கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2007.09-10

Page 1


Page 2
:
• • • • • • • • @ @ @ @ @ @ @ • @ ,@ 發 • @ @ @ @ @ @ • @ @ @ @ @ @ @ @ @ @
வைன்ழங் குன்
செய்து கொடுக்கப்படும். |
கொழமாமவீதி நெல்லியழ.
O
O
O
O
O
O
O
O
O
O
6.
e
O
O
O
e
6.
蠍
象
@
* மனோகரா Τ. Ρ0774170298 அல்வாய். ※ O776687103
ஜனன எம்.ர்Uதனிநிலையம்
வடிவங்களில் மொத்தமாகவும் சில்லறையாகவும்பெற்றுக்
கவிஞர் செல்லையா வீதி
دو مجھco
உற்பத்தியாளர்கள். எம்மிடம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர்களுக்கு தேவையான பாதணிகள் சகல
கொள்ளலாம். இன்றே நீங்கள் நாடவேண்டிய இடம் ஜனா ~ எம்.ரி பாதணி நிலையம்
--
 
 
 
 
 
 
 
 

R @
நதியினுைள்ளிே.
R * கவிதைகள் : சோ.ப -0.6 * கல்வயல் வே.குமாரசாமி -07 நதி - 01 கிளை - 02 த.ஜெயசீலன் -08
ச.நிரஞ்சனி -15 ܓܠ ܐ பிரதம ஆசிரியர்கள் : எழில்வேந்தன் -27 ജ சின்னராஜா விமலன் * த.அஜந்தகுமார் -34 يهcع : ஏ. இக்பால் -34 @r கலாமணி பரணிதரன் 影 இ.சு.முரளிதரன் -88 2 - யோ.யோகானர் -89" " நிருவாக ஆசிரியர்: ந்தி ܐ ܬܐ ܬ݁ܶܝܢ
துரைராஜா இராஜவேல் 影 t
s * கட்டுரைகள் གག་བར་ S. லோசகர் R s 03- e25 குழு செ.திருநாவுக்கரசுگے
திரு.தெணியான் o o o 影 அம்மன்கிளி முருகதாஸ் -12. ○ திரு.குப்பிளான் ஐ.சண்முகலிங்கம் 影 மெளனகுரு 19چ திரு.கி.நடராஜா 影 தெணியான் 28 )ي(
激 கி.நடராசா -35 தொடர்புகளுக்கு : N பரணி -37 கலை அகம் 激 க. திலகநாதன் - 41 சாமனந்தறை ஆலடிப்பிள்ளையார்வீதி பா. அகிலன் 一44 அல்வாய். லம்போதரன் ー46
தொலைபேசி 0775991949 影 நேர்காணல்
O7769.91015 செங்கை ஆழியான் -23
R R *> சிறுகதைகள் Fax : 021226.3206 : அநாதரட்சகன் -10 E-mail: jeevanathy (Ga).yahoo.com $ குந்தவை -3 மயூரருபன் -32 Web : www.jeevanathy.Com 激 ,
R ര e நூல் மதிப்புரை பதிப்புரிமை: கலை அகம் வெளியீடு 6.af. (Surasily staff ー40
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும் படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
கலை இலக்கிய நிகழ்வுகள் -48
பேசும் இதயங்கள் -50
(அட்டைப்படம் : அன்றா சுதர்சன்
ஆசிரியர்

Page 3
ஜீவநதி 2
இவரததி
(கலை இலக்கிய இருதிங்கள் ஏடு)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம் !
-பாரதிதாசன்ஜீவநதிப்பயணத்தைத் தொடர்வோம் பிரமிப்பாக இருக்கிறது. இளைஞர் நாம் இணைந்து மேற்கொண்ட சஞ்சிகை வெளியீட்டு முயற்சியைப் பாராட்டி ஆதரவுக்கரம் நீட்டி எமக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்துள்ள அனைத்து நெஞ்சங்களையும் நாம் நன்றியுடன் நினைவில் பதித்துக் கொள்கின்றோம். இன்றைய சூழலில் விற்பனை விநியோகம் தொடர்பாக எதிர்கொள்ளக்கூடிய இடர்பாடுகளை மனதில் கொண்டு 'ஜீவநதியின் முதலாவது இதழில் குறிப்பிட்ட பிரதிகள் மட்டும் அச்சிட்டோம். வெளியீட்டு விழாவிலேயே பெருமளவு பிரதிகள் விற்பனையாகிவிட ஏனைய பிரதிகளை இயன்றவரை நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் அனுப்பி வைத்தோம் . இப்போது எம்முடன் தொடர்புகொள்பவர்களுக்கும், நாங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கோரும் படைப்பாளிகளுக்கும் அனுப்புவதற்குகூட 'ஜீவநதியின் முதலாவது இதழின் பிரதிகள் எம்மிடம் இல்லை.
ஜீவநதியின் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியது. பலர் தங்கள் பெயரினை வெளிப்படுத்தாது கடித உறையுள் பெருந் தொகைப்பணத்தை வைத்து தந்து சிறப்புப்பிரதிகள் பெற்றுச் சென்றமை எம்போன்ற இளைய தலைமுறையினரிடத்தில் அவர்கள் கொண்டுள்ள பெருநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இளம் தலைமுறையினர் பலர் ஜீவநதியின் சந்தாதாரராகச் சேர்ந்து கொள்ள மிகுந்த விருப்பம் தெரிவித்துச் சென்றுள்ளனர். பலர், நேரிலும், கடிதங்களிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றிக்கு உரியவர்களாவோம். இவர்கள் எல்லோரது நம்பிக்கையும் உறுதிப்படுத்தும் காத்திரமான இதழாக ஜீவநதி தொடர்ந்து வெளிவரும்.
மானுடத்தின் மேன்மையை தமிழ்கூறும் உலகிற்கு உணர்த்தும் இலட்சியப் பயணத்தில் 'ஜீவநதி தன்னை இணைத்துக் கொள்ளும். மானுடத்தின் வெற்றிக்கு உந்துசக்தியாக அமையக் கூடிய படைப்புக்களைத்தாங்கி 'ஜீவநதி தொடர்ந்து வெளிவரும் மானுடத்தின் பலங்களையும் பலவீனங்களையும் கலாபூர்வமாக சித்தரித்து மானுடத்தின் உன்னதத்துக்கு வளம் சேர்க்கும். படைப்புக்களுக்கு 'ஜீவநதி களம் அமைத்துக் கொடுக்கும். இப் பயணத்தில் மூத்த படைப்பாளிகளுடன் இளந் தலைமுறையினரும் இணைந்து கொள்ள முன்வருமாறு 'ஜீவநதி' இருகரம் நீட்டி வரவேற்கிறது. வாருங்கள்! எமது புதிய சிந்தனைகளை மெருகூட்டி கலை இலக்கியப் பயணத்தைத் தொடர்வோம்.
ஆசிரியர்கள்.

ஜீவநதி 3
சினிமா : ஒரு கல்விசார் பார்வை
கலாநிதி - செ. திருநாவுக்கரசு.
இன்றைய உலகில் கவர்ச்சியும் ஈர்ப்பும் மிக்க வெகுசனத் தொடர்புசாதனமாக சினிமா (cinema) விளங்குகின்றது. 1895 இல் பிரான்ஸ் நாட்டில் அது தோற்றம் பெற்றதாயினும், கட்புலனும் செவிப்புலனும், இணைந்த பேசும் படமாக 1927ம் ஆண்டளவிலேயே உருவானது 31. 10. 1931 இல் திரைப்படம் தமிழில் பேசத்தொடங்கியது. உலகிலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளின் திரைப்படங்களில் மாத்திரம் பாடல்கள் இடம் பெறுகின்றன. அவற்றுள் இந்தியத் திரைப்படங்கள் முதன்மை வகிக்கின்றன. பாடல்களும் இசையும் தமிழ்த்திரைப்படங்கள் உட்பட எல்லா இந்தியமொழித் திரைப்படங்களிலும் அறாத் தொடர்புடன் இடம்பெற்று மரபுவழி நிலையில் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன. பாடல்கள் இல்லாத தமிழ்த்திரைப்படங்கள் சில இருந்த போதிலும், இசைப் பாடல்களின் செல்வாக்கு இன்னமும் குன்றிவிடவில்லை என்பதும், மாறாகக் கணிசமான தமிழ்ப்பட இரசிகர்களிடையே திரையிசைப்பாடல்கள் அதீதமான முறையில் சார்புநிலைத் தாக்கத்தினை ஏற்படுத்திவருவதும்யதார்த்தமாகும்.
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சினிமாவானக வாழ்வியலின் U60i (Lp 85 85 கூறுகளிலும் பரவி வருகின்ற சாதனமாகும் . ஆரம்பகாலத்தமிழ்ப்படங்கள் யாவும் படம்பிடிக்கப்பட்ட நாடகங்களாகவே விளங்கின. கலைஞர்களும் . பெருமளவுக்கு இசைநாடகமேடை அனுபவத்துடன் காணப்பட்டனர். சொந்தக் குரலில் பாடக்கூடிய கலைஞர்களுக்கே திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. காலப்போக்கில் பின்னணி பாட்டுக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டதுடன் குரல்வளம் இல் லாதவர் களும் தரைப் படங்களில் நடிக் கமுடிந்தது. தொழில்நுட்பத்துறையிலும் தமிழ்ச்சினிமா வளர்ச்சியடையத்தொடங்கியது. தற்போது காமிரா மூலம் காட்சிகள் நகர்த்தப்பட்டுக் கதை சொல்லும் திறன் தமிழ்த் திரைப்படங்களின் தரத்தை உயர்த்தியுள்ளது. பின்னணிக்குரலானது பாட்டுக்கு மாத்திரமன்றிப் பேச்சுக்கும் பயன்படும் அளவிற்கு சினிமாவில் தொழில்நுட்பம் காணப்படுகிறது. தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத நடிக நடிகையரின் எண்ணிக்கையே அதிகமாயுள்ள நிலையில், தமிழ்ச்சினிமாவின் போக்குப் பற்றிய விமர்சனங்களும் எழுகின்றன. மனதை மயக்கவைக்கும் மென்மையான இசைக்குப் பதிலாகத் துள்ளல் இசையும் ‘கானா' மற்றும் "பொப்" பாடல்களும் அதிகளவில் வெளிவருகின்றன. பாலியலும் வன்முறையும் தமிழ்ச்சினிமாவின் ஆத்மாவை நெரித்துவருகின்றன. சினிமா என்பது சமூகப் பயன்பாட்டு ஊடகம் என்பதை மறந்துவிட்டு வணிகநோக்குடைய சாதனம் என்றவகையில் இலாபநோக்குடன் செயற்படுவதையும் அவதானிக்கமுடிகிறது.
ஆரம்பகாலத் தமிழ்ப்படங்கள் இதிகாச, புராணக்கதைகளாகவே காணப்பட்டன. பின்னர் மெல்லமெல்ல வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றஉணர்வுமிக்க கதைகளும் படமாக்கப்பட்டன. அதீதகற்பனைக் கதைப்படங்களும் அடிக்கடி வெளிவந்தன சமய நம்பிக்கைகளும் சமூக நம்பிக்கைகளுமி, வரலாற்று மெய்மைகளும், நடப்பியல் உண்மைகளும் திரைப்படங்களின் கருப்பொருள்களாகின. இதுவரை எறத்தாழ ஐயாயிரம் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவந்தனவாயினும், தமிழ்த்திரைப்பட வளர்ச்சிப்போக்கானது ஆரோக்கியமானதாக இன்று காணப்படவில்லை.

Page 4
ஜீவநதி 4. இந்தியத்தமிழ்ச்சினிமாவின் தாக்கம் இலங்கையில் எப்போதுமே உண்டு. இலங்கையிலுள்ள தமிழ்பேசுவோரிடத்தில் மட்டுமன்றிச் சிங்கள மக்களிடமும் தமிழ்ப்பட ஈர்ப்பும் ரசனையும் காணப்படுகிறது. இலங்கையில் சுமார் நாற்பது தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்பட்டபோதிலும் அவற்றுள் ஒரு சிலவே பொருளாதாரரீதியில் வெற்றி கண்டன. ஏனையவை தோல் வியடைந்தன இந்தியத் தமிழ்த்திரைப்படங்களின் கவர்ச்சிமிக்க தாக்கமே இதன் பிரதான காரணியாகும். சந்தை வாய்ப்புடைய இந்தியத் தமிழ்ப்படங்களுடன், குறைவான வளங்களுடன் தயாரிக்கப்பட்ட இலங்கைத்தமிழ்ப் படங்களால் போட்டிபோட முடியவில்லை.
இலங்கையரின் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் கலைத் தரிட்டங்களிலும் , ஆசிரிய கலாசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முதலானவற்றின் கலைத்திட்டங்களிலும் பொதுவான முறையில் சினிமாவின் செல்வாக்கும், சிறப்பான முறையில் தமிழ்ச்சினிமாவின் தாக்குரவும் மிகுந்து காணப்படுகின்றது. இம்முறைசார் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், இந்துசமயம், சைவசமயம், இந்துநாகரிகம் கிறிஸ்தவநாகரிகம், சமூகவியல, பரதநாட்டியமி, கள்நாடக சங்கீதம், நாடகமும் அரங்கியலும் முதலான பாடங்களின் கலைத்திட்டக் கூறுகளில் தமிழ்த் திரைப்படங்களில் காணப்படும் செய்திகள, பாடல்கள், இசைக்கூறுகளி, விவரணங்கள, கருப்பொருள்கள் ஆகியன கல்விசார் நிலையில் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. இவ்வியல்பானது சுதந்திரத்திற்குப் பிந்திய கால இலங்கையின் கலைத்திட்டங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நிலைபெற்றமை வரலாறாகும். அத்துடன் தற்காலக் கணினியுகத்தில் கணினி தொலைக்காட்சி,இணையம் போன்றவற்றின் பிரயோகத்தின் மூலமும் சினிமாவானது கலைத்திட்டங்களில் ஊடுருவியுள்ளது. சினிமாவும் சமூகமும், சினிமாவின் பரிமாணங்கள், சினிமாப் படத்தயாரிப்புமுறைகள், தொழில்நுட்பவளர்ச்சியில் சினிமா என்னும் ஊடகம், சினிமாவும் கலைத்துவமும், பொழுது போக்கும் சினிமாவும், சினிமாவிமர்சனக்கலை, சினிமாவினால் ஏற்படக்கூடிய சமூகமாற்றங்களி, சினிமாவும் இரசனையும் என்றவாறாகப் பன்முக நோக்கில் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் தகவல்கள் யாவும் ஆய்வு நிலையில் பார்க்கப்படுவதைக் கல்விசார்ந்த இலங்கைக் கலைத்திட்டங்களில் அவதானிக்க முடிகிறது. சினிமாவின் பெறுமதிவாய்ந்த தாக்கம் இந்தியா உட்பட உலக நாடுகளின் கலைத்திட்டங்களில் அதிகரித்து வருவது கண்கூடு. இதிகாசங்கள், புராணங்கள், வரலாறுகள், நவீன இலக்கியங்கள் முதலானவை சம்பந்தப்பட்டவிடயங்கள் இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டங்களில் காலந்தோறும் இடம் பெற்று வந்துள்ளன. பல்கலைக்கழகங்களதும், ஆசிரியருக்கான பயிற்சிக் கல்லூரிகளினதும் கலைத்திட்டங்களிலும் கூட இவை பங்களிப்புச் செய்துள்ளன. தமிழ்மொழியும் இலக்கியமும, அழகியற்கலைகள், சமயங்களின் பாடக் கூறுகள் ஆகியவற்றில் இவற்றின் தாக்கம் கூடுதலானதாகும். தமிழ்த்திரைப் படங்கள் பலவற்றிலும் இலங்கைக்கலைத்திட்ட உள்ளடக்கத்திற்குத் துணை செய்யக்கூடிய விடயங்கள் பல காணப்படுகின்றன. பலநூற்றுக்கணக்கான தமிழ்ப்படங்கள் இதிகாச புராணக் கதைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு கால கட்டத்தில் “சினிமா” என்பது படமாளிகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வேளையில் பாடசாலைகளிலிருந்து மாணவர்களை அழைத்துச் சென்று சம்பூர்ண இராமாயணம், மகாபாரதம், திருவிளையாடல்,

ஜீவநதி சரஸ்வதிசபதம் , லவகுஷா, திருமால் பெருமை, கந் தன் கருணை வீரபாண்டியகட்டப்பொம்மன், சிவகெங்கைச்சீமை, ராஜராஜசோழன் போன்ற திரைப்படங்களைப் பார்க்கச் செய்த அனுபவங்கள் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நிறையவே உண்டு. இப்படங்களைப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்திற்குரிய விடயங்களில் தெளிவும் மேலதிக அறிவும் பெறுவரென எதிர்பார்க்கப்பட்டது. இன்று திரைப்படங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் வெகுசன ஊடகங்களினுடாக வீடு வரைக்கும் வந்துவிட்டன.
ஒளவையார், திருவள்ளுவர், கம்பர், பாரதியார் தமிழறியும் பெருமாள், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், தொண்டரடிப் பொடியாழ்வார், ஆண்டாள், காரைக்காலம்மையார் முதலான பல்வேறு தமிழ்ப்பெரியார்கள் பற்றியும் இந்துசமயப் பெரியார்கள் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவர்கள் அனைவரதும் வரலாறுகள் தமிழ்மாணவருக்குப் பயன்விளைவிப்பன. கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சிவகவி, திருநீலகண்டர், பவளக்கொடி, சிந்தாமணி, ராஜரிஷி, தசாவதாரம், தேவியின் திருவிளையாடல், முப்பெரும் தேவியர் என்றவாறு பல தமிழ்த் திரைப்படங்கள் கூறுகின்ற பொருள்நிலைகள்யாவும் மாணவர் அறிவுக்கு ஏற்றவைகளாகும்.
கிறிஸ்தவமதப்பின்னணியில் யேசுநாதர், கன்னிமேரி, புனித அந்தோனியார் போன்றவர்களது வரலாறுகள் படமாக வந்துள்ளன. மேலும் விவிலியத்திற் கூறப்பட்ட கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களும் வெளிவந்துள்ளன. அன்னைவேளாங்கண்ணி, ஞானசெளந்தரி, ஏசுநாதர் முதலிய திரைப்படங்கள் இவற்றுட் சிலவாகும். இஸ்லாமியப் பண்பாட்டுமரபிலும் அக்பர், ஒளரங்கசீப் ஆகியோர் வரலாறுகளும் பக்தாத் நகரை மையப்படுத்திய அரபு நாட்டுக் கதைகளும் இஸ்லாமிய தத்துவத்தையும், வாழ்வியலையும் வெளிக்காட்டும் அம்சங்கள் நிறைந்த படங்களும் தாராளமாகவே தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளன. குலேபகாவலி, பக்காத்திருடன், பக்தாத் பேரழகி ஆகியவை இவற்றுட் சில படங்களாகும். இவைதவிர மேனாட்டு அறிஞர்களின் கதைகளும் தமிழில் திரைப்படங்களாகியுள்ளன. சேக்ஸ்பியரின் ஒதெல்லோ, வெனிசுநகரவாணிபனி, ஹாம்லட் போன்ற நாடகங்கள் திரைப்படங்களினுாடு ஒரு சிறு நாடகமாக வெளிக் கொணரப்பட்டுள்ளன.விக்டர் கியூகோவின் 'லாமிசரபிள்' நாவலானது “ஏழைபடும்பாடு” எனப்படமாக வந்து வெற்றிகண்டது காளிதாசரின் ‘சாகுந்தலம் பலமுறை தமிழில் படமானது. நவீன இலக்கிய கர்த்தாக்களின் கதைகள் பலவும் திரைப்படங்களில் கையாளப்பட்டுள்ளமை பெருமைக்குரியதாகும். சரத்சந்திரசட்டர்ஜியின் தேவதாஸ், நிஸ்கிருதி என்பவை திரைப்படமாகின. ஆஷாபூர்ணாதேவி, சதாசிவப் பிரம்மம், பங்கிங்சந்திரர், வி.ஸி காண்டேகள் பிரேம்சந், அகிலன், ஜெயகாந்தன் தி.ஜானகிராமன்,சி.என் அண்ணாத்துரை மு.கருணாநிதி, கொத்தமங்கலம் சுப்பு, வை.மு.கோதைநாயகிஅம்மாள், அருராமநாதன், புஸ்பாதங்கத்துரை, கல்கி, லட்சுமி, பி.எஸ்.ராமையா, விந்தன் போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழில் திரைப்படங்களாக வந்து அணி செய்துள்ளன. பல சிறுகதைகள் கூட விரிவாக்கம் பெற்றுத் திரைப் படங் களுக்குரியனவாகியுள்ளன. அநுராதா ரமணனின் “சிறை" சிறுகதை அதே பெயரில் படமானது. இவையாவும் ஏதோ வொரு விதத்தில் தமிழிலக்கிய வரலாறு இந்துநாகரிக வரலாறு தமிழ்க் கலைகளின் வரலாறு, இந்து சமயம், சைவசமயம், கிறிஸ்தவசமயம், இஸ்லாமிய சமயம் போன்றவற்றின

Page 5
ஜீவநதி 6 தத்துவங்கள் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கு மாணவருக்குத் துணைபுரிவனவாகும். நவீனதமிழ் இலக்கியம், மொழிவரலாறு, சமூகவியல், அழகியல் ஆகியவற்றைக் கற்போருக்கு பல்வித நிலைகளிலும் தமிழ்த்திரைப்படங்கள் வழிகாட்டுகின்றன. கதை, வசனம், பாடல், காமிரா, எடிட்டிங் என எல்லாத் துறைகளிலும் சினிமாவின் பரிமாணம் கல்வித்துறையினை ஆக்கிரமித்துள்ளது. புராதனமான காட்சிகளை கலையம்சங்களை, கலை நிகழ்ச்சிகளை இயல்சார் நிகழ்ச்சிகளைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இன்று மாணவர்களும் ஈடுபட வழிசமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கலைத்திட்டம் சார்ந்த விடயங்களைச் சேகரித்தல், விளக்கமளித்தல், செய்துகாட்டுதல் ஆற்றுகைப்படுத்தல், அளிக்கை செய்தல் என்பவற்றில் சினிமாவை குறிப்பாகத் தமிழ்சினிமாவை நாம் வழிகாட்டியாக கொள்ள முடிகின்றது. எனவே தமிழ்த் திரைப்படங்களினுாடு புலப்படும் பலமான விடயங்களைப் பயன் படுத்தி எமது நாட்டின் கல்விசார்ந்த கலைத்திட்டமுயற்சிகளை வென்றெடுப்போமாக.
DDD எணர்ண எணர்கின.
வேட்டுச் சத்தம் கேட்டுத் துயில்கிறோம்
விடியற் காலை பிணத்தில் விழிக்கிறோம் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறோம்
மின்வெட்டால், குருட்டாட்டம் நடக்கிறோம் பூட்டு டைத்து நுழைகின்ற கொள்ளையர்
போட்டு தைத்து வெட்டத் துடிக்கிறோம் கேட்டுக் கேள்வியில் லாத கெடுபிடி
"கெட்டுப் போச்சுது உலகம்" - தவிக்கிறோம்!
மண்ணெய் வாங்க ஓர் மாதம் தரிக்கிறோம்
மாவுக் காய் இரு வாரம் பொறுக்கிறோம் விண்ணைத் தொட்ட அரிசி விலையை நாம்
வேக மாக விட்டுத் துரத்திறோம் கண்ணைக் கட்டிய பின் கொடுங் காட்டிலே
கைவிடப் பட்ட பிள்ளைகளாகனோம் எண்ண எண்ண இதயம் புண் ணாகுது
எப்பதான் எங்கள் கிழக்கு வெளுக்குமோ!
பாதி நாள்கள் கியூவில் கழியவும்
பாளிக் கான படிவம் எடுத்தபின் மீதி நாள்கள் பலவித ஒப்பங்கள்
வேண்டப் பலபடி ஏறி இறங்கவும் பாதை முடப் படுகிற அற்புதம்
பாடவும், அது திறந்திடப் பாடவும் போதும் போதும் பட்டதும் படுவதும்
போக்கி லா ஒரு வாழ்க்கை அமைந்ததே!
சோ. பத்மநாதன்.

ஜீவநதி
luprůupravoGo
கோழியும் குயிலும் குறுங்கால் வண்டும் யாழொடு பல்லியம் கறங்க் இன்னிசை ஏழில்என்ற நாயனம் தவிலொடும் ஆலய மணியின் ஓசை புணர்ந்து பாலும் ஒன்று படர்ந்து செறிந்து காற்றிற் கலந்து காதிடைப்புகுந்து ஊற்றெழு மோகன மோக முகிழ்ப்பில் பவள மல்லிகை வாசனை மனை தொறும் தவழ விடிந்த முன்றில் மகிழ் வெலாம் சென்றெங் கேகின சிந்தை கலங்கிட துவக்கின் துணிவொடு சென்றிங்கு ஏகின. துவக்கின் துணையொடு சவக்களை பிதி அவச்சா அவலம் அனைவர் முகத்திலும் கவலை ரேகை வரையும் கணந்தொறும் குருதி வெள்ளக் குளிப்பாட்டாக்கி தருதுயர்கரியமேகம் சூழும். பாலை வனதது ஆறலைகளவராய முலை முடுக்கும் முகாரியில் முயங்கும் AHJ வீரியம் ğ58505D ü55TC05LD மானிட நேயத் தொடர்புகள் கொன்று குவித்தலஇ குற்றுயிர் ஆக்கல் என்ற முகாரியும்
ல கொள்ளையர் கொலைப் பொறி கப் பலிக்களம் வகுக்கும். நிலைக்களங்கத்தை தலைத்தலை
பிஞ்சு மழலையாஇ வஞ்சியர்இ பிள்ளைகள் எஞ்சி அநாதைகள் விதவைகளாக்கும் நஞ்சினினும் கொடிய நரகப்பாதை
d3 2 1605 al606) யார் விரித்தார். கஞ்சிக்காகக் கடைப்படி துஞ்சிக்
கெஞ்சிக் கிடக்கும் கீழ்மைக் கெடுவைப் பாலைப் பரிசெனப் பகுத்து வகுத்த காலைத் தணிக்கத் தவறிய கால காலனைக் காய்தலும் கனே! சுருதி கலைத்துத் தந்திகள் அறுத்துத் தெருவிற் புழுதியில் வீசிய தாரோ?
கல்வயல். வே.குமாரசாமி

Page 6
ஜீவநதி
ஜெயசீலனின் இரு கவிதைகள்
&SL6p25 கடல் மீது படகில் அமர்ந்து. 85LOLJILJ63), கடலின் அழகின் பிரமாண்ட வியாபகத்தை, அலைகளின் எழுச்சி, alþöð9 tDáfþååsc))GI தளம்பும் கடல்முதுகை தெறிக்கும் துளிதுரையை, அலைமேலே சித்தரென அலைகின்ற பாசிகளை, இரசிக்கின்ற போது. எத்தனையோ இரகசியத்தை. சொல்லத்தான் அலைகள் துள்ளுவதாய்த் தோன்றிவிடும்! மேலே வானம் ஒர் வில்லாய் வளைந்திருக்க கீழே பசியநீலம் கலந்த கடல்ததும்பிக் கிடக்கும் அலையிரைச்சல் எழும்காற்றின் கைகோர்த்து உலுக்கிப் படகில் உதைக்கும் கணம்கணமும்! கண்ணெட்டும் துாரமட்டும். கசங்கும் துணிபோல எண்ணற்ற அலைகள் எழுந்தாடும் பாம்புகளாய்! எத்தனை வித அலைகள்? எத்தனை வகை அலைகள்? அத்தனைக்கும் பேருண்டோ? அவையவற்றின் ஆயுளென்ன? அலையினத்தின் மொத்தத் தொகையெண்ன? முதிய அலை மழலையலை அவற்றின் வடிவுமென்ன? அலையொவ்வொன்றின் உணவென்ன? நிறமென்ன? மதமென்ன? அவற்றிடையே இருக்கின்ற சாதியென்ன? இவைபேசும் மொழியுமென்ன? கடலினது கைகளென உயரும் அவற்றினது வாழ்வின் பொருளென்ன? வளைந்து கொடாக் கடலோடு மோதும் மனிதனது முடிவெண்ன? dL6ð loleuse பிரமாண்ட விரிவின்முன் மனிதனது வீராப்பின் பெருமைதான் என்ன? மலைப்போ. மருட்டிற்று அலைபற்றிக் கடல்பற்றி வியப்போ. பெருகிற்று அலையின் முன் கடலின்முன் துரும்பே நாம். புரிகிறது!

ஜீவநதி
அடக்கிவைத்த அமைதி
மவுனம் சிறுமழையாய்த் துாறிக் கிடக்கின்ற நிலவும் தொலைந்து போன நிசியில் கிழலுேம்பு வடிகட்டிக் காற்றை வழங்க. இளஞ்செடிகள் சாமரம் விசுவதாய் தலையசைக்க
குமர்க்காற்று தொட்டு எனைத்தழுவித் தனிமை நிலை தகர்க்க இருக்கின்றேன்!
சூழும் ஊரடங்கு அச்சத்துள், நித்திரை வராமல் நெடுமுச் செறிந்தபடி. எத்தனை இதயமிப்போ இடியாய்த் துடித்திருக்கும்? எத்தனை சேவல்கள், கோழிகுஞ்சு கணம் கணமும் செத்துப் பிழைத்தபடி சீவனினைக் காத்திருக்கும்? எங்கெங்கு மரநாய்கள் வேட்டைக்கு வெளிக்கிளம்பும்? எங்கெங்கு விசப்பாம்பு இரைதேடி ஊர்ந்திருக்கும்? தொலைவில் சரசரப்பும் தொடர்கின்ற நாய்க்குரைப்பும், இடைக்கிடை எங்கேயோ இறங்கும் கணையதிர்வும், அடக்கிவைத்த அமைதியினைத் தானா பறைசாற்றும்? பக்கத்துவிட்டில் குழந்தை அழும்சத்தம். திடீரென்றே எழுந்து
திடீரென்றே ஓய்கிறது. குழந்தை அழுவதற்கும் கொடுத்து வைக்காப் பயவாழ்க்கை அருகருகே நாய்கள் ஊளையிட
அதையதட்டி
விரட்டும் துணிவுமற்று, விழி பிதுங்கிக்காதுதீட்டி, மூச்சிழுக்கும் சத்தமும் கேட்காமல் முடங்கிடுது எங்கள் இருப்பு
எங்கே தான் விண் மீன்கள்? அவையும் 'இராக்- கடத்தலி அச்சத்தில் ஒழிந்தனவோ? விடிய ஏந்த எந்த விட்டில்
அழுகுரலகெ
எழ. உனதோ? சில்லிட்டுறைகிறது எண் கவிதை.

Page 7
ஜீவநதி
10
அந்தி மங்கும் பொழுதில் ஊர் அடங்கிக்கிடந்தது.
நெஞ்சு விம்மித் தவிக்கின்ற போதெல்லாம் இப்படி தனியே வந்து அவனது நினைவில் கரைந்து போவது அவளுக்கும் பழகிப்போய் விட்டி
([B[bჭ5ჭ5l.
இந்த வேளையில். அவனுடன் வாழ்ந்த இனிய பொழுதுகளின் பேருணர்வை தனக்குள் மீட்டுக்கொண்டு நெகிழ்ந்து போவாள்.
G38F ITL u T 6olf (66) IT UF 60o 6) ஒட்டியிருந்த படியில் அமர்ந்து முகத்தை முழந்தாள்களுக்கிடையில் தாங்கி கைகளால் கால்களைக் கோர்த்தபடி இருந்தாள்.
சீ. என்ன வாழ்க்கை. மனதுக்குள் ஒரே புழுக்கமாக இருந்தது. எல்லாவற்றையும் இழந்துவிட்டது போன்ற துயரம் அவளை அழுத்தியது.
கண்ணை இறுகமூடித்திறந்து பரிறகு நிதானமாகப் பார் வையை வெளியே எறிந்தாள்.
கடல். எல்லையற்றுப்பரந்து விரிந் திருந்தது. கடலின் நிர்ச்சலனமான அமைதியில் மனதில் கனத்திருந்த பாரம் இலேசாகுவது போன்ற பிரமை அவளை ஆட்கொண்டிருந்தது.
கடற்கரையோரம் நெடிது வளர்ந்து காற்றுவாக்கில் தலை சிலிப்பி நின்ற தென்னை மரங் களையும், பின்னே ஏகப்பெரு வெளி யாய் விரிந்துகிடக்கும் கடலையும் முகங்கொள்வது ஆறுதலளித்தது.
வானத்தில் பறக் கின்ற பறவைகளின் சிறகடிப்பைதவிர வேறு சலனமுமறியாத மெளன ஆளுகைக் குள் சூழல் சிக்குண்டிருந்தது.மனம் ஒரு நொடி முன்னே தெரியும் மணற்பரப்பில் தரித்தும். இருவரும் தடம் பதித்து உலவிய இடமது.
மு.அநாதரட்சகன். மண் துகள்கள் உள்ளங் காலை உறுத்த அந்த நெருடலை ரசித்தபடி சல் லாபித் திருந்த பொழுதுகள் அவளுள் சிலிர்த்து அடங்கியது.
நெஞ்சார நம்பிய வாழ்க்கை அகாலமாய் கைநழுவிப் போன சோகம் அவளை வாட்டியது.
அவனுடன் பகிர்ந்த வாத் சல்யமான வார்த்தைகள், தாம்பத்ய சிநேகம், அணைப்பில் கரைந்து உருகிப் போன கணங்கள் என எத்தனை பூரிப்புக்கள்.
அவளுக்கென இரட்சிக்கப் பட்ட அந்த நாட்களை எப்படி மறந்து போவாள்.
அந்த இனிய வாழ்வின் மூச்சினை வன்மமாகப் பறித்த பழியை யார்மீது சுமத்துவது.
அன்றும். இங்கிருந்துதானே அவனை வழியனுப்பிவைத்தாள். இந்த
வாசற்படி இதையொட்டி நீண்டு செல்லும் பெருவீதி. அதில் விரைந்து செல்லும் வாகனங்கள், பாதசாரிகள் எனப்பரபரப்புக்களின் மத்தியில் அவன் கடைக்குச்செல்ல விடை பெற்றுக் கொண்டு வீததியில் இறங்கியது. அவளையும், குழந்தை யையும் பார்த்துக் கையசைத்துச் சிரித்தது. அவன் தூரத்தில் சென்று மறையும் வரை இங்கே நின்று பார்த்தது.
எல்லாமே நெஞ்சுக்கூட்டுள் பசுமையாக ஒட்டிக்கிடந்தது.
நகைக் கடைக்கு வேலை க்குப்போனவன் திரும்பி வரவில்லை என்பது தினச்செய்திகளில் ஒன்றாய் பரபரத்து அடங்கிவிட்டது.
அவளுக்கு. தன்வாழ்வின் உயிர்ப்பு அதன் வசீகரம் எல்லாமே அச்செய்தியில் கரைந்துபோன வலிப்பு இன்னும் ரணமாக நின்று வருத்தியது.

11.
ஜீவநதி
அவனைப்பறி கொடுத்த திலிருந்து இந்தவாசல் படிதான் அவளைத் தாங்கிகொள்கின்ற மடி. மனம் பேதலித்துக்கிடப்பவளுக்கு ஆறுதல்தருகின்ற ஒரே உறவு. நொருங் குண்ட இதயத் துக் கு அமைதிதரும் போதிமரம்.
இந்த வாசற்படியைப் பார்க்கின்ற போதெல்லாம் நெஞ்சுக்கு நெருக்கமான துணையைப் பார்க் கின்ற தெம்பு அவளுக்கு.
இந்த இடத்தில் அவனுடன் எத்தனை இரகசியங்கள், சந்தோ சங்கள், வேதனைகள், எதிர்காலக் கனவுகள் பற்றியெல்லாம் சல்லாபித் திருக்கிறாள்.
பகிர்தல் அல்லவா அவர் களின் இன்பமாக இருந்தது.
கடலின் ஈரலிப்பைச் சுமந்து வந்த சீதளக் காற்று அவளை வருடிச்சென்றது.
இந்த அமைதி அதில் மனமுறைந்து போன ஆழ்தவம்.
அதில் ஆழ்ந்துகிடக்கின்ற 85D... மனக் கண்ணில் அந்தக் காட்சி நிழலாடியது. அந்தக் காட்சியுள் மூழ்கமுழ்க மனதுக்குள் ஒரு லயிப்பு.
ஒரு பரவசம். திருமண நாளில். கல்யாணப்புடவையும், மாலையும், மங்கலப் பொட்டும் அணிந்து
உடல் தழைய, மனம் படபடக் க மேடையில் அவனுக்குப்பக்கத்தில் 96)6.
அந்தக் காட்சி நெஞ்சில் கவிந்து தலைகாட்டியது.
அவனுடன் வாழ்ந்த கணங் களை நெட்டுருப்பண்ணிப் பரவசப் படுவதில் மனம் சுகித்திருப்பது இப்போ நித்தியகருமமாகிவிட்டது.
அவன் அவளை சோபா. சோபா.என அழைக்கும் அந்த அடக்கமான குழைவான குரல் செவிகளில் இன்னமும் ரீங்காரமிடுவது போன்ற நினைவு மிரட்சி. மீண்டும் மீண்டும் செவியில் வந்து அந்த வார்த்தைகள் ஆவர்த்தனமாகி மனதை நிறைத்தபடி இருந்தன.
அந்த நினைவுகளில் திளைத்து உருகி நின்றவேளை.
அறையரில் உறக்கம் கலைந்த குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. இயல்புக்கு வந்தவள் எழுந்து கதவைத்திறந்து உள்ளே கால் வைத்தாள்.
“இந்த ராசி கெட்டவள் எங்கை போட்டாள்.? இவளைக் கட்டினதாலை தானை என் ரை பிள்ளைக்கு இந்தக்கதி வந்தது”
மாமியாரின் வார்த்தைகளில் வழமைபோல கந்தகவாடை கரித்து நின்றது. அறையுள் குழந்தையை வாரிஅனைத்தபோது அவனுடன் இருப்பதான உணர்வு உள்ளத்தில் பரவியது.
O
நல்ல நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்கள் அவை எங்கிருந்து வந்தாலும் அவற்றை நாம் வாழ்க்கைக் கடலில் கரைகாண உதவும் தோணிபோல பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தலைமேல் தூக்கிவைத்து ஆர்ப்பாட்டம் செய்து திரிவதற்கும், பிறரை மயக்குவதற்கும் அல்ல
- ராகுல சாங்கிருத்யாயன்

Page 8
ஜீவநதி 12 Ligðustu Sugiausid ugloss
gist mgiltist gil funa um less
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
பழமொழிகள் உலகின் பல மொழிகளிலும் பயன்படுத்தப் படுகின்றமையை நாம் அறிகின்றோம். நாகரிகம் வாய்ந்த மக்களிடையேயும் சரி நாகரிகம் அடையாத மக்கள் இடையேயும் சரி எந்தவித வேறுபாடுமின்றி இவை பயிலப்பட்டு வருகின்றமையை நாம் அவதானிக்கலாம். பழமொழிகள் முறைசார் படிப்புக்கு உள்ளாகாத பாமர மக்களிடையே வாய்மொழி முறையிலே பயன்படுத்தப்படுவதால் இவை நாட்டார் இலக்கிய வகையுள் ஒரு முக்கிய கூறாகக் கருதப்படுகின்றன.
பழமொழிகள் பல்வேறு மக்களிடையே அவர்களின் அனுபவம் சார்ந்து வழங்கப்படுவதால் வெவ்வேறு மொழிகளில் சமமான பொருள்தரக்கூடிய பழமொழிகள் பயன்படுத்தப்படுவதையும் ஆய்வாளர் அவதானித்துள்ளனர். (தே.லூர்து-1988)
பழமொழிகள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இப்பழமொழிகள் மக்கள் வாழ்க்கையில் சாதாரண உரையாடலின்போது சந்தர்ப்த்திற்கேற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆபிரிக்காவில் நைஜீரியாவின் ஆனாங் இன மக்கள் நீதி மன்றங்களில் பழமொழிகளை மேற்கோளாகக் காட்டி வாதாடுகின்றனர் எனப்படுகின்றது.
தமிழில் பழமொழிகளையுள்ளடக்கிய முதலாவது தொகுதி கி.பி 3ஆம், 6ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் தொகுப்பட்ட பழமொழி நானூறு எனப்படும் நூலாகும். அதன்பின்னர் 19ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆங்கிலேயர் சிலர் தமிழ்ப்பழமொழிகளைத் தொகுத்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கி.வா.ஜகந்நாதன் 25000 பழமொழிகளை 4 தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். தொல்காப்பியம் பழமொழியை முதுசொல் என்று கூறுகின்றது.
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் (எளிமை) என்று இவை
விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்தற்கு வருஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப
என்று அது கூறும். அதாவது
1) நுண்ணியதான பொருளுடையதாய்
2) சுருக்கமுடையதாய்
3) தெளிவுடையதாய்
4) எளிமையுடையதாய் இருத்தல் இதன் பணி பாகும் தமிழரிடையே பழமொழிகள் ஒத்துக்கொள்ளற்கும் கண்டிப்பதற்கும் வசைகூறுதற்கும் உண்மை உரைப்பதற்கும் மறுப்பதற்கும் உடன்படுதற்கும் வழங்கப்படுவதாக ஜோன் கசரஸ் கூறுவார். இந்தப் பழமொழிகள் எப்போது தோன்றியனவென்று தெரியாது. காலம்காலமாகப்பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடுகளாக இவை S. 666.
பாரம்பரிய அறிவியல் தொடர்பாக நோக்கும் போது தமிழரிடையே வழங்கும் மாதங்கள் தொடர்பான பழமொழிகள் இங்கு சிறப்பாக எடுத்துநோக்கப்படுகின்றன. வருடத்தின் பன்னிரண்டு மாதங்கள் தொடர்பாகவும்

ஜீவநதி 13 தமிழிற் பழமொழிகள் வழங்கப்படுகின்றதை கி.வா.ஜகந்நாதன் தனது தொகுப்பிலே தந்துள்ளார். இப்பழமொழிகள் இயற்கை சம்பந்தமாக அக்கால மக்களுக்கிருந்த அறிவையும் காலநிலை பற்றியும் விவசாயம் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளையும் நம்பிக்கைகளையும் கூடக் கூறுவனவாய் உள்ளதை நாம் அவதானிக்கலாம்.
பழங்காலத்திலிருந்து ஒரு ஆண்டினை ஆறு பருவங்களாகப்பிரிக்கும் மரபு காணப்படுவதை தொல்காப்பியம் எடுத்துக்காட்டும். இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பணி என்பன அவை.
இளவேனில் - சித்திரை, வைகாசி முதுவேனில் - ஆனி, ஆடி
கார் - ஆவணி, புரட்டாதி கூதிர் - ஜப்பசி, கார்த்திகை முன்பணி - மார்கழி, தை பின்பணி - மாசி, பங்குனி
இளவேனில்தொடங்குகின்ற சித்திரைமாதம் எமது புத்தாண்டு பிறப்புக்காலமாகும். அத்துடன் இந்த வேனிற்காலங்கள் (சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி) மரங்கள் மலர்களைச் சொரியவும் விலங்கினங்கள், புள்ளினங்கள், மனிதர் எல்லோரும் மகிழ்ந்துறவாடக்கூடிய இயற்கைச் சூழலைக்கொடுப்பதாகவும் அமைதல் யாவரும் அறிந்ததே. வடமொழியில் வசந்தருது என அழைக்கப்படும் இக்காலம் வெப்பத்தையும் அதன் வெக்கையைத் தடுக்கும் சோழக்காற்றையும் தன்னகத்துக் கொண்டது. இந்த இயற்கைப்பண்புகளை இந்த மாதங்கள் தொடர்பான பழமொழிகள் எடுத்துக்காட்டுகின்றன.
1) சித்திரை மாதம் கத்தரி வெயில். 2) சித்திரை பத்தில் சிரித்தெழுந்தார் சோழகனார். 3) சித்திரை பத்திற்கு மேல் சிறந்த பெருங்காற்று. 4) வைகாசிமாதம் வாய்திறந்த கோடை. 5) ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பன அவ்வாறானவை. கார், கூதிர் காலங்கள் ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் ஆகும். அந்த மாதங்களின் கால நிலையை பின்வரும் பழமொழிகள் வெளிப்படுத்தும்.
1) ஐப்பசி அடை மழை. 2) கார்த்திகை கடுமழை. 3) ஐப்பசிப் பணி அத்தனையும் மழை. 4) ஐப்பசி மாதம் அழுகைத் தூற்றல். 5) புரட்டாசிக் கருக்கல் கண்ட இடத்து மழை. 6) கார்த்திகை மாதம் கனத்த மழை. கூடுதலாக புரட்டாதி மாதங்களில் பகலில் வெயில் எறிப்பதையும் இரவில் மழை பெய்வதையும் அவதானிக்கலாம் என இக்காலத்து காலநிலை விளக்கப் பெறுகிறது. முக்கியமாக இறுதியாக குறிப்பிட்ட பழமொழிக்குரிய காலநிலையை தற்போது மிகவும் அவதானிக்கலாம்.
மார்கழி, தை, மாசி, பங்குனி முன்பனி, பின்பணிக் காலங்களாகும். கோடை பிறத்தலும் பனி கூடுதலாகப் பெய்தலும் இக்காலத்திலாகும்.
1) மார்கழி மாதம் மரமும் கொடுகும். 2) மார்கழிப் பணி தலையைத் துளைக்கும். 3) தைப்பனி மூக்கைத் துளைக்கும்.

Page 9
§ඛJIBá 14
4) தை பிறந்தது தரை வரண்டது. 5) தை பிறந்தால் தலைக்கோடை. 6) தை மாதம் தரையெல்லாம் பணி. 7) மாசிப்பனி மூசிப் பெய்யும். 8) பங்குனிப்பனி பால்வார்த்து மூழ்கியது போல. என பனியின் தாக்கம் பற்றிய குறிப்புகளும் கோடை பிறத்தல் பற்றியகுறிப்புகளும் இந்த பழமொழிகளிற் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறதல்லவா.
அடுத்து மாதங்களுடன் தொடர்பான விவசாயம் சம்பந்தமான குறிப்புக்களைப் பார்க்கலாம்.
1) மார்கழியில் மழை பெய்தால் மலை மேல் நெல் விளையும். 2) UDMéf LDIlléG5ib. 3) மாசி மின்னல் மரம் தழைக்கும். 4) மாசி ஈனாத மரமுமில்லை தை ஈனாப் புல்லுமில்லை. என
வரும்பழமொழிகள். இக்காலங்களில் ஏற்படும் (மரங்களில்) இயற்கை மாற்றங்களைக் காட்டுகின்றன.
மேலும் குறிப்பிட்ட சில மாதங்களில் விதைக்கக் கூடிய பயிர்வகைகளையும் அறுவடை செய்யக்கூடிய பயிர்வகைகளையும் பற்றிய குறிப்புக்களையும் இந்தப் பழமொழிகளில் காணலாம். 1) ஆடி அவரை தேடிப் போடு. 2) ஆடி விதை தேடி விதை. 3) ஆடிப் பட்டம் தேடிவிதை. 4) ஆடிப் பருத்தி தேடிவிதை. 5) ஆடிப் பிள்ளை தேடி விதை. (தென்னம் பிள்ளை) 6) ஆடி பிறந்து ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை பிறந்தால்
ஒரு சட்டி கறியாகும். 7) ஆடிமாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய்காய்க்கும். 8) ஆடிவாழை தேடி நடு. 9) ஆடியில் விதை போட்டால் கார்த்திகையில் காய் காய்க்கும். 10) மாசிபங்குனியில் கரும்பு அறு.
என வரும் பழமொழிகள் ஆடிமாதத்தில் விதையிடுவது பற்றியும் ஆடிமாதம் விதைத்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என்பதையும் காட்டுகின்றன. அத்துடன் மாசிமாதம் கரும்பு அறுப்பது அதன் தரத்தைக் கூட்டுவதாக அதாவது இனிமையைக்கூட்டுவதாகும்.
ஆனிமாதம் போடுகிற பூசணியும் ஐயைந்துவயதிற் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.
ஆவணி முதல் நட்ட பயிர் பூவணி அரசன் புகழ் போலும். மழைகாலத்தை அண்டி விதைக்கப்படும் பயிர்கள் பலன்கொடுக்கும் என இவற்றிற் கூறப்படுவதையும் காணலாம். இவ்வாறுபார்க்கும்போது மாதங்கள் தொடர்பான தமிழ்ப் பழமொழிகள் மக்கள் காலந்தோறும் கண்ட அனுபவத்தினூடாக காலநிலை வானிலை பற்றிய செய்திகளையும் விவசாயம் சம்பந்தமான செய்திகளையும் தருகின்றதை அவதானிக்கலாம்.

15
ஜீவநதி
வயன்ைனென்பதால்.
இன்றெனக்கு இயல்கிறது! காற்றுடனே கதைபேசி, குருவிகளின் இன்னிசையிலெனை மறந்து பூரித்து, எனதளவில் இயற்கையின் தழுவலதில் உலகையே வென்றிடற்கு! எனதுரின்
வசந்தக்காற்றின் மடிதனிலே தலைசாய்த்துத் துயின்று பின்பாய் எதிலும் எதையும் வென்றவளாய் பூரிக்க இயல்கிறது நாளைய புலரிகளிலென் கனவுகளெவராலாவது விசிறியெறியப்பட காற்றில் துடிக்கும் காகிதமாயென் கனவுகளும் சிதிலமுற்று தண்ணில் சங்கமிக்கும் கண்ணிராயிடலாம்! வெறும் பதுமையாயவர்கள் முன் விலைபேசப்பட்டிடலாம்! என் மனசதுவும் தடமற்றுப் போயிடலாம்! நானும் சராசரியாய் முட்களை விலக்குதலாய் பயணிப்பின் விளிம்பில் அந்தரித்து,
6.
ழவும சாகவும் வழியேதுமின்றி ಫ್ಲೇಖ
இரண்டிற்குமிடையில் சித்தித் திணறி விதியதை தொந்துநிதம், கண்ணில் திளைத்திடலாம்! பெண்ணெண்பதனால் அவர்களின் பார்வையில் நாம் வெறும் ஐடங்களே!
ச.நிரஞ்சனி

Page 10
ஜீவநதி
6
blÉFIIEikuDTLLThlIII?
நூலகத்தை விட்டு வெளியே வந்த
பொழுது லேசாக இருட்டிக் கொண்டு
வந்து விட்டது.
நூலகரிடம் ஒரு பழைய - ஒன்றரைக் கிழமைக்கு முந்திய ஐலண்ட பத்திரிகையை தரமுடியுமா என கேட்டு, அவர் பழையவற்றைத் தேடி விட்டு, அவை எல்லாம் நகர சபைக்கு அனுப்பியாயிற்று என்று சொல்லிய பிறகு.
அந்தக் கட்டுரை வெளிவந்த அன்றே தெரிந்திருந்தால் அந்தப் பேப்பரை வாங்கியிருக்கலாம். இன்று தான் தெரிந்தது, அது பற்றி யாரோ கருத்துத் தெரிவித்த பிறகு.
குருனாகல் வீதியை குறுக் காய் வெட்டி மறு ஓரமாகப் போய் இடது புறமாக சற்று வேகமாக நடக் 856)T60TT6i.
சந்தடி குறைந்து வரும் பஸ் நிலையம் கவனத்தில் பதியவில்லை. பஸ் நிலையத்தைக் கடந்த பின் தெரிந்த தடங்கல்கள் அற்ற வானம் அப்படியே வந்து கண்ணைக் கவ்வியது.
சிறிது ஜொலிப்புடன் கூடிய சிவப்பு பட்டை அதன் கீழ், அதனிலும் சற்று நீளம் குறைந்த கத்தரிப்பூ நிற விசிறல. அதன் அடி வயிற்றைக் கவ்விக் கொண்டு வரும் சாம்பலும் கருநீலமும் கலந்த மேகத்திரட்சி. ஆங்காங்கே தங்க சரிகையிட்ட சிறு சிறு தீவுகள்.
இப்படியான ஒரு வர்ண ஜாலத்தை எங்கும் கண்டது இல் லைப் போலிருந்தது. அதுவும் கத்தரிப் பூ வர்ணத்தில் மேகம்.
இவளின் சொந்த ஊரிலும் மேற்குப் புறம் தான் கடற்கரை. வட புறத்துக் கடல், இவள் ஊரின் தொடக்கத்தில் ஒரு வளைவு எடுத்து ஊரின் உப்பாற்றோடு சேர தெற்காய் திரும்புகிறது. பெரிய கடற்கரை,
குந்தவை
சின்னக் கடற்கரை என்று இயற்கை ததும்புமிடங்கள்; அதுவும் சின்னக் கடற்கரையிலிருந்து பார்த்தால், கடல் நீர் வந்து ஆற்று நீரோடு மேவுவதைப் பார்க்கலாம். கடற்கரை மணலில் நேரே அமர்ந்தால் எதிரே சூரிய அஸ்தமனம்; அங்கு கூட இப்படி மனோரம்மியமான அடி வானத்தைக் கண்டதில்லை.
அரபிக் கடலில் பரந்த எல்லைக் கோட்டின் மேல் தான் இந்த அடி வானத்து அற்புதமோ? இருந்தும் இன்னும் கடல் தெரிய வில்லை. இந்த குருனாகல் வீதி சரிந்து நீண்டு போய், கொழும்பு வீதியை தொடுமிடத்தில் தான் கடல் கண்ணில் படும்.
வானத்தைப் பார்த்துக் கொண்டு வந்ததில், விரைவில் தபால் கந்தோர் சந்தி வந்து விட்டது போல் இருந்தது. தான் தங்கியிருக்கும் வீட்டிற்காய், பிரியும் போல்ஸ் வீதியில் இறங்கி நடந்தாள்.
இப்பொழுது இருட்டு, சற்று அதிகரித்து விட்டிருந்தது. அத் தெருவிலுள்ள பெரிய பள்ளிவாசலில, மாலைத் தொழுகைக்காக, மக்களை அழைக்கும் பாங்கொலி அப்பொழுது தான் ஒலித்து முடிந்திருந்தது. இல்லா விட்டால், மொழி புரியாவிட்டாலும் அதன் ஒலி நயத்தில் மனத்தைக் கொடுத்தபடி நடந்திருக்கலாம். இனி அந்த பள்ளிவாசலைக் கடக்கையில் உள்ளேயுள்ள மின்சார ஒளியில் கால் மடக்கி, வரிசையாக உட்காந் திருப்பவர்களை பார்த்தபடி போகலாம். சங்கரி மிஸ் வீட்டைக் கடக் கையில் தான் "ஐலண்ட்" பேப்பர், அவர்கள் வீட்டில் எடுக்கிறவர்கள் என்பது நினைவிற்கு வந்தது. அவர்களின் வீட்டு ஹோலில் ரீவி மேசையோடு சேர்ந்த மர இணைப்பில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்

17
capsas பட்டிருக்கும் பேப்பர்களும் நினைவில் வந்தன. இவர்களிடம் ஐலண்ட் பேப்பர் இருக்கும் பொழுது “அவரை இவரை" என்று கேட்டிருக்க வேண்டாம்.
இந்த எண்ணம் வந்த மறுகணம் இவள் நினைவில் அந்த மர இணைப்போடு நின்றாளர். சங்கரி மிஸ்ஸோ அவள் கணவரோ அந்தப் பேப்பரை உருவி எடுத்து கையில் தருகிறார்கள்.
மனத்தில் திருப்தி தேங்கி நிற்க இவள் தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு நடந்தாள்.
அடுத்த நாளர். இவள் Staff roomக்குள் போனபொழுது சங்கரி மரிஸ் ஸ"ம் அடைக் கலநாதன் மிஸ் ஸ"ம் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். குடும்ப விவகாரம் தான். இருவருக்கும் ஓர் ஒற்றுமையுண்டு. உத்தியோகம் பார்க்கும் கணவன்மாரோடு, தாமும் புத்தளத்திற்கு இடம் மாற்றல் கேட்டு வநதவாகள. ஆனாலும அடைககல நாதன் மிஸ்போல சங்கரி மிஸ் நாளாந்தம் நடக் கும் குடும்ப நடப்புகளை அதிகமாகப் பேச மாட்டாள். கலகலப்பாக இருக்கும் அடைக்கலநாதன் மிஸ் போலன்றி சங்கரி மிஸ் அடக்கமானவள்.
ஆசிரியைகளின் சொந்தப் பெயர் சொல்லி யாரும் அழைப் பதில்லை. இங்கே சங்கரி என்பது அவள் கணவன் சங்கரலிங்கத்தின் சுருக்க வடிவம். "மிஸ்" என்ற பின் இணைப்பு, மணமானவளோ மண மாகாதவளோ எல்லோருக்கும் பொருந்தும்.
அந்த அமைதியான சங்கரி மிஸ்தான், தன் கணவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்’ அவருக்கு என்ர விசயத்தில எல்லாம் நூanted எண்ட நினைப்பு. "இவளும் படிச் சவள் தான். இவளுக்கும் சுயமாய் கருத்து இருக்கும்" எண்டு ஒரு நாளும் நினைக்கிறேல்லை. அப்படி நான் ஏதும் சொன்னாலும் இதுக்கெல்லாம் இட்டல், இடறல்,
ஏதாவது சொல்லு வார். ஆனா நான் அவர் சொல்லுற தெல்லாத்துக்கும் ஒத் துப் பாட வேணு f இதுகளுக்கெல்லாம் "எப்ப.”
கேட்டுக் கொண்டிருந்த அடைக்கல நாதன் மிஸ் "இது எல்லாம் ஆம்பிளைக் கெறுக்கு" எனக் கூறிய பொழுது இவளுக்குப் பொறுக்க முடியவில்லை. காதலித்து திருமணம் செய்தவள் அடைக்கல நாதன்.
"ஏன் மிஸ்! உங்களுக்கு விருப்பமில்லாததை அவர் சொல்லு றாரெண்டு ஏன் செய்கிறீங்க, சொல்லு நீங்க? சொல்லுங்கோவன் எனக்கு இதில விருப்பமில்லை முடியாதெண்டு. காரணம் கேட்டா, அதையும் போட்டு உடைச்சுச் சொல்லுங்கோ"
ஆவேசமாகப் பேசி விட்ட தாக உணர்ந்த நிலையில் நாக்கைக் கடித்துக் கொண்டாள். அவர்களின் குடும்ப விவகாரத்தில் முந்திரிக் கொட்டையாய் கருத்துச் சொல்ல g36)J6iT u JITT?
ஆனால், திரும்பிப் பார்த்த அடைக் கலநாதனோ இவளை விளங்கிக் கொண்டதாய் புன்ன கைத்தாள்.
"மிஸ்! நீங்க கலியாணம் கட்டாம இருக்கிறது எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமே”
இவளும் குனிந்து கொண்டு சிரித்தாள். தனக்குத்தானே காலில் பூப்போட்டு அழகு பார்ப்பது மாதிரி இருந்தது.
இத்தனைக்கும் நடுவிலும் இவள் சங்கரி மிஸ்ஸிடம் "ஐலண்ட் பேப்பரைக் கேட்காமல் விடவில்லை. சங்கரி மிஸ் ஸ"ம் “இருக்கும் பின்னேரம் வீட்டை வாங்கோவன் எடுத்துத் தரலாம்" என்றாள்.
சங்கரி மிஸ் வீடு இவளுக் குப் பிறத்தியார் வீடு மாதிரி இல்லை. நினைத்த நேரத்தில் இவள் வீட்டு பின்பக்க வழியாலேயே அவர்கள் வீட்டுக்குப் போய் விடலாம். இவள இப்பதிலை எதிர்பார்க்கவில்லை.

Page 11
ஜீவநதி
18
இரு காணித்துண்டுகளையும் ஒரு ಜಿ? சொழுங்கையையும் இடை வட்டிக் கடந்தால் அவர்கள் வீட்டு பக்கவாட்டு மதிலும் ஒட்டிய சிறு படலையும் வந்து விடும்.
மிஸ்ரர் சங்கரலிங்கமும் இவளுக்கு நல்ல பழக்கமானவர் தானி. இவள் வீட்டிற்குப் போனால் கலகலப்பாக ஓரிரு வசனமாவது கதைக்காமல் இருக்க மாட்டார்.
ஆனாலும் சங்கரி மிஸ் இப்படி தன் கணவரைச் சொன்னதில் இருந்து அடிக்கடி ஒரு சம்பவம் நினைவில் வந்து கொண்டிருந்தது.
அவர்கள் வீட்டு முன் விறாந் தையிலிருந்து அவர்களின் பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். Sports பக்கம். முதல் நாள் நடந்த ஒரு ODI பற்றி எழுதியிருந்தார்கள். படங்களு
ருநதன.
உள்ளே இருந்து வந்த வருக்கு இவள் படித்துக் கொண்டி ருந்த Sports பக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
‘ஓ ! அண்ணன் மாரோட வளர்ந்தபடியா கிறிக்கெட்டைப் பற்றி தெரிஞ்சிருக்கு ..ம்' என்றபடி முன்னால் வந்தார்.
உண்மை இருந் ಖ್ವ.: இல்லையோ, இவளுக்கு உடனே அதை மறுக்க வேண்டுமென்று தோன்றியது.
அண்ணன்மாரோட வளர்ந்தா என்ன வளராட்டா என்ன (5 விடயத்தில விருப்பம், © வேணுமெண்டா ஆர்வம், சுயமாய் இயல்பா வாறது தானே? இதில அண்ணன்மார் என்ன, அக்காமார் என்ன? இப்ப பொம்பிளையஞம் தான் கிறிக்கெட் விளையாடுகினம்"
அவரின் பரந்த சிவந்த முகம் சற்று சப்பளிந்து விட்டது போல இவளுக்குத் தோன்றியது. இப்படி பத்திரிகைச் செய்தி களைப் பற்றி இவள் அவரோடு கதைக்க ல்லை. அவர் தவிர்த்தாரோ, இவள் தவிர்த்தாளோ தெரியவில்லை.
அவர்களின் பக்கவாட்டுப் படலையைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனாளர். எதிரே அவர்கள்
வீட்டுப் பக்கவாட்டுச் சுவர் நீள ஓடியது. பக்கவாட்டுச் சுவரில் இரு பெரிய ஜன்னல்கள் நடுவில் பிடித்து முடிச்சுப் போட்டிருந்த நைலோன் ਡ ਕੋਸ਼ ாலறகுள எதிரும புதருமாய 器 வலது கோடியில் 醫 மேசை ரீவியின் பின்புறம் அருகே set of box 6Jufres6i. (8LD603(3u II.G இணைந்த சிறு அலுமாரித்தட்டு, அதிலே அடுக்கி வைக்கப்பட்ட பத்திரிகைகள். எல்லாம் ஜன்னல் 6 Unಹಣ್ಣೆ ಙ್ಗ;
வள இடது புறமாய நடநது குசினிப் பக்கம் போனாள. குசினிக்குள் அலுவலாயிருந்த சங்கரி மிஸ் ஜன்னலால் இவளைப் பார்த
’துவிட்டு “வாங்கோ வாங்கோ” என்று
கூப்பிட்டாளர். பின் கதவால் உள்ளே போனாள்.
இருவரும் ஆளோடியைக் கடந்து ஹோல் பக்கம் போனார்கள். பின்வாசல் கதவை ஒட்டி மிஸ்ரர் சங்கரலிங்கம் நின்றிருந்தார். இவள் தான் ஓரடி முன்னால் போனாள்.
ஜூலை பதினெட்டாம் திகதி ஐலண்ட்’ பேப்பர் இருந்தா எடுத்துத் தாநீங்களா? கே.எஸ். #lo"ဗ္ဗဗု!!!!!!!! Q05 Lig55855605 Luig3... Review எழுதியிருக்கிறார். படிச்சிட்டுத்தாறன்.
எதுவித சலனமும்காட்டாது சங்கரலிங்கம் ಇತ್ಥಞ್ಞ! பட்டது.
‘நேற்றுத்தானே பழைய பேப்பரெல்லாம் கட்டிக் கொண்டே பழம் பேப்பர் கடையில குடுத்திட்டன். அந்த பேப்பரும் போயிட்டுது. அது இஞ்சை இல்லை”
இவன் இப் பதிலை எதிர்ப் பார்க்கவில்லை பரிதாபகரமாக சங்கரிமிஸ் முகத்தைப் பார்த்தான்.
எப்ப குடுத்தீங்க? பேப்ப ரெல்லாம் அடுக்கினபடி அப்படியே கிடக்கு.". இஞ்சை விடுங்கோ நான் எடுத்துக் தடுக்கிறன் ரீச்சருக்கு சொல்ல மாட்டாளா?
ஊஹூம் “ஓம்! சொல்லுறாரெல்ல நேறறுக்கு குடுத்திட்டார் அந்த பேப்பர் இப்ப இஞ்சை இல்லை”
ODO

ஜீவநதி 19
ஒரு நந்தியின் மறைவு
மிருதங்க வித்துவானி இரத்தினம் பற்றிய சில நினைவுகள்
பேராசிரியர் சி. மெளனகுரு
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் 1972ம் ஆண்டு என்று ஞாபகம்.
கொழும் பரிலே வசித்த 5 ņu dŠ கலைஞரும் , நாட்டியஆய்வாளருமான திருமதி.கார்த்திகா கணேசரின் வீட்டில் ஒருவரைச் சந்திக்கின்றேன். கறுப்பான தோற்றம். கைமடித்துவிடப்பட்ட நெஷனல், அமைதியான பார்வை மீசை மழித்த முகம், வெற்றிலை குதப்பிய வாய்.
கார்த்திகா எனக்கு அறிமுகம் செய்கிறார். “நான் பழக்கிக் கொண்டிருக்கின்ற நாட்டிய நாடகத்திற்கு மிருதங்கம் வாசிப்பவர் இவர் தான். இரத்தினம் மாஸ்டர்’
இரத்தினம் மாஸ்டர் சிரித்துக்கொண்டு கைகூப்புகிறார். இவ்வாறுதான் இரத்தினம் மாஸ்டர் எனக்கு அறிமுகமானார்.
கார்த்திகா கணேசர் கொழும்பில் மிகப்பிரபல்யம் பெற்று விளங்கிய காலம் அது. அவர் நடத்திய நடனாலயத்தில் நிறைய மாணவ, மாணவிகள் சேர்ந்து பரதம்பயின்று கொண்டு இருந்தகாலம் அது.
அரைத்தமாவை அரைக்காது அன்று தமது நாட்டிய நாடகங்களில் புதிய கருக்களை புகுத்தினார் கார்த்திகா. கூத்து ஆட்டங்களையும், கூத்தின் சாராம்சங்களையும் தமது நாட்டிய நாடகங்களில் அவர் கையாண்டார். ஈழத்துக்கூத்துகள் மீது சாஸ்திர ரீதியாக வழுவூரார் மரபில் பரதம் பயின்ற கார்த்திகா கவனம் செலுத்தியமை மிக முக்கியமான ஓர் அம்சம். மரபு ரீதியான நாட்டியக்கலைஞர்களின் தீவிரமான பலத்த எதிர்ப்பு அவருக்கு அன்று இருந்தது. உதயம் என்ற புதுக்கருகொண்ட நாட்டிய நாடகத்தின் பின் கொழும்பு புனித பிறிஜஸ் கொன்வன்ட் மாணவிகளுக்கு கானகம் ஏகிய இராகவன்' என்ற நாட்டிய நாடகத்தை கார்த்திகா பழக்கிக் கொண்டிருந்தார். இராமனும், இலக்குவனும், சுமந்திரனும் காட்டுக்கு தேரிலே செல்லும் காட்சியை மட்டக்களப்பு வடமோடிக் கூத்தாட்டமுறையில் அமைக்க எண்ணி என் உதவியைக் கேட்டிருந்தார்.
பேராசிரியர் வித்தியானந்தன் 1961-1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேடையிட்ட கள்ணன்போர், இராவணேசன் ஆகிய வடமோடி நாடகங்களில் கள்ணனாகவும் இராவணன் ஆகவும் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையினால் வடமோடி நாடக பரிச்சயம் எனக்கிருந்தது. அத்தோடு கூத்து இயக்கமாக ஆரம்பித்த தமிழர்களின் கூத்து மீட்புப்பணியினால் அன்று பலரும் கவரப்பட்டிருந்தனர். பேராசிரியர் தயாரித்த கூத்துக்களும் அதன் ஆட்டமுறைகளும் அன்று இலங்கை பூராவும் பரவலாக அறியப்பட்டதுடன் பிரபல்யமும் பெற்றிருந்தன. கார்த்திகா கணேசரும் எனது ஆடல்களைக் கண்டிருக்கிறார்; ரசித்திருக்கிறார், என்பதைப் பின்னால் அறிந்தேன். அக்கூத்துத் தான் எனக்கும் கார்த்திகா கணேசருக்குமான உறவுப் பாலமாயிற்று. கூத்தின் வீரியத்தை நடன மணியான காாத்திகா நன்கு புரிந்து கொண்டார். அதனாலேயே அதனைப் பரதத்துடன் இணைக்க எண்ணினார்.

Page 12
ஜீவநதி 20 அன்று அதற்கு அசாத்திய துணிச்சல் தேவைப்பட்டது. மரபு வழிப் பரத விற்பன்னர்களின் முகம் சுளிப்பையும், கேலிப் பேச்சுக்களையும், பொருட்படுத்தாது இதனை நடைமுறைப்படுத்த உழைத்தார் கார்த்திகா கணேசர். கார்த்திகாவுக்கு கை கொடுக்க வேண்டும். அது காலத்தின் கட்டளை. இரத்தினம் மாஸ்டர் மிருதங்கத்துடன் இருந்த இருக்கைக்கு முன்னே தரையில் அமர்ந்தபடி நான் வடமோடிக் கூத்தில் குதிரைத் தாளத்திற்குப் பாவிக்கப்படும் தாளக் கட்டுக்களை (ஜதிகளை) உச்சரித்துக் காட்டினேன்.
தக ஜொணு தகதிமி தாம் தாம் தாம் தெய்ய தக ஜொனு தகதிமி தெய். மீண்டும் கையில் தாளம் போட்டு இரத்தினம் மாஸ்டரின் முகத்தைப் பார்த்தபடி இசை ரூபமாக தாளக் கட்டுக்களை உச்சரிக்கத் தொடங்கினேன். உன்னிப்பாக ஜதிகளை கேட்ட பின் அவற்றை மிருதங்கத்தில் வாசிக்க ஆரம்பிக்கின்றார். தாளக் கட்டுக்கள் இரத்தினம் மாஸ்டரின் மோதிர விரல் அசைவுகளுக் கூடாக மிருதங்கத்தின் ஒலி அதிர்வுகளாக இரசாயன மாற்றம் பெறுகின்றன. நான் தாளக்கட்டுக்களை கூற இரத்தினம் மாஸ்டர் மிருதங்கத்தில் அதனைத் திருப்பிக்கூறுகிறார்.
மட்டக்களப்பிலே கூத்துக்குப் பாவிக்கப்படுவது “மத்தளம;” எனும் வாத்தியமாகும். மிருதங்கத்தைப் போல சப்தசுரங்கள் பேசும் சாஸ்திரிய வாத்தியமல்ல அது. ஒரு பக்கம் உச்சம் மறுபக்கம் தொப்பை என இரண்டு நாத அமைப்புக்களையுடைய கிராமிய வாத்தியம் அது.
இப்போது முதல் முறையாக மட்டக்களப்புக் கூத்தின் ஜதிகளை சாஸ்திர ரீதியானதும் நுட்பமான ஒலிச் சேர்கைகளைக் கொண்டதுமான மிருதங்கத்தில் கேட்கின்றேன். ஒரு மின்னல் பாய்ந்த உணர்வு, எனக்குள் ஏற்பட்டது. கூத்தின்ஜதி மிருதங்க ஒசையினுாடாக வெளிப்படுகையில் கோடான கோடி அதிர்வுகளையும், பரவசங்களையும் என்னுள் அது ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் தாளமிட்டபடி ஜதிகளை நான் மாஸ்டரைப் பார்த்தபடி கூற அவர் என்னைப் பார்த்த வண்ணம் தலையை ஆட்டியபடி புன்னகையுடன் தாளக் கட்டுக்களை மிருதங்கத்தில் எனக்குத் திருப்பித் தர. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத அனுபவம் அது. கிராமியக் கலை ஒன்றும் -சாஸ்திரரீதியான கலை ஒன்றும் சங்கமிக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்று வீரியம் பெறுகின்றன.
மிருதங்க நாதம் என் உடலுக்குள் ஓர் அதிர்வினை ஏறபடுத்துகிறது. நான் எழுந்து கூத்து ஜதிகளுக்கேற்ப கூத்தின் ஆட்டக்கோலங்களை ஆடிக் காட்டத் தொடங்குகின்றேன். மாஸ்டன் என் காலைப் பார்த்தபடி ஆட்டத்திற்கு மிருதங்கம் வாசிக்கத் தொடங்குகின்றார். அவர் மிருதங்கம் வாசிக்க, நான் ஆட. அனுபவத்தின் விகCப்பு இன்னொரு தளத்திற்கு விரிகிறது. கூத்து சாஸ்திரத்திற்கு கட்டுப்படுகிறதா? அல்லது சாஸ்திர விதிகள் கூத்துக்குள் இருப்பதால் கூத்தை சாஸ்திரம் தனக்குள் உள்ளடக்கி விஸ்வரூப தரிசனம் காட்டுகிறதா?
நான் வேகமாக ஆடுகிறேன். அவர் வேகமாக வாசிக்கிறார் எனக்குள் புதிய ஒளிகள்; புதிய தரிசனங்கள்.
அண்மைக் காலமாக கூத்தைப் பற்றி ஆய்வுரீதியாக சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். கூத்துக்கும் பரதத்திற்குமிடையே நிறைந்த ஒற்றுமைகள் உள்ளன என்பதும், கூத்து கிராமியக் கலை அன்று சாஸ்திர

says as 21 ரீதியாகப் பயில்விலிருந்த ஒரு கலையின் கீழிறங்கிய வடிவமே என்பதும் என் ஆராய்வின் முடிவுகளாகும். இவ்வண்ணம் இன்று நான் வைக்கும் கூத்துப் பற்றிய புதிய கருத்துக்களுக்கு ஆரம்பக் கருவை இப்படி என்னுள் விதைக்கிறார் இரத்தினம் மாஸ்டர்.
கானகம் ஏகிய இராகவனை பின்னாளில் இராமாயணமாக ஒன்றரை மணிநேர நாட்டிய நாடகமாக்கும் முயற்சியில் கார்த்திகாவுக்கு என் உதவி தேவைப்படுகிறது. இராவண வரவு, சீதையைத் தூக்கிச் செல்லல், அனுமன் ஆட்டம், இராம இராவண யுத்தம், என்ற காட்சிகளைக் கூத்தாட்ட முறையில் அமைக்கிறோம். பரத நாட்டியம் பயின்ற மாணவிகளுக்கு கூத்தாட்டம் கற்பிக்கப்படுகின்றது. பரதம் பயின்ற கால்கள் கூத்தாடுகின்றன. பேராசிரியர் இந்திரபாலா உற்சாகமும் உதவியும் அளிக்கிறார்.
தற்போது இலண்டனில் வசிக்கும் அவைக்காற்றுக் கலைக்கழக முக்கியஸ்தரும், பிரபல நடிகையுமான நிர்மலா பாலேந்திரா தான் இராமர். மாஸ்டரின் மிருதங்கம் கூத்திற்குப் புதுப்பொலிவு தருகிறது. கூத்து என்று தள்ளாமல் கூத்திலும் பயன் கண்டு அதனோடு தன்னை இணைத்துக் கொள்கிறார் இரத்தினம் மாஸ்டர். மகா கலைஞர்கட்குள்ள குணாம்சம் அது. இரத்தினம் மாஸ்டரின் மிருதங்க ஒலியினால் கூத்து புதுப் பொலிவு பெறுகிறது.
அதே ஆண்டில் என்று ஞாபகம். யாழ்ப்பாணக் கூத்து, மட்டக்களப்புக் கூத்துக்களை மையமாக வைத்து ஒரு நிகழ்ச்சி வானொலியில் தயாரிக்கப்படுகிறது. பேராசிரியர் அ.சண்முகதாஸா, பேராசிரியர் கா. இந்திரபாலாவா, அந் நிகழ்ச்சியைத் தயாரித்தவர் என்பது நினைவில்லை. நானும் பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராஜனும் யாழ்ப்பாண மட்டக்களப்பு வடமோடி தென்மோடிப் பாடல்களை பாடக் கலையகத்தில் இருக்கிறோம். கூத்துப் பாடல்களுக்கு பின்னணி இசை வாசிக்கிறார் இரத்தினம் மாஸ்டர். கிராமியக் கலையென கருதப்பட்ட கூத்துப் பாடல்களுக்கான பின்னணி இசை சாஸ்திரிய ரீதியான ஒரு இசைக் கலைஞரினால் வாசிக்கப்படுகிறது.
இரத்தினம் மாஸ்டர் எனக்குள் ஒரு மதிப்பு வாய்ந்த கலைஞனாக இடம் பிடித்துக் கொள்கிறார். சாஸ்திரத்தில் ஒரு சிறிது பிசகினாலும் பிழை காணும் சாஸ்திரீயக் கலைஞர்கள் மத்தியில் கூத்துக்களைக் குறைவாக மதிப்பிடும் கள்னாடக பரத வித்துவான்களுக்கு மத்தியில் மாஸ்டர் எனக்குவித்தியாசமானவராகத் தென்படுகிறார்.
1980 களில் நாம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு கூத்துப் பாணியிலமைந்த ‘சங்காரம்' எனும் நாடகத்தைத் தயாரித்த போது கூத்தாட்டங்களுக்கு மிருதங்கத்தையே பின்னணி வாத்தியமாகப் பாவித்தோம். அதற்கான ஞானோபதேசத்தை தன் வார்த்தைகளாலன்றி கலைஞனுக்கேயுரிய செயல் முறைகளினால் எனக்கு உபதேசித்தவர் இரத்தினம் மாஸ்டர்.
பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது இரத்தினம் மாஸ்டரின் தந்தை தம்பாப்பிள்ளை யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த ஒரு கூத்து மத்தளக் கலைஞர் என்று. நாவாந்துறை யாழ்ப்பாணத்தில் கூத்துக்கும் பெயர்போன ஊர்களுள் ஒன்று. பல கூத்துக் கலைஞர்களையும் மத்தளக் கலைஞர்களையும் கொண்டது அது. தம்பாப்பிள்ளையவர்கட்கு கோடையிடி என்ற பட்டமும் அளிக்கப்பட்டிருந்ததாம். இரத்தினம் மாஸ்டருக்கு கூத்துக் கலையுணர்வு பாரம்பரிய முதுசம்.

Page 13
ஜீவநதி 22
கூத்து என்ற வேரிலிருந்து மிருதங்கம் என்னும் விருட்சமாக இலங்கையில் பிரபல்யமாகி மீண்டும் கூத்து என்ற வேருக்கு வருகையில் இரத்தினம் மாஸ்டர் ஈழத்துத் தமிழரின் தனித்துவம் என்ற கலைக் கோட்பாட்டுக்கு உதாரணமாகத் திகழும் ஒரு குறியிடும் ஆகிவிடுகிறார். 1973 தொடக்கம் 1975 வரை எனது துணைவியார் சித்திரலேகா இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தயாரிப்பாளராகக் கடமையாற்றிய காலத்தில் நானும் சில நிகழ்ச்சிகளை அங்கு தயாரித்துக் கொண்டிருந்தேன். சங்கநாதம், கிராமிய சஞ்சிகை என. இதனால் அடிக்கடி அன்று நான் செல்லும் இடமாக அது அமைந்தது.
வாத்தியக் கோஸ்டியினரின் அறைக்குள் செல்லவும்
நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் உதவி பெறவும் வேண்டி வந்தது. இரத்தினம் மாஸ்டருடன் பழகும் வாய்ப்பும் வாய்த்தது. இப்போது அவை ஞாபகத்திற்கு வருகின்றன.
இரத்தினம் மாஸ்டரின் மிருதங்க ஓசை வெகு சுத்தமானது. சம்பூர்ணமானது. அவர் மிகுந்த ஞானஸ்தன். கலைஞனுக்கேயுரிய கற்பனை வளம் அவரிடம் மிகுதியாக இருந்தது. “பாடும் போது வாயைக் கவனித்து மிருதங்கம் வாசிக்க வேண்டும். ஆடும் போது காலைக் கவனித்து மிருதங்கம் வாசிக்க வேண்டும். வாத்தியத்திற்கு வாசிக்கையில் கையைக் கவனித்து வாசிக்க வேண்டும்” என்று அவர் கூறுவாராம். வாய், கால், கை என ஒவ்வொரு கலையையும் ஓர் உறுப்புக்குள் திரட்டி வைத்து அவதானித்தமை அவரின் நுட்பமான கலைப் பார்வைக்கு ஒரு சான்று.
நாட்டியத்திலே கம்பீரமாக ஒலிக்கும் அவரது மிருதங்க ஒலி, கச்சேரியிலே, நளினமாக ஒலிக்கும். தாளத்திற்கு கால் விழுகிறதா? காலுக்கு தாளம் விழுகிறதா? என்ற பிரமிப்பை ஏற்படுத்தும்
எத்தனையோ நாட்டிய மணிகளின் (?) பிசகிய ஆட்டங்களை தன் வாசிப்புத்திறமையால் காப்பாற்றியமைக்காக இன்று வாழும் பிரபலங்களி' இரத்தினம் மாஸ்டருக்கு என்றும் நன்றி கூற வேண்டும்.
கச்சேரி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரத்தினம் மாஸ்டர் தன்னை மறந்து மிருதங்கம் வாசித்துக்கொண்டிருக்கின்றார். சபையிலே ரசிகள்களுள் ஒருவராக பிரபல மிருதங்க வித்துவான் பாலக்காட்டு மணிஐயர் இருக்கின்றார். இரத்தினம் மாஸ்டரின் மிருதங்க வாசிப்பை மணிஐயர் உற்றுக் கவனிக்கிறார். அவருக்குள் ஆச்சரியம் தனது பாணியில் வாசிக்கிறாரே இவர் என்று. கச்சேரி முடிகிறது.
இரத்தினம் மாஸ்டடைக்கண்டு பாராட்டிய பின் மணிஜயர் கேட்கிறார் “உங்கள் குரு நாதர் யார்?" மாஸ்டர் தன் குரு நாதர் பெயர் கூறினார். என்ன ஆச்சரியம்! அந்தக் குருவிடம் தான் பாலக்காட்டு மணிஜயரும் மிருதங்கம் பயின்றிருக்கிறார். இன்றைய நாட்டியமணி வாசுகி ஜெகதீஸ்வரனின் தந்தை சண்முகப்பிள்ளையும் அக்குருவிடம் பயின்றவரே. இது அருந்ததி ழரீரங்க நாதனின் மகன் சாரங்கன் மூலம் நான் அறிந்த தகவல.
20 வருடங்களுக்குப் பின்னர் 1994ம் ஆண்டு இரத்தினம் மாஸ்டரை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனை ஏற்படுத்தியவர் சாரங்கனே. மாஸ்டரின் மகனான இரத்தினதுரையைக் காணச் சென்ற போது அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அது மனதுக்கு நிறைவையும் தருகிறது. தனது 63-வது வயதிலே கடைசித் தடவையாக அவர் வாசித்தது வாசுகி ஜெகதீஸ்வரனின் நாட்டிய நாடகத்திற்காகும்.

நேர்காணல்
செங்கை ஆழியான் சந்திப்பு - சி.விமலன்
ஈழத்து இலக்கிய செல்கெரியில் புனைகதை சார்ந்த மூர்துல் புனைகரைசார படைப்பாக்கத்தின் மூலமும் தொகுப்பாக்க முயற்சிகர் மூலமும் இலக்கியவட்டத்திலும் சரி, கல்விப்புலத்திலும்சரி ராக்கென்ரொரு இடத்தை எவருமே எட்டமுடியாத இடத்தில் ன்கித்து வருபவர் மூத்தலைமுறை ப்டைப்பானி செங்கை ஆழியார். இதுவரை 35 இர்கும் மேற்பட்ட காலக்கரையும் 5 சிறுகதை தொகுதிகரையும் 15 குறுநாவல்கரையும் எழுதியுர்ரே அன்னாரை நேர்காணல் செய்வதில் ஜீவநதி பெருமை அடைகிறது.
07. நமது நாட்டு படைப்பாளிகளின் ஆக்கங்களை புத்தக வடிவில் வெளிக் கொணர்வதற்கான வெளியீட்டு நிறுவனங்கள் அரிதாகவே காணப்படுகின்ற நிலையில் உங்கள் சுயமுயற்சியில் தோற்றம் பெற்ற “கமலம’ பதிப்பகம் பதிப்புத்துறையில் நிகழ்த்திய சாதனைகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
மிக ஆரம்ப காலத்தில் இருந்தே பதிப்பகம் பற்றிய கனவு எனக்குண்டு. பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்து 'ஈ'தைப்பூங்கா', 'விண்ணும் மண்ணும்', 'காலத்தின் குரல்களி' என்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டபோது 'பல்கலை வெளியீடு' என்ற பதிப்பகத்தை நிறுவியிருந்தேன். பின்னர் மகளின் பெயரால் ரேகா பதிப்பகம் என்றொரு பதிப்பகம் வைத்திருந்தேன். பின்னர் என் அதிர்ஸ்ட மனைவியின் பெயரால் கமலம் பதிப்பகத்தை கொண்டுள்ளேன். என்னைப் பொறுத்த வரையில் பதிப்பகத் துறை எனக்கு சிரமமானதாகவோ நட்டத்தைத் தருவதாகவோ இல்லை. ஏனெனில் என் நாவலோ சிறுகதைத் தொகுதியோ வெளிவந்திருப்பதாகச் செய்தி பரவியதும் ஒரு மாதத்திற்குள் 300 பிரதிகள் வரை விற்பனையாகிவிடும். முதலீடு வந்துவிடும். இன்று புத்தக பதிப்புத் தொழில் சாத்தியமானதாகவில்லை. விலைகொடுத்து வாங்கி நூல களைப்படிப்பவர்களின் கவனக் கலைப்பான்களாக தொலைக்காட்சிவந்து விட்டது. இல்லங்களில் 10 சதமானவர்கள் கூட கதை நூல்களைப் படிப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக விற்பனையாளர்கள் இப்பொழுது ஒத்தபடி 40 சதவீதக் கழிவு கேட்கிறார்கள். 100 ரூபா புத்தகத்தை விற்க 40 ரூபா கேட்கிறார்கள். பதிப்பகங்கள் நடந்த மாதிரித்தான்.
08.யாழ். இலக்கிய வட்டத்தின் தலைவராக தற்போது விளங்கும் நீங்கள் அதன் செயற்திட்டங்கள் குறித்தும் அதன் முலம் வெளியிட்ட நூல்கள் குறித்தும் சற்று கூறுங்கள்?
யாழ். இலக்கிய வட்டத்தின் மூலகர்த்தா ரசிகமணி கனகசெந்திநாதன் ஆவார். அவரோடு யாழ்வாணன், செம்பியன்செல்வன், நான் இணைந்திருந்தோம். வரதர், சச்சிதானந்தன், சு.வே. சொக்கன். கே.வி. நடராஜன், இ.நாகராஜன், கல்வயல் குமாரசாமி, காரை சுந்தரம்பிள்ளை, சிற்பி, குறமகள், கவிஞர் கந்தவனம், புத்தொளி சிவபாதம் என ஒரு எழுத்துலக ஐாம்பவான்கள் அதில் இருந்தனர், இருக்கின்றனர். இவீகஃ பலர் இன்றில்லை. அதனைக் கட்டிக்காக்கின்ற பணி என் தலை மீது சுமந்துள்ளது. அதன் தலைவராக இன்றுள்ளேன். யாழ் இலக்கிய வட்டம் ஈழத்து இலக்கிய உலகின் * ஒரு வலுவான அமைப்பாகும். அதன் சாதனைகள் பல. அதனை வீறுகொண்ட இளம் எழுத்தாளர்களிடம்

Page 14
ஜீவநதி 24
ப்படைக்க வேண்டும். இதற்காக ஆவன செய்து வருகின்றோம். நூல் வளியீடுகளைப் பொறுத்தளவில் இது வரை இலக்கிய வட்டம் 30 இற்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. கே.வி. நடராஜனின் யாழ்ப்பாணக்கதைகளுடன் அது தன் பிரசுரப் பணியை ஆரம்பித்தது. சு.வே. யின் ‘மண்வாசனை', கனக செந்திநாதனின் "வெண்சங்கு', இ.நாகராஜனின் நிறைநிலா, யாழ்ப்பாணனின் ‘அமரத்துவமி, செம்பியன் செல்வனின் 'அமைதியின் இறகுகளி, ‘சர்ப்ப வியூகமி, செங்கை ஆழியானின் மரணங்கள் மலிந்த பூமி உட்பட சில நூல்கள், “கவிஞர் ஐயாத்துரை கவிதைகளி', 'கந்தவனத்தின் கவிதைகளி என்பன நினைவிலுள்ள சில நூல்கள், யாழ். இலக்கியவட்டம் வெளியிட்டது. “சுதந்திரன் சிறுகதைகள் யாழ். இலக்கிய வட்டம் வெளியிட்ட பெரிய அளவிலான நூலாகும். 102 ஈழத்து எழுத்தாளர்களின் ‘சுதந்திரன் கதைகள் இதிலடங்கியுள்ளது. ஈழத்தின் எழுத்தாளர்களின் நலனைப் பெறுகின்ற சங்கமாக இது விளங்கி வருகின்றது.
09. இலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்களின் பங்களிப்பு என்பது கணிசமானதொன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கலைச்செல்வி’யில் தொடங்கிய உங்கள் எழுத்துப் பயணம் இன்று மல்லிகை”, “ஞானம” வரை தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய ஈழத்துச்சிற்றிதழ்களின் போக்கு குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஈழகேசரி, ஈழநாடு, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி முதலான பிரபல பத்திரிகைகள் இலக்கியப் பணி ஆற்றி வந்தன. தொடர்ந்து சில ஆற்றியும் வருகின்றன. ஆனால் சிற்றிதழ்கள் ஆக்கவிலக்கியத்துறைக்கு காலத்திற்குக் காலம் ஆற்றிய பணி அளவிடமுடியாது. சிற்றிதழ்கள் என்பதற்கு எழுதா மறையாகச் சில இலக்கணங்கள் உள்ளன. குறுகிய ஆயுளைக் கொண்டது, பண வளம், விடய வளம், அவற்றினைத் தொடர்ந்து வழங்கும் ஆற்றல் உள்ள படைப்பாளிகள் இன்மையால் இடை வயதில் செத்துவிடுகினறது. ஒரு குறித்த நோக்கிற்காக ஆரம்பித்தல், ஒரு இலக்கியக் குழுவின் குரலை நிலை நிறுத்த ஆரம்பிக்கப்படுதல், ஒரு சில ஆரோக்கியமான இலக்கியக் குரல்களை அடக்குவதற்காக அல்லது கொச்சைப் படுத்துவதற்காக ஆரம்பித்தல், மலின இலக்கியமன்றி கனதியான இலக்கியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஆரம்பித்தல், தாம் எழுதி வைத்திருக்கும் ளங்காத படைப்புகளை, ஏனைய பத்திரிகைகள் மறுதலித்த எழுத்துக்களை பிரசுரிப்பதற்காக ஆரம்பித்தல், இலக்கிய இசங்களைப்பற்றி எழுதி எழுதுபவனையும் மழுங்கடிக்கச் செய்ய ஆரம்பித்தல். இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். ஆனால் ஈழத்தில் முதலாவது சிற்றிதழ் வரதரின் 'மறுமலர்ச்சி ஆகும். அதன் இலக்கியப்பணி ஒரு சகாப்தமாகவே இன்றும் கருதப்படுகின்றது. “கலைச்செல்வி இன்னொரு கனதியான சிற்றிதழ். என்னைப்போன்ற படைப் பாளிகளை இனங்கண்டு உயர்த்திவிட்டது. அதன் பின்னராகவோ முன்னராகவோ விவேகி, அமிர்தகங்கை, வசந்தம், சமர், அலை, ஆனந்தன், அல்லி, பாரதி, எரிமலை முதலான பல ஏடுகள் வெளிவந்துள்ளன. குறுகிய காலப்பணியுடன் தம் ஆயுளை நிறைவு செய்து கொண்டன. மல்லிகை ஒன்று தான் 40 வருடங்களையும் கடந்து வெற்றி நடைபோடும் சிற்றிதழ். அதன் நீண்ட ஆயுள் சிற்றிதழ் என்ற இலக்கணத்தைக் கடந்து விட்டது போலப் படுகின்றது. அதற்காக அதனை வியாபார ஏடு என வகுத்துவிட முடியாது. ஞானம் இன்று ஈழத்தில் சிறப்பாக வெளிவரத் தொடங்கியுள்ளது. 88, இதழ்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது. கனதியான இலக்கியத்தினதும் இளம் படைப்பாளிகளின்

ஜீவநதி 25 தளமாக அது விளங்குகின்றது. இந்தக் கணினியுகத்தில் உலகெங்கும் சிற்றிதழ்களின் வருகை முதன்மை பெற்றிருக்கின்றது. தமிழகத்தில் ஒன்றிரண்டு படைப்பாளிகள் சேர்ந்து தம் கருத்துக்களை முன் வைக்கவும் எதிராளியின் கருத்துக்களை மறுதலிக்கவும் சிற்றிதழ்களைத் தொடங்கியுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் ஏராளமான சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆக்க இலக்கியத்தோடு வசை இலக்கியம் நன்கு வளர்ச்சி கண்டிருக்கின்றது. 10. ஈழத்து இலக்கிய வரலாற்றிலே "மறுமலர்ச்சி’ இதழ்கள் வெளிவந்ந காலம் ஒரு பொற்காலமாகவே கருதப்படுகிறது. இன்று கிடைத்தற்கரிதான அவ்விதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை “மறுமலர்ச்சி சிறுகதைகள்’ ஆக தொகுப்பித்த நீங்கள் வேறு எவ்வகையான தொகுப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளிர்கள்?
மறுமலர்ச்சி வெளிவந்த காலம் ஒரு பொற்காலம் தான். இரண்டாண்டுகள் அந்த ஆரோக்கியமான இதழ்கள் வெளிவந்தன. வரதர், பஞ்சாட்சரசர்மா, தாழையடி சபாரெத்தினம் போன்றோரின் முயற்சி பலன் தந்துள்ளது. மறுமலர்ச்சி இதழ்களைப் பாராமலேயே விமர்சகள்கள் அவ்விதழ் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் பேசத் தொடங்கியிருந்தனர். ஆதலால் அவற்றிலுள்ள சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட விரும்பினேன். வடக்கு - கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் நண்பர் டிவகலாலா உதவினார். அத்தொகுதி வெளிவந்த பின்னர் மறுமலர்ச்சி பற்றிய சிந்தனை சற்று மாறுபட்டது. நமது இலக்கிய இருப்புகளை வெளிக்கொணர வேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு. அதற்கான வாய்ப்பும் வசதிகளும் எனக்குள்ளன. மறுமலர்ச்சிச் சிறுகதைகளை வெளியிட விரும்பியபோது, அவ்விதழ்களைச் சேகரித்து வைத்திருக்கும் பண்டிதர் பஞ்சாட்சரசர்மாவின் மகன் கோப்பாய் சிவம் அந்த இதழ்களைத் தந்துதவினார். இலங்கையில் அவரிடம் மட்டுமே மறுமலர்ச்சி இதழ்கள் உள்ளன. அடுத்து என்னிடம் அவற்றின் போட்டோ ஸ்ரட் பிரதிகள் உள்ளன. மறுமலர்ச்சியில் வெளிவந்த 52 சிறுகதைகளில் 25ஐ தெரிந்தெடுத்து இத்தொகுதியை வெளியிட்டேன். அக்கால கட்டத்தின் சிறுகதை இருப்பினை அறிய இவை உதவின. கு.பெரியதம்பி என்ற சிறுகதைப்படைப்பாளியை இத்தொகுதி தான் இனங்காட்டியது. மஹாகவி ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதையும் இத்தொகுதி எடுத்துரைத்தது. "மறுமலர்ச்சி கவிதைகளை" பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுதர்சன் இப்போது வெளியிட்டுள்ளார். மறுமலர்ச்சி இதழ்களை அப்படியே மீண்டும் வெளியிட்டால் என்ன என்ற சிந்தனை கோப்பாய் சிவத்திற்கு உதித்துள்ளது. செங்கை ஆழியானின் இலக்கியப் பணிகளில் தொகுப்பாக்கம் தனிப் பகுதியாகும். 1930 இலிருந்து 1958 வரை வெளிவந்த ஈழகேசரியின் இலக்கியப்பங்களிப்பு குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. 500 இற்கு மேற்பட்ட சிறுகதைகளில் 53 ஐ தொகுத்து 'ஈழகேசரிச் சிறுகதைகள்' என்ற தொகுதி வெளிவந்தது. ‘ஈழத் து முன்னோடிச்சிறுகதைகள் 25 என்னால் தொகுத்து வெளிவந்தது. 109 சிறுகதைகளின் தொகுப்பாக ‘சுதந்திரன் சிறுகதைகள்' வெளிவந்தது. 'மல்லிகைச் சிறுகதைகள்' என இரண்டு தொகுப்புகள் என்னால் தொகுக்கப்ட்டு மல்லிகைப்பந்தல் வெளியிட்டது. அதே போலச் சிங்களச்சிறுகதைகளி என்னால் தொகுக்கப்பட்டன. சம்பந்தன் சிறுகதைகள், புதுமைலோலன் சிறுகதைகள்', 'முனியப்பதாசன் சிறுகதைகளி, தையிட்டி இராஜதுரையின் அகதி அரிசி' தேவன் - யாழ்ப்பாணத்தின் சிறுகதைகள், சிரித்திரன் சுந்தரின் ‘கார்ட்டுன் உலகில் நான் எனப் பல தொகுதிகள். ஈழநாட்டில் வெளிவந்த சிறுகதைகள் 799 சிறுகதைகளில் 124 சிறுகதைகள்

Page 15
ஜீவநதி 26 நூலாக வெளிவரவேண்டும். அதேபோல “சுடர்' என்றொரு சஞ்சிகை கோவை மகேசனால் வெளியிடப்பட்டது. ஈழத்தின் இன்றைய முன்னணிப் படைப்பாளிகள் அதில் தான் எழுதியுள்ளனர். கோவை மகேசனின் தம்பியாரிடமிருந்து அந்த இதழ்களைப்பெற்று முழுமையாக வாசித்து வைத்துள்ளேன். ஒரு தொகுப்பு வெளியிட வேண்டும்.எழுத்துப்பணிக்கு அப்பால் ஈழத்தின் ஏனைய படைப்பாளிகளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் செயற்பாடு அவசியமெனக் கருதுகின்றேன். 11. இலக்கிய உலகில் புலம் பெயர் இலக்கியங்கள் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. புலம் பெயர் இலக்கியம் குறித்துத் தங்கள் கருத்தென்ன?
புலம் பெயர் இலக்கியங்கள் இன்று முதன்மை பெற்று வருகின்றன. புலம் பெயர் இலக்கியங்கள் இரு வகையான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. ஆரம்ப கால இலக்கியங்கள் ஈழம் பற்றிய புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் இருந்தன. ஈழத்தில் தம் அனுபவங்களையும் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவை பேசின. பின்னர் அவர்கள் ஈழம் பற்றி எழுதியவை பார்வையாளரின் குறிப்புகளாக இருந்தன. ஈழத்தின் துயரங்களை, இன்றைய வாழ்வியலை இத்துயரங்களுக்கிடையில் வாழாமல் பதிவு செய்ய முடியாது. பட்டினி தேசமாக மாறிவிட்ட யாழ்ப்பாணத்தின் துயரங்கள் தெரியுமா? தீ விட்டெரியும் கிழக்கின் அவலங்களைக் கற்பனையில் காணமுடியுமா? நாசி முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படும் அவலங்களை அனுபவிக்க டியுமா? வீதிகளில் அவமே செத்துக்கிடக்கும் இளைஞர்களின் சடலங்கள் வளியிடும் கனவுகளை உணர முடியுமா? இன்னமும் எவ்வளவு காலத்திற்குத் தான் கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்து தமிழ் நாட்டின் அப்ளாஸைப் பெறப்போகிறீர்கள்? அவை ஈழத்துத் தமிழ் இலக்கியங்களல்ல. ஈழம் பற்றிய தமிழ் இலக்கியங்கள். அது அ.முத்துலிங்கத்திற்கும் பொருந்தும். அதேபோல எஸ்.பொன்னுத்துரை, வி.கந்தவனம், குறமகள், அரவிந்தன், ஷோபா சக்தி, ஜெயபாலன், சேரன், ஆழியாள் முதலான புலம் பெயர் இலக்கியம் படைக்கும் அனைவருக்கும் பொருந்தும். புதிய படைப்பாளிகள் அவர்களில் பலர் இன்று தாம் வாழ்கின்ற நாட்டில் அனுபவிக்கும் துயரங்களை எழுதிவருகின்றார்கள். எங்களுக்குப் பரிச்சயமில்லாத களமாக அவையுள்ளன. நெஞ்சைப் பிடித்துக் கொள்கின்றன. புலம் பெயர் தமிழ் இலக்கியம் இன்று எழுதுகின்ற பரம்பரையுடன் முற்றுப் பெற்றுவிடும். அதன் பின்னர் வரும்டிவருவது அந்தந்த நாட்டு மொழிகளில் ஈழத்துத் தமிழரின் வம்சாவளியினரின் எழுத்துக்களாக அமையும்.
12. உங்களின் எதிர்காலத்திட்டம் இலக்கியத்தில் எவை?
நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவன். திட்டமிட்டவாறு இலக்கியம் படைக்க முடியாது. அது காலச் சூழலைப் பொறுத்தது. எனினும் கைவசம் மனதில் சில எழுத்துத் திட்டங்களுள்ளன. "ஈழத்துச்சிறுகதை வரலாறு எழுதியது போல "ஈழத்து நாவல் வரலாறும் எழுதவேண்டும். அதன் பின்னர் ஈழத்தின் புனைகதை வளர்ச்சி கணிக்கப்பட்டு எழுதப்படவேண்டும். ஈழத்துப்புனைகதைப்படைப்பாளிகள் தொடரை மல்லிகையில் எழுதிமுடிக்க வேண்டும். அன்புக்குரிய நண்பர் டொமினிக் ஜீவா எனக்கு ஒரு கட்டளையிட்டுள்ளார். எனது சுயவரலாற்றைச் சுவைபட எழுதவேண்டுமென்று. இவை இலக்கியப்புலம் சார்ந்தவை. கல்விப்புலத்தில் நிறைவேற்றவேண்டிய எழுத்துப்பணிகள் சிலவுள்ளன. இந்த நோக்கங்களின் நிறைவேற்றம் என் கையிலில்லை என்பதும் எனக்குத் தெரியும். இந்த நேர்காணலைச் செய்தமைக்காக ஜீவநதிக்கு நன்றி கூறுகின்றேன்.

ஜீவநதி 27
சாம்Uல் கரைக்க வேண்டர0ா?
“ஊருக்குள்ளே சாதியில்லை ஒப்புக்கொள்ளலாம் - அது உள்ளத்திலே ஒளிந்திருக்கே 6IGöG0I LIG0öiG00TG)ITib?
தொற்று நோய்க்கும் தொழு நோய்க்கும் மருந்து கண்டோமே முற்றிப்போன சாதிநோய்க்கு மருந்து கண்டோமா? - அதை முழுவதுமாய் எரித்துச் சாம்பல் கரைக்க வேண்டாமா?”
கவிஞர் எழில்வேந்தன்
(நன்றி - தாமரை)

Page 16
ஜீவநதி 28 ஓர் இலக்கியவாதியின்
நெஞ்சில் பதிந்த நினைவுகள்.
இரசிகமணி கனகசெந்திநாதன்
தெணியான் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள் பற்றிய எனது மனப்பதிவினை இங்கு சொல்லலாம் என எண்ணுகின்றேன். எங்கள் நாட்டு இரசிகமணி பற்றிச் சொல்ல விழைகின்ற வேளையில் தமிழ்நாட்டு இரசிகமணி சிதம்பரநாத முதலியார் பற்றிய நினைவு நெஞ்சில் எழுவதைத் தவிர்க்க இயலாதிருக்கின்றது.
எங்கள் இரசிகமணிக்கு முன்னவர் தமிழகத்து இரசிகமணி. இவரை டி. கே. ஸி எனச் சுருக்கமாகவும், நெருக்கமாகவும், கெளரவமாக எல்லோரும் அழைத்தார்கள்.
பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கருத்தூன்றிப்படித்து இரசித்துச் சுவைத்தவர் டி. கே. ஸி. சிறப்பாக கம்பராமாயணத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. கம்பனைப் படித்துப்படித்து அனுபவித்து ரசித்தார். கம்பன் கவிதைகளின் ஆழத்தினையும், அழகினையும் புதிது புதிதாகக்கண்டு இன்புற்று உள்ளம் நெகிழ்ந்து அனுபவித்தார். தான் உண்ட இலக்கியத்தேறலை அனைவரும் பருகிமகிழும் வண்ணம் அள்ளி அள்ளி வழங்கினார். டி. கே. ஸி தான் சொன்னது மாத்திரமன்றி, பிறரும் அவரது இலக்கிய இரசனையினை தெளிவாக எடுத்துவிளக்கினார்கள். இது டி. கே. ஸி இன் ஒருபக்கம். டி. கே. ஸி க்கு மறுபக்கமும் ஒன்றுண்டு.
தமது சொந்த வாழ்வினை நன்றாக அனுபவித்து வாழ்ந்தவர் அவர் வாழ்வியலின் பல்வேறு துறைசார்ந்த அன்னாரின் இரசனையினை அவருடன் நெருக்கமாக வாழ்ந்தவர்கள், பழகியவர்களி, நண்பர்கள் அவ்வப்போது தெளிவாக எடுத்துச்சொல்லி இருக்கின்றார்கள். குறிப்பாக உணவுவகைகளை எவ்வாறு அவர் ரசித்து ருசித்து உண்டார் என்பதனை அறியத்தந்துள்ளார்கள். அதனால் டி. கே. ஸி என்னும் இரசிகமணியை முழுமையாக விளங்கிக் கொள்ள இன்று முடிகின்றது.
நமது நாட்டு இரசிகமணி கனகசெந்திநாதன் அவர்களை முழுமையாக நாங்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றோமா? என்னும் நியாயமான ஒரு வினா இங்கு எழுகின்றது.
இரசிகமணி கனகசெந்திநாதன் அவர்கள் பயிற்றப்பட்டதமிழ் ஆசிரியர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் மாத்திரமன்றி நவீன தமிழ் இலக்கியங்களிலும் பரந்த பரிச்சயம் உடையவர். சிறந்த எழுத்தாளர். நல்ல விமர்சகள். நிறைந்த வாசகள். ஆழமான பலதுறை ஆளுமைகளும் உடையவர். நடமாடும் நூல் நிலையம் எனக் கொண்டாடப்பட்டவர். பழைய புதிய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தாடனம் காரணமாக எல்லாவற்றையும் இரசித்து அனுபவித்துச் சொன்னவர். அவ்வப்போது தாம் அனுபவித்தவற்றை இரசனையுடன் எழுத்தில் வடித்துத்தந்தவர். இவைகள் யாவும் இரசிகமணியின் ஒருபக்கம் இரசிகமணி அவர்கள் தம்மை வெளிப்படுத்திக் காட்டிய பக்கம்.
டி.கே.ஸி அவர்களைப்போல கனக செந்திநாதன் அவர்களின் இலக்கிய இரசனைச் சிறப்புப் பற்றி இதுவரை பிறர் பெரிதாக எடுத்துச் சொன்னதாக அறிவதற்கில்லை. அதுமாத்திரமன்றி அவரது தனிப்பட்ட

gab 29 வாழ்வின் இரசனைகள் பற்றியும் குறிப்பிடப்படவுமில்லை. சினிமாப்படங்களை விரும்பிப்பார்ப்பார். ஆங்கிலப்படங்களையும் தவறாது பார்த்து ரசிப்பார். சுருட்டுப்புகைப்பார் என்பன போன்ற மிகச் சில தகவல்களே அவரின் இரசனை உணர்வின் வெளிப்பாடாக அறிந்து கொள்ள முடிகின்றது. இரசிகமணியின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், நெருக்கமான நண்பர்களாக உறவு பூண்டு பழகிவந்தவர்கள் இரசிகமணி பற்றி பல தகவல்களையும் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். அவ்வாறு சொல்லப்படாதது துரதிஷ்டந்தான்.
இளையதலைமுறை சார்ந்த இலக்கியவாதிகள் இரசிகமணியுடன் மதப் புரிமையுடனேயே பழகிவந்ததிருக் கரின் றோம் . ஒத்த தலைமுறையினரிடத்தில் இருந்திருக்கக் கூடிய நெருக்கம் இளைய தலைமுறையினரிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றல்ல. ஆயினும் இரசிகமணி அவர்களிடத்து எனக்கிருந்து வந்த மதிப்பார்ந்த உறவுநிலையில் நான் பெற்றுக் கொண்ட அனுபவத்தையும் அவரது மிகச் சிறந்த நடைமுறைப் பண்புகள் சிலவற்றையும் இங்கு குறிப்பிடலாம் என்று எண்ணுகின்றேன்.
நான் சிறிய மாணவனாக இருந்த காலத்தில் எங்கள்பாடசாலையில் 1952 இல் இடம் பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்கு வருகைதந்து உரை ஆற்றிய இரசிகமணியை முதல் முறையாகக் கண்டிருக்கின்றேன். பின்னர் யாழி. இலக்கிய வட்டக் கூட்டங்களுக்கு நான் சென்றுவரத் தொடங்கிய காலத்தில் அவரை நேரிற்சந்தித்துப்பேசி இருக்கின்றேன். யாழ். இலக்கிய நண்பர்கள் கழகம் 1967இல் நடத்திய சிறுகதைப் போட்டியில் "பெண்பாவை’ என்னும் எனது சிறுகதை முதற்பரிசு பெற்று, மல்லாகத்தில் இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் இரசிகமணியின் கரங்களினால் சான்றிதழும், பரிசுநூல்களும் பெற்றிருக்கின்றேன்.
இவைகள்தான் இரசிகமணியுடன் எனக்கு உண்டான ஆரம்பகாலத் தொடர்புகள். பின்னர் யாழ்ப்பாணம் 'மல்லிகை" காரியாலயத்துக்குச் செல்லுகின்ற சமயங்களில் இரசிகமணியை இடையிடையே அங்கு சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவரின் சுவாரசியமான உரையாடலைக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன்.
ஒரு தினம் நான் மல்லிகைக்குப் போனேன். அந்தச்சமயம் மல்லிகை ஆசிரியர் ஜீவா அவர்கள் வெளியே சென்றிருந்தார். ஜீவாவின் வருகையை எதிர்பார்த்து நான் அங்கு தரித்து காத்திருந்தேன். அப்பொழுது இரசிகமணி அவர்கள் தமக்கே உரித்தான கெக்கட்டச் சிரிப்புடன் அங்கு வந்து சேர்ந்தார். வழமைபோல நெற்றியில் அழுந்திப்பூசிய திருநீறு, எண்ணெய்பூசி படியவாரிவிட்டதலை, கஞ்சிபோட்டு மடமடக்கும் வெள்ளை வேட்டி, நஸனல, சால்வை, குடை, பாய்க்கு மாகத் தோன்றினார்.
எனக்கோ மனதில் பெரிய ஆனந்தம். அன்றைய எனது யாழ்ப்பாணப் பயணம் மிகுந்த பயனுற்றதாக இருக்கப் போகின்றது என மனசு சொல்லுகின்றது. இரசிகமணி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதில் கிடைக்கும் ஆனந்தத்தைப் பலதடவைகள் இதற்கு முன்னர் அனுபவித் திருக்கின்றேன். அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் சுவைதெரியும்.
நான் மெல்ல எழுந்து இரசிகமணியை வீரவேற்று விட்டு அமர்ந்து கொள்கின்றேன்.
இரசிகமணி குடை, பாய்க் என்பவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு உட்காருகின்றார். கழுத்தில் தொங்கும் சால்வையை இழுத்துப் பின்புறமாகவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி வசதியாக அமர்ந்து கொண்டு

Page 17
ஜீவநதி 30 பேச ஆரம்பிக்கின்றார்.
"தெணியான் உங்களுக்கொரு புதுமையைச் சொல்லப்போகின்றேன்.” "சொல்லுங்கோ ஸேர்' "நான் ஒரு ஆம்பிளை என்று நேற்றுத்தான் எனக்குத் தெரியும்” "அப்பிடியா..?” கேட்டுக்கொண்டு பலமாகச் சிரிக்கின்றேன. சுவாரசியமான சங்கதி ஒன்றைச் சொல்லப் போகின்றார் என எதிர்பார்க்கின்றேன்.
"உண்மையாகத்தான்” “என்ன விஷயம்? சொல்லுங்கோஸேர் சிரிப்புமாறாமல் மீண்டும் கேட்கின்றேன்.
"வீட்டிலே மனிசி கேட்கிறா, இதுவரைகாலமும் எல்லாக்காரியங்களும் நான் போய்ப்பார்த்தேன் பிள்ளைக்கு மாப்பிள்ளை கேட்டு நான் போகலாமோ? வீட்டுக்கார ஆம்பிளை எங்கே என்று கேட்க மாட்டினமோ?" என்று அப்பதான் எனக்கு விளங்கிச்சுது நான் ஒரு ஆம்பிளை என்று" சொல்லிக்கொண்டு இரசிகமணி உரத்துச்சிரிக்கின்றார்.
நானும் சேர்ந்து சிரிக்கின்றேன். இலக்கியவாதிகள், கலைஞர்களாக, இருக்கும் அநேகரது வாழ்வுநிலை இதுதான். வீட்டுக்கு வீடுவாசல்படி இரசிகமணியின் வாழ்வின் உயிர் மூச்சாக அமைந்தது இலக்கியம். குடும்பம், உறவு என்பவைகள் எல்லாம் அவரைப் பொறுத்தவரை இலக்கியத்துக்குப் பிறகுதான். தமது சொந்த வாழ்வினை வளம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் அக்கறை கொள்ளாதவர்களாகவே பெருமளவான எழுத்தாளர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இரசிகமணியிடம் பெரிய நூலகம் ஒன்றிருந்தது. அவர் தமது ஊதியத்தின் பெரும்பகுதியை நூல்கள் சஞ்சிகைகள் வாங்குவதற்காகவே செலவிட்டார். இலக்கியத்துக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்த ஓர் இலக்கியவாதி இரசிகமணி.
இரசிகமணியின் மகளின் திருமணம் அவர் இல்லத்தில் நடைபெற்றது. இரசிகமணி எழுத்தாளர்கள் கலைஞர்களுடன் எவ்வித வேறுபாடுமில்லாது நெருக்கமான உறவினைப் பேணிவந்த ஒருவர். கருத்துமுரண்பாடு, கொள்கை முரண்பாடு என்பவற்றை உறவுக்கு இடையூறாக அவர் கொள்வதில்லை. அதனால் இரசிகமணியின் மகளின் திருமணத்துக்குச் சமுகம் கொடுத்தசபை எழுத்தாளர்கள், கலைஞர்களால் நிறைந்திருந்தது. இலக்கியவிழா ஒன்று நடைபெறும் மண்டபம் போல அந்தச் சபை காட்சி அளித்தது.
திருமணச் சடங்குகள் யாவும் உரியமுறைப்படி நடந்தேறிமுடிந்த பின்னர் இரசிகமணி சபையின் முன்னே தோன்றுகின்றார். இலக்கிய அரங் கொன்றில் இரசிகமணி தோன்றுவது போலவே அப்பொழுது அந்தக் காட்சிகள் எனக்கு படுகின்றது. இருகரங்களையும் தூக்கிச் சபையோருக்கு வந்தனம் தெரிவிக்கின்றார். பின்னர் மிகப்பணிவாகச் சபையோரை நோக்கி தமது வேண்டுகோளை விடுக்கின்றார்.
"இங்கு வருகை தந்திருக்கும் பெரியோர்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். இங்கு வந்திருக்கும் எனது எழுத்தாள நண்பர்களுக்கு முதல் பந்தி வைக்கவிரும்புகின்றேன். அதுவரை பெரியோர்கள் என்னை மன்னித்துப் பொறுமையாக இருக்கும் வண்ணம் கேட்டுக் கொள்ளுகின்றேன்." சபையில் எந்தவொரு சிறிய சலசலப்புமில்லை. எல்லோரும் வெகு அமைதியாக இருக்கின்றார்கள். இரசிகமணி எழுத்தாளராகிய எங்கள் எல்லோரையும் அழைத்து உபசரித்து முதல் பந்தி வைக்கின்றார்.
பொதுவாக மூத்த தலைமுறைப்படைப்பாளிகள் மத்தியில் ஒருவரை

ஜீவநதி 3. ஒருவர் கெளரவித்து கனம் பண்ணி நடக்கும் பண்பு இருந்து வந்திருக்கின்றது. இவர்கள் அனைவருக்கு மத்தியிலும் இரசிகமணி ஒருபடிமேலே உயர்ந்து நின்றார். இமயமாகத் தோன்றினார். எழுத்தாளர்கள் எல்லோரும் தனது குடும்ப உறவினர்கள் எனக் கொள்ளும் மேலானபண்பு இரசிகமணியிடத்தில் இருந்து வந்திருக்கின்றது.
குடும்ப உறவு என்பது நட்பினாலும் வேறுசில நியாயங்களினாலும் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் பல உண்டு. இரசிகமணி அவர்கள் எழுத்தாளர்களை தமது குடும் ப உறவினர்களுள் இரத்த உறவுக்காரர்களாகவே கருதி வாழ்ந்து வந்தார். தமது மரணத்தின்போது அந்தப் பெரிய உண்மையை அவர் உணர்த்திப்போனார்.
ஒருவர் காலமானால் அவரது இறுதிக்கிரிகைகளின் போது இரத்த உறவுள்ளவர்கள் நிறைவேற்றுவதற்கென சில சடங்குகள் உண்டு. இறந்தவரின் தலையில் எண்ணெய் வைத்தல், அரைப்பு எலுமிச்சங்காய் ஊற்றித் தேய்த்தல் என்பன இரத்த உறவுள்ளவர்கள் செய்யும் மிகமுக்கிய சடங்குகள். இவை துடக்குக்காக்கும் உரிமைக்காரர்கள் செய்யவேண்டிய சடங்குகள். இரசிகமணி அவர்கள் அமரத்துவம் அடைந்தபோது அவர் விருப்பம்போல அந்தச்சடங்குகளை எழுத்தாளர்கள் அனைவரும் செய்தோம். பேனா பிடித்து அந்தச்சம்பவத்தை எழுதிக் கொண்டிருக்கும் எனது கரத்தினால் புனிதமான அந்தச்சடங்கிளைச் செய்தேன் என்று எண்ணும்போது இன்று உடல்புல்லரிக்கின்றது. கால ஓட்டத்தில் அவர்மறைவின் துயரம் மறந்து உள்ளம் பூரிக்கின்றது.
இரசிகமணி கனக செந் தரிநாதன் அவர்கள் இலக்கியவாதிகளுக்குள்ளே தனித்துவமானவர் அவரைப் போன்று இன்னொரு இலக்கியவாதியை நாங்கள் கண்டுகொள்ள இயலாது. அவர்கலை இலக்கியத்துறை சார்ந்த இரசிகமணி மாத்திரமன்று தேடக்கிடைக்காத மானுட நேயம்மிக்க மாமணியாகவும் அவர் எங்கள் மத்தியில் வாழ்ந்து போனார்.
67ofnaðarsavř uMsiðdöluv 69DoM asoslav2øabovř
எச்சில் விழுங்கு என்னைச் செரிக்கும் இன்னும் விழுங்கு வலிகளின் நிமித்தம் தொண்டைக் குழிக்குள் சொற்கள் வரமுடியாது துள்ளிக் குதித்து மெளனம் பிசைகிறது எட்டாது களைக்கும் புகைச்சுருளாய் சொற்களின் கவலை காற்றைத் தழுவி நிற்கும் நாளெல்லாம் தனித்து விடப்பட்ட உன் முகத்தில் *சொற்கள்’ எழுதப்பட்டு கிடக்கட்டும். சுயமைத்துனத்தின்
அந்தரங்கமாய்
*GIGGGTTG
மட்டுமே புரள்கிறது
த. அஜந்தகுமார்

Page 18
ஜீவநதி
வைரவம் உலா
குரைக்காத நாய்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் தான். ஆனால் இதுவரை பார்த்ததில்லை. இன்று அவை கனவில் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன. திடீரென அவற்றைப் பார்க்கப் பயமாகத்தான் இருந்தது. ஆனால் இதுவரை ஒருவரும் நேரடியாகக் காணமுடியாத நாய்களை கனவிலாவது காண முடிந்ததில் பெருமையும் பிரமிப்பும் சிறிது சிறிதாக என்னை ஆக்கிர மித்தது. ஆனாலும் அந்தத் திளை ப்பிலேயே மயங்கிவிடாமல் அந்த நாய்களையே உற்றுக் கவனிக்கத் தொடங்கினேன்.
கறுப்பு,மண்ணிறம், வெள் 60)6T, கறுப்பு-வெள்ளை. இப்படி சாதாரணமாக தெருவில் காணக் கூடியன போன்றுதான் அவை இருந்தன. எனினும், எனக்குள் ஏதோ ஒரு விடயம் உறுத்துவது போல உணர்ந்தேன்.
“எங்கேயோ. ஒரு வித்தியாசம்.”
"ம்.ஆ. கண்டுபிடிச்
சிட்டன்’
அவைகளின் முகம் ! அதுதான். சாதாரண நாய்களின் முகங்களைப் போன்றிருக்கவில்லை. ஒவ்வொன்றும் உணர்ச்சிகளை ஒவ்வொரு விதமாக வழிய விட்டுக் கொண்டிருந்தன. அந்த உணர்ச்சி களும் நாய்களும் ஏதோ ஒன்றால் பிரிக்க முடியாததாய் தைக்கப் பLடிருநதன.
என் காலடியில் வழிந்து தேங்கிய உணர்ச்சிகள்; அசைய முடியாதனவாய் சுருண்டிருந்தன. நிலத்தில் தேங்கியவை அப்படியே மண்ணுடன் கலந்து சகதியாகிக் கிடந்தன. நாய்கள் அவற்றை சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தன.
கறுப்பு நாயொன்று எனக் கருகே வந்து என்னை மணந்து
மயூரருபன் பார்த்துவிட்டு, தனது பின்னங்காலை துTக் கரியது. நான் முகத்தை மூடிக்கொண்டு எழுந்தமர்ந்தேன்.
விடிந்து விட்டிருந்தது பாயிலிருந்தபடியே ஜன்ன லால் வெளியில் பார்த்தேன். அப்பா முற்றம் கூட்டிக் கொண்டிருந்தார். எனக் குள் இலேசாக கோபம் முளைவிட்டது. எனது பச்சை நிறத்தொப்பி அவரது தலையிலி ருந்தபடி என்னை பரிதாபமாக பார்த்தது. தேநீர் ஆற்றும் சத்தம் எனது கவனததைக கலைததது. உறறுக கவனித்தேன; தேங்காய் துருவும் சத்தத்துடன் அம்மாவும் சின்னன்ரியும் மெதுவாக கதைக்கும் சத்தமும் கேட்டது. மெதுவாக எழுந்து குசினிக்குள் சென்றேன்.
சின்னன்ரி தேங்காய் துருவி முடிக்கவும் நான் போய் அருகில் அமரவும் சரியாக இருந்தது. அம்மா கலந்த தேநீரை சின்னன்ரிக்கு கொடுத்தாளர். நான் மெதுவாக,
"அம்மா. எனக்கும். அம்மா ஒன்றுமே பேசவில்லை. எனக்கருகே தேநீரை வைத்தாளர். நான் வியப்புடன் பார்த்தேன். அம்மா மெளனமாக மாவைக் குழைக்க, அவளின் முகம் இருண்டிருந்தது.
சின்னன்ரியைப் பார்த்து சாடையில் கேட்டேன: “என்ன விசயம்.?" “அழகு மாமி வீட்டில ராத்திரி வைரவர் வந்தாராம். அதுகள் பயந்து போய் இருக்குதுகள். அதுதான். கோயிலுக்கு ஏதும் குறையிருக்கும் (3LT6)...lib."
“அட! அப்படியே விசயம்.” நான் அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டேன. மனம் பரபரத்தது. ‘இன்று ஞாயிற்றுக் கிழமை. அவசரப்படத் தேவையில்லை.

sanss 33
பள்ளிக்குடம் இல்லை. ரியூசன் "இஞ்ச வா. இதில இரு.” பின்னேரம் தான் ." எனக்குள் உள்ளே போகவிடாமல் தன்னருகே சொல்லிக் கொண்டேன். இழுத்தார். மெதுவாக நழுவிக்
அழகு மாமி வீட்டிற்கு கொண்டேன். போவதற்கிடையில் பல யோச அங்குமிங்கும் சுற்றிவிட்டு, வீட்டுக்குள் னைகள் எனக் குள் சுற்றிக் எட் டிப் பார்த்தேன், மஞ்சள் பூ கொண்டன. ஏனோ என் கனவில் முகங்குப்புற படுத்தபடி அழுது வந்த நாய்களும் ஞாபகத்தை கொண்டிருந்தாள். எல்லோரும் கிளறிக் கொண்டிருந்தன. பேயடித்தவர்கள் போல ஒவ்வொரு
நான் அடிக்கடி அழகு மாமி மூலையில் இருந்தார்கள். வீட்டிற்குச் செல்வேன். ஏனோ அங்கு நிலைமை பிழை என உணர்ந்தேன்.
சற்றுப் பிரியம் அதிகம். எல்லாமே அழுது வடிந்து கொண்டி
நண்பர்கள் கிண்டலடிப்பார்கள். ருந்தன. மெதுவாக சீனியாச்சியிடம்
"மச்சாள்மாரை பார்க்காமல் போய் அமர்ந்தேன்.
இருக்கமாட்டான்.” "ஆச்சி. ஏன். உண்மையாய் வைரவர்
அழகு மாமிக்கு மூன்றும் பெண் வந்தவரோ. வைரவர் கூடாதவரோ.” பிள்ளைகள். ஆனாலும், மூவருக்கும் சீனியாச்சி என்னை நிமிர்ந்து பார்த்து என்னைவிட வயது அதிகம். நான் இலேசாக சிரிக்க முயன்றும் இப்போது எட்டாம் வகுப்பு. கடைசி முடியாமல்
மச் சாள் போனவருடம் ஓ.எல் "வைரவர்.ம். எடுத்தவள் என்றால் பார்த்துக் பெருமூச்சு விட்டார். கொள்ளுங்களேன். "அப்பு. வைரவரைப் பற்றி சின்னப் நான் மூன்று பேருக்கும் செல்லமாய் பிள்ளையஸ் கதைக்கக் கூடாது. பெயர் வைத்திருக்கிறேன். என்ன விளங்கிச்சுதே. “முத்தங்காய்” சுவாமியின் பாதங்கள் நிலத்தில
மூத்த மச் சாளை இப்படித்தான் படுகிற தில்லையாமே! வைரவ கூப்பிடுவன். அவளுக்கு இப்படி சுவாமியின் பாதமும் பட்டிருக்காது. கூப்பிடுவது பிடிக்காது. என்னை அருகில் போய்ப் பார்த்தேனி. அடிக்கத் துரத்துவாள். " அட! . சப்பாத்து அடையாளம் . "அணில் குஞ்சு”. இது இரண்டாவது வைரவர் சப்பாத்தும் போடுவாரோ! மச்சாள். நான் இப்படிக் கூப்பிடுவதில் வைரவர் பற்றி வெளியில கதைக்கக் அவளுக்கு ஆனந்தம் . என்ன கூடாதாம்.” பலகாரம் இருந்தாலும் எனக்கு எனக்கு இப்போது ஏனோ நிச்சயமாகத் தருவாள். மூன்றாவது கனவில் வந்த நாய்களிலிருந்து மச்சாள்- "மஞ்சள் பூ" நான் இப்படிக் வழிந்து கொண்டிருந்த அடக்கப்பட்ட கூப்பிட்டால் எனக்கு பழிப்புக் உணர்வுகளின் தத் தளிப்பு காட்டுவாள் ஆனால் ஒன்றும் சொல்ல ஞாபகத்திற்கு வந்தது. LDITILT6i. Oil மூன்றுபேரும் என்னை "ரீல் கட்டை"இரட்டைப்படம்தாள் ஒவியங்களை என்றுதான் கூப்பிடுவார்கள். நான் |அன்றா சுதர்சன் வன்ரந்துள்ளார். ஆளும் கட்டை கதை விடுவதிலும்|இவர் நண் கலைமாணிப்பட்டம் இத்தஅளில்லை.அதனால்தான்பெற்றவர்."ஓவியம், சிற்பத்தில் இப்பெயரை வைத்திருப்பார்கள். மிகுந்த ஈடுபாடு உடையவர். மாமியின் வீட்டுக்குள் நுழைந்தேன். இவை s e
● ர அறிமுகம் செய்து சரசு சித்தி, முட்டைமாமி, சீனியாச்சி. ப்பதில் ஜீவநதி ெ எல்லோரும் இருந்தார்கள். s வந n ഞ கணேசுமாமா'என்னைக் கூப்பிட்டார் \கோள்கிறது.

Page 19
ஜீவநதி 84
காரனயோர்?
அநியாயம் நடிப்பதையே அடித்துக் கேட்கும் ஆட்க ளெல்லாம் அவர்களது கூட்டாளிகள்!
சுதந்திரத்தின் பங்கினையே சுவாசிக்க விடவில்லை விட்டுவிட்டால் கீழிருப்போர் ஏறி மிதித் திடுவர்!
மொழி இனம் இவற்றைவிட மிக விரும்பும் வர்க்க பேதம் வழிநடந்த செய்கையாலே வாழ் விழந்த கதை பெரிது!
உத்தி யோகக் கல்வியினை உருப்போட்டு_வெற்றி பெற்ற சத்தியந்தான் இவர் பெரும்ை சான்றோர்கள் மடிந்து போனார்! றொட்டி சுடும் மண் ஒட்டில் ருசி பெறவே மாற்றி மாற்றிச் சுட்ட றொட்டி கருகியதால் சுவை யிழந்த கதை நமதே!
அத்திவர மில்லாமல் ஆட்க ஹெல்லாம் கூடி நின்று கட்டிய இக்கட்டிடத்தைக் காலம் இன்னும் ஏற்கவில்லை
வரலாற்றில் வலிமை பெற்ற வல்லமை யோர் அழிந்தொழிந்த குரல் இறுகிப்போனதற்குத் காரணம் யார்? காட்டிடுவீர்?
கவிஞர் ஏ. இக்பால்

ஜீவநதி 35
தமிழ் இரு செம்மொழி
கி.நடராசா.
உலகில் எத்தனையோ மொழிகள் தோன்றி வளர்ந்தன. காலப்போக்கில் பல அழிந்தொழிந்தன. சில மொழிகள் மட்டுமே இன்று வரை நிலைத்து வாழும் பேற்றினைப் பெற்றுள்ளன. தமிழ், சீனம் போன்ற மொழிகளே காலத்தால் அழியாது பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் பயின்று வருகின்றன. சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் முதலிய வரலாற்றுப்பெருமை வாய்ந்த மொழிகள் பேச்சுவழக்கு இழந்து மொழியளவில் நின்றுவிட்டன. இதனையே பேராசிரியர் சுந்தரம்பிள்ளை,
“ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து இதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” எனத் தமிழ் வாழ்த்துப்பாடுகின்றார்.
தமிழ் மொழியை உலக செம்மொழியாக்கவேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டதன்று. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, பூரணலிங்கம்பிள்ளை போன்றோரால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே முன்வைக்கப்பட்டது.ஒருமொழியை செம்மொழியாகப் பிரகடனப் படுத்தவேண்டுமாயின் அம்மொழிக்கான சில அடிப்படைச் சிறப்பியல்புகள் காணப்படவேண்டும்.
செம்மொழியாகத் தகுதிபெறவேண்டுமாயின் ஒரு மொழி தொன்மை வாய்ந்ததாக இருத்தல் வேண்டும். மனித நாகரிகத்தின் தொட்டில் (CRADLE OF HUMAN RACE) 616ö sB önsIt't Gld Geocupflusé &60Í L-gögól6ó பேசப்பட்டமொழியாக தமிழ் மொழி கருதப்படுகின்றது. சமஸ்கிருதம், எபிரேயம், கிரேக்கம் என்னும் மூன்று உலக இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் பரவலாகக் காணப்படுகின்றன என்று Rhys Davis என்பவர் குறிப்பிடுகின்றார். சுவாமி ஞானப்பிரகாசர், தமிழின் தொன்மை பற்றி குறிப்பிடுகையில் “இந்தோ ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழில் காணப்படுகின்றன என்பது ஊகம் என்று அகன்ற ஆய்வின்பின் கண்டமுடிவு” எனக் கூறுகின்றார்.
வளமான இலக்கியச் செல்வங்கள் தமிழ் மொழியில் இருப்பது போல வேறு எந்தமொழிகளிலும் காணப்படவில்லை. எக்காலத்திற்கும் பயனளிக்க வல்ல இலக்கியங்களே சங்க இலக்கியங்களாகும். கிரேக்கம் லத்தீன், சீனம், பாரசீகம், வடமொழி ஆகியனவற்றில் தோன்றிய செம்மொழி இலக்கியங்கள் போல தமிழ்மொழிக்கும் அந்தப் பாரம்பரியம் உள்ளது. உதாரணமாக திருக்குறள் உலகின் மிகப்பெரிய நீதி நூலாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் பிற மொழியின் ஆதிக்கம் பரவுமுன்னமே தன்னிச்சையான சுதேச இலக்கிய மரபை தமிழ் கொண்டிருந்தது. தனக்கென சில தனித்துவமான கவிதை மரபையும் இலக்கணமரபையும் வளமானதாகவும் பெரிதாகவும் கொண்டிருந்தது.
தமிழ்மொழியை செம்மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டதற்கு இன்னொரு காரணம் தமிழ் ஒரு மூலமொழியாக இருந்து அதிலிருந்து பல கிளைமொழிகள் உருவாகியமையேயாகும். கால்ட்டுவல் என்பவர் தாம் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலில் பன்னிரண்டு மொழிகளை திராவிடமொழிகளாக இனம் கண்டுள்ளார். தமிழ்மொழியே திராவிட மொழிக்குடும்பத்தின் தந்தை என்றும் குறிப்பிடுகின்றார்.

Page 20
ஜீவநதி S6
பழமை, மேம்பாடு, குறிக்கோள், நிலைபேறு நல்வாழ்க்கையின் பிரதிபலிப்பு ஆகியவைகொண்ட ஓர் இலக்கிய மொழியே செம்மொழி. பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் வாழ்வும் வளமும் உடையமொழியே செம்மொழி. ஒருங்கிணைந்தகொள்கைகளை அடிப்படையாக வைத்து செம்மையாக ஆக்கப்பட்ட சிறந்த இலக்கண வளமுடைய மொழியே செம்மொழி. இவ்வகையிலும் தமிழ்மொழியை செம்மொழியாக கொள்ள இடமுண்டு.
கிரேக்கம், ஐரோப்பியமொழிக்குடும்பங்களில் செம்மொழியாகவுள்ளது. ஆனால் ஆங்கிலம், பிரெஞ்சுமொழிகளுக்கு அந்நிலை இன்னும்வரவில்லை. இந்தியகலாசார அமைப்பில் வடமொழியை விட தமிழ்மொழி உயர்நிலைபெற்றிருக்கின்றது. அதற்குக்காரணம் தமிழ்நவீன அறிவியல் மொழியாகவும் கணினிமொழியாகவும் வளர்ச்சியடைந்திருப்பதோடு உலகின் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆய்வுமொழியாக கற்பிக் கப்படுகின்றமையும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது.
தமிழின் உயர்வைப் பாரதி குறிப்பிடும்போது, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பெருமைப்படுகின்றார். “தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும்மொழி” என்று தமிழின் பெருமையை Max Muler என்பவர் பாராட்டுகின்றார். இப்பொழுது வழங்கும் எல்லாமொழிகளிலும் தமிழே மிகப்பழைமையானது என்று ஹிராஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார். D
W
Θυάρ)\5υτι சிவபெருமான் விதியுலா வந்தார் செம்பொன்னில் புதுப்பொலிவு தந்தார் 9Giglguri 50g D60L நாதசுரம் கொண்டிசைக்க புவனத்தைப் படைத்ததற்கு நொந்தார். சுப்பையா முடிவிட்டார் கண்கள் சுருதியற்றுக் கிராமத்துப் பணிகள் அப்போது "ரீவி” யிலே "சீரியல்"முன் அமர்ந்திருந்தார் ஒப்பாரி சொல்லியழும் பெண்கள் பள்ளிதனில் பகற்பொழுது அரட்டை LJLlib (p2 LI JaisofGol) (Spi60DL அள்ளுகாக "ரியூசனிலே” சப்பித்துப்பும் குறிப்புகளை நள்ளிரவில் பிதற்றுவராம் பரட்டை அடைத்ததுவோ "ஏநைனாம்" விதி அதிரடியாய் விலையேறும் நீதி தடையகற்றக் கப்பலேறும் பங்கீட்டுப் பொருள்களது நடைபாதைக் கடைகளிலே பாதி
இ.சு.முரளிதரன்.

ஜீவநதி 37
Saraf Ly
O O () O O நல்லதொரு சமுதாயத்தை தோற்றுவிக்கும்
Дт6fl வாழ்வானது நீர்க்குமிழி போன்றது; அநித்தியமானது. வாழ்கின்ற காலத்தில் நல்ல அறிவை மனிதன் தேடிக்கொள்ள வேண்டும். தேடத்தேட தரணி போற்றும் மனிதனாக வாழ்வு உயர்ந்து கொண்டு போகும். ஒரு மனிதன் வாழ்ந்த காலம் எவ்வளவு எனச் சொல்வதைவிட, அவன் வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தான் என்பதே முக்கியம். சாதிப்பதற்கு வாசிப்பது மிக அவசியம். மனிதன் ஒருவன் சிறந்த அறிவுடையவனாக வாழ்வதற்கு வாசிப்பு அவசியமானதொன்றாகின்றது. வாசிப்பானது கலை இலக்கியம், சமூகம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என பலதுறைசார்ந்த விடயங்களின் வளர்ச்சிக்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. குறிப்பிட்ட ஒரு நூலினை ருவன் படிப்பதன் மூலம் அவன் நாடிய பலவிதமான அறிவினைப் பெற்றுக் காள்கின்றான். ஓர் ஆசிரியனிடமிருந்து கற்பதற்கும், நூல்ஒன்றை விளங்கிக் கற்பதற்கும் இடையே வேறுபாடுகள் பல காணப்படுகின்றன. ஆசிரியனிடமிருந்து கற்கின்ற மாணவனின் அறிவானது ஓர் எல்லைக்கு உட்பட்டதாக, திரும்பத்திரும்பப் பெற்றுக்கொள்ள இயலாததாக அமையும். ஆனால் ஒரு நூலினை வாசிக்கும் போது நமது தேடலின் ஆழத்துக்கு இட்டுச் செல்வதுடன் மீண்டும் மீண்டும் வாய்ப்பினையும் எமக்கு தரும்.
பண்டைய இலக்கியங்கள் கல்வெட்டுக்கள், ஆவணங்கள் எல்லாம் எழுத்துவடிவிலேயே தரப்பட்டு உள்ளன. இவற்றை ஒரு மனிதன் அறிய வேண்டுமாயின் அவன் வாசிக்கின்ற ஒருவனாக இருத்தல் வேண்டும். "வாசிப்பின் மூலம் மனிதன் பூரணம் அடைகின்றான்” என அறிஞர்கள் கூறுகின்றார்கள். நல்ல நூல்களை வாசிப்பதன் ஊடாக ஒருவன் தனது அறிவினை விருத்தி செய்ய முடியும். இன்றைய உலகில் நாம் காண்கின்ற கல்விமான்கள் அனைவரும் வாசிப்பின் மூலம் மேன்மையை அடைந்தவர்கள் தான். சென்னை பச்சையப்பன் கல்லூரி நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் கற்றார் ஸி.என். அண்ணாத்துரை என்பார்கள். அவள் அறிஞர் அண்ணா என போற்றப்பட்டார். ஒரு மனிதனின் அறிவு, சிந்தனை, மென்மேலும் விரிவடைய வேண்டுமாயின் வாசிப்பு அவசியமானதாகும்.
வாசகர்களை நாம் மூன்றுவகையானவர்களாகப் பிரித்து நோக்க முடியும். முதலாவது வகையினுள் பொழுது போக்கிற்காக நூல்களை வாசிப்பவர்களைக் குறிப்பிடலாம். இவர்களின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு, அறிவினைப் பெறுவது அன்று. நேரத்தை எப்படி போக்குவது என்பதே இவர்களின் பிரச்சினை. இவர்கள் நல்ல நூல்களை தெரிந்து எடுத்து வாசிக்கமாட்டார்கள். இவர்கள் துப்பறியும் நாவல்கள், மட்டரகமான சினிமாத்தகவல்களி, ரமணிசந்திரன் போன்றோரது நூல்கள் என்பவற்றை வாசித்து மிகக்குறுகிய வட்டத்தில் வாழும் வாசிப்பாளர்கள்.
இரண்டாவது வகையினுள் நடுத்தரமான வாசிப்பினை மேற்கொள்பவர்களை அடக்கலாம். இவர்கள் சிறுசஞ்சிகைகள் ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு, துளிர், குங்குமம் போன்றவற்றையும் சினிமாவை அடிப்படையாகக் கொண்ட விடயங்களை தாங்கிவரும் சஞ்சிகைகள், நூல்களை வாசிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களும் வாசிப்பதன் மூலம் அதிக பயனைப் பெறக்கூடியவர்களாக இருப்பதில்லை.
மூன்றாவது வகையினுள் அடங்கும் வாசகள்களை நாம் கருத்துான்றிப் படித்து வாசிப்பவர்கள் என அழைக்கலாம். இவர்களின் முழுநோக்கமாக அமைவது அறிவினை மேம்படுத்துவதாகும். இவர்கள் தமது அறிவுப்பசிக்கு

Page 21
ஜீவநதி 38 ஏற்ப சிறந்த நூல்களை தேடிப்பிடித்து வாசிப்பார்கள். இவர்கள் வாசிப்பின் லம் பெறக்கூடிய உச்சப்பலனை அடைவதனை நோக்கமாகக் காண்டவர்கள். அதாவது, எழுத்துத்துறையினுள் இவர்களின் செயற்பாடு அதிகமாகக் காணப்படும். இவர்களின் தேடலிற்கு உரிய நூல்களை கணக்கிட டியாது. எண்ணுக்கணக்கற்ற சிறந்த நூல்களைத் தேடிப் பெற்று வாசிக்கின்றவர்களாக விளங்குவார்கள்.
இவ்வாறான வாசிப்பாளர்கள் இருப்பதனால் தான் அறிவுலகம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆனால் இன்றைய சூழ்நிலையில், “இந்த வாசித்தல் என்பது எவ்வாறு உள்ளது?" என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறு ரு கேள்வி எழுவதற்கு முக்கிய காரணமாக அமைவது இலத்திரனியல் பாழுதுபோக்கு சாதனங்களின் எண்ணற்ற வருகை எனலாம். அத்தோடு வெளிநாட்டு மோகமும், ஆடம்பரமான வாழ்க்கையும் காரணமாக உள்ளன. இவற்றின் தாக்கத்தின் காரணமாக வாசிப்போர் தொகையானது மிகவும் குறைவடைந்து செல்கின்றது. ஆனால், முற்றுமுழுதாக வாசிப்போர் இல்லாது போய்விடவில்லை என்பது உண்மை அதாவது, வாசிப்போர் தொகை குறைவடைந்து உள்ளதே ஒழிய முற்றாக ஒழிந்து விடவில்லை, ஒழியவும் மாட்டாது என்பது உண்மை.
இன்றைய இளம் தலைமுறையினரிடத்து வாசிப்பு பழக்கம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய வேண்டியுள்ளது. இன்றைய தலை முறையினர் சினிமாவின் தாக்கத்திற்கு உட்பட்டு போலியான வாழ்க்கை வாழ்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையினை அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அதேசமயம் பெண்கள் அதிக நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் கழிப்பது காரணமாக பெண்களிடத்தும் வாசிக்கும் பழக்கம் குறைவடைந்து வருவதைக் காண்கின்றோம். வாசிப்புப் பழக்கம் குறைவடைய பிரதான காரணமாக தொலைக்காட்சி அமைகின்ற போதும் உலகமயமாதல் என்கின்ற ஒருவகை சுரண்டலும் காரணமாக அமைகின்றது. அத்தோடு, இன்றைய இளைஞர்களிடத்து வாசிப்பு குறைவதற்கு பின்புலமாக சமூகமும் காரணமாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் அமைதி குறைந்தவர்களாகவும், கலகக் கண்ணோட்டத்துடன் எதையும் பார்ப்பவர்களாகவும, வன்முறைகளை கையாள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். மதுபாவனைக்கும், புகைப்பிடித்தலிற்கும், கையடக்க தொலைபேசிக் கும், இந்தியன் மோட்டார் சைக்கிள்களுக்கும் அடிமைப்படுத்தப்பட்டு வாழ்கின்றனர். இவ்வாறான இவர்களின் வாழ்க்கைக்கு சமூகமும் ஒரு காரணமாக அமைகின்றது.
சமூகத்தின் பார்வையில் இவ்வாறான விடயங்கள் முக்கிய இடத்தை வகிப்பனவாக கொள்ளப்படுகின்றன. அத்துடன் கீழைத்தேச சமூகச்சூழலில் வாழ்கின்ற நமது இளைஞர்கள் தங்களைப்பற்றிய சுயதெளிவு அற்றவர்களாக காணப்படுவதும் பொருளாதார வசதி புலம் பெயர்ந்தோரிடமிருந்து கிடைப்பதும் போலியான பகட்டு வாழ்க்கை வாழ காரணமாகின்றன. இவர்களிற்கு அமைதி என்பது இல்லை. அமைதி அற்றவர்களால் பொறுமையாக வாசிக்க முடியாது. எனவேதான் இவர்கள் வாசிக்கும் மனப்பாங்கு அற்றவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் எதிர்கால சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பை உண்டாக்கும். மனிதன் ஆனவன் அறிவு, அமைதி, மனச்சுத்தம், சாந்தம், ஆத்மசாந்தி பெறவேண்டுமாயின் அவன் நல்ல நூல்களை வாசிக்க வேண்டும். வாசிப்பதன் ஊடாகத்தான் சிந்தனைகள் விரிவடையும். தொலைக்காட்சியில் முடங்கிக் கிடக்கும் மனப்பாங்கு அற்று, நல்ல காற்றை சுவாசிக்கும் சமுதாயம் உருப்பெறும். புதிய தலைமுறையினர் நல்லவர்களாக வாழ, தேச சமூகத்தை நல்நெறிப்படுத்த, வாசிப்பு என்பது முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. நாம் அனைவரும் வாசிப்பினால் உயர்வு அடைவோம்.

gaybas
39
புதுப்புனல்
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில்உயர்தரத்தில் கல்வி கற்கின்றார் யோ.யோகானந்தி அவர்கள் .இவர் கவிதை, சிறுகதை எழுதுவதில் நாட்டம் உள்ளவர்.இவரை ஜீவநதி அறிமுகம் செய்து வைப்பதில் பெருமை கொள்கின்றது.
ரபிேக்கையுடன் காத்திருப்Uேன்
காத்திருந்தேன் காத்திருந்தேன் - என் மன்னவன் வரவைக் காத்திருந்தேன்
காத்திருந்தேன் காத்திருந்தேன் மாலையிடக் காத்திருந்தேன் மார்கழி மழை பொழிந்ததெனக் கண்களில் நீர் பெருக
காத்திருந்தேன் காத்திருந்தேன்.
கடற்கரையின் மணல் உறுத்த கைக்கடிகாரம் தளையாய்ப்பிணிக்க 6:IIIId('Jail fillfillLi: uimilliú idi.J காத்திருந்தேன் காத்திருந்தேன் - என் மன்னவன் வரவை காத்திருந்தேன்.
இறந்தாளுக்கு மருந்து எதற்கு எவர்கொடுப்பார் புதிய உயிர்? பெற்றவர்க்கு புரியவில்லை புரிகின்றார் சோதனைதான் பிரேதத்தில்
தேசத்தின் கூனல் நிமிர்த்தி வருவாரென் தலைவனென காத்திருப்பேன் காத்திருப்பேன் நம்பிக்கையுடன் காத்திருப்பேன்

Page 22
ஜீவநதி 40
“ஜீவநதி - முதலாவது இதழ்’ பற்றிய மதிப்பீடு: சிலதுளிகள்
கலாநிதி செ.யோகராசா, கிழக்குப் பல்கலைக்கழகம்
வெளிவந்துள்ள ஆக்கங்கள் பற்றிய மனப்பதிவுகள் ஒரு புறமிருக்க இக்கட்டான ஒரு காலகட்டத்தில் வெளிவந்துள்ளது என்ற விதத்திலும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தந்துள்ளது என்ற விதத்திலும் ஜீவநதியின் வரவு எனக்குப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இடம் பெற்றுள்ள பல்வேறு ஆக்கங்களுள்ளும் கவிதைகள் பற்றி குறிப்பாக புதிய தலைமுறையினருள் சிலரின் கவிதைகள் பற்றி முதலில் குறிப்பிட்டாக வேண்டும். தமது கவிதைகள் சிலவற்றின் மூலம் ஏற்கெனவே அறிமுகமாகியுள்ள அஜந்தகுமாரின் 'பல்லி * வீடு + நான் + அவள்’ என்ற கவிதை வெளிப்பாட்டுரீதியில் அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை - வளர்ச்சியை - முதிர்ச்சியைக் காட்டியுள்ளது.
செத்துக்கொண்டிருக்கும் மரபுக்கவிதைக்கு அவ்வப்போது உயிர்கொடுத்துவரும் சோ.ப, ஜெயசீலன் ஆகியோரின் வரிசையில் சின்னராஜனும் எதிர்காலத்தில் இடம்பெறுவார் என்பதற்கு ‘வல்லைவெளி' சான்றாகிறது. வல்லை வெளியை ஏற்கெனவே நன்றாகப் பதிவுசெய்துள்ள இலங்கையர்கோன், குந்தவை பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோரது ஆக்கங்களின் வரிசையில் இப்போது இந்த ஆக்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
செங்கை ஆழியானின் நேர்காணல் தொடர்பான கேள்விகளும் சற்று வித்தியாசமாக உள்ளன. தொடர்ந்தும் அவ்வாறே அமைவது விரும்பத்தக்கது.
நன்கு பரிச்சயமான எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் ஏனைய ஆக்கங்கள் பலவும் பல்வேறு தளங்களில் பயனுடையன.
'ஜீவநதி' தனது குறிக்கோளைத் தெளிவாக்கி, திட்டமிட்டு, எதிர்காலத்திற் செயற்படுவது அவசியம். இன்றைய கலை இலக்கியச் சூழலில் இளந்தலைமுறை உருவாக்கத்தில் 'ஜீவநதி கூடிய கவனஞ் செலுத்துவது பயனுள்ளது என்பது எனது அபிப்பிராயம்.
"ஜீவநதியின் இலட்சியத்தினை வெளிப்படுத்துவது போல அமைந்துள்ள பாரதிதாசனின் கவிதை அடிகள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன, சீராக அமைப்பது அவசியம்.
O
 

ஜீவநதி 41 சீன சேரபுவழிராடக அரங்கு
ஓர் சிறு அறிமுகம்.
க.திலகநாதன் (விரிவுரையாளர்)
சீனா பல இனமக்களையும் பல இன கலாசாரங்களையும் கொண்ட நாடாகும். அதனால் வித்தியாசமான அம்சங்களையும் அது அரங்கில் கொண்டிருந்தது. ஐரோப்பிய சமூகத்திற்கு இந்திய அரங்குபோலவே சீன அரங்கும் தெரியும். இசை சீன அரங்கின் அடிப்படையாக உள்ளது. இந்த இசை பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும். மூன்றுபக்கப் பார்வையாளர்கள் திரையில்லாமை, ஆடை ஆபரணங்கள் மிகவும் பிரகாசமானதாக இருத்தல், நடிப்பு முக்கியம் பெறல் போன்றன சீன அரங்கின் பண்புகளாகும்.
சீன நாடக வரலாறும் இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முற்பட்டது. ஆரம்பகால சடங்கு இரண்டு வகையில் நிகழ்த்தப்பட்டன.
1. மூதாதையர்வழிபாடு
2. வீரவழிபாடு இராணுவவழிபாடு
ஆரம்பகாலச் சடங்குகள் நம்பிக்கையை அல்லது பொழுது போக்கை அடிப்படையாகக் கொண்டவை. வீரவழிபாட்டுச் சடங்கு நடந்த இடம் அரண்மனை (court) பூசாரி நடிப்பவராகவும் அரண்மனை சார்ந்தோர் பார்வையாளர்களாகவும் இருந்தனர். பெரிய உடைகள் அணிந்திருந்தனர். இசையாக ஒருவகை தாளவாத்தியம் (drums) பயன்படுத்தப்பட்டது. புராணக் கதைகளே நடாத்தப்பட்டது.
சீன நாடகவரலாற்றில் அரண்மனை சார்ந்தும் நாடகம் வளர்ந்திருந்தது. அரசர்கள் வெளியே வந்து மக்களுடன் இருந்து நாடகம் பார்க்க முடியாதவகையால் அரசவேலைக்காரர்கள், வைப்பாட்டிமார் போன்றோரை நடிக்க வைத்து அரசன் நாடகம் பார்த்தான். இவர்களுக்கு வெளிநடிகர்கள் பணத்திற்கு பழக்கினர். 17ம் நூற்றாண்டில் Lievoy எனும் திறமையான கவிஞன் நாடக ஆசிரியன் சீனா முழுவதும் சென்று நாடகம் பழக்கினான். 17ம், 18ம் நூற்றாண்டு நாடகம் செக்கோ என்ற நகரத்தில் வளர்ந்தது இவ்விடத்தில் கூடியளவு வியாபாரிகளே வந்து தங்கினர். சிங்சோங் கேள்ஸ் (Singsong girls) என்ற குழு முதன் முதலில் நாடகக்குழுவாக வருகிறது. அதோடு கடாமைக்ஸ் என்ற குழுவும் உருவாகிறது. இவர்கள் இளைஞர்களுக்கு நாடகம் பழக்கினர்.
இக்காலத்திலேயே ரியாங் கொவாங் என்பவர் நாடக ஆசிரியராக வருகிறார். நாடக பயிற்சிப்பாடசாலை இவரால் ஆரம்பிக்கப்படுகிறது. 12வயதுக்குட்பட்டோர் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். 7வருட பயிற்சி வழங்கப்பட்டு இறுதியாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இவரது நாடகங்கள் சட்டதிட்டங்கள் இறுக்கமுடையவையாகும். இவரது நாடகங்கள் 3 அடிப்படைகளைக் கொண்டவை.
1. முன்னோர் வழிபாடு.
2. வீரர் பற்றிய புகழுரை
3. கணவனுக்கு கீழ்ப்படியும் மனைவி.
இந்நாடகங்கள் செந்நெறி (Classic) முறைக்குரியவையாகும். சீனமொழியில் எழுதப்பட்டன. படித்தவர்களுக்குரியன. 1780இன் பின்னர் மொங்கோலிய படையெடுப்பால் சீன அரங்கு மாற்றம் பெறுகிறது. மொங்கோலியருக்கு சீனநாடகம் பிடிக்கவில்லை. நடிப்பு வீரதிரச் செயல்கள்

Page 23
ஜீவநதி 42 பாட்டு போன்றவற்றையே இவர்கள் விரும்பினர். இதனால் குறுகிய அரங்கு (Theatre) உருவாகி அதிலிருந்து பீக்கிங் ஒபேறா உருவாகியது.
1790க்கு பிற்குதான் சீன அரங்கம் யாவரது கவனத்தையும் ஈர்த்தது. சீனநாடகத்திற்கு செல்பவர்கள் கூடுதலாக இசையை இரசிப்பதற்கே செல்கின்றனர். நடிகரே முக்கியம் பெறுகின்றார். மேடையில் மேடைஅமைப்பு உருவாக்கங்கள் (Settings) இல்லை. ஆனால் நடிகன் உரையாடலினாலும், நடிப்பினாலும் தாம் நிற்கும் சூழ்நிலையைக் காட்டுவான். இவர்களது இசை உரையாடல் ஆழமானதாக இல்லாததனால் சாதாரண மக்களும் இரசிக்கக் கூடியதாக உள்ளது. ஐதீக வரலாற்று சமூகப்பிரச்சனைகளுடனான திரைக்கு முன் பாடகள் குழு நிற்கும் கொங்கோட்ரம் (Concorddrum), Simbols இரு தந்திவாத்தியம் போன்ற வாத்தியங்கள் பாவிக்கப்படுவதுடன் பிரதான நடிகள் ஒவ்வொருவரும் கூச்சிக் என்ற ஒரு வாத்தியத்தை வைத்திருந்தனர். இதனால் எழுந்த இசை பலமானதாக இருந்தது.
Lidisasts 66 pist (Peking opera)
பீக்கிங் ஒபேறா பாடல், உரையாடல், கூட்டுமம், சேர்க்கஸ் ஆகிய நான்கு அம்சங்களும் இணைந்தவையாகும். இந்த நான்கு அம்சங்களும் இணைந்து பல்வேறு வகையான பீக்கிங் ஒபேறாவை தோற்றுவித்தன. இப்பிக்கிங் ஒபேறாவில் பாடலும் உரையாடலுமே முக்கிய இடத்தை பெறுகின்றன. இப்பீக்கிங் ஒபேறா கிரேக்க அரங்கியற் சாயலுடன் ஒத்துப் போகக்கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்தில் வரலாற்று கற்பனைக் கதைகளே போடப்பட்டன. பின்னர் போர் சம்பந்தமாகவும், சமூகப்பிரச்சனைகள் சம்பந்தமாகவும் நாடகங்கள் போடப்பட்டன.
சீனப்பாரம்பரிய ஒபேறாக்கள் 350 வகைப்பட்டவை. இவைகள் பிராந்திய தனித்தன்மைகளுக்குட்பட்டன. இதனால் இவற்றின் பாணி, வாத்தியக் கருவிகளி, அளிக்கை, முறை, மேடையேற்றம், காட்சி, நடிப்பு போன்றவற்றில் வேறுபாடு காணப்பட்டாலும் இசை பெரும்பாலும் பொதுவானதாக இருந்தது.
இவ்வரங்கு பாடல, இசை, நடனம், ஊமம, பேச்சு, கதை போன்ற அம்சங்களெல்லாம் இணைந்திருக்கும். பாத்திரங்கள் உயர்தொல்சீர் கவிதை முறையில் பேசின. நாடகத்தில் பேசப்படும் உரையாடல்கள் அனைத்தும் சில சொற்பமான சொற்களைக் கொண்ட பாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்படும. இவ்வரங்கின் கதை பாடல்களாகவும் கட்புலக்காட்சியாகவும் வரும். கட்புலக்காட்சி என்பது பாத்திரம் தனது உணர்ச் சிகளை கணிகள் , உடம்பு அளிக் கைகள் மூலம் வெளிப்படுத்துதலாகும்.
இந்த ஒபேறாக்களிலே வரும் பாத்திரங்களாக ‘டங்', 'சிங்', 'யிங்', 'சோ' போன்றன உள்ளன. இவற்றில் ‘சிங்' பாத்திரம் ஆண் - படித்தவர், படைவீரர் போன்றவற்றிற்கும் வருவார். 'டங்' என்பது பெண் பாத்திரம் இதனை ஆண்களே ஏற்பர். இவர் மிகவும் மெதுவாக நடப்பார். 'யிங் போர்வீரர், கதாநாயகர்கள் போன்ற பாத்திரங்களை ஏற்பார். 'சோ' கோமாளிப்பாத்திரமாகும்.
சீனமரபுவழியரங்கில் பல குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை கற்பனைக்கு இடம் தருபவையாகும். இவற்றினைப் பார்த்து இரசிப்பதற்கு முன்னறிவு தேவை. ஒருவர் மேடையில் வட்டமாக வரும்போது அவர் நெடுந்துாரம் நடக்கின்றார் என்று அர்த்தம். இவை மூலம் மேசை, கதிரைகளை ஒழுங்காக வைப்பதன் மூலம் அரண்மனை, மலை என்பவற்றை

aba 43 உருவாக்குவர். இவ்வாறான குறியீடுகள் பிரக்டின் காவிய அரங்கிற்கு உதவியாக இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. யன்னலைத்திறத்தல், மலையிலிருந்து இறங்குதல். போன்றவற்றிற் கெல்லாம் குறியீடுகள் உண்டு. இவைகள் எளிமையானவைகளாக இருக்கும்.
மேலும் நாடகங்களில் உடை, ஒப்பனை, முகமூடி என்பனவும் சிறப்பாக அமைந்துள்ளன. முகத்திற்கு ஒப்பனை செய்வதற்கு துணிகளும் வர்ணப் பூச்சுகளும் பயன்படுத்தப்பட்டன. நடிகர் உள்ளாடையும், உயர்ந்த சப்பாத்துக்களும் அணிந்திருந்தார். அவர்களை பெரிதாகவும் உயரமாகவும் காட்டவே பயன்படுத்தப்பட்டன. நடிகர்களின் ஆடைகள் அக்காலத்திற் குரியதாகவும், குறியீடாகவும் அமைந்திருந்தன. முகமூடிகள் வர்ணப் பூச்சுக்களால் ஆக்கப்பட்டிருந்தன. நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் இதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது. பாத்திரங்களின் குணாதிசயங்களைக் காட்டும் குறியீடுகளாகவும் நிறங்களை பயன்படுத்தியுள்ளனர்.
சீன அரங்கில் ஆத்மாவாக இருப்பது மோடியாகும். குறிப்பிட்ட பாணியில் யதார்த்த வாதியின் நடவடிக்கைகள் இங்கு மோடியாக காட்டப்படுகின்றன. உடல் ரீதியாகவும், குரல்ரீதியாகவும் வெளிப்படுகின்ற மோடியை அடிப்படையாகக் கொண்டே சீனப்பாரம்பரிய அரங்கில் வேறுபாடுகளும் இனங்காணப்படுகின்றது.
சீனஅரங்கக் கட்டடம் 1. நிரந்தர அரங்கு
கோவிலுக்கு முன் கல்லால் கட்டப்பட்டது. பார்வையாளர் கூடும் நடுவில் ஒரு மேடை காணப்படும் . அதைச் சுற்றி கதிரைகள் போடப்பட்டிருக்கும். இந்த நடு இடம் "பென்ட்' என அழைக்கப்படும். பணக்காரர்கள் உணவு உண்ட வண்ணம் இங்கு நாடகம் பார்ப்பர். பார்வையாளர் கூடம் நீள்சதுரமாகவும் இருபக்கம் அரங்கமாடி இருக்கையை பல்கனியை (balcony) கொண்டதாகவும் இருக்கும். அரங்கமாடி இருக்கை பல்கனியில் (balcony) ஆகக்கூடிய பணக்காரர் இருப்பர். பெண்களுக்கு தனியிடம் கொடுக்கப்பட்டது. நடுவில் உள்ள "பென்ட் ஐச்சுற்றி மரத்தாலான வாங்குகளும் போடப்பட்டிருக்கும். 2. மரபுவழியரங்கு
இவ்வரங்கின் கதவில் வேலைப்பாடமைந்த பட்டுத்திரை முன் தொங்கும். பின்திரை மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அரங்கின் மேல் நடுவில் ஒரு கம்பி உண்டு. இதில் வேடிக்கை விநோதம் (circus) காட்டுவர். நுழைவுச்சீட்டு (Ticket) பணம் இல்லை. தேநீருக்கு மட்டும் பணம் உண்டு. பிக்கிங் அரங்கில் பாட்டும் இசையும் முக்கியம் பெற்றது. மிகப்பழைய நாடகத்தில் வெளிச்சம் பாவிக்கப்படவில்லை. இயல்பானதாக காணப்பட்டது.
இவ்வாறு ஆசிய மரபில் ஒவ்வோர் அரங்கப்பண்பாடும் ஒவ்வோர் பிராந்திய மரபுகளிற்கேற்ப காணப்படும் என்பது தெளிவாகின்றது.
மதிப்பீட்டிற்கு உங்கள் நூலின் இரு பிரதிகளை அனுப்பிவையுங்கள்.

Page 24
எல்லாப் படைப்புகளும் அவற்றிற்கேயான படைப்புடலில் வசிப்பவை ஒவியம் நிறங்களால் கையாளப்படும் இருபரிமாணப்படைப்புடலில் வசிப்பதாயின், தேகத்தின் அசைவுகளாலும், அசைவுகளின் பரிமாணங்களாலுமான முப்பரிமாண வெளியை உட்கொண்டு நிற்கும் ரு படைப்புடலில் நாட்கங்களும், நடனங்களும் வசிக்கின்றன. எனின், சாற்களாலான அல்லது சொற்களால் முடையப்பட்ட சொல்லுடலினுள் இலக்கியங்கள் வசிக்கின்றன. சொற்களைப் பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் முறையினால் இலக்கியமென்ற சொல்லுடல் கவிதையாயும் - உரைநடையாயும், நாவல் - சிறுகதை போன்ற களங்களாயும் வகை பிரிகின்றது. அல்லது வடிவ ரீதியான நிர்ணய எல்லைகளை ஊடறுத்து இவையெல்லாவற்றுள்ளும் சென்று படைப்பாக்கக் கணத்தின் உந்தலின் தெரிவு வழி அனைத்தினுள்ளும் படர்ந்து ஒருமையுடைய கலப்புடலைப் பெறுகின்றது.
ஆதலால், இலக்கியத்தின் அடிப்படைக் கூறும், அனைத்துப் பரிமாணங்களுக்குமான மூலம் சொல்லே . ஆதலால், இலக்கியம் அதன் எந்த வடிவத்திலும' சொல்லைக் கையாளும் முறைமையின் பாற்பட்டது. மற்றெல்லாக் கலை வடிவங்களோடும் ஒப்பிட்டு நோக்குகையில் இலக்கியம் பேசும் மொழி என்பதால், ஏனைய கலை வடிவங்களைவிடவும் இலக்கியம் நோக்கிய உந்துகை பொதுவாக அதிகம். அது புரிந்துகொள்ளப்பட்டாலும் புரிந்து கொள்ளப்படாவிட்டாலும், அது பேசும் மொழியைத் தாங்கி வருவதால் அல்லது கையாளுவதால் வாசக ரீதியாகவும், படைப்புச் செயற்பாட்டின் நகள்வின் வழியும் இலக்கியம் நோக்கிய செயற்பாடுகளே அதிகம். அதனால் அனைவரும் ஏதோவொரு வகையில் ஏதோவொரு தருணத்தில் இலக்கியத்தைச் சந்திக்க முயற்சிக்கிறார்கள்
ஆனால், நாம் இலகுவாகக் கருதுவது போல இலக்கியம் 'வெறுமனே', தினமும் நாம் பயன்படுத்தும் மொழியினால்தான் உருவாகியதா? - ஜனரஞ்சகத் தளத்தில் எமது நம்பிக்கையதுதான். ஆனால், அது அடிப்படையில் தவறானது என்று கூறுவது பலருக்கு
விசனத்தையேற்படுத்தும். இவ்விதமான ஒரு நோக்குக் காரணமாகவே, கணிதப் புதிரொன்று அல்லது அறிவியல் கருத்தாக்கம் புரியாது விட்டால் தமது பயிற்சியின்மை அல்லது 'அறிவின்மை
 

ஜீவநதி 45 எனக்கருதும் பலர் ஒரு கவிதை - இலக்கியம் புரியாது விட்டால், எந்தக் கேள்வியுமற்று அதனை அக்கவிதை -இலக்கியத்தின் பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது, இலக்கியம் என்பது நாம் பேசும் மொழிக்குள் - பொது மொழிக்குள் ஒரு தனி மொழியாகும் என்பதாகும். சொற்களை இலக்கியம் இந்தப் பொது மொழிப் பிராந்தியத்தினுள்/மொழிக் கிடங்கினுள் எடுத்தாலும் அதனை அடுக்கும்/ பின்னும் / உருக்கி வார்க்கும் றை வேறானது. ஆகவே, அது எமது நாளாந்த பேச்சு/ சொற்கோர்வை/ மாழிக்கோர்வையிலிருந்து வேறுபட்ட ஒரு விசேட மொழி முறையாகிறது. அடிப்படையில் அவற்றின் அர்த்தமும் - அனுபவமும் அகராதிகளில் வசிப்பதில்லை ஒரு சொல்லின்/சொற்களின் நிர்ணயிக்கப்பட்ட பொருளை அகராதியிலிருந்து எடுப்பதால் கவிதை புரிந்து கொள்ளப்படு மென்றில் லை. உண்மையில் இலக் கரியம் அகராதியில் “பதிக்கப்பட்டிருக்கும்”அர்த்தங்கள் மீதான சவாலாகவே அடிப்படையிற் காணப்படுகிறது . இலக்கியம் என்பது சொல்லின் பருப்பொருள் அர்த்தம் G சார்ந்ததல்ல அது அடிப்படையில் உய்த்துணர் பொருள் connotation) சார்ந்தது என்பர் நிர்ணயிக்கப்பட்ட அர்த்தங்களை குலைப்பதும் - இடைவிடாது மாற்றியமைப்பது நிர்ணயிக்கப்பட்ட அர்த்தங்களை அழிப்பதும் , புதிதாய் உற்பவிப்பதும் குலைப்பதுமான தருணங்களின் மேற்தான் அது நடமாடுகிறது முடிவில்லாது அனுபவங்களை திறப்பதற்கான எல்லையில்லாத சாத்தியமென்பதே அதன் அடிப்படைத் தர்க்கம். இதனாற்தான் மலையாளக் கவிஞரான ஆற்றுார் ரவிவர்மா' இலக்கியம் என்பது மொழியின் எல்லைகளை, எல்லையில்லாமல் விரிப்பது என்று கூறினார். இன்னொரு வகையில் "அது சொல்லால், சொற்களிற்கு அப்பால்' 660.
கவிதை, இலக்கியத்தின் மிகச் செறிவான வடிவம் பலரும் நினைப்பது போல கையாள இலகுவான வடிவம் அல்ல. சொற்களைச் சிறிய, சிறிய துண்டு வரிகளில் அடுக்குவதாலோ, குறிப்பிட்ட லயத்தினுள் அமர்த்தி விடுவதால் மட்டுமோ கவிதை பிறந்து விடுவதில்லை.அது படைப்பாக்க மனோ நிலையின் ஒரு கணத்தில்/ படைப்பாக்க மன மூட்டத்தினுள் நிகழும் கலையாக்க இரசாயன மாற்றதினுாடு சொற்கள் சினைப்படுகையில் - உணர்ச்சிகளின் கொதிநிலையில் - சொற்கள் குவிந்து, உள் ஒடுங்கிச் செல்லும் தாழ்வாரம் ஒன்றிலிருந்து முளைத்து எழுவதாக உள்ளது.
பலரும் கூறுவது போல, கவிதை மெளனத்திற்கு நெருக்கமானது - மெளனத்தைப்பேச வைப்பது,என்பதை விடவும் கவிதை என்பதே மெளனம் தான் என்று தோன்றுகிறது. அதனால், கவிதை ஏற்கனவே சொல்லியது போல, சொற்கள் குவிந்து, உள் ஒடுங்கிச் செல்லும்/சொற்கள் புறப்படும் மூலத்தைச் சார்ந்ததெனலாம். இவ்விதமான தன்மை சொற்களைப் படிமநிலைப்படுத்துகின்றன.ஒரு சொல்லே பல அடுக்கும் - மடிப்புமுடைய கண்டுபிடிப்பாக்/ தரிசனமாக ஆகிறது. அதுவொரு நெடும் பயணம், சொற்களாலான சொற்களுடான ஒரு யாத்திரை.
இருள் படிந்து உறங்கும் குளம் திடீரென தவளையின் பாய்ச்சல் நீர்ச் சப்தம்
-U5T
O

Page 25
ஜீவநதி 6
இலக்கியங்களினூடே ஒர் அறிவியற் பயணம் : கவனப்பிசகு
லம்போதரன் கவனப்பிசகு ஏற்படுவது வழமையானது தான். ஆனாலும் கவனம் பிசகு வதனால் எற்படக்கூடிய விளைவு பாரதூரமாக இருப்பின், கவனப்பிசகுதானே என்று அலட்சியப்படுத்திவிட முடிகிறதா?
அசுரவேகத் தில் இயங்கும் யந் தரிரங்களுடன் வேலைசெய்தவர்களிற் சிலர் கவனப்பிசகாக இருந்ததனால் அவர்களது கைகள் துண்டிக்கப்பட்ட கதைகள் பல கேட்டிருக்கின்றோம்.
கணிதப்பயிற்சி செய்யும் மாணவன் ஒருவன் குறியீடுகளுடனும் அட்சர கணிதச் செய்கைகளுடனும் கவனப்பிசகாக இருந்துவிட முடியாது. அழகான ஓவியம் ஒன்றைத் தீட்டிக்கொண்டிருக்கையில் கவனப்பிசகினால் அதன்மீது வர்ணக்கலவை சிந்திவிடின் மனம் என்ன UTCUGLD.
உண்மைதான்; கவனப்பிசகு ஒரு கணத்தில் ஏற்படினும் அதன் விளைவு தாக்கமானதாக அமையக்கூடும்.
ஆழலிலிருந்து பல்வேறு தூண்டிகள் எம்மை வந்தடையும்போது அவை அனைத்தையும் ஒரேசமயத்தில் எமது புலனுறுப்புக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொரு புலனுறுப்பும், தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தூண்டிகளுள் சிலவற்றை மட்டுமே தெரிவு செய்து ஏற்றுக் கொள்கின்றது. இவ்வாறு, தூண்டிகளுள் சிலவற்றை எமது புலன்கள் தெரிவு செய்து ஏற்றலையே கவனம் என்கிறார்கள்.
கவனத்திற் கொள்ள வேண்டிய குறித்த தூண்டிகளைக் கவனத்திற் கொள்ளாது தவறவிட நேரிடுகின்றபோது கவனப்பிசகு ஏற்பட்டு விடுகின்றது. அதுவே பாரதூரமான விளைவுகளுக்கும் காரணமாகிவிடுகின்றது.
தொழில் நுணுக்கம் என்பது கவனம்' பற்றிய எமது அக்கறையைச் சுட்டுவது. முடிவுப்பொருள் ஒன்று கலைத்துவம் மிக்கதாக அமைய வேண்டு மெனின், கவனப்பிசகு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அன்று எனது மகனின் முதலாவது பிறந்தநாள். வீட்டில் வைத்து கைக்கமராவினால் 'போட்டோ எடுப்பதை விட ஸ்ரூடியோவுக்குச் சென்று ஸ்ராண்டில் பொருத்திய கமராவினால் எடுத்தால் நன்றாக வரும் என்பது என் மனைவியின் விருப்பம். தட்டிக்கழிக்க முடியாமல் மகனையும் மனைவியையும் அழைத்துச் சென்று, ஸ்ரூடியோவில் "மேக் அப்' செய்து, குடும்பமாக ஒரு படமும், தனியாக மகனை வைத்து ஒரு படமும், எடுத்ததில் 'போதும்போதும்' என்றாகிவிட்டது.
ஸ்ரூடியோ அறையின் நடுவே இருக்கை போட்டு அதில் என்னையும் மனைவியையும் மணவறையில் இருத்தியதுபோல நெருங்கி அமருமாறு செய்து, எங்கள் நடுவே மகனை இருத்தி, அவனுக்கு விளையாட்டுக்காட்டி, எங்களை இங்கே பாருங்கள்', ‘அங்கே பாருங்கள்’ என்றெல்லாம் அதிகாரம் செய்து, "கழுத்தை இப்படித்திருப்புங்கள், தலையை அப்படிச் சாய்த்துவைத்திருங்கள்’ என்று கூறி எம்மைத் தலையாட்டிப் பொம்மைகளாக்கி, ‘டிக், டிக்’ என்று மாறிமாறிச் 'சுவிட்ச்" போட்டுக் கண் களைக் கூசச் செயப் து, கண் னை வெட்டாதர்கள் என்று அதட்டி.குடும்பப்படம் ஒருவாறாக எடுத்து முடிந்தது.
இதற்கே இப்படி என்றால், பிள்ளையைத் தனியாக எப்படி எடுக்கப்

gesubs 47 போகிறார்கள் என்று நெஞ்சு பேதலித்தது. ஆயினும், அவர்கள் கெட்டிக்காரர்கள். ஒருவர் 'சேஷடைகள் செய்து குழந்தையின் கவனத்தைத் தன்பால் ஈர்க்க, மற்றவள் படம் எடுத்து முடித்தார்.
"இரண்டு நாட்கள் கழித்துத்தான் படங்களை எடுக்கலாம்' என்றதில் மனைவிக்குத் திருப்தியில்லை. இரண்டு நாட்களாக நச்சரித்துக் கொண்டிருந்தார். "மறந்துவிடாதீர்கள், மத்தியானம் சாப்பாட்டு நேரத்தில்போய் படத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று உபதேசம் வேறு.
மறந்து விடாமலிருக்க, தினக்குறிப்பில் எழுதிக்கொண்டு அலுவலகம் சென்று அலுவலக உதவியாளரிடம் ரசீதைக் கொடுத்து ஸ்ரூடியோவுக்கு அனுப்பியபின் கோவைகளுக்குள் முடங்கிப்போனேன்.
வீடுதிரும்பும்போது வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த மனைவியைக் கண்டபின்புதான் 'போட்டோவின் ஞாபகம் வந்தது. வேலை நெருக்கடியின் போது அலுவலக உதவியாளர் கொண்டுவந்து கொடுத்த கடித உறைஇருக்கின்றதா என "சேர்ட்பொக்கற்றை தொட்டுப்பார்த்துக் கொண்டேன்.
சப்பாத்தைக் கழற்றிக்கொண்டு கதிரையில் சாய்வதற்கிடையில் மனைவி மகனைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தாள். கடித உறையிலிருந்து முதலாவது படத்தை எடுக்கையில் எம்மூவரின் கண்களும் அதனையே மொய்த்தன. பிள்ளையின் கண்களில் மிரட்சி. மனைவியின் முகத்தில் கடுகடுப்பு. நான் என்ன செய்வது?
மகனின் உருவத்தை விட அதன் பின்னால் தெரிந்த நிழல் பூதாகரமாகத் தோன்றியது. அதனைக் கண் டு தான் பிள்ளை மிரண்டிருக்கவேண்டும். பக்கங்களில் நிறுத்திய மின் குமிழ்களை ஒளிரச்செய்து, பின்னாலிருந்த மின்குமிழை ஒளிரச்செய்யாததனால் ஏற்பட்ட கவனப்பிசகுதான் அது என்று என் மனைவிக்கு விளக்கியபோதும் அவள் கேட்டால் தானே.
இது நடந்து சில நாட்களுள் ஒரு கூட்டத்திற் பேசுவதற்காக சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையைப் படிக்கத்தொடங்கினேன். மாதவி தலையரங்கேறும் அருந்தொழில் அரங்கம் பற்றிய விபரணத்தைப்படிக்க படிக்க பிரமிப்பாக இருந்தது. அரங்கின் நீள, அகல உயரப் பிரமாணங்களையும் அரங்க அமைப்பையும் திரைச்சீலை வகைகளையும் சிறப்புற விளக்கிய இளங்கோ அடிகள் 'ஒளியூட்டல்' பற்றியும் தெரிவித்த வரிகள் தொழில்நுணுக்கம் குறித்த அவரின் கவனத்துக்கான சான்று.
தூண் நிழல் புறப்பட, மாண்விளக்கு எடுத்து என்ற வரி நாற்புறமும் நிறுத்திய தூண்களின் நிழலும் நாட்டிய மாதின் நிழலும் அரங்கத்தில் விழாதவாறு மாட்சிமையுடைய நிலைவிளக்குகளை அரங்கிலே நாற்புறமும் நிறுத்தினர் என்பதை எடுத்தியம்புகிறது. இங்கே இளங்கோ அடிகளாரின் அனுபவ அறிவியலில் அவரின் இலக்கியம் கலைத்துவம் பெறுகிறது.
தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து, ஆங்கு, ஒரு முக எழினியும், பொருமுக எழினியும், கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு; ஒவிய விதானத்து உரை பெறு நித்திலத்து மாலைத் தாமம் வளையுடன் நாற்றி விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து.
- சிலப்பதிகாரம் (அரங்கேற்றகாதை)

Page 26
ஜீவநதி 48 கலை இலக்கிய/திகழ்வுகள்.
1) சொபொகிளிஸின் “அன்ரிகனி'தமிழில் இ. முருகையன் ஆக்கிய “கர்வபங்கம்’
2008 ஆம் ஆண்டு க.பொ.த.(உயர்தர) வகுப்புக்குரிய "நாடகமும் அரங் கியலும் ' பாடநெறிக் கான புதரிய பாடத் திட்டத் தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொபொகிளிஸின் "அன்ரிகனி” நாடகமானது கவிஞர் கலாநிதி இ.முருகையன் அவர்களால் தமிழில் "கள்வபங்கம்” என ஆக்கப்பட்டிருந்தது. இதன் நூல் வெளியீட்டு விழா 28.07.2007 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பிரதான மண்டபத்தில் பேராசிரியர். கலாநிதி அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தே.க.க.பீடாதிபதி எஸ்.கே.யோகநாதன் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வெளியீட்டுரையை ஜோண் சன் ராஜ்குமார் அவர்களும், அறிமுகவுரையை கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும் நிகழ்த்தினர். இந்நூலின் முதற்பிரதியை தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அவேதநாயகம் பெற்றுக் கொண்டார்.
கலை அகம் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலினை யாழ் பல்கலைக்கழக கல்வியியற்துறை சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி அவர்களும். யாழ் தேசியகல்வியியற்கல்லூரி விரிவுரையாளர் க.திலகநாதன் அவர்களும் பதிப்பித்துள்ளனர்.
2) கல்லூரி நாடகங்கள்
நாடகத்துறையில் சிறப்புப் பட்டதாரியான பா.இரகுவரன் அவர்களால் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்ட 6 நாடகங்களின் தொகுப்பான “கல்லூரி நாடகங்கள்” நூல் வெளியீட்டு விழா 5.8.2007 அன்று புலோலி கிழக்கு ஞானசம்பந்தர் கலை மன்றத்தில் நடைபெற்றது.
ஹாட்லிக் கல்லூரி அதிபர் ந.தெய்வேந்திரராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர் தெணியான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வெளியீட்டுரையை கல்வியியற்துறை சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி அவர்களும் கருத்துரைகளை யாழ். தேசிய கல்வியியற்துறை விரிவுரையாளர் க.திலகநாதன், கல்யாணி நமசிவாயம், ஜெ.சந்திரப்பிரகாசம், ஓய்வு பெற்ற ஆங்கில ஆசான் ஆ.கந்தையா ஆகியோரும் நிகழ்த்தினர்.
3) எதிர்பார்க்கைகள்
“உறங்கும் உண்மைகள்” என்ற குறுநாவலை எழுதிய நெல்லை ஆனந்தராணியின் நவநவீன வானொலி நாடகங்களின் தொகுப்பான எதிர்பார்க்கைகள் நூல் வெளியீட்டுவிழா 26.08.2007 அன்று கரவெட்டி கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்க காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது. கரவெட்டி கட்டைவேலி ப.நோ.கூ. சங்க கலாசார கூட்டுறவுப் பெருமன்றம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
தலைவர் த.சிதம்பரப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி க.குணராசா அவர்கள் கலந்து கொண்டார் நூலின் வெளியீட்டுரையை கலாநிதி த.கலாமணி அவர்களும். நூல் ஆய்வுரைகளை ஒய்வு பெற்ற அதிபர் கி. நடராஜா அவர்களும் எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகலிங்கம் அவர்களும் நிகழ்த்தினர்.

ஜீவநதி 49 4) திருமறைக்கலாமன்றத்தின் “தமிழ்விழா”
திருமறைக் கலாமன்றத்தினர் புதிதாக நிர்மாணித்துள்ள 'கலைத்தூது கலையகத்தில்” ஆகஸ்ட் மாதம் 18, 19, ஆம் திகதிகளில் "தமிழ்விழா” ஒன்றினை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். முதல் நாள் காலை இ.ஜீவகாருண்யன் தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வில் "ஈழத்தில் நவீன இலக்கிய விமர்சனம்" என்னும் விடயம் குறித்து விரிவுரையாளர் க. அருந்தாகரன் அவர்களும் "பத்தி எழுத்துக்கள்” என்னும் விடயம் குறித்து எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகன் அவர்களும் கருத்துரைகளை வழங்கினர்.
பின்னர் நடைபெற்ற கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையிலான இரண்டாவது அமர்வில் "தொண்ணுாறிலிருந்து ஈழத்து தமிழ்ச் சிறுகதை” என்னும் விடயத்தில் கருத்துரை வழங்க இருந்த பேராதனை பல்கலைவிரிவுரையாளர் செ.சுதர்சன் வருகை தராததால் அவரது கட்டுரை வாசிக்கப்பட்டது. இதனை அடுத்து “தொண்ணுாறிலிருந்து ஈழத்து தமிழ்க்கவிதை" குறித்து விரிவுரையாளர் பா.அகிலன் அவர்கள் கருத்துரையை வழங்கினார்.
இரண்டாம் நாள் காலை எழுத்தாளர் க.சட்டநாதன் தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வில் “புலம்பெயர் இலக்கியம்" குறித்து சு.குணேஸ்வரன் அவர்களும் "செங்கை ஆழியானின் வகைமாகிரி நாவல்கள் ஐந்து” எனும் விடயம் குறித்து அ. யேசுராசா அவர்களும் கருத்துரைகளை வழங்கினர்.
இரண்டாவது அமர்வில் பேராசிரியர் நீ.மரியசேவியர் அடிகள் தலைமையில் நடைபெற்ற பின் நவீனத்துவமும் தமிழ்ச்சூழலும" என்பது குறித்து ந.ரதிக்குமார் அவர்களும் “தொண்ணுாறிலிருந்து ஈழத்து தமிழ் நாடக இலக்கியங்கள்” என்னும் பொருளில் திருமதி க.நவதர்சினி அவர்களும் கருத்துரைகளை வழங்கினார்கள். ஒவ்வொரு அமர்வுகளின் பின்னரும் கலந்துரையாடலுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தமை வாசகள்களின் பல்வேறு சந்தேகங்களையும் தெளிவு படுத்த வசதியாக இருந்தது. அத்துடன் இவ்விருதினங்களும் மாலை நிகழ்வுகளாக பல்வேறு கலைநிகழ்வுகள் கலாரசிகர்களுக்கு பெருவிருந்தையும் அளித்திருந்தன.
5) சிறுவர்ப்ாடல் நூல் வெளியீடு 11.08.2007 அன்று தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் அமரர் மு.செ.விவேகானந்தன் எழுதிய சிறுவர்பாடல் நூல் அல்வாயூர் கவிஞர் நாடக மன்றத்தினரால் வெளியீடு செய்யப்பட்டது. மா.அனந்தராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
6) அவை (FORUM) ஒன்றுகூடல் “அவை ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெற்று வரும் ஒன்றுகூடலின் 12ஆவது நிகழ்வு 'கலை அகம்', அல்வாய் வடமேற்கு, அல்வாய் என்ற முகவரியில் திரு.ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. வடமாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.அநந்தராஜ் அவர்கள் ‘புதிய கல்விச்சீர்திருத்தமும் சமூகத்தின் பங்கும்’ என்ற பொருளில் கலந்துரையாடலை நிகழ்த்தினார். வடமாகாண கல்வித்திணைக்களத்தைச் சேர்ந்த பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு நிகழ்ச்சியாக யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழகத்தின் இசை மாலை’ நிகழ்வும் நடைபெற்றது.

Page 27
ஜீவநதி 50
பேசும் இதயங்கள்
1) கனதியான “ஜீவநதி’ கண்டேன். அது பெருகிப் பிரவாகிக்க என்
வாழ்த்துக்கள்!
த.ஜெயசீலன் நல்லூர்
2) யாழில் நதியில்லை என்ற குறைதீர்க்க, ஊற்றெடுத்த “ஜீவநதி’ பொங்கிப்
பிரவாகித்து நுங்கும் நுரையுமாக எங்கும் பாய்ந்து வற்றாத நதியாக எல்லோர்க்கும் அறிவமுதளிக்கவும், ஜீவநதி ஆசிரியர்களின் கலைப்பணி மென்மேலும் சிறப்புற்றோங்கவும் இறையருள் வேண்டி வாழ்த்துகின்றேன். தனா நகுலேசபிள்ளை கொழும்பு
3) ஜீவநதி கலை இலக்கிய சஞ்சிகையின் கன்னிஇதழ் கிடைத்தது படித்து மகிழ்ந்தேன். சாதகமற்ற சூழலுக்கு மத்தியில் இருந்து கொண்டு தரமான ஒரு சஞ்சிகையின் வரவைச்சாத்தியமாக்கி உள்ள சஞ்சிகையின் ஆசிரியர்கள் ஆலோசகள்களுக்கு எனது பாராட்டுகள். படைப்புக்கள் மிகவும் தரமானவையாக இருந்தன. பேராசிரியர். செ.கிருஷ்ணராசாவின் “வடமராட்சி சோழர்காலக் குடியிருப்புகள்’ பற்றிய கட்டுரையானது தமது பாரம்பரிய வாழ்வின் தடங்களை தேடி அலைந்து சான்றாதாரங்களுடன் நிறுவவேண்டிய நிலையிலுள்ள உள்ளங்களுக்கு இதம் அளிப்பதுடன் காலத்தின் தேவையை பூர்த்தி செய்கின்றது. குப்பிளான் ஐ. சண்முகனினதும், தெணியானினதும் சிறுகதைகள் நிகழ்கால வாழ்வின் தரிசனங்களாக அமைகின்றன. மிக நுட்பமாக கருத்துக்களைப் பரிமாறும் கலைத்துவப் படைப்புகள். ஆழியாளின் துவிதம் கவிதைத்தொகுப்பு பற்றிய நூல் மதிப்புரை செய்த குணேஸ்வரனின் ரசனையும், அதனை எடுத்தியம்பிய விதமும் அவரை தேர்ந்த விமர்சகனாக அடையாளம் காட்டுகின்றன. வல்லைவெளி எமது கடந்தகால நினைவுகளுடன் நெருங்கிவந்து அவற்றிற்கு மெருகூட்டிவெளிப்படுத்தும் முயற்சி; சிறப்பாக அமைந்துள்ளது. சோ.பவின் தனிநடிப்பு மனிதனுள் மறைந்திருக்கும் திறமைகளை ரசித்து மகிழ்வதுடன் மனித விழுமியங்கள் பற்றிய மதிப்பீடாகவும் அமைகின்றது. ஏனைய கட்டுரைகள், கவிதைகள் நேர்காணல் யாவமே சொல்லும்படியாக அமைந்துள்ளமை ஜீவநதியின் இலட்சியத்தை தெளிந்த நேரிய பாதையை சுட்டிநிற்கின்றன. உங்கள் முயற்சிகள் மேலும் சிறப்புற்று சமூகத்திற்கு உதவ வாழ்த்துக்கள்.
டாக்டர்.எம்.கே.முருகானந்தன் கொழும்பு
படைப்புக்கள் பற்றிய வாசகர்களின் சுருக்கமான கருத்துக்கள் எதிபாரிக்கப்படுகிவிறன.

ஜீவநதி 51 %e SNy
M IAYGDGDI RA G I FT
CENTRE Y}
རྒྱལ་ཐང་ཁུ- ཁོ་ལ་ཁ་མི་མཁོ་ཆོས་མཛད།
f ২২ ( ,
ప్రజ్ఞ బ్రి ଽନ୍ତି গুঞ্জ డీ.తో
ఖజ్రాణళి
Dealers in Fancy Goods, Gift items Electronic, electrical & House hold Goods.
No - 14. New market Outside
Power House Road >N--3.ރ.ޞ S Jafna. Te - 021 2222084) கட்டைவேலி - வருல்லியடி ப.நோ.கூ.சங்கம்:
எமது சங்கச் சேவைகள்:
நுகர்ச்சிச் சேவை தரமான நூலக சேவை கிராமிய வங்கிச் சேவை புலமைப்பரிசில் வழங்கல் வாடகைச் சேவைகள் தரமான திரைப்படக்காட்சிக்கூடாக புதிய ரசனையை ஏற்படுத்துதல் எரிபொருள் சேவை விவசாய சேவை நூல்வெளியீடும் விமர்சனங்களும் கூட்டுறவுக் கலாசாரப் பெருமன்றம் “சங்கம் செய்தி” மாதாந்த வெளியீடு. தொலைபேசி இலக்கம் :- 02:12263263 தொலைநகல் 02:12268268
03:226,474
021226,725 கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம் கரவெட்டி. L L L L L S L L

Page 28
ஜீவநதி 2
O O
O 豪 O O O e O O
O
● e e O O O ஆண்களுக்கான சேட், ஜீன்ஸ், வகைகள் விதவிதமாக தைத்துக் கொடுக்கப்படும். பாடசாலை மாணவர்களுக்கான பள்ளிச்சீருடைகளும் குறித்த தவணையில் தைத்து கொடுக்கப்படும். O கோட் வாடகைக்கு விடப்படும் O O o O O இவை அனைத்துக்கும் நாடவேண்டிய ஒரே இடம். O நியூஸ்ரார் ரெயிலறிங் : O e O O உமகாத்மா வீதி O O
நெல்லியடி O . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
சகல மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களும் பெற்றுக் கொள்ள
நாடவேண்டிய ஒரே இடம். ain Street Nelliad
இச்சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி த.கலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 
 

9ோட்டர் சைக்கிள், ரக்ரர் /
€opr
வாகன உதிரிப்பாகங்கள்
விற்பனையாளரும்,
GESTRESSITUn sigfi
நெல்லியழு.
i

Page 29
* வீடுகளுக்டு மின் இை * வீடுகளுக்டு ப்ே இ
 
 

、
.
பொடு
命腳 脚
!\ 聊
ன்சாரப்