கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2009.03-04

Page 1


Page 2
முநீரஞ்சனி புத்தகசாலை &
ஸ்ரார் பப்ளிகேஷன் /
190A ஜம்பட்டா வீதி கொழும்பு - 13 TP:O114947856 - 0777413990
தரம் 1ழுதல் O/L, A/வரை
ஏனைய பகுத மாணவர்களை போன்று யாழ் மாணவர்களுக்கும் கொழும்பில் இருந்து வெளியிடப்படும் பின்வருவனவற்றை கொழும்பில் அதே விலைக்கு தபால் முலம் பெற்றுக் கொள்வதற்கு வசதி செய்ய உத்தேசித்துள்ளோம்.
~\ =
பரீட்சை வழிகாட்டி,மாதிரி வினாத்தாள்கள்
O/Lபுதிய மாதிரி வினாத்தாள்கள்
ck
3ද * கடந்த கால வினாத்தாள்கள் (கொழும்பு பாடசாலைகள்)
米 * இ.நிர்மலன் ஆசிரியரின் விஞ்ஞானப் புத்தகங்கள்.
வினாத்தாள்கள் தபால் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள (கணிதம், விஞ்ஞானம் மற்றும் எனைய பாடங்கள்) 200/- காசுக்கட்டளையை ENimalan என்ற பெயருக்கு Kotahena தபாற்கந்தோரில் மாற்றத்தக்கதாக
Sri Ranjani Book Shop. 190AJampettah street. Colombo - 13 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மீதிக் கணக்குகள் அடுத்தவகுப்பில் A/L பதியப்படும்.
LLLLLS SLSS SLSS SLLLLLSSLLLLS SZSSLLLSSZSS SLO0S SLLLLSS SLLLLSS S SLL S SLLSS SSZSSLLSSLLSSLLSLLLLLSLZSSLLZ SLLLLLS SSSLTSSZSZSSZSZS SLLLL SZ SLLLLSZSSLLLLS SS STLLSSZSS SZS SLLLLLS SLLS SLLS S L L
இச்சஞ்சிகை அல்வாய் கலைஅகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி த.கலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 
 
 
 

பிரதம ஆசிரியர்கள்
56orfoap பரணீதரன் சின்னராஜா விமலன்
ಹಣನ್ತ ಕಹಣುಣಿ ஆலோசகள் குழு
திருதையைான்
கோகுலராகவன் கவிஞர் ஏ. இக்பால்
ថ្ងៃអង្កេះ ឆ្នា பஞ்சாமிதபாலன் இலட்சுமி புத்திரன்
வ. துஷ்யந்தன்
க. சின்னராஜன் கன. மகேஸ்வரன் சூசைளட்வேட் தி.சிவதர்சினி
பவானி சிவகுமார் #&géré È è ----- கதர்மதேவன்
U GõpesiñasuravrøóU
வதாலைபேசி 077599 1949 0776991015 தொடர்புகளுக்கு :
கலை அகமீ சாமனந்தறை ஆலeபிள்ளையார் வீதி göøឆ្នា
Email : jeevanathyayahoo.com 袭羲
Fax 0212263,206
வாங்கித் லதாடர்புகள்
K Bharameetharan & S Vimalan
HNB - Nelliady Branch AICNoR 18-00-02-094
ஆட்ரூரைகள் 6Fragrar சபா.ஜெயராசா கி. விசாகரூபன் ប្រោះ க. நவம்
த அஜந்தகுமார்
6eោះត្រូោះឆ្នា
ஷாத்வீகா
கலை இலக்கிய நிகழ்வுகள்
பேசும் இதயங்கள்

Page 3
ஜீவநதி
(கலை இலக்கிய இருதிங்கள் ஏடு)
அறிஞர் தம் இதய ஒடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
-பாரதிதாசன்
Gluოროდოz.Jა Gكn) 2GلمAف
சமுதாயத்தின் புலப்பாடே இலக்கியம் என்ற கருத்து இன்று வலுப்பெற்று வருகின்றது. இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு மட்டும் நின்றுவிடாது. வாழ்க்கையில் திவிரப் பங்கெடுத்து வாழ்க்கையைஆராய்ந்து அதன் நிறைகுறைகளை எடுத்தியம்பி அதிலிருந்து படிப்பினைப்பெறுவதாகவும் அமைய வேண்டும்.
பெண் என்பவள் மனித உயிர்களின் பிறப்பிடம், மனித சமுதாயம் தோன்றிவளரக் காரணமாயிருப்பவள் அவள். மனித வாழ்வில் பெண் வகிக்கும் நிலைகள் பல பெண்ணின் பெருமை வரலாற்றில் சிறப்புற உரைக்கப்படினும், பொதுவாழ்வில் பெண்ணானவள் பல கொடுமைகளுக்கும்.ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிறாள்.
பெண்ணின் பெருமை காலத்துக்குக் காலம் இலக்கியங்களிற் பேசப்பட்டு வருவதாயினும்.நடைமுறையில் பெண்ணடிமைச் சிந்தனைகள் மறைந்துவிடவில்லை பெண்ணின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பிய இலக்கியகாரர்களின் பட்டியல் அவேதநாயகம்பிள்ளை.மாதவையா,பாரதி பாரதிதாஸன். என்றுநீண்டுகொண்டே செல்கிறது. ஆயினும் பெண்ணை வர்த்தகப் பொருளாக்கி வாசகர்களிடத்து மோசமான விரஸ் உணர்வுகளைத்தூண்டி, பாலியலைப் படைப்பாக்கம் செய்யும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே வருகிறது. இதில் நகைப்புக்குரியது என்னவெனில், வெகுசன வாசிப்பு மட்டத்துக்குக் கீழிறங்காது “உயர்மட்ட இலக்கியம் படைக்கின்றோம்" என்று கூறிக்கொள்ளும், எழுத்தாளர்கள் சிலரும், "இதுவே நடப்பியல்" என்று சொல்லி. பாலியல் இரகசியங்களை வெளிச்சம் காட்டி, பெண்மையை மலினப்படுத்துவதுதான்.
இப்பின்னணியிலேயே பெண்ணுரிமை இயக்கங்களினதும் பெண்ணிய வாதங்களினதும் அவசியம் நியாயப்படுத்தப்படவேண்டியதாகின்றது.
ஆசிரியர்கள். இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு. - ஆசிரியர்கள்.
 
 

ஜீவநதி S நவீன வாய்மொழிப் பாரம்பரியத்தில்
கிழக்குப் பெண் கவிஞர்கள்
தொன்மை வரலாறு கொண்ட வாய்மொழிப்பாரம்பரியம் இந்நவீன காலத்தில் முக்கியமான சிலமாற்றங்களைச் சந்தித்துள்ளது. வாய்மொழிப்படைபொன்றின் ஆசிரியரை இனங்காணக்கூடியதாயிருப்பதும், அப்படைப்பு அச்சு ஊடகம் தொடக்கம் மின் ஊடகம்வரை அளிக்கை செய்யப்படுவதும் அம்மாற்றங்களுள் தலையானவையாகின்றன. இத்தகைய நவீன வாய்மொழிப்பாரம்பரியம் பெண் கவிஞர் பலரையும் இனங் காட்டியுள்ளது. பெண்நிலைச் சிந்தனை பரவிய சூழலில் இவ்வாறான பார்வை இன்று அவசியமாகின்றது.!
இத்தகைய பாரம்பரியம் சார்ந்த பெண் கவிஞர்களுள் ஒரு சாரார் தத்தமது கடவுளர் பேரில் பக்திப்பாடல்கள் பாடுகின்றவர்களாகவோ, சமயச் சடங்குகள் முதலியன பற்றிப் பாடுகின்றவர்களாகவோ, காணப்படுகின்றனர். அக்கரைப்பற்று வள்ளிநாயகி (1826 - 1890) என்ற கவிஞர் 'வதனமார் சடங்கு கண்ணகி வழக்குரைப்பாடல்" முதலியன பாடியுள்ளதாக அறிய முடிகின்றது. இதே ஊரைச்சேர்ந்த கவிஞர் ஜனாபா கலுங்கர் ாத்தும்மா (1902 - 1967) என்பவரும் பிரார்த்தனைப் பாடல்கள் ஞானப்பாடல்கள் முதலியன பாடியிருக்கின்றார். அக்கரைப்பற்று பரியபள்ளிவாசல் ஒரு தடவை புதுப்பித்துக் கட்டிய வேளையில் அவர் பாடிய பாடலொன்று பின்வருமாறு ஆரம்பிக்கின்றது.
வானமேழு தட்டும் வையகங்கள் முச்சடும் அடங்கப் படைத்த - ரகுமானி அனைவர் பிழையும் பொறுப்பாணி கருங்கொடி வெட்டிக் கட்டிய பெரியபள்ளி தாண்டி விட்ட பேர்களுக்கு - அல்லா (வர்) சுவர்க்க லோகம் தாண் கொடுப்பானர்" மேற்குறிப்பிட்ட பாத்தும்மா கவிஞர். சமூகப்பிரச்சினைகள் பற்றியும் (எடுத்துக்காட்டாக பெண்களின் நாகரிக மோகம், சீதனப் பிரச்சினை முதலியன பற்றியும்) பாடியிருப்பதாகத்
தரிகிறது.
காத்தான் குடியில் சிலவருடங்களுக்கு முன்பு நன்கு பிரசித்தி பெற்றிருந்த "வெள்ளம்மாட பாடல்கள் அவ்வூரினரான வெள்ளம்மா(?) என்பவரால் பாடப்பட்டதாகக் கூறுவர். அத்தகைய பாடல்களுள் ஒன்று வேலைவாய்ப்புநாடி வெளிநாடு செல்லும் பெண்கள் பற்றியது. இப்பாடலிலொரு பகுதி இங்கே தரப்படுகிறது.

Page 4
ஜீவநதி 4.
"ættør Liæru6 6ørtfæsas Gø2løGipt uoeførfra கலிவிடு கட்ட வேணடுமா? நாம பூணாரம் நகநட்டு போடணும் எண்டா வெளிநாடு போய் வரனும்
அந்தக் கத பேசாதடி புள்ள
அறவி எல்லாம் பொல்லாதவனர்
நீ” வெளிநாடு போய்வந்தா
ஊரில் நானும் தல காட்ட ஒணர்ணாதடி" பெண்களால் பாடப்பட்டு வருகின்ற ஒப்பாரிப்பாடல்கள் பல்வகைப்பட்டனவாக இன்று இனங் காணப்பட்டுள்ளது. அவற்றைப் பாடுகின்றவரான பெண்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இட்டுக்கட்டிப் பாடுகின்ற ஒப்பாரிப்பாடல்களும் உள்ளதாக கள ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். எனினும் அதற்கான சான்றுகள் தரப்படாத நிலையில் அத்தகைய பெண்கவிஞர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாதுள்ளது. ஆயினும் அத்தகைய பாடல்களை ஒத்த சில ஒப்பாரிப்பாடல்கள் அண்மைக்காலத்தில் கிடைத்துள்ளன. முன்னாள் அமைச்சர் அவர்களின் அகாலமரணம் பற்றிக் கேள்வியுற்ற வேளையில் முஸ்லிம் மூதாட்டிகள் சிலர் பாடிய ஒப்பாரிப்பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கல்முனைக்குடி சீனி உம்மா என்பவர் பாடிய ஒப்பாரிப்பாடலின் சில பகுதிகள் பின்வருமாறு:
"ஆலமெல்லாம் படைத்த அந்த மேலோனி முனினிறுத்தி
மனuரிரங்கிப் பாடுகிறேனர் பொதுமக்களே நரிங்க கேட்டிடுங்க
பிஎம்மில்லாஹரி என்று நம்மட வேதத்தை முன்னிரத்தி
முஸ்லிமுக்கு பாடுபட்டார் நமக்கு
முன்னுரிமை வேணும் எண்று
அறிவு மரம் நாட்டி
அதனி இணலில் நாங்க குந்தி
பழமருந்தும் வேளையில் - அல்லாஹர் நீ"
பரிச்செடுத்துப் போட்டாயடா
வெயிலால பால் குடிச்சி
வேர்வை யாலே தணர்ணர் வாத்து
கால் நடையாய் வந்த காட்சி - இப்ப எங்கட
கணர்ணெதிரே தோண்று தல்லாஹர்
பொண்ணான மேனி அல்லாஹர்
பூப்போல் தானு ரூந்து
கணர்னால காணாமை
கடும்கொலை ஆக்கினாகா
முற்பட்ட காலங்களில் - ஏன் இன்றுங் கூட கிராமப் புறங்களில் அற்புதங்கள் செய்கின்ற பெண்கள் சிலர் இருந்து வந்தமை பற்றி இருந்து வருகின்றமை பற்றி அவ்வப்போது அறிய நேரிடுகின்றது. முற்குறிப்பிட்ட வள்ளிநாயகி என் பாரும் அற்புதங்கள் செய்திருப்பதாக அறியமுடிகின்றது. ஒரு தடவை தன்மீது பாய்வதற்கு தயாரான புலியை பின்வருமாறு கூறி மந்திரக்கோலினால் நிலத்திலே தட்டி இறக்கச் செய்தாராம்.

ஜீவநதி
"வோள்கைக்கு நானல்ல விருந்து
வெடிபட்ட வாய்ச்செந்நீர்
கொடுப்பினால் வடிய
வெடிக்கட்டும் வெடி இட்டோம்!
ஊரின் சமூகத்தின் சில தேவைகளுக்காகவும் அவ்வப்போது பெண் கவிஞர்கள் சிலர் பாடல்கள் பாடிக் கொடுத்துள்ள வழக்கமும் முன்னர் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கத் தோன்றுகிறது. ஏனெனில் (ஏறத்தாழ ஐந்து தசாப்தத்திற்கு முன்னர்) பாடசாலைமாணவரது தேவைக்காக, பாத்தும்மா கவிஞர் கோலாட்டப் பாடலொன்று பாடிக்கொடுத்துள்ளார். அப்பாடலின் சில பகுதிகள் கிழே தரப்பட்டுள்ளன.
"திர்பதார் மாதர் பொரட்டாசி மொதல்
ஓராந் தெகதி சனிக்கிழமை
அமீபத்தி யோராமாண் டைவர்ை தொரவந்து
ஆக எப்ராட்டடி மாதரசே
சந்தோஷம் ஐவன் கொடிக்காறனர் தொர கர்ைனாடி ஒவிசர் கங்காணி பேரின்ப ஒவிசர் ஆறுபேரும் டயில் பெற்றரி வேலைக்கதரிபதியார்
மால பட்டார மணிநேரம் வில்லு
வார் கட்டுத் தொங்கலப் பாருங்கடி
இத்தைக்கு முனர்னொரு போதுமே காணாத
எனிசினி வயித்தங் கிலMததழ
மேளம்திரி மேசண்மார் ஓர்புறமும் நல்ல
6. Ddaejaz5/Tafle i LunrLigaz567f £Prif lymigputā
கூலிப்பயலுகள் ஓர் புறமும் அங்க
2õll olev 5(Boupuuõuor
பத்து மணிக்கொரு வல்லழக்கப் பசி
யாறும் சனங்கள் பசியார
தேயில திட்டல் திமிதிமிக்க அங்க
சினர்னொரு விவர்மா காலி மணிக்கு” மேலுள்ள பாடல் பகுதியை ஊன்றி அவதானிக்கும் போது கவிஞர் புதிய விடயத்தைக் கூற முற்படுவதும் வெகுலாவகமாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதும் அச்சொற்களின் நயமும் (எ.டு: சின்னொரு லிவு) விதந்துரைக்கப்பட வேண்டியன வாகின்றன.
வாய்மொழிப் பாரம்பரியத்திலுருவான எழுத்தறிவுள்ள பெண் கவிஞர்கள் சிலர் பற்றியும் அறிய முடிகின்றது. அத்தகையோர் சிலர் தமது மனத்துயரங்களைக் கவியாக எழுதி அதற்குக் காரணமாக இருப்பவர்களுக்கோ உறவினருக்கோ அனுப்பி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். சம்மாந்துறைப் பிரதேசத்தில் வழங்கிவருகின்ற "மருமகள் மாமிக்கு எழுதிய கடிதம்" இத்தகையவற்றுள் ஒன்று.
மாமிக்கு மாமி மறுமுறைக்கு நீ மாமி
ஈமனுள்ள மாமி எண் கதய கேளிர் மாமி
வெட்டுன கட்டையில வேரு தளச்சதுபோல்

Page 5
ஜீவநதி 6
2. எர்ளதும் ஓர் மாமி நார்க ஒத்துமைக்கு வந்திநாள்க
uttot 62L-á5áőlsó loszorgplatútuszf 67ai(B 6lőFITafarti
Punsjaz5L 62 utöly 621&Fuumrøv uorruf7 67øjL
வழிமறந்து போனாருகா
ஈச்ச மரம் ஒண்டு இல உதிர்ந்து பழம் பழுத்து
சவண்டு கொடுக்கும் எண்ட தனிமய நரீ கேளிர்மாமி என்று ஆரம்பித்துச் செல்லும் அந்நெடும் பாடல் பற்றிய தகவலைத் தந்தவருக்கு அதனை இயற்றியவர் யாரென்பதனை மறதிகாரணமாகக் கூறமுடியாது போய்விட்டது!
இவ்வாறே, அக்கரைப்பற்று வாசியான "மலடி" என்று கூறி கணவனால் கைவிடப்பட்ட இன்னொரு பெண் எழுதிய கவிக்கடிதம் பற்றியும் தெரிய வருகிறது. (196வரிகள் கொண்ட) இக்கவிப்பிரதியைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டிருந்த கலாநிதி ஏ.நு.மான், யாது காரணத்தினாலோ அப்பெண்ணின் பெயரினைக் குறிப்பிடாத படியால் இயற்றியவர் பெயரினை அறிய முடியாதிருக்கிறது. எவ்வா றாயினும் அப்பாடல்களின் நயமும் உருக்கமும் கவனத்திற்குரியன வாகலின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.
நண்றி மறந்தார்
நகமிநக்க சதையெடுத்தார்
கமுத்தரிலையும் கத்திவைத்தார். இனி ஓர்
காலமும் தானி பேச்சிருக்கோ
மலழ எண்று சொல்லி
வசைபேசிப் போட்டாரு
படைத்த நிகுமானி மாமி - என்னைப்
பதராக்கிப் போட்டாராக்கும்
உருகும் மெழுகாணேன.
உள்ளம் மெழுகுக் கொம்பாணேனர்
கடுகு நிறமானேணி - மதினி இந்தக்
கவலைவந்த நாளர் தொடுத்து
பட்ட மரம் பழம் தரும்
பறவை இறகுதரும்
சந்திரனும் சலா முரைக்கும் - எனிர
தனிமைகளைக் கேட்டவுடன்
கடலை மையாக்கரி
காணகத்தைத் தாளாக்கி
எழுதமுடித்தாலுமி - மதினி
எனர் கவலை திராது.
கவலையுடனர் பாடினேனர் - என்ற
கண்ணால் நீர் ஓடியதால்
கொப்பி நனைஞசிருக்கு - அதைக்
கூர்மையுடனர் பார் மதினி
இதுவரை கூறப்பட்ட பெண்கவிஞர்களது கவிதா ஆற்றல் பற்றிச் சிந்திக்கும் போது இவ்விடத்தில் இர விடயங்கர் நினைவுக்கு வருகின்றன. இவர்களுள் கணிசமானோர் 'ஆசுகவி 18. 1ே 11 ல் *.huம் ஆற்றல்) ஆற்றல் கைவரப்

ஜீவநதி 7 பெற்றிருந்தனரென்பதும் இசையோடு பாடுமாற்றலைப் பெற்றிருந்தனரென்பதுமே அவ்விடயங்களாகும்.(இத்தகைய இசையாற்றல் கைவந்தோருள் இறக்காமல் பிரதேசத்திலேயே இன்றும் வாழ்ந்து வருகின்ற மீரா உம்மா முக்கியமானவர். அவர் இசையாற்றல் தவிர பாடல்கள் இயற்றும் வல்லமையும் பெற்றவரென்றும் அறியப்படுகின்றது)
இறுதியாக இவ்வாறான வாய்மொழிப் பாரம்பரியப் பெண் கவிஞர்கள் பாடல்புனையும் ஆற்றலை எவ்வாறு பெற்றுக் கொண்டனர் என்றொரு வினாவை எழுப்புவது தவிர்க்க இயலாததே ஏலவே வழக்கிலிருந்து வருகின்ற வாய்மொழிப் பாடல்களைக் கேட்டல், பாடுதல், சடங்குப்பாடல்களைக் கேட்டல், பாடுதல் கூத்துப்பாடல்களைக் கேட்டல், ஏட்டுவாசிப்பினைக் கேட்டல், முதலான விதங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற வாய்ப்பும் மனப்பதிவும் அவர்களுக்குத் தாமே அவ்வாறு பாடுகின்ற வாய்ப்பினை வழங்கியிருக்கும் என்பதனை அதற்கு விடையாகக்
கொள்வதில் தவறிருக்க முடியாதென்றே கருதுகின்றேன். 000
விட்டில்களின் இரா வெம்மைக்குள், விட்டில்கள் எரிந்த இராவினில் என் ரோமங்கள் கருகி மனத்தன. விட்டிலுக்கு எல்லாம் விடியாத நாட்கள் தான். சிறு வெளிச்சத்தில் அதன் காலம் முடிகின்றது. விட்டிலைக் கொல்லுதல் விளக்கின் பணியா என்ன? விட்டிலுக் கென்ன மனது இருக்கப் போகின்றது. வீடு, தோட்டம், துரவு பெண்பால், பிள்ளை, ஆடும் மாடுகளும், கன்றும் - அவை தவிர ஏதும் எல்லாம் பொசுக் கென்று போய்விடுகின்றது. போகட்டும் இந்த விட்டில் ஆனால், அருத்த விட்டில் அதற்கருத்த விட்டில் எந்த விட்டிலுக்கும் பேதம் கிடையாது. ஒரு புலுண்டிய மனத்துடன் நிறைய விட்டில்களின் கனவு தீயில் கருகும் துயரம் தொடர்கின்றது.
- கோகுலராகவன்
6bulogjugas g5Goga535U5 அடிநுனி யறிய ஆற்றலே அற்ற நொடியிது விளங்கக் கல்வியை முகராப் படியினில் ஏறிப் பழசுகள் உண்டதால் உடனிது உயர்ந்து போனதா யெண்ணி மலையையே பார்த்துக் குரைப்பதைப் பார் நாய் குரைப்பதைப் பார்
பல்கலைத் திறனும் பார்ப்பவர் அதிரும் எல்லையே தெரியா மலையதின் விரிவு உள்ளதை யறியும் உணர்வுகள் இல்லா வல்லமை யற்ற வழிசலே இன்னும் மலையையே பார்த்துக் குரைப்பதைப் பார் நாய் குரைப்பதைப் பார்!
தாண்தொட முடியாத் தன்மைகள் தெரியா ஊனவர் கொருத்த உந்தலால் இன்று வானுயர் மலையின் வடிவம் எதிர்க்கும் வாலாட்டிக் குழையும் வடிவினைப் பார் மலையையே பார்த்துக் குரைப்பதைப் பார் நாய் குரைப்பதைப் பார்
கூக்குரல் ஊழையால் குப்பையில் கூடிய நாக்கு நீள் நாய்க்குப் பட்டியே கட்டி வீட்டையே காக்கும் வேட்டைநாய் என்று காட்டிய வழியில் கண்ட இத்தோற்றமாம் மலையையே பார்த்துக் குரைப்பதைப் பார்
நாய் குரைப்பதைப் பார்!
- கவிஞர் ஏ. இக்பால்

Page 6
ஜீவநதி 8
புனைகதையும்
நுகர்வோர் சமூகமும்
பின்னைய முதலாளிய சமூகத்தின் தனிமனிதக் குவியத் தோடு ஒட்டிய நுகர்வோர் நோக்கு தனிமனித நெறிக்கு மேலும் வலுவூட்டத் தொடங்கியுள்ளது. தனிமனித நுகர்வுக் கோலங்களின் ஆலாபரணங்களை நிலை நிறுத்தும் கதைப் புனைவுகள் முன்னைய சிறுகதைகளிலும், நாவல்களிலும் காணப்படாத புதிய பண்புகளைத் தோற்றுவித்து வருகின்றன. தனிமனித நுகர்ச்சிகளுக்கு சமகாலத்திற் கொடுக்கப்படும் அதித முக்கியத்துவம் மனித உறவுகளிலே பல வகையான சிக்கல்களைத் தோற்றுவிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சிக்கல் நிலை, நெறிப்பட்டநிலையிலும் நெறிப்படாநிலையிலும் புதிய புனைவுகளை ஆக்கத் தூண்டுகின்றது.
தனிமனிதர் என் போர் சமூக இயல்பின் குறியீடு களாகின்றனர். நுகர்வோர் சமூகத்தின் இயல்புகளின் வெளிப் பாடுகளை தனிமனிதர் மேற்கொள்ளும் வெளிப்படையானதும், தோன்றாநிலையானதுமான சமூக உறவுகள் வாயிலாகத் துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்.
இத்துறையில் மேலும் விளக்கத்தைப் பெறுவதற்கு நுகர்ச்சி, நுகர்ச்சியாளர், நுகர்ச்சியாண்மைவாதம் (Consumerism) ஆகிய எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்ளல் வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொருள்களையும் சேவைகளையும் தெரிவு செய்தலும் , திரட்டுதலும், பயன்படுத்தலும் நுகர்ச்சியாகின்றது. அச்செயலை மேற்கொள்வோர் நுகர்ச்சியாளராகின்றனர். நுகர்ச்சி என்பது பொருள்களைக் கொள்வனவு செய்யும் வலுவடன் அல்லது கொள்வனவுத் திறனுடன் இணைந்தது. இந்நிலையிலே சமூகத்தின் பொருளியல் சார்ந்த அடுக்கமைப்புக்கும் கொள்வனவுத் திறனுக்கும் நேரடியான நெருங்கிய உறவு இருத்தலைக் காணலாம். இந்நிலையில் நுகர்ச்சியாளர் அனைவரையும் ஒரே தரத்திலும் ஒரே தளத்திலும் உள்ளடக்கிக் கொள்ள முடியாது. இதேவேளை "நுகர்ச்சியாளர் இறைமை (Consumer Sovereignty) என்று முதலாளியப் பொருளியல் நிபுணர் முன்வைக்கும் கருத்து ஒருவித ஏமாற்றுக்கருத்தியலின் வெளிப்பாடுதான்.
முதலாளிய பொருண்மிய செயற்பாடுகளின் தீவிர பறிப்பையும் சுரண்டலையும் மறைத்து தனக்குரிய கவர்ச்சி
 

ஜீவநதி 9
முலாத்தைப் பூசுவதற்கு மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகவே"நுகர்ச்சியாண்மை" வாதம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பொருள்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்யும் விருப்பையும், தகுதியையும், தராதரங்களையும் பாதுகாக்கும் நியாயப் பாட்டை அந்த எண்ணக்கரு உள்ளடக்கி நிற்கின்றது. அந்தக் கருத்தியலின் வளர்ச்சியின் பின்னர் தான், பொருள்களிலே கட்புலனாக இரசாயன வழியானதும், மரபு அணுவழியானதும், உயிர்நுட்பு வழியானதுமான ஏமாற்றுத் தனங்களும், நுகர்ச்சியாளரின் உடல்நலக்கேடுகளை உருவாக்குதலும் மேலோங்கி வருகின்றன. நுகர்ச்சியை முதன்மைப்படுத்தும் சூழலில் சிறுகதைகளும், நாவல்களும் "நுகர்ச்சிப் பண்டங்களாக" மாற்றப்படுகின்றன. கைத் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் நுகர்ச்சிப் பண்டங்களின் நிலைக்கு சிறுகதை மற்றும் நாவலாக்கம் தள்ளப்படுகின்றது. ஆக்கமலர்ச்சியின் தரத்தைக் காட்டிலும் மலினமான நுகர்ச்சிக் கவர்ச்சி சராசரிப் படைப்புகளிலே மேலெழச் செய்யப்படுகின்றது. நடப்புநிலைச் சமூகப்படிமங்கள் நுகர்ச்சித் தேவைக் கேற்றவாறு உருக்கொடுக்கப் படுகின்றன. நுகர்ச்சிக்குரிய படிமங்களை உருவாக்குவதற்கு எழுத்தாளர் தூண்டப்படும் நிலை மேலெழுகின்றது. நாவலின் தரத்தைக்காட்டிலும் அதன் விற்பனைப் பிரதிகளின் எண்ணிக்கையே மேலையுலகில் முதன்மைப் படுத்தப்படுகின்றது. பின்னைய முதலாளியம் உருவாக்கும் நுகர்ச்சி வலைப்பின்னலில் நாவலும் உள்ளடக்கப் பட்டுள்ளது. சிறுகதையும் நாவலும் அவற்றின் இயல்பால் பொருண்மை கொள்ளப் படாது, பிறநாவல்களினதும் சிறுகதைகளினதும் "தொடர்பால்" நிர்ணயமாக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
நுகர்ச்சிப்பொருண்மியநடவடிக்கையின் பிறிதொரு இலக்கு பொய்ம்மையான தேவைகளை உருவாக்குதலாகும். அதன் நீட்சி புனைகதையாக்கங்களிலும் ஊடுருவிப் பொய்ம்மையான நிகழ்ச்சிகளின் ஆக்கங்களை மேலெழச் செய்யும் நடவடிக்கைகளை தூண்டி நிற்கின்றது. நுகர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் தூண்டவும் வல்ல செயற்பாடுகளைப் முதலாளியப்பொருளாதாரம் வெகு இலாவகமாகத் தொடர்ந்து முன்னெடுத்த வண்ணமுள்ளது.
கவர்ச்சியை ஊக்குவிக்கும் பொருண்மிய நட வடிக்கைகள் வாசகரை செயலூக்கமற்றவர்களாக மாற்றி விடுகின்றன. வாசகரை சமூகத்துலங்கலற்ற, வினைப்பாடற்ற நிலைக்கு மாற்றுதல் பின்னைய முதலாளியத்தின் உறுதிப்பாட்டுக்கு அவசியமானதாகின்றது."விறுவிறுப்பாகப் படிக்கச் செய்தல் (எடுத்துக்காட்டு புனிதன் "கலாஎன் கிளாஸ்மேட்" நாவல்) ஒருவகையில் யதார்த்தத்தையும் மீறிய சுவைப்புக்கு இடமளித்து நுகர்ச்சிப்பாங்கினைத் திவிரப்படுத்துகின்றது. மேலும் நுகர்ச்சியின் பிறிதொரு பரிமாணம் ஆங்கிலவழியான தொடர்பாடலை அறிமுகப்படுத்தி வேறுபாட்டின் வழியாக (Differentiation) நுகர்ச்சிப்பாங்கைத் தூண்டுதலும் பின்னைய முதலாளியத்தின் தொடர்பாடல் நுட்பவியலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு வகைமாதிரியான எடுத்துக்காட்டாக மேற்குறித்த புனிதனின் நாவலைக் குறிப்பிடலாம்.
தமிழகத்தின் சமூக இயல்பையும், அதன் தளத்திலும் இயல்பிலும் புரையோடிக்கிடக்கும் பிரச்சினைகளையும் புனையும் ஜெயகாந்தனும் நுகர்ச்சிப் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தலை அவ்வப்போது காணமுடிகின்றது. "விஸ்கிப்பாட்டிலும் கையுமாகத் தள்ளாடிய படிநிற்கும் கங்காவை உருவாக்கிய

Page 7
ஜீவநதி 10
ஜெயகாந்தன் ஒரு புறத்தே நுகர்ச்சிச் சுவைக்குத்தினிபோடுபவராயும் மறுபுறத்தில் இந்திய சமூகத்தின் புரையோடியவடுக்களைச் சித்திரிப்பவராயும் விளங்குகின்றார். புதிது புதிதான நுட்பங்களை அறிமுகம் செய்வதன் வாயிலாகச் சுவைத்துாண்டலை உருவாக்குதலும் நுகர்ச்சி அலையின் வீச்சுக்கு உட்படுகின்றது. இரா முருகன் எழுதிய "மூன்றுவிரல்" என்ற நாவல் மென்பொருள் துறையை மையமாக வைத்துத் தமிழில் உருவாக்கப்பட்ட முதலாவது நாவலாகின்றது.
புதிய கருதியல் அலைகளைத் தழுவி நாவல்களைத் தயாரித்தலும் ஒருவகையில் நுகர்வோரின் விருப்பங்களை நீண்டு கைப்பற்றும் செயற்பாடாகின்றது. எடுத்துக்காட்டாக ச.ராஜநாயகம் அவர்கள் எழுதிய "காலமற்ற காலம்" என்றொரு நாவல் பின்னவீனத் துவக் கருத்தியலை அடியொற்றி அமைந்தவாற்றைக் குறிப்பிடலாம். அந்நாவலின் வடிவமைப்பு இதழ்கோலமே (Layout) வித்தியாசமான தோரணமாக இருத்தலையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. நூலாசிரியர் காட்சித் தகவலியல் துறைப் பேராசிரியராக இருப்பதால் காண்பிய நுட்பங்களை நாவல் அல்லா நாவலில் பரவலாகப் பயன்படுத்தியுள்ளார். அதன் தொடக்கம் பின்வருமாறு அமைந்தமை வகைமாதிரி எடுத்துக் காட்டாகவுள்ளது.
"புதினத்தின் துவக்கத்தில் வருவதால் இது முதல் பகுதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. துவக்கத்தைக் காட்டும் முதல் பகுதியாக இருக்கலாம். இறுதிக்குப் பின்வரும் மற்றொரு துவக்கத்தைக் காட்டும் முதல் பகுதியாக இருக்கலாம். முதலுக்கும் முடிவுக்கும் இடையில் ஏதேனுமோர் இடத்தில் வரும் ஏதேனுமொரு பகுதியாக இருக்கலாம் தெரியாததுவக்கத்தின் இறுதிப்பகுதியாக இருக்கலாம். முடிவுக்குப் பின்னே முடிதலும் முதலுக்குமுன்னே முடிவும் சாத்தியமில்லை என்றால் மனித வாழ்வே சாத்தியமாகாது.(ப 1-3)
குறித்த ஒரு நாவலலைப் பல நிலைகளில் வாசிக்க முடியும் என்ற கருத்து முன்வைப்பும் நுகர்ச்சிப் பாங்கின் முதன்மையை வலியுறுத்தி நிற்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றது. சுந்தரபாண்டியன் எழுதிய "அந்தி நாவலுக்கு கோவை ஞானி எழுதிய சில குறிப்பில் பின்வருமாறு சுட்டப்பட்டுள்ளது. "இந்த நாவலை இரண்டுவகைகளில் நாம் வாசிக்க முடியும். இந்த நாவலுக்குள் நாட்டார் வழக்காற்றியல் கூறுகளைக் கண்டு வாசிப்பது ஒருமுறை, நவீன கால வாழ்க்கையை, வாழ்க்கைச் சிக்கலை கலை நயத் தோடு இந்தநாவல் வெளிப்படுத்துகிறது என்ற உணர்வோடு வாசிப்பது இன்னொருமுறை . ஒரு நல்ல வாசகர் இவ்விருவகை உணர்வோடும் இந்த நாவலை வாசித்து இன்புற முடியும்"
நுகர்ச்சியின் குவியப்பாடு நவபாலியலை (NeOSex) நோக்கித் திரும்பியுள்ளது. புதிதுபுதிதான பாலியல் விகாரங்களையும் பாலியல் விலகல் நடத்தைகளையும் சித்திரிப்பதன் வாயிலாக புனைகதை வாசிப்பைத் தாண்டும் நுகர்ச்சிப்பாங்கு மேலை உலகில் உச்சங்களை எட்டத் தொடங்கியுள்ளது.
தமிழ் இலக்கியப்பரப்பிலும் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பாலியலை மேலும் பல தளங்களிலே அணுகும் நாவல்கள் தோற்றம் பெற்றன. அவற்றின் வழியான "உண்மைபுகட்டலை" தமிழ் நாவலாசிரியர்கள் முன்னெடுத்தல் ஒரு வகையில் தமிழ்ப்பண்பாட்டுமயப்படுத்தலாகின்றது. இந்த வகையில் இந்து மதியின் "பைசா நகரத்துக்கோபுரங்கள், வாஸந்தியின் "ஒரு சங்கமத்தைத் தேடி, லஷ்மியின் "இருளில் தொலைந்த உண்மை" முதலிய நாவல்களைக் குறிப்பிடலாம்" இந்நாவல்களின்

ஜீவநதி 11 LDmudstib TB60Tsils.S. LD6JT6 guoisir (Unconscious Psychic Energy) disióTaldso இடமளிப்பது தான். ஏற்கனவே இந்தத் துள்ளலுக்குரிய தூண்டல் இலங்கையில் எஸ்.பொவின் ஆக்கங்களில் இடம் பெற்றுள்ளமை வரலாற்றுப் பதிவுகளாகக் கழிந்துள்ளன.
இலத்திரன் சாதனங்களின் தொடர்பாடற் போட்டிகளிலுடே “மீண்டும் வாசகரை அருட்டிவிடல்" என்ற செயற்பாட்டுக்கு "நவபாலியல்" நோக்கு மேலையுலகிலே கைகொடுத்துள்ளது. போலிமெய்ம்மை கொண்ட நவீன நாவல்களில் ஒடுக்குமுறைத்தொழில்நுட்பம் மிக நேர்த்தியாகக் கையாளப்படுகின்றது. ஏமாற்று விசைகளை உட்பொதிந்த நோய்க் கூறுகளைக் கொண்ட புனைவுகள் நடப்பியலை "தன்னிலை அழகியல் வழியாகத் தகர்க்க முற்படுகின்றன. இந்தவகையில் "மீண்டும் இருப்பியம் நோக்கித் திரும்பல்" முன்மொழியப்படுகின்றது. சாரு நிவேதிதாவின் "எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்" என்ற நாவல் (கனவுப்பட்டறை, 2005) குறிப்பிடத்தக்கது. சமூகவரலாற்றைப் போலியாகவும் மாயையாகவும் சுட்டும் பின்னவீனத்துவ உரையாடலால் மாறுபட்ட நிலையில் வெந்து தணிந்த வகையில் மீள் அழகு உயிர்ப்பூட்டப் படுகின்றது.
அழகியல் என்பது அதிகாரத்தினாற் கட்டமைப்புச் செய்யப்படும் வரம்பாக உள்ளது. அதிகாரக் கட்டமைப்பும், அதனை நிலைநிறுத்தும் நுகர்ச்சிப்பண்பாடும். சமூகக் கட்டமைப்பை உடைக்கும் விசைகளை மலினப்படுத்தும் புனைகதை யாக்கங்களும் ஒன்றையொன்று தழுவிநிற்கின்றன. முடிவுநிலையை எட்டாத அல்லது நிலைமாற்றத்துக்கு உட்படாத செம்மையுறா இருப்புக்கும் (RaWness) நடப்பியலுக்குமிடையே வேறுபாடுகாட்டப்படாத சித்திரிப்பும் அவற்றுடன் இணைந்து கொள்கின்றது பாலியல் உக்கிரத்தின் படிமப்படுத்தல் நுகர்வோரின் தெரிவு உந்தலுடன் இணைக்கப்படுகின்றது. 000
O
இலையுதிர்காலம் காலமதை வல்ல இலையுதிர்காலமீ இரவின் f வநீது வந்து (8LJIT6OTöib Зoъ5 g6 6L5, S 6 అద్దాIGు ஏனோ Dಾಲ್ಡLITU s பரந்த வெளியெங்கிலும் 5 器 பெய்ய மறுத்தது மேகம் - ஊரார் நான் நடநீதேன் Տ రొమిgదా! ఇఐp Baba புதர்களுக்கு மேலே 岔 @దిరిగి தெரியாதவர்களின் ஒருபுறம் சாய்நீதிருந்த ് 窗 கொடும்பாவியை எரித்தனர் விவசாயியின் சிவநீது போன ஒ மழையைவேண்g dpඝ6\lpගI (තිග්ග)]] S. ශිඛ|| ||5ඛoffසී ආගන්(8Lගනී. f. வெகுண்டெழுந்தது மழை முகில் பேசுவதற்காய் நான் S. யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் [5][5ඝ6)ඛඹීග60. 战 வேருடன் சாய்கிறேன் உங்கள் எனினும் தலையசைத்தேன் UTJö Usuió625óK85T 6626)T என்னைச் சுற்றிலும் ஆவலி சோவெனக் கொட்டியது காற்றுடன் மிகுந்த தாரகைகள் கிடந்தன. &BT6OLD65 ೧çloು வெள்ளை முகங்களுடனான UJITUTT6ů dipiguuỗ?
நகர்ப்புறப் பிள்ளைகள் போலும்! -பஞ்சாமிர்தபாலன்

Page 8
12
ஜீவநதி
ாைறுதே தன் வன்ைைெல
என்ன சத்தமிது? வாகனம் ஏதும் வருதா? கிழவி கையை ஊன்றி எழுந்திருந்து தெருவைப் பார்க்கிறது. இரண்டு நாட்களாக கோயிலிருந்து சரிவில் இறங்கி தெருவில் வந்து நின்று பார்த்துப் பார்த்துக் கால்கள் வீங்கி விட்டன. பக்கத்தில் வேறு பிரதான வீதி ஏதும் இருக்கிறதா? சிழவிக்கு அதுவும் தெரியவில்லை. இந்த ஊர் புதிது. வாகன இரைச்சல் எப்பொழுதாவது கேட்கிறது. பின்னர் தேய்ந்து மறைந்து போய் விடுகிறது.
மனித சஞ்சாரமேயில்லை. அவசர அவசரமாய்க் கால்நடையாகவும், சைக் கிளிலும், ட்ரக்டரிலும், மாட்டு வண்டியிலும் பயணித்த மக்கள் கூட்டம் இன்றில்லை. ஷெல்கள் தான் கூவிக்
கொண்டு தலைக்கு மெல்
பயணிக்கின்றன.
ஊருக்கு ஒதுக்குபுறமாய்
இருக்கிறது இந்தக் கோயில்,
கோயிலைச் சுற்றிக் கள்ளியும், எருக் கலையும், ஆமணக்கும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. இடையிடையே ஓரிரு பாலை மரங்கள்.
இன்று ஏனோ வானம் மப்பும், மந்தாரமுமாய் இருக்கிறது. கிழவி அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறது. மேகங்கள் தென்மேற்குப் பக்கமாய் ஒடுகின்றன. புயல், கியல் வரப் போகுதா? கிழவி கவலையுடன் கணவனைப் பார்க்கிறது. இரு சாக்குகளின் மேல், விரிக்கப்பட்ட பாயில் கிடக்கும் ஒட்டி உலர்ந்த உடல், சற்றுத் தள்ளி மெகா போத்தலில் தண்ணிர், உரப்பையில் சில மாற்றுடைகள் கிழவருக்கு நித்திரையா.
- பவானி சிவகுமார்
மயக்கமா என்று தெரியவில்லை. வாய் திறந்திருக்கிறது. மூச்சில் இரைச்சல். கண்களை விழித்துப் பார்க்கும் போதெல்லாம்.
"ம.ங்.க்.ளம்.த.ம்பி.அ.
கிழவிக்கு இந்த கேள்விக்குப் பதில் சொல்லும் முன் கண்ணிர் வந்து விடும்.
ஊர் விட்டு ஊர் வந்து அநாதையாய். இடம் புதிது ஆட் களையும் தெரியாது. தெரிந்து தான் என்ன பிரயோசனம்? ஒருவரும் இங்கில்லை பழகுவதற்கு. பத்து நாட்களுக்கு முன் கிழவி மங்களம் இப்படித்தானும் தன் கணவனும் தனித்து விடப்படுவோமென்று நினைக்க வேயில்லை. நிறைவற்ற எளிய வாழ்க்கை. பிறந்த நாளிலிருந்து இது பழகிப் போனதால் மங்களத்திற்கு அதிகம் ஆசைப்படத்தெரியவில்லை. அறுபத்தைந்து வயதில் எண்பது வயதுத் தோற்றம் பிள்ளைகள் திருமணமாகி ஆளுக்கொரு திசையில் சென்று விட மங்களமும், கணவனும் தம் சிறிய வீட்டில் கடைசி மகன் பார்த்திபனுடன் தங்கி விட்டனர். அவனுக்கும் மூன்று பிள்ளைகள் போர்ச்சூழல். கஷ்ட ஜீவனம், பசளையில்லை, பூச்சிக் கொல்லி இல்லை. தோட்டத்திலிருந்து பெரிதாக என்ன வரப் போகிறது?அதுவும் நிலையில்லை.
ஊரில் ஷெல்கள் விழத் தொடங்கின. போக மாட்டேனென்று அடம் பிடித்த மூத்த இரு பிள்ளை களையும், ஒருவாறு புத் தி சொல்லி, அது வாங்கித்தாறன், இது வாங்கித்

3
ஜீவநதி
தாறன்" என்று ஆசைகாட்டிமனைவியின் அக்காவிடம். விளாத்திக்குளம். பார்த்திபன் விட்டு விட்டு வந்தான்.
ஷெல் வீச்சு அகோரமாகிப் பலர் இறக்கவும், காயப்படவும் ஊரே யாத் திரை போல் இடம் பெயர்ந்தது. மங்களத்தின் கணவனிற்கு வலது கையும், காலும் இயங்காது. பாரிசவாதம். பேச்சும் குழறல் தான். கைத்தடியின் உதவியுடன் மிக மெதுவாய் அடி யெடுத்து வைக்கச் சில நாட்கள் முடிந்தது. பல நாட்கள் அதுவும் முடிவதில்லை.
மனைவி கைக்குழந்தையுடன் பின்னே வரப் பார்த்திபன் தந்தையைக் கரியரில் இருத்தி சைக் கிளை உருட்டியவாறு வந்தான். அடிக்கடி பலன்ஸ் தவறி
நழுவும் தந்தையை விழாதவாறு பிடிப்பதும், பின் சைக் கிளை நகர்த்துவதுமாய்ச் சிரமப்பட்டான். அருகே இடுப்பில் உரைப்பையுடன் மங்களம்.
"எங்களோட வந்தவையள் ஒருத்தரையும் காணேல்ல. எல்லாரும் எப்பவோ போய்ச் சேர்ந்திருப்பினம்.
வெயிலின் அகோரம் வீரிட்டழும் கைக்குழந்தை. மருமகள் சிடுசிடுப்பதில் பிழை சொல்ல ஒன்றுமில்லை. நேற்று அதிகாலை தொடங்கிய நடைப்பயணம். இவர்களால் தான் தாமதம், இல்லா விட்டால் மடியில் கைக் குழந்தையை அணைத்தபடி சைக்கிளில் கணவனுடன் நேற்றே விளாத்திக்குளம் சென்று இருப்பாள்.
"தம் பி.! எங்கள இங்க எங்காவது தெரிஞ்ச வீட்டில விட்டுட்டு நீ இவையளை முதல்ல கொண்டு போய் விட்டுட்டு வா"
"இங்க யாரம்மா தெரிஞ்சவை இருக்கினம்? இருக்கிற ஆட்களே ஒட ஆயத்தமாயிருக்கினம்"
கொண்டு வந்த தண்ணிர் தீர்ந்து விட, இடைநடுவே ஒரு வீட்டின் முன் தண்ணிருக்காய் நின்றார்கள். அங்கிருந்தவர்கள் தண்ணிர் தருவ தோடு மட்டும் நின்று விடாமல், பார்த்திபனின் தந்தை சிறிது நேரம் இளைப் பாறப் பாய், தலையணை கொடுத்து உதவினர்.
"தம்பி அவையளை மெல்லக் கேட்டுப்பார். நாங்க இங்க இருக்கிறம். நீ அவளையும், பிள்ளையையும் விட்டுட்டு
6T.
தாயும், மகனும் தங்களைப் பார்த்து இரகசியம் கதைப்பதைக் கண்ட வீட்டுக்காரர், என்ன என்பது போல் பார்த்தார். தெரிந்ததும் யோசித்தார்.
"நாங்களே இன்னும் ரெண்டு ஷெல் விழுந்தால் வெளிக்கிட்டிடுவம்?
"நான் நாளைக்கு வந்து கூட்டிக் கொண்டு போவன் அண்ணை.
"ஓம் தம் பி. அவன் அவை யளைக் கொண்டு போய் விட்டுட்டு வரட்டும். நாங்கள் இந்தத் திண்ணையில் இருக்கிறம். நீங்கள் போறதெண்டால் வீட்டைப் பூட்டிக் கொண்டு போங்கோ

Page 9
ஜீவநதி
பார்த்திபன் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை வீட்டுக்காரரிடம் கொடுத்தான்.
இது என்னத்துக்கு வேண்டாம். இல்லை அண்ணை, நான் வருமட்டும் இவையஞக்கு சாப்பாட்டுக்கு.
"இருக்கிறதில் குடுக்கிறம். இவையென்ன அப்பிடிக் கனக்கவே சாப்பிடப் போகினம். நான் என்ர தாய், தகப்பனிருந்தா குடுக்க மாட்டனா?
மறுக்க, மறுக்க காசைத் திணித்து விட்டுச் சென்ற பார்த்திபன் மறுநாள் வரவில்லை. மூன்றாம் நாள்
இந்த ஊரிலும் ஷெல் விழத் தொடங்கியது.
Ja»uñöLDT... 6T6öi 6OT 9D (FÄ)éb U
மகனைக் காணேல்ல?
இனம் தெரியாத திகில் பரவ மங்களம் அவனை மிரண்டு பார்த்தாள்.
"நாங்க வெளிக்கிடப் போகிறம் அம்மா. இனி இங்கயும் ஆபத்து."
நீங்க போங்கோ தம்பி. எங்களைப் பற்றி யோசிக்காதேங்கோ, மகன் வருமட்டும் நாங்க இங்க இருக்கிறம்.
அயல்ல ஒருத் தருமில்ல. தனிய என்ன நடந்தாலும் தெரியாது. ட்ரக்டர், வண்டியெல்லாம் சாமானோட ஆட்களோட போதது. ஏத்தி விடுவ மெண்டா அதுக்தம் வழியில்லை. ம். யோசித்தார்.
அம்மா. உங்களை இங்க தனிய விட்டுட்டுப் போக எனக்கு மனசில்ல. ஊருக்கு வெளியில ஒரு கோயிலிருக்கு. அது பாதைக்குப் பக்கத்தில் தானிருக்கு. நான் உங்கள அங்க விடுறன். போறவங்கள் சில நேரம் சாமானேத்த திரும்பி வரலாம். நீங்க கேட்டுரைறி வாங்கோ.
கைத்தடியைக் கிழவர் கையில் கொடுத்து கைத்தாங்கலாக, கிட்டத்
14
தட்ட இழுத்தபடி, கொண்டு வந்து ஒரு G6)յ6flամl6ծ, சிறிது மேட்டில் அமைந்திருந்த முருகன் கோயிலில் விட்டு விட்டார்.
அம்மா இந்தக் காசைப் பிடியுங்கோ. உங்கட மகன் தந்தது.
இதை வைச்சு நான் என்ன செய்ய. ரெண்டு நாள் சாப்பாடு போட்டீங்க வச்சிருங்கோ" இதைச் சொல்லும் முன் கிழவிக்கு அழுகை வந்தது.
இல்லையம்மா பிடியுங்கோ. உங்களுக்கு உதவும்.
தம்பி, காசை வச்சு நானென்ன Glerulu ... F65ö(6 Gauja fyrr?... ÚlesúSL" இருந்தா வாங்கித் தாரும். அவன் வருமட்டும் சமாளிக்கிறன்."
".ம்..ம். கடைக்காரர் எல்லாம் சாமானேத்திட்டினம். பார்ப்பம்."
போனவர் அரை மணித்தி யாலத்தின் பின் திரும்பி வந்தார்.
இந்தாங்கோ அம்மா.எல்லாம் தட்டுப்பாடு. சரியான விலை. உங்கட நல்ல காலம். ஒரு கடைக்காரர் ட்ரக்டரில் ஏற்றினதை அவிட்டுத் தந்தார்.
இரண்டு பிஸ்கட் பெட்டி களையும், ஐம்பது ரூபாயையும் திரும்பித் தந்தார். இரண்டு நாள் கோயில் வாசம். தெருவில் வருவோரெல்லாம் பார்த்திபன் போல் தெரிகிறது. காற்றின் இரைச்சல் வாகன இரைச்சல் போல் கேட்கிறது. தூரத்தே வெறிச்சோடிக் கிடந்த தெருவில் ஒரு சைக்கிள் வருவது தெரிகிறது. பார்த்திபனா? கூவிப் பாயும் ஷெல்களைப் பொருட்படுத்தாமல், தெருவை நோக்கி ஒட. வந்தது பார்த்திபன் இல்லை.
யார் அம்மா நீங்க?. இங்க என்ன செய்யறிங்க. தனியா? வந்தவன் ஆச்சரியப்பட்டான். ஊரே இடம்பெயர்ந்த நிலையில் வெட்ட வெளியில் ஒரு கிழவி.

15
ஜீவநதி
"தம்பி நாங்கள் தோணிப்பாறை ஆட்கள்.மகனோடவந்தனாங்கள். அவன் பெஞ்சாதி, பிள்ளையை விட்டுட்டுவாறன் என்டு போனானி, காணேல்ல"
"எங்க போனவர்?" விளாத்திக்குளம் அங்க இப்ப ஒருத்தரும் இல்லையெணை. ஷெல் விழுந்து கனசனம் செத்திட்டுது.நிறையப் பேருக்குக் காயம்
"ஐயோ முருகா. கா. என்ர பிள்ளை என்ன பாடுபடுறானோ.
உங்கள தனிய விட்டுட்டா போனவர்.நல்ல மகன்
இல்ல. நான் தான் போகச்
சொன்னனான். என்ர புருஷனுக்கு UITf3f6mm förb... IBLäbib LDT "LITT.
அவர் எங்க? கோயில்ல அங்கு பார்த்தது மனதைத் தாக்கியிருக்க வேண்டும்.
சாப்பாட்டுக்கு என்ன செய்த நீங்க?நானம்மா மாட்டை அவிட்டுப் போக வந்தனான். எனக்கு நாலு பிள்ளையஸ். லக்ஸ்பிறே வாங்க காசில்ல. அது தான் துணிஞ்சுஷெல்லடிக்க வந்தனான்
ஏதாவது உதவ மாட்டானா என்றனதிர்பார்ப்பில்மண்விழுந்தது. எடுத்து வந்த ரொட்டி, சம்பல் பார்சலைக் கொடுத்தான். சென்றான்.
கடவுளே! வராம விடானே. ஷெல்லடிச்சு சனம் செத்திட்டாமே. பிள்ளைகளுக்கு ஏதும். மனம் நிலை கொள்ளாமல் தவிக்க, மூடிய கம்பிக் கதவின் முன்னிருந்து முருகன் விக்கிரத்தைப் பார்த்துக் கிழவி அழுதது.
சுழன்றடிக்கும் காற்றுடன் மழை. நிற்பதாகத் தெரியவில்லை. இதுக்குள்ள தம்பி என்னெண்டு வரப்போறான்? இரண்டு நாளாயிற்று. ஊழிக்காலமோ? பிஸ்கட் அரைவாசி முடிந்து விட்டது. பாதி பிஸ்கட்டைக் கடித்துத் தண்ணிரை குடித்து
வயிற்றைநிரப்பிக் கொள்வது வழமையாகி விட்டது. கணவருக்காய் சேமிப்பில் மிகுதி தம்பிவருமட்டும் வேணுமே.
வீசியடிக்கும் காற்றில் தூவானம். கிழவரைத் தாக்கி இடம் விட்டு மாற்றிக் கிழவி களைத் துப் போனாள். இதில் கொடுமை என்னவென்றால் வெள்ளத்தில் அள்ளுண்டு வந்த பாம்புகள் மேட்டில் ஏற எத் தனித்தன. கிழவரின் கைத்தடியால், உடல் நடுங்க அவற்றை வெள்ளத்தில் தள்ளி விடுவதே பகிரதப் பிரயத்தனமாய் இருந்தது.
கோயிலில் இருந்த தேங்காய் எண்ணெய் வேறு முடியும் தறுவாயில் இருந்தது. இதுவும் முடிஞ்சா இருட்டில இருக்கிறதா, பாம்பு ஏறினாலும் தெரியாதே. இரவில்நித்திரை வருவதில்லை. பிஸ்கட்டும் முடியப் போதது. இவருக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்யுறது.
விடிந்த பொழுது நிலம் தெரியவில்லை. கடல் நடுவே இருப்பது போலிருந்தது. நல்லவேளை கோயில் மேட்டில் இருந்தது. பாலை மரங்கள் கொப்பிழந்து தெரிந்தன. கிழவர் கண் திறக்கவில்லை. உடம்பு கொதித்தது. என்ன செய்தும் தூவானத்திலிருந்து அவரைக் காக்கமுடியவில்லை. கடவுளே. இவருக்கு ஏதுமெண்டா நான் தனிய என்ன செய்ய. இப்பிடி தனிய விட்டுட்டுப் போய்ட்டானே.
நாலு நாட்களின் பின் மழை நிற்க, ஒய்ந்துபோயிருந்த கூடிஷெல்; வீச்சுப் பழையபடி தொடங்கியது. இருநாட்களாக காய்ச்சல்வேகத்தில்வாய்பிதற்றிய கிழவர் இன்று அமைதியாய்க் கிடந்தார்.
ஏதோ இரைச்சல்கேட்டது. கிழவி அது பற்றிக் கவலைப்படவில்லை. பல தடவைகள் காற்றின் இரைச்சல் வாகன இரைச்சலாய் நினைத்து ஏமாந்திருக் கிறாள். சத்தம் அதிக ரித்தது. உற்றுப் பார்த்தாள். ஏதோ வருகிறதுதான். நெஞ்சு

Page 10
ஜீவநதி
16
வரை நின்ற நீரில் மிதந்து தெருவில் நின்றாள். ட்ரக்டர் ஒன்று வந்து கொண்டு இருந்தது. மட்காட்டில், ட்ரைவருக்குப் பக்கத்தில் நின்றவாறு ஒருவர் வந்து கொண்டி ருந்தார். அருகே வர ட்ரக்டர் பெட்டியில் பல கிழங்களின் முகங்கள்.
s9!ưỗ LDIT இங்க என்ன செய்யுறிங்க? மட்காட்டில் நின்றவர்.
ஐயா நாங்க தோணிப்பாறை ஆட்கள். இடம் பெயர்ந்து வந்த னான்கள். மகன் வாறனெண்டு விட்டுட்டுப் போனவர்.
ம்.ம். ஒ.வருவார். அ.? பெட்டியிலிருந்து குழறல்.
தனியாவா இருக்கிறீங்க? இல்ல. அவர் கோயில்ல. க். ம். அ.ரெண்.டுநா.ஆ.ளா அறிவில்ல கிழவி கண்ணிரைத் துடைக்கிறது.
பெத்த தாய் தகப் பனைச் ஷெல்லடிக்க விட்டுட்டு நல்ல பிள்ளைகள். இல்லை ஐயா. நான் தான் போகச் சொன்னனான்."
எத்தனை இருக்கிங்க?
ஊரை விட்டு வந்து பத்து நாள். இங்க ஆறு
சாப்பாடு.? "பிஸ் கட் இருந்திது. நேத்து முடிஞ்சிட்டுது
ச்.ச்.ச்.சரி. ராசன் வா.போய்த் தூக்குவம்
எங்க ஐயா? ஆஸ்பத்திரிக்கு மகன் விளாத்திக்குளத்தில அங்க இப்ப ஆட்கள் இல்லை. எல்லாம் வெளிக்கிட்டுதுகள். அம்மா இவர் எங்கட ஊர் விதானையார், ஐயா சொல்லுறதைச் செய்யுங்கோ
'டவுனுல ஆஸ்பத்திரியிலயும் ஷெல் விழுதாம்.
அம்மா. இப்ப ஆஸ்பத்திரியும் இடம் பெயர்ந்திட்டுது. முதல்ல இவரை
நாளா இங்க
ஆஸ்பத்திரியில சேர்ப்பம். பிறகு மகனைத் தேடலாம். இப்ப ஏறுங்கோ. ஷெல்லடிக்க நிக்கிறது ஆபத்து.
கிழவரும் . கிழவி மங்களமும் ட்ரக்டர்ரில் ஏற்றப்படுகிறார்கள்.
வயசு போனதுகள சனம் விட்டுட்டுப் போய்ட்டுது. அதுகள் பிள்ளைகள தேடி அலையுது. ரிப்போட் வந்திருக்கு. ஜி.எஸ். போய்ப் பாருங்கோ எண்டு எனக்குச் சொல்லேக்க. இவ்வளவு
(Buff இருப்பினம் என்டு நான் நினைக்ககேல்ல. ட்ரக்டரைக் கொண்டு வந்ததுநல்லதாப் போச்சு.
கிழவி திரும்பி முருகன் கோயிலைப் பார்க்கிறாள். தன்னை அறியாமல் தலைக்கு மேல் குவிகின்றன. எட்டுநாள் தனிய. வெய்யில், மழை. காற்று, பாம்பு, பட்டினி வருத்தம். கண்களில் கண்ணிர் வழிகிறது. பாவம். அவனுக்கும் என்ன பிரச்சனையோ. கஷ்டமோ,
அதுவரை சரிந்து படுத்திருந்த கிழவர் மெல்லத் தலையைத் திருப்புகிறார். எழுந்தால் இருமல் வரும். மங்களத்தைப் பார்க்கிறார்.
கொச்சை மக்களைப்
பெறுதலின் அக்குடி எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்றே.
சரியாச் சொன்னிங்க மாஸ்டர். என்ன பாவம் செய்தமோ?. உது வெற்றி
வேற்கை என்ன?
இல்லை. நான் தான் ஷெல்லடிக்க நிக்காமல் போகச் சொன்னனான்.
அ. அ. சரி. விடுங்கோ.
அம்மாக்குப் பிள்ளைய விட்டுக் குடுக்க
விருப்பமில்லை
பழையபடி மழை மேகங்கள்
வானை மூடத் தொடங்கின.000

17
ஜீவநதி
நான் மரம் மானிடா நீ? ഥaീയർ, Dag 8ഖീg వియెCT 61660 జీతి விர்ை நோக்கித் தவமிருக்கும் புதை குழி அமைக்கிறாய்.
|p্যাট চাৰোঁ - 6াeবতাকেঁতে உரமூட்ட வேண்gய நீ ଗଉଁ ଔiji ଓ[Dêö உனக்கு சிமீமாசனம் அமைக்கிறாய்.
虚 üpíuණ්ෂ dpරග් (iOffiජා! [ශ්‍රී ලීමාIDffඝ (jගනීt|හී කllශ්‍රීය්ග්(8pග්,
ଓଁ5ରାଫୀର୍ଘ ପିତ୍ର6filଠି cea)LLITGT5 6656OTID65 ඌlගඛතීග්{D බl6ffill|5
రాగ్రి DataDhat Ciga860 அடைகின்ற நீருமீ ஆதாரமீ எனக்கு நானே என்றுமீ ஜீவாதாரமீ உனக்கு,
உற்பத்தியாக்கியாய் நீ எங்கேனும் இருந்ததுண்டா திண்ண மட்டும் தெரிந்த நுகரியே நீ.
என் தயவில் தான் உநீதன் வாழ்வே நகர்கிறது எண் மூச்சுக் கழிவு தான் உனக்குப் பிரான வாயு,
[]6IIIIGöffiගීගෆ්ග්] []gජ්ජා) ගබණ්ණි) பித்தலாடும் உநீதனுக்கு உளச் சிக்கல் வியாதி மலச்சிக்கலீ - மாதீதிரை நான் பேதி tDNIbáō)ඛණීජිංග් ජී.ජී மூலிகையின் ஐாதி.
முளைக்கின்ற பருப்பு முதல் dpස්කිග්‍රීය්ග්{D ආගfi ඛlගIIII]oධී எதீதனையாய் அனிை செய்தேன்.
பாலை வனத்தையும் பனிக்கட்gப் பாறையையும் பார்க்க மறந்து நீ மரீைனில் முளைவிடும் ළpoffiගඝí uගIIIඛෂ්ණ්
இயற்கையாய் இமீமனினரில் வேதfைறித் தழைத்த வேம்பு எவனெவனோ உரிமை கோரி இனைக்கின்றான் தோமீபு.
uගoláගද්‍ය ක්‍රිකාංගlණීයා) ගඛයීගඌද් ඛආ0ණීෆර්
கோடரிக் காமீபு நீயா..? நானா..?
ஆதவனின் கொடும் சீற்றம் அணுகாது தடுத் திடவே ஆரண்யம் அமைத்து வைத்தேன். கொப்புக்கள் வெgக்கு தென்று தப்புக் கணக்குப் போட்டு வெட்டிச் சரிக்கின்ற வேதனைகள் நடக்குதிங்கே
வெட்ட வெட்டத் தழைப்பேன் (8ඛ(8]ff(8 t|(G|සීOl5 බරැතII (BullUrlgä ୪t3ରାର୍ଯ୍ୟ,
உன் போலீ அகதியாய் ஒடவும் அg பணிந்து வாழவும் தனி மானமிழந்தவன் நானில்லை.
ஒழஒg எங்கும் எண் குலத்தை விதைப்பேன் ஒரு நாளும் இருளில் நான் ගg(8||1) ලීමා(Ibසීශිඝණ් எண் காலgயில் இனியேனும் புகலிடத்தைத் தேடு ஒளிமயமாய் எதிர்காலம் ஒழ வரும் தேe
്യഖIIൺ ട്രgb[8ഖ് இலையானாலி நிழலாவேன் காயானாலீ உனவாவேன் கணியானால் சுவையாவேன்
வேரானாலி கிழங்காவேன் ଅFଏtabited୩6ର୍ତ। ୭ JIDIt3ରାର୍ଥୀ மரமானாலி விறகாவேன் மானிடா நீ என்னவானாய்.
இணுைவையூர்-இலட்சுமி புத்திரன்

Page 11
ஜீவநதி 18
நாட்டுப்புற மருத்துவத்தில்
மந்திர சமய மருத்துவம்
அறிவியல் அடிப்படைகள் எதுவுமின்றி சில குறிப்பிட்ட
சமூகப் பிரிவினராலோ, மரபுவழி மருத்துவராலோ,
பூசாரிகளாலோ, பொதுமக்களாலோ பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும் மருத்துவத்தைப் பொதுவாக நாட்டுப்புற மருத்துவம் (FolkMedicine) என்பர்.ஒவ்வொரு மனிதச் சமூகமும் தத் தமக்கென தனித்துவமான ஒரு மருத்துவ முறையினை உருவாக்கிக்கொள்ளும், உலக நாடுகள் பலவற்றிலும் இப்பாரம்பரியமான மருத்துவ நடவடிக்கைகள் இன்றும் பயில்நிலையில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கதாகும். ሳ. நாட்டுப்புற மருத்துவத்தினை இயற்கை மருத்துவம் (Natural Folk Medicine). LDibéré LDuLD(biabi6)ò (Magico | Religious Folk Medicine) 616 ti Gштајбита, SФ 6.606штањti பிரித்துப் பார்ப்பது மரபாக உள்ளது. விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துவிட்ட இன்றைய நவீன உலகில் இவ்வகை மருத்துவப் பிரிவுகள் இன்றுவரை உயிர்த்துடிப்புடன் இருந்து வருவது
அவதானிப்புக்குரியதாகும்.
நோய்க்கான மருத்துவச் சிகிச்சையினை மதத்திலும், மந்திரத்திலும் நாடி நிற்பதனை மந்திரச் சமய மருத்துவம் எனலாம். இயற்கையின் இயற்கை விதிகளைப்புரிந்துகொள்ளாத மனிதன் இயற்கையைக் கட்டுப்படுத்தவும் அதனிடம் இருந்து சில நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் உருவாக்கிய ஒன்றே மந்திரமாகும். பழைய சமூகங்களில் மந்திரம் என்பது பிரிக்கமுடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
தெய்வத்தின் சிற்றத்தால் துன்பங்கள் நேரிடும் என்ற நம்பிக்கை உலகளாவிய வியாபகம் பெற்றுக் காணப்படுகின்றது. செய்யக்கூடாதவற்றைச் செய்தலோ, தெய்வங்களுக்கு நிந்தனை செய்தாலோ துன்பம் வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அம்மைநோய், இருமல், வயிற்றம்மை, உடலுறுப்பு நோய்கள். நச்சுக் கடி முதலானவை தெய்வத்தின் சீற்றத்தால் ஏற்படும் என்றும் அவற்றின் நின்றும் விடுதலை கிடைத்தபோது சீற்றம் தணிந்துவிட்டது என்றும் கிராமப்புற மக்கள் இன்றும் நம்புகின்றனர். அம்மை நோயும் அதற்கான கட்டுப்பாடான மருத்துவ முறை ஒழுங்குகளும் இங்கு கருதத்தக்கனவாகும். தெய்வங்களின் சிற்றங்களைத் தணிப்பதற்கு பல்வேறு நேர்த்திகளை நிறைவேற்றுவதும் மரபாகத் தொடர்கின்றீது
 

ஜீவநதி 19
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தெய்வக் குற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றியும் வெறியாடல் முதலான சடங்குகள் பற்றியும் பரவலாகச் செய்திகள் கிடைக்கின்றன. தெய்வம் மனித நிலைக்குக் கீழே இறங்கி வந்து நோய்கள், துன்பங்கள் ஆகியவற்றுக்கான காரணங்களையும் பரிகாரங்களையும் பூசாரிமூலமோ அல்லது வழிபடுநர் மூலமோ தெரியப்படுத்தும் என்ற நம்பிக்கை தொன்றுதொட்டே இருந்து வருகின்றது. தாயத்துக் கட்டுதல், நூல் கட்டுதல், மந்திரித்த பனையோலை கட்டுதல் முதலானவற்றின் மூலம் நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம் என நம்பப்படுகின்றது.
பருக்கள், பால் உண்ணிகள், நச்சுக்கடி (விச கடி) முதலான நோய்களுக்கு ஆங்கில மருத்துவமுறைகளை நாடாது மந்திர அடிப்படையிலேயே தீர்வு காணுகின்ற பெருவிருப்பு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவிற்கு அவதானிக்கத்தக்கதாக உள்ளது. விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இற்றைக்காலத்தில் கூட நச்சுக்கடிகளுக்கு விச கடி மாந்திரிகர்களைக் கொண்டு பார்வை பார்ப்பித்து நஞ்சை இறக்கும் நிலைமை தொடர்கிறது. தண்ணீரில் மந்திரித்தல் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. தமது உடல் உறுப்புக்கள் நோய் வாய்ப்பட நேர்ந்தால் அவ்வுடல் உறுப்புக்களை உலோகங்களாலும், மண்ணாலும், பிறவற்றாலும் செய்வித்துக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதனைக் கிராமத்து மக்களில் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை ஒரு வகையான பாவனைச் சடங்காகக் கருதிக்கொள்ள முடிகின்றது.
இருள் அல்லது பேய் அடித்தவர்களுக்கு மந்திரித்துத் தாயத்துக் கட்டும் வழக்கம் மிகப் பழைய காலம் தொட்டு இருந்து வருகின்றது. அமாவாசை, பெளர்ணமி இரவுகளில் திய ஆவிகளின் நடமாட்டம் உள்ளமை பற்றிய அச்சம் இன்றும் காணப்படுகின்றது. பேய்களை ஒட்டுவதற்குச் சாம, பேத, தான, தண்டம் என்ற ஒழுங்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகள், பெண்கள் முதலானோரிடத்தில் இத்திய சக்திகளின் தாக்கம் அதிகமாக உணரப்படுகின்றது. மந்திரவாதிகள் தாம் செய்யும் மந்திரச் சடங்குகள் மூலம் ஒருவரைத் துன்பத்தில் ஆழ்த்தலாம் என்ற நம்பிக்கை வலுவான ஒன்றாக உள்ளது. பில்லி, சூனியம், வசியம், செய்வினை முதலான பெயர்களிலே இச்சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசம் இவ்வகையான சடங்குகளுக்கு பெயர்போன ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. தலைமுடி, நகம், இளவயதினரின் எலும்பு எச்சங்கள், எலுமிச்சம்பழம், செப்புத்தகடுகள் முதலானவை மந்திரித்துத் தீமை செய்வதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. செய்வினை மூலம் பாதிப்பு அடைந்தவர்கள் பிற மந்திரவாதிகளைக் கொண்டு காவல் செய்தல், தடை வெட்டுதல் முதலான சடங்குகளைச் செய்விப்பர். குடியிருப்பை அண்டி பல்வேறு திக்குகளிலும் மந்திரித்த சங்குகளைப் புதைத்தல், மந்திரித்த நீற்றுப் பூசணிக்காய், எலுமிச்சம்பழம் முதலியவற்றை வெட்டுதல், சேவல், கடா, எருமை மாடு முதலான பறவைகள் மற்றும் விலங்குகளைப் பலியிடல் போன்றன இவ்வகைச் செயற்பாடுகளுக்குள் அடங்கும்.
கண்ணேற்றின் மூலம் (கண்ணுறு) உண்டாகும் பாதிப்புக்களை பார்வை பார்த்தல், சுற்றிப் போடுதல் முதலான சமயச் சடங்குகள் மூலம் போக்கும் நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. சூடம், உப்பு, வற்றல் மிளகாய், வேப்பிலை, திருநீறு, மஞ்சள்.

Page 12
ஜீவநதி 20 குங்குமம், சங்கு தெரு மண் முதலானவற்றைக்கொண்டு கண்ணேற்றைப் போக்கும் (கண்ணுாறு) நடவடிக்கை தொடர்கின்றது. ஆராத்தி சுற்றி எடுத்தல், சாம்பிராணிப் புகை இடுதல். கறுப்புப் பொட்டு இடுதல், நெட்டி முறித்தல் (சொடக்கு), நகை அணிவித்தல், சூடம் சுற்றிப் போடுதல், மஞ்சள் தண்ணீர் காட்டிக் கழித்தல், எச்சிலை உமிழ்தல் முதலான செயற்பாடுகள் இவற்றுள் சிலவாகும். கழிப்புச் செய்வதன் மூலம் கழிப்புப் பொருட்களான தெரு மண், மிளகாய் வற்றல், உப்பு முதலானவற்றின் மீது கண்ணுாறு தொற்றிக் கொள்கின்றது. பின்னர், அவற்றைத் தியிலிட்டோ, நீரிலிட்டோ அழிப்பதன் மூலம் அந்நோயும் அழிந்துபோகும் என்பதே இச்சிகிச்சை முறையின் அடிப்படையாகும். இதனைத் தொத்துமந்திரம் என்பதனுக்குள் அடக்கிப்பார்க்கலாம்.
மேலே குறிப்பிட்டவை போன்ற மருத்துவ நடைமுறைகள் பலவும் இன்றுவரை செல்வாக்குடன் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அறிவியல் அடிப்படையிலான துணிவு மற்றும் விளக்கம் என்பன இருந்தும் இவ்வகையான விடயங்களைச் செய்யாதுவிட்டால் தமக்குத் துன்பம் நேர்ந்துவிடுமோ என்ற அச்சமும் மரபான சில விடயங்களைத் தொடரவேண்டும் என்ற பெருவிருப்பும் இவ்வகை மருத்துவ முறைமைகளின் நீடித்த ஆயுளுக்குக் காரணங்களாக விளங்குகின்றன. இம்மருத்துவ நடைமுறைகளின் பெரும்பாலானவ்ற்றை 'LDJuan 5 diffujLDITs (Traditional Counselling) LITE disagpigáisi D3).
நேற்று இன்று நாளை.
ppഇഖങ്ങ] நண்பனே! அப்போதும் கூட "அவளே உன் உலகம்" என்றிருந்தாய்! அவளுக்காகநீஅழுவாய் அவளதுவார்த்தைகளே மழை விட்டும் போகாத வேதம்’ என்றாய், தூவாணமாய் உன்மனம் மெளனங்களை மொழிபெயர்த்தாய், வருணப்பாகுபாடற்று கடைக்கண்பார்வைக்காக நெடுஞ்சேரலாதன் நச்செள்ளையாய் கடும்தவங்கள் புரிந்தாய்! வஞ்சகவண்டுகள் இரைச்சலிட கூந்தல்க்காட்டில் ஐயுறறு ஐராவதம தொலைந்து போனாய்! காதலமாலையை
காலால் உழக்கியபோது இன்று இடறுப்பட்டது உன்உயிர்; 26 உலகம் உடைந்து போனது சபிக்கப்பட்டது உன் வாழ்வு 26T60). Duriu GurTeoTITL Lill சிறுபட்டியே ஊசியென வந்தவார்த்தைகள் மனம் எனும் காளையை காறறடைதத பையான உன இதயத்தை மடக்கிப்பிடிக்க முயன்று துளைத்தது! மல்லாக்க வீழ்ந்தாய்! "காதல்’ எனும் 'கானல் உன் அன்புக்கான ஏக்கத்தினை ஒ. பீஷ்மனே! தணிக்காது. உன் பிரம்மச்சரிய விரதமும் நாளை கழிந்தது இங்குதான்-நீ w வரம்பறிபோனது என்று கங்கையின் மைநதனஎனபதைவஞ்சியவள் புலம்புவாள் கண்கள காட்டித்தருவது?
- க.சுதர்சன் (தும்பளை)

நேர்காணல்
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் சந்திப்பு - க.பரணிதரன்
மணிவிழாக்கண்ட ஈழத்துப் பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1966களில் அறிமுகமாகி இண்நுவரை எழுதி வருபவர் இவருடைய சிறுகதைத்தொகுதிகளாக “உணர்வின் நிழல்கள்”, “ஈன்ற பொழுதில்", “கணநேர நினைவலைகள்”, “மனம்Mந்தையானதுதான்” ஆகியன வெளிவந்துள்ளன. சிரித்திரன் சுந்தர் விருது உட்பட பல்வேறு பரிசில்களையும் பெற்றவர். இவர் கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றையும் எழுதியுள்ளt.
1) உங்கள் பள்ளிப்படிப்பு, பல்கலைக்கழக படிப்பு, அதையொட்டி உங்களுடைய வாசிப்பு அனுபவம், இளமைப்பருவத்தில் உங்களுக்கு உந்துதல் கொடுத்த எழுத்துக்கள், புத்தக ஆர்வம் இவற்றைப் பற்றி சுறுங்கள்?
நான் பிறந்தது மலேயா நாட்டிலே, அப்போது அது மலேசியா ஆகவில்லை. ஆரம்பக்கல்வியை அங்கு கற்றேன், ஐந்தாம் வகுப்பிலிருந்து க.பொ.த(உ.த) வரை பண்டத்தரிப்பு மகளிர் உயர்நிலைக் கல்லூரியில் கற்றேன். நான் பேராதனைப் பல்கலைக்கழக சிறப்புக் கலைமாணி பட்டதாரி, எனது மூன்று வயது முதல் ஐந்து வயது வரை எனது பேரனாருடன் (தாயாரின் தந்தை) சேர்ந்திருக்க வாய்ப்புக் கிடைத்தது. மகாபாரதம், இராமாயணம், வேறு சிறுவருக்கான கதைகளை எனக்குக் கூறுவார். இவர் தான் எனக்குக் கதைகளில் ஆர்வமேற்படக் காரணகர்த்தா, எனது தாயாரும் மகாபாரதவசனம், விநோரசகமஞ்சரி, போன்ற நூல்களையும் கல்கி, ஆனந்தவிகடன் போன்ற சஞ்கிகைகளையும் வாங்கி வாசிப்பார். மலேயாவில் வெளிவந்த தமிழ்நேசன், தமிழ்முரசு ஆகிய பத்திரிகைகளையும் மாணவர் பூங்காபோன்ற சஞ்சிகைகளையும் வாங்குவார். அவற்றை நானும் வாகிக்கத் தொடங்கினேன். ராஜாஜி, கல்கி, சாண்டில்யன் முதலியோரின் கதைகள்தான் நான் ஆரம்பத்தில் வாசித்தவை.
2) ஈழத்து இலக்கிய பெணிபடைப்பாளிகளில் முக்கியமானவராக நீங்கள் திகழ்கின்றீர்கள். தாங்கள் எழுத்துலகை நாடக் காரணம் யாது? எழுதுவதில் ஆர்வம் பிறந்தது எப்படி? வாழ்க்கையில் எப்போது முழுமையாக எழுத்து മങ്ങpuിങ് உங்களை ஈடுபடுத்த தொடநர்கினர்கள்?
வாசிப்பு என்னை எழுத்துலகிற்கு அழைத்துச் சென்றதென்றே நினைக்கிறேன். எனது பதினொன்று அல்லது பன்னிரண்டாவது வயதிலென்று நினைக்கிறேன் ஆனந்தவிகடன் நடத்திய நாடகப்போட்டிக்கென ஒரு நாடகத்தை எழுதி, அதன் தரம் போதாதென நானே தீர்மானித்து அனுப்பாது விட்டுவிட்டேன். என் நினைவிற்கு எட்டியவரை அதுதான் எனது முதல் முயற்சி. ஏன் அப்படி எழுத எண்ணினேன் என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை. பின்னர் பத்திரிகை, வானொலி ஆகியவை நடத்திய மாணவர் பகுதிகளில் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக சுதந்திரன் பத்திரிகையின் வளர்மதி பகுதியும் வானொலியின் இளைஞர்

Page 13
ஜீவநதி 22 மன்றம் பகுதியும் எனது எழுத்துத்துறை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. இளைஞர் மன்றத்தைத் தயாரித்து நடத்திய திரு.வ.இராசையா எனது எழுத்து முயற்சியை மிகவும் ஊக்குவித்தார். எச்சந்தர்ப்பத்திலும் எழுத்துத்துறையில் முழுமையாக ஈடுபட்டதாக நான் கருதவில்லை. அவ்வப்போது எழுதுகிறேன். அவ்வளவே.
3) பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பெண்படைப்பாளி மூலம் தான் சிறப்பாக சொல்ல முடியும் எனப்படுகின்றது. இது பற்றி தங்கள் கருத்து யாது?
அது சரியான கூற்று என்றே நான் சொல்வேன். ஒருவர் தான் எதிர்கொண்டவற்றையும் அனுபவித்தவற்றையும் எழுதும் போதுதான் யதார்த்தமானதாகவும். உணர்வு பூர்வமானதாகவும். வீச்சானதாகவும் அமையும் உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்திலிருக்கும் நாம் போரின் உக்கிரத்தை அனுபவித்தவர்கள் தான். அதை வைத்துக்கொண்டு இன்று வன்னியில் நடப்பவை பற்றிக் கேள்விப்பட்டவற்றையும் சேர்த்து நாம் எழுதினாலும் அங்கே இன்றிருக்கும் ஒருவர் எழுதுவது போலிநக்காது. நாமெழுதுவதில் உண்மைநிலை காட்டப்படவில்லையென்றுதான் அங்கிருப்போருக்குத் தோன்றும். அது போன்றது தான் இதுவும்.
4) தங்களுடைய எழுத்தரின் ஊடாக எதைச் சொல்ல முனைகின்றிர்கள்?
எனது மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் பலரைச் சிந்திக்கவைக்க வேண்டிய ஒன்று என்றோ அல்லது அது பதியப்பட்டு வருங்காலத்துக்கு அறிவிக்கப்படவேண்டிய ஒன்று என்றோ நான் கருதும் போது அதை எழுதுகிறேன்.
う உங்கள் கதைகளுக்கு, கட்டுரைகளிர்கு கிடைக்கும் எதிர்வினைகள் பற்றி சுறுங்கள்?
நான் எழுதியது அதை வாசிப்பவரின் சிந்தனையைத் தூண்டவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் எனது அரைநிமிடநேரம் என்னும் நூலைவாங்குமாறு ஒருவரிடம் கேட்ட போது நீங்கள் எழுதியும் இந்த் உலகம் கெட்டுக்கொண்டுதானே போகிறது. எழுதி என்ன பயன்? என்று கேட்டார். இதே போன்று எதிர்க்கருத்துடை யோரும் அது பற்றிக் கூறுவார்கள். ஆனால் நான் இப்படித்தான் சிந்திக்கின்றேன். வாசகர்கள் எல்லோரும் ஒரே மனநிலையுடையவர்களல்ல. வாசிக்கும் நூறுபேரில் ஒருவராவது அதுபற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால் அது வேறு சிலரிடையே பரவும் அப்படி அது தொடரும்.
6) ஞானச்சுடரில்" நீண்டகாலமாக ஆன்மரீகக் கட்டுரைகளை எழுதிவருகின்றீர்கள். அத்துடன் "அரை நிமிட நேரம்” என்ற ஆன்மீகக் கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டு உள்ளிர்கள். தங்கள் ஆன்மிக ஈடுபாட்டைப்பற்றி குறிப்பிட முடியுமா?
நான் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவள். எனது குரு பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள் அவரிடம் கற்கும்போது

ஜீவநதி 28 எனக்குள்ளிருந்த சமய நாட்டம் மேலும் வளர்க்கப்பட்டது. அந்தத்துறையை மேலும் அறிவதற்கான தேடலே கட்டுரைகளை எழுதவைக்கிறது.
7) யாழில் பெண்படைப்பாளிகள் அருகி வருகின்றார்கள் இதற்கு காரணம் எனர்ன?
இங்கு தலைமைத்துவப் பண்பும் திறமையும் மிகுந்த எவர் உருவானாலும் அவரை ஒன்றில் மேல்நாட்டிற்குப் போகவைத்துவிடுவோம். போகாமலிருந்தால் மேலே அனுப்பிவிடுவோம். அதிலும் பெண்களைப் பொறுத்தவரை மணமகனைத் தேடி அலையும் பெற்றோர் அவளை எப்படியோ வெளிநாட்டிற்கு ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள். ஒரு துறைசார்ந்த தொழிற்பயிற்சி பெற்று சிறப்பாக முன்னேறிவரும் பெண்ணைக் கூட திருமணம், இடைநடுவில் நிறுத்தி வெளிநாட்டிற்கு அனுப்பி, அங்கு அவளது படிப்பறிவிற்கும் பட்டறிவிற்கும் சிறிதும் தொடர்பற்ற தொழிலைச் செய்ய வைத்துவிடுகிறது.
இவைதான் இதற்கும் காரணமென நினைக்கிறேன். அத்துடன் புதியவர்கள் எழுதப் போதிய களமுமில்லை. குடாநாட்டிற்கு வெளியிலிருந்து பத்திரிகைகள் கூட வராத பிரதேசத்தில் எதில் எழுதுவது?
8) மாலதிமைத்திரி அம்பை, சகிர்தராணி குட்டிரேவதி போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண்கள் பாலியல் சார்ந்துள்ள விடயங்களை எழுதுவது குறித்து புகார்கள் மீண்டும், மீண்டும் முன்வைக்கப்படுவது பர்ரி.?
சமுதாயத்தைக் கெடுக்காத எதையும் எவரும் எழுதலாம். எழுதுபவர்கள் எழுத்தாளர்கள், ஆண் எழுதலாமென்றால் பெண்ணும் எழுதலாம். பெண் இவ்வாறு எழுதக்கூடாது, பேசக்கூடாது சிரிக்கக்கூடாது என்றெல்லாம் கூறுவதற்குக் காரணம் எமது மனங்களுள் பதிந்து வைத்திருக்கும் சில மனப்பதிவுகளே. உதாரணமாக வீதியில் நடக்கும் போது அணிந்த பாதணிகளுடன் வீட்டினுள் உலவக்கூடாதென்பது சுகாதாரத்தின் பொருட்டே அப்படிப் பழகிய எமக்கு வீட்டிற்குள் அதற்கென தனியான காலனிகளை அணிந்து நடந்தாலும் தவறென்று தோன்றுகிறது. காலணிகளுடன் வீட்டினுள் உலவ கால் கூசுகிறது. ஆனால் அப்படி உலவலாம். அதில் எந்தத் தவறுமேயில்லை. பெண்ணுக்குரிய இலக்கணங்களாகச் சிலவற்றைக் கூறிக்கூறியே அதனை மனதில் பதித்துவைத்திருப்பதை இல்லாதொழித்தால் பெண்கள் பற்றிய பல புகார்கள் எழாதுபோகும்.
9) தாங்கள் சிறுகதை கட்டுரை நாடகம், கவிதை என்பவற்றை எழுதிவருகின்றீர்கள். இதில் உங்களுக்கு மனத்திருப்தியை மிகவும் தருவது எது? இவற்றில் எதன் ஊடாக சமுகத்திற்கு கருத்தை இலகுவில் சென்றடையச் செய்யலாம்?
எதை எழுதினாலும் நான் கூறநினைத்தது சரியாக வெளிப்பட்டால் அது எனக்குத் திருப்தியைத் தருகிறது. கட்டுரையாகக் கூறுவதை விட கதைமூலம் கூறும்போதுமனங்களைத் தொடும்.அதிலும் நாடக உருவில் அது அரங்கேறும்போது இலகுவில் அக்கருத்து சமூகத்தைச் சென்றடைகிறது. நாவல், சிறுகதை என்பன அதற்கு அடுத்தபடியே ஆனால் இன்று வாசிக்கும் பழக்கம் அருகிவருகிறது.

Page 14
ஜீவநதி 24
தொலைக்காட்சியும். இணையமும் மிகப்பெரும் பானோரை ஈர்க்கின்றன. தயாரித்த உணவு, தைத்த உடை என வாங்கிப்பழகிய நாம் தயாரித்த தொலைக்காட்சித் தொடர்களையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிங்கள மொழியில் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள். நமது சமுதாயத்திற்குக் கூறவேண்டிய கருத்தைக் கூறநாமே தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்க வேண்டும்.நம்மிடம் திறமை இருக்கிற ஊக்குவிப்பு தேவை.
10) இன்றைய இளம் எழுத்தாளர்களிர்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
நிறைய வாசியுங்கள். மற்றவர்களின் கருத்துகளைப் பொறுமையுடன் கேளுங்கள். எதற்கும் சோர்ந்துவிடாதீர்கள். நன்மை தருவனவற்றையும் தரமானவற்றையும் எழுதுங்கள்.
மனம் மாறும் மானுடங்கள்
அரிது அரிதுமானுடராய் மனிதள். பிறத்தல் அரிது என்றுரைத்தாள் அதிகாலை துயிலெழங்பும் தமிழ் மூதாட்டி அன்று! சேவல்கள் இன்று வசந்தங்கள் எல்லாம் எல்லைகள் தாண்டிமேய வரும் கருகியநினைவுகளuயின கால்நடைகள் ஆசைக்கனவுகள் கட்டுப்பாடின்றிக்கடலில் மீனுண்ணும் வர்ணங்கள் இழந்து வடிவமிழந்து கொக்கிளங்கள் வரைகோடுகளப்மட்டுமே இரவு ೫ಖೆ நன்றியுடன் எஞ்சிநிற்கும் குரைத்துக் காக்கும் ஆதிக்கபூர்வமான கட்டுப்பாடுகளும் நாயினங்கள் அந்நியோன்னியமற்ற இவற்றின் அன்றாட அரவணைப்புக்களுமே செயற்பாடுகளப் நிறைந்துநின்றனவாழ்வில். ஏக்கங்கள் எதுவுமின்றி அதீத அச்சமொன்று தடைகள் எதிலுமின்றி உருப்பெறத் தொடங்குகிறது தத்தம் கடமைகளை மானுடத்திள் ஆசைகளும் தவறாது செய்யும்போது மாறியதயமாகின்றது பொழுதுகள் கருங்கி மறுபிறவிஒன்றிருந்தால் ಆಖಖ್ರಅಹಿ,ಜ್ವ! மனிதப்பிறவியை வெறுக்கின்றான் உளக்கண்ணாடியில் மானுடன் விம்பங்களக தோன்றும். சுயாதீனமாக வாழ்கின்ற வேண்டாம். வேண்டாம் பட்சிகளப், மிருகங்களப் மறுபிறவி இப்பூவுலகில் இன்னும் ஆறறிவற்ற அதுவும் ஜீவராசிகளப் மானிபுராய்
பிறக்கத்துடிக்கின்றாள் - வெ. துஷ்யந்தன்

ஜீவநதி
அவளாய் இருந்தால்..!
மெளனம் ஒன்றே அவளின் கரம் கோர்க்கும் சிநேகிதியானது. அவளுக்குப் பிடிக்காத இந்த உலகு வெறுமையாகிக் கொண்டு வருவதாய்த் தோன்றிற்று. எவரெவரை உண்மையென எண்ணினாளோ எல்லாமே அவரவரது செயல்களால் ஒரு நொடியில் சிதைந்து போயிற்று. உண்மைக்கும் பொய் மைக்கும் இடையிலான போராட்டத்தில் பொய்மை தலைவிரித்துத் தாண்டவ மாடுவது போல் தெரிந்தது. அவளது விழிகள் ஈரமாகி எப்போதும் கலங்கிக் கொண்டுதாணிருக்கின்றன. ஆனால் தீர்வுகள் மட்டும் கிடைத்தபாடில்லை. பிறந்ததுமுதற்கொண்டே இறந்துபோன தந்தையினது புகைப்படத்தை மட்டுமே அறிந்து பழக்கப்பட்ட அவளுக்கு, வாழ்க்கை தொடர்பான அஸ்தி வாரத்தை சுமக்க வைக்க முயன்ற தாயைக் குறைகூறுவதா? அல்லது அதனாலான தன் சோகத்தை எண்ணிக் கலங்குவதா என்று புரியவில்லை. அலுவலகம் செல்வதிலும், நோயாளி ஆன தாய்க்குப் பணிவிடை செய்வ திலும், குழந்தையைப் பராமரிப்பதிலும் அவளது பொழுதுகள் கரைந்துருகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் சிந்திப் பதற்குக் கிடைக்கும் ஒரு சில நிமிடங்களை விட எல்லா நிமிடங் களிலும் நினைவுகள் பாரமாகிக் கனக்கின்றன. சில பொழுதுகளில் அழுகையை அடக்கி வெறுமையா யிருப்பினும் கூட தவிர்க்க இயலாத கணங்களில் தலையணையில் வடிந் துருகும் அவளின் விழிநீரை அவளால் தடுக்க இயலாதிருப்பதுடன் சோக ിഞ്ഞുങ്ങഖങ്ങേ ട്രഖഖണഖ ഉണ്ഡരൂഖru
-ச.நிரஞ்சனி
தாக்கி எறியவும் முடிவதில்லை.
முன்பெல்லாம் அவள் படித்துக் கொண்டிருந்த பொழுதுகளில் தாயிடம் வந்து அவளை ஒரு சுமை போலச் சொல்லிச் செல்லும் சொந்தங்களையும் "எப்படிக் கரையேத்தப் போறியள்? என அங்கலாய்க்கும் புறோக்கர்களையும் அவள் அப்போதே துணிகரமாய் விரட்டியிருந்தால் இன்று ஏதாவது ஒரு துறையில் முன்னேறியிருக்கலாம். மெளனமாய். எல்லாமே பெரியவர் களுக்குத் தெரியும் என விட்டேற்றியாய் எல்லோரையும் நம்பியதன் பலனைத் தான் இன்று அனுபவித்துக் கொண்டிருக் கிறாள். திடீர்ப்பொழுது ஒன்றில் தாயினது கிட்டத்துச் சொந்தமென எவரெவரோ வந்து இவளைப்பிடித்ததாச் சொல்ல. அப்போதெல்லாம் இவள் தடுமாறித்தான் போனாள்.
"உன்ரை வயசிலை ஊரிலை பார் பிள்ளை. இப்பிடியே இருந்தா காலம் போறபோக்குக்கு நல்லவங்களைப் பிறகு எங்கை தேடுறது? ஊநலகம் போற போக்குக்கு நிதான் படிப்பு படிப்பென்று." உறவுகளின் வார்த்தைகள் அவளை சிந்திக்க விடாமற் செயற்பட்டத் dist60 (960T. Eitutifs, 6cbit 2 LL எல்லோரது துண்டுதலும் ஒரு சேர நச்சரித்த வேளையில் தலையை அசைப்பதைத் தவிர வேறு வழி அவளுக்குத் தெரியவில்லை. சொந் தங்கள் அவளுக்கு கணவனாய் வர இருக்கும் புதியவனைப் பற்றியதான விபரங்களை கோர்வையாய் இயம்பின. எல்லாமே தன்னை விட்டுப் போகப் போவது தெரியாமல் அந்த வெளிநாட்டு மணாளனைக் கரம்பிடித்தாள் அவள்,

Page 15
ஜீவநதி
அப்போதே தன் எல்லாக் கனவுகளும் தூர விசிறி எறியப்பட்டு சிதறடிக்கப் படுவதை அவள் உணரவில்லை.
எல்லாமே மின்னல் வேகத்தில் நிகழ்ந்தேறின. அவனும் அவளை ஒத்த விருப்புகளுடனே நடந்து கொண்ட முறையில் மிகவும் பூரிப்புற்றாள். தனக்கு அதிவர்டம் வந்ததாய்க் கருதி களிப்புற்றாள். அவனும் அவளுக் கேற்றாற் போல் ஒவ்வொரு தருணங் களிலும் செயற்பட்டு, இங்கு இருக்கும் வரை எங்கெல்லாம் அவளைக் கூட்டிச் செல்ல இயலுமோ அங்கெல்லாம் பிடிவாதமாய்க் கூட்டிச் சென்றான்.
அவளுக்கு அவன் தான் உலகம் என்றாகிப் போயிற்று. மூன்று மாதம் வரையில் இங்கேயே அவர்களது வாழ்க்கை நீண்டுகொண்டிருந்தது. பின்பு அவனே தான் தனது நாட்டிற்குச் சென்று அவளுக்குத் தேவையான அலுவல் களைக் கவனித்து விட்டு வந்து அவளைக் கூட்டிச் செல்வதாகக் கூறிச் சென்றவன், நாட்கள் நகரவே அவளுடனான தொடர்பைக் குறைத்துக் கொண்டிருந்தான். திடீரென முற்றாகவே அவளுடனான தொடர்பை அவன் நிறுத்திய போது தடுமாறி நிலை பிறழ்ந்தாள். என்னவோ எனப்பதறி அந்தரித்தாள். அவளது கேள்விக் கெல்லாம் விடை விரைவாகவே
கிடைத்தது. ஏற்கனவே அவனுக்கு அங்கு மனைவி இருக்கிறாள் என அறிந்தபோது அவளுக்கு உலகமே தலைகீழாகச் சுற்றுவது போலிருந்தது. விதியின் பிடியிலிருந்து தப்பிக்க இயலாது திண்டாடினாள். அதை அறிந்த போது அவள் கரங்களிலும் புதுமகவு தவழ்ந்து கொண்டிருந்தது. இத்தகைய வேளையில் கண்ணிர் உகுப்பதைத்தவிர அவளால் வேறு எதையுமே செய்ய இயலவில்லை.
தனித்தே சமாளிக்க முடியாதவள் காலப்போக்கில் குழந்தையுடன் திண்டாடினாள். அலுவலகத்தில் சாதாரண பதவி வகிக்கும் அவளுக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு குடும்பத்தை இயக்குவது சிரம மாய்த்தான் இருந்தது. துணிவு பற்றியே அறியாதவள் துணிவை வலுக் கட்டாயமாய் வரவழைக்க வேண்டி இருந்தது. அவளின் நிலையறிந்தும் அவளை அலசும் கேவலங்கெட்ட பார்வைகளால் கூசிப் போனாள், நாட்கள் நகரவே அலுவலகத்திலும் இவளைப் பற்றியதான விசாரணைகள் தலை தாக்கின.
"உங்கட. ஹஸ்பன்ட் என்ன செய்யிறார்?
. எந்த நாடு.? சாதாரன விசாரிப்புக்களிலேயே கூனிக்குறுகிப் போனாள். பொறுத்து நடக்க முயன்றாலும் சனங்கள் அவளை விட்ட பாடில்லை.
தனக்கு மகளே இல்லாததால் துருவித்துருவி இவளைக் கேள்வி கேட்கும் வயதில் கூடிய அமலா,
தான் விரும்பியதால் கரம் பிடித்தவனுடன் வாழும் மாதுரியின் கேள்விகள்,
ஒரே பிள்ளை என்பதால் சீதனமும் டொனேஷனும் அள்ளிக்
 

27
ஜீவநதி
கொடுத்து கணவனை வாங்கிய வாசுகியின் பெருமித விசாரணைகள்,
இவைதவிர சாதாரண பெண்ணின் நலனில் கூட எள்ளளவும் அக்கறை காட்டாத அலுவலகப் பொறுப்பதிகாரி - இவர்கள் எல்லோரதும் புதுப்புது வினாக்களுக்கு விடை கூறும் நிலையில் அவள் இல்லை,
"உங்களுக்கென்னத்துக்கு உதெல்லாம். எனக் கத்த வேண்டும் போலிருக்கிறது. ஆனால் இயலாது ஏற்கனவே அவளைப்பற்றி கதைகட்டும் சனங்களின் மத்தியில் அவள் பொறுமையாய்த்தான் இருக்க வேண்டும். தூக்கி எறிந்து விடலாம் எல்லா வற்றையும் பிறகு. என்ன செய்வது? இனியும் காயங்களைத் தாங்க அவளால் இயலாது. அவளையே நம்பியுள்ள அந்தப் பிஞ்சுக் குழந்தை, தாய் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் அவள் இயங்கிக் கொண்டி ருக்கிறாள். ஆனால் 6{6}وقعIT 5ت மெளனத்தை தமது வெற்றியாக்கி
அவளைத் துரத்தும் சொற்கள் தொடர்ந்தும் அவளுக்குக் கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன.
இப்போதெல்லாம் மெளனம் மட்டும்தான் அவளை விலக மனமின்றி ஒன்றிக் கொண்டிருக்கிறது. அலுவலகம் முடிந்து களைத்து வீடு திரும்பும் தருணங்களில் குழந்தையின் மழலை மொழிஆறுதலைத் தந்து மகிழ்வித் தாலும் அது கூட சொற்ப வேளையே நீடிக்கிறது. குழந்தை கூட காலப் போக்கில் அவனின் தோற்றத்தை ஒத்திருந்து அவனை நினைவூட்டி அவளை மேலும் ரணப்படுத்துகிறது. தனது துன்பத்தைத் தூக்கி எறிய அவள்
மிகவும் பிரயத்தனப்பட வேண்டி யிருந்தது. அதற்காக குழந்தையை வெறுத்து ஒதுக்கவும் அவளால்
இயல்விப்தில்லை அவனுக்கு வேண்டு மானால் வெறுப்பது, தாக்கி எறிவது எல்லாமே சர்வசாதாரணமாயிருக்கலாம். ஆனால் அவளுக்கு இப்போது உயிராயிருப்பதே அந்தக் குழந்தை தான். அதை இனி அவள் எதற்காயும் எவர்க்காயும் விட்டுக் கொடுப்ப தாயில்லை. செயற்கையான களியாட்ட ங்களிலும் ஆடம்பரங்களிலும் மட்டும் திளைத்திருக்கும் அவனுக்கு அவளது வலிகள் புரியப் போவதில்லை, அது குழந்தையை பெற்றவளுக்குத் தான் தெரியும்.
அவள் பிடிவாதமாய் அவனைப் பற்றிய நினைவுகளை விலக்க முயன்றாலும் சில பொழுதுகளில் அதையும் மீறி அவனது வார்த்தைகள் அவனை மீண்டும் நினைவூட்டத் தவறுவதில்லை, மனைவி இருக்கவே இங்கு வந்து இப்படி நாடகம் போட்டவனை எண்ணி விம்மி அந்தரிப் பாள். அவன் மட்டும் நல்ல வனாய் இருந்தால். மானங்கெட்டு நப்பாசை கொள்ளும் மனசை வலுக்கட்டாயமாய் தானே பிடித்திழுப்பாள். அவளது நினைவுகள் அவளுடனேயே கரைந்து கொண்டிருக்கிறது.
சில வேளைகளில் மனம் அமைதியுறுவதற்காய் கோவிலுக்குச் சென்றால் அங்கும் அவளை எவரும் விட்டு வைப்பதாயில்லை.
"என்னவாம். பிள்ளை அவன் ஏதும் கதைக்கிறவனே?
அறிந்தும் நடிக்கும் உலகம்.
"உண்மையா அவனுக்கு அங்கை மனைவி இருக்கிறா என்று தெரியா தம்மா. தெரிஞ்சா நாங்கள் ஏன்."
என்று கூறும் திருமணத்தை நடத்தி வைக்க என்றே கொழும்பி லிருந்து வந்த அவனின் உறவுகள்.
அறியாததாய்

Page 16
ஜீவநதி
"நீயே ஒருக்கா கதைச்சுப் பாரன்"
என்று கூறும் இன்னொருத்தி இதையெல்லாம் விட இவளுடன் கதைத்து இவளின் வலியைக் கூட்டி தமக்குள் நகைக்கும் சில சொந்தங்கள். இவை எல்லாவற்றிலிருந்தும் அவள் எப்படி மீண்டெழுவது? பிரச்சனைகளை தொடக்கியவர்களுக்கே அதன் தார்ப் பரியத்தில் அக்கறை இல்லாத போது அவர்களுடன் விதண்டாவாதத்தில் ஈடுபடுமளவு சக்தி அவளுக்கில்லை.
"இவவின் ரை திமிருக்குத்தான் இப்படி.."
தலை மறைவில் கேட்கும் குரல்களுக்கு அவள் இனியும் அஞ்ச இயலாது. அவற்றுக்கான பதில்க்ளும் அவளுக்குத் தெரியாது. இப்படியெல்லாம் பேசும் உறவுகளுக்குப்பதிலடிகொடுக்க வேண்டும் போல் இருக்கும் கணங்களில் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வாள். இனி அவள் அவர்களைக் கருத்தில் கொள்ள முடியாது. வயசான தாயையோ வளராத குழந்தையையோ
தனக்காய் சிரமப்படுத்த இயலாது. விதியின் வழியில் புதுவசந்தம் வரும் வழி நோக்கிப் பயணிக்கும் அவளுடன் உண்மை மட்டும்தான் இப்போதெல்லாம் துணையாய்ப் பயணிக்கிறது.
இப்படித்தான் எதிர்பாராத பொழுதொன்றில் திருமண பந்தத்துள் தள்ளப்பட்டவள். தனி மரமாய் குடும்பத்தை இயக்குகிறாள். அவளை மணந்து மூன்று மாதத்தின் பின் வெளிநாடு சென்ற 966f கணவனுக்கோ, மகள் மாரற்ற அமலா விற்கோ. விரும்பி மணந்த மாதுரிக்கோ, பணத்தில் திளைக்கும் வாசுகிக்கோ அலுவலக பொறுப்பாளருக்கோ, சொந்த ங்களுக்கோ, கேவலமான பார்வை களுக்கோ, பொய்யான சிநேகிதங் களுக்கோ இவளது வலிகளும் வேதனைகளும் புரியப் போவதில்லை. அது வெல்லாம் அவர்கள் எப்போதாவது அவளாயிருந்தால் மட்டும் புரியும் இப்போது அவளுக்குப் புரிகிறது. எனெனில் அவள் அவளாயிருக்கிறாள்.
காகாடுகின் ങ്ങിത്തീ
அப்பாவி அவுஸ்திரேலியா யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதது. வந்தாரை வாழவைக்கும் வளம் மிக்க நாடு. எங்களுக்கு ஏன் இந்தச் சோதினை அக்கினிப்பகவானே! காட்டுத்தீயின் வடிவில் வந்து எங்கள் நாட்டைக் கபளிகரம் செய்கிறாயே நூற்றுக்கணக்கான மக்கள் பலி நூற்றுக்கணக்கான வீடுகள் நாசம் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் நாசம் கருகித்தீய்ந்த கண்மணிகள் காயப்பட்டகண்மணிகள்
காயம் ஆறினாலும் அவர்கள் எதிர்காலம்?
நடைப்பிணங்களாய் வாழ்வு உற்றார் உறவினர் சோகம் எத்தினை ஆண்டுகள் சென்றாலும் இவையாவுமே? சோகம்தீருமா? எங்கள் கண்ணிரால் இந்தக்காட்டுத்தீயை அணைக்கமுடியாதா? ஒருபாவமும் செய்யாத மக்களையே இறைவன் எப்போதும் சோதிப்பார் ஒருமுறையா இரண்டுமுறையா? அடிக்கடி வருகின்றதே இந்தச் சோகம் S6fGLDs (3660dfLTlib S&GSFITsib இந்த முறையோடு நிறுத்திக் கொள் அக்கினிபகவானே எந்த நாட்டிலும் உன் சோகத்தாண்டவம் வேண்டவே வேண்டாம்.
-அருள்மணி

29
ஈழத்தின் முக்கியபடைப்பாளிகளைப் பற்றிய தகவல்களை ஜீவநதியில் தரவுள்ளோம் அத்தவகையில் ஈழத்து நாடக வரலாற்றின் கூத்து மரபை தனது ஆளுமையால் புத்தாக்கம் செய்து அளித்துள்ள பேராசிரியர்சிமெளனகுரு அவர்கள்பற்றிய கட்டுரையை முதலில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
க.பரணிதரன்
நாடகத் தமிழறிஞர் பேராசிரியர் சி.மெளனகுரு
- முனைவர்.மு.இளங்கோவன் (இந்தியா)
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள். அவ்வாறு அழைத்து வரும் பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து "பேண்டு" இசைக்கருவிகள் முழங்குவது தான் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. பிற பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறு தான் நடக்கின்றன.
இலங்கையில் உள்ள மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அவ்வாறுதான் பட்டமளிப்பு விழாக்கள் நடந்தன. ஆனால் பல்கலைக்கழக ஆளவையின் இசைவுடன் தமிழர்களின் மரபுவழிப்பட்ட பெரும்பறை, சிறுபறை, தப்பட்டை, மேளம், உடுக்கு, மத்தளம், நாதசுரம், சொர்ணாளி, புல்லாங்குழல், சிறுதாளம், பெரும் தாளம், மிருதங்கம், சங்கு, எக்காளம், சிலம்பு, சேகண்டி, அம்மனைக்காய், சவணிக்கை, கூத்து, பரதம், கழிகப்பு உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்கவும் தமிழர்களின் மரபுவழி உடையுடன் இசைக் கலைஞர்கள் முன்னே வரப் பட்டமளிப்புவிழாவுக்கு வரும் விருந்தினர்களைப் பழங்கால அரசர்களைக் குடிமக்கள் ஆர்ப்பரித்துமகிழ்ச்சியுடன் அழைத்துவருவதுபோல் இன்றுநடப்பது தமிழர்களாகிய நமக்குத் தேன் பாய்ந்த செய்தியாகும்.
ஆங்கிலேய மரபிலிருந்து காலத்திற்கு ஏற்ப நம் மரபைப் புதுப்பித்துக் கொள்வது தவறாகாது என்ற சிந்தனையை விதைத்தவர் ஈழத்தில் நாடகம், கூத்துக்கலைகளில் வல்ல பேராசிரியர் சிமெளனகுரு அவர்கள் ஆவார். ஈழத்தில் தமிழர்களின் பண்பாட்டுக்கலைகள் இன்றும் சிற்றுார்ப்புறங்களில் கலப்பில்லாமல் வழங்கப்படுகின்றன. மண்ணின் மணம் மாறாமல் அக்கலைகளை உயிர்ப்பிக்கும் பணிகளில் தம்மை ஒப்படைத்துக் கொண்டு பணிபுரிபவர் சிமெளனகுரு.
இவர் ஆய்வாளராகவும். கூத்துக் கலைஞராகவும். பேராசிரியராகவும், கவிஞராகவும், ஆளுமைத்திறம் வாய்ந்த கல்வியியலாளராகவும் விளங்கி ஈழத்துக் கலைமரபுகளை மீட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவித்துத் தமிழர்களின் கலையுணர்வு அழியாமல் காத்த பெருமைக்கு உரியவர். கூத்துக்கள், நாடகங்கள். நாட்டுப்புற

Page 17
ஜீவநதி 30
இசைகள், இசைக்கருவிகள் யாவும் ஆவணப்படும் வகையில் பலநூறு குறுவட்டுக்களில் ஆவணப்படுத்தி வைத்துள்ள அறிஞர், ஆழிப்பேரலையில் தன் ஆய்வுச்செல்வங்களை இழந்த போதிலும் தப்பியவற்றைக் கொண்டு தமிழ்ப்பணியில் தொய்வின்றி இயங்குகின்றார். அவர் தம் வாழ்க்கையை எண்ணிப்பார்ப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிலாமுனை என்ற சிற்றுாரில் வாழ்ந்த சின்னையா - முத்தம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 1943.06.09 இல் பிறந்தார். அமிர்தகழி மெதடிஸ் மிஷன் பள்ளியில் 5ம் வகுப்புவரை பயின்றவர் (1948 - 1953) 5ம் வகுப்பில் புலமைப்பரிசில் பெற்று வந்தாறு மூலையில் உள்ள நடுவண் (மத்திய) கல்லூரியில் பயின்றவர். 6ம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்புவரை அங்கு பயின்றவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நாடகம் நடிப்பதில், பேச்சாற்றலில் வல்லவராக விளங்கினார். தலைமை தாங்கும் பண்பு கைவரப் பெற்று இருந்தார்.
தந்தையார் சிற்றுார்ப்புறக்கலைகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியதால், மெளனகுரு அவர்களுக்கும் இக்கலையில் ஈடுபாடு இயல்பாகவே இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (ஆனர்சு) (1961 - 1965), முதுகலை (1970 - 1973) பட்டம் பெற்றார். கொழும்பில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (1975-1976), யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் (p6oo6oT6Ji LuiLb (1980 - 1984) Guibm36our.
1966 - 1970 வரை ஆசிரியராக பணிபுரிந்த மெளனகுரு அவர்கள் 1971 - 1978 வரை கொழும்பில் பாடநூல் எழுதும் பொறுப்பில் இருந்தார். 1976-1981 வரை மீண்டும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். யாழ்ப்பாணப் பலாலியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த (1982 - 1983) இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் துணைவிரிவுரையாளராக பணிபுரிந்தார் (1983 - 1988). பின்னர் முதுநிலை விரிவுரையாளராக பணி உயர்வு பெற்று 1989 - 1991 வரை பணிபுரிந்தார்.
1991ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் முதுநிலை விரிவுரையாளர் ஆக பணி புரிந்தார். நுண்கலைத்துறையின் தலைவராகவும், கலைப்புல முதன்மையாளராகவும் திறம்பட பணிபுரிந்து உள்ளார். 1997இல் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் ஆகவும் பணி புரிந்தார். அதன் பிறகு கலைப்புலத் தலைவராக தொடர்ந்து பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். சுவாமி விபுலானந்தர் இசைக்கல்லூரியில் ஒருங்கிணைப்பாளராகவும் பெருமையுறப் பணிபுரிந்தவர் (2003 - 2005).
யாழ்ப்பாணத்தில் 17 ஆண்டுகளும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 17 ஆண்டுகளும் பணிபுரிந்த சிமெளனகுரு மிகப்பெரிய சாதனைகளை தாம் சார்ந்த துறையில் நிகழ்த்தி உள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்கள் மொழியால், இனத்தால் ஒன்றுபட்டவர்களாக இருந்தாலும் கலை பண்பாடுகளுக்கு இடையே வேறுபாடுகளைக் கொண்டவர்கள்.
மாவட்டத்துக்கு மாவட்டம் வழிபாடு, சடங்குமுறைகள், பண்பாட்டில் வேறுபாடு உண்டு. அவர் அவர்களுக்கு தனித்த அடையாளங்கள் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தம் ஆய்வுகளை நிகழ்த்தியதுடன் இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் இடம் உள்ள கூத்துக்கள், நாடகங்கள் பற்றிய பேரறிவும் மெளனகுருவிற்கு உண்டு. அதுபோல் தமிழகத்திலும் இந்தியாவின்

ஜீவநதி 31
பிற பகுதிகளிலும் வழங்கப்படும் கூத்து, நாடகமரபுகளை அறிந்தவர். தமிழகத்தில் உள்ள தெருக்கூத்துப் பற்றி அறிந்தவர். தமிழகத்தில் உள்ள தெருக்கூத்துப் பற்றி அறிந்தவர். நாடகத்துறை சார்ந்த அறிஞர்கள் பலரும் மெளனகுருவிற்கு நல்ல நண்பர்கள்.
தமிழகத்தில் வழங்கப்படும் தெருக்கூத்துக்கள் பலவற்றைக் கண் பொளியில் பதிவு செய்து பாதுகாத்த மெளனகுரு ஆழிப்பேரலையின் பொழுது இவற்றைப் பறிகொடுத்ததை மிகப்பெரிய இழப்பாக கருதுகின்றார். தமிழ்க்கூத்து மரபுகள், சிங்களத்தில் எந்தவடிவில் வழங்குகிறது என்பதை தமிழர் இசை இசைக் கருவிகள் என்ன பெயரில் வழங்குகின்றன என்பதையும் சிறப்பாக விளக்கிக் காட்டும் ஆற்றல் பெற்றவர். சிங்களக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். இலங்கையில் தமிழ்க்கலைகளும், சிங்களக் கலைகளும் எந்த வகையில்
366L6) என்பதைக் கற்று வல்லவர்கள் ஒப்பும் படி மெய்ப்பித்துக்காட்டியவர்.
్యుగో மெளனகுரு இலங்கைத் தமிழர்கள் பயன் பெறும்படி பல கூத்துக்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். பல நாடகங்களை அரங் கேற்றியும் உள்ளார். பல நாடகங்கள் எழுதி வழங்கி உள்ளார். நாடக, கூத்து தொடர்பில் ஆன பல நூல்களை எழுதியுள்ளார். தொன்மம் (புராண), பழங்கதை (இதிகாசம்), வரலாறு, சமுதாயம் சார்ந்த கதைகளை நாடகமாக, கூத்துக்களாக அரங்கேற்றி 3. جي. உள்ளார். மெளனகுரு குழந்தைகளுக்காக பல நாடகங்களை உருவாக்கி நடித்தவர். தப்பிவந்த தாடி ஆடு என்ற நாடகம் புகழ்பெற்ற நாடகம் ஆகும். இந்நாடகம் கல்வி நிறுவனங்களில் இவருக்கு நல்ல புகழை ஈட்டித்தந்ததுடன், பல உயர் பரிசில்கள் கிடைக்க வழிவகுத்தது.
மெளனகுரு அவர்கள் செய்த பல நாடக, கலை இலக்கிய முயற்சிகளுக்கு எதிர்ப்புகள் அவ்வப்போது கிளம்பி அடங்கி உள்ளதையும் அறியமுடிகிறது.கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கண்ணகையம்மன் வழிபாட்டில் இடம்பெறும் குளிர்த்திப் பாடல்களுக்குப் பொதுவான ஒரு இசையை உருவாக்கி பயன்படுத்திய பொழுது புனிதமாகக் கருதப்பட்ட பாடலை சந்திக்கு இழுத்து விட்டதாகவும், இசையை கெடுத்து விட்டதாகவும் கூறியவர்களும் உண்டு. அதுபோல் "இன்னிய அணி உருவாக்கலின் பொழுது இவ்வணி எழுப்பிய இசையில் சிங்கள இசைகருவிகளுக்கு முதன்மை உள்ளன என சிலர் தவறான கருத்து பரப்பியதுண்டு. இவற்றிற்கு எல்லாம் சலிப்பின்றி தமிழ் மக்களின் மரபுசார்ந்த செய்திகளை காலத்தேவைகளுக்கேற்ப மீட்பதில் கவனமாக இருந்தார்.
புதியதொருவீடு 'சங்காரம், இராவணேசன், உள்ளிட்ட நாடகங்கள் இவருக்கு நிலைத்த புகழ் தரும் நாடகங்கள் ஆகும். மெளனகுரு அவர்கள் தான் மட்டும் நாடகம், கூத்து துறைகளில் வல்லவராக அமையாமல், தம்மாணவர்கள். சார்ந்தவர்கள் என யாவரையும் பயிற்றுவித்து வளர்த்தவர்.
புத்துயிர்ப்பு. மழை, தப்பிவந்த தாடி ஆடு, சரிபாதி, வேடனும் புறாக்களும் சக்தி பிறக்குது, நம்மைப் பிடித்த பிசாசுகள், ஒரு முயலின்கதை, ஒரு உண்மை

Page 18
ஜீவநதி 32
மனிதனின் கதை, கலையில் உயிர்க்கும் மனிதன், புதியதொரு வீடு, பரதமும் கூத்தும், இலங்கைத்தமிழர் கூத்துக்கள், கண்ணகி குளிர்த்தி, கிழக்கு ஆட்டங்கள், கிழக்கு இசை, வடமோடி- தென்மோடி ஆட்ட அறிமுகம், இலயம் என்னும் பெயரில் உருவாக்கி உள்ள இசை, கூத்து தொடர்பான படைப்புக்கள் பேராசிரியரின் ஆழ்ந்த கலை உணர்வை வெளிப்படுத்தவல்லன.
இவற்றுள் புத்துயிர்ப்பு, மழை, தப்பிவந்த தாடி ஆடு, சரிபாதி, வேடனும் புறாக்களும், சக்தி பிறக்குது, நம்மைப் பிடித்த பிசாசுகள், பரபாஸ், ஒரு உண்மை மனிதனின் கதை, சங்காரம், இரவணேசன், வனவாசத்தின் பின் என்பன அச்சுவடிவம் பெற்றன.மெளனகுரு கூத்து, நாடகம் என்பவற்றை வகுப்பறையில் நிறுத்திக் கொள்ளாமல், பல்வேறு பயில் அரங்குகளில் நடாத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
20ம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் (1984), சடங்கில் இருந்துநாடகம் வரை (1985), மெளனகுருவின் மூன்று நாடகங்கள் (1985), தப்பிவந்த தாடி ஆடு (1987), பழையதும் - புதியதும் - நாடகம் அரங்கியல் (1992), சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் (1992), சங்காரம்-ஆற்றுகையும் தாக்கமும் (நாடகம்) (1993) ஈழத்து தமிழ் நாடக அரங்கு (1993), கால ஒட்டத்தினூடே ஒரு கவிஞர் - நீலாவணன் (1994), கலை இலக்கியக்கட்டுரைகள் (1997), சக்தி பிறக்குது - நாடகம் (1997), பேராசிரியர் எதிர்வீரசரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும் (1998), இராவணேசன் - நாடகம் (1998). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் (1998), அரங்கு ஓர் அறிமுகம் - இணையாசிரியர் (2000), சுபத்திரன் கவிதைகள் -தொகுப்பாசிரியர் (2001), வனவாசத்தின் பின்-நாடகம் (2002), மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப்பண்பாடு-பதிப்பாசிரியர் (2003), அரங்கியல் (2003), ஈழத்து தமிழர் நாடக அரங்கு (2வது பிந்திய பதிப்பு) (2004) என்ற நூல்களின் ஆசிரியராகவும் விளங்குகின்றார்.
மெளனகுரு அவர்களின் நாடகங்களில் குறிப்பிடத்தக்கது. "இராவணேசன்" நாடகம் ஆகும். மெளனகுரு அவர்களிடம் காணப்படும் கூத்து, இசை பாடல், தாளம், குறித்த பேரறிவை விளக்கும் நாடகமாக இது மிளிர்கின்றது. இராவணனின் துன்ப வாழ்க்கையை அழுகைச்சுவை ததும்ப இவர் உருவாக்கிஉள்ளதுபோற்றுதற்குரியது. இராவணன் வாழ்க்கையை நடுவணாகக் கொண்டு பல்வேறு உட்பொருட்களை, அதன் உள்ளே கலைக்கூறுகள் பொருந்த வைத்துள்ளமையை எண்ணிஎண்ணிமகிழவேண்டி உள்ளது. பல கலைஞர்கள் அந்த அற்புதக் கலைமாந்தர்களாகவே வாழ்ந்துள்ளனர். இலங்கையில் வழங்கும் பல்வேறு இசைக்கருவிகள், தென்மோடி, வடமோடி கூத்துமரபுகளில் அமைக்கப்பட்டு அந்த நாடகத்தில் இலங்கையின் பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை பதிவு செய்துள்ளார். இராமன், இராவணன் சண்டைக் காட்சியில் இடம்பெற்றுள்ள தாள அடைவுகள், உணர்ச்சி ஒட்டங்கள் காண்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. நாடகத் தமிழிற்கு, ஈழத்தமிழரின் பங்களிப்பு எந்தளவு உயர்வாக அமைந்துள்ளது என்பதைக் காட்ட இந்தவொரு நாடகம் இணை சொல்ல முடியாத படி அமைந்துள்ளது.
மெளனகுரு அவர்கள் நெஞ்சாங்குலை அறுவைப் பண்டுவம் செய்த நிலையிலும், ஆடியும், பாடியும், துள்ளிக்குதித்தும் மாணவர்களை பழக்கி உள்ள பாங்கு அறியும் பொழுது இவரின் கலைக்காதல் புலப்படும்.
பேராசிரியரின் துணைவியான சித்திரலேகா மெளனகுரு அவர்களும்

ஜீவநதி 33
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் நுண்கலைக்தனிறயில் பேராசிரியராக பணி புரிகிறார். இவர்களின் மகன் சித்தார்த்தன் அவர்களும் கலை உணர்வு நிரம்பப் பெற்றவர்.
பேராசிரியர் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, சு.வித்தியானந்தன் ஆகிய மூவரின் சேர்ந்த கலை உருவாக மெளனகுரு நமக்கு தெரிகிறார். இவர் திறமை உணரும் எதிர்காலத்தமிழர்கள் பல நூற்றாண்டுகள் இவரை வாயாரப்பேசிக்கொண்டு இருப்பார்கள். மெளனகுரு அவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வல்லவர். தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளது போல ஆங்கிலத்திலும் பல மொழி பெயர்ப்புகளைச் செய்துள்ளார். இவையும் நாடகத்திற்கு ஆக்கம் சேர்க்கும் நூல்கள் ஆகும்.
இவரிடர் பல மாணவர்கள் உருவாகி உள்ளனர் அவர்களில் யாழ்ப்பாணத்தில் சிதம்பரநாதன். பாலசுகுமார், கணேசன், ஜெயசங்கர், காலம் சென்ற செல்வி, பா.அகிலன், கனகரத்தினம், சோ.தேவராசா, அவர் மனைவி கலாலட்சுமி, இளங்கோ, போன்றோரையும் மட்டக்களப்பில் சீவரத்தினம், அன்பழகன், சதாகரன், இன்பமோகன், பிரியநந்தினி, ரவிச்சந்திரன். தவராசா, போன்றோர் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் அனைவரும் நாடகத்துறையில் இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டு இருப்பவர்கள்.
மெளனகுரு சற்றொப்ப முப்பது நாடகங்களில் நடித்து உள்ளார். பத்து நாடகங்கள் எழுதி உள்ளார். இருபது நாடகங்கள் இயக்கி உள்ளார். மெளனகுரு அவர்களின் நாடகப்புலமை இவருக்கு தேசிய அளவில் பரிசில்கள் பலவற்றை வாங்கித் தந்துள்ளது. குழந்தைகளுக்கான நாடகங்கள் உருவாக்கியமையால் இலக்கிய ஆராய்ச்சிக்கும், நாடக அரங்கப் பணிகளுக்காக என பலமுறை பரிசில்கள் பெற்றுள்ளார்.
பல்வேறு பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல் நாட்டு தேர்வாளராக பணிபுரிந்து உள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறு கல்விக் குழுக்களிலும் இணைந்து பணிபுரிந்துள்ளார். தமிழ், நாடக, கூத்து வரலாற்றில் என்றும் நின்று நிலவும் பெயராக மெளனகுரு அவர்களின் பெயர் விளங்கும். 000
கட்டை6வலி- நெல்லியடி U.69.2.കി.മ
எமது சங்கச் சேவைகள் : நுகர்ச்சிச் சேவை, தரமான நூலக, சேவை கிராமிய வங்கிச் சேவை, புலமைப்பரிசில் வழங்கல், வாடகைச் சேவைகள் தரமான திரைப்படக்காட்சிக்கூடாக புதிய ரசனையை ஏற்படுத்துதல் எரிபொருள் சேவை விவசாய சேவை நூல்வெளியீடும் விமர்சனங்களும் கூட்டுறவுக் கலாசாரப் பெருமன்றம் “சங்கம் செய்தி” மாதாந்த வெளியீடு தொலைபேசி இலக்கம் :- 02:12263268 - 0212264474 -- 02:12264725 தொலைநகல் 02:12263268 கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம் கரவெட்டி,

Page 19
3.
ஜீவநதி
தவநுக்காக அல்ல
முதற்பாடமணி ஓங்கி ஒலிக்கிறது. நெஞ்சு படபடக்கத் தொடங்குகிறது.
"இண்டைக்கு அவமானப்பட வேண்டியதுதான்!
எங்கள் வகுப்பாசிரியர் செந்திவேல் ஸேர் கையில் பிரம்புடன் கறுப்பு நிறத் தோற்பையைத் தோளில் கொளுவித் தொங்கவிட்டுக் கொண்டு வகுப்பை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார். "இண்டைக்கு என்னத்தைச் சொல்லிச் சமாளிக்கப் போறன் எண்டுதான் எனக்குத் தெரியேல்லை”. மனம் ஒரு நிலையில் இல்லாது தவிக்கிறது.
நேற்று வீட்டு வேலியடைப்பு ஐயாதான் பிரதான பணியாள். நான் அவர் எடுபிடி. உதவிஆள் இல்லாமல் அவரால் இயங்க இயலாது. நான் அவர் பக்கத்தில் நிற்கவேண்டும். வேலி அடைக்கிறதெண்டால் ஐயாவுக்கு ஒரு கலை. ஏதோ பல பொறியியலாளர்கள் சேர்ந்து திட்டமிட்டு கட்டிமுடித்த பெரிய கட்டடம் ஒன்றைப் பார்கின்ற திருப்தி தான் அடைத்த வேலியைப் பார்க்கும் போது அவரிடமிருக்கும். தெருவோரமாக இருக்கும் படலைப்பக்க வேலி, வெகு அக்கறையாக அந்த வேலியை அடைப் பார். பனைமட்டைகளை வைத்து வரிந்து மேலே தென்னாங்கிடுகைக் கொண்டு அமைக்கப்படும் வேலி காண்போர் கண் களைக் கவரும் நேர்த்தியானது. "ராசண்ணை இது மாதிரி எங்கட வேலியையும் நீங்கள் தான் அடைச்சுத் தரவேண்டும்" உறவினரின் வேண்டு கோளைக் கேட்கும் போது ஐயாவுக்கு பெருமையும்ஒருவித கர்வமும் பிறந்து விடும் கூடவே குசி வந்து விடும் குசி
- க.தர்மதேவன்
வந்தால் அடிக்கடி செருமிக் கொள்வார். செளந்தராஜனின் பாடல்களை மெல்லிய குரலால் முணுமுணுத்துக் கொண்டு இருப்பார். அந்த நேரம் பார்த்துத்தான் நான் ஐயாவிடம் ஏதாவது காரியம் சாதித்துக் கொள்வேன். பட்டம் ஏற்று வதற்கு நூலுக்கு காசு, பள்ளிக்கூட தவணைப்பணம் இப்படி எதுவென்றாலும் கேட்டுவைப்பென். உடனே கிடைத்து விடும். தன்னைப்போல தன் பிள்ளைகள் கூலிக்காரர்களாக வாழக்கூடாது என்பதில் கருத்தளவில் 93UT உறுதியாகவே இருக்கின்றார். விட்டு வேலை என்று வந்து விட்டால் உதவி இல்லாமல் அவர் தான் என்ன செய்வார்? எனக்கும் ஐயாவோடை சேர்ந்து வேலியடைக்கிறதெனிடால் நல்ல விருப்பம். பள்ளிக்கூடத்தில் நாலு சுவருக்குள் ஆறு மணித்தியாலம் அடைஞ்சு கிடந்து சித்திரவதை அனுப விப்பதைவிட வீட்டில் ஒடியாடி வேலை செய்யும் போது எவ்வளவு சந்தோசம் கிடைக்கிறது.
"பெடியா, நாளைக்கு பள்ளிக்கூடம் இல்லைத்தானே?
"b sguist" "அப்ப நாளைக்கு வேலியடைப்பம்? ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய (3665luJ60)Lü L! திங்கள் வரை தொடர்ந்தது. இதனால் நேற்று நான் பள்ளிக்கூடத்துக்கு வரமுடியவில்லை. எங்கள் கல்லூரியின் டிசிப்பிளின் ரிச்சர்” செந்திவேல் ஸேர். அவர் தான் எனது வகுப்பாசிரியர். அவருக்கு பாடசாலை ஒழுங்கு முக்கியம். ஒருநாள் மட்ட மடித்தால மறுதினம் மனிசன் எகிறிக்

ஜீவநதி
குதிப்பார். அதுவும் முன்னறிவித்தலின்றி நின்றுவிட்டால் அடுத்த கதை இராது. அடியும், நக்கல் நையாண்டிகளும் தாரளமாய் கிடைக்கும்.
இப்படியான ஆசிரியரை யாருக்குப் பிடிக்கும்? அவருக்கு என்மீது ஒரே வெறுப்பு. அவருடைய பாரா பட்டசமான நடைமுறைகளும், வாயி லிருந்து உதிக்கும் வார்த்தைகளும் என்னைக் கொல்லாமல் கொல்லும். ஒரு நாள் அவர் எங்களுக்குப் பழமொழிகள் படிப்பித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு பகுதியைக் கூறுவார். அவர் குறிப்பிடும் மாணவன் அதனை முழுமையாகச் சொல்லி முடிக்க வேண்டும்.
"கிட்டாதாயின். பிரதிபன் நீ சொல்லு ? "வெட்டண மறஸேர்" "ஊருடன் பகைக்கின். அருட்செல்வம் நீ சொல்லு? "வேருடன் கெடும் ஸேர் இப்போது என்னுடைய முறை. அந்தநேரம் பார்த்து பியோன் வகுப்புக்குள் நுழைந்து அதிபரின் அறிவித்தல் கொப்பியை நீட்டுகின்றான். செந்திவேல் ஸேர் கண்ணாடியை அணிந்து கொண்டு வலு கவனமாக அதனைப் படிக்கின்றார். அந்த இடை வெளியில் வகுப்பில்"சிர் சலசலப்பு அந்தக் குழப்பத்தால் திடீரெனக் கோபம் கொண்டவராய்.
"நாலும் இரண்டும். நீ சொல்லு? என்கிறார்.
"ஆறு ஸேர்" என்கின்றேன். வகுப்பே கொல் என்று சிரிக்கிறது. சிரிப்புக்குரிய அர்த்தத்தை நான் விளங்கு முன்னரே எனது இரு கன்னங்களும் வீங்கின. "ஆலும் வேலும்" என்று அவர் ஆரம்பித்து வைத்தி ருந்தால் நான் சரியான விடையைக் கூறியிருப்பேன். அவர் அப்படிக் கூறாது
விட்டதால் என்னால் சரியான முடிவை ஊகிக்க முடியாமல் போய்விட்டது. அவர் ஏன் அப்படிக் கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதன் பின் என் வகுப்பு மாணவர்கள் என்னைக் கண்டதும் நாலும் இரண்டும் ஆறு என்று கூறி கிண்டலடிப்பது அவமானமாக இருக்கும்.
என்மீது ஏற்கனவே வெறுப்புடன் இருக்கும் ஆசிரியருக்கு எப்படி முகம் கொடுக்கப் போறதென்று தான் தெரிய வில்லை.
"குட்மோர்னிங். ஸேர்" மாணவர்களின் வழமையான கோரஸ் குட் மோர்னிங், சிற்டவுண் கூறிக் கொண்டே "நேற்று நாங்கள் தமிழில் ஆகுபெயர்கள் படிச்சனாங்கள் என்ன? என்று வழமையான பாணியில் தனது பிரசங்கத்தை ஆரம்பிக்கின்றார். அப்போது அவர் கழுகுக் கண்களுக்கு நான் தென்படுகிறேன். அவர் பார்வைக்கு
அஞ்சி நான் தலை கவிழ்ந்து கொள்கின்றேன்.
"b.
"நேற்று பள்ளிக்கூடம் வராத ஆக்கள் இஞ்சாலை வாருங்கோ
நானும் நாகேஸ்வரனும் தான் எழுந்து வருகின்றோம் . எனக்குச்சற்று

Page 20
ஜீவநதி
ஆறுதல் துணைக்கு ஒரு ஆள் கிடைத்து விட்டாரல்லவா? அவனுடைய தந்தையார், மகன் பாடசாலைக்கு வருகை தராதற்குரிய காரணத்தை தெளிவாக எழுதிக் கொடுத்திருந்தார் முதலில் அவனிடம் தான் விசாரணை கடிதத்தை வாசித்துவிட்டு ஒருவித பிரமிப்புடன் “政治 மனேச்சற்றை மகனேயடா? இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சுது ஏன்ரா பெடியா எனக்குச் சொல்லேல்லே? சரி. எப்படி அப்பா சுகமா இருக்கிறாரே! நான் விசாரிச்சதா சொல்லு.ம் போய் இருடா தம்பி அவன் ஒரு சிரிப்புடன் போய் அமர்கின்றான்.
நான் இப்போது தனித்திவில் நிற்பதுபோல உணருகின்றேன். வகுப்பில் எல்லோருடைய கண்களும் என்னை மொய்கின்றன
"ஆ. நி. வா." “D 60T &š Goat56o 6OT Lmr? LuFT ,2 செத்துப்போனாளோ? பூட்டன் செத்துப் போனானோ?
"இல்லை ஸேர்!" வார்த்தைகள் தடுமாறுகின்றன.
"இல்லையெண்டால். என்ன? என்ன முழிமுழக்கிறாய் களவுக்குப் போனனியே? ஏளனமாகச் சிரிக்கிறார். வகுப்பில் திரிப்பொலி நான் கலங்கிக் கொண்டு நிற்கிறேன். என்னுடைய முகத்தைக் குறிப்பாகப் பார்க்கின்றார். "அட மீசையும் அரும்பத் தொடங்கி விட்டுது, குமரப்பருவும் போட்டிருக்கு? பத்தாம் வகுப்பிலேயே உனக்கு எல்லாம் முளைச் சிட்டுது போலக் கிடக்கு? வகுப்பறை சிரிப்பினால் கலகலக்கிறது அடிக்கடி வாய்த்தர்க்கம் புரியும் மொனிற்றர் இந்துமதியும் என்னைப் பார்த்து பார்த்து சிரிக்கின்றாள். நான்
அவமானத்தில் குறுகிப்போகிறேன். என்னமோ தெரியாது, அவள் மீது என்
கவனம் அடிக்கடி படிகிறது. அதை வெறுப்பென்பதா அல்லது விருப் பென்பதா? விருப்பால் விளைந்த போலியான வெறுப்பா? எப்படிக் கூறுவதென்றே தெரியவில்லை.
"சொல்லெண் ரா.? பேயன் மாதிரி முழுசிறாய்."
கதிரைமீது 守Tfら労lá
கிடக்கும் பிரம்பு அவர் கைக்கு மாறுகின்றது. நான் கேட்டுக் கொண்டு இருக்கிறன் நீபேசாமல் நிற்கிறாய் என்ன" முழங்காலுக்குக் கிழே விளாசுகிறார்.
ஸேர். ஸேர் அடிக்காதையுங்கோ வேதனையில் துடித்துத் துடித்து கெஞ்சுகின்றேன். அவர் கை ஓயவில்லை. “ஸேர். சொல்லுறன் ஸேர். சொல்லுறன் ஸேர். ஸேர் ஐயாதான் மறிச்சவர். அடியாதையுங்கோ!
கொப்பர் என்ன விதானையே! இனிமேல் மறைக்கேலாது சொல்லி விட வேண்டியதுதான்
"நேற்று வீட்டிலை வேலி அடைச் சனாங்கள். அது தான் ஐயாவுக்கு உதவியாய் நின்றனான். "கொப்பரோட திரிஞ்சு வேலிஅடைக்க வேண்டியது தானே! பிறகென்னத்துக்கு இங்க வாறாய்? உங்களுக் கெல்லாம் என்னத்துக்குப் படிப்பு? வாட கிட்ட. திரும்பு
நான் நடுநடுங்கிக்கொண்டு திரும்புகின்றேன். அவர் கையிலுள்ள பழுத்த பிரம்பு மூர்க்கமாக என் பிற் பக்கத்தை பதம் பார்க்கின்றதுநான் துடி துடித்துக்கத்துகின்றேன். எனக்கு ஒன்று விளங்குகிறது. இந்த அடிகள் எல்லாம் நான் நேற்று வராததுக்கல்ல. 000

ஜீவநதி 37
பக்தி கர்நாடக இசையின் பலமா அல்லது பாரமா?
- க. நவம் (கனடா)
இசை சிந்தனையைத் தூண்டவல்ல ஒரு சிறந்த சாதனமாகும். மகிழ்ச்சியை மட்டுமே இசை தரவல்லதென அறிந்து வைத் திருப்பவர்களுக்கு இக்கூற்று ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். புறவயமான இன்பத்திலும் மேலாக, இசை அறிவின் ஒர் ஊடகமாகவும், ஆன்ம ஈடேற்றத்தின் சாதனமாகவும், அகவயமாகப்பயன் தர வல்லது மேலும் தியானம், முறுக்கேறிய உணர்ச்சிகளிலிருந்து தளர்ந்து விடுபடுதல், மனதில் காட்சிப்படுத்தல், மற்றும் ஞாபகசக்தி ஒழுக்கம், ஒழுங்கு, உடலாரோக்கியம், கலாசார விழுமியங்கள் ஆகியவற்றை மேம்படுத்தல் போன்ற பல்வேறு நன்மைகளையும் அது தரக்கூடியது. குறிப்பாக அதன்னிந்தியப்பாரம்பரிய வழி வந்த கர்நாடக இசையானது தெய்வீகத்தன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. நாதவடிவினதனா சிவனையும் நாத சொரூபியான சக்தியையும் சைவர்கள் போற்றி வழிபட்டுவருகின்றனர் காணப்பிரியனான சிவன் இராவணனின் இசையில் மயங்கியதாக கம்பராமாயாணம் கூறுகிறது. சிவனின் கையிலுள்ள உடுக்கும் கண்ணனின் புல்லாங்குழலும், கலைமகளின் வீணையும் மற்றும் நந்தியின் மத்தளம். நாரதரின் மகதியாழ் என்பனவும் இறைவழிபாடும் இசையும் இரண்டறக் கலந்தவை எனக் காட்டுகின்றது. “உய்ய என் உள்ளத்து ஓங்காரமாய் நின்ற மெய்யா” என மணிவாசகர் நாதவினோதனை விழிப்பதும் "தழிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்று அப்பர் தன்னை அவரிடம் ஒப்புவிப்பதும் கர்நாடக இசையின் பக்தியின் பாற்பட்ட தன்மையைச் சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறான சிறப்புக்கள் மிக்க கர்நாடக சங்கிதம் ஏன் உலகளாவிய ரீதியில் பரவிக் கொள்ள வில்லை? வடஇந்தியாவின் வறிந்துஸ்தான் இசைவல்லுனர்களான ரவிஷங்கர் ஸாஹிர் ஹூசெயின், ஹரிபிரசாத் போன்ற பெயர்கள் போல ஏன் பட்டம்மாளோ, பாலமுரளியோ அல்லது ஜேசுதாஸோ பிரபலமாகவில்லை? இந்துஸ்தானி இசை அரச சபைகளின் தேவைகளுக்கேற்ப மாற்றங்களை உள்வாங்கி வளர்ந்து வந்தது. அதன் இலகுத்தன்மை உலக மயமாக்கலுக்கு ஏற்றதாயிற்று. கர்நாடக இசையோ இறுக்கமான கட்டுக்கோப்புக்குள் வளர்ந்தது.பக்தியுடனும் இறை வணக்கத்துடனும் பிணைக்கப்பட்டது. இறைபணியில் ஈடுபட்டிருந்த ஒரு சமூகப் பிரிவினருக்கு மட்டும் எட்டக்கூடியதாக ஒருகால் இருந்து வந்தது. இத்துறைசார் விற்பன்னர்கள் இந்த இசைக்கலையின் புனிதமும் சீர்மையும் செறிவும் சீரழிந்துவிடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தனர். மிக இறுக்கமான வரன்முறையின் கீழ் புதுமைகள் இங்கு பெரிதும் வரவேற்கப்படவில்லை. இதன் காரணமாக கர்நாடக இசையானது தனது வாழிட எல்லைகளைத் தாண்டி வெளியே வரமுடியாது போயிற்று.
கர்நாடக இசைக்கு இதனால் ஏற்பட்டுள்ள பாதகங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். இந்த இசையை இரசிக்கும் தென்னிந்திய இரசிகர்கள், இந்துஸ்தானி இசையையும் வேற்று நாட்டு இசை வடிவங்களையும் இரசிக்கின்றனர். ஆனால் இந்துஸ்தானி இரசிகர்களோ அல்லது வேறு இசைக் கலாசாரத்தைச் சார்ந்தவர்களோ கர்நாடக இசையை இரசிப்பதில்லை. இவர்களுக்கு இதன் அழமான அர்த்தங்களையும் செழுமையையும் இனிமையையும் உணர்ந்து இரசிக்கும் அறிவு. அனுபவம், அவகாசம், தகைமை, தவிப்பு என்பன கிடையாது. இதை அவர்களது தவறு

Page 21
ஜீவநதி 38
என்பதைவிட கர்நாடக இசையின் காவலர்களது தவறு என்பதே பொருத்தம். ஆனால் இந்நிலைமை கர்நாடக இசைக் கலைஞனுக்கே தீங்கானது. இரசிகர்கள் வட்டம் குறுகிவிடுதல் பொருளாதாய அடிப்படையில் இவர்களைப் பாதிக்கின்றது. அபாரமான வலிமை கொண்ட இசைக் கலைஞனும், நவீன சந்தைப் பொருளாதார சமூகத்தில் ஏழ்மைக்குள் தள்ளப்படுகின்றான்.
கர்நாடக இசையின் அடிப்படை பக்தியே ஆகும். இதனுடன் சிருங்காரம், வாத்சல்யம் என்பன போன்ற பல அம்சங்களும் அடங்கியிருந்த போதிலும் இவைகளும் வழிபாட்டின் பிற வடிவங்களே. சமகால உலகில் மத உணர்வுநிலையும், மதசார்பான பிரிவினைத் தன்மையும் நிறைந்த ஓர் இசைவடிவம், பரந்துபட்ட இரசிகர்கள் கூட்டத்தைக் கவர்ந்தெடுக்கத் தவறிவிடுகின்றது. மேலும் இது அந்தணர் சமூகத்தவர்களுக்கே உரிய கலை என்ற தவறான அபிப்பிராயத்தையும் வளர்த்துவிட்டது. கர்நாடக இசையின் பலமாக இருந்த பக்தி, அதன் பாரம் ஆகிவிடக்கூடாது. இச்சாஸ்திரிய இசையானது சகல மக்களுக்கும் உரிய அருங்கலை என்ற நிலை உருவாக வேண்டும்.
கர்நாடக இசை எதிர்நோக்கியிருந்த பேராபத்தைத் தடுக்கவென்று முயற்சிகளும் பல மேற்கொள்ள்ப்பட்டுள்ளன. ஜி.ராமநாதன், ஏ.வி.மகாதேவன் போன்றோர் முதற்கொண்டு எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரவுற்மான் வரையிலான இசை ஆசான்கள் கர்நாடக இசையை வெவ்வேறு தராதரங்களிலும் சினிமா வழியாக சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் அன்றாட வாழ்வில் விழாக்கள், வைபவங்களில் இசைக்கப்பட்ட பக்திப் பாடல்கள் மூலமும் இது நிகழ்த் தப்பட்டு வந்துள்ளது. பல இளந் தலைமுறை சார்ந்த கலைஞர்கள் இக்கலையை அழிய விடாமல் கற்பித்து வருகின்றனர். தற்போது மின்தளங்கள் வழியாக இது பற்றிய அறிவு உலகெங்கும் பரப்பப்பட்டு வருகின்றது. புலம்பெயர்வுகளின் விளைவாகவும் உலகெங்கும் இக்கலை விஸ்தாரம் அடைந்து வருகின்றது. இலக்கணம் வழுவாமல் கர்நாடக இசை அச்சொட்டாக வியாபித்து வளரவில்லை என்பது உண்மையே. ஆயினும் "பொற்சிறையை உடைத்து அது வெளியே சஞ்சாரம் செய்யத் துவங்கியிருப்பது நல்ல அறிகுறியே!
இனி உலகெங்கணும் வாழ்ந்து வரும் கர்நாடக இசைப் பிரியர்களுக்கென்று சில கடமைகள் காத்திருக்கின்றன. புதிய நண்பர்களுக்கு இதனை அறிமுகப்படுத்திப் பரவலாக்க வேண்டும். பாடசாலைகளில் ஒரு பாடமாக இது கற்பிக்கப்பட வேண்டும். இதனை உலக மொழிகள் அனைத்துக்கும் அறிமுகம் செய்தல் வேண்டும். இதுபோலவே இந்துமத வழிபாட்டுடன் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் சகல மதத்தவரும் தமது வழிபாட்டின் போது இதனைப் பயன்படுத்த வழிசெய்ய வேண்டும். உலகப் பிரசித்தி பெற்ற ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற பிறமொழிகளில் கர்நாடக இசையுடன்கூடிய சினிமாப் படங்கள் உருவாக்கப்பட வேண்டும் நவீன தொழில் நுட்பங்களின் பலாபலன்களையும் கர்நாடக இசைத்துறை உள்வாங்கிப் பயன்பெற முன் வரவேண்டும். கர்நாடக இசை சர்வலோக குணாம்சம் கொண்டது. சகல மக்களுக்கும் உரியது. மானுட மேம்பாட்டுக்கு அது ஒரு கருவியாகப் பயன்படவேண்டும். கர்நாடக இசையின் ஆசான்களும் ஆர்வலர்களும் கலைஞர்களும் இதனைக் கருத்தில் கொண்டு உலகு பூராவும் இதனை விதைப்பதற்கு முன்வரவேண்டும். ஊனின்றுருக்கி உள்ளொளி பரப்பும் இந்த உன்னதமான கலை உலகெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்!

ஜீவநதி 39
6 வெணிலவே கணினுறங்கு உயிரில் கலந்தவளே கண்விழித்துப் பார்க்கையிலே உதிரத்தில் பிறந்தவளே காவியங்கள் நினைவுவரும் தூயவளே தூண்டா கவிதைகளே நூறுவரும் மணிவிளக்கே கண்ணுறங்கு. கண்மணியே கண்ணுறங்கு. என்வயிற்றின் முத்தே வானவில்லின் நிறமெடுத்து எழில்கொஞ்சும் பூவனமே வண்ணவண்ணப் பொட்டுவைப்பேன் உன் அருகில் நானிருப்பேன் வைகறையின் இளம்மொட்டை உத்தமியே கண்ணுறங்கு. வசந்தமே கண்ணுறங்கு. தங்கப்பலகையிலே பள்ளிக்குச் செல்லும்போது பவளக்கால்நட்டு பரீட்சைப் போட்டிகளால் மாணிக்கத் தொட்டில் செய்வேன் பள்ளிகொள்ள நேரமில்லை மரகதமே கண்ணுறங்கு. பங்கயமே கண்ணுறங்கு. தோணுஉறும் செந்தமிழில் வெளிநாட்டு அப்பா தாலாட்டு நான் படித்தால் வேலைவிட்டு வரமாட்டார் பாலுறும் என்மடியில் தொலைபேசிமுத்தங்கள் பைங்கிளியே கண்ணுறங்கு. தந்திடுவார்கண்ணுறங்கு. நீசிரித்தால் முத்து உதிரும் கடைக்குப் போகவேண்டும் நிலவுகூடமுகம்பார்க்கும் காய்கறிகள் வாங்க வேண்டும் நான் பெற்ற செல்வமே விடைதர வேண்டுகின்றேன் நல்லவளே கண்ணுறங்கு. வெண்ணிலவே கண்ணுறங்கு.
- வடஅல்லை.க.சின்னராஜன்
ஜாதிக்கொரு நீதி
அகநானூறு புறநானூறென பன்னூறு பாடல்கள் பயின்றோராயினும். பஞ்சதந்திரக் கதைகள் பிரபந்தங்கள் பதிகங்களென பன்னூல் கற்றறிந்தோராயினும்.
அவரவர் அகத்திடை யிருப்பதை அறித்திடல் சாலுமோ..?
தற்கொலையொன்று நடந்திடுங்காலை அர்த்தங்கள் நூறு பிறப்பிப்பார். அதுவும் பெண்ணாக இருந்திட்டால் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிப்பாரே!
ஏழையொருவன்
சிறுநிதி சேர்த்தால்
'6IIf(335m கொள்ளை அடித்தனன் என்பர், அறாவட்டியில் பணம் சேர்த்தவனை அப்பவே அவன் பணக்காரன்” என்பர்!
இதுதான் வாழ்வின் இயல்பெனில் ஏழை எப்படிப் பெருநிதி சேர்ப்பான்.?
அந்தணன் வகுத்த சூத்திரருள்ளே எத்தனை பிளவுகள் புறக்கணிப்புகள்.
நீதிகள்கூட ஜாதிக்கு வேறு
நிமிர்ந்து நடப்பது எங்ங்ணம் கூடும்.?
- கண.மகேஸ்வரன்

Page 22
ஜீவநதி 0
பின் - நவீனத்துவம்; அறிமுகம்; தமிழ்ச்சூழலில் அதன் பிரவேசம் பற்றிய சில குறிப்புகள்
பின்நவீனத்துவம் என்பது ஐரோப்பாவைப் பொறுத்தவரை செல்வாக்கிழந்த சூழலிலேயே தமிழிலே செல்வாக்குப் பெறத் தொடங்கிய ஒன்றாகும். பின்நவீனத்துவம் என்பது ஒரு மாயையாகவும் குழு மனப்பான்மையாகவும் தீவிரமான இயக்கமாகவும் முரண் ஆற்றலாகவும் முதலாளித்துவ வெளிப்பாடாகவும் பல கோணங்களில் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இக்கட்டுரையானது பின்நவீனத்துவம் தொடர்பான அறிமுகத்தையும் அதன் நுழைவு தமிழில் நிகழ்த்திய சில சாத்தியங்களையும் தமிழாய்வு மற்றும் படைப்புச் சூழலின் ஊடாக வெளிப்படுத்தத் துணிகின்றது.
நவீனத்துவத்தை அடுத்ததாகவே பின் நவீனத்துவம் வந்து சேருகின்றது. 1950 களுக்கு பிறகு ஜரோப்பிய மேற்கத்தைய சிந்தனை மரபில் பல புத்தாக்கங்கள் நிகழ்ந்தன.அமைப்பியல், பின் அமைப்பியல் போன்றன; பல சிந்தனைகளைக் கேள்விக்குள்ளாக்கியதன் தொடர்ச்சியாக முகிழ்த்தது தான் பின்நவீனத்துவம். பின்நவீனத்துவம் என்பது தனியே கலை இலக்கியங்களோடு குறுகி விடும் ஒரு தத்துவம் அல்ல. அது வாழ்வின் வட்டங்கள் அனைத்தையும் வளைத்தபடி நிற்கும் ஒன்று. பின் அமைப்பியல் சிந்தனையாளர்களாகிய ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத் தொடர்ந்து லியத்தார்ட், பெளதலியன்ட், டெலூஸ் ஆகியோர் இச்சிந்தனை மரபில் முக்கிய வேர்கள்.
1966 bið Sb60ởr (B prašė Gabfa5T (Jaques Derid) என்னும் பிரான்ஸிய சிந்தனையாளர் De - Construction என்ற வார்த்தையை முதன் முதலாகப் பிரயோகித்த போது தான் பின்நவீனத்துவம் பிறந்ததாக நாம் கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறுகின்றார்.
தொண்மையில் இருந்து மரபு தன்னை வளர்த்துக் கொண்டது. மரபில் இருந்து பின்நவீனத்துவம் தன்னை விடுவித்துக்கொண்டது. நவீனத்துவத்தில் இருந்து பின் நவீனத்துவம் தன்னைத் துண்டித்து மேற்கிளம்பத் தொடங்கியது. இந்தச் சூழலில் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்ள நவீனம், நவீனத்துவம் ஆகிய கருத் தாக்கங்களை விளங்கிக் கொள்வது அவசியமானது. நவீனம் என்பது மரபுகளில் இருந்து சம காலத்தை வேறுபடுத்திக் காட்டுவது. நவீனத்துவம் என்பது ஐரோப்பாவிலும் ஐக்கிய
 

ஜீவநதி 41
அமெரிக்காவிலும் முகிழ்த்தெழுந்த நாகரிகத்தைச் சுட்டுகிறது. ஆனால், இந்த நவீனத்துவம் வர்க்கநிலை ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியதால் நவீனத்துவத்தை அடுத்து வந்த பின்நவீனத்துவம் சில திவிரமான நிலைப்பாடுகளை முன்வைக்கிறது. பல்வேறு கருத்தாக்கங்களையும் இது மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. எல்லாக் கருத்தாக்கங்களையும் மேலாதிக்கப்பண்புகொண்டவை என்று மதிப்பிட்டு அவற்றை ஏற்க மறுக்கிறது.
இறைவன், தனிமனிதன். பிரக்ஞை, அறிவு, சமூகம், மானிட விடுதலை என்பன போன்ற புள்ளிகளை மையமாகக் கொண்டு மொத்த உலகும் உலக நோக்கும் கட்டியெழுப்பப்படுவதை இது மறுதலித்து, துண்டு துண்டானவை. தொடர்பற்றவை. பன்மியப் பாங்கு கொண்டவை, நேர்க்காட்சித் தளத்தவை ஆகியனவற்றைப் பின்நவீனத்துவம் கொண்டாடுகிறது என்று எம். ஜி. சுரேஷ் கூறுகிறார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி, பின்நவீனத்துவம் என்பது ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக இரு மட்டங்களில் தொழிற்படுவதாகக் கூறுவார்.
1. கலை இலக்கியத் துறையில் ஏற்பட்ட எடுத்துரைப்பு மாற்றங்கள்
2. சிந்தனை மரபில் ஏற்பட்ட உலகம் நோக்கப்படுவது பற்றிய மாற்றம் இங்கு இரண்டாவது விடயமே என் கவனத்திற்குரியது. இதில் தான் இலக்கியப் பரீட் சார்த்தங்களின் தொடர்ச்சியாவதும் நவீனத்துவத்தில் இருந்து விட்டு விடுதலையாவதும் நிகழ்கின்றது. இது படைப்புச் செயற்பாட்டிலும் ஆய்வுச் செயற்பாட்டிலும்நிகழ்த்தியவை. நிகழ்த்தி வருவன கவனத்துக்குரியன. பின்நவீனத்துவம் என்பதில்
De - construction (G5fist)
Discourse (...is(35T)
Death of author (Gig ToolT6 UTirab) ஆகிய மூன்றும் ஆய்வுச் செயற்பாட்டில் முக்கியமானவை. இவற்றின் மூலம் முடிவுகளை நோக்கி ஆய்வை வரையறுத்து அழைத்துச் செல்லாமல் எல்லைகளற்று தன்னை நீட்டிக் கொள்வதாக பின்நவீனத்துவம் செயற்படுகிறது. எல்லாம் சிதைவு கலைவு என்பதில் இருந்து தன் ஆய்வைத் தொடங்காமல் எல்லாம் ஒழுங்கு, எல்லாம் இயைபு என்பதில் இருந்தே பின்நவீனத்துவம் தன் ஆய்வுகளைத் தொடங்குகின்றது. இது பன்மையான அறிதல் முறையையே அங்கிகரிக்கின்றது.
இதில் De - Construction என்பது (நிர் - நிர்மாணம்) தெரிதாவினால் முன்வைக்கப்பட்ட ஒன்று. அது மொழியினால் ஆன ஒரு பிரதியின் ஒற்றை அர்த்தங்களைக் கண்டடையும் தொழிற்பாடே இதுவாகும். பிரதியை ஒற்றைத்தன்மை உடையதாக நோக்காமல் புதிய வாசிப்புக்களை இது செய்கின்றது. இவ்வாறான வாசிப்பின் மூலம் ஒரு பிரதி - பெருக்கப்பட்ட பிரதிகளாக மாறுவதே பின்நவீன ஆய்வில் புதிய சாத்தியங்களை நிகழ்த்த உதவுகின்றது.
எழுதப்படும் வடிவங்கள் எல்லாம் பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை பிரதிகள் தான். இவற்றை,
(1) பெருங்கதையாடல்
(2) குறுங்கதையாடல் என்று இரண்டாகப் பார்க்கலாம். பெருங்கதையாடல் என்பது மார்க்ஸ், ஹெகல் போன்றவர்களின் பிரதிகளைக் குறித்து நிற்கின்றது. இங்தப் பெருங்கதையாடல்

Page 23
§ඛJIBá 42
என்பது பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை கொடும் வன்முறையாகவும், குறுங்கதையாடல் என்பது பன்மை வித்தியாசங்களை உடைய ஆக்கக் கூறாகவும் மிளிர்கின்றது. இதனால் பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை குறுங்கதையாடல் முக்கியமானவை. இதனாலேயே லியோடார்ட் இந்த யுகத்தை குறுங்கதையாடல் களின் திருவிழா நடக்கும் யுகம் என்றார்.
அடுத்து ரொலான் பார்த்தின் Death ofauthor (ஆசிரியனின் மரணம்) என்ற கோட்பாடு முக்கியமானது. ஒரு பிரதியை எழுதியதும் ஆசிரியனின் வேலை முடிவடைந்து விடுகின்றது. அவன் அதில் இருந்து இறந்தவனாகின்றான். வாசிக்கும் வாசகனே அதற்குப் பிறகு பொருள் கொள்பவனாக மாறுகின்றான். ஆசிரியனும் பிறகு வாசகனே. ஆசிரியன் எழுதியதை விட வாசகப் பொருள் கொள்ளல் இங்கு முதன்மையானது. ஆசிரியனை விட வாசகனுக்கு இது முதன்மை கொடுத்து பல்வேறு வாசிப்புகளுக்கு இடமளிக்கிறது. ஆனால் தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை படைப்பு இருக்கிறது-படைப்பாளி இறந்துவிட்டான் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் படைப்பாளியை முன்னிலைப்படுத்தும் அரசியல் - முற்கற்பிதங்கள் ஆய்வு நடவடிக்கைகளில் எப்போதுமே மாறாத ஒன்றாகும்.படைப்பாளி இறந்து விட்டான் என்று சொல்லிக்கொண்டுதான் படைப்பாளி இன்னும் முன்னிலைப்படுத்தப்படும் முரண் தமிழ்ச் சூழலில் தொடர்கிறது.
அடுத்து, ஃப்பூக்கோ முன்வைத்த Discourse முக்கியமானது. அறம் என்பதை இவர் ஓர் அதிகாரம் என்கிறார். பல்வேறு அதிகாரங்களையும் வரலாறுகளையும் இவர் அடையாளங் காட்டினார். அதிகாரத்தின் பன்மியத்தை ஃப்பூக்கோ பின்நவீன ஆய்வில் துரிதப்படுத்த உதவினார்.
பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை லக்கானும் முக்கியமானவர். பின்நவீன உளவியலில் இவர் முன்வைத்த படிமம், குறியீடு, யதார்த்தம் போன்றவை முக்கியமானவை.
இவ்வாறான பின்நவீனத்துவ அடிப்படைகள் இது தான் ஆய்வாக வேண்டும் என்றநிலையை மாற்றி எதுவும் ஆய்வாகலாம் என்றும் ஆய்வு என்பது முடிவற்ற தேடல் என்றும்ஆய்வு நடவடிக்கைகளின் புதிய வாசல்களைத் திறந்து வைத்தது.
இந்தப் பின்நவீனத்துவம் 1990களில் தான் தமிழ்ச்சூழலில் - அதுவும் தமிழகத்துக்குள் நுழைந்தது. அப்போதும் சரி. இப்போதும் சரி. இதற்குக் கடுமையான எதிர்ப்பே இருந்து வருகிறது. தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் நிலைப்பதற்கு நிறப்பிரிகை, மேலும் மீட்சி, வித்தியாசம், நிகழ். காலச்சுவடு, உயிர்மை, பன்முகம். கவிதாசரன், அட்சரம், தலித் என ஏராளமான இதழ்கள் தமிழகத்தில் இருந்து வந்தன. ஈழத்தில் மூன்றாவதுமனிதன், பெருவெளி போன்றன குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின. பின்நவீனத்துவத்தை மேற்கின் ஆய்வாளர்களதுபோலப் பிரதிசெய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப அவற்றை இடப்படுத்திப் புரிந்து கொள்வது என்பதே முக்கியமானது. இவ்வாறு இடப்படுத்தி ஆய்வு செய்யும் போது முடிவுகளை விடப் பிரதி பற்றிய மொழிதல்களே முக்கியமானவை.
உலகின் பல்வேறு சிந்தனைப் போக்குகளுடன் தமிழ் மரபுகளின் பல ஆக்கபூர்வமான மாற்றுமரபுகளும் சிறுமரபுகளும் இணைந்து இன்றைய தமிழ்சார்ந்த பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகளை அடையாளம் காட்டுகின்றன.
நிர் - நிர்மாணம் என்ற ஆய்வியல் சிந்தனை தமிழ்ச் சூழலில் பல

ஜீவநதி 43
வாசிப்புக்களை நிகழ்த உதவியுள்ளது. சிலப்பதிகாரம், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்றவற்றின் கருத்தியல்களைப் பூரணச்சந்திரனும், ஆண்டாளை செல்வி திருச்சந்திரன், ராஜ் கெளதமன். ரமேஷ், பிரேம் போன்றோரும் மறுவாசிப்புச் செய்தனர். புதுமைப்பித்தன், மெளனி ஆகியோரின் கதைகளை அ.மார்க்ஸ், சாருநிவேதிதா போன்றவர்கள் பின்நவீனத்துவ தலித்திய சிந்தனையுடன் கட்டவிழ்ப்புச் செய்தனர். கி.ரா, மெளனியை ரமேஷ் பிரேம் மறுவாசிப்புச் செய்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் போன்றவற்றையும் அவர்கள் மறுவாசிப்புச் செய்தனர். சிலப்பதிகாரம், கிராவை க.பஞ்சாங்கம் கட்டவிழ்ப்புச் செய்தார்.
இவ்வாறாக தமிழ் மரபு சார்ந்த இலக்கியத்தில் இருந்து நவீனத்துவ இலக்கியம் ஈறாக பின்னை நவீனத்துவ ஆய்வியல் சிந்தனை பதியத் தொடங்கிய தொடக்கப் புள்ளிகள் ஆய்வியல் மரபியல் புதிய சாத்தியப்பாடுகளை உருவாகவும் புதிய பார்வைகள் உருவாகவும் வழிகோலிற்று எனலாம்.
இதில் சிலவற்றை பதச்சோறாகக் காட்டுவது இதன் சிந்தனை வீச்சை அறிய உதவும். அதாவது, பாரம்பரியப் பார்வைகள் மீது முன்வைக்கப்படும் மாற்றுப் பார்வைகளை புரிந்து கொள்ள உதவும். மதக்கலாசாரம் சார்ந்த பிரதிகளில் பாலியல் பற்றிய அச்சமும் பாலியல் மற்றும் வாழ்வியல் விம்ப நிலைக் கருத்தாங்களுமே அடிப்படை அலகுகளாக அமைந்திருக்கின்றன என இனங்காணும் ராஜ்கெளதமன், ஆண்டாளின் பாடல்களை,
"பருண்மையான ஆண் உடலின் இடத்தில் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பதிவுகள் மூலமாக கல்வியை நிறைவேற்றும் பலத்த உளவியல் செயலை ஆண்டாளின் பாடல்களில் காணலாம்" என்று மறுவாசிப்புச் செய்தார்.
மாலதி மைத்ரிகாரைக்காலம்மையை ஒரு பெண் வரலாற்றுப் புனைவுகளால் பேயாக்கப்படுகின்றாள் என்று இனங்காணுகிறார்.
ஃபூக்கோ கூறிய அறம் என்பது அதிகாரம் என்ற கோட்பாடு தமிழாய்வுச் சூழலில் பல மறுபொருள் கோடல்களுக்கு வழிவகுத்து இருக்கிறது. ராஜ்கெளதமன் எழுதிய 'அறம்/ அதிகாரம் என்ற நூல் இந்த வகையில் முக்கியமானது. இந்த நூலானது சங்க இலக்கியங்கள். சங்கமருவிய கால இலக்கியங்கள், மூவர் தேவாரம், பிற்கால நீதிப்பாடல்கள். தனிப்பாடல்கள் போன்றவற்றில் ஒதப்பட்ட அறங்களை எல்லாம் மறுபொருட் கோடல் செய்கிறது. இதன்மூலம் அறங்களெல்லாம் ஆதிக்கச் சக்திகளின் பச்சையான நலன்களை நிலைக்கச் செய்பவை என்று சொல்லி நிற்கின்றது.
குழந்தைப்பருவம் தொடங்கிப் பலவற்றுக்கும் கண்மூடித்தனமாகப் பழக்கப்பட்டுப்போன நமது சிந்தனாமுறையில் விரிசலை ஏற்படுத்துவது - கட்டவிழ்ப்பைச் செய்வது இந்த வகையான மறுவாசிப்புகளின் நோக்கமாகும். இவ்வாறான ஆய்வுகள், முயற்சிகள். தமிழ் ஆய்வுச் சூழலைப் பலப்படுத்திவருகின்றன. அறுதியிட்ட ஆய்வுமுடிவுகளிலிருந்து விலகி எல்லையற்ற ஆய்வுப் பரப்பில் சஞ்சரிக்கவைக்கத் தமிழ் மனதைத் தூண்டிவிடுகிறது.
பின்நவீனத்துவ நுழைவால் இரண்டு சிந்தனைகள் இன்னும் கிளைத்தன. 1. தலித்தியச் சிந்தனை 2. பெண்ணியச் சிந்தனை

Page 24
ஜீவநதி 44
இரண்டு சிந்தனைகளும் அண்மைக் காலமாக ஆய்வுப் பரப்பில் இன்னும் இன்னும் கவனத்தைக் கோரி மறுவாசிப்புக்களை நிகழ்த்தியும் துரிதப்படுத்தியும் வருகின்றன. இவற்றினால் விளைந்த தமிழ் ஆய்வுச்சூழலின் சாதக - பாதகங்கள் தனியான ஆய்வுக்குரியன.
தமிழில் நுழைந்த பின்நவீனத்துவம் ஆய்வியலில் நிகழ்த்திய மாற்றம் போலவே படைப்புச் செயற்பாட்டிலும் பல மாற்றங்களை நிகழ்த்தியது. புனைகதைகளும், கவிதைகளும் புதிய தடத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. அதேவேளை, பின்னைநவீனத்துவத்தை இடப்படுத்தி விளங்கிக் கொள்ளாத அரைவேக்காட்டுத் தனம் தவறான புரிதல்களுடன் படைப்புச் செயற்பாட்டில் ஈடுபட இடமளித்து இலக்கியச் சூழலை சீரழித்து வருகின்றது. விளங்காது எழுதினாலே பின்நவீனத்துவம் என்ற புரிதல் தமிழ்ச்சூழலில் கவனிக்கப்படவேண்டியதும் கண்டிக்கப்படவேண்டியதும் ஒன்றாகும். புனைகதைகளில் ஆக்கிரமிக்கும் அட்டவணைகளும் கட்டுரைத் தன்மைகளும் வாசக மனங்களுக்கு சலிப்பை ஊட்டுகின்றன. அதேவேளை, கவித்துவம் நிரம்பிய பன்மை வாசிப்புக்கும் - திறந்த வாசிப்புக்கும் இடமளிக்கின்ற புடைப்புக்களும் தமிழ்ச்சூழலில் தோன்றியபடிதான் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தினால் தமிழிலக்கியப் படைப்புச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் தனியான ஆய்வுக்கு உரியன.
இவ்வாறாக, பின்நவீனத்துவம் என்பது மேற்கில் காலாவதியானவை. தமிழில் இப்போதும் அதனால் நிகழும் சில உடைப்புகள் முக்கியமானவை என்பதோடு இது பற்றிய தவறான புரிதல்கள் தமிழிலக்கியச்சூழலைச் சீரழித்து விடும் அபாயம் மிக்கவை என்பதையும் நாம் சேர்த்தே புரிந்துகொள்ளவேண்டும்.000
தெருக்குறள்
மனைவியின் கருகருப்பு புறுபறுப்பை குழந்தையின் குறும்பாகவே நோக்குவார் அறிவாளர்
கணவன் கனவானாய் இல்லாதபோதுதான் பெனி ஆர்ை ஆதிக்கத்தை எதிர்க்கிறாள்
சொற்பநேர இன்பந்தான் சிற்றின்பம் கற்ற விற்பன்னரும் அதையிழக்க சம்மதியார்
முயற்சி பயிற்சி அயாச்சியின்றி இருந்தால் O
உயர்ச்சி உச்சத்தில் இருக்கும் * சகதர்மினியை சகதோழி ஆக்கிக் கொண்டால் ふ/ சுகவாழ்வுக்கு நிகர் இல்லை
வாயாலே கண்டபடி உணினும் உணவே @
நோயாலே வருந்த வைக்கும்
பிச்சைக்காரனுக்கு பத்துவிட்டிலும் சோறு கிடைக்கும் சுருசோறுதான் கிடைக்காது

ஜீவநதி 45 ஈழத்தமிழர் பண்பாட்டின் பழமையை காட்டும் தமிழ்ப் பிராமி வடிவங்கள்!!!
-செ.கிருஸ்ணராஜா மண்ணுக்கும் பண்புக்கும் இடையே என்றுமே மிக நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன. மண்ணுக்குரிய இயல்புகள் பண்புக்குள்ள உள்ளிடாக அமைவதே இயற்கையானது, யதார்த்தமானதும் கூட. இக்காரணத்தினாலேயே மண்ணும் பண்பும் சேர்ந்து "மாண்பு என்ற நிலைப்பாட்டினைத் தோற்றிவித்தது. "மாண்பு என்ற பதம் மனித பண்பு என்ற நிலையில் மானிட நேயத்தினைச் சுட்டி நிற்கின்றது. இதுவே பண்பாடாகும். "பண்பாடு என்பது பாடு அறிந்து ஒழுகுவது எனவும் குறிப்பிடுவர். அவ்வாறு பாடு அறிந்து ஒழுக்கம் பேணி நின்ற தொடர்ச்சியான முயற்சியின் வெளிப்பாடே பண்பாட்டுக் கோலங்கள் என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய பண்பாட்டுக் கோலங்கள் மீண்டும் அன்று அவை பிறப்புக் கொண்ட மண்ணினுள்ளேயே புதைக்கப்பட்டும் விடப்பட்டன. ஏனெனில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவழுவில" என்ற வாழ்க்கையின் நோக்கில் அவை கைவிடப்பட்டனவாகலாம். அவ்வாறு புதையுண்டு போன பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பண்பாட்டு வடிவங்களாக இன்று எமக்கு தமிழ்ப் பிராமி வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. அவை இன்னும் எமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன! அவை எமக்கு ஈழத்தமிழர் பண்பாட்டின் பழமையைக் காட்டும் சான்றாதாரங்கள் ஆகின்றன!!!
பிராமி வடிவங்கள் என்பது ஒருவகையான எழுத்து முறையே. அதாவது கி.மு.3ம் நூற்றாண்டுக்கும் கி.பி.4ம் நூற்றாண்டுக்கும் இடையே உள்ள காலப்பகுதியில் தென்ஆசியா முழுவதிலும் ஒலியன்களைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள் எனலாம். அவை வடஇந்தியாவில் பிரகிருத ஒலியன்களுக்காகவும் (ஹிந்திமொழி உருவாகுவதற்கு முன்னோடியாக அமைந்த மொழி), தென் இந்நியாவில் தமிழ் நாட்டில் தமிழ் ஒலியன்களுக்காகவும், தென் இலங்கையில் பாளி ஒலியன்களுக்காகவும் (சிங்கள மொழி உருவாகுவதற்கு முன்னோடியாக அமைந்த மொழி) பயன்படுத்தப்பட்டிருந்தன. ஈழத்தில் வடஇலங்கையைப் பொறுத்தவரையில் பூநகரியிலிருந்து அதிகளவில் தமிழ் பிராமி வடிவங்கள் பொறுக்கப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இப்பொழுது கந்தரோடையிலிருந்தும் தமிழ் பிராமி வரிவடிவங்கள் கிடைத்த வண்ணமுள்ளன. அவையே எமது பண்பாட்டின் பழமையைக் காட்டும் திட்டவட்டமான சின்னங்களாகவும் உள்ளன.
கந்தரோடையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் பிராமி வரி வடிவங்களும் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெறும் சிறப்பெழுத்தான "ழு" கர ஒலிக்குரிய எழுத்துக்கிடைத்திருப்பது என்பது எமது பழமையை அங்கு நிலைநிறுத்திக் கொள்வதற்கு உதவுவதாக அமைந்துள்ளது. மேலும் "ஈ" கார ஒலிக்குரிய பிராமி வரி வடிவம் தமிழ் நாட்டு, முறையைத் தழுவிய வகையில் கிடைத்திருப்பதும் அங்கு ஈழ என்ற வழக்கு நிலைத்திருந்தமைக்கான சான்றாக கொள்ளவைக்கிறது.
இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் ஆனைக் கோட்டையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட செப்பினாலான முத்திரை மோதிரத்திலிருந்து கோவேதம்

Page 25
ஜீவநதி 46
அல்லது கோவேதன் என்று கொள்ளக்கூடிய தமிழ்ப் பிராமி வாசகம் கிடைத்தது. பூநகரியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றுகளிலிருந்து "வேள்” அல்லது "வேளிர்” என்று கொள்ளக்கூடிய தமிழ்ப் பிராமி வாசகம் கிடைத்தது. கந்தரோடையிலிருந்து மீட்கப்பட்ட சான்றிலிருந்து "குணி என்ற தமிழ் பிராமி வாசகம் கிடைத்தது. ஒரு வேளை பிக்குணி என்ற மணிமேகலையின் நிலையைத் தாங்கிய வாசகமாக அது அமையக்கூடும். இவை எல்லாவற்றையும் இணைத்து நோக்கும் பொழுது மண்ணுக்கும் பண்புக்கும் இடையேயான தொடர்புகள் வெளிப்படுவது போல் உள்ளன. எந்நிலைகளிலும் இப் பிராந்தியத்திற் கிடைக்கின்ற பிராமி வரிவடிவங்கள் ஈழத் தமிழர் பண்பாட்டின் பழமையைக் காட்டும் தமிழ்ப் பிராமி வடிவங்களே.000
புதுப் புனல்
தி.சிவதர்சினி யாழ்.உயர்வதாழில்நுட்ப கல்லூரியில் HNDA கற்கும் 3ம் வருட மாணவி. தும்பளையினை வசிப்பிடமாகக் கொண்டவார் யா/தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியாலயத் திலும் யா/மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் தன் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். கவிதை எழுதுதல், வாசித்தல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடைய இவரை இவருதி அறிமுகம் செய்து வைப்பதில் பெருமை அடைகிறது.
தெய்வங்களே தெருவில் இறங்குக!
கருவறைக்குள்ளே கட்டுரீைடு கிடந்தது போதும்
தெருவுக்கு வாருங்கள் 8о.оoотшоućao கருவறைக்குள்ளேயே 6 கண்மூஜக் கிடந்தாலி வாழ்வோம்
சிதறிய மானுடத்தை சீரமைப்பது யார்? இரத்தமும் சதையும் ஆறாய் ஓடுது கத்தி, கோடரியென வன்முறை வாழுது பஞ்சமா பாதகம் பழகிப்போனது பாரினில் வாழ்க்கை பாழ்பட்டுகிடக்குது மனிதம் இங்கே மரத்துவிட்டது புனிதம் எல்லாமீ புதைகுழி போனது தீபமும் தூபமும் உமக்கு, தீராத வேதனை எமக்கு அபிஷேகமீ, அலங்காரமீ உமக்கு, ඌl6ඨිඛඛ|5, ථlඛlඛල්plf) 6IIDසීල්ප! கடவுளரே ஏன் கலீலானிர்? கருவறைக்குள்ளே இன்னும் தாக்கமா? பூட்டுக்கள் உடைத்து ଗରାଗfi(BJ ଧୋiଏdiffଥ66ଗାଁ பூமியை சாகு முன் தூக்கி நிறுத்துங்கள்
வாழ்க்கை நமக்கானது நீயும் நானும் தூரமல்ல 83f ಜಾಹf 6)ಹTG கோர்த்து நடக்க உறுதி இருந்தாலி 8) 60ආl5 ||5|Dáō! சோர்ந்து போக உனக்கு சொல்லிக் கொடுத்தது யார்? எப்போதும் ஒழுக் கொண்gரு நாளைய சரித்திரமீ நம் பெயர் சொல்லட்டும்
6)ΙΠΙ
 

ஜீவநதி 47 நாம் பல்வேறு குணாம்சங்கள் கொண்டவர்களைச் சந்திக்கிறோம். ஒருவரில் குணங்கள் மிகையாகத் தோன்றும். அவை விரும்பத்தக்கவையாகவுமிருக்கலாம் வெறுக்கக் கூடியவையாகவுமிருக்கலாம். எதுவும் தள்ளி நின்று பார்க்கும் போ இரசிக்கத்தக்கதே. அப்படி நான் இரசித்த சிலரை எண் பேனா உங்கள் முண் நிறுத்துகிறது.
- யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
செர்ணிலாக் குணமுடைெேM
படலை திறக்கும் சத்தங் கேட்கிறது. யார் வந்தாலும் இந்தச் சத்தங் கேட்கும். ஆனால் பொன்னுப்பிள்ளையாச்சி வந்தால் கூடவே அவளுடைய குரலுங்கேட்கும். அங்கிருந்தே ஏதோவொரு விடயத்தைப் பற்றிக் சொல்லிக்கொண்டுதான் வருவாள்.
"ஊர்க்கோழி முட்டையிருக்குதே மரகதவல்லி? உவள் சுலோசனாவின்ரை பெட்டையெல்லே பெரிசாயிட்டாள்
அவள் கூறியது அயலிலுள்ள சகல வீடுகளுக்கும் கேட்டிருக்கும். தன் நிறங்கள் போய்விட்டதனால் பொலிவையிழந்த சேலையொன்றை எவ்வித அக்கறையுமின்றி உடுத்திருந்தாள். வயது எழுபதைத் தாண்டியிருக்குமெனத் தோற்றம் கூறிக்கொண்டிருந்தது. நரை மயிரிடையே ஆங்காக்கே கருமயிர் கலந்துகிடத்தது. பார்வை இங்குமங்கும் சுற்றித் துளாவிக்கொண்டிருந்தது. விழாது மிகுந்திருந்த முன் வரிசைப் பற்கள் அவள் சிரிக்கும் போதும் பேசும் போதும் எட்டிப்பார்த்தன. வாய் சிரித்தாலும் மலராத அவளுடைய முகம் மனதுள் மலர்ச்சியற்றவளோ என எண்ணவைத்தது.
ஆச்சி தனது வீட்டினுள் புகுவது போன்ற ஓர் உரிமையுடன் உள்ளே வந்து சமையலறைக்கு முன்னிருந்த வாராந்தாவில் இருந்து கால்களை நீட்டிக் கொண்டாள். தன் கையாலேயே கால்களை அழுத்தித் தேய்த்தாள்.
"சுலோசனாவின்ரை பெட்ட்ை நேற்றுக் காலமை பெரிய பிள்ளையாயிட்டாள். பள்ளிக்கூடம் போன பிறகுதான் தெரியுமாம் சுலோசனா கச்சேரிக்கு வேலைக்குப் போற அவசரத்திலை பெட்டையை எங்கை கவனிச்சிருக்கப் போறாள்?
மரகதவல்லி எதாவது கூறுவாளென்ற எதிர்பார்ப்போடு பேச்சை நிறுத்தியவளுக்கு சற்று எமாற்றந்தான்.
சாமத்தியச் சடங்கு பெரிசாய்ச் செய்வினம் போலை கிடக்கு மூத்தபிள்ளை யெல்லே. இம்முறையும் பதிலெதுவும் வராது போகவே"உங்களுக்கு விசயந்தெரியுமே? என்று மீண்டும் தொடங்கிய போது குரல் கிசுகிசுத்தது.
"உவன் கந்தசாமியின்ரை பெடியன் ஜேர்மனியிலை வெள்ளைக்காறப் பெட்டை யொண்டைக் கட்டிப்போட்டானாம். இவை விசயத்தை வெளிவிடேல்லை. அமத்திப் போட்டினம். பிள்ளையொண்டு மிருக்காம். அச்சொட்டாய் தாயைப் போலை தானாம்"
மரகதவல்லி எதுவுமே பேசவில்லை. "கொம்மா போடுற வெத்திலைபாக்கிலை கொஞ்சம் தா பிள்ளை. எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு தரமெண்டாலும் வெத்திலை, பாக்குப் போடோணும்.
மரகதவல்லி எடுத்துவந்த வெற்றிலைத் தட்டை வாங்கி வெற்றிலை பாக்குச்சீவல், சுண்ணாம்பு என ஒவ்வொன்றாக எடுக்கும் போது பேச்சுத் தொடர்கிறது.
"கொம்மா போயிலை போடுறேல்லை, என்ன? அ. என்ரை

Page 26
ஜீவநதி 48 வெத்திலைப்பையிக்கை போயிலை கிடக்கு. எனக்கு எப்பன் போயிலையும் போடாட்டா பத்தியப்படாது. இரண்டு வெத்திலை எடுக்கிறன் பிள்ளை"
வெற்றிலைத் தட்டில் ஒரு வெற்றிலையை விட்டுவிட்டு, மிகுதி வெற்றிலைகளையும் கணிசமான பாக்குச் சீவலையும் எடுத்துத் தனது வெற்றிலை பாக்குப் பைக்குள் பொன்னுப்பிள்ளை ஆச்சி வைக்கிறாள்.
"என்ன பிள்ளை பேச்சுப்பறைச்சில்லாமலிருக்கிறாய். வீட்டிலை ஏதும் பிரச்சினையே? "கதைச் சுக் கொண்டிருந்தால் சமையல் முடியாது. பிள்ளையளிர் பள்ளிக்கூடத்தாலை வரப்போகினம் மரகதவல்லியின் பதில்.
"ஒமோம். பள்ளிக்கூடம் விடுகிற நேரமாகுது. உங்கை பார் உவன் சதிசன் சைக்கிளிலை போற போக்கை. பள்ளிக்கூடம் விட அவள் சோபிதா வருவள். இப்ப கொஞ்ச நாளாய் உவை இரண்டுபேரும் உந்தக் குச்சொழுங்கைக்க நிண்டு கதை. உது பிரச்சினையாகப் போதது. நான் எங்கையிருந்து சொன்னனானென்டு பார். அவள் தமக்கைக் காறியைப் பற்றியும் கன கதையள். அதாலை தானே கலியாணம் ஒண்டும் ஒப்பேறாமல் போகுது.
அண்டைக்கும் ஒரு பகுதி என்னட்டைப் பெட்டையைப் பற்றி விசாரிச்சவை. நல்ல பெட்டை வேலைவெட்டி நல்லாய்ச் செய்வளெண்டு சொன்னனான்.
அதுசரி உங்கடை பக்கத்துவிட்டு குஞ்சுவும் புருசன்காரனும் அடிக்கடி கதைவழிப்படுகிறமாதிரிக்கிடக்கு. சத்தஞ்சளார் உங்களுக்குக் கேக்குந்தானே.
என்ன பிள்ளை அடுப்படி வேலை முடியேல்லையே? குஞ்சு ஏதும் சொன்னவளே? என்ன பிரச்சினையாம்? உங்களுக்குச் சொல்லியிருப்பள். மச்சாள்காறியின்ரை சம்மந்தப் பேச்சாலை ஏதோ பிடுங்குப்பாடாம்"
மரகதவல்லி வாசலில் வந்து நின்று ஆச்சியுடன் பேசத்தொடங்கினாள். "சோபிதாவின்ரை அக்காவைப்பற்றிக் கேட்டது சுன்னாகத்திலாக்களோ? "ஒமோம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்குப் போலை "நீங்கள் வேறையொண்டும் சொல்லேல்லையோ?” "என்னை நம்பியெல்லே கேட்டவை. எல்லாக்கதையளையும் மறைக்கக் கூடாதுதானே. ஊரிலை தெரியாதே பெடிச்சியைப் பற்றி அப்பிடியிப்பிடிக் கதைப்பினம். ஆனால் பெட்டை நல்ல பெட்டையெண்டு சொன்னனான்.
"நீங்களேதோ சொல்லித்தான் அது குழம்பினதெண்டு உங்கின கதை "கடவுளே. இதென்ன கதை சொல்லுறாயப் பிள்ளை? நானொண்டும் சொல்லேல்லையணை. உந்த வயிரவரறிய அவளைப் பற்றி நல்லாய்த் தான் சொன்னனான். எந்தக் கோயிலிலையும் கற்பூரமணைச்சுச் சத்தியம் பண்ணுவன் நான் அவளின்ரை கலியாணத்தைக் குளப்பேல்லை."
“என்னவோ கதைக்கினமணை, அதைவிடுநேற்றிரவுஉங்கடை வீட்டுப்பக்கம் சத்தங்கேட்டுது. மகளும் மருமகனும் ஏதோ சண்டையோ?
"அப்பிடியொண்டுமில்லை. வேறையெங்கையும் கேட்டிருக்கும் “உங்கடை மகளின் ரை குரல் எனக்குத் தெரியாதே உங்கடை வீட்டிலையிருந்துதான் கேட்டது.
"அப்பிடியொண்டும் எனக்குத் தெரியேல்லை. அட நானும் கதைச்சுக்கொண்டிருந்திட்டன். பேரன் பள்ளிக்கூடத்தாலை வந்திருப்பன், தாயைச் சமைக்க விடான். நான் போட்டுவாறன்.
ஆச்சி வேகமாக வெளியேறினாள்.000

ஜீவநதி 49
"ஜீவநதி - 1O சிறுகதைச்சிறப்பிதழ்" ஒரு வாசகநிலை நோக்கு
- ஷாத்வீகா இலக்கியச் சிற்றிதழ்கள் காத்திரம் பெறும் போது காலத்துக்குக் காலம் அவற்றில் வெளியான செழுமை மிக்க படைப்புக்கள் தொகுக்கப்படுவது வழமையே. அத்துடன் ஏதோ ஒரு இலக்கிய வகுதியின் தொகுப்புக்களை தனியிதழாக வெளியிடுவதும். யாரோ ஒரு இலக்கிய ஆளுமையை முன்னிறுத்தி சிறப்பிதழ்கள் வெளியிடுவதும் மரபாகி நிலைத்துள்ளது. இந்த வகையில் முதலாண்டைக் கடந்து பயணிக்கும் "ஜீவநதி கலை இலக்கிய இருதிங்கள் இதழ் அண்மையில் தனது 10வது இதழை சிறுகதைச் சிறப்பிதழாக கவனிக்கத் தக்க ஒரு ஆவணமாக்கியுள்ளது.
"தமிழ் நவீனச் சிறுகதைக்கு வயது 93 என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் ப.ஆப்டீன் யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தெணியான், திக்குவல்லை கமால் த.கலாமணி, கெகிறாவ ஸஹானா, சட்டநாதன், தாட்சாயணி, வசந்தி தயாபரன் ஆகிய பத்து சிறுகதையாளர்களின் புனைவுகளுடன் வெளியாகியுள்ள ஜீவநதி ஒரு எழுத்தாளரின் பல சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதி கொடுக்கும் அனுபவத்திலிருந்து வேறுபட்டு. பல்வேறு சிறுகதைப் புனைவு ஆளுமைகளின் அனுபவச் சங்கமமாகியுள்ளமை குறிப்பிடத் தக்க ஒரு அம்சமாகும். ஒவ்வொரு சிறுகதையின் தொடக்க முகப்பிலும் எழுத்தாளரின் புகைப்படமும் அவர் பற்றிய குறிப்பும் இடம் பெறுவது மேலும் பயன்மிக்கதாகவுள்ளது.
நாட்டின் வெவ்வேறு புலங்களில் வெவ்வேறு அனுபவங்களுடன் வாழும் எழுத்தாளர்கள்; மூத்த தலைமுறையிலும் இளைய தலை முறையிலும் எழுதிக் கொண்டிருப்பவர்கள்; பெண் எழுத்தாளர்கள்; ஆண் எழுத்தாளர்கள் என்று பன்மைநிலை பரிமாணங்களில் திகழும் எழுத்தாளர்களின் படைப்புகள் ஒரு சிற்றிதழில் ஒருங்கே வந்துள்ளன.
அடங்கியுள்ள பத்து சிறுகதைகளும் வெவ்வேறு கருக்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்த்துள்ளன. அவற்றை பின்வரும் வகையில் வகைப்படுத்தலாம். 1) சமூக விமர்சனங்களான கதைகள் 2) குழந்தை உளவியலைக் கூறும் கதைகள், 3) மொழிப்பற்று மதசகிப்புத்தன்மை தொடர்பானவை 4) போரின் விளைவான மனித அவலங்களைக் கூறுபவை.
3-gyáb SOA samm-Jaamman ሓመጓጓጭeላ
தெணியான் ஸஹானா. வசந்தி தயாபாரன் திக்கவல்லை கமால் போன்றவர்களின் கதைகள் இந்த வகையில் அடங்குவன. சிறுகதை, நாவல் புனைவுகளில் ஈழத்தில் தவிர்க்கப்பட முடியாத மூத்த எழுத்தாளர் தெணியானின் "மோப்பம் பிடிக்கும்" என்ற சிறுகதை வித்தியாசமானது. தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒருவனுக்கு அந்தஸ்து வந்துவிட்ட போதிலும் அடிப்படையில் செம்பு தண்ணிஎடுப்பதற்கு என்று தனியான ஒரு அந்தஸ்து அவவசியம்

Page 27
ஜீவநதி 50
என்பதை "வாங்கி வளர்த்த பிள்ளை ஒருவனுக்கும் அவன்மீது பற்றுக் கொண்டிருக்கும் ஒரு "அத்தை" என்ற உறவின் தடுமாற்றத்தின் மூலமும், மெல்லிய ஒரு விடலைப்பருவத்து ஊடல்களையும் எதிர்பார்ப்புக்களையும் சூழ்நிலையாகக் கொண்டு கதையை நகர்த்திச் செல்கின்றார் தெணியான்.
கதையில் தெணியானின் மொழியோட்டம், பேசும் பாத்திரங்களின் மனத்து உணர்வுகளின் பிரதிபலிப்பாகி வந்துள்ளது. காதல் இல்லாக் காதலை வெளிப்படுத்திப்பேசும் "சாணை போடப்பட்டதாகவே வளரும் இளசுகளின் உணர்வுகள், அவர்களின் ஊடல்களை கண்டு இன்புறும் அத்தையின் உள்ளத்து உணர்வு வெளிப்பாடுகளாக நீளும் கதையில் நாக்கிலெ குத்துறபச்சைத் தண்ணிகூட உன்னட்டை வாங்கிக் குடிக்க மாட்டன்” என்ற திமிரோடு வருகின்ற அத்தையின் பெரியம்மா ஒரு திருப்பு முனையாகி விடுகிறாள். அவள்தான் கதையின் கருவினை போட்டுடைக்கும் பாத்திரமாக நிற்கின்றாள். வைத்தியராகிவிட்ட வளர்ப்பு பிள்ளையான கண்ணனுக்கும் அத்தையின் மகள் ராதாக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அங்குவரும் பெரியம்மாக்கிழவி அந்த நாளையிலை கண்டி காலியிலை வாங்கி வந்திருந்தால் சிங்களத்தி, சோனகத்தி பெத்த பிள்ளையாக இருக்கும் அல்லது இந்தியாக்காரியின் ரையாகவும் இருக்கலாம். தனக்குப் பிறந்ததையும் விலைக்கு வாங்கினதெண்டு சில ஆம்பிளையஸ் கொண்டு வந்ததும் எனக்குத் தெரியும். அது பறவாயில்லை. இது?. யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியிலை பிறந்தது. யாழ்ப்பாணத்து ஏழை எளிய சாதிதான் பெத்த பிள்ளையை விப்பினம். எங்களின்ரை ஆக்களிலை. ஏழை ஏளியதுகள் இல்லையே அதுகள் ஒருநாளும் பெத்த பிள்ளையை விக்காதுகள். என்று வரும் உரையாடல் முக்கியமானது. இது சிங்களத்தி, சோனகத்தி, இந்தியாக்காரிக்கு பிறந்த பிள்ளையை ஏற்றுக் கொள்ளும் இந்தச் சமுகம் யாழ்ப்பாணத்தில் பெரியாஸ்பத்திரியில் வாங்கிவளர்த்த ஒரு பிள்ளையை திட்டாக கருதும் நிலையை விளக்கி நிற்கின்றது.
யாழ்ப்பாணத்தில் "அத்தை" என்ற உறவின் ஆழத்தை அடிநாதமாக வைத்து, அத்தையின் மகளுக்கும் கண்ணனுக்கும் கண்டும் காணாமல் வளர விடப்பட்ட பிணைப்பு "திருமணம்” என்று வருகின்றபோது அது யாழ்ப்பாணத்து மனோபாவத்துடன் பார்க்கப்படுவது கதையில் சாடப்படுகின்றது.
வசந்தி தயாபரனின் "வாய்ச் சொல்லில்" என்ற கதை தெட்டந்தெட்டமாக சம்பவங்களை பிணைத்து முடிவில் இன்றைய சமூகத்தில் நியமங்கள் பிறழ்ந்து போய்விட்டதை எண்ணி வேதனைப்பட வைக்கின்றது. "மனித வாழ்வின் பெறுமானங்களுக்கு என்ன ஆயிற்று? கால் நூற்றாண்டில் அவையெல்லாம் தலைகீழாக மாறி விட்டனவா?. இல்லையில்லை. மனிதர்கள்தான் மதிப்பிழந்து போய்விட்டார்கள்" என்று கதையின் முடிவில் ஆசிரியர் நுழைந்து இன்றைய சமூகத்தைப்பார்த்து அலுத்துக் கொள்ளும் வரை கதை தொடர்கிறது.
"சத்தியம் செய்தல்" என்ற விழுமியம் ஒரு கால் நூற்றாண்டில் எவ்வாறு தலைகீழாக மாறிவிட்டது என்பதுதான் கதையின் கரு. 25 வருடங்களின் முன் சிறுமியாகத் திரிந்த இடங்களெல்லாம் (கட்டமைப்புக்கள்) மாறிக்கிடப்பதை பார்த்துக் கொண்டு வரும் இளம் சட்ட ஆலோசகர்,
"ஆள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிக்கிடக்கும் கடற்கரை. பீதியும் பகையும் பூசிக்கொண்ட முகங்கள், ஊரடங்குக்குள் தயக்கத்தோடு உதிக்கின்ற

ஜீவநதி
சூரியன்! காலதேவன் களவாடிய இந்த ஊரின் செளந்தரியங்கள் எங்கே?. என்று சஞ்சலப்படுவதும் அதன் பின்னனியாக ஒடும் சிறுபிள்ளைக் கால நினைவினைத் தோய்தல். குடித்துவிட்டுவந்து மாமியுடன் சச்சரவுகொள்ளும் மாமாவிடத்து சத்தியம் கேட்ட சிறுமி அந்தச் சிறுமியின் மழலை அறிவால் ஆட்டங்கண்டு தலையில் அடித்து சத்தியம் செய்துவிட்டு அதற்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய மாமா எங்கே?. அலுவலகத்தில் தான் எங்கே வேண்டுமானாலும் சத்தியம் பண்ணத் தயார் என்று கூறும் பாசாங்கு மனிதர்கள் எங்கே?. 25 வருடகால இடைவெளியில் மாறிப்போய்விட்ட சமூகப் பொருண்மையை துண்டு துண்டுகளாய் சிதறும் வடிவத்தில் கதாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இவரின் சிறுகதை வடிவம் என்பது துண்டாடப்பட்ட வாழ்வின் அனுபவத் துண்டங்களால் தீர்மானமாகி வந்துள்ளது. எனினும் கதையின் கலைத்துவம் மேலும் மெருகு பெற வேண்டியதே.
கெகிறாவஸவுறானாவின் "சாக்கடை மேடையில் ஒரு மாநாடு என்ற படைப்பும் மிகுதியான சமூக விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. படைப்பு பேசாப்பொருளைக் கொண்டு பேச முயல்வது மனித சமுதாயச் சாக்கடையின் துர்நாற்றங்களையே யதார்த்த அதீதமாக நுளம்புகள் கூட்டும் ஒரு மாநாடு இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர்போல அமளிதுமளியாகவும். அரட்டல் பிரட்டலாகவும். வார்த்தைகளே வன்முறைகளாகிவிட்ட தன்மையிலும் நகர்வதே படைப்பு. இறுதியில் மாநாடு முடிந்து நுளம்புகள் வெளியே செல்லும் போது "எங்கே? அதோ அந்த வீதியோரத்தில் உறங்குகின்ற பிச்சைக் காரர்களின் இரத்தத்தைச் சுவைத்துப் பருகத்தான்" என்று நிறைவுறும்போது "மூன்றாம் மண்டல நாடுகளை நாடிவரும் "முதலாம் மண்டல நாடுகள் கண்களுள் விரிகின்றன.
எனினும் இவரது படைப்பில் ஒரு கட்டுரைப்பாங்கு தென்படுகின்றது. வலிந்து கொண்டு வரப்பட்ட படைப்பின் வடிவம் சொல்லவந்த விடயத்துக்கு கைகொடுக்கத் தவறியுள்ளது. அவர் நுளம் பின் வாயால் மனிதனைச் சாடும் இடங்களில் படைப்பாளியின் சூழல்சார் பிரக்ஞைகள் கட்டுரைப் பாங்குடன் வெளிப்படுவது படைப்பின் வழிவரும் உரிப்பொருளை சிதைக்க ஏதுவாகிவிட்டது.
'திக்குவல்லை கமால் நீண்ட அனுபவம் மிக்க எழுத்தாளர் பள்ளிவாசலும் பத்து நபாவும் என்ற இவரின் படைப்பின் வழியே அவர் சொல்ல வந்த சேதி என்ன என்பதை படைப்பின் வடிவம் பாழடித்துவிட்டது. கரீம் காக்காவின் முப்பது வநடத்துக்கு முந்தியநினைவுச் சோகமும் தற்போதைய பெரியமனிசத் தோரணையும் ஒருங்கே வெட்டப்பட்ட இரு துண்டங்களாய் படைப்பில் வந்துள்ளன. எனினும் பள்ளியை நிர்வகிக்கும் ரஸ்ஷ ஒன்றின் பொறுப்பில்லாத் தன்மையை இக்கதை சாடுகின்றது. ஆனால் இப்படைப்பின் மொழி ஸபூர், ஹஸ்ரத், குர்பான். ஸிக்ரு, துஆ, ஜெமாஅத்தினர் என்று தொடரும் எத்தனையோ சாதாரண புரிதலுக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளால் நிறைவதும் உணர்வின் பொதுநிலைத் தொற்றலுக்கு சவாலாக 2-6 T61T).
தேடிக்கை 2ளிலிைெலக் கூரமி கதைகள்
ச. ஈகானர்ஸ் ,கலாமணி ஆகிய படைப்பாளிகளின் கதைகள் இந்த
his ), பன \, ச, புல் நிலையில் முருகானந்தன் வைத்தியர், கலாமணி உளவியல்
துறையையும் கற்பிக்கம் ஒத கல்வியியல் விரிவுரையாளர் தாய் ரTர்க்க தொழில்

Page 28
ஜீவநதி 52 வாண்மையும் இவர்கள் குழந்தைகளின் உளத்தினுள் ஊடுருவிச் செல்ல வழிவகுத்திருக்கும்.
முருகானந்தனின் குழந்தைகள் உலகம் மூன்று சந்ததிகளின் இயல்பு வேறுபாடுகளுக்கு ஊடாக கதை நகர்கிறது. கணவனும் மனைவியுமாக ஒரே பாடசாலையில் கற்பிக்கும் தம்பதிகள் தம் பிள்ளைதான் பேச்சுப் போட்டியில் பரிசு பெறவேண்டும் என எண்ணுவதும், பரிசு பெற்ற இன்னொரு பிள்ளையை நையப்புடைப்பதும், பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை தனக்கு கற்பித்த வள்ளிப்பிள்ளை ரிச்சரின் உயர்வை ஒப்பிட்டு எண்ணுவதும், இறுதியில் பரிசு பெற்ற பிள்ளை (அகல்யா)க்கு ஆசிரியத் தம்பதிகளின் மகன் (பிரவீன்) கண்டோஸ் கொடுத்து மகிழ்வதும் கதையின் உள்ளடக்கம்.
ஒரு குழந்தையின் நடத்தைக் கோலங்களை நன்கு அவதானித்துகதையின் முற்பகுதி படைக்கப்பட்டுள்ளது. பெற்றாருக்கும் பிள்ளைகளுக்குமான ஆர்வ வேறுபாடுகள் தனித்தனி உலகங்களில் அவர்களை தூக்கிப் போட்டுள்ளது என்று காட்டும் கதைஞர் இடையிடையே இன ஒற்றுமை பாடத்துறைத் தெரிவு, தொழில் அந்தஸ்து, தாய்மாரின் கண்டிப்பு என்பவற்றை நாசூக்காக விமர்சனம் செய்கின்றார். கதை முடியும் தறுவாயில் "சில ஆசிரியர்கள் மாணவர்களைப் பாகுபடுத்தி சாதிபேதம், ஏழை - பணக்காரன், கெட்டிக்காரன் - மொக்கன் என்று தரம்பிரித்து கூறுபோட்டு குழந்தை உள்ளங்களையே குரூரமாக்கிட நிற்கிறார்கள்!" என்று சாட்டை வீசவிடுகின்றார். எனினும் பெற்றோரின் மொழியில் வெளிப்படும் இந்தக் கதை குழந்தைகளின் மொழியில் வெளிப்பட்டிருக்குமாயின் இதன் தாக்கு திறன் மேலும் உயர்வாக இருந்திருக்கலாம்.
த.கலாமணி அவர்களின் "பாலித்திட வேண்டுமம்மா." என்ற படைப்பு எவ்வளவுதான் உளவளத்துணைகள், சீர்மியம் என்றெல்லாம் நாம் "பீத்திக் கொண்டாலும் எமது பண்பாட்டின் வழிவந்த நம்பிக்கைகள் சார்ந்த இயல்பு நிலைச் சீர்மிய முறைகளின் வலுவை வெளிப்படுத்தும் படைப்பு. சேந்தன் என்ற ஒரு சிறுவனின் உளத்தாங்கல் மனவடுவாகிப் போய்விடாது தடுக்க உளவியல் அறிவுகொண்ட இலட்சியத் தந்தை ஒருவரும் சாதாரண தாய் ஒருவரும் கையாளும் உபாயங்களே கதையாகியுள்ளது. "நீங்கள் கவுன்சிலர் என்றால் உங்களோடை வைச்சுக் கொள்ளுங்கோ. என்ரை பிள்ளையிலை ஒன்றும் சோதிக்க வேண்டாம். என்ரை பிள்ளையை நான் கவனிச்சுக் கொள்ளுவன்" என்று கூறும் தாய்மைக்கும் உளவளத் துணை வழங்கல் செயற்பாட்டின் பட்டியலைப் போட்டுக் காட்டும் தந்தைக்கும் இடையிலே மயூரன் என்ற கூடப்படிக்கும் பிள்ளையின் விரல்கள் கதவிடுக்கில் தன்னால் தவறுதலாக நெரிக்கப்பட்டதற்காகக் கவலை கொள்ளும் சேந்தனின் நடத்தைக் கோலங்களை உளவியல் துறைசார் அணுகுமுறைகளில் படைப்பாக்கம் செய்துள்ளார் கதைஞர்.
தாய் தன் பிள்ளை பிறருக்காக பரிவு கொண்டு உளத்தாங்கல் படுவதை கவனித்து "அப்பன். நீ தெரியாமல் செய்த பிழை தானே. நாங்கள் எங்கடை பிள்ளையாாருக்கு ஒரு நேர்த்திவைப்பம். மயூரனுக்கு கைவிரல் முறியாமல் பிள்ளையார் காப்பாற்றினார் எண்டால் வாறவெள்ளிக்கிழமை ஒரு பானை பொங்கல் வைப்பம்" என்று கூறி மகனிடம் மனத்துளிர்ப்பை உண்டாக்கும் போதே கதையின் உண்மை புலனாகின்றது. இறுதியில் உளவியல் அறிவில் வல்லுநரான தந்தையார்

ஜீவநதி 58
"பிள்ளையாரப்பா எனக்குள் புகுந்து என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோலிருந்தது என்று முற்றுப் பெற வைக்கின்றார்.
இடையிடையே துறைசார்ந்த கோட்பாட்டு அறிவு கலைப்படைப்பாளியை இடையூறு செய்ய நேர்ந்தாலும் கதையில் படைப்பாளி பாத்திரமாகி நிற்பதும் துறைசார்ந்த வகையிற்றான் என்பதால் அது விமர்சனத்துக்கு அப்பால் சென்றுவிடுகிறது. துறைசார் அறிவு பிரயோக வாழ்வில் ஒருவனுக்கு உண்டாக்கும் "அலைக்கழிவை கதைஞர் சரிவர வெளிப்படுத்தியுள்ளார்.
மொழிப்பர்? முருக்கிபீடித்தன்மை தொடர்பானிலை
யோகேஸ்வரி சிவப்பிரகாசம், ப.ஆப்டீன் இருவரும் நீண்டகால சிறுகதை படைப்பவர்கள். முன்னர் பல படைப்புக்களைத் தந்தவர்கள். யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் “ஏனிந்தப் பெயர்? ஒரு மஜிகல் ரியலிஸ் பாணிக் கதையாகத் தொடங்கி அதன் வலுவை பின்னர் இழந்துவிட்டது. புராணங்கள் கூறும் ஜதிகங்கள் (Myths) மறுவாசிப்பு செய்யப்பட்ட வகையில் பலபடைப்புகள் வந்துள்ளன. எனினும் யோ.சி.யின் படைப்பில் தமிழன்னையும் நாரதரும் ஒன்றாக பூலோகம் வந்து அமெரிக்காவில் வாழும் முறிலங்கா தமிழ்ப் பெண்ணின் மருத்துவ சாதனையை பாராட்ட முனைவதும், அப்பெண் தமிழ் தன் வெள்ளைக்கார கணவனின் சாயலில் தனது பிள்ளை பிறந்தமைக்காக திருப்தி கொள்வதை எண்ணிக் கவலை கொள்வதாகவும் படைக்கப்பட்டுள்ளது.
ஒரு படைப்பின் வடிவம் என்பது இப்படி அமைய வேண்டும் என்று விதிகூறும் உரிமை நயப்பவனுக்கோ விமர்சகனுக்கோ இல்லை. எனினும் கதை தரும் அனுபவத்தை நுகரும் நேரடிப் பயனாளி என்ற வகையில் கதை தரும் உணர்வை கனதியாக வாசகனிடத்தில் தொற்றவைக்கும் வடிவம் தன்னிச்சையாகக் கதையில் இடம்பெறும் போது அது வெற்றி பெறும் யோசியின் கதையில் கதையின் கருவில் உள்ள "சீரியஸ் வடிவத்தால் சிதைகின்றது. இந்தக் கதையை படித்துமுடிக்கும்போது ஆகஸ்ட் 2008 ஞானம்" சஞ்சிகையில் வெளியான தொலையும் முகவரிகள் என்ற புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் கதையின் வடிவத்துடன் ஒப்புநோக்கி பார்க்கும் ஒரு வாசக விமர்சனம்ன நிலை உண்டாகின்றது.
ப.ஆப்டீனின் மனச்சங்கமம் என்ற படைப்பு மதபேதங்கடந்து வாழ்வில் இணைந்த தம்பதிகள் ஒருவர் இன்னொருவர் மீது தலையீடு செய்யாத அன்பான வாழ்க்கை முறையினைச் சித்திரிக்கின்றது. சுமணா. அத்தநாயக்கா, கிச்சிலான், ஆறுமுகம் என திட்டமிடப்பட்ட பெயர்களுடன் பாத்திரங்கள் கதையில் வருகின்றன. மதச்சகிப்புத் தன்மையை தம்பதிகளுக்கிடையே வெளிப்படுத்த இனபேதத்தின் விளைவால் நடைபெறும் பஸ்குண்டு வெடிப்புகள், வெள்ளைவான் கடத்தல்கள் போன்றன களமாக பயன்படுத்தத்தான் வேண்டுமா?. என்பது ஒரு புறமிருக்க கணவன் மனைவி வெவ்வேறு மதானுசாரிகள் என்பது அவர்களின் குடும்பக்களத்தில் எப்படியான முரண்கள் முரணின்மைகளை கொண்டுவரும் என்றுதான் ஒரு வாசக உள்ளம் உடனடியாக சிந்திக்குமே ஒழிய வன்முறைக்கலாசார சூழலில் காணாமல் போதலுக்கும் மதசகிப்புக்கும் இடையிலான தொடர்பினைச் சிந்திக்காது என்பதை கதாசிரியர் சிந்தித்திருக்கவில்லை

Page 29
થ્રીજાઝ 54
Gaിൽ ിഞ്ഞുംീ/മ ഗ്രി, ഷാദ് കത്തം പേ
சட்டநாதன் தாட்சாயணி இவர்கள் இருவரின் கதைகளும் அண்மைக் காலத்து யாழ்ப்பாணத்துச் "சூடுகள்" தரும் அதிர்வலைகளைத் தாங்கியவை. சட்டநாதனின் நினைவுகளில் அவரின் வழமையான கலைத்துவமான படைப்புக்கள் போன்றதே. கதைசொல்லல் உணர்வே ஏற்படாத கதை நகர்த்தும் மொழியாளுமை இதிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. யாழ் நகரத்திலிருந்து திவகத்துக்கு கற்பிக்கச் செல்லும் ஒரு ஆசிரியன் அங்குள்ள மக்களுடனும் தன்னுடன் சேர்ந்து பயணிப்பவர்களுடனும் மனத்தில் நீங்காத உறவாக இணைந்து சமூக உறவாடித்தன் நினைவுகளைப் பதித்துவிட்டு காணாமல் போய்விட்ட நிலையில் உறவுகளின் உணர்வுகள் வெளிப்படும் விதம் படைப்பாக்கப்பட்டுள்ளது. உயிர்ப்பான ஒரு காதல் மெல்லுணர்வும், ஏக்கத்தின் கனதியை உணரவைப்பதாக வந்து போகின்றது. கதையில் வரும் திவகத்து வர்ணனை. திவக பஸ் பயணம், உறவுகளின் நெருக்கம் யாவும் அளந்து நெய்யப்பட்டுள்ளன. எனினும் அருள் என்ற பிரதான பாத்திரமான ஆசிரியர் அபரிமிதமாக பிறருக்கு உதவும் ஒரு மனிதனான சித்திரிக்கப்படுவது, பின்னர் அவனின் இழப்பின் கனதியை அதிகரிக்கச் செய்வ தற்கான கதைஞரின் திட்டமிட்ட செயலாக அமைந்துள்ளது. இயல்பான கலைத்துவ மொழி நடை, காட்சிப் படிமமாக நகரும் சம்பவங்கள், செட்டாக வெளிப்படும் உரையாடல்கள். இவற்றுடன் அல்லைப்பிட்டி கெடுபிடிஸ்தலம் போன்ற புதுவகைப் பிரயோகங்கள் படைப்புடன் வாசகனை பிணைத்துவைக்கின்றன.
இன்றைய இளம் படைப்பாளிகளில் பேசப்படும் படைப்பாளியான தாட்சாயணியின் நாளை இனி யாரோ? என்ற படைப்பு பலியெடுக்கும் ஒரு வேட்பொலி ஒரு தையல்தொழில் செய்யும் இளைஞனின் மனதில் ஏற்படுத்தும் இனம் புரியாத அதிர்வலைகளை வெளிப்படுத்துகின்றது. துப்பாக்கி வேட்டுச் சத்தம் தரும் அதிர்வினால் தன்கையை மெஷின் ஊசியல் தைத்துக்கொள்வதுடன் தொடங்கும் கதை 80களின் நாட்டுச்சூழல், கல்லூரிக்கால கல்வி நாட்டமின்மை, கச்சான் வாங்கித்தந்த அக்காவின் மரணம், குழந்தைகள் பார்த்து நிற்க சுடப்பட்ட ஆண், மனித உரிமை ஆணைக்குழுவில் சரண் புதந்த லட்சுமியம்மாவின் மகன் என்றெல்லாம் நிதர்வனமான அனுபவங்களுடன் முறி என்ற அவனின் மரணபயமும் அதிகரித்துச் செல்வது இயல்பாக படைப்பாக்கப் பட்டுள்ளத. வாசகனை கைபிடித்து அழைத்துச் செல்லும் மொழிநடை, கதைக் கருவிற்கு ஏற்ற கதையின் சுருக்கமான வடிவமைப்பு தாட்சாயணியின் தனித்துவ அடையாளத்துடன் வந்துள்ளது.
இவ் இரு கதைகளும் நிகழ்கால நிதர்சனங்களின் அனுபவங்களாக அமைவதால் அந்த அனுபவம் கதையின் வடிவத்தை இயல்பாக தீர்மானித்திருக்கின்றது. சொல்லப்படும் சேதிகள் எவை? சொல்லப்படக் கூடாத சேதிகள் எவை? என்பது அந்த வடிவத்தை தீர்மானித்துள்ளது.
இவ்வாறு ஜீவநதி கலை இலக்கிய ஏடு ஒரு சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளமை ஒரு சிற்றிதழின் முயற்சியில் நின்று நிலைக்கத்தக்க ஒரு அம்சமாகும். எனினும் இனிவருங்காலத்துமுயற்சியில் கதைத்தேர்வில் கூடிய கவனம் எடுத்து மேலும்பல தொகுதிகளை ஜீவநதி தரும் என எதிர்பார்க்கலாம்.000

ஜீவநதி 55
கலை இலக்கிய நிகழ்வுகள்
1) "அவை கலை இலக்கிய வட்டத்தின் 16 ஆவது ஒன்றுகூடல் அதன் அமைப்பாளர் கலாநிதி த.கலாமணி அவர்களின் இல்லமான அல்வாய் கலை அகத்தில் 2009.01.02 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் "ஜீவநதி சிறுகதைச்சிறப்புமலரின் அறிமுகம் இடம்பெற்றது. இவ்விழாவின் தலைமையினை மூத்த எழுத்தாளர் தெணியான் வகித்தார். மதிப்பீட்டுரைகளை செல்வி.ந.கல்யாணி ஆசிரியை அவர்களும், எழுத்தாளர் கணமகேஸ்வரன் அவர்களும் நிகழ்த்தினர். ஏற்புரையை இதழின் பிரதம ஆசிரியர் க.பரணிதரன் நிகழ்த்தினார்.
பேசும் இதயங்கள்
1) தங்களின் ஜீவநதி சஞ்சிகையை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். வாழ்வே நிச்சயமற்ற விண்முறையான சமூகத்துள் வலிய திணிக்கப்பட்டு குருட்டு அதிகார ஆதிக்க எல்லைக்குள்ளிருந்து வாழ்வின் உடைவுகளை பூக்கச் செய்யும் ஜீவநதிக்கு என் பெருமைக்கு உரிய வணக்கங்கள்.
மேலும் இப்பணி கூர்மையடைந்து உலகளாவிய ரீதியில் ஒடுக்கு முறைக்குட்பட்டிருக்கும் மக்களின் நியாயமான குரலாக வளரவும் வாழ்த்துகினறேன்.
- சண்முகம் சிவகுமார்
கொட்டகல
2) ஐயா. தங்களின் ஜீவநதி சஞ்சிகையை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். அழகிய ஆழமான உள்ளடக்கங்களுடன் வெளிவருகின்றது. யாழில் நிலவும் தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியில் இப்படியொரு இதழ் இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவருவது போற்றக்குரியதாகும். ஜீவசதியின் 10ஆவது இதழைப் பார்த்தவுடன் வியப்படைந்து விட்டேன். ஏனெனில் "சிறுகதைச் சிறப்புமலர் ஒன்றினை வெளியிடுவது என்பது சுலபமான காரியம் அல்ல. இதற்கு முன்னர் ஒரு தடவை தாயகம்" சஞ்சிகையும் "சிறுகதைச் சிறப்பு மலர்” ஒன்றினை வெளியிட்டு இருந்தது. கெக்கிராவ'ஸஹான்ாவின் "சாக்கடை மேடையில் ஒரு மாநாடு யோகேஸ்வரியின் "ஏனிந்தப்பெயர் சிறுகதைகள் வித்தியாசமான முயற்சி ஏனைய கதைகளும் சிறப்பாக இருந்தன.
யாழில் நிலவி வரும் விலையேற்றத்தின் மத்தியில் நீங்கள் வெறும் 50/=
இற்கு இதழை விற்பது மனவருத்தத்தை தருகின்றது. மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும்.
- எஸ்.பார்வதி
யாழ்ப்பாணம்
3) ஜீவநதி அற்புதமாக வருகின்றது. ஜீவநதி மேலும் வளர வாழ்த்துக்கள்.
- கோகுலராகவன்
ymfע#5606,

Page 30
ஜீவநதி 56
அம்சன் ஒளி அகம் SF865u singîunmbUT PIPES, WIRES, BULBS, மற்றும் மிலர்பாக உதிரிப் பொருட்களை பெற்றுக் கொள்ள நாட வேண்டிய இரே இடம்
அந்சன் ஒளி அகந் பிரதான வீதி நெல்லியடி
சன் விக்கி புடைவை மாளிகை
jULDITGOT SHGJGJLigj GugliuJTGOT
ஆடைகளையும் பெற்றுக் கொள்ள நீங்கள் நாட வேண்டிய
କ୍ରୁଞ୍ଚ] ଔhili। சன் விக்கி புடைவை மாளிகை
T.P D50-525-35 圈圈圈圈圈圈圈圈圈圖圈圈圈圈圖圈圈圈■圈圈豎 圖
() O bg TñTÓ) 6ÜPribilgEBUT பிறந்த நாள் நிகழ்வுகள், திருமண வைபவங்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் 3 மற்றும் அனைத்து 4 வைபவங்களுக்கும் வீடியோ KN)
புகைப்படம் பிடித்திடடிஜிற்ரல் அல்பம் தயாரித்திட கணினி துறையில் வீடியோ மிக்சிங் செய்திட பழைய புகைப்படங்களை சீரமைத்திட நாடுங்கள். “bgTf75) briprbtg(BLUT” அணினாசிலையடி நவினிடில் கரணவாய் சந்தை வீதி கரவெட்டி TPD955DD5B
圈
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விபுசீனா என்றபிறைஸ் Vipooshana Enterprises சகல விதமான கைத்தொலை பேசிகளும் ອາມໍມneນໍ திருத்திக் கொருக்கப்பரும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிய கைத்தொலை பேசிகள், பற்றரிகள், சாச்சர்கள் உதிரிபாகங்கள் என்பனவும் மற்றும் வாகனங்களுக்குரிய ரயர்கள், பற்றரிகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள நாடவேண்டிய ஒரே இடம்,
Wipooshana Enterprises
பஸ்நிலையம் முன்பாக
நெல்லியடி.
T.P.- 0.7717664.66 அண்பான வாடிக்கையாளர்களே தங்களின் எதிர்கால நலனிற்காக இன்றே h
ஜிெலிங்கே வீடடுைப்புக் கடன் சிங்கத்தில் அங்கத்தவராகுங்கள் செலிங்கோ வீடமைப்புக் கடன் சங்கத்தின் உன்னதமான சேவைத்திட்டத்தை அனைவரும் பெற்றிட நெல் லியடிகளை தங்கள் அங்கத்தவர் களையும் வாடிக்கையாளர்களையும் அன்புடன் வரவேற்கிறது. வீடு வாங்கல், வீடு கட்டுவதற்கு காணியை வாங்குதல், வீடு ஒன்றைக் கட்ட, வீட்டைத் ருத்த, வீட்டைப் பெரிதாக்கிக் கட்டல் போன்றவற்றை இலங்கையின் எப்பாகத்திலும் குறைந்த வட்டி வீதத்தில் பெற்றுக்கொள்ள அரியதோர் வாய்ப்பாகும். “செலிங்கோ வீடமைப்புக் கடன் சங்கம்"(லிமிட்டெட்) மட்டுமே இலங்கையில் தேசிய வீடமைப்புச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஒரேயெரு தனியார் துறை வீடமைப்பு சங்கமாகும். * 51606 ouT60T 606. L (ANNUAL SUBSCRIPTION BLOCK) g5 5.56sgöl 5606 ouT60T முதலீடுகளுக்கு அதியுயர் பங்குலாபத்தினை வழங்குகிறது. * குறோத் பிளஸ் 5 (Growth plus 5)- “உங்கள் சேமிப்பு உங்களுக்கான இல்லம் தரும்” குறைந்த தொகையாக ரூபா 500/- செலுத்தி அங்கத்தவராவதுடன் தொடர்ச்சியாக 12 மாதங்கள் வைப்பிலிடும் தொகையின் 5மடங்கு வீடமைப்புக்கடன். * லெகஸி பிளஸ் (Legacy Plus) சேமிப்பு முறையானது பரம்பரை சொத்துப்போல் உங்களுக்கும் உங்களை நேசிப்பவருக்கும் எதிர் காலத்தில் 1. வீட்டுக் கடன் 2. இலவச காப்புறுதி 3. பண உறுதிச்சீட்டு (Cash Vouchers)மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது ஆகக்குறைந்த வைப்புத்தொகை1000/- Note; நிலையான, மற்றும் சேமிப்புக்களுக்கான மீளபெறுதல்களுக்கு எவ்வித வரியும்
அறவிடப்படுவதில்லை.
வடிக்கையாளர் சேவைக்காக நெல்லியடியிலும் நாம். தொடர்புகளுக்கு -
யாழ்ப்பாணத்தில்:- இல-12, கண்ணாதிட்டி வீதி, நெல்லியடியில் :- கொடிகாமம் வீதி 教
யாழ்ப்பாணம். நெல்லியடி.
தொலைபேசி :- 02/2422,0712/35.46 O776216057 أصـ

Page 31
கரவெட்டி 021226
 

elliady
22:28, Karaveddy
N