கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2008.01-02

Page 1


Page 2
品
® (3
ဖိမ့်
 
 

பிரதம ஆசிரியர்கள் :
சின்னராஜா விமலன் கலாமணி பரணிதரன்
நிருவாக ஆசிரியர்:
துரைராஜா இராஜவேல் ஆலோசகள் குழு:
திரு.தெணியான் திரு.குப்பிளான் ஐ.சண்முகலிங்கம் திரு.கி.நடராஜா தொடர்புகளுக்கு : கலை அகம் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார்வீதி
அல்வாய்.
தொலைபேசி : 0775991949 077699.1015
Fax : 021226.3206
E.mail:jeevanathy (@yahoo.com
பதிப்புரிமை: கலை அகம் வெளியீடு வங்கித் தொடர்புகள்:
K. Bharaneetharan & S.Vimalan
HNB- Nelliady Branch A/CNo. 118-00-02-0945701-1
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச்
செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை
அட்டைப்படம் : பாஸ்கரன்
உண்டு.
ஆசிரியர்கள்
வே,இன்ௗயகுட்டி. * பிரமிளா செல்வராஜா. : த.ஜெயசீலன். * g.6šLIT6. வெ.துஷ்யந்தன். : glais Uas6i. . . . . . . . . . . . . . . : gfair GOTUTTegair. . . . . . . . . . . . .
R R o o ; கட்டுரைகள்
: கா.சிவத்தம்பி.
激 FLINT-6legu u IJ TeFIT . . . . . . . . . .
: செங்கை ஆழியான்.
: மு. அநாதரட்சகன். : Jessf. . . . . . . . . . . . . . . . . . . .
激 சந்திரகாந்தா.
影 8-5LUT2T--------------
: க. திலகநாதன்.
* சிறுகதைகள் እN
激 தாட்சாயணி.
፴ o O o ; திக்குவல்லை கமால்.
தனஞ்சயன்.
R R? -- :பத்தி எழுத்து
த.அஜந்தகுமார். குப்பிழான் ஐ.சண்முகன்
நூல் அறிமுகம்.SSSL LSL S LLL 0LLLSS LS LS LSLLS LLL LLLL LL LLSS L LS L LL
கலை இலக்கிய நிகழ்வுகள்.
R
பேசும் இதயங்கள்.
22 23 34
37
40
43
47
03 08 19 24 29 35 38
41
14
26
44
47
51.
49
53
54

Page 3
ஜீவநதி
(கலை இலக்கிய இருதிங்கள் ஏடு)
அறிஞர் தம் இதய ஒடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
-பாரதிதாசன்.
புதுறைகள் புரிவோம்
புத்தாண்டில் ஜீவநதியின் நான்காவது இதழான பொங்கல் சிறப்பிதழோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. துன்பதுயரங்களுக்குள் மூழ்கிப்போயிருக்கும் எம்மக்களின் வாழ்க்கையானது மலர்ந்துள்ள புத்தாண்டிலாவது பரிதி முன் பணிபோல மறைந்து. சுபீட்சமாகவும் சந்தோசமாகவும் மிளிர வேண்டி நிற்கின்றோம். இளைஞர்களாகிய எம்மால் வெளியிடப்படும் சஞ்சிகைக்கு கடிதங்கள் மூலமாகவும் மின்னஞ்சல், இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாகவும் பெருகிவரும் ஆதரவு கண்டு மலைத்து போய் உள்ளோம். கணிசமான வாசகர்கள் சந்தாதாரர்களாகச் சேர்ந்து தமது பூரண ஒத்துழைப்பை நல்கியுள்ளனர்.
இன்றைய நெருக்கடியான சூழலிலும் எம்மைப் பெரிதும் பாதித் துள்ள விடயம் அதிகரித்துச் செல்லும் தபாற் செலவு, "சுண்டக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்” என்பது போல தபாற்செலவின் அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சஞ்சிகையை அனுப்புவதில் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. ஆனாலும் எமக்கு அப்பாற்பட்ட இச்சக்தியையும் மீறி ஜீவநதி நாட்டின் பலபாகங்களில் உள்ளவர்களின் கைகளை எட்டியதாக அறியத்தரும் தகவல்களில் எம்மனம் பேருவகை கொள்கின்றது.
ஜீவநதியின் ஒவ்வொரு இதழ்களினதும் கனதியும் காத்திரமும் அடுத்த இதழை அதைவிட சிறப்பாக உருவாக்க வேண்டிய அவசியத்தை எமக்கு ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் எமக்குவரும் படைப்புக்களில் எவற்றை நீக்க வேண்டும் என்பதற்கு பதிலாக எவற்றை போட வேண்டும் என்ற தரச்சிறப்புத் தெரிவே தலைதுாக்கி காணப்படுகின்றது. ஏனென்றால் ஜீவநதி எப்போதும் நீரை நீக்கி பாலை குடிக்கும் அன்னப்பறவை போல தரமான படைப்புக்களையே தாங்கி வரும் என்பதில் நாம் கண்ணும் கருத்துமாய் உள்ளோம்.
அடுத்த இதழ் மார்ச்/ஏப்ரல் காலப் பகுதியில் வெளிவர இருப்பதனால் சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 08) முன்னிட்டு அவ்விதழை மகளிர் தின சிறப்பு இதழாக வெளிக் கொணர உத்தேசித்துள்ளோம். இதனால் படைப்பாளிகளிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் “பெண்ணியம்” சம்பந்தமான ஆக்கங்களை “ஜீவநதி” வேண்டி நிற்கின்றது
-ஆசிரியர்கள்
 
 

ஜீவநதி 8
ஒன்றைய நிலையில் ஊடகத்துறை வளர்ச்சி
மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் செல்வாக்கு
பேராசிரியர் கா. சிவத்தம்பி
1950களின் பின்னர் உலகில் ஏற்பட்ட மிக முக்கியமான வளர்ச்சிகள் இரண்டு நிலைப்பட்டன என்று கூறுவார்கள். நான் விஞ்ஞானத்தைப் பற்றி சொல்லவில்லை. சமூக நிலைப்பட்ட, சமூக அறிவியல் நிலைப்பட்ட வளர்ச்சிகள் முக்கியமாக இரண்டு, ஒன்று தொடர்பு பற்றியது. மற்றது முகாமை பற்றியது.
1950களுக்குப் பிறகு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட புதிய மாற்றங்களோடு உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் காட்டுவதாக அந்தத் துறைகள் அமைகின்றன. அவற்றில் ஒன்று தொடர்பு (Communication) usibéugs).
Communication Studies என்பது புதிதாக வந்த சொல். முன்னர் 1940, 1950களில் Communication என்பது போக்குவரத்தைக் குறித்தது. ஒரு காலத்தில் இலங்கையினுடைய (Railway) புகையிரத அமைச்சுக்குப் Guujir Transport and Communication. 260TT6) 9155ds 35(55gs. LDITs படிப்படியாக தொடர்பாடல் என்பது Communication ஆகிற்று.
அதற்குக் காரணம் என்னவென்றால், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, புதிய பொருளாதார நிலைகள் வளர்ந்து வருகின்ற தன்மை. உலகம் படிப்படியாக சுருங்கி ஒருநாட்டவர் இன்னொரு நாட்டிற்குப் போவது, பிற மக்கள் மொழியைப் படித்தல், பிற பண்பாடுகளை அறிந்து கொள்ளல், பண்பாடுகளுக்குப் பரிச்சயமாதல், பரிச்சயமாக வேண்டி தேவைகள் என்பன மாத்திரமல்லாமல் மக்களை வர்த்தகத்துக்கு மாத்திரம் நுகள்வோராக கருதி பொருட்களை விற்பதற்கும் அவர்களே பொருட்களை வாங்குவதற்கும் அறிவைத்தருகின்ற பல விடயங்களை அறிய வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் Communication மிக முக்கியமானதாயிற்று.
அது மாத்திரம் அல்லாமல் 1950களின் பிற்பகுதியிலே அதாவது 1950களின் நடுக்கூற்றில் பனிப் போர் (ColdWare) நடந்தது. சமதர்மத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் ஏற்பட்ட பனிப்போரில் அபிப்பிராயங்களை மாற்றுவதற்கான, அரசியல் பிரசாரம் செய்வதற்கான ஒரு தொடர்பியல் முறையை நன்கு திறமையாகக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.
Đg560TTyub Communication Studies LÓNab (ypä5Ślu JLDTuî gbg.
இவ்வாறு வளர்ந்து வந்த Communicationstudies உண்மையில் 70, 80களில் தரரீதியான மாற்றத்தைப் பெறுகிறது. அந்தவகையில் பெரிதும் நவீனமயப்பட்ட சுருங்கிவிட்ட பூகோளம் கிராமமாக வந்து விடுகிறது. இப்போது ஒவ்வொரு நாடும் மற்றைய நாட்டைப்பற்றியும், ஒவ்வொரு பிரதேசமும் மற்றைய பிரதேசத்தைப் பற்றியும் ஒவ்வொரு மக்களும் மற்றைய மக்களைப் பற்றியும் அறிவதன் மூலமே வாழ முடிகிறது. இது நுகர்வோராக உள்ள சகல மட்ட மக்களுக்கும் பொதுவானதாக ஆகிவிடுகிறது.
இந்த ஊடகங்கள் அச்சு ஊடகங்கள், மின்னியல் ஊடகங்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த ஊடகங்கள் மூலமாகவே தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. தொடர்புகள் உணரப்படுகின்றன.
உண்மையில் உலகத்தை நாங்கள் எவ்வாறு பார்க்கின்றோம்

Page 4
ஜீவநதி 4. என்றால் தொலைக்காட்சி (Television) மூலமாகப் பார்க்கின்றோம். திரைப்படங்கள் மூலமாகவும் அச்சுப் பத்திரிகை மூலமாகவும் புத்தகங்கள் மூலமாகவும் சஞ்சிகை மூலமாகவும் பார்க்கின்றோம். உலகத்தை நாங்கள் உணர்கின்ற முறைமை ஊடகத்தின் மூலமாகவே நடைபெறுகின்றது.
இந்த ஊடகங்கள் யாவை? அவை எவ்வாறு தொடர்புபடுகின்றன? அது எவ்வாறு அபிப்பிராயத்தை நம்முடைய மனத்தில் ஏற்படுத்துகின்றது? என்பது பற்றிய ஆய்வுகள் மிக ஆழமாகச் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்த்தான் அவற்றை நாங்கள் பயன்படுத்தலாம். அப்படிச் செய்தால்தான் அதன் செல்வாக்கைப் பற்றி அறிந்து கொள்ளலாம். எனவே ஊடகம், ஊடகவியல் முக்கியமாயிற்று.
இது மாத்திரமில்லாமல் சாதாரண வாழ்க்கைக்கு இந்த ஊடகவியல் முக்கியமாகிறது. அது ஜனநாயக நடைமுறைகளுக்கானதாக இருக்கலாம், மக்கள் வாழ்க்கை பற்றியதாக இருக்கலாம். அல்லது சாதாரண மனிதனுடைய நோய்க்கு மருந்து வாங்குகின்ற மருத்துவக் குறிப்பாக இருக்கலாம் அல்லது ஒரு விவசாயி ஆட்கொல்லி மருந்தை வாங்கும் போது பெறும் அறிவுறுத்தற் பிரசுரமாக இருக்கலாம். இவை எல்லாமே ஊடகங்கள் தான்.
ஒரு ஜனநாயக அடிப்படையில், எழுத்தறிவின் அடிப்படையில் தொழிற்படும் போது ஊடகங்கள் மிகமுக்கியமானதாகினறன. நாங்கள் ஊடகங்கள் மூலமாகவே விடயங்களைப் பார்க்கிறோம், உணர்கின்றோம், ஊடகங்கள் மூலமாவே எமக்கு அபிப்பிராயங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த ஊடகங்கள் தருகின்ற தாக்கம் தான் நுகள்வினை ஏற்படுத்துகின்றது. இது எவ்வாறு செய்யப்படுகின்றது? இதைச் செய்வது யார்? இது எவ்வாறு நிகழ்கின்றது? என்பதைப் பற்றிய ஆய்வு மிகமிக ஆழமாகச் செய்யப்பட வேண்டும். இது நூல்களில் எவ்வாறு செய்யப்படுகின்றது. சுவரொட்டிகளில், சினிமாவில் மற்றும் Television இல் Radio இல் எவ்வாறு செய்யப்படுகின்றன. அது மாத்திரமல்ல. இந்த வளர்ச்சிகளின் பின் வருகின்ற பொழுது ஒலிப்பதிவு நாடாக்கள் (audio tape) இறு வெட்டுக்கள் (Compact disc) என்ற புதிய தொழில் நுட்ப பின்னணி இத்தொழிலின் தன்மையை மாற்றிவிட்டது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் வந்த எல்லா Radioக்களும் tape recnrdஐ கொண்டிருப்பது இயல்பாக இருந்தது. இப்பொழுது வருவதெல்லாம் CD க்களைப் போட்டுக் கொள்வதாக இருந்தது. இப்பொழுது வருவதெல்லாம் சாதாரண CD க்கள் அல்ல Mp3க்கள்.
இது ஒரு புறமாக இருக்க. இன்னாரு புறமாக இவை எல்லா வற்றையும் உள்ளடக்கி கணினி வளர்கிறது. கணிணியினுடாக சங்கீதம், 35600sofluigiTLITE Lugb5floods, 8560 failuigTLITE Web Side, Internet 6T60T ஊடகங்கள் முக்கியமாகின்றது. ஒரு Computerக்கு இருக்க வேண்டி எல்லாம் இருப்பின் உலகம் உன்னுடைய கையில்.
ஒரு Libraryயைப் பார்க்க வேண்டியதில்லை. ஒருவரைக்கேட்க வேண்டியதில்லை. அப்படியே கண்ணுக்கு முன்னால் எல்லாமே இருக்கும். உன்னால் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் பேசுவதைக் கேட்கலாம். இப்பொழுது ஊடகம் என்பது வியாபித்திருக்கின்றன. அவை இல்லாமல் உலக இயக்கம் இல்லை. இப்பொழுது கேள்வி என்னவென்றால் இந்த ஊடகத் தொழிற்பாட்டில் தமிழினுடைய நிலை யாது? தமிழ் எவ்வாறு

ஜீவநதி பயன்படுகிறது? இந்தப் பயன்பாட்டில் தமிழ் எழுத்துக்கு மாற்றம் வேண்டுமா? மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? தமிழினுடைய தனிமை பேணப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஊடக முயற்சிகளில் இருந்து தமிழை ஒதுக்கி விடுவதா? எல்லாம் முக்கியமான வினாக்கள். Computer என்பது தனக்கென ஒரு மொழியைக் கொண்டது. தனக்கென ஒரு வகை எழுத்தை கொண்டது. இதில் Microsoft உற்பத்திகள் அதனுடைய மொழி வேறு, அதனுடைய சொற்கள் வேறு.
எனவே ஊடகம் என்பது மிக முக்கியமான விடயமாகிறது. இந்த அமைப்பின்றி எம்மால் வாழ முடியாது. நாங்கள் ஊடகங்கள் மூலமாக எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறோம். நாம் யார்? என்பதை ஊடகங்களே தெரிவிக்கின்றன. ஊடகம் அல்லாத வாழ்க்கை இன்று வாழ முடியாது.
இதில் மொழியின் பயன்பாடு
அதாவது மொழி என்பது அடிப்படையில் பேச்சு நிலைப்பட்டது. அதனுடைய படிவம் தான் அச்சு. அந்த அச்சில் செந்தரமான நிலை இருந்தது. பேச்சில் காணப்படும் வேறுபாடுகள் எழுத்துருவில் வருவதில்லை. அங்கு ஒரு செந்தரம் உண்டு.
பேச்சில் (Variation) மாறுபாடுகளைக் காணலாம். ஆனால் ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவை பெரும்பான்மையாக மக்களைச் சென்றடைய வேண்டிய தேவை எதிர்பார்க்கப்படுவதனால் அவையும் செந்தரமாக்கப் படவேண்டும்.
இப்போது Televisions என்ற ஊடகத்தினை எடுத்துக் கொண்டால், 955 961, L3555g)6OLuu (og5 TLTUTL6) (Act of Communication) 856)5 காட்சிகளைக் காட்டுவதன் மூலம் செவிப்புலக் குறிப்புக்கள் மனதில் பதிகின்றன. கட்புலன் பிரதானமாகவும் செவிப்புலன் அனுசரணையாகவும் அமைந்து, ஒரு பாரிய புலப்பதிவு தொலைக்காட்சியால் ஏற்படுகின்றது.
மற்றது திரைப் படத்தைத்தவிர மற்றைய ஊடகத்தினுடைய பொதுவான பலகீனம் என்னவென்றால், அதைப் பயன்படுத்துபவன் தான் விரும்பாத நேரம் (off) நிறுத்தி விடலாம், அதாவது தொலைக்காட்சியை நிறுத்தி விடலாம், வானொலியையும் நிறுத்தி விடலாம்.
தொலைக்காட்சி வானொலியில் உள்ள மிக முக்கியமான பேச்சு பகுதி என்று சொல்லப்படுகின்ற பகுதி, எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியைக் கேட்கப்பார்க்கப் பண்ணுவதாக அமைதல் வேண்டும். அது எவ்வாறு நிகழும்? எத்தகைய மனநிலையில் ஒருவன் அல்லது ஒருத்தி அவ்வாறு செய்வார்கள், அது அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் அறிவு தருவதாக இருத்தல் வேண்டும். அது அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் மகிழ்வூட்டுவதாக இருத்தல் வேண்டும். தனியே (Entertainment) மகிழ்வூட்டல் சிறிது நேரம் கேட்போம். பிறகு விட்டுவிடுவோம். தனியே (Insertion) தகவல் சிறிது நேரம் கேட்போம். பிறகு விட்டு விடுவோம். இந்த சமநிலையை சரியாகப் பேண வேண்டும். மற்றது பொதுவான “இலக்கு மொழி” என்பது நிதானமாகப் பேசப்படுகின்ற விடயத்தில் இருந்து வேறுபட்டதோ அல்ல. தனியே மொழியென மாத்திரம் பார்க்கப்பட வேண்டியதொன்றல்ல. அது பேசப்படுகின்ற விடயத்தோடு, பேசுபரின் ஆளுமையோடு, கேட்பவருடைய தேவைகளோடு, அவர்கள் அவர்களுடைய விளக்கத்தோடு, இவை சம்பந்தப் பட்ட விடயம் ஆகும். உண்மையில் Communication என்பது Luaga

Page 5
ஜீவநதி 6 தான். மொழிதான் Communication பண்ணுகின்றது. அந்த மொழி தொலைக்காட்சிக்குள்ளால், வானொலிக்குள்ளால், பத்திரிகை புத்தகங்களுக குள்ளால் வரும். போது அது அதற்குரிய அமைப்பை எடுக்கும். பேசுபவர் பேசுகிற மாதிரி பேச வேண்டும், பேசுவது மாதிரிச் சொல்ல வேண்டும். அதற்குள் ஒரு செந்தரம் இருக்க வேண்டும். அது யாழ்ப்பாணத் தமிழாகவோ, மட்டக்களப்புத் தமிழாகவோ, மன்னார்த் தமிழாகவே இருப்பதில்லை ஆனால் sei(658660)6Tuilei). It has got to be speech from (Suédiggs TGör.
புஸ்சைப் பற்றி பேசுவதற்கு ஒரு தொனி. சந்திரிக்காவைப் பற்றி பேசுவதற்கு ஒரு தொனி, S.P பாலசுப்ரமணியம் பற்றி பேசுவதற்கு ஒரு தொனி இருக்கு. பாலசுப்ரமணியம் பற்றி பேசும் போது நன்னூல் ஆசிரியர் எப்படிப் பேச வேண்டும் என்றாலோ அப்படிப் பேச முடியாது. அது ஏன் விரசமாய் வருகிறது என்றால் அந்தப் பேச்சில் பேச்சோசை இல்லை என்பதாகும். இங்கே உள்ள மிகப் பெரிய குறைபாடு என்ன வென்றால் There is no speak redeem so.
மொழி என்ற சொல்லே மிக அற்புதமானது. மொழி Making Sound, making meaningfull sound, Radio has one way of doing, Television has another way of doing it, Book has diferent way of doing. Newspaper has diferent way of doing , Television 6ör 6T6d6oT 6îLuurålats6oo6Tuqub சுருக்கி முழுவிடயங்களையும் உள்ளடக்கும் வகையில் சேர்த்துத் தருவது. ஒரு BBC Corresponding சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? அதற்குள் உள்ள இலக்கியச் சுவையை அவதானித்துள்ளிர்களா? அதற்குள்ள மொழி நடையை அவதானித்தீர்களா. That is Language. அதற்குள் ஒரு தொனி இருக்கும், கேலி இருக்கும், அதற்குள் ஒரு சிரிப்பிருக்கும், அதற்குள் பல அர்த்தங்கள் இருக்கும், அதற்குள்ளே சிலேடை இருக்கும், ஒரு தெளிவு இருக்கும்.
எதற்காக பேசுவது, என்பது தெரிய வேண்டும். அறிவிப்பாளர் (3u8,695 BassT60T 585pétaf 96b6). You are they because you are introduce aprogrammer, அறிவிப்பாளர் ஏன் பேசுகிறார்? Television இல் தொகுப்பாளர் ஏன் பேச வேண்டும்? Radio இல் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருக்கிறார் என்றால் அதற்காக மொழி நிதானமாக, ஆழமானதாக இயல்பாக 6) J (3660iif(6b. It should be natural. natural gas 6 (5a5b LDITg5s 35T'tgds கொள்ள வேண்டும். Radio இல் எல்லாம் அறிவிப்பாளர் பேசுகின்ற போது *அறிவிப்பாளர் முக்கியமான ஆள் என்பது கேள்வி கேட்கும் போது தெரிய வேண்டும். தெரியும் முக்கியமானவன் பேசினால். ஊடகம் என்பது மிக முக்கியம். நாங்கள் இன்று உலகத்தைப் பார்ப்பது, படிப்பது எல்லாமே ஊடகத்தினுாடாகத்தான்.
மாணிக்கவாசகர் சொல்கின்றார் “ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் எம்பிரானே’ அந்த ஊடகம் வேறு, அகத்தினுடே என்று வரும். ஆனால் Meaning is same. நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் ஆடகச் சிர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் எம் உடையானே. That is Lunges. இது எங்கேயோ தூரத்தில் உள்ள விசயம் அல்ல. இது சொல்லி வருவதல்ல. இயல்பாக வரவேண்டும். மொழி தனியே நிற்பதல்ல. அது அனைத்தையும் சேர்த்து வருவது.

ஜீவநதி
வல்லை வெளி
வல்லை முனியப்பர் வடுவோர் போவோரை சில்லும் பகலும் காத்துநிற்பார் என்றாலும் ஒடு முனியப்பரல்ல - இன்று இரவு பகல் யாவினுக்கும் பல முனியப்பர்கள் பாதுகாப்புச் செய்திடுவர்.
முனியப்பர் டுன்பாக முன்பெல்லாம் இறங்கிடுவோர் இனியிப்போ தொடக்கத்திலும் இறுதியிலும் இறங்கிடுவர்.
திருவிழாக்கள் விசேஷங்கள் தேர் தீர்த்த நாட்களிலே நல்லைக்குமரனுக்கும் நம்சன்னதி முடுகனுக்கும் வல்லிபுர ஆழ்வார்க்கும் வந்துநிற்கும் வாகனம்போல் வல்லைவெளி முனியப்பர் வாசலிலும் நிற்பதென்ன வடுகின்ற "கொன்வோய்”க்கு வழிவிட்டு நிற்பவையாம்
நீண்ட நெடுநேரம நிற்பதனால் ରାର୍ଲଙ୍ଘର ଶେଷରାକ୍ଷୀ) தாண்டும் வரைக்கும் தாங்கொணத் துன்பங்கள்.
"ஒண்டுக்கு’ப் போவதற்கு ஒரமாய் ஒதுங்குதற்கும்
அஞ்சுகின்ற அவலத்தை ஆரிடத்தில் சொல்லியழ?
கைக்குழந்தை கதறியழக் bGL ởMiGDOM “ “(piņLITLD)” ” நிற்குமந்த வாகனத்துள் முலையில் தன்முலை திறப்பாள்
65Taiki 65T(501Disk Ti நொந்தவர் மயங்கிவிழ "கொன்வோய்” போய்டுடியத் தொண்ணுறு நிமிடங்கள். ஆவி பிரிந்ததனால் "அங்கிருந்து” அனுப்பப்படும் புதவுடல்களும் பொறுமைதனையிழந்து
തിയെറ്റ്] காரணத்தைக் கேட்கின்ற திேசயங்கள் நடந்தாலும் ஆச்சரியமில்லையம்மா.
வேலைக்குப் போனமகன் வீடுவரக் காணாமல் ஆளுக்காள் முழிசுகிறார்
சிவன் நிற்பான் வல்லையிலே.
ഖിത (nിulu வடுவோர் போவோரை அல்லும் பகலும் காத்துநிற்பார் காத்துநிற்பார்.
-கொற்றை பி.கிருஸ்ணானந்தன்
("ஜிவநதி" முதலாவது இதழில் (ஆடி - ஆவணி 2007) வடஅல்வை சின்னராஜன் எழுதிய வல்லைவெளி’ எனும் கவிதையின் தொடர்ச்சியாக இக்கவிதை
எழுதப்பட்டுள்ளது)

Page 6
ஜீவநதி 8
நவீன கலை இலக்கியர் புலப்பாடுகள்
(Sugmaffuusi sun.6gugnorm
"நடப்பு நிலவரங்களைப் புனைதல் முடிவுக்கு வந்துவிட்டது" (THE END OF THEREAL) என்ற குரலெழுகை கலை இலக்கியங்களைப் பொறுத் தவரை மிகைப்படுதலாக இருந்தாலும் அதனுள்ளே பிற்போக்குத்தனமான பொருண்மையும் செறிந்துள்ளது. எழுத்திலோ காண்பிய வடிவிலோ கலைவடிவம் மேலெழுகை கொள்ளும் பொழுது எளிமையானதும், மலினமானதுமான நேரிணைப்புக்கள் அழகியல் விசையை கீழ் விழுத்தி விடுதலும் சமகாலத்தின் நுணுகிய நோக்குதற்குரியவை.
இலத்திரனியற் தகவற் புரட்சியினால் நூலியம் (TEXT) எழுத்து வடிவாகவும் காட்சி வடிவமாகவும், ஒலிவடிவமாகவும் மிகவேகமாக, விரைந்த உருவமைப்பக்கட்டுமைக்கு உள்ளாக்கப்படுதலுடன், மிகப்பரந்த நுகள்வோர் தளங்களுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றது. இந்நிலையில் நடப்பியலுக்கும் தொடர்பாடல் படிமங்களுக்குமிடையேயுள்ள இணைப்புக்கள் பற்றிய ஆய்வுகள் இருபத்து ஓராம் நூற்றாண்டுகளில் எழுச்சி கொள்ளத் தொடங்கி யுள்ளன. நடப்பு நிலைவரங்களைக்காட்டிலும் மனத்தில் நிகழ்த்தப்படும்.
படிம வாக்கங்கள் அதிக செறிவையும் உளத்தாக்கங்களையும் ஏற்படுத்தவல்லவை. தொடர்பாடலின் விரைவும் விரிவாக்கமும் படிமங்களை விரைந்து ஆக்கம் செய்யும் “தொழிற்சாலைகளாக" எழுத்தாளர்களை மாற்றி வருகின்றது. ஒற்றை நிலைத் தெரிவிலிருந்து விடுபட்டு, பலவற்றிலிருந்து விரும்பியவற்றைத் தெரிவு செய்யும் கட்டற்ற நிலைக்கு வாசகர்களும், நுகள்ச்சியாளர்களும் மாற்றப்பட்டுவருகின்றார்கள். நூலியம் தொடர்பான “வாசகரின் மேலாண்மை” எழுச்சி கொண்டுள்ளமை போன்று கலைப் பொருள்களைத் தெரிவு செய்வதிலும் கலை நுகள்ச்சியாளரின் மேலாண்மை தூண்டிவிடப்படுகின்றது. இவற்றின் பின்னால் பல்தேசிய நிறுவனங்கள் புலப்படாக்கரங்களாக இருத்தலை பலர் உணர்ந்து கொள்வ தில்லை.
தெரிவுப் பெருக்கம் பன்முகமாகியும் விரிவடைந்து செல்லும் நிலையில் எழுத்தாளர்களினதும் கலைஞர்களினதும். எழுத்தாக்கம் மற்றும் கலையக்கற் செயற்பாடுகளின் விரிவு கேள்விக் குரிய தாக்கப்படுகின்றது. திறனாய்வாளர் பிரடிரிக் ஜேம்சன கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலே கூறிய கருத்து வருமாறு. "சமகாலத்து எழுத்தாளர்களும், கலைஞர்களும் பரவலானநிலையில் புதிய சொற்களையோ, நடைகளையோ கண்டுபிடிக்க முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். வரையறுக்கப்பட்ட ஒரு சில புத்தாக்கங்களை மட்டும் உருவாக்கக் கூடிய நிலைக்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். தனித்துவமான நடையியல்களும் வடிவங்களும் சொற்களும் கலையுலகிலும் எழுத்துலகிலும் ஏற்கனவே தவழவிடப்பட்டு விட்டன” இவ்வாறான ஓர் அவலமான புலக்காட்சியைக் கொண்டதன் விளைவாகவே பின்நவீனத்துவ மனநிலையில் அவர்கள் பழைய கலைத்தனிமங்களையும், புதியவற்றையும் ஒட்டுமை (HYBRID) செய்து அல்லது கலப்புச் செழுமை (BLEND) செய்து புத்தாக்கங்களை ஏற்படுத்தலாயினர். நவீனதமிழ் அரங்கில் இந்தச்செயற்பாடுகளே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஆக்கநிலையில் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள்

ஜீவநதி 9 முன்னெடுக்கும் வேளையில் இலத்திரனியல் தகவற் புரட்சியானது, தயாரிப்பு நிலையில் ஒட்டுமை வேலைகளையும், கலப்புச் செழுமை ஏற்பாடுகளையும் மேற் கொள்ளத் தொடங்கியுள்ளது. கார்டுன் எனப்படும் கேலிமை நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மகாபாரதம், இராமாயணம் போன்றவை விரைந்து விற்கப்படும் பண்டங்களாகமாற்றப்பட்டுள்ளன. கர்நாடக இசைக் கச்சேரி அல்லது பரதநாட்டியக்கச்சேரியின் பின்புலத்திலே காண்பியங்களை (Visuals) வைத்து நுகர்ச்சிக் கவர்ச்சியை ஏற்படுத்துதலும் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நவீன கலையுலகில் அதிக தீண்டலுக்கும் அதிக சீண்டல் விளையாட்டுக்கும் உட்படுத்தப்படும் கலையாக ஓவியமும் சிற்பமும் அமைந்துள்ளன. எழுத்துருக்கலையில் மேற்கொள்ளமுடியாத நெகிழ்ச்சியான சுயாதீனப்பாய்ச்சல்களுக்கு இக்கலைகள் இடமளிக்கின்றன. இந்தப்பாய்ச்சல் பழைமையான தொன்மச்சிற்பங்களிலும் சித்திரப் புனைவுகளிலும் ஏற்படத் தொடங்கிவிட்டன. காராம்பசு, மச்சகன்னி, செந்துருவம் போன்ற பல எடுத்துக் காட்டுக்களை இத் தொடர்பிலே குறிப்பிடமுடியும். கட்டற்ற முறையில் சமகாலத்தில் மேற்பாய்ச்சல் கொண்ட கலை அணுகுமுறைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடமுடியும்.
1. цjuu gБ666p6o easib (NEO EGO)
அருவ அழகியலை வெகுசன பண்பாட்டுடனும் பண்டங்களுடனும் இணைத்து இக்கலையாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பீட்டர் கலி, ஜெவ் கூன்ஸ், றொஸ் பிளிக்னர், முதலியோரது கலைப்படைப்புக்களை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக்குறிப்பிட முடியும்.
2. தூண்டலுருவாக்கம் (Simயlation)
குறிப்பிட்ட பொருளுக்கு ஒப்பானதாகச் செய்யும் கலையாக்கமாக இது அமைகின்றது. ஏனைய கலைவல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்ட வடிவங்களை அவ்வாறே பிரதி பண்ணுதல்,இப்பிரிவில் உள்ளடங்கும். ஒவியர் ரமணியின் சிற்ப ஓவிய நுட்பங்கள் யாழ்ப்பாணத்து இளம் கலைஞர்களினால் தூண்டலுருவாக்கத்துக்கு உட்படுத்தப்படுதல் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னோடியாக இருந்த ரமணிபயன்படுத்திய ஊடகத்தைக்கைவிட்டு வேறோர் ஊடகத்தின் வழியாக ரமணியின் நுட்பங்களைப் பிரதி செய்யும் செயற் பாடுகளும் இதில் அடங்கும். இதனைத் தமிழ்மரபில் “மீளக் கொலுப்பித்தல்' என்பர். ஆங்கிலக் கலைமரபில் இது "RESTAGE” எனப்படும். சிறிலிவினி, மைக் பிட்லோ, கிளென் பிறவுன் முதலியோரது ஆக்கங்கள் இந்தக் கலை நடையியலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
3. Él606ùLDITjöp (yp6760JÉl65ûlg560LD (Trans – Avant Garde)
இத்தகைய ஆக்கங்கள் நவீன செவ்வியற் கலை (Neo classical art) உடன் தொடர்புபட்டவையாய் அமைந்தன. கட்டடக்கலையிற் பழைய பொருட்களைப் பயன்படுத்தி விநோதமானதும், அலங்கார வேலைப் பாடுகளைக் கொண்ட ஆக்கங்களைச் செய்தலும் இப்பிரிவில் அடங்கும். பிரான்சிஸ்கோ கிளெமெந்தே, சன்றோசியா முதலியோரது கலையாக் கங்களை இதற்குச் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.
4. Liguu G66fluff liquus) (New expressionism)
செம்மை நீங்கிய (CRUDE) விரைந்த பெரிய வடிவில் அமைக்

Page 7
ஜீவநதி 10 கப்பட்ட ஜேர்மனியின் வரலாற்றையும் பண்பாட்டையும் உசாவிநிற்கின்ற, பார்ப்பதற்குப் பூர்வீக (Primitive) தொனிப்புடைய ஓவியப்படைப்புக்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். ஜேர்ச் பசிலிஸ் மற்றும் மார்க்கஸ் லப்பேட்ஸ் ஆகியோரின் ஆக்கங்கள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. 5. தெரிகை நல இணக்கவியல் (ECLECTISM) “உயர்’பண்பாட்டிலிருந்தும் “தாழ்பண்பாட்டிலிருந்தும் பொருத்தமான படிமங்களைத் தெரிவு செய்து இணைத்து இணக்கி பல நடையியல்களைக் கொண்டு உருவாக்கப்படும் கலைப் படைப்பாக இது அமைக்கப்படுகின்றது. டேவிட்சாலி, சிக்மர் பொல்கே, கிறிஸ்டின் கிளாஸ் முதலியோரின் ஆக்கங்கங்கள் இப்பிரிவில் அடங்கும்.
சிக்கலானதும் ஊடகக்கட்டு = மானத்தைப் பராமரிப்பதற்கான கனலாக்கங்களும் அதனை மறுதலித்து மேலெழும் கலையாக்கங்களும் என்றவாறான வெளிப்பாடுகள் தவிர்க்க முடியாத கால நிகழ்ச்சிகளாகும். djpg5 (upg56)T6sful U6 until 1960)6OT (Corrupt Capitalist culture) மறுதலித்துக் கலையாக்கங்கள் எழுகை கொள்ளும் பொழுது அவை விற்பனைப் பெருஞ்சந்தைகளிலிருந்து புறந்தள்ளப்படுதல் அவற்றுக்குரிய கலைப் பலமாக அமைகின்ற்து. விற்பனைப் பெருஞ்சந்தைகளிலிருந்து புறந்தள்ளப்படுதல் அவற்றுக்குரியபலமாக அமைகின்றது. விற்பனைப் பெருஞ்சந்தைகளுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் எழுத்தாளர்களுடன் சிறு சஞ்சிகைகளும் எமது சூழலில் உருவாக்கப் பெறுதல் குறிப்பிடத்தக்கது.
35560)6oui6ò 66031600Tébab(5 6ITébébébé56026o (Conceptual art) அகக் காட்சித்துாண்டற் கலை (insight art) முதலியவை பற்றிய சிந்தனைகளை மேலும் ஆழங்களை நோக்கி முன்னெடுக்க வேண்டியுள்ளது. சமூக உந்தலால் உருவாக்கப் பெற்ற தனிமனித ஆக்க மலர்ச்சியின் ஆற்றுகை பொருத்தமான கலை வெளிப்பாட்டு ஊடகங்கள் வழியாக வெளிப்பாடுகொள்ளும் நிலையில் "ஊடகத்தேடல்” அண்மைக்காலமாக ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளது.
கலைப்படைப்புக்கள் ஒவ்வொன்றும் தமக்குரிய தருக்கங்களை உள்ளடக்கி நிற்கின்றன. இன்னும் இந்தத் தருக்கத்தைக் கண்டறிய முடியாத திணறல் நிலையில் கலைப்படைப்புக்கள் இருப்பதனால் அழகியல் தொடர்பான சிக்கற்பாடுகள் இனனமும் தீர்க்கப்பட முடியாமல் இருக்கின்றன. இத் தருக்கம், படைப்பை உருவாக்கியோர், பலவகைப்பாடுகள் கொண்ட நுகர்ச்சியாளர். ஆகியோரை உள்ளடக்கியதாகவும், படைப்பை இணைத் தாகவும் அமைக்கப்படல் வேண்டும். இவ்வாறான கலைத்தருக்கத்தை உருவாக்குதல் மிகவும் கடினமான பணியாகும்? கலை தனக்குரிய நியாயப் பாடுகளுக்கு மட்டும் உரியதென்பது வாய்பாடுகளுக்கு உட்பட்ட சுருங்கி ஒடுங்கிய தருக்கமாக இருப்பதால் பலமான திறனாய்வுகளுக்கு இன்று வரை முகம் கொடுத்தவண்ணமுள்ளது. நடப்பியற் சமூகத்தைத்தழுவாத வகையில், ஆனால் தமக்குரிய "நிஜமான மாதிரிகளை" கலைப்படைப்புக்கள் 2-((56). Tdis85tb Gugb5 Gigby Lisu siteit. (The generation of a real without reality) தமது படிமத்தைத் தவிர வேறு எதனையும் பிரதிநிதித்துவப்படுத்தாத மிதக்கும் கட்டற்ற படிமங்கள் கலைப் படைப்புக்களிலே உருவாக்கப் படுகின்றன. தீவிர அருவலுவியங்களிலும் நவ தொலைக் காட்சியிலும் (Neo - TV) இவ்வகை ஆக்கங்கள் பரவலாக நிகழ்த்தப்படுகின்றன.

ஜீவநதி 11
படைப்பாற்றலை வெளிப்படுத்தி மகிழ்ச்சி கொள்ளல் என்ற மனிதரின் உளப்பாங்கில் ஒரு பெயர்ச்சி அல்லது நிலைமாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. படைப்பாற்றலால் தம்மைத்துலக்கிய மக்கள், தற்போது பொருள்களை நுகர்ச்சி செய்வதன் வாயிலாகத்தம்மை வெளிப்படுத்த முயல்வதாக பின்னைய மார்க்சிய வாதியாகிய டிபோர்ட் (Debord - 1931 1994) குறிப்பிட்டுள்ளார். அதாவது, புதிதாக ஒன்றை ஆக்குவதிலே நிறைவு கொண்டிருந்த மனித உள்ளம் இப்பொழுது புதிதாக ஒரு பொருளை நுகள்ச்சி கொள்வதில் உள நிறைவு பெறுமளவுக்கு நுகள்ச்சிச் சமூகம் தீவிரவளர்ச்சி கொண்டுள்ளது.
நுகர்ச்சிச் சமூகத்தின் வளர்ச்சியானது, பொருள் நுகர்ச்சியிலிருந்து படிமங்களை நுகர்ச்சி செய்யும் நிலை மேலோங்கத் தொடங்கியுள்ளது. பொருள்களை உற்பத்தி செய்வதிலும் பார்க்கப் படிமங்களை உற்பத்தி செய்தல் பொருளாதார நிலையிலும், அரசியல் நிலையிலும் பொருண்மை கொண்டதாகக் கருதப்படுகின்றது. இந்தப்புதிய வளர்ச்சிகள் கலை இலக்கிய ஆக்கங்களிலே தாக்க விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.
தகவல் தொழில் நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சூழலும் நவீன நுகர்ச்சிக்கவிநிலையும் கலை இலக்கிய ஆட்கள் மீது நேரடியான தாக்கங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. இலத்திரன் தொடர்பாடலை அடியொற்றிய புதிய சடங்குகள் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
"நூலாசிரியரின் இறப்பும் வாசகர்களின் பிறப்பும்” என்ற குரல் படைப்பாக்கவடிவங்கள் மீது செல்வாக்கை ஏற்படுத்துதல் போன்று "தொலைக்காட்சியின் திரையாக பார்வையாளரே மாறத் தொடங்கியுள்ளனர்” (With TV the viewer is the screen) 6T6óris LDisglass Mcluhan 1911-80) கருத்தும் கலையாக்கங்களிலே தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. நடைமுறையிலுள்ள நுகர்ச்சிச் சமூகத்தாற் கட்டுமை செய்யப் பெற்ற விழுமியங்களையே சமகால எழுத்தாக்கங்கள் சுளுவாக மீளுருவாக்கம் செய்கின்றன. சமூகத்தின் உறுத்தும் பிரச்சினைகள் ஆக்கமலர்ச்சிக்குள் கொண்டு வரப்படும் வேளைகளிலும் அந்த விழுமியங்களின் முலாம் பூசப்படுதல் உண்டு. இந்தச் செயற்பாடானது வாசகர்களை செயலூக்கம் குன்றிய (Passive) நிலைக்குத்தள்ளி வைத்துவிடுகின்றது. நுகர்ச்சியின் குணாம்சமே இதுதான். சிந்தனை நிலையில் வாசகர்களைக் குருடாக்கி விடுதலின் வெற்றியே நுகர்ச்சிச் சமூகத்தின் விழுமியமாக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன நிகழ விருக்கின்றது என்பதை வாசகரிடத்துத் தூண்டிவிடுதலே அழகியற் பரிமாணம் என்ற அந்தஸ்தைப் பெற்று விடுகின்றது. அதிலும் ஆண்களை முதன்மைப்படுத்திய சமூகத்தின் அழகியலே மேலோங்கல் பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (Kristeva, 1980)
ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட வாசிப்புப் பழக்கத்துக்கு உள்ளாக்கப் பெற்ற வாசகள் மீது சமூகநிலையில் சுமத்தப்பெற்ற மட்டுப்பாடுகளின் சுமையும் அழுத்தமும் ஆட்சிசெலுத்தப்படுதல் அழகியலாக்கப்படுகின்றது. இதிலிருந்து வாசகரைவிடுவிப்பதற்கு ஆதிக்கம் செலுத்துவோரால் ஓரங்கட்டப்பட்ட நூலியத்தின் (Marginal Text) தேவை உணரப்படுகின்றது. போலிகளால் உருவாக்கப்பட்ட வாசிப்பு மாயையில் இருந்து வாசகரை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. முழுநிறைவான கலைப்படைப்பு என்று கூறுதல் ஒருவிதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைதான். சமூகத்திலிருந்து கலைப்

Page 8
ஜீவநதி 12 படைப்பைப் பிரித்துப்பார்த்தலும் ஒருவித ஆக்கிரமிப்பு செயற்பாடுகொண்ட முன்னெடுப்பு. அழகு என்பது அதற்குமட்டுமுரிய பரிமாணங்களுடன் மட்டும் தொடர்பு கொண்டுள்ளதென்று வாதிடலும் அறிக்கையை ஆதிக்க நிலைக்குள்ளே தள்ளிவிடுகின்றது.
கலைப்படைப்பு ஓர் ஆக்க உற்பத்தி (Production) என்ற வடிவத்தை எடுக்கும் பொழுது பலரின் தலையீடுகளுக்கு அது உட்படுகின்றது. பதிப்பாளர், வடிவமைப்பாளர், விநியோகம் செய்வோர் போன்றோரின் தலை யீடுகள் வாசகர்களுக்கு அப்பாற்பட்ட வகையில் நிகழத் தொடங்கியுள்ளன. கலைப்படைப்பைத் தருவோர் தமக்குரிய படிமத்தை உருவாக்கிக் கொள்வதன் வாயிலாக தமது மேலாதிக்கத்தை வலுப்படுத்திக் கொள் கின்றனர். இந்த மேலாதிக்கப்பாடு அவரால் உருவாக்கப்படும் பின்னைய கலைப்படைப்புக்களை விற்பனை செய்வதற்குப்பயன்படுத்தப்படுகின்றது தமிழகச் சூழலில் திரைப்படத்துறையில் இந்த மேலாதிக்கம் எழுந்து காணப்படுமளவுக்கு நுகள்ச்சியாளரின் அறிகைமட்டம் பின் தள்ளப்பட்டுள்ளது. மத்திய தரத்தினரது வாழ்க்கை முறையையும் மனோபாவங் களையும் அடித்தளமக்கள் மீது திணிக்கும் மேலாதிக்கம் சமகால எழுத்தாளர்கள் பலரிடத்தும் 'காணப்படுகின்றது பொருளாலும் படிப்பாலும். மேலோங்கிய மத்தியதரவப்பினரது மன வெழுச்சிகள் கலை இலக்கிய வடிவங்களுடாக எல்லைப்படுத்தப்பட்டோர் மீது அல்லது ஓரங்கட்டப் பட்டவர்கள் மீது திணித்துவிடப்படுகின்றன. தமது அடையாளத்தை நிலைநிறுத்துவதில் ஏற்படும் பதகளிப்பே மத்திய தர வர்க்கத்தினரது கலைப் படைப்புக்களில் மேலோங்கியுள்ளன. ஆனால் எல்லைப் படுத்தப்பட்டோரது மன வெழுச்சிகள் நாளாந்த வாழ்க்கையை இழுத்துச் செல்வதோடு தொடர்பு பட்டுள்ளன. இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் மேற் கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் இந்த நடப்பியலை வெளிப்படுத்து கின்றன. யாழ்ப்பாணத்திற் குட்டியப் புலம் என்ற இடத்தில் மேற்கொள்ளப் பட்ட கள ஆய்வுகளும் இந்த முடிவுகளையே மீளவலியுறுத்துகின்றன.
பின்நவீனத்துவ இலக்கியங்கள் தேக்கமடையத் தொடங்கிய நிலையில், பின்னைய மனிதத்துவ இலக்கியம் (pOSt human literature) வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. நவீன நுகர்ச்சிக் கோலங்களும், தீவிர தொழில் நுட்பவளர்ச்சியும் பின்னைய மனிதத்துவ உருவாக்கத்தைமேலெழச் செய்துள்ளன. தொடர்பாற்கருவிகள் மனித உறுப்புக்களுடன் இணையத் தொடங்கியுள்ளன. மனித உறுப்புக்களும் இழையங்களும் விற்பனைப் பண்டங்களாக மாறிவருகின்றன. மனித உறுப்புக்களை வினைத்திறனுடன் செயற்படவைக்கும் இயலாக்குனர்கள் உடலினுள் வைக்கப்படுகின்றன. உருச்சிகிச்சை முறையால் முகத்தோற்றங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. மரபு அணுப் பொறியியல் தீவிர வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. ஆய்வுக் குழாய்க் குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் அனுகூலங்கள் சமூக அடுக்கின் மேலுயர்ந்தோருக்கே கிடைக்கப் பெறுகின்றன. மத்திய தர வகுப்பினரின் கலை இலக்கிய ஆக்கங்கள் இவ்வாறான பின் மனிதத்துவ வெளிப்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன. பின்மனிதத்துவத்தை விளக்குவதற்கு "பொறியுடல்" (Cyborg) என்ற எண்ணக்கரு பயன்படுத்தப்படுகின்றது. உடலும் பொறிகளும் கலந்து ஒட்டுமை செய்யப்படும் ஆக்கத்தைப் பொறியுடல் என்ற எண்ணக்கரு புலப்படுத்துகின்றது. பொறியுடல் என்ற எண்ணக்கரு மனிதர் மற்றும்

ஜீவநதி மனிதரற்ற பொருள் என்ற இருமைப்பாட்டைத் தகர்த்து விடுகின்றது. இயற்கை செயற்கை என்ற இருமைப்பாட்டை உடைத்து விடுகின்றது. பின்நவீனத்துவவாதிகள் குறிப்பிடும் எல்லைக்குழப்பங்கள் இங்கே நீக்கப்பட்டுவிடுகின்றன.
டொன்னாஹராவே என்பவர் 1985ஆம் ஆண்டில் தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் பொறியுடல் பற்றிய கொள்கைப்பிரகடனத்தை வெளியிட்டார். (harawayd, 1985Acyborgmanifesto) gj55, Lilya-L60Tib UT6) É606) Libólu பழைய எல்லைகளையும் அணுகு முறைகளையும் தகர்க்கத் தொடங்கி யுள்ளது. ஆண் ஆதிக்கச் சமூகத்தாற் செய்யப்பட்ட கட்டுமைகளை நிலைமாற்றம் செய்வதற்குரிய ஏற்புடைமைகள் தோற்றம் பெற்றுள்ளன. பின்னைய பால் நிலையுலகின் பிராணியாக பொறியுடல் நுட்பங்கள் பால் நிலைக்கட்டுமானங்களைத் தகர்த்து விடுவதற்குப் பிரயோகிக்கப்படத் தக்கவையாயிருத்தல் குறிப்பிடத்தக்கது.
உலகில் இன்று உருவாக்கப் பட்டுவரும் கணினி மென் பொருட்களிற் பெரும்பாலானவை ஆண் ஆதிக்கத்தினை நிலைநிறுத்தும் வகையிலே உருவாக்கப்பட்டு வருகின்றன. இதிலிருந்து மீள்வருதற்கும் பொறியுடல் தொழில் நுட்பத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது. மரபுவழியான "உடல் அழகியல்” என்ற எண்ணக்கருவும் பொறியுடலால் மாற்றம் பெறத் தொடங்கியுள்ளது.
நவீன கலை இலக்கிய ஆக்கங்களிலே தாக்கங்களை ஏற்படுத்தும் எண்ணக்கருவாக "இல்லா இடங்கள்” (Nonplaces) என்பதும் எடுத்தாளப் படுகின்றது. இந்த எண்ணக்கருவாக்கம் பிரெஞ்சு மானிடவியலாளராகிய மார்க் அகே (Marcauge) என்பவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீநிலை நவீனத்துவ சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு நபருக்குச் சொந்த மில்லாத இடங்களிலேதான் அவரது வாழ்க்கை கடந்து செல்கின்றது. இவ்வாறான "இல்லா இடங்களே” கதைப்புலங்களாக்கப்படுகின்றன.
இடங்களையும் அவற்றைப்பயன்படுத்துவோரையும் ஆக்கப்படிமங்கள் இணைப்புச் செய்கின்றன. இடம்பற்றிய அறிவிப்புக்களி, வழிகாட்டிச் செய்திகள், போக்குவரத்து குறியீடுகளி, வாகன ஓட்டுநர்களுக்கான அறிவிப்பு, வடிவங்கள் ஒளியூட்டப்படும் சிலைகளி, மற்றும் கட்டடங்கள் சுற்றுலா செல்வோருக்கு வழங்கப்படும் வழிகாட்டி ஏடுகள் முதலியவை இடம்பற்றிய வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றைப் படிமங்களாகி விடுகின்றன. இவற்றின் வழியே மனிதர் நகர்ந்து செல்வோராய் “இருத்தலை” இல்லா இடம் என்ற எண்ணக் கரு விளக்குகின்றது தனிநபரின் வாழ்க்கை அவருக்கு சொந்தமில்லா இடங்களில் நகர்ந்து செல்லலே ஒப்பீட்டளவில் மேலோங்கத் தொடங்கியுள்ளது. இல்லா இடங்களை ஊடறுத்து ஒவ்வொருவரும் தமது நாளாந்தச் செயற்பாடுகளுக்குரிய பாதைகளைத் தெரிவு செய்கின்றனர்.
மேலைப்புலக் காலனித்துவம் மீண்டெழுந்து உலகம் தழுவிய கவிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. காலனித்துவத்திலிருந்து உலகம் மீண்டெழுந்து விட்டது என்று கூறுதல் ஒரு தவறான புலக்காட்சியாகு தேசங்கள், இனக்குழுமங்கள், பண்பாடு கலை இலக்கியங்கள் முதலியவற்றை ஊடறுத்துப் பின்காலனியம் ஊடுருவத் தொடங்கியுள்ளது. இவற்றின் பின்னணியில் புதிய கருத்தாடல்களை முன்னெடுக்க வேண்டிய தேவை மேலெழத் தொடங்கியுள்ளது.

Page 9
§ඛu|bæ
கிலோ
14 62 eigslug.
தாட்சாயணி
"அக்கா வாங்கோக்கா. காத்திருந்தது.
அம்பது தானக் கா. ‘ஏறுங்கோ அக் கா,
வாங்கோ.” தீபனா திரும்பிப் பார்த்தாள். சனங்கள் நிரம்பிவழிய பஸ் சிரமப்பட்டு நகர முயற்சித்துக் கொண்டிருந்தது.
"கிலோ அம்பது. கிலோ அம்பது' தீபனாவை மீண்டும் அந்தக்குரல் இழுத்தது கறுத்துப்
பளபளத்துக் கொண்டிருந்த திராட்சைக் குவியல்கள் அவளை வாவென்றழைத்தன.
“அரைக்கிலோ போடப்பன்." பேர்சைத் திறந்து காசை 'எடுத்த படியே சொன்னாள் அவள். சொல்லும் போதே சின்னவளின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. சின்ன வளுக்கு ஏதேனும் வாங்கிக் கொண்டு போகவேண்டும். இல்லா விட்டால் அவள் முகம் தொங்கிப் போகும். ஆசை, ஆசையாய்க் காத் திருக்கும் அவளின் முகத்தை வாடவைக்கப் பிடிக்காமல் எப் போதும் ஏதேனும் அவளுக்கு வாங்கிக்கொண்டு போவதே வழமை. இன்று அவளுக்குத் திராட்சை. அவற்றைப் பார்க்கும் போது அவள் முகத்தில் தோன்றப் போகும் குதுாகலம் தீபனாவின் அன்றைய நாள் களைப்பைப் போக்கப் போது மானதாயிருக்கும். திராட்சைகளோடு அவள் திரும்பியபோது நேரம் நான்கு பதினைந்தை நெருங்கிக் கொண்டி ருந்தது. தரிருநெல்வேலியில் மூன்றரைக்கே பஸ்ஸைப் பிடித்தும் இங்குவர அரைமணி நேரம் ஆகி விட்டது. இனி வரணி வரை போக வேண்டும். ஏற்கனவே நின்றிருந்த மினிபஸ் சனங்களுடன் போய் விட்டிருக்க, வேறொரு மினிபஸ் இரண்டொரு மனிதர்களுடன் வெற்று ஆசனங்கள் நிறைய அவளுக்காகக்
ஏறுங்கோ. வழக்கமாய் வந்ததில் பழகிப்போன, கண்டக்டர் அவளை வரவேற்றான். இவள் ஏறி இருக் கையில் அமர்ந்தவுடன் மேலும் சனங்கள் மளமளவென்று ஏறினர். பஸ் வெகுவிரைவிலேயே முழு மையாய் நிரம்பிக்கொண்டது. நேரம் நான்கு இருபதை அண்மித்தது. சனங்கள் இன்னும் ஏறினார்கள். தீபனா ஜன்னலோரம் அமர்ந்தபடி யாரும் தெரிந்தவர்கள் ஏறு கின்றார்களா என அவதானித்துக் கொண்டிருந்தாள்
பஸ் ஸ்டார்ட் ஆகிவிட்ட போதும் இன்னும் நகரவில்லை. “ஏன் இன்னும் நிண்டு மிலாந்துறான். கொன் வேயிலை அம்பிட்டால் தெரியும். பஸ்ஸினுள் ஏறியவர்கள் முணுமுணுக் கத் தொடங் கரி விட்டார்கள். இவளுக்கும் ஒரு பயம் இருந்தது தான் முன்பும் இரண்டு மூன்று தடவை இப்படி "கொன்வே” யில் அகப்பட்டு வீடு போய்ச் சேர இரவு ஏழு மணியாகிவிட்டது. முகத்தை அழுமாப்போல வைத்துக் கொண்டு, வீட்டுக்கும், வாசலுக்கு மாய்த்திரியும் சின்னவளை நினைக கையில் மனம் பதறும். ஆனால் என்ன செய்ய முடியும்? வேலையை விட்டுவிட்டா போக முடியும்?
பஸ் கொஞ்சம் கொஞ்ச மாய் நகரத் தொடங்கியது.
கடைசி பஸ். கடைசி பஸ். என்ற தன் அஸ்திரத்தைப் பாவிக்க முனைந்தபடி கண்டக்டர் பையன் தன் திறமையைக் காட்டிக் கொண்டி ருந்தான்.
இப்படியே பஸ்கள் ஆறுத லாய்க் கிளம்பிப் போயிருப்பின் முன்பொருநாள் அவள் பஸ்ஸைத்

15
ஜீவநதி தவறவிட நேர்ந்திருக்காது. அன்று எவ்வளவு அவசரமாய் வந்தும் நாலரை ஆகிவிட்டது. இவள் வேர்க்க, விறுவிறுக்க திருநெல்வேலி பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடிவந்தும், கொடிகாம பஸ்ஸைக் காணமுடிய வில்லை. அப்போது நான்கு முப்பத்தி மூன்று தான். ஆனால் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்கமாட்டேன் என்பது போல் பஸ்கள் புறப்பட்டு விடு கின்றன. இவளுக்கு ஒருநிமிடம் தலை சுற்றிப் போனது. என்ன செய்யவதென்று தெரியாமல் திகை த்தவள், அப்பால் நின்று கொண்டி ருந்த ஓட்டோ ஒன்றைப் பிடித்து பஸ்ஸை பிடிக்கக்கூடிய தூரம் வரை வரச்சொல்லி, செம்மணி எல்லையில் பஸ் தெரிவதைக் கண்டு எட்டி விரட்டி, அன்று அவனுக்கு முந்நூறு ரூபா கொடுத்துப் பின் பஸ்ஸிலேறிப் போனதை எப்படி மறக்கமுடியும்? அவ்வாறு எத்தனையோ தடைகளை யெல்லாம் தாண்டி வீடு போய்ச் சேர்ந்தவளுக்கு இன்று பஸ் மெது வாகப் போவதையிட்டு அதிகம் கோபிக்கவும் முடியவில்லை. ஆனாலும் சில பெண்கள் பஸ் மெதுவாகப் போவதையிட்டு முணு முணுக்காமல் இல்லை.
ஆஸ் பத் திரிமுன் தாம தித்து, ஆட்களை ஏற்றிய மினிபஸ் அதற்குப்பிறகும் நின்று மிலாந்தாமல் வேகம் எடுத்தது. அப்பாடா என எண்ணியபடி இவள் இருக்கையில் வாகாகச் சாய்ந்து கொண்டாள். உள்ளே ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களும் மிக ரம்மியமாய் இருக்க இவள் சாதாரணமாயே அந்தப் பயணத்தை ரசித்தபடி யிருந்தாள். காதில் ஒலித்த பாட்டின் இசையை மீறி விசில் ஒலி கேட்ட போது, திடுக்குற்று நிமிர்ந்தது மனம். பஸ்ஸின் வேகம் சீராகக் குறைந்து, t: 60)ịD6)jff Lj6rỦ 60)6ỉù LDIT Lô Ljụplñ சந்தியிலுள்ள ஒழுங்கையொன்றில் புகுத்தி பின்வளமாய், உள்ளே
உள்ளே போய்க்கொண்டிருந்தான்.
“இனி, வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த மாதிரிதான்.”
உள்ளே பெரும்புகைச்சல் கிளம்பியது.
*சொல் லச் சொல் ல வைச்சுக் கொண்டிருந்தவன் இப்ப மறிச் சபிறகு, நாங்களெல் லோ நிக்கவேண்டிக்கிடக்கு.”
"இனி ஏழுமணிதான்.” இவ்வாறான குரல்கள் உள்ளே பல்கிப் பெருகின. நிறுத்தப்பட்ட பஸ்சின் ஓய்வை பயன்படுத்தி கொண்டக்டர் உள்ளே துருவிக் கொண்டு நுழைந்தான்.
"அக்கா, காசை எடுங்கோக்கா.” "இதுக்குமட்டும் முன்னாலை வரத் தெரியும். கொண்டு போய்ச் சேர்க்க மட்டும் தெரியாது. யாரோ ஒருத்தி கத்தினாள். “வரவிருப்பமில்லாட்டி இறங்குங்கோ அக்கா, சும்மா இதிலை ஏறி நிண்டு கொண்டு கத்தாதையுங்கோ.” பொறுமையை இழந்துபோன கொண் டக்டர் பதிலுக்குக் கத்தினான். தீபனா மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், பரிவாய் சனங்களை ஏறிட்டாளர். ஒவ்வொரு வருக்கும் எவ்வளவு பிரச்சினைகள். வேளைக்குப் போகமுடியாமல் போய் விட்ட ஆதங்கத்தில் அந்தப் பெண்கள் கத்துகிறார்கள். உண் மையில் பயணம் தடைப்பட யார் காரணமோ அவர்கள் மீதல் கோபத்தைக் காட்டமுடியாது. கோபத்தைக் காட்டுவதற்கு அவர் களுக்குக் கிடைத்தது, அந்த அப்பாவி கண்டக்டர். அவன் செய்த ஒரேதப்பு சற்றே ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக பஸ் சை ஒட்ட வைத்ததுதான். மற்றும்படி அவனும் இவர்களோடு தான் அலைந்து உரிய இடத்தில் பஸ்சை ஒப்படைத்து எத்தனை மணிக்குத் தனது வீட்டை அடையப்போகிறானோ..? அது எல்லாம் யோசிப்பது யார்? இவளும்

Page 10
ஜீவநதி எப்படியும் வேளைக்குப் போயே ஆகவேண்டும். கொடிகாமத்திற்கு அப்பால் எப்படிப் போவதென்று தெரியவில்லை. ஏழு மணியானால் ஊரடங்கு ஆகிவிடும். கொடிகா மத்தில் சைக் கிளை எடுத்துக் கொண்டு அப்பாலுள்ள முகாம்க ளைக் கடந்து எப்படிப்போக முடியும்?
தீபனாவின் முகம் கலவரத் தினால் சுருண்டுபோனது. விட மாட்டானா? விடமாட்டானா..? என உள்ளே ஏங்கிற்று மனம். எட்டி எட்டிப் பார்த்த பார்வைக்குள் எந்த ஒரு வாகன அணியுமே சிக்க வில்லை. இரண்டு மூன்று சீருடைகள் விசிலை வாயில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் நகர்ந்து கொண்டி ருந்தன. கடவுளே, கடவுளே என நேர்ந்தபடி அவள் கண்களை மூடிக் காத்திருந்தாள். நேரம் துளித் துளியாய் மிகக் கடினமாய் நகர்ந்து கொண்டிருந்தது. ஒற்றை ஒற்றை யாய் இராணுவ வாகனச் சத்தங்கள் கேட்டன. எட்டி எட்டிப் பார்த்தாள். நிமிடங்களை விழுங்கிக் கொண்டு வாகனங்கள் பறந்தன. இவள் எச்சிலை விழுங்கிக் கொண்டு ஒவ்வொரு நிமிடத்தையும் கனத்த யுகங்களாகக் கடத்தினாள். கைத் தொலைபேசி மூலம் வீட்டுக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். சற்றுப் பொறுத்துச் சொல்லிக் கொள்ளலாம். இப்போ திருந்தே ஏன் கணவனையும் , குழந்தைகளையும் சங்கடத்திற்கு உள்ளாக்குவான் என்று தோன்றப் பேசாதிருந்தாள். பஸ்ஸிற்குள் அடிக்கடி கைத் தொலைபேசிகளின் சிணுங்கல்கள் கேட்டன. எல்லாரும் தத்தம் அவலத்தை வீட்டுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். என்ன நாடு இது..? விடிகாலை ஏழு மணிக்குப் புறப்பட்டால் இரவு எட்டு மணி ஆகியும் வீட்டுக்குப் போய்ச் சேர்வோமா என்று தெரியாத நிலை. என்னதான் செய்வது, இந்த நாட்டில்.
16 வீட்டிலும் இல்லாமல் அலுவலகத் திலும் இல்லாமல் . வெறும் தெருவில் தானே பாதிப்பொழுது கழிகிறது.
ஏழுமனிக்கு ஊரடங்கு போடுகிறார்கள்தானே. அதன் பின் இந்த வாகன அணி போக முடியாதா? அல்லது சற்றுப்பொறுத்து பஸ்கள் புறப்பட்டயின் ஐந்தரைக்குப் பிறகு போனால் தான் என்ன.? இப்படி நாலரைக்கு உழைத்துக்களைத்து, வீட்டுக்குப்போகும் மக்கள் மீது இப்படி ஈவிரக்கமற்ற அழுத்தத்தைப் பிரயோகிப்பது சரிதானா..? ஒருபக்கம் வாகன அணி. இன்னொரு பக்கம் ஊரடங்கு. இரண்டு பக்கத்தாலும் நசித்தால் இந்த சனங்கள் என்னதான் செய்வது..?
தரீபனாவின் மனதில் பொங்கியெழுந்த கேள்விகள் தான் எல்லார் மனதிலும் இருந்தன. எனினும் கேள்வி கேட்கின்ற சூழலிலா அவர்கள் இருக் கின்றார்கள்.
ஒற்றை ஒற்றையாய் கேட்ட வாகன இரைச்சல் சற்றே அடங்கி ஒய்ந்தது. வெளியே இறங்கி நின்றி ருந்த சனங்கள் ஒவ்வொருவராய் உள்ளேறினர். நேரம் ஐந்தே முக்காலைக் காட்டியது. “கடவுளே விட்டுவிட்டானென்றால் எவ்வளவு நல்லது’ மனம் பிரார்த்தனை பண்ணியது. ஏதோ நினைத்தவன் போல் வீதியில் நின்றவன் விசில் ஊத பிறகும் கீழே நின்றவர்கள் தபதபவென்று உள்ளே ஏறினர். கண்டக்டர் அவசர அவசரமாய் சனங்களை உள்ளேற்றி “ரைட் சொன்னான். ட்றைவருக்கு எங்கி ருந்து தான் அந்த வேகம் வந்ததோ தெரியாது. இவ்வளவு நேரமும் புதி தாய் பஸ் ஓட்டப் போகிறது போல் ஓடிக்கொண்டிருந்த ட்றைவர் இப் போது கைதேர்ந்த வாகன ஓட்டுன ராய் தன் திறமையைக் காட்டினான். ஏதோ சின் னவளின்

ஜீவநதி
17
முகத்திலாவது சந்தோஷத்தைப் பார்க்கலாம் எனும் எண்ணம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது. இனி மாம்பழம் சந்தியிலிருந்து கொடிகாமம் போகும்வரை எங்குமே மறிக்காதிருக்க வேண்டுமே என மனம் மன்றாடிக் கொண்டது எதையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாமலல்லாவா இருக்கிறது. வேகமாகச் சென்ற பஸ் செம் மணியை நெருங்கியபோது நல்லூ ருக்குச் செல்லும் கிளைப் பாதை யில் ஏற்கனவே பஸ்கள் வரிசையாய் மறிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. நிறைய சனங்கள் மோட்டார் சைக் கிள்களோடும் சைக் கிள் களோடும் மறிக்கப்பட்டிருந்தனர். சிலவேளை இந்த வழியால் செல்லும் வாகனங்களை விட்டபின் அவர்களுக் குரிய தடைகள் அகற்றப்படக்கூடும். மனம் அந்தரித்துக் கொண்டிருந்த போது இவர்களின் பஸ்ஸையும் சைகைகாட்டி அந்தப்பாதைக்குள் பின்வளமாக அனுப்பினான் ஒரு சிப்பாய். இருப்புக் கொள்ளாமல் தவித்தபோது பஸ்ஸின் என்ஜினும் நிறுத்தப்பட்டது. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காற்றில் பறந்தது.
“சீ. என்ன வாழ்க்கை இது.?”
நேரம் ஆறுமணி ஆயிற்று. வெட்டவெளிக்காற்று குளிராகி ஐன்னலால் இவள் முகத்தை அடித்தது. மழைகால இருட்டு எங்கும் பரவத்தொடங்கியது. இவள் கண்களினூடு கண்ணி கரகரவென்று வழிந்தது. ஏதோ ஒற்றையடிக் காட்டுப்பாதையில் தனித்து வழி தவறியது போல் உணர்வு. தனித்து வழி தவறவில்லை. எல்லோரும் சேர்ந்து வழிதவறியிருக்கிறோம் என்பது போல் ஜன்னலுக்கு வெளியே கும்பலாய் சனங்கள் தெரிந்தார்கள். எத்தனை சைக்கிள் கள். எத்தனை மோட்டார் சைக்கிள்
கள். மோட்டார் சைக்கிள்களில் இரண்டு மூன்று சிறுவர்கள் கூட நெருக்கியடித்து இருந்தார்கள் குழந்தைகளைக் கொண்டு வந்த வர்கள் எல்லாரும் இந்த இருட்டில் எப்படிப் போகப் போகிறார்கள். ஆறுமணி ஆகிவிட்டதால் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும். இன்னும் சற்று நேரத்தில் அவன் விசில் ஊதியதும் இந்த மழை இருட்டில் பீறிட்டபடி பறக்கப் போகின்ற இந்த மோட்டார் சைக் கிள்கள, மினிபஸ்கள் ஒன்றோ டொன்று மோதாமல் இருக்க வேண்டுமே வீட்டையும் நாட்டையும் நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வந்தது. யாரும் பார்த்து விடுவார்கள் என்ற உணர்வு ன்துவு மின்றிக் கண்ணி விட்டாளர். மழை மம்மல் யாருக் குத் தெரியப் போகிறது. அவள் கண்ணிர் வழிய வழியக் கைக்குட்டையால் ஒற்றி யெடுத்தபடி அவள் ஐன்னல் வழியே வெளியே வெறித்தாளர். எந்த ஒரு வாகனமும் வருவதற்கான அறிகுறி களைக் காணவில்லை. தொலை பேசியை எடுத்து செம்மணியடியில் நிற்பதாய் கணவனுக்குத் தகவல் சொன்னாள். சின்னவளைப் பற்றிக் கேட்டால் அழுகை வந்துவிடும். அவளும் கேட்கவில்லை. அவனும் அவளைப் பற்றி எதுவும் சொல்ல வில்லை. இவளால் இந்த இரவு நிச்சயம் வீட்டுக்குப் போக முடியாது. போனமுறை மாதிரி கொடிகாமத்தில் சைக்கிள் விடும் வீட்டில் தங்கிவிட்டு, காலை ஐந்தரைக்கு எழும்பி வீட்டுக்குப் போய் அதன்பின் குடும்பத்துக்கான கடமைகளைக் கவனித்து திரும்பவும் அவசரப்பட்டு எட்டுமணிக்காவது வீட்டைவிட்டுக் கிளம்பவேண்டும். வீட்டில் வேளைக்கு வெளிக்கிட வேண்டியது தானே எனும் கணவனுக்கு மூன்றரைக்கு முன் எப்படி வெளிக்கிடுவது என்று சொல்லிப் புரியவைக்கமுடியும்.

Page 11
ஜீவநதி கையெழுத்து மெஷினுக்கு முன் என்ன நியாயத்தை எப்படி வெளிப் படுத்த முடியும், வேளைக்கு அலு வலகத்திற்கு வரவேண்டும் என வலியுறுத்தும் அதிகாரிகள் யாரும் எத்தனை மணிக்கு வீடு போய்ச் சேர்ந்தாய் என்று கேட்பதில்லையே!
கண் ணிரை அடக் கலிக் கொண்டு வெளியே பார்த்த போது சைக்கிளில் போன இரு சிப்பாய்கள் மறிக்கப்பட்டவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு போனார்கள. இவர்களுக்கு எப்படிப் பதிலுக்குச் சிரிப்பது? கைகால்களை இறுகக் கட்டிவிட்டுச் சிரி என்று சொல்வது
போல் அல்லவா இருக்கிறது boo)6)60)LD. “நாளைக் கு நீ சுடுதண் ணிப்
போத்தில் கொண்டா மச்சான். நான் பிஸ்கட் கொண்டாறன்.” யாரோ விடலைகளின் பேச்சு இவளை நிமிர்ந்து பார்க்கவைத்தது. உள்ளே பஸ் ஸலின் லைட் மங்கலாக ஒளிர்ந்தது. இரு பையன்கள் இவளிருந்த சீட்டிற்கு அருகில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள். இவளது கண் களில் வழிந்த கண்ணிரை அவர்கள் கண்டார் களோ..? அது தான் அவளின் கவனத்தைத் திசைதிருப்பி அவளது முகத்தை மலரச்செய்யும் விருப்ப மோ? அவள் முகத்தை அழுத்தித் துடைத்தாள். தொடர்ந்த அவர்களின் நகைச்சுவைப் பேச்சுக்களிடையே முகத்திற்குப் புன்னகையைப் பூசிக் கொண்டாள்.
பிரச்சினைக்குள்ளும் நகைச் சுவை பேசுகின்ற அவர்களால் அந்தச் சூழலின் இறுக்கம் சற்றே தளர்ந்தது. அப்பாடி என மூச்சுவிட முடிந்தது. “நாளைக்கு ரேடியோவும் கொண்டரவேணும், பாட்டுக்கேக்க.” "கச்சான் கொண்டந்தாலும் வறுத்துச் சாப்பிடலாம்.” லேசாய்ப் போன மனத்தை ஒரு பெருமூச்சோடு தாங்கிக்கொண்டான்.
8
நேரம் ஏழுமணியாகிற்று. இருட்டு கனமாகவே திரண்டு. எந்த ஒரு வாகனமும் போகவில்லை. வீதியில் நின்றவன் விசிலை ஊதினான்.
“இப்பதான் விசிலுாதிப் பழகிறான்.” எரிச்சல்தாளாமால் ஒரு குரல் முணுமுணுத்தது.
'அப் பாடி இப் பவாவது எல்லா வாகனமும் முகமாலைக்குப் போய்ச் சேர்ந்துதே.” “அதெல்லாம் பத்திரமாப் போய்ச் சேர்ந்தபடியாத்தானை எங்களை விடுபடுது.”
அவர்களின் பேச்சுக்குக் காத்திராமல் பஸ் சர்ரென்று சீறிக் கொண்டு பாய்ந்தது. நாவற்குழி வளைவில் வெள்ளை ஒளிப்புள்ளி களாய் மோட்டர்சைக்கிள்களும், மினிபஸ் களும் வரிசையாயப் அசைவது தெரிந்தது. சாதாரண வேளையெனில் அது ஒரு அழகான காட்சியாய் மனதில் பதிந்திருக்கும். இப்போதோ எந்தவொரு விபத்தும் நேராதிருக்க வேண்டும் என்றே எண்ணத்தோன்றியது
வீதிகளிலெல்லாம் லாம்பு ஏந்தியபடி ஒவ்வொருவரும் தமது சொந்தங்களுக்காகக் காத்து இருந்தனர். இவளுக்கு.? கொடிகா மத்தில் கடைசி ஆட்களில் இவளும் ஒருத்தியாய் இறங்கிய போது மனம் கனத்தது. பைக் குள் இருந்த திராட்சையும் கூட. இப்போது பளிச் சென்றிருக்கின்ற அந்தத் திராட்சைகள் தான் சின்னவளைப் பரவசப்படுத்தும். நாளை வாடி உலர்ந்த திராட்சைகளை நித்திரைப் பாயில் அவளை உலுக்கி எழுப்பிக் கொடுக்கிற போது அவளது முகம் மலரவா செய்யும். கண்களில் மீண்டும் நீர் வந்து விடும் போல் தோன்றவே மனதைக் கல்லாக் கியபடி நடக்கத் தொடங்கினாள் g5 601st.

ஜீவநதி 19
ஏனதுை அதிரவைக்குக் அன்னைய சிறுகதைகள்
செங்கை ஆழியான் க.குணராசா
யாழ். இலக்கிய வட்டத்தின் பிதாமகள் அமரர் இரசிகமணி கனக. செந்திநாதன் ஆவார். ஈழத்தின் புனைகதைத் துறையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான அவர் யாழ். இலக்கிய வட்டத்தை நிறுவி, அக்காலத்தில் எம்போன்ற இளம் படைப்பாளிகளின் படைப்பாற்றலை உலகறிய வைத்த பெருமகனார். அவருக்கு இலக்கிய உலகில் எதிரிகள் என்று எவருமில்லை. மாற்றுக்கருத்துடையவர்களையும் அவர்களது ஆற்றலைப் போற்றி மதிக்கும் பண்பினர். பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, டானியல், சில்லையூர்ச் செல்வராசன், டொமினிக் ஜீவா என அனைவரையும் அன்புக்குரிய ஆற்றல் வாய்ந்தவர்களென அவர் மதித்திருந்தார். நான் தமிழ் வாத்தி. ஆனால் கைலாசபதி இலக்கியத்தில் பேராசிரியன். பேரறிஞன். என்பார். ஆனால் பேராசிரியருக்கு நிகராக நவீன இலக்கியத்தில் கனக. செந்திநாதன் ஓர் இலக்கிய சக்தியாக இயங்கினார் என்பது பெரும் உண்மை. அவ்வாறான இரசிகமணி கனக. செந்திநாதனின் இலக்கியப்பணியை என்றும் நினைவு கூரும் முகமாக உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பே ‘கனகசெந் திகதாவிருது’ ஆகும். ஈழத்து எழுத்தாளர்களால் படைக்கப்படும் ஈழத்துச்சிறுகதை இலக்கியத்துக்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகளை இனங்கண்டு அவற்றினை மெச்சி, இரசிகமணி கனக. செந்திநாதனின் பெயரால் காலத்துக்குக் காலம் சிறு பணப்பரிசிலும் சான்றிதழும் வழங்குவதென யாழ். இலக்கிய வட்டம் முடிவு செய்துள்ளது. கனக செந்திநாதன் கதாவிருது பெற்ற சிறுகதை என மெச்சப்படுவது அச்சிறுகதைக்கும் படைப்பாளிக்கும் கிடைக்கும் GLI(560)LDu T(65b.
யாழ். இலக்கியவட்டம் தனது இலக்கியத் துறைகளை விரிவு படுத்தி வந்திருக்கின்றது. வருடாவருடம் இலங்கை இலக்கியப் பேரவை' என்ற அமைப்பின் மூலம் அந்தந்த ஆண்டில் வெளிவந்த ஆய்வு, நாவல், சிறுகதை, கவிதை, காவியம், சிறுவர் நூல், நாடகம், சமUம் முதலான துறைசார் சிறந்த நூல்களுக்கு விருதும் பரிசில்களும் வழங்கி வருகின்றது. சிறந்த ஆய்வு நூலொன்றுக்கு வருடாவருடம் ‘சம்பந்தர் விருது’ வழங்கிக் கெளரவிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. மிகச்சிறந்த கட்டுரையியல் நூலுக்கு ‘அ.பொ.செல்லையா விருது' என்றொரு கெளரவத்தை வழங்கி வருகின்றது. மிகச்சிறந்த சிறுகதை நூலுக்கு “நாவேந்தன் விருது’ வழங்கிக் கெளரவிக்கவுள்ளது. இவற்றோடு அவ்வப்போது வெளிவருகின்ற சிறந்த சிறுகதைகளுக்கு 'கணகசெந்தி கதாவிருது’ வழங்கி வருகின்றது. கதாவிருது வழங்கும் பணி ஈழத்துக்குப் புதிய சங்கதியன்று. ஏற்கனவே இப்பணியில் 'தகவம்' என்ற அமைப்பு ஈடுபட்டு வந்துள்ளது. அமரர் வ.இராசையாவும் வேல் அமுதனும் இணைந்து ஆரம்பத்தில் இந்த இலக்கியப் பணியைச் செய்து வந்தார்கள். பின்னர் தகவம் வ.இராசையா தனித்து இப்பணியைச் செய்தார். அவ்வாறு மாதாமாதம் தெரிவு செய்து பரிசில் வழங்கிய சிறுகதைகளைத் தொகுத்து இரண்டு

Page 12
ஜீவநதி 20 தொகுதிகளாக வெளியிட்டார்கள். அவ்வகையில் கனகசெந்திநாதன் கதாவிருதுபெற்ற பதினேழு சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட மீரா வெளியீட்டினர் முன்வந்துள்ளனர்.
அண்மைக்காலத்தில் ஏராளமான சிறுகதைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வாராந்தம் வெளிவருகின்றன. மரத்தினடியில் உதிர்ந்து விழுகின்ற சருகுகள் போல ஏராளமாக எண்ணிக்கையில் இருந்தாலும் அவற்றிடையே ஒன்றிரண்டு கனிந்த பழங்களும் காணப்படுகின்றன. கனகசெந்தி கதாவிருதுக்குத் தெரிவான அப்படைப்புகளில் புதியவர்களால் படைக்கப்பட்டவை வாசிப்பவர் நெஞ்சங்களை அதிர வைப்பனவாக விளங்குகின்றன. சிறுகதைகளைப் படைத்து அனுபவப்பட்டவர்களின் படைப்புகள் புதிய பரிமாணத்தைத் தருவனவாக அமைந்து விடுகின்றன. தெரிவாகிய பதினேழு சிறுகதைகளில் ஏழு நிறையவே எழுதாதவர்களின் சிறுகதைகளாகவுள்ளன. ஜூன் மாதம் தொட்டு மே வரையிலான கால கட்டத்தில் வெளிவந்த சிறுகதைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கனகசெந்தி கதாவிருதிற்கு உகந்தனவாக எம்.எஸ்.அமானுல்லா, புலோலியூர் அ. இரத்தினவேலோன், ஏ.எஸ். உபைதுல்லா, சி.கதிர்காமநாதன் ஆகிய நால்வரின் சிறுகதைகள் முதன் முறை 2003 - 2004இல் கனக செந்தி கதாவிருதுக்குத் தெரிவாகின. அடுத்த தடவை ஜூனைதா ஷெரிப், செம்பியன் செல்வன், சாந்தன், நீர்வைப் பொன்னையன், குந்தவை, சட்டநாதன் ஆகிய அறுவரின் சிறுகதைகள் கனக செந்திகதா விருதுக்குத் தெரிவாகின. மூன்றாம் முறைத் தெரிவில் செங்கை ஆழியான், பண்டா பாலா, திருமலை வீ.என், சந்திரகாந்தி, புலோலியூர் அ.இரத்தினவேலோன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், கனகசபை தேவகடாட்சம், பவானி தேவதாஸ் ஆகிய எழுவரின் சிறுகதைகள் தெரிவாகியுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளும் ஒவ்வொரு வகையின. வெவ்வேறு சுவையின. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் கலாநேர்த்தியிலும் நல்ல சிறுகதைக்குரிய பண்புகளைக் கொண்டுள்ளன. ஈழத்துச்சிறுகதைத் துறைக்குக் கூட்டு மொத்தமாகப் பெருமை சேர்ப்பன.
எம்.என்.அமானுல்லாவின் 'கருவேலங்காடுகள் தாண்டி. ஓர் அற்புதமான கதையாக அமைந்துள்ளது. தமிழருக்கும் முஸ்லீம்களுக்கு மிடையில் நிலவிய தாய் பிள்ளை உறவின் மேன்மையை இச்சிறுகதையும், ஏ.எஸ்.உ பைதுல்லாவின் ஜலசமாதி சிறுகதையும் பெருமிதத்தோடு நினைவு கூர வைக்கின்றன. “கருவேலங்காடுகள்’ தாண்டி சிறுகதையில் தேவன் ஐயாவுக்கும் ஆதமுக்கு இடையிலான நட்பும் ஆதமின் குடும்பத்தின் மீது தேவன் ஐயா வைக்கும் பாசமும் ஒருகணம் உளம் சிலிர்க்க வைக்கின்றன. இச்சிறுகதையின் வெற்றி அமானுல்லாவின் கலாபூர்வமான உரை நடையாகும். இயல்பாகவே சிறுகதைச் சம்பவங்களோடும் இயற்கையோடும் இணையும் மொழியைக் கையாளும் இலாவகமும், சிறுகதையைக் கலாபூர்வமாக எடுத்துச் சொல்லும் தேர்ந்தெடுத்த சொற்களும் அமானுல்லாவின் தனிச்சிறப்புகளாகவுள்ளன. பங்குனி வெயில் உச்சியைத் தீக்கத் தொடங்கியது' எனச் சிறுகதையை ஆரம்பிக்கும்போதே படைப்பாசிரியனின் ஆற்றல் புலப்படத்தொடங்குகிறது. நான் வவுனியாவுக்குப் போறதெண்டு யார் சொன்னது, நான் ஆரியாட ஊருக்குப்போறன். தலைக்கச்சானுக்கு மழையடிக்க முந்தி அவட வீட்டைத் திருத்திக் கொடுக்க வேண்டாமா?’ என்று முடிக்கும் போது நாம் நிமிர்ந்து உட்காருகின்றோம்.

ஜீவநதி 21 முஸ்லீம்களும் தமிழரும் எவ்வளவு அந்நியோன்யமாக வாழ்ந்தார்கள் என்பதை இரை மீட்க நீண்டதொரு பெரு மூச்சு வெளிப்படுகின்றது. காலத்தேவையை உணர்த்தும் கதை. ஏ.எஸ். உபைதுல்லாவின் ஜலசமாதி” என்றசீறுகதையும் முன்னைய சிறுகதைக்குச் சோடை போனதன்று.
புலோலியூர் அ.இரத்தினவேலோனின் இரண்டு சிறுகதைகள் கணக செந்தி கதாவிருதுக்குத் தெரிவாகியுள்ளன. சிறுகதைகளின் பாத்திர வளர்ப்பில் இரத்தினவேலோன் தனிக்கவனம் செலுத்துபவர். "வேட்டை என்ற சிறுகதையில் அம்மனின் வேட்டைத்திருவிழாவையும் மனோன்மணி வெளிநாட்டில் எடுக்கும் தீர்மானத்தையும் இணைத்து நல்லதொரு சிறுகதையை ஆக்கியுள்ளார். பாரம்பரியமான சமூக அடக்குமுறைக்கு பணிந்து போகாமல் அவள் எடுக்கும் தீர்மானம் சமூகக் கட்டவிழ்ப்பைச் சுட்டும் அற்புதமான பெண்ணியச் சிறுகதையாகவுள்ளது.ஆசிரியர் “நெஞ்சாங்கூட்டு நினைவுகள்’ ஒரு படைப்பாக்க புது வடிவமாகவுள்ளது. சி கதிர்காமநாதனின் "வீடு' என்ற சிறுகதை மனதில் ஏற்படுத்துகின்ற காயம் ஆழமாக விழுகின்றது.
ஜூனைதா ஷெரிப்பின் 'முள்ளை முள்ளால்' என்ற சிறுகதை, சம்சுதீனின் மன உணர்வுகளை மிக இயல்பாகச் சித்திரிக்கின்றது. தனது வளவிலுள்ள ஒரு பலா மரத்தைத் தறிப்பதற்கு அவர் படுகின்ற அவஸ்தைப் போராட்டங்களையும் இறுதியில் எடுக்கும் இயல்பான முடிவையும் இச் சிறுகதை நன்கு எளிமையான நடையில் சித்திரிக்கின்றது. செம்பியன் செல்வனின் ‘மாயாவதியின் கனவு’ என்ற சிறுகதை அவருக்கேயுரித்தான சிறப்பியல்புகளை உள்ளடக்கியுள்ளது. தெற்கிலிருந்து வடக்கே வரும் ஒரு சிங்களப் பெண்ணின் பார்வையில் வடக்கின் அவலங்களை அச்சிறுகதையில் அவர் சுட்டியுள்ளார். வாக்கியக் கட்டமைப்புகளைப் பொறுத்தளவில் முழுமை எட்டாது, உணர்ச்சி முடிவுடன் முறித்துவிடும் பண்பை இச்சிறுகதையிலும் காணலாம். சாந்தனின் 'மீள்தல் என்ற சிறுகதை அவர் படைக்கின்ற கருத்துக்கு முதன்மை தரும் சிறுகதைகளிலிருந்து வேறுபட்டது. முழுநாளையும் தன் மோட்டார் சயிக்கில் திருத்தலில் கழித்துவிட்டு எரிச்சலுடன் வரும் ஆசிரியரின் மன உணர்வுகளை இளம் பிள்ளைகள் அமைதிப்படுத்தும் பாங்கு மிகச்சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளது.
நீர்வைப் பொன்னையன் ஈழத்தின் மூத்த படைப்பாளி. வழமையாக அவரது சிறுகதைகள் சுட்டுகின்ற அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் அவலக்குரலாக ஒலிக்காமல், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர் கொள்ளும் ஓர் இளம் பெண்ணின் மனவுறுதியை “ஜென்மம்” சிறுகதை சித்திரித்துள்ளது. காலச் சூழலை இச்சிறுகதையில் கொண்டு வந்துள்ளார். சாதியத்தை மீறிய காதல் கலியாணமும், கடத்திக் கொண்டு போய் கொலையுண்டிறந்த கணவனி, இழப்பும் கோகிலாவைச் சோர்வடையவிடாமல் வாழ்க்கையைச் சவாலாக எடுக்க வைக்கும் இந்திரா ஆகிய இரண்டு பாத்திரங்களை வைத்து இச்சிறுகதையை நன்கு படைத்துள்ளார் குந்தவையின் நாடும் நம் மக்களும்' என்ற சிறுகதையின் நிறைவு நம்மை எழுந்தமர வைக்கின்றது. இச்சிறுகதையின் ஆரம்பச்சித்திரிப்புகள் நம் மனதில் பதித்த முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வைக்கின்றது. சட்டநாதனின் 'பொழுது என்ற சிறுகதையில் ரகு என்ற சிறுவனையும் மதி என்ற சிறுமியையும் ரதி என்ற இளம் பெண்ணையும் பாத்திரங்களாக்கி

Page 13
ஜீவநதி 22 அவர்களுக்கிடையிலான உறவு நிலைகளையும், ரதியின் தவறான பாலியல் உந்தலையும் விரசமில்லாமல் கு.ப.ரா. மாதிரி, ஜானகிராமன் மாதிரி சட்டநாதன் அற்புதமாகச் சித்திரித்துள்ளார். அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் கலா பூர்வமாகவுள்ளன.
செங்கை ஆழியானின் "ஒ வெள்ளவத்தை சற்று வித்தியாசமான படைப்பு மூன்று தசம் ஐந்து றிச்டர்களுக்கு மேல் புவிநடுக்கம் நிகழும்போது தென்னிலங்கை தரைமட்டமாவதாகச் சித்திரிக்கின்றது. ஒரு எதிர்வு கூறல் எச்சரிக்கைச் சிறுகதை. பன். பண்டாவின் "பெரியவன்' இன்றைய சமூகத்தின் அவல உணர்வுகளைப் படம் பிடிக்கின்றது. நன்றாகவே படைத்துள்ளார். திருமலை வி.என்.சந்திரகாந்தியின் ‘சம்ஹாரம்' என்ற சிறுகதை வாசித்து முடிந்ததும் மனதை அதிர வைக்கின்றது. வெள்ளை வானில் கடத்தப்படுகின்ற காட்சியும் கடத்தப்பட்ட நிலையில் படும் அவஸ்தைகளும், இறுதியில் 'என் பெயர் இலக்கியன். செத்துக்கிடப்பவர் ஊடகன்' என்று குறியீடாக முடிக்கும்போது மனம் அதிர்கின்றது. அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளில் அற்புதமானது.
யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் ‘காணவில்லை' நல்லதொரு சிறுகதை. அதன் உள்ளடக்கமும் பாத்திரங்களும் அதனைச் சித்திரிக்கும் முறையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. வீட்டையே காணாத நிலையில் அதன் திறப்பைத் தேடும் ஆச்சியைச் சிறப்பாகக் காட்டியுள்ளார். கனகசபை தேவகடாட்சத்தின் பிணங்கள் விற்பனைக்கு உண்மையில் வைபிறேசனை உருவாக்கும் நல்லதொரு சிறுகதை. அவமாக இறந்து போன பிள்ளையின் உடலுக்கும் உயிருக்கும் விலைபேசும் சுவிசிலுள்ள ஒருவனைத் தத்ரூபமாக இச்சிறுகதை சித்திரிக்கின்றது. சிறிய சிறுகதை. மனதை அப்படியே கவ்வி விடுகின்றது. பவானி தேவதாஸின் ‘என் இனிய தோழனே. தமிழ் பெண்ணொருத்திக்கும் சிங்கள இளைஞன் ஒருவனுக்குமிடையிலான சகோதர உறவை அற்புதமாகச் சித்திரித்து மனதை ஈர்த்துக் கொள்கின்றது. பொதுவாக அணி மைக் காலச் சிறுகதைகள் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குப் பெருமை சேர்க்கின்றன. ப பு
குழயிருப்பு
முத்தனி:குடியிருக்கும் கோரின்கட்டி குட කේෂ් நிலம் e 姆》 முழுக்காட்டுச் லசய்து EVpGogpJ BGoGosVpGongpuUruŪ- Boassos டிறுமையின் இறையினியம் அப்பனும் அப்பனுக்கு அப்பனும் வபறவேண்டும் என எண்ணி வகாதீதிப் பயிரிட்டு, மனைவயன்று சொன்னும் மூலையின் ஓர் சிறுகுடின் பிடுங்கி லகாட்டிலிட்டு மகேசன் மகனுக்கு வற்றிய உடலோடு வUருங்கோவின் எழுந்தது. வாழ்ந்த இடம்
கசை முழுக்காட்டுக் காணவிநிதோர்
ഗ്രബ്ബി காதாைகி கசிந்து கண்ணிமன்க சங்கரப்பிள்ளையின் வீடிழந்த மூத்தனும் முதுலசாமாம் அநீநிலத்தின் விம்மியழுதாணி
முருகனுக்கு
புத்தூர் வே.இளையகுட்டி.

ஜீவநதி
UpGameD tfal, SIGING GUATGallið SIGUI STOIagpJ ஊடுருவத்தான் செய்கிறது
தட்டித்தட்வி தவழ்ந்து
&Lýlu
ஒற்றைப் பாதைகளும் கடிக்குழுவி ஆக்கித்தின்ற &Č UGONGMastimmti... நினைவுகளின் ஆக்கிரமிப்பில் அதீத புகட்சியொன்று.
மறைத்து மறைத்து
GJgib lestiġġeb
முதல் மீசையும் வாலிபத்திமிரை பறைசாற்றிய álpað þanLuth ஒளித்து பதுக்கி வியர்த்து எழுதிய மோகக் கடிதமும்
என்று
Ulann lit.ie sIGO) & GUTCAGJálcö அலாதி சுகமொன்று ஊடுருவத்தான்
செய்கிறது. அம்மா சொன்ன வனதேவதைகள் அவ்வப்போது நிழல்களாய். ஊஞ்சல் அந்தரத்தின் se Láů ĎJálů ஆழ்மன ஆசைகளாய்.
வாழையிலை கட்டுசோறு அடி நாக்கின்
Iš gynh5 CSLUITth... வெட்டவெளி குட்டித்துக்கம்
Cl3паUgшU sijjlKJпélumi.
gau இந்த பூர்வ ஞாபகங்களில் இதமாக வலியொன்ரு
шувоlo iђLк...
இழையோடிப்படியே தான் அன்றைய அந்திப் பொழுதுகளையும் ஆற்றங் கரைகளையும் கதையென்று எண்ணி வாய்பிளந்து கேட்கிறான் என்
கடைசி மகன்
நனைதலின் சிலாகிப்பும் ஈரக்காற்றின் இங்கிதமும் அவனுக்கு தெரிந்திருக்க QTTitjGUtildjghqJ.
Glőübingi GöGilig சேற்றில் புரண்டு வரப்புகளில் பந்தயம் வைக்கும் அழகான தருணங்களுடன் அவனுக்கு அறிமுகந்தானும் Fldaq)
அவசரத்தின் அசுரத்தனத்துள் சிக்குண்ட
lassi (GD SIGJgi
torgól tongól சுவற்றுக்குள் முட்டும் இயற்கை மறந்த AUjölgolesco அவன்.
Jtb
இந்த புதுத்தலைமுறை.
கதையாகவேனும் அனுபவம் பகிர்ந்திட
என் இறந்த காலங்களை இறுக்கிப் பிடித்து அக்கம் பக்க சிறுசுகள் கட்டி upamft stað6UnCagleð அாைதி சுகமொன்று ஊடுருவத்தான் செய்கிறது.
- பிரமிளா செல்வராஜா (காலி)

Page 14
ஜீவநதி 24
யாருக்காக எழுதுகிறோம்.?
புரிதல் குறித்த ஒரு அனுபவப்பகிர்வு மு.அநாதரட்சகன்
சமீபத்தில் நண்பர்களுடனான மாலை நேரச் சந்திப்பு ஒன்றில் இலக்கியம் பற்றியும் பேச்சு எழுந்தது. அதில் ஒரு நண்பர் நல்ல இலக்கியங்களைத் தேர்ந்து வாசிக்கும் ஆர்வமுள்ளவர். தேர்ந்த வாசகன் என நண்பர்வட்டத்தில் மதிக்கப்படுபவள்.
அண்மையில் தாம் வாசித்த நல்ல படைப்புக்கள், அவை ஏற்படுத்திய பாதிப்புக்கள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து எழுந்த பேச்சில் இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றி குறிப்பாக யதார்த்தப் பண்புகளை மீறிய படைப்புக்கள் பற்றிப் பேச்சு நகர்ந்த போது விவாதம் சற்று சூடுபிடித்தது. நண்பர்கள் பல்வேறு அபிப்பிராயங்களை முன்வைத்தனர். இறுதியில், அந்த விவாதம் முடிவில்லாமல் பல கேள்விகளை எமக்குள் எழுப்பியது என்பது தான் முக்கியமானது.
யதார்த்தப் பண்புகளை மீறிய மெஜிக்கல் ரியலிசப் (Megical Realism) படைப்புக்கள் விளங்கவில்லை என்ற அபிப்பிராயம் வெகுஜனப்பத்திரிகை வாசகள்களிடம் நிலவுவது ஆச்சரியமானதல்ல. ஆனால் தீவிரவாசகனான நண்பனிடம் இருந்து வந்ததுதான் சிந்திக்கவைத்தது.
முன்னர் ஒருகாலத்தில் மெளனியின் எழுத்துப் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு வாசகர்களிடையே நிலவியது. வழமையான கதைசொல்லும் முறையைத் தவிர்ந்த எல்லா எழுத்துக்களுமே இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி வருகின்றன.
தற்போது தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் மெஜிக்கல் ரியலிசப்படைப்புக்கள் என வரும் கதைகளைப்படிப்பவர்கள் மெளனியின் எழுத்துக்கள் எவ்வளவோ பரவாயில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். மெளனியின் மொழிநடை வித்தியாசமானதுதான். அவர் வார்த்தைகளுக்கு அகப்படமறுக்கின்ற வாழ்வியல் அனுபவங்களை சிறுகதைகளில் வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்தார். அதற்காக தனக்கென்று தனிமொழியையே சிருஷ்டித்துக் கொண்டார். அந்த வகையில் மொழியிலும், விடயத்திலும், சிறுகதை உருவத்திலும் சோதனைகளைச் சிறப்பாகச் செய்து வெற்றிகண்டவர் மெளனி. மெளனியை விளங்கிக் கொள்ளுமளவுக்கு இன்று மெஜிக்கல் ரியலிசப்படைப்புக்களை வாசகனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தேர்ந்த வாசகமட்டத்தில் கூட எழுப்பப்படுவதுதான் முக்கியமானது.
பொதுவாக, இவ்வகைப்படைப்புக்களைப் பற்றி (தழிழில் இதனை "மாய யதார்த்தம்’ என்பர்). இரண்டு விதமான அபிப்பிராயங்கள் நிலவிவருகின்றன. ஒன்று புதுமை படைக்கிறார்கள் என்பது. இன்னொன்று புரியாமல் எழுதுகிறார்கள் என்ற அபிப்பிராயம். இவ்வகைப்படைப்புக்களைத் தமிழில் தந்தவர்கள் என தமிழவன், கோணங்கி, தமிழ்ச்செல்வன், ஜெயமோகன், பிரேம், சுரேஸ்குமார இந்திரஜித், இராமகிருஷ்ணன், ஸில்வியா போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களில் யதார்த்தப்பண்பினை மீறாத

ஜீவநதி 25 படைப்புக்களைத் தந்தவர்களும் உள்ளனர். ஈழத்திலும் இத்தகைய போக்கில் எழுதுபவர்கள் உள்ளனர்.
இத்தகையோரின் படைப்புக்கள் பற்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பல. இவ்வகையான கதைகளின் மொழிநடை வாசகனை அலைக்கழித்து சோர்வடையச் செய்கிறது. கதையுடன் போராடியே கதையின் ஜீவனைப்பிடிக்க வேண்டியுள்ளது. இப்பாணிக்கதைகளைப் படைப்பவர்களில் சிலரின் கதைகள் உருவகக் கதைகளை ஒத்தவை என்பதும் ஒன்று.
இப்படைப்புக்களினை வாசிக்கும் வாசகன் மொழியின் சிக்கலாந்த அமைப்பில் சிக்கித்தவித்துப் போகிறான். இந்த சிக்கல் வாய்ந்த மொழிநடை வாசகனை இருட்டில் ஆழ்த்திவிடுகிறது. இவற்றின் வெளிப்பாட்டு மொழியை வாசகனால் புரிந்துகொள்வது சிரமம் என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது. மெஜிக்கல் ரியலிசப்படைப்புக்கள் தீவிர அனுபவங்களைத் தருபவை எனக்கூறினும் அவ்வனுபவங்களின் அர்த்தம் வாசகனுக்கு புரிவதில்லை என்பது முக்கியமானதாகும்.
மெஜிக்கல் ரியலிசப் படைப்புக்களுக்கு சார்பானவர்கள் தரும் விளக்கமோ வேறு. இவ்வகைப் படைப்புக்கள் தீவிரவாசிப்புக்குரியவை என்பர். மனிதனின் அகநிலை உணர்வுகளை உச்சநிலையில் வெளிப்படுத்துபவை என்பதுடன், மொழியின் பன்முக அர்த்த பரிமாணங் களைத் தொடுபவை எனக்கூறுவர்.
இத்தகையோர் கலையை அருவமாகவும், சூட்சுமமாகவும் பார்க்கின்ற நிலைமையையே காணக்கூடியதாக உள்ளது.
படைப்பாளி எப்பொழுதும் முற்றிலும் தனிமனிதனாக இருப்பதில்லை. அவனுக்குள் பல்வேறு நிலைகளில் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. படைப்பில் அக உலகினை அழுத்துவோர் யதார்த்தத்தளத்தினை விட்டு விலகி நிற்க முடியுமா என்பது இத்தரகயோரை நோக்கி எழுப்பப்படும் வினாவாகும்.யதார்த்தத்தளத்தில் இயங்குகின்ற சில முரண்கள்தான் ஒருவனைப் படைப்பாளியாக்குகின்றது என்பதே உண்மைநிலை. படைக்கவும், புரியவும், விமர்சிக்கவும் ஆன ஒரு தளமாக இலக்கியம் அமையவேண்டும்.
நூல் அறிமுகம். நூல் - இன்னொரு புதியகோணம்
(சிறுகதை தொகுதி) ஆசிரியா - தெணியான்
வெளியீடு - பூமகள் வெளியீடு
கொற்றவத்தை அல்வாய் மேற்கு அல்வாய்
6,7606) 200/=

Page 15
ஜீவநதி
உ4 சன் ரேே
வெறிச்சோடிய காரியால யத்தை இரவு போர்த்திக் கிடந்தது. ஒவ்வொரு கட்டடத்திலும் குறைந் தது ஒவ்வொரு மின்விளக்காவது ஒளிர்ந்து அப்பகுதிக்குப் பாதுகாப்பு வழங்காமலில்லை. இடையிடையே நாய்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக் கொண்டிருந்தன. சடாரென்று சிற கடிக்கும் வெளவால்கள் இலுப்பை மரத்திற்கு உயிருட்டின.
இடையீடின் றி கண் டி வீதியில் ஊர்வலம் நடாத்திய வாகனங்கள், இடைவெளியை மணிக்கணக்கில் நீடித்தன.
காவல்கூடத்தில் வேலுப் பிள்ளை தேநீர், வெற்றிலை, பீடி யென்று தயார் நிலையில் வைத்து இருந்தான. அவனோடு கனக சபையும் அருணனும் துணை இருந்தனர். பதினொரு மணிக்கு மேல்தான் அவர்கள் விடைபெறுவது வழக்கம். நாட்டு நடப்பு, அரசியல, சினிமாவென்று அவர்களது கதை பல பக்கமாகவும் சுழன்றடிக்கும்.
“ட்றிங். ட்றிங்" டெலி..போன் அலறியது. காரியாலய நேரத்திற்குப் பிறகு காவல் கூடத்திற்கு அழைப்புக்கள் வரக்கூடிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இன்ரகொம் ep6) DfT85 அதனை உள்வட்டத் திற்குச் செலுத்தவும் வேலுப்பிள்ளை பயிற்சி பெற்றிருந்தான்.
“ஹலோ.” “ரஷாத் ஸேருக்கு ஒரு சொல்லனும்" "ஆம். ஆர் கதைக்கிறீங்க?"
வை.'ப் கதைக்கிறன்" "சொல்லுங்க” "அவர் ர மாமி காலம் சென்றிட்டா. தவறாம ஒருக்கா
தகவல்
"அவர்ர
திக்குவல்லை கமால்
சொல்லிவிடுங்கோ”
“gffi” ரிசீவரை வைத்துவிட்டு வேலுப்பிள்ளை தடுமாறினான். “என்ன விஷயம்? சொல்லன்”
“ரஷாத் ஸேரின்ட் மாமி மோசம் போயிட்டாவாம்”
“சரி இப்ப அவர எங்க தேடுறது. காலமை சொல்லன்” கனகசபை சட்டென்று சொன்னான். "ஒமோம்! இப்ப பன்ரெண்டு மணியல்லோ எப்படி அவரத் தேடிப் போறது” வேலுப்பிள்ளைக்கு வேறு வழி தெரியவில்லை.
"இல்ல அண்ணே! இப்பவே சொல்றதுதான் நல்லது பாருங்கோ. அவர் கொழும் புக் குப் போயப் அங்காலயுமல்லோ போக வேண்டி இருக்கு" அருணன் அவர் பக்கம் சார்பாக யோசித்தான்.
“பின்னயென்ன நீ போய்ச் சொல்லன்' வேலுப்பிள்ளைக்கு மெல்லிய கோபம்.
கொஞ்சநேரம் யோசித்தபடி இருந்தவன் ‘சரி நான் போறன்’ என்றபடி தயாரானான்.
இருவரும் அதனை எதிர் பார்க்கவில்லை. உண்மையில் அவன் அந்தக் காரியாலயத்தில் நிரந்தர ஊழியன் கூட இல்லை. ரஷாத் ஸேரை தெரியுமே தவிர, பெரிதாகப் பழக்கமென்றில்லை.
“லொட லொட்" சைக்கிள் வெளிக் கரிட்டது. நாய்களின் ஊளையிடலைத்தவிர நிசப்தமே நிலவியது. யுத்தக் கெடுபிடியும் இயக்க நடவடிக்கைகளும் ஒரு காலத்தில் கொடிகட்டிய பகுதி அது. "இவன் ஏதோ அவருக்கிட்ட காசகிச வேண்டியிருப்பான். அது தான் ஒடுறான்” இது கனகசபை,

27
ஜவநதி
இருக்கும்’ அதனை
“இருக்கும், வேலுப் பரிள் ளையும் அங்கீகரித்தான்.
ரஷாத் பதவியுயர்வு காரணமாக வடகிழக்கு சென்று கடமையாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டவர். கிடைத்த பதவியை கைவிட முடியாத நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இரண்டு வருடங்களை புதிய அனுபவங் களோடு கடத்திவிட்டார்.
டவுன் பள்ளிவாசலில் அவர் தங்குவதாகவே பேச்சுவாக்கில் அருணன் அறிந்துவைத்திருந்தான். அந்த எண்ணப்பாட்டுடன் தான் அங்குவந்து சேர்ந்தான். வாச்சர் வாசலிலே நின்றது நல்லதாய்ப் போயிற்று.
“ரஷாத் ஸேர் தங்கிறவர்?"
"அந்தா தெரியுது கலாசார நிலையம்.” குறிகாட்டிய திசையில் அந்தக் கட்டடத்திற்கு முன்னால் போய் இறங்கினான். ஒரு பக்கமாக உள்ளே பார்க்ககூடிய இரும்புக் கிராதி பூட்டுப் போடப்பட்டிருந்தது. கூர்ந்து பார்த்த போது உள்ளே ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்தான் பொறுப்பாளர் போலும்.
"அண்ணே! அண்ணே!”
அப் போதுதான் தூங்கியிருக்க வேண்டும். மெல்லிய அசைவாட்டம் தெரிந்தது.
"அண்னே!" "யாரு..?” விழித்துவிட்டார். “கல்விக் கந்தோரிலிருந்து வந்தநான்” எழுந்துவந்தவர் கதவைத் திறந்தார்.
"ரஷாத் ஸேர் இங்கயே தங்கிறவர்?"
“ஓம் தம்பி. இங்கதான. என்ன விஷயம?”
“வீட்டிலிருந்து அவருக்கு அவசர கோல்”
"இருங்கோ! நான் கூட்டிட்டு
இங்கயே
வாரன்” என்றவர் லைட்டைப் போட்டு விட்டு தடதடவென மாடிப்படிகளில் ஏறினார்.
அருணன் மூன்று வருடம் மாளிகாவதி தையரில் வேலை செய்தான். அச்சுவேலைகளில் அவனுக்கு கொஞ்சம் அனுபவ முண்டு. ஸபீரா அச்சகத்தில் வேலை செய்த போது அவர்களது நடை முறைகள், பழக்க வழக்கங் களெல்லாம் அவனுக்குப் பரிச்சய மானவையாக மாறிவிட்டன.
ரஷாத் துTக்கக் கண் களோடு படியிறங்கி வந்தார். அருணனை பெரிதாக அறிமுக மரில் லை. எங்கோ கண் டது போன்றதொரு உணர்வு மட்டுந்தான். “ஸேர்! என்னத் தெரிந்து இருக்காது. நான் டெம்பரரி நைட் வாச் சர்’ அருணன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
"அப்படியே, சொல்லுங்க” மிகுந்த எதிர் பார்ப் போடும் பதட்டத்தோடும் கேட்டார்.
“D H] ab LDT LỚI 5 T 6d tĎ சென்றிட்டாங்களாம் ஸேர்”
‘அப்படியே. இந்த நேரத்தில வந்து சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றி” இப்படிச் சொன்னாரே தவிர அவரது எண்ணமெல்லாம் எங்கெங்கோ.
“சரி ஸேர். நான் வாரன்" அருணன் விடைபெற்று வெளியேறினான. அவன் மனதில் ஒரு சந்தோஷம் குடியமர்ந்து கொண்டது.
"இனி எத்தின மணிக்கு பஸ் இருக்கு?” ரஷாத் கேட்டார்.
"ரெண்டரைக்கு கொழும்பு பஸ் இருக்கு ஸேர்" அஸ்லிக்காக்கா சொன்னார்.
"அதுக்குப் போனாத்தான் மையத் து கெடைக் கும் கொழும்புக்குப் போய் அங்கால இன்னும் ஆறு மணித்தியாலம்

Page 16
ஜீவநதி
பயணம் . ஒழுங்கா பஸ் ஸஉம் கிடைக்கணுமே” "நீங்க ஒண்னும் யோசிக்காதீங்க ஸேர். இந்தாங்க டைம்பிஸ்”
ரஷாத் மீண்டும் படுக்கை க்கு வந்தார். நேரத்தை ஒழுங்கு பண்ணிவிட்டு கால்கையை நீட்டினார். கைத்தொலைபேசி இருந் தும் கவரேஜ் இல்லாததால் வீட் டோடு தொடர்புகொள்ள முடிய வில்லை.
வாப்பாவின் ஒரே தங்கை கடந்த ஆறு மாதமாக தொடர்ச்சி ஆக நோய்க்கு ஆளாகியிருந்தார். உம் மாவை மிஞ் சிக் கொண்டு ரஷாத் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்தவள்.
“யா அல்லா. கடைசியாக அந்த முகத்தை பாத்துக்கொள்ள இந்த பயணத்த லேசாக்கிவெய்” என்று அவரது மனம் அடிக்கடி துஆ செய்து கொண்டது.
நேரம் நகர்ந்ததே தவிர தூக்கம் வந்ததாக இல்லை.
ck k-k-k-k-k “இன்றைக்கே ஸேர் வந்தநீங்க?"
ஒரு வார லீவுக்குப்பின் வந்த ரஷாதை காரியாலயத் தரில் காண்பவர்களெல்லாம் இடைமறித்து துக்கம் விசாரித்தனர்.
அன்று நடுநிசியில் தகவல் கிடைத்து புறப் பட்டுப் போய் மையத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டார் ரஷாத் , இன்னும் அரைமணி நேரம் தாமதித்திருந்தால் கூட அந்த சந்தர்ப்பம் கிடைத்து இருக்காது.
28 "எப்போது வருவார் எப்போது வருவார் என்று எல்லோரும் எதிர் பார்த்துக் காத்திருந்தனர்.
'அந்தப் பெடியன் தேடிக் கொண்டுவந்து சொன் னானே' அடிக்கடி அருணனின் முகம் அவரது நினைவிலே வந்துவந்து மோதியது. அருணனை சந்தித்து நன்றி சொல்லாதவரை அவருக்கு நிம்மதி ஏற்படாது போலிருந்தது.
தற்செயலாக கென்ரீன் பக்கம் போகும் போது அருணனை சந்திக்கக் கிடைத்தமை பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது ரஷாதுக்கு.
“ஸேர்! எப்ப வந்தியள்?” அவன் மிகுந்த ஆர்வத்தோடு
கேட்டான்.
“வாடாப்பா. இரண்டு டீ
போடு தம்பி’
"நீர் வந்து சொல் லா
விட்டிருந்தால் எனக்கு வேளைக்கு போகக் கிடச்சிருக்காது”
"அதுதான் ஸேர். கோல் வந்ததும் நாளைக்கு சொல்வோ மென்று வேலுப்பிள்ளை சொல் லிட்டான். அவனப் பிழை சொல்ல முடியாது. உங்கட ஆக்கள் 24 மணி நேரத்திக்குள்ள மையம் புதைக்கிறதல்லோ. அதுதான் ஓடி வந்தனான்’ அருணன் சொல்லி நிறுத்தினான்.
"பெரிய விஷயமப்பா' ரசாத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். இனி என்றும் அகல முடியாத படி அவரது மனதிலே நாற்காலி போட்டு அமர்ந்திருந்தான் அருணன். டீ வந்து சேர்ந்தது.ப ம
வாழ்த்துகின்றோம். கலை இலக்கிய பண்பாட்டுத்தளங்களில் தங்களை அர்ப்பணித்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் அறிஞர்களுக்கான ஆளுனர் விருது 2007 இம் முறை திருமறை கலாமன்ற இயக்குனர் நீ .மரியசேவியர் அடிகளாருக்கு கிடைத்துள்ளது. எழுத்தாளர், கவிஞர், கலைஞர், நாடக ஆசிரியர், தத்துவாசிரியர் என பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றும் அன்னாரை ஜீவநதி இதய பூர்வமாக வாழ்த்துகிறது.

ஜீவநதி 29 سب
பெண் புனைபெயர்களும் சில சங்கடங்களும்
ரஞ்சி. (சுவிஸ்)
சிதறிய கனவுகளின் குவியலாகக் கிடக்கின்ற தமிழ்ப் பெண்களின் கவிதைகள் தமிழ் இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்பட வேண்டியவை. அவை ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அந்த வகையில் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைக்கொண்ட "பெயல் மணக்கும் பொழுது" என்ற தொகுப்பு மிக முக்கியமானது என்றே கூறலாம். 1986இல் வெளிவந்த ஈழத்து பெண் கவிஞர்களின் தொகுப்பான "சொல்லாத சேதிகள" அதே போல் புலம்பெயர்தேசத்தில் வெளியிடப்பட்ட “மறையாத மறுபாதி” மற்றும் தமிழகத்தில் வெளியிடப்பட்ட “பறத்தல் அதன் சுதந்திரம்” தற்போது "பெயல் மணக்கும் பொழுது", புலம்பெயர்தேசத்தில் தற்போது வெளிவந்துள்ள "மை" என தொகுப்புகளாக்கப்பட்டுக் கொண்டிருப்பது தொடர்கிறது. எல்லாமே பேசப்படும் தொகுப்புகளாக வந்துகொண்டிருப்பதே அதன் தேவையை உணர்த்தப் போதுமானது. இத்தொகுப்பில் கிட்டதட்ட 280 பக்கங்களில் 93 கவிஞர்களின் கவிதைகள் அ.மங்கை அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்பை வெளிக்கொணர்வதில் கவிதைகளை தேடிக்கொள்வது, தேர்வுசெய்வது தொடக்கம் நிதிச்சமாளிப்பு வரை மண்டையைப்போட்டு உடைக்க வேண்டியிருக்கும். அத்தோடு அச்சிடுவது பின் பரவலடையச் செய்வது என்றெல்லாம் தொடர்ச்சியாக உழைக்கவேண்டியிருக்கும். கையைக்கடிக்கும் நிலையானாலும்கூட இந்த சமூக உழைப்பின் மீதான திருப்தியே தொடர்ந்து இவ்வகைச் செயற்பாடுகளை தொடரச் செய்துவிடுகிறது. இதனுாடாகப் பயணித்த அ.மங்கையின் உழைப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
கமலா வாசுகியின் ஓவியத்தை அட்டைப்படமாக கொண்டு ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் “பெயல் மணக்கும் பொழுதாக” வெளிவந்துள்ளது. இத் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்ட அனைத்து கவிதை களும் சஞ்சிகைகள், தொகுப்புக்கள், வெளியீடுகளில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன. அவையை ஒவ்வொரு கவிதைகளுக்கும் கீழே கவிதைகள் எடுக்கப்பட்டவெளியீடுகளின் விபரத்தை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்
D56)5.
பெயல் மணக்கும் பொழுது தொகுப்புக்குள் அதாவது, கவிதைக்குள் செல்வதல்ல இக் குறிப்பின் நோக்கம். இது தொடர்பான சில விடயங்களைப் பற்றிப் பேசவே முனைகிறது இக் குறிப்பு.
பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் தமிழ் இலக்கிய உலகில் அதிகளவு கவனிக்கப்படுவதில்லை. அத்துடன் படைப்பாளிகள் பெண்கள் என்ற காரணத்தினால் ஆண்களே ஆதிக்கம் பெற்றுள்ள விமர்சன உலகில் தமக்கு பிடித்தவர்களை பட்டியல் இடுவதும் மற்றைய பெண்களை ஒரம் கட்டுவதும் நடைபெற்று வரும் இன்றைய சூழலில் அ.மங்கையின் தொகுப்பு முயற்சி இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.தந்தைவழிச் சமூக விழுமியங்களால் வழிநடத்தப்படும் சமூகத்தில் வாழ்கின்ற இலக்கியம் படைக்கும் பெண்கள் இன்னொருபுறமாக இலக்கியம் படைப்பது பெரும்பகுதியாகிவிடுகிறது. அதனால் பெண்களைப் பற்றிய சித்திரிப்புகளும்

Page 17
ஜீவநதி 30 கருத்துக்களும் ஆண்நிலைப்பட்டதாக அமைந்துவிடுவதை சஞ்சிகைகள், பத்திரிகைகள் இணையத்தளங்கள், வானொலிகள் என எல்லா கலை இலக்கிய வடிவங்களிலும் காணலாம். இதை மறுதலித்து எழும் பெண்நிலை கலைஇலக்கியப் போக்குகளை நாம் இன்று அடையாளம் காண்கிறோம். இன்று தமிழ்ப் பெண் கவிஞர்கள் ஆழமான உணர்ச்சிச் செறிவையும் சிக்கனமான மொழியாள்கையையும் ஆழ்ந்த தேடலும் மொழிப்பயிற்சியும் உள்ள பல பெண் மொழிக் கவிதைகளை படைத்து வருகின்றார்கள். சிந்தனையும் ஆக்கத்திறனும் ஒரு பெண் படைப்பாளியின் அடிப்படை பலம் என்ற வகையில் இவ்வாறான தொகுப்புகள் காலத்தின் தேவையும்கூட அதனால் இவ்வெளியீடுகள் வரலாற்று ஆவணங்களாக அடுத்த சந்ததி யினருக்கும் இருக்கப்போகின்றன என்பது கவனிக்கற்பாலது.
இத் தொகுப்பில் பிழைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் தொகுப்பாளர் அ.மங்கை இருப்பதை அவரது குறிப்பில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதனால்தான் மங்கை இவ்வாறு கூறுகின்றார். "இத் தொகுப்பிற்காகத் தேடியலைந்த போது எழும்பிய கேள்விகள் பல. மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள் பெண்கவிஞருடையது இல்லை என்பதை தெரிந்த போது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது” எனக் குறிப்பிடுகின்றார். 'கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இப்படி ஒரு குரல் உண்டு எனத் தெரிந்த போது இதுபோன்ற வெளிப்பாடுகளின் தேவை அவற்றை வெளியிடப் பெண்பெயர் தெரிவு செய்தமை போன்றவற்றை நாம் கட்டுடைக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது” என்கிறார் மங்கை. பெண்குரலினை ஆவணப்படுத்துதல் என்று வரும்போது இது ஒரு மிகமிக முக்கியமான பிரச்சினைதான்.
இங்கு பிரச்சினை புனைபெயரைச் சூடுவதிலல்ல. போர்க்காலத்தின் நெருக்கடிகளுக்கும் கருத்துச் சுதந்திர மறுப்புகளுக்கும் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது எழுத்தாளர்கள் புனைபெயரை வேண்டி நிற்பது என்பது அவர்களின் உரிமையாகிறது. ஆனால் இதையே சிலர் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இது ஒரு ஜனநாயக செயற்பாடாகத் தெரியவில்லை. ஒடுக்கப்படும் சக்திகளின் பெயரை ஒடுக்கும் சக்திகள் கையாள்வது பல குழப்பங்களை விளைவிக்கவல்லது. ஈழப்போராட்ட இயக்கங்களில் இது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களின் பெயரைச் சூடுவது பெண்களின் பெயரில் எழுதுவது என்றெல்லாம் உத்திகள் பாவிக்கப்பட்டன. பின்நவீனத்துவம், கட்டுடைப்பு, பெருங்கதையாடல் என்ற முழக்கங்களும் இந்த விடயத்தில் கவனம்கொள்ளவில்லை என்றே படுகிறது. பெண்பெயரைப் பாவிப்பதில் என்ன தவறு என்ற கேள்விக்குமேல் இவர்களில் பலர் செல்வதில்லை. ஏன் பாவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையளிப்பதை தவிர்த்துவிடுகின்றனர். சென்ரிமென்ற் வெளிப்பாடு அல்லது தமது எழுத்துகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவது (பெண்களின் பெயரில் இருந்துகொண்டு பெண்களைத் தாக்குவது உட்பட) இந்த வழியிலும் சாத்தியப்படவே செய்கிறது.
இத் தொகுப்பில் இந்தப் புனைபெயர் பற்றிய அச்சம் அதை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்ட இயலாமை தனது தொகுப்பில் தன்னை மீறி தவறுநேர்ந்துவிடப் போகிறது என்ற நிலையை அ.மங்கைக்குத்

ஜீவநதி 3. தோற்றுவித்திருக்கிறது. அதேபோல் முகவுரை எழுதிய சித்திரலேகாகூட இதுபற்றிக் குறிப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்குப் பிறகும் பெண்கள் பெயரில் எழுதிய ஆண்கள் (இந் நுால் வெளியீடொன்றிலும்கூட) இதுவரை தாமாக முன்வந்து அதைத் தெரிவிக்கவில்லை.
மங்கை தொகுத்த ஈழத்து பெண்கவிஞர்கள் தொகுப்பிலும் புதுவைஇரத்தினதுரை போன்றே இன்னும் ஒருசில ஆண்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன என அறியவருகிறது. அதை வெளிப்படுத்தவேண்டியது அவசியமாகவே படுகிறது.
மாலிகா (புதுவை இரத்தினதுரை) போலவே ஆதிரா (கற்சுறா) ஆமிரபாலி, (ஹரிஹரசர்மா) (பக்கங்கள் 36,37,41) இருவரும் ஆண்களே. யூவியாவும் ஆண் என்றே சந்தேகிக்கப்படுகிறது (புலம்பெயர் நாட்டிலும் சரி. இலங்கையிலும் சரி. யூவியா என்ற பெயரில் எழுதும் பெண்கள் யாரும் கிடையாது). இருள்வெளியில் இக் கவிதை பிரசுரிக்கப்பட்டிருப்பதைத் தவிர, வேறு கவிதைகள் வெளிவந்ததாக நாம் அறியவில்லை. யூவியாவின் இக் கவிதையை வெளியிட்ட இருள்வெளியின் தொகுப்பாளர்களான சுகன், சோபாசக்தி ஆகியோர் இக் கவிதைக்குரியவர் பெண்ணா அல்லது ஆணா என்பதை தெரிந்துவைத்திருக்க சந்தர்ப்பம் உண்டு.
1998 ஒக்ரோபரில் நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற பெண்கள் சஞ்சிகையான சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு புனைபெயரில் எழுதும்போது ஆண்கள் பெண்களின் பெயர்களைப் பாவிப்பது தொடர்பில் ஒரு விமர்சனத்தை எழுதியிருந்தது. அதற்கேற்ப அப்போது எக்ஸில் ஆசிரியர் குழுவில் இருந்த கற்சுறா தேவி கணேசன் என்ற தனது இன்னொரு புனைபெயரை மாற்றிக்கொண்டதுடன் அதுபற்றியும் சக்திக்கும் அறிவித் திருந்தார். ஆனாலும் ஆதிரா என்ற பெயரில் அவர் பிற்பாடு எழுதிய அவரது இரு கவிதைகளும் இத்தொகுப்பில் தொகுக்கப் பட்டுவிட்டன . அதேபோல் ஆமிரபாலி என்ற பெயருக்குரியவரும் மூன்றாவது மனிதன், வீரகேசரியின் உயிர்எழுத்து, இணையத்தளங்கள் (முரண்வெளி) ஆகிய வற்றில் எழுதிவருகின்ற ஹரிஹரசர்மா ஆவர்.
இத் தவறுக்கு முழுப்பொறுப்பையும் இந்த பெண்பெயரின் பின்னால் நின்று எழுதிய ஆண்களே பொறுப்பேற்க வேண்டும். இந்தக் குழப்பங்கள் இனிவரும் காலத்திலாவது தவிர்க் கப்படுவது குறைந்தபட்சம் தொகுப்பாளர்களின் சங்கடங்களையாவது தீர்த்துக்கொள்ளும். தமிழகத்தில் வளர்மதி போன்றவர்கள் பெண் ஆண் அடையாளங்களை அழிப்பதற்காகவே இவ்வாறான பொதுப்பெயர்களைச் சூடுவது பற்றி ஏற்கனவே கூறியவர்கள். இது வேறுவகையானது. இதை மேலுள்ள பெண்பெயர்களுடன் போட்டுக் குழப்புவது இன்னும் குழப்பங்களையே உண்டாக்கும். சித்திரலேகா தனது முகவுரையில் இக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார். "பெயர்தொடர்பான மயக்கமே இது. பாடல் புனைந்தவர் ஆணா? பெண்ணா? என்கின்ற மயக்கம் சங்ககாலம் வரை தொடர்கின்றது. தமயந்தி, அருந்ததி போன்ற பெயர்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் பெண்கள் பெயரை பயன்படுத்துவது இதற்கு காரணம்" என்கிறார். மேலும் சித்ரலேகாவின் அதே குறிப்பில் “பெயரை மட்டுமன்றி வேறு தகவல்களையும் சேகரிக்க வேண்டிய கருத்தூன்றிப் பார்க்க வேண்டிய தேவையை இது சுட்டுகிறது". இது மாத்திரமல்ல. ஒருவரே பல பெயர்களில்

Page 18
ஜீவநதி 32 எழுதும் வழக்கமும் உண்டு. விஜயலட்சுமி சேகர், விஜயலட்சுமி கந்தையா, சிநேகா என மூன்று பெயர்களில் எழுதுபவரும் விஜயலட்சுமி என்ற ஒருவர்தான். இதேபோல வேறு சிலர் என்கிறார். இந்த விடயமும் கவனிக்கவேண்டியது" என்று குறிப்பிடுவது ஏனோ தெரியவில்லை. விஜயலட்சுமி எல்லாமே பெண் பெயர்களைத்தானே புனைபெயராகச் சூடியுள்ளார் என்ற விடயம் ஒருபுறமும், மறைந்துநின்று தாக்குதல்தொடுக்க இது வசதியாக இருக்கலாம் என்ற தர்க்கமும் இருக்கின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்படி பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவைகளும்கூட உள்ளது என்ற உண்மையையும் பொறுப்புடன் நாம் அணுகித்தான் ஆகவேண்டும். வேடிக்கை என்னவென்றால் சித்ரலேகாவும் சங்கரி, சன்மார்க்கா என்ற புனைபெயர்களில் எழுதி வந்துள்ளார் என்பதுதான். (இந்தப் பெயர்களில் அவரது கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.)
இத் தொகுப்பில் ஏற்கனவே ஈழத்து கவிதை எழுத்துகளில் அறியப்பட்டவர்களாக இருக்கும் கமலா வாசுகி, மாதுமை, சிமோன்தி, சலனி, மலரா, சாரங்கா, ஜெயா, மதனி, பாலரஞ்சனிசர்மா போன்ற கவிஞர்களின் கவிதைகள் இத் தொகுப்பில் சேர்க்கப்படாமல் போனது குறைபாடாகச் சுட்டமுடியும். இவர்களின் கவிதைகள் பெண்கள் சந்திப்பு மலர், பெண், சரிநிகர், வீரகேசரி உயிர்எழுத்து, ஊடறு, காலச்சுவடு ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற் கொலை செய்துகொணி ட சிவர மணியின் கவிதைகள் , கொலைசெய்யப்பட்ட செல்வியின் கவிதைகள், போராளிப் பெண்களான மேஜர் பாரதி, கப்டன், வானதி ஆகியோரின் கவிதைகளும் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளமை தொகுதிக்கு கனம் சேர்ப்பவை.
"சொல்லாத சேதிகள் காட்டிய புதிய கற்பனையும் கவித்துவமும் தமிழ்நாட்டில் அன்று கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த பெண்களின் எழுத்துக்களை பாதித்ததாக கொள்ள முடியாது. ஈழ நிகழ்வுகளின் வரலாற்று கனத்தைப் பக்குவமாக உணர்ந்து அவற்றைத் தமது சூழலுக்குரிய வகையில் பொருள்படுத்திக் கொள்ள யாரும் முனைந்ததாக தெரியவில்லை. அத்தகையதொரு முயற்சியை தேவையானதாகக் கவிஞர்கள் உணர்ந்ததாகவும் அறியமுடியவில்லை." என்கிறார் வ.கீதா. இன்று ஈழத்திலும், உலகின் வேறு பல இடங்களிலும் நடைபெற்று வரும் தேசிய இனப்போராட்டங்களில் பெண்கள் பல்வேறு நிலைகளில் பங்கேற்று வருகின்றனர். ஒருபெண் தன்னை பெண்ணாக மட்டும் உணர்ந்து வாழாமல் குறிப்பிட்ட தேசியஇனத்தையும் சார்ந்தவளாக தன்னை உணர்கிறாள். இது அவர்களிடத்தில் வயப்பட்டுவரும் ஆளுமை, இலக்கியம் எல்லாம் வேறுபடக் காரணமாகிறது. அதேபோல் போர்ச்சூழலில் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வும், தேசிய இனப் போராட்டத்தால் சாதி, பெண்ணொடுக்குமுறையெல்லாம் இரண்டாம்பட்சத்திற்கு தள்ளப்பட்ட மூடுண்ட நிலையும் இவர்களது எழுத்துகளில் வெளிப்படுகிறது. அதனால் ஏற்படும் வலி எழுத்துக்களில் வடிக்கப்படுகின்றன. இது ஈழச்சூழல்.
ஈழத்து பெண் படைப்பாளிகளுடன் தமிழ் நாட்டு பெண் படைப்பாளின் எழுத்துக்களை ஒப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கிறது. அவர்கள் அவர்களின் சூழலை உள்வாங்கியபடிதான் எழுதமுடியும். வேண்டுமானால் போர்ச்சூழலையும்விட தமிழகத்தில் மோசமான வாழ்நிலைகளையும்

ஜீவநதி S8 ஒடுக்குமுறைகளையும் அனுபவித்துவரும் (தலித்துகள் உட்பட) ஒடுக்கப்பட்ட சக்திகளிலிருந்து இவ்வகை எழுத்துகள் பெரியளவில் வராத அல்லது வரமுடியாத ஆதங்கத்தினை நாம் குறிப்பிடலாம். வசதிவாய்ப்புகள் கொண்ட புலம்பெயர் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளின்மீது திரும்பாத விமர்சனம் அல்லது ஒப்பீடு தமிழகப் பெண் எழுத்தாளர்கள் மீது திரும்புவது சந்தேகங்களையே உண்டுபண்ணும். இது விருப்புவெறுப்புகள் சார்ந்ததாகவே அமையும். ஈழம் தமிழகம் என்று பெண் எழுத்துக்களை எதிரெதிர் நிறுத்தவே துணைபோகும். தமிழகப் பெண் எழுத்தாளர்களின் மீதான விமர்சனத்தை நேராகவே வைப்பதற்குப் பதில் பெயல் மணக்கும் பொழுதினுாடாக சந்திக்க முனைவதாக அது அமைந்துவிடலாம்.
"இலக்கியத்தின் அழகியல் அளவுகோல், தனிப்பட்ட இரசனை மட்டங்கள் போன்றவற்றை இது போன்ற தொகுதிக்குள் கொண்டு வர நான் விரும்பவில்லை வாழ்வா - சாவா என்ற போராட்டத்தில் மூச்சுவிடத் திணறும் சூழலில் வெளிவரும் இக்கவிதைகளைக் கூறுபோட்டு கூவி விற்க நான் தயாராக இல்லை. அதற்கான மனம் என்னிடம் இல்லை." என்கிறார் அ.மங்கை. இக் கவிதைகளை யார் கூவி விற்றார்கள். ஏற்கனவே இக் கவிதைகள் பல சஞ்சிகைகள், மலர்கள், தொகுப்புக்களில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறான தொகுப்புகளைக் கொணர்ந்தவர்கள் பணப் பிரச் சினைகளுள் திண் டாடித் தான் கொண்டுவந்தார்கள். மீண்டும் மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். புலம்பெயர் தேசத்தில் இதற்கான வளம் தனிநபரிடம் இருப்பது உண்மைதான். ஆனாலும் இங்கும் அதனால் யாரும் வியாபாரம் செய்வதில்லை.
அ.மங்கையின் இக் கூற்றினை அடியொற்றி விருபா என்ற இணையத்தளம் இப்படி எழுதுகிறது. "இத் தொகுப்பினை செய்த அ.மங்கை அவர்கள் சென்னை கல்லுாரி ஆங்கில பேராசிரியராக பணியாற்று கின்றார். ஈழத்தமிழ் இலக்கிய வட்டத்துடன் உயர்வான தொடர்புகளைக் கொண்டிருப்பவர். மற்றைய பலரைப்போல் ஈழத்து இலக்கிய வட்டத்துடனான தொடர்புகளை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர் அல்லர். உணர்வு பூர்வமாக ஒன்றித்து செயலாற்றுபவர். இது யாரை நோகடிக்கும் வார்த்தைகள்? சமூக அக்கறையுடன் செயற்படுபவர்கள் வேறு எவரும் இல்லையா? ஈழத்து இலக்கியவட்டத்துடனான உயர்வான (??) தொடர்புகளை அ.மங்கை கொண்டிருப்பவர் என்று விருபா கூறுவது உண்மையானால் இந்தப் பெண்பெயர்களுக்குள் புகுந்து நின்ற ஆண்களை அவர் தெரிந்துகொள்ளவும் சந்தர்ப்பம் அமைந்திருக்கும் என்று ஒருவரால் வாதிட முடியும்.
இந்திய பெண் எழுத்தாளர்கள் ஈழப்பெண் எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருப்பதும், ஈழத்துக்கு நேரில் போய் தொடர்புகொள்வதும், புலம்பெயர் தேசத்தில் பெண்கள் சந்திப்புகளில் பங்குகொண்டு தொடர்பு றுவதும் என பலமான தொடர்பு ஒன்று உள்ளது. ஈழத்து இலக்கியத்தில் அவர்களும் அக்கறையுடையவர்கள். தமிழ்ப் பெண் கவிஞர்களின் தொகுப்பான "பறத்தல் அதன் சுதந்திரம்’, விஜயலட்சுமியின் சிறுகதைத் தொகுப்பான “வானம் ஏன் மேலே போனது” போன்றவற்றையும் தமிழகப் பெண்களே வெளியிட்டுள்ளனர். இதன் ஒரு தொடர்ச்சியாகவே பெயல் மணக்கும் பொழுதையும் நாம் பார்க்க முடியும். அது இத் தொகுப்புக்காக அ.மங்கையின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவது என்பதாகாது.

Page 19
ஜீவநதி
தமிழ் மிடுக்கு
தமிழெழுதி மகிழ்வோர்க்கு தரித்திரக் ప్లేక్టో தமிழழுதித5ஷழுத் தானெனது பாவத்தைக் கழுவிக்கொணி தருக்கின்றேன் கஷ்டம் வரும் போது. தமிழிருக்குத் துனைக்வகன்று தான் நான் சிரிக்கின்றேன் தலிழோடு பழகப் பழக தமிழினது
லுதன் தெள்விக இயல்புற் புரியலாக்கு தமிழுக்கு அணுக்கத் தொண்டனான வின். எனக்கும் அழிவில்லை தமிழைப்போல் எனுமுனிறை தெளிவாச்சு ஆழ்ஜந்த னுரு தரணிக்கு இர்ைத்தவல்ல முழுதுஞ் சுரக்க. மூச்சடக்கும் பழுவெனிலும் அதனால் வருந்பெருறை அகிலமுள்ள வரைவிருக்கும் வினுமுண்றை விளங்கிறது எவ்வாறு வான்கங்கை செய்யாவம் அத்தனையும்
தானேற்று. மனிதனினைப் புனிதனாக 19ாற்றிருதோ. elsiorogo
தமிழ் தன்வில்
முழுகியெழும் பித்தளையைக் சிவபுப் புடன் போட்டு புனித9ான வான்னாக்கும் என்ற புது இனிறை வின்னைத் திெ என்ாவல்கழுவுதமிழ் விவினை எத்தனையோ ασπάταδοί என்னென்ன விசான்னாலும் இணையற்ற స్థ தன்னைக் சிக்கெனர் டித்ததாலெனி சீவியமும் அதன் போக்குற் அர்த்தமுள்ள தாச்சு அகற்
இது ஆதால் அந்த க்கெந்த விழவினையும் தாங்க வலுத
34 என் முற்றப் பொன்னொச்சிறஞ்சள் நசிதாள் புத்தபடி விண்ணை ථfෂණි. කෙrකෝණaut ටොග්‍රණි என்னை மறுக்கின்றேன். விண்முற்றர் யூ இதுதான் விந்தத் தேனியும் விருக்க அதிற் தேனில்லை இன்பச் சுகந்தம் இதிலே பிறப்பதில்லை தின்னக்கணிகயைத் தந்து జీpuత్రకుaD6లి. என்றாலும் குறைவில்லை. ல் நச்சுப் பாலில்லை எண்முற்றப் பூவிதுதான். 6ταύτα» στάβααού στεία»χοΙαπωr எண்முற்றப் பூவிதுதான். எல்வாழ்வின் அழுைதிக்குக் குறியீடாய் சோடனைகள் ஆடல் பரங்களற்று பெருகிக் கிளைகளிலே கொத்தாக வாய்த்திருக்கும் பொன்னொச்சி. மஞ்சள் பூசியதாய் பூத்தபடி என்னை அழைக்க எண்முற்றப் பூ. எழிலில் சொக்கிக் கிடக்கின்றேன் "சொர்க்கப்பூ என ஒன்று
பக்கத்தில் வந்தாலும் அதைவிட நrவி இதை මෑgraණ6uණr.
- த.ஜெயசீலன்
 

ஜீவநதி 35
வளரும் பிள்ளைகளின் குணவியல்புகளில்
ஆதிக்கல் செலுத்துல் வளிப்பு முறை
சந்திரகாந்தா முருகானந்தன்
வளைசசல் சிறப்பாக அமைவதற்கு விதைமட்டும் நன்றாக இருந்தால் போதாது. விளைநிலமும், பராமரிப்பும், பாதுகாப்பும் மிகவும் அவசியமானவை என்பதை நாம் அறிவோம். ஆம்! குழந்தை வளர்ப்பிலும் கூட இது பொருந்துமே. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்று பாட ஆரம்பிக்கும் கவிப்பேரரசு கண்ணதாசன் அடுத்த வரியிலேயே அவை நல்லவராவதும் தீயவராவதும் அன்னைவளர்ப்பினிலே என்று குறிப்பிடுகிறார்.
ஒரு பிள்ளையின் ஆரம்பகால பராமரிப்பாளராக அன்னையே இருக்கிறார். இதனால் தான் தாயைப்போலபிள்ளை என்று குறிப்பிடுகிறார்கள். பின்னர் தந்தை, ஆசான் என்போரும் பிள்ளை வளர்ப்பில் பங்குகொள்கிறார்கள். ஒரு குழந்தையின் குண இயல்புகளையும் திறனையும் மரபணுக்கள் மட்டும் நிர்ணயிப்பதில்லை. மரபணுக்களின் பங்கு முக்கியமானது. எனினும் முற்றுமுழுதாக பரம்பரை அலகுகளே ஒருவரை உருவாக்கிவிடுவதில்லை. பிள்ளை வளர்ப்பில் மாற்றங்கள் ஏற்படும் போது பிள்ளையின் நடத்தையிலும் மாற்றம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளாலும் ஆய்வாளர்களாலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பிறந்த குழந்தையின் இயல்புகள் அதன் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஆரம்பத்தில் அம்மாவின் அரவணைப்பிலே வளரும் போது அம்மாவின் இயல்புகள் பலவும் குழந்தைக்கு ஏற்படுகிறது. கருவில் இருத்தி, பெற்றெடுத்து, பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி, வளர்க்கும் அன்னையே ஒரு குழந்தையின் முதலாவது வழிகாட்டியாதலினால் அன்னையர் சிறுபராயத்திலிருந்தே குழந்தைகளைச் சிறப்பாக வளர்த்து வரவேண்டும். அடுத்து வருபவர் தந்தையும், பேரன், பேத்திகளும் ஆவர். (பாட்டன், பூட்டிகள்) பொதுவாக பிள்ளைகளை முற்று முழுதாக பாட்டன், பூட்டிகளுடனோ, வேலைக்காரி, ஆயாவுடனோ வளர விடுவது ஆரோக்கிய மானதல்ல. இருவரும் வேலை பார்ப்பவர்களாக இருக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளினல் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
பிள்ளைகளின் நடத்தையில் சிறப்பான மாற்றங்களை அல்லது இயல்புகளை ஏற்படுத்த நல்ல பண்புடையவர்களாகவும், ஆளுமை மிக்கவர்களாகவும் அவர்களை உருவாக்க பெற்றோரின் அக்கறை, நல்லுறவு, பாசம், அன்பு, அர்ப்பணிப்பு என்பவை முக்கியம். வளர்ந்துவரும் குழந்தையுடனான மனப் பகிர்வு மிகவும் முக்கியமானதாகும். பிள்ளைகளுடனான நித்திய கலந்துரையாடல் அவசியமாகும்.
என்ன தான் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தாலும், எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் நாம் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்தத் தவறக்கூடாது. இல்லத்தரசிகள் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் தமது பிள்ளைகளை அக்கறையோடு கவனிக்க வேண்டியது அவர்களது பொறுப்பாகும். அதற்காக நேரத்தை ஒதுக்குவதை விடுத்து எமக்கு நேரமில்லை என்று சொல்லிக் கொண்டிருத்தல் ஆகாது. ஆயாவுடன்

Page 20
ஜீவநதி 6 வளரும் பிள்ளை அறிவு திறன் குறைந்த பிள்ளையாகவே வளரும். தாத்தா, பாட்டியும் ஒரு தலைமுறை முந்தியவர் களாதலினால், நவீன விடயங்களை அறியாது அவர்களோடு வளரும் குழந்தைகள் பழமையான கருத்துக்களைக் கொண்டு வளர்வர். பேய், பிசாசு, ஆவி என்று நம்பி அஞ்சி வளரும் போது பயந்த சுபாவமுடையவர்களாகி விடுவார்கள்.
பிள்ளைகள் நல்ல பண்பாளர்களாக வளர்வதற்கு பெற்றோரின் அணுகுமுறை முக்கிய அம்சமாகும். பெற்றோர்கள் சண்டை, சச்சரவுகள் இன்றி ஒற்றுமையாக வாழ்வதோடு பிள்ளை வளர்ப்பு முறையில் உயரிய நோக்கத்துடன் தமது போக்கையும், நடத்தையையும் கூட மிகுந்த அவதானத்தோடு கடைப்பிடித்தல் அவசியமாகும்.
குழந்தைகளின் உள்ளம் வாட்டமடையாமல் ஆனந்தமயமான இன்பகரமான, இங்கிதமான சூழலை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்தல் அவர்களது தலையாய கடமையாகும். அந்த வகையில் பிள்ளைகளின் எந்த ஒரு செயற்பாடாக இருந்தாலும் அவர்களை மனதாரப் பாராட்டுவது தான் அவர்களின் முன்னேற்றத்திற்குச் சிறந்த வழியாக அமையும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்களது பூப்போன்ற மனது புளகாங்கிதமடைந்து நறுமணம் வீசும்.
எனவே எப்போதும் பிள்ளைகளைப் பாராட்டுங்கள். அவர்களது மனதுக்கு நாம் வழங்கும் ஊட்டச்சத்து அதுவே. இதனால் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடையும். குழந்தையின் எதிர்காலம் மேன்மையடைய வழிபிறக்கிறது.
பிள்ளைகளிடம் சுமுகமான அணுகுமுறையை மேற்கொள்ளும் போது அவர்கள் நம்பிக்கையும் உற்சாகமும் அடைகின்றார்கள். இதனால் ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததி உருவாகிறது. எமது பிள்ளைகளின் உயர்வுக்காக அதிக நேரத்தைச் செலவிடுதலும் அவசியமே. பிள்ளைகளின் பிஞ்சு மனம் எப்போதுமே அன்பையும், அனுசரணையையும், பெற்றோரின் அக்கறையான பாசமிகு வெளிப்பாடுகளையும் எதிர்பார்க்கிறது.
பிள்ளை வளர்ப்பில் அடுத்த பாதகமான அம்சம் ஒப்பிடுதலும் அதிக கண்டிப்பும் என்றால் அது மிகையாகாது. பிள்ளைகளின் நடத்தை மாற்றங்களை நாம் எப்போதும் கண்காணிக்க வேண்டும். எடக்கு மடக்காக பிள்ளைகளைக் கண்டிக்க கூடாது. அதிக கண்டிப்பினால் பிள்ளைகளின் மனம் ஊனப்பட்டு அவர்கள் மேலும் சலிப்படைந்து துர்நடத்தையுடை யவர்கள்ாக மாறி விடுவார்கள். ஒரு நீண்ட பெரிய நூலில் கட்டி வைப்பது போன்று அவதானமாக பிள்ளைகளைக் கண்காணித்து இங்கிதமாக வழி நடத்த வேண்டுமேயன்றி பிள்ளைகளுக்கு, வாழும் இடத்தையே சிறைச்சாலை போல் ஆக்கிவிடக்கூடாது.
அதிக குழப்படி செய்யும் பிள்ளைகளையும், பொய் சொல்லும், களவெடுக்கும் பிள்ளைகளையும் கண்டிப்பதையும் தண்டிப்பதையும் விடுத்து அவ்வாறு பிள்ளை ஏன் நடக்கிறது என்பதற்கான காரணத்தை இனம் கண்டு அதை நீக்கி சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதுடன் அன்பாக குழந்தைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதனால் குழந்தையும் எளிதில் திருந்திவிடும். முரண்படும் போது குழந்தையும் மூர்க்கம் கொள்ளும் என்பதை மறந்துவிடலாகாது. எனவே தவறு செய்யும் குழந்தைகளைத் திட்டித் தீர்ப்பதை விடுத்து நல்லவழியில் நடக்கும்படி அன்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். குழந்தைகளின் தேவைகளையும், அபிலாசைகளையும் இனம்

ஜீவநதி 37 கண்டு அவற்றைக் குழந்தைகளுக்கு வழங்கும் போது குழந்தை மனநிறைவு கொள்ளும். குழந்தையும் சிறப்பாக வளர்ந்து நற்ப்ரஜையாகிறது.
பதுமப்பருவம் அல்லது வளரிளம் பருவம் பிள்ளைகளின் குண இயல்புகளைத் திசை திருப்பக் கூடிய பருவமாதலினால் இக்கால கட்டத்தில் குழந்தையின் சூழல், நட்புகள் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதை விடுத்து இப்பராயத்தில் பிள்ளைகளின் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதும் எதிர்வாதம் புரிவதும் நல்ல பயனையளிக்காது. இப்பருவத்து பிள்ளைகள் பல விடயங்களில் முரண்பட்டும் எதிர்வாதம் செய்தும் நடப்பார்கள் என்பதை பெற்றோர் உணர்ந்துகொண்டு, அவர்களோடு மல்லுக்கட்டாமல், உணவு மேசையிலோ அன்றி குடும்ப ஒன்று கூடலின் போதோ உரையாட வேண்டும். உரையாடல்களின் போது குற்றப் பத்திரிகைகளை வாசிப்பதை விடுத்து நல்லது கெட்டதைப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும். பருவமாற்றம், பாலியல், குடும்பத்திட்டம்
என்பவை பற்றி கூட மேலோட்டமாக உரையாடலாம்.
மனப்பகிர்வும் அனுசரணையும் அன்பான அணுகு முறையுமே நல்ல பண்பாளர்களாக ஆளுமை மிக்க பிள்ளைகளை உருவாக்கும். ப ம ய
ஒடுகரகம் ஒடு கூடு
காகக் கூட்டைக் கலைத்ததினால் ஏற்பட்ட கலவரம் யார் என்றும் பாராமல் அவர் தலையைக் கால் கீழ்த்து ஓயாத சச்சரவும் சத்தமும் காதைக் கிழிக்கும் ஒலம் இன்னும் ஒழிந்த பாடில்லை ஒருவருக்கும் இதை அடக்கும் திராணியில்ல்ை: உறவாலான உலகில் இன்று பொருளலான செல்வம் குறைவானதில் கலகம் அதுதான் ஒரு காகம் ஒரு கூட்டின் சிதைவால் செய்த கலகம்
அடைகாப்பதின் முனைப்பு ඡ01, 德 s காகம் கூடு முட்டை குஞ்சானதும் முடியும்
ஏ கலைப்பால் இந்த விளைவு ஐம்பொறிகளுள் <>ILeẻ e5Lỗ வல்லமை
அளவு முறைக்குட்பட்டது பொறிகளை நம்பிப் புலம்புதல் அறிவுக் கெட்டாச் செயலெனக் கூக்குரலிடலாம் அறிவும் பொறியும் அடக்கமும் அளவுகோல்களே அல்ல அகன்று விரிந்தால் அளவை எப்படிக் குறுக்கலாம்? குறுக் கலைவிட்டு அளக்கவும் இயலா தலையும் மனமும் குழம்பியழுந்துதல் ஓர் அளவா? அளவுக்கதிக ஆர்ப்பரிப்பால் அவலம் அதிகம்
f 片 மத் G 输
காகம்
மனிதர் மத்தியில் கட்டிய கூடு இதுதான் கவலை ஒந காகம் ஒரு கூடு கட்டி முடித்ததால் எட்டிய செய்திகள் ஏராளம்
- கவிஞர் ஏ. இக்பால்

Page 21
ඉද්ඛu|bæ 38
பாரதி கண்ட புதுமைப் பெனி
கி.நடராஜா
ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த பெண்ணின் சமுதாய வாழ்க்கைக்கும் இன்றைய பெண்களது சமூக வாழ்க்கைக்கும் இடையே எத்தனையோ மாறுதல்கள் உள்ளன. பாரத நாட்டில் பாரதிக்கு முன்னர் பெண்களை ஆண்களின் அடிமைகளாக எண்ணி இகழ்ந்து கொள்ளும் நிலை தோன்றியது. பாரதநாட்டின் விடுதலையை விரும்பிய பாரதி முதலில் பெண்களின் அடிமை வாழ்வு நீக்கப்பட வேண்டும் என விரும்பினான். அவனது விருப்பத்தின் எண்ண உணர்வுகளே புதுமைப் பெண்ணின் பண்புகளாக மலர்ந்தன.
சுதந்திர பாரதத்தைப் படைக்க எழுந்த புதுமைப் பெண், அன்னை பராசக்தியின் வடிவமாகவும், அடிமை வாழ்வு என்ற துன்பத்தை நீக்க வந்த சுதந்திரப் பேரிகையாகவும் படைக்கப்பட்டிருக்கின்றாள். புதுமைப் பெண்ணின் வருகையை பாரத மக்கள் செய்த தவப்பயனின் வருகையாக வியப்புடனும் பரவசத்துடனும் நோக்குகின்றார். புதுமைப்பெண்ணின் வருகை, சேற்றில் மலர்ந்த ஒளிமிகுந்த செந்தாமரை மலர் போல பாரதிக்கு தோற்றமளிக்கின்றது. பெண்களின் நிலையைப் பொறுத்தவரை மிகப் பிற்போக்கான பாரத தேசம் சேற்று நிலமாகக் காட்டப்படுகின்றது. புதுமைப் பெண்ணின் வரவோ அந்நிலத்தில் வளர்ந்த செந்தாமரையாக உவமித்திருப்பது பொருத்தமாகவே அமைகின்றது.
புதுமைப் பெண் எழுப்பிய உரிமைக்குரலின் இனிமை பாரதிக்கு மிகுந்த உள்ளக்கிளர்ச்சியையும் பரவசத்தையும் கொடுக்கின்றது. உலகில் எங்குமே கிடைக்காத தெய்வீகப் பொருள்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றார். நாரதரின் வீணை இசைக்கு நிகராகவும், கண்ணபிரானின் வேய்ங்குழல் இன்பத்திற்கு நிகரானதாகவும் ஒப்பிடுகின்றார். வேதமே பொன்னுருக் கொண்ட கன்னியாக வந்து, எம்மை மேன்மை செய்து, காத்திடக் கொடுத்த குரலாகக் காண்கின்றார். சாவையும் மூப்பையும் தடுக்கும் தேவாமிருதமாக உருவகப்படுத்துகின்றார்.
அறிவுள்ள மனிதர்களை அடிமைப்படுத்த முயல்பவர்களை, 'பித்தர்கள்’ என்று புதுமைப் பெண் எள்ளி நகையாடுகின்றாள். மனிதர்கள் எல்லா நெறிகளிலும் மேம்பட்டு நேர்மை கொண்டு தேவர்களாக உயர்வடைய வேண்டுமாயின் தொண்டுழியம் செய்வதை நீக்கி அடிமைத்தனத்தை தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும்.
"சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமைச்சுருள் தியிலிட்டுப் பொசுக்கிடல் வேண்டுமாம்" என்பதே புதுமைப் பெண்ணின் குரலாகும்.
வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடந்து நாணிக்கோணி எடுத்ததற் கெல்லாம் நடுங்கி இருப்பதுவும், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பனவும் புதுமைப் பெண்ணின் குணங்களல்ல. ஞான நல்லறம் வீரசுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாகும். நற்குடிப் பெண்களுக்கு கற்பு இயல்பான தென்றும் அதனை நான்கு சுவர்களுக்குள்ளே அடைத்து வைத்து கொடுமைப் படுத்துவதன் மூலமோ, கல்வியறிவூட்டாமல் அவர்களது அறிவைக் கெடுத்து விடுவதோ முறையன்று.

ஜீவநதி 39
"சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை” என்ற வள்ளுவர் நோக்கும் பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணின் நோக்கும் கருத்தொருமித்து நிற்கின்றன.
பெண்மை என்ற பதத்திற்கு ‘கண்ணுக்குப் புலனாவதோர் அமைதித்தன்மை' என்று பழைய உரையாசிரியர்கள் விளக்கம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் பாரதியின் இலட்சியப்படி
'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்' என்று புதுமைப்பெண் எடுத்துரைக்கின்றாள்.
நுண்ணறிவோடுடைய நூலொடு பழகினும் பெண்ணறிவு என்பது பெரும் பேதைமைத்தே' என்று பாடி வைத்திருக்கின்ற பாரத நாட்டில் மகாகவி பாரதியோ,
"பெண்ணுக்கு அறிவை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில முடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுக்கின்றார்” என்று பெண்ணறிவை குறை சொல்லும் பித்தர்களைச் சாடுகின்றான். இந்த மரபை மாற்றி உடைத்தெறிய வேண்டும் என்பதை, "அமிழ்ந்து பேரிருள் அறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும்’ என புதுமைப்பெண் குரல் எழுப்புகின்றாள்.
பெண்கள் வாழ்க்கைச் சித்திரங்களாக மட்டும் விளங்காது, நாற்றிசை நாடுகளிலும் சென்று புதுமை கொணர்ந்து பாரத தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டும் என்கிறார்.
“முந்நீர் வழக்கம் மகடூவோடில்லை” என்ற தொல்காப்பியப் பாரம் பரியத்திற்கு மாறாக,
"விலகி விட்டிலோர் பொந்தில் வளர்வதை விரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்" என்று புதுமைப் பெண்ணில் ஒலிக்கின்றார். பெண்குலத்தை அடிமையாக்கும் பொய்யான கட்டுப்பாடுகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் உடைத்தெறிய வேண்டும் என்பதிலேயே புதுமைப் பெண்ணினுடைய பெரு வேட்கை புலனாகின்றது. புதுமைப் பெண்ணாகிய அன்னை பராசக்தி தனது கருணையினாலே அடிமைப்பட்ட பெண்களை விடுதலை பெறச் செய்து மானுடம் போற்றிட வாழ்வாள். ப ம ய
மதிப்பிட்டிற்கு உங்கள் நூலின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள்.

Page 22
ஜீவநதி
40
புதுப்புனல்
கொள்கின்றது.
அல்வாய் ஊரைச்சேர்ந்த வெதுஷ்யந்தள் யா/நெல்லியடிமத்தியமகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்கின்றார். இவர் கவிதை,கட்டுரைஎழுதுவதிலும்,நாடகம்தடிப்பதிலும், வாசிப்பதிலும் சிறந்த ஆர்வம் உள்ளவர். இவரைவததி அறிமுகக்செய்துவைப்பதில் பெருை
ஆறாம் அறிவு
வெறிச் சென்றிருந்த அந்த வீதியில் நாணி பயணிக்கினிறேனர்.
காணிபதற்கு எதுவுமின்றி கணிகள் துழாவிச் சோர்கின்றன. உற்றுக்கேட்க விழையும் செவியிலும் உள் நுழைய ஓசை இல்லா
Sarůsb!
யாருமில்லாத வீதியில் இரவின் தனிமையில் என் பயணம் தொடர்கிறது ஆனால். கூட வருவது எனினவோ பயம் மட்டும் தானி
g56 நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு மெல்லிய அனுங்கல் மீண்டும் எள் நெஞ்சில் agoomf பயத்தினி மெல்லிய ரேகைகள்.
நெருங்கிப் பார்க்கிறேனி பெட்டை நாய் ஒன்று குட்டிகளுடன் கொஞ்சிக்குலவுகிறது 3mrugih ajčugaslomjumru ஒன்றையொன்று முட்டிமோதி. உரோஞ்சுதலில் unrarturfassif. நெகிழ்ந்து போனேனி
எனது இரவுணவு
Si G8 u mrg S96 gå góssiř u af தீர்க்கும்
u606 mř 6raš ஒன்றைக் கையில் எடுக்கையில் அதனி ஸ்பரிசம் இதமாக இருக்கிறது ஊட்டும் உணவோடு எனி கையையும் நக்கும் அதனி செயலை அங்கீகரிப்பது போல் தாயும் உடன் பிறப்புக்களும் வாலாட்டுகின்றன
கொணர்டு சென்றுதானி 656m fiC3unr(3up' எண்ணம் தலைதுாக்க எனி வழியில் நடக்க முயன்றேனர் நெஞ்சோடு அணைத்தபடி முடியவில்லை! தாயி மை எனினை கடிக்க வந்தது சகோதரத்துவம் குரைத்து உறுமிற்று.
குட்டியை இறக்கிவிட்டு assofusormulf மீண்டும் பயணிக்கிறேனர் சுயநலம், ஆதிக்கம், ஆறறிவு எல்லாம் - அந்த ஐந்தறிவு ஜீவனிடம் upssortguilசோகம் நெஞ்சைப் பிழிகிறது.
குட்டிகளுளி
 

ஜீவநதி 4. நாட்டிய சாஸ்திரம் - சில அரங்கக்குறிப்புக்கள்
க.திலகநாதன்
நாட்டிய சாஸ்திரத்தின் தோற்றம் பற்றிக் கூறின் அது தொன்மையானது. உண்மையில் நாட்டிய சாஸ்திரம் குறிப்பது நாடகத்தையே, பரதமுனிவர் இதனை எழுதினார். இங்கு நாடகம் எழுதுதல், நடித்தல், செய்து காட்டுதல், அரங்கேறும் இடங்கள் பற்றிக் குறிக்கப்படுகிறது. மற்றும் நாடகாசிரியர், நடிகன், நடனம், பாட்டு, பேச்சு, இசை நாடக அமைப்பு, நாடக அரங்குகள் என்கிற எல்லாவற்றையும் பேசுகிறது நாட்டிய சாஸ்திரம்.
மகாகவி காளிதாசனி, பரதர் நாட்டிய சாஸ்திரத்தை எழுதியதாக குறிப்பிடுகிறார். பரத என்ற சொல்
Lu -- LJT6JLb (Emotion) ர - ராகம் (Melody) த - தாளம் (Rhythm)
என்பன இணைந்து உருவாகின எனக் கூறுவர். பரதர் என்பதுகூட நடிகனைக் குறிக்கும். பிரம்மாவின் வேண்டு கோளிற்கு ஏற்ப பரதரால் நாட்டிய சாஸ்திரம் அருளப்பட்டது. நாட்டிய சாஸ்திரத்தில் முன்னுக்கு பின் முரண்பாடு ஏதும் காணப்படாத காரணத்தால் ஒருவரே எழுதியிருக்க முடியும் என நம்பப்படுகிறது. 36 அதிகாரங்கள் கொண்டது. ஆயினும் இதன் சாரம் 11 அம்சங்களில் அடக்கி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவையாவன: பாவமி, சித்தி, ரசமி, ஸ்வரம், அபிநயமி, ஆதாய, தர்மி, கானம், விருத்தி, அரங்கமி, பிரகிருதி.
இந்தப் பதினொன்றிலும் அபிநயம் முக்கியப்படுகிறது. ரசம் 8, பாவம் 49 (நிலையானது 8, மறுதலிப்பது 8, சஞ்சாரிபாவம் 33, அபிநயம் 4. தர்மி 2, விருத்தி 4, பிரகிருதி 4, சித்தி 2, ஸ்வரம் 7, ஆதால 4, கானம் 5, அரங்கு 03
6000 சூத்திரங்களும் 36 அதிகாரங்களுக்குள் அடக்கப்படுகின்றன. முதலாவது அத்தியாயம் நாடகத்தின் தோற்றம் பற்றிக் கூறும் அதே வேளை கடைசி அத்தியாயம் நாட்டிய சாஸ்திரத்தை பரத முனிவர் எப்படி உலகத்திற்கு கொண்டுவந்தார் என்பது பற்றி கூறுகின்றது.
நாட்டிய சாஸ்திரம் நடிகரை முக்கியப்படுத்தும். முதன்மையாகக் கொண்டது. ரசத்திற்கு முக்கிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பரதர் கூறும் அடிப்படை ரசங்கள் எட்டு இந்த ரசம் விபாவ - அனுபாவ - சஞ்சாரி (வியபிசாரி) பாவங்களால் ஏற்படுவது சுவைக்கப்படுவது. நால்வகை அனுபவத்தினடியாக காண்போரின் மனதில் அவையின் அனுபவம் ஏற்படுகிறது. பல வகை அபிநயங்களால் சுவையைத் தோற்றுவிப்பவை பாவங்கள் (Bhava). மேற்சொன்னவாறு பாவங்கள் நாற்பத்தொன்பது வகைப்படும். ஸ்தாயி பாவங்கள் எட்டு, சாத்துவிக பாவங்கள் எட்டு, சஞ்சாரி பாவங்கள் முப்பத்து மூன்று. ஸ்தாயிபாவங்கள் - ரதி, சோகம், நகை, குரோதம், உற்சாகம், பயம், ஜீகுட்ச, வியப்பு. சாத்துவிகபாவங்கள் - ஸ்தம்பம், சுவேதம், ரோமாஞ்சம், அரபங்கம், வேபது, வைவர்ணயம், அச்ரு, பிரளயம். ரச ஒவ்வொன்றிற்கும் நிலையான (ஸ்தாயி) பாவமும் வர்ணங்களும் உண்டு.

Page 23
ஜீவநதி 42
1) சிருங்காரம் - ரதி (அன்பு, காதல்) - பச்சை
2) ஹாஸ்ய - நகை (சிரிப்பு) - ിഖണങ്ങണ്
3) ரெளத்திரம் - குரோதம் (கோபம்) - சிவப்பு
4) வீர - உற்சாகம் - மண்ணிறம்
5) Ju IIT60185 - Juub - கறுப்பு
6) பீபத்ஸ் - ஜூகுட்ச (அருவருப்பு) - நீலம்
7) அற்புத - வியப்பு - மஞ்சள்
8) கருணா - சோகம் - புறா வர்ணம்
அபிநயம் நான்கு வகைப்படும்.
1) ஆங்கிகம் - அங்கங்களால் அபிநயித்துக் காட்டுதல.
2) வாசிகம் - வார்த்தைகளுக்கு அமைவாக செய்யப்படுவது
3) சாத்வீகம் - மெய்பாடுகளால் உணர்ச்சிகளை கொண்டு செய்தல்.
4) ஆஹார்யம் - வேட உடை, ஒப்பனை, காட்சிகளால் செய்தல்
இந்த நான்கு வகை வெளிப்பாடுகளையும் செய்பவர் நடிகரே. உடல், குரல், உணர்ச்சி, காண்பியங்களினுடாக பாவங்களை வெளிப்டுத்தி ரசங்களை தோற்றுவிப்பர். நடிகருக்கு ஏற்படும் உணர்வு பார்வையாளருக்கும் ஏற்பட வேண்டும். பாத்திரத்தை'சித்திரிக்கும் போது நாடகாசிரியர் பாத்திரங் களினுடாக தன் உணர்வை வெளியிடுகிறான். இவ்வுணர்வை நடிகள் பெற்று அதைக்கற்பனை பண்ணி நடிக்கும் போது பார்வையாளரும் தமது இனங்காணலின் வளர்ச்சிப்படியில் ஒரு நிலைக்கு வரும் போது நடிகள் பெறும் அதே உணர்வு அனுபவத்தை பார்ப்பவரும் பெற்றுக் கொள்வர்.
பார்த்துக்கொண்டிருக்கும் போது முதலில் மனம் மாற்றத் திற்குள்ளாகிறது. இதிலிருந்து மனம் கற்பனைத் தளத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறது. அது கற்பனையை அனுபவிக்கின்றது. நடிகனை தன்னோடு இனங்காண்கிறது. இந்தநிலை சர்வ உலக பொதுத்தன்மை பெற்றது. இதனால் தான் பார்ப்பவரை “சகிர்தயன்” என அழைத்தனர். சக இருதயம் (நடிகர் - பார்ப்பவர்) கொண்டவராக இருவரும் இருப்பர். நடிப்பதைப்பார்த்து அதன் உணர்வுகளை இவர் பெற்றுக் கொள்கிறார். இது அக்கணத்திலேயே நடைபெறுகிறது. அபிநயங்கள் இரண்டு வகையாக சித்திரிக்கப்படுகின்றன. 1) (86)ITE girlf - guj6)LT601 g) 6)ds6dpisg(Realistic Practice or Realism) 2) நாட்டிய தர்மி - உலக இயல்பிற்கு சற்று அப்பாற்பட்டது
(Conventional practice ldealism). கண்ணி சிந்தி நடிப்பது லோக தர்மி. கண்ணிர் சிந்துவது போல ஜாடை காட்டுவது நாட்டிய தர்மி. இரண்டு தர்மியும் கலக்கப்பட்ட வெவ்வேறு சேர்க்கைகளால் ஆனதே ரூபகம்.
மேலும் நாட்டிய சாஸ்திரம் 10 வகை நாடகம் பற்றிக் கூறுகிறது. நாடகம், பிரகரணம், அங்க, வியாயோகம், பாணம், சமபகாரம், வீதி, பிரகசனம், டிமம், ஈகாமிருகம் என்பனவாகும். நாடகம் கற்பித்தற் சாதனம், அறிவூட்டும், செயற்பாட்டிற்கு தூண்டும். கலை, கைவினைகளை உள்ளடக்கியதாக இருக்கும். எல்லா சாத்திரத்தையும் உள்ளடக்கியதால் இதனை திருகரண அனுகரண என அழைப்பர். (Triloga Anukarana) உலகத்தில் உள்ள இன்ப துன்பங்களை நால்வகை அபிநயங்களையும் போலச் செய்து காட்டும். இவற்றோடு நிருத்தத்தை சேர்ப்பதன் மூலம் சிறந்த நாடகம் செய்யப்படும். நிருத்தியம் என்பது நாடகம் ஆகும். நிர்த்த என்பது வெறும் நடனம். நிர்த்திய என்பது பாவத்துடன் கூடிய நடனம் என்பதாகும்.

§ඛuilbá 43
நாட்டிய சாஸ்திரம் நாடக கதை அமைப்பு பற்றிக் கூறும் போது ஐந்து கட்டங்கள் பற்றிப் பேசுகின்றது. பிராரம்பம் (தொடக்கம்), பிரயத்தனம் (முயற்சி), பிராப்தி(சம்பவம்), நியதபல பிரதாப்தி, பபயோகம் என்பனவாகும். மேலும் மூன்று வகையான அரங்கு பற்றிப் பேசுகின்றது. சதுரம், செவ்வகம், முக்கோணம் இவை மூன்றும் மேலும் 3 அளவுகளில் உள்ளன. 1) நீளம் அதிக அளவிலும் அகலம் குறைவாகவும் உள்ளது விகிருஷ்டம் (செவ்வகம்) என அழைக்கப்படும் 2) நீளமும் அகலமும் சரிசமமாக உள்ள சதுர அமைப்பு சதுஸ்ட (சதுரம்) என அழைக்கப்படும். 3) முக்கோண வடிவில் மூன்று சமமான அளவுள்ள அமைப்பைக் கொண்டது திரியஸ்ட என அழைக்கப்படும். மேலும் யேஸ்ட (பெரிய), மத்திம (நடுத்தரம்), அவரம் (குறைந்த அளவுள்ள) என மூன்று வகைப்படும் கேஸ்ட அரங்கு - தேவதைகளுக்குரியது. மத்திமம் - மன்னர்க்கு உரியது. அவரம் - பொதுமக்களுக்கு உரியது. ஆயினும் மனிதர்க்கு குறிப்பிட்டுள்ள மண்டபம் விக்கிருஸ்ட மத்திம நாட்டிய மண்டபம் ஆகும். ப ம ய
தூசிபடிந்த சாய்மனைக் கதிரைநாட்கள்
தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றது வாழ்வு கொழுத்தும் வெய்யிலில் கொட்டித் தள்ளும் இலைகளின் உதிர்ப்பில் பேய்க் காற்றுத் தாண்டவத்தில் எல்லாமே அள்ளுண்டபடி சிவப்பு கறுப்பு பொட்டிட்ட ஒரு தனியன் வண்ணத்துப்பூச்சி செழிப்பிழந்து போன நித்திய கல்யாணிப் பூக்களில் நம்பிக்கையுடன் தேடித் தேடித் தேனெடுக்கும் நாதிகூட. நம் வாழ்க்கையிலிருந்து மெல்ல மெல்லக் கைநழுவிப் போகிறது அதற்கிருக்கும் திராணிகூட இல்லாமற் போய்விடுமா? வீதிகளும். வெளிகளும். வெறுமையாகிப் போன நம் கதைகளையே மீண்டும் மீண்டும் சுமக்கின்றன வரிசை கட்டிக் கொள்வதும் நேரம் கடத்தும் காத்திருப்பும்
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தெரியும் சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில் இருக்கும் ஈர்ப்புக்கூட இந்த நடைப்பிணங்களில் இல்லை பழுப்பேறிப்போன சோம்பேறி இருட்டில் மூன்று நாளாக உதறிப் போடாத அழுக்குப் படிந்த போர்வையுடன் நேரத்திற்கு நேரம் கம்மிக் கொண்டு மண் நிரப்பிய சிரட்டையில் எச்சில் துப்பிக் கொண்டிருக்கும் இந்தத் தரித்திரத்தை யாரிடம்தான் கேட்டுப் பெற்றுக் கொண்டோம் அழுக்கு மூட்டையாய் அம்மிக் கொண்டு நீண்டு கிடக்கும் தூசி படிந்து போன சாய்மனைக் கதிரையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள் காத்திருப்புக்களின் நடுவே பழுத்துப்போன இலைகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றது வாழ்வு.
- துவாரகன் -

Page 24
ஜீவநதி
4.
அரன்
நான் அண்மைக் காலமாகத் தான் இங்கு வேலைபார்த்துவருபவன். நகரச்சூழலில் கடமையாற்றிவந்த எனக்கு இந்தக்கிராமத்துக்கான 'திடீர்மாற்ற உத்தரவுக் கடிதம் முதலில் திகைப்பைத்தான் தந்தது. ஆனாலும், யார் பின்னாலும் திரிந்து இடமாற்ற உத்தரவை வாபஸ்’ பெறுவதை விரும்பாத நான் இங்கு வந்து கடமையேற்றுவிட்டேன்.
தபால் அதிபர் இக்கிராமத் தவர்களுக்கு ஒரு சிற்றரசன் போல் தபால் அதிபருடாகத் தான் இந்த மக்களில் பெரும்பாலானோருக்கு வெளியுலகத் தொடர்புகளும்கூட சிலருக்கு கடிதத்தைப் படித்துக் காட்டுவதும் தபால் அதிபராகிய நான் தான். முன்பிருந்தவர் சிடுசிடுத்திருப் பாரோ என்னவோ நான் அவர்களு க்கு ஆதரவாக இருந்தேன். ஆறுத லாக, அவர்களுக்கு விளக்கம் கிடைக்கும்வகையில், நான் ஒவ் வொன்றையும் எடுத்துச்சொல்வது அவர்களுக்கு நிறைவைத் தந்து இருக்கவேண்டும். அன்பைச் சொரிந் தார்கள்.
நான் அவர்களின் இரகசியம் பேணினேன். குடும்ப உறவிலுள்ள விரிசல்களைக்கூட சிலர் என்னிடம் சொன்னார்கள். நான் அவ்விரிசலைக் குறைத்து அவர்களை ஒன்றாக்க முயற்சித்தேன்.
நான் ஒண்டிக்கட்டை குவாட்
டஸில் சமையல் யாருக்கும் என்னால் தொந்தரவு இல்லை. ஆனால் கிராமத்தவர்கள் விடுவதாக இல்லை சமையலுக்கு வேண்டி காய் பிஞ்சுகளைக்கூட கொண்டுவந்து தரத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் சங்கடமாக இருந்தது. பழகப்பழக,
அ.தனஞ்சயன்
கிராம வாழ்க்கை மகிழ்ச்சியைத் தந்தது.
கிராமத்தின் நிகழ்வு களுககு எனனை அழைததாாகள. பிற அதிகாரிகள். கிராமத்துக்கு வருகின்ற வேளைகளில். நான் தான் அவர்களுக்கு தொலுக்குமுதலி நகரச்சூழலில் நான் கண்ட 'ஒட்டாத தன்மை' கிராமத்தில் இல்லை. எனது முதல் நியமனம் இந்தக் கிராமத்திற்கு கிடைத்திருந்தால் என் வாழ்க் கையரிலும் வசந்தம் வீசியிருக்குமோ என்று நினைத்துப் பார்த்தேன். என்னையறியாமலே என் கண்களில் நீர் துளிர்த்தது.
சொந்தத்திற்குள் செய்து கொண்ட திருமணம் தான். ஆனால், குடும்பப்பெருமை பேசத்தொடங்கிய என் மனைவியின் குத்தல் கதை களும் அவளின் சகோதரங்களின் நடவடிக்கைகளும் என்னை இரணப் படுத்தின. எங்களிடையே விரிசல் மெல்ல மெல்ல அதிகரிக்க, மனை வியின் உறவினர் அதற்குத் தூபமும் இட்டனர். எங்களுக்கு திருமணமாகி பத்துவருடங்களாகக் குழந்தையும் இல்லாமற்போனதில் நாம் இருவரும் கோபத்தை மறந்து ஒன்றாவதற்கான வாய்ப்புகளும் இல்லாமற்போயின. மனைவியின் சகோதரர்கள் என்னிட மிருந்து விவாகரத்துக் கோருமாறு மனைவியைத் தூண்டியபோது என் அந்தராத்மாவும் விழிப்புக் கண்டது. முடிவு விவாகரத்து இல்லாமலே பிரிவு தான். இரண்டுவருடங்கள் எப்படி ஒடிச்சென்றதென்றே தெரிய வில்லை.
இந்த நேரத்தில் தான் கிரா மத்துக்கான இடமாற்றம் கிடைத்தது. கிராமத்தில் உள்ளவள்களின் குடும்ப

45
ஜீவநதி உறவுகளில் ஏற்படும் விரிசல்களைக் குறைத்து இவர்களை ஒன்றாக்கி வைக்கும் சேவையில் என்னை ஈடு படுத்தியபோது, என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கும். நான் என்ன செய்வது? என் மனை விக்குப் பக்கபலமாக பணமும் அவளின் உறவுகளும் இருக்கும் போது நான் அவளுக்கு ஒரு பொருட் டல்லத்தான்.
‘என்ன ஸேர் யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க?
நீலா ரீச்சரின் குரல் என்னை நினைவுகளிலிருந்து மீட்டது. நீலா ரீச்சரை நினைத்து எனக்கு ஆச்சரி யம். குடிகாரக் கணவன். தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் ரீச்ச ருக்க அடிதான். குவாட்டஸ்க்குப் பக்கத்திலிருந்து நீலா ரீச்சரின் வீட்டில் நிகழும் நித்திய சச்சரவு என் நித்திரையைக்கூட பல சந்தர்ப் பங்களில் குழப்பிவிட்டிருக்கிறது.
‘என்ன ரீச்சர் வேணும் உங் களுக்கு, என்ற கேள்விக்குப் பதி லெதுவும் சொல்லாமல் "பதிவுத் தபால்' என எழுதிய கடித உறை யொன்றை அவள் தருகிறாள். பதிவு செய்வதற்காகக் கடிதத்தைத்தரும் போதுதான் நன்றாக அவளைப்பார் க்கிறேன். அழுது அழுது கன்னங்கள் உப்பிப்போயிருக்கின்றன. இரவும் கணவனுடன் சச்சரவுதான்.
எனக்கு அவளைப் பார்க்கச் சங்கடமாக இருக்கிறது. நீலா ரீச்ச ரிடமே அதனைக் கேட்டுவிடலாமா என்று எண்ணுகிறேன்.
"ரீச்சர் உங்கள் குடும்ப விவ காரத்தில் தலையிடுவதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேணும். தின மும் அடி, உதை வேண்டுறீங்கள். உங்களுடைய உழைப்பிலைதான் உங்கள் குடும்ப சீவியமே ஓடுது. அப்படியிருக்க ஏன் சித்திரவதைப் படுறியள். பேசாமல் அவரைத் தள்ளி வைச்சிட்டு உங்கள் பாட்டிலை
இருக்கலாம் தானே.”
சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்துவிட்டேன். இந்தக் கிராமத்துக்கு வந்து, இந்தக் கிரா மத்தவர்களின் குடும்ப உறவுகளில் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்த என்னால், ரீச்சரின் குடும் பத்தைப் பிரிந்துபோகுமாறு சொல்வது ரீச்சருக்கு ஆச்சரியத்தைத் தருமோ என்று நான் சந்தேகப்படவில்லை. நான் எத்தனையோ தடவைகளில் அவளின் கணவனுடன் பேசிப்பார்த்து விட்டேன். ஒன்றும் பயனில்லை அவன் உதவாக்கரை. என் முயற்சிக ளெல்லாம் ரீச்சருக்கும் தெரியும்.
ரீச்சரின் கண்கள் பொல பொலவென்று கண்ணிர் உகுக் கின்றன. சற்று நேரத்தில் தன்னைத் திடமாக்கிக்கொண்டு சொல்கிறாள். நீங்கள் நான் படும் துன்பத் தைக் கண்டு என்னுடைய நன்மைக் காகச் சொல்வது எனக்கு விளங்குது ஸேர். ஆனால் அவர்குடிச்சாலும் அடிச்சாலும் ஒவ்வொரு நாளும் என் வீட்டுக்குத்தான் வாறார். இதனாலை என்னை ஒருத்தரும் நெருங்க முடியாமல் இருக்கினம். இல்லாட்டில் எனக்கு என்னவென்னமோ பட்டம் எல்லாம்கட்டி என் வாழ்க்கையையும் உருக்குலைச்சுப் போடுவினம்.
எனக் குத் திகைப் பாக இருக்கிறது. ரீச்சர் என் வாழ்க் கையை அறிந்திருப்பாளோ. எனக் குத் தான் சாட்டையடி கொடுக் கிறாளோ. எது எப்படி என்றாலும், ரீச்சரின் வார்த்தைகள் வேதம்போல என்னுள் மீண்டும் மீண்டும் ஒலிக் கின்றன. என்னவிதப்பட்டேனும் என் மனைவியுடன் சமாதானமாகி கூடிய விரைவில் என்னுடன் அவளை அழைத்துவந்து விடவேண்டும் என்று என்னுள் சங்கற்பம் செய்கொள்ளு கிறேன். L

Page 25
ஜீவநதி
46
வாய்க்கரிசிக்காக வாழ்க்கையை ஒட்டுகின்றோம்
எத்தனை பகற்பொழுதுகள் ஏக்கத்தைச் சுமந்து கொண்டு மெள்ள மெள்ள ஊர்ந்து மெளன இருட்டுக்குள் மறைந்து கொண்டன.
Discoso subcosts மேற்கு வானத்து அர்மியில் மஞ்சள் அரைக்கும் அந்தியும் மிளகாய் அரைத்து மேனியில் பூசிக்கொண்டது.
கரிய இருள் கரும் யூதாய்ப் பயர்ந்து தேசம் முழுதும் மூழக்கொண்டது.
காற்ரைக் கிழித்துவரும் ஏவுகனைத் தாக்குதலும் பீரங்கிச் சத்தமுமீ &gdpgâ817ü எங்கள் இதயக்ககுவினில் அதிரழத் தாக்குதலை அழகிகழ செய்கின்றன.
Dáša 56j inböTklas6f6 சோகத்தின் சுமை இமயத்தின் கனதியாய் இறுகிக் கொண்டது.
"அமைதி" என்ற வார்த்தை smilassi samsúlorð
அகராதியில் இருந்து தொலைந்து போனது.
"சமாதானமீ" என்பது காகிதத் தாள்களிலும் உதடுகளிலும்
ஒட்டிக்கொள்வதாய் சத்தியிரமானம் செய்து கொண்டது.
என் குழந்தை பாலுக்கு அழும்போது மாற்ராந்தாயிடம் சமீாகும் கேட்டு
TgTL Bsascalib)Titfi... இது என்ன நீதி? இதில் என்ன கெளரவம்?
அயிஷேகம் ஆராதனை அத்தனையும் செய்தோர் பூஜைகள் யாகங்களில் ஆகுதிகளை அள்ளிச் சொரிந்தோம் நோன்பினை நோற்று விரதம் முழத்தோம்!
திருப்யலிம் பூஜைகளைத் தேவாலயங்களில்
நடாத்தி முழத்தோம்
தினம் தினம் ஐந்து தொழுகைகளில்
95ởsom soos sasagut3søTTñiil
எனினும்
Triassi solilass இன்னும் தொடர்கதைதான்.
tnugleðið andsið அரிச்சந்திரர்களம் anythias aflarasaspas வாழ்க்கையை ஒட்டுகின்ரோவி
- வட அல்வை சின்னராஜன்.

ஜீவநதி 7
உணவு தொடர்லில் சில குறிப்புக்கள்
த.அஜந்தகுமார்
1) உணவிற்கான முக்கியம் வாழ்க்கையில் பிரதானமானது. உழைப்பது, போராடுவது, கஸ்டப்படுவது, எல்லாமே சாப்பிடுவதற்குத்தான். பலருக்கு இது வாழ்க்கையோட்டத்தில் ஒருகடமை, கடுமை, இனிமை. ஒவ்வொரு நாளும் வேளை தவறாது விதம் விதமாக உண்பவர்கள் உணவின் அருமையை பெருமையை உணர்ந்தது (A - 9) பூட்டப்பட்டு ஊரடங்க அமுலில் இருந்த காலங்களில்தான் ஊரடங்கு அமுல்படுத்தபட்டு நாட்டில் தோன்றிய அசாதாரண சூழல் பல நிலைகளில் பல பிரச்சினைகளை தட்டி எழுப்பியிருந்தது.
A - 9 வீதி பூட்டி பின் முதன் முதல் ஊரடங்கை சில மணி நேரம் தளர்த்திய போது, பதவிகள், பட்டங்கள், அந்தஸ்துக்கள் எல்லாமே தகள்ந்துபோய் எல்லோரும் “சாதாரணங்களாய்” Bagகுகளுடன் கடைகளின் வாசலில் வரிசை காத்தனர். கடைகாரருக்கு நெருங்கியோர் தாம் உதவியாளராய் மாறி தமக்கும் அயலுக்கும் பொருட்களை பதுக்கினர் ஒதுக்கினர். அப்பொழுது தான் எனக்கு முதன் முதலாக எல்லாவற்றையும் தாண்டி உணவுக்காக மனிதன் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் இறங்குவான் என்று தோன்றியது சூழ்நிலைகளே மனிதனை உருவாக்கின்றன.
ஊரடங்குக் காலகட்டத்திலும் உணவுத்தட்டுப்பாட்டின் போதுதான் எங்களிடம் இருந்த தரமான உணவு வகைகள் எங்களுக்கு ஞாபகம் வந்தன எங்களை அறியாமலே உணவுப் பண்பாட்டின் மீள் கண்டு பிடிப்புக்குள் இறங்கியிருந்தோம்.
2) ஓர் இனத்துக்கு அதன் உணவு சார்ந்த பண்பாட்டுப் பிரக்ஞை இருக்க வேண்டும். பண்பாட்டின் மீள்கண்டு பிடிப்பினுாடாக வலியுறுத்தப்படும் இந்த அடையாளநிலை உலகமயமாக்கல் நவீனமயமாதல் பின்னணிகளில் மக்களின் மன ஓர்மத்தைக் கரைத்துத் துடைத்து விட்டிருக்கிறது தன்னைத்தான் காதலனாகும் நிலை இல்லாது போய் மூளைச் சலவை செய்யப்பட்ட ஓர் இனமாகவே இருக்கும் பரிதாபம்.
எந்த உணவுப் பண்பாட்டையும் ஓரளவு ஜீரணிக்கக் கூடிய திறந்த பண்பாட்டைத் தமிழர் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ள சூழலும் இசைவாக்கமும் இனிவரும் தலைமுறைகளின் தழிழர்சார்ந்த உடல்சார் தகவமைப்பு அடையாளங்களைத் திட்டமிட்டோ திட்டமிடாமலோ தன்னழிப்புச் செய்யும். ஓர் இனம் திட்டமிட்ட உணவுப் பண்பாட்டின் மூலம் தம் உடல்சார் தகவமை ப்பை மாற்றியமைத்தமைக்கு யப்பான் நல்லொரு உதாரணம். கட்டையான உடலைக் கொண்ட இவர்கள் இப்பொழுது நல்ல உயரமுள்ள வர்களாக இருப்பதே இதற்குச்சான்று. திட்டமிடாத நமது உணவுச் செயற்பாடுகள் பல்வேறு நோய்க் கூறுகளை நமக்குள் கடத்தப்போகின்றன. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
3) ஒரு மனிதனின் சூழல் சார்ந்த தேவைப்பாடுகள் அவசியங்கள் உணவு ரீதியான சில முடிவுகளை எடுக்கத் தூண்டும் அகப்புறக் காரணிகளாகச் செயலூக்கம் பெறும் அவை புதிய உணவுக்கலவைகளை வகைகளைக் கண்டுபிடிக்கவும் தூண்டலாம். வறுமை, போராட்டம் இன்னபிற காரணிகள் புறக்காரணிகளாய்.

Page 26
ஜீவநதி 48 4) நாயக்கள் காலத்திலே வறுமை தாண்டவமாடியதாகச் சொல்வார்கள். மக்கள் பசியால், பஞ்சத்தால் வாடினார்கள் இதனால் இராமலிங்க கவிராயர். கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான7 இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா என்று இறைவனை மனம் நோவார். உணவொன்றும் இல்லாதபோது கல்லை, மண்ணைக் காய்ச்சிக் குடித்தால் என்ன என்று சிந்தனை ஒடத்தானே செய்யும்.?
எங்கள் வீட்டுக்கு சுமார் பத்து வருஷங்களுக்கு முன்னர் அரிசி இடிப்பதற்காக ஒரு வயதான பெண்மணி வருகின்றவர். அவவுக்கு அம்மா கொடுக்கும் தேத்தண்ணியிலும் பார்க்க எங்கள் வீட்டுக் கொட்டில் மண்ணாங்கட்டிகளிலேயே தீராத காதல் அந்த மண்ணாங்கட்டிகளை என் இரண்டு கண்களும் ஆச்சரியத்தால் பிளக்கும் வண்ணம் வீனிர் கடைவாயில் ஒழுக ஒழுக அவ சாப்பிடுவா ?
அம்மாவைக் கேட்டால் காமாலையாலதான் அப்படி என்பா! எனக்கு இன்று வரை ஆச்சரியம் இது. நான் இதை என் நண்பர்கள் சிலரிடம் சொன்னால் நம்பமாட்டார்கள், சிரிப்பார்கள் என் கதை புளுகு மூட்டையென்று இப்படிக் கதைக்கும் போதுதான் வடமராட்சி கிழக்கிலும் பிசுங்கான் துண்டுகளைச் சாப்பிடும் ஒருவர் இருந்ததாக.
எஸ். ராமகிருஷ்ணனின் நெருங்குருதி நாவல் வாசித்திருந்தேன். மிக நல்ல நாவல் அதில்வரும் ஒரு பகுதி என்னை ஈர்த்துக் கொண்டது. சென்னம்மாவின் கைகள் தரையைத் தேய்த்தபடியே வந்து மெல்ல எறும்புகளை அள்ளி வாயில் போட்டு மென்று தின்று விடுவாள். அவள் உதட்டு இடுக்கில் சிக்கி வெளியேறும் எறும்புகள் கூட அகன்ற அவள் முகத்தின் மேடு பள்ளங்களைக் கண்டு திகைத்து பயத்தோடு புருவ மயிர்களில் தடுமாறும் போது அவள் விரல்கள் எறும்புகளைத் தேடிப்பிடித்து நாக்கில் ஒட்ட வைத்துக் கொள்ளும்.
இங்கு சென்னம்மாவின் பாத்திரவார்ப்பு ஓர் இயற்கையதிதக் கற்பனையாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் வறுமை மாத்திரம் இதற்கான சூழலைக் கொடுக்கின்றது என்று சொல்ல முடியாது. அகச்சூழலின் ஏதோ ஓர் அடுக்கு இதன் பின்புலமாய் இருக்கக்கூடும்
‘புலி பசித்தாலும் புல் தின்னாது’ என்று பழமொழி ஏன் மனிதனுக்கு அப்படிச் சொல்லவில்லையென்பதை வாழ்க்கை பல்வேறு குரல்களில் சொல்லி வருகிறது போலத் தோன்றுகின்றது.
இப்பிடி யோசிக்கின்ற போதுதான் சோமாலியா போன்ற நாடுகளை வறுமைப்பட்ட கஷ்ட ஜீவன நாடுகள் என்கிறோம். அவர்களும் தாங்கள் வாழ்வதற்கான பிரயத்தனங்களாய் இப்படியான ஆச்சரியப்படத்தக்க அருவருக்கத்தக்க உணவுப் பண்பாட்டைத் தமக்குச் சாதகமான வழியில் கொண்டிருக்கிறார்களோ என்ற ஆய்வு ஆர்வம்' கிளைக்கிறது.
இதேபோலத்தான் போராட்டங்களின் போது காடுகளிலும் வெளிகளிலும் போராடுபவர்களும் உணவுக்காக கஷ்டப்பட நேரிடும். உணவில் புதுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த நேரிடும். இதனை மலைமகளின் கதையொன்று சாட்சிப்படுத்துகிறது.
மிதமிஞ்சிய தமக்கு வந்த சோறினைக் கெட்டாமல்அதன் அருமை யுணர்ந்து வெயிலில் உலர வைத்து தேநீரோடு அருந்துவதாய்.

ஜீவநதி 49
நூல் அறிமுகம்
நூல் :- இசை விழியப்பட்ட வீணை
(ஒரு ஞ்றிற்சிக் குரல்
வெளியிடு - 2ஹLறு விெலியீடு
அண்மையில் ஊடறு வெளியீடாய் வெளிவந்த கவிதைத்
தொகுப்பிற்கு 'இசை பிழியப்பட்ட வீணை" என்று பெயரிடப்பட்டுள்ளது. தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதியவர்கள் அனைவரும் பெண்கள் 47 பெண் படைப்பாளிகளின் எண்ணங்கள் எழுத்தாகிக் கவிதையாய் தொகுப்பாய் அரங்கேறியுள்ளன. குறிஞ்சி நிலத்துப் பெண்களின் வாழ்வியலைக் கவிதையாய் வடித்துச் சென்ற அன்றைய சங்கச் சான்றோரின் வாரிசுகள் இவர்கள். ஆனால் காலத்தின் கோலங்கள் கவிதைகளில் வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளன.
மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியெனப் பேசப்பட்ட பண்டைய அகப்பொருள் மரபு பாடிய வரலாற்றின் செல்நெறியை மாற்றிய புதிய கவிஞர்கள். பாடுபொருளில் பெண்மையின் வாழ்க்கை நிலையை வரைந்து காட்டும் முயற்சி முன்னிற்கிறது. கவிதையை ஆய்வுசெய்யும் திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்யமுனைவர். ஆனால் இப்படைப்பாளிகளின் மனதில் ஊற்றெடுத்த உணர்வலைகள் தமிழ்மொழி என்னும் ஊடகத்தில் நுழைந்து வெளிவரும் போது வாய்மொழி இலக்கியம் என்ற பழைய மரபை உடைத்து எழுத்துமொழி இலக்கியம் என்ற பெருங்கடலுள் பாய்வதை உணரமுடிகிறது. முன்னுரையை எழுதிய தினகரன் இதனை நன்கு பதியவைத்துள்ளார்.
இன்றைய மலையகப் பெண்களின் வாழ்க்கையை எடுத்தியம்ப வேண்டும் என்ற இலக்கு எல்லாக் கவிதைகளிலும் செறிந்துள்ளது. பெண்ணியம் பற்றிய கருத்துநிலைகள் வளர்ச்சியடைந்து வரும் இந்நூற்றாண்டில் மலையகப்பெண்களின் மனதுட்புகுந்து பார்க்கும் முயற்சியிது. எழுத்தறிவற்ற தேயிலைச் செடியைக் கிள்ளி வாழ்ந்த பெண்களின் உள்ளத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சில கவிதைகள் நயமாகக் கூறுகின்றன.
"பெண்ணே உன் நிறமென்ன - நீ
பேசும் மொழியென்ன” வினவும் குரலாய் வரும் கவிதை பெண்ணை உணரவைக்கும் அறிவுரையாய் அணிசெய்கிறது.
நல்லதோர் வினை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? எனப் பாரதி கேட்ட கேள்வியை விளங்கிக்கொள்ள "இசைபிழியப்பட்ட வீணைகளாய் வாழும் மலையகப் பெண்கள் வாழ்வியல் உதவும் என்பதைப் பலகவிதைகள் உணர்த்துகின்றன.
கவிதையின் தலைப்புகள் உள்ளடக்கத்தை ஊடுருவிப் பார்க்கத் தூண்டுகின்றன. 'சிறகுவிரி” “புறப்படுவிடியலைநோக்கி" பெண்ணே உன் நிறம் என்ன”? "தீக்குள் விரலை வைத்தால்" புதியதலாட்டு” என்பன

Page 27
gay Bas 50 குறிப்பித் தக்கவை கவிதைகளின் கருக்கள் எழுதவேண்டும் என்ற உணர்வைத் தூண்டியுள்ளன. பெண்மையின் அவலத்தைப் பிறரும் அறிய வைக்க வேண்டுமென்ற ஆவேசம் சிலபடைப்பாளிகளில் வெளிப்பட்டு நிற்கிறது.
எங்களின் ஏக்கங்களை புரிந்து கொள்ளாத சமுகமே இனி எங்களின் ஏவுகணைகளை ஏற்றுக்கொள்ளத்
மெளனமொழிபேசி வாழ்ந்த மலையகப் பெண்கள் கவிதை மொழிபேச முற்பட்டமை தலைமுறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது. கொழுந்துகிள்ளிய விரல்களிடம் வீணையைக் கொடுத்து இசை மீட்டச் சொல்லும் நிலை வந்துவிட்டது. மலையகப் பெண்கள் தங்கள் இருப்பை நிலைநாட்ட வாழ்க் கையை வளம் படுத்த மலைக்குயில்களாய் மாறிவிட்டார்கள். அவர்களின் கவிதைகளில் பாடும் குயில்களின் கன்னிக்குரலின் கவர்ச்சி தெரிகிறது. இருளுக்குள் கிடக்கும் பெண்களை ஒளியைப் பார்க்கத் தூண்டும் சிறிய அகல்விளக்குகளாக இவர்களுடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
"வினைகளின் நரம்புகளuப் பெண்ணினம் இனிய இசையைத் தரும்" என்ற பூங்கொடியின் கவிதை பெண்மையின் உன்னதமான இருப்பை எல்லோருக்கும் எடுத்துக் கூறுகிறது. எலுமிச்சையாகப் பிழியப்படும் பெண்மையை வீணையின் இனிய ஒலியாக மாற்றவேண்டி உழைக்க இக்கவிதைப் படைப்பாளிகள் புறப்பட்டு விட்டார்கள். குறிஞ்சியின் குரல் உலகெங்கும் கேட்கும் குரலாகிவிடடது.
தேயிலைக்காக வாழ்ந்த நாங்கள் வாழ்க்கைக்காக வாழ்வோமா இனி" என்ற ரா.ழரீபிரியாவின் கவிதை வழிகாட்ட ஈழத்தில் மலையகப் பெண் படைப்பாளிகளின் இலக்கியப்பயணம் தொடங்கிவிட்டதை இக்கவிதைத் தொகுப்பு உலகிற்கே பறை சாற்றும்.
சலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
வாழ்த்துகின்றோம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமனம் பெற்றுள்ளமையையிட்டு, எழுத்தாளரும் கவிஞரும் ஆக்க இசையாளருமான சமூகவியற் பேராசிரியர் என். சண்முகலிங்கள் அவர்களை"ஜீவநதி' இதயபூர்வமாகப் பாராட்டி வாழ்த்துகிறது.
 

ஜீவநதி 1.
U6ogõib urgrÖb
குப்பிழான் ஐ.சண்முகன்
கனடாவிலிருந்து வெளிவரும் ‘வைகறை இதழில் வெளிவந்த, கேகாலை மலரின் பேட்டியை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு படிக்கக் கிடைத்தது. கொழும்பிலிருக்கின்ற திரு.பாதுவாரகன்' அவரைப் பேட்டி கண்டிருந்தார்.
பல காலமாகவே கேகாலை மலான் பெயர் எனக்குப் பரிச்சயமாகியிருந்தது. விரகேசரி வார வெளியீடு எமக்கு ஒழுங்காகக் கிடைத்த காலங்களில் அடிக்கடி அவரின் பெயர் சினி பகுதியில் இடம் பெற்றிருக்கும் அன்புத்தங்கை கேகாலை மலர் என்
ாறாக் அவர் எழுதிய கடிதங்கள் பல சினிமாப் பகுதியில் பிரசுரமாகியிருந்தன. போகிற போக்கில் அவற்றை மேலோட்டமாகப் படிப்பதுண்டு. பல்லாயிரக்கணக்கான சராசரிகளில் இவரும் ஒருவர் என்றே எண்ணியிருந்தேன்
ஆனால் வைகறையில் அவரின் பேட்டியைப் படித்தபோது பிரமித்துப்போனேன். அடிப்படையில் அவள் ஒரு தீவிரமான கலை இலக்கிய வாதியல்ல. ஆனால் மனிதாபிமானி. பெண் உரிமைப்போராளி. தான் சார்ந்த தமிழ் மொழியின் மீதும் தமிழினத்தின் மீதும் அசைக்க முடியாத பற்றுறுத்
உடையவள். எத்தகைய இடைஞ்சல் நெருக்கடிகள் வந்தபோதும் கொள்கைகளைக் கைவிட்டுச் சரணாகதி அடையாதவர். கேகாை மாவட்டத்தில் வேற்றுமொழிச் சமூகச் சூழலில் வாழ்ந்த போதிலும் பல்வேறுவிதமான நெருக்குவாரங்கள் ஏற்பட்ட போதிலும் அஞ்சா நெஞ்சுடன் அதனை எதிர் கொண்டவர்.
இன்றைய அவலம்மிக்க வாழ்க்கைச் சூழலில் இத்தகையவர்களைப் பற்றி அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இவர் இப்போது கொழும்பில் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனமொன்றில் பணிபுரிவதாக
அறிகின்றேன். இவருக்கு என்றென்றும் எங்கள் தார்மீக ஆதரவு இருக்கும்.
யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியை பார்க்க 26.10.2007ல் கண்காட்சியின் கடைசி நாளன்று சென்றேன். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள நுண்கலை வளாகத்திலேயே கண்காட்சி நடந்தது.
அங்கே எனக்குப் பல வியப்புக்கள் காத்திருந்தன. இவ்வளவு பிரமாண்டமான ஒரு கண்காட்சியை நான் எதிர்பார்க்கவேயில்லை. நன்றா திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. கண்காட்சி நடந்த ஒவ்வொரு கூடத்திலும் நுண்கலைத் துறை மாணவர்கள் ஆர்வமும் இனிமையும் ததும்பிய முகத்துடன் வழிகாட்டற் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தனர். மனதை வருடும் கர்நாடக இசைமெலிதாய் இசைந்து கொண்டிருந்தது. வளாகம் முழுவதும் வெட்டவெளிகளிலும் சிற்பங்கள் நிறைந்திருந்தன. ஒவியங்களில்" மரபு சார்ந்த ஓவியங்களும் நவீன ஓவியங்களும் கணினியினால் வரையப்பட்ட ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியில் பெருமளவுக்கு ஒவியங்களே இடம் பெற்றிருந்தன. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் என்று சொன்னார்கள் கூடங்களிலும் வெட்டவெளியிலுமாக சிற்பங்களும் இடம் பெற்றிருந்தன. ஒரு கூடத்தில்

Page 28
ඉෂ්ඛu|bæ 52 இசைக்கருவிகளை காட்சிப்படுத்தி அவற்றை இசைத்துக் காட்டியும் விளக்கம் தந்தார்கள்.
என்னை வியப்பிலாழ்த்திய விடயங்களை நிரற்படுத்தலாம். 1) இக் கண்காட்சிக்கு - குறிப்பாக ஓவியக் கண்காட்சிக்கு இவ்வளவு திரளாக மக்கள் வந்திருந்தமை (பத்து வயதுச்சிறுவர் தொடக்கம் எழுபத்தைந்து, எண்பது வயது முதியவர் வரை) 2) யாழ்ப்பாணத்தில் இவ்வளவு ஓவியங்களை ஒரு சேரக் கண்டமை (புதிய தலைமுறையினராக யாழ்ப்பாணத்தில் இவ்வளவு ஓவியர்கள் இருக்கின்றார்கள்) 3) ஒவியங்களைக் காட்சிப்படுத்திய முறை. ஒவியங்களுக்கேற்ற ஒவியங்களை சரியான முறையில் பார்த்து இரசிப்பதற்கேற்ற ஒளியமைப்பை மிகக் கவனமாக பிரக்ஞை பூர்வமாக ஏற்படுத்தியிருந்தமை. இத்தகைய விதத்தில் யாழ்ப்பாணத்தில் நான்பார்த்த முதலாவது ஓவியக்கண்காட்சி இதுவென்றே சொல்வேன்.
என்றாலும், யாழ்ப்பாணத்து மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறும் துணிவு
இன்னமும் எமக்கு ஏற்படவில்லை என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. (கொழும்பில் பல ஓவியக்கண்காட்சிகளை பார்த்தவன் என்ற ரீதியில் கூறுகின்றேன்) அதற்கான சூழல் இங்கில்லை போலும்.
1999ல் யாழி.பல்கலைக்கழகத்தில் சிறிதாகத் தொடங்கிய நுண்கலைத்துறை, இக் குறுகியகாலத்தில் இத்தகைய பெரிய சாதனையைச் சாதித்திருக்கின்றது. பாராட்டுக்கள்.
O O. O. O.
ஒக்டோபர் மாதத் தொடக்கத்தில் ஒருநாள் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நுண்கலைத் துறை விரிவுரையாளர் இரதிதரனின் இரண்டு குறும் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவற்றில் "கால்கள்’ என்னைப்பெரிதும் கவர்ந்தது. வெறும் கால்களுடாகவே மனிதனின் ஆசாபாசங்கள், கோபதாபங்களி, போட்டி, பொறாமை, ஏமாற்று என்றவாறானவற்றை கலை நேர்த்தியுடன் சித்திரித்திருந்தார். மற்றைய படம் "வெட்டை ஓரளவு விவரணப் பாங்கில் அமைந்திருந்தமை குறைபாடாகத் தெரிந்தது என்றாலும் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் நடிப்பும் படப்பிடிப்பும் என்னைக் கவர்ந்தன. இரதிதரனின் முதல் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். ப ம ய
"ஜீவநதி" சந்தா விபரம் தனிப்பிரதி - 50/= ஆண்டுச்சந்தா - 350/= ஓராண்டுக்கு உரிய சந்தா செலுத்த விரும்புவோர், காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். Jeigjjj (86j6ë qu Quuuft\ (p856jf - K. Bharaneetharan
Kalaiaham
Alvai North west
Alvai. 6ńá cyp60ub 3557, UGClub G3955 6ń5ibl66)rii - K.Bharaneetharan & SVimalan
HNB - Nelliady. சேமிப்பு கணக்கு இலக்கம் -11800-02-0945701-1 என்ற வைப்பில் வைப்பு செய்து வங்கி ரசீதை எமக்கு மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாடு ஓராண்டுக்கு சந்தா $20 (us) (உங்கள் பெயர், விலாசம் என்பவற்றை விரிவாக எழுதவும்)

ஜீவநதி SS
கலை இலக்கிய நிகழ்வுகள்
1) மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் தெணியான் அவர்களின் "இன்னொரு புதிய கோணம் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 2.12.2007 தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. பூமகள் சனசமூக நிலைய தலைவர் இ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வட தெற்கு மேற்கு பிரதேச செயலர் எஸ் சத்தியசீலன், வட வடக்கு /கிழக்கு பிரதேசசபை செயலாளர் எஸ்.பசுபதி, தேவரையாளி இந்துக்கல்லூரி அதிபன் எம்.குட்டித்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் நூல் வெளியிட்டுரையை யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.த.கலாமணி அவர்களும். மதிப்பீட்டுரைகளை கோப்பாய் றோ.கதகபாடசாலை அதிபர் சலலிசன் அவர்களும் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தினர்
O O. O. O.
2) இலங்கை இலக்கியப் பேரவை மற்றும் யாழி. இலக்கியவட்ட பரிசளிப்பு விழா 16.12.2007 நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை இலக்கியப் பேரவை மற்றும் யாழ். இலக்கிய வட்டத்தின் தலைவர் செங்கை ஆழியான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கியப்பேரவை பரிசுகளுடன் கனகசெந்தி கதாவிருதுகளும் வழங்கப்பட்டன. வாழ்த்துரைகளை பூரீலழறீ திருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளையும் பரிசளிப்பு உரையை பேராசிரியர் சிவலிங்கராஜாவும் நிகழ்த்தினர். நிகழ்வில் 'ஈழத்தின் பெண் படைப்பாளிகள் என்ற தலைப்பில் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் உரையாற்றினர். நிகழ்வின் இறுதியாக மயிலங்கூடலூர் பி.நடராஜா கெளர விக்கப்பட்டார். கெளரவிப்பு உரையை கவிஞர் கல்வயல் வே.குமாரசாமியும் வாழ்த்துரையை செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனும் நிகழ்த்தினர்.
3) கந்தையா முருகதாசன் எழுதிய “செங்கை ஆழியான் நாவல்கள் ஒரு திறனாய்வு நோக்கு நூல் வெளியீட்டுவிழா 2.12.2007 நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடைபெற்றது. செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையை பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் வாழ்த்துரையை பேராசிரியர் சி.சிவலிங்கராஜா அவர்களும் வெளியீட்டுரையை கலாநிதி ம.ரகுநாதன் அவர்களும், ஆய்வுரையை கலாநிதி செ.திருநாவுக்கரசுவும் நிகழ்த்தினர். யாழ் இலக்கிய வட்டத்தின் ஆதரவில் நடைபெற்ற இவ்வெளியிட்டு விழாவின் இறுதியில் கலாநிதி செங்கை ஆழியான் கெளரவிக்கப்பட்டார்.
4) "எனக்கு மரணமில்லை” கவிதை நூலை எழுதிய கவிஞர் பெரிய ஐங்கரனின் "ஞானக்கண் கவிதைநூல் மற்றும் ‘வானவில் கைக்கூ நூல்களின் வெளியீட்டுவிழா 23.12.2007 புற்றளை மகாவித்தியாலய கந்த முருகேசனார் அரங்கில் நடைபெற்றது. மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் மு.கனகலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வின் நூல் வெளியீட்டுரையை பராறமேஷ் அவர்களும். நூல் நயப்புரைகளை பேராசான் ஆகந்தையா அவர்களும், ஆசிரியர் இரா.இராஜேஸ் கண்ணன் அவர்களும் நிகழ்த்தினார்.

Page 29
ஜீவநதி
பேசும் இதயங்கள்
1) பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய சோ. தேவராஜாவின் பார்வையும் ஒரு பன்முகப் பார்வைதான்-மிகச்சரியான கணிப்பு. கலாநிதி. ம. இரகுநாதனின் "புனைகதைகளில் கேட்கும் புதிய குரல் ” பெண்ணியம் என்ற பேரில் பண்பாட்டை சிதைக்க நினைப்பவர்களுக்கு நல்லதொரு அபாய எச்சரிக்கை. யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் "காணிநிலத்திடையே’ ஊடாக அவரது யதார்த்தமான பார்வையும், கதைநகர்த்தலின் முதிர்ச்சி தெரிகின்றது. கலாநிதி. செ. யோகராசாவின் ஆய்வு பித்தனோடு நின்றுவிடாது. மேலும் தொடர வேண்டும். மொத்தத்தில் யாவும் நன்று.
கொற்றை பி கிருஸ்ணானந்தன்
2) விற்பனையும், ஆக்கங்களும் தடையாக இல்லாவிட்டால் ஜீவநதி
நீண்ட ஜீவன் கிட்டும். எல்லோரும் ஏறிப்பார்த்து சறுக்கிய முரட்டுக்
குதிரையில் ஏறிவிட்டீர்கள். விழாமல் தொடர வாழ்த்துக்கள்.
DR. (f. Gupilab/760.556i (6457GlplbL)
3) வடமராட்சியில் ஊற்றெடுத்து குடாநாடு முழுவதும் பரவி தென்னி லங்கையையும் ஆக்கிரமித்து வெளி நாட்டிற்கும் பாயும் ஜீவநதி உனது பணி தொடரட்டும்.
வ. அரியரட்னம்
4) அடுத்த வேளை சாப்பாட்டிற்கும், மருந்து பொருட்களிற்கும் கப்பலை எதிர்பார்த்துக் கொண்டும் மாலை ஆறுமணிக்குள் அடங்கி போகின்ற நாட்களையும் கொலைகள் நிறைந்த பகல்களையும் கொண்ட யாழில் இருந்து இன்றைய சூழ்நிலையில் இந்த “ஜீவநதியின்’ வருகை ஆச்சரியத்துக்குரியதொன்று.
கோசலன் (கொழும்பு)
5) “ஜீவநதி” யாழில் உள்ள எம் போன்ற இலக்கிய ஆர்வம் உள்ள நெஞ்சங்களின் இலக்கிய பசிக்கு விருந்தாய் வருவதை இட்டு மகிழ்ச்சி. சென்ற இதழில் வெளிவந்த கதிர்காமநாதனின் “நீ ஒய்ந்து இருக்கலாகாது பாப்பா’, கெக்கிறாவ ஸகானாவின் “கறுப்பும் வெள்ளையும்”, ஆகிய சிறுகதைகள் அற்புதமாக இரு பெண் பாத்திரங்களை வைத்துக்கொண்டு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. பக்க வடிவமைப்புகள் சிறப்பாக உள்ளது. மற்றைய கட்டுரைகள், கவிதைகள் எல்லாம் தரமாக உள்ளன. தற்போது வெளிவருகின்ற சஞ்சிகைகளிலும் பார்க்க ஜீவநதி சிறப்பான உள்ளடக்கங்களுடன் வெளிவருவது பாராட்டத்தக்கது.
TOT
6) Jeevanathy is a wonderfull gift to us.It is very usefull to our society. I wishyoua Success. continue and keep it 器
TSivatharsini (Point pedro)

ஜீவநதி |55
aഞ_6ഖങ്ങി - ആൺിട്ടു. U.6ആംപ്രീം
எமது சங்கச் சேவைகள் :
| ヘ நுகர்ச்சிச் சேவை へっ、イ ~ தரமான நூலக சேவை ...................--ހހ.’’ |
A しへ
لے கிராமிய வங்கிச் சேவை / புலமைப்பரிசில் வழங்கல் てつ〜、、)一 اسم
வாடகைச் சேவைகள் .أسسححكس தரமான திரைப்படக்காட்சிக்கூடாக புதிய ரசனையை ஏற்படுத்துதல் எரிபொருள் சேவை விவசாய சேவை நூல்வெளியீடும் விமர்சனங்களும் கூட்டுறவுக் கலாசாரப் பெருமன்றம் “சங்கம் செய்தி” மாதாந்த வெளியீடு.
தொலைபேசி இலக்கம் :- 02:12263263 தொலைநகல் 0212289268
02122647
021226472岛 கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம் கரவெட்டி.
శీడ3%ళ
/*
afted 6ia)6 ILLIIIf d உபகரணங்களிற்கும்
IIIL 86)I6öIS2L ஒரே இடம்
பிரதான விதி 6hyb656Suga

Page 30
ஜீவநதி 56
হিত্যুঞ্জািত కెg ج & SRISK29NGTH ESSENCE قی 阶 GoROCERIES.
ருநீ காந் விசன்ஸ் அன் குறோசறிஸ்.
(Dealers in all Kinds of Essence Floyours Colour, Powder, Sent, Aurvedic Ointment
端 & Etc.
ভক্ত । 161CA K.K.S. Road 廖 Jaffna. O3. A. Žý:BS- 2SRS
সুগ্ৰী
MOHAN's MOBILE VIDEO
Ever ready to glorify all your home entertai
Weddings ఇళి برگ
Birthdays আৰ্ত্ত ( )
House warning ceremonies Puberty ceremonies.
T.P. 0777 046120
S.Mohanraj
இச்சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி த.கலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 
 
 
 
 

நவீன வடிவமைப்புகளில்
அழகிய தங்க நகைகளை உத்தரவாதத்துடன் செய்து பெற்றுக்கொள்ள 德 நாடவேண்டிய ஸ்தாபனம் ஐ
乡演。
مجموعة " و خا
變 மு.ஜெயநாதன் பிரதானவீதி நெல்லியடி.

Page 31
Buona orapannati sono ( ofiGù io.
6figጨ። %ویروه
omnium, mang இன்றே அருகிலுள்ள மக்கள்
| YES FUTUR
சேமிப்புக் கணக்கைான்
 
 
 

வின் சேமிப்புடன் பல்கலைக்கழக புலமைப்
போது உங்களுக்கு உள்ளது.
at , Uoomnunnið Enti Julebib
bSides Buntut. புலமைப்பரிசில்கள் előtölti.
.
தியையேனும் |ားဖားအမွေးဖွား A. 0ே இற்கு மேற்பதியையேறும் ாஸ் வழயும் வழங்கப்படும் அத்துடன் களையும் நீங்கள் அனுபவிக்கலாம். வங்கிக்கிளைக்கு சைன்று E STARS
றை ஆரம்பியுங்கள்