கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2009.01-03

Page 1
SMEGJogica
i
如 比
Naas
 

SF6O 5
MagaziDe

Page 2
O LD 6)íf: - 34 தW\ை இதழ்: - 01
தை - பங்குனி 2009 உளவியல் சஞ்சிகை விலை 35/=
ஆலோசனைக்குழு: ஆசிரியர்:-
(3L sugö O.M.I.M.A. LLIT 6ðslu_6ò O.M.I., M.A (GJf606), Gig 600T1b O.M.I., Ph.D. Prof. N. 360öT(Lp56ól ÉláBLb Ph.D Dr.R.f6!gpigsir M.B.B.S
360TT H.C Dip in Counselling 836)6O15T6t) O.M.I.B.A(Hons), Diplin.Ed. 886), T(3LT6) O.M.I., M.Phil.
அந்தோணிமுத்து 0.M.I., B.Th, M.A
இணையாசிரியர் :- Liggi QJT825Tu-135üb O.M.I., B.Ph, BTh
ஒருங்கிணைப்பாளர்:- u KTMBG&LD6mid O.M.I., B.Ph., B.Psy, BBA (Hons)
நிர்வாகக்குழு:- அ.ம.தி இறையியல் சகோதரர்கள் யோசப்பாலா.
அடுத்த 'தன்' தாங்கி வருவது பொதுத்தலைப்பு உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும் உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
“NAAN° Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jaffna, Sri Lanka.
Tel: 021-222-5359 E-mail: naanomiGDhotmail.com
“தMふ"
Lọ LD3F6ÕTL (35(C5DL-Lib, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்,
இலங்கை. தொ.பே: 021-222 5359 Lô6őT SÐGbFGö: maanomi@hotmail.com

O O O 0. O -N (வாசக (56(U(tabcab& 665tab85h35-5
வறுமையின் வடிவங்கள் பலவகை. அவ்வகைகளில் சில வகைகளின் கோரப் பிடிக்குள்சிக்கித்தடுமாறி அழகிழந்து, வளமிழந்து, வலிமையிழந்து,நிம்மதியிழந்தவர் கள் பலர். ஏன்தங்கள் ஒட்டுமொத்த வாழ்வையே தொலைத்தவர்கள் இன்னும் பலர்.
இன்றைய உலகமயமாக்கல், தாராளமயமாக்கல்,தனியார்மயமாக்கலினாலும், சமாதானத்துக்கான யுத்தம் போன்ற பிழையான வாதங்களினாலும் தனிமை படுத்தப்பட்டிருக்கும் எம்மனங்களில், குடும்பங்களில், சமூகங்களில் அருள் இல்லை, அன்பு இல்லை, பாசமில்லை, பொருளில்லை, பகிர்வு இல்லை, நேசமில்லை, நெகிழ்வு இல்லை, மனிதமில்லை என்று வறுமையின் பட்டியல் நீண்டு செல்கின்றது. ஆக மனிதனின் அகத்திலும், புறத்திலம் எத்தனை வறுமையின் வடிவங்கள். வறுமையின் பன்முக வடிவங்களில் இருந்தும், அதன் தாக்கங்களில் இருந்தும் நாம் விடுதலை பெற வேண்டும் என்பதே இன்று நம் அனைவரின் முன்பாகவுள்ள அவசியத் தேவை.
ஏன் வாழ வேண்டும்? என்ற கேள்விக்கு இறுதிப்பதில் ஒருவர் தன் இலட்சியத் தின்மீது வைத்திருக்கும் அன்பு என்பதே என விக்டர் பிசாங்கிள் கூறுவார். அப்படியா னால், யாருடைய வாழ்வில் அர்த்தம் இருக்கின்றதோ, இலட்சியம் இருக்கின்றதோ, அவர்கள்தான் இந்த அக, புற வறுமைகளை எதிர்த்துநின்று போராடி விடுதலை பெற %3 முடியும். மாறாக, இலட்சிய பார்வையும், பிடிப்பும் இல்லாதவர்கள் பலவற்றுக்குப் பயந்து ‘பன்முக வறுமைக்கு முகம் கொடுக்க முடியாமல் 'நிரந்தர வறுமையில் 1 வாழ்வர்.
‘இல்லாமை இல்லாமல் போகவேண்டும்; எல்லாரும் எல்லாமே பெறவேண்டும் என்பதே இப்பூவுலகில் நல்ல மனம் படைத்தவர்களின் கனவு. இக்கனவு நனவாக வேண்டுமானால், இப்பன்முக வறுமையை முதலீட்டாக்கி பிழைப்பு நடத்தும் பொறுப் பற்ற முதலாளிமார் மாற வேண்டும்; வறுமையை விதைக்கும் ஆதிக்க சக்திகளோடு சமரசம் செய்யும் சமூக, சமய, அரசியல், பொருளாதார பொறுப்பானவர்கள் மனம் மாறவேண்டும்.
“ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்’ என்ற தெய்வ வாக்கு வறுமைக்கு வழங்கப்பட்ட அந்தஸ்து அல்ல, மாறாக, வறியவர்களுக்கு பக்கத்தில் தெய்வம் இருக்கின்றது என்பதற்கான நற்செய்தி. ஆக, நம் முயற்சிகளும், இறை அருளும் கூட்டாக பயணிக்கும் போது; மனிதன் மனிதனுடன் சகோதர உறவில் இணை யும்போது, பிறருடன் பகிர்ந்து அன்புறவில் ஒன்றிணையும்போது எவ்வகை வறுமை யும் இறக்கும், வளமை உயிர்க்கும்.
൦൫, ൬൬൬/്ത്രരംഗം.
ఫళ్ల
தை - பங்குனி 2009 O1

Page 3
ഖഇത0ഞ്ഞ ബെൺ6ഖb
ഖങpTi வாழ்வோம்
LD6Oofl6mSFG56ôT BILD6AD6ör BA (Hons) அபிவிருத்தி உதவியாளர், கோட்டக் கல்வி அலுவலகம், நல்லூர் - யாழ் வலயம்.
X
இன்று உலக நாடுகள் யாவற்றிலும் பேசப்படும் ஓர் விடயமாக வறுமை காணப்படு கின்றது. இன்று உலக நாடுகள் முதல் அபிவிருத்தியடைந்த நாடுகள் முதல் அபிவிருத் தியடைந்துவரும் நாடுகள் யாவற்றிலும் வறுமையுள்ளது என்பது எமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உலக சனத்தொகையில் 1 /5 பங்கினர் வறுமையால் பர்திக்கப்படுவோராக அல்லது துன்பப்படுவோராகவுள்ளனர். வறுமை பல்வேறு பரிமானங்களில் வரைவிலக் கணப்படுத்தப்படுகின்றது.
“மிக குறைந்த வாழ்க்கைத்தரத்தினையாவது அடைய முடியாதநிலைமை” வறுமை நோக்கப்படுகின்றது. இங்கு மிகக் குறைந்த வாழ்க்கைத்தரம் என்பது நாடுகளுக்கு நாடு வேறுபடுகின்றது. எமது நாட்டில் வறுமைக்கோட்டு மட்டம் தீர்மானிக்கப்பட்டு அதற்கு கீழ்ப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்குவதை நோக்கலாம்.
வறுமை 2 பிரிவாக நோக்கப்படுகின்றது.
1. Upupg56T6áu 6p16OLD (Absolute Poverty) 2. FTiru6T6IITGOT 6p160LD (Relative Proverty)
முழுதளாவிய வறுமையென்பது தனிநபர் அல்லது ஒரு குடும்ப அலகு தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கின்ற வருமானத்தின் அளவினைக் குறிப்பிட்டு அவ்வருமான மட்டத்தின் கீழ் வாழும் நிலையை இது குறிக்கின்றது. சார்பளவான வறுமை யென்பது வெவ்வேறு வருமான பிரிவினரை உள்ளடக்கி ஒப்பீட்டுரீதியில்நாகரீக வளர்ச்சி, சுற்றாடல், குடும்ப அந்தஸ்துபோன்ற அம்சங்களை கொண்டு விளக்குவதாக அமையும். ஒருவர் தன்னிலும் பார்க்க வசதி படைத்ததவனோடு தன்னை ஒப்பிட்டு பார்த்து தான் வறியவனாக இருப்பதாக உணரும் நிலையைக் குறிக்கும்.
O2 தை - பங்குனி 2009
 
 
 

சனத்தொகை அதிகரிப்பு, சொத்தமைப்பு, அடிப்படை பொருளாதாரச் சூழ்நிலைகள், வேலையின்மை போன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் முழுதளாவிய வறுமை காணப்பட நாகரீக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, உலகமயமாக்கம் போன்றவற் றால் நகர்ப்புறங்களில் சார்பளவான வறுமை காணப்படுகின்றது.
ஆனால் வறுமை நிலையினை திருப்தி மட்டத்தினை மையமாக வைத்து நோக்கும் போது முழுதளாவிய வறுமைப்பட்டோருக்கும் சார்பளவாக வறுமைப்பட்டோருக்கும் இடையில் சமமான நிலையும் சிலவேளைகளில் முழுதளவாகக் வறுமைப்பட்டோர் சார்பளவாக வறுமைப்பட்டோரைவிட திருப்தியில், நிம்மதி நிலையில் உயர்ந்து காணப்படுவதை நோக்கலாம். உதாரணமாக 5000ரூபா ஊதியம் பெறும் ஒருவர் சாதாரண சைக்கிள் வாங்குவதை எதிர்பார்க்க 50,OOOரூபா ஊதியம் பெறுவோர் கார் வாங்குவதை எதிர்பார்க்கின்றனர். இங்கு இருவரதும் உளத்திருப்தி என்பது சமமாக அமைகின்றது. . ܕܝܼܬ݀
வறுமையை அளவீடு செய்யும் கோட்பாட்டு அணுகுமுறைகள்
1.5(86Orf6Ou6OLDuLDIT853,6h35,76ioTLeggcup60p856it (Calorie basis Approach)
வறுமைக் கோட்டினைத் தீர்மானிப்பதில் ஒருவர் உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரி மையமாக வைக்கப்பட்டது. 2250 கலோரியென்பது வறுமையின் எல்லையாக கணிக்கப்பட்டு அதன் கீழான கலோரி உணவை எடுப்போன் வறியவனாக கணிக்கப்படுகின்றது. கிராமம், நகரத்திற்கிடையில் கலோரிப் பெறுமானத்தில் வேறுபாடு காணப்படுகின்றது. கிராமத்தில் ஒருவர் 2450 கலோரியையும் நகர்புறத்தில் ஒருவர் 2150 கலோரியையும் உட்கொள்ள வேண்டும்.
2. elgiu6Olgs (35606ids (35TlturIG (Basic Need Approach)
அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள், சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு சார்பாக செலவிடப்படும் பணத்தினை அடிப்படையாக கொண்டு வறுமைக்கோடு தீர்மானிக்கப்படுகின்றது. கால ஓட்டத்திற்கேற்ப அடிப்படைத் தேவைகள் மாற்றமடைந்து செல்வதை நோக்கலாம்.
3. வருமானத்தை அடிப் படையாக கொண்டவறுமை அளவீட்டு அணுகுமுறை (Income Proverty Measure Approach) &
இங்கு ஒருவரது வருமா னத்தை அடிப்படையாகக் கொண்டு வறுமைக்கோடு
தை - பங்குனி 2009 Ο3

Page 4
தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி இதனை நோக்கும் போது ஒன்றிற்கு 1டொலரிலும் குறைவான வருமானம் பெறுவோரை வறியவர் எனக் கூறுகின்றது.
4. LD60f1356gp6OLDśditię (Human Proverty Index) இச்சுட்டியானது 1997ல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் (UNDP) அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட காலத்தினை அடிப்படையாகக் கொண்டு 3 கூறுகளை மையமாக வைத்து வறுமை நோக்கப்படுகின்றது.
1. 40வயதை அடைய முடியாது போகும் வீதம் 2. வயதுவந்தோரில் எத்தனை வீதத்தினர் எழுத படிக்கத் தெரியாதோர். 3. இது 3 மாறிலிகளின் கூட்டாக வருகின்றது. 3.1 நல்ல குடிதண்ணிர் பெற முடியாதோர் வீதம். 3.2 சுகாதார வசதிகள் அடைய முடியாதோர் வீதம். 3.3 5வயதிற்குட்பட்ட வயதிற்கேற்ற நிறை குறைந்த பிள்ளைகளின் வீதம் 5. 6.IITiru6ft LB606) &mit 6p160LD& Silig (A New Proverty Opportunity Index)
இதில் 3 வகையான மனித வாய்ப்பளிக்கப்படாத நிலை ' (Deprivation) காணப்படுகின்றது.
1. Öressig5rigib (Health) 11 40 வயதுவரை வாழ மாட்டாதோர் வீதம். 1.2 பாதுகாப்பான குடிநீர் பெறமுடியாதோர்
வீதம் 1.3 ஊட்டச்சத்துக் குறைந்தோர் வீதம்
2.56b6fi (Education) 21 வயதுவந்தோரில் எழுத வாசிக்க
தெரியாதோர் வீதம் 2.2 ஆரம்ப பாடசாலைகளில் இருக்க வேண்டிய பிள்ளைகளில் பாடசாலைக்குச் V. செல்லாத பிள்ளைகளின் வீதம்.
3. 6.QBLDIT60Tib (Income) இங்கு ஒருவரது வருமான மட்டம் நோக்கப்படுகின்றது.
வறுமையும் சமூகப்பிரச்சினைகளும்
வறுமை காரணமாக பல்வேறு சமூகப்பிரச்சனைகள் எல்லாநாடுகளிலும் வெவ்வேறு
வீதங்களில் ஏற்படுகின்றன. வறுமையால் கூடுதலாக பாதிப்படையும் தரப்பினராக சிறுவர்
Oa. தை - பங்குனி 2009
 
 

களும், பெண்களும் காணப்படுகின்றனர். வறுமையால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகளை நோக்கின்
1. சிறுவர் துஷ்பிரயோகம் - வறுமை காரணமாக சிறுவர்கள் துஷ்பிரயோகப் படுத்தப்படும்நிலை காணப்படுகின்றது. பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும்நிலைமை யும், சிறுவர்கள்தாமே விரும்பி இவற்றில் ஈடுபடும்நிலைமை என்பன காணப்படுகின்றது.
2. குழந்தை தொழிலாளர்கள் - வறுமை காரணமாக சிறுவர்கள் மிக குறைந்த ஊதியத்துடன் தொழிலுக்கு அமர்த்தப்படும் நிலை காணப்படுகின்றது. தொழில் துறை களில் சிறுவர்கள் அடித்து துன்புறுத்தப்படும் நிலையும், நெருப்பு பெட்டித் தொழிற்சாலை போன்ற ஆபத்தான தொழில்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படும் நிலைமையும் காணப்படுகின்றது. இவர்கள் பாடசாலைக் கல்வியினை இடைநிறுத்தி இவற்றில் ஈடுபடுத்தும் நிலைமை காணப்படுகின்றது. இவற்றால் சிறுவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறும் நிலைமை ஏற்ப்டுகின்றது.
3. குழந்தைகளை விற்றல் மற்றும் கடத்தல் - ஏழைப்பெற்றோர்கள் தமது பிள்ளை களை பிறருக்கு விற்கும் நிலைமையும், அடிமைகளாக வாங்கப்படும் நிலைமையும் வறியநிலைமையும் காணப்படுகின்றது.
4. அனாதைக் குழந்தைகளின் பெருக்கம் - கூடுதலாக வறிய பெற்றோர்கள் கல்வி அறிவற்றவர்களாகவும் குடும்ப கட்டுப்பாடு சார்விழிப்புணர்வற்றவர்களாகவும் உள்ளனர். இவற்றால் கூடுதலான பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்க்க முடியாத நிலையில் தெருவோரங்களில் விட்டுவிட்டுச் செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது. அத்துடன் முறையற்றபாலியல் உறவால் பிறக்கும் குழந்தைகளும் இந்நிலைமைக்கு உட்படும்நிலை காணப்படுகின்றது.
5. பெண் சிசுக் கொலைகள் - பெண் சிசுக்களை கருவிலோ அல்லது பிறந்தவுடனோ கொலை செய்கின்ற நிலை காணப்படுகின்றது.
6. பாலியல் தொழிலாளர்கள் - வறுமையின் நிமிர்த்தம் பல பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் தொழிலாளர்களாக மாறுகின்ற நிலை ஏற்படுகின்றது. இந்நிலையால் தாமும் பாதிப்படைந்து சமூகத்தையும் சீரழிக்கின்ற செய்கையில் ஈடுபடுகின்றனர். இவற்றால் எயிட்ஸ் மற்றும் ஏனைய பாலியல் நோய்கள் பரவுகின்றன.
7. சேரிப்புறங்கள் மற்றும் தெருவோரச் சமூகங்களின் தோற்றம் - நிலமின்மை, தொழிலின்னை காரணமாக நகர்களில் சேரிப்புறங்களின் உருவாக்கம் ஏற்படுகின்றது. மிகவும் சுகாதாரக்கேடான இடங்களில் குடிசைகளை அமைத்து பல்வேறு நோய்தாக்கங்களுக்கும் உட்பட்டு வாழும் நிலையுள்ளது. அத்துடன் புகையிரதநிலையங் கள் கடைகளில் முன்புறங்கள் இவற்றில் வாழும் சமூகங்களும் வறுமை காரணமாக தோற்றம் பெறுகின்றன. இவர்களால் பல்வேறு சமூக கலாச்சார பிரச்சனைகள் ஏற்படு
தை-பங்குனி 2009 O5

Page 5
கின்றன.
உ+ம் : நிறைகுறைந்த பிள்ளைகள், விபச்சாரம், களவு
8. புகைத்தல், மதுபாவனை அதிகரிப்பு - வறிய சமூகங்களிடையே மதுபாவனை மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகமாகவுள்ளது. கவலையை மறப்பதற்காகவே குடிக்கின்றோம் எனக் கூறிதமது உழைப்பின் பெரும்பகுதியை இதற்கே செலவழிக்கின்ற நிலைகாணப்படுகின்றது. குடும்பத்தலைவனின் இத்தகைய போக்கால் முழுக்குடும்பமுமே நடுத்தெருவிற்கு வருகின்ற நிலையேற்படுகின்றது.
9. பிச்சைக்காரர் அதிகரிப்பு - வறுமையின் விளைவால் பிச்சைக்காரர் அதிகரித்த வண்ணம் உள்ளது.
10. முதிர்கன்னிகள் உருவாக்கம் - சீதனம் இன்மையால் திருமணம் செய்யாது கன்னியாகவே காலத்தை கழிக்கின்ற நிலைமை ஏற்படுகின்றது. இவை பாலியல் பிறழ்வு நடவடிக்கைகள் ஏற்பட ஏதுவாக அமைகின்றன.
11. பலதார மணங்கள் - வறுமையின் கொடுமையால் பலதார மணங்கள், விருப்பின்றிய திருமணங்கள் நடைபெறுகின்றன. இவை பல சமூகப்பிரச்சனைகள் தோற்றம் பெற ஏதுவாக அமைகின்றது.
12. களவு - இன்று எமது நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலுமே இடம்பெறும் ஓர் அம்சமாக களவு, கொள்ளை அவற்றுடனான கொலைகள் ஏற்படுகின்றன.
வறுமையொழிப்பு
வறுமையினை ஒழிப்பதற்கு பல நாடுகள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளன. விவசாய அபிவிருத்தி, நிலப்பங்கீடு, உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்தல், இலவசக் கல்வி, மருத்துவம், ஜனசக்தி நிவர்ணம், சமூர்த்தி நிவாரணம், உலக உணவு நிறுவனத்தின் நலிந்த பிரிவினருக்கான நிவாரணம், கடனுதவிகள், வீடுகள்போன்றபல்வேறுதிட்டங்கள் ஒவ்வொருமுறையும் ஆட்சிக்குவரும் கட்சியினாலும் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களாலம் இலங்கையில் காலம்காலமாகமுன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஆனால்வறுமைஒழிக்கப்பட்டுவிட்டதா? என வினவினால் இல்லை என்ற பதிலே எங்கும் எழும் நிலை காணப்படுகின்றது.
ஏனெனில் மனித தேவைகள் இவ்விரைவுலகில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு தேவையினை பூர்த்தி செய்ய மறுதேவை தோற்றம் பெறுகின்றது. அத்துடன் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடியான உதவிகளால் வறிய சமூகங்கள் தாம் ஓர் முயற்சியினையும் செய்யாது வறியதாக இருக்கவே விரும்புகின்றன. பசியான ஒருவனுக்கு மீன் ஒன்றினைக் கொடுப்பதிலும் பார்க்கமீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதன்மூலம் அவன் தனது அடுத்தநாள் பசியினையும்
क्षं
OS தை-பங்குனி 2009
 
 
 

தீர்த்துக்கொள்ளக்கூடியதாக அமையும். இதற்கமையதற்போது சுயதொழில் ஊக்குவிப்பு சார் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கூடுதலாக வறுமை என்பது மனம் சார்ந்த ஒன்றாகவே அமைகின்றது. என்னால் முன்னேற இயலாது. தொழிலினை மேற்கொள்ள இயலாது என தானே எண்ணி முயற்சித்துப் பார்க்காது இருக்கின்ற நிலைமையே இதன் பிரதான காரணமாக அமைகின்றது. அத்துடன் போதும் என்ற மனப்பான்மையே வறுமையில் இருந்து மீள்வதற்கான பிரதான கருவியாகவுள்ளது. மற்றவரைப்பார்த்து ஆசைப்படாது என்னிடம் இருப்பவை எனக்கு திருப்தியாக காணும். இவற்றிலிருந்தே என்னால் முன்னேற முடியும், வாழ முடியும் என் எண்ணி வறுமையில் இருந்து மீள்வதற்காக தானே முயற்சித்தலே வறுமை ஒழிப்பிற்கு உதவக்கூடிய ஒன்றாகவுள்ளது.
உசாத்துணை: 1.6LJITOb6fusortsTsir, LD6)f 2,2OOO 2. அபிவிருத்திப் பொருளியல், இதழ்-2, 2001 3. வாழ்வியல் களஞ்சியம்.
தை-பங்குனி 2009 O7

Page 6
மேற்கத்தேய கண்ணாடியினூடாக மட்டுமே பாக்கின்ற குடாநாட்டின் éRMGuff Drfl6OLDUILib &ELp66umJGOLDu Ild
F6öoryp566lrásub-sr$6iv {BBA (Hons) (Hrspl), H.N.Dip. Acc, Dip.Coun.Psy} நிகழ்ச்சி திட்ட உதவியாளர் (நன்னடத்தை) பிரதேச செயலகம், நல்லூர்.
ஒவ்வொரு பிள்ளையினதும் சுதந்திரத்துக்கும் நல்வாழ்வுக்கும் உளநல மேம்பாட்டிற்கும் அடிப்படையாக அமைவது அவர்களது உரிமைகளே. இவை பிள்ளைகளின் உயிர்வாழ்வு, பங்கு பற்றுதல், பாதுகாத்தல், மேம்பாடு என்ற நான்கு தூண்களில் அடங்கும். பிள்ளைகள் தமது தேவைகளை நிறைவேற்றி வாழ்வின் அர்த்தங்களோடு வாழ்வாங்கு வாழ்வதற்கான சுபீட்சமாக உலகை கட்டி எழுப்புவதற்கும் இவ் உரிமைகள் பேணிக்காக்கப்பட்ட வேண்டியது அவசியமாகின்றது. ஆனாலும் இன்றைய காலசக்கரத்தின் சுழற்சிக்கு ஏற்பவும், இடத்துக்கு ஏற்பவும் சமுதாய
விழுமியங்களுக்கு ஏற்பவும் நாட்டின் மக்களின் நலன் பேணும் போக்குக்கு ஏற்பவும்
பல்வேறுதளம்பலான போக்குடன் சிறுவர் உரிமைபற்றிய கருத்துக்கள் பார் எங்கும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. எனினும் பிள்ளைகளின் உரிமைகள் என்பது அவர்களது கடமைக்குட்பட்ட ஒன்று என்ற வாதப்பிரதிவாதங்களும் இருக்கத்தான் செய்கின்றது. இந்த வகையில் சிறுவர் உரிமைகள் என்பது பிள்ளைகள் தமது ஆளுமை விருத்தி பெற்று ஆரோக்கியமான மனிதர்களாக வாழ்வியலின் அர்த்தத்தை புரிந்து சுதந்திரமாக வாழ்வதற்கான பொருத்தமான சூழ்நிலைகள் என வரையறுக்கப்படுகின்றது. சிறுவர் உரிமைகள் பற்றிய எண்ணக்கருஜக்கியநாடுகளின் சபையால்கடந்த 60 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தப்பட்ட போதிலும் அவைபற்றிய கவனம் இலங்கை 1991 ஆண்டு ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சமுதாயத்தை ஏற்றுக் கொண்டதனை அடுத்துமுன்னுரிமைப் படுத்தப்பட்டது. ஏழத்தாழ17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் எமது சமூக கட்டமைப்புக்குள் இன்னும் திருப்தி படக்கூடிய வகையிலான நடத்தை
O8 தை-பங்குனி 2009
தன்
 
 
 
 
 
 
 

மாற்றம் வேரூன்றவில்லை என்றே கூறவேண்டும்.குடாநாட்டில் வெளியூர், உள்ளூர் நிதி வழங்கும் நிறுவனங் களின் அனுச்ரனையுடன் v9lJef, 9lJSF சாரா நிறுவனங்களும் பல் வேறு உளநல மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டங் களை நடை முறைப்படுத்திவருகின்ற இன்றைய நிலையில் ஓரளவு மாற்றத்தை சமூக மட்டத்தில் உணர்
கின்றபோதும் தற்போது குடாநாட்டில் நிலவும் யுத்த மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளும் மக்களின் பல்வேறு கஷ்டங்களும் இடப் பெயர்வுகளும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட
நிலையில் இந்த உள்ளூர் சமூக கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் கட்டுமாணங்களால் உருவான பாரிய உடைவுகளும் சாதி சமய ரீதியான பால்நிலை வேறுபாடுகளிலான பாரபட்சங்களால் சிறுவர்களின் உரிமை என்ற பதம் வெறும் சொற்களிலேயே உலாவருகின்றது. இதற்கு குடாநாட்டிலுள்ள பொருளாதார வறுமைமட்டுமல்லாது சமூக பண்பாட்டு ரீதியிலான வறுமையும் அதனால் ஏற்பட்ட சமூக இடைவெளிகளும் காரணமாகின்றன. மறுபுறத்தில் பிள்ளைகளின் பெற்றோர் கல்வியாளர்கள், சமூக பணியாளர்கள், சட்டவியலாளர்கள் மத்தியில் பிள்ளையின் உள சமூக மேம்பாடு பற்றிய ஆத்மாத்தமான உயரிய நலன்நோக்கிய அர்ப்பணிப்ப குன்றிவருவதும் காரணமாகின்றது.
இன்றுகுடாநாட்டில்பிள்ளைகள் ஆரம்பபாடசாலை அனுமதிமுதல் பல்கலைக்கழககல்வி வரை கடுமையான போட்டியை எதிர்நோக்கி கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இன்நிலையில் குடும்பத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி ஒருபுறமும் புத்தகப்பையை மறுபுறமும் என்று செழிப்பான பிள்ளைப்பருவத்தின் கதைகளை எங்கோ தொலைத்துவிட்டு சந்துபொந்தெங்கும் காளன்களகமுளைத்திருக்கின்றதனியார்கல்விநிறுவனங்களுக்குஏறி இறங்குவதிலும் வீட்டை கவனிப்பதிலும் என்று காலத்தை கடத்தும் நிலைமை ஒரு புறம் இருக்க பிள்ளையின் கல்வியா? குடும்பவாழ்க்கையா? தொழிலா என்ற முக்கோண போட்டியில் பஞ்சாய் பறக்கும் பெற்றோரை மறுபுறம் என்று குடாநாட்டின் கிராமம் முதல் நகரம் வரை கடுமையான போட்டிகளும் சவால்களும்மிக்கஇன்றைய உலகமயமாகிக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்கின்றனர். இவ்நிலையில் எங்கே உள்ளது சிறுவர் உரிமை? இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு கெடுபிடிகளும் அச்சுறுத்தலும் நிறைந்த சூழ்நிலையில் தோன்றும் பல்வேறு மன அழுத்தங்கள் அதனால் தோன்றும் உள நெருக்குவாரங்கள் மற்றும் அகப்போராட்டங்கள் போன்றனவும், சிறுவர் உரிமை என்று பேசும் விடயங்களை இன்று தகர்த்தெறிகின்றன என்றே கூறவேண்டும். மாறாக
தை-பங்குனி 2009 09

Page 7
அடக்குமுறைகளையும் அவலங்களையும், சிறுவர் துஷ்பிரயோகங்களையும் சிறுவர் மீதான பல்வேறு இம்சைகளையும் ஏற்படுத்தும் அவலங்களையே தோற்றுவிக்கன்றன. இதனால் எதிர்கால உலகை கட்டி எழுப்பும் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர் இரண்டும் கெட்டான நிலைக்கே தள்ளப்படுகின்றனர். பிள்ளையின் உளநல மேம்பாடு தொடர்பில் பாடசாலையின்மீது மட்டும் தங்கியிராது மேலதிக தனியார் வகுப்புக்களில் நம்பிக்கை வைத்துதமது பணத்துக்கும், பகட்டுக்கும்.தமது மேன்மைக்கும்பிள்ளைகளை பலிக்காடாக ஆக்க முயல்கின்றனர். இதனால் பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு வேண்டிய விளையாட்டு, ஓய்வு பொதுநிகழ்வுகளில் பங்குபற்றல் போன்ற சுதந்திரமான அசைவுகள் தடைப்படுகின்றன. மாறாக மன அழுத்தங்கள் குருவித்தலையில் பனங்காய் ஏற்றும் செயல்போல் ஆகிவிடுகன்றன. இதனால் சமூக வறுமையும் அதனால் ஏற்படும் விளைவுகளால் எதிர்கால சந்நதியினர் சிக்கிசின்னாபின்னமாகிவிடுகின்றனர்.
மேற்கத்தேய நாடுகளை எடுத்து நோக்குவோமேயானால் அங்கு பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்து மதித்து அன்நாட்டு அரசாங்கம் பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் அவர்களது நலன் மேம்பாட்டு திட்டங்களை (Package) முன்வைத்து பொருளாதார உதவிகளையும் மற்றும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றது.மேலும்வேறுநாடுகளுக்கு சென்றுவிடுமுறைகளைகழிக்கதூண்டுகிறது. இத்துடன் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அப்பிள்ளைகளின் கை செலவுக்கு (Pocket money) என ஒரு தொகையை பெற்றோரின் சம்பளத்துடன் மேலதிகமாக வழங்குகிறது. இதனை அப்பிள்ளைகளுக்கு பெற்றோர் வழங்கினால் அப்பிள்ளைகள் தமக்கு மகிழ்வை ஏற்படுத்தும் விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் விரும்பிய தின்பண்டங்கள்போன்றவற்றுக்குசெலவிட்டுதமதுமகிழ்ச்சிமிக்ககழலைபடைப்பர். இதன் மூலம் சிறுவர் நலன் பேணப்படுகின்றது. எனவே சிறுவர் உரிமை பற்றிய இத்தகைய மேலத்தேய நாடுகள் கதைப்பதற்கும் பொருளாதார வறுமையாலும் யுத்த சூழலிலும் சிக்கித்தவிர்க்கும் எம்போன்ற வறிய நாடுகள் கதைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. எனினும் சிறுவர்உரிமை பற்றிய பதத்திற்கு செயல்வடிவம் கொடுக்க குறிப்பாக குடாநாட்டில் பல் வேறு அரச, அரசசாரா நிறுவனங்கள் (UNICEFSCISL போன்றன) பெருமளவு நிதியை கொட்டி பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி நடை ჯჯოჯჯ இருமுறைப்படுத்துகின்ற போதும் எமது பொருளாதார சமூக கட்டுமானங்களில் உள்ள சமச்சீரற்ற நன்மையும் மக்களின் மனப்பாங்கு மாறுதல்களில் உள்ள தாமதத் தாலும் இது இன்னும் திருப்த்திபடக்கூடிய அளவுக்கு செயல்வடிவம் பெறவில்லை என்றே கூறவேண்டும்.
1Ο தை - பங்குனி 2009
 
 
 
 
 
 
 
 
 
 

பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியையும் அவர்களது நடத்தை மாற்றங்களையும் தீர்மானிப்பதில் இரண்டுநிறுவனங்களமுக்கியத்துவம் பெறுகின்றது. அதில் ஒன்று குடும்ப சமூக சூழல் மற்றையது பாடசாலை சமூகம். பாடசாலை சமூகம் என்றவகையில் பிள்ளையின் அறிவுபசியைபோக்கும் இடமாக மட்டுமன்றி ஏனைய உள, சமூக, ஆன்மீக வளர்ச்சிக்கு உரம் போட்டு பிள்ளைகளை சமூக மயமாக்கலுக்கு உதவும் பாலமாக விளங்குகின்றது. அந்தவகையல் பல்வேறு உள்ளூர் வெளியூர் அரசசாரா நிறுவனங்களின் உதவியுடன் மேற்கத்தேய பாடசாலை சூழலை ஒத்த அணுகுமுறைகள் உள்ளடக்கிய சிறுவர் நேயம்மிக்க முறையியலை முன்வைக்கின்ற போதும் இவை சில வேளைகளில் பிள்ளைகளின் வாழ்வியலில் மேலதிக சுமையாகவும், அளவு கடந்த தண்டனைகள் வழங்குதல், முறைகேடான முறையில் தண்டித்தல், பிள்ளைகளின் முன்னால் குற்றம் செய்த பிள்ளைகளாக பார்த்து அநாகரிகமாகப் பேசுதல், பிள்ளைகள் செய்த குற்றத்துக்கு அவர்களுடைய பெற்றோரை இழிவாக பேசுதல்,
பெற்றோரின் தொழிலை மையமாக வைத்து பேசுதல், புள்ளிகள் (Marks) இடும் போது வேண்டாவெறுப்பாக குறைத்து வழங்குதல் போன்றவற்றால் பிள்ளைகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனால் மனவிரக்தியும் கல்வி மீதான வெறுப்பும் ஏற்ப்டுகிறது இது பாடசாலை இடைவெளிகலுக்கு இட்டுச் செல்கின்றது. இன்னொரு புறம் சில பிள்ளைகள் பொருளாதார சுமைக்கு முகங்கொடுத்து குடும்பத்தை கொண்டு நடத்த வேண்டிச்சிறுவர் ஊழியர்களாக மாறுகின்றனர். (Child Labourer) இத்தகைய பிள்ளைகளின் உணர்வ மதியாத வகையில் பரபட்சமாக சில பாடசாலை ஆசிரியர்கள் செயற்படும்போது பிள்ளை களின் மனதில் தாழ்வுமனப்பாங்கும் குற்றஉணர்வும் வளர்கிறது. இதனால் அவர்களது முற்போக்கான ஆளுமை வளர்ச்சி தடைப்படுகிறது. இவ்வாறான சிறுவர் நேயம் மிக்க சூழல் குறிதவறி செல்வதற்கு முக்கிய காரணம் எமது நாட்டிலள்ள பாடசாலைகளுக்கு இடையிலான வயபங்கீட்டிலுள்ள அசம நிலையே காரணமாகும்.
இவ்வாறே பிள்ளையின் வாழ்வியலில் பங்களிப்பு செய்யும் மற்றய முக்கியமான அமைப்பு மகிழ்ச்சிகரமான வாழும் குடும்ப சமூக சூழலாகும். குடாநாட்டு மக்களிடையே சிறுவர் உரிமைகளை மதிக்கும் வகையிலான நிகழ்ச்சி திட்டங்கள் எவ்வளவு தூரம் வேரூன்றுகின்றதுஎன்றுநோக்கவேண்டும். “அடியாதமாடுபடியாது”என்றுமுழக்கமிட்டு தமது கோபத்தையும் இயலாமையையும் பிள்ளைகளின் மீது காட்டும் பெற்றோர் ஒரு புறம் இருக்க மறுபுறம் தமது பயன்தரும் உழைப்பின் பாதிநேரத்தை வானொலி, தொலைகாட்சி, கணணி, இணையத்தளம் என நவீன தொழிலிநுட்ப சாதனங்களின் ஒப்பம் விட தவிக்கும் பெற்றோர் என காலம் உருண்டோடுகின்றது. அவ்வாறே பிள்ளைகளும் முன்பள்ளி முதல் வீட்டுக்கு வெளியே காலத்தை (பாடசாலை, தனியார் கல்வி சாலைகள், பிரத்தியோக வகுப்புக்கள்) கழிக்கின்றனர். இந்த வகையில் நோக்கும்போது ஓடி உழைக்கும் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கும் வீட்டை தற்காலிக
9
விடுதியாக பயன்படுத்தும் நிலை இன்று “உலகமயமாக்கல்” “நகரமயமாக்கல்” என்ற
தை - பங்குனி 2009 律

Page 8
இன்றைய கருத்தியியலின் ஓட்டத்துக்கு ஏற்ப மாறுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் பிள்ளை நேயம்மிக்க குடும்ப சூழலை கட்டியெழுப்ப பெற்றோர் தவறிவிடுகின்றனர். இதனால் பிள்ளைகளின் உளநல மேம்பாட்டுக்கு அவசியமான அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு என்ற அடிப்படைதேவைகளுக்கான வெற்றிடம் உன்று உருவாகின்றது. இது பிள்ளையின் வளர்ச்சிப் பெருக்க காலத்தில் தனிமை உணர்வு மிக்கவர்களாய், தன்னிலை அறியும் திறன் இல்லாதவர்களாய் வளர்வதுடன் அவர்களின் ஆளுமை விருத்தியும் தடைப் படுகின்றது. இது ஒருபுறம் இருக்க, அழகான வீட்டை கட்டி அதன் ஒவ்வொரு அறை களுக்கும் பல்வேறு பெயர்களைகட்டி பல சுகபோக வசதியுடன் வாழ்கின்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கற்பதற்கு என்று தனியான அறையை ஒதுக்க தவறிவிடுகின்றனர். இதனால் சத்தமும்சந்தடியும் மிக்க கழலிலேயே பல்வேறு இடையூறுகளுடன்பிள்ளைகள் கல்வி கற்கவேண்டியுள்ளது. இங்கு எங்கே உள்ளது சிறுவர் நேயம் மிக்க குடும்ப சூழல்?
மேற்கத்தேய நாடுகளை எடுத்து நோக்கும்போது அங்கு பெற்றோர்கள் வீட்டை 60LDuLDITEs 65|T6ioTLSibp6) (Home Based Leasining) assT60T sp606) elsoLD5gé 65ITG5 துள்ளனர். இதனால் வசதிகுன்றியபிள்ளைகள் கல்வியில் பின்தங்கியபிள்ளைகள்வறிய பிள்ளைகள் என எல்லோரும் சேர்ந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் கற்கும் வாய்ப்பை வீடுகளில் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகினறன. இத்தகைய மகிழ்ச்சிகரமான கற்றற்கழலில் எல்லா பிள்ளைகளும் ஆர்வத்துடன் கற்பார்கள். அத்துடன் விளையாட, நண்பர்களுடன் பேச ஒன்றாகச் சேர்ந்திருக்கக்கூடிய வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயல்கிறது இதனால் பிள்ளையின் ஆளுமை வளர்ச்சி பெறுகின்றது. அத்துடன் பிள்ளையின் சமூகத்தேவை பூர்த்தியடைவதுடன் சிறந்த சமூக மயமாக்கலை விருத்தி செய்கின்றது. எனவே சிறுவர் உரிமை பற்றி பேசும் வளர்முக நாடுகளுக்கும் உள சமூக ரீதியில் இன்னும் வளரவேண்டியுள்ள சமூக வறுமை மிக்க எமது நாட்டில் சிறுவர் உரிமைபற்றி பேசுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளதல்லவா?
எனவே “பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழியைஞாபகப்படுத்தி வெளிநாட்டு சிறுவர் உரிமை பேண் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் உள்ள நல்ல அம்சங்களை எமது நாட்டின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களுக்கு ஏற்றவகை யில் மாற்றத்துடன் கருத்தில் எடுத்துசிறுவர் பாதுகாக்கும்வேலைத்திட்டங்களை உருவாக்கி சிறுவர் உரிமை காப்போமாக சமூக வறுமையை போக்குவோமாக.
“கொடிது கொடிது இளமையில் வறுமை’
12 தை-பங்குனி 2009
 

DR. sador, 492 / 2 நெல்சன் பிளேஸ் (இடம்) வெள்ளவத்தை, கொழும்பு -O6
வறுமைவாழ்வில் ஒருவெறுமைநிலை.அதுபொறுமையின் வேதனையின் எல்லை மிகச் செழுமையாக வாழ்ந்து ஆண்டனுபவித்த செல்வந்தர் கூட வழுக்கி விழுந்து ஏழ்மை நிலை அடைந்த சரிதமும் உண்டு, நாமும் காணக்கூடியதாகவும் உள்ளது.விதி என்பர் ஒரு சாரார். ஊதாரித்தனமான அகங்காரச் செலவான ஆடம்பர வாழ்வில் தண்ணிராகச் சிக்கனம் பேணாமல் செலவு செய்து வாழ்ந்து சொத்து சுகம் அனைத்தையும் இழந்து, நொந்து,நடைப்பிணஏதிலியானவர்கள் பலர். ஆடம்பரத்தில், பிறர் காணா காட்சியாத சுக வாழ்வில்சுவைகண்டு மதிமயங்கி, உழைப்பு சேமிப்பின்றி செலவழித்தேசீரழிந்து இரந்து வாழும் வாழ்க்கை நிலைக்கு தாழ்த்தப்பட்ட நிலைமைக்கு ஆளானவர்கள் பலர். விரலுக்கேற்ற வீக்கம் என்பவரவுக்கேற்ற செலவும், கிடைப்பதைக் கொண்டு அழகாகத் திட்டமிட்டு அளவோடு மிதமாக திருப்தியுடன் வாழும் மனப்பக்குவம், முயற்சி, சேமிப்பு, தன்னம்பிக்கை துணிவு என விரிந்த செயல்பாடுகள் வறுமை நிலைமை அண்டாமல் விலக்கிவிடும் காரணிகளாகும் இவைதான் என்றும் தேவை.
இளமையில் இடும்பைமிகமிகக் கொடுமை ஒளவைப் பாட்டியும் தன்பாடலில் கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை எனக் கருத்து கொள் ளத்தக்க வகையில் கூறியுள்ளார். பல சங்கக்கால பாடல்கள் வறுமையின் கொடுமையை விபரித்துள்ளன. இளமையில் ஏழ்மையை இன்றைய சமகாலத்தில் பரவலாக நாம் காண்கிறோம் வயிற்றுக்குணவின்றி, உடுக்கப் போர்க்க உடைதுணியின்றி, ஊர்ஊராக ஊர்ந்து, ஒளிந்து இருந்தவை அத்த னையும் இழந்து, மரநிழலிலும், பற்றை, வெட்ட வெளிகளிலும் படுத் துறங்கி பயந்து, ஏதிலியராக வாழும் பேரவலத்தை, எமது சமுதாயத்தில் நாம் வறுமையின் உச்ச நிலையில்
காண்கிறோம். மனம் பதைபதைக்கி றோம். கண்ணிரை வெந்நீராக உருக் குகிறோம் வேதனையை பகிர்ந்து அனுபவிக்கிறோம். இந்த அவல **
தை-பங்குனி 2009 13

Page 9
நிலை யுத்த அனார்த்தம் நிகழும் நாடுகளில் பட்டினிச் சாவுடன் கூடிய, தற்கொலைகள், மனம் பேதலிப்புவரை விரவி காணும் நிலைமையில் நாம் இன்றும் உள்ளோம். எதனால் இந்த மனித பேரவலம். விதியா? சாபமா? இல்லவேயில்லை.
இளமையில், வறுமையில் சிறார்கள் வளரிளம்பருவத்தினர் வரை மிகவும் பாதிக்கப் படுகிறார்கள். கல்வி கற்கும் காலத்தில் ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவர்கள் வசதியான பணக்காரக்குடம்பத்தைச்சேர்ந்தவர்களுக்குவழங்கப்பட்டவாய்ப்பு வசதிபயன்பாடுகளை நோக்கிஒப்பிட்டு, தமக்கு இவை இல்லையே எனஏங்குவதும் அது கிடைக்காதற்கு காரணம் கற்பித்து பெற்றோர் மேல் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வதும் பிற்காலத்தில் சமுதாயத்தை வெறுக்கவும் தலைப்படுவர். தாமும் அவர்களைப் போல வாழும் பேரவா வால் மனமுடைந்து விடுவார்கள் கிடைக்காதபோது. ஒரு சிலர் உடுப்பை திரும்பத்திரும்ப தோய்துலர்த்தி அடிக்கடி அணியும் நிலை கண்டு, வெட்கத்தையும் வெறுப்பையும் மனதில் விதைத்துவிடும் அவலம் வேறு. அந்த மனநிலையை வாயால் விவரிக்கவியலாத மன ஓட்டம் எனலாம். அடிமனதில் ஆழப்புதைத்து உள்ள மனவடு என்பது இது எனலாம்.
கிடைக்காத வெற்றிக்காகவும் ஆசைப்பட்டு மனதில் அசை போட்டு போட்டு வழிதவறி திருட்டுப்பழக்கத்திற்கு ஆளாகும் இளசுகள் வளர்முக இளைஞர்கள் நவீன நாகரிகத்திற்கு ஈடுகொடுத்து, வசதிபடைத்தோர் வாழ்வுக்கு இணையாக வாழநினைக்கும்போது, வசதிக்கு வாழ்வளிக்கும் போதைக்கும் பொருளுக்கும் தேவைக்கும் களவு எடுக்க அல்லது முறையற்ற குறுக்கு வழியில் சம்பாதிக்க முயல்கிறவர்கள் இந்த ஏற்றத்தாழ்வு சமூகப்பிரச் சனையாக மாறிவடும் அவலம். அதாவது சமூகசமுதாய கட்டுக்கோப்பிற்கு முரணாக, ஏமற்றத்தால், சவால் விடும் விரக்தி வக்கிர மனத் தாழ்நிலைப்போக்குத் தான் இதற்கான முக்கிய காரணியாகவும் சமூகவியலாளர் கருதுவர். இதுதான் இளமையில் வறுமைப் பீடிப்பின் எதிர்விளைவுகள் எனலாம். கல்வி மனவளர்ச்சி குன்றி சுயகட்டுப்பாடு கடமை உணர்வு மங்கி வன்முறைக் கலாச்சாரத்தைக் கைக்கொள்ளும் சீரழிவை அடைந்து, மனப்பக்குவம், தன்னம்பிக்கை இழந்து மனநோயாளியாக உலா வருவதையும், மருத்துவ மனையை நாடி வருவதையும் நாமின்று அடையாளம் கண்டும் அன்றாடமும்
தை - பங்குனி 2009
 
 

காணக்கிடைக்கிறது. இத்தகைய நெருக்கடி காலத்தில் பரவலாக பலவாறாகக் காணும் துர்ப்பாக்கிய துயர அவலக்காட்சி மனதை அதிர்ச்சிக்கும் ஆதங்க வேதனைக்கும் ஆட்படுத்துகிறது, வேதனையான அனுபவங்கள் மதுவிலிருந்து மன நோய்வரை.
இப்படியான அவலநிலை, நெருக்கீடுகள் தொடரும் பட்சத்தில் நாடோடி ஏதிலி வாழ்க்கை முடிவுற்று, நாகரீகமாக வாழ்ந்த சமுதாயமே அழிந்த வரலாறும் உண்டு. வறுமை காரணமாக குடும்ப உறவில் விரிசல் வன்முறை, தற்கொலை, விரக்தி வெறுமை பெருகி, கூட்டுறவு, பாசபந்தம், இன்று அறுந்து மனநோய்க்கு வழிவகுக்கும் எல்லைக்கு வந்து விடும் நிலைமை தன்னம்பிக்கை இழந்து விட்டதால், சுயமுயற்சி, சுயமரியாதை, பிரச்சனைக்கு முகம் கொடுக்கும் துணிவு, பக்குவம் ஏற்படவில்லை. இதனால் வாழ்க்கை யின் எல்லை இறுதிக்கோட்டிற்கு மனிதன் அழைத்துச்செல்லப்படுகிறான். இது விதியல்ல. LDSussitatDLD, ஒத்துழையாமை, அறியாமையும் கூட
மேலும், இறுதியாக பொதுகடமைச் சிந்தாத்தில் உளறியவர்கள், இல்லாதோர், இருப்போர் என்ற சமுக வேறுபாடு, முரண்பாடுதான் ஒரு சாராரின் வறமைக்கு காரணம் என்று புரட்சி செய்ய வழிவகுத்தனர் செல்வந்தர், ஏழைகளைச் சுரண்டி, அடக்கி, ஒடுக்கி மேலும் இரவலர்களாக அடிமைப்படுத்தினர் என்பார் பொது உடமை வாதிகள். இதுவும் உண்மையில் ஒரு காரணியாகும்.
ஆக வறுமையின் கொடுமையை சத்தி முற்றப்புலவர் சங்ககாலத்தில் அழகாக சித்தரிக்கின்றார். பொருள்தேடி வெளியூர் சென்ற அவர் பசியுடன் அமர்ந்திருந்தபோது செங்கால் நாரைகள் மேலே பறந்து செல்வதைக் கண்டார். பாடல் செஞ்சுருக்கமாக வருகிறது. பனங்கிழங்கு பிளந்ததென கரிய பவள சொண்டு உடைய நாராய்களே என விழித்து, நீங்கள் சத்திமுற்றத்திற்குச் செல்வீர்களானால் கூரை பிழந்து சுவர் நனைந்து கிதிலாமாகிஉள்ளவீட்டில் குளிர்தாங்கதுணிப்போர்வை இன்றிகைகளால் மெய்பொத்தி, குறுகி, நனைந்த சுவரை பற்றிக் கொண்டிருக்கும் பல்லியை வெறித்து நோக்கியபடி கணவன்வரவை எதிர்பார்த்திருக்கும் மனைவிக்கு என்னைக்கண்டனம் என்ற செய்தியை உரைப்பீராக. என்ற கருதுபடவேதனையான வறுமைக் காசியைதத்ரூபமாக ஏழ்மையில் காட்டுகிறார்அதுமட்டுமல்ல ஒரு கவிஞர்பசிபட்டினிவேதனையில்தன்வயிற்றைஏசுகிறார் இப்படி- ஏய் இடும்மை கூர் ஏன் வயிறே கிடைக்கும் இருவேளைக்கான உணவினைத் தானும் ஒரு வேளையில் ஏற்றுக்கொள் என்றால் மறுக்கிறாய். அதனால் உன்னோடு வாழ்தல் மிகவும் கொடியது அரிது என்றார்.
எனவே வறுமைகொடிதிலும் மிககொடிதுஅதற்கான காரணிகளைக் களைந்து விலக்க வேண்டும். சமுதாயம் ஒன்றிணைத்து வறுமையை விரட்டலாம், திட்டமிட்டு முயற்சி செய்யவும், மனமும் உண்டேல் வெல்லலாம். அன்பே தெய்வீகம். அப்போது நீயே தெய்வமாகிறாய் என்பது இயற்கையின் செய்தி, நியதி, சிந்திப்போம் செயலாக்
குவோம்
தை-பங்குனி 2009 15 ای தன்

Page 10
நான் உருவாக . வறுமையிலும் கொடியது
வறுமை எண்ணம்
அருட்சகோ.றமேஸ் அமதி BBA (Hons), B.Psy
வறுமை
வறுமை என்ற சொல் பொதுவாக மனிதர்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும் சொல்லாக தென்படுவதில்லை. பொதுவாக மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதில் காணப்படும் பொருட்குறைவை பொருள் வறுமை என்றும், ஆன்மீக ரீதியில் ஓர் பிடிப்போ அல்லது முதிர்ச்சியற்ற தன்மையோ காணப்படின் அதனை ஆன்மீக வறுமை என்றும் பேசும் இவ்வுலகில் இன்று உளவியலானது "வறுமை எண்ணம்’ பற்றி பேசி நிற்கிறது. வறுமைக்கும், மனித வாழ்க்கையின் தோல்விக்கும் காரணமானது இந்த வறுமை எண்ணமே என்பதனை உளவியலாளர்கள் தமது ஆராட்சிகள் மூலமாக நிரூபித்திருப்பது கண்கூடு. இந்நிலையில் வறுமையே கொடுமையானது எனின் வறுமை எண்ணம் எவ்வாறானது என ஆராய்வது முக்கியமாகும்.
மகான்கள் நடுவில் வறுமை
பண்டு தொட்டு இன்று வரை வாழ்ந்து வரும் மகான்களில் பலர் தங்களின் உயரிய குறிக்கோளை அடைய தங்களைத் தகுதிபடுத்திக் கொள்வதற்காக, செல்வத்தைத் துறந்து வறுமையை வேண்டுமென்றே அணைத்துக் கொண்டதை நாம் வரலாற்றில் காணமுடிகிறது. அப்படியானால் ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்று கருதப்படு வது ஏன்? வறுமையானது பணப்பையில் இருப்பதை விட மனத்தில் தான் இருக்கிறது. பணத்தை அதிகமதிகமாகச் சேர்க்க வேண்டுமென்ற பேராசை மனிதனிடம் இருக்கும் வரையில் அவன்தன்னில் ஒரு வறுமையையே உணருவான்.திருப்திப்படாத மனிதமனம் நாளுக்கு நாள் தன் தேவையை மேலதிகமாக உணரும் பட்சத்தில் தன்னில் வறுமையை யும் அதில் ஓர் வெறுமையையுமே உணரமுடியும் என்பது உளவியலாளர்களது பொதுவான கருத்தாகும்.
கன்பூவிழியஸ் தன்னுடைய ஏழை மாணவராகிய என்ஹசவீ என்பவரைத் மற்றைய
16 605 - urig560f 2009
 
 

பணக்கார மாணவர்களுக்கு சுட்டிக்காட்டி'உயரிய ஒழுக்கத்தின் முன்மாதிரி இவர்’ என்று கூறுவார். அற்ப உணவை உண்டு, குடிசையில் படுத்துறங்கி அவர் ஏழ்மையில் வாழ்ந்து வந்த போதும், அவர் தன் வறுமை நிலையை உணர்ந்து தன்னைத் தானே நிந்தனை செய்து கொள்வில்லை. வறுமை அவருடைய மன அமைதியைக் குலைக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ஒருவரிடம் தங்கள் வெற்றியின் இரகசியம் என்ன” என்று வினவிய போது: வைகறையில் எழுந்து கடமைகளில் கவனம் செலுத்துவதுதான் என்று பதில் கூறினார். ஒருவன் எந்தநிலையில் இருந்தாலும், மற்றவர்களின் அலுவல்களில் தலையிடாது தன்னுடைய வாழ்வின் வேலைகளை அறிவுடனும், அக்கறையுடனும் கவனிப்பானாகில் அவனுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதில் ஐயமில்லை.
வறிய நிலையில் உள்ள ஒருவனின் மனோநிலையைப் பொறுத்துத் தான் வறுமை தங்கியுள்ளது. அவ்விதமே செல்வமும் உள்ளது. டால்ஸ்டாய் தன்னுடைய செல்வ நிலையிலும் துன்புற்றார். செல்வமே அவருக்கு தீமையின் காரணமாக இருந்தது. பேராசைக்காரன்பணத்தைக்குவிக்கவிரும்புவதுபோன்றுஅவர் வறுமையை அணைக்க விரும்பினார். ஏனெனில் வறுமையில் வாழ்வதா அல்லது செல்வத்தில் மிதப்பதா என்பது ஒவ்வொருவரினதும் மனத்தில் தான் தங்கியிருக்கிறது. இதனால்தான் மகான்கள் தங்கள் வாழ்வில் தமக்கு எது உகந்தது என்று கண்டு ஒழுகினார்கள். ஆனால் எல்லா மனிதர் களுக்கும் அது பொருத்தப்பாடு உடையதா என்ற வினாக்களும் பலவாறு எழ முடியும்.
தற்கால சமூகத்தில் வறுமை
தற்கால சமூகத்தில் வறுமை ஏற்றுக் கொள்ளக் கூடியது ஒன்றல்ல என்பது சிந்தனையாளர்களது கருத்து. இது மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை அமைத்து மனித மாண்மை மங்கச் செய்யும் ஒரு நோயாக மாறிவிடும் என்பது கண்கூடு. உளவியலாளர்கள் வறுமையை நோக்கும்போது வறுமை எண்ணத்தையே கட்டமிடுகிறார்கள். வறுமை என்பது தீர்வுகாணக் கூடிய ஒரு நோய். அது ஒரு மனிதனில் என்றும் நிலைக்கப் போவது இல்லை. மாறாக வறுமை எண்ணம் மிகவும் இழிவானது. ஒரு மனிதனில் எவ்வளவோ ஆற்றல்களும் தீமைகளும் குவிந்திருக்க அவன் தன்னை வறிஞன் என்றும் தனக்கு வளவாழ்வே இல்லை என்றும் கருதுவானாகில் அதுதான் அவனில் உள்ள பேதமையாகும்.
ஒருவன் தன்னை வறிஞன் என்றும் தனக்கு வளவாழ்வே இல்லை என்றும் எண்ணு வதே அவனுடைய எண்ணத்தை மாசுபடுத்தி வறுமையை உண்டுபண்ணும் என்பதில் ஐயமில்லை. இதனை மனிதர்கள் உணர்வதில்லை. தங்களின் தன்னம்பிக்கை. துணிவு என்பவற்றைப்பற்றிசிந்திக்காமல்எதுக்கும்மனக்குழப்பமடைந்துவாழ்வதேமனிதர்களின்
605 - Lurig56f 2009 17

Page 11
வறுமைக்கும் வாழ்வின் தோல்விக்கும் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
வறுமை எண்ணம்
6.g6OLD கொடியதுதான் ஆனால் அதைவிடக் கொடியது வறுமை எண்ணம். அந்த எண்ணம் ஒருவனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடுமாயின் அது அவன்பால் வறுமையைத் தவிர வேறொன்றையும் தோற்றுவிக்காது. வறுமை எண்ணத்துடன் வாழும் ஒருவன் எப்போதும் வறிஞர்களுடனே தொடர்பு கொள்வான். வறிஞர் போன்றே உடையணிவான்.வறுமையைப்பற்றியே பேசவான்.வறுமைவாழ்வேவாழ்வான்; அவன் அல்லும் பகலும் வறுமையின் சூழலில் வாழும் பொழுது, அவனது உள்ளமும் உடலும் வறுமையில் மூழ்கித்தோய்ந்தபிறகு அவன்வளவாழ்வைப்பற்றிஎப்படி சிந்திக்கமுடியும்? ஒருவன் வறுமை எண்ணங்களை எண்ணிக் கொண்டும், தன்னுடைய சோகத்தை எண்ணிக் கொண்டும், தன்னுடைய தோல்விகளை நினைத்துக் கொண்டும் வறுமைப் பட்டணத்தை நோக்கி தன்னுடைய அடிகளை எடுத்து நடக்கும் போது அவன் எவ்வாறு வள நகரைப் போய்ச் சேர முடியும்?
எனவே ஒருவன் தனது வாழ்வை வளமுள்ள வாழ்வாக மாற்ற வேண்டுமெனின், வறுமையை ஒழித்து வாழ்வில் வெற்றிக்கட்டங்களை அடையவேண்டுமெனின் முதலில் அவன் தனது உள்ளத்திலுள்ள வறுமை எண்ணத்தை விரட்டியடிக்கவேண்டும்.தன்னால் மற்றவனைப் போல் நன்றாக வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தன்னில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவனது வாழ்வைத்தீர்மானிப்பது அவனது எண்ணங்களே, சிலர் தங்ஸ் வாழ்க்கையில் வளமான நிலையில் இருக்கும் பொழுது கூட வறிய எண்ணங்களை எண்ணுவார்கள். வறிஞர் போன்றே செயலாற்றுவார்கள். எளிமை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு வறிய வாழ்க்கை வாழ்வார்கள். இவ்விதம் செய்வதை அவர்கள் திறமை என்றும் எளிமை என்றும் எண்ணுவார்கள். ஆனால் அவர்களின் வறிய எண்ணம் அவர்களை வறிஞர்களாகவே ஆக்கிவிடும் என்பது
18 தை-பங்குனி 2009
 
 

உளவியல் நிபுணர்களின் கருத்தாகும். வறுமையை விரும்பி, வாழ்ந்த மகான்களுடைய வறுமை வாழ்வை, நாம் பேசும் வறுமை வாழ்வுடன் இணைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் மகான்கள் பற்றிப்பிடித்த வறுமை வாழ்வு அவர்களது இலக்கு அல்ல மாறாக அவர்கள் தங்க்ள் உயரிய இலக்கை அடைய பயன்படுத்திய வாழ்க்கை முறையென்றே கூறலாம். ஆனால் நாம் பேசும் வறுமை என்பது மனிதர்கள் தங்களின் திறமைகளை மழுங்கச் செய்து, தங்களுக்கு தாங்களே தீர்ப்புக் கூறி, அதனை நியாயப்படுத்தி நாம் விரும்பாத வறுமை நிலையில் தவிப்பதாகும். இந்த வாழ்க்கை முறை சமூகத்திற்கு எந்த விதத்திலும் பயன்படாதவொன்றாகும்.
இன்றை மனித சமூகத்தில் அவர்களது வாழ்க்கைத்தராதரங்களை உற்றுநோக்கின் அவர்களதுநிலைகளுக்கான காரணங்களை எளிதாக அறிய முடிகிறது. வறியவர்களோ செல்வர்களோ வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் இருப்பதற்கு காரணம் அவர்களே! அவர்களில் உருப்பெறும் அவர்களது எண்ணங்களே! எண்ணங்கள் வாழ்க்கைக்கு நேர்கணியமாக அமைகின்ற பட்சத்தில் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், மாறாக எண்ணங்கள் திசைமாறும் போது அவை வாழ்வில் தோல்வியையும் ஏற்படுத்தி புனித வாழ்வைத் தரப்படுத்துகின்றன என்பது வெளிப்படையுண்மையாகும்.
இன்று பல்வேறு துன்பங்களோடும், துயரங்களோடும், தாங்க முடியாத வேதனைக ளோடும், தங்கள் வாழ்க்கையே அழிக்கப்பட்ட நிலையில் தமக்கென்று உள்ள அனைத் தையும் இழந்தநிலையில்நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டு, சாவை நோக்கிநடைப்பிணங்களாக வாழும் வாழும் எம்மக்கள் நடுவில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வறுமை எத்தகையது? உளவியல் கண்ணோட்டத்தில் ஆராயக்கூடியதா? என வினா எழுப்பப்படும் இடத்துவரும் பதில் என்ன என்பதே வறுமை என்பதற்கு உலகம் தரக் கூடிய உண்மைப்பதிலாகும் என்றால் மிகையாகாது. ஒரு மனிதனுடைய வாழ்வில் வறுமை கொடியது. மேலாக அவனில் உள்ள வறுமை எண்ணம் அதைவிடக் கொடியது. நான் உருவாக என்னில் உள்ள வறுமை எண் ணத்தை நான் கலைக்க வேண்டும். நான் நானா மலர இன்னும் ‘நான்’ சொல்லுவேன்.
உசாத்துணை நூல்கள் ஆப்துல் றஹீம், மனத்தை வெல்லுவாய் மனிதனாகுவாய், (சென்னை) யுனிவேர்சல் பப்பிளிசர்ஸ், 1980. குமாரசுவாமி, எண்ணங்கள், சென்னை) கண்ணதாசன் பதிப்பகம், 1979. William Berk, Poverty in human life, (Germany) Prince Press, 1997.
చX
தை - பங்குனி 2009 19

Page 12
நூல் நுகர்வு
நூல் :- துடுப்பு ஆசிரியர்-திருமதிசுரனுதாஅன்ரன் சுதாகரன்
வாழ்வியலில் மனிதர்களில் மனிதத்தை தேடியும், போலி நகைப்பற்ற முகங்களை தேடிச் செல்லும் நீண்ட பயணத்தில் நாம் காண்பதும், கண்டுணருவதும், அனுப விப்பதும் அழிவுகளும் அழிவுக்கான ஆக்கங்களும் என்றால் மிகையாகாது. மனிதம் நசுக்கப்பட்டு மனித உணர்வுகள் விலங்கிடப்பட்டு, துன்பங்கள் மேலோங்கி வேதனையின் விளிம்பில் பயணிக்கும் எம் மக்களின் வாழ்வில் பாரிய உள நோய்கள் பரிணாமம் பெற்றிருப்பது கண்கூடு. நடைமுறை வாழ்வில் உள நோய்கள் பற்றியும், அவற்றுக்கான சிகிச்சை முறைகள் பற்றியும், எதிர்கொள்ளக் கூடிய சிக்கல்கள் பற்றியும், அவற்றை அணுகும் முறைகள்பற்றியும் அறிந்துகொள்ளநல்லவாய்ப்பை இந்த நூலின் மூலமாக ஆசிரியர் தந்து நிற்கிறார்.
வளர்ந்து வரும் தமிழ் எழுத்துலகில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு
இவ்வாசிரியர் ஒர் எடுத்துக்காட்டு என்பது வெளிப்படை உண்மை. ஏனெனில் எழுத் தாக்கங்கள் இளையோரின் அறிவு வளர்ச்சிக்கு மிகவும் தேவையானதொன்றன்பதற்கு இவரது படைப்பே சாட்சியம் சொல்கிறது. உளவியல் துறையில் மிகச் சொற்ப நூல்களே தமிழில் கிடைக்கக்கூடியதாக உள்ள இக்காலத்தில் கன்னிப்படைப்பாகவுள்ள இவ் இளம் ஆசிரியரின் இவ்வரிய படைப்பு பாராட்டத்தக்கது.
இளையோர் முதல் பெரியோர் வரை எப்பிரிவினரும் படித்துப் பயன் பெறக்கூடிய இந்நூல் உங்கள் சிந்தனையைக் கூட்டுவதோடு வாழ்வையும் நோயற்ற் நல்வழியில் கொண்டு செல்ல உதவுமென்பதில் ஐயமில்லை. இந்நூலை நீங்கள் பெற்று பயன்பெற "நான்” உங்களை அழைத்து நிற்கிறது. மேலும் இந்நூலின் ஆசிரியரைப் போல் தமிழ் மொழியில் பல எழுத்தாளர்கள் உருப்பெற“நான்’ வாழ்த்துவதோடு, இப்பெறுமதியான, சமூகத்திற்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ள இந்நூலின் ஆசிரியரின் கன்னி முயற்சியை"நான்’பாராட்டுவதோடுஅவரது பணிமென்மேலும்தொடரஆசித்துநிற்கிறது.
துடுப்பு உங்கள் வாழ்க்கைப் படகுக்கு வழிகாட்டும் என்பது எனது நம்பிக்கை
இந்நூலைபெற்றுக்கொள்ளநீங்கள்நாடவேண்டியது GG---e-
நான உளநலசிகிச்சைப் பிரிவு, டீமசனட் குருமடம் யாழ். போதனா வைத்தியசாலை. கொழும்புத்துறை
தை-பங்குனி 2009
 
 
 
 
 
 
 
 

ஈாபர்டி இதயத்திலிருந்து.
“வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்.”
"வாழும்வரை போராடு.”
“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.”
என்னை அறியாமலே என்னுடைய உதடுகள் இப்படியான பாடல் வரிகளை அடிக்கடி உச்சரிக்கின்றன. எழுத ஒருபென்னும் பழைய காகிதங்களும் கையில் கண்டதால் என்ன வோ என் உள்ளக் குமுறல்களை, உள நெருக்கீட்டை, உடைந்து நொருங்கிப்போன என் உள்ளத்தை,வேதனையாலும் காயங்களலும் வெதும்பிய என்வாழ்க்கையை எழுதலாம் என எண்ணுகின்றேன். இது முற்றுமுழுதாக ஒரு பகுதியினை சாடுவதற்கும், இன்னொரு பகுதியினை நியாயப்படுத்துவதற்கும், என் துன்பியலை வெளிக்காட்ட நான் எடுக்கும் ஓர் அப்பட்டமான முயற்சி ஒன்றல்ல. மாறாக வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்கள் இறப்ப தில்லைஎன்பதையும் இலக்குகள்அழிக்கப்படுவதில்லை என்பதைக்காட்டவும், இத்தனை யும்என்வாழ்வில்ஓர்தெளிந்தஅத்தியாயத்தைப்படிக்ககிடைத்தசந்தர்ப்பமாகக்காட்டவும், வாழ்விலே வறுமையும், வெறுமை யும், வெறுப்பும் ஆதிக்கம் செலுத்த விட்டு விட்டு என்ன செய்வதெனத் திகைக்கும் என்னைப் போன்ற ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு ஒரு வழியைத் தேடவாய்ப்பளிக்கும் ஒரு சிறு முயற்சியாகவே நான் இதைப் பார்க்கின்றேன்.
எனக்கு ஏற்பட்ட இந்தநின்லமை யாருக்கும் ஏற்படக் கூடாது என்ப
தை-பங்குனி 2009 21

Page 13
தையே நான் இன்னமும் விரும் புகின்றேன். நான் பிறந்ததில் இருந்து இன்று வரை ஐம்பத்து ஐந்திற்கு அதிகமான இடங்களில் அகதியாக வாழ்ந்த துர்ப்பாக்கிய நிலைக்கு சொந்தக்காரன். இழப்பு இழப்பு என இழப்புக்களையே சம்பாதித்த ஒரு பாக்கியவான். சரி இவற்றையெல்லாம் விட்டு விட்டு மண்ணுக்குக் கீழமண் புழுக்களாக் மாதக் கணக்காய் வாழ்ந்து சொந்தங்கள் பலரை கண் முன்னே பறி கொடுத்த அந்த கொடிய வேதனை வேண்டாம் என உயிரை மட்டுமே காத்துக்கொள்ள உடுத்திய பாதியுடன் உணவற்ற வயிற்றுடன் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பல்லாயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். சரி வந்து விட்டேன் இனிப் பயமில்லை மீண்டும் வாழலாம் என்ற எதிர்பார்ப்பு என்னில் அதிகமாகவே இருந்தது. ஆனால் இங்கு நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் நெருப்புக்குப் பயந்து கொதிக்கின்ற எண்ணைக்குள் பாய்ந்த கதையாகி வருகின்றது. சுவருக்குள்ளே சிறைவாசம். நாய்கள் போல் நாக்கு வெளியே தொங்க உணவுக்காக.தண்ணிருக்காக. உடலார்ந்த தேவைகளுக்காக கூட வரிசையில் மணிக்கணக்காய் காத்து நிற்க வேண்டிய நிலை. நீங்கள் நம்புவீர்களே? என்னவோ! அடக்க முடியாது வரிசையில் நின்றவாறே காலைக்கடன் கழித்தவர்கள் பலர். மானம் என்பது மறைந்து விட்டது மிருகத்திற்கும் எங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் நான் இங்கு காணவில்லை. பார்க்க வரும் உறவினரை கூட அனுமதிப்பதில்லை வேலிகளுக்கு மேலாகவும் , தூரத்தில் நின்றவாறு கதைப்பதற்குத் துடிக்கும் அந்த இரத்த உறவுகளின் ஏக்கப் பெருமூச்சுகளால் வீசும் தென்றல் கூட சூடாக வருகின்றது. கட்டி அணைக்கத் துடிக்கும் அண்ணன் தங்கை உறவுகளும்,நீண்டநாளுக்குப்பின் இணையும் அம்மாபிள்ளைஉறவுகளும், பக்கத்துப் பாச உறவுகளும்.
பரிதாபமாக சுவர்களும் வேலிகளும் கூட அவர்களை பிரித்து நிற்க எட்டத்தே நின்று கொண்டு வந்த பொருட்களுக்கு பதிலாக கண்ணிரை மட்டும் கொடுத்து விட்டுச் சென்ற
&& தை - பங்குனி 2009
 
 

காட்சிகளுக்கு இங்கு குறைவே இல்லை. இப்படிப் பார்க்கையில் இங்கிருக்கும் நாம் யாவரும் கிட்ட அணுக முடியாத மிருகங்கள். நாம் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் ஒரு மிருகக்காட்சிச்சாலை அப்பப்போ அறுசுவையும் அற்ற உணவுகளுக்கு அல்லல்ப்பட்டு அவமானப்பட்டு அகப்பட்டதை உண்டுவாழும் கூட்டம் வாழும் ஒருகூடு. அப்பப்போஉதவி என்ற போர்வையில் வருபவர்க்கு இது ஒரு பிரச்சார மேடை இன்னும் பலருக்கு நாம் கண்காட்சிப்பொருட்கள். பரிதாபம் இன்னும் சிலருக்கு இது உறவுகள் தேடும் இடம்.
இப்படி ஒரு தங்கை அக்காவைப் பார்க்க வருகிறாள். பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பில் ஓர் சந்தோசம். கண்கள் சந்திக்கின்றன கரங்கள் தழுவத் துடிக்கின்றன அது தானே இங்கு முடியாத ஒன்று. கண்ணிரோடு ஒரு தரம் தன் அக்காவையும் அவளது குழந்தையையும் முத்தமிட அனுமதி கேட்கிறாள். அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமல்ல கிட்டக்கூட நிற்க விடாது கலைக்கப்படுகின்றாள். கண்ணிர் மல்க அலறி அனுமதி கேட்ட அந்த தங்கையின் அலறல் என் காய்ந்து வற்றிப்போன என் கண்ணி ஊற்றுக்களை துறந்து விட்டன. புலிக்குப் பயந்து ஒழித்து ஒழித்து அப்பா அம்மாவைத் தவிக்க விட்டு தனியே வந்த பலர் புலி என்று எண்ணி நடக்கும் பயங்கர விசாரணைகள் அவர்கள் சாப்பிடும் பாதி உணவையும் அப்படியே சமிபாடடைய செய்து விடுகிறது.
எழுதுவதற்குவெட்கம்ஆனால்எழுதாதுவிட்டால் என் இதயம்வெடித்துவிடும்போன்ற ஒருஇரத்தஅழுத்தம்மட்டுமல்லஓர் இறுக்கமான மனஅழுத்தமும் என்னைவாட்டுகின்றது. பக்கத்தில் இருப்பவனுடன் பகிர முடியாத ஓர் சூழல் ஏனெனில் அவன் யாரென எனக்குத் தெரியாது? மோப்பம் பிடிக்கத்திரியும் மோப்ப நாயாகக் கூட அவன் இருக்கலாம். காட்டிக்கொடுக்ககாதுகொடுக்கும்ஒர்கயவனாகக்கூடஅவன் இருக்கலாம். இதுவரைக்கும் நான் ஒரு பிழையும் செய்யவில்லை. ஒருவரையும் நான் ஆதரித்துப் பேசவில்லை ஆனால் என் ஒரே ஒரு உள்ளடை பல முறை சலத்தால் நனைந்த அந்த பரிதாபநிலை எனக்குப் பல முறை நடந்ததுண்டு. எனக்கு இருக்கும் அந்த ஒரே ஒரு சேட்டையும் காற்சட்டையும் கழுவி விட்டு கடும் இருட்டுக்குள்ளே பல முறை நிர்வாணமாக நின்றிருக்கின்றேன். நான்தான் ஒரு ஆண் இங்குள்ள பல நூற்றுக் கணக்ான பெண்களின் நிலமையை
எண்ணிப் பார்க்கையில் நான் பல முறை அழுததுண்டு. இதற்காக மட்டு மல்ல சத்துணவில்லாது வளரும் எம் பச்சிளம் பாலகரை நினைக்கை யிலே. நோய் வேதனைகளோடு எறிகணை கொத்துக்குண்டுகளை உடல்களிலே சுமக்கும் ஒவ்வொரு
வரையும் நினைக்கும் போது.
es - Lurig56,of 2009

Page 14
இன்னும் தனிமையில் வாடும் ஒவ்வொருவரையும் நினைத்து நான் அழுததுண்டு. எனக்கு இப்போ இரவுக்கும் பகலுக்கும் பெரிதாக வித்தி யாசம் தெரிவதில்லை. உணர்வுகள் மழுங்கத் தொடங்குகின்றன உறவுகள் உயிரற்றது போல தோன்றுகின்றது. இப்படியே எத்தனை நாளுக்கு . அடுத்தது என்ன? . எல்லாம் இன் னொரு புறம் என்னை முள்ளாய்க் குத்துகின்றது இத்தனைக்குள் இருந்தும்நான்எழவே விரும்புகின்றேன். அதுமட்டுமல்ல இனிஒருவரும் இந்தநிலைக்கு ஆளாகக் கூடாது என யார் யாரை நான் கேட்க முடியுமோ எல்லோரையும் கண்ணிரோடு அவர்கள்காலில் விழுந்துகேட்கவும்நான்தயங்கமாட்டேன்.இன்னும்வேலிக்குபின்னால் இருந்து கொண்டு உங்கள் முகம் தேடும் அந்த பாசப்பிணைப்புகளின் பரிதாபக் காட்சிகளுடனும் மனதுருக்கும் நிகழ்வுகளுடனும் உணர்வற்றவர்களின் செயற்பாடுகளுடனும் உங்களை சந்தித்து உங்களையும் என் சோக துன்பியலால் துன்புறுத்தியமைக்காக. மன்னிப்புக் கேட்கின்றேன்.
உறவுகள் பிரிக்கப்பட்டு உயிருக்காக ஓடி வந்தவர்கள் வாழும் இந்த இடத்தில் தாம் இங்கு இருக்கிறோம் என்பதை தம் உறவுகளுக்கு அறிவிக்க எடுக்கும் அந்த முயற்சிகள் அனேகமாக பரிதாபத்தையே தோற்றுவிக்கிறது. ஆயிரம் ஆயிரம் பிணங்களை கண்டு கடந்து அதன் மீது நடந்து வந்த பலர் நடை பிணங்களாக உணர்வுகள் செயலற்று உணர்ச்சிகள் வறண்டு உருவங்கள் சிதைக்கப்பட்டவர்களாக இன்னும் காணப்படுகின்றனர். நீண்ட பெரியதாடி மீசையுடன் இவர்கள் மரங்கள்தான். இவர்களது எதிர்காலம் என்ன என எண்ணும்போது எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் ஓர் பிரம்மையை நான் அனுபவிக்கின்றேன். ஆனாலும் இங்கே அப்பப்போ வரும் உயர் அதிகாரிகளிடம் தம் கல்வியைத் தொடர உதவுங்கள் என்ற அந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் இக்கொடிய வேதனைக்குப்பின்னாலும் வாழ்வு எதிர்காலம் உண்டு என்னும் ஓர் நம்பிக்கையை எனக்குத்தருகின்றது. எல்லாம் இழந்து விட்டேன் ஆனால் ஒன்றைமட்டும்நான் இழக்கவில்லை.அதையாராலும் அபகரிக்கவும் முடியாது.அது வேறு ஒன்றும் அல்ல என எதிர்காலம். அதற்காகவாவது நான் வாழவேண்டும் இனியொரு தலைமுறைக்காக நான் வாழவேண்டும். இந்த உணர்வுகள் தான் எனை இன்னமும் மனிதனாக வாழ உதவுகிறது.
24 தை - பங்குனி 2009
 
 

R. 6guurT 2ம் வருடம் யாழ். பல்கலைக்கழகம்
எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோல் ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால் 100 பேர் ஏழைகள். இந்தஏழைகளின்உழைப்பை சுரண்டிபணக்காரர்கள்கொள்ளைலாபம்சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில் வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான் துன்பத்தில் உழன்றனர். இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின் அவருடைய தலைமையில் 1917ம் ஆண்டு நவம்பர் 17ம் திகதி நடைபெற்ற புரட்சியினால் தொழிலாளர், விவசாயிகள் ஆட்சிமலர்ந்தது.உலகில் முதன் முறையாக தொழிலாளர்கள்ஆட்சியில் அமர்ந்தனர். அந்த ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளைநிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது. சமத்துவ சமூகம் படைக்கப்பட்டது. இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார்.
அருமை , பெருமை இரண்டையும் அழிக்கும் வறுமை ஒரு சிறுமையான விடய மாகும். பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவரும் , காசில்லாதவன் கடவுளானாலும் கதவை சாத்தடி என்று சினிமாவும், காசே தான் கடவுள் என்ற அனுபவ
தை-பங்குனி 2009

Page 15
வார்த்தையும் வறுமை இழையோடும் விருட்சங்களாக விளங்குபவை. பசிவந்திடப்பத்தும் பறந்து போகும் என்று உணவின் இன்றியமையாமையை விளக்குவதும் வறுமையின் ஒருசுட்டியாகும்.வறுமைக்குவழிகோலும் வழிகளை மக்கள்அறிந்து அதனைத்தடுக்கும் எல்லா வகையான மனிதாபிமான மேம்பாடுகளுடன் சேர்ந்து வாழப்பழக வேண்டிய கட்டாயம் தோன்றிக்கொண்டிருப்பதை நாம் எமது நாட்டின் பல பாகங்களிலும் உணரக்கூடியதாக இருக்கின்றது.
உலக வங்கியின் கணிப்பீட்டில் 50% ஆன உலக சனத்தொகையினர் வறுமையில் வாடுகிறார்கள். இவ் வறுமை ஒரு நாளுக்கு 20.000 உயிர்களை பலி கொள்கின்றது. நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் இலங்கை மிகவும் வறியநாடாக மாறி வருகின்றது என ஆசிய் பசுபிக் கொருளாதார மற்றும் சமூக சேவைகள் அமைப்பு அதன் 2008ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ள்து. கிட்டத்தட்ட 40%மான இலங்கை மக்கள் கூப்பன் புள்ளி பெரும் வறுமைக் கோட்டுக்கு கீழாக (மாத வருமானம் ரூபா 25OOF) வசிக்கிறார்கள்அயல்நாடான இந்தியாவில் 25கோடிமக்கள் உணவின்றி , போதிய மருந்தின்றி பட்டினியால் தவிக்கின்றார்கள். இலத்தின் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகளில் தற்போது 19 கோடி பேர் வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 07கோடி பேர் வறுமையின் கோரப்பிடியல் வாழ்கின்றனர் என அமெரிக்கசுகாதார அமைப்பின் இயக்குனர்மிர்தாரோசஸ்பெரியகோ தெரிவித்தார்.
பொருளாதார அல்லது வறுமைக்கான மந்த நிலைமை தோன்றுவதை சர்வதேச ரீதியாகவும், தேசிய மட்டரீதியாகவும், வடக்கு கிழக்கு மாகாண மட்டரீதியாகவும் அணுகி அவற்றுக்குரிய காரணங்களையும் அவைகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வகையான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்பதை இனங்கண்டு கொள்வதும் அவசியமாகும். அத்துடன் வறுமையானது சூழலின் நிலைப்பாட்டில் முற்றுமுழுதாக தங்கியுள்ளதை உணரக்கூடியதாக இருப்பதனால் சூழல் பற்றிய அறிவையும் ஆற்றலையும் வளர்க்கும் நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட வேண்டும். தேசிய மட்டத்தில் சிந்திக்குமிடத்து வறுமை ஒழிப்புக்காக உருவாக்கப்பட்ட “சமுர்த்தி அபிவிருத்தி” ஆட்டங்கண்ட நிலையே காணப்படுகின்றது. போரும் , சுனாமி அழிவும் பல வறிய குடும்பங்களைத் தோற்றுவித்ததோடுமேலும்வறுமைநிலைக்காகவும்காரணிகளாகின்றது. வறுமைக்கான V காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன.
O1 மக்களிடையே சமநிலையற்ற பொருளாதார அமைப்பு
O2 அரசியல் ,வாதிகளின் போக்கு , தள அமைவு அபிவிருத்தியை மையமாகக் கொண்டு அமையவில்லை.
03. எல்லைப்படுத்தப்பட்ட நகர்ாக்கம்
04. கிராமபுற வளங்களை இனங்காண முடியாதுள்ளமை
தை- ஃகுனி 2OO9
 

&
மக்களை பின்தள்ளல்
భళ్ల &:8&
05. வேலைவாய்ப்புக்களில் கிராம
06. உலகளாவிய யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார அழிவுகள், மீள முடியாத இடப்பெயர்வு அல்லல்கள் போன்றவை உள்நாட்டு யுத்தம் , அரச உதவிகள்
சரியாக மக்களை அடையாமை.
07. எல்லா நாடுகளும் விஞ்ஞான ஆய்வுகளில் போருக்கும், போர்கருவிகளுக்கும் பெரும் நிதியை ஒதுக்கியமை.
O8. cupg655 வரமுடியாத இடப்பெயர்வுகளும் , வளப்பற்றாக்குறையும் மக்களை கீழ்நோக்கித் தள்ளுகின்றமை.
09. வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு வலயம், மக்கள் இல்லா வலயம் என மூன்று முக்கிய பிரிவும் மக்களை தனிமைப்படுத்தி இடம் பெயர வைத்து வாழ்வாதார வழிகளை சுருக்கி அவர்களை முன்னேற விடாது தடுக்கின்றன.
10. மக்கள் சரியான தொழிலை தொடங்க முடியாமையும் , மானியங்கள் , வங்கிக் கடன்கள் பெறுவதில் இயலாமை இதனால் வறுமைத் தன்னை வளர வழிவகுக் கப்பட்டுள்ளமை.
வறுமைக்கு எதிரதன போராட்டம் இன்று உலகம் எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூர மான மனிதஉரிமைகள் சவாலாகும். உரிமைகள் மறுக்கப்படுகின்ற மக்களே கூடுதலான அளவுக்கு வறுமைப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பொதுவில் அவர்கள் தொழிற் சந்தையில் பங்கேற்க முடியாதவர்களாயும் அடிப்படை தேவைகளை வளங்களை பெற இயலாதவர்களாகவும் இருக்கிறார்கள். சமுதாயத்தில்உள்ளவறியவர்கள்கல்வி, சுகாதாரம் மற்றும் உறைவிட உரிமைகளை அனுபவிக்க முடிவதில்லை. 2015 ஆம் ஆண்டளவி
தை-பங்குனி 2009

Page 16
உலக வறுமையை அரைவாசியாகக் குறைக்கும் ஐ.நா. மிலேனியம் அபிவிருத்திக் குறிக் கோளைநிறைவேற்றுவதற்கு வருடாந்தம் 4OOOகோடிக்கும்7OOOகோடிக்கும் இடைப்பட்ட பொலர்கள் தேவைப்படுவதாகக் கணிப்பிடப்பட்டது. அந்த இலக்கை அடைவதற்கு ஏகுற்ற முறையில் பங்களிப்பைச் செய்வதில் தங்களுக்கு இருக்கின்ற பொறுப்பை உலகின் தனவந்தநாடுகள்உணர்ந்து செயற்படுவதாக இல்லை.மனிதவாழ்வுக்குஉலகசமுதாயம் கொடுக்க வேண்டிய பெறுமதியை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கும் மனித உரிமைகள் சாசனத்தைப் பற்றி உச்சத் தொனியில் பேசுகின்ற அரசியல் தலைவர்கள் மனித உரிமைகளில் அடிப்படையானதும் முதன்மையானதுமான உயிர்வாழ்வு மனித கெளரவத்தை உலகளாவிய ரீதியில் நிர்மூலஞ் செய்கின்ற வறுமையைப் போக்குவதற்கான செயற்பாடுகளில் கவனத்தைச் செலுத்துவதாக இல்லை.
உலகில் ஒவ்வொரு இரவும் 80 கோடி மக்கள் வெறும் வயிற்றுடன் நித்திரைக்குச் செல்கிறார்கள் என்று ஐ.நாவின் அபிவிருத்திப் பொருளாதார ஆராய்ச்சிக்கான உலக நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை விட சர்வதேச தொழில் ஸ்தாபனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகத் தொழிலாளர் சக்தியில் சுமார் 140 கோடி பேர் நாள் ஒன்றுக்கு 2 பொலருக்கும் குறைவானவருமானத்தைப்பெற்றுகொடிய வறுமையில்உழல்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மலைக்க வைக்கும் வறுமையும் அருவருக்கத் தக்க சமத்துவமின்மையும் எமது காலத்தின்மிகவும் பயங்கரமானதீங்குகள், அடிமைத்தனம்மற்றும்இனஒதுக்கல்போன்ற சமூகக் கேடுகளின் வரிசையில் அவற்றையும் வைக்க வேண்டும். வறுமைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பது என்பதை வறியவர்கள் மீது காட்டும் கருணையாகக் கருதக்கூடாது எமது கடமையாக கருத வேண்டும். இல்லாமையில் இருந்து விடுதலை பெறுவதென்பது ஒவ்வரொருமனிதப்பிறவிக்கும் எவருமே மறுக்கமுடியாதஉரிமையாகும் என்பதை உணர்த்துவோம். எனவே வறுமையைப் போக்க மனித் அபிமான உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசிய சரியான தீர்வுக்கு அத்திவாரமாக அமையும் என்பதும் எமது தெளிவாகும். வருடங்களும் ஓட வறுமையும் ஓடி விடும்.
“வறுமையோ வறுமை
வறுமைக்கு ஏது உரிமை
உரிமைக்கே இங்கு வறுமை
அதனால்தான் இங்கு கொடுமை”
தை - பங்குனி 2009
 

வறுமை என்னங்களால் தாழ்வு pનાઈજo
I. Gorf B.Sc Spaiorumb &6ior(s வளர்பிறை
எம்மிடம் வறுமை, வறுமையால் படிக்க முடியாதுள்ளது பொருளாதரத்தில் முன்னேற முடியாதுள்ளது. வறுமை எமக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது என்று பலவிதமான மன உளைச்சளுக்குள் எம்மை உள்ளாக்கி கொள்வதோடு அதிலிருந்து விடுபட முடியாமலும் இருக்கின்றோம்.
நாம் வறுமையில் இருந்து மீளமுடியாமல் இருக்கின்றோமேஎன்று வருந்தும் எம்மிடம் “ஏன்?’ என்று கேட்டால் எமது பெற்றோர் பாட்டன் பாட்டியர் எம்மை வறுமையில் வளர்த்தார்கள் அதனால் நாமும் வறுமையில் வாடுகின்றோம் என்கின்றோம்.
ஆனால் எம்மிடம் எமக்குள் ரணம் போல்புரையோடிக்கொண்டிருக்கும் வறுமையான எண்ணங்கள் எம்மை வறுமைக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதை நாம் எமக்குள்ளே இனங்கண்டுள்ளோமா?"வறுமை எண்ணங்கள்’அதுஎன்ன? என்றுயோசிக்கிறீர்கள? அதுதான்
என்னால் முடியாது நான் ஒன்றுக்கும் உதவமாட்டேன் என்னிடம் திறமைகள் இல்லை வெற்றிகள் அவனவனது அதிஷ்ரத்தைப் பொறுத்தது நான் பிழை விடுவேன் நான் என்ன செய்தாலும் அது பிழையாகும் நான் வடிவில்லை என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள
நான் ஒன்றுக்கும் பயனில்லை என்னை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள் தனிமைதான் எனக்கு நல்லது என்னால் என்னதான் சாதிக்கமுடியும்? இவ்வாறு எமக்குள்ளிருக்கும் வறுமை எண்ணங்கள் எம்மை ஒருவித
தாழ்வுமனநிலைக்குள் கெண்டு சென்றுவிடும். இவ்விதமான மனநிலை இருக்கும் போது
தை-பங்குனி 2009 29

Page 17
நாமும் எல்லாவற்றிலும் பின்னுக்கே நின்று விடுவோம் இதனால் எமது பலவிதமான வெற்றிப் பாதைகள் தோல்விகளையே சந்திக்கின்றன.
வறுமை எண்ணங்கள் எமக்குள் இருந்து எம்மை ஆட்டிப் படைக்கும் போது மன உளைச்சலுக்குள் சில வேளைகளில் நிரந்தர மனிதர்களாகிவிடுவோம்.
இவ்வாறு எம் எண்ணங்கள் வறுமையாக இருக்கையிலே எவ்வாறு நம் வாழ்வில் நாம் முன்னேறுவோம்?
எப்படி வாழ்வில் முன்னுக்கு வருவோம்?
எப்படி உறவுகள் எம்மை விரும்புவார்கள்?
எப்படி மற்றவர்கள் எம்மை மதிப்பார்கள்?
எப்படி எம்மை நாமே மதிப்போம்?
எப்படி எமக்குள் ஒரு நம்பிக்கை எம்மிடமே உருவாகும்?
சிந்திக்க வேண்டும் எம் வறுமை எண்ணங்களை இனங்காண வேண்டும்.
வறுமை எண்ணங்களோடு நாம் வாழ்வை நடத்துகையில் தன்னம்பிக்கை அற்றவர்களாகத்தான்நாம் வாழ்வோம் வாழ்வில் எதிலும் கவலையும், சலிப்பு, வெறுப்பும் உறவுகளோடும் என்னோடும் அந்த இறைவன் இயற்கையோடும் நல் உறவில்லாது வாழ்ந்து கொண்டிருப்போம்.
இவைகளிலிருந்து மீண்டும்வாழ எமக்குள்ளிருந்து எம்மை ஆட்டிப்படைப்பவராக தெள்ளென புலப்படும் எம் வறுமை எண்ணங்களை மாற்றியமைத்து தன்னம்பிக்கை யுடையவர்களாக வாழ எம் எண்ணங்களை நிறைவுடையதாக நேர்மறையாக மாற்றி
யமைப்போம்.
:
3O 605 - Lurig560f 2009
 
 

அருட் சகோ.ஜெ.எல்மோ. புனித சவேரியார்
குருத்துவ கல்லூரி
O уGDLOBěе அர்த்தப்o
முன்னுரை
எனக்கு எதிலயும் மனம் போகேல்ல
வாழ்க்கையே வெறுக்குது
ஏன் நான் வாழவேண்டும்? ஏன் இந்த வாழ்க்கை
வாழ்க்கையில் என்னத்தக் கண்டது!
Life is waste
چشيلا
ஏன் தான் கடவுள் படைச்சாரோ?
இன்று பொதுவாக இவ்வார்த்தைகளை எம்மக்கள் மத்தியிலே கேட்க முடிகின்றது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே இவ்வகையான உணர்வுகள் தாக்கம் செலுத்துவதை நாம் உய்த்துணரக் கூடியதாக இருக்கின்றது. இத்தகைய வார்த்தைகள் வெறுமையை வரட்சியை எட்டி நிற்க்கின்றன. இவ் நிலையினைப்பற்றித்தான் இச் சிறிய கட்டுரை ஆராய விளைகின்றது.
ஏன் இந்த நிலை?
இளமைப் பிராயம் குழப்பங்களும், பிரச் சினைகளும் மற்றும் முறுகல்களும் நிறைந்த பிராயம் என்று பல உளவியலாளர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். தமக்குள்ளே ஏற்படும் புதிய உணர்வுகளையும் ஆளுமைகளையும்
சரியான முறையிலே ஒழுங்கமைக்காத தன்மையினால் ஏற்படுகின்ற விளைவுகள், அடிக்கடி பெற்றோருடன் ஏற்படக்கூடடிய முறு கல்நிலை இன்னும் நண்பர்கள், ஒத்த வய தினர் (peers) மத்தியிலே ஏற்படக்கூடிய அடை யாளச் சிக்கல் போன்ற நிலைகள் இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணமாக அமையலாம். குறிப்பாக வாழ்க்கை பற்றிய தவறான கண் ணோட்டத்தை முக்கிய காரணமாக இங்கே குறிப்பிட முடியும். எனவே வாழ்வு பற்றிய
தை-பங்குனி 2009 3.

Page 18
சரியான கண்ணோட்டம் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. யேசு கூறியது போல ‘உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலவனையும் அன்பு செய்ய வேண்டும்”. அதாவது முதலிலே நாம் எம்மை அன்பு செய்ய வேண்டும் எம் வாழ்வை நேசிக்க வேண்டும் வாழ்வின் வரம்புகளையும் வேர்களையும் தெளிவாகக் கண்டுணர வேண்டும். அப்போது தான் எம்மையும் மகிழ்வுடன் வைத்திருந்து எம் அயலவரையும் மகிழ்வான, செழிப்பான வாழ்வுக்கு அழைத்துவர இயலும். எனவே வாழ்வு பற்றிய சரியான கண்ணோட்டத்தை கொண்டிருப்போம்.
வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்வு என்பது இறைவனின் கொடையாகும். இவ் அழகிய கொடையினை சிலர் நுட்பமாக வரையப்பட்ட ஓர் ஓவியத்துக்கு அல்லது ஏற்ற இறக்கங்களைக் கொண்ட ஓர் இனிமையான பாடலுக்கு உவமானமாகக் கொள்வர் ஒவ்வொரு மனிதனும் இவ் அழகிய வாழ்வின் நாட்களிலே மகிழ்ச்சியோடும், மன ஆறுதலோடும், மன நிறைவோடும் தன் இலக்கை நோக்கிப்பயணம்செய்ய அழைக்கப்படுகின்றான். ஆனாலும் இவ்வாழ்வினை தவறான புரிதல்களோடு அடையாளப்படுகின்ற மனிதர்கள் அதிலே திக்கு திசைமாறி, அலைகடலிலே சிக்கிய துரும்புபோல அங்கும் இங்கும் அடிபட்டு வெறுமையின் விரக்தியிலே தம் வாழ்வினை முடித்துக் கொள்கின்றார்கள். எனவே வாழ்வு பற்றிய ஆரோக்கியமான புரிதல் எமக்குத் தேவை. அப்போதுதான் எப்படியும் வாழலாம் என்ற நிலையினை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் எனும் நன்னிலை எம்மில் உயிர்ப்பெறுகின்றது. பொதுவாக வாழ்விலே இருமுக்கிய நிலைகளை மனிதன் எதிர்கொள்கிறான். ஒன்று சந்தோசமான, மகிழ்ச்சியான தருணங்கள் மற்றையது துன்பமான துயரமான வேளைகள். முதலில் இவை இரண்டினையும் மனித வாழ்விலிருந்துநாம் பிரிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறப்பு இருந்தால் இறப்பு உண்டு என் பதைப்போன்று மகிழ்ச்சியும் துன்பமும் மாறிமாறி வாழ் விலே வரக்கூடியவை. மகிழ்ச்
சியான தருணங்களை விட
துன்பதுயரமானநிலைகளிலே மனிதன் மிக கேடானமுறை ፳፬ யிலே பாதிப்படைகின்றான். எனவேதான் உளவியல் ரீதி யாக ஒரு மனிதனுடைய தனிப் பட்ட வாழ்வின் வரலாற்றை பகுப்பாய்வு செய்கின்றபோது பல விதமான வேதனைதரும்
32 தை-பங்குனி 2009
 
 
 
 

சூழ்நிலைகள் அவனின் ஆழ்மனத்திலே மாறாத வலியுள்ள வடுவினைத் தோற்றுவித்தமையினை உளவியல் வல்லுநர்கள் அடையாளம் காண்கின்றனர். எனவே தான் இச்சிறியு கட்டுரையிலே இத்துன்பு, துயர நிலைகளை மனிதவாழ்வின் 65STGB6ODLDu unresor வ்றுமைக்கு அடையாளப்படுத்திஅதிலும் சிறப்பாக இளைய பிராயத்திலே வாழ்கின்றவர்கள் இது மட்டிலே கொண்டிருக்க வேண்டிய விழிப்புணர்வு பற்றி சில கருத்துக்களை முன்வைக்க விளைகின்றேன்.
நிவாரணம் தான் என்ன?
துன்பத்தை மனத்திடனுடன் எதிர்கொள்ளுங்கள் தோல்வியைக் கண்டு துவளாதீர்கள் நல்ல நண்பர்களைக் கொண்டிருங்கள் எதனையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்க முயலுங்கள் (Positive/Optimistic view).
சிந்தித்து செயல்படுங்கள்
பிரச்சினைகளை தேவையற்றவிதமாக பெரிதாக்காதிருங்கள் Don't trouble the trouble unless the trouble troubles you. வாழ்வு எப்போதும் எமக்கு சாதகமானது அல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டு கொன்றேன் சீர்கேகாட் சொல்லுவது போல நாம் சவால்கலுடன் போராடுவதனூடாகவே வெற்றியை காணமுடியும். என்ற போராட்ட மனநிலையிலே வாழ்வினை எதிர்கொள்ளுதல்.
முடிவுரை
உளவியலாளர் விக்டர் பிராங்வின் முன்வைத்த கோட்பாடு மனிதன் அர்த்தத்தை (5Guoisir (man search for meaning) Gurgajig siggib GhaftGágib (gLögsteir எமது வாழ்வின் உந்து சக்தியாக அமையவேண்டும். இவ் உளவியலாளரின் தனிப்பட்ட வாழ்வினைபார்க்கும் போது 2ம் உலகமகாயுத்தத்திலே அவர் கைதுசெய்யப்பட்டு பாதாள சிறையிலே அடைப்பட்ட போது அவர் அனைத்தையும் இழந்தார். அவருடைய குடும்பம்,காதலி, நண்பர்கள் அனைவரும் மடிந்து போனார்கள். அவர் விடுதலையாகும் போது பிரபஞ்சத்தை ஓர் தனியாளாக வரட்சி நிறைந்த ஏழையாக எதிர் கொண்டார். ஆனாலும் அவர் மடிந்து விடவில்லை. இன்று உலகிலே இவரின் கோட்பாடுகள் (Logotherapy) பலர்வரவேற்பை பெற்றுள்ளதுடன் இவரின் உளவியலைஓர்ஆன்மீக உளவிய்ல் என ஏற்றுக் கொண்டு பலர் கடைப்பிடிக்க முயல்கின்றனர்.நாமும் வரட்சியை கண்டு பயப்படாமல் துணிவுடனும் திடத்துடனும் அதனை எதிர் கொண்டு வாழ்வுக்கு அர்த்தம் காண்போம்.
தை - பங்குனி 2009 33

Page 19
வறு2ைன்/22ன்சின்தன்/வர்தனன் 7ேச்ைததைதனர்சினை,
(உண்மைச் சம்பவங்கள்)
யே. ஜெறால்ட்
போரும், போரின் வடுக்களும், எம் மக்களை வாட்டுகின்றது. எம் எல்லோரையும் இப் போர்தாக்கிஅழித்துக்கொண்டிருக்கின்றது.விலைவாசிஉயர்வினால் இனிவாழமுடியாது என்கின்ற ஏக்கமும், இறந்துவிட்டால் கரைச்சல் இல்லை என்கின்ற இந்த இருளின் ஆட்சிக் காலகட்டத்தில், எமது குருமடத்தில் கடந்த ஆறு மாதகாலங்கள்ாக அன்புப் பணி (Charity Work) புரியும்பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்தப்பணிமூலம் நான்பற்பல அனுபவங் களைப் பெற்றுக் கொண்டேன். அந்த அனுபவங்கள் யாவும், உள்ளத்தை உருக்கும் பற்பல சம்பாசனைகளாகவே இருந்தன. அந்த அனுபவங்களில் சிலவற்றை அனுபவப் பகிர்வாகத்தருகின்றேன்.
(ஐம்பது(50) வயது நிரம்பிய ஓர் அம்மாவின் கதறல் ஒலிகள்.)
என்ன செய்வம் தம்பி, கடவுளும் எங்களை இப்படி ஏன் சோதிக்கிறாரோ தெரியேல, எடுத்துப்போட்டாரென்டா ஆக்கினைதீர்ந்துது.
(இருபத்துமூன்று (23) வயது நிரம்பிய இளம் தாய்தன்மூன்று(3)வயதுநிரம்பிய குழந்தையைச் சுமந்தபடி..)
நான் அவரை (தன்கணவரை) நம்பித்தான் அவருடன் போனனான் இப்ப அவர் என்னையும், என்ர குழந்தையையும் தவிக்கவிட்டிட்டார். என்ர பச்சைப்பிஞ்சு பசிக்குது எண்டு சொல்லுது. ஏதா வது சாப்பிடக்கொடுங்கோ.
(இருபத்தைந்து(25)வயதுநிரம்பியதாய் ஒருவர்) கடைசியாகத்தந்தநலிவுற்றோர்நிவாரணமும் முடிஞ்சுது, இராத்திரியும் வெறு வயிற்றோடதான் படுத்தது, என்ர பிள்ளைக்குப் பால் கொடுக்கிற னான் பாதர்.
(ஐம்பத்துமூன்று(53) நிரம்பிய ஓர் அம்மாவின் அங்கலாய்ப்பு.)
34 தை - பங்குனி 2009
 
 
 
 
 

என்னுடைய காலை தனது இரண்டு கரங் களாலும்பற்றிப்பிடித்துக்கொண்டு,நீங்கள்என்ர பிள்ளை மாதிரிஎன்று சொல்லி தனது சோகக் கதையைத் தொடர்கின்றாள்
என்ர கடவுளே, எல்லாம் சரியான விலை, அவர் கொண்டு வாற காசுக்கு ஒரு கிலோ அரிசி யும், ஒரு கொஞ்சப் பருப்புந்தான் வாங்கலாம், அவர்சரியான குடிதம்பி, என்ரபிள்ளைகள் பட்டி னியாக் கிடக்குதுகள், ஏதாவது சாப்பாட்டுச் சாமான்கள் தந்தால் போதும் தம்பி.
(ஐம்பத்து நான்கு(54) வயது நிரம்பிய, தனது வலது காலை இழந்த ஐந்து பெண்பிள்ளை'
களின் தந்தை)
எனக்குபதின்நான்கு(14) வயதில் கால் போய்விட்டது. சும்மா இருக்காமல்யன்னலில் இருந்து குதித்து என்ர காலும் போச்சு. இந்த அணியாயப்பட்ட கடவுள் ஏன் என்ர காலை எடுத்தவர்? கால் இருந்திருந்தால் இப்படி உங்களிட்ட வருவேனோ என்ர காலை எடுத்த கடவுள் உயிரை எடுத்திருக்கலாமே.
(நாற்பத்தைந்து(45) வயது நிரம்பிய ஓர் குடும்பஸ்தர்)
ஏன் ஐயா முந்தநாளும் வந்தனிங்கள் தானே! இது என்னுடைய கேள்வி. இல்லைத் தம்பி, நான் காசுக்கு வரேல, உங்களோட கதைக்கும் போது எனக்கு மன ஆறுதலாக இருக்குது.நான்மனஆறுதல் இல்லாமல் அலைகிறன் என்ரமணிசிஎன்ன ஒரேதிட்டுவாள். நான் என்ன செய்வன்நான் ஒரு இதயநோயாளி இங்கு வந்து பிச்சை கேட்டணான் எண்டு அறிஞ்சாலே என்னைத் தொலைச்சுப் போடுவாள். வறுமை எண்டாலும் டிசன்ரா வாழ வேண்டுமாம், காசு கொண்டு வராமல் வீட்டு முற்றம் மிதிக்க வேண்டாமாம், நான் என்ன செய்வன், நீங்கள் தம்பி அவவுடன் வந்து கதையுங்கோவன்
(முற்பது(30) வயது நிரம்பிய ஓர் இளம்தாயின் ஆவேச ஒலிகள்)
அரிசி ஒரு கிலோ 13Oரூபா, வீட்டில கரண்டும் இல்லை இவரும் மூட்டை சுமக்கிற தொழில்தான் செய்கிறவர், ஆனால்.(விம்மல்.) அவளாத்தையும் கசிப்புக் குடிச்சுமுடிச்சுப் போடுவார். என்ரபிள்ளைகளும் நானும் தற்கொலை செய்கிறதைத தவிர வேறவழியில்ல .
(இருபத்தெட்டு(28) வயது நிரம்பிய ஒர்தாயின் ஆதங்கம்)
நானும் படிக்கேல, என்ர அவரும்படிக்கேல, எங்கடபிள்ளைகளை எண்டாலும் படிக்க வைப்பமெண்டா முடியேலயே பாதர், கொப்பி பேனை வாங்க ஏதாவது உதவி செய்யுங்கோ
தை - பங்குனி 2009 35 sga

Page 20
(ஐம்பது வயதுநிரம்பிய(50)தன் கணவனை இக்கொடிய போரிலே பறிகொடுத்த ஓர்தாயின் கண்ணீர்க்கதைகள்) "ሶ
அவரும் வன்னியில இறந்திட்டார். வீடும் கொட்டில்வீடு, ஒரே ஒழுக்கு, எனக்கு ஐந்துஇ பெண்பிள்ளைகள், மூன்றாவது மகள் நேற்று பக்குவப்பட்டு விட்டா. ஒரு ஐந்நூறு ரூபாவாவதுதாங்கோநான்தோசைசுட்டுவிற்றாவது என்ரபிள்ளைகளைக்காப்பாற்றுவன்
(ஐம்பது(50) வயது நிரம்பிய ஓர் மனிதர்)
நான், எத்தனையோ இடங்களுக்கு உதவி கேட்டுச் சென்றிருக்கின்றேன், காசு தந்திருக்கின்றார்கள், சாப்பிடவுந் தந்திருக்கின்றார்கள், பழைய உடுப்புக்களும் தந்திருக் கின்றார்கள், இன்னும் சிலர் வெளியிலபோஎண்டுசொல்லிக்கேற்றைச்சாத்தியிருக்கினம். என்னை நீ யார்? எங்க இருந்து வாறாய்? ஏன் பிச்சை கேட்கிறாய்? என்று ஒருதர் கூடக் கேட்டதில்லை, ஆனால்தம்பி. (தடுமாறியவார்த்தைகள்) நீங்கள்என்னை விசாரித்ததே போதும், எங்க இருந்துவாறிங்கள்? உங்கட பேர் என்ன? உங்களுக்கு என்ன வேணும்? உங்கடகுடும்பம் எங்க இருக்குது? எண்டு கேட்டதேபோதும், ஓம்தம்பிஎன்ரகுடும்பந்தான் நான் இந்தக்கதிக்கு வந்ததுக்குக் காரணம். (கண்ணிலிருந்துநீர் மழையாகப் பொழிய) அவரால் தனது சோகக் கதையைத் தொடர முடியவில்லை. ஏதாவது சாப்பிடப் போறிங்களா? இது எனது கேள்வி. இல்லைத்தம்பி இது போதும் எனக்கு வயிறுநிறைஞ்சு விட்டுது. மயங்கி விழுந்து விடுவாரோ என்ற மன ஏக்கத்துடன் நான் (200) இருநூறு ரூபாவை அவரிடம் நீட்டினேன். அவர் அதனை வாங்கவில்லை மீண்டும் அழுதார். எழுந்துசென்றுவிட்டார்.
இவர்கள் இவ்வாறாக இருப்பதற்குக்காரணமானசமூகத்திடம் ஒன்றைக்கேட்கின்றேன். - சமூகமே இவற்றுக்கு உன் பதில் என்ன? - இவர்கள் மட்டில் உன் கரிசனை என்ன? உன் பங்களிப்பு என்ன? -இவர்களுக்காக செபித்துவிட்டால் மட்டும் போதுமா?
36 தை - பங்குனி 2009
 
 
 

வறுமை என்பது பலவகைப்படும். ஆனால் எங்களுக்குத் தெரிந்த, அனேகமானவர்களால் பேசப்பட்டு வருவது பொருளாதார வறுமையே, அனேகமாக இவ்வறுமை பரமனழை என்று அழைக்கப்படுவர்களிடமே காணப்படும் அவர்களைப் பார்த்து அனேகமானோர், அதாவது கொஞ்சம் பணவசதி படைத்தவர்கள், இவர்களை வறியவர்கள் அல்லர் எழுத்தாளர் பேணாட் சொல்வார் ‘வெறுமையே வறுமையின் முதற்படி அதாவதுஎங்களிடம் எந்தவகையானதிறமையும் காணப்படாவிட்டால், அல்லது எங்களிடம் உள்ள அறிவு, திறமை, செயற்பாடு இவைகளை சரியான முறையில் பயன்படுத்த தெரியாவிட்டால் அதுவே வெறுமையாகும்.’
ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே திறமைகளை கொண்டு செயலில் எவன் எவன் எல்லாம் வெறுமையாக காணப்படுகின்றானோ அவர்கள் எல்லோரும் வறுமையில் துவள்பவர்கள். “எவில் என்ற உளவியலாளர் செயலின் செல்வாக்கைப்பற்றிசொல்வார்” அதை நுணுக்கமாக பார்த்தால் அதில் எவ்வளவு சக்தி உள்ளடங்கி உள்ளது. அந்த “செயல்” என்றசொல்லிற்குல் எவ்வளவுகருத்துக்கள் உள்ளடங்கியுள்ளது.ஒருசெயலை செய்வதற்கு ஒருவனிடம் திறமை இல்லா விட்டால் அவன் வெறுமையாக காணப் படுகின்றான். அந்த வெறுமை அவனு டைய வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் வறண்டு காணப்படுகின்றது. உதாரண மாக ஒரு ஆசிரியரை எடுத்துக் கொண் பால்அவர்தன்னிடம்உள்ளஅறிவுதிறன் அனைத்தையும் கொண்டு அவற்றைப் பயன்படுத்தி தனது மாணாக்கனுக்கு அதை புகட்டும் வழி தெரியவில்லை என்றால், தன்னிடம் உள்ள அறிவை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முறை தெரியவில்லை என்று சொன்னால் அவர் தனது செயற்பாட்டில் வெறுமையாக
605 - urig56,of 2009

Page 21
உள்ளர் என்பது புலனாகின்றது.
செல்வச் செழிப்போடு வாழ்ந்தவன் அவன் அனேகமாக பரம்பரை பரம்பரையாக பணக்காரணாகத்தான் இருந்து வருகின்றான். ஏனென்று சொன்னால் அவன் பொருளாதார ரீதியாக வறுமையில் உள்ளவனைக் கொண்டே தனது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கி கொள்கிறான். அவனுக்கு அது இரட்டிப்பாகக் கிடைக்கின்றது என்று மட்டும் தெரியும் ஆனால் அதை இரட்டிப்பாக்கும் முறை, கஸ்ரப்பட்டு வேலை செய்யும் அந்த தொழிலாளிக்குத்தான் தெரியும். ஆக பொதுவாக வறுமை என்று பார்ப்போமேயானால் அது அவனுடைய செயற்பாட்டையும், முயற்சியையும், பொறுத்து அது அமையும். படித்த வனாக இருக்கலாம் , பாமரனாக இருக்கலாம், பணக்காரனாக இருக்கலாம், ஏழையாக இருக்கலாம் வறுமை என்னும் பதம் எல்லோருக்கும் பொதுவானது.
மத்தேயு நற்செய்தியின்படி இயேசுக் கிறிஸ்து வறியவர்கள் ஏழைகள் என்று அழைக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்றார். ஏன் அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், என்பதற்காகவா அல்ல வறுமையைப் பற்றி அவர்களின் வாழ்வினால் அவர்களுக்கு சுட்டிக்காட்ட
ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஒரு வேலைக்காரனும் இருந்தான். பணக்காரன் இவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான், அதாவது நான் உனக்கு பணம் கொடுக்கின்றேன் அதை கொண்டு நீர் இலாபம் ஈட்டி அதில் எனக்கு அரைவாசி உனக்கு அரைவாசி என்று பிரித்துக் கொள்ளலாம் என்றான். அவனும் அப்படியேசெய்தான். அந்த வேலைக்காரன் தனக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது மனைவி, பிள்ளைகள், அண்டை வீட்டாருடன் பகிர்ந்து ஒரு குடிசை வீட்டில் சந்தோசமாக ஒருசராசரி வாழ்க்கைநடத்திவந்தான்.ஆனால் பணக்காரன் அவன் பெற்றுக் கொண்ட பணத்தை வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, மற்றவர் படும் துன்பத்தை கண்டும் காணாதவனாக, ஒரு பெரிய மாளிகையைக் கட்டி, தான் இன்னும் பெரிய பணக்காரனாக வர வேண்டும். என்று ஆசையும் சுயநலனும் கொண்டவனாக வாழ்ந்து வந்தான்.
காலம் செல்லச் செல்ல அவனுடைய வேலையாள் திடீர் என மரணமானான். அதன் பின் அந்த பணக்காரனுக்கு என்ன செய்வதன்று தெரியவில்லை, ஏனென்றால் அதுதான் தெரியும் ஆனால் அதைஎவ்வாறு இரட்டிப்பாக்குவது. இரட்டிப்பாக்கபடும் கஸ்ரம் எல்லாம் அவனுக்கு தெரியாது. எனவே இந்த வறுமை அவனைநாளுக்குநாள் அவனிடம் உள்ள பணத்தை பறித்தது. இறுதியில் தீர்ப்பிற்காக நிறுத்தப்பட்டவன் அப்பொழுதுதான் தனது கண்களை ஏறெடுத்துப் பார்தான், தனது வேலைக்காரன் விண்ணக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவருடைய மனக் கண்கள் திறக்கப்பட்டன. வறுமை எங்குள்ளது என்று கண்டு கொண்டான்.
தை - பங்குனி 2009
 

ബില്യുബ
வாறுனையை விழுங்கிய வாறுனை
அருட்சகோ. ம. அ. ஜெறாட் புனித சவேரியார் குருத்துவக்கல்லூரி
வறுமையின் துளியில் ஊஞ்சலாய்” கத்தியின் விளிம்பில் சறுக்கலாய் எழுந்த பெரிய சூரியனுக்குள்ளும் குப்பி விளக்கின் தணலோடு குனிந்து தேடி குப்புற விழுகிறேன் மூன்று மாதமும் தலைநிமிர்த்த முடியாமல் அதுதான் என் ‘உயிர்’
படைத்தவன் தமிழனுக்கு இரும்புக்கம்பியாலா கருவறை அமைத்தான்? அதனாலா இன்னும் சுதந்திர தமிழ் உயிரை பிரசவிக்காத இலங்கை பத்து மாதமல்ல முப்பது ஆண்டுகளால் தள்ளாடுகிறது
நான் என்ன, எலும்புகளில்லா வெறும் தசைப் பிறவியா? அப்பாவின் எலும்புகளிற்காய் பற்றைகளுக்குள் தேடுகிறேன், நான் என்ன, மடியில் உறங்காதகுழந்தையா? அம்மாவின் உடலங்களுக்காய் குப்பைகளை கிளறுகிறேன். நான் என்ன, சிவப்புநிறம் தெரியாதவனா? அதனுள் நீந்தியே என் உறவுகளை பொறுக்கி எடுக்கின்றேன். போதுமா என்வறுமை?
தை - பங்குனி 2009 39

Page 22
ஏன், நான் ஆறறிவைவிட ஏழறிவு விசித் என், கல்லறைக்கு அத்திவாரமும் மண்மூட்டையும் அடுக்க, 1883: ஏன், என் உடம்பு காற்றேறிய பையா? S உடல் சிதறும் என பதுங்குகையில் பார்த்த வெள்ளம் பொறுக்காமல்
என் மூச்சை விலைபேசுதே போதுமா என்வறுமை?
நீரின்றி, உணவின்றி, நிழலின் நான் என்ன ஒட்டகப்பரம்பரையில் ஒட்டிப் பிறந்த பிறவியா? மாறி, மாறி பொதி சுமக்கவும், பாதுகாப்பும் கான நெல்வயல் கொண்டு வாழ்வோட்டியது குற்றமா?
முழுக்க குடிக்கிறேன் கஞ்சி, கு ஆடையின்றியா அம்மா தாலாட்டுச் சொன்னா? நிர்வாணமாய் ஆஸ்பத்திரியில் மிஞ்சிய உறவுகளோடு போதுமா என் வறுமை?
ஆலமர விருட்சத்தின் கிளைகளாய் விழுதுவிட்ட உறவுகளோடு வாழ்ந்தேன், ஓடித்தப்புங்கள் வாழ்வீர்கள் என்று தனிமரமாய் நின்று கையசைத்துக் கேட்டேன் போனவர்கள் பாதியிலே செத்திருக்கலா இப்பதான் பிராத்திக்கின்றேன்.
போதுமா என் வறுமை?
ஓரளவு ஆறுதலடைவேன். ஏன் முட்கம்பிகளுக்குள் நாய்களைப் ே திட்டமிட்டுத் தாக்குகிறீர்கள்? எட்டிப்பார்க்கும் உறவுகளோடு
O தை - பங்குனி 2009
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு வசனம் பேசவிடுங்கள் ஒரளவு தாங்கிக் கொள்வேன் ஏன் தொழுநோய் கூட்டம்போல் தேசத்தைவிட்டு ஒதுக்குகிறீர்கள்? போதுமா என் வறுமை?
இன்னும் ஒருமாதம் நீடித்தால் என் உயிர்ப்பறவை சிறகடிக்கும் கடைசி முத்தமிட என் கல்லறைக்கு நிச்சயமாய் வருவீர்களா? இந்த கடதாசியை விட்டு நீங்குகிறேன் வெறும் கையோடு, .ܕܨܘܼܪܬܵ ஆனால் மனசு நிறைய கனத்த இரத்தத் துளிகளோடு இன்னும் போதாதா என் வறுமை?
மகிழ்கிறேன்
- இயலன் -
தொட்டிலடி சங்கானை
கருவைச் சுமந்த
6)gp160)LD
ஜெயகேமலதா தொட்டிலடி செல்வத்தில் வறுமையிருக்கலாம் சொல்வளத்தில் வறுமையிருக்கலாம்
மெல்லுணர்வால் துணிவில் வறுமையிருக்கலாம்
இளகிய நெஞ்சமதில் ஈயும் குணத்தில் ஒப்புரவுப் பண்பில் மனித நேயத்தில் வறுமையிருந்தால் வாழுமோ இவ் வையகம்
வறுமையில் கொடுமை இதுவன்றோ மனிதா !
தாய் போல்
“நான்” கனவைச்
சுமந்து தவித்தேன்
அதன் கனதி பயனாய் உளவியலில் தாளாது இறக்கி ஓய்வு “நான்”
வைக்கத் துடித்தேன் Y ஒடியாடி மகிழ்கிறேன் களமமைததுக பின் மீண்டும் கொடுத்தாய் “நான்” கருவைத் தரிசிக்க ‘நான்” உன்னை போற்றி உனை நாடி வருகிறேன்
ஏற்றிப் பாடினேன்
தை - பங்குனி 2009

Page 23
உளவளப்பூரிப்பு ஜெயபாலன் פוחש&
- கொக்குவில் - I
அணிசெய்து அனைத்து மதங்களும் போற்றும் புனித மென்பது உளவளப் பூரிப்பு மனிதம் காணும் எண்ண இசைவாக்கம்! 6ig6.irisis56it u6) வாறாய் விளங்கிடினும் வழங்கும் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்த உயர்ந்த மனித நேய சமாதானமே - ஆன்ம நேய உளவள உயர் இன்பப் புனிதமாகும்
பெல்லாம் பிறந்தன ஒரே திணிவில் (பிடிமண்) பின்பரவி வெவ்வேறு மரபு ஆகினாலும் பரிணாம மூடே-படைத்த இறைவன் ஒருவனே
இதுவே மேலான புனிதம்
நானே நான்
- நெடுந்தீவு மகேஷ் -
அப்பா அம்மா அன்புடையீர் அறிவு புகட்டும் ஆசான்காள்
எப்போதும் என் வளர்ச்சியில் நீர்
எடுக்கும் முயற்சி மிகப்பெரிதே
நீங்கள் என்மேல் கொண்டிருக்கும் நிறைந்த அன்பால் என் உயர்வுக்(கு)
ஏங்கும் உங்கள் எண்ணங்கள் எல்லாம் எனக்குப் புரிகிறது
பொன்னாய்ப் பொருளாய் எனைநீங்கள் பூட்டிக் காத்தல் விட்டொதுக்கி என்னை நானாய் நடமாட எனக்குச் சுதந்திரம் தாருங்கள்
அவனாய் இவனாய் ஆக்கிடவே ஆசைமிகநீர் எனை வருத்தி கவனம் படியென் றென்னாளும் கடிதல் தவிர்ப்பீர் மன்னிப்பீர்
புயலாய் விரியும் என்வளர்ச்சிப் போக்கில் தடைகள் விதிக்காதீர் அயலான் போல நானில்லை அதற்காய் என்னை வெறுக்காதீர்
நானாய் நீங்கள் ஒருபோதும் நடத்தல் கடினம் தீர்மானம் ஏனோ எனக்காய் எடுக்காதீர் எனக்குள் கனவு பலவுண்டு
நானே நானாய் வளர்வதற்கு நன்றே உதவின் அதுபோதும் நானோ எந்தன் வலிமையினால் நல்லோர் மதிக்கும் சொத்தாவேன்
தை-பங்குனி 2009
 
 
 
 
 

நாதியற்று அலைமோதும் 攤線 காற்றின் நிலை கண்டு துன்பப்படுகின்ே என்நிலையும் அவ்வாறெண்ணி
தனிமையில் சிரிக்கும் பூவின் நிலை கண்டு புண்படுகின்ே
605 - Luries6of 2009 భః

Page 24
கன்னிலவளின் காத்திருப்பு ...!
அ. ஜஸ்மின் வடிறோன் ஆவணம் நானாட்டான் கலைமான்கள் நீரோடை தேடுவது போல கள்ளமில்லா குழந்தை உள்ளத்தால் - உன் கருணைநிறைந்த பார்வைதனை நோக்குகின்றேன்.
கர்த்தர் என்ற காவிய நாயகனின் - கடை கண்பார்வை என்மேல்பட ஏங்குகின்றேன்
கானல் நீராய் போகும் வாழ்க்கைதனை தொலைத்த கன்னியவளின் கயல்விழிகளால் நோக்குகின்றேன்
கருணை செய்யும் கொடைவள்ளலவர் கம்பீரமாய் - என் காதோரம் சொல்லப்போகும் அமுதமொழிக்காய் காத்திருக்கின்றேன்
கண்ணயர நேரமில்லை காண்பீரோ எம் அவலத்தை கரைபுரளும் வாழ்க்கைதனில் தனிமரமாய் தவிக்கிறேனே
கண்ணில் காலம் கழிய கண்டீரோ எம் கால கெடுவை காட்சிதந்து எம்துயரை நீக்க வேண்டுமென காலமெல்லாம் கண்ணயராது கயல்விழிகளால் காத்திருப்பேன் , கருணைதெய்வம் என் வாழ்விற்கு பதிலளிக்கும்என எண்ணுகின்றேன்!
தை-பங்குனி 2009
 
 
 

கருத்துக் குவியல் ' இன்று நீ எங்கே இருக்கிறாய்?
சி. காசிம்பிள்ளை அல்லாரை வடக்கு കെക്കുനDb
விஞ்ஞான வளர்ச்சியினால் இன்றைய சில 1: மனிதர்கள் ஆடம்பரத்தின் உச்சநிலையில் வாழ்கி | றார்கள். இவர்கள் ஒருபுறமிருக்க இன்னொரு புறத்தில் பலர் அமைதியை நாடி தெய்வீகத் தேட லில் ஈடுபடுகிறார்கள்.
இவ்விருவகையினரையும் தவிர இன்னொரு வகையினர் எம்மிடையே காணப்படுகிறார்கள் அவர்களைப் பார்க்கும்போது எமக்குச் சிரிப்பதா? அழுவதா? என்றுதான் தெரியவில்லை. இவர்களே சிலவேளைகளில் சந்திகளில் நின்று இளம் பெண் . . . . . களைப் பார்த்துக் கேலி செய்வார்கள். ஓடும் பஸ்ஸினுள்ளும் இப்படியே தம் கைவரிசை யைக் காட்டுவார்கள் ஓய்வு நேரங்களில் பட்ட மரத்திற் கூட ஏறி விளையாடுவார்கள். இவ்வேளையில் இவர்களைப்பார்த்து ‘இன்றுநீஎங்கே இருக்கிறாய்? என்றுதான் கேட்ட வேண்டும் போலுள்ளது இப்படியேஇக் கேள்வியை அவர்களிடம் தனித்தனியே கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? “பட்டமரத்தில்பொழுதுபோக்குகிறேன்’ என்றா? அல்லது ‘நான் குரங்காக மாறிவிட்டேன்’ என்றுதானே சொல்வார்கள்.
எத்தனையோ மரங்கள் பூவாக, காயாக, கனியாக மட்டுமா? இன்னும் எத்தனையோ தேவைகளுக்குப்பயன்படுகிறது. இத்தகையபிறருக்குதவும் குணவியல்புகளைக்கூடபட்ட மரத்திலிருப்பவர்கள் எண்ணிப்பார்தார்களா? இவர்களை சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றும் கூறலாம்தானே? பொழுதுபோக்குவதற்காக எத்தனையோ விஞ்ஞான சாதனங் கள் இருக்கமரத்தில்ஏறுவதற்காகஏணியை வைத்துவிட்டுஅடிமரத்தில் ஒருவர் மேலொரு வர் ஏறி அவஸ்த்தைப் படுகிறார்கள். உயரமான கிளைகளில் ஊஞ்சலாடுகிறார்கள் ஒய்யாரமாகநடிக்கிறார்கள்.தாவுகிறார்கள்தவறியும் விடுகிறார்கள்.
இதெல்லாம் மனித வாழ்வியல் விதிமுறைகளை மீறி எப்படியும் வாழலாம் என
தை - பங்குனி 2009 45

Page 25
எண்ணும் இன்றைய சில இளைஞர்களின் செயற்பாடுகளேயாகும். இத்தகை யோரினாற்தான் எம்மிடையே சிலர் மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். இதைவிட கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகளுக்குக் கூட இவர்களும் பங்காளியாகிறார்கள்.
இன்னும் சொன்னால் இவர்களின் இலக்கற்ற வாழ்க்கையினாலேயே தாமும் வறியவர்களாகி அயலவர்களையும் வறுமைக்குள்ளாக்குகிறார்கள். இச் செயற்பாடு களினால் அரவம், சிங்கம், புலி, கரடி போன்றவற்றைக் காண்பதுபோலவே இவர்களையும் பார்த்தவுடன் பயப்பட வேண்டியுள்ளது.
இவர்களை தூய உள்ளத்தினராய் மாற்றுவதென்றால் கல்வியில் உயர்ந்து நினைத் ததைச்செய்துமுடிக்கும்சக்தியம் ஆற்றலும் கொண்டவர்களாலும் இன்றுவியப்புறவளர்ச் சியடைந்து நிற்கும் விஞ்ஞானத்தினாலுமே சாத்தியமாகலாம் இவர்களுக்கு இறையருள் என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது? பெற்ற பின் ஏற்படும் நன்மைகள் போன்ற வற்றை விளக்குவதுடன் இறையருளின் மகிமையை கருப்பொருளாகக் கொண்ட பல திரைப்படங்களைத்தயாரித்துக்காண்பித்தால்குறுகியகாலத்தில்நல்லவர்களகமாறிவிடு வார்கள்.
இவ்வாறு நல்வழியை நாடிய பின் பூமியிலுள்ள எல்லா உயிரினங்களும் இறை வனால் படைக்கப்பட்டவை. மனிதன்யாவரும் எமது சகோதரர்கள். இவர்களுக்குத்துன்பம் செய்வது பாவமாகும். அப்படிப் பாவம் செய்தால் இறைவன் எம்மைத் தண்டிப்பார் என்ற உணர்வு தானாக வந்து விட இறைவனுக்கு அஞ்சி இறைவழிபாட்டுடன் தர்மவழியில் நடப்பார்கள்.
இதன்பின் எவ்வளவு காலத்தை வீணாக்கியதுடன் பிறருக்கும் துன்பம் செய்து விட்டோம். இதை மன்னிக்க வேண்டுமென ஆண்டவன் சந்நிதியில் பிராத்தனையிலிருப் பார்கள். இவ்வாறு இன்று நீ எங்கே இருக்கிறாய்? என்று கேள்வி எழுப்பினால் அவர்கள் தரும் பதில் பொருத்தமாகவே இருக்கும்.
‘நான்’ உளவியல் சஞ்சிகைக்கு பல ஆக்கங்களைப் படைத்து அனுப்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு எங்களுடைய நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உங்கள் முயற்சி மென்மேலும் வளரவாழ்த்துகின்றோம். இனிவ ரும் காலங்களிலும் உங்களுடைய ஆக்கங்களை உரிய காலத் தில் எங்களுக்கு அனுப்பி வைக்கும் படி ‘நான்’உங்களிடம் வேண்டி நிற்கின்றேன்
தை - பங்குனி 2009
 

LILLD 3
உளவியலின் பிரிவுகள் :
உளவியலானதுமிகவேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு துறையாகும். இது தன்னகத்தே பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் தமக்குரிய பகுதியில் விசேட தேர்ச்சி பெற்று வருகின்றன. இங்கு உளவியலின் பல்வேறு பிரிவுகளையும், அவை ஆராய்கின்ற விடயங்கள், பிரச்சினைகள் என்பன பற்றியும் காண்போம்.
பொது உளவியல் :
இது எல்லா உளவியல் பிரிவுகளுக்கும் அடிப்படையான பொதுவான கருத்துக்கள் பற்றியது. பொது உளவியலானதுமுதிர்ச்சிஅடைந்தசாதாரணமனிதர்களின்நடத்தையை விபரிக்கிறது. இப்பிரிவினுள் புலன் காட்சி, மனவுணர்ச்சிகளும் எழுச்சிகளும், ஊக்குவித்தல், கற்றல், சிந்தித்தல்", கற்பனை", ஞாபகம்", ஆளுமை வளர்ச்சி°, போன்றவைகள் அடங்குகின்றன. மற்றும் இப்பிரிவு தனியாட்களிடையே காணப்படும் வேற்றுமைகளின் தன்மை, அவை தோன்றுவதற்கான
1. Sense perception
2. Feeling and emotions
3. Motivation
4. Learning
5. Thinking
6. Imagination
7. Memory
8. Development of personality
காரணங்கள் போன்றவைகளையும் ஆராய்கிறது. ஒரு மனிதன்தன்னைச் சூழவுள்ள நிலைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு தன்னை இசைவுபடுத்திக் கொள்கிறான் என்பதை ஆராய்கிறது பொது உளவியல்
பரிசோதனை உளவியல் :
பரிசோதனை உளவியலானது புலணுணர்வுத் தூண்டல்கள் ஏற்படும்போது மனிதன் எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதை ஆய்வு செய்கிறது. உலகத்தைபற்றி அறிந்து கொள்ளல், அவற்றைப் பற்றிப் படித்தல், ஞாபகப்படுத்தல் போன்றவற்றிலும், மனஎழுச்சியினால் விடையளிப்பதிலும், செயல்களுக்குரிய நோக்கத்தை அறிதல், வாழ்வில் வெற்றியளிப்பதற்குரிய காரணங்களை ஆராய்வதில் பரிசோதனை உளவியலாளர் அக்கறை செலுத்திவருகின்றார்கள்.
தை - பங்குனி 2009 4ア

Page 26
உளக்கூற்று உளவியல்
உடலியலானது உளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. மனித நடத்தை தெளிவான அறிவினை நாம் பெறுவதற்கு அவனது உடலின் செயற்பாடுகள் பற்றிய அறிவு இன்றியமையாததாகும். மனிதனது உள்ளச்செயல்களெனப்படுவனவும் அவனது உடலுறுப்புக்களின் முக்கியமாக நரம்பு மண்டலத்தின் தொழில்களுடன் இணைந்தவையாகும். உடற்கூற்று உளவியலானது உடலின் தொழிற்பாட்டுக்கும் மனித நடத்தைக்குமிடையேயுள்ள தொடர்பை ஆராய்கிறது.
(உ-ம்) போதைவஸ்து உட்கொள்வது எவ்வாறு ஆளுமை ஞாபகசக்தி என்பவற்றைப் பாதிக்கின்றன, பாலியல் சம்பந்த கோமன்கள் எவ்வாறு நடத்தையைப் பாதிக்கின்றன மூளையின் எப்பகுதி பேச்சு ஆற்றலை கட்டுப்படுத்துகின்றன என்பன பற்றி ஆராய்கிறது.
616Tfööcup60p.26T6fluuso (Developmental Psychology)
வளர்ச்சி முறை உளவியலானது மனிதவளர்ச்சி பற்றியது. குழந்தைப் பருவம் தொடங்கி,முதிர்ச்சியடையும்வரைஅவனுடையநடத்தையை உருவாக்குகின்றகாரணிகள் என்பவற்றைப்பற்றி ஆராய்கின்றது.
&eup852-6T6íhuj6b (Social Psychology)
சமூகப் பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து தீர்ப்பதற்கு உளவியல் உண்மைகளைப் பயன்படுத்தும் விஞ்ஞானம் சமூக உளவியல் எனப்படும். சமூகவாழ்வில் மக்கள் ஒருவரோடொருவர் நடந்து கொள்வதை ஆராய்வதே அதன் நோக்கம். ஒருவன் மற்றவர்களுடன் சேர்ந்து வாழும்போது அவனுடைய உள்ளத்தில் உண்டாகும் நிகழ்ச்சிகளால் அவனுடைய ஆளுமை வளர்ச்சியில் பலவித மாறுதல்கள் உண்டாகின்றன. அவற்றைஎல்லாம் சமூக உளவியல் ஆராயும். ஒருவன் மற்றவர்களோடு தொடர்பு கொள்கின்றபோது அது எவ்வாறு அவனுடைய மனோநிலை, நடத்தை என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சமூக உளவியல் தன் ஆய்வுப்பொருளகக் கொண்டுள்ளது.
ஆளுமை உளவியல் :
ஆளுமை உளவியலானது தனிப்பட்டோரிடையே உள்ள வேறுபாடுகள் மட்டிலே கவனம் செலுத்துவதோடு ஒவ்வொரு தனிமனிதனதும் தனித்துவமான தன்மைகளை அறிவதிலும், நடைமுறைத் தேவைகளுக்காக தனி மனிதர்களை வகைப்படுத்தும் வழிகளிலும் ஈடுபடுகின்றது.
LDorgsglói cup60p.26T6fluj6b (Clinical Psychology)
இவ் உளவியலானது உளவியற் கோட்பாடுகளைப் பிரயோகித்து உளப்
48 தை - பங்குனி 2009
 

பிரச்சினைகள், நடத்தைக் கோளாறுகள், சித்த சுவாதீனம் போன்றவற்றிற்கான காரணங்களை கண்டறிந்து சிகிச்சையளிக்கிறதிலே கவனம் செலுத்துகிறது.
26T6.6T5 good600T 26T6fusio (Counselling Psychology)
இது மருத்துவ உளவியலைப் போன்ற பிரச்சினைகளை ஆய்வு செய்கின்ற போதிலும், மருத்துவ உளவியலில் காணப்படும் பிரச்சினைகளிலும் குறைவான பிரச்சினைகளையே ஆய்வு செய்கின்றது. சிகிச்சையளிக்கின்றது.
(உ-ம்) பயம், தாழ்வு மனப்பான்மை, உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றை மேற்கொள்ள இது உதவுகின்றது.
u6iref2) 6T6íhuj6) (School Psychology)
மாணவன் ஒருவனுடைய கல்விகற்கும்திறனை மதிப்பீடு செய்வதுடன், மனக்கிளர்ச்சி வயப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்கிறது. நுண்ணறிவு ஆளுமை என்பவற்றை பரீட்சித்துப் பார்த்து, மதிப்பது என்பனவும் இதில் அடங்கும். 856b6fi 2-6T6íhuj6o (Educational Psychology)
கல்வி உளவியல் நடைமுறை உளவியலின் ஒரு பகுதியேயாகும். பொது உளவியலில் கொள்கைகளையும், கண்டுபிடிப்புக்களையும், கற்பித்தலிலும், கற்றலிலும் கல்வி உளவியல் எடுத்தாளுகிறது. இதன்மையப்பொருள்கல்விபயிலும் மாணாக்கனின் இயல்புகளும் நடத்தையுமாகும் பள்ளிச்சூழ்நிலையினாலும், ஆசிரியர்களாலும், பள்ளிப் பாடத்திட்டங்களாலும் மாணாக்கரின் திறன்களும், நடத்தை முறைகளும் எவ்வாறு ஊகிக்கப்படுகின்றன? இவற்றைஎங்கனம்மாற்றியமைத்தால் மாணாக்கரின் பலதரப்பட்ட திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு வளர்ச்சியுறும், மாணாக்கரின் நடத்தைக் கோலங்களை அவர்க்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் பயன் தரும் வகையில் எவ்வாறு மாற்றியமைக்கவியலும் என்பன போன்றவை கல்வி உளவியலில் ஆராயப்படும் அம்சங்களாகும்.
தொழில்முறை உளவியல்(Industrial Psychology)
ஒருவேலைக்குத்தகுந்தஅட்களைதெரிவுசெய்வதிலும், ஒருகுறிப்பிட்டவேலைக்குத்
தகுந்த முறையில் ஒருவரை பயிற்சியளிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.
Sugisu 96T6fu Go (Engineering Psychology)
மனிதருக்கும் இயந்திரத்திற்குமுள்ள தொடர்பை மிக நுணுக்கமாக ஆய்வுசெய்கின்றது. இதனால் மனிதன் இழைக்கின்ற தவறுகளை குறைத்துக் கொள்ள உதவுகின்றது.
தை-பங்குனி 2009

Page 27
உளவியலாலர் விசைலில். மைக்கல் ஆர்க்கையில் MICHAELARGYLE
மைக்கல் ஆர்கையில் 1925ம் ஆண்டு, பிரித்தானியாவில் நொட்டிங்ஹாம் நகரில் பிறந்தார். அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று, கேம்பிறிஜ் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். சிலகாலம் பிரித்தானிய விமானப் படையில் பணிபுரிந்தபின் 1952இல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சமூக உளவியல் (Social Psychology) விரிவுரையாளரானார். அன்று தொட்டு சமூக உளவியல் அறிவைப் புகட்டுவதிலும், இத்துறையில் பலஅய்வுகளை மேற்கொள்வதிலும் காலத்தைச்செலவிட்டு வருகின்றார். சமூக உளவியலிலே இவரின் முக்கிய கவனம் என்னவென்றால், சமூகத் தொடர்பு முறைகளை எவ்வாறு சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க, விசாலமாக ஈடுபடுத்துவதென்பதேயாகும். இவரின் திறமையையும் செயற்பாடுகளையும் சர்வதேச ரீதியாகப் பயன்படுத்தவிரும்பியஸ்ரன்போட்டிலுள்ள, மனிதநடத்தைகளைப்பற்றி ஆய்வு நடத்துகின்ற சிரேஷ்ட மத்திய நிலையமானது, பல நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு இவரைக்காலத்துக்குக் காலம் அனுப்பிவருகின்றது. இதன் பிரகாரம் இவர் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும், ஆபிரிக்காவிற்கும் அனுப்பப்பட்டிருக்கிறார். இவர் பல உளவியல் நூல்களைப் படைத்திருக்கின்றார். அவைகளிற் சில: 1. சமூக நடத்தையின் விஞ்ஞான ரீதியான விளக்கம். 2. மனிதனின் மதரீதியான நடத்தைகள்.
3. உளவியலும் சமூகப் பிரச்சனைகளும். மேலும் இவரின் பல ஆய்வுக் கட்டுரைகள் பிரித்தானிய, அமெரிக்க உளவியல் சஞ்சிகைகளைப் பல தடவை அழகுபடுத்தியுள்ளன. அண்மையிலேதான், “சமூக உளவியல்’ என்ற சஞ்சிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். தனது ஆய்வுகளில் ஒருவரை சந்திக்கின்றபோது, பார்வை, முகபாவனை, தொனி போன்றவைகள் முக்கியத்துவம் பெறுகின்றதினால், மனிதநடத்தைகளை நுண்ணியமாக ஆராய, ஆய்வுகூட செயற்பாடுகள் ஆமற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார். ஒரு சிலருக்கிருக்கின்ற ஆற்றல்களை, குறிப்பாக நேர்முக உரையாடல், குழுக்கழுக்குத் தலைமைத்துவம் வகித்தல், சொற்பொழிவாற்றல், குழந்தை பராமரித்தல் போன்ற விடயங்களை ஊடுருவி அண்மையில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவரின் சிந்தனைப் போக்கைச் சுருங்கக் கூறினால், மனிதனுக்கு சமூகத்தில் பல
5O தை - பங்குனி 2009
 
 
 
 

தொடர்புகள் இருப்பதால் அவன் பல நடித்தற் பங்குகளை (roles) அல்லது பாத்திரங்களை ஏற்று நடக்க வேண்டியவனாகின்றான். அப்படியான நிலைகளில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதற்குப் பல பயனுள்ள ஆலோசனைகளைத் தனது ஆய்வுக் கட்டுரைகளில் கூறியுள்ளார். அவர் ஆய்வுப்படுத்தியவர்களில் ஆசிரியர்கள், உளவியலாளர்கள், விமானப் பணிப்பெண்கள், முகாமையாளர்கள் உட்படப் பலர் அடங்குவர். பலர் உளம் நொறுங்கியவர்களாக உள்ளனர்; தனிமையில் வாடுகின்றனர்; மனநோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களால் ஏனையோருடன் சீரான சமூக உறவு முறைகளை அமைத்துக்கொள்ளமுடியவில்லை.நாளாந்தவாழ்க்கையில் ஈடுபடும்போது மகிழ்ச்சியற்ற சிக்கலான, பயனற்ற அனுபவங்களைப் பெற நேரிடுகிறது. இவைக்குக் காரணம் இம்மாதிரியானவர்கள் வளர்த்துக்கொண்ட இணக்கமுறாத பழக்க வழக்கங்கள் தான்(ineptsocial behaviour) வேறுபட்டசாதி,மதவர்க்க இனங்களுக்கிடையே ஏற்படுகின்ற சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் எம்மிடையே காணப்படுகின்ற இணக்கமுறாப் பழக்கவழக்கங்களும் முக்கிய காரணியாகின்றன. எமது நேர் சீரான சமூக இடைவினைகளால் (Social interaction) பெரும்பாலான சிக்கல்களையும்நாம்தவிர்த்துக் கொள்ள முடியும் என்பது மைக்கல் ஆர்கையிலின் கருத்து. இன்றைய காலகட்டத்தில் சமூக உந்தல்கள் தான் (Social drives) சமூக ஊக்கல்களை Social motivations) உருவாக்கி விடுகின்றன என்று கூறும் மைக்கல் ஆர்கையில், இவைகளே சமூக உறவுமுறைகளுக்கு அடிப்படையாகின்றன என்கிறார். அத்துடன் சமூக ஊக்கல்களை எழுவகையாகவும் பிரித்துக்காட்டி ஒவ்வொன்றும் அடைய விரும்பும் இலக்குகளையும் (Goals) குறிப்பிடுகின்றார். இந்த இலக்குகள் ஒன்றில் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற துலங்கலாக (responses) இருக்கலாம் அல்லது மற்றவர்களுடனான உறவுமுறைகள் பற்றியதாக இருக்கலாம். அவையாவன: 1. சமூக இடைவினைகளைத் தோற்றுவிக்கும் சமூக உந்தல்கள் (non Social drives) குறிப்பாக உயிரியல் சார்ந்த தேவைகளாகப் கருதப்படுகின்ற உணவு, நீர் என்பனவாம். இவை பலதரப்பட்ட கூட்டுறவு, போட்டி நடத்தைகளை உருவாக்கும். 2. தங்கியிருத்தல் (Dependancy): ஏற்றுக்கொள்ளுதல் (acceptance), இடைவினை (interaction) ; உதவி, பாதுகாப்பு, வழிநடத்துதல் போன்றவற்றை அந்தஸ்து அதிகாரமுடையவர்களிடமிருந்து எதிர்பார்த்தல். 3. 96örg560600gg56) (Affliation): 2 L6&ITsyb5 eGiorgoLDB606) (physical proximity), கண்விழித்தொடர்பு (edycye contact), மகிழ்ச்சியானதும் சினேகபூர்வமானதுமான, சகபாடிகளினதும், அவ்வகையான குழுவினதும் அங்கீகாரம் பெறல். 4. ஆதிக்கம் (Dominence): செயல் வீரன் என்ற வகையில் பிறராலும், அம்மாதிரியான குழுக்களலும் அங்கீகரிக்கப்படுதலும், சம்பாஷனைகளில் தன் பேச்சையே மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமென்பதும், தீர்மானம் எடுத்தலும் அதனைக் குழுவினர் ஏற்கவேண்டுமென்பதும் முக்கியமானதாகக் காணப்படும்.
தை - பங்குனி 2009 51

Page 28
5. பால்(Sex):உடல்சார்ந்தஅண்மைநிலை, ஸ்பரிசம்(bodily contact), கண்ணோடுகண் நோக்குதல் (eye contact), மகிழ்ச்சியானதும் சிநேகயூர்வமானதுமான தொடர்புகள் பொதுவாக கவர்ச்சிகரமான எதிர்பாலாருடன் ஏற்படுத்திக்கொள்வது. 6. ஆக்கிரமித்தல் Aggression:சொல்லாலும்செயலாலும் ஏனையோரைத்துன்புறுத்துதல். 7. 56ör60T60L6 b &isib uipu S60TrilassrooDigid (Selfesteem and ego identity):56Org) சுயபடிமத்தை (Self image) ஏற்றுக்கொள்ளலும், பிறர் அவரது துலங்கல்களை (reSponses) அங்கீகரித்தலுமாகும். மேற்கூறிய ஏழுவிதமான சமூக ஊக்கங்கள் எமது சமூகத்தொடர்புகளுக்கு ஆணிவேராக அமைகின்றது எனக் கூறுகிறார். எது எவ்வாறிருப்பினும் சமூக உளவியலுக்கும் சமூகவியலுக்கும் நெருங்கிய தொடர்பு d 6ioTG. (Social psychology and sociology) &epsis 65Tlicy)6(p5606nd seypassau6) கண்ணோட்டத்துடன் பார்க்கின்றபோது, ஒரு சமூகக் கட்டமைப்பில் (social structure) காணப்படுகின்ற சமூக நிறுவனங்களின் (Social institutions) வாயிலாகவே எமது பழக்கவழக்கங்கள் உருவாகின்றன எனபது எம்மவர்கள் அனுபவ ரீதியாகக் காண்கின்ற
உண்மை
உளவியலாளர் வரிசையில். எனும் பகுதியி னுடாக “நான்’ உளவியலாளர்களின் சரித்திரங் களை நேயர்களுக்கு தந்து உதவுவேன். உங்க ளுக்கு விருப்பமான உளவியலாளர்கள் பற்றி நீங்கள் எழுதி அனுப்ப“நான்’உங்களுக்குகளம் அமைத்துள்ளது.
52 தை - பங்குனி 2009
 
 
 

லோறன்ஸ் ஹொல்பேர்க்கின் நன்னெறி (Moral Development Theory of Lawrence Kohlberg) 9IG56iru60sfuT6th SJT. 6tj656. (M.Sc. in Guidance & Counselling)
சென்ற இதழின் தொடர்ச்சி
இரண்டாம் நிலை - பாரம்பரியரீதியான நன்னெறிச் சிந்தனை (up60B (Conventional)
(குமரப்பருவச் சிறுவர்களும் வளர்ந்தோரும்)
இக்கட்டத்தில் சில மதிப்பீடுகளைத் தனதாக்கி அதன்படி வாழ்கின்றார். ஆனால் அம்மதிப்பீடுகளைத் தனதாகக் கருதாது அவற்றை பெற்றோர் அல்லது சமூகச் சட்டம் என்பன தனக்குக் கொடுத்ததாகவே கருதிச் செய்கின்றார். அதாவது நன்னெறி விடயம் தனக்கு வெளியேயிருந்து வருவதாகவே காண்கின்றனர்
மூன்றாம் கட்டம் - உறவுசார் மதிப்பீடுகள்: இக்கட்டத்தில் சமூக உறவில் ஒத்துப்போதல்’ என்பதே நன்னெறி நடத்தையை நிர்ணயிக்கின்றது. தனது தேவை, விருப்பம் என்பதைவிட இரு மனிதர்களிடையே செய்யப்படும் உறவு உடன்பாடு மிகமுக்கியமானது என்னும் எண்ணம் நன்னெறி நடத்தையை நிர்ணயிக்கின்றது. எதுவெல்லாம் பிறர் என்னை விரும்பும்படி செய்யுமோ அதுவே நன்னெறிக்குரியது என்ற சிந்தனையே நன்னெறி நடத்தையை நெறிப்படுத்துகின்றது. அதாவது பிறர் நம்மை விரும்பவேண்டும் என்னும் ஆவலே முக்கியமாகிறது.இக்கட்டத்தில் பிறரை நம்பதல், அக்கறை காட்டல், பிறருக்கு விசுவாசமாக நடத்தல் என்பவற்றைக் கருத்தில் எடுத்தே சிந்திக்கத் தொடங்குவர். தம் பெற்றோர் தம்மை நல்ல பிள்ளையென நினைக்கவேண்டுமெனும் நோக்கோடு செயலாற்றுவர். இதிலே தம் பெற்றோரின் வெறுப்பைச் சம்பாதிப்பதை தவிர்ப்பதையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். எனவே பெற்றோரின் மதிப்பீட்டின்படி வாழ்தல் நிகழ்கின்றது.
இக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் எவற்றைச் சரியான நடத்தையெனக் கருதுகிறார்களே அதன்படி வாழ்வதே நல்லது எனக்கருதி இசைந்து போகின்றார்கள். ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் அன்பாயிருப்போர் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்பதால் ஆகும். பிறர் உனக்கு என்ன செய்யவேண்டுமென விரும்புகிறாயோ அதையே நீயம் அவர்களுக்குச் செய் என்ற பொன்மொழியின் அடிப்படையிலேயே உறவுகள் நிகழ்கின்றது. உ-ம்
நன்மை: “மருந்தைக் களவெடுதால் உன்னை எவரும் கூடாத ஆள் என்று நினைக்க மாட்டினம். ஆனால் நீ இரக்கமே இல்லாத ஆள் என்றுதான் சொந்தக்காரர் எல்லாரும் நினைப்பினம். உன் மனைவியை இறக்கவிட்டால் ஒருதரும் உன் முகத்தையே நிமிர்ந்து பார்க்கமாட்டார்கள
தை-பங்குனி 2009 53

Page 29
நான்காம் கட்டம் - சமூக அமைப்பு நன்னெறி, சமூக அமைப்பு நல்ல முறையில் தொடர்ந்து இயங்கச் சட்ட ஒழுங்குகள் அவசியம். சமூகத்தின் ஒழுங்கு, சட்டம், நீதி, கடமை, என்பவற்றின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே நன்னெறி எழுகிறது. சட்டத்தை மீறல் அல்லது பிறருக்குத் தீங்கிழைத்தல் என்பன பிழையானது எனக் கருதத் தொடங்குவர். தன் கடமையைச் சரியாய் செய்வதும் சட்டத்தை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதுமே நன்னெறியின் அடிப்படையாகிறது. சட்டம் எல்லோருக்குமே, சட்டமே மனிதர்களிடையேயுள்ள பிரச்சினைகளைத் தீார்க்கவல்லது என்ற எண்ணம் நிலவும். மனிதர் பலர் இக்கட்டத்தைக் கடந்து செல்வதே இல்லை என்பது ஹொல்பேர்க்கின் கருத்து. சமூக ஒழுங்கைப் பேணுவதோடு ஒப்பிடும்போது தனிமனித தேவைகள் அவசியம் குறைந்ததாகவே கருத்தில் எடுக்கப்படுகின்றது. எனவே எது சட்டத்திற்கு உட்பட்டதோ அதுவே சரியானது, எது சட்டத்திற்கு முரணானதோ அது தவறானது என்ற சிந்தனை மேலோங்கி நிற்கும் இந்நிலையில் சாதகம்: “மருந்தை நீ களவெடுக்கத்தான் வேண்டும். நீ எதுவும் செய்யாமல் விட்டால் உன் மனைவியை சாகவிடப்போகிறாய். அவா செத்தால் அதுக்கு நீதான் பொறுப்பு. ஆனாலும் நீ எடுக்கும்போது மருந்துக் கடைக்காறனுக்குப் பிறகு கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் எடுக்க வேணும்.’
மனச்சாட்சி: “மனைவியைக் காப்பாற்ற விரும்புவது இயற்கையானது. ஆனால் களவெடுப்பதென்பது தவறானது. நீ களவெடுக்கிறாய் என்றும் மருந்து விலையானதென்றும் அது மருந்துக் கடைக்காரனால் செய்யப்பட்டது என்றும் உனக்குத் தெரியுமல்லா?
முன்றாம்நிலை-பாரம்பரியத்தியத்திற்குப் பிந்திய நன்னெறிச் சிந்தனை (Postconventional)
இருபது வீதமான வளர்ந்தோரும், வளர்ந்தோர் முன்பருவத்தினரும், பெரியோருமே, இந்நிலையை எய்துகின்றனர். தனக்குச் சரியெனப்பட்ட் மதிப்பீடுகள், நம்பிக்கைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே இவர்கள் தீர்மானம் எடுப்பர். நன்னெறி தொடர்பான பல்வேறு வழிகளை ஆராய்ந்து அதில் தனக்குச் சரியெனப் பட்டதையே தேர்ந்தெடுப்பர். இந்நிலையில் நன்னெறி விழுமியங்கள் என்பவை பிறருடை நிலைப்பாடுகளாக அன்றித் தன் சொந்த விழுமியங்களாக செயற்படுகிறது.
ஐந்தாம் கட்டம் - சமூகத்தின் உரிமைகளா? தனி மனித உரிமைகளா? (வயது 20 - 22): இங்கு சட்டத்தைவிட மனித உரிமையே முக்கியமெனக் கருதப்படுகிறது. அத்தோடு சட்டத்தைவிட சில விழுமியங்கள் மிக முக்கி யமானதென உணர்கின்றார். உ-ம் மனித உயிரின் மேன்மை. பத்து வீதத்தவர் இக்கட்டத்தில் மதிப்பீடுகள், சட்டங்கள் என்பன எல்லாருக்கும் எல்லா நேரமும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை உணர்கின்றனர். ஆளுக்காள் இது வேறுபடக்கூடியது என்பதையும் புரிந்துகொள்கின்றனர். அதாவது
54 605 - Urig56,of 2009
 

சமூகத்தில் வாழும் எல்லாத் தனிமனிதர்களது கண்ணோட்டங்களும் கருத்தில் கொள்ளப்படுகிறது. எல்லோரும் ஒரே மாதிரியான மதிப்பீடுகள், சிந்தனைகள் என்பன கொண்டிராவிடினும் எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு. ஒவ்வொரு தனிமனிதரதும் உரிமையைப் பாதுகாப்பதே நன்னெறியாகும். சட்டங்கள் தனிமனிதரைக் கட்டுப்படுத்துவதற்காக அன்றி அவர்களின் சுதந்திரத்தைப் பாது காக்கவே உள்ளன என்ற கருத்து இவ்வேளையில் உண்டு. தேவையேற்படும்போது சட்டங்களை மாற்றியமைக்கலாம். சட்டத்திற்கு மாறானதாக அல்லாவிட்டாலும்கூட சமூகத்துக்கு ஊறு விளைவிக்கும் நடத்தைகள் தவறானவை. என்பதை உணர்வர். நன்மை பயப்பது என்பதால் சட்டங்களுக்குப் பணிந்து நடக்கவேண்டும், ஆனால் சிலவேளை அது நன்னெறி விழுமியத்தோடு முரண்படக் கூடும் என்பது கருத்தில் கொள்ளப்படும். மேலும் தம் மரியாதையையும் பிறருடைய மரியாதையையும் தாம் காப்பாற்றவேண்டும் என்று நினைப்பர். சாதகம்: சட்டம் இப்படியான சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தாது. மருந்தை களவெடுப்பது இந்தச் சந்தர்ப்பத்தில்
பிழை. ஆனால் அப்பிடி எடுப்பது நியாயப்படுத்தக் கூடியது. மனச்சாட்சி: மிகமோசமான சந்தர்ப்பத்திலும் சட்டத்தை கையிலெடுப்பது நியாப்படுத்தப்பட முடியாதது. கஷ்டம் வந்துள்ளது என்பதற்காகக் களவெடுக்க முடியாது. முடிவு நல்லதாக அமைந்தாலும் அதை அடையும் வழியும் நல்லதாக அல்லவா இருக்கவேண்டும்
ஆறாம் கட்டம் - உலகளாவிய நன்னெறி விதிகள்: இக்கட்டத்தில் சட்டங்களுக்கும் மேலாக உலகளாவியரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரக்கம், சமத்துவம், நியாயம், நீதி, மனித மாண்பை மதித்தல் எனும் நன்னெறி மதிப்பீடுகளே நன்னெறித் தீர்மானங்களை நிர்ணயிக்கின்றன. மனித உயிரானது அனைத்துக்கும் மேலாக மதிக்கப்படுகின்றது என்பதை உணர்கின்றனர். ஒவ்வொரு மனிதரும் பெறுமதியானவர்கள். அவர்களது குணங்கள், சிந்தனகள் எவ்வாறு அமைந் திருந்தாலும் அவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்ற சிந்தனையே உள்வாங் கப்படடு மேலோங்கி நிற்கின்றது. மனச்சாட்சியின்படி வாழ்வதே நன்னெறி வாழ்வு என்பதே இந்நிலை. சட்டத்தைப் பின்பற்றுவதா அல்லது மனச்சாட்சியைப் பின் பற்றுவதா என்ற அகமுரண்பாடு ஏற்படும்போது தம் மனச்சாட்சியையே பின்பற்றுவர். இது அவருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருந்தாலும்கூட மனச்சாட்சியையே பின்பற்றி நடப்பார்.
சாதகம்: “மருந்தைக் களவெடுப்பதா அல்லது மனைவியை இறக்க விடுவதா எனத் தீர்மானம் எடுக்கவேண்டிய இக்கட்டான நிலை இப்போ. இக்கட்டத்தில் களவெடுப்பது நன்னெறிரீதியாகச் சரியானது. மனித உயிரைப் பாதுகாப்பதும் மதிப்பதும் முக்கியம் என்ற அடிப்படையிலேயே இவர் தீர்மானம் எடுக்கின்றனர்." மனச்சாட்சி: "என் மனைவியைப்போலவே வேறு ஒருவருக்கும் இதே மருந்து தேவைப்படக் கூடும்’ எனச்சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. மனைவி
தை - பங்குனி 2009 55

Page 30
மட்டிலுள்ள உணர்வின் அடிப்படையில் செயற்படாமல் இதிலே யார் யாரின் உயிர்கள் உட்பட்டுள்ளன என்று நான் சிந்தித்து நடக்வேண்டும்.
ஐந்தாவது கட்டம் சமூக நலனால் நெறிப்படுத்தப்படுகிறது. ஆனால் ஆறாவது கட்டம் அகரீதியான மதிப்பீடுகளால் நெறிப்படுத்தப்படுகின்றது. ஆறாவது நிலையை மிகச் சிலரே அடைகின்றனர்.
ஏழாம் கட்டம்- சமயம் நெறிப்படுத்தும் நன்னெறி: ஹோல்பேர்க்கின் இறுதிக்காலக் கருத்தின்படி, சமயநம்பிக்கை கொண்டவர்கள் பாரம்பரியச் சிந்தனைகளைக் கடந்து ஏழாவது நிலை ஒன்றை கொண்டு இயங்கின்றனர். இவர்களின் நன்னெறியை சமயம்சார் மதிப்பீடுகளே நெறிப்படுத்துகின்றன. அதாவது சமய நம்பிக்கை நெறிப்படுத்தும் நன்னெறி உண்டு என ஒத்துக்கொள்கிறார்.
கொள்கை மதிப்பீடு: இவரது கொள்கை பற்றிக் கீழ்க்காணும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இக்கொள்கை பல பண்பாடுகளிடையே உள்ள வேறுபாடுகளை கருத்திலெடுத்திருக்கவேண்டும். ஏனெனில் பின்வரும் பண்பாடுகள் நன்னெறிச் சிந்தனையில் தனித்துவத்தைக் கொண்டுள்ளன. இஸ்ராயேலர்கள் தம் நன்னெறிப் பிரச்சினைகளைத் தீர்க்கும்போது, தொடர்பான அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமெனக் கருதுவர். ஆசிய பண்பாட்டினர் தம்மிடையேயுள்ள பிரச்சினைகளுக்குச் சட்டத்தை நாடுவதைவிட இரு தரப்பினரையும் ஒற்றுமையாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துவர். மேலும் இந்தியப்பண்பாடானது 0ொல்பேர்க் கூறுவதுபோல மனித உயிரைமாத்திரமல்ல இதர உயிரிகளையும் கருத்திலெடுக்கிறது. உ-ம் மாட்டிறைச்சி, கோழி, மீன் உண்ணல, என்பன பாவமெனக் கருதுபவர்கள் உண்டு. மதத்தை நோக்கின், புத்தமதம் பிறரின் துன்பத்தைப் போக்க செயலில் இறங்கவேண்டும் என்ற கருத்துடையது. கிறிஸ்தவ மதம் பிறருக்காகத் தன்னுயிரையே கொடுக்கலாம் என்ற கருத்துடையது. அதாவது தன்னுயிரைக்கூடத் துச்சமாக மதிக்கும் நன்னெறி கிறிஸ்தவமத மதிப்பீடாகும்.
துணைநூாலிகள்
1. Bukatko.D., Daehler, M.W. (1998) Child Development: A Thematic Approach. 3o ed. New York:Houghton Mifflin 2. Coon, D. (1997) Essentials of Psychology: Exploration and Application. (7" ed), U.S.A.Brooks/Cole 3. Santrock.J.W.(1997)., Life-Span Development. 6th ed.New York: McGraw Hill. 4. Vasta, R., Haith, M.M., Miller, S.A. (1995) Child Psychology: The modern science. 2. ed. New York: John Wiley & Sons.
56 605 - Lurig56,of 2009
 
 

9 -
ள்
(8
6
O வறுமையைவெல்வோம் வளமாய் வாழ்வோம் மணிவாசகன் நிமலன்
O மேற்கத்திேய கண்ணாடியினுடாக. சண்முகலிங்கம்சதீஸ்
O 61060LD Dr. 5600T
O நான் உருவாக. அருட்சகோ.றமேஸ் அ.மதி
O நூல் நுகர்வு
O வறுமையில் வசப்பட்டவாழ்வு
O வறுமை R. 6guurT
O வறுமை எண்ணங்களால்தாழ்வுமனநிலை இ.மேரி
O வறுமைக்கு அர்த்தம் அருட்சகோ. ஜெ. எல்மோ
O வறுமையின் பிடியில் சிக்குண்டவர்களின். யே.ஜெறால்ட்
O செயலின் வறுமை எங்குள்ளது? அருட்சகோ. M. பேணாட்ஷா அ.மதி
O வறுமையை விழுங்கிய வறுமை அருட்சகோ.ம.அ.ஜெறாட்
O மகிழ்கிறேன் இயலன்
O வறுமை ஜெயகேமலதா
O உளவளப்பூரிப்பு இராம ஜெயபாலன்
O நானேநான் tpsറ്റെ
O 6766456060 அ.ஜஸ்மின் ஷறோன்
O கன்னியவளின் காத்திருப்பு. அ. ஜஸ்மின் ஷறோன்
O கருத்துக் குவியல் சி. காசிம்பிள்ளை
O உளவியலின்பிரிவுகள்
O உளவியளாளர் வரிசையில்.
O லோறன்ஸ்ஹொல்பேர்க்கின்நன்னெறி அருள்பணியாளர் இரா.ஸ்ரலின்
r N
“நான்’2009ம் ஆண்டிற்கான
உங்கள் சந்தாவைப் புதுப்பித்து ‘தன்” விட்டீர்களா? வருடத்தில் நான்கு டி மசனட் குருமடம்,
உளவியல் இதழ்களை நானில் கொழும்புத்துறை, பறிக்க இன்றே உங்கள் சந்தாவை யாழ்ப்பாணம்,
புதுப்பியுங்கள்! நீங்கள் “நான்’ இலங்கை அங்கத்தவர் இல்லையெனில் தொ.பே: 021-222 5359
இன்றே இணைந்து Ló6ir 916536): naanomica)hotmail.com
கொள்ளுங்கள்!
الصـ ܥܠ

Page 31
என்னுடைய தன்
என்னுடைய அ உள்ளூரில் 200 வெளியூரில் U.
Registered No. QD/125/News/2009