கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2003.03-04

Page 1

சித்திரை 2003

Page 2
நான
உளவியல் சஞ்சிகை
LD6oi: இதழ்: 02 பங்குனி - சித்திரை, 2003
28
விலை 20/=
D Gfr(86)T.....
ஆசிரியர் அரும்புகள்
மீறப்படும் உரிமைகள்.?
இளைஞர்களின் வண்குழு நடத்தை, விலகல் சார் அணுகுமுறையூடாக நோக்கல்
‘ஒன்றுபட நாடு” தனிநபர் பங்களிப்பு மைய
LIMIñGO)6)
எதிர்பார்ப்பு
மனிதம்
சகோதரமே
வன்முறையர் தொடர்பாடல்
கருத்துக்குவியல் - 96
சமுதாயத்தில் நெருக்கீடு
நேர்காணல் *
மனவடு
வலிப வசந்தம்
*NAAN” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jafna, Sri Lanka. Tel 021-222-5359
ஆசிரியர்: போல் நட்சத்திரம் O.M., B.Th., STL.
இணையாசிரியர்:
GhLumraðir afluaðir O.M., B.Th., B.A. (Hons).
ஒருங்கிணைப்பாளர்: ஜெறோம் O.M.I.
நிர்வாகக் குழு அ.ம.தி. இறையியல் சகோதரர்கள்.
- grari ror.
ஆலோசகர் குழு GLLSuair O.M.I., M.A.
|| LimrøfuLIGö O.M. l., M.A.
செல்வரெட்ணம் O.M., Ph.D.
|N. சண்முகலிங்கன் Ph.D.
Dr. R. Joagniasi M.B.B.S.
Saorir H.C. Dip. in Counselling, Kent. salargrett 0.M.I., B.A.(Hons), B.Th., Dip.Ed.
Sourcumrao O.M. l., M.Phil.

பார்க்கின்றோம்.
/இசிரியர் அரும்புகள் ཡོད༽ சிறப்பு மலரில் பொதுவாக உளவியல் விஞ்ஞானம் சார்ந்த சிந்தனைகளும், உளவியல் ரீதியாக மனிதன் அனுபவிக்கும் நெருக்கீடுகள், அவலங்கள் பற்றியும், அவற்றிற்குரிய சீர்மியப்படுத்தல் முறை சிகிச்சைகள் பற்றியும் வெளிவருவது இயல்பு. அத்துடன் மனித நடத்தை சார்ந்த பல ஆக்கங்கள் இணைக்கப்படுவது வாசகர்களதும், உள்நல்ம் நாடுவோரதும் தேவைகளை ஒரளவு நிறைவு செய்வதாக அமைவதுடன், புதிய கண்ணோட்டத்தில், நம்பிக்கையுடன் கூடிய வாழ்வின் அணுகு முறைகளை இனங்கண்டு மனித வாழ்வைச் சீர்ப்படுத்தவும் தூண்டுகின்றது. மனத்தின் பாதிப்பு, மனித நடத்தையில் பிறழ்வு நிலையை வெளிப்படுத்துவதென்பது ஆய்வின்வழி ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. மனித நடத்தை (Human Behaviour) சீரானதாக ge60DLDu J வேண்டுமெனில் ஆரோக்கியமான மனமும், நல்ல சிந்தனைகளும் ஒருவரை இயக்கவேண்டும். “மனமொன்றிற் சென்றால் காதொன்றும் கேளாதென்பர்? பெரியோர் (Mind controls our human behaviour.
வீதிகளில் பிரயாணம் செய்யும் போது பலதரப்பட்ட மனித நடித்தைகளைப் பார்க்கின்றோம். வீதி முழுவதையும் தமது ஏகச் சொத்தாகப் பயன்படுத்துபவர்கள்-வாகனங்கள் வருவதைக் கண்டும் விலகி இடங் கொடுக்காதவர்கள்-வாகனங்கள் ஒலியெழுப்பியும் அதைப் பொருட்படுத்தாதவர்கள் - துவிச்சக்கர வண்டிகளில் கைகோர்த்துச் சவாரி செய்து ஏனைய மனிதருக்கு இடைஞ்சல் விளைவிப்பவர்கள் - வீதியில் பயணிக்கும் முதியோர்களை ஏளனம் செய்பவர்கள் - பெண்களைக் கண்டால் கிண்டல் பண்ணுகிறவர்கள்-வீதிப்போக்குவரத்து ஒழுங்குகளைத் தமதாக்கிக்கொண்டவர்கள்-மதுபோதையில் வாகனங்களைத் தாறுமாறாகச் செலுத்துபவர்கள் எனப் பலதரப்பட்ட நடத்தைப் பிறழ்வுகளை நாளாந்தம்
இத்தகைய நடமாட்டங்களை அவதானித்த வெளிநாட்டு நண்பர் ஒருவர் கேட்டார் “உங்கள் மக்கள் எல்லோருக்கும் மென்ரலா? என்று (Are al your people mentally sick). BL 560)g5 5pbp635,6535(5 UG).35|TJ600115,356i இருப்பினும் முக்கியமானதொன்று ஆரம்பநிலை, குடும்ப உருவாக்கம் சரியான முறையில் இடம்பெறவில்லையென்பதாகும். குடும்பத்தில், சமூகத்தில், இறைஇல்லங்களில், கல்விச்சாலைகளில் ஆரம்பகால உருவாக்கம் காத்திரமான முறையில் வழங்கப்படவில்லையென்றால், குழந்தை வளர்ந்த பின்பும் மேரீடே நடத்தைப் பிறழ்வுகளைத்தான் வெளிப்படுத்தும். பிள்ளைகள் தகுந்த முறையில் உருவாக்கப்பட வேண்டியவர்கள் - வாழ்வுக்கு வேண்டிய அனைத்து நல்ல அம்சங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் - பணிந்த மனத்துடன், கனம்பண்ணும் குணத்துடன் கற்றுத் தெரியவேண்டியவர்கள் - கற்றபடி ஒழுக வேண்டியவர்கள். மீண்டும் மீண்டும் ஊனமுறும் வாழ்வுக்கும், r வித்திடாமல் புதியன தோன்ற நல் உருவாக்கம் பெறுவோம். சரியானவற்றைச் சிந்தித்து நேர்மையாக வாழ்வோம் உளநலம் பெறுவோம்.
\ரூழமையுள்ள வாழ்த்துக்களுடன், ம. போல் நட்சத்திரம் அமC)

Page 3
"நான்’ பங்குனி - சித்திரை 2003
嵩
60]IՈ]]
ள். .9
ராதி
அரியாலை
“தனக்கு தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில், முழு அமைதி நிலவும்”
என்பார் பெர்னாட்ஷா.
நாம் எல்லாம் தெரிந்தவர் போல் நடிக்க முற்படுவதனால் பல பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றோம். எமக்கு தெரிந்த வற்றை மறைத்தும், தெரியாத விடயங்களை பெரிது படுத்தியும் எம்மைப் பெரியவர்களாகக் காட்டுவதில் முன்னிற்கின்றோம். இதனால் மற்றவர்களை மதிக் காமலும், அவர்கள் கருத்துக்கள், உணர்ச்சிகளை கருத்தில் கொள்ளாமலும் செயற்பட தூண்டப் படுகின்றோம்.
எம்மை விட மற்றவர்கள் ஏதோ ஒருவித ஆற்றலில், திறமையில் உயர்ந்தவராக இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. ஏனெனில் எல்லாரிடமும் ஒரேவிதமான ஆற்றல், திறமைகள் இருப்பதில்லை. மாறாக வித்தியாசமான ஆற்றல், திறமைகள் இருக்கின்றன. அதனை நாம் மதித்து அவரை அவராக ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். ஒருவரின் திறமைகள், ஆற்றல்களை மதிக்கவில்லை
என்றால் நாம் அவருக்கு எதிராக செய்யும் மனித
உரிமை மீறல் ஆகும்.
爵 மனிதன் பிறக்கும் போது அவனுடன் கூடவே அவன் உரிமைகளும் பிறக்கின்றன. இதனை பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிக்கும் செயல்தான் உரிமை மறுப்புச் செயலாகும். அதாவது மற்றவர் தேவைகளை நாமே தீர்மானித்து, அவர்கள் உணர்வுகளை அடக்கி ஆளும் சர்வதிகார போக்கு எம்மிடம் அதிகமாக இருக்கின்றது. இதைத்தான் “மக்களின் தேவைகளை முடிவு செய்து செயற்படு வோரும், மக்கள் எண்ணங்கள், கருத்துக்களுக்கு மதிப்புக் கொடாதவர்கள் தலைவர்கள் அல்ல, அவர்கள் சர்வதிகாரிகள்” என்று கூறுவர். எமது பொறுப்பற்ற தன்மையினாலும், மற்றவர் முன் நல்லவராக நடிக்க முற்படுவதாலும், சுயநல

"நாண்’ பங்குனி - சித்திரை 2003 م”ه :- போக்கினாலும் எமது உரிமைகளை நாமே இழந்து போகின்றோம். எனவே மனித உரிமைகள் தன்னாலும் பிறரினாலும் மதிப்பிழந்து
போகின்றது.
பகSடிவதை தேவைதானா?
உறவுகள் தொடர்பாடலினால் கட்டியெழுப்பப்படுகின்றது. கணவன் மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-மாணவர் போன்ற எல்லாவகை உறவு வடிவங்களும் வலுப்பட சிறந்த தொடர்பாடல் முக்கியமானதாக விளங்குகின்றது. ஒருவர் சொல்லும் விடயங் களை, மற்றவர் பொறுமையாக செவிமடுப் பாராயின் அது அவருக்கு கொடுக்கும் மதிப்பாக விளங்குகின்றது. மாறாக, தான் சொல்வதை மட்டும் மற்றவர் கேட்கவேண்டும் என்ற தன்முனைப்புடன் செயற்படுபவர்கள் சுயநல போக்குடை யவர்கள். இவர்களினால் தான் உறவுகள் மத்தியில் பிளவுகள் ஏற்படுகின்றன.
ஒருவர் தமது உளம் திறமது பேசும் விடயங்களைக் கூட, நாம் இரகசியம் பேணாமல், வெளியில் சொல்லக் கூடாதவற்றை யெல்லாம் பெரிதுபடுத்தி சொல்லுவது எம்மிடையே தொடர்கதை தான். இவற்றைத் தான் எமது கேலிக்குரிய கருப்பொருளாகக் கொண்டு நண்பர்களுடன் பகிர்ந்து சிரித்து மகிழ்கின்றோம்.
இதனால் தம்மை வெளிப்படுத்த பயந்து, மன உழைச்சல்களை தமக்குள்ளே அடக்கி உள பாதிப்புக்குள்ளாகின்றார்கள். இதற்கு காரணம் நாம் தான். ஏனெனில் மற்றவர் மீது எமக்கு பொறுப்பற்ற தன்மை, மற்றவர் குறைகளை சுட்டிக்காட்டுவதில் மகிழ்ச்சி, அக்குறைகளை செவிமடுத்து ஆற்றுப்படுத்த தயக்கநிலை எம்மில் மேலோங்கியிருப்பதனால், அவர்கள் உணர்வுகளை மதிப்பதில்லை.
“உணர்வுகளை வெளிப்படுத்தாது புதைத்து வைப்பது பாதகமான விளைவுகளை ஒருவருக்கு ஏற்படுத்தும்” என்பது உளவியல் கருத்து. எனவே நாம் மற்றவர் உணர்வுகளை வெளிப்படுத்த இடம் கொடுப்பதில்லை அதனால் ஒருவரின் ഖഓ5ൺ நடத்தைக்கும், பாதகமான செயலுக்கும் துணைபோய் அவர்கள் உரிமைகளை பறித்துக் கொள்ளுகின்றோம்.
இதேநேரம் “எம் வாழ்க்கையில் அடங்கிப்போன உணர்வுகள் தான் மற்றவர் மீது பகிடி, சேஷ்டை என்ற ரீதியில் வெளிக்கொணரப்
3

Page 4
‘நான்’ பங்குனி . சித்திரை 2003
படுகின்றன” என்பதும் உளவியல் கூற்று. நாம் மற்றவர்களை எமது பகிடிப்பொருளாக பாவித்து இன்புறுவது குடும்ப-சமூக வாழ்வில் அடங்கிப்போன உணர்வுகளை வெளிக்கொணர்வதாக இருக்கின் றது. இச்செயல் மற்றவர்களை பாதிக்கும் ஒன்றாக அமைகின்றது. ஆகவே நாம் எமது உணர்வுகளை அடக்கி வைக்காமல் ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தியும் மற்றவர்கள் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த இடமளித்தும் வாழ்ந்தால், வெற்றிகரமான வாழ்வு எல்லாருக்கும் Ln6)(5l n.
“நகையுள்ளும் மின்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு”
என்பான் வள்ளுவன். அதாவது ஒருவரை விளையாட்டாகவும் இகழ்தல் நல்லதல்ல, அதேநேரம் மற்றவர் மீது பகைமையுள்ள போதும் இகழ்தல் இனியசெயல் அல்ல என்கின்றார்!
அன்பினால் அடக்கு முறையா? நல்லுறவுகள் வளரவும், உரிமைகள் பகிரப்படவும் அன்பு அடித்தளமாக இருக்கவேண்டும். ஆனால் அன்பு என்ற நிலையில் மற்றவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதும் உரிமை மறுப்புச் செயலாகும். ஒரு தாய் தனது பிள்ளை மீது அதீதபாசம் கொண்டு அதன் செயற்பாடுகளில் தலையிட்டு நீ அங்க போகாதே’ ‘இங்க போகாதே’ ‘அதைச் செய்யாதே? இதைச் செய்யாதே’ என்று கட்டுப்பாடுகளை விதிப்பாரானால் பிள்ளையின் சுய உருவாக்கம் குறைந்து பிறரில் தங்கி வாழும்நிலை உருவாகி எதிர்காலத்தில் சுயமாக இயங்க முடியாது போகின்றது.
பெற்றோர் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால், அதுதான் அன்பு என்றும், பிள்ளை மீது தாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம் என்று தப்பபிப்பிராயம் கொண்டு, பிள்ளைகளை சுயமாக சிந்திக்க தடைவிதித்து தாம் சொல்லும் விடயத்தை மட்டும் செய்யத் தூண்டுதல் அன்பு-பாசம் என்ற நிலையில் ஏற்படுகின்ற உரிமை மறுப்புச் செயல்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்த வரையறைகள் தேவைதான். ஆனால், அது அவர்களுடன் கலந்தாலோசித்து நல்ல முறையில் கட்டுப்படுத்தி

:ொஜனே துலிகல்
畿、總
蟒
‘நான்’ பங்குனி - சித்திரை 2003
0 0 d o t莺柠一 வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்க்ள் உரிமைகள்
மதிக்கப்படும்.
ஒரு காதலன் தன் காதலி மீது கட்டுப்பாடுகளை விதித்து தன் சொற்படி நடக்க நிர்ப்பந்திப்பதும், காதலி தன் காதலன் சொற்படி நடந்தால் அதுதான் தனக்கு பெருமை என்று தனது சுயநடத்தை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துதல் போன்ற செயல்கள் தன்னாலும்-பிறரினாலும் உரிமைகள் சிதைக்கப் படுகின்றன.
ஒருவர் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மற்றவர்களை அடக்கி-ஒடுக்கி வாழ முற்படுகின்றார்கள். ஒவ்வொரு அடக்கு முறைக்கும், உணர்வு வெளிப்பாட்டுக்கும் பின்னால் ஏதோ ஒரு தேவை மறைந்து இருக்கின்றது. இத்தேவைகளை நிறைவேற்றி, நிறைவு பெறுவதற்காக மற்றவர்களின் வாழும் உரிமையை மறுக்க நாம் யார்? எனவே மனித உரிமைகள் பற்றி பெரியளவில் சிந்திக்காது, எமது தனிமனித-குடும்ப-சமய-சமூக நிறுவனங்கள் மட்டத்தில் உள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்து, அவரை அவராக ஏற்றுக்கொண்டு, எமது தேவைகளை நிறைவேற்ற மிருகத்தனமாய் மாறாது, மற்றவர்களுடன் ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாறி, பிறர் உணர்வுகளை மதித்து நாம் வளர்ந்தால், மீறப்படும் உரிமைகளைக் காத்து, சமாதானத்தை நாம் உணர முடியும்!
懿

Page 5
"நான்’ பங்குனி - சித்திரை 2003
இளைஞர்களின் வன்குழு நடத்தை, விலகல்
சார் அணுகுமுறையூடாக நோக்கல் (Youth Aggressive Group Behaviour, Deviant Behaviour Approach)
சமூகவியல் சிறப்புக்கலை, யாழ்.பல்கலைக்கழகம்
சமூகபுலத்தில் இன்று அரசியல் ஸ்திரமின்மை, போர், சமூக ஒழுங்கமைப்பு குலைதல், ஜனநாயகத்தின் அதிஉச்ச சலுகைகள், சர்வாதிகாரப் போக்குகள் போன்ற பல்வேறு காரணங்களினால் வன்குழுக்களின் தோற்றமும், செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. இங்கு நாம் வன்குழு நடத்தையினை விலகல் 于T前 அணுகுமுறையூடாக நோக்கலாம்.
இந்திய சமூக உளவியலாளரான குப்புசாமி இன் கருத்துப்படி 'ஒத்த உணர்வுகளை ஒன்றுக்கொன்று பரிமாறும் ஒத்த சார்புள்ள உறவு நிலைகளைக் கொண்ட தனியனது கூட்டம் குழுவாகும்" ஆகவே இங்கு நாம் வன்போக்கு உணர்வுகளைக் கொண்ட தனியன்களது கூட்டம் வன்குழு என்ற முடிவுக்கு வரலாம்.
முழு மக்கள் சமுதாயத்தில் இளைஞர்கள் ஓர் உப குழுவாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கேயான உப பண்பாடும் காணப்படும். உதாரணம்:- ஆதிக்க உணர்வு, தலைமைத்துவம், பிறரிடமிருந்து மதிப்பினை எதிர்பார்த்தல். இத்தகைய இளைஞர் குழுவின் ஓர் உபகுழுவாக வன்குழு அமைகின்றது. இன்னொரு வரையோ அல்லது குழுவையோ தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று செய்யப்படும் செயற்பாடு வன்போக்காகின்றது. சிக்மன் புரொய்ட் மனிதனின் பாலுணர்வும், வன்னுணர்வும் மிகப்பலமான இயல்பூக்கங்கள் என்கிறார்.
இவர் மனிதனின் 2 மிக முக்கிய இயல்பூக்கங்களைக் குறிப்பிடுகின்றார்.
1. Eros - 6) is pédb85lb (Urge for living) 2. Thanatos — GFT64;:bLib (Urge for dying) இதில் மனிதனின் சாவூக்கமே வன்போக்கிற்கு காரணமாகின்றது. வன்நடத்தை அழிவிற்கும், கொலைக்கும் கொண்டு செல்லலாம்.
6

‘நான்’ பங்குனி சித்திரை 2003
வன்குழு நடத்தைகளாக சண்டை பிடித்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஏனையோரைத் துன்புறுத்துதல், கொலை, களவு போன்ற பலவற்றினைக் குறிப்பிடலாம்.
சமூகங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செல்நெறிகளில் இருந்து விலகிச் செல்வோர்களைப் பொதுவாக விலகல் நடத்தை கொண்டோர் 660 அழைக்கப்படுகின்றனர். இந்தவகையில் வன்குழுவின் நடத்தைகள் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள், விழுமியங்களில் இருந்து விலகியதாக அமையும்.
எமது சமூகப்புலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற பலவற்றில் வன்குழுக்களைக் காணலாம். இதனைவிட தீனா Group, Red Group போன்ற வன்குழு அமைப்புக்களும் காணப்படுகின்றன. இவைகள் சினிமாப் படங்களின் நடிகர்களை மாதிரியாகக் (Model) கொண்டு செயற்படுகின்றன. சிகையலங் காரம், உடை, அணிகலன் போன்ற பலவும் மாதிரியை அடிப்படை யாகக் கொண்டு பின்பற்றப்படும். வன்குழு ஒவ்வொன்றிற்கும் அவர்களுக்கேயான நியமங்களும், விழுமியங்களும் காணப்படும். உதாரணமாக: மதுபாவனை, ஆதிக்க உணர்வு, அவர்களுக்கேயான சில வார்த்தைப் பிரயோகங்கள் “தில் இருக்கா” “கேம்” போன்ற பல அம்சங்கள் சமூகத்தின் நியமங்களில் இருந்து விலகி அமைகின்றது.
மார்ஷல் கிளினாட் இன் மேற்கோள்படி "சமூகம் ஏற்றுக் கொள்ளத்தக்க சகிப்பு எல்லையைத் தாண்டிவிடும் நிலையில் உள்ள நடத்தையும் அதனை உருவாக்குகின்ற சந்தர்ப்பங்களும் விலகல் பண்புடையதாகக் கருதப்படும்' வன்குழு நடத்தையும் இத்தகைய விலகல் பண்புடையதே. ஏனெனில் சமூகம் வன்குழுக்களின் போக்கினை சகிக்காது வெகுசனத் தொடர்புசாதனங்கள் போன்ற பல்வேறு வழிகளில் விமர்சிக்கின்றது. உளவியற் கோட்பாடுகள் விலகல் நடத்தை என்பதைக் “கற்றுக் கொள்ளப்பட்ட நடத்தையாகக்” காட்டும். சமூகமயமாக்கல் செயல்முறையில் நிகழும் தவறுகளே ஒருவனைப் பிறழ்வு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இத்தகைய ஒழுங்கமைவற்ற சமூகமயமாக்கல் ஒருவனை சீரற்ற வழிகளுக்கு இட்டுச் செல்கின்றது. இத்தன்மையினை வன்குழுவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அனேகமான வன்குழுக்களின் அங்கத்தவர்கள் பெற்றோர்களின் அரவணைப்பற்றவராகக் காணப்படுவர். தாய்,

Page 6
"நான்’ பங்குனி - சித்திரை 2003 தகப்பன் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தின் பிள்ளை கள் இத்தகையவர்களே.
அனேகமான வன்குழுக்கள் பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவையாகவும், படிப்பற்றவர்களாகவும் இக்குழுக்களின் அங்க த்தவர்களின் பெற்றோர்கள் படிப்பறிவற்றவர்களாகவும் அமைகின்ற னர். இதன் மறுதலையாகவும் வன்குழுக்கள் அமையலாம்.
தொழிற்பாட்டுவாதம் விலகல் என்பது பயனுள்ள நேர்நிலையான தொழிற்பாடுகளையும் புரிவதனால் எந்தவொரு சமூகத்திற்கும் அது தேவையாகக் கருதப்படுகின்றது. “எந்தவொரு ஆரோக்கியமான சமூகத்தினதும் ஒன்றிணைந்த பகுதியாக விலகல் நடத்தைகள் இருக்கும்” என்பது எமில் துர்க்கைம்மின் கருத்தாகும். தொழிற்பாட்டு வாதத்தின் கருத்துப்படி குற்றச்செயல் என்பது தவிர்க்க முடியாததொன்று மாத்திரமல்ல, 91g. சமூகத் தொழிற்பாட்டுடன் இணைந்த செயலுமாகின்றது.
எல்லாவிதமான சமூக மாற்றங்களும் ஒருவித வில்கல் வடிவில் ஆரம்பிக்கும். கடந்தகால விலகல் நடத்தை நிகழ்காலத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்க நடத்தையாகவும் மாறலாம். இக்கருத்தினை வன்குழுவோடு பிரதியிடும் போது சிலவேளைகளில் வன்குழுவின் நடத்தைகள் நிகழ்காலத்தின் நியமமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. சில வன்குழுக்கள் நிகழ் காலத்தில் அல்லது எதிர்காலத்தில் புகழப்படலாம். உதாரணமாக:- சுபாஸ் சந்திரபோஸ், நெல்சன் மண்டேலா போன்றோர் ஒரு காலத்தில் வன்போக்குடையோராகக் கருதப்பட்டு காலவோட்டத்தில் அவர்கள் விடுதலை வீரர்களாகவும், வியத்தகு வீரர்களாகவும் கருதப்படுகின்றனர்.
இதன் மறுதலையாக ஒரு காலத்தில் புகழ்பெற்றவர்களாக இருந்தவர்கள் காலப்போக்கில் வன்போக்காளர்களாக கருதப் படுகின்றனர். உதாரணமாக:- கிட்லர் அவனது காலத்தில் புகழ்பெற்ற ஜேர்மன் நாட்டின் தலைவனாக வர்ணிக்கப்பட்டான். ஆனால் தற்காலத்தில் ஜேர்மன் தேசத்தவர் கிட்லரின் காலம் ஜேர்மனிய வரலாற்றின் விபத்து என்பர்.
றொபேற் (3LDL6öf சமூகக் கட்டமைப்பின் வழியாகவும், பண்பாட்டுக் கோலத்தின் வழியாகவும் பிணிசார் ஆளுமைப் பண்புகள் தோன்றுகின்றன எனக் கருதினார். சமூகமும், பண்பாடும் அந்தக் கட்டமைப்பில் உள்ளோர் மீது அழுத்தத்தைக் கொடுத்து
8

"நான் பங்குனி - சித்திரை 2003 விலகல் நடத்தைகளை வருவிக்கின்றன என்றார். இக்கருத்தினை வன்குழு நடத்தையோடு பிரயோகித்துப் பார்ப்பின் 6T ( Ogb) சமூகப்புலத்தில் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது அவர்களை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணப்பாங்கால் அழுத்தத்தை பிரயோகித்த போது விடுதலை இயக்கங்கள் என்ற வன்குழு தோற்றம் பெற்றது. நேரான வழியில் இலக்கினை அடைய அழுத்தம் ஏற்படும் போது வன்முறை ஏற்படுகின்றது.
இடைவினைக் (335T LIT LT6Titab6ft விலகியவர், விலகல், விலகலுக்குத் துலங்குபவரில் கவனம் செலுத்துகின்றனர். சமூகக் குழுக்கள் விலகலுக்குரிய வரைவிலக்கணத்தை வகுக்கின்றன. அவற்றைக் குறிப்பிட்ட D6856i மீது பிரயோகிக்கின்றன. அவர்களைக் குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்காதவர்கள் என முத்திரையிடுகின்றன என்று ஹொவாட் பெக்கர் குறிப்பிடுகின்றார். அதாவது ஒரு சாரார் இன்னொரு சாராரை "விலகியோர்” என மதிப்பிடுகின்றனர். இக்கோட்பாட்டினை வன்குழு நடத்தையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது எமது சமூகப்புலத்தில் அண்மையில் பத்திரிகையில் வெளியாகிய செய்தி ஒன்றின்படி கொழும்புத் துறையில் சிலர் ஒரு பெண்ணை கேலி செய்தல் போன்ற வன்முறையான நடத்தையில் ஈடுபட்டனர் என்றும், இதனைக் கண்ட இன்னொரு குழுவினர் @lഖf5ങ്ങബ് மடக்கிப் பிடித்து நையப்புடைந்தனர் என்றும் காணப்பட்டது. இச்செய்தியை தொடர்ந்து மறுநாள் பிரசுரத்தில் வாசகர் திருமுகம் என்ற பகுதியில் நையப்புடைந்த குழுவின் செயலைப் பாராட்டியும், இவ்வாறான குழுக்கள் ஒவ்வொரு ஊர்களிலும் தோற்றம் பெறவேண்டும், என்றவாறாக புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. எனவே இங்கு இரு குழுக்களும் வன்குழுவாக காணப்பட்டாலும் சமூகத்தின் UTfഞഖ, குழுக்களின் இலக்கு என்பவற்றின் ஊடாகவே வன்குழு எது? என தீர்மானிக்கப்படுகின்றது.
விமர்சனம் இங்கு நாம் வன்குழுவை வரையறுக்க எடுத்த அளவுகோல் சரியானதாக அமையாது. ஏனெனில் மனிதன் இயக்கம் கொண்ட இயல்பு மாறும் மனிதனாவான். ஏனெனில் ஒருவன் ஒருநாள் முழுவதுமோ அன்றி ஒவ்வொரு நாளுமோ வன்போக்குடையவனாக இருக்கமாட்டான். சந்தர்ப்பத்தின் நிமித்தம் ஒருவன் அக்கணத்தில் வன்போக்காளனாகக் காணப்பட்டு 6J60)6OTu நேரங்களில் நேர்நிலையாளனாகவும், சமூகத்தின் நியமங்களைக் கடைப்பிடிப் பவனாகவும் அமையலாம்.

Page 7

"நான் பங்குனி - சித்திரை 2003
G ༡ o O o e
ஒனறுபட நாடு’ தனிநபர் பங்களிப்பு 60IDui utsta)6)
அருட்திரு.S.D.P.செல்வன் வவுனியா
அறிமுகம் இன்று நாம் வாழும் உலகம் வித்தியாசமானது. தனித்தனி மனிதர்களாக முன்னேற முடியும், தனியாட்களாக வாழ்வில் நிறைவு பெறமுடியும் எனும் போலிச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒருவரின் அழிவிலேயே மற்றவரின் வாழ்வு எனும் எண்ணத்தைப் பல்வேறு நிலைகளிலும் ஏற்றுக்கொண்டும் நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறது. ஆனால் யதார்த்தமான இன்றைய வாழ்வில், ஒன்றுபட்டால் மட்டுமே அனைவருக்கும் வாழ்வு கிடைக்கும். தனிநபரும் வாழலாம்.
ஒன்றாவதே இயற்கை
ஒன்றுபட்டு வாழ்வதே இயற்கை. இயற்கையாகக் காணப்படும் அனைத்தும் தனித்தனியாக காணப்படுவதில்லை. ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டு வாழ்வதையே நாம் காணலாம். பல நீர்த்துளிகள் சேர்ந்தே நதி உருவாகிறது. நதியும் கடலுடன் சேர்ந்து ஒற்றுமைக்கு உதாரணமாகிறது. தன் இருப்புக்கு ஒன்றுபடல் தேவை என்பது தண்ணிருக்குத் தெரியும். மிருகங்கள், பறவைகள் கூட கூட்டங் கூட்டமாகவே கூட்டுவாழ்வில் ஈடுபடுகின்றன. ஒரு காகம் கரைந்து, மற்றக் காகங்களையும் உணவுண்ண அழைக்கின்றது.
மனிதர்கள் கூட கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். பண்டமாற்றுப் பொருளாதாரத்துடன், கூட்டுறவுடன் வாழ்ந்தனர் என்பதையே மனித வரலாறு எமக்கு கூறுகிறது. எனவே இயற்கை நியதியான “ஒன்றுபட்டு வாழ்தல்” எனும் நிலைப்பாட்டை எப்போது மனுக்குலம் மீறத் தொடங்கியதோ, அன்றிருந்து எம் வாழ்வின் இருப்புநிலை கேள்விக் குறியாகி விட்டது.
“என்னால் மட்டும் வாழமுடியும், மற்றவர்கள் தேவையில்லை” எனும் அகங்கார மைய நிலைப்பாடு எம்மை அழிவை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதை உலகின் சமகால நிகழ்வுகள் தெளிவாக்கி வருகின்றன.

Page 8
"நான் பங்குனி சித்திரை 2003 எனக்குள் நான் ஒன்றாதல்
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. ஒருவர் எப்படி வாழவேண்டும், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது போன்ற முடிவுகளை எடுக்கும் போது, இந்த உள்ளத்தில் நடைபெறும் போரை ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும்.
ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வது மிகவும் கடினமானது. ஏனெனில் ஒருவரால் தன்னைப் புரிந்து கொள்வதே சிக்கலானது. தன்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவராலேயே மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க முடியும். ஒவ்வொருவருக்குள்ளும் ஒற்றுமை இருக்கவேண்டும். ஒருவரின் சிந்தனை, செயல், பேச்சு அனைத்திற்கிடையேயும் ஒருமைப்பாடு காணப்பட வேண்டும். இந்த ஒருமைப்பாடு ஒருவரது ஆளுமையில் தங்கியுள்ளது.
சிலவேளைகளில், ஒருவரது சிந்தனை, செயல், பேச்சு போன்றன முரண்பாடுகள் நிறைந்தவையாக காணப்படுகின்றன என்று திடீர் முடிவுகளை “மற்றவர்கள்” விரைவில் எடுத்து விடுகின்றனர். இத்தகைய நிலைப்பாடு ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் முடிவு எடுத்த “மற்றவர்கள்” உடைய ஆளுமைகளும் எத்தகையவை என்பதை நாம் நோக்க மறந்து விடக்கூடாது. அத்துடன் வேற்றுமைகளில் ஒற்றுமையையும் நாம் பார்க்க வேண்டும் (Unity in diversity). ஆளுமைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள மனிதர்கள் வாழும் சூழ்நிலை (சமூக அமைப்பு, பண்பாடு.) கருத்திற் கொள்ளப்பட வேண்டும். மனித ஆளுமையைப் புரிந்து கொள்ள பின்வரும் அட்டவணை உதவும். இதனை எரிக் எரிக்சன் எனும் மனோவியலாளர் உருவாக்கியுள்ளார்.
எரிக் எரிக்சன் எனும் உளவியலாளரின் உளவியல் அபிவிருத் தியின் எட்டுப் படிகள் (ஆளுமை வளர்ச்சிப் படிகள்)
1. முதவாவது படிநிலை
முதலாவது ஆண்டு நம்பிக்கை - நம்பிக்கையின்மை
(Trust - Mistrust)
2. இரண்டாவது படிநிலை
இரண்டாவது ஆண்டு தன்னாட்சி - வெட்கம், தயக்கம்
(Autonomy - Shame, doubt)
மூன்று ஆண்டு தொடக்கம் முயற்சி தொடங்குநிலை-குற்ற உணர்வு
ஐந்து ஆண்டு வரை (Initiative - Guilt)

"நான்’ பங்குனி - சித்திரை 2003
4. ஆறு ஆண்டுகளிலிருந்து பூப்புப் பருவம் அல்லது பாலின விடாமுயற்சி - தாழ்வு மனப்பான்மை முதிர்ச்சியின் தொடக்க காலம் வரை (Industry - Interiority)
(Puberty)
5. ஐந்தாவது படிநிலை வனரிளமை அல்லது அடையாளத்துவம்' - எப்படி நடக்க புதுமலர்ச்சிப் பருவம் வேண்டும் என்பதில் குழப்பம்
(Adolescence) (Identity - Confusion about one's role)
6. ஆறாவது படிநிலை ‰% ነ
வயது வந்த அல்லது
வளர்ச்சியடைந்த நிலையின் நெருங்கிய நட்புறவு க் தனிமை ஆரம்பகாலம் (Intimacy - Isolation)
(Early Adulthood)
7. ஏழாவது படிநில்ை இளமை - முதுமை இனப்பெருக்கத்துக்குரிய நிலை -மந்தமான இடைப்பட்ட வயது அல்லது சோம்பலான நிலை
(Middle Age) (Generativity - Stagnation)
8. எட்டாவது படிநிலை முதுமை முழுமை - மனக்கசப்பு அல்லது நம்பிக்கை இழப்பு
(Old Age) (Integrity - despair)
elpGob : H.Gardner, Development Psychology (2"el)
Boston Little Brown, 1982, Pg 51. س”
மனித ஆளுமை வளர்ச்சியில் பல சிக்கல்கள் காணப்படுவதால் வளரும் சூழ்நிலை மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான வாழ்வை ஒருவர் வாழ்வதற்கு தனது சூழ்நிலையை தனது வளர்ச்சிக்குச் சாதகமாகப் பாவிக்க வேண்டும். ஒருவருக்குள் ஏற்படும் போராட்டம், இழுபறிநிலை அவரைப் பண்படுத்தி அவருக்குள் ஒன்றிப்பை, ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும்.
போர்ச்சூழலில் 20 ஆண்டுகள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒவ்வொருவரிலும் ஏற்பட்டிருக்கும் ஆளுமைச் சிக்கல்களை உடனடியாக நீக்கமுடியாது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்தோரிடமும் கூட சூழ்நிலைக ளுக்கேற்ப பல ஆளுமைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. இவை கவனமாக அணுகப்பட வேண்டியவை.
13

Page 9
"நாண் பங்குனி . சித்திரை 2003 பிறருடன் நான் ஒன்றாதல்
நாம் ஒவ்வொருவரும் தனித்து வாழாமல் பிறருடன் இணைந்து வாழும் போதே எமது இருப்பு அர்த்தம் பெறும். பிறரை மதித்து ஏற்றுக்கொண்டு 61η αριb போதே “நான்” அர்த்தமும், அடையாளமும் பெறமுடியும்.
நாம் வாழும் போது மற்றவர்களுடன் உறவு கொள்ள வேண்டும். இந்த உறவாடல் எமக்குள் இருக்கும் நல்ல பண்புகளை வெளிவரச் செய்ய வேண்டும். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல குழுக்களால் தீமைகள் செய்யப்படுவதையும் LIFTidseB6)Tib. எனவே நல் மனங்களையுடையோர் நீதியையும், அமைதியையும் நிலைபெறச் செய்ய ஒன்றாக வேண்டும்.
நாம் எப்போதும் நடிபங்கு மாதிரியாக (Role model) தனிநபர்களையே தேடுகிறோம், அலங்கரிக்கின்றோம். இது ஆரோக்கியமானதல்ல. எப்போதும் நாம் அங்கீகரிக்கும் தனிநபர்கள் தனிநபர்களல்ல, சிறிய குழுக்கள் என்பதை நாம் ஆழமாக ஆய்வு செய்தால் கண்டு கொள்ளலாம். தனிப்பட்ட நபர்களை கதாநாயகர்களாக பாராட்டுவதில் மட்டும் காலத்தை வீணாக்காமல் சிறு குழுக்களாக இணைந்து வாழ எம் காலத்தை செலவழிக்க வேண்டும்.
என்னைப் பற்றி நான் என்ன் நினைக்கிறேன் என்பது மட்டும் தனியாளின் வளர்ச்சிக்குப் போதாது. மற்றோர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார் கள் என அறிந்து கொண்டு சமூகமாக வாழ முயற்சிப்பது ஆரோக்கியமானது.
மனித விழுமியங்கள்ை'மதிக்காத சமூகம்
நாம் வாழும் சமூகம் வன்முறையை இலாப நோக்கமுடைய, காசை மட்டும் மதிக்கும் சமூகமாகும். மனிதத்துக்கு கொடுக்கும் மதிப்பைவிட இயந்திரங்களுக்கும், கணனிகளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகமாகும். மனித மாண்புக்கும், மனித நேயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
மனிதத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்க, ஒற்றுமையை உருவாக்க ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். தனிநபர்கள், சமுதாயம், சமுதாய அமைப்புகள், பொருளாதார, அரசியல், கலாசார, சமய அமைப்புகள் ஒவ்வொன்றும் மனிதம் வாழ செயற்பட வேண்டும். இந்தப் பணியில் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும். செபம், விசுவாசம் போன்ற மனப்பான்மைகளும், இறையாட்சியின் விழுமியங்களும் மாற்றுச் சமுதாயத்தை உருவாக்க நிச்சயமாக அடிப்படைகளாக இருக்கும்.
4

நான்’ பங்குனி - சித்திரை 2003
(!pgഖങ്ങj - “ஒன்றுபட நாடு வதற்கு ஒவ்வொருவரும் தன்னை தனியாள் மையமாக நினைக்காமல் சமுதாயம் மையமாகவும், இறையாட்சி மையமாகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். இதற்காக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. மனித மேம்பாட்டுக் கல்வி
மற்றவரைவிட நான் அதிகம் புள்ளிகள் பெறவேண்டும் எனும் இன்றைய
கல்வியமைப்பை விட்டுவிட்டு நல்ல மனப்பான்மைகளையும், விழுமியங்
களையும் முக்கியத்துவப்படுத்த வேண்டும். உதாரணம் :- சாந்தி நிகேதன்
2. சமூக வாழ்வு
குடும்பங்கள், பாடசாலைகள், பிள்ளைகளை, சமூகத்தை மனதில் வைத்து வளர்க்க வேண்டும். தனியாள் வளர்ச்சியை நினைத்து போட்டி LD6OTUT6660) D60)u உருவாக்காமல் சமத்துவ மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
3. ஆளுமை வளர்ச்சியை ஆரோக்கியமாக வளர்க்க நிகழ்ச்சிகள்
ஒவ்வொருவரும் தன்னைப் புரிந்து கொண்டு ஒற்றுமையை வளர்க்க ஏற்ற பயிற்சித் திட்டங்களும், பாசறைகளும் நடத்தப்பட வேண்டும். ஆகவே
ஒவ்வொருவரும் தன்னுள்ளும், பிறருடனும், கடவுளுடனும் ஒன்றுபடும்
போது உலகில் ஒற்றுமையும், நிறைவாழ்வும் ஏற்படும்.
ကြီဂိုရှိ်(
Fion HNystæSEA
உங்கள் வருட சந்தாவைப் புதுப்பித்து உங்கள் அங்கத்துவத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்
S

Page 10
"நான் பங்குனி - சித்திரை 2003
செ.பீற்றர்
(எதிர்பார்ப்பு என்ற பதம் ஏதோ ஒன்றை ஆர்வத்தோடு அடைவதற்கு எந்நேரமும் எதற்கும் தயாராக நிற்கும் ஓர் தன்மையை விளக்கிக் காட்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது பல்வேறு தரப்பட்ட வாழ்க்கை நிலையில் பல்வேறு வகையான எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளான். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. ஆனால் இவ் எதிர்பார்ப்புக்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்விக் கணைக்கு மனிதன் பதில் காணமுடியாமல் தவிக்கின்றான். ஆனால் எதிர்பார்ப்பு என்ற பதத்தின் விளக்க அடிப்படையில் பார்ப்போமேயாகில் அவை அனைத்தும் 919 D60T அபிலாசைகளில் இருந்தே உருவெடுக்கின்றன.
இவ் எதிர்பார்ப்புக்கள் மனித உறவுகளிடையே பற்பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. இப் பிரச்சினைகளுக்குக் காரணம் எம்மால் எது தகுதியான, நீதியான, வாய்ப்பான எதிர்பார்ப்பு என்று பகுத்தறிய முடியாத தன்மையே ஆகும். எமது எதிர்பார்ப்பு தகுதியானதொன்றாக இருக்க வேண்டுமென்று சொன்னால் அது உறுதியான துணை நிற்கக்கூடிய பல காரணங்களை தன்னகத்தே கொண்டதாக அமைய வேண்டும். உதாரணமாக :-
6 ஒரு சாதாரண மனிதன் தன் நண்பர்கள் தன்மேல் கரிசனை
உடையவர்களாய் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. 9 மற்றைய நண்பர்களைப் போல் தானும் நடத்தப்பட
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. 9 நண்பர்களுக்கிடையே நம்பிக்கை என்ற பண்பு இருக்க
வேண்டும் என்ற உயர்ந்த எதிர்பார்ப்பு
ஆனால் இவற்றிற்கெல்லாம் மாறாக எங்களுடைய அனேகமான எதிர்பார்ப்புகள் எதிர்மறையான, தகுதியற்ற, பொருளற்ற எதிர்பார்ப் புக்களாகவே அமைந்து விடுகின்றன. உதாரணமாக;-
9 எனக்கும் என் நண்பனுக்குமிடையே கருத்து வேறுபாடோ, கருத்து முரண்பாடோ ஏற்படக்கூடாது என்ற எதிர்பார்ப்பு. 9 நான் என்ன காரியம் செய்தாலும் அதை என் நண்பனும்
ஆமோதிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு.
16
 
 
 
 

நான்’ பங்குனி - சித்திரை 2003
இவ்வாறான பிழையான [ l6ᏙᎩ எதிர்பார்ப்புக்களை நாம் கொண்டிருப்பதால் அவை எம் வாழ்க்கையின் நோக்கத்தை, பொருளை மாற்றி விடுவதோடு நட்புக்கள் பலவும் உடைந்து போவதற்கு ஏதுவாக அமைந்து விடுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும், எனது எதிர்பார்ப்புக்களை நான் எவ்வாறு கையாள வேண்டும் என்று ஆய்ந்தறிந்து பயன் பெறுவோம்.
1. தேவையற்ற எதிர்பார்ப்புக்களை என் நண்பர்கள் மேல் சுமத்தாமல் இருப்பதை பழகிக் கொள்ள வேண்டும்.
2. நட்பின் மகத்துவத்தை அடையாளம் கண்டு அதை ஓர் வரப்பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் கட்டாயப்படுத்தி என் நண்பர்களைத் தேர்ந்து கொள்ள முடியாது. நண்பர்கள் நமக்குக் கிடைத்த மகத்தான கொடை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒருவன் மீது இன்னொருவன் நட்புக் கொள்வது ஆபத்துக்கள் பல நிறைந்த ஓர் நடவடிக்கை தான். இருப்பினும் நட்பு ஓர் விலைமதிப்பற்ற கொடை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
3. என்னை மற்றவர்கள் நேசிக்க வேண்டும், என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தவிப்பதை விடுத்து நான் மற்றவர்களை நேசிக்கவும், புரிந்து கொள்ளவும் முன்வர வேண்டும்.
4. திறந்த மனப்பான்மையோடும், நேர்மையாகவும் மற்றவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
5. வாழ்க்கையில் ஏற்படும் கசப்பான அனுபவங்களை சேர்த்து வைத்திருக்கப் பழகக்கூடாது. இவ்வாறு சேர்த்து வைப்பதால் நாம் எம்மையே தரம் குறைத்துப் பார்க்கும் பயங்கரம் உருவாகிவிடும். இது நட்பிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
• ER 303 - • --S>> •

Page 11
"நான் பங்குனி - சித்திரை 2003ஆ
வனஜா நடராஜா யாழ்ப்பாணம்
நான் வீட்டிலிருந்து ரவுணுக்குப் புறப்பட்டு விட்டேன். நான் நாளைக்குக் கொழும்புக்குப் போக இருக்கிறேன். சாமான்கள், உடுப்புகள் கொண்டு செல்ல இருந்த பெரிய கிட் வாக்கின் கைப்பிடி அறுந்து விட்டது. அதனைத் தைக்க வேண்டும். எனவே வீட்டிலிருந்து சைக்கிளில் ரவுண் நோக்கிப் புறப்பட்டேன்.
எனது மனம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. இன்று பாடசாலையில் அதிபர் என்னை, எனது சக ஆசிரியர்களிடம் “பரமேஸ்வரன் மாஸ்டர் பெரியதோர் மனிதாபிமானி. அவரின் மனிதத் தன்மைக்கு முன்னால் நாம் நிற்பது கொஞ்சம் கடினம்’ எனக் கூறிக் கொண்டிருந்ததை என் காதால் கேட்டு விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி.
நான் புகழ் எதிர்பார்த்துக் காரியமாற்றுபவனல்லன். என்றாலும் புகழ் மனிதனை ஏனோ மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. புகழைக்கண்டு மயங்கக்கூடாது என்று மனதுக்குள் திட சங்கற்பம் பூண்டாலும், இப்பொழுது நான் அந்தப் புகழ்ச்சி மொழியின் மகிழ்ச்சியை ஒதுக்கிவிட்டு சைக்கிளை மிதித்தபடியே சிந்தனை வயப்படுகிறேன். இன்று காலை உளப் பாதிப்படைந்தவர்கள் குறித்து சக ஆசிரியர் ஒருவருடன் உரையாடினேன். அதைக் குறித்து என் சிந்தனை ஓடியது.
“உளப் பாதிப்புக்கு உள்ளாவோரைத்தான் சமூகம் எப்படி ஒதுக்குகிறது. எமது மக்களிடையே உளவியல் விழிப்புணர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. இந்நோய் குறித்த சரியான மனப்பார்வை மக்களிடையே இல்லை. சமூகப் பொறுப்புணர்ச்சியுடைய பத்திரிகைகள் கூட காணாமற் போனோர், குறித்து எழுதும் பொழுது "இவர் சித்த சுவாதீனம் அற்றவர்’ என்று பிரசுரித்து அவர்களை ஏனையவர்களில் இருந்து பிரித்துக் காட்டி விடுகின்றனவே. உளப் பாதிப்பில் இருந்து மீண்டுவர அவர்களுக்கு உதவாமல் சமூகம் அவர்களை மேலும் பாதிப்புக்கு . 660 எண்ணியபடியே ரவுணை அடைந்தேன்.
நடை பாதையோரத்தில் குடை, செருப்பு, பைகள் தைப்பவர்கள் இருவர் உட்கார்ந்திருக்கின்றனர். இன்னுமொருவன் தொழில் செய்வதற்கான அடையாளம் உள்ளது. ஆனால் அவ்விடத்தில் ஆளைக் காணோம்.
18
 
 

"நான்’ பங்குனி - சித்திரை 2003, * நான் நடை பாதையோரத்திலிருந்த ஒருவனிடம் வாக்கைக் கொடுக்கி றேன். 'தம்பி அறுந்த கைப்பிடி மாத்திரமில்லாமல், எல்லாக் கைப்பிடிகளையும் தையும்” எனக் கூறிவிட்டு நிற்கிறேன். அப்பொழுது இன்னும் இரண்டு இளைஞர்கள் வந்து நான் வாக்கைத் தைக்கக் கொடுத்தவனுக்கு அருகில் இருந்தவனிடம் தம் செருப்புகளைத் தைக்கக்
கொடுத்தனர்.
நான் சிந்தனை வயப்படுகின்றேன். "இவர்கள் இந்தப் பிழைப்பை வைத்துக் கொண்டு எப்படித்தான் வாழ்க்கையை ஒட்டுகிறார்களோ? பிள்ளை, குட்டிகள் அவர்களின் படிப்பு . அப்பப்பா இந்தப் பூமியில் தான் எத்தனை ஏற்றத்தாழ்வுகள், வறுமையின் கொடுமைகள். அவர்களை என் மனம் இரக்கத்துடன் பார்க்கிறது. எப்பொழுது எல்லாம் சமமாக என எண்ணிய என் மனதில் நான் மனிதத்தை நேசிக்கிறேன்’ என்னும் திருப்தியும், கூடவே 'நான் என்றும் மனிதத்தை நேசிப்பவனாக இருக்கவேண்டும்” என்னும் உறுதியும் எடுக்கின்றேன்”
எனது இந்த சிந்தனை ஓட்டத்தை தூவுணை வார்த்தை ஒன்று கலைக்கிறது. பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். எதிர்ப்பக்கத்தில் உளப் பாதிப்படைந்த நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதன். அவன் தலைமுடி அழுக்கேறி ஒன்றுடன் ஒன்று புனைந்து . அரைக் காற்சட்டை போட்டிருக்கிறான். மார்பில் ஷேட் இல்லை. வலது தோள் பட்டையில் ஒரு பை. இதுதான் அவன் தோற்றம்.
எங்களைத் தாண்டிக் கொஞ்சத் தூரத்தில் பொலிஸ்காரர்கள். 'டேய்” அவன் கத்துகிறான். பின்னர் “பொங்கு தமிழ் வாழ்க, இந்த மண் எங்களின் சொந்த மண்” புரட்சிப் பாடல்களை உரக்கக் கத்துகிறான். இந்த வார்த்தைகள் அந்தப் பொலிஸ்காரர்களுக்குத் தான். இக்காட்சியை புடவைக் கடைகளில் நிற்கும் இளைஞர்கள் வேடிக்கை பார்த்துச் சிரிக்கின்றனர். அத்துடன் அவனுக்கு சினத்தையும் மூட்டுகின்றனர். அவன் அவர்களை அடிக்கப் போகிறான்.
என் மனம் “இவனுக்கு எப்படி இந்த நிலை . என்ன பாதிப்போ? இவனை வைத்தியசாலையில் சேர்த்தால் குணமடைந்து விடுவான். ஏன் வீதிகளில் அலைபவர்களை வைத்தியசாலையில் சேர்த்தால், அவர்களும் எங்களைப் போல் . 99
நான் மீண்டும் என்னைக் குறித்து எண்ணமிடுகிறேன். "என்னுடைய இந்த மனிதாபிமான சிந்தனை தான் மற்றவர்களிலிருந்து பிரித்து என்னைத் தனித்துவமாக்கிறது”. எண்ணிய நான் "சீ இப்படி என்னை நானே உயர்த்தி எண்ணி பெருமை கொள்ளக்கூடாது. இது ஆரோக்கியமான சிந்தனை அல்ல” என மனதுக்குள் கூறிக் கொள்கிறேன்.
19

Page 12
"நான்’ பங்குனி - சித்திரை 2003 அப்பொழுது அவன் என் அருகில் வருகின்றான். “பத்து ரூபா தாங்கோ’ என்னிடம் கேட்க நான் மெளனித்தபடி நளினமாக ஒதுங்குகிறேன். “அவன் பாவம் சுய நினைவில் இல்லை”. எண்ணிக்கொண்டு சற்று விலகி நிற்கிறேன். என்னிடம் ஆயிரம் ரூபா இருக்கிறது. கடையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் அவனை மீண்டும் சீண்டுகின்றனர். அவர்களிடம் அவன் காசு கேட்கிறான். அவர்களும் என்னைப் போல்.
இப்பொழுது மற்றைய தையல்காரன் தன் இடத்தில் வந்து அமர்கின்றான். அவன் பீடி பிடித்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்ததும் இவனுக்கு இந்த வருமானம் . எண்ணமிடுகிறேன்.
இப்பொழுது அவன் தற்போது வந்தமர்ந்த தையல்காரனிடம் போகிறான். பீடியைத் தரும்படி கேட்கிறான். அவன் தான் பற்றிய குறைப்பீடியை அவனிடம் கொடுக்கிறான். என் மனதில் ஒரு நெருடல்.
“டேய் பத்து ரூபா தாடா” அந்த தையல்காரனிடம் அவன் கேட்கிறான். தையல்காரன் சிரிக்கிறான். அவன் மீண்டும் பத்து ரூபா தரும்படி கேட்க, அந்த தையல்காரன் சிரித்த படியே பத்து ரூபாவைத் தன் ஷேட் பொக்கற்றுக்குள்ளால் எடுத்துக் கொடுக்கிறான். அவன் தையல்காரனின் தோளில் தட்டிவிட்டுச் செல்கிறான்.
எனக்கு மனதில் பூகம்பம் வெடிக்கிறது. அவனின் மனிதம், புரிந்துணர்வு - என்னுடைய வரட்டு சிந்தனை வாதம், என்னுடைய உளப் பாதிப்புக்கு உள்ளானோர் குறித்த அறிவு எல்லாம், அவன் மனிதத்துக்கு முன்னால் தூசாகின. அந்த தையல்காரனை மனதினால் பார்க்க அவன் மேலே மேலே உயர, என்று பொக்கற்றுக்குள் இருந்த ஆயிரம் ரூபா நோட்டும் வேறு, எனது நெஞ்சை நெருஞ்சி முள்ளாகக் குத்துகிறது.
(முற்றும்)
20

"நான்’ பங்குனி . சித்திரை 2003
ஜோயப்
கறை கடந்த எம் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தீரோ . இன்று
கீன்னியரின் கற்புக்கு கடுகளவும்
மதிப்பில்லை - ஏன்? மரத்திட்டதோ, மனித மூளை - இல்லை இறந்திட்டதோ இயங்கும் எம் இதயம் இறுகிப்போன “எஞ்சினில்” இயக்கம் இல்லை ஆனால் இல்லையென்றதே இல்லை இளையவர் தம் பாலியல் தொல்லையில் பஸ்ஸில் போனால் படாத தொல்லை
கிஸ்ஸே தான் எம் காதல் எல்லை இது லேசில் திருந்தாத காமக் காதலர்கள்.
கறையில்லை என்னிடம்" என்பாயோ? எனில் கடைசிவரை திருந்தவே போவதில்லை." கடிவாளம் இல்லையென்றால் KYRKAN WING உன் காமக் குதிரைகளுக்கு, கழுகு கூட தின்னாதுன்
அழுகிய ஆன்மாவை.
கணனிக் காதல், கல்லூரிக் காதல் கவர்ச்சிக் காதல், காமக் காதல் இன்னும் கள்ளக் காதல் என்று கதை படித்து களித்த எமக்கு வைத்திய சாலையின் வாய்க்கால்களிலே வழிந்தோடும் வாயில்லா சிசுக்கருக்கள், “இது கதையல்ல கற்பனையுமல்ல - எங்கட
கன்றாவிக் காவியங்களே” என்று
சத்தமிட்டு சகதியில் சமாதியாகின்றன. இது சரியா? இல்லை அரிதா? i
என்னையும் உன்னையும்" குழிசைபோட்டு, குறடுகொண்டு கொன்றிருந்தால் எப்பவோ நீயும், நானும் வாய்க்கால்களில் வடிந்து மடிந்திருப்போம். அம்மா, என்னை, உன்னை விட்டு வைத்தாள் வளர்த்தெடுத்தாள் ஏன்?" பச்சைக் குழந்தைகளை பிய்த்துப் போடவா? நான் அழிக்க எனக்கொரு காரணம் நான் அழிய ஏனொரு காரணம்' இருக்கல என் தாய்க்கு. கதைவிடாதே சகோதரமே கருவைத் தொடாதே பாவம் நிரந்தரமே.
21

Page 13
நான்’ பங்குனி - சித்திரை 2003
வன்முறையற்ற தொடர்பாடல் (Non-Violent Communication)
ஜே.எம்.ரி.றொட்றிக்கோ
சமூகவியல் மாணவன்
அகவொளி குடும்ப வளத்துணை நிலையத்தின் மாதாந்த ‘போயா? தினக் கருத்தரங்கில், இவ் வருடத்துக்கான முதலாவது: கருத்தரங்கில் மேற்குறித்த தலைப்பு பேசப்பட்டமை நடைமுறை: அரசியல் அமைதிக்கான பயணத்திற்கு சாலப் பொருத்தமானதாக; அமைந்தமை குறிப்பிடத்தக்கதே. இக் கருத்தரங்கினை: வண.எஸ்.டேமியன் அடிகளார் முன்னெடுத்தார். தொகுத்து: :பகிர்வதில்.மிகுந்த ஐவகையடைகின்றேன்.
வன்முறையற்ற தொடர்பாடல் என்ற விடயத்தினுள் புகுமுன் “வன்முறை” என்பதனை நோக்க, நாம் எம்மைச்சுற்றி அல்லது எம்மைப் பற்றி ஓர் வரைபடம் போட்டுள்ளோம்.
அது என்னவெனில் ‘நான் வன்முறையற்றவன்', ஆனால் தனிநபர் ஒவ்வொருவரிலும் வன்முறை என்பது காணப்படுவதாகவும் எப்படியெனில்; எங்களுடய பேச்சு, நடத்தை, சிந்தனை, உணர்வு, பழக்கவழக்கங்கள் இவற்றில் எம்மால் அறியப்படாமலேயே வன்முறை பட்டுத்தெறிக்கின்றது. மேலும் வன்முறை என்பது போர்க்காலத்தை விட போர் ஓய்ந்த பின்னுள்ள காலத்தில் தான் அதிகமாக இடம் பெறுவதாக "உளவியலாளர்கள்” குறிப்பிட்டிருப் பதை சுட்டிக்காட்டினார். தற்போதைய சமூக, அரசியல் நீரோட் டத்தில் இவ்வன்முறை கலந்திருப்பது புலப்படுகின்றது. நோக்க... ,
> சொந்த வாழ்வில்:- மனப்பாங்கு, மனப்பதிவு, எண்ண
ங்களில், சொல், செயல்களில். > குடும்பத்தில்:- பெற்றோர்-பிள்ளைகளிடையே, கணவன்
மனைவியரிடையே. > சமூகத்தில்:- சமூகக் குழுக்களிடையே, இரு சமூகங்களி
டையே.
உண்மையில் மனிதனின் guébuT60T நிலை’ (Nature)
“வன்முறையற்ற சுபாவமே” மனிதன் பிறக்கும் போது
22

I fig. G. معبر ہو۔":la۔۔۔یے یہ؟ * ‘நான்’ பங்குனி . சித்திரை 2003 氰 Ա5/16:04, to
-- வன்முறையுள்ள சுபாவமுள்ளவனாகிட்டபிற்ப்பதில்லை. ம் காலத்தின் போக்கில் அவனது சூழ்நிலை (சூழல்), வளர்ட் முறை, வாழ்க்கை முறை என்பனவே அவனை மாற்றுகின்றது.
எனவே வன்முறையற்ற தொடர்பாடல் என்பது, “பரிவு, கருணை, காருண்யம், இரக்கம் நிறைந்தவர் பேசும் மொழி, அதாவது உள்ளத்திலிருந்து மற்றவரின் உள்ளத்திற்கு பரிமாறும் (மொழியாக) தொடர்பாடலாக உள்ளது”. இம் மொழியானது நம் ஒவ்வொருவரிடத்திலும் உள்ளதெனவும், அதனை நாம் அந்த மொழியைத் தொலைத்து விட்டோம். மீண்டும் அதனை நாம் நம்மோடு இணைக்க வேண்டும். இந்த வன்முறையற்ற தொடர் பாடல் மூலம்; வாழ்வின் ‘ஆன்மீக பயிற்சிக்கு நெறியாக அமையும், எம் தேவைகளின் அறிதிறனை கொண்டிருக்க இது எமக்கு வழிசமைக்கும், அத்துடன் நாம் பிறருடன் கொள்ளும் தொடர்பு விரிவடையும், குடும்பத்திலே, சமூகத்திலே நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
வன்முறையற்ற தொடர்பாடலானது பின்வரும் அம்சங்களைக்
கொண்டுள்ளது.
1. 96.15|T60s - (Observation) நாம் நமது பார்வைப்புலன், கேள்விப் புலன்களின் அடிப்படையில் பலவற்றை அவதானிக்கின்றோம். இந்த அவதானிப்பானது 'உண்மையை உண்மையாகப் பார்ப்பதில் தான் த்ங்கியுள்ளது. அதாவது “உண்மை எது?” என்பதை அறிய வேண்டும். பார்த்தல், கேட்டல் என்பதன் அடியான அவதானிப்பு தப்பாகும் போது 'வன்முறை' ஏற்படுகின்றது.
2. 2 600Tsió856i - (Feelings) இது அவதானத்தின் தொடர்ச்சியில் தங்கியுள்ளது. அதாவது நிகழ்வை அவதானிக்கும் போது ‘உணர்வுகள்’ உடன் வேலை செய்ய ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக நாம் இயற்கையில் ஒரு காட்சியைப் பார்க்கிறோம் என எடுத்துக் கொள்வோம். ஒருவருக்கு அக்காட்சி மனதுக்கு மகிழ்வுணர்வைக் கொடுக்கும். அதே காட்சி இன்னொருவருக்கு துக்க உணர்வைக் கொடுக்கலாம்.
எனவே மனிதன் உணர்வுகள் நிறைந்தவன். உணர்வுகள் என்பது
மனிதனின் ஒரு பகுதி. உணர்வு தேவையானது. ஆகவே
அவ்வுணர்வுகளை நாம் “இனங்காண்பது' என்பது அவசியமானது.
23

Page 14
நான் பங்குனி சித்திரை 2003
3. தேவைகள் - (Needs)
வன்முறையற்ற தொடர்பாடலில் தேவைகள் அதிகம். ஒவ்வொரு உணர்வுகளின் பின்னாலும் எமக்குத் தேவைகள் உண்டு.
4. வேண்டுகோள் - (Request) 5. 695.5|Gorff say - (Empathy) i
இந்த ஐந்து அம்சங்களையும் புரிந்து கொள்ளும் பொருட்டு ஓர் எடுத்துக்காட்டினூடே நோக்குவோம்.
፶፭፥ * ஒரு ஆறு வயதுச் சிறுவன் பாடசாலை முடிந்தவுடன் வீட்டிற்கு வருகிறான். அவனுக்கு சரியான பசி, அதனால் அவன் புத்தகப்பை, காலணி, சீருடை இவற்றை ஒவ்வொரு திசையில் (வீசி) போட்டு விடுகின்றான்.
* இதனடியாக மகனின் செயலைத் தாயார் “அவதானிக் கின்றார்”. இதனால் 'கோபம்’ என்ற “உணர்வு’ ஏற்படு கிறது. உணர்வினடியான "தேவை” (மகன் அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும்) “வேண்டுகோள்” இப்படியாக இதைச் செய்தால் எப்படியிருக்கும் என்று நேர்முறையில் (Positive) அணுகுதல். "இப்படித்தான்’ செய்ய வேண்டும் என்றால் அது எதிர் (Negative) முறையிலான அணுகு முறையாக அமைய வன்முறை உருவாகும். “ஒத்துணர்வு” இருவரும் புரிந்து கொண்டு பரிவுடன் பேச வன்முறையற்ற தொடர்பாடல் ஏற்படும்.
எனவே இங்கு வேண்டுகோள், ஒத்துணர்வு என்பது முக்கிய மானதாக உள்ளது. இங்கு நாம் மற்றவரின் பிரச்சினையை என்னுடைய பிரச்சினையாகப் பார்க்கும் போதுதான் இதில் நாம் வெற்றி பெறமுடியும். மேலும் மனிதர்களுள் குள்ளநரியின் மொழி, ஒட்டகச் சிவிங்கியின் மொழி கொண்ட வேறுபட்ட மனிதர்கள் இருப்பதாக உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றின் மொழியினை நோக்க ... ,
ஒட்டகச் சிவிங்கியின் மொழி 1. இதயத்திலிருந்து புறப்பட்டு வரும் மொழியாக உள்ளது. 24

"நாண்" பங்குனி - சித்திரை 2003
பரந்த இதயம் கொண்டதை பகுப்பாய்கின்றனர். இதற்கு பரந்த ஓர் பார்வை உண்டு. எல்லோரையும் பரிவுடன் பார்க்கும் மொழியாக உள்ளது. நல்லதோர் மேம்பாட்டினை உருவாக்கக்கூடியது. . இது நல்லுறவுகளைக் கட்டியெழுப்பும். 。リ இவை அனைத்திற்கும் எதிரான/மாறான மொழியாக குள்ளநரியின் மொழி காணப்படுகிறது. .. 偲
இறுதியாக, இதயத்திலிருந்து வரும் பரிவு மொழி நம் ஒவ்வொரு வரிடமிருந்தும் புறப்படவேண்டும். அதுவே நல்வாழ்வுக்கான வழி (“Language of the Copmpassion. It is a way of Life") 6T6GT5 g55ty (6 தனது கருத்தரங்கினை நிறைவுக்குக் கொண்டு வந்து, இதன் பின் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடைகளை வழங்கினார், அடிகளார்.

Page 15
நான் பங்குனி - சித்திரை 2003
கருத்துக் குவியல் ~ 96
அரசியல் அமைதி
மனிதனுடைய வாழ்வின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக மொழியும், அரசியலும் இரு கண்களாகத் திகழ்கின்றன. ஆனாலும் இவ் இரண்டினுள் ஒன்று அதிகம் பங்களிப்பது இங்கு முக்கியம் பெறுகின்றது. அது அரசியல் அமைதியாகும். ஒரு வீட்டிற்குள் நாம் உளவியல் ரீதியாகப் பார்ப்போமாயின் அம்மா, அப்பா இருவரையும் ஒரு பிள்ளைக்குப் பிடிக்கும். ஆனாலும் அவர்களில் அம்மாவையோ அல்லது அப்பாவையோ அதிகம் பிடிப்பதாக உள்ளது. அதே போலத்தான், éᏐ6ᏡᎧ6u , கல்வி, கலாச்சாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு அரசியல் அமைதி முக்கியம் பெறுகிறது.
சமுதாயத்தில் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதைப் போல பிணக்குகளும் தோன்றுகின்றன. இது உளவியல் ரீதியான ஓர் செயற்பாடாகும். ஆரம்பகாலத்தில் ஒற்றுமைகளையும், பிணக்குகளை யும் அவ்வப்போது சமூகப் பெரியவர்கள் மேம்பாடடையச் செய்தும், தீர்த்தும் வைத்தார்கள். காலப்போக்கில் இதன் தன்மை மாறுபட அரசு/அரசியல் என்ற அமைப்பு உருவானது.
மனித சமுதாயத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு
மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை மிக விரைவாகவும், பெரும்
மாற்றத்தினை வேண்டி நிற்பவையாகவும் அமைகின்றன. இச் சமுதாய நீரோட்டத்தில் அரசியலின் செல்வாக்கு பெரும்பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் சில அரசியல் கொள்கைகள், நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகின்றான். அதைப் போலவே நாட்டில் அமைதியைப் பேணி வருகின்றான். இதனால் மேலைநாட்டுக் கல்வியானது ஆங்கிலக்கல்வி உள்வாங்கப்பட்டும், மேற்படிப்புக்கள் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் பெருகியும் வருகின்றன. இதனைப் போலவே மேலைத்தேயக் கலாச்சாரமும் அளவுக்கதிகமாக ஒவ்வொரு மனிதனாலும் விழுங்கப்பட்டுக் கொண்டு வரும் வேளையில், எமது பண்பாட்டைச் சிதைத்துவிடும் அபாயம் வெகு தொலைவில் இல்லை என்பது வருந்தக்கூடியதாகும். அண்மைக் காலமாக நிலவுகின்ற சமாதான நீரோட்டத்தில் கல்வி மாற்றம், கலாச்சார, பண்பாட்டு மாற்றங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசியல் செயற்பாடானது கலாச்சாரத்திலும் இணைந்துள்ளது. அரசியற் சமூகத்தின் கோட்பாடுகளையும், சித்தார்த்தங்களையும், வாழ்க்கை முறையில் விட்டுக் கொடுக்கும் 26
 

"நாண்" பங்குனி - சித்திரை 2003 பண்பு, பிறர் அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்கும் தன்மை, ஜனநாயகப் பாரம்பரியம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
அதாவது அரசியல் அமைதியானது இயங்கும் சுற்றுச்சூழல், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இங்கு காலம், இடம், சூழல் அரசியல் அமைதியை நிர்ணயிக்கின்றது. ஏனெனில்
மனிதன் பிறக்கும் பொழுது நல்லவனாகவே பிறக்கின்றான். பின்னர்
சூழல் தான் அவனை மாற்றுகின்றது. தற்கால முன்னேற்றத்தில் காலம் மாறுகின்றது. கலாச்சாரம், பண்பாடு மாற்றப்படுகின்றது.
அதற்கேற்ப மனிதனும் தன்னை மாற்றியமைக்க முனைகின்றான்.
காலத்தின் தேவையும், நியதியும் கூட இதுவே.
இன்றைய உலகமயமாக்கலின் மூலம் உலகம் ஓர் கைக்குள்
வந்துவிட்டது. மனித மனம் மாறுபடுகின்றது. மொழி வளர்ச்சி, அரசியல் அமைதி பொதுவில் மனித வளர்ச்சிக்கு பங்களிப்
பளித்தாலும் அதிகமாகப் பங்களிப்புச் செய்வது அரசியல்
அமைதியாக இன்றைய சூழலில் உள்ளது. 'Isis
K.Fif சமூகவியல் சிறப்புக்கலை,
யாழ்.பல்கலைக்கழகம்
மொழி வளர்ச்சி
ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் போது அவனுக்கே உரித்தாகி, அவனோடு ஒட்டிவரும், 96)6O)6OT அடையாளப்படுத்தும் சொத்துக்கள் மூன்று. நிறம், இனம், மொழி என்பன தான் அவனை அடையாளப்டுத்தும் அளவுகோல்கள். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் ஓரளவிற்கேனும் அவனை
அடையாளப்படுத்தி விடமுடியும். இந்த நிறம், இனம், மொழி
என்பவற்றின் வித்தியாசத்திற்கு ஏற்ப வேறுபட்ட வடிவங்களில் கலை, கல்வி, கலாச்சாரம் என்பன வளர்ச்சி பெறுகின்றன. எனினும் இவை மூன்றின் வளர்ச்சிக்கு மொழியின் பங்கே முழுமையாகத் தேவை என்பதை நாம் திட்டமாகக் கூறிவிட முடியும்.
鞑
ஏனெனில் ஒரு நாட்டின் அல்லது இனத்தின் கலை, கல்வி,
கலாச்சாரம் என்பன அந்நாட்டு அல்லது இனத்து மொழியின்
அடிப்படையிலேயே பேசப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒட்டுமொத்த உணர்வுகளையும், தேவைகளையும், திறமைகளையும்
27

Page 16
நான்’ பங்குனி - சித்திரை 2003 வெளியுலகிற்குக் கொண்டு வருவதில் மற்றைய ஊடகங்களை விட மொழி ஊடகமே மிகச் சிறந்ததாக அமைகின்றது. எனவே கலை, கல்வி, கலாச்சாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு மொழி ஒரு காவி அல்லது கடத்தி என்று கூறமுடியும். எல்லாக்கலை வடிவங் களையும் அபிநயங்களாலும், சைகைக ளாலும் விளக்க முடியுமா? ஆனால் எந்தவொரு கலை வடிவத்திற்கும் மொழி விளக்கம் கொடுக்க முடியும். நேர் கோடுகளாலும், வரை படங்களாலும் கொடுக்கப்படும் கல்வி கூட மொழி விளக்கத்திற்கு உட்பட்டே அமைகின்றது. மக்களின் வாழ்க்கை முறைகள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், வழமைகள் என்பவற்றை உள்ளடக்கும் கலாச்சாரம் தொடர்ந்து வாழப்படுவதற்கு, வாழப்படுவதற்கான காரணங்களைப் புதிய தலைமுறைக்குப் புகட்டுவதற்கு மொழி ஒன்றே கைகொடுக்கின்றது.
மேலும் எமது கலை, கல்வி, கலாச்சாரத்தை அந்நிய தேசங்கள் அறியவும், அந்நிய தேசத்துக் கலை, கல்வி, கலாச்சாரத்தை நாம் அறிந்து கொள்ளவும் மொழி ஒன்றே சிறந்த ஊடகம். மொழி வளர்ச்சி இல்லாத போது கலைகளின் வர்ணனை வரையறைக்குட்பட்டிருக்கும். இந்நிலையில் கல்வி கடுகளவு கற்கப்படும், கலாச்சாரம் முன்னேற்றமின்றி முடக்கப்படும்.
எனவே கலை, கல்வி, கலாச்சாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு அதிகம் பங்களிப்பது மொழி வளர்ச்சியே ஆகும்.
தயா
கருத்துக்குவியல் - 97
தனிமனித தேவைகள் அவன் வாழும் சூழ்நிலையோரு ஒத்துய்போகாதவிடத்து அது அவனது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும்/எற்படுத்தாது
உங்கள் கருத்துக்களை 20.04.2003 க்கு முன் அனுப்பிவையுங்கள்.
28
 

நான்’ பங்குனி - சித்திரை 2003
சமுதாயத்தில் நெருக்கீடு (Stress in Society)
உதயமலர் உதயசந்திரன் B.A Hons, சுகவாழ்வு நிலையம்
சமூகத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் நெருக்கீட்டிற்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின்ற னர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான நெருக்கீட்டிற்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்ற போதும், சிலர் கூடுதலான நெருக்கீட்டிற்கு உட்பட்டவர்களாக விளங்குகின்றனர்.
ஒருவன் தனக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் அல்லது நிலைமை களுக்கு முகங்கொடுக்க முடியாத போதே நெருக்கீட்டிற்கு உள்ளாக்கப்படுகின்றான். எனவே இப் பிரச்சினைகளை அல்லது நிலைமைகளைத் தடுப்பதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் நெருக்கீட்டிலிருந்து ஓரளவு தப்பிக் கொள்ளலாம். மேலும் சில நெருக்கீடுகள் சாதாரணமானவையாக விளங்குகின்றன. நெருக்கீடு ஒன்றிற்கு உள்ளாகும் ஒருவன் அதனை எதிர்த்து, அதற்கு, ஏற்றவகையில் தம்மை செயற்படுத்துபவனாக இருக்கவேண்டும்.
அண்மைக் காலங்களில் போர்ச்சூழல் காரணமாக சமுதாயம் பல் வகையான நெருக்கீடுகளிற்கு உள்ளாக்கப்பட்டது. குறிப்பாக, தொடர்ச்சியான போரினால் மக்கள் பல வகையிலும் பாதிப்புற்றுக்
காணப்பட்ட போதும் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல
வழிகளில் நெருக்கீட்டிற்கு உட்பட்டவர்களாகவே காணப்பட்டனர்.
நெருக்கீடு என்பது ஒரு குடும்பத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திலுமே இடம் பெறத் தொடங்கியது. தொடர்ச்சியான போரினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவானது சமுதாயத்தை வறுமை நிலைக்கு தள்ளியமையே ஆரம்பத்தில் நெருக்கீடு தோன்ற வழி வகுத்தது. இதனைத் தொடர்ந்து உறவினர் ஆதரவு இன்மை, கூட்டு வாழ்க்கைச் சிதைவு, எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லாமல் போனமை போன்ற அம்சங்களும் நெருக்கீடு மென்மேலும் சமுதாயத்தில் தோற்றம் பெற வழி வகுத்ததுடன், சமுதாயம் வறுமை நிலைக்கும் 956irón Lil Lg). இதனால் “கவலையே” நெருக்கீட்டை ஆரம்பித்து வைக்கும் முகிழாகச்
29

Page 17
"நான்’ பங்குனி . சித்திரை 2003 செயற்பட்டது. கவலை காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் (தலையிடி, களைப்பு) திரும்பவும் கவலையைத் தோற்றுவிக்கிறது. இதுவே தொடர்ச்சியாக நெருக்கீடு தோற்றம் பெற வழி வகுக்கிறது.
நெருக்கீட்டிற்கு உள்ளான ஒருவரை அவரது உடல், உள ரீதியான செயற்பாடுகளை வைத்து இனம் காணப்பட்ட ஒருவர் நெருக்கீட்டிலிருந்து ஓரளவு விடுபடுவதற்கு சான்றோரின் ஆலோசனைகள், சார்ந்த வழி முறைகள் என்பன போன்றவற்றுடன் அன்பு வழிவந்த உறவுத் தேவையை (Love and Belongingness need) பூர்த்தி செய்வதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம். சமுதாயத்தில் நெருக்கீடானது வாழ்க்கையின் கஷ்ட காலங்களில் உருவாகுவதுடன் துயரம், கவலை, தேகாரோக்கியம் குன்றிய நிலை, நடத்தை மாற்றம், மற்றவர்களுடனான உறவில் பிரச்சினை, செயற்பாட்டு சீர்கேடுகள் போன்ற காரணிகளையும் தோற்றுவிக்கும். இதனால் உடல் சார்ந்த நெருக்கீட்டிற்குத் தள்ளப்படுவர் (குடற்புண், தொய்வு, உயர் குருதியழுக்கம், தலையிடி, களைப்பு). இதுவே உள ரீதியில் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கும். அவை அந்தரம், சினம், ஸ்திரமற்ற மனநிலை, மன ஒருநிலைப்பாடு குறைதல், யோசனை, கவலைப்படல் போன்றவையாகும்.
சமுதாயத்தில் நெருக்கீட்டிற்கு உட்படுவோரை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. குழந்தைப் பருவத்தில் நெருக்கீட்டிற்கு உள்ளானோர். 2. கட்டிளமைப் பருவத்தில் நெருக்கீட்டிற்கு உள்ளானோர். 3. முதியோர் பருவத்தில் நெருக்கீட்டிற்கு உள்ளானோர்.
0 குழந்தைப் பருவத்தில் நெருக்கீட்டிற்கு உள்ளானோர்
நெருக்கீட்டின் ஆரம்பம் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பமாகிறது. குழந்தை வளர வளர பல்வேறு வகை நெருக்கீட்டிற்கு உள்ளாகின்றது. குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில் நெருக்கீடானது மனவெழுச்சி நிலையிலேயே தோற்றம் பெறுகிறது. இவ்வாறு உண்டாகும் நெருக்கீட்டை மாஸ்லோ கூறுகின்ற அன்பு வழிவந்த உறவுத் தேவை மூலமே குறைத்துக் கொள்ள முடியும்.
30

- ,- ,- ,- ..... לפי:"ץ. כדי - a" - - - ------ = ---------.
பொதுச் ருே ஐாற்கோணம்
"நாண்’ பங்குனி - சித்திரை 2003 0 கட்டிளமைப் பருவத்தில் நெருக்கீட்டிற்கு உள்ளானோர்
பிள்ளைப் பருவத்திற்கும், முதிர்ச்சிப் பருவத்திற்கும் இடைப்பட்ட
பருவமே கட்டிளமைப் பருவம் (Adolescence) ஆகும். இப் பருவமே
ஏனைய பருவங்களை விட அதிகம் நெருக்கீட்டிற்கு உள்ளாகும் பருவமாகும். சடுதியான அளவுக்கு மீறிய கைகால் வளர்ச்சி, துணை பாலியற் பண்புகளின் வளர்ச்சி ஆகியனவே அவர்களின் நெருக்கீட்டிற்கு அடித்தளம் இட்டுக் கொடுக்கிறது. இவ் உடலியல் வளர்ச்சியிலும், அவர்களின் சமூக நிலையிலும் அவர்களைப் பற்றிய கருத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கட்டிளமைப் பருவத்தினர் எல்லாவற்றிலும் பார்க்கத் g5LDgif உடலின் தோற்றத்தையே வெறுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப் பருவத்திலேயே பெற்றோர்களும், ஆசிரியர்களும், சகபாடிகளும் நல்ல அன்பு நிறைந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக :- பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் மெல்லக் கற்போரே நெருக்கீட்டிற்கு அதிகம் பாதிப்பிற்குட்பட்டவர்களாக விளங்குகின்ற னர். எனவே இப் பருவத்தில் பாரபட்சமற்ற, தன்னலமற்ற ஜீவாத்மா தொடர்பாக இருக்கவேண்டும். -
9 முதியோர் பருவத்தில் நெருக்கீட்டிற்கு உள்ளானோர்
சமுதாயத்தில் ஒரு மனிதனின் இறுதிப் பருவமும், அமைதியான பருவமும் இதுவாகும். ஒருவன் வயோதிப எல்லையைத் தாண்டத் தாண்ட அவனுக்கு தனிமையுணர்வு அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதனால் இப் பருவத்தில் உள்ளோர் அனேகமாக தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக உணர்வர். .
இதுவே அவர்களின் நெருக்கீட்டிற்கு அடித்தளமிட்டுக் கொடுக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒதுங்கியிருத்தல், மற்றவர்களுடன் மனம் விட்டுக் கதைக்காமை, அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை போன்ற காரணிகளால் தொடர்ந்து நெருக்கீட்டிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவ்வாறு நெருக்கீட்டிற்கு உள்ளானோரை இனம்கண்டு அவர்களுடன் அன்புடனும், பண்புடனும் உறவாடி அவர்களின் இன்ப துன்பங்களைப் பகிர்வதன் மூலமும் சங்கீதம், நாட்டுப்பாடல், கூத்து, பஜனை போன்ற செயற்பாடுகளைச் செய்வதன் மூலமும் அவர்களை நெருக்கீட்டிலிருந்து மீட்க வழி வகுக்க முடியும்.
31
る 器

Page 18
  

Page 19
நான்’ பங்குனி - சித்திரை 2003 அதிதீவிரப் பெண்ணிய வாதத்தோடு அல்ல (Radical Feminism). வானத்தின் சரிபாதி பெண்கள் என்று சொல்வார்கள். ஆகவே ஆண்களைப் போல பெண்களும் வளர வேண்டும். ஆகவே யாழ்ப்பாணத்திலும் ஆரோக்கியமான பெண்ணிய வளர்ச்சி மிகவும் தேவையானது.
கேள்வி:- பல்வேறு காரணங்களால் திருமணம் முடிக்காமல் இருக்கிற முதிர் கன்னிகளது (Spinster) உளவியல்ப் பிரச்சினைகளைப் பற்றி சொல்ல முடியுமா?
பதில்:- உண்மையில் கடந்தகாலப் போர் ஆண் பெண் சமநிலையைக் குழப்பிவிட்டது. போரினால் பாதிக்கப்பட்டவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் அதிகமானோர்களும் ஆண்கள் தான். இந்த சமநிலையின்மை காரணமாகப் பெண்கள் அதிகமாகவே உள்ளனர். அத்தோடு சீதனப் பிரச்சினை, வறுமை, உடலியற் குறைபாடு காரணமாகப் பெரும்பான்மையானோர் திருமணம் முடிக்காமலே உள்ளனர். நாற்பது வயதைத் தாண்டியும் திருமணம் முடிக்காமல் எத்தனையோ வேலை பார்க்கும் பெண்கள் உள்ளனர். இவர்களுடைய உளவியல்ப் பிரச்சினைகளை எடுத்து நோக்குகின்ற போது, மாஸ்லோவின் கருத்துப்படி மனிதனது அடிப்படைத் தேவைகளில் பாலியல் தேவை பிரதானமானதாகும். இந்த பாலியல்த் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத பொழுது அவர்கள் உளம் சார்ந்த பிரச்சனைகளோடு வாழ வாய்ப்புண்டு.
இதற்கு தீர்வு என்று சொல்லுகின்ற போது சாதி, அந்தஸ்து, வேலை, பதவி இவைகளைக் கடுமையாகப் பாராமல் யாரையாவது ஓர் ஆணைத் திருமணம் செய்வது நல்லது. திருமணமே முடிக்க இயலாத சூழ்நிலையில் அவர்கள் உள்ளத்தை சமநிலையில் வைக்கக்கூடிய ஆரோக்கியமான வழிகளில் இறங்க வேண்டும். 2.35|TJ600TLDIT85:- சமூக சேவையிலோ, GLOu Líb சார்ந்த விடயங்களிலோ, கலை, இலக்கியம், நாடகம் சார்ந்த துறைகளிலோ ஈடுபட்டுத் தங்களை வெளிப்படுத்தலாம். இம் முறைகள் சமநிலையோடு வாழ்வதற்கு உதவி செய்யக்கூடும்.
கேள்வி:- குறைந்த வயதில் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்படும் பெண்கள் திருமணத்தின் பிற்பாடு எத்தகைய உளவியல்ப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்?
34

"நாண்’ பங்குனி - சித்திரை 2003 பதில்:- குறைந்த வயது என்கின்ற போது நாங்கள், ஓர் குறிப்பிட்ட வயதை நிர்ணயிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
குறிப்பாகப் பெண்கள் திருமணம் முடிப்பதற்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். ஒரு பெண் குழந்தையைப் பெறுவதற்கான ஆரோக்கியமான வயது 22-30 க்கு இடையே என்று சொல்லப்படுகின்றது. 25, 26, 27 வயது மிக ஆரோக்கியமான வயது என்று கருதப்படுகின்றது. தற்போது ஓர் பெண் திருமணம் முடிப்பதற்கு ஆகக் குறைந்த வயது 20 என்று சொல்லலாம். அதற்குக் கீழே உள்ள வயதுகளில் திருமணம் முடித்துக் கொடுக்கின்ற போது பல உளவியல்ப் பிரச்சனைகளை எதிர்நோக்கலாம். * -
திருமணம் முடிக்கும் பெண் 9) 6T, 2 L6) ரீதியாக முதிர்ச்சியடைந்திருப்பதோடு பக்குவப்பட்டிருக்க வேண்டும். கணவனோடு ஒத்து வாழும் தன்மை, இன்னும் பிள்ளை வளர்ப்பு போன்றவை பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். பிள்ளை வளர்ப்புப் பற்றிய அறிவில்லாத தாயினால் பிள்ளைக்குத் தான் பாதிப்புண்டு. -
கேள்வி:- கட்டிளமைப் பருவத்தை எட்டிப் பிடிக்கிற பெண்கள் தங்களகத்தே எழுகின்ற பாலியல்ப் பிரச்சனைகளுக்கான, விளக்கங்களை யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
பதில்:- இதிலே முக்கிய பங்கு வகிக்க வேண்டியவர்கள் பெற்றோரும், ஆசிரியர்களுமே. சிலவேளை பெற்றோருக்கு இதுபற்றி போதிய அறிவில்லாமல் இருக்கலாம். ஆனால் இவற்றை விஞ்ஞான ரீதியில், விளங்கக்கூடிய முறையில் சொல்லக்கூடிய தகுதி விஞ்ஞான ஆசிரியருக்கோ, உடற்கல்வி ஆசிரியருக்கோ தான் உண்டு. எங்களது பாடத்திட்டத்திலும் இவ்விடயம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் பரீட்சையை முதன்மைப்படுத்திக் கற்பிப்பதாலும் இன்னும் பிள்ளைகள் முன்பு இவற்றைப் பற்றி எப்படிக் கதைப்பதென்ற சங்கடத்திலும், சில ஆசிரியர்கள் பாலியல் சார்ந்த விடயங்களைக் கற்பிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது தவறு. பாடத்திட்டத்தில் இருக்கிறதோ இல்லையோ 9, 10, 11 ஆம் தரங்களில் படிக்கிற கட்டிளமைப் பருவப் பிள்ளைகளுக்கு இதுபற்றிச் சொல்லிக் கொடுத்தல் மிக அவசியம்.
35

Page 20
"நாண்’ பங்குனி - சித்திரை 2003 கேள்வி:- பெண்கள் மற்றவரைக் கவர உடல் அங்கங்கள் வெளித் தெரிய குறைந்த அல்லது இறுக்கமான ஆடைகளை அணிந்து உலாவருவது உளவியல்ப் பிரச்சினைகளினாலா?
பதில்:- இருக்கலாம். ஆயினும் உடை உடுப்பது பெரிய பிரச்சனையல்ல. ஒவ்வொருவருக்கும் தான் விரும்பியவாறு உடை உடுக்க உரிமையுண்டு. ஆனால் சிலர் பெண்கள் கவர்ச்சியான, பொருத்தமற்ற ஆடைகளை அணிவது ஆண்களைச் சலனப்படுத்துகிறது என்று சொல்வார்கள். அது ஆண்களின் பிழையேயன்றிப் பெண்களின் பிழையல்ல. ஒரு ஆணுக்கு எப்படியெப்படி உடையுடுக்க உரிமையுள்ளதோ அதுபோல பெண்ணுக்குமுண்டு. ஓர் ஆண் இறுக்கமான, கவர்ச்சியான ஆடைகளை அணிகின்ற போது குற்றம் சாட்டுபவர்கள் குறைவு. அதனையே பெண் செய்கின்ற போது எதிர்வினைகள் வேறுபடுகின்றது.
அதேவேளை பல ஆண்களால் தான் கவரப்பட வேண்டுமென்று ஓர் பெண் நினைக்கலாம். பெண் மட்டுமல்ல ஓர் ஆணும் நினைக்கலாம். அப்படி அவர்கள் சிந்திப்பார்களானால் ஓரளவு சாதாரணம் என்று எடுக்கலாம்.
உதாரணமாக:- கட்டிளமைப் பருவத்தில் எதிர்ப்பாலார் தங்களைக் கவர வேண்டுமென்று நினைப்பது சாதாரண நிலை. தவறு அல்ல. ஆனால் அளவுமீறி, எல்லைமீறி ஆண்களைக் கவர்வது தான்
வாழ்க்கையென்று எண்ணி நடப்பாரானால், அவரது சில தேவைகள்
பூர்த்தி செய்யப்படவில்லையென்றே என்ன முடியும். சமநிலையோடு இருப்பவர் அப்படிச் செய்யமாட்டார். தன்னுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத ஒருவர் மற்றவரின் அன்பையும், கவனிப்பையும் பெறாத ஒருவர், வீட்டில் பிரச்சனைகளோடு வாழுகின்ற ஒருவர் மற்றவரின் கவனத்தை ஈர்ந்து இவற்றைப் பெற்றுக் கொள்ள முயல்லாம்.
கேள்வி: மாதவிலக்குக் காலங்களில் பெண்களை இன்னும் தனிமைப்படுத்தும் போக்கு எம் சமூகத்துள் இருப்பதாகப் பலரது கணிப்பு? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் :- மாதவிலக்கு என்பது சாதாரண உடலியற் தொழிற்பாடு. அதுபற்றிப் பதட்டமோ, குழப்பமோ 960). Ul வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்களில் பெண்கள் எந்தவித வித்தியாசமான முறையில் நடந்து கொள்ள அவசியமில்லை.
36

‘நான்’ பங்குனி . சித்திரை 2003 நாளாந்தக் காரியங்களில் ஈடுபடலாம், விரும்பினால் கோயிலுக்குப் போகாமல் இருக்கலாம். இதனை மதரீதியாக மட்டுமே சொல்வேன். ஏனென்றால் அத்தகைய நாட்களில் பெண்கள் அழுக்காவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு, அத்தோடு ஆலயம் ஒர் புனிதமான இடமாகும்.
உதாரணமாக- வயிற்றோட்டம் வந்தால் கோயிலுக்குப் போகமாட்டோம். அதுபோலத் தான் இதுவும். இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். சில கிராமப்புறங்களில் இவர்களைத் தள்ளிவைக்கிற மனப்பாங்கு இருக்கலாம்.
அவர்களுக்கு இதுபற்றி விளங்கப்படுத்த வேண்டும். இது துடக்கு அல்ல, மாறாக சாதாரண உடலியற் தொழிற்பாடு என்பதை உணர்த்த வேண்டும். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு ஒய்வு தேவையென்று சிலர் விவாதிப்பார்கள். இக் கருத்தை விஞ்ஞானம் அதிகம் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணமென்னவென்றால், 6) விளையாட்டு வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் கூட பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார்கள். எனவே ஒய்வு என்பது அவசியமில்லை. ஆனால் சிலருக்கு அந்த நாட்களில் வயிற்றுநோ, வயிற்றுக்குத்து இன்னும் வாந்தி எடுத்தல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். ஆகவே தேவையானவர்கள் ஓய்வு எடுக்கலாம்.
கேள்வி - பால்நிலைப் பாத்திரங்களை (Gender role) தீர்மானிப்பது உடலியல் அல்லது உயிரியல் மதிப்பீடுகளா (Biological values) 916b6log felpab6fuj6) upg5 (6356TIT (Social values)?
பதில் - பால்நிலைப் பாத்திரங்களைத் தீர்மானிப்பது பாலியலும், மரபணுவும் அல்ல. மாறாக சூழல்தான். ஒருவர் ஆணா, பெண்ணா என்பதை உயிரியல் தீர்மானிக்கும். பால் சார்ந்த நடத்தையையும், எண்ணங்களையும் சூழல், கல்வி, வளர்ப்பு முறைகள் தான் தீர்மானிக்கின்றன. பெண்ணும் அதற்கு அமைவாகின்றாள். உதாரணமாக:-ஒரு ஏழு வயதுப் பெடியன் மரத்தில் ஏறினால், “இங்க பார் தம்பி மரத்தில ஏறிட்டான்” என்று பாராட்டுவோம். அதனையே ஓர் பெண் செய்கின்ற போது "பார் கழுதை மரத்தில் ஏறிற்றா” என்று ஏசுவோம். அப்பொழுது பெண் தனது நடத்தையை மாற்றுவாள். ஆண் தொடர்ந்து செய்வான். ஆகவே பால்நிலைப் பாத்திரங்கள் முழுக்க முழுக்க சமூகத்தாலும், சூழலாலும் தீர்மானிக்கப்படுகின்றது.
37

Page 21
"நான் பங்குனி - சித்திரை 2003
கேள்வி : விளம்பரங்களுக்காகப் பெண்கள் பாலியல் ரீதியான வடிவங்களில் படம் பிடித்துக் காட்டப்படுகின்றனரே. இதுபற்றி .
பதில் - பெண்ணியவாதிகள் மிகவும் எதிர்ப்புக் காட்டுகின்ற விடயங்களில் இதுவும் ஒன்று அழகு என்பது ஆணுக்கும் இருக்கிறது, பெண்ணுக்கும் இருக்கிறது. பல விலங்குகளில் ஆணினம் தான் அழகானது. இயற்கையும் அழகானது.
அழகு என்பது பெண்களில் மட்டும் தான் இருக்கிறது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் விளம்பரங்களுக்குப் பெண்கள் பாலியல் ரீதியாகக் காட்டப்படுகிறார்கள் என்றால், இது ஆண்களின் திட்டமிட்ட செயல் என்று தான் சொல்வேன். ஏனென்றால் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பெரும்பாலும் ஆண்கள் பயன்படுத்துகின்ற இடங்கள், பொருட்கள் என்பவற்றில் பெண்கள் சார்ந்த படங்கள் பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் பெண்களை வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக்கூடாது என்றே கருதுகிறேன். நன்றி.
*நான்” வாசகர்களோடு உங்கள் சிந்தனைகளைப்
பகிர்ந்து கொண்டமைக்கு “நான்” வாசகர்கள் சார்பாக எமது உள்ளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
38

"நான்’ பங்குனி . சித்திரை 2003
D66)
(Psychological Tra
| g5faf6f 6f6óGOrgög5IGOJ B.A. Hons, சமூகவியல் சிறப்புக்கலை
எமது வாழ்க்கையில் ஆபத்தை விளைவிக்கும் நேரத்தில், பயங்கரமான சூழலில், யாரும் உதவியற்ற உணர்வை அநுபவித்துக் கொண்டிருப்பாரேயானால் அத்தாக்கமானது ஆழமான மன அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றது. இந் நிகழ்வை நாம் “மனவடு” எனக் கூறுகின்றோம். இவ் “மனவடு” எனும் பதமானது கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதாவது ஒருவருடைய மனதிலே ஏற்படுகின்ற வடு அல்லது காயம் அல்லது புண் எனப் பொருள்படும்.
இவ்வாறான நிகழ்வுகள் எமது வழமையான நிகழ்வுகளுக்கும் அப்பாற்பட்டவையாகும். இதனை ஒரு அசாதாரண நிகழ்வு என்று கூடக் கூறலாம். ஒரு அசாதாரண நிகழ்வின் எதிர்த்தாக்கமே (Reaction) இவ் மனவடுவினை ஏற்படுத்துகின்றது. எமது நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட போர்ச்சூழல், கொடுர நிகழ்வுகள் என்பன மக்களிடையே ஆறாத மனவடுவினை ஏற்படுத்திவிட்டது, என்றே கூறலாம். அதாவது போர்ச்சூழலின் போது பலவித இழப்புகள், இடப்பெயர்வு, உயிர் அச்சுறுத்தல், சித்திரவதை என்பன மக்கள் மனதில் இன்றும் கூட ஆழமான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டன, என்றே கூறலாம்.
உதாரணமாக :- 1. பெற்றோர், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களின் மரணம்.
2. சொத்துக்களின் அழிவு.
3. தொழில் இழப்பு.
4. உறவுகளின் முறிவு.
5. இராணுவத்தால் கைது செய்தல்.
மனவடுவை ஒருவர் அநுபவிக்கும் போது அவ்வாறான மனத்தாக்கமானது ஒருவிதமான இயலாத் தன்மையினை (lnability), மனச்சோர்வினை (Depression) உருவாக்குகின்றது.
39

Page 22
"நான்’ பங்குனி - சித்திரை 2003 வாழ்க்கையில் அச்சுறுத்தல் நிகழ்வுகள் நடைபெறும் போது, நாம் மன அழுத்தத்திற்குள்ளாகின்றோம். இதனுடைய அதிர்ச்சியானது உடனடியாகவும் ஏற்படலாம் அல்லது சில காலங்களின் பின்பு கூட ஏற்படலாம். இதன் காரணத்தால் இதனை நெருக்கீட்டின் “பின் மனவடு” என உளவியலறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எமது வாழ்க்கையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வானது, அளவுக்கு மீறிய தூண்டலையும், அதீத உணர்ச்சியையும் ஏற்படுத்தும் போது திடீரென உடனடியாக நாம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கமாட்டோம். மரத்துப்போன, உணர்வில்லாத நிலை இச் சந்தர்ப்பத்தில் ஏற்படும். நோ, வலி, காயம் என்பன ஏற்பட்டாலும் எம்மால் உணரமுடியாத நிலை ஏற்படும்.
'ós,
பயங்கரமான புலனுணர்வு
கொடுரகனவுகள் .ހ நெருக்கீடு
D60Tib
ച്ച്-്. ~
y
நனவிலிப்பகுதி
v
<- ஆழ்மணம் -->
(அடக்கிய, ஒடுக்கிய உணர்ச்சிகள்)
~പ്ര
<- அடிமனம் ->
இவ்வாறான நெருக்கீட்டின் பின்னான மனவடுவினால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக 25 வயதுக்குட்பட் டவர்களே அதிகளவில் தாக்கப்படுகின்றனர். கல்வியறிவென்பது மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது. இக்கல்வியறிவு இல்லாவிடினும் அல்லது கல்வியறிவு குறைவாகக் காணப்படினும்
40

t Err brigaardo
"நாண்" பங்குனி - சித்திரை 2003 தாக்கம் கூடுதலாக இருக்கும். இவர்கள் ஒரு குழப்பமான நிலையினை அநுபவித்துக் கொண்டிருப்பார்கள். செயற்கையாக ஏற்படும் அழிவுகளை விட, இயற்கை அழிவுகளால் கூட மனவடு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. உதாரணமாக:- புயல், வெள்ளம், பூகம்ப நிகழ்வுகள்.
உடல் மாத்திரம் ஆரோக்கியமாக இருந்தால் அதனை ஆரோக்கியமான வாழ்வு எனக்கூற முடியாது. உடலினை விட, முதலில் எமது “உளம்” ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அதுவே நலமான வாழ்வாகும்.
"ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலும், இயலாமையிலும் இருந்து விடுபட்டநிலை மாத்திரமல்ல, ஒருவர் தம் உடல், உள, சமூக, ஆத்மீக நன்னிலைகளில் அடையக்கூடிய அதி உயர்ந்த நிலையே ஆரோக்கியம் எனலாம். ஆரோக்கியம் மனிதனின்
அடிப்படைப் பிறப்புரிமைகளில் ஒன்றாகும்.”
இவ் மனவடுவுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தூண்டல் திரும்பவும் ஞாபகத்திற்குக் கொண்டுவரும். இது வேதனைக்குரிய விடயமாகக் காணப்படும். இவ் மனவடுவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணங்கள், செயற்பாடுகள், ஆட்கள் என்பவற்றைத் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள். தமக்கு வேதனை ஏற்படப் போகின்றது என்ற எண்ணத்தால் அல்லது பயத்தால் மரத்துப்போய் காணப்படுவர்.
இவ் மனவடுவினைப் பற்றி நரம் 2 முக்கிய அம்சங்களைக் குறிப்பிடலாம். ".
1. மரண அச்சுறுத்தல், பேராபத்தினை அல்லது அழிவினை ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்கவேண்டும்.
உதாரணமாக :- இராணுவ ஆக்கிரமிப்பு, பாலியல் துன்புறுத்தல், சித்திரவதை,
2. நிகழ்வினால் எமக்கு ஏற்படுகின்ற உணர்வு சார்ந்த குழப்பம். உதாரணமாக :- குண்டு வெடிப்பில் உடல் சிதறியவரைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற உணர்வுக் குழப்பம். ஒரு விபத்தில் இரத்தக் காயத்தினைப் பார்த்தல்.
4.

Page 23
"நான்’ பங்குனி - சித்திரை 2003
இவ் மனவடுவிலிருந்து ஓரளவு மீளுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதற்கான வழி முறைகள்.
1. ஆதரவு- பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் தனிநபர், குடும்ப, D35, 8F(UD35sful 395J6).
2. பாதுகாப்பு:- ஒரு பாதுகாப்பான சூழல் தேவைப்படுகிறது.
3. கலாச்சாரச் சடங்குகள்:- மரணச் சடங்கில் இறப்பால் ஏற்படும் கழிவிரக்கத்தைப் பகிர்தல். 4. சமூக மனப்பான்மை: பாதிப்புற்றவரை அனுதாபத்துடன் நோக்குதல்.
மனவடுவிற்கான இலகுவான சிகிச்சை முறைகள்
உளவளத்துணை ஆதரவு வழங்கல் சாந்த வழிமுறைகள் உளச் சிகிச்சை குடும்ப சிகிச்சை குழுச் சிகிச்சை விஷேட சிகிச்சை முறைகள்
உசாத்துணைகள்
- தமிழ் சமுதாயத்தில் உளநலம் - மனவடு :- தயா சோமசுந்தரம் - DSM IV (American Book)
42

நான் பங்குனி . சித்திரை 2003
s
வாலிப வசந்தம்
“ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா?
இவ்வருட உலகக் கிண்ணம் யாருக்கு என்ற பரபரப்பு எல்லாக் கிறிக்கெட் ரசிகர்களின் மனதில் எழுகின்ற உணர்வு.
உலகக் கிண்ணக் கிறிக்கெட் பலரது திருமணங்களையே ஒத்தி வைத்திருக்கிறது என்றால், இதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லிப் புரிய வைக்கத் தேவையில்லை. பலர் கிறிக்கெட் பைத்தியங்களாகவே மாறிவிட்டனர்.
இளையோரே, எம்மில் பலர் விளையாட்டு ரசிகர்களாக இருக்கின்றார்களேயொழிய, எத்தனை பேர் மைதானத்திற்குள் இறங்கியுள்ளார்கள். படிப்பு படிப்பு என்று ஒடித் திரிவதிலே பலர் தங்கள் உடல் நலத்திலே அக்கறை கொள்வதில்லை. ரியூஷன் கலாச்சாரமும் மாணவர்களை மைதானத்திற்குள் இறங்க அனுமதிப்பதில்லை. . பாடசாலைகளில் மாணவர்களை விளையாட்டுப் பயிற்சிகளுக்கு அழைப்பது பெரும்பாடாக உள்ளது.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். உடல் நலமாக இருந்தால் தான் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். படிப்பதற்காக மட்டுமன்று முழு ஆளுமை வளர்ச்சியைப் பெற விளையாட்டு முக்கியமானது. ஒழுக்கம், சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு, குழுவாகச் செயற்படுதல், பொது நலன் எனப்பல ஆளுமைப் பண்புகளை விளையாட்டில் இருந்து கற்றுக் கொள்கின்றோம். எனவே ஏதோ ஒரு விளையாட்டில் உங்களை ஈடுபடுத்துங்கள். இல்லாவிடில் உடற் பயிற்சியாவது செய்யப் பழகுங்கள். மற்றவர்களின் சாதனைகளுக்கு கைதட்டுங்கள். நீங்களும் சாதனை படைத்துப் JTgsto0)L பெறுங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 鷺
-இளவல்.
43

Page 24
"நான்’ பங்குனி . சித்திரை 2003
இல9ல8 உஇtலியல் அஞ்சல்சேலை
உங்கள் வாழ்க்கை விரக்தியின் விளிம்பிலா? உங்களுக்கு வாழ்க்கையில் தீர்மானமே எருக்க முடியவில்லையா? உங்கள் வாழ்க்கையில் பாலியல் பிரச்சினைகளா? உங்கள் வாழ்வுப் பிரச்சினைகளுக்கு தற்கொலைதான் சரியான தீர்வா? உங்கள் உள்ளம் குற்றவுணர்வால் துடிக்கிறதா? உங்கள் உடலிலுள்ள குறைபாடுகளால் தவிக்கிறீர்களா? உங்களுக்குத் தனிமையுணர்வா? உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா? உங்களால் உங்கள் பிரச்சினையை ஒருவரிடமும் சொல்ல dypLÇULIGífsöGODGOLLITT?
உங்களுக்கு உள நலப்பணி செய்ய உங்கள் நண்பன்
“நான்” தயாராகின்றான்.
நீங்கள் செய்யவேண்டியது.
உங்கள் பிரச்சினைகளை கேள்விகளாக $fଏgଣ୍ଣ நான்
சஞ்சிகைக்கு அனுப்பிவையுங்கள்.
உங்களுக்கு தகுந்த பதில்களை உளவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி அஞ்சலுண்டாக இலவசமாக அனுப்பி வைப்போம்.
அத்தோடு உங்கள் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க உளவியல் வழிகாட்டிகளையும் உளநல நிலையங்களையும் அறிமுகப்படுத்துவோம்.
இவை உங்கள் நலன்கருதி இலவசமாச் செய்யப்படும்.
44
 

அடுத்த‘நான்’ தாங்கிவருவது
இசைந்துடன்படல்
உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும்
உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 20.04.2003 க்கு முன்னர்

Page 25
III
இரண்டு மாத -60
6ਪL-ਰੰਸੁ 2.56.06ਘ6)
என்னிலே உங்களு உளவியற்கருத்துக்கள்
என்னுடைய தனிப்பிரதி 2
என்னுடைய ஆண்டுச்சந்தா
2.
(ରା)
என்னுடைய முகவரி இதுத
J.S. Printers

ங்களுக்கு ஒரு རྒྱ་ 6ւIIյլը,
ஆறு தடவைகளும் காண்டிருக்கின்றேன்.
நக்குத் தேவையான குவிந்து கிடக்கின்றன.
ள்ளூரில் 150= வளியூரில் 7 US
I6öI:
''' լդ Լntr8յIւ Աjմելուն,
ថៃTញ៉ាហាំបុផ្សំថ្មចាញ աIIլին UII600Iւն, ប្រិចារណាថា.
TE O 21-222-5359
Pandatheruppu.