கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2011.06

Page 1


Page 2

அர்வேம் ஆ3 è 66 op)
அறிவியல் பல்சுவை மாசிகை
அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம் அயலார்க்குநலம்செய்யார் எய்துவார்துன்பம் இறந்துபடும்உடலே ஏகிடும் முன்பு எளில் உள்ளம் நன்மைதீமை இனங்கண்டபின்பும் அறஞ்செய்அறஞ்செய் என்றே
அறிவேஎனை அழைத்தால் இறந்தார் போல் இருப்பேனோ?
-Uாரதிதாசன்
மாணவர்களை ஆரோக்கியமான அறிவுச் சமூகத்தை நோக்கி திசைப்படுத்துவதாகவே வரை செயற்படுகிறது. அறிவியல், விஞ்ஞானம், கலை, இலக்கியம், பகுத்தறிவுக் கோட்பாடு மற்றும் பல பல்சுவை அம்சங்களைத் தாங்கி வரை மாதம் தோறும் வெளிவருகிறது. இதற்காக வாசகர்களிடம் தொடர்ந்தும் நல்லாதவரை வேணர்டிநிற்பதோடு, உங்கள் ஆக்கங்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.
ਵੰ சிரியர்
உள்ளே.
இ சிந்திய குறள்கள் - 02 இ எதுவரை.? (தொடர் கட்டுரை) - 03 * தமிழ் வட்டம் - 05
இ. இரவீந்திரநாத்
தாகூர் - 06
* சிறுவர்
உரிமைகள் - தொடர் - 11
இ. நாவினாற்
பார்க்கலாம் - 15
A Let's Learn to
speak in English - 17
A Bussiness
Letters - 21
sa LDTu'LLLb - 23
இ வாழ்க்கையை
வெல்லும் வழி - 24 இ அரிசி - சுயாதாவின்
சிறுகதை - 26 லி துணிந்து நில்;
தொடர்ந்து செல் -
31
இபேராசிரியர் கா.சிவத்தம்பி - 33 இ புதிர்ப் போட்டி - 37 இதமிழா! உன் பெயர் தமிழா? - 38
41
Kury S III gs 3viksi”
O1

Page 3
வரை
சிந்திய குறள்கள்
சிறப்பினுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னர் வசய்யாமை மாற்றர் கோள்
சிறப்பினுஞ் செல்வம் பெறினும் - பலபல சிறப்புக்களையெல்லாம் தருவாதாயிருப்பினும், பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் - பிறருக்கு தீமை செய்யாமல் இருக்க வேண்டும். அதன் உண்மைப் பொருள்-சில தீமைகள் செய்தால் அதன்பலனாய் பல அரிய செல்வங்களை அடையக் கூடியதாய் இருந்தாலும், குற்றமில்லாத பெரியவர்கள் அவ்வழி எதையும் அடைய விரும்பமாட்டார்கள். இது அவர்களின் இலட்சியம்.
It is the nature of the spotless not to inflict suffering on others, thoughby it they may get wealth and renown.
 
 

வரை
9ே எதுவரை?
அன்பிற்கினிய இளைய தலைமுறையினரே.
முதுவேனிற் காலத்தின் நடுப்பகதியிலே ஆயுதமின்றிப் போர் தொடுக்கும் ஆதவனின் கொடுங்கோல் ஆட்டுசியிலே சிக்கித் திணறி விதிர் விதிர்த்து நிற்கும் இந்த வேளையிலே நல்லதொரு தென்றலாக உங்களை வருடி ஆற்றுப்படுத்தலாம் என்று எணர்ணி இந்த மடலில் உங்களைச் சந்திக்கின்றேன். சென்ற மடலில் விட்டுச் சென்ற வினாவுடன் இந்த மடலைத் தொடரலாமா?. தொடுகை பற்றித்தொட்டுவிட்டு விலகினேன் அல்லவா? அந்தத் தொடுகைக்குரியவர் தற்செயலாகத் தொட்டாரா? வேண்டுமென்றே தொட்டாரா? இயல்பாகத் தொட்டாரா? அவருக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள உறவுயாது? அவரைப் பற்றி முன்பே உங்களுக்குத் தெரியுமா? அவர் பிரச்சினைக்குரியவரா? உங்களை மிரட்டி வைத்திருக்கிறாரா? உங்களுக்கு அவரைக் கணர்டாலே
பயமா? அவர் உங்கள் வீட்டிலேயே இருக்கிறாரா அதைன தவிர்க்க முடியவில்லையா?
இனியவர்களே! இளமைக்கனவுகளின் தலைவாசலில் நிற்கும் உங்களைப் பார்த்துக் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் இப்படிக் கேள்விகளைத் தொடுக்கின்றேன் என்று முறைக்கின்றீர்களா? என்ன செய்வது. எனது பொறுப்பு அப்படிப்பட்டது. பரவாயில்லை. எனக்கு விடை சொல்ல வேணர்டாம். உங்களுக்குள்ளேயே தேடுங்கள். சிந்தியுங்கள். குழப்பத்திற்கு ஒரு தெளிவு ஏற்படும். நிதானமாக அமைதியாகச் சிந்தித்தால் தெளிவு பிறக்கும்.
நாம் கற்றுக்கொணர்ட நல்லொழுக்கப்பணிபுகள், விழுமியங்கள், தூய உணர்வுகள் என்பன தாம், நாம் தடம் புரணர்டு போகாது எம்மைக்காக்கும் அரணர்கள், இந்த அரணர்கள். இந்த அரணர்கள் சிறுவயதிலிருந்தே அங்குலம் அங்குலமாக எம்மைச் சுற்றியும், எமக்குள்ளேயும் எம் பெற்றோரால், ஆசான்களால்,
O3

Page 4
Qiang
அற்புத இலக்கியங்களால் கட்டி எழுப்பப்பட்ட அரணிகளாகும். இவை சிறைக்கூடத்தினர் கவர்களல்ல. இவற்றை நாம் தகர்த்துப் பாய்ந்து வெளிவருவதற்கு இவை முட்கம்பி வேலிகளுமல்ல. இவை நம்மைக் காக்கவல்ல காவலரணர்கள் ஆகும்.
நாமாக விரும்பி உணர்கின்ற மருத்துவ மூலிகைகள் போன்று ஆரோக்கியமான விளைவுகளைத் தரவல்லலவை. இவற்றை முதலில் நாம் புரிந்து கொள்ள வேணர்டும். ம். இப்பொழுது மீளவும் சிந்தியுங்கள் என்றாவது ஒருநாள் ஒரு கணம். நாம் இப்படியான உணர்வுச் சிக்கலுக்குள்ளாகத் தேவையில்லை. அந்தநிலையைச் சீர் செய்து கொள்ளமுடியும். . அறியாப்பருவத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள் ஆளாதல் என்பது மன்னிக்கக்கூடிய ஒன்று தான் ஆனால் மன்னிக்கப்படலாம் எண்பதற்காகவே மீள மீள அதே தவறை இழைக்கக் கூடாது. அந்த வீழ்ச்சியிலிருந்து விடுபட்டு மேலே வருவதற்கு நாம் விரும்பவேணிடும். தயாராக இருக்க வேண்டும். மாறாக தவறை நியாயப்படுத்திக்
கொணர்டிருக்கக்கூடாது.
பெணர் என்பவள் கனங்கா சமுத்திரம் போல் புனிதமானவள். அவளது புனிதத்தை அவளது நேர்மை, உணர்மை, என்பவற்றால்தான் அவளால் நிலைநாட்ட முடியும். பொய்யான மனம் கொணர்டு தன்னையும் பாழாக்கி, தான் படைக்கப்போகும் புனிதமான படைப்புக்களையும் பாழாக்கிவிடாமல் இருப்பதற்கே அந்த நேர்மை அந்த நேரிய நடத்தை அவளிடம் இயற்கையாகவே வழங்கப்பட்டிருக்கின்றது. அதை ஆதரிக்க வேண்டுமே தவிர அலங்கோலப்படுத்தக் கூடாது. ஆம். அவளுக்கு எதிரி வெளியே எங்கும் கிடையாது. அவளுக்குள்ளேயே இருக்கின்ற அவளது மனமேதான் அவளது எதிரி!
எனின. குழப்பமாக இருக்கின்றதா? சிந்தியுங்கள். தெளிவு கிடைக்கும். அடுத்த மடலில் சந்திக்கும் வரை விடை பெறும்.
பகீரதிகனேசதுரை ஆசிரியை யா/மகாஜனக் கல்லூரி
(விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்)
04

வரை
தமிழ் வட்டம் திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
காகவர்த்தினியம்
எங்கள் தமிழ் இலக்கியங்களில் - "இலக்கணமாக” வழங்கிய சில உதாரணங்கள் ஆணித்தரமான தருக்கம் போலச் சிலவற்றைக் காண முடிகிறது. ஒருபனைமரத்தின் பனம்பழக்குலையின் மேல் ஓர் காகம் போய் அமருகிறது. காகம் அமர்ந்தவுடன் பனம்பழம் விழுந்து விடுகிறது.
அப்படியாயின் "காகம் பனம்பழத்தின் மேல் இருந்த பாரத்தில் பழம் விழுந்தது” என்று கொள்ளலாமா? ஒரு காகம் இருந்த பாரம் பனம்பழத்தை விழுத்துமா? “கண்ணாலே பார்த்தோம் காகம் பழத்தில் மேல் இருந்தவுடன்தான்பனம்பழம் விழுந்தது”என்பது ஒரு விவாதம்.
மறுவிவாதம்: காகம் இருந்த பாரத்தில் விழுவதானால் காகம் அவ்வளவு பெரிய எடை கொண்டதா? பனம்பழம் விழவேண்டிய நேரத்தில் தற்செயலாக காகமும் அதன் மேல் இருந்து கொண்டது உண்மை. எனவே காலம் வந்துதான்பனம்பழம் விழுந்தது.
காகமிருக்கப் பனம்பழம் விழுந்ததா? அன்றி காலம் வந்து பனம்பழம் விழும் சமயத்தில் காகம் இருந்ததா?
1. தற்கரீதியாக காகம் வந்து இருந்தபோது பனம்பழம் விழுவதை நாம் நேரில் பார்த்தோம். இல்லையென்று சொல்லமுடியாதே?
2. காகம் இருந்த பாரத்தில் பனம்பழம் விழாது.
ஆய்வின்படி பனம்பழம் விழும் காலத்தில் காகம் வந்து இருந்தது. தருக்கரீதியாக காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததை கண்ணால் பார்த்தோம். யதார்த்தமாக காகத்தின் பாரத்தால் பனம்பழம் விழவில்லை.
இப்படியான திணறலைச் சொல்வதற்கான இந்த உதாரணத்தை (சொல்வதற்கான இந்த நிலைப்பாட்டை) நம்தமிழில் “காகவர்த்தினியம்” என்று காப்பியர், பெளநந்தி போன்ற இலக்கண சான்றோர்கள் சொல்வார்கள்.
O5

Page 5
வரை
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமைக்குரிய இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இந்தியாவில் கல்கத்தா என்னும் இடத்தில் தேவேந்திரநாத் - சாரதாதேவி தம்பதிகளுக்கு மகனாக ஜோராசாங்கோ மாளிகையில் 1861, மே 7 இல் பிறந்தார். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற குடும்பத்தில் பிறந்த இவர் ஓர் புகழ்பெற்ற வங்காளமொழிக் கவிஞராவர். கவிதைகள் மட்டுமல்லாது" சிறுகதை, நாடகம், நாட்டியநாடகம்,
கட்டுரை, கதை, பாடல்கள் என்பன இவரின் படைப்புக்களாகும். இதனால் இவர் கவிஞராக மட்டுமல்லாது நாடகாசிரியர், மெய்யியலாளர், இசையமைப்பாளர், ஒவியர் எனப் பல வடிவங்களில் விளங்கினார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். ஆரம்பகாலங்களில் தனது ஆக்கங்களை புனைபெயரிலேதான் வெளியிட்டார்.
இவர் இளம்வயதிலேயே தாயை இழந்துவிட்டதாலும் தந்தை அடிக்கடி பயணங்களை மேற்கொண்டதாலும்
இரவீந்திரநாத் தாகூர்
பெரும்பாலும் வேலையாட்களின் கையிலேயே வளர்ந்தார். தாகூர் பாடசாலைக்கல்வியை சுமையாகவே நினைத்தார். அதனால் ஆசிரியரின் போதனைகளில் அவர் மனம் நாடவில்லை. அவர் மனம் வங்காள மொழியிலும், சமஸ்கிருத மொழியிலுமே லயித்து நின்றது. இவரது பதினொராவது வயதில் பூணுால் சடங்குக்குப் பின்னர் பெப்ரவரி மாதம், 14 ஆம் திகதி, 1873 ஆம் ஆண்டு அவரது
O6
 

வரை
தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டு பல மாதங்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது
தந்தையாரின் சாந்திநிகேசன் தோட்டத்துக்கும் சென்றார். பலருடைய வரலாறுகளைக் கற்றதுடன், வீட்டிலேயே வரலாறு, வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசனின் கவிதைகளையும் கற்றார்.
தான் ஓர் வழக்கறிஞராக வரவேண்டும் எனும் நோக்குடன் லண்டன் சென்று கல்விகற்றார். ஆனால் அங்கு ஷேக்பியர் மற்றும் பிறகவிஞர்களின் ஆக்கங்களை ஆராய்வதியேலே அதிக ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலேயே 1880 ஆம் ஆண்டு
நாடுதிரும்பினார். 1883 ஆம் ஆண்டு மிருனாலிதேவி எனும் 10 வயதுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவரின் ஆற்றல்கள் இலக்கியப்படைப்புக்களாக மிளிர்ந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே, பைரே ஆகியவை அவரது மிகவும் பிரமலமான படைப்புக்களாகும். இவற்றில் கிதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கே இவர் 1913 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். அது மட்டுமன்றி இந்தியாவின் தேசியகீதமான "ஜன கண மன” பாடலை இயற்றிய பெருமைக்குரியவர். "அமர் சோனார் பங்களா” எனும் வங்காளதேசத்தின் தேசியகீதத்திற்குச் சொந்தக்காரனும் இவரே. இவரின் சிறுகதை, நாடகம், புதினங்கள் போன்ற படைப்புக்களில் உணர்ச்சியும், இலகு மொழிநடையும், இயல்புத் தன்மையும் செறிந்து காணப்படுவது ஓர் சிறப்பியல்பாகும். 2000 ற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி சில பாடல்களுக்கு அவரே இசையும் அமைத்துள்ளார்.
தாகூரின் படைப்புக்கள் எழுத்துக்களில் மட்டும் நின்றுவிடாது கற்களிலும்
O7

Page 6
வரை
உயிர்வாழ்கின்றன. ஏனெனில் “விசுபாரதி” எனும் பல்கலைக்கழகத்தையும் நிறுவி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளார்.
தாகூர் சாந்தினிகேசனில் இருக்கும் போது மனைவி, இரண்டு குழந்தைகள், தந்தை அனைவரையும் இழந்தார். இந்நிலையில் 1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்” என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. தாகூரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார். எண்ணிறைந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவரின் உரையில் வீராவேசமும், தேசாபிமானமும், நாட்டுப்பற்றும் மக்களின்
மனங்களில் ஆணிவேராய் இறங்கின. தம் நாட்டு மக்களின் வறுமை நிலையையும், தாழ்ந்த நிலைக்கு உந்தப்பட்டிருப்பதையும், அவர்கள் அடிமைபோல் நடத்தப்படுவதையும் கண்டு அவர்களை அவற்றிலிருந்து மீட்க தீவிரமாய் பாடுபட்டார்.
1991 ஆம் ஆண்டில் பஞ்சாபியிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் தாகூர் தமக்கு ஆங்கிலேயர் அளித்த "சேர்” பட்டத்தைத் துறந்ததுடன் உள்ளன்பில்லாத வெளி நட்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தினார். இவ் விடுதலைப்பணி காரணமாக பல பிரபலங்களை சந்தித்தார். அவர்களில் பிரசித்தி பெற்ற நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி ஐன்ரீனும் குறிப்பிடத்தக்கவர். ஐன்ரீன் தாகூரின் இல்லத்திற்கே சென்று உரையாடினார்.
தாகூர் 1878 ஆம் ஆண்டில் இருந்து 1932 ஆம் ஆண்டுகளிடையில் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். அவற்றுட் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் அவரது
08
 

வரை
அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. தனது ஆக்கங்களை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று அவற்றை עלי அறிமுகப்படுத்தினார். அதன்பயனாக அங்குள்ள முக்கிய கவிஞர்கள் பலரைக் கவர்ந்தன தாகூரின் படைப்புக்கள். மேலும்
விரிவுரைகள் நடத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் பயணம் செய்தார்.
இவ்வாறு இலக்கிய, சமூக பணிகள் ஆற்றிய இரவீந்திரநாத் தாகூர் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி 1941 ஆம் வருடம் உயிர் நீத்தார்.
GESTIGEůLurréŠEKLð sagðisr
தாகூர் அவர்களின் கவிதையொன்று = இது அவருடைய கையெழுத்திலேயே மறுபக்கம் தரப்பட்டுள்ளது.
Where the mind is without fear and the head is held high, Where Knowledge is free; Where the world has not been broken up into fragments by narrow domestic walls; Where words come out from the
depth of truth;
Where tireless striving
stretches its arms towards perfection; Where clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led foward by thee into ever widening
thought and action -
into that heaven of freedom,
My father,
let my country awake.
-Rabindranath Tagore
09

Page 7
வரை
தாகூர் அவர்களின் கையெழுத்திலேயே.
ൾ ! Gulfat !,
,{ و ارگاه مرا «هرهای مah J عریر وی، توسعه یام نیرو ویسهام گوری، با 2 گیمرها و ...
. . . v ീ}و لم
ർfe f( ( ('ഗ്ഗൈ', a 物%a/苯、 ീർ %ർ a :
(f fޒއޭޖީޑީ4އޓީޔ4 法 وری گرمایی که :
%feർറ) ി& != && i fead ീറ്റ مجبور ہو &് ιά Gay Жалé f. lly ീഴ്ച f ( (f","
lf.r ble 24ملهم هرو( ർ /هاعليته ( -)هرهمل/&. y ീc ൾکہ
fبرای രദ്ധി ασβέστι ரைன் l ff face φ free data,
); %),
" . .44 ?? ctuീj (
ம்ே. G
10

வரை
தற்காலச் சூழ்நிலையில் சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்
நாம் சென்ற அத்தியாயத்தில் சூழ்நிலையில் சிறுவர்கள் எதிர்
சிறுவர்களுக்காக இலங்கை நோக்கும் பிரச்சினைகள்” எனும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தலைப்பில் பார்ப்போம். நடவடிக்கைகள், செயற்பாடுகள், சிறுவர்களுக்கு ஏற்படும் உடலியல், சிறுவர்களுக்கான பாதுகாப்புக் 9. srstíhusů, Uralurů fghum 25
கட்டமைப்புக்கள் பற்றிப் பார்த்தோம். துஷ்பிரயோகம்
இவ் அத்தியாயத்தில் "தற்கால 9 வண்வnர்
அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக வைத்தியசாலைப் புள்ளிவிபரங்களும் பிரதேச செயலகப் புள்ளிவிபரங்களும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
9 பெற்றோர்கள் பிள்ளைகளை
11

Page 8
வரை
புறக்கணிக்கும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள் கவனிப்பாரற்று விடப்படும் நிலை தோன்றுகின்றது.
பற்றைகள், புதர்கள், மற்றும் வைத்தியசாலையில் குழந்தைகளை வேண்டுமென்றே கைவிட்டுச் செல்லும் துன்ப நிலை அதிகரித்துள்ளது.
வறுமையைக் காரணம் காட்டி பிள்ளைகளுக்கு உரிய போஷாக்கு உணவு வழங்காது கைவிடும் நிலை; இதனால் அவர்களது எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. பலாத்காரமில்லாது தமது உணர்வுகளை தீர்ப்பதற்கும், இச்சைகளை நிறைவேற்றுவதற்கும் இலகுவாக சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நிலை.
அண்மைக்காலமாக யாழ் பஸ் நிலையப்பகுதியிலும், வீதியோரங்களிலும், கடைகளுக்கு
முன்னாலும் சிறுவர்கள் ஆதரவற்று அலைந்து திரிவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இச்சிறுவர்கள் காலப்போக்கிலே தெருவோரச் சிறுவர்களாக மாறும் நிலை ஏற்படுகிறது. சிறுவர்கள் தாம் கல்வி கற்கும் வயதில் கல்வியைக் கற்காது குடும்பச்சுமையைக் குறைப்பதற்காக சிறுவர் ஊழியத்தில் ஈடுபடும் நிலைமை காணப்படுகிறது. வறுமை காரணமாக உழைப்பாளர்களை இழந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் குடும்பச் சுமை காரணமாக கல்வியை இடை நிறுத்தி தமது குடும்பத்தின் வருமானத்தை பெற்றுக் கொடுப்பதற்காக தொழில்களில் ஈடுபடுவதை குறிக்கின்றது. இதை விடக் கல்வியின் முக்கியத்துவத்தை உணராது அக்கறை இல்லாத பெற்றோரின் வழிகாட்டலாலும் பிள்ளைகள் சிறுவர் ஊழியத்தில் ஈடுபடும் அவல நிலை ஏற்படுகிறது. பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மையாலும் ஆசிரியர்களின் அதிக கவனமெடுத்தல்
12
 

தன்மையாலும் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தண்டனை வழங்கும் நிலை ஏற்படுகிறது. அதிகரித்து வரும் இளவயது கருத்தளிப்பு
9 அண்மைக்காலமாக இளவயது கருத்தரிப்பு காரணமாகவும் இளவயது கருச்சிதைவு காரணமாகவும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அதிகரித்துள்ளன.
9 பாலியல் உறவு தொடர்பான
விளக்கமின்மை காரணமாகவும் காதலின் கவர்ச்சி காரணமாகவும் வயதின் முதிர்ச்சியின்மையாலும் இவ்வாறான செயற்பாடுகளில் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இதன்காரணமாக உடல் முதிர்ச்சியின்மையால் இறப்புக்கள் கூட நிகழும் சாத்தியமும் உண்டு. இவ்வாறான தன்மைகள் தாய், சேய் இருவருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதிகரித்து வரும் சிறுவர் இல்லத்துக்கான அனுமதிகள்
தற்கால சூழ்நிலையில் பெற்றோர் பாதுகாவலர் இருந்தும் தமது பிள்ளைகளை சிறுவர் இல்லத்தில் அனுமதித்து கல்வி கற்பதற்கு பெற்றோரால் விண்ணப்பிக்கப்படும்
வரை
தொகை அதிகரித்துள்ளது. பொதுவாக சிறந்த ஒரு குடும்பம் என்பது பெற்றோர், பிள்ளைகள் சந்தோசமாக ஒரே இல்லத்தில் வாழ்வது ஆகும். ஆனால் தற்காலத்தில் குடும்ப உறவுகள் சிதைக்கப்பட்டு, உறவு நிலையின் பிணைப்புக்கள் உடைக்கப்பட்டு, தமது குடும்ப உறவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு, சிறுவர் இல்லங்களில் யாருமற்றவர்களாக முகாமையாளராலும் பராமரிப்பாளர்களாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதிகரித்து வரும் சிறுவர் ஒழுக்கச் aircassassi
அதிகரிக்கும் சிறுவர் ஒழுக்கச் சீர்கேடுகள் ஆரம்பகால நிலையுடன் ஒப்பிடும்போது தற்போது சிறுவர்கள் பெரியோரை மதிக்கும் தன்மை, பெற்றோரின் சொற்களுக்கு கீழ்படியும் தன்மை, ஆசிரியர், அதிபர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது போன்ற தன்மைகள் அருகிக்கொண்டு செல்கின்றது. மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு மதிப்பளிப்பதில்லை. > மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து
மதுபானம் புகைத்தல் பாவனையில் ஈடுபடுதல்
> சிறுவயதிலேயே தேவையற்ற
13

Page 9
வரை
ஆண், பெண் தொடர்பாடல்
> சிறுவர்கள் தமது வயதுக்கு
மேற்பட்டவர்களுடன் தேவையற்ற நட்பு கொள்ளல்
> சினிமா தகவல் தொழில்நுட்ப
வசதிகளை தவறாக பயன்படுத்தல் போன்ற காரணங்களால் சிறுவர்களது ஒழுக்கம் சீர் கெட்டு வருவதாக தெரிய வருகிறது.
சிறுவர் ஊழியம்
சிறுவர்கள் என்பவர்கள் (18 வயதுக்கு உட்பட்டவர்கள்) மகிழ்ச்சியான சூழலில் அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டியவர்கள். ஆனால் தற்போது குடும்பநிலை காரணமாகவோ, வறுமை காரணமாகவோ, கல்வியை மறந்து சிறு ஊதியத்திற்காக தங்களால் செய்ய முடியாத கடின வேலைகளைக் கூடச் செய்து தமது காலத்தை போக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குள் இருக்கிறார்கள். இதற்கான காரணமாக:
> குடும்பத்தலைவனின் இழப்பு,
பிரிவு
> ஏதோ ஒரு வழியில் வருமானம் தேவை
> குறைந்த கூலியில்
வேலைக்கு அமர்த்துவது
முதலாளியின் விருப்பு
> அதிக வேலை, கட்டுப்பாடற்ற
வேலை நேரம் என கடுமையான உழைப்பு குறைந்த கூலியில் பெறுதல்
> என்ன வேலையைச்
செய்தாலும் குறைந்ந காசாவது கையில் கிடைக்கிறது என்ற சிறுவர்களது மனநிலை
போன்ற காரணங்களால் சிறுவர்கள் இலகுவாக வேலைக்கமர்த்தப்பட்டு துன்பப்படுகிறார்கள். இதனால் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பல துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். இவ்வாறான பல பிரச்சினைக்களுக்கு சிறுவர்கள் முகங்கொடுத்து பல துன்பங்களை தாம் அனுபவிக்கும் நிலைமைகளை நாம் எமது கண்களால் காணும் நிலையுள்ளது. இவ்வாறான துன்பங்கள் சிறுவர்களுக்குத் தொடர்ச்சியாக ஏற்படுமிடத்து இதுவே அவர்களது சாதாரண வாழ்க்கையின் மாறும் துன்பமான சூழ்நிலையையும் கொணர்கிறது. ஆனால் காலப்போக்கில் இதுவே அவர்களது அழிவுக்கும் பாதையாக அமைகிறது என்பது கண்கூடு.
Cl26JDIU - qers L D S.M.E.Bridget சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நல்லூர்
14
 

வரை
நாவினாற் பார்க்கலாம்
கண்பார்வையற்றவர்க ள் தங்கள் நாவினால் பார்க்கும் வகையில் ஒரு மின் உபகரணம் அவுஸ்ரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள் ang. BrainPort Vision Device (IGOJGirGunt விசன் டிவைஸ்) என்னும் அசாதாரண தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ள இக் கருவி சிறிய கையிலடங்கும் Control Unit guilh, ஒரு கறுப்புக் கண்ணாடியையும் (Pair of Sun Glasses) கொண்டு அமைந்திருக்கிறது. 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கமெரா ஒன்று கறுப்புக் கண்ணாடியின்
மத்தியிற் பொருத்தப்பட்டுள்ளது. கமெரா மூலம் control unit இல் பதிவாகும் காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப்பட்டு lolipop எனும் கருவியை நாவில் தொடுவதன் மூலம் மூளையைச் சென்றடைகிறது. பின் அது அங்கே காட்சியாக உணரப்படுகிறது. ஒருவர் ஏறத்தாள 20 மணி நேரப் பயிற்சியின் மூலம் இந்தக் கருவியை உபயோகிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த மகத்தான கண்டுபிடிப்பு அனைத்து பார்வையற்றவர்களின் பாவனைக்கு வரும் போது அது அவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
冰冰米
15

Page 10
Qiang
அறிவியல் வினாவிடை வெள்ளுவரின் பெயரை வைத்து திருக்குறளை எவ்வாறு
அழைக்கின்றனர்? வள்ளுவம்
*தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி என்று அழைக்கப்டுபவர் யார்?
பாரதியார்
*புத்த சரிதை என்ற நூலை இயற்றியவர் யார்?
அசுவ கோஷ்
*மகாத்மா காந்தியின் சுயசரிதையின் பெயர் என்ன?
சத்திய சோதனை
"அந்த டொக்டரைப் பார்த்துநாக்கப்பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டனானி எணர்டியே, அப்படி என்ன கேள்வி கேட்டாய்” (3) "டொக்டர், நாங்கள் நாக்கைப்பிடுங்கலாமா? பிடுங்கினா வலிக்குமா?
இரத்தம் வருமா? பிடுங்கினதை பிறகு ஒட்டவைக்கலாமா? - என்று
கேட்டனர்”
و 2 ،
நீநேற்று குடிச்சதை வீட்டதெரியாம மூடி மறைச்சிட்டனெணர்டியே? எப்படி மாட்டினாய்?” "நான் மூடியைத் தானே மறைச்சன். போத்தலால பிடிபட்டுப் போச்சு”
16

வரை
LET'S LEARN TO SPEAKN ENGLISH ஆங்கிலத்தில் பேசப் பழகுவோம்
தொடர். 14
மாதமொரு உரையாடன் r. A Monthly Conversation
By: Professor A.V. Manivasagar, Ph.D.
Head/Dept. of Political Science University of Jaffna
AT THE HOTEL
In this lesson a dialogue takes place between the receptionist of a hotel and a visitor who goes there togeta room.
Receptionist: Good morning, Sir. Can I help you?
Visitor: Good morning, I wanta room in your hotel please. Receptionist: Have you booked a room in ourhotel?
Visitor: No, I am afraid not. Receptionist: How long will you stay here?
Visitor: I want to stay for at least five days, possibly longer.
Receptionist: You are welcome to stay any longer. First, let me see what we have at present. Do you want a single room or a double room?
Visitor: Could you tell me, what are your charges for a single and
double room.
Receptionist: We charge Rs.900/- for a single room and Rs. 1600/- for
a double room perday.
Visitor: Do you think a single room will be good enough for my
compotable stay?
17

Page 11
வரை
Receptionist:
Visitor:
I have a very good single room at the second floor, but it will be vacant only tomorrow before noon time.
What about a good double room?
Receptionist: I can offer you a very good double room at the forth floor
Visitor:
Receptionist:
Visitor:
Receptionist: Visitor:
Receptionist:
from where you can have a wonderful view of the Jaffna fort.
Thank you, I would be very much like to have this room. Please book this room in my name.
Kindly write your particulars in this register and sign at this place.
What about the breakfast? The breakfastis included in our charges. How about the other meals?
They are charged for separately. You can eat in our
18
 
 

வரை
Visitor:
Receptionist:
Visitor:
Receptionist:
Visitor:
Receptionist:
Visitor:
Receptionist:
restaurantor anywhere outside, as your desire, please. Can we get our morning tea also?
Yes, please, that is also included in our charges. You can tell us the time, when you want the morning tea and the breakfast to be served.
I would like the morning tea at 6.00 A.M. and breakfast at 7.00 A.M.
Thankyou, Sir. I have noted down your requirements. Who will carry my luggage to the room? This porter will do it and here is yourkey sir. Thankyou very much. Sir, I wish you a very comportable stayatourhotel.
Mid pleasures and palaces
though we may roam,
Be it ever so humble, there's no
place like home.
- JOHNHOWARD PAYNE (Home Sweet Home)
A man travels the world over in search of what he needs and returns home to find it.
- GEORGEMOORE (The Brooke Kerith)
19

Page 12
வரை
Pe8 & டுயிருைgற BUSNESS LETTERS (6)
From the Pen of Prof.A.V. Manivasagar....
Part. 2- Commercial Letters
Money makes the man (ARISTODEMUS). Business links all mankind(GARFIELD). The motto of business is money. Business letters are with money motto infused into them. They are purposively divided in this series into three parts - financial, commercial and managerial - though absolute partition is an eluding one. These technically and scrupulously written content-specific business letters are concise, clear and convincing in nature. Here you have not to think but to pick and choose.
7.. SAMPLES OF DRY FRUITS
Dear Sir,
Kindly send us by V.P.P Samples of dry fruits available with you along with quotations by air to enable us to place an order.
Thanking you,
Yours faithfully, 17.2. REPLY TO ABOVE
Dear Sir,
As desired by you, we are sending by V.P.P twenty samples of available fruits by air. We assure you our subsequent supplies will completely conform to these samples.
Waiting for your early order.
Yours faithfully,
விருப்பத்தெரிவு : வியாபாரக் கழுதங்கள்
20
 

Glady
8.1. PLACING AN ORDER Dear Sirs,
Sendus 100 boxes of best Indian apples at cometitive prices.
Assuring you of our increasing deals if both prices and supplies are found satisfactory.
Yours faithfully
18.2. REPLY TO ABOVE
Dear Sirs,
Today we have recieved your order for 100 boxes of best Indian apples at competitive prices. The boxes are being packed and will be dispatched in a couple of days.
Assuring you of our best attention and suitable terms.
Yours faithfully 18.3. REPLY TO ABOVE
DearSir,
Thank you for your letter dated .............. sent to us. Please note the
quality of the apples sent to us last June was satisfactory, but the packing was not done satisfactorily. Please instruct you packers to be more careful in future.
Thanking you,
Yours faithfully, 8.4. REPLY TO AEBOVE
Dear Sir, Thank you for your complaint vide your letter dated......... We have taken note of your complaint, and assure you of our best efforts in future to satisfy you on this score. We may, however, add that we can provide better packing on slightly higher charges. I hope this will be acceptable to you.
Yours faithfully,
21

Page 13
வரை
8.5, REPLY TO ABOVE
DearSir, Please give us better packing. We do not mind the extra charges. Thanking you,
Yours faithfully,
19. OIL ENGINES
Dear Sirs,
Kindly send us your catalogue and quotations regarding horizontal and vertical oilengines forusę insriLanka.
Your quotations should include delivery and erection charges.
Yours faithfully,
19.2. REPLY TO ABOVE
Dear Sirs, With reference to your letter dated ............... , we are sending you
herewith a catalogue giving designs and prices of various oil engines manufactured by us.
Anticipating an early order,
Yours faithfully,
Business links all mankind in one common brotherhood of mutual dependence and interests.
-JAMESACARFELD)
22
 

வரை
மாயங்ங்டம்
Mజs
条当s
《ས་པ།| 编美 }ళ్ల 戀 ས་ལ་ས་གས་ས་ང་ལ་ క్ష
மேலே உள்ள படத்தை உற்றுப் பார்க்கும் போது எப்படியிருக்கிறது?
23 - ر مم ، "فة ققة نانة ذقنا انتق تلقي رو.
... ai ". : ravit in.

Page 14
வரை
வாழ்க்கையில் வெல்லும் வழி
நீங்கள் படிக்கவிருப்பது பிரபல ஃபிரஞ்சு மன்னன் மாவீரன் நெப்போலியன் பற்றி அல்ல. இது நெப்போலியன் ஹில் என்ற எழுத்தாளரைப் பற்றியதாகும். 1937 இல் வெளிவந்து இன்றுவரை நூறுகோடி புத்தகங்களுக்கு மேல் விற்கப்பட்ட நூலான " Think and Grow Rich g 6TQpguj6 ft (S6) C3y. The law of SucceSS என்ற நூலை எழுதியவரும் இவரே.
தற்போது "வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி?”, "வியாபாரத்தில் இலாபம் அடைவது எப்படி?” எனப் பல புத்தகங்களைப் படித்திருப்பீர்கள். இத்தகைய
புத்தகங்களுக்கு முன்னோடி இவரே.
1883ல் அமெரிக்காவில் பரம ஏழையாகப் பிறந்த இவர் ஒரு சாதாரண பத்திரிகையாளராக வேலை பார்த்துக் கொண்டே வாழ்க்கையில் முன்றேற்றம் அளிக்கும் மந்திரங்களைக் கண்டுபிடித்தார். இது எப்படிச் சாத்தியமானது?
வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் பலரை இவர் சென்று
வரப்போலியன் அறில்
பேட்டியெடுத்தார். எடிசன், க்ரஹம் பெல், ஹென்றி ஃபோட் உட்பட சில அமெரிக்க ஜனாதிபதிகளும் இந்தப் பட்டியலில் அடக்கம். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு இதைப் போன்று பேட்டி எடுப்பதையே தொழிலாக வைத்திருந்தார் ஹில்.
கார்னெகி என்பவர்தான் ஹில் இற்கு இப்படிப் பேட்டியெடுக்கும் பொறுப்பைக் கொடுத்தார். இருபது வருடங்களுக்கு அதையே செய்யவேண்டும். இதற்காக ஹில்
எந்த சம்பளத்தையும் பெறவில்லை.
24
s,
 
 

வரை
எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமலே அந்தப் பணியை ஏற்றிருந்தார். அன்றைய நாளில் அண்ட்ரூ கார்னெகி என்பவர் பிரபலமான மனிதர். பல நூலகங்களை ஏற்படுத்தியவர். ஹில் இற்கு அத்தனை புத்தகங்களையும் படிப்பதற்கு அனுமதியுண்டு. அத்தோடு பேட்டியாளர்களையும் ஹில்லிடம் அவரே அறிமுகம் செய்வாராம். அதையெல்லாம் வைத்துக்கொண்டுதான் புத்தகங்களை எழுதினார் ஹில். இன்னும் அவருடைய குடும்பத்திற்கு அந்தப் புத்தகங்களின் மூலமாகப் பணம் வந்துகொண்டுதான் இருக்கிறது. அவருடைய புத்தகத்திலுள்ள விடயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
(நோக்கம், எதை நோக்கிச்
செல்கிறோம் என்பதில் தெளிவாக இருத்தல் அவசியம்.
0திறன், நற்றிறன்
கொண்டவர்களைக் குழுவில் வைத்துக் கொள்வது முக்கியம்.
(வசீகரம், மக்களை வசீகரத் தோற்றத்தால் கவரலாம்.
(நமயிக்கை, இலக்கை
எட்டுவோம் என்ற நம்பிக்கை இருத்தல் வேண்டும்.
0எதிர்பார்ப்பை மீறுதல்,
மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகம் செய்யவேண்டும்.
விெடா முயற்சி, விடாது
முயற்சித்தால் மாமலையும் ஓர் கடுகாம்,
(சுய கட்டுப்பாடு, சுய
கட்டுப்பாடு அவசியம்.
0கற்றுக்கொள்ளுதல், நம்
வெற்றி தோல்விகளிலிருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
ைெமயப்பார்வை, பாதையின்
மீது மையப்பார்வை அவசியம்.
(நற்பழக்கம் தீய பழக்கங்களை
விட்டொழித்து நல்லவைகளைப்
பின்பற்றுதல் .
சூழ்நிலையை அனுசரிக்கப் பழகிக்கொண்டால் இந்த உலகம் எங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக விளங்கும்
- சாள்ஸ் டிக்கன்ஸ்
25

Page 15
சிறுகதை
லகத்தில் உள்ள அத்தனை
கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று
வேலைக்காரர்கள் என்றால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன. இரண்டு மூன்று பேர் மட்டும் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிஷ்டவசமாக, முன்பட்டியலை சேர்ந்தவர். "தேமேனு" சென்று கொண்டிருந்த காரின் உட்பகுதியில் சில வினோத சத்தங்கள் திடீரென்று ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்து சென்றேன். அவர் ஒரு முறை ஒட்டிப் பார்த்து “ஸஸ்பென்ஸன் புடுங்கிக்கிச்சு" என்று சொன்னார்.
என்னதான் நான் இன்ஜினியராக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு.
மோட்டாரின் உள் அவஸ்தைகளை பற்றிய என் அறிவை ஒரு பஸ் டிக்கட்டின் பின் பக்கத்தில் எழுதி விடலாம். உதாரணமாக ஸஸ்பென்ஷன் எங்கிருக்கிறது என்று சுத்தமாக தெரியாது எனக்கு. இருந்தும் என் அறியாமையை காட்டிக் கொள்ள விழையாமல் "அப்படியா? மாத்திட்டா போச்சு” என்றேன்.
அந்த ஆள் உடனே ஒரு பழைய சாக்கை விரித்து காரின் அடியில் மறைந்தார். அங்கிருந்து பேசினார். "கிட்டு நீங்க வாங்கிட்டு
வாரீங்களா! நான் வாங்கிட்டு வரவா"
"அது எங்கே கிடைக்கும்?” "ஜே.ஸி ரோடு போகணும்" "சரிதான் நீங்க ஒண்ணு செய்யுங்க. மொத்தமா ரிப்பேருக்கு எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் போட்டு சொல்லிடுங்க”
"அதெப்படிங்க முழுக்க பார்க்காம சொல்லிட முடியாதே"
"முளுக்க பாருங்களேன்” அவர் பார்க்கும் நேரத்தில் நான் அந்த பட்டறையை விட்டு வெளியே வந்தேன். திரும்பிப் பார்த்தால் என் கார் ஜாக்கி போடப்பட்டு பரபரவென்று முன்சக்கரங்கள் நீக்கப் பட்டு எண்ணைக் கசிவுடன் வெவ்வேறு வடிவங்களில் உதிரிப் பாகங்களை இழந்து கொண்டிருந்தது. என் வயிற்றில் கவலை கவ்விப் பிடித்தது. கழற்றிக் கழற்றி இதற்கு நூறு, அதற்கு ஜம்பது என்று ஏற்றிக் கொண்டே செல்லப் போகிறார். கார் உள்ளே சத்தம் வந்தால் என்ன
26
 

வரை
குறைந்து பொய்விடும்? வெட்டி வம்பில் மாட்டிக் கொண்டேன் என்று சுயமாகச் சபித்துக் கொண்டே வெளியே வந்தேன்.
அந்தப் பட்டறை தெரு முனையில் இருந்தது. மில் கார்னர் சென்ட்ரலுடன் ஒட்டிக் கொள்ளும் இடம். காலை பத்து. போக்கு வரத்து கணிசமாக இருந்தது. எத்தனையோ கார்கள் ஆரோக்கியமான சஸ்பென்ஷனுடன் சென்று கொண்டிருந்தன. அருகே ஒரு ஒட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு என் பலி பீடத்துக்கு திரும்புகையில் அந்த விபத்தைப் பார்த்தேன்.
ஒரு கிழவன் சென்ட்ரல் தியேட்டர் பக்கத்திலிருந்து சைக்கிளில் "லொடக்கா லொடக்கா" என்று சத்தமிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மெயின் ரோடில் காவி நிறத்தில் ஒரு "மோட்டார்" வான் வந்து கொண்டிருந்தது. கிழவன் யோசிக்காமல், பார்க்காமல், நிறுத்தாமல், முட்டாள்த் தனமாக சரேல் என்று திரும்பி வேனின் குறுக்கே சென்று விட்டான். அதன் டிரைவருக்கு ப்ரேக் போட சந்தர்ப்பமே கிட்டவில்லை. "டம்" என்று சத்தம் கேட்டது. அதுக்கப்புபுறம் நான் கிழவனை பார்க்க வில்லை. என் வயிற்றில் பயம் சுருண்டு கொண்டது. பரபரவென்று கூட்டம் கூடி விட்டது. எனக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ளும் ஆவல் பற்றிக் கொண்டது. அங்கே செல்லத் தயக்கமாக இருந்தது. இருந்தும் மெல்ல நெருங்கினேன்.
வேன் நின்றிருந்தது. கிழவன் மேல் சுத்தமாக ஏறிவிட்டது. சைக்கிள் காய்ச்சிய அப்பளம் போலக் கிடந்தது.
கிழவன் கீழே ஒருக்களித்துப் படுத்தவாறு இருந்தான். அவன் மண்டையில் அடிபட்டு பக்கவாட்டில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. வாய் திறந்திருந்தது. உடல் ஒருவித நடுக்கம் போல் ஆடிக்கொண்டிருந்தது. அவன் உயிர் விரைவில் பிரிந்து கொண்டிருந்தது. அவனைச் சுற்றியிருந்த நாங்கள் அதாவது பங்களுள் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி நடந்து கொண்டோம்? சொல்கிறேன்.
"டிரைவர் எங்கையா? "அதோ உக்காந்துகிட்டிருக்காரு” "நான் இல்லிங்க டிரைவர்”
"ஆசாமி இறந்துகிட்டிருக்கான் தூக்குங்க”
"தூக்காதிங்க பொலிஸ் வரட்டும்
"அந்த ஆட்டோவை நிறுத்துய்யா"
நிறுத்தப்பட்ட ஆட்டோ வளையத்தை முத்தமிட்டு உடனே வேகம் பிடித்துப் பறந்தது. அருகே கடந்த பி.டி.எஸ் பஸ்ஸின் ஜன்னல் பூரா முகங்கள்!” பிரசன்னா சீக்கிரம் வந்து பாரு!" என்று பஸ்ஸின் உள் ஒரு அழைப்புக் கேட்டது.
"பொலிஸ் வரட்டும் அதுவரைக்கும் ஒண்ணும் செய்யக்கூடாது"
"டெலிபோன் செய்யுங்களேன்"
“ஸார் நீங்கதான் போய்
27

Page 16
Qiang
செய்யுங்களேன்"
“எனக்கு அர்ஜென்டா வேலை இருக்கு. பொலிஸ் வந்திடுவாங்க." இப்போது கிழவனின் நடுக்கம் நின்றிருந்தது. வாயால் பெரிசாக மூச்சு விட்டதால் வழிந்த ரத்தத்தில் காற்று கொப்பளங்கள் வெடித்தன.
"ஆள் யாருங்க" "யாருக்குத் தெரியும்"
"கூட ஒருத்தரும் வரலியா" "நீங்க என்ன பண்றிங்க எதிர்த்தாப்பல ஒட்டலுக்கு போய் போன் பண்ணிடுங்க” என்று என்னை ஒருவர் தேர்ந்தெடுத்தார். நான் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஒட்டலுக்கு சென்றேன். அங்கே உற்சாகமாக எல்லோரும் ரிபன் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
"டெலிபோன் செய்யணும்" "எழுபத்தஞ்சு பைசா”
தர்றேன்"
"முதல்ல கொடுத்துடுங்க எஸ்.டி.டி கூடாது"
"இல்லை போலிசுக்கு போன் செய்யனும் ஒரு ஆக்ஸிடெண்ட்"
"பண்ணிக்கங்க”
"டைரக்டரி வேணும் அவசர பொலிஸ் உதவிக்கு என்ன நம்பர் செய்யனும்”
"தெரியாது”
“டைரக்டரி இல்லையா?”
"அந்த ஆளு இறந்துகிட்டிருக்கான்”
“ஸார் நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா-"
"என்ன?
"இதில மட்டும் மாட்டிக்காதிங்க”
"எதில?"
“ஆக்ஸிடெண்ட் கேஸில நான் ஒரு முறை, இந்த மாதிரி ஆக்ஸிடெண்ட் கேஸ்தான் வழில கிடக்கான். கார்ல எடுத்திட்டு ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்க ஏன் கொண்டு வந்தே மெடிக்கோ லீகல் கேஸ் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு எடுத்து போ” ன்னாங்க விக்டோரியா எவ்வளவு தூரம் ?- அங்கே போனேன். அங்க போனா போலிஸ்காரங்க இல்லாம எப்படி நீபாடியை மட்டும் கொண்டு வரலாம"னு ஒரு ஓரத்தில் ஒன்றரை மணி நேரம் காக்க வெச்சாங்க. அதுக்கப்புறம் அங்க போன் பண்ணி இங்க போன் பண்ணி போலிஸ் வந்தாங்க.
முதல்லயே என்மேல ஏறினாங்க "எப்படிய்யா எங்களுக்கு சொல்லாம இங்க கொண்டுட்டு வரலாம்னுட்டு என்னைத் திட்டினாங்க. அவங்க ஆஸ்பத்திரில கேஸ் எடுத்துக்கிட்ட போது ஆள்போயட்டான். டெட் ஆன் அரைவல்"னு முடிச்சிட்டு கையைழுத்து போட்டு கிடங்குக்கு அனுப்பிச்சிட்டாங்க. "கேஸ் அத்தோட நின்னுச்சா? இல்லை நான்தான் ஸார் சாட்சி ஆறுமாசம் இழுத்து அடிச்சாங்க. கோர்ட்டுக்கு. சம்மன்ஸ் வரும் அங்கே போவேன். இன்ஸ்பெக்டர் வந்தா கவர்மெண்ட் வக்கீல் வரமாட்டாரு. ரெண்டு பேருமே வந்தா டிரைவரோட வக்கில்
28

வரை
ஒத்திப் போட்டுருவாரு, அன்னிக்கு ஒரு சின்ன கணக்குக்காக மொத்தம் எனக்கான செலவை கணக்கு பண்ணி பார்த்தேன். கிட்டத்தட்ட ஆயிரம் ரூபா. அதோட நின்னுச்சா கேஸ்? என்ன ஆச்சு கேளுங்க ஏறக்குறைய அந்த விபத்துக்கு நானே காரணம்ங்கற மாதிரி குறுக்கு கேள்வி போட்டு கண்ல விரலை விட்டு ஆட்டிட்டான் வக்கீல். விட்டாப் போதும்னு ஆயிருச்சு. எல்லாம் எதுக்காக? ஒரு குடிமகன்ங்கற முறையில என்பொறுப்பை கடமையை செஞ்சதுக்கு" "நான் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்து விட்டு "யாராவது பொலிசுக்கு போன் செய்ய வேண்டாமா” என்றேன்
"நீங்க தாராளமா போன் பண்ணுங்க கூப்பிட்டா கூட போய்ட்டு வாங்க. எனக்கு நடந்ததெல்லாம் சொல்லிட்டேன்"
"நம்பர் தெரியலையே”
"நூறு பண்ணுங்க” நான் போலிஸ்சுக்கு டெலிபோன் செய்து விட்டு திரும்ப அங்கே சென்றேன்.
ஏற்கனவே இரண்டு டிராபிக் போலிஸ் ஆசாமிகள் நின்று சாக்கட்டியில் கோடு போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் சென்றதும் "இவர்தாங்க என்றார்"ஒருவர் என்னை சுட்டிக்காட்டி,
“பொலிசுக்கு சொல்லிட்டேன்” என்றேன்
"போலிஸ் வந்தாச்சு, பக்கத்தில் தானே சேஷாத்ரிபுரம் போலிஸ்
ஸ்டேஷன். அங்கே போய் கூட்டி வந்திட்டாரு டிரைவரு”
போலிஸ் இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து “கொஞ்சம் வாங்க" என்றார் நான் தயக்கத்துடன் சென்றேன்.
"நீங்க இந்த ஆக்ஸிடெண்ட்டை untini öğlfiyasətirm?”
"ம்.பார்த்தேன்”
"உங்க பேரு?"அவர் பையிலிருந்து ஒரு டயரி புறப்பட்டது. என்னுள் எச்சரிக்கை சக்திகள் உயிர் பெற்றன.
“எதுக்கு"?.
“எதுக்கா?. விட்னஸ் ஸார்! சாட்சி நீங்க பார்க்கலை?”
"sigil alpigi..... untiliser தூரத்தில இருந்து சரியாப் பாாக்கலை”
"இப்பதான் பார்த்தேன்னு சொன்னிங்க? அட்ரஸ் சொல்லுங்க”
"அட்ரஸ் வந்து. நான் ஊருக்கு புதுசுங்க”
"ஊருக்கு புதுசா? பெங்களுர்ல தங்கறவர்தானே?"
"அதாவது மெட்றாஸ்காரன் நான்" "சரி இங்க வேலை செய்யறவரா?" "இல்லை. இன்ஃபாக்ட் நான் இன்னிக்கு பிருந்தாவண்ல திரும்பிடறேன்”
அவர் நான் சொன்னதை சுத்தமாக நம்பவில்லை. என்னை வருத்தத்துடன் பார்த்து சிரித்தார். “ஏன்ஸார் சாட்சி சொல்றதுக்கு அவ்வளவு பயமா?"
"பயம்னு இல்லிங்க வந்து நான்
29

Page 17
வரை
ஊர்லயே இல்லாம இருந்தா எப்படி சாட்சி சொல்ல முடியும் இதோ இவர் கூடப் பார்த்தார்”
"அய்யோ நான் பார்க்கலை இப்பத்தான் வரேன்”
"யாாவது சாட்சி சொல்ல வரமாட்டிங்களா? யாரவது? கூட்டம் மெல்லக் கலைந்தது. நான் ஒரு சின்ன சமாதான முயற்சியாக “ப்லிஸ் லுக் இன்ஸ்பெக்டர் திஃபாக்ட் இஸ் திஸ்! என்னால சாட்சிக்கு வர முடியும். எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. சந்தோசமா விருவேன். ஆனா வெளியூர்க்காரன். அதனால மெட்றாஸ்ல இருந்தா எப்படி.."
இன்ஸ்பெக்டர் கோபத்துடன் "போய்யா! மெட்றாஸ் போய்யா இங்க ஏன் நிக்கறே! போ” என்றார். கிழவனின் அருகில் சென்றார். அவன் இது நேரத்தில் இறந்திருப்பான். நான் சற்று நெரம் நின்றேன். மெதுவாக அருகில் இருப்பவரிடம் மெட்றாஸ்ல இருந்து வந்து எப்படி சாட்சி சொல்ல முடியும்? சொல்லுங்க”
"அதானே ஆவுறதில்லை அது" என்று அனுதாபித்தார். திரும்ப மெக்கானிக் ஷாப்பிற்கு வந்தேன். அவர் என் காரின் அக்கக்கான பாகங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.
"கிளட்சு ப்ளேட்டு கூட தேஞ்சிருக்கு மாத்திரலாமா” என்றார்
"செய்யுங்க”
"இன்ஜினை டவுன் பண்ணனும் மூன்று நாளாகும்"
"செய்யுங்க எஸ்டிமேட் கொடுத்துடுங்க”
மொத்தம் முன்னுத்தம்பது, எல்லாத்துக்கும் பில் கொடுத்துர்றேன். சரி உங்க அட்ரெஸ் சொல்லுங்க. சொன்னேன்.
“எத்தனை வருசமா அந்த ஃபாக்டரில இருக்கிங்க”
"ஒம்பது வருஷமா" "புதன்கிழமை வந்துருங்க” “சரி” என்று வெளியே வந்தேன். இப்போது அந்த காவி வர்ண வேனை காணவில்லை. கூட்டம் விலகியிருந்தது. ஒன்றிரண்டு பேர்களே இருந்தனர். போலிஸ்காரர்களையும் காணோம். நான் விபத்து நடந்த இடத்தை மறுபடி கடக்க வேண்டியிருந்தது. கிழவன் கிடந்த இடத்தில் அடையாளமாக உறைந்த இரத்தத்திட்டு இருந்தது. சைக்கிள் கிடந்தது. ஏறத்தாழ கிழவனின் வயசிருக்கும் போல் புராதன சைக்கிள். அதன் ஹாண்டில் பாரில் ஒரு அழுக்குப்பை மாட்டியிருந்தது. அதில் கிழவன் அரை கிலோ அரிசி வாங்கி வைத்திருந்தான் போலும், அந்த அரிசி சாலையில் சிதறியிருந்தது. பாதி அரிசி ரத்தத்தில் இருந்தது. இரண்டு சிறுவர்கள் ரத்தம் படாத அரிசி மணிகளை ஆர்வத்துடன் அள்ளி டிராயர் பைக்குள் அவசரமாக திணித்துக் கொண்டிருந்தனர்.
率率米
30

வரை
துணித்துதில், தொடர்ந்து செல்
சிறப்புமிகு சாதனைகளை அடைய எண்ணுகிறாயா? அவை இதயத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். இதயம் என்பது ஆலயம் - ஆனால் நல்லதும் கெட்டதும் இங்கே ஊற்றெடுக்கும்.
இன்னல் இழைக்காத நல்ல சிந்தனைகள் தீமையைக் கண்டு சீறிடும் பேர் இதயம் இவை பேணப்படும், நாடும் மதிக்கும்.
நல்லோர் என்ற புகழாரம் உலகம் சூடும் புத்திக்கூர்மையாலும் தர்க்கித்து பகுத்துணர்வதனாலும் ஆவது என்ன? அறிவீரோ நீவிர்? What is in intellect or reason?
Do you know?
அவைசில அடிதூரம் செல்லும் அங்கேயே அத்துடன் நின்றுவிடும் - ஆனால் அருட்கிளர்ச்சியோ இதயத்தின் அடியிலிருந்து வரும்.
"Through heart comes inspiration, love open the most impossible gate.
அறியாமை ஒரு கருமுகில் போல் வந்ததா? அது பூமியை முற்றாக மூடிவிட்டது என்று உணர்கிறாயா? அறியாமை உனக்கு ஒய்வே இல்லாமல், அறியாமை உனக்கு உறக்கமில்லாமற் செய்ததா? உன்னை முழுக்கப் பைத்தியக்காரனாக்கி விட்டதா?
31

Page 18
வரை
அழிந்து விடுவேன் என்ற பயம் தோன்றியதா? Does ignorance make you restles? Does ignorance make you sleepless? Has it made you almost mad?
ஏது செய்வீர்? மலைபோலத் தடைகள் வந்தாலும் மனந்தளராது அதைக் கடப்பேன் என்ற மாண்புடைய மதித்திட்பம் உன்னிடம் உண்டா? Have you got the will to surmount mountain high obstruction
முழு உலகமும் கையில் வாளேந்தி உனக்கு எதிராக வந்து நின்றாற் கூட உனக்குச் சரியென்று நினைத்ததை துணிந்து செய்வாயா? If the whole world stands againts you sword in the hand, would you still dare to do what you think is right?
மனத்திடத்தோடு இப்பொழுது கூட உன் குறிக்கோளை நோக்கிப் போவாயா? எவனொருவன் உண்மையினின்று அங்குலமேனும் பிறழாதிருப்பானோ அவனே உறுதியுடையோனாவான். He indeed is a steady man who dare not move inch from the way of truth. ৫০৫ ফ্লক্সিঞ্জস্টােঞ্জল্সঞ্জ
"நான் சிகரெட் பிடிக்கேக்க அப்பா கண்டிட்டாற்றா" "பிறகு.?” "தண்ணியப் போட்டுட்டுவந்து எனக்கு செம அடியடா!"
 

வரை
பேராசிரியர் கா.சிவத்தம்பி என்றால் அறியாதவர்களே இருக்கமாட்டார்கள். தமிழியலின் தலைமைப் பேராசிரியரான கா.சிவத்தம்பி அவர்களின் மறைவைத் தமிழ் இலக்கிய உலகம் தாங்கிக் கொள்ளாமல் சோகத்தில் மூழ்கியிருக்கிறது. சிறந்த இலக்கிய விமர்சகரும், சமூக சிந்தனையாளருமான இவர் கரவெட்டியில் 10.05.1931 அன்று பண்டிதர் கார்த்திகேசு - வள்ளியம்மை தம்பதிகளுக்குப் புதல்வராகப் பிறந்தார். இவர் தமது ஆரம்பக்கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லுரியிலே ஆரம்பித்து, கொழும்பு சாஹிராக் கல்லுரியில் தொடர்ந்தார். தமது
பேராசிரியர் கா.சிவத்தம்பி
தமிழர்களின் BLIII.IIII í Líb ög56OITIT65la)LI Ibíbű. ஆரம்பிக்கப்பட்டதல்ல
19வது வயதில் 1951ம் ஆண்டு கலாசூரி இ.சிவகுருநாதனுடன் இணைந்து "தமிழ்ஒளி" என்ற சஞ்சிகையை நடத்தினார். 1956ல் கொழும்பு சாஹிராக் கல்லுரியின் ஆசிரியராகவும் பாராளுமன்ற சமநேர மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார்.
வானொலி நாடக நடிகராகப் பிரகாசித்த சிவத்தம்பி அவர்கள் நாடகத் துறையிலும் தனித்துவத்தோடு சேவையாற்றினார். பல்கலைக்கழக நாடகங்களில் பேராசிரியர்கள் , சு.வித்தியானந்தன்,
கணபதிப்பிள்ளை ஆகியோருடன்
இணைந்தார். பேராசிரியர் கைலாசபதியும் இவரும் சமகால மாணவர்கள். இருவரும் அந்தக் காலத்து முற்போக்கு அணியின் இலக்கியப் பேச்சாளர்கள். இருவரையும் "இலங்கையின் இரட்டையர்கள்" என்றார் தமிழகத்து பிரபல எழுத்தாளர்
33

Page 19
வரை
கோமல் சாமிநாதன்.
பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தாம்சனின் "பண்டைய தமிழ்ச் சமூகத்தின் நாடகக்கலை” எனும் ஆய்வினைச் செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார். தஞ்சைப் பல்கலைக்கழகம், உப்சலா பல்கலைக்கழகம், ஸ்காண்டினேவியா பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, வில்தான்சியன், பெர்க்கிஸிஹார்வர்ட் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார்.
1978 ஆம் ஆண்டு தொடக்கம் ஏறத்தாழ 17ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டு காலமும், தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராக ஓராண்டு காலமும் பணிபுரிந்தார். மேலும் இந்தியா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைப்பேராசிரியராகப் பணியாற்றி பேரும் புகழும் பெற்றார்.
1956முதல் இலக்கிய விமர்சனத்துறையில் தடம் பதித்தார் சிவத்தம்பி. எனினும் 1966 முதல் தான் அவரது விமர்சன நூல்கள் வெளிவரத் தொடங்கின. இவர் எழுத்துலகில் தொடாத துறையே
இல்லை எனலாம் தமிழ், சமயம், மானிடவியல், அரசியல், சமூகவியல், நாடகம், விமர்சனம், வரலாறு, கவின்கலை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அன்னாரின் படைப்புக்களிற் சில:
இதமிழ்ச் சிறுகதைகள் - தோற்றமும்
வளர்ச்சியும் (1966)
இ.இலங்கைத் தமிழர் - யார்? எவர்?
இயாழ்ப்பாணத்தின் புலமைத்துவ
LDJIL
இதமிழில் இலக்கிய வரலாறு
இ.இலக்கணமும் சமூக உறவுகளும்
டிமதமும் கவிதையும்
ஒதமிழ் கற்பித்தலில் உன்னதம்
இதமிழ்ப் பண்பாட்டில் சினிமா
இதனித்தமிழ் இயக்கத்தின் அரசியற்
பின்னணி
இஈழத்தில் தமிழ் இலக்கியம்
இயாழ்ப்பாணச் சமூகத்தை
விளங்கிக் கொள்ளல்
இசுவாமி விபுலானந்தரின் சிந்தனை
நெறிகள்
ஆதிராவிட இயக்கக்
கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு
இதமிழ் கற்பித்தல்
34

இதமிழ் நூற்பதிப்புப் பணியில்
உ.வே.சா (பாட விமர்சனவியல் நோக்கு)
ஒதமிழின் கவிதையியல்
இ.தொல்காப்பியமும் கவிதையும்
இஉலகத் தமிழ் இலக்கிய வரலாறு
(கி.பி 1851 - கி.பி 2000)
இசசியாக்கதை
இ.யாழ்ப்பாணச் சமூகம் - பண்பாடு,
கருத்துநிலை
பேராசிரியர் பெற்ற விருதுகள்:
ல்தமிழக அரசு - திரு.வி.க விருதினை
வழங்கிச் சிறப்பித்தது.
ல் இலங்கை ஜப்பானிய நட்புறவுக்
கழக விருது
ல் உலக அளவிலான புலமையாளர்
பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது (2000)
மேலும் கொழும்புத் தமிழ் சங்கத்தின் மாதச்சஞ்சிகையான "ஒலை” அன்னாரது 75வது அகவையை, தனது 2007ம் ஆண்டு வைகாசி-ஆனி, 2007 சிறப்பிதழாக வெளியிட்டு கெளரவித்தது. “ஞானம் பதிப்பகம்” கார்த்திகை மாதம், 2007ம் ஆண்டு "பவளவிழா மலர்” வெளியிட்டு சிறப்பித்தது.
அமரர் சிவத்தம்பியின் முன்னாள் கல்லூரியான கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய
மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகர்சிப்பின் சில ஊற்றுக்களை அழகாக, அருமையாகப் பதிவு செய்யும் வகையில் அண்மையில் "கரவையூற்று" என்ற தலைப்பில் ஒரு
நூலை வெளியிட்டது.
இவையனைத்தும் இவர் வாழும்போதே பெற்றுக்கொண்ட கெளரவங்கள் பெருமைகள்.
ஒரு முறை தமிழகத்து எழுத்தாளர் கோமல் சாமிநாதன் அவர்கள் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை நேர்காணும் போது "இலங்கையின் தேசியம்” பற்றிக் கேட்டார். அதற்கு பேராசிரியர் அவர்கள் "துரதிஷ்டவசமாக பெரும்பான்மையினத்தவர்கள் "இலங்கை எமது நாடு; இது எமக்கு மட்டும்தான் சொந்தம்” என்று கூறுகின்ற இனவாதக் குரல், இந்த நாட்டுடன் நாங்கள் இணைந்து கொள்வதற்கான சந்தர்பங்களைத் தடுத்து விடுகின்றது. இது எங்கள் நாடு என்ற நினைப்பை சிங்கள தேசியவாதம் எங்களுக்குக்
35

Page 20
வரை
கொடுக்கவில்லை. எங்களுக்கு "தேசியம்” என்பதில் உள்ள பிரச்சினை இதுதான்” என்றார்.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் கோவையில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவிற்குத் தலைமைவகிக்க கா.சிவத்தம்பி அவர்கள் அழைக்கப்பட்டார். ஆனால் அவரை அங்கு செல்லவிடாது அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டபோது “இலங்கைத் தமிழர்களின் அரசியற் போராட்டம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, வெல்ல வேண்டும்” என்றும்
"கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக்கூடாது என்று சொல்லுவது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதை நான் தமிழகத்திலும் சொல்வேன்” என்றும் கூறினார்.
நடுநிலையான நோக்கு, தீர்க்க தரிசனம், பன்மொழிப் புலமை, அனைத்துத் துறைகளிலும் ஆற்றல். என எத்தனையோ பரிமாணங்களோடு தமிழ்பேசும் சமூகத்திற்குப் பெருமை தந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் இழப்பு
ஈடுசெய்யமுடியாதது.
(ԼՔԼգաT55/ இதனஞ்சயன்
கொஞ்சம் சிரியுங்கேரி
"நீ படிச்சு முடிய என்ன செய்வாய்?"
"புத்தகத்தை மூடி வைப்பேன்"
"இந்த மக்கள் இப்படிக் கேட்பாங்களெண்டு நான்
நினைக்கவேயில்லை” "ஏன்? என்ன கேட்கினம்?"
G)
"நீங்கள் இந்தத் தொகுதில நின்று உங்கட குடும்பத்துக்கே ஒண்டும் செய்யேல்லே, எங்களுக்கு என்ன செய்து கிளிக்கப் போறியள் - எண்டு கேட்கீனம்”
"ஏன்டா முகவரிய பிழையா எழுதினனி" "நான் பிழையா எழுதேல்லை, இல, 100/2 எண்டதைத்தான் சுருக்கி இல50 எண்டு எழுதித்தந்தனான்.
36

6uay
Wy யுதிர் போட்டி இல, 18 சோ. கிருஷ்ணதாஸ்
கீழுள்ள புதிர்களுக்கான விடைகளை 20-08-2011 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ரூபா 500.00 வழங்கப்படும்.
ஒருவருக்கு 3 மகள்கள். இன்னொருவர் அவரின் 3 மகள்களின் வயதைக் கேட்டதற்கு “3 மகள்களினதும் வயதுகளின் பெருக்கம் 367 என்றும், அவர்களின் வயதுகளின் கூட்டுத்தொகை ஒரு அதிஷ்டமற்ற இலக்கம்” என்றும் கூறினார். 3 மகள்களினதும் வயதுகளைக் காண்க.
ஒருவர் ஒரு இடத்திலிருந்து 12 Km சென்று இன்னோரிடத்தை அடைகிறார். பின் அங்கிருந்து இடதுபக்கமாக 5 Km தூரம் செல்கிறார். அவர் தற்போது ஆரம்ப இத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறார்?
இருவர் எதிரெதிரான திசைகளில் 10Km/h எனும் சீரான வேகத்தில் சைக்கிளிற் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது இருவரும் 50 Km இடைவெளியில் இருக்கும் போது, ஒரு பறவை ஒரு சைக்கிள் காரரை எதிரே 16Km/h எனும் வேகத்தில் கடக்கிறது. அக்கணத்திலிருந்து அந்தப் பறவை எவ்வளவு நேரத்தின் பின் மற்றவரைச் சந்திக்கும்?
இதழ் 16ல் வெளிவந்த புதிர் போட்டிக்கான விடைகள் ii)
104 அல்லது O6
+ 19722 + 19722 82526 82524
iii) GH, HI, ...
1O2352 102352
37

Page 21
வரை
தமிழா! உன் பெயர் தமிழா?
இன்று அருகிவருகின்றதுாயதமிழ்ப் பெயர்கள் இங்கேதரப்படுகிறது.
toas6f 6 usiasoff
அங்கயற்கண்ணி அறிவரசி அன்பரசி அறவழகி அன்பழகி அருள்விழி அன்புமொழி அருளரசி அறிவுமதி அஞசலை அடிசிற்கிணியாள் அமிழ்தவல்லி அமிழ்தமொழி அரசி அன்புச்செல்வி அழகுமதி அன்புமதி அமுதரசி அமுதவாணி அரியநாயகி அரிவை அருட்செல்வி அருமைச்செல்வி அருளி
9(56.560)LuT6ir அருள்நங்கை அருள்பொழிவிழி அருள்மணி அருள்மாது
அருள்வடிவு அருள்வளர்நங்கை அல்லி அல்லிமலர்நங்கை அல்லிமலர்நாயகி அழகரசி
அழகி அழகியசெல்வி அழகியலாள் அழகியாள் அழகுடைச்செல்வி அறச்செல்வி அறத்திருமகள் அறப்பெருஞ்செல்வி அழகுநிலா அமுதா அறிவுமலர் அன்புமொழி ஆறுமுகத்தாய் இசைமாது இசையமுது இசையரசி இளங்கண்ணி இளங்கிளி இளநகை இளநங்கை இளநிலா இளந்தென்றல் இளமங்கை
இளம்பிறை இளவரசி இளவழகி இனியவள் இசைவாணி இசையரசி இனியசெல்வி இன்பவல்லி இனியாள் இன்மொழி இன்னெழிலி ஈழமதி உலகமதி உமையரசி ஏழிசைச்செல்வி எழில்நிலா ஏழிசையாள் ஏழிசைஎழிலி எழில்மொழி ஒவியா ஒவியச்செல்வி கனிமொழி உமையம்மை
உமையாள் எழிலி எழிலியாள் எழில்வளர்நங்கை எந்திழை ஏரழகி
38

வரை
ஏழக்குழலி ஏலவார்குழலி ஏழிசையாள் ஏழிசைவல்லாள் ஒப்பிலழகி ஒப்பிலாமணி
ஒளவை
(9L6f Guaifass
எழிலுரு ஏழுமலை
ஜயப்பன் ஜயனார் ஜயாத்துரை ஜயாப்பிள்ளை ஒப்பிலப்பன் ஒப்பிழலகன் கடிகைமுத்து
85Lq6085uJITU கணிமேதை கண்மணி
கலைவாணன்
கலைவண்ணன்
கார்வண்ணன் கார்முகிலன் கதிரவன் கலைச்செழியன் கலைமுகிலன் கலையமுதன் கதிரொளி கதிர்ச்செல்வன் கரிகாலன் கருவேலன் கலியப்பெருமாள் கலைநாயகம்
கலையறிஞன் கார்மேகம் காளிமுத்து குமணன் குயிலன் குமரன் குலோத்துங்கன் குழந்தைவேலன் குன்றத்தூரன் (85IILDT6ir
கோவலன் செந்தமிழினியன் செந்தமிழ்ச்செல்வன் செந்தேவன் செம்பருதி செம்பியன்
செல்வன் சங்கப்புலவன் சவரியப்பன் சிவகுமரன் சிவக்கொழுந்து சிவநேயன் சிவமகன் சிவவழகன் சிவவொழி சிற்றம்பலம் சிற்றம்பலவன் சின்னத்துரை சுடர்மணி அடைக்கலம் அண்ணாமலை அம்பலவன் அம்பலவாணன் அரியநாயகம் அருமைநாயகம்
அருள்நாயகம் அழகப்பன் அழகன்
அழகிரி
அன்பரசு அன்புச்செல்வன் அறிவழகு அறிவுக்கரசு அறிவுடையப்பன் ஆவுடைநாயகம் ஆவுடையப்பன் ஆறுமுகம் ஆனையப்பன் இசைச்செல்வன் இசைத்தமிழ்வானன் இசையரசு இசையழகன் இசையாளன் இசைவாணன் இயலிசைவாணன் இயல்வாணன் இயற்றமிழ்வாணன் இளங்கீரன் இளங்கோ இளஞ்செழியன் இளந்திருமாறன் இளந்திரையன் இளம்பூதன் இளம்பெருவழுதி இறைமகன் இறையொளி இனியன் இன்பநாயகம் ஈழத்தரசு
தொகுப்பு: திசையன்
39

Page 22
வரை
“வரை சந்தா விபரம் நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
உள்நாடு தனிப்பிரதி - ரூ.40 ஓராண்டுச் சந்தா - ரூ.480 2 ஆண்டுச் சந்தா - ரூ.950 3 ஆண்டுச் சந்தா - ரூ.1400 ஆயுள் சந்தா - ரூ.20,000 வெளிநாடு ஆண்டு சந்தா -40 US$ ஆயுள் சந்தா - 400 US$
முகவரி
ஆசிரியர், "வரை” வெளியீட்டகம், இல, 10,
சம்பியன் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
சந்தா தொகையை, காசோலை மூலமாகவோ அல்லது எமது கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு ரசீதை அனுப்புவதன் மூலமாகவோ அல்லது காசுக் கட்டளை மூலமாகவோ (சுண்னாகம் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக) எமக்குக் கிடைக்கச்செய்யலாம். வங்கி கணக்கு மூலம் அனுப்புபவர்கள்
R.Thananjeyan, Commercial Bank - Chunnakam. A/C No. 81070049956T6ip
கணக்கிலிட்டு ரசீதை அனுப்பவும்.
இணை ஆசிரியர்கள்: திரு.இ.கிருபாகரன் (0717884331) செல்வி. மீரா இரவீந்திரகுமரன்
இதழி குழு:
க. அன்பழகன் - 077 2092013, 077 9876937 வவுனியா)
ஆ. பரமேஸ்வரன் - 0779791386 (மட்டக்களப்பு). திரு.க.தர்மசேகரம்
திரு.வ.சசிகுமார்
செல்வி ஏ.பிறென்டா
செல்வி ம. துளசிகா
ஒவியம்: திரு.சு.ஆழ்வாப்பிள்ளை செல்வன் தே. அகிலன்
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை" குழுமத்தினரால் தெல்லி பதிப்பகம், கொக்குவில் இல் அச்சிட்டு வெளியிடப்படுகிறது.
&ጠtዃrፓmemሸëeiት: ஆ பேராசிரியர் ஏ.வி.மணிவாசகர் ois ಙ್ಗಲ தலைவர் அரசியல் விஞ்ஞானத்துறை யாழ்.
பலகலைககழகம. ஆசிரியர் பேராசிரியர் ச.சத்தியசீலன், திரு.சு.ஆழ்வாப்பிள்ளை பீடாதிபதி பட்டப்பின்படிப்புகள் பீடம், யாழ்.
பல்கலைக்கழகம். பேராசிரியர். க.தேவராசா, பீடாதிபதி முகாமைத்துவ மற்றம் வணிக கற்கைகள் பீடம், யாழ் பல்கலைக்கழகம் பேராசிரியர் கு.மிகுந்தன், தலைவர், விவசாய உயிரியல்துறை விவசாய பீடம், யாழ். பல்கலைக்கழகம், வைத்தியகலாநிதி திருமதி. தாரணி குருபரன் இரத்த வங்கி யாழ் போதனா வைத்தியசாலை. திருமதி, பகீரதி கணேசதுரை ஆசிரியை. யா/மகாஜனக் கல்லூரி திரு. சி.சந்திரன் உப அதிபர். சைவப்பிரகாச மகளிர் கல்லூரி Gue6íLJIT TP: 024 2222281 திருமதி செம்மனச்செல்வி தேசிகன் உயர்தர ஆசிரியர், வவுனியா இறம்பைக்குளம் Losafir scignif suaesium TP: 024 222 6062, 024 222 2425
40
 


Page 23

uriyar Road, Jaffna. 021 222 1101
體冒w信 "Wär攝
Nelliady:
**
%},