கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2007.07-09

Page 1

8.
% MMMMM ^ 0.
線 繳
雅

Page 2
நான்
உளவியல் சஞ்சிகை
LD6)f: - 32
இதழ்: - 03 ஆடி-புரட்டாதி 2007. விலை: 25/=
உள்ளே
> ஆசிரியர் இதயத்திலிருந்து
> மகிழ்ச்சியைஅறுவடை செய்யும்.
>உளவியல் பற்றி உங்களுடன் > தயவுசெய்து கோபப்படுங்கள் > சிறுவர்களின் வளர்ச்சிப்படிகள் > என்னைப் பாராட்டமாட்டீர்களா >உறவுப்பற்றுக் கொள்கை > சிந்தனைத் துளிகள் >நாவிற்கு விலங்கிடு >திருப்தி என்பது.
X இன்றையசமூகத்தில்உளவியல்.
> மன அழுத்தத்தை புரிந்து. >வெறி
>நூல் நுகர்வு
> வன்முறையற்ற தொடர்பாடல்
“NAAN' TamilPsychologicalMagazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jaffna, Sri Lanka,
Te: 021-222-5359
ஆசிரியர்:- GFU6mlorfuj6ór O.M.I
இணையாசிரியர்:- பொன்சியன் O.M.I.B.Th.B.A.(Hons), Dip.in. Ed
ஒருங்கிணைப்பாளர்:- öfl6ÜG)6)J6müLff O.M.I. STL.
நிர்வாகக்குழு;- அ.ம.தி இறையியல் சகோதரர்கள் (3uJIT FILIT6)IT.
ஆலோசனைக்குழு:
(8LLfuj66, O.M.I.M.A.
LT66su6) O.M.I., M.A GeF6)6Og'600TLb O.M.I., Ph.D. Prof. N. 3F60öT(p356ól Élebb Ph.D Dr.R. dolytilesir M.B.B.S
360TT H.C Dip in Counselling,
236)|6015T6) O.M.I., B.A.(Hons), Dip.in. Ed. 236)||TI(3UT6) O.M.I., M.Phil.
*நான்” Lọ LD5F60Ti (G5(bLDLLD, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம், இலங்கை.
தொ.பே 021-222 5359

・リ ・エ一“
மெளனம் கலையுங்கள்?
*
அன்பு நெஞ்சங்களே!
தினம் தினம் எம் வாழ்வில் புதிய சவால்கள் புதிய புதிய தேவைகள் உருவாக புதிதாய் எழும் நாட்டுச்சூழல் மத்தியில் மெளன கலாச்சாரங்கள் மேலும் அழுத்தங்களாகி விட்டன. உள நெருக்கீடுகள் ஏதோ வகையில் பல வழிகளில் தொடர் பூடகங்களாலும், சமகால நடைமுறைகளாலும் தனிநபர் குடும்பம் சூழலில் ஏற்படும் அவலங்களை எதிர்கொள்வோர் மத்தியில் நான் உங்கள் நண்பன்ாக, நல்ல சோதரனாக, நல்ல உளவளத் துணையாளனாக உங்கள் கரங்களில் இன்று தவள்கின்றான். இக்காலத்தின் தேவை கருதிய கருத்துக்களை உள்ளடக்கி உள்ளத்துள் எழும் எண்ண அலைகளை தெளிவான சிந்தையுடன், தோழமையான நல்லுறவுடன் நம்பிக்கை வாழ்வுக்கு நகர்ந்து செல்ல அழைக்கின்றான். நீங்கள் ஓர் நம்பிக்கையூட்டும் பணியில் ஈடுபட சவால்களை எதிர் கொள்ள அசாதாரண சூழலையே சாதாரண வாழ்வாக்கி வாழ்வின் அர்ாத்தம் தேடும் பொழுதுகளாக்கி மெளனத்திலிருந்து விடுபட்டு நம்பிக்கையான வாழ்வைக் கட்டியெழுப்பும் நல்ல பல கருத்துப்பரிமாற்றத்திற்குள் ஒருவர் மற்றவரின் கருத்தாடல்களால் நான் வளர்ந்து நாம் மகிழ்வடையும் பணிகளால் ஒன்றிணைய, உளம் ஆறுதல்பெற அன்பு நெஞ்சங்களை அழைக்கின்றான்.
ச.மரிய செபஸ்ரியண் அ.ம.தி.
நான் . . . Sọ — LIJITALITÉS 2007

Page 3
மகிழ்ச்சியை அலுவடைStre விழிமுறைகள்
S. அல்பேட் றிகன் உளவியல் சிறப்புத் துறை (நான்காம் வருடம்)
. யாழ்.பல்கலைக் கழகம். நாம் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வையே எப்போதும் விரும்புகின்றோம். பால்குடிக்கும் மழலைக்கும் கல்லைறையை எதிர்கொள்ளும் வயதானோருக்கும் முக்கியமாகத் தெரிவது மகிழ்ச்சி நிறைந்த வாழ்வே. அதாவது மகிழ்ச்சியாய் இருப்பதே வாழ்வின் முக்கிய இலக்கு என்பது உண்மை. ஆனால் இது படிப்படியாகக் கற்றுத் தெளியும் ஒரு கலை. மகிழ்ச்சியான வாழ்வுக்கான சில கருத்துகளைக் கீழே பார்ப்போம்
1. தீர்மானம் எடுத்தல்: எந்தச் சூழலிலும் நான் மகிழ்ச்சியாக
இருப்பேன் என உறுதியான தீர்மானத்தை மனத்தில் எடுக்கும்போது அது எம் மனநிலை, மனப்பாங்கு நடத்தை என்பனவற்றை நிர்ணயிக்க ஆரம்பிக்கின்றது. எனவே மகிழ்ச்சியாக இருக்கத் தீர்மானம் எடுத்தல் முக்கியமானது. நாம் மகிழ்ச்சியாக இருக்கத்தீர்மானித்தால் பல சாதாரண அனுபவங்களே மகிழ்ச்சி தருவனவாக அமையும். காலையில் உண்ணும் உணவு ருசியையும், குளிப்பு புத்துண்ர்ச்சியையும், குழந்தையின் வஞ்சகமற்ற மனத்தைப் பார்க்கும்போது மனம் பூரிக்கும், அழகிய இயற்கைக் காட்சி மனதிற்கு இரம்மியம் கொடுக்கும், எமது அறையை ஒழுங்காக்கித் துப்பரவாக்கிய பின் ஏற்படும் மகிழ்ச்சி. இவ்வாறு எல்லையின்றி விரிந்து செல்லும். ஆனால் இவையெல்லாம் மகிழ்ச்சி தரும் அனுபவங்கள் என்று நாம் நினைப்பது குறைவு. ஆனால் நாம் இல்லாத்துக்காக ஏங்கி மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்கின் றோம். “எனக்கு நிறையப் பணம் கிடைத்தால் சந்தோசமாக
இருப்பேன்.” “எனக்கு நல்ல சுகம் கிடைத்தால் மகிழ்ச்சியர்க இருப்பேன்’ "கணவன் என்னைச் சரியாகப் புரிந்து நடந்தால் எவ்வளவு சந்தோசமாயிருக்கும்”. S' 6T60 எண்ணற்ற
ஏக்கங்களை வளர்க்கின்றோமே தவிர கிடைப்பதை இரசித்து மகிழ்வதில்லை. எனவே எக்கட்டத்திலும் சந்தோசமாக இருக்க உறுதியான தீர்மானம் எடுப்பது முக்கியமானது.
2. இறைவனுடன் உறவுநிலையிலிருத்தல்: இறைவன் என்னை அன்பு செய்கின்றார். எனக்கு ஆறுதல் தருகின்றார், என்னை
2
நான் ஆடி - புராட்டாதி 2007

வழிநடாத்துகின்றார் என்ற உணர்வே நமக்கு உண்மையான மனஆறுதலைத் தருகின்றது. "வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பது மில்லை. அவற்றை விட நீங்கள் மலானவர்கள் அல்லவா’ என்று இறைவனின் பாராமரிக்கும் கரங்கள்பற்றி அழகாகக் கூறுகின்றார் இயேசு (பைபிள். மத்தேயு 6:26) -
பிறரை மகிழ்வித்தல்; பிறரை மகிழ்ச்சிபடுத்த நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பொருத்தமானதாக அமைகின்றபோது நிச்சயம் நாமும் மகிழ்ச்சியாகவே இருப்போம். இதுவே. மகிழ்ச்சியோடு வாழச் சிறந்த வழியென்று சந்தேகம், ஏதுமின்றிக் கூறலாம்: "யாராவது ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த உங்கள் ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணியுங்கள்; உங்களை நோக்கி மகிழ்ச்சி நிச்சயம் தேடி ஓடிவரும்.” நேப்போலியன் கில், கிளமண்ட் ஸ்டோன் ஆகியோர் கூறுகின்றனர். நல்ல திறமைகள், குணங்கள், தோற்றம், சாதனைகளை பிறரில் காணும்போது மனமுவந்து பாராட்டுவது கேட்பவருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் மகிழ்ச்சி தரும். அத்தோடு அவர்களும் மீண்டும் உங்களையும் பாராட்டும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பிறந்த நாட்கள், திருமணநாட்கள். முக்கிய நாட்கள், வெற்றி பெற்ற நாட்களில் அன்பளிப்புகள், ! வழங்கும்போது நிச்சயம் பெறுபவர் மாத்திரமல்ல உங்கள் மகிழ்ச்சியும் பெருகும். நன்மை செய்தவர்களுக்கு நன்றி காட்டுவதனை நேரடியாகச் செய்யும் போது அல்லது கடி தத்தில் எழுதும்போது நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவீர்கள்
அர்த்தமுள்ள உறவுகளைக் கட்டி எழுப்புதல்: உறவுகள் அர்த்தம் கொடுப்பதாக நல்ல நோக்கங்கள், பண்புகள், நடத்தைகள் என்பன நிறைந்திருக்கும்போது மகிழ்ச்சி வந்தே தீரும். பரஸ்பரம் அன்பு காட்டுவது, அன்பு உன்னத ஊற்று என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். உற்வுகளை அறுத்து மகிழ்ச்சியாக இருக்க நினைப்பது முடியாத விடயம். அன்பானது பயிர் போன்றது. அது பசளையிடப்பட்டு தண்ணியூற்றி வளர்க்கப்படும் நல்ல கனிதரும் மரம் போன்றது. தொடர்ந்து பேணி வளர்க்கப்பட வேண்டியது.
சிரிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளல்; கவலையில மூழ்க மூழ்க சுயபரிதாபம் எம் மனதிற்குத் தீனியாகும்போது
நான் 31 ۔-- ஆடி புராட்டாதி 2007

Page 4
படிப்படியாகச் சிரிக்க மறந்துவிடுகின்றோம். நகைச்சுவை நிறைந்திருக்கச் சிரிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது! நகைச்சுவைப் படங்கள் பார்ப்பது, பகிடித்துணுக்குகளைப் படிப்பது நகைச்சுவைநிறை நண்பர்களுடன் கூடியிருப்பது
சிரிக்க வைக்கும் மனதில் மகிழ்ச்சியை பெருகச் செய்யும்.
மகிழ்ச்சி நிறை மனப்பாங்கு படிப்படியாக உங்களில் படியத்
குழந்தைகளைப் பார்த்து அவர்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். புன்னகைத்த வண்ணம் உங்களை கண்ணாடி யிலே பாருங்கள் அதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
தொடங்கும். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு “மீண்டும் மீண்டும் சிரிப்போம்” என்பதே. நினைத்து மகிழ்வதற்கும் சிரித்து மகிழ்வதற்கும் நம் வாழ்வில் நிறைய உண்டு. சிரித்து வாழத் தீர்மானிப்பது உடனடியாகத் தேவைப்படும் முக்கியமான விடயமாகும். நகைச்சுவையாகப் பேசுபவர்களைப் பெரும்பாலானோருக்குப் பிடிக்கும். நகைச்சுவையான உரை யாடல் முறை பிறரைமட்டுமல்ல நமக்கும் மகிழ்ச்சி தரும் ஊற்றாக அமைகின்றது என்பதை உணர்ந்து நகைச்சுவையை வளர்க்க முயற்சிக்க வேண்டும். பகிடித்துணுக்குகளைப் படித்து இரசிப்பது மனதில் பதிப்பது நல்லது.
யதார்த்தமான உயர்வு மனப்பாங்கு: நான் ஒன்றுக்கும் உதவாதவன். நான் பலவீனமானவன். என் வாழ்வில் எல்லாம் தோல்விதான் போன்ற சிந்தனைகள் நிச்சயம் மகிழ்ச்சியைக் கெடுக்கும். எனவே எம்மிலுள்ள இயற்கையான ஆற்றல்கள், கற்றுக்கொண்ட புதிய திறன்கள், ஆளுமையிலுள்ள நல்ல பண்புகள், நல்ல பழக்கங்கள் என்பனவற்றையும் கருத்தில் எடுத்து நம்மைப் பற்றிய யதார்த்தமான உயர்வு மனப்பான்மை கொண்டிருத்தல் மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்.
அடைந்ததில் திருப்தி: மனநிறைவு என்பது பழக்கத்தில் உருவாக்க வேண்டியது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது தமிழ்ப் பழமொழி. அதாவது திருப்தியான மனமே சிறந்த சொத்து என்ற கருத்தே இதில் மறைந்து நிற்கின்றது. நாம் நம்மிலுள்ள சிறந்தவைகளை அடையாளம் கண்டு மகிழ்ச்சியடைவதை விட நம்மிடமில்லாததைப் பிறரில் கண்டு ஏங்கிக் காலத்தை வீணடிக்கின்றோம். இதனால் நம் திறமைகள் வளர்க்கப்படாததால் மகிழ்ச்சிக்கான வாய்ப்புக் களை நழுவ விட்டுவிடுகின்றோம். "நாம் வைத்திருக்கும்
நான் ۔ 4 ۔ ஆடி - புராட்டாதி 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருட்கள் நம்மை அதிகம் சந்தோசப்படுத்துகின்றது. நம்மிடமுள்ளவை மற்றவர்களை அதிகம் சந்தோசப்படுத்து கின்றது” என ஓர் அறிஞர் நகைச்சுவையாக எம் திருப்தியற்ற மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
8. எதிர்மறை உணர்வுகளைக் களைதல்: எதிர்மறையான உணர்ச்சிகளை இதயத்தில் சுமந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ நினைப்பது இயலாத விடயம். எமது மகிழ்ச்சியைக் கொல்லும் புற்றுநோய்கள் பயம், கவலை, சுயபரிதாபம், எரிச்சல், பொறாமை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளே.
எனவே துணிவு தரும் நினைவுகள், மகிழ்ச்சியான
அனுபவங்கள், 3iuUTUT L6b, மனஓய்வுபெறல், பிறரில் நல்லதைக் கண்டு பாராட்டல் என்பன நம் மகிழ்ச்சியைப் பெருக்கும் வழிகளாகும்.
9. ஒய்வு எடுத்தல்: போதிய ஒய்வு, உறக்கம், மனதுக்குப் பிடித்த நல்ல பொழுதுபோக்குகளில் FFGUL6) மனம் S L6) இரண்டுக்கும் ஆழமான ஓய்வைத் தருவதோடு உடலின் கலங்களைப் புதுப்பிக்கின்றது, புத்துணர்ச்சியைத் தருகின்றது. இதில் கவனம் செலுத்தாதபோது சிடுசிடுப்பும் உள-உடல் இறுக்கமும் ஏற்பட்டு நிம்மதியும் உறவும் குலைகின்றது.
இவற்றைவிட இன்னும் பல வழிகள் இருப்பினும் முக்கியம் என்று கருதுவதையே தந்துள்ளேன். மகிழ்ச்சியோடு நீங்கள் வாழ என் அன்பு வாழ்த்துகள். *鯊黜
உசாத்துணை நூல்கள் -
1. லில்லியன் எயிஷ்வர் வாட்சன். தமிழில் . உதயகுமார்(2004), விளக்குகள் பல தந்த ஒளி, சென்னை: கண்ணதாசன் பதிப்பகம். 2. காப்மேயர், எம். ஆர். தமிழி
PURUA பதிப்பகம் 3. மேக்ஸ்வெல் மால்டஸ். தமிழில் தர்மகிர்த்தி (2004). மனம்
ல் கணேசன், பி. சி. (2004). கள், சென்னை: கண்ணதாசன்
4. Reichenbach (Translator).(1994). The Book on Happines. California:
Kober Press. -
- 薄薄
நான் 5- ஆடி - புராட்டாதி 2007

Page 5
: ab
வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது நண்பியின் தந்தையைப் பார்க்க வென நானும் நண்பியும் சென்றி ருந்தோம். ஏதிர்பாராதவிதமாக நோயாளரைப் பார்வையிடும் நேரத்துக்கு அதிகம் பிந்தி பி.ப. 2.30 மணிக்கே சென்றடைந்தோம். அந்நேரத்தில் அனுமதிக்கமாட்டார் கள் என்பது மட்டுமல்ல பெண்கள் ஆண்களது வாட்டுக்குப்போவது என்பது (plgud Tg5 35.Tflub. எம்மைப்போல் பிந்தி வந்த பலர் ஏக்கத்தோடு காத்துக்கொண்டேயி ருந்தார்கள். நண்பி சொன்னாள் “போய் நாளை வருவோம்” என்று. “ஒரு முறை முயற்சித்துப் பார்ப் போம்” என்று நான் பதிலளித் தேன். காவலாளி வயது குறைந் தவர். அவரை அணுகி அவரை சேர் என்று மரியதையோடு குறிப் பிட்டு எமக்கு எதிர்பாராது ஏற்பட்ட தடையைப் பணிவோடும் வருத்தத் துடனும் விளக்கினோம். அவரும் நமது நிலையைப் புரிந்து அனுமதி வழங்கினார். நன்றி தெரிவித்து விட்டு மகிழ்ச்சியோடு வாட்டுக்குச் சென்று திரும்பினோம். U6) முயன்றும் கிடைக்காதது நமக்கு எப்படிக் கிடைத்தது என்று நீங்கள் நினைக்கக் கூடும். சமூக உளவியல் கற்றதன் விளைவுதான் இது. அதாவது சிறந்த முறையில்
eeLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLAS
உவுவில்லி பற்றி உங்களுடன்.
8 SLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLq
0
பாமினி பாலகிருஷ்ணன்
இவ்வாறு சிறந்த முறையில் தொடர்பாடும் திறன்கள் (Communication Skills) 916)6Og5 6.66(p60s usbab Gig5 TLF LITL6t) (Non-Violent Communication or Compassionate Communication) போன்ற உளவியல் விடயங்களைக் கற்று வாழ்வில் கடைப்பிடிக்கும் போது நமது பலவிடயங்கள் சுலபமாவதோடு உறவுப் பிரச்சினைகளும் குறைந்து நிம்மதி பிறக்கும். மேலும் உளவியலின் பல விடயங்களைக் கற்று நம் அன்றாட உறவுகளிலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கடைப்பிடிக்கும்போது அது நம் குடும்ப அல்லது சமூக உறவு களை மேம்படுத்துவதோடு மன நிம்மதியோடும் மகிழ்ச்சி யோடும் வாழ வழியமைக்கும். இதனால் நம் வாழ்வு உண்மையி லேயே வீண் சிக்கல்கள் அற்ற இனிய பூங்காவாக மாற்றமுறும்.
உளவியல்: மேற்கு நாடுகளின் பல துறைகளுக்குப் பங்களிப்புச் செய்துவருகின்றது. அது பிரயோக g) 6T6 u6) (Applied Psychology) என்னும் வகைக்குள் அடங்குகின் றது. உளஆற்றுப்படுத்தல், கல்வி உளவியல், விளையாட்டுத்துறை உளவியல், வணிக உளவியல், நிறுவன உளவியல் என்பன சில உதாரணங்களாகும். இன்று அங்கு உளவியலைக் கருத்தில் எடுக்காத
தொடர்பாடல் பற்றி நாம் படித்
வாழ்வியல் g5 6013 எனறு திருந்தமையே காரணம். எதுவுமில்லை என்றே கூறலாம். அவ்வளவிற்கு அதன் அவசியம்
நான் ஆடி - புராட்டாதி 2007

உணரப்பட்டுப் பயன்படுத்தப்படுகின் நிது.
இலங்கையைப் பொறுத்த வரையில் இத்துறையின் அவசியம் LT6)6OT35 உணரப்படுகின்றது எனக் கொள்ளலாம். உளவியல் வெளி யீடுகள் புற்றீசல் (Surrou புறப்படுவதைக் காண்கின்றோம்.
உளவியலின் வரைவிலக்கணம்
உளவியல் என்றால் என்ன? உயிரியின் நடத்தையை
சூழலில் வைத்து விஞ்ஞான ரீதியாக ஆராயும் துறையே உளவியல் உயிரி எனும்போது அது மனிதர் விலங்குகள் என்பனவற்றைக் குறிக்கின்றது. இங்கே நடத்தை எனும்போது உயிரியின் உளச் செயல்கள், நடத்தைகள், உணர்ச் சிகள் என்பனவற்றை உள்ளடக் குகின்றது. நடத்தையானது ஒரு சூழலிலேயே நிகழ்வதால் அதற்கே உரித்தான சூழலில் வைத்து ஒரு உயிரியைப் பற்றிக் கற்பதே சரியான அறிவைத் தரும். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இது
ତୂ(b அதன்
மனித நடத்தைகள், உளச்செயற் шт(Вањ6i என்பனபற்றிய 69(5 கற்கை நெறியாகும். இது இன்பமான, துன்பான உணர்வுகள், உந்தல்கள், ஊக்கிகள்பற்றியும் அவற்றை நல்ல முறையில் 60)85uist (6 bib முறைகளையும்
எடுத்துக் கூறுகின்றது.
தாய் தந்தையரின் ஒவ் வொரு நடத்தையும் குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் எவ்வாறு
ஆகும். ਅ
பள்ளிப்பருவத்தைக் கடந்து சிறகடித்துச் சிட்டாய்ப் பறக்கும் பதின்வயதிலேற்படும் உடல், உள மாற்றங்களையும் அவற்றைச் சிறப்பாகக் கையாளும் முறை களையும் எடுத்துக்கூறித் தவறான முடிவுகள் எடுக்காது காத்து விடுகின்றதும் உளவியல்தான். இளைஞர் யுவதிகள், நட்பு காதல் அனுபவங்களை வளர்ச்சிதரும் முறையில் கையாளும் முறை களையும் கற்றுத் தருகின்றது. தம்பதியர் மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கை அமைத்துக் குதுர கலிக்க உதவக்கூடியதும் உளவி uj6) g5T66.
ஒன்றுக்கும் உதவாத ஆள் என்ற தவறான எண்ண்ங் களைக் களைந்து தன் திறன்கள், ஆற்றல்களை அடையாளம்கண்டு தன்னை உயர்வாக மதித்து மகிழ்ச்சியோடு வாழத் துணை செய்யக்கூடியதும் உளவிய லேயாம். இவ்வாறு உளவியலின் பயன்பாட்டை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
பைத்தியக்காறர், மனநோ யாளருக்கே உளவியல் தேவை யானது என்ற தவறான கருத்து நம்மத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும். உளவியல் அனை வரது உள்ளங்களையும் நடத்தை களையும் வளப்படுத்தும் விஞ்ஞா னம் தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும்போதுதான் இது துரித வளர்ச்சியடையும் என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே உளவியலானது வாழ்வை வளம் படுத்தும் ஒரு துறை என்பதைப்
செல்வாக்குச் செலுத்துகின்றது புரிந்து ஏற்றுப் பயன்பெறுவதே என்பதை வெளிப்படுத்துகின்றதும் பொருத்தமானது. உளவியல்தான். துள்ளித்திரியும் 薄囊
நான் - 7 - ஆடி - புராட்டாதி 2007

Page 6
தயவு செய்து கோபப்படுங்கள்
உ. சிவநாதன்
உளவளத்துணையாளர்.
கோபப்படுங்கள். என்ன ஆச்சரியமாக இருக்கா? பொருத்தமான வேளையில் கோபப்படலாம். அந்த வகையில் கோபம் கூடாத உணர்ச்சி அல்ல வேண்டியதும்கூட. ஆனால்
சூரியன் மறையும் முன் கோபமும் மறையவேண்டும். கோபத்தோடு படுக்கைக்குச் செல்லாதீர்கள். குழந்தைகள் தம் கோபத்தை தாம் பிறந்து மூன்றாம் மாதத்திலேயே வெளிப்படுத்தத் தொடங்கு கின்றது.
கோபிக்காமல் இருப்பதும் நோய், பொருத்தமின்றிக் கோபப்படுவதும் நோய். நம்மைக் காக்கும் நல்ல கவசமாக கோபம் விளங்குவதுண்டு. கோபத்தை மனதுள் புதைத்து மூடிமறைத்தோமானால் அது பல உடல் உள நோய்களுக்குக் காரணமாகி விடுகின்றது. மாரடைப்பு, குடற்புண், சரும நோய்கள் என்பன அடக்கப்பட்ட கோபத்தால் தோன்றக் கூடியவை.
அடக்கிவைக்கப்பட்ட கோபம் பின்வரும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படும்.
9 தப்பெண்ணம்
மிகுதியாகக் குறைகூறல் * பகைமையை நெஞ்சில் வளர்க்கும் நல்லதில் நம்பிக்கையற்றுக் காணப்படல் அலட்சியப் பேச்சு சந்தேகம் சுயநலத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தல் பிறரை எளிதில் புண்படுத்தல் பிறரை அச்சுறுத்தி தன் காரியம் பார்த்தல் அடையமுடியாக் குறிக்கோள்களை அடைய முயல்தல்
நான் t --8- ஆடி - புராட்டாதி 2007

கோபத்தைச் சீராகக் கையாளப் பின்வரும் முறைகளைப்
பயன்படுத்தலாம் -
இறைவன் நம்மைக் கவனிக்கின்றார் என்ற எண்ணங்கள் உங்கள், மனதில் ஒடட்டும் இறைவனுக்கு நன்றி கூறிப் பிரார்த்தியுங்கள் தியானம் செய்யுங்கள் கோபப்படுத்தியவர்கள் நலத்தோடு வாழவேண்டும் எனப் பிரார்த்தியுங்கள் விருப்பமான புத்தகத்தை எடுத்து வாசியுங்கள் நுாறிலிருந்து பின்னோக்கி எண்ணத் தொடங்குங்கள் புதிய ஒரு வேலையில் ஈடுபடுங்கள் மனதுக்குப் பிடித்த பாடல்களைக் கேளுங்கள் கோபத்தை ஏற்படுத்திய நபருக்குக் கடிதம் எழுதி அதைக் கிழித்தெறிந்துவிடுங்கள்
நகைச் சுவைத் துணுக்குகளைப் படித்து வயிறு குலுங்கச் சிரியுங்கள்
இனிமையான நினைவுகளை மனதில் ஓடவிடுங்கள்.
கோபம் என்பது அலிம்ை. அது எறியப்படும் இடத்தைவிட, இந்திக்கொண்டிருக்கும் கசைந்தையே
கிளென்டல்
நான் - 9 - ஆடி - புராட்டாதி 2007

Page 7
சிறுவர்களின் வளர்ச்சிப் படிகள்
அ. அஜந்தன் சிறுவர் திட்ட முகாமையாளர் கரித்தாளில் - கியூடெக்
கரித்தாஸ்-கியூடெக் நிறுவனத்தால் விசேட தேவையுள்ள ஏழு சிறுவர்களுக்கு விசேட இருக்கைகள் வழங்கும் நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய டாக்டர் மருதனார் இத்தகைய குழந்தைகள் பிறப்பதற்கு மிக நெருங்கிய இரத்த உறவினரைத் திருமணம் செய்வது, தாய் கருவுற்றிருக்கும்போது தொற்று நோய்க்குள்ளாவது, போசக்குக் குறைவு, கற்பத்தடை மாத்திரைகளை உட்கொள்வது என்பன காரணிகளாக அமைகின்றன எனக்குறிப்பிட்டார். எனவே இதுபற்றி மக்களிடையே போதியளவு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தினார். இக்கட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி சிந்திப்பது பொருத்தம் எனக் கருதுகின்றேன்.
சிறுவர்களின் வளர்ச்சி நான்கு நிலைகளுக்குள் அடங்குகின்றது.
படிநிலை: பிறப்பிலிருந்து 2 வயது வரை-இயக்கப் புலன் புத்திக் கூர்மை விருத்தி படிநிலை232 தொடக்கம் 7 வயதுவரை-ஆரம்பச் செயற்பாட்டு சிந்தனை விருத்தி படிநிலை3:7 தொடக்கம் 11 வயதுவரை-உறுதியான செயற்பாட்டுச் சிந்தனை விருத்தி படிநிலை4:12 வயதுக்கு மேல்-சாதாரண செயற்பாட்டுச் சிந்தனை விருத்தி.
சிறுவர்களின் அபிவிருத்தி மூன்று பிரதான விடயங்களில் தங்கியுள்ளது.
1. உடல் வளர்ச்சி
2. உள, உணர்ச்சிரீதியான மாற்றங்கள்
3. சமூக இசைவாக்கம்.
மேலுள்ள மூன்று பிரதான விடயங்களும் கீழ்க்காணப்படும் ஒன்பது உபவிடயங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
1.பரம்பரையும் சூழலும்; பிள்ளையின் வளர்ச்சியில் பரம்பரையும் சூழலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை வளர்ச்சியின் பின்புலமாக
இருந்து செல்வாக்கு செலுத்துகின்றன. இதில் அறிவுத்திறன்,
உடலியல் மற்றும் இயக்க அபிவிருத்தி என்பனவற்றிலும் பரம்பரை செல்வாக்குச் செலுத்துகின்றது.
நான் ۔ 10 ۔ ஆடி - புராட்டாதி 2007
 
 

2. உடல் வளர்ச்சி. ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் சராசரி நிறை ஏறக்குறைய 3 kg. அதன் சராசரி நீளம் 53 cm அதன் வளர்ச்சி முதல் 3 வருடங்களில் துரிதமாக இருக்கும். பின்னர் கட்டிளம் பருவத்திலும் இத்தகைய துரித வளர்ச்சி இடம்பெறும்.
3. இயக்கச் செய்ற்பாடு: இது முதல் இரு வருடங்களில் நடைபெறும். இவ்வியக்கச் செயற்பாடு ஒன்றோடொன்று தொடர்பற்றதாகக் காணப்படும். பின்னர் தெறிவினையான செயற்பாடுகள் இடம்பெறும். பெரும்பாலான பிள்ளைகள் 13 தொடக்கம் 15 LDIT5 காலத்தில் நடக்க ஆரம்பிக்கின்றது.
4.மொழி: குழந்தை மொழியைச் சரியாகப் புரிந்து முதல் சொல்லைப் பேசுவதற்கு கிட்டத்தட்ட 12 மாத காலம் எடுக்கும். இரண்டு வயதில் அது 270 சொற்களைப் பேசும் ஆற்றல் கொண்டிருக்கும். ஆறு வயதில் 2600 சொற்களைப் பேசக்கூடிய நிலையை அடையும். ஆனால் இவை ஒரே மொழியில் அமைந்திருப்பதே சாத்தியமாகும். 3 தொடக்கம் 5 வயதில் சரியான வசனங்கள் அமைத்துப் பேசத் தொடங்கும்.
5. ஆளுமை விருத்தி: இங்கு ஆளுமை என்பது எவ்வாறு பிள்ளை தன் உடல், உளத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நடந்து கொள்கின்றது என்பதைக் குறிக்கின்றது. தனக்கு ஏற்படும் முரண்பாடை எவ்வாறு தீர்த்துக் கொள்கின்றது.? எப்பொழுது இது சாத்தியமாகும்? ஏன்பதை அறிய முற்படும் சந்தர்ப்பத்தில் அதன் ஆளுமை விருத்தியடையும். -
6. அறிவுத்திறன்: அறிவுத் திறனில் பரம்பரை சூழல், மொழி வளர்ச்சி, பண்பாடு என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன. சிறப்பான கற்பித்தலின்மூலம் அறிவுத்திறன் மேம்படும்
7. குடும்ப உறவு: பெற்றோரின் குணங்கள், மனப்பாங்கு, மதிப்பீடுகள், நடத்தைகள் என்பன பிள்ளையின் குடும்ப உறவில் செல்வாக்குச் செலுத்துகின்றது. மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகளுக்கு பெற்றோரின் கவனமும் அக்கறையும் அதிகளவு தேவை. பிள்ளைகளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும் போது அவர்களது ஆளுமை எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
8. சமூக உறவு: பிள்ளைகளின் சமூக உறவாடல் பாடசாலை செல்லுமுன் ஆரம்பித்துப் பாடசாலையில் வளர்ச்சி காண்கின்றது,
9. சமூகமயமாதல்: எந்தெந்த நடத்தை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப் படுபவை, எவை ஏற்றுக்கொள்ளப்படாதவை என அறிந்து அதற்கொப்ப நடத்தலே சமூக மயமாதலாகும். பிறரை அவதானிப்பதன் மூலமும் தனக்கு வழங்கப்படும் வெகுமதி தண்டனை என்பனவற்றின் அடிப்படையிலும் இவற்றை கற்றுக்கொள்கின்றன.
நான் - - ஆடி - புராட்டாதி 2007

Page 8
என்னைப் பாராட்டமாட்டீர்களா?
வரதராசா சசிகுமார் (ஆசிரியர்)
பிறரைப் பாராட்டுவது என்பது சமூக உறவாடலில் மிக முக்கிய விடயமாகும். உளஆரோக்கியத்தோடு இணைந்ததாகவும் இது விளங்குகின்றது.
சிறுவர் தொடக்கம் முதியோர்வரை தாம் பாராட்டப்படுவதை மனதார விரும்புகின்றனர். "நீ அழகாக இருக்கின்றாய்.” * உன் சாரி உனக்கு நல்ல அழகாக இருக்கு’, ’ நீ நல்ல இனிமையாய் பாடினாய்.” போன்ற பாராட்டுகளைக் கேட்கும்போது உள்ளம் இனிக்கின்றது.
கணவன் மனைவி உறவிலும் பாரட்டு மிக முக்கியமானது. பலர் இதை மறந்து விடுகின்றனர். “நீ சமைத்த சாப்பாடு மிகவும் நல்லாயிருக்கு, என்பது மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும், “நீங்கள் வாங்கித் தந்த சாரி எனக்கு நல்லாய் பிடிச்சிருக்கு’ என மனைவி கூறுவது கணவனுக்கு இனிக்கின்றது. பாராட்டி வாழும்போது கணவன் மனைவி உறவு உறுதியடையும்.
பாராட்டானது பலரது ஆற்றல் வெளிக்கொணரப்பட முக்கிய பங்காற்றுகின்றது. இளம் மாணவர்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்போது கல்வியில் அவர்களுக்கு அதிக ஆர்வம் பிறக்கின்றது.
பாராட்டலை உடனுக்குடன் வழங்குவது முக்கியமானதாகும். இது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிறந்த மாணவனை உடனுக்குடன் பகிரங்கமாகப் பரிசில் வழங்கிப் பாராட்டும்போது அவர் தன் வாழ்வில் முன்னேறவேண்டும் என்ற ஆள்வத்தை அதிகரிப்பதாக அமையும். காலம் கடந்து சில பாரட்டுக்கள் விரும்பிய பலனைக் கொடுப்பதில்லை. தண்டனையை விட பாராட்டலே அதிக பலனைக் கொடுக்க வல்லது என்பதை மறக்கக் கூடாது. பிறர் முன் விமர்சித்துத் தண்டனை கொடுப்பதைவிடப் பிறர் முன் பாராட்டுவது விரும்பிய பலனைக் கொடுக்கும்.
எனவே ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மனிதர்களில் நல்லது எதையாவது அடையாளம்கண்டு பாராட்டத் தொடங்குங்கள் உசாத்துணை
1. நான் சிறப்பிதழ் - பங்குனி-சித்திரை 2006 2. நான் - இலக்கமைத்தல் - புரட்டாதி. ஐப்பசி 2005 3. சின்னத்தம்பி அறிகை உளவியல் 4. ச. முத்துலிங்களம். கல்வி உளவியல்
நான் ۔ 12 ۔ ஆடி - புராட்டாதி 2007

அருள்திரு. இராசேந்திரம் ஸ்ரலின் (M.Sc. Guidance & Counselling)
அறிமுகம் கார்ளோவும் சிம்மர்மானும் (Harlow & Zimmerman, 1959) குரங்குக் குட்டிகளில் செய்த ஆய்வில் கம்பிகளால் செய்யப்பட்ட தாய்க்குரங்கிடம் பால், உணவு என்பன கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது அதனிடம் போய் அவற்றை உண்டு தமது தேவையைப் பூர்த்திசெய்தன. ஆனால் பின்னர் அருகே மென்மையான துணியால் செய்யப்பட்ட தாய்க்குரங்கின் அணைப்பிலேயே பெரும்பான்மையான நேரத்தை கழித்தன. இவ்வாய்வானது மிருகங்கள்கூட தாயின் இதமான அணைப்பினையே விரும்புகின்றன என்பதை வெளிப்படுத்தியது. (Mary Ainsworth), (John Bowlby), (Bartholomew). (M. Horowitz.), (Harry Harlow) 235(3uJITs66, ஆய்வானது குழந்தைகளின் ஆளுமை எவ்வாறு தாயின் அணைப்பில் மலர்கின்றன என்பதை வெளிப்படுத்தின. உணர்வுரீதியான பற்றுறவே ஒருவரின் வாழ்விற்கு முக்கிய அர்த்தம் கொடுக்கின்றது என போல்பி நம்பினார். பிள்ளை தன் பெற்றோர் அல்லது முக்கிய பராமரிப்பாளருடன் கொள்ளும் உறவானது அதன் ஆளுமை உருவாக்கத்தில் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது என்று உளவியலாளர்கள் முன்வைத்த ଗ0[[T. -
பற்றுறவு வரைவிலக்கணம் 1. ஒரு பிள்ளைக்கும் அதன் பராமரிப்பாளருக்குமிடையே நிலவுகின்
மிக நெருக்கமான உணர்வுபூர்வமான உறவே பற்றுறவாகும். 2. சூழலை ஆராயும் நடத்தையையும், சூழலைக் கையாளும் திறனையும் ஊக்குவிக்கும் தன்மையுடைய நீடித்த உணர்ச்சிரீதியான உறுதிகொண்ட உறவே பற்றுறவாகும்.
உறுதியான பாசப்பற்றின் விளைவுகள் 1. பெற்றோருடனான பற்றுறவானது பிள்ளையின் அன்பு நெருக்கத் தேவை, ஆறுதலையும் ஆதரவையும் நாடல், சூழலை ஆராய்வதற்கும் அதனை நல்லமுறையில் கையாள்வதற்கும் தேவையான பாதுகாப்புணர்வுத் தேவை என்பனவற்றைப் பூர்த்தி செய்ய வல்லது.
2. இப்பற்றுறவானது ஆரோக்கியமானதாகவும் உறுதியானதாக வும் அமையும்போது அது பிள்ளைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கின்றது. அப்பாதுகாப்பு உணர்வைப் பெறுகின்றபோதே தன் சூழலை ஆராயும் துணிவைப் பெறுகின்றது. இவ்வாறு ஆராயும்போது தன் முக்கிய நபரை இடையிடையே திரும்பிப் பார்த்தவண்ணம் தொடர்ந்தும் தன் ஆராய்வு முயற்சியில் ஈடுபடும். ஆனால் தனது
நான் 13 ՑllԳ புராட்டாதி 2007

Page 9
உடலியல் அல்லது உளவியல் பாதுகாப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுவதாக உணரும்போதோ உடனே பராமரிப்பாளரிடம் ஒடி வந்து விடும். தான் பராமாரிப்பாளரால் பாதுகாக்கப்படுவேன் என்ற உணர்வு திரும்பவும் ஏற்படும்போது மீண்டும் சூழலை ஆராயத் தொடங்கும். இவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உறவுமுறையானது S) 6T6 gig56) (b. 9, 16s) 6TLDT.g5four (Working Model or Mental Representation or Template) LILņÜLJIọU JITG5 SÐ L(56ITä5G5aÉl6örgBg5. Abg5 உறவுஉளமாதிரியானது பிள்ளையின்
3. வளர்ச்சிப் பருவம் ஒவ்வொன்றிலும் உருவாகும் உறவுகளில் செல்வாக்குச் செலுத்தும். அதாவது அந்த முக்கிய நபருடன் கொண்ட பற்றுறவு போன்றதாகவே, காதலன்-காதலி அல்லது கணவன். மனைவியுடன் கொண்டிருப்பர். இந்த உறவுஉளமாதிரி பொரும்பாலும் மாற்றமடைவதில்லை. イリ。
4. பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் தாம் எவ்வாறு தம் பெற்றோரால் பாராமரிக்கப்பட்டாரோ அவ்வாறே தம் பிள்ளைகள்மட்டிலும் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த உறவுஉளமாதிரி சந்ததி சந்ததியாக இவர்களை அறியாமல் தொடர்கின்றது. பெற்றோர் தம் பிள்ளைகளோடு உறவாடும் முறை அல்லது பராமரிக்கும் முறை அவர்களைத் தம் சொந்தப் பெற்றோரின் பராமரிப்பு முறை, அல்லது உறவாடும் முறையை ஒத்ததாகவே அமைகின்றது.
பராமரிப்பும் பற்றுறவும் இக்கொள்கையின் அடிப்படைக் கருத்துகளை மூன்றாகப் பிரிக்கலாம்:
பராமரித்தல், பற்றுறவு என்ற இரு அம்சங்கள் இதில் நிகழ்கின்றது.
அதாவது பெற்றோர் பராமரிப்பதற்கேற்பவே அவர்கள்மீது பிள்ளைக்கும்
பற்றுறவு உருவாகும்.
1.பராமரிக்கும்முறை பிள்ளை தன் தேவையை வெளிப்படுத்தப்
பயன்படுத்தும் சமிஞ்சைகளை பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் சரியாகப் புரிவதும், உடனே அவற்றைப் பூர்த்திசெய்வதும் பிள்ளையின் ஆளுமை, நடத்தை என்பனவற்றை நிர்ணயிக்கின்றன.
2. பிள்ளையின் நடத்தையின் செல்வாக்கு: பாசப்பற்றுறவில் குழந்தையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பெற்றோருடன் நல்லமுறையில் நடக்கும் பிள்ளைகள் பெற்றோரில் நல்ல உறவு நடத்தையை உருவாக்கியது. இவ்வாறு பெற்றோர் நடத்தல் பிள்ளையில் இன்னும் அதிகளவான பாசப்பற்றை உருவாக்கியது. தன் பிள்ளை கரைச்சல் கொடுப்பதாக உணரும் தாய் அதைப் பராமரிப்பதில் குறைவான கவனமே செலுத்தத் தூண்டப்படுகின்றார். குறிப்பாக உறவுரீதியான நெருக்கீடுகளை
எதிர்கொள்ளும் தாய்மார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
நான் - || 4 |- ஆடி - புராட்டாதி 2007

3.பற்றுறவு: பராமரிப்பாளர் பிள்ளையோடு நடந்துகொள்வதற் கேற்ப, பிள்ளை நான்கு வகையான உறவுகளில் ஒன்றை அவருடன் எற்படுத்தும். இந்தப் பற்றுறவானது அந்நபரின் பராமரிப்பு முறைக்கேற்ப இருபெரும் பிரிவாக அமையும் பாதுகாப்புநிறை பற்றுறவு, பாதுகாப்பற்ற பற்றுறவு பாதுகாப்பற்ற பாசப்பற்றானது 3 வகைப்படும். கீழே அதன் விபரம் தரப்படும். பிள்ளைமீது காட்டப்படும் பாசத்திற்கு ஏற்பவே அதுவும் தன் பெற்றோர்மீது அல்லது பாராமரிப்போர்மீது உறவை வளர்த்துக்கொள்ளும் அல்லது தவிர்த்துக் கொள்ளும். பிள்ளையின் உதவிக்கான குரலை பாராமரிப்பாளர் சரியாக அடையாளம் காண்பது, அத் தேவையை உடனடியாகப் பூர்த்திசெய்வது, பிள்ளைக்கு ஆறுதல் அளிப்பது, பாசம் காட்டுவது என்பனவற்றின் அடிப்படையிலேயே பற்றுறவு அமையும். நல்ல முறையில் பராமரிப்பாளர் நடந்துகொண்டால் பிள்ளை ஒரு பாதுகாப்பான பற்றுறவைக் கொண்டிருக்கும். அதாவது பாசம், ஆதரவு பாதுகாப்புணர்வு என்பன கிடைக்கும்போது பாதுகாப்பான உறவைக் கொள்ளும், இவை கிடைக்காதபோது உறவை விலக்கும் போக்குடையதாக வளரும் சீரின்றி நேரத்துக்கு ஒரு மாதிரி மாறுபாட்ட விதமாக நடந்துகொள்ளும்போது பிள்ளை பாதுகாப்பற்ற பாசப்பற்று உறவையே கொண்டிருக்கும். 、 *
அண்மையிலிருத்தலின் முக்கியத்துவம் 徽獻 அண்மையிலிருத்தல் என்பது உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாக வும் அண்மையில் இருத்தலைக் குறிக்கின்றது. பராமரிப்பாளர் பிள்ளைக்கு வேண்டியளவு அண்மையில் இருப்பது முக்கியம். அவ்வாறு கிடையாவிடில், பிள்ளை உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் அவருக்கு நெருக்கமாக வர முயற்சிக்கும். அந்த நெருக்கம் கிடையாவிடில் பிள்ளை அச்சமடையத் தொடங்கும். அடிக்கடி இது நிகழும்போது பிள்ளை இழப்புணர்வுச் சோகத்திற்கு உள்ளாகி வருந்தும்.
பராமரிப்பு முறையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
1.பெற்றோரின் திருமண உறவின் தன்மையும் தன் பிள்ளைக்கு பாராமரிப்பு வழங்குவதை நிர்ணயிக்கின்றது. அதாவது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைந்து உளநெருக்கீடு அற்றதாக இருக்கும்போது பிள்ளையின் பராமரிப்பில் சரியாகவும் முழுமையாகவும் ஈடுபட வாய்ப்பு அதிகம். மாறாக கணவன்-மனைவி உறவு நெருக்கீடுகள்
நிறைந்ததாக இருக்கும்போது தாய்க்குப் பிள்ளையின் தேவைகளில்
கவனம் செலுத்தும் ஆற்றல் குறை வடைகின்றது. KUNA
2. தாம் வளர்க்கப்பட்ட முறைபற்றிச் சரியான அறிவு பெறும் பெற்றோர் தம் பிள்ளைகளை நல்லமுறையில் பாராமரிக்கத் தொடங்குகின்றனர் (Main et al. 1985). அதாவது தான் எவ்வாறு தன் பெற்றோரால் தவறாகப்
பராமரிக்கப்பட்டர் என்றும் அது எவ்வாறு தன் பிள்ளையைப்
நான் - 15 - ஆடி - புராட்டாதி 2007

Page 10
பராமரிப்பதில் குறுக்கிடுகிறது என்றும் உணரத்தொடங்கும் தாய்மார் அதைத் திருத்தித் தம் பிள்ளைகளைச் சரியான முறையில் பராமரிக்கத் தொடங்குவர்.
நான்கு 6.60)85UT60T பராமரிக்கும் முறைகளும் பற்றுறவு முறைகளும்
எயின்ஸ்வேர்த குழுவினரின் ஆய்வும் முடிவும்: மேரி எயின்ஸ்வேர்த் குழுவினர் (1978) தாய் பிள்ளைகளில் தொடர்ச்சியான பல ஆய்வுகள் செய்தனர். ஆரம்பத்தில் தாயும் குழந்தையும் முன்னர் சென்றிராத புதிய அறையுள் நுழைகின்றனர். தாய் ஓர் இடத்தில் இருந்தவண்ணம், குழந்தை தன் சூழலை ஆராய அனுமதிக்கின்றார். பின்னர் ஒரு புதுநபர் அறைக்குள் நுழையத் தாய் அறையைவிட்டு வெளியேறுகின்றார். அதன் பின்னர் தாய் மீண்டும் அறைக்குள் நுழைகின்றார். அப்போது புதுநபர் வெளியேறுகின்றார். பின்னர் தாய் குழந்தையைத் தனியே விட்டுவிட்டு மீண்டும் அறையினின்று வெளியேற புதுநபர் உள்ளே நுழைகின்றார். கடையசியாகப் புதுநபர் வெளியேறத் தாய் உள்ளே வருகின்றார்.
தாயோடு கொண்டுள்ள உறவுப்பற்றின் அடிப்படையிலேயே குழந்தை புதிய சூழலில் நடந்து கொள்கின்றது. இவ் ஆய்வில் வெவ்வேறு பிள்ளைகள் வெவ்வேறு விதமாக நடந்துகொள்வது அவதானிக்கப்பட்டது. பாதுகாப்பான உறவுப்பற்றுக் கொண்ட ஒரு வயதுக் குழந்தைகள் தன் தாயை ஒரு பாதுகாப்பான வீட்டுத் தளமாகப் பயன்படுத்தி சுயாதீனமாகத் தன் சூழலை ஆராய்கின்றது. ஆனால் இடையிடையே தாயிடம் திரும்பி வந்தது. தாய் அறையைவிட்டுப்போகும்போது துன்பப்பட்டது. ஆனால் உறவை விலக்கும் பற்றுறவு கொண்ட பிள்ளைகளோ தாய் அறையை விட்டுச் சென்றபோது அழவில்லை. தாய் திரும்பி வந்தபோது பிள்ளை கோபத்துடன் அவரை அலட்சியம் செய்தது. குழப்பஉறவுகொண்ட பிள்ளைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டபோது அச்சத்தை
வெளிப்படுத்தின. தாய் அறையைவிட்டுப் போனபோது குழப்பமடைந்தது.
தாய் திரும்ப வந்தபோது தாய்க்குக் கிட்டவர விரும்புவதும் அதேவேளை தாயை அடித்து உதைப்பதாக இருந்தது. பராமரிப்பாளர் அல்லது முக்கிய நபருடன் ஏற்படும் உறவின் தன்மைக்கு ஒப்ப கீழ்க்காணும் நாலு வகையான உறவுகளில் ஒன்றில் பிள்ளை ஈடுபடும். இந்த உறவு வகையை நிர்ணயிப்பது பராமரிக்கும் வகையில் தங்கியுள்ளது. - 1.Lig,135TCUT607 Luigib6 (Secure Attachment) 2.956óglair epip(5lb usigis6 (Preoccupied Attachment) 3. Ljubg566)5(5tb upbO3.36 (Fearful-avoidance or Anxious Resistance Attachment) W - 4.59.535.pdb(5 D Lisboss6 (Dismissing-avoidant Attachment or AnxiousAvoidant Attachment)
நான் - 6 - ஆடி - புராட்டாதி 2007

இந்த நான்கு வகைப் பாசப்பற்று முறைகள் உண்மையானவையென ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
1. அ, பாதுகாப்பான பற்றுறவில் பராமரிப்பாளரின் முறை (Care-giving Style):
பாசம் காட்டல்: பிள்ளைகள்மட்டில் தமக்குள்ள பாசத்தை வெளிப்படையாகவே காட்டுவர். தேவைக்கான சமிஞ்ஞையை புரிந்து பூர்த்தி செய்தல்: இத்தகைய பராமரிப்பில் தாய் தன் பிள்ளையின் உணர்வுகள், தேவைகள்பற்றிய சமிஞ்சைகள்மட்டில் விழிப்பாக இருப்பார். அவற்றை அறிந்து உடனடியாகப் பூர்த்தி செய்வர். இதில் எப்போதும் சீராக நடந்து கொள்வர். பிள்ளை அழும்போது உடனடியாக அதற்கு ஆறுதலளித்து தேற்றிப் பாலுாட்டுவர் அல்லது உணவளிப்பர். வேறு தேவைகளுக்காக அழும்போதும் உடனடியாகப் பிள்ளையைக் கவனிப்பள். ஆதரவு அளித்தல்: வழிகாட்டல் அவசியமாக இருக்கும்போது மட்டும் இவர்கள் இதில் ஈடுபடுவர். அநாவசியமாகத் தலையிடுவதில்லை. இதனால் தனக்குத் துன்பத்தில் ஆறுதல் கிடைக்கும், உணர்வு ரீதியாக வறண்டிருக்கும்போது அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று பிள்ளை நம்பி இவரிடம் வரும். பிள்ளை ஆறுதல் தேடிவரும்போது ஆறுதல் அளிப்பர். புகலிடம் அளித்தல்: பிள்ளை பாதுகாப்புக்காக ஓடிவரும்போது பாதுகாப்புக் கொடுப்பார். பயப்படும்போது தன் அச்சம் தணிக்கப்படும் என்ற உணர்வை பிள்ளை பெறும் விதத்தில் நடந்து கொள்வர் சூழலை ஆராய ஊக்குவித்தல்: இவர்கள் தம் பிள்ளைகள் தம்மோடு ஒட்டிக்கொண்டிருப்பதை ஊக்குவிக்காது சூழலை ஆராய்வதற்கும் சுதந்திரமாகவும் சுயாதீனமாக இயங்குவதற்கும் ஊக்கம் வழங்குவள்
1. ஆ. பாதுகாப்பான பற்றுறவு: இதில் ஒரு பிள்ளை முக்கியமான வருடனான உறவை ஒரு பாதுகாப்புத் தளமாகப் (Secure Base or Sate Haven) பயன்படுத்துகின்றது. சூழலை ஆராய முற்படும்போது அது இடையிடையே தான் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய தன்னைப் பராமாளிப்பவர் அண்மையில் இருக்கின்றாரா இல்லையா ଈଶ୍ବୀ உறுதிப்படுத்த இடையிடையே அவரைப் பார்க்கும். இடையிடையே அவரிடம் வரும். பின்னர் மீளவும் சூழலை ஆராயத் தொடங்கும்.
- இவ்வகைப் பற்றுறவுகொண்ட பிள்ளைகளில் நம்பிக்கை, அன்பு நெருக்கம், பிரச்சினை தீர்த்தலில் திறம்ை, தேவை ஏற்படும்போது பிறரிடம் உதவிதேடும் போக்குப் போன்ற நல்ல அம்சங்கள் காணப்படும். பராமரிப்பாளர்பற்றிய கருத்து இவ்வகைப்பற்றுக் கொண்ட பிள்ளைகள் பின்வரும் விடயங்களில் நம்பிக்கைகொண்டு காணப்படும். அதாவது தனக்கு அச்சமூட்டும் அல்லது வெறுப்பூட்டும் ஒரு சூழலைச் சந்திக்கும்போது பராமரிப்பாளன் உடனடியாகத் தன்னருகே வருவார், தன் தேவையை அறிந்து பூர்த்தி
நான் - 7 - ஆடி - புராட்டாதி 2007

Page 11
செய்வார், தனக்கு உதவியாக இருப்பார் என்று நம்பும். இந்நம்பிக்கை காரணமாகத் தன் சூழலைத் துணிச்சலோடு ஆராயத் தொடங்கும் சுயஎண்ணக்கரு தம்மைப்பற்றி நல்ல கருத்துக் கொண்டிருக்கும். தன் பெறுமதிபற்றி நன்றாக நினைக்கும். நிறைந்த தன்னம்பிக்கை கொண்டிருப்பர். பிறர்பற்றிய கருத்து: பிறர்பற்றியும் நல்ல கருத்தே கொண்டிருக்கும். மற்றவர்கள் அன்புசெய்யப்படக்கூடியவர்கள், தன்னைப் பராமரிக்கக் கூடியவர்கள் என்ற கருத்துகளைக் கொண்டிருக்கும். உறவாடல்முறை: பிறரோடு உறவாடும்போது அன்பு நெருக்கம் கொண்டு பழகும். மற்றவர்களின் துயர், தேவை என்பனவற்றைப் புரிந்துணர்ந்து செயற்படும். நம்பத்தகுந்த ஆளாக நடந்து கொள்ளும். உறவு விடயங்களைச் சீராகவும் மனம்திறந்தும் கதைக்கும். அன்புறவில் செளகரியமான உணர்வே கொண்டிருக்கும். அன்பானவர்கள் தன்னை அன்பு செய்யாமல் விடுவார்களோ, கைவிட்டுவிடுவார்களோ என்றெல்லாம் அச்சம் கொண்டு கலங்குவ தில்லை. பிறரோடு ஒத்துழைத்து நடந்து கொள்ளும். குறும் புத்தனம் நிறைந்திருக்கும். உணர்ச்சிகளைக் கையாளல்: பாதுகாப்பான பற்றுறவுகொண்ட பிள்ளை (2வயதில்) மகிழ்ச்சியோடு காணப்படும். எளிதில் விரக்திக்கு SD 6řT6T6ITTg6l6d60)6Nd (Matas et al,. 1978; Santrock & Yussen, 1989). 56ör உணர்வுகள், கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். உதவிநாடும் நடத்தை; கடுமையான நெருக்கடி அல்லது துயர்தரும் சம்பவங்களின்போதுமட்டுமே உணர்ச்சிரீதியான துன்பத்துக்கு உள்ளாவதால் அவ்வேளைகளில்மட்டும் பிறரின் உதவியை நாடும். சாதாரண பிரச்சினைகளில் பிறரின் உதவிநாடிச் செல்லாது. பாதுகாப்பற்ற பற்றுறவு (Insecure Attachment) பொது அறிமுகம்: பெற்றோர் கடுமையான உளநெருக்கீடுகளுக்கு உள்ளாகியிருக்கும் போது பிள்ளைகளின் உணர்வுகள், தேவைகள், அண்மை யிலிருத்தல் தேவை, என்பனவற்றைக் கவனத்தில் எடுப்பதில்லை. அல்லது நேரத்துக்கு ஒருமாதிரி நடந்துகொள்வர். இது 6itó06T60)ut பாதிக்கின்றது. பெற்றோரின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளும் அறிவு நிலை இவ்வயதுப் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. அதனால் தான் பாராமரிக்கப்பட அல்லது அன்பு செய்யப்படத் தகுதியில்லாத ஆள் என்றும், தன் தேவையில் பெற்றோர் தனக்கு உதவமாட்டார்கள், அவர்களில் தங்கியிருக்க கூடாது என்ற மனப்பதிவைப் பெற்றுக்கொள்ளும். இதனால் பிறருடனான உறவுகளை விலக்கல், அல்லது தன் தேவைகளில் மட்டும் மூழ்கிப்போயிருத்தல் என்பனவற்றில் ஈடுபடும். இது மூன்று வகையானது.
2. அ. தன்னில் மூழ்கும்பற்றுறவில் பராமரிப்பாளரின் முறை
இவர்களின் பராமரிப்பாளர் உடல்ரீதியாக மிக நெருக்கமாக இருப்பரெனினும் பிள்ளையின் உணர்வுகள், தேவைகளை அறிந்து
நான் - 18 - ஆடி - புராட்டாதி 2007

செயற்படும் ஆற்றல் அற்றுக் காணப்படுவர். பிள்ளைகளோடு ஒரு சீராக நடந்துகொள்வதில்லை. ஒரு நேரம் ஒருமாதிரி நடந்து கொள்வர். ஏதோ ஒரு அகரீதியான பலவந்தம் காரணமாகவே பிள்ளையின் பராமரிப்பில் ஈடுபரே (Compulsive Care-giving) தவிர இயல்பாக இதில் நடந்துகொள்வதில்லை. இவர்களின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பற்றுறவு அனுபவத்தில் மூழ்கி அதனாலேயே உந்தப்பட்டு நடப்பதே இத்தகைய ஈடுபாடின்மைக்குக் காரணமாக இருக்கலாம். அதாவது இவருக்குத் தன் பெற்றோருடன் இருந்த உறவும் தன்னில் மூழ்கியிருக்கும் வகையைச் சார்ந்ததாக அமைந்திருந்ததனால் அவ்வாறே தன் பிள்ளையுடனும் நடக்கின்றனர். மேலும் தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பகரமான உணர்ச்சி அனுபவங்களால் பாதிக்கப்பட்டதால் எந்தத் துன்பகரமான உணர்ச்சிகளையும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. இதனால் பிள்ளை துன்பப்படும்போது பிள்ளைக்கு உதவிசெய்ய முன்வரமாட்டார்.
2. ஆ தன்னுள் மூழ்கியிருக்கும் பற்றுறவு
சுய எண்ணக்கரு இத்தகைய பற்றுறவுகொண்ட பிள்ளை எதையும் எதிர்மயமாகவே நினைக்கும். ஆனால் தன் குறைகளைக் கருத்தில் எடுக்காது தான் குறையேதுமற்ற இலட்சியமான ஆளென நேர்மயமான கருத்துக்கொண்டிருக்கும். எனினும் சுயவிமர்சனத்தில் எப்போதும் ஈடுபடும்.
உறவாடல் முறை: பிறரோடு உறவாடும்போது அளவுக்குமீறி உணர்வுரீதியாகத் தன்னை உட்படுத்திப் பழகும். உறவாடும் தன்மையோ நேரத்துக்கு நேரம் மாறுபட்டுச் சீரின்றிக் காணப்படும். தாம் அன்பு செய்பவரை எப்போதும் அவதானித்துக்கொண்டு விழிப்பாகவே இருப்பர். மற்றவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவதிலேயே தன் பெறுமதி தங்கியுள்ளது எனக் கருதுவர். தம் உறவுவிடயம்பற்றிக் கலந்துரையாடும்போது உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்வர். இத்தகைய பிள்ளை மற்றவர்களின் அனுபவங்களை இலகுவில் புரிந்துகொள்ளமாட்டாது. அவைபற்றித் தெளிவற்ற அறிவே கொண்டிருக்கும். இதனால் தனக்குத் தேவையானபோது பிறர் உதவுவார்கள், உதவுவதற்கு விருப்பமாக இருப்பார்ளெனச் சிந்திக்காது. உணர்ச்சிகளைக் கையாளல்: இவர்கள் உணர்ச்சிசார்ந்த விடயங்களில் குறிப்பாக எதிர்மய உணர்ச்சி விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துவர். அச்சுறுத்தல் ஏற்படும்போது அதை மிகவும் பெரிய அச்சுறுத்தலாக மிகைபடுத்தி விளங்கிக் கொள்வர். ஒரு துன்பம் ஏற்பட்டால் மிகஅதிகம் துயரப்படுவர். தன் துன்ப துயரம்பற்றி உணர்ச்சிரீதியாக மிகைப்படுத்திக் கதைத்துக் கொண்டிருப்பர். பிரச்சினை கையாளும் திறன்: ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது அதை எவ்வாறு தீர்ப்பது என்று சிந்திப்பதற்குப் பதில்ாக உணர்ச்சி வசப்பட்டு அதில் மூழ்கிக் காணப்படுவர்.
நான் - 19 - ஆடி - புராட்டாதி 2007

Page 12
3. அ. உறவை விலக்கும் பற்றுறவில் பராமரிப்பு முறை பிள்ளை பாதுகாப்பு அல்லது ஆறுதல் தேடித் தாயிடம் வரும்போது அவர் பிள்ளையை உதறித் தள்ளுவார். சிலரோ பிள்ளையைத் தொடர்ந்து வெறுத்து ஒதுக்குவர். இவர்கள் தம் பிள்ளையைப் பராமரிப்பது குறைவு.
3. ஆ உறவை விலக்கும் பற்றுறவு பிறருடனான உறவு: ஏமாற்ற அனுபவங்களைத் தவிர்க்க நெருக்கமான உறவுகளைத் தவிர்ப்பதோடு உறவுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பர். இதனால் உறவின் முக்கியத்துவத்தைத் தட்டிக்கழிப்பதோடு உறவு நெருக்கத்தை விலக்கித் துார இருப்பர். உறவில் ஆர்வம் 85fTL'LIT60)LD, அல்லது உறவில் 5160ՔԱl அச்சம்கொண்டிருத்தல் என்பனவற்றில் இது வெளிப்படும். பிறர் தன்னை வெறுத்து ஒதுக்குவதுபற்றி மிகவும் கவலைப்படுவர். பிறரோடு நெருக்கமாக உறவாடல், பிறரில் தங்கி வாழ்தல் என்பன இவர்களுக்கு அதிக அசெளகரியம் கொடுப்பனவாக அமையும். பிறரோடு கடுமையான பகையுணர்ச்சி கொண்டவர்களாகவும், துன்பம் தரும் உணர்ச்சி அனுவங்களை அலட்சியம் செய்யும் போக்குடையவர்களாகவும் காணப்படுவர். பிறர்பற்றிய கருத்துகள்: தான் அன்பு செய்வோர்பற்றி எதிர்மயமான எதிர்பார்ப்புகளே கொண்டிருப்பர். தான் மற்றவரிடம் உதவிகேட்டுச் செல்லும்போது அவர்கள் உதவ விருப்பமுடையவர்களாக இருப்பரென நம்பமாட்டார்கள். உதவிநாடிச் செல்லும்போது தன்னை வெறுத்து ஒதுக்குவர் என்றே நம்புவர். இது மிகையாக இருக்கும்போது இந்நபர் பிறரின் அன்பு ஆதரவு என்பன இல்லாமலே வாழ முயற்சிப்பர். சுயஎண்ணக்கரு இவர்கள் தம்மைப்பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகள் தன்னைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கும். அதாவது தம்மைப்பற்றி நல்ல கருத்துகளைமட்டுமே கொண்டிருப்பர். ஆனால் தம்மிலேயே முழுமையாகத் தங்கிவாழும் போக்குடையவள். சுதந்திரப்போக்குடையவராகவும் சுதந்திரத்தை விரும்புவராகவும் இருப்பர். இவ்வகைப்பற்றுறவில் தீவிரநிலை அடைவோர் தம்மைப்பற்றி ஒரு பொய்யான கருத்தே கொண்டிருத்தல் (Having False Self) அல்லது சுயநலப் போக்கு (Narcissism) எனும் உளநல மின்மைகளுக்கு உள்ளாகின்றனர். உணர்ச்சிகளைக் கையாளல்; உளநெருக்கீடுகள் ஏற்படும்போது இவர்கள் அதிகம் துன்பத்துக்கு உள்ளாவதில்லை. மனம் புண்படாமலிருப்பதை முக்கியமானதாக் கருதுவர். இதனால் உணர்வுரீதியாகத் தன்னிறைவுடன் வாழமுயற்சிப்பர்.
4. அ. பயந்து விலக்கும் பற்றுறவில் பராமரிப்பாளரின் முறை
இவர்களின் பராமரிப்பானது அகஉந்தல் (உ-ம் குற்ற உணர்வு) காரணமாக நிகழ்வதேயன்றி இயல்பாக நிகழ்வதில்லை. இவர்களின் பராமரிப்பில் முரண்பாடுகள் அதிகம் காணப்படும். அதாவது பிள்ளையின்
நான் − 20 ஆடி - புராட்டாதி 2007

தேவையின்போது ஒரு நேரம் கிட்ட ஒடிவருவார், மறு நேரத்தில் கிட்ட வரவேமாட்டார். சில சந்தர்ப்பத்தில் உதவி செய்வர் மற்ற நேரத்தில் செய்யார். இவ்வாறு சீரின்றி நடப்பதோடு பிள்ளையை நிராகரித்துத் தள்ளுபவர்களாகவும் விளங்குகின்றனர். பிள்ளை அச்சத்தோடு இருக்கும்போது ஆதரவு அளிப்பது மிகக் குறைவு. பிள்ளை குழப்படி விடும்போது கைவிட்டுப்போய்விடுவேன் என்று அச்சுறுத்தியே கட்டுப்படுத்துவர் அல்லது உண்மையாகவே பிள்ளையை விட்டு விலகி இருப்பர்.
4. ஆ. பயந்து விலக்கும் பற்றுறவு சுய எண்ணக்கரு தன்னைப்பற்றியும் பிறரைப் பற்றியும் எதிர்மயமான கருத்துகளே கொண்டிருப்பர்.தான் பெறுமதியில்லாத ஆள், அன்புக்குத் தகுதியில்லாத ஆள் என்று தன்னைப்பற்றி நினைப்பார். பிறர் தன்னை ஏற்றுக்கொள்ளுவார்களா என்பதுபற்றி அதிகம் கவலைப்படுவர். பிறர்பற்றிய கருத்துகள்; மற்றவர்கள் தன்னை வெறுத்து ஒதுக்குவார்கள், தான் பாசத்தைத் தேடிச் செல்லும்போது அதை உணர்ந்து நடந்துகொள்ளமாட்டார்கள் என்று நினைப்பர். தனக்குத் தேவையான போது தான் அழைத்தால் தன் பெற்றோர் தனக்கு அருகில் வருவார்களா, தன் தேவையை அறிந்து பூர்த்தி செய்வார்களா என்பதில் நிச்சயமற்று உணர்வர். இந்த உணர்வால் எப்போதும் தன் பெற்றோர்கள் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றிடுவார்களோ என்ற அச்சத்துடன் காணப்படுவர். இதனால் பராமரிப்பாளரிலேயே எப்போதும் ஒட்டிக்கொண்டிருப்பதோடு தன் சூழலை ஆராய முயற்சி எடுக்கமாட்டார். பிறருடனான உறவு; இவர்கள் அன்பு, பாசம் என்பவற்றுக்காக ஏங்குவர்.
ஆனால் மற்றவர்களின் அன்பு, பாசம் என்பனபற்றிப் பிழையான அர்த்தம் கொடுப்பள். அதாவது பிறரின் அன்பு நிலையில்லாதது நேர்மையில்லாதது எனக்கருதுவர். மற்றவர்களில் நம்பிக்கை
யற்றிருப்பதும், பிறர் தன்னை ஏற்காது நிராகரிக்கக்கூடும் என்ற அச்சமும் கொண்டிருப்பதால் நெருக்கமான உறவுக்குள் செல்வதை விலக்கி நடப்பர். அன்பு, நெருக்கம், நிராகரிப்பு என்பனபவற்றிற்குப் பயந்து உறவில் துார இருப்பர். உறவில் எப்போதும் அச்சம், பதட்டம் என்பன கொண்டிருப்பர். பிறரில் மட்டுமீறித் தங்கிவாழும் போக்கு அதிகம் காணப்படும். இதனால் தான் அன்பு செய்வருக்கு தன்னை அளவுமீறி அர்ப்பணிக்கும்போக்கும் அதே அர்ப்பணிப்பு அவர்களிடமிருந்தும் கிடைக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்பர்.
உறவு உளமாதிரியும் காதலுறவும்
பாதுகாப்பற்ற பற்றுறவு கொண்டோருட்ன் ஒப்பிடும்போது, பாதுகாப்பான பற்றுறவு அனுபவத்தை குழந்தைப் பருவத்தில் கொண்டவர்கள் தம் காதல் உறவிலும் திருப்தியாக இருப்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இவர்களின் காதலில் தம் துணையாளின் தேவைகளை உணர்ந்து செயற்படும் திறன் அதிகம் காணப்படுகின்றது.
நான் - 2 - ஆடி - புராட்டாதி 2007

Page 13
இவர்களின் உறவு நீடித்த உறவாக விளங்குகின்றது. அத்தோடு அந்த உறவு ஒரு சீரான ஸ்திரத்தன்மை கொண்டு விளங்குகின்றது(Kirkpatrick & Davis, 1994). 淞
முரண்பாடுகளைத் தீர்த்தலில் பாதுகாப்பான பற்றுறவு கொண்டோரைவிட, உறவை விலக்கும் அல்லது பயம்நிறைந்த பற்றுறவு கொண்டோர் தமது காதலுறவில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்ப்பதில் கடினத்தை எதிர்கொண்டனர் பயந்து விலக்கும் பற்றுறவு முறைகொண்டோர் தம் காதல் துணையாளோடுள்ள உறவில் தனக்குத் துன்ப அனுபவம் ஏற்படும்போது உணர்ச்சிகளைச் சரியான முறையில் கையாளும் திறன் குறைந்து காணப்படுகின்றனர். ஆனால் உறவை விலக்கும் பற்றுறவு கொண்டோர் இத்தகைய சூழலில் தம்மை நடத்தைfதியாகச் சுதாகரித்து நடக்கும் திறன் குறைந்தவர்களாக விளங்குகின்றனர் (Fraley & Shave, 1998). இவர்கள் இவ்வேளையில் ஒதுங்கித் தனித்து இருக்கின்றனர் (Simpson et al., 1996)
தன் துணையாள் பற்றிய கருத்தில். பயந்து விலக்கும் பற்றுறவுகொண்டோர்; தன்னைக் காதலிப்பவர் தன்னை வெறுத்து ஒதுக்கக்கூடும் அல்லது கைவிட்டுச் செல்லக்கூடும் என்ற ஆழமான பயம் நிறைந்தவர்களாகத் தாம் இருப்பதாகக் கூறியுள்ளனர் (Feeney, 1999). ஆனால் இவர்களது உறவு நீண்டகாலம் தொடரும் தன்மையுடையதாயின் இருவரிடை யேயும் முரண்பாடு ஏற்படும்போது இந்தப் பயம் குறைவாகக் காணப்பட்டது உணர்ச்சிகளைக் கையாளல் பாதுகாப்பான பற்றுறவு கொண்டோருடன் ஒப்பிடும்போது, மிகையான பயந்து விலக்கும் பற்றுறவு உடையோர் தாம் காதலிக்கும் ஆளுடனான உறவின்போது கோபம், சோகம், பயம் என்பன அதிகம் நிறைந்து காணப்பட்டனர். பாதுகாப்பு நிறைந்த பற்றுறவு, உறவைவிலக்கும் பற்றுறவு என்பன கொண்டோருடன் ஒப்பிடும்போது, பயந்து விலக்கும் பற்றுறவு உடையோரிடையே உறவுமுரண்பாடு ஏற்படும்போது தம் உணர்ச்சியை ஆரோக்கியமாகக் கையாளமுடியும் என்ற நம்பிக்கை குறைந்தவர்களாக விளங்கினர். 鬣 ஆனால் உறவை விலக்கும் பற்றுறவுகொண்டோர், பாதுகாப்பான பற்றுறவு கொண்டோரைவிட உறவு முரண்பாட்டின்போது தம் எதிர்மய உணர்வுகளைக் கையாளுவதில் அதிகளவு கடினத்தை எதிர்கொள்ள வில்லை அதாவது இவற்றைக் கையாள்வது இரு வகையினருக்கும் எளிதானது.
உறவு முரண்பாட்டின்போது
6TuléFSF60660) ஏற்படும்போது பாதுகாப்புப் பற்றுறவுகொண்டோர், பயப்பற்றுறவு, விலக்கல் பற்றுறவு கொண்டோரைவிட அதைத்
2
2
நான் ஆடி - புராட்டாதி 2007

தீர்ப்பதிலே தன்னம்பிக்கை குறைந்து காணப்பட்டனர். இவர்களுக்கு வேண்டாத உறவுகளை முறித்துக்கொள்வதும் கடினமாக இருந்தது. பயந்து விலக்கும் பற்றுறவு கொண்டோரோ தம்மிடையே ஏற்படும் முரண்பாடுகளைக் கையாள்வதில் ஆற்றல் குறைந்து காணப்பட்டனர் (Gary Creasey & Mathew Hesson-McInnis, 2001). உறவை விலக்கும் பற்றுறவுகொண்டோர் வாய்ச்சண்டையின்போது மற்றவரின் மனத்தைப் புண்படுத்தும் வார்த்தைகள், செயல்கள் என்பனவற்றில் ஈடுபடுவதோடு அதை எளிதாகவும் உணர்ச்சி வசப்படாமலும் செய்கின்றனர். இவ்வாறு இவர்கள் உணர்ச்சிவசப்படாமல் எளிதாகச் செய்வது, இவர்களின் துணையாளுக்கு அதிகளவு துயரம் Ga5.T(6 LugbiT35 960 Dasaiggs (Gary Creasey & Mathew Hesson-McInnis, 2001),
முடிவுரை: பெற்றோர் தம் பாசத்தை இயல்பாக வெளிப்படுத்துவதும் உணர்வு ரீதியாக ஆதரவு வழங்குவதும், பிள்ளைக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் எல்லா நேரமும் சீராக உதவுவதும் முக்கியமானது. இவ்வாறு பெற்றோர் நடந்துகொள்ளும்போது பிள்ளைக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுவதோடு தான் ஒரு பெறுமதியான ஆள் என்ற உணர்வும் கிடைக்கும். இத்தகைய உணர்வுகளை வழங்குவதோடு பிள்ளையைத் தன் சூழலை ஆராய்ந்து பழகிக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். இதனால் பிள்ளை சுதந்திரமாகவும் சுயாதீனத்துடனும் இயங்குவதில் படிப்படியாக வளர்ச்சியடையும்.
துணைநூல்கள் 1. Bowlby, J. (1988).A Secure Base: Parent Child Attachment and Healthy Human
Development U.S.A.:Basic Books.
2. Krause, A.M. & Haverkamp, B.E. (1996). Attachment in Adult Child-Older Parent Relationships: Research, Theory, Practice. Journal of Counseling & Development Nov. Dec. 1996. Vol 75. 83-92
3. Pistorle, M.C. (1999). Caregiving in Attachment Relationships: A Perspective for
Counselors. Journal of Counseling and Development Vol. 77.437-44
4. Kemp, M.A. & Neimeyer, G.J. (1999). Interpersonal Attachment Experiencing
Expressing, and Coping with Stress. Journal of Counseling Psychology. Vol. 46. 388-394 ༤.
5. Gary Creasy &Matthew Hesson-McInns. (2001). Affective Responses, C mitive Appraisals, and Conflict Tactics in Late Adolescent Romantic Relationships: Associations with Attachment Orientations. Journal of Counseling Psychology. Vol. 4.885-96
葵美
நான் - 23 - ஆடி - புராட்டாதி 2007

Page 14
ம. அருந்தினி அகவொளி குடும்பவள நிலையம்.
இன்றைய சூழலில் மக்கள் ஷெல் அடியினால் கலங்குவதைவிட சொல்லடிகளால் தான் அதிகம் கலங்குகின்றனர். எமக்கும் மற்றவர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்படுவதற்குக் காரணம் நாவு எலும்பில்லாத நாவால் நாம் நிறைய சொற்களை எவ்வித முன் யோசனையுமின்றி, செலவீனங்களுமின்றி அள்ளி வீசுகின்றோம். இவ்வாறான தவறான வார்த்தைப பிரயோத்தினால் பிறரை உளப்பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லுகின்றோம். இதனால் கொலை, பழிவாங்கல், ஆக்கிரோச உணர்வுகள் வெளிப் படுகின்றன. இதனால் L6) உயிர்கள் தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கின்றன.
நாக்கு மிகவும் கூர்மை வாய்ந்தது அதனால்தான் இறைவன் அதனைச் சிறையில் வைத்ததுபோன்று வாய்க்குள் பாதுகாப்பாகப் படைத்திருக்கின்றார். உன் நாவிற்கு விலங்கிடு அன்றேல் நாவு உனக்கு விலங்கிடும் என்பது இலத்தீன் பழமொழி.
எமக்கு மற்றவர்கள் விலங்கிட வருவதில்லை நமது நாவே நமக்கு விலங்கிட்டுக்கொள்கின்றது. மற்றவர்களை ஆறுதல் படுத்தவும் அன்பு மொழி பேசவும், இறைவனது புகழ்பாடவும் படைக்கப்பட்ட நாவினை நாம் தவறாகப் பயன்படுத்துகின்றோம். இதுவே நமது பெரிய தவறு. எனவே உங்களது பேச்சு எல்லோரையும் மகிழ வைக்கட்டும். எவரையும் சாகடிக்கக்கூடாது.
ஒருவனது அறிவு மட்டத்தையும், குலத்தின் மேன்மை யையும் ஆளுமைப் பண்புகளையும் அவனது சொற் பிரயோகங்களிலிருந்து அறிய முடியும்.
ஒருவனுடைய வெற்றிக்கும் தோல்விக்கும் அவனது நாவடக்கமின்மையே காரணம். நமது நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் சிந்திய நீரையும், வில்லினின்று புறப்பட்ட அம்பையும் போன்று திருப்பிப் பெறமுடியாதவை. எனவே நம் நாவினின்று புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் அன்பான, இதமான, கனிவானதாக அமையட்டும்.
நான் - 24 م: - ) ( ஆடி - புராட்டாதி 2007
 

திருவள்ளுவர் இனியவை கூறல் என்னும் பகுதியில் நல்ல பல கருத்துகளைக் கூறியுள்ளார். -
பணிவுடையான் இன்சொலன் ஆதல் ஒருவருக்கு அணி அல்ல மற்றும் பிற. அதாவது ஒருவனுக்கு அணிகலன் பணிவு காட்டுதலும் இன்சொல் பேசுதலும் ஆகும்.
குழந்தைகள்கூட நாம் அன்போடு மனம்விட்டுக் கதைக்கும் போது மகிழ்ச்சியடைகின்றனர். எமது உறவைக் கட்டி எழுப்பும் பாலமாக விளங்குவது இன்சொல்லேயாம்.
பல நட்புகளை நாம் இழப்பதற்குக் காரணமாக இருப்பதும் நமது நாவேதான்.
தீயினால் சுடுங்கள் ஆனால் நாவினால் சுடவேண்டாம். தீயினால் சுட்ட புண்ணை மருந்தால் மாற்றலாம். ஆனால் நாவினால் சுட்ட புண்ணை ஆற்ற முடியாது. ஏனெனில் அது மனதில் ஆழப்பதிந்து தொடர்ந்து நம்மை வேதனைப் படுத்திக்கொண்டே யிருக்கும்.
வார்த்தைகள் அன்பு இதயத்தில் ஊற்றெடுக்கும்போது இப்படியான தவறுகள் இடம்பெறா.
சிலர் உணர்ச்சி வசப்பட்டு என்ன பேசுகின்றோம், எங்கு பேசுகின்றோம், யாரோடு பேசுகின்றோம் என்ற விழிப்புணர்வின்றி அள்ளிக் கொட்டி விடுகின்றனர். இதனால் பேசியவரும் பேசப்பட்டவரும் வேதனைக்கு உள்ளாகின்றனர். இப்படி என்னைக் காயப்படுத்திவிட்டாரே என்று ஏச்சு வாங்கியவரும், ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிவிட்டேன் என்று ஏசியவரும் வேதனைப்
படுகின்றனர். எனவே நாவைக் கட்டுப்படுத்திக்கொள்வது எத்துணை
நல்லது!
நிறுவன உறவில்கூட பொறுப்பாக உள்ளவர்கள் தமக்கு கீழ்
பணிபுரிபவர்களை அன்போடும் புரிந்துணர்வோடும் பேசும்போது
அந்நிறுவனம் எளிதில் விரைந்த வளர்ச்சி பெறும்.
எனவே எதிலும் ஏற்றம் பெறவேண்டுமாயின் நாவிற்கு விலங்கிடுவோம்.
**
நான் - 25 - ஆடி - புராட்டாதி 2007

Page 15
Sஆயோசப் LT6)
திருப்தி ஏற்படும்போதே ஒருவன் ஞானியாகின்றான், தன்னை அறிகின்றான், அமைதி அடைகின்றான். திருப்திப் படாதவர்களோ பொறாமை, கோபத்திற்கு உள்ளாகி மனஅமைதியை இழந்து விடுகின்றனர். மேலும் தாழ்வுச் சிக்கலுக்குள்ளாகி சந்தேகப் பூச்சியாகி அலைவர். அறியாமையே சந்தேகத்தின் அன்னை என்பார் வில்லியம் ஆல்ஜர்.
திருப்திப்படாதவர்கள் பிறரின் திறமைகளை, நல்ல செயல்களை ஏற்றுக்கொள்வதிலும், எதிர்கொள்வதிலும் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவர். மற்றவர்களை அவர்களது திறமைகளுடன் ஏற்றுக்கொள்வது இவர்களுக்குக் கடினமாகின்றது. சிறுவர்கள் தம்மிடமுள்ள விளையாட்டுப் பொருட்களில் திருப்தி கொள்ளாது மற்றவர்களின் விளையாட்டுப் பொருட்களுக்கு ஆசைப்படுவது போன்றே பெரியவர்களும் நடந்து கொள்வர்.
தனது உயர்வான நிலையை அடையாளம் கண்டு திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளும்போதுதான் ஒருவரது 2 luust நிலைகள் வெளிப்படத்தொடங்கும். பல சாதனைகள் புரிவதற்கு வேண்டிய தன்னம்பிக்கை பிறக்கும். குறிப்பாக மாணவர்கள இவ்வாறு நடக்கும்போது கல்வியில் சாதனை படைக்க முடியும்.
பின்தங்கிய கிராமத்தில் பிறந்த சிலர் தம் கிராமத்தைக் குறைகூறி அனுதாபத்தையும், உதவிகளையும் பெற முயல்வ துண்டு. பெற்ற உதவியைச் சுரண்டிக்கொண்டு பிறரோடு பகிராது சுயநலத்துடன் வாழ்வதும் இவர்களில் காணப்படுகின்றது. பிறர் உதவியோடு கட்டிடங்கள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு வசதிகள் என நல்ல பல மாற்றங்கள் ஏற்பட்டபின்னும் திருப்தியற்ற மனமே வடுக்களாக இவர்களில் காணப்படுகின்றது. குதுாகலத்தை இவர்களில் காணமுடிவதில்லை. இவர்கள் தமக்குக் கிடைத்தவற்றை அனுபவித்து மகிழ்வதற்குப் பதிலாகத் தம்மைப் பிறரோடு ஒப்பிட்டு நிம்மதியை இழக்கின்றனர்.
26 ஆடி - புராட்டாதி 2007
 
 
 

அழுகிய அப்பிள், எஞ்சிய பழங்களையும் அழுகச் செய்யும் என்கிறார் பென்ஜமின் பிராங்கிளின் அவ்வாறே திருப்திப்படாதவர்கள் தம்மோடு பழகுபவர்களிற்கும் திருப்தியின்மையை உருவாக்கி விடுகின்றனர். இதனால் நிறைகாண்பதைவிட குறைகூறுவதேயே வாழ்வாக்கி குழம்பிவிடுகிறார்கள்.
மாணவர்கள் தம் மனதில் தம்மால் சாதனை படைக்க முடியும் என்று முதலில் நம்ப வேண்டும். முழுமுயற்சி எடுத்துப் படித்தபின் என்னால் இயலுமானதைப் படித்தேன் என்று திருப்திப்படும் போதுதான் சிறப்பாக முன்னேறமுடியும்.
குடும்ப வாழ்விலும் திருப்திப்படும் மனம் முக்கியமானது. தனக்குக் கிடைத்த கணவன் அல்லது மனைவியில் இருக்கும் நல்ல குணங்கள் திறமைகளை 960)Luso Tib கண்டு தட்டிக்கொடுத்து வளர்ப்பதற்குப் பதிலாக வேறு ஆட்களுடன் ஒப்பிட்டுப் பேசும்போது வளர்ச்சி ஏற்படாதுபோவது மட்டுமன்றி உறவும் சீரழியத் தொடங்குகின்றது. இவை குடும்பத்தின் உறவுச் சிக்கலுக்கே வழிசமைக்கும்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற தமிழ்ப் பழமொழியின் அர்த்தம் புரிந்து மகிழ்வோடு வாழ்வோம்.
葵薯
毅 சிந்தனைத் துளிகள் சி.ை
G. Filibi ஒரு மனிதனுடைய மனப்பாங்கு சொர்க்கத்தை நரகமாகவும் நரகமதை சொர்க்கமாக்கவும் வல்லது மனித வாழ்வின் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் அறிந்த பகுதிகள், அறியாத பகுதிகள் உண்டு. உன்னை எவ்வளவிற்குப் புரிந்து கொள்கின்றாயோ அவ்வளவிற்குப் புரியாமையும் நிறைந்திருக்கும். என்னுடைய செயற்பாடு ஒவ்வொன்றுக்கும் நானே பொறுப்பு என் சுயத்தைக் காத்திட வேண்டும், பிறரது குறுக்கீடு இன்றி. உன் அறிவே உன் உணர்வை நெறிப்படுத்த வேண்டும். உணர்வுக்கு அடிமையாகி விடாதே உண்மையான உன் உணர்வுகளைச் சரியாக அடையாளம்
சந்தர்ப்பங்கள் இருக்காது
கண்டு எதிர்கொள்ளக் கற்றுக் கொண்டால் தவறி விழச்
நான் - 27 - ஆடி - புராட்டாதி 2007

Page 16
இன்றைய சமூகத்தில்
sitsos assift sits
- இராசேந்திரம் சிறீகாந்தன்
உளவியலின் தேவைபற்றிய அறிவு முன்பைவிட அதிகரித்துவருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக உளஆற்றுப்படுத்தல் (உளவளத்துணை) பற்றி விழிப்புணர்வு இன்னும் அதிகமாகப் பிரபல்யமாகி வருகின்றது. ஆனால் இன்றைய சமூகத்தேவையைக் கருத்தில் கொள்கின்ற பொழுது உளவியல் அல்லது உளஆற்றுப்படுத்தல் என்பவற்றில் இன்னும் அதிகமானோர் ஈடுபடுவது சமூகத்துக்கு நலன்பயப்பதாக அமையும் என்பது வெளிப்படையாகின்றது.
உளவியல் கற்க விரும்புவதற்கான காரணிகள்
1. உளவியல் கற்பவர்களுக்கு பிறர் குணங்களை அறியும் ஆற்றலுண்டு என்ற கருத்தின் அடிப்படையில் உளவியலைக் கற்போருண்டு. gep85 g) 6T6...huj606)& (Social Psychology) கற்கின்றபொழுது பிறர் குணங்களை அறிவதற்கான முறைகளை அடையாளம் கண்டு வளர்க்கும் வாய்ப்பு அதிகம். குறிப்பாகத் தொடர்பாடல் திறன்கள் என்னும் பகுதியில் உடல்வழிச் செய்திகள், குரல் வழிச் செய்திகள், உடற் சைகைகளின் உள்அர்த்தம். போன்ற விடயங்கள் உதவக் கூடியவை. அத்தோடு சுய-அறிவில் வளர்தல் (Self-Awareness) என்பனபற்றி பயிற்சிகள்மூலம் கற்கின்றபொழுதே இவ்வகை ஆற்றலைப் பெறமுடியும். ஏனைய உளவியல் துறைகளைக் கற்கின்றபொழுது அவற்றின் அடிப்படையில் சொந்த வாழ்வையும் பிறர் வாழ்வையும் அவதானித்துச் சிந்தித்து அலசி ஆராய்கின்றபொழுதும் இவ்வகை ஆற்றலைப் பெறமுடியும்.
2. சொந்த வாழ்வின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுகின்றவர்களும் உளவியலை அல்லது உளஆற்றுப்படுத்தலைக் கற்க முன்வருவதுண்டு. பிரச்சனை தீர்த்தல், தீர்மானம் எடுத்தல், தொடர்பாடும்திறன்கள், உறவுப்
* பிணக்குகளைத் தீர்த்தல், வன்முறையற்ற தொடர்பாடல்
போன்றனவற்றைக் கற்கின்றபொழுது தம் வாழ்வின் L6) பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய
நான் - 28 - ஆடி - புராட்டாதி 2007

அதிக வாய்ப்பு உண்டு. எனினும் கற்பிப்போர் இவ்விடயங்களை 560)L(p603 வாழ்வுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று விரிவுரையாளர்கள் கற்றுக் கொடுக்கின்றபொழுதே தம் வாழ்வுப் பிரச்சினைகளுக்கு விடைகாண உதவவல்லது.
3. பல்கலைக் கழகத்தில் பிற துறை மாணவர்கள் தமது கற்றலின் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக விருப்புப்பாட நெறியாக (Optional Course) உளவியலின் சில அலகுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவற்றைக் கற்றபின் தாம் முதலிலேயே உளவியல்துறையைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டோமே எனக்
காலந்தாழ்த்தி உணர்ந்து வருந்துவதைப் பார்க்கின்றோம்.
இவ்வாறு கற்றவர்கள் பலர் நாம் இனிமேல் உளவியல் விடயங்கள்பற்றித் தொடர்ந்து படிக்கப்போகிறோம் எனக்
கூறுகின்றனர். இவர்கள் தாம் கற்ற சில பகுதிகளால் அடைந்த
பயனின் அடிப்படையி ബേഥേ' இவ்வாறு கூறுகின்றனர் என்பது வெளிப்படை.
உளவியலைக் கற்க பல்கலைக்கழக LDIT6006)ireB6i முன்வராமைக்கான காரணிகள்
1.1. கற்றல் விளைவுபற்றிய தப்பெண்ணம்: உளவியல் கற்றல்பற்றிக் கல்லாதோரிடையே மட்டுமல்ல கற்றோர்களிடையேயும் தவறான அபிப்பிராயம் அறியாமையால் ஏற்படுகின்றது. உளவியல் கற்கிற ஆட்கள் “ஒருமாதிரி” அல்லது இதைக் கற்றால் “ஒரு மாதிரிப் போய்விடுவினம்’ என்று பேசுவது அல்லது ஏளனமாகப் பார்ப்பது இத்துறையைத் தேர்ந்தெடுக்க
விரும்பும் மாணவர்களின் உற்சாகத்தைக் கெடுத்துவிடுகின்றது.
ஏனைய மனிதர்களிடையே அல்லது கல்வித் துறையிலுள்ளோரில் காணப்படும் ஆளுமைக் குறைபாடுகள்தான் இவர்களிடமும் காணப்படுகின்றது. உளவில் கற்பிப்போர், கற்போர் சமுதாய நலனில் அக்கறை கொண்டு, நல்லுறவு (3Ugoof, உளஆரோக்கியத்தோடு வாழ்கின்றார்கள் என்பதே யதார்த்தரீதியான உண்மை. இதனை அவதானிக்க ஆரம்பிப்போர் தமது தப்பான கருத்தை மாற்றியமைக்க வாய்ப்பு உண்டு. இத்தகைய தவறான கருத்துப் பரவல் குறைவதே சமுதாய நலனுக்கு உகந்தது.
12. உளவியல்துறைபற்றிய அறியாமை; சிலர் உளவியலை உளமருத்துவத்தோடு(Psychiatry) இணைத்துப் பார்க்கின்ற னர்.
நான் - 29- ஆடி - புராட்டாதி 2007

Page 17
உளமருத்துவமானது வைத்தியத்துறை சார்ந்தது, உளவியல்துறை சார்ந்ததல்ல. உளநலம் குன்றியோருக்கு அவர்களின் நோய் அறிகுறியின் அடிப்படையில் மருத்துவச் சிகிச்சைமூலம் குணமளிப்பதே உளமருத்துவத்தின் பணி. உளவியல் துறையில்
ஈடுபட்ட காரணத்தால் எவருக்கும் உளநலமின்மைகள் உருவாகியதற்கான விஞ்ஞானரீதியான ஆதாரம் எதுவும் கிடையாது.
13. வேலை வாய்ப்புப்பற்றிய அறியாமை: பல்கலைக்கழக
மாணவர்கள் மத்தியில் இத்துறையின் வேலை வாய்ப்புப்பற்றிய விழிப்புணர்வின்மை, அவர்கள் இதில் ஈடுபடுவதைக் குறைப்பதில் பலமான செல்வாக்குச் செலுத்துகின்றது. உளவியல் பட்டதாரி மாணவர்களுக்கு அரசிலும் தொண்டர் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு தற்போது அதிகம். அரசாங்கம் பாடசாலைகளுக்கு உளஆற்றுப்படுத்துநர்களை நியமித்து வருகின்றது. உளவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையோ மிகமிகக் குறைவு. வருடாவருடம் சராசரியாக ஐந்து மாணவர்கள் மாத்திரம் உளவியல் பட்டதாரிகளாக வெளியேறுகின் றனர். மேலும் தொண்டள் நிறுவனங்கள் தம் உள-சமூகப் பணிகளுக்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் உளவியல் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. 8F(LD8556) நிறுவனங்களின் பணி வெற்றிடங்கள்பற்றிப் பத்திரிகையிைல் தினமும் படித்தால் இவ்வுண்மை புலனாகும்.
14. உளவியல் மொழியாக்குநர்களின் ġb56) Ig3l: உளவியல் துறைபற்றிச் சிலரின் ஆர்வம் குன்றியமைக்கு இத்துறைசார் உள்நாட்டு வெளிநாட்டுக் உளவியல் எழுத்தாளர்களும் அல்லது கல்விமான்களும் காரணம். உளவியல் புத்தகங்களை வெளியிடுகின்றபொழுது “புத்தி ஜீவித்துவத்தை” அல்லது "அறிவுத் தரத்தை”(?) பேணக் கருதிக் 35960TLDIT60T சொல்லாக்கங்களை மேற்கொள்வதால் பொதுமக்களால் மட்டுமன்றி வேறுதுறை ஆசிரியர்கள் மாணவர்களால்கூடப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் இத்துறை அந்நியப்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. சிறந்த உளவியலாளர்களில் ஒருவரான காள் யுங் தன் முதுமையில் சொந்த உளவியல் கருத்துகளை எளிய மொழிநடையில் எழுதியபொழுது அதற்கு மக்களிடையே கிடைத்த மகத்தான வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார். இதனால் பலர் பயன்பெறவேண்டும் எனும் நோக்கோடு தன் எஞ்சிய கால வாழ்வில் தொடர்ந்தும் அம்மொழிநடையிலேயே
நான் 30- ஆடி - புராட்டாதி 2007
 

*
எழுதினார். இவரது இச்செயல் இத்துறை எழுத்தாளர்கள், கல்விமான்களுக்கு நல்ல முன்னுதாரணமாக விளங்க வேண்டும். சொல்லும் விடயத்தை புரியும் வகையில் வெளிப்படுத்த உதவுவதே மொழியின் பணி என்பதை மறந்த உளவியல் மொழி uாக்கங்கள் ட்டுச்சுரைக்காயாகவே அமையும். உளவியல் கொள்கை உருவாக்குனர்கள் மத்தியிலே துறைசார் சொல்லாக்கம் அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சாதாரண மக்களிடையே எளிய மொழிநடை பேணுவது இத்துறையில் பலர் ஆர்வம் கொண்டு பயன்பெற உதவும்.
15. கற்பித்தல் முறைக் குறைபாடு: உளவியல் விடயங்களை வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தலாமெனக் கற்பிக்கும்பொழுது பலர் விரும்பிப் படிப்பதோடு பிறருக்குத் தாமும் அறிமுகம் செய்ய
வாய்ப்பு அதிகம். வாழ்வுப் பயன்பற்றிக் கூறாது வெறும்
உளவியல் அறிவை மட்டும் வழங்குகின்றபொழுது இதைக் கற்பதால் பயன் என்ன என்று சலித்துக்கொள்ள வாய்ப்புண்டு.
16. எழுத்தாளர்களின் குறைபாடுகள்: உளவியல் எழுத்தாளர்கள் தமது விடயம் சம்பந்தமாகத் தரமான உளவியல் புத்தகங்களைப் படித்துவிட்டே சுய சிந்தனைகள் எழுதத் தொடங்கவேண்டும். ஆனால் இன்று சிலர் தம் மனதில் தோன்றும் கருத்துகளைத் தொகுத்துப் புத்தகமாக்கிவிட்டு அதற்கு உளவியல் என்று பெயர் சூட்டும்போது இதுவா உளவியல் என்று மக்கள் உளவியலைத் தரக்குறைவாக நினைக்க வாய்ப்பளிக்கின் றது. இதுவும் உளவியல் அந்நியப்படக் காரணமாகின்றது.
சமூகத்தில் உளவியல் கல்வியின் தேவை தற்கால சமூகத் தேவைகள் உளவியல் கற்றலை வலியுறுத்தி நிற்கின்றன.
1. கல்வியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பல்கலைக்கழகம் போன்றவற்றில் பயிலும் இத்துறை மாணவர்
களுக்கும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் உளவியல் கல்வி
வழங்கப்படுகின்றமை உளவியலின் அவசியத்தை கோடிட்டுக் காட்டுகின்றது.
2. இலங்கை அரசானது ஒவ்வொரு பாடசாலை, பல்கலைக் கழகம் என்பனவற்றிற்கு உளஆற்றுப்படுத்துநர்களை (ஆலோசகர்கள்) நியமிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதற்கு உளவியல் அறிவில் அல்லது உள ஆற்றுப்படுத்தலில் பொருத்தமான பயிற்சி பெற்றோர்
நான் - 31 - ஆடி - புராட்டாதி 2007

Page 18
விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே.   LITLFT606566ö உளவியலின் அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் இதற்கென நியமிக்கப்படுவதான கருத்தும் உண்டு. இதனால் இவர்களது சேவையைப் பெறும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி பாதிப்படைய வாய்ப்புண்டு என்பதால் இந்நடைமுறை ஆரோக்கி யமானதல்ல. -
3. யுத்தம், சுனாமி என்பனவற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோர் அப்பாதிப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட் டோர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானோர், உளநலம் கடுமையாகக் குன்றியோர். போன்றோருக்கு உள்ஆற்றுப்படுத்தல் அளிக்க தகுதிபெற்ற உளஆற்றுப்படுத்துநர்கள் போதுமான அளவு இல்லை. குறுகியகால உளஆற்றுப்படுத்தல் பயிற்சியில் ஈடுபடுவோருக்கும் இன்னும் ஆழமான உளவியல் அறிவு வேண்டியுள்ளது. உளவியல் பட்டதாரிகள் Li6Off உருவாகி உளஆற்றுப் படுத்தல்பயிற்சி பெற்று ஈடுபடும்பொழுது பாதிப்புற்ற பலர் குணம்பெற்று மகிழ்வோடு வாழ வழி பிறக்கும்.
4. தகுதியான உளவியல் விரிவுரைகள் நிகழ்த்தக் கூடியவர்கள் உளஆற்றுப்படுத்தல் நிலையங்களுக்குத் தேவையாக உள்ளது. அவ்வாறே உள-சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வாக உளவியல் கல்வியளித்தல் (Psycho-Education) திட்டங்களுக்கு விரிவுரை யாளர்கள் தேவை. உளவியல் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் உளவியலைக் கற்காதோர் இதனைக் கற்பிக்கும் தவறான நடைமுறை அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் இடம்பெறுகின்றது என்ற கவலைகளும் உண்டு. வருடத்தில் சராசரி 5 மாணவர்கள் மட்டுமே பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். சமூகத்தில் பட்டதாரி மாணவர்களின் தேவையோ மிக அதிகம். ஆனால் அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையோ மிகக் குறைவு.
5. மேற்கு நாடுகளில் உளவியல் கற்காதோர் முன்பள்ளி ஆசிரியர்களாகவோ அன்றேல், ஏனைய துறை ஆசிரியர் களாகவோ பணியாற்ற முடியாது. அந்தளவிற்கு உளவிய லின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுகின்றனர். 6TLDgil பிரதேசங்களில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இக்கற்றல் மிக அவசியமான ஒன்றாக அமைகின்றது. சிறுவர்களின் உள-சமூகஒழுக்க வளர்ச்சிகளை மேம்படுத்துவதற்குப் பொருத்தமான
3
2
நான் ஆடி - புராட்டாதி 2007

உளவியல் பயிற்சி பெற்றுக்கொள்கின்றபொழுது, சிறுவர்களின் ஆளுமையைச் சிறப்பாக விருத்தியாக்க முடியும்.
உளவியல் கல்வியின் வாழ்வியல் பயன்பாடு உளவியலானது பரந்து வளர்ந்துகொண்டிருக்கும் துறை. இங்கே உளவியலின் சில துறைகள்பற்றிக் கற்பதால் ஏற்படக்கூடிய பயன்களை காண்போம்:
1. உளஇயங்கியல் உளவியல் (Psycho-Analysis): சிக்மண்ட்
பிராய்ட் (6560) D உருவாக்கம், உறவாடல், உளநலம் என்பனவற்றில் எவ்வாறு அடிமனதுள் மறைந்துள்ள L6) அனுபவங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை
விளக்கினார். இதனை நாம் கற்று விளக்குவதானல் நம் கடந்த கால அனுபவங்கள் எவ்வாறு அடிமனதுள் மறைந்திருந்து இன்றும் நம்மையறியாமல் செயற்படுகின்றன என்பதை அறிய முடியும்.
2. நடத்தைவாத உளவியல் (Behavioural Psychology) எமது நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் புறக்காரணிகளை அடையாளம் கண்டு பொருத்தமான முறையில் அவற்றைக் கையாண்டு வளர்ச்சியடைய உதவியளிக்கும். அத்தோடு சில கற்றல் முறைகளை அறிந்து கொள்ளவும் உதவும். பயிற்சி அளித்தலில் பயன்படுத்தக்கூடிய பல முறைகளை அறியும் வாய்ப்பும் எற்படுகின்றது.
3. உளச்செயல் உளவியல் (Cognitive Psychology) கற்கின்றபொழுது எண்ணங்கள், அக உரையாடல்கள், பிரச்சனை , தீர்த்தல், தீர்மானம் எடுத்தல், புத்தாக்கதிறனை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல். போன்ற பல விடயங்களை அறிந்து உளத்திறன்கள் பலவற்றை வளர்க்கவும் பிரச்சினைகளை தீர்க்கும் முறைகளை அறிந்து மகிழ்வோடு வாழவும் உதவும்.
4. D LL6), Frir D 6T6iluigi) (Biopsychology or Physiological Psychology) கற்கும்போது உடல் உறுப்பு, நரம்புத்தொகுதி, மூளை எனபவற்றின் குறைபாடுகள், உட்கொள்ளும் மருந்துகள் என்பன எவ்வாறு உளநலமின்மைகளை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து தடுக்க அல்லது குணமாக்கல் அளிக்கும் அறிவைத் தருகின்றது.
நான் - 33 ஆடி - புராட்டாதி 2007

Page 19
5. மனிதப்பண்பு உளவியல் (Humanistic Psychology) மனிதரின் சுயமதிப்பீடு எவ்வாறு 96.560)LD, 2.36) என்பனவற்றில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்றும், அதை வளர்ப்பதற்கான வழி முறைகளையும் இது கற்பிக்கின்றது. அத்தோடு மனிதர் தன் வாழ்வின் அர்த்தத்தை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாழ்வை அமைப்பதே நிறைவு தரும் என்பதை வலியுறுத்தும். தன் வாழ்வை அமைக்கும் தெரிவுகளை மேற்கொள்ளும் சுதந்திரமும் பொறுப்பும் மனிதனுக்கு உண்டு போன்ற விடயங்களைக் கற்றுக் கொடுக்கின்றது.
6. சமூக உளவியல் (Social Psychology) மனிதர் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றனர். அவர்களின் உறவுகளை நிர்ணயிக்கும் காரணிகள் எவை, சமூகப் பிரச்சனைகளையும் அவற்றிற்கான தீர்வுகள் என்பனவற்றை அறிய வாய்ப்பளிக்கின்றது. அத்தோடு ஒருவரின் ஆளுமையில் சமூகக்காரணிகள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என அறிய வாய்ப்பளிக்கின்றது.
7. மனோசக்தி உளவியல் ( கடப்புநிலை உளவியல், அதீத உளவியல்) (Para Psychology) கற்கின்றபொழுது மனித (6560) Dust 6095 சிக்மண்ட் பிராய்டின் ஆளுமைக் கருத்துகளையும்விடப் பரந்தது, அதன் மர்மங்கள் இன்னும் ஆய்ந்து அறியப்படவேண்டியவை என்பது வெளிப்படும். மனித மனமானது அற்புதமான பல சக்திகளைக் கொண்டுள்ளது என அறியும் 6)TüÜL எற்படுகின்றது. அத்தோடு மனோசக்தி அனுபவங்களுள் எவை உண்மையானவை எவை போலியானவை என்பதை இனம்காணும் திறனும் வளர்வதால் ஏமாந்து போவதற்கான சாத்தியம் குறைகின்றது.
8. 616 frédat u(56 s) 6T6 u66losis (Developmental Psychology) கற்கின்றபொழுது கரு வயிற்றிலிருக்கும்போது தாய் அல்லது தாதியர் கவனத்தில் கொள்ளவேண்டிய பல விடயங்களை அறிய முடிகின்றது. குழந்தைப் பருவ அனுபவம் எவ்வாறு பிற்கால வளர்ச்சிப்படிகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது என அறிய முடியும். பிள்ளையை நல்ல முறையில் உருவாக்கப் பயன்படும் காரணிகளை அடையாளம் கண்டு அவற்றை பிள்ளைகளுக்குக் கொடுக்கவும், தடையான வற்றை நீக்கவும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது. குழந்தை உளவியலைக் (Child Psychology) கற்பது பெற்றோர் தம் பிள்ளை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களைக் கற்றறிய வாய்ப்பு ஏற்படுத்துவதால்
நான் ۔ 34۔ ஆடி - புராட்டாதி 2007

நல்ல ஆளுமை கொண்ட பிள்ளைகளை உருவாக்க முடிகின்றது. கட்டிளம்பருவத்தோர் உளவியலைக் (Adolescence Psychology) கற்கும் இப்பருவத்தினர் தம்மில் ஏற்படும் உடல், உள, ஒழுக்க, பாலியல், உறவு மாற்றங்களை அடையாளம் கண்டு பொருத்தமான முறையில் இவற்றைக் கையாளக் கற்றுக்கொள்ள முடியும். இத்துறையைக் கற்கும் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர், ஆசிரியர்கள், இப்பருவத்தினர் எதிர்கொள்ளும் பல மாற்றங்கள் பிரச்சினைகளை அடையாளம்கண்டு புரிந்து அவர்களுக்கு உதவவும் தம்மிடையோன பிணக்குகளைப் புரிந்து இலகுவாகத் தீர்த்துக்கொள்ளவும் வழியமைக்கின்றது. அவ்வாறே மத்திய வயதினர் உளவியல் (Psychology of Middle Aged) வயது முதிர்ந்தோர் s) 6T6...huj6) (Psychology of Aging or Gerontology) 6T6iru60T 96fras6i எதிர்கொள்ளும் பிரச்சனை கள் தேவைகள், என்பனவற்றைச் சிறப்பாக அறிந்து நல்ல வாழ்வை அமைத்துக்கொள்ளப் பயனளிக்கின்றது. ܕܝܛܬ݀
9. LTGogislatoGo p 6T6iuso (Gender Psychology): (56) isfair urgi) நிலை எவ்வாறு உளநலனில் செல்வாக்குச் செலுத்துகின்றது, பால்நிலை உருவாக்கத்தின் காரணிகள், அதில் பாதிப்புச் செலுத்தும் உள, சமூகக் காரணிகள் என்பனவற்றை அறிந்து பால்நிலை சமத்துவம் மலரத் துணைபுரிகின்றது.
10. ஆளுமை உளவியல் (Personality Psychology): கற்கின்ற பொழுது எவ்வாறு ஆளுமை உருவாகின்றது, அதன் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் காரணிகள், g560)LUIT85 அமையும் காரணிகளை அடையாளம் காணமுடிகின்றது. அதே வேளை தம் சொந்த ஆளுமைபற்றிய பல ஆழமான உண்மைகளை அறிந்து வளர்ச்சியடைய வாய்ப்பளிக்கின்றது.
11. boogirilaos) s 6T6...hugi) (Health Psychology): L60 g) 6T நலனை மேம்படுத்தும் காரணிகள் முறைகள் என்பனவற்றை அறிந்து இந்நலனில் மேலோங்கி வாழ இத்துறை பல அரிய கருத்துகளை வழங்குகின்றது. உள நெருக்கீடுகளைக் கையாளும் முறைகள், உடல்-உள ஓய்வுப் பயிற்சிகள் போன்றன சில உதாரணங்கள். அத்தோடு உடல்நலம் குன்றியோரின் உள. உணர்ச்சி அனுபவங்களைப் புரிந்து அவர்களுக்கு உதவத் துணையாகின்றது
நான் 35 ஆடி - புராட்டாதி 2007

Page 20
12. p 6m56)LólairGOLDufus) (Abnormal Psychology) cstpay; கற்கின்ற பொழுது உளநலமின்மைகள் பல்வேறு பருவங்களில் ஏற்படுவதற்கான காரணிகள், அவைகளின் அறிகுறிகள், இவற்றைக் குணமாக்கும் முறைகள் என்பனவற்றைக் கற்பிக்கின்றது. இதனைக் கற்பதன் மூலம் ஒரு சில அறிகுறிகளைமட்டும் கண்டவுடன் தனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ அல்லது பிடிக்கப்போகின்றதோ என்று கலங்குவதிலிருந்து பலர் விடுபட வாய்ப்புக் கிடைக்கின்றது. காரணிகளை அடையாளம் காண முடிவதனால் தடுப்புமுறைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுகின்றது. எவை குணமாகக் கூடியவை, எவை முற்றாகக் குணமாகா நிலையிலும் தொடர்ந்து தம் வாழ்வை மேற்கொள்ள முடியும் என அறிய முடியும். உ-மாக பாலியல் பிரச்சினைகள் பல இலகுவாகத் தீர்க்கக் கூடியவை என்ற 'உண்மையறிந்து அவற்றிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியோடு வாழ வழிபிறக்கின்றது. இதனால் போலி வைத்தியர்களிடம் சென்று ஏமாறும் நிலையும் தவிர்க்கப்படுகின்றது. அத்தோடு மாற்றுவலுக்கொண்டோர்பற்றிய (Differently Abled or Disabled) selgol6ör 919tu60)Luigi) Gusii (Birir, மற்றும் பராமரிப் பாளர்கள், ஆசிரியர்கள், இவர்களைப் பராமரித்தல் கற்பித்தல் போன்றவற்றிற்குத் தேவையான அறிவைப் பெறுகின்றனர்.
13. உளஆற்றுப்படுத்தல் (Counselling Psychology): உளஆரோக்கிய நிலையிலுள்ளோர் எதிர்கொள்ளும் தற்காலிகப் பிரச்சனைகளை ஆரோக்கியமான முறையில் கையாள்வதற்கான திறன்களைக் கற்றுக்கொள்ளவும், உளத்திறன்களை வளர்த்தெடுக்கவும் உளத்தாக்கங்களிலி ருந்து விடுபட்டு வாழவும், இத்துறை உதவுகின்றது. தொடர்பாடல் திறன்களில் தேர்ச்சி பெற்று அன்றாட உறவுகளை மேம்படுத்தும் திறன்களைக் கற்றுக்கொடுக்கின்றது.
14. கல்வி உளவியல் (Educational Psychology) மாணவர்கள் சிறப்பாகக் கற்கின்றபொழுது பொருத்தமான முறையில் கற்றலில் ஈடுபட்டு சிறப்பான பெறுபேறுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆசிரியர்கள் இதனைக் கற்கின்றபொழுது வகுப்பறை முகாமைத்துவம், சிறப்பான பாடநெறி உருவாக்கம், சிறந்த கற்பித்தல் முறை. என்பனவற்றில் தேர்ச்சி பெறமுடியும்.
15. விளையாட்டுத்துறை உளவியல் (Sports Psychology): இத்துறையைக் கற்போர் தாம் எவ்வாறு பல்வேறு உளவியல்
நான் 36 - ஆடி - புராட்டாதி 2007

முறைகளைப் பயன்படுத்தி விளையாட்டுத் துறையில் சிறந்த ஆற்றுகை புரிவதற்குத் தேவையான நுட்பங்களை அறியும் வாய்ப்புக் கிடைக்கின்றது. பயிற்சியாளர்கள் பல உளவியல் நுட்பங்களை அறிந்து தமது பயிற்சி அளித்தலின்போது பயன்படுத்த முடியும். பெற்றோர், ஆசிரியர் தம் பிள்ளை இத்துறையில் (BotibLlL வைப்பதற்கான அறிவு, நுட்பம் என்பனவற்றைக் கற்பிக்க முடியும்.
16. Égolar p 6T6ius) (Organizational Behaviour): Big616& செயற்பாடுகளில் நடைபெறும் உள, உறவு இயங்கியலைப் பற்றி பல நல்ல கருத்துகளை வெளிப்படுத்துவதால் நிறுவனங்களில் தொழில்புரிவோர் தமது உள, உறவு, தொழில் என்பனவற்றில் மேன்மையடைய முடியும்.
எனவே உளவியல் கற்பதானது. நிச்சயம் தனிப்பட்ட வாழ்விலும், உறவாடல், கல்வி, தொழில் என்பனவற்றில் அதிகம் நற்பலன் தரக்கூடியது என்பதை உணர்ந்து பலர் இதில் ஈடுபட முன்வருவது நல்லது.
嘉薰 .
உங்கள் நண்பன் “நான்” : நீங்கள் வளமாக வாழவேண்டுமென்பதற்காக “நான்” வலம் ; வருகிறேன். உங்கள் உணர்வுகள் உணர்ச்சிகளுடன் ஒன்றித்து ; உங்களுக்குள்ளே ஓர் அகப்பயணம் மேற்கொள்ள உங்களோடே ; கூடவருபவன் “நான்”
சினேகமுள்ள நண்பர்களே! :*நான்” உளவியல் சஞ்சிகையை உங்கள் நண்பர்களுக்கும் :அறிமுகப்படுத்தலாமே, அன்பளிப்பாக அல்லது பரிசாக ஒருவருட :*நான்” வெளியீடுகளை வழங்கி சிந்திக்க துாண்டலாமே!
நான் - || || 37 ، شد ஆடி - புராட்டாதி 2007

Page 21
InGaN அழுத்தத்தை புரிந்து கொள்ளல்
* (Understanding stress)
8.
縫
ச. சத்தியவேணி LD6OT 6lupiabib airbofair 69(U) Ligas (stress is part of life)
9 மன அழுத்தம் பொதுவான வாழ்வின் ஒரு பகுதி எம் அனைவருக்குமே உடல் உள ரீதியாக அதிகாரங்கள் உண்டு * மன அழுத்தம் உதவியானது இது அபாயம் குறித்த விழிப்பை
தருகின்றது 9 மன அழுத்தத்தை சமாளிக்க முடியாத பட்சத்திலேயே அது
ஒரு பிரச்சனையாக மாறுகின்றது.
மன அழுத்தத்திற்கான முல காரணங்கள் (sources of stress)
9 உறவில் முறையில் பிரச்சனை
பணக் கவலைகள்
வேலையில்லா பிரச்சனை தேவைக்கு அதிகமான நிலை
தொழில் பிரச்சனை
சுகuபீனங்கள்
வறுமையான வீட்டுச் சூழல்
தனிமையாக்கப்படல், தனிமை
துஷ்பிரயோகங்கள்
புகையிலை கெப்யின் கெட்ட உணவு பழக்கங்கள் (tobacco
caffeine bad diet) -
மன அழுத்தம் எவ்வாறு உணரப்படும் (whatstressfeels like)
* உடல் ரீதியான பிரச்சனைகள், தலைவலி, அஜீரணம்,
முதுகுவலி * நித்திரை செய்யும் முறையில் மாற்றங்கள் 0 பசியின்மை 6 பாலியல் ஆற்றல் குறைதல் (திருமண உறவுகளில் தாக்கத்தை
ஏற்படுத்தும்) - * ஒய்வாக இருக்க கஷ்டப்படல்
தீர்மானம் எடுப்பதில் பிரச்சனைகள் காணப்படல் 6 சிறிய காரியத்திற்கும் கூடுதலாக உணர்ச்சி வசப்படல்
(கோபம், மனவிரக்தி) * மனச் சோர்விற்கு உட்பட்டு நிறைகுறைதல்
()
நான் ۔ 38 ۔ ஆடி - புராட்டாதி 2007
 
 
 
 
 
 
 

* மதுசாரம் புகையிலை பாவித்தல் அல்லது சமாளிக்க
போதைவஸ்து பாவித்தல்
மன அழுத்தத்தின் போது உடலில் என்ன நடைபெறும்? (What happensin your body when you are stressed?) ep66 (3 bloo)6)356it (three stages) Gráfaffeiseos repoo (the alarm stage)
உடல் செயற்பட்டு எட்பீனல் சுரப்பிகள் திரவத்தை சுரக்கும் (epinephrine hprmone) Sympathetic ஒழுங்குமுறை எட்பீனலைனை உற்பத்தி செய்யும் (துாண்டும்) parasympathetic ஒழுங்குமுறை மன அழுத்த ஒமோன்களை வெளியாக்கும் (தணிக்கும்) சமனற்ற தன்மையும், உடலில் மன அழுத்த ஒர்மோன்களை வெளியாக்க சந்தர்ப்பம் காணப்படாத நேரத்திலும் மன அழுத்தம் ஒரு பிரச்சனையாக மாறும் ஒர்மோன்கள் அமைப்பு பெறும்.
இதயத்துடிப்பு, சுவாசம், blood sugar, உயர்வடையும்
குருதி சுற்றோட்டமானது வயிற்றிலிருந்தும் 2 61 அவயவங்களிலிருந்து கை, கால், மூளை பகுதிக்கு விரைவாக LuTub அபாயத்திற்கு பிரதி செயலாக உங்களது உடலானது பாதுகாப்புக்காக ஒட அல்லது “சண்டையிட அதிகளவு சக்தியோடு ஆயத்தமாக இருக்கும்
Gigital road (resistance stage)
உடல் ரீதியாக தப்பிக்க முயற்ச்சி செய்யும் அல்லது சண்டையிடும் உடல் ரீதியாக தப்பிக்க அல்லது சண்டையிட முடியாத போது அதை சமாளிக்க வேறு வழிகளை நாடும் உதாரணம்:- மறுத்தல், கேலி செய்தல் உடல் ரீதியான மன அழுத்த அறிகுறிகளை தெரிந்து நிறுத்துவது கடினம்
Gafnio 5606) (exhaustion stage)
1.
2.
2 L6)T60135) மன அழுத்த பாதுகாப்புக்கு எதிராக செயற்பட்டிருக்கும்
உடல் ரீதியாக தப்பிக்க அல்லது சண்டையிட முடியாது அச்சுறுத்தல்களை எதிர்க்க முடியாது அடிக்கடி ஏற்படும் சுகயினங்களாக மனோதத்துவ ரீதியான வயிற்றுக் கோளாறுகள்
நான் - 39- ஆடி - புராட்டாதி 2007

Page 22
உதாரணம்:- தடிமல், வலிகள், தோல்வியாதி குணப்படுத்தும் சிகிச்சை முறையின் உறவில் ஆலோசகருக்கு தேவையானவை
9 உண்மை அல்லது ஒத்த கருத்தை கொண்டவராக இருத்தல் 9 நிபந்தனையற்ற உறுதியான மரியாதை கொடுத்தல் அல்லது
முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுதல் 9 உணர்ந்து கொள்ளுதலும், 69(5 ஆழமான புரிந்து
கொள்ளுதலோடு தொடர்பு கொள்ளுதலும் 966) T3F85.f356i (counselors)
எந்த ஒரு பாரம்பரியத்திலும் இரு ஆலோசகர்கள் ஒரே மாதிரியான விடையைக் காணமாட்டார்கள் இது சிறப்பாக மனிதனை மையமாகக் கொண்ட முறையில் தெரிகிறது person centered counseling இது ஒருமைத் தன்மை, சிறப்புத்தன்மையை ஆலோசனை பெறுபவருக்கு மட்டுமல்ல ஆலோசகருக்கும் கொடுக்கிறது.
ஆற்றுப்பணியாளர் தன்னை பயன்படுத்தும் முறை
6 ஆற்றுப்பணியாளரின் தன் அன்பு 9 ஒருவருக்காக நேரத்தை ஒதுக்குதல் 9 கவனித்தல் 6 பராமரித்தல் ஆற்றுப்பணியாளர் தன்னை செவிமடுத்தல்
6 தியானம் 6 ஜெபம், மன்றாடல் 6 பரீசீலனை செய்தல் ஆற்றுப்பணியாளர் தன்னை ஏற்றுக்கொள்ளல்
9 வளர்ச்சியின் விருப்பம் 9 உண்மையை சந்திக்க ஆயத்தம் . 9 அடிக்கடி குற்ற உணர்வை சந்தித்தல் -> ஆற்றுப்பணியாளர் பொறுமையுடன் காத்திருக்க Lip85 வேண்டும் -> ஆற்றுப்பணியாளர் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் -> உணர்ச்சி பூர்வமாக அனுதாபத்தில் முன்னேற்றம்
9 தங்களுடைய உண்மைதன்மையை விட்டுவிடாது, மற்றவர்களின் உலகை காண வேண்டும் * உண்மைத் தன்மையுடன் இருக்க ஆலோசனை பெறுபவர் கற்க வேண்டும் - 6 ஆற்றுப்பணியாளரும், ஆலோசனை பெற வருபவரும் உறவில்” நிலைத்திருக்க வேண்டும்
நல்ல
B6) - 40 - ஆடி - புராட்டாதி 2007

அதாவது
6 சமத்துவம் 8 திறந்த உள்ளம்
● தேவுைகளைப் பொறுத்தவரையில் திறந்த உள்ளம் 6 அர்ப்பணிப்பு ஆற்றுப்பணியாளர் பிற துறைகளிலும் உதவி செய்யலாம்
4. a6665 (education) * நிர்வாகம் முகாமைத்துவம் (management) * பிற கலாச்சாரத்தோடுள்ள தொடர்பியல் ( cross - cultural communication) 6 அகில உலக சமாதான பணி (international peace work) congruence- ஒருமித்த கருத்தை கொண்டிருத்தல்
ஒருமித்த கருத்தை கொண்டிருப்பதன் மூலம் ஆலோசனை பெறுபவரின் உள்ளான உணர்ச்சிகளுடன் இணைந்து வெளிப்படையான திறந்த பதில்களை வெளிக்கொணர முடியும்
9 புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை e குழப்ப நிலை இவற்றில் ஆற்றுப்பணியாளரின் முழுமையான இருப்புத்தன்மை (fully presen) மிக முக்கியமானது ஏனெனில் யதார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனித உறவில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருத்தல் தொடர்ந்து நிலைத்திருக்க உதவுகிறது. eyib ib (Beginning)
6 இருவரும் கூடி வருதல் உ உண்மைத்தன்மை, நம்பிக்கை, ஏற்படுத்துதல் 6 ஆற்றுப்பணியாளரின் அர்ப்பணிப்பு 6 ஆலோசனை பெறவருபவரின் தேவைகளை ஆராய, ஆர்வமுடன்
இருத்தல் 9 seƏgöoğ5ITLEtib 8 ஒருமித்த கருத்தை கொண்டிருத்தல்
இந்த ஆரம்பத்தின் முடிவு உறவின் தொடர்ச்சியை முன்னேற்றிச்
செல்வதாகும் GODINDA IůLJG56 (Middles)
e எல்லா ஆலோசனை பெறவருபவரும் தனித்தன்மை
கொண்டவர்கள் என்பதை வலியுறுத்தல் நம்பிக்கையை உறுதிப்படுத்தல் ஆழமான உறவை பகிர்ந்து கொள்ளுதல் ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி செல்லல் தன்னை ஏற்றுக்கொள்ளும் நிலையை அடைதல்
நான் - 41 - ஆடி - புராட்டாதி 2007

Page 23
(uplge (Endings)
ஆலோசனை பெறுபவரை முடிவுக்காக ஆயத்தப்படுத்தல்
திரும்பிப் பார்த்தல் ஆலோசனை பெறுபவர் தன்னை ஏற்றுக்கொள்ளல் புதிய தெரிவுகளை ஏற்க சுதந்திரமளித்தல் தன்னை ஏற்றுக்கொள்ளும் முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்லுதல்
முடிவுக்குப்பின்
ஆலோகசரும் ஆலோசனை பெறுபவரும் நண்பர்களா? எங்காவது பொது இடத்தில் கண்டால் எப்படி நடந்து கொள்கிறோம் - அருவருப்பு
வாந்தி
வயிற்றோட்டம்
மலச்சிக்கல்
வயிற்றுப்புண்
ஒற்றைத் தலைவலி ஒழுங்கற்ற மாதவிடாய் தலைமுடி உதிர்தல் திடிரென தாய்ப்பால் வற்றிப் போகுதல்
Grait GOT GTibLDTG) 6hafiu (plguyi (what you can do)
舜
உங்களை எது மன அழுத்தத்திற்குள்ளாக்குகின்றது என்பது குறித்து செயற்பட்டு மாற்ற முடியுமானவற்றை மாற்றல் உங்களை ஒய்வாக வைத்திருக்கக்கூடிய நிறுத்தக் கூடிய முறைகளை கண்டு பிடித்தல் மகிழ்ந்து அனுபவிக்கக்கூடிய ஒன்றை செய்தல்
உடற் பயிற்ச்சி, நீந்துதல்,யோகா, தளர்த்தக்கூடிய அணுகுமுறை ஏதாகிலும் செய்தல் இன்னொருவருடன் உறவாடல்
ஆலோசனை பெறல்
சமூகத்துடன் இணைதல் ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை செய்தல் உணவு பழக்கத்தை மாற்றல்
மருந்து உட்கொள்ளல்
குறிப்பு: மன அழுத்தத்தின் போது தேநீர், கொக்கோகோலா கூடுதலாக அருந்தக்கூடாது.
நான்
- 42 - ஆடி - புராட்டாதி 2007

லெ
அர்த்தமுள்ள மானிட வாழ்விற்கு வெறி தேவை, ஆக்கபூர்வமான காரியங்கள் ஆற்றுவதற்கு வெறியேற்ற வேண்டும் எனும் கருத்துக்கள் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், துன்பப்பட்ட மனைவியருக்கும், அவஸ்தைப்பட்ட உறவுகளுக்கும், அவமானப்பட்ட உள்ளங்களுக்கும் கசப்பான நினைவுகளை சுமந்து என்னில் வெறுப்பினையே ஏற்படுத்தும் ஆனால் அடிமைப்பட்ட பலருக்கு அருமையானதாக அருகில் இருக்காதா என்ற தாகத்தை உண்டுபண்ணும். −
ميشيلا என் சிந்தனை சுற்றிவரும் வெறி குடிவெறியல்ல சாதிக்கும் வெறி, சாதனைகள் ஆற்றும் வெறி, இலட்சியத்தை நோக்கி பெயர்ச்சி அளிக்கும் வெறி என்பதில் நான் தெளிவாய் இருப்பதுபோல் என் அன்புடை வாசகர்களும் முழுதாய் இருந்து நலமதை அருந்தி புதியவை படைக்கும் வெறியடைவார்கள் என்பதில் அதீத நம்பிக்கையுடன் அனுமதிக்கிறேன். பேனாவை என் எண்ணச்சிதறல்களை சீர்படுத்தி கருத்தமைக்க.
குதலை மொழிபேசி குதுகலிக்கும் காலம் கடந்து அறிவு தெளிவு பெறும் வயதில் இருந்து பெற்றோர் எதிர்பார்ப்பே பிள்ளைகளின் இலட்சியமாகிறது; வைத்தியர், பொறியியலாளர், சட்டவாளர், ஆசிரியர், துறவி. எனத்தொடர்கிறது பட்டியல். வளர்ந்துவரும் குழந்தை பெற்றோர் ஊன்றிய இலட்சிய விதையை விருட்சமாக்க இயற்கையிலே இயலாது போனாலும் பெற்றோர் இன்பத்துக்காக ஒவ்வாத உணர்வுகளுடன், உளச்சிக்கல்களுடன் போராடுகிறது. இயல்பு தன்மைகளும், பெற்றோர் எதிர்பார்ப்புகளும் ஒத்துச்செல்லாதபோது ஏற்படும் உரசல்களால் உருவாகும் சிதறல்கள் ஒவ்வாமையை வெளிப்படுத்தினும் உள்ளத்துள் ஒளித்துக்கொண்டு, இயற்கை திறன்களை அழித்து முரண்பட்ட செயற்பாடுகளுடன் உடன்பட்டு அசட்டு புன்னகையுடன் அசைகிறது நாட்கள் இலக்கை நோக்கி. பாலிய பருவத்தை எய்தியும் பெற்றோரை எதிர்க்க முடியாது, சமூகத்தை தவிர்க்க தெரியாது சுயரூபத்தை சுறண்டி பொய்ரூபம் செய்து வளைந்து, நெழிந்து வாழ்நாள் கழிகிறது எப்படியோ இலட்சியத்தை அடைந்துவிட வேண்டும் எனும் எண்ணத்துடன்.
நான் - 43 - - ஆடி - புராட்டாதி 2007

Page 24
வெறி - சாதிக்கும் வெறி பொறியாக பறந்திட வயது, பால், மனிதர்கள், விமர்சனங்கள் தடையாக அமைந்திட அனுமதியாமை ஒவ்வொரு இளைஞன், யுவதியின் ஆளுமை வளர்ச்சியின் ஆழத்திலும் தங்கியுள்ளது. தமக்கென இலட்சியம் வகுத்து சாதனைகள் படைக்க புறப்படும் உள்ளங்கள் எதிர்பாராத காரணங்களால், நிகழ்வுகளால், சூழ்நிலைகளால் காலாதி காலமாக சுமந்து சுகம் அனுபவிக்க காத்திருந்த இலட்சியத்தை அடைய முடியாத நிலை அல்லது தோல்வி தீப்பொறியாக இவர்கள் எதிர்காலத்தை, எஞ்சிய நாட்களை, மிஞ்சிய மனவலிமையை, வற்றாத இயக்க சக்தியை எரித்துவிட அனுமதித்து குழப்பம், கவலை, விரக்தி, அயர்ச்சி, அரித்தை, வெறுப்பு, ஒளித்தல்.என பரிதாபமான நிலைகளில் பரிதவிப்பது நாம் காண்பவை அல்லது வாழ்வின் ஏதோ ஒரு நிலையில், காலத்தில் நாம் அனுபவித்தவை. ۔۔۔۔
அமலாவின் பெற்றோர் அத்தையைபோல் அவளும் வைத்தியராக வேண்டுமென சிறுபராயத்தில் இருந்தே ஆக்கிரமிப்புச் செய்யத் தொடங்கினர். சுற்றத்தாரும், நண்பர்களும் வைத்தியர் என்றே அழைத்தார்கள். பெற்றோர், சமூகம் தன்மீது சுமத்திய இலட்சியத்தை சுகமாக உணரப்பண்ணியவை அவள் சந்தித்த சிறு சிறு வெற்றிகள், பாராட்டுதல்கள், புகழ்மாலைகள், சமூகத்தின் மரியாதை. இத்தனையும் அவள் வெற்றிக்கான கட்டியமாகவே காட்சியளித்ததனால் கடுமையாக உழைத்தாள். சாதாரண தரம் சிறப்பு சித்தி பெற்று உயர்தரத்தில் பெளதீகவியல் படித்தாள் பெற்றோரின், சுற்றத்தின், சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி மதிப்பை, மரியாதையை, புதழை, உயர் ஸ்தானத்தை தக்க வைத்துக்கொள்ள. அனைவரது கவனமும் அவள்மீது திரும்பியதால் படிப்பில் மூழ்கிப்போனாள் சாப்பாட்டை, உடல் நலத்தை, உறக்கத்தை மறந்து பெறுபேறுகள் வந்தன. ஆனால் அவளோ வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
இரண்டாம் தடைவை பரீட்சை எழுதலாமே என்றேன் - முதல் முறை , எல்லோரையும் ஏமாற்றி விட்டேன் இனி எதற்கு இரண்டாம் முறை? தாதியாக படிக்க புள்ளிகள் காணும் என்றேன் - வைத்தியராக என் பெற்றோர், உறவுகள், ஊரார் எதிர்பார்த்தார்கள் இனி எப்படி தாதியாவது? இது பலருக்கு பகிடியாக, நகைப்பாக இருக்கும். இதனால்தான் வீட்டுபக்கம் போகவே விரும்பாமல் நிறுவனத்தில் தங்கிவிடுவதை மேலானதாக, விடுதலையாக, கடந்ததை மறந்திடும் களமாக, பெற்றோர்-சமூகத்தின் கவனத்தை கலைத்திடும் காலமாக கருதுகிறேன் என அழுதாள்.
சாதிக்கும் வெறியுடன் செயற்படும் ஒரு நபர் சாதகமான சாத்தியங்களை கைக்கொண்டு கடினமாக உழைத்து குறித்த துறையில், முன் வைத்த
நான் - 44 - Sọ — LTJ ITILITÉ 2007

இலட்சியத்தில் பரிமளிக்க முடியாது போனாலும் மனமுடைந்து வாழ்வில் விரக்தியுறும் சாதாரண மனித சுபாவத்தை அசாதாரணமாக்கி புதிய இலட்சியங்கள் வகுத்து, அவற்றை அடைவதற்கான புதிய பாதைகள் அமைத்து பழைய அனுபவங்களுடன் புதிய வலுப்பெற்று அனுதினமும் புதிய காற்றை சுவாசித்து சுவாரசியமான அனுபவங்களுடன் சாதனைகளை சாத்தியமாக்கும் திறன் பலருக்கு பகற்கணவாய் அமைவது அவரவர் மனதின் பக்குவத்திலும், ஆளுமையின் ஆட்சியிலும் உறங்கிடும் ஊனம் காரணம் என்பதை இந்த நூற்றாண்டிலும் பலர் அறியாமல் இருப்பது அஞ்ஞானம் ஆகும்.
சாதிக்கும் திறன் இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிறது. எதையாவது சாதிக்கவேண்டும் அல்லது அவன், அவள், அவர்கள் சாதிப்பதை நானும் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வாத நிலைகளுக்கு ஒப்பாரி பாடுவோர் சில வேளை அதனை சாதித்தாலும் சறுக்கிவிடவும் அதிக வாய்ப்புகள் உண்டு. என்னத்தையாவது செய்து செத்திடுவோம் என்பதை வாழ்க்கைத் தத்துவமாய் கொண்டு வாழ்ந்த பல மனிதர்கள் தடயங்கள் ஏதுமின்றி மனித வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். எதுவானாலும், எந்நிலை உருவானாலும் இதைத்தான் செய்யவேண்டும் என்பதை வாழ்க்கை தத்துவமாய் வாழ்ந்ததனால் சரித்திரம் பேசும் புத்திரியானார் அன்னை திரேசா. எதை சாதிப்பது என்ற வினாவுக்கு என் இயல்புக்கு, இயற்கை தந்த சக்திக்கு இதைத்தான் சாதிப்பது என்ற தெளிவுடன், (Լplգավլն என்ற உறுதியுடன் உழைப்பவர்கள் தடைகள், விமர்சனங்கள், விம்பங்கள் எழுந்தாலும் ஒரு நாள் அடைந்து கொள்கிறார்கள் தம் இலக்கை.
பழமைகள், பழைய நம்பிக்கைகள், சமூக எதிர்பார்ப்புகள், பெற்றோர் போதனைகள், பெரியவர்கள் மூளைச்சலவைகள் என் இயல்புக்கும், திறனுக்கும், நலனுக்கும் உகந்தவை அல்ல என்பதை ஆழ்மணம் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தினும் எதிர்க்க தைரியமற்று என் உணர்வுகளின் ஏதலனாய் உலாவருகிறேன். ஏனெனில் புதியன சிந்தித்து, புதுவழி பயணித்து, புதுமை படைத்திடும் SS560) D மிக்கோரை ஓர்ம்கட்டுகிறது சமூகம். ஒதுங்கிடாமல் ஓர்மத்துடன் சாதிக்கும் வெறியுடன் காரியங்கள் ஆற்றும் ஆளுமை கொண்டவர்கள் புதிய தலைமுறைக்கு, நாளைய மானிடத்திற்கு மகத்தான மனிதர்களாக, மனவலுவற்றோருக்கு நல் முன்னுதாரணங்களாக அமைகிறார்கள். ஏனெனில் ஒரு காலத்தில் எதிர்க்கப்படுவதும், மறுக்கப்படுவதும் மறுகாலத்தில் ஏற்கப்படுவதும், புரட்சியாய் பூஜிக்கப்படுவதும், புதுமையாய் பலரால் பின்பற்றப்படுவதும் வரலாற்றின் உண்மைகள் என்பது நினைவிருக்கட்டும் நமக்கு.
நான் - 45- ஆடி - புராட்டாதி 2007

Page 25
மனிதன் எதை சிந்திக்கிறானோ அதுவே அவன்(ள்) வாழ்வாக மாற வழிபிறக்கிறது, அந்த சிந்தனா சக்தியே பல காத்திரமான காரியங்கள் உருவாக காரணமாகிறது. ஒரு செயல் நல்லதானாலும் கெட்டதானாலும் முதலில் அது மனித சிந்தனையில் வலம் வந்து மனதை விருப்பம் பண்ணி செயற்பாடாய் பிறக்கச் செய்கிறது. நம் சிந்தனை எவ்வழியோ அவ்வழியே நம் செயற்பாடுகள் பயணிக்கின்றன வாழ்க்கையில். ஆகவே நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எம் சிந்தனை எல்லாம் எதிர்காலத்தின் வெற்றிக்கான படிகளை அமைப்பதாய் இருக்க வேண்டியதை நாம் மறந்திடலாகாது.
மதுவெறியில் சூழலை மறப்பதும், உணர்வதை உணர்த்துவதும், நினைப்பதை நிஜமாக்குவதும் இனம் புரியாத ஓர் சக்தி, வெட்கம் நிறைந்த மனிதன், துணிவுகுறைந்த குமரன், சோர்வு மிகுந்த சோதி மதுவை அருந்திய பின் அலாதியான வார்த்தைகள், அருமையான தத்துவங்கள், அதிக துணிவு, பலமான சக்தி, புதுமையான உணர்வு - எப்படி, எங்கிருந்து உருவாகிறது என புருவங்களை உயர்த்த தூண்டுகின்றது. வாழ்வுக்கான இலட்சியத்தை வகுத்து அதுவே சிந்தனையாய், அனுதின எண்ணமாய், அனைத்து திட்டமாய் இரத்தமதில் கலந்து உடலெங்கும் ஒடும்போது இலட்சியத்தை அடையும் வெறி, சாதனைகளை சந்திக்கும் வெறி எம்மை அறியாமலே ஏறுகிறது. இதனால் சோர்வுகள், சரிவுகள், சோதனைகள், சுயத்தை அழிக்கும் விமர்சனங்கள் அவற்றின் நிழல்களைக் காட்டினும் நிரந்தரமாகிட இடமிராது. ஒவ்வொரு சாதனையிலும் பெருமையிராது, கருவாகும் தோல்விகளால் சோர்விராது அடுத்த இலட்சியத்தின் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆயத்தங்கள் ஆதிக்கம் (G)g-uu தொடங்கிவிடும் சிந்தனைகளில்.
ஒன்றை அடைந்து அதன் வெற்றியை அனுபவித்து அடுத்ததை நோக்கி பயணிப்பதில்தான் மனித வாழ்வு வாழப்பட வேண்டிய ஒன்றாகவும், பிறக்கும் ஒவ்வொரு புதிய நாளும் புதுமையானதாக, பயனுள்ளதாக, உற்சாகம் அளிப்பதாக அமைகின்றன. வெற்றிகள் தாண்டி மேலான சாதனைகள் நிகழ்த்த நகர்ந்துகொண்டிருக்கும் நபர்களின் சிந்தனைகள் புதிய வழிகள் தேடி நாற்புறமும் சிதறுகின்றன. இதுதான் என் அடுத்த இலக்கு என வகுத்து வெற்றிக்காய் சதா சஞ்சரிக்கும் உள்ளங்கள் வாழ்வு உருப்படியானது, முழுமையை நோக்கியது.
கடந்த காலங்களையே அதிகம் மனதில் இருத்தி கவலைகளை சுமப்பதனால் இன்றைய நாளும் கவலையானதாய் நாளைய நாளும்
கனமானதாய் எதிர்காலமே அழிவு நிறைந்ததாய் 960)LDu 15 காரணியாகிறது. கடந்தவைகளை அகலக் கால்விரித்து கடந்துவிடுவதில்
இருக்கும் சுகத்திலும், நலத்திலும் அவற்றை கட்டியனைத்து
நான் ۔ 46 ۔ ਮ, - புராட்டாதி 2007

காலமெல்லாம் கண்ணிர் விடுவதில் அவ்வளவு சுகமா? கடந்தவைகளை அகலக்கால் விரித்து கடந்துவிடு. ஏனெனில் எதிர்கால எண்ணங்களை சுமக்க கடந்தகால கவலைகள் சுமையாகி விடும் அல்லவா? அதேவேளை எதிர்கால எண்ணங்களை அதிகம் சுமந்து அவை கிடைக்குமோ, ! கிடைக்காதோ என்ற மனக்குழப்பம் நிகழ்காலத்தை நிம்மதி அற்றதாக மாற்றிவிடாமல் இருப்பதில் விழிப்பாய் இருக்க எதிர்கால இலட்சியத்தில் வெற்றிக்கான படிக்கற்கள் நிகழ்காலத்தில் போடப்படவேண்டும். இந்த முயற்சியில் குழப்பங்கள், கஸ்ரங்கள், சவால்கள் ஏற்படலாம் என்பதை எதிர்வுகூறும் திறன் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அவ்வாறு அவற்றை ஏற்றுக்கொண்டு, எதிர்கொள்ளும் சக்தி கொண்டு அடித்தளங்கள் இடப்படுமானால் வெற்றி நிட்சயம் என்பதை சாதிக்கும் வெறி உறுதி செய்யும். நடந்ததை, வாழ்ந்ததை, இழந்ததை எண்ணி எஞ்சிய கொஞ்ச நாளையும் வீணாக்காமல் நடப்பதை-நடக்க வேண்டியதை, வாழ்வதை-வாழப்போவதை சுற்றியே எம் எண்ணங்களும், முயற்சிகளும், சக்தியும் செலவிடப்படுமானால் வெற்றிக்கு எதிராக எதுவும் எழுந்துநிற்க முடியாது.
சாதிக்கும் வெறி எமக்கு குறையாமல் இருப்பதற்கு தெளிவான திட்டமிடல், துலக்கமான இலக்கு அவசியம் தேவை. இலக்கு இருப்பவர்கள்தான் அதனை அடைவதற்காக தம் ஆக்கபூர்வமான சிந்தனைகள் முழுவதையும் செலவிட முடியும். இலக்கை சுற்றி வட்டமிடும் சிந்தனைகள், எண்ண எழுச்சிகள் புதிய சக்தியை எழுப்பி இலக்கை அடையும் தாகத்தை உண்டுபண்ணுகின்றன, புதிய வழிகளை பிறப்பிக்கின்றன. இலட்சியம் இதுதான், அடைவதற்கான பாதைகள் இவைதான் ' என தீர்மானித்துக் கொண்டு அடையும்வரை அயராத உழைப்பாய் அதுவே நினைப்பாய், நிஜமாய், வேட்கையாய், பசிய்ாய், பைத்தியமாய் அனைத்து செயற்பாடுகளிலும் வெளிப்படும்போது அவமானம், அவஸ்தை, சோர்வு எதுவுமே சாதிக்கப்புறப்பட்டவர்களுக்கு எதிராக எழுந்து நிற்க இயலாத அளவுக்கு இலட்சியம், சாதிக்கும் வெறி அவர்கள் சிந்தையை நிரப்பிவிடும். அப்போது கடந்தவைகளை, இழந்தவைகளை, சமூகத்தின் விமர்சனங்களை சிந்திக்கவே சிந்தையில் இடமிராது, நேரமும் போதாது.
காதலை வாழ்வின் இலட்சியமாய் எண்ணி பள்ளிப்பருவத்தில் துள்ளும் உணர்வுகளுக்கு தீனிபோடும் சினிமாவும், தற்கால உலகபோக்குகளும் உண்மையென நம்பி கல்வியில் நலிவுற்று, காதலில் பொலிவுற்று மாயவுலகில் மயக்கம் மகிழ்வு கொடுத்தபோது அதுவே நிஜமென ஏமாந்தது தம் மட்மையென சுயஉணர்வு பெற்றபோது கல்வியின் காலம் கைகளைக் கடந்தது கண்டு கண்ணீர் விடுவது நாம் காணும் கண்கூடு. தம் பின்வரும் பலர் கல்விப்பருவத்தை பயனுள்ள விதமாய் முழுமையாய் பயன்படுத்தி வாழ்வில் சாதனைகள் பல நிகழ்த்த
நான் - 47 - ஆடி - புராட்டாதி 2007

Page 26
பாழ்பட்ட தம் வாழ்வு நிழலாக அல்ல நிஜமான பாடமாக இருக்க இவர்கள் இப்போது எண்ணுகிறார்கள்.
தன் காதலுக்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ள பெண் துடித்தாள். காதல், கல்யாணம் என்பன தன் வாழ்வின் இறுதி இலட்சியம் அல்ல; இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் இளைப்பாற்றியும், இன்பமும், துணையும் சங்கமிக்கும் சத்திரம் அல்ல தங்கிக்கொள்ள; கடந்து செல்ல வேண்டிய ஒரு சந்தி. தன்னோடு வாழ்வதனால் போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் சரிநிகராய் எழுந்து நிற்கும் திராணி கொண்டு எப்பொழுதும், எதிலும் தனக்கு துணையாக இருக்க வேண்டியதை சுருக்கமாய் உரைத்தான். இருப்பேன் உனக்கு துணையாக அனைத்திலும், அனைத்துமாய் என்று அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அவள் கயல்விழிகளால்.
உணர்ச்சிப் பெருக்கும், காதல் கற்பனைகளும் பல இளசுகளை இம்சைப்படுத்தி படுகுழியில் படுக்கச் செய்யும் இக்காலத்தில் நிதானமும், தூரநோக்கும், தெளிவான சிந்தனையும் கொண்ட முதிர்ச்சிமிகு மனசுகள் இரண்டு உரசிக்கொண்ட சம்பவம் வாழ்வில் குறுகிய நோக்கும், ஊனமுற்ற போக்கும் கொண்ட எனக்கும் என் பின்வரும் வழித்தோன்றல்களுக்கும் நல்ல மாதிரிகள். இவர்கள் நிட்சயம் ஜெயிப்பார்கள், வரலாற்றில் ஜொலிப்பார்கள். உயிரோடு நானிருந்தால் இவர்கள் சாதனைகளை சாற்றுவதும், பலரை சாதிக்க தூண்டுவதும் என் கடனும், என் எழுத்துக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமும் ஆகும்.
வளரட்டும் இவர்கள் இலட்சிய வேட்கை, பசளையாகட்டும் இவர்கள் காதல், கனியாகட்டும் இவர்கள் சாதனைகள். வித்தாகட்டும் இவர்கள் வாழ்க்கை நாளைய மரங்களும் சாதனைக் கணிகளைச் சுமப்பதற்கு.
சகோதரமே! பார்த்தாயா? புரிகிறதா வாழ்வின் நோக்கு? இன்னுமேன் சோர்வு? சிந்திப்போம் வா. நிந்தைகளை நீக்கி காரியங்கள் ஆக்குவோம் புறப்பட்டு வா. சுப்பனும், சூசையப்புவும், பர்சானாவும், பார்வதியும் சரித்திரத்தில் பரிணமிக்க முயற்சிக்காமல் மரித்ததுபோல் மனிதர் எல்லாம் பிறந்து, வளர்ந்து, உழைத்து, சாப்பிட்டு செத்துபோயிருந்தால் சகத்தில் நாம் இன்று காணும் சிறப்பு, படைப்பு, வளர்ச்சி, சாதனை ஏதுமின்றி அர்த்த மற்ற ஜனனமாய், சுவாரசியமற்ற சீவியமாய் மரணமே இலட்சியமாய் எமக்கும் இருந்திருக்கும் அல்லவா? வாழத்தானே பிறந்தோம், ஒருநாள் சாகத்தானே போகிறோம். அப்படியானால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையான எம் வாழ்க்கைகாலம் மிகவும் குறுகியது என்பதை மறந்துபோனாயா? இயற்கை அளித்துள்ள சக்தியையும், சிந்தனா வளத்தையும், தனித்துவமான திறமைகளையும் முறையாக முழுமையாக பயன்படுத்தி சாதனைகள் ஆற்றுவதை விடுத்து
நான் ۔ 48 ۔ ஆடி - புராட்டாதி 2007
 

சமூகத்துக்கும், சுற்றத்துக்கும் பயந்து கடந்ததுகளையே நினைந்து அவற்றை நாளாந்தம் புனைந்து நடக்கிறதை மறந்து, நடக்கவேண்டியதை இழந்து இறப்பின் மடியில் தலைசாய்ப்பதுதான் இலட்சியமா? இது தர்மம் ஆகுமா? இயற்கைக்குத்தான் ஏற்குமா? விமர்சனங்களுக்கும், சமூகத்தின் எதிர்வுகளுக்கும் பயந்து சமூகத்தின் பாராட்டையும், மலர்மாலைகளையும், மரியாதைகளையும் பெறுவதற்காய் போலி வேடம் பூண்டு புலியை பிடிக்கும் நம் வலுவுள்ள சக்தியை மறைத்து, அடக்கி பூனைபிடிக்கும் வித்தை கற்றுக் கொள்வதில் அவ்வளவு பூரிப்பா? பூனைபிடிப்பது நமக்கு பிடிக்காத விடயம் என்பதை மனசு அவ்வப்போது கூறுகிறது. ஆனால் சமூகத்தின் பாராட்டுதல், மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, அற்ப சந்தோசம் திருப்தி தருவதாய் இருப்பதனால் இயற்கை தந்த உன்னதமான திறமைகளை, உள்ளக வலுவை சவால்களுக்கும், விமர்சனங்களுக்கும் Lju ug5g5 சிறைப்படுத்தலாமா? א* ניקס
', அடுத்தவர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றால்போல் வாழ்ந்து மடிந்தவர்கள் வரலாற்றில் மறைந்தே போனார்கள். எதிர்த்து எழுந்து சுயபாதை வகுத்து வாழ்வில் சாதித்தவர்கள் சகலரும் சரித்திரமாகியுள்ளார்கள். நாம் எம்மில் எழுந்த எத்தனை விதமான ஆக்கபூர்வ சிந்தனைகளை, எமக்கும் பிறருக்கும் பயனளிக்கும் காரியங்களை சமூகத்தின் எதிர்வுகளுக்கு எதிராக நிறுத்த முடியாது நாமும் நிற்கமுடியாது அனைத்தையும் புதைத்து சமூகம் சமைத்துள்ள சமையலை உண்டு சுயமாக சமைத்துண்ணும் திராணியும் அற்றவர்களாய் ஊனமுற்று வாழ்கிறோம். சாதனைகள் படைத்து சரித்திரத்தில் வாழ்வு வரையப்பட்ட எவரும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு எண்ணை வார்த்தவர்கள் அல்ல; நெருப்பாக எரிந்து தமக்கென தாமே எதிர்பார்ப்புகளையும், இலட்சியங்களையும் ஏற்படுத்தி இறுதிவரை போராடியவர்கள். சமூகத்தின் உணர்வுகளை உதறி சுயஉணர்வுகளுடன் தமக்கென தாம் வகுத்த மதிப்பீடுகளுடன் பயணித்தமை அவர்கள் சாதனைகளுக்கு 99 it j60)Lu TGOfg.
புறப்படு புதிய பாதைகள் தேடி படைத்திடு உனக்கென ஒரு வரலாறு. பயன்பெறட்டும் நாளைய தலைமுறை. படிக்கல்லாகட்டும் உன் வாழ்க்கை. புலரட்டும் புதிய சரித்திரங்கள். மகிழட்டும் மானிட வரலாறு.
iLLLLLLL LLLL LLL LLLLLLL LL LLLLLLLLL LLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLeLS
நூல துகாவு Aسپینچتیتہئیے۔ جلا گ
6། 3’, ‘ඩ්‍ර
ཡོད་ན་ உளவியல் சார்ந்த உங்கள் நூலும் இப்பகுதியில் அறிமுகமாக உங்கள் பிரதிகளை எமக்கு அனுப்பி வாசகர்களுடன் சங்கமியுங்கள்
0SL L L L SLL 0L LLL 0LL S 0LLL S0LL 0LL LL S LLL 0LL S0LL L LLL LLL 0L 0SL L 0L 0L 0L LS L 0SL 0L L L L L L L L 0 L LL LLL LLLL LLLL LLLL LLL 0L L L L L L L L L L L L L L L L L L L L L LSL LSL LSL LSL LSL LSL LSL LLL LL LLL LSLL LLLL LL LL SL
நான் - 49 - ஆடி - புராட்டாதி 2007

Page 27
நூல் நுகர்வு
நுால்: 2-6(DSS... ஆசிரியர்: யோசப்பாலா வெளியீடு: பிராண்சிஸ்கண் சகோதர சபுை
மாத்தளை விலை: 200 ejus
மனப்புரட்சியையும் சமூகப் புரட்சியையும் இயல்பாக ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்ட அக்கினிக் குஞ்சுகளாக இந்த ஆக்கங்கள்.
உள-சமூகப் பணி என்பதனை வெறும் அறிவுத்திரளாகக் காணாமல் ஓர் அனுபவப் பாடமாகவும் காணும் பெறுமதியான ஆளுமை யோசப் பாலா. நெடுங்காலமாகவே உளசமூகப் பணிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் தான் வாழும் சமூகத்தை மானுடத்தை உளமார நேசிக்கும் யோசப் பாலாவின் இந்தப் புதிய நூல் இன்றைய உள-சமூகப் பணியாளர்களுக்கு உகந்த கைநூல். சுயம்பற்றிய அறிதலை மேம்பாட்டை அவாவி நிற்கும் அனைத்து உள்ளங்களுக்கும் அருமருந்து என்பேன்’ என யாழ் பல்கலைக்கழக சமூகவியற் துறைப் பேராசிரியர் N. சண்முகலிங்கன் கூற்று சாலப் பொருந்தும்.
"நான்' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் 25 வருட அனுபவ முதிர்ச்சியுடன் 32 கட்டுரைகள் உள-சமூக மேம்பாட்டு சிந்தனைகளின் தொகுப்பாக சமூக நெருக்கீட்டிடல் வாழும் மக்களுக்கும் ஆற்றுப் படுத்துனர்களுக்கும் கைநூலாக காலத்தின் தேவையை உணர்ந்து நூலாசிரியர் தந்துள்ளார்.
“நுால் ஒன்றினை ஆக்குவது ஒரு கலை, அக்கலையினை ஆக்கித் தருவதில் எழுத்துலகில் ଜୋରା 6f6ff) விழாக் காணும் யோசப்பாலா முக்கியமானவர். உளவளப் பணி சமூகப்பணி, எழுத்துப்பணி ஆகியவற்றில் பல வருடங்களாக ஈடுபட்டவர் என்ற முறையில் அவரின் பார்வையும், எண்ணமும், எழுத்தும் சேவையும் வேறு எவரிலும் காணமுடியாத அளவு தனித்துவம் கொண்டவை. எழுத்துத்துறையில் முக்கியமாக உளவளத்துறையில் உற்சாகமாகத் தமது கால்களைப் பதித்தவர்.
தனது கருத்துக்களை எழுத்துருவில் தருவதில் தனக்கென ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுக்கொண்டவர். அவர் அரங்கேற்றும் “உளமார.’ எனும் இந்நூலினை உளமாரப் படிப்பதில் ஒரு தனி இன்பம் என்ற கருத்தை பேராசிரியர் V. K. கணேசலிங்கத்தின் கூற்றுக்கு ஏற்ப அழகிய அட்டைப் படத்துடன் உள்ளடக்கத்தில் படவிளக்க சிந்தனைகளும் நூலினை நுகர்வோர் இக்கருத்துக்களின் ஒரு பாத்திரமாக மாறும் சக்தி கொண்ட சிறப்பைத்தரும். நுாலை நுகர்ந்து பாருங்கள். சிந்தனைகளைப் பகிருங்கள்.
கிடைக்குமிடம்: "நான்’ காரியாலயம், புத்தக விற்பனை நிலையங்கள். நூலாசிரியர். 8142 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
நான் ۔ 50 ۔ ஆடி - புராட்டாதி 2007
 
 

வன்முறையற்ற தொடர்பாடல் - ஓர் அறிமுகம் Non-Violent Communication (NVC) - An Introduction
திரு.அன்ரனி அனஸ்ரின் றோஜ் B.B.A (Hons), நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் (மனித வளம்).
(சென்ற இதழின் தொடர்ச்சி) நாம் வன்முறையற்ற தொடர்பாடலில் ஈடுபடும்பொழுது, தேவைகளை அடையாளம் காணுதல் பிரதானமானது என்பதன் அடிப்படையில், ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடிய தேவைகளை இங்கு நோக்குவது காத்திரமானதொன்றாக அமையும்.
Gg560D6856ĪT (Need Inventary) வன்முறையற்ற தொடர்பாடலில் ஒரு மனிதனுக்கு உணர்வுகளின் வழி புலப்படுத்திக் காட்டப்படும் தேவைகளை பின்வரும் வகைகளுக்குள் அடக்கிக் கொள்ள முடியும். அவையாவன,
01. சுதந்திரம் அல்லது சுயநிர்ணய தேவை (Autonomy or SelfDetermination Need) - சுதந்திரம் அல்லது சுயநிர்ணயம் என்று சொல்லப்படுகின்ற தேவை என்பது, தனியனொருவன் அவனுடைய எதிர்கால வாழ்வினை தீர்மானித்துத் தெரிவு செய்து கொள்வதனை இது குறிக்கும். இதனுள் அவனுடைய எதிர்கால வாழ்வு சம்பந்தமான கனவுகள், விழுமியங்கள் என்பனவும் அடங்குகின்றன (Choose one’s dreams, goals, or Values). மேலும் தனியனுடைய எதிர்கால கனவுகள், இலக்குகள் மற்றும் மதிப்பீடுகளை அடைந்து கொள்வதற்கான திட்டங்களை சுயமாக தெரிந்தெடுப்பதற்கான தேவைகளையும் இது குறிக்கின்றது எனலாம்
(Choose one's plan for fulfilling one's dreams or goals or Values).
02. கொண்டாடுதல் (Celebration, Mourning) - ஒரு தனிமனிதனுக்கு அவனுடைய வாழ்வில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சிகளையும், அவனுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கள் குறித்த துக்கத்தினையும் கொண்டாடுவதன் மூலம் வெளிப்படுத்தும் தேவை காணப்படுவதனையே இது குறித்து
Élisa56örgl 6T6076)ITLD (Celebrate the creation of life and also loss of life).
03- முழுமை (Integrity) - தனியன் ஒருவனின் வாழ்வு பின்வரும்
அம்சங்களினால் முழுமையடைகின்றது. அவையாவன, நேர்மையானவனாய், உண்மைத் தன்மையுள்ளவனாயிருத்தல் (Authnicity), வாழ்வின் அர்த்தத்தினை 2 600rf bgcbg.g56) (Meaning of life),
படைப்பாற்றல் மற்றும் ஆக்கத்திறன் கொண்டிருத்தல் (Creativity) என்பனவாகும். மேற்படி அம்சங்களின் வழி, தனியொருவரின் வாழ்வு முழுமையடைவ தாக கூறப்படுகின்றது. இத்தேவையைப் பூர்த்தி
நான் - 5 - ஆடி - புராட்டாதி 2007

Page 28
செய்வதற்கு அவன் தன்னுடைய வாழ்நாளிலே கடினமாக உழைக்க வேண்டியவனாக காணப்படுகின்றான்.
04. ஒன்றிலொன்று சார்ந்திருக்கும் தேவை (Interdependence). தனியொருவன் இவ்வுலகில் தனித்து வாழ முடியாது. இதனாலேயே மனிதன் ஒரு சமூகப்பிராணி (Social Animal) என்று அழைக்கப்படுகின்றான். அவன் தன்னுடைய சமூகத்துடன் சார்ந்திருப்பதன் மூலமாகவே தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. ஒன்றிலொன்று சார்ந்திருக்கும் தேவை என்பதனுள் கீழ்க் காட்டப்படும் அம்சங்களும் உள்ளடக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 960)6)UUT6).j60,
6 sibg.d505/T6iGIT6) (Acceptance). O (or55é585ib (Closeness). 0 தொடர்புற்ற நிலையில் இருத்தல் அல்லது அக்கறை அல்லது 8536060 (Consideration). o 6JT.pd56035disassroof s 61601.g5 Ursleb6f IL (Contribute to the enrichment to life - Exercise one's power by giving that which contributes to life). உ ஒத்துணர்வு அல்லது ஒன்றித்துணர்வு (Empathy). o I (85ft60)LD (Homesty). 1. Empowering honesty (that which enables us to learn from our
limitations).
2. Appreciation. 9 அன்பு அல்லது பாசம் (Love).
foii 2-plgii IT(6 (Reassurance). LDsungog (Respect). 9956) (Support). நம்பிக்கை அல்லது நம்புதல் (Trust).
Qg5b (Warmth). 6)|g16:L6ö (Empowerment).
05. உடல் பராமரிப்பு சம்பந்தமான தேவை (Physical Nurturance) எமது உடலை நாம் கருணையோடு பராமரிப்பது தொடர்பாக பின்வரும் அம்சங்கள் தொடர்பான தேவைப்பாடுகள் மிகப் பிரதானமாகக் காணப்படுகின்றன. அவையாவன,
0 சுவாசிப்பதற்கான காற்று (Air).
0 2 600T6 (Food). O 96086 316i)6Ogil 9 Libuuisbd (Movement or Exercise). 9 உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதான வைரசு, பக்ரீரியா, விசப்பூச்சி, விலங்குகள் மற்றும் பிற மனித உயிர்கள் 66óTL 6016).lib.oScbbgby UsTg5135|Tg556) - (Protection from life threatening forms of life such as Viruses, Bacteria, Insects. Predatory animals especially human beings).
நான் 52 - ஆடி - புராட்டாதி 2007

Quij6 (Rest). பாலுணர்வு வெளிப்பாடு (Sexual expression). உறைவிடம் (Shelter).
Gg5T(66085 (Tipuch).
(519566,60ft (Water).
06- விளையாட்டு (Play) சிரிப்பு அகத்துண்டல்
07- ஆன்மீக ஒன்றிப்பு (Spritual Communion) ஒரு தனியனுக்கு 916)ig)60)LUI ஆன்மீகம்சார் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றுள் காணப்படும் சில அம்சங்கள் அவனுடைய வாழ்வினை
வலுப்படுத்துவதாய் அல்லது மேம்படுத்துவதாய் அமையும்.
960)6) ULT6)601,
O 9p(5 (Beauty).
o 65560)3F6 (Harmony). ¬ܼܘܐܝܼܬ 9 உள்ளார்ந்த ஏவுதல் அல்லது ஆன்மீகத் தூண்டல் (Inspiration). O (psi(5 (Order).
9 அமைதி அல்லது சமாதானம் (Peace), e நல்லிணக்கம் அல்லது ஒப்புரவு (Reconciation).
ஒரு தனியனுக்கு ஏற்படும் தேவைகளை சுதந்திரம் அல்லது சுயநிர்ணய தேவை, கொண்டாடுதல், முழுமை, ஒன்றிலொன்று சார்ந்திருக்கும் தேவை, உடல் பராமரிப்பு சம்பந்தமான தேவை, விளையாட்டு, ஆன்மீக ஒன்றிப்பு என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி நோக்க முடியும்
I (Source. g. D.LDsfu(8b3Flb. From CNVC tools, 99m3ub60)3F 6 if GigbTLF LITL6) (கருணையாக கதைத்தல்), பயிற்றுநர் கைப்பிரதி: The Center for NonViolent Communication)
Φρδιύς எமது பழைய முறைமையாகிய குள்ளநரித்தன்மையின் பண்புகளான பாதுகாத்தல், விலகிக்கொள்ளல், தாக்க முற்படுதல் போன்ற தீர்ப்பிடலின் முகங்களையும், விமர்சனங்களையும் வன்முறையற்ற தொடர்பாடலானது இல்லாதொழிக்கின்றது. இதன்வழி, நாம் எங்களுக்கும் மற்றவர்களும் இடையிலான எண்ணங்கள் மற்றும் உறவுமுறைகளை ஒரு புதிய ஒளியில் அல்லது முறையில் தெரிந்துகொள்ள முடியும்.
நான் - 53 - ஆடி - புராட்டாதி 2007

Page 29
வன்முறையற்ற தொடர்பாடலை (NVC) எனக்கு நானே பயன்படுத்தும் giu Gigs ILFrL (Self Connection)
சிலவேளைகளில் நாம் 6TDCup60)Lu உணர்வுகள் தேவைகள் என்பவற்றுடன் துண்டிக்கப்பட்ட நிலையில், தெளிவான வேண்டுகோளை விடுக்க முடியாமல் குள்ளநரி நிலையில் வேண்டுகோளை விடுப்பதைக் காண்கின்றோம். அதாவது, உடல் எமக்குச் சொல்லும் செய்தியை அடையாளம் கண்டு கொண்டு (pl.9 UJITg5 இதயத்துக்கும் மூளைக்குமிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதே இதற்கான காரணம் எனலாம்.
உடல் நமக்கு கணத்துக்குக் கணம் என்ன செய்தியைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றது என்பதனை நாம் அவதானமாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். உடல் எம்முடன் உணர்வுகள், அதன் மூலம் வெளிக்கொணரப்படும் அல்லது அடையாளப்படுத்தி சுட்டி நிற்கும் தேவைகள் என்பவற்றின் மூலமாக எம்முடன் தொடர்பு கொள்ளும். பொதுவாக நாம் எம்முடைய நாளாந்த வாழ்வியல் அனுபவங்களினூடாக நோக்குகையில், நாம் உடல் தரும் செய்தியைக் கேட்பதற்குப் பதிலாக அதை அடக்குகின்றோம். இல்லாமல் ஆக்கப்பார்க்கின்றோம். அல்லது திசை திருப்பி விடுகின்றோம். இதன் மூலம் கருணையோடு எமது உடலைக் கவனிக்கத் தவறி விடுகின்றோம். இங்கு முக்கியம் என்னவெனில்,
உடல் எமக்கு உணர்வுகள், தேவைகள் ஊடாகத் தரும் செய்திகளை அவதானமாக அடையாளம் கண்டு எமது உடலை கருணையுடன் கவனிப்பதன் மூலமாக வன்முறையற்ற முறையில் எம்முடன் நாமே
தொடர்பினை ஏற்படுத்த முடியும்.'
(3LD6)Iửb NVC மாதிரியின் மூலம் ତୂ(y) உணர்வு எமக்கு ஏற்படுகின்றபோது எப்படி நாம் எம்முடன் சுயதொடர்பினை ஏற்படுத்த முடியும் என்பதனை நோக்குவது இங்கு மிகப் பொருத்தமானதாகும்.
பலமாக (Strong) ஒரு உணர்வு எமக்கு வருகின்றது என்றால் முன்னர் அவ்வுணர்வு குறைந்த விசையுடன் வந்தபோது நாம் அதை அசட்டை செய்து, சரியான முறையில் உணர்வுகள், தேவைகளுடன் தொடர்பு
கொள்ளாமல் எமது உடலைக் கருணையுடன் கவனிக்காமையே அது
பலமான ஒரு உணர்வாகப் பின்னர் வரக் காரணமாகியது எனலாம். இதற்குச் மிகச் சிறந்த உதாரணமாக கோபம் (Anger) என்ற உணர்வை
"எடுக்கலாம்.
ስ
எமது உடல் எமக்குத் தரும் செய்திகளை இதயபூர்வமாகவும், கருணையுடனும் நாம் பார்க்க வேண்டும். Mr.X என்னும் நபரிடம்
நான் - 54- ஆடி - புராட்டாதி 2007

கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் வழங்கிய பதில்களையும் இங்கு நோக்குவது பொருத்தமானது.
01. எப்படிப்பட்ட தன்மையான மனிதர்களை நினைக்கும்போது உங்களுக்கு கோபம் வருகின்றது? கடைசியாக நீர் கோபப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களைக் கூறுவீரா? மற்றவர்கள் கடமையுணர்வுடன் வேலை செய்யும்போது யாரும் கதைத்துப்பேசி, அதைக் குழப்பும் விதமாக நடந்து கொண்டாலும், என்னுடையாக தனிப்பட்ட விடயத்தில் தேவையில்லாமல் யாரும் குறுக்கே வந்து புத்திமதி சொன்னாலும், கடின மனம் கொண்டவர்கள் மக்களுக்கு உபதேசம் பண்ணினாலும் எனக்கு ஏதோ தெரியாது கோபம் புட்டுக்கொண்டு வரும். அதை அடக்கவே முடியாது.
02. அந்தவிதமாக உமக்கு கோபம் ஏற்படும் பொழுது நீர் என்ன காரியங்களைச் "");
ܐܝ "பொதுவாக வீட்டில் பெரிய சத்தம் போட்டு என்னுடைய பக்க நியாயப்பாட்டை இடித்துரைப்பேன். ஆனால், அலுவலகத்தில் யாருடனும் பேசாமல் அமைதியாக அடக்கிக் கொண்டு இருந்துவிடுவேன். பின்னர் கோபத்தை வைத்துச் சாதிப்பேன்.' (களஆய்வு 2005)
மேற்படி நபர் கோபம் என்ற உடல் கொடுக்கும் உணர்வை சரியான முறையில் அடையாளப்படுத்தாமல், குள்ளநரி போல வீட்டிலும் அலுவலகத்திலும் முறையே தன்னுடைய நியாயத்தைக் கூறியும், உணர்வுகளையும் தேவைகளையும் அடக்கியும் வன்முறையற்ற தொடர்பாடல் மாதிரியின் வழி சுய தொடர்பினை ஏற்படுத்தவில்லை என்பது கண்கூடு.
எனவேதானி, கோபம் என்ற உணர்வு எமக்குப் Li6ODS ஏற்படுகின்றபோது எமது பூர்த்தி செய்யப்படாத தேவையினை இனம் கண்டு கொள்ள வேண்டும். அதாவது கோபம் என்ற பலமான உணர்வு எமக்கு அடையாளப்படுத்தி நிற்கும் தேவையினை இனம் கண்டு கொள்ள வேண்டும். உதாரணமாக, கோபம் என்ற பலமான உணர்வு சுதந்திரம் (ஒழுங்கு, உறவு, புரிந்துணர்வு, ஆதரவு, துணை) என்ற பூர்த்தி செய்யப்படாத தேவையினை இனம்காட்டி நிற்கலாம். ஆகவே, கோபம் எம்முடைய பூர்த்தி செய்யப்படாத தேவையாகிய சுதந்திரத்தை அடையாளப்படுத்தி எம்மைப் பற்றியே சொல்லுகின்றது என்பது இங்கு முக்கியமானதாகும். அதாவது கோபம் எம்முடைய தேவையை எமக்கு அடையாளம் காட்டி நிற்கின்றது. இருந்தும் நாம் அதை அசட்டை செய்து, கவனிக்காமல் விட்டு திசைதிருப்பினால், எமது உடல் மிகவும் மிகவும் பாதிப்படையும்.
நான் 55 - ஆடி - புராட்டாதி 2007

Page 30
எனவே கோபம் என்ற உணர்வு ஏற்பட்டதும் நாம் என்ன செய்யலாம்? (What can we do while we felt anger?) - பொதுவாக கோபம் உணரப்பட்டதும் எமது உடல் சண்டைக்கு வேகமாகத் தயார்ப்படுத்தும் அல்லது விலகி ஒட வைக்கும். இதை Fight or Flight என்று கூறுவர். அதாவது கோபம் எமது உடலை பாதுகாப்பு உணர்வுக்கு கொண்டு செல்லும். மேலும் கோபம் வந்து, அது நீடிக்க நீடிக்க அது எமது உடலை பாரதூரமாய்ப் பாதிப்படையச் செய்யும்.
எனவேதான் கோபம் என்ன உணர்வு ஏற்பட்டதும், 01. எம்மை நாமே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அதாவது நாம் எமக்கு கோபம் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை உணரச் செய்ய வேண்டும்.
02. உடல் செயற்பாட்டை சாதாரண நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அல்லது முயற்சிக்க வேண்டும். இதற்காக நீண்ட மூச்சை எடுத்து விட வேண்டும் என்று கூறப்படுகின்றது. தொடர்ந்து படிப்படியாக நாம் மூச்சை எடுத்துவிட வேண்டும். இதன்மூலம், நாம் சுய நிலைமையை அடைய முடியும்.
03- Identifying judgement Thoughts. 6Tib(p60)Lu உள்ளத்தில் காணப்படுகின்ற குற்றம் சாட்டும் எண்ணங்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். உதாரணமாக அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது. Should not என்ற அர்த்தத்தில் அமைந்த குற்றம்சாட்டும் எண்ணங்களை குறிப்பிடலாம்.
04. எனக்கு இப்பலமான கோபம் என்ற உணர்வு வரக் காரணம் 6T6örgol60)Lu "girl (Gib 6.13607(3LD' (Judgement Thoughts) g56ly, usic b60)Lu செயலும் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது கோபம் என்ற உணர்வு குற்றஞ்சாட்டும் எண்ணங்களின் மூலமாக சுயவன்முறையினைத் தோற்றுவிக்கும் எனலாம்.
Φρύλύυ கோபம் என்ற உணர்வின் மூலம், மற்றவரைக் குற்றஞ்சாட்டும் எண்ணங்களின் வழி எம்மை நாமே சுயவன்முறைக்கு இட்டுச் செல்கின்றோம். குறிப்பாக குள்ள்நரியின் தன்மையை ஒத்தவர்கள் தீர்ப்பிடும் வசனங்களைக் (Judgement Thoughts) கதைப்பதன் மூலமாக சுயவன்முறையுடையவர்களாக காணப்படுகின் றனர். மாறாக, ஒட்டகச்சிவிங்கியின் தன்மையுடையவர்களின் சுயதொடர்பானது கோபம் என்ற உணர்வு ஏற்பட்டதும் எவ்வாறாக அமையும் என்று நோக்குவது இங்கு பொருத்தமானது ஆகும். இதனை அடுத்த இதழில் நோக்குவோம்.
(தொடரும்)
緊翼
நான் - 56 - ஆடி - புராட்டாதி 2007

வாசக அன்பர்களே!
இவ்வளவு காலமும் “நான்” உளவியல் சஞ்சிகை பல்வேறு தலைப்புக்களிலும் சிறப்பு மலராகவும் பல ஆக்கங்களைத் தாங்கி வெளிவந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் இனிவரும் காலங்களில் அதாவது 2007ம் ஆண்டுடன் “நான்” உளவியல் சஞ்சிகை எந்தத் தலைப்புக்களிலும் அல்லாமல் பொதுவான உளவியல் சஞ்சிகையாக வெளிவரும். ஆதலினால் உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும் அவை உளவியல் சார்ந்தாக அமையட்டும். உங்கள் ஆக்கங்களை 25, 11. 2007க்கு முன்னதாக அஞ்சலிடுங்கள்
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LL S LL LLL LLLS LL LLL LLLS LL LLL S LLLS S LLLLL LLLS S LLLLL LL
நான் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையும் வருடத்திற்கு நான்கு தடவையும் உங்களிடம் வந்துகொண்டிருக்கிறேன்
என்னில் உங்களுக்குத் தேவையான உளவியல் கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. என்னுடைய தனிப்பிரதி 25= என்னுடைய ஆண்டுச் சந்தா உள்ளுரில் 150G6).j6fluffs) 6USS (56)

Page 31

”।
须
R %
貓
(/ 繞