கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2010.01-03

Page 1

**w

Page 2
O Lo 6Nof: 35 தW\ை இதழ்: - 01
தை - பங்குனி 2010 உளவியல் சஞ்சிகை விலை 35/=
ஆசிரியர்: உள்ளே Udisabib 9565T6f(ypig O.M.I., B.Th., M.A O உளப்பாதுகாப்புக் கவசங்கள் O2 glóO)6OOTustafflust: O தன்நம்பிக்கை ஒரு சவால் O8 பீற்றர் இராஜநாயகம் O.M.B.Ph, BTh O இளவயதுக்கர்ப்பமும் கரு அழிப்பும் 10 s o * O கட்டிளமைப்பருவத்தினருக்கு. 13 ஒருங்கிணைப்பாளர்குழு: O & 15
sostGulf st LD சமுதாயததை. GaguibabóTL36 FébO.M.I.B.Ph.B.Th.STL(Rome) ணு
O மதுபாவனையால். 21 uuIT.363LD6mid O.M.I., B.Ph., B.Psy., BBA (Hons) O அறிவுவிருத்திக்கு வழிகாட்டும் it 24
o 6 ருத்திக்குவ 85 TGSD 2856T ம. பற்றிக் பிரசாந் O.M.I. - t2
O பூரணத்துவம் 28 நிர்வாகக்குழு:- O போராடு மனிதா 29 அ.ம.தி இறையியல் சகோதரர்கள் O 6Lig61C3LD! 29 யோசப்பாலா. O ஆதங்கம் 3O ஆலோசனைக்குழு: O பகிர்வின் தேவை 3.
O உன்னால் முடியும் 32 டேமியன் O.M.I.M.A. O இயற் ് திை 32
யறகை GeF6)6(oy 600TLb O.M.I., Ph.D. u -
O இழப்புக்கள் 33 விரிவுரையாளர் N.சண்முகலிங்கம் Ph.D - - -
o O மனிதவெற்றிக்கு. 38 வைத்தியகலாநிதி R.சிவசங்கள் M.B.B.S
O ஆன்மீகஉளவியல்-கருத்துக்குவியல் 43 360TT H.C Dip in Counselling a a
O உளவியற்கல்வி -நினைவாற்றல் 44 ĝ660Tg51T6mid O.M.I.B.A.(Hons), Dip.in. Ed.
O ഉ_ണബിuബrണ് ഖിങ്ങ9uിൺ. 46 6rogeS6ör B.Th. (Rome), M.Sc (Manila) - - - - a
O மாணவர் பக்கம் -நான் நல்ல நண்பன் 49 836)|T(3ungi) O.M.I., M.Phil.
O உளவியல் அணுகுமுறைகள் 51 O நட்புறவு 66
66 Λ品” *NAAN° ೨॥ Tamil Psychological Magazine மசனட குருமடம, De Mazenod Scholasticate, காழுமபுததுறை, Columbuthurai, Jaffna, யாழபபாணம, Sri Lanka. இலங்கை.
Tel: 021-222-5359
தொ.பே: 021-222 5359

(வாசக அன்பர்களுக்கு வணக்கங்கள் N
“நாம் இழந்தவுை” என்று பட்டியலிட்டு பார்க்கும் போதெல்லாம் “துன்பியல் வரலாறு” நம்மை துர்த்தித் தாக்கிக் கொண்டிருக்கின்றது. நம் இழப்புக்களுக்குக் காரணம் பலர், பல. நம் இழப்புக்களுக்கு நாமும் காரணம் என்பது தவிர்க்க முடியாதது ஏன் பலரையும் பலவற்றையும் கூடநம் இழப்புக்களுக்கு “அலங்களிப்பு’! காரணங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்பதும் வேதனையான விடயங்கள். எனவே இழப்புக்களுக்குள் நம்மை இழந்து விடாமல், அந்த இழப்பையே நம் “இன்பியல் வரலாறு’ ஆக்குவோம் என்ற நம்பிக்கையுடன் “நான்’ தன் நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் பேருவகை அடைகின்றான்.
நமக்குள், நாம் வாழுகின்ற பல்வேறு சமூக அலகுக்குள் எத்தனை திறமைகள். அவை உடல், உள, ஆன்மீக, அறிவு சார்ந்தவை என்று பட்டியல் நீண்டு செல்கின்றது. அவை பெரியனவாகவோ, சிறியனவாகவோ இருக்கலாம். அவை விதைக்கப்படும்போது விருட்சமாக வளர்ந்து நிழல் கொடுக்கும்; கனி கொடுக்கும்; பயன்கொடுக்கும். நம்திறமைகள் எல்லாமே வளர்த்து, வாழப்பட்டு, எல்லோருடைய வாழ்வின் வளர்ச்சிக்கும் பகிரப்பட வேண்டியவை. இதன் பயனாக ஒரு சமூகத்தின் எல்லா வடிவங்களிலுமுள்ள இல்லாமைகள், இயலாமைகள், இழப்புக்கள் எல்லாம் மறையும் என்பதே எம் நம்பிக்கை. மேலும், இறந்தவன் கூட உயிர்ப்பான் என்று நமக்குள் ஒளியேற்றும் வேத வசனம் கூட நம் நம்பிக்கைக்கு புத்துயிர் அளிக் கின்றது.
மாறாக நம் திறமைகளை இனங்காணாமல் மறைக்கும்போது நமக்குள் ஏதோவொன்று இழக்கப்படுகின்றது. எதையோ இழந்து விடுகின்றோம். நமக்குள் நாம் முழுமையை உணர்வதில்லை. இதன் விளைவாக நம் இழப்புக்கள் ஈடுசெய்ய இயலாதவைகளாக மாறும் என்பது சோகமான செய்தி.
நம் திறமைகள் சம்பந்தமாக நாம் அறிந்திருக்க வேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால், தன்திறமைகளில் மகிழும் ஒருவர், தன்னுடைய இயலாமைகளை, மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகளை ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது. நமக்குள் இருக்கும் இயலாமைகளை ஏற்றுக்கொள்ள நமக்குள் உண்மையான தன்னடக்கம் இருக்க வேண்டும். உண்மைத் தன்னடக்கம் என்பது நேர்மையிலும் அன்பிலும் தன் பலத்துடனும் பெலவீனத்துடனும் தன்னை ஏற்றுக்கொள்வது; உண்மை அமைதியுடன் வெற்றிகளையும் தோல்விகளையும் ஏற்றுக்கொள்வது; மற்றவர்கள் நம்மை புறக்கணிக்கும் போது சாந்தத்துடன் நம்மை நாம் ஏற்றுக்கொள்வது. ஆக உண்மையான தன்னடக்கம், தன்னுறுதி, தன்மதிப்பு என்பன நம் இழப்புக்களை தகுந்த முறையில் கையாளவும் அதில் வெற்றி கொள்ளவும் வழிவகுக்கும் என்பதே
நம் உறுதி. )அருட்திரு. செ. அந்தோணிமுத்து குரூஸ் அ.மதி ܢܠ
தை - பங்குனி 2010 Ο1

Page 3
உளப்பாதுகாப்புக் கவசங்கள் (Ego defense Mechanisms)
5. gasino.opm.g6ör (B.Com, Dip in Coun. Psy (Iraland) ஆற்றுப்படுத்துனர் உளவளத்துணை நிலையம்
அயல் நாட்டினர் படையெடுத்து வரும்போது அபாயங்களிலிருந்து நாட் டைக்காக்கவும் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கவும், ஒழுங்கு முறைகளைக் கட்டிக்காக்கவும் பாதுகாப்புப்படைகளை அரசு பயன்படுத்துகிறது. அவ்வண் ணமே மனிதன் தன் உள்ளத்தளவில் வருகின்ற பயங்களையும் பதட்டங் களையும் கையாள சில உளப் பாதுகாப் புக் கவசங்களை அணிந்து கொள்கிறான். இப்பாதுகாப்புக் கவசங்கள் இயற்கையா கவே மனதில் தோன்றி, தாமாகவே இயங்கி மனப்போராட்டத்திற்குக் காரணமான பல்வேறு உணர்ச்சிகளிடையே உடன்பாட்டைஉண்டாக்கி, மனஅமைதியைஏற்படுத்த, முயலுகின்றன. பயம், பதட்டம், கோபம், வன்மம், பகைமை முதலியவற்றைக் கட்டுப்படுத்த ஆளுமை (Personality) உருவாக்கும் கவசங்களே இவை.
ஆளுமை தனது உண்மை நிலையை உள்ளபடியே சந்திக்கப் பயப்பட்டுத் தன்னைத்திரித்து பொய்முகமாகக் காட்டுவதையே கவசம் எனக் கொள்ளலாம்.
வாழ்வில் எல்லோரும் இக்கவசங்களை உபயோகிக்கிறார்கள். எந்த அளவுக்கு எப்பொழுது இக்கவசங்களை உபயோகிக்க வேண்டுமென்று தெரிந்தால் பொதுவாக பிரச்சினைகளை நாம் எளிதாகச் சமாளிக்க முடியும்.
பொதுவாக பிரச்சினைகள் வரும்போது அவற்றைச் சமாளிக்க பாதுகாப்பு கவசங்களை அனைவரும் உபயோகிக்கிறார்கள். கோபமாக இருக்கின்ற ஒருவனிடம் "நீ ஏன் கோபமாக இருக்கின்றாய்?’ என்று கேட்கும்போது பாதுகாப்புக் கவசத்தை உபயோகித்து, “நான் கோபமாக இல்லை” என்று சொல்லியே கோபப்படுகின்றான். சில வேளைகளில் இப்பாதுகாப்புக் கவசங்கள் பயனளிக்கின்றன. இப்பாதுகாப்புக் கவசங்கள் பல வேளைகளில் மனப் பிளவுகளையும், சிக்கல்களையும் கொண்டு வருவதோடு உறவுகளிலும் மேலோட்டமான ஈடுபாட்டில் நிறுத்தி விடுகின்றன.
O2 தை - பங்குனி 2010
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nuTg్మతో శ్ శ్రేణి*** శt }}
பலவகையான பாதுகாப்பக்கவசங்கள் உண்டு. இங்குமுக்கியமான சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.
1.9 GoorGOLOGOuI Ingfrug (Denial of Truth)
உண்மையை மறுப்பது என்பது உண்மையைத் திரையிட்டு மறைக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம் ஆகும். இட+ம்) ஒரு தனிப்பட்ட நபரை நினைக்கும் போதெல்லாம் அமலனுக்கு தலைவலி வந்து விடும். இதைப்பற்றி அவன் நினைத்துப் பார்த்த தில்லை.நாளடைவில் அந்தநபரைப்பற்றிய பேச்சையார் எடுத்தாலும் அவன் அந்த இடத்திலிருந்து நழுவிவிடுவான். அந்த நபரைப் பற்றிய உண்மையை ஏற்றுக் கொள்ள அமலன் மறுப்பதுதான் அதற்கு காரணம்.
சுந்தரிக்குப்புற்றுநோய் என்று டாக்டர்சொல்லிவிட்டார். “இந்தடாக்டருக்குசரியாக நோயை கண்டுபிடிக்க முடியாது’ என்று தனதுநோயை மறுக்கின்றாள் இந்த சுந்தரி,
“தொடக்கத்தில் சூழ்நிலையின், பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் குறைத்து கவனிப்பது: பிரச்சினைமுற்றும் நிலையில் அதன் இயல்பையும், விளைவுகளையும் மறுப்பது” என்றுகாம்போக்(Hamburg), அடம்ஸ்(Adams) என்போர் இதற்கு விளக்கம் கூறுகிறார்கள்.
2. assioLIGO)6OT (Fantasy)
கற்பனை என்பது நாம் விரும்புவதையும், தேடுவதையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பாதுகாப்புக்கவசம் ஆகும். கற்பனையிலேகாரியத்தைச்சாதிக்கும் இருவகை கதாநாயர்கள் உண்டு. 1. வெற்றிபெறும் கதாநாயகன் 2. துன்புறும் கதாநாயகன்.
வெற்றிபெறும் கதாநாயகன்(Conqueringhero) தன்னை எல்லாம் வல்லவனாக, தைரியசாலியாக, அழகான, ஆற்றல் வாய்ந்தவனாக, பிறர் மெச்சும் தன்மைகள் உடையவனாகக் காண்கிறான். அவர் தன்னிடம் உள்ள கோபங்களை, வேதனை களை கற்பனையிலே வளப்படுத்தி வழிப்படுத்துகிறான். இக்கற்பனையில் தன்னைத் துன்புறுத்துபவர்களை இவன் அடக்கி, ஒடுக்கி அழிக்கிறான்.
துன்புறும் கதாநாயகன் (Suffering hero) தன்னுடைய இயலாமையை ஏற்றுக்கொள்ள வேண்டியதே இல்லை. இவன் கற்பனையில் விதியின் விளையாட்டால்தான் இத்தகைய இயலாமையில் தான் இருப்பதாக நினைக்கிறான். மற்றவர்கள் இவன் தன் துன்பத்தை எவ்வாறு மேற்கொண்டான் என்பதைக் கண் ணுறும் போது இவன்மேல் இரக்கமும் பரிவும் (Sympathy)காட்டுவார்களாகில் அவன் மிகவும் மகிழ்வான். அத்தகைய துன்பங்களை இவன் தாங்கிக் கொள்வான்.
கற்பனை ஓரளவுக்கு அவசியமானதே, இது வாழ்வை வளப்படுத்தும். உண்மை
தை - பங்குனி 2010

Page 4
நிலையை ஏற்றுக்கொள்ள மறுத்து, ஒதுங்கி ஓடும் நிலையில் செய்யும் கற்பனை ஒருவனை அழிவிற்கு இட்டுச் செல்லுகிறது.
3. eLisgj6o (Repression)
இளம் வயதில் சிலரது மனதில் சமூகக் கோட்பாடுகளுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் புறம்பான தீய எண்ணங்கள் எழலாம். அவ்வெண்ணங்களைச் செயலில் காட்டினாலோ, வார்த்தையில் வடித்தாலோ அவர்களைப் பெற்றோரும் சமூகமும் தண்டிக்கும் என்ற பயம் இருக்கும். எனவே இவ்வெண்ணங்கள் ஆழ்மனதிலேயே அடக்கி வைக்கப்படுகின்றன. இப்பாதுகாப்புக் கவசம் முக்கியமான ஒன்று. நம்மில் மிகப்பலர் அதிகமாக உபயோகிக்கும் பாதுகாப்புக் கவசம் இதுதான் என்றால் மிகையாகாது.
4. பின்னடைவு(Regression)
18 வயதாகிய வனஜா தனக்கு வந்துள்ள மனப்போராட்டங்களிலிருந்து மீள வழி தெரியாமல் குழந்தைக்கால பருவஉணர்ச்சிகளுக்கும், செய்கைகளுக்கும்தன்னைத் தானேதாழ்த்திக்கொண்டுஅதன்மூலம்பெற்றோரின்பிறரின் கவனத்தையும் கவரும் (attention seeking) B606). Sugib356OTC36.66mbgsiret 186jugeebooLD (Personality) இதனால் பாதிக்கப்படுகிறது. பின்னடைவு அதிகமானால் அது நாளடைவில் மனச்சிதைவு நோயாக (Schizophrenia) உருவாக வாய்ப்புண்டு.
ஒருசிறியதகராறுவந்தவுடன் பிறந்தவீடுபோகும் பெண்கள் பின்னடைகின்றனர். விரல்கப்புதல், குழந்தையைப் போல பேசுதல், படுக்கையில் சிறுநீர்கழித்தல் போன்ற குழந்தைச் செயல்கள் இவர்களிடமும் காணப்படும் .
5. அறிவார்ந்த விளக்கம் (Rationalization)
“ஏண்டா புகைக்கிறாய்?’ என்று கேட்டால் “நெடு நேரம் விழித்திருந்து படித்து முடிக்கிற.”தென்று பதில் கூறும் கல்லூரி மாணவன் தன் செயலுக்கு அறிவார்ந்த விளக்கம் தருகின்றான். இது ஒரு பாதுகாப்பக் கவசம். ஊடல் வலிக்காக சாராயம் குடிக்கிறேன் என்பதும், கலை ஆர்வத்தால் கல்வியைவிட்டேன்என்பதும் அறிவார்ந்த விளக்கங்களேயாகும். இவர்கள் கூறுவது பொய்யல்ல.தங்களையறியாமலே கூறும்
சமாதானமாகும்.
எவ்வளவு மோசமாக ஒரு செயலை ஒருவன் செய்திருந்தாலும், அறிவார்ந்த விளக்கம் கொடுத்து, தான் செய்தது சரியே என்று நிலைநாட்ட எந்த மனிதனும் துடிக்கிறான்.
சீ.சீ . இந்தப் பழம் புளிக்கும் - கதை தெரியுமா உங்களுக்கு? இந்த நிலைதான்.
தான் স্থ 線 04 தை - பங்குனி 2010

6. பிறர்மேல் சாற்றுதல் (Projection)
என்னுடைய தவறான எண்ணங்களுக் கும், உணர்வுகளுக்கும், செயல்களுக்கும் பிறரே காரணம் எனக் கூறுவதே பிறர் மேல் சாற்றுதல் என்ற பாதுகாப்புக் கவசம் ஆகும். சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்த விஜய் “அவன்தான்என்னைமுதலில்அடிச்சான்” என்பதும் தேர்விலே தோல்வியுற்ற மாண வன் “ஆசிரியர் ஒழுங்காக என் பேப்பரை திருத்தியிருக்க மாட்டார்’ என்று அவர்மேல் சாட்டுவதும் தன்னுடைய பெற்றோரும், ஊருமே காரணம் என்று அவர்களைச்சாட்டு வதுமாகும் இப்பாதுகாப்புமுறையில் உள்ள அரிச்சுவடியாகும்.
7. &L6Liu Ifrief (Displacement)
தன் கோபஉணர்ச்சிக்கு, பகை உணர்ச்
சிக்கு காரணமானவரிடம் அவ்வுணர்ச்சியைக் காட்டாமல் (காட்ட இயலாது ஏனெனில் இவர் அவருக்கு கீழ்ப்பட்டவராக இருப்பார்) தனக்குப் பணியும் பிறரிடம் காட்டுதல் இடப்பெயர்ச்சி எனப்படும். இவர் தனது உணர்ச்சியைக் காட்ட வேண்டிய இடத்தி லிருந்து இடப்பெயர்ச்சி செய்து வேறொரு இடத்தில் காட்டுகின்றார். சாதாரணமாக உபயோகிக்கும் உதாரணம், அதிகாரியிடம் “திட்டு” வாங்கிய ஓர் அலுவலர், தனது கோபத்தை மனைவியிடம் காட்ட, மனைவி மகனிடம் காட்ட, மகன் வீட்டிலுள்ள நாய் குட்டியின் மேல் காட்டுகிறான். கோப உணர்ச்சி இடம்பெயர்ந்து எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது.
8. 615 frofiloolT6 360)Lorridp6opD (Reaction Formation)
எதிர் விளைவு அமைப்பு முறை என்பது ஒருவரது மனதில் தோன்றும் சமூக விரோத, தீய எண்ணங்கள். இவற்றை “அடக்குதல்’ மூலம் கட்டுப்படுத்துவதோடு அல்லாமல் அவ்வெண்ணத்திற்கு எதிர்மாறான எண்ணங்களை உருவாக்கி, செயல்களாக வெளிப்படுத்துதல் ஆகும். உதாரணமாக, தாயிடம் பகையுணர்வு கொண்ட ஓர் இளம்பெண் தாய் இறந்தாலும் பறவாயில்லை என்று எண்ணிய போது, தாய் விதவையாகிவிட நேர்ந்தால், அதனால் மிகுந்த குற்றவுணர்வு கொண்டு, தன்
தை - பங்குனி 2010 O5.

Page 5
வெறுப்பு, பகை உணர்வுகளுக்கு எதிரான பாச உணர்வையும், எண்ணத்தையும் தன் உள்ளத்தில் கொண்டு, தாய்க்காகத் தனது திருமணத்தையே தியாகம் செய்யும் நிலையை எதிர்விளைவு அமைப்பு முறை என்போம். குடி, சீட்டாட்டம் மற்றும் சமூக விரோத செயல்கள் எதிர்விளைவு அமைப்பு முறையாக இருக்க வாய்ப்புண்டு. இந்நிலையிலும் இதில்ஈடுபடுபவர்கள்தங்களைஅறியாமலேயேசெயல்படுகின்றார்கள். இந்நிலை மிகைப்படுத்தப்பட்ட பயங்களலும், நம்பிக்கையாலும் உருவாகின்றது.
9.2 600riförifles6floo FF(6LIL556OL (Emotional Insulation)
தனக்கு வருத்தமோ தோல்வியோ வருமென நினைத்து, நல்லுறவுகளைத் துண்டித்துவாழ்வது, உணர்ச்சிகளில் ஈடுபடாமல் ஒதுங்கிவாழ்ந்துவிடுவது, அதனால் தோல்வியோ, துன்பமோ, புண்படுத்தலோ இல்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். நல்லுறவில் ஈடுபட்டபோது சிறியதுன்பங்கள் வந்திருக்கலாம். சிக்கல்வந்திருக்கலாம். வருத்தம்வந்திருக்கலாம். தோல்விவந்திருக்கலாம். இவ்வனுபவத்தின் பின்புஎடுக்கும் முடிவு இத்தகைய உறவுகளில் நாம் ஈடுபடக்கூடாது என்பதாகும். அவ்வாறு ஈடுபடும் போதுதானே நமக்கு வருத்தம், தோல்வி, சிக்கல் வருகின்றது. ஆகவே அத்தகைய நிலைமையை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பன போன்று அமைந்து விடுகின்றன. ஓர் அழகான பெண்ணைப் பார்த்துப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது சுகுமாருக்கு. அவள் தன்னை உதாசீனப்படுத்தி விடுவாளே என்ற பயம் அவனை ஆட்கொண்டுவிட்டது. இதனால் அவளோடு சுதந்திரமாகபேசவோ, அவளது அழகை இரசிக்கவோ அவனால் முடியவில்லை.
உணர்ச்சிகளில் ஈடுபடத் தடை என்ற உளப் பாதுகாப்புக் கவசமானது நாம் தோல்விகளையும், வருத்தங்களையும் நம் வாழ்வில் சந்திக்காமலிருக்க நமக்கு உதவுகிறது. இருப்பினும் ஈடுபாடில்லாதபோது வாழ்க்கையில் ஒருவித இன்பத்தை, நாம் இழக்கிறோம். தோல்வியும், வருத்தமும், சிக்கலும் வாழ்க்கையில் வளர்ச்சிப் பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது. தோல்வி, வருத்தம், சிக்கல் இல்லாதவன் இதுவரை எந்தவொரு உறவையும் ஏற்படுத்த முயற்சி எடுக்கவில்லை என்று பொருள். ஈடுபாடுதான் (involvement) வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிறைவையும் கொணருகிறது.
1O. 56örgofoo60orn (Identification)
தன்னை ஒரு நபருடனோ, ஓர் இயக்கத்துடனோ, ஒரு கட்சியுடனோ, ஒரு பதவியுடனோ இணைத்து நிறைவு கொள்வது தன்னிணைப்பு எனப்படும்.
சிறுகுழந்தைகள் தங்கள் பெற்றோரைப் போல் நடந்து காட்டுவார்களல்லவா. இதுவும் தன்னிணைப்புத்தான். இதனால் இந்தக் குழந்தை பெற்றோராலோ, மற்றோராலோ தட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்தத் தட்டிக்கொடுத்தலைப் பெறும்
O6 தை - பங்குனி 2010
 

பொருட்டு குழந்தைகள் பல்வேறு சூழ்நிலைகளில் பெற்றோரைப் போல் செயல்படு கின்றன. நாளடைவில் வளர்ச்சியடையும் குழந்தைகள் பிறருடைய பாராட்டைப் பெற, தட்டிக் கொடுத்தலையடைய தன்னிணைப்பைக் கையாளுகின்றன.
தாழ்வு மனப்பான்மையுடையவர்கள் தன்னிணைப்பை ஓர் ஊன்றுகோல், பலமில்லாத ஒன்றாக கருதுகின்றார்கள். பிணியாளின் ஆழ்மனதில் அடக்கி வைத்திருக்கின்ற தீவிர உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதும் அம்முயற்சியில் மனநிலை மருத்துவர் ஈடுபடும்போது பிணியாளியிடம் தோன்றும் எதிர்ப்பு மனப்பான்மையும் உணர்ச்சிப்போக்கைச் சமாளிப்பதும், இறுதியில் உளவியல் ரீதியான நோய்க்குரிய தொடர்பை மனநல மருத்துவர் நோயாளிக்கு விளக்கித் தருவதும் மன ஆய்வு மருத்துவத்தின் அடிப்படையாக அமைகின்றன. ஒரு வகையில் இந்த மன ஆய்வு மருத்துவத்தின் குறிக்கோள் என்னவென்றால் பிரச்சனைகளோடு வருபவரின் ஆளுமையை உறுதிப்படுத்துவதற்காக அவருடைய செயல்கள் உண்மைக் கொள்கையின் (Reality Principle) அடிப்படையில் அமையும் பொருட்டு, 86ötuds 685moirs035uslot (Pleasure principle) elig LIGOLu36 si6OLDumpsog(Big) நிறுத்தும் படியாக ஆழ்மனதில் உள்ளவற்றை வெளிமனதுக்கு கொண்டு வருவதுமாகும்.
‘நான்’ உளவியல் சஞ்சிகைக்கு பல ஆக்கங்களைப் படை த்து அனுப்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு எங்க ளுடைய நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள் கிறோம். மேலும் உங்கள் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம். இனிவரும் காலங்களிலும் உங்க ளுடைய ஆக்கங்களை உரிய காலத்தில் எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி ‘நான்’உங்களிடம் வேண்டி நிற்கின்றேன்
605 - Lurig56,of 2010

Page 6
தன்நம்பிக்கை ஒரு சவால்
ம. பற்றிக் பிரசாந் அமதி
நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கை இல்லாத வாழ்க்கை முதுகெலும்பு முறிந்தது போன்றது. எவன் ஒருவன் தன்நம்பிக்கையை இழக்கின்றானோ அல்லது எவனுக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவன் நாத்தீகன். மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்தீகன் என்று சொல்கின்றன. ஆனால் நவீன உளவியல் “தன்நம்பிக்கை” இல்லாதவனை நாத்தீகன் என்கின்றது. நம்பிக்கை - வாழ்வு இரண்டுமே ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. நம்பிக்கையோடு செயற்பட்டால் வெற்றி நிச்சயம் நம்பிக்கை இழந்தால் தோல்விதான் மிச்சம்.
ஒருவன் தான் “எதிர்பார்த்தது நடக்கவில்லை” என்பனாகில் அவன் அக்காரி யத்தில் தன்நம்பிக்கையோடு செயற்படவில்லை என்றுதான் பொருள். நம்பிக்கை இன்னொருவரிடமிருந்து கடன் வாங்குவது அல்ல. நம்பிக்கை ஒரு மனிதனின் உள்ளகச் செயற்பாடு. அது அவனுக்குள் இருந்துதான் எழுகின்றது. என்னால் ஒரு காரியத்தை செய்ய முடியும் என்றுநான்நம்பவில்லையானால் நான் அக்காரியத்தை தட்டிக்கழிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். மற்றவர்கள் குறை கூறுவார்கள் என்பதற்காக எப்படி நான் என்னுடைய நம்பிக்கையை இழக்க முடியும். நான் தட்டிக் கழிக்கும் ஒவ்வொரு காரியமும் நம்பிக்கையை இழக்கும் சந்தர்ப்பம்தான்.
நம்பிக்கை ஒரு சவால், சவாலை எதிர்கொள்ளநான் தயாராக இருக்க வேண்டும். வெறுமையின் பாதையில் செல்வதைவிட நம்பிக்கை கொள்வதே மேல், “என்னால் முடியும்’ என்று நான் கூறும்போது, அது நான் மேற்கொள்ளப் போகும் காரியத்தில் அரைவாசி முடிவுற்றதற்கு சமனாகும். செய்ய முடியாது என்று சொல்வதற்கு ஒன்று மில்லை, ஆனால் எம்முடைய நம்பிக்கையீனத்தால் எம்மால் பலகாரியங்களைச் செய்ய முடியாமல் உள்ளது.
சமுதாயம் ஆயிரம் சொல்லட்டும் நீ உன்னை நம்பு உன்மேல் நீ நம்பிக்கை கொள். நீநினைப்பதை சாதிக்க முடியும் என்று நீநம்பு. உன்நம்பிக்கை கைகூடும். உனக்கு உறுதிதானாக வரும்.
ஒரு முறை சீடன் ஒருவன் கடல் மேல் நடக்க ஆசைப்பட்டான். தன் குருவிடம் சென்று அதைத் தெரிவித்தான். குரு அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் எப்படி கடல் மேல் நடப்பது? கடல் மேல் நடக்க முடியுமா? என்ற கேள்விகள் அவனுக்குள் எழுந்தன. ஆனால் குரு எதையோஒருதுணியில் முடிந்து கொடுத்து"இதன் சக்தியால் நீகடல்மேல்நடக்கலாம்” என்றார். சீடன் அந்த நம்பிக்கையில்கடல்மேல்நடந்தான். நடுக்கடலில் அவன் ஆச்சரிய மேலீட்டால் முடிச்சுக்குள் இருப்பது என்வென்று பார்க்க ஆசைப்பட்டான். கடல் மேல்நடக்குமளவுக்கு எனக்கு சக்தியைக் கொடுத்தது எது என்ற
O8 தை - பங்குனி 2010
 
 
 

ஆவலோடு துணியை அவிழ்த்தான் என்ன ஆச்சரியம் ஒரு சிறிய செங்கல் கட்டி தான் இருந்தது. “இதுவா என்னை கடல் மேல் நடக்கச் செய்தது!’ அந்தக் கணமே தண்ணில் மூழ்கினான்.
நம்பினால் “கல்’ என்ன, “கடுகைக்” கொண்டு கூட பெரிய காரியங்களைச் சாதிக்கலாம். நம்பிக்கை இழந்தால் கடுகு கறிக்கு மட்டும்தான். தன்நம்பிக்கை எப்போதும் ஒருவனுடைய சுயமதிப்பை உயர்த்துகின்றது. சவால்களை சந்திக்க தயார்ப்படுத்துகின்றது. வெற்றியை ஈட்டித்தருகின்றது. அழிவு வரக் காரணம் ஒருவன் நம்பிக்கையை இழப்பதுதான். இவனைநம்புஅவனைநம்புஎன்றில்லாமல் என்னை நான் நம்ப வேண்டும். என்னை நான் நம்பவில்லை என்றால் எப்படி நான் மற்றவர்களை நம்ப முடியும்? கடவுளை நம்ப முடியும்?
இன்றைய சமுதாயம் ஒரு நம்ப மறுக்கும் சமுதாயம். தன்னையும் நம்பாமல், பிறரையும் நம்பாமல், கடவுளையும் நம்பாமல் வாழும் ஒரு அழிகின்ற சமுதாயத்தில் தான் நாமும் அழிந்து கொண்டு வாழ்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது.
தன்நம்பிக்கை இருந்தால் மலையைக் கூட பெயர்க்கும் அளவுக்கு எமக்கு பலம் இருக்கும். நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் நாங்கள் பலவீனர்களாகவே இருப்போம்.
நம்முடைய இன்றைய சமுதாயத்தில் தன்நம்பிக்கை உள்ள மனிதர்கள் மிகக் குறைவாகவே வாழ்கின்றார்கள். இதனால்தான் எம்மிடையே சிறந்த, நல்ல தலைமைத்துவம் இல்லை. மற்றவரைப் பார்த்து “நீ ஒரு சிறந்ததலைவன் இல்லை” என்றுமுறையிடுவதைவிடுத்து, நீஏன் ஒரு சிறந்த தலைவனாக உருவாக முடியாது? அப்படி நீ வரவேண்டும் என்றால் உன்னிடம் நிறையவே தன்நம்பிக்கை இருக்க வேண்டும். தன்நம்பிக்கை இல்லாமல் தலைவனாக முடியாது.
பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதற்கு பக்குவமும் தன்நம்பிக்கையும் இல்லை என்றால், எமக்குத் தரப்படுகின்ற பொறுப்புக்களை தட்டிக் கழிப்பதோடு மட்டுமல்லா மல், மற்றவர்கள் செய்யும் காரியங்களில் குறைகண்டு பிடிப்பதையே வழக்கமாக கொள்ளவேண்டி ஏற்படும். தன்நம்பிக்கை இல்லையானால் நம்மை பலவித அவநம் பிக்கைகள் சூழ்ந்து கொள்ளும். மனமுடைவு, குழப்பம், மந்த சிந்தனை, மனவழுத் தம், தாழ்வுமனப்பான்மை, நேர்மையற்றதன்மை, புறங்கூறுதல், பொறாமைப்படல் போன்ற உளத்தாக்கங்கள் தன்நம்பிக்கை குறைவால் ஏற்படுகின்றன.
தன்நம்பிக்கை (selfconfidence)தான் வாழ்க்கையின் உந்துசக்தி, அது இல்லை என்றால் வாழ்க்கையை நகர்த்த முடியாது. தன்நம்பிக்கை இல்லாத வாழ்க்கை நடைபிணவாழ்க்கைபோன்றது.“மெல்ல இனிநாம்தன்நம்பிக்கையை வளப்போம்”
தை - பங்குனி 2010 O9.

Page 7
இளவயதுக் கர்ப்பமும் கரு அழிப்பும்
முநி.கஜேந்திரன் (Dip.in.Coun.Psy.Ireland) (Dip.in Psy)
முன்வாலிபப்பருவத்தில் வயதுக்கோளாறினால் காதல் வசப்படல், பருவ இன்பம் போன்றஅனுபவங்கள்எல்லோருக்கும்இருக்கும்.மனிதனில்உள்ளஹோர்மோன்களின் உயிரியல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் ஓர் இனம்புரியாத உள்ளக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவதன் மூலம் இளம் தலைமுறையினர் செய்வதறியாது தத்தளிக் கின்றனர். இதனால் ஏற்படும் ஓர் வித்தியாசமான கவர்ச்சிஉந்துதலை “காதல்’ என எண்ணி அதற்கு “அன்பு” என்ற உயர் மதிப்பினைக் கொடுத்து தன்னையும், தன் வாழ்வினையும் இழக்கின்றனர்.
அன்புஎன்றஒர் ஈர்ப்பினைபின்வருமாறு பிரித்தும் பார்க்கலாம்.
• சாதாரணமோகம் கவர்ச்சி மோகம்
உண்மை அன்பின் பரிமாணம்
• பால் உறவில் ஈடுபாட்டுணர்வு (உடல் இச்சைகள்) உண்மையான அன்பினை சரியாக அடையாளம் கண்டுகொள்பவர்கள் சிலரே.
இவ்வாறான உளக் கிளர்ச்சியினால் ே
பல வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அதில் இளவயதுக் கர்ப்பமும் ஒரு வகையாகும்.
ஆய்வு இல்லா அன்பில் ஆபத்து அதிகம்
இளவயதுக் கர்ப்பமானது 14-21 வயதுக்கிடைப்பட்டவர்களிடையே ஏற்படுகிறது.
இக்கர்ப்பமானது எதிர்பார்த்து அல்லது எதிர்பாராது ஏற்படுவதாகும். நிர்ப்பந்தமாக
தாய்மைநிலைக்குத்தள்ளப்படல். இவ்வாறான கர்ப்பத்தினால் உடலியல், உளவியல்
தன் ॐ O தை- பங்குனி 2O1Ο
 
 

ரீதியானதாக்கங்கள்ஏற்படுவதோடு இதன் மூலம் தனிநபர், குடும்பம், சமூகம் போன்றவை பாதிக்கப்படு வதுடன் தவறான பார்வைகளும், பல விமர்சனங்களும் ஏற்படுவ தால், பாதிக்கப்பட்டநபர்மதிப்பிழக் கப்பட்டுஒதுக்கிவைக்கப்படுகிறார்.
இதன் காரணமாககுடும்பப்பிரிவு, உளவியல் தாக்கங்கள், தற்கொலை என்பன ஏற்படுகின்றன. இவ்வாறான துஷ்பிர யோகங்கள் நம்பகுதியில் அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனாலும் கண்ணுக்கு தெரியும் சம்பவங்கள் சிலவே. இச் செயற்பாடுகளினால் நாம் பேணிப்பாது காத்த கலாச்சாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது. இச்சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. மேலும் இச்சம்பவங்களை உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது மக்களின் கடமையாகும். இதற்கான உரியநடவடிக்கைகளினை மேற்கொண்டு சரியானதும், நீதியானதுமானபதில்வழங்க வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையாகும்.
இளவயதுக் கர்ப்பமானது இரண்டு வகையாக ஏற்படுகின்றது.
(1) இளவயதுத் திருமணம் (2) தவறான வழிகளில் ஏற்படுவது
இவ்வாறான கர்ப்பத்தினால் தாய் - குழந்தை ஆபத்தான நிலைக்கு தள்ளப் படுகின்றார்கள். தாய் கர்ப்பத்தை தாங்கும் வகையில் பூரண வளர்ச்சியடையாமல் (முதிர்ச்சிஅடையாதபருவநிலை, கர்ப்பகாலகுருதிச்சோகை, குருதியமுக்கம், நீரிழிவு நோய்களின் தாக்கங்கள், பாலியல் நோய்கள், உளவியல் தாக்கங்கள், தற்கொலை என்பனஏற்படுவதோடு பிரசவத்தின்போதுமரணத்திற்கான வாய்ப்பு இரண்டுமடங்காக அதிகரிக்கச் சந்தர்ப்பம் உண்டு (சாப்பிரசவம்). மேலும் தாயின் பிறப்புக் கால்வாய் இடுப்புஎலும்புபோதிய வளர்ச்சியடையாதிருப்பதால்நீண்டநேர பிரசவ வேதனையும், பிரசவம் தடைப்படலும் ஏற்படுவதுடன் சத்திர சிகிச்சையும் கடினமாகக் காணப்படு கின்றது.
பிறக்கும் குழந்தையானது நிறைகுறைந்து காணப்படுவதுடன் குழந்தை பின்னாளில் உயர் குருதியமுக்கம், அங்கவீனமான, குறைபாடுடைய குழந்தைகளா கவும், பாலியல் நோய்கள் ஏற்பட்ட குழந்தைகளாகவும், முதிராத குழந்தைகளாகவும் இருப்பதுடன் சிசுமரணங்களும் அதிகரித்துக் காணப்படும்.
இளவயதுத் திருமணம் செய்வோருக்கு குடும்பச் சூழல், வாழ்க்கை முறைகள் பற்றிய தெளிவின்மை, கர்ப்பம் தரிக்கும் காலஅளவு, கருத்தடை முறைகள்,
தை - பங்குனி 2010 辑

Page 8
பொருளாதார சிக்கல்கள், குழந் தைகளை பராமரிக்கும் முறைகள் தெரியாமை, இவற்றினால் மன உளச்சலுக்கு ஆளாகி வீணான குடும்ப முரண்பாடுகள், குடும்ப பிரிவுகள், பல்வேறு வகையான உளவியல் தாக்கங்களும் ஏற்படு கின்றன.
தவறான வழிகளில் ஏற்படும் கர்ப்பமானது பாலியல் துஷ்பிரயோகம், உணர்வுகளுக்கு அடிமையாதல். கருத்தடை பற்றிய அறிவின்மை, பாலியல் உறவு பற்றிய அறிவின்மையும் அதன் விளைவுகள் தெரியாமையும் ஆகும். பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமை இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு எல்லாம் பிரதான காரணமாகிறது.
இக்கர்ப்பத்தினால் மனக் கலக்கம், தடுமாற்றம், ஆதரவற்ற நிலை ஏற்படல், குடும்பம், சமூகத்தினால் ஒதுக்கப்படல், தற்கொலை, உளவியல் தாக்கங்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறான கர்ப்பத்திற்கான காரணங்களும், தூண்டல் காரணங்களும்
)ெ காதல் திருமணங்கள் இளவயதுத் திருமணம்)
இருபாலரிடமும் காணப்படும் நெருக்கமான பழக்கங்கள் கருத்தடை பற்றிய அறிவின்மை தவறான உறவுமுறைகள் பாலியல் உறவு பற்றிய அறிவின்மை கர்ப்பத்தை எதிர்பாராதநிலை திருமணத்துக்கு முந்திய பாலியல் தொடர்பு ஆபாசப் படங்கள் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய சினிமாப் படங்கள் தனிமையாக இருத்தல் சூழல் காரணிகள், வறுமை அதீத தொலைபேசி பாவனைகள் ஆரோக்கியமான பொழுதுபோக்கு வசதிகளின்மை உரிய காலத்துக்கு முன் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகுதல்
মল্লািষ্ট ।
தொடரும் .
2. தை - பங்குனி 2010
 
 

கட்டினமைப் பருவத்தினருக்த பாலியல் கல்வியின் நிவசியம்
கை.தவலதா, வவுனியா தேசியகல்வியல் கல்லூரி, 6) I6)6Oful IIT.
பிள்ளைப் பருவத்திற்கும் முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட ஒரு பாலமாக அமைந்து காணப்படும் பருவம், கட்டிளமைப் பருவமாகும். இப்பருவம் ஏறக்குறைய பதினொன் றிற்கும் பதின்நான்கிற்கும் இடைப்பட்ட வயதில் ஆரம்பித்து பதினெட்டிற்கும் இருபத்து ஒன்றிற்கும் இடைப்பட்ட வயதில் முடிவடையும். ஒருவரின் வாழ்க்கையில் பெரும்பா லும் நிச்சயமற்ற காலகட்டமென இப்பருவத்தினை சொல்லலாம். “பிள்ளைகளது உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூகம் என்பன சார்ந்த அடிப்படையில் பிள்ளைப் பருவத்திற்கும் வயது முதிர்ந்தோர் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப் பருவம்” என ATஜர்சில்ஸ் குறிப்பிடுகிறார்.
உடலியல் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் மனவெழுச்சி தாக்கங்கள் காரணமாக இப்பருவம் நெருக்கிடை நிறைந்த, தவிர்க்க முடியாத ஒரு பருவம் என கருதப்படுகிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடு, வாக்குவாதம் ஏற்படுகின்ற பருவமாக இது கருதப்படுகின்றது. இதற்கு காரணம் உடல் உளம் என்பவற்றில் ஏற்படும் திடீர் மாற்றமேயாகும். சடுதியான அளவுக்கு மீறிய கை கால் வளர்ச்சி, துணைப் பாலியற் பண்புகளின் வளர்ச்சி ஆகியன அவர்களின் உறுதியற்ற மனவெழுச்சிக்கு காரணமாகும்.
கட்டிளைஞரின் பாலியல் முதிர்ச்சியே அவர்கள் தம்மைப் பற்றிக் கொள்ளும் மனப்பான்மைக்கு ஆதாரமானதாகக் காணப்படுகிறது. பாலுறுப்புக்களின் விரைவான வளர்ச்சி காரணமாக குழப்ப நிலையும் பதகளிப்பும் உண்டாகும். காமக்கிளர்ச்சி தொடர்பான கனவுகள்கவலைகொடுக்கும். குழந்தைப்பருவத்தில்தன்னை மையமாக கொண்ட பிள்ளை பின்புதன் பெற்றோரிடமும் அன்பு செலுத்தி அப்பருவ இறுதியில் உறவினர், தோழர் ஆகியோரிடம் செலுத்தும் அன்பு பல திசைகளிலும் பரவுகிறது.
ஆளுமை வளர்ச்சிக் கோட்பாடுகளின்படி ஒருவன் கட்டிளமை பருவ இறுதியில் அந்த அன்பு எதிர்ப்பாலார் காதலாக மாறி வாழ்க்கை துணையை தெரிவு செய்து தன்னை அர்ப்பணிக்கும் அளவுக்கு வலுப் பெறுகிறது.
தை - பங்குனி 2010 3.

Page 9
பாலியல் சம்பந்தமான விடயங்களைக் கட்டிளமைப் பருவத்தினர் அறிய வேண்டியது அவசியமாகும் ஏனெனில் பாடசாலை மாணவர்களில் அதிகமான சதவீதத்தினர் கட்டிளமைப் பருவத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள் இக்கால கட்டத்தில் உடல் மனவெழுச்சி, சமூகம் எனும் அடிப்படையிலான மாற்றங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். அவற்றுக்கு முகம் கொடுத்து மாற்றங்கள் தொடர்பான மூட நம்பிக்கைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கட்டிளைஞர்களுக்கு பாலியல் தொடர்பான விளக்கம் அவசியமானது. பால்நிலை சார்ந்த மாற்றங்கள் யாவும் இயற்கையானவையே என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அறிவும் திறன்களும் மேம்பட வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளும் மனம் விட்டுப் பேசி முடிவுகளை எடுக்க வேண்டும். மாறாக பெற்றோர் கட்டளை இடும் அதிகாரிகளாக இருக்காது, உற்ற நண்பர்களாகவும் ஆலோசகர் களாகவும் நின்று தமது பிள்ளைகளுக்கு வீட்டிலேயே பாலியற் கல்வி பற்றிய தெளிவான விளக்கத்தினை வழங்க வேண்டும். அவ்வாறே ஆசிரியரும் கட்டிளைஞ ரின் சுதந்திர உணர்வுக்கு ஏற்ற வகையில் மாணவருடன் அன்புடன் பழகி தமக்கு பொருத்தமான நடத்தை ஒழுங்குகளை வரையறுத்துக் கொள்ளலாம். பாலியற் கல்வியை, சரியான முறையில், கல்விமூலம் வழங்குவது சிறந்தது.
ஆசிரியர்கள் தண்டனையை விடுத்து சுய கட்டுப்பாட்டினால் ஒழுக்கம் பிரச்சினைகளைதீர்க்க வேண்டும். மாணவருடன் சேர்ந்து பாட விடயங்களை தெரிவு செய்தல், வேலைகளை திட்டமிடல், சுதந்திர சிந்தனை, ஆக்க சிந்தனை முதலியவற் றில் ஈடுபடல் வேண்டும். பாடசாலையில் பாலியற் கல்வி, உயிரியல், மனையியல், சனத்தொகையியல், சுகாதாரம், உடற்கல்வி முதலியன மூலம் பாலியற் கல்வியை வழங்கலாம், அதுமட்டுமன்றி குழுமுறை வழிகாட்டல், கருத்தரங்குகள், செயற்றிட்டங் கள் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் பாலியல் பற்றிய பொருத்தப்பாட்டை மாணவர்களுக்கு வழங்கலாம்.
கட்டிளமைப் பருவத்தினருக்கு பாலியற் கல்வி தொடர்பான தெளிவான விளக்கத்தை அளித்து அவர்களின் சுய கணிப்பை அதிகரிப்பதன் மூலமும்தியானப் பயிற்சி வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கீடுகளை கையாளக் கூடியதாக இருக்கும்.
உசாத்துணை: 1. கல்வியும் உளவியலும் S.முத்துலிங்கம் பகுதி-1 (2002). 2. வித்தியாதீபம் (சஞ்சிகை) பே, மேரி நிறோஜினி 2008
4. தை - பங்குனி 2010
 

இளையோர் கானுைம் சமுதாயத்தை
படைப்பதற்கு ஊக்குவிப்பதன் முலம் அவர்களின் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்!
சண்முகலிங்கம் சதீஸ் (BBA (Hons) HR Spl): H.N.Dip. Acc, Dip. Couns.Psy. Iraland) சிறுவர் நன்னடத்தை அலுவலர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்
இன்று எமது தேசத்தில் சமூக, பொருளாதார, அரசியல் என்ற பல்வேறு துறை களிலும் உருவான மாற்றங்களால் சமூக கட்டமைப்பு மாற்றம், அநீதிகள், ஏழ்மை, சமூகரீதியிலானஏற்றத்தாழ்வு, சாதிவெறி, சமயரீதியிலான பாராபட்சங்கள், அடிப்படை உரிமை மறுப்பு,போலித்தனங்கள் போன்றஈனச்செயல்கள் கண்டுபொறுக்கமுடியாத இன்றைய கட்டிளமைப் பருவத்தினர் கொதித்தெழுகின்றனர். சமூக வாழ்வில் அர்த்தங்காணத் துடிக்கின்றனர். நான் யார்?, நான் என்ன செய்கிறேன்? நான் ஏன் வாழ்கிறேன்? என் வாழ்வின் பொருள் (அர்த்தம் என்ன? என்ற பல கேள்விகளின் மேல் கேள்விகளை கேட்டு விடைதேட முயற்சிக்கின்றனர். இதனால் முழு உலகத்தையும் நடுங்க வைக்கும் வகையில் செயல்படுகின்றனர். இதன்மூலம் சமூக மட்டத்தில் தோன்றுகின்ற போலி முகமூடிகளையும் பொய் வேசங்களையும் கிழித்தெறிய துணிகின்றனர். சில சந்தர்ப்பங்களில் இவற்றினில் உள்ள புதிர்களுக்கு விடை புரியாதவர்களாய் விரக்தியின் விளிம்பில் நின்று சமூக நியமங்களுக்கும் ஒழுக்க விதிமுறைகளுக்கும் அப்பால் சென்று தற்கொலை முயற்சி, தனிமையை நாடல், மது போதைக்கு அடிமையாதல், காம வெறிபிடித்தவராதல், மற்றவர்களின் மீது தங்கியிருத்தல் போன்றவற்றை மேற்கொள்ள துணிகின்றனர். சிலர் தட்டிக்கேட்க முயல்கின்றனர். விடைதேட வேட்கை கொள்கின்றனர். இவ்வகையான செயல்கண்டு அதன் ஆழத்தை தேடிப்பார்ப்போமேயானால் சமுதாய இடைவெளி அகற்றி மனிதவாழ்வியலில் உள்ள போலித்தனங்களையும் பொய் மாயைகளையும் ஓரங்கட்டி வாழ்வியலின் மதிப்பீடுகளை மேற்கொண்டு சமூக ஓட்டத்தின் பொருள் தேடவும் மனித உறவுகளை ஆழப்படுத்தவும் இவ்விளையோர்துடிக்கின்றனர் என்பது வெளிச்சமாகின்றது.
தை - பங்குனி 2010 非5

Page 10
உண்மையிலேயே இளமை என்பது சிக்கல்களும் சவால்களும் நிறைந்த பருவமாகும். நெருக்கீடுகளும் உளக் கொந்தளிப்புக்களும் மிக்கது. வாழ்க்கையை வாழ்வாங்குவாழவீரத்துடன் சவால்விடும்காலமாகும். இதனால்தான்தியோடர்லிம்ஸ் எனும் உளவியலாளர் கூறும்போது “இளமை என்பது தேடல்கள் நிறைந்த பருவம்” என்கின்றார். இப்பருவத்தினரைநல்ல முறையில்வழிகாட்டி குழந்தைகள் போலன்றி அவர்களது உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பளித்து அவர்தம் வளர்ச்சி, மகிழ்ச்சி, உயர்ச்சியில் பெற்றோர்களும் பெரியோர்களும் முன்னின்று உழைக்க வேண்டும். அவர்களது தேவைகள், விருப்பங்கள், ஆசைகளை மதித்து ஏற்றுக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் தம் திறனாய்வுச் சிந்தனை களையும் (Critical thinking)கடந்தகால அனுபவங்களையும் மூலதனமாக கொண்டு பிரச்சனைகளை சவால்களாக ஏற்று தீர்க்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமது வாழ்வியலின் அர்த்தத்தை கண்டறிந்து துன்பங்கள், துயரமான சந்தர்ப்பங்கள், கரடுமுரடும் பள்ளமும் பிட்டியும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தின் 96rlTes வாழ்வின் பொருள்தேடவும் அதன் மூலம் தமக்கு இசைவான தெரிவுகளை மேற்கொள்ளவும் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.
இளையோர்கள் சுதந்திரமும் பொறுப்பும் மிக்கவர்கள். தமது வாழ்வின் அடையாளத்தை காணக்கூடியவர்கள் என்கின்றனர் இருப்பியல் வாதிகள் அதாவது தமது தெரிவுக்கும் அதனால் மேற்கொள்ளும் நடத்தைமாற்றத்துக்கும் அவர்கள்தான் பொறுப்பாளிகள். அதாவது இவ் இளையோர்கள்தான் அவரவர் வாழ்வின் ஆசிரியர் கள். எனவே இளையோர்களை பெற்றோர் மற்றும் பெரியோர்களின் தலையீட்டினா லும் சுதந்திரமான வாழ்வியலின் தெரிவுக்குதடையாக அமைவதும் இவர்கள்“சகுனம் சரியில்லை” “விதி செய்த சதி”, “மொட்டைத்தலையில் விழித்தால் செய்கின்ற காரியம்மும் “செவ்வாய் வெறுவாய்”, “கறுத்தப் பூனை குறுக்கால போனால் செய்காரியம் கைகூடாது’ என்றபிற்போக்கான வசனம் பேசிதமது தெரிவுகளுக்கான விளைவுகளை பொறுப்பெடுக்காது தட்டிக்கழிப்பதை தவிர்த்து, சுதந்திரமான தமது தெரிவுக்கான விளைவை ஏற்க முன்வர செய்யவேண்டும். இதன்போதுதான் தமது வாழ்வியலின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். இதனால்தான் எபிற்றேற்றஸ் எனும் இருப்பியலாளர் கூறும்போது “ஒரு நிகழ்வு நிகழும்போது அந்நிகழ்வு அவனுக்கு பிரச்சனையாக இருக்காது, அதற்கு மனிதன் கொடுக்கும் தீர்ப்புத்தான் அவனை பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது” என்கின்றார். அதாவது இளையோர்கள் ஒரு நிகழ்வுக்குமுகம் கொடுக்கும்போது அந்தநிகழ்வைநிகழ்வாக எடுக்கவேண்டுமே அல்லாமல் அந்த நிகழ்வுக்கு அர்த்தம் கற்பிக்கக்கூடாது. ஏனெனில் மனிதன் sig5iSuLDIT60T Sg|T600s (Man is a free being). e56060TLDIriplusOLDigbé.66)6(OLDub அவனிடத்தேயே உள்ளது என்பதை இளையோர் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் என்னவோமுன்னோர்கள்"விதியை மதியால்வெல்லலாம்”
16 தை - பங்குனி 2010
 

என்று கூறி வைத்துள்ளனர். இவற்றை சரியான முறையில் விளங்கிக் கொள்ள தவறும்போது இளையோர் பல்வேறு உளவியல்சார் நெருக்கடிகளுக்கு உட்படுகின் றனர். ஈற்றில் இவை பல்வேறுவிதமான உடல் நோய்களை தோற்றுவிக்கின்றன. குருதி அமுக்கம், அஸ்மா, நீரிழிவு, அல்சர் போன்றவை) எனவே இவ்விளையோர் சமூகத்தினர்வாழ்வின் அர்த்தத்தையும் மதிப்பீடுகளையும் சரியான முறையில் புரிந்து
செயற்படுவதன் மூலம் உளநலம் மிக்கவராகவும் நிலைபேறான மனிதவளமாகவும்
நாட்டினை கட்டி எழுப்பும் பலம் பொருந்திய தூண்களாகவும் இருக்க முடியும். எனவே
எதையும் யதார்த்தமானநிலையில் நின்று பார்ப்பதற்கும் திறனாய்வு சிந்தனைகளை
மேற்கொண்டு தீர்மானம் எடுப்பதற்கும் பெற்றோர் இவர்களை சிறுபராயம் முதலே
* うう Q%
பழக்கப்படுத்த வேண்டும். “ஏன்”, “எதற்கு’, ‘எப்படி” என்ற காரண விளைவு
கோட்பாடின் வழியில் (Course and effect Theory) அறிவார்ந்த முறையில் சிந்தித்து
அவ்விடையத்துக்கோ அன்றேல் நிகழ்வுக்கோவிடைகாண ஊக்குவிக்க வேண்டும். மாறாக மூடக்கொள்கைகளையும், அர்த்தமற்ற நம்பிக்கைகளையும், பழமைவாதங் களையும், பிற்போக்கான சிந்தனைகளையும் இவ் விளையோர்மனதில் விதை ப்பதன் மூலம் இவ்விளை யோர் ஆளுமை வளர்ச் சியை மழுங்கடிக்க பெற் றோர்துணைபோகக்கூடாது. இதனால் பல்வேறு பிரச்ச
னைகளுக்கு (p5LD
கொடுத்து இறுதியில்தானே
பிரச்சினையின் ஊற்றாகி,
மன நோயாளியாகிவிட பெற்றோர் காரணமாகிவிடுகின்றனர். இதனால்தான் (Nietche) “நீற்சே” எனும் இருப்பியலாளர் கூறும்போது “ஏன்’ என்று எதற்கும் கேட்பவன் எதையும் தாங்கி வாழக் கூடியவன் என்கின்றார். இது இளையோர்க்கும் விதிவிலக்கல்ல.
அந்தவகையில் இளையோர் தமது வாழ்வின் அர்த்தம் கண்டு செயற்பட
பின்வரும் ஆறு விடயங்களை மனதில் கொண்டு செயற்படவேண்டும்.
1. இளையோர் தன்னிலை உணரும் திறன் பெற்று (SelfawareneSS) செயற்பட
வேண்டும். அதாவது ஒரு விடயம் நிகழும்போது அதனை நாம் எவ்வாறு
எடுத்துக்கொள்கின்றோம் என்கின்ற நிலையை குறிக்கும். சில இளையோர் ஒரு பொருளை அல்லது விடயத்தை நேர்ச்சாதகமாகவும் (Positive thinking) சிலர்
தை - பங்குனி 2010 7

Page 11
அதனை எதிர்மறையாகவும் (Negatively) எடுத்துக்கொள்கின்றனர். உண்மையில் எல்லாவற்றையும் நேராக நோக்கவேண்டும்.
இதன்மூலமே அவர்கள் வாழ்வில் அர்த்தம் மேற்கொள்ளவும் இயலும். இவ் விளையோர்கள் தனிமை, குற்றம், குற்றப்பழி, வெறுமை அர்த்தமற்ற நிலைக்கு அப்பால் நின்று நாம் தனித்துவமானவர்கள், எமக்கும் மற்றவர்களும் தொடர்பு கொள்ளும் ஆற்றல் உள்ளது என்ற அடிப்படையில் செயற்படவும், அர்த்தம் என்பது இயல்பான ஒன்று அல்ல, பலதேடல்களாலும் கண்டுபிடிப்புக்களாலும் முற்போக்கான சிந்தனை உணர்வுகளாலும் அடைய வேண்டிய ஒன்று என்ற நோக்கிலும் பொறுப்புடமையுடன் (Accountability) தனது வாழ்வின் தெரிவுகளை மேற்கொண்டு, அதனால் ஏற்படும் விளைவுகளை ஏற்றுக்கொண்டு செயற்படவும் இளையோருக்கு இந்த தன்னிலை உணரும் திறன் அவசியமாகின்றது.
2. இளையோர்கள் சுதந்திரமும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும். தமது வாழ்வின் இலக்கை அடைய பல தெரிவுகளை இவர்கள் நாளாந்தம் மேற்கொள்கின்றனர். இந்தத் தெரிவுகள்தான் அவர்களை உருவாக்குகின்றது. அத்துடன் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதும் இத்தெரிவுகளால் தான். இவர்களுக்கு இவைகளை தெரிவு செய்ய சுதந்திரம் இருப்பதால்தான் இளையோர் தமது வாழ்வை நல்ல முறையில் ஏற்று பொறுப்புடன் செயற்பட தூண்டப்படுகின்றனர்.
சிலர் அர்த்தமற்ற விளக்கங்களாலும் மூட நம்பிக்கைகளாலும் வாழ்வின் பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்காது தேவையற்ற நொண்டிச்சாட்டுகள் கூறி தப்பித்துக்கொள்ள முயலாது “வாழ்வு என்பது அர்ப்பணிப்பு மிக்கது’ என்ற கூற்றுக்கிணங்கி வாழ்வாங்கு வாழ இளையோர் முன்வரவேண்டும். இவ்வாழ்வே இவர்களை மகிழ்வாக்குகின்றது. இது அவர்களால் உருவாக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய வாழ்வியலின் தெரிவுகளால் உருவாகின்றது.
3. மற்றவர்களை அடையாளம் காணுதலும் இடைவெளி அற்ற தெளிவான தொடர்பாடலை பேணுதலும் இளையோர் வாழ்வியலின் முன்னேற்றத்துக்கு அவசியமாகிறது. இந்த உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியும் தொடர்பாடலை தன்னிடையே வைத்துக் கொள்கின்றது. அந்தவகையில் மனிதவாழ்வின் மதிப்புமிக்கதும் நோய்தீர்க்கும் மருந்துமாகிய மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படையானது சிறந்த தெளிவான தொடர்பாடலாகும். இது தற்போது "வன்முறை (9pp. 65ITLiumL6' (Non Violent Communication) 6T6örp gui 6LJurishessT6ioTG காணப்படுகின்றது. ஏனெனில் மனிதன் ஒரு சமூகப்பிராணி, அவன் எப்போதும் இயங்குகின்றான், எதிர்த்தியங்குகின்றான், பரஸ்பரம் இயங்குகின்றான். அந்த வகையில் இளையோரும் தமது எண்ணங்கள், உணர்வுகள், சிந்தனைகள்,
8 தை - பங்குனி 2010
 

ஆசைகள், விருப்புவெறுப்புக்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளுகின்றனர்அவ்வாறே இளையோர் பொதுவிடயங்களில் நாட்டம் கொள்ளவும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் சமூக அழுத்தத்தை குறைத்துக்கொள்ளவும், வெளிப்படையிலான தொடர்பாடல் அவசியமாகின்றது. அந்தவகையில் இளையோர்கள் தம்மை மற்றவர்களுக்கு கொடுக்க முன்வர வேண்டும். தனிமை என்பது இயற்கையுடனும் மற்றவர்களுடனும் உள்ள தொடர்பை அறுத்தலால்வரும் விளைவு. இதனைதவிர்த்து இளையோர் நாம் நாமாக வாழ வேண்டுமானால் தைரியம் தேவை. அப்படி இல்லாவிட்டால் வெறுமையும் முகமூடிபோட்ட மனிதர்களாகவுமே உலாவவேண்டி ஏற்படும். எனவே இதனைகளைந்து வாழ்வின் பொருள்கண்டு செயற்பட இடைவெளி அற்ற தெளிவான தொடர்பாடல் அவசியமாகின்றது.
4. வாழ்வின் அர்த்தத்தை தேட இன்றைய இளையோர் துடிக்கின்றனர். மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஓர் இலட்சியம் இருக்கும். அந்தவகையில் இளையோர்கள் “நான் இருக்கிறேன், நான் என்ன செய்யப்போகின்றேன்? எனது வாழ்வின் இலக்கு என்ன?’போன்றதன் வாழ்வின் அர்த்தத்தின் வளம்சார்கேள்விகள் அவரது வாழ்வியலில் எழுகின்றது. எனவே இளையோர்களது வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோர்களினதும் அவர்கள் வாழும் சமுதாயத்தினதும் தார்மீக பொறுப்பாகும்.
5. இளையோர் வாழ்வியலில் பதகழிப்பு மிக்க நிலை என்பது ஒரு நிபந்தனை ஆகிறது. (StreSSAnxiety) இது இருப்பதன்மூலம் இவர்கள் வாழ்வின் இலட்சியத்தை அடைய உந்தப்படுகின்றனர். இதனால் இப்பதகளிப்பு நிலை என்பது இவர்களுக்கு பயனுள்ள ஒன்றாக (Ideal Resources) மாறுகின்றது. இதனால் அதனை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இதன் உயர்நிலையோ அன்றேல் மிகக்குறைநிலை என்பதோ இளையோரின் வாழ்வியலின் இலட்சியத்தை நோக்கிய பயணத்துக்கு தடையாக அமையலாம். உயர்வான பதகளிப்பு நிலை என்பது சிலவேளை பல உளநோய்களுக்கு ஊற்றாகலாம். ஜெல்லோம் (clom) எனும் இருப்பியலாளரது கருத்துப்படி நடுத்தரமான பதகளிப்பு என்பது (Moderate StreSS) இருக்கும்போதுதான் இளையோர் அவர்களது வாழ்வியலின் பொருள் விளங்கி வாழவும் இழப்புக்கு முகங்கொடுக்கவும் முடியும் என்கின்றார். எனவே பதகளிப்பு என்பது மனித வாழ்வில் சாதாரணமானது. பொதுவாக தோன்றக்கூடியது. எனினும் இதன் அளவானது அவ்விளையோர்கள் மேற்கொள்ளும் சுதந்திரமான தெரிவில் தங்கியுள்ளது. ரோலோ மே (Rollo May) என்பவரது கருத்துப்படி “இளையோர் வாழ்வில் சுதந்திரமும் பதகளிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்” எனவே சவால்களை முகங்கொடுத்து சுதந்திரமான தெரிவுகளை மேற்கொள்வதன்மூலம் தன்னம்பிக்கையுடனும் பொறுப்புடமையுடன் கூடிய வாழ்வை வாழ இளையோர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
தை - பங்குனி 2010 19

Page 12
6. இளையோர் சாவு பற்றிய விழிப்புணர்வு கொண்டு செயற்படுதல் வேண்டும். இவ்வுலகில் பிறந்த உயிருள்ள எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒருநாள் சாவு என்பது நிச்சயமானது. எனவே சாவை இளையோர் எதிர்மறையாக நோக்காது இதனை வாழ்வின் அடிப்படை நிபந்தனையாக ஏற்றுக் கொள்வதன்மூலமே தமது வாழ்வின் அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். அதாவது வாழ்க்கைக் காலம் வரையறுக்கப்பட்டது. இதனால்தமது கடந்தகாலத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருப் பதன் மூலம் நிகழ்காலத்தில்தவறான தெரிவுகளை மேற்கொண்டு அதன் விளைவாக எதிர்காலத்தை பாதியிலேயே தொலைத்து விடாது:வாழும்நிகழ்காலம்பெறுமதியானது அதற்கு புது அர்த்தம் கொடுத்துவாழ வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்த இளையோர் தமது சாவு பற்றிய நிபந்த னையை முதலில் ஏற்றுக்கொள்ள வேண் டும். ஜெலோம் குறிப்பிடும்போது “சாவு பற்றிய விழிப்புணர்வானது வாழ்வை நன்றாக வாழவும் பலகாரியத்தை செய்யும் வல்லமை பெறவும் ஊற்றாகிறது. எனவே வாழ்வும் சாவும் ஒன்றில் ஒன்று தங்கி யுள்ளது” என்கின்றார். எனவே “சாவுக்கு அஞ்சுகின்றவன் வாழ்வதற்கு அஞ்சுகின் றான்” என்பதுதானே அர்த்தம்?
pഖങ്ങg :- O
இந்த வகையில் இன்றைய இளையோர் சமுதாயத்தில்தாம் இப்போதுவாழ்கின்ற வாழ்க்கை எப்படி அவர்களது தெரிவுகளை வரையறுக்கிறது!தமதுவாழ்வின் பொருள் தேடலுக்கு தடையாக உள்ளது என்பதை நன்கறிந்து தங்களது பலவீனமான அம்சங்களை அடையாளங்கண்டு, அதனை தமது பலத்தின் மூலம் இல்லாமல் செய்து தமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை முழுமையாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதன் மூலம் நிலைபேறான வளர்ச்சியை நோக்கி முன்னேறவும்:தமக்கு ஏற்படும் பதகளிப்புநிலையைக் கட்டுக்குள் கொணர்வதன் மூலம், அதனை மூலதன மாக்கித் தம் இருப்பியலின் உண்மைத்தன்மையை அடையாளப்படுத்தவும், தமது தொடர்புத்திறனை (Communication skis) வளர்ப்பதன் மூலம், பல தெரிவுகளில் (Choices) பொருத்தமானதை தெரிவு செய்து; அதன் மூலம் தமது வாழ்வியலை பெறுமதிமிக்கதாக அமைத்துக் கொள்ளவும், தேவையற்றவற்றைபகுப்பாய்வு செய்து வேறுபடுத்திப்பார்க்கவும், சாவுபற்றியவிழிப்புணர்வுடன் கூடியவாழ்வைவாழ்வாங்கு வாழக்கூடிய சூழலை அமைத்து வாழ இளையோர் சமுதாயம் முன்வர வேண்டும்.
தை - பங்குனி 2010
 
 

19து பாலுனையால்
குரும்பம், சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
செல்வி. ஜெயப்பிரபா ஜெகதீஸ்வரன் சுகவாழ்வுநிலையம்
சமூகத்தில் மது போதைப் பொருள் பிரச்சனைகள் பொதுவான விடயமாகிவிட்டது. அண்மைக்காலங்களில் இலாப நோக்கம் கருதியும் தொழில் வாய்ப்புக்களிற்காகவும் மது நிலையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் வருமானம் சேர்க்கும் தொழிலாகவும் மறுபக்கம் உயிரைக்கொல்லும் உயிர்கொல்லியாகவும் மதுஉருவெடுத் திருக்கின்றது. மது பாவனையில் ஈடுபடுபவர்கள் இதனால் தமக்கு நன்மைகள் ஏற்படுகின்றன என்ற மிகவும் போலியான எண்ணப் போக்கைக் கொண்டுள்ளனர். மற்றைய போதைப்பொருட்களைவிடகுடிபழக்கம்தான் அதிகளவில் காணப்படுகின்றது.
இக்குடிப்பழக்கம் ஆண்களிற்கு மட்டுமல்லாது பெண்களிடத்திலும் காணப்படு கின்றது. மேலைத்தேய நாடுகளில் மது பாவனைக்கு அடிமையாகும் பெண்களின் வீதம் அதிகளவில் காணப்பட்டாலும், எமது நாட்டில் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுகின்றது."
குடி நோய் என்பது ஒரு வியாதி. இந்நோய்க்கு அடிமையாகின்றவர்கள் உடல், உள, ஆரோக்கியம் இழந்து விடுகின்றனர். ஏனைய நோய்களைப் போன்று திடீரென இது ஒருவரைத் தாக்குவதில்லை. அதே போன்று ஒரு சில நாட்களில் ஒருவர் குடி நோயாளி ஆவதில்லை. பல மாதங்கள், ஆண்டுகள் குடி பழக்கத்தில்தான் ஒருவன் மது நோயாளியாக மாறுகின்றான்.
மது பாவனையானது மனிதனை வறுமை நிலைக்குத் தள்ளி உறவுகளை சீர் குலைப்பதுடன் நல்ல குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விடுகின்றது, “குடிகாரன்” என்ற பெயரும் சமூகத்தால் சூட்டப்படுகின்றது.
605 - LIrilgyoof 2010 2

Page 13
மது பற்றிய அறிவியல் உண்மைகள்:
அற்கஹோல் என்பது ஈதைல் அற்க ஹோல் CO+H2+சக்தி
சாதாரணமாகவெல்லத்தைமதுவத்தால்நொதிக்கவைத்துமது பெறப்படுகின்றது.
சட்ட விரோதமாக உற்பத்தி செய்ப்படும் கசிப்பு குடிவகையில் மிகவும் நச்சுத் தன்மையான மீதெயில் அற்கஹோல் (Methyl Alcohol) காணப்படுகின்றது.
மனிதனை மது போதைக்கு அடிமைப்படுத்தும் காரணிகள்:
சமூகத்தில் ஒருவன் மதுவிற்கு அடிமையாவதற்கு பலர் பல காரணங்களைக் கூறுகின்றார்கள். ஆனால் மதுவின்தாக்கத்தின் உண்மைநிலையை காலப்போக்கில் தான் அறிந்துகொள்கின்றனர்.
9 சந்தோசமான நிகழ்வுகளின் போது மது அருந்துதல். 9 பிறரைப் பழிவாங்கும் எண்ணத்தில் மதுஅருந்துதல். 9 ஒன்றைப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கவசமாகப்
பயன்படுத்துதல். * தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாமை. * மதுவின் விளைவைப் பற்றிய தவறான எண்ணங்கள்/நம்பிக்கைகள். D---D.
பாலியல் செயற்பாடுகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கைகள் உடல் உற்சாகம் பெறும் என்ற எண்ணம் மனநிம்மதியைத் தரும் என்ற நம்பிக்கை போன்ற தவறான எண்ணங்களினால் நல்லதொரு மனிதன் குடிநோயாளியாக உருவெடுக்கின்றான்.
மது போதைப் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள்:
மதுபாவனையுடையவர்களுக்கு உடல், உள, குடும்ப, சமூக ரீதியில் பல பாதிப்புக் கள் உண்டாக்குகின்றன. எவ்வளவு அதிகமாக ஒரு மனிதன் மது பாவனையில் ஈடுபடுகின்றானோ அவ்வளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றான்.
உடல் ரீதியான பாதிப்பு:
மூளை ஈரல்
இதயம்
நரம்பு சமிபாட்டுத்தொகுதி என்பன பாதிப்படைகின்றது
d கை, கால்நடுக்கம் ஏற்படுகின்றது
22 தை - பங்குனி 2010
நான்
 
 

இரைப்பை புற்றுநோய், இரைப்பை புண்கள், இரைப்பை அழற்சி என்பன ஏற்படுகின்றன.
உளநலப் பாதிப்பு:
9 மனோநிலைமாற்றம்
- Lub - துக்கம் - விரக்தி - சந்தேகம் - மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றத்தினால் தற்கொலை எண் ணம் உருவாகின்றது. 9 ஆளுமை மாற்றம்
குடும்பத்தில் தோன்றும் பிரச்சனைகள்:
குடும்ப வருமானம் குறைவடையும் உறவுமுறை சீரழியும் பொருளாதாரச் சுமை அதிகரிக்கும் பிள்ளைகளின் கல்வி சீரழியும் குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்படும் குடும்பத்தில் பிரிவுகளும் விலக்குகளும் ஏற்படும்.
சமூகத்தில் தோன்றும் பிரச்சனைகள்:
மதுபாவனைப் பழக்கமானது தனிமனிதரை மட்டுமன்றி குடும்பம் என்ற சிறிய
வட்டத்தையும், அதே வேளையில் சமூகம் என்ற பெரிய வட்டத்தையும் பாதிக்கின்றது
என்பது தெளிவாகிறது. அந்த வகையில், تهيمنس لا
சமூக மதிப்பு குறைவடைகின்றது காரணமின்றிய குழுச்சண்டைகள் பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்படல் விபத்துக்கள் ஏற்படல் சமூக சீர்கேடான நடவடிக்கைகளில் REGUL6) 9 வேலைவாய்ப்புக்கள் இழக்கப்படல்
போன்றன நடைபெறுகின்றன.
தை - பங்குனி 2010

Page 14
நான் உருவாக .
அறிவு விருத்திக்கு வழிகாடிடும் பழகள்
அருட்சகோ.றமேஸ் அ.ம.தி
ஒரு செடி வளர்வதற்கு என் னென்ன தேவையோ அதைப்
போன்று மனிதன் பண்பாட்டையும் நாகரீகத்தையும் மேலான அறிவை யும் பெறுவதற்கு கல்வி அவசியம் என்கிறார் ரூசோ, ஒருவனுடைய அறிவுதிறமை, சாதனை,போன்றவை களின்தரத்தைப் பொறுத்தே அவன் உலகத்தில் பிடித்துக் கொண்டிருக் கும் இடத்தின் அளவு அமையும் என்கிறார் ஆபிரகாம் லிங்கன்.
மனிதவாழ்வின் அனைத்துக் கூறுகளையும் நன்கு ஆராய்ந்து, அதன் பரிணாம வளர்ச்சிக் கட்டங்களின் நிலைகளை வரைவிலக்கணப்படுத்தியுள்ள சிந்தனையா ளர்கள் பலரினதும் கருத்துப்படி, கல்வியும் அறிவு விருத்தியும் ஒரு மனிதனின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கண்கூடு. ஒவ்வொரு மனிதனும் தான் தன்னில் வளர்வதற்கு, முதிர்ச்சி பெறுவதற்கு, பலதுறைகளில் வளரவேண்டி இருப்பி னும் எல்லாவற்றையும்விடகல்வியில், அறிவில் வளருதல்என்பது ஒருதனித்தன்மை யைக் கொண்டுள்ளது மட்டுமல்லாது மற்றைய அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளதென்றால் அதன் பெருமையும், அதை நாட வேண்டிய கடமையும், தேட வேண்டிய முறைமையும் எம்மால் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.
ஒருவன் அறிவில் வளர்வதற்கு, தன்னைத்தானே அறிவியலில் வளர்த்துக் கொள்வதற்கு, எட்டு வகையான அறிவுப்படிகளை நாட வேண்டுமென்று பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளில் இருந்து நாம் அறிய முடிகிறது.
1. நல்ல அறிவுதரும் நூல்களைக் கற்றல்
மனித வாழ்க்கைக் கட்டங்கள் பற்றி ஆழ்ந்த கருத்துரைத்துள்ள எரிக் எரிக்சன் பள்ளிப்பருவம் பற்றி பேசுகையில் அதன்தார்ப்பரியத்தை அழகாக விளக்கியுள்ளார். ஒருவர் கல்வி கற்கும் போது அறிவு பூர்வமாக விழிப்பாகவும், முழுக்கவனமாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்களான கிளிவோர்ட்டி மார்கன், ஜேம்ஸ் டீசேதங்களது
தை - பங்குனி 2010
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

فنامه فاز ۲ یا عمان hut யாழ்ப்பாணமி.
"படிப்பது எப்படி’ என்ற நூலில் நாம் ஒரு நூலைப் படிக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை "SQ3Rs’ என்பதனூடாக விளக்குகிகிறார்கள். S என்பது கணிப்பையும், Q என்டிது கேள்விகளையும் 3Rகள் என்பவை வாசிப்பதையும், சொல்லிப்பார்த்தலையும், மீட்டுப்பார்த்தலையும் குறிக்கின்றன. (Survey, Question, Read, Recite, Review) உடலுக்கு பயிற்சி மூளைக்கு படிப்பு என்ற தத்துவ அறிஞன் ரிச்சர்ட் ஸ்டீலே என்பவரின் கருத்தை உள்வாங்கிய உளவியலாளர்கள் இவ்வாறு துலங்குகிறார்கள்.
2. மூளையைக் கூர்மையாக வைத்திருத்தல்
எமது மூளையைச்சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கும் அதன்பகுத்தறியும்திறனை வளர்ப்பதற்கும் ஏற்ற வகையில் எங்களது கல்வியையும், கல்வி சார்ந்த செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்ளுதல் சாலச் சிறந்தது என்பது இன்னொரு படிமுறையாகும். கணக்கைக் கற்றுக் கொள்வதை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்.
3. பார்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளல்
உளவியலாளர் பண்டுரா இதுபற்றி ஆராட்சி மேற்கொண்டு, பார்க்கும் ஆற்றலினால் எவ்வாறு ஒருவனுடைய அறிவு விருத்தியடைகிறது என விளக்கியுள்ளார். நாம் ஒவ்வொருவரும் பார்க்கும் திறமையை வளர்க்கும் பட்சத்தில் வாழ்க்கையின் அதிசயங்களையும், இயற்கையின் அழகையும் ஆழ்ந்து உற்று நோக்கிரசித்துஅறிவைப்பெருக்கிடமுடியும் என்பதுதெளிவாக எமக்குப்புலனாகிறது.
4. சிந்தித்தல்
மனிதர்களை மற்றைய பிராணிகளில் இருந்து பிரித்துக் காட்டும் முக்கிய காரணிகளில் ஒன்று சிந்தனை என்பது பொதுவாக அறிஞர்கள் எல்லோரினதும் கருத்து. ஒவ்வொரு மனிதனும் தனது சிந்தனை ஆற்றலை வளர்க்கத்தினமும் நல்ல விடயங்களைப் பார்ப்பதும், கேட்பதும், படிப்பதுமாக இருக்க வேண்டும். தனக்குத் தானேவினா எழுப்பி ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளும் போது ஒருவனின் சிந்தனை ஆற்றல் வளர்ச்சியடையும் என்பது வெளிப்படையுண்மை.
5. எப்போதும் ஆர்வம் உள்ளவர்களாக இருத்தல்
மனிதனின் மூளை வளர்ச்சி முன்னோக்கிச் செல்ல அவன் ஒவ்வொரு காரியத்திலும் ஆர்வம் உள்ளவனாகவும், வினாக்கள் எழுப்பி விடயங்களில் தெளிவு பெறுபவனாகவும் இருக்கவேண்டும் என்று உளவியலாளர்கள் மட்டுமல்லநரம்பியல் நிபுணர்களும் கருத்துரைத்துள்ளார்கள். ஒருவன் சிறு குழந்தையாக இருக்கும்போது கொண்டுள்ள ஆர்வமும் அவற்றைச் செயல்களில் துலங்கவைக்கும் தன்மையும் மிக உயர்வாக உள்ளது மட்டுமல்லாது அவர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையா
8&
தை - பங்குனி 2010 25

Page 15
கவுள்ளது. ஆனால் அவர்கள் வளரும்போது அவ்வார்வம்வேறுதிசைகளில் செல்வது இயற்கை, ஒருவன் தன்னில் வளர்த்துக் கொள்ளும் ஆர்வமே அவனை மேற்கூறிய அனைத்துப் படிகளிலும் வளர்த்துக்கொள்ள உதவும் முக்கிய காரணி என்றால் மிகையாகாது.
6. நினைவாற்றலை விருத்தி செய்தல்.
நல்ல வளர்ச்சி பெற்றுள்ள மூளையின் வெளிப்பாடு நல்ல நினைவாற்றல் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விடயமாகும். ஆனால் இதை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்றுஆராய்ந்து அதனை ஒவ்வொருவரும்தமக்குரியதாக்க வேண்டுமென்பதே பலரினதும் விருப்பாகவுள்ளது. முதலில் ஒவ்வொருவரும் தங்கள் ஞாபக சக்தியின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். எதையும் எங்கும், எந்நிலையிலும், எப்படியும் தங்களால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பும் போது அவை அவர்களில் வளர்ச்சி பெறும் என்பது பலரினதும் நம்பிக்கை. இதை உண்மை வாழ்விலும் எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அத்தோடு நினைவாற்றலை எம்மில் வளர்க்க பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் அவற்றை மேலும் மேலும் மேம்படுத்தலாம் என்று அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
7. எப்பொழுதும் எல்லாவற்றையும் வரவேற்றல்
“நற்கருத்துக்கள் நான்கு பக்கங்களிலிருந்தும் நம்மைநாடி வரட்டும்” என்கிறது ரிக்வேதம். வயது, சமுதாய நிலை, தொழில், பால், சாதி, மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் யாரிடம் இருந்தும் எப்போதும் நல்லவைகளைக் கற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். எப்பொழுதும் மற்றவர்களுடைய கருத்துக்களை கவனமாகக் கேட்க வேண்டும், அவற்றை ஆராய வேண்டும், அதன் பின்பே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் எமது மூளையின் சக்தி வளர்ச்சி அடைகின்றது என்று அதில் அனுபவம் பெற்றவர்கள் எமக்குப் போதிக்கிறார்கள்.
8. ஒருமுகச் சிந்தனையில் வளருதல்
எம்மை விட வாழ்விலும் வளத்திலும் மிகமிக உயர்ந்த மனிதர்களைப் பார்க்கும் போது அவர்கள் ஒரு செயலில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்தக் கற்றுக் கொண்டவர்கள் என்பது தெளிவாகும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறைமையை ஒரு நேரப்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையில் முன்னெடுக்கும் போது ஒருமுகச் சிந்தனையை தங்களில் வளர்த்துக் கொள்ள முடியும் என்பது என் கருத்து. ஒருமுகச் சிந்தனைக்கு நாம் பழக்கிக் கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க எமது ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எமது சமுதாயத்தை நோக்கும் போது, சில பெற்றோர்கள் பிள்ளைகளின்
26 தை - பங்குனி 2010
 

கல்வியைநிர்ணயிக்கமுற்படும்சந்தர்ப்பங்களில் அங்கு முரண்பாடுகள் எழுகின்றன. கல்வியை ஒரு சமுதாய அந்தஸ்து என்று கருதும்பெற்றோரும், கல்வியை மையமாக வைத்து பணம் ಆbuಣ್ಣೆಹಕ எண்ணும் குறுகிய மனப்பான்மையுடயவர்களும், ஒருவனுடைய அறிவு விருத்திக்குத் தடைக்கல்லாக இருப்பவர்களும் உள்ளாந்த ரீதியில் சிந்திக்கும் மனிதப் பண்பு அற்றவர்களென்றே கணிப்பிட முடியும். சரியான கல்விப்பாதையைத் தெரிவுசெய்யாமல்தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துநிற்கும் இளைஞர்களும், அறிவை அறிவீனமாக பெருக்க முற்பட்டு அழிந்து போனவர்களும் எம்மத்தியில் உள்ளார்கள். இதன் காரணமாக அவர்கள் உளரீதியான பல சிக்கலான பிரச்சினைகளால் அவதிப்படுவது நாம் நாளும் காணும் நிகழ்வுகளாக உள்ளன.
எனவே ஒவ்வொரு மனிதனும் தான் தனக்கே உரித்தான முறையில் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் பெற்றோரின் கவனிப்பும் சமூகத்தின் அக்கறையும் முக்கியபங்கை வகிக்கவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்கு முக்கிய பங்கை வகிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்கு முக்கியம் கொடுத்து, அவர்களை ஓர் ஆரோக்கியமான கல்விப்பாதைக்குள் நடத்திச் செல்ல வேண்டும். கற்கும் கல்வியானது அவர்களது வாழ்க்கைக்கு குறிப்பாக தங்கள் உள்ளார்ந்த ரீதியில் அவர்கள் பக்குவப்படுவதற்கு அவர்களுக்கு வழி சமைக்க வேண்டும். ஒருவன் தனதுகல்விப்பாதைசம்மந்தமாக உளரீதியாகதிருப்திப்படாவிடின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப செயற்பட வேண்டும். ஒருமனிதன் தன்னில் தானாக உருவாக அவன் தன் அறிவை விருத்தி செய்ய வேண்டும். தன் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
உசாத்துணை நூல்கள்:
M.D. போல், புதிய கல்வி உளவியல், கிறிஸ்தவ சங்கம், சென்னை (1975). ச.பா.ஜெயராசா, உளவியலும் நவீன கற்பித்தலும், பூபாலசிங்கம் புத்தக சாலை, கொழும்பு (1993), புதிய உலகம், மே - யூன் 1987.
○
தை - பங்குனி 2010 27.

Page 16
  

Page 17
உருவத்தில் சிறியவர்கள் இவர்கள் ஆனால், உள்ளத்தால் உயர்ந்தசெயல் நாடிநிற்பர் பருவமது பாங்காக மாறமாற பண்பான பலசெயல்கள் செயத்துடிப்பர் பெருமனது கொண்டுஇந்தப் பிஞ்சுநெஞ்சப் பூங்காவில் நுழைவதற்கு யார்வருவார்? கருவிழிகள் மலர்ந்துசெயல் புரியவைத்துச் சிறப்பாக வழிகாட்ட எவர்வருவார்?
உடமையெலாம் இழந்தழுது வாடிநின்று ஊனமுற்ற மனநிலையும் சேர்ந்தேவந்தார் தடைகளினாற் துவண்டுஉளம் உடைந்துநின்று தவிதவிக்கும் இவர்க்குதவயார்வருவார்? உடலாலும் உள்ளத்தாலும் நொந்துவெந்து உவகையெமக் கெப்போது கிடைக்குமென்று, உடைந்தபல உள்ளங்கள் உயிர்த்தெழுந்து உவப்புடனே நல்லகல்வி பெறுவதெப்போ?
சாதிமத பேதமது மாறி நாளும் சமுதாயச் சாக்கடைகள் அழிவதெப்போ? ஒதுகின்ற சாஸ்த்திரங்கள் யாவுமிந்தப் பிஞ்சுகளைப் பளிங்குகளய வனைவதெப்போ? தூதுசென்று நீதியதை இடித்துச்சொல்ல கிருஸ்ணபரமாத்மாக்கள் பிறப்பதெப்போ? நாதியின்றிப்பரிதவிக்கும் பாலகர்க்கு நகைமுகங்கள் காட்டுபவர் இணைவதெப்போ?
எவராலும் செயற்கரிய அரும்பணியாம் ஆசிரியப் பணிக்கடலுள் அமிழ்ந்து நிற்போர் தவறேதும் வராதுதம்மைக்காத்து தரணியில் நல்லபணி செய்வதெப்போ? ஆழத்தே புதைந்துள்ள நல்ல முத்தை நலமாக முன்னெடுத்துச் செல்வதெப்போ? உள்ளத்தே உண்மையொளி நாளும்பெற்று உவகையுடன் தம்பணியைச் செய்வதெப்போ?
s 影
... •
•世二 關影 黑德 鄂 * 麗醫
熙离 9
3O தை - பங்குனி 2010
 

பகிர்வின் தேவை
ஜெயகேமலதா
மனிதனின் தோற்றம் அதன் ஆரம்பம் வாழ்வுக்காய் தேவைகளிருந்தன மனித நாகரீகம் தேவைக்காய் வாழ்வு என்றநிலைக்கு மாற்றியது
சுயநலம் முரண்கள் ஏற்றத்தாழ்வுகள் சீர்செய்ய முடியாத படிக்கு - இதனால் பகிர்வின் தேவைகளை உலகிற்கு உணர்த்தினர் தத்துவமேதையர் ஞானியர்கள்
அன்பில் பகிர்வு - கருணை கல்வியில் பகிர்வு அறிவு அனுபவத்தில் பகிர்வு-சான்றாண்மை பொருளில் பகிர்வு- ஈகை உறவில் பகிர்வு- பாசம் ஆன்மீகத்தில் பகிர்வு-பக்தி உளவளப் பகிர்வு- மனிதநேயம்
வேற்றுமைகள் பலவாறு இருந்தாலும் பிறர் தனித்துவத்தை ஏற்று வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு இன்றைய பகிர்வின் தேவை எம்மைப்போல் பிறரை நேசித்து ஒருவருக்கொருவர் நேசத்தை பகிர்ந்துகொண்டால் மனச்சாந்தி உண்டாகும் - உளவியல் மேன்மையுறும்
தை - பங்குனி 2010 31

Page 18
“2ażiaWiż (02/24/i)”
K. Priyalojini Delft-07
இளமைப் பருவம்-ஓர் இன்பமான பருவம் எண்ணியதை சாதிப்பதற்கு ஏற்ற பருவம் இது. நாகரிக மோகத்தால் நாஸ்திக உலகில் நுழையத் துடிக்கம் - வேகம் பண்புடைபருவம் இது. இளைஞனே எழுந்திடு சாக்கடையில் வாழ்ந்தகாலம் இனியும் வேண்டாம். சாதனைச் சிற்பியாக சரித்திரத்தில் மலர்வாய்-நீ காதல் என்னும் தரிப்பில் காலத்தை வீணாக்காதே. வசந்தம் உன் வாசல் கதவை தட்டும் வசந்தமான காலத்தில் . உன்னால் முடியும் என்ற உறுதியான எண்ணம் கொண்டு இன்றே உழைத்திடு . இன்பமாய் வாழ .
6SLLEDÖllö jLöGDL
இ. ஜெயபாலன் 65IIIQ6O19. Filesireo6Or
நான்-பலபாத்திரங்களையேற்று நடிக்கும் நடிகன் நான்-மகன், சகோதரன், தகப்பன் பேரன், பூட்டன் இவ்வாறு பாத்திரங்கள் பலவாக விரிந்துசெல்லும் நான்-பாத்திரங்கள் இல்லாது விட்டால் இறைவனுக்குப் பாத்திரமானவன்
உலகம் என்பது மாயை பொய்மைகள் நிறைந்தவை என்பதற்காக பொறுப்பற்று நடந்து விட முடியாது
நான், எனது என்ற இறுமாப்பு இல்லாது இயற்கையின் நியதிகளையேற்று சுமைகளை சுகங்களையேற்று சுமைகளை சுகங்களாக்கி பற்றற்று வாழப்பழகிக் கொள்ளண்ேடும்
நான் நினைக்காவிட்டாலும் தளராத உறுதி நிச்சயம் உயர்வைத் தரும் இதுவே சான்றோர் எமக்குத் 505ub Umlib!
32 தை - பங்குனி 2010
 

ෂිගුරදු|හීනිග්r
முன்னுரை
பிரபஞ்சத்தின் இயல்புக்கு இசைவாகவும், எதிராகவும் தமது செயற்பாடுகளையும், கண்டுபிடிப்புக்களையும் முன்னெடுப்பதில் மனிதன் முனைப்பாகவும், விருப்பாகவும் இருக்கின்றான். பல செயற்பாடுகளிலும், கண்டுபிடிப்புக்களிலும் மனிதன் வெற்றி கண்டுள்ளதுடன் அவை மனித வாழ்வின் மேம்பாட்டுக்கும், ஆரோக்கியத்துக்கும், சந்தோசமான வாழ்வுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளதென்பது 2600T60LDurras இருப்பதுடன், சில கண்டுபிடிப்பு முயற்சிகள் மனித வாழ்வின் அழிவிற்கும், இழப்பிற் கும் இட்டுச்சென்றுள்ளதையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இன்று மனிதன் இருக்கின்றான். மருத்துவக் கண்டுபிடிப்புக்கள் நன்மையானவை, அணு ஆயுதங்களின் உற்பத்தியும்,நவீனரக ஆயுதங்களின் கண்டுபிடிப்புக்களும் மனிதனு டைய அழிவிற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றன என்பதை நாம் இன்று பல நாடுகளில் நடந்துவருகின்ற யுத்தங்கள், அப்பாவி மக்களின் கொலைகள் என்பவற்றி லிருந்துநாளாந்தம் அறிந்துகொள்கின்றபோதும், இலங்கையின்மக்களைப்பொறுத்த வரையில் இதன் தாக்கங்களையும், அழிவுகளையும், இழப்புக்களையும் நேரடியா கவே அனுபவித்து நொந்துபோயுள்ளார்கள். இலங்கையில்யுத்தம் முடிந்துவிட்டதாகக் கருதப்பட்டாலும் அந்த மக்கள் சந்தித்த பேரவலங்களும், துன்பங்களும், இழப்புக் களும், இலகுவில் முடிந்துவிடக்கூடியவையாகவும், ஈடுசெய்யப்படக்கூடியவையா கவும் இல்லை.
ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை ஏற்றுக்கொள்ளவும், ஈடு செய்யப்படக்கூடிய வற்றை மனத்திடத்தின் முயற்சி யால் அடைந்துகொள்ளவும் கூடிய கழ்நிலையை உருவாக்கி வாழ்வின் மீதிக்காலத்தை நிம்ம | தியாகவும், சந்தோசமாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளைக் காட்டவேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
தை - பங்குனி 2010

Page 19
இழப்புக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
1. ஈடுசெய்யப்பட முடியாத இழப்புக்கள் 2. ஈடுசெய்யப்படக்கூடிய இழப்புக்கள்
மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற இழப்புக்கள் எப்போதும் இந்த இரண்டு வகைக்கு உட்பட்டதாகவே அமையமுடியும். இந்த இழப்புக்களை எவ்வாறு கையாள்வது, என்ன மனநிலையுடன் மேற்கொள்வது, எப்படி முகம்கொடுத்து எஞ்சியிருக்கும் வாழ்நாட்களை நம்பிக்கையுடன் மனநிறைவை நோக்கி, வாழ்க்கையின் வெற்றியை நோக்கி நகர்த்தி செல்வது என்பன சார்ந்த விடயங்களை ஆராய்வதும், அறிந்துகொள்வதும், வாழ்க்கையை அதன் அடிப்படையில் கட்டியெழுப்புவதும் அவசியமானதாகவும் காலத்தின் தேவையாகவும் அமைகின்றது.
1. ஈடுசெய்யப்படமுடியாத இழப்புக்கள்
மனிதனை அதிகம் வருத்துகின்றவிடயமாகவும், ஏற்றுக்கொள்வதற்கு கடினமான நிகழ்வாகவும் இருப்பது யாதெனில் அன்பானவர்களின் உயிரிழப்புக்கள், தமக்கே ஏற்படும் அங்கவீனம், அன்பானவர்களுக்கு ஏற்படும் அங்கவீனம் என்பவையாகும் நபர்களைப் பொறுத்தும், சந்தர்ப்பங்களைப் பொறுத்தும் இந்த ஈடுசெய்யப்பட முடியாத இழப்புக்களின் தன்மைகள் நீண்டுகொண்டு செல்வதற்கான வாய்ப்புகளும் 2-6бот6.
ஒரு கட்டத்தில் மிகவும் பிரசித்தமாக பேசப்பட்ட இடம், மனிதாபிமானிகள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த இடம், மனிதப்பேரவலம் உச்சத்தை அடைந்து வரலாற்றுக் கறைபடிந்த இடம், உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கிய இடம், மனித மாண்பு புதைக்கப்பட்ட இடம், மனித இதயங்களில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திய கோரநிகழ்வு நடத்தப்பட்ட இடம், முள்ளிவாய்க்கால் பகுதி என்பதை ஊடகங்கள் பல்வேறு விதமாக விபரித்தன. வாழ்க்கையில் மறக்க முடியாத, மனித சிந்தனாசக்தி யின் கற்பனைகளுக்குள்ளும் உட்படாத, மனிதம் நிறைந்த மனிதர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாத மனிதத்தின் அழிவுகளை, இழப்புக்களை, துயரங்களை அனுபவித்து, அவஸ்தைப்பட்டு அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் சுமந்து இறுதியாக (2009, மே 18, 19, 20 திகதிகள்) வன்னியைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு (27 மே 2009) கிடைத்தது.
'மனிக்பாம் முகாமில் வலயம் 4 இவர்களின் வாழ்விடமாகக் கொடுக்கப்பட்டி ருந்தது. அங்கு சந்தித்த நபர்கள் பலராகவும், அனுபவங்கள் தனியாக, வேதனை களின் கனாகனங்கள் அதிகமாக இருப்பினும் சிலரது அனுபவங்களையும்,
34 தை - பங்குனி 2010
 

碳 6}_figé*&# iš faši
யாழ்ப்பாணம்.
செய்திகளையும் இங்கே பகிர்ந்து கொள்வது பயனுள்ளது, எனக் கருதுகின்றேன்.
9 கிளிநொச்சியில் மெக்கானி
கடை போட்டிருந்தவர். கையில் கடைசிக் குழந்தையை சுமந்து கொண்டு மற்றைய இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு என்னைநோக்கி
வந்தார். அவருடைய மூத்த பெண் குழந்தைக்கு நான் 2007, 2008ம் ஆண்டுகளில் ஆங்கிலம் கற்பித்தேன். மாறி மாறி நலம் விசாரித்துவிட்டு லதா அக்கா (அவரின் மனைவி) சுகமா என்று விசாரித்தேன். கண்கள் கண்ணீரால் நிரம்ப தலையை குனிந்தார். விபரீதம் ஏதோ நிகழ்ந்துவிட்டதாக மனம் ஊகித்துக்கொண்டாலும், எனதுதவிப்பினை, அங்கலாய்ப்பினை உணர்ந்தவளாக மூத்த குழந்தை, “முள்ளிவாய்க்கால் பகுதியில் இருக்கும்போது தலையில் வெடிப்பட்டு செத்துப்போயிற்றா சேர்’ என்றதும் கனத்த உள்ளத்தோடு அவளை அணைத்துக்கொண்டேன். ‘வெடிபட்டதும் அந்தக் கடும் சண்டைக்குள்ளும் அவளைக்காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்குகொண்டுஓடினேன். அவளின் உயிர் எனது கையிலேபோனது. இனிஎன்ன சேர்வாழ்க்கை.’ என்றவிரக்தியின் வார்த்தைகள், வாழ்வில் பற்றற்ற அவர் நிலை, எனக்கு வார்த்தைகள் வெளிவர நேரமானது.
“பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் ஒளிமயமான எதிர்காலம்’ ஆகியவற்றை முதன்மைப்படுத்தி நம்பிக்கையோடும், முயற்சியோடும் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றிக் கூறுவதற்கு மட்டுமே அக்கணப் பொழுது போதுமானதாக இருந்ததே தவிர நீண்டதொரு ஆற்றுப்படுத்தலை, ஆழமான உணர்வுப் பகிர்தலைச் செய்வதற்கான சூழல் அமையவில்லை, சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.
* வ. கவிதா, வயது 27,1995ல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து அக்கராயன் வந்து 2003ம் ஆண்டுதிருமணம்செய்தவருக்கு இன்று மூன்று சிறுகுழந்தைகள். 8ம் மாதம் 2008ம் ஆண்டு அக்கராயனில் இருந்து இடம் பெயர்ந்து முறிப்பு பாடசாலையில் இருந்தபோது ஷெல் விழுந்து இடக்காலை இழந்து விட்டார். ஒரு காலுடன் கணவரின் துணையுடன் வன்னியின் அனைத்து இடப்பெயர்வுகளிலும் மிகுந்த வேதனைகளை அனுபவித்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அவருடைய கணவர் தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒரு காலுடன் மூன்று குழந்தைகளையும் வளர்த்தெடுப்பதில் அனுபவித்துவரும்
தை - பங்குனி 2010

Page 20
துன்பங்களின் பகிர்விற்கு அவள் கண்ணிர்த் துளிகள் தந்த சான்றுகள் ஏராளமானது. அத்துன்பத்தின் ஆழம், அகலம்,வேதனை அனுபவித்த அவளுக்கு மட்டுமே தெரியும். ஒரு காலுடன் முன்று பிள்ளைகளையும் பராமரிப்பதற்காக, தனது நாளாந்த கடமைகளைச் செய்வதற்காக படுகின்ற கஷ்ரத்தினை 10 நிமிடங் கள்வரைகவனித்துக்கொண்டுநின்றளன்னால்கூடஜீரணிக்கமுடியவில்லை. ‘என் கால் போனதோடு உயிரும் போயிருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும்’ எனும் வார்த்தை போதும், அவர் ஒரு காலை இழந்தமையால் ஏற்படுகின்ற வேதனை களும், முகம்கொடுக்கின்ற பிரச்சனைகளும்.
9 12.05.2009ஐ.சி.ஆர்.சிஅறிக்கையின்படி, 2009 பங்குனி 16ம்திகதி தொடக்கம் 2009 வைகாசி 9ம் திகதிவரை வன்னியிலிருந்துகடல்வழியாக கிறீன் ஓசன் கப்பலில் அரச கட்டுப்பாட்டு பகுதியான புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்ட காயப்பட்டோரின் எண்ணிக்கை 10,191.
* 04.01.2009 ‘த நேஷன்' பத்திரிகையின் செய்திப்படி இலங்கையில் ஏற்பட்டுள்ள இராணுவநடவடிக்கையில் 12,000 வீரர்கள் காயப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு, வாழ்க்கையில் நெருக்கமானவர்களையும், உயிரான்வர்களையும் இழந்து நிற்கும் ஏராளமான உள்ளங்கள் இன்று எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உயிர் ஒன்றே இருக்க இயங்க முடியாது தவிக்கும் உள்ளங்கள், கை-கால் இழந்தவர்கள், பார்வை இழந்தோர், செவிப்புலன் . என்றவாறான நீண்டுகொண்டு செல்லும் அவர்களின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களின் பட்டியலை பார்க்கும்போது இவர்கள் எவ்வளவு வேதனைகளுடன் தமது நாளாந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பார்கள் என்பது அதனை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
12. ஈடுசெய்யப்பட முடியாத இழப்புக்களில் இருந்து மீளுவதற்கான சில வழிகள்
1.2.1. ஏற்றுக்கொள்ளுதல்
ஈடுசெய்யப்பட முடியாத இழப்பு களுக்கு முகம்கொடுத்திருக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறான மனநிலைகளில் தங்கள் மனதிற்கு சமாதானத்தை, உள்ளத்திற்கு அமை தியைத் தேடிக்கொள்கின்றார்கள். அன்பானவர்களை இழந்தவர்கள் தங்களின் அன்பானவர்கள் இறக்கா மல் இயலாத் தன்மைகளிலும்
தை - பங்குனி 2010
 
 

உயிரோடு இருந்தால் போதுமே, அவர்களின் அன்பு மட்டும் போதும் என்றவர்கள் இருக்கும் அதேவேளை இப்படியாக கை கால்கள் இல்லாமல் அவஸ்தைப் படுவதைவிட இறப்பதேமேல் என்கின்ற எண்ணத்தோற்றத்தில் வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றன.
வாழ்க்கையில் நிச்சயமானதும், மனிதனால் தவிர்க்க முடியாததும் இறப்பு. வளர்ந்திருக்கும் விஞ்ஞானத்தின் உயர்ச்சியினால் உருவாக்கப்பட்டிருக்கும் இன்றைய மருத்துவம் கூட ஒருவருடைய இறப்பின் நேரத்தை சில சந்தர்ப்பங்களில் பிற்போட முடியுமே தவிர நிரந்தரமாக நிறுத்தி சாகா நிலைகொண்டவராக மாற்ற முடியாது. இறப்புக்கள் இயற்கை, செயற்கை, எதிர்பார்த்தவை, எதிர்பாராதவை என்று பலவாறாக வகைப்படுத்தப்பட்டாலும் அவற்றின் தன்மைக்கும் தொடர்புபட்டவரின் இயல்பு, குணாதிசயங்கள் முதலானவற்றில் அவற்றின் உளத்தாக்கங்கள், உள்ளத்து துயரங்கள் தங்கியுள்ளன.
எதுவானாலும் இறப்பு மனித னுக்கு இயற்கையானது, பிறந்த வர்கள் இறக்க வேண்டியது இயற்கையின்அமைப்பு. இதனை எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாது என்பதனைப் புரிந்து சம்மந்தப்பட்ட நபர்கள் தமது உள்ளத்தைத் தேற்றி, மனதினைத் தைரியபடுத்தி வாழ்க்கைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதே பயனுள்ள காரியமாக அமையமுடியும்.
1.2.2. பகிர்ந்துகொள்ளுதல்
மனதின் பாரத்தைக் குறைத்துக்கொள்வதற்கும், குழப்பமான நேரத்தில் நேரியபாதையை நோக்கி வழிப்படுத்தப்படவும் தீர்க்கமான முடிவுகளை எடுத்துக் கொள்ளவும், பகிர்தல் சிறப்பான விடயமாக அமைந்துள்ளது. ஆனால் இந்தப்பகிர்தல் எப்படியான நபரிடம் செய்யப்பட வேண்டுமெனப்பார்க்கும் போது, அது துணைநாடி யின் உணர்வுநாடிகளை உணரக்கூடிய, வழிப்படுத்தத் தக்கவிதமாமான ஆளுமை கொண்டவர் போன்ற அம்சங்கள் ஆராயப்படவேண்டியதுடன், உறுதிப்படுத்தப்பட வேண்டியவையும் ஆகும்.
வாழ்க்கையில் ஏற்படுகின்ற இழப்புக்கள் அவை ஏற்படுத்துகின்ற தாக்கம், குழப்பம், சிக்கல், பயம், பதகளிப்பு, விரக்த்தி, வெறுப்பு. அத்தனையும் ஒரு மனிதனுடைய உள்ளத்தினுள் அமுக்கி வாழும் போது,
தொடரும்.
605 - LIrisig,60f 2010 37.

Page 21
b9 உேற்றிக்டு OOOگesا
அருந்தினி மகாதேவன் அகவொளிகுடும்பவளநிலையம், யாழ்ப்பாணம்.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கு காரணமாக இருக்குமென்றால் பலரும் கல்வி, பணம், தொழில், இன்னும் பலவற்றைக்கூறுவார்கள். ஆனால் அவை மாத்திரம் ஒரு மனிதனின் வெற்றிக்கு காரணமில்லை.
ஒருவர் தனது உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் எப்படி கையாள் கின்றாரோ அவரே உண்மையில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகின்றார். இன்று எல்லோரும் வீட்டிலிருந்து பணிஇடங்கள்வரைதங்களுடையமனங்களில் ஒவ்வொரு விதமான மனக்காயங்களுடனும், கீறல்களுடனும்தான் பணி செய்வதை யாராலும் மறுக்கமுடியாது. உணர்வுகளை சரிவர வெளிப்படுத்த தெரியாது, சரியாக புரிந்து கொள்ளாததுதான் இதற்கான காரணமாக அமைகின்றது.
வாழ்க்கை அறிவு சார்ந்தது மட்டுமல்லாமல் உணர்ச்சிகளையும் சார்ந்தது. வாழ்க்கையில் வெற்றி பெற, மகிழ்ச்சியினை அனுபவிக்க வேண்டுமாயின் உணர்ச் சிகளை சரிவர கையாளத் தெரிந்திருக்கவேண்டும். காலையில் பணிக்கு சென்று வீடு திரும்பும்வரை ஒவ்வொருவரும் எங்கள் முகங்களை நாங்களே பார்ப்போமானால் எம்முகங்களில் அமைதி, சிரிப்பு, சந்தோசம் தென்படுகின்றதா? முகங்கள் இறுக்கமாக வும், கவலையுடனும், ஏக்கத்துடனும் காணப்படுகின்றது. இதற்கு காரணம் எங்களு டைய மனதில் அன்றாடம் வந்து போகும் உணர்வுகளே!
ஆனால் எங்களில் மாற்றங்களை கொண்டு வருவதன்மூலம் இதனை நாம் இல்லாமல் செய்யலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உணர்ச்சி அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சூழலில்நிகழும் சம்பவத்தால் நாம் என்னவகைஉணர்ச்சிக்கு உட்படுத்தப்படு கின்றோம், எதனால் அவ்வுணர்ச்சி இத்தனை தீவிரமாக நம்மை பாதிக்கின்றது. இந்த உணர்ச்சியின் மூலம் என்ன? அந்த உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்துவதால் என்னென்ன விளைவுகள் நேரும்? அந்த உணர்ச்சிகளை சூழலுக்குத்தக்கபடி ஒரு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது, அந்த சூழலுக்கு தக்கபடி உணர்ச்சியை எப்படி கையாள்வது அல்லது செயற்படுத்துவது போன்றவற்றையே உணர்ச்சி அறிவு என்கின்றோம்.
தை - பங்குனி 2010
 
 
 

இந்த உணர்ச்சி அறிவை எத்தனை திறமையோடு ஒருவன் கையாள்கிறான் என்ப தைக் கொண்டே அவனது உணர்ச்சி அறிவாற் றல் அமையும். தனது உணர்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வுடன் அவை பற்றிய தெளிவான அறிவுடன் எந்த ஒரு சூழ்நிலையிலும்திறமையுட னும் அவற்றை கையாளும் திறமையே உணர்ச்சி அறிவாற்றல் ஆகும்.
பெருஞ்சாதனைகள் புரிந்த பெரும் தலை வர்களின் வாழ்வை ஆராய்ந்து பார்த்தோமா னால் அவர்களின் இமாலய வெற்றிக்குப் பின்னால் வெறும் அறிவுத் திறன் மட்டுமல்ல்? அவர்களின் உணர்ச்சிகளை கையாளும் திறனும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஒருபடி மேலே சென்று தனி மனிதனின் வெற்றிக்கு அறிவுத் திறன் (IQ) பங்கு வெறும் 20%தான் என்றும் உணர்ச்சி அறிவாற்றலின் (EQ) பங்கு என்பது 80% என்றும் கூறுகின்றனர்.
தனது உணர்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வுடன் அவை பற்றிய தெளிவான சிந்தனையுடன், அறிவுடன் எந்த ஒரு சூழ்நிலையிலும் திறமையுடனும் அவற்றைக் கையாளும் திறமையே உணர்ச்சி அறிவாற்றல் என்று அழைக்கின்றோம்.
உணர்ச்சிஅறிவாற்றல் உடைய ஒருவன்தன்னைப் போலவே பிறரையும் மதித்து அவர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வேலைவாங்கவும் கையாளவும் தெரிந்திருப்பதாலேயே அந் நிறுவனங்கள் உணர்ச்சி அறிவாற்றல் உடைய ஒருவருக்கு முன்னுரிமை அளிக்கின்றது.
அறிவுத் திறனுக்கும் உணர்ச்சித் திறனுக்கும் இடையிலான மிக முக்கிய வித்தி யாசம் யாதெனில் ஒருவருடைய அறிவுத்திறன் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவரது மூளையின் இயல்பாகிவிடும். அதை மாற்றமுடியாது. ஆனால் உணர்ச் சித்திறன் என்பதுமாறக்கூடியது. எந்தகாலகட்டத்திலும் வளர்த்துக்கொள்ளக்கூடியது.
உணர்ச்சிஅறிவாற்றல் அதிகம் உடைய ஒருவரிடம் காணப்படும் சிறப்புத்திறன்கள்:- 1. திறமையாக உணர்வுகளை வெளிப்படுத்துதல்
(எந்த இடத்தில் என்ன உணர்வை எப்படி வெளிப்படுத்துவது) i. உணர்வுகளைப் பகுத்தறிவது (என்னென்ன உணர்வுகளை எந்த சூழலில் அறிகிறோம் அந்த உணர்ச்சிகள் பற்றிய
அடிப்படை அறிவு) :
தை - பங்குனி 2010 39

Page 22
i. உணர்வுகளின் ஆழத்தை, அடர்த்தியை,
தீவிரத்தை அறிந்திருத்தல்.
iv. உடனடியாக உணர்ச்சி வெடித்துவிடாமல் அதை
ஆய்ந்தறியும் வகையில் தம் கட்டுக்குள் வைத்திருத்தல்.
V. கடுமையான சூழலிலும் உணர்ச்சியைக்
கையாளுதல். wi. உணர்ச்சிக்கும் செயலுக்குமான வேகத்தை
அறிந்திருத்தல். Vi, மெல்லிய, நுட்பமான உள்ளுணர்வு
களைப் புரிந்து கொள்ளுதல். wi. மனித உணர்வுகளின் வெளிப்பாடு சமூதாயத்தை எவ்வகையில், எவ்வளவு
ஆழமாகப் பாதிக்கிறது என்பதை அறிந்திருத்தல். ix எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஒரு பிரச்சினையிலும், அடுத்தவர் கோணங்களை
ஆராயுந்திறன். X. எது சரியான ஒழுக்கம்? எது தவறு என்ற அறிவு. xi. உறவுகளை நேர்மையாக எதிர்கொள்ளுதல். xi. நியாயமான எதிர்பார்ப்புக்களையே மற்றவரிடத்திலும் வளர்த்தல். xi.வார்த்தைகளால் மட்டுமல்லாது முகபாவம், குரலின் தொனிகள் மூலமும்தம்மை
சரியாக வெளிப்படுத்துதல். xiv.தமக்கு எதிரானதாக்குதல்கள், விமர்சனங்களுக்குத்திறமையாகப்பதிலளித்தல், உதவி கேட்பதற்கும், பிறருக்கு உதவுவதற்கும் சரியான வார்த்தைத் தொடர்பு களைப் பயன்படுத்துதல்.
உசாத்துணை நூல்: (உணர்ச்சி அறிவாற்றல்
த்தீள்
YO தை - பங்குனி 2010
 
 
 
 
 
 

உளவியல் சிந்தனையியல்கள் (Schools of thoughts in Psychology)
அருள்திரு இராசேந்திரம் ஸ்ரலின் (MSc.Guidance & Counselling)
தொடர்ச்சி.
வற்சன் மனிதர்களை தூண்டலுக்குத் துலங்கல் காட்டும் உயிரியாக நோக்க, தோண்டைக், ஸ்கின்னர் ஆகியோர் மனிதன் தன் நடத்தையால் ஏற்படும் விளைவால் உருவாக்கப்படுகின்றான் எனக் கருதினர். ஆனால் இவர்கள் தூண்டல்-துலங்கல், நடத்தை-விளைவு என்ற அம்சத்துள்ளிருந்து செயற்படும் முக்கிய ஓர் அம்சமான மனத்தைக் கருத்திற் கொள்ளவில்லையென்பதை 6Ti" (36) u60ör(6.3T (Edward B.Bandura) அவதானித்தார். அவர்களது சிந்தனையி லுள்ள குறையை நிவர்த்திசெய்து தூண்டல் துலங்கலுக்கிடையே மனம் செயற்படுகின்றது. அதனால்தான் ஒரே தூண்டிக்கு வெவ்வேறு மனிதர் வெவ் வேறு துலங்கல் செய்கின்றனர். அவர்கள் ஒரே மாதிரியாகத் துலங்கல் காட்டு வதில்லை என்றார். அந்த வகையில் இவர் உளநடத்தைச் சிந்தனையியலை (Cognitive Psychology) உருவாகப் பங்களிப்புச் செய்தார் எனலாம். அதாவது உளவியல் மனித உளச்செயல்களைக் கருத்தில்லெடுக்காவிடில் அது குறை யுள்ளது என்பதை விளக்கினார்.
நடத்தைச் சிந்தனையியலானது கற்றல், நிபந்தனைக்குட்படல், வெகுமதி: தண்டனை என்பனவற்றின் செல்வாக்கு என்பனபற்றிய கற்றலைத் தூண்டிய தோடு நடத்தை மாற்றம் ஏற்படுத்தல் (Behaviourmodification) முறைகளையும் அறிமுகம் செய்தது.
4. முழுமை நோக்கியல்: இச்சிந்தனையியல் ஜேர்மன் நாட்டில் மக்ஸ் வேர்த்தெய்மர் (Max Wertheimer 1880-1943) என்பவரால் 1912ல் அறிமுகம் செய்யப்பட்டது. இவரோடு சேர்ந்து செயற்பட்டோர் கேள்ப் கோபிக்கா(Kurt Koffika. 1886-1941), G6)T6b6igTß (35T6pi (Wolfgang Kohler. 1887-1967). இவர்கள் நடத்தையியலை எதிர்த்தனர். இவர்களது முக்கிய ஆய்வுப் பொருளாக அமைந்தது உளச்செயற்பாடு எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றது என்பதே. மனித மனத்துள் இயங்கிக்கொண்டிருக்கும் செயற்பாடு முக்கியமான தெனக் கருதினர். சிந்திக்கும்முறை, கற்றல், முழுமையான புலக்காட்சி என்பனவற்றிலே கவனம் செலுத்தினர். மனித நடத்தையைப் பகுதி பகுதியாகக் கற்க முடியாது அது ஒரு முழுமையாக ஒட்டுமொத்தமாகவே ஆய்வுக்குட்பட வேண்டும் என்று
தை - பங்குனி 2010 41

Page 23
கருதினர். இவர்களின் முக்கிய வாக்கு: முழுமையென்பது அதன் பகுதிகளின் 69 (6OLDITg595560956 Lt. Gusflug) (“The whole is greater than the sum of its parts.").
புலன்கள் அளிக்கும் பல்வேறு தரவுகளை மனமானது ஒன்று சேர்த்து அவற்றை ஒரு முழுமையான புலக்காட்சியாக உருவாக்குகின்றது. இத்தகைய முழுமையையே கெஸ்ரால்ற் என்று அழைப்பர். இதற்கு வடிவம் (form), கோலம் (pattern), முழுமை (whole) என்று அர்த்தம். இந்த முழுமையானது அதை உருவாக்கிய பகுதிகளின் கூட்டைவிட வித்தியாசமானது. திரைப்படம் இதனை விளக்கும். ஒன்றைவிட மற்றது சிறிதளவே வித்தியாசமான போட்டோக் கூறுகளை வேகமாக அசைக்கும்போது அதில் அசைவுகள் தோன்றுகின்றது. இவர்களது ஆய்வுகள் சிந்தனைச் செயற்பாடு, பிரச்சினை தீர்த்தல், புலனுணர்வு, புலக்காட்சி போன்ற இன்றைய உளவியல்துறைகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளது. ஒருவர் கற்கும்போது அவரது மனதுள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதனை ஆய்வு செய்வது மனித நடத்தையைப் புரிந்துகொள்ள முக்கியமானது என இவர்கள் கூறியதை இன்றைய உளவிய லாளர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.
5. உளப்பகுப்பாய்வியல் : இதனை சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud. 1856-1939) 1909-1912 காலப் பகுதியில் தன் விரிவுரைகள் வழியாக அறி முகம் செய்தார். வியன்னாவைச் சேர்ந்த ஜோசப் புறுவரின் (Joseph Bruer) வைத்திய அனுபவம் இவரது சிந்தனையில் செல்வாக்குச் செலுத்தியது. புறுவர் தனது பாரிச வாதச் சுகநாடுநர்கள் (நோயாளர்) அறிதுயில்நிலையில் (Hypnosis) தமது பிரச்சினைபற்றி மனம்விட்டுப் பேசக்கூடியவர்களாக இருந்த போது இந்நலமின்மை நீங்கியதை அவதானித்தார். பிராய்ட் தன் சுகநாடுநர்களும் உடலியல் காரணிகள் ஏதுமற்ற நிலையில் உடல்நலமின்மைகள்பற்றிப் பேசு வதை அவதானித்தார். தனது அனுபவத்தினதும் புறுவரின் அனுபவத்தினதும் அடிப்படையில் மறைநிலை மனத்தின் (unconscious mind) செல்வாக்கை கண்டறிந்தார்.
இவரது முக்கிய பங்களிப்பு மறைநிலை மனம் பற்றிய ஆய்வாகும். மறைநிலை மனதுள் மறைந்து கிடக்கும் எண்ணங்கள், நினைவுகள், ஆசைகள். என்பன மனித நடத்தையில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. குழந்தைப் பருவத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத, தண்டிக்கப்பட்ட விடயங்கள் மறைமனதில் ஒளிந்திருந்து செல்வாக்குச் செலுத்துகின்றன. இம்மனப்பரப்பில் மறைந்துள்ள விடயங்கள் கனவுகள், வார்த்தை மாறி வரல்(slip ofthetoungue),
42 தை - பங்குனி 2010
 

உணர்ச்சிகள், விசித்திர நடத்தைகள்(mannerisms), என்பனவற்றில் வெளிப்படு கின்றன. மறைநிலை, மனதுள் ஒளிந்துள்ள விடயங்களிடையே காணப்படும் முரண்பாடுகளே உளர்நலமின்மைகள் ஏற்படக் காரணிகளாகின்றன. மனதில் (835T6örju6)libó0B 96.6) TGI finió061556566T (Free association) ep6)b 93bgub, கனவுகளைப் பகுப்பாய்வு செய்தும் குணமாக்க முடியும் என்று வெளிப்படுத்தினார். மேலும் மறைநிலை மனதில் மறைந்துகொண்டு மனித நடத்தையை இயக்கும் ஊக்கிகளாக மனிதப் பாலியல், வன்நிலை (aggression) என்பன விளங்குகின்றன என்றார். அத்தோடு மனமானது பாதிக்கப்படாதவாறு மறைநிலை மனமானது பல உளக்காப்பு நடத்தைகளில் (Defense Mechanisms) ஈடுபடுகின்றது என்ற முக்கிய கருத்தையும் முன்வைத்தார்.
தொடரும்.
ஆன்மீக 2ளவியல்
/ கருத்துக்குவியல் ཡོད༽
ஒரு சமூகத்திலே “நோய்’ என்பது எவ்வளவு இயல்பான ஒன்றாகக் கருதப்படுகின்றதோ அவ்வாறே“குணப்படல்’ என்பதும் இயல்பானது.
“நம்மைக் குணப்படுத்துவது யார்? எது? உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் குணமடைந்த அனுபவங்களில் இருந்தும், மற்றவர்கள் குணமடைந்த அனுபவங்களைநிங்கள் அனுபவித்த அனுபவங்களில் இருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டதை"நாங்கள்’ குணம் பெறும் வழிமுறைகளாக கைக்கொள்ள கருத்துள்ள கருத்துக்களாக"நான்’க்கு எழுதிஅனுப்புங்கள்.
ン ܢܠ
தை - பங்குனி 2010 48

Page 24
உளவிற்கல்வி
തുര്യഗ്രർ
கடந்தகால நிகழ்வுகளை நினைத்தலும், மறத்தலும் மனித மனத்தில் நிகழும் அன்றாட நிகழ்வுகளாகும். நினைத்தலும், மறத்தலும் மனிதனுக்கு அவசியமான தாகும்.நாம்கற்கின்றபோதுநாம்படித்தவை மனதிலே சேமித்து வைக்கப்படுகின்றன. பயன்படுத்த முடிகின்றன. இதனால்தான் தேவையேற்படும் போது மீண்டும் பயன் படுத்துவது சாத்தியமாகின்றது. நாம் : சிந்திப்பதற்கும் பகுத்து அறிவதற்கும் நினைவிலுள்ள தகவல்கள், அனுபவங் களையே பயன்படுத்துகின்றோம். கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு தொடர்பு படுத்திப்பார்த்து எதிர்காலத்தில் நிகழக் கூடியனபற்றி முற்கூறல் செய்யக்கூடியதாக இருப்பதற்கும் எமது நினைவாற்றலே காரணியாகின்றது. மனத்திலுள்ள நினைவுகள் நீடித்ததன்மை கொண்டதாகவும், தேவையானபோது மீட்டுப்பார்த்துப் பெறக்கூடியதாகவும் இருப்பது மனிதவாழ்விற்கு அத்தியாவசியமானது.
நினைத்தல் பலவழிகளிலேநிகழ்கின்றது. ஒருநிகழ்ச்சிநடந்தகழலைநினைத்துப் பார்த்து அந்த நிகழ்ச்சியை உடனே ஞாபகத்திற்கு கொண்டு வருவது ஒரு முறை. இதிலே நிகழ்ச்சித் தொடர்பான சிறிய ஒரு நினைவுத் தடயத்தின் உதவியுடன் முழு அனுபவத்தையும் நினைவுக்குக் கொண்டுவர முடிகின்றது. அன்பளிப்புப் பொருளானது அது தொடர்பான ஆள், அவர் தந்த அனுபவங்கள் என்பவற்றை நினைவூட்டுகின்றது.
ஆனால் சூழல் பற்றிய தடயங்களின்றியே சிலவற்றை நினைவுக்குக் கொண்டு வரமுடியும் உ-ம் ஏற்கனவே மனப்பாடம் செய்த ஒரு பாடலின் ஒரு பகுதியை கூறும்போது அப்பாடல் முழுவதையுமே நினைவுக்குக்கொண்டு வரமுடிகிறது.
இதிலே, அப்பாடல் மனப்பாடமாக்கியபோது, இருந்த சூழல் பற்றிய தடயங்கள்
44 தை - பங்குனி 2010
 
 
 
 
 

அடையாளம் கண்டுகொள்வதை இதற்கு
கம்
பொதுசன நபி
As ழ்ப்பா Flgðíl 0
ஏதுமின்றியே முழுப்பாடலையும் மீட்டக் கூடியதாக இருக்கின்றது.
இன்னொரு வகை நினைவுக்குக் கொண்டு வருவதிலே இனம் கண்டு கொள்வது அல்லது அடையாளம் காண்பது நிகழ்கின்றது. “எங்கே என்று ஞாபகமில்லை. ஆனால் உம்மை எங்கேயோ பார்த்திருக்கிறேன்’ என்று நாம்
உதாரணமாகக் கொள்ளலாம். இதிலே தவறுகள் நிகழ்வதுண்டு.
மேற்கூறிய அனைத்தும் மனத்தின் நினைவாற்றலை வெளிப்படுத்துகின்றன.
நினைத்தல் 3 நிலைகளில் நிகழ்கின்றது.
1. புலன்களினால் வாங்கப்படும் தகவல்களை மீட்டுப்பார்க்கக்கூடிய வடிவுக்குக் கொண்டுவருதல் இதை மீட்டுக்கொணர்தல் (Recal) அல்லதுமிட்டுணர்தல் (Recognition) 66oreorb.
2. அந்தத் தகவல்களைச் சேமித்து வைத்தல். (Retention)
3. நினைத்தல் (Remembering) எண்ணங்கள், நிகழ்வுகள் அனுபவங்களை
உள்ளத்தில் இருத்தி இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தல்.
ஒரு தொலைபேசிச் செய்தியைப் பெறுவது அதை அச்சிட்டு கோவை ஒன்றில்
போட்டுவைப்பது, தேவையானபோதுஎடுப்பது என்பன மேற்சொன்ன3நினைவாற்றல் சம்பந்தமான செயற்பாட்டை இலகுவாக விளக்கும்.
ஒன்றை ஞாபகப்படுத்த முடியவில்லையென்றால் மேற்சொன்ன 3நிலைகளில் ஏதோ ஒன்றில் அல்லது மூன்றிலும் கோளறு ஏற்பட்டுள்ளது என்பதுதான் அர்த்தம்.
○_つ
தை - பங்குனி 2010 45

Page 25
2டலாவியலாலர் விசைலில்.
ஹென்றி கிளே லின்ட்கிறென் Henry Clay Lindgren
இவர் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் உளவியல் துறையின் பேராசிரியராக இருக்கிறார். சமூக உளவியலில் இவரது கண்ணோட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. பலதரப்பட்ட ஆய்வுகளை இவர் மேற்கொண்டுள்ளார்.
தலைமைத்துவத்தைப்பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வுகளைச் சற்றுக் கவனிப்போம்.
தலைமைத்துவம் எனப்படும்போது, தலைவன் என்ற பதத்திற்கு ஒரு வரைவிலக்கணம் காணவேண்டியுள்ளது. ஒரு குழுவில், ஒருவர் ஏனையோர்மீதுதன் செல்வாக்கை, அவர்கள் தன்மீது செலுத்துவதிலும் பார்க்க, அதிகமாகச் செலுத்துவது தலைமைத்துவம் எனக்கூறலாம். எவரொருவர் தனது செல்வாக்கை ஏனையோர்மீது செலுத்தி அவர்களுடைய உளப்பாங்கினை, விழுமியங்களை, உணர்வுகளை (Emotions) மாற்றமுற்படுகிறாரோ அதனை அவர் தலைமைத்துவத்தை அடைய எடுக்கும் முயற்சியெனக் கூறலாம்.
தலைமைத்துவம் என்ற பதமானது மூன்று முக்கிய கருத்துக்களை உள்ளடக் குகிறது.
1. (5,555 56f 618556) - an attribute of a position 2.9056irfoir g5600TSFujib - a characteristic of a person 3.9056i5LDmoor Blš65- a category of behaviour
ஒரு தலைவன் மக்களால் மதிக்கப்பட்டு விரும்பப்படுகின்றபோது, மக்கள் அவனைக் கண்டுபாவிக்க முனைவார்கள் (limitation) உதாரணமாக அவரின் நடை, உடைபோன்றவற்றையும், உரையாடுகின்றபாங்கினையும்பின்பற்ற முனைவார்கள். நமது நாட்டிலும் கூட தமிழகத் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களைப்போல் பேசுவதில் ஒரு தனி இன்பம் காண்பதை அவதானிக்கலாம்.
பேராசிரியர் ஹென்றி, தலைவர்களை இரு வகையாகப் பிரிக்கலாம் என்பார்.
1. உத்தியோகமுறைசார்ந்ததலைவர்கள். Oficial leaders
2. உத்தியோக முறைசாராத தலைவர்கள் UnOficial leaders முதலாம் வகையைச் சார்ந்தவர்களை மக்கள் நேரிடையாக அறிவார்கள்.
46 தை - பங்குனி 2010
 
 

அவர்கள் வகிக்கின்ற பதவி காரணமாக அவர்களைத் தலைவர்களாக ஏனையோர் ஏற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக, ஜனாதிபதி, முகாமையாளர் நகரபிதா, பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளைக் குறிப்பிடலாம்.
இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள்,தலைவர்கள் இல்லாதபோதும், சிக்கலான சூழ்நிலைகள் உருவாகின்றபோதும் முன்னணிக்கு வந்து விடுகின்றனர். இவர்களிற் சிலர் முதலாம் வகையினரின் உதவியாளர்களாகவும், செயலாளர்களாகவும் செயற்பட்டு, மக்களுடன் நேரடித் தொடர்புகளையும் ஏற்படுத்தி தமது செல்வாக்கைப் பெருக்கிக்கொள்கின்றார். உதாரணமாகப்பல அரசியற்தலைவர்களின் மனைவிமார் இம்மாதிரியான செல்வாக்கைப் பெருக்கிக்கொள்வர்.
ஒரு தலைவரை எடைபோடுவதனால் அவருக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு சக்தியும் கெளரவமும் (Power and prestige) உண்டு என்பதை அறியவேண்டும் என்கிறார். ஒரு தலைவர், ஏனையோர் மீது தம் செல்வாக்கை எவ்வளவு தூரம் செலுத்துகின்றாரோ அதைத்தான் சக்தி என்கிறோம். எந்த அளவிற்கு தலைவரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதோ, அவ்வளவு கெளரவத்தை அவர் பெற்றிருக்கின்றார் என்பது புலப்படும். இதன் அடிப்படையில் தான் மேற்கு நாடுகளில் அடிக்கடி அபிப்பிராய வாக்கெடுப்பு (Opinion poll) நடத்தி அரசியற் கட்சிகளுக்கும் அரசாங்கங்களுக்கும் உள்ள செல்வாக்கினை வெளியிடுவார்கள். இம்மாதிரியான வாக்கெடுப்பு நாடுபூராகவும், பொதுத்தேர்தலைப் போல் நடைபெறுவதில்லை. மாறாக எல்லா மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து(கிட்டத்தட்ட 1000 பேர்வர்ை) அவர்களுக்குத்தபால் மூலம் அபிப்பிராயம் கேட்கப்படுகின்றது. இதை நாட்டின் “மாதிரி’யாகக் கணித்தே (Sample) பார்க்கப்படுகின்றது.
தலைவர்கள் பலமாதிரியானவர்கள் எனக் கூறும் பேராசிரியர் ஹென்றி,
அவர்களை இனங்காண்கின்றார்.
1. Bieurrësessit- administrators
2. 6hsmsiroups 6gsCSurfit- policy makers
3. வல்லுனர்கள்- experts
4. இலட்சியவாதிகள்- ideologists
5. p5356 fraid- charismatic leaders
6. (9.géuig56066ifissir- political leaders
7. BITLD5560606 fissir- Symbolic leaders
8. பெற்றோரைப்போல் கணிக்கப்படும் தலைவர்கள் - parent figure leaders இவர்களுக்குப் பொதுவாகக் காணப்படும் குணாதிசயங்களில் மிகவும் முக்கியமானவை.
605 - urig56,of 2010

Page 26
1.6f(36.5b - Intelligence
2. GLD6om:$55b– Dominence
3. & JITssib - Adjustment 4. செயற்பாடுகள் - Activities எனப் பேராசிரியர் கூறுகின்றார்.
அத்துடன் தனது ஆய்வுகளிலிருந்து தான் கண்ட ஒரு உண்மையையும் எடுத்துக்கூறத் தவறவில்லை. அதாவது பல தலைவர்கள் சமூகத்தில் காணப்படும் விழுமியங்களைச் சீராக அனுசரிக்காமல் இருப்பார்கள், இவர்களின் சொல்லும் செயலும் பொதுவாக மாறுபட்டே காணப்படும் எனக் கூறுகின்றார்.
பேராசிரியர் ஹென்றியின் சமூக உளவியல்படைப்புக்கள் பல அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பிரித்தானியாவிலும் கைநூல்களாக உபய்ோகிக்கப்படுகின்றன.
உளவியலாளர் வரிசையில். எனும் பகுதியி னுடாக“நான்’உளவியலாளர்களின் சரித்திரங் களை நேயர்களுக்கு தந்து உதவுவேன். உங்க ளுக்கு விருப்பமான உளவியலாளர்கள் பற்றி நீங்கள் எழுதி அனுப்ப “நான்’ உங்களுக்கு களம் அமைத்துள்ளது.
தை - பங்குனி 2010
 

() ()
ගarෙනtමහd cවාහිනීග
நான்நல்ல நண்பன்
A.எட்மன்தாஸ் குருநகர்.
e o O ܚܲܝܲܬ݀
உலகப் படைப்புக்களிலெல்லாம்
மேன்மையுள்ளவனாக, மனிதன் படைக் கப்பட்டான். படைப்பில் இறைசாயலாக மனிதன் இருப்பினும், சுகபோக வாழ் விலே இன்பம் காண்பனாகவே வாழ்ந்து கொண்டிருப்பது கண்கூடு. எனினும் புதிய கோணத்தில், இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மனிதர்கள் ஒவ்வொருவரும்,
மற்றவர்களுடன் தொடர்புபட்டு வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி. மகிழ்வாக வாழத்துடிக்கும் மனிதன் தன் மகிழ்வுக்கு அடிப்படையான அன்பு, அரவணைப்பு, ஒற்றுமை, புரிந்துணர்வு, மற்றும் விட்டுக் கொடுப்புப் போன்ற பண்புகளை வளர்ப்பது அவசியமானதாகும். ஆனால் மனிதனோ மகிழ்வைத் தொலைத்துவிட்டு மனம்போன போக்கிலே நிம்மதியற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறானதொரு சூழலில்தான் நல்ல மனிதனை உருவாக்குவதில்நாம் எடுக்கும்பிரயத்தனம் என்ன? என்றகேள்விஎழுப்பப்படுமிடத்து மற்றவர்களின் பழிசுமத்தும் படலத்தைப் பார்க்கலாம். அதாவது,
“இந்தச்சனம் திருந்தாது”
என்று மற்றவர்கள் மேல் குற்றச்சாட்டுகளை போட்டுவிட்டு, தாம் தப்பித்துக் கொள்வதில் சாமர்த்தியமானவர்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நேர்மையானதை இனங்காட்டவே “நான்”நம்மிடையே அளப்பரிய சேவையாற்றுகின்றது.
அரபுநாடுகளில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது "நாம் ஒவ்வொருவரும் ஒரு நேர்மையாளரை உருவாக்க முடியும். அந்த நேர்மையாளன்"நான்”. ஆம், மிகவும் உண்மையானதொரு கருத்து. இதனூடாக நமக்கு உணர்த்தப்படுவது என்னவெனில்
தை - பங்குனி 2010 49

Page 27
மற்றவர்கள்மேல்குற்றம்சுமத்துவதைவிடுத்து என்னை நான் நேர்மையாளனாக மாற்றுவ தற்கு முயற்சிக்க வேண்டும் என்பதாகும்.
அந்தவகையில் “நான்” எனக்கு நல்ல நண்பனாக விளங்குகின்றதென்றால் மிகை யாகாது. என்னை நான் நேசிக்கக் கற்றுத் தந்தது “நான்”, சமூக வழிகாட்டியாகவும், நன்மை, தீமைகளை சுட்டிக்காட்டி நல்ல தீர்வு யோசனைகளைத்தருவதுடன், துன்ப வேளைகளில் மனதிற்கு ஆறுதலாகவும் விளங்குகின்றது. ஆதலால்தான் “எனது நல்லநண்பனாகநான்”என்றும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நானைக் கற்று நான் நானாக வாழ முயற்சிப்பேன்.
தை - பங்குனி 2010
 
 
 
 
 

பொதுசன ఉuరిస్L யாழ்ப்பாணம்.
உளவியல் அணுகுமுறைகள் - ஓர் அறிமுகம்
உளவியல் என்றால் என்ன? இதற்குக் காலத்திற்குக் காலம் பல்வேறு வரைவிலக்கணங்கள் பல்வேறு உளவியலாளர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் அடிப்படையில் உளவியலின் ஆங்கில வடிவமான Psychology இனை நோக்கும்போது அது Psyche, logos ஆகிய இரு கிரேக்கச் சொல்லிலிருந்து உருவாகியமையை அவதானிக்க முடிகின்றது. இங்குPsyche என்பதுஉளம் அல்லது மனம் அல்லது ஆன்மா என்பதனையும், logos என்பது கற்கை என்பதனையும் குறித்து நிற்பதால் உளவியல் என்பது உளம் பற்றிய கற்கை என வரையறுக் கப்படலாம்.
ஆரம்ப காலங்களில் உளவியல் என்பது ஒரு தனித்துவமான விசேட கற்கை நெறியாகக் கருதப்படவில்லை. மெய்யியலின் ஒரு கூறாகவே கருதப்பட்டது. இந்நிலையில் உளவியல் பற்றி முதலில் எழுந்த நூலாக அரிஸ்டோட்டிலின் “ஆன்மாவின் இயல்புகள் “(De Anima) அமைந்துள்ளது. இவ்வாறாக பல்வேறு அறிஞர்களினதும் சிந்தனைகளால் விருத்தியடைந்த உளவியலிற்கு முதன்முதலில் அறிவியல் வடிவம் கொடுத்தவர் டேக்காட் (Descartes) ஆவார். எனினும் 1879இல் WilhemWundt என்பவரால்ஜேர்மனியின்Ieipzingபல்கலைக்கழகத்தில்உளவியல் ஆய்வுகூடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து உளவியலானது ஒரு தனி கற்கைநெறி என்ற அந்தஸ்தைப் பெற்றது. எனவே அறிவியல் முறையிலான உளவியலைத்தொடக்கி வைத்தவர் Wilhelm Wundt எனலாம்.
இவ்வாய்வுகூடத்தில் உளமானது அக நோக்கு முறையினால் (Introspection Method) ஆராயப்பட்டது. இம்முறையின் நோக்கமாக நனவுநிலை எண்ணங்களை அவற்றின் மூலகங்களினூடும், புலக் காட்சியை அதன் ஆக்கக் கூற்று புலனுணர்வுகளினூடும் பகுப்பாய்வு செய்தல் அமைந்திருந்தது. இதனடிப்படையில் Wundt அகநோக்கு முறையைப் பின்வருமாறு விபரிக்கின்றார். “ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவனது விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து விபரித்தலும், பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும்”
இத்தகைய நனவுநிலை எண்ணத்தின் கட்டமைப்பைஅறிவதற்கான முயற்சி
605 - Luries60f 2010

Page 28
அமைப்புவாதம்(Structuralism) அல்லது இருக்கைவாதம் (Existentialism) எனவும் அழைக்கப்பட்டது.
Wundt உம் அவருடைய இணை ஆய்வாளர்களும் பொதுவான பெளதீக சூழல், பொதுவான தூண்டி, பொதுவான சொல்சார் அறிவுறுத்தல்கள் என்பவற்றை ஒவ்வொரு பங்குபற்றுனருக்கும் பயன்படுத்தியதன் மூலம் கட்டுப்படுத்திய நிபந்தனைகளின் கீழ் தமது அகநோக்கு ஆய்வின் பெறுபேறுகளை அளவிட்டுப் பதிவுசெய்தனர். இத்தகைய அளவீடு, கட்டுப்பாடு என்பவற்றின் மீதான வலியுறுத்தல் உளவியலின் அடிப்படைத் தத்துவத்திலிருந்து ஒரு புதிய உளவியல் பிரிவை உருவாக்குவதாக அமைந்தது.
ஏறத்தாழ நூறு வருடங்களிற்கும் மேலாக தத்துவவியலாளர்கள் தான் உளம் பற்றி விவாதித்தனர். முதன் முதலாக விஞ்ஞானிகள் சில விஞ்ஞான ஆராய்வின் அடிப்படை முறைகளை உளச்செயன்முறைகள் பற்றிய கற்கைக்குப் பிரயோகித்த போது உளவியலும் ஒரு விஞ்ஞானம் என்ற அந்தஸ்தைப் பெற்றது.
இதனடிப்படையில் ஜேம்ஸ் என்பவர் உளவியலை பின்வருமாறு வரையறுக் கின்றார். “உளவாழ்க்கையினுடைய விஞ்ஞானம் என்பது அதனுடைய தோற்றப் பாடுகள், நிபந்தனைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. தோற்றப்பாடுகள் எனும் போதுஉணர்வுகள், விருப்பங்கள், அறிகை, காரணங்காணல், தீர்மானங்கள் என்பன கருதப்படுகின்றன.”
எனினும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அகநோக்கு முறையின் பயன்பாடும் தகுதியும்பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது. குறிப்பாக அமெரிக்க உளவியலாளரான John.B.Watson இது தொடர்பான விமர்சனங்களை முன்வைத்தார். அகநோக்கு முறையின் முடிவுகள் நிரூபிக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ முடியாதவை என்றும் அகவயத்தன்மை உடையது என்றும் Watson நம்பினார். அகநோக்கு முறையின் மூலம் ஒருவர்தன்னுடைய உளச்செயன்முறைகளைமட்டுமே அவதானிக்க முடியும். அதனையும் அவை நிகழும் போதே ஆராய்தல் என்பது இயலாத விடயம் என்றும் கூறினார்.
52 தை - பங்குனி 2010
 
 

22
"நான்’ 2010ம் ஆண்டிற்கான உங்கள் சந்தாவைப் புதுப்பித்து விட்டீர்களா? வருடத்தில் நான்கு உளவியல் இதழ்களை நானில் பறிக்க இன்றே உங்கள் சந்தாவை புதுப்பியுங்கள்! நீங்கள் “நான்’ அங்கத்தவர் இல்லையெனில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்!
99.
*தல் டி மசனட் குருமடம், கொழும்புத்துறை, ust DLJT600TLD, இலங்கை. தொ.பே: 021-222 5359

Page 29
क्षं
O 1 O