கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2002.11-12

Page 1


Page 2
27
I 警 இதழ்: 06 རྨ་
உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்கழி 2002 விலை 20k
O --- ஆசிரி ° 安決
D GIIGGIT••••• | curso Bits Surib O.M., B.Th., STL.
ஆசிரியர் அரும்புகள் உறங்கு நிலையிலா உங்கள் மனம் முகங்கொடுத்தல்
தீர்ப்பது எப்படி
நேர்காணல்
என்னை வாழவிடுங்கள் ஆஸ்பத்திரியில் கண்காட்சி மனிதனாக மனிதனை வாழ வைப்பது. ஊர்க்கிளி
கருத்துக்குவியல் - 94 வாழ்வை முன்னெடுக்கும் தரிசனங்கள் தடைகள் தாண்ட முகங்கொடு வாலிப வசந்தம்
“NAAN!” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jafna, Sri Lanka.
Te8 Fax 021-2721
இணையாசிரியர்:
a IIII air fuair O.M.l, B.Th., B.A. (Hons).
ஒருங்கிணைப்பாளர்: ஜெறோம் 0.M..
நிர்வாகக் குழு அ.ம.தி. இறையியல் சகோதரர்கள்.
G82πεπί ΙΙΠΤουΙr.
ஆலேங்சகர்
|GLIS'u IGr O.M.I., M.A.
டானியல் 0.M., M.A.
lastaarorbo.M., Ph.D. "|N. சண்முகலிங்கன் Ph.D.
Dr. R. falarıfinasi M.B.B.S.
Sarir H.C. Dip. in Counselling, Kent. gaarbratoO.M.I., B.A. (Hons), B.Th., Dip.Ed. gaIIrcuirab O.M.I., M.Phil.
 
 
 
 

ஆெசிரியர் அரும்புகள்
தா
தீவின் துகை
ཡོད༽
வாசக அன்பர்களுக்கு வணக்கம்.
ܓܚܟ
---'一°
“முகங்கொடுத்தல்" மனித வாழ்வின் சகல அம்சங்களிலும் கையாளப்படும் ஒரு படிமுறை எனலாம். புதிய திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தவும், தேர்வுகளை வெற்றியீட்டும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், மனித தெரிவுகளை நல்ல முறையில் முன்னெடுப்பதற்கும், தொய்ந்து விடாமல் அவற்றைக்காட் பாற்றுவதற்கும், மனித உறவுகளை ஆரோக்கியமாக அனுபவித்து அதில் வளரவும், தக்கவைக்கவும் இவற்றிற்கு மேலாக அன்றாட வாழ்வின் வெற்றிகளை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வது போல தோல்விகளையும் இழப்புக்களையும் அவற்றோடு ċing2 LLJ சவால்களையும் நம்பிக்கையுடன் சந்திக்கவும் முகங்கொடுத்தல் 1 அவசியமாகின்றது.
நாம் எல்லோரும் எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விடலாம். ஆனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அணுகுமுறையை "முகங்கொடுத்தல்” நமக்குக் கற்பிக்கின்றது. வாழ்வின் முதுமையும் நிறைவும் அதை ஒருவர் கையாளும் முறையில்தான் இருக்கின்றதென்று உளவியலாளர் சிந்திப்பர் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை ஊடறுத்துப் பார்க்கவும், சலிப்பின்றி ரர்வின்றி அவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் முகங்கிொடுத்தல் மனிதனை வலுப்படுத்துகின் றது. நமது மண்ணின் அவலங்களும் மக்களின் நெருக்கீடுகளும் நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு ஆடைக்காரணமாக அமைந்து விடுவது எதற்கும் எந்த சூழ் இலும் முகங்கொடுக்க நாம் பழகிக்கொள்ளவில்லை, QeVez- \உருவாக்கப்படவில்லை என்பதாகும். துணிவுடனும் உற் மனத்திடனுடன் கூடிய
அழிவு நெழிவுகளுக்கும்
நம்பிக்கையுடனும், வாழ்வுக்கும்.\ முகங்கொடுக்கும் போது வெற்றி நமத்
“முகங்கொடுத்தல்” பற்றி அரிய பல சிந்தனைகளையும், ஆக்கங்களையும் இவ்விதழ் சுமந்து வருகின்றது. படித்து பயன்பெறுவீர்களென்பது நமது திண்ணம். கருத்துக்களை பகிர்வீர்களென்பது நமது எதிர்பார்ப்பும் கூட. படியுங்கள்நண்பர்களையும் படிக்கத் தூண்டுங்கள்.
சூாழமையுள்ள வாழ்த்துக்களுடன் ம. போல் நட்சத்திரம் elp:)

Page 3
“நான்” கார்த்திகை - மார்கழி 2002 2
உறங்கு நிலையிலா உங்கள் மனம்?
V. P. தனேந்திரா சமூகவியல் சிறப்புக்கலை யாழ். பல்கலைக்கழகம்.
எந்தளவுக்கு ஒரு மனிதன் சிந்திக்கின்றானோ, அந்தளவுக்கு அவனால் படைப்பாற்றலையும் புத்தாக்கத்திறனையும் முன்னெடுக்க முடிகின்றது.
நாம் ஒவ்வொருவரும் மிகவும் சிறப்பாக சிந்திக்கின்ற மூளையுடன்தான் பிறந்திருக்கின்றோம். செயற்படவும் - வளர்ச்சி பெறவும் - வாழ்வை முன்னெடுத்து செல்லவும் - அதனால் வருகின்ற சவால்களுக்கு இலகுவாக முகம் கொடுத்து தீர்வு காணவும் மூளை உதவுகின்றது. ஆனால் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தாமல் இருப்பதனால் நமது எல்லையற்ற ஆற்றல்கள் உறங்கு நிலையில் இருந்து அழிந்து போகின்றன.
உலகத்திலேயே மிகச்சிறந்த மூளை ஒன்றினைப் பெற்றிருந்ததாக கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்ரைன் மூளையின் பத்தின் இரண்டு பகுதியினுடைய ஒருசதவீத திறமையினைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம் என்று சொல்லுகின்றார். மிகுதித் திறமைகளை நாம் சிந்திக்காது இருப்பதால் வெளிப்படுத்த முடியாமல் போகின்றது. இதற்கு முக்கிய காரணங்களாக அமைவது குழந்தையின் சூழலின் தாக்கமும், உருவாக்கத்தில் ஏற்படுகின்ற
பாதிப்புக்களுமே ஆகும்.
“மனிதன் பிறக்கும் போது ஒரு வெற்று உயிரியாகவே பிறக்கின்றான், மனிதனது மனம் பிறக்கும்போது வெற்றுப்பலகை யாகும். பின்னர்தான் மனத்தில் பதிவுகள் உருவாகின்றன”, என்று அரிஸ்ரோட்டில் கூறுவார். இவரின் இக்கருத்துக்கு ஏற்ப ஒரு மனிதன் பிறக்கும்போது மிகவும் தூய்மையாகவே பிறக்கின்றான், அத்துடன் எல்லையற்ற ஆற்றல்களுடனும் - அறிவுத்திறனுடனும் பிறக்கின்றான்.
எனினும் அந்தக்குழந்தை உடனுக்குடன் தன்னைச் சுற்றி இருக்கின்ற சுற்றுப்புற சூழலின் தாக்கத்துக்கும், தூண்டுதலுக்கும் உள்ளாகத்தொடங்குகின்றது. அதாவது பார்க்கின்ற காட்சிகள், கேட்கின்ற சத்தங்கள், நுகர்கின்ற வாசனைகள், மற்றும் உணர்வுகள்

“நான்” கார்த்திகை - மார்கழி 2002 3
அத்தனையும் அக்குழந்தையின் அடிமனத்தின் நினைவுகளாக படிய தொடங்குகின்றன. அவ்வாறு அடிமனதில் படியும் நினைவுகள் நேரானதா? மறையானதா? என்பதை பொறுத்துத்தான் குழந்தையின் சிந்தனா சக்தியும் அமைகின்றது.
மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வின் வழியாக சொல்லு கின்றார்கள், “குழந்தைகள் ஐந்து வயதுக்குள் தான் தங்களுடைய ஆதாரத்திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்” என்று. அதற்குப் பின்னர் அவர்களுடைய படைப்பாற்றல் திறன் மிகவும் குறைந்து செல்கின்றது. இதன் காரணத்தை ஆராய்ந்த ஜான் கார்டினல், “சமுதாயம் தன்னுடைய பழக்க வழக்கங்களுக்கும், நடைமுறை களுக்கும் குழந்தைகள் கட்டுப்பட வேண்டும் என்று அவர்களை நிர்ப்பந்திப்பதே இதற்கு காரணம்” எனகிறார்.
எனவே சமூக விழுமியங்கள், மூடநம்பிக்கைகள், மரபார்ந்த வழிமுறைகள், பெரியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க நிர்பந்திக் கப்படுவது போன்ற எல்லாமே சேர்ந்து ஒரு குழந்தையின் ஆற்றலில், நடத்தையில் மாறுதல்களை ஏற்படுத்தி தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன. இதுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்ரைன் சொல்லும் ஒரு சதவீத திறமையினைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம் என்பதற்குக் காரணம் ஆகும்.
சுயதேடலுக்காய் எதிர்கொள்! “என்னைப் போல என்ரி *$/. “என்ர சிந்தனைகளை “என்ர விருப்பங்க க்கு “எங்கட பரம்பரைை க்
கிே போக வேணும்”
99.
வேணும்
இத்தகைய நோக்கிலேே * வளர்ப்பதினால், பிள்ளைகளின் திேல்? வத்தினால் 'எழும் ளித்த 鯊 விடுகின்றார்கள்.
ள்நம் ர்ளைகளுக்கு பரிசுப்
ಟ್ಲಿ! னால், பிள்ளைகள் க்கி, (அர்த்தம் புரியாமல்,
கேள்விகளுக்கு, தகுந்த பதில் அ அத்துடன் தமது சொற்படி நடந்துகொ6 பொருட்களும், பாராட்டும் கொடுத்து ஊகி அதனையே தமது அடிமனதில் உருவா தமது நடத்தைகளில் வெளிப்படுத்துகின்றார்கள்.
தமது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருக்கின் றோம் என்பதை வெளிக்காட்டும் பெற்றோர் கூட, பாசம் என்ற நிலையில் குழந்தைகளின் சுயமுயற்சிக்கும், சுய சிந்தனா சக்திக்கும்

Page 4
“நான்’ கார்த்திகை - மார்கழி 2002 4. கட்டுப்பாடு விதித்து எப்பொழுது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்றெல்லாம் வற்புறுத்தல் செய்வார்கள்.
இதனால் பெற்றோர் தம்மையறியாமலே தங்களில் தங்கி வாழ ஊக்குவிக்கின்றார்கள். இச்செயற்பாடுகள் எல்லாம் சுயமுயற் சிக்கு தடையாகின்றன. இவை ஆழ்மனதில் பதிந்து “தொட்டிலில் பழக்கம் சுடு காடு மட்டும்” என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து, வாழ்வை முன்னெடுத்துச் செல்லவும், அதனால் வருகின்ற சவால்களை எதிர்கொள்ளவும் முடியாமல் அந்தரிக்கின்றார்கள்.
ஏன் ? எதற்கு? எப்படி ?
"எண்ணெண்டுதான் புதுசு புதுசாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறாங்களோ தெரியாது”
“கணிதத்துறையில அவர் பெரிய மண்டக்காய்”
“இவ்வளவு காலமும் எவராலும் தீர்க்க (pliqui. Tg5 பிரச்சனையை, இப்ப இவர் தீர்த்திட்டார் தானே உண்மையிலே திறமைசாலிதான்”
“அந்த கருத்தரங்கில், என்ன மாதிரி எளிய உதாரணங்கள் மூலம் பெரிய விடயங்களையும் விளங்கப்படுத்தினார் பாத்தியே’
“செயலிழந்து போன இந்த நிறுவனத்தில், இப்ப தல்ைமை வகிப்பவர் புதுப்புது காரியங்களை முன்னெடுத்துச் செல்கின்றார்”
இவ்வாறு எம்ம்ை:சுற்றியுள்ளவர்களை பார்த்து திறமை சாலிகள், வெற்றி பெற்றவர்கள், சாதனை படைத்தவர்கள் என்று புகழ்ந்து பேசி, இவை "எழிக்கு கிடைக்கவில்லையே, என்று கூறி, அவர்கள் அதிஷ்டத்துன்பிறந்தவர்கள் என்கின்ற முடிவுக்கு வந்தும், எமக்கு விதிப்பயனால் அந்த அதிஷ்டம் இல்லை என்ற ஆறுதலையும் சொல்லிக் கொள்ளுகின்றோம். இதன் சாட்டாக, சாத்திரமும் .பார்க்க முற்படுகின்றோம். இவை அதிஷ்டத்தினால் விளைந்தவை அல்ல, மாறாக திறமைசாலிகள் தமது ஆற்றலை அறிந்து, எதையும் தூரநோக்குடன் சிந்தித்து, வித்தியாசமாக நோக்கி அதற்கான காரணகாரியத்தை தேடுவோராக இருந்ததினால், தமது வாழ்வை முன்னெடுத்து அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
 

"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 5
எமது நடைமுறை வாழ்க்கையில் நிலவும் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு காரணகாரியத்துடன் தான் நிகழ்கின்றது. ஆனால் அவற்றைப் புரிந்துகொள்ள நாம் முயற்சிப்பது இல்லை ஏன்? எதற்கு ? எப்படி? என்ற கேள்விகளைக்கேட்டு சிந்திக்கின்ற போது அதற்கான அர்த்தம் புரிய முடியும். இவற்றைச் செய்ய நாம் தவறி விடுகின்றோம். இதனால் புதிய படைப்புக்களைச் செய்ய முடியாது இருக்கின்றது. இவ்வுலகில் நாம் பார்க்கின்ற அத்தனை பொருட்களும் யாரோ ஒருவரின் சிந்தனையில் தோன்றி உருவானவை தான். ஆகவே எம்மால் ஏன் புதிய படைப்புக்களைச் செய்ய முடியாது இருக்கின்றது? நாம் முயற்சிப்பதில்லை, எமது சிந்தனைகளை பிரயோகிக்காது ஆற்றலை உறங்க வைத்துள்ளோம் என்பதே காரணமாகும்.
வழமையாக நடக்கின்ற நிகழ்ச்சிதான், மேலே உள்ள பொருட்கள் கீழே விழுவது, இந்நிகழ்வு சேர் ஐசாக் நியூட்டனின் சிந்தனையில் கீழே விழுந்த ஆப்பிள் ஏன் மேலே போகக் கூடாது? என்ற கேள்வி எழுந்து, அதற்கான காரணகாரிய தொடர்பை ஆராய்ந்து, புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்தார். இதைப்போல நாமும் எமது சமூகத்தில் நடக்கின்ற நடவடிக்கைகளை அவதானித்து ஏன் ? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் மூலம் அர்த்தம் கண்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சிந்தையில் மாற்றம் கொள்!
வாழ்க்கையில் ஒரு நிலை வளர்ச்சி அடைந்ததும் அடுத்தகட்ட வளர்ச்சி என்ன, என்ற திட்டமிடுதல்தான், உயர்ந்த வாழ்வை நோக்கி நகர்தலுக்கு அடையாளமாகும். இதற்குப் புதிய சிந்தனைகளை உருவாக்கி, %ST அடைந்தால் முன்னேறு வதை யாராலும் தடைசெய்துவிடமுடியாது. காலம் சரியில்லை என்று காலத்தைத் தட்டிக்கழிக்காது உருவாக்கி வாழ்வை எதிர்கொஸ்லுஇ
சிந்தித்தால் எதிலும் வளர்ச்சி இல்லை எதையும் தூரநோக்குடன், அகன்ற பார்6ை முகம்கொடுக்க முயலவேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத்தல்ைவர்கள் ஆகியோரின் செல்வாக்கும் எம்மீது அதிகமாக இருக்கின்றது. அதாவது அவர்கள் எப்படிச் சிந்திக்கின்றார்களோ அதன்படி நாமும் சிந்தித்து ஒத்துப் போக வேண்டும். அல்லாவிட்டால் தண்டனையும், சமூகத்தில் கூடாத

Page 5
"நான்” கார்த்திகை - மார்கழி 2002 6
பெயரும் வந்துசேரும். இதேநேரம் புத்தாக்கத்திறனை முன்னெடுக்கின்ற வழிகாட்டிகளும் இருக்கவேசெய்கின்றார்கள். இவர்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். எமது நடை உடை பாவனையில் கூட நாம் சுயமாகச் சிந்தித்து செயற்படாமல் மற்றவர் போல் பிரதி பண்ணுகின்றோம்.
இவற்றின் விளைவால் குடும்ப சமூக சமய பொருளாதார தொழில் வாழ்வில் நாம் எமது பொறுப்புக்களைச் சரிவர முகம் கொடுக்க முடியாது அந்தரிக்கும் நிலை உருவாகின்றது. அத்துடன் பிரச்சனைகளைக்கூட (p60Dust 85 அலசி ஆராய்ந்து தீர்வு காணுவதை விடுத்து மேலோட்டமாக தீர்வு காண்பதும், நேரான வழியில் முன்னேறாமல் குறுக்குவழியில் முன்னேறுவதும், தலைமைப் பொறுப்புக்களை ஆக்கபூர்வமாகச் செய்து முடிக்காது சீரழிப்பதும் மற்றவர்களின் நற்கருத்துக்களை ஏற்க மறுப்பதும், எமது உருவாக் கத்திலும் - உருவாகுவதிலும் ஏற்படும் குறையாகும்.
எனவே “என்னால் முடியும், நான் என் ஆற்றல், திறமைகளை அறிந்துள்ளேன். எந்த இடத்திலும் வெளிப்படுத்தத் தயங்கமாட்டேன் எனத்துணிவுடன் செயற்படுபவனே தன்னை வெளிப்படுத்தி தலைமைகளை ஏற்றுக்கொள்ளுகின்றான்” என்பார் எழுத்தாளரும், உளவளத்துணையாளருமான கோகிலாமகேந்திரன். இவரின் இக்கருத்துக்கு ஏற்ப நாம் எமது திறமைகளை அறிந்து எம்மை அடையாளப்படுத்தி, நல்ல தலைமைகளை ஏற்றுக் கொண்டு நற்சமூகம் மலர ஆக்கபூர்வ சிந்தனைகளை ஆழ்மனதில் உருவாக்கி வாழ்வை முகம் கொடுப்போம். -
20
2003 வைகாசி-ஆனி இசிைந்துடன்படல் (Adjustmen 2003 ஆழ ஆவணி :చ: isopa (Satisfaction) 8 2003 புரட்டாதி-ஐப்பசி வாதுத்தலைப்பு
03 கார்த்திகை-மார்கழி infantriggi (Revenge)
 
 
 
 
 
 
 
 
 
 
 

"நான்” கார்த்திகை - மார்கழி 2002
令 令 2ésa(Sestab556)
Fr. றெக்ஸ் கொண்ஸ்ரண்ரைன் C.M.F
B.A (Phil) Dip. in Counselling (Kent)
எப்படி முகங்கொடுக்கப்போகின்றேன். என்ற பயம் என்னை வாட்டுகின்றது. ஒருவரின் உள்ளத்திலிருந்து எழும்புகின்ற கேள்வி. இந்த கேள்வியை கேட்கும்போது பல உணர்வுகளால் ஒருவர் அலைக்களிக்கப்படுகிறார். இவைகள் எல்லாவற்றையும் எப்படி சமாளித்து சமூகத்திற்கு நான் முகம் கொடுக்கப் போகின்றேன்? இது பலர் அன்றாடம் கேட்கிற ஒரு சாதாரண கேள்வியாக அமைந்தாலும் இதன் உளவியல் ரீதியான கனாகனத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளத்தயங்குகின்றார்கள் ~ என்ன இது இன்று வரும் நாளை மறையும் தொடர்ந்து எனக்குள் இருக்கப் போகின்றதா? என்ற வினாவினால் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு உண்மையாக விடைகாண வேண்டுமென்றால். நாம் நிற்கவேண்டும் ஓடிக்கொண்டிருக்கும் உலகோடு சேர்ந்த நாமும் ஓடி விடாமல் தரித்த நின்று என்னையே நான் கேள்வி கேட்க வேண்டும்
முதலாவதாக - எப்படி முகம் கொடுக்கப் போகின்றேன் என்கின்ற விழிப்புணர்வு எனக்குள் இருக்க வேண்டும் ஒரு பிரச்சனையை எதிர்நோக்கும்போது அந்த பிரச்சனை உண்மையாகவே எனக்குள் இருக்கிறதொன்று (உ+ம்) உற்ற நண்பரோடு பழகிய ஒருவர் வாய்த்தகராறு ஏற்பட்டதால் உறவு முறிகிறத. அவரால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னால் ஒரு மணி நேரம்கடட அவரோடு பேசாமல் இருக்க முடியவில்லை நாளை பல்கலைக்கழகத்தக்கு வரப்போகிறார். எப்படி முகம் கொடுக்கப்போகின்றேன் என்ற பயம் என்னைப்பற்றி தவறாக நினைக்கப் போகிறார் எனது நண்பன். என்னைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன சொல்லப் (உண்ணுஷ்ர் முதலில் இனம் கண்டு கொண்டு பிரச்சனையின் மையப்பொருளை ag" துகொள்ள வேண்டும்
தெளிந்து ܚܼܙܚܔ݂ܔܛ
靛
இரண்டாவதாக - பிரச்சனைக்குரிய கொண்டவர் இததான் உண்மையான என்று உறுதிப்படுத்தி அதிலிருந்து விடுபட அவர் முயல வேண்டும்.இது இந்தில் நபர் தனது
பிரச்சனையை இனம் கண்டு கொண்டு முன்னோல்
எனத பிரச்சனைக்கு அத்திவாரம் என்று ഉ ഞില്ക്ക് கொடுத்து விடுபட முயலவேண்டும்

Page 6
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 S
மூன்றாவதாக - தனது பிரச்சனையை இனம் கண்டு கொண்டவர் பிரச்சனையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது'இந்த பிரச்சனை எனக்குள் உருவாவதற்கு காரணம் என்ன இதனால் நபரின் வாழ்விலும் நடத்தையிலும் ஏற்படும் மாற்றங்களை விளங்கிக் கொள்பவராக இருக்க வேண்டும். இதனை நன்கு புரிந்து கொண்டவர் தனது மாற்றங்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் விளைவுகளையும் பாதிப்புக்களையும் நன்கு உணர வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்படும்போத கோபம் வருகிறது கோபம் ஏற்படும்போது அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை பொருட்களை எறிவதம், உடைப்பதும், தீயவார்த்தைகளால் பேசுவதம், உடல் சேதம் விளைவிப்பதமாக இருந்தால் அவர் இவற்றிற்கு எப்படி முகம் கொடுக்கப்போகிறார்? என்பதை நன்றாக விளங்கிக் கொண்டு செயல்படுவாராகில் நன்றாக அமையும் அல்லாவிட்டால் வீணான விரயங்களை தனது வாழ்வில் தேடிக்கொள்வார்.
நான்காவதாக - அவர் புரிந்து கொண்டதையும் - தனது நடத்தையில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய மாற்றத்தையும் உணர்ந்தவராய் செயல்முறையில் இயங்க / செயல்பட முனைய வேண்டும் - செயல் முறைகளை நடைமுறைப்படுத்த தாமாகவே எடுத்துக்கொண்ட நபர் ஒழுங்காகத் தான் எடுத்த தீர்மானங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறாரா என்று தனது ஆற்றுப்படுத்தினரோடு சேர்ந்த முன்னடத்திக் கொண்டு செல்லவேண்டும் தனித செயல்திட்ட நடவடிக்கைகளை சரியாக எடுத்துச்செய்து கொண்டு போகும் போத நபர் தெளிவாக தன்னிலே மாற்றங்களை உணர்ந்து கொண்டு வரலாம். -
கருத்துக்குவியல் s
தை-மாசி 2002
ஒருவனது இயற்கையான குணவியல்புகள் அவனது தன்னடக்க
முயற்சியை பாதிக்குமா/பாதிக்காதா
உங்கள் கருத்துக்களை 20.12.2002 க்கு முன் அனுப்பிவையுங்கள்.
 

"நான்” கார்த்திகை - மார்கழி 2002 9
திரப்பது எப்படி?
- யோ. யு. கமலானந்தன்.
வசந்தா என்னும் ஒர் இளம்பெண் ஒவ்வொருநாளும் சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்வாள். அவள் யாழ்ப்பாணம் செல்வதற்காக சாவகச்சேரியில் பேருந்துக் காகக் காத்திருக்கும் ஒவ்வொருவேளையும் அவளுக்கு ஏமாற்ற நேரமாகவே இருந்தது. ஒவ்வொருநாளும் அவள் பேருந்தில் இடம்பிடிப்பதற்காக நடுவெய்யிலில் வரிசையிலும், மக்களின் நெரிசல்கள் மத்தியிலும் அரைமணி நேரம் காத்திருப்பாள். ஆனால் பேரூந்து ஒவ்வொரு முறையும் அந்த பேருந்து நிலையத்திற்கு வரும்போது மக்களை நிறைய ஏற்றிக் கொண்டு வரும். மக்கள் நெருங்குப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இது வசந்தாவிற்கு ஒவ்வொருமுறையும் ஏமாற்றத்தைக்கொடுத்தது. ஆனால் நேரத்திற்கு, தான் யாழ்ப்பாணம் போக வேண்டும் என்ற ஆவலில் அவள் மக்கள் நெரிசலையும் பாராமல் ஏறிக்கொள்வாள். ஆனாலும் அவளுக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஏனென்றால் மக்களின் பைகளும், பொதிகளும் அவளை இடிப்பதும், அவள் தோள் மேல் விழுவதுமாக இருந்தன. இவ்வாறெல்லாம் நடக்கும் போது சில வேளைகளில் வசந்தா பொறுமை இழந்து விடுகின்றாள். சிலவேளைகளில் அவள் போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு நேரத்திற்கு போய் சேரமுடியாமல் போய் விடுகின்றது. இதனால் அவள் தனது செயலை முன்னெடுத்து இலக்கை அடைய முடியாமல் போய்விடுகின்றது. இந்த சந்தர்ப்பம் மட்டுமல்ல இன்னும் பல சந்தர்ப்பங்களும், மனித சமூக சூழ்நிலைகளும் அவளுக்கு முட்டுக்கட்டைகளாகவே இருந்தன. இவ்வாறு தனது செயலை முன்னெடுப்பதற்கு தடையாக வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அவளது வாழ்க்கை யில் பிரச்சினைகளாக அமைகின்றன. இது வசந்தாவிற்கு மட்டும் அவளது வாழ்க்கையில் நிகழும் அல்லது வரும் பிரச்சினைகள் அல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட பிரச்சினைகள் மிளிர்ந்து கொண்டே இருக்கின்றன.

Page 7
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 10 இவ்வாறாக ஒரு மனிதனுடைய வாழ்வில் பிரச்சினைகள் வரும்போது நாம் ஏன் என்ற கேள்வியை கேட்க வேண்டும். அவ்வாறு நாம் ஏன் என்ற கேள்வியை கேட்கும் போது நாம் ஒரு வகையில் பிரச்சினைக்கு முகம் கொடுத்து தீர்வு காணக்கூடியதாக இருக்கும். இவ்வாறு ஒருவன்/ள் ஏன் என்ற கேள்வியை கேளாது தொடர்ந்தும் அந்த பிரச்சினைக்குள்ளே இருந்து அவற்றுடன் வாழ்வானாகில்/ளாகில் அவர் தன்னுடைய, இலக்கை அடையும் வரை ஒரு சங்கடத்திற்கிடமான, கவலைக்கிடமான ஓர் நிலையை தன் வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருப்பான்/ள்
ஒரு தனிநபருடைய தேவைகளும், தான் வாழுகின்ற சமூகத்தினுடைய தேவைகளும் ஒத்துக் போகாதவிடத்து அந்நபர் பிரச்சினைகள்ை சந்திக்கின்றார். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தான் உயர்ந்த இலட்சியங்களை கடைப்பிடிக்க வேண்டுமென்ற கொள்கையை கொண்டிருக்கின்றபடியால், அவன்/ள் சாதாரணமான, நிஜமான, நிலையான உலகை சந்திக்கின்ற போதும் இவ்வாறான பிரச்சினைகள் 69(5 மனிதனுடைய வாழ்வில் எழுகின்றன. உதாரணமாக வசந்தா பேரூந்து குளிரூட்டப்பட்டதாக இருக்க வேண்டுமென்றும், வசதியுள்ளதாகவும் இருக்க வேண்டுமென்றும் எதிர்பார்த்திருக்கலாம். இது வசந்தாவினுடைய உயர்ந்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பு சாதாரண உலக வாழ்க்கையை சந்திக்கின்ற போது அவள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவதைப் பார்த்தோம். எனவே இந்த உண்மையான உலகில் ஒருவர் வாழும்போது தான் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ வேண்டியவராக உள்ளார். அவ்வாறு அவர் வாழாது இருந்தால், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் நிறைந்த ஓர் உலக கட்ட மைப்புக்குள் வாழ வேண்டி நேரிடும். எனவே ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை முன்னெடுக்க பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ வேண்டும்.
எனவே பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதென்றால் உடனே எழுந்து பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்நடை

"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 fff
போடுவதல்ல. மாறாக தன் ஆற்றலை, திறமைகளை, அறிவைப் பயன்படுத்தி முகம் கொடுக்க வேண்டும். முதலில் தனது வாழ்க்கையில் தடைக்கல்லாக, பிரச்சினையாக இருக்கும் சந்தர்ப்பங்களை அல்லது நபர்களை இனங்கண்டு, அந்த சந்தர்பங்களுக்கு, நபர்களுக்கு நாம் கொடுக்கும் சாதகமான உணர்ச்சிவசப்பட்ட பதிலைக் குறைத்து, எமது விருப்பமின்மையை தெரிவிப்பதன் மூலம் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியும். மேலும் என்னுடைய திறமைகள், ஆற்றல்கள், நடத்தைகளை எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி ஆராயும் போது, எந்த விதத்தில் எனது திறமைகள் ஆற்றல்களைக் கொண்டு வெற்றி கொள்ள முடியும் என்ற மனவுறுதி கிடைக்கின்றது. மேலும் பல பிரச்சினைகளுடாக தன் வாழ்க்கையில் வெற்றி கண்ட ஒருவருடைய வாழ்க்கையுடன் எங்களது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் என்ன விதத்தில் வித்தியாசப்படுகின்றோம் என்ற உண்மை எங்களுக்கு தெரியவரும். இந்த உண்மையினூடாக சில படிப்பினைகள் எம்மை எட்டும் போது அவை எமக்கு மனத்துணிவை தரும். இந்த மனவுறுதி, மனத்துணிவுடன் நாம் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியும். மேலும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தோல்விகள் சகஜம் என்ற உண்மையை உணர்ந்தால், உண்மையிலேயே இவ்வாறான ஒரு ஏற்றுக்கொள்ளும் தன்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு வழிவகுக்கும். இறுதியாக என்னை மிகவும் துன்பத்திற்கு, குழப்பத்திற்கு உள்ளாக்குகின்ற அல்லது என் வாழ்க்கைக்கு தடையாக இருக்கின்ற சந்தர்ப்பங்களை, பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை ஒரு நம்பிக்கைக்குரியவரிடமோ அல்லது ஓர் உளவியல் ஆலோசகரி டமோ பகிர்ந்து அவர் வழிகாட்டலில் வாழும் போது உண்மையி லேயே வாழ்க்கையில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க முடியும்.

Page 8
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 12
SGN&NEðots)
நேர்கண்டவர்கள்: விமல், எட்வின்
கேள்வி:
இன்று ஆசிரியர்கள் பலரின் கணிப்பின்படி மாணவர்கள் பொறுப்புக்களை முன்னெருப்பதில் தயக்கம் காட்டுவதாக சொல்கின்றார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம்?
மாணவர்களை முற்றுமுழுதாக குறைசொல்ல முடியாது. L6) மாணவர்கள் பொறுப்புக்களை முன்னெடுப்பதற்கு முன்னின்றாலும் அவர்களுக்கு தூண்டல்கள் இல்லாத படியால் தயக்கம் காட்டுகின்றார்கள். நாங்களும் சில வேளை மாணவர்கள் முன்னெடுக்க மாட்டார்கள் என்ற பிழையான முன் சார்பான எண்ணங்களை வைத்திருக் கின்றோம். மாறாக அவர்களுக்குப் பொறுப்புக்களைக் கொடுத்து, தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும்.
உதாரணமாக சில மாணவர்களுக்கு தலைமைத்துவ திறன்கள் இருக்கின்றன. ஆகவே அவர்களுக்கு கருத்தரங்குகள் வைப்பதினூடாகவோ, அல்லது ஆரோக்கியமான ஆசிரியர், மாணவர், உறவினூடா கவோ ஊக்கப்படுத்தலாம். கூடுதலான மாணவர்கள் முன்னெடுத்து செல்லும் திறன் உள்ளவர்களாக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு பொறுப்புக்களை கொடுக்கத் தயங்குகின்றோம். காரணம் என்னவென்றால்
 
 
 

wnnog Ffrengig gan Timorganaw
அச் சினை அறச்
"நான்” கார்த்திகை - மார்கழி 2002 13
கேள்வி:
தில்:
நாங்கள் அவர்களை இன்னும் குழந்தைகளாகவே பார்க் கின்றோம். ஆனால் நாங்கள் பொறுப்புக்களை கொடுத்து ஊக்கப்படுத்துகின்ற போது நாளை அவர்கள் பெரும் சாதனையாளர்களாக மாறலாம்.
முன்னெருக்கும் ஆளுமைபடைத்த பிள்ளைகளை உருவாக்குவதற்கு பெற்றோரின் பங்களிப்பு என்ன?
குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டு மென்றால் எங்களுடைய கண்ணோட்டங்கள் மாற வேண்டும். எங்களுடைய பிள்ளை வளர்ப்பு முறை பெரும்பாலும் சித்திரவதையாகவே இருக்கின்றது. பிள்ளைகளை ஒரு கோட்டுக்குள்ளே நிறுத்தி இப்படிச் செய், அப்படிச் செய்யாதே, இந்தப் பக்கம் போகாதே, அந்தப் பக்கம் போகாதே என்று வரையறை போட்டு வளர்க்கும் மனப்பாங்குதான் எங்களிடையே வளர்ந்துள் ளது. பிள்ளைகளுக்கு வரையறை தேவைதான். ஆனால் பிள்ளைகளும், பெற்றோரும் கலந்தாலோசித்து டுக்கின்ற
வரையறைகளாக அ606 இருக் வ்ேணுண்டும். அப்போதுதான் அங்கு புரிந்துணர் ಛೀ? சிலுரீடைய கருத்தின்படி பிள்ளைகளுடைய வுளிர்ப்ஜிமுஜ்து ல்தான் தங்கியிருக் ஆனால் ஒரு தந்தையின் ஜி/பிள்ளைகளின் தேவைகளை லு பெற்றோர்கள் தங்களுடைய தேன் பிள்ளைகள் மீது திணிக்கின்றார்கள். னழர்க ஒரு பிள்ளைக்கு
விஞ்ஞானப் பிரிவில் படிக்கத்தான் விருப்பமாக இருக்கின்றது. ஆனால் பெற்றோர் நீ வேறு ஒரு பாடத்தைப் படியென்று கட்டாயப்படுத்தும் போது பெரும் அநீதியைச் செய்கின்றார்கள் என நினைக்கின்றேன். பல மாணவர்களை சந்தித்த அனுபவங்களினூடாக விருப்பமில்லாத பாடங்களைச் செய்ய கட்டாயப்படுத்தப் பட்டவர்கள் பல உளச்சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார் கள் என்பதை காண்கின்றேன். இதற்கு தீர்வு காண்பதற்குப் பிள்ளைகளும் பெற்றோர்களும், ஆரோக் கியமான உறவை பேண வேண்டும். அதைவிடுத்து

Page 9
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 14
கேள்வி:
பதில்:
இந்தப் பிள்ளை உதவாது. இவவுக்கு கிரகிக்கின்ற தன்மையில்லை என்று பிள்ளைகளை குறை கூறுகின்றோம், பிள்ளைகளுடைய 929گىHB5 و LAO பின்னணிகளை உற்று நோக்க வேண்டும். அவர்களின் ஆளுமைகளை ஊக்கமற்ற வார்த்தைகளால் சிதைக்கக் கூடாது. பிள்ளைகள் மீது சில எதிர்பார்ப்புக்களை வைத்திருப்பது அவசியம்தான். ஆனால் அது நிறைவேறாத போது அவர்களை துன்புறுத்தவோ பிள்ளைகளின் சுய மதிப்பீடுகளை குறைத்து பேசவோ கூடாது. பிள்ளைகளோடு நேரம் ஒதுக்கி ஆரோக்கியமான முறையில் கதைத்து அவர்களின் மன உளைச்சல், வேதனைகளை, கஸ்ரங்களை அறிய வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிப்பட்ட திறமைகள், ஆற்றல்கள் வெவ்வேறு துறைகளில் இருந்தாலும், 6Töes6)Lu சமுதாயத்தினுடைய எதிர்பார்ப்பும், பெற்றோரின் எதிர்பார்ப்பும் கல்விதான். சில பிள்ளை களை பின்னின்று அடிக்கடி உந்தித் தள்ளுவதாலேயே சிறந்த கல்வித் தரத்திற்கு கொண்டு வரலாம் என்பது சிலரின் அபிப்பிராயம். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
எல்லாச் சிறுவர்களையும் ஒரே அச்சிலே போட்டுப் பார்க்கக் கூடாது. எங்களுடைய கற்றல் முறைகளில் நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். பிள்ளைகளின் மூளைக்குள் தகவல்களை அடுக்குவது கற்றல் முறையல்ல. அது ஒரு திணிப்பு என்றே நான் சொல்வேன். பிள்ளைகளை ஊக்குவித்து அவர்கள் தானாக கண்டு பிடித்த விடயங்களைத் தட்டிக் கொடுத்து அவர்களுடைய மறைந்த ஆற்றல்களை வெளிக் கொணர்வதுதான் கல்வியின் நோக்கு. மாணவர்களை மையப்படுத்திய கல்விதான் வெற்றியளிக்கும் என்பது எனது கருத்து. உதாரணமாக இன்றைய காலத்திலே ஐந்தாம் ஆண்டு பிள்ளையிடம் உயர்தர வகுப்பு பிள்ளையின் தராதரத்தை எதிர்பார்க்கின்றோம். இன்று சின்னப்பிள்ளைகள் வெட்டுப்புள்ளிகளைப்பற்றியே கதைக் கத்தொடங்கிவிட்டார்கள். அத்தோடு இன்று கல்வியிலே

"நான்” கார்த்திகை - மார்கழி 2002 15 போட்டி, அளவுக்கதிகமானவற்றைப் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிறோம். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எடுக்கும் பிள்ளையிடம் பெற்றோர் O/L, A/Lக்கு உரிய படிப்பை எதிர்பார்க் கிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் பாஸ் பண்ணினால், அல்லது பத்திரிகையில் பெயர் வந்தால் தங்கள் பிள்ளைகள் மேதைகளென சில பெற்றோர்கள் நினைக் கின்றனர். அதற்காகச் சிறுபிள்ளைகளை 11மணிவரை நித்திரைவிழித்துப் படிக்க கட்டாயப் படுத்துகிறார்கள். ஆதலால்தான் பிள்ளை வளர்ப்பு முறையும், கல்வியூட்டும் முறையும் வெறும் சித்திரவதைகளெனக் குறிப்பிடுகின்றேன். அத்தோடு தற்போதய ஒப்படைக் கல்வி முறைகளிலும் மாணவர்களுக்காக பெற்றோர்களே ஒப்படைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும், அதே வேளையில் ஆசிரியரும் பொறுமையாக இருந்து 56.6Ds அனைத்துப் பாடங்களையும் பார்த்து திருத்த இயலாமல் இருக்கிற சூழ்நிலையையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
பாடநேரங்களில், ஊக்கம் குன்றிய பிள்ளைகளின் பெற்றோரை, ஆசிரியர்கள் அழைத்து அக்கறையோடு அவர்களது பிரச்சனைகளைக்கதைக்க வேண்டும். ஒரு பிள்ளை படிக்கவில்லையென்றால் அதற்கு 6) காரணங்கள் இருக்கலாம். குடும்பப்பின்னணி, வீட்டுச் சூழல், வயசுக்கோளாறு), ஆசிரிய மாணவ உறவு, பயம், இப்படி 6) காரணங்கள் இருக்கலாம். ஆகவே ஆசிரியர்கள் பெற்றோரோடு கதைக்க வேண்டும். சிறப்பாக பாடசாலை முடிந்த பிற்பாடு அத்தகைய மாணவர்களோடு கதைத்து முடிந்தால் உளநல ஆற்றுப்படுத்துவர்களிடம் அனுப்பி உதவி செய்யலாம். பரம்பரை காரணமாக பிறப்பிலேயே மந்தமாகவே உள்ள பிள்ளைகளை மாற்றுவது கடினம் தான். அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு விருப்பமான துறைகளில் வளர்ப்பது நல்லது.

Page 10
“நான்’ கார்த்திகை - மார்கழி 2002 16
கேள்வி:
பதில்:
AIL, 0/L பரீட்சைகளில் தோல்வியடைந்து சமூகத்திற்கு
முகம் கொருக்கப் பயந்து தற்கொலைக்குத் துணியும் மாணவஃமாணவிகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?
எங்களுடைய சமூகம் கல்வி முறையை ஒரு போட்டி யாகத்தான் பார்க்கிறது. பரீட்சைகளுக்கு ஆயத்தப்படுத்து கின்ற பிள்ளைகளோடு பெற்றோர்கள் கூடக்கதைக்க வேண்டும். தற்செயலாக பிள்ளைகள் தோல்வியடைந் தால் அதனை ஏற்றுக்கொள்கிற பக்குவம் பெற்றோருக்கு வேண்டும். என்னுடைய அனுபவங்களிலிருந்து 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நன்கு சித்தியடைந்த சிலபிள்ளைகள் O/L இல் தோல்வியைச் சந்திக்கக்கூடிய தாகவும், O/L இல் நன்கு சித்தியடைந்த பிள்ளைகள் A/L இல் தோல்வியை சந்தித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்குக்காரணம் என்னவென்றால் அவர்களு டைய படித்தல் முறையிலே எங்கோ பிழை ஏற்பட்டி ருக்கின்றது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதனால் மாணவர்கள் மனமுடைந்து போகின்றார்கள். உதாரணமாக O/L இல் 8D எடுத்தவர் A/L இல் 3S யை எடுக்கும் போது சமூகம் அவரை பார்க்கின்ற விதத்தினால் அவர் கடினமான உளப்பாதிப்புக்கு உள்ளாகின்றார். இதற்கு முகம் கொடுக்க முடியாத சில மாணவர்கள் தற்கொலை முயற்சியிலும் RF(SUL முனைகின்றார்கள். அதனை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் அவர்களுக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி அடுத்த முறையும் பரீட்சை எழுதலாம் எனக்கூறி, தூண்டுதலைக் கொடுக்க வேண்டும். கல்வி (p60s Du T60Tg5 மாணவர்களை ஆளுமைமிக்க மனிதர்களாக உருவாக்க வேண்டும். ஆனால் எங்களின் கல்விமுறை எப்படி அதனை செய்கின்றது என்பது பற்றி எனக்கு சந்தேகம்தான். பெறுபேறுகளை வைத்துக்கொண்டு கல்வியை கணிப்பிடுவது தவறான விடயமாகும். ஆகவே கல்விமான்கள் ஒன்று சேர்ந்து கல்வி வீழ்ச்சிக்குரிய மூலவேர்களை கண்டுபிடித்து ஆய்வினை மேற்கொண்டு நிவர்த்தி செய்ய முற்பட வேண்டும்.

“நான்” கார்த்திகை - மார்கழி 2002
கேள்வி:
ngóili):
கேள்வி
சில மாணவர்கள் பரீட்சையின் பிற்பாடு ஆகக்கூடிய பெறுபேறுகளை எதிர்பார்க்கின்ற வேளையில் அவர்கள் குறைந்த பெறுபேறுகளை சந்திக்கின்ற போது மிகவும் மனமுடைந்து போகின்றார்கள். அவர்களை தேற்று வதற்கு சில ஆலோசனைகள் கூற முடியுமா?
பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் போது சில யுக்திகள் கையாளப்பட வேண்டும். எங்களுடைய பிள்ளைகள் பரீட்சைக்கு தயார்படுத்தும் போது மனனம் செய்கின்ற முறைகளையே கையாள்கின்றார்கள். அது எந்தளவிற்கு ஆரோக்கியம் என்பது என்னைப் பொறுத்தளவில் கேள்விக்குறிதான். அத்தோடு கல்வி கற்கின்றபோது சில ஒழுங்குமுறைகளோடு நேரஅட்டவணை ஒன்று அமைத்து படித்தல் நல்லது. பரீட்சைக்குமுதல் பிள்ளைகள் ஒய்வு எடுப்பது நல்லது என நினைக்கின்றேன். ஆனால் பலர் கடைசியில் படித்து விட்டு எழுதுவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். இது எந்தளவிற்கு ஆரோக்கிய மானது என்பது எனக்கு தெரியாது. கடைசிநேரப் படிப்பு எப்போதும் வாழ்க்கைக்கு உதவாத படிப்பாகத்தான் இருக்கும். ஆகவே மாணவர்கள் கல்வியின் மகத்துவத்தை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். தொடர்ந்து படிக்காமல் இடைவெளி விட்டு படிக்கின்ற போது கல்வி கற்கும் திறன் அதிகமாக இருக்கின்றது. ஆனால் சில மாணவர்களால் தொடர்ச்சி யாக ஒரே இடத்தில் இருந்து படிக்க முடியும். ஆகவே மாணவர்கள் தங்களுடைய மனநிலைகளுக்கேற்ப நேரசூசியை வகுக்க வேண்டும். ஆகவே பிள்ளைகள் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும், உந்துதலோடும் படிக்க வேண்டும். இதற்கு பெற்றோரும் உதவி செய்ய வேண்டும். மாணவர்கள் தாங்கள் படித்து சமூகத்திற்கு தொண்டு புரிய வேண்டும் என்கின்ற உந்து சக்தியோடு படிக்கின்ற போது தங்களை நன்கு கல்விக்குள்ளே ஆழப்படுத்துவார்கள்.
கட்டுக்கடங்காமல் நெறிதவறிச்செல்கின்ற மாணவ/ மாணவிகளைப்பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?

Page 11
% Ꮣ
BTGT
***్య ነፃጓኔትåዱፉኒ கார்த்திகை - மார்கழி 2002 S
*. *^#*
பதில்:
é é
5 TGOT
இளமை என்பது ஆற்றல் நிறைந்த காலம். மாணவர்க ளுக்கு அந்த ஆற்றல்களை ஆக்கமான வழியிலே வளப்படுத்துகின்ற தன்மை வேண்டும். மாணவர்களை சீரழிக்கின்ற முக்கியமான ஊடகங்களில் சினிமாவும் ஒன்று சினிமாவில் மாணவர்கள் தாங்கள் பார்ப்பவற்றை தாங்களும் அவ்வாறே செய்ய வேண்டுமென்று விரும்புகி றார்கள். அப்படிச் செய்வதால் தான் இளமைக்கு அழகு ஒன்று பொய்யான LDT60ou ugi தோற்றத்துக்குள்ளே வாழ்கிறார்கள். இது வெறும் “கதாநாயக வழிபாடு” (Hero Worship) என்று அழைக்கப்படும். கதாநாயக/ நாயகிகளைப் பின்பற்றும் மாணவர்கள் தங்கள் தனித்துவங்களை அழித்துக் கொள்கிறார்கள். வெறும் 9960)LD866 TIT86 கதாநாயக/ நாயகிகள் பேசுகின்ற பேச்சுக்களையும் காட்டுகின்ற சைகைகளையும் பின்பற்று கிறார்கள். இப்படியாக போலியான மாயைக்குள் இருப்பதால்தான் தங்கள கத்தே வக்கிரம், பலாத்காரம், ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள். இதனிமித்தம் குடும்பத்துக்குள்ளேயோ, கிராமத்துக்குள் ளேயோ பிறழ்வுபடுகின்ற நிலைகளை காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியாக உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் உளஆற்றுகைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.
வாசகர்களோடு உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து
கொண்டமைக்கு "நான்’ வாசகர்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
 
 
 

"நான்’ கார்த்திகை - மார்கழி 2002
என்னை வாழவிடுங்கள் சிறுகதை
E. கொட்விறீ ஜோயல்
சாமினியின் உள்ளத்தின் அடியாழத்தில் மிகவும் உறுதியாக எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஐயம் “மனிதனை நம்பி உறவைப் G3Li6OOT6NDT DIT?”
சாமினி தனது உயர்தரக்கல்வியில் திறமையான பெறுபேறுகளை எடுத்து மிகவும் நல்ல முறையில் நிறைவு செய்து கொண்டாள். அவளின் உள்ளத்தில் உறங்கிக்கிடந்த எதிர்காலம் பற்றிய கனவு மெல்ல கண் திறக்கத் தொடங்கியது. பல்கலைக்கழக கல்வியைத் தொடங்க சொந்த ஊரைப் பிரிந்து சென்றவளுக்கு விடுதியில் அறையொன்றும், அன்பைப் பகிர நண்பி சோபனாவும் கிடைக்கப் பெற்றாள். இதை அறிந்த பெற்றோர், சகோதரங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. தமது பிள்ளையை நன்கு பார்த்துக் கொள்ளும்படி சோபனாவுக்கு அடிக்கடி கடிதம் போட்டுக் கொள்வார்கள். அவ்வளவிற்கு சோபனா அவர்களது மனங்களில் இடம்பிடித்திருந்தாள்.
சாமினி அழகான, உயிர்த்துடிப்புள்ள, மற்றவர்களுடைய மனங்களைக்கொள்ளை கொள்ளும் ஒரு இளம்பெண். மற்றவர்களுடன் மனம்விட்டுப் பழகும் eiurt of உடையவள். 36 (61560)Lui சுவாபத்திற்கு ஏற்றாற் போலவே நண்பி சோபனாவும் இருந்தாள். இருவருக்கும் இடையில் இரகசியம் என்று சொல்லும் அளவிற்கு மறைவானது ஒன்றும் இருக்கவில்லை. இருவரும் பயிலும் துறைகள் வெவ்வேறானவை. இரவுகளில் தங்களது அனுபவங்களைப்பகிர்ந்து கொள்வதோடு மாறி மாறி ஒருவருக்கொருவர் புத்திமதியும் சொல்லிக்கொள்வார்கள்.
ஒருநாள் சாமினியின் முகத்தில் மாற்றத்தினை நோக்கிய சோபனா ஏதோ நடந்துவிட்டது என நன்கு உணர்ந்து கொண்டாள். “சோபனா, கொஞ்சம் சிரித்துக்கதைத்தவுடன் காதலிக்கின்றோம் என்று முடிவுக்கு வந்து.” அழத்தொடங்குகின்றாள் சாமினி. “அந்த

Page 12
“நான்” கார்த்திகை - மார்கழி 2002 20
சாகரவின் தொல்லை தாங்க முடியவில்லை, பேசாமல் ஊருக்கே போய்விடலாம் போல் உள்ளது. எனக்கு எனது இலட்சியம் தான் முக்கியம். காதல் இல்லை. நான் இல்லாமல் அவனால் உயிர்வாழ முடியாதாம் என்று அவன் சொல்கிறான். அவனுடைய செய்கைகள்
எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை’. சாகரவின் நண்பர்கள் சோபனாவிடம் பேசிய விடயங்களை அவள் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. சாமினியின் மனநிலையை உணர்ந்தவளாக
மெளனமாகவே இருந்து விட்டாள் சோபனா. சாகரவின் தொல்லை வரம்பு மீறிப் போகவே விடயம் நிர்வாகத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. தனது இலட்சியத்தினை மனதில் கொண்டவளாக சாமினியே இந்த முடிவினை எடுத்தாள். விசாரணையின் போது சாகரவின் குற்றம் நிரூபிக்கப்படவே, சாகர பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு ஒழுக்காற்றல் காரணங்களுக்காக, இடைநிறுத்தி வைக்கப்படுகின்றான். சாமினி நிம்மதிப் பெருமூச்சுவிட, சாகரவும் அவனது நண்பர்களும் கோபத்தினால் கொதித்தெழுந்தார்கள். அவர்களுக்கு கோபத்தினை உடனடியாகக் காட்ட முடியாத நிலை. சோபனா, சாமினியைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினாள்.
முதலாம் வருடத்தினை நிறைவு செய்து கொண்டவள் தனது லீவு நாட்களை முடித்துக் கொண்டு இரண்டாம் வருடத்தினை தொடக்க ஆயத்தமானாள். முதலாம் வருடத்தில் தனது வகுப்பினில் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தவள், தணியாத இலட்சிய தாகத்துடன் இரண்டாம் ஆண்டினை தனது நண்பியுடன் ஆரம்பித்தாள். அவளுடைய திறமையை கண்ணுற்ற மாணவர்கள் அவளிடம் உதவி நாடிய சந்தர்ப்பத்திலெல்லாம் தன்னுடைய வேலையைப் பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்தாள். அவளிடம் உதவி பெற்றவர்களில் அமில என்பவன் முக்கியமானவன். மிகவும் பின்தள்ளப்பட்ட, ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்திருந்த அவனால் எல்லாப் பாடங்களிலும் சித்தி பெற முடியாமல் போய்விட்டது. கல்வியில் அவனுக்கு இருந்த ஆர்வத்தினை கண்ணுற்ற சாமினி அவனுக்கு தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்து வந்தாள். அவனுடன் அதிக நேரம் செலவு செய்தாள். அவர்கள் இருவருக்கும் இடையில் நல்லதொரு உறவுநிலை பேணப்பட்டு வந்தது.

“நான்’ கார்த்திகை - மார்கழி 2002 21
தமது கோபத்தினைக் காட்ட இந்த உறவை எப்படியாவது பாவிக்க வேண்டும் என்று சாகரவின் நண்பர்கள் கங்கணம் கட்டினார்கள். அமிலவிற்கு விருந்துபசாரம் வழங்கினார்கள். அமிலவுடன் நண்பர்கள் போல் உறவாட ஆரம்பித்தார்கள். சாமினி நல்லதொரு பெண், நல்லாப்படிக்கக்கூடியவள் என்று அமிலவுடன் பேசினார்கள். சில மாதங்களின் பின்னதாக, “அமில் உனக்கு ஒரு விடயம் தெரியுமோ, சாமினி உன்னைக் காதலிப்பதாகக் கூறித் திரிகின்றாள்” என்று பொய்யாகக்கூறி வைத்தார்கள். அவனால் அவனது காதுகளை நம்பவே முடியவில்லை. என்னைக் காதலிக்கின்றாளா? சந்தோஷத்தினால் துள்ளிக்குதித்தான். சாகரவின் நண்பர்களின் உள்ளங்கள் அமைதிய்டையத் தொடங்கியன. சாமினி நண்பனாக எண்ணி அமிலவிற்கு செய்து கொண்டிருந்த உதவிகளையெல்லாம் அவன் காதல் கண்கொண்டே நோக்கினான். சாமினி அமிலவின் போக்கில் மாறுதல்களை கண்ணுற்ற போதும் அவள் பெரிதுபடுத்தவில்லை.
இதை அறிந்த சோபனா இது ஒருபோதும் உண்மையாக முடியாது என உனர்ந்து பேசாதிருந்தாள். எல்லோருடைய வாய்க்கும் இக்கதை பொரிபோட்ட வண்ணம் இருந்தது. என்ன, முதல் காதலித்தவனைக் காட்டிக் கொடுத்து விட்டு, இப்பொழுது வேறொருவனைக் காதலிக்கின்றாள் என்று குசுகுசுத்துக் கொண்டனர். வகுப்பு முடிந்து வந்த சாமினி சோபனாவிடம் “நான் அAலவைக் காதலிப்பதாக கதை அடிபடுகின்றது, ,சிேர் وبگاه | என்னைப்பற்றித் தெரியும் தானே’ எனக் கூறி ¥ಳೆಣ್ಣೆ பெரிதாக அலட்டிக் கொள்ளவிலு"ஐ நி2ேவீகுப்பிற்குச்
பரீத்த இது “சாமினி அமில LS S LSLLSL S LS S SLLL SLSS :"* *ಿ* o இருவரும் காதலிக்கின்றார்கள்."லுாழ்த்துக்கள் என்ற வாசகத்தினைக் கண்டாள். சாமினி கோபம் மிேலிட்டவளாக கரும்பலகையை அழித்துவிட்டு, நிர்வாகத்தினரிடம் முறையிடச் சென்றாள். இந்தவொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த சாகரவின் நண்பர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். விசாரணைக்காக இருசாராரும் அழைக்கப் பட்டார்கள். அமிலவிற்கு சாட்சியாக சாகரவின் நண்பர்களும், சாமினிக்குச் சாட்சியாக சோபனாவும் நின்றிருந்தார்கள். சென்ற ஆண்டு நடந்த நிகழ்வுகளே அவளது மனத்திரையில் வந்து மறைந்தன. அமிலவிடம் நீர் சாமினியைக் காதலிக்கின்றீரா எனக் கேட்ட போது ஆம் நான் காதலிக்கின்றேன். இதைக்கேட்ட சாமினிக்கு
சென்றவள் கரும்பலகையைப்

Page 13
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 22
உடம்பு வியர்த்தது. அவன் உண்மையாகவே பேசுகின்றானா என்ற எண்ணம் ஏற்படவே தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். நீங்கள் என்ன சொன்னாலும் என் நண்பி சோபனா எனக்கு சாட்சி சொல்ல இருக்கின்றாள் என எண்ணிக் கொண்டாள். இவர்களுடைய காதலுக்கு நாங்கள் சாட்சிகள் என சாகரவின் நண்பர்கள் பல பொய் நிகழ்வுகளுடன் நிரூபித்தார்கள். இவர்கள் ஒவ்வொருவருடனும் பழகிய நேரங்களை எண்ணி வெட்கப்பட்டு தன்னையறியாமலே தலைகுனிகின்ற வேளையிலே, சாமினி நீர் என்ன சொல்லுகின்றீர் எனக்கேட்டார் அதிபர். அழுதுகொண்டு நான் அவரைக் காதலிக்கவில்லை என்றவர் மேலும் பேச்சுவராமல் நண்பி சோபனாவை நோக்கி தனது சுட்டு விரலைக்காட்டின்ாள். அதிபர் சோபனாவை பேசும்படி கூறினார். எனக்கு சாமினியை நன்றாகத் தெரியும். இவளில் நானும் மாறுதலைக் கவனித்தேன். இவர்கள் சொல்லுவது உண்மையாக இருக்கலாம் சாமினி அமிலவைக் காதலிக்கின்றாள் என்றாள்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கோடு வாழ்பவளை அற்ப நோக்கங்களுக்காக தடைபோடும் சமூகத்தை, நண்பர்களை எண்ணி மனமுடைந்து போனாள். அவள் முன்னே உலகம் நழுவிப் போனது.
“நான்' சஞ்சிகையில் உளவியல் சார்ந்த பல விடயங்கள் வெளியிடப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. தமிழில் உளவியல் சஞ்சிகையின் வெளியீடு மிகுந்த குறைவாக உள்ளபோதும், “நான்” அதை நிறைவுசெய்வதால் தொடர்ச்சியாக வெளிவருவது எம்|
போன்ற வாசகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.
கு. சிவகுமார் சுன்னாகம்.

"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 23
ஆஸ்பத்திரியில் கண்காட்சியாம்
GG 6 e Q 99 6) Is TILSEE - ITTTTELSEE6Us LD
செ. அன்புராசா, அ. ம. தி
எத்தனையோ கண்காட்சிகள் நடைபெறுகின்றன. அவற்றில் பலவற்றைப் பார்த்த அனுபவம் உண்டு. அது ஏற்படுத்துகின்ற தாக்கம் அலாதியானது. கல்விக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, கைப்பொருள் கண்காட்சி என்ற தொடரில் அண்மையில் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலை யிலும் நீண்ட காலத்தின் பின்னர் நடந்தேறிய வர்த்தகக் கண்காட்சியை பார்க்காதவர்கள் இல்லையென்றே கூறலாம்.
யாழ்ப்பாணத்தில் “யாழ். வர்த்தக சந்தை” (Jaffna Trade Fair) என்ற பெயரில் இடம்பெற்றது. பல கம்பனிகள் சேர்ந்து பலநூறு இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வானது மக்களினு டைய வாழ்க்கைத் தரத்திலும், ஏன் வாழ்க்கை முறையிலும் கூட பல மாற்றங்களை ஏற்படுத்த எத்தனித்தன. ஏன் ஏற்படுத்தின என்றே கூறலாம்.
இப்படியான ஒரு வகைகாட்சி வைத்தியசாலைகளில் தினமும் நடைபெறுகின்றது. அதை ஏன் மக்கள் பார்க்க தூண்டக்கூடாது என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது. நிச்சயமாக இதற்கான பெயர் கண்காட்சி என அமையாமல் “காயக்காட்சி” அல்லது “நோய்வாய்க்காட்சி” அல்லது "ஆஸ்பத்திரிக் காட்சி” என்ற பெயர்களில் தான் அழைக்கலாம். ஏனெனில் இப்படியான “வைத்தியசாலைக் காட்சிகள்” மிகுந்த பலனைத் தரும் என்பது வைத்திய சாலையுடனான எனது நெருங்கிய தொடர்பிலான அனுபவத்தில் இருந்து கூறக்கூடியதாக இருக்கின்றது.
எப்படி என்று கேட்கின்றீர்களா? இதோ நான் பார்த்த "ஆஸ்பத்திரிக்காட்சி” களில் இருந்து சில காட்சிகள்.

Page 14
கார்த்திகை - மார்கழி 2002 24
“ஐயோ. இப்படி கால் முறியுமெண்டா மோட்ட சைக்கிளைத் தொட்டிருக்க மாட்டனே அல்லது மெதுவா எண்டாலும் ஓடியிருப்பனே ...” இக்காட்சியைப் பார்த்தால் விபத்துக்கள் குறைய வழி ஏற்படாதா?
“ஐயையோ. இப்படி வேதனப்பட்டு சாவனெண்டா மண்ணெண்ணெய் ஊத்தி கொழுத்தி இருக்க மாட்டேனே.” இக்காட்சியை கண்டிருந்தால்; மண்ணெண்ணெய் ஊற்றிக் கொழுத்தி அவல மரணமாகும் “கலாசாரம்” மாற்றமடை யாதா?
“இப்படி வயிறு எரியுமெண்டா அலரிக்கொட்ட சாப்பிட்டிருக்க LDTU GL(360 ...? இக்காட்சி தற்கொலை புரியும் சம்பவங்களைத் தடுக்காதா?
“இப்படி நோவும் வேதனையுமெண்டா குடியை எப்பவோ விட்டிருப்பேனே . 99 இக்காட்சி ஒரு சிலரையாவது குடியிலிருந்து காப்பாற்றாதா?
“இப்படி ஊசி போடுவாங்கள் எண்டு தெரிஞ்சா மரத்தில ஏறி விளையாடியிருக்க மாட்டேனே. 92 இக்காட்சி வீண் வேதனைகளை விலக்காதா?
وو
“நானே என் உயிரை (சிசுவை) அழிச்சுப்போட்டேனே .
இக்காட்சி ஊமைகளாக்கப்பட்ட சில உயிர்களையாவது வாழ வைக்காதா?
“இப்படி மிதிவெடியில கால் போகுமெண்டா தேங்காய் ஆய போயிருக்க மாட்டோமே..? இக்காட்சி இன்றைய இளைய சந்ததியில் ஊனமுற்றவர் களின் எண்ணிக்கையில் கொஞ்சமென்றாலும் குறைந் திருக்காதா?
“இப்படி வெடிக்குமெண்டா குத்தியிருக்க (மர்ம பொருள்)
DIT (SLC360T ....” இக்காட்சி அநியாய ஆபத்துக்களையும் மரணங்களையும் ஓரளவிற்கேனும் தவிர்க்காதா?

நான்’ கார்த்திகை - மார்கழி 2002 25
F “இப்படி நடக்குமெண்டால் (காச்சல், காயம், பிறசர், இன்னும்
U6) வருத்தங்கள்) வைச்சுக்கொண்டு இருந்திருக்க மாட்டோமே.”
-9 இக்காட்சி ஒருவருக்கு ஏற்பட்ட நோய் மட்டில் அலட்சியப்
போக்கை நிவர்த்தி செய்யாதா?
F “இவன்(ள்) பாவி மாறிக் குளிசையைத் தந்து என்னக்
கொண்டு போடுவான்(ள்) போல கிடக்கு .”
-9 இக்காட்சி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர் கொள்ளும்
அக்கறையைக் கூட்டாதா?
நிறைவாக மேலே கூறப்பட்ட ஆஸ்பத்திரிக் காட்சிகளோடு, இன்னும் பல காட்சிகள் ஒவ்வொருநாளும் இருபத்து நான்கு மணி நேரமும் ஆஸ்பத்திரியில் ஆயத்தமாகவே இருக்கின்றன. பார்வைக்கு, காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களில் திறந்து விடப்பட்டிருக்கின்றன. ஆக,பல பருவங்களிலும், தரங்களிலும், துறைகளிலும் உள்ள பொதுமக்களாகிய அனைவரும் பார்ப்பதன் வழியாக அவர்கள் வாழ்க்கை முறையில் நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.
நினைவில் நிற்க:
கண்காட்சிப் பொருள் "ஆஸ்பத்திரிக் கண்காட்சி”
இடம் - வைத்தியசாலை - காலம் - Daily யாக (ஒவ்வொரு நாளும்) நேரம் - காலை, மதியம், மாலை.
வயது - அனைவரும் அனுமதிக்கப்படுவர். பிரவேசம் - (இலவசம்) சும்மா
uuu66 - பல வேதனைகளை தவிர்க்கலாம்.
ஆபத்துக்களைக் குறைக்கலாம்
"நீங்களும் பாருங்கள் - உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் எமக்கும் அறியத் தாருங்கள்”

Page 15
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 26
மனிதனாக மனிதனை வாழவைப்பது முன்னெடுத்தலாகும்
ப. சபிண்ஸ் நெடுந்திவு,
22ம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நாம் முன்னெடுத்தல் பற்றி சிந்திக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நாளைய சந்ததியையும் நவீன உலகத்தையும் ஆளப்போகின்ற இன்றைய இளைஞர்கள் முன்னெடுத்தல் பற்றி சிந்திக்க வேண்டிய வர்களாக உள்ளனர். ஒருவனது நடத்தை என்பது அவனது ஆற்றல், அறிவு, அனுபவம் முதலான அடிப்படை காரணிகளில் தங்கியுள்ளது. ஆனால் இச்சமுதாயத்திலே சமத்துவம் எங்கோ ஒரு மூலையில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு உணர்வுகள் அழிக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதை நம் வாழ்விலேயே உணரலாம். இத்த்கைய எதிர் நிலமைகளை தோற்கடித்து எமது காரியங்களை முன்னெடுக்கும் போதுதான் எமது வாழ்வு வெற்றி பெறுகின்றது.
“முன்னெடுத்தல்” என்றால் என்ன?
ஒருவன் ஒரு காரியத்தை பொறுப்பேற்று அதைச் செய்யும் போது எதிர்ப்படும் எதிர்ப்புக்களையும் சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முழுமையாக அக்காரியத்தை நிறைவேற்றும் போது தான் ஒருவனின் முன்னெடுத்தல் வெற்றி பெறுகிறது.
இதற்கு சில அம்சங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
முன்னெடுத்தலில் ஈடுபடும் ஒரு தனிநபரது செயற்பாடுகளை கெடுக்க மனிதர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு முன் எச்சரிக்கையோடு நடந்து வரப்போகும் ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் துணிவை கொண்டிருக்க வேண்டும். அவனே வாழ்க்கையில் வெற்றியீட்டியவனாக இருப்பான். வாழ்க்கையில் எதிர்ப்பு, ஏமாற்றம், தோல்வி ஏற்படுவது சகஜம். அவற்றை ஒரு புது அனுபவமாகக் கொண்டு வாழ்க்கைக்கு வழிகாட்டிகள் எனக் கணிப்பிடுபவன் தான் ஒரு பூரண மனிதனாகின்றான். புதிய எண்ணங்கள் கருத்துக்கள் பரிமாறப்பட்டு அவற்றை

●猪
O
O
o e esib O d o
o
SLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLLL LLLLLL L LL LLL LLL LLLLLL
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 2?
கட்டியெழுப்புவதில் முன்னேற்றமுடையவனாக இருத்தல் மனிதாபிமானத்துக்கு அழகு.
இத்தகைய சூழலில் முன்னெடுத்தல் வெற்றிபெறுவதற்கு
01. முன்னெடுத்தல் தெளிவானதாக இருத்தல் வேண்டும். 02. முறையான திட்டமிடலும் அவதானிப்பும் வேண்டும். 03. இனிமேல் எதற்குமே கவலைப்படுவதில்லை என்று ஓர்
உறுதியான தீர்மானம் எடுத்தல் அவசியம். 04. கவலைப்படுவதால் கவலைகள் நீங்கப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்தி கவலைகளை விட்டொழிக்க முயலுதல் வேண்டும். - 05. முன்னெடுத்தலில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்
இவ்வகையில் முன்னெடுத்தல் என்பது ஒரு பயணம், வான ஊாதியிலோ, வளமான வாகனத்திலோ குலுங்காமல் சென்று இறங்கும் பயணமன்று கல்லும் முள்ளும், காடும் மேடும் கடந்து செல்ல வேண்டிய பயணம். இப்பயணத்தை கடும் முயற்சியினாலே வெற்றி கொள்ள முடியும். “நீதியில்லா சமுதாயத்திலே பிறந்து விட்டோம். இதை எப்படியும் மாற்றி விடுவோம்” என்ற வாக்கிற்கிணங்க முன்னேற முயற்சிப்போம். இக்கட்டுரையின் பிரதான கருத்தை நீங்களும் பரீட்சிப்பதினூடாக இக்கட்டுரையின் கருத்தைப் புரிந்து வாழ்க்கையில் வெற்றி நடைபோடலாம். - -
கையே - என்றும் நான் உன் ரசிகையே
ந்துவரும் அம்சங்களனைத்தும்
ຫຼືgubrgຫຼືຄົນ எனக்கு விருப்பமானவை!
இணைய உலகிலே - நீ
இணையில்லா பத்திரிகையாக வலம் வர பரமனின் ஆசி வேண்டி வாழ்த்துகிறேன்.

Page 16
“நான்’ கார்த்திகை - மார்கழி 2002 28
ஜோசியம் என்பது விஞ்ஞானமல்ல, அல்லது கைவசமுள்ள விஞ்ஞானங்களால் வளைத்துப்பிடிக்க முடியாத ஒரு துறை என்பதே எம்வாதம். ஆனாலும் சமூக, சமய, கலாசார பாரம்பரிய காரணங் களினால் அது கீழத்தேயவரின் விசேடமாக தெற்காசிய நாட்டவரின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத தொற்று நோயாகப் போய்விட்டது.
பிறந்த நேரத்தைக் கணிப்பது எவ்வளவு கடினமானது? மருத்துவிச்சி கணித்துச் சொல்லுகின்ற மணியும், நிமிடமும், நொடியும் தான். பிள்ளையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. தாயின் உடலை விட்டு குழந்தை முற்று முழுதாக (தொப்புள் கொடி தொடர்பு இன்னும் 綴 இருக்கின்ற போதும்) வெளியேறிய கனமே குழந்தை பிறந்த கண்ம். தாயின் கருவின் சயனித்த பொழுதிலே அது உயிர்தானே. அக்கணத்தைக் கருத்திலெடுத்தால் அது விஞ்ஞான ரீதியானது. அல்லது அந்த புது உயிர் வெளிப்பட்டு தானே சுவாசித்து வாழத்தொடங்குகின்ற கணத்தையாவது எடுக்கலாமே.
பிரவசம் பார்ப்போரின் வேகமும், விவேகமும் குழந்தை பிறக்கின்ற
கணத்தை துரித பின்போடவோ கூடுமே. ஆக «›1 1::31አox`﷽:‹ - நம் அல்ல. வெறும் ஆள்களே விதியைத்
ஏதோ ஒரு மனச்சாந்திக்காக A. செய்கின்ற ஒரு பழக்க தோஷமே ஜோசியமேயொழிய வேறில்லை. “கறுப்புப்பூனை குறுக்கால் போனால்
காரியம் கெடும்” எனக் கேட்டுக் கேட்டு அதை உண்மை என
நம்புகின்றோம். மனம் நம்பி விட்டதனால் பூனை குறுக்கால் போன
சந்தர்ப்பத்தில் அஞ்சுகின்றோம், பதறுகின்றோம். பதறியகாரியம்
சிதறிப்போகிறது. அல்லது சிரமங்கள் வருகின்றன. ஆக இந்த இடத்தில் குருட்டு நம்பிக்கை இறுகி இறுகி மனோதத்துவத்திற்கு மனிதனை உட்படுத்தி தனக்கு விஞ்ஞானச் சாயம் பூசிக் கொள்கிறது.
கைவிசேடமெல்லாம் வாங்கியும் நாம் இன்னும் வறுமைப்பட்ட மூன்றாம் உலகநாடாகவே இருக்கின்றோமே. ஏடுதொடக்குவதெல்லாம் கடைப்பிடித்தும் தொழில்நுட்ப அறிவுலகில் நாம் முன்னிலையில்லையே. நட்சத்திரங்களெல்லாம் பார்த்தும் ஆயுட்காலம் 68 ஆண்டுகளாகத்
தானே இருக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“நான்” கார்த்திகை - மார்கழி 2002 29
கருத்துக் குவியல் - 94
நம்நாட்டு தல்ைவர்கள் சமாதானத்தை முன்னெடுப்பதால் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஆளுமை படைத்தவர்கள்.
சமாதான வீட்டை அடையவே நம்நாட்டின் பெரும்பான்மை யான மக்கள் ஆசிக்கின்றனர். ஆனால் இந்த சமாதான வீட்டிற்கான பாதையோ கற்களாலும், முட்களாலும் நிறைந்து கடினமாக இருக்கின்றது. இங்கே கற்களும் முட்களும் என்று நான் குறிப்பிடுவது ஆண்டாண்டு காலமாக புரையோடிப் போன பகைமை உணர்வுகள், பழிவாங்கும் மனப்பாங்குகள், இனத்துவேசங்கள், போரினால் பயனடையும் சில பல பிணந்தின்னும் கழுகுகள்’ ஆக இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் e(6560)LD சமாதான முன்னெடுப்புக்களை நிகழ்த்தும் நம் நாட்டு (சிங்கள, தமிழ்) தலைவர்களுக்கு உண்டா? என்ற வினாவே எல்லோர் மனதிலும்
உண்டு.
பச்சுவார்த்தை வரை முன்னேறிய சமாதான இன்டுப்புக்கள் நம் தலைவர்களின்
ஆளுமையை பறைசாற்றுவதாகவே நான் கருதுகிறேன். ஆண் டாண்டு காலமாக வஞ்சமராடிய ஈரின தளபதிகள் அருகருகே அமர்ந்து யுத்தக் கைதிகளை விடுவிப்பதும் அளவளாவுவதும் நம் நாட்டில் அதிசயமான, ஆரோக்கியமான, வித்தியாசமான, விருப்ப மான காட்சி.
ஐ.தே.கட்சியும், விடுதலைப்புலிகளும் சமாதான செயற் பாட்டில் நெருங்கி வருவதும் கூட்டிணைவதும் ஜே.வி.பி, சிங்கள உறுமய மற்றும் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட பொ.ஐ. முன்னணியின் பெரும்பான்மையினரின் கடும் ஆட்சேபத்திற்கு உள்ளாகுவது நாம் அறிந்தவையே. இத்தகைய கட்சியினரின் கடும்

Page 17
"நான்’ கார்த்திகை - மார்கழி:2002 30
எதிர்ப்புக்கள் சில பல பெளத்த பிக்குகளின், துவேச வாதிகளின் கண்டன எதிர்ப்புகளின் மத்தியிலும் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு சமாதான முன்னெடுப்பில் பயணமான நம்நாட்டு தலைவர்கள் இனிவரும் சவால்களையும் நன்முறையில் எதிர்கொள்வர் என நம்புவோமாக.
சமாதானத்திற்காக இந்நாட்டின் பெரும்பான்மையினர் வாக்களித்து; ஆசித்து, செபித்து செயற்படுத்தும் பொருளாதார வளப்பாட்டிற்கான அதிகரித்த தேவை, உலக நாடுகளின் உந்துதல் போன்றனவும் நம் நாட்டுத் தலைவர்களின் ஆளுமையை சமாதான முன்னெடுப்பிலே அதிகரிக்கும் அழுத்த சக்திகளாக அமையும் என்று கருதுகிறேன்.
டக்ளஸ் மில்ரன் லோகு. சூ
நம்நாட்டு தலைவர்கள் சமாதானத்தை முன்னெடுப்பதால் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆளுமையற்ற வர்கள்.
அரசியல்வாதியின் வீட்டில். மனைவி என்னங்க முகமெல்லாம் ஒரு மாதிரிகிடக்கு. ஏதும் பிரச்சினையோ அ. வா. பிரச்சினைதான் சமாதான முயற்சிகள நல்லாச் செய்வம் என்டா
விடுகிறாங்கள் இல்ல. மனைவி உங்களுக்கு ஏன் தேவைல்லாத வேல நீங்களும் உங்கட
வேலையும் என்டு இருக்கிறதுக்கு.
மனிதன் பல சந்தர்ப்பங்களில் தான் வாழும் சமூகம் என்ற விரிந்த பார்வையை விடுத்து ‘ஏனப்பா பிரச்சினையை' என்ற நிலையில் தன் குடும்பம் தன் வேலை தன் சகாக்கள் என்ற அந்த சுயநலவட்டத்துக்குள்ளேயே அழிந்து விடுகிறான். மாறாக ஒருவன் தன் சிந்தனைத் திறனை பயன்படுத்தி உறுதியான மனநிலையுடன் புதிய நடைமுறைகளை, சமூகத்தின் நன்மை கருதி செய்யும் போது அந்நடிவடிக்கைகளால் அவன் பல பிரச்சினைகளுக்கும், விமர்சனங் களுக்கும் உள்ளாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அந்த வகையில் இவற்றை ஏற்று முகம் கொடுத்து முன்னெடுத்துச் செல்லும் போது அவனது உண்மைத்தன்மை வெளிப்படுவதோடு எழும் விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் அடிபட்டு உடைந்து போகும்.
 

Menggep gemaak தீேச்சலூர்
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 *து *இ9 ஜ, 3.
இன்று நம் நாட்டில் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் நம் நாட்டுத் தலைவர்களினது முகம் கொடுக்கும் திறனை ஆராய்கின்ற பொழுது, தலைவர்களின் முரண்பட்ட கருத்துக்களே முதலில் சிந்தனைக்கு வருகின்றன. பிரதான ஆளுமைகளை பொறுத்தவரை, எப்படியாவது சமாதானத்தை அடைந்துவிட வேண்டும் என்ற மனநிலையில் செயற்படுவது போல தென்படுகின்றது. எனினும் மற்றைய பகுதிகள் முழுமையாக தம் எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாத நிலையில் அவ்வப்போது கருத்துக்களையும் எதிர்ப்புக் கூட்டங்களையும் நடத்துவதோடு அமர்ந்துவிடுகின்றன.
சில தலைமைகள் தங்களால் முழுமையாக செயற்பட முடியாது என்ற நிலையை உணர்ந்தும் தம் பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற வகையில் செயற்படுவது போலவும் தெரிகின்றது.
அதே வேளையில் முதலாம் கட்டப் பேச்சுக்கள் முடிவுற்ற நிலையில் அதன் முடிவுகள் பல விமர்சனங்களையும் கேள்வி களையும் எழுப்பிய நிலையில் நம்நாட்டு தலைவர்கள் “சமாதானம்” என்ற பயணத்தை தொடர்கிறார்கள். எனினும் இவர்கள் இம் முயற்சியைத் தொடர்கிறார்கள் என்பதற்காக இவர்கள் முகம் கொடுக்கும் ஆளுமை உள்ளவர்கள் என்று கூற முடியாது. ஏனென்றால் இத்தொடர் பயணத்திற்குக்கூட வேறுபல பொருளாதார, அரசியல் அழுத்தங்கள் பக்க அழுத்தங்களாகவும் அல்லது பலமாகவும் அமையலாம். அதே வேளையில் இந்த சமாதான முயற்சிகள் அதன் கருநிலையிலேயே உள்ளன. இன்னும் பல பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எய்தப்பட வேண்டும். பல விட்டுக் கொடுப்புக்கள் இவர்களால் செய்யப்பட வேண்டும். அப்போது ஏற்படப் போகும் உணர்வலைகளும், எதிர்வலைகளும் இவ்வாளு மைகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு இவர்கள் உண்மைத் தன்மையோடு செயற்படுகின்றார்களோ அந்த நிலையை வைத்தே நம் நாட்டின் தலைவர்கள் சமாதானத்தை முன்னெடுப்பதால் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஆளுமை படைத்தவர்கள் அல்லது இல்லாதவர்கள் என்று கூறமுடியும்.
விஜயகமலன் அல்பிரட்

Page 18
“நான்’ கார்த்திகை - மார்கழி 2002 32
வாழ்வை முன்னெடுக்கும் தரிசனங்கள்.
D, யூட்ஸ்கிங் யா/நெடுந்தீவு. றோ. க. மகளிர் கல்லூரி,
மனித வாழ்வு என்பது வானில் தோன்றும் வானவில் போன்றதுதான். வனப்புமிக்க ஒன்றுதான். ஆனால் வாழும் வாழ்வு எப்படியும் வாழலாம் என்றிருக்க முடியாது. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறை ஒவ்வொருவரிடமும் இருக்கும் போது தான் வாழ்வை முன்னெடுக்க முடியும். மனிதவாழ்வு துன்பம் நிறைந்தவையும்தான். எனவே மனம் இழப்புக்களையும் அழிவுகளையும் கண்டு கலங்கினாலும் அவனை அறியாமலே வாழ்வை முன்னெடுக்க மனம் முயற்சிக்கின்றது. நம் சொந்த வாழ்வை ஒரு கணம் மீட்டுப் பார்த்தால் நன்கு புலப்படும்.
ஒவ்வொரு மனிதனும் வாழ்வை மேம்படுத்தும்போது முன்னெடுக்கும்போது சுயமேம்பாடு இன்றியமையாத தாகின்றது. சுயமேம்பாட்டின் அடிப்படைக்காரணி சமூகமயமாக்கலின் விளைவுதான். தனிமனிதனைப் பற்றிய புலக்காட்சியானது சமூக மயமாக்கலினுடாக ஏற்படுவதாயின் ஒருவனின் வாழ்வு முன்னெடுக்க முடியுமெனலாம். எனினும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினை யால் பீடிக்கப்படுகின்றார்கள். இது தனிமனித பிரச்சினையாகலாம் அல்லது சமூகப்பிரச்சினையாகலாம். எவ்வாறெனினும் மனிதன் அடிப்படையிலேயே ஒரு குற்றவாளி யாகத்தான் பிறக்கின்றான். அறியாமை, ஆசை என்று ஏற்கனவே கொடுரமான குணாம்சங்கள் கொண்டவனாக இருக்கின்றான். இது இயல்பாகிவிட்டது. இதுவும் பிரச்சினையாகி விடுகின்றது.
எப்படித்தான் இருந்தாலும் தனிமனித வாழ்வை முன்னெடுக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடத்திலும் உண்டு. இவ்வாறு முன்னெடுப்பில் கவர்ச்சி (Attraction) பெரும்பங்காற்றுகின்றது. இந்த (Attraction) சமூக உளவியல் அம்சமாகக் காணப்படுகின்றது. ஒருவர் ஒருவர்பால் விரும்புவதற்கோ அல்லது ஒருவரின் வாழ்வு

“நான்’ கார்த்திகை - மார்கழி 2002 33 உயர்வதற்கோ ஏதோ ஒரு வகையில் (Attraction) செல்வாக்குச் செலுத்துகின்றது.
இது ஆளுமை கவர்ச்சி (Personal Attraction) ஆக இருக்கலாம். அல்லது உடற்கவர்ச்சி (Physical Attraction) ஆக இருக்கலாம். இவை இல்லாமல் வாழ்வை முன்னெடுப்பது கடினம்தான். இப்படிப்பட்ட கவர்ச்சியை எப்படிப் பெறலாம் என்று நோக்கினால் அதனை நாம் தாம் எம் உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும். எத்துறையாக இருப்பினும் அதாவது கல்வித் துறையாக இருக்கலாம், விளையாட்டுத் துறையாகவும் இருக்கலாம், அல்லது குடும்ப வாழ்க்கை முறையாகவும் இருக்கலாம். எத்துறைக ளென்றாலும் கவரப்படுதல், அதன்பால் ஈர்க்கப்படுதல் இன்றியமை யாததாக உள்ளது. -
“வாழ்க்கை வளர்ச்சிக்கு ஒரு வரப்பிரசாதம் அன்றேல் நம்மை செயலிழக்கச் செய்யும் ஒரு சாபம்” என்கிறார்கள் உளவியலாளர் றோலோமே (Rollomay). ஆகவே வாழ்வை எப்படி அமைப்போம், தொடர்வோம் என்பது நமது கையில் தான் உள்ளது. எனவே எந்தவித இன்னல்கள் நேரிடலாம், துன்பதுயரங்களைச் சந்திக்கலாம், அல்லது மனச் சஞ்சலங்களை எதிர்கொள்ளலாம். அவை அனைத்தையும் தாண்டி முன்னேறு அப்பொழுது வசந்தம் உன் கையில் கிட்டும்.
|எம் நன்றிகள்.
கடந்த இரு வருடங்கள 1ாக "நான்’ உளவியல் சஞ்சிகையில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி தற்பொழுது மேற்படிப்புக்காக இத்தாலி சென்றிருக்கும் அருட் தந்தை ஜெயந்தன் அழகளாருக்கு ‘நான்’ உளவியல் சஞ்சிகை சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதோடு
அவரது கல்வி சிறக்க வாழ்த்துகின்றோம்

Page 19
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 34
Dari)
நியூமன் பொண்ணையா
நடந்து போன காலங்களுக்காக அழுகின்றது. நடக்கப் போகும் காலங்களை காண அஞ்சுகின்றது. நடந்த சரித்திரங்களால் - நடக்கப் போகும் சரித்திரங்களை காண பயப்படுகிறது.
அடுத்தவரிற்கு ஆறுதல் சொல்ல முனைகிறது ஆறா துயரில் மூழ்கும் போது - அந்த ஆறுதல் தனக்கே தேவை என ஆதரிக்க மறுக்கிறது.
பிறர் புகழும் போது மகிழ்கின்றது - ஆனால் பிறரை புகழ பின் நிற்கிறது. பிறர் இகழும் போது கவலைப்படுகிறது - ஆனால் பிறரை இகழ முன் நிற்கிறது
மனம் கொண்டதே மாளிகை என மனம் அறிந்தும் மனம் கொள்ளாக் காட்சிகளின்
மாயைகளில்
மதி மயங்குகின்றது.
மனம் ஒரு குரங்கு - அது
மரம் விட்டு மரம் தாவும்
மந்தி - ஆசைகளை
மாற்றி மாற்றி பாயும் - ஆனால் ஒரு கட்டத்தில்
மரத்துப் போய் நிற்கும்.
பயப்படும் விடயத்தில் துணிகின்றது துணிகின்ற விடயத்தில் பயப்படுகின்றது. துன்பத்தைக் கண்டு துவஞகின்றது - ஆனால் தூக்கு மேடைக்கு போக துணிகின்றது
நன்மையின் நினைவில் கெடுதலை மறக்கின்றது
வெற்றியின் நினைவில் தோல்வியை மறக்கின்றது. நிஜத்தின் பயத்தில் பொய்மையில் வாழ்கின்றது.
கண்ணிரில் வாழ்க்கை கரைகின்றதே, கானல் நீராக கனவுகள் ஆகிறதே - என கையளவு இதயத்தின் ஆசைகளை நிறைவேற்றத்துடிக்கின்றது.
மனம், மனம், . விளங்க முடியாத, புரியாத புதிர்.

"நான்’ கார்த்திகை - மார்கழி 2002
வாழ்வில் எந்தக் கட்டத்தையும் அடைய முன்னெடுத்துச் செல்ல முற்படும்போது முகம் கொடுத்தல் மிக முக்கியமானது என்பதனை வாழ்வின் அனுபவங்கள் சுட்டும் நடைமுறையாகவுள்ளது.
முகம் கொடுத்து முன்னேறுபவர்களின் அனுபவ முதிர்ச்சியே ஏனையவர்களுக்கு வழிகாட்டவும் தலைமைத்துவ ஆளுமைப் பண்பினை வெளிப்படுத்தவும் காரணமாகிறது.
முன்னேற வேண்டும் என யாருக்குத்தான் ஆவலில்லை? ஆனால் அதற்கு முன்னெடுக்க வேண்டிய செயல்களில் ஈடுபடும் போது ஆs
ஏற்படும் சிறுதடைகளும் உள நெருடலாக சலிப்பை, விரக்தியை,தன்னம்பிக்கையற்ற தன்மையை, சந்தேகத்தை ஏற்படுத்துவதால்
ஒதுங்குவதும் கோழையாகி
அதிலிருந்து தப்பிக்க முனைதலும் முகம் கொடுத்து முன்ன்ெடுத்துச் செல்லமுடியாது தவிக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்யவும் முனைகிறார்கள். இதற்கு அவர்கள் மட்டும்
காரணமல்ல. அவரது வாழ்வின் சூழலும், வழிகாட்டலும், சிறுபராயம் முதல் விதைக்கப்பட்ட தவறான சிந்தனை தூண்டலின் செயல் வடிவங்களுமே காரணமாகும்.
'தன்னைத்தானே வென்றவன் தனக்குத்தானே நண்பன் தன்னைத்தானே ஆளாதவன் தனக்குத்தானே பவைகன் இவ்வாறு ஒருவன் தானே தனக்கு பகைவன், தானே தனக்கு நண்பன் ஆகிறான்” என பகவத்கீதை கூறும்.
எம் சூழல் நமக்கு தவறான வழிகாட்டலை தந்த போதும் எமது சுயசிந்தனை மூலம் தவறுகளை, தடைகளை இனம் கண்டு வெல்ல முகம் கொடுக்க, தன்னைத்தானே வழிகாட்டும் மனப்பக்குவம் தன்னில் வளர்த்தெடுக்க, முன்னெடுத்து தடைதாண்டி செல்லுதலில் முனைவதுதான் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது.
கல்வியில் முகம்கொருத்தல்
மாணவப்பருவத்தில் படிப்பதற்காக முயலும் போது உதவுவதாக செயல்படும் பெற்றோர் சில &LDuuLib முழுப்பாடத்தின் கேள்விபதில்களைத் தாமே மாணவனின் பாடக்கொப்பியில் எழுதி

Page 20
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 36
கொடுப்பதனாலும் ஒப்படைக்கான வேலைகளை சகோதரரோ, அடுத்த வீட்டாரோ செய்து கொடுத்து சிறந்த புள்ளிகளைப் பெற்றிடுவதாலும் மாணவருக்கு எதுவுமே முகம் கொடுக்க சந்தர்ப்பம் இல்லாது போகும். இவை உயர் பரீட்சையிலே தவறும் போது ஆசிரியரில் பழி சுமத்தப்படுத்துவதற்கு காரணமாகின்றது.
பரீட்சையில் புள்ளிகள் குறைந்தாலும் எழுத வாசிக்க தெரியாத போதும் 8ம் வகுப்புவரை ஆசிரியர்கள் தடையின்றி வகுப்பேற்றி விட்டுவிடுவார்கள். பின்னர் அவர்களே “8ம் ஆண்டுக்கு மேல் படித்தும் 6I(Լք95 வாசிக்கத் தெரியாத பிள்ளைகள்” 660 அறிமுகப்படுத்துவார்கள். இது கூட இன்றைய வழிகாட்டிகளின் முன்னெடுத்தலுக்கான தவறான வழிகாட்டலே ஆகும். அடிப்படை அறிவு பலமில்லாததால் உயர் கல்வியில் திண்டாடும் மாணவர்க்கு தவறான வழிகாட்டலே தடைகளுக்கு காரணமாகும்.
பாராட்டலில் முகம்கொரு
"நீயே செய்யக்கூடியதற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதே’ என்பார் தாமஸ் ஜெ.பபர்ஸின் முன்னெடுத்தலுக்கு முகம் கொடுத்தலில் ஏற்படும் சவால்களில் சிறு வெற்றி கண்டாலும், நாம் செய்தோம் என்ற திருப்தியே எமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
எம் சூழல், எம் சமூகம் முன்னெடுத்தலைக் கண்டு உங்களுக்கு பாராட்ட உற்சாகப்படுத்த முன்வராத போது அவை உங்களுக்கு சலிப்பைத் தரலாம். ஆனால் மற்றவர் திறமையை, உயர்வை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்க்கப்படாத எமது சூழ்லில்
அதனை எதிர்பார்த்து ஏமாறுவதைவிட உங்களுக்குத் திருப்திப்பட்டால் சவால்களுக்கு முகம் கொடுத்தேன் என உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே பாராட்டாகும்.
பாராட்டுக்களை எதிர்பார்க்கும் மனங்கள் மற்றவர்களையும் பாராட்ட பழக்கப்பட வேண்டும். “மனிதனால் ச்ெயத்தக்கது, செய்யக்கூடியது எதுவும் உன்னால் எய்தக் கூடியதே என்று நம்பு’ என்பார் மார்க்கஸ் அரோலயஸ் என்ற அறிஞர்.
இதைவிட இன்று ஏமாற்றம், விரக்தி, நம்பிக்கையீனங்கள் எமது நாட்டு சூழலில் ஏற்பட்ட உள நெருக்கீடுகள் பலருக்கு தொடராகி விட்டதால் எதிர்கொள்ளல், ஏமாற்றமடைந்த மனநிலை, சிலர் வாழ்வில் உளப்பிறழ்வுகளை ஏற்படுத்தி சந்தேகத்துடன் வாழும் மனிதர்களுக்கு நம்பிக்கை வாழ்வை கட்டி வளர்ப்பதில் மிக

"நான்’ கார்த்திகை - மார்கழி 2002 3?
முக்கியமாக முகங்கொடுத்து முன்னேறும் முன்மாதிரிகளே இன்றைய தேவையாகிறது. அது நீங்களாக இருக்க முடியாதா?
சில வழிகாட்டிகள் தங்கள் பொட்டலங்களை தூக்கிச்செல்லும் சீடர்களை உருவாக்குபவர்களே தவிர தம்முன்னே நடந்து செல்வதைக்கண்டு மகிழ்வோடு ஏற்க முடியாத தலைமைகளே வளர்க்கப்பட்டதால், இன்று முன்னெடுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய சவால்களும் பலவாகும். இதனை வெல்லும் ஆளுமை வளர எதனையும் எதிர்கொள்ள முன்னெடுத்துச் செல்வதற்குத் துணிவு மிக முக்கிய பண்பாகும். -
தலைமைத்துவம், தன்னம்பிக்கை முன்னெடுத்தலுக்கு சிறுபராயம் முதல் கற்றுவர முயலவேண்டும். இதனைப்பெற தவறியவர்கள் தம்மை சுய மதிப்பீடு செய்து அதிலிருந்து விடுபடும் வழிகளை தேடிக்கொள்ளவும் முடியும். அதற்கான பல தளங்களே எமக்கு ஏற்படும் சால்களும் சந்தர்ப்பங்களுமாகும்.
எதுவும் முடியாது என்றில்லை முயலப்படாதது எதுவோ அதுவே முடியாது என்பதாகும். என்னால் முடியாது, என்னில் அந்த தகைமை இல்லை, என்னைவிட மற்றவர்தான் செய்வார், தலைமை ஏற்பார் என எம் ஆற்றல் திறமைகளுக்கு சந்தர்ப்பம் வரும்போது தப்பித்து தவிர்த்தல் ஒதுங்குதல்கூட, தானே தன்னை தாழ்வு மன உணர்வுக்குள் தள்ளி விடுகிறார். பரம்பரைத் தலைமைகள்கூட இதற்கு தடையாய் இருப்பார்கள். இத்தடை தாண்ட முகம் கொடுத்தல் வாழ்வில் முக்கியமானது. -
ஏமாற்றப்பட்ட மன நிலையில் வாழ்வோர் மற்றவர்களையும் ஏமாற்றியே வாழ முற்படுவார்கள். நம்பிக்கையினம் சந்தேகங்களைக் களைவதில் ஆற்றுப்படுத்தும் நம்பிக்கையூட்டும் பணியாளர்கள் மிக அதிகமாக தேவைப்படும் எமது நாட்டில் (p(p60)LDust 601 அர்ப்பணிப்பாளர்கள் அரிதாக இருப்பதும் பகுதிநேர பணியாளர்களும் பயிற்சிகள் மூலம் எதிர்கொள்ளலுக்கு முகம் கொடுக்கும் மனப்பக்குவத்துடன் நம்பிக்கையூட்டும் முன்னெடுத்தலை வளர்க்க வேண்டும். வளங்களும், மனங்களும் உளப்பக்குவத்தைப் பயின்று பணத்தை மையமாகக் கொள்ளாது மனித மனங்களை மையமாகக் கொண்டு பாமர மக்களிடம் சென்று சேவையாற்ற தளங்களைத் தேடிச் செல்ல வேண்டியதும் இன்று காலத்தின் தேவையாகும்.
-GSMITJFiI LIITGADIT

Page 21
"நான்’ கார்த்திகை - மார்கழி 2002
வாலிப வசந்தம்
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி
முகம்கொடுத்தல் என்று சொல்லும் பொழுது “எதற்கு முகம் கொடுக்க வேண்டும்” என்ற கேள்வி வருகிறது. உண்மைக்கு, உண்மை நிலைக்கு, பிரச்சினைகளு க்கு, சவால்களுக்கு நாம் எல்லோரும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதிலும் இளையோராகிய நீங்கள் உணர்வுக் கொந்தளிப்பிற்கு உடல் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். உலகிற்கு நீங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்ற காலம் இது. ஆகவே பலவற்றை விலங்கிக்கொள்ள முடியாமல் அங்கலாய்ப்பீர்கள். ஆனால் இவற்றிற்கு நீங்கள் முகம் கொடுத்தே ஆகவேண்டும். இல்லையெனில் ஆளுமை குன்றியவர்களாக இருப்பீர்கள்.
இன்று இளையோரில் பலர் சவால்களிலிருந்து தப்பி ஓட முயற்சிக்கின்றனர். இன்னும் சிலர் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் மனமுடைந்து போகின்றனர். சிலர் தவறாக முடிவெடுத்து தற்கொலை புரிகின்றனர். போரின் விளைவுகள் இளையோராகிய உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மையே. ஆனால் இந்த கொடுர்மான தாக்கத்தை உங்கள் ஆளுமைக்கு படிக்கற்களாக ஆக்கிக்கொள்வது உங்கள் கைகளில்தான் உண்டு. மண்ணிலே மக்கி மக்கி வைரம் உருவாவதுபோல் சவால்களுக்கு முகம் கொடுக்க கொடுக்க வைர நெஞ்சுடையவர்களாக நீங்கள் மாறுவீர்கள். எனவே சவால்களைக்கண்டு ஓடாதீர்கள். நிமிர்ந்த நெஞ்சுடன் எதிர்கொள்ளுங்கள் எதிர்காலம் உங்கள் காலடியில் . உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
-இளவல்
 

அருத்த “நான்'தாங்கிவருவது
தன்னடக்கம் (SELF CONTROL)
உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும் உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 20.12.2002க்கு முன்னர் அஞ்சலிடுங்கள்.
2.
8ʼy, x
و گردان:

Page 22
» 6g6OöIG LOT:
55L60)
> வருடத்திற்கு
உங்களிடம் வந்து கெ
•}} 616ර්16ක්‍ෂීලිඛථ නූ_Ihiජ්‍ය{ உளவியற்கருத்துக்கள்
என்னுடைய தனிப்பிரதி 20
என்னுடைய இருண்டுச்சந்தா.
96
ଜୋତି
என்னுடைய முகவரி இது
J.S. Printe
 

தங்களுக்கு ஒரு வயும்,
ஆறு தடவைகளும் காண்டிருக்கின்றேன்.
ளுக்குத் தேவையான குவிந்து கிடக்கின்றன.
|-
萎 Tebalo 150/= 3. Jaffyfalo 7 US
தான்: -
*நான்
ty. Infari", gdjin Lih, கொழும்புத் துறை, யாழ்ப்பாணம்,
இலங்கை.
TEL O212721
ل 's, Sillalai.