கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2003.11-12

Page 1


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
(ஆண்டுச் சந்த 100/=
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICA OA. N . لر
 

இதழ் - 34
போது - 1
கார்த்திகை - மார்கழி 2003 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி போல் சற்குணநாயகம், யேச.
ஆசிரியர்: (Editor) வாகரைவாணன்
நிர்வாகம்: (Management) சி. எம். ஒக்கஸ்
U600ftp60601: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி: Ꭴ65 - 23822, Ꭴ65 - 22983
E-mcil
ppcc (CD dicamond, lanka.net
இருபது ஆண்டுகள் முழுமையான இருட்டிற்குள் இருந்த இந்த நாடு - ஒளியின் கதிர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு மகிழ்ச்சி அடைவதைக் கனவிலும் விரும்பாத அதன் பகைவர்கள், மீண்டும் அதனை அதே இருட்டிற்குள் தள்ளிவிடும் பெரும் முயற்சியில் இறங்கியிருப் பதையே தற்போதைய தென்னி லங்கை அரசியல் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இலங்கை -ஏதோ ஒர் இனத்திற்கு மட்டும்தான் சொந்தம் - அந்த இனம் தான் ஆளப் பிறந்தது, மற்றவர்களெல் லாம் அதற்கு அடிமைகள் என்னும் மனோபாவம் எல்லாளன் - கைமுனு (கி.பி. 145) காலத்திலேயே உருவானதிலிருந்து நாம் அனைவரும் ஒளியையும் , இருளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தித்தபடி இருக்கின்றோம்.
1948 பெப்ரவரி 4ல் இலங்கை பெற்ற "சுதந்திரம்' என்னும் ஒளி தமிழரைப் பொறுத் தமட் டி லி பிரகாச மற்றுப்போனதால் அது இருட்டிற் குள்ளேயே இருந்துவிட்டது. எனினும்
இந்த இருளை அகற்றி ಙ್ 6 Α)
ஏற்றும் உன்னத பணியில்,ஒரு
o *... "El ல்ல உள்ளங்கள் ஈடுபட் 67) ந * இதுதெ
ܡܘ ܐ .

Page 3
*
லாம் இருளின் மைந்தர்கள் அந்தப் பணியை இலகுவாக முறியடித்தமை ஒரு பெரும் சோக வரலாறு.
இதற்கு முன் இந்த வரலாறு நமக்கு மட்டுந்தான் தெரிந் திருந்தது. ஆனால் - இன்று உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் அது உரத்துப் படிக்கப்படுவதால் உள்நாட்டு விவகாரம் வெளிநாட்டு விவகாரமாகிவிட்டது. அரசாங்கத்தையும் ஒருவித "அச்சம்' ஆட்டிப்படைக்கின்றது.
இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட இந்தப் பெரும் மாற்றத்தை இருளின் மைந்தர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதன் விளைவு. கூச்சல். குழப்பம். அரசியல் அட்டகாசம். தென்னிலங்கையில் அரங்கேறுகின்றன.
உலகம் தோன்றிய காலம் தொட்டு இருளுக்கும் ஒளிக்கும் இடையே ஒரு பெரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் இந்த யுத்தத் தின் வெளிப்பாடுகளாகவே விளங்குகின்றன.
யேசு கிறிஸ்து என்னும் ஒளி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் ஒரு மூலையில் உதித்தபோதே இருளுடன் அதன் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. ஏரோதன் தான் அந்த இருள். ஒளியை வெல்ல அந்த இருள் முதலில் தந்திரமாகப் பேசிப்பார்த்தது. இறுதியில் ஆயுதத்தையே கையில் எடுத்துக்கொண்டது. ஆனாலும் ஒளியை வெல்ல முடியவில்லை.
ஆமாம் - இருளின் மைந்தர்கள் இந்த உலகத்தில் இருக்கும் வரை ஒளியின் போராட்டம் ஓயாது நடந்துகொண்டே இருக்கும் - வெற்றி மாலை சூடும் வரை
அன்புடன் வாகரைவாணன்.

பிறப்பினால் அல்ல இயேசுவுக்குப்
6)Ս(560)Ա0!
~ ஞானி
குழசை ஒன்றில் ஒரு குழந்தை பிறந்தது செய்தி கேட்ட ஏரோதன் “செத்தே போனான்.!
தனதும், தன் போன்றவர்களினதும் தலைக்கு மேலே தொங்கும் கத்தி அது!
இப்படி
எண்ணிய அவன் இடையில் இருந்த வாளை உருவினான்!
பச்சைக் குழந்தைகளின் இரத்தத்தை அந்த மண் பக்தியோடு பூசிக் கொண்டது!
அதிஸ்டவசமாக அந்தக் குழந்தை மட்டும் அவன் கையில் அகப்படவேயில்லை! ஏமாந்து போனான் ஏரோதன்!
வளர்ந்தது குழந்தை. வாலிபனாகி ஒரு நாள்
மக்கள் மத்தியில் எழுந்து நின்றது.
இதனைக் கண்ட ஏரோதனின் இன்னுமொரு வழவம் பெரிய குரு தலையைப் பிய்த்துக் கொண்டான் பரிசேயர்களுக்குப்

Page 4
Uைத்தியம் Uழத்துவிட்டது.
பின்னிய வலையில் விழாமல் யேசு பல முறை
உரோமைப் பேரரசின் பிழைத்துக்கொண்டார்.
ஏஜண்ட் பிலாத்துவும்
உசாரானான். ஆனாலும்
சூழ்ச்சிக் கண்ணியில்
ஒரு புரட்சியின் வழவம் அவர் ஒரு நாள்
தங்கள் முன் நின்று சுலபமாக வீழ்ந்தே போனார்.
புன்னகைப்பதை அவர்களால்
பொறுத்துக்கொள்ள இந்த வீழ்ச்சி தான்
முழயவில்லை. (Suj6606)
இறைவனாக்கியது.
சரித்திரம்
வழக்கம் போல ஆமாம்.!
சதிப்பின்னலைச் பிறப்பு யாருக்கும்
சந்தித்தது. பெருமை சேர்ப்பதில்லை!
/ སོ།༽
கிறிஸ்மஸ் சில தகவல்கள்
- டிசம்பர் 25ல் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடும்படி கத்தோலிக்கரைக் கேட்டவர் முதலாம் யூ லியஸ் போப் ஆண்டவர். இதற்கான பிரசாரம் கி.பி. 351ல் நடைபெற்றது.
- 1598ல் தான் கிறிஸ்மஸ் மரம் ஜெர்மனியைச் சேர்ந்த பேராய ஒருவரால் அமைக்கப்பட்டது.
- தகவல் ராணி' - 29-12-2002.
ސ.........

அன்னை திரேசா
கருணை,காருண்யம்,தயாளசிந்தை அனைத்தும் கொண்ட அன்னை திரேசா உலகிலுள்ள ஏழைகள், அனாதைகள், வயோதிபர், நோயாளிகள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காவே தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
யூகோஸ்லாவியாவில் 1910ஆம் ஆண்டு ஆவணிமாதம் 26ம் திகதி ஸ்போட்ஜோ நகரில் அல்பேனியப் பெற்றோருக்கு மகளாகப்பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அக்னர்கொயின்ஷா பெஜாக்கியூ என்பதாகும். பெற்றோர் சாதாரண விவசாயிகள். அன்னை அவர்களுக்கு 7 வயது நடந்து கொண்டிருக்கும் பொழுது தமது தந்தையாரைப் பறிகொடுத்தார்.தாயாரின் நிழலில் வளர்ந்தார்.
எந்தநேரமும் உலக மக்களுக்குத்தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்ந்தார். சிறுவயதிலேயே இறை பக்தி நிறைந்த இவர் தனது 12ஆவது வயதில் கன்னியாஸ்திரி மடத்தில் சேர விரும்பினார். ஆனால் தேவ அழைத்தல் 18 வயதிலேயே இவருக்குக் கிடைத்தது.
1928இல் அயர்லாந்தில் லொரற்றோ மடத்தில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தார். 1929ஆம் ஆண்டு தை மாதம் 29ம் திகதி அருமைத் தாயாரிடமும் உற்றார் உறவினரிடமும் விடை பெற்றுக் கொண்டு கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு டார்ஜிலிங்கிலுள்ள லொரேடோ கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்தார். 1931ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கன்னியாஸ்திரியாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
கல்கத்தாவில் உள்ள புனித மரியாள் பாடசாலையில் 17 வருடங்களாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1944இல் அதன் அதிபரானார். வறிய அனாதைக் குழந்தைகளுக்காகவே நடத்தப்பட்ட பாடசாலை அது. அனாதைச் சிறுவர்களை அணி பு காட்டி அரவணைத் தார் . லொரேடோ மடத்தின் அனுமதி பெற்று வெளியுலகிலும் சமூகப்
○

Page 5
பணியாற்ற ஆரம்பித்தார். 1948இல் பாட்னாவில் வைத்தியத் தாதிப்பயிற்சி பெற்றுக்கொண்டார். அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு, பிரசவப் பிரிவு என்பவற்றில் சேர்ந்து ஊழியம் புரிந்து கொண்டே முழுப்பயிற்சியும் பெற்றார். நான்கு மாதப் பயிற்சி முடிவடைந்ததும் மோதிஜில் என்ற சேரியில் தனது பணியைத் தொடங்கினார். ஒரு மர நிழலில் 5 வறிய குழந்தைகளுக்குப் பாடம் போதிக்கத் தொடங்கினார். பின்னர் 1949இல் மைக்கல் கோமஸ் என்பவருடைய மாடியில் குடிபெயர்ந்து மக்களுக்குச் சேவை புரியலானார்.கள்ளிக்கோட்டை என்ற இடத்தில் வயோதிபர்களுக்காக ஒரு இல்லம் அமைத்து அவர்களுக்குச் சேவையாற்றத் தொடங்கினார். தொழுநோயாளர்களைக்கூட தன் சேவையில் சேர்த்துக்கொண்டார்.
1950ஆம் ஆண்டு அன்னை திரேசா அவர்களின் தலைமையில் மிஷனரீஸ் ஒவ் சரிட்டி (Missionaries of charity) உருவாக்கப்பட்டது. துய்மையான பணிக்கு எடுத்துக்காட்டாக நீல நிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலையை அணியத் தொடங்கினார். தனது சொந்த சமூகசேவை இயக்கமாகவே இதனை ஆரம்பித்தார்.சிறு அமைப்பாக ஆரம்பித்த இயக்கம் இன்று 130 நாடுகளில் செயற்படுகின்றது. இந்நாடுகளில் 50 இற்கும் அதிகமான அநாதைச் சிறுவர் இல்லங்கள் இயங்குகின்றன.
1967ஆம் ஆண்டு கொழும்பு அதிமேற்றிராணியார் வண. காடினல் குரே அன்னை திரேசாவை இலங்கை வந்து இங்கும் அவரது சேவையை ஆரம்பிக்கும்படி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று இரு சகோதரிகளுடன் இலங்கை வந்த அன்னையவர்கள் முதலாவது கிளையை மாதம்பிட்டியில் நிறுவினார். இந்தியாவிலிருந்து மூன்று கன்னியாஸ்திரிகள் இங்கு வரவழைக்கப்பட்டு 12 பேருடன் இக்கிளை ஆரம்பமானது. மாதம்பிட்டி "கருணை இல்லம்", முகத்துவாரம் "சாந்தி நிவச” மற்றும் மொரட்டுவையில் 1989இல் “பிரேம நிவச" என்ற அனாதை இல்லங்கள் ஆரம்பமாயின. மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், காலி ஆகிய இடங்களிலும் இல்லங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
1984இல் திரேசா அவர்கள் இலங்கை வந்தபொழுது அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இறுதியாக 1987ஆம் ஆண்டு இலங்கை வந்த அன்னை அவர்கள் அநாதை இல்லங்களைப் பார்வையிட்டு பேருவகை அடைந்தார்.
1962ஆம் ஆண்டு அன்னையின் சேவையைப் பாராட்டி இந்திய அரசினால் பத்மழுறி விருது སྐུ་ཕྲུམ་ tatt ༧. தொடர்ந்து 1979இல்

அமைதிக்கான நோபல் பரிசு, 1980இல் இந்தியாவின் அதியுயர் விருதான பாரத ரத்னா விருது, 1983இல் புதுடில்லியில் பிரிட்டிஷ் மகாராணி 2ஆவது எலிசபெத்திடமிருந்து அன்னையின் திறமைக்கான கெளரவ விருது, 1993இல் ராஜிவ் காந்தி வகுப்பு நல்லிணக்க விருது என்ற பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. அன்னை திரேசாவின் பொதுப்பணியைப் பாராட்டி 1997 கார்த்திகை மாதம் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிங்டன் அவருக்கு அமெரிக்காவின் கெளரவ பிரஜாவுரிமையை வழங்கினார். அமெரிக்க சரித்திரத்திலேயே அன்னையுடன் இதுவரை நால்வருக்கே இந்த கெளரவம் கிடைத்துள்ளது.
C Uண்டிதை திருமதி மரகதாசிவலிங்கம்
1991ஆம் ஆண்டு தொடக்கம் அன்னையை நோய்கள் வாட்டத் தொடங்கின. 1996 ஆவணி 22இல் இருதய நோய் ஏற்பட்டது. கல்கத்தாவின் ஆட்லாண்ட வைத்தியசாலையில் அன்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1996 கார்த்திகை 26இல் திரும்பவும் இருதய நோய் ஏற்பட்டது. 1997 ஆனி 16ஆம் திகதி இளவரசி டயனாவை சந்தித்து உரையாடினார். பின்னர் இளவரசியின் திடீர் மரணச் செய்தி கேட்டு மனம் மிகப் புண்பட்டார். இளவரசி டயனாவின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ளவிருந்த சமயம் நோய்வாய்ப்பட்டு 1997ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி கல்கத்தாவிலுள்ள அவரது தலைமைச் சேவாச்சிரமத்தில் உயிர் நீத்தார். அன்னையின் புனிதப் பணிகள் இன்றும் அவர் ஸ்தாபித்த கிளைகள் ஊடாகத் தொடரப்பட்டு வருகின்றன. இன்று "மிஷனரீஸ் ஒவ் சரிட்டி” வருடாந்தம் 5 இலட்சம் குடும்பங்களைப் பராமரித்து வருவதுடன் 20 ஆயிரம் குழந்தைகளுக்குக் கல்வி போதித்தும் வருகிறது. 90 ஆயிரம் தொழுநோயாளர்களுக்கு அன்னையின் சிகிச்சை நிலையம் சிகிச்சை அளித்து வருகிறது.
அன்னையின் பணியை நேபாள பிராமணக் குடும்பத்தில் பிறந்த அருட்சகோதரி நிர்மலா ஏற்று அநாதைகளின் அன்னையாக விளங்குகிறார்.
ஏழை அநாதைப் பிள்ளைகளின் இரட்சகர் என உலக மக்களால் போற்றப்பட்ட அன்னை திரேசா அவர்களின் இறுதிச் சடங்குகள் 1997ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை 10 மணிக்கு அரச மரியாதையுடன் கல்கத்தாவிலுள்ள தர்மசாசன நிலைய தலைமை அலுவலக
வளவில் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
(நாடறிந்த பெரியோர்ககிர்நூலிலிருந்து)

Page 6
ஒரு கனவுட4
மன்னனவன் விஜயபாகு
மற்றும் சில வாரிசுகள் கண்ணெனவே சைவநெறி
காத்து நிதம் வளர்த்தார்கள் விண்முட்ட ஆலயம்
விளங்கிடவும் செய்தார்கள் மண்ணந்தக் கந்தளாய்
மகிமை இது கூறிடுமே!
அரசரவர் அவைதனிலே
அறிவு மிகு பிராமணர்கள் வரிசை முன் அமர்வார்கள்
வாய்த்த பெரும் Uதவிகளை பரிசு எனப் பெறுவார்கள்
பரம்பரையாய்க் குழயிருப்பில் வருஷம் பல வாழ்வார்கள்
வரலாறு சொல்லும் இது!
மன்னனவன் முதலாம்
மகா பராக்கிரமUாகு
எனினருமைத் தமிழன்;
எழில் மிகுந்த கண்டி

மண்ணதனை ஆண்ட
மறவனவன் சிங்கன்
தென்னவரின் இனமாம்
தெலுங்கர் எனும் வம்சம்!
சிங்களவர் முன்னிது
செந்தமிழர் தேசம் இங்குள்ள ஊர்கள்
ஏனைய பெயர் காட்டும் பங்கங்கள் இன்றிப்
Uல்லாண்டு காலம் மங்களமாய் வாழ்வார்
மண்ணகமே அறியும்!
எல் என்ற மொழியில்
இருந்து தமிழ், சிங்கள நல்மொழிகள் தோன்றும்
நமக்கிதனைச் சொன்ன பல்மொழியில் அறிஞர்
பண்டிதர் தாவீதார் சொல் அதனைப் பலரும்
கருதி எனக் கொள்வார்!
தெனிUாண்டிப் பூமி
தேசமது கலிங்கம்
இன்னும் சில நாடு
இலங்கையிலே கலக்கும்
முன்வந்த சிங்கள

Page 7
மூதாதையரோடு ஒன்று என ஆவார்
உண்மையிது அறிவீர்!
திருமலை எம்மவரின்
தெனி கயிலாயமாகும் அருமலையில் ஈசன்
அமர்ந்தரசு செய்வான் பெருமலையைப் போலும்
பீருடனே விளங்கும் ஒரு மலையாம் இதனை
ஒக்க வேறில்லை!
மட்டக்களப் பென்னும்
மருதநிலத்தோடு பட்டிப்பழை முழுதும்
பழந்தமிழர் உடைமை! தட்டி இதைப் பறித்தார்
தந்திரி செனநாயக்கா! விட்ட பெருந் தவறு
6)j”ớỹujfT(8uorT 95uố%prT!
வடக்கெல்லாம் தமிழர் வாழ் நிலமாகும்
எடுத்திதைச் சொல்வேன்
எத்தனை தரமேனும்!
தடுத்திதை மறுப்பார்
தாரணியில் இல்லை!

அடுத்து ஒரு சமூகம்
அம்மண்ணில் எழுமோ?
யாழ்ப்Uாணம் என்றால் போதும்
ஜகமெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும் காப்பரணி தமிழர்க்கீங்கு
கதையல்ல, வரலாறாகும்! மூப்பது இல்லா மதுரை
முத்தமிழ் இளமையோடு தோப்பிதில் செழிக்கும், கண்டு
சொக்குவர் புலவர் எல்லாம்!
சங்கிலி என்னும் நாமம்
சரித்திரம் நாளும் சொல்லும் கங்குலை ஒழிக்கத் தோன்றும்
கதிரென ஒளிரும் கண்ணில்! பொங்கிடும் வீரம், மானம்
புகன்றிடும் உலகிற் கெல்லாம் மங்கிடும் கதையே யில்லை
மறவர்கள் தேசம் அன்றோ!
(கனவு தொடரும்)

Page 8
அறிய வேண்டிய அரிய மனிதர் - 12
குமிழின உணர்வைத் Փմ Մ. 6TՎքնմlա
'உன் னைத் தான் தம் பரி’ என்ற கரகரப்பான அந்தக் குரல் மந்திரமாய் தமிழர்களை மயக்கியது. ‘வடக்கு வாழ்கிறது: தெற்குத் தேய்கிறது' என்று தென் மாநிலங்களுக்கு ஆதரவாக ஒலித்த அந்தக் குரல், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை தனது தொண்டர் களுக்கு வலியுறுத்தியது. அவர் ஆட்சியில் “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற கொள்கையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டன. எதிராளிகளை வெறுக்கர்மல். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் பணமுண்டு' என்று பெருந்தன்மை காட்டியது. உட்றவுக்குக் கை கொடுத்தும் உரிமைக்குக் குரல் கொடுத்தும் எதையும் தாங்கும் இதயமாக தமிழர்களின் உதயமாக நின்றது அந்தக் குரல் மறப்போம் மன்னிப்போம்” என்று பகையாளியிடமும் பண்பு பாராட்டிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். பேரறிஞர் அண்ணாத்துரை.
குறும்பான பார்வை, விரிந்த நெற்றி, குள்ளமான சராசரி தோற்றம், நறுக்கப்பட்ட மீசை, ஒழுங்குபடுத்தப்படாத தலைமுடி, சிறிது முன் தள்ளிய தொப்பை, அதன் மேல் பொருத்தமில்லாத ஒரு சட்டை. இடுப்பில் பொடி மட்டை, கையில் வெற்றிலைப் பொட்டலம், செருப்பில்லாத கால். இந்த அடையாளங்களுடன் 1935ஆம் ஆண்டு சென்னை லொயோலா கல்லூரியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் அந்த மாணவன் எரிமலை கங்குகளாய் வார்த்தைகளை வீசினான். மேடையில் தலைவராக இருந்த ராஜாஜி கேட்டாராம் “யாருப்பா இந்தப்  ையன்? பேச்சில் தீ கக்குகிறானே". ராஜாஜியின் பக்கத்தில் இருந்தவர் சொன்னார்: ”பெயர் அண்ணாத்துரை, பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் படிக்கிறான்".
அண்ணா, அவரே சொன்னது போல் மிகவும் சாமான்யன்,
C12)
 
 

சாதாரண குடும்பத்தில் சின்ன காஞ்சிபுரத்தில் வரகு வாசல் தெருவில் 54 எண்ணுள்ள ஒட்டு வீட்டில் பிறந்தார். அப்பா பெயர் நடராஜன். அம்மா பங்காரு அம்மாள். பிறந்த தேதி 15-09-1909. அண்ணாவின் சித்தி ராசாமணி அம்மாள்தான் அவரை வளர்த்து ஆளாக்கினார்.
சிறுவயதில் அண்ணா தலையை முன்பக்கம் மழித்து, பின்பக்கம் நீண்ட ஜடை போட்டு, காதில் கடுக்கண் போட்டிருந்தார். பிள்ளையார் இஷடமான தெய்வம். கூட்டம் அதிகமாக உள்ள கோயில்களுக்குச் செல்லாமல், குறைவாக உள்ள கோயில்களுக்குச் செல்வதுதான் அண்ணாவுக்குப் பிடிக்கும். காஞ்சி புண்ணிய கோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தப் பிள்ளைதான், பின்னால் பகுத்தறிவு இயக்கத்தின் தனிப்பெரும் சுடராக ஆகப்போகின்றான் என்று யாராவது அப்போது சொல்லியிருந்தால், அண்ணாவேகூட குலுங்கிச் சிரித்திருப்பார். காரணம் அவ்வளவு பக்தி
அண்ணாதுரை பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதும், தலையில் ஜடை மறைந்து கிராப் வந்தது. அவரது வீட்டில் ஒரு அழகிய மாட்டு வண்டி. அதை அண்ணாவே ஒட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்வார். அவர் வண்டி ஒட்டும் வேகம் மிரளவைக்கக்கூடியது. நின்று கொண்டுதான் ஒட்டுவார். மாடு சுணங்கினால் வாலைக் கடித்து மாட்டை முடுக்கி விடுவாராம்.
எஸ்.எஸ்.எல்.சி.யில் கணக்கில் இரண்டு முறை தோற்று, மூன்றாவது முறைதான் தேறினார். மேற்கொண்ட இன்டர்மீடியட் படிக்க அவருக்கு ஆசை. ஆனால், வீட்டு வறுமை அதற்கு அனுமதிக்கவில்லை. காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் எழுத்தர் வேலையில் சேர்ந்தார். கொஞ்ச நாட்களிலேயே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை கிடைக்க பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்தார். முதல் வகுப்பில் தேர்ச்சி. மீண்டும் மேற்கொண்டு படிப்பதில் பொருளாதாரத் தடை. பச்சையப்பன் கல்லூரித் தலைவர் பேராசிரியர் சின்னத் தம்பிப்பிள்ளை ! மேற்படிப்புக்கான செலவை ஏற்றுக்கொள்ள பீ.ஏ. பொருளாதாரம் படித்தார்.
ԱՀ
歴
*=
ష్కి."
Vo }
مه" "
பள்ளியில் படிக் கும் போதே vʼ , , • ~ தொற்றிக் கொண்ட பொடிப்பழக்கம் கல்லூரியில் தொடர்ந்து சிறு

Page 9
வயதிலேயே பொடியில்லை என்றால் அண்ணாவுக்கு வேலையே ஓடாது. பின்பு பொடியுடன் வெற்றிலைப்பாக்கு புகையிலைப் பழக்கமும் சேர்ந்து கொண்டது. வெற்றிலை போடுவதற்கு வசதியாக வகுப்பறையில் சன்னல் ஒரமாகத் தான் உட்காருவாராம் அண்ணா.
நகராட்சி அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றிய காலகட்டத்திலேயே அண்ணா நீதிக்கட்சியால் ஈர்க்கப்பட்டிருந்தார். பின்னர், தியாகராயரின் சிந்தனைகள், பச்சையப்பன் கல்லூரி சூழல், சுயமரியாதை இயக்க மன்றத் தொடர்பு நீதிக் கட்சி முன்னோடிகள் தொடர்பு இவைகளும் சேர்ந்துகொள்ள, கல்லூரியை விட்டு வெளியே வரும்போதே அண்ணாவின் எதிர்காலம் பாதி வடிவமைக்கப்பட்டிருந்தது.
அண்ணாவுக்கு 1930ல் திருமணம் நடந்தது. ராணி அம்மையார் வாழ்க்கைத் துணையானார். இவர்களுக்குப் பலவருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லை. ஆனால் அதை ஒரு குறையாகவே அண்ணா கருதவில்லை. பரிமளம், இளங்கோவன், கெளதமன், பாபு என்ற நான்கு பேரை வளர்ப்புப் பிள்ளைகளாக்கிக் கொண்டார்கள் அண்ணாவும் ராணி அம்மையாரும்.
கோயம்புத்துரில் 1935ம் ஆண்டு நடந்த செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதல் முறையாக பெரியாரை சந்திக்கிறார் அண்ணா. பெரியார் அண்ணாவிடம், “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அண்ணாவின் பதில் “படித்துக் கொண்டிருக்கிறேன். பரிட்சை எழுதியிருக்கிறேன்".
“உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?”
“இல்லை. பொது வாழ்க்கையில் ஈடுபட விருப்பம்” அன்று முதல் பெரியார், அண்ணாவின் தலைவரானார்.
1949ல் பெரியார் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது அண்ணா எதிர்த்தார். ஏற்கனவே சிறு சிறு கருத்து முரண்பாடுகளும் மனக்கசப்புகளும் தோன்றியிருந்தன. நாடு சுதந்திரம்
 

அடைந்த போது பெரியார், "நம்மை சுரண்டுபவரும், தாழ்வுபடுத்துபவரும் இருக்கும்போது நாம் எப்படி விடுதலை பெற்றவராவோம். எனவே இந்த நாளை துக்க நாளாகக் கொண்டாட வேண்டும்” என்றார். அண்ணாவுக்கு பெரியார் கருத்துடன் உடன்பாடில்லை. அண்ணா சொன்னார் “ஆகஸ்ட் 15 இந்தியா மீதிருந்த இழிவைத் துடைக்கும் நாள்".
பெரியார் மணியம்மை திருமணம் முடிந்து 9-7-1949க்கு மறுநாள் அண்ணா தன் அதிருப்தியை வெளியிட்டார். பின்னர் விரிசல் விலகலானது. 17-9-1949 அன்று தி.மு.க. உதயமானது.
திராவிடர் கழகத்தைவிட்டு அண்ணா வெளியேறியதும் பல காங்கிரஸ் தலைவர்கள் அண்ணாவை சந்தித்து காங்கிரஸில் சேரும்படி கேட்டார்கள். ஆனால், அண்ணா "நான் தலைவராக ஏற்றுக்கொண்டது ஒரே ஒருவரைத்தான். அவர் பெரியார் என்று கூறிவிட்டார். தி.மு.க.விலும் தலைவர் பதவியை பெரியாருக்காகவே காலியாக வைத்திருந்தார். பின்னாளில் “அண்ணாவைத் தோற்கடியுங்கள்" என்று பெரியார் சொல்லியபோதும் இதில் மாற்றம் இல்லை.
ஆட்சியைக் கைப்பற்றும் வேகத்திலிருந்த தி.மு.க.வினருக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் கை கொடுத்தது. நாடு முழுவதும் காங்கிரஸ் மீது கோபமும், தமிழ்ப் பற்றும் பரவிய காலம்.
சென்னை விருகம்பாக்கத்தில் 1966ல் நடைபெற்ற மாநாட்டில் ராஜாஜி, ஆதித்தனார், ம.பொ.சி. கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரையும் ஒரே அணியில் காங்கிரஸிற்கு எதிராகக் கொண்டு வந்தார் அண்ணா. 1967 மார்ச் இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தி.மு.க. 138 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இரவு அண்ணா வீட்டில் நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன். எல்லோரும் கூடியிருந்து ரேடியோவில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியாக தி.மு.க. வெற்றி அறிவிக்கப்பட, ஒரே மகிழ்ச்சி ஆரவாரமும் சத்தமும். 60 தொகுதிகளை தி.மு.க. கடந்தபோது. அண்ணாவிடம் இருந்த சந்தோசம் மறையத் தொடங்கியது. உள்ளூர இந்த வெற்றி அவரை சங்கடப்படுத்திவிட்டது.
இவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஆட்சிக்கு வந்திருக்கக்கூடாது. 150 வருட சரித்திரம் கொண்ட காங்கிரஸையூே மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

Page 10
மேலும், காமராஜர், பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் தோற்றிருக்கக்கூடாது. அதற்கு நாம் காரணமாகிவிட்டோம் என்றாராம் அண்ணா.
அண்ணாவை முதலமைச்சராகக் கொண்டு ஒன்பது பேர் உடைய அமைச்சரவை பதவியேற்றது. “இந்த அமைச்சரவை பெரியாருக்குக் காணிக்கை” என்றார் அண்ணா. பதவியேற்பு உறுதிமொழியையும் தமிழிலேயே எடுத்துக்கொண்டார். 1967 மே மாதத்திலிருந்து படியரிசித் திட்டம், 187-67 அன்று தமிழ்நாடு பெயர் சூட்டல், 28-11-67 அன்று சுயமரியாதை திருமண சட்ட வடிவம், பி.யூ.சி. வரை இலவசக் கல்வி. சனவரி 1968ல் முதல் உலகத் தமிழ் மாநாடு. என்று அண்ணா ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கினார். இந்த வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதுபோல் அண்ணாவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உணவுக்குழாயில் கேன்சர் கட்டி வளர்ந்தது. உணவு உட்கொள்ள முடியவில்லை. நோய் முற்றிவிடவே அமெரிக்கா சென்றார். அங்கு டாக்டர் மில்லர் அறுவைச்சிகிச்சை செய்து கட்டியை நீக்கினார். அண்ணா தாயகம் திரும்பினார்.
அண்ணா அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு மருத்துவர்களின் ஆலோசனையை மீறி ஓய்வெடுக்காமல் உழைத்தார். விளைவு - மீண்டும் நோய் வாய்ப்பட்டார். அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு டாக்டர் மில்லர் அவருக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்தார். டாக்டர்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பிப்பிரவரி மாதம் 2ம் திகதி நள்ளிரவு 12.20 மணிக்கு
தமிழர்களுக்காகத் துடித்த அந்த இதயம் நின்று போனது.
(குமுதம் /-9-2003)
1876ல் ஜேர்மனியைச் சேர்ந்த ஜேகர் என்பவர் ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழ்வாய்வில் கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நபர்களின் சாம்பல் வைக்கப்பட்டுள்ள கலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நபர்களின் உடல்களோடு பல அரிய பொருட்கள் (குறிப்பாக தாமிரத்திலானவை) கண்டெடுக்கப்பட்டன. பாண்டி மன்னர்களின் முத்திரை பொறித்த தங்க நாணயங்கள், தாமிரத்திலான பெண் கடவுள் சிலை போன்றவையும் இதில் அடங்கும்.
(தினக்குரல் 23-6-2003)
 

(வாசகர்வாசகம்)
அன்பர் வாகரைவாணன் அவர்களுக்கு!
தங்களிடமிருந்து வந்த போது இதழைப் படித்தேன். அதன் முன்பக் கத்தில் எழுதப்பட்டிருந்த ‘ஒரு சிலரின் கையில். அலங்கோலமாக்குகின்றது என்னும் தொடர், எடுத்த உடனேயே சஞ்சிகை எப்படியிருக்கப்போகின்றது என்பதை அச்சொட்டாகக் காட்டியது. வலுவான அருமையான அர்த்தம் நிறைந்த ஒரு வாக்கியம், அது.
இந்த இதழில் தாங்கள் 'சுயம்' என்னும் தலைப்பிலே தந்திருக்கும் கருத்துக்கள் அத்தனையும் சரியானவை. "தமிழினம் தனது வரலாறு, மொழி, தேசியம், கலை, பண்பாடு என்பனவற்றைப் புதுப்பிக்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது” என்பது மறுக்கமுடியாத உண்மை.சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழர்கள் சுயத்தை இழந்தையினால் ஏற்பட்ட திய விளைவுகள்தான் இப்பொழுதும் நம்மிடையே தொடர்கின்றன. தமிழினம் இன்றும் தனது சுயத்தைப் பற்றி முழுமையாக சிந்திக்கவோ அதன் வழி செயற்படவோ இல்லை என்பது எனது கருத்து. தென்னகத்துத் தமிழர்களது தனித்துவம் கலப்படமாகிக் கொண்டு வருகிறது. இதன் தாக்கம் நம்மிடமும் ஏற்படுவதைக் காண்கின்றோம். இந்த அழிவைத் தடுப்பது எப்படி? "சுயம்' ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய கட்டுரை.
ஓகோ என்று வரவேற்கப்படும் இணையத்தினால் வரும் சமுதாயச் சீர்கேடுகளை ந. பார்த்திபன், மனதில் பதியும் வகையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இணையத்துக்கும் இதயத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறுவது மிகவும் சரியான கணிப்பு. "புதிய வானம், புதிய பூமி போதுமா?’ என்னும் தலைப்பிலே ஆசிரியரது சிந்தனையில் குமுறல் வெளிப்படுகின்றது.
போது உருவத்தால் சிறிய இதழாயினும் உள்ளடக்கத்தால் வீச்சும் வேகமும் உடையதாக இருக்கிறது. இந்தச் சஞ்சிகையை எனக்கு அனுப்பி வைத்தமைக்காகத் தங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அன்புடன் 6. TrT60&urt கொழும்பு - 6.
C1)

Page 11
‘புடலங்காய்”
- சொல் பற்றிச் சில குறிப்புக்கள்
பகுபத உறுப்புக்களான பகுதியையும் விகுதியையுைம் இணைப் பதற்கு அல்லது கூட்டுப் பெயராக்கத்தில் இரண்டு சொற்களை இணைப்பதற்குப் பயன்படும் பகுபத உறுப்பு சாரியை எனப்படும். (பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அடிப்படைத் தமிழ் இலக்கணம், பக்கம் - 36) பேராசிரியரின் இவ்வரைவிலக்கணத்தினை
“பதமுன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்” என்னும் நன்னூல் சூத்திரம் எடுத்துக்காட்டும். இச்சூத்திரத்திற்கமைவாக புடல் என்னும் சொல்லோடு காய் என்னும் சொல் புணர்கையில் அம் என்னும் சாரியை வரும். இதன்படி புடல்+அம்+காய் = புலடங்காய் என்றாகிறது. இது போன்றதே புளியங்காய் (புளி+அம்+காய்) என்னும் சொல்லும். ஆயினும், புளி+கறி என்னும் சொற்கள் புணர்கையில் அவற்றின் இடையே அம் சாரியை வருவதில்லை. இதனையே மேற்படிச் சூத்திரம் 'தவிர்தல்’ எனச் சுட்டும்.
தமிழறிஞர் அ. கி. பரந்தாமனார் தமது நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’ எனும் நூலில் புடல்’ எனும் சொல் தெலுங்கு என்பார். அறிஞரோடு உடன்படாத நமது பன்மொழிப் புலவர் த. கனகரத்தினம் புடலங்காய் என்பது தெலுங்கு மொழியில் "பொட்லகாய' எனக் குறிப்பிடப்படும் என்கிறார்.
இச் சொற்கள் (புடல், புடலங்காய், புடோலங்காய், பொட்லகாய) எத்தகைய ஒலி அமைப்பைக் கொண்டிருப்பினும் அவை அனைத்தும் ஓர் அடிச் சொல்லில் இருந்து ஆரம்பமாகி அவ்வப் பிரதேசத்திற்கேற்பத் திரிபு அடைந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சொற்கள் திரிபு அடைதல் பற்றி மொழியியல் அறிஞர் மு. வ. அவர்கள் தமது "மொழி வரலாறு' எனும் நூலில் (பக். 139 - 140) தெளிவாக விளக்கியுள்ளார்.
மேலும், மொழியியல் அறிஞர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை

அவர்கள் ‘தமிழும் பிற மொழியும்’ எனும் தமது கட்டுரையில் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான அடிப்படைச் சொற்கள் பல இருக்கின்றன. இச்சொற்கள் திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் அவ்வவ் மொழிகளின் ஒலிமுறைக்கேற்ப உருவ வேறுபாடு அமைந்து விளங்கும் என்று தெரிவித்துள்ளமை திராவிட மொழிச் சொற்களின் திரிபுக்கான காரணத்தை விளக்கப் போதுமான
Ebst (35. D.
மேற்படி இரு மொழியியல் அறிஞர்களின் கூற்றுக்கமைவாகவே கட்டமு, பொம்மு எனும் தெலுங்குச் சொற்கள் தமிழில் கட்டிடம், பொம்மை 6 6ði m! Hö ண்ணிர்) காய் 6 ை தஃ (புடலங்காய் எனும் பெயர்ச் சொல் g 5F T ಕ್ಲ ள தெலுநர் கரி ல | பற்றி, கொழும் புத் தமிழ்ச் நீர் லு, காய என ம | சங்கத்தின் ஒலை (16) தெரி வழங்குதலை ா த வித்திருந்த கருத்துக்களை இந்தக் துண து கொள்ளலாம் . கட்டுரை தனது ஆய்விற்கெடுத் புகழி பெற ற கட்டப்பொம்மன் துக் கொள்கின்றது. எனும் பெயர் கெட்டிப் பொம்மு எனும் தெலுங் குப் பெயரின் திரிபு என்பதைப் படித்தவர்கள் அறிவர்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் புடலங்காய் எனப்படுவது, வேறு பிரதேசத்தில் புடோலங்காய் என்று வழங்கப்படுதல் கூடும். மட்டக்களப்புப் பிரதேசத்தைப் போன்றே தமிழ் நாட்டிலும் புடலங்காய் எனும் சொல்லே பயன்பாட்டில் உள்ளமையை நர்மதாவின் தமிழ் அகராதி (பக். 662) எடுத்துக்காட்டும்.
வளர்ச்சி என்பது குறைவில் இருந்தே உண்டாகும் எனும் பிரமாணத்திற்கமைய புடல் எனும் சொல் புடோல் ஆக நீட்சி (ட எனும் குறில் டோ எனும் நெடிலாக) அடைதல் இயல்பாகும். இச் சொல்லிலும் (புடோலங்காய்) அம் சாரியை இடம் பெற்றிருத்தல் (புடோல்+அம்+ காய்) கவனிக்கத்தக்கது.
புடலங்காய் பாம்பு போலத் தோற்றம் தருவதைக் கண்ட வெள் ளைக்காரன் அதனை Snake Gourd என்று குறிப்பிட்டமை ஆச்சிரியத்திற் குரியதன்று. இவ்வாங்கிலச் சொல் புடலங்காயின் தோற்றம் பற்றி எழுந்ததே. இது போன்றே முருங்கைக்காயை அதன் தோற்றத்திற்காக

Page 12
அதே வெள்ளைக்காரன் Drumstick என்று அழைத்தமையையும் இச்சந்தர்ப்பத்தில் எண்ணிப் பார்த்தல் பொருத்தம் உடையதாகும்.
புடலங்காய் எனும் சொல் பற்றிய எனது குறிப்பில் (ஓலை 16) 'புடை’ எனும் சொல்லில் இருந்து புடல் எனும் சொல் தோற்றம் பெற்றதாகக் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கையில் புடை என்ற அடியில் இருந்து புடல் வராது என்று பன்மொழிப் புலவர் கூறுவது ஏனோ?
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் "அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் பொதுவான அடிப்படைச் சொற்கள் இருக்கின்றன” எனும் கருத்தினை நாம் ஏற்றுக்கொள்வோமாயின் திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்குச் சொல்லுக்கு (புடல்) அடிச்சொல் காண்பது தமிழ் இலக்கணப்படி எப்படிப் பொருந்தும் என்ற கேள்விக்கே இடமில்லை. மேலும், சொற்கள் அல்லது சொல் உறுப்புக்கள் பொருள் தரும் வகையில் ஒன்றோடொன்றுவதையே தமிழ் இலக்கணம் புணர்ச்சி என்று சொல்லும். அதன்படியே புடல், காய் எனும் இரண்டு சொற்களும் அம் சாரியை பெற்றுப் பொருந்துகின்றன.
பெண்கள் தம் புடையில் (இடுப்பில்) வைத்து ஆடை அணிவதனால் அது புடைவை என்று (காரணப் பொதுப் பெயராக) அழைக்கப்பட லாயிற்று. இது அணியப்படும் பொருள்கள் அணிகள் என்று குறிப்பிடப் படுவது போன்றதாகும்.
"வைட் என்பதனைத் தொழிற் பெயர் விகுதிகளில் ஒன்று என்று கூறும் நன்னுால், அதனைச் செய்' எனும் ஏவலின் பகாப்பதம் என்றும் கூறும். தமிழ் அகராதியும் "வையென்னேவல்' என்றே தெரிவிக்கின்றது.
கடைசியாக "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று கூறிய தொல்காப்பியர் "மொழிப்பொருள் காரணம் விழிப்பத்தோன்றா’ என்று குறிப்பிட்டுள்ளமையும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.
- வாகரைவாணன். புனித தோமையார் இந்தியாவுக்கு வந்த
ஆண்டு கி.பி. 52.
தகவல் - "ராணி' - 29-12-200
 
 
 

தீதுறி பரணி (அதிகாரம் - 9.
தொண்டை மண்டலத்தின் தொன்மை மிக்கமாநகரம் காஞ்சி. கடல் மல்லையைக் கலைக்கோயிலாகக் கட்டி எழுப்பிய பல்லவப் பேரரசர்கள் கொலுவீற்றிருந்த இம்மாநகரம் குலோத்துங்க சோழனின் இரண்டாவது தலைநகரமாக எழுந்து நின்றது.
சோழப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட வேங்கி மீது படை எடுத்து வந்த, குளம் எனும் நிலப்பகுதியின் குறுநில மன்னன் தெலுங்கு பீமனை வென்று, தென் கலிங்கத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திய குலோத்துங்கன் காஞ்சி மாநரின் தென்மேற்குத் திசையில் அமைந்த மாளிகையின் சித்திரமண்டபத்தில் முத்துப்பந்தலின் கீழ், வெண் கொற்றக் குடையின் நிழலில், இருபுறமும் கவரி வீச அரியணையில் ஏறு என வீற்றிருக்கின்றான். அருகில் மதுராந்தகி, ஏழிசைவல்லி என்னும் பெயர் கொண்ட இரண்டு பட்டத்துராணிகளும் அமர்ந்திருக்க இசையிலும், கூத்திலும் வல்ல ஏந்திழையர் பலர் புடைசூழ, சூதர், மாசுதர், மங்கலப் பாடகர் என்போர் புகழ்ந்து பாட, வீணை, யாழ், குழல், மத்தளம் வல்லோர்
தம்தம் கருவிகளை மீட்டிட, இசையில் வல்ல குலோத்துங்கன் அது கேட்டு இன்புற, சோழனின் ஆணைக்கடங்கிய சிற்றரசர்கள் திறை தந்து அவனடி வணங்கி, சூழ்ந்து நிற்கிறார்கள்.
அவ்வேளை, இன்னும் திறை கொடுக்காத சிற்றரசர்கள் இருக்கின் றார்களா என்று கேட்கின்றான் குலோத்துங்கன். அதற்குத், தலைமை அமைச்சன் எழுந்து தலை வணங்கி, மன்னா வடகலிங்க அரசன் அனந்தவர்மன் தங்களுக்கு திறை செலுத்த மறுக்கிறான், என்று விடை இறுக்கிறான். மந்திரியின் பதிலுரையைக் கேட்ட மன்னன் குலோத்துங்கன் புன்னகை பூத்தவனாய், வட கலிங்கத்தை இப்போதே எனது காலடியின் கீழ்க் கொண்டு வர வேண்டுமென்று ஆணையிடுகின்றான்.
சோழநாடு மீண்டும் போர்க்களமாகின்றது. பல்லவர் குல வண்டையர் தலைவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவன் ஆகின்றான். பல்லவனோடு வணக்கோவரைஆ முடிகொண்ட சோழன் என்ற இரு

Page 13
படைத்தளபதிகளும் இணைந்து கொள்கின்றனர்.
எழுந்தது சேனையெழலும்
இரிந்தது பாரின் முதுகு விழுந்தன கானும் மலையும்
வெறுந்தரையாகின திசைகள் என்று புகழ்ந்தேத்தும் வண்ணம் கருணாகரன் தலைமையில் சோழர்படை, வடகலிங்கம் நோக்கிப் புறப்படுகின்றது. இவ்வாறு சென்ற படை பாலாறு, குசைத்தலை ஆறு, பொன்முகரியாறு, கொல்லியாறு, வடபெண்ணையாறு, மண்ணாறு, குன்றியாறு, பேராறு, கோதாவரியாறு ஆகிய ஆறுகளை யெல்லாம் கடந்து வடகலிங்கத்தை அடைகிறது.
(வரலாற்றுக் குறுநாவல்)
கலிங்கத்தில் கால் வைத்த சோழர்படை கண்ட கண்ட இடமெல் லாம் சூறையாடிக்கொண்டே அதனை நெருப்புக்கிரையாக்குகின்றது. மக்கள் அஞ்சி, மன்னன் அனந்தவர்மனிடம் முறையிடுகின்றனர். அமைச்சர் அங்கராயனும் அரசனிடம் ஆனவிதமெல்லாம் எடுத்துக்கூறி மோதலைத் தவிர்க்க முற்படுகின்றான். ஆனால், ஆணவத்தோடு பதில் சொன்ன அனந்தவர்மன், அமைச்சனை எள்ளி நகையாடி, சோழர் படையை எதிர்த்து போர் முழக்கமிடுகின்றான். கலிங்கப் படை அவன் கட்டளைக்கு அடிபணிந்து களம் புகுகின்றது.
எடுமெடுமென வெடுத்ததோர்
இகலொலி கடலொலி இகக்கவே விடுவிடு பரிகரிக்குழாம்
விடும் விடுமெனு மொலி மிகைக்கவே
என்னும் விதத்தில் களத்தில் இரண்டு படைகளும் கலக்கின்றன. கணப்போதுள் களம் இரத்தக் கடலாகின்றது. அங்கே. சாய்ந்தன குதிரைகள், மாய்ந்தன யானைகள், வீரர்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். கலிங்க மன்னனின் படைத்தளபதிகளான கேத்தண்ணன், மாதவன், மட்டையன், ரச்சனன், ராசனன், ரேத்தனன், தாமயன், அமைச்சன் அங்கராயன் ஆகிய அனைவரும் மடிந்தனர். எங்கும் பிணங்கள் நிறைந்தன. கழுகுகளும், பருந்துகளும் களத்தில் வட்டமிட்டன. நாய்களும், நரிகளும் ஒடிஓடி நரமாமிசத்தைப் புசித்தன.
கள நிலைமையைக் கண்ட கலிங்க மன்னன் அனந்தவர்மன் காட்டுக்குள் ஒடி ஒளித்தான். ஆனாலும் கருணாகரன் அவனை விடவில்லை. கண்டுபிடித்துச் சோழன் முன் நிறுத்தினான். ஆமாம். காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்து போயிற்று.
G2)
(இன்னும் வரும்)

வானமும் பூமியும் கூடி மகிழும் மாரிகாலம் அது. அந்த மகிழ்ச்சி வெள்ளம் இன்றைய இலங்கையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் தோன்றும் அகதி முகாம்களுக்குள்ளும் புகுந்து கொள்கின்றது. முகாமுக்குள் ஒரே அல்லோலகல்லோலம். பாவம், மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு பக்கத்திலுள்ள பாடசாலைக் கட்டடத்தில் தஞ்சம் அடைகின்றனர். வெள்ளம் கட்டடத்திற்கே சவால் விடுவது போல அதன் அருகே முட்டி மோதிக் கொண்டு நிற்கின்றது.
ஒருவனின் இன்பம், சில சமயம் இன்னொருவனின் துன்பத்திற்குக் காரணம் ஆதல் போல வானத்தின் சந்தோச வெள்ளம், தம் அற்ப சொற்ப பொருள் பண்டங்களையும் விழுங்கிக் கொண்டு தம்மை வெறுங்கையோடு பாடசாலைக் கட்டடத்திற்குள் துரத்தியதை ஒரு அகதிப் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் புலம்புகின்றாள். 'இந்த மனிசருக்குத்தான் இரக்கம் இல்லையென்டால் வானத்துக்கும் இல்லையா? அப்படி நாங்கள் என்ன தான் பாவம் செய்தனாங்க.
ஆறு அறிவுள்ள மனித ஜிவன்களுக்கே அந்த அபலையின் குரல் எட்டாதபோது வானத்துக்கு மட்டும் எப்படிக் கேட்கப்போகின்றது? அது தொடர்ந்து தன் வேலையைச் செய்து கொண்டிருந்தது. வெள்ளத்தில் முகாம்
SY aynTIi . . . A குடிசைகளெல்லாம் படகுகளாகின்றன (கி amúsuDømús deறுகதை)
வெள்ளம் அந்தப் பிரதேசம் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருப் பதை யோசப்பால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. கையில் ஒரு மண்வெட்டியோடு வெள்ளத்தை வேறு திசையில் மறித்துவிடும் பணியில் திவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான் அவன். அப்போராட்டத்தில் வேறு சிலரும் அவனோடு இணைந்து கொள்கின்றனர். உழைக்கும் கரங்கள் அந்த வெள்ளத்தை உறுதியோடு எதிர்த்து நிற்கின்றன. அது தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு வேறு திசை நோக்கிப் பாய்கின்றது.
யாழ் குடாநாட்டில் இராணுவத்தின் காலடிகள் மிக அழுத்தமாகப் கிந்த ஊர்களில் மயிலிட்டியும் ஒன்று. கடலோரத்தில் ஒரு அரசிபோல
G23)

Page 14
விற்றிருந்த நெய்தல் மண் தன் முன்னாலேயே களங்கப்படுத்தப்பட்டதைக் கண்டு கண்ணிர் வடித்த யோசப், உயிரைக்காப்பாற்றுவதற்காகத் தன் குடும்பத்தோடு உடுவில் பகுதிக்கு வந்த போது இந்த முகாம்தான் அவனை வரவேற்று ஆதரவு தந்தது.
இடம்பெயர்தல், தமிழர் வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வு என அமைதி அடைந்த யோசப், அந்த முகாமைத் தன் சொந்த வீடாகவே கருதினான். காலையில் எழுந்து கூட்டித் துப்புரவு செய்து, வாசலுக்குத் தண்ணிர் தெளித்து விட்டே தன் தொழிலுக்குப் போவதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தான் அவன். இந்தப் பழக்கமொன்றே முகாமில் இருந்த மற்றவர்கள் அவன்மீது மதிப்பு வைக்கக் காரணமாயிற்று.
வெள்ளம் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டு நின்ற யோசப் இண்டைக்கு மழை பெய்யாட்டி ஒரு மாதிரியா வெள்ளம் வடிஞ்சிடும். நிலம் காயத்தான் நாள் எடுக்கும். அது வரைக்கும் பள்ளிக்கூடம்தான் எமக்குத் தஞ்சம். என்று சொல்லிவிட்டு மண்வெட்டியைத் தோளில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தான் அவன். மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
பள்ளிக்கூடம் அமளிதுமளிப்பட்டது. குழந்தைகளின் அழுகை. ஒலம்.
பெரியவர்களின் வாய்ச்சண்டை. -இவற்றையெல்லாம் கவனித்த யோசப் அமைதியாகவே சொன்னான். ' எப்ப பார்த்தாலும் எங்களுக்குச் சண்டைதான். இந்தச் சண்டையால நாங்கள் என்னத்தைச் சாதித்துப்
போட்டம்.? அழிவுதான்.இது தெரிஞ்சும் ஏன் சண்டை பிடிக்கிறீங்கள். இது என்ன எங்களுக்குக் கடவுள் போட்ட சாபமோ? ...
யோசப்பின் நியாயமான கேள்வி அந்தப் பள்ளிக்கூடம் முழுவதிலும் நிசப்பத்தைக் கொண்டு வருகிறது. அதனால் முகம் மலர்ந்த யோசப், பாடசாலைக் கிணற்றில் இரண்டு வாளி அள்ளிக்குளித்துவிட்டு தனது அடுத்த வேலையைக் கவனிப்பதற்காக சைக் கிளில் ஏறி விரைகிறான் .
யோசப்பின் சைக்கிள், கிராமசேவையாளர், தொண்டர் ஸ்தாபன அதிகாரிகளின் வீடுகளையெல்லாம் முற்றுகையிடுகின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுகின்றனர். யோசப்பைப் பொறுத்தவரையில் அது ஒரு
புதுமையான அனுபவம. 2 4விந்தண்
ஏழைகள், அகதிகள் விடயத்தில் அரசாங்க அதிகாரிகள், தொண்டர் ஸ்தாபனத்தின் நிர்வாகிகள் காட்டும் அக்கறையின் இலட்சணம் அவனுக்கு
C24)

நன்றாகவே புரிகின்றது. ஆனாலும் அவன் தன் முயற்சியைக் கைவிட்டுவிட வில்லை. அகதி முகாம் நிலைமை, அந்த அதிகாரிகளிடம் அவனைக் கை எடுத்துக் கும்பிடச் செய்கின்றது.
யோசப்பின் முயற்சி வெற்றி அளித்துவிட்டது என்பதை முகாமுக்கு வந்து நின்ற ஒன்றிரண்டு வாகனங்களின் இரைச்சலும், உலர் உணவுகளும் ஊர்ஜிதம் செய்கின்றன. யோசப் அவர்களின் பாராட்டு மழையில் நனைகிறான்.
அது ஒரு மத்தியான வேளை. யோசப் சாப்பிட்டுவிட்டு பாடசாலைக்கு முன்பாக உள்ள ஒரு வேப்பமரத்தின் கீழ் கிடந்த கல் ஒன்றின்மீது குந்திக் கொண்டிருக்கிறான். குழந்தைகள் அவனுக்கு முன்பாக, ஒரளவு காய்ந்து போன நிலத்தில் கோடு கிறி விளையாடுகின்றனர். அப்போது, சைக்கிள் டைனமோவின் உதவியால் இயங்கிக் கொண்டிருந்த வானொலியிலிருந்து ஒரு பாடல் வழிந்து வருகிறது. யோசப்பிற்கு அந்தப் பாடலைக் கேட்டதும் பொறி தட்டுகிறது. 'ஓ நத்தாரும் வந்திற்று.
கிறிஸ்மஸ் என்றதும் கடந்த ஆண்டு அதனைத் தன் வீட்டில் குடும்பத்தோடு குதுனகலமாகக் கொண்டாடியது அவன் நினைவுக்கு வருகின்றது. ஆனாலும் அதை உடனடியாகவே மறந்து விட்ட அவன், தன் பைபிளில் படித்த யேசுவின் அவதார வரலாற்றை நினைத்துக் கொள்கிறான்.
அது உரோமாபுரிப் பேரரசர்களின் காலம். குடும்பக் கணக்கெடுக்க வேண்டும் என்ற அகஸ்து சீசரின் ஆணை உலகமெல்லாம் சொல்லப்படு கிறது. கட்டளைக்கு கட்டுப்பட்ட யோசப்பும் மரியாளும் மற்றவர்களைப் போல யூதேயாவின் பெத்தலகேம் நோக்கிப் புறப்படுகின்றனர். அங்கே அவர்கள் கால் வைத்தபோது பெத்லகேம் ஜனவெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கின்றது. சத்திரத்திலும்கூட இடம் இல்லாத நிலையில் யோசப் கர்ப்பிணியான தன் மனைவி மரியாளைக் கூட்டிக்கொண்டு ஒரு கொட்டிலை நோக்கிப் போகின்றார்.
யேசுவின் பிறப்பு வரலாற்றில் ஆழ்ந்திருந்த யோசப் தங்கள் அகதி முகாமை யேசு பிறந்த கொட்டிலோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான். அவன் மனம் அந்த அவதார புருவடிருக்காக அனுதாபப்படுகிறது. 'பாவம். யேசு ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து எங்களைப்போல நல்லாக் கஸ்ரப்பட்டிருப் பார். தன்னை மறந்த நிலையில் அவன் வாய் முணமுணுக்கிறது.
அகதி முகாமில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். அதனால் அன்றிரவு எப்படியும் மல்வம் கோயிலுக்கோ அல்லது மானிப்பாய்

Page 15
அந்தோனியார் கோயிலுக்கோ சாமப் பூசைக்குப் போக வேண்டுமென்று திர்மானிக்கின்றனர். ஆனால், மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பார்களே அதுபோல வானம் கொட்டு கொட்டெனக் கொட்டுகிறது. மீண்டும் அந்தப் பிரதேசம் முழுவதும் வெள்ளக்காடாகின்றது. இது போதாதென்று பாடசாலைக் கட்டிடத்திற்குள்ளும் ஒரே ஒழுக்கு. மக்கள் மத்தியில் புறுபுறுப்பு. புலம்பல். யார் யாரையோவெல்லாம் அவர்கள் மனம் திட்டித் திர்க்கிறது.
களத்தில் மழை தன்னந்தனியாக நிற்கிறது என்றெண்ணியோ என்னவோ காற்றும் அதனோடு வந்து கைகோக்கின்றது. இந்தக் கூட்டில் அகப்பட்ட மரங்கள் தலையை விரித்துக்கொண்டு பேயாட்டம் போடுகின்றன. அகதி களுக்கு ஒரே பயம். சூறாவளி வந்துவிட்டதோ என்ற நினைப்பில் அப்படியே விக்கித்து விறைத்துப் போகிறார்கள்.
ஆனால், யோசப் மட்டும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அசுர வேகத்தில் இயங்குகின்றான் அவன். யோசப்பின் வேகம் மழை ஒழுக்கைப் பெருமளவு கட்டுப்படுத்துகிறது. இருட்டில் தேங்கிக் கிடந்த அந்தக் கட்டிடத்திற்குள் அரிக்கன் லாம்புக்குள் இருந்து எழும் ஒளிக்கிற்று புசைச் சிமிழுக்குள் இருந்து தன் முகத்தைக் காட்டுகிறது.
குளிரில் நடுங்கிய குழந்தைகள் சில தங்கள் தாய்மாரின் மடிகளுக்குள் நெளிகின்றன. சில பாய்களிற் புரள்கின்றன. இதனைக் கவனித்த யோசப்பிற்கு மீண்டும் யேசுவின் ஜனன வரலாறு நினைவுக்கு வருகிறது.
கந்தல் துணியால் சுற்றப்பட்டிருந்த குழந்தை யேசுவும் இப்படித்தான் குளிரில் நடுங்கியிருப்பார் என்று நினைத்த அவன், பாயில் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொள்கிறான்.
முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் தன் குழந்தை ஒட்டிக்கொண்ட தைக் கண்ட அதன் தாய் முகம் மலர்ந்தவளாய் 'இந்த முகாமில் நீங்கள் இல்லாட்டி எங்கட பாடு கஸ்ரந்தான் கேக்கப்பாக்கவும் ஆள் இருக்காது. என்கிறாள்.
யோசப் அவள் சொன்னதைக் கவனித்ததாகவும் தெரியவில்லை.
அவன் அந்தக் குழந்தையின் வடிவில் யேசு பாலனையே கண்டது போன்ற ஒரு உணர்வில் மிதந்து கொண்டிருந்தான்.
(шт6уші сыйш60P607)

மகாபாரதம் - சில நிகழ்வுகள்
உதிட்டிரரின் பிறப்பு -
பலராமனார் பிறப்பு
வீமன் பிறப்பு
அருச்சுனன் பிறப்பு
கண்ணபிரான் பறப்பு
é. S. 31-8-31 14
229 நாள் சென்ற பின் ஒரு ஞாயிறன்று பிறந்தார்.
347 நாள் கழித்து ஒரு சனியன்று பிறந்தான்
650 நாள் கழித்து ஒரு திங்கட்கிழமையில் பிறந்தான்.
696 நாள் கழித்து ஒரு வெள்ளிக்கிழமையன்று (கி. மு. 27.7.3112) பிறந்தார்.
பாரதப்போரின் தொடக்கம்
கி. மு. நவம்பர் 22-3067 கிருத்திகை நட்சத்திரத்தில்
இராசசூயம் தொடக்கம்:- ஒர் அமாவாசையில்.
கி.மு. 25.12.3082
யுதிட்டிர சகாப்தத் தொடக்கம் -
- மறுநாள் கி. மு. 26.12.3082.
வனவாசத் தொடக்க நாள்:-
- ஜூலியன் நாள் 596391
○

Page 16
- வெளிப்பாடு
ஜூலியன் நாள் 601157
- வனவாசமும் அஞ்ஞாதவாசமும் மொத்தம் 4764 நாள் அல்லது சூரிய சித்தாந்தப்படி 13 ஆண்டுகளும் 18 நாளும்.
- அருச்சுனனுக்கு 14ம் பிராயம் நடக்கும்போது பாண்டு
மரணமடைந்தான்.
- வீடுமர் 58 நாள் தூங்காமல் அம்புப் படுக்கையில் இருந்து
விட்டு விண்ணுலகம் சென்றார்.
- யாதவர்களின் உள் நாட்டுப்போரும், அவர்களின் அழிவும்
ஓர் அமாவாசையன்று.
- வெள்ளி கி. மு. 15-4-3031.
- கண்ணபிரான் பூதவுடலை நீத்தது அடுத்த நாளில்
16.4.3031.
கலியுகம் பிறந்த தேதியும் இதுவே.
ஏழு மாதங்கள் கழித்துப் பாண்டவர் அரசு துறந்து முக்தி வழியில் பூப்பிரதட்சணமாக நடந்தனர்.
(ச. கு. கணபதி) - (வியாசரும், வில்லியும் ஒரு திறனாய்வு.

தென்னிங்கை?
திருந்துமா தென்னிலங்கை?
வருந்தப் போகின்றதா வாழ்நாளெல்லாம்?
இனவாதம்தான் அதன் இலட்சியமா? குணம் எப்போதும் குரோதமா?
அதிகாரச் சண்டையின் அர்த்தம் என்ன? விதி மீண்டும் விளையாடுகின்றதா?
இருட்டிற்குளர்தான் இலங்கை இருக்க வேண்டுமா? குருட்டு மனிதர்களே கூறுங்கள்!
தாய் நாடே! உனக்கேள்ை இந்தத் தண்டனை! GILLEGGIATT
உன் பிளர்ளைகளர்?
ட காண்டீபன்

Page 17
ー○
யேசுகு
யேசு சூரியனே எழுந்து வா நீ நீச இருளை
நிர் மூலமாக்கு
சூரியனே. இந்த
9_6035Ա0 (U0(Կ26)J6 சுத்தமாக்கு! பேரொளி மழை 6)UUÜ
ஊரெல்லாம் உ உற்சவம் நடக் ஏரோதணர்கள் இன்றும் இருக் வேரோடு அவர் வீழ்த்த வா. விரைந்து வா.
- கம்பதாசன்

தையும்
p60)UU
ந்தன்
ՖԱ 6մ)
கின்றார்கள் fகளை