கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2011.05

Page 1


Page 2

6600
அறிவியல் பல்சுவை மாசிதை
குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்
கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்
–ህff፱፱õffÖÖ
மாணவர்களை ஆரோக்கியமான அறிவுச் சமூகத்தை நோக்கி திசைப்படுத்துவதாகவே வரை செயற்படுகிறது. அறிவியல், விஞ்ஞானம், கலை, இலக்கியம், பகுத்தறிவுக் கோட்பாடு மற்றும் பல பல்சுவை அம்சங்களைத் தாங்கி வரை மாதம் தோறும் வெளிவருகிறது. இதற்காக வாசகர்களிடம் தொடர்ந்தும் நல்லாதவரை வேண்டிநிற்பதோடு, உங்கள் ஆக்கங்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.
-ஆசிரியர்
உள்ளே.
இ. சிந்திய குறள்கள் - 02 இ சிந்திய முத்துக்கள் - 04 இ எதுவரை.? (தொடர் கட்டுரை) - 05 & தமிழ் வட்டம் - 07 இ. சிறுவர் உரிமைகள் -
தொடர் -08 இ மனதை உறுத்தும்
முகப்பருக்கள் -13 sa Let's Learn to
speak in English A Bussiness Letters - 18
A Buddihism - 21
இ. பல்பயன் தரு(ம்)
மரங்கள் - கிளிறிசிடியா இ மறைந்து கிடக்கிறது மனித ஆற்றல் 26 இ இலங்கை தொடர்பான தகவல்கள்
- 28 இமனநலமே மனித
நலம் - 30
& சிறுகதை - அடிமை
நோய் - 32
இகவியரங்கம் -
கெளதமரின் பாதை
-38
இ மாதமொரு மனிதர்
திரு.முத்துக்குமாரு பாலசுப்பிரமணியம் 41 இ புதிர்ப் போட்டி - 45 இ தமிழா! உன் பெயர் தமிழா? - 46
O1

Page 3
Qiang
சிந்திய குறள்கள்
தக்கார்தகவிலர் என்பதவரவர் எச்சத்தற்கானப்படும்.
இதற்குப் பரிமேலழகர் கூறும் பொருள் "இவர் நடுவு நிலையுடையவர் இவர் நடுவுநிலைமையிலர் என்னும் விசேடம் அவரவருடைய நன்மக்களது உண்மையாலும் இன்மையாலும் அறியப்படும் என்றவாறு.
If Person just or unjust be, is proved by their progeny.- சிற்சந்ததி
சுருங்கக் கூறினி பெற்ற பிள்ளைகளைக் கொணி டு (செயற்பாடுகளை) அவன் ஒரு தகுதியானவனா? இல்லையா? என அறியலாம் என்பது.
வேறுசிலர், எச்சம் என்பது மிச்சம் - எனவே அவர் பேச்சிலிருந்து தக்காரோ? தகவிலாரோ? என்றும் அறியலாம் என்பர்.
ஆனால் என்னால் இவ்விரண்டையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அகிம்சா மூர்த்தி காந்தி அவர்களுடைய மகன் காந்தியின் சிறப்பை பிரதிபலிக்கக் கூடியதாக நடக்கவில்லை. மேலாக கேவலமான பழக்கமுடையவனாகவும் ஓர் காமுகனுமாக, மற்றவர் பழிப்பிற்கு இடமாகவே வாழ்ந்தான்.
இரண்டாவதாக நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் இராசரத்தினம்பிள்ளையவர்களின் மகன் கலைஞானம் ஏதுமில்லா மிகச் சாதாரண மனிதனாக, ஒரு சாதாரண கடைக்காரனின் கார்சாரதியாகவே வாழ்நாள் முழுவதையும் கழித்தான். இப்படியே எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். எனவே இப்பொருள்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்படியென்றால் குறளில் பிழையிருக்கிறது என்று நான் கூறவில்லை. இக்குறளுக்கு இப்பொருட்கள் பிழையென்பதே என் கொள்கை.
O2
 

வரை
என்ன பொருள் கொள்ளலாம் என்று பார்ப்போம். எச்சம் என்றால் மிச்சம் என்பது பொருள். மிச்சம் என்பதற்கு அவர்கள் பெற்றுவிட்டுச் சென்ற பிள்ளைகள் என்பது பொருள். ஆனால், நான் எச்சம் என்று எதைக்கொள்கிறேன் என்றால் அவர்கள் இறக்கும் முன் இந்நாட்டுக்கு என்ன செய்துவிட்டுச் சென்றார்கள் என்பது. உதாரணமாக காந்தி மகான் என்ன செய்து விட்டுச் சென்றார்? இந்தியாவுக்கு சுதந்திரத்தை எடுத்துக் கொடுத்தபின் இறந்தார். எனவே காந்தியின் எச்சம் - அதாவது அவர் இறக்குமுன் விட்டுச்சென்றது இந்தியசுதந்திரம்.
எனவே எச்சம் என்பதற்கு ஒருவர் வாயிலிருந்து பேசிய பேச்சென்றோ அவர்கள் பெற்றுவிட்டுச் சென்ற பிள்ளைகள் என்றோ கொள்வது குறளை பிழை கூறுவது போலாகும் என்பதே என் பொருள். வணக்கம் மீண்டும் சந்திக்கிறேன்.
மாணவ மணிகளே! மிகப் பொறுமையோடு குறளை எழுத்தெண்ணிப் (ஆராய்ந்து) படிக்க வேண்டுகிறேன்.
விவேக வரிகள்
1. அறிவதற்கான புலனை நீங்கள் உருவாக்கும் முன்பே
அறியப்படுகின்ற பொருள் இருந்தது. 2. அனிச்சை செயல் மேலோங்கினால் இழிநிலை அடைவாய் . பரிமாணமி மேலோங்கினால் முன்னேறுவாய் 3. யார் எதற்கும் கவலைப் படுவதிலி லையோ
அவனைத்தேடி எல்லாம் வரும். 4. யார் இந்த அர்ப்ப உலகின் பொருட்களைச் சாராமல்
வாழ்கிறானோ அவனே எஜமான். 5. ஒரு இலட்சியத்திற்காக மட்டுமே வாழுங்கள், வேறு எதற்கும் இடமில்லாத அளவிற்கு அந்த இலட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும். அனைத்திலும் உறுதிமிக்கதாக இருக்கட்டும். 6. இலட்சியத்தில் தீவிர நாட்டம் ஏற்பட்டுவிட்டால் மற்றவை எளிதில் வந்துவிடும். போராட்டம் தான் ஒருவன் பெறும் படிப்பினை இந்த வாழ்க்கையில் நாம் பெறும் பெரிய நன்மை இந்தப் போராட்டப் பயிற்சியே. 7. சொர்க்கத்திற்கு ஒரு பாதை இருக்குமானால் அது நரகத்தின்
வழியாகவே இருக்கும். 8. இந்த உலகம் ஓர் பயிற்சிக்கூடம் இங்கு நீங்களும் நானும் இன்னும் கோடிக்கணக்கான உயிர்களும் வந்து பயிற்சி செய்து தங்களை உறுதியானவர்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இது இருக்கிறது.
03

Page 4
வரை
யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
4தீதும் நன்றும் பிறர்தர வாரா; ófléólu/ நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; 4- d 4சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் ഗ്ര/006്
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; "மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல், ஆருயிர் முறைவழிப் படுஉம்” என்பது திறவோர். காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. ሀሀመub ሀn፲፰]
To us, all towns are as our hometown. All people are as brethren. Life's good comes not from others' deeds, nor ill. To suffer, and to experience bliss, is up to each person and their own deeds alone. Even death is not to be feared, for it is a form of renewal. We do not say Life is great, let us enjoy life. Nor do we say with bitterness, that life is terrible. For, when with lightning strikes the sky opens up, the wild forest river overflows, beating against the rocks, and weeping. A small boat, which is caught in its currents, will not obey the boatman's guidance, but be dragged along the river's wild course. Even our lives are thus dragged, by tides of fate, and not in our control. Thus have we seen in visions of the wise. Therefore, We are not in awe of those who are greatl Even more so, we do not scorn those who seem simple.
04

வரை
0ே எதுவரை?
அன்பிற்குரிய இளைய தலைமுறையினரே.
இனிய வசந்தகாலத்தில்
இறக்கை கட்டிப் பறந்து திரிகின்ற வணினத்துப் பூச்சிகளைப் பார்த்து இரசித்துக் கொணர்டிருக்கிறீர்களா? இந்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். உங்கள் பாதை, அதில் உங்கள் பயணம் - அங்கே ஏற்படும் தடைகள் - அதன் பிடியில் சிக்கித்தவிக்கும் நீங்கள். ஆம்! நீங்கள் சந்தித்தது மிகச்சிறிய பிரச்சினையாகத்தான் இருக்கும். எதுவுமே நடந்துமிருக்காது. ஆனால் அதனை மிகப்பெரிய பூதாகரமாக உருவாக்கி அது பேயாட்டம் போடுகின்ற நிலைமைகள் யாரால் உருவாகின்றன?
ம். இளையவர்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். என்ன நடந்தது என்றே புரியாது குழம்பிநிற்கும்போதே அவர்களின் சின்னஞ்சிறிய தலைக்குள் மிகப்பெரிய பாரம் திணிக்கப்பட்டுவிடும்; சுதந்திரம் பறிக்கப்பட்டுவிடும்.
கல்லூரி வாசலில் இருந்து மாணவிகள் வீடு நோக்கிச் செல்கின்ற பாதை. அங்கே
அவர்களை எதிர்கொள்ளும் பிரச்சினைகள். பதறி அடித்துக்கொண்டு வீடு சென்றாலோ அங்கு அதைவிடப் பயங்கரமான வரவேற்பு. பிரச்சினையை யாரிடமும் வாய்விட்டுச் சொல்லமுடியாத அவலநிலை!
ஆசை ஆசையாய் பெற்றுவளர்த்து, அதன் பருவத்தைப் பார்த்து இரசித்துப் பெரிய விழாவெடுத்து, ஊரை அழைத்துப் பிள்ளையை அலங்கரித்து, நிற்கவைத்துத் திரும்பவைத்து, விளக்கேற்றவைத்து, சிரிக்க வைத்து, வெட்கப்பட வைத்து, நடக்க வைத்து, காதணி, கழுத்தணி அணியவைத்து, சாய்ந்து கையூன்றி அமரவைத்து, சேலை முந்தானையைப் பறக்கவிட்டு, வெற்றிலையில், கணிணாடியில் முகம் பார்க்கவைத்து, ஒருகணிணை மூடி மறுகணிணால் பார்க்கவைத்து, அத்தனைக்கும் மேலாக தணர்ணிர்த் தொட்டிக்குள் நீர் நிரப்பிமலர் தூவி அதற்குள் குளிக்கவைத்து.அப்பப்பா. எத்தனை எத்தனை கோலங்களில் எல்லாம் அந்தப் பன்னிரணிடு பதின்மூன்று வயதில் இரண்டும் கெட்டான் பருவத்தில் வீடியோப்படம் எடுத்துப்
05

Page 5
வரை
பொருத்தமான பாடல்களையும்
இணைத்து ஒரு திரைப்படமே தயாரித்து, அல்பம் தயாரித்து அறியாப்பருவத்துக் குழந்தை மனதை மொட்டிலிருந்து மெல்ல முகையவிழ்ந்து மணம்வீசத் தூணிடிக் கனவுகளை விதைத்து ஒரு மாய உலகில் வலம்வர வைத்தவர்கள் யார்? “எங்களிடம் ஒரு பருவப் பெணி உருவாகிவிட்டாள்" என்று அறைகூவி, அழகுபடுத்தி ஆவணப்படுத்திச் சந்தைப்படுத்தும் வியாபாரத்தை முன்வைத்தவர்கள் யார்? என்ன உங்களுக்கும் இது பிடித்திருக்கிறது போல் தெரிகிறதே.
கட்டிளமைப்பருவத்துப் பெனிபிள்ளையின் நடத்தைக் கோலங்கள் யாவும் இந்தப் பதின்மூன்று வயதில் தான் முறைகொள்ள ஆரம்பிக்கிறது. ஒரு ஆணினி ஸ்பரிசம், தொடுகையானது ஒரு பெணிபிள்ளையினர் உடலில், மனதில் ஒரு சிலிர்ப்பை எற்படுத்தும் நிலை இங்கேதான் ஆரம்பமாகின்றது. சில வேளைகளில் இந்த சிலிர்ப்பு விருப்பத்திற்குரியதாக மாறியும் விடுகின்றது. இது பெற்றவர்களின் பார்வைக் கோணத்திற்குச் சில வேளைகளில் அகப்படாது போய் விடவும் கூடும்.
இளைஞர்களே! உங்கள் மனதில் தூய விழுமியங்ளை ஒழுக்கக் கோட்பாடுகளை வளர்த்து வைத்திருப்பதவசியம். நீங்கள் சலனப்படவும் தடுமாறவும் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் உங்கள் ஒழுக்கப்பணிபு விழித்துக்கொணர்டு "இது தவறு விலகிவிடு அல்லது விலக்கிவிடு” என்று உங்களைக் கட்டுப்படுத்தி சந்தர்ப்பங்களில் உங்கள் சறுக்கலிலிருந்து உங்களைக் கட்டிக்காத்துவிடும். ஒருவேளை உங்களுக்கு இத்தகைய தொடுகை தொடர்ந்து தேவைப்படுவது போல ஒரு ஏக்கம் ஏற்பட்டால் நீங்கள் தான் உங்கள் மனதைக்கட்டுப்படுத்தி அந்த நினைவிலிருந்து நல்ல நினைவுகளைக் கொணர்டு வந்து அந்தத் தூய்மையில் லயிக்கப் பழகிக்கொள்ளுங்கள்! ஆம்! உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்துத் தடம்புரணர்டு விடாதீர்கள். என்ன? கடந்தகால நினைவலைகள் வந்து போகின்றனவா? ம். ம். சிந்தியுங்கள். அடுத்த மடலில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறும்.
vகீரதிகனேசதுறை ஆசிரியை, யா/ மகாஜனக் கல்லூரி
(விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்)
O6

வரை
ij o திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
நூறச்சொனினால் எருதிற்குக் கோயம்; இறங்கச் சொண்ால் முடவனுக்குக் கோயம்!
இப்படியான ஒர் பழமொழியை எம்மவர்கள்கள் சொல்வார்கள. இதில் என்ன இருப்பதெனில் யாரோ இருவர் சில உதவிகளைக் கேட்கிறார்கள். ஒரு நிலப்பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். ஒருவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தால் மற்றவர் கோபித்துக்கொள்வார். மற்றவருக்குசாதகமாக தீர்ப்பளித்தால் முன்னையவர் கோபித்துக்கொள்வார். ஒருவர் அண்ணனின் மகன்; மற்றவர் தம்பியின் மகன் . இந்நிலையில்தான் தீர்ப்பளிப்பவர் நிலையிருக்கிறது. இவர் தான் சொல்கிறார் "நான் யாருக்காகத் தீர்ப்பளிப்பது. ஒருவர் அண்ணன் மகன் மற்றவர் தம்பி மகன். ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம்” என்று.
இதை விளக்க எருமையையும், முடவனையும் ஏன் கூறவேண்டும்? அதற்கு ஒரு குட்டிக்கதை சொல்லுவார்கள் முன்னோர்கள்.
ஒருவர் மாட்டு வண்டியில் வந்துகொண்டிருந்தார். வழியில் மரமொன்றில் சாய்ந்து கொண்டு நின்ற முடவன் வண்டியில் ஏறிவிட்டான். வண்டிக்காரன் திரும்பிப் பார்த்தான். முடவன் பரிதாபமாகப் பார்த்தான். வண்டியை வண்டிக்காரன் எடுப்பதற்காக எருதை கையிலிருந்த தடியால் தட்டினான். எருது தலையை கோபமாக சுழற்றிவிட்டு வண்டியை இழுக்காமல் நின்று விட்டது. மிகுந்த பாரத்துடன் வந்த வண்டி முடவனும் ஏறிய படியால் எருது வண்டியை இழுக்க முடியாமல் போய்விட்டது. எனவே வண்டிக்காரன் “நீ வண்டியிலிருந்து இறங்கு” என்றான்.
முடவனுக்கு கோபம் வந்துவிட்டது. "நீ ஒரு அறிவில்லாத மனிதன். நான் ஒரு முடவனென்று தெரிந்தும் வண்டியை விட்டு இறங்கென்று சொல்கிறாயே" என்று கோபித்தான். வண்டிக்காரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போதுதான் அவன் நினைத்தான் ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம் என்று.
நம்மவரின் பழமொழிக்கு அவர்கள் தந்த கற்பனைக் கதையைப் பார்த்தீர்களா?
O7

Page 6
நாம் சென்ற தொடரில் சிறுவர் என்றால் யார்? இவர்களது குணவியல்புகள் என்ன? இவர்களுக்கு இருக்கும் உரிமைகள் என்ன? போன்ற விடயங்களைப் பார்த்தோம். இவ்விதழில் இவ்வாறான சிறுவர் உரிமைப் பிரகடனத்தை எமது அரசு ஏற்றுக் கொண்டு சிறுவர்களுக்காக எவ்வாறான செயற்பாடுகளைத், திட்டங்களை வகுத்து சிறுவர்களைப் பாதுகாத்து வருகின்றது என்பதை விரிவாக நோக்குவோம். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகள் பிரகடனத்தை எமது இலங்கை அரசு 1991ம் ஆண்டில் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு சிறுவர்களைப்
பாதுகாப்பதற்காகவும், சிறுவர் உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இச்செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாக:
> சிறுவர்களையும், பெண்களையும்
மட்டுமே மையப்படுத்தி "சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு” எனும்
08
 

வரை
விசேட அமைச்சு உருவாக்கப்பட்டு இவற்றினூடாக சிறுவர்களைப் பாதுகாக்கும், உரிமைகளை மேம்படுத்தும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு இவர்களுடாக சிறுவர் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. > மேலும் சிறுவர்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தேசிய ரீதியிலும், மாகாண ரீதியிலும் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. > ஒவ்வொரு பொலிஸ்
நிலையங்களிலும் சிறுவர், பெண்களுக்கென விசேட பிரிவு (Women & Child desk) உருவாக்கப்பட்டு இதில் ஒரு பெண்பொலிஸ் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டு சிறுவர்களுக்கு எதிராகவரும் முறைப்பாடுகளை சுமூகமான முறையில் கையாள வகைசெய்யப்பட்டுள்ளது. > சிறுவர்களது உரிமைகளைப்
பாதுகாப்பதற்கும், சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவும் இதற்கென விசேட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள்:
9 சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள்
9 சிறுவர் மேம்பாட்டு
உத்தியோகத்தர்கள் 9 முன்பிள்ளைப் பருவ
உத்தியோகத்தர்கள் 9 நன்னடத்தை நிகழ்ச்சித் திட்ட
உத்தியோகத்தர்கள் போன்றோர் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் நியமிக்கப்பட்டு 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு நிலையிலுமுள்ள சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவி இதன் உத்தியோகத்தர்கள் மூலம் பாதுகாப்பு தேவைப்படும் சிறுவர்களுக்கான சேவையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறாக உருவாக்கப்பட்ட அரச அமைப்புக்களும், உத்தியோகத்தர்களும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு மட்டங்களிலும் பல கட்டமைப்புக்களை உருவாக்கி அவற்றினூடாக சிறுவர்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அவைகளில்:
> கிராமிய மட்டத்தில் கிராம
அலுவலர்களைத் தலைவராகக்
09

Page 7
கொண்ட கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு ரீதியாகவும் உருவாக்கப்பட்டு சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக இயங்கிவருகின்றது. பிரதேச மட்டத்தில் பிரதேச செயலரைத் தலைவராகக் கொண்ட பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு பிரதேச ரீதியாகவும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாகாண மட்டத்தில் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளரைத் தலைவராகக் கொண்டு மாகாண சிறுவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய மட்டத்தில் உள்ள சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உருவாக்கப்பட்டு உடனடியாக எங்கிருந்தாலும் தொடர்புகொள்ளக் கூடிய
வரை
இலகுவான தொலைபேசி எண் மூலம் (1919) அகில ரீதியில் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற சூழலை இல்லாதொழிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றைவிட கிராமிய மட்டத்தில் சிறுவர்களது பங்களிப்பை அதிகரித்து, அவர்களின் ஆற்றல்கள், ஆளுமைகளை வளர்ப்பதற்காக சிறுவர் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட சிறுவர்கழகங்கள் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்தையும் ஒன்றிணைத்த "பிரதேச சிறுவர் சபை" "மாவட்ட சிறுவர் சபை" "தேசிய சிறுவர் சபை" என்ற நிலைகளில் சிறுவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தி செயற்படுத்தப்படுகின்றது. இவ்வாறான கட்டமைப்புக்களுடன் பாதிக்கப்பட்ட உதவி தேவைப்படும் சிறுவர்களுக்கான அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர் மூலம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அவையாவன:
> இரு பெற்றோரையும் இழந்து
1O

வரை
உறவினர்களுடன் வாழும் சிறுவர்களின் கல்வி, பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக பொருத்தமானவர்களை இப்பிள்ளைகளுக்கு நீதிமன்றம் மூலம் நியமித்து "பொருத்தமான நபருக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 500/= வீதம் வழங்கி வருகின்றது. > வறுமைக்கோட்டினுள் வாழும்
குடும்பங்களில் பிறக்கும் இரட்டைப் பிள்ளைகளின் உணவுத் தேவைக்காக "இரட்டைப் பிள்ளைகள் கொடுப்பனவாக” ஒட்டுமொத்தமாக 7500/= வழங்கப்படுகின்றது.
மருத்துவ உதவி தேவைப்படும் (இதயநோய்,சிறுநீரகநோய் வறிய சிறுவர்களுக்கு "மருத்துவ உதவிக் கொடுப்பனவாக” 5000/- , உணவு மருந்துகளுக்காக வழங்கப்பட்டு வருகின்து. > தமது அடிப்படைத் தேவைகளை
நிறைவேற்ற முடியாத சிறுவர்களுக்கான அடிப்படைத்தேவைகளை இனங்கண்டு முக்கியமாகவும் அவசரமாகவும் நிறைவேற்ற வேண்டிய தேவைகளை அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் திணைக்களத்தலைவர் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. > இவற்றைத்தவிர உடல், உள,
பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் சிறுவர்களுக்கு சட்ட ரீதியிலான உதவியை நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மூலம் பெற்றுக்கொடுத்தும், பாதிப்பை ஏற்படுத்திய நபருக்கான தண்டனையைப் பெற்றுக் கொடுத்தும் சிறுவர்களைப் பாதுகாத்து வருகின்றது.
> இவ்வாறான சிறுவர்களின்
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சிறுவர்களின் உயரிய நலன் பேணப்பட்டு சிறுவர்கள் பாதுகாப்புடனும், உரிய பராமரிப்புடனும் வாழவேண்டும் என்றும் அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பதை எம்மால் விளங்க முடிகின்றது. இருப்பினும் இப்படிப்பட்ட செயல்முறைகள் எடுக்கப்பட்டும் சிறுவர்கள் பல்வேறு சிக்கல்களை, துன்பங்களை எதிர்நோக்குவதும் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே நாம் அடுத்த அத்தியாயத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அதற்கான காரணங்களையும், தீர்வுகள் பற்றியும் பார்க்கலாம். us
ஒதாகும
S.M.E.Bridget சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நல்லூர்
11

Page 8
கனவுகள் பூப்பூக்கும் வயது அது. கற்பனைகள் சிறகடிக்க எண்ணங்கள் கைகால் முளைத்த காற்றாய் காற்றில் பறக்க மாயக் கண்ணாடி முன்னே மணிநேரங்கள் தொலைய கனவுகள் சுமக்கின்ற வயதில் ஒரு தொல்லை . அதுவொரு கொடுமையப்பா விரக்திவரை கொண்டு செல்கிறது. தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது என்றால் தவறில்லை. எந்தக் கிறீம் பூசியும் பயனில்லை. பாலாடை தொடக்கம் எல்லாம் பூசிக் களைத்து விட்ட நிலை ஐயோ முகமே மேடுபள்ளமாக அவலட்சணம் எல்லாம். முகப்பரு தொல்லையில் இருந்து மீள வழியில்லையா என்ற 6T60,000T f.
இளம் வயதினரை முகப்பரு
ஆக்கிரமிப்பது மிகப் பெரியதொரு கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆங்கில a 5-gfiLS65 Acne Vulgaris எனப்படும். இதில் உள்ள மாயம் என்னவென்றால் பருவம் அடையும் வயதில் வருகின்ற பருக்கள் 25 வயதை அண்மித்த கால வயதில் தானாகவே மாயமாகிவிடுகின்றன. எனினும் சிலரில் அது தொடர்ந்தும் நிலைப்பதுண்டு.
இந்நோயின் தாக்கம் 16 19 வரையான கால வயதில் அதிகம் வழுவழுப்பை தோலுக்கு வழங்கும் நெய்சுரப்பிகள் அடைபடுவதன் மூலம் அங்கு ஏற்படும் அழற்சியால் முகப்பருக்கள் மிகப் பெரும்
12
 

வரை
வருத்தத்தை மனதில் தருகின்றன.
இது ஆளுக்கு ஆள் வேறுபட்டதாக அமையலாம். இது நெய்சுரப்பின் சுரப்பு பதார்த்த அளவும், ஓமோன்கள் ஆண்களில் வி த, பெண்களில் சூலகம் மற்றும் அதிரீனல் சுரப்பி இவற்றினால் உருவாக்கப்படும் ஓமோன்கள், இவை தவிர கிருமித் தொற்று Propionibacterium @g5 நெய்ச்சுரப்பிகளில் பரவி தாக்கத்தை தருகின்றன. இதைவிட முகப்பருக்கள் குடும்பத்தினரிடையே காணப்படினும் அவை தொடரலாம். இது உணவுமுறை, சூழல் ஆகியவற்றுடன் சில தொடர்புகள்
கொண்டனவாக நம்பப்படுகின்றன.
எனினும் அது பொதுவாக இளவயதினரில் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்படுகின்றது. இதைவிட Follianlar கொழுப்புப்பதார்த்தங்கள், Occlusstion triad. Sgs spital எண்ணெய், இனிப்பு வகைகள் ஆபிரிக்கர்களில் உருவாகும் இவற்றுடன் நேரடியாக எந்தத் ஒருவகை என்றே கூறலாம்.
தொடர்பும் அற்றது.
இது பல்வேறுபட்ட இவை இவ்வாறிருக்க
முகத்தை மிருதுவாக்குகின்றது என
வகைகளை கொண்டுள்ளது. நினைத்து கொண்டு நாம்
Infantile குழந்தைகளில் வரும் இதற்கு தாயிலிஇருந்து பெறப்பட்ட அந்ரோஜன் வகை ஓமோன் assry 600TLDITeSib. Steroid acne. Sgs Cushing Syndrom or steroid தொடர்ச்சியான பயன்பாட்டில் 6][DLIGaélgipg). Oilacne தொழிற்சாலைகளில் எண்ணெய்ப்
பயன்படுத்துகின்ற சிலவகை பவுடர்களும் முகப்பருவை மிகையாக்குகின்றன. அவ்வாறே கருத்தடை மாத்திரைகள், சில வலிப்பு மாத்திரைகள் இவையெல்லாம் முகப்பருவுக்குக் காரணமாகின்றன.
முகப்பருவை எதிர்கொள்ள
பதார்த்தங்களின் கையாளுகையால் கிருமித் தொற்று, சுரப்பு, மற்றும்
6pLG&lpg5). Acne fulminous. Qg5.
13 ”عاشق لخg 6777 byt۹بھnarr
* طاق5لاة قتلقيود

Page 9
சுரப்புக்களில் ஏற்படும் அடைப்பை தவிர்த்தல் என அமைகின்றது. முகப்பருக்களை உடைப்பதோ, நசிப்பதோ, கிள்ளுவதோ வேண்டத்தகாத செயற்பாடுகள் என்றுதான் கூறவேண்டும். இதனால் வடுக்கள் தோன்றுவதும் சில சமயம்அவை மறையாதுவிடும்.
முகத்தை சோப்பும் நீரும் கொண்டு ஒழுங்காக சுத்தம் செய்தல் வேண்டும். கிருமித்தொற்றை குறைக்க Chlorhexidinebenzoylperoxi de, Tretinoin, adapalene (3LIT6óp மருந்துகளை வைத்திய ஆலோசனையுடன் பூசுவது நன்று. இவற்றின் செறிவு வேறுபட்டதாக பல தயாரிப்புக்கள் காணப்படுகின்றன. இது மருத்துவஆலோசனையின் கீழ் பல மாதங்களும் தொடரும் வாய்ப்பு உள்ளது.
இதைவிட சீழ் பிடித்து G(5üllsi Erythromycin, metronidazole கலந்த களிம்புகள் அல்லது மாத்திரைகள், Oxytetracycline, Erylhromycine போன்றனவும் பயன்படும்.
இன்னும் இருப்பின்
Isotretinon என்னும் மருந்து Cyproterone என்னும் ஓமோனும் மருந்தும் பயன்படும் இவை எல்லாம்
வைத்தியரின் ஆலோசனையின் கீழ்அமைதல் வேண்டும்.
இவை தாண்டி சீழ் கட்டி பட்டிருந்தால் சீழ் சிறு சத்திர சிகிச்சை அல்லது ஊசி மூலம் உறிஞ்சி அகற்றப்படும். அதைவிட நுண்ணிய ஊசிகளால் சில LD(bibgs|356ir Triamcinolone acetate போன்றனவும் இப்பருக்களுள் ஏற்றலாம்.
டாக்டர் வெ.நாகநாதன்
வைத்தியர்: “ஏன் பயந்தோண்டு நிக்கிறீங்கள். ஒண்டுக்கும்
பயப்படக்கூடாது"
நோயாளி: "டொக்ரர், இது எனக்கு முதல் ஒப்பரேசன். அதுதான்” வைத்தியர்: “அதுக்கென்ன, எனக்கும்தான் முதல் ஒப்பரேசன். நான்
என்ன பயந்துகொண்டேயிருக்கிறனர்.”
14
 

வரை
LETS LEARN TO SPEAKN ENGLISH
ஆங்கிலத்தில் பேசப் பழகுவோம் .
s மாதமொரு உரையாடல் * t AMonthly Conversation .By: Professor A.v. Manivasagar, Ph.D %کچھ اچھی
- *、 Sewies, 13 Head/Dept. of Political Science
University of Jaffna
AT THE LIBRARY,
In this lesson a student goes to the library to get membership and a dialogue takes place between the librarian and the student.
student: Good morning, Sir.
Librarian: Good morning, please.
Student: I want to become a member of your libгагу. Librarian: Are you a student? IS
Student: Yes, please.
Librarian: In which class are you studying?
Student: I am an A.L. student, sir.
Librarian: You can take this form, fill it up and after that get it signe
by your class teacher.
Student: Am I required to deposit membership fee? Librarian: Yes, you have to depositrupees hundred in cash. Student: How many books can I getata time?
Librarian: You will be issued two cards and you can get two books at
one time.
15

Page 10
4 litur. Ai
జా" } 器}常 | *3.2ක
Student:
Librarian:
Student:
Librarian:
Student:
Librarian:
Student:
Librarian:
Student:
Librarian:
For how many days can Iretain the book?
You can retain a book for a fortnight. After which either you should get it renewed or return it otherwise you will have to pay a fine of one rupeeper day.
What are the library timings, sir?
The library remains openeveryday from 8.00 A.M. to 4.00 PM.
What about Sundays and holidays?
On Sundays and holidays it remains open from 8.00A.M to 2.00 P.M.
Can Ibring my own books into the library? No please. You are not allowed to do so. How many books have you got in your library?
We have got nearly twenty thousandbooks in our library.
16
 

வரை
Student: Have you got books on every subject? Librarian: Yes, please. We have books nearly on all the subjects. Student: Do you also getnewspapers and magazines?
Librarian: Yes. We subscribe to all the important newspapers and magazines. Of course, you can read these in the reading room, but you cannottake them to your home.
Student: Thank you, sir. I shall become a member of this library tomorrow, when I submit the application form along with the fee.
Librarian: It's all right.
米米米
Pherhaps no place in any community is so totally
democratic as the public library. The Only
entrance requirementisinterest. -
- LADY BRD JOHNSON
Reading makes a full man; conference a ready man; and writing an exact man.
-FRANCIS BACON
We often read with as much talent as we write. - RALPH WALDO EMERSON
People say that life is the thing, but I prefer
reading.
- LOGAN PEARSALL SMTH
17

Page 11
வரை
Peß & GßOO89 BUSINESS LETTERS (5)
From the Pen of Prof.A.V. Manivasagar....
Part 1 - Financial Letters
Money makes the man (ARISTODEMUS). Business links all mankind(GARFIELD). The motto of business is money. Business letters are with money motto infused into them. They are purposively divided in this series into three parts - financial, commercial and managerial - though absolute partition is an eluding one. These technically and scrupulously written content-specific business letters are concise, clear and convincing in nature. Here you have not to think but to pick and choose.
15.1. LETTER OF CREDIT
Dear Sir,
Would you be good enough to advance the bearer of this letter, Mr. R.P Sivaraman funds to the extent of Rs. 2,00000/- (Rs. Two Hundred Thousand only) less the amount of your commission. We will esteem it a great favour tous.
Please note down all payments made to the above quoted gentleman on the back of this letter and send us Mr.R.P.Sivaraman's receipt in duplicate in each case.
Yours faithfully, Signature....................
(Drawee)
விருப்பத்தெரிவு : வியாபாரக் கடிதங்கள்
18
 

வரை
5.2. LETTER OF ADVANCE
Dear Sir,
We have the honour to inform you that we have today given Mr.R.P.Sivaraman a letter of credit for Rs.80000/- on your behalf.
Kinly take note of this and honour our draft in lieu thereof when presented.
Thanking you,
Yours faithfully
15.3. RECEIPT FOR CASH RECEIVED
Received with thanks a sum of Rs. 80000/- from M/s. Karim&Co., Colombo against our letter of credit furnished by Mr.R.P.Sivaraman.
(Signature)
S.4. REPLY TO LETTER OF CREDIT
DearSir, We are in receipt of your letter of credit dated.....
We have today paid Mr. Jegath Fernando Rs.100000/- as per his receipt enclosed herewith, and have drawn upon you at three days' notice.
Please honour our drafton presentation.
Yours faithfully,
16. 1 ... BILL OF EXCHANGE
Gentlemen, Kindly pay the bearer of letter Mr. ....................... of this city, upon
identification, a sum of Rs.300000/- less your charges in exchange for his draftonus attached with this letter, which will receive due protection.
Yours faithfully,
19

Page 12
Quang
6.2. INTIMATION OF ABOVE
DearSir,
This is to inform you that we have sent you today a bill of exchange for Rs.300000/- through Mr.................
Kindly give it due protection.
Thanking you, 涧
Yours faithfully,
6.3. REPLY TO AEBOVE
DearSir, Thanks for your letter dated ............. informing us of your bill of Exchange on our house for Rs.................. Restassured it will receive due protection.
Yours faithfully,
6.4. INTIMATION OF PAYMENT
Dear Sirs,
I have the honour to inform you that a Sum of Rs.100000/- has been paid to your agent Mr.M.N.Davidson and the draft has been received in exchange, which when sent to you, must be honoured at sight and
receive your due protection.
Yours faithfully,
Money is like an arm or a leg - use it or lose it.
- HENRY FORD
Taking it all in all, I find it is more trouble to watch after money than to get.
– MONTAGNE
20
 

வரை
Bശ്രീരffട്ടന്ന
Buddhism is based on the personal experience of Lord Buddha discarded all authority and evolved a golden mean which was purely his own. Rational understanding is the keynote of Buddhism.
Blind believes are dethroned. Instead of believes and dogmas the importance of practice is emphasized. Mere believes and dogmas cannot emancipate a person. There are no gods to be propitiated. There is no priestly class to mediate. Morality, concentration and wisdom are essential to achieve the goal.
21

Page 13
வரை
б) шо врб) отва
பேராசிரியர் குமிகுந்தன், தலைவர், விவசாய உயிரியல் துறை, விவசாயபீடம்,
யாழ். பல்கலைக் கழகம்.
தாவரவியலாளரின் பக்கத்திலிருந்து
கிளிறிசிடியா மக்குலேற்றா (Glyricidia Maculata) 6T6IOT @g5b5 இரு சொற்பெயரிட்டுள்ளனர்.
எங்களுரெங்கும் பரந்து வளர்ந்திருக்கும் கிளிறிசிடியா தாவரத்தினது பூர்வீகம் மெக்சிக்கோ ஆகும். மேலை நாட்டவர்கள் பல்பயன்தரும் மரங்களில் மிகவும் இலங்கையில் வியாபார நோக்குடன் வருகை தந்து இங்கே தமக்குத் தேவையான ஏற்றுமதிப்
பயனுள்ள மரமிது. குறிப்பாக விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பில் இதற்கென விசேட பொருட்களான தேயிலை, இறப்ப தகுதியுண்டு. இது பபேசியே குடும்ப கொக்கோ, மிளகு போன்றவற்றை தாவரம். இதனை முந்தைய உற்பத்தி செய்து ஏற்றுமதி பாகுபாட்டியலில் லெகுமினோசே செய்தபோது அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அநேகமான பயிர்களுக்கு பிடித்தேறும் தாவரமாக" கிளிறிசிடியா இருக்கின்றது.
குடும்பமென விபரிப்பார்கள். அவரைக் குடும்ப உறுப்பினராக
ஆரம்ப காலங்களில்
மலைநாட்டுப்பகுதிகளில் வளர்க்கப்பட்டாலும் தற்போது இலங்கை பூராகவும் வளர்கின்றதனைக் காணலாம். விரைந்து வளர்ந்து நிழல் தருந் தாவரவகைகளுள் கிளிறிசிடியாவும் ஒன்று. உயிர்வேலிகளுள் முதன்மை மரமாக வளர்க்கப்படுவதும் இதற்குரிய சிறப்பாகும்.
22
 
 
 
 
 
 
 

வரை
இருப்பதனால் மண்ணில் தழைச்சத்தினை நிலைநாட்டும் சிறப்பியல்பு இதற்குண்டு. வளிமண்டல நைதரசனை
(தழைச்சத்தினை) இயற்கையாகவே மண்ணில் பதிப்பதனால் மண்வளப்படுத்தப்படுகின்றது. மேலும் இதனது இலைகளை பசுந்தாள் இலைப் பசளையாக பயன்படுத்துவார்கள். தண்டின் மூலமாக பதியமுறை மூலமும், விதையின் மூலமாகவும் இனப்பெருக்கமடையும் கிளிறிசிடியாவின் இலைகள் சிறந்த கால்நடை உணவாக பயன்படுத்தப்படுகின்றது. இதனை உயிர் வேலிகளில் வளர்க்கப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. விரைந்து நேரான கிளைகளை உருவாக்கி வளரும் தாவரமென்பதே அதுவாகும். குறுகிய காலப்பகுதியில் அதிக இலைத் தொகுதிகளை உருவாக்கி 6 - 8 மாதங்களில்
இலைகள் முதிர்வுற்று உதிர்ந்துவிடும். வருடத்தின் பங்குனி, சித்திரை மாதங்களில் இக் கிளைகளில் பூக்க ஆரம்பிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் காய்கள் உருவாகி முற்றி அவை வெடித்துச் சிதறுவதனால் விதைகள் பரவி விழுந்து முளைக்கும். விதைகளை காய்கள் வெடித்து சிதறமுன்பு சேகரித்து நடுகைக்கு பயன்படுத்தலாம்.
கிளிறிசிடியா இலையில் 2.5 - 3.5% நைதரசன், 1.7% பொட்டாசியம், 0.2% பொசுபரசு மற்றும் 0.3 - 0.5% மக்னீசியம் உண்டு. இலைகள் மண்ணில் விழுந்து 10 - 12 நாட்களுக்குள் உக்கி இச்சத்துக்களை மண்ணினுள் சேர்த்துவிடும். சிறப்பியல்புகள்
கிளிறிசிடியா தாவரமானது வரட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதுடன் நீர்நிலைகளுக்கு அருகிலும் வளரும் வலுவுள்ளது. தொடர்நிரையாக வளர்க்கப்படும் போது சிறந்த காற்றுத்தடையாகவும், குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தும் தாவரங்களாகவும் இருக்கும். பொதுவாக வளங்குறைந்த நிலங்களிலும் வளரும் ஆற்றல் கொண்டது.
மேலும் தென்னையுடன் ஊடு பயிராக கிளிறிசிடியா
$பாதுசன ஓலகம்?
யாழ்ப்பாணம்.

Page 14
வரை
வளர்க்கப்படுகின்றது. இதன் மூலம்
இதன் இலைகள் தென்னைக்கு சத்தாக மாற்றப்படுவதுடன் நிழலை விரும்பி வளரும் கொடிப்பயிர்களுக்கு தாங்கும் தாவரமாக அவை பிடித்தேற உதவும். பல பயன்களை தன்னகத்தே கொண்டிருக்கும் கிளிறிசிடியாவுக்கு இன்னுமொரு சிறப்பியல்பும் உண்டு. இதனது தண்டினை எரித்து தேவையான சக்தியையும் பெற்றுக் கொள்ளுவர். இதனை உயிரியல் சக்தி (Biofuel) என அழைப்பர். தண்டு தளபாடதேவைக்கு ஏற்றதல்ல, இருப்பினும் சூட்டடுப்பு போன்றவற்றில் குறித்தளவு தண்டு துண்டத்தைப் பயன்படுத்தி உணவு சமைத்திட முடியும். இவ் அடுப்பினை இலங்கைத் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. எளிய
பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள சமையலுக்கான அடுப்பினைப் பயன்படுத்தி 600 கிராம் எடையுள்ள 7.5 ச.மீ நீளமான நறுக்கப்பட்ட கிளிறிசிடியா துண்டத்தைப்
JULIGöřLIGğögŜ 40 நிமிடங்களில் 3-4 கறிகளுடன் 550 கிராம் அரிசியும் சமைக்க முடியும். இவ் அடுப்பின் மூலம் சமைக்கும் போது புகை, கரி, என்பன தவிர்க்கப்படுகின்றது. மின் உற்பத்தி திட்டம்
கிளிறிசிடியா தாவர துண்டங்களை "கசிபயர்” எனப்படும் இயந்திரத்தினுள் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்ய முடியும். இத்திட்டம் இலங்கையில் பல இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமானதாகவும் இலாபகரமானதாகவும் இயங்குகின்றன. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை திட்டும் இக்காலகட்டத்தில் கிளிறிசிடியா போன்ற தாவரங்களை நடுகை செய்து பயனை பெற்றிடலாம்.
崇烧炽
24
 

வரை
மாயங்ங்
ഥേബേ சுற்றுவது சக்கரங்கள் அல்ல, உங்கள் தலைதான் சுற்றுகிறது.
25

Page 15
கட்டளையிட்டு விட்டான்.
வரை
மறைந்து கிடக்கிறது மனித ஆற்றல்.
அரசன் ஒருவன் அரேபிய நாட்டிலிருந்து அழகிய இரு வல்லுறுகளை பரிசாகப் பெற்றான். வல்லூறுகள் எந்நேரமும் இரைதேடிப் பறந்து கொண்டேயிருப் பவை. பறப்பதும் அழகுதான். அதை ரசித்து மகிழவேண்டும் என அவன்
மிக ஆவல்கொண்டான். தனது தோட்டத்தில் விட்டு அவற்றை நன்கு பழக்கப்படுத்துமாறு பறவைகள் பராமரிப்பாளனுக்கு
மாதங்கள் நகர்ந்தன. அவையும் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்ந்தன. ஆனல் பயிற்றுவிப்பாளன் மனம் உடைந்து அரசனிடம், “அரசே, அந்த வல்லூறுகளில் ஒன்று மட்டும் நன்கு ஆகாயத்தில் உயரத்திற்குப் பறந்து அழகாகக் காட்சி தருகிறது. ஆனால் மற்றொன்று அது இருக்கும் மரக்கிளையை விட்டு நகர்வதாக
இல்லை. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை." எனக் கவலையுடன் கூறினான். அரசனும் தன் ஏவலாட்கள் மூலம் அனைத்து பறவைப் பயிற்றுவிப்பாளர் களையும் அழைத்து முயற்சி செய்தும், வந்தவர்களில் ஒருவராலும் அதனைப் பறக்கச் செய்ய இயலவில்லை. அது
26
 
 

வரை
உட்கார்ந்த மரத்திலிருந்து அசைவதாக இல்லை.
மன்னன் பலவாறு யோசித்தபின் "பட்டண வாசிகளை விடுத்து கிராமத்தவர்களிடம் இதனை ஒப்படைத்தால் என்ன?" என எண்ணி, தனது ஆட்களுக்கு ஒரு கமக்காரனை கிராமத்திலிருந்து அழைத்துவரச் சொன்னான். ஏனெனில் அவர்கள்தான் இவற்றில் இயற்கையான அறிவைக் கொண்டிருப்பார்கள் என்ற காரணத்தால்.
மறுநாள் அதிகாலையில் அரசன் தனது அறையின் சாளரத்தின் ஊடாக அந்த அற்புதக் காட்சியைக் கண்டான். ஆம், அந்த வல்லூறு ஆகாயத்தில் அழகாகப் பறந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது.
உடனே அதைச் செய்த வரை அழைத்துவரக் கட்டளை யிட்டான். அந்தக் கமக்காரனை அதிகாரிகள் அரசன் முன் கொண்டுவந்து நிறுத்தினர். அவனிடம், "நீ எப்படி அதனைப் பறக்கச் செய்தாய்?" எனக் கேட்டான்.
அவன் தலைதாழ்த்தி வணங்கியபடியே, "அரசே, நான்
பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, அது உட்கார்ந்திருந்த கிளையைக் கோடரியால் தறித்துவிட்டேன். அவ்வளவுதான்” என்றான்.
நாம் எல்லோருமே "பறக்கும்” ஆற்றலைக் கொண்டவர்களே, அதாவது மனிதர்களாகிய நாம் மிகவும் நம்பமுடியாத அளவிற்குத் திறன்களைக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நாமோ அந்த வல்லூறு மரத்தில் தன்திறனை மறந்த நிலையில் இருந்தது போல அவற்றை அறியாமலே இருக்கின்றோம். எவ்வளவோ முடியும் ஆனால் வாழ்வின் பெரும்பகுதியை எமது அன்றாடப் பழக்கமுறைகளையும், தேடித்தந்த சுகானுபாவங்களிலும், அரைத்தமாவையே அரைப்பதிலும் கழிக்கிறோம். எனவே, மனதின் அச்சம், தயக்கம், வெட்கம், கூச்சம் என்பன போன்ற மரக்கிளையை அகற்றக் கற்றுக்கொண்டு அத் தளையினின்று விடுவித்து
சாதனைகள் புரிய வேண்டும்.
ச.சதானந்தசர்மா திருநெல்வேலி.
27

Page 16
Qiang
1.
2.
இலங்கை தொடர்பாடி தகவல்கள்
இந்து சமுத்திரத்தின் முத்து, இந்து சமுத்திரத்தின் நித்திலம் என அழைக்கப்படும் நாடு
நீளம்: 432 கிலோ மீற்றர் (Km), அகலம்- 224 கிலோமீற்றர் (Km), பரப்பளவு- 65610 சதுரகிலோமீற்றர்.
3. தலைநகரர் கொழும்பு (ஜெயவர்த்தனபுர), நாணயம்- ரூபாய்
4. தேசிய
தினம் - பெப்ரவரி 4 (சுதந்திரமடைந்தது 1948) விலங்கு - மரஅணில் பறவை - காட்டுக்கோழி மரம் - நாகமரம் Logos - நீலோற்பலம் (நீல அல்லி)
விளையாட்டு - கரப்பந்தாட்டம்
. தேசிய கொடி 1978 செப்ரெம்பர் 7 ஆம் திகதி ஜனநாயக குடியரசினால்
அங்கிகரிக்கப்பட்டது.
. தேசிய கீதம் - “ழரீ லங்கா தாயே"
இயற்றியவர் - ஆனந்தசமரக்கோன் இசைஅமைத்தவர் - அமரதேவா தமிழில் மொழிபெயர்த்தவர் - முதுதமிழ் புலவர் மு. நல்லதம்பி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - WW.கன்னங்கரா
7. பெரியமலை-பீதுறுதாலகால மலை, நீளமான ஆறு-மகாவலிகங்கை
8.
தற்போதய பராளுமன்றம் பூரீஜெயவர்த்தனபுரவில் 1982 ல் ஜப்பானியரால் நிர்மாணிக்கப்பட்டது. இன்றைய பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களும் தேசியபட்டியல் மூலம் 29 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
9. இலங்கையின் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
கோல்புறுக் 833 டொனமூர் 1931
28

Qiany
சோல்பரி 1947
1ம் குடியரசு 1972 2ம் குடியரசு யாப்பு 1978
10. இலங்கையின் முதலாவது
பிரதமர் - டீ.எஸ் சேனநாயக்கா, ஜனாதிபதி-வில்லயம் கோபல்லாவ பெண் பிரதமர் (உலகிலும்)-யூரீமாவோ பண்டாரநாயக்க 11. இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி
ஜே.ஆர். ஜெயவர்த்தனா 12. இலங்கைக் கல்வித்திட்டங்கள்
இலவசக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது 1945 பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டது 1960 இலவச பாடநூல் வழங்கப்பட்டது 1980 இலவச மதிய உணவு வழங்கப்பட்டது 1989 இலவச சீருடை வழங்கப்பட்டது 1993 13. இலங்கைக்கு அந்நியர் வருகை
போத்துக்கேயர் 1505 (கி.பி)
ஒல்லாந்தர் 1658
ஆங்கிலேயர் 1796
14. இலங்கைக்கு பிரமுகர்களின் வருகை
1995 ஜனவரி20 அருட்தந்தை 2ம் அருளப்பர் சின்னப்பர் 1998 பெப்ரவரி பிரிட்டிஸ் இளவரசர் சாள்ஸ் 2001 பெப்ரவரி 25 சந்திரனில் காலடி பதித்த ஆல்ட்றின் 2009 மே 22ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன்
15.இலங்கை அரசியல் கட்சிகளின் தோற்றம் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சி 1919
லங்காசமசம்யான கட்சி 1935
ஐக்கிய தேசியக் கட்சி 1946 பூரீலங்கா சுதந்திரக் காட்சி 1952
தொடுப்பு: நா.கிதாகிருஷ்ணன்.
29

Page 17
வரை
மனநலமே மனித நலமாகும்
காலங் காலமாக அனைவராலும் பேசப்படும் விடயம் மனம் என்பதாகும். மனிதனிடம் மனம் எங்கே உள்ளது? நெஞ்சத்தில் உள்ளது என்பதும், மனம் என்பது யாது?, இதயத்தை தொட்டு இங்கே இருப்பது என்று கூறுவதும் வினாவுக்குப் பொருத்தமற்ற 660Luries காணப்படுகின்
றது. எது எவ்வாறாக இருப்பினும் மனிதனிடமே “மணம்” எனும் புதிர் உள்ளது என்பது
a 60060)LD.
மனித மூளையின் முக்கிய செயற் பாடுகளின் தொகுப்பு வடிவமே மனம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவரது எண்ணம், சொல், செயல் இவற்றின் சரியான சமநிலையான செயற்பாடுதான் மன நலமாகும். மனநலத்தின் சமநிலை மாறினால் மனிதனது செயற்பாடுகளும் மாறுபட்டுக்
காணப்படும். எனவே உறுதியான ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையாக மனநலமே கருதப்படுகின்றது.
உடல் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவது மூளையில் சுரக்கும் சுரப்புக்களின் பற்பல செயற்பாடுகளாகும். இதில்
செற்ரோன் எனும் இராசாயனமே
அதிக பங்கு வகிக்கின்றது. எனவே மூளையின் செயற்பாடுகள் பாதிப்படையாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதற்காக தியானப் பயிற்சி, யோகாசனப் பயிற்சி, மற்றும் உடற்பயிற்சிகளும் மேற்கொள்வது
30
 

வரை
நல்ல பயனைத் தரும். ஆகவே திடமான உறுதியான செயற்பாடுகளினால் மனநலம் மனித நலம் காக்கப்பட முடியும்.
கால வேகத்தின் கட்டாயத்தில் மனப் பதற்றம், மன அழுத்தம் அனைவரையும் இலகுவாக சென்றடைகிறது. இது ஒரு பெரிய தாக்கமான செயற்பாடு. இத் தாக்கத்திலிருந்து விடுபடவேண்டும். பதற்றம் அதிகரித்தால் மூளையின் செயற்பாடுகளில் மாற்றங்கள் தோன்றிவிடும். இதனால் கோபம், மனத்தளர்வு, மனச்சிதைவு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பாதகமான விளைவுகள் தோன்றலாம்.
எனவே இவற்றிலிருந்து விடுபடுவதற்கு நாம் பழகிக் கொள்ளல் வேண்டும். அதாவது ஆழ்ந்த தூக்கம், சுற்றுப் புறச் சூழல் செயற்பாடுகள், கலாசார மாற்றங்களை அனுசரித்தல் போன்ற நல்ல செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும். அத்துடன் அன்பாகப் பேசுதல், ஒற்றுமையைப் பேணுதல், பொறுமையைக் காத்தல், மனித நேயம் வளர்த்தல், ஒழுக்கம், பணிவுடமை போன்றவற்றை
கடைப்பிடித்தல் என்பனவற்றின்
மூலமும் மனம், மனிதம் இரண்டும்
நலமாக இருக்கும்.
இவ்வாறாக சீரிய உயரிய வாழ்வியல் தத்துவங்களைக் கடைப்பிடித்து வந்தால் சகலரும் சமம் எனும் அன்புறவுடன் அமைதியாக வாழலாம். எந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் எம்மைத் தாக்காது தனித்துவமாக தலை நிமிர்ந்து வாழலாம்.
கவியரசர் பாடலும் இதையே "மனிதன் எதையோ பேசட்டுமே, உன் மனதைப் பார்த்துக்க நல்லபடி" என்று நலம் கூறிச் சென்றுள்ளார்கள்.
米率米
திருமதி சிவலிங்கம் சிவகலா
31

Page 18
வரை
சிறுகதை
வழக்கமாக கடலலைகளின் இனிய ஓசையை இரசித்தபடி கற்பாறையொன்றில் அமர்ந்து காற்று வாங்கும் பச்சையப்பன், இன்று மட்டும் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான். பல தேசங்களுக்கு பயணம்
செய்யவேண்டும்; மக்களுக்குச் இடப்பட்ட கட்டளை. இருந்தாலும் சேவை செய்யவேண்டும் என்பதே அவன் மனம் அவனின் விருப்பம். ஆனால் சங்கடப்பட்டுக்கொணர்டேதான் மனச்சாட்சிக்கு விரோதமான இருந்தது.
காரியங்களைச் அன்று மாலை, செய்துவிட்டோமோ என்ற ஓர் எதிர்பார்த்தபடியே அந்த குற்ற உணர்வில் அன்று ஊரிலிருந்த அனேக கானப்பட்டான். எப்படியோ அது இளைஞர்கள் அவனுக்கு மேலிடத்திலிருந்து
32
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரை
வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அனைவரும் பாக்கு வெற்றிலையை மென்று காவி படிந்த பற்களுடன் காணப்பட்டார்கள். வேட்டி சால்வையோடு கைகளைக் கட்டி வெள்ளைக்காரருக்கு மிக அடக்கமாகவே நின்றிருந்தார்கள். தாங்களாக உடற்பயிற்சிகள் செய்யாவிடினும் கடின உழைப்பால் அனேக இளைஞர்களின் மேனி திடமாகவும் கம்பீரமாகவும் இருந்தது. அனைவரையும் புன்னகையோடு வரவழைத்த பச்சையப்பன், முன்னாலே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொணர்டான்.
பச்சையப்பண் மக்களுக்கு சேவைசெய்யவேண்டும்; இந்த தேசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் வந்திருந்தாலும் அவனுக்காக சில இரகசியப் பணிகள் மேலிடத்திலிருந்து பணிக்கப்பட்டிருந்தன. அதை நிறைவேற்றிக் கொள்ளவே இந்த இளைஞர் கூட்டத்தினரை வரவழைத்தான். அதற்காக மிகுந்த சிரமப்பட்டு தமிழையும் கற்றுக்கொணர்டு, கிறீன் என்ற தனது பெயரையும் அந்தச் சூழலுக்கேற்றது போல் பச்சையப்பனென்றே
மாற்றியிருந்தான். தான் நினைத்ததுக்கு மாறாக இங்கு வேலை மிகச் சுலபமாக இருப்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. வெள்ளையர்களுடன் நல்ல உறவை வைத்திருப்பதற்கு அனைவருமே பெருமை கொள்கிறார்கள். ஏன்? இங்கே ஆங்கிலேயர்களின் பெயர்களைச் சூட்டிக்கொணர்டவர்கள் அனேகர் இருந்தார்கள். வேட்டியிலிருந்து காற்சட்டைக்கும், சால்வையிலிருந்து மேலாடைக்கும், தங்கள் சொந்த மதத்திலிருந்து அன்னியர்களின் மத்ததிற்கும் மாறியிருந்தார்கள். தங்களுக்குரிய அடையாளத்தை இழக்கிறார்களே என்று பச்சையப்பன் மனதுக்குள் வேதனைப்பட்டாலும், அதை அவன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இவ்வளவும் நடந்ததொன்றும் பெரிய விடயமில்லை. இனி அவன் நடத்தப்போவதுதான் ஒரு தேசத்திற்கே செய்யவிருக்கும் பெரும் துரோகம், தன் தேசத்துக்கு எண்னவோ அது கடமையாக இருந்தாலும், ஏதோவொரு நம்பிக்கையோடு ஆனால் அறியாமையோடு தன் முன்னே இருக்கும் இனத்தின் சந்ததிக்கே செய்யும் மாபெரும் அநீதி அவன்
33

Page 19
Qiang
அதை உணர்ந்தே இருந்தான். இருந்தும் அவனது கடமையிலிருந்து அவன் தவறவியலாது. தவறினாலும், இன்னொருவண் அதைச் செய்யத்தான் போகிறான்.
மனச்சாட்சி உறுத்திக் கொணர்டிருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அனைவரையும் பார்த்து
*அனைவருக்கும் வணக்கம்” பணிவு குறையாமல் கூறினான்.
"குடீவினிங் கிறீன் துரை” அந்த இளைஞர் கூட்டத்தினர் ஆங்கிலம் கலந்து அந்த வெள்ளைக்காருக்கு மாலை வணக்கம் செலுத்தி தரையில் அமர்ந்து கொணர்டார்கள்.
"எங்கள் அழைப்பை ஏற்று நீங்கள் இவ்விடம் வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." எல்லோரும் தலையை அசைத்து ஆரவாரித்துக்கொணர்டார்கள். பச்சையப்பன் தொடர்ந்தான்.
“உங்களுக்கு நாங்கள் வேலைவாய்ப்புக்களைத் தர இருக்கிறோம். உங்களுக்குத் தெரியும், ஏற்கனவே எமது பட்டாளத்தில் நிறைய தமிழர்கள் விசுவாசத்தோடு வேலை செய்து கொணர்டிருக்கிறார்கள். பலரை நாங்கள் வெளிநாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறோம். இப்போது
இன்னும் பலருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம்.”
இடையில் ஒருவன் குறுக்கிட்டு "ஐயா, நீங்கள் உதவிசெய்யநினைப்பதற்கு நன்றி. ஆனால் பணினை, விவசாயமென்று எங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை. எங்களுக்கு வேணர்டிய உணவுகளை நாங்களே தேடிக்கொள்கிறோம். அப்படியிருக்க உங்கள் வேலையை நம்பிநாங்கள் வந்தால் நாம் உணவுக்கு என்ன செய்வது. உங்கள் பணத்தைச் சாப்பிட முடியாதே!” என்றான். அவன் கூறியது பச்சையப்பனுக்கு தூக்கிவாரிப்போட்டது. தன் முயற்சிகளை கெடுத்துவிடுவான் போலிருக்கிறது என்று சற்று சிந்தித்தான். கூட்டத்தில் சலசலப்பு, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அப்போது பச்சை "நீங்கள் பயப்படத் தேவையில்லை. நாங்கள் பணத்தைத் தருவதோடு உங்களுக்குத் தேவையான உணவுப் பணிடங்களை இறக்குமதி செய்து தருகிறோம். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு நிரந்தர சம்பளம் கிடைக்கும். அதோடு மேல்நாட்டு குடிவகைகள்
34

உங்களுக்கும் கிடைக்க ஆவனசெய்வோம்.”
மீணர்டும் கூட்டத்தினர் ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொணர்டார்கள். அப்போது இன்னொருவன் எழுந்து “ஏன் இதற்கு யோசிச்சுக்கொண்டிருக்கிறியள் இஞ்ச பாருங்கோ, துரை எங்களுக்கு நல்லது செய்யத்தான் மினைக்கெட்டு வந்திருக்கிறார். அதோட எங்கட தோட்டம் துரவிலையோ அல்லாட்டி எந்த தொழிலிலையோ நிரந்தரமா ஒணிடும் கிடைக்கிறேல்லை. வாய்பானி பிளைப்பானாத்தான் போகுது. பேசாம அரசாங்கத்தில கூலிகளா வேலைசெய்தா நிரந்தர வருமானம் ஆகுது, பெஞ்சனும் கிடைச்சதாகுது. எல்லாருக்கும் சம்மதம்துரை. நீங்கள் என்ன செய்யச் சொல்லுறியளோ நாங்கள் செய்யுறம்; எங்க வரச் சொல்லுறியளோநாங்கள் வாறம். எல்லோரும் ஏற்றுக்கொணர்டார்கள். மகிழ்ச்சியோடு அவர்களைப் பார்த பச்சை “எங்களுக்கு, உங்களுக்கு உதவிசெய்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்ப எல்லோருக்கும் மது விருந்து
உணர்டு. மகிழ்வோடு அருந்துங்கள்.
உங்கள் மகிழ்ச்சியே எங்களின் விருப்பம்” அனைவரும் தயங்கித் தயங்கி மதுஅருந்துவதற்கு
ஆயத்தமானார்கள்.
எல்லோருக்கும் மது வழங்ச ஏற்பாடு செய்த பச்சையப்பன் தண் அலுவலக அறைக்குள் வந்தான். அவன் மதுஅருந்தவில்லை. அளவான உணவு, தேகப் பயிற்சி, கடின உழைப்பு, ஓய்வு வேளைகளில் படிப்பது - இதுதான் அவனின் நல்ல பழக்கவழங்கங்கள். இருந்தும் தேகத்துக்கு ஆரோக்கியம் தரும் அற்ககோல் குறைந்த சில வகை மதுபானங்களை மட்டும் அருந்திக்கொள்வான். தனது அறையில் அவன் அலுவலாக இருக்கும் போது குதிரைவணர்டி வரும் சத்தம் கேட்டது. சாள்ஸ் துரை வருவதை உணர்ந்து வெளியே வந்தான். அவரை உரியபடி வரவேற்று உள்ளே கூட்டிச்சென்றான்.
“மாலைவணக்கம் பச்சையப்பண்” தமிழிலேயே சாள்ஸ் வணக்கம் கூறியது அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது.
"நீங்கள் நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள்"
“கொஞ்சம் கொஞ்சம் பேசக் கற்றுக்கொணர்டேன்”
“நல்லது எங்கள் வேலைக்கு மிகவும் உதவியாயிருக்கும்”
"இன்றைய நிகழ்ச்சித் திட்டம்
எப்படி?”
35

Page 20
"நன்றாகவே முடிந்தது. எல்லோரும் மகிழ்ச்சியுடன் அரச பணிகளில் இணையச் சம்மதித்துவிட்டார்கள்”
"நல்லது. அனேக இடங்களில் நமக்கு வெற்றி, அதோடு பெருமளவு கோதுமை மா இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் இலவசமாகவே கொடுப்போம். காலப்போக்கில் எங்களின் உற்பத்திகளையே மக்கள் நுகரும்படி செய்யவேண்டும்.”
"நீங்கள் பயப்படவேண்டாம். நாம் நினைப்பதைவிட வேலை சுலபம். நீங்கள் இருந்து பாருங்கள், இன்று மட்டுமல்ல இன்னும் நூறு, இருநூறு வருடங்களைக் கடந்தும் இவர்கள் அண்னியரான எம்மிடம் கையேந்தும் நிலையே இருக்கும். மதுபானங்களின் உற்பத்தியால், எமது தேசத்திற்கு தொடர்ந்தும் வருமானம் கிடைத்துக் கொணர்டேயிருக்கும்” பச்சையப்பனின் ஊகம் சரியென்றே சாள்ஸ்க்குப் பட்டது.
"நல்லது. அடுத்து நீ செய்யவேணர்டியது, வேலைவெட்டியில்லாமல் திரியும் இளைஞர்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்க வேனர்டும்.”
வரை
“இது எதற்கு? ஏன் எமது பணத்தை விரயம் செய்யவேணர்டும்?”
“இங்கே தான் விசயமே இருக்கதிறது பச்சை. நாம் முதலில் இதைத்தான் செய்யவேண்டும். இப்போது இந்தியாவில் எமக்கெதிராகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. புரட்சி இயக்கமும் உருவாகியிருக்கிறது. இங்கும் பார்த்தால், சில அறிஞர்கள் தமிழையும் சைவத்தையும் காக்க புயல் போலப் புறப்பட்டுவிட்டார்கள். மக்களுக்கு அவர்கள் ஊட்டுகிற சுதேசிய உணர்வு காலப்போக்கில் தேசப் பற்றாக மாறி, இங்கும் புரட்சிகள் வெடிக்கலாம். இங்குள்ள இளைஞர்களை நீ கவனித்திருப்பாய், சரியான தலைமைத்துவத்தோடு உரிய வழிகாட்டல் இருந்தால் ஒரு வீரனின் முன்னால்கூட நாம் நின்றுபிடிக்கமாட்டோம். அதனால்தான் சொல்கிறேன், இங்குள்ள இளைஞர்களை மதுநோயாளிகளாக்கி விட்டால், அதாவது மதுவுக்கு அடிமையாக்கிவிட்டால். அவர்களின் பொருளாதாரம் வீழச்சிகணர்டு, குடும்பமும் சீர்குலைந்து, அவர்கள் படுகிற அவஸ்த்தையால் சுதந்திரத்தைப்
36

வரை
பற்றி எணர்ணவே மட்டார்கள்.” என்று விளக்கிவிட்டு சாள்ஸ் நம்பிக்கையோடு விடைபெற்றுச் சென்றார்.
முதலில் ஓரளவு புரிந்திருந்தாலும் பச்சையப் பனுக்கு இப்போதுதான் நன்கு புரிந்தது. “எமது இனம் ஆணர்டாண்டு காலம் வாழ்வதற்காக இன்னொரு இனத்தை நாசமாக்க வேணர்டுமா?” சிந்தித்தவாறே அருகில் இருந்த கடற்கரையோரமாக நடந்து சென்றான். சுயநலம் முதலில் மற்றவர்களை அழிக்கும், பின்பு தன்னையும் அழிக்கும் என்று படித்திருக்கிறான். அப்டியென்றால் இதுகொஞ்சம் பெரிய சுயநலம்; எம் தேசம் ஒருநாள் அனுபவிக்குமா? குழப்பத்தோடு தான் வழக்கமாக ஒய்வெடுக்கும் கற்பாறையொன்றின் மேல் அமர்ந்துகொணர்டான்.
“வணக்கம் துரை” சிந்தனை
கலைந்து பச்சை திரும்பிப் பார்த்தான். இரு சிறுவர்கள் அங்கே நின்றிருந்தார்கள். புழுதிபடிந்த தேகம், எணர்ணை காணாத தலைமுடி, அழுக்கான கோவணத்துணர்டோடு பத்துவயதும் நிரம்பாத அந்த பாலகர்கள் “விசுக்கோத்து துரை” என்றபடி பரிதாபமாக பார்த்தார்கள்.
"நாண் உங்களுக்கு விசுக்கோத்துத் தாறன். ஆனால் நீங்கள் எண்ணிடம வந்து படிக்க வேணர்டும். உங்களை நான் ஆளாக்கிறேன். சம்மதமா?” “சரிதுரை” என்றபடி சிறுவர்கள் உலருணவுப் பொட்டலமொன்றை வாங்கிக் கொணர்டு மகிழ்வோடு ஓடினார்கள்.
அவர்கள் ஓடுவதையே பச்சையப்பன் பார்த்துக் கொணர்டிருந்தான். அவனுடைய மனம் அமைதியூஓடந்தது.
இதனஞ்சயன்
ஆசிரியர் இடுக்கண் வருங்கால் நகுக, அப்படியென்றால்
துன்பம் வரும் போது சிரியுங்கள்.
மாணவன் யாருக்கு துன்பம் வரும்போது சிரிக்க வேண்டும்.
எமக்கு வரும்போதா? அல்லது மற்றவர்களுக்கு
வரும் போதா?
ஆசிரியர்: ???
37

Page 21
வரை
கவியரங்கே వీL ܬܽ
கொளதமரின்
IITG) 5
-இரா வண்ணன்
அவதியுறுமக்களது துன்பம் கண்டு
அதிகவலை கொண்ட புத்த, கோமான் தானும்
தவமுனிபோல் அரண்மனையை விலகி அன்னான்
தண்ணொளியோன் காடுறைந்து அமைதிகாண
உவந்துசென்று தனிமையிலே உலகிற்காக
உத்தமனும் மேற்கொண்ட சிந்தனையால்
அவலமுறஉலகினர்க்கோர் தீர்வுகண்டார்
அந்நிலையே பெளத்தமதாய் அமைந்த தாங்கே
غیر
மக்கள்படுதுயரினையே தாங்காக்கோமான் மனையாளை மற்றுமரும் செல்வனான பக்குவமாய் பெற்றெடுத்த அன்புச் சேயை
பற்றுடைய ராகுலனை துறுந்தார் மேலும் தக்கதொரு விடைகாண மக்களுக்காய்
தனிமையிலே சென்றிருந்து சிந்தனையால் மிக்கவொரு முடிபுகண்டார் உலகிற்காக
மேன்மைபெறும் தத்தும்தான் மதமே யாச்சு
38
 
 
 

வரை
பிறந்ததெல்லாம் இறப்பதுதான் தவறா தென்றார்
பயப்படவே எதுவுமில்லை இயற்கை என்றார் மறந்திடுவீர் கடவுளர்கு சாந்திசெய்து
மனமதனை திருப்திபண்ண நினைப்பதெல்லாம் துறந்திடுவீர் மூடமிகுகொள்கை கண்டீர்
அணிந்து சொன்னார் மக்களது மடமை நீங்க அறிந்திடுவீர் இவையாவும் புத்தர் கண்ட
அனுபவமும் பகுத்தறிவும் வேறேயல்ல.
கோவில்தனில் பூசைசெய்யகுருக்கள் வேண்டாம் கொடுமூட மதகுருமார் கழுகு போன்றார் போயவரை அடிபணிந்து பொருளும் தோற்று
பேயரென வாழ்கின்றீர் உலகீர் கேளிர. யாரிவர்கள் கடவுளரின் பிரதியாளோ?
யார்கொடுத்தார் இப்புதுமைப்பதவி தன்னை ஊரவரே கேளுங்கள் நாம் வணங்க
ஒருவருடை இடைத்தரகு தேவை தானோ?
பழமூடக் கொள்கைகளை உதறி வீசி
பகுத்தறிவே உலகினிற்கு வேண்டுமென்றார். வழமான சிந்தனையால் உலக மக்கள்
வாழ்வதுதான் பொருந்துமென்று வகுத்துச் சொன்னார் தொழவேண்டி இறைபெயரால் வேள்வியாகம்
தொன்றுதொட்ட செயலெல்லாம் பொய்யே என்றார் களமமைத்தார் பகுத்தறிவை வளர்த்த செம்மல்
கண்மூடிக் கொள்கைதனை கடிந்தே நின்றார்
குலத்துக்கொருநீதி கூறும் பொய்மை
கொடியமனு ஸ்மிருதி இன்னும் சொன்னால் நலத்திற்கே உதவாத இதிகாசங்கள்
நானிலத்தில் இல்லாத புழுகு, மக்கள் பலத்திற்கே ஊறுசெயும் புராணம் கோடி
பண்புடையீர் நம்பாதீர் இவற்றையெல்லாம் நிலத்திற்கே பகுத்தறிவை பகிர்ந்த வள்ளல்
நீள்நிலத்துகூறுகின்ற அறிவைக் கேளிர்
39

Page 22
வரை
ஆசைதான் துயர்களுக்குவித்து என்றார்
அன்புடமை உயிர்களிடம் காட்டவேண்டும் ஆசைதனை அறவேநீஅகற்றிவிட்டால்
அன்பான நல்வாழ்வு அமையும் கண்டீர் நேசமுடன் உயிர்களைநிநேசியென்றார்
நினைப்பதெல்லாம் நல்லனவாய் வேண்டும் மேலும் பாசமுடன் இல்வாழ்வு வாழ வேண்டும்
பகுத்துணர்ந்து நல்லவழிசெல்வாய் என்றார்.
வீட்டிலுள்ள தீயதனை மக்கள் நீவிர்
வீதிக்கு எடுக்காதேவெட்கம் கேடு நாட்டிலுள்ள தீயதனை உன்றன் வீட்டு
நடுவாசல் எடுக்காதே அமைதி குன்றும் ஈட்டுமொரு செல்வமெலாந்தீமையின்றி
இயல்பான நற்செயலால் இருக்க வேண்டும் காட்டுகின்ற அன்பெல்லாம் கருணையோடு
கண்டிடுவீர் நலிந்தவர்க்கு என்றார் கோமான்
உலகினில் பகுத்தறிவை
உவப்பிலா அன்பின் பண்பை பலவகை மேற்கோள் காட்டி
பரவிடச் செய்த செம்மல் நிலமதில் அமைதியோடு
நெடுந்துயர் அற்று வாழ குலமகள் புத்தர் தந்த
கொள்கையே பெளத்தம் கண்டீர்.
米米米
"அவன் ரொம்ப நல்லவனென்று எப்படிச் சொல்லுறாய்" "அவன் தமிழன்"
"புரியவில்லை”
“எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்"
as 29
40

வரை
க.தர்மசேகரம்
மாதமொரு மனிதர்
வாசகர்களே! “மாதமொரு மனிதர்" என்ற இப்பகுதியில் எமது நாட்டில்
இலைமறை காய்களாக இருக்கும் திறமையாளர்களை, தொழில் முயற்சியாளர்களை அல்லது நல்ல சமூக முன்மாதிரிகளை அறிமுகஞ்செய்கிறோம். நீங்களும்
இத்தகையோரைப் பற்றிய தகவல்களை
எமக்கு அனுப்பிவையுங்கள்.
ஆசிரியர்
தனித்துவமான இயல்புகளோடு வாழ்கின்றவர்கள் என்றும் உயர்ந்த மனிதர்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றார்கள். அத்தகையவர்களது வாழ்வு காலத்தால் அழியாது வாசிப்பிற்குட் படுத்தப்படுகி ன்றது. இத்தகைய சிறப்புப் பொருந்திய உன்னத மனிதராகத்தான் திரு.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். வாழ்கின்ற வாழ்வு பொருள் நிறைந்ததாகவும், சமூகமேம்பாட்டை அவாவுவதாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்ற இப் பெருமகன் மந்துவில் மேற்கு கொடிகாமத்தில் முத்துக்குமாரு தெய்வானை தம்பதிகளின் மூத்த புதல்வனாகப் பிறந்தார்.
சரசாலை சரஸ்வதி வித்தியாலயம், அரசினர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள்
முத்துக்குமாரு பாலசுப்பிரமணியம்
பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆரம்பக்கல்வி பெற வாய்ப்புத்தந்தன. பின்னர் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
பாடசாலைக்காலத்தில்
விளையாட்டு, கல்வி, பேச்சு, கவிதை புனைதல் என அனைத்துத்துறைகளிலும் திறன்மிக்க ஒருவராகத் திகழ்ந்தார். பள்ளித் தோழர்களால் புலவர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்படுவதை மிக்க மகிழ்ச்சியோடு அவர் நினைவுகூறுகின்றார். சமூகப் GLIT(Ifj6IITSTU -2|gÚL16OL&6úlsé
41

Page 23
வரை
அவர் சந்தித்த நெருக்கடிகளை, இடர்பாடுகளை உரமாக்கி வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். சிறுவயதில் கற்றலின் பொருட்டாக பெற்றோரைப் பிரிந்து பேரனோடு வாழ நேர்ந்ததாகவும், அப்போது அதையிட்டு மனக்கவலை கொண்டிருந்தாலும் தனது வாழ்வு விருத்தியுறுவதற்கு அவ்வாறு வாழ நேர்ந்ததே பேருதவியாய் அமைந்தது என மனம் நெகிழ்ந்து நினைவு கூறுகிறார். தனது தந்தையாரின் தங்கை தனது கற்றல் செயற்பாடுகள் நேர்த்தியாய் இடம்பெற வழங்கிய வழிகாட்டல்களும், ஒத்துழைப்பும் என்றும் நினைக்கத்தக்கவை என திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
1972 ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அங்கு பயிலக் கிடைத்த வாய்ப்பு தன் வாழ்வில் நேர்ந்த குறிப்பிடத்தக்க திருப்புமுனையான அம்சமென பாலசுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடுகிறார். ஏழ்மைச்சூழல் குடும்பத்தில் நிலவிய போதும் கல்வி என்ற விளக்கை கை விடுவதில்லை என்று அவருக்குள் இருந்த உறுதி அவரது வாழ்வை உயர்த்திக் கொள்ளத் துணை நின்றது. பல்கலைக்கழகக் காலத்தில் விளையாட்டுத்துறையில் நெடுந்தூர ஓட்டத்தில் அதுவரை இருந்த சாதனையை முடியடித்து
புதிய சாதனையை நிலைநாட்டும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது.
1976 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியப் பணிசெய்யும் வாய்ப்புக் கிட்டியது. பட்டதாரிஆசிரியராக பொகவந்தலாவ பாடசாலையில் நியமனம் பெற்றார். பின்னர் கற்றன் கைலைன்ஸ் மகாவித்தியாலயத்தில் பணியினைத் தொடர்ந்தார். இங்கு பணியாற்றிய 9 ஆண்டு காலத்தில் அவரது சேவை மாணவர்களுக்கும், பாடசாலைக்கும் வளம் சேர்ப்பதாய் அமைந்தது. வீரசிங்கம் மகாவித்தியாலயம், மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இவரது சேவையினை பெறும் பேற்றினைப் பெற்றன. 1988 ஆம் ஆண்டு அதிபர் தரம் II பரீட்சையிலும் 1991 ஆம் ஆண்டு அதிபர் தரம் 1 பரீட்சையிலும் சித்தியடைந்து தனது தொழில் திறனை முழுமைப்படுத்திக் கொண்டார்.
மட்டுவில் சந்திரபுர
ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் மாணவராக இருந்து பின் அங்கு ஆசிரியராக, உப அதிபராக, அதிபராக வாழக்கிடைத்ததை பெரும் பேறாக திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் கருதுகிறார். கல்வியை பணம் என்ற எல்லைக்குள் மட்டுப்படுத்த கூடாது என்பது அவரது பெருவிருப்பு. பிரத்தியேக வகுப்புக்களை பணத்திற்காக நடத்துவதில்லை
42

என்பதை இலட்சியமாகக் கொண்டுள்ளார். தொழில் அதிபர்களின் பிள்ளைகளுக்கும் ஏனையவர்களுக்கும் தனிப்பட்ட வகுப்புக்களை நடத்தியபோதெல்லாம் அதற்காகப் பணத்தையோ, வேறு சன்மானங்களையோ பெற்றிருக்கவில்லை என்பதை மிகுந்த மனநிறைவோடு கூறி திருப்தியடைகிறார்.
செல்வந்தர்களுக்கு முன் பணிந்து நிற்கும் ஏழைகளைப் போல் அறிவுச் செல்வந்தர்களாக இருக்குகின்ற ஆசிரியர்களிடம் மாணவர்கள் பணிந்து கல்வியைப் பெற வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆசிரியப் பணி என்பது அர்ப்பணிப்புடன் நிறைவேற்றப்படுகின்றபோதே முழுமையான அர்த்தப் பரிமாணத்தைப் பெறும் என்பது இவரது நம்பிக்கை.
திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் பணியாற்றிய வேளையில் அதிபர் என்ற வகிபாகத்திற்கு அப்பால் ஆசிரியராக ஒரு சாதாரண தொழிலாளியாக எல்லாம் பணி செய்ய வேண்டியிருந்தது. இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்த சூழலாகவே காணப்படுகிறது என்றார். யுத்தத்தால் அழிவடைந்த மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய
வரை
மகாவித்தியாலயம் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் பெரு முயற்சியால் மீளெழுந்து மாணவர்களுக்கு பயன்தரு விருட்சமாய் இன்று விரிந்து நிற்கிறது.
சாஸ்திர அறிவு மிக்கவர். சட்டத்துறை சார்ந்த அறிவையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற ஒருவர், முதுகலமானி பட்டத்தை நிறைவு செய்து தற்போது கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒருவர், எல்லாவற்றிக்கும் மேலாய் இம்மியளவேனும் தன்னால் ஜீவராசிகள் பாதிப்படையக் கூடாது என்ற உளப்பாங்கு கொண்ட உயர்ந்த மனிதர். "வாடிய பயிரைக் கண்ட போலெல்லாம் வாடினேன்” என்ற இராமலிங்க வள்ளலாரின் வரிகளுக்கேற்ப நடத்தை நிகழ்த்தக் கூடிய பண்பாளர். தனது பணி ஒய்வுக்காலத்திலும் ஓய்வின்றி சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத் திக் கொண்டு வாழ்கின்ற திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் வாழ்வு ஆரோக்கியமாய் முதுமையை எதிர் கொள்வதற்கான சிறந்த சாட்சியாய் விளங்குகின்றது. சமூகத்தில் இவரைப் போன்ற பின்பற்றுதற்குரியவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
வாசகர்களே! திரு
முத்துக்குமாரு பாலசுப்பிரமணியம் அவர்கள் இரண்டு தசாப்தங்களுக்கு
43

Page 24
alang முன் எழுதிய "துடிக்கின்ற புழு” என்ற இந்தக் கவிதையை அன்றைய சூழலின் அமைவை மனதில் இருத்தி சுவையுங்கள்.
துடிக்கின்ற புழு அடிக்கின்ற வெயிலதணில் அவதியதை மிகவுற்றுத் துடிக்கின்ற புழுப்போலத் துயரதிலே துள்ளியுடன் வெடிக்கின்ற இதயத்தால் வேதனையை வெளிக்காட்டி முடிக்கின்ற கதியற்று முனங்குகிறார் எம்மக்கள்!
மருந்து விலைகேட்டால் மரணந்தான் வந்துவிடும் அருந்த உணவில்லை அழுதாலும் கதியில்லை பொருந்த இருப்போர்கள் பொல்லாங்கு செய்கின்றார் வருந்த இவர்சிறிதும் வாட்டமது கொள்ளார்கள்!
வெள்ளம் அதுவாக விடமாக விலையேறி உள்ளம் அழவே உயர்ந்து விடும் போது தள்ளமுடியாத தமக்கான பொருளற்றோர் மெள்ள இறப்பை மேலென்று கொள்ளுவரோ!
மெத்த உடல்தன்னை மிகக்கழுவும் சகர்க்காரம் ஒத்த விலையின்றி ஒருநூறாய் உயர்ந்துவிட நித்த மதனாலே நிறைவான பணம்பெறுவோர் சித்த மழுக்காகச் சிறப்பதனை எய்துவரோ?
பாலுக் கழுது பாலகரும் பரிதவிக்க மேலுக்கு மேலும் மிகையாக விலைகூட்டத்) தோலுக் கெலும்பாகத் துன்பமுறும் சிறார்தம்மைக் காலுக்குரிய காலணியாய்க் கருதுவரோ?
米米率
44

வரை
V யுதிர் போட்டி இல, 17 சோ. கிருஷ்ணதாஸ்
கீழுள்ள புதிர்களுக்கான விடைகளை 15-07-2011 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ரூபா 500.00 வழங்கப்படும்.
1. அருகே தரப்பட்ட உருவங்களைப்
பயன்படுத்தி F என்ற ஆங்கில எழுத்தை உருவாக்கிக் காட்டுங்கள்.
4
2. உம்மிடம் உருவத்தில் ஒரே மாதிரியான சட்டக் காந்தமொன்றும் இரும்புச்
சட்டமொன்றும் தரப்படுகிறது. வேறு எந்தப் பொருட்களையும் உபயோகப்படுத்தாமல் இரும்பையும் காந்தத்தையும் எவ்வாறு அடையாளம் காண்பீர்?
2. உம்மிடம் ஒரு தராசும் பின்வரும் பொருட்களும் தரப்பட்டுள்ளன. 5g
நிறையைக் கொண்ட நாணயம், 10g நிறையைக் கொண்ட பேனா, 20g நிறையைக் கொண்ட அழிப்பான், 40g நிறையைக் கொண்ட சிறிய கைத்தொலைபேசி. இவற்றைப் பயன்பயன்படுத்தி வெவ்வேறான எத்தனை நிறைகளை அளவிடமுடியும்?
புதிர்ப் போட்டி இல, 15 இற்கான பரிசை வெல்பவர் செல்வி ஆராஜினி, தரம் 12, யா! மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை,
இதழ் 15ல் வெளிவந்த புதிர் போட்டிக்கான விடைகள்
1) 20 2) 8 3) 8/27
45

Page 25
Quang
தமிழா! உன் பெயர் தமிழா?
எம்மில் பலருக்கு தமிழ்ப்பெயர்கள் இல்லை. வேற்று இனத்தவரைப் பொறுத்தமட்டில் எந்த நாட்டினராயினும் சரி அல்லது எந்த மதத்தினராயினும் சரி அவர்கள் தத்தம் மொழியிலேதான் பெயரிட்டுக்கொள்கிறார்கள். தமிழர்கள் மட்டும் வேற்று மொழிகளிலே பெயரிட்டுக்கொள்வதில் பெருமையும் கொள்கிறார்கள்.
இருந்தும் தமது பிள்ளைகளுக்கு தூயதமிழ்ப் பெயர்கள் சூட்ட இன்றும் அக்கறைகாட்டும் பெற்றோர்கள் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்காக பிறமொழிப் பெயர்களும் அவற்றுக்கு நேரான தமிழ்ப்பெயர்கள் அல்லது அவற்றின் அர்த்தங்களைத் தொகுத்துத் தருகிறோம். தொடர்ந்தும் தூயதமிழ்ப்பெயர்களை இப்பகுதியில் அறிமுகம்செய்யவுமுள்ளோம்.
மகளிர் பெயர்கள்
LiğLDİT - தாமரை வசந்தி - இளந்தென்றல் பல்லவி -பூங்குமரி வனஜா - கானமலர் பரமேஸ்வரி - பேரிறைவி வாசுகி -மணவழகி பவானி - பூவானி வித்யா - கல்விச்செல்வி Ufdt -விறலி விஜயகுமாரி - வெற்றிச்செல்வி பானுமதி -கதிர்மதி விஜயா - வெற்றியழகி பார்வதி - Lo606)LD856.fr ரஞ்சிதா - இன்பெழிலி îrfuumt - அன்புச்செல்வி ரஞ்சினி -இன்பவல்லி பிரேமா - அன்பரசி ரதி -மணச்செல்வி
6LIFT - பூமகள் JLDIT - எழில்
மஞ்சுளா - பூமகள் ராணி - அரசி மகாலட்சுமி - பெருஞ்செல்வி ராஜம் -அரசி மகேஷ்வரி - பெருவுடையாள் JITEFIT bomoir - அரசம்மாள் மரகதம் - பச்சைமணி ராஜேஸ்வரி - இறையரசி மனோரமா - மனத்தழகி ராஜலட்சுமி - திருவரசி
D6) - D606) ருக்மணி - மறைமணி மீனாட்சி - கயற்கண்ணி ரேணுகா - எழிலி முத்துலட்சுமி - முத்தம்மை ரேவதி - பரிசில், ஆர்வம் மோனிஷா - பேசாமொழி ரோஜா - முளரி
வசந்தா - இளவேனில் லட்சுமி -செல்வி
46

வரை
லதா -கொடி லலிதா - கவினி லோகம்பாள் - உலகம்மை கதிஜா - மதிப்பன்னை சுல்தானா - اويJ۹کا ஷகீலா - அழகி கிளேரா - ஒளியல் குளோரி - பெரும்புகழ்
FाJा - இளவரசி விக்டோரியா - வெற்றி
ஆடவர் பெயர்கள் அப்துல்லாஹம் - இறைவனடிவன் அப்துல்வஹற்ஹாப்-இறைத்தொண்டன் அமீர் - தலைவன் அல்ஜப்பார் - துயருறுத்தி அப்பாஸ் - சினவரிமா அலாவுதீன் - நெறியுயர்ந்தோன் அலி - மங்கலன் அல்லாஹற்பிச்சை - இறைஇரவன் அஹம்மத் -போற்றி ஆயிஷா - நல்வாழ்வர் இக்பால் - எழுச்சியர் இப்ராகிம் - அருட்தந்தை இமான் - வழிகாட்டி இஸ்மாயில் - இறைக்கேள்வி கபீர் - பேரறிஞன் கமால் - திறத்தன் 5rfuò - வள்ளல் காசிம் -பகிருநன்
F6)TLE - அமைதியானவன் சய்யத் -மேன்மைமிக்கவர் சலீம் -இணங்கி சிராஜுன் - விளக்கு சுலைமான் - அமைவன் தவ்லத் - செல்வம் தாசுதீன் - நெறிமுடி தாஜ் -மணிமுடி
நர்கிஸ் - கண்மலர் நிஜாம் - தொடர்வோன் நூர்ஜஹான் - பாரொளி ஆபிரகாம் - இனமுதல்வன் அந்தோனி - பெருஞ்சீரோன் அப்போலோ -கதிரவன் அம்புரோஸ் - தேவன் அலக்ஸாண்டர் - காவலன் அல்போன்ஸ் - நேயன் ஆரோக்கிராஜ் - வளங்கோ அல்பேர்ட் - புகழேந்தி அல்வின் - அன்புக்குரியவன் அன்ட்ரு - உரவோன் ஸ்ரீபன் - (yptq லாசர் - கடவுள்துணைசெய்வார் லியானோர்ட் - அரிமாத்திறல் லுயிஸ் - ஆற்றல்மறவன் எட்வேட் -வள்ளியோன் எட்வின் - திருவண்பன் சாள்ஸ் - உரவோன் சொலமோன் - அமைதியுடையார் ஜோர்ஜ் - உழவன் செபஸ்ரியன் - வணங்கத்தக்கவன் ஜோசப் -வளான் ஞானப்பிரகாசம் - அறிவுஒளி டேவிட் - அன்பர் டேனியல் - தேவநடுவர் டொமினிக் - பெருமான் தோமஸ் -இரட்டை இளைஞர் தியோடர் - இறையீகை பிரட்றிக் - அமைதிக்கரசு பிலிப் - அன்பன் பீட்டர் - LD606)uj6 பெஞ்சமின் - வலங்கை ரொபேட் - புகழாளி
Bāding]ủ bì|Hồ.
தொகுப்பு:திசையன்
47

Page 26
வரை
“வரை சந்தா விபரம் நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
உள்நாடு தனிப்பிரதி - ரூ.40 முகவரி: ஓராண்டுச் சந்தா - ரூ.480 ஆசிரியர், 2 ஆண்டுச் சந்தா - ரூ.950 “வரை” வெளியீட்டகம், 3 ஆண்டுச் சந்தா - ரூ.1400 இல 10, ஆயுள் சந்தா - ரூ.20,000, சம்பியன் வீதி, வெளிநாடு கொக்குவில்,
யாழபபாணம.
ஆண்டு சந்தா -40 US$ guar gigsit - 400 US$
சந்தா தொகையை, காசோலை மூலமாகவோ அல்லது எமது கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு ரசீதை அனுப்புவதன் மூலமாகவோ அல்லது காசுக் கட்டளை மூலமாகவோ (சுன்னாகம் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக) எமக்குக் கிடைக்கச்செய்யலாம், வங்கி கணக்கு மூலம் அனுப்புபவர்கள்
R.Thananjeyan, Commercial Bank - Chunnakam. A/C No. 81070049956T6ip
கணக்கிலிட்டு ரசீதை அனுப்பவும்.
நிர்வாக ஆசிரியர்: திரு. இதனஞ்சயன் (O776 701661)
ஆசிரியர்: திரு.சு.ஆழ்வாப்பிள்ளை (021 222 7242)
இணை ஆசிரியர்கள் திரு.இ.கிருபாகரன் (0717884331) செல்வி. மீரா இரவீந்திரகுமரன்
இதழ் குழு:
க. அன்பழகன் - 077 2092013, 0779876937 வவுனியா)
ஆ. பரமேஸ்வரன் - 0779791366 (மட்டக்களப்பு). திரு.க.தர்மசேகரம்
திரு.வ.சசிகுமார்
செல்வி ஏ.பிறென்டா
செல்வி ம. துளசிகா
ஒவியங்கள்
திரு.சு.ஆழ்வாப்பிள்ளை செல்வன் தே. அகிலன்
திருமதிச.மயூரி
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை" குழுமத்தினரால் தெல்லி பதிப்பகம், கொக்குவில் இல் அச்சிட்டு வெளியிடப்படுகிறது.
&mບໍຜmath46h: பேராசிரியர் ஏ.வி.மணிவாசகர் தலைவர், அரசியல் விஞ்ஞானத்துறை, யாழ். பல்கலைக்கழகம். பேராசிரியர் ச.சத்தியசீலன், பீடாதிபதி பட்டப்பின்படிப்புகள் பீடம், யாழ். LIG)3606)&ap3d. பேராசிரியர், க.தேவராசா, பீடாதிபதி முகாமைத்துவ மற்றம் வணிக கற்கைகள் பீடம், யாழ் பல்கலைக்கழகம் பேராசிரியர் கு.மிகுந்தன், தலைவர், விவசாய உயிரியல்துறை விவசாய பீடம், யாழ் பல்கலைக்கழகம். வைத்தியகலாநிதி திருமதி. தாரணி குருபரன் இரத்த வங்கி யாழ் போதனா வைத்தியசாலை. திருமதி, பகீரதி கணேசதுரை ஆசிரியை யா/மகாஜனக் கல்லூரி திரு. சி.சந்திரன் உப அதிபர், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி 666furt T.P. 024 2222281 திருமதி. செம்மனச்செல்வி தேசிகன் உயர்தர ஆசிரியர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி வவுனியா TP: 0242226062, 024 222 2425
48
 


Page 27
Co. teriz
 

■
d Kokuvil Junctio