கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2001.03-04

Page 1
f
முன்னேற்றம்
 


Page 2
உளவியல் சஞ்சிகை
மலர்: 26 இதழ்! 02 பங்குனி - சித்திரை 2001 விலை
ஆசிரியர்: போல் நட்சத்திரம் O.M.BTh.STL
இணையாசிரியர்: GLIPT6Tragfluu6air O.M., B.Th., B.A. (Hons)
ஒருங்கிணைப்பாளர்: ஜெயந்தன் OM
நிர்வாகக் குழு அ.ம.தி.இறையியல் சகோதரர்கள் ஜோசப் பாலா
ஆலோசகர் குழு GLLslugor O.M.I., M.A. LT6üfusü O.M.I, M.A. செல்வரெட்ணம் O.M., Ph.D. N. சண்முகலிங்கன், Ph.D. Dr. R. Álaugriisi M.B.B.S.
60TT H.C. Dip. in. Counselling. Kent fal60Tg5ITsai O.M.I, B.A. (Hons), B.Th., Dip.Ed. ஜீவா போல் OM., M.Phil.
உள்ளே.
ஆசிரியர் அரும்புகள் எனது மனித உருவும் முன்னேற்றமும் ஆளுமை வளர்ச்சிப்படிகள் சமுக அசைவும், சமுக முன்னேற்றமும் ஆளுமை வளர்ச்சியின் ஆரம்பம் எங்கே? கல்வி என்பது முன்னேற்றத்தின் அடிக்கல் உளப்பிறழ்வு பற்றிய உள -
இயக்கவியல் காட்டுரு / ஊர்க்கிளி நான் வளர. நீ,
5 QKANTOJ..... SIG முயற்சியே முன்னேற்றம் உளவியலாளரின் வாழ்க்கையில் முன்னேற்ற கருத்துக்குவியல் வாலிபவசந்தம் உங்களுக்கு ரென்னொ? றிலக்ஸ்
தொடர்பு.
நான டி மசனட் இறையியலகம் சில்லாலை, பண்டத்தரிப்பு. யாழ்ப்பாணம், இலங்கை.
*NAAN° Tamil Psychological Magazine - De Mazenod Scholasticate,
Sillalai, Pandlatheruppu,
Jaffna, Sri Lanka. Te. Fa O2 - 2721

ஆசிரியர் அரும்புகள்
அபிமான வாசக நெஞ்சங்களே!
மனித வாழ்வின் “முன்னேற்றம்” அவனது “பூரண iቇቇቐ”uፃ6å குறிகாட்டி. பூரண(நிறை)வளர்ச்சி மனித ஆளுமை அனைனத்துக்கூறுகளும் ஒருங்கிணைந்து முதிர்நிலை (Maturity) நோக்
வளர்தலாகும். உடல்-உணர்வு-மனம் என்ற வாழ்வியல் கூறுகளின் வளர்ச்சி ஆரோக்கியமான ஒருங்கிணைவுத்துண்டுதலில் தங்கிநிற்கிறது. மனநலனும் உடல் நலமும் சீராகும்வேளை ஆளுமை வளர்ச்சியின் உச்சக் கட்ட முதிர்ச்சி எனலாம். ஆனால் உடல்-உள வளர்ச்சி மட்டும்தான் மனிதனின் முன்னேற்றம் என்ற குறுகிய வரையறை தவறானது. சமூக - ஆன்மீக~ கலாச்சார-அரசியல்- பொருளாதார பிராணியாக வாழும் அவன் இந்த சமூக அம்சங்களையும் யதார்த்த நோக்குடன் உள்வாங்கி முதிர்ச்சியுடன் கையாளும்போதே சமநிலை வளர்ச்சி (முன்னேற்றம்) ஏற்படுகிறது. உண்மையான மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் அவனது சிந்தனைத்திறன், செய்கைத்திறன், சமூக உறவுத்திறன் என்ற அடிப்படை யில்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
நலிவுற்றதும் ஆளுமைச்சிதைவு கொண்டதுமான மனித வாழ்வு நன்மை பயக்கப் போவதில்லை. நலிவுற்ற மனித-சமூக நலன்கள் மீண்டும் உயிர்பெற மனித வாழ்வு மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும். மகிழ்ச் சியுடன் வாழ சுகநலத்துடன் கூடிய ஆளுமை வளர்ச்சியும் மனிதமுன் னேற்றமும் மிக அவசியமான தேடலாகின்றது. நாம் வாழ்வின் இனிமையை சுவைத்து மற்றவர்களும் அதைச்சுவைக்கத்தூண்டும் கருவிகளாகச்செயற் படவேண்டும். பிறர்நலம் நோக்கும் சீரிய பண்பாளர்களாக வளர்வோம். வாழ்வோம். வாழ்வில் முன்னேற அயராதுழைக்கும் நம் சகோதரர்களிை முயற்சிக்குக்கைகொடுப்போம், தடைகளைத்தாண்ட கரம் நீட்டுவோம். ஒருங்கிணைந்து மனித முன்னேற்றத்திற்கான பங்களிப்பை நல்குவோம்.
“முன்னேற்றம்” என மலரும் இவ்விதழ் பல்வேறு சிந்தனைத் தூண்டுதல்களையும் மனிதனை வளர்ச்சி நோக்கி நகர்த்தும் ஊக்கிகளையும் தாங்கிவருவது சிறப்பம்சம். நமது தனி, சமூகத்தேவைகளின் பின்புலங்களில் பிரசவித்த இக்கருத்துக்களும் எண்ணங்களும் ஒவ்ெ வரினதும் முன் னேற்றத்திற்கு விளைநிலங்களாக அமையுமென்று gDnub. உங்கள் விமர்சனங்களையும் அன்புடன் எதிர்பார்க்கின்ாம். தோழமையுள்ள வாழ்த்துக்களுடன்.
ம. போல் நட்சத்திரம் 9.D.5
நான

Page 3
எனது மனித உருவும் முன்னேற்றமும்
றெக்ஸ் கொன்ஸ்ரன்ரைன் C. M. F B.A(Phil) Dip. in Counselling (Kent).
“முன்னேற்றத்திற்கு தினமும் முப்பது நிமிடங்கள்” பல பேரறி ஞர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம். என்ன முன்னேற்றம்? எதிலே முன்னேற்றம்? என்று கேட்கலாம். சாதாரணமாக எம் அன்றாட வாழ்வில் ஒரு மாணவனையோ பணியாளனையோ அல்லது ஒரு குடும்பத்தையோ பற்றி பேசும்போது - அவர்களில் ஏதும் குறை காணும் போது ‘உன்னில் ஒரு முன்னேற்றத்தையும் காணவில்லையே? நீ முயற்சி செய்யவில்லையே’ என்று கூறுவது வழக்கம். இந்த முயற்சிக்கு - பயிற்சி தேவை. ஆக நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் முயற்சியும் பயிற்சியும் இணைந்தால்தான் முன்னேற்றம் காணலாம்.
எனது மனித உருவும் முன்னேற்றமும் என்ற தலைப்பை உளவியல் உலகில் உற்று நோக்கப்போனால் இது ஒர் எல்லை யில்லா ஆழ் சமுத்திரம். இந்த ஆழ்சமுத்திரத்தின் ஒரு சிறு முத்தைப் பற்றித்தான் நான் இங்கு விளக்க விரும்புகிறேன்.
மனித முன்னேற்றம் அல்லது வளர்ச்சியின் முதல் உரு தன்னைப் பற்றிய தேடலும் அறிந்து கொள்ளலும் ஆகும். இது வேதனை கலந்த ஒரு தேடல். நான் யார்? நான் எங்கு போகிறேன்? என்ற அடிப்படை கேள்விகள் எம் எல்லோருக்கும் கட்டாயமாக வந்து போகின்றன. இந்த தேடலில் என்னை முழுமையாக அர்ப்பணிக்கின்ற போதுதான் நான் என் வாழ்வில் முழுமையையும் முன்னேற்றத்தையும் கண்டு 96055D6)Lulu (Մ)ւգարք. ஒருவரிடம் ஆயிரம் சொத்துக்கள் சுகபோகங்கள் இருந்தாலும் சுயமாக சிந்தித்து செயல்படும் அறிவு இல்லையேல் அவர் ஒரு பயித்தியம் ஏனென்றால்“பிறரை அறிபவன், கெட்டிக்காரன். தன்னை அறிபவன், உள்ளொளி பெற்றவன்.”
எப்பொழுது ஒருவர் தன்னைப்பற்றிய அறிவை சேகரித்து அதன் மூலம் தன்னுடைய தனித்தன்மையை உணர்ந்துகொள்ள ஆரம்பிக்கின் றாரோ, அன்றிலிருந்து அவர் தன் வாழ்வில் முன்னேற்றத்தை காணத் தொடங்குகிறார்.” என்னைப்போல் இந்த உலகில் யாரும் இல்லை. நான் தனித்தன்மை வாய்ந்தவன், என்னிலே நிறைகளும் உண்டு, குறைகளும் உண்டு. நிறைகளோடும், குறைகளோடும் நான் என்னை ஏற்றுக்கொள்ளும்போது வளருகிறேன். “எனக்குப் பேச்சுத்திறமை இல்லை. உண்மைதான், ஆனால் அறிவு இருக்கின்றது.”(பைபிள்) இவ்வாறான கூற்றுக்கள் ஒருவருடைய தாழ்வுமன நிலைகளிலிருந்து அவரை விடுவித்து முன்னேற்றுத்திற்கு வழிகோலுகின்றது. எம்மில் தாழ்வுமன நிலைகள் உருவாகும் போது எம்மை நாமே நம்பாமல் எம் சொந்த வாழ்விற்கே ஊறுவிளைவித்து விடுகின்றோம். ஆகவேதான் உளவியலாளர்கள் “நீ அனுமதித்தாலன்றி உன்னிலே யாரும்
நான்

தாழ்வு மனப்பான்மையை உருவாக்க முடியாது. எப்பொழுது உன்னையே
நீ நம்பத்தொடங்குகிறாயோ அன்றே உலகில் வாழக்கற்றுக் கொண்டாய்” என்கிறார்கள்.
தத்துவஞானி மார்க்கஸ் “நமது வாழ்க்கை என்பது நினைவு களால் ஆக்கப்படுவதுதான்” என்கிறார். ஒவ்வொருநாளும் ஒருவன் என்ன நினைக்கிறானோ அப்படியேதான் அவன் வாழவும் முடியும், என்கின்றார் எமர்சன். ஆக நமது நினைவுகள் நம்மைப்பற்றி எப்படி அமைந்துள்ளது? அந்த நினைவுகள் எல்லாம் என்னை வளரச்செய்கின்றனவா? அல்லது பல்வேறு விதமான தாக்கங்களிற்கு அழைத்துச்செல்லுகின்றனவா? என்று ஒவ்வொருவரும் அறியத்தொடங்க வேண்டும்.
உ-ம்:
நபர் ஒருவர் வீதியில் சென்று கொண்டிருக்கின்றார் அவர்
எதிரில் அவருக்கு நெருங்கிய ஒருவரை எதிர்கொள்ள நேர்ந்தால், இருவரும் பரஸ்பரம் சிரித்துவிட்டு கடந்து செல்லுகின்றார்கள். குறித்த நபர் அதே நபரை சற்று நேரத்திலேயே மீண்டும் வீதியில் எதிரெதிரே சந்திக்கும்போது அவரிற்கு முன்னரைப் போல சிரிப்பதற்கு சற்று சங்கடமாக இருந்ததாம். அவரைக் கடந்து வரும்போது இவர் தனது மனதில் பலவகையான சிந்தனைகளை எழுப்பி, நான் மறுமுறை சிரித்தபோது முன்னரைப்போல சிரிக்காததால் அவர் என்ன நினைத் தாரோ? நான் கூட சிரித்தேனா? குறையச் சிரித்தேனா? இது எனக்கும் அவருக்குமிடையிலான உறவைப்பாதிக்காதா? எனப்பலவாறு எண்ணியபடி வீடு செல்கிறார்.
அத்தோடு நிறுத்தாமல் வீட்டிலிருந்தும் இதைப்பற்றியே தியானித்து மனதைக்குழப்பி பலவிதமான தாக்கங்களிற்கு உந்தித் தள்ளப்படுகிறார். இவருடைய நினைவுகள் எல்லாம் சந்தேகமாக எழுகின்றன. திருப்தியற்ற நிலை, மறுமுறை அவரை காணும் போது எப்படி இருப்பேன் என்ற குழம்பிய நினைவுடன் என்னை அணுகினார். இவரது உணர்வுகள் எல்லாம் தான் தவறு விளைத்ததாகவும் எப்படி முகம் கொடுப்பது என்ற மனப்பான்மையுடன் தொடர்ந்து இவ்வாறான உணர்வுகளுடன் வாழ் வதால் ஏனைய முன்னேற்ற பகுதிகள் எல்லாவற்றையும் அடைத்து, வாழ்வில் குழப்ப நிலைக்கு தள்ளப்படுகிறார். ஆற்றுப்படுத்துபவருடன் தொடர் செயல்பாடுகளில் இந்நபர் ஈடுபடத்தொடங்கி தனது உள்ளார்ந்த உண்மை நிலையை அறியத்தொடங்கினால் நிச்சயம் முன்னேற்றம் காணலாம்.
என்னை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடமுள்ள ஒவ்வொரு உணர்வையும், எண்ணத்தையும், நம்பிக்கையையும், பயத்தையும், தோற்றத்தையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது மனித உருவோடு உண்மையான தொடர்புகொண்டு முன்னேற்றம் காணமுனையும் போது ஓர் ஆழமான கேள்வியை என்னை அறியாமலேயே கேட்கத்தூண்டப் படுகிறேன். நான் யார்? நான் எதற்காகப் பிறந்திருக்கிறேன்? இப்படியான கேள்வி பொதுவானதாகவும், சாதாரணமாக பலதடவை கேட்கப்பட்டதாகவும் கேட்டதாகவும் தோன்றலாம். ஆனால் இதன் உண்மையான ஆழத்தை ஆராயத்தொடங்கும்போது பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்றாக
நான

Page 4
4.
அமையும். ஏனென்றால், சில சமயம் இக்கேள்விக்கு சரியான பதிலைக் கொடுக்க முடியாமலும் போகலாம். இதற்கு உண்மையில் உடனடியாகவும் பதிலளிக்க முடியாது. மாறாக, வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய ஒன்றாக அமைகிறது. இக்கேள்வி எப்படித்தான் கடினமாக இருந்தாலும் திடமாக பதிலளிக்க முயற்சிக்க வேண்டும். உண்மையாக வாழ்வில் முன்னேற்றம் காணும் நோக்கம் உண்டானால் நான்தான் எனது வாழ்வை வளப்படுத்த வேண்டும். எனது வாழ்வுக்கு நான்தான் உருக்கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து என் வாழ்வை முன்னேற்றிச் செல்ல முனையவேண்டும்.
நான் எப்போது எனது உள்ளார்ந்த பயணத்தை மேற்கொண்டு எனது மனித உணர்வைத் தொடுகின்றேனோ அப்போது நான் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியது, “நான் யார்? எனக்கு இது ஒர் அதிர்ச்சியை உண்டு பண்ணலாம். இருப்பினும் வாழ்வில்.முன்னேற்றம் காணவேண்டுமென்ற அவாவுடன் முயலவேண்டும். என்னை நான் ஏற்றுக்கொள்ளும்போது, என்னை நான் நம்பும்போது சுய அறிவைப்பெற்று, விழிப்புணர்வு பெற்று முன்னேற்றம் அடைகிறேன்; நம்முடைய சிந்தனைகள், செயல்கள், சொற்கள், உணர்ச்சிகள் எத்தகையன என்று அறிந்து பல நேரங்களில் நாம் ஏன் இத்தகைய சிந்தனைகளை, சொற்களை, உணர்ச்சிகளை கொண்டு செயற்படுகிறோமென நமக்கே தெரியாது. நாம் செய்வது நமக்கே தெரியவில்லை என்றால் வேறுயார்தான் அதனை அறிந்திருப்பர்.
நம்மை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்றால், நம்மைப்பற்றிய சொந்த அறிவு இன்றியமையாதது. நம்மை அறியும் போது நமது திறமைகளை, ஆற்றல்களை, இயலாமைகளை முன்னேற்றத்திற்குரிய வாய்ப்புகளை, தடைகளை அறிந்து ஏற்றுக்கொள்ளும்போது நாம் நிமிர்ந்து நடக்க முடியும். நம்மிலிருக்கும் அச்சம் ஒர் அறியாமையின் வெளிப்பாடு. நாம் நினைப்பதில், செய்வதில் “ஏன் செய்கின்றோமென்ற,’ தெளிவிருந்தால் அச்சத்திற்கு இடமில்லை. ஏனெனில் சுயஅறிவு அச்சத்தை அகற்றும்.
நம்மை நாமே அறிந்து கொள்ள பின்வரும் 3 வழிகளைப்பயன் படுத்தலாம்
1. நம்மைப்பற்றி நாமே மனந்திறந்து நெருங்கியவர்களோடுபேசுதல்
2. பிறர் நம்மைப்பற்றி சொல்பவற்றை ந்த மனத்தோடு எவ்வித
பாதுகாப்புக்கவசமுமின்றி கேட்டல்.
3. தியானித்தல் - பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகின்ற நிலை. இந்நிலை
நம்மைப்பற்றி பல காரியங்களை தெளிவாக்கும்.
ஆகவே, நாம் எந்தச் சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறுவதோடு, ஆளுமையின் அடித்தளத் திலிருந்து சக்தியும் பலமும் உள்ளத்தின் வழியாக உடலுக்கு அனுப்பப்பட்டு மாற்றம் ஏற்பட ஏதுவாக அமைகிறது. விக்ரர் ஃபிராங்கல் என்னும் உளவியலாளர் வாழ்க்கையில் பொருள் கண்டு பிடிப்பதுதான்
நான்

5
மிகப்பெரிய முன்னேற்றம் என்கிறார். இதனைக்கண்டுகொண்டால் எப்படியா வது மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம். ஏன் வாழ்கின்றேன் என்று தெரிந்தால் எப்படியும் வாழ்ந்து விடலாம். ஆக என் மனித உருவில் முன்னேற்றத்தைக் கண்டுகொள்ள நாளும் பொழுதும் ‘நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் வாழ்கிறேன்?’ என்ற தேடலில் விடா முயற்சியோடு பயணிப்போம்.
முன்னேற்றப்பாதை எம்முன் விரியும்.
மெளனச்சப்தங்கள்
IJarøf SBoanuI 3" வருடம், மருத்துவபீடம்
திறந்து கொள். நம் உடலினதும் நுண்ணிய உள்ளத்தினதும் மாயவலைப் பின்னல்கள்
விழி பொருதி, ஸ்பரிசம் பெற்று என்றுள் நியும் உன்னுள் நானும் இதுவரை காத்த மெளனங்களை ஊற்றிக் கொள்ளுவோம்.
பேகயவர்பேசிக் கொள்ளபட்டுமே.
க்கணிக்கப்பட் பறவைகளின் பாடல்களைப்பற்றி அவர்களுக்குத் தெரியாது நம் பேசாப் பொருட்களின்
ந்தலில் நாமே இயங்குவோம் கை கொடு நள்பி. இனியுமென்ன தயக்கம்?
6 S”
جدعيخ

Page 5
ஆலுநமை வளர்ச்சிப்படிகள்
6f 6fJF6rs (Erik Erikson)
A.B. 66taf6
மானிப்பாய்
உளவியலாளர் பலர் மனித ஆளுமை வளர்ச்சி பற்றி விபரித்துள்ளார்கள். அவர்களுள் எரிக் எரிசன் என்ற உளவியல் நிபுணர் குறிப்பிடப்பட வேண்டியவர். எரிக் எரிசன் தனது கருத்துக்களை ஒரு முழுமையான மனிதனை அடிப்படையாக வைத்து விபரிக்கின்றார். அவரது ஆளுமை வளர்ச்சிப் படிமுறைகள் பலராலும் பாராட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவரது கருத்துப்படி ‘ஆளுமை’ வளர்ச்சித்திறன் படிகள் எட்டு நிலைகளாகும். மனித வளர்ச்சிக்கு ஏற்ப ஆளுமை (Personality) வளர்ந்து மாற்றங்கள்பெற்று முன்னேற்றம் காணுகின்றன. இம்முன்னேற்றம்தான் அவனை சமூக விலங்காக சமூக உறவுகளில் இணைத்து முழுமையை நோக்கி வளரத்துாண்டுகின்றது. மனிதன் தனது ஆளுமையை அறிந்து பின்னர் மற்றவருடைய ஆளுமை நிலையை விளங்கிக்கொள்ளுகின்ற போது மாத்திரமே சமூகத்திலே சுமூகமான தொடர்பாடல் காணப்படும். இச்சுமூகமான தன்மையே பொது நன்மைகளை தோற்றுவித்து மனிதன் முழுமனித வளர்ச்சியை அடைய உதவுகிறது.
எரிக் எரிசன் தனது எட்டு படிமுறைகளிலும் விஷேசமான முறைகளையும் குணாதிசயங்களையும், அவ்அப்பருவத்திலே அவன் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகளையும் வெளிக்கொணர முற்படுகின்றார். இவ்ஒவ் வொரு படிமுறைகளிலும் அவன் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள், அனுப வங்கள் ஊடாக பயணிக்கின்ற போது அவன் ஆளுமை ரீதியாக வளர்ச்சி அடைகிறான், முன்னேறுகிறான் என்பது பொருள் அவ்வப் பருவ்ங்களளிலே முகங்கொடுக்கப்பட வேண்டியவை மறுக்கப்படுகின்றபோது, அவை பின்னைய பருவங்களிலே வெளிக்கொணரப்படுகின்றன. இது அவனுடைய வளர்ச்சியை, முன்னேற்றத்தை தடை செய்கிறது.
1. நம்பிக்கை/அவநம்பிக்கை (0-1 வயது)
(Trust versus Mistrust)
குழந்தை தாயினுடைய அல்லது வெளியுலகினுடைய உறவினை தொடுகை மூலம் பெற்றுக்கொள்கிறது. இது முக்கிமாக தாய் , சேயினுடைய உறவின் மூலம் வெளிக்கொணரப்படுகின்றது. குழந்தை தனது தேவைகளை பூர்த்தி செய்ய அழுகையை பயன்படுத்தியும், தேவை பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் சிரிப்பது, விளையாடுவது மூலம் தனது நிறைவையும் வெளிப்படுத்துகின்றது . அச்சந்தர்ப்பத்தில் அது வெளியுலகினில் தனக்குள்ள நம்பிக்கையையும் தன் தேவைகள் பூர்த்தியாகாதபோது அவநம்பிக்கை களையும் தன்னிலே வளர்த்துக்கொள்கிறது.
நான்

2. தன்னாட்சி / வெட்கமும் சந்தேகமும் (1 - 3 வயது)
(Autonomy versus Shame and Doubt)
இது தசை சம்பந்தமான வளர்ச்சி. இங்கு குழந்தை தட்டிக் கொடுக்கப்படுகின்ற நிலையை விரும்புகிறது . அவை தாமே பலவற்றை செய்ய முனைகின்றன. தன்னாட்சி தன்மையை வெளிக்கொணருகின்றன. தொடுகை, ஆராய்வு, இன்னும் மல சலம் கழிக்கும் பயிற்சி போன்றவற்றில் பெற்றோர் தட்டிக் கொடுக்கின்ற வேளை தன்னாட்சித் தன்மையையும், விழ்கின்றபோதுவெட்கி, தன்னிலே சந்தேகப்படுகின்ற நிலைப்பாட்டையும் குறித்து நிற்கின்றன. தன்னைச் சுற்றியுள்ள உலகம் தன்னை ஏற்றுக் கொள்ளுகிறது என்ற உணர்வை பெற்று முன்னேறுகிறது. பாராட்டுக் கிடைக்காதபோது தன்னையிட்டு வெட்கமும் தன்னிலே சந்தேகமும் கொள்கின்றது. இது பிற்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஓர் அம்சமாக காணப்படுகிறது.
3. தன்முனைப்பு / குற்றம் (4 - 5 வயது)
(Initiative versus Guilty)
இப்பருவத்தில் பிள்ளைகள் மிகவும் உத்வேகத்துடன் புதியது பல படைக்க முனைவர். சுயமாகவே முன்னெடுத்து செயற்படுகின்ற தன்மைகளை இப்பருவம் தாங்கிவரும். திட்டமிடுதல், தன்முனைப்புத்தன்மை கொண்டு செயற்படுகின்ற வேளை பெற்றோரால், மற்றோரால் தட்டிக்கொடுக்கப்பட்டால் முன்னோக்கி செல்வதையும், தடுக்கப்படும் போது குற்ற உணர்வினை அனுபவிப்பதனையும் காணமுடியும். இன்னும் பாலியல் சம்மந்தமான நாட்டம் சிறிது காணப்படும். ஆண்பிள்ளை தாக்குதல், கைப்பற்றுதல், போன்றவற்றில் இன்பமடைவதையும், பெண்பிள்ளை மெதுமையான, சாந்தமான, போக்கினை அடைவதில்இன்பமடைவதையும் காணலாம். இப்பராயம் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தினை உண்டாக்குவதனால் இதில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும்.
4. முயற்சி / தாழ்வுமனப்பாங்கு (6 -12 வயது )
(Industry Versus Inferiority)
இது பாடசாலைப் பருவம். இங்கு பரந்த, முறையான ஆற்றல்களை ஒழுங்கமைத்து பெறமுயல்கின்றனர். தாம் கற்றவற்றை நடைமுறைப் படுத்த முன்வருகின்றனர். பாடசாலை மற்றும் படிப்புக்களின் ஊடாக பிள்ளைகள் தமது முன்னேற்றத்தினை காண்கின்றனர். இவ்வாறு பிள்ளைகளின் வளர்ச்சி ஆசியர்களினால், பெற்றோர்களினால் தட்டிக்கொடுக்கப்படுகின்றவேளை திருப்தி அடைந்து, தமது சாதனைகளை எண்ணி மகிழ்கின்றனர். மாறாக அவர்கள் நிராகரிக்கப் படுகின்ற வேளையில் தாழ்வுமனப்பாங்கை உள்வாங்க
நான

Page 6
8
வேண்டியவர்களாகின்றனர். இப்பருவத்தில் பிள்ளைகள் சமூக மயப்படுத்தப் படுகின்றனர்.
5. அடையாளம்\நடிபங்குத்தெளிவின்மை (12-20 வயது)
(Identity versus Role Confusion)
குழந்தை இங்கு ஒரு புரண மனிதனாக, சமூகத்தால் நோக்கப்படுகிறான். உடல் ரீதியான வளர்ச்சி மாத்திரமன்று தனித்துவத்தையும் கண்டுணர வைக்கின்றான். இங்கு நான் யார்? எனது திமறமைகள் யாவை? எனது மதிப்பீடுகள் யாவை? என்று தன்னுணர்வு பெற்றவனாகி காணப்படுகிறான். பெரும்பாலாக எதிர்பால் உறவுகளை ஏற்படுத்திக்கொள்கின்றான். தனது சக பாடிகளுடன் அதிகமான உறவினை ஏற்படுத்திக்கொண்டு வாழுகின்றான். சுயதனித்துவம் பாதிக்கப்படுகின்ற போது அவனில் நடிபங்குத்தெளிவின்மை, நான் யார் என்று புரியாத குழப்பநிலை ஏற்படுகின்றது.
6. சகவாசம் / தனிமை (20-30 வயது)
(Intimacy versus Isolation)
இதில் ஆளமான Dഖങ്ങബ ஏற்படுத்த முனைகின்றான். இந்நிலையில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டு தனது வாழ்வினை அர்ப்பணிக்க முன்வருகின்றான். இதே வேளை சில தியாகங்களையும் மேற்கொள்ள முனைகின்றான். இவ்வாறான வேளைகளில் தனது தனித்துவத்தை அல்லது நான்’ என்பதனை இழந்து விடுவேனோ என்ற பயத்தினால் சில வேளைகளில் தன்னைத்தானே தனிமைப்படுத்தவும் முனைகின்றான். இப்பராயத் தில் பாலியல் சேர்க்கைச் சார்பு அவனில் காணப்படுகின்றது.
7. ஆக்கம் / தேக்கம் (30-65 வயது)
(Creative versus Sagnation)
புதிய சமுதாயத்தை கனவிலே கொள்கின்றான். தன்னைப்போல மற்றவனும் சமூகப்பிராணி. எனவே அவனுக்கு இந்த உலகம், உறவு, படைப்பு, அனைத் தும் தேவை என்பதனை உணர்ந்து சேமித்து வாழப்பழகுவான். தன்னுடைய வருங்கால சந்ததியை மனதில் கொண்டு வாழ முற்படுவான். இப்பொழுது ஆக்க சக்தி நிறைந்தவனாகி தொடர்ந்து, சளைக்காது உழைப்பாண். அவன் எப்பொழுது இத்தொழிலில் திருப்தி காணவில்லையோ அப்பொழுது தேக்க நிலையை தன்னில் உணர்வான். இது அவனுக்கு ஓர் இழப்பாகும்.
நான்

8. முழுமை \ நம்பிக்கையின்மை (65க்கு மேல்)
(Integral versus Despair)
ஒரு முழுமை அடைந்த வாழ்வை வாழ்ந்தவனாகி திருப்தி அடைகின்றான். இக்கட்டத்தில் ஆன்மீகம் சம்மந்தமான நாட்டம் அதிகம் காணப்படும். மரணம் என்ற அனுபவத்தை நோக்கி நடக்க முயலுகின்றான். தனது கடந்த முழுவாழ்வையும் திரும்பி பார்த்து முழுமை அடையவில்லையெனில் நம்பிக்கையினை இழந்து விடுகின்றான். அவன் விரக்தி உற்றவனாக வாழ்வை முடிக்க முயலுவான்.
நாம் மேலே பார்த்த எட்டு படிமுறைகளும் தம்மிடையே ஒன்றோ டொன்று தொடர்புடையனவாக காணப்படுகின்றன. ஒவ்வொரு படியும் வெற்றிகரமாக தாண்டப்படுகின்ற பொழுது ஒருவன் முழுமை பெற்றவனாகி சமூக வரலாற்றில் தன்னையும் இணைத்துக் கொண்டவனாக மாறுகின்றான். இது அவனுடைய வாழ்வில் தொடருகின்ற ஒரு முன்னேற்றமாக அல்லது வளர்ச்சியாக காணப்படுகிறது. மனிதன் தனது ஆளுமையை வளர்த்து உடல், உள, ஆன்மீக ரீதியாக முழுமை பெறுகின்ற போது சமூகம் என்ற சக்கரம் முன்னேறுகிறது. நல்லதை நோக்கிய மாற்றங்கள்தான் வளர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது.
- o o a e o a o o o o e o o o o o o o a o o • • • • • oo o o e a o o o o o o o o o o o a o o • • • • • • • • • • • • • • ** *
0. 2001 வைகாசி - ஆனி மலரில்
“தலைமைத்துவம்”
எழுத்தாளர்களே, வாசகர்களே! போரின் கொடூரப்பிடியினால் பாரின் நிலை தடுமாறி, தகுதியான தலைமைத்தவமின்றி, உடல், உள இழப்புகளே தனிச்சொத்தாகி வருகின்றது. எனவே நாட்டைத்தட்டி எழுப்பி கட்டியெழுப்ப உங்கள் சிந்தனைக்குதிரைகளை திசையெங்கும் விரட்டி ஆன்மீக, அரசியல், சமூக, உடல், விழிப்புணர்வுகளை ஒருங்கே திரட்டி ஆக்கங்களாக்கி அனுப்பிவையுங்கள். அவை 20. 04. 2001 இற்கு முன்பாக கிடைக்கும்படியாக ஆவன செய்யுங்கள்
நான

Page 7
O
சமூக அசைவும் சமூக முன்னேற்றமும் (SOCIAL MOBILITY AND SOCAL DEVELOPMENT D
அ. எ. றிச்சேட் விரிவுரையாளர்
அரசறிவியல், சமூகவியல் தறை, யாழ், பல்கலைக்கழகம்.
முன்னுரை
எங்கு பார்த்தாலும் வளர்ச்சி, மாற்றம், முன்னேற்றம், அபிவிருத்தி, விழிப்புணர்வு, மறுமலர்ச்சி தொடர்பான பேச்சுக்களாகவே உள்ளன. அந்தளவிற்கு எம் புலங்களில் முன்னேற்றம் ஓர் அத்தியாவசியமான பணியாக அமைந்துவிட்டது. அதன் முக்கியத்தவமும் உணரப்படுகின்றது. ஆக, சமூகவியல் நோக்கில் - சமூகக் கட்டமைப்பில் நிகழும் பகுநிலை மாற்றங்கள், செயல் முறைமைகளை விளக்கும் ஒரு பதமாக சமூக அசைவு (Social Mobility) அமையும். கூடவே இக்கட்டுரை சமூகக் கட்டமைப்பின் செயல் நிலைகளையும் அதன் சமூக முன்னேற்றம் (Social Development) தொடர்பான பகுப்பாய்வுகளையும்
உள்ளடக்கும். O சமூகம் இரு பிரதான பகுதிகளை, சமூக நிலையியல் (Social Static) சமூக இயக்கவியல் (Social Dynamics) அதாவத சமூகக்கட்டமைப்பும் (Social Structure) dopa, 65T busyGib (Social Function) 96f 67TLieb என்பது அமைப்பு செயற்பாட்டியல் கோட்பாட்டு மரபு (Structural Functional School) அழுத்தும் உண்மையாகும். இந்த வகையில் சமூகவியல் அறிஞர்களான &ä66S (SLSisi, sisöjä pi (Kingsley Davis and Willbert Moore; Some Principles of Stratification, 1969) “s(66.60105.5 66) கோட்பாடுகள்” எனும் நாலின் வழி குறிப்பிடும் ஆய்வின் சாரம் இங்கு முதன்மை பெறும். “வகுப்பு அமைப்பில்லாமலோ, படிநிலை அமைப்பில்லாமலோ எந்த ஒரு சமூகமும் இல்லை. செயற்பாட்டியல் முறையில் கூற வேண்டுமானால் எந்த ஒரு சமுதாய அமைப்பும் அதன் செயற்பாட்டு நிலையில் ஏதோ ஒரு வகை யான
சமநிலையின்மையைக் (nequality) கொண்டிருக்கும். இது ஒரு உலகளாவிய விதியாகும்’
சமூக கட்டமைப்பு என்பத சமூக முறைமையின் கூறுகளுக்கிடையிலான வடிவமைக்கப்படும் உறவுகளை ஆராயும். சமூக அந்தஸ்தம் (Social Status) நடிபங்கும் (Roles) இதன் முக்கிய கூறுகளாகும். குறிப்பாக சமூகக் கட்டமைப்பில் ஒரு தனியனின் நிலையினைக் (Position) குறித்துக் காட்டுவதாய் சமூக அந்தஸ்த அமையும். அதன் சுட்டிகளாய் 6a67 gosib Prestige), செல்வம்(Wealth), அதிகாரம்(Power)இவை மூன்றும் அமையும்.
நான்

0 மேலும் சமூகவியலாளர்கள் இரண்டு வகை அந்தஸ்தக்களையும் குறித்தக்
காட்டுவர். அவையாவன;
31. 9kDuib disabgy (Achieved Status) &b. 2 fiaslay aliasisgy (AScribed Status)
சமூகம் அல்லது ஒருகுழு தனியனுக்கு வகுத்தமைத்தக் கொடுக்கும் படிநிலையை உரித்தான அந்தஸ்த என்றும், போட்டி, முயற்சி, கடின உழைப்பின் வழி நாடிப் பெறும் படிநிலையை அடையும் அந்தஸ்த குறிக்கும். இதன் வழி: சமூகத்தில் பண்பாட்டின் வழி வரையறுக்கப்படும். சில கடமைகள், உரிம்ைகளை எதிர்
கொள்ளும் பக்குவம் உருவாகும். இதனை நடிபங்கேற்றல் (Role Taking) என்பர்.
0 அடுத்த சமூகக்கட்டமைப்பில் நிகழும் அசைவும், மாற்றமும் முக்கியம் பெறும். சமூக உறுப்பினர்களிடையே அந்தஸ்த தொடர்பான தொடர்ச்சியான மேல் - கீழ் நோக்கிய அசைவு இடம் பெறும். சமூகவியலாளர்கள் இதனை சமூக அசைவு என்பார்கள்.
உதாரணமாக ஓர் ஏழை, பணக்காரனாகவும், ஓர் வங்கியின் சாதாரண ஊழியர் அதன் முகாமையாளராகவும் முன்னேற்றமடைய இயலும்.
மேலும் அறிஞர்கள் சமூக அசைவினையும் இரண்டு வகையாக பிரித்துக் காட்டுவார்கள்.
(9s. Glastigia T60) glodoy (Vertical Mobility) &b &DLuIISO 9/6036 (Horizontal Mobility)
ஒரு தனியாள் தனத வகுப்பு, தொழில், அதிகாரத்தின் வழி ஒரு அந்தஸ் தில் இருந்த இன்னுமொரு அந்தஸ்திற்கு முன்னேற முடியும். இதனை செங்குத்தான அசைவு விளக்கும். ஆனால் ஒருவரின் அந்தஸ்தில் மாற்றம் ஏற்படாமல், அவரின் படிநிலையில் (Position) மாத்திரம் ஏற்படும் முன்னேற்றத்தினை கிடையான 9lGoodromy 6gsfang (bågrb. (Rqo Shankar, 1993).
உதாரணம்: வகுப்புச் சமூகங்களில் ஒருவர் தன் முயற்சி, கடின உழைப்பின் வழி கீழ் வகுப்பில் Stigs (Lower class) Loifu, Giosi foso (Middle, upper) asgyfies அசையமுடியும். இங்கு அந்தஸ்தம், அவரின் படிநிலையும் மாற்றமடைகின்றத. ஆனால் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களில் ஒருவர் தன் தொழில், கல்வி, புகழின் வழி எவ்வளவுதான் முன்னேறினாலும் அந்தஸ்தில் எதவித மாற்றமும் ஏற்படாத ஒரு நிலையையே அவதானிக்க முடியும்.
நான்

Page 8
12
வகுப்பு, சாதிய சமூக அமைப்பு தொடர்பான பகுப்பாய்வு (The Analysis of the Social Systein of Class Caste Based Societies)
மேலைத்தேய, கீழைத்தேய சமூகங்களின் சமூக அமைப்பினை ஒப்பிடுவதன் வழி அந்தந்த நாடுகளின் சமூக அசைவின் போக்கினையும், சமூகமுன்னேற்றத்தையும், அவற்றின் பின்னடைவுகளையும் உய்த்தணர முடியும். மேலைப்புலங்களின் சமூக அமைப்பெண்பத சமுக வகுப்பாக அமையும் (Social Class). இதன் வழி இச்சமூகங்கள் திறந்த சமூகங் களாக இருக்கின்றன (Open Society ). கீழ் நிலை வகுப்பு, மத்திய வகுப்பு, மேல் நிலை வகுப்பு (உயர் குழாமினர். Elites) என படிநிலைகளும் வேறுபடும். ஒரு செங்குத்தான அசைவினையும் அதன் வழியான அடையும் அந்தஸ்தம் அங்கு நியமமாகும் சமூக செயல் போக்குகளாகும். இதனால் இச்சமூகங்கள் வகுப்புச் சமூகங்கள் (Class Based Societies) 6T6 DGOgdafi (68.jpg).
கீழைத்தேய சமூகக் கட்டமைப்பு சற்று வித்தியாசமானது. அவை சாதீய Öopósió6ft 66 psogiairl Géop601 (Caste Based Societies). at L(36 முடிய சமூகங்கள் அவை (Closed Societies). கிடையான சமூக அசைவும், அதன்வழி உரித்தாகும் சமூக அந்தஸ்தம், நடியங்கும் நியமங்களாகும். பின்வரும் வரைபடம் வழி இதனை விளங்கிக்கொள்ளலாம்.
)உயர் குழாம் (Elites حoحتمبر
| 4 //ޗެޗަ 용 மேல் Σ வகுப்பு 瓦 (Upper வகுப்பு முறைமை- (வகுப்புச் சமூகங்கள்) 岳 Class) (Class System) - (Class Based Societies) こ மத்திய
gy g (- 960Lujib oligorog (Achieved Status) 器 A (Middle so figsbro sig556rog (Ascribed Status
Class) , கீழ் $1 | | வகுப்பு ၃.်လာလွလာ၏oၾက္်သဖွာဖဂ်.oနွှယ်ဟာဖွပ်.2%2?
(Lower
Class)
ཡས་ལ་རྒྱལ་བ་རྒྱུ་བ་ཁ་མལ་ S. 黑 患 டசாதிய &epsissilson. (Caste Based Societies)
V7 doluJITGOT &eps si6086 (Horozontal Inobility)
一°>
 
 
 
 
 
 

13
வரைபடத்தின் வழி வகுப்பு முறைமைக்கும், சாதிய முறைமைக்குமிடையிலான வேறுபாடு காட்டப்பட்டுள்ளத. அதன் வழி வேறுபடும் சமூக அந்தஸ்தும், நடிபங்குகளும் செங்குத்தான- கிடையான சமூக அசைவின் வழி குறித்துக்காட்டப் பட்டுள்ளன. சமூக முன்னேனற்றம் வகுப்புச்சமூகங்களில் நெகிழ்ச்சி கொண்டதாயு (மேல் - கீழ் நோக்கிய சமூக அசைவு), சாதிய சமூகங்களில் சமூக அசைவென்பது இறுக்கமானதாயும் அமைவதால் சமூக மாற்றம் (Social Change), அகஸ் வழியான முன்னேற்றம் மந்தகதியிலேயே அமையும். ஆனாலும் மேலைத்தேய வகுப்புச்சமூகங்களிலும் சமூக அசைவெண்பத மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அங்க உயர் குழாம் (Elites) எனும் வகுப்பினுள் நழைவத கடினமானதே. கண்ணுக்குச் தெரியாத பல தடைகள் (Invisible Barriers) முன்னேற்றத்திற்கு தடைக்கற்களாய் இருக்கின்றன. உதாரணமாக அமெரிக்க அரசியலின் செனட் உறுப்பினராவதும், பிரித்தானிய அரசு வம்சத்தினுள்ளும் நழைவதென்பதம் சிக்கல் வாய்ந்தத.
தொல்சீர் சமூகவியலாளரான மக்ஸ்வெபர் (Max Weber) இன் ஆய்வு களில் குறிப்பான இடத்தினைப்பெறும் - புரெட்டஸ்தாந்து ஒழுக்கவியலும், gp56uT6fjöjoiá6 diggio (The Protestant Ethic And The Spirit Of Capitalism, 1904\1958); இதன் வழி சமூக அசைவு , சமூக முன்னேற்றம் தொடர்பான விளக்கங்களை பகுத்தறிவினடிப்படையில் (Rational Thinking விளக்கும். மேலைப்புலத்தச் சமூகங்கள் முன்னேற்றம் கண்டளவுக்கு ஏன் கீழைத்தேச சமூக அமைப்புக்கள் முன்னேற்றம் கண்டு கொள்ளவில்லை என்பதனை அந்தந்த நாடுகளில் மையங் கொண்ட சமய அறக்கருத்துக்களினடியாகவும், அமைப்பியல் தடைகளையும் (Structural Barriers) gp6,606), drug 6 6), if அவற்றிற்கு நியாயம் கற்பிப்பார்.
எம் சமூகப்புலங்களில் சாதியம் (Castism) ஒரு சமூகப் பிரச்சினை என்றே கூறலாம். அண்மைக்கால இனத்தவம்சார் பிரச்சினைகளினால் இதன் தாக்கம் TTT TS STTTT T S TT T SLLLLLLLL LLLLLL மக்களின் மனங்களிலிருந்த மறைந்து விட வில்லை. வெளிப்படையாக தோன்றாவிடினும், உள்ளார்ந்த நிலையில் கண்ணுக்கு புலப்படா வகையில் இதன் துவேஷம் வேர்விடும். யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக்கொள்ளல் - தமிழ்ச் சமூகமும்; பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும்’ எனும் ஆய்வின் வழி யாழ்ப்பாணசமூக 6LLGOLoj56060 (Jaffna Social Structure) 9ëë 36), Dy gb60f36upT6 அப்பட்டமாக விளக்குவார் எம் சமூக அறிஞர்கள் (சிவத்தம்பி கார்த்திகேசு, 1994). குறிப்பாக நாட்டார் சமய வழிபாடு தொடர்பான சமுக மானிடவியல்சார ஆய்வுகளும் (அண்ணாமரர் வழிபாடு) சமயத்தினுள் சாதிய வேறுபாடுகளை தல்லியமாகவே விளக்கும். (சண்முகலிங்கன் N., 1993)
நான்

Page 9
14
O சாதிய ஒழிப்புத் தொடர்பான சமூக இயக்கங்கள் (Social Movements) இந்தியப்புலங்களில் நிறையவே உண்டு. சமயமும், சாதியமும் இறுகப்பிணைத்த இச்சமூகக் கட்டமைப்புக்களில் மதப்பீடிவாதம், அடிப்படைவாதம் போன்ற அலைகளைக் குறைத்து மதச்சார்பின்மையை (Secularization) உட்புகுத்தும் நிகழ்வுகளும் இங்கு இடம்பெறும். பெரியார், டாக்ரர் அம்பேத்கரின் பணிகள் குறிப்பாக தீண்டாமை (Untouchability) எனும் சாதிய பாகுபாட்டை (Caste Differentiation) பெருமளவிற்கு குறைப்பதற்கு அடிகோலியத. ‘தலித் விடுதலை இயல்’ (Dalit Theology) தொடர்பான கருத்தியல்களும் இங்கு மேம்படும்.
(upla6)6Oy
தொகுத்து நோக்கும் போத, இன்று எம் புலங்களில் இடம் பெறும் போர், உள்ளுர் இடம்பெயர்வுகள், வெளிநாட்டு புலம்பெயர்வுகள் எல்லாம் எம் சமூகக் கட்டமைப்பில் ஓர் தளர்ச்சியினை ஏற்படுத்தினாலும் முற்று முழதாக சாதிய உணர்வுகளை களைதல் என்பது ஒரு கடினமான பணி என்றே கூறலாம். சாதாரண பண்பாட்டு நிகழ்வுகளில் இருந்த அலுவலக நிர்வாகம் வரை இதன் தாக்கம் ஒரு தொடர்கதையே. இவ்வகையில் எம் சமூகக்கட்டமைப்பு, எப்போத உடைத் தெறியப்பட்டு அதற்கு எண்ணெய்வார்க்கும் சமயவெறிவாதம் (Religionalism) மக்கள் மனங்களிலிருந்த அகற்றப்படுகின்றதோ அன்றுதான் எம்மவருக்கு விடுதலை; சமூக, மானுட முன்னேற்றம் என்பதம் சாத்தியமாகும். இத்தகைய ஒரு சமூக விழிப்புணர்வு தொடர்பான செயற்பாடுகள் எங்கள் மத்தியில் ஆரம்பிக்கப்படல் வேண்டும். இதற்கு சமூகவியல், உளவியல், சமூக உளவியல் கருத்தியல்களும், கோட்பாடுகளும் கைகொடுக்கும்.
உசாத்துணைகள்
1- i)irenzo. J. Gordon, Human social Behavior, Concepts and Principles of Sociology; Holt, Rinehard and Winston, 1990.
2- Rao Shanker C. N., SOCIOLOGY, Primary Principles of Sociology with an Introduction to Social Thought, S. Chands Company Ltd, 1993.
3-Mallick Ross, Development, Ethnicity And Human Rights in South Asia,Sage Pubilication, 1998.
As
நான

15 ஆலுநமைவளர்ச்சியின் ஆரம்பம் எங்கே?
M. GL6 S.T.L (Rome) விரிவுரையாளர், யாழ்.குருத்துவக்கல்லுரி
நேரம் மதியவேளை இடம் பரியோவான் பாடசாலையருகில். மேலே யுத்த விமானங்கள் இரும்புத் தும்பிகள் போல். அனைவரின் முகங்களிலும் ஒர் அங்கலாய்ப்பு. மறைவிடம் தேடி கால்கள் அவசரமாய் ஓடி ஒழிந்தன. ஒரு சிறுவன் பாடசாலை மதிலின் அருகில் மறைந்து கொண்டு “இப்ப (SuTL போறான்”, “போடுறான். போட்டுட்டான், இது கொழும்புத்துறை பள்ளிக்கூடத்திற்கு கிட்டவாத்தான் இருக்கும்.”, “கள்ளன் திரும்பவும் போடுறான். ’ இப்படியான வார்த்தைகளை சிறுவன் ஆவேசத்தோடு சொல்லிக்கொண்டே இருக்கின்றான். பொம்மைகளைப்பற்றிப் பேசி, துள்ளி விளையாடவேண்டிய சுட்டிப்பருவத்திலே யுத்தவிமானங் களையும், பல்குழல் செலுத்திகளையும், இன்னும் யுத்த ஆயுதங்களையும் பற்றி பேசி பெற்றோரை மிஞ்சும் அளவிற்கு ‘பெரியவர்களாக’ மாறிவிடுகின்றார்கள் சிறுவர்கள்.
எங்கள் எதிர்காலத்தின் அரும் பெரும் சொத்துக்கள் இந்த மழலைச் செல்வங்கள். இந்த முத்தழிழ்மண் பெற்றெடுத்த முதுசங்கள் இந்த குழந்தைகள். இவர்களின் உள்ளங்களில் இந்தக் கொடிய யுத்தம் பல்வேறு தாக்கங்களை பதித்துவிட்டது, பதித்துக்கொண்டு இருக்கின்றது. இருந்தும் எமது எதிர்கால சமுதாயம் எழுந்து நிற்பதற்கு புதிய சிற்பிகளாகிய இந்த மழலைச் செல்வங்களை வளர்த்து எடுக்க அவர்களின் வளர்ச்சியின் ஆரம்ப காலங்களில் நாம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.
உளவியலாளர் எரிக் எரிக்சன் ஒரு மனிதனின் வளர்ச்சியில் எட்டு நிலைகளைக் குறிப்பிடுகின்றார். அவற்றுள் முதலாவது நிலை இங்கு அலசப்படுகின்றது. எந்த மனிதனுக்கும் அவனின் குழந்தைப்பருவம் மிகவும் முக்கியமானதொன்றாகும். இந்தக்குழந்தைப் பருவத்தில் குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் குடும்பம் முக்கிய இடத்தை வகிக் கின்றது.
முதலாவது நிலை குழந்தையின் முதல் வருடப் பருவமாகும். இங்கேதான் குழந்தையின் எதிர்கால அத்திவாரம் இடப்படுகின்றது. பிறந்த குழந்தை பிறரில் தங்கிவாழும் பருவம் இது. அழுது தன் தேவைகளை பிறருக்கு வெளிப்படுத்துகின்றது. தன்னுடைய தேவைகளை வெளிப் படுத்தும் போது, அவை அன்புடன் நிறைவு செய்யப்படும்போது, குழந்தை ஏற்றுக்கொள்ளப்படுவதை அன்பு செய்யப்படுவதை உணர்கின்றது. எந்த அளவிற்கு குழந்தை அன்பு செய்யப்படுகின்றதோ, அந்த அளவிற்கு அக்குழந்தை தனது பின்னைய வளர்ச்சி நிலைகளில் சுமூகமாக வளர்கின்றது. தான் அனுபவிக்கின்ற அன்பின் அளவைக்கொண்டுதான் தன்னிலும், பிறரிலும், சூழ்நிலையிலும் அக்குழந்தை நம்பிக்கையை வளர்க்கின்றது. இவ்வாறு அன்பை அதிகம் சுவைத்த குழந்தை நம்பிக்கை என்ற பண்பை தனது வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே ஏற்படுத்தி,
நான்

Page 10
6
எதிர்கால வாழ்வின் எழுச்சிக்கு மிகவும் ஆழமான அத்திவாரத்தை இட்டுக் கொள்கிறது.
அதேவேளை அன்பையும் பாசத்தையும் சுவைத்திராத குழந்தை தன்னிலும் பிறரிலும் அவநம்பிக்கை கொண்டு வளர்கின்றது. ஆரம்பத்தில் குழந்தை அனுபவித்த கசப்பான அனுபவம் எதிர்கால வாழ்வின் முன்னேற் றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகிறது. இந்த அவநம்பிக்கையில் வாழ்வை ஆரம்பிக்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் பேராசை கொண்டவர்களாகவும், பிறர் பொருட்களை அபகரிப்பவர் களாகவும், அன்புறவுகளில் ஈடுபட அஞ்சுபவர்களாகவும், இருப்பார்கள். இவர்கள் தன்மதிப்பை இழந்தவர்களாகவும், நம்பிக்கை நாற்றுக்கள் கருகிப்போன நிலையிலே உறவுப்பாலங்களில் உடைவுகள் ஏற்பட்டு, தனித்துப்போன தீவுகளாகி தனிமையில் வாடுபவர்களாகவும், இருப்பார்கள். இவர்கள் ஆழமான உறவுகளுக்கு அத்திவாரம் அமைப்பது மிகவும் கடினமானதாக அமையும். இவ்வாறு ஒரு குழந்தையின் முதல் வருடத்தில் ஏற்படும் தாக்கங்கள் அதன் எதிர்கால வாழ்வின் எல்லா நிலைகளிலும் பாரிய வடுக்களாய் பரிணமிப்பதை துலாம்பரமாய் காணமுடிகின்றது.
வரலாற்றின் பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்கின்ற போது பல கொடிய மனிதர்களை சந்திக்கின்றோம். இவர்களை கொடியவர் களாக்கியது எது? ஜேர்மனி நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திய ஹிட்லரை உருவாக்கியது எது? ஆறு மில்லியன் யூதர்களையும், வயோதிபர்கள், நோயாளர்கள், ஊனமுற்றோர் பட்டியலில் ஆயிரமாயிரம் அப்பாவிகளையும் கொன்றுகுவிப்பதற்கு ஹிட்லரின் இதயம் இடம் கொடுத்ததற்கு காரணம் என்ன? சுருங்கக்கூறின் அன்பு கிடைக்கப் பெறாத குழந்தைப்பாராயமே இவ்வாறான மனித வேள்விக்கு ஹிட்லரை துாண்டியது எனலாம்.
ஹிட்லரின் தந்தை ஒரு யூதருக்குப் பிறந்த முறையில்லாத குழந்தை. தாய் ஒரு ஜேர்மானியப் பெண்மணி. ஹிட்லரின் தந்தை தன் , மகனுக்கு அன்பும் பாசமும் காட்டாமல் கட்டளை பிறப்பிக்கும் ஒர் இராணுவ அதிகாரி போலவே நடந்தார். பலவேளைகளில் ஒரு சிறிய குற்றத்திற்கே அடி உதைகளால் மயக்கம் வரும்வரை தண்டிப்பார். தந்தையின் கொடுமையான வழிநடத்தல் யூதர்கள் மட்டில் வெநிபுணர்வை சிறுபராயத்திலேயே ஹிட்லரின் மனதில் விதைத்துவிட்டது. அத்துடன் வயதில் முதிர்ந்த நெருங்கிய உறவினரொருவரும் ஹிட்லரை எப்போதும் வார்த்தைகளால் கொடுமைப்படுத்தினார். இந்த உறவினர் மூளை பாதிக் கப்பட்ட ஒருவர். இப்படியான கசப்பான அனுபவம் காலப்போக்கில் யூதர்கள், வயோதிபர்கள், ஊனமுற்றவர்கள் போன்றோரை தண்டிக்க வேண்டும் என்ற கோர உணர்வை ஹிட்லரில் ஏற்படுத்தியது எனலாம்.
இவ்வாறு ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்ப காலங்கள் தான் அதன் எதிர்காலத்தைப் பெரிதும் உருப்படுத்துகின்றது. போரின் பல்வேறுவிதமான வடுக்களை வாழ்க்கையில் சுமந்து வாழும் குழந்தைகளின் எதிர்காலம் வளமுள்ளதாக அமையவேண்டுமானால், அவர்களின் ஆரம்ப உலகமாகிய குடும்பத்திலும், சமூகத்திலும் அன்புக் கரங்களின் அரவணைப்பில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணர்வில் அவர்கள் வளரவேண்டும். ஒரு அன்னை குழந்தையின் ஆரம்பபருவத்தில் கொடுக்கும் அரவணைப்பும்
நான

17
ஒவ்வொரு பாசமுத்தமும் அக்குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் நீண்ட தூரம் செல்லும். எனவே வறுமை, பொருளாதாரத்தடை, இடம்பெயர்வு, என்று பலவிதமான கடின பாதைகளின் வழியே எமது இனத்தின் இலட்சியப்பயணம் தொடரும் இவ்வேளையில், இலவசமாக இறைவன் தந்த அன்பு என்னும் அருமருந்தை எமது குழந்தைகளுக்கு அள்ளிக் கொடுத்து அவர்களின் வளர்ச்சிப்பாதையில் நம்பிக்கையூட்டி நாளைய எம் தலைவர்கள் முழு மனிதர்களாக உருவாவதை உறுதி செய்வோம்.
சிறுகதை
என்னை அறிந்த வேளை.
இந்த வடிவான ரோசாப்பூவை மற்றவர் அதன் அழகினை பார்க்காதவாறு இவ்வளவு காலமும் மூடிவைத்து விட்டேனே, என்ற ஒருவகையான குற்ற உணர்வினை உணர்ந்த கங்கா, தன் நினைவிற்கு வந்தவளாக இனியும் நான் என்னை முடிவைக்கக்கூடாது, நான் இந்த சந்தோஷத்தினை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. என திடசங்கற்பத்துடன் எழுந்தாள். விடுதலை பெற்ற ஆயுட்கைதி போல் உணர்ந்தாள்.
கங்கா, சராசரியான குடும்பமொன்றில் ஒரேயொரு பிள்ளை, இன்று பதினெட்டு வயதினை அடைந்துவிட்டதொரு இளம்பெண். அவளுக்கு தன்னையே நம்ப, தன்னால் பொறுப்புக்களை ஏற்றுச்செய்யமுடியும் என்று எண்ண முடிவதில்லை. “சீ, எனக்குத் தெரியாது, என்னால் செய்யமுடியாது” என்று எல்லாப் பொறுப்புக்களையும் தட்டிக்கழித்துக்கொள்வாள். “கலியா ணம் கட்டிவைத்தால் அதெல்லாம் தானாகச்சரிவரும்.” என்று சொல்லிக் கொண்டு பெற்றோர் மாப்பிள்ளை தேடுகிறார்கள். ஆனால், கங்காவிற்கு ஆண்கள் என்றால் பேய், அவர்களை நம்ப, அவர்களுடன் உறவு கொள்ள முடியாது. அவளுக்கு ஆண்கள் அடிதடிக்காரர், காட்டுமிறாண்டிகள், பெண்களைக் கொடுமைப்படுத்தும் கொடும் பிறவிகள். கலியாணப் பேச்சு இழுபறி நிலையில் முறிந்தும் முறியாததுமாக தொடர்கின்றது.
பெற்றோர், “இது என்ன பிறவி, சொல்லுக்கேட்கமாட்டன் என்று பிடிவாதமாக நிற்கிறது” அவளை விளங்கிக் கொள்ள இயலாதவர்களாய், காணும்போதெல்லாம், மற்றவர்கள் முன்னிலையிலும் திட்டித்தீர்க்கின் றார்கள். அவள் தனிமையில் தன்னைத்தானே நொந்தவளாக அழுது கொண்டே இருக்கின்றாள். பொழுதெல்லாம் அமைதி அற்றதாகவே கழிகிறது. கங்காவால் தன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னை ஒருவரும் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்ற கங்காவிற்கு, வாழ்க்கை சுமையாகவும், விரக்தியாகவும் தொடர்கின்றது.
* கங்கா, வா கோயிலுக்குப்போயிட்டு வருவோம்."அன்னை அழைக் கின்றாள். “கோயிலும் கோதாரியும், நீ தனிய போவன்” தாயைத் துரத்து கின்றாள். தலையினை சொறிந்தவளாக வீட்டுப்படியினில் உட்காந்து கொண்டு “ ஏன் என்னை எல்லோரும் வெறுக்கிறார்கள், கடவுள் ஏன் இப்படி
நான்

Page 11
18
என்னைச் சோதிக்கின்றார்?’ என்று யோசனையில் இருந்தவளை படலைச் சத்தம் குழப்பியது. "போனால் போகட்டும் போடா. ’ தந்தை ஆட்டத்துடன் வருகின்றார். பதினெட்டு வருடமாக அவள்காணும் தொடர்ச் சியான காட்சி. அடிபடுவதற்கு அம்மாவும் இல்லை, எதைத்தான் உடைக்கப் போகிறாரோ எனப் பயந்தவள், நண்பி சயந்தி வீடு நோக்கி விரைகிறாள்.
“என்னடி வாழ்க்கை இது. கறுமம், நான் சாகப்போகின்றேன்" தனது முழுச் சோகக்கதையையும் நண்பி சயந்தியிடம் அப்படியே கொட்டிவிடுகின்றாள். சயந்தி நண்பியை புரிந்து கொண்டவளாக, குழப்பாமல் அவள் சொல்லிய எல்லாவற்றிற்கும் ஆர்வத்துடன் காது கொடுத்தாள். கங்காவுக்கோ சொல்லித் தீர்த்த பின் ஒருவகையான நிம்மதி, ஒருவகையான மனநிறைவு, சுமை குறைந்தது போன்ற உணர்வு, நண்பியைக் கட்டி அணைக்கின்றாள். பகிர்ந்த துன்பம் பாதி, பகிர்ந்த இன்பம் மீதி என்பைைத அறிந்து கொண்டாள்.
தான் குணம் பெற வேண்டும் என்று உறுதியாக உணர்ந்த கங்காவை, ஒருவரின் உள்ளார்ந்த வாழ்க்யைப் பற்றி அறிந்து வழிநடத்தக் கூடிய ஒருவரிடம் சயந்தி அழைத்துச் செல்கின்றாள். தன்னுள் பயணிக்கத் தொடங்கிய கங்கா, தனது சிறுபராயத்தினை அந்த நாள்களை நினைவுபடுத்திப் பார்கின்றாள். நினைவு இருக்கும் நாளில் இருந்து கங்காவுக்கு அப்பா என்றால் பேய் - சரியான பயம். அம்மாவை வெறியில் 9 UT அடிக்கும்போதெல்லாம் அம்மாவின் கால்களை இறுகமாக கட்டிப்பிடித்தவளாக வீரிட்டு அழுவாள். ஆண் சகோதரர்கள் இல்லாத காரணத்தினால், ஆண்கள் என்றால் தன் தந்தயைப்போன்றவர் என எண்ணினாள். அவர்கள் கொடுமைக்காரர். இது அவளின் கணிப்பு.
தந்தையின் பொறுப்பற்ற தன்மையால், தாய் மகளின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கின்றாள். அந்த அன்பு அளவு கடந்ததாக, கங்காவை ஒன்றுமே செய்ய விடவில்லை. கங்கா விளையாடப்போவதில்லை. அம்மாவுடன்தான் பள்ளிக்கூடம் போவாள். “ கவனம், அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே,” அன்னை அடிகடி பாவிக்கும் வார்த்தைகள். கங்கா துன்பப்படுவதை, கஸ்ரப்படுவதை, அன்னையால் தாங்கவும் முடியாது, சகிக்கவும் முடியாது. தனக்காகத்தான் அம்மா உயிருடன் இருக்கிறா என உணர்ந்த அந்தப்பெண்ணால், அம்மாவை ஒரு விதத்தாலும் எதிர்க்கமுடியவில்லை. இப்படியாகவே இவள் வளர்ந்து, இத்தனை காலத்தையும் கடந்து விட்டாள்.
தனக்குள் பயணித்த கங்கா, தனது நிலையை உணர்கின்றாள். என்நிலை உணர்ந்த பின்னும் நான் அடிமையாக, கோழையாக இருக்கவே கூடாது. அப்படி இருப்பது நான் எனக்கே மரணதண்டனை விதிப்பது ஆகும். இதில் இருந்து விடுபட்டு எதிர்காலத்தை சந்தோஷமாக எதிர்கொள்ளப் போகிறேன், என்று உறுதியான தீர்மானம் ஒன்றை தன் உள்ளச்சபையில் சட்டமாக்கினான். அந்த அழகான ரோஜா - இந்த கங்காவே தான்.
(யாவும் கற்பனை)
இ. கொட்விறி ஜொயல்
நான்

9
கல்வி என்பது முன்னேற்றத்தின் அடிக்கல்
கோகிலா மகேந்திரன் - உதவி கல்விப்பணிப்பாளர் யாழ். கல்வி வலயம் II
ஈரெட்டுப் பதினாறில் பெறாத கல்வியும் மூவெட்டு இருபத்து நாலில் பெறாத பிள்ளையும் நாலெட்டு முப்பத்திரண்டில் பெறாத செல்வமும் ஐயெட்டு நாற்பதில் பெறாத செல்வமும்
எதற்கும் உதவாது என்று கிராமங்களிலே கூறுவார்கள்.
ஒருவன் பதினாறு வயதை அடைவதற்கு முன் கல்வியின் முக்கிய பகுதியைக் கற்று முடித்துவிடவேண்டும் என்பது உண்மையே. அதாவது வாழ்விலே எவற்றைக் கற்கவேண்டும் என்பதை இக்காலத்தில் அவன் அறிந்திடவேண்டும். கற்பதற்குக் கற்றல் (Lean to leam) இவ்வயதுக்கு முன் முடிவடைய வேண்டும். இக்கருத்தை மனதிலே கொண்டுதான் எமது நாட்டில் கட்டாயக் கல்விக்கான வயதெல்லை 6-14 ஆக இருக்கிறது.
உயர் அழுத்த மின்சாரக்கம்பிகளின் அருகில் வாழ்தல் குழந்தைகளின் மனதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திக் கொலை உணர்வைத் தாண்டும்
வாழ்க்கை என்பது ஒரு தொடர் மாற்றம். அம்மாற்றம் உடல், உள, சமூக, ஆன்மிக வளர்ச்சி கொண்டதாக ஒரு குறித்த இலக்கை நோக்கி அசைவதாக இருக்க வேண்டும். அப்பாதைக்குக் கல்வி ஒளி பாய்ச்சும்.
ஒரு குழந்தை பிறந்த நாலு வாரத்தில் ஒலிகளைக்கேட்கும். இரண்டு மாதத்தில் தலையை நிமிர்த்தும். மூன்று மாதத்தில் நெஞ்சை நிமிர்த்தும். ஐந்து மாதத்தில் இன்னொருவரின் மடியில் நிமிர்ந்து அமரும். ஏழு மாதத்தில் தானாக நிலத்தில் நிமிர்ந்து உட்காரும். பத்து மாதத்தில் தவழ்ந்து செல்லும். ஒரு வயதில் ஏதோ ஒரு நிலையான பொருளைப் பிடித்து எழுந்து நிற்கும். ஒன்றரை வயதுக்குள் தானே நடந்து செல்லும்.
இவ்வாறு வெளியே அவதானிக்கத்தக்க உடல் தொடர்பான விருத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், கல்வி தொடர்பான வளர்ச்சி எம்மை அறியாமலே நடைபெறுகிறது. தாயின் கருப்பையில் இருக்கும் போதே குழந்தை கற்கத் தொடங்கி விடுகிறது. அக்கல்வியில் சூழலும் மரபும் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்தியவண்ணம் இருக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சியானது தொண்ணுாறு வீதம் அதன் இரண்டு வயதுக்கு முற்பட்ட காலத்தில் நிறைவடைகிறது. ஆகவே இக்கால அநுபவங்கள் குழந்தை பிற்காலத்தில் பெறப்போகும் கல்வியின் தன்மையைத் தீர்மானிக்கும்.
நான்

Page 12
20
பொதுவாகக்கடவுள் நம்பிக்கை உள்ள குடும்பம், குடும்ப உறவு நெருக்கமாக உள்ள குடும்பம், பெரியவர்கள் பதற்றமடையாத குடும்பம், விளையாட அனுமதிக்கும் குடும்பம், வசதியான இடங்களில் எல்லாம் தான் விரும்பியவற்றைக் கிற அனுமதிக்கும் குடும்பம், நன்றாகப் பாடவும் ஆடவும் அனுமதிக்கும் குடும்பம், பிள்ளை சமவயதுத் தோழர்களோடு நல்ல உறவு கொள்ள அனுமதிக்கும் குடும்பம் ஆகிய இடங்களில் வளரும் பிள்ளைகள் அதிஷ்டசாலிகள். அவர்கள் கல்வி முன்னேற்றம் இலகுபாதை. கற்பதற்கு வேண்டிய பொருத்தமான சூழலைக்குடும்பம் வழங்குகிறது.
இதற்கு முற்றிலும் எதிர்மாறாக, குடும்பத்தில் இரு பெற்றாரையும் இழந்த பிள்ளை, அல்லது ஒரு பெற்றாரை இழந்த பிள்ளை, அல்லது ஒரு பெற்றாரது அன்பை இழந்து அவர்களைப் பிரிந்திருக்கும் பிள்ளை பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டபிள்ளை, முகாமின் கஷ்டமான சூழல்களில் வாழும் பிள்ளை, அதீதமான குடும்ப நெருக்கீடு களுக்கு ஆளான பிள்ளை இவர்கள் எல்லாம் கல்வியை முன்னெடுப்பது கடினமான விடயம்.
சிறுவயதில் பிள்ளைகள் பெறுகின்ற அனுபவங்கள் அவர்களின் ஆளுமையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. ஹிட்லர் சிறு வயதில் யூத சமூகத்திடம் பெற்ற அனுபவமே, யூதர்கள் மீது அவனுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் கம்பிகளின் அருகில் வாழ்தல் குழந்தைகளின் மனதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திக் கொலை உணர்வைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.
ஒரு பட்டதாரியை உருவாக்கும் செலவில் 70 சிறார்களுக்கு ஆரம்பக்கல்வி ஊட்டமுடியும்
குழந்தை பிறந்து முதல் இரண்டு வருடங்கள் புலன் இயக்கப் பருவம் என்று பியாஜே கூறுவார். பிறந்த ஆறு மாதத்திற்குள் குழந்தை பொருள் ஒன்றை உள்ளங்கையால் பிடிக்கும். ஒரு வயதின் பின் பெருவிரலையும் ஏனைய விரல்களையும் எதிரும் புதிருமாகப் பாவித்துப் பொருள்களைக்கையாளும். இக்காலப் பகுதியில் பிள்ளையின் புலன் அங்கங்களைத் தூண்டக் கூடியவாறு வழங்கப்படும் அனுபவங்கள் முக்கிய மானவை எனக் கருதப்படலாம்.
குழந்தை பிறந்த முதல் வருடத்தில் அது பெறும் அனுபவங்கள் அதன் உள்ளத்தில் உலகம் பற்றிய நம்பிக்கையை அல்லது அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கும் என்று எரிக் எரிக்சன் என்ற உளவியலாளர் கூறுவார். தாய் அல்லது தந்தை குழந்தைக்கு அருகிருந்து, அன்புகாட்டி, பாதுகாப்புக்கொடுத்து, அது அழும் போதெல்லாம் குறை தீர்க்கப்படும் அனுபவத்தைக் குழந்தைக்கு வழங்குவார்களாயின் குழந்தையின் மனதில் நம்பிக்கையும் வாழ்வதற்கான ஆசையும் உறுதியாகத் தோன்றிவிடும். விடயங்கள் இதற்கு எதிர்மாறாக இருக்குமாயின் குழந்தையின் உள்ளத்தில் அவநம்பிக்கை ஏற்படும்.
நான

2
அதேபோல ஒரு வயதுக்கும் இரண்டு வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிள்ளையின் செயற்பாடுகள் நேரான முறையில் பாராட்டப்படு மிடத்து அது சுதந்திர உணர்வுடன் வளரும் என்றும், அதன் முனைப்புகள் தடுக்கப்படுமிடத்து அல்லது தண்டிக்கப்படுமிடத்துக் குழந்தை வெட்க உணர்வுடன் வளரும் என்று எரிக்சன் கூறுகிறார்.
ஆகவே குழந்தை நல்ல கல்விமானாக வளரவேண்டுமெனில் அதன் குழந்தைப்பருவம் செம்மையாகக்கவனிக்கப்பட வேண்டும். குழந்தை ஒன்றின் கல்வியில் முதலீடு செய்வதே குடும்பம் ஒன்று செய்யக்கூடிய மிகப்புத்திசாலித்தனமான முதலீடு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
“கல்வி என்பது ஒரு பிள்ளை முன்னர் ஒருபோதும் நடந்து கொள்ளாத முறையில் நடந்துகொள்ளப்பயிற்றுதல் ஆகும்” என்று அறிஞர் றஸ்கின் கூறுவார்.
கல்வி ஒருவனது உறுதிப்பாட்டை அதிகரிக்கிறது. அவனுடைய சுய மதிப்பை உயர்த்துகிறது. சுயமதிப்பு உயரும்போது, சில காரியங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. “இன்றோ அல்லது நாளையோ ஒரு காரியத்தைச் செய்து முடிக்கிறவன் யாரென்றால், அந்தக் காரியம் தன்னால் செய்யப்படக் கூடியது என்று நம்புகிறவனே” என்று கூறுவார்கள்.
ஒரு பட்டதாரியை உருவாக்கும் செலவில் எழுபது சிறார்களுக்கு ஆரம்பக்கல்வி ஊட்டமுடியும் என்பதைக் கருத்தில் கொண்டு எமது நாட்டின் ஆரம்பக் கல்விக்குப் புதுப்பலம் ஊட்டப்படவேண்டும். வளர்முக உலகில் பதினொரு வயதுக்குக் குறைந்த நூறு மில்லியன் பிள்ளைகள் அடிப்படைக் கல்வி பெறவில்லை என்பது மிகவும் மனவருத்தத்துக்கு உரிய உண்மை. அதிலும் அறுபது வீதமானோர் பெண்பிள்ளைகளாகவே காணப்படுகின்றனர்.
உலகின் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு படிப்புப்பராயம் தெருவிலும், வயலிலும், சிறுவேலைத் தலங்களிலுமே கழிகிறது. இது பெரியதோர் உரிமை மீறல். ஒவ்வொரு மனிதனும் தனித்துவ இயல்புகளைக் கொண்டவன். கற்பதற்கு விருப்பமுள்ளவன். கல்வி மகிழ்வைத் தருவது. ஆகவே அது வாழ்வு நீடித்த கல்வியாக இருக்க வேண்டும். மகிழ்வுடன் கற்கப்பட வேண்டும்.
நீர் நல்லது. ஆயினும் சாக்கடையில் ஓடினால் பயனில்லை. அது போலக் கல்வி நல்லது. ஆனாலும் அதனுடன் நல்லொழுக்கம் சேராவிட்டால் பயனில்லை. நல்லொழுக்கத்துடன் சேர்ந்த கல்வியைத் தாராளமாக வழங்குமிடத்துச் சமுதாய முன்னேற்றம் இலகுவில் சாத்தியப்படும்.
நான்

Page 13
22
உளப்பிறழ்வு பற்றிய உள இயக்கவியல் காட்டுரு \ மாதிரி
Phychodynamic Model Of Psychological Abnormality)
அன்ரன் டயஸ் விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்
அறிமுகம்
நாளாந்த வாழ்வில் பல்வேறு உளப்பிறழ்வுடையோரைச் சந்திக்கின்றோம். அவர்களுள் சிலர் யதார்த்தத்துடன் தொடர்புடையோராயும், சிலர் தொடர்பற் றோராயும் இருப்பதை காண்கின்றோம். புராதன காலங்களில் இவை தீய ஆவிகளின் வேலையெனவும், சாத்தானின் கைங்கரியத்தின் குறியீடுக ளெனவும் கருதப்பட்டன. இதன் விளைவாய் பேயோட்டுதல் எனும் பெயரில் மூடத்தனம் சார்ந்த சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. பட்டினி, இருட்டறையில் அடைத்தல், சிறையிலிடுதல், வதைத்தல், சூடுபோடு தல் (Scalding ), சவுக்கால் அடித்தல், விளக்குமாற்றால் அடித்தல்(Whiping) போன்றன குறிப்பிடத்தக்கன. இவற்றின் மூலம் தீய ஆவிகள் பாதிக்கப்பட் டவரது உடலிருந்து வெளியேறும் என நம்பப்பட்டது. மத்திய காலத்தில் பிறழ்வுநடத்தைகள் நன்மைக்கும் தீமைக்கும், கடவுளுக்கும் பேய்களுக்கு மிடையிலான போரென வியாக்கியானம் செய்யப்பட்டமை சுட்டத்தக்கது. உளப்பிறழ்வுடையோரை இனங்கண்டு உரிய முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் அவர்களைச் சமூக வாழ்வில் இணைத்து அவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் இன்றியமையாததாகும்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், அதனோடிணைந்த உளவியலின் வளர்ச்சியும் பிறழ்வுநடத்தைகள் குறித்து பாரம்பரிய சிந்தனைகளுக்கு மாறுபட்ட வகையில் புதிய விளக்கங்களை முன்வைத்தன. உளவிய லானது பிறழ்வுநடத்தைகள் குறித்து பல்வேறு மாதிரிசார் விளக்கங்களை முன்வைத்தது. ஒவ்வொரு மாதிரியும் மனித நடத்தை பற்றியும் பிறழ்வுநடத்தை பற்றியும் பல்வேறு பரிமாணங்களில் வியாக்கியானம் செய்கின்றது. அவற்றுள் » Luîrfuu6ðast Ti LDTgs (Biological Model), நடத்தைவாத மாதிரி (Behaviouristic Model), அறிகைசார் மாதிரி (Cognitive Model), LD6ígsstu S(5Lots LDT.gif (Humanistic Existential Model) felps 356)n&igsty LDITgSrf (Socio Cultural Model), 616tru60T (ggs பிடத்தக்கவையாகும். இங்கு நாம் உளவியக்கவியல் மாதிரி / காட்டுரு குறித்து நோக்குவோம்.
நான

23 உளவியக்கவியல் மாதிரி
மிகவும் தொன்மை வாய்ந்ததாகிய உளவியக்கவியல் மாதிரி உயிரியல் மாதிரியைப்போன்று ஒரு மருத்துவ நோக்கைக் கொண்டுள்ளது. உயிரியல் மாதிரியாளர்கள் பிறழ்வுநடத்தை ஒரு நோயெனவும், உயிரினது உறுபுக்களின் தொழிற்பாட்டுக் குறைபாட்டினால் விளைவனவெனவும் கரு துகின்றனர். ஆனால் உளவியக்கவியல் மாதிரியினரோ உளவியல் சார் அம்சங்கங்கள்தான் பிறழ்வுநடத்தைக்குக் காரணமென வலியுறுத்துகின்றனர். ஒரு நபரின் நடத்தை - அது இயல்பானதாயினும் அல்லது பிறழ்வாயினும் குறிப்பிட்ட நபர் அறியாத நிலையில், அவரிற்செயற்படும் உளவியல் விசைகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. என்பது இவர்களது கருத்தாகும். சுருங்கக் கூறின் மனித நடத்தைகள் யாவும் ‘நனவிலி' உளச்செயற்பாடு களாலேயே தீர்மாணிக்கப்படுகின்றனவென்பதுவே இவர்களது அபிப்பிராய மாகும். நனவிலியில் செயற்படும் விசைகள் இயக்கவியல் சார்ந்தது (Dynamic) எனக் கருதுகின்றனர். அதாவது இவ்விசைகள் ஒன்றுடனொன்று ஊடாட்டம் கொள்கின்றன. ஒரு நபரின் நடத்தைகளை, சிந்தனைகளை, இவ்வூடாட்டமே வடிவமைக்கின்றது. பிறழ்வுநடத்தை உளவியல்சார் முரண்பாடுகளால் (Conflicts) ஏற்படுகின்றனவென்பதும் இக்குழப்பங்கள், பெற்றோருடனான சிறுபராயத் தொடர்புகளினாலும், உணர்வதிர்ச்சி அனுப வங்களினாலும் ஏற்படுகின்றனவென்பதும் இவர்களது அபிப்பிராயமாகும். இதனால் நோயாளியின் கடந்த காலத்தில் அக்கறை கொள்கின்றனர். பல உளவியலாளர்கள் உளவியக்கவியல் மாதிரியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனரெனினும் சிக்மண்ட் புரொய்டே ஆரம்ப கர்த்தாவாவார்.
(4) இதன் விளைவாய் பேயோட்டுதல் எனும் பெயரில் மூடத்தனம் சார்ந்த சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. பட்டினி, இருட்டறையில் அடைத்தல், சிறையிலிருதல், வதைத்தல், சூருபோருதல், சவுக்கால் அடித்தல், விளக்குமாற்றால் அடித்தல் போன்றன குறிப்பிடத்தக்கன.
புரொய்டின் விளக்கம்:
நோயாளியின் வாழ்க்கையையும் பிரச்சனைகளையும் ஆராய்ந் ததன் விளைவாக, இயல்பூக்கத்தேவைகள் (lnstincture Needs) spy 6.Třipbg5 ábg56bGo (Rational Thinking) , 9(pša5 6uULDála56ň (Moral Standards) ஆகிய மூன்று பிரதான விசைகள் மனிதனின் ஆளுமையை வடிவமைப்பதாகக் கண்டார். இவ்விசைகள் நனவிலிநிலையிற் செயற்படு கின்றனவெனவும், இயக்கவியல் தன்மையுடையனவெனவும் கருதினார். இவ்விசைகளின் இயக்கவியற் செயற்பாடே மனிதனின் நடத்தைகளைச் சிந்தனைகளை, உணர்வுகளை நிர்ணயிக்கின்றன என்கின்றார். புரொயிட் 86il6î6D556D6TT 9)' (Id) FF(35|T (Ego) 5ûuff FF(85T (Super Ego) 61607 அழைததாா.
நான்

Page 14
24
SR / ID
இயல்பூக்கத்தேவைகளைக் குறிப்பிடுவதற்கு புரொயிட் இட் என்ற பதத்தைப் பாவித்தார். ஏற்றுக்கொள்ள முடியாத விருப்புக்கள், ஆசைகள், மனமுடுக்குகளின் இருப்பிடம் இதுவாகும். மக்கள் அனைவரும் "இட்’ இனாலேயே உந்தப்படுகின்றனரென நம்பினார். புரொயிட் அதனை "கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் பரபரப்பின் கடாரம்’ என விபரிக் கின்றார். இட் மகிழ்வுக் கோட்பாட்டினடிப்படையில் இயங்குகின்றது. அதாவது இட்டின் இயல்பு எப்போதும் மகிழ்வுநாட்டமே. மகிழ்வுக் கோட்பாட்டினை நிறைவு செய்வதே இட்டின் தொழிற்பாடாகும். மகிழ்வை அடைந்து கொள்வதற்கான ஒரு மூலம் தெறிவினைச் செயற்பாடாகும். குழந்தைக்கு பசியெடுக்கும் போது தாயின் முலையைத் தேடுவதும் பாலைப் பெறுவதும் இதற்குரிய எடுத்துக்காட்டாகலாம். மகிழ்வை அடைந்துகொள்வதற்கான இரண்டாவது மூலம் முதனிலைச் சிந்தனைச் Garugbu TLT5lb (Primary Process of Thinking). 6 (5.jL60Lu QuT(b6ft பற்றிய ஞாபகத்தை ஏற்படுத்திச்செயற்படுதலை இது குறிக்கிறது. உதாரணமாக பசியுடைய குழந்தை தாயின் முலையைக் கற்பனை பண்ணலாம். இக்கற்பனை ஒரு பகுதியளவாவது திருப்தியைத் தரலாம். ஏனெனில் புறப்பொருள் உண்மைக்கும் அகப்பொருள் உண்மைக் குமிடையில் வேறுபாட்டை ஏற்படுத்த “இட் இனால் முடிவதில்லை. முதனிலைச் சிந்தித்தல் செயற்பாட்டால் இட் பெறும் மகிழ்வு, விருப்பு p560)p(36 ppb (Wish Fulfillment) 6T60TuGašpg.
இட் இயல்பூக்கங்கள் அனைத்தும் பாலியல் சார்ந்ததெனவும், குழந்தையின் மகிழ்ச்சி விருத்தியின் மிக ஆரம்பகால படிமுறைகளி லிருந்தே பாலியலின் பரிமாணங்களைக் கொண்டுள்ளதெனவும், மகிழ் வின் பெரும்பகுதி பராமரித்தல், துாய்மைப்படுத்தல், சுய இன்பம் பெறுதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படுகிறதெனவும் புராயிட் நம்பினார். இட் 2D LLLJL * அனைத்து விசைகளுக்கும் உந்தலர்யிருக்கும் பாலியற்சக்தியீைசீலிபிடோ’ என அழைக்கின்றார்.
ஈகே / EGO
இயல்பூக்கத் தேவைகள் அனைத்தையும் நிறைவுசெய்யும் ஆற்றலை சூழல் பெற்றிருக்கவில்லை. எமது இயல்பூக்கத் தேவைகளை அனுபவிக்கும்போது பதகளிப்புடையவர்களாக மாறுகின்றோம். பசித்த நபருக்கு உணவும், பாலியல் ரீதியாகத் துாண்டப்பட்டவருக்கு எதிர்ப்பால் துணையும் கிடைக்கும் போதுதான் பதகளிப்பு நிலை சமநிலையடையும். ஆனால் இத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு புறவுலக மெய்மையைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. நபருக்கும் புறவுலக மெய்மைக் குமிடையில் பரிமாற்றத்தை ஏற்படுத்துகின்ற உளவியல்முறையே ஈகோ எனலாம். இயல்பூக்கத் தேவைகளைக் காலம், இடம், தேவையைப் பொறுத்து நிறைவேற்றுவதே ஈகோவின் பணியாகும்.
நான்

25
இயல்பூக்கத்தேவைகளால் பதகளிப்பை அனுபவிக்கும் போது "இட்'இன் ஒருபகுதி பிறிதொரு விசையாக மாறுகின்றது. அது ஈகோ என அழைக்கப்படுகிறது. "இட்” ஐ போன்றதே ஈகோவும் நனவிலிசார்ந்த திருப் தியையே தேடுகிறது. ஆனால் அத்திருப்தி மெய்மைக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைகின்றது. "இட்"இன் மனமுடுக்குகள் வெளிப்படுத் துவதற்கு ஏற்றுக்கொள்ள முடியாததும், ஆபத்தானதுமென அனுபவத் தினுாடாகவும், எம்மைச் சூழவுள்ள மக்களாலும் பெறுகின்ற அறிவே மெய்மைக் கோட்பாடாகும்.
மசித்த நபருக்கு உணவும், பாலியல் ரீதியாகத் தாண்டப்பட்டவருக்கு எதிர்ப்பால் தனையும் கிடைக்கும் போதுதான் பதகளிப்பு நிலை சமநிலையடையும்.
*இட்” d6) தூண்டல்களையும் மனமுடுக்குகளையும் ஆபத்தின்றி எதிர்விளைவின்றி வெளிப்படுத்த முடியுமோ முடியாதோவென உணர்த்துவதற்கு நியாயத்தையும் முதிர்ந்த சிந்தனையையும் பிரயோகித்து ஈகோ எம்மை வழிப்படுத்துகிறது. ஈகோவின் இத்தகைய தொழிற்பாடு வழிநிலைச் செயன்முறை (Secondary Process) எனப்படுகிறது. எளிய வார்த்தையில் குறிப்பிடுவதாயின் பிரச்சனைதீர்த்தல் அல்லது சிந்தித்தல் என்பதையே இது குறிக்கின்றது. இதன்மூலம் ஈகோ அனுபவங்களையும் சூழ்நிலைகளையும் மதிப்பீட்டு விளைவுகளையும் எதிர்பார்ப்பதுடன், திருப்தியைப் பெறுவதற்கு எது சிறந்தது எனத் திட்டமிடுகிறது.
“இட்'இருந்து வெளிப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத தூண்டல் களை மனமுடுக்குகளை கட்டுப்படுத்தவும், அவற்றில் ஏற்படும் பதகளிப் பைத் தவிர்க்க அல்லது குறைக்கவும் ஈகோ சில தந்திரோபாயங்களைக் கையாளும். அவை ஈகோவின் பாதுகாப்புப் பொறிமுறைகள் (Ego Defense Mechanism) எனப்படுகின்றன. மிகவும் அடிப்படையான பாதுகாப்புப் பொறி முறை ஒடுக்குதல் ” (Repression) ஆகும். இது எற்றுக்கொள்ள முடியாத மனமுடுக்குகள் நனவுககுள் பிரவேசிப்பதைத் தடைசெய்கிறது. பிறிதொரு பொறிமுறை இடம்பெயர்தல் (Displacement) ஆகும். இட் மனமுடுக் கொன்று (உதாரணம் பாலியல் வேட்கை) வெளிப்படுத்துவதற்கு ஆபத்தாக அமையும் போது, ஈகோ அம்முடுக்கை பாதுகாப்பான பிறிதொரு நபர் மீது திருப்பிவிடும். இவற்றைவிட புறத்தேற்றல், புனிதவழிப்படுத்தல், நியா யித்தல், எதிர்ச்செயல் உருவாக்கல், மறுத்தலென வேறு பல பாதுகாப்புப் பொறிமுறைகளும் 6. இவைகள்கூட நனவிலி நிலையிற்தான் செயற்படுகின்றன.
&íu í FEBars f SUPER EGO
“இட்” இருந்து ஈகோ வளர்வதைப்போன்று ஈகோ இலிருந்து சுப்பர் ஈகோ வளர்கிறது. எமது இட் மனமுடுக்ககளில் பொம்பாலானவை ஏற்றுக் மகாளாள முடியாதவையென பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டதைப்
நான

Page 15
26
போல, எமது பெற்றோரின் மதிப்பீடுகளோடும், விழுமியங்களோடும், நனவிலி ரீதியாக இணைந்து செல்கிறோம். பெற்றோரோடு எம்மை ஒப்பிட்டு அவர்களது விழுமியங்களை நாம் மேற்கொள்ளும்போது நன்மையை உணர்கிறோம். அதற்கெதிராகச் செய்ற்படும்போது குற்ற உணர்வைப் பெறுகின்றோம். நன்மை உணர்வுக்கும் குற்ற உணர்வுக்கும் காரணமாகவுள்ள ஒன்றே சுப்பர் ஈகோவாகும்.
சுப்பர் ஈகோ இரண்டு பகுதிகளை உள்வாங்கியுள்ளது. மனச்சாட்சியும், அக இலட்சியமுமே அவையாகும். குறிப்பிட்ட நடத்தை, உணர்வு, சிந்தனை நல்லதா? தீயதா? சரியானதா? தவறானதா? என்பதை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதே மனச்சாட்சியாகும். நாம் பெற்றுக்கொண்ட விழுமியங்களது ஒருங்கிணைந்த படிமம், எவரைப் போன்று நாம் உருவாகவேண்டுமென்று முயற்சிக்கின்றோமோ அந்நபரின் வகை அக இலட்சியமாகும். குழந்தைகளின் சிறுபராயத்தில் பெற்றோரே இவ்விலட்சியத்தின் பிரதான மூலமாக உளர். ஆனால் வளரவளர அவர்கள் பிறரோடு தம்மை இனங் காண்கிறார்கள். அப்போது மக்களின் விழுமியங்கள்அக இலட்சியத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.
lfpp6 / Abnormality
புரொய்ட் இன் அபிப்பிராயப்படி ஆளுமையின் மூன்று கூறுகளும் அடிக்கடி முரண்படுகின்றன. எனவேதான் நாம் அடிக்கடி முரண்பட்ட வழிகளில் செயற்படுகிறோம். சிந்திக்கின்றோம், உணர்கின்றோம். இம் மூன்று விசைகளுக்கிடையே நிலையானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான சமரசம், செயற்றிறன்மிக்க தொழிற்பாட்டுறவு ஆகியவற்றினை ஸ்தாபிக் கின்ற ஒன்றே ஆளுமை எனலாம். இட், ஈகோ, சுப்யர் ஈகோ தம்மிடையே மிகையான முரண்பாட்டைக்கொண்டிருப்பின் நபரின் நடத்தை குறைத் தொழிற்பாட்டுக்குறிகளைக்காட்டலாம். இவரது அபிப்பிராயப்படி முரண பாடுகளும் பாலூக்கங்களும் வெளிப்படும் ஐந்து வளர்ச்சிப் பருவங்களிலும் (உளப்பாலியல் வளர்ச்சிப்பருவங்கள்) இம்மூன்று விசைகளுக்கிடையிலான உறவு கட்டியமைக்கப்படுகிறது. உறுதியானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான சமரசம், எந்தவொரு + பருவத்திலும் காணத்தவறும்போது அது பிறழ்வநடத்தைக்கு இட்டுச்செல்லும்.
இன்றைய போர்க்காலச் சூழலில் உளநோயாளிகளின் எண் ணிக்கை அதிகரிக்கின்றது. ஏன் நாம் ஒவ்வொருவருமே சிறிதளவு நேரமாவது உளநோய்களால் பாதிக்கப்படுகின்றோம். உளநோயாளர்களை எமது சமூகம் எவ்வாறு நோக்குகின்றது? அவர்களுக்கு மறுவாழ்வளிக்க தனியாரினதும், சமூக நிறுவனங்களினதும் பங்களிப்பு யாது? தனிப்பட்ட ரீதியில் நாம் உளப்பிறழ்வுடையோரை தீய ஆவிகளாலும், பேய்களாலும் பீடிக்கப்பட்டுள்ளனர் எனக்கருதும் நிலை இன்றும் நீடிக்கின்றது. மறுபுறத் தில் பிறழ்வுகளை உளநோய் என அங்கீகரித்தாலும் அவர்களை இழி வான நிலையில் நோக்கும் போக்கும் நிலவுகிறது. இத்தகைய நிலை 6DD6DU மாற்றி அவர்களுக்கு சிகிச்சைகளுக்குரிய வசதிகளை
நான

27
மேற்கொண்டு அவர்களை இயல்பான நிலைக்குத் திரும்பச் செய்தலே உளப்புனர்வாழ்வு சார் முன்னேற்றத்தின் குறிகாட்டியாகும்.
உசாத்துணைகள்
Ronald J. Comer (1992) Abnormal Psychology, W. H. Freeman and Company, New York.
Calvin.S. Hall (1955) Primer of Freudian Phychology, A Member Book, The New American Library, New York
ஊர்க்கிளி ゞ下
“மொட்டைத்தலைக்கும் முழங்காலிற்கும் என்ன முடிச்சு? "ஊனக் கிளிக்கும் உளவியலுக்கும் என்ன தொடர்பு?” என்னும் ஒரு நியாய விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அது சாலப்பொருத்தமே. விமர்சனங்கள் எப்போதும் நல்லவை. இதயசுத்தியுடன் எடுத்துரைக்கப்பட்டவையாயின் முன்னேற்றத்தின் படிக்கற்களவை. முன்னேற விரும்புமெவரும் விமர்சனத் திற்கு வாசல் திறக்க வேண்டும். வளரவேண்டிய மார்க்கத்தினையும் மந்திரத்தையும் அவை எமக்குக் கற்றுத்தரும்.
w
‘உலகைப் பாதிக்குமெல்லாம் உள்ளத்தைப் பாதிக்கும். உள்ளத்தை பாதிக்குமெல்லாம் உலகைப்பாதிக்கும்’ என்று கூறி எதையும் எழுதலாம் என “நானின்” உள்ளடக்கத்தையும் உற்றநோக்கத்தையும் வழி தவறச்செய்தல் கூடாது. அதற்காக ஊர்க்கிளியை வெறும் கூண்டுக் கிளியாக்கி கால்கட்டும் போடுதலும் பரிதாபம்.
எது எப்படியோ, ஊர்க்கிளி பறக்குமி. அகத்திலிருந்து அண்டம் வரை அது வானேறி வலம் வரும், உளவியலுடன் சேர்த்துத்தொட்டுக் கொள்ள அரசியலையும், ஆன்மீகத்தையும், அறிவியலையும், சமூகவியலை யும் அது பரிமாறும், பகிர்ந்தளிக்கும், பரிச்ோதிக்கும்.
நான்

Page 16
28
குறைவான "களில் கூடிய"கவனமெடுத்தால் மூன்னேற இடமுண்டு” எனும் வகுப்பாசிரியரின் தேர்ச்சியட்டைக்குறிப்பு ல்ை களின் கல்வி ன்ற்த்தின் குறிகாட்டி. படித்து முடித்த வாழ்கைப்பள்ளியில் அநேகருக்கு குறிகாட்டியே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள எனக்கு மனமில்லை, துணிவில்லை, நேரமில்லை. சீர்துரக்கும்கோல் கொண்டு சுயபரிசோதனை செய்தல் எம்மை வருத்தும் ஒரு செயல். ஆனால் வேண்டப்பட்ட ஒன்று.
ஆளுமை அமைப்பு, முற்சாய்வுப்போக்கு, சமய சமூகப் பின்புலம் ஐதீகங்கள், அறிவுமுதிர்ச்சி போன்றவை எம் சுய பரிசோதனையைப்பாதிக் கும் முதன்மைக் காரணிகளாகும்.
உலகத்திலே தாங்கள் மாத்திரம்தான் சோலி உள்ளவர்கள் எனக்கருதும் சிலருக்கு தம்மை எடையிட நாழிகை கிடைப்பதில்லை. எனவே அவர்களில் சிலர் தம்மைப்பற்றித்தாமே நல்லபிப்பிராயம் வைத்திருக்கிறார் கள். பலவேளைகளில் அவை தப்பபிப்பிராயங்களாகவே இருக்கின்றன. விஷயம் தெரியாதவர்களைவிட நாலுந்தெரிந்தவர்களை இச்சுயஅறிவுச் சிக்கல் பாதிக்கக்கூடாது என்பது நியாயமான எதிர்பார்ப்புத்தான். ஆனால் அவ்வெதிர்பார்ப்பின் நடைமுறை உண்மைத்தன்மை உற்சாகம் தருவதாக இல்லை. இவர் அவர் எனாதபடி எவரையும் இது பீடிக்கக்கூடியது. ஊர்க் கிளியை வாசிக்கின்ற எத்தனைபேர் சுயபரிசோதனைச்சவாலை எதிர் கொள்ளத்தயாராக இருக்கின்றார்கள்?
“சவால்” என்றேன்.ஏனெனில் “பலவான் பிழைப்பான்” என்னும் கூர்ப்புக்கொள்கை வழிப்படி "சுயபரிசோதனைச்சவாலை' வெல்லுபவன் ஆளுமையை வளர்ப்பான். ஆளுமையை வளர்ப்பவன் வாழ்க்கையை வெல்லுவான். சுயபரிசோதனை செய்யாதவர் ஏதோ பிறந்த கடமைக்காக வாழ்ந்து முடிக்கிறவர்கள். ஆளுமையின் தேறிய இலாபத்தை அடையாமலேயே வாழ்க்கைக்கடையை ஒடுக்குகின்றவர்கள்.
வணிகத்தில்: முன்னேற உட்கார்ந்து கணக்குப்பார்க்க வேண்டும். அரசியலில் முன்னேற ஆறஅமர இருந்து ஆலோசனை நடத்தவேண்டும். ஆன்மீகத்தில் முன்னேற அப்பனே எனத்தியானம் செய்யவேண்டும். ஆளுமையில் முன்னேற இதயசுத்தியுடன் சுயபரிசோதனை செய்யவேண்டும்.
96öllösöbl6O)6T / LOVE ORDER
“நான்’ ஆண்டு 2001 இற்கான சந்தாவை புதுப்பிக்க, ஆரம்பிக்க, அறிமுகப்படுத்த உங்கள் காசுக்கட்டளைகளை (Money orders) அனுப்பி வையுங்கள்.
பணம் பெறுபவர்: ஆசிரியர், “நான்’ பணம் பெmாம் அலவலகம்: கலைnைக்காலகம் (ாழ்ப்பாணம்
நான்
 

29
நான் வளர . நீ,
நீ வளர. நான்
ஷிரோமி லெனாட்
உளவளத்துணையாளர்
ஒரு பட்டம் உயர, உயர பறந்து எத்தனை பேருடைய கண்களைக் கவருகின்றது. ஆனால் அது அவ்வளவுக்கு உயருவதற்கு பல காரணிகள் துணைநிற்க வேண்டும். அவ்வாறே, நமது வாழ்க்கையிலும், நமது முன்னேற்றத்திற்கு எமது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அனுபவஅறிவு, எச்சரிக்கையுணர்வு என்பனவும், எமது சூழலும் சுற்றியுள்ளோரும், எமது வெற்றி தோல்விகளும், இழப்புக்களும் ஏமாற்றங்களுமே ஏணிப்படி களாயமைகின்றன.
வாழ்க்கை, கனவிலும், கற்பனையிலும், பூஞ்சோலையாகவும் இதமான இளந்தென்றலாகவும் தோன்றலாம். ஆனால் நிஜத்தில் அவ்வாறு அமைவதில்லை என்பதை நாம் நன்கு அறிவோம். எம் ஒவ்வொரு வருடைய வாழ்க்கையிலும், இன்பமும், துன்பமும், சக்கரம் போல் மாறி, மாறி வந்து போகின்றன. பலரது வாழ்கையில் துன்பம் நிரந்தரமான தாகவும், இன்பம் இடையிடையே இழையோடுவதாயும் அமைந்து விடுகின்றன. வாழ்க்கை சுலபமாக வாழ்ந்துவிடக் கூடியதொன்றல்ல என்பது நன்கு புலப்படுகிறது. இந்தக் கடினமான பாறையை எமது ஆரோக்கியமான, மற்றவர்களின் நன்மையையே கருத்திற்கொள்ளக் கூடிய, அவர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத நல்லுறவு களால் அலங்கரிக்கலாம். இந்நிலையில், நமது வாழ்க்கையை நாம் கனவிலும், கற்பனையிலும் காணும் பூஞ்சோலைகளை நிஜத்தில் அமைத்து முன்னேற முயற்சிக்கலாம்.
இந்த ‘நான் <-த நீ” உதவும் உறவை (Helping Relationship) ஆரோக்கியமானதாக வளர்ப்பதென்பது 6) O60 காரியமா? இதற்கு எத்தனை பிரச்சனைகள்? எத்தனை தடைக்கற்கள்?
இதன் வளர்ச்சிக்கு அளவு கடந்த அன்பும், அக்கறையும், அரவணைப்பும், பகிர்வும், புரிந்துணர்வும், ஊக்கப்படுத்தலும், ஒருவர் மீது ஒருவர் நிறைந்த நம்பிக்கையும் தேவைப்படுகிறது. நீ’ வளர ‘நான்’ உனது விருப்பு வெறுப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். உனது உணர்ச்சிகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். நீ" எனனென்ன குறைநிறைகளுடன் இருக்கிறாயோ அப்படியே உன்னை நான் ஏற்றுக்கொள்ளத்தயாராக இருக்கிறேனா? நீ சொல்பவற்றிற்கும், சொல்லத் தயங்குபவற்றிற்கும் செவிமடுத்து, புரிந்து கொண்டு உன்னை ஏற்றுக் கொள்வேனா? ‘நான்’ உன்மீது வளர்க்கும் அன்பை அழகோ, அறிவோ, பதவியோ, பொருளாதாரமோ, வாழ்க்கைத்தரமோ, எனது சுயநலமோ, சுயஇலாபமோ, இன, மத, மொழி வேறுபாடோ பாதிக்கின்
நான

Page 17
30
றதா? இவ்வாறான வினாக்களை அடிக்கடி என்னை நான் கேட்கும் போது எனது ஆளுமையை வளர்க்கக் கூடியவனாகிறேன்.
‘நான்’ என்னை எனது உடல், உள குறைநிறைகளோடு ஏற்கும் போதே என்னால் உன்னையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைக்கு வளரக்கூடியவனாயிருக்கிறேன். உ+ம்:- சுமணா: எனது சகமாணவி ராதாவைப்பிடிக்காது. அவவுடைய நண்பி மதியையும் பிடிக்காது. ஏனோ தெரியேல்லை. முதலிலை அவவைப் பார்த்தவுடனேயே பிடிக்கேல்லை. உளவளத்துணையாளர். உங்களுக்கு அவர்களை பிடிக்காதமைக்கான காரணம் ஏதாவது சொல்ல முடியுமா?
சுமணா என்னவோ தெரியேலை, எனக்கு சிலரை பார்த்தவுடனேயே
பிடிக்கிறேல்லை. பிறகு அவர்களோட பழக விருப்பம் வராது. (தொடர்ந்து அவருடன் கதைக்கும் போது)
உளவளத்துணையாளர் : உங்களுக்கு உங்களைப்பிடிக்குமா?
சுமணா (சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, மெதுவாக தலையை ஆட்டிக் கொண்டு, கைகளை கசக்கியவாறு) இல்லை.
நம்பிக்கையான உறவு
நானும் நீயும் உறவு கொள்ள, அத்திவாரமாக அமைவது நம்பிக்கையே. இந்த நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே நல்லுறவு வளரவும் அதனைத்தொடர்ந்து வளர்க்கவும் மிகவும் அத்தியாவசியமானதாகும். இது உறவின் வேகத்தைக்குறைக்கிறது.
‘நான்’ என்னைத் தெரிந்து கொள்ள "நீ தேவை. 'நீ உன்னைத் தெரிந்து கொள்ள நான்’ தேவை.
ஆரோக்கியமான உறவை ககனர்க்க:-
நாம் மனந்திறந்து உண்மையைப் பகிர்ந்து கொண்டு, உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். நிகழ்ந்த சம்பவத்தை பற்றி விளக்கலாம் தீர்ப்பிடலாகாது. புத்தி கூறாமல் கருத்துக்களைப் பகிரலாம். எனது தீர்வுகளைக் கூறி, பிரச்சனைகளை விகாரப்படுத்தாது, அதற்கான மாற்று வழிகளைக் கூறலாம். எனது பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டாலும் அவரது வளர்ச்சியும், நலனுமே கவனிக்கப்பட வேண்டும். சொல்ல வேண்டியதை நேரடியாகக்கதைத்தல். பிறரில் பழி சொல்வதைத்தவிர்த்தல். பழிவாங்கம் உணர்வுகளை நல்லபடி கையாண்டு கவிர்த்கல்.
நான்

31
நமது பகிர்வுகள், நல்ல புத்தகங்கள், உறவுகள், அனுபவங்கள், நம் உள்ளத்தைப் பண்படுத்துகின்றன. நல்ல எண்ணங் கள் ஆரோக்கியமான உணர்வுகளைத் துாண்ட, எமது வார்த்தைகளும் ஆரோக்கியமானதாக அமைவதுடன், நல்ல சிந்தனைகளையும், நல்ல உறவுகளையும் வளர்க்க கூடியதாயமையும்.
ஆழமான உறவில்:- சந்தேகம் தாண்டவமாட முடியாது. எனவே
வாழ்வில் இன்பமோ, துன்பமோ ஒன்றாகப் பகிர்ந்து கொள்வார்கள்.
பலவினமான உறவில்:- சந்தேகம், நம்பிக்கையின்மை, புரிந்து கொள்ளாமை, ஏற்றுக் கொள்ளாத்தன்மை, மன்னிக்க மனமின்மை, என்பன உறவைச் சிதறடிக்கும்.
அமெரிக்க உளவியலாளர் கார்ள் றொஜர்ஸ் (Carl Rogers ) தாவரம் சூரிய ஒளியை நோக்கி வளர்வது போல், ஒவ்வொரு மனிதனும் தனது முழுமையை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாக கூறுகின்றார். இதற்காக தனது ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்தி, முன்னேற வழிகளை ஒருவர் அறிந்து கொள்ளும் போது அவர் முன்னேற சுலபமாக இருக்கும். இந்த முன்னேற்றத்தால் அவர் தனது ஆளும் திறனை (Self Autonomy) வளர்த்து முழுமையடைவதாகக் கூறுகிறார்.
இதுவரை எமது முன்னேற்றத்தைப்பற்றி கருத்திற்கொண்ட நாம் இதுவரை காலமும் எம்மை முன்னேற்றக்கைகொடுத்தவர்களை நன்றியுணர்வுடன் ஒரு கணம் பின்னோக்கிப் பார்ப்போம். அது எமக்கு இன்னும் வளர்ச்சியாகி எம்மை மென்மேலும் முன்னேற்றும்
Bibliography On Becoming a Person - Carl Rogers Introduction to Phychology - Aitkinson
தாரநோக்கு “நான்” ஆண்டு - 2002
வருமாண்டில் எதிர்பாருங்கள்
2002 6og5 – uDTé - (பொதுத்தலைப்பு) 2002 பங்குனி - சித்திரை - குற்றவுணர்வு 2002 வைகாசி - ஆணி - தன்னம்பிக்கை 2002 ஆடி - ஆவணி - (பொதுத்தலைப்பு) 2002 புரட்டாதி - ஐப்பசி - இலக்கமைத்தல்
2002 கார்த்திகை - மார்கழி - முகம்கொடுத்தல்/முன்னெடுத்தல்
ミ: 角 s z a i km 。 数 淡 * × 。 L 5 感 怒 嫁 零 e Ki * 4 5 6

Page 18
32
காற்றும் கை குலுக்கும்
தாங்கிச் சோம்பி நிற்பவனுக்கு பூமி சிறைக்கூடம் வழிகள் கரடு முரடு
முனைப்புடன் “முன்னேற" நினைப்பவனுக்கு அதவேயொரு
தடைகள் ஏணிப்படிகள்
ஆழ் மனதில் வேரூன்றி, உணர்வுகளை, உன்னை ஏன் உயிரையே நாசப்படுத்தம் களைகளை நாசப்படுத்த: அக்கினியில் போடு
விருட்சத்தின் வேரருகே கோடரி வைக்கப்படினும் அங்கே....... கிளைகளை வெட்டலாம் விருட்சத்தை சாய்க்கலாம் ஆனால்...... மண்ணுக்குள் ஆழக்கால்பதித்த வேர்களை எவர் என்ன செய்ய முடியும்?
நான்
யாழ். பல்கலைக்கழகம்
தரயரங்களைத் தாக்கித் திரியாதே * நம்பிக்கையில்’ காலுன்றி உனக்குள் உள்ள உன்னை உசுப்பி நடக்கத் தொடங்கு
எழுந்த புறப்படும் வரைதான் தடைகள தடையாகும ஏற்றத்தை நோக்கி நம்பிக்கை நடைபோட்டால் தோல்விகள் கூட தாண்டு கோலாகி மாற்றத்திற்கான வழியங்கே தன்னால் திறந்திருக்கும்
அப்போது
“ിഖ്” ഈ ങ്ങ് முகவரி தேடும் காற்றும் கை குலுக்கும்
నీ

33
முயற்சியே முன்னேற்றம்
Soto. N. E. study 6Ob B.A(Hons), Dip.in Ed. யா\ புனித சாள்ஸ் ம. வி
ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் காண்பது இன்றியமையா தது ஆகும். உலகம் மிக விரைவாக முன்னேறிவரும் இக்காலத்தில் முன் னேற்றப்பாதையில் எம்மை இட்டுச் செல்லும் செயற்பாடுகளில் ஈடுபடாது வெறுமனே சோம்பலாய் இருப்பது எமது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டுக்குமே கேடு விளைவிப்பதாய் அமையும். முன்னேற்றம் என்பது முயற்சியின் அடிப்படையில் உருவானதொன்றாகும். ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றத்தை அடைய வேண்டுமாயின் குறிக்கோள், மனஉறுதி, நம்பிக்கை, உயர்வான எண்ணம், ஒருமைப்பாடு, முழுத்திறன், விடாத உழைப்பு, சோம்பலின்மை போன்ற அடிப்படை அம்சங்களை கொண்டிருத்தல் வேண்டும்.
குறிக்கோள் இல்லாதவன் வாழ்க்கை நடுக்கடலில் தத்தளிக்கும் படகுக்கு ஒப்பாகும். குறிக்கோள் என்ற சொல்லில் இருபொருள் உண்டு. ஒன்று குறித்தல், இரண்டாவது கொள்ளுதல். குறித்ததை எவ்வாறு கொள் ளுதல் வேண்டும் என்ற வினாவுக்கு விடைகாண்பதே குறிக்கோளாகும். ஒரு மாணவன் முன்னேற்றமடைவதற்கு முதலில் அவனிடம் இருக்க வேண்டியது இக்குறிக்கோளாகும். அடுத்து அவனிடம் இருக்க வேண்டிய அம்சம் மன உறுதியாகும். ஒரு செயலில் வெற்றி பெற மனஉறுதி இன்றியமையாதது. மெய்வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார், செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்புக் கொள்ளார் கருமமே கண்ணாயினார். என்பதற்கிணங்க வாழ்வதன் மூலமே வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியும். ஊக்கமும், உழைப்பும், மன உறுதியின் அடிப்படை அம்சமாகும். உயர்ந்தவற்றை எண்ணுவதே வெற்றியின் முதற் படியாகும்.
தன் திறமையின் மீது நம்பிக்கை வளர்த்துக் கொள்ளாதவனுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடையாது. நம்பிக்கை கலந்த உழைப்பு நிச்சயம் வெற்றி பெற வழிசமைக்கும். நம்பிக்கையுடன் செயற்படுபவன் தன்னுடன் தொடர்புகொண்ட அனைவரையும் ஊக்கப்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு மாபெரும் சக்தியின் மையமாக விளங்குவான். அவமானங்கள், சோதனைகள், ஏமாற்றங்கள், எதிர்ப்புக்கள் வந்த போதிலும் அவற்றை வென்று முன்னேற்றம் காண்பான். தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்திருப்பவன் அங்குமிங்கும் அலைந்து பலரைச் சந்தித்து ஆக்க பூர்வமான விடயங்களைக் கற்று முன்னேறு வதற்கான சந்தர்ப்பத்தைத் தானே உருவாக்கிக் கொள்கின்றான்.
நல்ல நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வதும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஓர் அம்சமாகும். "உடுக்கையிழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” என்று நட்பிற்கு
நான்

Page 19
34
வரைவிலக்கணம் வகுத்தார் வள்ளுவர். அதிலும் நல்ல நண்பர்களைச் சம்பாதித்தலே முன்னேற்றத்திற்கு வழியாகும். ஒருமைப்பாடு, உயர்ந்த சிந்தனை, உதவி செய்யும் மனப்பாங்கு, பிறர் நலனில் அக்கறை, போன்ற நற்பண்புகளைக் கொண்ட நண்பர்கள்தான் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் வழிகாட்டிகளாவர்.
“சோம்பல் மிகக் கெடுதி பாப்பா” என்றார். பாரதியார் முன்னேற்றத் திற்கு தடையாக இருப்பது சோம்பல். எறும்பிடம் உள்ள சுறுசுறுப்பு, தேனியிடம் உள்ள கூட்டுறவு போன்று மாணவர்களிடமும் உயர்ந்த செயற்பாடுகள் இருப்பது அவசியம். உலகம் பல துறைகளிலும் மிக விரைவாக முன்னேறி வரும் இக்காலத்தில் மாணவர்கள் தம் கல்வியிலும் முன்னேற்றம் காண்பதன் மூலமே உலக மயமாக்கலுக்குத் தம்மை உட்படுத்த முடியும். மாணவர்கள் தம் வாழ்க்கையில் முன்னேற்றம் காண் பதற்கான சில வழிகள் பின்வருமாறு:
நல்ல சிந்தனைகளை வளர்க்க உதவும் சிறந்த கருத்துக்களைக் கொண்ட நூல்களைப் படித்தல்.
• தன்னம்பிக்கையும் ஒரு மூலதனம் என்பதனையுணர்ந்து முயற்சியுடன் செயற்படுதல். o 6060D முன்னேற்றத்திற்கு தடையில்லை என்பதனையுணர்ந்து, வறுமையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்தல். “காலம் பொன்னானது” என்பதையுணர்ந்து திட்டமிட்டுக் கருமமாற்றுதல். நல்ல நண்பர்களின் சகவாசத்தைத் தேடிக்கொள்ளுதல். அறிவையும் திறனையும் வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் இலக்கை அடையும்வரை ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும், விடாமுயற் சியுடனும் செயற்படுதல்.
இத்தகைய வழிமுறைகளைக் கைக்கொள்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.
(poiGUIrefoor
(1). கருத்துக்குவியல் - 86 (ஆடி~ஆவணி 2001)
வாழ்வுக்கு வளம் சோர்ப்பது தனிமனித அநுபவமா \ சமூக அநுபவமா?
(2). கருத்துக்குவியல் - 87 (புரட்டாதி- ஐப்பசி 2001)
தொடர்பு யுகமான இன்று நவீன தொடர்புச்சாதனங்கள்
மனித 4-9 மனித உறவினை வளர்க்கின்றன \ தடுக்கின்றன.
நான்

35
உளவியலாளரின் வாழ்க்கையில் முன்னேற்றப்பாதை
gar H.C, Dip. in Counselling (Kent) உளவளத்துணையாளர்
நாம் எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தாலும் எந்தச் சூழல் சுற்றாடலில் வாழ்ந்தாலும் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் வாழ்வில் முன்னேறுவத நம் கையில் தான் உண்டு. இதனால் அயலவரின் தணை தேவையில்லை என்ற அர்த்தம் கொள்வதற்கில்லை. இதற்குச்சான்று பகர்பவர்கள் நம் முன் வாழ்ந்த, வாழ்ந்த கொண்டிருக்கும் பெரியோர்கள், புனிதர்கள், நிபுணர்கள், தத்தவ ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள். இவர்கள் சென்ற பாதை, வாழ்ந்த வாழ்க்கை நமக்கோர் எடுத்துக்காட்டாக மனம் சோர்ந்த வேளைகளில் ஓர் உந்து கோலாக அமையலாம்.
ஆகவே, தன் கடும் உழைப்பால் உளவியலுக்கு மெருகூட்டி, உளநலனுக்கு புதுத்தெம்பு கொடுத்து மனித நடத்தையின் அடிப்படைக் காரணிகளை அனுபவங்களி, ஆய்வுகள் மூலம் கண்டறிந்த மனித ஆளுமை வளர்ச்சி, அதில் ஏற்படும் தேக்கங்கள், மனம் பற்றிய கொள்கைகள் என்பனவற்றை முதன் முதலாக 0 S MTTT TTTT TTT TTlTS ST SLLLLLL S LLLLLLLLS compágosófsó 855 6gon (Gerald Corey Theory & Practice of Counseling and Psychotherapy) gogy by 656) gob éo libósió6061T உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
éảoca sógmi (Sigmund Freud 1856-1939 )
சிக்மன் புரொய். 1856ம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான, வியன்னாவில் மூன்று ஆண்களையும் ஐந்து பெண்களையும் கொண்ட குடும்பம் ஒன்றில் முதல் மைந்தராகப் பிறந்தார். அக்காலகட்டத்தில் அந்நாட்டில் வாழ்ந்த பெரியோர்களைப் போன்ற இவரின் தந்தையும் அதிகார குணம் படைத்தவராக இருந்தார்.
பொருளாதாரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இவர் குடும்பம், வசதிகள் குன்றிய நெருக்கமான விடுதியில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இருந்தம் சிக்மன்ட் புரொய்டின் புத்திக்கூர்மையை, அறிவு
ஆற்றல்களை அவதானித்த பெற்றோர் இவரின் அறிவு வளர்ச்சிக்குத்தங்களால்

Page 20
36
இயன்ற உதவிகளைச் செய்தனர். இவரிடம் பல ஆர்வங்கள் ஆற்றல்கள் இருந்தம் யூத பரம்பரையில் பிறந்தவராகையால் தான் விரும்பிய தறையை தெரிந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேறுவதில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. இவர் தனது ஆற்றலை தான் விரும்பியபடி விருத்தி செய்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. சில
இறுதியில் இவர் மருத் த்தேர்ந்து கொண்டார். இத் தேர்ச்சி பெற்ற நான்கு ஆண்டுகளில், தனது 26வது வயதில், தான் கல்வி பயின்ற வியன்னா பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இதன் பின், தனத வாழ்வின் பெரும்பகுதியை முளை, நரம்புக்கேளாறுகளுக்கான காரணிகளை அறிந்து கொள்ள உளப்பகுப்பாய்வு (Psycho-Analysis) ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இதன் கோட்பாடுகளை உருவாக்கு வதிலும், விரிவுபடுத்தவதிலும் செலவிட்டார்.
நாற்பத வயதகளில் கடுமையான மனக்கிளர்ச்சிக்கு ஆளாகி பல உடல் 26T (a TGITTD865igib (Psychosomatic Disorders) GibsTisdellieb gymnasi. சாவைப்பற்றி அளவுக்கதிகமாக பயங்கொண்டதுடன் வேறு ப்ல விதமான பயங்களும் இவரை ஆட்கொண்டன. இந்தக்கால கட்டத்தில், தன்னைத் தானே ஆய்வு செய்யும் ஒரு கஷ்டமான பணியில் ஈடுபட்டார். தனது கனவுகளுக்கு அர்த்தம் தேடினார். தனது பிள்ளைப் பருவத்தின் அனுபவங்களைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தார். தனத தந்தை மேல் தான் கொண்ட பகைமையை உணர்ந்தார். தனக்கு பாதகாப்பும், அன்பும், வழங்கிய தன் தாய் மேல் தான் கொண்டிருந்த பால்க்கவர்ச்சியை அடையாளம் கண்டார். தன்னைப் பற்றிய தன் ஆய்வில் இருந்தம், மருத்துவரீதியாக நோயாளரின் குணமடைதலில் ஆர்வமுடன் உழைத்து ஆய்வு செய்த பெற்றுக் கொண்ட அனுபவங்களில் இருந்தம் மனித ஆளுமை பற்றிய கோட்பாடுகளை உருவாக்கினார்.
மிகத் திறமை வாய்ந்த புத்திஜீவியாகிய இவர் நாளுக்குப் 18 மணி நேரத்தைத்தனத ஆய்வுகளுக்கு செலவிட்டார். இவருடைய ஆய்வுகள் 24 கோவைகளில் (Volumes) தொகுக்கப்பட்டுள்ளன. உள ஆய்வு முறை ஆதிகர்த்தாவாகிய இவர் முன் ஒருபோதம் அறிந்திராத ஆளுமை வளர்ச்சி (Personality Development) tossi di Taibai jigs, 3,76igib (Philosophy Of Human Nature) 9 GT polo shipfit Gipsi) gpopass (Method of Psychotherapy) ஆகியவற்றின் கோட்பாடுகளை உலகிற்களித்தார். இவருடைய ஆய்வுகளில் முக்கியத்துவம் பெறுவத, மனிதனுடைய நடத்தையை, அவனுடைய ஆளுமை, பிரச்சனைகள், சிக்கல்கல்கள் பற்றி ஆழமாக அறிய ஏதவாக அமைந்த வெளிமணம் (நனவு நிலை-Conscious) ஆழ்மனம் (நனவிலி நிலை-Unconscious) பற்றிய இவரது விளக்கமாகும். மனிதனுடைய மனதில் பெரும் பாகம் ஆழ் மனம் என்றும், கடந்த கால அனுபவங்கள் யாவும் ஆழ்மனதில் புதைந்த கிடந்து அவனத நடத்தைக்குக்காரணமாக அமைகின்றன என்றும் கூறினார்.
நான்

37
ஆழ்மனதில் அமிழ்ந்து கிடக்கும் நிறைவேற்றப்படாத தேவைகள், விருப்புகள், வெறுப்புகள், முரண்பாடுகள் ஆகியவை கனவுகளில் வெளிப்படுத்தப்படு கின்றன. வாய்தடுமாறிச் சொல்லும் சில வார்த்தைகள் (Slip Of Tongue) அல்லது முக்கியமானவற்றை மறத்தல், தேவையானவற்றை வசீகரப்படுத்திய பின் சொல்ல 606; i36) ( Posthypnotic Suggestion) digibiyi, 65TLiu1836) by Uso (Free Association Techniques) 2_60076yï6)JAuñóóf by Lub (Transference & Projective Techniques) (06) (85Tiösfu 95ösö6606T 3bij6, 6äig56ö முதலியவையே புரொய்டின் ஆழ் மனதைப்பற்றிய கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தன.
சிக்மன்ட் புரொய்டின் இந்த அடிப்படைக் கொள்கைகளே உள நல உதவி வளர்ச்சிக்கும் உள நலம் தொடர்பாக இதன் பின் வந்த கொள்கைகளுக்கும் மூலாதாரமாக அமைந்தன. சில அணுகு முறைகள் இந்த அடிப்படைக் கொள்கைகளை ஆதாரமாக வைத்து வளர்ந்தன. வேறு சிலர் இதற்கு எதிர் மாறாகச் சிந்தித்தமையால் தோன்றியவையாகும். பலர் இவரின் கோட்பாடுகளை தமது கோட்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயற்படுத்தினர்.
இவரைப் பொறுத்த மட்டில் தனது சிந்தனைக்கோ கோட்பாடுகளுக்கோ எதிரான சிந்தனையுள்ளவர்களுடன் இணைந்து போவது கடினமாக இருந்தது. இதனால் இவருடன் இணைந்து செயற்பட்டு, பின் எதிர்மறைக் கருத்துகளால் பிரிந்து தங்களுடைய கோட்பாடுகளுக்கிணங்க உளநல ஆற்றுப்படுத்தலை உருவாக்கிக் 6lä5ñ60öL6)ssóCh6f 6575ffussb) (Carl Jung) 96ö76DL 9Ö6ofi (Alfred Adler ) ஆகியோரை கூறலாம்.
எது எப்படி இருந்தாலும், பல இடையூறுகள் மத்தியிலும் சிக்மன்ட் புரொய்ட் தனத அறிவை, ஆற்றலை தகுந்த முறையில் பாவித்த முன்னேற்றம் கண்டார். இவர் யூத குலத்தில் பிறந்ததால் ஏற்பட்ட தடைகளினாலோ, அன்றேல் உடல் உள நோய்களால் பாதிப்படைந்த நிலையிலோ மனம் நெகிழ்ந்த தனது வாழ்வைப் பயனற்றதாக்கி விடவில்லை. தனது ஆழ்ந்த சிந்தனையை, ஆற்றலை, கடின உழைப்பை உலகிற்கு விட்டுச்சென்றார்.
சவால்களை எதிர்கொள்கின்றபோது வாழ்க்கை வெற்றியை நோக்கியது. வென்றவர்ககள் எல்லாம் சவாலை முட்டிப்பார்த்தவர்கள். எனவே . . .
நான்

Page 21
இளைய வாசக உள்ளங்களே,
உங்களை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? உங்கள் ஆற்றல்களை அறிந்து கொண்டீர்களா? ஆற்றலுக்கமைய உங்கள் வாழ்கையைத் தெரிந்து கொண்டீர்களா? மனம் வைத்தால் முன்னேறலாம் என்ற உறுதி உங்களுக்கு
உண்டா?
பெற்றோரே, பெரியோரே, ஆசிரியர்களே, வாசக நேயர்களே,
நாட்டு வீட்டுப் பிரச்சனைகள் உங்களை ஆட்கொள்கிறதா? சிந்தித்துச் செயற்பட முடிகிறதா? நம் நாளைய சந்ததியினரின் பாதை தெரிகிறதா? உங்கள் பங்களிப்பு என்னவெனப் புரிகிறதா?
X “நானே உந்தன் தேவை நாடுவோர் அநேகர் தாங்கி வரும் அ
நன்று. உ
X தரமான ஆக்கங்களை தாங்கி
கதை, கவிதை போன்ற இலகுஆக்கங்கள் இதழுக்கு மெருகூட்டும், இலக்கியப்பிரியர்களையும் உளவியல் உலகி அழைத்துச்செல்லும்,
1. கிளரன்ஸ் பீரிஸ்
நான
 
 
 
 
 
 
 
 
 

39
கருத்துக்குவியல் - 84
முன்னேற்றத்தில் முதன்மை பெறவேண்டியது சமூக முன்னேற்றமே
பரிகாரிகண்டல், முருங்கன்
மானிட உயிர் ஒவ்வொன்றும் ஒரு சமூக கட்டமைப்புக்குள் இறுகப்பிணைக்கப்பட்ட ஒரு சமூக அலகாக இருக்கின்றது. ஒரு சமூகம் இல்லாது மனிதனின் செயற்பாடுகள், நடத்தைகள், ஆளுமைத் தன்மைகள் தன் அக, புற இயல்புகள் முதன்மை பெற முடியாது. எனவே சமூகம் ஒரு இன்றியமையாத அலகாக இருந்து சமூகமுன்னேற்றமே தனிமனிதனை முன்னேற்றி வளப்படுத்துவதால் சமூக முன்னேற்றமே முன்னேற்றத்தில் முதன்மைபெற வேண்டியதொன்றாக இருக்கின்றது. மனிதனில் சமூகத்தின் செல்வாக்கும் அதன் சூழலியல் தாக்கமும் காணப்படுகின்றன. ஒருவனின் நடத்தைகள் அவனின் எதிர்கால செயற்பாட்டுத் திட்டங்கள், சமூக நலன்கள், அவனின் சமூகத்திற்கு ஏற்றதாக மாற்றப்படுகின்றன. பல சமூக அமைப்புக்களுடன் கொள்ளுகின்ற உறவுப்பரிமாற்றத்தால் அவன் பற்பல சமூக நற்பண்புகளை தன்வயமாக்குகின்றான்.
சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றமும் அதன் மறுமலர்ச்சியும் மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பதால் அவனிலும் மறுமலர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. சமூகம் அதன் அங்கத்தினர் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் அந்தஸ்துக்காகவும் அவர்களின் முழு மனித ஆளுமை வளர்ச்சிக்காகவும், பாடுபட்டு உழைக்கின்றது. ஒவ்வொரு சமூகத்தின் விழுமியங்களும், அறநெறிகளும், அதன் பண்பாட்டு சூழலும் அதன் அலகு ஒவ்வொன் றிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஒரு சமூகத்தில் அறநெறி நற்பண்புகள் வேர்விட்டு வளர்ந்துவருகின்றபோது சமூகம் முன்னேற்றப்பாதையில் செல்வதோடு அதன் அலகு ஒவ்வொன் றையும் பல நற்பண்புகளை உள்வாங்க தூண்டுவதோடு அவற்றையும் முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்கிறது.
எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது சமூக முன்னேற்றமே முன்னேற்றத்தில் முதன்மை பெற வேண்டியதாகும். ஏனென்றால் ஒரு சமூகம் முன்னேற அதன் சிறு அலகாகிய தனிமனிதனும் அதேவழியில் முன்னேற்றமடைவான்.
அடுத்த கருத்துக்குவியல் - இல.85 (வைகாசி-ஆனி 2001)
தலைமைத்துவத்தை பால் வேறுபாடு பாதிக்கும் / பாதிக்காது.
உங்கள் கருத்துக்களை 20.04.2001 க்கு முன் அனுப்பிவையுங்கள்.
நான்

Page 22
40
முன்னேற்றத்தில் முதன்மை பெறவேண்டியது சமூக முன்னேற்றமே
றொய்சி அருள்வாணி ஆசிரியை, பருத்தித்துறை.
மனிதனை பூரணமாக முன்னேற்றத்தின் பாதையில் முதன்மை பெறச் செய்வது சமூக முன்னேற்றமாகும். ஒரு மனிதனை முன்னேற் றத்தின் வழியில் கொண்டு செல்லும் காரணிகள் சமூகத்தில் கற்றுக் கொண்ட விடயங்கள் அவன் வாழும் சமூகத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், தன்னைப்பற்றி சமூகத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் சுய விழிப்புணர்வு ஆகும். வாழ்க்கையில் மனிதன் மகிழ்ச்சியாகவும் இன்ப மாகவும் வாழ விரும்புகின்றான். ஆனால் தனிமனித உணர்வில் முன்னேறும் போது மற்றவர்களோடு நெருக்கமான உறவை ஏற்ப டுத்த முடியாது. மகிழ்ச்சியாக இருக்க முடியாது. தமது நேரத்தையும், சிந்தனைகளையும், உடல் உழைப்பையும், மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் முன்னேற்றததில் முதன்மை பெறமுடிகிறது.
ஒளிமயமான சமூக மாற்றம் முன்னேற்றத்தின் தோற்றமாகும். அதுவே ஏற்றமிகு வாழ்வை தோற்றுவிக்கும். சமூகம் தனிமனிதன் உறங்கிய போது விழித்தெழச் செய்கின்றது. சமூகத்தில் தப்பான சிந்தனைகள், தவறான சினேகிதங்கள், போலிமதிப்பீடுகள், போலிக் கெளரவங்கள், அதிகார துர்ப்பிரயோகங்கள், அகந்தையான செயற்பாடுகளை அகற்றுவதன் மூலம் மனித வாழ்வில் உள்ளங்கள் மகிழ உறவுகள் மலர சமூக முன்னேற்றமே வழித்துணை புரிகின்றது. தீயசக்திகளை வெல்லவும், அச்சமின்றி எதிர்நீச்சல் GBUIT L 6 D சமூகமுன்னேற்றமே வழித்துணை புரிகிறது.
முன்னேற்றத்தில் முதன்மை பெற வேண்டியது தனிம்னித
முன்னேற்றமே
செபமாலை அன்ரன் புதக்கமம், மன்னார்
முன்னேற்றம் என்பது தற்கால இருப்பு நிலையிலும் சிந்தனை செயற்பாட்டு, அனுபவ அறிவு சார் நிலைகளிலும் ஏற்படுகின்ற ஒரு வளர்ச்சித்தன்மை என்று கூறலாம். இவ்வாறான ஒரு மனிதமுன்னேற் றம் சீரிய முயற்ச்சியாலும் ஒழுங்கான பயிறிச்சியாலும் ஏற்படுகின்றது.
முன்னேற்றத்தின் அடி அத்திவாரமாக அமைய வேண்டியது தனி மனித முன்னேற்றமாகும். ஒவ்வொருவருடைய தனித்துவமான இயல் புகளும் முன்னேற்றத்தின் ஒவ்வொரு பரிமாணமாக அமைகின்றது. தனி மனித வளர்ச்சியின்றி ஒரு சமுதாயத்தின் குழுவின் வளர்ச்சியை அல்லது
நான்

41
முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. எங்கே தனி மனித முன் னேற்றம் இல்லையோ அங்கே சமுதாய முன்னேற்றம் இல்லை. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் தனி மனிதர்களின் கூட்டு முயற்ச்சியிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
வாழ்க்கையில் உயர் நிலையடைவதற்கு பொதுவான நடைமுறை வழி கிடையாது. அவரவர் குறிக்கோள் இயல்பு போன்றவற்றிற்கு ஏற்ற நடைமுறை வழியினைக் கண்டறிந்து வளர்ச்சியடைவதே முன்னேற்றத் தின் முதற்படி, யார் யார் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் நடக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்கள் தமக்கும் தமது குறிக்கோளுக்கு ஏற்ற ஒத்துவரக்கூடிய நடைமுறை வழி என்ன என் பதை கண்டறிந்து அந்த வழியில் நடக்க வேண்டும். இவ்வாறான ஒரு கண்ணோட்டத்திலே நோக்குகின்ற போது முன்னேற்றம் என்ற பரிமாணத்துக்குள்ளே தனி மனித முன்னேற்றமே முதன்மைப்படுத் தப்பட வேண்டியதாகின்றது.
முன்னேற்றத்தில் முதன்மை பெறவேண்டியது தனிமனித முன்னேற்றமே
அன்ரன் பீற்றர் திருமகன் பருத்தித்தறை
தனிமனித வாழ்வியல் முன்னேற்றம் ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்தை’ நிர்ணயிக்கின்றது. முன்னேற்றம்’ என்பது பரந்துபட்ட அர்த்தத்தை தன்னகத்தே கொண்ட ஒரு பதம். முன்னேற்றம் மானிடத் திற்கே உரித்தான ஒரு சொத்து. மனித வாழ்வியலில் பல கோணங் களில் ~ஏற்படுகின்ற வளர்ச்சியே முன்னேற்றமாக பரிணமிக்கின்றது. மனிதன் ஒரு சமூகமாக வாழ அழைக்கப்பட்டாலும், 'தனிமனித வாழ்வின் முன்னேற்றமே குழுவின்\சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றது.
முன்னேற்றம் ஒருவனின் உடல், உள ஆன்மீகம் என்பவற்றில் நிகழ்கின்றது. இந்த முன்னேற்றம் “சுயநலம்’ என்னும் அர்த்தம் கொண்டதல்ல. மாறாக, சமூக முன்னேற்றத்தின் ஆரம்ப படியாக இது நிகழ்கிறது. சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு எவ்வாறு தனிநபர் காரணமாக இருக்கின்றாரோ அவ்வாறே சமுதாய முன்னேற்றத்திற்கும் தனிநபர் காரணமாகின்றார். தனிமனிதனில் ஏற்படும் வளர்ச்சி அவனது குடும் பத்தை, அவனது சக நண்பர்களை, அவனது வேலைத்தள ஊழியர் களை, அவனது தொடர்புக்கு உட்பட்டவர்களையும் பாதிக்கின்றது. இவற்றில் ஏற்படும் தாக்கம் சமுதாய முன்னேற்றமாக பரிணமிக்கின்
நான

Page 23
42
றது. அதாவது பல தனிமனித முன்னேற்றம் குழுவான சமுதாய முன்னேற்றத்திற்கு வழிசமைக்கும்.
சிந்தனையும் உணர்ச்சியும் மனிதனை மனிதனாக்குகின்றது. இவற்றை நெறிப்படுத்தும் முறையிலேயே மனித முன்னேற்றம் தங்கியுள்ளது. "நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் வெல்ல லாம்' என்ற தத்துவ வரிகள் தனி மனித முன்னேற்றத்திற்கு உந்து சக்தி கொடுக்கிறது. ‘நான்’ என்ற இச்சஞ்சிகையின் விருதுவாக்கு ‘நான் வளர்ந்தால் நாம் வளர்வோம்’ என்பதாகும். இங்கு ‘நான்’ சஞ்சிகையை குறித்து நின்றாலும், யதார்த்தத்தில் தனிமனித வளர்ச்சி நாம் என்ற சமூக வளர்ச்சிக்கு இட்டு செல்லும் :ன்பதையே உணர்த்துகின்றது. சமுதாயத்தை முன்னேற்றத்துடிப்பவர்கள் அந்த சமுதாயத்ததில் உள்ள தனிமனிதனை முதலில் முன்னேற்ற வேண்டும். தனி நூலின் தரமே ஒட்டுமொத்த சேலையின் தரத்தை நிர்ணயிக்கின்றது.
எனவே, முன்னேற்றத்தில் முதன்மை பெற வேண்டியது தனி மடிமுன்னேற்றமே.
D66 disésid
கிருபா அக்கா
சென்ற நான் மாணவர் பகுதியில் ஆலோசனை கோரிய தயாளினிக்கு கிடைத்துள்ள ஆலோசனைகளிலிருந்து சில அன்பின் தயாளினி, நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை அதாவது ஒருவர் மேலே ஒருவர் கொண்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது உங்கள் உறவு பலப்படுத்தப்படும்
சாளினி இளவாலை கன்னியர் மட மகா வித்தியாலயம்.
உமது நண்பியிடம் நேரடியாக சென்று உம்முடன் உறவை
முறித்தமைக்கான காரணத்தை கேளும், பிழை உம்மில் எனில்
திருத்திக்கொள்ளும். இல்லையெனில் பொறுத்திரும் காலம் பதில் சொல்லும்.
ந. நிறைந்தினி
யாழ. பலகலைககழகம
உமது நண்பியை நேரடியாக, தனிமையாக அணுகுவதே அதற்கான சிறந்த வழியாகும். ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து அவருடன் கதைக்க
அ. நிலோ யாழ்-திருக்குடும்ப தமிழ் மகா வித்தியாலயம்.

43
வாசகர் தொடர்ந்த கதை
கதை சொல்வோம் :
பொ. பகீரதன் யாழ். பல்கலைக்கழகம்
தனது இன்றைய பாடசாலைப் பொழுது எவ்வாறு கழியப்போ கிறது, எனும் ஏக்கத்துடன் சந்திரன் தனது காலைக்கடன்களை முடிக்கின்றான். எப்படியாவது இன்று ஆங்கில சொல்வதெழுதல் எல்லாம் சரி எடுக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் அவசர அவசர LDITEs List-fiT606)855 ஆயத்தமாகி கொண்டிருந்தான். அதனி டையே”அம்மா எனக்கு இண்டைக்குச்சாப்பாடு கட்டித்தர வேணும், நான் வர நேரஞ்செல்லும்” எனும் தங்கையின் குரல் கேட்டு அவனும் சாப்பிடச் சென்றான். அங்கு அம்மா ஒரு கோப்பையில் இவனுக்குச் சாப்பாடு போட்டு வைத்துவிட்டு தங்கைக்கும் ஒரு பார்சல் கட்டு கின்றாள். மிச்சப் புட்டுத்தான் அம்மாவுக்கு இருந்தது. இதைக் கண்ட சந்திரன், தானும் பார்சல் கட்டித் தாங்கோ என்று கேட்டால் அவள் தனது சாப்பாட்டை தந்து விடுவாளே என எண்ணி, ‘அம்மா எனக்கு இப்ப பசிக்கேல்லை. என்ர சாப்பாட்டைக் கட்டித் தாங்கோ நான் கொண்டுபோய் சாப்பிடுவன்” என்றான். உடனே தாய் அவனது சாப்பாட்டை பார்சலாக்கி அவனிடம் கொடுத்தாள். பார்சலை வாங்கித் தனது புத்தகப் பையினுள் வைத்துக்கொண்டு, தனது மேசையடிக்குச் சென்று எழுதாத ஒற்றையுள்ள பழைய கொப்பிகளுள் ஒன்றையும் எடுத்துக் கொண்டு, தங்கையைக் கூட்டிக் கொண்டு நடக்க ஆரம் பித்தான்.
கால்கள் வேகமாக ஓடின. ஆனால் இவனது கையிலோஆங்கி லச்சொற்கள் நிறைந்த ஒற்றை காணப்பட்டது. அவற்றையும் பாடமாக்கிக் கொண்டே போனான். இரவே அவன் பாடிழாக்கி யிருப்பான், ஆனால் அம்மா நீண்ட நேரம் தனியாக இருந்து கிடுகு பின்னியதால் தன் படிப்பை நிறுத்திவிட்டு அவளுக்கு உதவச் சென்று விட்டான். இரவு பின்னினால்தான் அடுத்தநாள் அவர்களது வீட்டில் சமையல். அம்மா பாவம் பகலிலும் வேலை, இரவிலும் வேலை. நான் உதவாவிட்டால் வேறுயார் உதவுவார்கள்? இயன்றவரை நான் என்னால் முடிந்தவற்றை அம்மாவிற்குச் செய்து கொடுக்க வேண்டும், செய்து கொடுப்பேன், எனும் மனஉறுதியுடன் மீண்டும் நினைவுகளை மாற்றி பாடமாக்கத்தொடங்கினான். கிட்டத்தட்ட பாடசாலையை நெருங்கிய அளவில் எல்லாச்சொற்களும் மனதில் பதிந்துவிட்டன. இரவு படிக்காவிட்டாலும், இப்போதாவது பாடமாக்கி விட்டேனே எனும் மனத்திருப்தியுடன் தங்கையின் 6066 but பிடித்தவாறே
ர் நுழைகின்றான்
இனி நீங்கள் தொடருங்கள் 8 as 8

Page 24
44
IDT6Nsari 6a Lib
மாணவச்சகோதரர்களே, பல மாணவவாசகர்கள் “நானின் மாணவர் வட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து தம் பற்றிய தகவல்களை அனுப்பியிருக்கிறார்கள். மேற்கொண்டு பயன் பெற ஆயத்தமாகுங்கள். மேலதிக தொடர்புகள் அஞ்சலில்.
தம்பி, தங்கைகளே இம்முறை கதை ஒன்று சொல்லலாம் என எண்ணுகிறேன்; அத அமெரிக்கக்கண்டத்தை கண்டு பிடித்த மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ் பற்றியது.
1492 இல் புதிய உலகைக்கான கொலம்பஸ் புறப்பட்டுப்போனார். நீண்ட பயங்கரக் கடல் பயணம். கடலின் சீற்றம் ஒரு பக்கம், கூடவந்தவர்களின் முணுமுணுப்பு மறுபக்கம். அவர்களுக்குள்ளே எதிர்ப்பும் வன்முறையும் உருவாகின. கொலம்பஸ்சை தாக்கி கடலில் வீசிவிட்டு கரைதிரும்ப மற்றோர் திட்டம் தீட்டினர்.
திசையை இழந்தவிட்டு எங்கு செல்கிறோம்என்ற தெளிவில்லாத நிலமை. புயல் இழுக்கும் பக்கமெல்லாம் அறுபத்தஐந்த நாட்கள் அல்லோலகல்லோலப்பட்டு அவதியுற்றபோது “திரும்பி கரைக்குச் செல்வோம்” என்று கூட இருந்தோர் ஆலோசனை கூறினார்கள்.
அவ்வாறு வீடு திரும்பியிருந்தால் யாரும் அவரைக்குறை கூறியிருக்கமாட்டார்கள். அப்படி வீடு திரும்பியிருந்தால் இன்று யாரும் அவரை நினைத்திருக்கவும் மாட்டார்கள்.
சாதனையாளர்கள் எல்லாம் விடாமுயற்சியை
இறுகப்பற்றிக் கொண்டவர்கள்.
கல்லிலே சிற்பம் உண்டு- அது சிற்பிக்குத்தான் தெரியும் சொல்லிலே கவிதை உண்டு - அது கவிஞனுக்குத்தான் தெரம் இயற்கையிலேஇறைவன் உண்டு - அது பக்தனுக்குத்தான் தெரியும் ஆக்கபூர்வமான விமர்சனத்திலே ஆரோக்கியமான வளர்ச்சி உண்டு
- இது உங்களுக்கு தெரியும்
எனவே உங்கள் பாராட்டு கடிதங்களையும், விமர்சனங்களையும்,எமக்கு அனுப்பிவையுங்கள்.
நான்
 
 

45
வாலிப வசந்தங்கள்
“எண்ணப்பறவை சிறகடித்த விண்ணில் பறக்கின்றது’
இளைய வசந்தங்களே,
இளமை இனிமையானது, சுகமானது, ஒருமுறை மட்டும் வாழ்வில் மலர்வது. மனித வளர்ச்சிப்படிகளின் பொற்காலம் இளமைக்காலம்தான். இளம் இரத்தத்தின் ஜீவ அணுக்கள் சித்தத்தை துடிதுடிக்க வைக்கின்றன. ஒடிவரும் ஆற்றுநீரைக் சுடடிக்கைகோர்த்து நிறுத்தலாம் என எண்ணும் காலம். மலையைத் தலையாலே முட்டி உடைக்கமுடியும் என சபதமிடும் காலம். வாதத்திற்கு எதிர்வாதம் பேசுவதில் பெருமை கொள்ளும் காலம். இளமைக்கால சாதனைகளும், இனிய ங்னைவுகளும்தான் முதுமையை முழுமைப்படுத்துகின்றன.
முன்னேற்றத்திற்கான அடித்தளம் இடப்பட வேண்டியது இந்த இளமைக் காலத்தில்தான். ບົເຫນGrBມITBງ இடங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான அத்திவாரம் போடப்பட்டு விட்டதா? ஆம்’ என்போர்க்கு எனது பாராட்டுக்கள். “இல்லை’ என்போர்க்கு இளவலின் அன்பான ஆலோசனை,
“மனிதனின் எண்ணங்களே, மனிதனை உருவாக்குகின்றன.” எண்ணங்களின் இருப்பிடமே மனிதன். எண்ணங்கள் விதைகள். செயல்கள் எண்ணங்களின் கனிகள். எண்ண விதையிட்டு செயல்ரீர் பாச்சுங்கள் அமோசு சுனிகளை அறுவடை செய்வீர்கள். எண்ணம் வலிமை மிக்கது. எண்ணம் மகத்தான சக்தி கொர்ேடது. முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள்தா.ே வாழ்விலே முன்னேறமுடியும். டிரைன் என்ற தத்துவமேதை “எண்ணங்களை உள்ளே விடுங்கள். முடியும் என்ற எண்ணங்களைத்திரும்பத்திரும்ய எண்ணுறுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கின்றது. நமது நம்பிக்கை செயலாகப்பரிணமிக்கின்றது” என்கிறார். இருக, முன்னேற்றத்திள் முதற்படி முடியும் என்ற எண்ணமே.
எண்ணம் விதையாகட்டும் செயல் நீராகட்டும் முன்னேற்றம் கனியாகட்டும் எதிர்காலம் இனிக்கட்டும்
- இளவல் -
நான்

Page 25
46
உங்களுக்கு ரென்சனா?
றிலக்ஸ். றிலக்ளல்.
ரென்சன். ரென்சன் . sориштLп அடக்கவே முடியவில்லை அப்படித்தானே. ஏன் தெரியுமா?
நாட்டில் பலவித நெருக்கீடுகள், எமது சூழலும் அப்படித்தானே. இதற்குள்ளே அகோர வெய்யில் அப்பப்பா தாங்கமுடியவில்லை. இதைவிட காலை முதல் மாலை வரை அவசர அலுவலாக அங்குமிங்கும் அலைவதற்கு நேரமே போதவில்லை. இதற்கிடையில் இறங்கி ஏறி சோதனை சாவடிகளைத்தாண்டிச் சென்று வருவது என்றால் கேட்கவும் (3660irGupt?
அடடா, இது எனக்கு மட்டும்தானா என்றால் இல்லை. இப்போது எதிரே காணும் ஒவ்வொருவரும் “தனக்கும்” என புலம்பிக் கொள்கி றார்களே.
அப்போ, இதனை தீர்க்க வழியே இல்லையா? எதுவும் சொல்லி விடலாம். நடைமுறைப்படுத்துவது என்றால் முடிகிறதா? முணுமுணுப்பதை விட ஒருமுறை முயற்சித்துத்தான் பார்ப்போமே.
கொஞ்சம் முன் காலை 5-30 போல் எழும்பி இரண்டு நிமிடம் அமைதியாக இன்றைய செயற்பாட்டை திட்டமிடுங்கள். மன அமைதியாக ஒரு குளிப்பு போட்டுப்பாருங்கள். தூய உடையை அணிந்து அழகாய் இருங்கள். இன்று ஏதாவது நல்ல ஒரு சிறிய செயல் செய்து மற்றவரை மகிழ்விக்க முடிந்தால் அதுவும் மகிழ்ச்சிக்கு வழிகோலும் அல்லவா. இன்றைய நாளில் அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கண்டுபிடித்து ஒருசெயலை தவறாமல் செய்து விடுங்கள்.
பெரிதாக இல்லாவிட்டாலும் சிறுஉதவி போதும். நல்லதை எண்ணிய உங்களுக்கு மற்றவர்களின் வார்த்தை, செயல் சிலவேளை பொறுமைக்கு சவால் விடும் அப்படித்தானே? அவர்கள் சொல்லட்டும், நீங்கள் முயலுங்கள். இன்று நீங்கள் எடுத்த தீர்மானம் ரென்சனைக்குறைக்க அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சகித்து அவர்முன் சாதுவாக செயல்படுங்கள். கந்தோரிலோ, வீட்டிலோ, வெளிநண் பர்களிடமோ; மற்றவர் பற்றிய வீண் அரட்டைக்கு சந்தர்ப்பம் கொடுத்துவிடாது நல்லதைப்பாராட்டி மகிழ்வூட்டிப்பாருங்கள்.
பற்றாக்குறை, தட்டுப்பாடுகள் இருக்கும். இருப்பதை சமாளிக்க முயலுங்கள். முடியாதுதான். முயற்சிக்க. காலையில் எடுத்த தீர்மானப்படி இன்று எப்படியும் சவால்களுக்கு முகம் கொடுத்து வெல்ல வேண்டும். முன்மாதிரியாக என் சொல் செயல் முன் இருப்போருக்கு ஒரு 960)Lustel TLDsf86, இருக்கிழகரஎனேேடுப்பாருங்கள்.
நான்

47
உங்கள் முகத்தை தொங்கப் போடாது மகிழ்வூட்டும் மன உணர்வை கைவிட்டு விடாதீர்கள். அடடா, மிக அகோர வெய்யிலாய் இருக்கிறதே என்ன செய்யலாம். நல்ல குளிர்ந்த தண்ணிரை நன்றாக அருந்துங்கள். கிணற்றில் இருந்து நேரடியாக அள்ளிக் குடித்தால் அதுவும் நலலதுதான.
வேலைகளை குறிப்பிட்ட நேரத்துக்கு முடித்துப்பாருங்கள்.
உணவு நேரங்களை தவறவிடாது கவனித்து இருப்பதை ரசித்து உண்டு மகிழ பழகிவிடுங்கள். நன்றாயிருப்பதை பகிர்ந்து மகிழ்வூட்டப் பாருங்கள். உங்கள் உரையாடல் அவர்களை மகிழ்வூட்டுகிறதா எதிர் பார்க்கப்படுகிறதா அளவோடு நிறுத்துங்கள்.
மாலை சிறு உலா, நண்பர்களுடன் சிறு உரையாடல் நாட்டு நடப்புகளாக இருந்தாலும் ஆரோக்கிய விமர்சனங்களை ஏற்று கலந்துரை யாடுங்கள்.
இன்று நடந்த விடயங்களை ஒருமுறை சுய மதிப்பீட்டுடன் மீட்டுப் பாருங்கள்.
(3) மூச்சில் எல்லாவற்றையும் சரியாக நிறைவேற்ற முடியாதுதான். இன்று ஆரம்பமாக சரியை ஏற்றுக்கொள்வது போல் தவறுகளையும் திருத்திக்கொண்டு பாருங்கள். மகிழ்ச்சிதான் வாழ்வின்
வெற்றி.
- Guess -
“நான்” ஆண்டு -2001
மூன்றாம் மிலேனிய முதலாண்டில் “நான்”
தாங்கிவருவன. 38
- 2001 தை மாசி - புனர்வாழ்வு
2001 பங்குனி - சித்திரை - முன்னேற்றம் 2001 வைகாசி - ஆணி தலைமைத்துவம் 2001 ஆடி - ஆவணி - அனுபவம்
2001 புரட்டாதி - ஐப்பசி தொடர்பு 2001 கார்த்திகை - மார்கழி பொறுப்பு
جعلدجاج
நான்

Page 26
48
நீங்கள் முற்சாய்வு போக்குடையவரா?
வாழுகின்ற தேஷம், வளர்கப்படுகின்ற விதம், கொடுக்கப்படுகின்ற சூழல், ஊட்டப்படுகின்ற கல்வி, ஒதப்படுகின்ற வேதம், போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் முற்சாய்வுப்போக்கிற்குக் (Prejudice) காரணங்களாகின்றன. முதற்பார்வையும் முதற்கணிப்பும் அனேக தடவைகளில் தவறானவைகளாக இருப்பதால் இம்முற்சாய்வுப் போக்கில் இருந்த விடுபட அயராத சுயபோராட்டத்தில் ஈடுபடவேண்டியிருகிறத.
“இனம்சார் முற்சாய்வு” பெரும் பாதகமானத. அனேகமானோர் தங்கள் இனம்தான் மிகவும் மேன்மையானத என்ற முற்சாய்வுடன் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவனும் தண்மதம்தான் சரியானதும் உயர்ந்ததும் எனக்கருதவதனால் பிறமத நம்பிக்கைகளை கேவலமாக நோக்க விளைகின்றார். நிறழற்சாய்வு அநேகமானோரை பாதிக்கின்றது. தோலின் ‘கடும்’ நிறம் கீழ்த்தரமானதாக நோக்கப்படுகிறது. சாதாரணமாக எம் கலாச்சாரப் பின்புலத்தில் வெள்ளைத்தோலிற்கு ஓரிடமும் கறுப்பு நிறத்திற்கு வேறிடமும் இட்டு மக்களை, மக்களின் ஆளுமையை வரைவிலக்கணப்படுத்தி வரையறைசெய்த விடுகிறோம். ஆரிய, மேற்கத்தேயப்படையெடுப்புக்கள் அரசியல் ரீதியில் எம்மை அடிமைப்படுத்திய வரலாற்று மன வடுவும் தாழ்வுமனப்பான்மையும் எம் இனத்தில் நிறமுற்சாய்வினை புரையோடச் செய்தவிட்டன.
இவ்வாறு எம்மில் பிரதேசம்சார் முற்சாய்வு, சாகியம்சார் முற்சாய்வு, சாதியம்சார் முற்சாய்வு, மொழிசார் முற்சாய்வு என பல குழுசார் முற்சாய்வுகளும் குடிகொண்டு உள்ளன. தனியன்சார் முற்சாய்வுகள் ஒரு தனிமனிதனை உடல் உளரீதியாகப் பாதித்து இறுதியில் அவன் வாழுகின்ற சமூகத்தையும் பாதிக்கின்றன.
முற்சாய்வுகள் அறிவுக்கண்களை மறைத்த நடுநிலமை தவறவும், பிழையான முடிவுகளால் மனிதனை வழிதவறச் செய்யவுமே தணைபோகின்றன. சிலவேளைகளில் அவை மனிதனில் தலைக்கணத்தை உண்டு பண்ணவும் சிலவேளைகளில் தாழ்வுமனப்பான்மையை வளர்க்கவும் காரணங்களாகின்றன. எனவே முற்சாய்வுப் போக்கிலிருந்து எம்மை விடுவித்த சீர்தாக்கும் கோல்போல சுயநலம் கருதாத கணிப்புகளினடிப்படையில் எம் தீர்மானங்களை மேற்கொள்ளவும்
வாழ்க்கைச்சவாலை வெல்லவும் அறிவுக்கண்களைத்திறப்போம்.
தொகுப்பு
சதா பேராதனை

அடுத்த நானில்.
2001 வைகாசி - ஆனி மலரில்.
தலைமைத்துவம்
(LEADERSHIP)
உங்கள் பெறுமதி மிக்க ஆக்கக்கட்டுரைகளை வரைந்து சிறப்பியுங்கள்.
20 சித்திரை 2001 இற்கு முன்பு
எமக்குக்கிடைக்கும் படியாக அனுப்பி வையுங்கள்.

Page 27
"நான் உண்னுடன் நல்ல உள்ளத்தை
"நான்’ கொணரும் கருத்துக்களை உண்டு
కా
ĝiECITRE ប្រែ இபரிகள்
-اقہis. து: "ஆன்க்
தனிப்பிரத ஆண்டு ச உள்ளூர் வெளியூர்
முகவரி:
நிரந்தரம் "நான்', டி மசனட் இறையியலகம், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம், இலங்கை,
J.S. OFFSET Prin

s
})
சங்கமிக்க, உருவாக்க.
உளவியல்
வடண் பகிர.
15/-
ந்தா
ー "00/= - 5 S
தற்காலிகம்
"நான்' டி மசனட் இறையியலகம், சில்லாலை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
இலங்கை,
الـ
ers, Sillallai.