கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2004.01-02

Page 1
岳 @ 函
 


Page 2
IIGOJ IDSOft: 29 இதழ்:01 உளவியல் சஞ்சிகை தை- IDIrif, 2004 شتات دقت باد
o ஆசிரியர்: - 毅 , ཚོ་ י::Kفيلمسها ' אא."ל ... 2 GTGSGIT..... போல் நட்சத்திரம் 0.M., BThis ! s!: ->
-ஆேசிரியர் அரும்புகள் -ஒேரு இளையவனின் வாழ்வில் சுய ஆய்வு -நேல்வாழ்விற்கு வழிகாண -முேடிவெடுக்கும் வேகத்தை சுயமதிப்பீடு
- செய்வோம் -வேளமான வாழ்வுக்கு சுய ஆய்வு தேவை =சுேய ஆய்வு இளையோர் வாழ்வின் ஏணிப்படி -நோண் சஞ்சிை
கவிச்சோலை" 'ಜ್ಯ ' -தேன்னை உணர்ந்தால் உயர்வடையலாம் =ஆரோக்கியமான சமுதாயம். -ேேநர்காணல் -உேண்னையே நீ அறிவாய் -இேன்றைய சமூக மேம்பாட்டிற்கு
சுய ஆய்வின் பங்கு -நோண் என்னைத் தேடுகிறேன் -கேருத்துக்குவியல் - 102
“NAAN!” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jafna, Sri Lanka.
Tel 021-222-5359
எழுத்தாளர் ஒன்றுகூடல் |
ୱିଣ୍ଟ୍
ਨੂੰ
இணையாசிரியர்:
GLIIrar FuLIGór O.M. l, B.Th., B.A. (Hons).
ஒருங்கிணைப்பாளர்: ஜெறோம் O.M.I.
நிர்வாகக் குழு அ.ம.தி. இறையியல் சகோதரர்கள். GeBITēFiI LIITGADIT.
ஆலோசகர் குழு:
cLLSuLuzir O. M. l., M.A. LimressfuLIGò O.M. l., M.A. செல்வரெட்ணம் O.M., Ph.D. N. சண்முகலிங்கன் Ph.D. Dr. R. Falafiasir M.B.B.S.
Saorir H.C. Dip. in Counselling, Kent. galgorgirost 0.M.I., B.A.(Hons), B.Th., Dip.Ed
Sourcumreso O.M. l., M.Phil.
 
 
 
 
 
 

W (1 V) ஆசிரியர் அரும்புகள்! (yj
வாசக அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உடல் நலமும் உள நலமும் வளம்பெற்று மனித வாழ்வு செழிப்புற ஆசிக்கின்றோம். புதிய ஆண்டின் தொடக்கத்தில் “சுய ஆய்வு” (Self - Evaluation) என்னும் சிந்தனைப் பொருளில் “நான்” வெளிவருவது மிகவும் பொருத்தமாகின்றது. ஏனெனில் தனிமனிதன் ஒவ்வொருவனும் தன்னைப் பற்றிய உண்மை நிலையை அறிவதற்கும் தன் வாழ்வை நேர்த்தியான வழியில் முன்னெடுத்துச் செல்வதற்கும் இக் கருப்பொருள் தணைநிற்குமென்று நம்புகின்றோம். தனிமனிதன் தன்னைப் பற்றிய உண்மை அறிவைக் கொண்டிருக்க வேண்டும். அத தெரியாத பட்சத்தில் இயற்கையான தன்னைப் பற்றிய நிலை அழிந்து பொய்யான மதிப்பீடுகள் கட்டப்படுகின்றன. செயற்கையான விழுமியங்கள் போலியான வாழ்வு முறைக்கு அவனைத் தள்ளக் கூடும். இந் நிலையில் அவனது மகிழ்ச்சி அழிந்து, தன்னைத் தானாக ஏற்றுக்கொள்ள முடியாத பரிதாப நிலையை அவன் சந்திக்கின்றான். ஒருவன் தன்னையும் தன் வாழ்வையும் உண்மையாகவும் தன்னுணர்விலும் சமூக உறவிலும் மீளாய்வு செய்த சீர்தாக்கிப் பார்க்க வேண்டும்.
உளவியல் நோக்கில் தன்னைத் தானாக ஏற்றுக்கொள்ள விரும்பாதவன், தன்னைச் சந்திப்பதற்குப் பயப்படுகின்றவன் தனக்கும் மற்றவர்களுக்கும் சுமையாகின்றான். காலப்போக்கில் வெறுமையும், தனிமையும், விரக்தியும் அவனது சொந்த அனுபவங்களாகின்றன. இப் பின்புலத்தில் தனது பிளவுபட்ட சிதைந்தபோன மனநிலையை மற்றவர்கள் மத்தியில் வெளிப்படுத்தகின்றான். ஈற்றில் பிழையான மதிப்பீட்டு முறைகளையும் அவற்றை நியாயப்படுத்தம் முகமுடிகளையும் வளர்த்துக் கொள்ளுகின்றான். இப் பரிதாப நிலையிலிருந்து
நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது “சுய ஆய்வை” மேற்கொள்ள வேண்டும். உண்மை தெளிவாகும் போத மனித
தவறுகள் மறைகின்றன - புதிய வாழ்வு மலர்கின்றது - புனித உறவுகள் பரிணமிக்கின்றன - புதிய ஒழுக்கமும் பண்பாடும் பேணப்படும் சமூகங்கள் உருவாகின்றன. தவறுகளைச் சந்திப்போம் - தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வோம் - திருந்தி வாழ்வோம் - நலமான நாளை உருவாகத்
ணைநிற்போம்.
தோழமையுள்ள வாழ்த்துக்களுடன்,
ம. போல் நட்சத்திரம் அ.மதி

Page 3
"சே! அப்படி நான் பேசியிருக்கக் கூடாது. நான் அவ்வாறாக பேசியதால் தான் எங்களுடைய நல்ல நட்பு முறிந்து போனது.”
“பிழை நான் இப்படி கோபப்பட்டிருக்கவே கூடாது. நிதானமிழந்து விட்டேன். ஏன் என்னால் எனது கோபத்தை அடக்க முடியாமல் போனது?’
“எனக்கே என்னைப் பற்றி நினைக்க பெருமையாக இருக்கின்றது. எவ்வளவு சிறப்பாக அந்த நிகழ்ச்சியை நான் ஒழுங்கு செய்திருந்தேன். எல்லோருமே பாராட்டினார்களே. அடுத்த முறை இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும். இம்முறை நிகழ்வில் காணப்பட்ட சிறிய சிறிய குறைபாடுகள் எவை? அவை எவ்வாறு உண்டாகின? ”
சுய ஆய்வு என்றால் என்ன? என்ற கேள்விக்கு மேற்காணப்படுகின்ற சில அனுபவ பகிர்வுகள் சிறந்த உதாரணங்களாகும். சுய ஆய்வு என்பது ஒருவன் அல்லது ஒருத்தி தன்னைப் பற்றி, தனது ஆளுமை, ஆற்றல்கள், உணர்வுகள், செயற்பாடுகள், உறவு முறைகள் பற்றி மிகவும் நிதானமான முறையில், சுய சார்பின்றி ஆராய்வதாகும்.
சுய ஆய்வின்றிய மனித வாழ்க்கையானது துர்நாற்றம் வீசும் தேங்கிய நீர்க்குட்டையை ஒத்தது. ஒரு மனிதன் அறிவிலும், ஆற்றலிலும், ஆன்மீகத்திலும், உறவு முறைகளிலும் வளர்ச்சி 960) வேண்டுமானால், சுய ஆய்வு இன்றியமையாததொன்றாகும். உலகப் புகழ் பெற்ற பெரியவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை எடுத்து நோக்குவோமெனில், அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் அடைந்த வெற்றிகளின் இரகசியம் புலப்படும். அந்த இரகசியங்களில் ஒன்றாக சுய ஆய்வும் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
எல்லோருடைய வாழ்க்கையிலும் சுய ஆய்வு அவசியமானதாக அமைந்தாலும் எனது இந்தக் கட்டுரையின் முக்கிய கருப்பொருள் “இளையவர்களுடைய வாழ்க்கையில் சுய ஆய்வு” என்பதாகும். இன்றைய இளைஞர், யுவதிகள் நாளைய சமுதாயத்தின் தலைவர்கள். எனவே நாளைய சமுதாயம் சிறப்பானதொரு, நல்ல எடுத்துக்காட்டான சமூகமாக திகழ வேண்டுமானால், இன்றைய இளைஞர்கள் அதற்குரிய
2
 
 

முறையில் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். தங்களுடைய எதிர்கால இலக்குகள், இலட்சியங்களை U ஆய்வினூடாக மறுபரிசீலனை செய்து மீள வெற்றிநடை போட வேண்டும்.
சுய ஆய்வை மேற்கொள்ளக்கூடிய வழி வகைகள் ( பொதுவான சுய ஆய்வு )
KO
X
அமைதியான, ஆரோக்கியமானதொரு சூழ்நிலையை
தெரிந்தெடுத்தல். l'UIo : oos"
* மனதை ஒருநிலைப்படுத்தல். (சத்தங்கள், வேடிக்கைகள்
போன்றவற்றிலிருந்து பின்வாங்குதல்)
* என்னை நான் கண்ணாடியில் பார்ப்பது போன்று என்னை சுய்
சார்பின்றி நோக்குதல்.
* பின்வரும் வினாக்கள்ை அடிப்படையாகக் கொண்டு
ஆேய்வினை மேற்கொள்ளுதல்.
என்னுடைய இலட்சியம் என்ன? என்னுடைய உறவு முறைகள் எவ்வாறு உள்ளன? என்னுடைய உணர்வுகளின் தன்மை எத்தகையது? நான் செல்லுகின்ற பாதைக்கும், எனது இலட்சியத்திற்கும் தொடர்பு உள்ளதா? இல்லாவிட்டால் எவ்வாறு தொடர்பை உண்டாக்குவது?
e 6T6örgoj60Lu வாழ்வில், ஆளுமையில், உடல், SD 6.
செயற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளுக்கு காரணம் என்ன?
• அவற்றை நிவர்த்தி செய்ய என்னால் முடியுமா?  ை என்னால் முடியாவிட்டால் எவ்வாறு வெளியிலிருந்து
உதவியை பெறுவது? உ என்னுடைய வாழ்வில் நிறைவுள்ளதா? மன அமைதி,
சந்தோஷம் உண்டா? e இல்லாதவிடத்து அவற்றிற்கு காரணம் என்ன? e என்னிலே இருக்கின்ற திறமைகள் எவை? 9 என்னுடைய திறமைகளை மேலும் வளர்க்க நான் எடுக்கும்
முயற்சிகள் எவை? 9 நான் எனது வாழ்க்கையை வாழும் முறை எனக்கு
திருப்திகரமானதாக இருக்கின்றதா? உ இல்லாவிட்டால் எனது வாழ்க்கை எனக்கு சுமையாக
உள்ளதா? உ சுமையை, சுகமாக மாற்ற நான் செய்ய வேண்டியது என்ன? e என்னிலே உள்ள பயம், பதட்டம், விரக்தி, தனிமையுணர்வு, அதீத கோபம், தாழ்வு மனப்பான்மை, பதகளிப்பு, சோர்வு, குழப்பம் போன்றவற்றிற்கு காரணம் என்ன?
3.

Page 4
e எனது வாழ்க்கை என்னால் தீர்மானிக்கப்படுகின்றதா? பிறரால்
தீர்மானிக்கப்படுகிறதா? 9 மற்றவர்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம்
என்ன? 9 அவர்களது அத்தகைய அபிப்பிராயத்துக்கு காரணங்கள்
எவை?
இவ்வாறான மாதிரி வினாக்களை அடிப்படையாகக் கொண்டு சுய ஆய்வினை மேற்கொள்ளலாம். இத்தகைய சுய ஆய்வானது ஆளுக்கு ஆள், சந்தர்ப்பம், சூழ்நிலை, வாழ்க்கை நிலைகள், சமூக, கலாச்சார மத பின்புலங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். எது எவ்வாறு இருப்பினும் சுய ஆய்வானது ஒருவன் வாழ்வில் ஏதோ ஒரு விதத்தில் அடிப்படை விளைவுகளை உருவாக்கியே தீரும்.
se எற்படக்கூடி 55) ஒரு சுய ஆய்வினூடாக அல்லது அதன்
DO
விளைவாக உருவாகக்கூடிய D60 உணர்வுகள் L6)65 இருப்பினும், அவற்றுள் பிரதானமானவையாகவும், தனித்துவமானவையாகவும் நிற்பவை இரண்டு விதமான மன உணர்வுகள் தான்.
96.06), T660 -
1. தன்னை பாராட்டும் மன உணர்வு - தன்னையே தட்டிக் கொடுத்தல், ஆர்வமுடன் மீண்டும் செயற்படல், பெருமை, பெருமிதம் அடைதல், மகிழ்ச்சி, உற்சாகமடைதல் போன்ற பல உணர்வுகள் இதனுள் அடங்கும்.
2. தன்னை குற்றம் காணும் மன உணர்வு - மன வருத்தம், கவலை, சோர்வு, விரக்தி, குற்றத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வு, குற்றங்களுக்கான காரணங்களை கண்டுபிடிக்கும் ஆர்வம், இவ்வாறாக நடந்து கொள்ளக் கூடாது என்ற மன வைராக்கியம் போன்ற பல்வேறு விதமான உணர்வுகளும் இதனுள் அடங்கும்.
இந்த இரண்டு விதமான மன உணர்வுகளிலும் சாதகமான அதே நேரம் பாதகமான விளைவுகள் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து தன்னைப் பாராட்டுபவர் தன்னைத் தானே தட்டிக் கொடுத்து பாராட்டும் அதே நேரம், தற்பெருமையும் அகங்காரமும் அடையக்கூடிய வாய்ப்புக்களுண்டு. தன்னைக் குற்றம் காணும் மன உணர்வு கொண்டவர் தன்னுடைய தவறிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுகின்ற அதே நேரம் குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, விரக்தி போன்றவற்றில் சிக்கிக் கொள்ளக்கூடிய நிலைமைகள் உண்டு. எனவே சுய ஆய்வு செய்பவருக்கு தேவையான சில முக்கிய பண்புகள் எவை என்பதைப் பற்றி ஆராய்வோம்.
 
 
 

சுய ஆய்வினுடாக ஒருவன் - ஒருத்தி சந்திக்கக்கூடிய பாதகமான விளைவுகளான தற்பெருமை, அகங்காரம், குற்ற உணர்வு, விரக்தி, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்கு, சுய ஆய்வில் ஈடுபடுபவர் மிகுந்த அவதானத்துடனும், உண்மையுடனும் கொண்டிருக்க வேண்டிய பண்புகளாவன.
* திறந்த மனநிலை - தனக்குத் தானே நேர்மையாளராக, ஒழிவு
மறைவின்றி சுய ஆய்வில் ஈடுபடல். ே
* உண்மைத் தன்மை - நான் எனக்கு எவ்வளவு தூரம்
உண்மையாக இருக்கின்றேன்.
* சிறந்த அளவுகோல் ஒருவர் தன்னை ஆய்வு செய்து கொள்ளும் போது ஒரு சிறந்த அளவுகோலை வைத்திருக்க வேண்டும். அவை சமய ரீதியான சட்டங்களாகவோ, மனித ஒழுக்கவியல் மதிப்பீடுகளாகவோ, இயற்கை சட்டங்களாகவோ, தெய்வ நம்பிக்கை மதிப்பீடுகளாகவோ இருக்கலாம்.
* தெளிவான நோக்கமும் உறுதிப்பாடும் - ஒருவர் தான் சுய
ஆய்வு செய்வதன் நோக்கத்தை தெளிவாக நிலைநிறுத்தி அதன் மட்டில் உறுதிப்பாட்டோடு விளங்க வேண்டும். "ஆரோக்கியமான வளர்ச்சியே’ U ஆய்வினுடைய
அடிப்படை நோக்கமாக З60DIDU I வேண்டும். ஆய்வினூடாக "ஆரோக்கியமான வளர்ச்சி” இல்லாதவிடத்து சுய ஆய்வு அர்த்தமற்றது.
* சுய ஆய்வில் ஒரு சுய ஆய்வு - சுய ஆய்வு செய்யும் ஒருவர் தான் செய்யும் சுய ஆய்வையே சுய சார்பின்றி ஆராய்ந்து பார்க்கக் கூடியவராக இருக்க வேண்டும். அது எனது வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றது என்று துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
“கடிகார முட்களாக சுற்றிக் கொண்டிருப்பவனே, வாழ்க்கை என்பது வட்டமடிப்பதல்ல என எப்போது உணரப் போகின்றாய்” என்பது நம் முன் இருக்கும் பெரிய சவால். இன்றைய கணனி யுக இளைஞர்கள் வாழ்க்கையில், உறவு முறைகளில், செயற்பாடுகளில் காணப்படும் நடத்தைக் கோளாறுகள், உடல் உள சிக்கல்கள், மற்றும் இதர பிரச்சினைகளுக்கு காரணம் அவர்களது U ஆய்வின்றிய அணுகுமுறையே. இன்றைய பத்திரிகைகளில் நாம் காணும் நாளாந்த சாதாரண செய்திகள் எவை? “யுவதி ஒருத்தி தற்கொலை', “இளைஞன் ஒருவன் பெண்ணுடன் வல்லுறவு”, 'தாயை கொலை செய்த 25 வயது யுவதி”, “இளைஞர் கும்பல் கோயில் திருவிழாவில் குழப்பம்’, இவைபோல ஆயிரம் ஆயிரம்.

Page 5
இத்தகைய இளைஞர், யுவதிகள் தம்மை தாம் சுய அறிவு செய்யாது வீணே காலம் கழிப்பதற்கு பின்வருபவற்றை காரணங்களாக குறிப்பிடலாம். -
)ே சுய ஆய்வு என்றால் என்ன என்பதே தெரியாத அறியாமை. )ே சுய ஆய்வைப் பற்றி தெரிந்தாலும் அதனை எவ்வாறு
மேற்கொள்வது என்ற குழப்பம். )ே சுய ஆய்வு செய்வதன் மூலம் ஏற்படப்போகும் சவாலை ஏற்க
வேண்டுமே என்ற பயம். SS )ே சுய ஆய்வு செய்தால் என்ன / செய்யாவிட்டால் என்ன என்ற
அலட்சியம். )ே சுய ஆய்வால் நான் எடுக்கும் இலட்சிய நோக்கை என்னால்
அடைய முடியுமா என்ற தயக்கம். '
இத்தகைய பாரதூரமான், வளர்ச்சியிலே மந்த நிலையை கொண்டுவரும் அறியாமை, குழப்பம், பயம், அலட்சியம், தயக்கம் (மேற்குறிப்பிடப்பட்டுள்ள) போன்ற காரணிகளை கண்டறிந்து அவற்றிலிருந்து விடுபட்டு ஒரு சீரிய சுய சார்பற்ற, உண்மையான சுய ஆய்வை மேற்கொள்வதே ஒவ்வொரு வளர்ச்சியடைய விரும்பும் இளையவருடைய இலட்சியமாக 960)LDUI வேண்டும். சுய ஆய்வினூடாக தன்னை அறியும் மனிதன், மற்றவர்களையும், ஏன் தான் வாழும் சமுதாயத்தையும் கூட தரிசன நோக்கு கொண்டு ஆய்வு செய்யும் ஆற்றல் உள்ளவனாக மாறுவான். அவனால் மட்டுமே வரலாற்றை மாற்றி எழுதமட்டுமல்ல, புதியதொரு வரலாற்றையே உருவாக்க முடியும். NN88NNNNND
SLLS L S LLLL L LLSL LLL LLL S LLLLL LL LLL LLLS LLLL L LL LLL LLL LLL LLLL LL LLL S L S YS LLL S LSL SLLLL LL LLL LLL LLL LLLLLS LLLS LL S LL S LL LLL LLLS S LL LLL LLLL LL LLL LLL 0L S LLLLS LL LLLLLS LLLLL O e O O
e
நண்பன் O
நீ தேர்ந்தெடுக்கும் நிறம் கூட உன் குணம் காட்டும் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் உணத குறைகளை உனக்கு மட்டுமே சுட்டிக்காட்டி மற்றவர்களிடம் மறைத்த விடுகிறவனே நம்பத் தகுந்த நண்பன்.
- வைரமுத்த ம (சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்).
e StLLLL LL LLL LLLLL LL LLL LLLSLLLLLLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLLLLS

۔۔۔۔۔۔۔۔ عسے calistisڈ நழைவுக்கு வழி கன.
N.W., E. - ஜோசப் பாலா! "தன்னை அறி” என்ற கோட்பாடு மனிதனின் பெருமையைத் தவிர்ப்பதற்காக மட்டுமே வகுக்கப்பட்டதல்ல. தம் சொந்த மதிப்பை
தாம் உணர்ந்து கொள்வதற்காகவும் வகுக்கப்பட்டது, என்பார் ஸிஸ்ரோ என்ற அறிஞர்."
சுய தேடல், சுய ஆய்வு, சுய விமர்சனம் யாவும் எம்மை நாமே மதிப்பிடல் போன்றதொன்றாகும். உடல் நோய்கள் ஏற்படும் போதெல்லாம் உடலை பல வழிகளில் பரீட்சித்து வெளிப்படுத்த பலவகை மருத்துவ வழிகள் உண்டு. ஒவ்வொரு அங்கத்தையும் பரீட்சிப்பதும் உடற்கூறு முழுவதையும்" பரீட்சிப்பதும் விஞ்ஞான வளர்ச்சியில் உடன் அறிந்து கொள்ளும் வழிகள். இருந்த போதும் எம் உள்ளம் சார்ந்த தேடலை மற்றவர்களால் மருத்துவ உபகரணங்களால் பதில் தர முடியாததை தாமே சுய ஆய்வின் மூலம் கண்டு கொள்வதில் முயன்றால் முடியும் என்ற முயற்சி தான் நம்பகத் தன்மையுடைய நல் ஆளுமை கொண்ட மனிதனை உருவாக்கும்.
9IUL6)6) 60601, அடுத்தவனை மதிப்பிடும் எமது பார்வைகள், வார்த்தைகள், எல்லாம் எம்மை நாமே சுய மதிப்பீடு செய்தால் எதைக் கூற முடியும்? எனது பலம், பலவீனம், எனது ஆற்றல், திறன்கள் யாவற்றையும் என்னுள் தேடி வரிசைப்படுத்தும் உளப் பயிற்சிகள் பல எமது நிலை உணரவும், எம்மை நாமே ஏற்றுக் கொள்ளவும், வழிப்படுத்தவும் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பங்களாகும்.
நான் யார்? என என்னை நானே பலமுறை கேட்டு அதற்கான விடைகளை என்னுள் தேடி பதில் காணும் போதெல்லாம் என் சுய ஆய்வு சுயதரிசனமாக பதிலைத் தரும். அதில் நல்லவை தீயவை எவை என்பதை இனம்காணும் போது பலமும், பலவீனமும் பகுத்தறியப்படும். இதனால் எம் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் உள வடுக்கள் வெளிப்பட வாய்ப்புண்டு. இவற்றை வெளிப்படுத்தும் ஓர் பயிற்சியாக உள்ளத்தின் மதிப்பீடுகளை எழுதிப் பாருங்கள்.
இத்தனையும் என் உள்ளத்தில் உள்ளவை தான் என ஏற்று அதில் பலமும் பலவீனமும் இனம் காணப்படும் போது நல்ல மன்நிலை, நடுநிலைத் தன்மை இருக்க வேண்டியது சுய ஆய்வில் மிக முக்கியமானதாகும்.
“என்னுடன் நான் வாழ்ந்தே தீரவேண்டுமாதலால், என்னை நானே அறிந்து கொள்வதற்கு ஏற்ற தகுதியைப் பெற, நானே விழைய 7

Page 6
வேண்டும்” என்பார் எட்சார் ஏ கென்ட் எனும் அறிஞர். ஆதலால் தன்னை அறிந்தவனால் தான் தன் வாழ்வை சீர்ப்படுத்த முடியும். என்பதுடன் பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வழி காட்டவும் (փIգԱյլb. 。 „ሃ
சுய ஆய்வின் முடிவுகள் தன் வாழ்வில் மேற்கொள்ளும் வழிகளை திட்டமிட்டுக் கொள்வதுடன் நான் யார் என்பதை தன்னுள் கண்டு பிறருக்கு வெளிப்படுத்தும் உளப்பக்குவ நிலையில் மற்றவரின் சுயத்தை மதிக்கும், மதிப்பிடும் மனப்பக்குவ நிலையில் குறைகளையும் நிறைகளையும் சமமாக தரிசிக்க சுயதரிசனம் மூலமே நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம்.
எங்களை விட விஷேச தன்மைகள் மற்றவருக்கு இருக்கலாம். ஆனால் அதைவிட சில விஷேட ஆற்றல்கள் எம்மிடம் உண்டு. அதைக் கண்டுகொள்ள வேண்டியது நானே தான் என்பதை சுயதரிசனம் மூலம் உணர்ந்து கொள்வதே எமது வாழ்வின் வெற்றிக்கு வழியாகும்.
CD
CO சிநேகமுள்ள அன்பர்களே ! Σ.Κ.
நான் 2004 இற்கான சந்தாவைச் செலுத்த உங்கள் காசுக்கட்டளைகளை (Money Order) அனுப்பி வைக்கலாமே !
பணம் பெறுபவர் ஆசிரியர் “நான்’ பணம் பெறும் அலுவலகம் - தலைமைத் தபாலகம்
யாழ்ப்பாணம் ノ
أريا
கருத்துக் குவியல் - 103
பெற்றோர்கள் குழந்தைகளை சுதந்திரமாக வளர அநமதிப்பத எப்பொழுதும் நன்மையானதாக அமையும் / அமையாத
உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.

முடிவெருக்கும் வேகத்தை சுய-மதிப்பீடு செய்வோம்
డ్లప్తి
அன்புராசா வவுனியா
அன்றாட அனுபவம்
கடந்த வாரம் கொழும்பு செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்து கொண்டேன். நான் பஸ்சை அடைந்து சுமார் பதினைந்து நிமிடங்களின் பின் வந்த ஒருவர் எனதருகில் இருந்து கொண்டார். “உடன வெளிக்கிடுமோ அல்லது நேரமாகுமோ? " எனக் கேட்டுக் கேட்டு என்னையும் அமர்ந்திருந்த ஏனைய பிரயாணிகளையும் அரிகண்டப்படுத்திக் கொண்டிருந்தார்.
புகைப்படம் எடுத்து விட்டு அப் படங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மூன்று நாட்களின் பின் போயிருந்தேன். எனது அலுவலைப் பார்த்துக் கொண்டிருந்தார் புகைப்பட நிலையப் பொறுப்பாளர். அங்கு அப்போது தான் வந்த ஒருவர், "படம் எடுத்தால் உடன தரமுடியுமோ அல்லது ஒரு மணித்தியாலத்தால தருவிகளோ?” என்று விடாப்பிடியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
போன மாதம் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். எனக்குரிய இடத்தில் அமர்ந்து கொண்டேன். நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. அருகில் இருந்தவர், “இழுத்துக் கொண்டிருக்கிறாங்கள் . உடன முடிக்க
மாட்டாங்க போலிருக்கு . எனச் சொல்லிச் சொல்லியே விழா முடியும் வரை இருந்து விட்டுப் போனார்.
எனக்குத் தெரிந்த ஒருவர் வயிற்றுக்குத்து என்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்து விட்டு மருத்துவர் அவரிடம், “உமக்கு 'அப்பென்ரி சைட் அவசரப்பட்டு ஒப்பரேஷன் செய்ய ஏலாது, செய்யவும் கூடாது. திகதி தருவோம், வீட்ட போயிற்று இரண்டு கிழமையால வாங்க. 'ஒப்பரேஷன் செய்வோம்.” எனத் தெளிவாகவும் விபரமாகவும் சொன்னார். நோயாளி, ‘அப்ப டெTர்ரர் உடன செய்ய மாட்டீகளோ? . ” எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்.
e Largs surf - INSTANT - MADE
இவ்வாறு இன்றைய காலத்தில் எதை எடுத்து நோக்கினாலும் எல்லாம் உடனடியாக நடைபெற வேண்டும். நினைக்கின்ற வேகத்தில் எல்லாம்

Page 7
நிறைவேற வேண்டும். சிந்தனையினுடைய வேகத்தில் செயல்கள் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்.
இதற்கு ஒத்திசைவது போல plgorig (Instant தயாரிப்பாக நாளுக்கு நாள் பொருட்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. "இன்ஸ்ரன்ற் (335|Titi Instant Coffee), “Q66roj6irgi) grg66ro Instant Noodles), 36i Gröy Gig) if Instant Tea), 36.6m)ygiip "glitigro Instant Drinks), "இன்ஸ்ரன்ற் லஞ்' (lnstant Lunch), என்று எல்லாமே உடனடி
(lnstant) தயாரிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உடனடி நிவாரணி
இந்த வரிசையில், பல நோய்களுக்கும் உடன் நிவாரணம் தரும் மருந்து வகைகளும் தாராளமாக வந்து கொண்டிருக்கின்றன. தடிமலுக்கு உடன் நிவாரணி’, ‘தலையிடிக்கு உடன் நிவாரணி’, அஸ்மாவுக்கு உடன் நிவாரணி', 'ஆத்தறயிற்ரிஸ்க்கு உடன் நிவாரணி’, ‘முறிவு நெறிவுக்கு உடன் நிவாரணி என நோய்களைக் குணமாக்கப் Ll6Ꮣ) மருத்துவப் பொருட்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
'திருமணத் தடையா? வேலை கிடைக்கவில்லையா? வெளியூர் செல்லத் தடையா? வாழ்க்கையில் விரக்தியா? அல்லது பில்லி சூனியமா? எதுவானாலும் உடன் நாடுங்கள் மலையாள மாந்திரிகர் X என நாளுக்கு நாள் சோதிடம், சாத்திரம், குறி பார்த்தல் என்பன மனிதர்களின் வாழ்க்கை நிலைகளை உடன் தீர்மானிக்க விளைந்திருக்கின்றன.
தொலைத் தொடர்பு சாதனங்களை எடுத்துக் கொண்டால் உடனடித் தொடர்பு உழைக்க எண்ணுகின்ற வேளையில் உடனடி சம்பாத்தியம் 'உச்சப் பலன். W"
தற்போதைய நிலையில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் மட்டும்
தான் உடனடிப் பிள்ளைப்பேறு என்று ஒன்று இன்னும் இல்லாமல்
இருக்கிறது. நாளடைவில் அதற்கும் என்ன நிலை வருமோ?. 1. உடனடி மனநிலை
இப்படியான அனுபவங்களினால் ‘உடனடி மனப்பான்மையிலேயே நாம் எமது வாழ்க்கைப் பிரச்சினைகளையும், வாழ்க்கை நிலைகளையும் . முறைகளையும் முறையே தீர்க்க, தீர்மானிக்க விளைகிறோம். அதனால் வாழ்க்கைத் தெரிவுகளை ஏற்படுத்தும் வேளையிலோ அல்லது பிரச்சினைகள் ஏற்படுகின்ற வேளையிலோ உடன்
10

முடிவுகளை எடுக்க முனைகிறோம். அவை பல சந்தர்ப்பங்களில் எதிர்மறையான விளைவுகளையே (Negative Outcome) ஏற்படுத்துகின்றன.
சிந்தித்து தீர்க்கமாகத் தீர்மானிப்பது இன்று இல்லாமற் போய்விட்டது. இன்று மாலை ஒரு தீர்மானமும், இரவு நித்திரைக்குப் பின் இன்னொரு முடிவும் என வாழ்க்கைச் சக்கரம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. கடுகதி வேகத்தில் ஒடிக்கொண்டு 'இன்ரசிற்றி ஸ்பீற்றில் (Inter-city Speed) வாழ்க்கைத் தீர்மானங்களை எடுக்க முடியுமா?
இடைக் குறிப்பு முடிவு எடுக்க முடியாமல் காலத்தைக் கரைப்பவர்களுக்கு இது விதிவிலக்காக அமையும் என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகிறேன். காரணம் அவர்கள் இனிமேலும் தாமதிக்கக் கூடாது. விரைந்து - உடனடியாக அதாவது நிதானத்தோடு கூடியதாக விரைந்து செயற்பட வேண்டிய தருணம் இது என உணர வேண்டும்.
உடனுக்குடன் செய்யப்பட வேண்டியவை உடனடியாக வேகமாக விரைந்து செய்யப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். உதாரணம் -
1. இயற்கை / செயற்கை அனர்த்தங்களால்
பாதிப்புற்றவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும்.
2. விபத்திலே ஒருவர் காயப்பட்டு விட்டார் என்றால் அவருக்கு
உடன் மேருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
3. உறவினர் ஒருவரின் இறப்புச் செய்தி கேட்டுவிட்டு அடக்கச்
சடங்கிற்கு ஆறுதலாக யோசித்துப் போகலாம் என இருக்க
முடியாது. - இவை போன்ற விடயங்கள் உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆக, உடனுக்குடன் செய்ய வேண்டியவற்றை உடனுக்குடன் செய்தே ஆக வேண்டும்.
வாழ்க்கைத் தீர்மானங்கள் வாழ்க்கை நிலைகள் பற்றிய தீர்மானங்களையோ / தொழில்சார் துறைகளையோ / ஏதேனும் நீண்ட காலத் தெரிவுகள் "உடனடி மனநிலையில் செய்யப்படக் கூடாது. ஏனெனில் تم ترقي للملكي ஏற்படக்கூடிய விளைவுகள் . கால ஓட்டத்தில் நம் வாழ்வை மோசமாகப் பாதிக்கலாம். உதாரணமாக - ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் எனப் பல காரணங்களைக் கூறி எல்லாம் நடந்தேறுகின்றது.
இறுதியில் ஓரிரு மாதங்களில் பெண் தாய் வீடு வந்து விடுகிறாள் - தற்காலிகமாக அல்ல நிரந்தரமாகவே. காரணம், மாப்பிள்ளை ஏற்கனவே மணமுடித்தவர் அல்லது பணத்தை, சொத்துக்களைச்
警

Page 8
சீதனமாகப் பெற்றுக்கொள்ள நடந்த நாடகம் எனப் பல சம்பவங்கள் எம்மிடையே இருக்கின்றன.
படிப்பினைகள்
நம் நாட்டுத் தொழில் அதிபர் ஒருவர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் உயர்வாய் உள்ளது போல இங்கும் செயற்படுத்துவதே அவரது அமெரிக்கப் பயணத்தின் நோக்கமாகும். அவர் சென்ற அத்தனை தொழிற்சாலைகளிலும், “செய்ய வேண்டியதை காலம் தாழ்த்தாமல் உடன் செய்யுங்கள்” என்ற வாசகத்தை அவதானித்தார். வினவிய போது இத் தத்துவம் தான் அவர்களின் வளர்ச்சிக்குக் காரணம் என்பதை அறிந்து கொண்டார். நாடு திரும்பிய அவரின் ஆலோசனைப்படி இங்கே உள்ள ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பல இடங்களில் இதே தத்துவத்தைப் பொறித்து வைத்தார்கள்.
மூன்று மாதங்களின் பின்னர் அமெரிக்க நாட்டிலிருந்து தொழிலதிபர்களின் குழு இங்குள்ள நிலைமைகளை ஆராய வரவழைக்கப்பட்டது. நம் நாட்டுத் தொழிலதிபர், “எனது தொழிற்சாலை கணக்காளர் ஐம்பது இலட்ச ரூபாவோடு தலைமறைவு!. பத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகின்றனர். பதினைந்து பேர் வேலை விட்டுவிட்டு வேறு தொழிற்சாலைகளுக்குப் போய்விட்டாாகள். 660)6OTUL தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்து விட்டார்கள்!. வினவிய போது, “செய்ய வேண்டியதைக் காலம் தாழ்த்தாமல் உடனே செய்திருக்கிறோம் என்ற பதில் தான் கிடைத்தது . ஒ9 என்றார் அழாக்குறையாக,
"மோஸ்கோ’ என்ற ஒெரு வகை மூங்கில் சீன நாட்டில் பயிரிடப்படுகின்றது. ஐந்து வருடங்களுக்கு அது வெளியே வளருவதில்லை. ஐந்து வருடங்களின் பின் ஒரு நாளுக்கு சுமார் 2.5 அடி வீதம் ஆறு வாரங்களில் தொண்ணுாறு அடி உயரம் வளர்கிறது. இத்தகைய வளர்ச்சிக்குக் காரணம் அதன் வேர்கள் பூமிக்கடியில் ஐந்து வருடங்களாகச் செய்த தயாரிப்பே ஆகும் 660 அறியப்பட்டிருக்கிறது.
duplg660J - - உடனுக்குடன் எழுப்பப்படும் கட்டடங்கள் பொதுவாக உறுதியானதாக அமைவதில்லை. உடனுக்குடன் சமைத்தவை உருசியாக இருக்கிறது. ஆனால் எல்லா வேளைகளிலும் பசியைப் போக்குவதில்லை. ஆக, உடனடியாகச் செயற்பட வேண்டிய செய்யப்பட வேண்டிய விடயங்களை அக்கணமே விரைந்தாற்ற வேண்டும்.
12

வளமான வாழ்வுக்கு சுய ஆய்வு தேவை!
V.P. தனேந்திரா ாழ். பல்கலைக்கழகம்
"உன்னையறிந்தால் - நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் ?
கவிஞர் கண்ணதாசன்
உள்ளத்தை சலசலவென ஓடவிட்டு கற்பனை உலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள், தழுக்கென ஒரு உலகை அமைத்து, அதில் மகிழ்ந்திருக்க முயற்சிக்கின்றனர். இதனால் தமது நடத்தைக் கோலத்தை மீள்பார்வை செய்ய முயற்சிப்பதில்லை.
எல்லா மனிதர்களும் 'நாம் எப்படி இருக்க வேண்டும்’ என்று கற்பனை காணுகின்றார்கள். இந்த கற்பனை உலகு தவறானதல்ல! ஆனால் அந்த கற்பனை எப்படிப்பட்டது? அதன் சவால்கள் என்ன? என்று மீள்பார்வை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாது இருக்கும் போது எமது நடத்தைக் கோலம் ஜதார்த்த சூழலுக்குள் நகர்கின்றது.
அதாவது ஒரு மனிதன் மற்றவர் மீது பகை கொண்டு, தினமும் அவரை பழிவாங்கும் உணர்வுடன் நோக்கி, அந்த உணர்வினால் ஏற்படும் சாதக-பாதக நிலைகளை மீள்பார்வை செய்யாது இருந்தால், அவரது மறையான கற்பனை, நடத்தையாக வெளிப்படுகின்றது. இதன் மூலம் அடி தடி - கொலை என்றும் தனிப்பட்ட வாழ்வை பாதிக்கும் வகையில் வன்முறைகளை உபயோகிப்பதும் நிகழ்கின்றது. இவ் நடத்தை மீண்டும் அவரையும் செய்யத் தூண்டுகின்றது. சங்கிலித் தொடர் போன்று மாறிமாறி நடைபெறுகின்ற ஆரோக்கியமற்ற நடத்தைகள் ஆகும்.
தனிமனித பழிவாங்கும் உணர்வுகள், சில வேளைகளில் சமூக பிரச்சினையாக வெளிப்பட்டு, முழுச் சமூகத்தையும் பாதிப்புக்குட்படுத்துகின்றது.
ஒரு மனிதனின் மறையான நடத்தையை, அவரது வாழ்வியலில் அக்கறை கொண்டவர், தவறை சுட்டிக்காட்டி திருத்த முயற்சிக்கும் போது, அவர் மீது கோபம் கொண்டு, தமது தவறை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். “என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு ஒருத்தரும் அறிவுரை சொல்லத் தேவையில்லை” என்று கூறுவாரேயானால், அவர் தன்னைப் பற்றி மீளாய்வு செய்யாதவர் என்பதே அர்த்தம்.

Page 9
எமது வாழ்க்கையில் எளிமை மிகவும் அவசியம். உணவில் எளிமை - உடையில் எளிமை - வாழ்க்கை முறையில் எளிமை அல்ல, மாறாக எதையும் நேரிடையாக பார்ப்பதில் எளிமை தேவை, எந்த திரிபுமின்றி உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்வதில் எளிமை வேண்டும். இந்த எளிமை நிலை எமக்குள் வளர்ந்தால், எம்மை நாமே ஆராய்ந்து எமது நடத்தையில் - உணர்வில் இருக்கும் மறையானவற்றை சீர்படுத்தி வாழ்வியலை நகர்த்த உதவியளிக்கும்.
எங்கள் மனம், இனம் - மதம் - சாதி - கலாச்சாரம் - மொழி - பண்பாடு - தேசியம் என்ற நிலைகளில் கட்டுண்டே இருக்கிறது. இக் கட்டுண்ட நிலைகளில் இருந்து வெளியே வர நாம் முயற்சிப்பதில்லை. அதுவே மிகவும் முக்கியமானதாக கருதுகின்றோம். இதனால் மற்றவரை ஏற்றுக்கொள்ள தயங்கி, எமது நிலைப்பாடு தான் சரி என்ற கொள்கை ஏற்படுத்துகின்றோம்.
இத்தகைய மானிட கட்டுண்ட நிலைகளினால் தான் சாதியம் - இனத்துவம் - பால்நிலை வேறுபாடு சமூகத்தில் தலைதூக்கி, ஒன்று எழுச்சி பெறவும் - இன்னொன்று தாழ்நிலை அடையவும் வழி வகுக்கின்றது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், நாம் மனம் கட்டுண்ட நிலையில் இருந்து விடுதலை பெற முயற்சிப்பது இல்லை. அதனை மீள் ஆய்வு செய்யாமையே ஆகும். இதனால் போர் - அடக்குமுறை - உரிமை மறுப்பு - ஏற்றுக் கொள்ளாமை - போன்ற தன்மைகள் உருவாகி மனிதம் சிதைக்கப்படுகின்றது.
மற்றவரை அடக்கி வாழும் மனிதன், தன்னை அடக்கி வாழ தெரியாதவனாக தவிக்கிறான். காரணம் சுற்றி உள்ளவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட மனிதன், தன்னை நன்கு தெரிந்து கொள்ளவில்லை. இதனால் தான் சிந்தனையாளரும் - அறிஞருமான சாக்ரட்டீஸ் கூறினார், “உன்னையே நீ அறிவாய்” என்று.
ஆகவே ஒரு மனிதனுக்குள் ஒழிந்திருந்து ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு நபர்களை இனம் காண வேண்டும். ஒரு மனிதனின் சிந்தனை - சொல் - செயல் முறைகளுக்கு அவன் மட்டும் காரணமல்ல, மாறாக புறத் தாக்கத்தினால் அவனுக்குள் ஏற்பட்ட பாதிப்புக்களே, அவன் அடி மனதில் பதிந்து வெளிப்படுகின்றன.
தனிப்பட்ட வாழ்வியல் மேம்பாடு காண வேண்டுமானால், தேன்னைத் தானே சுய ஆய்வு செய்து, தனது மறையான நடத்தை என்ன? தனது நேரான நடத்தை என்ன? ஆதனது பலம் - பலவீனம் என்ன? போன்றவற்றை இனம் காண வேண்டும்.
14

இவ்வாறு இனம் காணப்படாவிட்டால், அவரது பலவீனத்தை பயன்படுத்தி மற்றவர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து, அவரை பகடைக் காயாக பாவித்துக் கொள்வார்கள்.
தாழ்வு மனப்பான்மை - அச்ச உணர்வு - கோபம் கொள்ளுதல் என்பன மனிதனிடம் அளவுக்கதிகமாக வெளிப்பட்டால், அவையும் வாழ்வை பாதிப்புக்குள்ளாக்கும். இத்தகைய நிலைகள் எமக்குள் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்று நாம் ஆராய வேண்டும். அவ்வுணர்வுகள் அதிகமானால் அவற்றில் இருந்து விடுதலை பெற முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவை மகிழ்ச்சியான வாழ்வுக்கு தடை கற்களாகும்.
“நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு மிகமிகத் தேவைப்படும் ஒன்று, உடன் மறைக் கண்ணோட்டம் உள்ள தன்னியல்பு மதிப்பீடு தவிர வேறு ஒன்றும் இல்லை” என்பார் டாக்டர் நத்தானியல் பிராண்டன்.
ஆகவே நிறைவான வாழ்வியலை முன்னெடுத்துச் செல்ல நேரான தன்னிலை மதிப்பீடு அவசியம். இதை எமது வாழ்வில் அனுபவிக்க மறையான சிந்தனைப் போக்குகளை அகற்றி உண்மைத்துவமாக வாழ்வோம். அதற்கு எம்மை நாமே ஒவ்வொரு நாளும் மீள் ஆய்வு செய்து கொள்ள வேண்டும். மனத்தை கட்டுப்படுத்தி, தியானத்தில் தரித்திருந்தால் சுய ஆய்வு மேற்கொள்ள மிகவும் இலகுவாக அமையும். ஆகவே சுய ஆய்வு செய்வோம், வாழ்வில் உயர்வு 35sT60öy(3UITLD.
"நாண்’ உங்கள் நண்பன்
நண்பனாக உங்களோடு பேசுவேன் நண்பனாக உங்களைப் பற்றிச் சொல்லுவேன் நண்பனாக உங்களை மகிழ்விப்பேன் நண்பனாக உங்களை ஆறுதல்படுத்தவேன் நண்பனாக உங்கள் அறிவை வளர்ப்பேன்
சிநேகமுள்ள நண்பர்களே!
*' நான் உளவியல் சஞ்சிகையை உங்கள் நண்பர்களுக்கும் "அறிமுகப்படுத்தலாமே
* அன்பளிப்பாக பரிசாக ஒரு வருட சந்தாவை உங்கள்
நண்பர்களுக்காக வழங்கலாமே
15

Page 10
au ஆய்வு - இளையோர் வாழ்வின் ஏணிப்படி
பி.தே. யூட்தாஸ்
இளைமைப் பருவம் இனிய வாழ்க்கைப் படியாகும். மகிழ்ச்சியின் எல்லையைத் தொட முயற்சிப்பதும் இக் காலத்தில் தான்.
உலகிலும் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை நியதி. புதிய புதிய சிந்தனைகளும், வற்றாத ஆசைகளும் பீறிட்டெழுவதும் இப் பருவத்திலே. தனது ஆளுமையை இளைஞனானவன் நிர்ணயித்து அச்சிடும் காலம் இதுவாகும். இவ் அச்சிடல் நடைபெறாத வேளையிலேயே பல்வேறு நடத்தைப் பிறழ்வுகள் ஏற்பட இளைஞன் காரணமாகின்றான். இளைமைக் காலத்திலே ஓர் மனிதன் தனது மனிதத் தன்மையை, சமூகத்தில் தனது நிலையை, படைப்பில் தனக்கு இருக்கும் சிறப்பை அறிந்து அதை அனுபவிக்க முற்படுகிறான். இது நியாயமானதே! யாரும் மறுப்பதற்கில்லை. ஒரு இளைஞன் தனது வாழ்க்கையை நேரிய பாதையில் இட்டுச் செல்ல மிகவும் அவசியமானது சுய ஆய்வு ஆகும். BULU ஆய்வை மேற்கொள்ளுவதனால் மனித ஆளுமை வளர்ச்சியடைகிறது. மனிதத்துவத்தின் இருப்பின் நிலைகள் ஆழமாக்கப்படுகின்றன.
எமது யாழ் மண்ணில் வாழும் பெரும்பான்மையான இளையோரை நாம் எடுத்து நோக்குகின்ற போது இவர்கள் அனைவரும் போர் பெற்றெடுத்த பிள்ளைகள் ஆவர். போரின் தாக்கங்களும், விளைவுகளும் இவர்களை சிதைத்து விட்ட நிலைகள் அதிகம். இவர்கள் அறிந்தோ அறியாமலோ போரின் அழிவுகளிற்கும், போர் தந்த கலாச்சாரத்திற்கும் இரையாகி விட்டார்கள். இது இவர்களது
தவறு அல்ல. பூகோளமயமாக்கல் செயற்பாடுகளும், பின் நவீனத்துவத்தின் சிந்தனைகளும், நுகர்வுக கலாச்சாரத்தின் ஈர்ப்புக்களும், வன்முறைக் கலாச்சாரத்தின் உள்ளீடுகளும்
இளைஞர்களை வழி தெரியாத குருடர்களாக அலைக்கழிக்கும் இச் சந்தர்ப்பத்தில் சுய ஆய்வு இல்லை எனில் வாழ்வே இருண்ட கண்டமாகி விடும்.
மனித ஆளுமை
ஆளுமை என்ற பதத்திற்கு தமிழ் அகராதி தரும் கருத்துக்கள் பின்வருமாறு - தனிமனிதனின் நிலை, தனிநபரின் தனித் தன்மை, தனிமனித வாழ்வு, தனிமனித சிறப்பியல்பு, தனிமனித பண்பியல்பு என்பனவாகும். ஆளுமையை ஆள் + தன்மை - அதாவது ஆளும் தன்மை, ஆள் + உண்மை எனப் பிரித்துப் பார்க்கும் போது ஆளுமை
16
 

என்ற பதத்தின் பொருள் தெளிவாகிறது. இப் பதத்திற்கு தெளிவான, வரையறுக்கப்பட்ட விளக்கம் கொடுப்பது கடினமாகும்.
சாதாரண வாழ்க்கை நிலைகளில் இப் பதத்தை ஓர் தனிமனிதனின் உயரம், கட்டான உடல், விரும்பத்தக்க நிறம், கவர்ச்சிகரமான நடை, உடை, பாவனைகள் என்பவற்றைக் குறிக்கப் பயன்படுத்துகின்றோம். ஆனால் உளவியல் ரீதியில் ஆய்கின்ற போது இப்பதம் ஆழமான பொருளைக் கொண்டதாக இருக்கின்றது.
மனித ஆளுமையை நிர்ணயிக்கும் காரணிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். -
பாரம்பரியம் (Genetics)
)ே உடலமைப்பு
[Constitution) E குடும்பச் சூழ்நிலை E) உள்ளக் கிளர்ச்சி E சமூக கலாச்சார
Emotion) பொருளாதார நிலை E அறிவு 66ਲੰ E மதம் is...
Intellect 3 பாலியல் (Sex () பொறியுணர்வு B மனித வளர்ச்சி () பொறிக்காட்சி 5 சுரப்பிகளில் ஏற்படும் )ே கருத்துருவாக்கம்" வளர்ச்சி
Concept formation)
எனவே ஆளுமையானது வெறுமனே ஒரே ஒரு காரணியால் நிர்ணயிக்கப்படும் விடயமல்ல. பல்வேறு காரணிகளால் உருவாக்கப்படுவதே ஆளுமை ஆகும்.
குறையுள்ள ஆளுமைகளாக நாம் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
N சந்தேக ஆளுமை !
உணர்ச்சி மாறுபாடு ஆளுமை
சிதைந்த மன ஆளுமை
ஆட்டிப் படைக்கும் ஆளுமை
ஹிஸ்டீரியா ஆளுமை
குறைபாடுள்ள ஆளுமை
சார்பு நிலை ஆளுமை
மெளன ஆக்கிரமிப்பு ஆளுமை
கட்டுப்பாடிழந்த ஆளுமை
சமூக விரோத ஆளுமை
தற்புகழ் ஆளுமை
உணர்வுமிகை ஆளுமை
மேற்கூறிய குறைபாடுகள் இன்று ஏதோ ஒரு வடிவில் எம் இளைய
உள்ளங்களை பீடித்துள்ளது. இக் குறைபாடுகள் உள்ள இளைஞர்
ஒருவர் ஒரு சில மணித்துளிகளிலே தனது ஆளுமையின் குறையைக்
கண்டுகொள்ள முடியாது. தனது குறையைக் கண்டு கொள்வதற்கு
7

Page 11
சிறப்பாக நேரம் ஒதுக்கி, தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவ்வாறு குறையைக் கண்டுபிடித்த ஒருவர் அக் குறையில் இருந்து விடுபடுவதற்கு சிறந்த ஒரு வழியாக அமைவதே சுய ஆய்வு ஆகும்.
சுய ஆய்வு ஒருவர் அமைதியிலே தனக்குள்ளே பயணம் செய்து தனது முன்னைய வாழ்வின் செயற்பாடுகளை ஒவ்வொன்றாக சீர்தூக்கிப் பார்த்து, கூட்டிக்கொள்ள வேண்டிய விடயங்களையும் கழித்துக்கொள்ள வேண்டிய விடயங்களையும் பற்றி ஆராய்ந்து, தவறிப்போன சந்தர்ப்பங்களை இனங்கண்டு தவறிப் போவதற்கு ஏதுவாக இருந்த காரணிகளை 9,9LDIT85 உற்றுநோக்கி அவற்றை எவ்வாறு எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து, சிறப்பாகச் செயற்பட்ட வேளைகளை நினைத்து மகிழ்ந்து, இன்னும் சிறப்பாக செயற்பட ஒத்திசைவான காரணிகளை தேடும் ஓர் செயற்பாடே சுய ஆய்வு ஆகும்.
அன்றாடம் ஓர் இளைஞர் சுய ஆய்வை மேற்கொண்டு வருகின்ற போது அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அவனது செயற்பாடுகளில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். சுய ஆய்வை மேற்கொள்ள விரும்பும் ஒருவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய மனப்பாங்கு யாதெனில் அவர் முதலில் தன்னை அன்பு செய்யத் தொடங்க வேண்டும்.
என்னை நான் அன்பு செய்தல் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது அன்பே ஆகும். அன்பு இல்லை என்றால் வாழ்வே பொருளற்றதாகி விடும். உறவுகளுக்கு உயிராயிருப்பதும் அன்பு ஆகும். மதங்கள் எல்லாம் ஒருமித்துப் பேசுவது அன்பைப் பற்றிய போதனையாகும். ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனை அன்பு செய்யப் போகிறான் என்றால் முதலில் அவன் தன்னை அன்பு செய்ய வேண்டும். அன்பின் ஆனுபவத்தை அவன் பெற்றாக வேண்டும். வாழ்வின் வளர்ச்சியின் ஆரம்பம் ஒருவன் தன்னை அன்பு செய்வதோடே ஆரம்பமாகிறது.
தன்னை அன்பு செய்யும் ஒருவனிடம் பின்வரும் அம்சங்கள் காணப்படும்.
* தனது திறமைகள், ஆற்றல்கள், தகுதியை, ஆர்வத்தைக்
கண்டு மகிழ்வான். * தனது தேவை யாது என்று அறிந்து அதை நிறைவு செய்வது. * தனது குற்றங்களை, அழுகிய அனுபவங்களை இனங்கண்டு,
மன்னித்து, மறப்பது. * தனது இருப்பின் அர்த்தத்தை, பெறுமதியை நினைத்து
வியப்படைவான். * இந்த உலகம், படைப்புப் பொருட்கள் எல்லாம் தன்னை
நேசிப்பதாக உணர ஆரம்பிப்பான்.
18

இளையோர் சுய ஆய்வை மேற்கொள்ள விரும்பாமை இன்று எமது சமூகத்திலே இளையோர் சுய ஆய்வை மேற்கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக வாழ்கிறார்கள். 5GUL ஆய்வின் பரிணாமங்களை அறிந்த பின்பும் அதில் நாட்டம் காட்ட மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
இதற்குரிய காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
> பய உணர்வு - எனது பழைய வாழ்க்கைச் செயற்பாடுகளை நான் மீள ஆய்வு செய்கின்ற போது எனது பழைய பிழைகள், தவறுகளை அறிய வேண்டிவரும். இது யாருக்கும் தெரிந்தால் எனக்கு பிரச்சினையாகி விடும், பழைய தீய காரியங்கள் எனது மன அமைதியைக் கெடுத்து விடும் என்ற பய உணர்வு காரணமாகப் பலர் சுய ஆய்வு செய்வதில் இருந்து பின்வாங்குகின்றார்கள்.
> சுய கணிப்பு பாதிப்படையலாம் - சாதாரணமாக ஒரு இளைஞன் தன்னைப் பற்றிய ஒரு படத்தைப் போட்டு தன்னை கணிப்பிட்டு வைத்திருப்பான். எப்போதும் தனது கணிப்பை நிலைநாட்டுபவனாகவே அவன் காணப்படுவான். சுய ஆய்வை மேற்கொள்ளும் போது தனது கணிப்பு சீர்குலைக்கப்படலாம் என்ற எண்ணம் உருவாகின்றமையால் சுய ஆய்வு செய்யாது விட விரும்புகிறார்கள்.
> தன்னம்பிக்கையின்மை - சுய ஆய்வை மேற்கொள்ளும் போது ஏற்படும் குற்ற உணர்வுகளையும் பின்பு புதியதொரு வாழ்க்கை முறையை மேற்கொள்ளத் தீர்மானிக்கும் போது அதை மேற்கொள்ளுவதற்கும் தன்னம்பிக்கை இல்லாது இருக்கலாம். எனவே சுய ஆய்வை மேற்கொள்ள விரும்பாது இருக்கிறார்கள்.
> என்னை மன்னிக்க முடியாத நிலை - சில வேளைகளில் சுய ஆய்வின் மூலம் go) சந்தர்ப்பங்களில் நானே பொறுப்பானவனாக தெரியக்கூடும். என்னால் சமூகத்தில் அல்லது குடும்பத்தில் அல்லது இன்னொருவருடைய வாழ்க்கையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் என்னை மன்னிக்க எனக்கு மனமில்லாது போகிறது. எனவே சுய ஆய்வு செய்வதை தவிர்க்கலாம்.
மேற்கூறிய நிலைப்பாடுகள் மனிதனின் வளர்ச்சிப் படிகளில் சவால்களாகத் தோன்றுகின்றன. எதிர்கால நன்மையை கருத்திற் கொண்டு இச் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். ஆனால் உலகப்போக்கோடு அள்ளப்பட்டுச் செல்லும் இளைய உள்ளங்கள் இவ்வுண்மையை உணர்ந்து கொள்வது என்பது இலகுவான
19

Page 12
காரியமல்ல. இதற்கு சிறந்த மனவுறுதியும் நான் நிறைவாக வளர
வேண்டும் என்ற வைராக்கியமும் எம்மில் பிறக்க வேண்டும்.
சுய ஆய்வை மேற்கொள்ளும் போது இளையோரின் உள்ளங்களின் படிப்படியாக மனப் பாரங்கள் குறைந்து செல்வதையும், வாழ்வின் இலக்குகள் தெளிவடைவதையும், வளர்ச்சியின் படிமுறைகள் சிறப்பாக அவதானிக்கக் கூடியதாக இருப்பதையும், பிறருடனான எமது உறவுகள் சீரடைவதையும் நாம் அறிந்து கொள்ளலாம். இளையவர்கள் தமது வாழ்வின் சுய ஆய்வு தேவை என்ற உறுதிப்பாடடையும் போதுதான் வாழ்வும் செழிப்படையும்.
(pig.6 T85 - மனித ஆளுமை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் முற்றுப்பெறும் ஓர் படிமுறையல்ல. மாறாக வ்ாழ்க்கை வட்டம் பூராகவும் நிகழும் ஓர் செயற்பாடாகும். ஆளுமை வளர்ச்சி சீரானதாக இருப்பதற்கு சுய ஆய்வு அவசியமாகிறது. அன்றாடம் சுய ஆய்வை மேற்கொள்வதன் மூலம் எதுவித நோய்களும் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதேவேளை பிறருடனான உறவு நிலைகளை புதுப்பித்து முழு மனித இலக்கு நோக்கிப் பயணிக்க உதவி செய்கிறது. இளைமைப் பருவத்திலே தான் ஆளுமை வளர்ச்சியின் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எனவே இளையோருக்கு சுய ஆய்வு அவசியமாகிறது.
அன்றாடம் நித்திரைக்குச் செல்லுமுன் ஆத்ம சோதனை செய்து கொள்வது பயனுள்ள ஓர் காரியமாகும். அன்றாடம் நான் என்னை சுய ஆய்வு செய்ய முயற்சிக்கின்ற போது அது நன்மை பயக்கும். கடவுள் தந்த வாழ்வை எப்படியும் வாழலாம் என்றிராமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதியுடன், சுய ஆய்வின்படி வாழ ஆரம்பித்தால் வாழ்வு சிறக்கும், உறவுகள் மலரும், உள்ளம் பூரிப்படையும், நோய் நொடிகள் ஓடி மறையும்.
துணைநின்ற நூல்கள் -
அ. அல்போன்ஸ், முழு மனித வளர்ச்சியில் உன் ஆளுமை, கிளறேசியன் பப்ளிகேஷன்ஸ், பெலிசர. அ. அல்போன்ஸ், “உருவாகும் நான்”, மேரா வெளியீடு, குமரி மாவட்டம், 1997 இம்மானுவேல் ராஜ், "இளமையில் .”, நாஞ்சில் புக் ஸ்டால், 1995 அ. அல்போன்ஸ், “மனிதனின் நிறம் சிகப்பு, நலம் வெளியீடு, 2000. அ. அல்போன்ஸ், “நீ நான் அவன்”, St. Paul Publication, 1987. ம.அ. ஜெகத் கஸ்பார், “போலிகளோடு போர்”, நாளை வெளியீடு.
20

“நான்” சஞ்சிகை எழுத்தாளர் ஒன்றுகடடல் C 07.12.2003 )
ச. யேசுதாசன், அ.ம.தி
ജ്ഞ இந்த் “நான்’ சஞ்சிகை தனது 28 வது வெற்றிப் பயணத்திலே தன்னை மீள்பார்வை செய்ய 07.12.2003 அன்று எழுத்தாளர் ஒன்றுகூடலை "தொடர்பகத்தில்” நடாத்தியது. அதன் பதிவுகள் இதோ.
“நான்' சஞ்சிகை எழுத்தாளர்களுக்கிடையே ஓர் குழும உணர்வை, ஒன்றிப்பை ஏற்படுத்துவதே இந்த ஒன்றுகூடலின் முதன்மையான நோக்கம். இவ் ஒன்றுகூடலில் பலர் கலந்து கொண்டு தம்மை அறிமுகம் செய்தார்கள். 28 ஆண்டுகளை நிறைவு செய்யும் “நான்” உளவியல் சஞ்சிகையின் வளர்ச்சி, இதனை எம் மக்களின் தற்கால சூழ்நிலைக்கு தக்கவிதமாய் நகர்த்துவதில் எழுத்தாளரின் பங்கு, உளவியல் சஞ்சிகையின் நோக்கம் எப்படி புண்பட்ட மனங்களுக்கு மருந்தாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிப்படுத்துவது போன்ற விடயங்கள் இவ் அமர்வில் பேசப்பட்டன, பகிரப்பட்டன.
ந்தி
)ே தலைமையுரை - (இதழ் ஆசிரியர் - அருட் தந்தை போல்
நட்சத்திரம்)
தனது தலைமையுரையில் இதழாசிரியர், எம் மக்களுக்கு இன்று அதிகமாகவுள்ள உளவியல் தேவையை பூர்த்தி செய்ய முயல்வது இந்த "நான்” உளவியல் சஞ்சிகையாகும்; எம் பிரச்சினைகள் முடிந்து விடவில்லை; மாறாக இப்பொழுது தான் எம் உள்ளங்களில் வேரூன்ற பதிக்கப்பட்டு எம் வாழ்வின் இயல்புகளாக வெளியே புறப்படுவதை நாம் பார்க்கின்றோம் என சமூகம் பற்றிய தனது பார்வையை விளித்துரைத்தார்.
உளவியல் ஆக்கங்களை எல்லோரும் படைக்க முடியாது. உளவியல் விஞ்ஞானத்தில் அனுபவம் பெற்றவர்கள், அதனை நன்கு தெரிந்தவர்களால் மட்டுமே முடியும். எனவே இது எம்மேல் சுமத்தப்பட்ட பணி. அதை அர்ப்பண உணர்வோடு தொடர்ந்தும் பங்களிப்புச் செய்ய கேட்டுக் கொண்டதுடன், நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் குழுமமாக செயற்பட்டு எங்களால் இயன்ற உதவிகளை எம் மக்களின் வழமான, ஆரோக்கியமான வாழ்வுக்கு கொடுக்க வேண்டுமென்றும், எம் ஆக்கங்கள் மக்களின் நல்வாழ்வுக்கு உதவ ஊக்கமுடன் உழைப்போம் என்றும் கூறி தன் தலைமை உரையை முடித்துக் கொண்டார்.
2

Page 13
() எழுத்தாளர் - ஜோசப் பாலா ("நான்’ உளவியல்
சஞ்சிகையின் நிர்வாகக் குழு உறுப்பினர்) “நான் கண்ட “நான்” ” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த உளவியல் சஞ்சிகையில் ஏற்பட்ட தொடர்பு நேரிடையான பாதிப்பையும், தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள உதவியதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததோடு, “நான்’ பற்றி தனது பார்வையை சுவைமிக்க சம்பவங்களினூடாக தெரிவித்தார்.
“நான்' சஞ்சிகையால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் பங்குபற்றியதன் மறுநாளே “அவவுக்கு என்ன தெரியும்” என்ற ஓர் கதையை எழுதியதாகவும், இதுவே தன்னை சிறுகதை எழுத்தாளராக இனங்காட்டியதோடு சிறுகதை நூல்கள் வெளியிடவும், தன்னைத் தூண்டியதாகக் கூறினார். இவ்வாறு இச் சஞ்சிகை பலரை படைப்பாளிகளாக, எழுத்தாளர்களாக மாற்றியிருக்கிறது என்ற உண்மையைத் தெரிவித்தார். 扈
ஆரம்ப காலத்திலேயே இச் சஞ்சிகை சரியான தடம் பதித்ததனால் தான் நெருக்கீடு காலங்களில் எம் மக்களுக்கு பெரும் துணையாக இருந்து பலருக்கு பல விதமான உளவியல் தேவைகளை பூர்த்தி செய்யும் மருத்துவனாக செயற்பட்டது என பூரிப்போடு கூறினார்.
இச் சஞ்சிகை இன்று இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வாசிக்கப்படுகின்றது. இதன் தேவையும் சேவையும் பரந்து விரிய வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால் இதன் தரமும் உயர வேண்டிய தேவை உள்ளது. இது ஓர் கல்விசார் நூலாக மட்டும் அல்லாமல் சாதாரண மக்களையும் அடையக்கூடிய விதமாக வளர்க்கப்பட வேண்டியது எம் ஒவ்வொருவரின் கடமையாகும். “நான்’ குழுமத்தில் அங்கம் வகிக்கும் நாம் ஒவ்வொருவரும் இச் சஞ்சிகையை வளர்க்கவும், இதன் மூலமாக எம் சமூகத்திற்கு உதவவும்" இன்னும் கூடுதலாக எம்மை ஈடுபடுத்த வேண்டும் என்ற அழைப்புடன் தன் உரையை நிகழ்த்தினார்.
() சிறப்புரை - அருட்தந்தை றெஜினோல்ட் (வன்னி “அன்னை’ இல்ல உளவளத்துணையாளரும் (M.S அமெரிக்கா), “வளர்பிறை" உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர்) போர்த் தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, உதிர்ந்து போகின்ற மனித உள்ளங்களுக்கு குணமளிக்கும் “அன்னை
இல்லம்’ எனும் பெயர் கொண்ட S. 666 நிலையத்தை கிளிநொச்சியில் நடத்தி வருகின்றார். உளவளத்துணையில் இளையோரை, பயிற்றுவித்து அவர்களை நல்ல
உளவளத்துணையாளர்களாக' உருவாக்குவதும், உளவளத்துணை வழங்குவதும், பயிற்சிப் போசறைகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துதல் போன்றன அவருடைய பணிகளாகும்.
22

“நான்' சஞ்சிகையை எப்படி நான் பார்க்கின்றேன்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். ஒரு சஞ்சிகையை வெளியிடுவதில் பல விதமான கஷ்டங்கள், சவால்கள் உள்ளன. அத்தனைக்கும் மத்தியில் இத்தகைய ஓர் உளவியல் சஞ்சிகை 28 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவருவது புக்ழ்ச்சிக்கும், பாராட்டுதலுக்கும் உரியது என்றார்
உளவியல் என்பது நாம் படிப்பதை, வாசிப்பதை தொகுத்து எழுதும் ஓர் விடயம் அல்ல. இது வாழ்வோடு இணைந்திருக்க வேண்டும். இருபது வருடகால யுத்தத்திலே 6) விதமான நெருக்கீடுகளுக்கு உள்ளாகியிருக்கும் எம் சமூகத்திற்கு
சந்தோஷமான, நம்பிக்கை நிறைந்த வாழ்வை 96.28586
வேண்டுமானால், அவர்கள் தம் வாழ்க்கைச் சுமைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை
ஏற்படுத்தும் சஞ்சிகையாக இது அமைய வேண்டிய தேவையுள்ளது என்ற செய்தியை எழுத்தாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
உளவியல் ஓர் அறிவு ரீதியான பகிர்தலாக இருந்தால், அது இந்தக் காலத்திற்கு தேவையான சேவையை செய்ய முடியாது. நாம் கற்பதை, தெரிந்து கொள்வதை எமக்குள் உள்வாங்க வேண்டும். எமக்குள் முதலில் அனுபவிக்க வேண்டும். எம் ஆக்கங்கள்
வாழ்க்கையில் இருந்து வெளிவர வேண்டும். அந்த அனுபவத்தின்
ஊடாக சில விடயங்களை கொடுக்கிற போது, அவை பயனுள்ளதாய்
பாதிக்கப்பட்டுள்ள எம் தற்கால சமூகத்தை கட்டி எழுப்பும் பாரிய பணி இவ் உளவியல் சஞ்சிகைக்கு நிறைய உண்டு. எம் எழுத்துக்கள் சாதாரண மக்களும் வாசித்து விளங்கக்கூடிய மொழிநடையில் அமைவது சாலச் சிறந்தது. எம் மக்கள் மீண்டும் ஓர் நம்பிக்கையுடன் தம் வாழ்வைக் கட்டி எழுப்ப துணை செய்யும் ஓர் மலராக "நான்" தொடர்ந்தும் வெளிவர வாழ்த்தி விடைபெற்றார்.
)ே பொதுக் கலந்துரையாடல் - பொதுக் கலந்துரையாடலை அருட் தந்தை செல்வரெட்ணம் நெறிப்படுத்தினார். (“நான்” உளவியல் சஞ்சிகை ஆலோசகர், ஆன்மீக உளவியல் பற்றி கருத்துரைகளை உலகின் பல பாகங்களிலும் நிகழ்த்தி வருகின்றவர், ஆழமிக்க எழுத்தாளர்)
முதலில் எழுத்தாளர் அறிமுகம் நடைபெற்றது.
iiiiiii து இந்த ஒன்றுகூடலை பலரும் பாராட்டினர்.  ைஇது போன்ற ஒன்றுகூடல்கள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும்
என ஆலோசனைகளைக் கொடுத்தனர். வி வாசகர்களுக்கான ஒன்றுகூடல்கள் வைப்பது நல்லது என்ற
கருத்தும் முன்வைக்கப்பட்டது.
23

Page 14
ங்கக்கூடிய மொழிநடை
விள
--- .  ി . - - - օԽ அன பண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். 2 ஆரோக்கியம் உள்ளவர்களை வைத்து எப்படி ஆக்கங்களை
б " _نام_____ e o | ` , „" ”. ; * | | | | | | | | | | | | ருவாக்குவது என்று ஆராயப்பட்டது.  ി ിപ്പ്
எ குறிப்பிட்ட தலைப்புகளில் எழுதுவதால் தீமையை விட நன்மைகள்
 ി
ற கருத்தை எல்லோரும் ஆதரித்தனர். * Εί6ι சிகையின் வளர்ச்சியை பலரும் t;" |ംiൻ ി
அதிகம் என்
ി.
I  ി
e o o es es es " o " o es e o 9 9 89 e ി
oo o so e o o o os o co o o o so e o e o o os | |
O ;"" ---- - - ش-.... - . م - وو شص---- |
O I6 உளவியல் சஞ்ச் 99. @ تF( s X O -
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது. இப் புத்தாண்டில் வாசகர்கள் எடு D
TC) முயற்சியும் ه" SIN?
O
வெற்றியடைய ஆசி கூறி வாழ்த் லறது.
-- ਘyyy
ി ന്റെ
O ിപ്ര s ൻ  ിന്റെ ി O
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிச்சோலை
மனத்துணிவு சிதைவு
இலக்கை நோக்கிய எனது முகமூடி அழகானது பயணத்திற்கும் குழந்தைகளிடம் சிரிப்பையும் முயற்சியுள்ள முன்னேற்றத்திற்கும் பெரியவர்களிடம் மதிப்பையும் 三 முகவுரை சகபாடிகளிடம் நட்பையும் 一三ーヨ
உருவாக்க வல்லது. துன்பங்களிற்கும் தோல்விகளுக்கும் என்னைச் சுற்றியுள்ள முகவுரை மாவைகளுடன் எனக்கு
இந்த நிமிடம் வரை வாழ நினைக்கும் உடன்பாடில்லை -இனி ஒவ்வொருவருக்கும் இருக்கப்போவதும் இல்லை. வாழ்த்துரை
இறந்து போவதைக்காட்டிலும் கரும்பாறையையும் வாழ்வது மேலாவென்று கணிய வைக்கும் அடிக்கடி சிந்தித்து இரும்பு உளி உடைந்து போகிறேன்
முணுமுணுக்கும் எனது புன்னகை அழகானதென்று முஹாரி ராகங்கள்ன் ஒரு நண்பி சொன்னாள் முற்றுப்புள்ளி அதன் பின்னால் நான் அழுவது
அவளுக்கு கேட்டிருக்க நியாயமில்லை. எனவே நீங்களும் - நான் சிரிப்பதாக நேற்றுவரை எண்ணினால் . மன்னிக்கவும்! போர்வைக்குள் முடங்கிக் கிடந்த சறா நண்பனே! மருத்துவபீடம், யாழ். பல்கலைக்கழகம் துணிந்து நில்! தாதியாகிட ஆசை தொடர்ந்து செல் !! "தோல்விக்கு இனி எதிர்காலத்தின் தோல்வியே. ஒளிமயத்துக்காக - நான்
மாய்கின்றேன் J.M.J. றொட்றிக்கோ புதிர்காலமாய் யாழ். பல்கலைக்கழகம் நிகழ்காலம்
ஓடிக்கொண்டிருக்கின்றது.
இலட்சியத்தை அடைய தாதியத்தை எதிர்க்கும்
சமுதாய சிந்தனைகள tD6öllib (ELIII6öl Gusrö(0856Ó60stuð பலரின் புத்திமதிகள்-என் குணம் போய் வாழ்ந்திருந்தால் குரல்வளையை தினம் தினம் அலைந்தே நெரித்துக் கொண்டே மனமிழந்து போய் விடுவோம் என் குரல் வளத்தை
பரிசோதிக்கின்றன. எண்ணத்தில் திட்டமிட்டு பதில்களை திண்ணமாய் செயற்பட்டு பதுக்கியவளாக வண்ணமாய் வாழும் போது மெளனிக்கின்றேன். கண்ணியமாய் இருந்திடலாம்
தனித்துவ மனத்தில் இலக்கமைத்து தாதிய நிழலில் பாண்புடனே வாழும் போது தைரியமாய் இலங்கிடும் இலட்சியத்தை நிற்கின்றேன். இனிதாக அடைந்திடலாம். கை குலுக்கும்
ஒரு காலத்துக்காக கு. சிவகுமார் தன்னம்பிக்கையுடன்
சுன்னாகம் என் பயணங்கள் தொடரும் .
பிரதீபா, கொடிகாமம்
25

Page 15
தன்னை உணர்ந்தால் உயர்வடையலாம்
میں ہےD_____________ لی- " * நிறைந்தினி
நி சுகவாழ்வு நிலையம்
விஞ்ஞானம் மனிதன் வாழ்நாளை அதிகரிக்கின்றது. கட்டடம் எழுப்பக் கற்றுக் கொண்டவன், தன்னை எழுப்பக்கற்றுக் கொள்ளவில்லை. தன்னைத் தெரியாமல் ஒருவன் தன்னை வளர்த்துக்கொள்ள இயலாது. ஒருவரது ஆளுமை வளர்ச்சியானது அவர் தன்னைத் தானே ஆய்வு செய்யும் தன்மையை பொறுத்து காணப்படுகிறது. ஒருவர் தன்னைத் தானே ஆய்வு செய்கின்ற போதுதான் எந்த நிலையில் உள்ளார் என்பதை உணர முடியும்.
“உன்னையே நீ அறியின் உன் மனதை நீ உணர்வாய், உன் அறிவை நீ அறியின் உன் ஆற்றலை நீ புரிந்து கொள்வாய்” என்ற சாக்ரட்டீசின் கருத்து குறிப்பிடத்தக்கது. எனினும் ஒருவன் தன்னைத் தானே ஆய்வு செய்கின்ற போது தனது உணர்வுகளை அறிந்து கொள்ள முடியாது. இங்கு தன்னைத் தானே ஆய்வு செய்கின்றேன் என எண்ணும் போது உணர்வுகள் மாற்றமடைகின்றன. இதனை அகக்காட்சி முறை (Introspective method) மூலம் அறிய முடியும். உதாரணமாக - ஒருவர் தாம் கோபம் கொள்ளும் போது எவ்வாறு செயற்படுகின்றேன், என தன்னை ஆய்வு செய்ய முற்படும் போது அவரது கோபம் என்ற உணர்வு குறைந்து அல்லது மறைந்து விடும்.
சுய ஆய்வின் மூலம் ஒருவர் தனது, அறிவு - திறமை - ஆற்றலை ஓரளவு உணர்ந்து கொள்ள முடிந்தாலும் கூட சுய ஆய்வானது ஒரு நெருப்பை போன்றது. அதாவது நெருப்பானது ஒன்றை ஆக்கவும் அதேநேரம் அழிக்கவும் வழி செய்கின்றது. அதுபோன்றே சுய ஆய்வும் ஒருவரை உயர்வடையச் செய்யும் அதேநேரம், தாழ்வடையவும் வழி செய்கிறது. இதற்கு சுய ஆய்வின் மூலம் உணர்ந்து கொள்ளப்பட்ட கடந்தகால அனுபவங்களே காரணமாக அமைகிறது. சுய ஆய்வானது ஒருவன் துன்பம் அடைகின்ற போதே தோன்றுகின்றது. இந் நிலையில் தவறான நடத்தைக்கு போவதற்கும், தாழ்வு மனப்பாங்கு உணர்வைப் பெறுவதற்கும் வழி ஏற்படுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஆழ் மனதில் உறைந்திருக்கும் உணர்வுகள் கட்டியெழுப்பப்பட்டு ஒன்று சேர்ந்து பல எதிர்வுகளை தோற்றுவிக்கும். இச் செயற்பாட்டை போன்று நேரான உணர்வுகள் சுய ஆய்வின் மூலம் ஏற்படும் போது அவரது ஆளுமை வளர்ச்சியானது உயர்வடையும்.
ஒருவன் தன்னைத் தானே உணரும் போது பெற்றோர்கள், சகோதரர்கள், விளையாட்டு குழு, பாடசாலை, சமூகம், பொருளாதார நிலை என்பன மீள் நோக்கப்படும்.
26
 
 
 
 

உதாரணம் - பரீட்சையில் தோல்வியடைந்திருக்கும் மாணவன் தன்னைத் தான் நோக்கும் போதுதான் பொருளாதார நிலை காரணமாக படிப்பினை ஒழுங்காக மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பம் ஞாபகத்தில் வரும். அப்போது பெற்றோர் சமூகம் மீது வெறுப்பு ஏற்படும்.
இதனால் ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் நல்ல ஆழமான
அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும். இதனுடாக நல்ல ஒரு மனிதனை உருவாக்க முடியும். தன்னைத் தானே ஆய்வு செய்யும் போது ஏற்படும் உணர்வு நல்ல விஷயமாக : இருந்தால் அது அவனுக்கு நன்மையாகின்றது. இதன் மூலம் மற்றவரும் நன்மையடைவார்கள். இதற்கு மாறாக தீமையாக இருப்பின் மற்றவர்கள் தீமையடைகின்றார்களோ இல்லையோ அவன் நிச்சயமாக தீமையடைகிறான்.
எனவே தன்னைத் தான் நோக்கும் போது நல்ல உணர்வுகள் தோன்றின் அதனை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். தீய உணர்வுகள் ஏற்படின்,
)ே வேறு சிந்தனை பக்கம் மனதை திருப்பல். )ே நான் இவ்வுணர்வு நிலையில் செயற்படும் போது ஏற்படும்
விளைவுகளை சிந்தித்தல்.
() ஒருவன் தன் மீது நல்ல அபிப்பிராயத்தை கொண்டிருத்தல், !
அச் செயற்பாடானது அவனை நல்ல வழியில் இட்டுச்
செல்லும். () சிந்தனை தவறான பாதையில் செல்லும் போது சிந்தனையை, கதை, கட்டுரை, கவிதை, சித்திரம் வரைதல், . போன்ற
செயற்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். )ே விருப்பமான பாடல்களை இசைத்தல், கேட்டல். () விளையாட்டு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்ளல்.
உசாத்துணை நூல்கள்
)ே அ. அல்போன்ஸ் - வளர்கிறேன் நான். O N I p. மரிய வில்லியம் )ே S.R. கோவிந்த ராசன் - தாழ்வு மனப்பான்மையைத் தவிர்ப்பது
W
6Tulg?
27.

Page 16
ஆரோக்கியமான சமுதாயம் - சிறந்த சுய 乏°丁、 மதிப்பீட்டினூடாக .
விக்னேஷ்வரி இராமலிங்கம்
B.A(Hons), S 6T6 u6)
“உன்னையறிந்தால் - நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் OOo Go என்பது சினிமாப் பாடல் வரி. உண்மையில் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய வரிகள். "தன்னையறிதல்” என்பது மிகப் பெரிய விடயமாகவே காணப்படுகின்றது. தன்னையறிந்து கொள்ளும் போராட்டத்தில் ஒவ்வொருவரும் சுய மதிப்பு (Self Esteem) சுய மதிப்பீடு (Self Evaluation) என்ற சொற் பதங்களுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல் அவசியமானதாகும். ஏனெனில் இவ்விரு சொற் பதங்களும் நெருங்கிய தொடர்புடையனவாகவே காணப்படுகின்றன. சுய மதிப்பு என்பது என்னால் எவ்வளவு செய்ய முடியும் என்பதை வைத்தே கணிப்பிடப்படுகின்றது. சுய மதிப்பீடு என்பது நான் எவ்வளவு வீதம் சரியாகச் செய்தேன் என்பதைக் கணிப்பிடுவதாக அமையும். Carl Rogers என்பவர் “பெற்றோர்கள் பிள்ளைகளை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஒருவருடைய சுய மதிப்பீடு அமைகின்றது”, எனக் கூறுகின்றார். மேலும் சுய மதிப்பு என்பது ஒருவருடைய ஆளுமை, தோற்றம், ஆற்றல்கள், நட்பு, வாழ்க்கை முறைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும். ஒருவருடைய மனநிலையினைப் பொறுத்து சுய மதிப்பானது உயர் நிலையிலோ அல்லது குறைவான நிலையிலோ காணப்படும். இதனடிப்படையில் சுய மதிப்பீடானது நேரானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ காணப்படும்.
எமது நாளாந்த வாழ்க்கையை நோக்கின் சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சி தொடக்கம் தவணை இறுதியில் மாணவர்கள் பெறும் புள்ளிகள், ஆண்டு இறுதியில் ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளர்களின் எண்ணிக்கை, நிறுவனங்களின் ஆண்டிறுதிக் கணக்கறிக்கை, வீட்டு வரவு செலவுத் திட்டம் தொடக்கம் நாட்டு வரவு செலவு வரை எல்லாவற்றையும் மதிப்பீடு செய்கின்றோம். ஆனால் நாம் எங்கு போகின்றோம், என்ன செய்கின்றோம்? எமது இலக்கு என்ன? நாம் பயணிக்கும் பாதை சரியானதா? அல்லது பிழையானதா? நாளாந்தம் நாம் செய்யும் செயற்பாடுகள் எத்தன்மையானவை, அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கின்றோம்? எமது சுய வளர்ச்சிக்கு அல்லது இறை தியானத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கியிருக்கின்றோம், போன்ற இன்னோரன்ன வினாக்களை எம்மில் பெரும்பாலானோர் சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. உண்மையில் இவ் வினாக்களை எமக்குள்ளேயே நாம்
28
 
 

கேட்டுப் பார்த்து சுய மதிப்பீட்டினை செய்து கொள்வோமானால்,
நாளாந்தம் வாழ்க்கையில் ஏற்படும் எத்தனையோ தவறுகளை சீர்செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், எமது வளர்ச்சியின் ஏணிப் படிகளிலும் உச்ச நிலையை அடையலாம் என்பதில் ஐயமில்லை.
"விரல் தன் நுனியைத் தொட்டுக்கொள்ள முடியாது. கத்தி தன்னையே காயப்படுத்திக்கொள்ள முடியாது. அதேபோல் மனமும் தன்னை முழுமையாகப் பார்த்துக்கொள்ள முடியாது.” என்பது உபநிடத சிந்தனை. மனம் தன்னை முழுமையாகப் பார்த்துக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையில்,
மனவியல் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பெருமளவு தன்னைத் தானே ஒருவர் அறிந்து கொள்ள முடியும். தன்னையறிந்து
கொள்வது என்பதை ஒரு தத்துவ விசாரணையாகப் பார்க்காமல் சுய பரிசீலனையாகவே எடுத்துக் கொள்ளுதல் முக்கியமானதாகும்.
உளவியலாளரான மாஸ்லோவின் (Maslow) “தேவைகளே வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவையே ஒரு மனிதனை அடுத்த கட்டத்துக்குள் போக உந்துகின்றன.” என்ற சிந்தனை இவ்விடத்தில் நோக்கத்தக்கது. அவருடைய கூற்றின்படி மனிதன் ஒவ்வொரு கட்டமாய் வாழ்க்கையில் பரிணமிக்கின்றான். அடிப்படை தேவைகளையடுத்து, பாதுகாப்பிற்கானத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான். இந்தக் கட்டத்தில் சிலருக்குப் படிப்பு, சிலருக்கு வேலை வாய்ப்பு, சிலருக்குத் தாங்கள் விரும்பும்
துறையில் அறிமுகம் போன்ற பல்வேறு அம்சங்கள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. இவை பூர்த்தியான பின்தான் மூன்றாவது கட்டமாக தன் உணர்வுகளுக்கும்,
உணர்ச்சிகளுக்கும் வாழ்க்கையில் மனிதன் ஒரு பிணைப்பைத் தேடுகின்றான். இவை யாவும் பூர்த்தியான பின் மனிதன் சமூக அங்கீகாரத்துக்கு விளைகிறான். இக் கட்டங்கள் அனைத்தும் முழுமையாக ஒருவனுக்கு நிறைவினைத் தந்தால் வெளியே தேவைப்படுவது என்று எதுவும் இருக்காது. அப்போது தான் உள்ளே தேட ஆரம்பிப்பான். இந்தத் தேடல் சுய பரிசீலனையாக ஆரம்பித்து ஆன்மீகமாக, தத்துவமாக பல்வேறு வகைகளில் ஒரு சுயதரிசனமாக அமையும். இந்த இறுதிக் 5L'U-560555|T6ï LDIT6rö(36)T (Maslow g56ï6öfl60»p6) [Self Actualisation) எனக் குறிப்பிடுகின்றார். மாஸ்லோ குறிப்பிட்டுள்ள இவ் ஐந்து படிமுறைகளையும் ஒருவர் கடந்து செல்லும் போது தன்னைத் தானே ஒருமுறை சுய மதிப்பீடு செய்து கொள்ளல் வேண்டும். சுய மதிப்பீடு செய்து கொள்ளும் போது தன்னிரக்கம், சுய தரிசனத்தில் வெட்கம் காட்டுதல், குறைகளை ஒப்புக் கொள்வதில் தயக்கம் என்பன இல்லாது ஒவ்வொருவரும் செயற்படுவார்களாயின் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இருக்க முடியாது.
"நான் எப்போதும் முதன்மையானவன்” என்று பெருமைப்படுவது சுய கெளரவம் அல்ல. மனோதத்துவத்தில் “சுய கெளரவம்” என்பது தனக்கு ஏற்படக்கூடிய நம்பிக்கையுணர்வு எனக் கருதப்படுகின்றது.
29

Page 17
சமுதாய வாழ்வில் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய ஒரு மதிப்பீட்டினை செய்து கொள்வது முக்கியமானது என்பதை அனைவரும் அறிவோம். நமது மதிப்பீடு தவறாகிவிடின் கூச்சம் அடைகிறோம். தவறான மதிப்பீட்டினால் உண்டாகும் தொடர் தோல்விகள், பயம், உடலுறவுப் பிரச்சினைகள், மகிழ்ச்சியில்லாத மணவாழ்வு போன்றவற்றைச் சமாளித்து தீர்த்து வைத்துவிட முடிவதில்லை. ஒரு பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியாத போது “சுய கெளரவக் குறைவு’ உணரப்படுகிறது.
உதாரணமாக - குமார் ஒரு பிரபலமான பாடகரின் மேடைக் கச்சேரிக்குச் செல்கிறான். பாடகன் வெகு நேர்த்தியாகவும், சிறப்பாகவும் பாடுகிறார். குமார் அதை மனம் லயித்து ரசிக்கிறான். குமாரால் பாட்டை ரசிக்க முடியுமே தவிர பாட முடியாது. ஆனால் இசையில் அதிக நாட்டமுடையவன். இந் நிலையில் குமாரின் மனநிலையை இரு நிலையில் நோக்கலாம்.
குமார் சமநிலை மனப்பக்குவம் உடையவனாகில் அவன் கருத்தில் திட்டவட்டமான முடிவு புலப்படும். அவர் சிறந்த பாடகர், நன்றாகப் பாடி மகிழ்வித்தார். நான் பாடகனல்ல, நல்ல ரசிகன். நன்றாகவே ரசித்தேன், என்ற எண்ணம் தோன்றும். இது ஆரோக்கியமான நேரான சுய மதிப்பீட்டினூடாக உருவாகும்.
குமார் சமநிலை மனப்பக்குவம் இல்லாமலிருந்தால், அது அவனது கருத்தை மாறுபட வெளிப்படுத்தும். அவர் சிறந்த பாடகர். நானோ பாடத் தெரியாத தாழ்ந்தவன். அவர் சபையினரைக் கவர்ந்து விட்டார். அவர் அதிகமான நம்பிக்கையுடையவர் என்ற தாழ்வு மனப்பான்மையுடைய கருத்து உண்டாகும். இத் தன்மைகள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால் சுய மதிப்பீடானது எப்போதும் சமநிலையில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும். அப்போது தான் தாழ்வு மனப்பான்மையை சீர்செய்து கொள்ளலாம். தொகுத்து நோக்குவோமாயின், சிறந்த சுய மதிப்பீட்டினை உடையவர்களது கண்ணோட்டம் (Perception) சரியானதாகவும், முழுமையாகவும் இருக்கும். பொதுவாக தன்னையும், பிறரையும், இயற்கையையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் காணப்படும். இயல்பானவராக (Spontaneity) எளிமையானதாக (Simple), பிறர் தூண்டுதலின்றித் தானாகச் செயற்படுபவராக, தனிமையை (Privacy) மதிப்பவராக இருப்பார். செயற்பாடுகளில் ஜனநாயகப் போக்கு பரந்து காணப்படும். அதிகார மனநிலை வெகுவாகக் குறைந்து காணப்படும். எல்லாவற்றிலும் நன்மை காணும் மனநிலை தோன்றும். எனவே சிறந்ததொரு ' சுய மதிப்பீடு எல்லோரது மனநிலையிலும் தோன்றுமாயின் நாம் வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்னும் படிகளில் வேகமாக ஏறுவதோடு மட்டுமன்றி, சிறந்த நாட்டையும் உருவாக்கலாம் என்பதில் ஐயமில்லை.
30

நேர்காணல்
யாழ் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் கடந்த ஆறு வருடங்களாக பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றி வருபவரும்,
புனித சவேரியார் உயர் குருமடத்தில் கடந்த பதின்மூன்று" வருடங்களாக உளவியல் விரிவுரையாளராகவும் பணிபுரியும் அருட் திரு. பிரான்சிஸ் டானியல் omi M.A Ottawa
அடிகளாருடனான நேர்காணல்.
கேள்வி - சுய ஆய்வு பற்றி உங்கள் கருத்து என்ன? 11 ܕܚܠ ܐ
பதில் - சுய ஆய்வு என்பது அமைதியான சூழ்நிலையில் தனிமையில் தனிப்பட்ட
தீர்மானத்துடன் ஒருவரால் செய்யப்பட வேண்டிய செயன் முறை. இதன் மூலம் ஒருவர் தன்னுடைய வாழ்க்கை (p60060)ul, உணர்ச்சிகளை, நடத்தைகளை, நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து தனது உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளலாம். இது ஒருவரது வளர்ச்சிக்கு துணை செய்யும். ஆனால் சுய ஆய்வு நம் மக்கள் மத்தியில் நடைமுறைகப்படுத்தப்படுவது மிகக் குறைவு. எனவே சுய ஆய்வுக்கான சந்தர்ப்பங்களும், வழிநடத்தல்களும் வழங்கப்பட வேண்டும். அதன் அவசியம் உணர்த்தப்பட பாடசாலை, சமய, சமூக மட்டத்தில் விழிப்புணர்வு கொண்டுவரப்பட வேண்டும்.
கேள்வி - நமது குடும்பங்களில் சுய ஆய்வு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் - மேலை நாட்டவர்களை பொறுத்தவரையில் அவர்கள் சுய ஆய்வின் நன்மையை உணர்ந்ததினால் அதனை நடைமுறைப்படுத்துகின்றார்கள். நாம் பல்கலைக்கழகத்தில்
பாவிக்கின்ற புத்தகங்கள் பொதுவாக மேலை நாட்டு நடைமுறைகளையே உதாரணமாக கொண்டிருக்கின்றன. இவற்றை இங்கு படிப்பிக்கின்ற போது மாணவர்களுக்கு இவை புது அனுபவமாகவே அமைகின்றன. ஏனென்றால் நமது சூழலைப் பொறுத்தவரையில் குடும்பமாக அமர்ந்து தங்களைப் பற்றி சுய ஆய்வு செய்வது மிகவும் அரிது. எமது குடும்பங்களை பொறுத்தவரையில் பொதுவாக கருத்துப் பரிமாறலில் சமநிலை பேணப்படுவதில்லை. அதாவது பெற்றோரின் கருத்திற்கு மாற்றுக் கருத்தை முன்வைப்பதோ
3.

Page 18
அல்லது ஒரு இளைஞன் தனது பிரச்சினைகளை பெற்றோரோடு கலந்தாலோசிப்பதற்கான சந்தர்ப்பமும், சமநிலையும் பேணப்படுவதில்லை. மேலும் குடும்பங்களில் பிரச்சினைகளை, குறைநிறைகளை அலசி ஆராய எமது கலாச்சாரமும் இடம் தருவதில்லை. எனினும் சில குடும்பங்கள் தாங்கள் மேலைநாட்டு அனுபவங்களாலோ அல்லது புத்தகங்களுடாக பெற்ற அனுபவங்களால் சுய ஆய்வின் முக்கியத்துவம் உணர்ந்து அதை குடும்ப, தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்துவதையும் காணலாம்.
கேள்வி - சுய ஆய்வு எந்த வகையில் தனிமனித வளர்ச்சிக்கு உதவுகின்றது? |
பதில் ' ஒருவன் தன்னை அறிந்து ஏற்றுக்கொண்டால் மற்றவர்களை ஏற்றுக்கொள்வது சுலபம் என சில உளவியலாளர்கள் கூறுவார்கள். ஒருவன் தன்னை முழுமையாக அறிய வேண்டும். அந்த அறிவே சுய ஆய்வின் அல்லது சுய மதிப்பீட்டின் வெளிப்பாடு எனலாம். ஒருவர் ஏனோதானோ என்ற மனநிலையில் ஏன்தான் கடவுள் எனக்கு இப்படி குறைபாடுகளை தந்திருக்கிறார் என்ற அங்கலாய்ப்பில் தன் குறைநிறைகளை ஏற்றுக் கொள்ளும் போது அவனால் சந்தோஷமாக வாழ முயடிாது. ஆனால் ஒருவர் தனது குறைநிறைகளை, எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் உண்டு, என்ற நேர்த்தியான மனநிலையில் ஏற்றுக் கொள்ளும் போது மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அத்தோடு தமது குறைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் மேலும் மேலும் வளருவார்கள்.
நான் என்னை ஏற்றுக் கொள்ளும் போதுதான் மற்றவர்களும் என்னை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சிலர் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் தமக்கு நண்பர்கள் இல்லை என்று வருத்தப்படுவார்கள். மற்றவர்கள் இவரோடு பழக விரும்பினும் அவரது நடத்தை பண்புகள், கோப உணர்வு போன்றவற்றால் விலகியே நிற்க முற்படுவர். இதனால் தம்மை அறியாது தனிமைப்படுத்தப்பட்டு, கோபம், பழிவாங்கல் மற்றும் மது போன்றவற்றிற்கு அடிமையாகி ஆளுமைச்சிதைவுக்கு உட்படலாம். இவர்கள் ஆரம்பத்திலேயே சுய ஆய்வின் மூலம் தம்மை யார் என்று அடையாளம் கண்டு, தம் உணர்வுகளை புதைக்காது நெறிப்படுத்தும் போது சமூகத்திலிருந்து விலக்கப்படாது தமது உறவுகளை வளர்த்துக்கொள்ள முடியும் சுய ஆய்வு, உறவை வளர்க்கவும், நட்பை வலுப்படுத்தவும், தீயதை விட்டகலவும் தனிமனிதனுக்கு உதவுகின்றது.
கேள்வி - சுய ஆய்வுக்கு தங்களை உட்படுத்துபவர்களுடைய செயற்பாடுகள் பற்றி சொல்ல முடியுமா?
பதில் சுய ஆய்வு தொடர்ச்சியாக செய்பவர்கள் தங்கள் வளர்ச்சியிலும், நடத்தையிலும் முதிர்ச்சியை காண்பிப்பார்கள்.
32

இவர்கள் தங்களது உணர்வுகளை தனக்கும், மற்றவர்களுக்கும் பாதிக்காத வகையில் நெறிப்படுத்துவர். என்றும் மகிழ்ச்சியாக இருப்பர். தமது குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வர். తణ్ణి உறவுகளை வலுப்படுத்தி நல்ல நண்பர்களை கொண்டிருப்பர். ஸ்ரிச்சல், பொறாமை, காய்மகாரம், ஊழல், போட்டி, புகழ் போன்ற பண்புகளிலிருந்து விலகி, எல்லோரையும் மதித்து அன்பு செய்யும் மனிதர்களாக விளங்குவர்.
உண்மையான சுய ஆய்வு செய்து நம்மை நாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோமேயானால் இவ் அறிகுறிகளைக் காண முடியும் என பேராசிரியர் ஜோண் பவெல் கூறுகிறார் .
அதாவது தங்களை ஏற்றுக் கொள்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாய் காணப்படுவார்கள். மற்றவர்கள் தங்களை குறை
கூறினாலும், அன்பு செய்யாவிட்டாலும், கோபப்படாமல் அவர்கள் தங்களை விளங்கிக் கொள்ளவில்லை என கருதுவார்கள்.
() அத்தோடு இலகுவாக மற்றவர்களை நாடிச் செல்வார்கள்.
அந்நியரோடும் பழக, உறவாட பின் நிற்கமாட்டார்கள்.
)ெ மேலும் மற்றவர்களால் அன்பு செய்யப்படவும், புகழாரம்
சூட்டப்படவும் ஆவலாய் இருப்பார்கள். திறந்த மனம்
கொண்டவராய் இருப்பதுடன், மற்றவர்கள் தங்களைப் புகழும் பொழுது சந்தேகக் கண் கொண்டு பார்க்கமாட்டார்கள்.
)ே அதேவேளை தங்களை ஏற்றுக கொள்வோர் இதுவே
உண்மையான “நான்” என்று கூறும் அளவுக்கு உறுதி
பூண்டவர்கள். மற்றவர்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டாலும், அதைப் பெரிதுபடுத்திக்
கொள்ளமாட்டார்கள்.
)ெ இவர்கள் தங்களுடைய முட்டாள் தனம், தவறுகளைப் பார்த்ததும் மற்றவர்களோடு தானும் சேர்ந்து இலேசாகவே சிரித்து விடுவார்கள்.
)ே இவர்கள் தங்களுடைய தேவைகளை இனங்கண்டு பூர்த்தி செய்யும் ஆற்றல் உள்ளவர்களாகவும், அதேவேளை மற்றவர்களின் தேவைகளையும் உன்னிப்போடு நிறைவேற்றுவதில் குறியாயிருப்பர்.
() தங்களை ஏற்றுக் கொள்வோர் சுயமாகவே தீர்மானம் எடுக்கக் கூடியவர்களாயிருப்பர். “கும்பலில் கோவிந்தா” என்றிருக்க udsti i stflassist.

Page 19
() தங்களை ஏற்றுக் கொள்வோர் வீண் கற்பனை உலகில் வாழாது, நிஜ நிலையுடன் தொடர்புடையவர்களாய், தங்கள் வரையறைகளை நன்கு அறிந்தவர்களாய் வாழ்வார்கள்.
கேள்வி - பலருக்கு சுய ஆய்வில் ஈடுபடுவது ஏன் அவ்வளவு எளிதாக அமைவதில்லை?
பதில் - எங்கள் எல்லோருக்கும் மனதின் ஒரு பகுதியாக “ஆழ் மனம்” என்று ஒன்று உண்டு. இதை ப்ராய்ட் (Freud) "Unconscious” என்று அழைப்பார். நாங்கள் முகம் கொடுக்க விரும்பாத அல்லது அதனுடன் வாழ விரும்பாத எமது அநேகமான எண்ணக் கருக்களை ஒழித்து வைக்கும் அல்லது புதைத்து விடும் ஓர் இடம் தான் இந்த ஆழ் மனம், துரதிஷ்டவசமான உண்மை என்னவெனில், இந்த வேண்டா எண்ணக் கருக்கள் மடிந்து போனவையாக அல்ல மாறாக உயிரோடேயே புதைக்கப்பட்டவையாய் இருக்கின்றன. அதனால் 60D6Y எம்மையும் அறியாமலேயே, எம்முடைய அனைத்து}9گه சிந்தனைகள், சொற்கள், செயற்பாடுகள் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் நாம் சுய ஆய்வில் ஈடுபடுவது அவ்வளவு எளிதாக அமைவதில்லை.
-கேள்வி - மனித வாழ்வில் சுய ஆய்வை பாதிக்கும் அல்லது தடைகளாக அமையும் காரணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?
பதில் - பொதுவாக சுய ஆய்வை தடுக்கும் பிரதான காரணியாக ஒருவர் தனக்குத் தானே தடையாக இருக்கலாம். அதாவது ஒருவர் சுயமாக தானே தன்னைப் பற்றி அறிய விரும்பாத நிலையில், தன்னை அறியக்கூடிய வழி வகைகளை பின்பற்ற விரும்பாத நிலையில் அவர் தானே தனக்கு தடையாக இருக்கின்றார். அதேவேளை ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி, ஒரு குறையுமே இல்லை என்று சிந்திப்பானாயினும் அவனால் சுய ஆய்வை மேற்கொள்ள முடியாது.
() சுய ஆய்வில் எம்மை முழுமையாக ஏற்றுக்கொள்ள பல்வேறு தடைகள் நமக்கு ஏற்படுகின்றன. ஒவ்வொருவரின் தனித்துவத்திற்கேற்ப எக் காரணி மேலோங்கி நின்று ஆதிக்கம் செலுத்துகிறதென்பதை நாமே கண்டுகொள்ள வேண்டும். எனது உடல் தோற்றம் - கட்டமைப்பு எனது மனம் (Mind) எனது தவறுகள் (Mistakes) எனது உணர்வுகள் / மன எழுச்சி நிலைகள் (Feelings / Emotions
(*) எனது ஆளுமை 34

நாம் அனைவரும் எமது உடல் தோற்றத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை விரும்புபவர்களாயிருக்கலாம். தன்னைப் பற்றி ஒருவன் மதிப்பாய் எண்ணுவதற்கு அல்லது சுய கெளரவத்திற்கு உடற் தோற்றம் மி முக்கியமானதொன்று என உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆகவே இந்த உடல் குறைபாடுகள் எப்படியான ஒரு தாக்கத்தை நம்முள் உண்டுபண்ணுகிறதென்பதை அறிய முயல வேண்டும்.
எந்தப் பாடசாலையிலும், வேலைத் தளத்திலும் புத்திக் கூர்மைக்கு (அறிவுக்கு) அழுத்தமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. எங்கள் உறவுகளிலும் புத்திக் கூர்மை போட்டி மனப்பான்மையை உண்டுபண்ணலாம். மற்றவர்களுடைய சிரிப்புக்குரிய, நாணி வெட்கப்பட வைத்த சந்தர்ப்பங்கள் மனதில் ஆறாப் புண்ணைப் பதித்திருக்கலாம். இருப்பினும், இதுவே எனக்கு அளிக்கப்பட்ட அறிவும், தரமும் என்ற மன நிறைவோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
குறைகள் இல்லாத மனிதர் யாருமில்லை. இதற்காகத் தான் பென்சிலோடு “றேசர்” (eraser) சேர்க்கப்பட்டுள்ளது. நாம் எல்லோரும் தவறுகள் புரிபவர்கள் தான். தவறுகளினால் தான் அறிவும், ஆற்றலும், அனுபவமும் வளர்ச்சியடைகின்றன. நான் செய்த தவறிலிருந்து ஒன்றும் கற்றுக் கொள்ளாமையே, உண்மையில் நாம் விடும் பெருந் தவறு. புதிய நானுக்கு (New me) பழைய நான் (Old me) எவ்வளவோ காரியங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறான் என்பதை உணர்வோம்.
அநேகமாக எங்கள் எல்லோருக்கும் நேரங்களைப் பொறுத்து மனநிலை (Mood) மாறுவது பொதுவானதே. உஷார் நிலை, தேக்க நிலை, கோப நிலை இப்படியாக மாறுவதுண்டு. என்னில் இருக்கும் உணர்வுகள், மன எழுச்சிகளை குறை கூறாது, என்னையே நான் தீர்ப்புக்குள்ளாக்காது அவைகளை அடையாளங் கண்டு ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பாங்கினை வளர்க்க வேண்டும்.
வெவ்வேறு வகையான ஆளுமை உண்டு. மரபு ரீதியாகவும், சூழல் மூலமாகவும் நாம் எப்படிப்பட்ட ஆளுமையைக் கொண்டுள்ளோம் எனத் தீர்மானிக்கப்பட்டு விட்டோம். அமைதியான, கலகலப்பான, சுறுசுறுப்பான, சோம்பலானவர்கள் என பல ஆளுமையுள்ளவர்கள் இருப்பர். என்னைப் பற்றி அறிந்ததில் இருந்து எனது ஆளுமையோடு திருப்தி உண்டா அல்லது எனக்கே என்னில் ஏமாற்றமா? என சிந்திப்பது ஆரோக்கியமானது.
35

Page 20
  

Page 21
இருக்கின்றேனா அல்லது தடையாக இருக்கின்றேனா அல்லது பின்னடைவுக்குக் காரணமாகின்றேனா? போன்றவற்றை ஆய்வு செய்து நான் எனது குடும்ப வளர்ச்சியில் பங்கு கொள்கின்றேனா? என்பது தொடர்பாக மதிப்பீடு செய்வது குடும்பத் தலைவி என்ற வகையில் அவசியமானதாகும். குடும்ப விருத்திக்கு பின்வரும் விடயங்களில் என்னுடைய பங்கு என்ன? என்பதனை சிந்திப்போம்.
பொறுப்பு (Responsibility) வகித்தல்
பிள்ளைகளின் தேவைகளை இனங்காண்பதும் அவர்களின் தேவைகளை கூடியளவு நிறைவு செய்வதும் ஆரோக்கியமான குடும்ப வளர்ச்சிக்கு அவசியமானதாகும். மாஸ்லோ, தோமஸ் போன்ற உளவியலறிஞர்கள் பிள்ளைகளின் உடல், உளத் தேவைகள் நிறைவு செய்யப்படாவிட்டால் அவர்கள் மன முறிவுகளுக்கும், உடல் நோய்களுக்கும் ஆளாகலாம் எனக் கருதுகின்றனர். ஆதலால் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல், அவர்களுக்கு அருகில் இருந்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உதவுதல், கற்றலில் அவர்களுக்கான ஆர்வத்தைத் தூண்டுதல், அவர்களில் மறைந்திருக்கும் ஆற்றல்களை வளர்ப்பதற்கு வழி வகுத்தல் போன்றவற்றில் பொறுப்புள்ள தாயாக செயற்படுவது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு அவசியமானவையாகும். இச் செயற்பாடுகளில் எனது பங்கு என்ன?
சுய கட்டுப்பாடு (Self- Control) பேணுதல்
புலனடக்கம் சிறப்பான குடும்ப உறவை வளர்க்கும் எனலாம். குறிப்பாக, நாவடக்கம் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகுவதைத் தடை செய்யும். பாதகமான மனவெழுச்சிகளான கோபம், சினம், மூர்க்கக் குணங்களை அடக்கி பொறுமை சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்பவற்றைப் பேணுவது அமைதியான குடும்ப வாழ்வுக்கு வழி சமைக்கும். இவ் விடயத்தில் நான் எவ்வாறு நடந்து கொள்கின்றேன்?
நண்பத்துவத்தைக் (Friendship) கட்டியெழுப்புதல்
தோழமையுணர்வு பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமிடையில் ஒளிவு மறைவில்லாத கலந்துரையாடல்களுக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, தமக்கு ஏற்படும் பிரச்சினைகள் சவால்களை தாயிடமே தயக்கமில்லாமல் எடுத்துக் கூறுவர், கூற விரும்புவர். தாய் தோழமையுணர்வுடன் பிள்ளைகளை அணுகும் போது பிள்ளைகளின் உள்ளக் கிடக்கைகள் தாயுடன் பகிரப்படும். அதன் மூலம் அவர்கள் மன ஆறுதலை அடைய முடியும். பிள்ளைகளுடன் உறவாடுவதில் நான் என்ன அணுகுமுறையைப் பின்பற்றுகின்றேன்?
38

முன்மாதிரியாக / வழிகாட்டியாக வாழ்தல் பிள்ளைகளின் மனப்பாங்கு வளர்ச்சிக்கு பெற்றோரின் முன்மாதிரிகை அல்லது வழிகாட்டுதல் அவசியமானதாகும். பெரும்பாலும் தாயைப் போல பிள்ளை என்றுதான் சொல்வார்கள். ஒழுக்கம், கற்றல் செயற்பாடுகள் பார்த்துப் பின்பற்றக்கூடியன. பின்பற்றுதல், ஒன்றுதல் (Identification) குடும்ப வளர்ச்சிக்கு உதவுவதனால் பிள்ளைகள் பின்பற்றக்கூடிய நல்ல செயற்பாடுகளில் ஈடுபடுதல் அவசியமாகும். அந்த வகையில் நான் முன்மாதிரிகையாக அல்லது வழிகாட்டியாக வாழ்கின்றேனா?
புரிந்துணர்வுடன் வாழ்தல்
குடும்ப அங்கத்தவர்களிடையே புரிந்துணர்வு கொள்ளுதல் ஆரோக்கியமான குடும்ப இயக்கத்திற்கு அவசியமானதாகும். ஒருவர் ஒருவரைப் புரிந்து கொண்டு வாழும் போது முரண்பாடுகளைத்
(Conflict) தவிர்த்துக்கொள்ள முடியும். முரண்பாடுகளற்ற குடும்ப
வாழ்க்கையில் மன நிறைவு ஏற்படுவதுடன் சமுதாயத்தில் ஒன்றி வாழ்வதற்கான துணிவும் ஏற்படும். ஆதலால் நான் புரிந்துணர்வுடன் வாழ முயற்சிக்கின்றேனா?
பயனுள்ள உரையாடல்கள்
வெட்டிப் பேச்சு, வீண் பேச்சுக்கள் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கலாம். பிள்ளைகள், பெற்றோரின் நீண்ட உரையாடல்களினால் சலிப்படையக் கூடும். போதனை செய்யப்படுவதை, ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பதை,
விமர்சிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். பிள்ளைகளின் தேவை என்ன? அவர்கள் எதைக் கேட்க விரும்புகின்றார்கள்? எதை அறிய விரும்புகின்றார்கள் என்பதனைத் தீர்க்கமாக உணர்ந்து கொண்டு உரையாடுதல் சிறப்பானது. குடும்ப உரையாடல்கள் அங்கத்தவர்களின் மன அமைதிக்கு வழி வகுக்க வேண்டும். நாளாந்தம் சில நிமிடங்களாவது ஒன்றாக இருந்து உரையாட வேண்டும். அவ்வாறு கலந்துரையாடும் போது பிள்ளைகளின் மனப்பாங்கு விருத்தியடையும் வகையிலான விடயங்கள் பேசப்பட வேண்டும். நான் என்ன செய்கின்றேன்? கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றேனா? பிள்ளைகளின் அமைதிக்கான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றேனா? என் பங்கு என்ன?
தொடர்பாடலை ஏற்படுத்தல்
சில குடும்பங்களில் பெற்றோருக்கிடையில், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில், பிள்ளைகள் - பிள்ளைகளுக்கிடையில் சுமுகமான தொடர்பாடல் இருப்பதில்லை. இது உள நெருக்கீடுகளை ஏற்படுத்துவனவாக அமையலாம். மகிழ்ச்சிகரமான குடும்: இயக்கத்திற்கு இவை தடையாக அமையலாம். ஆதலால் குடும்:
39

Page 22
அங்கத்தவர்களுக்கிடையிலான தொடர்பாடல் சிறப்பானதாக, சீரானதாக அமைதல் வேண்டும். இதனை உருவாக்குவதில் தாயின் பங்கு அதிகமானதாகும். தந்தை - பிள்ளைகளுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தாது உறவை ஏற்படுத்துவது தாயினாலேயே முடியும். எனவே குடும்பத்தவர்களிடையே தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு நான் முயற்சி செய்கின்றேனா?
சிந்திப்போம் 1 செயல்படுவோம் !
17 ZZZZZZZZZZZ འོན་འོན་པོ་རྗེ་འོན་པོ་དེ་དེ་༽ a Y
உளவியல் கருத்தரங்கு
"நான்” உளவியல் சஞ்சிகையானது ஆழமான அழுத்தமான உளவியல்ச் சிந்தனைகளை, உளவளத்துறையை, உளவியல் அறிவை மக்களுக்கு சஞ்சியையூடு கொடுப்பதோடு, களத்தில் இறங்கி உளவியல் பட்டறைகள், கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் என்பவற்றை திட்டமிட்டு வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது. இவ் உளவியல் சிந்தனைப் பகிர்வில் பல தரப்பினரும் கலந்து கொண்டு ஆழமான உளவியல் அறிவைப் பெறுவதோடு தங்கள் உளவியல்ப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள், என்பது வெள்ளிடைமலை. அந்த வகையில் “நான்” உளவியல் சஞ்சிகையின் உளவியல் பட்டறைக்கு பொறுப்பாக செயல்படுவோரான எஸ்.யூ.ஜெகான், யேசுராஜன் என்போர். ஆனைக்கோட்டை வாழ்க்கைத்திறன் பயிலும் மாணவிகளுக்கும், நாவாந்துறை புனித நீக்கிலஸ்." மரியாள் ஆலய இளைஞர் யுவதிகளுக்கும், புனித மரியாள் பூ பேராலய இளைஞர் யுவதிகளுக்கும் வெவ்வேறு தினங்களில், அநுபவமுள்ள உளவியலாளர்களின் துணைகொண்டு உளவியல் பட்டறைகளை நடாத்தினர். இதன் மூலம் பல இளைஞர் யுவதிகள் உளவியல் அறிவை g)6)6.8FLDIT35 பெற்றுக் கொண்டனர்.
ஆகவே, நீங்களும் உங்கள் பிரதேசங்களில், கிராமங்களில், பாடசாலைகளில் உளவியல் பட்டறைகள் நடாத்தப்பட ஆர்வம் கொண்டால் எங்களோடு தொடர்பு கொள்ளவும். நாங்கள் உங்களோடு தொடர்பு கொண்டு உங்கள் பிரதேசங்களில் உளவியல் பட்டறைகளை நடாத்துவோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய “நான்”
உளவியல் பட்டறைப் பிரிவு, டி மசனட் குருமடம், கொழும்புத்துறை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய சமூக மேம்பாட்டிற்கு ‘சுய ஆய்வின் பங்கு
க. சசிகலா B.A (Hons), சமூகவியல்
*தொட்டணைத்து ஊறும் மணற்கேலை மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு”
மனிதனுடைய ஆற்றல்கள், சிந்தனைகள் எண்ணிலடங்காதவை. இவை மனிதனின் ஆளுமையினால் கட்டியெழுப்பப்படுகின்றன. சில விஞ்ஞான ரீதியானவை, அதாவது ஆராய்ச்சி வடிவிலான இவை சிந்தனையின் வெளிப்பாடுகளாக உணரப்படும் அதேவேளையில் மனிதனின் செயற்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள் என்பவற்றை உளவியல் ரீதியிலும், சமூகவியல் ரீதியிலும் ஆராய்ந்து வெளிப்படுத்துவதன் பங்கு விஞ்ஞான அறிவினதும் மாறுபட்டது. மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவனின் உணர்வுகளிற்கு மதிப்பளித்தல், நடைமுறைப்படுத்துதல் இவற்றிற்கு உளவியல் துணை அதிலும் 'சுய ஆய்வின் பங்கு நிறையவே உண்டு. முமுதலாவிய மனிதனின் தேடலுக்கும், அவனது நிறைவிற்கும் ʻ8iu I ஆய்வானது' துணையாகின்றது.
சுய ஆய்வானது பெரிதும் மனத்திற்கு"Mind’ கூடிய முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஓர் தனியனின் அல்லது குழுவின் பெளதீகச் செயற்பாடுகளையும் Physicaly), உளவியல் ரீதியான (Psychologically) செயற்பாடுகளையும் ஆராய்வதில் இதன் பங்கு பெரியது.
சுய ஆய்வானது பின்வரும் Luliq(p60DD356006T தன்னகத்தே கொண்டுள்ளது. இவை ஆய்வின் உண்மைத் தரவுகளை பெறுவதற்கு
Actual Data) g560600Tu IITssairpg).
96ug5TG (p6op ( Participant Observation
இம் முறை எந்த ஒரு ஆய்விலும் மிகவும் இன்றியமையாது பயன்படுத்தப்பட வேண்டியதொன்று. ஏனெனில் பிரச்சினையின் ! பிரச்சினைக்குள்ளானவரின் நாளாந்த செயற்பாடுகள், உணர்வுகள், இன்ப துன்பங்கள், உளவியல் ரீதியான விளைவுகள் என்பவற்றை அறிந்து அவற்றிற்கேற்ப ஆலோசனைகளை வழங்குவதற்கு (Counseling) வாய்ப்பளிக்கின்றது. 鸚
41

Page 23
(Spigit 6016 (ypsop (Interview Method
ஓர் தனியனதும், குழுவினதும் அகப்புற வாழ்வினை நேர்காணல் வழியே (அதாவது உள்ளார்ந்த வெளிப்பாடுகளை) முழுமையாக நாம் வெளிக்கொணர முடியும். இதனையே சமூகவியல் விமர்சனக் கோட்பாட்டாளரான Adorna என்பவரும் தனியனின் அகத்திற்கு, அக ரீதியான தூண்டல் அவற்றின் துலங்கல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.
356T guigi Life - History
இவ் ஆய்வு முறையில் பெருமளவில் பண்பு ரீதியான தரவுகள் அதாவது மனிதனின், உயிரியின் உள்ளார்ந்த செயற்பாடுகள், எண்ணங்கள் அளவு ரீதியான முறையில் (Quantitative Data) அளவிட முடியாது. பெரிதும் தன்மை ரீதியில் (Qualitative method) ஆய்வு செய்யப்படுகின்றன. " உதாரணம் - இன்றைய யாழ்ப்பாண கட்டமைப்பில் அண்மையில் செய்யப்பட்ட (எனது ஆய்வொன்றில்) வறுமை - குருநகர் குடும்பங்களில் வறுமைக்கு காரணம் யுத்தமா?  ിട്ടു.
இங்கு நாம் கவனிக்க வேண்டியதென்னவெனில் யுத்தம் கொடுத்த விளைவுப் பரிசுகளில் வறுமை முக்கியம் பெறுகின்றது. இதனை விட மறுபுறம் இம் மக்களின் வறுமையானது வறுமை என்பதை விட ஓர் வாழ்க்கைக் கோலமாக அமைந்திருப்பதை காணலாம். இதனையே அமெரிக்க மானிடவியலறிஞரான Oscar Lewis "வறுமைப் பண்பாடு” என்கின்றார். அதாவது பரம்பரை, பரம்பரையாக வறுமை பின்னூட்டப்படுகின்றது. இதனையே விஷவட்டக் கோட்பாடும் கூறுகின்றது. இவர்களின் பிரச்சினைகளும் இன்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக அமைவதற்கு தாமே காரணமாகின்றன. இவர்களின் மனங்கள் சோம்பேறி மனங்களாகவும், நோயியல் மனமாக மாறுவதற்கும் துரதிஷ்டவசமாக சமூக அமைப்புக்கள் உதவி வருகின்றன. FINKIN
இம் மக்களின் வறுமையானது சமூகத்தில் நேரான விளைவுகளை ஏற்படுத்துவதிலும் பார்க்க, எதிரான விளைவுகளையே அதிகமாகக் கொண்டுள்ளது. " A.IIIs Y, NA KERK
T
Dependency (தங்கியிருத்தல் நிலை)
-ー (..) Capability (இயலாத் தன்மை)
3 Begging (பிச்சையெடுக்கும் நிலை )ே Alcoholism (மது பாவனை) (...) Child Labour (épéisi Girglub)
42
 
 
 
 
 
 

இம் மக்களின் முக்கிய ஒரு குறைபாடாக மற்றவரில் தங்கியிருத்தல், பிறர் உதவிகளை எதிர்பார்த்தல் இேவர்களின் வறுமைக்கு காரணமாகின்றது. இவர்களின் வறுமைக்கு காரணமென்ன? “வறுமையாக இருப்பதே வறுமைக்கு காரணம்” என்றுதான் என்னால் கூற முடியும். இதனால் மீண்டும் மீண்டும் பின்னடைந்து வரும் சமூகமாக வருவதைக் காண முடிகின்றது.
இன்றைய உளவியல், சமூகவியல் ரீதியான பல ஆய்வுகள் மனிதனை நிறைவுள்ள வாழ்விற்கு வழிகாட்டுகின்றன. வலுவூட்டுதல் (Empoweiment), உயிர்ப்பித்தல் (Animation) இவை ஆய்வுகளை உயிர்ப்பிக்கின்றன. எனவே தான் சமூகம் வேண்டி நிற்பது 'மனிதன் மேம்பாடடைவது, மேலோங்குவது அல்ல, மனித மனங்கள் மேலோங்குவதையே! ' என்பதை சுய ஆய்வு முறைகள் விளக்கி நிற்கின்றன.
உசாத்துணை நூல்கள்
5 Life - History Methods - Gurunagar Village Experience of Field
Research. No. Ronald J. Commer - Abnormal Psychology, New york, Free man
O. Kenneth J. NEUBECK
Third edition.

Page 24
நான் என்னைத் தேடுகிறேன்
GuLIT. LDG a 6MTAT (B.A)' “வளர்பிறை”
“உன்னையே நீ அறிவாய்” என்ற சோக்ரட்டீசின் வார்த்தைக்கமைய நான் என்னை எப்படி அறிவது. அறிவுகளில் முதன்மையான அறிவு என்னை நான் புரிந்து கொள்ளலே, ஏனையோரைப் புரிந்து கொள்வதற்கும் எனது வாழ்வில் நிறைவைக் காண்பதற்கும் அடிப்படையாக உள்ளது.
நான் என்னை எந்தளவுக்கு அறிந்துள்ளேன் என்னும் போது எனது பெயர், வயது, கல்வித்தகமை, குடும்பம், இடம், மதம், தொழில் இவை மட்டும்தான் நான் என்று சொன்னால் அது நான் என்னை அடையாளப்படுத்தும் ஒரு பொருளாக மாற்றுகிறேனே தவிர, நான் என்ற முழுமையை காண முடியாது.
என்னைப் பற்றி தெரியுமா என எனக்குள் கேள்வி எழுப்பினால், ஆம் என்றுதான் சொல்வேன். ஆனால் சில நேரங்களில் நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது.
நானா இதைச் செய்தேன் என என்னையே என்னால் நம்ப முடியாமலிருக்கிறது. எனக்கு என்ன நடந்ததென்றே தெரியாது. அந்த நேரம் என்னை அறியாமலே அப்படிச் செய்து விட்டேன் எனக் கவலைப்படுவதுண்டு. இங்கு என்னை அறிவேன் என்றால், எனது செயற்பாட்டை என்னால் அறிய முடியாதுள்ளது:
நான் என்னைப் பற்றி ஆழமாக அறிந்து வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமேயானால், என்னைப் பற்றிய ஆய்வு, மதிப்பீடு அவசியமாகின்றது. எனது பலங்கள், பலவீனங்கள், ஆற்றல்கள், திறமைகள், விருப்பங்கள், இயல்புகள், உணர்வுகள், அனுபவங்கள்,
தாக்கங்கள் என்பவற்றை அறியும் போது என்னை நான்
அறிய முடிகின்றது.
எந்த ஒரு நிறுவனமோ, "அமைப்போ, நிர்வாகமோ, தொழில் முயற்சியோ அதன் கட்டமைப்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமேயானால் அது தன்னைப் பற்றி தனது நிர்வாகத்தின் முதலீடு மூலதனம், அங்கத்தவர்கள் தொகை, அவர்களின் ஆக்குதிறன், அவர்களின் வெற்றி, தோல்வி, சமூகத்தின் இன்றைய தேவை, சமூக மாற்றத்திற்கேற்ப அதன் வளர்ச்சி, அவற்றின் பயன்பாடு
44
 
 
 
 
 
 
 
 

என்பவற்றை காலத்துக்குக் காலம் கணிப்பிட்டு ஆய்வு செய்யும் போதுதான் அந்த அமைப்பு வெற்றிகரமாக இயங்க முடியும்.
அவ்வாறு தான் ஒவ்வொரு மனிதனும் சிறுவயது முதல் முதுமை வரை பல்வேறு கட்டங்களைத் தாண்டி, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வளர்ச்சியடைகின்றான். உடல் வளர்ச்சிக்கேற்ப உள வளர்ச்சியடைந்து ஆரோக்கியமான ஆளுமையின் பரிணாமத்தைப் பெறத் தன்னையே அவன் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறான சுய ஆய்வை நாளாந்தமோ, வாராந்தமோ, மாதாந்தமோ செய்யும் பொழுது ஒருவன் தன் அனுபவங்கள் மூலம் பெறும் வெற்றி தோல்விகள் சவால்களில் தன்னையே தான் அறியவும், அவற்றைத் தனது வளர்ச்சிப் படிகளில் கையாளவும் உதவியாக அமைகின்றது.
எனது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறதோ, எனது உணர்வுகளுக்கு என்னால் பொறுப்பெடுக்க முடிகின்றதா என நோக்கும் பொழுது, என்னை நான் எந்தளவுக்கு அறிகின்றேனோ அந்தளவுக்குத்தான் என்னை என்னால் உணரவும், 'ஏற்றுக் கொள்ளவும், பொறுப்பெடுக்கவும் முடியும். என்னையே புரிந்து கொள்ள முடியாத என்னால் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியாது போகும்.
பல சந்தர்ப்பங்களில் எனது உணர்வுக்கு என்னால் பொறுப்பேற்க முடியாமல் மற்றவர் மேல் சுமத்துகின்றேன். எனக்கு கோபம் வருகிறது. எனது கோபத்திற்கு காரணம், நீ தான். நீ இப்படிச் செய்வதனால் தான் எனக்கு கோபம் வருகிறது எனக் கூறுகிறேன். அவரது செயல் எதற்காக எனக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது. எனது எதிர்பார்ப்போ, விருப்பமோ நிறைவேறாத பொழுது எனக்கு கோபம் ஏற்படலாம். அவ்வாறே எனது மதிப்பீடுகளுக்கு முரணான மதிப்பீடுகளை இன்னுமொருவர் என்மீது திணிக்க முயலும் போது, எனக்கு கோபம் ஏற்படலாம். இவ்வாறு நான் என்னை ஆராயும் போது எனது உணர்வுக்கு என்னால் பொறுப்பேற்க முடிவதோடு, மற்றவர்களையும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள முடிகிறது.
நான் என்னை அறிவது என்பது சிறுவயது முதல் பெற்றோர், உறவுகள் சொல்லியவற்றைக் கொண்டு நான் என்னை அடையாளம் காண்கின்றேனா அல்லது என்னையே நான் ஆழமாக ஆராய்ந்து, மதிப்பிட்டு என்னை நான் இனங்காண்கின்றேனா என ஆராய வேண்டியுள்ளது. கவிஞன் கண்ணதாசனின் பாடல் வரிகள் "உன்னை அறிந்தால் - நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்! உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.”
ஆம். சுய ஆய்வினூடாக நான் என்னை எந்தளவுக்கு ஆழமாக அறிகின்றேனோ அந்தளவுக்கு எனது வெற்றி தோல்விகளை ஏற்று, \မျိုးမျိုး முகம் கொடுத்து சுய மதிப்பை உயர்வாக்க முடியும்.

Page 25
சுய மதிப்பு உயர்வாக இருக்கும் போது என்னையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். என்னையே நான் ஏற்றுக் கொள்ளும் போது மற்றவர் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள முடியும். இவ்வாறாக செயற்படும் போது ஆரோக்கியமான ஆளுமையை உருவாக்குவதோடு நிறைவான வாழ்வை வாழ முடியும்.
கருத்துக் குவியல் - 102
ஒருவனது சுய ஆய்வு ( Self Evaluation ) அவனது ஆளுமை வளர்ச்சிக்கு எப்பொழுதும் உதவி செய்யும் ! நிச்சயம் ஒருவரது வாழ்க்கையில் சுய ஆய்வானது ஆளுமை விருத்தியினூடாக வளர்ச்சி என்னும் படிக்கட்டிற்கு என்றும் உதவி செய்கிறது, செய்யும். பொதுவாக அனுபவம் ஒருவனது ஆய்வு ரீதியாக கிடைத்த பரிசு. இவற்றை நன்றாக ஆராய்ந்து, அவதானித்து பின்னர் அறிவார்ந்த, அறிவியல், வினா விடை, விமர்சனமூடாகவும், பொது அறிவு, கதைகள், நொடிகள், துணுக்குகள், பட்டிமன்றங்களில் போட்டியிடல், நாடகம் எழுதி நெறியாள்கை செய்து காட்டல் போன்ற இவ் ஆய்வுக் கலசங்களினடியாகவே ஒருவரது சுய ஆய்வானது அவரது ஆளுமை வளர்ச்சிக்கு என்றும் உந்து சக்தியாகிறது.
ஒருவனது சுய ஆய்வு பின்வரும் முறைகளில் அமையும்.
)ே கல்வியில் மாணவரிடையே கல் தொடக்கம் கண்ணாடி வரை ஆய்வு செய்யப்பட்டு வருகின்ற வேளை, இச்சுய ஆய்வுத்திறனை வெளிப்படுத்த கணிப்பீடுகள் உதாரணமாக - வரைதல், விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஒட்டுச் சித்திரங்கள், கைவினைகள் என்றும் பக்கபலமாக அமைகிறது. '
)ே பல்கலைக்கழக மட்டத்தில் நுணுக்கமான தேடல்கள், அறிவார்ந்த விளக்கக் கோட்பாடுகள், ஆய்வுக் கட்டுரைகள்
Dissertation
)ே அதிபர், ஆசிரியர்கள் - பயிற்சிக் கல்லூரிகளில் மாணவரை வழிநடத்தும் பக்குவத்தை இங்கு பெறுகிறார்கள். அத்துடன் பாடவிதான செய்கை முறைகளை ஆய்வுகள் மூலம் பயில்கிறார்கள். இவை எல்லாம் எம் மன வளர்ச்சிக்கு பெரிதும் கருணை காட்டுகிறது.
() உளவளத்துணையாளர்கள் அல்லது ஆற்றுப்படுத்துனர்கள் மக்களிடையேயுள்ள சில உள சமூகப் பிரச்சினைகளை இனம்கண்டு, துணைநாடி ஊடாகவே தீர்மானம் எடுக்கச் செய்து இவ் தீர்மான விடயத்தை என்ன வழியில் கொண்டு/
4 6
 

செல்லலாம், என நாமே ஒரு தேடலை மேற்கொண்டு துணைநாடியை தீர்மானம் எடுக்க செய்கிறோம்.
சுய ஆய்வை 2 வகையில் நோக்கலாம்.
1. சொந்த சுய ஆய்வு 2. பட்டத்திற்கான சுய ஆய்வு
முதல், சொந்த சுய ஆய்வு முயற்சிகளில் - கவிதை, கட்டுரைகள், ஆன்மீக கருத்துக்கள், உலகியல் கருத்துக்கள், நுண்ணறிவு விடயங்களை வாழ்க்கை என்னும் ஒடத்தில் வெற்றிப் படியாக்கி சிந்தனை துளிர்களை கையேட்டில் வர்ைந்து, களத்தில் நின்று பல சவால்களுக்கும் மத்தியில் தமது எழுத்தாற்றலையும், கவிதா சக்தியையும், வளர்த்துக் கொள்கிறார்கள். தத்துவக் கவிஞன் கண்ணதாசன் கூட, “ஆளும் வளர அறிவும் வளர வேண்டும் அவனே தான் மனிதன்” என்ற அற்புத கருத்துக்களையே பாடலாக்கினான். ஒரு துறையில் மட்டுமல்ல பல்வேறு துறைகளிலிருந்து தேடப்படுகின்ற உண்மைகளே, ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு என்றென்றும் கண்ணாடி போல் அமையும்.
இரண்டாவது, பட்டத்திற்கான சுய ஆய்வு - இன்று பல்கலைக்கழக மட்டத்திலும், ஆசிரியர்களின் (Post Degree) பட்டத்தை கையில் பெற வேண்டும், பெற்றால் தான் நிறைய சம்பளம் பெறலாம் (எல்லாரும் அல்ல) என்ற நெருக்கீட்டில் (Stress) களத்தில் இறங்கி தாண்டவமாடுகிறார்கள். இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலும் சிலவேளை எம்மை ஒரு ஆய்வுப் பொருளாக மாற்றி விடுகிறது.
எனவே தான் ஒருவருக்கு வலிமை, ஆற்றல், விடா முயற்சி, தன்னம்பிக்கை, கற்பனா சக்தி, மன வலிமை என்பவை ஊற்றுக்கள் போல இருந்தால் எமது கோலால் மட்டுமன்றி ஆளுமை ஊடாக, சுய ஆய்வினை (Self evaluation) நேரிய பாதையில் நகர்த்தினால் சுய இன்பம், சுய விருப்பம், சுய ஆற்றல், சுய தேடல், சுய வலிமை, சுய மதிப்பை எப்பொழுதும் தரும். அத்துடன் இச்சுய ஆய்வானது எமது ஆளுமை வளர்ச்சிக்கு என்றும் உதவி செய்யும்.
க. காந்தரூபி
உளவளத்துணையாளர்
ஒருவனது சுய ஆய்வு அவனது ஆளுமை வளர்ச்சிக்கு எப்பொழுதும் உதவி செய்யும் / செய்யாது
சுய ஆய்வானது பல்வேறு பரிணாமங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இவ் ஆய்வு நிலையிலே ஆன்மீகமும், உளவியலும் ஒன்றையொன்று கரம்பற்றி நிற்கின்றன. சுய ஆய்வானது ஒருவருடைய ஆளுமையிலே முக்கியத்துவம் பெற்றாலும், அதன் மூலமாக எடுக்கப்படுகின்ற பின் விளைவுகள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவனவாக அமைந்து
47

Page 26
விமானம் பறக்க வேண்டும் என்றால் சூழ்நிலைகள் சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், பறவைகளைப்
ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணம் என்ன?
இயற்கையிலேயே பறவைகள், பறப்பதற்குப்
படைக்கப்பட்டுள்ளன. நினைத்த மாத்திரத்தில் பறக்க ே
48
விடுகின்றன. உதாரணமாக - தன்னை சுய ஆய்வுக்கு உட்படுத்தும் ஒருவர் தன்னை குறிப்பிட்ட ஒரு திறமையற்றவராக கணிக்கின்ற பொழுது, தன் தாழ்வு மனப்பான்மையால் முயற்சியற்றவராக இருந்துவிடக்கூடிய சாத்தியம் அமையலாம். அதேநேரம் எனக்கு அத் திறமை இல்லை, ஆகவே நான் அதில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவருக்கு சுய ஆய்வானது பயனளிப்பதாக அமையும். மறுபக்கத்தில் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய
சுய ஆய்வானது அவரை அந் நிலையிலேயே தக்கவைத்துக் கொண்டிருக்க செய்யுமே தவிர, அவருடைய வளர்ச்சிக்கு உதவி
செய்யப் போவதில்லை. எனது வாதத்தின்படி சுய ஆய்வு எப்பொழுதும் உதவி செய்கின்றது என்று கூற முடியாது. சுய ஆய்வின் பின் மேற்கொள்ளப்படுகின்ற பக்க விளைவுகளைக்
கொண்டே இதன் அநுகூலம், பிரதிகூலம் பற்றி நாம் சிந்திக்கலாம்.
பறவைகள் தரும் பாடம்
பாருங்கள், மரக்கிளைகளிலிருந்து உடனே பறக்க"
முடியும் என்ற உள்ளுணர்வு பறவைகளுக்கு உண்டு. பறவைகளைப் போல் நம்மால் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்ய முடியாது என்பது உண்மை. ஆனால், i Mih. ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால் சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இது தருகின்றது: KIRKJUNUN BUNKOW
ஒரு சிறகு ஒடிந்த பறவை, மரக்கிளையில் உட்கார்ந்திருக்கிறது. தனது
இறக்கையை ஆட்டி ஆட்டிப் பறக்க முயற்சி செய்கிறது. தனக்கு சக்தி
வரும்வரை சூழ்நிலை சாதகமாகும் வரை முயற்சி செய்கிறது.
தன்னைக் கை தூக்கிவிட யாராவது வருவார்கள் என்று காத்திருந்தால்
அந்தப் பறவை மரக்கிளையில் இருந்து கீழே விழவேண்டியதுதான். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. மேலும் பல காரியங்களைச் செம்மையாகச் செய்வதற்கு முயற்சி உதவி செய்யும்.
நினைத்ததையும் நம்புவதையும் மனிதனால் சாதிக்க முடியும் என்பது இயற்கை.
அத்துடன் வேலை செய்யச் செய்ய வலிமை கிடைக்கிறது என்ற பறவைகளின் பாடத்தையும் சேர்த்துக் கொள்வோம். சாதாரண மனிதன் தனது சக்தியில் பாதிக்குமேல் உபயோகிப்பதில்லை என்பது தற்போதைய ஆராய்ச்சிகளின் முடிவு தெரிவிக்கிறது. நாம் நம் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தப் போவது எப்போது? நன்றி - மனோ சக்தி
 
 
 
 
 
 

அடுத்த “நான்’ தாங்கிவருவது
பொதுத்தலைப்பு
உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும்
உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 20.02.2004 க்கு முன்னர் அஞ்சலிடுங்கள்.

Page 27
IHI
Siyadi Long
வருடத்திற்கு உங்களிடம் வந்து
GTerezid) 2. Titeří உளவியற் கருத்துக்க
GTiggeULUU g
sligEDLu
உள்ளூரி ଗରାଣୀy
என்னுடைய முகவரி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TIOUT
தங்களுக்கு ஒரு EODSlugħ
34g 5 LEONGluqb Ge5TEOriguéileirenei.
வருக்குத்தேவையான ள் குவிந்து கிடக்கின்றன.
னிப்பிரதி 2O/-
ஆண்டுச்சந்தா
5O/- fli 7 US
LDỞ 6OIL (JbChLDU LÊ,
5ாழும்புத்துறை,
[LpLILIT6OOTILD,
லங்கை.
E. L. O2 - 222 5359