கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கை 2008 (31)

Page 1


Page 2
தலைப்பு
ஆசிரியர்
ஆசிரியர் குழு :
ബൈബിu്B
9łörf” (BLITT
6606)
Title
Editor
நங்கை - இதழ் 2008/31
சரோஜா சிவச்சந்திரன்
எம்.தேவகெளரி, விரிவுரையாள
கோகிலா மகேந்திரன், எழுத்தா
கே.எஸ்.சிவகுமாரன், எழுத்தா6
மகளிர் அபிவிருத்தி நிலையம்
இல:07, இரத்தினம் ஒழுங்ை கே.கே.எஸ் வீதி, வண்ணார்ட யாழ்ப்பாணம்.
கரிகணன் பிறிண்டேர்ஸ்,
இல, 424, காங்கேசன்துறை யாழ்ப்பாணம்.
உள்நாடு
தனிப்பிரதி ரூபா 25 ஆண்டுச் சந்தா : ரூபா 24 (தபாற்செலவு உட்பட)
: Nangai - Issue 2008/
Saroja Sivachandran
Editorial Board : Ms.M.Devagwory, L
Publishers
Printed by
ISSN ISBN
Ms.Kohila Mahendr
Mr.K.S.Sivakumara
: Centre for Women a No:07, Ratnam Lane Jaffna, Sri Lanka.
: Harikanan printers,
K.K.S. Road, Jaffna,
1800-3109 977-180-031.00-0-2

ர், ஊடக கல்வி நிலையம், கொழும்பு,
ளர். முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்.
ார்/விமர்சகர்
is,
ങ്ങrങ്ങിങ്ങ്,
வீதி,
வெளிநாடு
. OO தனிப்பிரதி : eufT 5O. OO
.O.O. ஆண்டுச் சந்தா : e5LIFT 54O. OO
(தபாற்செலவு உட்பட)
31
, B. A Hons (Cey), M.A.(Jaf).
ecturer, College of Journalism, Colombo.
an, Writer, Former Deputy Director of Education.
1, Writer/Critic
nd Development, , Off.K.K.S. Road,

Page 3
LD86lflfr SILífleÉldbgbg3 fó0 uurtpurié00TLD Centre for Women and D

60 DS
፴፬ ጋ፲/2008
D6DUILD,
evelopment

Page 4
வபாருளடக்கம்
1) "நல்லதோர் உலகம் செய்வோம் - ஆசிரியை
2) தொடர்பூடகங்களும் பெண்களும்
3) மனைவியின் மகப்பேற்று நேரத்தில் கணவனும் ச
4) சர்வதேச மகளிர் தினம்
5) Adverdisment 8th & 9th March
6) தேயிலைத் தோட்டப்பெண்
7) மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறிய நே
8) கோடிக்கணக்கரனி கிராமிய ஏழைப் பெண்களின் முகம்மதுபூனுஸ் அவர்கட்கு உலகம் வழங்கும்
9) ஒர் விடிவெள்ளியின் அஸ்த்தமனம்!
10) சொல்வளத்தைப் பெருக்கும் - வாசிப்பு
1) சார்க் கூட்டமைப்பின் சமூகப் பட்டயம்
12) பெண்கள் தொடர்பான தொழிற் சட்டங்கள்
13) தொடர்பூடகங்களும் பெண்களும், பெண்களை ஆ
14) தெரிந்துகொள்க
15) தொடர்பு ஊடகத்துறை புதிய போக்குகள் பத்திரி
16) பாலியல் வல்லுறவு கொலைக்கு, பன்னிரண்டு வ
17 )உங்களுக்குத் தெரியுமா? அழுகு சாதனப் பொரு
18) கனவு வாழ்க்கை
19) 500 பெண்களின் குரல்களில் ஒர் பிரகடனம்
20) 2000ஆம் ஆண்டின் அபிவிருத்தி இலக்குகள் 2
2) மகளிர் அபிவிருத்தி நிலையம்

கூடவே இருப்பதற்கு அனுமதி
பாளம்
வறுமையைப்போக்க உழைத்த சன்மானம்
பூர்வப்படுத்தலும். ஆளுமைப்படுத்தலும்
கைச் சுதந்திரம் எதிர்நோக்கும் சவால்கள்
ருடங்களின் பின் தீர்ப்பு - மரணதண்டனை
ட்களின் பின்னால் மறைத்திருக்கும மர்மம்
15இல்
O
O2
06
07
10
13
15
16
17
18
25
26
34
35
37
38
4.

Page 5
"நல்லதோர் உல
இன்று பல காரணங்க ளால் மனிதனின் சந்தோஷமே பறிபோய் விட்டது. உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவு பயங்கரவாதம், மனித விழுமியங்கள் மதிக் கப்படாமை இவை எல்லாம் சமூகத்தில் பலமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. போதனைகளையும், சித்தாந்தங்களையும் கொண்ட பல சமயங்கள் வேரூண்டி வளர்த்த மனித விழுமி யங் கள் , ச ரி ந் து வி ட் ட ன வாழ்க்கையின் இளமைக்காலம், பலருக்குப் பயனற்றதாகப் போய் விட்டது. பல்கலைக் கழகங்களிற்கூட அறிவுசார் சிந்தனைகள் நீங்கி அரசியல் சார் சிந்தனைகள், கருத்து மோ த ல் கள் கட்ட விழ்த்து விட ப் பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் மா பெரும் த த் துவ ஞானி யான ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியது போல “நீங்களே உங்களுக்கு ஆசிரியராக வும், நல்ல வழி நடத்துனராகவும் ஆக வேண்டும்” என்பது இன்று எவ்வளவு பொருத்தமாக உள்ளது. கல்விகற்ற மேதாவிகள்கூட தாம் என்ன பேசுகின் றோம், தாம் பேசும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவையா என்பதை மறந்துவிடு கின்றனர். மனித குலத்தின் பிரச்சினைகள் உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும், ஏதோ ஒரு வகையில் ஒத்தவையாகவே
-so- -as- -
Biaodo S85 31/2UDB

கம் செய்வோம்"
உள்ளது. ஒவ்வொரு சமூகத்திலும், வாழும் மனிதர் மற்றவரைச் சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். நாடுகள் கூட, பலமிழந்த, வறிய நாடுகளை எவ்வாறு சுரண்டுகின்றன. இதனால் வறிய நாடுகள் மேலும் மேலும் வறுமைக்குள் தள்ளப் படுகின்றன.
இவ்வாறான சமூகப் பிரச்சினை களிலிருந்து விடுபட பலர் இன்று ஆன்மீகத் தலைவர்களை நாடுகின்றனர். ஆன்மீகச் சித்தார்த்தர்கள் கூட மக்களை தத்தம் வேறுபட்ட தத்துவ அறிவூட்டல்கள் மூலம் சமூக ஒன்றிணைப்பை பிரித்துவிட்டன. வீடு தீப்பற்றி எரியும் போது வெறுமனே எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? தீமை ஒன்று நடக்கும்போது பார்வையாளனாக இருப்பவரும் அதற்கு உடந்தையானவரே. சமூகத்தில் தீய செயல்கள் இடம்பெறுவதைச் சும்மா பார்த்துக் கொண்டிருப்பவர்களும் தமக்குத் தாமே நற்பெயரைச் சூட்டிக் கொள் பவர்களும் நியாயத்திற்கப்பாற்பட்டவர் களே! சமூகத்தில் நாம் ஒருவராக இருப்பதை விட தாமே உலகம் என்ற் பரந்த கோட்பாட்டி ன் அடிப் படையில்
“நல்லதோர் உலகம்”செய்வோம்.
edisou

Page 6
தொடர்பூடகங்க
பெண் களை ஆர்வப் படுத்தலும் ஆளுமைப்படுத்தலும்
ஊடகங்கள் சமூகத்திற் கருத்து நிலையை உருவாக்குவதிலும், பிரதிபலிப் டதிலும், பரப்புவதிலும் முக்கிய பங்கு வகிப்பன. எனவே இந்த ஆடடகங்கள் பெண் கள் பற்றிய விட யங் களைக் கையாளும் முறைமை சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. அனேகமாகப் பிரதான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு வருபவை. அதாவது அந்த ஊடகங் களுக்கான வாடிக்கையாளர்கள் (கேட்ப வர்கள், பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள்) ஆண்களே என்ற கருத்தாக்கம் தான் முதன்மையானதாக இருக்கிறது. ஒரு தினப்பத்திரிக்கையிற் பெண்கள் வாசிப்பது என்ன? இவை யெல்லாம் கருத்திற் கொள்ளவேண்டிய விடயங்கள்.
பத்திரிகையாயின் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பக்கத்தில் பெண்கள் பற்றிய விடயங்கள், பெண்களுக்கான விடயங்கள், குடும்பத் தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக் கும் . குழந்தை, ச ைம ய ல் , அழகு முக்கியமானவையாக இருக்கும். அத்துடன் பெண்களுக்கான ஒழுக்கம், கணவனை, உறவினர்களை, வயோ தி பர்களைக் கவனித்த ல் , பராமரித்தல் பற்றிய விடயங்களும் கொடுக்கப்படும். இவை பெண்களுக்கு அடுத்து பெண் பற்றிய விடயங்களை, உதாரணமாகச் சினிமாவில்,
கங்கை இதழ் 31/2008

ளும் பெண்களும்
சினிமாவை பத்திரிகையிற் கொண்டுவரல், இவற்றிற் பெண்களைக் காட்சிப்படுத்தல் ஆண்களை வாசகர்களாக, பார்வையாளர் களாக வரித்துக்கொண்டதன் விளைவு; அது இன்றுவரை தொடர்வதுதான் அபத்தம். பெரிய திரை ஆண்களுக்கு, சின்னத்திரை (வீட்டுக்குள்) பெண்களுக்கு. இத்தகு பிரிப்பைத்தான் சகல ஊடகங்களும் கருத்தியல் ரீதியாகச் செய்கின்றன. இதனால் ஆண்-பெண் நோக்கு, தேவை வேறு வேறாகி அவர்கள் இருதுருவங்களாக வளர்த்தெடுக்கப்படுகின்றார்கள். ஆனால் இவர்கள் ஒன்றாக ஒரே கூரையின்கீழ் வாழ வேண்டிய வர் க ள் - இன்னும் சொல்லப்போனால், ஆணுக்கு உலகமே வீ டாகவும் , பெண் களுக்கு வீடே உலகமாகவும், இவர்களை வளர்த் தெடுக்கும் பணியை நன்றாகவே தொடர் பூடகங்கள் செய்துவருகின்றன. இதை நாம் விளங்கிக்கொண்டாற்றான், தொடர்பூட கங்களிற் கொண்டுவரக் கூடிய மாற்றங்கள் பற்றியும் மரபிற் சேர்க்க வேண்டிய விடயங்கள் பற்றியும் தெரியமுடியும்,
தொடர்பூடகங்கள் பெண்களை எப்படி கருத்துருவாக்கம் செய்கின்றன என்பதை ஆழமான புரிதலுடன் விளங்கிக் கொள்கின்றபோது, பெண்களின் முழு ஆளுமையும் குடும்ப வட்டத்திற்குள் கட்டமைக்கப்படுவது புரியும். அதுகூட எதிர்மறையாக இருப்பதுதான் இன்று பெரிய சவால்.

Page 7
அதாவது எம்மில் 70% பெண்கள் சமூகத்தில் தொழிற்றுறைகளில் இறங்கி யுள்ள நிலையிற் குடும்பம் சார்ந்த கருத் துக்கள் இரட்டைச் சுமையை ஏற்படுத் துகின்றதேயொழிய, நடந்த மாற்றங்களுக்கு அமைய அவை கட்டமைக்கப்படவில்லை.
உதாரணமாக, சமையலை இலகு படுத்த இர விற் காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து வையுங்கள் என்ற தகவல் பெண்களுக்காகத் தரப்படும். அலுவலகம் சென்று வரும் பெண் (இன்று அநேகர் அப்படியானவர்கள்) ஐந்து மணிக்குப் பின் வீட்டுக்கு வந்து, வீட்டு வேலைகள், சிலருக்குத் தன்னார்வ விருப்புகள், (வாசித்தல், ரீவி பார்த்தல், எழுதுதல்) குடும்பத்தினருடன் உரையாடல் எல்லாம் முடித்துப் படுக்கப் பத்து மணிக்கு மேலாகின்றது போது அடுத்த நாள் சமையலுக்குத் தயார்ப்படுத்த முடியுமா? இந்த விடயங்களைப் பிள்ளைகளுடன் கணவருடன் பங்கீடு செய்வது பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நிலை, ஒட்டுமொத்த குடும்பச் சுமையைப் பெண் ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவதால் அவள் சிந்தனையும் விரிவுபட வழியில்லை. இதனால், விரைவில் சலிப்படையும் பெண் பல பிரச்சினை
களையும் உருவாக்கக் காரணமாகிறாள்.
இதனாற்றான் பல வருடங்களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பற்றிக் குறிப்பிடும்போது, அவர்கள் வெறும் கண்ணிர் இழுப்பிகள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. (இன்று சின்னத்திரை நாடகங்கள் பெண்களை வைத்து அதைச்
செய்வது வேறு விடயம்). இந்த நிலையில்
Enzod Sg5 3/2008

தொடர்பூடகங்களிற் பெண்கள் ஆர்வம் கொண்டு அதில் தம்மை இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக் கொணர உதவும். அதிலும் பெண்பற்றிய அக்கறை கொண்ட பெண்களாற்றான் இது ஏற்படமுடியும். எப்படி ஆளுமையுள்ள பத்திரிகையாளர்கள் ஒரு சமூகக் கருத்தி யலைக் கட்டமைக்க, மாற்றியமைக்க முடியுமோ, அப்படித்தான் பெண்பற்றிய யதார்த்தங்களை உணர்ந்த பெண்ணாற் றான் தொடர்பூடகங்களிற் கருத்துக்களை முன்வைக்கமுடியும். நம்மிற் பலர் நம் சமூக யதார்த்தத்தை எமது சிந்தனையில் எடுக்காமலே கதைபண்ணிக்கொண்டும், கவிதை வடித்துக் கொண்டும், ஏற்கனவே எழுதிய பழமொழிகளை தூசி தட்டிக் கொண்டும் இருக்கிறோம்.
பெண்ணுக்குரிய பிரச்சினைகளைக் குடும்பமட்டத்தில் மட்டுமே வைத்துப் பார்த்துத் தீர்ப்பிடும் நிலையைத்தான் நாம் கொண்டியங்குகிறோம். இன்று நம் சமூகப் பெண்கள் சமூகத் தளத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள். போர் தந்த மாற்றம் இது. இப்போது அதுதான் வாழ்வாகி விட்டது. இந்த நிலையிற் குடும்பத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பெண் இப்படி இருக்கவேண்டும்; இது செய்ய வேண்டும் என்று கூறி ஒருகருத்துருவாக் கத்தை மேற்கொள்வது முரணானது. சாதாரணமாக "அழகு" பற்றிக் கூறும் நாம் இன்று எமக்குத் தேவைப்படும் உடல் உறுதி, உடல் உற்சாகம்பற்றிக் கதைக்கிறோமா? அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை முக்கியப்படுத்துகிறோமா? முடி நீளமும் முக அழகும் எந்தக் கருத் தாக்கத்தில் எமக்குத் தேவை? இந்தக்

Page 8
கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க
வேண்டும்.
எனவே, ஒரு சின்ன விடய மானாலும் அது இன்றைய யதார்த்தப் பெண்ணுக்கு ஏற்புடையதுதானா?- என்ற சிந்தனை வேண்டும். அத்துடன் கீழ்மைப்படுத்தல், பலவீனப்படுத்தல் எந்த விதத்திலும் பெண்ணின் இயற்கையான விடயம் என்ற தொனி இல்லாதவாறு கருத்துருவாக்கம் செய்தல் முக்கியமானது. பத்துப்பேரை ஒன்றாக அடிக் க முடியும் என்று திரைப்படத்தில் ஆணைக்கதாநாயகனாகக் காட்டமுடிந்திருக்கிறது. ஆனாலும் பலம் பொருந்தியவனாக ஆகமுடியும் என்ற நம்பிக்கை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது! இல்லாத ஒன்றையே, நடக்கமுடியாத ஒன்றையே இவ்வளவுதூரம் காட்ட முடியும் என்றால், யதார்த்தத்தை, உண்மை விடயங் களை எமது வாழ்வாதாரங்களை ஏன் காட்டமுடியாது? ஏன் வெளிக்கொணர முடியாது? வெளியில் இருந்து ஏதோ ஒரு வகையில் தொடர்பூடகங்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்களின் சிந்தனைக்காக மேற்கூறிய விடயங்கள்
முன்வைக்கப்பட்டன.
அடுத்த விடயம், ஊடகங்களிற் பணிபுரிவது! இது ஒரு பெரிய சவால்தான். மூன்றாம் உலக நாடுகளிலேயே முதன்முதற் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு, முதற் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை வைத்திருக்கிறோம் நாம். பெண்கள் அதிலும் தமிழ்பெண்கள், ச மூ க த் தி ற் பொது ம க் களு டன் தொடர்புகொள்வதென்பது பெரிய விடயம்.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும்
நங்கை இதழ் 3/2008

விடயத்தில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங் களில் ஜி.ஜி.யால் சொல்லப்பட்ட ஒரு விடயம்: “பொது மகளிர்” ஆக்கப்பார்க்கி றார்கள் என்பது. இப் படி சமூக ச் சிந்தனையைப் பெண்கள் ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமமாக இருந்த வரலாற்றில் வந்த நாம், இன்று போராளிப் பெண்களைக் கொண்டியங்குகின்றோம். பெண் தலைமைத்துவக் குடும்ப மரபைக் கொண்டிருக்கிறோம். ஆனால் தொடர் பூடகங்களிற் பணிபுரிவதற்கு முடியா திருக்கிறது. தொலைக்காட்சிகளிற் செய்தி வாசிக்கப் பெண் தேவை. பத்திரிகையைக் கவர்ச்சியாக்கப் பெண் தேவை ஆனால், ஆழமான கருத்தியல் களை , சமூக அபிவிருத்தி, அரசியல், பொருளாதாரம் பற்றிய அக்கறை களைக் கொண்டு தொடர்பூடகங்களில் இயங்கப் பெண்
‘இல்லை. ஏன்?
பெண்ணுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புக்கள் இவை சார்ந்து பெண் ஆர்வ ப்ப டல் என்பன இல்லாமல் இருக்கின்றது. இதற்குக் காரணம் சமூகம் பெண், தொடர்பூடகம் பற்றி வைத்திருக்கும் விழுமியங்கள், போருக்குள்ளால் புடம் போடப்பட்ட நாங்கள் எங்கள் பலத்தைச் ச ரி யா க இன ம் காண வில்  ைல . சமூகத்தளத்தில் எம்மால் ஆளுமையாக இயங்க முடிகிறபோது, ஏன் தொடர் பூடகங்களில் அதை வெளிக்கொணர முடியாது? பெண் ஏமாற்றப்பட்ட செய்தி, பெண் பாலியற் பலாத்தகாரப் படுத்தப்பட்ட செய்தி சுவாரஸ்யமான செய்திகளாக மட்டும் போடப்படும் நிலைதான் உள்ளது. இதுவே பெண்கள் ஊடகங்களுக்குள் வேலை செய்கின்ற போது, இயல்பாகவே அடுத்து என்ன நடந்தது? குற்றம் புரிந்த நபர்
04

Page 9
யார்? அவருக்குக் கிடைத்த தண்டனை என்ன? அல்லது தண்டனை கிடைக்க வில்லையா? இது எல்லாம் செய்தியாகும். இதுவே அக்குற்றத்தைக் குறைப்பதற்கு மான வழியுமாகும்.
அபிவிருத்தி, மீள்குடியேற்றம் பற்றி  ெயல்லாம் சிந் தி க்கும் போது , பெண்ணைப்பற்றி யார் சிந்திக்கிறார்கள்? சமூக மறு உற்பத்தி பண்பைக் கொண்டுள்ள பெண், குடும்பங்களைப் பராமரிக்கும் பெண், சமூகத்தில் முக்கிய கடமைகளை நிறைவேற்றும் பெண் கவனிக்கப்படுவ தில்லை. அவளது போசாக்குப் பற்றியோ, சுகாதாரம் பற்றியோ யாருக்கு அக்கறை? இது பற்றி பெண்களாற்றான் கேள்வி எழுப்ப முடியும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது எல்லா விதத்திலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் ஒவ்வொரு செயலும் ஆளுமை மிக்கதாக மிளிர வேண்டும். இதற்குப் பெண் தான் தன் குடும்பம், தன் சமூகம், தன்நாடு ஆகியவற்றிற் கொண்டிருக்கக் கூடிய தொடர்பு முக்கியம்.
தொடர் பூடகங்களிலும் முடி வெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இல்லை. அதிலும் தமிழ் பெண்கள் அறவே இல்லை. பெரும்பாலும் ஊடகங்களில் வேலைசெய்யும் பெண்கள் அலுவலகத்தினுள்ளே வேலை செய்பவர் களாகவே உள்ளனர். இன்றைய எமது ஊடகத்துறைக்கூட குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறை பெரியளவில் வளர்ச்சி யடைந்ததாக இல்லை. ஒரு விவரணக்
கட்டுரை எழுதுவதற்கான தகவலைத்
aapa Sa 31/2OOB

திரட்ட வெளியிற் சென்று வருதல், புலனாய்வுக் கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு என்பவற்றைக்கூட நாம் செய்ய முடிவதில்லை. ஆளணி பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பின்மை என்பன முக்கிய காரணங்களாகும். அத்துடன் தொடர் பூடகத்துறை, கல்வியியல் ரீதியாக வளர்த் தெடுக்கப்படாததும் ஒரு குறைபாடு. இன்று அந்த வாய்ப்பு உள்ளது. அதில் பெண் களையும் உள்வாங்கிப் பயிற்சி அளித்தால் நம்பிக்கை தரக்கூடிய யதார்த்த சமூகத்தைக்
கட்டியெமப்பலாம். (9
எ ல் லா வ ற் று க்கு ம் மே லா க ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஒரளவுக்காவது அந்தந்த நிறுவனங்களி லாவது உறுதிப்படுத்தப்படவேண்டும். ஊடகத் தொழில் என்பது எனக்குப் பிடித்ததையும் உங்களில் ஒருவருக்குப் பிடித்ததையும் எழுதுவதல்ல. சமூக யதார்த்தத் தி ல் இருந்து பல்வேறு கோணங்களிலும் பிரச்சி  ைனகள் அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வளமான சமூகத்தை எதிர்பார்த்து கட்டமைக் கப்படுவது அல்லது முன் வைக்கப்படுவது.
இதில் சமூகத்திற் சரிபாதிக்கும் மேலிருக்கும் பெண்களும் பங்கெடுத்துக் கொள்வது ஒரு சமநிலைச் சமூகத்தை உருவாக்க, பிரச்சினைகளைத் தெளிவாக அணுக வழிகோலும்.
உலகெங்கும் இன்று பெண்கள் தொடர்பூடகங்களில் மிகுந்த தாக்கம் மிக்க வர்களாக இயங்குகிறார்கள்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளிற் பெண்

Page 10
ஊடகவியலாளர்கள் 40 வீதத்தினர் உள்ளனர். போர் காவுகொண்ட எம் சமூகத்திலும் பெண்கள் அரிய பல பணி களை ஆற்றி வருகின்றனர். ஆனால் அவை சரியாக இனம் காணப்பட்டு வளர்த்தெடுக் கப்படவில்லை. இவற்றைச் செய்யக்கூடிய வர்கள் பெண்கள்தான் அதிலும் சமூகம், பெண் பற்றிய சிந்தனைகளைக் கொண்ட வர்கள். அவர்களை ஊடகங்கள் வரவேற்க
வேண்டும்.
மனைவியின் மகப்பேற்று கணவனும் கூடவே இருப்
மனைவியின் பிரசவ நேரத்தில் கணவனும் கூடவே இருப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு ஏற்படுத் தி யுள்ளது. மனைவி யின் இன்பத்தில் மட்டுமல்ல, அவளது பிரசவ கால வலி, நோ என்பவற்றால் மனைவி அவஸ்த்தைப்படும்போது அவளுக்கு ஆறுதலளிக்கும் வகையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. மேலை நாடுகளில் மனைவி கர்ப்பமுள்ள
நாளிலிருந்து, குழந்தை பராமரிப்பு,
ease- -asse- -a.
tónía)æ5 &ög 3/2DD8

அத்துடன் சமூகத் தளங்களில் அகலக்கால் வைத்திருக்கும் நம் பெண்கள் தம் சிந்தனையிலும் சமூக தளத்திலிருந்தும் தம் இயங்கியலுக்கான மரபுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு இந்த உணர்வு உள்ள பெண்கள், ஊடகங்களில் உள்வாங்கப்படவேண்டும் அல்லது உள்வாங்கப்பட்ட பெண்கள் இத்தகு சிந்தனை யை வளர்த்துக் கொள்ள
வேண்டும்.
நேரத்தில் பதற்கு அனுமதி
மனைவியின் கர்ப்பகால உணவு முறைகள் யாவற்றிலும் கலகம் செலுத்தும் வகையிலும் குழந்தை பராமரிப்புப் போன்ற விட யங் க ளிலும் க ண வ னு க் கு க் கருத்துரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது ஆரோக்கியமான விடயமே. இ ல ங்  ைக யி ல் இந் ந  ைட மு  ைற வழக்கத்திற்கு வருவது வரவேற்கத் தக்கதோடு, குழந்தை கடத்தல் போன்ற விடயங்களைத் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.
தக வற்க -ற்ற்-

Page 11
சர்வதேச ம
மகளிர் அபிவிருத்தி நிலையம் 2008, மார்ச் 20ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத் தை , யாழ் பொது நூலகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்வில் யாழ்.குடா நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் 500 ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டமை சிறப்பம் சமாகும். போக்கு வரத் துத் தடைகள், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போ ன் ற நில  ைம க ளி ல் இ ைவ
எல்லாவற்றையும் மீறி பல கோணங்களி
லிருந்தும் நிகழ்வில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு வருகை தந்திருந்த பெண்களின் துணிவு பாராட்டத்தக்கது.
சர்வதேச மகளிர் தின நிகழ்வில் (20.03.2008) அன்று உரையாற்றும் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சிராணி மில்ஸ்
Nu) ||
நங்தை இதழ் 31/2008
 
 

களிர் தினம்
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக உடுவில் ம க ளிர் கல்லூரி அதிபர் திருமதி.சிராணி மில்ஸ் அவர்கள் பங்குபற்றி சிறப்பித்ததோடு மட்டுமன்றி பங்குபற்றிய பெண்களுக்கு பல ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் சமூக அபிவிருத்தி மன்றத்தின் தலைவி திருமதியோசப், கிராம அலுவலர் திரு. சுந்தரராஜன், அறவழிப் போராட்டக்குழுத் தலைவர் திருசக்திவேல், மூளாய் பாலர் கல்வி பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவி பொன் மலர் இராஜேஸ்வரன் ஆகியோர் சிறப்பான கருத்துக் களை வழங்கி நிகழ்வை ச் சிறப்பித்தனர். மகளிர் அபிவிருத்தி நிலையத் தலைவி திருமதி சரோஜா சிவசந்திரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
மகளிர் தின விழாவில் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கிறார் பிரதம அதிதி திருமதி சிராணி மில்ஸ்
{d
அவர்கள்

Page 12
மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடா ஒவ்வொர் பிரதேசத்திலிருந்தும் வருகை த நாடக நிகழ்வுகளில் சில.
தச மகளிர் தினம்
- CYND
ரிர் அபிவிருத்தி நிலையம்
FOR vonfišN 8 po Ey:LopMENT
வதேச மகளிர் தி: CD
Dasarf Sería finnsågs faseMous CENTRE For area gi beste o PM
கங்கை இதழ் 3/2008
 
 

த்தப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவில் - ந்திருந்த இளம் பெண்கள் அரங்கேற்றிய

Page 13
சர்வதேச மகளி
CWD
மகளிர் அபிவிருத்தி நி CENTRE FOR GEN & DE
AO
/6/Éiopaí i Sraig 31/2008
 
 

velo PfENT

Page 14
Adverdisment 8
“இலாபம் பங்கிடுவோருக்கும் தொழிலாளருக்கும் இடையிலான பாரிய இடைவெளியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பெண்களே” ஆகவே தொழிலாளர்களுக்குப் பெண்கள் ஒன்றிணைந்து தமது உரிமைக்காகப் போராட முனைதல் வேண்டும். ஒன்று கூடும் சு தந் தி ரத் தை உறுதிப் படுத் த லே இப்போராட்டத்தின் மையமாக அமையும்.
“பல பிரதேசங்களில் இயங்கும்  ெப ண் க ள் அ  ைம ப் பு க ஞ ம் தமக் கிடையிலான தொடர்புகளை வலுவாக்கிக் கொள்வது காலத்தின் தேவையாகும்.”
“எமது பெறுமானங்கள் ஒழுங்க மைப்புக்களில் இப்போதே ஒர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பெண் தொழி லாளர்கள் தமது லாபத்தைப் பெருக்கிக் கொள்வதில் ஓர் மைய நோக்கத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
“வன்முறையற்ற ஓர் சமூகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த முன்வருக”
* பி ர ச் சி  ைன க  ைள இ ன ங் காணுதல்மூலம் பிரச்சினைகளின் 50% தீர்க்கமுடியும். எமது சமூக கலாச்சார அடித்தளத்தில் மிக வேரூன்றிய பிரச்சி னையைப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை, சட்டம், மன எழுச்சி, உள நலம், உடல் ரீதியிலான வன்முறைகளுக்கு
alolo- -ee- -d
/5/56)a Saig 31/2008

;th & 9th 9March.
தீர்வு காண உதவிய போதிலும் , உடல் ரீதியான அதிக பாதிப் பை ஏற்படுத்தும் வன்செயல்களான “விதி” என்றே பெண்களும் நம்புகின்றனர். எமது முயற்சி இவர்களது மெளனத்தைக் குலைத்து வன்முறையற்ற ஓர் சுதந்திரமான சமூகத்தை உருவாக்கும். அண்மையில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை தொடர்பாகப் பலவித செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. நாம் எடுக்கும் முயற்சி சிறிதாயினும் அது பெரும் தா க் கத் தை உரு வா க் கும் என
நம்புகின்றோம்.”
“பெண்கள் தொழில் பார்ப்பவர்கள் தம்மை தொழிலாளர்களாக மட்டும் சிந்திப்பதை நிறுத்தவேண்டும். தாம் நுகர் வோர், தேர்தலில் வாக்களிப்போர் என்ற பார்வையும் வலுப்படுத்திக் கொள்வது அவசியம். பெண்களின் குரல் பெரும் பான்மையாக இருந்தபோதிலும் அவர்கள் குரலின் பெறுமானம் சிறுபான்மையாகப் போவது துரதிஷ்டமே”
“இடப்பெயர்வு, குடிநகர்வுமூலம் பெண் தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்ளும் நாடுகள், குறைந்த மூலதனத்தை வழங்கி இதன்மூலம் அடைகின்றனர். ஆனால் தொழிலாளர்களை அனுப்பும் அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகள் தொழிலாளர் இடப்பெயர்வை வாழ்வாதார
நோக்குடன் மட்டுமே பார்க்கின்றனர்.
- see- esses

Page 15
தேயிலைத் ே
குறிஞ்சிக்கு ஒரு தடவை இக் G(Orfeð)a JC CJr) sé6 வாருங்கள்! புத்தகச் சுமைக்கு பதில் என் பூர்வீக குடிகள் கூட, சுமந்தது என்றும் மூங்கில் கூடைதானே! வாருந்தும், வாழ்-நாள் முழுதும், வாய்திறவாத ஊமைகள்! பிள்ளைப் பருவத்துள் எம்மை பிணிவாட்டியது அப்போது நான்
பிறந்தமேனியாய். பீலிக்கரை சுற்றினேன்! மழலை எம் மனதில் மருவாக அந்நிகழ்வு. பள்ளிக்கூட வாசலிலும், பட்டதில்லை என்பாதம்! சொல்லிக் கொள்கிறேன்! ஆயம்மா கைக்குள்ள, அடங்கி நான் கிடந்தேன்! ஆண்டுகள் ஏதுமறியாது. ஆளானேன் பெரியவளாக.! குனிந்த தலை நிமிராத, குமரியென்னை, கட்டிக்கிட்ட பாஷமவன் கட்டிலிலே போட்டு துவைச்சான். அடுத்த நாள் தோட்டத்துல, பேரை பதிஞ்சிவைச்சி. கொழுந்தெடுக்க, அனுப்பிவைச்சான்! நாளும் கடந்தது, புது உயிரொன்றும் வளர்ந்தது.
anada Sag 31/2OOB

தாட்டப்பெண்
காலையில் அஞ்சிமணி, கதிரவன் உதிக்குமுன்னே! கைகால் அலம்பிவிட்டு, ரொட்டிச்சுட்டு, என் புருஷனுக்கும் கொடுத்துவிட்டு, மிஞ்சிப்போன சாயத்தண்ணி மிதமாக குடித்துவிட்டு, பெத்தெடுத்த பிள்ளைகளுக்கு பாலில்லாத மார்பை காட்டிபுட்டு-பின் அதுகள, பிள்ளை மடுவம் விட்டு விட்டு, ஏறினேன் ஏழாம் நம்பர்! மலையேறி வந்தவளை மறிச்சுவிட்டகங்காணி மாமன் -“ஏ. புள்ள மணி எட்டு” என்றுசொல்லி, விரட்டி விட்டவேளையில். கெஞ்சிக் கூத்தாடி, “வேலைக்கு விடுமாமன்” எனச் சொல்ல.
“ராவெல்லாம் போட்ட கவட்டியில், எனக்கும் கொஞ்சம் இடம் ஒதுக்கு” என்றும் சொன்னான், காமப்பார்வையுடன் கங்காணி!
“ச்.சீ.போ’வென
நிறைக்குள்ள ஒடிப்போனேன்! ஆய்ந்தெடுத்த கொழுந்துகள் அம்புட்டும், என் பிள்ளைகளாகத் தெரிய. கூடைநிறைஞ்சதுங்க! மூன்று முறை நிறுவலிலும் முப்பது தாண்டி இறாத்தல்

Page 16
எடுத்து, மோகப் புன்னகை செய்த மூக்குறிஞ்ச கேபியிடம் முகஞ்சுழிச்சு, பின் அப்படியே மிலாறுதேடி, ஓடி, வீடு வந்து சேர்ந்தபோது, மணி ஆறுதாண்டிப் போச்சு! புள்ளக் காம்பிறா விட்டுவந்த பிள்ளைகளும், தொட்டியில தூங்கயிலே, சட்டிப்பானை நான் கழுவி, முட்டிமோத சோறு, சமைச்சீ'அத்தைமாமன் சாப்பிட்ட பின்னே.
பிள்ளைகள் அழுதபோது, அதுகளுக்கும் பாலூட்டி, பின் சோற்று கஞ்சூட்டி, விட்டு புருசன பார்த்து நின்னேன்! புறப்பட்டு போன மனிசன், பெட்டிக் கடையில்-தினம் புட்டிப்பால் குடிப்பது போல, “லேபர்டஸ்ட் ஈடுவைச்சி, லேட்டஸ்ட் சாராயத் தண்ணி, ஊத்தி குடிச்சு விட்டு, தள்ளாடி வந்து, தடுக்கி விழுந்து; வீடு வந்து சேர்ந்ததும், மிச்சமீதி சோற்றையும். மொத்தமாகச் சாப்பிட்டு, பார்த்தானே ஒருப் பார்வை. பல்லிலுச்சி./ மிஞ்சிப்போன,
Izöntőjavas Saig 3/2008

எச்சில் சோற்றை, வாரியென் வாயில்போட்டு, ஒரு மொடக்கு, தண்ணி குடித்து! பாத்திரத்தை அலம்பிபுட்டு, படுக்கைக்கு நான்
போனா., தூங்காத ஏம் புருஷன் - சீலத் துணியையும் அறுத்துப்புட்டான்! அசதியில நான்படுக்க, அசராமல் அவன்படுக்க,
என்னைத் தூக்கம் வந்து தாலாட்டும் போது, -மணி விடிய ரெண்டாச்சு தூங்கி விழிச்சி - நான் பார்த்தா - அப்புறம் மணி அஞ்சாச்சி! மீண்டும் தொடரும். பொழுத எண்ணி. பெருமூச்சு விட்டு நான், எழுந்தேன்! இயந்திரமா இப்படியே எந்நாளும் தொடரும், இந்நிலைக்குள்.
வளரும் என் பிள்ளைகளை - சரி
நல்லா வளர்த்தெடுக்க வேணுமுணு, ஆச மழைசிலிருக்கு. இருந்தும் வழிகாட்ட உறுதியாக யாரிருக்கா..?
செ.ஜெ.பபியான் LeGoof". Fulfill noooo.

Page 17
மன்னராட்சியிலிரு மாறிய ே
தென் ஆசிய சார்க் கூட்டமைப்பு நாடுகளில் நேபாளமும் ஒன்று. உலகின் ஒரே ஒரு இந்து இராட்சியம். 2008, மே 28ஆம் திகதி இந்நாடு மன்னராட்சி ஒழிக்கப்பட்ட, மதச்சார்பற்ற குடியரசாக மாறியுள்ளது. பத்துவருட காலமாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் பிடியில் மக்கள் அல்லற் பட்டனர். 13,000 மேற்பட்டோர் இறந்துள் ளனர். பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். இந்நிலையில் ஏற்பட்டுள்ள இப்புதிய மாற்றம், மிக இலகுவாகப் பெறப் பட்டதல்ல. பல அரசியல் ஆலோசனைகள், இழுபறிகள், ஏமாற்றங்களுக்கு மத்தியில் எட்டப்பட்ட இம்மாற்றம், மேலும் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இருநூறு வருடகாலமாக மன்னராட்சியின், சர்வாதிகாரப் போக்கு, மக்கள் சந்தித்த கொடூரமான சம்பவங்கள். அவற்றின் வடுக்களை மேலும் பதிவு செய்த பத்து வருட கால உள்நாட்டு யுத்தம் இவற்றின் பிடியிலிருந்து மீண்டு விட்டதாக
மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
தமக்கு அமைதி கிட்டிவிட்டதாக மக்கள் குதூகலிக்கின்றனர். போரின் கொடுமைகள் விலகிவிட்டதாக உணர்கின்ற னர். இவ்வுணர்வை உற்சாகப்படுத்திய முக்கிய அம்சம், ஆயுதப்போராட்டம் நடத்திய போராளிகளும், நாட்டின் பிரதான கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கை ஆகும். இது
பலமான மாவோயிஸ்ட் போராளிகளுடன்
Gnýa)æð &ög 3/2008

ந்து மக்களாட்சிக்கு நபாளம்
ஏற்பட்ட உடன்படிக்கை மட்டுமே, நேபாளத்தில் மேலும் 27 சிறு சிறு ஆயுதக் குழுக்கள் ஆங்காங்கு செயற்பட்டு வருவது உண்மை ஆயினும், சன நாயகத்தை முன் நோக்கிய இச் சமாதான உடன் படிக்கை வெற்றிக்கான முதற்படியாக அமைந்துள்ளது. இவ்வுடன் படிக்கையின் படி, இடைக்கால அரசு நிறுவப்பட்டு தேர்தல்மூலம் 601 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு வருடத்துள் அரசியல் யாப்பு வரையும் பணி இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் தலைவராகச் செயற்பட்டு வரும் பிரசண்டா மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளார். ஆயினும் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றிப் பலமான நிலையில் ஆட்சியை தக்க வைக்கும் நிலைப் பாடு, ஆட்சி நிர்வாகத்தில் எழக்கூடிய சவால்களை தவிர்க்கும் ஆற்றலில் தங்கியுள்ளது. மாவோயிஸ்ட், திரும்பவும் போருக்குத் திரும்பிவிடாது, அவர்களை வழிப்படுத்த வே ண் டி யது மக்க ளின் பா ரிய பொறுப்பாகும். ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பது உடன்படிக்கையின் பிரதான அ ம் சமாகும் . ஆனால் , இச்செயற்பாடு மரணமடையவில்லை. போரினால் பாதிப்படைந்த மக்களின் தேவைகள், நலன்கள் உடனடியாகக் கவனிக்கப் படுவது அவசியம். போராளிகள் எப்போதும் அரச இராணுவக் கட்ட மை ப் பில் இணைத்துக் கொள்ள ப்

Page 18
படுவார்களா? இவை போன்ற பல சவால்களைப் புதிய ஆட்சியாளர்கள் முன் உள்ளன. சீனா, இந்தியா போன்ற இரு வல்லரசுகளின் மத்தியில் பூட்டப்பட்ட ஒர் நாடாக இருந்துவரும் நேபாளம், தனது வெளியுறவுக் கொள்கைகளில் எவ்வாறான
கோடிக்கணக்கான கிரா வறுமையைப்போக்க உ6
அவர்கட்கு உலகம்
கிரமீன் வங்கியின் கடன் வழங்கும் முறைமை பற்றிய அண்மைக்கால எடுத்துக் காட்டுக்கள் வங்கியாளர்களாலும், மகளிர் குழுக்களாலும் அடிக்கடி பேசப்பட்டு வரும் விடயமாக பரவிவந்துள்ளது. கடன் பெற வேண்டுமாயின் நமது நாட்டு வங்கிகள் விதிக்கும் பாதுகாப்பு உறுதி வருமானவரி சான்றிதழ்களோ இன்று இவ் வங்கி வழங்கும் கடன் முறைமை வங்கிகட்கே ஒர் சவாலாகும். ஏழைகளின் வங்கியாளர் என அழைக்கப்படும் பங்களாதேஷத்தை சேர்ந்த பொருளியல் நிபுணர் முகம்மது யூனுஸ் (66) 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார். கிராமங்களில் வாழும் வறிய குடும்ப பெண்களுக்கு சிறு கடன் வழங்கும் கிரமீன்
se- -es
Iðnófoð &ög 31/2008

நிலைப்பாட்டைப் பேண எத்தனிக் கின்றது என்பவையாவும், புதிய அரசின் நிலையான ஆட்சியிலேயே தங்கியுள்ளது. மாற்றங்கள் யாவும் மக்களின் நலன் கருதுபவையாக
அமையின் வரவேற்கத்தக்கதே.
சி.சரோஜா
மிய ஏழைப் பெண்களின்
ழைத்த முகம்மதுயூனுஸ் வழங்கும் சன்மானம்
வங்கியை அமைத்தவர் யூனுஸ், கிராமிய வறுமையைப் போக்க உழைத்தார், அடிமட்ட சமூதாய வளர்ச்சியை ஏற்படுத்த உழைத்த அவான் முயற்சிக்காக முகம்மது யூனுஸ் அவர்கட்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவருக்குக் கிடைக்கும் சன்மானம் 14 கோடி ரூபா. வறுமை ஒழிப்பிற்காக செயற்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்கள், தென் ஆசியாவில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், கிரமீன் வங்கித்திட்டம் ஓர் முன்மாதிரித் திட்டமாக அமைத்தது. கிராமிய பெண்களின் வறுமையைப் போக்குவதற்கு சிறந்ததோர் வழிகாட்டியாக அமைத்தது வரவேற்கத்தக்கது.

Page 19
ஓர் விடிவெள்ளிய
இஸ்லாமிய நாடொன்றில் முதற் பெண் பிரதமராக 1988இல் தெரிவு செய்யப்பட்ட பெனாசிர் பூட்டோ 2007 டிசம்பர் 27ஆம் திகதி ராவல்பிண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் துப் பாக்கிச் சூட்டிற்கும் குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளாகிபலியானார். 35 வயதில் பிரதமரான தன் மூலம் பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் பிரதமரான பெருமை இவருக்குண்டு. ஹாலாட் பல்கலைக் கழகத்தில் கலைமாணிப் பட்டம்பெற்ற பெனாசிர், பின்னர் ஐக்கிய இராட்சியத்தில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். அங்கு சர்வதேச சட்டம் மற்றும் ராஜதந்திரம் என்பவற்றைக் கற்றதோடு தன்னை அரசியல் ஆட்சிக்கு ஏற்றவாறு தயார்ப் படுத்திக் கொண்டார்.
1979ஆம் ஆண்டில் இவரது தந்தை சுல்பிகார் அரிபூட்டோவை வியா உல் ஹக்கின் இராணுவ அரசாங்கம் தூக்கி விட்டது. இதனைத் தொடர்ந்து வியர் ஆட்சிக்கு எதிராகப் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 1984இல் இவர் மீண்டும் லண்டன் பயணமானார். 1986இல் மீண்டும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத்
-as- ap- -a.
sisijaa Söi 3M2DO8

பின் அஸ்த்தமனம்
தலைவரானார். 1988இல் பாகிஸ்தானின் முதற் பெண்பிரதமரானார். ஆயினும் 1990 இல் ஊழல் மோசடி குற்றச் சாட்டின் பேரில் பதவி நீக்கப்பட்டு 1993இல் மீண்டும் பிரதமரானார். மீண்டும் ஊழல் குற்றச் சாட்டுக்கு முகம் கொடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் ஐக்கிய இராட்சியத்தில் தஞ்ச மடைந்தார். 2007 ஒக்ரோபர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் பெனாசிர் பூட்டோ. அதிபர் முஷாரப் அவர் மேல் இருந்த ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மன்னிப்பு வழங்கினார். 2007இல் கராச்சியில் இடம்பெற்ற பேரணியில் கடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பெனாசிர் உயிர் தப்பிய போதிலும், 2007 டிசம்பர் 27இல் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அவரால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. உலக அரசியலில் ஒர் ஆளுமைமிக்க வசீகரமான ஓர் பெண் தலைவி அநியாயமாகக் கொல்லப்பட்டு விட்டார். அவரை இழந்த சோகம் எல்லோர் மனதிலும் எதிரொலிக்கின்றது. மக்களுக் காக வாழவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதே மக்கள் மத்தியில் அநியாய மாக மரணத்தைத் தழுவினார்.

Page 20
சொல்வளத்தைப் ெ
கற்றறிந்தோர் முன் தலைநிமிர்ந்து நிற்கும் துணிவை வாசிப்பு ஏற்படுத்து கின்றது. கற்பித்தலின் மூலம் பெறும் அறிவைவிட வாசிப்பதன்மூலம் அறிவோடு சொல்வளமும் விருத்தியடைகின்றது. எமது மனதில் தவறான எண்ணக்கருக்களை நீக்கிப் புதிய வழி காட்டலை ஊக்குவிக் கின்றது. வாசிப்பதன் மூலம் ஞாபகசக்தி பெருக வழி ஏற்படுகின்றது. கற்பித்தலின் போதோ அன்றி மேடையிற் பேசும் போதோ, தங்குதடையின்றிச் சரளமாகப் பேசுவதற்குரிய சொல்வளம், வாசிப்பதன் மூலமே கிடைக்கின்றது. தொலைக் காட்சியைப் பார்ப்பதன் மூலமோ, பேசுவதன் மூலமோ சொல்வளத்தைப் பெருக்க முடியும் என்ற எண்ணக்கரு மாறி வாசிப்பதே சொல்வளத்தைக் கிரகித்து எமது மூளையில் பதியவைக்கும் கூடுதலான ஆற்றலைப் பெற்றுள்ளது என ஆய்வாளர் கள் அறிந்துள்ளனர். சிறுவர் தாம் வாசிக்கும் நூல்களிலிருந்து பல புதிய சொற்களைக் கிரகித்துக் கொள்கின்றனர். பத்திரிகைகளிற் பல வகையான புதிய சொற்கள் அறிமுகமா கின்றன. சிறுவர் இலக்கியங்களிற் பல மனதை மகிழ்விக்கும் சொற்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன. இவை யாவும் நூல் களை, பத்திரிகைகளை வாசிக்கும் போதே
எம்மை அடைகின்றன.
Meimiodas Sass5, 31/2008

பெருக்கும் - வாசிப்பு
பல விடயங்களையும் தெரிந்து வைத்திருக்கும்போது எம்மை அறியாமலே எம்மிடம் ஒர் உற்சாகம் பிறக்கின்றது. வாசிப்பு, பொழுதுபோக்கு மட்டுமல்ல, பல பொதுவிடயங்களை அறியும் கலையு மாகும். பொருட்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? எமக்குப் போசாக்குக் கிடைக்கும் உணவு வகைகள், சூழலைப் பாதுகாத்தல், தீமையான விடயங்கள், அரசியல் போன்ற பல பொதுவிடயங்களை வாசிப்புமூலமே பெறமுடியும். கல்வி அறிவினிற் சிறந்த பெரியோரின் ஞாபக சக்தி, எந்த நூலிலிருந்து குறிப்புக்களை எடுத்துக் கூறுதல், பழமொழிகளைச் சரளமாக உதாரணத்திற்காகக் கொடுத்தல், இலக்கியம், இப்படிப் பல பல - இன்றைய இளைஞர்கள் - எந்த நூலையாவது மேற்கோள்காட்டிப் பேசக்கூடிய வல்லமை யுள்ளவர்களாக உள்ளனரா? நம்மிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதே இதற்கெல்லாம் காரணம். வாசிப்பு பழக்கத்தைப் பெருக்கிக் கொள்வது என்பது, பல நன்மைகளை எமக்கு அள்ளித்தரும் பழக்கமாகும். ஆகவே வாசிப்பதை, நிறுத்தாதீர்கள்.
6

Page 21
சார்க் கூட்டமைப்பி
(SAARC SOCI
சார்க் கூட்டமைப்பு நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சமூக ப் பட்டயமானது மிக முக்கியமான அபி விருத்திக்கான வழிகாட்டியாக இருந்த போதிலும் கூட்டமைப்பு நாடுகள் வர்த்தகத்திற்குக் கொடுத்த முக்கியத் துவத்தைச் சமூக அபிவிருத்திக்கும் கொடுக்கத்தவறிவிட்டன. இலங்கையிற் சமூக அபிவிருத்திக்கான இலக்குக் கூறுகள் தென்பட்டபோதிலும் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் வறுமையைப் போக்குவனவாக அமையவில்லை. சார்க் சமூகப் பட்டயத்திற் கேற்ப இலங்கை வறுமையை இல்லா தொழிக்கும் இலக்காகக் குடித்தொகைக் கட்டுப்பாடு, மகளிர் விழிப்புணர்வு, இளைஞர் முன்னேற்றம், மனிதவள அபிவிருத்தி, சுகாதாரம், போக்கு ஆகியவற்றை ஊக்கு வித்தல் ஆகிய துறைகளை இனம்கண்டு ஒரு செயற்றிட் டத்தை மட்டும் தயாரித்துள்ளமை வரவேற்கத்தக்கது. மகிந்த சிந்தனை என்ற கோட்பாட்டு நோக்கிற் பத்து வருடகால எல்லைத்திட்டத்தில் இவை உள்ளடக்கப் பட்டுள்ள மிகவும் இவற்றை செயற்படுத்தும் அரசியல் வல்லமை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவை சாதிக்கப்படுமாயின், சமூக அபிவிருத்திப் புள்ளி ஏனைய
area aene -
inadas S. 3/2OOB

ன் சமூகப் பட்டயம் AL CHARTER)
நாடுகளோடு உயர் வ ைடயக் கூடிய சாத் தி ய மு ம் உண்டு . ஆயினும் மேற் கூறப்பட்ட சமூக அபிவிருத்தி அடையப்படவேண்டுமாயின் இலங்கையிற் சமாதானம் நிலவ வேண்டும். போரும், இடப்பெயர்வும் மக்களின் அவலங்களும் இவற்றை முக்கியப்படுத்தியதிற் சிக்கல் களைத் தோற்றுவிக்கும். சார்க் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் வறியவை. குடிநீர், கல்வி, சுகாதாரம், மின்சாரம் ப்ோன்ற வசதிகள் பல மில்லியன் மக்களுக்கு இன்னும் எட்டவில்லை. பெண்கள், சிறுவர் இந் நாடுக ளில் வறுமைக்கோட்டுக்குள் வாழ்வதோடு குறிப் பிடத் தக்க முன்னேற்றத்தை அடையவில்லை. அரசியல் ரீதியிற் பெண்களின் பங்களிப்பை முன்னிலைப் படுத்துவதில் இந்நாடுகள் அக்கறை செலுத்தவில்லை. இவை யாவும் சமூக அபிவிருத்திக்கு இன்றியமையாத கருத்துக் களாகும். சார்க் கூட்டமைப்பின் எட்டு நாடுகளும் ஓர் இலக்கை அடைவதற்காக முயற்சிக்கு சந்தர்ப்பம் ஏற்படவேண்டும். சிந்தனைகள் செயலாக்கம் பெறவேண்டிய கட்டத்திலேயே சமூக அபிவிருத்தியும், பொருளாதார அபிவிருத்தியும் நல்ல முறையிற் செயற்படுத்தப்படும்.
se- se abe

Page 22
பெண்கள் தொடர்பா
இலங்கையில் ஏறக்குறைய 42 தொழிற் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. அவற்றின் பின்வரும் சட்டவாக்கங்கள் பெண்களை தொழிலில் அமர்த்துதல், அவர்களது வேலை, நேரம், நலன்கள், சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, விடுமுறை வசதிகள் என்பன பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.
o)6õLLIS
1. 1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்கள் இளைஞர் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் சட்டமும் அதன் திருத்தச் சட்டங்களும். இச் சட்டம் பெண் களை வேலைக் கமர்த்தும் நேர காலங்களை நெறிப் படுத்தி அவர்களுடைய சுகாதாரம், ஏனைய நலன்களைப் பாதிக்கும் வேலையில் ஈடுபடுத்துவதைத் தடுக்கின்றது. இச் சட்டத்தின்படி பெண்கள் எனப்படு வோர் தனியார் துறைகளில் (கூட்டுத் தாபனங்கள், சபைகள் உட்பட) வேலை செய்யும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களைக் குறிக்கும். இச் சட்டங் களுக்க  ைம ய பெண் கள் இரவு நேரங்களில் வேலையில் ஈடுபடுத்துதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1984ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க திருத்த சட்டத்துக்கமைவாக கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கமைவாக பெண் ஊழியர்களை இரவு நேர வே லை யில் ஈடுபடுத்த சட்டம் அனுமதிக்கிறது.
1. பெண் ஊழியர்களில் சம்மதம் பெறப்பட
வேண்டும்.
கங்தை இதழ் 31/2008

O
2.
தொழிற் சட்டங்கள்
தொழில் ஆணையாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்படல் வேண்டும். பகற்பொழுதில் மு.ப. 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணிவரை வேலையில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் அதே தினம் பி.ப 1.00 மணிக்குப் பின் வேலையில் அமர்த்தப்பட முடியாது. இரவு நேர வேலைக்கான ஊதியம் பகல் நேர சம்பளத்தின் 1 1/2 மடங்கு வழங்கப்படவேண்டும்  ெப ண் க ஞ க் கு உ த வி யா க பெண்காப்பாளர்கள் நியமிக்கப்படல் வேண்டும். பெண்கள் ஓய்வுக்கான அறையும், உணவும், வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். பெண்கள், ஒய்வுக்கான அறையும், உணவும், வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் இரவு
வே லை யில் ஈடு பத்தக் கூடாது இச்சட்டத்தின் படி "இரவு" என்பது பி.ப 10.00 மணி யிலிருந்து மறுநாள் அதிகாலை 5.00 மணிவரையிலான காலப்பகுதியை உள்ளடக்கும்.
மேற்படி விதிகள்:
1.
முகாமைத்துவ அல்லது தொழில் நுட்பத்தன்மையில் வேலைக்கமர்த்தப் பட்டுள்ள பெண்களுக்கும். நலன்புரி வேலைகளில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கும். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தொழில் செய்யும் நிறுவனங் களின் பெண்களுக்கும் பொருந்தாது,

Page 23
இச்சட்ட ஏற்பாடுகளை மீறி தொழி லுக்கு அமர்த்துதல் தண்டிக்கப்படக் கூ டி ய (நீ தி ம ன் ற த் தி ன m ல் ) குற்றமாவதுடன் தொழிலுக்கமர்த்து வோர் ஒரு வருட சிறைத் தண்டனைக் கும் 10,000 ரூபா வரையிலான தண்டப் பணத்துக்கும ஆளாவார்.
2. 1954 ஆண்டின் கடைகாரியாலய ஊழியர் சட்டமும் அதன் திருத்தச் சட்டங்களும் இச் சட்ட ஏற்பாடுக ளின் படி 18 வயதுக்குக் குறைந்த பெண்கள் பி.ட 6.00 மணி க்கு மு ன் பும் வேலை யில் ஈடுபடுத்தப்பட முடியாது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவு 8.00 மணிவரை கடை அல்லது அலுவலகங் களில் வேலையில் அமர்த்தப்படலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவு 10.00 மணிவரை கடை அல்லது அலுவலகங்களில் வேலையில் அமர்த்தப் படலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வதிவிட உணவகங்களில் தொலைபேசியில் பணியாளர்களாவும், வரவேற்பாளர்களாக வும், பெண் தலைவர்களாகவும் விமான நிலைய அலுவலகங்களில் தரை நிலைப் பணிப்பாளர்களாகவும், இரவில் வேலை யில் அமர்த்தப்படலாம். அத்துடன் வேலைக்கமர்த்தப்படும் பெண்களுக்கு வேறான மலசல கூடம் கழுவுமிட வசதிகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். வாடிக்கை யாளர்களுக்கு சேவையாற்றும் பெண்கள் உட்காருவதற்காக ஆசனங்கள் 3 பேருக்கு ஒன்று வீதம் கொடுக்கப்படல் வேண்டும்.
மேலும் இச்சட்ட ஏற்பாடுகளின் படி பிரசவிக்கும் பெண் ஊழியர்களுக்கு உயிருடன் பிற க்கு ம முதல் இரு
Ma57bŷgodais Saif 31/2008

பிரசவங்களின் போதும் சம்பளத்துடன் கூடிய 84 நாட்கள் விடுமுறை வழங்கப்படல் வேண்டும். அத்துடன் பிரசவத்துக்கு 3 மாதங்களுக்கு முன்னர் உள்ள காலப் பகுதியில் குழந்தை அல்லது தாய்க்கு ஊறு. விளையக் கூடிய வேலைகளில் அமர்த்த முடியாது. பிரசவம் அல்லது கருக்கட்டல் காரணம் ஏற்படக் கூடிய நோய் தொடர் பான வேலையிலிருந்து நீக்கப்படவும் முடியாது. பிரசவ விடுமுறையில் இருக்கும் காலப்பகுதியில் வேலை நீக்க அறிவித்தலும் கொடுக்க முடியாது.
3. 1939 ஆம் ஆண்டின் 37ஆம் ஆண்டின் இலக்க பிரசவ நலன்கள் கட்டளைச் சட்டம் இச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் (சம்பள சபை ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் உட்பட) தொழில்களில் வேலைக் கமர்த்தப்பட்டுள்ள பெண் ஊழியர்கள் கடை அலுவலக பெண் ஊழியர்களைப் போன்று பிரசவ லீவுக்குரித்துடையவர்கள். ஆனால் முதல் இரு பிரசவங்களுக்கும் 84 நாட்களுக்குப் பதிலாக 12 வாரங்கள் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்ட சம்பளத்துடனான லீவும் ஏனைய பிரசவங்களுக்கு 6 வார கணக்கிடப்பட்ட லீவும் பெற உரித்துடை யவர்கள் ஏனைய நலன்கள் கடைக் காரியாலய சட்டத்தைப் போன்று அமையும்.
இச்சட்டத்தின் கீழ் பிரசவித்த தாய்மார் கள் ஒரு நாளில் 2 தடவைகள் பாலூட்டும் இடைவேளைக்கு உரித்துடையவர்கள், குழந்தைக்கு 1 வயது வரை இந்த இடைவேளை மேலதிகமாக வழங்கப்படல் வேண்டும்.
9

Page 24
4. ஊழியா சேம லாப நிதிச் சட்டமும் (1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கம்) ஊழியர் நம்பிக்கை நிதியச்சட்டமும் இச் சட்டங்களின் கீழ் பெண்கள் 50 வயதை யடையும் போது தங்கள் கனககு களிலுள்ள தொகையை ளோளரிப்புப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் திருமணமான டெண்கள் திருமணமாகி 5 வருடங்களுக்குள்ளும் திருமணமாவதற்கு 3 மாதங்களின் முன்பும் திருமணம் தொடர்பாக வேலையிலிருந்து விலகும் போதும்
ډيميسيوسلم
மீள்ளி ட் புக் க  ைள ப் பெற்று க்
கொள்ளலாம். 5. 1942ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க தொழிற் சாலைகள் கட்டளை ச் சட்டமும் அதற்கான திருத்தங்களும். இச் சட்டங்க ளின் பெண் க ைள வேலைக்கு அமர்த்தல் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உண்டு. பெண்கள் இயந்திரங்கள் செயற்படும் போது சுத்தப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுத் தப்பட முடியாது. பெண்களுக்கு வேறாக 25 பேருக்கும் 1 கழுவும் பேசின் வீதம் வழங்கப்படல் வேண்டும். பெண்களைத் தொழிற்சாலைகளில்
15љizоa sabiji 31/2008

வேலைக்கமர்த்த அவர்களின் சம்மதம் தேவை அல்லது தொழில் ஆணையாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறல் வேண்டும். சுரங்கங்களில் பெண்களை வேலைக்கமர்த்த முடியாது. பெண்கள் மேலதிகநேர வேலை செய்யும் காலப் பகுதி மாதத்திற்கு 60 மணித்தி யாலங்ளுக்கு மேற்படக்கூடாது. அத்து டன் கர்ப்பிணிக் காலத்தின் போது பாலூட்டும் 1 வருட காலத்தின் போதும் பிறந்த பிள்ளையைப் பிரசவித்த தாய் குறிப்பிட்ட 3 மாத காலத்திற்கும் மேலதிக நேரவேலையில் ஈடுபடுத்தப் பட முடியாது. மேலதிக வேலைக் காலப் பகுதியில் ஒய்வறை போக்குவரத்து வசதிகள் என்பன பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். மேற்படி விடயங்களின் கீழ் வேலையில் அமர்த்தப்படும் பெண்கள் சம்பந்தமாக தொழில் தருநர்கள் அவர்களுக் குரித்தான விசேட சேவை நியதிகள், நிபந்தனைகள், பாதுகாப்பு, சுகாதாரம், நலன்கள் என்பன வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ளல் முக்கிய சட்ட தேவைப்பாடுகளாகும்.
சி.முத்துக்குமாரசுவாமி உதவித் தொழில் ஆணையாளர் மாவட்ட தொழில் அலுவலகம் யாழ்ப்பாணம்.
sow» asses asses

Page 25
தொடர்பூடகங்களும் ஆர்வப்படுத்தலும், அ
ஊடகங்கள் சமூகத்தில் கருத்து நிலையை உருவாக்குவதிலும், பிரதிபலிப் பதிலும், பரப்புவதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பன. எனவே இந்த ஊடகங்கள் பெண்கள்பற்றிய விடயங்களை கையாளும் முறைமை சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. அனேகமாக பிரதான ஊடகங்கள் ஆண் களை மையமாகவைத்தே தகவல்களை வெளியிட்டு வருபவை. அதாவது அந்த ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் (கேட்பவர்கள், பார்ப்பவர்கள், வாசிப்ப வர்கள்) ஆண்களே என்ற கருத்தாக்கம் தான் முதன்மையானதாக இருக்கின்றது. ஒரு தினப்பத்திரிக்கையில் பெண்கள் வாசிப்பது என்ன இவையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
பத்திரிகையாயின் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பக்கத்தில் பெண்கள்பற்றிய விடயங்கள், பெண்களுக்கான விடயங்கள், குடும்ப தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டி ருக்கும். குழந்தை, சமையல், அழகு முக்கியமானவையாக இருக்கும். அத்துடன் பெண்களுக்கான ஒழுக்கம், கணவனை, உறவினர்களை , வயோ தி பர்களை கவனித்தல், பராமரித்தல் பற்றிய விடயங் களும் கொடுக்கப்படும். இவை பெண் களுக்கு.
அடுத்து பெண்பற்றிய விடயங்களை, உதாரணமாகச் சினிமாவில், சினிமாவை
7aOa5 Sag 3/2008

பெண்களும், பெண்களை பூளுமைப்படுத்தலும்
பத்திரிகையில் கொண்டுவரல். இவற்றில் பெண்களை காட்சிப்படுத்தல், ஆண்களை வாசகர்களாக, பார்வையாளர்களாக வரித்துக் கொண்டதன் விளைவு. அது இன்றுவரை தொடர்வதுதான் அபத்தம். பெரிய திரை ஆண்களுக்கு, சின்னத்திரை (வீட்டுக்குள்) பெண்களுக்கு. இத்தகு பிரிப்பைத் தான் சகல ஊடகங்களும் கருத்தியல் ரீதியாகச் செய்கின்றன. இதனால், ஆண் - பெண் நோக்கு தேவை வேறு வேறாகி அவர்கள் இரு துருவங்களாக வளர்த்தெடுக்கப்படுகின்றார்கள். ஆனால் இவர்கள் ஒன்றாக ஒரே கூரையின்கீழ் வாழவேண்டிய வர்கள். இன்னும் சொல்லப்போனால், ஆணுக்கு உலகமே வீ டாகவும் , பெண் களுக்கு வீடே உலகமாகவும் இவர்களை வளர்த்தெடுக்கும் பணியை நன்றாகவே தொடர்பூடகங்கள் செய்து வருகின்றன. இதை நாம் விளங்கிக் கொண்டால்தான், தொடர்பூடகங்களில் கொண்டுவரக்கூடிய மாற்றங்கள் பற்றியும், மரபில் சேர்க்க வேண்டிய விடயங்கள் பற்றியும் தெளிய முடியும்.
தொடர்பூடகங்கள் பெண்கள் எப்படி கருத்துருவாக்கம் செய்கின்றன என்பதை ஆழமான புரிதலுடன் விளங்கிக் கொள்கின்றபோது, பெண்களின் முழு ஆளுமையும் குடும்ப வட்டத்திற்குள் கட்டமைக்கப்படுவது புரியும். அதுகூட எதிர்மறையாக இருப்பதுதான் இன்று பெரிய சவால்.

Page 26
அதாவது எம்மில் 70% பெண்கள் சமூகத்தில் தொழிற்துறைகளில் இறங்கி யுள்ள நிலையில் குடும்பம் சார்ந்த கருத்து கள் இரட்டைச் சுமையை ஏற்படுத்து கின்றதேயொழிய, நடந்த மாற்றங்களுக்கு அமைய அவை கட்டமைக்கப்படவில்லை.
உ த | ர ன மாக , ச  ைம ய  ைல இலகுபடுத்த இரவில் காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து வையுங்கள் என்ற தகவல்
பெண்களுக்காகத் தரப்படும்.
அலுவலகம் சென்று வரும் பெண் (இன்று அனேகர் அப்படியானவர்கள்) ஐந்து மணிக்குப் பின் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகள், சில ருக்கு தன்னார் வ விருப்புக்கள், (வாசித்தல், ரீவி பார்த்தல், எழுதுதல்) குடும்பத்தினருடன் உரையாடல் எல்லாம் முடித்துபடுக்க பத்து மணிக்கு மேலா கின்ற போது, அடுத்த நாள் சமையலுக்கு தயார்படுத்த முடியுமா? இந்த விடயங்களை ப் பிள்ளைகளுடன் கணவருடன் பங்கீடு செய்வது பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நிலை, ஒட்டுமொத்த குடும்பச்சுமையைப் பெண் ஏற்றுக் கொள்ள வைக்கப்படுவதால் அவள் சிந்தனையும் விரிவுபட வழியில்லை. இதனால், விரைவில் சலிப்படையும் பெண் பல பிரச்சி  ைன க  ைள யும் உருவாக்க
காரணமாகிறாள்.
இதனால்தான் பல வருடங்களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிடும்போது, அவர்கள் வெறும் கண்ணிர் இழுப்பிகள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. (இன்று சின்னத்திரை
Gfoað Sö 3ÆeDOB

நாடகங்கள் பெண்களை வைத்து அதைச்
செய்வது வேறு விடயம்).
இந்த நிலையில் தொடர்பூடகங்களில் பெண்கள் ஆர்வம் கொண்டு, அதில் தம்மை இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்கள் வெளிக்கொணர உதவும். அதிலும் பெண் பற்றிய அக்கறை கொண்ட பெண்களால் தான் இது ஏற்பட முடியும். எப்படி ஆளுமையுள்ள பத்திரிகையாளர்கள் ஒரு சமூக கருத்தியலைக் கட்டமைக்க, மாற்றி யமைக்க முடியுமோ அப்படித்தான் பெண் பற்றிய யதார்த் தங்களை உணர்ந்த பெண்ணால்தான் தொடர்பூடகங்களில் கருத்துகளை முன்வைக்க முடியும். நம்மில் பலர் நம் சமூக யதார்த்தத்தை எமது சிந்தனையில் எடுக்காமலே கதைபண்ணிக் கொண்டும், கவிதை வடித்துக் கொண்டும், ஏற்கனவே எழுதிய பழமொழிகளைத் தூசி தட்டிக்கொண்டும் இருக்கிறோம்.
பெண்ணுக்குரிய பிரச்சினைகளை குடும்பமட்டத்தில் மட்டுமே வைத்துப் பார்த்து தீர்ப்பிடும் நிலையைத்தான் நாம் கொண்டியங்குகிறோம். இன்று நம் சமூகப் பெண்கள் சமூகத் தளத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள். போர் தந்த மாற்றம் இது. இப்போது அதுதான் வாழ்வாகிவிட்டது. இந்த நிலையில் குடும்பத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பெண் இப்படி இருக்க வேண்டும். இது செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கருத்துருவாக்கத்தை மேற்கொள்வது முரணானது. சாதாரணமாக அழகு பற்றிக் கூறும் நாம் இன்று எமக்குத் தேவைப்படும் உடல் உறுதி, உடல் உற்சாகம் பற்றி கதைக்கிறோமா? அதற்கு என்ன செய்ய
"} ^)

Page 27
வேண்டும் என்பதை முக்கியப்படுத்து கிறோமா? முடிநீளமும், முக அழகும் எந்தக் கருத்தாக்கத்தில் எமக்குத்தேவை? இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க
வேண்டும்.
எனவே ஒரு சின்ன விடயமானாலும் அது இன்றைய யதார்த்த பெண்ணுக்கு ஏற்புடையதுதானா? என்ற சிந்தனை வேண்டும். அத்துடன் கீழ்மைப்படுத்தல், பலவீனப்படுத்தல் எந்த விதத்திலும் பெண்ணின் இயற்கையான விடயம் என்ற தொனி இல்லாதவாறு கருத்துருவாக்கம் செய்தல் முக்கியமானது. பத்துப்பேரை ஒன்றாக அடிக்கமுடியும் என்ற திரைப் படத்தில் ஆணைக் கதாநாயகனாக காட்ட முடிந்திருக்கிறது. ஆனாலும் பலம் பொருந்தியவனாக ஆகமுடியும் என்ற நம்பிக்கை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது! இல்லாத ஒன்றையே, நடக்கமுடியாத ஒன்றையே இவ்வளவுதூரம் காட்டமுடியும் என்றால், யதார்த்தத்தை, உண்மை விடயங் களை எமது வாழ்வாதாரங்களை ஏன் காட்டமுடியாது? ஏன் வெளிக்கொணர முடியாது? வெளியில் இருந்து ஏதோ ஒருவகையில் தொடர்பூடகங்களுடன் தொடர்புகொள்ளும் பெண் களின் சிந்தனைக்காக மேற்கூறிய விடயங்கள்
முன்வைக்கப்பட்டன.
அடுத்த விடயம், ஊடகங்களில் பணிபுரிவது! இது ஒரு பெரியசவால்தான். மூன்றாம் உலக நாடுகளிலேயே முதன்முதல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு, முதற் பெண்பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை வைத்திருக்கிறோம் நாம். பெண்கள் அதிலும் தமிழ் பெண்கள்,
፴፭OC

சமூகத்தில் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதென்பது பெரியவிடயம். பெண் களுக்கு வாக்குரிமை வழங்கும் விடயத்தில் ஏற்பட்ட வாதப் பிரதி வாதங்களில் ஜி.ஜி.யால் சொல்லப்பட்ட ஒரு விடயம். "ஆங்கிலேயரின் நாகரிகத்திற்கு ஆட்பட்டு எமது குடும்பப் பெண்களை பொது மகளிர் ஆக்கப்பார்க்கிறார்கள்" என்பது. இப்படி சமூக சிந்தனையை பெண்கள் ஏற்படுத்திக்கொள்வதே பெரும் சிரமமாக இருந்த வரலாற்றில் வந்த நாம், இன்று போராளிப் பெண்களைக் கொண்டி யங்குகின்றோம். பெண் தலைமைத்துவக் குடும்ப மரபைக் கொண்டியங்குகின்றோம். ஆனால் தொடர்பூடகங்களில் பணி புரிவதற்கு முடியாதிருக்கிறது. தொலைக் காட்சிகளில் செய்தி வாசிக்க பெண் தேவை. பத்திரிகையை கவர்ச்சியாக்க பெண் தேவை. ஆனால், ஆழமான கருத்தியல்களைச் சமூக அபிவிருத்தி, அரசியல், பொருளாதாரம் பற்றிய அக்கறைகளைக்கொண்டு தொடர்
பூடகங்களில் இயங்கப் பெண் இல்லை'
ஏன்?
பெண்ணுக்குக் கொடுக் கப்படும் வாய்ப்புகள், இவை சார்ந்து பெண் ஆர்வப் படல் என்பன இல்லாமல் இருக்கின்றது. இதற்குக் காரணம் சமூகம் பெண், தொடர்பூடகம் பற்றி வைத்திருக்கும் விழுமியங்கள், போருக்குள்ளால் புடம் போடப்பட்ட நாங்கள் எங்கள் பலத்தைச் சரியாக இனம் காணவில்லை. சமூகத் தளத்தில் எம்மால் ஆளுமையாக இயங்க முடிகிறபோது, ஏன் தொடர்பூடகங்களில் அதை வெளிக்கொணர முடியாது? பெண் ஏமாற்றப்பட்ட செய்தி, பெண் பாலியல்

Page 28
பலாத் காரப் படுத்தப் பட்ட செய்தி சுவாரஸ்யமான செய்திகளாக மட்டும் போடப்படும் நிலைதான் உள்ளது. இதுவே பெண்கள் ஊடகங்களுக்குள் வேலை செய்கின்றபோது, இயல்பாகவே அடுத்து என்ன நடந்தது? குற்றம் புரிந்த நபர் யார்? அவருக்குக் கிடைத்த தண்டனை என்ன? அல்லது தண்டனை கிடைக்கவில்லையா? இது எல்லாம் செய்தியாகும். இதுவே அக் குற்றத்தை? குறைப்பதற்கு மான வழியுமாகும்.
அபிவிருத்தி, மீள் குடியேற்றம் பற்றியெல்லாம் சிந் தி க்கும் போது, பெண்ணைப்பற்றி யார் சிந்திக்கிறார்கள்? சமூக மறு உற்பத்தி பண்பைக் கொண்டுள்ள பெண், குடும்பங்களைப் பராமரிக்கும் பெண், சமூகத்தில் முக்கிய கடமைகளை நிறைவேற்றும் பெண் கவனிக்கப்படு வதில்லை. அவளது போசாக்குப் பற்றியோ, சுகாதாரம் பற்றியோ யாருக்கு அக்கறை? இதுபற்றி பெண்களால்தான் கேள்வி எழுப்ப முடியும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது எல்லா விதத்திலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் ஒவ்வொரு செயலும் ஆளுமை மிக்கதாக மிளிர வேண்டும். இதற்குப் பெண்தான் தன் குடும்பம், தன்சமூகம், தன்நாடு ஆகிய வற்றில் கொண்டிருக்கக்கூடிய தொடர்பு முக்கியம்.
தொடர்பூடகங்களிலும் முடிவெடுக் கும் தகுதி யைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இல்லை. அதிலும் தமிழ் பெண்கள் அறவே இல்லை. பெரும்பாலும்
Mab Müawdas &asg 31/2008

ஊடகங்களில் வேலைசெய்யும் பெண்கள் அ லு வ ல கத் தி னு ள் ளே வே  ைல செய்பவர்களாகவே உள்ளனர். இன்றைய எமது ஊடகத்துறைகூட, குறிப்பாக தமிழ் ஊடகத்துறை பெரியளவில் வளர்ச்சி யடைந்ததாக இல்லை. ஒரு விவரணக் கட்டுரை எழுதுவதற்கான தகவலைத்திரட்ட வெளியிற் சென்று வருதல், புலனாய்வுக் கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு என்ப வற்றைக்கூட நாம் செய்யமுடிவதில்லை. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப் பின்மை என்பன முக்கிய காரணங்களாகும். அத்துடன் தொடர்பூடகத்துறை கல்வியியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்படாததும் ஒரு குறைபாடு. இன்று அந்த வாய்ப்பு உள்ளது. அதில் பெண்களையும் உள்வாங்கி பயிற்சி அளித்தால் நம்பிக்கை தரக்கூடிய யதார்த்த சமூகத்தைக் கட்டியெழுப்பலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஊடகவி யலாளர்களுக்கான பாதுகாப்பு ஓரளவுக் காவது அந்தந்த நிறுவனங்களிலாவது உறுதிப்படுத்தப்படவேண்டும். ஊடகத் தொழில் என்பது எனக்குப் பிடித்ததையும், உங்களில் ஒருவருக்குப் பிடித்ததையும் எழுதுவதல்ல. சமூக யதார்த்தத்தில் இருந்து பல்வேறு கோணங்களிலும் பிரச்சினைகள் அணுகப்பட்டு, ஆழமான சிந்தனையில், வளமான சமூகத்தை எதிர்பார்த்து கட்டமைக்கப்படுவது, அல்லது முன் வைக்கப்படுவது.
இதில் சமூகத்தில் சரிபாதிக்கும் மேலிருக்கும் பெண்களும் பங்கெடுத்துக் கொள்வது ஒரு சமநிலைச் சமூகத்தை உருவாக்க, பிரச்சினைகளைத் தெளிவாக அணுக வழிகோலும்.

Page 29
உலகெங்கும் இன்று பெண்கள் தொடர்பூடகங்களில் மிகுந்த தாக்கம் மிக்க வர்களாக இயங்குகின்றார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெண் ஊடகவியலாளர்கள் 40 வீதத்தினர் உள்ளனர். போர் காவுகொண்ட எம் சமூகத்திலும் பெண்கள் அரிய பல பணி களை ஆற்றி வருகின்றனர். ஆனால் அவை சரியாக இனம் காணப்பட்டு வளர்த் தெடுக்கப்படவில்லை. இவற்றைச் செய்யக் கூடியவர்கள் பெண்கள்தான். அதிலும்
சமூகம், பெண்பற்றிய சிந்தனைகளைக்
aes- -she
தெரிந்து
உலக வர்த்தக அமைப்பு (WTO)
1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்
அமைந்துள்ளது. இது சுதந்திரமான வர்த்;
அரசாங்கங்களின் மத்தியில் குறைப்பதற்காக
so ensends (World Bank)
1994 ஆம் ஆண்டு பிறேட்டன் வூட் நாடுகளில் இயங்கிவருகின்றது. உலக வங்கிய இணையாகச் செயற்படுகின்றது. வறிய நாடுக ஆராய்ச்சியில் ஈடுபடும் சர்வதேச ஆராய்ச்சிநி
75/7aOa5 Sa 3/2008

கொண்டவர்கள், அவர்களை ஊடகங்கள்
வரவேற்க வேண்டும்.
அத்துடன் சமூகத்தளங்களில் அகலக் கால் வைத்திருக்கும் நம் பெண்கள், தம் சிந்தனையிலும், சமூகத் தளத்திலிருந்தும் தம் இயங்கியலுக்கான மரபுகளைக் கட்டி யெழுப்பவேண்டும். அதற்கு இந்த உணர்வு உள்ள பெண்கள், ஊடகங்களில் உள்வாங் கப்பட வேண்டும் அல்லது உள்வாங்கப் பட்ட பெண்கள் இத்தகு சிந்தனையை
வளர்த்துக்கொள்ளவேண்டும்.
alo- rehe- -ss
கொள்க
-டது. சுவிற்சிலாந்தின் ஜெனிவா நகரில் தகத் தொடர்புகளில் ஏற்படும் தடைகளை ச் செயற்படும் ஒர் அமைப்பாகும்.
டஸ் மாநாட்டின்மூலம் நிறுவப்பட்டது. 182 ானது சர்வதேச நாணய நிதி நிறுவனத்துடன் 5ளில் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக லையமாகவும் செயற்படுகின்றது.

Page 30
தொடர்பு ஊடகத்துஎ பத்திரிகைச் சுதந்திரம் 6
11.தொடர் பு கொள்ளுதல் மனித வாழ்க்கையின் பிரதானமானதொரு அம்சம். பாரம்பரிய தொடர்புச் சாதனங்களான வாய்மொழித் தொடர்பு, அச்சு, வானொலி தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்ற வரிசையினை மீறிய வகையில் தொலைத் தொடர்புத் துறையிலே புதிய பரிமாணங்கள் தோன்றியுள்ளன. கணினிகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள், இணையங்கள் என்ற வரிசையிலே புதிய பரிசோதனைக் களங்களும் தோற்றம் பெற்றுள்ளன.
12 தொடர்புகளைத் தேடும் சமூகத்தின் மத்தியிலேயே எமது வாழ்க்கையின் உயிரோட்டங்கள் மட்டுமல்ல, உணர் வோட்டங்களே சிக்கியுள்ளன. மனித சமூக, சமுதாய நடமாட்டங்களின் அத்தனை நடவடிக்கைகளையும் தொடர்பூடகக் கலாச்சாரம் விழுங்கி யுள்ளது. யாவற்றிற்கும் மேலாக இப்பொழுது தொடர்பூடகத்துறை எடுத்துள்ள விஸ்வரூபம் மனித வாழ்க்கையின் அத்தனை துறை களையும் உள்வாங்குவதாக அமைந் துள்ளது. ஆனபடியால் இன்றைய தொடர்பு ஊடகத்துறையின் சர்வ வியாபகம் உலக சமுதாயத்தையே ஒரு முனைப்படுத்தும் பக்குவம் வாய்ந்ததாகி யுள்ளது.
(5/5ada | Säi 3M2OO8

றை புதிய போக்குகள்,
ாதிர்நோக்கும் சவால்கள்
1.3.
1.4
தகவல்களைத் தகவல் தேட்ட முறைமைகளினூடாகப் பயன்படுத்தல். பொருளாதார உறுதிப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அவசியமான தொன்றாகி விட்டது. உலகநாடுகள் சாதாரண வளர் முக நாடுகள்வரை சகல பொருளாதார எழுச்சி நடவடிக்கைகளுக்கெல்லாம் தகவல் மூலாதாரமானவை. தகவல் களைச் சேகரித்தல் அவற்றை ஒழுங்கு முறைப்படுத்தல், தகவல்களைப் பரவ வைத்தல் என்ற வரிசையிற் பல விடயங்கள் படிமுறையாக விரிவு பெற்றுள்ளன. தொலைத்தொடர்புத் துறை வெளிப்பாடுகள், தொடர்பு ஊடகத்துறை விரிவாக்க முறைமைகள், அபரிமிதமான கணினிப் பயிற்சிப் பயன்பாடுகள் புதிய பரிமாணங்களைத்
தோற்றுவித்துள்ளன.
தகவற்றுறை இப்பொழுது ஆளுமை நிரம்பிய துறையாகிவிட்டது. தகவற் பரிவர்த்தனைத் தொழிற்றுறையில் ஆளுமையும் வலுவும் பயிற்சியும் நிரம்பிய புதிய தலைமுறையினர் உருவாகியுள்ளனர். தகவற்றொழில் நுட்பம் பல்தொழில் ஆளுமைகளை உள்ளடக்கிய வகையில் விரிவாக்கம்
பெற்றுள்ளது. பத்திரிகையாளர்கள்,
வானொலி, தொலைக் காட்சித்

Page 31
தயாரிப்பாளர், கணினிப் பயிற்சி ஆளுமை பெற்றோர், விளம்பரத்துறைப் பயிற்சி பெற்றோர், ஆவணத் தொகுப்பு வலுவுள்ளோர் எனத் தகவற்றுறை பரந்துபட்டதாகிவிட்டது.
15. உலகம் இப்போது தகவல் தொடர்புத் துறை ச் சமுதாய மாகி விட்டது. பாரம்பரியத் தொடர்பூடக முறைகளை யெல்லாம் உடைத்தபடி வெளிப்படும் தொடர்பூடகத் துறைகள்தான் எதிர் காலத்துத் துரித மாற்றங்கள் உலக சமுதாயத்தைத் தகவற்பெருக்குகளின் மத்தியிலே தள்ளித் தத்தளிக்க வைத் துள்ளது. அச்சுக்கலை முதல் இப் பொழுது கணினிகள் ஏற்படுத்தியுள்ள புரட்சிகரமான மாற்றங்களின் மத்தியில் தகவற்றுறை வலைப் பின்னல்கள் தாறுமாறாகவும், வேறு வேறாகவும் பெற்றுள்ள வளர்ச்சி சகல எல்லை களையும் மீறிய வகையிற் செயற்படு கின்றன.
21. விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்குகளும் ஒட்டிப் பிற வாத இரட்டைப் பிள்ளைகளாகிவிட்டன. தொழில் நுட்பத்துறை வளர்ச்சிப் போக்குகளின் மத்தியில் தொடர்பூட கத்துறை படிப்படியாக வளர்ச்சிபெற்ற ஏகாதிபத்தியமாகி விட்டது. புதிய வாழ்வியல் நடைமுறைகள் புதிய புதிய தொழிற்றுறைகள் ஒழுங்குமுறைமை மாற்றங்கள், சமூக விவகாரங்கள் பற்றிய புதிய பரிமாணங்கள் யாவற்றிற்கும் மேலாகத் தொடர்பூடகக் கல்விபற்றிய
AõnzjarDað Sö 31/2DDB

சிந்தனைகளும், போக்குகளும் என்றின்னோரன்ன விடயங்கள் யாவும் இப்பொழுது புதிய அத்தியாயத்தையே தோற்றுவித்துள்ளது.
22.தகவற்றொடர்பு பற்றிய புதிய சித்தாந் தங்கள் இணையங்களின் வளர்ச்சிப் போக்குகளோடு பின்னிப் பிணைந்த தொன்றாகிவிட்டது. உலகளாவிய கணினித்துறை வலைப் பின்னல்களின் மத்தியில் விசுவரூபம் எடுத்த புதிய தொரு துறையாக இணையங்களின் எழுச்சி வேகமான வளர்ச்சிப்பாதையில் உறுதியுடன் செல்கின்றமை தகவற் றுறையிலே புரட்சிகரமான மாற்றங் களுக்கு வித்திட்டுள்ளது.
2.3.தொடர்பூடகத்துறையிற் பணியாற்று பவர்களின் பணி பாரியது. இத்துறை யிலே பணியாற்றுபவர்கள் விழிப் புணர்வுடன் பணியாற்ற வேண்டிய காலகட்டம் இதுவாகும். இத்துறை பற்றிய ஆய்வுகள் ஆழ்ந்து அகன்ற முறையிலே உபயோகமான தகவல் களுடன் உதிரியாக மேற்கொள்ளப்
படுகின்றன.
24.இன முரண்பாடுகளின் மத்தியில் ஊடகத்துறையின் சுதந்திரம்பற்றிய ஆய்வுகளும் கருத்து வெளி ப் படுத்தப்படவேண்டும். இனத்துவப் பிணக்குகளின் மத்தியிலே ஊடகத் துறையும் சுதந்திரம் பற்றிய சிந்தனை களும் நைந்து போயுள்ளன. இன முரண்பாடுகளின் பின்னணியில்

Page 32
தொடர்பூடகவியலாளர் கருத்தாதிக்க அமுக்கல்களின் மத்தியிலே தொய்யும் மனங்களுக்கு நாண் ஏற்ற வேண்டியமை மிகமிக அவசியமானது.
25.தொடர்பூடகத்துறை அரசியல் இன
3.1.
முரண்பாடுகளின் மத்தியில் விழிப்பு ணர்வுடனும் சரியான இலக்கு களுடனும் செயற்ப டா விட்டாற் பத்திரிகைச் சுதந்திரம் அல்லது சுதந்திர ஊடகக் கலாச்சாரம் என்பது கேலிக் கூத்தாகிப் போய்விடும். குறிப்பாக, இலங்கையில் தேசிய இன முரண் பாடுகளின் மத்தியில் நடைபெறும் காரியங்கள், அத்தனை அபிவிருத்தி, சமாதான முயற்சிகளையும் விழுங்கிக் கக்கவைக்கக்கூடாது.
சுதந்திரமான தொடர்பூடகக் கலா சாரத்திற்கான களம் இப்பொழுது விரிவடைந்துள்ளது. தொடர்பூடகத் துறை இணைவு அல்லது விரிவாக்கத் தைப் பின்வருமாறு அட்டவணைப் படுத்தலாம்.
அ.இணையத் தளங்களின் விரிவாக்கமும்
எழுச்சியும்
ஆ.தொடர்பூடகத்துறையின் தொழில்நுட்ப
வளர்ச்சி
இ. தொழிற்றுறைகளின் விரிவாக்கமும்
வளர்ச்சியும் வாழ்க்கை முறைமையில் ஏற்பட்டுள்ள
பாரிய படிமுறை மாற்றங்கள்.
. வேலைவாய்ப்பு , தொழில்முறை
மாற்றங்கள் தொலைத்தொடர்புக் கட்டங்கள்
ஊடகவியல் தொடர்பான கட்டங்கள்
75/7jGADÓT OG 3/2OOB

ஊ.சமூக நிகழ்வுகளில் மாற்றங்களும்
பெயர்வுகளும் எ. உலகளாவிய இணையத்தள விரிவாக்க மும், இதனோடு இணைந்த தொடர் பூடகக் கல்வித்துறை ஏ. தொடர்பூடகத்துறைத் தொடர்புகள்,
தொழிற்றுறைச் சமுதாயம் ஐ. பாரிய தகவற் சமுதாயத்தின் தோற்றம்
32.முரண்பாடுகள் வேகமடைந்துள்ளமை யால் “தொடர்பூடகங்கள்” நெருக்கடி கள் நிறைந்த சூழ்நிலையை எதிர்நோக்கு வதும் தொடர்புச் சாதனங்களை அரசாங் கங்கள் தீவிரமாகக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்த முற்படுவதும், பல்வேறு சிக்கலான விவாதங்களையும், விமர் சனங்களையும் தோற்றுவித்துள்ளன. உலகப் பத்திரிகையாளர் சுதந்திர தினம் தொடர்பாகச் சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் கருத்தரங்குகளும் பத்திரிகையாளர் சந்திப்புகளும் ஆண்டு தோறும் வரிசையாக நடந்தேறுகின்றன. பத்திரிகைச் சுதந்திரமும், பேச்சுச் சுதந்திரமும் ஜனநாயக நிறுவனங்களின் அத்திவாரம் என்ற உண்மையைத் தெளிவாக உறுதிப்படுத்தும் தற் போதுள்ள ஊடகச் சட்டங்களின் சீர்திருத்தம் கோரும் முயற்சியில் இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் கணிசமான முயற்சிகளைச் செய்து வருகின்றது.
33.ஜனநாயக சமூகத்தில் தொடர்பூட
கங்கள் பாரிய பங்களிப்புகளின்
அவசியத்தை மக்களின் மனங்களில்
28

Page 33
வேரூன்ற வைப்பதற்காக ஐக்கிய நாடு கள் நிறுவனம் உலகளாவிய நிலையில் உலகப் பத்திரிகையாளர் சுதந்திரதினம் ஆண்டுதோறும் மே மாதம் 3ஆம் திகதி நினைவுகூரப்பட வேண்டும் எனப்
பிரகடனம் செய்துள்ளது.
ஐ.நா. செயலாளர் கோபி அனான், ஐ.நா.மனித உரிமைகளுக்கான தூதுவர் மேரி றொ பின் சன், யுனெஸ்கோ நிறுவனப் பணிப்பாளர் ஜெனரல் கொய்ச்சிறோமத்சுரா ஆகியோர் உலகப் பத்திரிகையாளர் தினத்தையொட்டி வெளியிட்ட கூட்டுச் செய்தி யில் “சுதந்திரமான கருத்துவெளிப்பாட்டைத் தடைசெய்யாத வகையிற் பத்திரிகை யாளர் பணியாற்றுவதை உறுதிப்படுத்த வதற்குரிய வழிவகைகளையும், தீர் மா னங்க  ைள யும் எ டுக் கும் அதிகாரிகளும் அரசாங்கங்களும் திறந்த மனதோடு செயற்படுவதும் மட்டுமல்ல, அவற்றை நடைமுறையிலும் கைக் கொள்ளவேண்டும்.” என வேண்டு
கோள் விடுத்துள்ளனர்.
அண்மையில், பரந்துபட்ட சுதந்திரம் என்ற அடிப்படையில் அட்டவணைப் படுத்தி வெளியிட்டுள்ள 2005 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் உலக ளாவிய சுதந்திர கலாச்சாரத்துறைத் தேவை அழுத்தியுரைக்கப்பட்டுள்ளது. உலகப் பத்திரிகையாளர் தினத்தை யொட்டி இலங்கைப் பத்திரிகை யாசிரியர் சங்கமும் யுனெஸ்கோவும் இணைந்து கொழும்பில் 2003 இல்
கங்கை இதழ் 31/2008

ஒழுங்குசெய்த கருத்தரங்கில், சர்வதேச நாடுகளிலும், இலங்கையிலும் பத்திரி கைத்துறை எதிர்நோக்கும் சவால்கள், முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. உலக மக்களுக்கான கருத்துச் சுகந்திரத்தை வலியுறுத்தும் நோக்குடன் ஆபிரிக்கப் பத்திரிகையாளரால் வின்டொக் சாசனம் ஏற்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் வேகமாக ஓடிவிட்டன. ஆனால், இலங்கை நிலைவரம் அப்படியேதான்
உள்ளது.
3.4 இலங்கையில் ஊடகச் சட்டச் சீர்திருத்த நடைமுறைகள் திருத்தப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் நீண்டகாலமாகக் கொடுக் கப்பட்டாலும் இதுவரை எந்தவித பயனுள்ள பெறுபேறுகளும் ஏற்படவில்லை. 1996 ஆம் ஆண்டு ஊடகச் சட்டச் சீர்திருத்தக் குழு வொன்றை அரசாங்கம் நியமித்தது. விரிவான சிபாரிசுகள் பல செய்யப்பட்ட
பின்னர், பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக் கப்பட்டது. பத்திரிகை யாளரும், பொதுமக்களும் தமது முறையீடுகளை விரிவாக இந்தத் தெரிவுக் குழுவிற்குச் சமர்ப்பித்தனர். இடைக் கால அறிக்கையும் வெளி வரவில்லை. கடந்தகாலப் பாராளுமன்ற நடைமுறைகள் செயலிழந்த பின்னர் ஏற்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாக 1999 ஆம் ஆண்டில் ஊடகச் சட்டம் சம்பந்தமாக 218, 99 ஆம் இலக்க பிரேரணையும் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது
வாக்களிப்பே நடைபெறவில்லை.

Page 34
3.5.நாட்டில் உருவாகியுள்ள அரசியல்
4.1.
முரண்பாடுகளின் மத்தியில், திறந்த மனத்தோடு ஆரம்பத்திற் பத்திரிகைச் சுதந்திரத்தை அணுகிய கடந்த அரசாங் கங்களின் அணுகுமுறையில் தேக்கம் ஏற்பட்டது மட்டு மல்ல , “தி டீர் வன்மங்களும்” வேகமாக உருவாகி யுள்ளன!
சமகாலத்தில் பலதிறப்பட்ட வகையிற் பத்திரிகையாசிரியர்களுக்கு எதிராகவும், பத்திரிகையாளருக்கு எதிராகவும் பல்வேறு கட்டங்களிற் குற்றமுறையான அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை அவதானித்துவரும் பத்திரிகை யாளர் சமூகமும் விசனமடைந்துள்ளன. இவை எல்லாம் கருத்துச் சுதந்திரத்தைச் சட்ட ரீதியாக அமுக்கும் சவால்களாகும்.
நீண்ட விவாதங்கள், சட்டவியல், அரசியல், பத்திரிகைத்துறை சம்பந்தப் பட்ட வர்களின் ஒருங் கிணைந்த சிந்தனைகளின் பின்னர், பொறுப்பு வாய்ந்த சுதந்திரமான பத்திரிகா தர்மத்தைத் தலையெடுக்க வைப்பதற் குரிய சட்டங்கள், விதிகள், ஒழுக்கவியற் கோவைகள் இப்பொழுது தயாரிக்கப் பட்டுள்ளன. இவை விபரமாகத் தற்போது பாராளுமன்றத்தின் முன்னர் வைக்கப்பட்டுள்ளன. இவை வெறும் ச ட் ட வ  ைர பு க ள |ா க த் தா ன் இப்பொழுதும் உள்ளன. பேச்சுச் சுதந்திர உரிமைக்கும், ஒருவரின் கீர்த்தியைப் பேண வேண்டிய உரிமைக் கும் இடையே சமநலையை ஏற்படுத்தக்
கூடிய பகிரங்கக் கொள்கையை
Gnóøá5 Sö 31Æe008

வலியுறுத்தும் வகையில் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் வெளி யிட்டுள்ள ஆலோசனைகள் புதிய தகவல் ஒழுங்கு முறையை உறுதி செய்வதாக அமையும் என்பதை சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புகள் விதந்துரைத்துள்ளன. இவை ஜனநாயக வரம்பை மீறாதவை.
அரசியல் முரண்பாடுகள் வேகமடைந் துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டிற் சுதந்திரமான தொடர் பூடகச் கலாச்சாரத்தை அரசியற் சக்திகள் எந்தவிதமான கண்களோடு பார்க்கப் போகின்றன என்பதிலேதான் ஊடகச் சீர்திருத்தச் சட்டமும் தகவற் சுதந்திரமும் கூடத் தங்கியுள்ளன.
42.இப்பொழுது சகல உலக நாடுகளிலும் 'பத்திரிகைச் சுதந்திரம்’ பற்றிய குரல்கள் வெளிப்படுகின்றன. முரண்பாடுகள் வேகம் அடைந்துள்ள  ைம யால் தொடர்பூடகங்கள் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கிக்கொண்டி ருக்கின்றன. இக்கால கட்டத்திலே அரசாங்கங்கள் தீவிரமாக இந்தத் தொடர்புச் சாதனங்களைக் கண் காணிப்பதும் கட்டுப்படுத்த முயல்வதும் பல்வேறு சிக்கலான விவாதங்களையும் விமர்சனங்களையும் தோற்றுவித் துள்ளன. தொடர்புச் சாதனத்துறை எதிர்நோக்கும் பல்வேறு சவால்களும் இவை பற்றி வெளியிடப்படும் கருத்துக்களும் இந்த நாட்டின் அரசியற் சக்திகள் மத்தியிலும், பத்திரிகையாளர் மத்தியிலும் புதிய

Page 35
வேகத்தை உருவாக்கியுள்ள ன . இப்பொழுது தொடர்புச் சாதனத் துறை புதிய நடைமுறை, ஒழுங்குமுறைமை நியமனங்களைக் கொண்டு எழுச்சி பெறவேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனைப் பத்திரிகையாசிரியர் சங்கமும், பத்திரிகையாளர் அமைப்புக்களும் நிதானமாக அரசியற் சக்திகளின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளன.
43. ஊடகச் சட்டச் சீர்திருத்தங்கள் பற்றிய முயற்சிகள் பொதுஜன முன்னணிச் சிர்திருத்தங்கள், அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு பதவியேற்ற காலம் தொடக்கம் பேசப்பட்டு வரும் விடயம். முதன் முதலாக 1996 ஆம் ஆண்டிலே ஊடகச்சட்ட சீர்திருத்தக் குழுவொன்று அமைக்கப்பட்டதும் அப்பொழுது முதல் தொடர்புச் சாதனத்துறையினரும், பத்திரிகையாசிரியர் சங்கமும் இந்த விடயம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்களை, இதர நாடுகளின் பின்ன ணியை அவதானித்து இலங்கையில் தொடர்புச் சாதனச் செல்நெறி எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிக் கருத்துக் களை வெளிப் படுத் தி வருகின்றனர். தொடர்புச் சாதன சீர்திருத்த அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலைமையிற் கூட யாவுமே, அரசியல் சூழ்நிலை காரணமாக அமுங்கிப்போயுள்ளன. யாவும் மந்தகதியில்தான் உள்ளன. 1999 ஆம் ஆண்டில் ஊடகச் சட்டம் தொடர்பாக அடிக்கடி பேச்சுக்கள்
எழுகின்றன. பல்வேறு விடயங்கள்
25724

முன்னர் அலசி ஆராயப்பட்டுள்ளன. பாராளுமன்ற விவாதமும் கூட நடந்தேறியது. முடிவுகள் யாவும் ட் ட டி யே தான் இருக்கின்றன. பாராளுமன்ற விவாதத்தின் பின்னர் வாக்களிப்புக்கூட நடத்தப்படவில்லை. உண்மையில், இன்று பத்திரிகைத்து றையில் தொழில் சார் செல் நெறி களுக்கும், அரசாங்க நடைமுறைகளுக்கு மிடையே பாரிய இடைவெளி காணப் படுகின்றது. இப்படியே ஒரு கால கட்டத்திலே தான் நாங்கள் புதிய தொடர்புக்கான ஒழுங்குமுறைபற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
4.4.சதந்திரமான சாதனங்கள் இல்லாமற் சுதந்திரமான சமுதாயம் இயங்க
முடியாது. இன மத மொழி முரண்பாடுகள் வேரூன்றியுள்ள சூழ்நிலையிலே தொடர்புச் சாதனங்களின் ஆளுமை யைச் சரிவர இனங்காண முற்படுவது அவசியமானது. தொடர்புச் சாதனங் களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள தொடர்புகள், அவை பரந்த அடிப்படையிலே வெளிப்படுத்தி வரும் சிந்தனைத் தாக்கங்கள், சகல கலை இலக்கியப் பண்பாட்டு மரபுகளைச் சரியான பாதையிலே வழிப்படுத்தும் போக்கு கள், சமூக , அரசியல் , பொருளாதார உரிமைப் போராட் டங்களில் அவை வகிக்கும் செல்வாக் குகள் என்றின்னோரன்ன விடயங் களை எல்லாம் ஒழுங்குபடுத்திவைக்க
முற்படுவது அவசியமானது. சுருங்கக்

Page 36
கூறினால் தொடர் பூடங்க ளின் வகிபாகத்தைச் சரிவர நிரற்படுத்தி வழிப்படுத்தவேண்டும். இப்பொழுது இது ஒரு பாரிய பணியாக உருவெடுத் துள்ளது.
4.5.தொழில் நுட் பத் துறை யிலும் ,
5.1.
அபிவிருத்திப் பாதையிலும் நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருந்தாலும், உலகம் முரண் பாடுகளின் மத்தியிலேதான் சிக்கித் தவிக்கின்றது. பெருங் குழப்பங்கள், பயங்கரமான கொலைகள், யுத்தவெறி, ஒழுங்கீனங்கள், வன்முறைகள், மிகப் பெரிய உருவிலான கொடுமைகள், போரில் முடியும் கலவரங்கள் என எல்லாம் தொடர்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் சகல நாடுகளிலும் அரசியல் மோதல்களும் இனக்குழு மோதல்களும் நடந்தேறுகின்றன. இதன் காரணமாக தொடர்பூடகத்துறையிலே சுதந்திரமான, தெளிவான போக்கு களையோ ஊடக சுதந்திரத்தையோ தெளிவாக ப் பேண முடியாத அவலங்களே தோன்றியுள்ளன.
தேசிய சமாதானத்தையும், குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரையிலே, இனத்துவ முரண்பாடுகளைச் சரிவர அணுகமுடியாத வகையிலே ஊடகத் துறை, துக் கங்களையும், அழிவு களையுமே சுமப்பது வரலாறாகி விட்டது. அடிமனங்களிலே கொடிய நெருப்பை மூட்டும் வகையிலும் இரத் தத்திலே உஷ் ண ம் ஏறும்
Enzo6 SS 31/2DUB

வகையிலே சம்பவங்கள் நாடளாவிய
ரீதியிலே நடந்தேறுகின்றன.
5.2.ஊடகச் சுதந்திரம் “தனித்துவம்’ என்ற அடிப்படைகளை வளர்த்தும் வகை யிலே அழிந்து, அகன்ற நிலைமையில் ஊடகத்துறையினரின் செல்நெறிகளை வழிப்படுத்துவதும், நெறிப்படுத்துவதும் அவசியமானது என்பதை ஊடகத் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல. அறிவு ஜீவிகளும் உணர்ந்து செயற்பட முற்பட்டுள்ளமை நல்ல அறிகுறியாகும். வெறுமனே ஊடகங்கள் பிரசார சாதனங்களாக மட்டுமல்ல, இனத்துவ முரண்பாடு களுக்குத் தூப மி டும் சக்திகளாகிவிட்டன.
53.ஊடகங்களின் செயற்பாடுகளைப் பயன் படுத்துவதன் மூலமாக அரசியலையும் சமூகத்தையும், சுய நலன்களோடு திசை திருப்புவது சமகால வரலாற்றிலே ஒரு புதிய அங்கமாகி விட்டது. இது பத்திரிகைச் சுதந்திரம் என்ற விடயத் தைக் கேள்விக்குறியாக மட்டுமல்ல அரசியல் முரண்பாடுகளுக்குட்பட்ட விடயமாக்கிவிட்டது.
5.4.குறிப்பாக இலங்கையில், ஆங்கில, சிங்கள, தமிழ் பத்திரிகைகளும், இதர தொடர்பூடகங்களும் இனத்துவப் பின்னணியோடு செய்திகளை அணுகு வதும், அரசியல் முரண்பாடுகளுக்குத் தூபமிடுவதும் தாறுமாறாக நடந்தேறு கின்றன. சுருங்கக் கூறினால் தென்னிலங் கையில் உள்ள சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் தென்புலத்திலே உள்ள

Page 37
வாசகர்களுக்கு இதமூட்டும் வகையி லேயே செய்திகளை வெளிப்படுத்தி வருகின்றன.
தென்புலத்து உள்ளிட்டு அரசியலும், கட்சிய ரசியல் முரண்பாடுகளும் முதன்மை பெறுவது தேசிய சமாதான முயற்சி களை  ெயல்லாம் வெகு தூரத்திற்குப் பின்தள்ளிக் கொண்டி ருக்கின்றன.
5.5.சிங்கள மக்களின் உள்ளுணர்வுகளைத் தூண்டு த ல் , த ட் டி விடு த ல் , மறு முனையில் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிரான முறையிலே அவற்றை அறிக்கையிடுதல், தென்புலத்து ஊடகச் செயற்பாடுகளில் இலக்காகியுள்ளமை அவதானத்திற்குரியது. மொத்தத்திலே, தென்புலத்து உள்ளிட்டு அரசியல், பூதாகரமான வடிவைத் தொடர்ச்சியாக எடுத்துவருகின்றது.
6.1 சகல இனங்களையும் சமத்துவமாக நோக்குவதும் அல்லது பரந்துபட்ட நாடளாவிய தேசியத்தைப் புலப் படுத்துவது அல்லது பேணிக் காப்பதும் என்ற முறைமையைச் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் சிதைத்தபடி செயற்படு கின்றன. தமிழ் ஊடகங்கள் எவ்வளவு தான் தேசிய சமாதானத்தையோ, அல்லது இன சமத்துவத்தையோ பேண முற்பட்டாலும், அவற்றை இனவாத அடையாளங்களுடன் பார்ப்பது வரலாறாகிவிட்டது.
6.2.மொத்தத்திற் சுதந்திரமான பத்திரிகை
Mömürgodas i sg)g 31/2UU8

உலகம், தொடர்பூடகக் கலாசாரம் என்ற விடயங்கள் கேள்விக்குரிய விடயங் களாகிவிட்டன. தேசியப் பத்திரிகைகள் என்ற நோக்கோ டு செயற்படும் தென்னிலங்கைப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செயற்படும் போக்கைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம். தமக்குச் சாதகமான செய்திகளை வெளியிடல், சாதகமற்றவற்றை மறைத் தல், தருணம் பார்த்து வெளியிடல், நோக்கங்களுக்கும் சார்பாகத் திரித்து அல்லது தவறாக வெளிப்படுத்துதல் என்ற வரிசையில் உள்ளவைகள்
ஊடகப்போக்குகளாகிவிட்டன.
63.சிங்கள, ஆங்கிலத் தொடர்பூடகங்கள் தென் புலத்து, சிங்கள மக்களின் உள்ளுணர்வு க  ைளத் திருப்தி ப் படுத்துவதற்கான நிலைப்பாட்டைத் தொடர்வது வரலாறாகிவிட்டது. இதே வகையில் தமிழ் பத்திரிகைகளும், தமிழ் ஊடகங்களும், செய்தி வெளிப்பாடுகள், கருத்து வெளிப்பாடுகளின் மத்தியில் முரண்பாடுகளுடன் சீவிப்பதும், முரண் பாடுகளைத் தட்டிவிடுவதும் பொது
வான போக்குகளாகிவிட்டன.
64.இப்பொழுது புதிய நூற்றாண்டு போய் எட்டு ஆண்டுகள் வேகமாக ஓடி விட்டன. பழைய தலைமுறையின் பிடிகளில் இருந்து விடுபட்டுப் புதிய எண்ண அலைகளின் மத்தியில் எமது இளைய தலைமுறையினரையும், ஊடக
சமுதாயத்தையும் வழிப்படுத்துவதும்

Page 38
அவசியமானது. உலக ளாவிய வறுமைப்படுகுழிகளின் மத்தியிலிருந்து உலகத்தை மீட்டு வெளியே எடுப்பது புதிய தலைமுறை எதிர்நோக்கும் பாரிய பணியாகிவிட்டது.
65.மனித சமுதாயம் பசிப்பிணிகளைத் தாண்டி ஓடினாலும் பயங்கரமான நோய் க ளோ டு த ள் ள ப் படப்
போகின்றது. எதிர்வரும் தசாப்தம் ஜீவ
பாலியல் வல்லுறவுக் செ வருடங்களின் பின் தீர்
யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப் பட்டமை, மற்றும் அவரைத் தேடிச்சென்ற அவரது தாயார், சகோதரர், அயல்வீட்டார் ஆகியோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு, பல மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தம்
sea- -as- s
Brugo6 SS 31/2008

மரணப் போராட்டங்களை எதிர்நோக்கி விடுகின்றது! பயங்கரவாதம், வெளித் தனமான வன்முறைகள் இனிவரும் காலத் தி லே தணிய வேண்டும் . சுதந்திரமான ஊடக கலாசாரம் தோன்றுவது மனித சமுதாயத்தின் மதிப்பையும், பெறுமதியையும் தாழ்ந்து போகாது உயரவைக்கும் அரசியல் சமுதாய செயற்பாடு களில் தான்
தங்கியுள்ளன.
காலைக்கு, பன்னிரண்டு ப்பு - மரணதண்டனை
மற்றும் நீதித் துறையின் நியாயமான விசாரணை களின் அடிப் படையில் குற்றவாளிகள் இனம் காணப்பட்டு தீர்ப்பானது, உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை உறுதியாக்கப்பட்டுள்ளது. கிருசாந்தி அவரது குடும்பத்தவரது ஆத்மா சாந்தியடைவதாக.

Page 39
உங்களுக்குத் தெரியு பொருட்களின் பின்னால்
அழகுசாதனப் பொருட்களாகவும், குளியலறை தொடக்கம் சாப்பாட்டு மேசை வரை நாம் பாவிக்கும் விதம் விதமான புதுமையான பொருட்கள் யாவும் எங்கிருந்து பெறப்படுகிறதென்பது புதுமையான விடயமே.
அழகுசாதனப் பொருட்களுக்கு மு க் கி ய மாக ப் பா வி க் க ப் படும் கொழுப்பினைப் பெறுவதற்காக இறந்த ஆடு, மாடு, கோழி போன்ற பிரயாணிகளின் உடல்கள் சேகரிக்கப்பட்டு பாரிய பாத்திர மொன்றில் ஒன்றாகப் போட்டு உயர் அமுக்கத்தில் இவை வேக வைக்கப் படுவதன் மூலம் அவற்றிலிருந்து கொழுப்பு பிரித்தெடுக்கப்படுகின்றது. இவ்வாறு பிரித்து எடுக்கப்படும் கொழுப்பினைப் பல பிரபல்ய அழகுசாதன உற்பத்தி கம்பனிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கு கின்றன. குறிப்பாக உதட்டு சாயம், கண்ணை அழகுபடுத்தும் சாதனங்கள் என்பனவாகும். மேலும் அழகுசாதனப் பொருட்களின் விற்பனைக்காக கவர்ச்சிகரமான பெண்கள் இப் பொருட்களைப் பாவிப்பதாக விளம்பரங்கள் மூலம் பிரபல்யப்படுத்தப்
படுகின்றது.
இவர்களை அழகுபடுத்தும் நிற மூட்டிவாசனையூட்டப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் யாவும் இறந்த நாய்கள், மாடுகள், பன்றிகளிலிருந்து பெறப்பட்ட தென்பதை இவர்கள் அறிவார்களா? இப் பொருட்களைப் பாவிக்கும் பொழுது இதன்
az

மா? அழகு சாதனப்
0 மறைந்திருக்கும் மர்மம்
மூலம் ஏற்படும் தாக்கங்கள் மனித உடம்பிற்கு ஏற்புடையதாக அமையுமா?
கெரட்டீன் என்ற புரத வகை கொழுப்புகள், இறகுகள், செட்டைகள் மிருகங்களின் முடி, ஊர்வனவின் பாகங்கள் ஆமை ஒடு, பறவைகளின் சொண்டுகள் நண்டின் கால்கள், திமிங்கிலத்தின் பாகங் கள் என்பனவற்றில் இருந்து பெறப்படு கின்றது. இதனை பாவித்து சம்பூ, கென்டி சனர், உடம்பைச் சுத்தப்படுத்தும் சாதனங் கள், உடம்பில் வாசனைக்காக பூசப்படும் பொருட்கள், முகத்தின் அழுக்கை அகற்ற பாவிக்கப்படும் ரோனர், முகத்தை ஈரலிப் பாக வைத்திருக்கும் பொருட்கள், முகத்தை அழகுபடுத்த உபயோகிக்கப்படும் கலவை கள், மஸ்காரா உதட்டுச்சாயம், முடிக்கு வர்ணமூட்டும் வர்ணக் கலவைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
மேலும் இவ்வாறான பொருட் களுக்கு ஜெலட்டீன், அல்லது "ஜெல்" மேலதிகமாகச் சேர்க்கப்படுகின்றது. இந்த ஜெலட்டீன் அல்லது "ஜெல்" பிராணிகளின் மெதுமையான பகுதிகள், தோல் எலும்புகள் போன்றவற்றை நீரில் கொதிக்கவைத்துப் பெறப்படுகின்றது. மாற்றீடாகப் பாசி, கடற்கோள் உரவகை, பழப்சை, மரப்பிசின் போன்றவற்றிலிருந்தும் பெறப்படுகின்றது.
சவர்க்காரம், வழுக்கும் தன்மை உடைய பொருட்கள், முடிக்குப் பயன் படுத்தும் பொருட்கள், கென்டிசனர்
S

Page 40
வியர்வை நாற்றத்தைத் தடுக்கும் பொருட் கள், முகக்கிறீம் போன்றவற்றிக்கு பாவிக்கப் படும், ஸ்ராயறிக் அமிலம் மாடு, ஆடு, நாய்,பூனை, பன்றிகளின் வயிற்றுப் பாகம் இவற்றிலிருந்து பெறப்படும் கொழுப்பிலி ருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மாற்றீடாக மரக்கறி வகைகள் தேங்காய் போன்ற வற்றிலிருந்து பெறப்படும் கொழுப்பும் பயன்படுத்தப்படுகின்றது.
கடலாமையின் உட் பாகங்களி லிருந்து பெறப்படும் கொழுப்பின்மூலம் பெறப்படும் எண்ணெய், தோலுக்கு பூசப்படும் கிறீம், நகத்திற்குப்பூசப்படும் கிறீம் சூரிய வெப்பத்தில் இருந்து பாது காக்கும் கிறீம் வகைகளுக்குப் பாவிக்கப்
படுகின்றது.
கோச்சிறேல் எனப்படும் சிவப்புச் சாயவகை, தோர்சிறேல் எனப்படும் பெண்பூச்சியை அரைத்துத் தூளாக்குவதன் மூலம் பெறப்படுகின்றது. (7000) ஏழாயிரம் இவ்வகைப் பூச்சிகளை அரைப்பதன் மூலம் இறாத்தல் சிவப்புச் சாயம் பெறப்படுகிறது. இது அழகு சாதனங்களை வர்ணமூட்டு வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
நார்த்தன்மை உடைய புரதம், பிராணிகளின் சவ்வில் இருந்து பெறப் படுகிறது. இது முதுமை அடைவதைத் தடுக்கும் "கிறீம்" வகைகளுக்குப் பாவிக்கப் படுகின்றது. மாற்றீடாக சோயாபுரதம், வாதுமை எண்ணெய் போன்றவையும் இதற்குப் பாவிக்கப்படுகின்றன.
நங்தை இதழ் 31/2008

பிராணிகளின் குட்டிகள் ஈணப் பட்ட பின்பு வெளியேற்றப் படும் பிளசண்டா (நஞ்சுக்கொடி) இவற்றிலிருந்து தோல்கிறீம் சம்பூ போன்றவை செய்யப்படு வதாக அறியப்படுகின்றது. சுறாவின் ஈரலில் இருந்து பெறப்படும் எண்ணெய் வழுக்கும் தன்மை கொண்ட கிறிம் வகைகள் தயாரிக்கப்படுவதற்குப் பயன்படுத்தப்படு கின்றது.
மீன் ஈரலில் இருந்து பெறப்படும் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் விற்றமின் A கிறீம் வகைகள், வாசனை ஊட்டும் பொருட்கள், முடிச்சாயம் போன்ற வற்றிற்குப் பாவிக்கப்படுகின்றது.
மிருகங்களிலிருந்தும் தாவரங் களிலிருந்தும் பெறப்படும் மெழுகு, சாயம் என்பவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. பன்றியின் கொழுப்பில் இருந்து முகச் சவரத்திற்கு பாவிக்கப்படும் கிறீம் வகைகள், சவர்க்காரம் என்பன செய்யப்படுவதோடு மாற் றீடாக இவற்றிற்கு மரக் கறி வகைகளிலிருந்து பெறப்படும் கொழுப்பும் பாவிக்கப்படுகிறது. அழகை மெருகூட்டும் சாதனங்கட்காக, எத்தனையோ பிராணிகள் தம் உயிரைத் தியாகம் செய்கின்றன. இயற்கையாக தாவரங்களிலிருந்து பெறப் படும் பழங்கள் இலைகள் வேர் போன்றவை கூட அழகை மெருகூட்டும் பொருட்களே! மேற்குலக வர்த்தக விளம்பரங்கட்கு அமைவாக இயற்கையோடு ஒன்றிய வீண் விரயமற்ற வகையில் அழகை மெருகூட்டும் பொருட்களை இனம் கண்டு உபயோ கிப்பது நாம் சூழலுக்கு செய்யும் நன்றியாகும்
-aup- -ee

Page 41
கனவு வ
ஆத்து லயத்தின் ரெண்டாம் நெம்பர் காம்பராவில்
வாழும். முத்தம்மாவுக்கு அவ்வப்போது ஆசைகள் மனதுக்குள் தலைநீட்டும்
கடல் அலைகளாக
ஒரு வெளிநாட்டுக்கு போக வேண்டும். வேலைக்காரியாக இல்லையேல் கொழும்புவங்களாவுக்கு ஆயாவாக போக வேண்டும்
இந்த
லயத்து காம்பரா கிளிக்கூண்டு வாழ்க்கையை தொலைக்கவேண்டும். மாலை சூரியன் மங்கிய நேரத்தில் லயத்து கோடியில் புரோக்கர் பொன்னையா மாமனிடம் கொழும்புக்குக் கூட்டிப் போய் வங்களாவில் விடுங்களே ஆசையோடு கேட்டுப்பார்த்தாள் யென்னாப்புள்ள முத்தம்மா
வங்களா யென்னாபுள்ள வங்களா
Brigod Sg5 31/2UDB

ாழககை
சவூதிக்கே அனுப்புகிறேன்
LρΓτμοσδίδοότ
எதிரொலி வார்த்தைகளால் கற்பனையில் மிதந்தாள்
முத்தம்மா சம்மதம் தெரிவித்த மாமன் மறுநாள் கேட்டார் அடியே முத்தம்மா
அடையாள அட்டை பேர்த்து சர்ட்டிபிக்கேட் இஹிம் கையை விரித்தாள்
முத்தம்மா - அப்ப தோட்டத்திலேயே இருந்து தொலைஞ்சுப் போ -"மாமனின் வார்த்தைகள் குத்தியது முள்ளாக மனதில் படர்ந்திருந்த ஆசைகளையும் அவிழ்த்து விட்டு லயத்து காம்பராவில் - மீண்டும் கிளிக்கூண்டு வாழ்க்கையை புதுப்பிக்கத் தொடங்கினாள்
முத்தம்மா - அந்த விடியல் நேரத்தில்
floomTL Irh (385.5l. LqopLITTEIT

Page 42
500 பெண்களின் குரல்
சர்வதேச மகளிர் தினத்தில் யாழ்.
மகளிர் ஒன்று கூடி எடுக் கப் பட்ட
பிரகடனம்.
1.
உலகளாவிய ரீதியில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைவிட அதிக சுமைகளை யாழ். பெண்கள் எதிர் கொள்கின்றனர். தொடரும் யுத் தத்தினால், எதிர் பாராத பல இடர்களை இவர்கள் சந்திக்கின்றனர். இதனால் தொடரும் யுத்தம் நிறுத்தப் படவேண்டும்.
போர்ப் பிரதேசங்களிலிருந்து பெரும் பா லா ன ஆண் கள் பாது காப் பு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறு வது, பெண்கள் மீது அதிக சுமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதனால்
அவர்கள் பலவகையான வன்முறை
20.03.2008இல் யாழ் பொது நூலகத் நிகழ்வில் பங்குபற்றிய பெண்கள்.
značavao Saig 31/2008
 

ஸ்களில் ஒரு பிரகடனம்
களையும், மனித உரிமை மீறல்களையும்
சந்திக்கின்றனர். ஆகவே இந்நிலை தவிர்க்கப்பட்டுப் பெண்களுக்கான பாது
காப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.
3. யாழ். பிரதேசத்தில் இடம்பெறும்
ஆள் கடத்தல், காணாமற் போதல்,
நீதிக்குப்புறம்பான கொலைகள், பயங்கர வாதத்தடுப்பு என்ற ரீதியில் இடம் பெறுவது உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும்.
4. இதுவரை காணாமற் போனோர்,
கொலை செய்யப்பட்டோர், கடத்தப்
பட்டோர், ஆகியவர்கட்காக சட்ட
ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்
பட்டு, குற்றம் புரிந்தோர் இனம்
காணப்பட்டு, உரிய தண்டனை வழங்க
ஏற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும்.

Page 43
5. மக்களின் பாதுகாப்பு என்ற ரீதியில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதோடு அதுவே நியமமாக வரும் நிலை காணப்படுவது தவிர்க்கப்படவேண்டும். 6. பெண்களுக்குரிய, மனிதாபிமான கெளரவம், மதிப்பு, சுயமரியாதை பேணப்படுவது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். 8. ம க ளிர் சுதந்திரமாக வீதிகளில் மட்டுமன்றி, இலங்கையின் ஏனைய பிரதேசங்கட்கும் கட்டுப் பாடின்றி சுதந்திரமாகச் சென்று வருவதற்கான நடைமுறைகள் பேணப்படவேண்டும். 9. பெண்கள் தமது குடும்பத்தின் அன்றாட தேவைகட்கான பொருட்களை இலகு
-she- -se- -a
தேசிய சமாதான பேரவையால் ஒரு தொடர்பான மதத் தலைவர்களின் அகாசியுடன் ஏனைய மதத்தலைவ
நங்தை இதழ் 31/2008
 

வாக, நியாய விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படவேண்டும். 10. மேலாக தொடரும் இராணுவ ரீதியான போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு கெளரவமான சமாதானத்தை எட்டுவதற் கான முயற்சிகளில் பெண்கள் இணைக் கப்பட்டு, சமாதான முயற்சிகளை முனைப்போடு செயற்படுத்த, பெரும்
முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.
இப்பிரகடனம் 500 இற்கும் மேற்பட்ட பெண் களின் கையொப் பத் தோடு ஐனாதிபதி, மற்றும் சம்பந்தப்பட்ட அ  ைமச் சு கட்கு அனுப் பி வைக் கப் படவுள்ளது.
ஜ்னு அனு- -ஆ-
ழங்கு செய்யப்பட்ட இலங்கையின் சமாதானம் சர்வதேச மகாநாட்டில் பங்கு பற்றிய யசூசி ர்கள் காணப்படுகின்றனர்.
39

Page 44
2000ஆம் அபிவிருத்தி இல்
மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் என அழைக்கப்படும் இவ் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான கால எல்லை 2015ஆகும். 2000 ஆம் ஆண்டின் புதிய அபிவிருத்திகளை ஞாபகம் ஊட்டும் வகையில் ஐ.நா.வில் 189 அங்கத்துவ நாடுகள் ஒன்று கூடி நடை பெற்ற உலக உச்சி மாநாட்டில் மிலேனியம் அபிவிருத்திக்கான இலக்குகள் குறிக்கப்பட்டன. வறுமை, பட்டினி போன்றவற்றை ஒழித்து சுகாதாரம், கல்வி என்பவற்றைப் பின்தங்கிய நாடுகளில் வலுப்படுத்தும் நோக்கமாக இவ் இலக்குகள் வரையப்பட்டுள்ளன. அவையாவன: 1. வறுமை, பசி என்பவற்றை ஒழித்தல்.
ஒருநாளுக்கு (107 ரூபா) குறைவான வருமானத்துடன் வாழும் மக்களின் வறுமையைப் போக்குதல். 2. உலகலாவிய ரீதியில் ஆரம்பக் கல்வியை அடைதல். எல்லா ஆண்கள்/பெண்கள் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தல். 3. பால்நிலை சமத்துவத்தை ஊக்குவித்து
பெண்களை விழிப்படையச் செய்தல். இரண்டாம் தரப் பாடசாலைகளில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குதலை ஒழித் த ல் பாராளுமன்றத் தில்
Bagoa SS 3/2008

ஆண்டின் பக்குகள் 2015இல்
அதிகாரத்தில் பெண்கள் எண்ணிக் கையை அதிகரித்தல். 4. சிறுவர் இறப்பைக் குறைத்தல்
5 வயதிற்குக் குறைவான சிறுவரது இறப்பைக் குறைத்து 3/2 ஆக குறைத்தல். 5. தாய்மை சுகாதாரத்தை முன்னேற்றல்.
குழந்தை பிறப்பின்போது இருக்கும் தாயாரது எண்ணிக்கை யை 312 குறைத்தல். 6. மலேரியா எச்.ஐ.வி. எய்ட்ஸ், வேறு நோய்களுக்கு எதிராகப் போராடுதல். மேற் கூறிய நோய்கள் பரவாது தடுத்தற்குரிய நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளல். 7. நிலைத்தகு சூழலை உறுதிசெய்தல்.
நிலைத்தகு சூழலுக்கான திட்டங் களையும் , கொள்கை களையும்
உள்ளடக்கல்.
8. அபிவிருத்திக்கான உலகளாவிய பங் களித்தலை அபிவிருத்தி செய்வதோடு, விளக்கங்களையும் பங்கீடு செய்தல். நல்லாசியுடன் கூடிய நிரந்தர வர்த்தக நிதிக் கொள்கை யினைக் கடைப் பிடித்தல். நாட்டின் கடன் பிரச்சினை
களுக்கான தீர்வுகளைக் கண்டறிதல்.
மகளிர் அபிவிருத்தி நிலையம்.
07, இரத்தினம் வீதி,

Page 45
மகளிர் அபிவி
மகளிர் அபிவிருத்தி நிலையம். 2007ம் ஆண்டில், யாழ் மாவட்டத்தில், பின்வரும் செயல் திட்டங்களை அமுல் செய்துள்ளது 1. பிரதான திட்டங்கள்
2. பொதுவான திட்டங்கள்
1. பிரதான திட்டங்கள்
3 வன்முறைகளாற் பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்கள் சேகரித்தலும் ஆவணப்படுத்தலும் ICTAProject
* எமது ஜனாதிபதியின்கீழ் வருகின்ற "இலங்கைத் தகவல் தொழில்நுட்பத் தொடர்பாடல் முகவர்" (Information & Communicate Technology Agent of Sri Lanka) sbloo) Guu-1556öT 960)FU ணையுடன் எமது நிறுவனத்தினாற் சிறந்த முறையில் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
令
Х»
இத்திட்டத்தின்கீழ், யாழ் மாவட் டத்தில் யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் ஆகிய இடங்களில் 5 நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
*இத்திட்டத்தின் ஆரம்ப நடவடிக் கையாகக் கொழும்பில் மென் GUITOU5 GT i gol îNGíîObj, ĝS (Software Development) Spig (p65) puigi நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து இத்திட்டத்தை எமது நிறுவனத்தின் 5 நிலையங்களிலும்
நங்தை இதழ் 31/2008

ருத்தி நிலையம்
செயற் படுத் த க் கூடிய தாக இருக்கின்றது.
பற்றிக் பயிற்சி நெறி
* Aoustion Aid / CHA 965).J5FUGOGODOTULLGőT எமது நிலையத்தினால் உடுவில், தாவடி, தெல்லிப்பழை, ஆகிய பிரதேசச் செயலகப் பிரிவில் 3 மாதகாலப் பற்றிக் பயிற்சி நெறி சிறந்த முறை யில் நடைபெற்றது.
* இப்பயிற்சிக்குக் கல்வியைப் பூர்த்தி செய்த பெண்கள் மற்றும் பாட சாலையிலிருந்து விலகிய பெண் பிள்ளைகள் 20 பேர் ஒவ்வொரு பிரிவுக்கும் தெரிவு செய்யப்பட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது.
●
* எமது பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சிகளை நிறைவுசெய்த பெண் பிள்ளைகளில் 10 பேர் தெரிவுசெய் யப்பட்டு அவர்களினால் தைக்கப்பட்ட "ஆயத்த உடைகள் விற்பனை
நிலையம்" ஒன்று நடைமுறை ப் படுத்தப்பட்டு வருகிறது.

Page 46
* கிராமிய மட்ட அமைப்புக்கள் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கான சுயதொழிற் பயிற்சியாக பன்னவேலை பயிற் சி யினைத் திருநெல்வேலி ப ா ற் ப ன்  ைண வீ தி யி லு ம் , சண்டிலிப்பாய் பிரதேசத்திலும் எமது நிறுவனத்தினால் நடாத்தப் பட்டு வருகிறது. இப்பயிற்சியில் ஒவ்வொரு நிலையத்திலும் 20 பயனாளிகள் பயிற்சி
பெற்றுவருகின்றனர்.
3 வாழ்வாதாரத் தீர்வு
« Australian Aid 5 p. 61 GOT அனுசரணையுடன் மகளிர் அபிவிருத்தி நிலையம் தெரிவு செய்யப்பட்ட பய னாளி களு க்கு அவர் களது சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக மாடு, கோழி அவற்றுக்குரிய கூடு என்பனவற்றை வழங்கி உதவியது.
நங்தை இதழ் 31/2008
 
 

3 பெண்கள் தொடர்பான கல்வி * இத் திட்டம் OXFAM நிதி அனு சரணையுடன் எமது நிலையத்தினால் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், உயர் கல்வி கற்கும் பெண்கள் தொடர்பான கல்வியின் ஆரம்ப வேலைத்திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சி யாழ் பல்கலைக் கழகத்திற் சிறந்த முறை யி ல் ந  ைட பெற இருந்தவேளை தற்காலச் சூழ்நிலையில் அத்திட்டம் தொடர்ந்து கொண்டு செல்கிறது.
X
2. பொதுவான திட்டங்கள்.
3 பெண்களுக்கான திட்டம்
* எமது நிறுவனத்தின் பயிற்சி நிலை யத்தில் தொடர்ச்சியாக வருடம் முழுவதும் வேலை வாய்ப்பின்றி இருக்கும் யுவதிகளுக்கு இலவச  ைத ய ற் பயிற் சி யும் பற்றி க் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.
* கிராம மாதர் சங்கங்களைப் பலப்
படுத்தும் திட்டம். கிராம மாதர் சங்கங்களைப் பயன் படுத்தும் நோக்கோடு அவர்களிற்கு ஆற்றல் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குதல்

Page 47
*
* நாவாந்துறை சனசமூக நிலைய மாதர் அபிவிருத்திச் சங்கம், கோட்டை மீ னா ட்சி அம் ம ன் மா த ர் அபிவிருத்திச் சங்கம், கடற்கரை வீதி, பா  ைஷ யூர் மே ற் கு மாத ர் அபிவிருத்திச் சங்கம் கொழும்புத் துறை மகேந்திரபுரம் மாதர் சங்கம், நாவாந்துறை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய கிராம மாதர் சங்கங்க ளின் செயற் பாடுகளுக்கு ஊக்கமளிப்பதற்காக அவர் க ளோடு இ ைண ந் து செயற்படும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்குக் கற்றல் உபகரணங்
கள் வழங்கப்பட்டன.
*
சுயதொழிற் கடன் வழங்கல் விதவைகள், கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், வலுக்குறைந்த பெண் கள் போன்ற வர்களின் அடிப்படை வசதியற்றோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குச் சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக் காகச் சுழற்சி முறையிற் பயனாளி களுக்கு கடன் வழங்கப்பட்டது.
3 இலவச சட்ட உதவி
எமது நிறுவன இலவசச் சட்ட ஆலோ சகராகத் திருமதி பவானி சற்குணராசா கடமையாற்றுகின்றார். இத்திட்டத்தின் கீழ் வருமான மற்ற பெண் கள் வன்முறைக்குள்ளாகும்போது அவர் களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப் படுகிறது. குறிப்பாக வீட்டுவன்முறை, ஆதன உரிமை, பிறப்புச் சான்றிதழ் பெறல், மனித உரிமை மீறல் தொடர் பான வழக்குகள் போன்றவற்றிற்கு ஆலோசனைகளும் உதவிகளும்
வழங்கப்படுகின்றன.
நங்தை இதழ் 31/2008

9 கல்வி உதவித்திட்டம்
● exe
அடிப்படை வசதி குறைந்த மாணவர் திட்டத்தின் கீழ் , ஒவ்வொரு வருடமும், வருட ஆரம்பத்தில், ஒவ்வொரு பாடசாலையிலும், அதிபர்களினாற் சிபாரிசு செய்த 100 மாணவர்களிற்குப் பாடசாலைப் புத்த கப்பை வழங்கப் பட்டது. இதற்கு யாழ் வர்த்தகர்களின் உதவி பெறப்பட்டது.
● *్మe
X
வருடத்தின் மூன்று த வ ைண ஆரம்பத்திலும் ஒவ்வொரு பாட சாலைகளிலும் தெரிவு செய்யப் பட்ட 200 மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வெளி நாட்டு அன்பர் களின் உதவியுடன் 5 வறிய மாணவர் களிற் குக் கல் விக்காக, எமது

Page 48
நிறுவனத்தினூடாக, மாதாந்தம் ரூபா 1000,00 வழங்கப்படுகின்றது.
3 இடம் பெயர் ந் த மு காம் க ளில் உளவளத்துணை ஆலோசனையும் உதவித்திட்டமும், * யுத்த அனர்த்தங்களினாற் பாதிக்கப் பட்ட உறவுகள், வீடுகள், சொத்துக் கள் என்பனவற்றை இழந்து பாடசாலை, தேவாலயங்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு இலவச டிாகச் சட்ட ஆலோசனைகள், மருத்துவ வசதிகள் உள வ ள ஆலோசனைகள், உதவி வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் உணவு வழங்கும் வழிவகை செய்து கொடுக் கப்பட்டது. * எமது நிறுவனம் வழங்கிய உதவிப் பொருட்கள்: லாந்தர் விளக்கு, சமையற் பாத்திரங்கள், பெண் களிற்கான உடைகள், சோப்,
உடுபுடைவைகள்.
* கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்
களிற்கான போசாக்கு நிறையா
நங்தை இதழ் 31/2008
 

காரம் தயாரித்து, தெரிவுசெய்யப் பட்ட கிராம மக்கள், முன்பள்ளிச் சிறுவர்களிற்கு வழங்கப்படுகின்றது. இதற் கு ரி ய நிதி யு த வி  ைய இலண்டனிலுள்ள "தமிழர் நிதியம்" வழங்கி வருகின்றது.
மேனித உரிமைகள் சம்பந்தமான தகவல்
சேகரிப்பு
oxo
இடம்பெயர் முகாம்களில் தங்கி யுள்ள மக்களிடம், யுத்த அனர்த் தத் தி ன் போது அவர் களு க்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் பெறப்
பட்டன. தற்காலத்தில் நாளாந்தம் மக்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்கள், அது சம்பந்தமான தகவல்களும் ப த் தி ரி  ைக க ள் மூ ல ம் சேகரிக்கப்படுகின்றன. மனித உரிமை ஆணைக் குழு அலு வலு கத்திற்கு ச் சென்று மு  ைற ப் பா ட் டா ள ர் க ளி ன் முறைப்பாடுகளை எமது நிலைய உத்தியோகத்தர் பதிவு செய்து கொடுத்தனர்.
3 அரச.அரசார்பற்ற நிறுவனங்களுடனான
வலையமைப்பு அரசசார்பற்ற நிறுவனங்கள், யாழ் மாவட்
டம் மற்றும் வெளி மாவட்டங்களில் ந டா த் தி ய க ரு த் த ரங் கு க ள் பயிலரங்கு களிற் பங்கு பற்றிய
பெண்களிற்கான ஒர் உறுதியான
வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 49
கேருத்தரங்களும் விழிப்புணர்வுச்
Glarujung * மாதர் சங்கங்கள், அரசார்பற்ற நிறுவனங்களுடனான தொடர்பு ஊரகத் திணைக்களங்களுடனான தொடர்பு * பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு / சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சிநிரல் * அலுவலக உத்தியோகத்தர் ஏனைய
பொதுநிகழ்வுகளிற் பங்குபற்றல். * தென் பகுதியிலிருந்து வருகை தந்த பெண் கள் குழு க் களு டன் இணைந்து எமது நிறுவனம் மாதர் சங்கங்களுடன் கலந்துரையாடல்.
நேங்கைசஞ்சிகை
* எமது நிலையத்தினால் "தங்கை" மகளிர் சஞ்சிகை வெளியிடப்பட்டு வருகிறது. இம்முறை சஞ்சிகை வெளியிடும் வேலைகள் சிறந்த முறையில் நடைபெற்றுவருகின்றது.
மகளிர் அபிவிருத்தி நிலையம்
நீண்டகாலமாக யாழ் மாவட்டத்தில்
பெண்களுக்கான இலவசச் சட்ட
07, இரட்னம் ஒழுங்கை,
R காங்கேசன்துறை வீதி,
. . . . ab e GRECYFeaturaNGaMeResorosor,ILIITILIZIONITED.
 
 
 

உதவியைச் செய்து வருகின்றது முக்கியமாகச் சட்ட ஆலோசனைகள் மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகளை இலவசமாக நடத்திக் கொடுக்கின்றது. அந்த வகையில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக பாதிக்கப்படுகின்ற பெண்கள் எமது நிறுவனத்தின் மூலம் சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் * இவ்வன்முறையால் பாதிக்கப்படும்
பெண்கள் * கணவனால் கைவிடப்பட்ட பெண்களில் கணவனிடம் இருந்து தயாரிப்புப்பெற விரும்புவோர்
«Ο
X
ஏனையகுடும்ப வழக்குகள்
Φ
X
பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான
வழக்குகள். * பிறப்பு, இறப்பு விவாகப் பதிவுகள்
தொடர்பான சிக்கல்கள்.
* பிள்ளைகளின் தந்தை "தான் அந்தப் பிள்ளைகளின் தந்தை இல்லை" என மறுக்கும்போது உண்மையை நிரூபிக்கும் வழக்குகள். இது தொடர்பான மேலதிகத் தகவல் களைப் பெறவிரும்புவோர் மகளிர் அபிவிருத்தி நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Page 50
பாலியல் வல்லுறவு
(பெயர்கள் மாற் சுமதி என்பவர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவளது தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு இவர் மூலம் ஆறு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு 03 பிள்ளைகள் உள்ளனர். தற்போதைய விலைவாசி ஏற்றம் காரணமாக இரண்டு குடும்பங்களையும் கவனிக்க முடியாது போய்விட்டது. முதல் மனைவியும் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். முதல் மனைவியின் பிள்ளை களை கவனிப்பதற்கு யாரும் இல்லை. கவனிப் பாரற்ற நிலையில் அந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வழிகளில் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருத்திதான் சுமதி.
சுமதி தனது பேத்தியாரிடம் சென்று வசித்து வந்தாள். வருமானம் எதுவும் அற்ற சு மதி கூலி வே  ைலக் குச் செல்ல ஆரம்பித்தாள். அதில் கிடைக்கும் வருமானத் தைக் கொண்டு தனது வாழ்நாளைக் கழித்து வந்தாள். சுமதி திருமண வயதை அடைந்ததும் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்தாள். அவளது வாழ்க்கைக்கு வறுமை தடையாக
இருந்தது.
சு ம தி யி ன் த ம் பி ய |ா ர் யாழ்ப்பாணத்தில் உள்ள கம்மாலையில் வேலை செய்து வருகின்றார். விடுமுறை தினங்களில் சுமதியின் வீட்டுக்கு வருவார். அன்று தீபாவளி 2003ஆம் ஆண்டு ஐப்பசி
-o- relo- a
aa2a5 Sa 31/2OOB

0660) OF FOLLO
றப்பட்டுள்ளது)
மாதம் சுமதியின் தம்பி தன்னிலை அறியாது நிறைவெறியில் சுமதியின் வீட்டுக்கு வந்தார். சுமதியை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இவ்வாறு பல தடவைகள் வலுக்கட்டாயமாக சுமதி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் சுமதி கர்ப்பமானாள். சுமதி தான் கர்ப்பமானதை ஆரம்பத்தில் சொல்லாமால்
மறைத்து விட்டாள்.
2005.04.27 அன்று சுமதிக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பராமரிப்பற்ற நிலையில் இருந்ததால் பராமரிப்பு நிலையத்தில் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த தந்தை இவ்வளவு காலமும் தேடாது இருந்த தனது மகளிடம் வந்து நடந்த பிரச்சினைகளைக் கேட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதை அறிந்த சுமதியின் தம்பி கிளிநொச்சிக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
மேற்குறிப்பிட்டுள்ள சம்பவம் பெண்களின் வன்முறைகள் தொடர்பான தரவுகள் சேகரிக்கும் போது மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரால் சுமதி என்ற கற்பனைப் பெயர் உடைய பெண்ணை நேர்காணல் செய்யப்பட்டது. எமது நிலையத்தினால் இந்தப் பெண்ணிற்கு வாழ்க் கை நடைமுறை கள் பற்றி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Page 51
பெண்களுக்கு எதிரான 6) 56856O)6T (956) I60 பிரதேச நிை
 

1ன்முறை 6ğ5ITL ListLIITGOT எப்படுத்துகின்ற Nou IIñIE66ir
ধ্রু
ধ্ৰুষ্ট্রগুপ্ত ឆ្នា
ষ্ট
சண்டிலிப்பாய் கலந்துரையாடல்

Page 52