞானம்” வெளியிட்ட பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பவளவிழா மலரில் "நவீன இலக்கியத்தில் அவரின் விமர்சனப்பார்வை ஈழத்துப் படைப்பாளிகளுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தின” என்று கூறியிருந்தீர்கள். ஒரு காலத்தில் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற மார்க்சிஸ்ட் விமர்சகர்கள் மார்க்சிய கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எழுதிய எழுத்தாளர்களை, அவர்கள் படைத்தது இலக்கியமே இல்லை என்று ஒதுக்கிவிட்ட ஈ "க கூறும் குற்றச்சாட்டுக்களும் நிலவி வந்தது. அதற்கு ஒப்பானதாக இதனைக் கொள்ளலாமா? இது பற்றி சற்று விரிவாக கூறுங்கள்.?
மார்க்சிஸ்ட் விமர்சகர்கள் மார்க்சிய கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு எழுதிய எழுத்தாளர்களை அவர்கள் படைத்தது இலக்கியமே இல்லை என்று ஒதுக்கிவிடவில்லை. அவர்களின் கணிப்புக்கு அவை உட்படுத்தப்படவில்லை. இவர்கள் கணிக்காததால் அவை இலக்கியம் இல்லை என்றும் ஆகிவிடவில்லை. ஒரு காலத்தில் தூக்கிப்பிடித்த மார்க்சிஸ்ட் எழுத்தாளர்களை இன்று சிவத்தம்பியின் மீள் விமர்சனநிலை முகம் சுழிக்க வைத்துள்ளது. அதனைத் தான் நான் குறிப்பிட்டேன். நான் பவள விழா மலரில் எழுதியவற்றை மீண்டும் தருகின்றேன். நவீன இலக்கியத்தில் பேராசிரியரின் விமர்சனப் பார்வை ஈழத்துப் படைப்பாளிகளுக்கு (அதாவது மார்க்சிஸ்ட் படைப்பாளிகளுக்கு) முகச் சுழிப்பை ஏற்படுத்தியுeளன. டானியல், டொமினிக் ஜீவா, ரகுநாதன். ஆகியோரை புனைகதை இலக்கியத்தின் உச்சங்களாக்க முயன்ற பேராசிரியர் இன்று டானியலை அவருடைய 'கானல்’ நாவலுடனும், ரகுநாதனை அவரின் நிலவிலே பேசுவோம் சிறுத்தையுடனும், மட்டுப்படுத்திவிட்டார். மூத்த எழுத்தாளர் அகஸ்தியரின் படைப்புகளை அவை மார்க்சியப் பார்வை கொண்டனவாக இருந்தும் இலக்கிய வரம்பிற்குள் சேர்க்காது ஒதுக்கிவிட்டார். நாவலாசிரியர் கணேசலிங்கத்தின் ஆரம்ப நாவல்களான நீண்டபயணத்தையும்’, ‘செவ்வானத்தையும் ஏற்கும் பேராசிரியர் ஏனையவை மறுவாசிப்பிற்குரியவை எனக் கணிப்பிட்டுள்ளார்.”
(தொடரும்.)

Page 15
ஜீவநதி
வல்ைைவெளி
வல்லை வெளியில் வானம் குடை பிடிக்கும் வட்டமாய்ச் சுற்றி நிற்கும் வான் பயிரும் பனை மரமும் நீலப் பட்டுடுத்தி நிரை நிரையாய் காட்சி தரும் நெய்தலொடு மருதம் இங்கே நேசமாய் உறவாடும் கார்காலம் பிறந்து விட்டால் கைகுலுக்கிச் சுகம் கேட்கும் தாழைமரம் பூப்பூத்து தங்க நிறப் பழம் தூங்கும் புன்னை மரக்கிளைகளிலே புள்ளினங்கள் இசையமைக்கும் ஈச்சமரம் பழம் பழுத்து இளசுகளின் மனம் பறிக்கும் வீதி ஓரத்து இலந்தை மரங்களிலே அப்பிள் பழம் போலே அழகான கனிதூங்கும் சவுக்கமரச் சிலுசிலுப்பில் சங்கீதம் தாலாட்டும் ஆநிரைகள் அங்குமிங்கும் அலைந்து புல்தேடும் காவல் செய்யும் இடைச்சிறுவன் கால்கடுக்கும் தொண்டைமான் ஆறு இங்கே வளைந்து வளைந்து ஓடும்
கோடைமழை பொய்த்து விட்டால்
அன்னநடை பயிலும். கொக்குகளும் நாரைகளும் மீன் பிடிக்கும் வெண் பஞ்சுப் பொதியாக
அவை மிதக்கும்.
மீனவர்கள் வீசுகின்ற வலைகளிலே
நண்டு இறால் முரல் வகைகள்
வளமாக மாட்டிக் கொள்ளும்
உப்பு விளைந்து விட்டால்
உவர்க் காற்று மெல்லவீசும்
வலிகாமம் வடமராட்சி
இவையிரண்டின்
உறவுப்பாலமாக
வல்லைப் பாலம் வரவேற்கும்
மனித நேயத்தை
தம் மனவெளியில்
விரித்து வைக்கும்
மக்கள் மனம் போலே
வல்லைவெளி விரிந்திருக்கும்
இத்தனைக்கும் மத்தியிலே
வல்லை முனியப்பர்
வருவோர் போவோரை
இரவுபகல் காத்து நிற்பார்.
வடஅல்வை சின்னராஜன்

ஜீவநதி 27
கல்வியும் பாடசாலைச் சமூகமும்
செல்லத்துரை சேதுராஜா
கண்ணுடையர் என்போர் கற்றோர் - முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர்.
பொய்யாமொழிவள்ளுவர்.
ஆந்தையால் பகலில் எதனையும் பார்க்கமுடியாது
காக்கையால் இரவில் எதனையும் பார்க்கமுடியாது.
படிப்பறிவற்ற மனிதன் அவற்றைவிட வலுவற்றவனாவான்.
ஏனெனில் அவனால் இரவிலோ அல்லது பகலிலோ
எதனையும் பார்க்க முடிவதில்லை.
356)r fig5 C.W.W 356T60Tssldby IT. மனித வாழ்வுக்குக் கல்வி அவசியமானது என்னும் கருத்து
பண்டுதொட்டு இன்றுவரை நிலைபெற்று வருகின்றது. மானிடவாழ்வில் பலவியாலாகாத தொன்றில்லை என்பது நடைமுறை உலகின் நிதர்சனமான உண்மையாகும். மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு அடிப்படையான இக் கல்வியை வழங்கும் முதல் முக்கிய ஆதாரம் பாடசாலைகளேயாகும் என்பதுவும் கல்வியின் பிரதான நோக்குகளான மானிட சமூக விழுமியங்களைப் பேணுதல், அவற்றை எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளித்தல், காலத்திற்கேற்ற பொருத்தமான சமூக மாற்றங்களை உண்டாக்குதல் முதலான பணிகள் பாடசாலைகளைச் சார்ந்துள்ளன என்பதுவும் இன்று கல்விப்புலம் சார்ந்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனவாகும். மதிப்புமிகு மனிதவாழ்க்கைக்கும். மானிட மேன்மை நோக்குப் புரட்சிக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் அடிப்படையான கல்வியை வழங்குவதில் பாடசாலைகளின் வெற்றிக்கும் கீர்த்திநாம மேன்மைக்கும் பாடசாலைச் சமூகத்தின் செல்வாக்கு உந்துசக்தியாக விளங்குகின்றது. பாடசாலை என்பது ஒரு சமூக நிறுவனமாகும். பாடசாலை சமூகத்திற்கும் சமூகம் பாடசாலைக்கும் ஆதாரமாக அமைகின்றன. ஒரு சமூகத்தின் முன்னேற்ற அடையாளங்களில் அச் சமூகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் ஆரோக்கிய நிலைமை பிரதான இடம் வகிக்கின்றது. பாடசாலையின் செயற்றிறனும் கீர்த்தி நாமமும் (Goodwill) சமூக மேம்பாட்டின் குறிகாட்டியாகின்றன. எதிர்கால சமூக மாற்றங்களின் பிரதான செயற்பாட்டுக் களமாகப் பாடசாலைகள் விளங்க வேண்டுமாயின் அதன் நிகழ்கால ஏற்பாடுகளும் செயற்பாடுகளும் தூர நோக்குடனும் அறிவு பூர்வமாகவும் அமைதல் வேண்டும். இதற்குப் பாடசாலைச் சமூகம் (School Society) கட்டமைப்பு வலுமிக்கதாக்கப்பட வேண்டும்.
பாடசாலைகளின் அபிவிருத்தி என்னும் பன்முகப் பரிமாணத்தை வெளிப்படுத்தும் கட்டுருசார் எண்ணக் கருவானது தனிமனித, சமூக, தேசிய, சர்வதேச எல்லைகளை நோக்கிய படிமுறை வளர்ச்சியினை வேண்டி நிற்கின்றது. தனிமனிதனை (மாணவனை) அவனது வாழ்வுக்குரிய திறன்களை வளர்த்தெடுப்பதனூடாக எனைய படிநிலை வளர்ச்சிகள் எய்தப்படுவதனை இவ்வெண்ணக்கரு உள்ளடக்கியுள்ளது. எனவே மாணவரது மகிழ்ச்சிகரமான வாழ்வாதாரத்திறன்களை வளர்த்தெடுக்கும்

Page 16
ஜீவநதி 28
பணியில் பாடசாலைக்கு உறுதுணையாகப் பாடசாலைச் சமூகம செயற்படுதல் இன்றியமையாததாகும்.
பாடசாலைச் சமூகம் என்னும் போது மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர், பழையமாணவர்கள் நலன்விரும்பிகள், கல்வி நிர்வாகப் பணியாளர்கள் முதலானோர் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் பிரதேசத்தின் ஏனைய பொதுச்சேவை நிறுவனங்கள், வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள் முதலான பாடசாலையுடன் தொடர்புடைய அனைவரும் இதில் அடங்குவர். பாடசாலை முகாமைத்துவமும் மேற்குறித்த பங்காளிகளும் நெருக்கமாகத் தொழிற்பட்டு உண்மையான கல்வி இலக்குகளை அடைவதற்கான அர்ப்பணிப்புடன் கருமமாற்றுவராயின் அது ஆரோக்கியமான சூழ்நிலையாகும்.
கால.ாற்றத்தினூடாக இன்று கல்வி இலக்குகளும் மாற்றங்களை உள்வாங்கி சிக்கலடைந்து செறிவாகியுள்ளன. இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் ஆசிரியர்கள், அதிபர்கள், நிர்வாகிகளின் பணிகளும் வகிபங்குகளும் சிக்கலடைந்துள்ளன. கல்வியினடைவைப் பொறுத்தவரை பரீட்சை அடைவுகள் மாத்திரமல்லாது சமூக விழுமியங்களும் தலைமைத்துவத்திறன்களும் மாணவர்களிடம் வளர்த்தெடுக்கப்படுவது கட்டாயத் தேவையாகவுள்ளது. மாணவரைச் சமூகத்திற்குரியவராக்கும் பொறுப்பு பாடசாலைச் சமூகத்தைச் சார்ந்ததாகும். நவீன கல்வி இலக்குகளை நோக்கிய கல்விச் செயற்பாடுகள் நவீன கற்றல் கற்பித்தல் முறைகளினூடாக முன்னெடுக்கப்படுகின்ற அதே நேரத்தில் எமது சமூக விழுமியங்களும் பண்பாடும் கலாசார நறுமணமும் கலந்து பொலிவு பெற்றோடுகின்ற நீரோடை போன்று கல்வி அமைதல் வேண்டும். மாணவர்கள் தமது சொந்தப் பண்பாட்டு அடையாளங்களுடன் கல்வியடைவுகளை எய்தப் பெறுதல் வேண்டும். இதற்குப் பாடசாலைகளும் கல்வி அமைப்புக்களும் வெறுமனே பாட உள்ளடக்கங்களை மாத்திரம் போதிக்கின்ற பொறிமுறைக் களங்களாக அமைதல் போதாது. அவை உயிரோட்டமுடைய சமநிலை ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்குகின்ற நிறுவனங்களாகத் திகழ்தல் வேண்டும். இதற்குப் பாடசாலைச் சமூகத்திடம் கல்வி பற்றிய விழிப்புணர்வு அவசியம்.
ஒரு சமூகம் எந்தளவிற்குக் கல்வி விழிப்புணர்வுள்ளதாகக் காணப்படுகின்றதோ அந்தளவிற்கு அச் சமூகத்தின் உண்மையான கல்வியடைவுகள் வெளிட்டுகின்றன. இன்று மாணவர்கள் பலர் தேவையான கல்வி இலக்குகளையோ சமநிலை ஆளுமைப் பண்புகளையோ கொண்டிராத நிலைமைகள் உணரப்படுகின்றன. மாறிவரும் உலகச் சூழ்நிலைகளும் நிச்சயமற்ற உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளும் சமூகத்தில் ஒரு தகைப்பு நிலையினை உருவாக்கியுள்ளன. மக்கள் தமக்கு உரித்தான வாழ்க்கை முறைகளைச் சந்தர்ப்பவசத்தால் தெரிந்தோ தெரியாமலோ கைக் கொள்ளத் தலைப்பட்டுள்ளனர். கல்வி என்பது வியாபாரப் பண்பில் கட்டுண்டுள்ளது போல் காட்சியளிக்கின்றமையால் ஞானம் என்பது அடையப்படமுடியாததாகத் தோன்றுகின்றது. கல்விச் செயற்பாடுகள் கற்பித்தல் பொறிமுறைகளுடன் மட்டுப்படுத்தப் படுவதாகவன்றி ஞானத்தின் வழிமுறைகளாக அமைதல் வேண்டும். மாணவர்களைச் சிறந்த சமூக அங்கத்தவர்களாக ஆக்கும் செயற்பாட்டுத் தடங்களில் பாடசாலைகள் சரியாகக் கால்பதிப்பதற்குப் பாடசாலைச் சமூகம் வழிகாட்டி உறுதுணையாதல் வேண்டும்.

ஜீவநதி 29
இதற்குப் பாடசாலைச் சமூகம் விழிப்புணர்வு பெறல் வேண்டும். சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பாடசாலைகளும் தமது பங்களிப்பை வழங்குதல் வேண்டும்.
மாணவர்களின் கல்வியில் பாடசாலைச் சமூகம் முன்னுரிமை அக்கறை காட்டுவதுடன் ஆரோக்கியமான கட்டுப்பாட்டுச் செயன்முறைகளையும் அவை கொண்டிருத்தல் வேண்டும். மாணவர்களது வயதிற்கும் மாறிவரும் சூழலுக்கும் ஏற்றாற்போல் கள ஏற்பாடுகளையும் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்படும் காரணங்களிலேயே முகாமைத்துவ நுட்பங்கள் பிரயோகமுக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறான வேளைகளில் பாடசாலைச் சமூகம் எதிலும் தலையிடாக் கொள்கையினை கொண்டிருத்தல் செயத்தக்க செய்யாமையாலும் கெடும்' என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க குற்றமாகக் கொள்ளப்படும்.
இன்று மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சாரச் சரிவுகளுக்குப் பாடசாலைச் சமூகப் பிரிவினரது தனித்தனியானதும் கூட்டானதுமான கொள்கைகளும் செயற்பாடுகளுமே காரணமாகும். இன்றையமாணவர்கள் பாடசாலைகளில் செலவிடும் நேரம் ஒப்பீட்டடிப்படையில் குறைவாகும். வீட்டிலும் பிரத்தியேகப் போதனை நிலையங்களிலுமே அவர்கள் அதிகளவு நேரத்தைச் செலவு செய்கின்றனர். இதனால மாணவர்களது நடத்தைக் கோலங்களில் பாடசாலைகளின் செல்வாக்கு நலிவடைந்துள்ளது. பாடசாலைகள் மாணவர்களைப் பொதுப் பரீட்சைகளுக்கும் சில வகைப் போட்டிகளிற்குமான பதிவுகளை மேற்கொள்ளும் காரியாலங்கள் என்னும் தோற்றப்பாடே மேலோங்கியுள்ளது. பாடசாலைகளிடையே ஆரோக்கியமற்ற உள்ளார்ந்த போட்டிகளும் மீந்திறன் மிக்க மிகக் குறைந்த எண்ணிக்கையுடைய மாணவர்களது கல்வி அடைவுகளுக்காக உரிமை கோரும் பிரசாரங்களும் எமது இன்றைய கல்விச் சமூகத்தின் பலவீனத்தின் வெளிப்பாடாகும். ஒட்டு மொத்தமான கல்வி வளர்ச்சி என்பது கல்வியின் பிரதான இலக்காக இருக்கையில் பெருமளவு மாணவர்கள் கல்வியடைவுகளில் தோல்வியடைந்து போவதற்கும், கல்வியின் பண்பாட்டுத் தரக் குறிகாட்டிகள் இழிநிலையில் இருப்பதற்கும் பாடசாலைச் சமூகத்தினரின் சிந்தனைக் குறைபாடும் செயற்பாட்டு நலிவுமே காரணமாகும். இவை சீர் செய்யப்பட்டுச் சரியான திசை நோக்கி முடுக்கிவிடப்படுதல் வேண்டும்.
பாடசாலை ஆசிரியர்களும் பெற்றோரும் , நலன் விரும்பிகளும், கல்விப்பணியாளர்களும் வகைகூறல் பொறுப்பினை உணர்ந்து செயற்படுதல் வேண்டும். தத்தம் சமூகப் பொறுப்புக்களை ஏனைய பிரிவினரிடம் சுமத்தி விடுவதனால் தொடர்ந்து கல்வியின் பிழையான பக்கங்களே காட்சிப்படுத்தப்படலாம். மாணவர்களைப் பாடவிதானக் கல்வியடைவுகளை எய்தச் செய்வதுடன் சமூக பண்பாட்டு விழுமியக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கைக்கொள்ளச் செய்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் பாடசாலைச் சமூகத்தின் முழுமுதற் பணியாயமைதல் வேண்டும். மாணவர்கள் பெற்றோரைப் பேணவும். பெரியோரை மதிக்கவும் ஊக்கமளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த பொறுப்புவாய்ந்த சமூக அங்கத்தவராகும் தகுதியைக் கொடுக்கும். கல்விப்பணிபுரிவோர் தத்தம் பதவிக்கும் பொறுப்புக்கும் வகை கூறக் கடமைப்பட்டவர்களாவர். ஆரோக்கியமான பாடசாலைச் சமூகங்களை

Page 17
ஜீவநதி 00ܐܝ
உருவாக்குவதற்கு அவர்கள் வழிகாட்டிகளாகவும் உந்துசக்தி வழங்குபவர்களாகவும் செயற்படுதல் இன்றியமையாததாகும். பெற்றோர்கள் அனைவரும் தமது பிள்ளைகளின் கல்விக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் மற்றெல்லாவற்றையும் விட முதல் முன்னுரிமை வழங்குபவராகச் செயற்படுதல் வேண்டும். ஆசிரியர்களும் பணியாளர்களும் அர்ப்பணிப்புடனும் தொழில் ஈடுபாட்டுடனும் கருமமாற்றி சமூக நோக்குடைய மாணவ சமுதாயத்தினை உருவாக்குதல் வேண்டும். வெற்றி பெற்ற பாடசாலைச் சமூகங்கள் தமது பாடசாலை என்னும் எல்லையினைத் தாண்டி ஏனைய பின்தங்கிய பாடசாலைகளுக்கும் சாத்தியமான வழிகளில் வழிகாட்டி உதவி புரிதல் என்பதும் ஞானம் (WISDOM) வழிவரும் ஆரோக்கிய நிலையாகும். இத்தகைய கல்வியினால் எல்லோரும் இன்புற்றிருத்தல் என்னும் பரந்த இலக்கு எய்தப்படும் பாடசாலைச் சமூகத்தின் சேவை இலக்குகள் படிமுறை சார்ந்த தூர நோக்குடையன. கல்விச் சமூகங்கள் இந்த உண்மை இலக்கை உணர்ந்து செயற்படின் இலக்குகள் எய்தவல்லனவே.
O D
விழ்த்துகிறேwம்
கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பழந்தமிழ் இலக்கிய 9 இலக்கணம், நவீன இலக்கியம், மொழியியல், தமிழ்நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், பொருளாதாரம், தொடர்பாடல் போன்ற துறைகளில் தனது பல்பரிமாண ஆளுமையால் ஈழத்து இலக்கியத்திற்கு செழுமை சேர்த்து வரும் தமிழறிஞரும், தமிழக அரசின் அதியுயர் விருதுகளில் ஒன்றான “திரு.வி.க.விருது’ பெற்றவருமான வாழ்நாட் பேராசிரியர்
கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பவளவிழா காண்பதையிட்டு உளம் பூரிப்பதுடன் பல்லாண்டு காலம் நீடுழி வாழ ஜீவநதி இதய பூர்வமாக வாழ்த்துகிறது.
 

ஜீவநதி
3.
பாதுகாப்பு
நான் அப்ப ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றேன். எங்களுக்கு வந்து வாய்த்த வகுப்பாசிரியர் சற்று வித்தியாசமான ஒருவர் வெகு குதூகலமான ஆள். வகுப்பில் எங்களை எப்பொழுதும் கலகலப்பாக வைத்திருப்பார்.
அவர் வகுப்பறைக்குள் வந்து சேரும் காட்சியைக் காண்பதற்கு நாங்கள் பெரும் ஆவலுடன் காத்திருப்போம். அந்த அரிய காட்சியைத் தினமும் காண்பது நாங்கள் பெற்ற பெரும்பேறு என்று சொல்லவேண்டும்.
அவர் ஒரு நாடக நடிகன்போல அங்கு வந்து தோன்றுவார் வரவுப்பாடல் ஒன்றைப் பாடியவண்ணம் நடிகன் அரங்கில் வந்து சேருவதுபோல அவர் பாட்டோடுதான் வருவார். அப்பொழுது நிமிர்ந்த மெட்டான ஒரு துள்ளல் நடை இருந்தாற்போல அவரிடம் வந்து சேர்ந்து விடும். அது அவருக்கு இயல்பான ஒரு நடை அல்ல என்பது சற்று உன்னிப்பாக நோக்கினால் மெல்லப் புலப்படும்.
அன்றும் அவர் வழமைபோல
நடந்து வந்தார்
வணக்கம் ஸேர்’ நாங்கள் அனைவரும் பணிவாக எழுந்து நிற்கின்றோம்.
இருங்கள் இருங்கள் . மஹரிஷியின் திவ்விய தரிசனத்துக்காகக் காத்துக்கிடக்கும் பக்தர்கள் முன்னே திடீரெனத் தோன்றி இருகரங்களையும் மேலே தூக்கி ஆசீர்வதிப்பதுபோல தாளலயத்துடன் கரங்களை அசைக்கின்றார். நாங்கள் ஆசீவதிக்கப் பெற்றவர்களாக மெல்ல அமருகின்றோம்.
- தெணியான்
அவர் எங்களை முகம் நோக்கி நிற்கின்றார். அவருக்குப் பின்னே அவருக்குரிய மேசை. இரண்டு அடிகள் பின் நோக்கி மெல்ல நகள்ந்து அந்த மேசை விளிம்பில் மெதுவாகத்தனது பிருஷ்டத்தை வைக் கரின் றார் . பின்னர் வலது காலைத்தூக்கி சற்று மடித்து இடது தொடையின்மேல் போட்டுக்கொண்டு ஒற்றைக் காலில் ஊன்றி நிற்கின்றார். ஆகிா. ஆகி. என்ன அற்புதம் என்ன அற்புதம்! வேய்ங்குழல் ஊதும் கண்ணனை நேரில் கண்டதில்லை ஓவியங்களில் அவரைப் பார்த்திருக்கின்றோம் சாட்சாத் அந்தக் கண்ணபிரானே பூமிக்கு இறங்கிவந்து காட்சி தருவது போல அவள் எங்கள் முன்
தோன்றுகின்றார்.
அவரின் சிரித்த விழிகள் மெது மெதுவா 6] {{s 86 60) ଶୀ நோக்க
நோட்டமிட்டுமேய்ந்து வருகின்றன. பின்னர் ஏதோ ஒரு இராகத்தைப் பாடப்போகும் பாவனையில் தொண்டையைச் செருமிச் செருமி சரிசெய்து கொள்ளுகின்றார். நாங்கள் எதிர்பார்க்கின்றோம் வழமைபோல ஒரு இராகம் பிறக்கப் போவதை அப்படி எதுவும் நடக்கவில்லை. மீண்டும் ஒரு செருமல் அதன் பிறகு பிள்ளைகளே உங்களுக்குச் சந்தோஷமான ஒரு செய்தி சொல்லப் போகிறேன் எனக் கூறிக்கொண்டு எங்கள் முகங்களை துல்லியமாக மீண்டும் நோக்குகின்றார்.
எங்களுக்கு மனதில் திடீரென ஆவல் எழுந்து பொங்கி வழிகிறது.
அவள் தனது முகத்தில் புன்னகை ஒளிரவிட்டு மெளனமாக நிற்கின்றார்.

Page 18
ஜில்நதி
மகிழ்ச்சியான செய்தியானால் காலந்தாழ்த்தாது உடனே சொல்லி வைத்துவிட வேண்டும். துயரமான செய்தியானால் கொஞ்சம் தாமதித்து மெல்லச் சொல்லலாம் இது கூட வா தெரியாது?
எங்கள் உள் ளங் களில் ஆவலைத் தூண்டிவிடும் உத்திதான் இந்த மெளனம்.
எங்கள் எல்லோருடைய கவனமும் தன்னை நோக்கித் திரும்பி இருக் கண் றது என்பதை அவர் அவதானித்துத்தீர்மானித்துக் கொண்டு திருப்தியாக மெல்லத்தலை ஆட்டுகின்றார். திரும்பவும் ஒரு சங்கீதச் சொருமல்
அதன் பின்னர் "உங்களை நான் 9 (5 ரூர் கூட் டிக் கொணி டு போகப்போகிறேன். ரூர் என்றால் . சுற்றுலா, தெரியுந்தானே! வரவிருப்ப மானவர்கள் கை உயர்த்துங்கோ! என்று கேட்கின்றார். அட அதற்கா இத்தனை ஆலாபனைகள்! சட்டென்று சொல்லி இருக்கலாமே!
நான் பட்டென்று எழுந்து நிற்கின்றேன் அவருக்கு வெற்றிப் பெருமிதம் குறிப்பாக என்னைப் பார்த்து சொண்டுக்குள் சிரிக்கின்றார் பிறகு, 'கையைத்தான் உயர்த்தச் சொன்னேன்’ என்கின்றார்.
வகுப்பில் எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்க்கின்றார்கள். கேலியாகச் சிரிக்கின்றார்கள். எனக்குப் பெரிய வெட்கமாகப் போச்சு. சட்டென்று வாங்கின் மீது திரும்பவும் குந்துகின்றேன். ஆனால் மனதில் எழுந்த ஆவல் அடங்குவதாக இல்லை. வலது கரத்தைத் தூக்கி நல்ல உயரமாக உயர்த்திக் காட்டுகிறேன் என்னைப்பார்த்துச் சிரித்தவர்கள் இப்ப சிரிக்கவில்லை. கொஞ்சம் சுணங்கி
அவருக் குதி
தயங்கித் தயங்கி ஒவ்வொருவராகக்கை உயர்த்துகின்றார்கள் இப்பவகுப் பறைக்குள் கைகளை நட்டுவைத்தது போல எல்லோருடைய கைகளும் உயர்ந்து நிற்கின்றன.
ஆசிரியர் முகம் மலருகின்றது. இணக்கமாக என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார். அவர் சிரிப்பு எனக்குத் தெரிவிக்கும் நன்றிச்சிரிப்பு என்பது எனக்குத் தெரியும்.எனக்கு மனதளவில் சொல்லமுடியாத பெருமை பெரிய காரியமொன்றைச் சாதித்துவிட்டதான புளுகம் ஆசிரியர் மாணவன் எனக்கு நன்றி தெரிவிப்பதென்பது சாதாரணமான ஒரு காரியமா? அதன் பிறகு வகுப்பில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. வகுப்பு எப்ப முடியும்? வீட்டுக்கு எப்ப போய்ச் சேருவேன்? என்று துடித்துக் கொண்டிருந்தேன்.
நான் வீடு வந்து சேர்ந்தேன் எப்படி வந்தேன்/ நடந்தா, பறந்தா? அதுவும் எனக் குத் தெரியாது. வீட்டுப்படலையைத் திறந் தடித்துக் கொண்டு துள்ளிக்குதித்து உள்ளே ஓடி வருகின்றேன். 'அம்மா. அம்மா. அம்மோய். அம்மாவின் அசுகை இல்லை. இந்த நேரம் அம்மா எங்கே போய் இருப்பா! அடுக்க6ைக்குள்ளேதானே
இருப்பா ! 9ị LD (8 LD Tuử ........... அம்மோய். அடுக்களைக்குள் பாய்கிறேன்.
அம்மா அடுப்புக்குமுன் குந்தி இருக்கின்றா. அடுப்பில் மீன்குளம்பு கொதித்துக் கொண்டிருக்கின்றது. அகப்பையைவைத்து அம்மா துழாவிக் கொண்டிருக்கின்றா. அம்மாவுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. அம்மாவின் மூக்குத்திக் கல்லு மாதிரி வியர்வைத துளிகள் நெற்றியில் 'கன்னத்தில்

થ્રીજાઝ
கழுத்தில் மின்னுகிறது வியர்வையால் குளித்து அம்மாவின் சட்டை நனைந்து கிடக்கிறது. அடுப்பு வெளிச்சம் முகத்தில் விழுந்து அம்மா நல்ல ஒவியமாகத் தோன்றுகிறா. அம்மா நல்ல வடிவு இப்ப அம் மாவுக்கு அவசரம் . ஐயா சாப்பாட்டுக்கு வருகிற நேரம் எனக்குள்ள அவசரம் அம்மாவுக்குத் தெரியாது. திரும் பவும் 'அம் மா...' என அழைக்கின்றேன். அம்மாவின் முழுக் கவனமும் குளம்பு பொங்கி வழிந்து விடக்கூடாது என்பதில் எனக்குள் ஆவல் பொங்கி வழிந்து கொண்டிருப்பது அம்மா அறியமாட்டா.
'அம்மா, நாங்கள் ரூர் போகிறம் ‘முதல் புத் தக தி தைக் கொண்டுபோய் வைச்சிட்டு உடுப்பை மாத்து உனக்கு எல்லாத்துக்கும் அவசரக்குணம்
'அம்மா. நானும் போகப்போகிறேன் 'முதல் சொன்னதைச் செய் உனக்காக அம்மியிலே அரைச்சுக் குளம்பு காய்ச்சி வைச்சிருக்கிறன் கால் முகம் கழுவிக் கொண்டுவா’
"ஒமெண்டு சொன்னால்தான் சாப்பிடுவன்'
‘ஓகோ. இப் பவே பிடிவாதம் பிடிக்கத் துடங்கிவிட்டாய்
'அம்மோய். சொல்லுங்கம்மோய்.
'நான் என்ன சொல்லுகிறது? ஐயா வாறநேரம் வந்தாப்போலகேள்’
சட்டிக்குள் குளம்பு இப்பதான் கொதி அடங்கிப்போனது அம்மா இப்பதான் என்னைத் திரும்பிப் பார்க்கிறா. ‘என்னவாம்? முற்றத்தில் சயிக்கிளை நிறுத்திக்கொண்டு ஐயா கேட்கின்றார். கடையைப் பூட்டிக் கொண்டு மத்தியானச் சாப்பாட்டுக்காக இப்ப வந்திருக்கின்றார். 'பிறகு கேளுங்கோ. முதல் வந்து சாப்பிடுங்கோ
33
‘என்னவாம் பிள்ளை? கேட்டுக் கொண்டு அடுக்களை விறாந்தைக்கு ஏறிவருகின்றார்.
அம்மா அடுக்களைக்குள் ஐயா விறாந்தையில் நான் அம்மாவுக்கு அருகே மெளனமாகி நிற்கின்றேன்.
"சொல்லன். SubLDT 'அம்மா சொல்லுங்கோ. மெல்லச்சிணுங்குகிறேன்.
"எல்லாத்துக்கும் ஆயித்தம் சொல் லத் தான் U Ulu LĎ ரூர் போகப்போகினமாம்
'சின்னப் பிள்ளைகளுக்கு என்னளுர்? நீ துருதுரெண்டு இதிலே நிற்கிறன் எண்டு அதிலே நிற்பாய்
'வகுப் பரிலே எல் லாரும் போகினம் ஐயா
'வகுப்பிலே எத்தினை பேர்’ 'முப்பது ‘எங்கே கூட்டிக் கொண்டு போகப் போகினம்?
யாழ்ப்பாணக்குடா நாடு 'எனக்கு மனதில் நம்பிக்கை பிறந்து விட்டது
'கைதடி செவிடர் குருடர் பாடசாலை, யாழ்ப்பாணம் தொல்பொருட் காட்சிகோட்டை, காங்கேசன்துறைசீமேந்த் தொழிற்சாலை, கீரிமலைக்கேணி.” மூச்சு விடாமல் நான் அடுக்கிக் கொண்டு
போகின்றேன்
'ஆர் உங்களைக் கூட்டிக் கொண்டுபோகிறது?
‘எங்கடை ஸேரும், இங்கிலீசு ரீச்சரும்
‘வேறை. ၇: "ஐயா, அம்மா விரும்பினால் 6)IJ6IMOT DITb''
‘அப்ப. நானும் வருகிறன்
எனக்கு மனதில் ஒரே வியப்பு ஐயாவுக்கும் இந்த இடங்கள் தெரியாது என்று நினைத்துக் கொள்ளுகின்றேன் மனதில் எழுந்த சந்தேகத்தை சட்டென்று கேட்டுவிடுகின்றேன்.

Page 19
ஜீவநதி
'ஐயாவைச் ஸேர் மார் ரூர் கூட்டிக் கொண்டு போகயில்லை அதுதான் ஐயாவுக்கு-இந்த இடங்கள் தெரியாது
'83 u. T வாய் தறந் து ʻ9)AB... .. DAB . . . . ).st3 . . . . . . . y என்று வெற்றிலைக்காவிதெரியக் குலுங்கக் குலுங்கப் பெரிதாகச் சிரிக்கின்றார். ஐயா வின் செல்ல வண்டி மேலும் கீழும் ஆடுகிறது.
அம்மா முந்தானையை இழுத்து வாயைப்பொத்திக் கொண்டு மெல்லச் சிரிக்கின்றா.
இருவரும் ஏன் சிரிக்கின்றார்கள் என்று எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை சில சமயம் இவர்கள் இப்படித்தான் எனக்கு விளங்காமல் கள்ளச்சிரிப்புச் சிரிப்பார்கள். நான் இருவருக்கும் நடுவில் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு நிற்கின்றேன். பிறகு அம்மா 'உனக் குத் துணையாக வரப்போகிறார்
eljLJ........ ஸேரும். ரீச்சரும்? எனக்குச் சந்தேகம் இன்னும் தீரவில்லை. 'முப்பதுபேர் எல்லாரையும் அவையஞக்குக்கட்டி மேய்க்க ஏலாது எங்கடை பிள்ளையை நாங்கள் தானே பாக்கவேணும்'
கடையைப் பூட்டி விட்டு ஐயா புறப்பட்டு என்னோடு ரூர் வந்தார்.
கதிரை ஒன்றைத் தூக்கி வந்து முற்றத்தில் வைத்து அதில் அம்மா அமர்ந்திருந்து கூந்தலைக் குலைத்து இடது தோளின் மேலாக மார்பினில் தொங்கவிட்டு சீப்பினால் வாரிக் கொண்டிருக்கின்றா. தலைவாளி முடிந்ததும் நேரே கிணற்றுக்குப் போவா குளிப்பதற்கு. புழுக்ககாலமானால் அம்மா மாலையில் குளிப்பதுதான் வழக்கம். இதுதான் சரியான சந்தர்ப்பம் எனத் தீர்மானித்துக் கொலன்டு நான் அம்மாவை அணுகுகின்றேன்.
'அம்மா குளியுங்கோவன் நான் அள்ளித்தாறன்’
சொல் லுகளின் றா 3 U 1 T
34
‘என்ன இருந்தாப்போல அம்மாவிலே இரக் கம் வந்துவிட் டு து/ சுத் தி வளைக்காமல் சங்கதியைச் சொல்லு?
'ஒண்டுமில்லை அம்மா 'கள்ளா பொய் சொல்லாதே உன்னை எனக்குத் தெரியும்.
! SÐDLDT, 676d6dTQ5LD LJUD LJITä55ŮJ போறான்கள் நானும் போகப்போறன்’
அம்மா கூந்தல் வாருவதை நிறுத்திக் கொண்டு தலைநிமிர்ந்து கோபமாக என் னைப் பார்த் துச் சொல்லுகின்றா.
‘ஓ.ஓ. நீ இப்ப கடுக்கண்டிட்டாய் இரவு நேரம் படம் பாக்க தியேட்டருக்கு வெளிக்கிட்டாய்
"இரவு இல்லை நாளைக்குச் சனிக்கிழமை. பகல் மெற்ணி ஸோவுக்கு 'உந்தப்படங்களை உண்மையான வாழ்க்கை எண்டு நம்பி இந்தக்காலத்துப் பெடியள் பெட்டைகள் கெட்டுப்போகுதுகள் 'இது நல்ல படம் ஸேர்தான் போய்ப்பாக்கச் சொன்னவர்
‘என்னபடம்? அம்மா கொஞ்சம் இறங்கி வந்து விட்டாபோல எனக்குப் புலப்படுகினறது. நம்பிக்கையுடன் சொல்லுகின்றேன்.
'சம்பூரணராமாயணம்' அம் மா அடுத் து என் ன சொல்லப்போறா என்பது எனக்குத் தெரியும் நான் எதிர்பார்த்தது போல ‘ஐயா வந்தாப்போல கேளன்' என்கிறா எனக்கு. உள்ளுர எரிச்சல் வந்துவிடுகிறது.
‘என் ன கேட் டாலும் ஐயா வைக் கேள். ஐயாவுக் குச் சொல்லு.பகல் நேரந்தானே! ஐயாவுக்குத் தெரியாமல் போய்விட்டு வந்தால் என்ன? அம்மா தலையை வேகமா வீசி கூநீ தலைப் பரின் புறம் எடுத் து இருகரங்களையும் தூக்கிக் குடுமியை முடிந்த வணி னம் பற்களை நெருடிக்கொண்டு எழுகின்றா.

ஜீவநதி
‘என்ன சொன்ன நி. என்ன சொன்னநீ. பொய்யும் புரட்டுமாக நடக்கப் போகிறியே? ஐயாவைக்கேட்காமல் வேறை ஆரைக் கேட் கிறது? தோளுக்குமிஞ்சினால் தோழன் எண்டது பொய் இல் லை. நீ உன் ரை எண்ணப்படிதான் நடக்கப் போறாய் போல கிடக்கு
நான் அப்படி நடக்கமாட்டன். நீங்கள் சொல்லுங்கோ எண்டுதானே கேட்டனான்!” அம்மாவை மெல்லச் சமாதானப் பண்ணப்பார்க்கின்றேன்.
'தலை இருக்க வாலாடக்கூடாது எல்லாத்துக்கும் ஐயா வரட்டுக்கும் சொல் லிக் கொணி டு அம் மா கிணற்றடியை நோக்கிப் போகின்றா. ஐயாவின் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன். ஐயா வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி ஆகிப் போனது.
‘நான் சொல்லுவேனே. உனக்கு எல்லாத்துக்கும் அவசரமெண்டு கொஞ்சம் பொறுமையா இரு. ஐயா சாப் பிட் டு முடிஞ்சு ஆறுதலாக இருக்கேக்க கேட்கவேணும். இப்ப கதைச்சால் எல்லாம் பிசகிப்போகும் அம்மா அனுபவப்பட்டவ. வாழ்க்கையை விளங்கிக் கொண்டவ, ஐயாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது அவவுக்குத் தெரியும். எனக்குத்தான் பொறுமையாக இருக்க இயலவில்லை. மேசைமீது புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிப்பதுபோலப் பாசாங்கு பண்ணிக் கொண்டிருக் கின்றேன்.
ஐயா சாப்பாடெல்லாம் முடிந்து விறாந்தைக்கு வந்து கன்வேஸ் கட்டிலில் ஆசுவாசமாக மெல்ல சரிந்து கண்களை மெல்ல மூடுகின்றார்.
விறாந்தையில் கம்பியில் தொங்கும் ஹரிக்கன் லாம்பு மின்னி மின்னிக் கண்சிமிட்டிக் கொண்டு கிடக்கிறது
எனக்கு வேகமாக இதயம் அடித்துக் கொண்டிருக்கிறது. ஐயா கட்டிலில் கிடந்து அப்படியே சில சமயம் கண் அயர்ந்து விடுவார். பின்னர்தான் எழும் பிச் சென்று படுக் கையில் ஒழுங்காகப்படுத்துக் கொள்வார்.
இன்றும் அப்படி நடந்து விட்டால்..? சற்று நேரம் கழிந்து "இஞ்சாரப்பா. அந்தத் தீப்பெட்டியைக கையோடை கொண்டுவா ஐயா குரல் கொடுக்கின்றார்.
அம்மா அடுக் bo)ளயை பூட்டி கையில் திறப்பை எடுத்துக் கொண்டு, தீப்பெட்டியுடன் ஐயாவை நோக்கி ஒரு மந்தகாசச் சிரிப்புடன் வருகின்றா. இந்தச் சிரிப்பு ஐயாவை வசியப்படுத்தும் போதைப் பொருள். அம்மா இந்தச் சாகசங்கள் எல்லாம் எங்கே படித்தாவோ!
தீப்பெட்டியை ஐயா கையில் கொடுத்துவிட்டு கட்டில் அருகே அம்மா குந்திவிடுகிறா
எப்போதாவுது ஒருநாவள் அம்மா இப்படிப்போய்க் குந்தி விடுவது வழக்கம். அன்று முக்கியமான சங்கதி ஏதோ இருக்கிறது என்பது ஐயாவுக்குத் தெரியும், ஐயா சுருட்டை மூட்டி புகையை மெல்ல மெல்ல இழுத்து விட்டுக் கொண்டு அம்மாவைப் பார்த்துக் கேட்கின்றார். ‘என்ன சங்கதி?
'ஒண்டுமில்லை.தம்பி. படம் பாக் கப் போறானாம் e Lö DT இழுத்துப்பறித்து மெல்லச் சொல்லுகிறா. ‘எல்லாம் நீ அவனுக்குக் குடுக்கிறசெல்லம்
'இல்லையப்பா. கூடப்படிக்கிற பெடியள் எல்லாம் போகுதுகள்

Page 20
§ඛuIbé
'போகட்டன் இவருக்கு இப்ப வால் முளைச்சிட்டுது'ஐயாவின் குரலில் கொஞ்சம் காரம் ஏறுகிறது.
'கோபிக் காதையுங்கோ. சொல்லுகிறதைக் கேளுங்கோ...! சம்பூரணராமாயணம். பாக்கத்தானே வேணும் நாளைக்கு மெற்னி லோவுக்கு போறானாம்
சிநேகிதன் மாரோடை ரவுனுக்கு சயிக் கிளிலே போக வெளிக்கிட்டிட்டார். எத்தினை கார். லொறி.வரும் வேறைகதை வேண்டாம் போகேலாது எண்டு சொல்லு'
ஐயா கட்டிலில் பின்புறமாகச் சார்ந்து கண்களை மூடிக்கொண்டு சுருட்டுப் புகையை இழுத்துவிட ஆரம்பித்து விட்டார்.
இனி அவரோடு பேசுவதில் பயனில்லை என்று அம்மா உணர்ந்து கொண்டு சிறிது நேரம் பொறுத்து அங்கிருந்து எழுந்து போகின்றா.
எனக்குக் குமுறிக் கொண்டு வருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து வருவதாக நான் அவர்களுக்குச் சொல்லி வைத்தேன். அவர்கள் முகத்தில் இனி நான் எப்படி முழிப்பது? அவர்கள் என்னைக் கேலியும் கிண்டலும் பணி ண்ப் போகிறார்கள் என்ன செய்யலாம்? நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
மற்றையவர்களை எதிர்த்து நின்று காரியம் சாதிக்க இயலாத பல வரீனமானவன் அவர் களின் கருணையைப் பெற்றுக் கொள்வதற்கான ஒருவழி தன்னைப் பட்டினி போடுதல். நான் உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பித்து விட்டேன்.
மறுநாள் காலை நான் பட்டினி, அம்மாவும் பட்டினி மதியம் நான் பட்டினி. அம்மாவும் பட்டினி.
காலையில் கடைக்குப்போன
ஐயா மதியம் வந்தார் வழமைபோல உணவு உண்டு முடிந்தபின்னர் வெற்றிலையைப் போட்டுக் கொண்டு திரும்பிப் போய்விட்டார். நான் பட்டினி இருப்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை அவர் அறிந்தால். குடலைக் கலக் கரிக் கொண் டு வருகிறது.மாலை நேரம் கடையைப் பூட்டிக கொண்டு திடீரென்று ஐயா வீட்டில் வந்து நிற்கின்றார். எனக்கு அது வியட்பாக இருக்கிறது. எனக்குள் எழுந்த வியப்பு அடங்குவதற்குள்ளே தம்பி இஞ்சைவா, படத்துக்குப் போகலாம் வெளிக்கிடு' என்கின்றார்.
அம்மாவை அழைத்து 'முதல் அவனுக்குச் சாட்பாடுகுடு, நீயும் சாப்பிடு சொல்லிக் கொண்டு கால்முகம் கழுவ கிணற்றை நோக்கிப் போகின்றார்.
எனக்கு இப்ப எல்லாமே விளங்கிவிடுகிறது. அம்மா முகம் மலர்ந்து அடுக்களைக்குள் நுழைகின்றா. நான் அம்மாவைத் தொடர்ந்து பின்னால் போகின்றேன்.
ஐயா தனது சயிக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு படம் பார்க்க தியேட்டருக்கு அழைத் துச் செல்லுகின்றார்.
米米米 米 米米 米火水
நான் நேர்த்தியாக உடுத்து வெளியே செல்வதற்குத் தயாராகப் புறப்பட்டு வீட்டுவாசலில் வந்து நிற்கின்றேன்.மகனைப் பார்க்கிறேன். அவன் விளையாடுவதற்கு ஓடிப்போய்விட்டான்.
அவனுக்காகத்தான் நான் தாமதித்து காத்திருந்தேன் அல்லது ஒருமணி நேரத்துக்கு முன்னதாக நான் இங்கிருந்து புறப்பட்டுப் போயிருக்கலாம்.

ஜீவநதி
நேற்றுப்படுக்கைக்குப் போனசமயம் கலாவிடம் அவன் விசாரித்தான். 'அம்மா. நாளைக்கு லீவுதானே!"
“காலையிலே நேரத்தோடை எழும்பாமல் படுத்துக் கிடக்கலாம் அப்பிடித்தானே! கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டா.
வேலை நாட்களில் கலாவுக்குப் பள்ளிக்கூட அவசரம் எனக்குக் கந்தோர் அவசரம். காலை உணவு மத்தியான உணவு சமைத்து முடித்து கட்டி எடுத்துக் கொண்டு போக வேணும். மகனைக் குளிப்பாட்டி உடுத்து உணவு ஊட்டி கலா தன்னோடு பாடசாலைக்கு அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். காலையில் திருப்பள்ளி எழுச்சிபாடி அவனைப் படுக் கையில் இருந்து ஆழுப்புவது கலாவுக்குப்பெரிய வேலை. அவனைக் கடிந்து கட்டாயப்படுத்தி எழுப்ப முடியவில்லை. முதலாம் வகுப்பில் படிக்கும் ஐந்து வயது நிரம்பிய சின்னப்பிள்ளை காலை வேளையில் அவனால் நன்றாக தி துTங்க முடிவதில்லை வீட்டில் அப்படி ஒரு பரபரப்பு.
இன்று காலையில் நான் இடைஇடையே போய்ப்பார்த்தேன் பஞ்சு மெத்தையில் சுகமாகழ் புரண்டு புரண்டு படுத்துக்கிடந்தான். அவன் உறக்கத்தைக் குழப்ப நான் விரும்பவில்லை.அவன் படுக் கையில் இருந்து எழும் பரி வருகின்றவரை நான் காத்திருந்தேன்.
எனக்கு மேசையில் உணவு பரிமாறிக் கொண்டு அவனுக்கும் கலா ஊட்டிவிட்டா நான் அறைக்குள் சென்று உடைமாற்றிப் புறப்படுவதற்குள் அவன் இங்கிருந்து மாறிவிட்டான், பொல்லாத சுட்டிப்பயல். வெகு சுழியன் சட்டென்று விளங்கிக் கொண்டு விடுவான். இன்றைய தலைமுறையின் அசல் வாரிசு.
37
எனக்கு நேரம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்னரே நான் திட்டமிட்டிருந்தேன் யாழ்ப்பாணநகரம் போய் இன்று அந்த அவசரகாரியத்தை முடித்துக் கொண்டு வரவேண்டும். சாதாரணமாகப் போய்வர எனக்கு இரண்டுமணி நேரம் போதும்.
'எந்த நாளும் ஆவிபோன சாப்பாடுதான் சாப்பிடுகிறோம். லீவு நாளிலேயாவது சுடச்சுட உயிரோடைசாப்பிடவேணும். தாமதிக்காமல் வாருங்கோ. நீங்கள் வந்துதான் கோழி வெட்டித்தரவேணும்
கலா வீட்டுக்குள்ளே இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறா.
எனக்குச்சி . மூளுகிறது. 'எந்த நேரமும் சாப்பாடு பற்றித்தான் எண்ணமும் கதையும் இப்ப கோழிக் கென்ன அவசரம்? தம்பி எங்கே? "ஏன் அதி தான் கோவிக்கிறியள்? கலாவீட்டு வாசலுக்கு உடனே வருகிறா. கலாவுக்கு முகம் சுண்டிப்போச்சு.
'எனக்கு நேரம் போகுது நான் சிடுசிடுக்கிறேன்.
'பிள்ளை இஞ்சைதானே நின்றவன அதுக் கிடையிலே. விளையாடப் போயிருப்பான். நில்லுங்கோ வாறன் கலா அடுத்த வீட்டுக்கு ஓடிப் போகிறா. போன வேகத்தில் மகனைக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறா.
அவன் தூரவரும் பொழுதே முற்றத்தில் மோட்டார் சயிக்கிள் நிப்பதைக் கவனிக்கின்றான். வெளியே செல்வதற்குத் தயாராகப் புறப்பட்டு நிற்கும் என்னைப் பார்க்கின்றான்.
அவன் சிணுங்கி அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றான்.
'அம்மா. நான் மாட்டன். நான் LDITt 65T.

Page 21
ஜீவநதி
அப்பாவோடை போய்விட்டு வாடி. எங்கடை செல்லமெல்லே!’
'நான் போகேல்லை’ "ஏன் போகேல்லை? முன்னர் என்றால் நான் வெளியே செல்லச்சயிக்கிள் எடுத்தால், மோட்டார் சயிக்கிள் எடுத்தால் போதும் ஒடி வந்து தொத்திக் கொள்ளுவான். கலா தடுத்தாலும் கேட்கமாட்டான். அவன் என்னோடு வெளியே சென்று வந்தால் அம்மாவுக்குக் கதை கதையாகச் சொல்லுவான்.
'அம்மா, துவக்குவைச்சொண்டு சென்றியிலே நிக்கிற அங்கிள் என்னைப் பாதி துச் சரி ரிச் சவர் , எண் பாண் , இன்னொருநாள் "அங்கிள் கைஆட்டி பாய் சொன்னவர் என்பான். பிறகொரு நாள் 'சொக்கிலேகிள்ளிச் சிரிச்சவர்' என்பான்.
இப்ப அப்படி எல்லாம் சொல்வதை நிறுத்திக் கொண்டு விட்டான். என்னோடு வருவதில் அவனுக்கு இப்ப கொஞ்சமும் ஆர்வம் இல்லை
'செல்லம் கூடப்போய்விட்டு வாங் கோ' கலா கெஞ் சுகரிறா எனக்குசலிப்படிக்கு அம்மா. அப்பா தான் போற இடமெல்லாம் என்னைக் கூட்டிக்கொண்டு திரியிறார். என்னை விளையாடவிடுங்கோ’
'செ'ல லத் துக் கு என்ன வாங்கித்தாறது? சொல்லுங்கோ! மகனை அணைத்து தலையைத்தடவுகின்றேன்.
'எனக்கு ஒண்டும் வேண்டாம் நான் வரயில்லை
"கேக்
(8660öfLTlib' "கஜ'
(36603, LTD" முந்திரி வேண்டாம் ‘அப்பிள்'
(8660öLTub'
38
அண்மையில் ரி.வி. இல் அவன் கிரிக்கெட் விரும்பிப் பார்ப்பது என் நினைவுக்கு வருகிறது. என்னிடம் வந்து 'அப்பா நான் தான் கங்குலி . நான்தான் ஜெயவர்த்தனா. ஜெயசூரிய. என
சொல் லிக்
கொண்டிருப்பான். கிரிக்கெட்டை வைத்து
இடையரிடையே
அவனை வழிக்குக் கொண்டுவர எண்ணுகிறேன்.
"அப்பா ஒரு விளையாட்டுச் சாமான் வாங்கித் தருவேன்'
‘என்ன வாங்கித் தருவியள் ஆர்வமாகக் கேட்கின்றான்.
"கிரிக்கெட் போளும் பற்ரும்' 'உண்மையா’ அவன் விழிகளி? ஆவலுடன் விரிகின்றன. அந்தவிழிகள் அவன் இப்ப என்னுடன் வருவதற்குச் சம்மதம் என்பதைச் சொல்லுகின்றன.
கலா அவனை உள்ளே
அழைத்துச் சென்று உடுப்புமாற்றி காலுக்குச் சப்பாத்துப் போட்டு, தலைக்குத் தொப்பி அணிந்து அழைத்து வருகின்றா. நான் சென்று மோட்டார் சயிக்கிளை எடுத்து அதில் ஏறி அமர்ந்து கொள்ளுகின்றேன்.
கலா போய் வெளிக்கேற்ரைத் திறந்து வைத்து விட்டு திரும்பிவந்து மகனைத் தூக்கி எனக்கு முன் மோட்டார் சயிக்கிளில் இருந்துகின்றா.
நான் மோட்டார்சயிக்கிளில்
மகனோடு புறப்பட்டுப் போகின்றேன்.

ஜீவநதி
ர\3க்குள்ளேயே
39
ஒன்றாவது \9னிதனுே
நல்லதோ கெட்டதோ எதுவான சந்தர்ட்பத்திலும் எழுந்தமானமாய் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடிகின்றதா? புரையோடிப் போன மரபுவழிச் சமூகத்தின் பார்வையில் இருந்து - நாம் அந்நியப்பட்டு விடுவோம்
என்றதொரு மனப்பிரக்ஞையிலும்
நடத்தைக் கோலத்தின் பிறழ்வுத் தன்மையை பலர் சிலாகித்துக் கொள்ளக்கூடும் என்ற அச்சத்தின் பற்றுதலாலும் சமூகத்தில் மிகுதியானவர்களின் ஒப்புரவுக்கமைய ஒழுகிவாழ்வதே - இங்கு நடப்பியல் ஆகிவிட்டது ஏன் வீண்வம்பென்ற ஏகமனத் தெரிவின் தோற்றுவாய் நிமித்தத்தால் முரண்பாடுகளின்
சிருஷ்டிப்புக்களுக்கே - நாம் முகம கொடுப்பதில்லை இந்த இலட்சணத்தில் மன உளைச்சலின் பிரதிவிம்பம் பாதியாயும் ரெளத்திரத்தின் கோர வடிவு மீதியாயும் நான் நண்பர்களிடம் ஆஜரான பொழுதுதான் சமூக எதிர்வினைத் திராணியற்று மூன்றாம் நபரான சமூகப் பிரதிநிதியை தத்தம் எண்ணங்களில் உதயமாகும் இடர்பாடுகளுக்கு வடிகால்களாகவும் அவஸ்தைகளாகவும் உருவகித்து அவர்களும் தமக்குள் தாமே முட்டி மோதும் குருஷேத்திரத்தை நடத்திக் கொண்டிருந்தனர் என்னைப் போலவே.
சி. விமலன்
மல்லிகை இதழின் ஊடாக கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனது தனித்துவத்தை நிலைநிறுத்தி, இன்று மல்லிகைப்பந்தல் வெளியீடுகள் மூலம் ஒரு பதிப்பாளராகவும் வெளியீட்டாளராகவும் உயர்ந்து நிற்கும் முற்போக்கு அணியின் மூத்த படைப்பாளியான
திரு.டொமினிக் ஜீவா அவர்கள் அமுதவிழா காணும் இவ்வேளையில் நீண்ட ஆயுள், சுகபலம் என்பவற்றுடன் நீடுழி வாழ ஜீவநதி வாழ்த்துகிறது

Page 22
ඉෂ්ඛIIbé 40
நெறியாள்கையும் நெறியாணரும்
க.திலகநாதன் (விரிவுரையாளர்)
நாடகம் சமூகத்திலிருந்து பிறந்து, சமூகத்தினால் வாழ்ந்து சமூகத்தை வாழ வைக்கிறது. இக்கலைவடிவம் மதக்கரணங்களில் இருந்து பிறந்தது. மனிதனது தேவையை நிறைவு செய்யும் பொருட்டு தோன்றிய கலைவடிவம். ஆகவே பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாடகம் அமைகிறதா? இயற்கையை வெற்றி கொள்ளவேண்டிய தேவை காரணமாக கரணம் தோன்றியது. இக்கரணத்தினடியாக நாடகம் தோன்றியது என்ற உண்மை மறுக்கமுடியாதது ஆகும்.
சமூகம் வழங்கும் மொழி, பண்பாடுகள், மரபுகள், வழமைகள், பாரம்பரியங்கள், மூடநம்பிக்கைகள் யாவும் நாடகத்தின் மூலங்கள். மக்களிடம் இருந்து பெற்றதை மக்களிடம் வழங்குவதுதான் கலை என்பதாகும், இந்த வகையில் தான் பேணாட்சா சோஷலிச சமுதாயத்தையும் பிறெச்ற பொதுவுடமைச் சமுதாயத்தையும் உருவாக்க முற்பட்டனர் எனக் கூற முடியுமா?
‘தேசம் ஒன்று தனக்கு முன்னிலையிலேயே வெளிப்படையாக நின்று சிந்திக்கும் இடம்தான் அரங்கு
-Matin Esslin
எஸ்லின் கூறும் இத்தகைய கூற்று எத்துணை பொருத்தப்பாடுடையது. உணவோடு மட்டும் மனிதன் வாழ்வதில்லை. நீர், நித்திரை, அன்பு, ஆதரவு என உடல் சார்ந்த தேவைகள் என்பதோடு மனிதனுக்கு கருத்துக்களும் உணர்வுகளும் அவசியம். அரங்கு என்பது மக்கள் கூடி நின்று செறிவான உணர்வுகள், கருத்துக்கள், அனுகூலங்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ளும் இடம் தான், கலை என்பது கலைஞரது வாழ்வு பற்றிய புலக்காட்சியின் தரிசனம் என்பர். நாடக ஆசிரியர், நெறியாளர், நடிகள் மற்றும் ஏனைய அரங்க கலைஞர்களின் கூட்டுச் சேர்க்கையாக நாடகம் இருப்பதால் பல சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. அதே நேரம் ஒன்றுபட்ட கலைத் தேடலில் கலைஞர்கள் ஈடுபடும் போது நாடகம் அதியுன்னத வெற்றியடைந்து விடுகிறது. மனித அனுபவமே அனைத்து அரங்க நடவடிக்கைகளுக்கும் காரணம். பார்வையாளர் கூட தமது வரவை மட்டும் அரங்கிற்கு கொண்டுவருவதில்லை. அனுபவத்தையும் சுமந்து வருகின்றனர். இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகப் பிரதான பங்கை எடுத்துக் கொள்பவர் நெறியாளர் ஆவார். கிட்டத்தட்ட முழுப் பொறுப்பும் நெறியாளருடையது என்று கூறுவது பொருத்தமுடையது ஆகும்.
நாடக நெறியாளரை மேடையின் சிருஷ்டி கள்த்தா என்பர். நாடகாசிரியரின் எழுத்துருவை மேடையில் இயக்குபவர் இவரே. ஆகவே மேடைப்படைப்பாளி எனக் கூறமுடியுமா? படைப்பாக்கம் என்பது இரண்டு நிலைகளில் வரும் என்பர். ஒன்று படைப்பாக்க மனநிலை (Creative Mood), மற்றையது படைப்பாக்க அனுபவம் (Creative Experience). படைப்பாக்க மனநிலை என்பது எழுத வேண்டும் போல இருக்கிறது எழுதினேன், இவ்வாறு நடிக்கவேண்டும் என இருந்தது நடித்தேன், இவ்வாறு நெறிப்படுத்தவேண்டும் என நினைத்தேன், செய்தேன் என்பவற்றின் அடிப்படையில் கொள்ளப்படுவது.

ஜீவநதி 41
படைப்பாக்க அனுபவம் என்பது அவரது ஆளுமையால் பெறப்படுவது, அந்த அனுபவம் பொதுமையாக்கப்பட்ட அனுபவமாகப் படைக்கப்படல் வேண்டும் (மற்றவரின் அனுபவத்துள் அடங்குதல் வேண்டும்). ஆகவே நாடக நெறியாளர் இரு நிலைகளிலும் செயற்படலாம். நெறியாளர் தனது படைப்பாக்கத்தின்போது இரண்டு சாதனங்களைப் பயன்படுத்துவார். ஒன்று நடிகர் (Actor/Actress), மற்றையது மேடை/களம் (Stage/ Space), நாடகம் என்பது நடிகரின் கலை எனக் கூறினாலும் கூட நெறியாளரின் ஆளுகைக்குட்பட்டே நடிகன் தன் படைப்பாற்றலை மேற்கொள்ள முடியும். அவ்வாறாயின் நடிகரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதா?
நடிகள் கலைஞராக இருந்தாலும் நெறியாளர் கையில் அவர் ஒரு சாதனம் (Tool) தான். நெறியாளர் தனது படைப்பாக்கத்திற்காக நடிகரைப் பயன்படுத்துகிறார். நடிகரின் ஆற்றலை, கற்பனையை, ஆர்வத்தை, படைப்பாக்க உந்து சக்தியை நெறியாளர் கட்டுப்படுத்துவதில்லை. அவற்றை நல்ல முறையில் தனது படைப்பிற்கேற்ப வழிகாட்டி (Guide) சிறந்த வெளிப்படுத்தலைக் கொண்டு வருகின்றார். இவ்வாறுதான் நடிகர் பயன்படுத்தப்படுகிறார். நடிகள், பார்வையாளர் தொடர்பு கொள்ளும் முறைமை இவ்வாறு அமையும் (படச்சட்ட அரங்கில் நிற்கும் நடிகரை அடிப்படையாகக் oெண்டு).
3 A - (p65TLJ355 5606) (Front Position) )D E B - ET6)urg5 5.c5 bilu 5606) (Quarter Turn Positionے 5 C C - 960J Justig5 5.cbiblu fa06) (HalfTurn Position)
D - (p55T6) LJBig5 5(5tbLiu 5606) (Three Quarter 3 Turn Position)
2 B A E - பின்பக்கம் திரும்பிய நிலை (Full Back)
1.
நடிகரின் உடல் நிலை பார்வையாளருடன் நெருங்கிய தொடர்புள்ள நிலை A BCED என ஒழுங்கு படுத்தப்படும். C,E இரண்டு நிலைகளும் சமமான பலமுள்ள நிலைகள், D ஏன் ஐந்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது? நடிகள் அரங்கைவிட்டு வெளியேறத் தயாராகிறார் என்பதாலா?
இவ்வாறான நிலையின் அடுத்தகட்டமாக நெறியாளர் கவனிக்க வேண்டிய விடயம் அசைவுகள, ஆகவே இனி அந்த அசைவுகளின் பினனணியில் மேடையை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் கவனிக்கலாம் (படச்சட்ட அரங்கை அடிப்படையாகக் கொண்டு). படச்சட்ட அரங்கைப் பிரிக்கும் போது 6 அல்லது 9 அல்லது 12 பிரிவுகளாகப் பிரிக்கும் முறை உண்டு. பெரும்பாலும் 9 பிரிவுகளையே கற்பித்தலில் பயன்படுத்துகிறோம்.
UR - Up Right - மே.வ - மேல் வலது UC - Up Centre - மே.ம - மேல் மத்தி UL - Up Left - மே.இ மேல் இடது
CR - Centre Right - LD.6) - LD55 66 g) CC- Centre Centre -- LD.LD - Dgögô LDÈ CL - Centre Left - LD.9 - Dig5. Sugs DR - Down Right -- .6)! - aÉp 616uogi DC - Down Centre - d.L.D - ap LD55 DL - Down Left - கீஇ - கீழ் இடது

Page 23
ஜீவநதி 42
படத்தில் குறிப்பிட்டபடி படச்சட்ட அரங்கின் பரப்புகள் பின்வரும் ஒழுங்கில் முக்கிய இடம் பெறுகின்றன. 1- DC, 2-DR, 3- DL, 4- CC, 5- CR 6- CL, 7-UC, 8- UR, 9- UL
ஏன் இடது பக்கத்தைவிட வலது பக்கம் முக்கிய பரப்பாக அமைகின்றது? எமது வாசிப்பு முறைமை வலதில் தொடங்கி இடதாக அமைகின்ற காரணத்தாலா? பண்பாட்டில் வலதுக்கு முக்கிய இடம் என்பதாலா? ஆனால் அணிவகுப்பு இடம் பெறும் போது இடம் எனத்தானே தொடங்குகின்றது. அப்படியாயின் ஏன் இடது முக்கியப்படவில்லை? எமது பார்வைக் கோணம் எப்பொழுதும் வலதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. ஆகவே வலது முக்கியமாயிற்று. இதன் காரணமாக மத்தி, வலது, இடது என்னும் அடிப்படையில் மேடையின் பரப்புக்கள் (Areas) முக்கியமாயின.
மேற்கூறப்பட்ட ஒழுங்குநிலையில் பலமான பரப்புக்களைநெறியாளர் பலவீனமாக்கவும் பலவீனமான பகுதிகளை அவர் பலமாக்கவும் முடியும். அதுதான் அவருடைய நெறியாள்கைத் திறன் ஆகும். மாறுபாடுகளை (மட்டங்கள் - Levels (36)|L2 60L - costume, UGO)601-Makeup, 66s-Light, blood60356it - Poses, GUTC5' 356it -PropS. அசைவுகள்-Movements, சத்தங்கள். Sounds) பயன்படுத்தியும் குவிவு (Focus) முறைமையைப் பயன்படுத்தியும் அதனைச் சாத்தியமாக்கலாம்.
பெரும்பாலும் (எப்பொழுதுமல்ல) மேல் வலது, மேல்மத்தி, மேல் இடது, பகுதிகள் காட்சிப் பொருட்களால் நிரப்பப்படுவதுண்டு. ஆகவே முன்பகுதிகளில் தான் செயல்கள் பெரும்பாலும் இடம் பெறும். இத்தகைய செயல்களுக்கு நடிகரைப் பயன் படுத்துபவர் நெறியாளர். மேடையில் இணைப்பாக்கத்தை (Composition), 35|Tid Lu(655606) (Picturization), 9608660)6OT (Movements), 6)uugi,605 (Rhythm) கூட்டும நாடகவாக்கத்தை (Pantomimic dramatization) உருவாக்கி கதையைப் பரிமாற காலாயிருப்பவர் நெறியாளரே, நடிகரினது அசைவுகள் தீர்மானிக்கப்படுவது யாரால்? கூத்தில் அண்ணாவியார் தீர்மானிப்பார். எப்போது எட்டுப் போடுவது? எப்போது பெருவட்டம் போடுவது? குறிப்பிட்ட தாளக்கட்டுக்கு ஏற்ப எவ்வாறு ஆடுவது? போன்ற அசைவுக்கான ஒழுங்குகளை அண்ணாவியாரே தீர்மானிக்கின்றார். நடிகரையும் மேடையையும் எவ்வாறு நெறியாளர் பயன்படுத்துகிறார் என்பதை இதுவரை பார்த்தோம். உண்மையில் இது நெறியாளரின் அறிவு, திறன் எனக் கூறமுடியுமா? இத்தகைய அறிவு, திறனுடாக வியாக்கியானம் செய்கின்ற மனப்பாங்கினைப் பெறுகின்றார். படைப்பாக்க மனநிலை, படைப்பாக்க அனுபவத்தினுாடாக வியாக்கியானம் செய்கின்ற நிலை தோன்றுகிறது அரங்கிற்கான அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுகின்றவராகவும் அனைத்தையும் தெரிவு செய்கின்றவராகவும் காணப்படுகின்றார்.
எழுத்துரு
நடிகர்
மேடை (களம்)
85 ITL f
இசை - சத்தம்
ஒளி
(86) L-2 60L
ஒப்பனை
Uss 636)Us6T.

ஜீவநதி 43
முழுமையான புரிந்து கொள்ளல், அவதானம், கருத்தூன்றல் ஊடாக வியாக்கியானம் இடம்பெறும். இத்தகைய வியாக்கியானம் நாடகாசிரியர் சொல்லவந்த கருத்தை அழுத்திக்காட்டவேண்டுமே தவிர வேறுவிதமாகச் சித்திரிக்கக்கூடாது. ஆரம்ப காலத்தில் நாடகாசிரியரும் நெறியாளரும் ஒருவராக இருந்த காரணத்தால் சிக்கல்கள் தோன்ற வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் இருவரும் வேறுவேறான நிலையில் வருகின்றபோது அவதானம் தேவைப்படுகின்றது. நாடகாசிரியரின் அனுமதியின்பேரில் சில மாற்றங்களைச் செய்யலாம் அல்லது பிரதியை விலைக்கு வாங்கியிருந்தால் அத்தகைய சுதந்திரம் உண்டு.
நெறியாளர் தனித்துவம் மிக்கவராக விளங்கினாலும் கூட நாடக அரங்கு கூட்டுமொத்த தயாரிப்பு என்ற நிலையில் அந்த கூட்டு வாழ்க்கையை மிகவும் சுவாரசியமாகவும், மகிழ்வாகவும் அனுபவிக்கும் ஆளுமை அவருக்கு இருக்கும். ஏனெனில் அது அவரின் தலைமைத்துவப் பண்பாகவும் விளங்குகின்றது.
அரங்க வரலாற்றில் ஆரம்பத்தில் நாடகாசிரியரே நெறியாளராக இருந்தார். 19ஆம் நூற்றாண்டின் பின்னரே லோட் சேக்ஸ் மனிங்கன் கோமகன் நாடகத்தில் நெறியாள்கை என்ற விடயத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஸ்ரனிஸ்லவஸ்கி மிகவும் முக்கியமானவராக இருந்தார். இவரே நடிப்பில் முறைமைக் கோட்பாட்டை முன்வைத்தவர். தொடர்ந்து பேட்டோல்ற் பிறெச்ற் நெறியாள்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார், இவர் ஜேர்மனியைச் சேர்ந்தவர், கவிஞர், நாடகாசிரியர், நெறியாளர் நாடகக் கோட்பாட்டாளர், பொதுவுடைமைவாதம் பேசியவர், போதனை அரங்கை முன்வைத்தவர். தொடர்ந்து பல நாடக அறிஞர்கள் அரங்க வரலாற்றில் இடம்பெறறாலும் துருத்திக் கொண்டு நிற்பவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒகஸ்ராபோல் என்பவரே இவர் விவாத அரங்கை முன்வைத்தவர்.
எமது பண்பாட்டில் கூத்தின் நெறியாளர் அண்ணாவியார். இசை நாடகத்திலும் அவ்வாறே.
மேற்படி நெறியாளர் அரங்கில் பல்வேறு பணிகளைச் செய்கிறார். நாடக எழுத்துருவை வாசித்து, வியாக்கியானம் செய்து, நடிகர்களைத் தெரிவு செய்து, தெரிவு செய்த நடிகர்களுக்கு பாத்திரங்கள் வழங்கி, ஒத்திகைகளை மேற்கொண்டு, நாடக அளிக்கைவரை பல செயற்பாடுகளையும் இணைத்து நாடகம் ஒன்றினை முழுமையாக பார்வையாளருக்கு வழங்குவதே அவரது பணியாகும்.

Page 24
§ඛIIbé
44
நூல்மதிப்புரை நூல்:-துவிதம் ஆசிரியர் :-ஆழியாள்
‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினுாடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்' என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் 'மறு' வெளியீடாக வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்துக்கள் மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகியிருக்கும் தற் கால இலக் கரிய உலகளில் : இக்கவிதைத் தொகுதி புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் படைப்புக்களுக்கு வலுச்சேர்க்கும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.
பெண - மொழ7-க வ?தை :
மொழிசார் சாலைப் பயணம் என்ற தெ. மதுசூதனனின் ஆழமான தொடக்க அறிமுகத்துடன் அழகான அமைப்பில் அமைந்துள்ள இக்கவிதைத் தொகுப்பில் மொத்தம் 24 கவிதைகள் அமைந்துள்ளன.
கவிதைகள் அனைத்திற்கும் தாயக வாழ்வும் புலம்பெயர் தேசத்து வாழ்வும் இணைந்த உணர்வுநெறி அடிபபடையாக அமைந்துள்ளது. சில கவிதைகளில் இரணி டையுமே வேறுபிரித்து அறியமுடியாதபடிக்கு அதன் உள்ளுணர்வு பின்னிப் பிணைந்துள்ளது.
ஆழியாளின் கவிதைகள் அனைத்தும் சுட்டுகின்ற பொருட்பரப்பு முக்கியமானது. இத்தொகுப்பினுாடாக தாயக வாழ்வின் ஞாபக அடுக்குகளில் இருந்து பல உணர்வு வெளிகள் விரிகின்றன. வாழ்வு பற்றிய பிடிமானமும் அதற்கான எத்தனமும் இந்தச் சூழலிலிருந்து மெல்ல மெல்ல விலகுவதும், புலம்பெயர் தேசத்தில் அந்நியமாகிப் போன வாழ்வு நிலையும், பெண் தன்னையும் தன் உணர்வுகளையும்
வெளிப்படுத்துதலும், பெண் தன் தனித்துவத்தைக் கட்டமைத்தலுமாக இத்தொகுப்பின் கவிதைகள் பல வழிகளில் பயணிக்கின்றன.
பெண் ஒடுக் குமுறையும் அதற்கெதிரான எழுச்சியும், பெண் தன் சுய அடையாளத்தை வெளிப்படுத்தலுமாக இதுவரை பயணித்து வந்த பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வளவு தூரம் முக்கியமோ, அதே அளவு பெண் தனக்கான மொழியைக் கட்டமைக்கும் சிந்தனையும் அதற்கான செயற்பாடுகளும் தற் கால இலக் கரிய உலகளில் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக பெண் தன்னை தன் எழுத்துக்களுக்கூடாக மறுபிரதி செயப் த லும் தன் உணர்வுகளையும் தன் மொழியையும் எழுதுதலாயும் உள்ளது. இது காலம் காலமாக இருந்த தடத்தை அழித்து புதிய தடத்தை எற்படுத்தும் நிலை. இதன் ஒரு அம சமாக த தா ன “இருபர் ப ைத உடைக்காமல் புதிய சொல்லாடலை உருவாக்க வழியில்லை’ என்று பெண்ணியல் திறனாய்வாளரான ஹெலன் fä56Můsmid (Helene Cixous) 6(pgộusiT6TTTTİ. இதனாலேயே பெண், பெண்உடல், பெண் மொழி என்பன இன்றைய இலக் கரியச் சூழலில் மிகுந்த விவாதத்திற்கு உட்பட்டிருக்கின்றது. பெண்கள் தமக்கான மொழியைக் கட்டமைப்பதன் மூலம் தமக்கான விடுதலையை சாத்தியமாக்க முடியும் என்ற சிந்தனையும் இன்று வலுப்பெற்று வருகின்றது. இவற்றை மனங்கொண்டுதான் ஆழியாளின் படைப்பினை நோக்கமுடியும். காமம், விடுதலை, தடம் இதுபோன்ற பல கவிதைகளை ஆழியாளின் பெண் மொழிக்கு உதாரணமாகக் காட்டலாம். "தடம்’ என்ற கவிதையில்
 

ஜீவநதி 45
“வெகு இயல்பாய் சுவருக்கு செவிகள் என் தடமழியும் உண்டு 666TD இருளுக்கு கூர் விழிகளும் பதித்த நீர்ச் சுவடு உண்டு போல பீறிக் கசியும் ரத்தமாய் காற்றுக் மேலும் காவும் உண்டு இன்னொன்று மீன் வசம் போல அவளுக்கு.”
க ட ற க  ைர க’ காலடியாய் வெகு இயல்பாய் என் தடமழியும் நாலு சுவருள் ஒற்றப்படும் மென் உதட்டு முத்தம் போலவும் எட்டுக் கால் படும் ஒற்றைச் செருப்படி போலவும். வெகு இயல்பாய் என் தடமழியும் ஒளி விழுங்கின வானவில்லாய்.”
தனது முதலாவது தொகுப்பிலேயே என் ஆதித் தாயின் / முதுகில் பட்ட/ திருக்கைச் சவுக்கடி/ நான் காணும் ஒவ்வொரு முகத்திலும் தழும்பாய் தேமலாய்/ படர்ந்து கிடக்கிறது’ என்ற பிரகடனத்துடன் கவிதை எழுதியபோதே கவனிக்கப்பட்டவர் ஆழியாள். துவிதம் தொகுப்பில் அமைந்துள்ள ‘காமம்’ என்ற பிறிதொரு கவிதையில்
“உயரும்
மலையடிவார
மண்கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின்
ஆழப்புதைவில்
அலறி ஓயும்
குரல்களின்
இறுதி
விக்கல்களும்
உண்டு இங்கு
ஆழியாளின் கவிதைகளின் பலமே அதன் மொழிதான். ஆணாதிக்க மொழியில் இருந்து விடுபட்டு பெண்கள் தமக்கான மொழியை உருவாக்குதலும் இவரின் படைப் புநெறியாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம். தமிழ்ச்சூழலில் அம்பை, மாலதி மைத்திரி குட்டிரேவதி, சுகிர்த J, சல்மா, புகலிடத்தில் ரஞ்சனி, சுமதி ரூபன் ஆகியோரின் எழுத்துக்களில் இதற்கான எதி தன தி தை தற் காலத் தரில் அவதானிக்கமுடியும்.
தாயக வாழ்வு தந்த போரின் வலிகளைப் பதிவுசெய்யும் கவிதைகளில் “சின்னப்பாலம்’ கவிதை ஏனைய பல கவிதைகளுக்கு தொடர்ச்சியாயப் அமைந்துள்ளது. அது கொண்டு வரும் படிம அடுக்குகள் முக்கியமானவை. அதரி ல வெளிப் படும் குரூரம் காட்சிப்படிமமாகத் தொடர்வதனை கவிதையரின் வாசிப் பரினுTடாக கண்டுகொள்ளலாம். இது போன்ற உணர்வு வெளிப் பாடுகளை பல ஈழக்கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சேரனின் ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம் கவிதையரில எலும் புக் கூடுகள் அணிநடையாகச் சென்ற பின்னரும் தொடரும் ஓசை ஒழுங் குபோல் ஆழியாளின் இந்தக் கவிதையிலும் தொடர்கிறது. இதனை அதியதார்த்தக் (Surrealism) கவிதைகளில் வெளிப்படும் பண்புக்கு இணையாக ஒப்பிடலாம்.

Page 25
§ඛuIBá
சின்னப் பாலத்தடிக்கு நித்தம் செட்டை அடித்து வந்தன வழக்கத்திலும் கொழுத்த ஒற்றைக்கால் கொக்குகளும், சுழியோடும் நீர்க்கோழிகளும். அவற்றிலும் அதிகமாய் விளைந்து கிடந்தன ஊறி அழுகிய பிணங்களின் வாசனை முகர்ந்து, சுவை அறிந்த ஜப்பான் குறளிகளும், குறட்டை பெட்டியான் மீன்களும். கபறக்கொய்யாக்களோ எவ்வித நிர்ச்சலனமுமின்றி நீரிற் பொசிந்துாறிய மனிதக் கபாலங்களை ஆளுக்கு ஐந்து ஆறாய்ப் பங்கிட்டுக் கொண்டன - சண்டை சச்சரவின்றி
சமாதானத்துடனே. தேவைப்படும்போது அவை பின்னிற்பதில்லை தம் நாவால் மனிதக் கட்குழிகளை நீவிக் கறுத்த விழிகளைத் திராட்சைகளாய் உறிஞ்ச. இவை தவிர ஆழியாளின் கவிதைகளில் அந்நியமும் தனிமையும் வெளிப் படுவதையும் அவதானிக்கலாம். "மரணம்’ என்ற கவிதையில் அவர் தனது தனிமையை வெளிப் படுத் த எடுத்துக்கொள்ளும் உவமை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.
“கலங்கரை விளக்கத்து இரவுக் காவலாளியாகவும்
ஆறடிக் குழியுள் மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட
பினமொன்றைப்
போலவும் தனித்தே
மிகத் தனித்தே
இருக்கின்றேன்.” “
46
கொடுரமான கனவுகளே வாழ்வாகிப் போன நிலையில் கவிதை சார்ந்த அழகியலும் சூழல் சார்ந்தே இயங்குவதனைக் கண்டு கொள்ளலாம். இது இவரது அதிகமான கவிதைகளுக்குப் பொருந்தக்கூடியது. சின்னப்பாலம், கிபி2003 இல் தைகிரீஸ்,
மரணம் , ஞாபக அடுக்குகள் ஆகியவற்றில் வரும் படிமங்கள் முக்கியமானவை.
உணர்வும் தர்க்க மும்
இழையோடும் கவிதைகளில் அவை வெளிப்படுத்த விளையும் பொருட்பரப்பும் அதன் அழகியலும் மிகக் கட்டிறுக்கமாக பல கவிதைகளில் அமைந்துள்ளன. குறியீட்டு அர்த்தமுடைய கவிதைகள் வாசிப்பில் பல அர்த்தத் தளங்களுக்கு இடங்கொடுக்கின்றன. கவிதைகளின் அர்த்தத்திற்கு ஏற்ப சில கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சாத்தியமில்லாத பந்தி பிரிப்பு தவிர்த்திருக்கக்கூடியதே. சின்னப்பாலம், விமானநிலையச் சந்திப்பு ஆகியவற்றில் வரும் இறுதி இரண்டு பந்திகளுமே Ꮿ!60Ꭰ6Ꭳ] .
அதரி களவான பெணி Lu 60) L Lj Lu (T 6f 6Ť தொடர்ந்து எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு விமர்சகர்களால் முன்வைக்கப்படுவ துண்டு. இது படைப்பு நெறி சார்ந்து நோக்கும்போது பெண் படைப்பாளிகளிடம் இருக்கும் முக்கிய குறைபாடாகும். அந்த நிலையரிலி இருந்து விடுபட்டு தொடர்ச்சியாக தனது படைப்பைச் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஆழியாளுக்கும் உண்டு. அதற்குரிய வீச்சும் புதிய விளைவும் ஆழியாளிடம் நிரம் பவே உள்ளன என்பதை வெளிவந்துள்ள இரண் டு தொகுப்புக்களுமே நிரூபிக்கின்றன. இந்த வகையில் புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களின் படைப் புக் களில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதும் ஈழத்தமிழ்ப் படைப்புக்களில் தவிர்க்க முடியாததுமான ஒரு தொகுப்பாக துவிதம் அமைந்துள்ளது என்பது வெளிப்படையான 2-60öT60)LDu III(5b.

ஜீவநதி 47
கட்டை&வலி - வநல்லியடி ப.நோ.கூ.சங்கம்
எமது சங்கச் சேவைகள்:
நுகர்ச்சிச் சேவை தரமான நூலக சேவை கிராமிய வங்கிச் சேவை புலமைப்பரிசில் வழங்கல் வாடகைச் சேவைகள் தரமான திரைப்படக்காட்சிக்கூடாக புதிய ரசனையை ஏற்படுத்துதல் எரிபொருள் சேவை விவசாய சேவை நூல்வெளியீடும் விமர்சனங்களும் கூட்டுறவுக் கலாசாரப் பெருமன்றம் “சங்கம் செய்தி’ மாதாந்த வெளியீடு.
தொலைபேசி இலக்கம் :- 021-2283263 தொலைநகல் 021-2283283
021-22647
02-226,725 > கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம் கரவெட்டி.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
கதிரலின்ஸ் பகுனி
భస్యో
•*፷፭ 窓。
& ... 'X
&
** **
鲸 R. திருமால் 8లజీయ96ల్
蹟 பாண்,பணிஸ், பிஸ்கட்வகைகள்,
கேக்வகைகள் கிடைக்கும். மற்றும் உங்களுக்குத் தேவையான திருமண, பிறந்தநாள் ஐசிங்கேக் வகைகளும் ஒடருக்குச் செய்து கொடுக்கப்படும்.
உங்களுக்குத் தேவையான
பாதணிகள் புத்தம்புது வடிவங்களிலும் நிறைந்த தரத்திலும் பெற்றுக் கொள்ளவும் பாடசாலை சிறுவர் சிறுமியர்களுக்கான ஸ்கூல்பாக், சப்பாத்து போன்றவற்றை தெரிவு செய்யவும் மற்றும், சகலவிதமான விளையாட்டு உபகரணங்களையும் பெற்றுக் கொள்வதற்கும் நாட வேண்டிய ஒரே இடம். பிரதானவீதி, நெல்லியடி.
தொலைபேசி ;~0779093131 கொடிகாமம் வீதி, ா நெல்லியடி.
უ).:
DSDSSYBBSYYBDSDBSYSBSBSSBS DeSBBSDBe eSYYeBSYYSeSYYBS B BS BS BS BSB

Page 26
ஜீவநதி 48
ஆயுள் காப்புறுதியா? பொதுக்காப்புறுதியா? உங்கள் காப்புறுதித் தேவைகளுக்கு நாடவேண்டிய காப்புறுதி நிறுவனம்
மாநிலங்கா இன்கருரன்ஸ் நாட்டுப்பிரச்சினை காரணமாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இடைநிறுத்தாது தனது சேவையை யாழ். மக்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஒரேயொரு காப்புறுதி நிறுவனம் மாநிலங்கா இன்கருரன்ஸம் ஆயுள்காப்புறுதியில் குறைந்த கட்டணத்தில் நிறைந்த இலாபப்பங்கினை வழங்கும் நிறுவனம் இளைஞர்களே/யுவதிகளே
க.பொ.த.(சா/த) பரீட்சையில் கணிதம் உட்பட 6பாடங்கள் சித்தியெய்தி வேலைவாய்ப்பின்றி வேதனைப்படுகிறீர்களா? பூரீலங்கா இன்சூரன்ஸ் முகவர்களாக இன்றே இணையுங்கள் தொடர்புகளுக்கு - திரு.கோபால் தவராஜா
அமைப்பாளர் பூரீலங்கா இன்சூரன்ஸ் 9IC 5600TT6)UJLD நெல்லியடி வடக்கு, கரவெட்டி
O7772.50918
ALSLSLSL ESL LSL SLSL SLSLA LLSLSL LSLSLSLL LLSLLLLSAAALLSLESLLSL LSSLLSLSL LSLSLS
நியூ கிருஷி0ை DOROAD
கிறீன்வுறவுனல் 8 . Enterprises
R Communication 8 and Video multicomplex
; Phones, phones Accessories Latest Tamil, Hindi & English movies on VHS.
விசேட வைபவங்களகக் V.C.D. and DVD
(S5 d5(35 IDD&Local calls Laminating
குளிர்பான வகைகளை ஓடர் stationery and fancy items
*Vam - for HIRE
R
செய்து பெற்றுக்
R R R R
தேவையான ஐஸ்கிறீம், photocopy, Binding,
R R R R R R
கொள்ளலாம்
R Main Street Nelliyady, R Tel/Fax 0212263.432
கொடிகாமம் வீதி, dora 2000 (a)sitnetik.
SSLSLLLSLL ESL ESLSESLSLESLSLSLSESL ESL ESLSSLSALSLSLSL LSL SLSLSLSLSL LSLESL ESL LSL ESLSLSL LSLSLSLS
MNV MNV MNV MNV MNV ~~~~~~~~~~~~~~~~~~~~~~്
 
 

ó。
كم .
திருமண பட்டுச் சாறிவகைகள்`ஆ. S. சோளிஸ் 等
கழதார்
ஸ்கேட் & பிளவுஸ் அலங்காரய் பொருட்கள் Gತt. шритозғiт பேபி சூட் சிறுவர் சிறுமியருக்கு ஏற்ற ரெடிமேட் ஆடைகள்.
ག་ཚོ་
(డా ഋജാവ്ലേജുബ്ബു ഒഴ്വജ്ര XA
o/tain 6ezeef, விெag
el 0.21-2263207.
இச்சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியிட்டு உரிமையாளர் கலாநிதி தகலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 27
勤
園 % % % °C青
娜脚 加g % QQ蠟 A A A A ZA:
ephone: 0779364727
Te!
 
 

RC3.AB NEI LEYABHY
E-Mail: einfosystem ayahoo.com
Services
ouvSing
ܐܠ
1-226,5335
tnet. Ik -