கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2003.01-02

Page 1
பகுத்துண்டு பல்லுப தொகுத்தவற்றுள் எ
 
 

இ 臀 COOC.
பிர் ஒம்புதல் நூலோர் ல்லாம் தலை
- திருவள்ளுவர்

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
~ மகாகவி பாரதி
ஆண்டுச் சந்தா 100/=
வெளியீடு:
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTCALOA. ノ ܢܠ
 

போது - 1 இதழ் - 29
தை - மாசி 2003 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி
போல் சற்குணநாயகம், யேச.
ஆசிரியர்: (Editor) வாகரைவாணன்
நிர்வாகம்: (Management) சி. எம். ஒக்கஸ்
U600ftp6060T: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி: O65 - 23822, O65-22983
E-mail ppccGDdiamond.lanka.net
-
உலகம் பொது விழா
தைப் பொங்கல் - தமிழர்களின் தனிப்பெரும் பாரம்பரிய விழா என்று தம்பட்டம் அடித்தல் நமது வழக்கம். எனினும் - இது போன்ற விழா, உலகின் பல நாடுகளிலும் கொண்டா டப்பட்டமையை வரலாறு உணர்த் தும். உதாரணத்துக்கு யூத மக்களின் முப்பெரும் விழாக்களில் ஒன்றான இவ்விழா "அறுவடை விழா” எனும் பெயரில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கொண்டாடப்பட்டமையை (பழைய ஏற்பாடு விடுதலைப் பயணம் 29/14) இங்கு குறிப்பிடலாம்.
மனித இனம் ஒரளவு நாகரிக மார்க்கத்தில் நடைபோடத் தொடங்கிய பின் பே வெள்ளாமை எனும் பிபிர்த்தொழில் செய்யப்படலாயிற்று. வெள்ளத்தை (நீரினை) தக்க விதத்தில் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஒருவகைப் பயிரே காலகதியில் (ஒரு காரணப் பயிராக) வெள்ளாமை என்று குறிக் கப்பட்டது. இது போன்றே வெள் ளத் தைக் கொணர் டு இப் பயிர் செய்தவர்கள் வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். (வெள்ளத்தை ஆள்பவர்கள் வெள்ளாளர்)
எனவே, வெள்ளாளரின் (வெள்ளாளர் எனும் சொல்லின் திரிபே வேளாளர் என்பதாகும்) இவ்வறுவடை விழாவை (பொங்கல் விழாவை) உலகப் பொதுவிழா என்று சொல்லு

Page 3
தலே உத்தமம். உழவுத் தொழில் பற்றிப் பேசிய ஒல்காப் புகழ் வள்ளுவரும்,
"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை” என்று கூறும்போது "உலகம்' என்றே சுட்டுகின்றார்.
இது போன்றே -
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை, என்று பொங்கல் விழாவின் அடிப்படை நோக்கத்தை அவர் தெளிவுபடுத்தும்போது - நூலோர்’ என்று சொல்லுதல் அவதானத்துக் குரியது.
பொங்கல் எனும் சொல்லுக்கு மிகுதல் என்றும் பொருள். அதாவது, பொங்கல் திருநாளில் நாம் பொங்கிய பொங்கலை நமது உறவினரோடு பகிர்ந்து உண்ணுகின்றோம். இப்பண்பினையே வள்ளுவரும் பகுத்துண்டு என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவை - சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் நாம் கொள்ளுகின்றோம். இவ்வொளி (சூரியன்) வணக்கம் தமிழருக்கு மட்டும் உரியதல்ல. ஏனெனில் இத்தகைய வழிபாடு ஆதியில் கிரேக்கர், உரோமர் முதலான மக்களிடையே இருந்துள்ளமையை வரலாறு நமக்குத் தெரிவிக்கின்றது.
எனவே, பொங்கல் விழா இடத்திற்கேற்ப வேறு வேறு பெயரைப் பூண்டிருந்தாலும் அதனை உலகப் பொதுவிழா என்றே நாம் கொள்ளல்வேண்டும்.
மக்கள் - இனத்தாலும், நாட்டாலும் மாறுபட்டிருந்தாலும் அடிப்படையில் அவர்களது எண்ணங்களும் செயல்களும் ஒரே விதமானவை என்பதற்கு இந்தப் பொங்கல் விழாவும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
அன்புடன் வாகரைவாணனர்.

போரது ஒழிந்து போக
பூசல்கள் மறைந்து போக வேரது விட்டு நிற்கும்
விரோதங்கள் சாய்ந்து போக பாரது வேண்டும் அந்தப்
பரிசுத்த அமைதியோடு காரது ஓடச் செய்யும்
கதிரவன் ஒளியேயாக,
தைத்திருமகளே வா. வா.
தமிழர்கள் வாழ்க்கை தன்னைக் கைத்திடச் செய்யும் தீய
கம்பலை மறையச் செய்வாய் பொய்த்திட வேண்டும் இந்தப்
போரது உலகமெல்லாம் வைத்திடு சட்டமொன்று
வாழ்வது இனிக்கத்தானே!
இனம் மதம் என்னும் பேரால்
இனிய நம் வாழ்க்கை தன்னை கணப்போதுள் கெடுத்துப் போடும்
கயமைகள் மடிய வேண்டும் குணம் மிகு பாவாய் உன்னைக்
கும்பிட்டு வேண்டுகின்றேன் மனமது கெட்டுப்போன
மனிதரை மாற்றுவாயே!
பணமது சிலரின் பக்கம்
பயங்கர வறுமையாலே பிணமென மக்கள் கோடி
பிழைக்கவே வழிகள் இல்லை தனமது பொதுவாய் எங்கும்
தைத்திருமகளே வைப்பாய் தினமுனை வேண்டுகின்றேன்
திருவருள் புரிகுவாயே!
‘தெய்வங்கள்’, ‘சமயம்’ என்று
தினம் சிலர் பணத்தையெல்லாம் அய்யய்யோ அழிக்கின்றாரே
ஆருமே தடுப்பாரில்லை உய்பவர் இதனால் உண்டோ?
உணவின்றி வாடும் மக்கள் வையத்தில் கோடி கோடி
வசந்தமும் வீசுமாமோ?
எச்சிலை பொறுக்கும் மக்கள்
எத்தனை கோடியாமோ? பிச்சைக்கும் வழிகள் இன்றி
பினமெனக் கிடக்கும் போது மிச்சமென்றுணவை இங்கே
வீதியில் கொட்டுகின்றார் இச் செயல் பொறுப்பதில்லை
இதற்கொரு முடிவு கட்டு

Page 4
ZZaz22%z7 4225ZaéasZó
இலங்கைத் தமிழ் மக்கள் மீது பாரம்பரியமாக நடைபெற்று வந்த அடையாள மாற்றங்களின் கொடுரங்களைக் காண வேண்டுமெனில் வடமேல் மாகாணத்துக்குச் செல்ல வேண்டும். புத்தளம், கற்பிட்டி, சிலாபம் ஆகிய பகுதிகள் மிக மிக முக்கியமானவை. 19ம் நூற்றாண்டில் இவை தமிழ்ப் பிரதேசங்களாகவே இருந்துள்ளன. ஆனால் இப்போது மதம் ஒன்றைத் தவிர ஆடை முதல் கல்வி, மொழித்துறை வரை பல விடயங்களில் தமிழ் மரபுகளையும் தழிழையும் மறந்து விட்டார்கள்.
அண்மையில் மேல் மாகாண மக்கள் முன்னணியும் மேல் மாகாணத் தமிழர் கல்வி சபையும் ஏற்பாடு செய்திருந்த வட மேல் மாகாண மக்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு உடப்பில் நடைபெற்ற போது ஒரு பண்பாட்டுப் பயணத்தின் தொடக்கம் என்ற தலைப்பிலான பேராசிரியர் கா. சிவத்தம்பியின் வாழ்த்துரையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் வாழ்த்துரை விபரம் வருமாறு:
இலங்கையின் வட, கிழக்குப் பிரதேசத்திலில் லாத மறக்கப்பட்டுப்போன தமிழ்க் குடியிருப்புக்களை மீளக் கண்டபிடிக்கும் முயற்சியில் மேல் மாகாண மக்கள் முன்னணியும், மேல் மாகாணத் தமிழர் கல்விச் சபையும் காட்டும் ஆர்வத்தில் அரசியல் சமூக, பண்பாட்டு நியாயப்பாடுகள் நிறைய உள்ளன. அரசியல் தேவைகள் ஒரு புறமிருக்க வரலாற்றுப் பண்பாட்டுத் தேவைகளே முக்கியத்தவம் பெறுகின்றன.
இலங்கை முழுவதற்கும் பொதுவாக எழுதப்படும் ஆங்கில, சிங்கள வரலாற்று நூல்களில் மிகப் பெரும்பாலானவற்றில் வட கிழக்குக்கு வெளியே உள்ள தமிழ்க் குடியிருப்புக்கள் பற்றிய குறிப்புக்கள் இல்லையெனும் அளவுக்கு மிகக் குறைவாக உள்ளன. இதனால் மேற்குக் கரையோரப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத் தமிழர்கள் பற்றிய பிரக்ஞை தானும்
4.

இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு இதுவரை வரவில்லை. மலையகத் தமிழர் என்ற தொடர், கரையோரப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களை முற்றிலும் மறந்துவிட்டது. இன்று அவர்கள் மதம் ஒன்றைத் தவிர ஆடை முதல் கல்வி, மொழித்துறை வரை பல விடயங்களில் தமிழ் மரபுகளையும், தமிழையும் மறந்து விட்டார்கள்.
வடமேல் பாகத்திலுள்ள இடப்பெயர்கள் பற்றிய தொகுதி யொன்று தயாரிக்கப்படின் ஏறத்தாழ 60-70 சதவீதமான இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருப்பதை அவதானிக்கலாம்.
வடக்குப் பகுதியின் பெளத்த வரலாற்றுத் தொடர்புகள் காரணமாக அங்குள்ள சில இடங்களில் சிங்கள அடிச் சொற்களிலிருந்து வந்த பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், வடமேல் கரையோரப் பகுதிகளிலோ துர்ய தமிழ்ப் பெயர்களையுடைய கிராமங்களே அதிகம். Ši கொழும்புக்கு மேற்கே உள்ள ஊர்ப் பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.
<ரோசிரியர் கா சிவத்தம்)
19ம் நூற்றாண்டில் இவை தமிழ்ப் பிரதேசங்களாகவே இருந்துள்ளன. இப்பகுதியில் வாழ்ந்த செட்டிமாருடைய தேச வழமை பற்றிய மூலச் சான்று ஒன்றினைப் பேராசிரியர் சி. பத்மநாதன் ஈழத்து தேச வழமைகள் பற்றிய தனது நுாலில் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியாவின் தென்கோடியான துரத்துக்குடியிலிருந்து றோமன் கத்தோலிக்கம், மன்னார் முதல் நீர்கொழும்பு வரை பரவிற்று. இந்த வரலாற்றினை போத்துக்கேயரின் காலம் முதலிருந்தே அவதானிக்கலாம். ஒரே கத்தோலிக்கப் பாதிரியார் தமிழிலும், சிங்களத்திலும் பங்களிப்புச் செய்துள்ளமையை சுவாமி ஜோசப் வாஸ் மூலம் அறிகிறோம். சிங்கள கத்தோலிக்க இலக்கியத்தில் சுவாமி ஜோசப் வாஸ9க்கு பெரும் பங்குண்டு. தமிழ் நூல்கள் பலவும் அவர் எழுதியுள்ளார்.
இப்பிரதேச மக்கள் தமிழையே தமது தாய் மொழியாகக்
கொண்டிருந்தனர். இப்பொழுதும் தமிழை வீட்டு மொழியாகவும்,
சிங்களத்தைச் சமூக மொழியாகவும் கொள்ளுகின்ற பல குடும்பங்களை
நீர்கொழும்பிலும் நீர்கொழும்புக்கு அப்பாலும் காணலாம். இவர்கள் 5

Page 5
தங்களைத் தமிழர்களாகவே கருதி வந்துள்ளனர்.
கத்தோலிக்கத் திருச்சபையின் ஒழுங்கமைப்புக் காரணமாக யாழ்ப்பாணத்துக்கான ஒரு ஆண்டகையை (Bishop) நியமிக்கும் போது, இலங்கையின் மேற்குக் கரையோரமும் அவரின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டது.
சிறிது காலம் செல்ல சிலாபம் பகுதியிலிருந்த குருமார் இந்நிலையை எதிர்த்து சிலாபத்தை மையமாகக் கொண்ட ஒரு மறை வட்டம் தோற்றுவிக்கப்பட வேண்டுமென்றும், இப்பிரதேசம் யாழ்ப்பாண மறைமாவட்டத்திலிருந்து வேறுபட்ட பண்பாட்டினைக் கொண்டதெனவும் வாதிட்டனர். இதனால் இங்கு படிப்படியாக மொழி மாற்றம் ஏற்பட்டது.
முந்திய காலத்தில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமலைக்கு மேலேயுள்ள கடற்கரைப் பிரதேசங்களுக்குச் சென்று மீன் பிடித்து வருவதுடன், அவ்வூர்களைச் சேர்ந்த மக்களுடன் ஒன்று சேர்ந்தது மாத்திரமல்லாமல் தமிழ்ப் பாதிரியாரின் வழிகாட்டலிலேயே மதக் கருமங்களைச் செய்து வந்தனர். வடக்கே சண்டிக்குளம் வரை இந்த மீன்பிடிகாரர்கள் சென்றதுண்டு. வடமேல் மாகாணத்தில் ஏற்பட்ட மொழி மாற்றம் காரணமாக மீன்பிடிக்கான பருவகாலங்களில் வட, கிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற மீன் பிடிகாரர் தமது புதிய அடையாளங்களை நிலைநிறுத்த முயன்றனர்.
பெளத்த-சிங்கள இயக்க முனைப்பு அதிகரிக்கவே கிறிஸ்தவ சிங்களவர்களும் குறிப்பாக கத்தோலிக்க சிங்களவர்களும் தங்கள் அடையாளத்தை வற்புறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் காரண மாக வடமேல் பகுதியில் சிங்கள மயமாக்கம் வெகு வேகமாகப் பரவிற்று.
இது எவ்வாறாயினும் உத்தியோகபூர்வமான இன அடையாளப் பதிவைப் பொறுத்தவரையில் இப்பகுதியிலுள்ள கத்தோலிக்கர்களை பெர்ணான்டோ, பெரேரா போன்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சிங்களவர் என்று பதியும் வழக்கம் இருந்திருக்கவில்லை. இவர்கள் தாங்கள் தூத்துக்குடியிலிருந்து வந்த பரதவர்கள்-பரதர் என்று தம்மை அடையாளம் கண்டு கொண்டனர். இதன் காரணமாகத்தான் 2000இல் நடந்த குடிசன கணக்கெடுப்பின்போது பரதர் என்றவொரு புதிய இனவகைப்பாடு கொண்டு வரப்பட்டது.
6

இந்த மாற்ற அலைகளினால் விழுங்குபடாமல் இருந்த பிரதேசங்கள் இந்தத் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்த பகுதிகளேயாகும். புத்தளம் கற்பிட்டி போன்ற முஸ்லிம் பெரும்பான்மை இடங்கள் தமது இன அடையாளத்தைப் பேணிக் கொண்டன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தொடர்ந்து இந்துக்களாக வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளிலுள்ள தமிழர்களே தங்கள் தமிழ் அடையாளத்தோடு தொடர்ந்து இருக்கக்கூடியதாக இருந்தது.
இந்த விடயத்தில் முன்னேஸ்வரம், உடப்பு, மதுரங்குளி ஆகியவை மிக முக்கியமானவையாகும். முன்னேஸ்வரக் கோயிலின் பழமையும் அங்கு காணப்படும் கல்வெட்டுச் சான்றுகளும் அக்காலத்து சிங்கள அரசர்களின் பண்பாட்டுப் பொருதியுணர்வை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. இலங்கையில் உடப்புக் கிராமம் மிக மிக முக்கியமானதாகும். இப்பகுதியில் திரெளபதி அம்மன் வழிபாடு உண்டு. மட்டக்களப்பிலும் திரெளபதி அம்மன் வழிபாடு உண்டு. ஆனால், யாழ்ப்பாணத்தில் இல்லை. முக்குவ குடியிருப்புக்களின் மேலாண்மை புத்தளம், சிலாபம், மட்டக்களப்புப் பகுதிகளில் உண்டு. இவற்றை நோக்கும் பொழுது வட மேற்குக் கரையோரத் தமிழர்களுக்கும் கிழக்குக் கரையோரத் தமிழர்களுக்குமிடையே நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பு இருந்ததென்பது தெரிய வருகின்றது.
வடமேற்குப் பிரதேசத்திலுள்ள தமிழ்க்கூத்து மரபு பிரசித்த மானதாகும். 1963இல் பேராசிரியர் அ. சின்னத்தம்பி, பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க இப் பிரதேசங்களுக்குரிய மார்க்கண்டன், வாளபிமன் நாடகங்களை நான் பதிப்பித்திருந்தேன்.
இலங்கையின் தமிழ் மொழி வழக்கில் ஆர்வம் காட்டிய பல அறிஞர்கள் அத்தொகுதியினை மிக்க ஆர்வத்தோடு வாசித்தனர். காமில் கரபில், ஏ. கே. ராமானுஜன் போன்றோர் அந்த நூல் பற்றி பெரிதும் ஆர்வம் காட்டினர்.
20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏறத்தாழ 40களிலிருந்து
அப்பிரதேசத்திலுள்ள இந்துப் பண்பாட்டினை தொடர்ச்சியறாது
பேணுவதற்கு உதவியவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெண்கள் 7

Page 6
மருத்துவம், மகப் பேற்றியல் பேராசிரியராக விளங்கிய பேராசிரியர் அ. சின்னத்தம்பி ஆவார். அங்கு பாடசாலை பலவற்றையும் நடத்தினார். பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சின்னத்தம்பி ஆகியோர் அவர்களது உதவியாளராக அப்பகுதிக்குச் சென்ற போது நான் யாழ்ப்பாணக் கடற்கரையோரங்களில் வாழ்பவர்களுக்கும் இங்கு வாழ்பவர்களுக்குமிடையிலிருந்த உறவினை அறிய முடிந்தது.
வல்வெட்டித்துறையைச் சார்ந்த பலருக்கு அங்கு தென்னந் தோட்டக் காணிகள் உண்டு.
இந்த வரலாறுகளெல்லாம் மறக்கப்பட்டு இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களில் பெரும்பான்மையோர் தங்கள் மொழி, இன அடையாளங்களைக் கைவிட்டு நிற்கின்ற இந்த நிலையிலும் சிலர் தங்கள் தமிழ் அடையாளங்களை இழக்காமலிருப்பது மாத்திரமல்லாமல் அவற்றைப் பேணியும் வருகின்றனர்.
இந்தப் பண்பாட்டுப் பேணுகையை இனவாதக் கண்ணோட் டத்திலிருந்து நோக்காமல் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும். ஒரு பண்பாட்டுக் குழுமத்தைச் சார்ந்த மக்கள் தங்கள் அடையாளங்களைப் பேணிக்கொள்வது ஜனநாயக உரிமையாகும். அதுவும் நீண்டகால வரலாற்றுத் தொடர்ச்சியுடைய மக்கள் குழுமத்தினர் தமது மத பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொள்வதற்கு உதவுவது மிக அவசியமாகும். அப் பேணுகையின் முதற் தேவையாக அமைவது அதே பண்பாட்டு வட்டத்தைச் சேர்ந்தவர்களுடனான தொடர்பாடலாகும்.
இன்றைய இந்தச் சந்திப்பு இந்தப் பெரும் பாதையில் வைக்கும் முதல் அடியாக இருக்கட்டும். எந்தப் பெரும் பயணமும் முதலில் ஒரு அடி எடுத்து வைப்பதன் மூலம் தான் தொடங்குகிறது. இந்த உண்மையை மறந்து விடாமல் இருப்பது அவசியம். தூரத்தைக் கண்ட பயமோ, பாதையின் கரடு முரட்டுத் தன்மையோ பயணத்தை நிறுத்திவிடக் கூடாது பயணம் தொடங்கட்டும்; பயணம் வெல்லட்டும்.
(நன்றி - தினக்குரல் 7-2-2003)

நாளை என்ன நடக்கும்? இதுவே, எங்கள் எல்லோர் மனதிலும் எழும் கேள்வியாகவுள்ளது.?
விஞ்ஞான விதிக்கு வித்தியாசமாகத் துடிக்கும் இதயத்துழப்பின் நாதங்களை நாங்கள் எல்லோரும் சிரிப்Uெனும் திரையில் மறைத்தே நாடகமாடுகிறோம்.
எஞ்சியிருக்கும் எங்கள் கனவுகள் எதிர்பார்ப்புப் பற்றி மட்டும் தான்.
சிலர் இரகசியங்களை பரிமாறிக் கொள்கிறார்கள் நடக்கப்போவது என்னவோ..? ஒன்றும் புரியவில்லை.
ஆனால்..?. எல்லோருமே மாயை என்று
மட்டும் புரிகிறது,
எதையாவது தெரிந்து கொள்ள S நினைத்தால் S உள்ளுணர்வு கொள்ளுகிறது. $ ஆனால் Sỳ கனவுகள் மட்டும் இன்னும் 冷 காத்திருக்கின்றன. S
9

Page 7
"றிய வேண்டிய அரிய மனிதர் - 8
Q Q) Q) மைக்கல ஆளுசலோ
“கலை என்பது என்ன என்பதை இவன் வடிக்கப் போகும் சிற்பங்களிலிருந்தும் ஒவியங்களில் இருந்தும் உலகம் அறிவதாக!”
மைக்கெல் ஆஞ்சலோவைப் படைக்கும் போது இறைவன் இப்படி அறிவித்தாக ஒரு நம்பிக்கை உண்டு. உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர் பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை, மைக்கேல் ஏஞ்சலோ தன் தூரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்.
ஆதாமின் பிறப்பு' என்ற இந்த ஒவியம் உலகத்தில் இருக்கும் அத்தனை ஒவியங்களுக்கும் வேதம் மாதிரி. இந்த ஒவியம் இருக்கும் சிஸ்டைன் மாதா கோயிலின் (வாட்டிகன்) மேற்கூரையில் இதைப் போலவே வேறு 340 ஓவியங்கள் உள்ளன. இவற்றை ஒவியங்கள் என்பதைவிட ஒவியங்களின் டிக்ஷனரி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். உட்காரும் போதும், குனியும் போதும், நிமிரும் போதும், ஒடும் போதும் என்று ஒவ்வொரு மனித அசைவுகளையும் துல்லியமாக ரெக்கார்ட் செய்த முதல் கலைஞன் மைக்கல் ஏஞ்சலோ தான். இத்தனைக்கும் மைக்கல் ஏஞ்சலோ அடிப்படையில் ஒவியர் இல்லை - மகா சிற்பி.
15345 ஆணர் டு மைக் கலி ஏஞ்சலோ தனது இருபத்தொன்பதாவது வயதில் செதுக்கிய பதின்மூன்று அடி உயர டேவிட் சிலை, அதுவரை நடைமுறையில் இருந்த சிற்ப இலக்கணங்களையே மாற்றியமைத்தது. அப்போது சர்வ அதிகாரத்தோடு விளங்கிய போப் ஆண்டவரான இரண்டாம் ஜூலியசிடமிருந்து மைக்கல் ஏஞ்சலோவுக்கு சம்மன் வந்தது. சிஸ்டைன் தேவாலயத்தின் சுவர்களிலும் மேற்கூரையிலும் பைபிள் காட்சிகளை ஒவியங்களாகத் தீட்ட போப் ஆண்டவர் ஏஞ்சலோவுக்கு கட்டளை பிறப்பித்தார். "நான் சிற்பி. ஒவியன் இல்லை. என்னை
O
 
 
 
 

விட்டு விடுங்கள்” என்ற ஏஞ்சலோவின் கெஞ்சல் போப் ஆண்டவரின் காதில் விழவில்லை. ஏஞ்சலோ வேண்டாவெறுப்புடன் தான் இந்த வேலையைத் தொடங்கினார்.
சுமார் பத்தாயிரம் சதுர அடியில் ஒவியங்கள் வரையும் மாபெரும் பணியை நான்கு ஐந்து ஒவியர்களை உதவிக்கு வைத்துக் கொண்டு ஏஞ்சலோ ஆரம்பித்தார். அவர் ஒரு முன்கோபி, சுற்றி வளைத்துப் பேசத் தெரியாதவர். அதனால் வேலைக்குச் சேர்ந்த வேகத்திலேயே உதவியாளர்கள் விலகிவிட தேவாலயத்தின் உயர்ந்த உட்கூரைகளில் ஒவியம் வரையும் கஷடமான பணியைத் தனி ஒரு மனிதராகவே ஏஞ்சலோவே செய்தார். மின்சார விளக்குகள் இல்லாத அக்காலத்தில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சாப்பாடு, தூக்கம் என்று எல்லாவற்றையும் மறந்து ஏஞ்சலோ தேவாலயத்தின் விதானத்தில் ஒவியம் தீட்டியபோது தூரிகையில்இருந்து சிதறிய வண்ணங்கள் அவர் கண்களைக் கசக்கி எடுத்தன. இப்படி நான்கு ஆண்டுகள் அவர் இரவு பகலாக உழைக்க சிஸ்டைன் தேவாலயம் உலகின் தலை சிறந்த ஓவியக்கூடமாகவும் மாறியது.
இந்த அற்புதமான இளைஞன் ஒவியனாக இருந்தபோது தான் செதுக்கிய டேவிட் சிலை போல் இறுக்கமான - உருண்டு திரண்ட தசைகளுடன் திடகாத்திரமாக இருந்தார். ஆனால் கடைசிக் காலத்தில் இவர் விசித்திரமான உபாதைகளால் தவித்தார். சாக்ஸைக் கழற்றினால் கால் தோலும் சாக்ஸோடு சேர்ந்து கழன்றது. சரி. சாக்ஸ் -வடிற எதுவுமே வேண்டாம் என்று விட்டால் கால்கள் மரத்துவிடும்.
திருமணம், மனைவி, குழந்தைகள் என்று எதுவுமே பார்க்காத ஏஞ்சலோ 1564ம் ஆண்டு மரணப் படுக்கையில் இருந்தபோது அருகே இருந்த நண்பரிடம் இப்படிச் சொன்னார்.
"நான் இந்த உலகத்திற்கு விட்டுச் செல்வது என்னுடைய படைப்புக்கள் என்ற குழந்தைகள் தான். என்னுடைய குழந்தைகள் என்று சொல்லவே அவற்றுக்குத் தகுதியில்லை என்றாலும்
என்றென்றும் அவற்றிலே நான் வாழ்வேன்.”
jbങ്ങൾ - ഖബ ഉOOO.
11

Page 8
- செல்வி சரிதா -
இன்னும் ஏன் என்னைச் சுரண்டுகிறாய் பட்ட மரம் துளிர் விடாது என்று உனக்குத் தெரியாதா?
நடந்தவை 6ால்லாம் வெறும் கனவுதான் என்று தேற்றிக் கொண்டேன் நீயும் அப்பழயே செய்.
காதல் என்பது ஒவ்வொருவரும் கற்று மறக்க வேண்டிய பாடம்தான் பாறையான எண் இதயத்தை நீர் கசிய வைத்தவனும் நீதான் கசிந்த நீரில் கல்லெறிந்து விட்டுப் போனவனும் நீதான்.
இப்போது நான் ஓர் உணர்ச்சியற்ற மரக்கட்டை தான் மீண்டும் இந்த மரம் துளிர் விடும் என எதிர் பார்க்காதே ஏனென்றால் நீதான் ஏற்கனவே அதன் ஆணிவேரையும் அறித்துவிட்டாயே.
2
 

)。 g Nil u (
அதிகாரம் - 4.
துங்கபத்திரைப் போரில் சோழரிடம் தோல்வியைத் தழுவிய மேலைச் சளுக்கிய மன்னன், ஆகவமல்லன் அந்த அவமானத்தைத் துடைத்தெறியும் நோக்கோடு சோழ நாட்டின் மீது பொர் தொடுக்க ஆயத்தமாகிறான் என்ற செய்தி அடங்கிய ஒலையைக் கங்காசேத்தன் என்பவன் ஊடாக, தனக்கு அனுப்பியதைக் கண்ட, வீரராஜேந்திரன் ஒரு கணம் கோபாவேசம் அடைந்தானாயினும், தனது இராசதந்திரப் போக்குக் கு ஏற்ப உடனடியாகவே பல்லவராயன் என்ற படைத்தளபதியோடு அதுபற்றி நீண்ட மந்திராலோசனையில் ஈடுபட்டான்.
ஓர் இனத்தவரான, சாளுக்கியரை, மேலைச் சாளுக்கியரென்றும், கீழைச்சாளுக்கியரென்றும், நிரந்தரமாகப் பிரித்து வைப்பதன் மூலமே சோழப்பேரரசின் எதிர்கால நன்மைகளை உறுதிப்படுத்த முடியும் என்று எண்ணிய முதலாம் இராசராசன் தனது நாட்டின் தேர் வடக்கே அமைந்திருந்த கீழைச்சாளுக்கிய நாட்டின் அரசன் தானார்வனின் மகன் விமலாதித்தியனைத் தன் மகள் குந்தவிக்குத் திருமணம் செய்து வைத்தான்.
பிற்காலத்தில் தன் தந்தையைப் போலவே, பேரரசனாகத் திகழ்ந்த முதலாம் இராசேந்திர சோழனும் இந்தத் திருமண உறவை வலுப்படுத்த வேண்டும் என்று எண்ணியவனாய் தன் உடன் பிறந்தாள் குந்தவையின் மகன் ராஜராஜ நரேந்திரனுக்குத் தன் மகள் அம்மங்கை தேவியை வாழ்க்கைத் துணைவியாக்கினான்.
இம்மரபை ஒட்டியே இரண்டாம் ராஜேந்திரன் தன் மகள் மதுராந்தகியை அம்மங்கைதேவியின் மகன் விஸ்ணுவர்த்தன் எனும் குலோத்துங்கனோடு திருமண வாழ்க்கையில் ஈடுபட வைத்தான்.
இத்தகைய ஒரு பந்தம் நிலைத்துவிட்ட நிலையில்தான் துங்கபத்திரை ஆற்றின் பக்கமாகச் சோழரோடு நடத்திய களப்போரில்
13

Page 9
தோல்வியுற்ற மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் சோழ நாட்டின்மீது படையெடுக்கத் திட்டுமிட்டு நாளும் குறித்துவிட்டான் என்ற செய்தி வீரராஜேந்திரனுக்கு கிடைத்தது.
படைத்தளபதி பல்லவராயனோடு நடத்திய நீண்ட மந்திராலோச னையை நிறைவு செய்துகொண்ட வீரராஜேந்திரன் ஆகவமல்லனின் அழைப்பை ஏற்று உடனடியாகவே போர் முரசம் கொட்டினான். அந்த வீர முரசம் சோழநாட்டில் மட்டுமன்றி இரண்டு சாளுக்கிய தேசங்களிலும் கர்ணகடுரமாக எதிரொலித்தது.
இதற்கு முன்பு ஆகவமல்லனோடு நடத்திய களப்போரில் அவ்வரசனின் படைத்தளபதிகளான மல்லியண்ணன், வங்காரன், சத்தியாண்ணன், அசோகையன் ஆகிய சேனைத் தளபதிகளையும்,
குறுநில மன்னர்களான சுங்கன், நுளம்பன், காடவர்கோன், வைதும்பராயன் முதலானவர்களையும் கொன்று குவித்ததோடு ஆகவமல்லனின் மனைவியர் உட்பட அரச குடும்பக் கருவூலம், புஸ்பகம் என்ற பெண் யானை, சாளுக்கியவராகக் கொடி, மகர தோரணம், போர் யானைக் கூட்டம், குதிரைகள், முரசங்கள் என்பனவற்றையும் வீரராஜேந்திரன் கைப்பற்றியிருந்தான்.
சோழ மன்னனின் இந்தச் செயலால் சொல்லொணா வேதனையும், கடும் சினமும் அடைந்த ஆகவமல்லன், துங்க பத்திரை ஆற்றின் பக்கமாயுள்ள கரந்தை என்னும் இடத்தில் நேருக்கு நேர் சந்தித்து போரிடும்படி வீர ராஜேந்திரனுக்கு அறைகூவல் விடுத் திருந்தான்.
துங்கபத்திரைக்கு அன்று என்னதான் கோபமோ? அது பொங்கிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது. இரண்டு கரைகளையும் தகர்த்துவிடுவதுபோல, பாய்ந்து சென்ற அந்த நதியைப் போலவே வீரராஜேந்திரன் தலைமையில் யுத்தப் பேரிகை முழங்கிவந்த சோழசைனியமும் துங்கபத்திரையின் பக்கமாக உள்ள கரந்தை என்னும் இடத்தில் ஒன்று திரண்டது.
14
 

மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் குறிப்பிட்டெழுதிய நாளுக்கு முன்பாகவே கரந்தைவெளியில் முகாமிட்ட வீரராஜேந்திரனின் மறவர்கள் ஆகவமல்லனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், சொல்லிய நாளில் மேலுமோர் திங்கள் கடந்தும் மேலைச் சாளுக்கிய மன்னன் அந்தப் பக்கம் எட்டியே பார்க்காததால் ஆத்திரமடைந்த வீரராஜேந்திரன் இரட்டபாடி நோக்கித் தன் படையை நடத்தினான்.
வரலாறுக குறுநாவல இரட்டபாடி என்ற இடைத்துறை நாட்டைக் காத்து நின்ற ஆகவமல்லனின் வீரர்களான தேவநாதன், கீர்த்தி, கேசி என்பவர்கள் சோழர்களின் தலையைக் கண்டதுமே சொல்லாமல் கொள்ளாமல் ஒடி ஒளிந்து கொண்டார்கள். இதனால் எவ்வித எதிர்ப்பும் இன்றி நகரத்துக்குள் புகுந்த சோழர்படை அதனை அக்கினிக்குணவாக்கி ஆரவாரித்ததோடு துங்க பத்திரைக் கரையில் ஒரு வெற்றித்
துணையும் எழுப்பியது.
வெற்றித் தூணை நிறுவிய வீரராஜேந்திரன் ஆகவமல்லன் போல ஒரு பொம்மையைச் செய்து அதன் மார்பில் ஒரு பலகையையும் கட்டி அந்தத் துணில் தொங்கவிட்டபின் வேங்கி நோக்கி வீர நடை பயின்றான்.
வீரராஜேந்திரனின் இந்தப் போர்ப் பயணத்தை விஜயவாடா அருகே மேலைச் சாளுக்கிய வீரர்கள் தடுத்து நிறுத்த தம்மாலானவரை முயன்று பார்த்தார்கள். ஆனால் புலிகளுக்கு முன் நிற்க முடியாது போன பூனைகளான சாளுக்கிய வீரர்கள் சனநாதன், ராசமைய்யன், திப்பராசன் போன்றோரைப் போரில் கண்டதுண்டமாக வெட்டிக் குவித்துவிட்டு சோழர்படை வேங்கி நோக்கி வீறு கொண்டெழுந்தது.
அரசன் வீரராஜேந்திரனின் வரவு கீழைச்சாளுக்கிய நாடு முழுவதையும் அச்சத்தால் உறைய வைத்தது. இதனால் மிக இலகுவாகவே வேங்கி சோழன் கையில் வீழ்ந்தது. இந்த வீழ்ச்சியினால் வெற்றிப் பெருமிதம் அடைந்த சோழர்படை வேங்கியில் புலிக் கொடியைப் பறக்கவிட்டுப் பூரித்து நின்றது.
15

Page 10
வேங்கியைக் கைப்பற்றிய வீரராஜேந்திரன் அதனைத் தன் தந்தையின் உடன் பிறந்தாளான குந்தவ்ையின் கணவன் விமலாதித்தனின் இன்னுமொரு சோழநாட்டு மனைவி பெற்றெடுத்த விஜயாதித்தன் என்பவனுக்கு ஒரு விருதாகவே அளித்து மகிழ்ந்தான்.
இச்சமயத்தில் மேலைச் சாளுக்கிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட பிளவினைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய வீரராஜேந்திரன் அந்நாடு நோக்கிப் படையெடுத்தான். சாளுக்கியரின் கம்பிலி நகரம் தீப்பற்றி எரிந்தது.
கீழைச் சாளுக்கிய நாட்டினைப் போலவே, மேலைச் சாளுக்கிய நாட்டிலும் தனது மேலாண்மையை நிரூபித்துக் காட்டிய வீர ராஜேந்திரன் - உடனடியாகவே தனது போர் முறையை உதறிவிட்டு அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு இராஜதந்திர வழியை நாடினான்.
இவ்வழியின்படி மேழைச்சாளுக்கிய மன்னன், இரண்டாவது சோமேசுவரனின் இளவலும் அவனோடு முரண்பட்டு நின்றவனுமான விக்கிரமாதித்தனுக்கு அரைவாசி நாட்டை அளித்து அதன் யுவராஜனாகவும் பட்டம் சூட்டும்படி சோமேசுவரனை நிர்ப்பந்தித்தான் சோழ மன்னன்.
வீரராஜேந்திரனின் இந்த அரசியல் நிர்ப்பந்தத்திற்கு கட்டுப்பட்ட சோமேசுவரன், விக்கிரமாதித்தனுக்குப் பாதி நாட்டை அளித்ததோடு - அவனை அதன் யுவராஜனாகவும் பிரகடனம் செய்தான்.
சோழமன்னனின் இராஜதந்திரம் இதனோடு மட்டும் நின்றுவிடவில்லை. தன் பாட்டன் முதலாம் ராஜராஜன் தந்தை இராசேந்திரன், தமையன் இரண்டாம் இராசேந்திரன் - போன்று சோழப் பேரரசிற்கு வலுவூட்டும் விதமாகத் தனது மகள் ராஜசுந்தரியை விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்து கொடுக்கும் இராஜதந்திர வழியில் அவன் உடனடியாகவே இறங்கினான்.
வீரராஜேந்திரனின் இந்தச் செயல் - சோழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது. -(இன்னும் வரும்)
16

அணி என்னும் சொல்லுக்குத் தமிழில் ஆபரணம் என்றும் பொருளுண்டு. இயற்கையிலேயே எழில் நலம் வாய்ந்தவளாக ஒரு பெண் இருந்தாலும் அவள் பொன் ஆபரணங்களைப் பூணும் பொழுது அழகு பொலிந்த தேவதையாகவே நோக்கப்படுவாள்.
தமிழ்க் கவிதைப் பெண்ணும் அழகோடு அவதாரமானவளே. எனினும் அவள், உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், சிலேடை முதலான அணிகளைப் பூணும் பொழுது அவள் அழகு ஆயிரம் மடங்காகப் பிரகாசிக்கும்.
தமிழ்க்கவிதை நல்லாளின் அணிகள் முப்பத்தைந்து என தண்டியலங்காரம் என்னும் நூல் எடுத்துக்கூறும்.
‘செய்யுள் அணி’ எனத் தண்டி குறிப்பிட்டாலும், அதனைக் குறிக்க இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் கவிதை என்னும் சொல்லே இக்கட்டுரையில் கையாளப்படுகின்றது. அழகு மிகு அவ்வணிகளில் சில:
உவமையணி:
அழகுமிகு தமிழக்கவிதைப் பெண் மிக விரும்பியணியும் அணி உவமையணியேயாகும். ஒரு பொருளை வேறு ஒரு பொருளோடு இணைத்து அவற்றிடையே ஒப்புவமை காண்பது இவ்வணியே. இணைத்துச் சொல்லப்படும் அவ்விரு பொருள்களுள்ளே ஒப்புவமை அறிவதற்கு எடுத்துக் கொண்ட பொருள் உவமானம் என்றும் அதனால் உவமிக்கப்படும் பொருள் உவமேயம் என்றும் சொல்லப்படும். இவ் வரைவிலக்கணத்தைத் தண்டியலங் காரம் பின் வருமாறு எடுத்துக்துரைக்கும்.
பணிபுந்தொழிலும் பயனுமென்றிவற்றின் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்தொப்புமை தோன்றச் செப்புவதுவமை’
17

Page 11
தண்டியின் உவமையணி, தாங்கி நின்று ஒளிர்விடும் கவிதைப் பெண்ணை பாவேந்தர் பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலும் நாம் சந்திக்கின்றோம்.
அது ஒரு தாமரை பூத்த தடாகம். பாவேந்தருக்கு அதனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தண்ணின் மேல் தன் முகத்தை நிமிர்த்திக் காட்டியபடி தாமரைப்பூக்கள் பல வடிவத்தில் எழில் காட்டுகின்றன. இனிய இக்காட்சியைக் கண்டுகளித்த கவிஞர் தமது இதயம் கனிய இயம்புகின்றார்.
இந்த மலர்களில் சில ஏந்திழை ஒருத்தியின் செய்யவாய் போல் சிந்தையைக் கவர்கின்றன. வேறு சிலவோ அவளது அங்கையாக அசைகின்றன. இன்னுஞ் சில மலர்கள் நீராடுகையில் மேலே தோன்றுகின்ற நேரிழைமாரின் முகம் போல் நெஞ்சில் நிறைகின்றன. முழு மலர்களையும் மொத்தமாக நோக்கின் தண்ணிரில் விளையாடி மகிழும் ஆயிரக்கணக்கான தையலரைப் போலத் தோன்றுகின்றன.
இத்தனை உவமையணிகளையும் கொண்ட பாரதிதாசனின் கவிதைப் பெண் யார் தெரியுமா? இவள் தான்.
வாuப்போலச் சில மலர்கள்!
வா என்றே அழைக்கும் கைபோல்
தூயவை சில மலர்கள்!
தோய்ந்து நீராடி மேலே
பாயும் நன்முகம் போல் நெஞ்சைப்
பறிப்பன சில மலர்கள்!
ஆயிரம் பெண்கள் நீரில்
ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்!
உருவகவணி:
உவமையணியின் முக்கிய கூறுகளான உவமானம் உவமேயம் என்னும் இரண்டுக்குமிடையேயுள்ள வேறுபாட்டைப் போக்குவதே உருவகவணியாகும். இதனைத் தண்டியலங்காரம் இவ்வாறு கூறுகின்றது.
18

“உவமையும் பொருளும் வேற்றுமையொழிவித்தொன்றெனக் காட்டினஃதுருவகமாகும்’.
அரன்மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஆழ்வார்களில் பொய்கையாரும் ஒருவர். இவர் தமக்கு நேர்ந்த இன்னலை நீக்கும் பொருட்டு ஒளிக்கடலான அவ்விறைவனின் திருவடிகளுக்கு உலகினைச் சட்டியாகவும் அதில் ஊற்றப்படும் நெய்யாகக் கடலையும் விளக்காகச் சூரியனையும் கொண்டு ஓர் அழகிய சொல்மாலை படைக்கின்றார்.
ஆழ்வாரின் ஆழ்ந்த பக்தியின் விளைவாக உருவகம் என்னும் அணி பூண்டு ஒளிவீசும் அந்தக் கவிதை மகளை நீங்களும் காண வேண்டாமா?
வையம் தகளியாக வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீக்குகவே என்று'
தற்குறிப்பேற்ற அணி:
ஆற்றல்மிக்க ஒரு புலவனால் தமிழ்க்கவிதைப் பெண்ணுக்கு அணிவிக்கப்படும் அணிகளில் இதுவும் ஒன்று. இயற்கையின் செயல் மீது கவிஞன் தான் கருதிய இயல்பான ஒன்றினை ஏற்றிச் சொல்வதே தற்குறிப்பேற்ற அணி எனப்படும். இதனை
பெயர் பொருளல் பொருளென விரு பொருளினும்
இயல்பின் வினை திறனன்றி யயலொன்று என்று குறிப்பிடுகிறார் தண்டியாசிரியர்.
புகழேந் தரிப் புலவர், இவ் வணி புனைபவர்களில் குறிப்பிடத்தக்கவர். தாம் பாடிய நளவெண்பாவில் தமிழக்கவிதை நல்லாளுக்கு இவ்வணியைப் பல சந்தர்ப்பங்களில் அணிந்து மகிழ்கிறார்.
புட்கரனோடு சூதாடி தன் பொன்னாட்டையும் இழந்த நளன், மனைவி தமயந்தியோடு காடு செல்கிறான். அங்கு விதி
விளையாடுகிறது. கானகத்திலே காரிருள் வேளையிலே ஒரு பாழ் 19

Page 12
மண்டபத்தில் படுத்துறங்குகின்றான, இடையில் கண்விழித்துக்கொண்ட அவன் இரவென்றும் பாராது தன் மனைவியை விட்டுட் பிரிந்து செல்கின்றான். அருகில் கணவன் இல்லாததை அறிந்து தமயந்தி கதறுகிறாள், கண்ணிர் வடிக்கிறாள்.
எனறோ நடந்த இக்கதையைப் பாடிக் கொண்டிருந்த புகழேந்தியாருக்கு இக்கட்டத்தில் கண்டிப்பாக இதயம் கசிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் கோழிகள் கூட இக்கோதை நல்லாளின் துயர்கண்டு தரியாது தம் சிறகாகிய கைகளால் வயிற்றிலடித்தபடி சூரியனைப் பார்த்து குதிரைகள் பூட்டிய தேரின் மீதேறி விரைந்து வா என்று கூப்பிடுவதுபோல கூவுகின்றன என்கிறார்.
தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள் வாய்-வெய்யோனை வாவு பரித்தேரேறி வாவென்றழைப்பன போற் கூவினவே கோழிக்குலம்
சிலேடையணி:
நாயக்கர் காலப்பகுதியில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் நம் தமிழ்க் கவிதைப் பெண் ணுக்குச் சூட்டி மகிழ்ந்த அணி அலங்காரங்களில் சிலேடையணி சிறப்பான இடத்தைப் பெறுகிறது. “ஆசுகவியால் அகில உலகமெங்கும் வீசு புகழ் காளமேகம்” என்று பாராட்டப்பட்ட காளமேகப் புலவர் அவ்வணி செய்பவர்களில் இணையற்றவராவார்.
விசமுடைய பாம்பு, நாம் பெரிதும் விம்பியுண்ணும் வாழைப்பழத்திற்கு ஒப்பானது என்று ஒரு போடு போடுகிறார் காளமேப் புலவர். எப்படி? அவரே சொல்லுகிறார்
பாம்பு விசத்தையுடைய ஒரு படைப்பு. இது தோலை உரிக்கும் இறைவனின் சடை முடி மீது இருக்கும். கொடிய கோபத்தோடு இருக்கும் போது யாரையாவது கொத்திவிடுமானால் அந்த மனிதனுக்கு மரணம் எனும் பரிசு நிச்சயமாகக் கிடைத்துவிடும்.
நன்றாகக் கனிந்திருக்கும் போது வாழைப்பழமும் மேல் தோல் உரித்து உண்ணப்படும் பஞ்சாமிர்தமாகக் கலந்து பரம் பொருளாகிய 20

சிவனின் முடிமீது அபிஷேகப் பொருளாக வைக்கப்படும். பசி மிக்க நேரத்தில் மனிதர்களின் பல்லில் அது படுமானால் வயிற்றினுள்ளே செல்லுமே தவிர வெளியே திரும்பி வராது.
இந்தவகையில் பாம்பு வாழைப்பழத்தை ஒக்கும் என்றுரைக்கும் புலவரின் சிலேடையணி பூண்ட செந் தமிழ்க் கவிதைப் பெண் இவள் தான.
நஞ்சிருக்கும், தோலுரிக்கும் நாதர் முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது, விஞ்சமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு ஆகும் வாழைப்பழம்.
குறித்ததோர் ஒழுங்கிற்கமைய தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தமிழ்க்கவிதைப் பெண் இந் நால்வகை அணிகளைப் பூண்டிருக்கும் போதே இத்தனை அழகரசியாக விளங்குவாளேயானால் அவளுக்குரிய முப்பத்தைந்து அணிவகைகளையும் அணிந்து கொண்டால் அவளோர் அழகுப் பிம்பமாகவே இருப்பாள் என்பதில் ஐயமில்லை.
இருந்தும், வரம்பு மீறாத வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இவ்வனிதையைக் கர்நாடகம் என ஒதுக்கிவிட்டு மேலை நாட்டு இலக்கிய நாகரிக மினுமினுப்போடு நடைபோடும் புதுக்கவிதை என்னும் பெண்ணும் , தன்னையறியாமலே உவமை, உருவகம் எனும் அணிகளைப் பூணுவதைப் பார்க்கும்போது இவ்வணிகளெல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை என்பதை நாம் கண்டுணர்ந்து கொள்ளலாமன்றோ?
தமிழ் மொழி நல்லதொரு மொழி. ஆனால் ஆங்கிலமோ அதைவிட நல்லது. அது ஒரு தொழில்நுட்ப
மொழி. குழந்தைக்குத் தாய் மொழி அறிவு அவசியமே. ஆனால் அவன் வளரவளர
உலகப்பொதுமொழியான ஆங்கிலத்தின் அறிவே அவனுக்கு அதிகம் தேவை. எமது வாழ்வு முப்பது
இலட்சம் தமிழ் மக்களுடன் முடிந்துவிடப் போவதில்லை. அது உலகம் முழுவதும் உள்ள அறுநூறு
மில்லியன் மக்களுடனும் தொடர்பு கொண்டது. அண்மையில் யு.என்.எ.ஸிஃகோ வெளியிட்டுள்ள
அறிக்கையொன்றில் அறிந்துகொண்டிருக்கும் மொழிகளில் ஒன்றாக தமிழும் குறிப்பிடப்பட்டுள்ளது. (பேராசிரியர் மா சே மூக்கையா. 30-1-2002 தினக்குரல்)
21

Page 13
கேட்டேன்
- கம்பதாசன் - வாழ்க்கை என்றால் என்ன வென்றேன் வசந்தம், புயல் இரண்டும் என்றான் யாக்கை என்றால் என்ன வென்றேன் யாசகன் உன் மூட்டை என்றான்.
நித்திரை என்றால் என்ன வென்றேன்
நிச்சயம் மரணத்தின் ஒத்திகை என்றான்
வித்துவம் என்றால் என்ன வென்றேன்
வெளிச்சமும் இருளும் கலந்த தென்றான்.
அன்பு என்றால் என்ன வென்றேன்
அர்த்தம் நூறு அதற் கென்றான்
இன்பம் என்றால் என்ன வென்றேன் இதுவும் வகைகள் பல என்றான்.
மனம் என்றால் என்ன வென்றேன்
மர்மம் வளங்க முடியா தென்றான்
பணம் என்றால் என்ன வென்றேன்
படைத்தவனுக்கு அடுத்த தென்றான்.
தெய்வம் என்றால் என்ன வென்றேன்
தெரிந்தது, தெரியாதது இரண்டும் என்றால்
பொய் என்றால் என்ன வென்றேன்
"போல’ என்பதன் பொருள் என்றான்.
22

மனைவி என்றால் என்ன வென்றேன்
மங்கலம், அமங்கலம் இரண்டும் என்றான்
கனவு என்றால் என்ன வென்றேன்
கானும் உலக வாழ்க்கை என்றான்.
அழகு என்றால் என்ன வென்றேன்
அவரவர் மனத்தின் ரசனை என்றான்
இழவு என்றால் என்ன வென்றேன்
இதுதான் வாழ்க்கையின் நிஜம் என்றான்.
இனம் என்றால் என்ன வென்றேன்
இருப்பது ஒன்று, வேறில்லை என்றான்
குணம் என்றால் என்ன வென்றேன்
குறையும் நிறையும் கொண்ட தென்றான்.
புகழ் என்றால் என்ன வென்றேன்
போதைப் பொருளில் ஒன்று என்றான்
இகழ் என்றால் என்ன வென்றேன்
எண்ணங்களில் தாழ்தல் என்றான்.
நட்பு என்றால் என்ன வென்றேன்
நல்ல மனிதரின் உறவு என்றான்
கற்பு என்றால் என்ன வென்றேன்
கற்றல் உயர்ந்த பண்பு என்றான்.
23

Page 14
மதக நாட்டு மன்னன் அசோகனால் பெளத்தத்தைத் தழுவிக் கொண்ட ஈழநாட்டு அரசன் தேவநம்பிய தீசனின் இளவல் அசேலன் அனுராதபுரத்தில் அந்தாணி மண்டபத்தில் அரசனாக வீற்றிருக்கின்றான். அவ்வமயம் தமிழ்நாட்டு சோழ வம்சத்தைச் சேர்ந்த எல்லாளன் எனும் தமிழ் மறவன் ஒரு பெரும் படையோடு ஈழத்தின் வடக்கில் உள்ள மாந்தோட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்குகிறான். இருசேனைகளும் ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றன. இரத்தக் கடல் பெருக்கெடுக்கின்றது. ஈற்றில் எல்லாளன் வாளுக்கு அசேலன் இரையாகின்றான். ஈழத்தின் வரலாற்றில் முதல் தடவையாக அனுராதபுரத்தில் சோழப்பரம்பரையின் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது.
அனுராதபுரத்தில் சேனன், குத்திகன் எனும் தமிழ் வீரர்களின் ஆட்சி நடந்தேறிய பிறகு எல்லாளன் எல்லோரும் போற்றும் வண்ணம் நீதி வழி நின்று அரசு செய்கின்றான். அதேவேளை, மகாவலிகங்கையின் மறுகரையில் மாகமையில் தேவநம்பிய தீசனின் இன்னுமொரு உடன்பிறப்பு மகாநாகனின் கொள்ளுப் பேரன் காகவண்ணதீசனின் பெளத்த சிங்கள ஆட்சி நடைபெறுகின்றது.
பிளவுபட்டுக் கிடந்த உருகுணையைப் பெரிதும் முயன்று ஒன்றுபடுத்தி அதனை ஓர் ராச்சியமாக்கி மாகமையில் இருந்து அரசு செய்யும் மன்னன் காகவண்ணதீசன், கல்யாணியின் அரசன் மகள் விகாரமாதேவியைத் தன் பட்டத்துராணியாகக் கொண்டிருதான்.
ஈழத்தின் ஒரு பக்கம் தமிழரசும் இன்னுமொரு பக்கம் சிங்கள
அரசும் செங்கோலோச்சினாலும் இரண்டு அரசுக்குமிடையே எவ்வித
பிணக்குகளும் ஏற்படாமைக்கு காகவண்ண தீசனும் எல்லாளனும்
கடைப்பிடித்த இராஜதந்திரமே காரணம் என்பதைக் குடிமக்கள்
நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். ஆனால், நீண்டகாலத்திற்கு இந்த
ராஜதந்திரம் நிலைநிற்கப்போவதில்லை என்பதைக் காகவண்ணதிசனின் 24
 

மூத்த மைந்தன் காமினி அபயனின் எண்ணங்களும் செயல்களும் எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தன.
மாகமை அரசனின் மைந்தன் காமினி அபயன் ஈழம் முழுவதையும் சிங்களப் பேரினமே கட்டியாள வேண்டும் என்னும் கனவில் நிலைத்துப் போகின்றான். இந்தக் கனவை எப்படியும் நனவாக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்தில் இரகசியமாகவே வீரர்படை ஒன்றை உருவாக்குகின்றான். மகாவலிகங்கைக் கரையை எல்லையாகக் கொண்ட உருகுணையை மட்டும் தன் தந்தை ஆள்வதை அடியோடு வெறுத்த காமினி அபயன் தன் உள்ளக்கிடக்கையை அரசனிடம் ஒரு நாள் வெளியிட்டபோது அவன் அதிர்ந்து போனான்.
(வரலாற்றுச் சிறுகதை )
தன் மகன் காமினி அபயன் சிறுவனாக இருந்தபோது தான் குறிப்பிட்ட மூன்று கட்டளைகளில் ஒன்றான தமிழரோடு பொருதுவதில்லை எனும் கட்டளையை அவன் ஏற்க மறுத்தமையை இப்போது எண்ணிப்பார்த்த அரசன் இரண்டு இனங்களுக்குமிடையே இருந்து வரும் நல்லுறவை எதிர்காலத்தில் கெடுத்து விடுவானோ என்ற ஐயம் அவன் மனதில் மீண்டும் எழவே அவன் உள்ளம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போகின்றது.
தமிழ் மன்னன் எல்லாளனோடு பொருதும் தனது திட்டத்தை தந்தை எதிர்த்ததினால் கடும் சினம் உற்ற காமினி அபயன் மாகமையைவிட்டு மலைப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டு அரசனைக் கேலி செய்யும் பாங்கில் பெண்கள் அணியும் ஆபரணங்களை அவனுக்கு அனுப்பி வைத்தான். காமினி அபயனின் இவ்விழி செயல் அவனுக்குத் துட்டன் எனும் பட்டத்தை மக்களிடமிருந்து பெற்றுக்கொடுத்தது.
மலைப்பகுதியில் மறைந்து வாழ்ந்த காமினி அபயனின் காலம் வீணாகக் கழியவில்லை. தனது கனவை நனவாக்கும் விதத்தில் தான் உருவாக்கிய படையினருக்கு கரந்து நின்று பகைவரைத் தாக்கும் போர்ப் பயிற்சிகளை அளித்துக் கொண்டிருந்தான். இவனது இந்தப் போர் நடவடிக்கைகளுக்கு மலைப்பகுதி ஒரு நல்ல அரணாகவே வாய்த்தது.
மைந்தனின் மலைவாழ்க்கை அவனது அன்னை விகாரமாதேவிக்கு
பெரும் வேதனையை உண்டு பண்ணினாலும் அவனது போருக்கான
ஆயத்தங்கள் குறித்து அவளுக்கு மகிழ்ச்சியே ஏற்பட்டது. தன் 25

Page 15
கணவனைப்போல ஒரு சிற்றரசனாக இருப்பதைவிட, ஈழத்தின் ஏக மன்னனாகத் தன் மைந்தன் மகுடம் குடுவதையே விரும்பிய விகாரமாதேவி அவனை மானசீகமாக ஆசீர்வதித்தாள்.
பல்லாண்டுகள் உருகுணையைக் கட்டியாண்ட காகவண்ணதீசனின் வயோதிபம், அவனுக்கு அந்திமத்தைத் தருகின்றது. அரசனின் மறைவு கேட்ட அவனது இளைய மகன் சதாதீசன், உருகுணையின் இன்னுமொரு ராசதானியான தீகவாபியில் இருந்து மாகமைக்கு விரைந்து வந்து, தாய் விகாரமாதேவியுடன் பட்டத்து யானை ‘கந்துல’வையும் தனது தலைநகருக்குக் கொண்டு செல்கின்றான்.
e22/2227
தனது பின்னோனின் இச்செயல் காமினி அபயனின் உள்ளத்தில் பெரும் கோபக்கனலை மூட்டிவிடவே, மாகமைக்கு உடனடியாகத் திரும்பிய அவன் உருகுணையின் மன்னனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டு தாயையும், பட்டத்து யானையையும் தன்னிடம் அனுப்பி வைக்கும்படி தம்பி தீசனுக்கு செய்தி விடுக்கின்றான். ஆனால், சதாதிசனோ தமையனின் கட்டளைக்கு அடிபணிய மறுக்கிறான். இதனால் இருவருக்குமிடையே சண்டை மூள்கிறது.
சகோதர யுத்தத்தை விரும்பாத சங்கத்தினர் உடனடியாக இச்சச்சரவில் தலையிட்டு இருவருக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்துகின்றனர். தாய் விகாரமாதேவி, பட்டத்து யானையுடன் மாகமைக்குத் திரும்புகிறாள். இளவரசன் சதாதீசன் தீகவாபியில் காமினி அபயனின் இராஜப்பிரதிநிதியாகப் பரிபாலனம் செய்யலானான்.
உருகுணையின் அரசனாக மகுடம் சூடிக்கொண்ட காமினி அபயன் உடனடியாகவே தனது போருக்கான ஆயத்தங்களில் துரிதமாக இறங்கலானான். அவனது இந்த முஸ்தீபுகளுக்கு இளவரசன் சதாதீசன், தளபதிகள் நந்தமித்ர அபயன், புஸ்ஸதேவ ஆகியோர் பக்கபலமாக இருந்தாலும் அவன் மனதில் ஒரு பெரும் கேள்வி எழவே செய்தது.
‘எல்லோரும் போற்றும் வண்ணம் அரசு செய்யும் எல்லாளனை
நான் எதிர்த்துப் போர் செய்வதை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்
கொள்வார்களா? என்ற இந்தக் கேள்வி அவன் மனத்தில் எழுந்தபோது
சில தினங்களுக்கு முன் இராசதானி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஓர் 26

நிகழ்வு அவன் மனக்கண்முன் விரிகின்றது.
அனுராதபுரத்தில் எல்லாளனின் அரண்மனை சோழர்களுக்கே உரிய கலை வண்ணத்தோடு காட்சி தருகின்றது. அங்கே அந்த அரண்மனை வாயிலில் ஒரு பெரிய ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருக்கிறது. ஒரு நாள். யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த மணியின் கயிற்றை ஒரு பெற்றம் தன் வாயில் கவ்வி இழுத்து அசைக்கின்றது. மணிச்சத்தம் கேட்டு வெளியே வந்த மன்னனும் அமைச்சர்களும் திகைத்துப் போகின்றனர்.
அரசன், காரணம் அறிய அமைச்சரவையை அவசரமாகக் கூட்டுகிறான். தலைமை அமைச்சர் எழுந்து தக்கவிதமாக நிகழ்ந்ததைச் சோழனிடம் எடுத்துக்கூறுகின்றான். எல்லாளன் நிலை தர்மசங்கடமா கின்றது. ஆனாலும் அவன் தயங்காது தாய்ப்பசு அனுபவிக்கும் துயரத்தை இந்நாட்டு மன்னனும் அனுபவிப்பதே தர்மம், நீதி என்று அறிவிக்கிறான்.
அரசனின் அறிவிப்புக் கேட்டு ஈழதேசம் முழுவதுமே அதிர்ந்து போகின்றது. என்றாலும் நீதி நிலைநாட்டப்படுகின்றது.
எல்லாளன் ஆட்சியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை மனத்தில் அசைபோட்ட காமினி அபயன் அதிலிருந்து தன்னை உடனடியாக விடுவித்துக்கொண்டு தனது போர் நடவடிக்கைகளில் மூழ்கிப் போகிறான்.
உருகுணை மன்னனின் இந்தப் போர் முனைப்புகள் பற்றிக் கேள்வியுற்ற அனுராதபுரத்து மன்னன் எல்லாளன் தனது முதுமைப் பருவத்தைப் பற்றிக்கூடச் சிந்தியாது, இளமையும் ஆற்றலும் மிக்க துட்டகாமினி அபயனை தானைத்தளபதி சத்தன் தலைமையில் மகியங்கனையில் எதிர்கொண்டான்.
மாகமையில் இருந்து வடக்கு நோக்கி ஒரு சமுத்திரம் போல எழுந்த காமினி அபயனின் சிங்கள வீரர் சேனை, மகியங்கணையில் தமிழர்படையை எதிர்த்துச் துவம்சம் செய்தது. தமிழரின் தோல்வியால் தலைகால் புரியாமல் நடந்து கொண்ட காமினி சேனை, தளபதி நந்தமித்த அபயன் தலைமையில் மகியங்கனையில் இருந்து முன்னேறி, அந்திரசொப்ப, நானிசொப்ப, கச்சதீர்த்தம், கொட்டநகரம், நந்திக்கிராமம் ஆகிய ஊர்களில் திரண்ட தமிழர்களைத் தாக்கி இறுதியாக விசித்திரபுர என்னும் இடத்தில் எல்லாளன் படையை முறியடித்து அனுராதபுரம் நோக்கி
27

Page 16
வெற்றிமுழக்கமிட்டது.
மாகமையில் இருந்து புறப்பட்ட இந்த ஓராண்டு காலத்தில் தனக்குக் கிடைத்த பெரு வெற்றியினால் ஒருவித வீராப்புடன் தனது பட்டத்து யானை கந்துலவில் ஆரோகணித்திருந்த காமினி அபயன் நகரத்தின் தெற்கு வாயிலுக்கு அண்மையில் எல்லாளனோடு தனித்துப் போரிட்டான்.
நீண்ட நேரம் மிகக் கடுமையாக நடந்த இந்த வாட்போரில், இளமை மிக்க காமினி அபயனுக்கு ஈடுகொடுத்து நின்ற எல்லாளன், இறுதியில் தன் வயோதிபம் காரணமாக தளர்ந்து களத்தில் சாய்ந்தான்.
களத்தில் உயிரற்றுக்கிடந்த எல்லாளன் உடலை அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்ற காமினி அபயன் அதனை மிகுந்த மரியாதையோடு எரியூட்டிவிட்டுத் தனது மக்களுக்குச் சற்றுத் தழுதழுத்த குரலில் சொன்னான்.
“நீதி வழி நின்று ஆட்சி செய்த எல்லாளன் நினைவாக இதில் ஒரு சைத்தியம் நிறுவப்படும். அத்துாபியின் முன்னால் செல்லும் அரசர்கள் தாமும் அந்த மாமன்னனுக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்த வேண்டும்.”
மன்னன் காமினி அபயனின் இந்த ஆணை கேட்டு தமிழர்கள் தம்மை அறியாமலேயே அவனுக்குத் தலை வணங்கி நின்றனர்.
பிராமணியம் அல்லது ஆரியமயமாக்கம் நமது வாழ்வியலையும், ஐரோப்பிய மயமாக்கம் நமது கலாசாரத்தையும் பாதித்தன.
-பேராசிரியர் சி. மெளனகுரு (தினக்குரல் 13-2-2003

தையே பாவாய் வருக
தமிழர் நாங்கள்
கையிரண்டும் குவித்தோம்
கன்னி நீவருக!
கரும்பே, கனியே வருக
காலைப் Uொழுதில்
அரும்பும் அழகே வருக
ஆராதிக்கின்றோம்.
நெல்லே மணியே வருக
ഗ്രിബഖണ്ഡക്റ്റിങ്
எல்லா உயிர்க்கும் இனியாய் எழுந்து வருக!
பூவே தேனே வருக
பூரண கும்Uமே
மாவிலை தோரண
மங்கலம் நீவருக.
கதிரே ஒளியே வருக
காலம் மூன்றும்
உதிரா அழகே வருக
உன்னை வரவேற்றோம்
Uனியே வெயிலே வருக
UளUளக்கும்
மணியே முத்தே வருக
மனம் மகிழ்ந்தோம்.
மனதில் இனிக்கும் பழம் தமிழ்ப் Uாட்டே
பாவை நீவருக!
கைகள் வீசி வருக
கரிய குழலின்
நெய்யின் வாசம் கமழ
நேரிழையே வருக.
வளமே வாழ்வே வருக
வையம் ஆளும்
உழவர் மகளே வருக
உதய காலமே!
மழையே குளிரே வருக

Page 17
எண்ணெய் இன்றைய
குண்டு மன குடை இரு
மழை பொ 9)ւնւյԼջպլb
பழம்பெரும் செய்த பா6
Lusis J6.IT பயிரிடப்படு
தனி ஒரு மனித இன
வளைகுடா இல்லை -
இறுதிவை
மத்திய |
மணடை
எண்ணெய் என்ன செ கண்னை இல்லை.
ஒரு கை
 
 

க் கேள்வி இதுதான்!
நக்கின்றதா?
': '
ழியா மண்ணில்
?மழையா חIb LD)פ6
பாரசீகம் வம் என்ன?
கின்றதா?
மனிதனுக்காக னமே மடிவதா?
வளைந்து கொடுக்குமா?
ர எழுந்து நிற்குமா?
ழக்கு ஒடுகளின் மயானமா?
புத் தேசம்
ய்யப் போகின்றது? க் கசக்குமா?
if , 'g | *
IITitai,(SLDIT?
யாழ்ப்ப வன: