கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2005.05-06

Page 1


Page 2
IITGUI
உளவியல் சஞ்சிகை
LD6hoir: 30 இதழ்! 03 GNGuáTà-Safi 2005 eilans 25/=
உள்ளே. ஆசிரியர் அரும்புகள் குற்றப்பழியுணர்விலிருந்து
விடுதலை வேண்டும்! அலை அதிர்வுகளையே
அதிர வைப்போம்! சுனாமியின் உடனடித்தேவை11 IËu JTI சீறியெழுந்தாய்? ஆழிப்பேரலையின் அதிர்வுகள் பேரலை அனர்த்த உள அதிர்ச்சிக்கு
ஓர் ஆறுதல் வாலிப வசந்தம் வேரோடிய தழும்புகள் அலை அதிர்வில் அவர்கள். அம்மாவுக்கு அலை அதிர்வுகள் ஆழிப்பேரலையின் பின்னதான
ஆற்றுப்படுத்தலின் தேவைப்பாடு சிறுவர் உள்ளங்களில்
அலையின் அதிர்வுகள் ஆழிப்பேரலையில் ஆழப்பதிந்தவை கவிச்சோலை சுனாமிக்கோர் வேண்டுகோள். 9.O ஏற்படுத்திய அதிர்வலைகள் சினேகமுள்ள சிநேகிதனே சிநேகிதியே
*NAAN!” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jafna, Sri Lanka.
Te.021-222-5359
ஆசிரியர்: போல் நட்சத்திரம் O.M., B.Th., M.A.
B6ONGOSOFTu Taffluurir:
GlumrGrafAuusi O.M., B.Th., B.A. (Hons).
ஒருங்கிணைப்பாளர்: aÁlsÜGlshu6tüöLfir O.M.l. STL.
நிர்வாகக் குழு அ.மதி. இறையியல் சகோதரர்கள். ஜோசப் பாலா.
ஆலோசகர் குழு
டேமியன் O.M., M.A.
டானியல் O.M., M.A. செல்வரெட்ணம் O.M., Ph.D. N. சண்முகலிங்கன் Ph.D. Dr. R. gasus-stasir M.B.B.S. goTT H.C. Dip. in Counselling, Kent.
falsTsirai) 0.M.I., B.A.(Hons), B.Th., Dip.Ed ஜீவாபோல் O.M., M.Phil.
 

ஆசிரியர் அரும்புகள்.
வாசக அன்பர்களுக்கு வணக்கங்கள்.
* சுனாமி அனர்த்தங்கள் ஓய்ந்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட அது விட்டுச் சென்ற தாக்கங்கள், அழிவுகள், மன அதிர்வுகள், உளநெருக்கீடுகள், அங்கலாய்ப்புக்கள், நம்பிக்கையின்மைகள், இருப்பிடமின்மை, தொழில் வாய்ப்புக்களற்ற நிலை, வாழ்விடங்களை நிரந்திரமாகத் தொலைத்த ஏக்கம் போன்ற அழிவு அனுபவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சோகக் கதைகளும், கண்ணிர் பகிர்வுகளும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டன. ஏதிலிகளாக அலைவது மட்டுமன்றி அடுத்தவர்களுக்கு எத்தனை நாட்களுக்குத் தான் நாம் சுமையாக இருக்க வேண்டும் என்ற அசெளகரிய உணர்வுகளும், எத்தனை காலம் அவர்கள் நம்மை சகித்துக் கொள்வார்கள் என்று தங்களையே நொந்து கொள்கின்ற மனப்பாங்கும் பாதிக்கப்பட்டவர்களது உளைச்சலாகவுள்ளது.
எதுவாயினும் இம்மக்கள் தமது முந்திய வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் மனித o அடிப்படை வசதிகளை அனுபவிக்க அவலங்கள் தீர்க்கப்பட ஆவன
திக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு தவ முடியும் என்னும் போது எங்கு அவர்களை குடியமர்த்துவது, எத்தனை கிலோமீற்றர் துாரத்தில் வீடுகள் கட்டுவது, யார் கட்டுவது, எவ்வாறு உதவிகளை பகிர்ந்தளிப்பது, யார் கண்காணிப்பது போன்ற LD LLDs 60 சிந்தனைகள், தேவையற்ற இழுத்தடிப்புக்கள், துணிவற்ற தலைமைகள், செயற்திறனற்ற திட்டங்களை மாத்திரம் கொண்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களினது உளப்பாதிப்புக்கள்

Page 3
விரக்தி உணர்வுகள் அதிகரித்து தங்களையே நொந்து சில சமயங்களில் தற்கொலையைக் கூட செய்யத் துாண்டி விடலாம்.
மேலாக, சில தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களை பரிதாபத்துடன் நோக்குபவர்களும், அவர்களுக்கு பிச்சை போட
முன்வருபவர்களும், அகதிகள் அனாதைகள் போன்று அவர்களை நடத்தி, ஆழமற்ற, உண்மையற்ற உறவுகளை அவர்களுடன் ஏற்படுத்துகின்றவர்களும் நம்மிடையே
இல்லாமலில்லை. இது மிகவும் தவறானது மட்டுமல்ல கொடுரமானதும் ஆகும். இயற்கையின் சீற்றம் நேற்று அவர்களை தீண்டியது. நாளை நம்மையும் காவு கொள்ளலாம் என்பதை எவரும் மறந்து விடக் கூடாது. அலை அதிர்வுகளின் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் வேதனைப்படும் நமது
உறவுகளை- நண்பர்களை- சகோதரர்களை குறிப்பாக சிறுவர்கள், மாணவர்கள், வயோதிபர்கள், விதவைகள் போன்றோர் மட்டில் ஆற்றுப்படுத்துனர்கள் விசேட கவனம் செலுத்தவேண்டும். வாழ்வையே வெறுத்துப்பார்க்கும்
அவர்களது உணர்வுகள் மீண்டும் காயப்படுத்தப்படாமல் மதிக்கப்படவேண்டும். வெவ்வேறு திட்டங்கள், புனருத்தாரணப் பணிகள், பயிற்சிமுறைகள், பட்டறைகள், ஆற்றுப்படுத்துதல்கள் மூலம் அவர்களது முந்திய இயல்பு நிலைகளை உருவாக்க வேண்டும். துன்பப்படுகின்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதைவிட அவர்களுக்கு வாழ்வையும், அதற்குரிய வழிகளையும் காட்டுவதுதான் மேலானது.
அதிர்வுகள்’ என்னும் விரிகின்ற இவ்விதழ் L6)
தகளையும், சிந்தனைத் துணுக்குகளையும் சுமந்து வருகின்றது. டியுங்கள்- சிந்தியுங்கள். மற்றவர்கள் o நம்பிக்கையின் ஒளியை
தோழமையுள்ள வாழ்த்துக்களுடன் - up. Gumabasada527ab 6w. was
வைகாசி ஆனி 2009 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குற்றப் பழியுணர்விலிருந்த
விடுதலை வேண்டும்
வி. பி. தனேந்திரா
O O O யாழ. பலகலைககழகம
எமது சமூக வாழ்வில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு சமய சடங்குகள் பல செய்தே, அந்த உடல்கள் தகனம் செய்யப்படுகின்றது, அல்லது புதைக்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு மார்கழி 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி தாக்கத்தினால் ஏராளமான உயிர்கள் சிதறியும், அழுகியும் குவியல் குவியலாக இருந்தன.
மத்தியில் தமது
உறவுகளை கலந்த முகத்துடன், இன்னும் எம் கண் செல்கின்றன. இவ் தேற்றுவது? என்ற
இருந்தது.
இந்த வெற்று உடல்கள் உறவுகளைத் தேடியும் அவ்வாறு தேடுகின்ற போது எதிர்பார்ப்புக் கதறி அழும் காட்சிகளும் முன்னே வந்து வேளையில் யாரை, யார் நிலைப்பாடுகளே விஞ்சி
தொலைக் காட்சியில் இவற்றை மீள மீளக் காட்டும் போது எல்லோர் வயிற்றிலும் அமிலத்தினைத் தெளித்தது போன்ற வேதனை காணப்பட்டது என்பது உண்மை. இந்த காட்சிகள் இன்னும் மனதை விட்டகலாத ஒன்றாகவே இருக்கின்றது.
கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்கள் கொடுமையான போரினால் கூட கண்டு அனுபவிக்காத சடலக் குவிப்புக்களை கண்டு அதிர்ந்து போனார்கள். இதனால் இவர்களில் பலர் நித்திரையின்றி தவிக்கிறார்கள். அலை போன்ற பேரிரைச்சல் கேட்பதாக பிரமை கொண்டு பயப்பீதியில் வாழ்கின்றார்கள். தம்மை அண்டி வாழ்பவர்களின் அழுகுரல்களும், தினமும் ஒலித்துக் கொண்டே இருப்பதாக கூறுகின்றார்கள்.
இத்தகைய நிலைப்பாடுகள் அடிமனதில் பதிந்து விட்டன. இந்த எண்ணப் படிமங்கள் மனிதனை வாட்டிக் கொண்டே இருக்கின்றன. இவர்களை மீட்க வேண்டிய பொறுப்பு, சமூகத்தில் வாழும் எம் ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகும்.
நான் ၅၉မ္ဘီဒါချွံစံဖြင့် မြှားဆုံးရှုံးနှီးမ္ယမ္ဟု၏ 2008

Page 4
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு இளம் பெண் தனது ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் இழந்துவிட்டார். தண்ணிர் அடித்துச் சென்ற வேகத்தில் ஒரு மூலையில் ஒதுங்கியதன் காரணமாக அவர் தப்பி விட்டார். எனினும், அவரது உடை கிழிந்து விட்டதால், அவரால் எழுந்து செல்ல முடியவில்லை. எனவே, இவரைக் காப்பாற்ற வந்த இவரது சகோதரன் இறந்த உடலில் இருந்த உடையைக் கழற்றி எடுத்து இவரிடம் கொடுத்தே வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார். இதனால், தற்போது இந்தப் பெண் தான் இறந்தவரின் உடையை எடுத்துப் போட்டதை எண்ணி மிகவும் பயந்து போய் இருக்கிறார். தற்போது இவரது எண்ணம் எல்லாம், தான் இறந்தவரது உடையைப் போட்டு விட்டோமே! ஏதாவது நடந்து விடுமோ! என்று கருதி மிகவும் மனதளவில் சோர்ந்து போய் இருக்கிறார். இதைப் போன்று பல துன்பியல் அனுபவத்தைக் கூறும் மக்கள் இருக்கிறார்கள். தமக்கு ஏற்பட்ட நிலையில் இருந்து மீளாது வேதனை அடைகிறார்கள்.
சுனாமி அனர்த்தத்தின் அதிர்வினால் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் பெண்கள் ஆவர். இதற்கு காரணம் அவர்களது தலைமுடியும் உடையும் ஆகும். ஏனெனில் தலைமுடி மரச் செடிகளிலும் மற்றும் முட்கம்பிகளிலும் செருகிக் கொண்டதினால் இறந்து போனார்கள். மேலும் பெண்கள் அணிந்திருந்த உடைகள் உடலைவிட்டு அகன்று போனது. இதனால் நிர்வாணமானார்கள். வெளியில் ஒடிச்சென்று தப்பிக்க வழிதெரியாது அலையில் அடித்துச் செல்லப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்.
இருந்தும் நிர்வாணமாக காப்பாற்றப்பட்டவர்கள் தாம் கற்பை இழந்து விட்டோமே, இனி சமூகத்தில் எப்படி வாழ்வது என்ற குற்றப்பழியுணர்வினால் பாதிக்கப்ட்டுள்ள பெண்களும் இருக்கிறார்கள்.
இன்னும் சிலர் தமது உறவினர்களின் சடலங்களை கண்டுபிடிக்காமையால் பெரிதும் துக்கப்படுகின்றார்கள். மேலும் அந்த சடலங்களுக்குரிய சமய சடங்குகளை செய்யாது போனதனால், அவர்கள் ஆத்மா சாந்திக்கு எதுவும் செய்யவில்லை, அவை எமக்கு எதையாவது உண்டாக்கி விடுமோ என்ற குற்றப்பழியுணர்வுடன் தினமும் வாழ்கின்றவர்கள் இருக்கின்றார்கள்.
அலை அடித்துச் செல்லும் போது, காப்பாற்ற சந்தர்ப்பம் இருந்த போதிலும், அதற்குரிய சூழல் பொருந்திவராததனால் காப்பாற்ற முடியாமல் போனதும், கண்முன்னே உறவுகளை அலை இழுத்துக் கொண்டு சென்ற போது ஐயோ காப்பாற்ற முடியவில்லையே என்ற உணர்வுகளும் குற்றப்பழியுணர்வுகளாக தினமும் வதைக்கின்றது. இறந்து போனவர்கள் அவர்கள் கண்முன்னே
 
 

கூக்குரல் இடுகின்ற காட்சிகளும் உறுத்திக்கொண்டே இருக்கின்றது. இவையெல்லாமே சேர்ந்து மன அதிர்வுகளாக வெளிப்படுவதை அவதானிக்க முடியும்.
இந்த அலை தந்த அதிர்வுகள் அநேகமாக இருந்தாலும், அவர்களை ஆற்றுப்படுத்தும் பொறுப்பு எம் ஒவ்வொருவரிடமும் உண்டு. அந்தவகையில் முதலில் அந்த மக்களுடன் நன்றாக கதைக்க வேண்டும். அதேநேரம் அவர்களை கதைக்கச் சொல்லி வற்புறுத்திக் கொள்ளவும் கூடாது. மற்றும் அவர்கள் சொல்ல விரும்பாத அந்தரங்க விடயங்களை சொல்லுமாறு தொந்தரவு கொடுக்கவும் கூடாது. முதலில் எம்மீது அவர்களுக்கு நம்பிக்கை பிறக்க வைக்க வேண்டும். அதற்கு ஏற்றது போன்று எமது முக பாவனை - செவிகொடுக்கும் தன்மைகள் - ஒத்துப்போகும்விதம் அமைதல் வேண்டும். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எம்மால் ஒழுங்கான மறுமொழி கொடுக்க முடியாவிட்டால் அவ்விடத்தில் அமைதி காப்பது தான் சிறந்தது. எமது ஆற்றுப்படுத்தும் வழி முறைகள் அவர்களை வாழ்விப்பதாக இருத்தல் வேண்டும். உடைந்து போன நம்பிக்கையை மீளவும் கட்டியெழுப்ப கூடியதாக அமைதல் வேண்டும்.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிறுவனங்களாக சமய நிறுவனங்கள் காணப்படுதல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் எந்த சமயத்தவராக இருந்தாலும் சரி, அவரை சமய வழிபாடுகளிலும், இறை நம்பிக்கையிலும் வளர்த்தல் அவசியம்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தால், அவர் கட்டாயமாக தன் வாழ்வை வளப்படுத்தவும், தன் மீது நம்பிக்கை கொண்டு வாழவும் முடியும் என்பது உறுதி.
இந்த இறை நம்பிக்கை தான் குற்றப்பழியுணர்வில் இருப்பவர்களை வழிப்படுத்தும். குற்றப்பழியுணர்வு இரண்டு வகைப்படும். ஒன்று உண்மையான குற்றப்பழியுணர்வு, இரண்டாவது போலிக் குற்றப்பழியுணர்வு
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் போலி குற்றப்பழியுணர்விலேயே பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இயற்கையினால் நடந்தது. தவறுதலாக நடந்தது. அவர்கள் எவ்விதத்திலும் குற்றமிழைக்காமல் நடந்தது. உண்மையாகவே இவை தம் தவறு என்று கருதி துன்பப்படுதல், இவற்றில் இருந்து விடுதலை கொடுப்பது இறை நம்பிக்கை. இதனை நாம் அவர்கள் மத்தியில் வளர்க்க முயற்சிக்க வேண்டும்.
இ நான் உளவியல் சஞ்சிகை

Page 5
அதிரவைப்போம்!
జ్ఞా "**ళ寺。
பா. கிருஸ்ணாதேவி கரவெட்டி
மார்கழி மாதம் இருபத்தாறம் திகதி முழு உலகையுமே ஒரு கணம் உறைய வைத்தது இந்தக் கொடிய அலை அதிர்வுகள். பல்லாயிரக் கணக்கான பெறுதற்கரிய உயிர்களையும், பெறுமதியான சொத்துக்களையும் இந்த அலை அதிர்வுகள் அடித்துச் சென்றாலும், ஏனையவர்களின் தன்னம்பிக்கையையும், மனிதாபிமானத்தையும் இவற்றால் என்றைக்குமே எதுவுமே செய்ய முடியாது.
வாழ்க்கையில் பல தடைவை விழுவது வெட்கமல்ல வீழ்ந்த போதெல்லாம் எழுவதே பெருமை. கொடிய யுத்தத்திலும் தலை நிமிர்ந்திருந்த எங்களை இவ்விரக்கமற்ற அலை சிறிது ஆட்டம் காண வைத்தாலும் எமது எழுச்சி இதைவிடப் பெரிதாக இருக்கப் போவதை இவ் அலை தெரிந்திருக்க நியாயமில்லை. அலை அதிர்வுகளை அதிருமாறு புதிய சமுதாயம் சமைக்க அனைவரும் இன்றே ஆயத்தமாவோம். நாம் ஒவ்வொருவரும் எழுச்சியடையும் போது சமுதாயம் தானாகவே எழுச்சியடையும்.
விதி தன்னிடம் உள்ள எல்லா அம்புகளையும் பாய்ச்சட்டும் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, இன்னும் எத்தனைவரினும் அத்தனையும் தாங்கக்கூடிய சக்தி என்னிடமிருக்கிறது. விதி எனக்கு கட்டுப்பட்டதேயன்றி நான் விதிக்கு கட்டுப்பட்டவனல்ல, என்கிறார் ட்ரைடன் எனும் அறிஞர். ஆகவே நாம் நடந்தது, இழந்தது எல்லாம் என் விதிப்படி என்று மனம் சோராமல் புதுச் சமுதாயம் படைக்க இன்றே ஆயத்தமாவோம்.
இழந்து போன வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிராமல் இன்றே புது வாழ்க்கையின் நோக்கத்தை தீர்மானித்து, அதை வலுவாக்கி, உழைப்பை அதில் கொட்டி, காலத்தை முறையாக பயன்படுத்தி, வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாது, நம்பிக்கையுடன் செயலாற்றுவோம். எப்படி நீர் 100' C வெப்பநிலையை அடைந்தால் தண்ணிர் கொதிப்பதை யாரும் நிறுத்த முடியாதோ,
|5Tခေါ် ၈..ဓmဓါန်း၏စ အဒါး၏ဓ၈၊ဖ வைகாசி-ஆனி 2005 இ
 
 
 
 
 
 

அதே போல் நமது உழைப்பு, நோக்கம், ஈடுபாடு முயற்சி போன்றவை இணைந்து 100 C ஆகும் போது நாம் வெற்றி பெற்று புதிய சமுதாயம் உருவாகுவதை உலகிலுள்ள எந்த சக்தியாலும் நிறுத்த (plgul Tg5.
‘உலகிலுள்ள எல்லா சக்தியாலும் ஜெயிக்க முடியாத ஒரு சக்தியுள்ளது. அதுவே மனிதனின் மனோ சக்தி” என்ற ஸ்டாலினின் கூற்றை அறியாத அலை அதிர்வுகளிற்கு அவற்றை மெய்ப்பித்துக் காட்டுவோம். மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், துயரங்கள் அகன்று இன்பங்கள் வர உழைக்க வேண்டும் எனும் ஒவ்வொரு மனிதனது மனோசக்தியையும் அலையால் நிச்சயம் ஜெயிக்கமுடியாது.
போராட்டம் உனக்கே தெரியாமல் உனக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. போராட்டத்தினால் தான் துருப்பிடியாதிருக்கிறாய். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் நீ புதிது புதிதாகப் பிறக்கிறாய்! உன்னிலிருந்து உதித்த நீ, உன்னை விட உயர்ந்த நீ, புதிய நீ முன்னிலும் வலிமை மிக்க உன்னைப் போராட்டமே புதையலைத் தோண்டி எடுக்க வைக்கிறது என்கிறார் கவிஞர் அப்துல் ரகுமான். ஆம் சுனாமிப் போராட்டமே புதிய வாழ்க்கை எனும் புதையலைத் தரப்போகிறது என்பதை உறுதியாக நம்புவோம்.
ஒவ்வொரு இழப்புக்களும், தோல்விகளும் எம்மையும் எம் குணம், நடத்தையை செம்மைப்படுத்தும் F66)6 எடுத்துக்கொள்வோம். தோல்விகளும், இழப்புக்களும் எம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொண்டு விடாது. மாறாக அது எங்களை முன்னரை விட தீர்மானவுள்ளவராக, அறிவு நிறைந்தவராக, உறுதியானவராக மாற்றும் என்பதை நாம் அனைவரும் அலை அதிர்வுகளிற்கு அறியப்படுத்த வேண்டும்.
எனவே நாம் எம்மை அழித்த அலை அதிர்வுகளுக்கு எதிராக எதிர்கால சவால்களை ஏற்கத் தயாராவோம். உறவுகள் மீதும் ஆண்டவன் மீதும் நம்பிக்கை கொள்வதுமட்டுமின்றி உங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு வெற்றி எனும் கனி நிரம்பிய புதிய வாழ்க்கைப் பூந்தோட்டத்தை நோக்கி எமது ஒவ்வொரு கணமும் அமையட்டும்.

Page 6
69ño &gp/v/a/ű ufaálñalo:
அருட்தந்தை மடேவிற்.
2004ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி எமது குரல்வளைகளை அமுக்கிய ஓர் நாள். சுனாமி அலைகளின் அதிர்வுகள் மக்களின் மனங்களை சிதற வைத்தன. நான் கடந்த இருபது வருடப் போரின் பயங்கரங்களைப் பார்த்துள்ளேன். இந்தப் போரின் இழப்புக்களைச் சந்தித்த மனிதர்களுடன் பேசியுள்ளேன். வாழ்ந்துள்ளேன். ஆனால் சுனாமி தந்த அவலம் வார்த்தைகளால் வடிக்க முடியாது. இந்தப் போரில் பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம் ஆனால் அது நீண்ட ஓர் வரலாற்றுப்பாதையில் நாம் கண்ட சோகம், அவலம். ஆனால் இந்த சுனாமியின் அதிர்வுகள் ஒரு சில நிமிடங்களுக்குள் நிகழ்ந்தவை. எனவே குறுகிய நேரத்துக்குள் பாரிய இழப்பபை சந்தித்தது 6τιό அனைவருக்கும் ஓர் புதிய அனுபவமேயாகும். எனவே இப்படியான ஓர் இழப்பபை எப்படி எதிர் கொள்வது என்பது மட்டில் பெரிய குழப்பமே முதலில் எல்லோரிடையும் காணப்பட்டது. எனினும் தென்பகுதி இந்தப் பேரழிவைக் கையாண்ட விதத்தை விட வடகிழக்குப் பகுதிகள் இதனை கையாண்ட விதம் பாரட்டுக்குரியது.
கடந்த கால போர் அனர்த்தங்களின் போது இடப்பெயர்வுகள் இழப்புக்கள் என்பன எம் மக்களின் நாளாந்த அனுபவங்கள். ஆனால் அந்த இடப்பெயர்வுகளின் போது மக்கள் கைகளில் அகப்பட்டதை எடுத்துச் சென்றார்கள். ஆனால் இந்த சுனாமி அவலத்தின் போது மக்கள் எதனையும் எடுக்க முடியவில்லை. அதிலும் கவலைக்குரிய விடயம் தாங்கள் போட்டிருந்த உடுப்புகளைக் கூட இழந்து வந்த அனுபவம் மக்களின் மனதில் பாரதுாரமான வடுக்களை ஏற்படுத்தியது. பலர் தாம் கண்ட காட்சிகள், தம் அனுபவங்கள் ஓர் கனவா என்று கூட நினைக்கின்ற அளவுக்கு அவலங்கள் பாரதுாரமானதாக அமைந்தன.
இந்த நிலையிலேயே நான் மக்களைச் சந்திக்கச் சென்ற போது அவர்களில் பல புதிய உணர்வுகளைக் கண்டேன். முதல் இவர்களில்
0 நான் உளவியல் சஞ்சிகை )
 
 
 
 

பலர் வாய் திறந்து பேசமாட்டார்கள். கேள்விகள் கேட்கப்பட்டால் மட்டுமே பதில் சொல்லுவார்கள். எப்போதும் தனிமையையே நாடுவார்கள். முகாம் பொறுப்பாளர்களுடன் பேசிய போது அவர்கள் தங்கள் அனுபவங்களாக இதனைக் குறிப்பிட்டார்கள். “இந்த மக்களிடம் இவர்களின் குடும்பங்களில் இறந்தவர்கள் பற்றிய விபரம் கேட்க முடியாது. பெரிதாக விடை சொல்லமாட்டார்கள். உணவு சமைத்த பின்னர் இவர்களுக்கு உணவு கொடுப்பது மிகவும் கஸ்ரம். காரணம் உணவில் அவர்களுக்கு அக்கறை இல்லை. இவர்கள் எல்லோரும் மிகவும் பெரிய அதிர்ச்சியில் உள்ளார்கள்”.
இப்படியாக இந்த மக்களின் இந்த இழப்புக்களின் தாக்கம் மிகவும் கொடியது. இதனை வார்த்தைகளினால் வடிக்க முடியாது. இந்த நிலையில் இருந்த மக்கள் எதனை PD L60 gulusT85 எதிர்பார்த்தார்கள். நிவாரணங்களை அல்ல மாறாக வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் எம் மக்கள் பல்வேறு குழுக்களாக இன, மத, வர்க்க பேதமின்றி இந்த மக்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். இந்த வகையில் புலோப்பளைப் பகுதியில் குருக்கள் துறவியர்களாக ஒரு குழுவாக பணி புரிந்தோம். காலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முகாமுக்குச் சென்று இந்த மக்களோடு உரையாடுவோம். இதுவே மக்கள் அந்த வேளையில் அதிகம் எதிர் பார்த்ததொன்று. இது மக்களுக்கு பெரும் ஆறுதலைக் கொடுத்தது மாத்திரம் அல்ல அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையும் கொடுத்தது. எம் குழுவில் இருந்தவர்கள் பெரிய “ஆற்றுப்படுத்தல்” பயிற்சி பெற்றவர்கள் அல்ல. ஆற்றுப்படுத்தலின் முதல் முக்கிய மூன்று கட்டங்களை நன்றாகச் செய்தார்கள்.
1. அவர்கள் மக்களைச் சென்று சந்தித்தார்கள் (Interview)
2. இரண்டாவது இவர்களின் உள்ளக் கிடக்கைகளை தங்கள்
இதயச் செவிகளால் கேட்டார்கள் (Listening)
3. அவர்கள் தங்கள் உள் உணர்வுகளோடு பதிலளித்தார்கள்
(Rasponding)
இப்படியாக எளிமையாக முதல் மூன்று படிகளையுமே ஆற்றுப்படுத்தலின் தொடக்கம் என்ற விஞ்ஞான பூர்வமான அறிவு இல்லா விட்டாலும் சாதாரண மனிதர்களாக ஒருவர் இழப்பில் மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய இந்தப் படிகளைச் செய்தார்கள். இவர்களின் சந்திப்பு அந்த மக்களுக்கு ஒர் உறுதியை ஊட்டியது. “நாம் தனியாக இல்லை எம் உடன்பிறப்புக்கள் எம்முடன் உள்ளனர்” என்ற உறுதியை அவர்களுக்கு கொடுத்தது. இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் முடிய முகாம் பொறுப்பாளர் எமக்குச் சொன்ன விடயம் “இப்படியாக நீங்களும் உங்களைப் போன்று
நான் உளவியல் சஞ்சிகை
வைகாசி ஆனி 2005

Page 7
பலரும் வந்து சந்தித்த பின்னர் தான் இந்த மக்களின் முகத்தில் ஒரளவு நம்பிக்கையின் ஒளிக்கிற்றுக்கள் பிறக்க ஆரம்பித்துள்ளன'
இவ்வாறாக சுனாமி அதிர்வுகள் எம்மில் பல இதய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. நாம் நிச்சயமாக பல மக்களை இந்த ஆற்றுப்படுத்தும் பயிற்சி கொடுத்து ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இது ஒரு பெரும் இயற்கை அல்லது போர் அனர்த்தங்களைச் சந்தித்தவர்களை ஆற்றுப்படுத்த மட்டுமல்ல மாறாக நாளாந்த வாழ்வின் சுமைகளில் தனிமரமாக தற்கொலையின் விளிம்புகளில் நிற்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க நாம் ஆற்றுப்படுத்துபவர்களாக பயிற்சி பெற வேண்டும். இந்த ஆற்றுப்படுத்தலின் அடிப்படை நுட்பங்களை (Basic skils) நாம் கற்றுக் கொள்ள இது இக்காலத்தின் மிக முக்கியமாக தேவை.
ಘಣಾ థప:వ్రక్లిషః
 
 
 
 

மேரி லுசிடா. செதா
முல்லைக்கடலில் முல்லைச் சிரிப்புடன் ஓடி விளையாடி, நீந்தி, மட்டி பொறுக்கிய நீங்கா நினைவுகள் நிழலாக நிலைத்திருக்க அப்பப்பா, அமைதியான நீயா சீறியெழுந்தாய்- உன் அழகை ரசித்து, மடியில் தவழ்ந்த நாமா உன் அருகே வரப்பயப்பட்டு தள்ளி நிற்கின்றோம்?
ஐந்து நிமிடம் ஆடியடங்கினாய் ஆழியலையே ஐந்து வருடம் இல்லை ஐம்பது வருடம் ஆகும்? எம் இழப்புக்களை மறக்க? யார் நினைத்தார் மரணம் மார்கழி இருபத்தாறு என்று யாரையும் விட்டு வைக்கவில்லையே - இக் கொடுரம் புரிந்ததன் புதிர் தான் என்ன?
உடைத்தெறியவோ பொங்கியெழுந்தாய் - உன் உக்கிர உணர்வினால் மரணித்தன எம் மனங்கள் உடைத்தது எம் உறவுகளை மட்டுமா? -பலரின் எலும்புகளையும் தானே நொறுக்கினாய் - நீ பறித்தெடுத்தது எம் உடைமைகளை மட்டுமா பசுந்தளிர், பச்சிளம் குழந்தைகளையுமல்லவா?
யாரை விட்டு வைத்தாய்? - எம் காலத்தில் சாதி பார்த்தோம், சண்டை பிடித்தோம் - ஒன்றியிருக்க வெட்கப்பட்டோம் சாதிக்கொருகோவில் கட்டினோம் நொடிப்பொழுதில் சமத்துவம் - வேறுபாடில்லை தனிக்கல்லறைச் சுவர்கள் தகர்ந்து - குழியில் அனைவரும் சங்கமம். (சிலருக்கு குழியுமில்லை)
யார் யாரைத் தேற்றுவார் யாருக்கும் தெரியவில்லை கொடுமையிலும் கொடுமையிது - நீ கொண்ட கொடுரக்கோலம் - ஜூன் கோலம் கண்டவர் கனவிலும் கதறும் காட்சி கற்பனையில் கூட வடிக்க முடியவில்லை - அவர்கள் களையிழந்த, சோகக்காட்சி.
ஆழியலையாய் வந்து, கோர முகம் காட்டி, பூமியை அசைத்து, ஒடி ஒளிந்த அலைஅதிர்வே - ஆடி

Page 8
அடங்குமா உன் அலை அதிர்வுகள்? இல்லை தொடருமா உன் கோரத்தாண்டவம்? மாதங்கள் மூன்று ஆகின வாயினும் ஆறவில்லை, மாறவில்லை இன்னும் எம் மன அதிர்வுகள்.
எல்லோர் வாயிலும் உன் பேச்சு - “நீ மீண்டும் வருவாயாம்” - ஏன் காவு கொண்டது காணாதென்றா மீண்டும் பொங்கியெழத்துடிக்கிறாய்! ஆறிவிட்டாய் அடங்கிவிட்டாய் - என நினைத்தால் “இல்லையில்லை அடிக்கடி வருவேன்” என அடம்பிடிக்கிறாய். ۔۔۔۔۔۔
விருந்தினரை வரவேற்று பழகிய எம் மனங்கள் வேண்டாம், வேண்டாம் சுனாமியே எம்மிடை வேண்டா விருந்தாளியாய் மீண்டும் வந்து - உன் கோரக்காட்சியின் சாட்சிகளாய் நிற்கும் எஞ்சியோரையும் பறித்துச் செல்லாதே - என்று ஏந்திய கரங்களுடன் நிற்கின்றோம் கடற்தாயே.
சொந்தமிழந்து பந்தமிழந்து சொல்லியழ சொற்களின்றி சோர்ந்து தவிக்கின்றேன்
பாவமறியா பச்சைப்பிள்ளைகள் & பரிதவிக்குது பெற்றோரிழந்து பேசும் தெய்வமே நீ பேசாதிருந்தால் நான் என்ன செய்வேன்?
& siirsinggisá
நான் உளவியல் சஞ்சிகை X 1
 
 
 

ஆழிப்பேரலையின் அதிர்வுகள் صے(
- க்+:ம் args திருமதி றொசாந்தி
(Diploma in Psychology) வவுனியா
2004 மார்கழி 26 என்றுமே மறக்க முடியாத துரதிர்ஷ்டமான நாள். மனிதன் அறிவியலின் உச்சிக்கே சென்றிருந்தாலும் இயற்கை சீறினால் இயலாமை அடைவான் என்பதை நிரூபித்த நாள். பொங்கி எழுந்து தனது பெயரையும் பொறித்து விட்ட சுனாமியை பலரும் அறிவியற் பார்வையில், ஆன்மீகப் பார்வையில் நோக்கி பல கேள்விகளை எழுப்புகிறார்கள். எது எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசித்தவர்களும் வசிக்காத பலரும் சுனாமியால் ஏதோ ஒரு விதத்தில் தீவிர, அதி தீவிர நெருக்கீட்டிற்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்திற்குப்பின் கிழக்கு மாகாணத்தில் ஓர் உளவளத் துணையாளராகப் பணியாற்றும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. சிதைந்து போன கிராமங்கள், சிதறிவிட்ட மக்கள், இழந்து போன உயிர்கள், அழிந்து போன சொத்துக்கள், வறுமை தொழிலின்மை, எதிர்கால நம்பிக்கையற்ற, பீதி கலந்த வாழ்வு போன்றன வாழ்வின் நிஜங்களாகியுள்ளன.
அம்மக்கள் கூறும் ஒவ்வொரு சம்பவங்களும் உணர்வு பூர்வமானவை. உள்ளத்தைத் தொடுபவை. ஐந்து பிள்ளைகளையும் இழந்த பெற்றோர். மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் இழந்து தவிக்கும் ஆண். பெற்றோரையும் சகோதர சகோதரிகளையும் இழந்து நிற்கும் தலை மகன். வறுமை காரணமாக வீட்டுப்பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடு சென்று கணவன் மறு கல்யாணஞ் செய்ய பிள்ளைகளைச் சுனாமி காவு கொண்ட துயரங்கூறும் பெண். இனக்கலவரத்தில் கணவனை இழந்து கடலலையிற் பிள்ளைகளையும் கொடுத்த விதவைத்தாய். இவ்வாறு ஏராளம் கொடுரங்கள், துன்பங்கள். பாண்டிருப்புப்பிரதேசத்தை நோக்கினால் 90b ஆண்டுகளில் பெரும்பான்மையான குடும்பத் தலைவர்கள் சுட்டுக கொல்லப்பட்டவர்களாகவும் கைத்தறி, கூலி வேலையெனப் பெண்களே காப்பாற்றி வந்த குடும்பங்கள் இன்று சுனாமியில் மீண்டும் சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது. அம்பாறையிற் குருந்தையடி, மருதமுனை, கல்முனை என்பனவும் சிதைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அம்மக்கள் தம் மண்ணில் அமைதியின்மையும் அழிவுகளும் அடிக்கடி நிகழ்வதற்குச் சாபக்கேடு காரணமோ என அங்கலாய்க்கின்றனர். இனக்கலவரம், வரட்சி, வெள்ளம், புயல், குழுக்களின்

Page 9
உள்ளப்பிறழ்வுகள், அரசியல் ஆதரவுகள், சுயலாபச்சுரண்டல்கள், பிரபல்யத்தன்மைகள், சாதி, அந்தஸ்து என்பனவும் செல்வாக்குச் செலுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.
இச்சூழ்நிலையில் மக்களுக்குப் L6) உளவியற் பிரச்சனைகளும் காணப்படுகின்றன. கவலை, கோபம், பயம், விரக்தி, தனிமை, நம்பிக்கையற்ற தன்மை, தன்னம்பிக்கையின்மை, வெறுமை, வெறுப்பு, ஏமாற்றம், தற்கொலை எண்ணம், தற்கொலை முயற்சி, பாலியலில் நாட்டமின்மை, துாக்கமின்மை, நித்திரைக் குழப்பம், நித்திரையிற் திடுக்கிடல், வாய்பிதற்றல், அதிக யோசனை, தலை வலி, உடல் நோ, தனியாகவே கதைத்தல், அதிகரித்த ஆஸ்மா நோய், பசியின்மை, அதிகப் பசி, களைப்பு, சோம்பல், மனச்சோர்வு,
படபடப்பு, பதற்றம், நடுக்கம், விளையாட விருப்பமின்மை, பாடங்களைக்கிரகிக்க முடியாமை, மனதைச் சந்தோஷ சூழலுக்குள் கொண்டு செல்ல (plgul T60)LD, எரிச்சல், அமைதியின்மை,
பயங்கரக்கனவுகள், குற்றவுணர்வு, சுயமதிப்புக்குறைவு, இயலாமை, மாதவிடாய் ஒழுங்கீனம் என்பவற்றையும் ஆரோக்கியமற்ற சமாளிப்பு முறைகளையும் காணக்கூடியதாகயுள்ளது. (தம்மைச் சார்ந்திருப்போரை வன்முறைக்கு உள்ளாக்குவது, மதுபாவனை, புகைத்தல், அயலவருடன் சண்டை, சுயகவனிப்பின்மை)
இவ்வாறான உளவியற் பாதிப்புக்களோடு இருக்கும் மக்களுக்கு நாம் உளரீதியாக ஆதரவு வழங்கி வழிப்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது. நாம் அவர்களுடன் எந்த வகையிற் பணியாற்ற வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும். அவர்கள் அத்தியாவசியப் பொருட்களை அவசியமாகக் கருதுவது போல் சில வேளைகளில் அதற்கு மேலாகவும் உளரீதியான ஆதரவையும், வழிப்படுத்தலையும்
5LD கதைகளை கேட்போரையும் எதிர்பார்க்கிறார்கள். வரவேற்கிறார்கள். அவர்களது தேவைகளை மதிப்போம். ஒரு சமூக சேவையாளராக, பயிற்றப்பட்ட உளவளத் துணையாளராகப்
பின்வருவனவற்றில் இயலுமானதை ஒவ்வொருவரும் செய்வோம், கடைப்பிடிப்போம்.
* அவர்கள் கூறுவதை உற்றுக்கேட்போம். * ஆதரவு வழங்குவதே எம் தலையாய நோக்கம் என்பதை உடல் மொழியிலும், வார்த்தையிலும் புலப்படுத்துவோம். * அவர்களின் பிரச்சனைகளுக்கு நாமே அர்த்தம் கொடுத்து பெரிதாக, சிறிதாக நோக்காமல் அவர்களின் மதிப்பீட்டை மதித்துப்பதிலுரைப்போம். * அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தக் களம்
அமைத்துக்கொடுப்போம். * அவற்றை நல்ல முறையில் சமாளிக்க உதவுவோம்.
 

அவர்களின் முடிவுகள் விவேகமற்றவையென்றோ, முட்டாள்
தனமானவையென்றோ தீர்ப்பிடோம். எமக்குத் தெரிந்த தளர்வாக்கற் பயிற்சிகளைச் செய்து
காட்டுவோம். சுனாமி பற்றிய உண்மையான தகவல்களை
வழங்குவோம். நிறுவனங்களுக்கிடையின் “வலைப்பின்னல்’ அமைத்துத்தகவல்
அறிந்து அவர்கள் தம் தேவைகளைப் பெற உதவுவோம். தங்கள் பிரச்சனைகளுக்கு அவர்களே தீர்வுகாண, மாற்று வழி காண, தம் ஆற்றல்களை வளர்க்க, எஞ்சியிருக்கும் உறவுகளின் ஆதரவைப் பெற, வழங்க, உள்ள வளங்களைப்பயன்படுத்த வழிப்படுத்தி உதவுவோம். எமது சேவையை அனைவரும் மனிதர்கள் என்ற முறையில் இன, மத, வர்க்க, பேதமின்றி நடுவுநிலைமையோடு வழங்குவோம்.

Page 10
பேரலை அனர்த்கு உள அதிர்ச்சிக்டு
ஓர் ஆறுகுலி
ர் ஆ
[ 16u) இலட்சம் உயிர்களைக் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஆழிப் பேரலை அழித்தது. அது எமது நாட்டிலும் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான எம் உடன் பிறப்புக்களைப் பலி கொண்டது. எண்ணற்ற பெரும் சொத்துக்களையும் கடல் அலை அள்ளிச் சென்றது. கடற்றொழிலைப் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த மக்களை, கடலே தங்கள் வாழ்க்கை என நினைத்த மக்களை, கடற்கரையிலே படுத்துறங்கிய மக்களை, கடற்கரையில் மண் விளையாடிய மழலைகளை ஒரு சில நிமிட அலை அழித்துச் சென்றுவிட்டது. அள்ளிக் கொடுத்த கடல் அழிவை ஏற்படுத்தியது. தாய் தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளைகளின் இழப்பால் தவிக்கும் பெற்றோர்கள், கணவர்களை இழந்த மனைவிகள், மனைவிகளை இழந்த கணவர்கள், உறவினர்களை இழந்த சகோதர சகோதரிகள் என்று பரிதாப நிலையால் உள அதிர்ச்சிக்கு ஆளாகி பலர் இன்று காணப்படுகின்றார்கள்.
இப் பேரலை உள அதிர்வையும், சோகத்தையும், மன விரக்தியையும், உளத்தாக்கத்தையும் ஏற்படுத்தியது. உயிர் வாழ்ந்து என்ன பயன் என்ற உணர்வு, யாருக்காக உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம், ஏக்கம், மக்கள் மத்தியில் இருக்கின்றது. இன்னும் சிலர் அழுது அழுது கண்ணிரற்ற நிலையில் வாழ்கிறார்கள். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அழுகையை அடக்கி வைத்துக்கொண்டு இருக்கலாம். அவர்கள் தங்கள் கவலைகளை, இழப்பின் பிரிவை, சோகத்தை வெளிக் கொணர நடந்த கோர அழிவை சொல்லி கதறி வாய்விட்டு அழுவதன் மூலம் மனப் பாரத்தை, மன அழுத்தத்தை, கவலையை குறைக்கலாம். இதற்கு நேரடி உதாரணமாக பல அனர்த்த அனுபவங்கள் உள்ளன.
ஒருவருடன் நேரடியாகப் பெற்ற அனுபவத்தைத் தர விரும்புகின்றேன். குறிப்பிட்ட நபர் தன் மனைவியையும், இரு பிள்ளைகளையும் தன் கண் முன்னால் அலையின் அனர்த்தத்திற்கு 徽 பறி கொடுத்தார். ஒரு பிள்ளை மட்டுமே மிஞ்சி இருந்தார். அவர்கள் தன் கண் முன்னால் கொண்டு செல்லப்பட்ட பொழுது அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதால் ஏற்பட்ட குற்ற உணர்வு ஒரு பக்கம் அவர்களை இழந்த கவலை ஒரு பக்கம் அந்த ஊரில் பலர்
 
 
 
 
 
 
 

أثلتك t ۱۱۱ به بیسی 8ھ کھی۔ ? کیا \\ y كلاه هو - گلا خانقہ ۱۲۶ھ
முடியாமல் கவலையின் கொடுரத்தால் நான்கு ஐந்து நாட்கள் சாப்பிடாமல் கவலையில் மூழ்கி இருந்தார்.
நான் அவரை அன்போடு நாடி கதைத்தபொழுது முதலில் அவர் கதைக்கவில்லை. ஏனெனில் அவர் மன விரக்தியில், மன அதிர்வில் இருந்து மீள முடியாமல் இருந்தார். பல நேரம் கடந்து சென்றும் அவர் மெளனம் சாதித்தார். அதன் பின் அனைத்தையும் கூறி மனம் விட்டு அழுதார். ஓ. என்று என்னை கட்டிப் பிடித்து அழுதார். நான் இனி யாருக்காக வாழ வேண்டும். ஏன் வாழ வேண்டும் என்ற உணர்வு. தன் மற்றப்பிள்ளையையும் மறந்த நிலை. கவலை தீர கதறி அழுததன் மூலம் தன் சோகத்தை அலையின் அதிர்வினால் ஏற்பட்ட தாக்கத்தை, அதிர்ச்சியைக் குறைத்ததன் மூலம் அன்று அவரால் உணவு உண்ண முடிந்தது. மனக் கவலை, சோகம், அதிர்வு குறைந்ததாக அவர் கூறினார்.
இவ்வாறு உயிர்களை இழந்த எம் சகோதரங்கள் இருக்கின்றார்கள், மனவேதனையால் அழ முடியாமல் உள்ளம் மரத்துப் போனவர்களை வெவ்வேறு வழிகளைக் கையாண்டு அழுகை வரச் செய்ய வேண்டும். அனர்த்தம் நடை பெற்று இன்று நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டாலும் உறவினர்களை இழந்தவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள் அவர்கள் அநுபவத்தை எவ்வாறு அவர்களின் உறவினர்களை இழந்தார்கள் என்று சொல்ல பாதிக்கப்பட்டவர்களைத் துாண்டுவது நல்லது. திரும்பத் திரும்ப அவர்கள் தங்கள் இழப்பின் அனுபவத்தைச் சொல்லி அழும் பொழுது தடுக்காமல் அழ விடல் வேண்டும்.
எனவே அதிர்வுக்கு உள்ளானவர்கள் எம்முடன் தமது இழப்புக்கள், கவலைகள் போன்றவற்றை பகிரும் போது அவர்களோடு எமது பிரசன்னத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் அழுவதன் மூலம் இழப்பின் கவலை, மன விரக்தி படிப்படியாக குறைவதன் மூலம் அவர்கள் உள அதிர்ச்சியில் இருந்து விடுதலை பெறுவார்கள்.
இன்னும் பல்வேறு உள், ଘଶiଣୀ காயங்களுடன், முறிவுகளுடன் இனி தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என மனவேதனைப்படுவோர் தங்களின் மாற்று விலுவினை இனங்கண்டு தங்களாலும் வாழ முடியும் என முயற்சிக்க வேண்டும்.
அன்பானவர்கள், உறவினர்கள், சொந்தக்காரர்கள் இறந்ததை உணர்ச்சி ரீதியாக ஏற்றுக்கொண்டு இனி இருப்பவர்களுக்காக வாழவும், புது நம்பிக்கை, தெம்பை, உற்சாகத்தை, சந்தோஷத்தை, மகிழ்ச்சியை, அன்பை அவர்கள் வாழ்வில் உணர்த்தி புது வாழ்வு அளிக்க முயற்சிக்க வேண்டும்.

Page 11
இளவல் -
ஆழத்தில் ஒடம்
ஒரு பெரிய இயற்கை அனர்த்தத்தின் பின் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சுனாமி (துறைமுக அலை) ஆழிப்பேரலை என்ற சொற்கள் எமக்கு புதியதல்ல. அலையினுடைய தாக்கம் கரையில் தான் தெரியவருகின்றது. ஆழ்கடலின் அலையின் சீற்றம் பெரிதாக இருப்பதில்லை கரையைத் தான் அலை சீரழிக்கின்றது. இது இயற்கையின் நியதி.
வாழ்க்கையை கடலில் பயணம் செய்யும் ஒடத்திற்கு
ஒப்பிடுவார்கள். ஒடம் கரையில் இருக்கும் வரை அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஆழத்திற்கு சென்று விட்டால் அமைதியை அனுபவிக்கிறது. ஆழத்தில் தான் கடலின் செல்வங்கள் எல்லாம் இருக்கின்றன. இளையோரே, இதில் இருந்து எதை நீங்கள் கற்றுக்கொள்கிறீகள்? வாழ்க்கைப் படகு எப்போதும் ஆழத்தில் இருக்க வேண்டும்.
“வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனைய உயர்வு”
தாமரைத் தண்டின் நீளம் தண்ணின் ஆழத்தைப் பொறுத்தது. அதேபோல் உள்ளத்தின் ஆழத்தைப் பொறுத்தே மாந்தரின் உயர்வும் அமைந்திருக்கும். உள்ளத்தை ஆழப்படுத்துபவை என்ன? உயர்ந்த சிந்தனை, நல்லவற்றை விரும்பும் இதயம், உயர்ந்த இலட்சியம், பொது நல நோக்கு, உணர்வுகளுக்கு அடிமையாகாத ஒழுக்கம் எனப்பலவற்றைக் கூறலாம். மேற்கூறப்பட்ட விழுமியங்களால் உங்கள் வாழ்க்கைப் படகை அலங்கரியுங்கள். எவ்வித சஞ்சலங்களுமின்றி ஆழ்கடலில் அமைதியாக பயணம் செய்யும் படகைப்போல நீங்கள் இருப்பீர்கள். வாழ்வின் செல்வம் என்ற முத்துக்களை அங்கே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
 
 
 
 

(శిక్ష్యానిస్ట్"
அந்தி வானம் செக்கச் சிவந்து அந்த கடற்கரையையும் தன் அழகிற்குள் ஈர்க்க, அங்கே ஒரு தனி அழகு. அந்த அழகிற்குள் தன்னையும் மறந்து, இனம்புரியா ஒர் உள்ளார்ந்த மகிழ்வில் திளைத்திருந்தான் மதன்.
மதன் ஒரு அனாதை என்று தான் சொல்ல வேண்டும். அவன் பிறப்பதற்கு முன்னமே தன் தந்தையை இழந்தவன். தாயோடு மட்டும் வாழ்ந்து வந்தவன். ஏறக்குறைய அவனுக்கு பத்து வயதிருக்கும் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வேலைதேடி அவனுடைய தாய் சென்ற போது. ஆரம்பத்திலே பாசப்பிணைப்பின் பந்தத்திலே பல அன்புக் கடிதங்கள் பறந்து பரிமாறின. ஆனால் சில வருடங்களுக்குப் பின் அவனுடைய தாய்க்கும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.
பாவம் மதன், சமூகத்தின் பார்வையில் அவன் அனாதையாகி விட்டான். அவனை அவனின் தாய் மாமனே தத்தெடுத்தாற் போல வளர்க்கலானார். அன்று தொடங்கி இந்த பாழாய்ப் போன சுனாமி வரைக்கும் தன்னுடைய அந்த மாமன் குடும்பத்துடன் தான் வளர்ந்து வந்தான். இப்போது அவன் சிறுவனல்ல. ஒரு சராசரி அழகு பொருந்திய மீனவ இளைஞன், கிட்டத்தட்ட 22 வயதிருக்கும்.
அந்த மாலைப்பொழுதின் கடற்கரை அழகிலே தன்னையுமறியாமல் நன்றியுணர்வு ததும்ப நின்ற அவனுடைய எண்ண அலைக்குள் ஒரு சில மனிதர்களின் நினைவு நிழல்கள் நிஜங்களாகத் தெரிந்தன.
அவனுடைய இந்த நாட்களில் அவன் எதிர் கொண்ட சுனாமியையும், இந்த சுனாமியால் அவனுடைய வாழ்வில் நுழைந்த சில மனிதர்களையும் அவன் எண்ணி தனக்குள் சிறிது புன்னகைத்துக் கொண்டான்.

Page 12
அனைவரையும் முந்திக்கொண்டு அவனுடைய முகத்திரைக்கு வருகிறாள் குமுதினி. குமுதினி வேறு யாருமல்ல, அவனோடு ஒரே வகுப்பில் பல காலம் படித்தவள். சூழ்ச்சியாய் வந்த சுனாமி அவளையும் விட்டு வைக்கவில்லை. மதனைக் காயங்களோடு விட்டு வைத்த சுனாமி அவளுடைய ஒரு காலையும் சிதைத்து அவளை அங்கவீனமாகவே ஆக்கிவிட்டது.
ஆரம்பத்தில் கண்ணிர் விட்டு கதறி அழுதவள் தான். ஆனாலும் அவள் தானாகவே தன் உணர்வுகளை பக்குவப்படுத்திக் கொண்டவள். வாழ்க்கையை நம்பிக்கைத் துளிர்களோடு அணுக ஆரம்பித்தவள். அவளுடைய மனதை அந்த சுனாமி அவ்வளவாக சிதைத்து விடவில்லை.
இப்படிப்பட்ட ஒரு நாளில் தான் அவள் மதனையும் சந்தித்தாள். அந்த நாளை மதனால் மறக்க முடியாது. அவனுடைய அந்த கசப்பான நாளில் தான் குமுதினி முதன்முறை ஆறுதல் மொழி கூறி அன்பில் அவனை அரவணைத்தாள்.
பொழுது சாயத் தொடங்கியதையும் உணராமல் அவளுடைய அந்த நினைவிலே நின்ற மதனுக்கு கிராமத்தின் ஆலய மணி ஓசை அது பிற்பகல் ஆறு முப்பதையும் தாண்டி விட்டது என்பதை சுட்டிநின்றது. அவனுடைய உள் உணர்வுகளும், மன அலைகளும் திசை திரும்ப, தன் மாமா வீட்டார் இருந்த அந்த தற்காலிக கொட்டிலை நோக்கி நடக்க எண்ணியவனாய் திரும்பினான்.
அவன் தன் முன்னே இப்போது தெரிவதெல்லாம் கலையிழந்த காவியமாக, நரம்பறுந்த வீணையாக நாதியற்றுக் கிடக்கும் அந்த மீனவக் கிராமம் தான். முழுமையான வீடுகள் இல்லை, முறிந்து விழாத பூவரசு மரங்களில்லை, எல்லைக் கதியாலுமில்லை, எள்ளளவேனும் பழைய அமைப்புமில்லை, பந்து விளையாடி மகிழும் இளைஞர் கூட்டமில்லை, சந்தி வந்து கதைக்கும் சம்மாட்டிமாருமில்லை.
V ஏறத்தாள இருநூறு குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தின் தலையெழுத்தையே இந்த சுனாமி மாற்றி விட்டிருந்தது. பொருளாதாரத்தில் ஒரளவு முன்னேறி நின்ற ஒரு கிராமம் அங்கே இருந்தது என்பதற்கான சான்று ஒரு துளியும் இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு வீடுகள், கட்டடங்கள் எல்லாம் தரையை தொட்டுக் கிடந்தன.
இடிபாடுகளுடு நடந்து, அழிந்து போன தனது கிராமத்தை கடந்து வருகின்ற போது ஊரார் அனைவரதும் சோகச் சுவடுகளில் அவனும் நடந்து கொண்டிருந்தான்.
 

“இது தான் எங்கட கிராமத்தின்ர விதி' என்று இந்த இயற்கை அனர்த்தத்தை சிறிது ஏற்றுக் கொள்வது போல் தனக்குள்ளே அடிக்கடி சொல்லி வந்தான். அவன் தற்காலிக கொட்டில்கள் போட்டுக் கொடுக்கப்பட்டிருந்த அந்த இடத்திற்கு வந்த போது மணி எட்டரையை எட்டிவிட்டிருந்தது.
“எங்கயடா சுத்திப் போட்டு வாற?” கேட்டாள் கோபப் பொறி பறக்கும் குரலில் அவனது மாமி.
“ஒரு இடமுமில்லை” என சுருக்கமாகவே பதில் கொடுத்து வீட்டிற்குள் நுழைந்தான் மதன். மாமியாரின் கோபம் அடுத்து வந்த முணுமுணுப்பிலும் தெளிவாயிற்று.
“தண்ணியை கிண்ணியை எடுத்து வைப்பம் எண்டு இல்லை தரித்திரம் எங்கையோ போயிற்று வருகுது. விறகால வந்த களைப்போட நிற்கிறன் நான், அந்த விளக்கை கொழுத்து”
மாமியாரின் இப்படியான வெறுப்புணர்வு கொண்ட வறட்டுக் குரலை கேட்கிற போதெல்லாம் அவனுக்குள் ஒரு மன உடைவு ஏற்படும். அவளுடைய வார்த்தைகளை அடியோடு வெறுத்தான். 96(660)u கோபம் கொதிக்கும் பார்வையை காணுகின்ற பொழுதெல்லாம் மதனுக்கு அந்த மார்கழி 26ம் திகதி நடந்த அலையின் கோரத் தாண்டவ அனுபவம் தான் அவனுக்கு ஞாபகம் வரும். அது அவனுக்குள் ஒரு பெரும் அதிர்வையே ஏற்படுத்தும்.
மதன் மேல் மாமிக்கு இருக்கும் வெறுப்புணர்வுக்கு காரணம் இருக்கலாம். ஆனால் அவளுடைய கோப, வெறுப்பு உணர்வுகளும் வார்த்தைகளும் மதனுக்குள் ஓர் குற்றப்பழியுணர்வை மென்மேலும் ஆழமாக உருவாக்கிக் கொண்டிருந்தது. -
அது அவனுடைய மாமா மகள் வனிதாவைப் பற்றித் தான். “ág....... நான் அவளை வடிவாகக் காப்பாற்றியிருக்கலாம். மதன் அத்தான் என்னைக் காப்பாற்று என்று தன்ர கையை நீட்டி கத்தின போது என்னால் ஏலாமல் போயிற்றே. ’ என்று அடிக்கடி அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொள்வர்ன்.
வனிதா அவனுடைய தாய் மாமாவின் ஒரேயொரு பிள்ளை. கடந்த வருடம் தான் O/L பரீட்சையை செய்து முடித்திருந்தாள். திறமையாகப் படிப்பாள், பாடுவாள். ஊரார் அனைவரும் அவளை பாராட்டுவார்கள். சிறந்த பெறுபேறுகளையும் எதிர்பார்த்திருந்தாள் 966.

Page 13
அந்த அரக்க அலையிலே அவளும் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட அந்த கொடுரக் காட்சியே மதனுக்குள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.
“ச்சீ. அவளை கை நழுவ விட்டுவிட்டேனே' என நொந்து பலமுறை தன் தலையணையை நனைத்தே விட்டான் அவன். கண் மூடித் துாங்குகின்ற போதெல்லாம் அலை தந்த சோக அனுபவம் தான் அவனை வாட்டி விரட்டியது.
சம்பவ தினத்திற்கு முதல் நாள் தான் வனிதாவின் பெற்றோர் கொண்டாட்டம் ஒன்றிற்காக வவுனியா போயிருந்தார்கள்.
'மதன், தொழிலால் வந்து அங்க இஞ்ச எண்டு திரியாம வீட்டில இரு. வனிதா கவனம். நாளைக்கெல்லாம் நாங்க வந்து விடுவம்” என்று தான் கூறி சென்றிருந்தார்கள் அவனுடைய மாமியும் மாமாவும்.
அவனுடைய பொறுப்பில் விடப்பட்டிருந்த வனிதா இன்று உயிரோடு இல்லை.
“ஐயோ, ஒடுங்க கடல் வருது” என்று யாரோ துாரத்தில் கத்திக் கொண்டு வரும் அபாயக்குரல் கேட்டு அவனும் தலை கால் தெறிக்க ஓடுகிறான்.
“வனிதாவும் ஓடி வந்து விடுவாள்’ என்று தான் அவனும் ஆதங்கப்பட்டு ஓடிக் கொண்டிருந்தான். அதற்குள் அந்த அலை அரக்கன் அவனையும் வளைத்துப் பிடித்து அங்குமிங்குமாய் அவனையும் துாக்கி எறிந்தது. பனை வடலியோடு மோதிக் காயப்பட்டுக் கிடந்தான். சுயநினைவை இழப்பது போல் மங்கிக் கொண்டு போன அவனுடைய கண்களில், அலைகளிலே அடிபட்டு அந்தரிக்கும் வனிதா தெரிகிறாள்.
*மதன் அத்தான் என்னைக் காப்பாற்று. ’ என்று கத்திக் க்தறும் சத்தம் கேட்பதையும் அவன் உணர்ந்தான். இதற்கு பிறகு என்ன ஆயிற்று என்று அவனுக்கு தெரியவில்லை.
அவனுடைய கை கால்களில் பனை மட்டைகளின் கருக்குகள் தமது பலத்தைக் காட்டியிருந்தன. காயக்கட்டுகளுடன் தன் சுய நினைவை அவன் பெற்று வைத்தியசாலையில் கண் திறந்த போது கத்திக் குழறி மாரடித்துக்கொண்டிருந்த மாமியும் மாமாவையும் தான்
காண்கிறான்.
தொடரும்.
 

சூ. டக்ளஸ் மில்ரன் லோகு,
Ep6zir6z5rnrff
அவர்கள் கடலோடு உரையாடி உறவாடியவர்கள், கடலலையில் சரளமாக சவாரி போனவர்கள், சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலான ஆடவர்கள் நீச்சலில் வின்னர்கள் உப்புக்காற்றை சுவாசிக்காமல் உறங்காதவர்கள், சேமிக்கும் பழக்கத்தை பெரிதாக கொள்ளாது மீன்பாடு காலத்தில் மிகுதியாகச் செலவழிக்கும் மகிழ்ச்சிப் பிரியர்கள்; எதிர்காலத்தை பெரிதாக அலட்டிக் கொள்ளாது நாளாந்த வாழ்க்கையில் திருப்தி காண்பவர்கள், தகராறு ஏதுமென்றால் அடிதடிக்கு அஞ்சாதவர்கள், இலகுவில் உணர்ச்சி வசப்பட்டு வாய்த்தகராறு புரியும் வனிதைகளுக்கு பஞ்சமில்லாதவர்கள், “ஆடவர்கள் அழுவதா?’ என்ற மனநிலையில் மிகுந்தவர்கள். தமிழர் தாயகத்தின் வடகிழக்காகவுள்ள கரையோரக்கிராமமாம் முல்லை வாழ் மக்களின் இயல்பு வாழ்விலே ஒரு பேரனர்த்தம். சுனாமி எனும் பேரலை அவர்களுடைய வாழ்வையே தலைகீழாக மாற்றி ஆறாத வடுக்களை ஆழப்பதித்துவிட்டது.
இன்று அவர்கள், தாம் உரையாடி, உறவாடி, சவாரி போன கடலுக்கு மிகவும் அஞ்சுகிறார்கள்;உப்புக்காற்று என்றாலே உறைந்து போகிறார்கள் , சத்தம் சந்தடி இல்லாது மூலைக்குள் சுருண்டு போகிறார்கள், ஆண்கள் உட்பட அழுகிறார்கள், எதிர்காலம் என்ன..? எப்படி. யோசிக்கிறார்கள்; விடை அறியாது விரக்தியுறுகிறார்கள். இன்று அவர்களுக்கு படுக்க பாய், உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடம் அனைத்தும், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புக்கள், ஆட்கள் மூலமாக தாராளமாக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களின் அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய ஆர்வமாக மனிதாபிமானிகள் அனைவரும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ஆழ்மன ஏக்கத்தினின்று, உள்ளார்ந்த உணர்வினின்று எழும் வினாக்களுக்கு என்ன பதில் உரைப்பது? என்பதில் ஆர்வலர்கள் அதிக அக்கறை எடுக்க வேண்டும்.

Page 14
அள்ளித் தந்த கடல் அள்ளிச் சென்றதேயென சொல்லியழும் அவர்களுக்கு என்ன பதில் உரைப்பது? துள்ளித் திரிந்த மொட்டுக்கள் துடிதுடித்துச் சென்றதேயென விம்மியழும் அவர்களுக்கு என்ன பதில் உரைப்பது? ஒட்டு மொத்த குடும்பத்தவரை ஒரேயடியாய் கொன்ற அலை எனை விட்டு விட்டு சென்றதேயென விக்கியழும் பேதைக்கு என்ன பதில் உரைப்பது? அம்மா எங்கே? அப்பா எங்கே? யாரிடத்தில் நான் இங்கே? என வினவும் விடலைக்கு என்ன பதில் உரைப்பது? தன்னுடைய மனைவிமக்கள் அனைவரையும் பேரலைக்கு பலி கொடுத்து ஆறாத்துயரில் அன்றாடம் குடித்து விட்டு ‘சர்வதயாபர இயேசுவே" என்று சதா ஒப்பாரி வைத்து கதறும் அப்பு ஐயாவின் வாழ்வில் எப்படி ஒளி ஏற்றுவது? ஆசையாக பெற்று வளர்த்த மகன்,மகள் இருவரையும் சுனாமிக்கு காவு கொடுத்து மன அழுத்தத்தால் மருத்துவமனை ஏறி இறங்கும் மேரி அக்காவையும், தன் மனைவியின் துயரில் துவஞம் ராஜன் அண்ணாவையும் எப்படி தேற்றுவது? அம்மா, அப்பா, உடன் பிறப்புக்கள் அனைவரையும் இழந்து ஒரக்கண்ணில் சோகம் அப்பி சோர்ந்து கிடக்கும் சிறுவன் ஜெகதீபன் வாழ்வில் எப்படி தீபம் ஏற்றுவது? பெற்றோரை சுனாமி அள்ளிப்போக அண்ணன், தம்பி இருவரோடும் தானும் சேர்ந்து திகைத்து நிற்கும் சிறுமி தர்ஷாவின் கவலையை எவ்வாறு தணிப்பது? இப்படி பலவற்றை பார்த்து, கேட்டு, அனுபவித்த இத்தகைய நபர்களின் எதிர்கால வாழ்வு பற்றி என் எண்ணத்தில் பலவித கேள்விகள், இத்தகைய கேள்விகளுக்கும்.இத்தகைய ஏக்கங்கள், மனநிலைகளுக்கும் சொற்களால், உடனிருப்பால், சூழலால் உளநல துணையாளர்கள் பதில் உரைக்க வேண்டிய அவசிய நிலைமை நிலவுகிறது. தொடர்ச்சியான ஆற்றுப்படுத்தல் அவசியமாகிறது.
கடந்த 856) போரின் தாக்கம், இடப்பெயர்வுகள், பொருளாதாரத்தடை அனைத்திற்கும் முகம் கொடுத்த அவர்களின் உறுதி இன்று தளர்ந்து காணப்படுகிறதென்பது எதார்த்தமாகின்றது. ஆனாலும் அதை அப்படியே விட்டுவிடலாகாது. பேரலையின் அனர்த்தத்தில் சிக்கி சிதைந்த அவர்களின் மன உறுதியை
உசுப்பிவிட வேண்டும். “சென்றவர் கனவுகளை இருப்பவர் நாம் சுமப்போம்,” “சாம்பலில் நின்றும் சரித்திரம் படைப்போம்” என்ற உத்வேகத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும். “உற்வை
இழந்தோம், உடைமையை இழந்தோம் இருந்தும் நல்வாழ்விற்கான உணர்வை இழக்க மாட்டோம்” என்ற தற்றுனிவும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
அறுகம் புல் அடியோடு தீய்ந்து போனாலும் தன் வேரினின்று மீண்டும் எழும். பீனிக்ஸ் பறவை சாம்பலினின்று எழுந்து பறக்கும். ஆழிப்பேரலைக்கு அகப்பட்ட மண்ணும் சாம்பல் மேடுகளிலிருந்து
 

மாண்புடன் எழுந்து நிற்கும். அவர் குரலில் இனி விரக்தி இல்லை எனும் அந்நாளை நாம் விரைவு படுத்துவோம். அவர் குரலில் இனி ஒளிமயமான எதிர்காலத்திற்கான எழுச்சியே உண்டு எனும் நிலையை உருவாக்குவோம். அத்தகைய நிலையை உருவாக்கும் பணியை உளநல ஆற்றுப்படுத்தினர், சமூக ஆர்வலர், நிவாரண தொண்டர்கள், துறவிகள், மதகுருமார்கள், இன்னும் பலர் சுயநலம் கருதாது தொடர்ச்சியாக ஆற்ற வேண்டுமென்பது இக்காலத்தின் தேவையாகிறது.

Page 15
“அம்மாவுக்கு அலை அதிர்வுகள்”
றாஜ் கிளேயர்
பிறந்த திகதிக்கும் இறந்த திகதிக்கும் இடைப்பட்ட காலம் தான் வாழ்க்கையா? என்ற தத்து வார்த்தைக் கேள்வி இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்ற தீர்க்கமான முடிவைத் தருகின்றது. வாழ்க்கைக்கு அப்பால் பிறப்புக்கு முன்னரும் இறப்புக்கு பின்னரும் ஒரு வாழ்க்கை உண்டு என விஞ்ஞான ரீதியில் 砂 ஆய்வு செய்து நிரூபிக்கப்படாதிருக்கின்ற போதிலும் மதம் சார்ந்த கருத்துக்கள் இவற்றுக்கு சார்பான கருத்துக்களையே முன் வைத்துள்ளன. ஆனால் தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்து இந்த உலகைக்காணும் தருணத்திலிருந்து மனிதனின் வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை என்றும் பிறப்புக்கு முன்னரும் அதாவது தாயின் கருவிலேயே மனிதர்களின் வாழ்க்கை ஆரம்பித்து இருக்கின்றது என்றும் அண்மைக்கால மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் வியக்கத்தக்க வகையில் நிரூபித்துள்ளன.
கருவுக்கு ஏற்படும் வெளி அதிர்வுகள் குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன
கருவாக உருவான நாள் தொடக்கம் அது ஒரு தசைப்பின்டமாகயன்றி, உணர்வுகள் உள்ள மனிதரைப் போன்று விருப்பு வெறுப்பை வெளிக்காட்டும் இயல்பை அக்கரு கொண்டிருக்கின்றது. உலகில் பிறந்த பின் குழந்தை உள்வாங்கும் விடயங்களைப் போன்று ஒரு கருவாக இருந்து கொண்டு அவ்வுயிர் உள்வாங்கும் விடயங்களும் அநேகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உள்வாங்கும் விடையங்களே அக்குழந்தையின் எதிர்காலத்தை, நற்பண்புகளை, தீயகுணங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றன.
குழந்தையின் அசைவும் உணர்வை வெளிப்படுத்தலும்
தாயின் வயிற்றில் பாதுகாப்பாக இருக்கும் குழந்தை பொதுவாக கருவில் அசைந்து கொண்டும், செவிமடுத்துக் கொண்டும், எச்சிலை விழுங்கிக் கொண்டும், தாயின் உணர்வுகளுக்கேற்ப எதிர் விளைவுகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாக பரிசோதனைகள்
 
 
 

வெளிக்காட்டியுள்ளன. பன்னிரண்டாம் வாரத்தில் விரல் சூப்புதல், தொப்புள் கொடியை பிடித்து விளையாடுதல், கால்களால் உதைத்தல், டோச் வெளிச்சம், தாய் தன் வயிற்றை இறுக்குதல் போன்ற விடயங்களுக்கு எரிச்சலை வெளிக்காட்டுதல் போன்ற உணர்வுகளைக் கருவில் உள்ள குழந்தை வெளிப்படுத்துகின்றது. வயிற்றில் உள்ள குழந்தைக்கு தாய் வழங்கும் விடயங்களே அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. விடயங்களை புரிந்து கொண்டு உள்வாங்கும் திறனை குழந்தைகள் பெற்றுள்ளன.
ஆழிப்பேரலையின் அதிர்வு.
குழந்தையைப் பெற்று வளர்ப்பது தான் மிகப் பெரும் பேறு என்று தாய்மார்கள் தற்போது கருத முடியாது. கருத்தரித்த காலம் முதல் ஒவ்வொரு தாயும் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறது விஞ்ஞான அவதானிகள் கூட்டம். கருவில் உள்ள குழந்தை தாயின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்கின்றது. தாய் கோபப்படும் போது அதிகரிக்கும் இதயத்துடிப்பு வேகத்தை உணர்ந்து குழந்தை திகைக்கின்றது.
அதிகம் கோபப்படும் தாய் கோபம் கொள்ளும் குழந்தையையே பெற்றெடுக்க முடியும். அதேவேளை சந்தோஷமான, திருப்தியான, அழகான சூழலில் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்கள் சமூகத்திற்கு சிறந்த சந்ததிகளையே வழங்குகிறார்கள். கர்ப்பிணிகள் மெல்லிய இசையை செவிமடுத்து வன்முறை மற்றும் திகிலுாட்டும் திரைப்படங்களைத் தவிர்க்க வேண்டும். நல்ல எண்ணங்களை தாய்மார்கள் வளர்த்துக் கொண்டு உளச் சமநிலையை பேண வேண்டும்
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களும் செயற்பாடுகளும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய்மாருக்கு ஒரு விதிவிலக்காகவே அமைந்து விடுகின்றது. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஓர் திகிலுாட்டும் அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். அப்பேர்பட்ட அதிர்ச்சி அனுபவம் அவர்களைவிட அவர்களின் கருவில் உள்ள குழந்தையையே அதிகம் பாதித்துள்ளது. இவற்றை நினைத்து மேலும் சோர்வு அடைவதாலோ அல்லது கவலை கொள்வதாலோ இப்பிரச்சனைக்கு பரிகாரம் காண முடியாது.
சுனாமி சூழலை மட்டுமல்ல சூலகத்தையும் பாதித்துள்ளது என்பதற்கு எமது கண்களே 3FTilá. சுனாமி நலன்புரி நிலையமொன்றில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தாயொருவர் தனது மூன்று குழந்தைகளை இழந்த நிலையில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இக் குழந்தை ஆழிப்பேரலை

Page 16
அனர்த்தத்தின் இரு வாரங்களின் பின் பிறந்தது. அத்தாயின் கண்களில் தவளும் ஆதங்கமும், குற்றப்பழியுணர்வும், சோகமும் கண்ணாடி போல பிரதிபலிக்கின்றது அக்குழந்தையின் அகத்திலும் முகத்திலும். அக்குழந்தைக்கு குளிரும் தெரியவில்லை. வெப்பமும் தெரியவில்லை. உள்ளத்திலே பாரியளவில் பாதிப்புற்ற தாயின் பாலை உட்கொள்ளும் அக்குழந்தை குற்றப்பழியுணர்வுடன் தோற்றமளிப்தாக ஓர் உளவியல் ஆற்றுப்படுத்தினர் தனது சிந்தனைகளை பகிர்ந்துள்ளார். இதற்கு காரணம் தாய்ப்பால் மட்டுமல்ல மாறாக அக்குழந்தை பிறக்கும் முன்னரே ஒர் பாரிய ஏமாற்றத்தையும், இழப்பையும் உணர்ந்திருக்கின்றது.
வயிற்றில் வளரும் அல்லது ஏற்கனவே பிறந்துவிட்ட குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன் எச்சரிக்கைகளை கையாள வேண்டும். பாதிக்கப்பட்ட கருவில் சிசுவாக வளர்ச்சியடைகின்ற குழந்தையின் எதிர்காலத்தை இருள் நிறைந்த, சோகம் தவழுகின்ற ஓர் வாழ்வாக மாறவிடாமல் காப்பது அக்குழந்தையை சுமக்கும் தாயினது கடமை மாத்திரமல்ல, மாறாக எம் ஒவ்வொருவரதும் தலையாய கடமை. கர்ப்பிணி தாய்மாருக்கு சந்தோஷமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து, ஆறுதலான வார்த்தைகளைக் கூறி மலர இருக்கும் எதிர்கால சந்ததிக்கு ஒளி ஊட்டுவோம். எதிர்காலத்தை கட்டியெழுப்பும் துாண்களுக்கு அத்திவாரமாவோம்.
பெற்றோர்களே உங்கள் குழந்தை எதிர்காலத்தில் இசை மேதையாக வரவேண்டுமா? சிறந்த இசையைக் கேட்டுக் கொண்டிருங்கள். சிறந்த அறிவு ஜீவியாக வர வேண்டுமா? சிறந்த நூல்களைத் தேர்தெடுத்து வாசியுங்கள். ஒரு கருவை சுமக்கும் 280 நாட்களும் தாய் திருப்தியுடனான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். சந்தோஷத்தின் போது வெளிப்படும். 'என்டோ.பின் (Endotin) என்ற இரசாயனம் ஒட்சிசனுடன் கலந்து வயிற்றில் உள்ள குழந்தையை சென்றடைந்து குழந்தையின் சந்தோஷத்திற்கு வழி வகுக்கின்றது என்பது விஞ்ஞான அறிவு. ஈஸ்டரஜன் ஓமோன் சவால்களை வெற்றி கொள்ளும் பக்குவத்தை, பொறுமை, வேதனைகளை தாங்கும் இயல்புகளைத் தருகின்றது. இதனால் தான் பல சவால்களையும் வேதனைகளையும் பெண்கள் தாங்கிக் கொண்டு ஒரு உயிரை உலகிற்கு வழங்குகின்றார்கள். இந்த கடமையுடன் மேலதிகமாக கருவிலே குழந்தையின் உளவியலை நிர்ணயிப்பதும் பெண்களுக்கு கிடைத்த பொறுப்பாகும்.
 

திரு. பிரதீப் திருமலை
இன்று LD&86 அனைவரையும் பேரச்சத்திலும் ஆற்றொனாத் துயரத்திலும் ஆழ்த்தியிருப்பது “சுனாமி” என்ற பேரலை அனர்த்தமாகும். இவ்வாழிப் பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களும் சொத்துக்களும் காவு கொள்ளப்பட்டன. 35L6)6.5606060)u
6 (360TITUTujLDIT35 நம்பியிருந்த பலரின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டு பூதவுடல் சிதைவுகளுமே சுவடுகளாக விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன. தம் உறவினர்கள், பிள்ளைகள், தாய், UTafia பிணைப்புக்கள் என்று எல்லோரையும் பிரிந்து இன்று துயரத்தில் தத்தளிக்கின்றனர்.
இவ் வேளையில் இவர்களின் மனநிலை பற்றி நாம் இலகுவாக எதனையும் கூறிவிட முடியாது. இம் மன வேதனை அவர்களை நிரந்தர மன நோயாளிகளாக்கி மரணத்தின் விளிம்புக்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
எனவே உடனடியாக இவற்றை தடுப்பதற்கு தேவைப்படுவது சிறந்த உளவள ஆற்றுப்படுத்தலாகும். இதன் மூலமே அவர்களை ஓரளவுக்கேனும் இயல்பு நிலைக்கு திருப்பலாம். இவர்கள், நடந்து முடிந்த சம்பவத்தை எண்ணி வருந்துபவர்களாகவே பெரிதும் 85. T600TLIG6) is (Post Traumatic incident).
முதலில் எவ்வாறு உளவியல் ரீதியான தாக்கத்துக்கு உட்பட்டனர் என்பதை இணங்கான வேண்டும். இவ்வாறு பாதிப்படைந்தவர்கள் பின்வருவனவற்றிற்கு உட்பட்டு காணப்படுவர்.
* நடந்தவற்றை நினைத்து புலம்புதல் * கனவில் அதனை காணுதல்

Page 17
ஆரோக்கியமான நித்திரையின்மை முணுமுணுத்தல் தமது உணர்ச்சிகளை அடக்க முற்படுதல் எளிதில் கோபப்படுதல் சுயநினைவு இழந்தவர்களாக காணப்படுதல் கவலையுடனும் சோர்வுடனும் காணப்படுதல் மனவிரக்தியும் வெறுப்புற்றும் காணப்படுதல்
இது போன்ற பல்வேறுபட்ட முரண்பட்ட அறிகுறிகள் தென்படின் அவர் உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார் என நாம் முடிவு செய்யலாம்.
இதன் பிற்பாடு நாம் எவ்வாறு இத்தாக்கத்திலிருந்து அவர்களை வெளிக் கொணர காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கலாம். முதலில் பாதிக்கப்பட்ட மனதினை சிறிது சிறிதாக வழமை நிலைக்கு மாற்ற உதவலாம். அதாவது இவ்வாறான நிகழ்வு மீள நடைபெறாது அவர்களின் குற்ற உணர்வை காண் பித்து “ நீங்களும் வாழ வேண்டும்” எனும் திடத்தை அளிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கு மீள் அர்த்தத்தை கொடுக்கும் வகையில் எமது ஆற்றுப்படுத்தல் இருக்க வேண்டும் (Re assurence).
பாதிப்புக்குள்ளானவரின் மனதில் உள்ளவற்றை வெளிக் கொணர உரையாடல், எழுதுதல், வரைதல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி அவர்களின் மனப்பாங்கினை அறிந்து கொள்ளல். சிலர் கடலினை பார்ப்பதற்கே பயப்படுபவர்களாக காணப்படுவர். அவர்களுக்கு இலகு முறையிலிருந்து கடின முறைக்கான செயன் (gp60p60)u assiglds GasT(66856)ITb (Eesiest to hardest).
அதாவது அவர்களை அழைத்துச் சென்று கடலலைச் சத்தத்தைக் கேட்க வைத்தல், பிள்ளைகளை கடல் மணலில் கால் பதிய வைத்து மெல்ல அடியெடுத்து தண்ணிரை தொட்டுப் பார்க்கச் செய்து தொடுகை முறை உணர்த்தல் மூலம் அவர்களை இயல்பு வாழ்க்கைக்குள் கொணரலாம். படிமுறையாக மனதில் உள்ள பீதியை இதன் மூலம் அகற்றச் செய்யலாம். மேலும் கோபம் மற்றும் நச்சரிப்புக்கள், நித்திரையின்மை என்பவற்றுடன் காணப்படுபவர்களுக்கு உடல் ரீதியாக சில பயிற்சிகளையும் செயல் முறைகளையும் அளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அப்பாதிப்பிலிருந்து வெளிக் கொணர முடியும்.
இவற்றை விடுத்து சிலர் கவலையுற்று மதுவிற்கு அடிமைப்பட்டுக் இருக்கின்றனர். இவர்களை நன்றாக மனம் விட்டு
 
 

அழவிடல் வேண்டும். ஏனெனில் அழுவதினால் கவலையிலிருந்து ஆறுதல் பெறலாம். அதன் பிற்பாடு அவர்களை திசை திருப்பும் செயற்பாடுகளில் விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற இன்னோரன்ன செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் ஓரளவுக்கேனும் ஆற்றுப்படுத்தலாம். இவ்வாறாக மனரீதியான தாக்கத்துக்குட்பட்டவர்களை அவர்களின் சமூக நிலைக்கு ஓரளவேனும் கொண்டுவர முயற்சி செய்யலாம்.
எனவே, எம் மத்தியில் இவ்வாறு பாதிப்புற்றவர்களை கண்ணுற்று எம்மாலான ஆற்றுப்படுத்தல்களை செவ்வனே செய்ய முயற்சி செய்வோம்.
'நான் இன் மாணவர்களும்
மாணவர்களே!
தவற விடாதீர்கள்
- - 4ܨܗܶܕ݂ .99 یہ سائنسیسی ۔ உங்கள எழுததாறறலை வளாபபதறகு ôTGOT 蠶
உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தை தருகிறது. உங்கள் சிந்தனைகளை கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ அல்லது சிந்தனை தொகுப்புகளாகவோ எமக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் ஆக்கங்கள் உளம் சார்ந்தவையாக அமைந்து ஏனைய மாணவர்களின், வாசகர்களின் உள வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கட்டும்.
é.é
உங்கள் ஆக்கங்களுடன் உங்கள் பெயர், தரம் போன்ற விபரங்களோடு LETTLEFITGEDGOLífsrör பெயரையும் குறிப்பிடத்தி தவறாதீர்கள். 66 on ab: ஆசிரியர்
நான் உளவியல் சஞ்சிகை “மாணவர் மனதிலிருந்து” டிமசனட் குருமடம் கொழும்புத்துறை யாழ்ப்பாணம்.
ஆசிரியர்டா
ண்"

Page 18
திருமதிஎஸ்தேவிகா வவுனியா
மனிதனின் கட்டுப்படுத்தும் சக்தியை மீறி, சடுதியாக ஏற்பட்ட பாரிய உயிர், உடமை, உறைவிட அழிவுகளை நாங்கள் அனர்த்தம் என்று கொள்ளலாம். சுனாமி அலைகள், வெள்ளப் பெருக்கு, நில நடுக்கம், எரிமலை போன்றன இயற்கையின் சீற்றத்தால் ஏற்படுகின்ற அனர்த்தங்கள். விசவாயுக்கசிவு, அணுக்குண்டுத்தாக்கம் மற்றும் ஏனைய போர் அழிவுகள் மனிதனால் ஏற்படுகின்ற அனர்த்தம் ஆகும்.
அனர்த்தங்கள் எவ்வாறு ஏற்படினும் இவற்றின் சடுதித்தன்மை, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் இயல்பு போன்றன அந்தக் காலங்களில் தப்பிப் பிழைத்தவர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனித மனங்களிலே ஏற்படுகின்ற தாக்கம் நெருக்கீடாக உணரப்படும். தாக்கங்கள் பெரியவர்களை மட்டும் தான் பாதிக்கும் என தப்புக்கணக்கு போடக் கூடாது. எமது சிறுவர்களின் உள்ளங்களிலும் இது பெரிய காயங்களை ஏற்படுத்தும். சிறுவர்களின் உள்ளங்களிலே காயங்களை ஏற்படுத்திய காரணிகளாக கீழ்வருவன அமைந்திருக்கலாம்.
* உயிரிழப்பு
* காயங்கள் * பேரழிவுகளை நேரடியாக காணுதல் * இடப்பெயர்வு
* தனித்துப் போதல் * அகதி வாழ்க்கை * நிச்சயமற்ற நிலமை
சிறுவர்களை இவ்வாறான காலங்களில் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் மிகவும் கவனமாக கவனிக்க வேண்டும்.
 
 
 

உடனடியாக அந்த நேரங்களில் முதல் உதவியாக செய்யக்
* அவர்களின் உடனடித்தேவைகளை நிறைவு செய்தல்
(உணவு, உடை, உறையுள்) * அவர்களுடன் இருத்தல் (தனித்து விடாது) * உணர்சிகளை வெளிப்படுத்த விடுதல் (அழுதல்) * அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படல்
(பாடசாலைக்கு போக மறுத்தால் அதை வற்புறுத்தாது விடல்) * அனர்த்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு விஞ்ஞான
ரீதியாக விளக்கம் கொடுத்தல். * பெற்றோரை இழந்த சிறுவர்களை அவர்களின் நெருங்கிய
உறவினர்களோடு சேர்ந்து இருக்கச் செய்தல்.
பிள்ளைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் போது அவர்களிடம் சிறிய காலத்திற்கு வழமைக்கு மாறான செயற்பாடுகள் காணப்படும்.
$ பயங்கர கனவு காணுதல், நித்திரைக்குழப்பம் அடைதல். 9 பழைய விடயத்தை அனுபவிப்பது போல் இருத்தல்.
(சுனாமியில் அகப்படுவது போல்) 9 அழுவது, கோபப்படுவது, ஒதுங்கி இருத்தல். 9 மலசலக் கட்டுப்பாட்டை இழத்தல். * மழலைச் சொல் பேசுதல். )ே உணவில் விருப்பம் காட்டாமை. * உடல் முறைப்பாட்டு நோய்கள் கூறுதல் (தலையிடி, வயிற்று வலி உண்மையாக நோய் இருக்காது ஆனால் அவர்களுக்கு அப்படி இருக்கும்). 8 பெற்றோரை இறுக்கப்பிடித்தல் (தனித்து போக விருப்ப
இல்லை). 9 அனர்த்தம் நடை பெறுவது போல மீள விளையாடுதல்
(பல தடவைகள்).
இவை அசாதாரண சூழ்நிலையில் சாதாரண சிறுவர்களுக்கு ஏற்படும் அசாதாரண நிலை. இதை வைத்து குழந்தைகளுக்கு நோய்களின் பெயரை சூட்டத் தேவையில்லை. இவை சில காலங்களின் பின் படிப்படியாக குறைவடையும். இதற்காக நாம் சில செயற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கிறது. அது பிள்ளைக்கு உடனடியாக வலியை தந்தாலும் பின்னர் பிள்ளை குணமடைய இது நிச்சயம் உதவும்.

Page 19
* பிள்ளைகளுக்கு இழப்பின் உண்மை நிலையை கூறுதல்.
(அம்மா இறந்து இருந்தால் எப்படி இறந்தார் என நேரம் திகதியோடு கூறுதல்)
* இழப்புக்களைப் பற்றி பிள்ளைகளோடும் கதைத்தல். (அவர்களைக் கதைக்கும் இடத்தில் வைத்திருத்தல்)
சமயக் கிரிகைகளை நடாத்துதல் (இறந்தவர்களின்) உடனிருந்து அவர்களின் கதைகளை உற்றுக் கேட்டல்.
(பிள்ளை விரும்பும் போது)
கவர்ச்சியான விளையாட்டு உபகரணங்களை பாவித்து விளையாடச் செய்தல் (வெற்றி தோல்வியற்ற விளையாட்டுக்கள்) அக அமைதிப் பயிற்சிகள் செய்தல் (தியானம், சுவாசப் பயிற்சி) உணவுகளைச் சமநிலைப் படுத்தும் வெளிப்பாட்டு முறை சிகிச்சை செய்தல் (பாடுதல், ஆடுதல், கதை சொல்லல், சித்திரம் வரைதல்)
இவற்றைச் செய்யும் போது பிள்ளைகளிடம் தாங்கும் சக்தி ஏற்பட நிறைய சர்ந்தப்பம் கிடைக்கின்றது. சிறிய காலத்தின் பின் சிறுவர்கள் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். சில சிறுவர்கள் அதில் இருந்து விடுபட முடியாது மிகவும் பதகளிப்புடன், மனச்சோர்வு உள்ளவர்களாக, கல்வியில் ஆர்வம் காட்ட முடியாது இருந்தால் அவர்களை ஒரு உளவளத்துணையாளரோடு கதைக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பது மிகவும் நல்லது.
 

ஆழிப்பேரலையில் ஆழப்பதிந்தவை.
LITT & Guasis Tafear
கண்டி
ஓர் உளவியலாளனின் பார்வையில் உணர்வுகளினதும் வார்த்தைகளினதும் முழு வடிவம் தான் மனிதன். மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் இவ்விரு எண்ணக்கருத்துக்களும் வளர்க்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும். எம் நாட்டில் மட்டுமன்று ஆசியப் பிராந்தியத்தின் பெரும் பகுதியைத் தாக்கிய சுனாமியால் பெரும் பொருட்சேதத்தை விட மனித உயிர் சேதம் அதிகமானதாக இருப்பது நம் எல்லோரும் அறிந்த உண்மை. இதிலும் உயிர் தப்பியோர் பல பக்கங்களாலும் குழப்பப்பட்ட நிலையில் இருப்பதும் நாம் தெரிந்த ஒன்றே. இது ஒரு வழமைக்கு மாறான நிகழ்வு, அசாதாரணமான ஒரு நிகழ்வு, எதிர்பார்க்கப்படாத ஓர் நிகழ்வு, எதிர்வு கூற முடியாமல் போன ஒரு சம்பவம். எனவே இதை எதிர் கொண்டதில் மன வடு (Mental Trauma) தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
“கடலப் பாக்க என்னவோ செய்யுது” “கடல்ல கால் வைக்க கூசுது' “இந்தக்கடலா இப்படி செய்தது” “இனி யார நம்பி வாழுறது”
ஆழிப்பேரலையின் ஆழமாகப் பதிந்த மனவடுக்களின் எதிரொலி தான் இவைகள். இவர்களின் இந்த தயக்கத்திலே, அதிர்ச்சியிலே, பயத்திலே ஏக்கத்திலே நாம் இரண்டு வகையான உண்மைகளைக் காண்கின்றோம். ஒன்று இயலாமை (nability) மற்றயது மன அழுத்தம் (Depression). உளவியலாளர்களின் கருத்துப்படி இவ் மன வடு ஆனது ஓர் உறவுசார்ந்த உணர்வு சார்ந்த குழப்பமாகும். இது உயிருக்காக போராடும் ஒருவரை நேர் கண்ணால் பார்க்கும் போது ஏற்படுகின்றது. அநேகமானோர் ஆழிப்பேரலையில் சிக்குண்டு தவித்ததைக் கண்டிருக்கிறார்கள். தந்தை பிள்ளைகளையும், மகன் தாயையும் அலை அடித்துச் செல்வதை கண்டுள்ளார்கள். எனவே தான் ஆழிப்பேரலையில் இது ஒர் ஆழப் பதிந்த உளவியல் தாக்கம் எனலாம். ...

Page 20
இன்னும் மேலாக ஆழிப் பேரலையில் அகப்பட்டவர்களோடு உரையாடுகின்ற போது அவர்கள் தங்களது பரிதாபக் கதையை சொல்லும் போது நாம் அவதானிப்பது என்னவென்றால் அது (5sbptugust.0TfG). Testb (Guilt feelings).
“என்னக் காப்பாற்ற வந்ததால நான் அவர. (அழுகை)
“என்ர பிள்ளயஸ் இரண்டையும். வீட்டுக்குமேல ஏத்தியிராவிட்டால். “என்ன பெத்த அம்மா என்ன பாத்து காப்பாத்து எண்டு அழேக்க. “என்ர மகன நான் தானே வீட்ட நிக்க சொல்லிட்டு கோயிலுக்கு போனான்.
இவர்களின் அழுகையின் ஆதங்கம் என்ன? இதன் வெளிப்பாடு என்ன? இது 905 வகையில் குற்றப்பழியுணர்வே இதன் விளைவு தான் அமைதியின்மை, அங்கலாய்ப்பு. இப்போ மட்டக்களப்பு கரையோர மக்கள் இரவு நேரங்களில் கடற்கரை ஓரங்களில் “காப்பாத்துங்கோ” என்ற 9t(g6085 குரலோசை சத்தத்தை கேட்பதாக ஒரு நண்பர் சொன்னார் அதற்கு உளவியல் ரீதியாக சொல்லப்போனால் குற்றப்பழியுணர்வும்
ஒா காரணமாகும். இவ்வாறாக ஆழிப்பேரலையில் ஆழப்பதிந்தவற்றிலிருந்து மீள்வதற்கு நாம சிலவற்றை கடைப்பிடிக்கவேண்டும், சில இப்பாதிக்கப்பட்ட மககளுககு
கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.
* பாதுகாப்பு:- இனி இப்படியான ஒரு அனர்த்தம் எமக்கு இல்லை என்ற அளவிற்கு ஓர் உத்தரவாதம் ஓர் உறுதிமொழி அவற்றிற்கான ஏற்பாடுகள்.
* ஆதரவு இவர்களுக்கு எங்காவது ஆதரவு தேவை. அது
தனி நபர் அல்லது உறவாகவோ சமய சமூக உறவாகவோ ஆதரவாகவோ இருக்கலாம்.
* சமய சமூக கலாச்சார சடங்குகள்: இப்படியான
நிகழ்வுகளை நடாத்துவதும் அவற்றில் இப்படியான மக்களை உள்வாங்குவதும் சிறந்ததாக அமையும்.
இவை இப்படியாக ஆழப்பதிந்துள்ள தாக்கங்களில் இருந்து மேல் வர உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இவற்றை அனுசரிப்பதில் முக்கியமாக நான்கு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
 
 

(1) (gp6) (Environment) "N (2) சமூகம் (Society) ܘܢ” (3) மதமும் அதன் சடங்குகளும் (Religion affitices) (4) s 6T6 u6) sessibgpu(6556) (Psychological counselling)
இவ் நான்கு காரணிகளதும் செயற்பாடுகள் அப்படியான ஒரு நிலையில் தேவையானதும் அவசியமானதுமாகும். எனவே காலத்தின் தேவைக்கேற்ப எம் சேவையை வழங்கி தளர்ந்து போன கைகளை திடப்படுத்தி தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்தி எங்கே இவர்கள் வாழ்வுப் பயணம் தடம் புரண்டதோ அங்கேயிருந்து ஆரம்பிக்க பாதிக்கப்பட்டவர் என்றாலும் சரி பாதிக்கப்படாதவர் என்றாலும் சரி முயல்வோம். அந்த முயற்சி திருவினையாக்கும்.

Page 21
இண்னொரு சுனாமி வேண்டாம்
s
து
போதுமென்று எண்ணுகின்றோம்
கடலன்னையே உன்னிடம் மண்டியிட்டு நாம் வேண்டுகின்றோம் எம் வாழ்வில் இன்னொரு சுனாமி வேண்டாம்
கமேரி அருள்மதி யாழ். பல்கலைக்கழகம்.
நல்மனமுடையோர் சிலர்
சொல்லும் சொல்லுக்கு உண்டு
பொருள். பலதரப்பட்ட கண்கள் எல்லாம் தொலைக்கப்பட்ட மக்களுக்கு வலிந்து துன்பம் தருவது தவிர்த்திடுவோம்.
லூா. ஜீவலோஜின
 
 
 
 
 
 

GRGURULđãGaGut GSIGNINGEaGTG.
2004 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது முப்பத்தியாறு மணியளவில் கடலன்னை வயிற்றிலிருந்து பெரும் அதிர்ச்சியுடன் பிறந்த அரக்கனே! gist f(3u
நீ பிறந்தது இந்த உலகத்தின் உயிர்களைக் காவு கொள்ளத்தான் என்பது எமக்குத் தெரியும். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அதிர்வெனும் உயிர்கொடுத்து அலையரக்கனாக வந்து எம்மவரை காவு கொண்டதுடன் உன் வாழ்நாளும் அழிந்துவிட்டது. ஆனால் அன்று நீ தந்த அலைகளின் அதிர்வுகள் இன்னும் வடுக்களாக எம்மோடு தொடர்கின்றன.
நீ வந்ததன் விளைவு நிலமகள் தன் வளத்தினை இழந்தாள், களையிழந்தாள், அவள் காத்து வந்த செல்வங்கள் எல்லாவற்றையும் காவு கொண்டு போனாய், இன்னும் ஓடைக்குள், ஓலை மட்டைக்குள், சுவருக்குள், பாறைக்குள் என பல இடங்களிலும் உயிரினின்று விடுதலைபெற்றுக்கொண்ட மனித சடலங்களின் எச்சங்களைக் காண முடிகின்றது. இன்று எத்தனையோ குழந்தைகள், தந்தையை, தாயை, அண்ணனை, தங்கையை, என்று பலி கொடுத்து அந்த ஏக்கம் தாங்காமல் வாழ்கின்றார்கள். எத்தனையோ தாய்மார்கள் கணவனை இழந்து, குழந்தைகளை இழந்து, உள்ளத்தினைப் பறிகொடுத்து,
உளநோயாளிகளாகி தெருத்தெருவாய் அலைகின்றார்கள்.
இப்படி உறவுகளை இழந்து உண்ண உணவின்றி, அகதிகளாக அகதி முகாம்களில் வாழ்க்கை நடாத்தும் சோகக்கதைகள் சொல்லில் அடங்காதவை. அதைவிடப் பொருளாதாரம், கலை, அரசியல், கல்வி, கலாச்சாரம், ஆன்மீகம், என பல்கிப் பெருகியிருந்த அத்தனை துறைகளையும் அழித்துச் சென்றாயே. எத்தனையோ ஆலயங்களை இருந்த இடம் தெரியாமல் அள்ளிக்கொண்டு சென்றாய். மீனவர்களின் படகுகள், மற்றும் சொத்துக்களை அழித்தொழித்தாய். உல்லாசப் பயணத் துறையை நிலைகுலைத்தாய். அழகிய கலைச் சிற்பங்களை சிதைத்தெறிந்தாய். இன்னும் எத்தனை எத்தனை அத்தனையும் எம்மவர் மனங்களில்

Page 22
ஆழப்பதிந்துள்ளன. அன்றைய அழுகுரல்கள் எத்தனை நெஞ்சங்களை நிலைகுலையச் செய்தன.
அதன் விளைவாக இன்னும் உன்பெயரால் வதந்திகள் பரவிக்கொண்டேயிருக்கின்றன. வாழ்வின் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் எங்களைத் தாலாட்டி இளைப்பாற்றிய கடற்கரையையும், நாங்கள் கால்கள் நனையக் குதித்து கும்மாளம் போட்ட கடல் அன்னையையும் பார்க்கும் போது இன்னும் எமக்கு சொல்ல முடியாத பயப்பிராந்தியை ஊட்டுகின்றது.
உத்தம குணம் படைத்த கடலன்னை வயிற்றில் நீ உதித்ததனால் அவ்வன்னைக்கே அவப்பெயர் உண்டாக்கிவிட்டாயே. உன் நினைவு இரவில் நித்திரையில் வந்து பயமுறுத்துவதால் எம்மில் பலர் துாக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கின்றனர். உன் பெயரைக் கேட்டாலே குழந்தைகள் பயந்து நடுங்குகின்றனர்.
இந்நிலையில் நிவாரணங்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், அவர்களின் உளத்தினை மேம்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது உனக்கே புரியும். உளவள ஆற்றுப்படுத்தலும், பயிற்சிகளும் அவர்களை பழைய நிலைக்கு கொண்டு வர முடியுமா என்ற கேள்வியுடன் நாட்கள் நகருகின்றன.
எனவே si6OTITLEGuit உனக்கொரு வேண்டுகோள் விடுக்கின்றேன், கேள்! நீ மீண்டும் கடலன்னை வயிற்றில் கர்ப்பம் தரிப்பதாய் இருந்தால் எமக்கொரு முன்னறிவிப்புச் செய். உலகுக்கு ஒளி காட்ட வந்த பாலன் யேசுவே எம்மக்களுக்கு நட்சத்திர வடிவில் முன்னறிவிப்புச் செய்திருந்தார். அவர் பிறந்த மறுநாள் எம்மையெல்லாம் அழிக்க பிறந்து நீ எமக்கோர் அறிவிப்புச் செய்யக்கூடாதா? உன்னை நாம் சுவாமியாக நினைத்துக் கேட்கின்றோம். மீண்டும் எம் நாட்டுக்கு வந்து எம்மையெல்லாம் அழித்து விடாதே. வருவதாயினும் முன்னறிவிப்புச் செய்யாமல் எம்மை வந்து கொல்லாதே.
 
 

9.0° ஏற்படுத்திய அதிர்வலைகள்
26.12.2004 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை அனுபவம் எமக்கு முற்றிலும் ஒரு புதிதான ஒன்றாகும். எவருமே எதிர்பாராத ஒரு நேரம் அது. ஒரு சிறு நொடிப் பொழுதிற்குள் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறித்துச்செல்லப்பட்டன; உறவுகள் பிரிக்கப்பட்டன; குழந்தைகள் யாரும் இல்லா ஜீவன்கள் ஆக்கப்பட்டன; உடமைகள் பறிக்கப்பட்டன; வீடுகள், ஏனைய கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின; மீனவர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டன; மாணவர்களின் கல்வி ஊசலாட்டம் கண்டது; நேரில் கண்டவர்கள்; அதற்குள் மூழ்கி உயிர் பிழைத்தவர்கள் பலவாறெல்லாம் இதனைப்பற்றி பேசுவதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் நாம் அறிவோம்.
இத்தைய அழிவுகளை ஏற்படுத்திய இந்த ஆழிப்பேரலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிய புவியியல் ஆராய்வாளர்கள் பல விளக்கங்களை முன் வைத்தார்கள். சுமாத்திரா தீவுகளில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் விளைவாக இந்த ஆழிப்பேரலை உருபெற்றதென நாம் அறிவோம். சில மணித்தியால இடைவெளிகளுக்குள் இந்த ஆழிப் பேரலை இலங்கையையும் மிகவும் கொடுரமாக தாக்கியது. சுமாத்திரா தீவில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி 90 றிக்டர் அதிர்வு அலகாக உணரப்பட்டது.
எம் ஒவ்வொருவர் மத்தியிலும் இந்த 9.0 என்ற இலக்கம் அறிமுகமான ஒன்றாக இப்போது உள்ளது. ஏனெனில் அந்த 9.0 புவியதிர்வு எம் மக்களின் வாழ்க்கையிலும் சொல்லமுடியா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் மறக்க முடியாத ஒரு வரலாறாக இந்நிகழ்வு மாறிவிட்டது. என்பது தான் உண்மை.
இதுவரைக்கும் 96).5 வரலாற்றிலே இத்தகைய பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய புவியதிர்வு பற்றிய தகவல்கள் இங்கே s தொகுத்து தரப்படுகின்றது. இவையனைத்தும் இயற்கை
அனர்த்தங்களே. இவற்றால் உடைந்து போன உள்ளங்களுக்கு மனப்பலத்தை, வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுக்கும் எமது
கரங்களைக் கொடுப்போம். இது எமது கடமையாகும்.

Page 23
அதிர்வு
இல திகதி இடம் வீதம் இறப்பு 1. 18.04.1960 சன் பிரான்சஸ்கோ,
அமெரிக்கா 7.8 3.000
2 17.08.1906 வல்பராய்சோ, சில்லி 8.2 20,000 3 28.12.1908 மெசினா, இத்தாலி 7.2 70,000 4 16.12.1920 நிங்சியா, சீனா 8.6 200,000 5 01.09.1923 கன்ரோ, யப்பான் 7.9 143,000 6 07.03.1927 ரங்கோ, யப்பான் 7.6 3,020 7 22.05.1927 சிங்காய், சீனா 7.9 200,000 8 15.01.1934 பிகார், இந்தியா 8.1 10,700 9 26.12.1939 அறிசிங்கன், ரேர்க்கி 7.8 32,700 10 29.02.1960 அஜமர், மொறக்கோ 5.7 10,000 11 22.05.1960 சில்லி 9.5 5,700 12 31.03.1970 பேரூ 7.9 66,000 13 04.02.1975 கய்ஜென், சீனா 7.0 10,000 14 04.02.1976 | (885[TL"LLDT6v) 7.5 23,000 15 27.07. 1976 ரங்சன், சீனா 7.5 255,000 16 19.09. 1985 மிக்கோக்கன்,
மெட்சிகோ 8.0 9,500 17 07.12.1988 பிற்ரக் ஆர்மோனியா 6.8 25,000 18 129.09.1993 லுாத்தர், இந்தியா 6.2 9,748 19 16.06.1995 கோப், யப்பான் 6.9 5,502 20 17.08.1999 சிமித, ரேக்கி 7.6 17,118 21 26.01.2001 குயராத், இந்தியா 7.7 20,085 22 26.12.2004 சுமாத்திரா,
இந்தோனேசியா 9.0 150,000?
 
 

வெளிவந்த "காதல்’ என்ற ார்க்க நேர்ந்தது. மெக்கானிக்காக தொழில் புரிடிம் முருகனும் கல்லுாரியில் கல்வி கற்கின்ற ஐசு’ என்கின்ற இளம் பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி முகம் கொடுக்கும்
அவஸ்த்தைகளையும் நண்பனின் உதவியோடு திருமண பந்தத்துள்
ழைய முற்படுவதையும் அதன் பிற்பாடு அவர்களின் பெற்றோரால்
கொடுரமாக பிரிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதையும்
அலைவதை மிகுந்த அவலச் சுவையோடு "காதல்" என்கின்ற
திரைப்படம் மிகத் தத்ரூபமாக எடுத்துக் காட்டியது. இயக்குனர் கூட இது ஓர் உண்மைச்சம்பவம் 665 சுட்டிக்கட்டியமையால் திரையரங்கை விட்டு வெளியேறிய போது அல்லது TV இல் படம் பார்த்து முடிந்த போது இரசிகர்கள் தங்களது அடைக்கும்
|துக்கத்தோடு கண்களில் அரும்பிய கண்ணிரைத் துடைத்தே இருப்பார்கள் என்ஐ நம்புகின்றேன்.
காதல் தவறா? காதல் தவறு என்று Mர் சொன்னது? காதல் தவறானால் இவ்வுலகில் உயிர்கள் தோன்றுவது ஈட்டி? என் அன்பன சிநேகமே காதல் ஒரு வகை உணர்வு. அது எப்போது எங்கு யாரில் உருவாகுமென்று யாருக்கும் தெரியாது. காதல் என்ற மின்சாரம் வயது, சாதி, அழகு, வாழ்வு நிலைகள் அனைத்தையும் தாண்டி பாயக்கூடியது. காதல் யாரிலும் வரலாம், யாருக்கும் வரலாம். காதல் உணர்வு உனக்குள் ஊறிவிட்டால் நீயே ஓர் வித்தியாசத்தை உனக்குள் உணர்வாய்.

Page 24
சரஸ்வதி வந்தவர் போல் நீ கவிதைகள் புனையக்கூடும். அழகனாய், அழகியாக மாற அடிக்கடி கண்ணாடி தரிசிக்கக் கூடும். சினிமா பாடல் வரிகளை உன் வாய் முணுமுணுக்கக் கூடும். உன் காதலுக்கு எதிரான வில்லன்களை வில்லிகளை உன் மனம் சபிக்கக் கூடும். தனிமைக்குள் இனிமையைத் தேடக் கூடும். கற்பனை உலகுள் | அடிக்கடி புகுந்து கொள்வாய். உன் காதலனுக்கு/காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என அடிக்கடி எண்ணத் தொடங்குவாய். உன் காதலன்/காதலியுடைய வார்த்தைகளே வேதமாக" உனக்குத் தோன்றும்.
காதல் வயப்பட்ட சிநேகமே சில சிந்தனைகள்
தெரிவு உண்கையில் காதல் ஒரு வகை உணர்வு. நீ பருவமடைந்து வளர்ச்சியடைகின்ற
செய்திராத ஒருவரை நீ காதலிக்க கூடும். அவர்/அவள் இல்லாமல் நீ வாழ முடியாது என்று எண்ணி தவிக்கக்கூடும். இருப்பினும் நீ காதலிக்கப் போகிறாயா, அல்லது காதலை பிற்போடப் போகிறாயா, அல்லது உனக்கு சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்துவிட்டாயா என நீ தான் மிகத் தெளிவாக நிதானமாக பக்குவமாக சிந்திக்க வேண்டும். ஏனென்றால் வாழப்போகிறவர் நீ. எனவே தெரிவு உன் கையில்.
சிலவேளை ஏற்கனவே நீ காதல் வயப்பட்டிருக்கக் கூடும். ஆதலால் நிதானமாக உன்னால் சிந்திக்க முடியாமல் இருக்கலாம். ஆண்கயால் நீ மதிப்புவைத்திருக்கின்ற, நம்புகின்ற அநுபவம் மிக்க உனக்கு உதவக் கூடிய யாரிடமாது உன்னுடைய மனக்கஷடங்களை சொல்லி ஆலோசனை பெற முயற்ச்சிக்கலாமே. இது சில வேளை நிதானமற்ற, பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உன் முடிவுகளை மாற்ற உதவக்கூடும்.
யாரையாவது ஆலோசிக்கலாமே
கலியானம் கட்ட ஒழப்போவோமா?
எம்முடைய சமூகமும் சில மதங்களும் இத்தைகைய நிலைகளை இதுவரை முழுமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் இத்தைகைய நிலைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. இந்த |'ஓடிப் போகின்ற நிகழ்வினை நான் முற்று முழுதாக குற்றம் |
சாட்டவில்லை. மாறாக வேறு அணுகு முறைகளை பயன்படுத்தனைால்
 
 

?)“)?))"
இப்பிரச்சனைக்கு சுமூகமாக முடிவை எடுக்கலாம். சிலவேளை “ஓடிப் போகின்ற" நிகழ்வினால் (சிலவேளை ஓடிப்போகாமல் நடந்தோ, பஸ்சிலோ அல்லது சைக்கிளிலே செல்லக்கூடும்) சில பின் விளைவுகள் ஏற்படலாம். உன் பெற்றோருக்கு அவமானம், உன்
8. தடைப்படக்கூடும், உன் பாடசாலைக்கு அவப்பெயர்,
நரம்பில்லாதவர்கள், தலை இருந்தும் பாவிக்காதவர்கள், கொஞ்சக்
| காலத்துக்கு உன் பெயரை தங்கள் உரையாடலுக்குள்ளே அடிக்கடி
இழுத்துக்கொண்டிருப்பார்கள். ஆக உனது ஓடிப்போகின்ற நிகழ்வை ஆமோதிப்பவர்கள் ஒரு சிலராகவும் அது பற்றி வேறுபட்ட கருத்துக்கள் வைத்திருப்போர் பெரும்பான்மையாகவும் இருப்பர்.
"ஒழப்போக" தீர்மானித்து விட்டாயா? “። அவரது (காதலன்) குடும்ப நிலவரம் தெரியுமா? உன்னைக் காப்பாற்றக் கூடிய தகைமையில் (வேலை) அவர் இருக்கிறாரா? அவரது குடும்பத்தில் அதிகமான பொறுப்புக்கள் (அதாவது கரை சேர்க்கப்படாத பெண்கள், அவர் உழைத்து காப்பாற்ற வேண்டிய பெற்றோர், கல்விக்கு உதவி செய்யப்படவேண்டிய தம்பி, தங்கையர்) உள்ளவரா? ஏனென்றால் நிதானமற்ற உங்கள் முடிவினால் மேற்சொல்லப்பட்டவர்கள் கூட பாதிப்படையக்கூடும். திருமணத்திற்கு ஏற்ற உடல் உள ஆன்மீக முதிர்ச்சியை அவர் பெற்றிருக்கிறாரா? சீரியஸாக உன்னைக் காதலிக்கிறாரா? (ஏனென்றால் ஏமாற்றப்பட்ட பெண்களையும், குழந்தைகளோடு தனித்து வாழும் பெண்களையும், தற்கொலை Gauluu முனைந்த பெண்களையும் நான் சந்தித்திருக்கிறேன்)
உனது காதலியை, அவளது குடும்ப நிலவரங்களை தெரியுமா? அவளது குடும்பம் ஊரிலே மரியாதை நிறைந்த குடும்பமா? (ஏனென்றால் உங்களது முயற்சியால் அவர்களது குடும்பமானமே கப்பலேறிவிடும்) அவள் திருமண பந்தத்துள் நுழையக்கூடிய உடல் உள ஆன்மீக முதிர்ச்சியை வளர்ச்சியை பெற்றிருக்கிறாளா? நல் மனைவியாக உன் தேவைகளைக் கவனித்து உனது குடும்பத்தோடு ஒத்துப்போகக் கூடியவளா? திருமணம் பற்றி அவளுக்கு ஏதாவது தெரியுமா? உண்மையில்ேயே அவள் உன்னைக் காதலிக்கிறாளா?
சகோதர சகோதரிகளுக்கு அவமானம், அவர்களுடைய திருமணம்
பணிபுரிகின்ற இடத்துக்கு அவப்பெயர், உன் பெற்றோருடைய | வளர்ப்புமுறைகளை கூறி நான்கு பேர் கதைக்ககூடும். நாக்கிலே
"* vi

Page 25
காதல் வயப்பட்டவர்களே நீங்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. அதனை விடுத்து உங்கள் காதலர் ஒடுகின்ற புதுரகமோட்டார் சைக்கிளிலோ, ஹாண்ட் போனிலோ, ஸ்ரைலிலோ, கவர்ச்சியான பேச்சுகளிலோ, உங்களை பின்னால் துரத்துகின்ற பாணிகளிலே கவரப்பட்டு வீடாதீர்கள். உங்கள் காதலிகள் அணிகின்ற விதம்விதமான சுடிதாரிலோ, ஸ்கூட்டிகளிலோ மந்திரப்புன்னகையிலோ மயங்கி விடாதீர்கள்.
நஞ்சு துாக்காதீர்கள்
உங்கள் காதல் தோற்றால் தற்கொலைக்கு துணியாதீர்கள். நீங்கள் சாவதற்கு துணிகின்ற உங்கள் துணிச்சலை உங்கள் வாழ்வுக்கு காட்டுங்கள். வாழ்வதற்கு வெவ்வேறு முறைகள், பாதைகள் இருக்கின்றன. ஒரு வாசல் மூடி மறு வாசல் திறப்பான் இறைவன். நான் காதலை எதிர்க்கும் வில்லன் அல்ல. காதலித்து திருமணம்
முடித்து சந்தோஷமாக வாழுகின்ற குடும்பங்களைப் பார்த்திருக்கறேன். அதே வேளை காதலால் சீரழிந்து, பிரிந்து, கையில் குழந்தையோடும், விரக்தியோடும், தாடியோடும்
நடமாடுகின்றவர்களையும் சந்தித்திருக்கிறேன். இவை உங்களுக்கு நேரக்கூடாதென்றே விரும்புகிறேன்.
கல்லுாரிப் பெண்ணே/ஆணே - உன் கல்வியைக் காதலி கல்வி தவிர்த்து காதலில் ஈடுபட்டு - உன் கல்வி தொலைத்து காதலையும் இழக்காதே
உனக்கென ஒருவன் ஒருத்தி - இந்த உலகத்துள் உதித்திருக்கிறான்/ள் உன்னை உருவாக்கிய இறைவனுக்கு உன்னை கரை சேர்க்க சந்தர்ப்பம் கொடு
நடந்தவை அனைத்தும் நன்மைக்கே நடக்கப் போகிறவை அனைத்தும் நன்மைக்கே நடக்க வைப்பவர் இறைவன் நடக்க வேண்டியது உன் பொறுப்பு.
சிநேகமுள்ள சிநேகமே சிந்தனை செய் பக்கசார்பற்ற நிலையில் சிந்தனை செய் நல்ல சிந்தனைகள் உன்னை நல்வழிப்படுத்தும் உன் வாழ்வில் ஒளிக்கீற்றுக்கள் உதயமாகும்
நற்சிந்தனை தர உன்னோடு நான் நடக்கின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடுத்த “நான்’தாங்கிவருவது
மனம் சாய்ந்தால்.
உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும்
உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 20.06.2005 க்கு முன்னர் அஞ்சலிடுங்கள்.

Page 26

s