கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2007.07-08

Page 1
தடைகளைத் த
亨 A.
இருமாத க
விலை 20/=
 

。
522 - ஆவணி 2007
எழுதலாம்
எழுத்து = 3
கர்த்த கவுகளைத் தேடி
விதை இதழ்
SSN 1800 - 3311

Page 2
நீங்களும் எழுதலாம் இருமாத கவிதை இதழ் ஆடி - ஆவணி 2007
ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
படைப்பாளிகள் சம்பூர்.எம்.வதனரூபன் இ.வினோதினி திக்கவயல் தர்மு வெல்லபதியான் கலா விஸ்வநாதன் எஸ்.சத்யதேவன் திருமதி.வி.அருளானந்தி திருமதி.ச.இராமநாதன் >.C35.LeibuJITë வே.விஜேந்திரன்
sîrfu JēFö
சி.என்.துரைராஜா சரஸ்வதி புத்திரன் சுந்தரி சதாசிவம் ܓ݂ திருமதி.ஜெ.றெஜினர்` க.ழுநீகந்தவேள் ܢܠ இ.றெக்ஸ் சுதர்ஷிகா வி.புருஷோத்தமன்  ീ கவித்தாநிஜாம் ஜெ.மதிவதனி தி.காயத்திரி எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
வடிவமைப்பு எஸ்.சத்யதேவன்
ger 60oLL, LILL5 ஒவியர்.கே.சிறிதரன்
தொடர்புகளுக்கு "நீங்களும் எழுதலாம்"
103/1, திருமால்வீதி, திருகோணமலை. தொ.பே: 026 2220398
 
 
 
 

காத்திரமான பங்களிப்புகளை வேண்டி . முதிய, இளைய தலைமுறை இடை வெளியின்றி அனைத்து பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்து தெளிவான நோக்குடன் பயணித்துக் கொண்டிருக்கும் ‘நீங்களும் எழுதலாம் மூன்றாவது இதழ் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
ஏனைய இலக்கிய வடிவங்களுடன் ஒப்பிடு மிடத்து கவிதை என்பது இன்று பலராலும் விரும்பி வாசிக்கப்படுவதோடு பலரும் தமது உணர்வுகளை வெளியிடக்கூடிய ஊடகமாகவும் அமைந்து விடுகிறது.
ஆயினும் தமிழ்க் கவிதைகள் பல - பரிணாமங்களைப் பெற வேண்டியிருக்கிறது என்பதை மறுப்பதற் கில்லை. கவிதை பெருகுமளவிற்கு ஆரோக்கியமான கலந்துரையாடல்களும் விமர்சனங்களும் வளர வேண்டும். அந்த வகையில் பாரிய பங்களிப்பினை சிற்றேடுகள் வழங்க முடியும்.
வளரும் எழுத்தாளர்களுக்கு பயில்களமாக இருக்கும் அதே வேளை ஏனையோரின் காத்திரமான பங்களிப்புக்களும் அவசியப்படுகின்றன. கவிதையாக்கத்தில் பரிசோதனை முயற்சிகளை வேண்டி நிற்பதோடு கவிதை சார்ந்த விடயங்களை கவிதைத் துறை சார்ந்தவர்கள் வெளிக்கொணரின் அது இளைய தலைமுறையினர்க்கு வழிகாட்டுதலாக அமையும் அவ்வாறு பயன்பெறும் களமாக நீங்களும் எழுதலாம் அமைவது காலத்துக்கு பொருத்தமான பணியும் கூட. நீங்களும் எழுதலாம் அண்புடன் ஆசிரியர்
-3-

Page 3
தனித்தானஉடன்பாடுகள் எனக்குன் மீதான எந்தவொரு
உன்மொழி என்னில் சிறுமயிரைத்தானும் உதிர்த்தாது உறுதியாக்காது சிரைக்காது செப்பனிடாது
சிலவேளை . உன்னிலும் அதுவாகவே உனக்கான தனித்துவமுண்டு -அது எனக்கும் கூட . உனதான முன்மொழிவுகளை முன்னிறுத்த எனக்கும் உனக்கும் முன்னாகவொரு பெருவெளி அனுமதிக்கப்பட்டிருக்கிறது நம்மால்
அதிலெதையும் விட்டுச்செல்ல உனக்குரித்துண்டு - அது எனக்கும் கூட .
அதிலெதையேனும் மாற்றஞ்செய்யவும் மறுப்பேதுமில்லை எவருக்கும் ஆனாலும் .
எனக்குன்மீதான எந்தவொரு உடன்பாடுகளுமில்லை தனித்தாக.
சம்பூச்.எம்.வதனரூபன்
()
வேண்டும்!
தட்டுங்கள் கதவுகளை திறவுங்கள் பூட்டுக்களை கொட்டுங்கள் முரசுகளை கூவுங்கள் சுதந்திரத்தை விடியுமிந்த வேளையிலே வேண்டும் சமாதானம் பாருங்கள் வடிவாக பட்டினியின் அவலத்தை சிதறுண்ட எம் இனத்தை சேர்த்து வைத்துப் பார்ப்பதற்கும் ஒரு தாயின் பிள்ளைகளை ஒரு தெய்வம் அறிவதற்கும் வேண்டும் சமாதானம் !
ഭ്ഷിച്ചവ, கல்விகல்லுரரி

பொதுவில் வைத்து ?
இராகவா என்றொரு குரல் இராமனிடம் இருந்து உடன் புறப்படு என்றொரு ஒலி சீதையிடம் இருந்து !
ஏகாமல் நீ இருந்தால் என்னை அடையவா ஈங்குள்ளாய் ? சீதை கேட்டாள் நாணமின்றி, நளினமின்றிக் காப்பியத்தில் 1
இராமனே என்னைக் கடிதெனக்
காதலி என்றொரு குரல் சூர்ப்பனகை சொன்னாள், நாணமோ வெட்கமோ, ஏதுமின்றி,
கண்ணகி எரித்தாள் மதுரையை: அந்த நாள் கோபப்பட்டாள்: எரித்தாள், மீண்டாள், எதற்கும் நாணப்பட்டாளில்லை
பாலியல் வேகம் கணவனுக்கு கூடையில் சுமந்தாள், கணவணை ஏட்டில் உள்ள இக்கதைக்காய் நளாயினி நாணப்படவில்லை
பொன்னுக்காக விலை போன மாதவி என்றுமே நாணமடையவில்லை கானல் வரிப்பாட்டை கன்னம் வைத்தால் வருவது சந்தேகமே நாணமில்லை,
நாணம் என்றொரு நற்குணம் பாணம் போன்று பிடித்ததே கோவலர்க்கு சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடிய காலை நாணப்படுவதாகக் கோவலன் சொன்னது நாணம் என்பதைப்
பொதுவில் வைத்தா?
திக்கவயல் தர்மு
--

Page 4
காதல் ஊற்று ......
காதல் இப்படிச் சுடுமென்று கடுகளவும் நான் நினைத்ததில்லை . ஏனெனில் - காதல் சுகமான கூதலைத்
தருமென்று தான்
பலரும் என்னிடம் கூறி வந்திருக்கிறார்கள் . நம்பினேன் நானும் அதிலே இறங்கினேன் . இறங்கிய எனக்கோ இதயப்பரப்பெல்லாம் எரிந்தது கண்களில் இருந்தும் கனல் நீரே வந்தது - ஓ . கன்னியா வெந்நீரூற்றாய் காதலுாற்று சுட்டது கொதிக்க வைத்த நீருக்குள் விழுந்த சுண்டெலியாக சூடுபட்ட நான் ஆனால் நான் எனக்குள்ளே உனக்காகத் தோண்டிய காதலுாற்றோ குளிர்ச்சியாகவே இன்று தன்னும் இருக்கிறது. அதனால்தான் கூற வருகிறேன் . வெப்ப வலயமாக உன்னை இன்னும் விளம்பரப்படுத்த வேண்டாம். குளிர்ச்சியான காதல் ஊற்றை உனக்குள்ளே தோண்டு எண்ணெய்க்குள் விழுந்த எலிக்குஞ்சாக இன்னும் பலரை நீ
கொதி நீரிலே கொண்டு விழுத்தாதே காதலானது எப்போதும் சுகமான கூதலாகவே உலகமெங்கும் உயிர் வாழட்டும் . ஆம் காதல் இப்படிச் சுடுமென்று கடுகளவும் நான் நினைத்ததில்லை.
கண்ணிமுத்து வெல்லபதியான் எருவில்
-6-

மனிதம் மகிழ ......
நித்தம் இந்த தேசத்தில் இரத்தம் சிந்தும் கோரம் சொத்திழந்து சுகமிழந்து சித்தம் சுமக்கும் பாரம்
முத்தான ஈழவள நாட்டில் முகிழ்த்த முறுவலின் ரோகம் கத்தும் ஆழி அலைகளாய் கரை சேராத சோகம்
வித்தான சமாதானம் விளைய விரும்பும் மக்கள் மனம் சத்தான சமரச பேச்சின்றி சறுக்கும் இனவாதக் குணம்
யுத்தமே வாழ்வாகிக் போயின் யோகமாகும் ஆயுத வியாபாரம் பித்தராய் மனிதர் பிரிந்திட பெருகும் வறுமை ராகம்
புத்தரைப் போசிக்கும் பூமியில் புனிதம் புதைகுழி போகும் சித்தர் செப்பும் மொழிகளை சிந்தியாது பேயாட்சி நீளும்
மாணிக்கம் விளையும் மண்ணில் மனிதம் மகிழ வாழ வேண்டும் காணிக்கையாகும் உயிர்பலி நீங்கி கவிதையாய் மக்கள் வாழ வேண்டும்
கலா விஸ்வநாதன்
ஆக்கபூர்வமான கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
-7-

Page 5
elabue Trebar
நீர்த்துப்போகும் உணர்வுகள் நித்தமும் சாவடிக்க துலக்கமில்லாத எதிர்காலம் அழுகி புழுத்து நிணம் வடியும் மூளைகளை நித்தமும் நக்கிதக்கி தின்றதில் நினைவுகளில் பிணப்புழுக்கள் நடனமாடுகின்றன தோண்ட தோண்ட தாங்கவொனா மணத்துடன் பேசும் வார்த்தையை உதிர்க்கும் ஒழுகும் இருதயத்தை சந்தேகித்தபடி மீண்டும் துயிலெழும்பும் உண்ணிகள் அழகாக இருக்கும் ஊற்றெடுக்கும் ஒவ்வோரு கணத்துளியிலும் விஷம் கலந்திருக்கும் சந்தேகமாய் விழித்திருக்கும் எந்நேரமும் சீழ்வடியும் சொறிநாய் அழகாய்த்தெரியும் நாறியபிணம் ஊனைத்தின்றபடி குழந்தைகள் மலக்குழியின் நீரில் உதிர்க்கும் அடையாளங்களாய் .
எஸ்.சத்தியதேவன்
()
ஓர் அன்பான வேண்டுகோள்
1950 களிலிருந்து இதுவரை திருமலை மாவட்டத்திலிருந்து வெளிவந்து நின்று போன பருவ இதழ்களின் (சஞ்சிகைகள், அச்சுருப்பெற்ற, தட்டச்சு செய்யப்பட்ட) பட்டியலொன்றை “நீங்களும் எழுதலாம்” தயார் செய்ய விரும்புகிறது. சஞ்சிகையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அறிஞர்கள், வாசகர்கள் ஆகிய உங்களிடமிருந்து சஞ்சிகையின் பெயர், அதன் ஆசிரியர், வெளிவந்த இதழ்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் ஆதாரபூர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களை "நீங்களும் எழுதலாம்” முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆசியர் -8-

குரைகடலோரம்
இயற்கையின் எழிலானது எங்கும் நிறைந்திருக்கின்றது திரிகோண வடிவிலுள்ள மலையின் கண்ணே எழில் தவழும் கடலோரமெங்கும் ஒரே நிசப்தம் கடலோரத்தில் காற்று வாங்கலாமென கருதிக் கலந்து கொள்வார் கணக்கற்றோர் அன்று கடற்கரைக்குச் சென்று விட்டால் காவலர்கள் குறிக்குத் தப்ப முடியாது என்று ஒதுங்கி இருப்போர் இன்று கடல் தரிசனத்திலோ கற்பனை சிறகடிக்கும் கவலைகள் மறந்துவிடும், கணக்கற்ற மகிழ்ச்சி அலையானது மீண்டும் மீண்டும் கரையைத் தேடுகின்றது மனிதர்களே மீண்டும் மீண்டும் முடிவைத் தேடுகின்றனர் கரையை மனிதர்களல் காண முடியவில்லை கடல்தாய் தன் மக்களைக் காப்பாற்றி வந்தாள் கடலின் மீன் பிடித்தனர் இத்தொழிலே கதியென எண்ணி கணக்கற்ற மக்கள் இருந்தனர் அன்று கடலுக்குச் செல்லவே கடுமையாகச் சிந்திக்கின்றார் இன்று மீனவத் தொழிலுக்கு மிகையான கட்டுப்பாடுகள் இன்று காலத்தின் அறுவடையில்லாமல் கரையேற முயலுகின்ற மீன்கள் எவை எவை எப்போது நடக்குமோ அவை அவை அப்போது நடக்கவில்லை காலச்சக்கரம் சுழலுகின்றது மனித வாழ்வின் அவலம் மட்டும் சுழலவில்லை ஏனே? என்று திரும் இந்த அவல நிலமை இறைவா! பதில் தருவாயோ?
திருமதிசரோசா இராமநாதன்
-9-

Page 6
கடைசியாக ...... உன் நினைவுகளை அனு தினமும் சுமக்கிறேன் Lāš8 (piņuTLD6) தோற்றுப் போய்! விழித்துக் கொண்டிருப்பது என் விழிகள் மட்டுமல்ல மனமும் தான் உன் நினைவுகளை மனதுக்குப் போர்வையிட்டு உறங்கும் அந்த ஆழ்ந்த உறக்கத்தையாவது கற்றுத்தந்து விட்டுப் போ கடைசியாக சொல்கிறேன்.
ஆர்கே.புஸ்பராஜ்-இறக்குவானை
o 6 drapid கொட்டில் வாழ்க்கை கொடியேறுகின்றது - இங்கு SjóOrLITb உகண்டா முடி சூடுகின்றது பானையில் சோறு பக்கத்தில் சாவு இலங்கையில்
தெருவெல்லாம் பிணங்கள் சுடலைக் காடெல்லாம் சனங்கள் வேட்டை நாய்களின் வெறியாட்டமும் காட்டு நாய்களின் ஊளையும் சிதைந்து கிடக்கும் ஊனத்துக்காக கோரப்பற்களை கொடுப்புக்குள் வைத்திருக்கும் கோரமான உலகமிது விழிப்பாக இரு
இல்லையெனில் ஓரினமே அழிந்து விடும்
வே.விஜேந்திரண் ~ ஈச்சந்தீவு
-10

66), 6&FSD6)
பசி என்ற போது உண்ண உணவில்லை ஆசையாக அல்ல ! அவசியமாக உடுத்த ஆடை இல்லை! இத்தனைக்கும் அப்பால்
ஒவ்வோரு தடவையும் மரணித்து மரணித்து பெற்றெடுத்த இவ்விரண்டு மகன்கள் பட்டணத்தில் வர்த்தகப் பிரபலங்கள் பெண்ணொருவர் வெளிநாட்டில் சிற்றிசன் எண்ணிப்பார்க்கா பிள்ளைகள் பெற்றவள் பாவக்கணக்கில் செலவு பிள்ளைப்பாவக்கணக்கில்
6)6.
பிரியசகு ~ கிண்ணியா
()
தெருக்குறள்
* கடவுள் ஒருவரெனில் எப்பெயரில் உருவில் அழைப்பினும் அருள் கிட்டும் * அழகு அழிந்து கொண்டே இருக்கும் ஒழுக்கம் அழகுபடுத்திக் கொண்டே இருக்கும் * அழகிகள் ஒழுங்காக வாழார் என்பதல்ல வாழவிடார் என்பதே சரி * கண்ணைத்தான் உறுத்தும் உடலின் ஊனம் மண்ணே வெறுக்கும் உள்ளத்துனம் * பைத்தியக்காரனும் குடிகாரனும் ஒன்றே, அவர்க்கு வைத்தியசாலையும் ஒன்றாதல் நன்றே * அழகால் சோறு போட முடியாது இன்பத்தால் புகழடைய முடியாது
ஆசைஎட்வேட் - அன்புவழிபுரம்
A ep

Page 7
Tb6 Dfb Kb3 DIT ?
நேற்றைய பொழுது இருண்டு கிடந்தது நேற்றைவரை நடந்தவை காற்றுடன் கரைந்தது இன்றைக்கு அமைதியாய் வானம் விடிந்தது - எனினும் புனிதம் தொலைந்தது மனிதம் செத்தது கரகமாடியது துவேசம் நரகமாகியது நகரம் சுடலைநோக்கி பாடைகள் நிறையவே களவேள்விகள் இனபூதங்கள் ஆடிய கூத்தினை அரசியல் பிழைத்தோர் நன்றாய் அரங்கில் கண்டு களித்தனர் அதிலும் இலாபம் தேடினர் காமினி, அப்துல், கார்த்திகேசு கோர்த்திருந்த கைகள் தனித்தன நாளைய பொழுதும் இப்படித்தானோ? களம் புகுமா?
இல்லை நலம் படுமோ?
கந்தையா நீகந்தவேல் வவுனியா
புனைபெயரில் எழுதுவோர் தங்கள் சொந்தப் பெயரையும் குறிப்பிடுதல் வேண்டும்.
-12س

ஏனிந்த மாறிற்றம்
துணையிழந்து தவித்த போது துயர்தனைத் துடைக்கவென்று துணிவுடன் வந்தென்னை ஆட்கொண்டு துணிந்து செயல்படுவீர் துணையாய் நானிருக்க துஞ்சுவதேனெனக் கேட்டு இன்முகம் காட்டி கனிமொழி பேசி அன்று நீ அன்பால் அரவணைத்தாய் என்னை நானும் துணையிழந்த துயர் மறந்து உன் நிழலே தஞ்சமென நானிருந்த வேளையிலே யார் கண்பட்டதோ? எவர் செய்த மாயமோ? . உன் திடீர் மாற்றம் கண்டு உள்ளம் குமுறுதடி நெஞ்சம் துடிக்குதடி உன் நினைவால் மகிழ்ந்த உள்ளம் உன் செயலால் சோர்வதேனோ? யாரு மறியார் நடந்தவை யாவும் நமக்கிடையிலன்றோ வஞ்சியவள் வஞ்சகியான பின் விட்டு வைப்பதும் முறையாமோ? உள்ளம் குமுறுதடி . நெஞ்சம்துடிக்குதடி சூறாவளியாய் வந்துன்னை சூழ்ந்து கொள்ளவா . அன்றேல் சுனாமியாய் வந்துன்னை வாரிக்கொண்டு செல்லவா? நீயே சொல் . இ.றெக்ஸ் வெண்டர்கோண் களுவாஞ்சிக்குடி
இதுறுைபெறவிரும்புவோர் 5 ரூபாவியறுமதிகொண்டமுத்திரைகள் ஐந்தினை அனுப்பிவைக்கவும்
-13

Page 8
இருந்தும் நம் இலக்குகளுக்காய் தாவிய தாவல்களில் நின்று தவறிப் போனோம் ! தவறியதால் சிதறியும் போனோம் ! எம்மில் விழுந்தவைகள் எல்லாம் பாசிகளாயிருக்க எப்படியெழுவது? நிமிரத் துடிக்கின்றன நம்மிதயங்கள் கைகூப்பி பின் வர அடம்பிடிக்கும் குழந்தையாய் விரட்டுகின்றன உங்கள் ஆதிக்கங்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வாயை மூடி அலகு வீங்கிப் போனோம் அதரங்களுக்குள்ளே ஆயிரம் மெளன உச்சரிப்புக்கள் நாங்களும் எங்கள் கனவுகளுமாய்த்தான் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம் எப்போது அறுந்து போகும் எம் கனவுகள்? அதற்கிடையில் அவசரமாய் விடியல்கள் தேடுகின்றோம் எழவேண்டும் என்ற அவாவோடு இப்போது நாம் வீழ்ந்து கிடப்பது இரவில் அல்ல உங்கள் நிழல்கள் பட்ட இருளில் இது எங்களுக்கு புரியாமல் இல்லை இருந்தும் ஏங்குகிறோம் விடியலுக்காய் !
சுதர்வுதினி
வவுனியா கல்வி. கல்ஹாரி
14۔

தாவும் குரங்கு
அதிகாலையிலே மதி நிறத்தினிலே - ஒரு ரதியைக் கண்டேன் ജൂഖണ് அழகே உருவானவள் பிரபஞ்சத்தில் அழகுப் பஞ்சம் அழிப்பவள் கண்ணழகு தனி மெளன மொழி இடை - மதுக்கடை அவ்வேளை அம்மா அழைத்தாள் போய் வந்து பார்த்தேன்
பருவப் பெண்ணாக இருந்தவள் பருத்துப் போன மாயமென்ன எப்பவும் அப்படித்தான் மனித மனமும் முகிற் சிலையும்
வி.புருஷோத்தமன்
எதிர்காலம்வேண்டும்
எண்ணங்கள் நிறைவேறிட வேண்டும் சொந்தங்கள் சேர்ந்திட வேண்டும் புதிய சுகம் பிறக்க வேண்டும் ஆயுத கலாசாரம் நீங்கி ஆனந்தமாய் வாழ வேண்டும் ஏழைகள் இல்லாது எல்லோரும் இன்பமாய் இருந்திட வேண்டும் மானிடர் யாவரும் ஒன்றென பகை நீங்கிட வேண்டும் ஏது இடர் ? எனும் எதிர்காலம் வேண்டும்
கவித்தாநிஜாம்
d'oi strofilius -15

Page 9
புனிதமடையும் சேதி ஒன்று கேட்டிரா செக்கிழந்த தமிழினமே நாதியற்று ஊர் சுற்றும் நல்குடி பெருமகனே வீதி வழி சென்று நீ விடுதலைக்கு வழிசமைப்பாய் ஆதி முதல் அந்தம் வரை அனல் தெறிக்க கொடிபிடிப்பாய்
உச்சிவெயில் தலையினிலே உமை வாட்டும் வேளையிலே கச்சை கட்டி முரசறையும் கருநாக பெருநிதிகாள் மிச்சமிது எம்மினத்தின் மேன்மையுள்ள கெளரவத்தை கொச்சை பண்ண நினைத்தால் கொடும் பகைக்கே ஆளாவீர்
குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குறும்புத்தி கொண்டவரே நறுக்காக நாம்பேசி நல்லவழி காண்போம் பார் பெரும் பொறுமை காப்பதை பேதமை என்றா முடிவெடுத்தாய்? பொறுக்க பொறுக்க எம்மினம் புனிதமடைவதைப் பார்.
சி.என்.தரைராஜா
()
களங்களை விரித்துள்ளேம் ஆக்கங்களை அனுப்புங்கள்
-16

மதிப்பிடமுடியவில்லை
நகம் வெட்டிக் கொண்டிருந்தேன் நீ வந்தாய்
நிமிர்ந்தேன்
சறுக்கியது பிளேற் சிறியது இரத்தம் ஐயோ பாவம் என்றாய் அனுதாபப்பட்டாய்
சிணுங்கினாய் துணித்துண்டொன்றைத் தண்ணிரில் துவட்டி வந்து என்விரலில் சற்று இறுக்கமாய்ச் சுற்றி விட்டாய் ஆயினும் உன்னைப்பற்றி எதுவுமே என்னால் மதிப்பிட முடியவில்லை என் நகக் கண்ணிலிருந்து உதிரம் கொட்டிய போது உன் அகக் கண்ணிலிருந்தும் உதிரம் கொட்டியிருக்க வேண்டும்
சரஸ்வதி புத்திரன்
()
தொடர்பு R.Mahendran 34, Red Rifferd Plaistow London E 130JX, UK -17

Page 10
ஒன்றுபடு
அரக்கத்தனம் அட்டகாசம் அடக்குமுறை அட்டுழியம் இறுமாப்பு இரக்கமின்மை அறிவில்லாத அடாவடித்தனம் நீதியின்றி ஏதிலர்களாகி நாதியற்று வீதியில்! தமிழனாய் பிறந்ததற்கு தரப்பட்ட தண்டனை ஷெல்லடி, பல்குழலடி வான் தாக்குதல், கடல் தாக்குதல் சித்தம் கலங்கி பித்தர்களாய் சத்தமின்றி சாகும் கொடுமை உழைப்பில்லை ஊதியமில்லை இடும்பிச்சை ஏற்கும் துயரம் வேண்டாம் இந்த வாழ்வு ஒன்றுபடு உண்டு நல்வாழ்வு
சுந்தரி சதாசிவம் - மிருகவில்
()
OnSanIII ---- !
அஸ்தமனத்தில் விடியலை தேடும் மாந்தரே உதயத்தில் - நீங்கள் முட்டாள்களாக்கப்பட்டதை ஏமாற்றப்பட்டதை அறியவில்லையோ வெப்பத்தில் குளிர்காய துடிக்கும் - நீங்கள் கார் காலத்தில் சிதைக்கப்படுவதை ஏன் மறந்திர்கள்! விதியென்று விட்ட வழி மறந்து மதி கெட்டு - நீங்கள் நிற்பதேன் ? காலம் வருமென்று காத்திருக்கும் நீங்கள் காலத்தினால் வஞ்சிக்கப்பட்டதை உணர மறுப்பதேன்
திருமதிஅஆனந்தி விஜயராஜ்

மனமகள் தேவை
ரோஜாவின் நிறத்தோடும் ஜோரான அழகோடும் மல்லிகையின் மணத்தோடும் மழலையின் குணத்தோடும் முல்லையின் சிரிப்போடும் முத்தமிழ் மூச்சின் பேச்சோடும் வாழையின் செழிப்போடும் நம்பிக்கை எதிர்பார்ப்போடும் தாழையின் தரத்தோடும் தாமரையின் தனித்தன்மையோடும் அதிகாலை விடியலோடும் ஆலய மணியின் ஓசையோடும் ஆண்டவனின் கீர்த்தனையோடும் என் அன்னையவிளின் விருப்பத்தோடும் வாழ்ந்திருக்க வாஞ்சை கொள்ளும் வஞ்சி மகள் தேவை 1 வந்தால் விளம்பரம் கண்டு வந்தால் சுயம்வரத்திற்கான வரதட்சனைகள் பேசித்தீர்க்கப்படும் திருமதி.ஜெ.றெஜினா
()
црвет CSLD - uscoso 2007 %இருமாத இலக்கிய இதழ்
ஆசிரியர் எல். வளிம் அக்ரம்
വൈണിu്
அனுராதபுர நட்சத்திர நற்பணி மன்றம்
தொடர்பு The Editor 78B, Jeyanthi Mw, Anuradhapura
-19

Page 11
திரைவிலகியபோது
உந்தன் முதலாளித்துவத்திற்குள் முடங்கிப் போய் மூச்சுத் திணறுகிறது எந்தன் சமதர்மம். என்னால் நிமிர முடியவில்லை முரட்டுத்தனங்களும் மூர்க்கத் தனங்களும் உனக்கான விலாசங்கள். இதுவே உன் சுயம். நீ காட்டியதும் நான் நம்பியதும் போலி முகவரி என்பதே நிஜம்.
ஆதிக்கம் செய்வதே தகுதியென நம்புகிறாய் உன் விதிப்புக்களே என் விருப்பங்களாக வேண்டுமெனில் ஏன் என் வெறுப்புக்கள் உன் விருப்பங்களாக?
இணங்கிப் போக இதுவொன்றும் நியதியல்ல சமத்துவத்துக்கு சம்மதி அன்றேல் மறுமணத்தை பரிசீலி!
திகாயத்திரி வவுனியா கல்வி கல்லூரி
Luísleð asetrið காத்திரத்தின் களம்
பரிசோதனைக் களம் நீங்களும் elhoryeorák serTib எழுதலாம் விளக்கக் களம்
கருத்தாடல் களம்
-20

எத்தனை ஊர்களை இழந்தோம்?
வார்த்தைகளில் மெளனம் உறையும் se/60|TGö D657ib LD06ub ஆயிரம் வார்த்தைகளை தனக்குள்ளே பேசிக்கொள்ளும் பரந்த வான் வெளியில் பனிப் போர்வையில் பிறை நிலா துாரத்தே நின்று துயரம் விசாரிக்கின்றது எத்தனை ஊர்களை இழந்தோம் நேற்றைய நாள் என் பாதங்கள் பதிந்த என் ஊர் கோயில் திருவிழாவில் குதூகலித்த என் ஊர் இன்று என் சுடுகாடாய் நாளைய கற்பனைகள் இன்று சிதறிப் போயின ஊரை இழந்து அகதிகளானோம் மிதி வெடிகளில் காலை இழந்து முடவர்களானோம் கணவரை இழந்து விதவைகளானோம் யாரோ வந்தார்கள் எதையோ பேசினார்கள் இருப்பதையும் பறிப்பதற்காக மந்திராலோசனைகள் இதுவும் ஒரு கருக்கலைப்பு தான் ஊர்களோடு ஊரின் பெயர்களையும் தொலைத்திட எத்தனை எத்தனை தலையங்கங்களில்
நெஞ்சு வலியில் நினைவுகள் புரண்டன ஒவ்வோரு வினாடியும் பெருகி வழிந்தன எனது மூலமும் மறந்து போனது என்னை மீட்காயோ! எனக் கதறும் என் ஊர்
எனக்கு வேண்டும்.
ஜெ.மதிவதனி
-21

Page 12
  

Page 13
  

Page 14
  

Page 15